Quote:
புத்தாண்டை `தாம்தூம் 2009' என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரம்மாண்டமாக வரவேற்கிறது, ஜெயா டிவி. எம்.ஜி.எம்.மில் நடைபெறும் இந்த நேரடி ஒளிபரப்பு, வரும் புதன்கிழமை இரவு 9.30 மணி முதல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.
பிரபல முன்னணி நட்சத்திரங்கள், திரையுலக கலைஞர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள, வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளோடு பிறக்கவிருக்கும் 2009-ஐ புத்துணர்வுடன் தனது ரசிகர்களோடு இணைந்து கொண்டாடுகிறது, ஜெயா டிவி.
விழாவில் 2008 ஆம் ஆண்டில் திரைத்துறையில் சாதனை படைத்த நடிகர்- நடிகைகள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு விருதுகளையும் வழங்கி சிறப்பிக்கவிருக்கிறது.
இந்த `தாம்தூம் 2009' நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர்கள் க்ரிஷ், யுகேந்திரன், பிரசாந்தினி, பெல்லிராஜா, தீபாமரியம், சின்னபொண்ணு இவர்களின் இனிய குரலில் இன்னிசை நிகழ்ச்சியையும், சினிமா நடிகைகள் பூர்ணா, சுஜா, தாரிகா ஆகியோர் ராக் அகாடமியுடன் இணைந்து நடத்தும் நடனநிகழ்ச்சியையும் காணலாம்.