srividya- passed away
Printable View
srividya- passed away
rest in piece sridivya. Its very sad 2 hear abt her death so sudden. Shes such a brilliant acteress. Let her soul rest in piece.
Take care
from usha
Here is a Tamilian lady (her mother was a great Carnatic vocalist) who is most loved by Mallus, many Mallus still think of her as a Mallu. Condolences to her immediate family, friends and the film industry.
her mother was ML vasanthakumariQuote:
Originally Posted by Braandan
பழம்பெரும் நடிகர் நம்பியாரின் ஆத்மா சாந்தி அடைய ...
மகாபாரதம் தொடரை தயாரித்த பி.ஆர்.சோப்ரா மரணம்
*மிக அ*திக ம*க்களா*ல் பா*ர்*க்க*ப்ப*ட்ட தொட*ர் எ*ன்ற புக*ழை*ப் பெ*ற்ற மகாபாரத*ம் (டிடி*யி*ல் ஒ*ளிபர*ப்பானது) தொடரை தயா*ரி*த்த *பி.ஆ*ர். சோ*ப்ரா மரணமடை*ந்தா*ர்.
இந்தி சினிமா உலகின் பழம்பெரும் தயாரிப்பாளரு*ம், இயக்குனரு*ம் ஆன பி.ஆர்.சோப்ரா மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94.
கடந்த சில காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த அவரது உ*யி*ர் நே*ற்று காலை *பி*ரி*ந்தது. அவருக்கு ரவி சோப்ரா என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
பெரும் பொருட்செலவில் இந்தியில் தயாரிக்கப்பட்டு, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பரபரப்பாக ஒளிபரப்பாகிய `மகாபாரதம்' *தொலை*க்கா*ட்*சி*த் தொட*ர் தயாரித்தவரும் இவர்தான். சமூக சிந்தனையுள்ள பல சினிமாக்களை தயாரித்து, இயக்கி பரபரப்பு ஏற்படுத்தியவர் பி.ஆர்.சோப்ரா
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர்களில் மிகச்சிறந்த நடிகராக கருதப்படும் நாகேஷ் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 76. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் நாகேஷ் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
----------
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்
நன்றி -- தினமணிQuote:
ஓமக்குச்சி நரசிம்மன் மரணம்
சென்னை, மார். 12: பிரபல நகைச்சுவை நடிகர் "ஓமக்குச்சி நரசிம்மன்' சென்னையில் புதன்கிழமை காலமானர். அவருக்கு வயது 73.
ஓமக்குகுச்சி நரசிம்மனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும், விஜயலட்சுமி, நிர்மலா, சங்கீதா என்ற 3 மகள்களும், காமேஸ்வரன் என்ற மகனும், 3 பேத்திகளும், ஒரு பேரனும் உள்ளனர்.
சிறிது காலமாக தொண்டை புற்று நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் சில நாட்களாக மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார். இதையடுத்து திருவல்லிகேணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் புதன்கிழமை இறந்தார்.
இதையடுத்து அவரது உடல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நரசிம்மன்: திருச்சியை பூர்விகமாக கொண்ட நரசிம்மன் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது 13-வது வயதில் "அவ்வையார்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்பு கும்பகோணத்தில் பள்ளிப் படிப்பை முடித்து எல்.ஐ.சி.யில் வேலைப் பார்த்து வந்தார்.
பின்பு நடிப்பின் மீது இருந்த தீராத காதலினால் நடிகர் சுருளிராஜன் உதவியுடன் 1969ல் "திருக்கல்யாணம்' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார்.
அதை தொடர்ந்து சென்னையில் செயல்பட்டு வந்த "நாடக மந்திர்' நாடக சபாவில் சேர்ந்து 100-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தார். அப்போது அரங்கேற்றப்பட்ட "நாரதரும் நான்கு கடவுள்களும்' என்ற நாடகத்தில் அவரது "ஓமக்குச்சி' எனும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பின்பு ரசிகர்களால் "ஓமக்குச்சி நரசிம்மன்' என அழைக்கப்பட்டார். பின்பு அந்த பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக நடித்த படம் "தலைநகரம்'.
ஓமக்குச்சி நரசிம்மனின் 2-வது மகள் நிர்மலா அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் சனிக்கிழமை காலை சென்னை வந்த பிறகு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.
heartfelt condolence
நன்றி -- தினமணிQuote:
திரைப்பட கதாசிரியர் காலமானார்
சென்னை, மார்ச் 5: பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகரும் கதாசிரியருமான கோவை கதிரொளி (83) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை இரவு காலமானார்.
மறைந்த கதிரொளி "தெய்வம் பேசுமா', "அன்னையின் ஆணை', "முக்கனிகள்' உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். எம்.ஆர்.ராதா நடித்த "நாகமலை அழகி' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
அவருக்கு ரோஸி என்ற மனைவி, கே.ஆர்.செல்வராஜ் என்ற மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். ரோஸி பழம்பெரும் நாடக நடிகை. இயக்குநரும் நடிகருமான கே.ஆர்.செல்வராஜ், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைச் செயலாளராக இருக்கிறார்.
ஆழ்ந்த அனுதாபங்கள்