மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம
மனதை மயக்கும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம்
இரண்டாவது பாகத்தை ஆரம்பிக்கும் மிக பெரிய பொறுப்பை (குருவி தலையில் பனங்காய் போல்,கொக்கு தலையில் வெண்ணை போல் ,காக்கா தலையில் கருப்பட்டி, வாரிய கட்டைக்கு பட்டு குஞ்சலம் போல் இப்படி சொல்லிகிட்டே போகலாம் ) இந்த எல்லோருக்கும் தாசனு தாசன் கிருஷ்ணாவின் பெயரை முன் மொழிந்த .'நன்றி என்ற இந்த ஒரு சொல் எப்படி எப்போது எங்கே உபயோகிக்கப்படவேண்டும் என்பதை உணர்த்திய வாசு சார் அவர்களுக்கும் மற்றும் வழி மொழிந்த அத்துணை இனிய நெஞ்சங்களுக்கும் மேலும் போடப்படும் பதிவுகளுக்கு எல்லாம் நன்றி மற்றும் விருப்பம் தெரிவிக்கும் நெல்லை சீமையை சேர்ந்த கோபு சார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இந்த நேரத்தில் ஆருயிர் நண்பர் முரளி அவர்களை நினைவு கூர்கிறேன் .'ஹப் என்று ஒன்று உள்ளது அதில் கலந்து எழுத வாருங்கள் ' என்று 2010 வாக்கில் இந்த அமைப்பை எனக்கு அறிமுகபடுத்தியவர திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள்.
கிட்ட தட்ட 4 ஆண்டுகள் ஏனோ தானோ என்று நடிகர் திலகம்,ஸ்ரீகாந்த்,ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன் என்று பல்வேறு திரிகளில் பதிவு போட்டு கொண்டு இருந்த எனக்கு இந்த 'மனதை கவரும் மதுர கானங்கள் ' திரியையும் சொன்னவர் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் தான்.
முதல் பாகத்தின் 3 அல்லது 4வது பக்கத்தில் வாசு அவர்கள் சூரிய காந்தி திரை படத்தை பற்றி எழுதும் போது தான் அவர்கள் கூறினார்கள்
ஆகா லேசா எட்டி பாப்போம் என்று நுழைந்த எனக்கு அர்ஜுனனை அணைத்து கொண்ட அந்த கிருஷ்ணரை (வாசுதேவன்) போல் இந்த வாசுதேவன் கிருஷ்ணா என்ற அர்ஜுனரை அணைக்க 'ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சு' :) அவ்வளுவு தான்
'அர்ஜுனனுக்கு வில் ஹரிச்சந்திரனுக்கு சொல் இந்த கிருஷ்ணாவுக்கு கல் (விழ கூடாது!) :mrgreen:
முதல் பாகம் தொடங்கி கிட்டத்தட்ட 66 நாள்கள் ஆகிறது .சடார்னு முடிந்து விட்டது . அதிலும் 4வது 100 சான்சே இல்லை .வாயு (ரொம்ப (குசு)ம்பு) வேகம் மனோவேகம் என்பார்களே அது போல் . அனைத்திலும் எவ்வளவு தகவல்கள்,பாடல்கள்,நிகழ்சிகள்,படங்கள் என்று கலந்து கட்டி கிட்டத்தட்ட 62000 பார்வைகள் பெற்று உள்ள திரி என்ற தகவல் மலைக்க வைக்கிறது .
திரு நெய்வேலி வாசுதேவன் அவர்கள் மறு பிறவி திரை படத்தில் ஆரம்பித்த முதல் பாகத்தை போல் இரண்டாவது பாகத்தை
சொர்க்கத்தில் கொலு வீற்று இருக்கும்
'சிவா (ஜி) கணேச பெம்மானையும் ராமச்சந்திர மஹா பிரபுவையும் '
'முரளி ஸ்ரீனிவாசா கோபாலா பார்த்த சாரதி வாசுதேவா ' என்று எவ்வாறு அழைத்தாலும் அந்த 'என் வாசுதேவன்' என்ற பரம் பொருள் ஒன்றே என்ற பிரணவத்திற்கு பொருள் கூறிய மருகன் 'கார்த்திகேயனை ' வணங்கி குருஜி 'ராகவேந்தர்' இன் அருளாசியுடன்
உலகிற்கு எல்லாம் ஒளி தரும் அந்த 'ரவி' என்ற சூரிய பகவானையும் வணங்கி 'ராஜேஷ்'வரி என்ற சக்தி துணை கொண்டு 'வினோத'மான இந்த இழையின் 'மது ' என்ற அமிர்தத்தை பருகிட (sss அப்பா தாங்கலையே') உங்கள் அனைவரையும் 'உத்தரவின்றி உள்ளே வாருங்கள்'
என்று 'ராதா அழைக்கிறாள் காதல் கீதம் இசைகிறாள் ' போல 'கிருஷ்ணா அழைகிறேன். ராக தாள ஸ்வர ஜதி நடைகளுடன்
'எந்தரோ மகானுபாவலு அந்தரிக்கு மனு வந்தனமுலு '
உத்தரவின்றி உள்ளே வா 1970
சித்ராலயா production
இயக்கம் NC சக்கரவர்த்தி மேற்பார்வை ஸ்ரீதர்
இசை மெல்லிசை மன்னர்
குட்டி சிவாஜி (கோபால் கோபப்படமாட்டார்) ரவிசந்தர்,காஞ்சனா,நாகேஷ்,வெண்ணிற ஆடை மூர்த்தி,மாலி,தேங்காய் ஸ்ரீனிவாசன்,ரமாப்ரபா,குமரி சச்சு ,சுந்தரி பாய்,வீரராகவன் போன்றோர் நடித்து வெளிவந்த நகைச்சுவை சித்ரம்
படத்தில் வரும் வில்லன் மகாலிங்கம் (முட்டை கண்ணன்) யாரு ?
தேங்காய் நாகேஷ் ரமாப்ரபா நகைச்சுவை பெரிதும் பேசப்பட்டது .
அதிலும் 'அந்த டாக்டர் பாண்டியன் ரூட் போட்டு கண்டு பிடிக்கிறான் ' ,கண்ணே பூர்வஜென்மம் ஆண்டாள் ராமப்ரபாவிடம் டிரைவ் இன் ஹோட்டல் இல் நாகேஷ் சொல்லும் 'ஒரு தட்டில் தேனும் மறு தட்டில் திணை மாவும் கொணர்க ', 'நாதா எனக்கு அது வேண்டும் .சீ சீ அது எச்சில் வேறு வாங்கி தருகிறேன் ', 'நான் நாதன் என்றால் நீ என் நாதியா ' போன்ற வசனங்கள் மிகவும் ரசித்து பேசப்பட்டது .
ரவி, மாலி,நாகேஷ்,மூர்த்தி நால்வரும் பிரம்மச்சாரி நண்பர்கள் .அனைவரும் ரவியின் சொந்த வீட்டில் ஜாலியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஜானகி (காஞ்சனா ) என்ற பெண் அடைகலம் கேட்டு வருகிறாள் . இரவு நேரத்தில் ஒவ்வொருவாராக அவளிடம் காதல் கொண்டு கனவு காணும் காட்சியை மிக அழகாக நகைச்சுவையுடன் அமைத்து இருப்பார்கள்
முதலில் ஈஸ்வரி ஆரம்பிக்க பின்னால் அவருடன் பாடகர் திலகம் சேர்ந்து கொள்ள (நாகேஷ் பாகவதர் மேக் up அபாரமாக இருக்கும்) இறுதியில் கள்ள குரல் பாலா முடிக்க அகதளம் புரியும் பாடல். போததற்கு மெல்லிசை மன்னர் 70 களில் ஆரம்பித்த பேஸ் கிடார்,டபுள் பேந்கோஸ் ,saxophone , triumpht ,ட்ரும்ஸ்,ஷெனாய் என்று கலந்து கட்டி ஜுகல் பந்தி போல் அமைத்த பாடல் என்றால் அது மிகை ஆகாது.
பாட்டிற்கு நடுவில் மாலி கனவு காண நினைக்க காஞ்சனா அவரை சின்ன வயசில் பார்த்த சித்தப்பா என்று அழைப்பது நினைவிற்கு வர கனவு பணால் 'மாலி காலி'.காஞ்சனாவின் சிகப்பு கலர் லுங்கி மற்றும் மஞ்சள் கலர் ஜிப்பா டிரஸ் மூர்த்தி உடன் ஆரம்பிக்கும் ஜனரஞ்சக பாடல் பின்னர் பரத நாட்டிய பாடலாக மாறி நாகேஷ் பாகவதர் முன்னிலையில் அரங்கேறி இறுதியில் ரவி சல்வார் சும்மீஸ் காஞ்சனா உடன் இணையும் நவீன யுக பாடல் . இந்த பாட்டில் இருந்தே காஞ்சனா ரவியை தான் காதலிக்க போறாங்க அப்படினு ஈஸி ஆக புரிந்து விடும். மூர்த்தியுடன் பாடும் போது ஈஸ்வரி தனியாக தான் பாடுவார் ,நாகேஷுடன் பாடும் போது பாடகர் திலகம் தனியாக பாடுவார். ஆனால் இறுதியில் பாலா ஈஸ்வரி இருவரும் இணைந்து பாடுவார்கள். இயக்குனரின் திறமைக்கு ஒரு சான்று
http://s1.dmcdn.net/Coy6K.jpg
https://encrypted-tbn1.gstatic.com/i...iKq8wfWxbBDIcg
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரம் இருக்க
உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
பக்கம் வராமல் வெட்கபடாமல்
காதலி (சாக்ஸ் பின்னும் )
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
பக்கம் வராமல் வெட்கபடாமல்
நீ காதலி
அந்த புரத்தில் நண்பர் இருக்க
இந்த புரத்தில் வா வ வா
நீ வா
(இந்த இடத்தில ஈஸ்வரியின் குரலை கவனிசீங்கான 2 large பெக் அடிச்சா ஒரு ஏப்பம் வரும் பாருங்க அது மாதிரி ஒரு இழுப்பு )
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
ஆஹ் ஆஹ் அஹ
(இங்கே பாருங்க காஞ்சனா கை நாகேஷ் காது கிட்டே இருக்கும் . ஒரு வேளை நாகேஷ் காதை கிள்ளி அதனாலே இந்த ஆலாபனையா )
ஆஹ் ஆஹ் அஹ
பூமியில் மானிட ஜன்மம் எடுத்தது
காதலி உன்னை காண
ஆஹ் ஆஹ் அஹ
பூமியில் மானிட ஜன்மம் எடுத்தது
காதலி உன்னை காண
புடவையின் அழகென்ன
கூந்தலின் அளவென்ன
ஏழையை கண் பாரம்மா
அந்தரி சுந்தரி
என் முகம் பார்த்தபின்
இன்னொருவன் முகம் பாராதே
(நாகேஷ் உட்கார்ந்து சுத்தி சுத்தி ஆடுவார் பாருங்க ஆடற் கலை அரசு என்ற பட்டம் வழங்கலாம் )
அந்தரி சுந்தரி
என் முகம் பார்த்தபின்
இன்னொருவன் முகம் பாராதே
சுபஷனி மதாங்கனி
சுபஷனி மதாங்கனி
தோழர்கள் பார்வையில்
கேலிகள் ஆகுமுன்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உறவினில் ஆடவர் ஆயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
(பாடகர் திலகம் என்ன சளைச்சவரா அந்த வா என்பதை உச்சரிக்கும் போது இளமை கொப்பளிக்குமே நாகேஷ் என்ன இளைதவரா இந்த சரணம் முடிந்துடன் பின்புறத்தை ஆட்டி கொண்டு போவது)
(வந்தார் பாருங்க
கள்ள குரல் பாலா அப்படியே கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா)
கள்ளம் இல்லாத பிள்ளை நிலவை
கன்னம் தொடாமல் போவேனோ
கள்ளம் இல்லாத பிள்ளை நிலவை
கன்னம் தொடாமல் போவேனோ
கட்டி பிடித்து நெஞ்சில் அணைத்து
தன்னை மறந்து வாழ்வேனோ
கட்டி பிடித்து நெஞ்சில் அணைத்து
தன்னை மறந்து வாழ்வேனோ
மஞ்சள் முகத்தை மெல்ல பிடித்து
என்னை ரசிக்க கூடாதோ
வண்ணம் மலர்ந்து
எண்ணம் கலந்து
மின்னல் மயக்கம் கொள்ளதோ
மின்னல் மயக்கம் கொள்ளதோ
(ஒரு பேஸ் கிடார் ட்ரும்ஸ் பீட் வாராதோ இந்த இசை மீண்டும்.கேட்கமாட்டோமோ மீண்டும் ஒரு முறை )
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரம் இருக்க
உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம்
இந்த திரை படத்தின் ஒவ்வொரு பாடலுமே தேன் தான்
நண்பர்கள் அனைவரும் இத்திரை படத்தின் மற்றைய பாடல்களையும் அலச வேண்டும் என தாழ்மையுடன் தோழமையுடன் வேண்டி கேட்டு கொள்கிறேன்
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் யாமொன்றும் அறியேன் பராபரமே என்ற தாயுமானவரின் வரிகளுக்கேற்ப எல்லோரும் எல்லா இன்பமும் பெற்று வாழ்க வளமுடன் என்று வந்தவர்களை வாழ்த்தும் மற்றவர்களை வரவேற்கும்
என்றும் நட்புடன்
கிருஷ்ணா
http://www.dailymotion.com/video/x15...971_shortfilms