Quote:
மக்கள் தொலைக்காட்சியில் இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக 2008-ம் ஆண்டில் தமிழ் சமூகத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு மக்கள் விருது வழங்கி சிறப்பு செய்யும் நிகழ்ச்சி இடம் பெறுகிறது.
இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் சாதனை புரிந்தவர்களுக்கும், மருத்துவம், விவசாயம், சுற்றுச்சூழல், விளையாட்டு, அறிவியல் என்று துறைதோறும் தங்களது திறமைகளை பதித்த சாதனையாளர்களுக்கும் இந்த 2008-ம் ஆண்டிற்கான மக்கள் விருது வழங்கப்பட உள்ளது.
இந்த ஆண்டிற்கான மக்கள் விருது பெறும் 31 சாதனைத் தமிழர்கள் பற்றிய தகவல்களை பொங்கல் தினத்தில் மாலை 6.03 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் காணலாம்.
dailythanthy-muthusaram