duplicated
Printable View
duplicated
பெண்ணின் சக்தியை விளக்கும் தொடராக வரவிருக்கிறது `பராசக்தி'
கணேசன்- லட்சுமி தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள். இரண்டு மகள்கள். மகன்கள் தன் குடும்ப கவுரவத்தைக் கட்டிக் காப்பார்கள் என்ற நம்பிக்கை. மகள்களில் சாந்தி மீது அபார நம்பிக்கை. அவளது ஒவ்வொரு செயலிலும் இருக்கும் நேர்மை, ஒரு தந்தையாக அவரை பெருமைப்படுத்துகிறது.
மகன்கள் விஷயத்தில் அவரது கனவுக்கோட்டை தகர்ந்து போக, இப்போது அவரது ஒரே நம்பிக்கை, மகள் சாந்தி தான்.
ஒழுக்கத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக வாழ்ந்த சாந்தி தனக்கு ஒழுக்கமான கணவன், நிம்மதியான வாழ்க்கை அமையும் என்று நினைத்தாள். அவளுக்கு நேரெதிர் கேரக்டர் கவுதம். ஆண்- பெண் சேர்க்கைக்கு திருமணம் என்பது தேவையில்லாதது என்ற கொள்கையுடன் அவன் வாழ்ந்து வந்தான்.
இரு வேறு துருவங்களும் ஒன்றையொன்று சந்திக்க நேர்ந்தது. கவுதமின் சுயரூபம் சாந்திக்கு தெரிய வந்தது. கோகுலத்து சீதையாய் வாழ விருப்பம் இல்லாத சாந்தி, தீயவற்றை அழிக்கும் பராசக்தியாய் மாறினாள்.
நடிகர் - நடிகைகள்: சித்தாரா, ஷ்யாம்கணேஷ், விஜய்பாபு, ராஜசேகர், ஐஸ்வர்யா, `அலைகள்' ராணி தேவ், முரளி, கிட்டிலட்சுமி விக்கி, வி.ஆர்.திலகம், பேபிமோனிகா, சசி, திவ்யா.
ஒளிப்பதிவு: பி.வி. விஜயராஜா, திரைக்கதை- வசனம்: கே.பார்த்திபன், இசை: ஏ.ஜான்சன், பாடல்கள்: டாக்டர் கிருதயா, கதை- இயக்கம்: பி.ராஜபாண்டி.
வசந்த் டி.வி.யில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது, இந்த தொடர்.
Sun TV ல் புதிய 3 நாடகங்கள்
1. சிவசத்தி
2. மணி்க்கூண்டு
3, கலாட்டாக் கிரிக்கெட்
அப்படியானால்
3 நாடகங்கள் முடிவிற்கு வருகின்றனவா?
அவை எவை?
1. லட்சுமி
2. சூரிய வம்சம்்
3. ???
At what time Manikundu is telecasted????
Indian Standard Time 12.00PMQuote:
Originally Posted by priya_2008
or EST 1.00 PM
Thank u......The trailor was nice , i wanted to see that but i wont be available in home that timeQuote:
At what time Manikundu is telecasted????
Anna Wrote
Indian Standard Time 12.00PM
or EST 1.00 PM
if time permitsQuote:
Originally Posted by priya_2008
visit isaitamil.net (sign in required - free ) and watch in your computer
not created a new thread: எப் டிவி
என்று தணியும் மைக்கேல் தாகம்
என்றுமே தணியாது என்பதுதான் இதற்கு பதில். எப் டிவி கடந்த ஞாயிறு ஒரு சாதனையை செய்தது. ரொம்ப நேரத்திற்கு பூனை நடையை பவனி வர செய்யாமலே இருந்தது
உலக இசை விருதுகள் விழா ஒளிபரப்பப்பட்டதுதான் காரணம். விழா காட்டப்பட்ட பின், சிறந்த இசை என்ற பெயரில் சிறப்பான ஆல்பங்களிலிருந்து அற்புத பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. எப் டிவி இந்த உலக இசை விருதுகள் விழாவை ஒளிபரப்ப போகிறது என்பதற்கு மிகப்பெரிய அளவில் விளம்பரங்களையும், ஏற்பாடுகளையும் செய்திருந்தது. எவ்வளவு பெரிய அரங்கம் எவ்வளவு பெரிய, விழா காட்சியை காட்டும் திரை எவ்வளவு பெரிய மக்கள் வெள்ளம்! இசை நிகழ்ச்சி, பூனை நடை அனைத்தையும் நடத்தும் வண்ணம் அகல மற்றும் நடக்க இடமுள்ள வடிவத்தில் மேடை. மைக்கேல், ஜாக்சனுக்கு வைர விருது வழங்கப்பட்டது.
பின், அவருடைய த்ரில்லர் ஆல்பம் உலக சாதனை நிகழ்த்தியமைக்கு கின்னஸ் நிறுவன பாராட்டு பத்திரம் அளிக்கப்பட்டது. அவருடைய இசை ஆல்பங்கள் மொத்தமாய் 75 கோடி விற்றுள்ளது. உலகில் மிக அதிகமாய் விற்ற ஆல்பம் அவருடைய த்ரில்லர் தான். அது வெளிவந்து 25 ஆண்டு ஆகிவிட்டது. இதுவரை அந்த ரிகார்டு ஒடிக்கப்படவில்லை. இதுவரை 10 கோடியே 40 லட்சம் விற்றுள்ளது. உலகின் மிக பாப்புலரான மனிதர் என்பதற்காக மட்டுமல்ல, அவருடைய புகழை மனித நலனுக்கு உலகம் முழுவதிலும் பயன்படுத்துகிறார் என்பதற்காக மைக்கேல் போற்றப்படுகிறார். மைக்கேல் வந்ததிலிருந்து சென்றது வரை அரங்கம் முழுமையும் உள்ள மக்கள் ஒரே கோஷமாயும், கைதட்டலுமாய் தங்கள் அன்பை தெரிவித்தனர். மைக்கேலின் விருது வாங்கியமைக்கான பேச்சு, ஒன்றுமே காதில் விழவில்லை. அதெல்லாம் முக்கியமே இல்லை. நீ வந்தது தானைய்யா முக்கியம் என அரங்கம் அதிர்வதை புரிந்து கொண்டு "என் நன்றியை பெற்றோர், உடன் பிறந்தோர், ரசிகர்களுக்கு தெரிவிக்கிறேன் என்றார்.
இந்த பேச்சின் போது மட்டும் சற்று அரங்கம் வால்யூம் குறைக்க, "ஐ லவ் யூ' என்று மைக்கேல் குதூகலிக்க, அவ்வளவு தான் அந்த அரங்கமே மறுபடியும் அதிர்ந்தது. பின் அவர், ஐ லவ் யூ மட்டுமே சொல்லி கொண்டிருந்ததும் கேட்கவில்லை. உலகில் யாருக்குமே இப்படி ஒரு கிரேஸ் கிடையாது. விருது வாங்கிவிட்டு மைக் உள்ளே போக, மேடையில் வந்த குழு மைக்கேலினை வரவேற்கும் பாட்டை பாட, அரங்கத்தில் ஒவ்வொரு வரும் அதை பாடினர். இவ்வளவு பெரிய கோரஸ் குழு பாடல் உலகில் எங்கும் நடந்திருக்காது. பாட்டினூடே மைக் வர ஒரே கூக்குரல்கள். சிறியவர், பெரியவர், ஆண், பெண் பேதமே இல்லை. எல்லார் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். ஆளாள் கைகளில் இதயப் படங்களை, பொம்மைகள். 40 வருடங்களாய் கிங் ஆப் பாப் ஆக இருக்கும் மைக் இப்பொழுது மிக அழகாக இருக்கிறார். மேடையின் விளிம்பின் வந்து கை கொடுத்தார். தன் இதயத்தில் கை வைத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். தன் கோர்ட்டை அவிழ்த்து வீசினார். யு.எஸ்.ஏ., கொடியை ரசிகர்களிடம் பெற்று அதை விசிறி காட்டினார். கூட்டமே அவருக்காக பொம்மையாய் தலையை ஆட்டியது, அழுதது, குதித்தது. உலகின் மந்திர வார்த்தைகளில் ஒன்றாகிவிட்டது, மைகேல் ஜாக்சன்!
இமயத்தில் இங்கிலீஸ் டாக்கீஸ்
இமயம் டிவியில் ஞாயிறு தோறும் மாலை 4.30க்கு ஒளிபரப்பாகிறது இங்கிலீஸ் டாக்கீஸ் நிகழ்ச்சி.
புதிதாக வந்த ஆங்கிலப் படங்கள் பற்றிய அலசல் மற்றும் காட்சிகளை விவரிக்கும் இதில், ஹரிஹரன் தொகுத்து அளிக்கிறார்.
we are in July now :-(Quote:
Ramya Krishnan will be the heroine of a new mega serial to be aired in Sun Tv on week days at 8.30 pm from June 14th. Named Kalasam, it revolves around women oriented issues and Ramya Krishna plays the role of a working woman fighting for women’s rights and justice. It has a storyline aimed at the female audience.
its July 14th 8.30 PM IST
Quote:
After Simran, guess who is making a foray into Tamil television? It is ravishing Ramya Krishna. The talented actress who once ruled the south Indian film industry has agreed to play an important role in Sun TV’s daily soap Kalasam. However, television is not new for Ramya. She earlier hosted a talk show Zara Masti Zara Dhoom on Gemini TV in Telugu in which she interviewed film celebrities like Kamal Haasan and Nagarjuna.
“This is the first time she will be seen in a daily serial on Tamil TV. Kalasam revolves around women oriented issues and Ramya Krishna plays the role of a working woman fighting for women’s rights and justice. It has a storyline aimed at the female audience,” says the producer Keertana. A special photo shoot on Ramya was organised recently to promote the serial. Noted classical dancer and actress Sudha Chandran and Malayalam actor Devan will be seen in important roles. The first episode will be aired on July 14 at 8.30 pm on Sun TV.
மக்கள் தொலைக்காட்சியில் தற்போது ரஷ்யமொழித் திரைப்படங்கள் ஒளி பரப்பாகிக் கொண்டிருக்கிறது. படத்தை சிதைக்காமல் தமிழில் மொழி பெயர்த்து துணை தலைப்புகளில் மாதத்துக்கு இரு ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்கல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் ரஷ்யத் திரைப்படங்கள் அந்த நாட்டு வரலாறு, போர்ச்சூழல், மக்களின் வாழ்க்கை முறை இவைகளை திரைப் பட இலக்கணம் மீறாமல், மசாலா கலக்காமல் தயாரானவை.
இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் ரஷ்ய திரைப்படம் ஆன்ட்ரோவின் ஆர்வம் இது ஏழு கதைகளில் தொகுக்கப் பட்ட கருப்பு, வெள்ளை காவியம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் நிதிகழும் கதைகள், வேறுவேறு படக்களம், பல தரப்பட்ட மனிதர்கள் என்று பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும்
வி சேனல்களில், இப்போது போட்டி, ரியாலிட்டி ஷோக்களுக்கு குறைவில்லை. ஆனால், பொதிகை மீது பலருக்கு குறை உண்டு. தனியாருக்கு ஈடாக நிகழ்ச்சிகளை தருவதில்லை என்று. ஆனால், இப்போது பொதிகை, ஓசைப்படாமல் பல மடங்கு முன்னேறிவிட்டது. "டிவி' சேனலில், நேயர்களை பங் கேற்க வைக்கும் தொலைபேசி வாயிலான போட்டிகள் பல உள்ளன.
ஆனால், ஒரே நேரத்தில், போன், இன்டர்நெட், எஸ்.எம்.எஸ்., என்று நவீன தகவல்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி நடத்தும் ஒரே போட்டி பொதிகையில் மட்டும் தான். திறமைக்கான போட்டி நிகழ்ச்சியின் பெயர், என் கேள்விக்கு என்ன பதில்? குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் பயனுள்ள நிகழ்ச்சி இது. பள்ளி, கல்லும்ரி மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப துறை சேர்ந்தவர்கள், வயதானவர்கள் என்று எல்லாரும் பார்க்கலாம். சினிமாத்தனமான விஷயங்களில் மூழ்கி விட்டவர்களுக்கு இந்த நிகழ்ச்சி போரடிக்கலாம்; ஆனால், சீரியசான அறிவுப்பூர்வ விஷயங்களை விரும்புவோருக்கு இது விருந்துதான். போட்டி நிகழ்ச்சியில், 15 கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு நான்கு வித பதில்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இரண்டு சுற்று முடிவில், விடைகளும் தெரிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களும் அறிவிக்கப்படுவர். அபிராமபுரத்தில் இருந்து மட்டுமல்ல, அமெரிக்கா வரை பல நாடுகளில் இருந்தும் இதற்கு தீவிர நேயர்கள் உள்ளனர். ஐம்பதாவது நிகழ்ச்சியை தாண்டி விட்ட இதில், இதுவரை நெட் மூலம் 1,700 பேர், எஸ்.எம்.எஸ்., மூலம் 6,700 பேர் பங்கேற்றுள்ளனர். இதுவரை, ஐந்து பேர் மெகா வெற்றியாளர்களாக தேர்வு பெற்றுள்ளனர். இதன் தயாரிப்பாளர் ஹேமலதா வெங்கட்ராமன். தொகுப்பாளர் டாக்டர் சுதா கணேசன், தொழில்நுட்ப ஆலோசகர் குரு மாணிக்கம், ஒருங்கிணைப்பாளர் மரியதாஸ் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள். ஒவ்வொரு மாதமும், பொதிகையில், முதல், மூன்றாவது, ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 12க்கு தயாராகி விடுங்கள்; www.quizpot.com க்கு விசிட் அடித்துப் பாருங்களேன்.
DEEPANGAL’ A NEW SOAP
From 28th of this month DEEPANGAL, a new mega serial will be telecast through the kalaignar tv channel. The present news says that it will be telecast at 11.00 AM to 11.30 AM. Though the new Kalaignar TV Channel has come with a bang, some of its soaps which were telecast was abruptly stopped from telecasting. It is also understood that many serials did not have the story weight and there were less sponsors for those programmes. There is no other option and the channel had to abandon those serials, it is said..
Deepangal story line is based on a married man who wants to become a millionaire. For this his mother also encourages. Her son marries a rich man’s daughter. The married girl does not know about his earlier marriage. This hero running a luxury life in the city with his second wife.
The story will aim at how the newly married fellow manages between the two wives.
The serial is produced by famous Director Thalapathy and M.R.Sivakumar, and Directed by Edward Raj. The acters are Srikanth, Rajkanth, Bhavna, Vanaja, Nalini, Arunadevi and others.
Quote:
ராதிகா சரத்குமாரின் ராடான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் "செந்தூரப்பூவே' என்ற புதிய தொடர் சன் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது. இதில் ரஞ்சனி கிருஷ்ணா கதாநாயகியாக நடிக்கிறார். இவருடன் டெல்லி குமார், நித்யா, பத்மா செüத்ரி, ராஜலட்சுமி, கெüசிக், அப்ஸர், மோனிகா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
மலேசியாவின் ஆஸ்ட்ரோ வானவில் நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற "மல்லிகைகள் நிறம் மாறுவதில்லை' என்ற நாவலை மையமாக வைத்து இந்தத் தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது. நடுத்தர வர்க்கத்தில் வாழ்ந்துவரும் பெண்களின் பொறுமை, தியாகம் போன்றவற்றை யதார்த்தமாகப் பிரதிபலிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆபாவாணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த "செந்தூரப்பூவே' படத்தில் இடம்பெற்ற "செந்தூரப்பூவே... இங்கு தேன் சிந்த வா! வா!' என்ற பாடல் இந்தத் தொடரின் டைட்டில் பாடலாக ஒலிக்கிறது.
இந்தத் தொடர் ஜூலை 28-ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
திரைக்கதை -"மெட்டி ஒலி' முத்துச்செல்வம். வசனம் -பன்னீர்செல்வம். இசை -கிரண். ஒளிப்பதிவு -அனில் வாஸ். இயக்கம் -சுகி ஜெயராம்.
இரவு 8.00 மணி .....
for the title song
click here
http://raretfm.mayyam.com/tvserial/
நடிகை சங்கவி முதல் முதலாக சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கிறார். பிரபல சின்னத்திரை இயக்குநர் சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் கோகுலத்தில் சீதை என்கிற நெடுந்தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
இத் தொடரில், நடிகை சங்கவி கதாநாயகியாக நடிக்கிறார். அண்ணாமலை, சித்தி போன்ற நெடுந் தொடர்களை இயக்கி சாதனை படைத்த சி.ஜே.பாஸ்கர் இத் தொடரினை இயக்குகிறார்.
கலைஞர் தொலைக்காட்சியில் கல்யாணப் பரிசு என்ற நெடுந் தொடரை தயாரித்து வழங்கும் ஸ்ரீதன் மீடியா பூபதி இத் தொடரை தயாரித்து வழங்குகிறார்.
சந்தனக்காடு தொடரின் வெற்றி விழா கொண்டாட்டம் அண்மையில் மிஞ்சிக் அகாடமி அரங்கில் நடைபெற்றது. மருத்துவர் ராமதாஸ், இயக்குனர்கள் மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலாஜி சக்திவேல், சீமான், திருச்செல்வம், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் தாணு, சந்தனக்காடு இயக்குனர் வ.கௌதமன் மற்றும் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை மக்கள் தொலைக் காட்சியில் சனி மற் றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஒளிபரப்புகிறார்கள்.
good news
check this
Kalaignar - A La Carte
Top rated Tamil channel progrmms comprising of Movies, Serials, News, Music, Reality shows and special programs. $4.99
Jaya - A La Carte
Jaya - Jackpot, Simran Thirai, Reality Shows etc $4.99
Tamil Standard
Raj TV, Raj Musix, Makkal Tv, Jaya Tv, CNN IBN - FREE Channel, Chutty Tv - TEST Channel - FREE $6.99
Tamil Premium
Kalaignar, Raj, Jaya, Makkal, Isaiaruvi, Raj Musix. Chutty Tv (Free), CNN IBN (Free)
*Summer promotion. Limited time offer. Price subject to change without notice. $9.99
at
http://www.channellive.tv/default.aspx
Our GOOD OLD DOORDARSHAN :redjump:
is gonna telecast
"Ramaanujar" (I supp life history of the great saint)
every friday at 7.00 pm! from august 15th!
I am eagerly looking forward for the same!
Prabha
Raj TV is going to telecast a new serial.
புராணம் சம்மந்தப்பட்டது.
I saw a trailer. But did not get the name. Watch Raj TV for info.
I dont get to see raj tv :(
Quote:
MGR WAS SHOT BY ACTOR M.R.RADHA- A REAL EPISODE
MGR was shot by actor M.R.Radha when both of them were reining the Tamil film industry. Though the incident was deplorable one, but interesting to know what had really transpired between them. By keeping in view of the real incident to be highlighted, the Makkal TV Channel has made attempts how the quarrel arose between MGR and M.R.Radha. Though both of them are not living now, the interesting incident will make any viewers, if they want to come to know, could watch the Makkal TV Channel on all week days between Mondays to Fridays at 8.30 PM. In this show, two look-alikes like the late MGR and M.R.Radha are doing the roles. Pazhani Siva an actor who looks like MGR adores the role of the late AIADMK founder and leader. Madurai Kalaimani is appearing as M.R.Radha.
Quote:
ACTRESS SANGAVI IN SMALL SCREEN
One could easily guess that those cine actresses who have crossed their 30's are slowly entering in small screen following Seetha, Kushboo, Suganya, Devayani,and Kousalya.
Now it is the arrival of film actress Sangavi who will be making her small screen debut through the mega serial GOKULATHIL SEETHAI. The serial is going to be telecast through the Kalaignar TV channel. The renowned director C.J.Bhaskar is directing the serial. Soon channel will start to telecast the serial. Kalyanna Parisu serial producer SriDhan Media Sridharan is producing this serial.
Quote:
Bhuvaneswari on Sun TV, weekdays, 17.30.
The maiden solo music performance by Sruthi Kamal Hassan was the pinnacle.
The mega event started with the presentation of Lifetime Achievement Award to the legends. The recipients - Lalgudi Jayaraman, the Duo - M.S.V-Ramamurthy and Vikku Vinayakaram were honoured with a standing ovation.
Huddle up to your television set to watch the who’s who of tinsel town adorning the stage to honour some of the best music talents and the up-and-coming artists with prestigious titles.
Quote:
Ashtapathi
(Jaya TV, weekends, 6 a.m.)
‘Ashtapathi’ – Gita Govindam, a main part of Sampradaya Bhajan composed by Jayadeva Swamigal is being telecast on the channel as a special segment in ‘Arul Neram’ every Saturday and Sunday.
This week’s segment features Udaiyalur Kalyanarama Bhagavatar’s rendition of Ashtapathi.
Quote:
அம்மன்
வசந்த் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் அம்மன். வரும் திங்கள் முதல் இத்தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.
சின்னத்திரை வண்ணத்துளிகள்
Quote:
*`செல்லமடி நீ எனக்கு' தொடரையடுத்து அபிநயா கிரியேஷன்ஸ் தரவிருக்கும் புதிய தொடர் `திருப்பாவை'. செல்லமடி தொடரை இயக்கிய எஸ்.என்.சக்திவேலே இந்தத் தொடரையும் இயக்குகிறார். தொடருக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுவது தொடரின் தயாரிப்பாளர் ஜே.கே.
*டைரக்டர் கே.பாலச்சந்தரின் சின்னத்திரை, பெரியதிரை படைப்புக்கள் எதுவாயினும் அதில் `கவிதாலயா' கிருஷ்ணன் இடம் பிடித்து விடுகிறார். சமீபத்தில் வெளியான பாலச்சந்தர் தயாரிப்பான குசேலன் படத்திலும் `கவிதாலயா' கிருஷ்ணன் நடித்திருந்தார்.
*நாலெழுத்து அப்பா பெயரை தனது இரண்டெழுத்துடன் சேர்த்து போட்டுக் கொள்ளும் சின்னத்திரை `வெளிச்ச' நடிகை, இப்போது நடிப்பைத் துறந்துவிட்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டிருக்கிறார். இதனால் புதிய சீரியல்களுக்கு அவரை மனதில் வைத்து கதை பண்ணியவர்கள் அம்மணியைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
*ஜெயா டிவியில் இப்போது `என்ன பொருத்தம்' நிகழ்ச்சியை வழங்கிவரும் டைரக்டர் பிரபுநேபால், மீண்டும் ஜெயா டிவிக்கு ஒரு சீரியலை இயக்கி தயாரிக்கிறார் சீரியலுக்குப்பெயர் கவரிமான். இந்த சீரியல் தவிர, `ஜி' டிவிக்கும் `அழகான ராட்சசி' என்ற சீரியலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
தினம் தினம் தீபாவளி
Quote:
சின்னத்திரையில் ஆரம்பத்தில் வாரத் தொடர்களாக மட்டுமே சில நகைச்சுவைத் தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தன. ஆனால் முதன் முறையாக தினமும் நகைச்சுவை தொடராக ஒளிபரப்பாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள தொடர் "தினம் தினம் தீபாவளி.''
இத்தொடர் வருகிற வாரத்தில் தனது 150-வது பகுதியை கடக்கிறது.
மெகா டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடரில் நளினி, பாண்டு, சாதனா, குமரேசன், பாலாஜி, ஆர்த்தி, ஊர்வம்பு லட்சுமி, வாசு விக்ரம், ரக்ஷித், கே.எஸ்.ஜெயலட்சுமி, வந்தனா, ரம்யாபாரதி, செம்புலி ஜெகன், மாஸ்டர் சுஜித், மாஸ்டர் அபிஜித், பேபி ஸ்ருதி, லட்சுமிராஜ், சின்னராசு என ஒரு காமெடி பட்டாளமே இருந்து நகைச்சுவை கொட்டமடிக்கிறது.
இத்தொடரை திருவள்ளுவர் கலைக்குடும்பம் சார்பில் டி.குணவதி தயாரிக்கிறார். கணேஷ்ராஜேந்திரன் கதை எழுதி இயக்க, சூர்யபிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை நகைச் சுவையோடு சொல்லும் இத்தொடரில், மாமியாரான நளினியும், சின்னமருமகளான ஆர்த்தியும் குடும்பத்தை உடைக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். எது நடந்தாலும் அதையெல்லாம் தாங்கிக்கொண்டு தங்களது தனித்தன்மையையும் விட்டுக் கொடுக்காமல் குடும்பத்தை தாங்கி நிற்கின்றனர். ஆனால் மூத்த மருமகளான சாதனாவும், இரண்டாவது மருமகளான `ஊர்வம்பு' லட்சுமியும் குடும்பத்தை உடைத்து தனிக்குடித்தனம் போக பல வழிகளை முயற்சி செய்தபடி இருக்கின்றனர். இவர்களது கணவர்கள் இவர்களிடம் மாட்டிக்கொண்டு படும்பாடு செமரகளை.
"வருகிற வாரங்களில் இன்னும் நகைச்சுவை காட்சிகளை அதிகமாக்கி ரசிகர்களை "தினம் தினம் தீபாவளி'' கொண்டாட்டத்தில் பங்கேற்க வைக்கப் போகிறோம்'' என்கிறார், இயக்குனர் கணேஷ் ராஜேந்திரன்.
புதுமையான ரோபோட்
Quote:
கதாநாயகனுக்கு ரோபோட்டுகளின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் வேலை. ஒருநாள் கால இயந்திரத்தைப் பயன்படுத்தி முற்காலத்திற்கும், பிற்காலத்திற்கும் செல்லும் புதுமையான ரோபோட் ஒன்று அவனுக்கு கிடைக்கிறது. அதன் துணை கொண்டு வேறொரு காலத்திற்கு பயணமாகிறான். அங்கு சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் தீயசக்திகளை சந்திக்க நேர்கிறது.
அந்த தீயசக்திகளை வீழ்த்தி உலகத்திற்கு எப்படி நன்மை தேடித்தருகிறான் என்பதுதான் `இகான் கிட்' என்ற தொடரின் கதைக்களம். வரும் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 4 மணிக்கு கார்ட்டூன் நெட்வொர்க் சேனலில் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.
Quote:
தேடிவந்த அதிர்ஷ்டம்
`கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும்' என்பார்கள். சிறுவன் ஒருவனுக்கு திடீரென்று ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கிடைக்கிறது. அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு பணக்காரனாகிய பின் மாறும் வாழ்க்கை சூழலை காமெடியுடன் தந்திருக்கிறார்கள். கார்டூன் நெட்வொர்க் சேனல் `ரிச்சீ ரிச்' என்ற பெயரில் நாளை காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு கிறார்கள்.
Quote:
சிரித்தால் பரிசு
மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `சிரிப்போ சிரிப்பு'.
சிரித்துக் கொண்டே இருந்தால் பரிசு தரும் வித்தியாசமான விளையாட்டு நிகழ்ச்சியே, `சிரிப்போ சிரிப்பு'.
மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் நடத்தப்படும் இந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கு ஒரே விதிமுறைதான். சிரித்துக் கொண்டே இருக்க
வேண்டும்.வேடிக்கை சிரிப்பு, விஷமச் சிரிப்பு, நக்கல் சிரிப்பு, விளையாட்டு சிரிப்பு, காரிய சிரிப்பு என்று எந்த சிரிப்பு ஆனாலும் சிரிக்கலாம். யார் அதிக நேரம் சிரிக்கிறார்களோ அவர்களுக்கு பரிசு.
சிரிப்புதானே... நான் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சிரித்துக் கொண்டே இருப்பேன் என வீராப்போடு ஆரம்பிப்பார்கள். நொடிகள் கடக்க கடக்க, கண்களில் கண்ணீர் வரும், வயிறு வலிக்கும், வாய் நோகும் `போதுமடா சாமி' என்று போட்டியிலிருந்து விலகி விடுவார்கள். இதையெல்லாம் மீறி தாக்குப் பிடித்து தொடர்ந்து சிரிப்பவரே வெற்றியாளர் ஆவார்.
இடைஇடையே தொகுப்பாளர் ஏதாவது கேள்விகள் கேட்பார். பதில் சொன்னால் தொடர்ந்து விளையாட முடியாது. விடாமல் சிரித்துக் கொண்டே இருந்தால்தான் பரிசு.
Quote:
சாதனைப் பெண்ணுக்கு மரியாதை
சனிக்கிழமை தோறும் காலை 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "வைர மங்கை'' பெண்களுக்கான நிகழ்ச்சி.
எந்தத் துறையாக இருந்தாலும் சரி, தனித் தன்மையுடன் புதுமையாக, ஏதாவது சாதனை படைத்தால் அவர்களை வரவழைத்து அரங்கில் பார்வையாளர்கள் முன்னிலையில் சாதனை நிகழ்த்த வாய்ப்பு வழங்கப்படும். பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டுகளை பெறும் பெண்மணிக்கு சாதனையாளர் நிகழ்ச்சியில் தோன்ற வாய்ப்பு வழங்கப்படும்.
சின்னத்திரை நட்சத்திரங்கள் சுஜிதா, நிஷா இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள்.
வ.உ.சி. வரலாறு
Quote:
வசந்த் தொலைக்காட்சியில் தமிழ் மண்ணின் பெருமை சொல்லும் வீரக் குலத் திலகங்களின் சரிதம் பாடல் மூலமாக சொல்லப்பட்டு வருவது ரசிகர்களிடம் வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது.
குதிரை ஏறி கும்பினி கூட்டத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்த விடுதலை வீரர்கள் வரிசையில் கப்பல் ஏறி பரங்கிப் படையை பதறச் செய்த செக்கிழுத்த செம்மல் - கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் தியாகம் பாடல் மூலமாக ஒளிபரப்பு ஆகிறது.
இந்த பாடலுக்கான இசை பாமரன், எழுதியவர் கவிஞர் ஆசீர்வாதம், பாடியவர் பாலமுருகன். ஒளிபரப்பு நேரம்: ஞாயிறு மதியம் 12 மணி.
Quote:
சனிக்கிழமை இரவு 8 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கும் மெகா டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, "அதிசய ராகம்.'' இந்த நிகழ்ச்சி இனி வரும் வாரங்களில் புதுப்பொலிவுடன் ஜொலிக்க உள்ளது.
பிரபல திரை இசை பாடகர்களின் சுவையான அனுபவங்களை இனிமையாக பகிர்ந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில், அவர்கள் பாடிய பாடல்கள் மட்டும் அல்லாது தங்களுக்கு விருப்பமான மற்றவர்கள் பாடிய பாடல்களையும் சேர்த்து பாடி பார்வையாளர்களை அசர வைக்கின்றனர். இனிவரும் வாரங்களில் கிருஷ்ணராஜ், உன்னிமேனன் உள்ளிட்ட பல பின்னணி பாடகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
Quote:
குழந்தைகள் பிடிவாதம்
சீரியல்களில் இப்போது அதிக குழந்தைகள் நடித்து வருகிறார்கள். இதனால் அந்தக் குழந்தைகளுடன் அவர்கள் பெற்றோரும் படப்பிடிப்பு அரங்கை நிறைக்கத் தொடங்கி விட்டார்கள். பள்ளிக்கு சரிவர போக முடியாத குழந்தைகள் பலரை சில பள்ளி நிர்வாகம் பள்ளியில் இருந்து விலக்கி வைக்க, அதிர்ந்துபோன பிள்ளைகள், படிப்பு நிறுத்தப்பட்ட அதிர்ச்சியில் செட்டில் நடிக்க வர மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.
Quote:
* சன் டிவியில் `மீண்டும் மீண்டும் சிரிப்பு' நகைச்சுவைத் தொடரில் நடித்த நடிகர் எஸ்.வி.சேகர், இப்போது அந்தத் தொடரில் இல்லை. அவருக்குப் பதிலாக இப்போது மயில்சாமி நடித்துக் கொண்டிருக்கிறார்.
* சினிமா வாய்ப்புக்கள் தொடர்ந்தாலும் நடிகர் டெலிபோன்ராஜ் சின்னத்திரை வாய்ப்புக்களையும் தவிர்ப்பதில்லை. இதுவரை ராடன் டிவி நிறுவனத்தின் சின்னத்திரை தொடர்கள் எதிலும் நடிக்காத அவர், இப்போது முதன்முதலாக ராடனின் செந்தூரப்பூவே தொடரில் காமெடி கலந்த வில்லன் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
* கலைஞர் டிவிக்காக லட்சியம் என்ற தொடரை தயாரித்து வரும் வி.எஸ்.குமரன், நடிகர் ரஞ்சித் நடித்த வள்ளுவன் -வாசுகி என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார்.
* சின்னத்திரையில் அதிக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நடிகர் ரியாஸ்கான், இப்போது சின்னத்திரையில் இருந்துவரும் எல்லா அழைப்புக்களையும் தவிர்க்கிறார். சினிமாவில் தான் இனி என் முழுத் திறமையும் வெளிப்படுகிறமாதிரி இருக்கும் என்கிறார். இவரது மனைவி உமாவோ சின்னத்திரையில் தன் ஈடுபாட்டை இப்போது அதிகப்படுத்தியிருக்கிறார்.
* சின்னத்திரையில் வில்லி கேரக்டர் மட்டுமல்லாது இப்போது குடும்பப் பாங்கான கேரக்டர்களிலும் பிரகாசிப்பவர் நடிகை கவுதமி. இப்போது அவர் நடித்து வரும் மேகலா, திருமதி செல்வம், பந்தம் ஆகிய மூன்று தொடர்களிலுமே தனக்கு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தும் கேரக்டர்கள் என்கிறார். ஊட்டியில் 10 நாட்கள் பஞ்சாமிர்தம் படப்பிடிப்பில் இருந்தவரிடம், "இப்போது சினிமாவிலும் அதிகம் நடித்து வருகிறீர்களே?'' கேட்டால், "சின்னத்திரையிலும் என் பங்களிப்பு அதிக அளவில் இருக்கும். என்னை வித்தியாசமான கேரக்டர்கள் மூலம் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது சின்னத்திரை தானே'' என்கிறார்.
* சினிமா படங்களுக்குத்தான் படப்பிடிப்புக்கு முன்பாக போட்டோ சூட் வைத்து சில விசேஷமான காட்சிகளை படம் பிடிப்பார்கள். இப்போது சின்னத்திரையிலும் அதைத் துவக்கி விட்டார், டைரக்டர் சி.ஜே.பாஸ்கர். கலைஞர் டிவிக்காக அவர் இயக்கப் போகும் புதிய தொடருக்காக சமீபத்தில் 2 நாட்கள் சின்னத்திரை நடிகர்களை நடிக்கவைத்து `போட்டோ சூட்' எடுத்தார்.
இந்த தொடரில் நடிகர் பிருத்விராஜ் நாயகனாக நடிக்கிறார். நடிகை சங்கவி இந்த தொடர் மூலம் சின்னத்திரைக்கு வருகிறார்.
Quote:
சின்னத்திரையில் ஓர் வெள்ளித்திரை
வெள்ளித்திரைக்கு வரும் புதிய திரைப்படங்களை நேயர்களே விமர்சிக்கும் புதிய நிகழ்ச்சி "வெள்ளித்திரை.''
வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு மெகா டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியுள்ள திரைப்படங்களைப் பற்றி நேயர்கள் நேரடியாக தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் தொலைபேசி வழியாக பரிமாறிக் கொள்கின்றனர். நேயர்கள் புதிய திரைப்படங்களை திரையரங்கிற்குச் சென்று பார்த்த பின்பு அந்த படத்தில் அவர்களுக்கு பிடித்த காட்சிகள், பாடல்கள், விரும்பாத காட்சிகள், படத்திற்கு பொருந்திய, பொருந்தாத காட்சிகள், படத்தின் கிளைமாக்ஸ் குறித்து விரிவாக விமர்சனம் செய்கின்றனர்.
மேலும் படத்தின் கதை அமைப்பு மற்றும் முடிவு காட்சிகள் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று திரை உலகினருக்கு தமது கருத்துக்களையும் எடுத்துரைக்கின்றனர்.
கிருபா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
Quote:
The weekly serial being telecast on all Sunday nights Nagavalli is a devotional as well a crime story. The story and dialogues are handled by “Vidathu Karrupu” fame Sethuraman and is directed by Cine cameraman P.S.Dharan.
In a pond where a few people absconding when taking bath. No one knows where they went. A house, in a flat consisting of twelve houses finds no one living. Is the people who absconded very recently in the pond belonged to the house where no one is living? The suspense of the story that is properly woven to attract the weavers without skipping their weekly serial on all Sundays at 9.30 PM at Sun TV Channel.
Vinodhini, Nandhitha, Lakshmipriya, Bayilvan Renganathan, Nesan and others are acting
Quote:
கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான "நம்ம குடும்பம்' நெடுந்தொடர் முடிந்து விட்டது.
இதைத் தொடர்ந்து 22-ந் தேதி (திங்கள்) முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புதிய தொடர் "தங்கமான புருஷன்' பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் கதை எழுதி உள்ளார்.
இத் தொடரை சுந்தர் கே.விஜயன் இயக்க, நடிகர்கள் பிரேம் சாய், அபிதா, நீபா, சந்திரபோஸ் மற்றும் சரண் ஆகியோர் நடிக்கிறார்கள்.
Quote:
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை தொகுப்பு, கிங் மேக்கர் என்ற பெயரில் வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. வாரந் தோறும் ஞாயிறு மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் காமராஜரின் இளமை பருவம், நாட்டுப்பற்று, மனித நேயம், பொது அறிவு, மக்கள் தொண்டு, தியாக மனப்பான்மை, ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ஆற்றிய பணி, சமுதாயத் தொண்டு உள்ளிட்ட அந்த மாபெரும் தலைவரின் ஒப்பற்ற வாழ்க்கை வரலாறு முழுமையாக காட்டப்படுகிறது.
Quote:
Kichu Kichu.com
(Jaya TV, Thursdays, 19.00)
The comedy show gets more special this week, as the crew airs episodes filmed at Vega Land theme park, in Kochi. To make it more enjoyable and hilarious, each week’s episode will have comedy sequences from Tamil films aired along with the week’s programme.
Navaratri special
A ten-day line-up is being aired on Jaya TV as part of the Navaratri celebrations from September 30 to October 9. Get to know the spiritual facts on what is Navaratri and the ways and means to worship the goddess during this period, besides enjoying concerts by up-and-coming musicians.
The series is being aired at 6.30 a.m. on Sundays and 5.30 p.m. on other days.
Brahmotsavam
For the religious, Jaya TV brings home the Srivari Brahmotsavam that coincides with Navaratri this year. Stay tuned to watch the proceedings to be aired between 6 and 6.45 a.m.
Worship the Lord of Tirumala in this special segment, spread over ten days, which is being aired from October 1 to 10. Watch the special abhishekams performed to the deity, and the procession when the Lord will be taken out on different vahanams.
Thiraikadal Odi Diraviam Thedu
(Makkal TV, Tuesdays, 11 a.m.)
The programme is aimed at those interested in export business. Ramachandran, an expert in the field, offers valuable information on the products suitable for export and the places to which these can be sent, to reap the maximum profit.
Small wonders
‘Varam Oru Murai Malarum Kurijni Malar,’ a programme that attempts to bring out the extraordinary ability of young ones will be aired on Makkal TV, Wednesdays, 16.30. Directed by Jayaraman, the live programme has young participants exhibiting their talents.