Quote:
என்னோட வரப்பிரசாதமே இசைஞானி இளையராஜாதான். முதல் படத்தில் இருந்தே என்னோட எல்லா படங்களையும் பாடல்கள் சூப்பர் ஹிட்டா இருக்கும். அதுக்கு காரணம் இளையராஜா சார்தான்.
...
...
இப்ப என் மகனும் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சுட்டான். இதுல ஒரு ஆச்சர்யமான விசேஷம் என்னன்னா… 1985 சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சார் தயாரிப்பாளர், மணிரத்னத்தின் முதல் படம், இசைஞானி இளையராஜாவின் இசை. அது ரொம்ப ஹிட் கூட்டணியா இருந்தது. அடுத்தடுத்து நிறைய ஹிட் படங்கள்ல இந்த கூட்டணி தொடர்ந்தது. இப்ப என் மகன் நடிச்சிருக்குற பானா காத்தாடி படத்தை தயாரிச்சிருக்கிறதும் சத்யஜோதி பிலிம்ஸ்தான். தியாகராஜன் சாரோட வாரிசுகள்தான் செந்தில் தியாகராஜன் – அர்ஜூன்தான் தயாரிப்பாளர். இளையராஜா சாரின் வாரிசு யுவன்ஷங்கர் ராஜாதான் இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியா இருக்கிறது.
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இதயம் படத்தில் இடம்பெற்ற பொட்டு வெச்ச வட்ட நிலா பாட்டுதான். அந்த பாட்டை எத்தனை த*டவை கேட்டாலும் சலிக்காது. உன்*மையான காதலை சொல்ல முடியாமல் தவிக்கிற தவிப்பை நல்லா சொல்லுற பாட்டு.