:lol:Quote:
Originally Posted by Plum
Printable View
:lol:Quote:
Originally Posted by Plum
Many posters we can see this combination.Quote:
Originally Posted by Plum
ஆனா ரொம்ப காலமா 'கிரௌன்' - ஐ 'கி ரெ ள ன்' (KireLen' ன்னு வாசித்திட்டிருப்பேன் :lol:
:exactly:Quote:
Originally Posted by Plum
But now 'Alankar' also demolished and re-structured as a big Offcial Complex.
well said !Quote:
Originally Posted by groucho070
கர்ணன்தான் தன்னோட மூத்த மகன் அப்படீன்னு தெரிஞ்சதும் குந்தி தேவிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. உடனே, வேற எதப்பத்தியும் யோசிக்காம, இத்தனை வருஷமா பிரிஞ்சிருந் தன்னோட குழந்தைய பாக்குறதுக்கு கர்ணனின் அரண்மனையை நோக்கி ஓடிப்போறா.
அற்புதமான ஒரு அதிகாலை Silhouette காட்சியில் சூரிய பகவானை வணங்கிக் கொண்டிருப்பார் கர்ணன். பிறகு, அரண்மனைக்குப் போனதும அங்கே குந்தி தேவியை பார்த்து ஆச்சர்யமும் ஆனந்தமும் அடைந்து அவரை அன்பாக வரவேற்று உபசரிப்பார். "அம்மா, உங்களைப் பார்த்ததும் என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது", அப்படீன்னு சொல்லுவார். அவருக்கு மட்டுமா ? அந்தக் காட்சியைப் பார்க்கும் நமக்கும் கூட அதே நிலைதான் .
தேரோட்டியின் மகன் என்ற பழிச்சொல் நீங்கி இப்போது தான் ஒரு அரசன் என்கிற சந்தோஷத்திலும் கர்வத்திலும் நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் அந்த அரசன், தன்னைப் பெற்றவளைப் போல தன்னிடம் பரிவு காட்டும் அந்தத் தாயுள்ளத்தைக் கண்டு நெகிழ்ந்துதான் போய்விடுகிறது.
இந்தக் காட்சியில் தலைவர் அசத்தியிருப்பார் பாருங்க.....நடிப்பின் எல்லைகளையெல்லாம் கடந்து வானளாவி உயர்ந்து நிற்பார். :notworthy: நானெல்லாம் அந்தக் காட்சியை வாயடச்சிப்போய் பார்ப்பேன். வசனம் பேசறது ஒரு பக்கம் இருக்கட்டுங்க, அவரு முகத்துல காட்ற expressions இருக்கே !!!!....கண்ணத்து சதையெல்லாம் அப்படியே பூரிச்சுப் போகும். அந்த பெரிய விழிகளை உருட்டி உருட்டி அதில் ஆயிரமாயிரம் செய்திகளை சொல்வாருங்க ! அப்புறம் அந்தக் குரல் ! கண்களை மூடிக்கிட்டு கேட்டா கூட அந்தக் காட்சியோட தன்மை நமக்குப் புரியும்.
M.V. Rajamma மட்டும் என்ன சாதாரணமானவங்களா ? அவங்களும் அசத்தியிருப்பாங்க. படம் பார்க்கும் நமக்கு இவங்க இரண்டு பேரும் நிஜமாவே தாயும் மகனும்தானா அப்படீன்னு தோனும்.
இது எல்லாத்துக்கும் மேல, Top Class-அ ஒரு scene. குந்தி தேவிதான் தன்னைப் பெற்ற தாய் என்று தெரிஞ்சதும் அவருக்கு தலை சுற்றி மயக்கம் வரும். இப்போ அவரு அப்படியே பக்கத்துல இருக்கும் இருக்கையில் விழுந்திருக்கலாம்,அல்லது காலை மடக்கி தரையில் விழுந்திருக்கலாம். ஆனால் நடிகர் திலகம் என்ன செய்வார் தெரியுமா? வெட்டப்பட்ட ஒரு பெரிய மரம் போல நின்ற நிலையில் இருந்து அப்படியே நிலத்தில் விழுவார். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க, அந்த நேரத்தில் அவருக்கு இருந்த சற்று பெருத்த உடல் வாகும், அவர் போட்டிருக்கும் நகைகளின் எடை - இவற்றோடு அப்படியே நிலத்தில் விழுவது என்பது எவ்வளவு வலியையும் வேதனையையும் கொடுக்கக் கூடிய செயல். இருந்தாலும், எந்த சிரமத்தையும் பார்க்காமல் அந்த மகா நடிகன் அதைச் செய்தார். :notworthy:
I would like to add a piece of information here. Anthony Hopkins bagged his Best Actor Academy Award for his role in the film “ Silence of the Lambs “ of which most of you would be aware of. And can you imagine the duration his character appeared in that film – it is just over 25 minutes !!!
ஆனால் இங்கே, நடிப்பு ஒன்று தான் தன் உயிர் மூச்சு என்று வாழ்ந்த அப்பாவியான இந்த மகா கலைஞன், மாங்கு மாங்கென்று நூற்றுக்கணக்கான படங்களில் உயிரைக் கொடுத்து நடிச்சிருக்காரு. அவருக்கு இந்த நாடு என்ன செய்தது ??? :huh:
ஆனால் நம்ம “ Sarkar “ஐ யும் சும்மா சொல்லக் கூடாது. எவ்வளவு சீக்கிரம் அவருக்கு "பத்ம" விருது கொடுத்துட்டாங்க!!! யாருக்குத் தெரியும்? ஒரு வேளை அவர்,"பூப்பரிக்க வருகிறோம்" படத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிச்சிருந்தா, அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கூட கொடுத்திருப்பாங்க. பாவம், அவருதான் அதுக்குள்ள அவசரப்பட்டு போய் சேந்துட்டாரு.
வாழ்க பாரத நாடு !!!
Arey baba ! maaf keejiye.
“ Bharath Matha ki Jai “
Ab teek hai na ??
--------------------------------
டியர் மோகன்,
தங்கள் போஸ்டிங் நம் அனைவரின் நெஞ்சினிலும் ஒரு இனம் புரியாத உணர்வை ஏற்படுத்தியிருக்கும். அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் பால் தங்களுடைய பாசம் வெளிப்பட்டுள்ளது. இதைப் படித்து உணர்ச்சி வயப்படாத சிவாஜி ரசிகர் இருக்க முடியாது.
நடிகர் திலகத்தின் கண்கள் எப்போதும் சிவந்திருக்கும். அதைப் பற்றிப் பலர் பலவாறு கதை கட்டிய காலமும் உண்டு. சமீபத்தில் தான் அதன் காரணம் புரிய வந்தது. அந்த செய்தியைக் கேட்டதும் துடிதுடித்து விட்டேன் நான். இப்படி ஓர் ஆத்மார்த்தமான கலைஞன் ஏன் தமிழ்நாட்டில் வந்து பிறந்தார் என்று மிகவும் வருந்தினேன்.
நடிகர் திலகத்துடன் நெருங்கிய ஒருவர் சொன்ன தகவல்.
படப்பிடிப்பிற்கு நடிகர் திலகம் வந்து விட்டால் உணவு இடைவேளை தவிர மற்ற நேரங்களில் அரங்கை விட்டு செல்ல மாட்டார். குறிப்பாக சோகக் காட்சிகளில் நடிக்கும் போது சில சமயம் தாமதமாகலாம். சக நடிகர் ரீடேக் வாங்கியிருக்கலாம் அல்லது ஏதேனும் தொழில் நுட்ப காரணமாகக் கூட இருக்கலாம். ஆனால் அவ்வளவு நேரமும் அமைதியாக அந்த இடத்திலேயே இருந்து தன்னுடைய பங்களிப்பை செய்து விட்டுத் தொடர்ந்து மற்றவர்களின் நடிப்பையும் கவனிப்பார். இவையெல்லாம் தெரிந்த விஷயம். ஆனால் தெரியாத ஒன்று. அன்றைய தினம் உணர்ச்சி மயமான காட்சி அல்லது சோகக் காட்சி என்றால், வந்த உடனேயே கண்களில் கிளிசரின் ஊற்றிக் கொண்டு விடுவாராம். அவர் நடிக்க வேண்டிய நேரம் வரும் வரை அந்த கிளிசரின் அவர் கண்களுக்குள்ளேயே அடக்கி வைத்திருந்து அவர் நடிக்கும் போது வெளிப்படுத்துவாராம். அவ்வளவு நேரம் அவ்வளவு ஆண்டுகள் அவ்வாறு கிளிசரின் வைத்த கண்களை வைத்து அந்த வேதனையைத் தாங்கிக் கொண்டு அவர் நடித்தைக் கேள்விப் படும் போதே நமக்கு நெஞ்சு பதைக்கிறது. இப்படிப் பட்ட திறமையுள்ள கலைஞனை நமது நாடு எப்படியெல்லாம் கௌரவப் படுத்தியிருக்கிறது என்பதை எண்ணும் போது ....?
ராகவேந்திரன்
ராஜபாளையத்தில் உள்ள மீனாட்சி திரையரங்கில் , 12.11.2009 (வியாழன்) முதல் 5 நாட்களுக்கு , தினசரி 4 காட்சிகளாக , நமது நடிகர் திலகத்தின் நீதி திரைப்படம் திரையிடப்பட்டு , வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக , கணிசமான மக்கள் கண்டு களித்து வருகின்றனர். இத்தகவலை எமக்கு அளித்த மதுரை ரசிக நல்லிதயம் திரு. தி. அய்யம் பெருமாள் அவர்களுக்கு உளங்கனிந்த நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
Dear Raghavendra Sir,
I've always been sharing these thought with many people, whenever i get a chance. And, recently i happened to watch Karnan once again and was very much moved. So, i just thought of registering it here in the hub.
It was really shocking to know the reason behind NT's " Sivandha Kangal " !!! I have also come across people who used to blabber some nonsense about his red eyes, and unable to retaliate, i will just stay quiet. Now that you have revealed the reason, i will take them for a ride.
dear pammalar,
good to know that Needhi is making a good run. Chennai is really a cursed city.