கோபால் சார்,
பணக்கார சகோதரர்கள் அல்ல. நாமெல்லோரும் அன்புச் சகோதரர்கள்.
டியர் ஹரிஷ் சார்,
தங்கள் சந்தோஷமே எங்கள் சந்தோஷம். நன்றி!
கோபால் சார்,
பணக்கார சகோதரர்கள் அல்ல. நாமெல்லோரும் அன்புச் சகோதரர்கள்.
டியர் ஹரிஷ் சார்,
தங்கள் சந்தோஷமே எங்கள் சந்தோஷம். நன்றி!
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் அளவு கடந்த நன்றி! தங்கள் வழிகாட்டுதலில் நம் பயணம் இனிதே தொடரும்.
சாந்தியில் 22.07.2012 மாலை அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் திலகத்தின் திருவுருவப் படத்திற்கு மலர்களால் அஞ்சலி செலுத்தப் பட்டபோது அங்கு தங்களால் எடுக்கப்பட்ட நிழற்படங்களை இங்கு வழங்கியதற்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள்.
அன்பு கார்த்திக் சார்,
தங்களின் அன்புப் பாராட்டுப் பதிவுக்கு நன்றிகள்ஆயிரம்.
இதய தெய்வத்தின் ஆசியும், தங்களைப் போன்ற நல் உள்ளங்களும் இருக்கையில் என்ன கவலை?
அன்பு பம்மலார் சார்,
இதயதெய்வத்தின் 11வது அவதார நிறைவு நாள் ஒட்டி நம் ரசிகக் கண்மணிகள் அள்ளித் தந்திருந்த போஸ்டர்களை தாங்கள் திரியில் பதித்து மனம் நிறையச் செய்து விட்டீர்கள்.
அமரதீபம் 10-வது வார விளம்பரப் பதிவு (தி ஹிந்து) நிச்சயமாக ஒரு நமது புதுத் திரிக்கு ஒரு outstanding பதிவு. கலக்குங்கள். இரு பதிவுகளுக்கும் பரமானந்த நன்றிகள்.
அன்புக்குரிய அடிகளாரே,
வருகைக்கு மகிழ்ச்சி..!
மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு அன்பான நன்றிகள்..!
அண்ணலின் "அந்தமான் காதலி(1978)" பாடல்:
http://www.youtube.com/watch?v=xgUCFhNpOhY
பாசத்துடன்,
பம்மலார்.
Welcome, Barrister Sir..!
Thanks a lot..!
பாசத்திலகம் "பச்சை விளக்கு" காட்டி விட்டார்..!
கேள்வி பிறந்தது அன்று ! நல்ல பதில் கிடைத்தது இன்று !
ஆசை பிறந்தது அன்று ! யாவும் நடந்தது இன்று !
http://www.youtube.com/watch?v=5RUpUQHbQ3g
லேட்டஸ்ட்
இதயதெய்வத்தின் 11வது அவதார நிறைவு நாள்
[21.7.2012 : சனிக்கிழமை]
பக்தகோடிகளின் பக்தி வெளிப்பாடுகள்
http://i1110.photobucket.com/albums/...r/GEDC6085.jpg
http://i1110.photobucket.com/albums/...r/GEDC6092.jpg
http://i1110.photobucket.com/albums/...r/GEDC6087.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
இதயதெய்வத்தின் 11வது அவதார நிறைவு நாள்
[21.7.2012 : சனிக்கிழமை]
பாசத்தலைவனுக்கு புஷ்பாஞ்சலி : சென்னை 'சாந்தி' திரையரங்க வளாகம்
http://i1110.photobucket.com/albums/...r/GEDC6101.jpg
http://i1110.photobucket.com/albums/...r/GEDC6102.jpg
http://i1110.photobucket.com/albums/...r/GEDC6110.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
நடிகர் திலகம் என்னும் மலை ரயிலில் சிகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்..! மலை ரயில் பயணத்தில் தண்டவாளங்களுக்கு நடுவே ஒரு பல்சக்கர தண்டவாளம் உண்டு. அதுதான் மலை ரயிலை பாதுகாத்து நிற்கும். எங்களுக்கு, அந்த பல்சக்கர தண்டவாளம் போன்றவர் தாங்கள்..!
அன்புடன்,
பம்மலார்.
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் : 4
நடிகர் திலகத்தின் 32வது காவியம்
அமரதீபம் [வெளியான தேதி : 29.6.1956]
100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
100வது நாள் விளம்பரம் : The Hindu : 6.10.1956
http://i1110.photobucket.com/albums/...deepam-1-1.jpg
குறிப்பு:
1. 100 நாட்களுக்கு மேல் ஓடிய திரையரங்குகள்:
அ. சென்னை - காஸினோ - 125 நாட்கள்
ஆ. சென்னை - கிரௌன் - 125 நாட்கள்
இ. திருச்சி - பிரபாத் - 125 நாட்கள்
2. 100வது நாள் திருச்சி பதிப்பு விளம்பரம் கிடைத்தவுடன் இங்கே இடுகை செய்கிறேன்..!
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
பாராட்டுக்கு நன்றி..!
கலைக்குரிசிலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 'குங்குமம்' வெளியிட்ட சிறப்பிதழில் வெளிவந்த சிறப்புக்கட்டுரையை, அட்டைப்படங்களோடு தாங்கள் இங்கே இடுகை செய்தது, உண்மையிலேயே ஒரு மங்களகரமான பகிர்வு(பதிவு). பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்..!
இக்கட்டுரையில் திரு.ஏவிஎம் சரவணன், திருமதி. மனோரமா, திரு.நாசர், நடிகர் திலகத்தின் குடும்ப டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அளித்த 'மலரும் நினைவுகள்', பாசத்திலகத்தின் பல்வேறு நற்பண்புகளை எடுத்தியம்பின..!
தங்களுக்கு ஓர் அன்புப்பரிசு:
'குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்' ["குங்குமம்" டைட்டில் சாங்] வீடியோ:
http://www.youtube.com/watch?v=Ib7tjERO95g
அன்புடன்,
பம்மலார்.
சிவாஜி சினிமா : பத்திரிகை விமர்சனம் : 1
பொக்கிஷாதி பொக்கிஷம்
ஆண்டவன் கட்டளை
இந்தியன் மூவி நியூஸ் [IMN, சிங்கப்பூர்] : ஆகஸ்ட் 1964
இந்த கிடைத்தற்கரிய ஆவணப்பதிவை அருமைச் சகோதரர் mr_karthik அவர்களுக்கு Dedicate செய்கிறேன்..!
http://i1110.photobucket.com/albums/...GEDC6116-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6117-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
[QUOTE=vasudevan31355;907711]'குங்குமம்' நாயகருக்கு 'குங்குமம்' வழங்கிய புகழாரம்.
பத்திரிகை: குங்குமம்.
வெளியான நாள்: 3-8-2001
தலைப்பு: சிவாஜி ஒரு சகாப்தம் 1927-2001
நாம் வணங்கும் கடவுளின் பதினோராம் ஆண்டு நினைவாஞ்சலியையொட்டி நம் தெய்வத்திற்கு என்னால் இயன்ற ஒரு சிறு காணிக்கை.
அன்புடன்,
வாசுதேவன்.
Dear Vaasudevan,
After reading this especially, the Singapore commitment, I could only infer this. Manidhanukkae Kuduththa commitmentai, Vaakai, Ivar ippadi Kaapaathum boadhu, July 21st 2001, I will be there with you endru Aandavanukku koduththa commitmentai eppadi ivar thavaraviduvaar? Ada, andha Kadavulaavadhu ivarai paarthu, unga commitmentukku engal parisu, neengal ippodhu engalai sandhikka varavaendaam, medhuvaaga oru 20 years appram vaanga endru koori irukkalaam, but they too, failed, to appreciate the man of commitment.
:smokesmile:
Dear Pammalar Sir,
This is a request for everybody's benefit. It would be great to understand from your release advertisement of our thalaivar's epics, if you could include the detail of the film that was running in the same theaters when our thalaivar film releases, also the date of that particular film release. This will help us to understand any tall claims of that particular movie by the other fans. For instance, if our thalaivar film is releasing on x date in Chitra,Sayani, Maharani, what is the film that is getting removed from these theaters and the release date of that movie. If you feel that detail, is irrelevant or not required or if it is difficult to get, you may skip it. If available it would help us to discuss with those who give tall claims about their film or hero.
Sandharppa Saatchiyangal mattrum Aadhaaraththudan,
BR :smokesmile:
மீண்டும் பம்மலாரின் பொக்கிழன்கள், வாசுதேவன் அவர்களின் புகைப்பட அணிவரிசைகள், ராகவேந்திரன் அவர்களின் சிறப்புத் தகவல்கள், கார்த்திக் அவர்களின் பளிச் பதிவுகள் மற்றும் ஏனைய நண்பர்களின் பாராட்டுப் பதிவுகளோடு அமர்க்களமாகத் துவக்கப்பட்டுள்ள இத்திரியின் ஆரம்பமே அருமையாக உள்ளது.
நடிகர்திலகம் நினைவுநாள் சுவரொட்டி - திருச்சி
http://i1234.photobucket.com/albums/...erTrichy-1.jpg
நடிகர்திலகம் நினைவுநாள் பேனர் - கோயமுத்தூர்
http://i1234.photobucket.com/albums/...annerKovai.jpg
நடிகர்திலகத்தின் நினைவுநாள் நிகழ்ச்சி திருநெல்வேலியில் சிறப்பாக நடைபெற்றது. அதில் சில புகைப்படங்களை மட்டும் இங்கு பதிவிடுகிறேன்.
நடிகர்திலகத்தின் உருவப்படத்திற்கு மலர்ஞ்சலி
http://i1234.photobucket.com/albums/...NTPortrait.jpg
நடிகர்திலகத்தின் புகைப்படக் கண்காட்சி திறப்பு:
http://i1234.photobucket.com/albums/...xhibition1.jpg
நடிகர்திலகத்தின் புகைப்படக் கண்காட்சி:
http://i1234.photobucket.com/albums/...xhibition2.jpg
இலவச கண் சிகிச்சை முகாம்:
http://i1234.photobucket.com/albums/...reeEyeCamp.jpg
இசை நிகழ்ச்சியில் நடிகர்திலகத்தின் பாடல்களை சிறப்பாகப் பாடிய T.M.S. பால்ராஜ் அவர்களுக்கு பாராட்டு.
http://i1234.photobucket.com/albums/...oTMSBalraj.jpg
அன்புள்ள பம்மலார்,
அமரதீபம் 100-வது நாள் விளம்பரததைத்தந்து, அதன் வெற்றியை உலகறிய உரக்கச்சொல்லி விட்டீர்கள். அன்றைய நாட்களில் திரைப்படங்களின் 100-வது நாளின்போது அதில் நடித்த பிரதான நட்சத்திரங்கள் திரையரங்குகளின் மேடையில் ரசிகர்கள் முன் தோன்றுவது வழக்கமாக இருந்து வந்துள்ளதை பல்வேறு விளம்பரங்களின்மூலம் அறிய முடிகிறது. இந்த வழக்கம் எப்போது, எப்படி நின்றுபோனது என்பது தெரியவில்லை.
அறுபதுகளின் பிற்பகுதி மற்றும் எழுபதுகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றியடைந்த படங்களுக்கு வெற்றிவிழா கொண்டாடுவது கூட அபூர்வமாகிப்போனது. இதில் நடிகர்திலகத்தின் பல படங்களும் அடக்கம்.
சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் இந்தியன் மூவிநியூஸ் பத்திரிகையில் வெளியான 'ஆண்டவன் கட்டளை' பக்கங்களை எனக்கு டெடிகேட் செய்ததற்கு மிக்க நன்றி. இவற்றைப்பார்க்கும்போது, இன்று நம்மிடையே அண்ணனும் இல்லை, 'அண்ணி'யும் இல்லையென்ற உண்மை மனதைத் தாக்குகிறது.
சாந்தி அரங்கில் நடிகர்திலகத்தின் நிரந்தர உருவப்படத்துக்கு மலரஞ்சலியையும், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க அஞ்சலியையும் பத்திப்பித்தமைக்கும் மிக்க நன்றி.
அன்புள்ள வாசுதேவன் சார்,
தாங்கள் வழங்கிய 'குங்குமம்' வார இதழின் 'சிவாஜி சிறப்பிதழ்' பக்கங்கள் மிகவும் அருமை. அவரைப்பற்றி பல்வேறு பிரபலங்களும் பெருமைபடக்கூறியவற்றைப் படித்தபோது கண்களில் நீர்த்திரையிட்டது. சிறந்த நடிகராக அறியப்பட்டிருந்த அவர் எப்படி ஒரு சிறந்த மனிதராக வாழ்ந்திருக்கிறார் என்பதை அனைவரும் அறியும் வண்ணம், அச்சிறப்பிதழின் எட்டு பக்கங்களையும் பதிப்பித்த உங்களுக்கு என்ன கைமாறு செய்ய முடியும்?. சேவைக்கு கைம்மாறு ஏது என்கிறீர்களா?. அதுவும் சரிதான்.
நமது புதிய திரி, தங்களைப்போன்றோரின் சிறந்த பங்களிப்புகளால் நாலுகால் பாய்ச்சலில் பயணிக்கத்துவங்கி விட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
வாழ்க உங்கள் திருச்சேவை.
அன்புள்ள சந்திரசேகர் சார்,
நடிகர்திலகம் ச்மூக நலப்பேரவையின் நற்பணிகள் பற்றிய புகைப்படத்தொகுப்பும், அதுபற்றிய பத்திரிகை செய்திகளும் அருமை.
நடிகர்திலகத்தின் நினைவுநாளையொட்டி தங்கள் தலைமையில் இயங்கும் சமூகநலப்பேரவையின் செயல்பாடுகள் வழக்கம்போல மலைக்க வைக்கின்றன.
நடிகர் திலகத்துக்கு மலரஞ்சலி என்ன...
புகைப்படக் கண்காட்சி என்ன...
இசை நிகழ்ச்சி என்ன...
முதியோர் இல்லத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சி என்ன....
இலவச கண்சிகிச்சை முகாம் என்ன.......
அசத்துறீங்க சார்.
நடிகர்திலகத்தின் பெருமையை நற்பணிகளால் பரப்பி வரும் தங்களின் சீரிய சேவையை இதயத்தின் அடித்தளத்திலிருந்து பாராட்டுகிறோம்.
தங்களுக்கும், சமூக நலப்பேரவையின் அத்தனை அன்பு இதயங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள் புதுவை அரசால் அனுசரிக்கப் பட்டது. புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்வின் சில நிழற்படங்கள்
http://info.puducherry.gov.in/IMAGES/DSivaji2012/1.jpg
http://info.puducherry.gov.in/IMAGES/DSivaji2012/2.jpg
http://info.puducherry.gov.in/IMAGES/DSivaji2012/4.jpg
http://info.puducherry.gov.in/IMAGES/DSivaji2012/5.jpg
http://info.puducherry.gov.in/IMAGES/DSivaji2012/6.jpg
http://info.puducherry.gov.in/IMAGES/DSivaji2012/7.jpg
விரிவான செய்திக் குறிப்பிற்கு
திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றம் சார்பாக வெளியிடப் பட்டுள்ள சுவரொட்டி
http://i872.photobucket.com/albums/a...asanposter.jpg
லேட்டஸ்ட்
DIGITAL கர்ணனின் GIGANTIC வெற்றி
பக்தகோடிகளின் வெற்றி முழக்கங்கள்
http://i1110.photobucket.com/albums/...r/GEDC6086.jpg
http://i1110.photobucket.com/albums/...r/GEDC6088.jpg
http://i1110.photobucket.com/albums/...r/GEDC6108.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
அமெரிக்காவில் "கர்ணன்"
மாலை மலர் : 21.7.2012
http://i1110.photobucket.com/albums/...GEDC6133-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் சந்திரசேகர்
திருநெல்வேலி நடிகர் திலகம் நினைவு நாள் நிழற்படங்கள் அருமை. பாராட்டுக்கள்
டியர் பம்மலார்
சூப்பர் டூப்பர் ராக்கெட் வேகத்தில் திரி கொடி கட்டிப் பறக்கிறது. பாராட்டுக்கள். கர்ணன் அமெரிக்க விஜயம் பற்றிய மாலை மலர் செய்திகளுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
கர்ணன் மார்ச் 16ல் வெளியான நாள் முதல் பல்வேறு கட்டங்களில் ரசிகர்கள் சென்னையில் நடத்திய விழாக்களின் காட்சிகள் ஒளித் தகடாக வெளி வந்துள்ளன.
http://i872.photobucket.com/albums/a...nanCelebVK.jpg
தேவைப்படுவோர் திரு விஜயகுமார் அவர்களை 7299215188 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன்
டியர் பம்மலார் சார்
தங்களின் சீரிய முயற்சியால் துவங்கப்படிருக்கும் இந்த திரியை கண்டவுடன் என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே வரவில்லை, கடந்த சில வாரங்களாக தாங்கள், ராகவேந்தர் சார் மற்றும் வாசுதேவன் சார் பதிவுகள் இல்லாமல் சற்று வெறுமையாக இருந்தது, இனி நம் திரி ராஜநடை போடும் என்பதில் ஐய்யமில்லை!
I saw some North Indian tweet "Have any of you guys in Chennai watched 'Karnan' in Sathyam? I just love that film, Shivaji at his best.". Good to know there are exceptions too.
டியர் சந்திரசேகரன் சார்,
பாராட்டுக்கு நன்றி..!
நமது நடிகர் திலகம் திரியில், வான்மழை போல் தாங்கள் வளமுடன், சிவாஜி பேரவை சம்பந்தப்பட்ட பதிவுகளை இடுகை செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
நமது நடிகர் திலகத்தின் பதினோராம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில், சிவாஜி பேரவை சார்பில் வெளியிடப்பட்ட போஸ்டர்(திருச்சி), பேனர்(கோவை) அருமை..! நாளிதழ் செய்திகளுக்கு நயமிகு நன்றிகள்..!
எல்லாவற்றுக்கும் சிகரமாக விளங்குவது திருநெல்வேலி நிகழ்ச்சிகள். புஷ்பாஞ்சலி, விஷுவலாஞ்சலி(கண்காட்சி), இசையாஞ்சலி(கச்சேரி), இலவச கண்சிகிச்சை முகாம், முதியோர் இல்லத்தில் அன்னதானம் போன்ற சமூக நற்பணிகளால் அஞ்சலி என தேசிய திலகத்துக்கு அவரது அவதார நிறைவு நாளில் எல்லாவிதமான அஞ்சலியையும் செலுத்தி, சிவாஜி பேரவையின் மாநிலத் தலைவராகிய தாங்கள் நமது இதயதெய்வத்தின் உண்மையான தொண்டன் என்பதனை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்..! தங்களுக்கும், தங்களின் அமைப்புக்கும்,
பாசமான பாராட்டுக்கள்..! வளமான வாழ்த்துக்கள்..! நெஞ்சார்ந்த நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
தங்களின் அன்பான பாராட்டுக்கு எனது கனிவான நன்றிகள்..!
நம் அனைவரின் உள்ளம் கவர்ந்த ஜோடி, சிவாஜி-தேவிகா ஜோடி. அந்த அற்புத pair-ன் முழுமுதல் பக்தரான தங்களுக்கு இந்த "ஆண்டவன் கட்டளை" விமர்சனப் பக்கங்களை dedicate செய்ததில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். தாங்களும் அதனை அன்புடன் ஏற்றுக் கொண்டதில் எனது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.
நம் எல்லோருக்காகவும் 'அழகே வா அருகே வா' பாடல்:
http://www.youtube.com/watch?v=PYCv3vDPzrk
இப்பாடலில் தேவிகா, நடிகர் திலகத்தை மட்டுமா நிலைதடுமாற வைக்கிறார், பார்க்கும் நம்மையும்தான்..!
அன்புடன்,
பம்மலார்.
My wishes for the success of this thread.
To all those who've contributed in this thread- It is because of your efforts that, youngsters like me and many others actually get to appreciate NT, the legend.
Thank you.
டியர் ராகவேந்திரன் சார்,
பாராட்டுக்கு நன்றி..!
நமது நடிகர் திலகம் திரியின் மெகா வெற்றிக்கு, இறையருளும், இதயதெய்வத்தின் அருளாசிகளும், அன்புள்ளங்களின் வாழ்த்துக்களும், பெருமதிப்புக்குரிய பங்களிப்பாளர்களின் செயல்பாடும்-உழைப்பும்-அணுகுமுறையும், பாசத்துக்குரிய பார்வையாளர்களின் வருகையும், மரியாதைக்குரிய மாடரேட்டர்களின் அனுமதியும், மூல காரணங்கள். அனைவருக்கும் நமது ஆத்மார்த்தமான நன்றிகள்..!
திருச்சி சிவாஜி மன்ற போஸ்டருக்கும், டிஜிட்டல் "கர்ணன்" வசந்த உற்சவ நெடுந்தகடு வெளிவந்துள்ள செய்திக்கும் ஸ்பெஷல் நன்றிகள்..!
புதுவை முதல்வர் ரங்கசாமி, கலையுலக முதல்வரான நம்ம சாமிக்கு, புதுவை அரசு சார்பில், நினைவு நாள் அஞ்சலி செலுத்திய நற்செயல் மிகுந்த போற்றுதலுக்குரியது. பெருமதிப்புக்குரிய அவருக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும், புதுவை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் புதுவை அரசுக்கும் நமது இருகரம் கூப்பிய சிரந்தாழ்த்திய நன்றிகள்..!
இந்த உணர்வுபூர்வமான நிகழ்வின் நிழற்படங்களை அள்ளி அளித்து, செய்திக்கான சுட்டியையும் பாங்குற வழங்கிய தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.