View Full Version : Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor
Pages :
1
2
3
4
5
6
[
7]
8
9
10
11
12
13
pammalar
1st October 2012, 03:28 PM
wish every one a happy sivaji jayanthi
நடிகர்திலகத்தின் பிறந்த நாள் அன்றே உங்களையும் வாழ்த்த வேண்டும் என்பதால் , உங்களுடைய பிறந்தநாள் அன்று வாழ்த்து சொல்லவில்லை. Wish you many many happy returns fo the day. உங்களுடைய நடிகர் திலகத்தின் தொண்டு தொடரட்டும்.
உங்களுக்காக (வேறு ஒரு திரியில் சுட்டது தான்)
அருமைச்சகோதரர் பாலா அவர்களே,
நமது நடிகர் திலகத்தின் ஜெயந்தித் திருநாளன்று அவரது கடைக்கோடி தொண்டரான இந்த எளியவனுக்கும் தாங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியதில் மட்டற்ற மகிழ்ச்சி..! தங்களுக்கு எனது இனிய நன்றிகள்..!
தங்களுக்கோர் தங்கமான பரிசு:
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/ETR1-1.jpg
பாசத்துடன்,
பம்மலார்.
pammalar
1st October 2012, 03:33 PM
டியர் பாலா சார்,
தாங்கள் எனக்களித்துள்ள நமது நடிகர் திலகத்தின் 'அன்னை இல்ல' குடும்பப் புகைப்படம் வெகு அருமை..! தங்களுக்கு மீண்டும் எனது இனிய நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
pammalar
1st October 2012, 03:52 PM
அன்புள்ளங்கள் அனைவருக்கும்,
அடியேன், அடுத்த மூன்று நாட்கள்[அக்டோபர் 2,3,4] வெளியூர் பயணிப்பதால், அக்டோபர் 5 அன்று சென்னை திரும்பியபின் எனது பதிவுகளைத் தொடர்கிறேன்..! இதயதெய்வத்தின் 85வது ஜெயந்தி சிறப்புப் பதிவுகள் தொடர்ந்து வெளிவரும்..!
அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்..! வாழ்த்துக்கள்..! நன்றிகள்..!
Once again, A Very Happy Sivaji Jayanthi To One & All..!!!
அன்புடன்,
பம்மலார்.
vasudevan31355
1st October 2012, 06:04 PM
அன்பு முரளி சார்,
பழுத்த அனுபவசாலியான தங்களின் அன்புப் பாராட்டுதல்களுக்கு தலை சாய்க்கிறேன். தங்கள் ஈடுஇணையில்லா எழுத்துக்களும், சாரதா மேடம் அவர்களின் பாங்கான பதிவுகளுமே எனக்கு குருகுல பாடங்கள். அதற்காக மிகுந்த நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். தன்னைச் சார்ந்தவர்களையும் ஊக்கப்படுத்தி, அவர்களைப் பாராட்டும் உயர்குணம் கொண்ட தங்களின் அன்பிற்குப் பாத்திரமானதை எண்ணி பெருமையும், உவகையும் கொள்கிறேன். மீண்டும் மீண்டும் என் ஆழ்மனதின் நன்றிகளை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் திலகத்தின் பிறந்தநாள் பதிவாக பாகம் பத்தில் தாங்கள் தலைவரது பாடல்கள் மூலமாகவே அவருக்கு வாழ்த்துப்பா பாடியிருப்பது ஜோர். தங்களுக்கு அன்பான நடிகர் திலகத்தின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Richardsof
1st October 2012, 06:27 PM
COURTESY. MALAIMALAR - 1.10.2012.- நடிகர் திலகத்துக்கு இன்று பிறந்த நாள்: சூறாவளியாய் கலக்கிய சிவாஜிகணேசன் திங்கட்கிழமை, அக்டோபர் 01, 12:19 pm
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இன்று 85-வது பிறந்தநாள். 1952-ல் ‘பராசக்தி’யில் குணசேகரனாக அறிமுகமாகி 1999 வரை திரையுலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார்.
பாடல்களே படங்களாகவும் பாட தெரிந்தவர்களே பெரும் நடிகர்களாகவும் இருந்த நியதிகளை உடைத்தெரிந்து வசன உச்சரிப்பாலும் நடிப்பு பரிமாணங்களாலும் ரசிகர்களை தன் வசம் கவர்ந்தார்.
‘மனோகரா’, ‘திருவிளையாடல்’, ‘தங்க பதக்கம்’ படங்களில் அவர் பேசிய வசனங்கள் நெருப்பை கக்கின. திரையுலகில் 50 ஆண்டுகள் சூறவாளியாய் கலக்கினார்.
வீரபாண்டிய கட்டபொம்மனையும், கப்பலோட்டிய தமிழனையும், வாஞ்சிநாதனையும், பகத்சிங்கையும் கண்முன் நிறுத்தினார். ராஜராஜசோழன் போன்ற சரித்திர புருஷர்களையும் கடவுள்களையும் சிவனடியார்களையும் மனக்கண்ணில் கொண்டு வந்தார்.
பத்மஸ்ரீ, பத்மபூஷன், டாக்டர், செவாலியே என எண்ணற்ற பட்டங்களை அவர் பெற்று இருந்தாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எவரும் பெறமுடியாத நடிகர் திலகம் பட்டத்தை அவர் பெற்று இருந்தார்.
இளம் தலைமுறை நடிகர்கள் வசங்களை பேசியோ இன்றும் நடிப்பு பயிற்சி பெறுகின்றனர். அண்ணன் தங்கை பாசத்தை சித்தரித்த ‘பாசமலர்’, ஒன்பது வேடங்களில் வித்தியாசம் காட்டி ஆச்சரியப்படுத்திய ‘நவராத்திரி’, கர்ணனை காட்சிபடுத்திய ‘கர்ணன்’ படம் ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘வியட்நாம் வீடு’, ‘வசந்தமாளிகை’ என எண்ணற்ற காவிய படங்களை தமிழ் பட உலகுக்கும் தமிழர்களுக்கும் தந்தார்.
நடிப்புலக மேதை சிவாஜி இன்று நம்மிடையே இல்லை என்றாலும் அவர் விட்டுச்சென்ற கதாபாத்திரங்கள் மூலம் என்றென்றும் தமிழர்கள் நெஞ்சில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
vasudevan31355
1st October 2012, 06:57 PM
மாலைமலர் (1.10.2012)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/malaimalar.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
vasudevan31355
1st October 2012, 09:07 PM
http://rivr.sulekha.com/calling-all-sivaji-ganesan-aficionados-on-actors-day_593525_blog
http://www.cinebuzzz.com/articles/1011
http://news.webindia123.com/news/articles/India/20121001/2074162.html
vasudevan31355
1st October 2012, 09:18 PM
டியர் ராகவேந்திரன் சார்,
சந்திரபாபு நம் 'சத்ரபதி' க்கு மாலை சூடி பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் புகைப்படம் சும்மா கலக்குகிறது சார். அபூர்வமான, இதுவரை காணமுடியாத, லட்சத்தில் ஒன்றான அரிய புகைப்படத்தை அளித்ததற்கு தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.
vasudevan31355
1st October 2012, 09:23 PM
கோபால் சார்,
திரியின் செப்டம்பர் மாத பதிவுகளை ஒன்று விடாமல் பார்த்து அனைத்துப் பதிவுகளையும் ரசித்துப் பாராட்டியமைக்கு நன்றிகள். தங்கள் 'வியட்நாம் வீடு' பதிவு வித்தியாசமாய் உணர வைக்கிறது. தொடருங்கள். பாராட்டுக்கள்.
vasudevan31355
1st October 2012, 09:31 PM
டியர் பார்த்தசாரதி சார்,
நடிகர் திலகத்தைப் பற்றிய தங்கள் பிறந்த நாள் பதிவு அருமை. நடிகர் திலகத்தின் மேல் தங்களுக்குள்ள ஈடுபாடு உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. நன்றி!
vasudevan31355
2nd October 2012, 05:38 AM
இன்று காந்தி ஜெயந்தி
http://1.bp.blogspot.com/_pCG_c3Rq788/TQPM62TzKsI/AAAAAAAAJbs/ojv4VN23F2I/s1600/Mahatma+Gandhi+acknowledging+the+greetings+of+supp orters+-+1940.jpg
RAGHAVENDRA
2nd October 2012, 08:39 AM
நடிகர் திலகத்தின் 84வது பிறந்த நாள் நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகள் விரைவில் வர உள்ளன. ஆனால் அதற்கு முன்னர் நமக்கெல்லாம் பிறந்த நாள் பரிசாக நமது அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்கள் தம் குடும்பத்திற்கும் சிவாஜி ரசிகர்களுக்கும் உள்ள அன்பை, பாசப் பிணைப்பை நேற்றைய ஜெயா டி.வி. தேன்கிண்ணத்தில் கூறியது நெஞ்சை நெகிழ வைக்கிறது. மிகுந்த நன்றி ராமு சார். நம் அனைத்து ரசிகர்களின் பார்வைக்கு அந்தப் பகுதி மட்டும்.
http://youtu.be/wP1QlZ-Z0no
vasudevan31355
2nd October 2012, 03:44 PM
தினத்தந்தி (2-10-2012)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/c.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/b.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
vasudevan31355
2nd October 2012, 04:25 PM
தினத்தந்தி (2-10-2012)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/d.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6_0009.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6_0010.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/f.jpg
vasudevan31355
2nd October 2012, 04:47 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/f-2.jpg
vasudevan31355
2nd October 2012, 05:00 PM
நடிகர் திலகம் சிவாஜிக்கு மரியாதை!
http://rightnews.in/176/sivaji-ganesan-85th-birthday/
http://rightnews.in/wp-content/uploads/2012/10/sivajigane-620x421.jpg
vasudevan31355
2nd October 2012, 05:05 PM
Sivaji Ganesan: Greatest Thespian of Post-Independence Tamil Cinema
http://dbsjeyaraj.com/dbsj/archives/11280
vasudevan31355
2nd October 2012, 05:09 PM
Actor Sivaji Ganesan’s 85th birthday
http://www.jaffnafocus.com/?p=786
vasudevan31355
2nd October 2012, 05:14 PM
பாலிமர் செய்திகள்
Sivaji Ganesan’s 84 Birthday Special
http://www.dailymotion.com/video/xu0dj9_sivaji-new_lifestyle
vasudevan31355
2nd October 2012, 05:41 PM
Rosaiah recalls Sivaji Ganesan's brilliant portrayals
http://news.webindia123.com/news/Articles/India/20121002/2074635.html
vasudevan31355
2nd October 2012, 05:47 PM
Sivaji Ganesan's 84th Birthday Celebration
http://www.kalakkalcinema.com/images/tamil/event/Sivaji%20Ganesan%2084th%20Birthday%20Celebration/Sivaji011012_1.jpg
http://www.kollytalk.com/wp-content/uploads/2012/10/sivaji-ganesan-84th-birthday-celebration-7.jpg
http://www.kalakkalcinema.com/images/tamil/event/Sivaji%20Ganesan%2084th%20Birthday%20Celebration/Sivaji011012_16.jpg
http://www.kalakkalcinema.com/images/tamil/event/Sivaji%20Ganesan%2084th%20Birthday%20Celebration/Sivaji011012_11.jpg
vasudevan31355
2nd October 2012, 05:53 PM
Sivaji Ganesan's 84th Birthday Celebration
அனைத்து புகைப்படங்களுக்கான லிங்க்
http://www.kalakkalcinema.com/tamil_events_list.php?id=4226
vasudevan31355
2nd October 2012, 05:57 PM
Sivaji Ganesan 84th Birthday Celebration Photos
http://www.kollytalk.com/stills/sivaji-ganesans-84th-birthday-celebration-stills/
vasudevan31355
2nd October 2012, 06:11 PM
"வீர சிவாஜி வெற்றி வேந்தன் சிவாஜி"
கலைத்தாயின் தலைமகனுக்கு ஒரு அன்பு ரசிகரின் காணிக்கை.
இதய தெய்வத்தின் புகழ் பாடும் பாடல். இந்த அற்புத வீடியோவைப் பார்க்கையில் மெய் சிலிர்க்கறது.
http://www.youtube.com/watch?v=LsLwJQc_TPo&feature=player_detailpage
vasudevan31355
2nd October 2012, 08:22 PM
பெருந்தலைவர் திரு காமராஜர் நினைவு தினம்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/KKamaraj-WNCOMadvancedsearchFLV_000281114-1.jpg?t=1349196132
சோகமே வடிவாக பெருந்தலைவரின் பூத உடல் அருகே நடிகர் திலகம்.
http://2.bp.blogspot.com/-n-BKud2xS4A/TkD8JFcrptI/AAAAAAAAAQQ/TWgb_SBrluM/s1600/kamaraj-sivaji-nedumaaran.jpg
பெருந்தலைவரை போற்றி வணங்கும் பெருங்குணம் படைத்தவர்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/k.jpg
The king maker k.kamaraj video
http://www.youtube.com/watch?v=KNwyLJ40gbQ&feature=player_detailpage
vasudevan31355
2nd October 2012, 09:38 PM
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் பிறந்த நாள் (2 October 1904)
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களுடன் நடிகர் திலகம், நடிகையர் திலகம், ஜெமினி கணேஷ் ஆகியோர்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/savitr-lal-jpg1207620146.jpg
RAGHAVENDRA
3rd October 2012, 07:21 AM
டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய உழைப்பினை எவ்வாறு பாராட்டுவது என்று திகைத்து நிற்கிறேன். உடனுக்குடன் பல்வேறு விதமான செய்தி மற்றும் நிகழ்வுகளின் நிழற்படங்களை அளித்து பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாதோர் அந்த வருத்தத்தினை உணரா வண்ணம் மிகவும் அருமையாக அளித்துள்ளீர்கள். தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியாகட்டும், ரசிகர்களின் மரியாதை நிகழ்ச்சியாகட்டும் அனைத்தையும் ஒரு சேர அளித்து தங்கள் பங்களிப்பினை செவ்வனே செய்துள்ளீர்கள்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
vasudevan31355
3rd October 2012, 12:09 PM
23.9.12 அன்று சென்னை பேபி ஆல்பர்ட் திரையரங்கில் காலை 11.30 காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பேனர்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/th_thiru.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-1.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-1.jpg
அரங்கினுள் எடுக்கப்பட்ட நிழற்படங்கள்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5.jpg
டிஜிட்டலில் ஜொலிக்கும் நம் சிவபெருமானார்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-3.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-3.jpg
vasudevan31355
3rd October 2012, 05:58 PM
செப்டம்பர் 30 'தினமலர்' வாரமலரில் நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் அவர்கள் அளித்த அட்டகாசமான, மறக்க முடியாத தலைவர் புகழ் பாடும் கட்டுரை.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/d1.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/d5.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
vasudevan31355
3rd October 2012, 06:44 PM
மேலே பதிவு செய்யப்பட்டுள்ள தினமலர் கட்டுரை தெளிவாக நம் பார்வைக்கு.
பாசமும், நேசமும் நிறைந்த குடும்பத் தலைவர் சிவாஜி!
சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் அவர்கள்
http://kumarsrinivas004.files.wordpress.com/2011/11/mr-gt-still.jpg
http://img.dinamalar.com/data/uploads/E_1348730919.jpeg
மூன்றாம் பிறை, கிழக்கு வாசல், இதயம், பார்த்திபன் கனவு, எம் மகன் போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்தவரும், மணிரத்தினம், கதிர், செய்யாறு ரவி, கரு.பழனியப்பா, திருமுருகன், கண்ணன், பத்ரி வெங்கட் போன்ற பல இயக்குனர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனை, தமிழில் அறிமுகப்படுத்தியவரும், "ஆனந்தம், இதயம்' போன்ற பல, மெகா, "டிவி ' தொடர்களையும் தயாரித்தவருமான பிரபல திரைப்படத் தயாரிப்பாளர், சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி, சுவாரசியமான, பசுமையான விஷயங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
பிரபு, ராம்குமார் போல, நானும் சிவாஜி கணேசனை ,"அப்பா' என்றே அழைப்பேன். அவ்வளவு நெருக்கமான பழக்கம். நடிப்பைத் தவிர, அவர் அறிந்த இரு விஷயங்கள், பாசமும், நேசமும் தான்!
எங்கள் குடும்பத்திற்கும், சிவாஜி குடும்பத்திற்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி, டி.ஏ.மதுரத்தின் இளைய சகோதரி தான், என் அம்மா, டி.ஏ.பட்டம்மாள். இளம் நாடக நடிகராக இருக்கும் போதிலிருந்தே, சிவாஜிக்கு என் அம்மாவிடம் மிகுந்த பாசம். "பட்டு' என்று, அம்மாவை பாசமாக, சகோதரர் என்ற உரிமையோடு அழைப்பார்.
என் தந்தை, டி.கோவிந்தராஜும், வீனஸ் கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து, வீனஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, ஸ்ரீதரின் கதை, வசனத்தில், "அமர தீபம்' (சிவாஜி, பத்மினி) என்ற படத்தை தயாரித்தனர். அது, மிகப்பெரிய வெற்றிப் படமானது. தொடர்ந்து என் தந்தை தயாரித்த, "உத்தம புத்திரன்' சிவாஜி, இரு வேடங்களில் நடித்த முதல் படம். அப்படமும்,பெரிய வெற்றியைப் பெற்றது. நட்பு ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், சிவாஜிக்கும், எங்கள் குடும்பத்திற்கும் நெருக்கமான உறவு, மேலும் வலுப்பட்டது.
அரை நிக்கர் அணியும் பருவத்திலிருந்தே, வாரத்திற்கு ஒரு முறையாவது சிவாஜி வீட்டுக்கு சென்று, அன்று முழுவதும் தங்கி இருப்பேன். சிவாஜிக்கு, தோட்டமும், பண்ணை வீடும் ராமாவரத்தில் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் ராம்குமார், பிரபு, கிரி, முரளி, மற்றும் நெருங்கிய உறவினர்களின் மகன்கள், நான் எல்லாரும் ஒன்றாக இருப்போம்.
தோட்டத்தில் பெரிய பம்ப் செட்டு போட்டு, குற்றாலம் அருவி போல தண்ணீர் கொட்டும். அங்கு, ஆசை தீர எல்லாரும் குளிப்போம். சில சமயம், சிவாஜியும் எங்களுடன் சேர்ந்து, மகிழ்ச்சியாக குளிப்பார். தோட்டத்தில், அவர் குதிரை சவாரி செய்வார். டார்கெட் வைத்து, துப்பாக்கி சுடுவார். குறிபார்த்து டார்கெட்டை சுடுவதில், அவர், "எக்ஸ்பர்ட்!'
நான் சினிமாவிற்கு வர வேண்டாம் வேறு தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக, மேனேஜ்மென்ட் படிக்க வேண்டும் என்று, என் தந்தை, என்னை எம்.பி.ஏ., படிக்க, அமெரிக்கா அனுப்பி வைத்தார். ஆனால், எம்.பி.ஏ., படித்து முடித்து, இந்தியா திரும்பியதும், நான் சினிமாத் துறையிலேயே சேர்ந்தேன்.
எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக பணிபுரிந்தவரும், முன்னாள் தமிழக அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகள் செல்வி தான் என் மனைவி. என் தந்தை, வீனஸ் கோவிந்தராஜ் மற்றும் ஆர்.எம்.வீ., இருவரும் நல்ல நண்பர்கள். பெரியவர்கள் பார்த்து, எங்கள் திருமணத்தை நிச்சயம் செய்தனர்.
"நீங்க கண்டிப்பாக வர வேண்டும்...' என்று, சிவாஜியிடம் நான் கேட்டுக்கொண்டதின் பேரில், அவர் பல ஆண்டுகள் கழித்து, என் மாமனார் வீட்டுக்கு வந்தார். என் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், சிவாஜியும், எம்.ஜி.ஆரும் அருகருகே அமர்ந்து, நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசினர்.
"நான் மாப்பிள்ளை சைடு' என்று சிவாஜியும், "நான் பெண் வீட்டு சைடு' என்று எம்.ஜி.ஆரும் அறிவித்தது, மேலும், இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக்கியது. இருவரும் நிகழ்ச்சி முழுவதும் இருந்து, எங்களை கவுரவித்தனர்.
சிவாஜி அமெரிக்கா சென்றிருந்த போது, கலைவாணரின் மகளும், என் சகோதரியுமான கஸ்தூரி கிருஷ்ணன் வீட்டில் தங்கினார். அங்கு, தனக்கு கிடைத்த சுதந்திரத்தை ரொம்பவும், "என்ஜாய்' செய்தார். சினிமா தியேட்டரில், மக்களோடு மக்களாக க்யூ வரிசையில் நின்று, டிக்கட் வாங்கி உள்ளே சென்றார். ஷாப்பிங் மாலில், "டிராலி'யில் பொருட்களை வைத்து தள்ளிக் கொண்டு வந்தார். இது பற்றி, சிவாஜி என்னிடம் சொல்லும் போது, "இதெல்லாம் மெட்ராசிலே செய்ய முடியுமா? அங்கு பலருக்கு நம்மை தெரியாதுங்கிறதும் ஒரு சுகம் தானேடா' என்றார்.
எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில், "புதிய வானம்' என்ற படத்திற்காக, ஸ்கிரிப்டை ஓ.கே., செய்தோம். அதில், ஒரு பவர் புல்லான போலீஸ் அதிகாரி கேரக்டர், அதை சிவாஜி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதினோம். சிவாஜி ஒப்புக் கொள்வாரா? இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரும், நானும் அன்னை இல்லம் சென்று, அவரிடம் கதையை சொன்னோம்.
அவருக்கு அந்த கதாபாத்திரம் பிடித்துப் போனதால், ஓ.கே., சொன்னார். "நான் உங்களுக்குப் படம் பண்ணினால், எம்.ஜி.ஆர்., ஏதாவது நினைப்பாரா?' என்றார். "மாமா (ஆர்.எம்.வீ.,) எம்.ஜி.ஆரிடம் சொல்லியிருப்பார்...' என்றேன்.
சிவாஜி, சத்யராஜ், ரூபினி, கவுதமி படத்தில் முக்கிய ஸ்டார்கள். சிவாஜி படப்பிடிப்பிற்கு எப்போதும் சரியான நேரத்திற்கு வருவார் என்பது, திரைப்படத் துறையில் இருக்கும் எல்லாருக்கும் தெரியும். ஆனாலும், அதை நேரில் பார்க்கும் போது, தனி த்ரில் தான்! படத்தில் நடிக்க சிவாஜி போட்ட ஒரே கண்டிஷன், "காலை ஏழு மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பிக்க வேண்டும். இரண்டு மணிக்கு(மதியம்) என்னை விட்டுடணும். அவுட்டோரிலேன்னா, கொஞ்சம் லேட்டானாலும் பரவாயில்லை...'
வாஹினி ஸ்டூடியோவில் பெரிய செட் போட்டிருந்தோம். 7.00 மணிக்கு படப்பிடிப்பு என்பதால், அவசரமாக கிளம்பி, 7.00 மணிக்குள் அங்கு போய் சேர்ந்தேன். முழு காஸ்ட்யூம் அணிந்து, மேக்-அப் முடிந்து, 6.45 மணிக்கே அங்கு வந்து சேர்ந்து, படப்பிடிப்பு தளம் பூட்டி இருந்ததால், வெளியே ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டிருந்தார் சிவாஜி.
சிவாஜி நடிப்பதை, அருகே இருந்து பார்ப்பது, பெரிய பாக்கியம். அவரிடமிருந்து, ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம்.
நடிகர் திலகம் காங்கிரசிலிருந்து விலகி, சொந்தமாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்தார். தேர்தலின் போது, ஓட்டு சேகரிக்க தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தார். நிறைய அலைச்சலுக்குப் பின், தன் சொந்த ஊரான சூரக்கோட்டைக்கு வந்தார். அவரை சந்திக்க, அங்கு சென்றேன்.
"ஐயா மாடியில் இருங்காங்க...' என்றனர். மாடியில் ஒரு உதவியாளர் அவருக்கு கை, கால் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். அவரை போகச் சொல்லி விட்டு, நான் இதமாக அவருக்கு பிடித்து விட்டேன். "உள் கிராமங்களிலே ஜாக்கெட் கூட அணியாமல், புடவை மட்டும் உடுத்தி, பாவம் ரொம்ப கஷ்டப்படுறாங்கடா... எவ்வளவு ஏழ்மை, பார்த்தாலே கஷ்டமாக இருந்தது...' என்று சொல்லி, அவர்களுக்காக உண்மையாக வருந்தினார். அதை, என்னால் உணர முடிந்தது.
சிவாஜி, அப்போலோ மருத்துவமனையில் இறந்து விட்டார் என்ற செய்தி அறிந்து, அதிர்ச்சி அடைந்தேன். உடனே, ராம்குமாரை தொடர்பு கொண்டேன். "தியாகு... நீ இப்போ வீட்டுக்கு வராதே. எக்கச்சக்கமான கூட்டம். போலீஸ் பந்தோபஸ்து போட்டிருக்காங்க. நீ நேரே அப்போலோ போயிடு. சிவாஜி உடலை அங்கிருந்து வீட்டுக்கு எடுத்து வருகிற பொறுப்பை, நீ எடுத்துக்கோ. ஜாக்கிரதை...' என்றார் ராம்குமார்.
ஆம்புலன்ஸ் வண்டி வந்ததும், சிவாஜியை அதில் ஏற்றி, தி.நகர் போக் ரோட்டில் உள்ள, அன்னை இல்லத்திற்கு எடுத்து சென்றோம்.
திரை உலகில், அவர் செய்த சாதனைகள், பாசமிகு குடும்பத் தலைவரான அவர் வாழ்ந்த வாழ்க்கை, அவருடன் நெருங்கி பழகியது எல்லாம், என் மனத் திரையில் ஓடியது. அவருடன் இறுதியாக இருந்த சில நிமிடங்கள், என் வாழ்நாளில் மறக்க முடியாது.
vasudevan31355
3rd October 2012, 08:45 PM
Sivaji Ganesan 84th Birthday Celebration Pictures
http://tamilmaxs.com/events/sivaji-ganesans-84th-birthday-celebration-gallery-2012/?pid=111250
http://pluzmedia.in/galleries/kollywood/66240/sivaji-ganesan-84th-birthday-celebration-pictures.htm
http://tamil.way2movies.com/pics_tamil.html?id=166463&cat=5&tit=photo%20gallery&page=5
http://www.accesskollywood.com/photo-galleries/sivaji-ganesan-84th-birthday-celebration/01-sivaji-ganesan-84th-birthday-celebration-prabhu-k-rosaiah.html
http://www.chennaipatrika.com/post/2012/10/03/Sivaji-Ganesan-84th-Birthday-Celebration-Gallery.aspx
http://apnaindia.com/entertainment/event/tamil/sivaji-ganesan-84th-birthday-celebration-6041.html
http://tamil.way2movies.com/pics_tamil/Sivaji-Ganesan-84th-Birthday-Celebration-10335-166463.html
http://www.indiaglitz.com/channels/tamil/events/36943.html
vasudevan31355
3rd October 2012, 08:51 PM
Nadigar Thilagam Sivaji Ganesan's 84th Birthday Celebration (video)
'இளைய திலகம்' பிரபுவின் அற்புதமான ஆங்கிலப் பேச்சு.
http://www.youtube.com/watch?v=6Ao5gamDC3U&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
vasudevan31355
3rd October 2012, 09:52 PM
பாராட்டுக்கள் ராகவேந்திரன் சார்!
நடிகர் திலகம் பிறந்தநாள் நிகழ்ச்சியின் விருதுகள் வழங்கும் விழாவில் தொகுத்தளிக்கப்பட்ட 'வீடியோ கிளிப்பிங்ஸ்' பல பேருடைய பாராட்டுதல்களை பெற்று கைத்தட்டல்களை அள்ளியது என்றால் அதற்கு நம்முடைய 'ரசிக வேந்தர்' அன்பு ராகவேந்திரன் சாருடைய பங்கும், உழைப்பும் மிக மிக முக்கியமானது. விழாவிற்கு சென்றிருந்த அன்பு கடலூர் நண்பர்கள் விழாவில் விருது பெற்றவர்கள் நடிகர் திலகத்துடன் சம்பந்தப் பட்ட 'வீடியோ கிளிப்பிங்ஸ்' மிக மிக அருமையாக இருந்தது என்று என்னிடம் கைபேசியின் வழியே தெரிவித்தனர். கடந்த பத்து தினங்களுக்கு மேல் ராகவேந்திரன் சார் இந்த 'வீடியோ கிளிப்பிங்ஸ்' ஒர்க்குக்காக இரவுபகல் பாராமல் உழைத்திருக்கிறார். சத்தமே செய்யாமல் நடிகர் திலகத்திற்காக அவர் அரும்பணி ஆற்றி வருவது நாமெல்லாம் பெருமைப்படவேண்டிய விஷயம். நமது திரியின் சார்பாக அவருடைய உண்மையான உழைப்பிற்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வோம். நன்றிகள் ராகவேந்திரன் சார்!
vasudevan31355
4th October 2012, 11:07 AM
சிவந்த மண்ணின் 'சிங்காரச் சக்கரவர்த்தி'.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/s.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/s2.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sivanthaman.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
KCSHEKAR
4th October 2012, 02:06 PM
Dear Vasudevan Sir,
Nadigarthilagam's birthday function coverages are very good. Well done.
Thanks
Richardsof
4th October 2012, 02:56 PM
2000 பதிவுகள் ....http://i50.tinypic.com/6hrcde.jpg
http://i49.tinypic.com/20ii62v.gif
மிகவும் குறுகிய காலத்தில் நடிகர்திலகத்தின் நிழற்படங்கள் , வீடியோ , ஆவணங்கள் ,கட்டுரைகள் , மற்றும் பல் வேறு தலைப்புகளில் நடிகர்திலகத்தின் ஆய்வுகள் ,அபூர்வ தகவல்கள் என்று தொடர்ந்து பதிவிட்டு இன்று 2000 பதிவுகள் ....நிறைவு பெரும் புகழுக்கு சொந்தக்காரர் திரு வாசுதேவன் சார்
உங்களுக்கு என்னுடைய நல வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்களது சேவை .
நட்புடன்
வினோத்
parthasarathy
4th October 2012, 03:04 PM
Dear Mr. Raghavendar/Mr. Vasudevan,
Excellent and on time coverage of NT's birthday function. Thank you very much.
Regards,
R. Parthasarathy
parthasarathy
4th October 2012, 03:06 PM
Dear Mr. Vasudevan,
Hearty congratulation for 2000 postings! Wish you for 2 trillion postings!
Regards,
R. Parthasarathy
Richardsof
4th October 2012, 03:12 PM
VASUDEVAN SIR
EVERGREEN YOUR FAVOURITE NT STILL
http://i50.tinypic.com/xlcab5.png
RAGHAVENDRA
4th October 2012, 05:06 PM
டியர் வினோத் சார்,
தாங்கள் கூறியது போல் திரு வாசுதேவன் அவர்களுடைய பங்களிப்பு பெரிதும் பாராட்டத் தக்கது. வெறும் சம்பிரதாயத்திற்காக ஓரிரு வார்த்தைகளில் அரை மனதோடு பாராட்டுக் கூறுவோர் இருக்கையில், தாங்கள் எம்.ஜி.ஆர். ரசிகராயிருந்தாலும் உள்ளன்போடு வாசுதேவனுடைய 2000 வது பதிவினை முன்கூட்டியே பாராட்டி அவருக்குப் பிடித்த ஞான ஒளி நிழற்படத்தையும் பதிவிட்டு தங்களுடைய நற்பண்பைக் காட்டியுள்ளீர்கள். தங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
ராகவேந்திரன்
RAGHAVENDRA
4th October 2012, 05:08 PM
நாளை 05.10.2012 வெள்ளிக் கிழமை இரவு 10 மணி சென்னை சூரியன் பண்பலை வானொலியில் திரு ராம்குமார் கணேசன், இளைய திலகம் பிரபு கணேசன் அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
RAGHAVENDRA
4th October 2012, 05:10 PM
அக்டோபர் 7, ஞாயிறு அன்று நாகர்கோயிலில் நடிகர் திலகம் பிறந்த நாள் விழா விமர்சையாகக் கொண்டாடப் பட உள்ளது. விழாவின் ஒரு பகுதியாக திண்டுக்கல் லியோனி அவர்கள் பங்கேற்கும் பட்டி மன்றம் நிகழ்ச்சி இடம் பெறுகிறது. விவரம் விரைவில்.
RAGHAVENDRA
4th October 2012, 10:02 PM
அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்ற இலக்கிய அணி மற்றும் சென்னை சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் சிறப்பு ரத்த தான முகாம் அக்டோபர் 1, 2012 திங்கள் காலை சென்னை தியாகராய நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலை முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் அன்புச் சகோதரர் ராம்குமார் கணேசன், சென்னை மாநகராட்சி உறுப்பினர் பத்மினி சுந்தரம், பிரார்த்தனா திரையரங்கு உரிமையாளர் ரங்கநாத், அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் கே.வி.பி. பூமிநாதன், நடிகர் திலகத்தைப் பற்றி முனைவர் பட்டத்திற்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் மருது மோகன், துஷ்யந்த் ராம்குமார் பங்கேற்றனர். முன்னதாக சென்னை மாகராட்சி மேயர் சைதை துரைசாமி அவர்கள் வருகை புரிந்தார். விழாவினை நாஞ்சில் இன்பா அவர்கள் தொகுத்து வழங்க ரமேஷ் அவர்கள் நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து ரத்த தான முகாமை ராம்குமார் கணேசன் அவர்கள் துவக்கி வைத்தார். சிவாஜி ரசிகர்களும் பொது மக்களும் ஆர்வத்துடன் ரத்த தானத்தில் பங்கு பெற்றனர். விழாவின் ஒரு பகுதியாக சோனியா வாய்ஸ் பருவ இதழின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிறப்பிதழை ராம்குமார் அவர்கள் வெளியிட்டார். விழாவின் சில நிழற்படங்கள் நம் பார்வைக்கு.
சென்னை சமூக விழிப்புணர்வு இயக்கத் தலைவர் ரமேஷ் அவர்கள்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/BloodCamp02_zpsb5c36654.jpg
திரு ராம்குமார் கணேசன் அவர்கள்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/BloodCamp06_zpsad724a15.jpg
பிரார்த்தனா திரையரங்க உரிமையாளர் ரங்கநாத் அவர்கள்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/BloodCamp08_zps08540fe3.jpg
சென்னை மாகராட்சி உறுப்பினர் பத்மினி சுந்தரம் அவர்கள்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/BloodCamp11_zps8b2dc360.jpg
திரு மருது மோகன் அவர்கள்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/BloodCamp05_zps80ffe48f.jpg
ரத்த தானம் செய்யும் சிவாஜி ரசிகர் திரு முத்துக் குமார் அவர்களை ராம்குமார் அவர்கள் பாராட்டுகிறார்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/BloodCamp09_zpsdc4c9c9d.jpg
மற்றொரு ரசிகர் ரத்த தானம் செய்கிறார்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/BloodCamp10_zpsd4b7d34c.jpg
RAGHAVENDRA
4th October 2012, 10:05 PM
ரத்த தான முகாமைப் பற்றிய தகவல் பேனர்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/BloodCamp01_zpsd60289e5.jpg
விழாவில் சோனியா வாய்ஸ் பருவ இதழின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் சிறப்பிதழை ராம்குமார் அவர்கள் வெளியிட்டார்.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/soniavoicemagazine2_zpsf05a28df.jpg
மேலே உள்ள படத்தில் ராம்குமார் அவர்களுடன் சோனியா வாய்ஸ் இதழைக் கையில் பிடித்திருப்பவர் ஆசிரியர் நவாஸ் அவர்கள். அருகில் அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவர் கே.வி.பி. பூமிநாதன்.
RAGHAVENDRA
4th October 2012, 10:11 PM
அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் திரு கே.வி.பி. பூமிநாதன் அவர்கள் அன்னை இல்லத்திலுள்ள நடிகர் திலகத்தின் படத்திற்கு மரியாதை செலுத்தும் காட்சி
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20BIRTHDAY%202012/kvpbatAI_zps6a4d7e46.jpg
நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி சென்னை நகரில் பல்வேறு வகையான போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தன. அவற்றில் சில நம் பார்வைக்கு.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20BIRTHDAY%202012/GROUPSOFKARNAN02_zps3d7a1aae.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20BIRTHDAY%202012/GROUPSOFKARNAN01_zps308e60ab.jpg
மதுரை நகரில் முருக விலாஸ் திரு நாகராஜன் அவர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20BIRTHDAY%202012/murugavilasnagaraj4-Sheet-Sivaji-fw_zps029bb88c.jpg
கோவை நகர ரசிகர் மன்றங்களின் போஸ்டர்கள்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20BIRTHDAY%202012/PNPALAYAMRAVI_zpsb9fc1397.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20BIRTHDAY%202012/PNPALAYAMRAVI2_zpsc0b1db9e.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20BIRTHDAY%202012/PNPALAYAMRAVI3_zps7eecabc1.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20BIRTHDAY%202012/PNPALAYAMRAVI4_zps3dbde4bc.jpg
RAGHAVENDRA
5th October 2012, 06:24 AM
இன்றைய ஹிந்து நாளிதழில் சிவாஜி பிரபு அறக்கட்டளை விழாவைப் பற்றி வெளிவந்துள்ள கட்டுரை
A celebration made memorable
MALATHI RANGARAJAN
http://www.thehindu.com/multimedia/dynamic/01227/05FR-SIVAJI_GANESA_1227488g.jpg
Can a vote of thanks be the most gripping and poignant part of a birth anniversary celebration? Probably, only actor Prabhu could have pulled it off! The occasion was the 84 birth anniversary of Sivaji Ganesan, on October 1, at The Music Academy, Chennai. The function was marked by three succinct speeches including Ramkumar’s welcome address, and that of the chief guest, Governor of Tamil Nadu Dr. K. Rosaiah’s. “I may have not been a close friend of the great actor, but like all of you I love him,” the Governor said. “I’ve not gone to the cinemas for 40 years now. But I went to watch ‘Veerapandiya Katta Bomman’ four times,” he went on amidst applause.
The short AV highlighting the versatility of the actor, his body language, the various gaits that he had acted out to suit the roles he played, and his expressive eyes was a treat. Ganesan could make even his eyebrows (the ‘Samrat Asokan’ sequence from ‘Annaiyin Aanai’ exemplified it) convey emotions, and it was all there for the audience to watch, drink in and go into raptures. An audio byte from a recorded interview with the actor had been thoughtfully added. Relevantly, the scenes revealed the Sivaji Ganesan-awardees connect well. Whoever put it together deserves special mention.
“It was Lata Mangeshkar who gave us the idea of instituting an award in appa’s name,” said son Ramkumar. The recipients of the Dr. Sivaji Ganesan Memorial Award were director K. Balachander, thavil vidwan Valayapatti A. R. Subramaniam, actors K.V. Srinivasan and Kanchana and media person Dr. T.S. Narayanaswami. Sivaji Ganesan had touched the lives of each of the recipients in some way.
So when K.V. Srinivasan turned emotional as Prabhu dwelt on the association between the nonagenarian actor and the thespian, which dated back to their theatre days, the sentiment and the sensibility were only too evident. Rotary Club of Madras Boys Town Society was presented a sum of Rs.54000 and Chevalier Sivaji Ganesan Educational Trust, Rs.50000. High on goodwill it was an evening to savour.
The best part of Prabhu’s crisp conclusion was the warmth with which he spoke of each of the awardees. After an intro in English he turned towards the Governor saying, “Sorry Sir, I have to switch over to Tamil.” The from-the-heart talk was so engrossing that you quite forgot that the speaker’s brief must have been only a formal signing-off note! And he had the fans thronging the balcony eating out of his hand when he said that they are always part of the Sivaji family.
“Without you we are nobody. You were all close to appa’s heart,” he told them. The actor sure knew the pulse of the audience. Also, he didn’t forget to record the contribution of every person instrumental for the success of the evening.
The well-planned, neatly executed event organised by Sivaji Prabhu Charities Trust wasn’t merely purposeful -- the cordiality the evening radiated left an indelible impression on the attendees as a whole.
LINK THE PAGE IN THE HINDU (http://www.thehindu.com/arts/cinema/a-celebration-made-memorable/article3964526.ece)
vasudevan31355
5th October 2012, 08:36 AM
டியர் வினோத் சார்,
தங்களின் அன்பு உள்ளத்திற்கு என்றும் என் இதயங்கனிந்த நன்றி. மக்கள் திலகம் திரியில் தங்களுடைய உழைப்பு சாதாரணமானதல்லவே!
vasudevan31355
5th October 2012, 08:38 AM
டியர் பார்த்தசாரதி சார்.
தங்களுடைய அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி! தங்களுடைய பாடல் ஆய்வுக் கட்டுரைக்காக காத்துக் கிடக்கிறேன்.
vasudevan31355
5th October 2012, 09:54 AM
அன்பு நெஞ்சங்களுக்கு,
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRlYHgzX9L3ud3oFaWBH3yP0LAnepkpa oQ_XIWlxyKORcW9eXLJJQ
முதலில் என் இருகரம் கூப்பிய நெஞ்சார்ந்த நன்றிகள். 2000 பதிவுகள் அடியேன் இடக் காரணமாய் இருந்த 'நான் வணங்கும் தெய்வம்' நடிகர் திலகத்திற்கும், மரியாதைக்குரிய மாடரேட்டர்களுக்கும், மற்றும் திரியில் என்பால் அன்பும், பாசமும், தோழமையும் கொண்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் இதயபூர்வமான நன்றிகளை ஆனந்தக் கண்ணீரோடு சமர்ப்பிக்கிறேன். நன்றி! நன்றி! நன்றி!
நடிகர் திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு
2000-ஆவது சிறப்புப் பதிவு.
நடிகர் திலகத்தின் "துணை" (1-10-1982).31-ம் ஆண்டுத் துவக்கம்
ஒரு முழு ஆய்வுக் கட்டுரை
அன்பே துணை! அறிவே துணை! உயிரே துணை! உறவே துணை!
பண்பட்ட ஒரு மாமனாரின் புண்பட்ட கதை.
துணை. இந்த சொல்லுக்குத்தான் எவ்வளவு சிறப்பு! எத்துணை மதிப்பு! எப்படி நீரின்றி உலகு அமையாதோ அதே போல் துணைகளின்றி வாழ்க்கை அமையாது. துணை.. ஒரு முறை இந்தச் சொல்லை வாயார உச்சரித்துப் பாருங்கள். நூறு யானைகளின் பலம் ஒன்று சேர்ந்து கிடைப்பது போல ஒரு உணர்வு வருவது நிஜம்தானே! நம் தனிமையை தவிடு பொடியாக்கும் இந்த துணை என்ற சொல் நம்மைச் சுற்றி நமக்காக நாலு பேர் துணை இருக்கிறார்கள் என்ற அச்சம் தவிர்க்கும் உணர்வை அற்புதமாக உருவாக்குகிறதே! மனித உறவுகள், விலங்கினங்கள் ஏன் தாவரங்கள் கூட துணைகளின் துணையோடு தானே வாழ்கின்றன! துணைகள் இல்லாவிட்டால் துன்பமாகி விடாதா வாழ்க்கை! துணையென்று ஒன்றிருக்கையில் துன்பம் துணிவின்றி ஓடி விடும் அன்றோ! கடலுக்கு அலை துணை... நிலவுக்கு வானம் துணை... கொடிக்கு கொழு கொம்பு துணை... மலருக்கு வாசம் துணை... மனிதனுக்கு உறவுகள் துணை... கதியற்றோருக்கு கடவுள் துணை... இப்படி துணை.. துணை... துணையென்று ஒன்றுக்கொன்று ஆதரவாய் துணை நின்று ஆனந்த களிப்போடு வாழ்வதுதானே வாழ்க்கை. துணையே இல்லாது போனால்? கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை இல்லையா?
அப்படிப்பட்ட இந்த அருமையான சொல்லை தலைப்பாக வைத்து, நடிகர் திலகதைத் துணையாகக் கொண்டு, இயக்குனர் துரை அவர்கள் இயக்கி தன் 'பசி'யைத் தீர்த்துக் கொண்டு, நமக்கும் அருமையான விருந்தளித்ததுதான் பிரகாஷ் பிக்சர்ஸாரின் இந்தத் 'துணை'.
சப்-ரிஜிஸ்தரர் தசரதராமன் (B.A)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/subregistharaarthasaratharaaman.jpg
தசரதராமன் (B.A) ஒரு இன்ட்ரெஸ்ட்டிங் கேரக்டர். நடுத்தர வயது. மனைவியை இழந்தவர். சப்-ரிஜிஸ்தரராக பணி புரிந்து கொண்டிருப்பவர். கல்யாண வயதில் ரகு என்று ஒரு மகன் அவருக்கு. வண்டலூரில் ஜாகை. பணி புரிவது வெஸ்ட்மாம்பலத்தில். கலகலப்பான பேர்வழி. "மனுஷனா பொறந்துட்டா சிரிச்சுகிட்டே இருக்கணும்... அழவே கூடாது"...என்ற கொள்கையைக் கொண்டவர். கடைப்பிடித்தும் வருபவர். இவர் இருக்கும் இடம் எப்போதும் 'கல கல'வென்றுதான் இருக்கும். அவரைச் சுற்றி ஒரு நட்பு வட்டாரம் விரிந்து கிடக்கும். வண்டலூரில் இருந்து மின்சார ரயிலில் தினம் வேலைக்குப் பயணம். ரயில் பயண நேரங்களில் ஜோக்குகளும், சிரிப்பும், கும்மாளமுமாக அனைவரையும் சந்தோஷப் படுத்தி, தானும் சந்தோஷமடையும் ஒரு ஜாலியான நல்ல பேர்வழி.
ரகு
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ragu.jpg
மகனின் மேல் மலையளவு பாசம். தான் கிழித்த கோட்டைத் தாண்டாத (ரகு) ராமன் தன் மகன் என்ற அசாத்திய நம்பிக்கை மகன் மேல்அவருக்கு. மகனுக்கு சமைத்துப் போடுவது முதல் துணிகள் அயர்ன் செய்து தருவது வரை அவரது வேலைதான். மகனுக்கும் அப்பா என்றால் கொள்ளைப் பிரியம். அன்பு நண்பன் கல்யாண புரோக்கர் V.K.R சரியான கம்பெனி. இப்படி ஜாலியாகப் போய்க் கொண்டிருக்கிறது அவரது வாழ்க்கை.
பையன் சரியான அசமஞ்சம். வேலைக்குப் போகும் நடுத்தர வர்க்கத்துப் பெண் ராதாவை அப்பாவுக்குத் தெரியாமல் பயந்து பயந்து காதலிக்கிறான். அவளோ இவனுக்கு நேர் எதிர். துணிச்சல்காரி. யாராய் இருந்தாலும் வெட்டு ஒண்ணு.. துண்டு ரெண்டு.. இதுதான் அவள் பாலிசி. நல்லவள் தான். ஆனால் பிடிவாதக்காரி. சுயகௌரவமும், தன்மானமும் ரொம்ப ஜாஸ்தி.
தன் மகன் ரகுவிற்குப் பெண் பார்க்கச் சொல்லி V.K.R யிடம் சொல்லி வைக்கிறார் தசரத ராமன். அதே சமயம் ரகு தான் ராதாவைக் காதலிப்பதை V.K.R யிடம் கூறி, அந்தப் பெண்ணையே தனக்கு முடித்து வைக்குமாறும் கூறுகிறான். தன் தந்தைக்கு தன் காதலைப் பற்றியும், காதலியைப் பற்றியும் சொல்லிவிடாமால் இருக்கச் சொல்லி V.K.R யிடம் கேட்டுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் ராதாவைப் பெண் பார்க்கத் தந்தையை அழைத்துச் செல்லுமாறும் கூறுகிறான். V.K.R ம் சம்மதிக்கிறார். நண்பனிடம் ரகுவின் காதலைப் பற்றி தெரியப்படுத்தாமலேயே அவரை பெண் பார்க்க அழைத்துசெல்கிறார்.
ராதா
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ratha.jpg
ஆபீஸ் முடிந்து வீடு திரும்பும் ராதாவிற்கு தன் காதலனின் அப்பாதான் தன்னைப் பெண் பார்க்க வருகிறார் என்று தெரியாது. தன் பெற்றோர்களிடம் அந்த சமயத்தில் திருமணம் 'என் இஷ்டப் படிதான் நடக்கும்' என்று ரகுவை மனதில் வைத்து மறுத்து எதிர்க்கிறாள் ராதா. ஆனால் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக ஏனோ தானோவென வந்து தசரத ராமன் முன்னால் வந்து நிற்கிறாள். அவர் முன் மரியாதையே இல்லாமல் நடந்து கொள்கிறாள். தன்னை அவருக்குப் பிடித்து விடக் கூடாது என்றுதான் அவள் வேண்டுமென்றே அப்படிச் செய்கிறாள். தசரத ராமன் மரியாதையற்ற அவளின் செய்கைகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் 'தப்பித்தோம்... பிழைத்தோம்' என்று நைசாக வெளியில் வந்து தனக்குப் பிடிக்காத அந்தப் பெண்ணைக் காட்டியதற்காக V.K.R யை ஒருவழி செய்து விடுகிறார். V.K.R மூலம் பெண் பார்க்க சென்ற போது நடந்த நிகழ்ச்சிகளை கேட்டறிந்து திருமணத்திற்கு இனியும் அப்பா சம்மதிக்க மாட்டார் என்று ஒரு முடிவெடுக்கிறான் ரகு.
ஒருநாள் தசரத ராமன் பணியில் இருக்கும் போது ஒரு அதிர்ச்சி செய்தி வருகிறது. மகன் ரகு டவுன் ரிஜிஸ்தர் ஆபீசில் தன் மகன் ராதாவுடன் திருமணம் செய்து கொள்ள தயாராக வந்து நிற்கிறான் என்பதுதான் அது. அதுவரை சிரிப்பும், சந்தோஷமுமாய் போய்க் கொண்டிருந்த தசரதனின் வாழ்க்கை அந்த வினாடி முதல் சிக்கலாகி, சுக்கல் சுக்கலாகிப் போகிறது. தன் கௌரவம் அதலபாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்று சட்டென உணர்ந்து திருமணம் நடக்கும் ரிஜிஸ்தர் ஆபீசிற்கு விரைகிறார். திருமணம் நடத்தி வைக்கும் ரிஜிஸ்தர் சாட்சி கையெழுத்து கேட்கும் சமயத்தில் கரெக்டாக ஆஜராகி தன் இஷ்டப்படி சிம்பிளாக தன் மகன் திருமணம் நடைபெறுவதாக எல்லோரிடமும் கூறி நம்பவைத்து, மகன் திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்திட்டு கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்கிறார். சரி! தசரத ராமனின் துன்பத்தை கொஞ்ச நேரம் மறப்போம்.
வித்யா
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/saritha.jpg
இன்னொரு நடுத்தர குடும்பத்து நாயகி வித்யாவின் கதை. தன் தந்தைக்கு இரண்டாந்தாரமான விதவையான சித்தி, ஒரு பெண்ணைக் காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போய் கைக்குழந்தையுடன் ஒருவேளை சோற்றுக்கே ததிகினத்தோம் போடும் சொந்த அண்ணன், டிகிரி முடித்துவிட்டு டிகிரி காப்பிக்குக் கூட வழியில்லாத ஊர் சுற்றும் பொறுப்பற்ற தம்பி, வயது வந்த ஸ்கூல் படிக்கும் தங்கை, போதாக் குறைக்கு ஐந்தாறு வயதில் கடைக்குட்டி சிறுவன் இத்தனை பேரையும் தான் ஒருத்தி வேலைக்குப் போய் சுமைதாங்கியாய் சுமக்கும் 'இவளும் ஒரு தொடர்கதை' தான். ஏதோ ஓடிக் கொண்டிருக்கும் குடும்பத்தில் நல்லவன் போல் நுழைகிறான் ஒரு நயவஞ்சகன். குடும்பத்தினர் அனைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி நடித்து வித்யாவை திருமணமும் செய்து கொண்டு பின் கம்பி நீட்டி விடுகிறான் அந்தக் கயவன். இதில் கொடுமை என்னவென்றால் அந்தத் திருமணத்தை ரிஜிஸ்தர் ஆபீசில் நடத்தி வைத்தவரே நம் தசரத ராமன் தான். ரயில் பயணங்களின் போது வித்யாவும், தசரத ராமனும் ஏற்கனவே நண்பர்களாக அறிமுகம் ஆனவர்கள்தான். தசரதனுக்கு வித்யா மேலும், வித்யாவிற்கு தசரதன் மேலும் பரஸ்பரம் கள்ளமற்ற அன்பும், மதிப்பும், மரியாதையும் உண்டு. தான் உணர்ச்சி வசப்படும் நிலைகளின் போது தசரத ராமன் கால் கை வலிப்பு வந்து துடிப்பது வழக்கம். அப்படிப்பட்ட சில தருணங்களில் வித்யா தான் அவரை காப்பாற்றி அரவணைத்திருக்கிறாள். வித்யாவின் வாழ்க்கை சூன்யமாகிப் போனதற்கு தானும் ஒரு காரணம் என்று கூனிக் குறுகிப் போகிறார் தசரத ராமன். சரியாக விசாரிக்காமல் வித்யாவிற்கு ஒரு கயவனை கல்யாணம் செய்து வைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வு அவருக்கு. தம்பிக்கு வேலை கிடைத்தவுடன் வித்யாவின் குடும்பம் அவளை நிராதராவாய் தவிக்க விட்டுப் போன பின் அவள் மீது இன்னும் இரக்கம் அவருக்கு. அவர் ஒருவர் தான் அவளுக்கு ஆறுதல்.
சரி. குடும்பத்தில் தசரத ராமனின் நிலை என்ன? சமுதாயத்திற்கும், சுய கௌரவத்திற்கும் பயந்து வேண்டா வெறுப்பாக மகனையும் மருமகளையும் ஏற்றுக் கொள்கிறார். மகனுக்குத் தெரியாமல் மருமகளால் அலட்சியப் படுத்தப் பட்டு அவமானப்படுத்தப்படுகிறார். சாப்பாட்டை கூட சரியாகப் போடாமல் சங்கடப் படுத்துகிறாள் சண்டிராணி மருமகள். வாழ்க்கையில் பிடிப்பை இழந்து ஏதோ கடமைக்கு வந்தோம் போனோம் என ஜடம் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார் தசரத ராமன். கால் கை வலிப்பு வந்து துடி துடிக்கும் மாமனாரை காப்பாற்றும் வித்யாவை மாமனாரோடு தொடர்பு படுத்திப் பேசி விஷத்தைப் (பா)பீய்ச்சுகிறாள் மருமகள் ராதா. வெளியே சொல்லாமல் மென்று விழுங்குகிறார் தசரதர். மகனிடம் கூட எதையும் சொல்வதில்லை அவன் கஷ்டப்பட்டு விடக் கூடாதே என்று. மருமகளின் அராஜகம் எல்லை மீற ஆரம்பிக்கிறது. மாமனாரை வீட்டை விட்டு வெளியேறும்படி அவரிடம் கடிதமே கொடுத்து விடுகிறாள். எப்போதுமே சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றென்னும் தசரத ராமன் மட்டும் என்ன விதிவிலக்கா விதியின் கைகளில் சிக்கிக் கொள்ளாதிருப்பதற்கு? அவரும் ஆசாபாசங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் கட்டுப்பட்ட ஒரு சராசரி மனிதன்தானே! மனைவியும் இல்லை. மகனுக்கு எதுவும் தெரியாது. மருமகள் மனம் குலையச் செய்கிறாள். வீட்டை விட்டே வெளியேற்ற முடிவு செய்த பின் இனி இந்த வாழ்வு தேவையா? வீட்டை விட்டு வெளியேறுகிறார். அனைவருக்கும் ஆறுதல் கூறுபவர் இன்று ஆதரவின்றி, துணையின்றி பட்ட மரமாய் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத அனாதையாய் நிற்கிறார். இதற்குள் மகன் ரகுவிற்கு வித்யா மூலம் எல்லா உண்மைகளும் தெரிய வர கொதித்துப் போகிறான் அவன். அப்பாவைக் கொடுமைப் படுத்திய தன் மனைவியை மொத்தமாகச் சேர்த்து பந்தாடுகிறான். அப்பாவின் நிலைமையை புரிந்து கொள்ளாமால் போய்விட்டோமே என்று அப்பாவைத் தேடுகிறான். அப்பா எங்கே?!
தற்கொலை முடிவெடுத்து தண்டவாளங்களை நோக்கிச் செல்கிறார் தசரதன். அங்கேயும் தேவதை போல வந்து அவர் உயிரைக் காப்பாற்றி விடுகிறாள் வித்யா. பூவாய் இருந்தவள் புயலாய் ஒரு திடுக்' முடிவெடுக்கிறாள். நேராக தசரத ராமனை ரிஜிஸ்தர் ஆபிசிற்கு அழைத்துச் சென்று அவருக்குத் துணையாய், அவரைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறாள். ஆதரவற்ற நிலையில் தசரத ராமனுக்கு தாரமாகி அவர் வாழ்க்கையை மீண்டும் தரமாக்க முனைகிறாள். அதில் கொஞ்சமும் சுயநலமில்லை. அவள் எண்ணம் முழுதும் தசரத ராமனின் நல்வாழ்வைப் பற்றிதான். அனைத்தையும் பேசாமல் கவனித்தபடியே மெளனமாக நிற்கிறார் தசரதன். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியா?!!...
அனைவரும் விஷயமறிந்து அங்கே வந்து விடுகின்றனர். மகனும் அங்கே வந்து விடுகிறான். மருமகளும் மனம் திருந்தி வருகிறாள். வித்யாவின் முடிவை முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறான் ரகு. தன் அப்பாவிற்கு ஒரு நல்ல துணை வித்யா என்று ஆனந்தப்படுகிறான். தன்னுடைய திருமணத்திற்கு தன் தந்தையின் சாட்சிக் கையெழுத்து. தன் தந்தைக்கு நடக்கப் போகும் திருமணத்திற்கு தனயனான தன்னுடைய சாட்சிக் கையெழுத்து.
மகளாக ஏற்றுக் கொண்ட வித்யாவுடன் தசரத ராமர்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/MP2_Sep28_132800_0mpg_012504394.jpg
ஆனால் தசரதன்?... இப்போதுதான் வாய் திறக்கிறார். ஈடு இணையில்லா அன்பை தன் மீது பொழியும் வித்யாவின் முடிவை வித்யாவின் துணையை ஏற்றுக் கொள்வதாகக் கூறுகிறார். அனைவருக்கும் அதிர்ச்சி ரகுவைத் தவிர. ஆனால் தசரதன் தங்கமல்லவா! அதனால் தான் வித்யாவைத் துணையாக ஏற்றுக் கொள்கிறார்... வாழ்க்கைத் துணைவியாக அல்ல... வாழ்நாள் முழுதும் மகளாக... துணையாக.
அன்புடன்,
வாசுதேவன்.
தொடர்கிறது...
vasudevan31355
5th October 2012, 09:57 AM
நடிகர் திலகத்தின் நயமான நடிப்பு முத்திரைகள்.
கண்ணியமான 'தசரத ராம'ராக இதய தெய்வம்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/kanniyathasarathar.jpg
தசரத ராமனாக நம் தவப்புதல்வர். நடிகர் திலகத்தின் நடிப்பை சற்று மிகை நடிப்பு என்று கூறுபவர்களின் மென்னியைப் பிடித்து நொறுக்கும் நடிப்பு. ஆர்ப்பாட்டமான நடிப்புக்கு ஈடாக அமைதியான நடிப்பையும் அள்ளி வழங்க முடியும் என்று ஏற்கனவே பல படங்களில் நிரூபித்த நிகரற்ற திலகம். இரும்புத்திரை, அறிவாளி, பாவ மன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், மோட்டார் சுந்தரம் பிள்ளை, முதல் மரியாதை, தேவர் மகன் என்று அவரின் இயல்பு நடிப்புப் பட்டியல் காவியங்கள் மேலும் நீளும். அந்தப் பட்டியலில் வெகு ஈசியாக நுழைவது 'தசரத ராமன்' ராஜ்ஜியம் நடத்தும் 'துணை'.
சப்-ரிஜிஸ்தரராக நடிகர் திலகம். கனஜோராக கச்சிதமாக சப்-ரிஜிஸ்தரர் பாத்திரத்தில் பொருந்திவிடுகிறார். (இவர் பாத்திரத்துக்குப் பொருந்துவதைவிட பாத்திரம்தான் இவருக்குள் பொருந்துகிறது) ஒயிட் பேன்ட், ஒயிட் ஷர்ட், கருப்பு கோட், ஒரு கையில் லஞ்ச் பாக்ஸ் கூடை, மறு கையில் மடக்கிப் பிடித்த குடை, சௌத்ரியை ஞாபகப்படுத்தும் நரைத்த கிருதா ஒப்பனை. கையெடுத்து கும்பிடத் தோன்றும் பாந்தமான தோற்றம். கேரக்டர் என்றால் அப்படி ஒரு கேரக்டர். சும்மா நச்'சென்று.
எலெக்ட்ரிக் ட்ரெயினில் கலக்கல் கலாட்டா
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/MP2_Sep28_132800_0mpg_000961070.jpg
எலெக்ட்ரிக் ட்ரெயினில் பயணிக்கும் போது சிறுசுகளிடம் சும்மா ஜோக் மழை பொழியும் கலகல கலாட்டா...
("சாந்தி தியேட்டரில் என்னம்மா படம் நடக்குது?
தெரியாது சார்...
ஆனந்த் தியேட்டர்ல என்னம்மா படம் நடக்குது?
தெரியாது சார்...
காஸினோவில என்னம்மா படம் நடக்குது?
தெரியாது சார்...
மூணு தியேட்டரிலும் 'தெரியாது'ன்ற படமா நடக்குது?!)
ரயிலில் பயணிக்கையில் எல்லோருக்கும் கடலை வாங்கிக் கொடுத்துவிட்டு தானும் கடலை சாப்பிடும் நேரத்தில் சில கடலைகளை எடுத்து கோட் பாக்கெட்டுக்குள் போட, சரிதா அதைக் கவனித்துவிட்டு காரணம் கேட்க, "கடலை சாப்பிட்டு முடிக்கிற நேரத்துல ஒரு சொத்தக் கடலை வந்துரும்... அதுக்கப்புறம் சும்மாக் கிடந்த வாய் என்னவோ மாதிரி ஆயிடும்...அதனாலதான் முன்ஜாக்கிரதையா நாலு கடலையை எடுத்து பாக்கெட்டுல போட்டுக்குவேன்" என்ற புத்திசாலித்தனமான எல்லோருக்கிருக்கும் முன்ஜாக்கிரத்தை உணர்வு.
மகன் மேல் பெருமிதம்... தன் சொல் தட்ட மாட்டான் என்ற அபார தன்னம்பிக்கை... ராதாவை பெண் பார்க்க V.K.R. தன்னை அழைத்துச் சென்றவுடன் ராதா அவமானப்படுத்துவதைப் வெளிக்காட்டிக் கொள்ளாமல் (ஜாலியாகப்!) பொறுத்துக் கொண்டு, கல்யாணத்திற்கு சம்மதிப்பது போலத் தலையாட்டிவிட்டு ராதாவிடம் கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு வெளியே வந்து V.K.R.ஐ விட்டு விளாசியதும், V.K.R., 'அப்புறம் ஏன்டா அந்தப் பொண்ணுகிட்ட காசு கொடுத்துட்டு வந்தே?" என்றவுடன் "நீ கொட்டிகிட்டயே டிபன்... அதுக்குதான்டா பரதேசி", என்று பட்டை கிளப்பும் பாங்கு...
மகன் தனக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ளப் போவதைக் கேட்டு பதைபதைத்து ஓடிவந்து தாங்க மாட்டாமல், "அப்பா வர்றதுக்குள்ள என்னப்பா அவசரம்?... பஸ் புடிச்சி வர வேண்டாமா?" என்று தன்மானத்திற்கு கேடு வந்து விடாத வகையில் சாட்சிக் கையெழுத்துப் போட்டு அதிர்ச்சியை மறைத்து சிரித்தபடி நிலைமையை சமாளிக்கும் விதம்...
தண்டவாளத்தில் கால்கை வலிப்புடன்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/valippilvathangumthasaratharaaman.jpg
தனக்குத் தெரியாமல் தன் மகன் தானே திருமணத்தை நடத்திக் கொள்ள முற்பட்டுவிட்டானே என அதிர்வுற்று துன்பம் தாங்க மாட்டாமல் கைகால்கள் துவள, வலிப்பு வந்து துடித்துத் துவளும் அவலம் (ஆஹா! இந்த ஒரு காட்சி போதும் மகனே!),
சரிதாவின் வாழ்க்கையை சக பயணிகள் கேலியும் கிண்டலுமாகப் பேசும்போது அதைப் பொறுமையைக் கேட்டு விட்டு, "எனக்குக் கோபம் வந்து நீங்கள் பார்த்ததில்லையே? என்று அமைதியாக முறைத்துவிட்டு சண்டமாருதமாய் அவர்களிடம் எகிறோ எகிறு எகிறு என்று எகிறும் கட்டம்... (கட்டம் போட வைக்கும் கட்டம்)
தன் சம்பந்தி அம்மாள் வீட்டுக்கு எதேச்சையாக வந்தவுடன் வரவேற்பை பலமாக அளித்து, மருமகள் மேல் உள்ள வருத்தங்களை வருடலாக மருமகளுக்குத் தெரியாமல், சம்பந்தியிடம் நயமாக, நாசூக்காக இருபொருள்பட குறைகளைக் கூறும் பாணி...
(சம்பந்தி அம்மாள் : ராதா முழுகாம இருக்காளா என்ன?
இவர் : முழுகலாமா வேண்டாமான்னு யோசனை பண்ணிகிட்டுதான் இருக்கா...)
மகனின் திருமணத்திற்குப் பின் 'தேமே' என்று பிடிப்பில்லாமல் விட்டேற்றியாக வீட்டுக்கு வருவதும், ரூமிற்கு அடைந்து கொள்வதுமாய் மனைவியை இழந்த கணவனின் பரிதாப நிலைமைகளை வெளிப்படுத்தும் வெளிப்பாடு...
widower problem பற்றி நடிகர் திலகம்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/widowerproblem.jpg
ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு டயர்டாக திரும்பியவுடன் மருமகள் கடுப்புடன் காபி தம்ளரை டொக்'கென்று மேசை மீது மேலும் கீழுமாக சிந்துமாறு வைத்து விட்டுச் செல்ல, அதை வெறித்துப் பார்த்தபடியே, "அம்பத்தஞ்சி நயே பைசே இந்த காப்பியோட விலை... பேசாம ஹோட்டல்லியே சாப்பிட்டுருக்கலாம்... கூட பத்து பைசா கொடுத்தா கூடப் பொறந்த சகோதரன் மாதிரி அன்போட கொடுத்திருப்பான் ஹோட்டல் சப்ளையர்" என்று தனக்குத் தானே விரக்தியுடன் புலம்பித் தீர்ப்பது...
தன்னிடம் முகம் கொடுத்து பேசாத மருமகள் ஒருகட்டத்தில் தன்னை தைரியமாக எதிர்கொண்டு விளாசித்தள்ளி வெளுத்துவிட, அதை அப்படியே சின்னக் குழந்தை போல கைகட்டிகொண்டு மூக்குக்கண்ணாடியைக் கீழே இறக்கியவாறு கண்கள் மேல்நோக்க மருமகளைப் பார்த்து எதுவும் பேசமுடியாமல் வாய்பொத்தி மௌனியாய் அமர்ந்து accept செய்து கொள்ளும் அழகு...
வீட்டு வாசலில் இரு சிறுவர்கள் விளையாடும்போது அடித்துக் கொள்ள, இவர் என்ன நடந்தது என விசாரிக்க, அதில் ஒரு பையன், "பாருங்க அங்கிள்! இந்த ரகு என் தலையிலே மண்ண அள்ளிப் போட்டுட்டான் "என்று புகார் கூறியவுடன் அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று புத்திமதி சொல்லிவிட்டு, "ரகுன்னாலே தலையிலே மண்ணதான் போடுவான் போலிருக்கு," என்று மகனை நினைத்தவாறு முணுமுணுத்துக் கொள்வது முத்தாய்ப்பு.
மருமகள் தன்னை வீட்டைவிட்டு வெளியேறி விட வேண்டும் என்று கடிதம் மூலம் கலங்க வைக்கையில் உண்மையாகவே நம் மருமகள் நம்மை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறாளா என நம்பமுடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் கடிதத்தை இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்து ஜீரணிக்க முடியாமல் தலையை ஒரு உலுப்பு உலுப்பிக் கொண்டு, நிஜம் தான் என உணர்ந்து, பேசாமடந்தையாய் இனி அவ்வளவுதான் நம் வாழ்க்கை என்ற உணர்வுகளின் வெளிப்பாட்டை உணர்ச்சிப் பிழம்பாகாமல் உண்மையாய் உன்னதமாய் வெளிப்படுத்தும் விதம்...
என்று படம் முழுக்க யாருடைய துணையுமின்றி தனி ஆவர்த்தனக் கச்சேரி செய்து ராஜாங்க நடிப்பு தர்பார் நடத்துகிறார் நடிப்புலகச் சக்கரவர்த்தி.
படத்தின் இறுதிக்காட்சியில் வரும் வலிப்பின் போது வலிப்பின் துடிப்பை அவர் நடிப்பால் வெளிப்படுத்தி நம்மைத் துடிக்க வைக்கிறார் என்றால் அதைவிட ஒருபடி மேலேபோய் வலிப்பின் கொடுமையை ஆ..ஊ.. என்று கூக்குரலிட்டு தன் குரலில் அதனை வெளிப்படுத்தும் போது நம்மை பதைபதைக்க வைத்து விடுவார்.(என்ன ஒரு பார்ப்பவரை பதைபதைக்க வைக்கும் ஒரு முனகல்! கண்களை மூடிக்கொண்டு அவருடைய வலிப்பைப் பார்க்காமல் அவருடைய வலிப்பின் முனகல்களைக் கேட்டாலே போதும்...வலிப்பில் அவர் படும் தவிப்பை நம்மால் முழுமையாக உணர முடியும்.)
ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய சாவிக்கொத்து.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/saaviyumnadikkum.jpg
எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற்போன்ற ஒரு காட்சி.. .மகன் திருமணம் முடித்து மருமகளுடன் இல்லை இல்லை அவன் மனைவியுடன் வீட்டுக்கு வரும் நேரத்தில் சேரில் அமர்ந்து கொண்டு மேஜை மேல் வலது கையை தலையணையாய் வைத்து பரிதாபமாக கண்களை மூடியபடி அமர்ந்திருப்பார். (அப்போதுதான் வலிப்பு வந்து சரிதாவால் காப்பாற்றப்பட்டு அமர்ந்திருப்பார்). வி.கே.ஆர் இருவரையும் அழைத்துக் கொண்டு அருகில்வந்து மணமக்களை நடிகர்திலகத்திடம் ஆசிர்வாதம் வாங்குமாறு சைகையால் பணிக்க, இருவரின் ஸ்பரிசமும் தன் கால்களில் பட்டவுடன் கண்களைத் திறக்காமலேயே கைகளில் உள்ள சாவிக்கொத்தை இறுகப் பிடித்தபடியே, சற்றுமுன் வந்த வலிப்பின் தொடர்ச்சியை மீண்டும் ஒரு சிறு வலிப்பாக ஒரு சிறு இடைவெளிக்குப் பின் மறக்காமல் தொடர்வார். சாவிக்கொத்தை பிடித்தும் பிடிக்க முடியாமலும் விட்டு விட்டு பிடித்து வலிப்பை அடக்கிக் கொள்வார். வலிப்பின் கொடுமையை சேர்த்து அவரது மனவலிகளின் கொடுமையையும் அந்த சாவிக்கொத்து நமக்கு உணர்த்திவிடும். (அந்த சாவிக்கொத்து 'ஆஸ்கார்' அவார்ட் நாமினேஷனுக்கு போட்டி போடக் கூடிய தகுதி படைத்தது)
(சாப்பாட்டு ராமனின் வலிப்பின் போது அவனுக்கு நமக்கு உதவும் எண்ணம் தோன்றுவதை விட," ராமா! எழுந்திரு! உன் சவாலை நிறைவேற்று... பணம் சம்பாதித்துக் கொண்டு வந்து தேவகியைக் கரம் பற்று" என்று எழுந்து நின்று கூக்குரலிடத் தோன்றும். தசரத ராமனின் வலிப்பின் போது," தலைவா! இதோ நான் உங்களுக்குத் துணையாக வருகிறேன்," என்று துடிதுடித்து அவரை ஓடிப்போய் நமக்குக் காப்பாற்றத் தோன்றும். இரு காவியங்களிலும் பெயர் ஒன்றுபட்டாலும் வலிப்பின் ஆரம்பங்களும், அதன் தொடர்ச்சித் துடிப்புகளும், முனகல்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத ஆச்சர்ய வியப்புகள்!).
வைரமோதிரத்தின் மூலம் வாழ்க்கையை முடித்துக் கொள்ள திட்டம்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/vaazhkkaiththunaiyaiizhanthavarukkuvairamothiramet hunai.jpg
பின் நார்மலாகி வி.கே.ஆரை அழைத்து, தன் மனைவியின் நகைகளைக் கொடுத்து தழுதழுத்த குரலில் குரல் ஒன்றும் பாதியுமாக உடைந்து வெளியே வர, தன் உள் வேதனையை வெளிப்படுத்தும் இடத்தில் நடிப்பின் உச்சங்களைத் தாண்டிப் பயணித்து சிறகடிப்பார். வைர மோதிரத்தை மட்டும் வி.கே.ஆரிடம் தராமல், "மரியாதைக் குறைவா ஏதாவது நடந்துச்சுன்னா... அப்படி ஒன்னும் நடக்காதுன்னு நெனைக்கிறேன்... நடந்துச்சுன்னா இந்த வைரத்தைப் பொடி பண்ணி காபியில் போட்டு குடிச்சிடுவேன்" என்று கதறி வெடிக்கும் போது நம் கண்களைக் கடலாக்குவார். அது மட்டுமல்லாது வி.கே.ஆரிடம் தன் இறுதிச் செலவுக்கான தொகையைக் கொடுத்து," பத்தோ இருபதோ அதிகமா செலவானா பரவாயில்ல... என்னை கரண்ட்லியே வச்சு எரிச்சுடு... நான் செத்து சாம்பலாயிடுறேன்", என்று பொங்கி அழும்போது நம் நெஞ்சங்களைக் கோடாரியால் பிளந்து விடுவார். ("நீ முந்திண்டா ஒனக்கு...நான் முந்திண்டா எனக்கு" நினைவுக்கு வந்தாலும் அது வைடூர்யம். இது வைரம்.)
'துணை' கட்டுரைக்காக இந்தக் காவியத்தை பலமுறை பார்த்து refer செய்யும் போது இந்தக் குறிப்பிட்டக் காட்சியின் வசனத்தை நடிகர் திலகம் பேசுவதை கேட்டவுடன் நெஞ்சடைக்க என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். (அவர் வாக்கு பலித்துதான் போய்விட்டது. நடிகர் திலகத்தின் பூத உடலை மின்சார இடுகாட்டில் அல்லவா எரித்து திருநீறாக்கினார்கள் ! வருடா வருடம் அஞ்சலி செலுத்த ஒரு நினைவு சமாதி கூட நமக்கு இல்லாமல் போய் விட்டதே! அந்த ஞாபகம் அப்போது வந்துவிட்டது)
கொடி நாட்டும் வி.கே.ஆர்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/natpukkuoruvkr.jpg
பதிலுக்கு வி.கே.ஆரும் தன் பங்கிற்கு கொடி நாட்டுவார். அவரும் கதறிக்கொண்டே, "அப்படியெல்லாம் பேசாதடா.. இனிமே இப்படியெல்லாம் பேசின உன் பல்லை ஒடச்சிடுவேன் அயோக்கிய ராஸ்கல்! (உரிமையுடன்)! நீ வந்து இப்படியெல்லாம் பேசினா நான் பொறுத்துக்குவனாடா ?... என்னால தாங்க முடியுமா?...இப்ப நீயும் அழுது என்னையும் அழ வைக்கிறியே!," என்று பதிலுக்கு தலையில் அடித்துக் கொண்டு கதறும் போது அந்த இடத்தில் நாம் தசரத ராமனையோ அல்லது புரோக்கர் வி.கே.ஆரையோ காண முடியவில்லை. ஒரிஜினலான நடிகர் திலகத்தையும், அவருக்கு உயிருக்குயிரான V.K.ராமசாமியையும்தான் நேராகக் காண முடிகிறது. 'பார் மகளே பார்' காவியத்தில் சிவலிங்கமும், ராமுவும் சிவலிங்கத்தின் மகளின் நிச்சயதார்த்ததின் போது மோதிக் கொள்ளும் அந்த ஆவேச நடிப்புப் போட்டிக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல இந்த நெஞ்சை உருக்கும் நட்புப் போட்டிக் காட்சி.
மகன் பாசத்தில் மனம் மாறுமா?!...
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/maganinmaaraathapaasaththaithaininaiththu.jpg
ஆபிசிலிருந்து லேட்டாக இரவு விரக்தியுடன் வீடு திரும்பும்போது வீட்டில் தந்தை தன் மனைவியால் கொடுமைப்படுத்தப்படுவதை அறியாத மகன் செல்லக் கோபத்துடன் இவரைக் கடிந்து கொண்டு அன்பால் அரவணைத்து உபசரிக்கும் போது தன் மீது மகனுக்கிருக்கும் பாசம் எள்ளளவும் குறையவில்லை என்று விரக்தி நிலையில் இருந்து சற்றே விடுபட்டு "பந்தபாசம் எல்லாத்தையும் அறுத்து விட்டுட்டு எங்கேயாவது ஓட லான்னு பாக்குறேன்... இவன் என்ன புதுசா விலங்கு போடுறான்" என்று மகனின் பாசத்தை எண்ணியவாறே சொற்ப நேர சந்தோஷத்தை முகத்தில் பரவவிட்டு குழப்பத்தில் ஆழ்வது...
என காணும் காட்சிகளில் எல்லாம் கண்ணிலும், கருத்திலும் நிறைகிறார் நடிப்பின் துணைவர்.
விளையாட்டிலும் மருமகளுடன் போட்டி.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/marumagaludanvilayttilumpoatti.jpg
மனைவியை இழந்த widower ஆக தன் மகன் ஒன்றே உலகமென வாழ்ந்து மருமகளால் உதாசீனப் படுத்தப் படும் தன்மானமுள்ள நடுத்தர வர்க்கத்து மாமனாரை அப்படியே அச்சு அசலாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் நடிகர் திலகம். தானும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் மகிழ்சிக்குள்ளாக்க வேண்டும் என்ற உயரிய உள்ளம் கொண்ட உயர்ந்த மனிதனாகப் பரிமளிக்கும், பாமரனுக்கே உரிய ஆசாபாச விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படுத்தப்படும் அருமையான பாத்திரம். கம்பீரத்துடனும், சிம்மக்குரல் கர்ஜனையுடன் பல பாத்திரங்களில் நடிப்பு வேந்தரைக் கண்டு களித்த நமக்கு, நார்மலாக நம்மில் ஒருவராக உலவும் ஒரு சராசரி நடுத்தர வர்க்க தசரத ராமரின் பாத்திரத்தை அனாயாசமாய், அசாதரணாமாய் வடித்துத் தருகிறார் நம் திரையுலக சிற்பி. இப்படிப்பட்ட பாத்திரப் படைப்பு வேறு சிக்கலானது. "நடிப்புக்காகக் கூட யார் காலிலும் நான் விழக்கூடாது' என்ற குருதட்சணைக்கருத்து நம்மவரிடமிருந்து வெளிப்படக் காரணமாயிருந்த அன்பு வெறி ரசிகர்களைக் கொண்ட அந்த சிங்கம் சீற்றத்தை விட்டு சிங்காரமாய்த் தனக்கு துணையில்லாமல் துணிவோடு தேர்ந்தெடுத்துக் கொண்ட தன்னிகரற்ற தாழ்ந்து போகக் கூடிய ரோல். கடந்த நூற்றாண்டில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அற்புதக் கேரக்டர்களை வாரி வழங்கி வாய்பிளக்க வைத்தாரென்றால் எண்பத்து இரண்டிலும் அந்த அளவிற்கு சிறப்பாக வழங்க முடியும் என்று நிரூபணம் செய்யும் ரோல். கத்தி மேல் நடப்பது போன்றது. ஒன்றிலே சூப்பர் ஹீரோவாக அறிமுகமாகி, ஈகோ மாயைகளையெல்லாம் அண்டவிடாமல் ஐந்திலேயே அசகாயசூர வில்லனாய் அதகளம் செய்து 'திரும்பிப் பார்'த்தவருக்கு எந்த வருடமானாலென்ன! எந்த வேடமானாலென்ன! ப்பூ.. தானே! இருந்தாலும் துணையைத் துணிவாகத் தேர்ந்தெடுத்தது துணிச்சல்தான். அடக்கி ஒடுங்கிப் போகவேண்டிய கேரக்டர்... ஆனால் நடிப்பில் அடங்குமா?! சும்மா ஆட்டி வைத்து விட்டதே!
மகன் மருமகளுடன் தசரதர்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/maganmarumaggalidanthasaratharaman.jpg
மொத்தத்தில் சப் ரிஜிஸ்தரார், அடக்கமான மாமனார் என்ற புதிய கோணங்களில் காட்சியளித்து வாழ்ந்து, சராசரிவாழ் மனைவியை இழந்த, மாமனார்களின் மறுபக்க அவஸ்தை அவலங்களை தன் நயமான நடிப்பால் பதிவு செய்து, உள்ளக் குமுறல்களை உணர்ச்சிகள் கொப்பளிக்காமல் உணர்த்தி, அமைதி காக்க வேண்டிய நேரத்தில் அமைதி காத்து, கொந்தளிக்க வேண்டிய சமயங்களில் அளவாகக் கொந்தளித்து, இயல்பான நடிப்பை இங்கிதமாக வழங்கி, ஈகோ இல்லாமல் இளம்தலைமுறை நடிகர்களுடன் இணை சேர்ந்து, நம் இதயங்களை மெல்லிய மயிலிறகால் மென்மையாக வருடுகிறார் நடிக மாமன்னர்.
அன்புடன்,
வாசுதேவன்.
தொடர்கிறது...
vasudevan31355
5th October 2012, 09:58 AM
தூணுக்கும் துணைக்கும் துணை நின்றவர்கள்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/maganthirumanaathirchi.jpg
சுரேஷ் - நடிகர் திலகத்தின் மகன் ரகுவாக சுரேஷ். தந்தை மேல் பாசம் காட்டவும், காதலி மற்றும் மனைவி ராதாவுடன் வழியவும் சான்ஸ். கொடுத்த ரோலை கொஞ்சம் சிரமப்பட்டு ஒப்பேற்றியிருக்கிறார்.அப்பாவுக்காகப் ப(பு)ரிந்து ராதாவை இறுதியில் விளாசுகையில் ஆடியன்ஸின் குறிப்பாக நம் ரசிகக் கண்மணிகளின் அப்ளாசை அள்ளுகிறார்.
ராதா - மகா திமிர் கொண்ட மருமகளாக ராதா. திடமான நம்பிக்கை, தீர்க்கமான முடிவு எடுக்கும் சுயமரியாதை கொண்ட சிடுமூஞ்சியாக வந்து மாமனாரைக் கொடுமைப் படுத்தி, மகளிர் அணியினரின் வயிற்றெரிச்சல்களை வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.அதிலும் குறிப்பாக ரசிகப் பிள்ளைகளின் வசைமாரிகளுக்கும்,சாபங்களுக்கும் சொந்தம் கொண்டாடுகிறார். ராதாவை வசைபாடி தியேட்டரில் ரசிகர்கள் கோஷம் போட்ட சம்பவமெல்லாம் நடந்ததுண்டு. துண்டுப் பிரசுரங்கள் கூட ராதாவை விமர்சித்து விநியோகிக்கப் பட்டன. 'முதல் மரியாதை'யின் போதுதான் அவருக்கு 'பாவ மன்னிப்பு' வழங்கப்பட்டது.
சரிதா - குடும்பத்திற்காக தன்னையே மெழுகாய் உருக்கிக் கொண்டு பார்ப்பவர்களை 'உச்' கொட்ட வைத்து உருகச் செய்யும் ரோலில் உன்னதமாகக் கொடி நாட்டுகிறார். நடிகர் திலகத்திற்கு முழு ஆதரவும் கொடுத்து அவருக்கு உற்ற துணையாக உதவ வருவதால் அனைவரது நெஞ்சங்களிலும் எளிதாக நுழைந்து நல்ல பெயர் எடுத்து விடுகிறார். ஜாடிக்கேற்ற மூடி போல தசரத ராமருக்கு சரியான துணை இந்த சரிதா. சரிதானே!
வி.கே.ஆர் - சொந்தப் பெயரிலேயே கல்யாண புரோக்கராகவும், நடிகர் திலகத்தின் உயிர் நண்பராகவும் வாழ்ந்து காட்டுகிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று இவருடைய ஆளுமையை ஒரே காட்சியின் மூலம் முன்னமேயே அலசியாகிவிட்டது. காமெடியில் கலக்க இவருக்கு இணை இவர்தான். குணச்சித்திரத்திலும் கூட. உயர்ந்த நட்பிலும், நடிப்பிலும் கூட. 'ஓல்ட் ஈஸ் கோல்ட்' மறுபடி ஒருமுறை நிரூபணம்.
வியட்நாம் வீடு சுந்தரம் - வியக்க வைக்கும் வசனங்களுக்கு சொந்தக்காரர். வியட்நாமுக்கு கௌரவம் அளித்து துணைக்கு உறுதுணையாய் உதவுகிறார். தலைவர் ரசிகர்களின் நாடி பிடிக்கத் தெரிந்தவர். அதே சமயம் கருத்தாழமிக்க நகைச்சுவை கலந்த வசனங்களுக்கும் பஞ்சமில்லை. உதாரணத்திற்கு சில.
"நீ ட்ரெயின்ல ஏறினின்னா நேரா சைதாப்பேட்டைக்குப் போவே!
ட்ரெயின் உன் மேல ஏறுச்சுன்னா நேரா கண்ணம்மாப்பேட்டைக்குப் போவே!
பேட்டை ஒண்ணுதான்..."
"இந்த widower problem இருக்கே... it's a only an international problem...better ஆ போயிட்டா அதுக்கப்புறம் bitter off தான்"...
"வாலிபமா இருக்கும்போது வருங்காலம் எப்படியிருக்குமோன்னு பயந்தே வாழ்க்கையை நடத்திடறோம்...வயசானதுக்கப்புறம் கடந்த காலத்தைப் பத்தி கற்பனை பண்ணியே வாழ்க்கையை முடிச்சுடறோம்"...
'மாமனாரால மனசு உடைஞ்சுது... மருமகளால அடுப்பு உடைஞ்சுதுன்ற நிலைமை ஏற்பட வேண்டாம்"
Little warming up then only pressing (பெண்களுக்கு சமமாக அயர்ன் பாக்சை உதாரணமாய் வைத்து நடிகர் திலகம் உதிர்க்கும் வசனம்)
இப்படி நிறைய பஞ்ச்சஸ். படத்தின் முடிவில் வரும் இறுதி வசனம் டாப்போ டாப். எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு அவர்களைப் பற்றிச் சொல்லும் சாக்கில் அவரது அன்பு ரசிகர்களுக்காக அவர் கூறும் வசனம்தான்.
"என் குணத்தை தெரிஞ்சுக்கிட்டு, என் எண்ணத்தைப் புரிஞ்சுக்கிட்டு இந்தப் புள்ளைகளெல்லாம் எனக்கு ஆதரவா நிக்குதே! அதுதான் எனக்கு உண்மையான துணை!"
வாழ்க்கையின் உண்மைத் தத்துவங்களை எளிமையாக வசனங்களில் வடித்துதர இவர் போல இப்போது யார் இருக்கிறார்கள்? ('துணை'யிலும் ட்ரெயின் காட்சி ஒன்றில் பிச்சை எடுப்பவராக ஒரு சீனில் தலைகாட்டுவார்)
சங்கர் கணேஷ் - உறுத்தாத பின்னணி இசை. பாடல்களில் கோட்டை விட்டிருப்பார். "காற்று நடந்தது மெல்ல மெல்ல" (வாணி, ஜெயச்சந்திரன்) மட்டும் சுமார் மெலடி. "அடேய்! உனக்கும், எனக்கும் உறவு வர பெண்தான் காரணம்?"...என்ற டி .எம்.எஸ். குரலில் நடிகர் திலகத்திற்கு வரும் பின்னணிப் பாடலில் சொதப்பியிருப்பார். அருமையான சிச்சுவேஷன் சாங்கை, அதுவும் நடிகர் திலகத்திற்கான தனிப் பின்னணிப் பாடலை இப்படி கோட்டை விட்டிருக்கலாமோ?... 'Life is a game' பாடல் காட்சி இரு கோடுகளை ஞாபகப்படுத்தினாலும் நன்றாகவே இருக்கும். பாடலும் ஓ.கே ரகம்.
ரங்கா - ஒளிப்பதிவு இவர் வேலை. இயல்பான சென்னையின் நடைமுறை வாழ்க்கையை இயற்கையாக ஒளிப்பதிவு செய்து தூள் கிளப்பியிருப்பார். நடிகர் திலகத்தை மிக மிக அழகாக மெருகூட்டி பாந்தமாக பரிமளிக்கச் செய்யும் இவரது காமிராவுக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு. வண்டலூர் டு மாம்பலம் எலக்ட்ரிக் ட்ரெயின் காட்சிகள் படு நேச்சுரல். ட்ரெயின் பயணங்களில் நம்மையும் நடிகர் திலகத்தோடும், மற்றவர்களோடும் சேர்ந்து பயணிக்க வைப்பார்.
துரை - 'அவளும் பெண்தானே மற்றும் தேசிய விருது பெற்ற 'பசி' படங்களின் புரட்சி இயக்குனர். நடிகர் திலகத்தின் மற்றொரு பரிமாணத்தை துணிவோடு துணிச்சலாகக் காட்டி அசத்தியிருக்கிறார். அனாவசியக் காட்சிகள் குறைவு. சரிதாவை சகபயணிகள் கேவலமாகப் பேசும்போது அவர்களை வார்த்தைகளால் விளாசிவிட்டு ரயிலில் சரிதாவுடன் நடிகர் திலகம் பயணிக்கையில் இருவருடைய மனக்குமுறலையும் காலில்லாத நொண்டிப் பிச்சைக்காரன் பாடும் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற 'பராசக்தி' பாடலின் மூலம் உணர்த்தியிருப்பது துரையின் 'டச்'
மற்றும் சரிதாவின் ஏமாற்றுக்காரக் கணவனாக ராஜீவ், சரிதாவின் தம்பியாக சமீபத்தில் காலமான நடிகர் திலீப், சரிதாவின் சித்தியாக வசந்தா, துடுக்கான பால்காரியாக வனிதா, 'ஞானஒளி' கோகுல்நாத், துரையின் ஆஸ்தான கலைஞர்கள் 'பசி' நாராயணன், 'பசி' சத்யா ஆகியோர் தங்களுக்களிக்கப்பட்ட பாத்திரங்களை நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.
இயல்பு மாறாத, வரம்பு மீறாத, தெளிந்த நீரோடையாய் பயணிக்கிறது 'துணை' என்றால் துரையின் பங்கு நடிகர் திலகத்திற்குப் பிறகு மிகப் பெரியது. துரையின் இயக்கத்தில் நடிகர் திலகத்திற்கு இரண்டு படங்கள். ஒன்று 'துணை'. மற்றொன்று 'வீரபாண்டியன்' .வெகு யதார்த்தமான நடிகர் திலகத்தை 'துணை' மூலம் நம்மிடையே உலவ விட்டதற்கு வாழ்நாள் முழுதும் துரை பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நாமும்தான். இப்படிப்பட்ட ரோலில் நடிகர் திலகத்தை நடிக்க வைக்க மிக்க துணிச்சல் வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட ரோலில் நடிப்பதற்கு அதை விட துணிச்சல் வேண்டும். அது நடிகர் திலகத்தால் மட்டுமே முடிந்த ஒன்று. சபாஷ் துரை சார்! டபுள் சபாஷ் நடிகர் திலகத்திற்கு.
மொத்தத்தில்
மனித உறவுகளுக்கான துணைகளின் அவசியத்தை அற்புதமாக வலியுறுத்தும் காவியமே துணை. அனைத்திற்கும் நடிகர் திலகமே துணை!
அன்புடன்,
வாசுதேவன்.
vasudevan31355
5th October 2012, 10:03 AM
போனஸ் பதிவு('துணை')
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/vilayaattilkuzhanthaiyaai.jpg
http://mmimages.maalaimalar.com/Articles/2012/Sep/e3485972-d608-45c1-beff-044084cdc7cd_S_secvpf.gif
'துணை' ஆய்வுக்கட்டுரையின் போனஸ் பதிப்பாக இயக்குனர் துரை அவர்கள் நடிகர் திலகத்துடனான தன்னுடைய அனுபங்களை 'மாலை மலர்' .செய்தித்தாளுக்கு அளித்த பேட்டி.
சிவாஜிகணேசனை வைத்து படம் எடுக்குமாறு, டைரக்டர் துரைக்கு எம்.ஜி.ஆர். ஆலோசனை சொன்னார். அதன்படி துரை உருவாக்கிய படம் 'துணை.'
துரை எடுத்த 'பசி' படத்தை எம்.ஜி.ஆர். பார்த்துப் பாராட்டினார். இதன் பிறகு ஒருநாள், எம்.ஜி.ஆரை அவரது தோட்டத்தில் துரை சந்தித்தார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, நான் முதல்-அமைச்சராகி விட்டேன். எனவே, இனி நான் படங்களில் நடிக்க முடியாது. நடிக்கக்கூடிய நிலையில் இருந்தால், உன் டைரக்ஷனில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பேன். அந்த அளவுக்கு, 'பசி' படம் உன் மீது எனக்கு மிகுந்த மதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது' என்று எம்.ஜி.ஆர். சொன்னார்.
எம்.ஜி.ஆர். இப்படி சொன்னதும் மெய் சிலிர்த்துப் போனார், துரை. வசிஷ்டர் வாயால் 'பிரம்மரிஷி' பட்டம் பெறுவது சாதாரணமா! எம்.ஜி.ஆர். தொடர்ந்து பேசும்போது, 'உன் படத்தில் நான் நடிக்க முடியாமல் போய்விட்டது. என்றாலும், நீ தம்பி சிவாஜியை வைத்து படம் டைரக்ட் செய்யலாமே!' என்றார்.
இதைக் கேட்டதும் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்த துரை, சிவாஜிகணேசனை சந்தித்தார். எம்.ஜி.ஆர். கூறியதை சொன்னார். அதைக்கேட்டு சிவாஜிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. 'அண்ணனா அப்படிச் சொன்னார்!' என்று கேட்டார். 'நிஜமாகத்தான் அவர் இப்படிச் சொன்னார். உங்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று எனக்கு நீண்ட காலமாக ஆசையாக இருந்தது. ஆனால், உங்களிடம் எப்படி கேட்பது என்று தயங்கிக் கொண்டிருந்தேன்.
எம்.ஜி.ஆர். அண்ணன் சொல்லி விட்டதால், தைரியமாக வந்து கேட்கிறேன் என்றார், துரை. அண்ணனே சொல்லி விட்ட பிறகு, மறு பேச்சு பேசமாட்டேன். உன் படத்தில் நடிக்கிறேன். நீ எப்போது கேட்டாலும் கால்ஷீட் தருகிறேன். நீ மற்ற வேலைகளைப் பார் என்று கூறினார், சிவாஜி.
சத்யா ஸ்டூடியோவுக்கு ரொம்ப காலம் சிவாஜி போனதில்லை என்பது எனக்குத் தெரியும். நான் எம்.ஜி.ஆரிடம் அண்ணே! சத்யா ஸ்டூடியோவில் உள்ள உங்கள் மேக்கப் ரூமை சிவாஜி சாருக்கு கொடுக்கணும் என்று கேட்டேன். இனிமேல் எனக்கு எதுக்கய்யா மேக்கப் ரூம்? என் ரூமையே தம்பி பயன்படுத்திக் கொள்ளட்டும் என்றார்,பெருந்தன்மையுடன். நான் இதை சிவாஜி சாரிடம் சொன்னபோது, மறுபடியும் அவரால் நம்ப முடியவில்லை. டேய், என்னடா சொல்றே? அண்ணனா இப்படிச் சொன்னார்? என்று மீண்டும் ஆச்சரியமாக கேட்டார்.
துணை' படத்தின் பூஜை, சத்யா ஸ்டூடியோவில்தான் நடந்தது. நான்தான் சிவாஜி சாரை பூஜை முடிந்ததும் எம்.ஜி.ஆரின் மேக்கப் ரூமுக்கு அழைத்துச் சென்றேன். இந்த வகையில் 'துணை' படம் மூலம் மறுபடியும் சிவாஜி சத்யா ஸ்டூடியோவுக்குள் அடியெடுத்து வைத்தார்.
புதிய 'கேரக்டர்' சிவாஜி சாரை அதுவரை அவர் நடித்திராத புதிய வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று துரை விரும்பினார். 'துணை' கதை உருவாகியது. தினமும் வண்டலூரில் இருந்து மாம்பலத்துக்கு மின்சார ரெயிலில் பயணம் செய்யும் சப்-ரிஜிஸ்திரார் சிவாஜி. ரெயிலில் போகும்போது, பெண்களிடம் ஜோக் அடித்துக் கொண்டு போகும் ஜாலியான கேரக்டரை அவர் செய்தார்.
படத்தின் பெரும் பகுதியை ஓடும் ரெயிலில் எடுக்க வேண்டி இருந்ததால், ஒரு மின்சார ரெயிலை வாடகைக்கு எடுத்து, படப்பிடிப்பை நடத்தினார், துரை. இதுபற்றி அவர் கூறியதாவது:-
மிகச்சிறந்த நடிகரான சிவாஜியை எப்படி இயக்கப்போகிறோமோ என்று எனக்கு பயம் இருந்தது. படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்த பிறகும் இந்த பயம் நீடித்ததால், ஏற்கனவே சிவாஜியுடன் பழகியிருந்த 'வியட்நாம்வீடு' சுந்தரத்தை வசனம் எழுத வைத்தேன்.
எனக்கு இருந்த பயத்தை எப்படியோ தெரிந்து கொண்ட சிவாஜி, என்னை அழைத்தார். 'நீ நல்ல டைரக்டர் என்று எனக்குத் தெரியும். நான் எப்படி செய்யணும் என்று சொல்லு. அப்படியே செய்கிறேன்' என்றார். நடிப்பின் இமயம் இப்படி எனக்கு தன்னம்பிக்கை கொடுத்ததும், பயம் விலகி உற்சாகமானேன்.
படப்பிடிப்பு வேகமாக நடந்தது. ஒரு நாள் சென்னை அண்ணா நகர் வீதியில் சிவாஜியையும், வி.கே.ராமசாமியையும் வைத்து ஒரு காட்சியை எடுத்துக்கொண்டிருந்தேன். அடுத்த காட்சிக்கான இடைவேளையின்போது, சிவாஜி சார் வி.கே.ராமசாமியிடம், 'தெரியாமல் இந்தப் பயகிட்ட வந்து மாட்டிக்கிட்டேன். பய நம்பள தெருத்தெருவா அலைய வைக்கிறானே' என்று அவருக்கே உரிய பாணியில் கிண்டலாக சொல்ல, பதிலுக்கு வி.கே.ராமசாமி, 'இதாவது பரவாயில்லை. `பசி'ன்னு ஒரு படம் எடுத்தானே, அந்தப்படம் பூராவும் கூவம் சாக்கடையில்தான் எடுத்தானாம்! நல்லவேளை; நாம அதுல மாட்டலே!'என்றார்.
வி.கே.ஆர். இப்படிச் சொன்னதும் சிவாஜி குலுங்கிக் குலுங்கி சிரித்தார். 'துணை' படத்தில் நிஜமாகவே சிவாஜி சாருக்கு சவாலான பாத்திரம். ஏதாவது திடீர் அதிர்ச்சி ஏற்பட்டால் உடனே அவருக்கு 'காக்கா வலிப்பு' வந்து விடும்.
ரிஜிஸ்திரார் ஆபீசில், தான் திருமணம் செய்து வைத்த பெண்ணின் கணவன் அவளை விட்டு ஓடிவிட்டான் என்ற தகவலை கேள்விப்பட்டதும் வலிப்பு வந்து விடும். இந்தக் காட்சி படமாக்கப்பட இருந்த அன்று செட்டுக்கு வந்ததும் சிவாஜி சார் என்னை அழைத்தார். சீன் முழுக்க கேட்டவர், 'இந்த காட்சியை நான் ஒரே ஷாட்டில் நடித்து முடித்து விடுவேன். அப்புறம் என்னை அனுப்பி விடவேண்டும். குளோசப் காட்சி, மிட் ஷாட் காட்சின்னு கேட்கக் கூடாது' என்றார்.
பதிலுக்கு நான் அவரிடம், 'சரி சார். அப்படியே செய்கிறேன். ஆனால் எனக்கு ஒரு மணி நேரம் அவகாசம் வேண்டும்' என்றேன். 'ஏண்டா?' என்று அவர் கேட்டார். 'இன்னும் இரண்டு காமிராவை வரவழைக்க வேண்டும். அதற்குத்தான் அவகாசம்' என்றதும், அவர் ஓய்வறைக்குப் போய்விட்டார்.
ஒரு மணி நேரத்திற்குள் மேலும் இரண்டு கேமராக்கள் வந்துசேர, சிவாஜி சார் நடிக்கத் தொடங்கினார். சொன்னபடியே, அந்தக் காட்சியை ஒரே டேக்கில் `ஓ.கே' செய்தார். காட்சி முடிந்ததும் என்னை தட்டிக்கொடுத்த சிவாஜி, 'நீ ஒரு நல்ல டெக்னீஷியன் என்று நிரூபித்து விட்டாய்!' என்று பாராட்டி விட்டுச் சென்றார்.
இந்த பாராட்டு, நிஜமாகவே நான் எதிர்பாராதது. ஆனந்தத்தில் அப்படியே சிலையாகி நின்றவனை, என் குழுவினரும் கை கொடுத்து பாராட்டி இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தார்கள். 'துணை' படத்தில் முக்கிய வேடங்களில் ராதா, சரிதா ஆகியோரும் நடித்தனர்.1-10-1982-ல் வெளிவந்த 'துணை' படம் வெற்றிகரமாக ஓடியது.'
இவ்வாறு துரை கூறினார்.
அன்புடன்,
வாசுதேவன்.
RAGHAVENDRA
5th October 2012, 10:54 AM
டியர் வாசுதேவன் சார்,
திக்கற்றவர்களுக்கு என்றுமே தெய்வமே துணை என்பார்கள். ஆனால் நமக்கு அந்தக் கவலை இல்லை. நாம் திரும்புகின்ற திசையெல்லாம் நடிகர் திலகத்தின் திருவுருவமல்லவா காட்சியளிக்கும். நம் இதயத்தின் உள்ளே சென்று பார்த்தால் அவர் தான் நீக்கமற நிறைந்திருப்பார். அதனை தங்கள் மூலம் இன்று மீண்டும் நிரூபித்துள்ளார் நடிகர் திலகம். தங்களின் துணை நடிகர் திலகத்தின் துணை. அந்தத் துணை இருக்கும் வரை நமக்கு என்றுமே ஜெயம் தான்.
துணை படத்தினைப் பற்றிய தங்களின் பதிவுகள் ... மலைத்துப் போய் நிற்கிறேன். இந்த அளவிற்கு விஸ்தாரமான அலசலை ஒவ்வொரு படத்திற்கும் நாம் தரும் போது நடிகர் திலகம் என்கிற ஆலமரம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டு தானே இருக்கும். காட்சிகளின் விவரிப்பென்ன, அந்தக் காட்சிகளில் நடிகர்களின் பங்களிப்பென்ன, தொழில் நுட்ப உதவியாளர்களின் பங்களிப்பென்ன என்று அனைத்தையும் அலசி விட்டீர்கள். நடிகர் திலகத்தின் பிறந்த நாளில் வெளியான காவியமல்லவா. இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது. வியட்நாம் வீடு சுந்தரம் ஒரு முறை கூறியது போல் சரிதா காப்பாற்றும் அந்த வலிப்புக் காட்சியில் அவரது சமயோசிதம் வியப்பை ஏற்படுத்தும்.
தங்களைப் போல் நீண்ட பதிவு எழுத ஆசை தான். இருந்தாலும் புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதையாகக் கூடாதே.
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4702a-1.jpg
RAGHAVENDRA
5th October 2012, 10:56 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/hub2000posts.jpg
இரண்டாயிரம் என்ன இரண்டு லட்சம் கூட நான் தருவேன் என சூப்பராய் கலக்கும் வாசு சாருக்கு பாராட்டுக்கள் உளப் பூர்வமாக. இது போல் மேலும் மேலும் தாங்கள் பதிவிட வேண்டும். நாங்கள் அதனைப் படித்து மகிழவும் வேண்டும் நெகிழவும் வேண்டும்.
அன்புடன்
ராகவேந்திரன்
KCSHEKAR
5th October 2012, 12:17 PM
Dear Vasudevan Sir,
Congratulations for your achievement of crossing 2000 posts.
Welldone
Gopal.s
5th October 2012, 12:25 PM
வாசு சார்,
இரண்டாயிரம் ஆவது பதிவுக்கு அற்புதமான தேர்வு துணை. எங்களுக்கு திரியின் ஒரு முக்கிய தூண் நீங்கள். கிழிச்சு நாட்டி தோரணம் கட்டுவது என்பார்கள். அதைத்தான் செய்து காட்டியிருக்கிறீர்கள்.
நன்றியுடன்
Gopal
KCSHEKAR
5th October 2012, 12:28 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/GopichettipalayamProgmPg1.jpg
[http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/GopichettipalayamProgmPg2-1.jpg
oowijaez
5th October 2012, 12:44 PM
[QUOTE=vasudevan31355;962131]நடிகர் திலகத்தின் நயமான நடிப்பு முத்திரைகள்.
கண்ணியமான 'தசரத ராம'ராக இதய தெய்வம்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/kanniyathasarathar.jpg
தசரத ராமனாக நம் தவப்புதல்வர். நடிகர் திலகத்தின் நடிப்பை சற்று மிகை நடிப்பு என்று கூறுபவர்களின் மென்னியைப் பிடித்து நொறுக்கும் நடிப்பு. ஆர்ப்பாட்டமான நடிப்புக்கு ஈடாக அமைதியான நடிப்பையும் அள்ளி வழங்க முடியும் என்று ஏற்கனவே பல படங்களில் நிரூபித்த நிகரற்ற திலகம். இரும்புத்திரை, அறிவாளி, பாவ மன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், மோட்டார் சுந்தரம் பிள்ளை, முதல் மரியாதை, தேவர் மகன் என்று அவரின் இயல்பு நடிப்புப் பட்டியல் காவியங்கள் மேலும் நீளும். அந்தப் பட்டியலில் வெகு ஈசியாக நுழைவது 'தசரத ராமன்' ராஜ்ஜியம் நடத்தும் 'துணை'.
சப்-ரிஜிஸ்தரராக நடிகர் திலகம். கனஜோராக கச்சிதமாக சப்-ரிஜிஸ்தரர் பாத்திரத்தில் பொருந்திவிடுகிறார். (இவர் பாத்திரத்துக்குப் பொருந்துவதைவிட பாத்திரம்தான் இவருக்குள் பொருந்துகிறது) ஒயிட் பேன்ட், ஒயிட் ஷர்ட், கருப்பு கோட், ஒரு கையில் லஞ்ச் பாக்ஸ் கூடை, மறு கையில் மடக்கிப் பிடித்த குடை, சௌத்ரியை ஞாபகப்படுத்தும் நரைத்த கிருதா ஒப்பனை. கையெடுத்து கும்பிடத் தோன்றும் பாந்தமான தோற்றம். கேரக்டர் என்றால் அப்படி ஒரு கேரக்டர். சும்மா நச்'சென்று.
எலெக்ட்ரிக் ட்ரெயினில் கலக்கல் கலாட்டா
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/MP2_Sep28_132800_0mpg_000961070.jpg
எலெக்ட்ரிக் ட்ரெயினில் பயணிக்கும் போது சிறுசுகளிடம் சும்மா ஜோக் மழை பொழியும் கலகல கலாட்டா...
("சாந்தி தியேட்டரில் என்னம்மா படம் நடக்குது?
தெரியாது சார்...
ஆனந்த் தியேட்டர்ல என்னம்மா படம் நடக்குது?
தெரியாது சார்...
காஸினோவில என்னம்மா படம் நடக்குது?
தெரியாது சார்...
மூணு தியேட்டரிலும் 'தெரியாது'ன்ற படமா நடக்குது?!)
ரயிலில் பயணிக்கையில் எல்லோருக்கும் கடலை வாங்கிக் கொடுத்துவிட்டு தானும் கடலை சாப்பிடும் நேரத்தில் சில கடலைகளை எடுத்து கோட் பாக்கெட்டுக்குள் போட, சரிதா அதைக் கவனித்துவிட்டு காரணம் கேட்க, "கடலை சாப்பிட்டு முடிக்கிற நேரத்துல ஒரு சொத்தக் கடலை வந்துரும்... அதுக்கப்புறம் சும்மாக் கிடந்த வாய் என்னவோ மாதிரி ஆயிடும்...அதனாலதான் முன்ஜாக்கிரதையா நாலு கடலையை எடுத்து பாக்கெட்டுல போட்டுக்குவேன்" என்ற புத்திசாலித்தனமான எல்லோருக்கிருக்கும் முன்ஜாக்கிரத்தை உணர்வு.
மகன் மேல் பெருமிதம்... தன் சொல் தட்ட மாட்டான் என்ற அபார தன்னம்பிக்கை... ராதாவை பெண் பார்க்க V.K.R. தன்னை அழைத்துச் சென்றவுடன் ராதா அவமானப்படுத்துவதைப் வெளிக்காட்டிக் கொள்ளாமல் (ஜாலியாகப்!) பொறுத்துக் கொண்டு, கல்யாணத்திற்கு சம்மதிப்பது போலத் தலையாட்டிவிட்டு ராதாவிடம் கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு வெளியே வந்து V.K.R.ஐ விட்டு விளாசியதும், V.K.R., 'அப்புறம் ஏன்டா அந்தப் பொண்ணுகிட்ட காசு கொடுத்துட்டு வந்தே?" என்றவுடன் "நீ கொட்டிகிட்டயே டிபன்... அதுக்குதான்டா பரதேசி", என்று பட்டை கிளப்பும் பாங்கு...
மகன் தனக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ளப் போவதைக் கேட்டு பதைபதைத்து ஓடிவந்து தாங்க மாட்டாமல், "அப்பா வர்றதுக்குள்ள என்னப்பா அவசரம்?... பஸ் புடிச்சி வர வேண்டாமா?" என்று தன்மானத்திற்கு கேடு வந்து விடாத வகையில் சாட்சிக் கையெழுத்துப் போட்டு அதிர்ச்சியை மறைத்து சிரித்தபடி நிலைமையை சமாளிக்கும் விதம்...
தண்டவாளத்தில் கால்கை வலிப்புடன்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/valippilvathangumthasaratharaaman.jpg
தனக்குத் தெரியாமல் தன் மகன் தானே திருமணத்தை நடத்திக் கொள்ள முற்பட்டுவிட்டானே என அதிர்வுற்று துன்பம் தாங்க மாட்டாமல் கைகால்கள் துவள, வலிப்பு வந்து துடித்துத் துவளும் அவலம் (ஆஹா! இந்த ஒரு காட்சி போதும் மகனே!),
சரிதாவின் வாழ்க்கையை சக பயணிகள் கேலியும் கிண்டலுமாகப் பேசும்போது அதைப் பொறுமையைக் கேட்டு விட்டு, "எனக்குக் கோபம் வந்து நீங்கள் பார்த்ததில்லையே? என்று அமைதியாக முறைத்துவிட்டு சண்டமாருதமாய் அவர்களிடம் எகிறோ எகிறு எகிறு என்று எகிறும் கட்டம்... (கட்டம் போட வைக்கும் கட்டம்)
தன் சம்பந்தி அம்மாள் வீட்டுக்கு எதேச்சையாக வந்தவுடன் வரவேற்பை பலமாக அளித்து, மருமகள் மேல் உள்ள வருத்தங்களை வருடலாக மருமகளுக்குத் தெரியாமல், சம்பந்தியிடம் நயமாக, நாசூக்காக இருபொருள்பட குறைகளைக் கூறும் பாணி...
(சம்பந்தி அம்மாள் : ராதா முழுகாம இருக்காளா என்ன?
இவர் : முழுகலாமா வேண்டாமான்னு யோசனை பண்ணிகிட்டுதான் இருக்கா...)
மகனின் திருமணத்திற்குப் பின் 'தேமே' என்று பிடிப்பில்லாமல் விட்டேற்றியாக வீட்டுக்கு வருவதும், ரூமிற்கு அடைந்து கொள்வதுமாய் மனைவியை இழந்த கணவனின் பரிதாப நிலைமைகளை வெளிப்படுத்தும் வெளிப்பாடு...
widower problem பற்றி நடிகர் திலகம்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/widowerproblem.jpg
ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு டயர்டாக திரும்பியவுடன் மருமகள் கடுப்புடன் காபி தம்ளரை டொக்'கென்று மேசை மீது மேலும் கீழுமாக சிந்துமாறு வைத்து விட்டுச் செல்ல, அதை வெறித்துப் பார்த்தபடியே, "அம்பத்தஞ்சி நயே பைசே இந்த காப்பியோட விலை... பேசாம ஹோட்டல்லியே சாப்பிட்டுருக்கலாம்... கூட பத்து பைசா கொடுத்தா கூடப் பொறந்த சகோதரன் மாதிரி அன்போட கொடுத்திருப்பான் ஹோட்டல் சப்ளையர்" என்று தனக்குத் தானே விரக்தியுடன் புலம்பித் தீர்ப்பது...
தன்னிடம் முகம் கொடுத்து பேசாத மருமகள் ஒருகட்டத்தில் தன்னை தைரியமாக எதிர்கொண்டு விளாசித்தள்ளி வெளுத்துவிட, அதை அப்படியே சின்னக் குழந்தை போல கைகட்டிகொண்டு மூக்குக்கண்ணாடியைக் கீழே இறக்கியவாறு கண்கள் மேல்நோக்க மருமகளைப் பார்த்து எதுவும் பேசமுடியாமல் வாய்பொத்தி மௌனியாய் அமர்ந்து accept செய்து கொள்ளும் அழகு...
வீட்டு வாசலில் இரு சிறுவர்கள் விளையாடும்போது அடித்துக் கொள்ள, இவர் என்ன நடந்தது என விசாரிக்க, அதில் ஒரு பையன், "பாருங்க அங்கிள்! இந்த ரகு என் தலையிலே மண்ண அள்ளிப் போட்டுட்டான் "என்று புகார் கூறியவுடன் அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று புத்திமதி சொல்லிவிட்டு, "ரகுன்னாலே தலையிலே மண்ணதான் போடுவான் போலிருக்கு," என்று மகனை நினைத்தவாறு முணுமுணுத்துக் கொள்வது முத்தாய்ப்பு.
மருமகள் தன்னை வீட்டைவிட்டு வெளியேறி விட வேண்டும் என்று கடிதம் மூலம் கலங்க வைக்கையில் உண்மையாகவே நம் மருமகள் நம்மை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறாளா என நம்பமுடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் கடிதத்தை இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்து ஜீரணிக்க முடியாமல் தலையை ஒரு உலுப்பு உலுப்பிக் கொண்டு, நிஜம் தான் என உணர்ந்து, பேசாமடந்தையாய் இனி அவ்வளவுதான் நம் வாழ்க்கை என்ற உணர்வுகளின் வெளிப்பாட்டை உணர்ச்சிப் பிழம்பாகாமல் உண்மையாய் உன்னதமாய் வெளிப்படுத்தும் விதம்...
என்று படம் முழுக்க யாருடைய துணையுமின்றி தனி ஆவர்த்தனக் கச்சேரி செய்து ராஜாங்க நடிப்பு தர்பார் நடத்துகிறார் நடிப்புலகச் சக்கரவர்த்தி.
படத்தின் இறுதிக்காட்சியில் வரும் வலிப்பின் போது வலிப்பின் துடிப்பை அவர் நடிப்பால் வெளிப்படுத்தி நம்மைத் துடிக்க வைக்கிறார் என்றால் அதைவிட ஒருபடி மேலேபோய் வலிப்பின் கொடுமையை ஆ..ஊ.. என்று கூக்குரலிட்டு தன் குரலில் அதனை வெளிப்படுத்தும் போது நம்மை பதைபதைக்க வைத்து விடுவார்.(என்ன ஒரு பார்ப்பவரை பதைபதைக்க வைக்கும் ஒரு முனகல்! கண்களை மூடிக்கொண்டு அவருடைய வலிப்பைப் பார்க்காமல் அவருடைய வலிப்பின் முனகல்களைக் கேட்டாலே போதும்...வலிப்பில் அவர் படும் தவிப்பை நம்மால் முழுமையாக உணர முடியும்.)
ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய சாவிக்கொத்து.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/saaviyumnadikkum.jpg
எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற்போன்ற ஒரு காட்சி.. .மகன் திருமணம் முடித்து மருமகளுடன் இல்லை இல்லை அவன் மனைவியுடன் வீட்டுக்கு வரும் நேரத்தில் சேரில் அமர்ந்து கொண்டு மேஜை மேல் வலது கையை தலையணையாய் வைத்து பரிதாபமாக கண்களை மூடியபடி அமர்ந்திருப்பார். (அப்போதுதான் வலிப்பு வந்து சரிதாவால் காப்பாற்றப்பட்டு அமர்ந்திருப்பார்). வி.கே.ஆர் இருவரையும் அழைத்துக் கொண்டு அருகில்வந்து மணமக்களை நடிகர்திலகத்திடம் ஆசிர்வாதம் வாங்குமாறு சைகையால் பணிக்க, இருவரின் ஸ்பரிசமும் தன் கால்களில் பட்டவுடன் கண்களைத் திறக்காமலேயே கைகளில் உள்ள சாவிக்கொத்தை இறுகப் பிடித்தபடியே, சற்றுமுன் வந்த வலிப்பின் தொடர்ச்சியை மீண்டும் ஒரு சிறு வலிப்பாக ஒரு சிறு இடைவெளிக்குப் பின் மறக்காமல் தொடர்வார். சாவிக்கொத்தை பிடித்தும் பிடிக்க முடியாமலும் விட்டு விட்டு பிடித்து வலிப்பை அடக்கிக் கொள்வார். வலிப்பின் கொடுமையை சேர்த்து அவரது மனவலிகளின் கொடுமையையும் அந்த சாவிக்கொத்து நமக்கு உணர்த்திவிடும். (அந்த சாவிக்கொத்து 'ஆஸ்கார்' அவார்ட் நாமினேஷனுக்கு போட்டி போடக் கூடிய தகுதி படைத்தது)
(சாப்பாட்டு ராமனின் வலிப்பின் போது அவனுக்கு நமக்கு உதவும் எண்ணம் தோன்றுவதை விட," ராமா! எழுந்திரு! உன் சவாலை நிறைவேற்று... பணம் சம்பாதித்துக் கொண்டு வந்து தேவகியைக் கரம் பற்று" என்று எழுந்து நின்று கூக்குரலிடத் தோன்றும். தசரத ராமனின் வலிப்பின் போது," தலைவா! இதோ நான் உங்களுக்குத் துணையாக வருகிறேன்," என்று துடிதுடித்து அவரை ஓடிப்போய் நமக்குக் காப்பாற்றத் தோன்றும். இரு காவியங்களிலும் பெயர் ஒன்றுபட்டாலும் வலிப்பின் ஆரம்பங்களும், அதன் தொடர்ச்சித் துடிப்புகளும், முனகல்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத ஆச்சர்ய வியப்புகள்!).
வைரமோதிரத்தின் மூலம் வாழ்க்கையை முடித்துக் கொள்ள திட்டம்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/vaazhkkaiththunaiyaiizhanthavarukkuvairamothiramet hunai.jpg
பின் நார்மலாகி வி.கே.ஆரை அழைத்து, தன் மனைவியின் நகைகளைக் கொடுத்து தழுதழுத்த குரலில் குரல் ஒன்றும் பாதியுமாக உடைந்து வெளியே வர, தன் உள் வேதனையை வெளிப்படுத்தும் இடத்தில் நடிப்பின் உச்சங்களைத் தாண்டிப் பயணித்து சிறகடிப்பார். வைர மோதிரத்தை மட்டும் வி.கே.ஆரிடம் தராமல், "மரியாதைக் குறைவா ஏதாவது நடந்துச்சுன்னா... அப்படி ஒன்னும் நடக்காதுன்னு நெனைக்கிறேன்... நடந்துச்சுன்னா இந்த வைரத்தைப் பொடி பண்ணி காபியில் போட்டு குடிச்சிடுவேன்" என்று கதறி வெடிக்கும் போது நம் கண்களைக் கடலாக்குவார். அது மட்டுமல்லாது வி.கே.ஆரிடம் தன் இறுதிச் செலவுக்கான தொகையைக் கொடுத்து," பத்தோ இருபதோ அதிகமா செலவானா பரவாயில்ல... என்னை கரண்ட்லியே வச்சு எரிச்சுடு... நான் செத்து சாம்பலாயிடுறேன்", என்று பொங்கி அழும்போது நம் நெஞ்சங்களைக் கோடாரியால் பிளந்து விடுவார். ("நீ முந்திண்டா நோக்கு...நான் முந்திண்டா நேக்கு" நினைவுக்கு வந்தாலும் அது வைடூர்யம். இது வைரம்.)
'துணை' கட்டுரைக்காக இந்தக் காவியத்தை பலமுறை பார்த்து refer செய்யும் போது இந்தக் குறிப்பிட்டக் காட்சியின் வசனத்தை நடிகர் திலகம் பேசுவதை கேட்டவுடன் நெஞ்சடைக்க என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். (அவர் வாக்கு பலித்துதான் போய்விட்டது. நடிகர் திலகத்தின் பூத உடலை மின்சார இடுகாட்டில் அல்லவா எரித்து திருநீறாக்கினார்கள் ! வருடா வருடம் அஞ்சலி செலுத்த ஒரு நினைவு சமாதி கூட நமக்கு இல்லாமல் போய் விட்டதே! அந்த ஞாபகம் அப்போது வந்துவிட்டது)
கொடி நாட்டும் வி.கே.ஆர்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/natpukkuoruvkr.jpg
பதிலுக்கு வி.கே.ஆரும் தன் பங்கிற்கு கொடி நாட்டுவார். அவரும் கதறிக்கொண்டே, "அப்படியெல்லாம் பேசாதடா.. இனிமே இப்படியெல்லாம் பேசின உன் பல்லை ஒடச்சிடுவேன் அயோக்கிய ராஸ்கல்! (உரிமையுடன்)! நீ வந்து இப்படியெல்லாம் பேசினா நான் பொறுத்துக்குவனாடா ?... என்னால தாங்க முடியுமா?...இப்ப நீயும் அழுது என்னையும் அழ வைக்கிறியே!," என்று பதிலுக்கு தலையில் அடித்துக் கொண்டு கதறும் போது அந்த இடத்தில் நாம் தசரத ராமனையோ அல்லது புரோக்கர் வி.கே.ஆரையோ காண முடியவில்லை. ஒரிஜினலான நடிகர் திலகத்தையும், அவருக்கு உயிருக்குயிரான V.K.ராமசாமியையும்தான் நேராகக் காண முடிகிறது. 'பார் மகளே பார்' காவியத்தில் சிவலிங்கமும், ராமுவும் சிவலிங்கத்தின் மகளின் நிச்சயதார்த்ததின் போது மோதிக் கொள்ளும் அந்த ஆவேச நடிப்புப் போட்டிக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல இந்த நெஞ்சை உருக்கும் நட்புப் போட்டிக் காட்சி.
மகன் பாசத்தில் மனம் மாறுமா?!...
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/maganinmaaraathapaasaththaithaininaiththu.jpg
ஆபிசிலிருந்து லேட்டாக இரவு விரக்தியுடன் வீடு திரும்பும்போது வீட்டில் தந்தை தன் மனைவியால் கொடுமைப்படுத்தப்படுவதை அறியாத மகன் செல்லக் கோபத்துடன் இவரைக் கடிந்து கொண்டு அன்பால் அரவணைத்து உபசரிக்கும் போது தன் மீது மகனுக்கிருக்கும் பாசம் எள்ளளவும் குறையவில்லை என்று விரக்தி நிலையில் இருந்து சற்றே விடுபட்டு "பந்தபாசம் எல்லாத்தையும் அறுத்து விட்டுட்டு எங்கேயாவது ஓட லான்னு பாக்குறேன்... இவன் என்ன புதுசா விலங்கு போடுறான்" என்று மகனின் பாசத்தை எண்ணியவாறே சொற்ப நேர சந்தோஷத்தை முகத்தில் பரவவிட்டு குழப்பத்தில் ஆழ்வது...
என காணும் காட்சிகளில் எல்லாம் கண்ணிலும், கருத்திலும் நிறைகிறார் நடிப்பின் துணைவர்.
விளையாட்டிலும் மருமகளுடன் போட்டி.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/marumagaludanvilayttilumpoatti.jpg
மனைவியை இழந்த widower ஆக தன் மகன் ஒன்றே உலகமென வாழ்ந்து மருமகளால் உதாசீனப் படுத்தப் படும் தன்மானமுள்ள நடுத்தர வர்க்கத்து மாமனாரை அப்படியே அச்சு அசலாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் நடிகர் திலகம். தானும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் மகிழ்சிக்குள்ளாக்க வேண்டும் என்ற உயரிய உள்ளம் கொண்ட உயர்ந்த மனிதனாகப் பரிமளிக்கும், பாமரனுக்கே உரிய ஆசாபாச விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படுத்தப்படும் அருமையான பாத்திரம். கம்பீரத்துடனும், சிம்மக்குரல் கர்ஜனையுடன் பல பாத்திரங்களில் நடிப்பு வேந்தரைக் கண்டு களித்த நமக்கு, நார்மலாக நம்மில் ஒருவராக உலவும் ஒரு சராசரி நடுத்தர வர்க்க தசரத ராமரின் பாத்திரத்தை அனாயாசமாய், அசாதரணாமாய் வடித்துத் தருகிறார் நம் திரையுலக சிற்பி. இப்படிப்பட்ட பாத்திரப் படைப்பு வேறு சிக்கலானது. "நடிப்புக்காகக் கூட யார் காலிலும் நான் விழக்கூடாது' என்ற குருதட்சணைக்கருத்து நம்மவரிடமிருந்து வெளிப்படக் காரணமாயிருந்த அன்பு வெறி ரசிகர்களைக் கொண்ட அந்த சிங்கம் சீற்றத்தை விட்டு சிங்காரமாய்த் தனக்கு துணையில்லாமல் துணிவோடு தேர்ந்தெடுத்துக் கொண்ட தன்னிகரற்ற தாழ்ந்து போகக் கூடிய ரோல். கடந்த நூற்றாண்டில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அற்புதக் கேரக்டர்களை வாரி வழங்கி வாய்பிளக்க வைத்தாரென்றால் எண்பத்து இரண்டிலும் அந்த அளவிற்கு சிறப்பாக வழங்க முடியும் என்று நிரூபணம் செய்யும் ரோல். கத்தி மேல் நடப்பது போன்றது. ஒன்றிலே சூப்பர் ஹீரோவாக அறிமுகமாகி, ஈகோ மாயைகளையெல்லாம் அண்டவிடாமல் ஐந்திலேயே அசகாயசூர வில்லனாய் அதகளம் செய்து 'திரும்பிப் பார்'த்தவருக்கு எந்த வருடமானாலென்ன! எந்த வேடமானாலென்ன! ப்பூ.. தானே! இருந்தாலும் துணையைத் துணிவாகத் தேர்ந்தெடுத்தது துணிச்சல்தான். அடக்கி ஒடுங்கிப் போகவேண்டிய கேரக்டர்... ஆனால் நடிப்பில் அடங்குமா?! சும்மா ஆட்டி வைத்து விட்டதே!
மகன் மருமகளுடன் தசரதர்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/maganmarumaggalidanthasaratharaman.jpg
மொத்தத்தில் சப் ரிஜிஸ்தரார், அடக்கமான மாமனார் என்ற புதிய கோணங்களில் காட்சியளித்து வாழ்ந்து, சராசரிவாழ் மனைவியை இழந்த, மாமனார்களின் மறுபக்க அவஸ்தை அவலங்களை தன் நயமான நடிப்பால் பதிவு செய்து, உள்ளக் குமுறல்களை உணர்ச்சிகள் கொப்பளிக்காமல் உணர்த்தி, அமைதி காக்க வேண்டிய நேரத்தில் அமைதி காத்து, கொந்தளிக்க வேண்டிய சமயங்களில் அளவாகக் கொந்தளித்து, இயல்பான நடிப்பை இங்கிதமாக வழங்கி, ஈகோ இல்லாமல் இளம்தலைமுறை நடிகர்களுடன் இணை சேர்ந்து, நம் இதயங்களை மெல்லிய மயிலிறகால் மென்மையாக வருடுகிறார் நடிக மாமன்னர்.
[size=3]
அன்புடன்,
வாசுதேவன்.[
fantastic write up. I agree with you 100% of the NT movies you referred here: 'இரும்புத்திரை, அறிவாளி, பாவ மன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், மோட்டார் சுந்தரம் பிள்ளை, முதல் மரியாதை, தேவர் மகன். His method acting in those film were totally different from rest of his films. For a change I like to watch those kind of movies, but I like 'Attakaasamana' Sivaji! i;e: the villain 'Vikraman' in 'Uthama Puthiran' and Barrister Rajinikanth etc..
mr_karthik
5th October 2012, 01:46 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,
முதலில்...., வெற்றிகரமாக இரண்டாயிரம் வெற்றிப்பதிவுகளை வெற்றியுடன் அளித்து, மேலும் தொடர்ந்து வெற்றி நடைபோடும் தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியுடன் அமைய வாழ்த்துக்கள்.
அடுத்து 'துணை' திரைக்காவியத்தின் மிகச்சிறப்பான ஆய்வுக்கட்டுரைக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். முதலில் விஸ்தாரமான காட்சி விளக்கம், தொடர்ந்து அப்பாத்திரத்தில் நடிகர்திலகத்தின் நடிப்பு ராஜாங்கம், அதைத்தொடர்ந்து அவருக்கு மற்ற கலைஞர்கள் அளித்த பக்குவமான ஒத்துழைப்பு, அடுத்து தொழில்நுட்பக்கலைஞர்களின் பங்களிப்பு, இறுதியில் இத்திரைக்காவியம் உருவான விதம் பற்றி இயக்குனரின் விளக்கம் என ஒரு முழுமையான ஆய்வுக்கட்டுரை எப்படி அமைய வேண்டும் என்று இலக்கணம் வகுத்திருக்கிறீர்கள்.
ஆய்வுக்கட்டுரையைப் படிக்கும்போதே, படிப்போரை அப்படியே மானசீகமாக பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய், துணை படம் ஓடும் தியேட்டரின் மைய இருக்கையில் அமர வைக்கும் கலை, தங்களுக்கு கைவந்த கலை. (முன்பு சாரதா இதைப்போலச் செய்துகொண்டிருந்தார்). முன்பு கருடா சௌக்கியமாவின் ஆய்வைப்படித்து விட்டு அப்படத்தின் நெடுந்தகடுகளைத் தேடிப்பிடித்து வாங்கிப்பார்த்தனர் பலர். அதுபோல இக்கட்டுரையைப்படித்த பின்னர்....., கொஞ்சம் இருங்க, அந்த வீடியோ கடையில் என்ன சத்தம் ("தம்பி, அடுத்த ஆர்டர் போடும்போது நடிகர்திலகம் நடித்த 'துணை' படத்தின் டிவிடி ஒரு 200 காப்பி எக்ஸ்ட்ரா ஆர்டர் போடுப்பா. கேட்டு வர்ரவங்களுக்கு இல்லேன்னு சொல்லாமல் கொடுக்கணும்").
துணையை ஆராயும்போதே அதுபோன்ற மற்ற படங்களையும் அங்கங்கே தொட்டுக்கொண்ட விதம் அருமை. குடும்பத்தைக்காப்பாற்ற வேலைக்குப் போகும் சரிதாவைப்பற்றி 'இவளும் ஒரு தொடர்கதை', காக்காவலிப்பு காட்சியின்போது மறவாமல் ராமன் எத்தனை ராமனடியைக் குறிப்பிட்டது, நடிகர்திலகம் வி.கே.ஆர் காம்பினேஷனில் பார்மகளே பார் பற்றிய நினைவூட்டல் என அசத்தி விட்டீர்கள்.
உலகப்பெரும் கலைஞனுக்கு 'நினைவுநாளில் போய் அழ ஒரு சமாதி கூட இல்லையே' என்ற வாசகம் நெஞ்சில் விழுந்த அடி. புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி. மேலும் தீர்க்கமாகப்பேசினால் வம்பு வர வாய்ப்புண்டு. விடுவோம்.
ஆய்வின் ஆங்காங்கே இடம்பெற்ற ஸ்டில்கள் கட்டுரைக்கு மேலும் அழகு சேர்த்தன. ‘சாவிக்கொத்துக்கு ஆஸ்கார் விருது’ அழகான கருத்து. முரளிசாரும் சாரதாவும் சொல்வது போல அஃறிணைப்பொருட்களும் படத்தின் கேரக்டர்களாவதுண்டு. அழகன் படத்தில் டெலிபோன், பூவே பூச்சூடவா' வில் காலிங் பெல், நான் வாழவைப்பேனில் மோதிரம், காதல் கோட்டையில் ஸ்வெட்டர் இப்படி நிறைய. இவ்வளவு ஏன், காதலிக்க நேரமில்லையில் பாலையா, முத்துராமன், நாகேஷ் இவர்கள் அளித்த நகைச்சுவையோடு ரவிச்சந்திரனின் அந்த பழைய ஓட்டைக்காரும் நமக்கு நகைச்சுவையளித்ததே.
உங்களிடம் பிடித்த மிகச்சிறப்பம்சம், ஏற்கெனவே ரொம்ப பாப்புலரான, எல்லோருக்கும் ரொம்ப பரிச்சயமான படங்களையே ஆய்வு செய்து குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்காமல், அதிகம் பேசப்படாத படங்களைத்தேர்ந்தெடுத்து அவற்றின் சிறப்பம்சங்களை விவரித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருவது.
முன்பு உங்கள் ஆசிரியை சாரதாவும் அப்படித்தான் செய்தார். அவர் ஆய்வு செய்த பட்டியலைப்பார்த்தால் இளைய தலைமுறை, இமயம், தங்கச்சுரங்கம், பாட்டும் பரதமும், வைரநெஞ்சம், எங்கமாமா, அன்பைத்தேடி என்று யாரும் தொடாத படங்களையே அவரும் தேர்ந்தெடுப்பார். ஆசிரியை எவ்வழி மாணவர் அவ்வழி. சும்மா திருப்பி திருப்பி பராசக்தி, மனோகரா, கட்டபொம்மன், பாசமலர், திருவிளையாடல், தில்லானா, தங்கப்பதக்கம், முதல் மரியாதை என்று வட்டம்போட்டு வைத்துக்கொண்டு, அதற்குள்ளேயே சுற்றி வருவது உங்களுக்கும் பிடிக்காதது கண்டு பெருமகிழ்ச்சி.
மொத்தத்தில், நான் முதலில் சொன்னதுபோல, 'ஆய்வுக்கட்டுரை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று இலக்கணம் வகுத்து விட்டீர்கள்.
அற்புதம்... அருமை... அட்டகாசம்... சூப்பர்...
parthasarathy
5th October 2012, 03:21 PM
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
நடிகர் திலகம் எப்படி அனுபவித்து, ரசித்து, ரசித்து, இழைத்து நடித்தாரோ, அது போல், எனக்கு மிகவும் பிடித்தமான, "துணை" திரைப்படத்தை, அனுபவித்து, ரசித்து, ரசித்து, இழைத்திருக்கிறீர்கள்.
அற்புதம் என்ற சொல்லைத் தவிர வேறெதுவும் எழுதத் தெரியவில்லை.
என்னுடைய பாடல் ஆய்வுக் கட்டுரையை திரும்பவும், எழுதத் துவங்கி விட்டேன். கூடிய சீக்கிரம், பதிவிட்டு விடுவேன் என்று நம்புகிறேன். நடிகர் திலகம் ரசித்து, நடித்ததை, அவ்வளவு சுலபமாக, மேம்போக்காக எழுத யாருக்குத் தான் மனம் வரும்?
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
parthasarathy
5th October 2012, 04:14 PM
தவப்புதல்வன்
நேற்று எதேச்சையாக, சன் லைப் தொலைக்காட்சியில், இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
1972-இல், முதன் முதலாக, இந்தப் படம் வெளியான போது, சென்னை கமலாவில், முதல் நாளே பார்த்து விட்டேன். அந்த வயதில், முதலில் என்னை ஈர்த்தது, வழக்கம் போல், "Love is fine darling" - ஆங்கிலப் பாடலில், நடிகர் திலகத்தின் ஸ்டைலிஷ் நடிப்பும், இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடலும் தான்! அதன் பின்னர், எனக்குத் தெரிந்து இந்தப் பாடல் அடிக்கடி, மறு வெளியீடு செய்யப்படாததாலும், என்னுடைய கவனம், அவருடைய பழைய படங்களைப் பார்ப்பதில் கழிந்ததாலும் (நினைவு தெரிந்து பார்க்க ஆரம்பித்தது, ராஜா-விலிருந்துதான்), இந்தப் படத்தை மறுபடியும், முழு படத்தையும், பார்க்க வில்லை. சில வருடங்களுக்கு முன்னர், ஏதோ ஒரு தொலைக் காட்சியில் பார்த்த போது, நடிகர் திலகம் ஏ. சகுந்தலா வீட்டில் விழுந்து கிடக்கும் காட்சியையும், எம்.ஆர்.ஆர்.வாசு மற்றும் ஏ.சகுந்தலா டாமினேட் செய்யும் காட்சிகளும், தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால், கோபம் வந்து, படத்தை மேற்கொண்டு பார்க்காமல் எழுந்து சென்று விட்டேன். (என்னதான் நடிப்பாக இருந்தாலும், பாழாய்ப் போன மனசு கேட்க மாட்டேன் என்கிறதே!).
எல்லோரும் எழுதி எழுதி, ஒப்புக் கொண்டு விட்ட ஒரு விஷயம் தான்! அதாவது, நடிகர் திலகத்தின் இமேஜைப் பற்றிக் கவலைப்படாத குணம். இருப்பினும், இந்தப் படத்தை நேற்று கொஞ்சம் கொஞ்சமாகப் பார்க்கப் பார்க்க, மனதில் எழுந்த, பிரமிப்பு அடங்க வெகு நேரம் பிடித்தது.
1972 - எல்லோருக்கும் தெரியும், நடிகர் திலகத்தின் உச்சக்கட்ட வசூல் சாதனை ஆண்டு. வெளி வந்த 7 படங்களில், 6 படங்கள் பெரிய வெற்றி அடைந்தன. (பட்டிக்காடா பட்டணமாவும், வசந்த மாளிகையும் வெள்ளி விழா தாண்டி ஓடியது; ராஜா, ஞான ஒளி, தவப்புதல்வன் மற்றும் நீதி 100 நாட்களும், அதற்கு மேலும், ஓடின.). இது தான் முக்கியம். நடிகர் திலகம் மெல்ல மெல்ல அதிரடி நாயகனாகவும், மசாலா நாயகனாகவும் கூடப் பெரிய நிலைக்குச் சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில், எதிர் மறையான கதாபாத்திரமாயிருந்தால் கூடப் பரவாயில்லை. இது, முற்றிலும், ஒரு விதமான, கோழைத்தனம் கலந்த, இயலாமை கலந்த பாத்திரம். இதை ஏற்று நடிக்க - அதுவும், அந்தக் கால கட்டத்தில் - எவ்வளவு துணிவு வேண்டும்? இருப்பினும், தைரியமாகத் துணிந்து ஏற்று நடித்திருக்கிறார்.
ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி! இந்நாளில், யார் யாரோ இதைப் பேசுகிறார்கள். ஆனால், இந்த வாசகம் நடிகர் திலகம் ஒருவருக்குத்தான் என்றும் பொருந்தும்.
படத்தைப் பொறுத்தவரை - தொய்வில்லாமல் சீராக, சுவாரஸ்யம் குன்றாமல் சொல்லப் பட்டிருந்தது. நடிகர் திலகம், வழக்கம் போல், கதாபாத்திரமாகவே மாறியிருந்தாலும், அளவாகவும், இயல்பாகவும், அழகாகவும் நடித்திருந்தார். அருமையான பாடல்கள். இந்தப் படம் நூறு நாட்கள் ஓடியதில் வியப்பில்லை தான். (திரு. முரளி அவர்கள், "சிவாஜியின் சாதனைச் சிகரங்கள்" கட்டுரையில், 1972 - வருடத்திய படங்களைப் பற்றி அலசியிருந்த போது, இந்தப் படத்தைப் பற்றி எழுதியிருந்தது, பசுமையாக நினைவில் இருந்தது. அப்படியே எழுத முடியவில்லை. அதாவது, "ஒரு பக்கம் பட்டிக்காடா பட்டணமா மிகப் பெரிதாக ஓடிக் கொண்டிருக்கிறது, மறு பக்கம் வசந்த மாளிகை பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில், வெளியான தவப்புதல்வன், நூறு நாட்களை தொட்டது என்றால், நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபீஸ் பவர் என்ன என்பது புரியும்".)
இத்தனைக்கும், தவப்புதல்வன், ஒரு கருப்பு வெள்ளைப் படம் தான்.
திரு. முரளியின் அந்த வர்ணனையும், நடிகர் திலகத்தின், சரளமான நடிப்பும் தான், மீண்டும் தவப்புதல்வனைப் பார்க்க வைத்தது.
பார்த்து முடித்ததும், திரு. முரளியைத் தொடர்பு கொண்டு பேசியும் ஆகி விட்டது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
mr_karthik
5th October 2012, 05:07 PM
'துணை' படத்தின் ஆய்வுக்கட்டுரைக்கு என் பதில் பதிவின் சின்ன கொசுறு இணைப்பு....
நான் ஏற்கெனவே சொன்னபடி, நம்மவர்கள் மிக அருமையாக சமைப்பார்கள். ஆனால் பறிமாறும்போது கோட்டை விட்டு விடுவார்கள்....
காலை 8 மணிக்கு டிபன், மதியம் 12 மணிக்கு லஞ்ச், மாலை 6 மணிக்கு மாலை டிபன், இரவு 9 மணிக்கு டின்னர். இதுதான் வழக்கமான நியதி.
ஆனால் காலை 8 மணிக்கு டிபன், காலை 9 மணிக்கு லஞ்ச், 10 மணிக்கு டிபன், 11 மணிக்கு டின்னர், 12 மணிக்கு மறுநாளுக்கான காலை டிபன்... இப்படி பறிமாறியவர்களைப் பார்த்ததுண்டா..?. என்னதான் லஞ்ச் அருமையாக இருந்தாலும், டிபன் சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில் லஞ்ச் சாப்பிட முடியுமா?. சாப்பிட மறுத்த மக்களை குறை சொல்ல முடியுமா..?.
இதோ நம்மவர்கள் பறிமாறிய லட்சணம்....
03.09.1982 தியாகி
01.10.1982 துணை
14.11.1982 பரீட்சைக்கு நேரமாச்சு
14.11.1982 ஊரும் உறவும்
10.12.1982 நெஞ்சங்கள்
விஸ்வரூபம் வெற்றிப்படம் தந்த கிருஷ்ணா மீண்டும் படம் எடுக்கிறார். துரை என்ற அருமையான இயக்குனர் முதன்முறையாக இயக்கி படமெடுக்கிறார். 'வேறுபக்கம்' தாவாமல் தன்பக்கமே நிலைத்து நிற்கும் முக்தா படமெடுக்கிறார். தன் சக நடிகர்கள் ஏ.வி.எம்.ராஜனும் புஷ்பலதாவும் இரண்டாவது முறையாக படமெடுக்க, அதை சக நடிகர் மேஜர் இயக்குகிறார். இன்னொரு சக நடிகர் விஜயகுமார் முதன்முறையாக படமெடுக்கிறார்.
எப்படியெல்லாம் திட்டமிட்டு எப்படியெல்லாம் வெளியிட்டிருக்கலாம். யாரையும் குற்றம் குறை சொல்வதற்கல்ல இது. பெரும் வெற்றிகளை ஈட்டியிருக்க வேண்டிய படங்களெல்லாம் அநியாயமாய் வெற்றி வாய்ப்புகளை இழந்தனவே என்ற அடித்தட்டு ரசிகனின் வயிற்றெரிச்சல், வேறொன்றுமில்லை.
Gopal.s
5th October 2012, 06:41 PM
கார்த்திக் சார்,
நீங்கள் உள்ளம் நிறைந்து வாசுவிற்கு அளித்த பாராட்டுக்கு மிக நன்றி. நீங்கள் பாராட்டுக்கே இலக்கணம் வகுத்து,இதுதாண்டா பாராட்டு என்று சொல்ல வைத்து விட்டீர்கள்.
உங்கள் வயித்தெரிச்சலில் ,நானும் பங்கெடுத்து கொள்கிறேன். வெளியீட்டில் நம்மவர்களின் சொதப்பல் சொல்லி மாளாது. என்னதான் பாதாம் அல்வாவாகவே இருந்தாலும், ஒரே நேரத்தில் 20 கிலோவா சாப்பிட முடியும்? ஆனாலும் சதவீத கணக்கு வெற்றியை பார்த்தாலும் நம்மவரை அடிக்க ஆளில்லை.
J.Radhakrishnan
5th October 2012, 10:36 PM
டியர் வாசு சார்,
தங்களது இரண்டாயிரமாவது பதிவாக அமைத்த "துணை" ஆய்வு கட்டுரை பிரமாதம், காட்சியை விவரிக்க துணையாய் பதிவிட்ட ஸ்டில்களும் அற்புதம்.
anm
5th October 2012, 10:48 PM
Dear Vasudevan Sir,
It is really great pleasure in congratulating you on crossing 2000 posts and each one of your post is an 'Research' itself and this is not mean but a great achievement.
And your Analysis of "Thunai" picture is a great example of your writings.
We always look for your write-ups as we look for our Great NT's acting!!!!
ANM
Jeev
6th October 2012, 06:11 AM
Dear Sivaji Fans,
Here is the link to watch Garuda Sowkiyama.
http://www.tamilflix.net/2012/10/garuda-sowkiyama-tamil-movie-watch.html
Jeev
oowijaez
6th October 2012, 09:17 AM
I'm beginnig to become addicted to this site. I've been yearning to talk to people about NT, now I found one with 'NT ardent fan's club. Even though I do not have the capacity to do a big write up's like you people, I read each one of them. Also once I read a write-up or comment, I tend to watch the NT movie. I have created a 'Sivaji Movie Bank' folder in my external hard disk! trying to save as many of his films as possible. Good to know so many Tamilans in the world have the same taste as me, brilliant! Anybody who talks nice things about Sivaji Ganesan would be my friend, so you guys are my friends!! Thank you
RAGHAVENDRA
6th October 2012, 10:08 AM
Dear Vankv
Welcome to the world of the ONLY EMPEROR IN CINEMA the Nadigar Thilagam Sivaji Ganesan world. Happy to read your post and delighted. PLEASE INTRODUCE YOURSELF, your real name, where are you from and so on, so that you may have a chance to meet like minded friends in person in your surroundings.
Also from your posts I guess you might be in your mid fifties or late forties. This is only a wild guess. It may be wrong because we come across so many youngsters belonging to the current generation being ardent / hardcore fans of NT. If it is so, it will be more happier for seniors like us. Please share your nostalgia on NT, away from his movies. This will enlighten us on his social and public contributions hitherto unknown to the Society.
Warm welcome once again
Raghavendran
vasudevan31355
6th October 2012, 02:43 PM
சித்தூரில் நடிகர் திலகத்தின் பிறந்த நாள்.
எனதருமை நண்பர் சித்தூர் திரு.வாசுதேவன் அவர்கள் சித்தூரில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளின் இரு புகைப்படங்களை ஈ மெயிலில் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். ஆந்திர மாநில சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் திரு.C.N.ராஜசேகர் அவர்களும், சித்தூர் நகர தலைவர் திரு.தரணி முதலியார் அவர்களும் மற்றும் திரளான நடிகர் திலகத்தின் ரசிகர்களும், நடிகர் திலகம் பிறந்தநாள் விழா நிகழ்சிகளில் கலந்து கொண்டனர். புகைப்படங்களை அனுப்பி வைத்த அன்பு நல்லுள்ளம் திரு வாசுதேவன் அவர்களுக்கு எனது சார்பிலும், நமது திரியின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகள். புகைப்படங்கள் இதோ நமது பார்வைக்கு.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/Untitled-2.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/Untitled-3.jpg
vasudevan31355
6th October 2012, 03:41 PM
டியர் வினோத் சார்,
2000 பதிவுகளுக்கான சிறப்புப் பரிசாக என் ரத்தத்தின் ஒவ்வொரு அணுவிலும் கலந்த ஆண்டனி என்ற அருணை தந்து மெய்மறக்கச் செய்து விட்டீர்கள். ஆஹா! என்ன போஸ் சார் அது! அற்புதமான நிழற்படத்திற்கு எண்ணிலடங்கா நன்றிகள் சார்.
vasudevan31355
6th October 2012, 03:42 PM
டியர் ராகவேந்திரன் சார்,
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் சிறப்பு ரத்த தான முகாம் புகைப்படங்கள் அம்சம். ரத்ததான முகாம் பற்றிய விவரங்கள் லைவ் ரிலே மாதிரி அருமையாக இருந்தது. அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் திரு கே.வி.பி. பூமிநாதன் அவர்கள் அன்னை இல்லத்திலுள்ள நடிகர் திலகத்தின் படத்திற்கு மரியாதை செலுத்தும் காட்சி அட்டகாசம். தலைவரின் மலர்ந்த முகத்தைப் பார்க்கையில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி சென்னை நகரில் ஒட்டப் பட்டிருந்த பல்வேறு போஸ்டர்கள் கண்களையும், கருத்தையும் கவருகின்றன.
ஹிந்து நாளிதழில் சிவாஜி பிரபு அறக்கட்டளை விழாவைப் பற்றி வெளிவந்துள்ள கட்டுரையும் அதி அற்புதம்.
'துணை' பற்றிய தங்களின் அன்பு கலந்த அருமைப் பாராட்டு கண்டு மனம் மகிழ்கிறேன். திரியில் நான் பங்கு பெற எனக்கு ஊக்கமளித்து என்னை திரிக்கு வரச் செய்ததே தாங்களும், அன்பு முரளி சாரும்தான். நான்தான் தங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும். மூத்த ரசிகரான தங்களது அன்பு ஆசீர்வாதங்கள் இருக்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். இரண்டாயிரம் பதிவுகள் கடந்ததை வாழ்த்தும் முகமாக பூஜ்யங்களுக்குள்ளே ராஜ்யங்களை ஆண்டு கொண்டிருக்கும் நடிப்புலக இறைவனாரின் நிழற்படங்கள் தாங்கள் எனக்களித்த விலைமதிப்பில்லா மாணிக்கப் பரிசுகள். அதற்காக என் உள்ளம் குளிர்ந்த நன்றிகள். அற்புதமான பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
vasudevan31355
6th October 2012, 03:54 PM
டியர் சந்திரசேகரன் சார்,
தங்கள் வாழ்த்துகளுக்கு என் அன்பு நன்றிகள்.
vasudevan31355
6th October 2012, 03:55 PM
டியர் கோபால் சார்,
கிழிச்சு நாட்டி தோ(ரணம்) கட்ட எலி ஒன்று பொந்து வழியாக மெல்ல எட்டிப் பார்த்து யாருமில்லாத நேரத்தில் துணைக்கு 'துணை'யை வைத்துக் கொண்டு இதுதான் சமயமென்று உள்ளே நுழைந்து விட்டது. மூஞ்சுறுவா அல்லது பெருச்சாளியா என்பதை அதுவே விரைவில் காட்டி விடும். anyhow 'துணை'யை ரசித்ததற்கும், கைபேசியின் வழியே பாராட்டித் தள்ளியதற்கும் தேங்க்ஸ் ராஜா!
vasudevan31355
6th October 2012, 04:32 PM
அன்பு கார்த்திக் சார்,
நன்றிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட தங்களின் 'துணை' பற்றிய பாராட்டுப் பதிவை (யப்பா..எவ்வளவு பெரிய பாராட்டு!) பதிவிட்டு தங்கள் அன்பினால் என்னைத் திக்கு முக்காடச் செய்து விட்டீர்கள். தங்கள் பாராட்டு என்ற இன்பச் சாகரத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னமும் எழுந்தபாடில்லை. தங்கள் தூய்மையான அன்பிற்கும், அகம் மகிழ்ந்த பாராட்டுதல்களுக்கும் என் இருகரம் கூப்பி தலை வணங்கிய என் நன்றிகளை தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.நன்றி! நன்றி! நன்றி!
தாங்கள் கூறியது போல மணிக்கொருதரம் தலைவாழை விருந்து வைத்தால் திகட்டித்தான் போகும். நல்ல உணவு வகைகளும் நாசமாகும். சரியான திட்டமிடுதல் இருந்திருந்தால் துணை இன்னும் சிறப்பாகப் போய் இருக்கும். கடலூரில் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடி பெரிய வெற்றியைப் பெற்றது 'துணை'. (கடலூர் துறைமுகம் கமர் மற்றும் கடலூர் 'ரமேஷ்') இத்தனைக்கும் நல்ல கூட்டம் இருக்கும் போதே வழக்கம் போல தூக்கப்பட்டு விட்டது.
vasudevan31355
6th October 2012, 04:39 PM
டியர் பார்த்தசாரதி சார்,
'துணை' பதிவிற்கான தங்களுடைய மனமுவந்த பாராட்டுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். அதுவும் தங்களுக்கு 'துணை' மிகவும் பிடித்த காவியம் எனத் தெரிவித்திருப்பது இரட்டை சந்தோஷமளிக்கிறது. பல பேருக்கும் பிடித்த காவியம். ஏன் வெளிப்படுத்தமாட்டேன் என்கிறார்கள் என்பது நிஜமாகவே புரியவில்லை. தாங்கள் பாடல் ஆய்வு எழுதத் தொடங்கிவிட்டீர்கள் என்ற செய்தி தேனாய் இனிக்கிறது. எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
RAGHAVENDRA
6th October 2012, 04:40 PM
இத்தனைக்கும் நல்ல கூட்டம் இருக்கும் போதே வழக்கம் போல தூக்கப்பட்டு விட்டது.
பேசாமல் இதை ஒவ்வொரு படத்தின் டைட்டிலோடும் டிவிடியில் இணைத்து விடலாம். முக்கால் வாசிப் படங்களுக்கு பொருந்தும் வாக்கியம் .... இல்லை இல்லை.... பொன்மொழி ....
RAGHAVENDRA
6th October 2012, 04:42 PM
பார்த்த சாரதி, என் பாடலே கதி என்று நடிகர் திலகம் ஓடி வந்து அருகில் அமர்ந்து ஒவ்வொரு வரியாய் படிக்கச் சொல்லி ரசித்து, பின் அதனையே வசனமாய் ஒப்பித்தாலும் ஒப்பித்து விடுவார் ... அந்த அளவிற்கு அவருடைய பாடல் ஆய்வு அமர்க்களமாய் இருக்கும்.. சீக்கிரம் வாங்க...
vasudevan31355
6th October 2012, 04:47 PM
டியர் பார்த்தசாரதி சார்,
'தவப்புதல்வன்' பற்றிய தங்களின் பதிவு தங்கம். திரும்ப 'தவப்புதல்வன்' பற்றிய பழைய ஞாபகங்களில் மூழ்கச் செய்து விட்டீர்கள். தலைவர் கருப்பு வெள்ளையில் அவ்வளவு அழகாக இருப்பார். குறிப்பாக கண் தெரியாமல் பல்வேறு முகபாவங்களை அற்புதமாக வெளிப்படுத்தி ரூமில் தனியாக எம்.ஆர்.ஆர்.வாசுவிடம் நம்மவர் போடும் புத்திசாலித்தனமான அந்த அற்புத சண்டைக் காட்சியைப் பற்றி நினைக்கும் போதே.... (கார்த்திக் சார், புரிகிறது... புரிகிறது.... ok. done) அற்புதமான நினைவுப் பதிவிற்கு கலக்கல் நன்றிகள் சார்!
vasudevan31355
6th October 2012, 04:52 PM
கார்த்திக் சார் அளித்த பாராட்டிற்கு கோபால் சார் நன்றி சொன்னதற்காக கோபால் சாருக்கு என் நன்றிகள். (கார்த்திக் சாருக்கும் சேர்த்து)
vasudevan31355
6th October 2012, 04:58 PM
டியர் jeev சார்,
என்னுடைய சிந்தை கவர்ந்த 'கருடா சௌக்கியமா' காவியத்தின் வீடியோ இணைப்பிற்கு நன்றி! உடனே டவுன்லோட் செய்துவிட்டேன். பார்க்க வேண்டியதுதான் பாக்கி.
vasudevan31355
6th October 2012, 05:03 PM
டியர் vankv சார்,
'துணை' பற்றிய தங்களின் பாராட்டு இனிமை! நன்றி! தங்கள் உள்ளத்தில் நடிகர் திலகம் எந்த அளவிற்கு குடிகொண்டிருக்கிறார் என்று புரிகிறது. நடிகர் திலகம் என்னும் இன்பக் கடலில் மூழ்கி உங்களால் எவ்வளவு முத்துக்கள் எடுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு முத்துக்களை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
kalnayak
6th October 2012, 05:05 PM
டியர் வாசுதேவன் சார்,
பிடியுங்கள் எனது பாராட்டுக்களை உங்களது இரண்டாயிரமாவது பதிவிற்கு. இன்னும் பதியப்போகும் பல்லாயிரம் பல்லாயிரம் பதிவுகளுக்கும் எனது advance வாழ்த்துகள்.
துணை திரைப்பட ஆய்வு கட்டுரை... அபாரம், அற்புதம், அட்டகாசம். ரமேஷ் திரை அரங்கில் நான் பார்த்து ரசித்த அருமையான திரைப்படம். எனக்கும் மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்று.
vasudevan31355
6th October 2012, 05:08 PM
டியர் ஆனந்த் சார்,
தங்களின் 'துணை' பற்றிய பாராட்டுக்கு சந்தோஷத்துடன் கூடிய என் நன்றிகள்
vasudevan31355
6th October 2012, 05:09 PM
டியர் ராதாகிருஷ்ணன் சார்,
'துணை' யின் பதிவுகளையும், குறிப்பாக ஸ்டில்களையும் பாராட்டியதற்கு என் அன்பு நன்றி!
vasudevan31355
6th October 2012, 06:52 PM
அன்பு பம்மலார் சார்,
நடிகர் திலகம் பிறந்த நாள் திருச்சி விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பியதற்கு மிக்க சந்தோஷம். நாளையில் இருந்து என்னென்ன ஆச்சர்யங்கள் அளித்து கலக்கப் போகிறீர்களோ! தாங்கள் ஊர் திரும்பியவுடன் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சற்று லேட்டாக தங்களுக்கு இந்தப் பதிவை இடுகிறேன்.
'பாவமன்னிப்பு' சுதேசமித்ரன் இதழில் வந்த 'பாட்டுப் போட்டி' விளம்பரம் பதிவிட்டு கலக்கியுள்ளீர்கள். காணக் கிடைக்காத மிக மிக அரியதொரு விளம்பரமிது.
'கப்பலோட்டிய தமிழன்' மறு வெளியீட்டு விளம்பரம் நன்று.
பத்திரிகை புகைப்படங்கள் வரிசையில் "சத்ரபதி சிவாஜி" தொலைக்காட்சி நாடகப் புகைப்படம் மற்றும் தகவல் தகதகக்கிறது. சிவாஜி ரசிகனில் வெளிவந்த 'வீர சிவாஜி' வியக்க வைக்கிறார். எவ்வளவு பெரிய நிழற்படம்! அற்புதம். அதே போல வரலாற்று ஆவணம். தாராவியிலிருந்து பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய கட்டுரை வடக்கிலும் தலைவருக்கிருக்கும் செல்வாக்கை பறை சாற்றுகிறது.
அடுத்தது மிக முக்கியமான எனக்கு பிடித்த திலகன் அவர்கள் மறைவுக்காக தாங்கள் பதிவிட்டிருந்த பக்கா கலக்கல் பதிவு. ஆஹா! திலகன் அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி வானளாவப் புகழ்ந்த சினிமா எக்ஸ்பிரஸ் செய்திக் குறிப்பை பத்திரப்படுத்தி வைத்து சமயம் பார்த்து அளித்துள்ளீர்களே! நிஜமாகவே சிலிர்க்கிறது. திலகனின் மேல் உள்ள மரியாதை தங்கள் பதிவின் மூலம் மேலும் பலமடங்கு உயர்ந்து விட்டது. அதற்காக என் ஆத்மார்த்தமான நன்றிகள். "ஒரு யாத்ரா மொழி(1997)" இரண்டாவது வார விளம்பரமும் செம்மையாக உள்ளது.
ஒன்பதாவது பாக நடிகர் திலகம் தாய்த்திரியில் தங்களுடைய வசந்த மாளிகை பதிவுகளுக்கான லிங்கைக் கொடுத்திருந்தீர்கள். ஏற்கனவே பார்த்திருந்தாலும் மீண்டும் பார்க்கும் போது பிரமிப்பு அடங்க வெகுநேரமாயிற்று. என்ன ஒரு அசுரத்தனமான உழைப்பை தந்து அனைவரையும் மகிழ்வித்திருக்கிறீர்கள்!
"வசந்த மாளிகை" குறித்து மதி ஒளியில் நடிகர் திலகம் வரைந்துள்ள கட்டுரை கற்கண்டு. வசந்த மாளிகை வெற்றிக் செய்தியை தன்னுடைய பிறந்தநாள் பரிசாக ரசிகர்கள் வழங்க வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்த கலைத்தெய்வத்திற்கு நம் கண்மணிகள் அவருடைய வாழ்நாளின் போதும், அவர் மறைந்த பின்னரும்கூட இன்றளவும் வசந்த மாளிகையை வெற்றி பரிசாக வழங்கி வருகிறார்களே! என்னவென்று பாராட்டுவது! நடிகர் திலகம் பற்றி தயாரிப்பாளர் திரு. டி. ராமாநாயுடு மதி ஒளியில் அளித்துள்ள கருத்தும் கவிதைதான். ஒரு தயாரிப்பாளர் போல திலகம் செயல்பட்டதை என்னும்போது தயாரிப்பாளர்கள் மேல் இருந்த அவரது அக்கறை பளிச்சிடுகிறது.
இதயதெய்வத்தின் 85வது ஜெயந்தியை முன்னிட்டு தாங்கள் அளித்து எங்களை மகிழ்வித்த கலைதெய்வத்தை ஈன்றெடுத்த தெய்வங்கள், அவதார தெய்வம் அவதரித்த 'விழுப்புரம்' இல்லம்,அதைப் பற்றிய அரிய தகவல்கள், 'அன்னை இல்ல' விநாயகரை வழிபடும் தெய்வத்தம்பதியினரின் நிழற்படம், 'இதயம் பேசுகிறது' இதழில் வந்த மணியனின் மணியான புகழாரம்...
ஆனந்த விகடனில் வெளிவந்த நடிகர் திலகத்தின் 43வது பிறந்ததின விழா தொகுப்பு விவரங்கள்,ஆளுயர மாலையுடன் அருள்பாலிக்கும் அண்ணனின் நிழற்படங்கள், பாராட்டி மகிழும் இன்றைய தமிழக முதல்வர், மக்கள் கலைஞர், தர்மேந்திரா, நடிகை பாரதி, மெல்லிசை மன்னர், நாகேஸ்வரராவ் மற்றும் இதர நட்சத்திரங்கள், கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் கோமகனார், அருகில் அழகே உருவாய் குட்டியாய் இளைய திலகம், தளபதி, செல்ல புதல்விகள் மற்றும் அன்னை இல்லத்தின் மூத்த அன்னை, கேக் ஊட்டி மகிழ்ந்து சிரிக்கும் அருமை மகள் சாந்தி இணைந்துள்ள நேர்த்தியான புகைப்படங்கள்...
பொம்மை இதழில் வெளிவந்த 'நடிகர் திலகத்தின் 43வது பிறந்ததின விழா' பிரம்மாண்டமான மூன்று பக்க அருமையான நிழற்படங்களுடன் கூடிய அற்புத ஆவணக் கட்டுரை, பொம்மையில் வெளிவந்த 'எங்கள் ஊர் கலைஞர்' இளங்கோ பாரிவள்ளலின் அதியற்புதக் கட்டுரை, சிவாஜி ஜெயந்தி நல்வாழ்த்துக்களில் செந்தூர பிறைத் திலகமிட்டு ஜொலிக்கும் கலர் கலக்கல் வீர சிவாஜியின் கம்பீர நிழற்படம், திரியின் 150-ஆவது பக்கத்தில் பட்டையைக் கிளப்பும் 'சவாலே சமாளி'யின் விளம்பரப் பொக்கிஷங்கள், குறிப்பாக ஊர் மக்களுடன் நூறு நாள் வெற்றிபவனி வரும் மனிதர் குல 'மாணிக்கம்'...
என்று திரும்பிய பக்கமெல்லாம் ஆனந்தத்தால் திகைக்க வைக்கும் அற்புத பதிவுகளைத் தந்து "இந்தப் பதிவு போதுமா... இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என்று மலைக்க வைக்க உங்களைத்தவிர வேறு யாரை சொல்ல முடியும்?
"இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்?" என்று பாடினான் பாரதி.
அதுவேதான் இங்கும். எங்கள் பம்மலாரைப் பெற நாங்கள் என்னென்ன தவங்கள் புரிந்தோமோ! தங்கள் உன்னதப் பதிவுகளை எவ்வித சிரமுமுமின்றி பலன்களாய் அனுபவிக்கிறோம். அற்புதமான காணக் கிடைக்காத தங்கள் பதிவுகளுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். அதைவிட தங்கள் சிரமம் பாரா உழைப்புக்கு கோடி கோடி நன்றிகள்.
Jeev
6th October 2012, 08:52 PM
Dear Vasudevan Sir,
More Sivaji films ...
http://www.tamilflix.net/2012/10/viswaroopam-tamil-movie-watch-online.html
http://www.tamilflix.net/2012/10/vilaiyattu-pillai-tamil-movie-watch.html
Regards,
Jeev
டியர் jeev சார்,
என்னுடைய சிந்தை கவர்ந்த 'கருடா சௌக்கியமா' காவியத்தின் வீடியோ இணைப்பிற்கு நன்றி! உடனே டவுன்லோட் செய்துவிட்டேன். பார்க்க வேண்டியதுதான் பாக்கி.
RAGHAVENDRA
6th October 2012, 11:26 PM
அன்பு நண்பர்களே,
இங்கே இரு பாடல்களின் காணொளிகளைப் பார்ப்போம்
1. கர்ணன் - இரவும் நிலவும் வளரட்டுமே
http://youtu.be/dwVo1Bbn1T4
2. திருவிளையாடல் - பாட்டும் நானே
http://youtu.be/xg_hBWlR3h0
இந்த இரு பாடல்களுமே சிவாஜி ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து ரசிகர்களின் நெஞ்சிலும் நீங்கா இடம் பிடித்தவை. இரண்டுமே கிட்டத் தட்ட 50 ஆண்டு காலப் பழமை வாய்ந்தவை என்றாலும் பசுமையாக நினைவில் உள்ளவை.
இதில் நவீன மயமாக்கலில் வெளி வந்து புதிய தலைமுறையினரை ஈர்க்கும் சக்தியை நிரூபித்த படம் கர்ணன். இந்த 2012ம் ஆண்டில் முதலிடத்தில் சாதனை புரியும் அளவிற்கு மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது கர்ணன் திரைக் காவியம். ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் தங்கள் குடும்பங்களோடு கண்டு களித்த படம் 2012ல் கர்ணன் மட்டுமே. பொது மக்கள் மாபெரும் வெற்றியைத் தந்த இப்படம், இதற்குப் பிறகு இனிமேல் நல்ல பழைய படங்களை - அது யார் நடித்திருந்தாலும் - நவீன மயமாக்கலில் கொண்டு வர ஊக்கம் அளித்தது என்பது உண்மை. இதற்கு இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் திரைத் தொழிலில் இருப்போரே சாட்சி. குறிப்பாக நடிகர் திலகத்தின் படங்களில் புதிய பறவை, தில்லானா மோகனாம்பாள், பாச மலர், என பல பட்டியலில் வரிசையில் உள்ளன. சிலவற்றிற்கான ஆரம்ப கட்ட வேலைகளும் துவங்கி விட்டன எனவும் செய்திகள் உள்ளன. இப்படி தமிழ் கூறும் நல்லுலகில் நடிகர் திலகத்தின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதற்கு கர்ணன் பெற்ற வெற்றியே காரணம்.
இதனைத் தக்க வைக்க ஒவ்வொரு ரசிகரும் தம்மாலான முயற்சியில் ஈடுபட்டு ஆவலுடன் காத்திருக்கும் வேளையில் திடீரென்று ஓசையின்றி திருவிளையாடல் படம் திரையிடப் பட்டது உண்மையிலேயே ஒவ்வொரு ரசிகருக்கும் அதிர்ச்சியினைத் தந்துள்ளது என்றால் மிகையில்லை. இருந்தாலும் அதனையும் தாங்கிக் கொண்டு அந்தப் படத்திற்கு வரவேற்பினை மக்கள் தந்துள்ளதை ரசிகர்கள் ஊக்கத்துடன் பேசிக் கொள்வதை காண நேரிட்டது.
சென்ற 15.09.2012 சனிக்கிழமை யன்று சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் திரையிடப் பட்ட திருவிளையாடல் இன்று 06.10.2012 தனது 22வது நாளைக் காண்கிறது. உட்லண்ட்ஸ் திரையரங்க வளாகத்தில் எனக்கு நினைவு தெரிந்து இதற்கு முன்னர் பழைய தமிழ்ப் படம் 25 நாட்களைக் கடந்து ஓடியதாக எனக்கு நினைவில்லை.
இதுவே ஒரு சாதனையாகக் கூறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் திடீரென்று வெளியிட்டு விட்டதற்கு காரணம் கூறப் பட்டாலும், படம் நன்றாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதைக் கூடவா சொல்லக் கூடாது என்று மனதில் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை. அதே போல் பேபி ஆல்பர்ட்டிலும் இப்படம் 2 வாரங்களாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
எவ்வளவு பெரிய படம், எப்படி வெளியிட்டிருக்கப் பட வேண்டும் என்றெல்லாம் எதிர் பார்த்ததெல்லாம் இல்லாமல் ஆகிவிட்ட போதிலும், வெளியிட்ட பின் அதனை நல்ல முறையில் மக்களிடம் சென்று சேர்க்கும் பணியைக் கூடவா செய்ய முடியவில்லை. விளம்பரங்கள் எல்லாம் ஏதோ அந்தக் காலத்தில் குதிரை வண்டியில் தட்டி கட்டி, இன்றே கடைசி என்று துண்டு காகிதம் ஒட்டி செல்வார்களே அந்த தோற்றத்தில் போஸ்டர்கள் திருவிளையாடல் படத்திற்கு இந்த 21வது நூற்றாண்டில் ஒட்டப் பட்டிருப்பது, அதுவும் டிஜிட்டல் முறையில் நவீன மயமாக்கப் பட்ட ஒர் படத்திற்கு, ஒட்டப் பட்டிருப்பது மனதுக்கு மிகவும் வருத்தமாயுள்ளது.
இந்த நேரத்தில் திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களுடைய பணியை நினைக்காமல் இருக்க முடியவில்லை, பாராட்டாமல் இருக்க முடியவில்லை. கர்ணன் படம் 2012ம் ஆண்டையே திருப்பிப் போட்டு பார்க்க வைத்தது என்றால் அதற்கு அதி முக்கிய காரணம், அதனை வெளியிட்டதோடு நில்லாமல் மிகப் பெரிய அளவில் மக்களிடம் அதனை சென்று சேர்த்த விதம் தான் எனலாம்.
கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பின்னால் சொக்கலிங்கம் அவர்களின் உழைப்பு இருந்தது. அந்த உழைப்பு எத்தனை மேன்மை வாய்ந்தது என்பது, திருவிளையாடல் படத்தின் வெளியீட்டின் மூலம் நன்றாகத் தெரிகிறது.
அவருடைய அருமை இப்போது நன்றாகவே புரிகிறது.
அப்போது சொன்னோமோ இல்லையோ, இப்போது கூறுகிறோம் சொக்கலிங்கம் சார் ..
நன்றி, நன்றி, நன்றி..
RAGHAVENDRA
7th October 2012, 07:15 AM
IMPACT OF NADIGAR THILAGAM ON THE CURRENT GENERATION
http://youtu.be/KnG6LdIHiOI
RAGHAVENDRA
7th October 2012, 07:26 AM
FRANKT SINATRA (http://en.wikipedia.org/wiki/Frank_Sinatra) - பாப் உலகின் முடி சூடா மன்னன். தன் குரலால் உலகையே தன் காலடியில் அடிமைப் படுத்தியவன். பாப் உலகின் பொற்காலமான 60களில் கொடி கட்டிப் பறந்த இவருடைய பிரசித்தி பெற்ற பாடல்களில் ஒன்று Strangers in the Night. இப் பாடலைப் பற்றிய குறிப்பு http://en.wikipedia.org/wiki/Strangers_in_the_Night இந்த இணைப்பில் உள்ளது.
இந்த இனிமையான, மயக்கமூட்டக் கூடிய பாடலைப் பின்னணியாக வைத்து நடிகர் திலகம் - பத்மினி ஜோடிக்கு மரியாதை செலுத்தியுள்ளார் ஒரு அன்பர். அந்த வீடியோ இங்கே நம் பார்வைக்கு.
http://youtu.be/noYV4k5bIVA
குறிப்பு .. இந்தப் பாடலைக் கேட்டால் நமக்கு ஒரு தமிழ்த் திரைப்படப் பாடல் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாது. அந்தப் பாடலைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.
RAGHAVENDRA
7th October 2012, 07:35 AM
Anandha Vikatan Tweet as a tribute to NT
https://pbs.twimg.com/media/A4F-aNVCcAAL1Or.jpg:large
ScottAlise
7th October 2012, 09:54 AM
Hi,
I saw Garuda Sowkiyama yesterday before the link was posted . I was searching for this movie since it was discussed in the thread's 9th part . Even a ardent person posted some screenshots(Sorry Could not remember his name) But million of thanks to him .
Many of them criticised NT for this movie but for me this movie was one among the best
First: His tamil speaking style in this movie. We all know NT for his unique command ober tamil language here his language speaking ability is superb broken tamil chennai style.
2. His Gethu ultimate mass
3. His dressing style wearing baniyan and transparent silk top with pattu vesthti Sivaji sir inthu style
Vera yaravudu ippidi panna comedy thaan
4. Walk: slow, steady, confidence walk
5. Diction: his affectionate calling of Thyiyagarajan as " Muthukrishnaaa" is still ringing in my ears
6. Perfect fit for God father
7. Henpecked husband though he is a underworld Don
9. Couple of Dialouges reveal his natural character
Sujatha Madam: En kanavar oru appavi
Thengai: Amam ma
Thengai:Nalla Nadikireng
NT: Nadikaratha enkaka phew: ( Reaction like " I don't know)
Judge: DO u need a lawyer?
NT: Parasakthi arul ala enaku nanae Vathunadunathan Gauvravam.
Climax: Enga Amma enna nadikarathu kaga thaan pethuirukanga, Sagaravarikum Naan nadikuren neenga pathukute irunga
I have also seen many movies inspired by this movies'
A ordinary man to mafia king: Nayagan
Handling Daughter's marriage: Nallavanuku Nallavan
Keeping his underworld life a secret from his wife: Ezhumalai
Many more influences
Once again a million of thanks to people who posted screenshots & discussed about it
vasudevan31355
7th October 2012, 10:08 AM
நடிகர் திலகத்தின் பிறந்தநாள் (1-10-2012) அன்று ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறப்புத் தேன்கிண்ணம் நிகழ்ச்சியில் நடிகர் திலகத்தின் அருந்தவப் புதல்வர் 'தளபதி' ராம்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நடிகர் திலகத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ஒருமணி நேர நிகழ்ச்சி சென்ற வாரம் முடிந்து நாளை மீண்டும் தொடர்கிறது. நம் நண்பர்கள் அனைவரும் கண்டு மகிழ இந்நிகழ்ச்சியை முழுவதுமாக பதிவு செய்து தரவேற்றி சில பாகங்களாக தரலாம் என்று எண்ணம். இதன் முதல் பாகத்தை இப்போது அனைவரும் கண்டு மகிழ்வோம். நன்றி!
http://www.youtube.com/watch?list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg&v=TKMUUsyIs4o&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
vasudevan31355
7th October 2012, 10:45 AM
ராகுல்ராம்,
நீங்கள் குறிப்பிட்ட உங்களுக்கு பெயரே தெரியாத 'கருடா சௌக்கியமா' screenshots- களை அளித்த வாசுதேவன் என்ற பெயர் கொண்ட நடிகர் திலகத்தின் கடைக்கோடி ரசிகன் நான்தான். 'கருடா சௌக்கியமா' screenshots- மட்டுமல்ல ஆய்வையும் நான் எழுதியதாக கூட லேசாக எனக்கு ஞாபகம். நான் அளித்த screenshots-தங்கள் கண்களுக்குத் தெரிந்து ஆய்வுக் கட்டுரை மட்டும் தங்கள் கண்களுக்குத் தெரியாமல் போனது உலகின் நெம்பர் 1 அதிசயம். என்னை உங்களுக்குத் தெரியாது போல. இப்போது என்னை நான் தங்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். என் பெயர் வாசுதேவன். நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மய்யத்தில் உறுப்பினராக இருக்கிறேன். தாங்கள் மய்யத்தில் உறுப்பினராகும் போது கூட தங்களை வாய் நிறைய நான் வரவேற்றதாகக் கூட ஞாபகம். 2000 பதிவுகள் கூட நான் இங்கு இட்டதாக ஞாபகம். எனக்கே நினைவில்லாத போது தங்களுக்கு என் பெயர் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். பரவாயில்லை. இப்போதுதான் அறிமுகப்படுத்திக் கொண்டேனே. ஏதோ நான் போட்ட சில பதிவுகளைக் கூட தாங்கள் பார்த்ததில்லை போல் இருக்கிறது. பாவம்! என்னை யாரென்றே உங்களுக்குத் தெரியாது. பதிவுகளுக்கு இடது புறம் யார் பதிவை இட்டார்கள் என்று அவ்தாருடன் பெயர் தெரியும். இனிமேலாவது பதிவை யார் இடுகிறார்கள் என்று பார்ப்பீர்கள் என நம்புகிறேன். பெயர் தெரியாத போதும் வானளாவ வாழ்த்தும் தங்கள் பரந்து விரிந்த உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி! (இன்னும் ஒரு வருடம் கழித்து 'துணை' கட்டுரை யாரோ எழுதினார்கள் என்று கேட்பீர்களோ?)
இப்படிக்கு
தங்களிடம் முதன் முதலாக இன்றுதான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்
வாசுதேவன்.
RAGHAVENDRA
7th October 2012, 10:58 AM
Dear Ragul Ram,
I appreciate your interest in the rare movie GARUDA SOWKKIYAMA and your views on the film. The so-called screenshots have been interspersed with the detailed analysis of the film by Shri Vasudevan. I am surprised by your approach in acknowledging the fellow hubber's posts. Good that you thought of acknowledging at least. There is no necessity for remembering the name. You can just refer the user id given by the side. In fact Mr. Vasudevan has his real name as user id and doesn't fail to mention it below his posts. Just a glance through these pages would guided you his name.
Please put a little effort to mention or acknowledge properly. Mr. Vasudevan is a senior person too in his age.
Raghavendran
Subramaniam Ramajayam
7th October 2012, 11:09 AM
dear vasudevan sir
my belated congrats on your compeletion of 2000 posts. my favourite sivaji films release bommai with nadigarthilagam copied from vikatan for you as a small momento.
WISH YOU MANY MORE THOUASANDS OF ARTICLES ABOUT OUR LIVING GOD LEGEND.
RAGHAVENDRA
7th October 2012, 11:14 AM
GARUDA SOWKKIYAMA ANALYSIS BY VASUDEVAN SIR
LINK: NADIGAR THILAGAM THREAD PART 8
http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8/page95
கருடா சௌக்கியமா ஆய்வுக்கட்டுரை . பாகம்-1.
25-02-1982 அன்று வெளியான நடிக மாமன்னனின் 222-ஆவது படைப்பான ரேவதி கம்பைன்ஸ் 'கருடா சௌக்கியமா' என்ற வண்ண ஓவியமான இக் காவியத்தைப் பற்றி ஆய்வு செய்து ஹப் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
' பத்தோடு பதினொன்று' என்று ஒதுக்கி விடக் கூடிய படமில்லை இது. இப்படம் ஓர் அற்புதக் காவியம். இயக்குனர் திரு டி. எஸ்.பிரகாஷ்ராவ் அவர்களின் பழுத்த அனுபவமிக்க இயக்கத்தாலும்,'வியட்நாம் வீடு' சுந்தரம் என்ற வளமான வசனகர்த்தாவின் உயிரோட்டமான வசனங்களினாலும், திரு.என்.கே.விஸ்வாதன் அவர்களின் அற்புத ஒளிப்பதிவினாலும், மெல்லிசை மாமன்னரின் தேனூறும் இசை அமைப்பினாலும், எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போன்று' நடிப்புலகச் சக்கரவர்த்தி',' நடிக மாமேதை',நடிகர்திலகம்' அவர்களின் அற்புதமான, வித்தியாசமான நடிப்பசைவுகளாலும் உருவான உயிரோவியமே' கருடா சௌக்கியமா' என்னும் காவியமாகும்.
சரி! கதைக்கு வருவோம்.
அனாதைக்குழந்தை' தீனா' 'மேரி' என்னும் கன்னிகாஸ்திரீயால்
வளர்க்கப்படுகிறான். சிறுவயதிலேயே அவள் கணவனால் தீனா விரட்டியடிக்கப்படுகிறான். யாருமில்லாத அனாதையாக தனியாக வளர்ந்து பெரியவனாகிறான். தீனாவைப் பயன்படுத்தி, அவனை வைத்து குற்றங்கள் புரிந்து பணம் சம்பாதிக்கின்றனர் சில கயவர்கள். தீனா அதைப் புரிந்து கொண்டு உஷாராகிறான். அவர்கள் தனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்களை அவர்களுக்கே கற்றுக் கொடுக்கிறான்.
முத்துக்கிருஷ்ணன் எனும் அனாதைச் சிறுவன் தீனாவின் திறமைகளைக் கண்டு வலிய வந்து தீனாவிடம் அட்டை போல் ஒட்டிக் கொள்கிறான். தீனாவுக்கு வலது கையாகிறான்.
தன் தாய்மாமனால் துன்புறுத்தப்படும் 'லஷ்மி' என்ற பெண்ணை அவனிடமிருந்து காப்பாற்றி அவளைத் திருமணம் செய்து கொள்கிறான் தீனா. அவளுடைய தாய்மாமனையும் தன்னுடைய அடியாளாக்கிக் கொள்கிறான்.
தீனாவுக்கு வயதாகிறது. தீனா இப்போது' தீனதயாளு' என்று மக்களால் போற்றப்படும் ஆபத்பாந்தவர். அநாதை ரட்சகர். ஏழை எளிய மக்களுக்கு தீனதயாளு ஒரு காட்பாதர். தீனதயாளு ஏழை எளியவர்களுக்கு இன்னல்கள் கொடுக்கும் பணக்கார முதலைகளின் கொட்டங்களை தன் செல்வாக்கால் ஒடுக்கி அவர்களை நிலை குலைய வைக்கிறார். ஆனால் தீனதயாளு எப்போதுமே கெட்டவழியில் செல்வது இல்லை. மொத்தத்தில் அவர் ஒரு நல்ல' தாதா'.
ஆனால் குடும்பத்தைப் பொறுத்த வரையில் அவர் ஒரு அப்பாவி. அவர் மனைவி லஷ்மிக்கு தன் கணவர் ஒரு பெரிய 'தாதா' என்பது தெரியாது. அப்படி அவள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் தீனதயாளு உறுதியாக இருக்கிறார். அவ்வளவு பெரிய தாதாவாக இருந்தும் தான் நேர்மையாக நடத்தி வரும் அச்சக ஆபீஸ் மூலம் வரும் வருமானத்தை வைத்துதான் தீனதயாளு தன் குடும்பத்தை நடத்துவார்.
தீனதயாளுவுடன் சிறுவயது முதற்கொண்டே வளர்ந்து வரும் முத்துக்கிருஷ்ணன் இப்போது இளைஞன். தீனதயாளு என்ற சிவனின் கழுத்தில் சுற்றிய பாம்பாய் யாரை வேண்டுமானாலும் கருடா சௌக்கியமா என்று கேட்பவன்.தீனதயாளுவுக்கு எல்லாமே அவன்தான். இதற்கிடையில் தீனதயாளு தன் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை அடிக்கடி சந்தித்து ஆறுதலடைகிறார். தீனதயாளுவுக்கு ராதா என்ற செல்ல மகள், ராதா மோகனை விரும்புகிறாள். திருமணம் செய்ய ஆசைப் படுகிறாள். ஆனால் தீனதயாளுவுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் தன் மனைவி லஷ்மியின் விருப்பத்துக்காக அரைமனதுடன் சம்மதித்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
ராதாவின் கணவன் மோகன் குடிகாரனாகி ராதாவை தீனதயாளுவின் வீட்டிற்கே அனுப்பி வைத்து விடுகிறான். சந்தோஷம் குடியிருந்த வீட்டில் சோகம் குடிகொள்ள ஆரம்பிக்கிறது.
தீனதயாளுவை சில பணக்காரத் தீயவர்கள் சந்தித்து போதை மருந்து கடத்தலில் ஈடுபடவைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் தீனதயாளு அதை அடியோடு மறுத்துவிட்டு, அவர்களும் அதில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி விடுகிறார். இது முத்துகிருஷ்ணனுக்கு பிடிக்காமல் தீனதயாளுவை எப்படியாவது கடத்தலில் தான் ஈடுபட சம்மதிக்க வைப்பதாக அவர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொள்கிறான்.
சத்தியநாதன் என்ற தொழிலதிபர் தீனதயாளுவின் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை குடிபோதையில் காரை ஏற்றிக் குற்றுயிரும்
கொலையுயிருமாக விட்டு விட்டு கண்டு கொள்ளாமல் சென்றுவிடுகிறான். இது தீனதயாளுவுக்குத் தெரியவர துடிதுடித்து மேரியாம்மாவை பார்க்க ஓடிவர, அவர் கண் முன்னமே மேரியம்மாவின் உயிர் பிரிகிறது. தன் வளர்ப்புத்தாயைக் கொன்றவனை பழிவாங்கத் தயாராகிறார் தீனதயாளு.
இது புரியாமல் சத்தியநாதன் மேரியம்மாவின் மரணத்துக்காக தரும் சொற்ப பணத்தை வாங்கிவந்து முத்துகிருஷ்ணன் தீனதயாளுவிடம் தர, தீனதயாளு மிகுந்த கோபமடைந்து அந்தப் பணத்தை வாங்கி வந்ததற்கு முத்துக்கிருஷ்ணனைக் கடிந்து கொள்கிறார். இருவருக்கும் அபிப்பிராய பேதங்கள் ஏற்படுகிறது.
தன் தாயைக் கொன்ற சத்தியநாதனைப் பழிவாங்க நேரிடையாக தலையிட ஆரம்பிக்கிறார் தீனதயாளு. சத்தியநாதனுக்கு பலவகையிலும் தொல்லைகள் கொடுத்து அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறார்.
இப்போது சத்தியநாதன், மருமகன் மோகன், முத்துக்கிருஷ்ணன், மற்றும் தீனதயாளுவின் எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீனதயாளுவைப் பழிவாங்க பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள். கள்ளநோட்டுகளை அச்சடித்து அவற்றை தீனதயாளுவின் அச்சாபீஸில் போட்டு தீனாவை போலீசில் சிக்க வைத்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாது தீனதயாளுவின் மற்றொரு முகமான' தாதா' முகத்தை அவர் மனைவி லஷ்மிக்கு தெரியப்படுத்தி விடுகின்றனர். லஷ்மி தன் கணவர் தீனதயாளு ஒரு கெட்டவர் என்று எண்ணி அதிர்ச்சி அடைந்து உயிரை விட முயற்சிக்கிறாள். தீனதயாளு அவளைக் காப்பாற்றி தான் நியாயமானவன் என்று அவளை சமாதானப் படுத்துகிறார்.
எதிரிகளின் சூழ்ச்சி ஒருபுறம்.
குற்றவாளிக் கூண்டில் ஏற்றத் துடிக்கும் சட்டம் ஒருபுறம்.
மருமகனும், வளர்த்த முத்துக்கிருஷ்ணனும் எதிர்ப்புறம்.
தன்னைக் கெட்டவன் என்று நினைத்து துயருறும் மனைவி மறுபுறம்.
இவ்வளவு பிரச்னைகளையும் சர்வசாதரணமாக எதிர்கொண்டு, கோர்ட்டில் குற்றவாளிக்கூண்டில் தீனதயாளு.
வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தானே தனக்கு வக்கீலாகி, தன் வாதத் திறமையாலும், சமயோசித புத்தியாலும், மனதைரியத்தாலும் தான் குற்றவாளி அல்ல என்று வாதாடி, தீயவர்களின் சூழ்ச்சிகளை வீடியோப்படக் காட்சிகள் மூலம் நிருபித்து நிரபராதியாய் வெளியில் வருகிறார் தீனதயாளு.
பிரிந்த குடும்பம் ஒன்று சேர முடிவில் சுபம்.
இத்திரைப்படத்தில் 'தீனதயாளு' என்ற அற்புதமான கதாபாத்திரத்தில் நடிகர்திலகமும், அவர் மனைவி லஷ்மியாக மறைந்த குணச்சித்திர நடிகை சுஜாதாவும், முத்துக்கிருஷ்ணனாக தியாகராஜன் அவர்களும்,மகள் ராதாவாக அம்பிகாவும், மருமகனாக மோகனும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படம் நிச்சயமாக ஒரு 'ஒன் மேன் ஷோ' மூவி என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் ஆதிக்கம் தான் படம் நெடுகிலும்.
மேக்-அப், கெட்-அப், நடை, உடை, பாவனை அனைத்திலும் மிக மிக வித்தியாசமாக காட்சியளிப்பார் நடிகர்திலகம் அவர்கள்.
தாதாவாக உலா வரும்போது.....
வெளியே அணிந்திருக்கும் மிக மெல்லிய ஜிப்பா என்ன!
உள்ளே பளிச்' சென்று தெரியும் கட்-பனியன் என்ன!
வேட்டியின் மேல் அணிந்திருக்கும் பச்சை நிற பெல்ட் என்ன!
வலது கையில் மின்னும் மோதிரம் என்ன!
கையில் ஜிப்பாவுக்கு மேல் கட்டப் பட்ட வாட்ச் என்ன!
கையில் எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட் என்ன!
அப்பப்பா.... தீனதயாளுவாக அல்லோல கல்லோலப் படுத்துகிறார் நடிக மன்னன்.
அதே சமயம் குடும்பத்தலைவனாகக் காட்சியளிக்கும் போது...
நீண்ட அங்கவஸ்திரம் அணிந்து கையில் சிகரெட் இல்லாமல் முகத்தை அப்பாவியாக வைத்திருப்பார்.
'காட்பாதர்' தீனதயாளுவாக வரும்போது உதடுகளைக் குவித்து சிகரெட்டை கை விரல்களுக்கிடையில் வைத்துக் கொண்டு, கண்கள் சிவக்க, ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்து ஒரு சொடுக்கு போடுவார் பாருங்கள். தியேட்டர் கூரை ரசிகர்களின் கைத்தட்டலில் பிய்த்துக் கொண்டு போகும்.
மீண்டும் 2-ஆம் பாகத்தில் சந்திப்போம்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
selvakumar
7th October 2012, 11:37 AM
Have seen "Gnana Oli" many times in the last couple of weeks. Generally, I skip the first half of the film so that I can directly jump to the point when "Rich Arun" enters. His style, mannerisms, charm and face reactions are so good that you can't stop admiring this "heroism" and "gethu". The way uses his eye brows and lips to convey emotions even when he is wearing goggles is definitely noteworthy. This is one of the films of Sivaji where you can't dislike his english and delivery. As a father, convict, grandfather, rich man, friend, patron etc he delivers an awesome performance that stands the test of time even today.
I liked many scenes but I loved the scene when he sees his granddaughter for the first time in doctor's house. His face reactions in those sub seconds are excellent. His pride and extreme happiness after hearing his granddaugther's name as "Rani" (his wife's name) :clap: There were lot of minute things he had taken care while playing "Arun". I would love to see this in colour.
mr_karthik
7th October 2012, 11:42 AM
அன்புள்ள ராகுல்ராம்,
கருடா சௌக்கியமா படம் நம் எல்லோரையும் போலவே தங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. நேற்றுகூட வாசுதேவன் அவர்களுக்கான என்னுடைய பதிவில், 'தங்களுடைய கருடா சௌக்கியமா ஆய்வுக்கட்டுரையைப்படித்து, பலர் அப்படத்தைத் தேடிப்பிடித்துப் பார்த்தனர். அதுபோல துணை படத்துக்கும் டிமாண்ட் ஏற்படும்' என்று குறிப்பிட்டிருந்தேன், அதைப்பார்த்தபின்னும் தங்களுக்கு வாசுதேவன் அவர்களின் பெயர நினைவு வராதது அதிசயம்தான். (ஒருவேளை என்னுடைய பதிவை நீங்கள் படிக்கவில்லையோ).
இருந்தாலும் 'கருடா சௌக்கியமா பார்த்தேன். நன்றாக இருந்தது, பிடித்திருந்தது' என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், முன்பு அதைப்பற்றிய பதிவை இட்ட ரசிகருக்கு (பெயர் நினைவில்லாவிட்டாலும்) நன்றி சொல்லத்தோன்றியது பாருங்கள். அங்கேதான் உங்கள் பெருந்தன்மை வெளிப்படுகிறது.
உங்களைப்போன்ற எண்ணற்ற ரசிகர்களை 'கருடா சௌக்கியமா' படத்தைப்பார்க்க வைத்த வாசுதேவன் அவர்களுக்கு இந்நேரத்தில் மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறேன்.
vasudevan31355
7th October 2012, 12:39 PM
டியர் கல்நாயக் சார்,
2000 பதிவுகள் கடந்ததற்கான அன்பு பாராட்டிற்கும், துணை பதிவுகளுக்கான பாராட்டுதல்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகளைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். 'துணை' கடலூர் ரமேஷில் எடுக்கப்பட்ட இறுதிநாள் வரை எவ்வளவு கூட்டத்துடன் ஓடியது என்று தங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அடிக்கடி பதிவிடுங்கள். தங்கள் 'ராஜ' காமெடி பதிவுகள் கண்டு நாளாயிற்று.
vasudevan31355
7th October 2012, 12:43 PM
டியர் சுப்பிரமணியம் ராமஜயம் சார்,
தங்கள் அன்பிற்கு தலை வணங்குகிறேன். தங்கள் ஆசீர்வத்தங்களுடன் கூடிய வாழ்த்துகளுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
mr_karthik
7th October 2012, 12:47 PM
மறுபடியும் என்னத்தே புதுசா சொல்லிடப்போகிறேன்....?.
திருப்பித்திருப்பி அதேதான்.
26.01.1982 இட்லர் உமாநாத்
05.02.1982 ஊருக்கு ஒரு பிள்ளை
06.02.1982 வா கண்ணா வா
25.02.1982 கருடா சௌக்கியமா
முப்பதே நாள் இடைவெளியில் நான்கு படங்கள்.
(மக்கள் கலைஞர் ஜெய்க்கு யாரோ 'வெள்ளிக்கிழமை Hero' பட்டத்தை தவறாகக் கொடுத்து விட்டனர்)
vasudevan31355
7th October 2012, 12:58 PM
அன்பு ராகவேந்திரன் சார்,
'கருடா சௌக்கியமா?' மறு பதிவுக்கு மிக்க நன்றி சார்! .. தாங்கள் கூறியள்ளது போல ஒரு பாடாவதி பழைய போஸ்டரைக் கொண்டே இவர் படத்தை வெற்றிகரமாக ஓட்டும் துணிச்சல் சில பேருக்குத்தான் வரும். இன்றைய இளம் தலைமுறையினர் மனதிலும் நடிகர் திலகம் எப்படி ஊடுருவியிருக்கிறார் என்பதற்கு தாங்கள் பதிவிட்டுள்ள வீடியோவே சான்று. Strangers in the Night மூலம் நடிகர் திலகம், பத்மினி காம்பினஷனில் மி(ஒ)ளிரும் அருமையான வீடியோக் காட்சிக்கும் நன்றி!
vasudevan31355
7th October 2012, 01:00 PM
அன்பு கார்த்திக் சார்,
எது ஒன்று என்றாலும் உடனே ஓடோடி வந்து சம்பந்தப்பட்டோருக்கு நிலைமைகளைப் புரிய வைக்கும் தங்களின் நட்புணர்வுக்கு நெஞ்சார்ந்த நன்றி! 'வெள்ளிக்கிழமை Hero' வேண்டாம் சார்... சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.
mr_karthik
7th October 2012, 01:28 PM
அன்புள்ள செல்வகுமார் சார்,
ஞான ஒளியில் அருண் ரோல் தங்களுக்குப் பிடித்திருப்பதற்கான காரணங்களை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். பேத்தி ஜெயகௌசல்யாவின் பெயர், தன் மனைவியான 'ராணி'யின் பெயரே என்றறியும்போது அவர் முகத்தில் சட்டென்று எரியும் ஆயிரம் வாட்ஸ் பல்பு அமர்க்களம். அதுபோலவேதான், ஆப்பிள் பழங்கள் வேண்டாமென்று சொல்லி, தந்தை குடிக்கும் கூழையே தனக்கும் கேட்கும் மகள் சாரதாவுக்கு கூழ் ஊற்றிக்கொடுத்து விட்டு, அதை மகள் குடிக்கும் அழகைக் கண்டு பாசம் பொங்க ரசிப்பது...... நிஜ அப்பன் கெட்டான் போங்க.
ஆனால் தாங்கள் பிற்பகுதியில் வரும் அருணை மட்டுமே பார்க்க விரும்புவதாகக்கூறுவது உங்கள் விருப்பம். இருந்தாலும் 'மெஜஸ்டிக் அருணுக்கு' கொஞ்சமும் குறையாத 'முரட்டுப்பய அந்தோனி'யையும் சேர்த்துப்பார்த்தால்தான் எங்களுக்கு திருப்தி. (பாதிரியாராக வரும் கோகுல்நாத் 'மொரட்டுப்பயலே' என்று செல்லமாக அழைக்கும் அழகே தனி, கருடாவில் நடிகர்திலகம் 'முத்துகிருஷ்ணா' என்றழைப்பது போல).
முற்பாதியில்தானே முரட்டுப்பயலின் கள்ளமில்லாத அட்டகாச நடிப்பு, சட்டென மின்னல்போல தோன்றி நம் நெஞ்சங்களைக்கவரும் அந்த விஜயநிர்மலாவுடன் காதல் காட்சி, 'அம்மா கண்ணு சும்மா சொல்லு' என்ற அருமையான டூயட் (நடிகர்திலகத்தின் மிகச்சிறந்த கருப்புவெள்ளை டூயட்களில் ஒன்று), சுசீலாவின் கொஞ்சும் குரலில் 'மணமேடை மலர்களுடன் தீபம்' பாடல். ராணியின் மறைவைக்கேட்டு கன்னத்து தசை மட்டும் தனியே துடிக்கும் அற்புதம்..... இன்னும் பிற சிறப்பம்சங்களும் முற்பாதியில் உள்ளனவே.
மொத்தத்தில் சென்ஸார் சர்டிபிகேட்டில் துவங்கி 'நன்றி, மீண்டும் வருக' போர்டுவரை எந்தக்காட்சியும் சோடையல்ல, எம்.ஆர்.ஆர்.வாசு ஐ.எஸ்.ஆர் ஆகியோரின் தத்துபித்து காமெடி உள்பட.
ஞான ஒளியை வண்ணத்தில் காண வேண்டும் என்று நீங்கள் சொன்னதைப் படித்ததும் ஒரு பழைய நினைவு. இப்படம் வரும் முன்னர், பொம்மை மாத இதழில், வாழைத்தோப்பில் ஒரு கையில் அரிவாளூடன் மறுகையால் ஸ்ரீகாந்தின் கழுத்தை நடிகர்திலகம் ஆக்ரோஷத்துடன் வளைத்துப் பிடித்திருக்க, அரிவாள் பிடித்த கையை மேஜர் பிடித்து தடுத்திருக்க, பின்னால் அதிர்ச்சியுடன் சாரதா பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியை வண்ணப்பட ஸ்டில்லாக வெளியிட்டு விட்டனர். அதைப்பார்த்தது முதல் ஞான ஒளி வண்ணப்படம் என்றே நினைத்திருந்தேன். படம் வருவதற்கு சில நாட்கள் முன்புதான் மதி ஒளியில் இது கருப்பு வெள்ளைப்படம் என்று செய்தி வெளியிட்டு என் கலர்க்கனவைக் கலைத்தனர்.
vasudevan31355
7th October 2012, 02:54 PM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)
(தொடர்-8)
நடிகர் திலகத்தின் நாயகிகள் (8) P.K.சரஸ்வதி
'உலகம்' திரைப்படத்தில் P.K.சரஸ்வதி
http://www.thehindu.com/multimedia/dynamic/01143/15cp_ulagam_jpg_1143774e.jpg
'இன்ஸ்பெக்டர்' திரைப்படத்தில் P.K.சரஸ்வதி
http://www.thehindu.com/multimedia/dynamic/00879/01cp_Inspector_jpg_879913e.jpg
'துளிவிஷம்' காவியத்தில் P.K.சரஸ்வதி
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_2VOB_000905643.jpg
'துளிவிஷம்' காவியத்தில் நடிகர் திலகத்துடன் P.K.சரஸ்வதி
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_2VOB_001418986.jpg
நடிகர் திலகத்தின் 'துளிவிஷம்' படத்தின் செகண்ட் ஹீரோயின். படத்தின் நாயகர் கே.ஆர். ராமசாமியைக் காதலிப்பார். கே. ஆர். ராமசாமிக்கு கிருஷ்ணகுமாரி ஜோடியாகி விட்டதால் ராமசாமியைப் பழிவாங்க கற்பக மன்னனாக, வில்லனாக வீறுநடை போடும் நடிகர் திலகத்தைக் காதலிப்பது போன்று பல காட்சிகளில் வருவதால் நடிகர் திலகத்தின் அபூர்வ ஜோடியாகிறார். நிஜமாகவே அழகான நடிகை. பல பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நடிகர் திலகத்திற்கும் சீனியர். "அறியாமல்...என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்" என்ற மிக மிக அற்புதமான டூயட் சாங் ஒன்று இருவருக்கும் உண்டு. சும்மா நம் தலைவர் இந்தப் பாடலில் 'கலக்கோ கலக்கு' என்று கலக்குவார். 'உத்தம புத்திரன்' விக்கிரமனுக்கு முன்னோடி இந்த கற்பக மன்னர். என்ன... சற்று மெலிந்த விக்கிரமன் என்று கூறலாம். விக்கிரமனின் வில்லத்தனங்களுக்கு உதாரண புருஷர் என்றும் கூறலாம். சரி! சப்ஜெக்ட் நடிகர் திலகத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டால் நிறுத்துவது அவ்வளவு ஈஸி அல்ல. நடிகர் திலகத்தின் நாயகியருக்கு வந்து விடுவோம்.
P.K.சரஸ்வதி 1947-இல் வெளிவந்த 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி', 1953-இல் வெளிவந்த 'ஜூபீடரின் 'இன்ஸ்பெக்டர்' மற்றும் 'உலகம்', எம்ஜியார் அவர்களுடன் 'நாம்', 'அந்தமான் கைதி' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் திலகத்துடன் ஒரே ஒரு காவியத்தில் இணைந்த (கதைப்படி இல்லாவிட்டாலும் காட்சிப்படி அமைந்த) மிக அபூர்வ ஜோடியாய் நடிகர் திலகத்தின் நாயகியர் வரிசையில் சேரும் அதிர்ஷ்டம் பெற்று, மந்தகாசப் புன்னகை புரிந்து வெற்றி பெருமிதம் கொள்கிறார்.
இனி மேற்குறிப்பிட்ட, நடிகர் திலகத்திற்கும், P.K.சரஸ்வதிக்கும் அமைந்த, 'துளிவிஷம்' காவியத்தின் மிக மிக அரிய, அற்புத டூயட் பாடலான "அறியாமல்...என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்" முதன் முதலாக இணையத்தில் தரவேற்றப்பட்டு நம் எல்லோருக்காகவும்.
http://www.youtube.com/watch?v=peD-t2sD6-Q&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
ScottAlise
7th October 2012, 06:14 PM
Dear Vasu Sir
Really sorry sir I read it some months ago , You don't need any introduction sir
Urself, Ragavendran, Pammalar sirs are Thrisoolam , I said it before.
Already I mis mentioned the names once , thats why sir,
Really sorry Vasu Sir .
Hereafter I will search & acknowlege the efforts of fellow hubbers
ScottAlise
7th October 2012, 06:16 PM
Dear Ragavendran sir and Karthik sir
Iam sorry sir really sir. Thanks for your concern , . Seniors have right to correct me sir. Often I get confused with names sorry sir really
vasudevan31355
7th October 2012, 07:06 PM
அன்பு கார்த்திக் சார்,
'ஞானஒளி' பற்றி ஒரு குறு ஆய்வு நடத்தி என்னை பரபரப்பாக்கி விட்டீர்கள். கொஞ்சமே என்றாலும் சுழன்று சுழன்று சூறாவளியாய் சுற்றி நினைவுகளை விட்டு தங்கள் நடை நீங்க மறுக்கிறது. அற்புதமான நினைவூட்டலுக்கு இதயபூர்வமான நன்றிகள்.
அந்த கேரக்டரே தனி சார். எதுவும் நெருங்க முடியாது. பல பரிமாணங்களை ஒரே கேரக்டரில் அவர் வெளுத்துக் கட்டியது ஒளியில்தான். முதலில் மாதா கோவிலில் மணி அடிக்கும் ஒரு சாதாரண வேலையாள், பாதிரியார் மேல் பயங்கரப் (!) பற்று வைத்திருக்கும் ஒரு முரட்டு வெகுளி விசுவாசி , அடுத்து காதல் என்றாலே என்னவென்று தெரியாமல் காதலிக்கும் முரட்டுக் காதலன், பின் நேசமான கணவனாக பிரமோஷன், ஒன்டிகட்டையாக இருந்து குடும்பப் பொறுப்பேற்கும் குடும்பத்தலைவன், பிரசவத்தில் மனைவியை இழந்து மறுபடி அனாதையாகும் அவலக்காரன், அடுத்து மகளுக்குத் தந்தையாக மட்டுமல்லாது தாயாகவும் இருந்து பாதுகாக்கும் தாயுமானவன், பிள்ளை படித்து பெரிய ஆளாக வரவேண்டும், பாதிரியாரின் ஆசைகளை மகள் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்ற தீராத லட்சியம் கொண்ட ஒரு லட்சியவாதி, சின்ன வயது சிநேகிதனின் ஆத்மார்த்த நண்பன், மகள் சோரம் போனாள் என்று துடித்துத் துவளும் துர்பாக்கியத் தந்தை, பின் சாந்தமடைந்து மகளின் வாழ்வே பெரிது என மகளை பாழ்படுத்தியவனை கண்டுபிடித்து வாழ்வு வேண்டும் வைராக்கியன், அது நடக்காமல் போனதால் ஒரே ஒரு அடியில் கொலைகாரன் பட்டம் சுமக்கும் கொலையாளி, தண்டனை அனுபவிக்கும் ஜெயில் தண்டனைக் கைதி, சிறையிலேயே அச்சுக் கோர்க்கும் தொழிலாளி, பரோலில் பாதிரியாரின் சாவிற்கு வெளியே வந்து அவர் எண்ணங்களை நிறைவேற்ற தப்பியோடும் குற்றவாளி, பின் ஆர்ப்பாட்டமாய் தன் சொந்த கிராமத்துக்கே யாருக்கும் அடையாளம் தெரியாமால் (ஒருவரைத் தவிர) திரும்பும் கோடீஸ்வர படாடோப அருண், தனக்கு தன் மனைவி பெயரிலேயே ஒரு பேத்தி இருக்கிறாள் என்று உள்ளுக்குள் பூரித்துப் போகும் தாத்தா, பாதிரியாரின் கனவுகளை நிறைவேற்றும் கடமை வீரன், கழுகின் பார்வையில் சிக்கித் தவித்து கழுவும் மீனில் நழுவும் மீனாக இன்ஸ்பெக்டர் நண்பனிடம் மாட்டாத அதிபுத்திசாலி விலாங்கு மீன், தான் யாரென்று காட்டிக கொள்ள முடியாமல் மகளின் துன்பங்களை நினைத்து நினைத்து துயர் கொள்ளும் துரதிர்ஷ்டசாலி, தன் மகள் எல்லோரது முன்னாலும் இன்ஸ்பெக்டர் நண்பனால் அவமானப்படும் போது கொதித்தெழும் கோப சிங்கம், பின் தெளிவடைந்து மீண்டும் தவறுகள் செய்யக் கூடாது என உணரும் உத்தமசீலன் என்று...
ஒரே கேரக்டரில் பல்வேறு முகங்களையும், உணர்வுகளையும் பிரதிபலித்தனால் அருண் என்ற ஆண்டனிதான் 306-லும் எனக்கு நெம்பர் ஒன்.
selvakumar
8th October 2012, 01:17 AM
அன்புள்ள செல்வகுமார் சார்,
ஞான ஒளியில் அருண் ரோல் தங்களுக்குப் பிடித்திருப்பதற்கான காரணங்களை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். பேத்தி ஜெயகௌசல்யாவின் பெயர், தன் மனைவியான 'ராணி'யின் பெயரே என்றறியும்போது அவர் முகத்தில் சட்டென்று எரியும் ஆயிரம் வாட்ஸ் பல்பு அமர்க்களம். அதுபோலவேதான், ஆப்பிள் பழங்கள் வேண்டாமென்று சொல்லி, தந்தை குடிக்கும் கூழையே தனக்கும் கேட்கும் மகள் சாரதாவுக்கு கூழ் ஊற்றிக்கொடுத்து விட்டு, அதை மகள் குடிக்கும் அழகைக் கண்டு பாசம் பொங்க ரசிப்பது...... நிஜ அப்பன் கெட்டான் போங்க.
loved many scenes. He had immense care while playing this character. I know it sounds clichéd but we can't describe this performance in words. His reactions whenever he sees her daughter as Arun. Antha "Perumitham" + Paasam.. :clap: Loved his style and the way "he looks at others" (esp Major) through the goggles. Amazing :clap:
ஆனால் தாங்கள் பிற்பகுதியில் வரும் அருணை மட்டுமே பார்க்க விரும்புவதாகக்கூறுவது உங்கள் விருப்பம். இருந்தாலும் 'மெஜஸ்டிக் அருணுக்கு' கொஞ்சமும் குறையாத 'முரட்டுப்பய அந்தோனி'யையும் சேர்த்துப்பார்த்தால்தான் எங்களுக்கு திருப்தி. (பாதிரியாராக வரும் கோகுல்நாத் 'மொரட்டுப்பயலே' என்று செல்லமாக அழைக்கும் அழகே தனி, கருடாவில் நடிகர்திலகம் 'முத்துகிருஷ்ணா' என்றழைப்பது போல).
முற்பாதியில்தானே முரட்டுப்பயலின் கள்ளமில்லாத அட்டகாச நடிப்பு, சட்டென மின்னல்போல தோன்றி நம் நெஞ்சங்களைக்கவரும் அந்த விஜயநிர்மலாவுடன் காதல் காட்சி, 'அம்மா கண்ணு சும்மா சொல்லு' என்ற அருமையான டூயட் (நடிகர்திலகத்தின் மிகச்சிறந்த கருப்புவெள்ளை டூயட்களில் ஒன்று), சுசீலாவின் கொஞ்சும் குரலில் 'மணமேடை மலர்களுடன் தீபம்' பாடல். ராணியின் மறைவைக்கேட்டு கன்னத்து தசை மட்டும் தனியே துடிக்கும் அற்புதம்..... இன்னும் பிற சிறப்பம்சங்களும் முற்பாதியில் உள்ளனவே.
I loved his performance as Antony too and his left hand mannerisms. But in this age of stylish performances with suites and goggles, I could relate more and love his performance as "Arun" more anything else. Just a personal favorite :) that I selected to watch it repeatedly. Also due to fact that the role is multi-dimensional for the story.
மொத்தத்தில் சென்ஸார் சர்டிபிகேட்டில் துவங்கி 'நன்றி, மீண்டும் வருக' போர்டுவரை எந்தக்காட்சியும் சோடையல்ல, எம்.ஆர்.ஆர்.வாசு ஐ.எஸ்.ஆர் ஆகியோரின் தத்துபித்து காமெடி உள்பட. :exactly: Agree and I didn't find any scene as boring or lacking the speed. It is just that "heroism" starts from "Arun". Just that we all feel happy when we see the uneducated Antony returning as Rich Arun.
ஞான ஒளியை வண்ணத்தில் காண வேண்டும் என்று நீங்கள் சொன்னதைப் படித்ததும் ஒரு பழைய நினைவு. இப்படம் வரும் முன்னர், பொம்மை மாத இதழில், வாழைத்தோப்பில் ஒரு கையில் அரிவாளூடன் மறுகையால் ஸ்ரீகாந்தின் கழுத்தை நடிகர்திலகம் ஆக்ரோஷத்துடன் வளைத்துப் பிடித்திருக்க, அரிவாள் பிடித்த கையை மேஜர் பிடித்து தடுத்திருக்க, பின்னால் அதிர்ச்சியுடன் சாரதா பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியை வண்ணப்பட ஸ்டில்லாக வெளியிட்டு விட்டனர். அதைப்பார்த்தது முதல் ஞான ஒளி வண்ணப்படம் என்றே நினைத்திருந்தேன். படம் வருவதற்கு சில நாட்கள் முன்புதான் மதி ஒளியில் இது கருப்பு வெள்ளைப்படம் என்று செய்தி வெளியிட்டு என் கலர்க்கனவைக் கலைத்தனர்.
oh! It would have been awesome. Sema rich ah vanthirukkum with church, Arun's bungalow etc. It would be great if they can release this in colour.
Jeev
8th October 2012, 07:55 AM
Here is the link to watch Sathyam (1976) on line.
http://www.tamilflix.net/2012/10/sathyam-tamil-movie-watch-online.html
Jeev
Subramaniam Ramajayam
8th October 2012, 10:06 AM
Here is the link to watch Sathyam (1976) on line.
http://www.tamilflix.net/2012/10/sathyam-tamil-movie-watch-online.html
Jeev
SIRAPPU THEN KINNAM-- RAMKUMAR SIR JAYATV
your presentaion is simply fabulous and fantastic sir.
Especially the diceiption about pudiyaparavai vasantamaligai and thiruvilaiyadal
and selection of galatta kalyanam song amazing.
totally a lovely presentation. to be preserved for repeated viewing like NADIGARTHILAGAM MOVIES.
vasudevan31355
8th October 2012, 10:19 AM
இளைய திலகத்தின் அசத்தல் பேட்டி
'குமுதம்' 10-10-2012 இதழில் நடிகர் திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'இளையதிலகம்' பிரபு அவர்களின் சிறப்புப் பேட்டி வெளியாகியுள்ளது. தன் தெய்வத் தந்தையைப் பற்றியும், தங்களுடைய கூட்டுக் குடும்பம் பற்றியும், அப்பாவின் தொழில் பக்தி பற்றியும், 'அன்னை இல்ல'த்து மகாலக்ஷ்மிகள் பற்றியும், கமல், ரஜினி பற்றியும், தன் பிள்ளைகள், உறவினர் பற்றியும், தன்னுடைய திரையுலக அனுபங்களைப் பற்றியும் மொத்தம் நான்கு பக்கங்கள் அழகாக, அம்சமாக பேட்டி அளித்திருக்கிறார் நம் 'இளைய திலகம்'. இப்போது அந்தப் பேட்டி சுடச்சுட நமது பார்வைக்கு.
பக்கம் 1
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/pra1.jpg
பக்கம் 2
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/pra2.jpg
பக்கம் 3
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/pra3.jpg
பக்கம் 4
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/pra4.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
mr_karthik
8th October 2012, 11:22 AM
Dear JEEV sir,
Thanks a lot for providing the link for the movie 'SATHYAM'.
(many of you know why I am this much like Sathyam. (yes, the last movie of the excellent pair in NT's career)
oowijaez
8th October 2012, 11:37 AM
When I watched 'Gnana Oli' I straightaway recognized where Rajinikanth's acting came from.
vasudevan31355
8th October 2012, 12:02 PM
மறைந்த இயக்குனர் திரு. ஜெகந்நாதன் அவர்களுக்கு நம் இதய அஞ்சலி.
http://ts2.mm.bing.net/videos/thumbnail.aspx?q=4858703874556001&id=6acb3ab4e7d0641193ae75f51c8aa2ac&bid=mvWlBeWAygr%2F3g&bn=Thumb&url=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DCMf bEd5aggI http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQ9Sz8qIHdEEAlMYwla30MA61xUuFCsW hdLUnZ3xvN8sqhblhZfmoqJOAoUeA
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5-1.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-2.jpg
oowijaez
8th October 2012, 01:32 PM
Dear Vankv
Welcome to the world of the ONLY EMPEROR IN CINEMA the Nadigar Thilagam Sivaji Ganesan world. Happy to read your post and delighted. PLEASE INTRODUCE YOURSELF, your real name, where are you from and so on, so that you may have a chance to meet like minded friends in person in your surroundings.
Also from your posts I guess you might be in your mid fifties or late forties. This is only a wild guess. It may be wrong because we come across so many youngsters belonging to the current generation being ardent / hardcore fans of NT. If it is so, it will be more happier for seniors like us. Please share your nostalgia on NT, away from his movies. This will enlighten us on his social and public contributions hitherto unknown to the Society.
Warm welcome once again
Raghavendran
Thank you Mr Raghavendran. I'm Sasidharan, originally from Jaffna, Srilanka . You've guessed my age correctly, I'm 49. My mother was an ardent fan of Sivaji Ganesan. Growing up as kids in the 70's, going to the movies means, going to Sivaji movies to us. Never much heard of other actors or didnt bother to watch others' movies. Having lived in the UK for a long time,(currently living in Colombo) I started watching& collecting most of Sivaji movies on my spare time. Watching English movies changed my conception towards Tamil movies but not about Nadigar Thilagam. He was one of a kind of actor. My late mother mentioned him as 'genious'! It was unfortunate that Indian government didnt recognize him properly for his talents but used him as a vote bank though! He shouldn't have wasted his time with politics, it didnt suit an honest person like him. But I'm glad he acted more than 300 movies, as they are a life-time treasure for his fans. I've probably watched more than 200/250 of his movies. Still watching them again and again. Nice to be part of this forum! Keep posting write-ups, they boost my energy levels! Thank you all!
parthasarathy
8th October 2012, 05:09 PM
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
5. "நல்லவன் எனக்கு நானே நல்லவன்"; படம்:- படித்தால் மட்டும் போதுமா? (1962); இயக்கம்:- ஏ. பீம்சிங்
கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பின், இந்தக் கட்டுரையை மறுபடியும் எழுதுவதில் பேருவகை அடைகிறேன்.
1952-க்குப் பிறகு, தமிழ்க் கலையுலகில், எடுக்கப்பட்ட பல புதிய முயற்சிகளில், நடிகர் திலகத்தின் பங்கு நான்கில் மூன்று பங்கு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இருக்காது. சினிமா என்கிற விஷுவல் மீடியத்தை எப்படி நடிகர் திலகம் புதிய கோணத்தில், விஷுவலாகக் கையாளத் துவங்கினார் என்பதைப் பற்றி ஏற்கனவே விரிவாக எழுதி இருக்கிறேன். நிற்கும் விதம் (posture), உடல் மொழி (கை கால்களை மனம் போன போக்கில் அசைக்காமல், அளவோடும், அழகாகவும்) மற்றும் மூவ்மென்ட். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். (இன்னமும் நிறைய பேர் பத்தாம் பசலித் தனமாக, சில படங்களில் வந்த வசனங்களைப் பற்றியும், ஓரங்க நாடகங்களைப் பற்றியும் மட்டுமே, (வேறு எதுவும் கிடைக்காததால்) பேசிக் கொண்டிருக்கின்றனர்!)
அந்த வகையில், இதோ நடிகர் திலகத்தின் இன்னுமொரு புதிய முயற்சி -
எப்போதும் டூயட்டுகளில், ஆணும் பெண்ணும் பாடியது போக, இரண்டு ஆண்கள் பாடும் புதுமை இந்தப் பாடலில் இதே படத்தில் மறுபடியும் இடம் பெற்றது. ("பொன்னொன்று கண்டேன்" பாடலை வேறொரு கட்டுரையில் எழுதி விட்டேன்!). இந்தப் பாடலை நடிகர் திலகம் அணுகிய விதம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
இது ஒரு நிறைய பேரின் பங்களிப்பு கொண்ட ஒரு குழுவின் பாடல் (குரூப் டான்ஸ்). இந்தப் பாடலில், பாடும் இரு கதாநாயகர்களும், அவர்களைப் பற்றியும், சில வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றியும், அந்தக் குழுவினரோடு சேர்ந்து சந்தோஷமாகப் பாட வேண்டும்.
இந்தப் பாடலின் துவக்கத்திலேயே, ஒரு வித அசுர வேகம் தெரியும்.
இந்தப் பாடல் துவங்குவதற்கு முன்னர், படித்த அண்ணன் (பாலாஜி), படிக்காத எப்போதும் வேட்டையாடிக் கொண்டு பார்ப்பதற்கு முரடனாக இருந்தாலும் கள்ளமில்லா மனம் கொண்ட தம்பி (நடிகர் திலகம்) இருவருக்கும் திருமணம் நிகழ்ந்து, அதில் அண்ணன் மட்டும் நினைத்த மாதிரியே மனைவியை அடைந்து விடுவார். ஆனால், தம்பி, துரதிர்ஷ்டவசமாக, பொருத்தமில்லாத படித்த ஒருவரை மணம் புரிந்து, மனைவி, அவரைத் தன்னைப் படித்தவன் போல் நடித்து ஏமாற்றித் திருமணம் புரிந்து விட்டார் என்று வெறுப்புடன், பிறந்த வீட்டுக்குச் சென்று விடுவார். இந்த விஷயம், தம்பி தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது. இருப்பினும், எல்லோரும் சொந்த கிராமத்துக்கு (எஸ்டேட்) செல்ல, அங்குள்ளவர்கள், இவர்களை வாழ்த்தும் விதமாக கூட்டமாக நடனமாடி மகிழ்விக்கத் துவங்குகையில், அண்ணன் பாடத் துவங்குவார்.
அண்ணன் (பாலாஜி) பல்லவியைத் துவக்கி முடித்தவுடன், சற்றும் எதிர்பாராதவிதமாக, தம்பி (நடிகர் திலகம்) அனு பல்லவியைத் துவங்குவார். தன்னுடைய குணாதிசயத்தை அழகாகக் கூறுவார் - "உள்ளம் சொன்னதை மறைத்தவனில்லை - ஊருக்குத் தீமை செய்தவனில்லை - வல்லவன் ஆயினும் நல்லவன்" என்று பாலாஜியின் பின்னாலிருந்து முகத்தை மட்டும் காட்டும் போது அந்த முகத்திலும், அந்தக் கண்களிலும் தெரியும் அந்தக் குழந்தைத்தனம், மறுபடியும், அந்த வரிகளைப் பாடி அசாத்திய வேகத்துடன், பாலாஜியை நோக்கித் திரும்பி நிறுத்தும் ஸ்டைல்!
இப்போது, சரணம் -
பள்ளம் மேடு கண்டால் பார்த்துச் செல்லும் பிள்ளை .... சேர்த்துக் கட்டிய முல்லை" எனும்போது ஒரு வித ஸ்டைல்.
"இல்லை இல்லை என்று என்றும் சொன்னவர் இல்லை" என்று பாலாஜி பாடும் போது, இவரது ரியேக்க்ஷன்!
அடுத்து, இரண்டாவது சரணம் -
"சிட்டு போல வானில் துள்ளிச் செல்ல வேண்டும்" - அந்த ஆர்ப்பரிப்பைக் கவனியுங்கள் - கைகளை வானத்தை நோக்கி அசாத்திய வேகத்துடன் உயர்த்தும் விதம்! "கீரிப்பிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும்" எனும் போது காட்டும் பாவனை! பாலாஜி பதிலுக்கு, "தொல்லை என்ற பாம்பைக் கவ்விக் கொல்ல வேண்டும்; தூய உள்ளம் வேண்டும், என்றும் சேவை செய்ய வேண்டும்" எனும்போது, நடிகர் திலகம், இரண்டு கைகளையும் ரொம்பவே லூசாக வைத்துக் கொண்டு இலேசாக ஆடுவது -அவருடைய ஸ்டைலையும் சேர்த்து! குறும்பு கொப்பளிக்கும்!!
இந்தப் பாடல், இந்தப் படத்தின் அந்தச் சூழலுக்குத் தேவையில்லை என்றே தோன்றினாலும், அதற்கு முன்னர் ஏற்படும் ஒரு விதமான இறுக்கமான சூழலை மக்களை மறக்க வைத்து, வேறு ஒரு சூழலை, மக்களுக்கும், ஏன் அந்தப் பாத்திரங்களில் நடிப்பவர்களுக்குமே கூடத் தரும்.
பாடல் நெடுகிலும், நடிகர் திலகத்திடம் காணும் அசுர வேகமும், ஸ்டைலும், அதன் மூலம், அவருடைய பாத்திரத்தின் குண நலன் என்ன, பாங்கு என்ன என்பதையும் அவர் காட்டியிருக்கும் விதமும், அற்புதமாக இருக்கும். அவரது குடும்பத்தில் இவர் ஒருவர் தான் காட்டிற்கு அடிக்கடி வேட்டையாடச் செல்வதாலும், அவர் எல்லோருடனும் கள்ளம் கபடமின்றி பழகுவதாலும், அவர் மட்டும் பந்தா இல்லாமல் எல்லோரையும் போல் தன்னை மறந்து ஆடி இருப்பார்!
உத்தம புத்திரன் படத்தில் "யாரடி நீ மோகினி" பாடலில், எப்படி பார்வையாளர்களாக நின்ற கொடிய வில்லன்கள் நம்பியார் மற்றும் ஓஎகே தேவர் ஆகியோரையும் சேர்த்து கைத் தட்ட வைத்தாரோ, அதே போல், இந்தப் பாடல் முடிவில், பார்வையாளர்களான, எம்.ஆர்.ராதா மற்றும் ஏ.கருணாநிதி அவர்களையும் சேர்த்து ரசிக்க வைத்து விடுவார். அந்த அளவிற்கு, பாடலும், நடிகர் திலகத்தின் பிரத்யேக வேகமும், நடிப்பும், துடிப்பும், ஸ்டைலும், அந்த இடத்தையும், பார்ப்பவர்களையும் சேர்த்து மயிர்க் கூச்செறிய வைத்து விடும். பாடல் முடிந்து, சில கணங்கள், அந்த பாதிப்பு நீங்காமலேயே இருக்கும்!
குழுவினர் ஆடிக் கொண்டிருக்கும்போது, நடிகர் திலகமும், பாலாஜியும் நின்று பார்த்துக் கொண்டிருக்கும்போது கூட, நடிகர் திலகம் மட்டும் ஒரு வித தயார் நிலையில் நின்று கொண்டிருப்பதை கவனிக்கலாம்.
என்னடா புதிதாக ஏதேதோ செய்யப் போகிறோமே, மக்கள் ரசிப்பதற்குப் பதில், சிரித்து விடுவார்களோ என்று நினைக்காமல், துணிந்து வித்தியாசமாக நடித்த விதம் தான், அவரை மற்ற நடிகர்களிடமிருந்து வேறு படுத்திக் காண்பிக்கிறது. எவ்வளவு தான், புதிதாகச் செய்தாலும், பாத்திரத்தை விட்டு விலகாமல், மாறாக, அந்தப் பாத்திரத்தையும், அந்த கணத்தையும், அந்தப் படத்தையும், மேலும் மெருகேற்ற இவர் ஒருவரால் தான் முடியும் போலும்!
தொடரும்,
இரா. பார்த்தசாரதி
RAGHAVENDRA
8th October 2012, 05:29 PM
டியர் சாரதி,
அட்டகாசமான பாடலுடன் அமர்க்களமாக ஆய்வு செய்துள்ளீர்கள். இந்தப் பாடல் கொட்டகைகளில் திரையிடப் படுமேயானால் ரசிகர்களைக் கட்டுப் படுத்தவே முடியாது. ஸ்டைல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்தவர் நடிகர் திலகம். அந்த ஸ்டைலையும் அவர் நுணுக்கமாக செய்யும் போது அதன் பரிணாமம் பல மடங்கு உயரும். பாத்திரமறிந்து பிச்சையிடு என்ற பழமொழிக்கேற்ப, தான் ஏற்றுக் கொண்ட பாத்திரங்களின் குணாதிசயங்களை சற்றும் பாதிக்காதவாறு அந்த ஸ்டைலை அதற்குள் கொண்டு வருவார். அது உலகிலேயே அவருக்கு மட்டுமே உரித்தான பாணி. எத்தனையோ நடிகர்கள் எத்தனையோ விதமான ஸ்டைல் கடைப் பிடித்திருக்கலாம், அல்லது நடித்திருக்க்லாம். ஆனால் அந்த வார்த்தைக்கே உயிர் கொடுத்தவர். கீரிப்பிள்ளை என்ற வார்த்தைக்கு அந்த ஜீவனையே கண்முன்னே கொண்டு வருவார். கீரிப் பிள்ளை வேகமாக வந்து தன் இரையைக் கண்டவுடன் முற்றிலும் மெதுவாக ஊர்ந்து செல்லுமாம். அந்த லட்சணத்தினைத் தன் கைகளில் காட்டி விடுவார் இந்தப் பாட்டில்.
தங்களுக்காகவும் நமது மற்ற நண்பர்களுக்காகவும் இதோ அந்தப் பாடலைப் பார்ப்போமா
http://youtu.be/0lvwBSwz8eo
நான் கவிஞனுமில்லை பாடலில் மேண்டலின் வாத்தியத்தை முறுக்கி கலக்கினார் என்றால் இந்தப் பாடலின் முடிவில் அந்த டேப் கருவியை முகத்தின் அருகே வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு வேகமாக வாசிப்பதைப் பாருங்கள். அந்தக் காலத்தில் 50களின் கடைசியில் 60களின் துவக்கத்தில் டேப் கலைஞர் ஒருவர் வாசிப்பதைக் கவனித்து அதனை இங்கு பிரதிபலித்துள்ளார். அதே கருவியை சற்றே வித்தியாசமான சூழ்நிலையில் பாவ மன்னிப்பு படத்திலும் வாசிக்கும் போது பாருங்கள். அங்கே அந்தப் பாடலில் கண்கள் திறந்திருக்கும். இந்தப் பாடலில் கண்களை சற்றே மூடினாற் போல் வைத்திருப்பார்.
சூப்பர் பாட்டு ... சூப்பர் தேர்வு ... கலக்கல் சாரதி....
vasudevan31355
8th October 2012, 06:05 PM
டியர் பார்த்தசாரதி சார்,
அருமை. 'படித்தால் மட்டும் போதுமா' காவியத்தின் 'நல்லவன்... எனக்கு நானே நல்லவன்' பாடலையும், அதற்கு நடிகர் திலகம் தந்த ஒத்துழைப்பையும் அற்புதமாக பாடல் பிடித்துள்ளீர்கள் இல்லை இல்லை படம் பிடித்துள்ளீர்கள். தாங்கள் கூறியது போல நடிகர் திலகத்தின் இந்த புதிய முயற்சி நகைப்புக்கு இடமாகக் கூடவாய்ப்புகள் இருந்தும் தன்னுடைய அசாத்திய திறமையில் பாடலை இமாலய உயரத்திற்கு கொண்டு சென்று ஸ்டைலில் பின்னி எடுத்திருப்பார். இதற்கே சற்று பருமனுடன் (விக் மற்றும் மேக்-அப் கூட சுமாராகத்தான் இருக்கும்) படிப்பறிவில்லாத ஒரு வேட்டைக்காரன் போல கதையும், காட்சியமைப்பும் இருந்தும் கூட இப்பாடலில் கண்கள், புருவம், கைகள் இவற்றாலேயே அனைத்தையும் மறக்கச் செய்து வழக்கமான நெம்பர் ஒன் இடத்தை எப்போதும் போல தக்க வைத்துக் கொள்வார். அதுதான் நடிகர் திலகம். "நல்லவன் எனக்கு நானே நல்லவன்" அற்புதப் பாடலை அட்டகாசமாய் ஆய்வு செய்த நீங்களே வல்லவர். பெருமகிழ்ச்சியுடன் கூடிய பாராட்டுக்கள்.
vasudevan31355
8th October 2012, 06:40 PM
கீரிப்பிள்ளை என்ற வார்த்தைக்கு அந்த ஜீவனையே கண்முன்னே கொண்டு வருவார். கீரிப் பிள்ளை வேகமாக வந்து தன் இரையைக் கண்டவுடன் முற்றிலும் மெதுவாக ஊர்ந்து செல்லுமாம். அந்த லட்சணத்தினைத் தன் கைகளில் காட்டி விடுவார் இந்தப் பாட்டில்.
சபாஷ் ராகவேந்திரன் சார். பின்னி எடுத்திட்டீங்க.. நீங்கள் எழுதியதைப் படித்தவுடன் எனக்கு 'சிந்து நதியின் மிசை' ஞாபகம் வந்து விட்டது. "வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்" வரிகளின் போது மிகுதியான நீர் ஆற்றோட்டமாய் வளைந்து நெளிந்து வந்து கடலில் சேர ஓடிவரும் வேகத்தை இரு கைகளின் வளைவுகளின் மூலம் அவர் காட்டும் அழகு... அடடா! மிகுதியான நீர் கடலில் கலந்து வீணாகாமல் பயிர் செய்ய உதவ வேண்டும் என்பதை உணர்த்த, நல்ல நீரை கடலில் சேராமல் தடுப்பது போன்ற பாவனையில் கைகளாலேயே சட்டென்று நிறுத்துவார்... பின் கடலில் சேரவிருக்கும் நல்ல நீரை தடுத்த பின் அந்த நீரோட்டத்தை திருப்பி மையத்து நாடுகளில் பயிர் செய்ய அனுப்பி வைப்பார்.(கைகளாலேயே). கைகளை சமமாக்கி நீரை சமமாக பங்கிட்டு வேறு கொடுப்பார். ஒரு செகண்ட் காட்சி. ஒரு கோடி தலைமுறைக்கும் எழுதலாம். பாரதி மட்டும் இதை கண்டிருந்தால் "என் பாட்டில் இவ்வளவு அர்த்தமா?" என்று அவனே ஆச்சரியப்பட்டுப் போவான்.
Subramaniam Ramajayam
8th October 2012, 08:31 PM
சபாஷ் ராகவேந்திரன் சார். பின்னி எடுத்திட்டீங்க.. நீங்கள் எழுதியதைப் படித்தவுடன் எனக்கு 'சிந்து நதியின் மிசை' ஞாபகம் வந்து விட்டது. "வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்"வரிகளின் போது மிகுதியான நீர் ஆற்றோட்டமாய் வளைந்து நெளிந்து வந்து கடலில் சேர ஓடிவரும் வேகத்தை இரு கைகளின் வளைவுகளின் மூலம் அவர் காட்டும் அழகு... அடடா! மிகுதியான நீர் கடலில் கலந்து வீணாகாமல் பயிர் செய்ய உதவ வேண்டும் என்பதை உணர்த்த, நல்ல நீரை கடலில் சேராமல் தடுப்பது போன்ற பாவனையில் கைகளாலேயே சட்டென்று நிறுத்துவார்... பின் கடலில் சேரவிருக்கும் நல்ல நீரை தடுத்த பின் அந்த நீரோட்டத்தை திருப்பி மையத்து நாடுகளில் பயிர் செய்ய அனுப்பி வைப்பார்.(கைகளாலேயே) கைகளை சமமாக்கி நீரை சமமாக பங்கிட்டு வேறு கொடுப்பார். ஒரு செகண்ட் காட்சி. ஒரு கோடி தலைமுறைக்கும் எழுதலாம். பாரதி மட்டும் இதை கண்டிருந்தால் "என் பாட்டில் இவ்வளவு அர்த்தமா?" என்று ஆச்சரியப்பட்டுப் போவான்.
Your write-up of nallavan enakunane nallavan of PMP very much impressive like the song. We need more sarathys' to publise NT'S talents.
plese do write more mr parthasarathysir.
qulabewud
9th October 2012, 01:32 PM
வணக்கம். இது தான் நான் இங்கு முதல் முறை போஸ்ட் செய்வது. அந்த strangers in the night வீடியோ செய்தது நான் தான். ஆனால் மன்னிக்க வேண்டும், அது சிவாஜிக்காக செய்ததில்லை, பத்மினிக்காக செய்தது. I'm a huge Padmini fan. இது என் பத்மினி blog - http://athousanddances.posterous.com.
நான் அமெரிக்காவில் வாழ்வதால் பத்மினி இருக்கும் படங்களோ பத்திரிக்கை பதிவுகளோ கிட்டுவது மிகவும் அருமை. ஆனால் இந்த வலைதளத்தில் அவர்களைப்பற்றி நிறையத் தெரிந்துக்கொண்டேன். அதற்கு மிக மிக நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். நான் பிறந்தது 1988 இல் என்பதாலும் என் பெற்றோர் தொலைக்காட்சி பார்க்காததாலும் நான் பழைய தமிழ் திரைப்படங்கள் நிறையப் பார்த்ததில்லை. ஆனால் இப்போது தேடித் தேடி மொழி புரிந்தும் புரியாமலும் நிறைய பத்மினி திரைப்படங்கள் பார்த்தபோது சிலவற்றில் சிவாஜியையும் பார்த்தேன். பத்மினியைப் பற்றி இந்த வலைத்தளத்தில் தேடும் பொது நீங்கள் அனைவரும் சிவாஜி மேல் வைத்திருக்கும் அதீத அன்பைப் பற்றி அறிந்துக்கொண்டேன். நான் அவருடைய ரசிகராக இல்லாவிட்டாலும் உங்கள் அன்பு என்னை மிகவும் தொட்டது.
One day when I've made enough money, I shall collect all the old south indian magazines and (padmini ;)) movies, acquire the copyrights and make them available online freely.
Keep up this amazing work and thank you so much for all the songs, videos, pictures, magazine clips and screenshots!
mr_karthik
9th October 2012, 02:23 PM
அன்புள்ள பார்த்தசாரதி சார்,
முன்னறிவிப்பின்றி திடுமென "நல்லவன் எல்லோர்க்கும் நான் நல்லவன்" என்று நுழைந்திருக்கிறீர்கள். தங்கள் பாடல் ஆய்வை மீண்டும் கண்ணுற்றதும் பெரும் மகிழ்ச்சி. 'நல்லவன், எனக்கு நானே நல்லவன்' பாடல் ஆய்வு மிக நன்றாக உள்ளது.
பாடல் முழுவதும் தலைவர் முகம் முழுக்க சிரிப்போடும் குதூகலத்தோடும், அலட்டல் எதுவுமில்லாமல் கைகளை ஃப்ரீயாக சுழலவிட்டு ஸ்டைலாக ஆடுவார். இவர் ஸ்டைலுக்கு முன் பாலாஜி என்னென்னவோ செய்துபார்த்தும் எடுபடாமல் போனார்.
'நல்லவன், எனக்கு நானே நல்லவன்' என்பது முழுக்க முழுக்க சுயநலமான வார்த்தை. அதனால்தான் பாடல் முழுவதிலும் ஒரு இடத்தில்கூட நடிகர்திலகம் இந்த பல்லவியைப் பாட மாட்டார். தம்பிக்காகப் பார்த்த குடும்பக்குத்துவிளக்கை தான் அபகரித்துக்கொண்ட சுயநலக்காரர் பாலாஜிதான் திரும்பத்திரும்பப் பாடுவார். இயக்குனர் பீம்பாய் நன்றாக மேட்ச் செய்திருக்கிறார்.
முன்பெல்லாம் பழைய படங்களில் இப்படித்தான். ஏதாவது பண்ணைத்திருவிழா, கோயில் திருவிழா, குடும்பத்தில் விசேஷம் என்றால் மட்டுமே குரூப் டான்ஸ் நடைபெறும். ஆனால் இப்போதோ, கதாநாயகனும் நாயகியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டால் போதும், எங்கிருந்துதான் ஒரே மாதிரி உடையணிந்த முப்பது ஆண்களும் பெண்களும் வந்து குதிப்பார்களோ தெரியாது. டூயட் பாடல் என்ற பெயரில் ஒரே தையாதக்காதான்.
பாடலை நன்றாக ஆய்வு செய்துள்ளீர்கள். படிக்காத, வேட்டையாடும் முரடனுக்கான உடல்வாகு, அதற்கேற்ற விக் என்று தலைவர் அட்டகாசமாக இருப்பார். தலைவருக்கு ஐந்து பாடல்கள் இருந்தும் கூட தன் ஜோடியுடன் ஒரு டூயட் பாடல்கூட இல்லை. கீரியும் பாம்புமாக இருப்பவர்களுக்கிடையே எப்படி டூயட் என்று கேட்கிறீர்களா?. அட, கனவுப்பாட்டாகக்கூட ஒரு டூயட் இல்லை. அதுதான் தலைவரின் பாணி. அதற்கு பதிலாக பாலாஜியுடன் இரண்டு டூயட். இப்போதுகூட டிவி ரியாலிட்டி ஷோக்களில், இரண்டு ஆண்கள் சேர்ந்து பாடும் பாடல் என்றால், 'பொன்னொன்று கண்டேன்' பாடலைத் தேர்ந்தெடுப்பவர்களே அதிகம்.
வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்.... ஆறப்போடாமல் அடுத்த பாடலுக்கான ஆய்வை சீக்கிரமே வழங்குங்கள் பார்த்தி....
parthasarathy
9th October 2012, 05:39 PM
அன்புள்ள திரு. ராகவேந்தர், திரு. வாசுதேவன், திரு. கோபால், திரு. ராமஜெயம், திரு. கார்த்திக் அவர்களுக்கு,
படித்தால் மட்டும் போதுமா படத்தில் வரும் "நல்லவன் எனக்கு நானே நல்லவன்" பாடல் ஆய்வுக்கு பாராட்டு தெரிவித்தமைக்கு நன்றிகள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
parthasarathy
9th October 2012, 06:04 PM
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
6. "நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு"; படம்:- நெஞ்சிருக்கும் வரை (1967); இயக்கம்:- சி.வி.ஸ்ரீதர்
இன்னமும் கூட, பல கலைஞர்கள், சினிமாவில், பாடல் காட்சிகளில், எப்போதெல்லாம் வேகமும் ஒரு சில மூவ்மெண்டுகளும் தேவையோ, அப்போதெல்லாம் நடனமாட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாறாக, சினிமாவில், பாடல்களில் பெரும்பாலும் தேவைப் படுவது, நடனம் அல்ல, மூவ்மெண்டுகளுடன் கூடிய சில பல அபிநயங்கள் தான் என்று தெரிவதில்லை. அவர்கள் எல்லோரும் இந்தப் பாடலை ஒரு முறை பார்த்தால் போதும்.
மூன்று படித்த இளைஞர்கள், வேலை தேடித் தேடி அலுத்துப் போனாலும், தன்னம்பிக்கையை வரவழைக்க, தங்கள் கண் முன் அப்போது இருக்கும் சூழலை ரசித்து, அனுபவித்து, தன்னம்பிக்கையோடு பாடுவதாக வரும் பாடல்.
பாடலின் துவக்கத்தில் வரும் இசையே ஒரு வித உற்சாகத்தை அளிக்க, நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் வி.கோபாலகிருஷ்ணன் மூவரும், பாடலைத் துவக்குகின்றனர்.
இந்தப்பாடலைக் கேட்டாலே, பாடல் துவங்கி முடியும் வரையிலும், ஒரு வித சரளமும், வேகமும், உற்சாகமும் இருப்பதை உணரலாம். பார்த்தால், இவை பல மடங்கு
விருத்தியாவதைக் கண்டு பிரமிக்கலாம். இதற்கு முழு காரணம் நடிகர் திலகம் மட்டுமே.
பாடல் முழுவதிலும், அவர் காட்டியிருந்த சரளமும், நளினமும், கௌரவத்துடன் கூடிய அழகும்/மெருகும், வேகமும், வெவ்வேறு நடைகளும், ஒவ்வொரு முறையும், வேறு வேறு பாவனைகளையும், இலேசான மூவ்மெண்டுகளையும் மாற்றி மாற்றிக் காண்பித்தும் நடித்த விதம், படம் பார்த்து பல வருடங்கள் ஆனாலும், நெஞ்சில் பசு மரத்தாணி போல் நிரந்தரமாகத் தங்கி விட்டது (அதன் பின்னர் பல முறை பார்த்தாகி விட்டது என்பது வேறு விஷயம்!).
இந்தப் பாடலின் துவக்கத்தில் வரும் இசையிலிருந்தே, நடிகர் திலகத்தின் இராஜாங்கம் துவங்கி விடும். நடிகர் திலகத்தின் ஒரு பக்கத்தில் முத்துராமனும், மறு பக்கத்தில் வி. கோபாலகிருஷ்ணனும் கூடவே வர, துவக்கத்திலிருந்தே, மிக மிக நளினமாக மெதுவாகத் துவங்குவார். முதலில், துவக்க இசைக்கேற்ற நளினமான நடை - இப்போது, விசிலடித்துக் கொண்டே, கைகளையும் கால்களையும் ஆங்கில பாணியில் அபிநயித்துக் கொண்டே செல்வார்... மெல்ல மெல்ல மூவ்மெண்ட் வேகமெடுக்கும் - ஆனால் ஒரு அளவோடு. இப்போது, நேர் போஸில் மற்ற இருவரோடும் அவர் வர, பல்லவி துவங்கும். "நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு" எனும்போது, இரண்டு கைகளையும் ஒரு மாதிரி லூசாக வைத்துக் கொண்டே, வலது கையால் சொடக்குப் போட்டுக்கொண்டே, இடது கையை லூசாக வைத்துக் கொண்டே, நடை. "வாழ்ந்தே தீருவோம்" எனும்போது, ஒரு வித இலேசான திமிருடனும் நம்பிக்கையுடனும், வலது கையை உயர்த்தி இந்த வார்த்தைகளுக்கேற்ற பாவம். இப்போது, பல்லவியை மறுபடியும், முத்துராமனையும் கோபியையும் நோக்கித் திரும்பி பாடும் போது வேறு விதமான நடை, மற்றும் பாவம், இப்போது "நாளை என்ற நாளிருக்கு" எனும்போது, இரண்டு கைகளையும் கீழே வைத்து "எப்படி வாழாமல் போவோம்" எனும் விதத்தில் வெளிப்படுத்தி, "வாழ்ந்தே தீருவோம்" எனும் போது, வலது கையை, பெரிய நம்பிக்கையுடன் உயர்த்தி இரண்டு பேரையும் நோக்கிச் சொல்வார். "எங்கே கால் போகும் போக விடு" என்று மற்ற இருவரும் சொன்னவுடன், இடது கையை உயற்றி “முடிவைப் பார்த்து விடு” என்று பாடி, திரும்பவும், "எங்கே கால் போகும் போக விடு" எனும் போது, இப்போது சைட் போஸில், வலது கையை உயர்த்தி சொல்லும் ஸ்டைல்; “காலம் ஒரு நாள் கை கொடுக்கும்”, என்று கூறி, "அது வரை பொருத்து விடு" என்று இப்போது, இரண்டு கைகளால், லூசாக, பொருத்தமாக, அந்த "பொறுத்து விடு"வைச் சொல்வார். இது எல்லாமும், ஒரு இடத்தில் கூட டெம்போ தொய்ந்து விடாமல், ஒன்று நடந்து கொண்டோ, அல்லது இலேசாக அபிநயித்துக் கொண்டோ, இல்லை, ஆங்கில பாணியில் நடனமாடிக் கொண்டோ தான் செய்து கொண்டே இருப்பார். அத்தனை சரளமாக! அனு பல்லவி முடியும் போது, "லா லா ... யா ய யா யா" என்று மூன்று பேரும் ஹம் செய்யும் போது, இவருடைய பாவனையைக் கவனியுங்கள்!
இப்போது வரும் ஒரு துள்ளல் இசைக்கு, அப்படியே, பின்னோக்கி ஆங்கில ட்விஸ்ட் நடன பாணியில் நடனமாடிக் கொண்டே செல்லும் போது, ஆரவாரத்தில் தியேட்டர் கிழிந்தது.
முதல் சரணம் துவங்குவதற்கு முன் வரும் இசைக்கேற்றபடி (filler music) , இந்தப் பாடல் துவங்கிய டெம்போ குறையாமல், நடிகர் திலகம் நடந்து கொண்டோ, இலேசான அபிநயத்துடன் கூடிய நடனத்துடனோ, மற்ற இருவருடனும் கைகளைக் கோர்த்துக் கொண்டோ, வலது கையால் சொடக்குப் போட்டபடியேவோ, அல்லது இடது கையோடு சேர்ந்து, கால்களின் துணையோடு, அற்புதமான நளினத்துடன் நடந்து கொண்டோ, நடனமாடிக் கொண்டோ வருவார்.
முதல் சரணம் - "இருந்தால் தானே செலவு செய்ய" இப்போது "கைல என்ன இருக்கு செலவு செய்ய" என்பதை நளினத்துடன் செய்து காண்பிப்பார். "எடுத்தால் தானே மறைத்து வைக்க" எனும் போது கைகளில் அதற்கேற்ற அபிநயம் இருக்கும். திரும்பவும் அதே வரிகள் - பாருங்கள் - வேறு மாதிரியான அபிநயம் மற்றும் பாவனை - ஆனாலும், அந்தக் கருத்துகேற்பத்தானிருக்கும்! "கொடுத்தால் தானே வாங்கிச் செல்ல தடுத்தால் தானே விழித்துக் கொள்ள" என்று இரண்டு முறை சொல்லும் போதும், வலது கையை உயர்த்தி இரண்டு முறையும் இரண்டு விதமாகச் சொல்லும் விதம்! இப்போது, கேமரா டாப் ஆங்கிளில் இருக்கும்!!
"எங்கே கால் போகும் போக விடு முடிவைப் பார்த்து விடு; காலம் ஒரு நாள் கை கொடுக்கும் அது வரை பொறுத்து விடு" எனும் போது, நடனமாடாமல், இப்போது வேகமாக நடக்கத் துவங்கி விடுவார் - அதுவும் படு ஸ்டைலாக. இப்போது முதலில் வந்த ஹம்மிங் மறுபடியும் "லா லா ... யா ய யா யா" - முதல் சரணத்துக்கு முன், இதே ஹம்மிங்கிற்கு ஆங்கில பாணியில் அபிநயித்து இலேசாக நடனமாடியவர், இப்போது அதே ஹம்மிங்குக்கு, ஒரு மாதிரி ஸ்டைலாக நடந்து கொண்டே வருவார் - மற்ற இருவர் மட்டும் ஹம் பண்ணுவார்கள். ஏனென்றால், இந்த ஹம்மிங்குக்கு முன் தான் வேகமாகப் பாடிக் கொண்டே நடந்து வருவார். இந்த ஹம்மிங் உடனே வருவதால், அந்த நடையின் வேகத்தைச் சிறிதே குறைத்து, மற்ற இருவரையும் ஹம் செய்ய விட்டு, நடு நாயகமாக, அனாயாசமாக நடந்து வருவார். மீண்டும், பல்லவி "நெஞ்சிருக்கும் எங்களுக்கு..." என்று துவங்கும் போது, அந்த வேகமான நடையுடன் கூடிய அபிநயத்துக்கு வந்து விடுவார். ஆங்கிலத்தில், 'follow through' என்று சொல்வார்கள். இதை நடிகர் திலகத்தைப் போல், பூரணமாகச் செய்து காட்டியவர் இன்று வரை ஒருவரும் இல்லை; இனி ஒருவர் பிறக்கப் போவதும் இல்லை!
திரும்பவும், இப்போது, இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் துள்ளல் இசைக்கு ஏற்ற படி, கைகளையும் கால்களையும் ஒரு வித தாள கதியுடன் மற்ற இரண்டு பேர்களின் கைகளைக் கோர்த்துக் கொண்டு ஆங்கில பாணியில் நடனமாடிக் கொண்டே வருவார்.
இப்போது இரண்டாவது சரணம் - "துணிந்தால் தானே எதுவும் முடிய தொடர்ந்தால் தானே பாதை தெரிய" எனும் போது, மறுபடியும் இரண்டு கைகளையும் லூசாக, ஆனால், இப்போது வேறு மாதிரி அபிநயித்துக் கொண்டே வருவார். "சிரித்தால் தானே கவலை மறைய" என்று முதல் முறை சொல்லும் போது, வலது கையை உயர்த்தி சொல்லும் போது, அவர் முகத்தில் தோன்றும் அந்த பாவம் - சிலிர்க்க வைக்கும்! (மனுஷன் எல்லா போஸ்களிலும் அழகாக இருந்தாலும், அந்த சைட் போஸ் மட்டும் - அடிச்சுக்க முடியாது!). மீண்டும் மறு முறை இதேயே சொல்லும் போது "இரண்டு கைகளையும் மேலே தூக்கி "எங்க சிரிக்கறோம்" எனும் போர்வையில் (ஆங்கிலத்தில் wry ஸ்மைல் என்பார்கள் அது போல் - ஒரு வித வறண்ட புன்னகை) அபிநயிப்பார்.
கடைசியில், "நெஞ்சிருக்கும் எங்களுக்கு" என்று மீண்டும் பல்லவி துவங்கும் போது மூவரும், அங்கிருக்கும் வட்ட வடிவ நீரூற்றின் மேலே ஏறி பாடிக் கொண்டே போய் (இதற்குப் பக்கத்தில் தானே நீ இன்று சிலையாய் இருக்கிறாய் கலைக் கடவுளே!), கீழே இறங்கி அந்த வேகத்தை மெல்ல மெல்ல குறைத்து, "லா ல லா லா" என்று ஹம் செய்த படியே முடிக்கும் போது, அடடா, இவ்வளவு சீக்கிரத்தில் பாடல் முடிந்து விட்டதே என்று தோன்றும்!
பாடல் எழுதிய கவிஞர் வாலியின் நோக்கத்தைப் புரிந்து, இப்படித் தான் எடுக்க வேண்டும் என்று நினைத்த இயக்குனர், நடன இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோரின் இதயத்திற்குள் நுழைந்து, அருமையாக இசையமைத்த மெல்லிசை மன்னர் மற்றும் அற்புதமாகப் பாடிய டி.எம்.எஸ்ஸின் வித்தைக்குத் தலை வணங்கி, இந்தப் பாடலை மறக்க முடியாத பாடலாக்கிய பெருமை, நடிகர் திலகம் ஒருவருக்கு மட்டுமே சேரும்.
இத்தனைக்கும் இந்தப் பாடல், சுட்டெரிக்கும் வெய்யிலில் மெரீனா கடற்கரைச் சாலையில் படமாக்கப் பட்டது. எனக்குத் தெரிந்து, இந்தப் பாடலை ஒரே நாளில் எடுத்து விட்டார்கள். என்ன, கூட நடித்தவர்கள் இவர் அளவிற்கு இயைந்து நடிப்பதற்கு நேரம் பிடித்திருக்கும் என்பதால், நிறைய டேக்குகள் போயிருக்கும். இருப்பினும், காலில் செருப்பில்லாமல் நடித்திருப்பார்கள், நடிகர் திலகம் உட்பட!
நினைவு தெரிந்து இந்தப் படத்தை முதலில் ஒரு டூரிங் டாக்கீஸில் ஒரு வார நாளில் - அதுவும் - மதியக் காட்சியில் - பார்த்த போது (அரங்கம் நிரம்பி வழிந்து, ப்ளாக்கில் டிக்கெட் வாங்க வேண்டியதாகி விட்டது!), இந்தப் பாடலில், நடிகர் திலகம் ஒட்டு மொத்த மக்களையும் ஆர்ப்பரிக்க வைத்தது பசுமையாக நினைவில் உள்ளது - நிறைய பேர் ஆபரேட்டரிடம் சென்று, "ஒன்ஸ் மோர்" கேட்டு, மறுபடியும், இந்தப் பாடல் போடப் பட்டது - இதெல்லாம், வேறு எந்த நடிகருக்கும் சாத்தியமா?
நடிகர் திலகத்திடம் இந்தப் பாடல் நெடுகக் கொப்பளிக்கும் குதூகலம், நளினம், நம்பிக்கை, இவை அத்தனைக்கும் மூல காரணங்களான அவரது அசாத்திய, அபாரமான கற்பனை வளம் மற்றும் அர்பணிப்புக்கு முன் கலை வாணியே மயங்கித் தான் தீர வேண்டும் எனும் போது, பார்க்கும் கேவலம் மனித ஜென்மங்களாகிய நாம் என்ன செய்ய முடியும்? அவரைப் பார்த்து வாய் பிளந்து பிரமிப்பதைத் தவிர!
தொடரும்,
இரா. பார்த்தசாரதி
RAGHAVENDRA
9th October 2012, 08:50 PM
டியர் சாரதி,
மறக்க முடியாத மற்றொரு பாடல் - படம் - நெஞ்சிருக்கும் வரை. கிட்டத் தட்ட இந்தப் பாடலின் பெரும் பகுதி படப் பிடிப்பைப் பார்த்த நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளது. காலையில் துவங்கி மதியம் வரை நடைபெறும் படப்பிடிப்பில் மக்கள் கூட்டத்தை மிகவும் சிரமப் பட்டு கட்டுப் படுத்த போலீஸ் முயன்ற போது, நடிகர் திலகம் தன் வேண்டுகோளின் மூலம் அந்தப் படப்பிடிப்பை சுமுகமாக நடக்க வைத்த சாதுர்யம் மறக்க முடியாது. காலையிலேயே பெருமளவில் மக்கள் கூட்டம். அப்போதெல்லாம் நாங்கள் கடற்கரையில் காலையில் விளையாடும் வழக்கம் உண்டு. இந்தக் காட்சியிலேயே நீங்கள் கவனிக்கலாம். ஒரு கட்டத்தில் மணலுக்கு முன்புறம் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி இதில் வரும். வி.கோபால கிருஷ்ணன் முத்து ராமன் இருவரும் மிகச் சிறந்த கலைஞர்கள். அதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் இந்தப் பாடல் காட்சியில் அவர்கள் நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுக்க முடிய வில்லை என்பதை நாங்கள் கண் கூடாகப் பார்த்தோம். அதுவும் அந்த மக்கள் கூட்டத்தில் நிறைய பேர் எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிகர்கள் இருந்தார்கள். அவர்களே வியந்து போனார்கள் என்ற அளவிற்கு நடிகர் திலகத்தின் திறமை பளிச்சிட்டது. பாடலில் காலணி இருக்காது. ஒரு கட்டத்தின் போது காலணியுடன் மூவருமே நடந்து விட்டார்கள். அது படமும் பிடிக்கப் பட்ட போது நடிகர் திலகம் திடீரென அதனை நிறுத்தச் சொல்லி விட்டு தன் காலில் வெயில் உரைக்க வில்லையே என காலைப் பார்த்து செருப்பினைக் கழட்டி விட்டு மீண்டும் நடநது வந்தார். அடிக்கடி டேக் எடுக்க வேண்டி வந்ததால் [காரணம் நடிகர் திலகமல்ல] ஷாட் எடுக்கும் போது வெயில் வந்து விடும். அந்த சுட்டெரிக்கும் வெயிலில் வெறும் காலுடன் நடந்து பாடல் முழுவதையும் மூவரும் நடித்து கொடுத்தது பாராட்டத் தக்கது. சாலையில் கடற்கரை ஒட்டிய நடைபாதையை ஒட்டிய பகுதி படப்பிடிப்பிற்காக ஒதுக்கப் பட்ட போது வாகனங்கள் அதனை ஒட்டிய பகுதியில் சாலையில் கடந்து சென்றன. அதனை மிகவும் திறமையுடன் காவல் துறையினர் ஒழுங்கு படுத்தித் தந்தது பிரமிக்கத் தக்க கடமையுணர்வாகும்.
http://www.dailymotion.com/video/xgs4m3_nenjirukkum-engalukku_school
இதெல்லாம் சரி ... ஆனால் ...
எந்த இடத்தில் அவர் ஆடிப் பாடினாரோ, எந்த இடத்தில் அவரை அந்தப் படப்பிடிப்பில் பார்த்தோமோ,
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/rereleases/NTNENJIRUKKUMVARAI_zps68abe392.jpg
அதே இடத்தில் இன்று அவர் சிலையாக இருப்பதை நாங்கள் கண்ணுறும் போதெல்லாம் ...
http://mw2.google.com/mw-panoramio/photos/medium/70896696.jpg
http://4.bp.blogspot.com/-fN0P7avigIA/Tbmo3soga9I/AAAAAAAAAPo/jCB3eet6cZc/s1600/tears.jpg
RAGHAVENDRA
9th October 2012, 09:42 PM
இதயக்கனி சினிமா ஸ்பெஷல் அக்டோபர் பதிப்பு நடிகர் திலகம் பிறந்த நாள் சிறப்பிதழாக வந்துள்ளது. இதில் திருவிளையாடல் வெளியீட்டைப் பற்றி வெளிவந்துள்ள கருத்துரையின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20FILMS%20IN%20CHENNAI/IKOCT12TVLP01_zps13bbd944.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20FILMS%20IN%20CHENNAI/IKOCT12TVLP02_zps6e7f60f4.jpg
இது நம்முடைய சொந்தக் கருத்தல்ல. இதயக்கனியின் அணுகுமுறையைக் காட்டுவதாகும். இதில் உள்ள கருத்துக்களை ஏற்பதும் புறக்கணிப்பதும் அவரவர் உரிமை. ஏராளமான ரசிகர்கள் திருவிளையாடல் படத்தின் திடீர் வெளியீட்டில் மனம் நொந்திருக்கும் வேளையில் இந்தக் கட்டுரை தனக்கே உரிய கோணத்தில் இப்பட வெளியீட்டைப் பற்றிக் கூறியுள்ளது.
RAGHAVENDRA
9th October 2012, 10:14 PM
ஒரு ஒசையின்றி மௌனமாக சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்க வளாகத்தில் திரையிடப் பட்ட திருவிளையாடல் திரைக் காவியத்தின் 25வது நாளை ரசிகர்கள் இன்று 9.10.2012 மாலை அரங்க வாயிலில் கொண்டாடினர். திருவிளையாடல் நடிகர் திலகத்தின் திருவுருவம் இடம் பெற்ற பதாகைக்கு மாலை அணிவிக்கப் பட்டு மரியாதை செலுத்தப் பட்டது. வந்திருந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கப் பட்டது. ரசிகர்கள் நடிகர் திலகத்தின் பேனருக்கு தீப ஒளி காட்டி மரியாதை செலுத்தினர். திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்கள் தன் புதல்வியின் திருமண அழைப்பிதழை நடிகர் திலகத்தின் பதாகையின் முன் வைத்து வணங்கி, ரசிகர்களுக்கு அழைப்பிதழைப் படித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்.
நிகழ்ச்சியின் சில நிழற்படங்கள் நம் பார்வைக்கு
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20FILMS%20IN%20CHENNAI/TVL25WL01_zpsd4095a27.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20FILMS%20IN%20CHENNAI/TVL25WL02_zpsa82a3a61.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20FILMS%20IN%20CHENNAI/TVL25WL03_zps96074f45.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20FILMS%20IN%20CHENNAI/TVL25WL04_zps81ee2b1b.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20FILMS%20IN%20CHENNAI/TVL25WL05_zpsc69030ee.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20FILMS%20IN%20CHENNAI/TVL25WL06_zps8d1ca23d.jpg
RAGHAVENDRA
9th October 2012, 10:16 PM
மேலும் சில நிழற்படங்கள்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20FILMS%20IN%20CHENNAI/TVL25WL07_zpsbd549339.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20FILMS%20IN%20CHENNAI/TVL25WL08_zpse1e9db5c.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20FILMS%20IN%20CHENNAI/TVL25WL09_zpse534f2fa.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20FILMS%20IN%20CHENNAI/TVL25WL10_zpscb25e0a6.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20FILMS%20IN%20CHENNAI/TVL25WL11_zps0d5dc0ef.jpg
Murali Srinivas
9th October 2012, 11:14 PM
வாசு,
ஒரு மாதத்திற்கு முன் துணிவே துணை என்று விளம்பர பதிவிட்டீர்கள். ஆனால் நான் எப்போதும் சொல்வது போல் உங்களுக்கு கற்பனை வளமும் எழுத்து திறமையும் என்றுமே உங்கள் துணை. இதை தவிர உங்கள் துணை பதிவைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.
அன்புடன்.
oowijaez
10th October 2012, 09:47 AM
[QUOTE=RAGHAVENDRA;964376]டியர் சாரதி,
மறக்க முடியாத மற்றொரு பாடல் - படம் - நெஞ்சிருக்கும் வரை. கிட்டத் தட்ட இந்தப் பாடலின் பெரும் பகுதி படப் பிடிப்பைப் பார்த்த நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளது. காலையில் துவங்கி மதியம் வரை நடைபெறும் படப்பிடிப்பில் மக்கள் கூட்டத்தை மிகவும் சிரமப் பட்டு கட்டுப் படுத்த போலீஸ் முயன்ற போது, நடிகர் திலகம் தன் வேண்டுகோளின் மூலம் அந்தப் படப்பிடிப்பை சுமுகமாக நடக்க வைத்த சாதுர்யம் மறக்க முடியாது. காலையிலேயே பெருமளவில் மக்கள் கூட்டம். அப்போதெல்லாம் நாங்கள் கடற்கரையில் காலையில் விளையாடும் வழக்கம் உண்டு. இந்தக் காட்சியிலேயே நீங்கள் கவனிக்கலாம். ஒரு கட்டத்தில் மணலுக்கு முன்புறம் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி இதில் வரும். வி.கோபால கிருஷ்ணன் முத்து ராமன் இருவரும் மிகச் சிறந்த கலைஞர்கள். அதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் இந்தப் பாடல் காட்சியில் அவர்கள் நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுக்க முடிய வில்லை என்பதை நாங்கள் கண் கூடாகப் பார்த்தோம். அதுவும் அந்த மக்கள் கூட்டத்தில் நிறைய பேர் எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிகர்கள் இருந்தார்கள். அவர்களே வியந்து போனார்கள் என்ற அளவிற்கு நடிகர் திலகத்தின் திறமை பளிச்சிட்டது. பாடலில் காலணி இருக்காது. ஒரு கட்டத்தின் போது காலணியுடன் மூவருமே நடந்து விட்டார்கள். அது படமும் பிடிக்கப் பட்ட போது நடிகர் திலகம் திடீரென அதனை நிறுத்தச் சொல்லி விட்டு தன் காலில் வெயில் உரைக்க வில்லையே என காலைப் பார்த்து செருப்பினைக் கழட்டி விட்டு மீண்டும் நடநது வந்தார். அடிக்கடி டேக் எடுக்க வேண்டி வந்ததால் [காரணம் நடிகர் திலகமல்ல] ஷாட் எடுக்கும் போது வெயில் வந்து விடும். அந்த சுட்டெரிக்கும் வெயிலில் வெறும் காலுடன் நடந்து பாடல் முழுவதையும் மூவரும் நடித்து கொடுத்தது பாராட்டத் தக்கது. சாலையில் கடற்கரை ஒட்டிய நடைபாதையை ஒட்டிய பகுதி படப்பிடிப்பிற்காக ஒதுக்கப் பட்ட போது வாகனங்கள் அதனை ஒட்டிய பகுதியில் சாலையில் கடந்து சென்றன. அதனை மிகவும் திறமையுடன் காவல் துறையினர் ஒழுங்கு படுத்தித் தந்தது பிரமிக்கத் தக்க கடமையுணர்வாகும்.
It must had been a privilege to watch NT in action! I missed that opportunity in my life. You are really lucky! But please mention the good memories of NT only.
oowijaez
10th October 2012, 10:01 AM
[QUOTE=Pappimma KP;964066]வணக்கம். இது தான் நான் இங்கு முதல் முறை போஸ்ட் செய்வது. அந்த strangers in the night வீடியோ செய்தது நான் தான். ஆனால் மன்னிக்க வேண்டும், அது சிவாஜிக்காக செய்ததில்லை, ????பத்மினிக்காக செய்தது. I'm a huge Padmini fan. இது என் பத்மினி blog - http://athousanddances.posterous.com.
The video fits well with Frank Sinatra's song, fantastic! But the comment about NT in the blog will certainly not make NT fans happier. On that blog, you have mentioned that NT over acted just because he wanted to look better than his co-stars (or something like that). That is absolutely wrong. Everybody knows that NT always encouraged his co-stars and even went out of the way to advise them, giving acting tips to make the shot good. What Padmini mentioned in the interview that NT and her tried to outperform each other, was only in a sense that they wanted to give their best, not as a competition. No matter who he acted with, he performed as he always did; brilliantly. He acted with his piers like Banumathi, Kannamba, MRR, etc...too as well as Radha, Ambika and Vijay. Did he have to overact with them too? sounds ridiculous to me.
vasudevan31355
10th October 2012, 12:16 PM
டியர் பார்த்தசாரதி சார்,
பாடல் ஆய்வுத் தொடர் மூலம் தொடர் சந்தோஷங்களை அள்ளி வழங்கி வருகிறீகள். 'நல்லவன் எனக்கு நானே நல்லவன்' அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே மற்றுமொரு பம்பர் லாட்டரி. நெஞ்சிருக்கும் எங்களுக்கு நினைவிருக்கும் வரை மறக்க முடியாத பாடல். அதன் பின்னணியை அற்புதமாக ஆய்வு செய்யும் தங்கள் பா(ப)ணி... பாடலில் நடிகர் திலகம் புரியும் அட்டகாசங்கள் தங்கள் வைர வரிகளில் ஜொலிக்கும் அற்புதம்... அனைத்தும் படு ஜோர். உள்ளத்தில் நுழைந்து என் ஊனில் ஊடுருவிய பாடல். அத்தகைய பாடலின் ஆய்வு அதுவும் தங்கள் எழுத்துக்களில் என்றால் கேட்கவும் வேண்டுமோ! நன்றிகள் பல.
mr_karthik
10th October 2012, 12:19 PM
அன்புள்ள பார்த்தசாரதி சார்,
சீக்கிரமாக அடுத்த பாடல் பதிவைத் தாருங்கள் என்று நாங்கள் கேட்டது உண்மை. அதற்காக இவ்வளவு சீக்கிரம் தருவீர்களென்று எதிர்பார்க்கவேயில்லை. எதிர்பாராமல் அள்ளித்தருபவர்கள்தானே நம் அன்பர்கள்.
நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தின் அனைத்துப்பாடல்களும் தேன் சொட்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. முத்துக்களோ கண்கள், பூமுடிப்பாள் இந்தப்பூங்குழலி, எங்கே நீயோ நானும் அங்கே, கண்ணன் வரும் நேரமிது, நினைத்தால் போதும் பாடுவேன், நெஞ்சிருக்கும் எங்களுக்கு என அனைத்துமே அட்டகாசமான, வெவ்வேறு வடிவங்களைக்கொண்ட பாடல்கள். அவற்றில் முதலிரண்டு பாடல்களூம் அனைவராலும் அடிக்கடி சிலாகிக்கப்படும் பாடல்கள் என்பதால் யாரும் அதிகம் தொடாத பாடலான 'நெஞ்சிருக்கும் எங்களுக்கு' என்ற பாடலைத் தேர்ந்தெடுத்து அலசியிருக்கிறீர்கள். வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை நடிகர்திலகத்தின் மூவ்மெண்ட்டுகளைக் குறிப்பிட்டு ஆய்ந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
வழக்கமாக இம்மாதிரி வெளிப்புறங்களில் படமாக்கப்படும் பாட்ல்களை, இயக்குனர்கள் பாதிப்பாடலுக்கு மேல் ஸ்டுடியோக்களில் 'பேக் ப்ரொஜக்ஷன்' முறையைப் பயன்படுத்தி, நடிப்பவர்களை இடுப்புக்கு மேல் காண்பித்து ஒப்பேற்றுவார்கள். ஆனால் பெர்ஃபெக்ஷனிஸ்ட் ஸ்ரீதர் அப்படிச்செய்யவில்லை. பாடல் முழுவதிலும் மூவரையும் பீச்ரோட்டில் ஆடல் பாடல்களுடன் நடக்கவைத்து முழுப்பாடலையும் இயற்கையாகவே எடுத்துள்ளார்.
நேற்றுமாலை, இப்பாடல் பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே படித்து விட்டேன். உடனே பதில் பதிவிட முடியாததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று நேரமின்மை (அவசரமாக வெளியில் செல்ல வேண்டியிருந்தது). இன்னொன்று சிறிது மன வருத்தம். அதாவது...
இதே போல இசைஞானி இளையராஜா அவர்களின் பாடலொன்றை ஒருவர் ஆய்வு செய்திருந்தால் குறைந்த பட்சம் பத்து இடங்களிலாவது இளையராஜா பெயர் இடம் பெற்றிருக்கும். ஆனால் நேற்று பவர் கிளாஸ் போட்டுத் தேடியும், என்னிடமிருக்கும் பெரிய பூதக்கண்ணாடியை வைத்துத்தேடியும் ஒரு இடத்தில்கூட அந்த பாவப்பட்ட மனுஷன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் பெயரைக்காணவேயில்லை. (நெஞ்சிருக்கும் வரை படத்துக்கு பாடல்கள் ஒரு பெரிய பலம் என்பதையும், பாடல்களுக்காகவே பலர் திருப்பித்திருப்பிப் பார்த்தார்கள் என்பதையும் மறுக்க முடியாது).
மத்திய அரசிலிருந்து, அவர் பாடல்களை ஒளிபரப்பும் டிவி காம்பியர்களிலிருந்து, டிவிக்களில் பேட்டி கொடுக்கும் வி.ஐ.பி.க்களில் இருந்து, இன்னும் பலரும் அவர் பெயரைக்குறிப்பிட்டு அவருக்குரிய 'கிரடிட்'டைக் கொடுக்க மறுக்கிறார்களென்றால் நீங்களுமா என்று எண்ணி வியந்தேன். நடிகர்திலகமும் மற்றவர்களும் இப்பாடலில் துள்ளல்நடை போடுகிறார்களென்றால் அதற்கு முழுமுதல் பக்கபலம் மெல்லிசை மன்னர் அள்ளித்தந்த அந்த துள்ளல் இசை மற்றும் மெட்டு அல்லவா?.
இன்று காலை மீண்டும் பதிவைப்படித்தபோது 'ஒரு இடத்தில்' மெல்லிசை மன்னரின் பெயர் செருகப்பட்டிருந்ததைக் கண்டேன். தானாக சேர்க்கப்பட்டதா அல்லது யாரும் சுட்டிக்காட்டியபின் சேர்க்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
அடுத்த முறையாவது 'சாபம்' வாங்கி வராமல், 'வரம்' வாங்கி வா விஸ்வநாதா.
vasudevan31355
10th October 2012, 12:24 PM
பார்த்தசாரதி சார் ஆய்வு செய்தபின் அப்பாடலை பார்க்காமல் விட்டு விடுவோமா என்ன! அப்போதுதானே அப்பாடலின் சிறப்பம்சங்கள் இன்னும் நமக்குத் தெரியும்... புரியும். இதோ ரசிக்கத் தயாராவோம்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NJMsXIrkPrI
vasudevan31355
10th October 2012, 12:34 PM
அன்பு கார்த்திக் சார்,
"நெஞ்சிருக்கும் வரை' பாடல் வீடியோவில் தங்களுக்காகவே மெல்லிசை மன்னரின் பெயரை பச்சை வண்ணத்தில் மேலேயும், பாடகர் திலகத்தின் பெயரை மஞ்சள் வண்ணத்தில் கீழேயும் வாட்டர் மார்க் செய்து ஒரு புண்ணியவான் அப்லோட் செய்துள்ளார் போலும். இப்போது தங்கள் மனம் சற்று அமைதி பெற்றிருக்கும் என நம்புகிறேன். எங்கே நீங்களோ நானும் அங்கே உங்களோடு.
vasudevan31355
10th October 2012, 01:00 PM
நடிகர் திலகத்தின் புகழ் பெற்ற 'நெஞ்சிருக்கும் வரை' போஸ். 'என்ன' போஸ்!
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-5.jpg
vasudevan31355
10th October 2012, 03:59 PM
அன்பு முரளி சார்,
தங்கள் 'துணை'யான அன்புப் பாராட்டிற்கு மிக்க மிக்க நன்றி!
vasudevan31355
10th October 2012, 05:54 PM
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சிகள் (வீடியோ தொடர்) 7.
படம்: எங்கள் தங்க ராஜா
வெளிவந்த ஆண்டு: 1973
தயாரிப்பு: V.B.ராஜேந்திர பிரசாத் (ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ்)
சண்டைப்பயிற்சி: A.D.வெங்கடேஷ், M.K.சாமிநாதன்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/11.jpg
சண்டைக்காட்சியின் அட்டகாசமான நிழற்படங்கள் சில.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/15.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/12.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/14.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/13.jpg
இந்த அற்புதமான சண்டைக்காட்சியை 'வியட்நாம்' கோபால் சாருக்கு ஆனந்தத்தோடு சமர்ப்பிக்கிறேன்.
எங்கள் தங்க ராஜாவில் பட்டாக்கத்தி பைரவனின் புகழ்க்கொடி நாட்டிய மோட்டார் பைக் காட்சியையும் இந்த சண்டைக்காட்சியுடன் இணைத்துள்ளேன். பைரவனின் அமர்க்களம் உலகிற்கே தெரிந்த விஷயமாயிற்றே! ராமதாஸ் மற்றும் ஸ்டன்ட் குழுவினருடன் பைரவர் போதும் பயங்கரமான சண்டைக்காட்சி. சும்மா சுறுசுறுப்பு என்றல் அப்படி ஒரு சுறுசுறுப்பு... வேகமென்றால் அப்படியொரு வேகம்... ஹோட்டலுக்குள் நுழையும் போதே ரசிகர்களின் முதுகெலும்பு நேராகி விடும். ரெட் கலர் பேன்ட் மற்றும் நெக் பனியனுடன் மேலே அணிந்த பிளாக் கலர் கோட்...(ஓப்பன் கோட்டாய் இல்லாமல் வயிற்றின் அருகே மட்டும் பட்டனுடன் கோட் ஸ்டைலாக இணைக்கப்பட்டிருக்கும்). கையில் புகையும் சிகரெட் வலதுபுறமாய் கை விரல் சுண்டுதலில் பறக்கும். வலது காலில் சாக்ஸிலிருந்து கண நேரத்தில் கத்தி எடுக்கப்பட்டு ராமதாஸ் முன் உள்ள டேபிளில் கரெக்டாக கண்'ணென்று செருகும். பின் காலருகே இருக்கும் சேர் ஒரே உதையில் ஒய்யாரமாய் நகர்ந்து சென்று நச்சென்று டேபிள் அருகில் இவர் அமர ரெடியாக நிற்கும். சிம்மம் ஸ்டைலாக நடந்து வந்து சேரை திருப்பிப் போட்டு அமரும். பின் ஆரம்பமாகும் அனல் பறக்கும் சண்டை. ஹோட்டலின் உத்திரத்தை பிடித்து தொங்கியவாறு டூப்பே இல்லாமல் எதிரிகளைத் தாக்கும் போதும், bar-ஐ பிடித்துக் கொண்டு வில்லன்களைப் பந்தாடும் போதும் விசில் சத்தம் விண்ணைக் கிழிக்கும். முற்றிலும் வித்தியாசமான நடை, உடை, பாவனைகள், கர்ஜனை, அலாதி சுறுசுறுப்பு, கால்களின் விறைப்பு, பெல்சும் பெல்சுமல்லாத ரகத்தில் விறைத்து நிற்கும் பேன்ட், கண்களில் குடிகொள்ளும் கையகல கூலிங் கிளாஸ், வாயில் சதாசர்வ காலமும் நர்த்தனமாடிக் கொண்டிருக்கும் சூயிங்கம்... பைரவன்னா பைரவன்தான். நம் எல்லோரையும் அவன்பால் பைத்தியமாக்கிய பைரவன்... பாருங்கள்.
முதன்முறையாக இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக
http://www.youtube.com/watch?v=Ogv_5o3Ejw8&feature=player_embedded
அன்புடன்,
வாசுதேவன்.
qulabewud
10th October 2012, 06:14 PM
The video fits well with Frank Sinatra's song, fantastic! But the comment about NT in the blog will certainly not make NT fans happier.
Thank you for the kind words about the video! :) Yes I agree the blog in its entirety may not go down well with the readers of this thread. However, I thought that they might find some things there interesting, such as the Vinnodum Mukilodum song's video.
On that blog, you have mentioned that NT over acted just because he wanted to look better than his co-stars (or something like that). That is absolutely wrong.
Perhaps I was unclear in the blog, but this interpretation is incorrect. I did not suggest that he overacted in order to look better than his costars. I do not think so either, because it's somewhat illogical - he was a famous actor and had no reason whatsoever to try and look better than the others - and from what little I've read about him, he sounds like a warm and nice person.
However, the question of whether he overacted is not one that I'm prepared to argue about, here. To each his own - you love NT and I love Padmini and we both benefit from watching them, and the blog is the place to discuss what I write there. :)
NemYsumussy
10th October 2012, 06:42 PM
Inthis songs performance by all three very very naural fine
Murali Srinivas
10th October 2012, 11:19 PM
வாசு,
எனக்கு மிக மிகப் பிடித்த அந்த நெஞ்சிருக்கும் வரை போஸிற்கு கோடானு கோடி நன்றிகள்!
அன்புடன்
Gopal.s
11th October 2012, 06:38 AM
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சிகள் (வீடியோ தொடர்) 7.
படம்: எங்கள் தங்க ராஜா
வெளிவந்த ஆண்டு: 1973
தயாரிப்பு: V.B.ராஜேந்திர பிரசாத் (ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ்)
சண்டைப்பயிற்சி: A.D.வெங்கடேஷ், M.K.சாமிநாதன்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/11.jpg
சண்டைக்காட்சியின் அட்டகாசமான நிழற்படங்கள் சில.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/15.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/12.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/14.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/13.jpg
இந்த அற்புதமான சண்டைக்காட்சியை 'வியட்நாம்' கோபால் சாருக்கு ஆனந்தத்தோடு சமர்ப்பிக்கிறேன்.
எங்கள் தங்க ராஜாவில் பட்டாக்கத்தி பைரவனின் புகழ்க்கொடி நாட்டிய மோட்டார் பைக் காட்சியையும் இந்த சண்டைக்காட்சியுடன் இணைத்துள்ளேன். பைரவனின் அமர்க்களம் உலகிற்கே தெரிந்த விஷயமாயிற்றே! ராமதாஸ் மற்றும் ஸ்டன்ட் குழுவினருடன் பைரவர் போதும் பயங்கரமான சண்டைக்காட்சி. சும்மா சுறுசுறுப்பு என்றல் அப்படி ஒரு சுறுசுறுப்பு... வேகமென்றால் அப்படியொரு வேகம்... ஹோட்டலுக்குள் நுழையும் போதே ரசிகர்களின் முதுகெலும்பு நேராகி விடும். ரெட் கலர் பேன்ட் மற்றும் நெக் பனியனுடன் மேலே அணிந்த பிளாக் கலர் கோட்...(ஓப்பன் கோட்டாய் இல்லாமல் வயிற்றின் அருகே மட்டும் பட்டனுடன் கோட் ஸ்டைலாக இணைக்கப்பட்டிருக்கும்). கையில் புகையும் சிகரெட் வலதுபுறமாய் கை விரல் சுண்டுதலில் பறக்கும். வலது காலில் சாக்ஸிலிருந்து கண நேரத்தில் கத்தி எடுக்கப்பட்டு ராமதாஸ் முன் உள்ள டேபிளில் கரெக்டாக கண்'ணென்று செருகும். பின் காலருகே இருக்கும் சேர் ஒரே உதையில் ஒய்யாரமாய் நகர்ந்து சென்று நச்சென்று டேபிள் அருகில் இவர் அமர ரெடியாக நிற்கும். சிம்மம் ஸ்டைலாக நடந்து வந்து சேரை திருப்பிப் போட்டு அமரும். பின் ஆரம்பமாகும் அனல் பறக்கும் சண்டை. ஹோட்டலின் உத்திரத்தை பிடித்து தொங்கியவாறு டூப்பே இல்லாமல் எதிரிகளைத் தாக்கும் போதும், bar-ஐ பிடித்துக் கொண்டு வில்லன்களைப் பந்தாடும் போதும் விசில் சத்தம் விண்ணைக் கிழிக்கும். முற்றிலும் வித்தியாசமான நடை, உடை, பாவனைகள், கர்ஜனை, அலாதி சுறுசுறுப்பு, கால்களின் விறைப்பு, பெல்சும் பெல்சுமல்லாத ரகத்தில் விறைத்து நிற்கும் பேன்ட், கண்களில் குடிகொள்ளும் கையகல கூலிங் கிளாஸ், வாயில் சதாசர்வ காலமும் நர்த்தனமாடிக் கொண்டிருக்கும் சூயிங்கம்... பைரவன்னா பைரவன்தான். நம் எல்லோரையும் அவன்பால் பைத்தியமாக்கிய பைரவன்... பாருங்கள்.
முதன்முறையாக இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக
http://www.youtube.com/watch?v=Ogv_5o3Ejw8&feature=player_embedded
அன்புடன்,
வாசுதேவன்.
மிக்க நன்றி வாசு சார்.
எங்கள் தங்க ராஜா(1973 )
வசந்த மாளிகைக்கு பிறகு தெலுங்கு தயாரிப்பாளர்களின் பிரிய நடிகர் ஆனதுடன் ,இரு மடங்கு ஊதியம், மொத்த தேதிகள் இத்யாதிகளுடன் தயாரிக்க பட்ட தெலுங்கு தழுவல் படம். ராஜேந்திர பிரசாத் இயக்கம் ,தயாரிப்பு. (மற்றவை- உத்தமன், பட்டாகத்தி பைரவன்).நான் பெங்களுருவில் தொலைந்து போக இருந்த த்ரில் அனுபவத்தை எழுதி விட்டேன்.
கதை ஜன ரஞ்சகமாக பொழுபோக்கு நிறைந்த suspense அம்சம் கொண்டது. தனது குடும்பத்தை நிர்மூலமாக்கிய வில்லனை டாக்டர் கதாநாயகன்,அவர் மகளை காதலித்து பழி வாங்கும் கதைதான் என்றாலும், பட்டாகத்தி பைரவன் கதாபாத்திரம் படத்தை உச்சத்தில் நிறுத்தி, அந்த வருடத்திய அதிக பட்ச வசூல் சாதனை நிகழ்த்திய சிவாஜி படம் ஆனது. மஞ்சுளா ஜோடியாக வெளிவந்த முதல் படம்.(அறிமுகம்-மன்னவன் வந்தானடி)
படம் வழக்கமான துவக்கம்,பிறகு டாக்டர் கதாபாத்திரத்தின் நற்பண்புகள்(ஏழைகள் ,உதவி இத்யாதி), கல்லூரி மோதல் ,tease பாட்டு, காதல் , என்று என்னடா கொஞ்சம் தொய்கிறதே என்று பார்த்தால், பட்டாகத்தி பைரவன் அறிமுகம். சூயங் கம் மென்று கொண்டு, தோசைகல் கூலிங் க்ளாச்சுடன்,பைக்கில் அறிமுகம். பாரில் கலாட்டா. வில்லன் உடன் அறிமுகம். அவன் பெண்ணை தட்ட கூடாத இடத்தில் தட்டி கலாட்டா.மாடி வரை ஸ்போர்ட்ஸ் கார் ,சகுந்தலாவுடன் கொட்டம், போலீசுடன் நக்கல், பிறகு கொஞ்சம் சீறியேஸ் ஆக கற்பாம் மானமாம் பாடல் என விரிந்து ,எதிர்பாராத முடிவுடன் முடியும். NT அவருடைய அதிரடி பாணியில் (உத்தம புத்திரன் விக்ரம், நவராத்திரி DSP ) வெளுத்து வாங்கி பின்னியிருப்பார். அட்டகாச சிரிப்பு, restless ஆன திமிர் நடை,அகந்தையாய் ஈர்ப்புடன் வசன உச்சரிப்பு, துரு துருப்பு , rowdiyish handsome தோற்றத்தில்(ஒல்லியாக) ரசிகர்களை பைத்தியம் ஆக்கி இருப்பார். இந்த படத்தில் முத்தங்கள் நூறு பாட்டை பார்த்தவர்கள், ரஜினி ஸ்டைல்,நடை, நடனம் எங்கிருந்து உற்பத்தியானது என உணர்வார்கள்.
பாடல் மாமா மகாதேவன் பின்னியிருப்பார். இரவுக்கும் பகலுக்கும் அழகான ஓட்ட நடை பாடல்.(மற்றது விடிவெள்ளியின் கொடுத்து பார்),கல்யாண ஆசை ,சம்ப்ஹோ,கற்பாம்,முத்தங்கள், கோடியில்(ஆண்டவனே ஒளி விளக்கு பாணி) என நல்ல ஹிட் பாடல்கள்.
படம் நடு நடுவில் தொய்ந்தாலும் , மொத்தத்தில் விறுவிறுப்பாய் போவதே தெரியாமல் போகும்.
எதற்காக இல்லாவிட்டாலும் பட்டாகத்தி பைரவனுக்காக நூறு முறை பார்க்கலாம்.(ஏனென்றால் அவர் ஒரு முறை நடித்து விட்டதை மற்றவர்கள் நூறு முறை நடித்து பெயர் வங்கி விட்டார்கள்)
Gopal.s
11th October 2012, 06:42 AM
வாசு,
எனக்கு மிக மிகப் பிடித்த அந்த நெஞ்சிருக்கும் வரை போஸிற்கு கோடானு கோடி நன்றிகள்!
அன்புடன்
அதே அதே சபாபதே.
parthasarathy
11th October 2012, 11:25 AM
அன்புள்ள திரு. ராகவேந்தர், திரு. முரளி, திரு. வாசுதேவன், திரு. கார்த்திக், திரு. கோபால் மற்றும் திரு. சசி,
என்னுடைய "நெஞ்சிருக்கும் எங்களுக்கு" படப் பாடல் ஆய்வைப் படித்து பாராட்டி ஊக்குவித்ததற்கு மிக்க நன்றி.
திரு. ராகவேந்தர்:- எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்ததற்கும், உடனே, அந்தப் பாடலை பதிவிட்டதற்கும் மிக்க நன்றி.
திரு. முரளி:- இந்தப் பாடல் கவிஞர் வாலி இயற்றினாரா அல்லது கவியரசுவா என்று முதலில் இருந்தே ஒரு சந்தேகம் இருந்தது. என்சைக்ளோபீடியவான உங்களிடம் வேறொரு சந்தேகத்தை நிவர்த்தி பண்ணுவதற்கு தொடர்பு கொண்ட நான், இந்த சந்தேகத்தை நிவர்த்தி பண்ணாமல் விட்டு விட்டேன். உடனே, அந்தத் தவறை சரி செய்து விட்டேன். சரியான நேரத்தில் தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள். என்ன செய்வது, எனக்கும் பல விவரங்கள் (மற்ற மொழிகள் உட்பட) தெரிந்திருந்தும், சில விவரங்களில் இன்னமும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டபடி, "நல்லவன் எனக்கு நானே நல்லவன்" பாடலும் "நெஞ்சிருக்கும் எங்களுக்கு" பாடலும் பெரும்பாலும் உடல் மொழியை சுற்றியே பின்னப் பட்டிருக்கும். இந்த ஒரு விஷயம் தான் நாடக நடிப்புக்கும் சினிமா நடிப்புக்கும் வித்தியாசத்தை - நடிகர்களிடமிருந்து - வர வேண்டியிருக்கும் மிக முக்கியமான வித்தியாசம். இந்த வித்தியாசத்தை முதலில் அதுவும் பரிபூரணமாகக் காட்டிய நடிகர், நடிகர் திலகம் என்பது துவக்கத்திலிருந்தே தெரியும். இருப்பினும், இந்தப் பாடல்களும் அந்தக் கட்டுரையும், நடிகர் திலகத்தின் வித்தியாசமான முயற்சியையே பெரிதும் எடுத்துக் கொள்கிறது.
திரு. வாசு:- பாராட்டியதோடு நிற்காமல், உடனடியாக அந்தப் பாடலின் விடியோவையும் பதிந்ததற்கு மிக்க நன்றி. அதோடு நிற்காமல், "நெஞ்சிருக்கும் வரை" படத்தின், புகழ் பெற்ற நடிகர் திலகத்தின் போஸின் நிழற்படத்தையும் பதிந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். மிக்க நன்றி. நடிகர் திலகத்தின் படம் ஒவ்வொன்றையும், அது இன்ன படம் என்று அவருடைய கெட்டப் மற்றும் சில போஸ்களை வைத்தே எளிதாகக் கண்டு பிடித்து விடலாம் - ஒரே சிகை அலங்காரம் மற்றும் கிருதாவாக இருந்தாலும் (செல்வம் முதல் என் தம்பி/லக்ஷ்மி கல்யாணம் வரை) - விக்குடன் இருந்தாலும் - குறிப்பிட்ட போசை வைத்து (உதாரணத்திற்கு செல்வத்தில் க்ளோசப் சைட் போஸ்:- முத்து முத்தாக வியர்வைத் துளிகள்; என் தம்பி:- கத்தியுடன் நிற்கும் போஸ் - இப்படிப் பல படங்கள்). இந்த வரிசையில், நெஞ்சிருக்கும் வரை என்றாலே ஒவ்வொரு ரசிகனுக்கும் நினைவு வருவது நீங்கள் பதிந்த போஸ் தானே! முதலில் பார்த்த போது, அந்தப் போஸுக்கு தியேட்டர் அதிர்ந்தது இன்னும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றது!!
திரு. கார்த்திக்:- இந்தக் கட்டுரை, நடிகர் திலகத்தின் நடிப்பை மட்டுமே ஆராய்வதால், பங்களித்த மற்ற கலைஞர்களின் பங்களிப்பைப் பெரிய அளவில் தொடுவதில்லை. ஒரே ஒரு வாக்கியத்தில் மற்ற கலைஞர்களைப் பற்றிக் குறிப்பிட்ட போது, மெல்லிசை மன்னரின் பங்களிப்பை முதலில் சுட்டிக்காட்டத் தவறி விட்டேன். பின்னர், மறுபடியும், படித்த போது, தவறை உணர்ந்து திருத்தி விட்டேன். மற்றபடி, எனக்கும், ஆதர்ச இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் தான். என்னைப் பொறுத்த வரை, திரை இசைப் பாடல்களுக்கு (குறிப்பாக, தமிழில்) டியூனுக்கு இலக்கணம் வகுத்தவர் அவர் தான் என்பேன். சினிமா பாடல்கள் 1961-க்கு முன்பு வரை, ஒன்று சாஸ்த்ரிய அடிப்படையிலோ இல்லை நாட்டுப் பாடல்களின் (folk) அடிப்படையிலோ தான் இருந்து வந்தன. பாவ மன்னிப்பு படத்திற்குப் பின்னர் தான் சினிமா பாடல்கள் வேறு ஒரு பாட்டையில் பயணிக்க ஆரம்பித்தது. அதாவது, கொஞ்சம் சாஸ்த்ரிய சங்கீதம், கொஞ்சம் மேலை நாட்டு சங்கீதம் சேர்ந்த கலவையாக. எப்படி இன்றைய கர்னாடக சங்கீதக் கச்சேரிகள் பின்பற்றுகின்ற முறையை, மறைந்த அரியக்குடி அவர்கள் முதலில் வகுத்தாரோ, சினிமாவில், இன்றைய சங்கீதத்தின் அடிப்படையை மெல்லிசை மன்னர் அவர்கள் தான் (மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி) முதலில் வகுத்தார். அந்த அடிப்படையில் தான், இன்று வரை, தமிழ் சினிமா பாடல்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதை ஏற்கனவே ஒரு முறை எழுதியிருக்கிறேன்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
mr_karthik
11th October 2012, 01:12 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,
எங்கள் தங்க ராஜாவின் சண்டைக்காட்சி பதிவு வெகு அருமை. சற்றே கருமையான முகம், வித்தியாசமான விக், வழக்கத்துக்கு மாறாக பெரிய கூலிங் கிளாஸ், சற்று காடியான வண்ணத்தில் உடை என அசத்தியிருப்பார் தலைவர். இம்மாதிரி சண்டைக்காட்சிகள் அம்சமாக எடுபட்டதற்கு பெரிய மூலதனமாக அமைந்தது அந்த அட்டகாசமான ஸ்லிம் உடல்வாகு. தச்சோளி அம்பு மலையாளப்பட ஷூட்டிங்கில் அடிபட்டு ஓய்வெடுத்ததிலிருந்து அவரது உடல்வாகு மீண்டும் 1960 முதல் 65 வரையான கட்டத்தை நோக்கித்திரும்பி விட்டது.
கோபால் சார் சொன்னதுபோல, படம் துவங்கி சிறிது நேரம் இரண்டு சிறுவர்கள், மேஜர், சௌகார் என்று ஓடத்துவங்கியபோது, 'என்னப்பா இது இருதுருவம் போலல்லவா இருக்கிறது?' என்ற முணுமுணுப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இருந்தாலும் ஸ்டில்களில் பட்டாக்கத்தியாரின் போஸ்களைப் பார்த்திருந்ததால் அவரது தரிசனத்துக்காக மனம் ஏங்கிக்கொண்டிருந்தது. அதனால் மஞ்சுளாவின் 'சாமியிலும் சாமியிது' பாடலெல்லாம் பொறுமையை ரொம்பவே சோதித்தது உண்மை. பாடலை தெலுங்கு மெட்டில் வேறு போட்டிருப்பார் கே.வி.எம். அவர் பண்ணிய இன்னொரு மிஸ்டேக், எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருக்க வேண்டிய 'முத்தங்கள் நூறு' பாடலை சுசீலாவுக்குக் கொடுத்தது.
நீங்கள் தந்திருக்கும் சண்டைக்காட்சி அட்டகாசமாக உள்ளது. வெறும் சண்டையாக இல்லாமல் அதில் ஸ்டைலையும் கலந்து தந்திருப்பதுதான் இதில் சிறப்பு. ஏ.டி.வெங்கடேசன் அமைத்த சிறந்த சண்டைக்காட்சிகளில் இதுவும் ஒன்று எனலாம். (சண்டைக்காட்சி வரிசையில், தங்கள் பதிவின்போது அந்தந்த படங்களின் சண்டைப்பயிற்சியாளரின் பெயரை படத்தின் ஒரிஜினல் டைட்டில் கார்டோடு சேர்த்து பதிவிடும் தங்கள் பாணி மிக மிக போற்றுதலுக்குரியது).
ஒருபக்கம் நடிகர்திலகத்தின் திரை நாயகியர் வரிசை ஆய்வு, இன்னொருபக்கம் சண்டைக்காட்சிகள் பற்றிய ஆய்வு, மறுபக்கம் படங்களின் ஸ்டில்கள், வேறொருபக்கம் பார்த்தசாரதி அவர்களின் பாடல் ஆய்வுகள், ராகவேந்தர் சாரின் ஸ்பெஷல் பதிவுகள் என திரி கனஜோராகச் செல்கிறது. பம்மலார் அவர்கள் விடுமுறை முடிந்து எப்போது திரும்புவார்?. அவர் பதிவுகளைக்காண மனம் ஏங்குகிறது.
'எங்கள் தங்க பைரவன்' சண்டைக்காட்சியைப் பதிவிட்டு திரியில் சுறுசுறுப்பு ஏற்றியமைக்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள்.
Gopal.s
11th October 2012, 03:06 PM
As written by Mr.Partha sarathy,
(Quote)
திரு. கார்த்திக்:- இந்தக் கட்டுரை, நடிகர் திலகத்தின் நடிப்பை மட்டுமே ஆராய்வதால், பங்களித்த மற்ற கலைஞர்களின் பங்களிப்பைப் பெரிய அளவில் தொடுவதில்லை. ஒரே ஒரு வாக்கியத்தில் மற்ற கலைஞர்களைப் பற்றிக் குறிப்பிட்ட போது, மெல்லிசை மன்னரின் பங்களிப்பை முதலில் சுட்டிக்காட்டத் தவறி விட்டேன். பின்னர், மறுபடியும், படித்த போது, தவறை உணர்ந்து திருத்தி விட்டேன். மற்றபடி, எனக்கும், ஆதர்ச இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் தான். என்னைப் பொறுத்த வரை, திரை இசைப் பாடல்களுக்கு (குறிப்பாக, தமிழில்) டியூனுக்கு இலக்கணம் வகுத்தவர் அவர் தான் என்பேன். சினிமா பாடல்கள் 1961-க்கு முன்பு வரை, ஒன்று சாஸ்த்ரிய அடிப்படையிலோ இல்லை நாட்டுப் பாடல்களின் (folk) அடிப்படையிலோ தான் இருந்து வந்தன. பாவ மன்னிப்பு படத்திற்குப் பின்னர் தான் சினிமா பாடல்கள் வேறு ஒரு பாட்டையில் பயணிக்க ஆரம்பித்தது. அதாவது, கொஞ்சம் சாஸ்த்ரிய சங்கீதம், கொஞ்சம் மேலை நாட்டு சங்கீதம் சேர்ந்த கலவையாக. எப்படி இன்றைய கர்னாடக சங்கீதக் கச்சேரிகள் பின்பற்றுகின்ற முறையை, மறைந்த அரியக்குடி அவர்கள் முதலில் வகுத்தாரோ, சினிமாவில், இன்றைய சங்கீதத்தின் அடிப்படையை மெல்லிசை மன்னர் அவர்கள் தான் (மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி) முதலில் வகுத்தார். அந்த அடிப்படையில் தான், இன்று வரை, தமிழ் சினிமா பாடல்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதை ஏற்கனவே ஒரு முறை எழுதியிருக்கிறேன்.
Unquote
சாரதி சார்,
நீங்கள் தகுதிக்கு மீறியே விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு கிரெடிட் கொடுக்கிறீர்கள். அவர்கள் trend -setter என்பது தவறான தகவல்.1952 இல் சுப்பராமன் மறைவுக்கு பிறகு ஒன்று சேர்ந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடி உருப்படியாக 52 - 60 இல் தந்த படங்கள் புதையல்,பதிபக்தி, சிவகங்கை சீமை,பாகபிரிவினை, மன்னாதி மன்னன்,மாலையிட்ட மங்கை ஆகியவை மட்டுமே. நீங்கள் சொன்ன trend -setter பட்டத்துக்கு தகுதியானவர்கள் சுப்பராமன்,ஜி.,ராமநாதன், ஏ.எம்.ராஜா,மகாதேவன் ஆகியோரே.இவர்கள்தான் சரியான விகிதத்தில் கர்நாடகம்,ஹிந்துஸ்தானி,வெஸ்டேர்ன்,folk கலந்து தமிழ் பட மெல்லிசையை தூக்கி பிடித்த நால்- வேந்தர்கள்.(trend -setters )
ஆனால், 60 களில்,மெல்லிசை மன்னர்கள் ,வடக்கில் சங்கர்-ஜெய்கிஷன்,நவஷாத்,நய்யார்,பர்மன்,,சலீல் சௌதரி,மதன் மோகன்,லட்சுமி-பியாரி இவர்கள் அத்தனை பேருடைய சாதனையையும் மிஞ்சி, அத்தனை variety கொடுத்தனர். பீம்சிங்,ஸ்ரீதர், சங்கர்,பந்துலு,ராமண்ணா, கோபாலக்ருஷ்ணன்,வேலுமணி ,சிவாஜி படங்களில் இசை ராஜ்ஜியம் தான். இதே காலகட்டத்தில் மாமா மகாதேவன் சாதனையும் அளப்பரியது.
ஆனாலும், 60 இல் இருந்து 65 வரை வருடம் நான்கு படங்கள் சராசரியாக கொடுத்து தங்கள் ஜோடியை ஆதரித்த சிவாஜியிடம், தனியாக வந்த பிறகு ,விஸ்வநாதன் நன்றி பாராட்டினாரா என்பது கேள்வி குறியே.தனியாக வந்த பிறகு விஸ்வநாதன் திறமை அந்த அளவு ஜொலிக்கவும் இல்லை.
vasudevan31355
11th October 2012, 04:05 PM
ஆஹா! ஆரம்பிச்சிட்டாருய்யா...ஆரம்பிச்சிட்டாருய்யா.. . 'மெல்லிசை மன்னர்' திரி நண்பர்கள் கண்களுக்குப் படாமல் ஏதாவது செய்ங்கப்பா...
vasudevan31355
11th October 2012, 04:16 PM
தனியாக வந்த பிறகு விஸ்வநாதன் திறமை அந்த அளவு ஜொலிக்கவும் இல்லை
அப்டியா?!
Gopal.s
11th October 2012, 04:36 PM
அப்டியா?!
ஒரு அழகான உரையாடலை தொடங்கியுள்ளீர்கள். தங்களுடன் உடன் படுகிறேன். Grandeaur என்று பார்த்தால் சிவந்த மண்தான் அவர் உச்சம். உயர்ந்த மனிதனை நான் தேர்ந்தெடுத்தது classical touch (பால் போலவே,வெள்ளி கிண்ணம் தான் ) Experimental genre (அந்த நாள்) ஆகியவற்றுக்குத்தான்.
அவர்கள் பிரிந்தபின் balancing of archestra , அதிசய ராகங்கள்(உள்ளத்தில் -சக்ரவாகம் தொடங்கி,சரசாங்கியில் தொடரும்) ,ரெகார்டிங் ஸ்டாண்டர்ட்ஸ் பாதிக்க பட்டது உண்மை. ராம மூர்த்தி அவர்களுக்கு வியாபார திறமை அற்றதாலும்,தங்க சுரங்கம் எதிர் பார்த்த வெற்றியை பெறாததாலும் ஒதுக்க பட்டார்.
விஸ்வநாதன் தனியே வந்த பின் சில நல்ல படங்களை (sivaji) 1975 வரை கொடுத்துள்ளார். நீலவானம்(ஓஹோஹோ ஓடும் ,ஓஹ் லிட்டில் flower ),மோட்டார் சுந்தரம் பிள்ளை(காத்திருந்த), Thangai(Sugam,Iniyadhu),நெஞ்சிருக்கும் வரை(அனைத்தும்),இரு மலர்கள்(மாதவி,மன்னிக்க, அன்னமிட்ட),ஊட்டி வரை உறவு(அனைத்தும்),உயர்ந்த மனிதன் (அனைத்தும்),அன்பளிப்பு(தேரு வந்தது,வள்ளிமலை), சிவந்த மண்(அனைத்தும்),எங்க மாமா(என்னங்க,சொர்க்கம்,எல்லோரும்),ராமன் எத்தனை ராமனடி(சித்திரை மாதம், நிலவு வந்து),சொர்க்கம்(பொன்மகள்,muthaaraththil),எங் கிருந ்தோ வந்தாள்(ஒரே பாடல்,சிரிப்பில்),பாதுகாப்பு(ஆற்றுக்கு),இரு துருவம்(தேரு பார்க்க),தங்கைக்காக(அங்க முத்து),Praptham (Allsongs)சுமதி என் சுந்தரி(அனைத்தும்), பாபு(வரதப்பா), ஞான ஒளி(மண மேடை),பட்டிக்காடா பட்டணமா(என்னடி,கேட்டுக்கோடி),தர்மம் எங்கே(பள்ளியறைக்குள்),தவ புதல்வன்(நானொரு,இசை கேட்டால்),பொன்னூஞ்சல்(ஆகாய, நல்ல காரியம்),கவுரவம்(யமுனா,அதிசய),ராஜபார்ட் ரங்கதுரை(அம்மம்மா,மதன),
சிவகாமியின் செல்வன்(இனியவளே,மேளதாளம்),தாய்(எங்க மாமனுக்கும்),அவன்தான் மனிதன்(ஊஞ்சலுக்கு,அன்பு நடமாடும்,ஆட்டுவித்தால்)மன்னவன் வந்தானடி(காதல் ராஜ்ஜியம்),அன்பே ஆருயிரே(மல்லிகை முல்லை),வைர நெஞ்சம்(நீராட),டாக்டர் சிவா(மலரே,கன்னங்கருத்த),பாட்டும் பரதமும்(மான் தோரண,கற்பனைக்கு), சித்ரா பவுர்ணமி (வந்தாலும்).
ரோஜாவின் ராஜா(ஜனகனின் மகளை)
mr_karthik
11th October 2012, 05:39 PM
அன்புள்ள கோபால் சார்,
இது நடிகர்திலகத்தின் புகழ்பாடும் திரி என்பதால் இங்கு இசையமைப்பாளர்களைப்பற்றிய விவாதம் தேவையில்லையென்றாலும் நீங்கள் துவக்கிய விவாததத்துக்கு ஒரு சிறு விளக்க்மேனும் தந்து முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நீங்கள்தான் அளவுக்கு அதிகமாக கே.வி.மகாதேவன் மாமாவுக்கு கிரெடிட் கொடுக்கிறீர்கள். அவரது சாதனைகளனைத்தும் புராணப்படங்களில்தான். சமூகப்படங்களில் அவரது வெற்றியென்பது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான். அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன், வசந்தமாளிகை வெற்றிகள் அப்படித்தான்.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஜோடி பிரிந்தபின், யாரால் அந்த ஜோடி முன்பு ஸ்திரம் பெற்றிருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியானது. பிரிந்தபின் மெல்லிசை மன்னர் வருடத்துக்கு 20 படங்கள் கொடுக்க, ராமமூர்த்தியோ தனியாக மொத்தமே 26 படங்களைத்தான் கொடுத்துள்ளார். பிரிந்தபின் தனியாக நின்ற மெல்லிசை மன்னரைக்கூட மாமாவால் வீழ்த்த முடியவில்லை. அதிலும் கே.வி.எம். அறுபதுகளின் துவக்கத்தில் சின்னப்பா தேவர் படங்களுக்கு இசையமைத்த படங்களில், படத்தின் டைட்டிலை மாற்றிவிட்டால் எந்தப்பாடல் எந்தப்படம் என்று புரியாது அந்த அளவுக்கு வெரைட்டி இல்லாமல் ஒரே மாதிரியாக அடித்துத் தள்ளினார்.
தனியே பிரிந்த பின் மெல்லிசை மன்னர் கொடுத்த ஊட்டிவரை உறவு, இருமலர்கள், அன்பே வா, ரகசிய போலீஸ், குடியிருந்த கோயில், உயர்ந்த மனிதன், செல்வமகள், சிவந்த மண், நம்நாடு, சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், எங்கள் தங்கம், காவியத்தலைவி (எழுபதுகளில் வந்த அனைத்து சிவாஜி, எம்.ஜி.ஆர். படப்பாடல்களும்) அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மனமத லீலை, நினைத்தாலே இனிக்கும் உள்பட ஏராளமான பாடல்களைக்கேட்டபின்னும், "த்னியே வந்தபின் எம்.எஸ்.வி. ஜொலிக்கவில்லை" என்று நீங்கள் சொல்லியிருப்பதை இந்த ஆண்டின் சிறந்த ஜோக்காக எடுத்துக்கொள்கிறேன்.
மேற்கொண்டு விவாதிப்பதென்றால் மெல்லிசை மன்னர் திரிக்குப் போகலாம். இங்கே விவாதித்து நடிகர்திலகத்துக்கு நாம் இடைஞ்சல் தர வேண்டாம்.
Gopal.s
11th October 2012, 05:53 PM

விஸ்வநாதன் சார் தனியாக இசையமைத்த மற்ற படங்கள் (எனது பிடித்தம்)-1965 -1975 .
கலங்கரை விளக்கம்(அனைத்தும் ),அன்பே வா(அனைத்தும் ),நாடோடி(அனைத்தும்),ரகசிய போலீஸ்(அனைத்தும்),குடியிருந்த கோவில்(அனைத்தும்),சந்திரோதயம்(அனைத்தும்),பறக் கும் பாவை(அனைத்தும்)காவல் காரன்(நினைத்தேன் வந்தாய்),செல்வ மகள்(அனைத்தும்),நிமிர்ந்து நில்(அனைத்தும்),குடியிருந்த கோவில்(அனைத்தும்), கண்ணன் என் காதலன்(பாடுவோர்,மின்மினியை),நான் ஆணையிட்டால்(கொடுக்க கொடுக்க),ஒளி விளக்கு( நாங்க புதுசா,நான் கண்ட,மாம்பழ),நம் நாடு(ஆடை முழுதும்),காவிய தலைவி(அனைத்தும்),குமரி கோட்டம்(நாம் ஒருவரை,எங்கே அவள்),உலகம் சுற்றும் வாலிபன்(அவள் ஒரு,நிலவு ஒரு),அவளுக்கு என்று ஓர் மனம்(அனைத்தும்),எங்கள் தங்கம்(நான் அளவோடு,தங்க பதக்கத்தின்),தேடி வந்த மாப்பிள்ளை(நாலு பக்கம்,சொர்கத்தை),உரிமை குரல்(அனைத்தும்).அபூர்வ ராகங்கள்(அனைத்தும்)
ராமமூர்த்தி சார் தனியாக எனது பிடித்தம்.
தேன் மழை(கல்யாண, விழியால்,என்னடி ),நான்(அனைத்தும்),மறக்க முடியுமா(அனைத்தும்),தங்க சுரங்கம்(அனைத்தும்),எங்களுக்கும் காதல் வரும்(கள்ள பார்வை).காதல் ஜோதி(சாட்டை, உன்மேலே),மெட்ராஸ் டு பாண்டிசேரி (என்ன என்ன, ஹாய் கன்னியர்க்கு ,பயணம்),மூன்றெழுத்து(காதலன் வந்தான், ஆடு)
parthasarathy
11th October 2012, 06:00 PM
As written by Mr.Partha sarathy,
(Quote)
திரு. கார்த்திக்:- இந்தக் கட்டுரை, நடிகர் திலகத்தின் நடிப்பை மட்டுமே ஆராய்வதால், பங்களித்த மற்ற கலைஞர்களின் பங்களிப்பைப் பெரிய அளவில் தொடுவதில்லை. ஒரே ஒரு வாக்கியத்தில் மற்ற கலைஞர்களைப் பற்றிக் குறிப்பிட்ட போது, மெல்லிசை மன்னரின் பங்களிப்பை முதலில் சுட்டிக்காட்டத் தவறி விட்டேன். பின்னர், மறுபடியும், படித்த போது, தவறை உணர்ந்து திருத்தி விட்டேன். மற்றபடி, எனக்கும், ஆதர்ச இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் தான். என்னைப் பொறுத்த வரை, திரை இசைப் பாடல்களுக்கு (குறிப்பாக, தமிழில்) டியூனுக்கு இலக்கணம் வகுத்தவர் அவர் தான் என்பேன். சினிமா பாடல்கள் 1961-க்கு முன்பு வரை, ஒன்று சாஸ்த்ரிய அடிப்படையிலோ இல்லை நாட்டுப் பாடல்களின் (folk) அடிப்படையிலோ தான் இருந்து வந்தன. பாவ மன்னிப்பு படத்திற்குப் பின்னர் தான் சினிமா பாடல்கள் வேறு ஒரு பாட்டையில் பயணிக்க ஆரம்பித்தது. அதாவது, கொஞ்சம் சாஸ்த்ரிய சங்கீதம், கொஞ்சம் மேலை நாட்டு சங்கீதம் சேர்ந்த கலவையாக. எப்படி இன்றைய கர்னாடக சங்கீதக் கச்சேரிகள் பின்பற்றுகின்ற முறையை, மறைந்த அரியக்குடி அவர்கள் முதலில் வகுத்தாரோ, சினிமாவில், இன்றைய சங்கீதத்தின் அடிப்படையை மெல்லிசை மன்னர் அவர்கள் தான் (மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி) முதலில் வகுத்தார். அந்த அடிப்படையில் தான், இன்று வரை, தமிழ் சினிமா பாடல்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதை ஏற்கனவே ஒரு முறை எழுதியிருக்கிறேன்.
Unquote
சாரதி சார்,
நீங்கள் தகுதிக்கு மீறியே விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு கிரெடிட் கொடுக்கிறீர்கள். அவர்கள் trend -setter என்பது தவறான தகவல்.1952 இல் சுப்பராமன் மறைவுக்கு பிறகு ஒன்று சேர்ந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடி உருப்படியாக 52 - 60 இல் தந்த படங்கள் புதையல்,பதிபக்தி, சிவகங்கை சீமை,பாகபிரிவினை, மன்னாதி மன்னன்,மாலையிட்ட மங்கை ஆகியவை மட்டுமே. நீங்கள் சொன்ன trend -setter பட்டத்துக்கு தகுதியானவர்கள் சுப்பராமன்,ஜி.,ராமநாதன், ஏ.எம்.ராஜா,மகாதேவன் ஆகியோரே.இவர்கள்தான் சரியான விகிதத்தில் கர்நாடகம்,ஹிந்துஸ்தானி,வெஸ்டேர்ன்,folk கலந்து தமிழ் பட மெல்லிசையை தூக்கி பிடித்த நால்- வேந்தர்கள்.(trend -setters )
ஆனால், 60 களில்,மெல்லிசை மன்னர்கள் ,வடக்கில் சங்கர்-ஜெய்கிஷன்,நவஷாத்,நய்யார்,பர்மன்,,சலீல் சௌதரி,மதன் மோகன்,லட்சுமி-பியாரி இவர்கள் அத்தனை பேருடைய சாதனையையும் மிஞ்சி, அத்தனை variety கொடுத்தனர். பீம்சிங்,ஸ்ரீதர், சங்கர்,பந்துலு,ராமண்ணா, கோபாலக்ருஷ்ணன்,வேலுமணி ,சிவாஜி படங்களில் இசை ராஜ்ஜியம் தான். இதே காலகட்டத்தில் மாமா மகாதேவன் சாதனையும் அளப்பரியது.
ஆனாலும், 60 இல் இருந்து 65 வரை வருடம் நான்கு படங்கள் சராசரியாக கொடுத்து தங்கள் ஜோடியை ஆதரித்த சிவாஜியிடம், தனியாக வந்த பிறகு ,விஸ்வநாதன் நன்றி பாராட்டினாரா என்பது கேள்வி குறியே.தனியாக வந்த பிறகு விஸ்வநாதன் திறமை அந்த அளவு ஜொலிக்கவும் இல்லை.
டியர் கோபால் சார்,
நான் பொதுவாக, சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தொடுவதில்லை. (மனதில் பட்டதை சொல்வதானாலும் கூட!). சரி பரவாயில்லை.
நான் மெல்லிசை மன்னர்கள் 1961-க்குப் பிறகு தான் trend setters என்று சொல்லியிருக்கிறேன். ஒருவன் துவக்கத்திலிருந்தே மேதாவியாயிருப்பான் என்பது நடிகர் திலகம் போன்ற 50 கோடியில் ஒருத்தருக்குத்தான் சாத்தியம். (ஏன் அவரே கூட, அவரை மெல்ல மெருகேற்றிக் கொண்டு தான் வந்திருக்கிறார் கால மாற்றத்துக்கும் இயைந்து!) எல்லோரும் மெல்ல மெல்ல அனுவபத்தின் மூலம் அறிவுத்தெளிவு பெற்று கொஞ்ச காலம் கழித்து, அவர்களுடைய அனுபவம் மற்றும் உள்ளார்ந்த அறிவு மூலம் மேதாவிகளாகின்றனர், அதற்கேற்ற மனமிருந்தால்! அதே போல், மெல்லிசை மன்னர்களும், 1953 - "பணம்" படத்திற்குப் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து தான் "பாவ மன்னிப்பு" படத்தின் மூலம் புதிய இசை வடிவத்தைக் கொண்டு வந்தனர். இந்த இசை வடிவம் தான், இன்றும் வேறு வேறு பரிமாணங்களில் கையாளப் படுகின்றது. இந்த இசை வடிவம் தான் முக்கியம்.
இரட்டையர்களாயிருந்த வரை, அவர்களிடமிருந்து வந்த இசைக்கும், பிரிந்த பின் வந்த இசைக்கும், தரத்தில் இறக்கம் இருந்தது எல்லோரும் ஒப்புக் கொண்டு விட்ட விஷயம் தான். ஆனால், இருவரில், யார் பெரியவர் என்பது மறுபடியும் சர்ச்சைக்குரிய விஷயம் தான். இதை நான் தொட விரும்பவில்லை. எங்கோ கொண்டு விட்டு விடும். சில விஷயங்களில், என்ன நடந்தது என்பது மிகச் சரியாக ஆதாரபூர்வமாகத் தெரியாத போது, அதைப் பற்றி சொல்ல நான்(ம்) யார்? இருப்பினும், மெல்லிசை மன்னர் அவரிடமிருந்த நிறைய திறமைகளின் மூலம், அவருடைய இடத்தை சற்றேறக்குறைய தக்க வைத்துக் கொண்டார். இதற்காக, ராமமூர்த்தி அவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. அதிர்ஷ்ட தேவதை அவர் பக்கம் முகம் காட்டாது போயிருக்கலாம்.
இதன் மூலம், மேதை ஜி. ராமனாதனையோ, திரை இசைத்திலகத்தையோ யாரும் குறைத்து மதிப்பிட முடியாது, நான் உட்பட!
என்னாலும் வருட வாரியாக, பாடல் வாரியாக, பக்கம் பக்கமாக வாதிட முடியும். இருப்பினும், இது ஒரு பெரிய, நீண்ட வருடங்கள் பிடிக்கும் ஒரு டாப்பிக் என்பதாலும், அனாவசிய சர்ச்சைகளுக்கு வழி வகுக்கும் என்பதாலும், இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்.
(என்னடா இது, திரு. கார்த்திக் அவர்களின் ஆதங்கத்தைப் போக்கலாம் என்று பார்த்தால், ஒரு சர்ச்சையில் வந்து மாட்டிக் கொண்டோமே!),
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
vasudevan31355
11th October 2012, 06:13 PM
அக்டோபர் 2011 'இதயக்கனி சினிமா ஸ்பெஷல்' மாத இதழில் அட்டகாச புகைப்படங்களுடன் வந்த, இலங்கை வானொலியின் அன்பு அறிவிப்பாளரும், நடிகர் திலகத்தின் இனிய நண்பருமான B.H.அப்துல் ஹமீத் அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி அளித்த அற்புதக் கட்டுரை.
http://www.bhabdulhameed.com/images/sivaji.jpg
முன் அட்டைப்படம்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/7-1.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-2.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-3.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-5.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-6.jpg
பின் அட்டைப்படம்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5-2.jpg
இணைப்பு: B.H.அப்துல் ஹமீத் அவர்கள் நடிகர் திலகத்தை இலங்கையில் வானொலிக்காக கண்ட பேட்டி.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/photo_B_5_2-1.jpg?t=1350021026
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Xi-dILr69Ww
http://www.youtube.com/watch?v=c8xZ1n3eLxI&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
oowijaez
12th October 2012, 01:38 PM
அப்டியா?!
It is totally a wrong perception to conclude that Viswanathan lacked his talent since he splited from Ramamurthy. There are plenty of examples to proof that, and everybody knows that. Even with Ramamurthy, he was the main creator of all the successful 60's movie songs, Ramamurthy was the main violinist, I hear. He probably helped MSV with tunes and the orchestra but not the main composer. As for KVM, he was very good in religious movies (mind you MSV marvelled in that too. e.g: Karnan) but not for movies like 'Engal Thanga Raja' etc. Hearing some songs form that movie, couldnt help me thinking, it should have been MSV composing for that sort of situations. The songs would have been much more youthfull and melodious with westernized rythms.
RAGHAVENDRA
12th October 2012, 07:22 PM
கிடைத்தற்கரிய பொக்கிஷம் .... நம் பொதிகை தொலைக் காட்சியில் வெள்ளி தோறும் இரவு 7.05 மணிக்கு ஒளிபரப்பாகும் கனவுலக பிரம்மாக்கள் தொடரில் தற்போது நடிகர் திலகம் ஒரு பல்கலைக் கழகம் ஒளிபரப்பாகிறது. இது தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/nt%20remembrance/NTPODHIGAIREMN_zps780ec2cd.jpg
பொதிகைக்கு நன்றி.
அன்புடன்
oowijaez
13th October 2012, 09:21 AM
அன்புள்ள கோபால் சார்,
தனியே பிரிந்த பின் மெல்லிசை மன்னர் கொடுத்த ஊட்டிவரை உறவு, இருமலர்கள், அன்பே வா, ரகசிய போலீஸ், குடியிருந்த கோயில், உயர்ந்த மனிதன், செல்வமகள், சிவந்த மண், நம்நாடு, சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், எங்கள் தங்கம், காவியத்தலைவி (எழுபதுகளில் வந்த அனைத்து சிவாஜி, எம்.ஜி.ஆர். படப்பாடல்களும்) அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மனமத லீலை, நினைத்தாலே இனிக்கும் உள்பட ஏராளமான பாடல்களைக்கேட்டபின்னும், "த்னியே வந்தபின் எம்.எஸ்.வி. ஜொலிக்கவில்லை" என்று நீங்கள் சொல்லியிருப்பதை இந்த ஆண்டின் சிறந்த ஜோக்காக எடுத்துக்கொள்கிறேன்.
Certainly. Even composing with Ramamurthy who probably helped MSV with the orchestra, especially violin, MSV was the main man. The standard of these songs mentioned here are not less than the one's he composed with Ramamurthy, which cleary shows who was the creator.
மேற்கொண்டு விவாதிப்பதென்றால் மெல்லிசை மன்னர் திரிக்குப் போகலாம். இங்கே விவாதித்து நடிகர்திலகத்துக்கு நாம் இடைஞ்சல் தர வேண்டாம்.
Of course, we are going out of context here. Just concentrate on Sivaji Ganesan, the great. Please publish more write-ups about NT's songs here!
RAGHAVENDRA
13th October 2012, 10:37 AM
இந்த மக்களின் ரசனையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. திருப்பித் திருப்பி சில படங்களைத் தாண்டி அந்த வட்டத்தைத் தாண்டி வருவேனா என்கிறார்கள். மிகவும் பிரபலமான படங்களைக் காட்டிலும் இன்னும் சிறப்பான நடிப்பை பல படங்களில் நடிகர் திலகம் வெளிப் படுத்தி இருப்பார். அவற்றையெல்லாம் வெளிக் கொணர்ந்து அடுத்த தலைமுறைக்கு அவருடைய நடிப்பின் பல பரிணாமங்களைக் காட்ட வேண்டியது ரசிகர்களாகிய நமது கடமை. அந்த வரிசையில் அதிகம் பிரபலமாகாத ஒரு படத்தின் பாடலை இங்கே நாம் பகிர்ந்து கொள்வோமா. படம் பிரபலமாகவில்லை என்று சொல்வதைக் காட்டிலும் சந்தடி சாக்கில் வந்து சென்று விட்ட படம் என்று வேண்டுமானால் சொல்லலாம். காரணம் வெற்றிக் கூட்டணியின் கடைசி படம். பீம்சிங் நடிகர் திலகம் கூட்டணியில் வெளிவந்த படம். சன்பீம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பாதுகாப்பு அருமையான படம். மற்ற பீம்சிங் படங்களுக்கு எந்த விதத்திலும் சற்றும் குறையாத படம். விறுவிறுப்பு சற்றே குறைந்த காரணத்தால் எடுபடவில்லை எனலாம்.
இந்தப் படத்தைப் பற்றிப் பின் ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக அலசுவோம். இப்போது இதில் நடிகர் திலகத்திற்கு அமைந்த அட்டகாசமான பாடல். பாடகர் திலகம் சௌந்தர்ராஜன் குரலில் திரை இசைச் சக்கரவர்த்தி விஸ்வநாதன் இசையில் கவியரசரின் வரிகளுக்கு உயிரூட்டுகிறார் நடிகர் திலகம்.
சோலோ பாடலான இதில் என்ன பெரிசாக செய்யப் போகிறார் என நினைப்பதற்கு இடம் தராமல் இதிலும் நுணுக்கமான விஷயங்களைப் புகுத்தி இருப்பார் நடிகர் திலகம். வெவ்வேறு தோற்றங்களில் வரும் போது அந்தப் பாத்திரங்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்தி இருப்பது மிகச் சிறப்பு. கோட் சூட் அணிந்து பணக்கார வாலிபனாக வரும் போது அந்தக் காலத்தில் அந்த வாலிபனுக்கே உரிய பணத்திமிரும் அவனுக்கே இயல்பாக சற்றே இருக்கும் ஜாக்கிரதை உணர்வையும் ஒரு சேர உணர்த்தி இருப்பார். ஒரு மண்டபத்தின் மேல் அவர் நிற்க ஜெயலலிதா கீழே இறங்கி சுற்றி வந்து மேலே ஏறி திரும்ப மண்டபத்திற்கு வரும் காட்சியில் ஜாக்கிரதை உணர்வோடு ஒரு கை அந்த மண்டபத்தின் தூணைப் பிடித்திருக்க மற்றொரு கை ஜெயலலிதாவின் கையைப் பிடித்திருக்க அதனை அவர் பற்றியவாறு சுற்றி வருவார். அதே போல் கச்சை கட்டி வரும் காட்சியில் அவர் வேகமாக படி யிறங்க நம்மவர் மிகவும் நிதானமாக நளினமாக இறங்குவது, அதே போல் படகில் லூங்கி கட்டி வரும் போது, அதிலும் ஒரு நாகரீகத்தை வெளிப் படுத்தி கடலோரமாக நிதானமாக இருவரும் நடந்து வருவர். இந்த நளினத்தை அவர் கடைப் பிடிக்கக் காரணம் அந்தப் பாடலில் மெல்லிசை மன்னர் புகுத்தியிருக்கும் அதே பாவனைதான். டி.எம்.எஸ். குரலிலும் அந்த மென்மை, நளினம் இவையெல்லாம் பிரதிபலிக்க இவர்களை நாம் தூக்கி சாப்பிட வேண்டும் காட்சியை நிறுத்த வேண்டும் என்கிற தொழில் பக்தியை இந்த பாடலிலும் காட்டி யிருப்பார்.
இத்தனைக்கும் இது ஒரு கனவுப் பாடல் என்பது குறிப்பிடத் தக்கது. கனவுப் பாடல் தானே என்று இஷ்டத்திற்கு பாத்திரத்திற்குப் பொருந்தாத உடைகளை அணிந்து பார்ப்பவர்களை பயமுறுத்தும் கண்றாவி கலரையெல்லாம் உடுத்தாமல் அவர் நடித்திருப்பது அவருடைய நடிப்பின் ஆழத்தை உணர்த்துவதாகும்.
அதிகமாக எழுதி விட்டோனோ. பாடலைப் பார்ப்போமே..
http://www.youtube.com/watch?v=0u1IWqlXR9A&feature=share&list=UUHZ9TIXjklcLpnIKC2q3h3A
HARISH2619
13th October 2012, 12:23 PM
Can anyone provide me pammalar/esvee/barrister mobile numbers please?
Gopal.s
13th October 2012, 12:50 PM
It is totally a wrong perception to conclude that Viswanathan lacked his talent since he splited from Ramamurthy. There are plenty of examples to proof that, and everybody knows that. Even with Ramamurthy, he was the main creator of all the successful 60's movie songs, Ramamurthy was the main violinist, I hear. He probably helped MSV with tunes and the orchestra but not the main composer. As for KVM, he was very good in religious movies (mind you MSV marvelled in that too. e.g: Karnan) but not for movies like 'Engal Thanga Raja' etc. Hearing some songs form that movie, couldnt help me thinking, it should have been MSV composing for that sort of situations. The songs would have been much more youthfull and melodious with westernized rythms.
நண்பர்களே,
இந்த விவாதம் முற்று பெற்றதில்லை. பல உண்மைகள் எனக்கு தெரியும். ஆனாலும் கார்த்திக் சாரின் மேலுள்ள பெரு மதிப்பினால் நான் விவாதத்தை தொடர போவதில்லை. நண்பர்களும் இந்த திரியில் மேற்கொண்டு விவாதிக்க வேண்டாமே!
parthasarathy
13th October 2012, 01:16 PM
[quote=raghavendra;966397]இந்த மக்களின் ரசனையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. திருப்பித் திருப்பி சில படங்களைத் தாண்டி அந்த வட்டத்தைத் தாண்டி வருவேனா என்கிறார்கள். மிகவும் பிரபலமான படங்களைக் காட்டிலும் இன்னும் சிறப்பான நடிப்பை பல படங்களில் நடிகர் திலகம் வெளிப் படுத்தி இருப்பார். அவற்றையெல்லாம் வெளிக் கொணர்ந்து அடுத்த தலைமுறைக்கு அவருடைய நடிப்பின் பல பரிணாமங்களைக் காட்ட வேண்டியது ரசிகர்களாகிய நமது கடமை. அந்த வரிசையில் அதிகம் பிரபலமாகாத ஒரு படத்தின் பாடலை இங்கே நாம் பகிர்ந்து கொள்வோமா. படம் பிரபலமாகவில்லை என்று சொல்வதைக் காட்டிலும் சந்தடி சாக்கில் வந்து சென்று விட்ட படம் என்று வேண்டுமானால் சொல்லலாம். காரணம் வெற்றிக் கூட்டணியின் கடைசி படம். பீம்சிங் நடிகர் திலகம் கூட்டணியில் வெளிவந்த படம். சன்பீம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பாதுகாப்பு அருமையான படம். மற்ற பீம்சிங் படங்களுக்கு எந்த விதத்திலும் சற்றும் குறையாத படம். விறுவிறுப்பு சற்றே குறைந்த காரணத்தால் எடுபடவில்லை எனலாம்.
இந்தப் படத்தைப் பற்றிப் பின் ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக அலசுவோம். இப்போது இதில் நடிகர் திலகத்திற்கு அமைந்த அட்டகாசமான பாடல். பாடகர் திலகம் சௌந்தர்ராஜன் குரலில் திரை இசைச் சக்கரவர்த்தி விஸ்வநாதன் இசையில் கவியரசரின் வரிகளுக்கு உயிரூட்டுகிறார் நடிகர் திலகம்.
சோலோ பாடலான இதில் என்ன பெரிசாக செய்யப் போகிறார் என நினைப்பதற்கு இடம் தராமல் இதிலும் நுணுக்கமான விஷயங்களைப் புகுத்தி இருப்பார் நடிகர் திலகம். வெவ்வேறு தோற்றங்களில் வரும் போது அந்தப் பாத்திரங்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்தி இருப்பது மிகச் சிறப்பு. கோட் சூட் அணிந்து பணக்கார வாலிபனாக வரும் போது அந்தக் காலத்தில் அந்த வாலிபனுக்கே உரிய பணத்திமிரும் அவனுக்கே இயல்பாக சற்றே இருக்கும் ஜாக்கிரதை உணர்வையும் ஒரு சேர உணர்த்தி இருப்பார். ஒரு மண்டபத்தின் மேல் அவர் நிற்க ஜெயலலிதா கீழே இறங்கி சுற்றி வந்து மேலே ஏறி திரும்ப மண்டபத்திற்கு வரும் காட்சியில் ஜாக்கிரதை உணர்வோடு ஒரு கை அந்த மண்டபத்தின் தூணைப் பிடித்திருக்க மற்றொரு கை ஜெயலலிதாவின் கையைப் பிடித்திருக்க அதனை அவர் பற்றியவாறு சுற்றி வருவார். அதே போல் கச்சை கட்டி வரும் காட்சியில் அவர் வேகமாக படி யிறங்க நம்மவர் மிகவும் நிதானமாக நளினமாக இறங்குவது, அதே போல் படகில் லூங்கி கட்டி வரும் போது, அதிலும் ஒரு நாகரீகத்தை வெளிப் படுத்தி கடலோரமாக நிதானமாக இருவரும் நடந்து வருவர். இந்த நளினத்தை அவர் கடைப் பிடிக்கக் காரணம் அந்தப் பாடலில் மெல்லிசை மன்னர் புகுத்தியிருக்கும் அதே பாவனைதான். டி.எம்.எஸ். குரலிலும் அந்த மென்மை, நளினம் இவையெல்லாம் பிரதிபலிக்க இவர்களை நாம் தூக்கி சாப்பிட வேண்டும் காட்சியை நிறுத்த வேண்டும் என்கிற தொழில் பக்தியை இந்த பாடலிலும் காட்டி யிருப்பார்.
இத்தனைக்கும் இது ஒரு கனவுப் பாடல் என்பது குறிப்பிடத் தக்கது. கனவுப் பாடல் தானே என்று இஷ்டத்திற்கு பாத்திரத்திற்குப் பொருந்தாத உடைகளை அணிந்து பார்ப்பவர்களை பயமுறுத்தும் கண்றாவி கலரையெல்லாம் உடுத்தாமல் அவர் நடித்திருப்பது அவருடைய நடிப்பின் ஆழத்தை உணர்த்துவதாகும்.
அதிகமாக எழுதி விட்டோனோ. பாடலைப் பார்ப்போமே..
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,
நடிகர் திலகத்தின் அற்புதமான, நளினமான நடிப்பைத் தாங்கிய "பாதுகாப்பு" படப் பாடலைப் பதிந்ததற்கு நன்றி.
என்னைப் பொறுத்த வரை, என்னுடைய பாடல் ஆய்வுக் கட்டுரையின் இரண்டாவது பகுதியில், நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பைத் தாங்கி வந்த பாடல்களை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதாவது, நடிகர் திலகத்தின் புதிய முதல் முயற்சி மற்றும் வித்தியாசமான முயற்சிகள். முதல் பாடல் ஆய்வுக் கட்டுரை "நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவிப் பாடல்கள்" - இதில், இடம் பெற்ற பத்து பாடல்களும், நடிகர் திலகம் மட்டுமின்றி, மற்ற எல்லா கலைஞர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி பெற்று, இன்றும் மக்களை ஆகர்ஷிக்கும், பேசப்படும் பாடல்கள்.
இந்த இரண்டாவது பகுதியில், இது வரை, 6 பாடல்களைப் பற்றி எழுதி விட்டேன். "சக்கப் போடு போடு ராஜா", "கா...கா...கா", "சுந்தரி சௌந்தரி", "பனி படர்ந்த மலையின் மேலே" என்று 4 பாடல்களைக் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னர் எழுதி, அண்மையில் மீண்டும் தொடர்ந்து எழுதி, "நல்லவன் எனக்கு நானே நல்லவன்" மற்றும் "நெஞ்சிருக்கும் எங்களுக்கு" பாடல்களையும் எழுதி இருக்கிறேன்.
இனி மேலும், இது போன்ற வித்தியாசமான முயற்சிகளையும், எல்லோரும் அறிந்த அவரது படைப்புகளையும், என்னுடைய பார்வையிலிருந்து எழுதுவேன். அதன் நோக்கமே, எல்லோரையும் போல நடிகர் திலகத்தின் திறமைகளையும், பங்களிப்பையும் இன்றைய இளம் தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்வது மட்டுமின்றி, ஆத்மத் திருப்திக்காகவும் தான்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
RAGHAVENDRA
13th October 2012, 05:14 PM
டியர் சாரதி,
தங்களுடைய அன்பான பாராட்டுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
இனி மேலும், இது போன்ற வித்தியாசமான முயற்சிகளையும், எல்லோரும் அறிந்த அவரது படைப்புகளையும், என்னுடைய பார்வையிலிருந்து எழுதுவேன். அதன் நோக்கமே, எல்லோரையும் போல நடிகர் திலகத்தின் திறமைகளையும், பங்களிப்பையும் இன்றைய இளம் தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்வது மட்டுமின்றி, ஆத்மத் திருப்திக்காகவும் தான்.
நிச்சயம் முழுக்க முழுக்க வரவேற்கத் தக்கதே. தங்களுக்கு கிடைத்துள்ள பாராட்டுக்களே இதனைப் பறை சாற்றும், அடியேன் உள்பட. நான் ஏற்கெனவே சொன்னது போல் தங்களிடமிருந்து தொடர்ந்தும் அடிக்கடியும் இது போல் பதிவுகளை எதிர்பார்க்கும் நமது அன்பர்களில் நானும் ஒருவன். தொடருங்கள்.
அன்புடன்
ScottAlise
14th October 2012, 09:41 AM
Hi,
Saw Enn Thambi last night again, NT looked so lean, superb favourite scenes, NT reading book(White Pyjama), Sattai scene, Sword fight,many stills are always circulating in Sivaji books
Also Thalaivar rajini in Chandramukhi would have same style which NT did while sword fight
ScottAlise
14th October 2012, 09:42 AM
Vasu sir,
In your action episode pl include this sword fight, its superb, comes around 7 minutes
ScottAlise
14th October 2012, 09:44 AM
After a very long time
Thangaikaga movie is running in Delite theatre , 2 shows daily
RAGHAVENDRA
14th October 2012, 10:19 AM
Dear Ragulram,
As said earlier, please go through the previous parts of NT thread. Mr. Vasu Sir has already posted the fight scene in reference from En Thambi in NT Thread Part 10 on June 30, 2012.
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள் (வீடியோ தொடர்) 3.
படம்:வெளிவந்த ஆண்டு: 1968
தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்.
நடிகர் திலகம் மோதும் வில்லன்: கே.பாலாஜி
இயக்கம்: ஏ.சி.திருலோகசந்தர்.
'என் தம்பி' திரைக்காவியத்தில் இடம் பெற்ற அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த கத்திச் சண்டை. நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் திலகத்தின் அனல் பறக்கும் கத்தி வீச்சு. அதுவும் படு ஸ்டைலாக. தம்பி வேண்டுமென்றே சண்டைக்கு அழைத்தவுடன் மறுத்து ஒதுங்குவதும், பின்னர் தம்பியின் கொலை வெறியை எண்ணி தற்காப்பின் பொருட்டு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஸ்திரப் படுத்திக் கொண்டு பின்னர் புகுந்து விளையாடுவதும் வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாது.
கத்திச் சண்டை தொடங்கும் போது அந்த கோட்டை படு ஸ்டைலாக கழற்றும் லாவகம்...(இந்த இடத்தில் பின்னணி இசையில் கொடி நாட்டிப் பின்னிஎடுத்திருப்பார் எம்.எஸ்.வி).
கத்தியை எடுத்து முத்தம் கொடுப்பது போன்ற பாவனயில் நிற்கும் அந்த standing pose...
முதலில் தன் தம்பி மூர்க்கத்தனமாகத் தன்னைத் தாக்கத் தொடங்கி தன்னை கொலை செய்யுமளவிற்கு போய் விட்டவுடன் அதிர்ந்து, அடுத்த கணமே தம்பியாவது... மண்ணாவது...என்று தன் பாதுகாப்புக்காக அவனைத் தள்ளி விட்டு விட்டு புருவங்களை ஏற்றி படுஅலட்சியமாக அவனை எதிர்கொள்ளும் விதம்...
பின் சிரித்துக் கொண்டே தம்பியின் வாள் வீச்சை எதிர்கொண்டு, அவனைத் தவிடுபொடியாக்கி, தம்பியின் கத்தியும் தன் கைக்கு வந்தவுடன் அந்தக் கத்தியைத் தீட்டுவது போல தன் கத்தியில் ஒரு உரசு உரசி, கத்தியை அவனிடம் தூக்கிப் போடும் லாவகம்.
விஷம் தோய்ந்த கத்தியை அவன் தன்னைக் கொல்லப் பயன்படுத்தியுள்ளான் என தெரிந்து, அதிர்வுற்று, தம்பியிடம், "விஸ்வம், நீ மாறவே மாட்டியாடா?...என்று வேதனைப்பட்டு திரும்புவது.
என்று நடிகர் திலகத்தின் ஸ்டைல் சாம்ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கும் அற்புத சண்டைக்காட்சி.
ஒரு இடம் கூட 'டூப்'போடாமல் தலைவர் அசத்திய கத்திச்சண்டை.
கத்தியை எடுத்து நடிகர் திலகம் ஸ்டைலாக நிற்கையில் தியேட்டர்களில் விண்ணைப் பிளந்த ஆரவாரத்தையும்,கரகோஷத்தையும் தட்டிச் சென்ற, நடிகர் திலகம் ரசிகர்களால் வாழ்நாள் முழுதும் மறக்க இயலாத (மற்ற ரசிகர்களையும் வியக்க வைத்த) சூப்பர் சண்டைக்காட்சியாயிற்றே! ஏன்! நடிகர் திலகமே ரசித்து மகிழ்ந்த பெருமையைப் பெற்ற சண்டைக் காட்சியாயிற்றே!
முதன்முறையாக இணையத்தில் உங்களுக்காக
for your reference the video is given here again:
http://www.youtube.com/watch?v=YJfmdyg2Eco&feature=share&list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg
rajeshkrv
14th October 2012, 10:31 AM
PAmmalar sir
here is manidhanum deivamagalam for you
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=RGr56osYmVA
RAGHAVENDRA
14th October 2012, 10:50 AM
Dear Rajesh,
Thank you for the movie link of MANIDANUM DEIVAMAGALAM
RAGHAVENDRA
14th October 2012, 10:55 AM
இன்றைய தேதியிட்டு [14.10.2012] வெளிவந்துள்ள தினத்தந்தி நாளிதழில் சினிமா கேள்வி பதில் பகுதியில் இடம் பெற்றுள்ள கேள்வி-பதில் ஒன்று-
குருவியாரே, சிவாஜி கணேசனின் பழைய படங்கள் மீண்டும் 'ரவுண்டு' கட்டுகிறதே... அதற்கு என்ன காரணம்? (எம்.வாசுகி, புதுக்கோட்டை-2)
காலத்தால் அழிக்க முடியாத கதையம்சத்தையும், நடிப்பாற்றலையும் தவிர, வேறு எந்த காரணமும் இல்லை!
vasudevan31355
14th October 2012, 03:03 PM
இன்றைய 'தினத்தந்தி'
தொடர்ந்து வெற்றிநடை போடுகிறது
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/th.jpg
RAGHAVENDRA
14th October 2012, 04:12 PM
வாசு சார், திருவிளையாடல் விளம்பர நிழற்படம் தினத்தந்தியின் கூற்றை வலுப்படுத்துவது போல் சிறப்பாக அளித்து விட்டீர்கள். சூப்பர்...
அன்புடன்
ராகவேந்திரன்
vasudevan31355
14th October 2012, 04:47 PM
17-10-2012 'குமுதம்' இதழில் 'முக்தா' ஸ்ரீனிவாசன் அவர்களின் நினைவலைகள்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6_0008-1.jpg?t=1350218137
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-7.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
RAGHAVENDRA
14th October 2012, 05:18 PM
டியர் வாசு சார்,
வரும் போதே அசத்தறீங்க... அபூர்வமான படம் .. அபூர்வமான சந்திப்பு ... அகலாத நினைவுகள் ...
நன்றி சார்.
அன்புடன்
ராகவேந்திரன்
RAGHAVENDRA
14th October 2012, 05:19 PM
sarankumarnm.blogspot.com has developed an anroid application on Nadigar Thilagam. The download link is given below:
https://docs.google.com/open?id=0B8nQ6EuJfsiIb2lmUlIwNlU1QkE
I request our friends who are well versed in android apps to give their opinion so that we can use and inform others.
vasudevan31355
14th October 2012, 06:18 PM
டியர் ராகவேந்திரன் சார்,
ரொம்ப ரொம்ப நன்றிகள் சார். சும்மா 'பாதுகாப்பு' காவியத்தின் 'ஒருநாள் நினைத்த காரியம் நடக்கும்' சூப்பர் பாடலை பதிவு செய்து நெஞ்சில் நீங்கா இடத்தைப் பெற்று விட்டீர்கள். ஒவ்வொரு வரிக்கும் தலைவருடைய அட்டகாசமான ஸ்டைல் நடிப்பும், உடை அலங்காரங்களும் , தாங்கள் கூறியுள்ளது போல பணக்கார தோரணையில் வரும் அந்த காட்சியில் சற்றே ஜாக்கிரதையான உணர்வுகளும் வெளிப்பட... வர்ணிக்க வார்த்தைகள் ஏது?
மிக மிக அபூர்வமான பாடலை தரவேற்றி இங்கு பதித்தமைக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் சார்.
vasudevan31355
14th October 2012, 06:48 PM
Also Thalaivar rajini in Chandramukhi would have same style which NT did while sword fight
100% ragul.
vasudevan31355
14th October 2012, 06:51 PM
ராகுல்,
தலைவர் ரஜினி என்று குறிபிட்டுள்ளீர்கள். புரியவில்லை.
kalnayak
14th October 2012, 08:37 PM
sarankumarnm.blogspot.com has developed an anroid application on Nadigar Thilagam. The download link is given below:
https://docs.google.com/open?id=0B8nQ6EuJfsiIb2lmUlIwNlU1QkE
I request our friends who are well versed in android apps to give their opinion so that we can use and inform others.
Dear Raghavendra Sir,
To install this application one needs an Android smart-phone or an Android Tablet with newer versions of Android (probably a version from v2.2 to v4.0). Users have to connect their smart-phone or the tablet to Internet through GPRS connection using the Sim card, or using Wi-fi connection available with the phone. Using Opera or other browser available with the phone, browse to the specified site given by you, download the SivajiGanesan.apk file to the external memory card (default 2GB card) of the smart-phone. One who cannot connect their phone/tablet using the above methods can still connect it to their pc/laptop which in turn is connected to internet and using pc browser one can download to the application to phone/tablet's memory card. Double clicking the application within the phone/tablet shall install the application.Once the application is installed, user can access the same using application icon.
If the developer Mr.SaranKumar has published the application in android market/play store, users can access the playstore site https://play.google.com/store
search for the application and get it installed instead of downloading the application to external memory card.
I will install the application and give my feed-back soon. Snap-shots of the application are available from the site given by you: http://sarankumarnm.blogspot.in/2012/10/android-sivaji-ganesan-application.html
RAGHAVENDRA
14th October 2012, 09:26 PM
Dear Kalnayak,
Thank you so much for the prompt response. I am happy you are installing it. I am eagerly awaiting your feedback on the same.
RAGHAVENDRA
14th October 2012, 09:29 PM
இன்று 14.10.2012 ஞாயிறு மாலைக் காட்சி திருவிளையாடல் சென்னை பேபி ஆல்பர்ட் திரையரங்கம் விழாக் கோலம் பூண்டு ரசிகர்கள் அமர்க்களப் படுத்தி விட்டதாக முரளி சார் தகவல் தந்துள்ளார். அரங்கு நிறைவு house full கண்டது மட்டுமின்றி ரசிகர்களின் அளப்பரை திரையரங்க ஊழியர்களிடையே ஆவலையும் உண்டு பண்ணியுள்ளது. அவர்களின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. அநேகமாக முரளி சார் விரிவான பதிவிடுவார் என எதிர்பார்ப்போம்.
Murali Srinivas
14th October 2012, 11:34 PM
இன்று மாலை பேபி ஆல்பட் திரையரங்கில் [House Full] திருவிளையாடல் காவியத்தின் 25-வது நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரையரங்கிற்கு வெளியே ஆரம்பித்து உள்ளே திரையரங்க வெளி வளாகம் முழுவதையும் பராசக்தி வைர விழாவிற்கு தயாரிக்கப்பட்ட பானர்கள் அலங்கரிக்க பலவற்றிக்கும் மாலை அணிவிக்கப்பட்டு ராஜ கம்பீரத்தோடு காட்சியளித்தன. வெளியே வெடிக்கப்பட்ட பட்டாஸ்-களின் எண்ணிக்கைக்கு கணக்கேயில்லை. எண்ணிக்கையில் மட்டுமல்ல அவை ஏற்படுத்திய ஒலி அதிர்வுகள் எக்மோர் ரயில் நிலையத்தையும் தாண்டி கேட்டிருக்கும். போக்குவரத்து ஸ்தம்பிக்க மக்கள் கூட்டம் இரு பக்கம் குவிய வாழ்தொலிகளும் ஆட்டங்களும் பட்டாஸ்-களின் வெடி சத்தமும் அந்த சுற்றுவட்டாரத்தையே சற்று நேரம் கலக்கி விட்டது உண்மை. அந்த வழியாக சென்றவர்கள், படம் பார்க்க அரங்கிற்கு வந்தவர்கள் அனைவரும் முதலில் புதிதாக வந்துள்ள படத்திற்குதான் இந்த அமர்க்களம் என நினைத்தனர். பிறகு நடிகர் திலகத்தின் பானர்களையும் சிவாஜியின் பெயர் வாழ்தொலிகளில் சொல்லபடுவது கேட்டு உண்மையை புரிந்துக் கொண்டனர்.
திரையரங்க ஸ்டாலில் இருப்பவர்கள் நம்மிடம் அடித்த கமண்ட். நாங்களும் எத்தனையோ படங்களுக்கு ரசிகர்களையும் அவர்களின் ஆட்டப்பாட்டங்களையும் பார்த்திருக்கோம். ஆனால சிவாஜி ரசிகர்கள் போல் இவ்வளவு உணர்ச்சிமிக்க விசுவாசமிக்க ரசிகர்களை பார்த்ததேயில்லை. அது போல் இடைவேளையின் போது இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் இடைவெளி விடப்பட நமது ரசிகர்களின் அலப்பறையை பார்த்து இளைஞர்களே அதிசயித்து போனதோடு மட்டுமல்லாமல் அந்த அலப்பறையை தங்களின் அலைபேசிகள் மற்றும் சிலர் காமராவில் பதிவு செய்துக் கொண்டனர், அரங்கிற்கு உள்ளே வழக்கம் போல் பலத்த வரவேற்பு அதிலும் குறிப்பாக இறுதி எபிஸோடு வழக்கம் போல் மிகுந்த ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது எப்போதும் போல் பாட்டும் நானே அதிலும் ஆடும் கலையின் நாயகன் நானே வரியெல்லாம் உச்சகட்டம்.
இறுதியாக ஒன்று. ஒரு நடுத்தர வயதுடைய நபர் அவருடன் மேலும் இரண்டு பேர்கள், அவர் ஒரு கேள்வி கேட்டார். சிவாஜி இறந்து பல வருஷம் ஆயிடுச்சிலே?
ஆமாம் பதினோரு வருஷம் ஆயிடுச்சு.
இப்பவுமா இவ்வளவு பேர் இப்படி இருக்காங்க?
இன்னும் நிறையப் பேர் இருக்காங்க. ஏன் அப்படி கேட்கீறிங்க?
இல்லே எதாவது லாபம்,பதவி பணம் இப்படி எதுவுமே கிடைக்க சான்ஸ் இல்லையே இருந்தும் இப்படி இருக்காங்கனா ரொம்ப உண்மையான மனுஷங்க என்று சொல்லிவிட்டு கூட வந்தவர்களிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டே போனதுதான் ஹைலைட்.
அன்புடன்
Murali Srinivas
14th October 2012, 11:37 PM
நமது நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் திரு ராமஜெயம் [நமது ஹப்பர் அல்ல] சிவாஜி சமூக நலப் பேரவையில் இணைந்து பணியாற்றுபவர். அவர் தெரிவித்த இரண்டு செய்திகள்.
தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள பார்வையற்றோர் விடுதியில் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பாக நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு அன்னதானமும் விடுதியில் உள்ளவர்களுக்கு புதிய உடைகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
சென்ற வருடம் அம்பத்தூரை அடுத்து அமைந்துள்ள அய்யப்பபாக்கத்தில் ஒரு பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது . அதன் முதல் ஆண்டு விழாவை முன்னிட்டு அந்த இடத்தில இன்று அன்னதானம் நடத்தப்பட்டது.
அன்புடன்
Murali Srinivas
14th October 2012, 11:40 PM
கோவை டிலைட் திரையரங்கில் தங்கைக்காக திரையிடப்பட்டிருக்கிறது.[இளவல் ராகுல் ராமும் இதை பதிந்திருக்கிறார். நன்றி]
அன்புடன்
goldstar
15th October 2012, 06:34 AM
Ragavendran sir for you...
Tharasu
http://www.youtube.com/watch?v=aVg2wPgOMnU
Thiruppam
http://www.youtube.com/watch?v=dElU2I17c5I&feature=relmfu
Thangaikkaga
http://www.youtube.com/watch?v=H1cUU0eRTyk&feature=relmfu
Paladai
http://www.youtube.com/watch?v=TJX_1FdajlI&feature=relmfu
Thirudan
http://www.youtube.com/watch?v=J_XkFUkexsg&feature=relmfu
Illara Jothi
http://www.youtube.com/watch?v=4ORhQlYMB-I&feature=relmfu
Manamagan Thevai
http://www.youtube.com/watch?v=ymgel-rLGvI&feature=relmfu
Avan Oru Sarithiram
http://www.youtube.com/watch?v=9HrUfWkFrhU&feature=watch-now-button&wide=1
ScottAlise
15th October 2012, 08:34 AM
Vasu sir,
Iam a ardent fan of Rajini from childhood so I address him as Thalaivar, NT is like a Godfather so I address him as sir, Aiya when speaking about him. So I said Rajini as Thalaivar
vasudevan31355
15th October 2012, 08:44 AM
O.K Ragul. Thank u. Glad. I like annamalai, engeyo ketta kural, thillumullu, jani, mullum malarum, nallavanukku nallavan and thai veedu.
vasudevan31355
15th October 2012, 08:49 AM
அன்பு முரளி சார்
நேற்று இரவுப் பணி முடித்து இன்று காலை வீட்டிற்கு வந்ததும் தங்கள் 'திருவிளையாடல்' கொண்டாட்டங்கள் பற்றிய பதிவை ஒரே மூச்சில் படித்தேன். மனதிற்கு மிக மிக சந்தோஷமாய் இருந்தது. நம் அன்புச் செல்வங்களின் ரகளைகளை அட்டகாசமாய் பதித்து விழாவிற்கு வரமுடியாமல் போன ஏக்கத்தைப் போக்கி விட்டீர்கள். மிக்க நன்றி!
Subramaniam Ramajayam
15th October 2012, 09:13 AM

Murali sir. your write up about BABYALBERT THIRUVILAIYADAL 25DAYS CELEBRATIONS superb. Ennai pola vara mudiyavarkalukku
Neril kanbathu pola unarvukalai create panni vittergal.
nadigarthilagam PUGAZL ENDERUNDUM JOLIKKA VENDUM IDHU POLA.
We wish and pray the movie celebrates another 1oodays.
ScottAlise
15th October 2012, 10:05 AM
Dear active hubbers, moderator
Can we have an index for Nt thread because it contains lots of intresting info but finding it difficult to retrieve.
I have been asking this for some time
This is again a gentle remainder
abkhlabhi
15th October 2012, 11:02 AM
இன்று மாலை பேபி ஆல்பட் திரையரங்கில் [House Full] திருவிளையாடல் காவியத்தின் 25-வது நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரையரங்கிற்கு வெளியே ஆரம்பித்து உள்ளே திரையரங்க வெளி வளாகம் முழுவதையும் பராசக்தி வைர விழாவிற்கு தயாரிக்கப்பட்ட பானர்கள் அலங்கரிக்க பலவற்றிக்கும் மாலை அணிவிக்கப்பட்டு ராஜ கம்பீரத்தோடு காட்சியளித்தன. வெளியே வெடிக்கப்பட்ட பட்டாஸ்-களின் எண்ணிக்கைக்கு கணக்கேயில்லை. எண்ணிக்கையில் மட்டுமல்ல அவை ஏற்படுத்திய ஒலி அதிர்வுகள் எக்மோர் ரயில் நிலையத்தையும் தாண்டி கேட்டிருக்கும். போக்குவரத்து ஸ்தம்பிக்க மக்கள் கூட்டம் இரு பக்கம் குவிய வாழ்தொலிகளும் ஆட்டங்களும் பட்டாஸ்-களின் வெடி சத்தமும் அந்த சுற்றுவட்டாரத்தையே சற்று நேரம் கலக்கி விட்டது உண்மை. அந்த வழியாக சென்றவர்கள், படம் பார்க்க அரங்கிற்கு வந்தவர்கள் அனைவரும் முதலில் புதிதாக வந்துள்ள படத்திற்குதான் இந்த அமர்க்களம் என நினைத்தனர். பிறகு நடிகர் திலகத்தின் பானர்களையும் சிவாஜியின் பெயர் வாழ்தொலிகளில் சொல்லபடுவது கேட்டு உண்மையை புரிந்துக் கொண்டனர்.
திரையரங்க ஸ்டாலில் இருப்பவர்கள் நம்மிடம் அடித்த கமண்ட். நாங்களும் எத்தனையோ படங்களுக்கு ரசிகர்களையும் அவர்களின் ஆட்டப்பாட்டங்களையும் பார்த்திருக்கோம். ஆனால சிவாஜி ரசிகர்கள் போல் இவ்வளவு உணர்ச்சிமிக்க விசுவாசமிக்க ரசிகர்களை பார்த்ததேயில்லை. அது போல் இடைவேளையின் போது இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் இடைவெளி விடப்பட நமது ரசிகர்களின் அலப்பறையை பார்த்து இளைஞர்களே அதிசயித்து போனதோடு மட்டுமல்லாமல் அந்த அலப்பறையை தங்களின் அலைபேசிகள் மற்றும் சிலர் காமராவில் பதிவு செய்துக் கொண்டனர், அரங்கிற்கு உள்ளே வழக்கம் போல் பலத்த வரவேற்பு அதிலும் குறிப்பாக இறுதி எபிஸோடு வழக்கம் போல் மிகுந்த ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது எப்போதும் போல் பாட்டும் நானே அதிலும் ஆடும் கலையின் நாயகன் நானே வரியெல்லாம் உச்சகட்டம்.
இறுதியாக ஒன்று. ஒரு நடுத்தர வயதுடைய நபர் அவருடன் மேலும் இரண்டு பேர்கள், அவர் ஒரு கேள்வி கேட்டார். சிவாஜி இறந்து பல வருஷம் ஆயிடுச்சிலே?
ஆமாம் பதினோரு வருஷம் ஆயிடுச்சு.
இப்பவுமா இவ்வளவு பேர் இப்படி இருக்காங்க?
இன்னும் நிறையப் பேர் இருக்காங்க. ஏன் அப்படி கேட்கீறிங்க?
இல்லே எதாவது லாபம்,பதவி பணம் இப்படி எதுவுமே கிடைக்க சான்ஸ் இல்லையே இருந்தும் இப்படி இருக்காங்கனா ரொம்ப உண்மையான மனுஷங்க என்று சொல்லிவிட்டு கூட வந்தவர்களிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டே போனதுதான் ஹைலைட்.
அன்புடன்
சென்னைக்கு வரும் போதெல்லாம், நடிகர் திலகத்தின் படம் வெளியானால், மிஸ் செய்வதில்லை. திருவிளையாடல் வெளியாகி ௫ வாரங்கள் அனாலும் (வூடலண்ட்சில்) சில காரணங்களால் சென்னைக்கு வரமுடியவில்லை.
செப்டம்பர் இறுதில், அக்டோபர் முதல் வாரத்தில் டிக்கெட் புக் செய்து, கேன்சல் செய்து, எப்படியும் திருவிளையாடலை பார்க்க சென்னைக்கு 13 ஆம் தேதி வந்தேன். பேபி ஆல்பர்டில் 6 30 காட்சியில் திருவிளையாடல் பார்க்க நேரிட்டது. கிட்ட தட்ட 50 பேர் இருந்தார்கள். கர்ணனை போல், திரையில் மழை பெய்யவில்லை. புது படம் போல், பிரிண்ட் நன்றாக இருந்தது. கர்ணனை போல் பிளான் பண்ணி வெளியிட்டு இருந்தால், கர்ணனை மிஞ்சி திருவிளையாடல் சரித்திரம் படைத்திருக்கும். இடைவேளையின் பொது நடிகர் திலகத்தின் கோடான கோடி ரசிகர்களில் ஒருவரை சந்திதேன். தன்னை சுப்ரமணியம் என்று அறிமுகபடுத்தி கொண்டார். வூடலண்ட்சில் 13 தடவை பார்த்ததாகவும், பேபி ஆல்பர்டில் 12வது முறை பார்க்க வந்ததாகவும், இரண்டும் சேர்த்து 25 வது முறை பார் பதாக கூறினார். மீண்டும் நாளை (14 ஆம் தேதி) வருவதாக கூறினார். அவருடன், அவருடைய நண்பர்கள் 4 பேர்கள் கூடவே வந்தனர். அவர்களும் 25 வது முறை பார்பதாக கூறினார்கள். படம் முடிந்து வெளியே செல்லும் பொது, நாளை ஹவுஸ் புல் காட்சியுடன், ஒரு புதிய படம் வெளியானால், திரை அரங்கம் எப்படி அமர்க்களம் இருக்குமோ, அப்படியே செய்வதாக கூறினார்கள்.
அவர்கள் மேலும் கூறியது - 2012 ஆம் ஆண்டு, தமிழ் திரை உலகில், மிக முக்கியமான ஆண்டும் - கர்ணன் மிக பிரமாண்டமாக வெளியாகி 150 நாட்கள் ஓடியது. எந்தவித ஆர்பாட்டம் / பிரமாண்டம் இல்லாமல் திருவிளையாடல் 25 நாட்களை கடந்து விட்டது. 50 நாட்கள் ஓடும் என்றும் கூறினார்கள். அடுத்து அவர்கள் சொன்ன செய்தி மிக்க சந்தோசத்தை கொடுத்தது. அது தான், வெற்றி / வெள்ளி விழா படங்களில் ஒன்றான, வசந்த மளிகை நவம்பர் இரண்டாம் / முன்றாம் வாரத்தில் , இதே பேபி ஆல்பர்டில் வெளியிட போவதாக கூறினார்கள்.
சண்டே திற அரங்கு நிகழ்சிகளை தொகுத்து வழங்கிய முரளி ஸ்ரீநிவாஸ்ற்கு நன்றி.
RAGHAVENDRA
15th October 2012, 10:06 PM
டியர் சதீஷ்,
தராசு,
திருப்பம்,
தங்கைக்காக,
பாலாடை,
திருடன்,
இல்லற ஜோதி,
மணமகன் தேவை,
அவன் ஒரு சரித்திரம்
என ஒவ்வொன்றும் வெவ்வேறு கால கட்டங்களில் நடிகர் திலகத்தின் முத்திரை பதித்த படங்களாகும். தங்களுக்கு உளமார்ந்த நன்றி.
சிந்தனை தோன்றி தெளிவு பிறந்தது இன்றல்ல நேற்றல்ல - புரட்சிதாசன் வரிகளில் மெல்லிசை மன்னரின் இசையில் பாடகர் திலகம் சௌந்தர் ராஜன் குரலில் கருத்துச் செறிவுள்ள பாடல். ஒவ்வொரு வரியும் ரசிகர்களை மனதில் வைத்து எழுதப் பட்டது போல் இன்றும் பொருந்தும் வரிகள்.
திருப்பம் - சாகர் ஹிந்திப் படத்தில் கிஷோர் குமார் பாடும் ஒரு பாடலை நினைவூட்டும் மெட்டில் மெல்லிசை மன்னர் இசையமைத்த அருமையான பாடலாக எனை மறந்து பாடுவேன் பாடல் அமைந்தது. சௌந்தர்ராஜன் அவர்களின் குரலில் சற்று அதிகம் எதிர்பார்த்து விட்டோமோ என எண்ண வைக்கும் பாடல். இருந்தாலும் அவருடைய குரல் வளம் குறையாத அருமையான பாடல்.
1971ல் தேர்தலை மனதில் வைத்து எழுதப் பட்ட பாடல் உனைத் தேடி வரும் எதிர்காலம் பாடல் இடம் பெற்ற படம் தங்கைக்காக. மிகவும் ஓஹோ என ஓடியிருக்க வேண்டிய படம். ஒரே சமயத்தில் ஐந்து புதுப் படங்கள் ஓடியது, இதே சாயலில் அருணோதயம் வெளிவந்தது, இளைஞர் பட்டாளத்தை சுமதி என் சுந்தரி வசீகரித்து விட்டது போன்ற காரணங்களால் பாதிக்கப் பட்ட படம். இதிலும் மெல்லிசை மன்னரின் கைவண்ணம் எதையும் தாங்குவேன் பாடலில் மிளிர்ந்தது.
பாலாடை நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த நடிப்பைக் கொண்ட படம். இதில் ஏகப் பட்ட நுணுக்கங்களை அளித்திருக்கிறார். பின் ஒரு சந்தர்ப்பத்தில் இதனை அலசுவோம். பாதி பாடல் லாங் ஷாட்டில் எடுத்து நல்ல பாடலை சரியாக படம் பிடிக்காமல் ஏமாற்றி விட்டார் பீம்சிங். இந்தப் படம் ஓடாததற்கு இதுவும் ஒரு காரணமாயிருக்கலாம். கதையும் சற்று வித்தியாசமானது. முதல் மனைவியே கணவனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கும் புதுமையான கதையமைப்பு. ஒரு வேளை இப்போது வந்திருந்தால் இந்தக் கதை எடுபட்டிருக்குமோ...
திருடன் ... நினைத்தபடி நடந்ததடி, பாடலுக்காகவே பல முறை பார்க்கத் தூண்டும். வெள்ளை ஆடையில் ஸ்லிம்மாக சூப்பர் ஸ்டைலாக காட்சி யளிக்கும் நடிகர் திலகம். அது என்னவோ தெரியவில்லை, விஜயலலிதாவுக்கும் நடிகர் திலகத்தும் சேர்ந்தாற்போல் ஒரு பாடலை அமைத்தால் அது சூப்பர் ஹிட்டாக அமைகிறது அல்லது சூப்பர் ஸ்டைலாக அமைகிறது - சில சமயம் சூப்பர் சோதனையாகவும் அமைகிறது [எதிரொலி].
இல்லற ஜோதி. அந்தக் காலத்திலேயே புதுமையை செய்த படம். இரண்டு சிவாஜிகள் ஒரு பத்மினி இடம் பெற்ற கேட்பதெல்லாம் காதல் கீதங்களே பாடல் காட்சிக்காகவே பார்க்கலாம். மற்றும் ஜி.ஆர். இசையில் களங்கமில்லா காதலிலே பாடல் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஏ.எம்.ராஜா ஜிக்கி குரல்களில் இனிமையான பாடல்.
மணமகன் தேவை, இது முழுக்க முழுக்க நகைச்சுவை இழைந்தோடும் சித்திரம். இந்தக் காலத்தில் இது நகைச்சுவையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் காலத்தில் நல்ல நகைச்சுவைப் படமாக பிரபலமாகியது.
பேருக்கு ஏற்றார்போல் வெளிவந்த படம் அவன் ஒரு சரித்திரம். வசந்த மாளிகை இயக்கிய பிரகாஷ் ராவ் அவர்களின் இயக்கத்தில் குற்றாலிங்கம் அவர்கள் தயாரித்த படம் அவன் ஒரு சரித்திரம். இதைப் பற்றி நாம் அதிகம் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.
நல்ல வாய்ப்புக்கு நன்றி சதீஷ்.
இதுவரை இந்தப் படங்களைப் பார்க்காதவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
அன்புடன்
oowijaez
16th October 2012, 11:17 AM
பாலாடை நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த நடிப்பைக் கொண்ட படம். இதில் ஏகப் பட்ட நுணுக்கங்களை அளித்திருக்கிறார். பின் ஒரு சந்தர்ப்பத்தில் இதனை அலசுவோம். பாதி பாடல் லாங் ஷாட்டில் எடுத்து நல்ல பாடலை சரியாக படம் பிடிக்காமல் ஏமாற்றி விட்டார் பீம்சிங். இந்தப் படம் ஓடாததற்கு இதுவும் ஒரு காரணமாயிருக்கலாம். கதையும் சற்று வித்தியாசமானது. முதல் மனைவியே கணவனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கும் புதுமையான கதையமைப்பு. ஒரு வேளை இப்போது வந்திருந்தால் இந்தக் கதை எடுபட்டிருக்குமோ...
I like that film too. looking forward to read a write-up on this film.
RAGHAVENDRA
16th October 2012, 07:13 PM
அறுபது ஆண்டுகள் ....
புயலெனப் புறப்பட்ட சிம்மக் குரல் ...
அதன் கர்ஜனை
ஓயவில்லை...
இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது...
என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்...
அந்தக் குரல் கேட்கும் திசை நோக்கி
ஓடினோம்...
ஓடினோம்..
ஓடிக் கொண்டே இருக்கிறோம்...
எங்கள் வாழ்க்கையின் ஓரத்திற்கே
ஓடினாலும்
அங்கே அந்தக் குரலைத்தான்
செவிமடுப்போம்...
17.10.1952 அன்று ஓலிக்கத் துவங்கிய
அந்த சிம்மக் குரல்
இன்னும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும்..
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Parasakthi60/PARASAKTHI60fw_zps06cac4ad.jpg
RAGHAVENDRA
16th October 2012, 07:16 PM
நமது நண்பர் மதுரை சந்திரசேகர் அவர்கள் பராசக்தி 60வது ஆண்டினை முன்னிட்டு தயாரித்துள்ள சுவரொட்டியின் நிழற்படம் நமது பார்வைக்காக ...
சந்திரசேகர் அவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றி
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Parasakthi60/maduraichandrasekaran2shtpostrfw_zpsf695bc9e.jpg
RAGHAVENDRA
16th October 2012, 09:07 PM
பராசக்தி அறுபது ஆண்டுகள் நிறைவினையொட்டி நாளை 17.10.2012 காலை 11.00 மணியளவில் சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் சக்ஸஸ் நினைவுச் சின்னம் முன்பு விழா நடைபெற உள்ளது. இதய வேந்தன் சிவாஜி ரசிகர் மன்றம், King of Karnan Groups மற்றும் சென்னை மாவட்ட சிவாஜி ரசிகர்கள் சார்பில் நடைபெற உள்ள இவ்விழாவில் நடிகர் திலகத்திற்கு முதன் முதலில் ஒப்பனை செய்த திரு ராமச்சந்திரன், மற்றும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் தொலைக்காட்சிக் கலைஞருமான திரு நந்தகுமார் உள்பட பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க விழா அமைப்பாளர்கள் அழைத்துள்ளார்கள்.
RAGHAVENDRA
16th October 2012, 09:12 PM
நடிகர் திலகம் பிறந்த நாள் விழாக்களின் ஒரு பகுதியாக மதுரை மாநகரில் துஷ்யந்த் ரசிகர் மன்றம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவ மனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளன. மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையில் வரும் 21.10.2012 ஞாயிறு அன்று நடைபெற உள்ள முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
மேலும் துஷ்யந்த் ரசிகர் மன்றம் சார்பாக சிறு குழந்தைகளுக்கு இலவச இதய பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமும் நடைபெற உள்ளது. இருதயக் கோளாறினால் பாதிக்கப் பட்ட 10வயதுக்கு உட்பட்ட ஏழை எளிய குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப் பட உள்ளன.
இத்தகவல்களை துஷ்யந்த் ரசிகர் மன்றத் தலைவர் திரு நாஞ்சில் இன்பா அவர்கள் தெரிவிக்கிறார். அவருடைய தொலைபேசி எண் 9566274503
Thomasstemy
16th October 2012, 10:29 PM
அன்பு முரளி சார்
நேற்று இரவுப் பணி முடித்து இன்று காலை வீட்டிற்கு வந்ததும் தங்கள் 'திருவிளையாடல்' கொண்டாட்டங்கள் பற்றிய பதிவை ஒரே மூச்சில் படித்தேன். மனதிற்கு மிக மிக சந்தோஷமாய் இருந்தது. நம் அன்புச் செல்வங்களின் ரகளைகளை அட்டகாசமாய் பதித்து விழாவிற்கு வரமுடியாமல் போன ஏக்கத்தைப் போக்கி விட்டீர்கள். மிக்க நன்றி!
ENGA KUTHAANGO !!!
:smokesmile:
Murali Srinivas
16th October 2012, 11:25 PM
சென்ற வெள்ளியன்று கோவை டிலைட் திரையரங்கில் திரையிடப்பட்ட தங்கைக்காக சிறப்பான வரவேற்ப்பை பெற்று வருகிறது என தகவல் வந்துள்ளது. ஞாயிறு மதிய காட்சிக்கே பரவலான கூட்டம் வந்திருக்கிறது. அன்று மாலை 4 மணி முதல் முன்னிரவு 7 மணி வரை கோவை மாநகரில் பலத்த மழை பெய்திருக்கிறது, அந்த மழையிலும் மாலைக் கட்சிக்கு திரளான ரசிகர் திரண்டு வந்திருக்கிறார்கள். மழை மட்டும் இடையூறாக வராமல் இருந்திருந்தால் அதிகளவில் மக்கள் கூட்டம் வந்திருக்கும் என சொல்லப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வண்ணம் நேற்று திங்கள் மாலைக் காட்சிக்கு நல்ல கூட்டம். ஒரு வேலை நாளில் மாலைக் காட்சிக்கு வந்த கூட்டம் அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.
தொடர்ந்து இதே டிலைட் திரையரங்கில் நடிகர் திலகத்தின் ஆலய மணி மற்றும் திருமால் பெருமை வெளி வர இருப்பதாக அந்த அரங்கத்தின் சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டியிருக்கிறார்களாம்.
தகவல் உதவி நண்பர் திரு ராமஜெயம் அவர்கள்.
அன்புடன்
Thomasstemy
16th October 2012, 11:38 PM
namm kangalukku virundhalikka viraivil varigiradhaamae ?
Eppadi irukkum idharkku varaverpu? Ungal anaivarin paarvayil !
1848:smokesmile:
Richardsof
17th October 2012, 06:35 AM
NADIGAR THILAGAM - PARASAKTHI -1952- 2012http://i47.tinypic.com/j9ncya.jpg
http://i50.tinypic.com/ogwf9e.jpg
RAGHAVENDRA
17th October 2012, 06:49 AM
டியர் விநோத் சார்,
நடிகர் திலகத்தின் பராசக்தி 60 ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு தங்களுடைய பதிவு மிகச் சிறப்பாக உள்ளது. தாங்கள் கூறியது போல் இது வெற்றியின் 60 ஆண்டுகள் தான். தங்களுடைய உள்ளன்புக்கும் பாராட்டுக்கும் உளமார்ந்த நன்றி.
அன்புடன்
RAGHAVENDRA
17th October 2012, 06:50 AM
மதுரை கண் பரிசோதனை முகாம் பற்றிய செய்தி தொடர்பான நிழற்படம். இதனை நமக்கு அனுப்பி வைத்த திரு இன்பா அவர்களுக்கும் திரு சுந்தரராஜன் அவர்களுக்கும் நன்றி.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/inbaeyecamp_zps08428207.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/3x2-sundfw_zps1928c0f1.jpg
vasudevan31355
17th October 2012, 08:24 AM
'பராசக்தி' வைரவிழா.
http://3.bp.blogspot.com/_ZxB6aHS1OLw/SkO_davA-iI/AAAAAAAABEY/2qfpL2qlC8M/s1600/rw28gh.png
http://imageshack.us/scaled/landing/862/parashakthi64.jpg
http://www.shotpix.com/images/21153785126829784989.jpg
அறுபது ஆண்டுகள். ஆமாம். தமிழ்த் திரையுலகம் தழைத்தோங்க வித்திட்ட எங்கள் இறைவனார் சினிமாவில் அவதரித்த திருநாள். அறுபது ஆண்டுகள் என்ன ஆறு லட்சம் ஆண்டுகளானாலும் எவராலும் அசைத்துப் பார்க்கக் கூட முடியாத ஆண்டவரின் சாதனை தொடங்கிய நாள். கலைமகள் முதன் முதல் களிப்புற்ற நாள். கோடிக்கணக்கான தொண்டர்களை நம் தெய்வம் தன்னகத்தே வசப்படுத்திய நாள். பராசக்தி தன் மைந்தன் மூலம் பரவசப்பட ஆரம்பித்த நாள். புரட்சித் தமிழை புவியெங்கும் பரவச் செய்த நாள். நடிப்பென்றால் என்னவென்று நானிலத்திற்கு உணர்த்திய நாள். அதுவரை யாரும் கண்டறியா அங்க அசைவுகள் மூலம் அகிலத்தை ஆளத் துவங்கிய நாள். கூத்தும், பாட்டுமாய் இருந்த தமிழ் சினிமாவின் தலையெழுத்தை தலைகீழாக மாற்றிய நாள். 'சக்சஸ்' என்று ஆரம்பித்து சண்டமாருதமாய் முழங்கி சங்கநாதம் செய்த நாள். சோதனை, வேதனைகளை சாதனைகளாக்கிக் காட்டிய நாள். "என் கண்ணீரால் ஏவிஎம் ஸ்டுடியோவின் வேப்ப மரங்கள் வளர்ந்தன" என வேல் பாய்ந்த நெஞ்சோடு வேதனைப் பட்டவரின் வாழ்வு வளமான நாள். கோர்ட் என்றாலே கோமகனை நினைவுக்குக் கொண்டு வரும் நாள். ஆம். பராசக்தி தன் மைந்தனை ஈன்றெடுத்த திருநாள்.
http://www.shotpix.com/images/72415733794608426189.jpg
அறுபதாவது ஆண்டு நிறைவு விழா.
http://imageshack.us/scaled/landing/607/parasakthi00066.png
நீ அவதரித்த பூமியில் பிறந்ததினால் உன்னை விட புண்ணியம் செய்தவரானோம்.
உன்னுடனேயே வாழ்ந்ததினால் உன்னதப் புகழை உன்னை விடப் பெற்றோம்.
http://imageshack.us/scaled/landing/860/parasakthi00027.png
முக்காலமும் போற்றும் எக்காலமும் நாங்கள் வணங்கும் எங்களின் கண்கண்ட ஒரே கடவுளே!
நின் பாதம் பணிந்து உன் புகழ் பாடுவதே எங்களுக்கு சொர்க்கம்.
அன்புடன்,
வாசுதேவன்.
Gopal.s
17th October 2012, 08:33 AM
நான் வணங்கும் ஒரே கடவுள், உலகுக்கு காட்சி தந்த நாள். இன்னும் சாதனையாகவே மிஞ்சியுள்ள பெரும் சாதனை.
உலகிற்கு ஒளி கிடைத்து அறுபது ஆண்டுகள்தானா ஆகிறது?எனக்கு வாழ்வில் கிடைத்த ஒரே பெருமை உன் அடிமையாகவே தொடர்வது.
RAGHAVENDRA
17th October 2012, 08:53 AM
சென்ற ஆண்டு பம்மலார் கவியரசருக்கு அஞ்சலியாக பதிவிட்ட நிழற்படம் ... எத்தனை ஆண்டுகளானாலும் பொருந்தும் ...
கலை உலகின் தலைமகனை உலகிற்கு அடையாளம் காட்டிய நாளில் கவியுலகின் தலைமகனை தன்னுடன் அழைத்துக் கொண்ட நாளினையும் ஒன்றாக்கி விட்டாயே... இதனைக் கொண்டாடுவதா ... அல்லது அஞ்சலி செலுத்துவதா .... கொண்டாடுவோம் ... கவியரசரே நீங்கள் நிரந்தரமானவர் அழிவதில்லை... எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை... எனவே நீங்கள் இன்னும் வாழ்கிறீர்கள்...
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/NTKannadhasan-1.jpg
vasudevan31355
17th October 2012, 09:20 AM
'பராசக்தி' 60-ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டிய சிறப்புப் பதிவு
http://i.ytimg.com/vi/yGhxLO5HmsQ/0.jpg
'தமிழன் எக்ஸ்பிரஸ்' ஆகஸ்ட் 1-7 இதழில் வெளிவந்த நடிகர் திலகத்தின் புகழ் பாடும் 'ராஜபார்ட் சிவாஜி துரை!' பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் கட்டுரை
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6-3-1.jpg?t=1350445433
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6_0001-3-2.jpg?t=1350446063
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6_0005-1-1.jpg?t=1350445729
அன்புடன்,
வாசுதேவன்.
Subramaniam Ramajayam
17th October 2012, 09:22 AM
What to say except our slogam
THE GREATEST ACTOR OF THE UNIVERSE AND THE ONLY BO EMPEROR ALWAYS.
UMMUDAYA KALATHIL VALTHETHE NAN SEITHA PUNNIYAM.
vasudevan31355
17th October 2012, 09:28 AM
http://upload.wikimedia.org/wikipedia/en/3/33/Parasakthi.jpg
vasudevan31355
17th October 2012, 09:33 AM
மறக்க முடியாத நினைவுகள்.
http://www.shotpix.com/images/34017949594675238162.png
http://www.shotpix.com/images/31918888007115480575.png
http://www.shotpix.com/images/31713868331032389396.png
http://www.shotpix.com/images/40694571643093935649.png
vasudevan31355
17th October 2012, 09:42 AM
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களுடைய 'பராசக்தி' நினைவலைகள் பிரமாதம். ஏதோ இனம் புரியாத சோகம் நெஞ்சை வாட்டியது உண்மை.
மதுரை சந்திரசேகர் அவர்கள் பராசக்தி 60வது ஆண்டினை முன்னிட்டு தயாரித்துள்ள சுவரொட்டியின் நிழற்படம் தூள். அருமையாகப் பதித்ததற்கு நன்றி!
பராசக்தி அறுபது ஆண்டுகள் நிறைவினையொட்டி கொண்டாடப்படவிருக்கும் விழா நிகழ்ச்சிகளின் விவரங்களை அளித்தமைக்கும் நன்றிகள்.
தராசு, திருப்பம், தங்கைக்காக, பாலாடை, திருடன், இல்லற ஜோதி, மணமகன் தேவை, அவன் ஒரு சரித்திரம் காவியங்களைப் பற்றிய நினைவலைகளைத் தொகுத்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள்.
vasudevan31355
17th October 2012, 09:44 AM
டியர் வினோத் சர்,
தங்களின் மனமுவந்த 'பராசக்தி' வைர விழா வாழ்த்துப் பதிவிற்கு என் எண்ணிலடங்கா நன்றி!
vasudevan31355
17th October 2012, 09:50 AM
டியர் சுப்பு சார்,
ஒழுங்காக வயிற்றுவலி மாத்திரைகளை எனக்கு அனுப்பி வைக்கவும். சிரித்து சிரித்து வயிறே புண்ணாகிப் போய் விட்டது. ஆஹா! ஆஹா! வெள்ளை ரோஜாவைத் தரப் போகும் அந்த வெள்ளை மனதுக்காரார்கள் யாரென்று தெரியலையே... எங்க சொன்னாங்கோ!
vasudevan31355
17th October 2012, 09:59 AM
கவியரசருக்கு எங்கள் இதய அஞ்சலி.
http://cineaxis.com/Gallery/Events/Kaviyarasu%20Kannadasan%20Birthday%20Celebration%2 0Stills/Kaviyarasu%20Kannadasan%20Birthday%20Celebration%2 0Stills%2023.jpg
eehaiupehazij
17th October 2012, 10:09 AM
When NT appeared in Parasakthi his maiden movie, he proved that 'valarum payir mulhayile theriyum' and no looking back over sixty years till today! His young energetic looks and the different style of acting with a cannon ball like dialogue delivery and the courage he exhibited in close-up shots, the acting fineness ...... eththanai yugangal kadandhalum Sivaji Ganesan ennum mahanadiganaippola evarum illai! Nadippin aththunai parinamangalaiyum velippaduthiya ulaga nadigan ungalaippola everume illaiye! kalangal kadandhalum ungal ninavu alaigal en kadaisi moochu varai
parthasarathy
17th October 2012, 01:25 PM
நீ இந்தத் திரையுலகில் அவதரித்து அறுபது ஆண்டுகள் நிறைந்து விட்டது.
தமிழும், கலையும், இப்பூவுலகும் உள்ளவரை, நீ இருப்பாய்.
மற்றவரெல்லாம் பிறந்த பின் நடிக்கையில், நீ ஒருவன் தான் நடிப்பதற்கென்றே பிறந்தாய்! அதனால், கலைக் கடவுளானாய்!!
என்றும் உன் பக்தன்,
இரா. பார்த்தசாரதி
RAGHAVENDRA
17th October 2012, 06:54 PM
சென்னை வடபழநியிலுள்ள ஏவி.எம். படப்பிடிப்பு அரங்க வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பராசக்தி திரைப்படத்தில் நடிகர் திலகம் முதன் முதல் பேசிய வசனமான சக்ஸஸ் என்ற வாசகம் படப்பிடிப்பு நடத்தப் பட்ட இடத்திலுள்ள நினைவுச் சின்னத்தில் ரசிகர்களால் எளிய முறையில் விழா நடத்தப் பட்டது. வார நாள், மழை பெய்யும் சூழ்நிலை போன்ற காரணங்களையும் பொருட் படுத்தாமல் ரசிகர்கள் விழாவுக்கு வருகை புரிந்தனர். தன்னுடைய தள்ளாத வயதிலும் உடல் நிலையிலும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த, பராசக்தி படத்தில் நடிகர் திலகத்திற்கு ஒப்பனை செய்த திரு டி.எம். ராமச்சந்திரன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். திரு ராமச்சந்திரன் அவர்கள் அந்த நினைவுச் சின்னத்தில் அமைந்துள்ள நடிகர் திலகத்தின் உருவிற்கு மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் எடுக்கப் பட்ட சில நிழற்படங்கள் நம் பார்வைக்கு.
திரு ராமச்சந்திரன்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Parasakthi60/successfn07fw_zps8bdad93a.jpg
சக்ஸஸ் வசனம் பேசிய நடிகர் திலகத்தின் காட்சி
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Parasakthi60/successfn06fw_zpsa678df76.jpg
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு ராமச்சந்திரன் அவர்களுக்கு வழங்கப் பட்ட நினைவுப் பரிசு
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Parasakthi60/successfn04fw_zpsb82e087a.jpg
படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களின் பட்டியல் கல்வெட்டாக
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Parasakthi60/successfn03fw_zps7ee2d606.jpg
படத்தின் பாடல்களைப் பற்றிய விவரம் கல்வெட்டாக
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Parasakthi60/successfn02fw_zpse4180d77.jpg
அலங்கரிக்கப்பட்ட கல்வெட்டின் முழுத் தோற்றம்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Parasakthi60/successfn01fw_zps4f963641.jpg
Thomasstemy
17th October 2012, 07:12 PM
டியர் சுப்பு சார்,
ஒழுங்காக வயிற்றுவலி மாத்திரைகளை எனக்கு அனுப்பி வைக்கவும். சிரித்து சிரித்து வயிறே புண்ணாகிப் போய் விட்டது. ஆஹா! ஆஹா! வெள்ளை ரோஜாவைத் தரப் போகும் அந்த வெள்ளை மனதுக்காரார்கள் யாரென்று தெரியலையே... எங்க சொன்னாங்கோ!
ADA SOMMA POANGOE...YELLLLLAMM SONANGOE..MARANDHUTEENGO NEENGOE..!!
:smokesmile:
Thomasstemy
17th October 2012, 07:58 PM
செய்தி: விரைவில் நடிகர் திலகத்தின்
1856:smokesmile:
vasudevan31355
17th October 2012, 08:58 PM
ஒரு டூரிங் டாக்கீஸ் அனுபவம்.
பராசக்தியை பெரும்பாலும் பார்த்து பரவசப்பட்டது கிராமத்து டூரிங் கொட்டகைகளில்தான். மல்டி காம்ளெக்ஸ் தியேட்டர்களில் கிடைக்காத மகிழ்ச்சி டூரிங் டாக்கீஸ்களில் கிடைக்கும் என்பது அதை அனுபவித்தவர்களுக்குப் புரியும். பராசக்தி என்றில்லை நடிகர் திலகத்தின் பெரும்பாலான 'ப' மற்றும் 'பா' வரிசைப் படங்கள், எம்ஜியார் அவர்களின் ஆக்ஷன் படங்கள் என்று அனைத்து ரசிகர்களையும் குதூகலிக்கச் செய்த ஒரு குட்டி சொர்க்கபுரி என்று கூட டூரிங்குகளைத் தட்டிக் கொடுக்கலாம்.
கடலூரை எடுத்துக் கொண்டால் பச்சையான்குப்பம் சுகந்தி, கோண்டூர் லக்ஷ்மி, பாதிரிக்குப்பம் ஜகதாம்பிகா என்ற சுற்றுவட்டாரக் கிராமங்களின் டூரிங் டாக்கீஸ்கள். நன்றாக நினைவிருக்கிறது. கிராமங்களை ஒட்டி இருக்கும் டூரிங் கொட்டகைகள். அதுவும் தென்னங்கீற்று ஓலைகளால் முழுவதும் மிக நெருக்கமாக வேயப்பட்டிருக்கும். டாக்கீஸ்களுக்கு முன்னால் நிச்சயம் நிழல் தரும் மரங்கள் உண்டு. மனிதர்கள் புழங்க இடவசதி தாராளமாய் இருக்கும். காலையில் ஒரு மாடு பூட்டப்பட்ட தட்டு வண்டியின் இரு சைடுகளிலும் படத்தின் போஸ்டரைத் தாங்கிய இரு சிறு பதாகைகள் அலங்கரித்துக் கொண்டிருக்க, வண்டி கிராமவலம் வந்து விளம்பரம் செய்து கொண்டிருக்கும். டூரிங் டாக்கீஸ் பணியாளர்களிடையே வழக்கம் போல சிவாஜி குரூப், எம்ஜியார் குரூப் என இரு குரூப்கள் உண்டு. எனவே இரு திலகங்களின் பட விளம்பரங்களில் கண்டிப்பாக போஸ்ட்டர்களுக்கு மாலைகள் அவரவர்கள் சார்பில் உண்டு. விளம்பர வண்டி கிராமத்து முக்கிய வீதிகளில் சென்று வீதி உலா வரும். "டேய்... நம்மூர்ல பராசக்தி போட்டிருக்காண்டா" என்று காலையிலேயே களேபரம் களை கட்டி விடும். எட்டு மணிக்கெல்லாம் ஊரின் முக்கிய சந்திப்பில் ரசிகர் கூட்டம் தவறாமல் ஆஜராகி விடும். பின் ஆளாளுக்கு இன்னின்ன வேலைகள் என்று பகிர்ந்தளிக்கப்படும். ஒருவர் தேங்காய்கள் கலெக்ட் செய்ய அனுப்பி வைக்கப்படுவார். இன்னொருவர் மாலைகள் வாங்கி வர ரெடியாக்கப் படுவார். இன்னொரு நபர் கொடி வாங்கி வரவேண்டும். கற்பூரம் இத்யாதி இத்யாதிகளுக்கு வேறொருவர். உதிரிப்பூகளுக்கு என்னைப் பணிப்பார்கள். அதனால் கிராமத்தின் கடைக்கோடியில் இருக்கும் என் நண்பனின் வீட்டில் இருக்கும் காகிதப்பூவை பறித்து சாக்கு மூட்டையில் கட்டி வைப்பது என் பணி.
பின் அனைவரும் டூரிங் டாக்கீஸில் ஸ்கூல் முடியும் நேரத்தில் ஒன்று கூடுவோம். விறுவிறுவென சணலில் மைதாமாவு பசையைத் தடவி கொடிகள் கண நேரத்தில் ஒட்டப்படும். கொடியை ஏறி கட்டுவதற்கென்றே ஒரு 'அறுந்த வால்' எங்களிடையே இருக்கும்.(நண்பா ரஹீம்! மன்னிச்சுடுப்பா!) கண்ணிமைக்கும் நேரத்தில் வௌவால் போல அங்குமிங்கும் தாவி கொடிகளை கட்டிவிடும். டூரிங் டாக்கீஸ்களிலெல்லாம் இரண்டு காட்சிகள்தாம். மாலை ஏழுமணிக்கு முதல் காட்சி. இரவு பத்தரை மணிக்கு கிராமத்தார் பாணியில் சொல்வதென்றால் ரெண்டாவது ஆட்டம். பக்கத்து டவுனில் இருந்து ஒரு பதினஞ்சு ரூவா மதிப்புக்கு நல்ல மாலையா நண்பர்கள் வாங்கிட்டு வந்திருப்பாங்க. ஊர்ப் பெரிய தலையின் பிள்ளை கண்டிப்பாக நம் ரசிகராக இருப்பார். அவர் தன் பவுசைக் கட்ட தோட்டக்காரங்களை விட்டு அவுங்களோட தென்னந் தோப்பில் இருந்து பத்துப் பதினைந்து தேங்காய் பறித்துக் கொடுத்தனுப்புவார். (படம் தொடங்கியதற்கு பின் முதல் வகுப்பு சேரில் அமர்ந்து படம் பார்த்து விட்டு படம் முடியும்முன்னரே வேகமாகத் தியேட்டரை விட்டு கௌரவம் கருதி கழன்று கொள்வார்) போன தீபாவளிக்கு பரணில் போட்டு வைத்த பட்டாசுக் கட்டுகளை ஒருத்தர் மெனக்கெட்டு தேடி எடுத்து வருவார். அப்படி இப்படி சைக்கிளில் பரபரப்பாய் போய் வருகையில் எதிரணி கோஷ்டி ஒன்றாக ஓரிடத்தில் அமர்ந்து முறைத்துக் கொண்டிருக்கும். உள்ளுக்குள் உதைப்பு இருந்தாலும் எதையும் சட்டை செய்யாதது போன்ற பாவனையில் நேர்கொண்ட பார்வையுடன் சைக்கிள் பறக்கும்.
இம்..ஆச்சு... சுற்று வட்டாரத்திலிருந்து கும்பல் கும்பலாக மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மந்தை மந்தையாக ஜனக் கூட்டம் திருவிழாவிற்கு வருவது போல வர ஆரம்பிக்கும். சரியாக ஆறுமணிக்கெல்லாம் விநாயகனை வினை தீர்க்க சீர்காழியார் டூரிங் டாக்கீஸ் ஸ்பீக்கரில் வேண்ட ஆரம்பிப்பார். அடுத்து நடிகர் திலகத்தின் படமென்றால் நடிகர் திலக படப்பாட்டு. பாடல்கள் கிராமத்தை தட்டி எழுப்பியவுடன் உள்ளூர் ஜனம் கிளம்ப ரெடியாகும்.
டிக்கெட் கவுண்ட்டரில் ஜனம் ரெடியாக நிற்கும். 40w மஞ்சள் கலர் பல்புகள் ஆண்கள், பெண்கள் கவுண்டர்களில் எரிந்து கொண்டிருக்கும். டிக்கெட் கொடுப்பதற்கு முன்னால் ரசிகர்களின் அட்டகாசங்கள் தொடங்கும். வந்திருக்கும் ஜனம் அமர்க்களங்களைக் காண வேண்டுமே! டாக்கீஸின் பிரதான இடத்தில் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்ட்டரில் மாலைகள் சூட்டப்படும். 'அறுந்த வால்' மேலே ஏறி கற்பூர ஆராதனை காட்டும். திருஷ்டித் தேங்காய்கள் உடைக்கப்பட்டு சிதறியவுடன் பேருக்குக் கூட ஒரு தேங்காய் பீஸை தரையில் காண முடியாது. ஆபரேட்டர் வேறு கட்டிய பூப்போட்ட கைலியுடன் half-அடித்து விட்டு அலட்டலாய் நிற்பார். அவருக்கு ஸ்பெஷல் கவனிப்பு உண்டு. "தலைவா! பிரிண்ட் எப்படி? பார்த்து ஓட்டு தலைவா... என்று கரிசனத்தோடு ஆபரேட்டர் காதோரம் கிசுகிசுக்கப்படும். பெடல் இல்லாத சைக்கிள்கள் பாதி வந்திருக்கும். டிரிங்...என்று டிக்கெட் கொடுக்க மணி ஒலிக்கும். 'நான் நீ... டமால் டுமீல்' என்று ஒரே அடிதடிதான். டிக்கெட் கொடுப்பவர் பிராணன் போகும். ஒப்பன் கவுண்ட்டராய் இருப்பதனால் கவுண்ட்டரின் பின்புறம் வந்து டிக்கெட் கொடுப்பவரின் முதுகை டிக்கெட் கேட்டு பிராண்டும் ஒரு கூட்டம். ஒரு வழியாக டிக்கெட் கொடுத்து முடித்தவுடன் வார் ரீல்(!) ஆரம்பமாகும். அப்போதைய பிரதமர் (பெரும்பாலும் இந்திரா காந்தியாகத்தான் இருப்பார்) பீகார் வெள்ள சேதங்களை ஹெலிகாப்டரில் பார்வையிடுவார். வார் ரீல் சத்தம் வெளியே கேட்டவுடன் தியேட்டருக்கு வந்து கொண்டிருக்கும் பலரின் நடை ஓட்டமெடுக்கும். ஒரு வழியாக எல்லா களேபரங்களும் முடிந்து படம் போடுவார்கள். ஆண்கள் பெண்களை தனியே பிரிக்க ஒரு மூன்றடி உயரத்திற்கு இடையே மண்ணாலான தடுப்புச் சுவர். ஒரே கூச்சலும் குழப்பமும்தான். இருட்டில் யார் என்ன எது ஒன்றுமே தெரியாது...
"ஒய்..மாணிக்கம் எங்கடா இருக்க?...
டேய் இங்க பார்ரா...முன்னாடி..முன்னாடி"
என்று குரல்கள் ஒலித்த வண்ணம் இருக்கும்.
முன்னே உட்காருவோர் உயரமாய் இருந்தால் என்ன செய்வது என்று சர்வ முன் ஜாக்கிரதையாக மண்ணைக் கூட்டி மேடாக்கிக்கொண்டு அதன் மேல் அமர்ந்து கொள்ளும் புத்திசாலிகள். (எல்லாருமே அதைத்தான் செய்திருப்பார்கள்) நாற்பத்தஞ்சு பைசா தரை டிக்கெட் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமிக்க அதன் பின்னால் பத்துப் பன்னிரண்டு மர பெஞ்சுகள். அது பெஞ்ச் டிக்கெட். தொண்ணூறு பைசா. அதற்கு பின்னால் முதல் வகுப்பு. தனி சேர்கள். ஒரு ரூபாய் இருபது பைசா. அதுவும் மரத்தினால் ஆனதுதான். மூட்டைப் பூச்சிகளின் அன்புக் கடியில் ஆட்டம் போட்டபடியே படம் பார்க்கலாம். டிக்கெட் இல்லை என்ற பேச்சே இல்லை. ஜனம் வரவர டிக்கெட் உண்டு. அரை மணி நேரம் சென்றதும் டிக்கெட் கவுண்ட்டரில் ஆள் இல்லை என்றால் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் ஆளிடம் காசைக் கொடுத்து சென்று விடலாம். படம் போட்டவுடன் ஒரே விசில் சத்தம்தான். காது ஜவ்வுகள் கிழியும். எப்படிப்பட்ட பிரிண்டாய் இருந்தாலும் இருட்டாகத்தான் படம் ஓடும். நடிகர் திலகம் அல்லது தங்கள் அபிமான நடிகரைக் காட்டியவுடன் காகிதப் பூவாய் பறக்கும். ஒரே ஒரு புரஜெக்டர் தான் இருக்கும். எனவே நான்கு முறை படச் சுருளை லோட் செய்வார்கள். எனவே ஒவ்வொரு படத்திற்கும் மூன்று இடைவேளைகள் இருக்கும். கொட்டகை நிரம்பி வழிந்து சிறுநீர் கழிக்கும் இடங்களில் கூட ஜனம் கூச்சப்படாமல் அமர்ந்து படத்தை ரசிக்கும். இடை வேளைகளின் போது லைட்டைப் போட்டால் எங்கு பார்த்தாலும் வெற்றிலைப் பாக்கு எச்சில்கள்தாம் தெரியும்.
படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே மங்கலாகும். சமயத்தில் ஆடியோ மட்டும் கேட்க படம் மட்டும் தெரியாமல் கூட்டம் கடுப்பாகும். ஆபரேட்டர் என்னன்னவோ அட்ஜஸ்ட் செய்வார். (கார்பன் குச்சிகளை நெருக்கி வைத்து ஒளிர விடுவார்) ஓரளவிற்கு நிலைமையை சமாளித்தும் விடுவார். ஆனால் படச் சுருளிடம் இவரைப் போல மாரடிக்க எவராலும் இயலாது. எப்படியும் நான்கைந்து முறையாவது படம் அறுந்து போகும். பின் இடைவேளை. ஒரே சுற்றில் சுற்றப்பட்ட கை முறுக்கு அபாரமாய் விற்பனை ஆகும். புகை வாடை அடிக்கும் டீயைக் குடிக்க ஒரே அடிதடி நடக்கும். டீ என்றால் அரை கிளாஸ் இல்லை முழு கிளாஸும் இருக்க வேண்டும். இல்லையென்றால் தூக்கிக் கிடாசி விடுவான். ஜோடா கலரும் தம் பங்கிற்கு அமோக விற்பனை ஆகும். குமட்டிக் கொண்டு வரும் கழிவு வாடைகளையும் மீறி மனம் படத்தில் லயிக்கும். ஒருவழியாகப் படம் முடிந்ததும் ஆபரேட்டருக்கு ரசிகர்கள் சார்பில் ஐந்தோ பத்தோ இனாமாக அளிக்கப்படும். அவருக்கு அடுத்த கட்டிங்கிற்கு காசு ரெடி. படம் முடிந்து மக்கா ஆறேழு கிலோமீட்டர்கள் படத்தின் கதையை விவாதித்தபடியே நடைபயணம் போகும். (விஷேச நாட்களின் போது மேட்னியும் உண்டு. திக்கான சாக்கு படுதாக்களை சைடுகளில் கட்டி உள்ளே இருட்டாக்க முயற்சிகள் செய்து அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்று பகலில் படத்தை ஓட்டுவார்கள்). உள்ளூர் ஜனம் போய் சாப்பிட்டு விட்டு படுத்து உறங்க எத்தனிக்கையில் இரண்டாவது ஆட்டத்தில் கல்யாணியும், கிறுக்கண்ணாவும் உரையாடிக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகக் காதுகளுக்குக் கேட்டு உறக்கம் வராமல் தடுக்கும்.
ம்...என்ன சொல்லுங்க... அந்த மாதிரி ஒரு பொற்காலம் சுட்டுப் போட்டாக் கூட இப்ப கிடைக்காது... அதெல்லாம் ஒரு சொர்க்கமுங்க...
அன்புடன்,
வாசுதேவன்.
RAGHAVENDRA
17th October 2012, 09:16 PM
60 ஆண்டுகளுக்கு முன் வந்த பராசக்தி எத்தனை நினைவுகளைக் கிளறி விட்டது. வாசு சார்.... எப்படி சார் உங்களைப் பாராட்டுவது ... நிஜமாகவே வார்த்தை வரவில்லை.. ஏனென்றால் எனக்கும் டூரிங் டாக்கீஸ் அனுபவம் நிறையவே உள்ளது.. விடுமுறை நாட்களில் உறவினர் வீட்டுக்குப் போகும் போது டூரிங் டாக்கீஸ்களில் நடிகர் திலகம் படம் பார்த்து ஊறிப் போய் விட்டது. அவர் படம் மட்டுமல்ல ஒரே பொழுது போக்கு என்பதால் ஓடும் அனைத்துப் படங்களையும் பார்த்து விடுவேன். சில நாட்களில் படங்களை ஓரிரு நாட்களுக்கு மட்டும் போடுவார்கள். அதையும் விடுவதில்லை.. ஆஹா நிறைய நினைவுகள்... பொறுமையாக எழுத வேண்டும் ...
RAGHAVENDRA
17th October 2012, 09:21 PM
அந்த நாட்களை நினைவு படுத்தும் ஒரு மகிழ்வான செய்தி ...
நீ................ண்....................ட நாட்களுக்குப் பிறகு ஞான தேசிகன் அவர்களின் மூலம் சத்யமூர்த்தி பவனுக்கு ஞானோதயம் ...
1975ல் எந்த நடிகர் திலகத்திற்கு சங்கடங்கள் நேர்ந்ததோ, எந்த சூழ்நிலையில் அவர் செய்யாத தவறுக்கு அவதூறுகளுக்கு ஆளாக்கப் பட்டாரோ [அந்தத் தவறான கண்ணோட்டம் இன்று வரை நம்மிலேயே உள்ள பல ரசிகர்களுக்கு இருப்பது மிகவும் மன வேதனையூட்டும் விஷயம், அதுவும் அவரை நன்கு அறிந்தவர்களே மேம்போக்கான மற்றவர்களின் கருத்தை ஆதரிப்பது மிகவும் மன வருத்தம்...] அதே சத்யமூர்த்தி பவன் இன்று பிராயச் சித்தம் செய்வது போல், நடிகர் திலகத்தின் பிறந்த நாளை அவர்களே கொண்டாட உள்ளார்கள் என்ற செய்தி வந்துள்ளது. காலங்கடந்த ஞானோதயம் என்றாலும் இது வரவேற்கத் தக்கது. அதிகார பூர்வமற்ற தகவலின் படி வருகின்ற அக்டோபர் 28ம் தேதி ஞாயிற்றுக் கிழமை யன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் கொண்டாடப் பட உள்ளதாக ஒரு தகவல். நடிகர் சிரஞ்சீவி கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. ஓரிரு நாட்களில் தகவல்கள் வந்த வுடன் பகிர்ந்து கொள்வோம்.
Thomasstemy
17th October 2012, 09:43 PM
http://www.youtube.com/watch?v=5RUpUQHbQ3g
Raghavendran sir......
RAGHAVENDRA
18th October 2012, 08:53 AM
http://www.reocities.com/hollywood/1096/hatsoff.gif
டியர் பம்மலார்
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
22 ஜூலை 2012ல் தொடங்கி இன்று 18.10.2012 வரையில் இந்த 89 வது நாளில் 1722 பதிவுகளுடனும் 85,982 - கிட்டத்தட்ட 86000 பார்வையாளர்கள் எண்ணிக்கையுடனும் இந்தத் திரியினை நடத்திச் சென்றுள்ளீர்கள். இந்த வேகத்தினால் எந்த விதத்திலும் திரியின் மேன்மை பாதிக்காமல் தங்கள் பதிவுகளாலும், மற்றும் வாசுதேவன் அவர்களின் பதிவுகளாலும் சிறப்புறச் செய்து பீடு நடை போடுகிறீர்கள். இந்த சிறப்பிற்கு காரணமாயிருந்த அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
தொடர்ந்து தங்கள் பங்களிப்பில் இத்திரி மேலும் சிறப்புடன் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை.
அன்புடன்
ராகவேந்திரன்
vasudevan31355
18th October 2012, 09:06 AM
'சினிமா எக்ஸ்பிரஸ்' அக்டோபர் (16-31) 2012 இதழில் வெளிவந்துள்ள ஆண்டவருக்கான அன்னை இல்லத்தின் ஆத்மார்த்தமான அஞ்சலி.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-8.jpg
vasudevan31355
18th October 2012, 09:10 AM
'சினிமா எக்ஸ்பிரஸ்' அக்டோபர் (16-31) 2012 இதழில் வெளிவந்துள்ள 'பிலிம் நியூஸ்' ஆனந்தன் அவர்களின் 'திருப்புமுனைத் திரைப்படங்கள்' வரிசையில் 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' சாதனைகள் பற்றி.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-7.jpg
Richardsof
18th October 2012, 09:12 AM
http://i46.tinypic.com/351fslh.jpg
RAGHAVENDRA
18th October 2012, 09:14 AM
டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய பங்களிப்பிலும் பம்மலாருடைய பங்களிப்பிலும் இத்திரி வீறு நடைபோடுவதை நிரூபித்து விட்டீர்கள். பாராட்டுக்கள். பாராட்டி பதிவை முடிக்கும் முன் சினிமா எக்ஸ்பிரஸ் இதழின் பக்கங்களை உடனுக்குடன் அளித்து பரவசமூட்டியுள்ளீர்கள். அதற்கு மீண்டும் பாராட்டுக்கள். இதை முடிக்கும் முன் அடுத்த அசத்தல் எதுவோ தெரியவில்லை. அதற்கும் முன் கூட்டியே பாராட்டுதலைத் தெரிவித்து விடுகிறேன்.
அன்புடன்
RAGHAVENDRA
18th October 2012, 09:19 AM
டியர் வினோத் சார்,
அருமையானதொரு நகைச்சுவைப் படம் அறிவாளி. நடிகர் திலகம் பத்மினி சாலையில் நடந்து கொண்டே ஒருவரை ஒருவர் சண்டி செய்யும் பாடல் சூப்பர் ஹிட். அதே போல் தங்கவேலு டி.பி.முத்துலட்சுமிக்கு சமையல் செய்யக் கற்றுத் தரும் காட்சியும் சிறந்த நகைச்சுவை. அந்தக் காலத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைப் படம் என பிரபலமானது. ஹிந்து நாளிதழில் இப்படத்தைப் பற்றி வெளிவந்த கட்டுரையைப் பிரசுரித்தமைக்கு உளமார்ந்த நன்றி.
அன்புடன்
Gopal.s
18th October 2012, 10:00 AM
வாசு சார்,
அசத்தி விட்டீர்களே சார்.
vasudevan31355
18th October 2012, 10:23 AM
டியர் வினோத் சார்,
ஹிந்து இதழின் 'அறிவாளி' பதிவை அளித்தமைக்கு மிக்க நன்றி! எனக்கு மிக மிகப் பிடித்த படங்களில் ஒன்று அறிவாளி. சும்மா பானுமதியைப் பாடாய் படுத்துவார் பாருங்கள்... நடிப்புச் சக்கரவர்த்தி அதகளம் புரிந்த காவியம் அது.
oowijaez
18th October 2012, 10:35 AM
ஒரு டூரிங் டாக்கீஸ் அனுபவம்.
பராசக்தியை பெரும்பாலும் பார்த்து பரவசப்பட்டது கிராமத்து டூரிங் கொட்டகைகளில்தான். மல்டி காம்ளெக்ஸ் தியேட்டர்களில் கிடைக்காத மகிழ்ச்சி டூரிங் டாக்கீஸ்களில் கிடைக்கும் என்பது அதை அனுபவித்தவர்களுக்குப் புரியும். பராசக்தி என்றில்லை நடிகர் திலகத்தின் பெரும்பாலான 'ப' மற்றும் 'பா' வரிசைப் படங்கள், எம்ஜியார் அவர்களின் ஆக்ஷன் படங்கள் என்று அனைத்து ரசிகர்களையும் குதூகலிக்கச் செய்த ஒரு குட்டி சொர்க்கபுரி என்று கூட டூரிங்குகளைத் தட்டிக் கொடுக்கலாம்.
கடலூரை எடுத்துக் கொண்டால் பச்சையான்குப்பம் சுகந்தி, கோண்டூர் லக்ஷ்மி, பாதிரிக்குப்பம் ஜகதாம்பிகா என்ற சுற்றுவட்டாரக் கிராமங்களின் டூரிங் டாக்கீஸ்கள். நன்றாக நினைவிருக்கிறது. கிராமங்களை ஒட்டி இருக்கும் டூரிங் கொட்டகைகள். அதுவும் தென்னங்கீற்று ஓலைகளால் முழுவதும் மிக நெருக்கமாக வேயப்பட்டிருக்கும். டாக்கீஸ்களுக்கு முன்னால் நிச்சயம் நிழல் தரும் மரங்கள் உண்டு. மனிதர்கள் புழங்க இடவசதி தாராளமாய் இருக்கும். காலையில் ஒரு மாடு பூட்டப்பட்ட தட்டு வண்டியின் இரு சைடுகளிலும் படத்தின் போஸ்டரைத் தாங்கிய இரு சிறு பதாகைகள் அலங்கரித்துக் கொண்டிருக்க, வண்டி கிராமவலம் வந்து விளம்பரம் செய்து கொண்டிருக்கும். டூரிங் டாக்கீஸ் பணியாளர்களிடையே வழக்கம் போல சிவாஜி குரூப், எம்ஜியார் குரூப் என இரு குரூப்கள் உண்டு. எனவே இரு திலகங்களின் பட விளம்பரங்களில் கண்டிப்பாக போஸ்ட்டர்களுக்கு மாலைகள் அவரவர்கள் சார்பில் உண்டு. விளம்பர வண்டி கிராமத்து முக்கிய வீதிகளில் சென்று வீதி உலா வரும். "டேய்... நம்மூர்ல பராசக்தி போட்டிருக்காண்டா" என்று காலையிலேயே களேபரம் களை கட்டி விடும். எட்டு மணிக்கெல்லாம் ஊரின் முக்கிய சந்திப்பில் ரசிகர் கூட்டம் தவறாமல் ஆஜராகி விடும். பின் ஆளாளுக்கு இன்னின்ன வேலைகள் என்று பகிர்ந்தளிக்கப்படும். ஒருவர் தேங்காய்கள் கலெக்ட் செய்ய அனுப்பி வைக்கப்படுவார். இன்னொருவர் மாலைகள் வாங்கி வர ரெடியாக்கப் படுவார். இன்னொரு நபர் கொடி வாங்கி வரவேண்டும். கற்பூரம் இத்யாதி இத்யாதிகளுக்கு வேறொருவர். உதிரிப்பூகளுக்கு என்னைப் பணிப்பார்கள். அதனால் கிராமத்தின் கடைக்கோடியில் இருக்கும் என் நண்பனின் வீட்டில் இருக்கும் காகிதப்பூவை பறித்து சாக்கு மூட்டையில் கட்டி வைப்பது என் பணி.
பின் அனைவரும் டூரிங் டாக்கீஸில் ஸ்கூல் முடியும் நேரத்தில் ஒன்று கூடுவோம். விறுவிறுவென சணலில் மைதாமாவு பசையைத் தடவி கொடிகள் கண நேரத்தில் ஒட்டப்படும். கொடியை ஏறி கட்டுவதற்கென்றே ஒரு 'அறுந்த வால்' எங்களிடையே இருக்கும்.(நண்பா ரஹீம்! மன்னிச்சுடுப்பா!) கண்ணிமைக்கும் நேரத்தில் வௌவால் போல அங்குமிங்கும் தாவி கொடிகளை கட்டிவிடும். டூரிங் டாக்கீஸ்களிலெல்லாம் இரண்டு காட்சிகள்தாம். மாலை ஏழுமணிக்கு முதல் காட்சி. இரவு பத்தரை மணிக்கு கிராமத்தார் பாணியில் சொல்வதென்றால் ரெண்டாவது ஆட்டம். பக்கத்து டவுனில் இருந்து ஒரு பதினஞ்சு ரூவா மதிப்புக்கு நல்ல மாலையா நண்பர்கள் வாங்கிட்டு வந்திருப்பாங்க. ஊர்ப் பெரிய தலையின் பிள்ளை கண்டிப்பாக நம் ரசிகராக இருப்பார். அவர் தன் பவுசைக் கட்ட தோட்டக்காரங்களை விட்டு அவுங்களோட தென்னந் தோப்பில் இருந்து பத்துப் பதினைந்து தேங்காய் பறித்துக் கொடுத்தனுப்புவார். (படம் தொடங்கியதற்கு பின் முதல் வகுப்பு சேரில் அமர்ந்து படம் பார்த்து விட்டு படம் முடியும்முன்னரே வேகமாகத் தியேட்டரை விட்டு கௌரவம் கருதி கழன்று கொள்வார்) போன தீபாவளிக்கு பரணில் போட்டு வைத்த பட்டாசுக் கட்டுகளை ஒருத்தர் மெனக்கெட்டு தேடி எடுத்து வருவார். அப்படி இப்படி சைக்கிளில் பரபரப்பாய் போய் வருகையில் எதிரணி கோஷ்டி ஒன்றாக ஓரிடத்தில் அமர்ந்து முறைத்துக் கொண்டிருக்கும். உள்ளுக்குள் உதைப்பு இருந்தாலும் எதையும் சட்டை செய்யாதது போன்ற பாவனையில் நேர்கொண்ட பார்வையுடன் சைக்கிள் பறக்கும்.
இம்..ஆச்சு... சுற்று வட்டாரத்திலிருந்து கும்பல் கும்பலாக மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மந்தை மந்தையாக ஜனக் கூட்டம் திருவிழாவிற்கு வருவது போல வர ஆரம்பிக்கும். சரியாக ஆறுமணிக்கெல்லாம் விநாயகனை வினை தீர்க்க சீர்காழியார் டூரிங் டாக்கீஸ் ஸ்பீக்கரில் வேண்ட ஆரம்பிப்பார். அடுத்து நடிகர் திலகத்தின் படமென்றால் நடிகர் திலக படப்பாட்டு. பாடல்கள் கிராமத்தை தட்டி எழுப்பியவுடன் உள்ளூர் ஜனம் கிளம்ப ரெடியாகும்.
டிக்கெட் கவுண்ட்டரில் ஜனம் ரெடியாக நிற்கும். 40w மஞ்சள் கலர் பல்புகள் ஆண்கள், பெண்கள் கவுண்டர்களில் எரிந்து கொண்டிருக்கும். டிக்கெட் கொடுப்பதற்கு முன்னால் ரசிகர்களின் அட்டகாசங்கள் தொடங்கும். வந்திருக்கும் ஜனம் அமர்க்களங்களைக் காண வேண்டுமே! டாக்கீஸின் பிரதான இடத்தில் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்ட்டரில் மாலைகள் சூட்டப்படும். 'அறுந்த வால்' மேலே ஏறி கற்பூர ஆராதனை காட்டும். திருஷ்டித் தேங்காய்கள் உடைக்கப்பட்டு சிதறியவுடன் பேருக்குக் கூட ஒரு தேங்காய் பீஸை தரையில் காண முடியாது. ஆபரேட்டர் வேறு கட்டிய பூப்போட்ட கைலியுடன் half-அடித்து விட்டு அலட்டலாய் நிற்பார். அவருக்கு ஸ்பெஷல் கவனிப்பு உண்டு. "தலைவா! பிரிண்ட் எப்படி? பார்த்து ஓட்டு தலைவா... என்று கரிசனத்தோடு ஆபரேட்டர் காதோரம் கிசுகிசுக்கப்படும். பெடல் இல்லாத சைக்கிள்கள் பாதி வந்திருக்கும். டிரிங்...என்று டிக்கெட் கொடுக்க மணி ஒலிக்கும். 'நான் நீ... டமால் டுமீல்' என்று ஒரே அடிதடிதான். டிக்கெட் கொடுப்பவர் பிராணன் போகும். ஒப்பன் கவுண்ட்டராய் இருப்பதனால் கவுண்ட்டரின் பின்புறம் வந்து டிக்கெட் கொடுப்பவரின் முதுகை டிக்கெட் கேட்டு பிராண்டும் ஒரு கூட்டம். ஒரு வழியாக டிக்கெட் கொடுத்து முடித்தவுடன் வார் ரீல்(!) ஆரம்பமாகும். அப்போதைய பிரதமர் (பெரும்பாலும் இந்திரா காந்தியாகத்தான் இருப்பார்) பீகார் வெள்ள சேதங்களை ஹெலிகாப்டரில் பார்வையிடுவார். வார் ரீல் சத்தம் வெளியே கேட்டவுடன் தியேட்டருக்கு வந்து கொண்டிருக்கும் பலரின் நடை ஓட்டமெடுக்கும். ஒரு வழியாக எல்லா களேபரங்களும் முடிந்து படம் போடுவார்கள். ஆண்கள் பெண்களை தனியே பிரிக்க ஒரு மூன்றடி உயரத்திற்கு இடையே மண்ணாலான தடுப்புச் சுவர். ஒரே கூச்சலும் குழப்பமும்தான். இருட்டில் யார் என்ன எது ஒன்றுமே தெரியாது...
"ஒய்..மாணிக்கம் எங்கடா இருக்க?...
டேய் இங்க பார்ரா...முன்னாடி..முன்னாடி"
என்று குரல்கள் ஒலித்த வண்ணம் இருக்கும்.
முன்னே உட்காருவோர் உயரமாய் இருந்தால் என்ன செய்வது என்று சர்வ முன் ஜாக்கிரதையாக மண்ணைக் கூட்டி மேடாக்கிக்கொண்டு அதன் மேல் அமர்ந்து கொள்ளும் புத்திசாலிகள். (எல்லாருமே அதைத்தான் செய்திருப்பார்கள்) நாற்பத்தஞ்சு பைசா தரை டிக்கெட் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமிக்க அதன் பின்னால் பத்துப் பன்னிரண்டு மர பெஞ்சுகள். அது பெஞ்ச் டிக்கெட். தொண்ணூறு பைசா. அதற்கு பின்னால் முதல் வகுப்பு. தனி சேர்கள். ஒரு ரூபாய் இருபது பைசா. அதுவும் மரத்தினால் ஆனதுதான். மூட்டைப் பூச்சிகளின் அன்புக் கடியில் ஆட்டம் போட்டபடியே படம் பார்க்கலாம். டிக்கெட் இல்லை என்ற பேச்சே இல்லை. ஜனம் வரவர டிக்கெட் உண்டு. அரை மணி நேரம் சென்றதும் டிக்கெட் கவுண்ட்டரில் ஆள் இல்லை என்றால் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் ஆளிடம் காசைக் கொடுத்து சென்று விடலாம். படம் போட்டவுடன் ஒரே விசில் சத்தம்தான். காது ஜவ்வுகள் கிழியும். எப்படிப்பட்ட பிரிண்டாய் இருந்தாலும் இருட்டாகத்தான் படம் ஓடும். நடிகர் திலகம் அல்லது தங்கள் அபிமான நடிகரைக் காட்டியவுடன் காகிதப் பூவாய் பறக்கும். ஒரே ஒரு புரஜெக்டர் தான் இருக்கும். எனவே நான்கு முறை படச் சுருளை லோட் செய்வார்கள். எனவே ஒவ்வொரு படத்திற்கும் மூன்று இடைவேளைகள் இருக்கும். கொட்டகை நிரம்பி வழிந்து சிறுநீர் கழிக்கும் இடங்களில் கூட ஜனம் கூச்சப்படாமல் அமர்ந்து படத்தை ரசிக்கும். இடை வேளைகளின் போது லைட்டைப் போட்டால் எங்கு பார்த்தாலும் வெற்றிலைப் பாக்கு எச்சில்கள்தாம் தெரியும்.
படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே மங்கலாகும். சமயத்தில் ஆடியோ மட்டும் கேட்க படம் மட்டும் தெரியாமல் கூட்டம் கடுப்பாகும். ஆபரேட்டர் என்னன்னவோ அட்ஜஸ்ட் செய்வார். (கார்பன் குச்சிகளை நெருக்கி வைத்து ஒளிர விடுவார்) ஓரளவிற்கு நிலைமையை சமாளித்தும் விடுவார். ஆனால் படச் சுருளிடம் இவரைப் போல மாரடிக்க எவராலும் இயலாது. எப்படியும் நான்கைந்து முறையாவது படம் அறுந்து போகும். பின் இடைவேளை. ஒரே சுற்றில் சுற்றப்பட்ட கை முறுக்கு அபாரமாய் விற்பனை ஆகும். புகை வாடை அடிக்கும் டீயைக் குடிக்க ஒரே அடிதடி நடக்கும். டீ என்றால் அரை கிளாஸ் இல்லை முழு கிளாஸும் இருக்க வேண்டும். இல்லையென்றால் தூக்கிக் கிடாசி விடுவான். ஜோடா கலரும் தம் பங்கிற்கு அமோக விற்பனை ஆகும். குமட்டிக் கொண்டு வரும் கழிவு வாடைகளையும் மீறி மனம் படத்தில் லயிக்கும். ஒருவழியாகப் படம் முடிந்ததும் ஆபரேட்டருக்கு ரசிகர்கள் சார்பில் ஐந்தோ பத்தோ இனாமாக அளிக்கப்படும். அவருக்கு அடுத்த கட்டிங்கிற்கு காசு ரெடி. படம் முடிந்து மக்கா ஆறேழு கிலோமீட்டர்கள் படத்தின் கதையை விவாதித்தபடியே நடைபயணம் போகும். (விஷேச நாட்களின் போது மேட்னியும் உண்டு. திக்கான சாக்கு படுதாக்களை சைடுகளில் கட்டி உள்ளே இருட்டாக்க முயற்சிகள் செய்து அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்று பகலில் படத்தை ஓட்டுவார்கள்). உள்ளூர் ஜனம் போய் சாப்பிட்டு விட்டு படுத்து உறங்க எத்தனிக்கையில் இரண்டாவது ஆட்டத்தில் கல்யாணியும், கிறுக்கண்ணாவும் உரையாடிக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகக் காதுகளுக்குக் கேட்டு உறக்கம் வராமல் தடுக்கும்.
ம்...என்ன சொல்லுங்க... அந்த மாதிரி ஒரு பொற்காலம் சுட்டுப் போட்டாக் கூட இப்ப கிடைக்காது... அதெல்லாம் ஒரு சொர்க்கமுங்க...
அன்புடன்,
வாசுதேவன்.
What an unforgetable flashback, magnificient write up! I wish I had that experience.
oowijaez
18th October 2012, 10:38 AM
60 ஆண்டுகளுக்கு முன் வந்த பராசக்தி எத்தனை நினைவுகளைக் கிளறி விட்டது. வாசு சார்.... எப்படி சார் உங்களைப் பாராட்டுவது ... நிஜமாகவே வார்த்தை வரவில்லை.. ஏனென்றால் எனக்கும் டூரிங் டாக்கீஸ் அனுபவம் நிறையவே உள்ளது.. விடுமுறை நாட்களில் உறவினர் வீட்டுக்குப் போகும் போது டூரிங் டாக்கீஸ்களில் நடிகர் திலகம் படம் பார்த்து ஊறிப் போய் விட்டது. அவர் படம் மட்டுமல்ல ஒரே பொழுது போக்கு என்பதால் ஓடும் அனைத்துப் படங்களையும் பார்த்து விடுவேன். சில நாட்களில் படங்களை ஓரிரு நாட்களுக்கு மட்டும் போடுவார்கள். அதையும் விடுவதில்லை.. ஆஹா நிறைய நினைவுகள்... பொறுமையாக எழுத வேண்டும் ...
Please write your wonderful experience of watching NT's movies released in the early years, 50's & 60's. I find it very interesting to read.
oowijaez
18th October 2012, 10:48 AM
[QUOTE=RAGHAVENDRA;968623]
1975ல் எந்த நடிகர் திலகத்திற்கு சங்கடங்கள் நேர்ந்ததோ, எந்த சூழ்நிலையில் அவர் செய்யாத தவறுக்கு அவதூறுகளுக்கு ஆளாக்கப் பட்டாரோ
Please tell us about that incident
vasudevan31355
18th October 2012, 05:38 PM
நன்றி கெட்ட (சினிமா) உலகம். வண்ணத்திரை (22-10-2012)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/0a.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1a.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2a.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3a.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4a.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
RAGHAVENDRA
18th October 2012, 07:02 PM
சன் லைப் தொலைக்காட்சியில் தற்பொழுது நடிகர் திலகத்தின் மக்களைப் பெற்ற மகராசி ஒளிபரப்பாகிறது.
vasudevan31355
18th October 2012, 08:03 PM
அன்பு நண்பர்களுக்கு
ஒழுங்காகப் பதிவு போட்டுக் கொண்டிருப்பவர்களை கெடுப்பதற்கென்றே ஒருவர் கங்கணம் கட்டி கொண்டிருப்பதாக தெரிகிறது. சுதந்திரமாக பதிவுகள் இட வேண்டும் என்றுதான் அன்பு பம்மலார் அவர்கள் இந்த திரியைத் தொடங்கி தற்போது இந்தத் திரி சாதனை சிகரங்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. செவ்வனே என்று பதிவு போடுபவர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று கருமமே கண்ணாக தங்கள் பணியை யாருக்கும் தொந்தரவு தராமல் செய்து வருகிறோம். பதிவிடுவது எனபது சாதாரண விஷயமல்ல. நிறைய கால நேரங்களை விரயம் செய்து, பல உடல் உபாதைகளைக் கூட பொருட்படுத்தாமல் நடிகர் திலகத்தின்பால் கொண்ட பேரன்பினால் குடும்பத்தைக் கூட இரண்டாம் பட்சமாக வைத்துதான் பதிவுகள் இடுகிறோம். அவரவர்கள் தங்களால் முடிந்த பதிவுகளை மிகுந்த சிரமங்களுக்கிடையில் தான் அளித்து வருகிறோம். எல்லோருமே பதிவுகளை அளித்து விட முடியாது. அவரவர்களுக்கு ஆயிரம் வேலைகள். ஒரு சிலரால்தான் அது முடிகிறது. ஆனால் அதையும் கெடுப்பது போன்ற தோரணையில் இங்கும் வந்து சிலர் கெடுக்க நினைப்பது தெளிவாகப் புரிகிறது. தானும் உருப்படியாக எந்தப் பதிவையும் அளிப்பதில்லை.. ஒழுங்காகப் பதிவிடுபவர்களையும் நக்கல் நையாண்டி செய்து வேதனைப்பட வைப்பதே இவர்களுக்கு வாடிக்கையாகிப் போய் விட்டது. பதிவிடுபவர்கள் இங்கு யாரும் பொன்னுக்கோ, பொருளுக்கோ, பணத்திற்கோ ஆசைப்பட்டு இங்கே பதிவிடவில்லை. பதிவிடுபவர்கள் யாருமே தங்கள் பதிவுக்கான கருத்துக்களை எதிர்பார்ப்பது நியாயமே! அது போல ஒருவர் பதிவை இடும் போது அவரை பாராட்டுவதும், நன்றி தெரிவிப்பதும் ஒரு சரியான நாகரீகமே! யாரும் இங்கு பாராட்டுகளுக்கு ஏங்கிக்கொண்டு நிற்கவில்லை. பிஸ்கட்டுகளுக்காக காத்துக் கிடக்கும் நாய்க் கூட்டமும் அல்ல. சிலர் இதை மிக கேலி செய்து வருவது வேதனைக்குரியது. வருத்தத்திற்குரியது. நிச்சயமாக சேவை மனப்பான்மையுடன்தான் நாங்கள் பதிவுகள் அளித்து வருகிறோம். நாங்கள் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சுதந்திரமாக பதிவுகள் அளிக்கத்தான் இந்தத் திரியை தொடங்கினோம். அதன் வளர்ச்சி பொறுக்க முடியாமல் இங்கேயும் வந்து சிலர் கெடுக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது. ஒருநாள் உட்கார்ந்து இப்படிப்பட்டவர்கள் பதிவுகள் இட்டுப் பார்க்கட்டும். அப்போது தெரியும் அருமை! சும்மா பொழுது போக்கிற்காக உட்கார்ந்து அனைத்தையும் கெடுத்துக் கொண்டிருக்க பிறவி எடுத்தவர்கள் போல தெரிகிறது. நான் ஆரம்பத்திலேயே சிலரை இந்தத் திரியில் வரவேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தேன். 'உங்களுக்கும், இதற்கும் சரிப்பட்டு வராது ... உங்கள் கருத்துகளுக்கு அந்தத் திரி இருக்கிறது... இனி நீங்கள் discussion-களை எந்தத் தடையுமின்றி அங்கு தொடரலாம்" என்றும் கூறினேன். வரக்கூடாது என்று சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால் இரு திரிகளின் நலம் கருதிதான் அவ்வாறு கூறினேன். அப்போது சம்மதித்து விட்டு அங்கேயும் ஒன்றும் செய்யாமல் இங்கேயும் வந்து கெடுக்க நினைப்பது சரியல்ல என்பது என் தாழ்மையான கருத்து. நடிகர் திலகம் திரி என்று ஒரே பாதையில் பயணித்த திரியை இரண்டாகப் பிரித்து பிளவுகளையும், பேதங்களையும் உருவாக்கிய இந்த புண்ணியவான்களுக்கு இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்ற நினைப்பு இருக்கிறதோ தெரியவில்லை. இப்போதுதான் உண்மையிலேயே சந்தேகம் வருகிறது இந்த மேட்டுக்குடி பெருமகன்கள் நடிகர் திலகத்தின் புகழ் பாட வந்தார்களா அல்லது கெடுக்க வந்தார்களா என்று. நடிகர் திலகத்தையே உயிர் மூச்சென நினைத்து வாழும் எங்களை 'அனுகூல சத்ரு' என்று கூறிய இந்த கெட்ட கலக புத்தி படைத்த நாரத அதிமேதாவிகள் தானும் கெட்டு மற்றவர்களையும் புண்படுத்துவதில் பலே ஆசாமிகளோ! பதிவிடுபவர்களையும், பாராட்டுபவர்களையும் நக்கல் நையாண்டி செய்வதை விட்டு விட்டு இனியாவது உருப்படும் வழியை இவர்கள் பார்க்கட்டும். தப்பும் தவறுமில்லாமல் ஒரே ஒரு பதிவை ஒழுங்காக இடட்டும். இப்படிப்பட்ட புண்ணியவான்கள் செய்கையினால் பதிவுகள் இடும் என்னைப் போன்றோர் பதிவுகள் இட மறு யோசனை செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் நிச்சயம் நஷ்டம் எங்களுக்கல்ல. இனி அந்தத் திரியைக் கெடுத்த புண்ணியவான்களே இந்தத் திரியைக் கெடுத்ததற்கும் காரணகர்த்தா ஆகிறார்கள். திரியில் நாங்கள் பதிவுகள் அளிக்காமல் போகும் துரதிருஷ்டம் நேர்ந்தால் கண்டிப்பாக அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்பதை அருமை ஹப்பர்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாய் கிழியப் பேசும் இந்த ஜாம்பவான்கள் இனி இந்தத் திரியில் ஆய்வுக்கட்டுரைகள், ஆவணப் பொக்கிஷங்கள், வீடியோக் காட்சிகள், புகைப்பட ஸ்டில்கள், அப்டேட் நிகழ்வுகள், திரைப்பட விழாக்கள், தொலைக்காட்சி தலைவர் நிகழ்ச்சிகள், உடனுக்குடனான பத்திரிகை செய்திகள் என்று அனைத்துப் பதிவுகளையும் அனுதினமும் வழங்குவார்கள் என்று நம்புகிறேன். இந்தத் திரியையும் கெடுத்து குட்டிச் சுவராக்குவதில் வெற்றி அவர்களுக்கே! யார் யாரெல்லாம் புதிதாக உள்ளே நுழைந்து எல்லாவற்றையும் கெடுத்து பிரிவினைகளை உண்டு பண்ணி குட்டிச்சுவராக்கினார்கள் என்று அவரவர்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். இது வரை இந்த விஷயத்தில் வாய் திறக்காத நான் இப்போது பகிரங்கமாகவே இப்பதிவின் மூலம் என் எண்ணங்களை சொல்லி விட்டேன். மறுபடியும் சொல்கிறேன். இதனால் பதிவிடும் எங்களுக்கு பதிவிட முடியாமால் போனால் எவ்வித நஷ்டமுமில்லை.
வருத்தத்துடன்,
வாசுதேவன்.
RAGHAVENDRA
18th October 2012, 09:01 PM
டியர் வாசுதேவன் சார்,
எந்த அளவிற்குத் தங்கள் உள்ளம் காயப் பட்டுள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது. தங்களுக்கு ஆறுதல் சொல்லும் உள்ளமும் உறுதியும் எனக்கும் இல்லை. தங்களுடைய வருத்தத்தில் நானும் பங்கேற்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
vasudevan31355
18th October 2012, 10:04 PM
டியர் ராகவேந்திரன் சார்,
நீங்கள் எனக்கு ஆறுதல் சொல்வதைக் கூட இந்நேரம் கிண்டலடித்து களித்துக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.
J.Radhakrishnan
18th October 2012, 10:33 PM
டியர் வாசு சார்,
தங்களின் பதிவை கண்டதும் மனம் வருந்தினேன், எனினும் "போற்றுவார் போற்றினும் தூற்றுவார் தூற்றினும் போகட்டும் கண்ணனுக்கே" என்பது போல் எடுத்துக்கொண்டு தங்கள் பணியினை தொடர வேண்டுகிறேன்.
RAGHAVENDRA
19th October 2012, 06:23 AM
நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னி்ட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ராஜ் டி.வி.யில் இசை நிகழ்ச்சி தொடராக ஒளிபரப்பாக உள்ளது. வாரம் தோறும் ஞாயிறு அன்று காலை 8.00 முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ள இத்தொடரை பின்னணிப் பாடகர் மனோ தொகுத்தளிக்க இருக்கிறார். இளைய திலகம் பிரபு, அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் திரு பூமிநாதன் தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். முதல் நிகழ்ச்சி வரும் 21.10.2012 அன்று இடம் பெறுகிறது. முகேஷ், சி.ஏ.ராஜா, சங்கீதா, தீபக்ஷிகா, கருணாகரன், மணிமாறன் ஆகியோர் பாடல்களைப் பாடுகின்றனர்.
தவறாமல் காணுங்கள்.
RAGHAVENDRA
19th October 2012, 06:26 AM
நமது ntfans அடுத்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு 21.10.2012 அன்று மாலை 6.00 மணிக்கு நடக்கிறது. நடிகர் திலகம் தேவிகா மற்றும் பலர் நடித்த உன்னதத் திரைக்காவியமான நீலவானம் திரையிடப் பட உள்ளது. கே.பாலச்சந்தர் கதை வசனம் பி.மாதவன் இயக்கம். மெல்லிசை மன்னர் நடிகர் திலகத்திற்கு தனியாக இசையமைத்த முதல் படம்.
உறுப்பினர்களுக்கு அனுமதி.
oowijaez
19th October 2012, 09:39 AM
அன்பு நண்பர்களுக்கு
ஒழுங்காகப் பதிவு போட்டுக் கொண்டிருப்பவர்களை கெடுப்பதற்கென்றே ஒருவர் கங்கணம் கட்டி கொண்டிருப்பதாக தெரிகிறது. சுதந்திரமாக பதிவுகள் இட வேண்டும் என்றுதான் அன்பு பம்மலார் அவர்கள் இந்த திரியைத் தொடங்கி தற்போது இந்தத் திரி சாதனை சிகரங்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. செவ்வனே என்று பதிவு போடுபவர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று கருமமே கண்ணாக தங்கள் பணியை யாருக்கும் தொந்தரவு தராமல் செய்து வருகிறோம். பதிவிடுவது எனபது சாதாரண விஷயமல்ல. நிறைய கால நேரங்களை விரயம் செய்து, பல உடல் உபாதைகளைக் கூட பொருட்படுத்தாமல் நடிகர் திலகத்தின்பால் கொண்ட பேரன்பினால் குடும்பத்தைக் கூட இரண்டாம் பட்சமாக வைத்துதான் பதிவுகள் இடுகிறோம். அவரவர்கள் தங்களால் முடிந்த பதிவுகளை மிகுந்த சிரமங்களுக்கிடையில் தான் அளித்து வருகிறோம். எல்லோருமே பதிவுகளை அளித்து விட முடியாது. அவரவர்களுக்கு ஆயிரம் வேலைகள். ஒரு சிலரால்தான் அது முடிகிறது. ஆனால் அதையும் கெடுப்பது போன்ற தோரணையில் இங்கும் வந்து சிலர் கெடுக்க நினைப்பது தெளிவாகப் புரிகிறது. தானும் உருப்படியாக எந்தப் பதிவையும் அளிப்பதில்லை.. ஒழுங்காகப் பதிவிடுபவர்களையும் நக்கல் நையாண்டி செய்து வேதனைப்பட வைப்பதே இவர்களுக்கு வாடிக்கையாகிப் போய் விட்டது. பதிவிடுபவர்கள் இங்கு யாரும் பொன்னுக்கோ, பொருளுக்கோ, பணத்திற்கோ ஆசைப்பட்டு இங்கே பதிவிடவில்லை. பதிவிடுபவர்கள் யாருமே தங்கள் பதிவுக்கான கருத்துக்களை எதிர்பார்ப்பது நியாயமே! அது போல ஒருவர் பதிவை இடும் போது அவரை பாராட்டுவதும், நன்றி தெரிவிப்பதும் ஒரு சரியான நாகரீகமே! யாரும் இங்கு பாராட்டுகளுக்கு ஏங்கிக்கொண்டு நிற்கவில்லை. பிஸ்கட்டுகளுக்காக காத்துக் கிடக்கும் நாய்க் கூட்டமும் அல்ல. சிலர் இதை மிக கேலி செய்து வருவது வேதனைக்குரியது. வருத்தத்திற்குரியது. நிச்சயமாக சேவை மனப்பான்மையுடன்தான் நாங்கள் பதிவுகள் அளித்து வருகிறோம். நாங்கள் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சுதந்திரமாக பதிவுகள் அளிக்கத்தான் இந்தத் திரியை தொடங்கினோம். அதன் வளர்ச்சி பொறுக்க முடியாமல் இங்கேயும் வந்து சிலர் கெடுக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது. ஒருநாள் உட்கார்ந்து இப்படிப்பட்டவர்கள் பதிவுகள் இட்டுப் பார்க்கட்டும். அப்போது தெரியும் அருமை! சும்மா பொழுது போக்கிற்காக உட்கார்ந்து அனைத்தையும் கெடுத்துக் கொண்டிருக்க பிறவி எடுத்தவர்கள் போல தெரிகிறது. நான் ஆரம்பத்திலேயே சிலரை இந்தத் திரியில் வரவேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தேன். 'உங்களுக்கும், இதற்கும் சரிப்பட்டு வராது ... உங்கள் கருத்துகளுக்கு அந்தத் திரி இருக்கிறது... இனி நீங்கள் discussion-களை எந்தத் தடையுமின்றி அங்கு தொடரலாம்" என்றும் கூறினேன். வரக்கூடாது என்று சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால் இரு திரிகளின் நலம் கருதிதான் அவ்வாறு கூறினேன். அப்போது சம்மதித்து விட்டு அங்கேயும் ஒன்றும் செய்யாமல் இங்கேயும் வந்து கெடுக்க நினைப்பது சரியல்ல என்பது என் தாழ்மையான கருத்து. நடிகர் திலகம் திரி என்று ஒரே பாதையில் பயணித்த திரியை இரண்டாகப் பிரித்து பிளவுகளையும், பேதங்களையும் உருவாக்கிய இந்த புண்ணியவான்களுக்கு இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்ற நினைப்பு இருக்கிறதோ தெரியவில்லை. இப்போதுதான் உண்மையிலேயே சந்தேகம் வருகிறது இந்த மேட்டுக்குடி பெருமகன்கள் நடிகர் திலகத்தின் புகழ் பாட வந்தார்களா அல்லது கெடுக்க வந்தார்களா என்று. நடிகர் திலகத்தையே உயிர் மூச்சென நினைத்து வாழும் எங்களை 'அனுகூல சத்ரு' என்று கூறிய இந்த கெட்ட கலக புத்தி படைத்த நாரத அதிமேதாவிகள் தானும் கெட்டு மற்றவர்களையும் புண்படுத்துவதில் பலே ஆசாமிகளோ! பதிவிடுபவர்களையும், பாராட்டுபவர்களையும் நக்கல் நையாண்டி செய்வதை விட்டு விட்டு இனியாவது உருப்படும் வழியை இவர்கள் பார்க்கட்டும். தப்பும் தவறுமில்லாமல் ஒரே ஒரு பதிவை ஒழுங்காக இடட்டும். இப்படிப்பட்ட புண்ணியவான்கள் செய்கையினால் பதிவுகள் இடும் என்னைப் போன்றோர் பதிவுகள் இட மறு யோசனை செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் நிச்சயம் நஷ்டம் எங்களுக்கல்ல. இனி அந்தத் திரியைக் கெடுத்த புண்ணியவான்களே இந்தத் திரியைக் கெடுத்ததற்கும் காரணகர்த்தா ஆகிறார்கள். திரியில் நாங்கள் பதிவுகள் அளிக்காமல் போகும் துரதிருஷ்டம் நேர்ந்தால் கண்டிப்பாக அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்பதை அருமை ஹப்பர்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாய் கிழியப் பேசும் இந்த ஜாம்பவான்கள் இனி இந்தத் திரியில் ஆய்வுக்கட்டுரைகள், ஆவணப் பொக்கிஷங்கள், வீடியோக் காட்சிகள், புகைப்பட ஸ்டில்கள், அப்டேட் நிகழ்வுகள், திரைப்பட விழாக்கள், தொலைக்காட்சி தலைவர் நிகழ்ச்சிகள், உடனுக்குடனான பத்திரிகை செய்திகள் என்று அனைத்துப் பதிவுகளையும் அனுதினமும் வழங்குவார்கள் என்று நம்புகிறேன். இந்தத் திரியையும் கெடுத்து குட்டிச் சுவராக்குவதில் வெற்றி அவர்களுக்கே! யார் யாரெல்லாம் புதிதாக உள்ளே நுழைந்து எல்லாவற்றையும் கெடுத்து பிரிவினைகளை உண்டு பண்ணி குட்டிச்சுவராக்கினார்கள் என்று அவரவர்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். இது வரை இந்த விஷயத்தில் வாய் திறக்காத நான் இப்போது பகிரங்கமாகவே இப்பதிவின் மூலம் என் எண்ணங்களை சொல்லி விட்டேன். மறுபடியும் சொல்கிறேன். இதனால் பதிவிடும் எங்களுக்கு பதிவிட முடியாமால் போனால் எவ்வித நஷ்டமுமில்லை.
வருத்தத்துடன்,
வாசுதேவன்.
Please do not stop writing about NT because of some useless people. There are billions of NT fans around the world and few lousy commnents would'nt destroy their mentality about NT's acting talent. There must a mederator to this thread who can delete these kind of posts which intend to discourage us
Gopal.s
19th October 2012, 09:48 AM
வாசு சார்,
முதலில் நான் தங்களுக்கு பதில் கொடுக்க வேண்டாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் தங்களுடன் நட்பும்,மதிப்பும் கொண்டவன் என்ற முறையில் சுய விளக்கம் கொடுக்கிறேன். முதலில், எனது கிண்டல் பதிவுகள்- Parody என படுவது ஒரு மறைமுக புகழ்ச்சி.(Indirect compliment ) நான் தங்கள் எழுத்து பாணியில் ஜாலியாக போட்ட ஒரு புகழ்ச்சி பதிவுக்கு(எடுத்தும் ஆகி விட்டது) ,இவ்வளவு பயங்கர எதிர் விளைவா? நகைச்சுவை உணர்ச்சி ஆற்றா போய் விட்டது? உங்களை நான் பொருட்படுத்தா விட்டால்,இவ்வளவு உரிமை எடுத்து கொள்வேனா?உங்களது உழைப்பையும்,பங்களிப்பையும் மிக மிக மதிக்கிறேன்.
திரும்பி திரும்பி ,திரியில் பிளவு என்னால் என்ற மிக பெரிய புகழை என் மீது திணிக்க முயலாதீர்கள்.நான் அந்த அளவு பொருட்படுத்த தக்கவன் அல்ல.புதிய,ஒத்த மனம் கொண்ட நண்பர்கள் என்பதால் தொடர்பு கொண்டிருந்தேன்.
தங்களின் முதல் குற்ற சாட்டு நீங்கள் சம்பந்த பட்டது.அதில் உண்மையுண்டு. திரியின் பிளவு ,உங்களுக்கும் எனக்கும் தெரியாத ,புரியாத குற்றச்சாட்டு. நடிகர் திலகத்தின் மேல் யாருக்கு ரொம்ப மதிப்பு என்பதெல்லாம், பேசி தீர்க்க முடியாதவை. விவாதிக்க அவசியமில்லை.
அடுத்த குற்றச்சாட்டு- என்னுடைய பிழையான பதிவுகள். உருப்படியில்லாதவை-ஒப்பு கொள்கிறேன். உங்களுடைய பங்களிப்பின் மேன்மையிலும் எனக்கு உடன்பாடே.
அடுத்ததாக, நான் தங்களுக்கு போட்ட பதிவுகளையும்,தாங்கள் எனக்கு போட்ட பதிவுகளையும் மீண்டும் யாராவது படித்தால், தங்கள் குற்றச்சாட்டில் உள்ள வலிமையை புரிந்து கொள்வார்கள். நான் எல்லாவற்றையும் ஜாலியாய் எடுத்து கொள்பவன்.மீண்டும் மீண்டும் இது தொடர்வதால் ,நான் நண்பர்களாக தொடர்வோம். தங்கள் வேண்டுகோள் படி,இத்திரியில்,இனிமேல்,என் பதிவுகள் இடம் பெறாது. தாங்கள் சம்பந்த பட்ட எந்த பதிவுகளை பற்றியும் எந்த வினையும் என்னிடமிருந்து எழாது.
Gopal.s
19th October 2012, 09:56 AM
VankV sir,
I appreciate your encouragement for the contributors. But ,dont pass superfluous ,emotional-soaked comments on others without knowing any head or tail.
Regards from
Useless man(use singular,No problem)
RAGHAVENDRA
19th October 2012, 11:04 AM
இன்று இரவு 7.05 மணிக்கு கனவுலக பிரம்மாக்கள் தொடரில் பொதிகை தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் மலரும் நினைவுகள் மறு ஒளிபரப்பு தொடருகிறது. காணத் தவறாதீர்கள். அரிய வாய்ப்பு.
oowijaez
19th October 2012, 11:47 AM
VankV sir,
I appreciate your encouragement for the contributors. But ,dont pass superfluous ,emotional-soaked comments on others without knowing any head or tail.
Regards from
Useless man(use singular,No problem)
I didn't know that was you who passed those comments, in fact I didnt even know what those comments were. Anyway, I think it's between you and Mr Vasudevan. All I want is to read news and write -ups about Sivaji Ganesan, that's all.
oowijaez
19th October 2012, 11:57 AM
இன்று இரவு 7.05 மணிக்கு கனவுலக பிரம்மாக்கள் தொடரில் பொதிகை தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் மலரும் நினைவுகள் மறு ஒளிபரப்பு தொடருகிறது. காணத் தவறாதீர்கள். அரிய வாய்ப்பு.
unfortunately I do not have that channel. Can you able to upload the whole programme in this thread, please?. I remember watching that in 1984/1985 (not sure) and we were glued to our chairs during the whole 3 hours!. Brilliant! Unforgetable! Also I remember a comment about that programmethat 'Ananda vikatan' (I think) pointing that; (it was telecasted on 15th of August) during those hours of 'Sivaji's 'Malarum Ninaivugal', the people in Tamil Nadu were spellbounded, that robbers could enter their houses easily without knowing them! (or something like that). I've been looking for that programme in youtube too without any luck.:(
abkhlabhi
19th October 2012, 12:03 PM
http://www.youtube.com/watch?v=RfoOKCmbIbY&feature=plcp
http://www.youtube.com/watch?v=EFn7-1eJvBg&feature=relmfu
abkhlabhi
19th October 2012, 12:06 PM
http://www.youtube.com/watch?v=jaju1dhcY3M
abkhlabhi
19th October 2012, 12:09 PM
Don't know the following videos were already posted in this thread of somewhere ?
http://www.youtube.com/watch?v=_JIzvFgFwVg&feature=relmfu
http://www.youtube.com/watch?v=7dNiv0YtOVY&feature=relmfu
http://www.youtube.com/watch?v=MSNA-Nv5IKA&feature=relmfu
http://www.youtube.com/watch?v=6KeKvnn2Zts&feature=relmfu
http://www.youtube.com/watch?v=T7uqb40FFLo&feature=relmfu
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.