http://i67.tinypic.com/148en0w.jpg
Printable View
இரங்கல் செய்தி .
---------------------------
மறைந்த திரு.ராஜ்குமார் (இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் ) அவர்களின் அன்பு தாயார் திருமதி பொன்னம்மாள் , 83 வயது , அவர்கள் இன்று (24/3/18)காலை , சென்னையை அடுத்த அச்சரப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்கிற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் .
அன்னாரது பூத உடல் நாளை (25/3/18) காலை அச்சரப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் தகவல் அளித்துள்ளனர் .
திரு.ராஜ்குமார் அவர்களின் தாயார் ஆன்மா சாந்தி அடைய இறைவன் அருள் புரியட்டும் . அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்துக் கொள்கிறோம் .
ஆர். லோகநாதன் ,
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .
மக்கள் திலகம் அன்பு இதயங்கள் மறைந்த திரு முனியப்பா அவர் தம் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... மற்றும் மறைந்த திரு ராஜ்குமார் தாயார் இழப்புக்கு வருத்தத்துடன் இரங்கல் கூறுகிறோம்...
வசூல் திலகம், மக்கள் திலகம் " எங்க வீட்டுப் பிள்ளை" தற்போது தஞ்சை - திருவள்ளுவர் dts வெற்றி நடை போடுகிறார்...
21/3/18 தினமலர்
http://i67.tinypic.com/dg2w00.jpg
25/3/18 தினத்தந்தி
http://i63.tinypic.com/2i2al4l.jpg
26/3/18 தமிழ் இந்து
http://i64.tinypic.com/352q2wh.jpg
http://i68.tinypic.com/22mfd3.jpg
சென்னை ஆல்பட் அரங்கில் நேற்று (25/3/18) மாலை காட்சியில் கொண்டாட்டங்கள் அரங்கேறின . மாலை 4 மணி முதல் பக்தர்கள் அரங்கிற்கு வர ஆரம்பித்தனர் .
பல்வே று எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் வைத்திருந்த பேனர்களுக்கு மலர்மாலைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன .பேண்ட் வாத்திய குழுவினர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள் இசைத்த வண்ணம் இருந்தனர் . புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். பட பாடல்கள் ஒலிபெருக்கி மூலம் ஒலித்த வண்ணம் இருந்தன .
மாலை 5.30 மணியில் இருந்து 6.15 வரை (மேட்னி காட்சி முடிந்து பார்வையாளர்கள் வெளிவரும் நேரம் வரை ) இடைவிடாமல், சரவெடிகளும், வான வெடிகளும் வெடிக்கப்பட்டன. வான வேடிக்கைகளும் நிகழ்ந்தன .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர்களுக்கு பல்வேறு அமைப்புகள், 108 தேங்காய்கள் உடைத்து , கற்பூர ஆரத்தி ,எடுத்து பாலபிஷேகம் ,செய்தனர் .புரட்சி தலைவர் புகழ் ஓங்குக என்று பக்தர்கள் விண்ணதிர முழக்கம் இட்டனர் . மாலை காட்சியை சுமார் 1000 நபர்கள் கண்டுகளித்தனர் . தியேட்டர்கள் மூடல், தயாரிப்பாளர் சங்கம் பிரச்னை, புதிய திரைப்படங்கள் வெளிவருவதில் தடங்கல், போன்ற பல விஷயங்களுக்கு நடுவில் தமிழகம் முழுவதும் நினைத்ததை முடிப்பவன், ரிக்ஷாக்காரன், அடிமைப்பெண் ,எங்க வீட்டு பிள்ளை , நாடோடி மன்னன் ,போன்ற படங்கள் நூற்றுக்கணக்கான அரங்குகளில் திரைக்கு வந்து தியேட்டர் அதிபர்களுக்கு ,கைகொடுத்து அமுதசுரபியாக திகழ்கின்றன 60 ஆண்டுகட்கு முன்பு வெளியான நாடோடி மன்னன் ,வைரவிழா கொண்டாடும் வேளையில் மீண்டும் வெளியாகி சாதனை புரிந்து வருகிறது .
25/3/18 ஞாயிறு மேட்னி, மாலை காட்சிகள் வசூல் மட்டும் ஆல்பட் அரங்கில்
ரூ.1,40,000/- ஈட்டியுள்ளதாக அரங்கத்தினர் தெரிவித்துள்ளனர் .
பல்வேறு பிரச்னைகள் காரணமாக பார்வையாளர்கள் கூட்டம் அரங்கிற்கு வருவது
வெகுவாக குறைந்திருக்கும் வேளையில் ஞாயிறு மாலை காட்சியில் 1000 நபர்கள்
வந்திருந்தது , வேடிக்கை, வினோதம், ஆச்சர்யம் ,மகிழ்ச்சியும் கூட என்றும்
புரட்சி தலைவர் படத்திற்கு தான் இந்த மவுசு உள்ளது என்றும் அரங்க மேலாளர்
தெரிவித்தார் .
இன்று (26/3/18) தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு அவர்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் .
இன்று போல் என்றும் எல்லா நலமும், வளமும் பெற்று ,புரட்சி தலைவர் புகழ்
சேர்க்கும் பணியை தொடர்ந்து செய்திட பல்லாண்டு வாழ்க .
http://i65.tinypic.com/2yv6n7t.jpg
ஆர்.லோகநாதன் ,
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .