மனம் வெதும்பும் நேரம்
மரிக்கும் பூ சிரிப்பு
மௌனமாய் இருந்தே
மலரும் பூ வெறுப்பு
மகிழ்ச்சியை மங்கவைக்க
மிரட்டும் பூ மறுப்பு
மணவாழ்வில் நான்
பெற்ற பூ பொறுப்பு
விட்ட பூ எதிர்பார்ப்பு
கற்ற பூ பண்பு
கிடைக்காத பூ மதிப்பு
----
Kirukan
Printable View
மனம் வெதும்பும் நேரம்
மரிக்கும் பூ சிரிப்பு
மௌனமாய் இருந்தே
மலரும் பூ வெறுப்பு
மகிழ்ச்சியை மங்கவைக்க
மிரட்டும் பூ மறுப்பு
மணவாழ்வில் நான்
பெற்ற பூ பொறுப்பு
விட்ட பூ எதிர்பார்ப்பு
கற்ற பூ பண்பு
கிடைக்காத பூ மதிப்பு
----
Kirukan
:clap: கடைசியை வரியை பொய்யாக்கும் என் கைதட்டல்!
mine too :clap:
¿ýÚ!! :clap:
மெல்லிய பனிப்புகை உரசிச்செல்ல
மனதிற்க்கு மகிழ்ச்சியை கொடுத்தது-அதுவே
மகிழுந்துக்களுக்கு முடிவை தந்தது.
-Abudhabi 250 cars pileup
-Kirukan
இருள் அடர்ந்த காட்டினில் வெள்ளி மின்னல்
மீசையில் வெள்ளை முடி.
-கிறுக்கன்
ஆஹா!
:P
இல்லாமல்(not having) இல்லாமல்(not using) இல்லாமல்(not being) -இருந்தும்
இல்லாமல் இருப்பதே எளிமையாம்.
-கிறுக்கன்
தலை சுத்திவிட்டது! :D
i reading it for nth time to understand :P
சுகமாய் இருந்த தென்றல் சூடாய் ஆனது
பனியில் விடிந்த பொழுது புழுதியாய் விடிந்தது
-பாலைவன வெய்யில்
-கிறுக்கன்
Ayya.....
padithen,paravasamadainthen!
Vegu naal kazhithu oru kuzhappa kavithai! ;)
Pls continue your good work.2004?
Inru ezhuthiya en kaviye Ithanai naalai engirunthaay?
அமைதியாய் இருக்கும் நேரம்
அமைவதில்லை கவிகள்
அமைதி இழக்கும் நேரம்
அருவியாய் அவிழ்கின்றன
அடியேனின் கிறுக்கல்கள்
-நன்றி வெங்கியாரே
-கிறுக்கன்
Things will get better. Good luck :thumbsup:Quote:
Originally Posted by kirukan
மனம் வெதும்பி வந்த என்னை
மனம் மலர செய்தது இம்மன்றம்
கரம் தேடி அலைந்த என்னை
அன்புக்கரம் கொண்டு கவர்ந்தது இக்குழு
நன்றி நவிழ்கிறேன் நல்ல உள்ளங்களுக்கு
--கிறுக்கன்
நட்பை பெருக்கி
துன்பம் வகுத்து
மகிழ்வை கூட்டி
சோர்வை கழித்து
புது கணக்கு போட
உகந்த இடமிது
தேனுண்ணும் வண்டாக
கிடக்கிறோம் இங்கு
ரீங்கார கவிதைகள்
கேட்கும் தொடர்ந்து
குடிபோதையில் நின் வழி-உன்
குடி வீழ வெட்டும் குழி
--கிறுக்கன்
nalleh muyarchee...paraddukkal
நிழலை நிஜமென நினைக்கும் அடியார்
நிஜமே நிழலென அறியார்
--நிலாவில் ...............
--கிறுக்கன்
புசிக்க மனமில்லை
படுத்துறங்க முடியவில்லை
பகலும் இரவும் அதே நினைவு
--பரிட்சை பயம்
--கிறுக்கன்
:notthatway:
தப்பு செய்தாலும் தண்டனை இல்லை
கடிந்து பேசினாலும் கலக்கம் இல்லை
மறுத்து பேசினாலும் மருட்சி இல்லை
சர்ச்சை செய்தாலும் சினம் இல்லை
-அன்பு மகளின் மழலை செயலின் முன்.
--கிறுக்கன்
Yes, the kids are real 'dictators'! :D
பணம் பத்தும் செயும்-இங்கு
பணம் பதினொன்று செய்தது.
-தேசிய விளையாட்டு அணி.
-கிறுக்கன்
நீண்ட நாட்கள் கழித்து நறுக் கென்று நல்ல கவிதைகளை ரசிக்கிறேன். நன்றி.
அருமையாய் எழுதுகிறீர்கள் கிறுக்கன்! வாழ்த்துக்கள்.
கிறுக்கன், எழுத்துப்பிழைகளில் கவனம் வைய்யுங்கள் !
//பதிணொன்று//
பதினொன்று!
நன்றி சக்தி
:)
Kirukkan.... 8-) superb :notworthy:
btw are you Actor Parthiban? :wink:
:roll: UAE?
DONT TELL ME :shock:Quote:
Originally Posted by Sanguine Sridhar
I am his fan :shock: :oops:
ok :shock: :oQuote:
Originally Posted by Shakthiprabha
End digression
பார்திபன் அளவு பா புனைய
பெறவேண்டும் பயிற்ச்சி பல.
பாராட்டுக்களுக்கு என் பணிவான நன்றி.
பாலைவனத்தில்(Sharjah) பணி
ஆண்டு விடுமுறையில் தற்போது பாரதத்தில்.
மாற்றம்
காசை காகிதமாய் காண்கின்றனர்
கனிப்பொறி கண்மனியினர்
kakidham'na enna paper? :oops:
காகிதத்தை ஒழிக்க வந்த கணிப்பொறியால் இப்படி ஒரு விளைவா?!
அங்கு(இந்தியா-விடுமுறை) இங்கு(துபாய்-வேலை)
அங்கு யுகங்களும் கணங்களாய் ஆனது
இங்கு கணங்களும் யுகங்களாய் ஆனது
அங்கு சோகமும் சுகமாய் ஆனது
இங்கு சுகமும் சோகமாய் ஆனது
அங்கு ருசியே பசி ஆனது
இங்கு பசியே ருசி ஆனது
அங்கு மகிழ்வே பேச்சாய் ஆனது
இங்கு பேச்சுமட்டுமே மகிழ்வாய் ஆனது
அங்கு ஓய்வு தூக்கம் ஆனது
இங்கு தூக்கம்மட்டுமே ஓய்வாய் ஆனது
...
கிறுக்கன்
:sigh2:
ivlavu kashttangal irundhum yEn nam makkal dubai endraal, parakkiraargal... :roll:Quote:
Originally Posted by kirukan
Kirukkan.... ungal kirukkalgal ( kavidhaigal) pramaadham :clap:
enakkum serthu ezhuthina maari irukku :(Quote:
Originally Posted by kirukan
eli valaiyaanalum thani valaiye sirandhadhu(thaaththa adikkadi sollvaaru) :sigh2: