சூப்பர் சிங்கர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த வார சூப்பர்சிங்கர் நிகழ்ச்சி, மற்றொரு தகுதிச் சுற்றாக அமையும். போட்டியில் கலந்து கொள்ளும் பாடகர்களுக்கு பின்னணி பாடகர்கள் மனோ, சித்ராவுடன் இணைந்து பாடும் அரிய வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இந்த சுற்றில் இருக்கும் அஜீஷ், விஜய் நாராயணன், ரஞ்சித், பிரசன்னா, ரவி, ராகினி ஸ்ரீ, ரஞ்சினி, ரேணு ஆகியோரே நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வரும் சித்ரா மற்றும் மனோவுடன் சேர்ந்து பாடும் வாய்ப்பை பெற்றவர்கள்.
இந்த சுற்றில் மனோ, சித்ரா இருவருக்கும் பிடித்த பாடகருக்கு சிறப்பு பரிசும் உண்டு.
பின்னணி பாடகர்களான சுஜாதா மற்றும் ஸ்ரீநிவாஸ் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை திங்கள் முதல் புதன் வரை தினமும் இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் காணலாம்.