Nadigar Thilagam Sivaji Ganesan Part 12
அன்புள்ள நண்பர்களே,
உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.
உலகின் ஒப்பற்ற கலைஞராம், கலைத்தாயின் மூத்த மகனாம் (ஏன், அவரே கலைமகளின் அவதாரம் என்றும் சொல்லலாம்), நடிகர் திலகத்தின் பன்னிரெண்டாவது திரியைத் துவக்கி வைக்குமாறு பணித்த திரு . முரளி அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள். அதனை வழி மொழிந்த திருவாளர்கள். ராமஜெயம் மற்றும் கோபால் அவர்களுக்கும் அலைபேசியில் அழைத்து ஊக்குவித்த திரு. ராகவேந்திரன் அவர்களும் என் பணிவான நன்றிகள். என்னை என்.டி.ஆரோ என்று கலாய்த்த திரு. கிருபாவுக்கும் நன்றிகள் பல!
(கலைக்கடவுளைப் பற்றி எழுதும் நேரத்தில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் இன்று பணியிலிருந்து விடை பெற்று விட்டார்.)
பாடல்கள் என்று இல்லாமல், நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியும் (இருபது படங்கள்) ஆரம்பத்தில் எழுதியிருக்கிறேன். இனியும் எழுதுவேன். (திரு. கோபால் கவனிக்க...).
இந்நேரத்தில் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். தயவு செய்து இனியும் சிறு சிறு சண்டைகள் இடாமல், அனைவரும் தங்களின் அற்புதப் பதிவுகளை தயை கூர்ந்து தந்து கொண்டே இருங்கள். நாமும் மகிழ்ந்து, மற்றவரையும் மகிழ்விப்போம். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நடிகர் திலகத்தின் பொருட்டு, வேற்றுமைகளைக் களைந்து மீண்டும் வருவீர்கள் என்பதில் (திரு. பம்மலார் உட்பட!).
நன்றியுடன்,
இரா. பார்த்தசாரதி
http://1.bp.blogspot.com/-Xdor4bPK4x.../75years21.jpg