Quote:
மக்கள் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி "மக்கள் கலை இரவு.''
தமிழகத்தின் நாட்டுப்புற கதையாடல்கள் பல்வேறு கலை வடிவங்களாக இப்பொழுதும் திகழ்கின்றன. ஊர் திருவிழாக்கள் , பண்டிகைகள், சிறு தெய்வ வழிபாட்டு நிகழ்வுகள் என்று வட்டாரம் சார்ந்த விழாக்கள் இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய விழாக்களின்போது அந்தந்த வட்டாரம் சார்ந்த நாயகர்களின் வாழ்க்கை வரலாறு விடிய விடிய நடத்தப்படுகின்றன. நல்லதங்காள், அரிச்சந்திரன், முத்துப்பட்டன், பொன்னர் சங்கர் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு தெருக்கூத்து, கணியான் கூத்து, வில்லுப்பாட்டு என்று பல்வேறு வடிவங்களாக காட்சிப்படுத்தப்பட்டு, முதன் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.