-
மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்த மக்கள் திலகத்தின் படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் .
குறிப்பாக பாடல்கள் அனைத்தும் தேன்சுவை . மெல்லிசை மன்னரின் இசையில் பாடகர் திலகம் டி .எம்.எஸ் , சீர்காழி கோவிந்தராஜன்
இசை அரசி சுசீலா , ஈஸ்வரி ஜானகி வாணிஜெயராம் , எஸ்.பி..பாலசுப்ரமணியம் ஆகியோர் பாடிய பாடல்கள் காலத்தால் மறக்க முடியாத காவிய கீதங்கள் .
மெல்லிசை மன்னர் எம் எஸ் வி தனியாக இசை அமைத்த படங்கள் கலங்கரை விளக்கம் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
படங்களில் ரீ ரெக்கார்டிங் மற்றும் பாடல்கள் எல்லாமே இனிமை .
கலங்கரை விளக்கம்
அன்பே வா
நான் ஆணையிட்டால்
நாடோடி
சந்திரோதயம்
பறக்கும்பாவை
பெற்றாலதான் பிள்ளையா
காவலக்காரன்
ரகசிய போலீஸ் 115
குடியிருந்தக்கோயில்
கண்ணன் என் காதலன்
புதிய பூமி
கணவன்
நம்நாடு
தேடிவந்த மாப்பிள்ளை
எங்கள் தங்கம்
குமரிக்கோட்டம்
ரிக் ஷாக்காரன்
நீரும் நெருப்பும்
ஒருதாய் மக்கள்
சங்கே முழங்கு
ராமன் தேடிய சீதை
உலகம் சுற்றும் வாலிபன்
நேற்று இன்று நாளை
சிரித்து வாழ வேண்டும்
உரிமைக்குரல்
நினைத்ததை முடிப்பவன்
நாளைநாமதே
நீதிக்கு தலை வணங்கு
உழைக்கும் கரங்கள்
ஊருக்கு உழைப்பவன்
இன்று போல் என்றும் வாழ்க
மீனவ நண்பன்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
இன்று மாலை எம் எஸ் வி குழுவினர நடத்தும் மெல்லிசை மன்னரும் மக்கள் திலகம் எம்ஜிஆர் விழா இனிதே அரங்கேற வாழ்த்துக்கள் .
-
அன்பே வா படத்தைப் பொருத்த வரை நான் எனது பள்ளிப்பருவத்தில் மடியில் எனது சிறிய தம்பியை அமர வைத்து பார்த்த ஞாபகம் இன்றும் பசுமையாக உள்ளது. அதன்பிறகு இப்படத்தை குறைந்தது ஏழெட்டு தடவை பார்த்து விட்டேன். பாடல்கள் மனனம் செய்து விட்டேன் .உள்ளம் என்றொரு கோவிலிலே பாடலும் ஏய் நாடோடி பாடலில் எம்ஜிஆரின் துள்ளலான நடனமும் எனக்கு மிகவும் பிடித்தவை. மெல்லிசை மன்னரும் வாலியும் மாயாஜாலம் பண்ணியிருக்கிறார்கள். சரோஜாதேவி கொள்ளை அழகு. சிம்லா காட்சிகள் தீவிரவாதத்தால் நாம் இழந்த சொர்க்க்த்தை ஏக்கத்துடன் காணச் செய்கின்றன. நாகேஷூம் இ்ப்படத்தில் மி்க அற்புதமாக நடித்திருப்பார். லவ் பேர்ட்ஸ் பாடலில் அபிநய சரஸ்வதியின் விரல் அசைவுகளை பல ஆண்டுகள் கழித்து மாதுரி தீக்சித் சாஜன் படப்பாடலில் பயன்படுத்தி கைத்தட்டல்களை அள்ளினார்.
எம்ஜிஆரின் படங்களும் பாடல்களும் இன்றும் எனக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருபவையாக உள்ளன.
Courtesy - mgr fan net
-
BONGOS என்ற தாள வாத்தியக் கருவியை மிகச் சிறப்பாக மெல்லிசை மன்னர்கள் கையாண்டார்கள்.அதன் இனிய நாதம் தமிழ் திரை இசைக்கு புத்துணர்வுமிக்க புதிய சப்தத்தை வழங்கியது.இன்று ஏ.ஆர் ரகுமான் போல தாளத்தை சகட்டுமேனிக்கு போட்டு ” முழக்காமல் ” மிகவும் கச்சிதமாக திரையில் காட்சிகளுக்கு பொருத்தமாக பயன்படுத்தினார்கள்.
அதுமட்டுமல்ல கியுபாவில் தோன்றி பின் மெக்சிக்கோவில் நிலை பெற்ற நடன முறையில் பயன் பட்ட DENZONES என்ற இசை , ENRIQUE JORRIN என்பவரால உருவாக்கப்பட்டது.ஆங்கில இசையின் கலப்பும் ,கியூபா மற்றும் ஆபிரிக்க தாளத்தின் கலவைகளாக உருவான இந்த இசை பிரஞ்சு காலனித்துவ வாதிகளால் பரப்பபட்டது.இந்த இனிய கலவையின் விளைவாகத் தோன்றியதே CHA CHA CHA என்ற நடன இசை.இந்த இசை 1940 , 1950 களில் மிகவும் புகழ் பெற்றிருந்தது.இந்த CHA CHA CHA வை பயன்படுத்தி 1960 களில் வெளிவந்த பல படங்களில் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி பல வெற்றிப்பாடலகளைத் தந்தார்கள். அவற்றில் சில
1. அன்று வந்ததும் இதே நிலா [படம் : பெரிய இடத்து பெண் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + P சுசீலா
இந்த பாடலில் நேரடியாக ” CHA CHA ” என்ற சொல் பிரயோகம் நேரடியாக வரும்.
2. இது வேறுலகம் தனி உலகம் [படம் : நிச்சயதாம்பூலம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + L.R ஈஸ்வரி
இந்த பாடலிலும் நேரடியாக ” CHA CHA ” என்ற சொல் பிரயோகம் நேரடியாக வரும்.
3. அவளுக்கென்ன அழகிய முகம் [படம் : சர்வர் சுந்தரம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + L.R ஈஸ்வரி …..
இந்தப் பாடலில் நேரடியாக ” CHA CHA ” வராது ஆனால் தொனிப்புகளில் மிக துல்லியமாகத் தெரியும்.
உலகெங்கும் உள்ள நல்ல இசையை தமிழ் சினிமாவில் கொண்டு வந்த பெருமை அவர்களைச் சாரும் என்பதை நாம் அவர்களது பாடல்களை இன்று கேட்கும் போதும் உணரக்கூடியதாக இருக்கின்றது.இன்று சர்வ சாதாரணமாகப் பயன் படுத்தப்படும் வெளி நாட்டு வாத்தியங்களை எல்லாம் இவர்களே அறிமுகம் செய்தார்கள்.ஒரு மெலோடி [Melody ] யுகத்தை உருவாக்கி அதில் வாத்திய இனிமையையும் ,நவீனத்தையும் , காலத்திற்கு ஏற்ப புதுமையையும் படைத்தார்கள்.பாடல் மட்டுமல்ல பாடலுக்கு வரும் முகப்பு இசை [Opening Music] இடையில் வரும் வாத்திய இசை [Interlute] போன்றவற்றைப் புதுமையாக அமைத்து பாடலின் எல்லா பக்கத்தையும் இனிமையாக்கினார்கள்.ஹம்மிங் , கோரஸ் , விசில் , பறவை இனங்களின் ஒலிகள் , இரவின் ஒலி போன்ற சப்தங்களை எல்லாம் மிக நுட்பமாக பயன்படுத்தினார்கள்.மனதை கரைய வைத்து நினைவில் இறுகி நிற்கும் பாடல்களைத் தந்தவர்கள் இந்த இரட்டையர்கள்.காட்சிக்கு பொருத்தமான இசையை பயன்படுத்தி வந்த இரட்டையர்கள் மரபை விட்டு வில்கியவர்களல்ல என்பதும் கவனத்திற்குரியது.வாத்திய சேர்க்கைகளில் புதுமை இருந்தாலும் ராக அடிப்படைகளில் நின்று மனதை வசியம் செய்கின்ற பல பாடல்களை தந்தார்கள்.ராகங்களை “மறைத்து வைக்கும் “அதே நேரத்தில் அதன் குணாம்சங்களை பாத்திரங்களின் உணர்வு நிலைக்கு ஏற்ப கொடுக்கும் வல்லமையைப் பெற்றிருந்தார்கள்.சில பாடல்களில் ராகங்கள் இன்னதென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரு விதமான மயக்க நிலலையில் , ரகசியமாக ஒளித்து வைக்கும் கலையை கை வரப் பெற்றார்கள் எனலாம்.கனமான ராகங்களில் மெல்லிசை தன்மை ஓங்கி நிற்கும்.பாடல்களைத் தந்து சாதனை படைத்தார்கள். சில சாதனைப் பாடல்கள்…
1. கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே [படம் : கர்ணன் ] பாடியவர்: P.சுசீலா ராகம்: சுத்த தன்யாசி
2. நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே [படம் : பார் மகளே பார் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + P.சுசீலா ராகம்: தர்மவதி
3. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் [படம் :பாலும் பழமும் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + P.சுசீலா ராகம் : சிவரஞ்சனி
4. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் [படம் : பாக்கியலட்சுமி ] பாடியவர் : P.சுசீலாராகம் : சந்திர கெளன்ஸ்
5. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல [படம் : பாசமலர் ] பாடியவர்கள் : T.M.:சௌந்தரராஜன் + P.சுசீலா ராகம் : ஆபேரி
6. தங்கரதம் வந்தது [படம் : கலைக்கோயில் ] பாடியவர்:பாலமுரளி கிருஷ்ணா + P.சுசீலா ராகம் : ஆபோகி
7. மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா [படம் : கற்பகம் ] பாடியவர்: P.சுசீலா ராகம் : கீரவாணி
8. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் [படம் : போலீஸ்காரன் மகள் ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் ராகம் : ஆபேரி
9. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா [படம் : நிச்சயதாம்பூலம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் ராகம் : கல்யாணி
10.ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை [படம் : பணத்தோட்டம் ]பாடியவர்: P.சுசீலா ராகம் : காபி
11. பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா [படம் : பணத்தோட்டம் ]பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + .P.சுசீலா ராகம் : சாருகேசி
12 .பொன் என்பேன் சிறு பூ என்பேன் [படம் : போலீஸ்காரன் மகள் ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் + எஸ்.ஜானகி ராகம் : சாருகேசி
13 .தமிழுக்கும் அமுதென்று பேர் [படம் : பஞ்சவர்ணக்கிளி ] பாடியவர்: P.சுசீலா ராகம் : திலங்
14 .நான் உன்னை சேர்ந்த செல்வம் [படம் : கலைக்கோயில் ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் + P.சுசீலா ராகம் : மோகனக்கல்யாணி
15 .நெஞ்சம் மறப்பதில்லை [படம் : நெஞ்சம் மறப்பதில்லை ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் + P.சுசீலா ராகம் :
COURTESY - NET
-
எம்.எஸ்.விஸ்வநாதன் பெரும்பாலும் இயக்குனர்களின் இசையமைப்பாளர். இருப்பினும் எம்.ஜி.யாரின் திரை ஞானம் காரணமாக இசையும் எம்.ஜி.யாரும் எம்.எஸ்.வியும் பிரிக்க முடியாத பந்தத்தில் கிடந்தனர். அது நாடோடி மன்னனில் தொடங்கி, உலகம் சுற்றும் வாலிபன் வழியாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரையிலான நீண்ட பந்தம். வாலி என்ற மாபெரும் கலைஞனை உருவாக்க எம்.ஜி.யார். எம்.எஸ்.விஸ்வநாதன் , அன்றைய அரசியல் சூழல் இவை காரணம் என்றால் மிகையாகாது. கொடுத்ததெல்லாம் கொடுத்தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், ஏன் என்ற கேள்வி, புத்தன் ஏசுகாந்தி பிறந்தது, நான் ஆணையிட்டால் போன்ற எம்.ஜி.யார் கொள்கைவிளக்க பாடல்கள் இன்றளவும் அ.இ.தி.மு.க மேடைகளில் நமக்கு எம்.எஸ்.வியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.நேற்று இன்று நாளை எம்ஜியாரின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய படம். அவர் திமுகவை விட்டு விலகி தனிக்கட்சி தொடங்கி வெளிவந்த முதல் படம். அதில் இடம் பெற்ற காஞ்சியிலே நான் படித்தேன் நேற்று என்ற கொள்கைவிளக்கப் பாடல் அதன் தன்மை கெடாமல் பட்டி தொட்டிகளில் இன்றும் முழங்கியவண்ணம் உள்ளது. அந்தப்பாடலுக்கு நமது எம்.எஸ்.விஸ்வனாதன் அவர்கள்தான் இசையமைத்தார்.
-
எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர்கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும்இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.
எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப்பயன்படுத்தியிருப்பார்கள்.
மெல்லிசை மன்னர் ஒரு பாட்டுக்கு பொங்கசை, என்னென்ன நேரப் பரிமாணங்களில் பாவித்துள்ளார் எனபதை விளக்குவதற்கும் அதன் மூலம் எப்படி ஒரு பாட்டில் குதூகலத்தையும், புத்துணர்ச்சியையும் கொண்டுவந்தார் என்பதைப் புலப்படுத்தவும் எம்ஜிஆரின் இந்தப்பாடல் நல்லுதாரணம். இந்தப் பாடலில் அவர் பொங்கசை அட்டகாசமாகப் பாவித்துள்ள விதத்தை விபரமாகப் பார்ப்போம்.
இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத்தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின்தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.
பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரைஅட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..
பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவதுஇடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம்தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில்பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசைகேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.
அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால்யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின்எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல்அற்புதமாக இசைத்துள்ளார்.
-
படகோட்டிக்கு அடுத்து வாலி ஸ்கோர் செய்தது ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில்தான். அதற்கும் முன்னதாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கண்ணதாசன் மற்ற பாடல்களை எழுதியிருக்க வாலியின் “பருவம் எனது பாடல்” பாடலும், “ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை” பாடலும் புகழ்பெற்றன.
அடுத்து வந்த படம்தான் எங்க வீட்டுப் பிள்ளை. 1965-ல் வந்த இந்தப் படம்தான் வாலியை இன்றுவரை நினைக்கும் அளவுக்குத் தூக்கி நிறுத்தியது. அதுவரை வசூல் மன்னனாகவும், மக்களை வசீகரிக்கிற நடிகராகவும் மட்டுமே விளங்கிய எம்ஜிஆர் என்ற அந்த மனிதர் அரசியல் அந்தஸ்து பெறவும் அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களின் குறைகள் யாவும் தீர்க்கப்பட்டு சுபிட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்கவும், மனதுக்கு உகந்தவராக இருந்த ஒருவரை மக்கள் தலைவராக மாற்றவும் முதன் முதலாக வெற்றிகரமாக ஊன்றப்பட்ட விதையாக வாலியின் ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றது. இந்தப் பாடலைத்தவிர ‘குமரிப்பெண்ணின் உள்ளத்திலே’, பாடலும் ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ பாடலும் வாலிக்குப் புகழ் சேர்த்தன.
(வாலி அடிக்கடி ஒரு கிளிஷே போல இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்றுதான் சொல்லவேண்டும். தெய்வத்தாயில் வாடகை, விலை, இதயம் என்ற கான்செப்டை ஆரம்பித்தவர் நிறையப் பாடல்களில் திரும்பத் திரும்ப இதையே சொல்லியிருக்கிறார். ‘இந்தப் புன்னகை என்ன விலை’……….’.என் இதயம் சொன்ன விலை’, குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்……………வாடகை என்ன தரவேண்டும்?) அடுத்துவந்த பஞ்சவர்ணக்கிளியில் புரட்சிக் கவிஞரின் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ பாடலுக்கு அடுத்து (இங்கே இசை ரசிகர்கள் கொஞ்சம் கவனிக்கவேண்டும்.
‘துன்பம் நேர்கையில்’ பாடலுக்கு அடுத்து பாரதிதாசனின் இந்தப் பாடலுக்கு இணையாக இனிமையாக இசையமைக்கப்பட்ட புரட்சிக்கவிஞரின் பாடல் வேறு ஏதாவது இருக்கிறதா? பாரதிதாசனின் பாடல்கள் ஏராளமாய் இருக்கின்றன. மற்ற எந்த இசையமைப்பாளரையாவது பாரதிதாசனின் ஏதாவது ஒரு பாடலை எடுத்துக்கொண்டு ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்பதை விடவும் இனிமையாக இசையமைத்து புழக்கத்தில் விடச்சொல்லுங்களேன். அந்த இசையமைப்பாளரைத் தமிழுலகம் உலகம் உள்ளவரைக்கும் கொண்டாடும்) புகழ்பெற்ற பாடல் ‘அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்’, மற்றும் ‘கண்ணன் வருவான் கதை சொல்லுவான்’……………..
எங்க வீட்டுப் பிள்ளை படத்திற்கு அடுத்து எம்ஜிஆர் படங்களுக்கு வாலிதான் என்று அமைந்துவிடுகிறது. அடுத்து வருகிறது ‘பணம் படைத்தவன்.’ இதில் மொத்தம் ஏழு பாடல்கள். ஏழு பாடல்களில் ஆறு பாடல்கள் பட்டையைக் கிளப்புகின்றன. முக்கியமானவை இரண்டு பாடல்கள். ஒன்று – ‘கண்போன போக்கிலே கால்போகலாமா’, இரண்டாவது ‘தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை’. இந்த இரண்டு பாடல்களையும் கண்ணதாசன்தான் எழுதினார் என்றே இன்னமும் லட்சக்கணக்கானோர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்
. இல்லை இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர் வாலி. அதிலும் ‘தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்’ என்ற ஒற்றை வரியில் காதலனின் பிரிவு நுட்பத்தைச் சொல்லும் இடத்தில் வாலி மிக உயரத்தில் நிற்கிறார் என்பதை உரத்துச் சொல்லவேண்டியிருக்கிறது. கண்போனபோக்கிலே கால்போகலாமா என்பதும் வாலியின் பெயர் சொல்லும் மிகச்சிறப்பான பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தின் மற்ற பாடல்கள்…………’அந்த மாப்பிள்ளே காதலிச்சான் கையப் புடிச்சான்’, ‘பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்’, ‘மாணிக்கத்தொட்டில் இங்கிருக்க’, அடுத்தது ‘எனக்கொரு மகன் பிறப்பான்’………………பாடல்களின் ‘தாக்கம்’ அப்போதெல்லாம் எந்தளவுக்கு இருந்தது என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான் இதையெல்லாம் இங்கே சொல்லவேண்டியிருக்கிறது.
கவியரசர் பாடல்கள் எழுதும் படங்களிலும் ஓரிரு பாடல்களை வாலி எழுதுகின்ற சந்தர்ப்பம் நிறையவே வாய்க்கிறது. தம்மை நாடிவரும் சில பட அதிபர்களிடமும் இயக்குநர்களிடமும் “வாலி நல்லா எழுதறான் அவனிடம் எழுதிக்கங்க. எனக்காக காத்திருக்க வேணாம்” என்று கவிஞரே சொன்னதாகவும் கூறியிருக்கிறார் வாலி. குழந்தையும் தெய்வமும் படத்தில் ‘அன்புள்ள மான்விழியே’ பாடலும், ‘நான் நன்றிசொல்வேன் என் கண்களுக்கு’ என்ற இரு பாடல்களை எழுதுகிறார் வாலி. இவை கவியரசரின் மற்ற பாடல்களுடன் சேர்ந்து (குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, பழமுதிர்ச் சோலையிலே, கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே பாடல்கள் கண்ணதாசனுடையவை) செம ஹிட்டடிக்கின்றன.
எம்ஜிஆரின் கலங்கரை விளக்கம் படத்தில் ‘என்னை மறந்ததேன் தென்றலே’, ‘பொன்னெழில் பூத்தது புதுவானில்’ ஆகிய புகழ்பெற்ற பாடல்கள் பஞ்சு அருணாசலம் இயற்றியவை. வாலி எழுதிய ‘நான் காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்’, ‘என்ன உறவோ என்ன பிரிவோ’, ‘பல்லவன் பல்லவி பாடட்டுமே’ மூன்று பாடல்களும் இசை ரசிகர்களைக் கொண்டாடவைத்த பாடல்கள். இந்த இடத்தில் இன்னொரு தகவலையும் சொல்லவேண்டும். விஸ்வநாதன் ராமமூர்த்தி பிரிந்ததாகச் சொல்லப்பட்ட ‘ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்’ படத்திற்கு அடுத்து உடனடியாய் வந்த படங்கள் குழந்தையும் தெய்வமும், கலங்கரை விளக்கம், நீலவானம், நீ………………. ஆகியன.
அதனால் இந்தப் படங்கள் இருவரும் சேர்ந்து இசையமைத்து வெளியாகாமல் இருந்து பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதனால் விஸ்வநாதன் பெயரில் வந்தன என்றும் சொல்லப்படுவதுண்டு. அதுபற்றிய விளக்கத்தை எம்எஸ்வியோ அல்லது ராமமூர்த்தியோ இதுவரை சொன்னதில்லை. ஆனால் கலங்கரை விளக்கம், குழந்தையும் தெய்வமும் பாடல்களை வைத்துப் பார்க்கும்போது இருவரும் சேர்ந்து இசையமைத்த படங்களே என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. எது எப்படியோ, எம்எஸ்வி முழுக்க முழுக்க ‘தனியாக’ இசையமைத்து வெளிவந்த படம் ‘அன்பே வா’தான்
courtesy net
-
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் சில ஊடல்கள் இருந்தது. இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாச் சொன்னார்.
“இந்தப் பாடலை கண்ணதாசன்தான் எழுத வேண்டும். அவரால் மட்டுமே நான் நினைப்பதை வரிகளாகக் கொண்டு வர முடியும்.” – எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கண்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள் .
“சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!
மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல் ;
அதை , மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு எழுதச் சொன்னால் எப்படி ..?
சரி .. எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்..!
வேறு வழி இல்லை..! படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள் .
சிரித்தார் கண்ணதாசன்.
சில காலம் முன் அவர் எழுதி இருந்த ஒரு கவிதை :
“ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும்
சேர்ந்திருக்கின்ற வேளையிலே என்
ஜீவன் பிரிய வேண்டும் – இல்லையென்றால்
என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாயென்றே
எனை படைத்த இறைவன் கேட்பான்..”
கண்ணதாசன் எழுதிய இந்தக் கவிதை , எம்.ஜி.ஆருக்கும் தெரியும்..!
அப்படி இருந்தும் தன்னை எம்.ஜி.ஆர் அழைக்கிறார். மதுவின் தீமைகளை விளக்கி பாடல் எழுதச் சொல்கிறார் என்றால்…?
புரிந்து கொண்டார் கண்ணதாசன் !
மதுவினால் ஒரு மனிதன் படும் அவஸ்தைகளை மதுப் பழக்கம் இல்லாத ஒருவனால் , அனுபவித்து எழுத முடியாது .
எனவேதான் மதுக் கோப்பைக்குள் குடி இருக்கும் தன்னை தேர்ந்தெடுத்து இந்தப் பாடலை எழுத அழைக்கிறார் எம்.ஜி.ஆர்.
கண்ணதாசனுக்கு தெளிவாக தெரிந்து போனது தயாரானார் கண்ணதாசன்.
“சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்”
கோப்பையிலிருந்து வழியும் மதுவாக ,
பொங்கி வந்து விழுந்தன வார்த்தைகள் ..!
“மதுவுக்கு ஏது ரகசியம் ?
அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்தவன் வார்த்தையை
மறுநாள் கேட்பது அவசியம் !”
“ஆஹா..” என்றார் எம்.ஜி.ஆர்.
அடுத்து கண்ணதாசனிடமிருந்து வழிந்த வார்த்தைகள் :
“அவர் இவர் எனும் மொழி
அவன் இவன் என வருமே”
கூர்ந்து கவனித்தார் எம்.ஜி.ஆர்.
கண்ணதாசன் அடுத்து சொன்ன வரிகள் :
“நாணமில்லை வெட்கமில்லை
போதை ஏறும் போது
ந*ல்ல*வ*னும் தீய*வ*னே
கோப்பை ஏந்தும் போது”
“சபாஷ்..!”-பரவசப்பட்டுப் போனார் எம்.ஜி.ஆர். இதை விட மதுவின் தீமைகளை எவரால் சொல்ல இயலும்..?
கண்களை மூடியபடி கண்ணதாசன் யோசித்தார்..மதுவின் தீமைகளை சொல்லி விட்டோம். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி சில பாஸிடிவ் விஷயங்களை சொல்ல வேண்டாமா..?
“எழுதிக் கொள்ளுங்கள்” என்ற கண்ணதாசன் உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் :
“புகழிலும் போதை இல்லையோ
பிள்ளை மழலையில் போதை இல்லையோ
காதலில் போதை இல்லையோ
நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ
மனம் மதி அறம் நெறி தரும் சுகம் மது தருமோ ?
நீ நினைக்கும் போதை வரும்
நன்மை செய்து பாரு
நிம்மதியை தேடி நின்றால்
உண்மை சொல்லிப் பாரு !”
சொல்லி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார் கண்ணதாசன்.
படக் குழுவினரை ஏறிட்டுப் பார்த்தார் எம்.ஜி.ஆர். “என்ன..? கவிஞரை நான் ஏன் அழைத்தேன் என்று இப்போதாவது தெரிகிறதா..?”
ஆம் .. யாரிடம் எதை எப்படி கேட்டு வாங்க வேண்டும் என்ற வித்தை எம்.ஜி.ஆருக்கு தெரிந்திருந்தது ;
சரி .. இப்படி எந்தச் சூழ்நிலையானாலும் அதற்கேற்ற பாடல் எழுதும் இந்த வித்தை ..
அது எங்கிருந்து வந்தது கண்ணதாசனுக்கு ..?
இதோ.. அதை கண்ணதாசனே சொல்லி இருக்கிறார் :
“வட்டிக் கணக்கே
வாழ்வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
சீர்கொடுத்த சீமாட்டி!
தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே
வேண்டுகின்ற போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே
உன்னைத் தவிர
உலகில்எனைக் காக்க
பொன்னோ பொருளோ
போற்றிவைக்க வில்லையம்மா!
என்னைக் கரையேற்று
ஏழை வணங்குகின்றேன்!”
ஆஹா..!
வாழ்க கண்ணதாசன் புகழ் ! வளர்க அவர் தாலாட்டிய தமிழ் !!
நன்றி: எழுத்தாளர் : Vallam John
-
தம் படங்களுக்குப் பாடல்கள் எழுத புதுப்புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அன்றைக்கே முனைப்பாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கண்ணதாசனோடு எம்.ஜி.ஆருக்கு அரசியல் ரீதியான பிரிவு தோன்றியிருந்ததால் அவரை நாடமுடியாத நிலை. மேலும், கண்ணதாசன் சிவாஜியின் படங்களுக்கு அதிகமாக எழுதிக்கொண்டிருந்தார்.
ஆகவே, தவிர்க்கவே முடியாமல் வாலி போன்றவர்கள் எம். ஜி. ஆர் படங்களில் தொடர்ந்து எழுதலாயினர். வாலியின் பாடல்கள் கண்ணதாசனே எழுதியவையோ என்ற மயக்கத்தை ஏற்படுத்தியபோதிலும் கண்ணதாசன் பாடல்களோடு ஒப்பிடுகையில் ஒருபடி தாழ்ந்தே இருந்தன. மேலும் கவிஞர் வாலியும் எல்லாப் படங்களுக்கும் நிறைய பாடல்கள் எழுதி வந்தார். எம்.ஜி.ஆருக்குத் தமிழ் அறிந்த புலவர்கள்மீது அளப்பரிய மதிப்பும் பற்றும் எப்போதும் இருந்திருக்கிறது. அந்தப் பற்றே தமிழறிஞரான கருணாநிதியோடு அவர் ஆழ்ந்த தோழமை கொள்வதற்குக் காரணம். அவர் எப்போதும் தமிழறிஞர்களையும் புலவர்களையும் மதிப்போடு போற்றியும் ஆதரித்தும் வந்திருக்கிறார் என்பதற்கு நிறைய சாட்சியாளர்களைக் காணமுடிகிறது. எம்.ஜி.ஆர் தம் படங்களுக்காகப் புதிய சிந்தனையாளர்களைத் தேடியதோடு நில்லாமல் அவர்களுக்குத் தம் படங்களில் இயன்றவிடங்களில் எல்லாம் உரிய வாய்ப்பைத் தந்து ஏற்றிவிட்டிருக்கிறார். தமிழ்த் திரையின் அபூர்வமான படைப்புகளைத் தந்த இயக்குநர் மகேந்திரன் எம்.ஜி.ஆர் தந்து புரந்ததால் ஆளானவர் என்பதை அவரது சுயசரிதைப் பக்கங்கள் கூறுகின்றன.
இத்தனைக்கும் மகேந்திரன் எம்.ஜி.ஆரின் படங்கள் எவற்றிலும் பங்கு பெற்றவரோ பணியாற்றியவரோ அல்லர். தம் கடைசிக் காலத்தில்கூட திரைப்படக் கல்லூரிக்கு பரிந்துரைக் கடிதம் ஒன்றைத் தந்து இயக்குநர் பாடப்பிரிவில் மாணவன் ஒருவனைச் சேர்க்க உதவுகிறார். அப்படிச் சேர்ந்த மாணவர்தான் பிற்காலத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் வர்த்தகப் படங்களை வெற்றிகரமாக இயக்கமுடியும் என்பதை நிறுவிய இயக்குநர் ஆர். வி. உதயகுமார். அவர் முதலமைச்சராக இருந்தபோதும்கூட யார் அவரைச் சந்திக்கச் சென்றாலும் அவரே முன்வந்து கேட்கும் கேள்விகளில் ஒன்று 'சொல்லுங்க. நான் உங்களுக்கு என்ன செஞ்சு தரணும் ?' என்பதே. பஞ்சு அருணாசலம், புலமைப்பித்தன், முத்துலிங்கம் ஆகியோரும் எம்.ஜி.ஆரின் அறிமுகங்களே. அந்த வரிசையில் எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்திய பாடலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் நா. காமராசன். நா காமராசன் தேனி மாவட்டம் போடி நாயக்கனூரைச் சேர்ந்தவர்.
-
எம்.ஜி.ஆர்
எம்ஜிஆர் 1 – எம்.ஜி.ஆரின் அக்கறை
எம்ஜிஆர் 2 – அண்ணாவின் தம்பிகள்
எம்ஜிஆர் 3 – எம்.ஜி.ஆரின் எம்.கே.டி அன்பு
எம்ஜிஆர் 4 – மனிதமும் மதநல்லிணக்கமும்
எம்ஜிஆர் 5 – நேரு எழுதிய கடிதம்
எம்ஜிஆர் 6 – இந்தி எதிர்ப்பு போராட்டமும் விமர்சனமும்
எம்ஜிஆர் 7 – எம்.ஜி.ஆரின் பொதுவுடமை
எம்ஜிஆர் 8 – தியாகி கக்கனுக்கு செய்த உதவி
எம்ஜிஆர் 9 – எம்ஜிஆரும் இந்திரா காந்தியும்
எம்ஜிஆர் 10 – என்.எஸ்.கிருஷ்ணன் எனும் ஆசான்
எம்ஜிஆர் 11 – நட்புக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மரியாதை!
எம்ஜிஆர் 12 – கண்ணதாசன் வர்ணித்த ஆணழகன்
எம்ஜிஆர் 13 – எம்.ஜி.ஆரும் என்.டி.ஆரும்!
எம்ஜிஆர் 14 – நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்!
எம்ஜிஆர் 15 – அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புக்கு சொந்தக்காரர்!
எம்ஜிஆர் 16 – நிழலில் எதிரிகள்; நிஜத்தில் நண்பர்கள்
எம்ஜிஆர் 17 – ஆங்கிள் பார்த்த எம்ஜிஆர்!
எம்ஜிஆர் 18 – ஸ்ரீதருக்குச் செய்த உதவி!
எம்ஜிஆர் 19 – அசைவ உணவுப் பிரியர்!
எம்ஜிஆர் 20 – பகட்டுக்கு மயங்காதவர்!
எம்ஜிஆர் 21 – மதியூகத்தின் மறுபெயர்!
எம்ஜிஆர் 22 – மல்லிகையைப் பிய்த்து தின்ற மக்கள் திலகம்!
எம்ஜிஆர் 23 – மென்மையான உள்ளம் கொண்டவர்!
எம்ஜிஆர் 24 – திரையுலகில் முடிசூடா மன்னர்!
எம்ஜிஆர் 26 – படம் ஓடினால் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி!
எம்ஜிஆர் 27 – மனிதரை மனிதராக மதிப்பவர்!
எம்ஜிஆர் 28 – ‘இந்தியாவின் ஹிதேகி தகஹாஷி’!
எம்ஜிஆர் 29 – மக்களின் மனங்களில் இன்றும் வாழ்பவர்!
எம்ஜிஆர் 30 – எதையும் கொடுத்தே பழக்கம்!
எம்ஜிஆர் 31 – சந்திரபாபு நட்பு
எம்ஜிஆர் 32 – எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர்!
எம்ஜிஆர் 33 – குண்டு பாய்ந்ததால் பாதிக்கப்பட்ட குரல்வளம்!
எம்ஜிஆர் 34 – இரக்க சுபாவம் கொண்டவர்!
எம்ஜிஆர் 35 – எம்.ஜி.ஆருக்கு முதுகிலும் கண்!
எம்ஜிஆர் 36 – m.g.r. ஆத்திகரா? நாத்திகரா?
எம்ஜிஆர் 37 – ‘‘நான் பெறாத அந்தப் புள்ள நீதாம்பா’’!
எம்ஜிஆர் 38 – நினைத்ததை முடிப்பவர்!
எம்ஜிஆர் 39 -படத்தில் மட்டுமல்ல; நிஜத்திலும் ‘ஹீரோ’!
எம்ஜிஆர் 41 – அமுதசுரபி!
எம்ஜிஆர் 42 – ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்!
எம்ஜிஆர் 43 – மழையில் உதவிய கரங்கள்
எம்ஜிஆர் 44 – போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!
எம்ஜிஆர் 46 – சத்தியவதியின் வயிற்றில் பிறந்த சத்தியம்!
எம்ஜிஆர் 47 – உண்பது, உறங்குவது போல கொடுப்பதும் அவரது இயல்பு!
எம்ஜிஆர் 48 – அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்!
எம்ஜிஆர் 49 – ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!
எம்ஜிஆர் 50 – எம்ஜிஆரின் அபார நினைவாற்றல்!
எம்ஜிஆர் 51 – எம்.ஜி.ஆரின் வாரிசுகள்!
எம்ஜிஆர் 52 – புரட்சித் தலைவர் வாழ்க!
எம்ஜிஆர் 54 – ரத்தம் கொடுத்து படம் பார்த்த ரசிகர்கள்!
எம்ஜிஆர் 55 – இசைபட வாழ்ந்தவர்!
எம்ஜிஆர் 56 – கேட்காமலேயே கொடுத்தவர்!
எம்ஜிஆர் 57 – ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கியவர்!
எம்ஜிஆர் 58 – நடனக் கலைஞர்!
எம்ஜிஆர் 59 – உரிமைக்குரல்!
எம்ஜிஆர் 60- நாடகக்கலை மீதான பிரியம்!
எம்ஜிஆர் 61 – முப்பிறவி எடுத்தவர்!
எம்ஜிஆர் 62 – பொருளாதாரம் தெரியாதவர்!
எம்ஜிஆர் 63 – சொன்னதையும் சொல்லாததையும் செய்தவர். ஆனால்…
எம்ஜிஆர் 64 – மக்களின் அடிமை நான்!
எம்ஜிஆர் 65 – ஏழைப் பங்காளர்!
எம்ஜிஆர் 67 – மற்றவர்களுக்கும் மதிப்பளித்தவர்!
எம்ஜிஆர் 68 – சினிமாவிலும் பின்பற்றிய தர்மம்!
எம்ஜிஆர் 69 – அரசியல் வேறு, நிர்வாகம் வேறு
எம்ஜிஆர் 70 – தமிழ்ப் புலமை மிக்கவர்!
எம்ஜிஆர் 71 – விளம்பரத்தை விரும்பாத உள்ளம்!
எம்ஜிஆர் 72 – உதவும் மனம்!
எம்ஜிஆர் 73 – காட்சி அமைப்பாளர்!
எம்ஜிஆர் 74 – குழந்தை உள்ளம்!
எம்ஜிஆர் 75 – முதலும் கடைசியுமான விநியோகஸ்தர்!
எம்ஜிஆர் 76 – கொடுத்தது கோடிகள்!
எம்ஜிஆர் 77 – நரிக்குறவர்கள் அன்பு
எம்ஜிஆர் 78 – எடுத்துக்கொண்ட கடமைக்கே முதலிடம்!
எம்ஜிஆர் 79 – தொண்டருக்கும் தொண்டர்!
எம்ஜிஆர் 80 – ஆஸ்திரேலிய இயக்குநரின் பாராட்டு
எம்ஜிஆர் 81 – தொண்டர்கள் நலன்
எம்ஜிஆர் 82 – பத்திரிகையாளர்!
எம்ஜிஆர் 83 – வென்றாரும் இல்லை வெல்வாரும் இல்லை!
எம்ஜிஆர் 84 – தமிழ் வளர்த்தோன்!
எம்ஜிஆர் 85 – ‘அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி’
எம்ஜிஆர் 86 – அப்படியேதான் இருந்தார் எம்.ஜி.ஆர்.!
எம்ஜிஆர் 87 – பெண்களை தெய்வமாக மதித்தவர்!
எம்ஜிஆர் 88 – கலைஞருக்கெல்லாம் வள்ளல்!
எம்ஜிஆர் 89 – நடிகர் நலனில் அக்கறை கொண்டவர்!
எம்ஜிஆர் 90 – படுத்துக்கொண்டே நடித்தவர்!
எம்ஜிஆர் 91 – ரசிகர்களுக்கு மதிப்பளித்து மகிழ்ச்சிப்படுத்தியவர்!
எம்ஜிஆர் 92 – ‘குடும்பத் தலைவன்’!
எம்ஜிஆர் 93 – சிறந்த கொடையாளி!
எம்ஜிஆர் 95 – கருணை உள்ளம் கொண்டவர்!
எம்ஜிஆர் 96 – ரசிகர்களை அரசியலில் வளர்த்தவர்!
எம்ஜிஆர் 97 – பொய்க்காலில் அல்ல, புகழ்க்காலில் நிற்கும் உயரம்!
எம்ஜிஆர் 98 – அரசியல் எதிரிகளையும் ஈர்த்த பண்பு!
எம்ஜிஆர் 99 – மூன்றெழுத்துக்குள் இருந்த மாமனிதம்!
எம்ஜிஆர் 100 -அவர் புகழுக்கு முடிவேது?
-
மக்கள் திலகம் நூற்றாண்டு நிறைவு பெற்று நூற்றியொன்று நிகழும் அவர்தம் பெருமை மிகு சரித்திர சாதனைகள் பாமலைகள் நம் ரசிக்க கண்மணிகள் வடித்திடும் எழுத்துக்கள் எல்லாம் அருமையோ அருமை...