Poi is damn awesome. Watched it last night. It's KB's best after DUET.
Printable View
Poi is damn awesome. Watched it last night. It's KB's best after DUET.
Rajini....??? Apoorva Ragangal....??? MAJOR ROLL..???????? :lol: :lol:Quote:
Originally Posted by sankara1970
பாலசந்தர் - பகுதி 4 அனுபவி ராஜா அனுபவி
--------------------------------------------------------------------------------
1967
அனுபவி ராஜா அனுபவி ..
சோகம் ஆயிற்று, திகில் ஆயிற்று இப்பொழுது பாலசந்தர் எடுத்துக்கொண்டது நகைச்சுவை..
ஆம் முழுக்க முழுக்க நகைச்சுவை படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற அவரது ஆவல் இந்த படத்தின் மூலம் நிறைவேறியது.
கதை என்னமோ சாதரணமானது தான் .. உருவ ஒற்றுமை உள்ள இருவர் இடம் மாற அதனால் ஏற்படும் விளைவுகளே கதைக்களம். ஆனால் பாலசந்தர் சொன்ன விதம் அருமை..
கதைக்களம் மதுரையில் நடப்பதாக அமைந்தது. மேஜர் பெரும் பணக்காரர் அவரது மனைவி டி.பி.முத்துலெட்சுமி.
அவரது மகன்கள் நாகேஷ், முத்துராமன்.
இருவரும் ஒழுங்காய் படிக்காமல் அப்பாவின் சொத்தை வீணடித்துக்கொண்டிருக்க, இதை கண்டு மேஜர் ஆத்திரமடைய அவர்களை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறார்.
அவருக்கு தெரியாமல் அவரது மனைவி இருவரையும் அவர்களது கொடைக்காணல் பங்களாவிற்கு அனுப்பி வைக்க அங்கே இந்த இரு மேதைகளும் திட்டம் தீட்டுகின்றனர்..
என்ன திட்டம் என்று அறிய ஆவலா.. ஆம் .. ஒருவரை மற்றொருவர் கொன்றுவிடுவதாக ஒரு நாடகம் நடத்தி தன் தந்தையை பழிவாங்க வேண்டும் என்பதே அது..
கொடைகாணல் ஏரியில் எறிவதாக முடிவாக , நாகேஷ் ஏரியில் தனிமையில் இருக்க முரடர்கள் அவரை தாக்க அவர்களிடமிருந்து தப்பிக்க .. முத்துராமன் அவரைத்தேடி வர, ஏறியில் நாகேஷின் கடிகாரத்தை பார்த்து அவர் இறந்துவிட்டதாக நினைத்து திரும்பி ஊருக்கே செல்கிறார்.
முரடர்கள் நாகேஷை ரயிலில் எங்கோ கொண்டு செல்ல நாகேஷ் அவர்களிடமிருந்து தப்பித்து வேறு ரயில் பெட்டியில் ஏற அது செல்வதோ தூத்துக்குடிக்கு ..
தூத்துக்குடி ....இங்கே ஒரு ஏழை நாகேஷ் .. இவரோ அம்மா(எஸ்.என்.லெட்சுமி) மற்றும் முறைப்பெண் மனோரமா இவர்களே உலகம் என வாழும் மனிதர்.
உப்பளத்தில் வேலை இவருக்கு. இந்த உப்பு மூட்டையை கப்பலில் கொட்ட வரும் சமயத்தில் இவருக்கு உறக்கம் வர அங்கேயே குரட்டை விட்டு இவர் தூங்க, முழிக்கும் போது கப்பல் கரையை விட்டு கிளம்ப இவரோ அலறி அடித்துக்கொண்டு கேப்டனிடம் முறையிட அவரோ ஒன்றும் செய்ய இயலாது என்று கூறி கப்பல் சென்னைக்கு செல்கிறது என்று கூறுகிறார்.
இந்த நாகேஷ் சென்னைக்கு வர .. சென்னை அவருக்கு பிரமிப்பை தர.. ஒரே களேபரம்..
எப்படியோ இந்த நாகேஷ் மேஜரிடத்தில் வந்து சேர.. படத்தில் விறுவிறுப்பு கூடுகிறது.
நடுவில், தன் மகன் நாகேஷ் இறந்து விட்டதாக முத்துராமன் கூற போலீஸ் அவரை கைது செய்கிறது.
இப்பொழுது தன் மகன் திரும்பி வந்துவிட்டதால் சந்தோஷம் அடைந்த மேஜர், இந்த நாகேஷை கோர்ட்டில் ஆஜர் செய்ய தன் வக்கீலிடம் ஆலோசனை கேட்கிறார். இந்த நாகேஷ் பேசும் தோரணை, மற்றும் செய்லகள் மாறுபட்டிருக்க அவருக்கு எல்லாம் மறந்துவிட்டது என்று நினைத்து அவருக்கு பழைய நாகேஷ் போல பேசவும் பழகவும் கற்றுத் தருகிறார்கள்.
கோர்ட் - காட்சி
தூத்துக்குடிக்காரர் மதுரைக்காரராக ஆஜர் செய்ய, அரசாங்க வக்கீர்(ஒ.ஏ.கே.தேவர்) கேட்கும் கேள்விகளுக்கு சமாளித்து நாகேஷ¤ம், வக்கீலும் பதில் சொல்ல, ஒரு கட்டத்தில் நாகேஷ் கைக்கடிகாரம் களவாடப்பட்டதாக சொல்ல இது மதுரை வட்டார வழக்கல்ல என அரசாங்க வக்கீல் வாதாட, பின் நாகேஷை டை கட்ட சொல்ல அவர் தடுமாற தீர்ப்பு கூறும் வேளையில் பழைய நாகேஷை அவரது காதலி ஜெயபாரதி கோர்ட்டில் ஒப்படைக்க சுபம்..
பாலசந்தருக்கு ஓய்வு தேவை அந்த சமயத்தில் அதனால் தான் அவர் இந்த நகைச்சுவை படத்தை எடுத்தார் போலும்..
இப்பொழுது பார்த்தாலும் சலிக்காத படம்...
படத்தின் நாயகன் அந்த தூத்துக்குடி நாகேஷ் தான் .. அவர் அந்த நெல்லைத்தமிழ் பேசும் விதம் அபாரம்
ஆத்தி ..
அடுத்தவர் முத்துராமன் .. தன் தம்பியை தானே கொன்றுவிட்டதாக கருதி அவர் பயந்து நடுங்குவதாகட்டும், காதலி ராஜஸ்ரீயிடம் தான் கொலை செய்யவில்லை என்று சொல்வதாகட்டும் அருமை.
மற்றவர்கள் எல்லோரும் பாத்திரம் உணர்ந்து நடித்திருப்பர்.
இந்த முறை பாலசந்தர் பணியாற்றியது எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் கண்ணதாசனுடன்.
இந்த கூட்டணியும் ஒன்றும் குறைந்த கூட்டணியல்ல
பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து ..
அதிலும் தூத்துக்குடி பாஷையில் கண்ணதாசன் இயற்றிய
முத்துக்குளிக்க வாரீகளா மூச்சை அடக்க வாரீகளா
எல்.ஆர்.ஈஸ்வரி - டி.எம்.செளந்தரராஜன் குரல்களில் இன்றும் பிரபலமான பாடல்
பாடல் இதோ..
http://www.coolgoose.com/music/song.php?id=219516
அனுபவி ராஜா அனுபவி - சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில்
துள்ளல் பாடல்
அனுபவி ராஜா அனுபவி
அனுபவி ராஜா அனுபவி
அழகுக் கிளிகளின் கையாலே
அடிவிழுந்தாலும் சந்தோஷம்
அதிலே தோன்றும் அடையாளம்
அது ஒரு மாதிரி உல்லாசம்
(அனுபவி)
நடுத்தெருவில் ஒரு மகராஜா
பார்த்தாரே ஒரு பெண்ணை
லாபம் நஷ்டம் பாராமல்
போனாரே அவள் பின்னே
கட்டுக்காவலை மீறிய கண்கள்
வட்டம் போட்டதடி
பட்டுத்தாவணி மூடிய மேனி
கட்டிப் போட்டதடி
இன்னும் பாரடி கண்ணும் நெஞ்சும்
எதையோ தேடுதடி
உண்மைதானடி கன்னம் ரெண்டும்
இன்னும் கேட்குதடி
(அனுபவி)
அடுத்த வீட்டுப் பெண்ணெல்லாம்
அம்மான் மகளோ ராஜா
அம்மான் மகள்தான் என்றாலும்
சும்மா வருமோ ராஜா
சாலை வழியே போகும் பெண்ணை
ஜாடை காட்டாதே
சேலை போகும் பாதை எல்லாம்
வாலை நீட்டாதே
அங்கும் இங்குமே கண்கள் ஓடினால்
அனுபவம் இது ராஜா
மங்கை கைகளில் வாங்கும் பூஜை
மாறட்டும் மகராஜா
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - டி.எம்.செளந்தரராஜன் குரல்¢ல் சென்னை நகரையும் நாகரீகத்தையும் சாடும் பாடல்
பாடல் இதோ..
http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.4219/
பாமா விஜயம் - அடுத்த பகுதியில்
பகுதி -5 பாமா விஜயம் --- பாலசந்தர் ஜெயம் ..
பாமா விஜயம்(1967) - பெயரைக்கேட்டாலே நமக்கு சிரிப்பும் வரும் கூடவே அந்த படம் சொன்னை கருத்தை சிந்திக்கவும் வைக்கும் அளவிற்கு தமிழ் நாட்டை கலக்கிய திரைப்படம் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து..
நடிகர் நடிகையை நேரில் பார்த்தால் நாம் எப்படியெல்லாம் நடந்துகொள்வோம் .. அதைத்தானய்யா பாலசந்தர் திரையில் காட்டினார்..
இன்றும் சிலர் பாலசந்தரின் சிந்தனையையும், படங்களையும் குறை கூறிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அவர்களை பற்றி எனக்கு கவலையில்லை.. நான் ரசித்த, பலர் ரசித்த பல அற்புத காவியங்களின் படைப்பாளி அவர். அதை சொல்வதில் எனக்கு மிகுந்த சந்தோஷமே...
சரி பாமா விஜயம்..
அழகான கூட்டுக்குடும்பம் .. அப்பாவின் தலைமையில் நிர்வாகம்.
மேஜர் - ஹிந்தி ஆசிரியர் அவரது மனைவி செளகார் ஜானகி
முத்துராமன் - ஒரு கம்பெனியில் மானேஜர் அவரது மனைவி காஞ்சனா
நாகேஷ் - ஏதோ சின்ன வேலை அவரது மனைவி ஜெயந்தி
இவர்களின் தங்கை சச்சு
கண்டிப்பான அப்பா - டி.எஸ்.பாலய்யா
மற்றும் மாஸ்டர் பிரபாகரின் தலைமையில் மழலைப் பட்டாளங்கள் ..
அழகான குடும்பத்தில் புயல் வீசுகிறது .. ஆம் இந்த முறை புயல் சோகம் அல்ல ஒரு இளம் பெண்
ஆம் திரைத்தாரகை பாமா(ராஜஸ்ரீ) அவர்கள் வீட்டுக்கு எதிரில் குடிவருகிறாள்..
அன்று முதல் வீட்டில் ஒரே களேபரம் .. இருக்காத பின்னே.. நடிகை பாமா இவர்களுக்கு பக்கத்தில் .. பார்க்க வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்குமே..
ஆண்களுக்கு .. பாமா அழகானவளா சின்ன வயதா ... என்ற எண்ணம்
பெண்களுக்கு -- பாமா என்ன நகை போட்டிருக்கிறாள் .. வேளைக்கு என்ன உடை உடுத்துகிறாள் என்று அறிய ஆவல்...
தினமும் இதைப்பற்றியே பேச்சு ..
வீட்டின் பெரியவருக்கோ இது ஒரே தலைவலி
மூன்று பெண்களும் மாடியில் வடகம் போட்டுக்கொண்டு இருக்க, பாமாவின் கார் சத்தம் கேட்டவுடன்
பாமா வராடி, அய்யோ பாமா வந்துட்டாடி என கூறிக்கொண்டே பாமாவை எந்த திசையிலிருந்து பார்த்தால் ஒழுங்காக தெரியும் என வடகத்தை மிதித்துக்கொண்டு ஓட ,பின் வடகத்தை மிதித்தது தெரிந்து செளகாரும், காஞ்சனாவும் காட்டும் முக பாவம் அப்பப்பா... அந்த ஒண்டுகுடித்தன பெண்களுக்கே உண்டான குணங்கள். .
இதற்கு நடுவே பாமாவை தங்கள் வீட்டிற்கு அழைப்பதில் வீட்டுப்பெண்களும் ஆண்களும் ஆர்வம் காட்ட
பாமாவின் மேனேஜர் ஸ்ரீகாந்தை அணுகி .. ஒரு வழியாக பாமா இவர்கள் வீட்டிற்கு வர சம்மதிக்கிறார்.
ஸ்ரீகாந்த்திற்கு இவர்கள் வீட்டுப்பெண் சச்சுவின் மீது ஒரு இது .. அதனால் தான் இத்தனை சுலபமாக பாமாவை சம்மதிக்க வைத்தார்
நடிகை வருவது என்னவோ எலிசபத் ராணி வருகை தருவதுபோல் நினைப்பு இவர்களுக்கு, வீட்டிற்கு வர்ணம் பூசுவதிலிருந்து, வாடகை சோபா என தூள் பறக்கிறது... இதெல்லாம் ஒரு நாள் இல்லை ஒரு மணி நேரக்கூத்திற்காக..
அடேயப்பா படத்தில் இந்த காட்சியை நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்
நாகேஷ் தலை கீழாக வர்ணம் பூசிக்கொண்டிருப்பார், முத்துராமன்/மேஜர் சுந்தரராஜன் வாடகை சாமான்களை சரி பார்த்துக்கொண்டிருப்பர், மனைவியரோ பாமா வரும்பொழுது தாங்கள் எப்படி எப்படி எல்லாம் அலங்காரம் செய்து கொள்ளவேண்டும் என்பதை விவாதம் செய்து கொண்டிருப்பர்.. டிபிகல் மிடில் கிளாஸ் மக்களை கண் முன் இப்படி கொண்டுவர பாலசந்தரால் தான் இயலும்..
அந்த நாளும் வந்திடாதோ .. என்பது போல
பாமா விஜயம் செய்யும் நாளும் வர, அடேயப்பா வாசனை திரவியங்களை ஆண்களும் சரி பெண்களும் சரி பூசிக்கொள்ளா, இரவல் நகையை முதலில் யார் போட்டுக்கொள்வது என்பதில் சண்டை வர பின் சமாதனமாக பாமா ஒருவர் அறையை விட்டு வரும் தருவாயில் மாற்றிக்கொள்வது என முடிவாக ..
பாமா வீட்டினுள் நுழைகிறார்..
இந்த காட்சியும் மறக்க முடியாத காட்சி.. முதலில் காஞ்சனா -முத்துராமன் வீட்டிற்கு(அறைக்கு) செல்ல
காஞ்சனா தனது ஆங்கில புலமையில் பாமாவிடம் பேச பின் பாமா காஞ்சனாவின் நகையை பற்றி கேட்க
காஞ்சனா அதன் பெருமை பாட .. உடனே பக்கத்து அறையிலிருந்து செளகார் சைகை காட்ட , பாமா அவர்கள் அறைக்கு செல்ல ஆயத்தமாகிறார்.
நகையை செளகார் கேட்க கொடுக்க மனமில்லாமல் கொடுத்துவிட்டு ஏதாவது வம்பு செய்ய வேண்டும் என்று நினைக்கும் காஞ்சனா ,
செளகார் பூட்டிவைத்திருக்கும் அவரது பிள்ளைகளை திறந்து விடுகிறார்.
செளகார்-மேஜர் அறையில் பாமா இருக்க தங்களுக்கு இரண்டே குழந்தைகள் தான் என பாமாவிடம் செளகார் சொல்ல, திறந்த அறையிலிருந்து ரயில் பெட்டி போல் குழந்தைகள் வர.. செளகார் சமாளிக்க உடனே காஞ்சனா பாமாவிடம் இதுவும் அக்காவின் குழந்தைகள் தான் என கூற செளகாரின் முகத்தை பார்க்கவேண்டுமே...
செளகார் தனக்கு தெரிந்த ஹிந்தியில் சில வார்த்தைகளை சொல்லி, காஞ்சனாவிற்கு ஹிந்தி தெரியாது என சீண்டுகிறார்.
அடுத்து நாகேஷ் -ஜெயந்தி அறை அங்கே குடிப்பதற்கு என்ன வேண்டும் என ஜெயந்தி கேட்க பாமா மோர் வேண்டும் என கூற ஜெயந்தியின் முகத்தில் ஆச்சர்யம்..
ஒரு வழியாக பாமா விஜயம் முடிய, தொல்லைகள் அத்தோடு முடியவில்லையே..
வீட்டில் உள்ள ஆண்கள் ஒவ்வொருவராக பாமாவை தனியே சந்திக்க முயற்சி செய்ய அதில் மூவருக்கும் போட்டி உண்டாக்க ஒருவரை மற்றொருவர் அவர்கள் மனைவியிடம் எப்படி மாட்டி விடலாம் என திட்டம் தீட்ட,
முதலில் நாகேஷ் உதட்டுச்சாயத்தால் மேஜரின் சட்டையில் கறை உண்டாக்க, வெளுக்க போடும் துணிகளை எடுக்க வரும் செளகார் கறையை பார்த்து மேஜரிடம் கேள்வி கேட்டு ஒரு அமளி..
இப்படி ஒருவர் பின் ஒருவராக மனைவியுடன் சண்டை போட யாரை பார்க்க இந்த பெண்கள் துடித்தார்களோ அவர்களே அவளை வெறுக்க ஆரம்பித்தனர். பின் பெரியவர் கூறும் புத்திமதியால் மனம் மாறுகின்றனர்
பின் பாமா இவர்களின் ஒற்றுமை தான் தனக்கு பிடித்ததாகவும், தன் படப்பிடிப்பை பார்க்க இவர்களை அழைத்துக்கொண்டு போக படம் சுபம்..
படத்தில் அத்தனை நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தனர்
ஆனால் டி.எஸ்.பாலய்யா அவர்களின் நடிப்பு அபாரம், கோபம் கொள்வதாகட்டும், இவர்கள் கேட்காததால் வருத்தப்படுவதாகட்டும் குணசித்திர நடிகரய்யா இவர்
செளகார்.. இந்த படத்திலும் வாய்ப்பு மூத்த மருமகள் வேடம் கனகச்சிதம் அந்த கர்வம், கணவனை அடக்கும் விதம் நடை உடை பாவணை என எல்லாம் அமர்க்களம்
நாகேஷ் - கடைசி மகன் அதே சுட்டி அப்பாவிடம் வாதம் செய்யும் இடமாகட்டும், மேஜை மீது ஏறி நிற்கும் தண்டனை பெறும் போதாகட்டும் .. தமாஷ்
மேஜர், காஞ்சனா,ஜெயந்தி,ராஜஸ்ரீ என எல்லோரும் நன்கு நடித்திருந்தனர்
எப்படி பாலசந்தர்-குமார்-வாலி கூட்டணி மேஜர் சந்திரகாந்தில் தொடங்கி ஒரு ஸ்திரமான கூட்டணியானதோ அதே போல் பாலசந்தர்-எம்.எஸ்.வி-கவியரசர் கூட்டணியும் ஒரு சாதணை கூட்டணியானது இந்த வருடத்திலிருந்துதான் .. அனுபவி ராஜா அனுபவியில் ஒரு முத்துக்குளிக்க வாரீகளா என்றால்
பாமா விஜயத்தில் ஒரு வரவு எட்டணா செலவு பத்தணா
ஒவ்வொன்றாக வருவோம்
இந்த மூன்று பெண்களின் அ ந் நியோன்யத்தை விளக்கும் விதமாக அமைந்த பாடல்
ஆணிமுத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே - சுசீலா(செளகார்),சூலமங்கலம் ராஜலெட்சுமி(காஞ்சனா),
எல்.ஆர்.ஈஸ்வரி(ஜெயந்தி) என அழகான பாடல் .. மூன்று பாடகியர் பாடிய பாடல்கள் சிலவே அதில் மிகவும் முக்கியப்பாடல் இது(இதே மூவர் பாடிய இன்னொரு பாடல் துள்ளி துள்ளி விளையாட - மோட்டார் சுந்தரம்பிள்ளை)
கவிஞரின் வரிகளும் மெல்லிசை மன்னரின் இசையும், மூன்று குயில்களின் குரலும் நம்மை மெய் மறக்க செய்யும்
http://psusheela.org/audio/ra/tamil/...aresong515.ram
சுசீலா: ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
ஈஸ்வரி: அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
சுசீலா: ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
ஈஸ்வரி: அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
ராஜலஷ்மி: நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும்
நேரம் இல்லையடியோ
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும்
நேரம் இல்லையடியோ .. அடியோ
அனைவரும்: ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
சுசீலா: எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஈஸ்வரி: ஏறிட்டு நான் அதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நான் அள்ளி சூடவில்லை
சுசீலா: எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஈஸ்வரி: ஏறிட்டு நான் அதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நான் அள்ளி சூடவில்லை
அந்தக் கன்னத்தில் என்னடி முத்து வண்ணம்
எந்தக் கள்ளத்தனத்தினில் வந்ததடி
சுசீலா: வாங்கிக் கொடுத்ததும் தாங்கிப் பிடித்ததும்
முத்துக்கள் போல் வந்து சிந்துதடி
ஒரு முத்து இரு முத்து மும் முத்து
நால் முத்து ... அம்மம்மா
ராஜலஷ்மி: பெண்ணுக்கு எத்தனை முத்தமடி
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி
ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஈஸ்வரி: ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஈஸ்வரி: ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ராஜலஷ்மி: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ராஜலஷ்மி: மாமன் மக்கள் தேடிய செல்வங்கள் யாருக்கடி
சுசீலா: ஆடிடும் பிள்ளைகள் பேருக்கடி
மிஞ்சிய செல்வங்கள் ஊருக்கடி
ஈஸ்வரி: கையில் உள்ளதைக் கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
சுசீலா: வீட்டின் நலத்துக்கும்
நாட்டின் நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
வீட்டுக்கு ... பிள்ளைக்கு ... ஊருக்கு .. நாட்டுக்கு...
அனைவரும்: பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி
ஓஓஓஓஓஓஓஓஓஓ ....ஓஓஓஓஓஓஓஓஓ ...ஆஆஆஆஆஆஆஆஆஆ
மறக்க முடியாத வரவு எட்டணா செலவு பத்தணா.. இந்த பல்லவியே போதும் எல்லாவற்றையும் சொல்லி விடும்...
பாலய்யாவும் குழந்தைகளும் பெரியவர்களுக்கு புத்திமதி சொல்வதாக ஆரம்பிக்கும் பின் மகன்களும் மருமகள்களும் பதிலுக்கு பதில் சொல்வார்கள்..
டி.எம்.எஸ் பாலய்யாவிற்கும் பாடுவார், மேஜர், நாகேஷ்,முத்துராமனுக்கும் பாடுவார் .. ஆனால் அழகாக வித்தியாசப்படுத்தி பாடியிருப்பார். பெண் குரல்கள் எல்.ஆர்.ஈஸ்வரி, சுசீலா மற்றும் குழந்தைகள் (எஸ்.என்.சுரேந்தர் உட்பட)
பாடலின் வரிகளும் , மெட்டுக்கு சிறியவர்கள் போடும் ஆட்டமும் அபாரம் ...
இன்றும் இந்த பாடல் ஒலி(ளி)பரப்பினால் கேட்காத/பார்க்காத உள்ளமிருக்க முடியாது..
http://music.cooltoad.com/music/song.php?id=173715
நினைத்தால் சிரிப்பு வரும்... நினைத்தால் சிரிக்க வைப்பேன்
காஞ்சனா(சுசீலா), ஜெயந்தி(எல்.ஆர்.ஈஸ்வரி) பாடுவதாக அமைந்த பாடல்
கொஞ்சம் கடினாமான மெட்டு .. அழகாக பாடியிருப்பார்கள் இருவரும்..
http://www.coolgoose.com/music/song.php?id=252232
குறு குறு நகை என்னவோ - நாகேஷ்-ராஜஸ்ரீ கனவுப்பாடல்
மொத்தத்தில் பாமா விஜயம் என்றும் பார்க்க வேண்டிய படம்..
இந்த படம் தெலுங்கு, ஹிந்தி சமீபத்தில் மலையாளத்திலும் எடுக்கப்பட்டது
தாமரை நெஞ்சம் - அடுத்த பகுதியில்
Dear Rajesh,
Eventhough I already watched the movie many times, your wonderful writing brought the movie (Bama Vijayam) again in front of me.
Beautiful writing. Keep it up.
Rajesh Sir,
Now only i could go though yours posts in this thread. Wonderful write up :notworthy:
Awaiting Thaamarai Nenjam :)
Rajesh
Bama Vijayam alasal arumai. Waiting for the next movie.
6.தாமரை நெஞ்சம்-நம் நெஞ்சில் நீங்கா மஞ்சம்
தாமரை நெஞ்சம் .. பெயரே அழகாக இருக்கிறதல்லவா அது தான் பாலசந்தரின் சிறப்பு..
தாமரை நெஞ்சம் - பாலசந்தர் இயக்கத்தில் மறக்க முடியாத படம்
காதல் மன்னன் ஜெமினி முதன் முதலில் பாலசந்தருடன் பணியாற்றிய படம் பின்னர் இவர் பாலசந்தரின் ஆஸ்தான நாயகரானார் என்பது உலகமறிந்த செய்தி..
அபிநய சரஸ்வதி திருமதி சரோஜாதேவி பாலசந்தரின் இயக்கத்தில் நடித்த ஒரே படம்.
வாணிஸ்ரீ நடித்த பாலசந்தர் படமும் இதுவே..
இந்த புதியவர்களை தவிர மற்றவர்கள் ஏற்கனவே பாலசந்தரின் படங்களில் முகம் காட்டிய நாகேஷ், மேஜர் என அதே பட்டாளம்....
சரோஜாதேவியின் திரையுலக வாழ்க்கையில் இது ஒரு மைல்கல் படம் என்றால் அது மிகையில்லை .. அளவான நடிப்பு அதே சமயம் அற்புத வெளிப்பாடு .. என தூள் கிளப்பியிருப்பார்.
வாணிஸ்ரீ மட்டும் சளைத்தவரா என்ன .. சரோவிற்கு ஈடு கொடுத்து நடித்திருப்பார்
கதைக்களம் இதுதான் .. சரோஜாதேவியும், வாணிஸ்ரீயும் நெருங்கிய தோழிகள் .. சரோஜாதேவி ஒரு வீட்டில் குழந்தைகளை கவனித்து கொள்ளும் வேலையில் சேர்கிறார். அங்கு ஜெமினி மீது காதல் கொள்கிறார்.
ஆனால் ஜெமினியே சரோவின் தோழியான வாணிஸ்ரீயை விரும்புகிறார். சரோ ஜெமினியின் அண்ணன் மேஜரிடம் போராடி வாணிஸ்ரீக்கும் ஜெமினிக்கும் திருமணம் முடித்து வைக்கிறார்.
ஆனால் தன் மனதில் ஜெமினியுடனே வாழ்க்கை நடத்துகிறார் சரோ..
இந்த நிலையில் வாணிஸ்ரீயின் கால்கள் செயலிலழ்ந்து போக சரோ அவரையும் கவனித்துக் கொள்கிறார்.
சரோ எழுதும் கதை ஆனந்த விகடனில் வாரா வாரம் வெளியாக வீட்டில் அனைவரும் அதை படிக்க கடும் போட்டி.. குடும்ப நண்பர் நாகேஷ் உட்பட.. (பலருக்கு தெரியாது சரோ இதை எழுதுகிறார் என்று)
வாணிஸ்ரீக்கு உண்மை தெரிய வர, சரோவின் நிலையோ கேள்விக்குறி ..
வேறு வழியின்றி தற்கொலை செய்துகொள்கிறார்.. அதுவும் தன் கதையின் கடைசி பகுதியை எழுதிக்கொண்டே தன் கடைசி அத்தியாயதை முடித்துக்கொள்கிறார்.
நாகேஷ் எவ்வளவோ முயன்றும் அவரை காப்பாற்ற முடியாமல் போகிறது...
சரோவின் நெஞ்சம் தாமரை போன்றது என்பதை குறிப்பதே இந்த தலைப்பு..
நான் கதையை மிகவும் சுருக்கி சொல்லிவிட்டேன் .. திரையில் பார்க்க இன்னும் அழகு..
இசையமைப்பு மெல்லிசை மன்னர்
வரிகள் கண்ணதாசன்..
பாடல்கள் ஒவ்வொன்றும் இன்றும் பிரபலம்
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால் ..
சுசீலா மற்றும் குழந்தைகள் (சுரேந்தர் உட்பட) அழகான பாடல்
சரோ குழந்தைகளை கவனிக்கும் விதமே அழகு
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு
நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு
லல்லல்லல்லல்லா...லல்லல்லல்லல்லா...
சனிதப மகரி
நிதபமகரிச
கண்ணழகு பாப்பா
உன் கைகளைக் காட்டு
உன் கை பார்த்து ஆயிரம் உள்ளம் வாழும்
சின்ன சின்ன ராஜா
என் அருகினில் வாடா
உன் முகம் பார்த்து ஆயிரம் இல்லம் வாழும்
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
காகிதப் பூவில் வாசம் இல்லை ரோஜாவை வைத்தேன்
காதல் கொண்ட ராணியின் பக்கம் ராஜாவை வைத்தேன்
கண்ணாடி உன் உள்ளம்
கள்ளம் இல்லாப் பெண் உள்ளம்
உன்னைக் கண்டு உறவாடும் பேதை என்னுள்ளம்
அந்தி படும் போது என் அழகிய வீடு
பொன் ஒளியோடு மாணிக்க வண்ணம் காட்டும்
வெண்ணிலவு வந்து என் இல்லத்தைக் கண்டு
தன் விளையாட ஓரிடம் என்னைக் கேட்கும்
லல்லல்லல்லல்லா...லல்லல்லல்லல்லா...
லல்லல்லல்லல்லா... லல்லல்லல்லல்லா...
கோடி கொடுத்தும் உறவினரோடு வாழ்வது தான் இன்பம்
கூட இருந்து பாதி கொடுத்து உண்பது பேரின்பம்
இரை போடும் உள்ளங்கள் என்றும் வாழும் தீபங்கள்
இல்லை என்று சொல்லாத தங்கக் கிண்ணங்கள்
நல்லவர் இல்லம் இது பல்கலைக் கழகம்
இது நடமாடும் தெய்வங்கள் கூடும் சங்கம்
கலகலப்பாக நல்ல ஒளிமயமாக
தினம் கல்யான வீடென வாழும் இல்லம்
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு
நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு
http://psusheela.org/audio/ra/tamil/...aresong011.ram
தித்திக்கும் பாலெடுத்து..
சரோ தினமும் ஜெமினியின் அடியில் தன் காலடியை பதித்து நடத்து பார்த்து நிம்மதி அடைவார்
ஒரு நோண்பன்று தன் அறையில், தன் பெட்டியில் உள்ள ஜெமினி படத்தை வைத்துக்கொண்டு பேசுவார்.. பாடுவார்
அதுவே சுசீலாவின் குழைவான குரலில் தித்திக்கும் பாலெடுத்து பாடல்
தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு மாலை சூடும் மண விருந்து
பொன்னைப் போல் நீ இருந்து அன்னம் போல நடை நடந்து
பொன்னைப் போல் நீ இருந்து அன்னம் போல நடை நடந்து
உண்ணத் தான் மடியிருந்து அள்ளி வைப்பாய் தேன் விருந்து
தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு மாலை சூடும் மண விருந்து
பெண் பார்க்க மாப்பிள்ளையும் பெற்றோரும் வரும் போது
பெண் பார்க்க மாப்பிள்ளையும் பெற்றோரும் வரும் போது
மண் பார்த்து அடி எடுத்து
மண் பார்த்து ... அடி எடுத்து..
ஒரு கண் பார்த்து கனிவோடு வருவது பெண்மை
சிங்காரக் கன்னி என்பார்
செவ்விதழில் பதில் தருவாய்
படித்தாளா எனக் கேட்டால்..
படித்தாளா.. எனக் கேட்டால்
உன் படிப்பெல்லாம் பார்வையிலே சொல்வது மென்மை
கல்யாண மணவறையும் கண்ணாடி நிலவறையும்
கல்யாண மணவறையும் கண்ணாடி நிலவறையும்
கண்டாடும் பெண்ணாக
கண்டாடும்.. பெண்ணாக
சுகம் கொண்டாடும் திரு நாளை நினைப்பது நெஞ்சம்
என்னேரம் எது நடக்கும்
எப்போது மண முடியும்
முள்ளோடு மலராக
முள்ளோடு.. மலராக..
மனம் தள்ளாட தனியறையில் காண்பது இன்பம்
http://psusheela.org/audio/ra/tamil/...aresong006.ram
வாணிஸ்ரீக்கு உண்மை தெரிந்ததும் சரோவை பார்த்து
பாடுவார் அடி போடி பைத்தியக்காரி அதற்கு சரோவும் பதில் சொல்வார்..
சுசீலா, ஈஸ்வரி குரல்களில் அழகுப்பாடல் ..
சுசீலா: அடி போடி பைத்தியக்காரி
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
ஈஸ்வரி: அடி போடி பைத்தியக்காரி
நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்
நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்
சுசீலா: நினைத்ததெல்லாம் முடித்து விட்டேன்
இனி வேறு ஆசை இல்லை
நிலை மாறப் போவதில்லை
நிழல் தேடும் எண்ணம் இல்லை
நிழல் தேடும் எண்ணம் இல்லை
அடி போடி பைத்தியக்காரி
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
ஈஸ்வரி: நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்
ஈஸ்வரி: இறைவன் ஒரு நாள் தூங்கி விட்டான்
எழுத்தைக் கொஞ்சம் மாற்றி விட்டான்
எழுத்தைக் கொஞ்சம் மாற்றி விட்டான்
எழுதும் கதையை மாற்றி எழுத
என்னை இங்கே தூது விட்டான்
உன்னைக் கண்டு பேச விட்டான்
சுசீலா: அடி போடி பைத்தியக்காரி
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
ஈஸ்வரி: நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்
சுசீலா: கண்கள் அருகே இமை இருந்தும்
கண்கள் இமையைப் பார்த்ததில்லை
கண்கள் இமையைப் பார்த்ததில்லை
இந்த உவமை கொஞ்சம் புதுமை
இன்னும் உனக்கேன் புரியவில்லை
வேறென்ன சொல்வேன் தெரியவில்லை
ஈஸ்வரி: அடி போடி பைத்தியக்காரி
நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்
சுசீலா: நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
சுசீலா: அடி போடி பைத்தியக்காரி
ஈஸ்வரி: விளக்கின் ஒளியாய் நீ இருந்தால்
விழுந்த நிழலாய் நானிருப்பேன்
சுசீலா: நிழலும் ஒளியும் சேர்வதில்லை
நிலவும் வானும் பிரிவதில்லை
ஈஸ்வரி: த்யாக நெஞ்சம் தெய்வ நெஞ்சம்
நானும் தெய்வம் ஆவேனோ
சுசீலா: நான் பாதை மாறிப் போவெனோ
http://psusheela.org/audio/ra/tamil/...aresong662.ram
தாமரை நெஞ்சம் இன்றும் மறக்க முடியாத படம்
ராஜ்
புன்னகை
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் எழுதி இயக்கிய படங்களில் இன்னொரு மகத்தான படம் ‘புன்னகை’ என்று சொல்லலாம். முழுக்க காந்தியடிகளின் சத்திய வேட்கையை மையமாகக் கொண்டு மிக அற்புதமாக இதனை இயக்கியிருந்தார். சத்திய வேட்கை என்ற பெயரையே இந்த படத்திற்கு வைத்திருக்கலாம். ஆனால் பாலசந்தர் எப்போதுமே நேரடியாகக் குறிப்பிடுவது மாதிரி தலைப்புகளை வைக்காமல் எதன் மூலமோ எதனையோ உணர்த்துவது மாதிரி பெரும்பாலும் தலைப்புகளை சூட்டுவார்.
இந்தப் படத்திலும் சத்தியத்தின் மீது நம்பிக்கையும், உறுதியும் கொண்டவர்கள் எந்த நிலையிலும் மனம் கலங்காது இருப்பார்கள் என்பதனையே ‘புன்னகை’ என்ற பெயரின் மூலம் உணர்த்தியிருக்கிறார். நிலை கலங்காமல் இருப்பவர்கள் முகத்தில் எப்போதும் புன்னகை கோலம்தான்! என்று பொருள் கொள்ளலாம். இடுக்கண் வருங்கால் நகுக என்பாரே வள்ளுவர்! அதைத்தான் புன்னகை என்ற பெயர் மூலம் நமக்கெல்லாம் தெளிவு படுத்தியிருக்கிறார்.
மோனலிசாவின் புன்னகை உலகிலேயே அழகானது என்பார்கள். ஆனால் சத்திய வேட்கை உள்ளவர்களின் புன்னகையே தெய்வீகமானது என்பதை நமக்கு உறுதிப்படுத்திக்காட்ட இந்தப் படத்தில் அவ்வப்போது காந்தியடிகளின் புன்னகையை நமக்கு பாலசந்தர் காட்டிக்கொண்டே இருப்பார்.
காந்தியடிகளின் நெறிகளைச் சொல்ல வந்த படங்களில் இந்தப் புன்னகை திரைப்படம் ஒரு மகத்தான திரைப்படம். காந்தியடிகள் பிறந்த நாள் போன்ற நல்ல நாட்களில் ஒளிபரப்பி காட்டப்பட வேண்டிய திரைப்படம் ‘புன்னகை’.
இந்தப் படத்தில் இதன் கதையைச் சொல்லும் கதாசிரியராக நாகேஷ் வருவார். அவர் மேஜர் சுந்தர்ராஜனிடம் இந்தக் கதையை சொல்ல ஆரம்பிக்கும் நேரம், ‘சரி கதையின் பெயர் என்னப்பா?’ என்று மேஜர் சுந்தர்ராஜன் கேட்பார்.
‘கதையின் பெயரா? இதுதான்’ என்று சொன்னவாறு நாகேஷ் புன்னகை பூப்பார். அதன் தொடர்ச்சியாகவே படத்தின் டைட்டில் காட்டப்படும்.
கல்லூரியில் படிக்கிற காலத்தில் ஒற்றுமையாக இருந்த ஐந்து நண்பர்களாக ஜெமினி கணேசன், கோபால கிருஷ்ணன், முத்துராமன், எம்.ஆர்.வாசு, நாகேஷ் ஆகியோர் விளங்குவார்கள்.
ஆனால் கல்லூரி வாழ்க்கை முடிந்து வாழ்க்கை துவங்கப்போகிற காலத்தில் ஒருவரான கோபாலகிருஷ்ணன் விபத்தில் மாண்டுவிடுகிறார். அவர் உயிருக்காகப் போராடுகிற கட்டத்தில் தங்கள் உயிரைக் கொடுத்து அவர் உயிரைக் காப்பாற்ற மற்ற நால்வரும் துடிக்கிறார்கள்.
அப்படி ஒற்றுமையாய் இருந்த நண்பர்கள் தனித்தனியே பிரிந்து வாழ்க்கையை துவங்கிய காலங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாக குணங்களை மாற்றிக் கொள்கிறார்கள். நண்பர்கள் ஒன்றாக இணைந்திருந்த காலத்தில் சத்தியத்தின் அடிப்படையிலேயே வாழ்க்கையை தொடர்வோம் என்று காந்தியடிகள் சிலையின் அடியில் நின்று உறுதி எடுத்தவர்கள் யதார்த்தமான வாழ்க்கைக்கு வரும்போது குணங்களை மாற்ற ஆரம்பிக்கிறார்கள். அவர்களில் ஜெமினி கணேசன் மட்டும் சத்தியத்தைக் காப்பாற்றுவதில் உறுதிப்பட நிற்கிறார்.
இந்தப் படத்தில் தாய் இல்லாத பெண்ணாக வரும் ஜெயந்தியின் வளர்ப்புத் தந்தையாக வரும் ராகவன் மொடாக்குடியர். தனது மகளின் வாழ்க்கை பாழாகிவிடும் என்பதை உணராமல் குடிக்கு அடிமையாகிப் போன ராகவனை ஒரு சமயம் ஜெமினி கணேசன் கண்டிப்பார். அப்போது ராகவன் நான் எப்போதுமே குடிப்பவன் இல்லை என்று சொல்ல முற்படுகிறார்.
‘நான் எப்போதுமே குடிக்கிறவன் இல்லைங்க.. எப்போதாவதுதான் குடிப்பேன்; கவலையா இருந்தா குடிப்பேன்; அல்லது சந்தோஷமா இருந்தா குடிப்பேன்; தனியா இருந்தா குடிப்பேன்; நண்பர்களுடன் சேர்ந்திருந்தா குடிப்பேன்; பொழுது போகலைன்னா குடிப்பேன்; பொழுது போயிட்டுன்னா குடிப்பேன். மற்றபடி நான் எப்போதும் குடிகாரன் இல்லை’ என்பார்.
இந்தக் குடிகாரத் தகப்பன் கண் மூடித்தனத்தினால் அவருடைய பெண் ஜெயந்தி தங்கள் முதலாளியினால் கற்பழிக்கப்படுகிறாள். அந்நிலையில் அவளைக் காப்பாற்றுகிற ஜெமினி கணேசன் அவளையே மனைவியாக்க துணிந்து மணந்துகொள்கிறார். ஏனெனில் ஏற்கனவே கெடுக்கப்பட்ட ஜெயந்தி அதன் காரணமாகத் தாயாகும் நிலையை அடைந்துவிடுவதால், ஊரார் அதைப்பற்றி தவறாகப் பேச ஆரம்பிக்கவே, அந்த சமயத்தில் ஜெமினி கணேசன் அவளை மணந்து வாழ்வு கொடுக்கிறார்.
இந்நிலையில் ஜெயந்திக்குப் பிறந்த குழந்தை பத்து பன்னிரண்டு வயது சிறுவனாக வளர்ந்துவிட்ட நிலையில் அவனைத் தன் மகனாகவே ஏற்றுக்கொள்ளும் ஜெமினி கணேசன், தனது நண்பர்களில் ஒருவரான முத்துராமனை சந்திக்கும் நேரம்... தன் வாழ்க்கையைப் பற்றி உண்மைகளை எல்லாம் சொல்லிவிடுகிறார்.
முத்துராமனின் மனைவி கொஞ்சம் அகந்தையானவள். தன் கணவனின் நண்பனான ஜெமினி கணேசன் இன்னொருவருக்குப் பிறந்த குழந்தையை தனது குழந்தையாக ஏற்று வளர்ப்பதை அறிந்து கொண்டு ஒரு சமயம் தான் செய்த தவறை ஜெயந்தி செய்ததாக பழி சுமத்தி விடுகிறாள். அதாவது தன் ஆண் நண்பர் ஒருவன் தன்னைத் தேடிவந்த நேரத்தில் தன் கணவனும் வீட்டுக்கு வந்துவிட்டதால், அந்த ஆள் ஜெமினி கணேசன் மனைவி ஜெயந்தியைத் தேடி வந்ததாக கதைகட்டிவிடுகிறாள்.
இப்படி ஒரு பழியை எதிர்பார்க்காத ஜெயந்தி ஏதும் பேசமுடியாமல் மவுனமாகிறாள். அந்த நிலையில் ஜெமினி கணேசன் தன் மனைவியை தன்னோடு வீட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறார். வீட்டுக்கு வந்த பிறகும் தன்னுடன் கணவன் எதுவும் பேசாததால் தன் மீது தன் கணவனுக்கே சந்தேகம் ஏற்பட்டுவிட்டதாக ஜெயந்தி மனம் வருந்துகிறார்.
எனவே, சற்று தள்ளி படுத்திருக்கும் தன் கணவன் காதுகளில் விழுமாறு, தன் மகனுக்குக் கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.
‘ராமன் மிக உத்தமமான கணவன். தன் மனைவியைத் தவிர மற்ற பெண்களை ஏறெடுத்தும் பாராதவன். அவன் மனைவி சீதையும் உத்தமி. கற்புக்கரசி, விதி வசத்தால் அந்தக் கற்புக்கரசி ராவணனிடம் சிறைப்பட நேர்கிறது. பின்னர் ராமன் ராவணனோடு போர் செய்து வென்று மனைவியை மீட்கிறான். தன் மனைவி உத்தமியாகத்தான் வாழ்ந்தாள் என்பதை நிரூபிக்க மனைவியை அக்னி பிரவேசம் செய்ய வைக்கிறார். இப்படியெல்லாம் மனைவிக்கு உயர்ந்த இடத்தைத் தந்த ராமன், தங்கள் நாட்டில் யாரோ ஒருவன் சீதையைத் தவறாகச் சொல்லிவிட்டான் என்று எந்த விசாரணையும் இல்லாமல் அவளை தனியே காட்டுக்கு அனுப்பிவிடுகிறான். இது என்ன நியாயம்? சீதை தவறு செய்தாளா? என்று ஒரு வார்த்தை வாய்விட்டு கேட்பதற்குக்கூட ராமனுக்கு மனம் வரவில்லையா? என்று ஜெயந்தி தனது நிலையை சீதைக்கு ஒப்பிட்டு மகனுக்கு கதை சொல்கிறாள்.
இவ்வளவு நேரம் அமைதியாக எதுவும் பேசாமல் படுத்திருந்த ஜெமினி கணேசன் இப்போது தன் மகனை அழைத்து, ‘நானும் உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்’ எனக் கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.
மகாபாரதத்தில் கர்ணன் ஒரு சமயம் துரியோதனன் மனைவி காஞ்சனாவுடன் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருக்கிறான். இந்நிலையில் துரியோதனன் அங்குவந்து கொண்டிருப்பதை கவனித்த அவன் மனைவி எழ ஆரம்பிக்கிறாள். தன் கணவன் வருகையால் காஞ்சனா எழுகிறாள் என்பதை உணராத கர்ணன் தாங்கள் ஆடும் சொக்கட்டான் ஆட்டத்தில் தோற்றுவிடுவோம் என பயந்துதான் அவள் எழுந்துவிட்டாள் என நினைத்தவனாக, ‘பாதி ஆட்டத்தில் எங்கே ஓடுகிறாய்?’ என்று கேட்டு அவள் இடையை பற்றிவிடுகிறான். வேகமாக அப்படி இடையைப் பிடித்து இழுத்ததால் அவள் இடையில் அணிந்திருந்த ஆபரணங்கள் அறுந்து அதிலுள்ள முத்துக்களெல்லாம் கீழே கொட்டிவிடுகின்றன. இதைக் கண்டு சிரித்தபடி துரியோதனன் அருகில் வருகிறான். இப்போதுதான் துரியோதனைக் கண்ட கர்ணன், தனது அவசரத்தை எண்ணி அஞ்சுகிறான். துரியோதனன் மனைவியின் இடையைப் பிடித்து இழுத்ததை அவன் தவறாக எண்ணி எதும் விபரீதமாகிவிடுமோ என பதட்டம் கர்ணனுக்கு ஏற்படுகிறது. ஆனால் துரியோதனனோ ‘விழுந்த முத்துக்களை எடுக்கவா’ கோர்க்கவா?’ என கேட்கிறான். அவனுடைய மனைவி மீதோ, உயிர் நண்பன் கர்ணன் மீதோ எள்ளவும் சந்தேகம் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறான். அந்தத் துரியோதனின் மனநிலைதான் எனக்கும்’ என்கிறார் ஜெமினி கணேசன்.
இப்படி அற்புதமான இலக்கிய நயமான வசனங்களுடன் அருமையான காட்சிகளை ‘புன்னகை’ படத்தில் பாலசந்தர் வைத்திருந்தார்.
கடைசிக் காட்சியில் ஜெமினி கணேசன் மரணமடையப் போகும் நிலையில் அவருடைய ஒரே சொந்தமான தாத்தாவை அழைத்துவர ஜெமினி கணேசனின் மகனுடன் முத்துராமன் கிராமத்திற்கு வருவார்.
ஏற்கனவே அந்தத் தாத்தாவுக்கு ஜெமினி கணேசன் மேல் கோபம் இருக்கும். சத்தியத்தைப் போற்றுகிறேன் என்ற பெயரில் யாராலோ கெடுக்கப்பட்ட பெண்ணை தன் பேரன் மணந்துகொண்டிருக்கிறான் என்பதை அறிந்து தன் பேரனுடன் இருந்த தொடர்பை அறுத்துக் கொண்டவர் அந்தத் தாத்தா.
இப்போது முத்துராமன் அந்தத் தாத்தாவிடம் பேரன் ஜெமினி கணேசனின் நிலையைச் சொல்லி, உடனே புறப்படுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறார். அந்த சமயம் ஜெமினி கணேசனின் மகனான சிறுவன் சற்று தள்ளி நின்று பூஞ்செடிகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பான்.
அந்த தாத்தா சொல்வார்: ‘என் பேரன் சத்தியத்திற்காகவே வாழ்வதாக என்னிடம் வாய் வீரம் பேசினான். அவன் உண்மையிலேயே சத்தியத்தை நம்பக் கூடியவன் என்றால், இதோ வந்திருக்கிறானே அவனுடைய வளர்ப்பு மகன், இந்த சிறுவனிடம் நான் உன்னைப் பெற்ற அப்பா இல்லை என்று சொல்லியிருப்பானா?’ என்று கேட்பார்.
இதைக் கேட்டு பதறிய முத்துராமன், ‘இந்த சிறுவனிடம் அந்த உண்மையை எப்படி சொல்லியிருக்க முடியும்?’ என கேட்பார்.
அதற்கு அந்தத் தாத்தாவோ, ‘உண்மையைச் சொல்வதற்கு வயது என்ன வேண்டியிருக்கிறது. உண்மையிலேயே என் பேரன் சத்தியவந்தன் என்றால் இதோ நிற்கும் அவன் வளர்ப்புப் பையனிடம் அவன் பிறப்பின் ரகசியத்தைச் சொல்லியிருக்கிறானா கேட்டுப் பார்க்கலாம்’ என்று கூறி, அந்தச் சிறுவனை தன்னருகே அழைத்து அவனிடம், உன்னுடைய அப்பா யார்? என்று அந்தத் தாத்தா கேட்பார்.
அந்தச் சிறுவனோ, ஜெமினி கணேசனை தனது அப்பா என்று முதலில் சொல்லிவிட்டு, ஆனால் அவர் உண்மையிலேயே எனது அப்பா இல்லை. என்னைப் பெற்ற அப்பா இன்னொருவர். அதன்பின் என்னை வளர்த்து ஆளாக்கியவர்தான் இந்த அப்பா. இதை என்னை வளர்த்தத் தந்தை ஏற்கனவே எனக்குச் சொல்லியிருக்கிறார்’ என்பான்.
இதைக் கேட்டு ஜெமினி கணேசன் தாத்தா திகைப்பிலும், வியப்பிலும் அதிர்ச்சியாகிப் போவார். வாழ்க்கை முழுவதும் தனது பேரன் சத்தியத்தைக் கடைப்பிடிக்க எவ்வளவு பெரிய சோதனைகளையெல்லாம் ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து மனம் கணிந்துபோவார்.
கே.பாலசந்தரின் ‘புன்னகை’ திரைப்படத்தைப் பார்க்கிற சமயம் நாம் ஒவ்வொருவர் மனதிலும் சத்தியத்தின் பெருமையை உணர்ந்த சிந்தனைகள் எழாமல் இருக்க முடியாது. கண்டிப்பாக அந்தப் படம் நடக்கிற இரண்டரை மணி நேரம் சத்தியத்தின் மீது நமக்கு ஏற்படுகிற மதிப்பும், மரியாதையும் அதனைத் தொடர்ந்து எல்லா நேரமும் நம் மனதிலே இல்லாமல் போவது ஏன்?
அதற்குக் காரணம் சத்தியத்தை பேசுகிற புன்னகை போன்ற படங்கள் அடுத்தடுத்து வந்திருக்குமேயானால், நம் மனங்களிலே நிச்சயம் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கும். சமுதாயத்தையும், நாட்டையும் புதிய சிந்தனையில் ஆட்படுத்த பாலசந்தர் மேற்கொண்ட ஓர் அரிய முயற்சி ‘புன்னகை’ திரைப்படம் என்று சொல்லலாம்.
நன்றி: விகடன்
oru naaL paarunga, vikatan.com case pOda pORAnga :oops: :yessir:Quote:
Originally Posted by joe