Originally Posted by thriinone
இது போன்ற விவாதங்களில் வார்த்தைகள் தீவிரமும் அமிலத்தன்மையுமே அதிகரிக்கின்றது. ப்ளம் அவர்கள் சொல்வது போல, எந்த ஒரு நடிகையைப் பற்றிய கவர்ச்சிப்படங்களும் தேவைக்கு அதிகமான வார்த்தைப் பிரயோகங்களும், எழுதுபவரின், அல்லது எழுத்தின் கலாச்சாரத்தை பரை சாற்றுகிறது.
கலாச்சாரம் என்பது உடலுறவு சம்பந்தபட்டது மட்டுமே அன்று. அளவான, அழகான, இதமான, நல்ல, பேச்சும், செய்கையும், சிந்தனையும், செயல்களும் சேர்த்தே ஒட்டுமொத்த கலாச்சாரம் ன்னு ஆகும்.
இதன் படி பார்த்த கலாச்சாரம் எங்கயோ எப்பயோ பல பேர்கிட்டயும் காணாம போச்சு. எதை வச்சுகிட்டு, குய்யோ முய்யோன்னு கத்திகிட்டும் பேசிகிட்டும் இருக்கோம் ன்னு தெரியல.