http://i280.photobucket.com/albums/k...psi0ptnewo.jpg
Printable View
இன்று காலை 11மணிக்கு சன்லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
நடித்த "சங்கே முழங்கு " திரைப்படம் ஒளிபரப்பாகியது
இன்று இரவு 7 மணிக்கு சன்லைப் சானலில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "எங்கள் தங்கம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
எனது நண்பர் ராமச்சந்திரன் என்பவர் காட்பாடியில் ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அவரது தந்தை சமையல் காண்ட்ராக்ட் எடுத்து திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்து வருபவர். எனவே என் நண்பருக்கும் சமையலில் நல்ல பரிச்சயம் உண்டு. 1983ல் ஒரு சமயம் காட்பாடி அருகே சத்துணவு திட்டத்தை துவக்கி வைக்க முதல்வர் எம்ஜிஆர் வருகிறார். என் நண்பர் படிக்கும் கல்லூரியில் விழா ஏற்பாடானது. விழா நடக்கவிருக்கும் முதல்நாள் மாலை முதல்வர் அலுவலகத்திலிருந்து போன் வருகிறது.
அன்று சத்துணவில் கலந்துகொள்ளும் பயனாளிகள் அனைவருக்கும் லட்டு வழங்க வேண்டும் என்று. எந்த இனிப்பு கடையிலும் அவ்வளவு லட்டுகள் (2000) இருப்பு இல்லை. இந்த நிலையில் என் நண்பரின் தந்தையோ வேறு கல்யாண பிசியில் வெளியூரில் இருந்தார். கல்லூரி முதல்வருக்கோ என் நண்பர் ராமச்சந்திரன் நினைவு வரவே அவரை அழைத்து விஷயத்தை கூறினார். என் நண்பரும் சளைக்காமல் (அவரும் தலைவரின் ரசிகரே) கல்லூரி முதல்வரிடம் லட்டு செய்ய தேவையான சாமான்களை பட்டியலிட்டார்.
தனது நண்பர்கள் ஐந்துபேர் உதவியுடன் மறுநாள் காலைக்குள் 2000 லட்டுகள் சூப்பராக ரெடி. விழாவிற்கு வருகை தந்த தலைவர் சத்துணவுடன் போட்ட லட்டுவை சாப்பிட்டுவிட்டு விழா அமைப்பாளரிடம் இந்த இனிப்பை யார் செய்தது என்று கேட்டார். அவர் விவரம் தெரியாமல் காட்பாடியிலுள்ள ஏதோ ஒரு பெரிய ஸ்வீட் ஸ்டால் பெயரை சொன்னார். எம்ஜிஆரோ இது கடை லட்டு இல்லை. யார் செய்தது என்று கேட்டார்.
இதை கவனித்த கல்லூரி முதல்வர், எம்ஜிஆரிடம் எனது மாணவன் ராமச்சந்திரன்தான் செய்தது என்று கூறி அறிமுகப்படுத்தினார். தலைவர் என் நண்பனை வெகுவாக பாராட்டி ஒரு குறிப்பிட்ட நாளில் தோட்டத்திற்கு வரச்சொன்னார். அந்த நாளும் வந்தது. காட்பாடியில் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் விழா நடத்தியவர்களுக்கு பரிசும், வேலையில் சேர்பபவர்களுக்கு பணி ஆணையும் தலைவரால் வழங்கப்பட்டது. என் நண்பரை பார்த்த தலைவரோ வா! லட்டு சந்திரா என்று அழைத்து நீ என் பேர் கொண்டவனல்லவா என்று சிரித்துகொண்டே வாழ்த்தினார். அவர் எந்த பொறுப்பிலும் இல்லாததால் தன் சொந்த பணத்திலிருந்து 10,000 ரூபாயை அளித்துள்ளார். பிறகு அவருடன் ஒரு புகைப்படமும் எடுக்கப்பட்டு நண்பரின் விலாசத்திற்கே அனுப்பபட்டது. வாழக்கை சக்கரத்தின் ஓட்டத்தில் அந்த புகைப்படத்தை தொலைத்துவிட்டாலும் தலைவரின் மலரும் நினைவுகளோடு வாழ்கிறார் என் நண்பர் ராமச்சந்திரன் கோவை மதுக்கரையில்! மாலை வணக்கத்துடன்...Older Posts
நன்றி சந்தானம் ஏடிஎம்கே முகநூல்
--------
இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதனை எளிமையானவர்களுக்காக சாதரண மக்களையும் ஞாபகம் வைத்துக் கொண்டு இரங்கி வருபவரை இனிமேட்டு பார்க்க முடியமா என்று சொல்லுங்கள் நண்பர்களே
அய்யா உன்னை எப்ப பார்ப்போம். நெஞ்சு துடிக்கிறது.
புரட்சித் தலவரே.. அவனவன் வயத்து வலிக்கு அவன்தான் மாத்திரை சாப்பிட வேண்டும். அடுத்தவன் நன்றாக இருக்கானே என்று பொறாமை படக் கூடாது. பொறாமயால் உன்னை தூற்றிக் கொண்டு திரியும் டைரக்டர் சேரன் மாதிரி முட்டாள் நாய்ங்களுக்கு உன் பெருமை எங்கே தெரியப் போகிறது? கழுதைக்கி தெரியுமா கற்பூர வாசனை. படம் எல்லாம் மொக்கையாய் போய் இப்ப டைரக்டர் சேரன் நாய் பிச்சை எடுக்கும் நிலைக்கி வந்துவிட்டது. புரட்சித் தலவர் பேரை தேவையில்லாமல் இழுக்கும் அந்த சேரன் நாய் விரைவில் பிச்சையும் எடுக்கும். புரட்சித் தலைவரின் பக்தன் அவனுக்கும் பிச்சை போடுவான்.
என் தலைவன் புரட்சித் தலைவன் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும். மக்கள் திலகம் வா்ழக. பொன்மனச் செம்மல் வாழ்க. புரட்சித் தலைவர் வாழ்க.
http://i64.tinypic.com/33fbb6t.jpg
http://i68.tinypic.com/v4orgl.jpg
தற்போது சன்லைப் சானலில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் கலக்கலாக நடித்த "நீரும் நெருப்பும் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது
http://i280.photobucket.com/albums/k...pshn5wo5n6.jpg
கடந்த 05/08/2017 சனியன்று சென்னை காமராஜர் அரங்கில் ,முன்னாள் சென்னை மாநகர மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் நடத்திய மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு......
http://i280.photobucket.com/albums/k...psgcqz1sgf.jpg
.திருவாளர்கள் ;டி.டி.செல்வன் (தூத்துக்குடி ), கணேஷ்,குப்பன்,சங்கர் ஆகியோர் .
http://i280.photobucket.com/albums/k...psbj71hqiv.jpg