100% unmai. idhai patri naan ezhudhirundhEn. enna oru relief, piragu :rotfl2:Quote:
Originally Posted by saradhaa_sn
Printable View
100% unmai. idhai patri naan ezhudhirundhEn. enna oru relief, piragu :rotfl2:Quote:
Originally Posted by saradhaa_sn
:bow:Quote:
Originally Posted by saradhaa_sn
ini naan :shhh: :D
NOV,Quote:
Originally Posted by NOV
1971 -ல் வந்த முக்கியமான படங்களை விட்டு விட்டீர்களே
சவாலே சமாளி
தேனும் பாலும்
மூன்று தெய்வங்கள்
பாபு
1971 -ல் முதல் பாதி (ஜூன் வரை) மட்டும் தான் கணக்கில் எடுத்து கொண்டீர்களா? ஏன் என்றால் நான் சொன்ன படங்கள் எல்லாம் ஜூலைக்கு பிறகு வெளிவந்தது.
பிரபா,
சவாலே சமாளி அருமையான படம். ராஜ் டிவி-யில் அடிக்கடி போடுவார்கள். முடிந்தால் VCD/DVDயில் பாருங்கள். பார்த்து விட்டு அதை பற்றி சொல்லுங்கள்.(இப்படித்தான் எங்கிருந்தோ வந்தாள் பற்றி நிறைய கேட்டு விட்டு படம் பார்த்து விட்டு ஒன்றுமே சொல்லாமல் இருந்து விட்டீர்கள். அது போல இல்லாமல் இருக்கட்டும்). அறிவாளி பொதிகையில் 2,3 முறை வந்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.
அன்புடன்
இன்று மாலை பொதிகையில் புதிய பறவை. கடைசி 1 மணி நேரம் பார்த்தேன். வழக்கம் போல் ஒரு காட்சி கூட அலுப்படைய வைக்காமல் ரசித்து பார்க்க முடிந்தது, இன்று பார்க்கும் போது வேறு சில சிறப்புகள் தென்பட்டன. (நடிகர் திலகத்தின் படங்களை பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் புதிய புதிய விஷயங்கள் தென்பட்டு நம்மை வியக்க வைக்கும்).
உடல் மொழி என சொல்லப்படும் அவரது Body Language. நான் இன்று பார்க்க ஆரம்பிக்கும் போது கருத்த ( இரண்டு நாள் தாடியுடன்) முகம். அதில் தெரியும் வேதனை, அனுபவிக்கும் சித்ரவதையின் வெளிப்பாடு. அந்த வேதனையை மறக்க உட்கார்ந்து பியானோ வாசிக்க, அசரீரி போல் ஒலிக்கும் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல். வாசிப்பதை நிறுத்தாமல், முகத்தை திருப்பாமல் ஆனால் அதே சமயம் அந்த முகத்தில் தான் எத்தனை பாவம்? தன் உள்ளத்திலே குடி கொண்டிருக்கும் பாடல், ஆனால் எப்படி இந்த பாடல் இவளுக்கு தெரியும் என்ற கேள்வி, அதை நினைத்து ஆச்சர்யம், அதிர்ச்சி இவை எல்லாம் அந்த முகத்தில் வெளிப்படும் விதம்!
தன் மனைவியின் அண்ணன் வரும் செய்தியை சொல்லும் சரோஜாதேவியிடம் எந்த விதமான reaction-ம் இல்லாமல் கேட்பது, அந்த நேரத்தில் கேட்கும் கோபால் என்ற குரல், அது அவருள்ளில் ஏற்படுத்தும் உணர்வு, ராஜு என்று மெல்லிய குரலில் சொல்லி விட்டு, அதையே உரத்த குரலில் (தன் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்க போகிறது என்ற மகிழ்ச்சியில்) சொல்வது. அந்த மகிழ்ச்சி அற்ப ஆயுளில் முடிந்து போக ராஜு! You Fool என்று சொல்லும் ஏளனம்,இப்படி ஏராளம்.
அதே கிளைமாக்ஸ் காட்சியில், அவர் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கும் போது அதில் ஒரு புதிய கோணம் தென்பட்டது. அந்த நிகழ்வுகள் அனைத்தும் திரையில் ஓடி கொண்டிருக்க, பின்னணியில் நடிகர் திலகத்தின் குரல். அதை பார்க்கும் போது ஒரு எண்ணம். இந்த காட்சிகளுக்கான வசனம் முன்னமே எழுதப்பட்டதா? இல்லை படமாக்கப்பட்ட பிறகு எழுதியதா? எப்படி இருந்தாலும் நடிகர் திலகம் அதை dubbing -ல் தான் பேசியிருக்க வேண்டும். அப்படி பார்க்கும் போது அந்த முக பாவங்கள், பின்னணியில் ஒலிக்கும் வசனங்களுக்கு ஏற்ப மாறும் உணர்வுகள், உதாரணமாக ரயில்வே கேட்-ல் காத்திருக்கும் போது வரும் வசனம் "அப்போது என் மனதில் ஒரு மின்னல் அடித்தது". அந்த வசனம் வரும் போது அந்த கண்களில் தென்படும் ஒரு ஒளி, முடிவு எடுக்கும் முக பாவம்! எப்படி அந்த வசனம் பேசப்படுவதற்கு முன்பே அதை அவரால் காட்சியாக்க முடிந்தது? அந்த ஐந்து நிமிடம் வரும் காட்சிகள் அனைத்தையும் இப்படி அலசலாம். அதுதான் நடிகர் திலகம்.
முத்தாய்பாக ஒரு எண்ணம் மீண்டும் உறுதிப்பட்டது. ஆயிரம் நடிகர்கள் வரலாம். ஆனால் ஒரே ஒரு நடிகர் திலகம் மட்டும் தான் இருக்க முடியும்.
அன்புடன்
புதிய பறவை தாக்கத்தில் இதை மறந்து விட்டேன். இன்று மதியம் வசந்த் டி.வி-யில் சிறிது நேரம் கந்தன் கருணை பார்த்தேன். சூரனோடு போர் புரியும் காட்சிகள் மற்றும் வெற்றி வேல் பாடல்.
அந்த வெற்றிவேல் வீர வேல் நடை! எப்படி இவருக்கு மட்டும் இப்படி வித விதமான நடைகள் சாத்தியப்படுகின்றன? ஒவ்வொரு கதாபாத்திரதிற்க்கும் வேறு வேறு விதமான நடை. ஆனால் அனைத்தும் அலங்காரமான கம்பீரமான நடைகள். ஒன்று போல் ஒன்று இருக்காது. ஆனால் ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒரு ரிதம்.
மறுபடியும் சொன்னால் நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.
அன்புடன்
டியர் முரளி,Quote:
Originally Posted by Murali Srinivas
பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள். குறிப்பாக ஒவ்வொரு படமும் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒவ்வொரு புதிய பரிணாமம் வெளிப்படும். எப்பேர்ப்பட்ட கருத்தினை மிகவும் அழகாக விளக்கியிருக்கிறர்கள் என்பதற்கு ஒரு சான்று. பிறந்த நாள் காட்சி. வாசலில் மனைவிக்காக கவலையுடன் காத்திருக்கிறார் கோபால். அப்போது கூட, விருந்தினர்களை கவனிப்பதில் தவறவில்லை. இந்த காட்சியில் வாசலில் கோபால் நிற்கும் போது வருகின்ற மூன்று தம்பதிகளை கவனித்தேன் - அவர்களை கோபால் வரவேற்பதையும் கவனித்தேன். முதலில் வருபவர்கள் உள்ளூர் மலேசியா தம்பதி - அவர்களை வரவேர்கும் போது சிங்கப்பூர் முறையில் வணக்கம் செலுத்துவார். அடுத்து ஒரு தமிழ் தம்பதி - அவர்களுக்கு தமிழ் கலாச்சார முறைப்படி வணக்கம் - அடுத்து வருவது ஒரு இஸ்லாமிய தம்பதி - அவர்களுக்கு அவர்கள் முறையில் வணக்கம் - இந்த ஒரு காட்சியே போதும் - முரளி சொன்னது போல் -
ஒரே ஒரு நடிகர் திலகம் மட்டும் தான் இருக்க முடியும்.
ராகவேந்திரன்.
பிறவி நடிகன் :DQuote:
Originally Posted by Murali Srinivas
Sorry Murali. SaradhavOda vimarsanaththilirundhu eduththa padangal avai. :)Quote:
Originally Posted by Murali Srinivas
சுமதி என் சுந்தரி பற்றிய கட்டுரையாதலால், அந்தப்படம் வெளியானபோது ஓடிக்கொண்டிருந்த படங்களை மட்டும் (ஒப்பீட்டுக்காக) குறிப்பிட்டிருந்தேன்.Quote:
Originally Posted by NOV
மற்றபடி முரளி அண்ணா சொன்ன நல்ல படங்கள், அதன்பின்னர் வந்தவை. அந்த ஆண்டில் அதிகம் பேசப்படாத இரு நல்ல படங்கள் அருணோதயம் மற்றும் தேனும் பாலும்.
1971ல் நடிகர்திலகத்தின் ஜோடிகள்:
இருதுருவம் : பத்மினி
தங்கைக்காக : 'வெண்ணிற ஆடை' நிர்மலா
அருணோதயம் : சரோஜாதேவி
குலமா குணமா : பத்மினி
பிராப்தம் : சாவித்திரி
சுமதி என் சுந்தரி : ஜெயலலிதா
சவாலே சமாளி : ஜெயலலிதா
தேனும் பாலும் : பத்மினி, சரோஜாதேவி
மூன்று தெய்வங்கள் : (ஜோடியில்லை)
பாபு : விஜயஸ்ரீ (பத்து நிமிடம் மட்டும்)
இதில் சுவாரஸ்யம், அந்த ஆண்டு ஒரு படத்தில் கூட கே.ஆர்.விஜயா இல்லை.
அது மட்டுமல்ல, அடுத்த ஆண்டு வெளியான ராஜா, ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, தர்மம் எங்கே, த்வப்புதல்வன், வசந்த மாளிகை, நீதி... படங்களில் 'தவப்புதல்வனில் மட்டுமே கே.ஆர்.விஜயா நடித்திருந்தார்.
Saw " Kungumam" in DVD. Well, it was a big disappointment for an hardcore NT fan like me. :( :roll:
Only good thing in the movie, apart from NT is the evergreen song. Rangarao gave a cool & casual performance.
NT could have avoided this film.