-
ஹாய் குட்மார்னிங் ஆல்..
காலையில் மனசுல ஒலிக்கற பாட்டு என்ன..பார்த்தேன் பார்க்காத அழகை.. தேடிப்பார்த்தால் வீடியோ கிடைக்கலை.. கெட்டிக்காரன்..
நல்ல பாட்டு..
https://youtu.be/Wek6QF5Odyw
இன்னொரு பாட்டு நேற்றிலிருந்து என் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது..
காலம் என்னோடு வரும் போது கடவுள் வருகின்றார்..
தேடினால் கிடைக்கைவில்லை..என்ன படம்...
-
மிகவும் நன்றி திரு கோபால் - உங்கள் பாராட்டுக்கள் புதிய உற்ச்சாகத்தை தரும் வண்ணம் உள்ளது .
-
திரு ராகவேந்திரா சார் - மிகவும் நன்றி - எப்படி ஆரம்பித்தேன் எங்கு முடித்தேன் என்றே தெரியவில்லை - ஓடிவிட்டன நாட்களும் , பதிவுகளும் - உங்கள் பாராட்டுக்களுக்கு என் தாழ்மையான வணக்கங்கள் .
-
இன்னிக்கு கல் நாயக் வருவாரோன்னோ.. வார்த்தை தவற மாட்டாரோன்னோ..இந்த வெண்ணிலவுப் பாட்ட ப் போடலைன்னு நினைக்கிறேன்..
ஏங்கியே கண்களும் ஏமாந்தே இருக்கிறதே
பாங்காய்த் தவித்தங்கே பார்த்தபடி - பூங்குயில்
தானுருகிப் பாடித் தனியாய்ப் புலம்புவது
ஊனுருக்க வைக்கும் உணர்..
வ.நி.சி. சென் ட்ரலில் அரெளண்ட் பதினைந்து பேர் கல்லூரியில் சனிக்கிழமை மட்டம் போட்டு காலைக்காட்சி சென்றோம்.. மேல்வகுப்பு தான்.. அந்தக் கால கட்டத்தில் வேலையில்லா திண்டாட்டம் என வழக்கமான சப்ஜெக்ட்தான் இருந்தாலும் ரசித்தோம்.. சிப்பியிருக்குது முத்துமிருக்குது, நல்லதோர் வீணை, துமே ராஜா மேது ராணி,அப்ப்புறம் கடைசியில் வந்த இந்தப் பாடல் மனதில் முதலிடம் பெற்றுவிட்டது..
https://youtu.be/V43cycEi3Gw
வ. நி.சி பத்தி இன்னும் எழுதலாம் அப்புறம் வாரேன்..
-
திரு வினோத் சார் - உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி - நீங்களும் , k .v அவர்களும் இங்கு வராதது மனதிற்கு அவ்வளவு உற்ச்சாகத்தை தர வில்லை - சந்திரனை பற்றி எழுத இரு காளமேக புலவர்கள் உள்ள இந்த திரியில் நான் எழுதுவது என்பது ஒரு குழந்தை எழுதும் கோடுகள் போல - ஒரு குருடன் வரையும் காவியம் போல - அதில் அவ்வளவு எதார்த்தமும் , உயிரோட்டமும் இருக்காது - இந்த விஷ பரிட்ச்சை எனக்கு வேண்டாம் .
அன்புடன்
-
ராஜேஷ்ஜி!
நீங்கள் அளித்த 'நானே உன் காதலி' பாடலை பார்த்து ரசித்தேன். இப்பாடலைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். பின்னி பெடல் எடுக்கும் பாட்டு.
-
சி.க, ராஜேஷ், கலை,
ஒன்று கவனித்தீர்களா?
நாயகன் பல நாயகிகளுடன் பிளே-பாயாக பாடும் பாடல்கள் அமர்க்களமாக அமைந்து விடுகின்றனவே.
நடிகர் திலகத்தின் 'யாரடி நீ மோகினி' அனைத்திலும் உச்சம்.
அது போல ரஜினியின் 'ஒரு மைனா மைனாக் குருவி'யும் (உழைப்பாளி) அமர்க்களம்.
'நானே உன் காதலி' கேட்கவே வேண்டாம்.
'ஹேஹேஹே... பொன்வண்டு பொன்வண்டு பொன்வண்டு' (பொன்வண்டு)அருமையிலும் அருமை.
இவையெல்லாம் நமக்கு ரொம்பப் பரிச்சயமான பாடல்கள்.
இது போல பிரபலங்கள் நடித்திருந்தாலும் கூட வெளியில் அதிகம் தெரியாத ஜாலி பாடல்களும் உண்டு.
அதில் ஒன்று இப்போது.
திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் 'தலைவன்' படத்தில் சில பெண்களின் வலையில் சிக்காமல் அவர்களை ஏமாற்றிப் பாடும் பாடல் காட்சி அவருடைய பாணியிலேயே. இதில் மலையாள ஜெயபாரதியும் உண்டு.
இந்தப் பாடலும் நல்ல வெரைட்டியாகவே இருக்கும். ஆனால் வழக்கமான எம்.ஜி.ஆர் பாடல் போல புகழ் பெற வில்லையென்றாலும் கேட்பதற்கு நன்றாகவே இருக்கிறது.
முதலில்
'நாங்களெல்லாம் உங்களுக்காக
நல்ல கலையை ரசிக்கும் கண்களுக்காக
நீங்களெல்லாம் எங்களுக்காக
உங்கள் நினைவில் ஏங்கும் பெண்களுக்காக'
என்று கொஞ்சும் தமிழ்ப் பெண்ணாக நடிக்கும் ஜெயபாரதியிடம் (ராட்சஸி பின்னணி)
எம்.ஜி.ஆர் அவர்கள் பாடுவது.
'நான் மயங்கிடாதவன்
பாதை மாறிடாதவன்
மதுவினாலும், மங்கையாலும்,
பொருளினாலும், புகழினாலும்
மயங்கிடாதவன்
ஒரு எல்லை நோக்கி நடக்கும் கால்கள் திசை திரும்புமா
புது எழுச்சி கொண்ட நெஞ்சில் வேறு எண்ணம் தோன்றுமா'
அங்கேயும் அவரின் கொள்கை முழக்கம். அவருக்கேற்ற வரிகள்.
அடுத்து ஒரு இந்திப் பெண்.
'தேகோ தேகோ தேகோ... துமாரி பியாரி
கேக்காமலே போனா மேரே தில் படா ஸாரி'
என்று தமிழிலும், இந்தியிலும் பாடி மயக்க,
பாடகர் திலகம் 'கியோ கியோ' என்று கூக்குரலிட,
ஜாலியாகவே இருக்கும்.
தொடர்ந்து
'புல்புல்புல் போலே ஜில் ஜில் ஜில் லடுக்கி'
ஜிஸ் தேஷ் மே கண்ணங்கி பொறந்தா ஹே:)
ஜிஸ் தேஷ் மே மங்கம்மா இருந்தாஹே:)
ஜிஸ் தேஷ் மே காவேரி பஹத்தி ஹே:)
ஜிஸ் தேஷ் மே நீ வந்து தொலைஞ்சே ஹே:):):)
என்று எம்.ஜி.ஆர் பட்டை கிளப்ப, (பாடகர் திலகம் செமை காமெடி செய்திருப்பார்)
ஒரே அமர்க்களம்தான்.
எம்.ஜி.ஆர் ஜாலியாகப் பண்ணியிருப்பார். நகைச்சுவையும் நளினமாக இருக்கும். அதே சமயம் அறிவுரையும் வழமை போல (நன்றி அப்துல் ஹமீத்):) அளிக்கப்படும்.
அடுத்து
ஒரு மேற்கத்திய பாணி நங்கை.
'டச் மீ.. டச் மீ.. யூ டோன்ட் பியர்'
என்று எம்.ஜி.ஆரின் மேல் விழுந்து வைக்க, அதற்கு அவர் மறுத்து,
(சாய்பாபா இப்போது எம்ஜிஆருக்கு பின்னணி ஆங்கில சரணம் என்பதால். ஆனால் டைட்டிலில் போட மாட்டார்கள்):(
'டோன்ட் கம் நியர் பியூட்டி... டோன்ட் கம் நியர்
ஐ அம் மேன் ஆப் டியூட்டி'
என்று தன் நிலையில் குறியாய் இருக்க,
நான் ரொம்ப ரசிக்கும் ஒரு ஜனரஞ்சகப் பாடல்.
கலைவேந்தன் சாரும், சி.கவும் ரொம்ப ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். நிஜமாகவே ஒரு அபூர்வ பாடல்.
பல பேர் பார்த்திருக்க மாட்டீர்கள்.
பார்த்து என்ஜாய் பண்ணுங்கோ.
https://youtu.be/8HJHUCfwTBo
-
நன்றி வாசு சார்.. ரைட் அப் நைஸ்.. பாடல் பார்த்துச் சொல்கிறேன்..கேட்டதும் இல்லை இது வரை..
ஒரு மைனா மைனா க் குருவியும் நான் நினைத்தேன் நேற்றே..கமல் என்று யோசித்தால் படக்கென மனதில் மொட்டவிழும் பாடல் கடந்த நாள் மறக்கவே இருக்கும் நாள் குடிக்கிறேன்..
சொர்க்கம் மதுவிலே..
பாலில் பழம் போலே இந்தப் பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச் சொல்லி இந்தத்தோகை கெஞ்சுவாள்..
முற்றும் துறப்பான் முனிவனும் கன்னியர்கள்
சுற்றியே பாடுகையில் தான்..
என்பது போல.. ஆனால் கொஞ்சம் காதலி போனதால அழுவாச்சிப் பாடல்..:)
https://youtu.be/SWw2yhqa7VI
-
சி.க,
என்ன கமல் பாட்டா இருக்கு? ஆனா நல்லாவே இருக்கு. 'சொர்க்கம் மதுவிலே' பார்த்தா எது ஞாபகம் வருது? அனைத்தையும் கரைத்து குடித்த 'சக்கரவர்த்தி'யைத் தானே?
நல்ல பாடல்களுக்கு நன்றி!
-
ரவி,
உங்ககிட்ட இப்போ நல்ல மன நிறைவு தெரியுதே. உழைப்புக்கு என் வந்தனங்கள்.