Nadigar Thilagam Sivaji Ganesan Part 14
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரை உலக கலைபயணம் பற்றி பல்வேறு தகவல் கொண்ட பாகம் 14 துவக்கி நல்ல முறையில் எழுத , கொண்டு செல்ல நடிகர் திலகம் அவர்களின் ஆன்மாவின் ஆசி மற்றும் அருள் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு முதற்க்கண் வேண்டிகொள்கிறேன்.
http://i501.photobucket.com/albums/e...psd0b4a951.jpg
இந்த திரி பாகம் 14 துவக்கி எழுத முன்மொழிந்த அனைத்து நல்ல இதயங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
போட்டி என்பது ஒரு கருத்து பரிமாற்றம் என்பதை உணர்ந்து பாராட்டும் வேளையில் பாராட்டியும், தமாஷ் நய்யாண்டி செய்யும் வேளையில் அதையும் செய்து ஊக்குவிக்கும் "GENTLEMAN OF THREAD " என்று அன்பாக கருதப்படும் திரு எஸ்வி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருக்கும் மிகுந்த நன்றிகள்.
மஹாகவி காளிதாஸ் காவியத்தில் ஒரு பாடல் வரும்...யார் தருவார் இந்த அரியாசனம்..புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் அம்மா என்று ! அந்த பாடல் வரிகள் இந்த தருணத்தில் எனக்கு நினைவிற்கு வருகிறது.
இந்த பாகத்தை பொருத்தவரை நடிகர் திலகம் திரியை அலங்கரித்த பலரது எண்ணங்கள், தகவல்கள், ஆவணங்கள், அனுமானங்கள் ,அனுபவங்கள் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து அதனுடன் என்னாலான கற்களை பாலம் அமைக்க சுமந்து சென்று பொறுபபாக சேர்க்க அனைவரின் ஒத்துழைப்பும் ஆதரவும் வேண்டுகிறேன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 100 நாட்கள் மற்றும் 175உம் அதற்க்கு மேலும் ஓடிய படங்களின் எண்ணிக்கை விபரங்கள் அனைவரின் பார்வைக்கும் !
http://i501.photobucket.com/albums/e...psd2417045.jpg
http://i501.photobucket.com/albums/e...ps7def0b43.jpg
இந்த பாகம் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் இப்போதுமுதல் எங்கு வெளியிட்டாலும் அதன் தகவல்கள், நினைவலைகள் இவற்றை கொண்டு சாதனை மலர்களாக சார்த்தப்படும்.
நமது ஜாம்பவான்கள் திரு நெய்வேலி வாசு சார், ராகவேந்திரன் சார், ஜோ சார், ராகுல்றாம் சார், ச. வாசுதேவன் சார், செந்தில் சார், ஹைதராபாத் ரவி சார், திரு.கார்த்திக் சார், கல்நாயக் சார் , பரணி சார், ஆதிராம் சார் மற்றும் பெயர் விட்டுப்போன அனைவரும் திரும்பவும் வந்து முன்பு போல பதிவிட வேண்டுகிறேன்.
கோபால் சார் பற்றி கூற தேவை இல்லை. காரணம் அவரால் இங்கு வந்து பதிவிடாமல் இருக்க முடியாது. கோபால் சார் அவர்களுடைய பொக்கிஷமாம் SCHOOL OF ACTING தொகுப்பை ஒரு குறு தொகுப்பாக ஒரு சாதாரண பாமரன் படித்து மகிழும் வண்ணம் எளிய நடையில் இங்கு REPHRASE செய்து பதிவிட்டால் மிகவும் மகிழ்ச்சி. அந்த கௌரவத்தை அவர் எனக்கு பரிசாக அளிப்பார் என்று நம்புகிறேன்.
அனைவருக்கும் எனது நன்றிகலந்த வணக்கங்கள்.
:2thumbsup:
http://www.youtube.com/watch?v=WngSPSrIRJM
live and let live : The only legend who showed the way!
[quote]
Quote:
Quote:
Originally Posted by
ravikiransurya
ஜல்லிக்கட்டு திரைப்படத்தில் ஏரியில் ஒரு ஓடம் என்ற பாடலுக்கு நடிகர் திலகத்தின் நடன அசைவு !
வாழு! வாழ விடு!' இந்தத் தாரக மந்திரத்தை தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து, எத்தனையோ வளரும் இளம் நடிகர்களின் வாழ்வில் உண்மையான ஒளிவிளக்காகத் திகழ்ந்தவர் நடிகர் திலகம். மாபெரும் நடிப்புச்சக்கரவர்த்தியாக உச்ச நட்சத்திரமாக இருந்தபோதும் கூட நடிப்பவர்கள், ஆணோ பெண்ணோ, எவராயினும் தன்னோடு சேர்ந்து அவர்களும் வளரட்டுமே நன்கு வாழட்டுமே என்று எண்ணிய பெருந்தகை. தன் தொழிலை தெய்வமாக எண்ணி காலம் தவறாமையை தன் அடையாளமாக நிலைநிறுத்தி வேறு எந்தவொரு நடிகருக்கும் முன்மாதிரியாக விளங்கி ரசிகர்களின் நடிப்புத்தெய்வமாக என்றும் சுடர்விடும் தீபம் அவர் மட்டுமே. ஜெமினிகணேசன் போன்ற சமகால நடிகச்செம்மல்களும், பின்வந்த அனைத்துத் தலைமுறை நடிகர்களும் விரும்பி உடன் நடித்திட வித்திட்ட மாபெரும் நடிப்புச்செல்வம். எத்தனை புதிய இயக்குனர்கள்! எத்தனை புதிய தயாரிப்பாளர்கள்!'எத்தனை தொழில் நுட்பக்கலைஞர்களுக்கு வாழ்வு ! நடிகர் திலகத்தால் வளர்ந்தவர், செழித்தவர், வாழ்ந்தவர் உண்டே தவிர அவரால் இழந்தவர், ஒழிந்தவர், தாழ்ந்தவர் எவருமில்லையே! கர்ணன் மகாகாவியம் காலத்தை வென்று நின்று உரத்த குரலில் இந்த உண்மையை மேன்மையுடன் இந்தத்தலை முறையினரையும் மனம் கவர்ந்து எட்டாத உயரத்தில் வெற்றிக்கொடி நாட்டி சம்மட்டியால் அடித்ததுபோல்உணர்த்தியபோதும் தூங்குவது போல் நடிப்பவர் ...... இருந்தும் இல்லாதவரே!