-
திரு.தெனாலி ராஜன் சார்.
தாங்கள் பணி ஓய்வு பெற்றதற்கு வாழ்த்துக்கள். தங்களின் ஓய்வு காலம் தலைவர் புகழை மேலும் தாங்கள் தீவிரமாக பாட வழிவகுத்து உங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் மன நிறைவும் கிடைக்க வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
Yukesh Babu
‘நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி....’
சமீபத்தில் படித்த செய்தி ஒன்று மனதை உலுக்கியது. சேலம் அருகே ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம், ஒரு கொள்ளை வழக்கில் அவரது கணவருக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதை அறிந்தோ என்னவோ, அந்த பெண்ணின் கணவரும் தலைமறைவாக இருந்தார். அக்கம்பக்கத்தாரின் இழிசொல் பொறுக்க முடியாமல், கணவரால் ஏற்பட்ட அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அந்தப் பெண்.
இதில், கொடுமை அந்தப் பெண்ணுக்கு 2 பெண் குழந்தைகள். ஒரு குழந்தைக்கு 2 வயது, இன்னொரு குழந்தைக்கு 4 வயது. விஷயம் அறிந்து 5 நாட்களுக்கு முன் தனது வீட்டுக்கு நள்ளிரவில் வந்திருக்கிறான் தலைமறைவாக இருந்த ஆசாமி. வந்தவன், தனது இருகுழந்தைகளுடன் விளையாடிவிட்டு குளிர்பானத்தில் குழந்தைகளுக்கு விஷத்தை கலந்து கொடுத்து அவர்களை கொன்று விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.
உண்மையில் தனது பெண் குழந்தைகள் மீது அவனுக்கு அளவற்ற பாசம் இருந்திருக்கிறது. அதனால்தான், தாயும் தந்தையும் இல்லாமல் ஆதரவின்றி இரு குழந்தைகளும் கஷ்டப்படக் கூடாது என்று நினைத்தவன் அவர்களையும் தன்னோடு அழைத்துக் கொண்டு போய்விட்டான். குடும்பத் தலைவன் தவறான வழியில் சென்றதால் ஒரு குடும்பமே அழிந்திருக்கிறது.
மானத்துக்கும் நல்லோர் பழிக்கும் செயல்களுக்கும் அஞ்சியிருந்தால் அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் இந்த நிலையே வந்திருக்காது.
தலைவர் நடித்த அரசிளங்குமரி நமக்கு எல்லாருக்குமே பிடித்த படம். அவரது வாள் வீச்சுக்காகவே பலமுறை பார்த்திருக்கிறேன். (எத்தனை முறை என்று நினைவில்லை. தலைவர் படத்தை கணக்கு வைத்துக் கொண்டெல்லாம் பார்ப்பது தப்பு)
பாட்டுக்கோட்டையாக விளங்கிய பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளில், இசைமேதை திரு.ஜி.ராமநாதன் அவர்களின் இசையில் பாடகர் திலகத்தின் குரலில் ‘சின்னப் பயலே, சின்னப் பயலே சேதி கேளடா...’ காலத்தை வென்று நிற்கும் பாடல். கையில் குழந்தையை வைத்துக் கொண்டு அதற்கு புத்தி சொல்வது போல அமைந்திருக்கும் பாடலுக்கு தலைவர் அனாயாசமாக பாடி நடித்திருப்பார்.
போட்டியில் தன் தந்தை தோற்றதால் பறிக்கப்பட்ட அவரது வாளை மகனாக வரும் தலைவர் மீட்டு இழந்த பெருமையை மீட்பதாக கதை. தந்தையால் இழந்த குடும்ப மானத்தை மீட்க வேண்டும் என்று தீவிரமாக இருப்பதால், படம் முழுவதும் தலைவரின் தன்மான உணர்ச்சி சற்று மேலோங்கியே இருக்கும். அந்தக் காட்சிகளையும் பாத்திரத்தின் தன்மையையும் உணர்ந்து சிறப்பாக நடித்திருப்பார் தலைவர். இந்தப் பாடலின் வரியிலும் அது எதிரொலிக்கும்.
‘நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி
உன் நரம்போடுதான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி...’
சின்னக் குழந்தைக்கு தலைவர் அறிவுரை கூறுவது போல பாடல் அமைந்திருந்தாலும் பெரியவர்களுக்கும் அந்த அறிவுரைகள் பொருத்தமானதாகத்தான் இருக்கும்.
திருடாதே படத்தில் ‘திருடாதே பாப்பா... திருடாதே’ பாடலில், ‘வறுமை நிலைக்கு பயந்து விடாதே, திறமை இருக்கு மறந்து விடாதே..’ என்று அறிவுரை கூறுவாரே, (அதுவும் பட்டுக்கோட்டையார் பாடல்தான்) அதன்படி, வறுமையைக் கண்டு பயப்படாமல் திறமையைக் கொண்டு உழைத்திருந்தால் குடும்பத்தையே அழித்து தானும் அழிந்த ஆசாமிக்கு இந்த நிலை வந்திருக்குமா?
அரசிளங்குமரியில் தலைவர் பாடும் ‘நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி..’ என்ற வரிகளைப் போல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தை வழங்கி காலம் என்னவோ பயிற்சியாக அளித்துக் கொண்டுதான் இருக்கிறது. பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டியது மனிதர்களின் பொறுப்பு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
THALAIVAR ATTENDED KANNADA SUPERSTAR RAJKUMAR SON MARRIAGE
http://i1170.photobucket.com/albums/...psvkf3rmqh.jpg
-
-
Indru 04.07.15
மக்கள் திலகம் MGR முதல்முதலாக, முதலமைச்சராக கோப்பில் கையெழுத்து போட்ட தினம் 4.7.1977.
இத்திருநாளை இன்று கொண்டாடுவோம்
4-7-77கையெழுத்திட்டார் புரட்சிதலைவர் 13வருஷம் வனவாசம் போனாய்
மு.கருணாநிதி.
-
watch the clippings from 2.30
in olden days kamal
https://www.youtube.com/watch?v=1fIHjjMjVKs
-
watch the clippings from 00.01 to 00.20
in olden days kamal
https://www.youtube.com/watch?v=cCmRd236YBs
-
watch the clippings from 00.01 to 00.40
in olden days kamal
https://www.youtube.com/watch?v=MONCy3X2Tvk
-
watch the clippings from 12.10 to 12.30
in olden days kamal
kamal paste the thalaivar poster
https://www.youtube.com/watch?v=cyiHBijAvlk
-