நிலவே முகம் காட்டு...!!!!
/after admiring the pics by madhuppappaa... am following the footsteps :bow:
My third attempt, en karppanai kuthirai odikondirukkiradhu :lol2:
idhu semma mokkaiyaana kadhai... spoiler alert...!!!!!!!!! :bow: /
நல்ல பௌர்ணமி இரவு...
ச்சிக்குமா இந்தா ஒரு வாய் சாப்டிட்டு தூங்குவியாம்... கவிநயா தன் மகள் ரோஜாவுக்கு பால்சாதம் ஊட்டிக்கொண்டிருந்தாள்...
விண்டோ வழியே தெரிந்த நிலாவைப் பார்த்து, மம்மி அந்த நிலவுக்கு அந்த பக்கம் என்னமா இருக்கும்... என்று தன் கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்தாள் ரோஜா...
அங்க ஒரு நிலாராஜா இருக்கானாம்...
'நிலாரஜாவா..ஆ..ஆ.' என்று கண்கள் விரிய கேட்டாள் ரோஜா...
ம்ம்ம்ம் ஆமாண்டி கண்ணு, நிலாராஜா, தன்னோட நிலாராணிக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கானாம்...!!!!!!!
யாரு மம்மி அந்த நிலாராணி ...
நீதாண்டி கண்ணு...
'நானா..ஆ..ஆ..ஆ..' என்று குதித்தாள் ரோஜா...
கவி night shift போனும் dinner செஞ்சியா இல்லையா.. கூவினான் ஸ்ரீஷன்...ம்ம்ம்ம் வந்துட்டேன்... நீ படுத்துப்பியாம் அம்மா இப்போ வந்திடறேன் என்ன...
அந்த machine-இல் இரண்டு மாத்திரையை போட்டு சிறிது தண்ணீரை ஊற்றினாள், அந்த பச்சை button-ஐ அழுத்தினாள், ஐந்தே நிமடத்தில் 'பொலக்'கென்ற சத்தத்துடன் இரண்டு இட்லி வந்து விழுந்தது...
நிலாவைப் பார்த்துக்கொண்டே இருந்தாள் இந்த குட்டி நிலா... பார்த்துக் கொண்டே இருக்கையில் நிலாவில் ஒரு முகம் தெரிந்து மறையே, ரோஜா ஆச்சர்யத்தில் ஆழ்ந்தாள்...
மம்மி மம்மி கம் ஹியர் மம்மி நிலாராஜா தெரியறான்...
என்னடி சொல்றா அவ,
ஒன்னும் இல்ல சும்மா கதை சொல்லிட்டு இருந்தேன்,
ஏண்டி நவ் இட் இஸ் 2312, இந்த காலத்திலும் நிலாகதைலாம் சொல்லிட்டு என்ன இதெல்லாம்... டெல் சம்திங் இண்டரஸ்டிங்...
இதெல்லாம் செய்யணும் ஸ்ரீ, எவ்ளோ வருஷம் ஆனா என்ன, kids has to enjoy certain things இல்லையா... என்று புன்னகைத்து 'நீ கெளம்பு இப்போ' என்று கணவனை வழியனுப்பினாள் கவி...
அடுத்தடுத்த நாட்களில் நிலாவுடன் பேசிக்கொண்டே தூங்கினாள் ரோஜா...
மெல்ல நிலா மறைய தொடங்க, ரோஜா, 'அம்மா என்னமா நிலா குட்டி ஆகிட்டே இருக்கு என்று சோகமாய் கேட்டாள்...
ஒன்னும் இல்லடி கண்ணு, நிலாராஜா, நிலாராணிக்கு... என்று ஆரம்பிக்க
'எனக்காம்மா..' என்று எதிர்ப்பார்ப்புடன் கேட்டாள் ரோஜா
'ஹஹஹஹா... ஆமா ஆமா உனக்கு தான்...' என்று தலைய வருடிவிட்டு... 'உனக்கு நெறையா jewellery, dress-லாம் வாங்கிட்டு வர அடிக்கடி out of station போய்டுவான், தூரமா போக போக சின்னதா தெரிவான்...' என்று சமாதனம் கூறினாள் கவி...
'ஓ ஹோ...சீக்கிரம் வர சொல்லுமா நிலாராஜாவ'
'சரி சரி.. sleep now.. என்று iMusic-இல் ஒரு மெலடி ஸாங் போட்டு விட', அழகாய் தூங்கினாள் ரோஜா...
அன்று இரவு நிலாவை பார்க்க வந்த ரோஜா, 'மம்மி, ஹோ நோ மம்மி' என்று அலற... என்னவோ ஏதோ என்று பதறிக்கொண்டு வந்தாள் கவி, 'என்னடி ஆச்சு'...
'நிலாராஜாவ காணும் மம்மி...' என்றவுடன்,,
இன்னிக்கு அம்மாவாசை-ஓ அதான் என்று யோசித்துவிட்டு,
ஹோ அதுவா, நிலாராஜா உன் கூட hide and seek விளையாடுறான்... நீ வேணா பாரு இன்னும் கொஞ்ச நாள்ல நீயே கண்டுபிடிப்ப...
சொல்லிவைத்தாற்போல் அதுவும் நடந்தது... வளர்பிறையும் ஆரம்பிக்க, 'அம்மா நான் கண்டுபுடிச்சிட்டேன் பாரு' என்று வெற்றிப்புன்னகையுடன் கூறினாள் ரோஜா...
இப்படியே நிலவை ரசித்தே வளர்ந்தாள் ரோஜா...
இப்பொழுது இருவது வயது, நிலாராஜா இன்னும் அவள் மனதில் ஒளிவீசிக்கொண்டுதான் இருந்தான்...
தோழி பூஜா, 'ஏண்டி ஏதோ சின்ன வயசுல நிலாராஜா அப்படின்னு கதை சொல்லியிருகாங்க உங்க மாம், இன்னும் நிலாராஜானு ஒருத்தன் வருவான் உன்ன அங்க கூட்டிட்டு போவான்னு 2327la சொல்லுறது, கொஞ்சம் too much-ஆ இல்ல' என்றாள்...
பூஜா, logicaa யோசிச்சா நீ சொல்றது கரெக்ட், பட் இப்படி யோசிச்சு பாரு, இங்க நாம இருக்கறப்போ, நிலவுக்கு அந்த பக்கம் யாராச்சும் இருக்க மாட்டாங்களா என்ன ... and NASA has proved the existence of living things there.... பூஜாவால் பதில் சொல்ல முடியவில்லை தான்...!!!!!!!!!!!!!!!