Quote:
மங்கை, அம்மா, அம்பிகை அவளும் பெண்தானே, முந்தானை முடிச்சு போன்ற பல வெற்றி பெற்ற மெகா தொடர்களை தயாரித்தவர், திரைப்பட தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி. இவர் தன்னுடைய விஷ்டா விஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் புதிய மெகா தொடர் அவளுக்கென்று ஓர் மனம்.
இத்தொடர் ஜீ-தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
கமலேஷ், கவுசிக், எஸ்.என்.வசந்தி, திலக்ஜி, சிவன், சீனிவாசன், ராஜசேகர், சந்தோஷி, ஷோபனா, வினோதினி, ராணிஸ்ரீ, சாந்தி, வில்லியம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கண்மணிசுப்பு திரைக்கதை எழுத, மருதுசங்கர் வசனம் எழுதுகிறார். ஒளிப்பதிவு சரவணன். ரெக்கார்டிங் கணேஷ். கவிஞர் பிறைசூடன் டைட்டில் பாடலை எழுத, ராம்கிரண் தீனா இசையமைக்கிறார்.
ஆர்.வி.ரமேஷ்ராஜ் இயக்கும் இத்தொடர் உணர்ச்சிமயமான ஒரு அருமையான குடும்பக் கதையைச்சுற்றி பின்னப்பட்டிருக்கிறது.
இத்தொடர் பெண்கள், ஆண்கள், வயதானவர்கள், குழந்தைகள், இளம் தலைமுறையினர் என்று எல்லா தரப்பைச் சேர்ந்தவர்களின் வரவேற்பையும் பெற்ற தொடராகியிருக்கிறது, என்றார் அழகன் தமிழ்மணி.