-
குலோபகாவலி/ அலிபாவும் 40 திருடர்களும்/
பாக்தாத் திருடன்/ ராஜா தேசிங்கு என்கிற
இந்த நான்கு படங்களிலும்
இஸ்லாமியப் பெயர்களையும், அடையாளங்களையும் தாங்கி
பாத்திரத்தோடு அவர் ஒன்றி
நடித்திருப்பது கவனிக்கத் தக்கதாக இருக்கும்.
அவர் தொப்பி அணியும் அழகே அலாதியாக இருக்கும்.
இஸ்லாத்தை மாசுபடுத்தாத வகையில்
கவனமும் செய்திருப்பார்..
குறிப்பாய் ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது
குலோபகாவலி படத்தின் துவக்கம்
ஃபஜருக்கு (அதிகாலை நேரத் தொழுகை) பாங்கு சொல்வதாக இருக்கும்.
தமிழில் இப்படி ஃபஜரின் பாங்கோசையோடு துவங்கும்
இன்னொரு படம் பிற்காலத்தில் வந்திருக்கிறது. அது
மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’
மலையாளத்தில் கூட அப்படியோர் படம் பார்த்திருக்கிறேன்…
பெயர்தான் நினைவில் இல்லை.
சினிமாவில்,
எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்த காலத்திலும்
அதற்குப் பிறகான காலத்திலும் பல நடிகர்கள்
இஸ்லாமிய வேடம் ஏற்றிருக்கிறார்கள் என்றாலும்
எம்.ஜி.ஆர். அளவுக்கு இஸ்லாமியப் பாத்திரங்களோடு
ஒன்றிப் போனார்கள் என சொல்ல முடியாது.
எம்.ஜி.ஆர். நடித்த அந்த நான்கு படங்களில்
ராஜா தேசிங்கு நீங்களாக
மற்ற மூன்றும்
வெற்றிப் பெற்ற ஆங்கில படங்களை தழுவியது.
ராஜா தேசிங்கு…
செஞ்சியை ஆண்ட ஓர் நவாபுவின்
அவரது மறைமுக மனைவிகளின்….
அவர்களது பிள்ளைகளின்…
வரலாற்றுச் சான்றுகளை ஒட்டிய திரைக்கதை
-
-
நடிகர் எம்ஜிஆரை பற்றி ?
ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்வதில் வல்லவர் .தன்னுடைய படங்களில் புதுமையான காட்சிகளை புகுத்துவதில் புதுமையானவர் .பாடல்களில் தனி கவனம் செலுத்தி சண்டைகாட்சிகளில் தன்னுடைய திறமைகளை வெளிபடுத்தியவர் .சோக காட்சிகளை தவிர்ப்பவர் . மூன்று மணி நேரம் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் படம் பார்த்து செல்ல விரும்புவர் .நன்றி - குண்டூசி -1965.
-
சென்னை மகாலட்சுமி திரைஅரங்கில் சென்ற வாரம் வெள்ளி முதல் தர்மம் தலை காக்கும் என்று செய்தி பதிவு செய்திருந்தோம். ஆனால் அப்படம் திரையிடப்படவில்லை என்று நண்பர் திரு.லோகநாதன் இன்று தெரிவித்தார். பின்பு திரையிடப்படும் என்று தெரிகிறது. திரை அரங்கின் உள்ளே போஸ்டர் ஒட்டி உள்ளனர். தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம்.
-
திரு. ரூப் சார். புரட்சி நடிகர் 1961ம் ஆண்டு ரிக்க்ஷாகாரர்களுக்கு மழை கோட் வழங்கிய நிகழ்ச்சியில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசியது நம் மக்கள் திலகத்தின் உண்மையான உதவும் குணத்தை உள்ளபடி சொல்கிறது. தனது குறைவான வருமானத்திலும் இதுபோன்ற எண்ணற்ற உதவிகள் செய்தவர் நம் இதய தெய்வம். அதனால்தான் இன்னும் அவர் எட்டாவது வள்ளலாக வாழ்ந்து வருகிறார். இந்த செய்திகள், நடிப்பு என்று சொல்பவர்களுக்கு அப்போதும், இப்போதும், எப்போதும் விழும் சாட்டையடி என்று கொள்ளலாம். உலகத்தாரால் பேரறிஞர் என்று போற்றப்பட்ட அண்ணா அவர்கள் தன்னுடைய இதயக்கனி என்று சொன்ன ஒரே தலைவர் புரட்சித்தலைவர். தன்னுடைய வாழ்நாளில் ஈட்டிய செல்வம் அனைத்தையும் வறியவர்களுக்கும், இயலாதோர்க்கும் வழங்கி, பரம்புமலை பாரியை மிஞ்சிய பரங்கிமலை பாரிவள்ளலின் கொடை உள்ளம் அவருக்கே உரித்தானது. அவரின் ரசிகராய், பக்தராய் இருப்பதில் நமக்கு எவ்வளவு பெருமை. அறிஞர் அண்ணா சொன்னது போல் அவரைப்போல் நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த குணத்தை நமக்கு போதித்தாரே! இதைவிட நமக்கு வேறென்ன செய்ய வேண்டும்?
திரு. ஜெய்ஷங்கர் சார். தங்களின் பதிவுகள் மிகவும் அருமை. அனைத்தும் என்னை கடந்த காலத்திற்கு அழைத்து செல்கின்றன. இது போன்ற அரிய, முத்தான பதிவுகளைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
திரு. ரவிச்சந்திரன் அவர்களின் பதிவுகளுக்கும் கோவை ராயலில் நாடு போற்றும் நாயகனின் 'நம்நாடு' தகவலுக்கு நன்றி.
திரு. வினோத் சார் அவர்களின் ராஜா தேசிங்கு விமர்சனமும், படங்களும் வெகு நேர்த்தி. நன்றி.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்
-
மக்கள் திலகம் அவர்கள் திறந்து வைத்த திரை அரங்குகள் .
சென்னை - பல்லாவரம் - லக்ஷ்மி - 1971 - முதல் படம் - குமரிகோட்டம் .
திருப்பத்தூர் - சி.கே .சி - 1971 - குமரிகோட்டம் .
கொடுமுடி - kbs - 1968
தஞ்சை - கமலா - சாந்தி
-
ஸ்ரீகாந்த்
சசிகுமார்
ஜெய்சங்கர்
ரவிச்சந்திரன்
மக்கள் திலகத்துடன் ஒரு படங்களில் கூட நடிக்காத நடிகர்கள் .
1966ல் ஒருதாய் மக்கள் படத்தில் மக்கள் திலகத்துடன் - சரோஜாதேவி - ஜெய்சங்கர் நடித்த காட்சி ஒரு நாள் மட்டும் படமாக்கப்பட்டது . பின்னர் மக்கள் திலகம் - முத்துராமன் - ஜெயலலிதா என்று மாற்றப்பட்டது .
-
மக்கள் திலகத்துடன் பலகதாநாயகிகள் நடித்திருந்த போதிலும் பெரும்பாலான ரசிகர்கள் விரும்பிய பொருத்தமான ஜோடி
1. சரோஜாதேவி
2. ஜெயலலிதா
3. லதா
4. பத்மினி
5. கே .ஆர். விஜயா
6. மஞ்சுளா
7. பானுமதி
8. சாவித்திரி
9. வாணிஸ்ரீ
10.லக்ஷ்மி
-
மக்கள் திலகம் - சரோஜாதேவி ஆல்பம் .
-