Makkal thilagam mgr part 22
http://i280.photobucket.com/albums/k...pso8kjc8aw.jpg
http://i280.photobucket.com/albums/k...psgdzz5p5w.jpg
அருமை நண்பர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கம் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் 10ஐ துவக்கி வைத்த எனக்கு 2 வது முறையாக
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் 22 ஐ தொடங்கி வைக்க வாய்ப்பு அளித்த திரியின் நெறியாளர் திரு.ரவிச்சந்திரன் (திருப்பூர் ) அவர்களுக்கும் , அதை வழிமொழிந்து
வரவேற்பு அளிக்கும் இனிய நண்பர் திரு.வினோத் (பெங்களூரு ) அவர்களுக்கும்
அதை ஆமோதிக்க உள்ள ஏனைய அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் , பதிவாளர்களுக்கும் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாடும் நேரத்தில் எனக்கு அளித்த சிறப்பு வாய்ப்பாகவும், பெருமையாகவும் கருதி அனைவருக்கும் எனது கனிவான
நன்றியை உரித்தாக்குகிறேன் .
அ.தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கத்தை தொடர்ந்து இயக்குபவர்கள் கட்சி சார்பாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்த நாள் விழா எடுக்க முடிவு எடுக்கவில்லை என்று நினைக்கும்போது சற்று வருத்தமாக உள்ளது .
ஆயினும் அ.தி.மு.க.அரசு சார்பில் ,கீழ்கண்ட மாவட்டங்களில் வெற்றிகரமாகவும், வெகு விமர்சையாகவும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
1.கடலூர் ,2. விழுப்புரம், 3.திருவண்ணாமலை,4.மதுரை .5..அரியலூர்,6.. பெரம்பலூர்,7. . திருவாரூர்,8..காஞ்சிபுரம், 9.திருவள்ளூர் .
மேலும் பல நகரங்களில் நூற்றாண்டு பிறந்த நாள் விழா எடுக்கும் வகையில்
அதற்கான பணிகள் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றன
என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி .
திராவிடர் கழகம் சார்பில் ,திரு.கே.வீரமணி தலைமையில் பெரியார் திடலில்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு பிறந்த நாள் விழா அரங்கேறியது .
ம.தி.மு.க. சார்பில் , திரு.வை.கோ.தலைமையில் காமராஜர் அரங்கில் 30/03/17அன்று யாரும் எதிர்பார்க்காத வகையில், யாரும் அப்படி ஒரு விழா எடுக்கமுடியாது என்று எண்ணும் வகையில் ,வெகு சிறப்பாக, அனைவரும் பிரமிக்கத்தக்க வகையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திரை உலகில் சந்தித்த சோதனைகள், சாதனைகள், அரசியல் உலகில் சாதித்த வெற்றிகள், பொதுவாழ்வில் விளம்பரம் இல்லாமல் செய்த எண்ணற்ற உதவிகள், கொடைத்தன்மை, தமிழ் ஈழத்திற்கு செய்த ஈடு செய்ய முடியாத உதவிகள் , நன்கொடைகள், சரித்திர சாதனை செய்த சத்துணவு திட்டம் , பல்வேறு நல திட்டங்கள், பல்கலை கழகங்கள், மக்களின் அடிப்படை உரிமை பாதிக்காத வகையில் ஆட்சி நடத்தியது, தெலுங்கு கங்கை திட்டம் , போக்குவரத்து கழகங்கள் மாவட்டம் தோறும், பல தலைவர்கள் பெயரில் உதயம் , ஐந்தாவது உலக தமிழ் மாநாடு --மதுரையில் , காவிரி நீரை கர்நாடகத்தில் இருந்து பெறுவதற்கு கையாண்ட அணுகுமுறை , என்று பலவகையான தகவல்களை செய்திகளை நம்முடன் உணர்ச்சிகரமாகவும், சில சமயம் கண்ணீருடனும் பகிர்ந்து கொண்ட திரு.வை.கோ.அவர்களுக்கு எம்.ஜி.ஆர். பக்தர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டவர்கள் .
எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் திரு.ஆர்.எம்.வீரப்பன் தலைமையில், ராணி சீதை மன்றத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா 20/01/17 அன்று சர்வகட்சி தலைவர்கள் பங்களிப்பில் பிரம்மாண்டமாக நடைபெற்றது .
உரிமைக்குரல் மாத இதழ் சார்பாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா 29/01/17 அன்று தொடக்க விழாவாக சென்னை மியூசிக் அகாடெமியில் நடைபெற்றது .
பெங்களூர் தமிழ் சங்கத்தில் , 05/02/17 அன்று உரிமைக்குரல் பாரத ரத்னா
டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை,பெங்களூரு சார்பில், திரு.எம்.ஜி.ஆர். ரவி
தலைமையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது .
திண்டுக்கல் நகரில் 26/02/17 அன்று, மனிதநேய மாணிக்கம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில், திரு.மலரவன் தலைமையில்மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா மிக எளிமையாக , ஆனால் வலிதாக கொண்டாடப்பட்டது
பெங்களூரு தமிழ் சங்கத்தில், அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் சார்பில், 16/7/17 அன்று திரு.கா. நா. பழனி தலைமையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா அனைவரும் பாராட்டும் வண்ணம் நடைபெற்றது .
திருவண்ணாமலை நகரத்தில் 19/7/17 அன்று திரு.கலீல் பாட்சா தலைமையில்,
அமைச்சர்,கட்சி நிர்வாகிகள்,எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முன்னிலையில்
கலை வேந்தன் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .
முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் தலைமையில்
05/08/17 அன்று சென்னை காமராஜர் அரங்கில் அனைவரும் அளித்த வரவேற்பில்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா அட்டகாசமாக
கொண்டாடப்பட்டது .
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் 12/8/17 அன்று மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா உலகம் போற்றும் வகையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது .
முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பின், ஒன்றுபட்ட அண்ணா தி.மு.க. அரசு சார்பில் அபிராமி மெகாமாலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
பேனர்கள் அலங்கரிப்புடன் , வெகு விமரிசையாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது .
கிராம அலுவலர்கள் சங்கம் , கிராம அலுவலக ஊழியர் சங்கம், வருவாய் கிராம ஊழியர் சங்கம், நில அளவை அலுவலர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் ,
சென்னை கலைவாணர் அரங்கில் 17/8/17 அன்று மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்
மிக பிரம்மாண்டமாக அரங்கேறியது .
சிங்கப்பூர் , பிரான்ஸ், துபாய் மற்றும் இதர நாடுகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாக்கள் நடத்தப்பட உள்ளன .
மேற்கண்ட விழாக்களில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் பற்றிய புகைப்படங்கள்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் 21ல் பதிவிட்டுள்ளேன். எஞ்சிய விழாக்களின்
நிகழ்ச்சிகள் பற்றிய புகைப்படங்கள் விரைவில் அவ்வப்போது , புதிதாக தொடங்க
உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் 22 ல் பதிவிட உள்ளேன்.
உலக சினிமா சரித்திரத்தில் இடம் பெற்ற ஒரே இந்திய நடிகர் நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் என்பது நாம் அனைவரும் பெருமையாக கருத கூடிய விஷயம் .ஊர் கூடி இழுத்தால்தான் தேர் வேகமாக நகரும் என்கிற வகையில்
புதிய பாகம் 22 வேகமாக நகருவதற்கு அனைத்து பதிவாளர்கள் ஆதரவும்
ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் .என்கிற அடிப்படையில், நெறியாளர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் நண்பர் திரு.வினோத் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இனியாவது அமைதி காத்திடாமல் ,அனைத்து பதிவாளர்களும்
தொடர்ந்து தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நானும் பணிவுடன்
கேட்டுக் கொள்கிறேன் . நன்றியுடன் ,
ஆர். லோகநாதன் .
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .