மாலை மலர் -12/01/2017
http://i67.tinypic.com/25tu5nq.jpg
Printable View
மாலை மலர் -12/01/2017
http://i67.tinypic.com/25tu5nq.jpg
நன்றி லோகநாதன் சார்,
டிஎம்எஸ் அய்யா எனக்கு பிடித்த பாடகர். அவருக்கு தபால் தலை வெளியிட்டிருக்கிறார்களா? இப்பத்தான் தெரிந்து கொண்டேன். நன்றி. அவருக்கு தபால் தலை போட வேண்டியதுதான். புரட்சித் தலைவருக்கு காலத்தால் அழியாத எவ்வளவு நல்ல பாடல்கள் பாடியுள்ளார்.
பி.பி.சீனீவாஸ் பாட்டு வார்த்தைகள் வேற மாதிரி காதில் விழும்.
ரோஜா மலரே ராஜகுமாரி பாடல் பி.பி.சீனிவாஸ் பாடும்போது
ஓஜா மலரே ஆஜ குமாரி .... என்று கேட்கும். எனக்குத்தான் அப்பிடி தோணுதா.
ஜேசுதாஸ், பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்... என்பதை பில்லை தமிழ் ... என்பார்.
சீர்காளி கோவிந்த ராஜன் முத்தின குரல். லவ் பாட்டு பாடினால் ரொமாண்டிக் மூடே அவட்.
எஸ்,பி.பியிடம் கம்பீரம் இருக்காது. டிஎம்எஸ் மாதிரி யார் பாடுவார்? நன்றி.
http://i68.tinypic.com/2ce0jeb.jpg
இன்று (13/01/2017) பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில்,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பறக்கும் பாவை " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/jfw950.jpg
இன்று (13/01/2017) முதல் சென்னை அகஸ்தியாவில், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
கோடிக்கணக்கான தமிழ் இதயங்களில் "குடியிருந்த கோயில் " திரைப்படம்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் திருவிழாவாக தினசரி 2 காட்சிகள் (மேட்னி, மாலை ) திரையிடப்படுகிறது .
http://i67.tinypic.com/30mwne0.jpg
ஜல்லிக்கட்டு அப்புறம், முதல்ல எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.. திரையுலகம் மெகா பிளான்!
http://i64.tinypic.com/35ckl7k.jpg
சென்னை: அரசுடன் சேர்ந்து எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாட விரும்புவதாக தமிழ் திரையுலகினர் தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்து தமிழ் திரையுலகினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குனர் ஆர்.கே. செல்வமணி கூறுகையில், Buy Tickets Tamil film industry's plan for MGR centenary celebration VIDEO : This is a big turning point of my life - Bharathiraja This is a big turning point of my life - Bharathiraja Entertainment Powered by எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். அதன் துவக்கமாக வரும் 17ம் தேதி சென்னை அபிராமி தியேட்டரில் துவக்க விழா நடைபெறும். அன்று அந்த தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன் படம் திரையிடப்படும். அனைத்து தியேட்டர்களிலும் காலை 9 மணிக்கு எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும். எம்.ஜி.ஆர். நடித்துள்ள 136 படங்கள் இந்த ஆண்டு முழுவதும் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இயக்குனர் பாரதிராஜா கூறுகையில், அரசுடன் இணைந்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவோம். அரசுடன் சேர்ந்து திரையுலகம் எம்.ஜி.ஆர். விழாவை நடத்தினால் அதிர்வு பெரிய அளவில் இருக்கும். இயக்குனர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி சேர்ந்து எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை நடத்துகின்றன என்றார். பாரதிராஜா தலைமையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெறும் என்று திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.
Read more at: http://tamil.filmibeat.com/news/tami...rticle-fbshare