-
இன்று காலை 11.00 மணியளவில், சென்னை விஜய் தொலைக்காட்சி நிலைய அலுவலகம் சென்று,
மக்கள் திலகத்தை மிமிக்ரி செய்து கொச்சைப்படுத்துவதை (அதாவது சுடப்பட்ட பின் அவரது குரலை imitate செய்வதை) ஆட்சேபித்து கண்டனம் தெரிவித்து, இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு, அனைத்துலக எம். ஜி. ஆர்.பொது நல சங்கம், மற்றும் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மன்றம் ஆகிய அமைப்புக்களை சார்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கோஷங்கள் எழுப்பினர். .
பின்னர் விஜய் தொலைக்காட்சி நிறுவன உயர் அதிகாரி, நமது மன்ற நிர்வாகிகளை, தங்கள் மாநாட்டு கூடத்துக்கு (CONFERENCE HALL) அழைத்து பேசினார். இனி இது போன்ற நிகழ்வுகள் தொடரா வண்ணம் கவனமுடன் இருப்பதாக உறுதியளித்தார்.
இது தொடர்பாக, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம் சார்பில் ஏற்கனவே 14-05-2013 அன்று அளிக்கப்பட்ட கடித நகலும், இன்றைய தேதியிட்டு (25-10-13) இறைவன் எம். ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் மீண்டும் ஒரு எச்சரிக்கை கடிதமும் விஜய் தொலைக்காட்சி நிறுவன அதிகாரியிடம் அளிக்கப்பட்டது. அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட எச்சரிக்கையுடன் கூடிய கோரிக்கை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் red pix இணைய தள நிறுவத்தினர், பேட்டி எடுத்தனர். பேட்டி முடிந்தபின் எம். ஜி. ஆர். பக்தர்கள் அனைவரும் திருப்தியுடன் கலைந்து சென்றனர்.
__________________________________________________ _______________________________________________
நிர்வாக அதிகாரி அவர்கள்,
விஜய் தொலைக்காட்சி நிலையம்
சென்னை - 34.
அன்புடையீர், வணக்கம் !
பொருள் : எங்கள் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களின் குரலை MIMICRY செய்வதை உடனே நிறுத்தக் கோரி சமர்ப்பிக்கும் மனு.
தாங்கள், ஒளி பரப்பி வரும் சில கலை நிகழ்ச்சிகளில் எங்கள் இதய தெய்வம் மக்கள் தலைவர் எம் ஜி ஆர். அவர்களை MIMICRY செய்யும் போது, அவர் குண்டடிபட்ட பிறகு,, பாதிக்கப்பட்ட அவரது குரலை, கேலியும், கிண்டலும் செய்வது போல் காட்சிகள் காண்பிக்கப்படுகிறது. இது, அவரது பக்தர்களாகிய எங்கள் மனதை புண்படுத்தும் விதத்தில் உள்ளது.
உலகிலேயே REPEATED AUDIENCE கொண்ட பெருமையை பெற்றவர் எங்கள் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் ஒருவர் மட்டுமே.
தமிழகமெங்கும், தனது பழைய திரைப்படங்கள் மூலம், மறு வெளியீடுகளில் வசூலில் மகத்தான சாதனைகள் படைத்து, 82 ஆண்டு கால தமிழ் திரை உலகின் முடி சூடா மன்னனாக இன்றும் திகழ்ந்து வருகிறார் எங்கள் புரட்சித் தலைவர்.
ஒரு நடிகராய் தனது வாழ்க்கையை துவக்கி, பின் தமிழகத்தையே, தன் ஆயுள் காலம் வரை ஆண்டவர் எங்கள் வரலாற்று நாயகன் எம். ஜி. ஆர். அவர்கள். தேசமே, மனிதப்புனிதர் எம். ஜி. ஆர். அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தேசிய விடுமுறை அறிவித்தது.
எங்கள் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களுக்கு, இந்திய அரசாங்கம், நாட்டிலேயே உயரிய விருதான "பாரத ரத்னா" பட்டம் அளித்து கௌரவித்தது. அப்படிப்பட்ட மாமனிதரின் குரலை, அவமதிப்பதை போல் MIMICRY செய்வதை உடனடியாக நிறுத்திக் கொள்வது நல்லது.
எங்களது இந்த வேண்டுகோளை புறக்கணித்து, அதற்கு மாறாக தொடரும் பட்சத்தில், தமிழகமெங்கும் உள்ள எங்கள் அமைப்புக்களின் மூலம், கண்டன ஆர்ப்பட்டங்களும் போராட்டங்களும், நடைபெறும் என்றும், தாங்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எதிர் நோக்குவீர்கள் என்று எச்சரிக்கிறோம்.
நன்றி. !
ஒங்குக புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். புகழ் !
குறிப்பு : இதற்கு முன்பும், ஒரு ஆட்சேபனை கடிதம், மக்கள் தலைவர் எம். ஜி. ஆர். அன்பர்களால் அளிக்கப்பட்டு, அதற்கு எந்த விதமான சாதக நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இந்த fz;ld கடிதத்தை மீண்டும் சமர்ப்பிக்கிறோம்.
================================================== ==============================
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
இன்று காலை 11.00 மணியளவில், சென்னை விஜய் தொலைக்காட்சி நிலைய அலுவலகம் சென்று, மக்கள் திலகத்தை மிமிக்ரி செய்து கொச்சைப்படுத்துவதை (அதாவது சுடப்பட்ட பின் அவரது குரலை imitate செய்வதை) ஆட்சேபித்து கண்டனம் தெரிவித்து, இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு, அனைத்துலக எம். ஜி. ஆர்.பொது நல சங்கம், மற்றும் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மன்றம் ஆகிய அமைப்புக்களை சார்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பேனர்கள் சுமந்து கோஷங்கள் எழுப்பி சென்ற காட்சிகள் .
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
http://i41.tinypic.com/s28m5g.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
http://i40.tinypic.com/15qs228.jpg
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
http://i40.tinypic.com/bgpv2s.jpg
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
http://i44.tinypic.com/4fvjht.jpg
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
தற்போது வெளிவந்துள்ள "ராணி" வாரந்திர பத்திரிகையின் தீபாவளி மலரில்,
தமிழ் நாட்டில் எவ்வாறு எம். ஜி. ஆர். அலை ஒவ்வொரு தேர்தலிலும் வீசியதோ, அது போல் குஜராத்தில் .நரேந்திர மோடிக்கு அலை வீசுவதாக, பிரபல நடிகர் திரு. எஸ். வி. சேகர் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நம் ஒப்பற்ற தெய்வம் எம். ஜி. ஆர். என்பது என்றும் நிலைத்து நிற்கும் உண்மையாகும்.
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
எழுத்தாளர் மேகலா சித்ரவேல் அவர்கள், தமக்கு எம். ஜி. ஆர். படங்கள் தான் பிடிக்கும் எனவும், பல படங்களை 50 முறைக்கு மேல் பார்த்து ரசித்திருப்பதாகவும், அதே "ராணி"வாரந்திர பத்திரிகையின் தீபாவளி மலரில், தெரிவித்துள்ளார்.
இவர் 6 தேசிய விருதுகளை பெற்ற "ஆடுகளம்" பட இயக்குனர் வெற்றி மாறனின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
-
-
இன்று காலை விஜய் தொலைக்காட்சி நிலையம் சென்று மக்கள் திலகத்தின் அனைத்து அபிமானிகளின் சார்பில் கண்டனம் தெரிவித்த திருவாளர்கள் பேராசிரியர் திரு செல்வகுமார், சைதை ராஜ்குமார், சந்திரசேகர் மற்றும் அனைத்து மக்கள் திலகத்தின் அபிமானிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.