A Shame
[html:7a6245256a]
http://rlv.zcache.com/thats_a_shame_...32q0yk_400.jpg
[/html:7a6245256a]
Shameful acts happening.
Please share your views.
Printable View
A Shame
[html:7a6245256a]
http://rlv.zcache.com/thats_a_shame_...32q0yk_400.jpg
[/html:7a6245256a]
Shameful acts happening.
Please share your views.
continued from here: http://www.mayyam.com/hub/viewtopic....009183#2009183
Liquor worth Rs.47 crores sold in government Tasmac wine shops for New Year celebrations!
குடிமக்களை 'குடி'மக்களாக்கி அதில் வரும் வருமானத்தில் அவர்களுக்கு இலவசங்களை வளங்கும் அவலமான அரசு! :oops:
Shocked to see the murder of SI veRRivEl... There were so many people around him (include two Honoroble Ministers) witnessing him go through the pain and no one was able to save him. There was media people filiming this too ( :shock: and :sad:). The sad part is the now it seems he was murdered by mistake.
Incidents like this, law college and in Jarkhand make you wonder where India is going... :cry:
Indeed a sad incident!Quote:
Originally Posted by RC
PS: 'had first read the word "honorable" in ur post as "horrible"....which I don't feel is wrong at all!
And to add, the recent Telangana agitation issue too here....! :cry:Quote:
Incidents like this, law college and in Jarkhand make you wonder where India is going... :cry:
http://www.incubation360.com/knowled...ide-the-tunnel
:curse: :rant: :argh: :banghead: :twisted: :oops: :hammer: :cry2:
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6675
A sobering article on crimes based on love affairs in TN :-(
http://www.seanpaulkelley.com/?p=620
shocking, shameful or just plain condescending?
you decide!
:argh: Who cares if such a sniggering, indecent, empty-headed, bloated bloke set his foot in India or not! Blah-blah of the most odious kind!!! :curse: :rant: :angry2: :hammer: :twisted: Such half-baked detractors can never hinder our fast progress to the top global rank IN SPITE OF our mammoth population and problems! :2thumbsup:
Totally agree with him! Though I haven't travelled as widely as him worldwide, I've travelled enough in India (i.e. till 2003, unless things have suddenly changed enormously better after that), to totally agree with each of his statements. For e.g., I have seen the progressive deterioration of Bangalore in the matter of pollution - month after month during my visits - from 1985 to 2002. Sickening:-(Quote:
Originally Posted by NOV
Interestingly, he chose to single out Kerala (esp Calicut, the first litter free city in India) as different from rest of India. Very true!
Funnily, PP madam's reply proves one of his statements - that we Indians don't care - and instead comfortably choose to call him names :-)
May I please ask, in what?Quote:
Originally Posted by pavalamani pragasam
Cynicism has never been my trait! I'm a proud Indian at first and then a concerned citizen watching the trends of the world! Tissue paper-la thudaichittu pORavanellaam namma onnum naiyaaNdi seyya thEvaiyillai!
First of all forget about who is making such statements.
வள்ளுவர் சொல்லி இருக்கார் அல்லவா, "எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்று?
Personally I don't care who points out my problems, mistakes, errors, shortcomings (and over the years, also matured to filter out the language / tone in which such things are delivered to me). For that matter, we don't even know how this blogger looks like, eats like, lives like etc. To me, it's just a nameless entity that bothered to look at the problems / issues of a foreign nation, in comparison with others he visited.
Ultimately, if I want to improve, I need to look at things objectively and analyze things properly. Getting emotional doesn't help (rather it only hurts). That's about it!
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை! உள்நாட்டு வண்டவாளத்தை வெளிநாடுக்காரன் சொல்வதை கேட்பதற்கு உவப்பாயில்லை!
குறைகளை சுட்டிக்காட்டும்போது உவப்பாய் இருக்காது தான். அதிலும் நமது ஈகோ தட்டப்படும் போது வரும் எரிச்சலே அலாதியானது.
ஆனால், குறையை எப்படிக்களையலாம் என ஆக்கபூர்வமாகச்சிந்திப்பதை விட்டு விட்டு குற்றம் சொன்னவன் எப்படிக்கால் கழுவுகிறான் என்று குமுறுவது எப்படி முதிர்ச்சி ஆகும்?
As even an external person can easily discern, Kozhikkode (aka Calicut) is so clean. And it is only 4 hours bus journey from ukkadam (Cbe).
What stops our officials (& political bigwigs) of Cbe to go there, study and implement the methods here? And, the budget of Cbe should be a much better / comfortable one while the population / quality of people etc are not great negatives either.
Where is the will?
ஆக்கபூர்வமாக அத்தனை பேரும் சிந்தித்து ஒரு நாளில் தீராது நமது உபகண்டத்து பிரச்சினைகள்! ஆக்கபூர்வமாய் சிந்த்திக்கிறேன் என்று பிரகடனப்படுத்தத் தெரியவில்லை! இந்தியா ஒரு திறந்த களிப்பறை என்று வெள்ளைக்காரன் பல்லாண்டுகாலமாய் முகம் சுளிக்கிறான்; நானுந்தான் மேலை நாடு ஒரு திறந்த படுக்கையறை என்று முகம் சுளிக்கிறேன்!ஈயத்தை பார்த்து பித்தளை இளித்த கதையாய் இருக்கு!அநாகரிகமான விமரிசனத்தை ஏன் சகித்துக் கொள்ளவேண்டும்? அதில் கிடக்கும் உண்மைகள் பொருட்டில்லை!அவர்களுக்கு நம் பழக்கவழக்கங்கள் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் பழக்கவழக்கங்கள் எல்லாம் எங்களுக்கும் பிடிக்கவில்லை!சட்டென்று நினைவுக்கு வந்தது- களிப்பறையை விமரிசகர் சுத்தி வந்ததால்-அந்த சங்கதிதான்! தன் முதுகு தனக்கு தெரியாது! பைபிள் கூட அழகாக பழமொழி சொல்கிறது!
துரதிருஷ்டம் என்னவென்றால், உங்களை மாதிரி ஒரு சிலர் மட்டும் தான் இப்படிப்புலம்பிக்கொண்டிருக்கிறீர்கள். அரசு முதல் அடுத்த தலைமுறை வரை எல்லோரும் விழுந்து விழுந்து "அவர்களு"க்கும், "அவர்களது பழக்கவழக்கங்களு"க்கும் ரத்தினக்கம்பள வரவேற்பு அளித்துக்கொண்டிருக்கிறார்கள்! இல்லாவிட்டால் அந்த அந்நிய நாட்டான் ஏன் இங்கே அடிக்கடி வரப்போகிறான், இதைப்பற்றி எழுதப்போகிறான்? உணர்ச்சிவசம் உண்மை நிலையை மாற்றி விடாது மேடம்!Quote:
Originally Posted by pavalamani pragasam
நீங்களே மார்தட்டிக்கொள்கிற 2000த்துக்குப்பின்னான படுவேக பாரத "முன்னேற்ற"த்தில் (i.e. your "top spot" thingy) வெளிநாட்டார் / நிறுவனங்களின் பங்கும் ஆதிக்கமும் எந்த அளவு என்று உங்களுக்குத்தெரியாதா?
எவ்வளவு இளைய நாடு நம் நாடு! எத்தனை ஆழமான-மொழி, மதம், கலாசாரம், பண்டைய சரித்திரம், இயற்கை வளம்-வேறுபாடுகள் இருக்கும் ஒரு மாபெரும் கடல் போன்ற நாட்டை, இவ்வளவு மாபெரும் மக்கட்தொகையை, வழிநடத்துவது சாமான்யமா? இவ்வளவு சவால்களுடன் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு முன்னேறியிருக்கிறோம் என்பது சாதனை, மகத்தான சாதனை! ராஜபாட்டையில் பல்லாண்டு சரித்திர பலத்துடன் 'சாதிக்கும்' ஓபாமாமை மன்மோஹன் சிங் நாற்காலியில் வந்து ஒரு நாள் உட்காரச் சொல்லுங்கள்- ஓடியே போய்விடுவார் தலையை பிய்த்துக்கொண்டு!
இன்னொரு இழை தொடங்குங்கள் - அவர்களைப்போட்டுக்கிழிகிழியென்று கிழித்து விடலாம் :-)Quote:
Originally Posted by pavalamani pragasam
ஆனால் இந்த இழையின் நோக்கம் அது அல்லவே, நமது கைப்புண்ணுக்கு மருந்து என்ன என்று சிந்திப்பது தானே? (அல்லது நான் அப்படி நினைத்துக்கொண்டிருப்பது சரி இல்லையோ?)
வம்புச்சண்டைக்கு போகவில்லை, வந்த சண்டையை விடவில்லை!
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே- அவற்றை பழிப்பவரைப் பார்த்து உணர்ச்சிவசப்படாவிட்டால் மனித இயல்பில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும்!!!
இருக்கலாம். என்ன இருந்தாலும் நம்ம சிங்கம் மாதிரி யாராலும் முடியுமா?Quote:
Originally Posted by pavalamani pragasam
தன் ஊரிலேயே லட்சக்கணக்கானோர் குளிருக்குப்போர்வையில்லாமல் தெருவில் செத்து விழும்போது சுகமாகக்கட்டிலில் (துப்பாக்கி ஏந்திய நூற்றுக்கணக்கான காவலர்கள் புடைசூழ) சயனிப்பவர்களில் ஒருவர் தானே?(ஆதாரம் - பிரபுராம் அவர்கள் "Current affairs " பகுதியில் சுட்டிய இந்து நாளிதழ்).
அவர் மாதிரி அரசியல்வாதிகளின் ஸ்விஸ் வங்கிக்கணக்குகளுக்குப்பாதுகாப்புத்தரும் பணி செய்து கொண்டு வாளா இருப்பது அவ்வளவு எளிதா என்ன?
நேர்மறை சிந்தனைகள் இல்லாமல் பொழுதுக்கும் ஓட்டைகளை பூதக்கண்ணாடி மூலம் பெரிதாக்கிக் கொண்டிருப்பதில் என்ன லாபம்? இதற்கு பேர்தான் ஆக்கப்பூர்வ சிந்தனையோ?
ஏதோ கொஞ்சம் முன்னாடி தான் பைபிள் எல்லாம் மேற்கோள் காட்டியது போல் இருந்தது :-) அதே வேகத்தில் அடுத்தவன் கண்ணில் உள்ள துரும்பு எடுக்கும் வேலை செய்வது வேடிக்கை தான்:-)Quote:
Originally Posted by pavalamani pragasam
தாராளமாக உணர்ச்சி வசப்படுங்கள் - தவறாகப்பழி சொன்னால்!
உண்மை நிலை சொல்லும்போது உணர்ச்சி வசப்படுவது இயலாமையின் வெளிப்பாடே ஒழிய, பிறந்த நாட்டை மதிக்கும் செயல் கிடையாது :-)
கோயமுத்தூர்காரர்களை கோழிக்கோட்டுக்குப்போகச்சொன்னதை நீங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது.Quote:
Originally Posted by pavalamani pragasam
என்ன செய்வது, அவரவர்கள் தமக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொள்வது இந்த உலகில் புதியதல்லவே :-)
அதைத்தான் சொன்னேந் இந்த அகண்ட உபகண்டத்தில் மூலைக்கு மூலை பிரச்சினை- இருவர் கொண்ட குடும்பத்தில் ஈராயிரம் பிரச்சினை என்றால் இத்தனை கோடி பேர் உள்ள நாட்டில் பிரச்சினைகளுக்கு பஞ்சமிருக்காது- சுகமாக வீட்டில் உட்கார்ந்து கொண்டு, ஓட்டு கூட போடாமல்(பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு), வாய் வலிக்காமல் கோளாறுகளை பட்டியலிட்டுக்கொண்டிருக்காமல், ஒரு எதிர்மறை கருத்துச் சூழலை- ஐயோ எல்லாம் போச்சு, இந்த நாடு உருப்படவே உருப்படாது, வெள்ளைக்காரனை பார், நம்ம நாட்டு பரதேசிகளைப் பார், ஊழல் பெருச்சாளிகளை பார் என்று சும்மா பிதற்றுவதை விட்டுவிட்டாலே நாடு உருப்படும்!
Charity begins at home!
நல்லனவற்றை பட்டியலிடுங்கள், நல்ல முயற்ச்சிகளை பாராட்டுங்கள், ஓசையின்றி தீதினை களையும் வழிகளை தேடுங்கள். நேர்மறையான, பெருமையான, சாதிக்க ஊக்குவிக்கும் நம்பிக்கையான கருத்துச் சூழலை உருவாக்குங்கள். நாட்டில் நிறைய மஞ்சள் பத்திரிக்கைகள் இருக்கின்றன- அசிங்கங்களை அம்பலப்படுத்தி அற்ப சுகமும் அதிக லாபமும் ஈட்டிக்கொண்டு. நாமும் சேர்ந்து ஜால்றா தட்ட தேவையில்லை.
உங்களுக்குத்தெரிஞ்ச டெக்னிக்கு கொஞ்சம் சொல்லித்தந்தால் நல்லது :-)Quote:
Originally Posted by pavalamani pragasam
எனக்கு தெரிந்த ஒரே டெக்னிக்- நேர்மறை சிந்தனைகள், அணுகுமுறைகள் இவற்றை நமக்குள்ளும் வளர்த்து நம்மை சுற்றியும் வியாபிக்கச் செய்ய முயலவேண்டும். குற்றங்குறைகளை காணாமல் கண்ணை மூடிக்கொள்ள வேண்டாம். அவற்றிற்கு தேவையில்லாத, பொருந்தாத விளம்பரம் கொடுக்கவேண்டாம். நம் இளைஞர்களை தட்டிக்கொடுப்போம், விவேகானந்தரைப் போல் கர்ஜனையிட்டு ஆக்கம் செய்ய அழைப்போம்- உதயமூர்த்ய் போல் 'உன்னால் முடியும் தம்பி' என்று சொல்லிக்கொண்டேயிருப்போம். எறும்பூற கல்லும் தேயும். அவரவர் வீட்டில் ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், சுகாதாரம், நேர்மை கோட்பாடுகள், பண்பாடுகள் ஆகியவற்றை கடைபிடித்து குழந்தைகளையும் அதே பாதையில் பழக்க வேண்டும். சிறு துளி பெரு வெள்ளம். ஒவ்வொரு வீடும் உருப்பட்டால் மொத்த நாடும் உருப்படாமல் போகுமா?
பாரதியை போல் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று கதற வைக்கும்படியாகத்தான் இன்றைய சூழல் உள்ளது. ஆனால்... முயல்வோம்! A die-hard optimist!
"வெட்கக்கேடு" என்ற முதல் இழையும் (100 பக்கங்கள் ஓடியது), பின் இரண்டாவது இழையும் தொடங்கியவர் தாங்கள் தானே :-)Quote:
Originally Posted by pavalamani pragasam
NOV அவர்களிடம் சொல்லி இந்த இழைக்கு ஒரு பூட்டுப்போடச்சொல்லுங்கள் :-)
ஆயிரம் இருந்தாலும் எங்களை மாதிரி அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள் இங்கே விட்டுக்கொடுக்காமல் தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்குத்தெரியுமா?
அது மட்டுமல்ல, மென்பொருள் மற்றும் இன்ன பிற தொழில்நுட்பத்துறை இளைஞர்களால் தான் இன்று ஓரளவுக்காவது பன்னாட்டரங்கில் பாரதம் தலை கொஞ்சம் நிமிர்ந்திருக்கிறதென்பது நீங்கள் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் நிதர்சனமான விஷயம். அதற்கும் ஒரு முக்கியக்காரணம் ஆங்கில அறிவு போன்ற, பழங்காலத்து இந்தியாவுக்கு பந்தம் இல்லாத விஷயங்கள் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. ஆதலினால், தங்கள் "வெளிநாட்டவர் வெறுப்புணர்வு" நீக்கம் செய்வது நாட்டுக்கு நீங்கள் செய்யும் ஒரு சின்ன உபகாரமாக இருக்கும் :-)
நன்றி!
விரைவில் இந்த இழைக்குப்பூட்டு எதிர்பார்க்கிறேன். இல்லாவிட்டாலும், என் வாய்க்கு (இந்த இழையைப்பொறுத்த மட்டில்) பூட்டு
:-)
No shocking (ஒரு வேலை வெளிநாட்டுக்காரன் சொல்றது வேணும்னா அப்படி தோணலாம் சிலருக்கு)Quote:
Originally Posted by NOV
What he said I experience every day then why shocking?
இதனால்தான் நான் அடிக்கடி நினைப்பதுண்டு நம் நாடு ஒரு நல்ல சக்திவாய்ந்த தலைவனை பார்த்ததில்லை (காந்தி exception). இந்த நாடு குறைந்தபட்சம் இந்த அளவிற்கு (முன்னேறி!) இருக்கிறது என்றால் அதற்கு எதையும் எதிர்பாராமல் உழைக்கும் மக்கள் மட்டுமே
Yeah but Keralites move to dirty chennai and calcutta for survival! :lol:Quote:
Originally Posted by app_engine
I read somewhere indian software engineers in US tried to abuse some teenagers and got caught by the cyber crime police as well. Only software engineers could achieve this too! :lol:Quote:
Originally Posted by app_engine
a feedback on the issue:
Quote:
thank you sean paul kelley. it is a well written article. the indian media have hoodwinked their people by writing mainly glamourous issues catering to the middle class and ignoring the problem of the poor lower classes.
the bureaucrats and the media is forever obsessed about foreign nations planning or trying to undermine their nation and hence the obsession with weapons. the same can be said about the dummy generals in pakistan.
the real threat to india would come from the poor .lower classes.. already there is the violent maoist rebels active in many indian states.
actually, india can do better by focussing in providing better sanitation for its people. it is said 600 millions indians dont have access to toilets. surely, a nation that can send rockets into space can also build toilets for its people.
நமக்குள் ஒரு விழிப்புணர்ச்சியை உருவாக்க முயல்வதில் என்ன தவறு? ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களுக்கு அவற்றைப் பற்றிய தீர்வுகளுக்கு நாம் பார்த்த, கேள்விப்பட்ட வெட்கக்கேடான விஷயங்களை அலசும் இந்த திரிக்கு பூட்டு போட வேண்டிய அவசியம் ஏற்படும் என்று எனக்கு தோன்றவில்லை!Quote:
Originally Posted by app_engine
விட்டுக்கொடுக்காமல் பேசுகிறீர்கள் என்ற செய்தி மகிழ்ச்சியை தருகிறது!Quote:
Originally Posted by app_engine
'வெளிநாட்டவர் வெறுப்புணர்வு'? என்னை எவ்வளவு மிகச் சரியாக புரிந்துகொண்டுள்ளிர்கள் என்று புரிகிறது!!! என் முதிர்ச்சியே உங்களுக்கு கேள்விக்குரியதாய் இருக்கும் போது இப்படி ஒரு குற்றச்சாட்டில் அதிசயமில்லை!
இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக உருண்டை வெகுவாக சுருங்கிவிட்ட நிலையில் திரவியம் தேடி திரைகடலோடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தத்துவமே புத்திசாலித்தனமானது! ஆனாலும் அவரவர் இன, நாட்டு உணர்வினை, பற்றினை- நியாயமான, பெருமையான சங்கதி-தொலைக்கத் தேவையில்லையே? என்னவரின் கணிப்பு/ஆரூடம் என்ன தெரியுமா? வெளிநாட்டவர் பொருளும், பெருமையும் தேடி இங்கு வந்து குவியும் நாள் வெகு தூரத்தில் இல்லை!!! Yes, the tables are going to be turned one day!!!
Quote:
Originally Posted by NOV
:rotfl3: The magnificent obssession with toilets!!!
Joking apart, we are so dumb as to take tuition from our esteemed guests to set our priorities!!! :rotfl:
there are three ways to handle a issue:
1. go into a state of denial and abuse the critic
2. disagree with the criticism and give a scholarly rebuttal
3. do an introspection and work on attacking the issue
The above is not only for this issue, but for everything in our life.
You sanction all the 3 options? :roll: No poottu yet? :o