Results 1 to 10 of 15

Thread: வன மோகினி

Hybrid View

  1. #1
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *
    'சொல் ரத்னா '

    'இது போன்ற பழக்கங்கள் இருக்கக் கூடாது என்று சட்டம் நீஙக்ள் கொண்டு வர வேண்டும். இப்போது வேண்டுமானால் உங்களுக்குப் படைபலம் இல்லாதிருக்கலாம். பிற்காலத்தில் வரலாம் அல்லவா. உங்களுக்குத் தேவை இப்போது என்னவென்றால் படைபலமல்ல. மனோ பலம்.. '

    *

    'நீ யாரிடம் பேசுகிறாய் எனத் தெரிந்து தான் பேசுகிறாயா பெண்ணே '

    'ஆம். நன்றாகத் தெரிந்து தான் பேசுகிறேன். சுரத்தில் நீங்கள் என்ன உளறினீர்கள். உங்களுக்கு எப்படித் தெரியும்.. ஆண்டவனே, நான் பாண்டிய நாட்டைக் கட்டிக் காப்பேனா ...

    இப்படி எனது படைகள் குறைவாக இருக்கின்றதே.. பிரச்னை மேல் பிரச்னை வருகிறதே - இன்னும் என்னவெல்லாமோ அவ நம்பிக்கையாய்ப் புலம்பினீர்கள்

    அரசே... இருக்கும் படைகள் உங்கள் மீது உயிரையே வைத்திருக்கிறது என்பதை மறந்து விட்டீர்கள். தோல்விகள் வரத் தான் வரும். ஆனால் தோல்வி தான் எப்போதுமே வரும் என நீங்கள் நினைக்கக் கூடாது...உங்களிடம் நான் இன்னொன்றும் கேட்க வேண்டும்.. '

    'சொல் ரத்னா '

    *
    'தங்களுக்கு நாற்பது பிராயம் தாண்டி விட்டது எனச் சொல்வார்கள். தாங்கள் இன்னும் மணமுடிக்கவில்லை.. நாட்டை எப்படி விஸ்தரிப்பது என்ற கவலையினாலேயே வதுவை செய்து கொள்ளவில்லை எனக் கேள்விப் பட்டேன் '

    'ஆமாம் '

    'இந்தச் சிறு பெண் சொல்வதைத் தயை செய்து கேளுங்கள். இப்போது அநாவசியப் போர்கள் எதுவும் வேண்டாம்.

    எதிரியின் பலத்தை நன்றாக ஊன்றிக் கவனித்தவண்ணம் இருங்கள். சிறுகச் சிறுக படைகளைச் சேருங்கள். அதற்கு முன் ஒரு திருமணம் செய்து கொள்ளுஙகள் '

    *
    'ஏன் '

    'இது என்ன கேள்வி. ஒருவேளை பாண்டிய நாட்டை விரிவு படுத்துவது தங்கள் காலத்தில் நடக்கவில்லையென்றால் தங்கள் வாரிசின் காலத்தில் நடக்கட்டுமே. அது நடக்கலாம் அல்லவா... ' எனச் சொல்லிவிட்டு முழங்கால்களில் தலை புதைத்து குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள் ரத்னா.

    *
    அவள் அவ்வாறு அழுவதை சற்று நேரம் மெளனமாகப் பார்த்தவாறே இருந்த குலசேகரன், மெல்ல அவளருகில் சென்று தோளைத் தொட்டுத் தன்புறம் திருப்பினான்.

    முதலில் அவளது சிவந்த விழிகள் அவனது கூரிய விழிகளுடன் கலந்தன. பிறகு....

    *************************

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •