கலைவேந்தன் புகழ்பாட காவேரி கண்ணனே வருக! வெல்க!!
Printable View
கலைவேந்தன் புகழ்பாட காவேரி கண்ணனே வருக! வெல்க!!
நன்றி ஜோ அவர்களே..
நீங்கள், சாரதா, பம்மலார், முரளி ஸ்ரீனிவாஸ் மற்றும் நம் நண்பர்கள் இங்கே கட்டிவரும் மெய்நிகர் கலைக்கோயிலை சில நாட்களாய் தினம் தரிசித்து வருகிறேன்.
பதிந்து பலநாள் கழித்து இன்றுதான் பதிய அனுமதி கிடைத்தது.
சித்ராவில் புதிய பறவை, மேகலாவில் தில்லானா மோகனாம்பாள், பாண்டியனின் கீழ்வானம் சிவக்கும், சாந்தியில் முதல் மரியாதை, கிரவுனில் வெள்ளை ரோஜா, கபாலியில் நீலவானம், பாரத்தில் என்னைப்போல் ஒருவன், நடராஜாவில் நீலவானம், அசோக்கில் வடிவுக்கு வளைகாப்பு - என நாலாபக்கமும் ஓடித் தேடி அடைந்த 80 -களின் நினைவுகள் முழுதாய் மீட்டெடுத்தேன்.
என் பல பரிமாணங்கள் நீங்கள் ஒவ்வொருவரும் பதிவதாய், பரிமாறுவதாய் பரகாயப்பிரவேச பரவசம் எனக்குள்.
நல்ல இடம் நான் வந்த இடம்..
காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு
மரகதம் படத்தின் முகப்பில் ஒலிக்கும் இப்பாடல் வரிகளுக்கேற்ப காவிரிக் கர்ணனாய் நடிகர் திலகத்தினைப் பற்றிய நினைவுகளையும் எண்ணங்களையும் அள்ளித் தரவந்திருக்கும் காவிரிக்கண்ணன் அவர்களுக்கு நமது அனைவர் சார்பிலும் உளமார்ந்த வாழ்த்துக்கள். திக்கெட்டும் திரிந்தலைந்து திரும்புகின்ற திசையெல்லாம் அவர் திருவுருவத்தை மட்டும் காட்சியாய்க் கண்டு ரசித்த பல கோடிக் கண்களில் இரண்டு கண்களுக்கு சொந்தக்காரனான உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்வுறுகிறோம்.
வருக வருக வருக
ராகவேந்திரன்
மதிப்புக்குரிய ராகவேந்திரா அவர்களே..
உங்கள் இரசனை என்னும் மேரு முன் நான் சிறு மண்மேடு.. அவ்வளவே..
நடிகர்மன்னினின் திரைக்காவியங்கள் காட்டப்பெறும் இடங்கள் நமக்கு தலங்கள்.
அவரைச் சிலாகித்து மகிழ்வது நம் மதம்..
இளையவயதின் சக்தியை ஒரு கலைக்கோட்டில் பயணிக்கவைத்த கலாச்சார இயக்கம் நம் நடிப்பின் தலைவர்.
படம் தொடங்குமுன், இடைவேளைகளில் -
சக மதத்தவருடன் ஆராதிக்கும் சேதிகளைப் பகிரவே பலமுறை விஜயம்...
நம்மைவிடவும் நுணுக்கமாய் நடிப்பரசரை ரசிப்பவரைக் கண்டால், உடன் நட்பு, நெருக்கம், மதிப்பு..
காட்சிகளின்போது அரங்கத்தவர் எப்படி இரசிக்கிறார்கள் என அவதானிப்பதே நம் விழிகளுக்கு முதல் பொறுப்பு...
உங்களைப் போன்றோரை அணுகவைத்த இத்திரிக்கு நன்றி..
அன்பு நண்பர் காவிரிக் கண்ணன் அவர்களே,
நம் அனைவரையும் ஒரு சேர சங்கமிக்க வைத்துள்ள இத்திரிக்கு நாம் அனைவருமே நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். நம் அனைவரின் உள்ளத்தையும் பிரதிபலித்துள்ள தங்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.
வசந்த் தொலைக்காட்சி சிங்கத்தமிழன் சிவாஜி நிகழ்ச்சியில் இவ்வாரம் மனோ - பாடகர் அல்ல - மனோகர் - நடிகர் திலகத்தின் மூத்த சகோதரர் அவர்க்ளின் புதல்வன் - இவ்வாரம் பங்கு பெறுவார் எனத் தெரிகிறது. வசந்த் தொலைக்காட்சியின் முன்னோட்டத்தில் அவர் பேச்சைக் காட்டும் போது, நடிகர் திலகத்தின் கொடைத்தன்மை மற்றும் உதவும் மனப்பான்மையைப் பற்றிய தகவல்கள் இடம் பெறும் எனத் தெரிகிறது.
காத்திருப்போம், புதன் வரை.
ராகவேந்திரன்
நேற்றுதான் குறிப்பிட்டேன். நமது திரிக்கு பல புதிய பரிமாணங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்று. அதை மேலும் உறுதிப்படுத்தும் வண்ணம் நண்பர் காவேரிக் கண்ணன் வருகை புரிந்திருக்கிறார். திரிக்கு புதியவர் ஆனால் அவரது எழுத்துக்களைப் பார்த்தால் மிகுந்த அனுபவம் உடையவர் என்பது புரிகிறது. அவரே சொன்னது போல் நல்ல இடம் நீங்கள் வந்த இடம். உங்கள் பதிவுகளால் இந்த திரிக்கு மேலும் மெருகூட்டுங்கள்.
அன்புடன்
கலைக்குரிசிலின் திரி என்னும் இக்கடலில், காவிரியாய், கண்ணனாய் மொத்தத்தில் காவேரிக் கண்ணனாய் கலக்க வந்திருக்கும் திரு.காவேரிக் கண்ணன் அவர்களே, வருக! வருக! தங்களின் வரவு நற்றமிழின் நல்வரவு!
நடிகர் திலகத்தின் நிரந்தர ரசிகரே, தங்களின் பயணம்,
புதுமைத் திலகத்துக்கு புதுவெள்ளம் பாய்ச்ச காவிரியாய்ப் பிரவாகிக்கும்!
வான்புகழ் வேந்தருக்கு வெண்சாமரம் வீச கண்ணனாய் விஸ்வரூபமெடுக்கும்!
பார்த்து படித்து மகிழப் போகும் நாங்களோ பாக்கியசாலிகள்!
பாசப்பெருக்கில்,
பம்மலார்.
நடிகர்திலகத்தின் புகழ்பரப்பும் இத்திரியின் இன்னொரு வைரமாய் வந்திருக்கும் காவேரிக்கண்ணன் அவர்களே, வருக.
உங்களின் ஆரம்பப்பதிவுகளே, இனிவரும் பதிவுகளின் சுவைக்கு கட்டியம் கூறுவதாய் அமைந்துள்ளன. குறிப்பாக 80-களின் காலகட்டத்தில் நீங்கள் அலைந்தோடி பார்த்து மகிழ்ந்த படங்கள் மற்றும் அரங்குகளின் பட்டியல் அக்கால நினைவுகளுக்கு அள்ளிச்செல்கிறது.
முரளி, பம்மலார், ராகவேந்தர், ஜோ, மோகன் (ரங்கன்), செந்தில், ராகேஷ், பாலா போன்ற இத்திரியின் ஜாம்பவான்கள் வரிசையில் நீங்களும் இடம்பெறப்போவது தெள்ளத்தெளிவு. நடிகர்திலகத்தின் காவியப்படங்களுடனான உங்கள் அனுபவங்களை அழகுற அள்ளித்தெளியுங்கள். அனுபவித்து மகிழ காத்திருக்கிறோம்.
ஆஹா! வாங்க வாங்க! வந்து ஜோதியில் ஐக்கியமாய்டுங்க. :)Quote:
Originally Posted by kaveri kannan
திரைப்படம் மட்டும் இன்றி, ஓவியம், எழுத்து, மேடைப்பேச்சு என பன்முகப் படைப்பாளியாக திகழுபவர் திரு. சிவகுமார்.... "என்னை முழுவதுமாக ஆட்கொண்ட தேவகுமாரன் சிவாஜி தான்" இப்படி துவங்குகிறார் - ராணி வார இதழில் அவர் எழுதி வரும் உங்களோடு பேசுகிறேன் என்ற கட்டுரையில்.
அவர் முதல் மூன்று முறை சிவாஜியை சந்தித்த சம்பவங்களை விளக்குகிறார். ராயப்பேட்டையில் சிவாஜி இருந்த ( தற்போது இது சிவாஜி பிலிம்ஸ் அலுவலகம் என்று நினைக்கிறேன்) வீட்டில் முதல் சந்திப்பு. " சிவாஜியை பார்த்த அந்த நொடிகளில் உணர்ச்சி குவியலாகிப் போனேன். பார்ப்பவர்க்ளை ஊடுருவும் அழகிய லேசர் கண்கள், அம்சமான சின்ன உதடுகள், நேர்த்தியான நீண்ட மூக்கு - பசி மறந்து பார்த்துக் கொண்டே இருக்கலாம்" என்கிறார் திரு. சிவகுமார் . சிவகுமார் வரைந்த "உத்தமபுத்திரன்" பட சிவாஜி ஓவியத்தைப் பார்த்து பாராட்டிய சிவாஜி மோகன் ஆர்ட்சில் வேலைக்கு சேர சொல்லி சிபாரிசு செய்கிறார். ஓரு வருடம் அங்கே பேனர் ஆர்டிஸ்ட் ஆக வேலை பார்த்துள்ளார் சிவகுமார்.
இரண்டாவது சந்திப்பு, கோவை மாதம்பட்டியில் கல்யாணியின் கணவன் பட ஷூட்டிங்கின் போது.
மூன்றாவது சந்திப்பு மோட்டார் சுந்தரம் பிள்ளை படப்பிடிப்பில். " அந்த படப்பிடிப்பு தளத்தில் சிவாஜியை பார்க்கும் போது அசந்து விட்டேன். கால் மேல் கால் போட்டு அவர் அமர்ந்து பேசிய பாவனை அவ்வளவு அற்புதமாக இருந்தது... அடடா.. ஒரு மனிதன் பிறக்கும் போதே இத்தனை ஸ்டைல் ஆக பிறக்க முடியுமா? என்று எண்ணத் தோன்றியது" என வியக்கிறார் திரு. சிவகுமார்.
பட்ப்பிடிப்பு தளத்தில்.....
"என்னை உங்களுக்கு நினைவு இருக்கா?. நான் தான் சிவகுமார். ஓடையகுளம் கண்ணு மச்சானுடன் உங்களை ராயப்பேட்டை வீட்டில் சந்தித்து இருக்கேன்"
" ஓ அப்படியா!. சாரிப்பா, எனக்கு நினைவு இல்லை. வெரி புவர் மெமரி" என்கிறார் சிவாஜி.
சிறிது மனம் வருந்தும் திரு.சிவகுமார், பின்பு பெரிய நடிகன் ஆன பிறகு கோவை ரயில் நிலையத்தில் தன்னை பத்து வருடம் முன்பு ஒரே ஒரு முறை பார்த்த ஒருவர் "என்னை நினைவு இருக்கிறதா?" என்று கேட்டதைப் பற்றியும், தான் நினைவுக்கு வராமல் தவித்ததை பற்றியும் சொல்கிறார்.
அப்போதுதான் மோட்டார் சுந்தரம் பிள்ளை படப்பிடிப்பில், சிவாஜியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனான நான் (சிவகுமார்) "என்னை நினைவு இருக்கா?" என்று அவரிடம் சர்வ சாதரணமாக கேட்டதையும், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதையும் உணர்ந்தேன், என்று சொல்கிறார்.
உண்மையில் சிவாஜி போல நினைவாற்றல் கொண்ட ஒரு நடிகனை காணவே முடியாது. காட்சி, வசனங்கள் தேவையற்ற எதையுமெ அவர் நினைவு வைத்துக் கொள்வதில்லை. அதனால் தான் கடைசி வரை அந்த கம்பீரம் குறையாமல் சினிமவில் அவரால் வலம் வர முடிந்திருக்கிறது" என்கிறார் சிவகுமார்.
சிவாஜியின் நுட்பமான நினைவாற்றலுக்கு ஒரு சம்பவதை அடுத வாரம் ( இது ஒரு தொடர்) எழுதுவதாக கூறி முடித்து உள்ளார் திரு. சிவகுமார்.