உதவியாளர்களுடன் பேதமில்லாமல் பழகும் இளையதிலகம்
http://uploads.tapatalk-cdn.com/2016...bd9c725225.jpg
Printable View
உதவியாளர்களுடன் பேதமில்லாமல் பழகும் இளையதிலகம்
http://uploads.tapatalk-cdn.com/2016...bd9c725225.jpg
தந்தையுடன்சபரிமலை யாத்திரை
http://uploads.tapatalk-cdn.com/2016...edfdcde06a.jpg
இளையதிலகத்தின் பட வரிசை
http://uploads.tapatalk-cdn.com/2016...e138cc9a4a.jpg
69.பிள்ளைக்காக
04.03.89
என் தங்கச்சி படிச்சவ வெற்றியை அடுத்து,வாசு இயக்கிய அதிரடி படம்
"பிள்ளைக்காக"
கடமை தவறாத காவல் அதிகாரியின் கதை.சமூக விரோதிகளால் அவருடைய மனைவி கொல்லப்படுகிறாள்.
கொலைப்பழியும் அவர் மீது விழுகிறது.அதிலிருந்து தப்பி எதிரிகளை பழி தீர்ப்பதுதான் படத்தின் மையக் கரு.
பாடல்கள்
1.மழலையின் மொழியினில் அழகிய தமிழ் படித்தேன்
அருமையான பாடல் இது.
2.இனிய வசந்தமே வா வா.
பிரபு, கௌதமி பாடும் டூயட் பாடல்.
3.உன் அன்னை நான்.என் பிள்ளை நீ
குழந்தைப் பேறு இல்லாத கணவன் மனைவி மனசாந்தி கொள்வதாக எழுதப்பட்ட பாடல்.
படம் விறுவிறுப்பாக சென்றாலும் திரைக்கதையில் நேர்த்தி குறைவு என்பதால் படம் மிகுந்த வரவேற்பை அடையவில்லை.
இளையதிலகத்தின் பட வரிசை
70.நினைவுச்சின்னம்
05.05.89
இசை இளையராஜா
ஒளிப்பதிவு .ராஜராஜன்
இயக்கம்.அனுமோகன்
http://uploads.tapatalk-cdn.com/2016...d0fed947fb.jpg
கதை.
ஊரின் தலையாய மனிதர் ராசப்ப கவுண்டர்.அவரை மீறி எந்த சமூக விரோத செயல்களை யாராலும் அந்தஊரில் செய்யமுடியாது.அதை மீறி யாராவது செய்தால் அவர்களின் தோலை உரித்து விடுவார் உரித்து.ஆனாலும் மனிதர் சாதாரணர்களுக்கு கூட தோழர் போன்றவர்தான்.உதவி செய்வதிலும் வெள்ளை மனம் கொண்டவர்.ராசப்ப கவுண்டரின் மனைவியும் அவர் குணம் போல்தான்.மானப்பற்று கொண்டவள்.
ஊருக்கு நாட்டாமை பெரியபண்ணை என்றுவேறு ஒருவர் இருந்தாலும் ராசப்ப கவுண்டர் சொல்லுக்குத்தான் மரியாதை.கவுண்டரை ஒழிக்க சமயம் பார்த்துக் கொண்டிருப்பவர்.
அந்த ஊருக்கு புதிய இடமாறுதல் காரணமாக இன்ஸ்பெக்டர் ஒருவர் வருகிறார்.அநியாய விரும்பி.அதிகாரத்தை கொண்டு எந்த வழியிலும் செல்ல துணிந்தவன்.
ராசப்ப கவுண்டருக்கு இருக்கும் புகழையும் பணத்தையும் கண்டு பொறாமை கொள்கிறான்.அவர் இருக்கும் வரை தன் ராஜ்ஜியம் பூஜ்யம்தான் என்று எண்ணி அவரை கவிழ்க்க சமயம் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.இன்ஷ்பெக்டரும் பெரியபண்ணையும் பெரியசதி செய்து கவுண்டரை கவிழ்க்க கூட்டு சேர்கின்றனர்.
கவுண்டரின் தோட்டத்திற்குள்சாராய பானைகளை புதைத்து வைத்து போலி சாட்சியங்களை உருவாக்கி கவுண்டரை கைது செய்கிறான்.
கவுண்டரின் மனைவி தனியாக இருக்கும் சமயம் பார்த்துபெரியபண்ணை, கவுண்டரின் மனைவியை சந்தித்து ஆறுதல் சொல்வது போல் நடித்து வீட்டிற்கு வெளியே வந்து ஊர் மக்கள் முன்னிலையில் கவுண்டரின்
மனைவியின் கற்புக்கு களங்கம் சேர்க்கின்றான்.அவமானம் தாங்காமலும்,தன் கற்புக்கு பங்கம் ஏற்பட்டமையாலும் அவள் ஊரார் பார்வையில் தற்கொலை செய்து கொள்கிறாள்.
கவுண்டர் மேல் மதிப்பு வைத்துள்ள ஏட்டு ஒருவர் கவுண்டரை சிறையிலிருந்து விடுவித்து நடந்தவைகளை கூறுகிறார்.
இடி.
மின்னல்.
மழை.
ரோடு முழுவதும் மழை வெள்ளம்.
அந்த ரோட்டில்
அநாதையாக அரை உயிர் போன நிலையில் கவுண்டரின் மனைவி.இதைப் பார்க்கும் கவுண்டருக்கு எப்படி இருக்கும்?
சாகும் நிலையில் ,
தன் கற்பை ஊர் பேச வைக்கும் வேண்டும் என்று சொல்லி கவுண்டரின் மனைவி உயிர் விடுகிறாள்.
கவுண்டரின் ஆவேசம் அவரையும் மீறி விடுகிற செயலாகி விடுகிறது.மூன்று அடிக்கு குறையாத வீச்சரிவாள கையில்.இன்ஸ்பெக்டரின் வீட்டுக்கு செல்கிறார்.கதவை உடைக்கிறார். அதிகமான பின்புல வெளிச்சத்தில் சரியாக உருவம்தெரியாதநிலையில் இன்ஷ்பெக்டர் என்ன ஏதென்று முழிக்க ,எழுந்த அடுத்த நொடி தலை தனியாக தெறித்து விழுகிறது. ஒரே ஒரு வீச்சுதான். அதுவும் இடது கையால் .ஒரு சத்தம் கூட போட முடியவில்லை.முக்கல் இல்லை. முனகல் இல்லை .அடுத்ததாக பெரியபண்ணையை தேடி அலைகிறார்.பெரிய பண்ணை தப்பிப் போகும் அவசரத்தில் தன் குழந்தைக்கு பதிலாக கவுண்டரின் பெண் குழந்தையை எடுத்துச் சென்று விடுகிறான்.பெரிய பண்ணையின் குழந்தை கவுண்டர் கைக்கு வருகிறது..
20 வருஷம் ஆச்சு.
அந்தக் குழந்தைய தேடி அவன் அப்பன் வருவான். அப்ப ரெண்டு பேரையும் வெட்டித் தள்ளலாம்னு
அவனை பலியாடு போல் வளர்த்து வந்திருக்கிறார் .
ஊரும் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வருகிறது.போலீஸ் ஸ்டேசனும் இப்ப இல்ல.இப்படியே காலத்தை ஓட்டிட்டு வருகிறார் கவுண்டர். இப்ப அவர் ராசப்ப கவுண்டர் இல்ல.முட்டிக்கால் ராசா.ஜிப்பா,முட்டிக்கால் அளவுக்கு வேட்டி.
ஆடை கறுப்பு இல்லை, வெள்ளை.
கடைசியில் பெரியபண்ணை வந்தானா?
என்ன ஆச்சு?
இந்தப்படத்தையெல்லாம் நேரில் பார்த்துதான் ரசிக்க வேண்டும்.
நினைவுச்சின்னம்.
இளையதிலகம் பிரபு...
http://uploads.tapatalk-cdn.com/2016...67c2f7dffb.jpg
இளையதிலகத்திற்கென ஸ்பெசலாக உருவாக்கப்பட்டதோ இந்தக் கேரக்டர்.
"ராசப்பகவுண்டர் என்கிற முட்டிக்கால்ராசா"
என்ன ஒரு பெர்மான்ஸ்
நடிப்பில்,நடையில்,பேச்சில்.
அங்கஅசைவுகளில்.
ஆக்ரோசத்தை உடம்பு முழுவதும் தேக்கி வைத்திருந்து அதை வெளியில் காட்டிக் கொள்ளாமலும்,ஆனால் விழிகளிலும்,சின்ன சின்ன அசைவுகளிலும் வெளிப்படுத்தி மனிதர் தான் நடிப்பில் இளையதிலகம் என்பதை நிரூபித்திருப்பார்.
ராசப்ப கவுண்டர் பாத்திரமோ கலக்கல்.குடையை சட்டை பின் காலருக்குள் மாட்டி நடந்து வருவது ,
மேளம் கொட்ட காண்பிக்கும்அபிநயம், பஞ்சாயத்தில் இன்ஸ்பெக்டரை மிரட்டுவதும்,ராதிகா இறக்கும்போது அழும் அழுகை,இன்ஸ்பெக்டரை வெட்டிக்கொல்லும் காட்சியில் காட்டுப் ஆவேசம் என்று எல்லா காட்சிகளும் சூப்பரோ சூப்பர்.
முட்டிக்கால் ராசா:
அடிக்கடி தலையை வெட்டி முடியை சிலுப்பி பார்ப்பதும்,எல்லா வகை பேச்சுகளையும் அமைதியாக பார்வையில் எந்த சலனத்தையும் காட்டாமல் பேசுவதும்,ஜிப்பா வேட்டி உடையில் கம்பீரமாக நடந்து செல்வதும்,என்று புதிய நடிப்பு உத்தியை கையாண்டிருப்பார்.ஆச்சரியமான நடிப்பு.
அந்த தொங்குபால சண்டை அமர்க்களம்.
ஸ்லோமோசனில் பாலத்தில் அவர் ஓடிவருவதை காண்பிப்பது அழகு.
"நினைவுச்சின்னம்."
எந்தக்காட்சியும் அலுப்புத் தட்டாத நினைவுகள்.
இசை:
இளையராஜா பி.ஜி.எம். மில் அசத்தியிருப்பார்.அந்த டைட்டில் டிரேக்கே அட்டகாசமாக ஆரம்பிக்கும்.புல்லாங்குழல் இசையில் ஆரம்பித்து இடையில் தூரத்தில் கிராம த்தை காண்பிக்கும் போது அதிரடிக்கு மாறும் வித்தியாசமான இசை சேர்ப்புகள்.
அப்புறம் அந்த செண்டைமேள அடி.
ராதிகா தற்கொலை செய்யும் காட்சியில் பிண்ணனி இசை பிரமாண்டம்.
படம் முழுவதும் பிண்ணனி இசையில்
இளையராஜா மாயம் செய்த படம் இது.
சூப்பர் பாடல்கள்.
நினைவுச்சின்னம்
Yele Ilangiliye En Aasai Paingiliye | Tamil Song …: http://youtu.be/iAbOJ1wF5sY
Vaigasi Maasuthala | Tamil Song | Ninaivu Chinnam…: http://youtu.be/O_Nny-KXGos
Ninaivu Chinnam Tamil Film song 4: https://youtu.be/6YGpI5W9XRo