Please use this thread to notify of events held relating to our Nadigar Thilagam.
Printable View
Please use this thread to notify of events held relating to our Nadigar Thilagam.
Remembering Sivaji - Malaysian Chapter
http://thestar.com.my/metro/story.as...96&sec=centralQuote:
Originally Posted by The Star
Is that the one by Vijayasingham and group?
By the way, you may need to revise the poll title. Performance-na parpala performance irukku.
I've no idea Rakesh. Why dont you call them? :P
21st is a Tuesday :sigh2:
Suggest a title then Rakesh.
Aiyo, antha todarbu vittu remba naalachu. It's basically self-glorification event (giving parattu parisu to each other) rather than sit down and analyse NT's achievements.
Am not sure about the world performance day thingy, coz you can give NT that appreciation but only for India. I dare not declare him as the greatest actor in the world. All I can say, enakku therinji, he is up there with Brando and Lord Olivier, and in many instances better than Brando. But enakku terinji. Folks from other countries might have their own version of NT to compete.
Anyway, suggestion: World Screen Actor's Day. or World Screen Performer's Day.
It doesnt matter if there are "better" actors. What I am suggesting is something like Fathers Day, Teachers Day, etc... Behind their origins there lived a real person. That person may not be the best father or best teacher in the world, but he was the world to someone.
We could have an actors day when we celebrate all actors who have been providing entertainment in our otherwise boring lives. :P
Dear friends,
This year it would be YGeeM's turn to take over the Rememberance Day programmes. He is giving special performance of Nadigar Thilagam's VIETNAAM VEEDU, at 6.30 p.m. on 21.07.2009, the D-Day, i.e. Nadigar Thilagam's Rememberance Day. Guests of Honour will be Shri R. Sarath Kumar, President, South Indian Cine Artistes Association, Kavip Perarasu Vairamuthu, Shri Radha Ravi, Secretary, South Indian Cine Artists Association, Dr. M.N. Rajam, Actor, in the august presence of Shri Ramkumar and Shri Prabhu. Venue: Vani Mahal A/C, G.N. Chetty Road, T.Nagar, Chennai - 17.
All fans interested in attending the programme may send p.m. to me or Shri T. Murali Srinivas for invitations.
South Indian Cine Artistes Association, observe October 1, as Actors' Day as a mark of respect to NT.
Raghavendran.
_________________
If you say like that, then why the heck not. Let's initiate it. Now it seems like great idea. Cheers.
Why "Acting"?
Teachers day, not Teaching day illa? Athey mathiri, World Screen Actor's Day.
INDIA
Quote:
Originally Posted by RAGHAVENDRA
MALAYSIA
Quote:
Originally Posted by NOV
வரும் சனிக்கிழமை ஜூலை 11 அன்று நடிகர் திலகத்தின் திருஉருவ சிலை அரக்கோணம் நகரில் திறக்கபடுகிறது. இதை அமைத்திருப்பவர்கள் அரக்கோணம் நகர சிவாஜி மன்றத்தை சேர்ந்தவர்கள். தங்கள் சொந்த செலவில் இதை நிறுவுகிறார்கள். இதைப் பற்றி சொல்லும் போது மதுரையில் வெகு நாட்களாக தயாராக இருக்கும் நடிகர் திலகத்தின் சிலை கூடிய விரைவில் திறக்கப்படும் என்று நம்பகத்துக்குரிய செய்தி வந்திருக்கிறது. மேலும் விவரங்கள் விரைவில் வரும்.
அன்புடன்
source: http://www.mayyam.com/talk/showthrea...=1#post1120096Quote:
இன்றைய ஞாயிறு தினம் மிக இனிமையான தினமாக கடந்து சென்றது. நடிகர் திலகம் ஒரு versatile actor என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதற்கு சான்றாக பல விஷயங்களை சொல்லலாம். அதையே ரொம்ப எளிதாக சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒருவர்தான் class and mass hero. மிகப் பெரிய உயர் பதவியில் இருப்பவர்களும் அவர் ரசிகர்களாக இருப்பார்கள். அது போன்றே சாதாரண மனிதனும் அவர் ரசிகனாக இருப்பான்.
இன்று காலை Russian cultural Society இணைந்து NT FAnS நடத்திய பச்சை விளக்கு திரை காவியத்தின் பொன் விழ கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. Russian Consulate General, திரு B.லெனின், திரு ராம்குமார் மற்றும் Zeal என்ற ஆளுமை பண்புகளை வளர்க்கும் நிறுவன [Personality Development Training] பயிற்சியாளர் ராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நடிகர் திலகத்தைப் பற்றிய தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள். Indo Russian Friendship Society தலைவருமான திரு தங்கப்பன் விழா ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்தார். காலை வேளையாக இருந்த போதும் திரளான பொது மக்கள் கூட்டம். நான் முன்னரே குறிப்பிட்டது போல் class audience. விழா முடிந்ததும் படம் திரையிடப்பட்டது. அற்புதமான படம். படம் முடிந்து வெளியே வந்த அனைவரும் ஒரே சுரத்தில் சொன்ன வார்த்தை Thanks! இப்படி ஒரு படத்தை திரையிட்டு எங்கள் மனதை மகிழ்ச்சி படுத்தியதற்கு என்றார்கள். மிக அற்புதமான தருணங்கள் அவை.
நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் பச்சை விளக்கு 50வது ஆண்டு விழா நேற்று காலை சிறப்பாக நடந்தேறியது. ருஷ்யக் கலாச்சார மய்யத்தின் சார்பில் மனிதன் விண்வெளியில் கால் பதித்த ஐம்பதாவது ஆண்டு விழாவும் சேர்ந்து கொண்டாடப் பட்டது. முதன் முதலில் ருஷ்ய நாட்டின் வாஸ்டோக் விண்கலத்தில் யூரி காகரின் 1961ம் ஆண்டு பயணம் செய்து விண்வெளியில் கால் பதித்ததும், முதன் முதலில் ருஷ்ய நாட்டின் வாஸ்டோக் 6 விண்கலத்தில் பயணம் செய்து 1963ம் ஆண்டு வேலன்டினோ தெரஸ்கோவா என்ற பெண்மணி விண்வெளியில் கால் பதித்ததும் சேர்ந்து நம் விழாவுடன் கொண்டாடப் பட்டன. விழாவில் சிறிய காணொளி திரையிடப் பட்டது. இதில் விண்வெளியில் ரஷ்ய வீரர்களின் நிழற்படங்கள் விண்கலங்களின் நிழற்படங்கள் இடம் பெற்றன. இந்திய விடுதலை நாள் 50வது ஆண்டு விழாவில் ருஷ்ய கலாச்சார மய்யத்தில் நடிகர் திலகம் பங்கேற்றுப் பேசியதின் ஒரு பகுதியும் நேற்று திரையிடப் பட்டது. நேற்று அங்கு வந்திருந்தவர்களுக்கு நிச்சயம் இது பரவசமான அனுபவமாயிருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
16.03.2014 அன்று நடைபெற்ற நமது நடிகர் திலகம் திரைப்பட திறனாய்வு அமைப்பு நிகழ்ச்சியைப் பற்றி மக்கள் குரல் பத்திரிகையில் வெளியிடப் பட்டுள்ள செய்தியின் நிழற்பட வடிவம்
http://makkalkural.net/?cat=8
மக்கள் குரல் பத்திரிகைக்கு நமது நன்றி
பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவப் படத் திறப்பு விழா
மற்றும்
நாடகச் செம்மல் பத்மஸ்ரீ அவ்வை டி.கே. சண்முகம் நினைவு நாடகப் போட்டிப் பரிசளிப்பு விழா
நாள் 22.03.2014 சனிக்கிழமை, மாலை 5.00 மணிக்கு
இடம் பெங்களூர் தமிழ்ச் சங்கம்
59, அண்ணாசாமி முதலியார் சாலை, பெங்களூர் 42
நிகழ்ச்சி நிரல்
தலைமை திரு கோ. தாமோதரன், தலைவர் பெங்களூர் தமிழ்ச் சங்கம்
முன்னிலை திரு ஆர். சுந்தர்ராஜன, வெள்ளிவிழாப் பட இயக்குனர், நடிகர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படத் திறப்பு மற்றும் நாடகப் போட்டி பரிசளிப்பு விழா- கலைமாமணி திருமதி சௌகார் ஜானகி, பிரபல திரைப்படக் கலைஞர்
விருந்தினர் - திரு ஜி. ராம்குமார் கணேசன், திரு டி.கே.எஸ்.புகழேந்தி, திரு மா.நடராஜன்
நடிகர் திலகத்தின் வண்ணப் படம் அன்பளிப்பு கர்நாடக சிவாஜி கணேசன் நினைவு அறக்கட்டளை
பாவை விளக்கு படப்பிடிப்பு தாஜ் மஹாலில் நடைபெற்ற போது எடுத்த படம். எம்.என்.ராஜம் மற்றும் சந்தியா.
http://directorksomu.com/gallery/films/pv/gal_5.jpg
நிழற்படம் உபயம் இயக்குநர் சோமு அவர்களின் இணைய தளம். நன்றியுடன்.
பாவை விளக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தாஜ் மஹல், குதுப் மினர் மற்றும் சுற்று வட்டாரங்களில் படப்பிடிப்புக் குழுவினர் சென்ற போது. நிழற்படத்தில் நடிகர் திலகத்துடன் எம்.என். ராஜம்.
http://directorksomu.com/gallery/films/pv/gal_2.jpg
நன்றி. இயக்குநர் சோமு அவர்களுக்கான இணைய தளம்.
வி.கே. ராமசாமி இயக்குநர் கே.சோமு, ஏ.பி.நாகராஜனுடன் நடிகர் திலகம்
http://directorksomu.com/gallery/films/pv/gal_3.jpg
நன்றி இயக்குநர் சோமு அவர்களுக்கான இணைய தளம்
இணையத்தில் முதன் முதலாக
சிவந்த மண் திரைப்பட வெளியீட்டு சமயத்தில் அடிக்கப் பட்ட போஸ்டர். 45 ஆண்டுகளுக்குப் பிறகு நம் நண்பர்களின் பார்வைக்கு. அடியேனின் திரட்டிலிருந்து
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...50716796_n.jpg
அன்புள்ள ராகவேந்தர் சார்,
'சிவந்த மண்' சுவரொட்டி மிக மிக அருமை.
மனம் காலச்சக்கரத்தில் ஏறி பழைய நினைவுகளை நோக்கி பயணிக்கிறது. 1969 தீபாவளியில் எங்கும் சிவந்த மண் என்பதே பேச்சு.
Make me travel back in my memory lane. What a beautiful Poster? Sivaji-Kanchana look so Cute,young ,fresh, vivid like made for each other.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...83459004_n.jpg
வசந்த மாளிகை திரையிடப் பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போது சென்னை நகரில் 73 ஜனவரியில் கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் சேப்பாக்கம் ஸ்டேடியம், நகரெங்கும் உள்ள பெட்ரோல் பங்குகள் என எங்கும் விநியோகிக்கப் பட்ட நடிகர் திலகத்தின் வசந்தமாளிகை நிழற்படம் இடம் பெற்ற பாக்கெட் காலெண்டரின் பிரதி பிம்பம். பல கடைகளில் பொருட்கள் வாங்கும் போது சிவாஜி ரசிகர்கள் வைத்திருந்த கடைகளில் பொருட்களுடன் போனஸாகவும் தரப் பட்டது. எங்கும் சிவாஜி, எதிலும் சிவாஜி,... அன்று முதல் இன்று வரை இதுவே பேச்சு..
அந்த காலெண்டர்
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...87618689_n.jpg
Raghavender Sir,
In fact, one fancy store was opened on the Vadapalani Temple road and named as "Vasantha Maligai" and the owner's name was Chandran, whose mother was a Congress Devotee. The craze for Vasantha Maligai and the euphoria it created is unparalled in the tamil cinema history. It was screened in Virugambakkam National only after 100 days and ran for more than 7 weeks!
The street where we had our house was named after Pandit Nehru Ji, as "Jawahar Street" in Virugambakkam (now West KK Nagar) and celebrated by my father who used to be a Congress man, my mother only painted the board.
Regards,
R. Parthasarathy
ராகவேநத்ரா சார்,
இந்த திரையிடல் உறுபினர்களுக்கு மட்டுமா ? உறுப்பினர் அல்லாதவர் வரலாமா ? கட்டணம் ஏதுமுண்டா ?
உறுப்பினர்களுக்குத் தான் என்றாலும் சிறப்பு அழைப்பினர்கள் விருந்தினர்கள் என்ற முறையில் மற்ற ரசிக நண்பர்களும் பிரமுகர்களும் கலந்து கொள்ளலாம்.
தாங்கள் சென்னையில் இருந்தால் கண்டிப்பாக வரவும்.
ஜோ,
உங்கள் நண்பர்களை தாராளமாக வரச் சொல்லுங்கள். அனுமதி கட்டணம் ஏதும் இல்லை. அவர்கள் விரும்பினால் உறுப்பினராக சேர்ந்துக் கொள்ளலாம். வணிக நோக்கம் ஏதுமின்றி செயல்படும் எங்கள் அமைப்பின் வருடாந்திர சந்தா தொகையும் மிக குறைவே.
அடுத்த மாதம் உங்களுக்கு மிக மிக பிடித்த கை கொடுத்த தெய்வம். அதற்கு அடுத்த மாதம் புதிய பறவை என பல்வகை விருந்து காத்திருக்கிறது.
அன்புடன்
பெருந்தலைவரின் உண்மையான தொண்டன் ... அவர் பிறந்த மாதத்தில் இவருடைய நினைவு நாள்... இவர் பிறந்த மாதத்தில் அவருடைய நினைவு நாள்... இதுவல்லவோ இயற்கையின் அத்தாட்சி...
எங்கள் இதயதெய்வமே... தாங்கள் மறையவில்லை என்பதே உண்மை... மெய்யான தங்கள் புகழ் நிரந்தரமானது... தங்கள் மெய் மட்டுமே இவ்வுலகை விட்டுச் சென்றதேயன்றி தங்கள் உள்ளமும் ஆன்மாவும் எங்களுக்குள் ஆழமாக நிலைகொண்டுள்ளது...
தங்கள் நினைவை பாரெங்கும் உள்ள ரசிக உள்ளங்கள் எப்படி அனுசரிக்கின்றனர் பாருங்கள்...
கோவை டாக்டர் ரமேஷ் பாபு அவர்களின் அஞ்சலி
http://i1146.photobucket.com/albums/...ps5ef11ac4.jpg
திருச்சி புறநகர் மாவட்ட சிவாஜி மன்றம்
http://i1146.photobucket.com/albums/...ps46280384.jpg
http://i1146.photobucket.com/albums/...ps2d012eda.jpg
அன்பு நண்பர் கோவை சேது, செந்தில் மற்றும் நண்பர்கள்
http://i1146.photobucket.com/albums/...ps28d9d574.jpg
http://i1146.photobucket.com/albums/...ps1e2abfc1.jpg
திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் நல இயக்கம்
http://i1146.photobucket.com/albums/...ps303e6945.jpg
நமது நடிகர் திலகம் இணையதளம் சார்பில் ...
http://i1146.photobucket.com/albums/...psacbfcf42.jpg
Quote:
“Sivaji was no stranger to Sri Lanka. His movies ran to packed houses in the island. Several of his films were adapted and remade in Sinhala. Substantial portions of the films ‘Pilot Premnath’ and ‘Mohanapunnagai’ starring Sivaji were shot in Sri Lankan locales with Sri Lankan artistes Malani Fonseka and Geetha Kumarasinghe in the lead female roles
Sivaji Ganesan played a wide range of characters, from god and king to commoner. Whether it was the mercurial Chola emperor Raja Raja Cholan, Lord Siva, Lord Muruga, Saivite saint Appar, Vaishnavite saint Periyaalvar or Tamil poet Ambigapathy, Sivaji was always at his scintillating best. He was equally splendid in contemporary roles and stereotypes making every performance a memorable one”
.... Read more here ....
https://scontent-a-lax.xx.fbcdn.net/...96380552_n.jpg
Reproduced from Facebook page of Tamil Nadu Congress Committee at: https://www.facebook.com/TamilnaduCo...levant_count=1Quote:
பத்திரிகைச் செய்தி :
சத்தியமூர்த்தி பவனில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவுநாள் நிகழ்ச்சி
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 13-வது நினைவு நாளினை முன்னிட்டு இன்று (21.7.2014) சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. பி.எஸ். ஞானதேசிகன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் டாக்டர் குமரி அனந்தன், பொதுச்செயலாளர்கள் ஏ.எஸ். சக்திவடிவேல், கே. சிரஞ்ஜீவி, சென்னை மாவட்டத் தலைவர்கள் ராயபுரம் மனோ, என். ரங்கபாஷ்யம் மற்றும் பெ. திருவேங்கடம், ஜி.பி. நம்பி, ஜி.ஆர்.வெங்கடேஷ், சிவாஜி மன்ற செயலாளர்கள் கு,கொண்டல்தாசன், கே. சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...43449305_n.jpg
from the facebook page of Tamil Nadu Congress Committee: https://www.facebook.com/TamilnaduCo...e=1&permPage=1Quote:
நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்
நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் நூற்றாண்டின் மிகப்பெரிய நடிகர். காங்கிரஸ் கட்சிக்கு அவர் ஆற்றிய பங்கு மகத்தானது, மறக்க முடியாதது. பெருந்தலைவர் காமராஜர் மீது அவர் வைத்து இருந்த மரியாதையும் நன்மதிப்பும் இன்றும் நினைவு கூற தக்கவை. அவரது நினைவு நாள் (21.07.2014) அவரது நினைவை போற்றுவோம்.
சிவாஜி கணேசன் அவர்கள், தென்னிந்தியாவின் ஒரு பெரிய நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். தனது குழந்தைப் பருவத்திலிருந்தே நடிப்பதில் பேரார்வம் கொண்ட அவர், அதில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர், அவர் தெலுங்கில் ஒன்பது திரைப்படங்கள், கன்னடத்தில் ஒன்று, மலையாளத்தில் இரண்டு, ஹிந்தியில் இரண்டு திரைப்படங்கள் என முன்னூறுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பிறப்பு:
சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக விழுப்புரத்தில் 1 அக்டோபர் 1927 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்.
ஆரம்பகால வாழ்க்கை
சிவாஜி கணேசன் அவர்கள், தனது இளம்வயதிலேயே நாடகங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாலும், அதில் பங்கேற்பதில் ஆர்வம் இருந்ததாலும், தனது கனவினை நிறைவேற்ற ஒன்பது வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்தார். பின்னர், அவரது சொந்த அம்மாவே நாடகக் குழுவில் இடம் பெற உதவி செய்தார். சிவாஜி கணேசன் அவர்கள், கமலா என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற மகள்களும் உள்ளனர்.
திரையுலக வாழ்க்கை:
திரையுலகுக்கு வரும் முன், நாடகங்களில் நடித்த சிவாஜி கணேசன் அவர்கள், ‘இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகம் மூலமாக மிகவும் பிரபலமானார். இதில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின், நடிப்புத் திறமையைத் தந்தைப் பெரியார் அவர்கள் பெரிதும் பாராட்டினார். அவர், அவரை ‘சிவாஜி கணேசன்’ என்றழைத்தார். இந்நிகழ்ச்சியே, அவருக்கு ‘சிவாஜி கணேசன்’ என்ற பெயரை நிலைக்கச் செய்தது.
தமிழ்த் திரையுலகில், ‘பராசக்தி’ என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் அவர்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர், இரண்டு ஹிந்தி திரைப்படங்கள், ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
அவருக்குத் தெளிவான, உணர்ச்சிப் பூர்வமான தமிழ் உச்சரிப்பும், நல்ல குரல்வளமும், சிறந்த நடிப்புத் திறனும் இருந்ததால், ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்றும் மக்களாலும், திரையுலகத்தினராலும் அழைக்கப்பட்டார்.
அக்காலத்தில், தேசத் தலைவர்களின் பத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்த முக்கிய நடிகர்களுள் ஒருவர், சிவாஜி கணேசன் அவர்கள். ‘இராஜராஜ சோழன்’ மற்றும் ‘கப்பலோட்டிய தமிழன்’ ஆகிய திரைப்படங்களே இதற்கு சான்றாகும். ‘மனோகரா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற திரைப்படங்கள், இவரின் வீர வசனத்திற்காகப் பெயர்ப் பெற்றவை. ‘பாசமலர்’, ‘வசந்த மாளிகை’ போன்ற திரைப்படங்களில் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைக் காணலாம். ‘கந்தன் கருணை’, ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ போன்ற பக்தித் திரைப்படங்களும் பெரிதும் பேசப்பட்டவை.
அரசியல் வாழ்க்கை
அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜி கணேசன் அவர்கள், 1955 வரை திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1961ல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரானார்.
விருதுகள்:
1960 – ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
1966 – பத்ம ஸ்ரீ விருது
1984 – பத்ம பூஷன் விருது
1995 – செவாலியே விருது (Chevalier)
1997 – தாதா சாகேப் பால்கே விருது
1962 – சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கௌரவிக்கப்பட்டார்.
இறப்பு
தென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்கள், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு தனது 74வது வயதில் மரணமடைந்தார்.
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...72166190_n.jpg
NFTE BSNL தொழிற்சங்கம் நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி தன்னுடைய வலைப்பதிவில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியது
அந்தப் பக்கத்திற்கான இணைப்பு
http://nftekanchipuram.blogspot.in/
http://nftekanchipuram.blogspot.in/2014/07/21.html
http://4.bp.blogspot.com/-ejrW0efVsw...vaji+stamp.jpg
BSNLEU Madurai தொழிற்சங்கம் நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி தன் வலைப்பதிவில் வெளியிட்டுள்ள செய்திக்கான இணைப்பு
http://bsnleumadurai.blogspot.in/2014/07/21.html
Sivaji's connection behind Shankar's name
courtesy: Indiaglitz website. Link: http://www.indiaglitz.com/Sivajis-co...il-news-111069Quote:
There's always an interesting story behind all our names. Our name must have been borrowed from our ancestors, world leaders, international sport persons, or it could have been derived from our parent's lost love. Some would not have concrete reason to explain why they carry a specific name.
http://i.indiaglitz.com/tamil/news/s...2972014_m1.jpg
Director Shankar went on explain the reason behind his name in an interesting manner in a recent function. He said, my mom was an ardent fan of, Chevalier Sivaji Ganesan. I was born on the day where she watched one of his movies and his character name was, Shankar. And, that is how I got the name from him. I have always wanted to make a movie with him and I wrote the dad's character in 'Kaadhalan' keeping him in my mind. But I was not sure whether that role would suffice the great actor's appetite. Though I was not able to cast him in any of my movies, I felt good by naming the Superstar starrer as 'Sivaji'.
தமிழ்த்திரையுலகின் பொற்காலம் (1960 - 1969)
தமிழ்த்திரைப்படங்கள் மகத்தான் சாதனைகள் புரிந்த இந்த காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் சாதனை பொக்கிஷங்கள்.
-------------------------------------------------------------
வெள்ளிவிழா காவியங்கள்
1) பாவ மன்னிப்பு
2) பாசமலர்
3) திருவிளையாடல்
20 வரங்களைக் கடந்த படங்கள்
1) படிக்காத மேதை
2) பாலும் பழமும்
3) சரஸ்வதி சபதம்
4) தில்லானா மோகனாம்பாள்
5) சிவந்த மண்
100 நாட்களுக்கு மேல் ஓடியவை...
மருத நாட்டு வீரன்
பார்த்தால் பசிதீரும்
ஆலயமணி
இருவர் உள்ளம்
அன்னை இல்லம்
கர்ணன்
பச்சை விளக்கு
கைகொடுத்த தெய்வம்
புதிய பறவை
நவராத்திரி
சாந்தி
மோட்டார் சுந்தரம் பிள்ளை
கந்தன் கருணை
இருமலர்கள்
ஊட்டிவரை உறவு
கலாட்டா கல்யாணம்
உயர்ந்த மனிதன்
தெய்வமகன்
(திருவருசெல்வர், என்தம்பி, திருடன் ஆகிய படங்கள் 100 நாட்கள் ஓடியதாக சொல்லப்பட்ட போதும் தெளிவான ஆதாரங்கள் இல்லாததால் சேர்க்கப்படவில்லை).
சென்னையில் நான்கு அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்...
ஆலயமணி
கைகொடுத்த தெய்வம்
நவராத்திரி
சிவந்த மண்
------------------------------------------------------------
விருதுகளும் பரிசுகளும்
1966-ல் மத்திய அரசின் 'பத்மஸ்ரீ' விருது
1961 மத்திய அரசின் சிறந்த பிராந்திய மொழிப்படம் பாவமன்னிப்பு
1961 மத்திய அரசின் சிறப்பு சான்றிதழ் கப்பலோட்டிய தமிழன்
1968 மத்திய அரசின் சிறந்த பிராந்திய மொழிப்படம் தில்லானா மோகனாம்பாள்
1968 மாநில அரசின் சிறந்த படம் உயர்ந்த மனிதன்
1968 மாநில அரசின் இரண்டாவது சிறந்த படம் தில்லானா
1969 மாநில அரசின் சிறந்த நடிகர் விருது தெய்வமகன்
1963 சிறந்த ஒருமைப்பாட்டுப் படம் ரத்தத்திலகம் (துப்பாக்கி பரிசு)
இவைபோக சினிமா ரசிகர்சங்க விருதுகள், பிலிம்பேர் விருதுகள்.
ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் சிவந்த மண்.
இந்த காலகட்டத்தில் (60-69) வெளியான 'லேண்ட்மார்க்' படங்கள்
75-வது படம் பார்த்தால் பசிதீரும்
100-வது படம் நவராத்திரி
125-வது படம் உயர்ந்த மனிதன்
(அனைத்தும் வெற்றி)
1962-ல் இந்திய கலாசார தூதுவராக அமெரிக்க பயணம். நயாகரா நகரின் கௌரவ மேயராக தங்கச்சாவி பரிசு என்பதோடு அன்றைய மேயர் என்ற முறையில் இரண்டு தீர்மானங்களில் நடிகர்திலகத்தின் கையெழுத்து.
பொற்கால தமிழ் சினிமாவின் பொற்கால சிற்பி நடிகர்திலகம்...
கார்த்திக்
பல்வேறு கோணங்களில் அலசி நடிகர் திலகத்தின் சாதனைகளைத் தொகுத்திருக்கும் தங்கள் பணி மிகவும் மன மகிழ்வூட்டுகிறது. தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
நடிகர் திலகம் செவாலியே சிவாஜி நினைவு நாளை முன்னிட்டு 21.07.2014 அன்று காலை 11.00 மணியளவில் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மாவட்ட சிவாஜி மன்ற அலுவலகத்தில் நெல்லை மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் மாவட்ட தலைவர் பா.சிவாஜி செல்வராஜன் தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர் திரு V.P. லட்சுமணன் முன்னிலையில் டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மன்ற ஆலோசகர் திரு ஆ.லெட்சுமணன், செயலாளர் திரு ந. மங்களேஷ்வரன், பொருளாளர் திரு ப.இசக்கிமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் திரு இ.மாரியப்பன், திரு ஏ.சீனிவாசன், எஸ்.சிவாஜி மாரியப்பன், கே.பி.அருணா சிவாஜி, கவி.கோ.அரவிந்தன் சர்மா, கவி.கண்மணி. ரீகன், மேலக்கரை முருகன், பத்தமடை சிவாஜி மாயாண்டி, திரு என்.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
http://i1146.photobucket.com/albums/...psf4eb9dc5.jpg
http://i1146.photobucket.com/albums/...ps102542a9.jpg
http://i1146.photobucket.com/albums/...ps99739369.jpg
http://i1146.photobucket.com/albums/...psa68bc559.jpg
http://i1146.photobucket.com/albums/...ps3c6d891f.jpg
http://i1146.photobucket.com/albums/...ps2e6cf467.jpg
http://i1146.photobucket.com/albums/...pscd111666.jpg
http://i1146.photobucket.com/albums/...psc50b6581.jpg