-
http://uploads.tapatalk-cdn.com/2016...5bf1a07610.jpg
ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ் நடித்து வரும் படம் எங்கிட்ட மோதாதே.
இந்தப் படம் 1985ல் நடக்கிற கதை.
இந்த படத்தில் மறைந்து போன கட்அவுட் கலாச்சாரம் கதையின் மைய பகுதி. ரஜினி, கமலுக்கு விதவிதமான கட்அவுட்கள் தயார் செய்து அதனை படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் பிரபுவின் 60 அடி உயர கட்அவுட்டும் வைத்து படமாக்கி இருக்கிறார்கள். கதை நடக்கும் காலத்தில்தில் குரு சிஷ்யன் படம் வெளிவருவதால் அவரது கட்அவுட்டும் இடம்பெறுகிறது.
-
இளையதிலகத்தின் பட வரிசை
88.ஆயுள் கைதி
28.06.81
http://uploads.tapatalk-cdn.com/2016...883d5e0307.jpg
இளையதிலகம் பிரபு. ரேவதி.ஜெய்கணேஷ்.கவுண்டமணி,
லிவிங்ஸ்டன் மற்றும் பலர்
சின்னத்தம்பிவெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போது ரிலீசான அடுத்த படம் .சின்னத்தம்பி பாத்திரம் மக்களின் மனதில் இருந்து
அகலாத நிலையில் அடிதடி+ முரட்டு கேரக்டரில் பிரபு செய்த படம்.பட பூஜையன்று வெளியான ஆயுள் கைதி என்ற டைட்டிலும் அதன் இயக்குனர் கலியுகம் இயக்குனர் சுபாஷ் என்ற அறிவிப்புமே படத்தை மிக அதிகமாக எதிர்பார்க்க வைத்தது.
சுபாஷ் இப்படத்தை இயக்கிக் கொண்டே வாக்குமுலம் என்ற புதியபடத்தை புதியவர்களை வைத்து இயக்குவதாகவும் அறிவிப்பு செய்தார்.ஒரே நேரத்தில் அவர் செய்த இரட்டைச் சவாரி பலனை கொடுக்கவில்லை.
பிரபு ரேவதி பாடும் பாடலொன்று ஒரே ஷாட்டில் படம் பிடிக்கப்பட்டது.
-
-
-
89.கிழக்கு கரை
20.09.81.
http://uploads.tapatalk-cdn.com/2016...2968c7e944.jpg
பிரபு *வாசு கூட்டணியில் மீண்டும் ஒரு வெற்றிப்படம்.
தந்தைவிஜயகுமார் ஒரு தாதாவிடம் தான் வேலை செய்கிறார் என்பதை அறியும் பிரபு அதிலிருந்து வெளிவர கூறுகிறார்.அவர் வெளியில் சென்றால் தன் கடத்தல் ரகசியங்கள் வெளிவரும் என்பதால் அவரை கொன்று விடுகிறான்.அவனை பழிவாங்க முடிவெடுக்கிறார் பிரபு.அவனை அவன் பாதையிலேயே சென்று பழி வாங்கினால்தான் முடியும் என்று தானும் ஒரு தாதாவாகிறார்.அவன் செய்யும் கடத்தல் செயல்களை முறியடித்து இறுதியில் அவனை கொல்வதே படத்தின் சுருக்க கதை.
சின்னத்தம்பியின் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே இப்படம் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியாகி வெற்றியும் பெற்றது.
சின்னத்தம்பி ரிலீஸ் 14.04.91.சின்னத்தம்பி வெள்ளிவிழாவை நோக்கி டிக்கொண்டிருக்க இப்படம்.ஐந்தே மாதங்களில் ரிலீஸ்.இதுவும் 100 நாள் படம்.
பாடல்கள்.
எனக்கென பிறந்தவ
நந்தவனம் இந்த மனம்
சன்னதி வாசலில் வந்தது பூந்தேரு
சிலுசிலுவென காத்து
இடியோசைகள் கேட்கட்டும்
-
-
-
இளையதிலகத்தின் பட வரிசை
90.தாலாட்டு கேட்குதம்மா
05.11.91
http://uploads.tapatalk-cdn.com/2016...f3c0ea39b4.jpg
சிறப்பும்,பெருமையும் படைத்த சிவாஜி புரொடோக்ஷன்ஸின் தரமான தயாரிப்பு.
இளையதிலகம்.,கனகா, வடிவுக்கரசி, கவுண்டமணி.,செந்தில், மற்றும் பலர் நடித்தது.
இசை.இளையராஜா
இயக்கம்.ராஜ்கபூர்(முதல் படம்)
கதைச் சுருக்கம்.
முறைப்பெண் கனகாவை மணம் முடிக்கிறார் பிரபு.தாய்மையடைந்த பெண் ஒருவர் பிரசவத்தின் போது படும் அவஸ்தையையும், அதன்பின் அப்பெண்இறப்பதையும் பார்க்கிறார் கனகா.அச் சம்பவம் அவரை பெரிதும் பாதிக்கிறது.தானும் தாய்மையடைந்தால் இறந்து விடுவோம் என்ற மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்.கணவனான பிரபுவை நெருங்க விட மறுக்கிறார்.அதனால் தனக்கும் ஒரு வாரிசு இல்லாமல் போய் விடுமோ என்ற சோகத்தில் நாட்களை தள்ளுகிறார் பிரபு.பொறுத்துப் போகும் பிரபு ஒரு நாள் பலவந்தத்தினால் கனகாவுடன் உறவு கொள்கிறார்.அதன் விளைவாய் அவர் கர்ப்பமாகிறார்.கடைசியில் குழந்தை ஒன்றை ஈன்றெடுப்பதுடன் தாயும், சேயும் நலமுடன் இருக்கின்றனர்.தாய்மையின் சிறப்பை அப்போது அவர் உணர்கிறார்.
சற்று கடினமான கதை. அதை கொடுத்த விதம் மிக சிறப்பு.பிரபு என்ற ஹீரோ கதை நாயகனாக தன் பாத்திரத்தை கச்சிதமாக செய்த படம்.ஆனாலும் கமர்ஷியலாக வழக்கமான ஆடல் பாடல்களும் குறைவில்லாமல் செய்த படம்.
பாடல்களும் நன்றாக அமைந்திருந்தன.
சுட்டி சுட்டி பெண்ணுக்கு,
நேர்ந்துகிட்ட நேர்த்திக்கடன்,
அண்ணணுக்கு அண்ணண்மாரே,
அம்மா என்னும் வார்த்தைதான்,
எல்லாமே சூப்பர்ஹிட்.
ஹீரோசிய படைப்பை யோசிக்காமல் பெண்ணின் தாய்மையை பறைசாற்றும் கதையை மையப்படுத்தி எடுக்க துணிந்த சிவாஜி புரொடொக்ஷன்ஸ், கதை நாயகன் பிரபுவை வெகுவாக பாராட்ட வேண்டும்.அருமையான திரைக்கதை அமைப்பு,பிண்ணனி இசை.,எடிட்டிங், நடிப்பு என்று எல்லாம் சிறப்பாக அமையப் பெற்ற படம்.
பாடல்கள் சிறப்பாக இருந்த போதிலும் படத்தின் திரைக்கதை.இயக்கமே படத்தை ஓட வைத்தது.
தளபதி, குணா ஆகிய படங்கள் போட்டிக்கு இருந்த போதிலும் அவற்றையும் தாண்டி ஜெயித்த படம்.
-
-