PDA

View Full Version : Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13

mr_karthik
26th August 2012, 06:18 PM
திருத்துறைப்பூண்டியில் தோன்றி, இன்று திக்கெட்டும் நடிகர்திலகத்தின் பெருமையையும், புகழையும் தனது செயற்கரிய செயல்கள் வழியே பரப்பிக்கொண்டிருக்கும் அன்புச்சகோதரர் 'செயல்வீரர்' சந்திரசேகர் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

தங்களின் சேவை சிறக்கவும், அதன் மூலம் நடிகர்திலகத்தின் புகழ் மென்மேலும் உயரவும் தங்களுக்கு நீண்ட நெட்டிய நல்வாழ்வைத்தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

நடிகர்திலகத்துக்கு நினைவுமண்டபம் அமையும்போது, அதில் நிச்சயம் தங்களுக்கொரு கல்வெட்டு அமைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

சேவையின் விளக்கமாகத் திகழும் நீங்கள் வாழ்க பல்லாண்டு.

mr_karthik
26th August 2012, 07:20 PM
துவங்கிய குறுகிய காலத்திலேயே 100 பயனுள்ள பக்கங்களையும் 1000 பயனுள்ள பதிவுகளையும் தந்து வீறு நடை, வெற்றிநடைபோடும் நமது திரியின் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

(தற்செயலாக எனது பதிவு 1001-வது பதிவாக அமைந்து 101-வது பக்கத்தை துவக்கிவைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி).

இந்த சாதனையைப் படைத்திட உழைத்த நமது திரியின் தூண்களான பம்மலார், ராகவேந்தர், வாசுதேவன், முரளியார், ஜோ, சந்திரசேகர், பார்த்தசாரதி, வினோத், ராதாகிருஷ்ணன், செந்தில், ராகுல்ராம், பாரிஸ்ட்டர் சுப்ரமணியன் மற்றும் பதிவுகளைத்தந்துகொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும், நமக்கு அனுமதியும் அளித்து, ஊக்கமும் தந்துகொண்டிருக்கும் மாடரேட்டர்களுக்கும் இத்தருணத்தில் நமது நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

இது ஆரம்ப சாதனை மட்டுமே..... இன்னும் பெரிய அளவில் தொடரும், உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு.

நன்றி.... நன்றி.... நன்றி....

mr_karthik
26th August 2012, 07:30 PM
அன்புள்ள பம்மலார் சார்,

100-வது பக்கத்துக்கு,
100-வது படத்தின்,
100-வது நாள் வெற்றிவிழா
விளம்பரத்தைப் பதிவிடும் 'டைம்லி ஆக்ஷன்' எல்லாம் உங்களுக்குத்தான் வரும்.

(125-வது, 150-வது படங்களின் விளம்பர ஆவணங்களை (ஏற்கெனவே தாய்த்திரியில் பதித்திருத போதிலும்) தயாராக வைத்திருங்கள். திரி போகும் வேகத்தில் விரைவிலேயே அவை தேவைப்படும்).

அன்புள்ள வினோத் சார்,

நமது திரி, எளிதில் வீழ்த்த முடியாத சிமெண்ட் கோட்டை என்பதை உணர்த்தும் தங்கள் 100 என்ற சிமெண்ட் ப்ளாக் அருமையான இடைச்செருகல்.

அனைவருக்கும் பாராட்டுக்கள்.

mr_karthik
26th August 2012, 07:57 PM
அன்புள்ள வாசுதேவன் சார் மற்றும் வினோத் சார்,

கலைத்தாயின் 'தவப்புதல்வனின்' 41-வது உதய தினத்தை மிக அருமையாக நினைவுகூர்ந்துள்ளீர்கள். வினோத் சார் வழங்கிய கட்டுரை அருமை.

அன்பு வாசுதேவன் அவர்க்ளே,

தவப்புதல்வன் பாடல்காட்சிகள் இணைப்புக்கு நன்றி. எத்தனையோ முறை பார்த்துவிட்டபோதிலும் அலுக்காத பாடல் காட்சிகள். எல்லாப்பாடல்களுமே தனித்தனி சிறப்பு வாய்ந்தவை. டூய்ட் பாட்டு, டப்பாங்குத்து பாட்டு என்றில்லாமல், நான்கு பாடல்களும் தேவையான இடத்தில், சிறப்புக்காட்சிகளாக இடம்பெற்றன. வண்ணப்படங்கள் கோலோச்சிவந்த அந்த ஆண்டில், நமது வண்ணப்படங்களுக்கு இணையாக மூன்று கருப்புவெள்ளைப்படங்களும் பெரும் வெற்றிபெற்று சாதித்துக்காட்டின.

அனைத்துப்பதிவுகளுக்கும் நன்றிகள்.

KCSHEKAR
26th August 2012, 09:14 PM
டியர் கார்த்திக் சார்,

தங்களின் உயர்ந்தபட்ச பாராட்டுக்கும், பிறந்தநாள் வாழ்த்துக்கும் இதயங்கனிந்த நன்றி. தங்களின் ஒவ்வொரு பாராட்டும் எனக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் கொடுக்கிறது.

திரைப்படங்களைப் பற்றிய விமர்சனங்களானாலும், அனுபவப் பதிவுகளானாலும், பாராட்டுகளானாலும், தங்களுடைய எழுத்துக்கள் மிகவும் ஆணித்தரமாகவும், அழகு தமிழிலும், அன்பொழுகவும் அமைந்திருக்கிறது.

தங்களின் அனுபவ ஆலோசனையுடனும், ஆதரவுடனும் (moral support ) , இறையருளாலும், நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட விழைகிறேன்.

நன்றி.

J.Radhakrishnan
26th August 2012, 11:03 PM
Dear Chandrasekaran sir,

Many more Happy returns of the day!

pammalar
27th August 2012, 12:32 AM
டியர் ராகவேந்திரன் சார்,

சென்ற வருடம் ஆகஸ்டு 26 அன்று நாம் இடுகை செய்தவற்றை, இந்த வருடம் மலரும் நினைவுகளாகத் தந்தமைக்கும். அப்பதிவில் இந்த எளியவனின் பெயரையும் மறவாமல் பதிவு செய்தமைக்கும் தங்களுக்கு எனது அன்பான நன்றிகள்..!

சென்ற வருட பதிவுகளுக்கான இணைப்பில் உள்ள சில பக்கங்களை இன்று மீண்டும் பார்த்தபோது நிஜமாகவே மலைப்பாக இருந்தது..! ரிலீஸ் மேளாவை உள்ளடக்கிய எட்டு மற்றும் ஒன்பதாம் பாக நடிகர் திலகம் திரிகள் மட்டும் சற்றேறக்குறைய எட்டரை லட்சம் ஹிட்ஸ்களை பெற்றிருப்பது பிரமிக்க வைக்கிறது..! இதற்கு காரணமாக விளங்கும் அனைவருக்கும் நமது இதயம் நிறைந்த நன்றிகள்..!

எல்லாப் புகழும் நமது இதயதெய்வத்துக்கே..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th August 2012, 02:12 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் ஆகஸ்டு 26 கொண்டாட்டம் ஆனந்தமயம்..!

"தாயே உனக்காக(1966)" காணொளி, "தவப்புதல்வன்(1972)" பாடல் காணொளிகள், "கூண்டுக்கிளி(1954)" ஸ்டில்ஸ், நிழற்படங்கள், காணொளிகளைக் கொண்ட மேலதிக விவரங்களுடன் கூடிய "தூக்கு தூக்கி(1954)" மீள்பதிவு என நான்கு விதமான நல்லிடுகைகளும் நற்கரும்பஞ்சாறு..!

பாராட்டுக்கள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th August 2012, 02:40 AM
டியர் பம்மலார்,

Nadigar-Thilagam-The-Greatest-Actor-of-the-Universe - முதலாவது பதிவைத் துவக்கி இன்று - நடிகர் திலகத்துக்கு கௌரவம் : 5 - 'செவாலியே' விருது விழா பதிவின்மூலம் 100 -வது பக்கத்தைத் தொட்டிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

டியர் சந்திரசேகரன் சார்,

தங்களின் சரமாரியான பாராட்டுதல்களுக்கு எனது சிரந்தாழ்த்திய நன்றிகள்..!

நமது திரியின் வெற்றியும், சாதனையும் நம் அனைவரது கூட்டுமுயற்சியினால் சாத்தியமாயிற்று..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th August 2012, 03:00 AM
Parasakthikku(1952) Piragu, Anaiththu vagai Thayyaripaalargalum Virumbi Padam Edukkum Orey Nadigaragaa Valam Vandhavar Nam Nadigar Thilagam Enbadhu Ulangai Nellikani. Nadigar Thilagamum Adhai Vanagi Varavetru, Madhippalaiththu, Thayaripaalargalai Thunbathirkku Aalakaamal, Call-Sheet Prachanai edhum seiyaamal, Varudathirkku, Sarasari 7 (or) 8 thiraipadangal, 1954 mudhalae Kodukka Thuvanginaar.



டியர் பாரிஸ்டர் சார்,

'First hero who had guts' என்ற டைட்டிலில் தாங்கள் வழங்கிய அருமையான பதிவுக்கு பாராட்டுக்கள்..!

அதில் ஒரு வரியில் ஒரு சிறுதிருத்தம்..!

நமது நடிகர் திலகம் வெள்ளித்திரையில் புயலெனப் புகுந்த 1952-ம் வருடத்திற்கு அடுத்த வருடமான 1953லேயே - அதாவது தனது திரையுலக இரண்டாவது வருடத்திலேயே - ஏழு திரைக்காவியங்களை அளித்துவிட்டார்.

1952-ல் "பராசக்தி", "பணம்" திரைக்காவியங்களை அடுத்து 1953-ல் வெளியான ஏழு நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்:

3. பரதேசி(தெலுங்கு) - 14.1.1953

4. பூங்கோதை - 31.1.1953

5. திரும்பிப் பார் - 10.7.1953

6. அன்பு - 24.7.1953

7. கண்கள் - 5.11.1953

8. பெம்புடு கொடுகு(தெலுங்கு) - 11.11.1953

9. மனிதனும் மிருகமும் - 4.12.1953

திரைப்படத்துறையில், தான் நடிக்க வந்த இரண்டாவது வருடத்திலேயே, வெள்ளித்திரையில் ஏழு திரைக்காவியங்களை வெளியிட்ட உலகக் கதாநாயகன் நமது நடிகர் திலகமாகத்தான் இருக்கமுடியும்..! மேலும், 1954-ல் 10 காவியங்கள்..! சொல்லி மாளுமா அவரின் சாதனை..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th August 2012, 03:15 AM
36 DAYS

100 PAGES

REALLY A GREAT ACHIVEMENT .

OUR SINCERE WISHES TO ALL THE MEMBERS WHO PARTICIPATED IN THIS THREAD.
http://i48.tinypic.com/28vubdv.jpg
WISHES FROM MAKKAL THILAGAM FANS.

Thank you so much for your magnanimous gesture, esvee sir..! Kindly continue to enrich & enthrall us thru your posts..!

Our sincere & special thanks to all Makkal Thilagam fans for showering their warmest wishes on us on this glorious occasion.!

pammalar
27th August 2012, 03:58 AM
துவங்கிய குறுகிய காலத்திலேயே 100 பயனுள்ள பக்கங்களையும் 1000 பயனுள்ள பதிவுகளையும் தந்து வீறு நடை, வெற்றிநடைபோடும் நமது திரியின் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

(தற்செயலாக எனது பதிவு 1001-வது பதிவாக அமைந்து 101-வது பக்கத்தை துவக்கிவைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி).

இந்த சாதனையைப் படைத்திட உழைத்த நமது திரியின் தூண்களான பம்மலார், ராகவேந்தர், வாசுதேவன், முரளியார், ஜோ, சந்திரசேகர், பார்த்தசாரதி, வினோத், ராதாகிருஷ்ணன், செந்தில், ராகுல்ராம், பாரிஸ்ட்டர் சுப்ரமணியன் மற்றும் பதிவுகளைத்தந்துகொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும், நமக்கு அனுமதியும் அளித்து, ஊக்கமும் தந்துகொண்டிருக்கும் மாடரேட்டர்களுக்கும் இத்தருணத்தில் நமது நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

இது ஆரம்ப சாதனை மட்டுமே..... இன்னும் பெரிய அளவில் தொடரும், உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு.

நன்றி.... நன்றி.... நன்றி....

தன்னடக்கத்தின் உறைவிடமாகத் திகழும் mr_karthik என்கிற திரு_கார்த்திகேயன் அவர்களே,

நாங்கள் எல்லாம் திரியின் தூண்கள் என்றால் தாங்கள் நமது திரியின் அசைக்க முடியாத கல்தூண்..! தாங்கள் தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள அனைவரது கூட்டுமுயற்சியால்தான் இத்தகைய பிரம்மாண்ட வெற்றி சாத்தியமாயிற்று..!

தங்களின் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..! அவை நமது திரியை வெற்றிப் பாதையில் செலுத்துவதற்கு மிகப் பெரிய ஊக்கசக்தியாய் விளங்குகிறது..! வரலாற்று விற்பன்னரான தங்களிடமிருந்து தகவலார்ந்த பதிவுப் பொக்கிஷங்களை மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம்..!

'இது ஆரம்ப சாதனை மட்டுமே..... இன்னும் பெரிய அளவில் தொடரும், உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு' என தாங்கள் வழங்கிய நல்வாக்கு நிச்சயம் பலிக்கும்..!

[125வது மற்றும் 150வது காவிய ஆவணங்கள் தயார் நிலையில்...!]

பாசத்துடன்,
பம்மலார்.

Richardsof
27th August 2012, 06:27 AM
நடிகர் திலகத்தின் அன்பு நெஞ்சங்கள் http://i50.tinypic.com/b3olsh.jpg திரு ராகவேந்திரன் , திரு. பம்மலார், திரு வாசுதேவன் ,திரு கார்த்திக் , திரு சந்திர சேகர் ,பாரிஸ்டர் ரஜினிகாந்த்
உங்களின் அன்பு பாராட்டுதலுக்கு நன்றி ..நடிகர்திலகத்தின் எல்லா ஆவணங்களையும் உடனுக்குடன் விரிவான தகவல்களுடன் . புதுமையான வடிவில் ,பலரும் பார்த்திராத சுவையான செய்திகள் ,நிழற் படங்கள் , வீடியோ பாடல் காட்சிகள், கருத்துக்கள் . என்று
மீடியா& பிரஸ் விட மின்னல் வேகத்தில் பதிவுகளை 24X7 என்ற அளவினையும் தாண்டி வழங்கி வரும் உங்களின் சேவைக்கு மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் .
விரைவில் உயர்ந்த மனிதன் ,..........சவாலே சமாளி .......... அவன்தான் மனிதன் ......

திரிசூலம் ....200
அன்புடன்
esvee

RAGHAVENDRA
27th August 2012, 06:46 AM
எம் ஜி ஆர் அவர்களின் திரியின் ஒளி விளக்காகத் திகழும் வினோத் சார், இத்திரியின் 100 பக்க சிறப்பினை எட்டியமைக்கு உளமுவந்து பாராட்டுதல்களை நல்கிய தங்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் நன்றிகள். விரைவில் எம் ஜி ஆர் திரியின் பாகம் 3- புதிய பாகத்தினைத் தாங்கள் துவக்க வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.

டியர் பம்மலார், வாசு சார், கார்த்திக் சார், முரளி சார், சந்திரசேகர் சார், ராமஜெயம் சார், பெயர் விட்டுப் போன நண்பர்கள், இது வரை இங்கு பதிவிடாத நண்பர்கள், இனிமேல் இங்கு பங்கு கொள்ளப் போகும் அன்பர்கள் அனைவருக்கும் நம் அனைவரின் சார்பிலும் என் சார்பிலும் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

மாடரேட்டர் பிரபுராம் அவர்களுக்கு சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் இந்த சாதனைக்குக வித்திட்டவரே அவர் தான். எனவே அவருக்குத் தான் முதல் நன்றி. மேலும் மேலும் அவருடைய சிறப்பான மொழியாற்றலில் தோய்ந்த ஆய்வுப் பதிவுகளையும் படங்களின் திறனாய்வுகளையும் இங்கே தரவேண்டும் என அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

ராகவேந்திரன்

HARISH2619
27th August 2012, 01:59 PM
திரு சந்திரசேகரன் சார்,
தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .தங்களின் கனவான நடிகர்திலகத்தின் மணிமண்டபம் முயற்சி விரைவில் வெற்றிபெற இறைவனை பிரார்த்திக்கிறேன் .

vasudevan31355
27th August 2012, 03:14 PM
அன்பு பம்மலார் சார்,

தங்கள் அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

நமது திரியின் வெற்றிகரமான நூறாவது பக்கத்துக்கு பொருத்தமான பதிவாக 'செவாலியே' விருது விழாவில் 'என் வாழ்நாளில் இந்த நாளை மறக்க முடியாது' என்ற தலைவரின் ஏற்புரையை பதிவிட்டு கலக்கியுள்ளீர்கள். தலைவரின் உணர்ச்சிகரமான உரை நெஞ்சை கனக்க வைத்து விட்டது.

100வது பக்கம் : 100வது காவியம் : 100வது நாள் விளம்பரம் பலே ஜோர். 'நவராத்திரி' நூறாவது நாள் விளம்பரம் நல்ல தேர்வு.

நூறாவது பக்க பக்கா பதிவுகளுக்கு தங்களுக்கு மார்க் நூற்றுக்கு நூறு. நன்றிகள். திரி தொடங்க காரணாமாயிருந்த தங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.

vasudevan31355
27th August 2012, 03:18 PM
டியர் வினோத் சார்,

தங்கள் உயரிய அன்பிற்கும், பண்பிற்கும் மனமார்ந்த நன்றிகள். நடிகர் திலகம் திரியின் வியக்கத்தகு வெற்றியில் தங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதற்காக என்னுடைய சந்தோஷமான நன்றிகள். மக்கள் திலகம் திரி தங்கள் அசுர உழைப்பால் முன்னூறு பக்கங்களை விரைவில் கடக்கப் போவது உறுதி.

vasudevan31355
27th August 2012, 03:26 PM
அருமை கார்த்திக் சார்,

தங்கள் உயரிய பாராட்டுதல்களுக்கு நன்றி!

101...1001 செமப் பொருத்தம். அற்புதமான பதிவுகளினால் திரியின் வெற்றியில் முக்கியப் பங்கு தங்களுக்கு உண்டு என்பதை நினைக்கும் போது மனம் மிக்க சந்தோஷம் கொள்கிறது. உழைப்பு...உழைப்பு... உழைப்பு... நமது திரியின் வெற்றிக்கு தாரக மந்திரம். அசுர வெற்றியின் மகிழ்ச்சிகளைத் தங்களுடன் சந்தோஷத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். தங்களது அற்புதமானபதிவுகளுக்கு மீண்டும் மீண்டும் என் நன்றிகள்.

vasudevan31355
27th August 2012, 03:31 PM
திரியின் பிதாமகரே! அன்பு ராகவேந்திரன் சார்,

தங்களது ஆதரவினாலும், ஆசீர்வாதங்களினாலும் அன்பு பம்மலார் ஆரம்பித்து வைத்த இந்தத் திரி வெற்றி பவனி வந்து கொண்டிருக்கிறது. திரியை வழி நடத்த பல்வேறு வழிகளிலும் வழி காட்டிய தங்களுக்கு என் தலை வணங்கிய நன்றிகள். தங்களின் அன்புப் பாராட்டுதல்களுக்கு என் பாசமான நன்றிகள்.

vasudevan31355
27th August 2012, 03:34 PM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்கள் அன்புள்ளத்திற்கு நன்றி! தங்களின் சமூக நலப் பணிகள் தொடரவும், தாங்கள் வாழ்வாங்கு வாழவும் வாழ்த்தும்

வாசுதேவன்

vasudevan31355
27th August 2012, 03:38 PM
நமது திரியின் வெற்றிகரமான 100 பக்கங்கள் கடந்த சாதனையை மேலும் அனைவரும் சந்தோஷமுடன் கொண்டாட அடியேனின் சிறப்புப் பதிவு.(1)

கலையுலக ஆண்டவரின் 'அரை நூற்றாண்டு அருஞ்சேவை' என்ற 'ஜெமினி சினிமா'வின் அரிய கட்டுரையான ஆவணப் பதிவு.

கவர் ஸ்டோரி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-127.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-100.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-77.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-60.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
27th August 2012, 03:59 PM
நமது திரியின் வெற்றிகரமான 100 பக்கங்கள் கடந்த சாதனையை மேலும் அனைவரும் சந்தோஷமுடன் கொண்டாட அடியேனின் சிறப்புப் பதிவு (2)

நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சிகள் (வீடியோ தொடர்) 5.

நமது திரி வெற்றிகரமாக 100 பக்கங்களைக் கடந்து பீடுநடை போட்டு சாதனை புரிந்து வருவதை முன்னிட்ட சிறப்பு சண்டைக்காட்சி பதிவு.

படம்: சொர்க்கம்

வெளிவந்த ஆண்டு: 1970

தயாரிப்பு: T.R.சக்கரவர்த்தி

சண்டைப் பயிற்சி: திருவாரூர் M.S.தாஸ்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Sorgam1970TamilDvDRipXviDMP3SubsMeNavi_000276575.j pg

இயக்கம்: ராமண்ணா

சண்டைக்காட்சியின் அட்டகாசமான நிழற்படங்கள் சில.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/s3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Sos2.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/s1.jpg

இந்த அற்புதமான சண்டைக்காட்சியை அன்பு முரளி சாருக்கு ஆனந்தத்தோடு சமர்ப்பிக்கிறேன்.

சும்மா பஞ்சு பறக்கும் சண்டைக்காட்சி. அதுவும் ஓடும் ட்ரெயினில். எதிரிகள் இருவரும் தன் இருக்கைக்கு முன் அமர்ந்து இருப்பதை சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் அந்தப் பார்வையிலேயே நடிகர் திலகத்தின் அற்புதமான இந்த சண்டைக்காட்சி களைகட்டி விடுகிறது. அதுவும் கத்தியோடு வரும் அந்த ஸ்டன்ட்மேனிடம் நம்மவர் மோதும்போது நிஜமாகவே உடல் சிலிர்க்கிறது. தன் மேல் குத்த வரும் எதிரியின் கத்தியை சிம்மக் குரலோன் தலையணையால் லாவகமாகத் தடுக்க, தலையணை கிழிந்து பஞ்சு ரயில் முழுவதும் பறக்க, பின் ரயிலில் உட்காரும் இருக்கையின் மேல் எதிரியின் கத்தியை ஆழப் பதியவைக்க, இருக்கை கிழிந்து கொண்டே வந்து அதிலிருந்தும் பஞ்சு பஞ்சாய்ப் பஞ்சு பறக்க, பஞ்சுத் துகள்களுக்கு மத்தியில் படு அமர்க்களமான சண்டைக்காட்சியில் சிகரங்களைத் தொடுகிறார் நடிகர் திலகம். அமிர்தம் அவர்களின் பிரமாதப்படுத்தும் ஒளிப்பதிவு இந்த சண்டைகாட்சிக்கு ஒரு ப்ளஸ் பாய்ன்ட்.

'சொர்க்கம்' படத்திற்கு முந்தைய படங்களான எதிரொலி, ராமன் எத்தனை ராமனடி போன்ற காவியங்களில் ஆக்ஷன் சீன்களுக்கு வேலை இல்லை. நடிப்பின் ராஜாங்கம் அவைகளில் கொடிகட்டிப் பறந்தது. சொர்க்கத்துடன் வெளிவந்த 'எங்கிருந்தோ வந்தாள்' காவியத்திலும் சொல்லும்படியான சண்டைக்காட்சிகள் இல்லை. எனவே தீபாவளி விருந்தான 'சொர்க்கம்' ஆக்ஷன் சீன் ரசிகர்களுக்கு இந்த குறிப்பிட்ட சண்டைக்காட்சி மூலம் அறுசுவை விருந்தை அள்ளி வழங்கியது. அற்புதமான அதே சமயம் வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்ட இந்த சண்டைக்காட்சி நம் ரசிகப் பிள்ளைகளின் உள்ளங்கள் மட்டுமல்லாது அனைவரது உள்ளங்களிலும் நிரந்தரமாகக் குடியேறியது.

இந்த அனல் பறக்கும் சண்டைக்காட்சியை நமது திரியின் நூறு பக்கங்கள் கடந்த சந்தோஷத்தின் முழு வெளிப்பாடாக ஸ்பெஷல் பதிவாகப் பதிவிடுவதில் பேருவகை கொள்கிறேன். இனி நம் நடிகர் திலகத்தின் இடித்தாக்குதல்களுக்குத் தயாராகுங்கள்.

முதன்முறையாக இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக


http://www.youtube.com/watch?list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg&v=g74zRNWwfkY&feature=player_detailpage

அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
27th August 2012, 04:12 PM
Dear HARISH Sir, J.Radhakrishnan Sir,

Thanks for your wishes.

vasudevan31355
27th August 2012, 04:16 PM
நமது திரியின் வெற்றிகரமான 100 பக்கங்கள் கடந்த சாதனையை மேலும் அனைவரும் சந்தோஷமுடன் கொண்டாட அடியேனின் சிறப்புப் பதிவு (3)

இதய தெய்வத்தின் இரு அரிய ஒரிஜினல் புகைப்படங்கள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/fdghj.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/hkjl.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
27th August 2012, 04:47 PM
நமது திரியின் வெற்றிகரமான 100 பக்கங்கள் கடந்த சாதனையை மேலும் அனைவரும் சந்தோஷமுடன் கொண்டாட அடியேனின் சிறப்புப் பதிவு (4).

நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

(தொடர்-6)

நடிகர் திலகத்தின் நாயகிகள் (6) 'நடிகையர் திலகம்' சாவித்திரி

'வணங்காமுடி' தமிழ்த் திரைக்காவியத்தில் கம்பீரத் திலகத்துடன் நடிகையர் திலகம். (மிக அரிய சிறப்புப் புகைப்படம்).

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sa.jpg

இவரைப் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டுமோ! நடிகையர்களில் திலகம் ஆயிற்றே! தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். அப்போதைய நடிகைகள் முதல் இப்போதைய நடிகைகள் வரைக்கும் அத்துணை நடிகைகளும் பேட்டிகளில் கூறுவது "சாவித்திரியைப் போல் நடித்துப் புகழ் பெற வேண்டும்" என்பதுதான். நடிகர் திலகத்திற்கு பல படங்களில் ஜோடி. அமரதீபம், அன்னையின் ஆணை, காத்தவராயன், எல்லாம் உனக்காக, திருவிளையாடல், நவராத்திரி, அவரே தயாரித்து இயக்கிய 'பிராப்தம்' என்று பல படங்களில் இணையாக நடிகர் திலகத்துக்கு நாயகியாய் ஜொலித்தவர். 'கை கொடுத்த தெய்வம்' இவர் புகழை உச்சிக்கே கொண்டு சென்றது. 'சிவன்' என்றால் நடிகர் திலகம் கண்முன் தோன்றுவது போல 'பார்வதி' என்றால் சட்டென நம் நினைவுக்கு வருபவர். அபூர்வ திறமை கொண்ட அழகிய நடிகை. 'நவராத்திரி' யில் கலக்கியவர். நமது திரி நூறு பக்கங்களை வெற்றிகரமாக கடந்ததால் நடிகர் திலகத்தின் நூறாவது காவியத்தின் நாயகி 'நடிகையர் திலகம்' சாவித்திரி இந்தத் தொடரின் ஸ்பெஷல் கதாநாயகி அந்தஸ்து பெறுகிறார்.

'காத்தவராயன்' கலக்கல் காவியத்தில் கலைக்குரிசிலும், சாவித்திரியும்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4.jpg

'திருவிளையாடல்' பக்திக் காவியத்தில் சாதனைத் திலகத்துடன் சாவித்திரி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Thiruvilayadal0008.jpg

நடிகர் திலகமும், நடிகையர் திலகமும் அவர்களும் இணைந்து கலக்கும் அற்புத டூயட் பாடல். இரு திலகங்களின் இளமைத் துள்ளல். 'அன்னையின் ஆணை' காவியத்தில் படுஸ்டைலான டூயட் பாடல். (வீடியோ)

"கனவின் மாயாலோகத்திலே ..
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே"...


http://www.youtube.com/watch?v=Mtslsb4wJkY&feature=player_detailpage

'பிராப்தம்' படத்தில் மறக்க முடியாத டூயட் பாடல்.

"சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது"...


http://www.youtube.com/watch?v=uLmsuXcID7U

(ஜோடிகள் தொடரும்)

உள்ளத்தை உருக்கும் நிழற்படம்.

தன் வாழ்க்கையின் கடைசி நிமிடங்களில் 'கோமா'வினால் உருக்குலைந்து போன நடிகையர் திலகம்.

http://s3.amazonaws.com/picable/2009/04/13/878419_actress-savithri-in-her-last-minute-of-life_620.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
27th August 2012, 05:19 PM
நடிகர் திலகம் மற்றும் அனைத்து தென்னிந்திய நட்சத்திரங்களுடன் 'நடிகையர் திலகம்' சாவித்திரி.

http://www.cinema24hours.com/images/ntr-and-anr-with-sivaji-ganeshan-a-rare-photo_iiorn_0.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
27th August 2012, 05:38 PM
அனைவருக்கும் அன்பு நல்வாழ்த்துக்களும், நன்றிகளும்.

http://www.easyvectors.com/assets/images/vectors/vmvectors/bouquet-of-flower-18.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
27th August 2012, 10:06 PM
டியர் சுப்ரமணியம் சார்,
மோஹன்ராம் அவர்கள் வழங்கிய நிகழ்ச்சி பற்றிய தங்களுடைய பதிவினைப் பற்றி அடியேனுடைய தாழ்மையான அபிப்ராயத்தைக் கூற விரும்புகிறேன். அந்த பதிவில் சில கருத்துக்கள் தங்களால் எடிட் செய்யப் பட்டு விட்டது என நினைக்கிறேன். இருந்தாலும் எந்த அளவிற்கு மோஹன் ராம் சார் இந்த நிகழ்ச்சிக்காக உழைத்திருக்கிறார் மற்றும் ஒவ்வொரு காட்சியிலும் எந்த அளவிற்கு உன்னிப்பாகக் கவனித்திருக்கிறார் என்பதை அவருடைய திருவிளையாடல் காட்சி எடுத்துக் காட்டியது.

மோஹன் ராம் சுட்டிக் காட்டியது போல் நான் பெற்ற செல்வம் திரைப்படத்தில் நக்கீரனாக அவர் பேசிய வசனங்கள் திருவிளையாடல் படத்தில் சிவனாக அப்படியே பேசப் பட்டது அந்தக் கலைஞர்களின் சிறப்பைக் காட்டியது. அதனை மிகச் சரியாக சுட்டிக் காட்டினார் மோஹன் ராம் சார். ஒரு மனிதனுக்கு இயல்பாக இருக்க வேண்டிய உணர்வை உணர்த்தவே அந்த சிவன் வேடத்தை நடிகர் திலகம் கையாண்டிருப்பதாகத் தோன்றுகிறது. உமையவளின் கூந்தலைப் பற்றி, அதாவது சிவனின் மனைவியின் கூந்தலைப் பற்றி நக்கீரன் உரைக்கும் அந்த ஒரு கண நேர உணர்வு அந்த நேரத்தில் அந்த இறைவனையே மனிதனாக மாற்றி அவருக்குள் உணர்ச்சியினைத் தோற்றுவித்து மனைவியைப் பற்றி இன்னொருவர் சொல்வதா என்கிற உணர்வையும் உருவாக்கி அதனை அவர் தான் பின் வாங்கியது போல் உடல் மொழியைக் காட்டியதன் மூலம் பிரதிபலிக்கச் செய்தது மிகச் சிறப்பானது. இவையெல்லாம் எத்தனை பெரிய நடிகர்களானாலும் சிந்தித்திருக்க முடியாத REFLEX ACTION. அதனை மிகச் சிறப்பாக மோஹன் ராம் எடுத்துரைத்தார். அதே போல் prompting பேசும் நடிகர்களிடையே மனப்பாடம் கூட செய்யாமல் ஒரு முறை செவி வழி கேட்டதை வைத்து வசனங்களைப் பேசும் சிறப்புற்ற நடிகர் திலகத்தின் மேன்மையையும் திரு கவிதாலயா கிருஷ்ணன் துணை கொண்டு செய்து காட்டினார்.
இன்னும் சொல்லப் போனால் இந்த நிகழ்ச்சியினை இன்னும் சற்று விரிவாக நாம் எதிர்காலத்தில் நடத்தலாம்.

திரு மோஹன் ராம் அவர்களுக்கு நம் உளமார்ந்த பாராட்டுக்கள்.

Murali Srinivas
27th August 2012, 11:57 PM
வெற்றிகரமாக 100-வது பக்கத்தை தாண்டி வெள்ளி விழாவை நோக்கி வெற்றி நடை போடும் திரியின் நாயகன் சுவாமிக்கும், பக்கதுணையாய் விளங்கும் வாசு அவர்களுக்கும், ராகவேந்தர் சார் அவர்களுக்கும் கார்த்திக் அவர்களுக்கும் ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த வாழ்த்துக்கள்.

வாசு சார்,

மிக்க மிக்க நன்றி. நான் எப்போதோ ஒரு முறை நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சிகளில் எனக்கு மிகவும் பிடித்தது [ராஜாவை தவிர்த்து] சொர்க்கம் படத்தில் இடம் பெற்ற ட்ரெயின் சண்டைக் காட்சிதான் என சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு அந்தக் காட்சியை இணையத்தில் தரவேற்றி அதை எனக்கு dedicate செய்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல!

Belated Birthday Wishes Chandrasekar Sir!

அன்புடன்

mr_karthik
28th August 2012, 09:59 AM
அன்புள்ள வாசுதேவன் சார்,

நடிகர்திலகத்தின் சாதனைகளை அள்ளிவரும் நமது திரி 100 பக்கங்களைக்கடந்த மகிழ்ச்சியை பல்வேறு சிறப்புப்பதிவுகளைத் தந்து அற்புதமாகக்கொண்டாடி விட்டீர்கள். அதற்கு நெஞ்சார்ந்த நன்றி.

'ஜெமினி சினிமா' கவரேஜ்......

ஜெமினி சினிமாவில் அழகிய அட்டைப்படத்துடன் வெளிவந்த, நடிகர்திலகத்தைப்பற்றிய் கட்டுரை அருமை. அனைத்து விவரங்களையும் மிக அருமையாக கவரேஜ் செய்து, கண்கவர் படங்களுடன் வெளியிட்டு அசத்தியுள்ளனர். அதனை இங்கு அழகுற பதிவிட்டமைக்கு நன்றி.

'சொர்க்கம்' ஸ்டண்ட் காட்சி.......

நடிகர்திலகம் நடித்த மிக அற்புத ஸ்டண்ட் காட்சிகளில், சொர்க்கம் படத்தில் இடம்பெற்ற ரயில் சண்டைக்காட்சிக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. மிக வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்ற முனைப்புடன் ராமண்ணா அவர்களும், ஒளிப்பதிவாளர் அமிர்தம் அவர்களும், முக்கியமாக ஸ்டண்ட் மாஸ்ட்டர் திருவாரூர் தாஸ் அவர்களும் சிரத்தையுடன் செய்ய, அவர்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து 100 சதவீத ஈடுபாட்டுடன் அண்ணன் நடிகர்திலகம் அவர்கள் செய்திருப்பார். பலமுறை பார்த்திருந்த போதிலும், சமீபத்தில் எதிர்பாராமல் கே.டிவியில் பார்த்திருந்ததால் பசுமையாக நினைவில் உள்ளது. (என்னிடம் இருந்த நெடுந்தகடை நண்பர் ஒருவர் வாங்கிப்போய் இன்னும் திருப்பித்தரவில்லை. சிறிது பொறுத்துப்பார்த்து விட்டு வேறு ஒன்றை வாங்கிவிட வேண்டியதுதான்).

அப்படத்தில் எனக்கு குறையாகப்பட்டது, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் நடிகர்திலகத்துக்குப் போதிய பங்களிப்பு இல்லாமல்போனதுதான். பாலாஜி, நாகேஷ், வாசு அனைவரும் 'கெட்ட' மனோகருடனும், அவரது ஆட்களுடனும் சுறுசுறுப்பாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, நடிகர்திலகம் சேற்றில் மூழ்கிக்கொண்டிருக்கும் 'நல்ல'மனோகரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார். மற்றபடி படம் படுசூப்பர்.

நீங்கள் குறிப்ப்பிட்டதுபோல, அந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் சண்டைக்காட்சிகள் குறைவே. அதற்குக்காரணம் அவற் ஏற்றிருந்த பாத்திரங்கள். 'எங்க மாமா' கிளைமாக்ஸில் இடம்பெற்ற சூப்பர் சண்டைக்காட்சிக்குப்பின், சொர்க்கம்தான்.

'நாயகிகள்' வரிசையில் நடிகையர்திலகம்....

இனிமேல் இப்படி ஒரு நடிகை வரமுடியுமா என்று எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம், தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகையர்திலகம் சாவித்திரி பற்றிய கவரேஜ் சிறப்பாக உள்ளது. அவர் நடிகர்திலகத்துடன் ஜோடி சேர்ந்த படங்களை 'மட்டும்' அழகாகத் தொகுத்துள்ளீர்கள். (தங்கையாக கலக்கிய பாசமலர், அண்ணியாக அருமையாகச்செய்த பாவ மன்னிப்பு மற்றும் படித்தால் மட்டும் போதுமா, தம்பி மனைவியாக வந்த பந்தபாசம், நண்பனின் மனைவியாக தோன்றிய கர்ணன் மற்றும் பார்த்தால் பசிதீரும் போன்றவற்றை கவனமாகத் தவிர்த்திருக்கிறீர்கள்).

ஒரு சின்ன விடுதல் மட்டுமே... 63 தோன்றி இன்றுவரைக்கும் பிரிவுபசார விழாக்கள் என்றாலே தவறாமல் ஒலிக்கும் 'பசுமை நிறைந்த நினைவுகளே' பாடல் இடம்பெற்ற, திலகங்கள் இணைந்து கலக்கிய 'திலகம்' மட்டும் மிஸ்ஸிங்.

அனைத்து கலக்கல் பதிவுகளுக்கும் பாராட்டுக்கள், நன்றிகள்.

KCSHEKAR
28th August 2012, 12:53 PM
Dear Murali Srinivas Sir,

Thanks for your wishes

KCSHEKAR
28th August 2012, 01:38 PM
திருச்சி மாவட்ட ந்டிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில், வரும் அக்டோபர் 2 ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று, நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 85-வது பிறந்தநாள் விழா நடைபெறுகிறது.

அதற்காக எழுதப்பட்டுள்ள சில சுவர் விளம்பரங்கள்:

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WallwrittingTrichy1.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WallwrittingTry2JPG-1.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WallwrittingTry3.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WallwrittingTry5.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WallwrittingTry4.jpg

HARISH2619
28th August 2012, 01:38 PM
திரு வாசு சார்,
100 பக்கங்களை கடந்ததர்க்கான சிறப்பு பதிவுகள் அத்தனையும் அருமை .கடந்த சனிக்கிழமை அன்று இரவு கலைஞர்முரசு சேனலில் சொர்க்கம் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த சண்டைகாட்சியை உங்கள் தொடரில் இடம்பெறசெய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன் .அதை உங்களிடம் சொல்வதற்கு முன்பாகவே அதை சூப்பராக தரவேற்றி இன்ப அதிர்ச்சி அளித்துவிட்டீர்கள் எப்படி சார் இதெல்லாம்?

vasudevan31355
28th August 2012, 01:44 PM
23/08/2012 அன்று விஜய் தொலைக்காட்சியில் (Super Singer Junior 3) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கர்ணனின் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' காவியப் பாடலை தன் அற்புதமான குரலால் பாடி, தானும் கலங்கி, அனைவரையும் கலங்க வைத்த கெளதம். அனைவரும் கலங்கி இந்தப் பாடலில் லயித்துப் போக மூலகாரணம் நம் இதய தெய்வம் அல்லவோ!


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9MzNyyNyXL4

vasudevan31355
28th August 2012, 01:58 PM
அன்பு கார்த்திக் சார்,

நீண்ட தங்களுடைய அன்புப் பாராட்டுப் பதிவுகள் தங்கள் உள்ளத்தைப் போலவே விசாலமானவை. அதற்காக என் ஆயிரமாயிரம் நன்றிகள்.(நம்முடைய சில நண்பர்கள் எல்லோரும் ஒரே மாதிரி குணம் கொண்டவர்களோ! என்னிடமும் சில நண்பர்கள் வாங்கிப் போன நெடுந்தகடுகளைத் மறக்காமல் திருப்பித் தரவில்லை. அனைத்திலும் இரண்டு மூன்று காப்பிகள் எடுத்து வைத்திருந்ததால் நல்ல வேலையாக நான் பிழைத்தேன்).

அன்பு முரளி சார்,

தங்கள் உயரிய வாழ்த்துக்களுக்கும், அன்புப் பாராட்டுதல்களுக்கும் நன்றி! நன்றி!


நன்றி ஹரிஷ் சார்.

தங்கள் மகிழ்ச்சி என் மகிழ்ச்சி. டெலிபதி சார் டெலிபதி. சாதாரண நட்பா நம்முடையது?

vasudevan31355
28th August 2012, 02:10 PM
டியர் சந்திரசேகரன் சார்,

திருச்சி மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதியன்று, நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் 85-வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் சூப்பர். டிஜிட்டல் பேனர்களின் காலமாகிப் போய்விட்ட இந்தக் காலத்தில் பெயிண்ட்டால் எழுதப்படும் சுவர் விளம்பரங்களைக் கண்ணால் காண்பதே அரிதாகி விட்டது. இப்போது தங்கள் பதிவின் மூலம் அதைக் காண்பது கண்ணுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.

நடைபெறப் போகும் சீர்மிகு சிறப்பு விழாவில் நடிகர் திலகத்தின் மூத்த ரசிகர்கள் கௌரவிக்கப் படுவார்கள் என்பது தேனான ஒரு செய்தி. மிக முக்கியமாகச் செய்ய வேண்டியதும்கூட. மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்க இருப்பதும் பெருமைக்குரிய விஷயம். தங்களுக்கும், விழாவைச் சிறப்பிக்க இருக்கும் அனைவருக்கும், விழா ஏற்பாடு செய்பவர்களுக்கும், விழாவில் கௌரவிக்கப் பட இருக்கும் நடிகர் திலகத்தின் பக்தர்களுக்கும், சுவர் விளம்பரங்கள் தீட்டிய ஓவியர்களுக்கும் நம் திரியின் சார்பில் மனமுவந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.

RAGHAVENDRA
28th August 2012, 02:14 PM
http://www.hindu.com/fr/2008/01/18/images/2008011851190305.jpg

கர்நாடக சங்கீதத்தில் மிகச் சிறந்த விற்பன்னர்களில் ஒருவர் சஞ்சய் சுப்ரமணியன். மோஹன் ராம் சார் வழங்கிய நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அந் நிகழ்ச்சி பற்றி திரு சஞ்சய் அவர்கள் தன்னுடைய வலைத்தளத்தில் எழுதியுள்ளதாவது -


The brilliance of Sivaji
Sivaji was, is and will be one of the most celebrated actors of Indian films. He was such a colossus in the Tamizh Industry, it was quite unbelievable. Yesterday we were treated to a lovely presentation on Sivaji by the actor Mohan V Raman. Mohan is such a passionate fan of cinema and Sivaji in particular that this was as easy as Mohanam was to the Maharajapuram family! The highlights of the presentation for me were

1. Couple of amazing Sivaji facts - Sivaji in his career has on 18 different occasions had 2 films simultaneously being released on the same date in Madras. Of these 36 films, nearly 50% were ran either 100 days or 25 weeks! At a point of time, 85% of the theatres in Madras were screeing Tamizh films which starred Sivaji as the hero.

2. The beautiful manner in which Mohan illustrated how Sivaji could vary the “kaalapramaanam” or tempo in which he delivered dialogues. This is very interesting for me as a musician because it is very very difficult for me to change the tempo in which I sing certain songs. I guess formally trained actors could get this because it is part of their syllabus, but for Sivaji to have got this through sheer observation, native intelligence and hard work is what is exciting to learn about.

3. A brilliant example of the acting of Sivaji from the famous Dharumi episode in Thiruvilayaadal. At one point when the exchange is happening at a brisk pace between AP Nagarajan (Nakkerar) & Sivaji, APN insists that the hair of even the divine Goddess could not have a natural fragrance. At this juncture one generally does not notice what Sivaji is doing. But at that precise moment the Lord realises that by mentioning the Goddess, Nannkeerar is actually to referring to Sivaji’s wife and he takes a slight backward step indicating shock at the audacity of the man! This bit of subtle acting can easily be ignored unless pointed out by an expert like Mohan!!

4. Some lovely examples of Sivaji’s different Tamizh accents, starting from Manohara, Parasakthi, the Tambrahm accents in Vietnam Veedu & Gowravam, the sissy playboy in Deivamagan, the Madras baashai in Bale Pandiya with MR Radha, the Konguththamizh with Sarangapani in Makkalai petra magarasi, the brilliant Mukkulatthor tamizh in Thevar magan, the sophistication in Uyarntha manithan and the list can just go on and on.

5. Finally as a Vote of thanks, Mohan played a 40 sec clipping where Sivaji is seen felicitating Mohan for a programme he had organised, and even there you can see the dignity and stature of the man in the way he operated in that formal space.

Mohan is a huge Sivajiphile. He was instrumental alongwith a few others in getting a postage stamp released on Sivaji in a record time of 71 days after his passing. He ahs organised some terrific philatelic exhibitions showcasing the life of Sivaji through stamps. He and YG Mahendran are running a Sivaji films appreciation society showing his films once a month.

சஞ்சய் சுப்ரமணியன் அவர்களின் வலைத்தளத்திற்கான இணைப்பு (http://sanjaysub.tumblr.com/post/30218094194/the-brilliance-of-sivaji )

இத்தகவலைத் தன்னுடைய முகநூல் பகுதியில் வழங்கிய மோஹன் ராம் சாருக்கு நன்றி

RAGHAVENDRA
28th August 2012, 02:16 PM
டியர் வாசுதேவன் சார்,
சொர்க்கம் சண்டைக் காட்சியை வழங்கி நம்மையெல்லாம் சொர்க்கத்திற்கே அழைத்துச் சென்று விட்டீர்கள். பாராட்டுக்கள்.
ராகவேந்திரன்

Subramaniam Ramajayam
28th August 2012, 08:06 PM
Gladnews trichy sivaji peravai conference on oct second
our heartiest congrats and good wishes for the success
trichy next to chennai doing lot of great work and services.

vasudevan31355
29th August 2012, 08:24 AM
அனைவருக்கும் ஓணம் பண்டிகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

http://www.papdichat.in/wp-content/uploads/2012/08/onam2012.jpg

'தச்சோளி அம்பு' வில் தலைவர்.

http://www.shotpix.com/images/37953891640959290417.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/thacholiambu.jpg

http://padamhosting.com/out.php/i72006_Thacholi.Ambu.1978.SDvD.x264.AAC.2.0.xMS.mk vsnapshot01.11.592011.04.1305.55.33.png

பிரேம் நசீருடன் 'கலையுலகப் பிதாமகர்'.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/bg78thac-1-1.jpg?t=1346210950

KCSHEKAR
29th August 2012, 10:41 AM
திரு.வாசுதேவன் சார்,

திருச்சி மாவட்ட நிகழ்சிக்கு தாங்கள் அளித்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

சொர்க்கம் சண்டைக் காட்சி, ஓணம் பண்டிகைக்கு- தச்சோளி அம்பு தலைவர்மூலம் வாழ்த்து - அருமை.

kalnayak
29th August 2012, 03:38 PM
அற்புதமான விவரங்கள், நிகழ்ச்சிகள் என்று எல்லோரும் தந்து கொண்டே இருக்கிறீர்கள். என்னால் அலுவலகப்பணியில், இடையிடையே எப்போதாவது வந்து படித்து செல்ல முடிகிறதேயன்றி பங்களிக்க முடியவில்லை. மன்னிக்கவும். KCSekhar சார் என்னுடைய தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் தங்களுக்கு. பல நாட்கள் கழித்து நீண்ட நேரம் செலவழித்து ....

ஞாயிறு (26/08/12) இரவுக்காட்சியாக 'சன் லைப்' - ல் 'பலே பாண்டியா' பார்க்க நேர்ந்தது. இந்த படத்தைப் பற்றி பலர் அங்குலம் அங்குலமாக பல விதத்தில் அலசிவிட்டார்கள் இங்கே. எண்ணற்ற முறை நான் பார்த்து இருந்தாலும் இம்முறை பார்த்தபின் என் எண்ணத்தில் எழுந்தவைகள் இதோ...

திரு B. R. பந்துலு இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர். குறிப்பாக கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தனது அழுத்தமான முத்திரைப் படங்களை கொடுத்தவர். நடிகர் திலகத்துடன் இணைந்து பிரமாண்டமான, வித்தியாசமான, அற்புதமான பல படங்களை கொடுத்தவர். நடிகர் திலத்தின் முத்திரைப் படங்களாகவும் அவை அமைந்திருந்தன. இருவரும் பிரிந்து சென்றது தமிழ் திரையுலகிற்கே பேரிழப்பு.

பதினோரு நாட்களில் இப்படியொரு உயர்தரமான படத்தை கொடுக்க இப்படியொரு குழுவால் மட்டுமே சாத்தியம். (நடிகர் திலகம், நடிக வேள், தேவிகா, மெல்லிசை மன்னர்கள், கவியரசர், B. R. பந்துலு). நடிகர் திலகத்தின் நடிப்பை இந்த படத்தில் என்று இல்லை, எந்தப் படத்திலும் அற்புதம், அட்டகாசம், பிரமாதம், ஆஹா, ஓஹோ என்று நான் காட்சிவாரியாக சிலாகித்து சொல்வதில்லை. ஏனென்றால் 'சூரியன் கிழக்கில் தோன்றுகிறது. மேற்கில் மறைகிறது' என்ற கூற்றுகளில் எந்த தகவலும் (Information) இல்லையோ அது போல அந்த கூற்றுகளிலும் எந்த தகவலும் இருக்காது. இருந்தாலும் பலரைப்போல் என் மனதை மிகவும் கவர்ந்த சில காட்சிகள்... குறும்பு கொப்பளிக்கும் காதல் காட்சிகள் (தேவிகா அண்ணி ரசிகர் மன்றம் சாட்சி), 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' பாடல் காட்சிகள், அதுமுடிந்து மாமனாரை கண்டு அஞ்சுவது, அவரும் கபாலியும் வேறு வேறு ஆட்கள் என காணுவது, மற்றும் படத்தின் இறுதி காட்சிகளில் ரவுடி மருதுவும், விஞ்ஞானி சங்கரும் பாண்டியன் போல வேடம் போடுவதும் நகைச்சுவைக்கு உச்சக்கட்டங்கள். ரவுடி மருது, கபாலியிடம் 'பாஸ்', 'பாஸ்' என்றே அழைப்பதுவும், மதராஸ் தமிழிலேயே உரையாட வந்து தவிப்பதுவும், விஞ்ஞானி சங்கர் ஆங்கிலம் கலந்த கீச்சுத்தமிழில் உரையாட வருவதை தவிர்த்து பாண்டியன் போல இயல்பான தமிழ் பேச முயற்சி எடுப்பதையும் பின்னி எடுத்திருப்பார். படம் பார்ப்பவர்களுக்கு எந்த கதாபாத்திரம் எப்படி மாற முயற்சிக்கிறது என்பது தெளிவாக இருக்கும் என்பதால் நகைச்சுவை உற்சாகம் கரைபுரண்டோடும். இதற்கு பின்னர் வந்த பல படங்களில் கூட பலர் செந்தமிழில் உரையாடி இருப்பார்கள். ஆனால் 1962-ல் வந்த இந்தப்படத்தில் எல்லோரும் (ரவுடி மருது - மதராஸ் தமிழிலும், சங்கர் ஆங்கிலம் அதிகம் கலந்த தமிழிலும்) இயல்பான தமிழில் பேசி இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார்கள். உடன் வந்து கலக்கிய நடிகவேளை நான் குறிப்பிடாவிட்டால் எனது எண்ணவோட்டங்கள் முடிவு பெறாது. ஆனால் இவரை சிலாகித்து பேசுவதிலும் தகவல் இராது. ஆமாம் நடிகர் திலகமும், நடிக வேளும் மற்ற சிலரும் தங்கள் திரைப்படங்களில் சரியாக நடிக்கவில்லை என்று சொன்னால்தான் பிரமாண்டமான தகவல் இருக்கும். நகைச்சுவைக்கேற்ற நல்ல கதைதான். Logic-உம் சரியாகவே இருந்தது ஆனால்... பாலாஜி, தேவிகாவிற்கு முறை மாமன்/மாப்பிள்ளை. எனவே பாண்டியனுக்கு அண்ணன்/தம்பி முறை. அவரே பாண்டியனின் தங்கை வசந்தாவை மணப்பது சற்று சிரமமாய் இருந்தது. யாரோ அங்கே என்னை முறைப்பது தெரிகிறது. நிறுத்திகொள்கிறேன்.

இந்த படத்தின் பாடல்கள் தொலைக்காட்சி மற்றும் FM ரேடியோ நிகழ்ச்சிகளில் எங்கேயாவது ஒளிபரப்பாகிகொண்டேதான் இருக்கின்றன. பார்த்தால் அல்லது கேட்டால் சற்றே நிறுத்தி கண்டு அல்லது கேட்டு விட்டுத்தான் செல்ல முடியும் 'வாழ நினைத்தால்', 'அத்திக்காய் காய்', 'ஆதிமனிதன் காதலுக்குப்பின்', 'நான் என்ன சொல்லிவிட்டேன்', 'நியே உனக்கு என்றும்', 'யாரை எங்கே வைப்பது' போன்ற சாகா வரம் பெற்ற பாடல்களைப் பற்றி சொல்ல நான் இன்னும் பல கற்றுக்கொள்ளவேண்டும்.

'பலே பாண்டியா' என்ற சொற்றொடர் மஹாகவி பாரதி பிரயோகித்ததாக புதிய 'பலே பாண்டியா' (2010) திரைப்படத்தின் இயக்குனர் சித்தார்த் சந்திரசேகர் சொல்லி இருந்தார். இந்த புதிய படத்திலும் பாண்டியன் என்ற கதாநாயகன் படத்தின் துவக்கத்தில் தற்கொலை செய்ய முயற்சி செய்வது போன்ற காட்சி இருக்கும். அது மட்டுமே இரு படங்களுக்கும் தொடர்பு. மற்றபடி இது மறுவாக்கம் (ரீமேக்) அல்ல. பழைய புகழ் பெற்ற படங்களின் பெயர்களை வைக்காதீர்கள் என்று என்ன சொன்னாலும் தற்போதைய திரைப்படத்துறையினர் கேட்பதாகவே இல்லை. படத்தின் பெயரிலுருந்தே copy துவங்குகிறது. 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' பாடல் காட்சியை 'உள்ளதை தா' என்று அள்ளி கபளீகரம் செய்திருந்தார்கள். தனது திரைப்படங்களை (தங்கமலை ரகசியம், ஸ்கூல் மாஸ்டர் (கன்னட) ) மாற்று மொழிகளில் அந்த மொழிகளின் பிரதான நடிகர்களை வைத்து இயக்கிய திரு. B. R. பந்துலு இந்த படத்தை மற்ற மொழிகளில் எடுத்தாரா என தெரிந்தவர்கள் யாரேனும் கூறினால் நல்லது.

சமீபத்தில் கூட யாரோ ஒருவர் நடிகர் திலகத்தின் படங்களை அறிமுகம் செய்யுங்கள். அவருடைய 'கனத்த' கதையம்சம் நிரம்பிய படங்களை பின்பு பார்க்கிறேன். அதற்கு முன் 'light-hearted' படங்களை அறிமுகம் செய்யுங்கள் என்றபோது மற்றொருவர் இந்த படத்தைப் பாருங்கள் என்று கூறியது மிகவும் பொருத்தமானது. நடிப்பின் பாடங்களைக் கற்றுகொள்ள நல்லதோர் நகைச்சுவைப் படம்.

அன்புடன்.

mr_karthik
29th August 2012, 07:05 PM
Dear Kalnayak sir,

A very wonderful nerration about the great movie 'Bale Pandiya'.

For many people it will be kook like a very light movie, but it is very very tough one to differenciate each and every three rolls by NT, and in fact the two different rolls of M.R.Radha too. In between Balaji also done a very nice roll of comedy mixed. I think Balaji didnt do any such rolls in any other movies.

And no need to say about the freshness of "Anni" in all scenes, and the hard work of MSV-TKR.

innum eththanai pEr ezuthinaalum indha padaththaip patri ezuthi mudikka mudiyAdhu.

Thanks a lot Kalnayakji...

pammalar
29th August 2012, 10:23 PM
HAPPY ONAM TO ALL !!!

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/4-2-1.jpg

vasudevan31355
30th August 2012, 08:38 AM
கல்நாயக் சார்,

'பலே பாண்டியா' பற்றிய தங்களின் குறுஆய்வு 'பலே' கல்நாயக் என்று சபாஷ் போட வைக்கிறது. முன்பொருமுறை நான் தங்களிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க தாங்கள் முடிந்தவரை பதிவுகள் அளிப்பதாகக் கூறியிருந்தீர்கள். அதேபோல் இப்போது சொன்னபடி நல்ல பதிவளித்துள்ளீர்கள். தொடரட்டும் தங்கள் பணி.

vasudevan31355
30th August 2012, 10:05 AM
கார் விரைந்து வந்து கொண்டிருக்கிறது. மேடான பகுதியில் இருந்து சற்று சரிவான பாதையில். எதிர்பாராதவிதமாக காரின் டயர் பஞ்சராகி கார் மெதுவாக நிற்கிறது. உள்ளே அமர்ந்திருக்கும் ஜெனரல் ஆப்ரஹாமிடம் கார் டிரைவர் வண்டியை விட்டு கீழே இறங்கி வந்து நிலைமையைச் சொல்கிறார். உடனே ஸ்டெப்னி மாற்றி விடுவதாகவும் கூறுகிறார். நிலைமை தெளிவாகப் புரிகிறது. 'சரி' என்று தலையசைவில் ஒரு சம்மதம். அந்த இடைப்பட்ட ஒரு சில வினாடியில் அழகாக இடது கைவிரல்களை மடக்கி வாயருகே கொண்டு சென்று சற்றே வாயைப் பிளந்து (கோட்டுவாய் விடுதல் என்பார்களே!.. அது போல) சிறு ரிலாக்ஸ். வலது கை விரல்கள் தன்னையுமறியாமல் சிறு அசைவுகளில் கணநேர களிநடம் புரிகின்றன. நேரான நேர்கொண்ட பார்வை. டிரைவரின் போதாத காலம் ஸ்டெப்னியிலும் காற்றில்லை. பயந்து போய் மிரட்சியுடன் மெதுவாக ஆப்ரஹாமிடம், "அய்யா... ஸ்டெப்னியிலும் காற்று இல்லீங்க...என்று நடுக்கத்துடன் டிரைவர் கூற, அதுவரை நேர்க்கொண்டிருந்த பார்வை வன்மத்துடன் டிரைவரின் மேல் திரும்புகிறது. டிரைவரை மேலும் கீழுமாக நோக்கும் சுட்டெரிக்கும் சூர்யப் பார்வை. ("ஏதோ டயர் பஞ்சராவது சகஜம்... இயற்கை... பொறுத்துக் கொண்டேன். 'ஸ்டெப்னி மாற்றுகிறேன்' பேர்வழி என்றாய்... சரி... செய்ய வேண்டியதுதான்...ஆனால் ஸ்டெப்னியிலும் காற்று இல்லை என்று வந்து என்னிடம் தைரிமாகச் சொல்கிறாய்...உன் பொறுப்பற்ற தன்மைக்காக நான் காரில் அனாவசியமாக தேவையிலாமல் உட்கார்ந்திருக்கவா?... நான் யார்! என் ஸ்டேட்டஸ் என்ன! ஸ்டெப்னியைக் கூட கவனியாமல் இந்த ஆர்மி ஜெனரலிடம் கார் டிரைவராக வேலை பார்க்க உனக்கு இனியும் யோக்கியதை இருக்கிறதா?") இவ்வளவு விஷயங்களும் அந்த ஒரு பார்வையில், அந்த ஒரு வினாடியில் டிரைவருக்கு உணர்த்தப்பட்டு விடும். இதுவரை பின்னணி இசை இல்லாமல் சென்று கொண்டிருக்கும் காட்சி, இப்போது டிரைவருக்கு ஏற்படப் போகும் ஆபத்துப் பின்னணியை இசைப் பின்னணி மூலம் அற்புதமாக எடுத்துக் காட்ட ஆரம்பிக்கிறது. (நன்றி சங்கர் கணேஷ்) கார் கதவைத் தானே திறந்து அந்த ரோட்டின் சரிவில், உச்சி வெயிலில், கோபத்தின் உச்சத்தில் பேன்ட் பாக்கெட்டுக்களில் தன் இரு கைகளையும் நுழைத்த வண்ணம் அமைதியான கொந்தளிப்புடன் ஆர்ப்பாட்டமாக, கனகம்பீரமாக ஜெனரல் ஆப்ரஹாம் நடந்து வரும் அந்த ஒரு நடையிலேயே நமக்குப் புரிந்து விடுகிறது அந்த டிரைவரின் கதி அதோகதிதான் என்று.

ஜெனரல் ஆப்ரஹாம்- நடிப்புலகச் சக்கரவர்த்தி.

ராஜாங்கம் நடத்திய காவியம்- 'பந்தம்'

அண்மையில் தொலைக்காட்சியில் பார்த்து செயல் இழந்து போய் நான் உறைந்து நின்ற காவியக் காட்சி.

மேற்கண்ட குறிப்பிட்ட அந்த அருமையான காட்சியை நீங்களே பாருங்களேன். நம் அனைவருக்காகவும் தரவேற்றி இதோ அந்த ஒரு சில வினாடி காவிய சீன்.


http://www.youtube.com/watch?v=SmRBJcoRN5E&feature=player_detailpage

Richardsof
30th August 2012, 11:30 AM
still from net.
http://i45.tinypic.com/spkp6e.jpg

RAGHAVENDRA
30th August 2012, 06:52 PM
நடிகர் திலகத்தின் பிறந்த நாளை யொட்டி சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் கௌரவிக்கப் படும் சாதனையாளர்கள் பட்டியலில் இந்த ஆண்டு தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். விவரம் விரைவில்.

KCSHEKAR
30th August 2012, 10:20 PM
Dear Kalnayak sir,

Thanks for your wishes.

KCSHEKAR
30th August 2012, 10:22 PM
Dear Vasudevan sir,

Thanks for your post with very good scene in PANDHAM.

pammalar
31st August 2012, 04:40 AM
நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 4

"பராசக்தி" கணேசன் பற்றி கலைவாணர்

பொக்கிஷாதி பொக்கிஷம்

வரலாற்று ஆவணம் : போர்வாள் : 30.12.1952
[திராவிட முன்னேற்றக் கழக சார்புடைய பருவ இதழான 'போர்வாள்' இதழின் "பராசக்தி" வெற்றிவிழா மலரிலிருந்து...]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6544-1.jpg

30.8.2012 : கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 55வது ஆண்டு நினைவு தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

RAGHAVENDRA
31st August 2012, 07:52 AM
டியர் வாசுதேவன் சார்,
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசும் வாய்களுக்கு பூட்டு போடுவது போல் பந்தம் திரைப்படத்தின் சிறந்த காட்சிகளில் ஒன்றை பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். 80களுக்கு பிறகு நடிகர் திலகம் ஒன்றுமில்லை என்று மேம்போக்காக பேசுபவர்களுக்கும், அத்தகைய பேச்சை ஆதரிக்கும் நம்மிடையே உள்ள நாரதர்களுக்கும் சரியான சாட்டையடி இந்தக் காட்சி. இது போல் 80களுக்குப் பிறகு வெளி வந்த நடிகர் திலகத்தின் இன்னும் பல படங்களிலிருந்து காட்சிகளைப் பதிவேற்றத் தங்களால் தான் முடியும். தொடருங்கள் உங்கள் பணியை. சுழற்றுங்கள் உங்கள் சாட்டையை வேகமாக. இனிமேலும் இவர்களெல்லாம் வாயைத் திறக்கத் துணிவார்களா என்ன.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
31st August 2012, 07:55 AM
டியர் பம்மலார்.
சரியான தருணத்தில் சரியான நேரத்தில் சரியான ஆவணங்களைத் தருவதில் தங்களை மிஞ்ச ஒருவர் உளரேல். கலைவாணர் நினைவு நாளையொட்டி நடிகர் திலகத்தைப் பற்றிய அவருடை கருத்துக்கள் கொண்ட ஆவணத்தைப் பதிவிட்டு மேலும் மேலும் தங்கள் சிறப்பினை கூட்டிக் கொண்டே போகிறீர்கள். தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்

yoyisohuni
31st August 2012, 10:56 AM
kalaivaanarkuL irukkum kavignarukku thaan muthal idam. sivaji ayyavin thiramaiyai andre kande theerka tharisi

Richardsof
31st August 2012, 02:35 PM
http://i46.tinypic.com/2iaa3ia.jpg

vasudevan31355
31st August 2012, 03:37 PM
நகைச்சுவை அரசர் 'கலைவாணர்' திரு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 55-ஆவது ஆண்டு நினைவு தினம். (30.8.2012)

நடிகர் திலகம் கலைவாணருக்கு அளிக்கும் நிஜமான நினைவாஞ்சலிப் புகழாரம்.(முதன் முறையாக)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rJltHpUv89A

'ராஜா ராணி' காவியத்தில் 'ராஜா'வும், கலைவாணரும்.(30.8.2012)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3vob_063493221.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
31st August 2012, 03:50 PM
கலைவாணரின் நினைவாக

'அம்பிகாபதி' திரைக்காவியத்தின் புகழ் பெற்ற, கலைவாணர் மற்றும் மதுரம் அவர்களின் எவர்க்ரீன் காமெடி பாடல்.

"கண்ணே! உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா?"


http://www.youtube.com/watch?v=et6AIbTxS7c&feature=player_detailpage

vasudevan31355
31st August 2012, 05:10 PM
'சித்ராலயா' கோபு

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-128.jpg

'சித்ராலயா' கோபு கலாட்டா கல்யாணம் காவியம் உருவானதைக் கூறுகிறார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-101.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-47.jpg

RAGHAVENDRA
1st September 2012, 09:15 AM
NTFANS - சார்பில் இன்று 01.09.2012 மாலை 5.0 மணிக்கு பத்மினி பிக்சர்ஸ் திரைக்காவியம், கப்பலோட்டிய தமிழன் திரையிடப் படுகிறது. இடம் ருஷ்யக் கலாச்சார மய்யம். உறுப்பினர்களுக்கு அனுமதி.

உறுப்பினரல்லாதோர் இன்றே உறுப்பினராகலாம்.

http://www.hindu.com/thehindu/gallery/sg/sg025.jpg

RAGHAVENDRA
1st September 2012, 09:16 AM
டியர் வாசுதேவன் சார்
சித்ராலயா கோபு சாரின் சினிமா எக்ஸ்பிரஸ் கட்டுரையினை வெளியிட்டு அசத்துகிறீர்கள். அரிய தகவல்கள் அடங்கிய இது போன்ற பதிவுகளை அளிக்கும் வல்லமை படைத்தவர்கள் பம்மலாரும் தாங்களும். தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
1st September 2012, 02:10 PM
தொலைக்காட்சிகளில் நடிகர் திலகத்தின் ஆளுமை

இன்று ஒரே நாளில் கிட்டத் தட்ட 7 அலைவரிசைகளில் நடிகர் திலகத்தின் படங்கள்

பாலிமர் டி வி - ஆனந்தக் கண்ணீர் - பிற்பகல் 1 மணி
மெகா டி வி - தீபம் - பிற்பகல் 1.30 மணி
ராஜ் டிவி - சாதனை - பகல் 1.30 மணி
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் - ஊரும் உறவும் - பிற்பகல் 1 மணி
கே டிவி - என் ஆச ராசாவே - மாலை 4.30 மணி
வசந்த் டிவி - கந்தன் கருணை - காலை 10 மணி
முரசு டி வி - தெனாலி ராமன் - மாலை 7 மணி

nt rocks

KCSHEKAR
1st September 2012, 02:33 PM
NTFANS - சார்பில் இன்று 01.09.2012 மாலை 5.0 மணிக்கு பத்மினி பிக்சர்ஸ் திரைக்காவியம், கப்பலோட்டிய தமிழன் திரையிடப் படுகிறது. இடம் ருஷ்யக் கலாச்சார மய்யம். உறுப்பினர்களுக்கு அனுமதி.

உறுப்பினரல்லாதோர் இன்றே உறுப்பினராகலாம்.



டியர் ராகவேந்திரன் சார்,

தகவலுக்கு நன்றி! "பார்த்தால் பசிதீரும்" பட வெளியீட்டின்போதே விண்ணப்பத்தினை அளித்துள்ளேன். பரிசீலனை செய்து தகவல் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு 2, 3 திரைப்படஙள் திரையிடப்பட்டபோதும் தகவல் இல்லை. கட்டணம் யாரிடம் செலுத்தவேண்டும் என்ற விபரம் தெரிவிக்கவும்.

நன்றி.

KCSHEKAR
1st September 2012, 02:35 PM
Thanjavur News

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ThanjavurNews1005.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ThanjavurNews2008.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ThanjavurNews3007.jpg

vasudevan31355
1st September 2012, 03:08 PM
அன்பு பம்மலார் சார்,

ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக தாங்கள் அளித்துள்ள தலைவரின் புகைப்படம் சூப்பர்.

நடிகர் திலகம் பற்றி கலைவாணர் அவர்கள் 'போர்வாள்' ("பராசக்தி" வெற்றிவிழா மலர்) இதழில் குறிப்பிட்டிருந்த கட்டுரையும், அவரே நடிகர் திலகத்தைப் பாராட்டி தயாரித்து எழுதியிருந்த அந்த ஜனரஞ்சகக் கவிதையும் கலக்கலோ கலக்கல். இப்பேர்ப்பட்ட அரிய பொக்கிஷங்களை அள்ளித் தர தங்களைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. சுயலாபமற்ற தங்களின் அர்ப்பணிப்பு சேவைக்கு எத்தனை முறை நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது. இந்த அரிய பதிவு ஒன்று மட்டுமே போதும் காலம் முழுவதும் தங்கள் பெருமையைப் பறைசாற்ற.

ஆனந்தம் கலந்த நன்றிகளுடன்

vasudevan31355
1st September 2012, 03:31 PM
டியர் ராகவேந்திரன் சார்,

'பந்தம்' மற்றும் 'கலாட்டா கல்யாணம்' பதிவுகளுக்கான தங்களின் மனமுவந்த பாராட்டுதல்களுக்கு உள்ளம் குளிர்ந்த நன்றிகள். இன்று ஏழோடு முடிந்து விடாமல் எட்டாகத் தொடர்கிறது நடிகர் திலகத்தின் ஆதிக்கம். மெகா 24 தொலைக்காட்சியில் இன்று மதியம் இரண்டு மணிக்கு சூப்பர் காமெடிச் சித்திரம் "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி". என்றும், எப்போதும், எங்கும், எதிலும், நெம்பர் ஒன் ராஜா நம் எங்கள் தங்க ராஜா.

vasudevan31355
1st September 2012, 03:52 PM
டியர் சந்திரசேகரன் சார்,

பதிவுகளுக்கான தங்கள் உயரிய பாராட்டிற்கு என் மனமுவந்த நன்றி! சமூக நலப்பேரவை சார்பாக தஞ்சை ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் கோவிலுக்கு பஞ்சலோக சுவாமி -அம்பாள் சிலை செய்யப்பட்டு வழங்கப்பட்டது பேரவை அமைப்பு நலப் பணிகளில் மட்டுமல்லாது இறைப்பணியிலும் சளைத்ததல்ல என்பதைக் காட்டுகிறது. பாராட்டுக்கள்.

vasudevan31355
1st September 2012, 04:11 PM
அன்பு மாடரேட்டர்களுக்கு,

இந்திய நேரப்படி மதியம் மூன்று மணியிலிருந்து கிட்டத்தட்ட ஐந்து மணிவரை திரியில் போஸ்டிங் போடுவது மிக்க சிரமமாய் உள்ளது. நொடிக்கொரு தடவை Log in செய்யச் சொல்லி கேட்கிறது. எத்தனை முறை Log in செய்தாலும் திரும்பத் திரும்ப Log in செய்யச் சொல்கிறது. நீண்ட நாட்களாக இந்தப் பிரச்னை உள்ளது. ஆவன செய்யுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.


அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
1st September 2012, 04:29 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

'பந்தம்' திரைக்காவியத்தின் அருமையான காட்சியொன்றினைப் பதிவிட்டு சிறப்புச்சேர்த்துவிட்டீர்கள். ஒரு பார்வை ஓராயிரம் கதைபேசும் என்பதற்கு இக்காட்சி எடுத்துக்காட்டு. அந்தப்படத்தில் தலைவருக்கு வசனங்கள் மிகக்குறைவு. எல்லாமே காட்சிவழி மொழிகள்தான். அதுபோலத்தான், அதே டிரைவரை 'சர்ச்'சில் சந்திக்கும்போது, 'டேவிட்,என்ன வேலை செய்றே?' என்று கேட்க, அவர் மௌனமாகத் தலையசைக்க, சட்டென்று கார் சாவியை எடுத்துக்கொடுத்து 'வண்டியை எடு' என்று சொல்லும் இடமும்.

ராகவேந்தர் சார் சொன்னதுபோல, அவர் தனது கடைசிப்படம் வரை நடிப்பு ராஜாங்கம் நடத்திவிட்டுத்தான் மறைந்தார். குறிப்பிட்ட காலத்தோடு முடிந்துபோனார் என்பதெல்லாம் சிலரின் பேத்தல். உண்மையென்னவென்பது மக்களுக்குத்தெரியும்.

கலைவாணருக்கு தலைவர் அளித்த அஞ்சலி பற்றிய காணொளியும், கலாட்டா கல்யாணம் உருவான கதைபற்றி சித்ராலயா கோபுவின் பேட்டியைத்தாங்கிய கட்டுரையும் மிக அருமையான பதிப்புக்கள்.

தொடர்க தங்களின் சீரிய சேவை.

vasudevan31355
1st September 2012, 04:35 PM
NTFANS - சார்பில் இன்று திரையிடப்படும் 'கப்பலோட்டிய தமிழன்' திரையீட்டு விழா செவ்வனே சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/08466572400423607725.jpg

mr_karthik
1st September 2012, 04:52 PM
அன்புள்ள ராகவேந்தர் சார் மற்றும் வாசுதேவன் சார்,

இன்று ஒரே நாளில் மட்டும் எட்டு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நடிகர்திலகத்தின் எட்டு படங்கள். வாவ்.... என்ன ஒரு சாதனை.

அவர் பிஸியாக இருந்த காலத்தில் ஒரு ஏரியாவில் ஏழு தியேட்டர்கள் இருந்தால் அவற்றில் அவரது ஐந்து புதிய படங்கள் ஓடிக்கொண்டிருந்த நிகழ்வு சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வந்தது. உதாரணமாக 1971 ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரையான காலகட்டத்தில் மவுண்ட்ரோடு ஏரியாவில் மற்ற படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலையிருந்தது அனைவரும் அறிந்தது. அதுபோல மதுரையில் பலமுறை ஒரே சமயத்தில் அவரது பல புதிய படங்கள் ஓட்டத்தில் இருந்ததைப்பற்றி முரளியார் அவர்கள் பல்வேறு சமயங்களில் சொல்லியிருக்கிறார் .

இப்போது, தொலைக்காட்சியிலும் அவரது ஆதிக்கம் தொடர்கிறது. ஒரே நாளில் எட்டு படங்கள் இதுவரை வேறு யாருக்கும் நிகழ்ந்ததுமில்லை இனி நிகழப்போவதுமில்லை.

இசைஞானி பாடியது இவரை நினைத்துத்தானோ..... "நேற்று இல்லை இன்று இல்லை, எப்பவும் நான் ராஜா".

mr_karthik
1st September 2012, 05:19 PM
அன்புள்ள பம்மலார் சார்,

எது ஒன்றைச்செய்தாலும் அதில் நடிகர்திலகத்தை முன்னிறுத்தியே செய்வதை வழக்கமாக, கடமையாகக்கொண்டிருக்கும் தாங்கள், 'கலைவாணர் என்.எஸ்.கே அவர்களின் நினைவுநாளை' சிறப்பிக்கவும் கூட அவர் நடிகர்திலகத்தைப்பற்றி முதல் பட வெற்றிவிழா மலரிலேயே எழுதியுள்ள கட்டுரை மற்றும் சிறப்புக்கவிதையைப் பதிப்பித்து நினைவுகூர்ந்துள்ள விதம் அருமையிலும் அருமை.

இந்தக்க்ட்டுரை வெளிவந்த காலத்தில் (1952) என் தந்தைக்கு அதிகம்போனால் 17 வயது இருந்திருக்கலாம். என் தாய் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்திருப்பார். இன்றைய இளைஞர்களின் தாய் தந்தையர் அப்போது பிறந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது வெளிவந்த கட்டுரையை இப்போது நாங்கள் படிக்க முடிகிறதென்றால், பம்மலாரின் அர்ப்பணிப்பை அளவிட தமிழில் வார்த்தைகளே இல்லையென்பதுதான் உண்மை.

ஓலைச்சுவடிகளைத் தேடித்தேடி சேகரித்து தொகுத்தளித்த தமிழ்த்தாத்தா உ.வெ.சா. அவர்களின் வரிசையில் வைத்துப் போற்றப்படவேண்டியவர் தாங்கள்.

திரு சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம் நடத்தினால் என்ன?. தலைப்பு "த்மிழ்த்திரைப்பட ஆவணங்கள் அதிகம் இருப்பது பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களிடமா? பம்மலார் அவர்களிடமா?".

(தங்கள் அடியொற்றி நண்பர் வினோத் வேகமாக முன்னேறி வருகிறார். அவரது சேவையால் மக்கள்திலகம் திரி தறிகெட்டு பறந்துகொண்டிருக்கிறது).

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.

Richardsof
1st September 2012, 08:55 PM
Dear karthik sir

my sincere thanks to your valuable comments regarding my postings in makkal thilagam part 2.
Moovendhargal [ragavendran sir - pammalar sir - vasudevan sir ] and above all your detailed description and narration about your olden days memories postings , analysis of movies and actors is really a great inspiriation to me to write in this thread.

vasudevan31355
2nd September 2012, 06:27 AM
அன்பு கார்த்திக் சார்,

தங்கள் அன்பு பாராட்டுதல்களுக்கு நன்றி!

இயக்குனர் விஜயனுக்கும் நடிகர் திலகத்திற்கும் சிறிது மனக்கசப்பு ஏற்பட்டிருந்த போது விஜயனால் நடிகர் திலகத்தின் காவியங்களை இயக்க முடியாமல் போனது. ஆனால் நம்மவர் குழந்தை போல. எதையும் மனதில் வைத்துக் கொள்ளத் தெரியாது. பாலாஜி அவர்கள் 'பந்தம்' படத்திற்கு இயக்குனராக விஜயனைப் போடலாம் என்றதும் பழையனவற்றை எதையும் மனதில் கொள்ளாமல் சந்தோஷமாக ஒப்புக் கொண்டார் நடிகர் திலகம். இத்தனைக்கும் சொந்தப் பட வேலைகளின் (தூரத்து இடி முழக்கம்) காரணமாக நடிகர் திலகத்தின் சொந்தக் காவியமான 'ரத்த பாசம்' திரைப்படத்தின் இயக்குனர் பணிகளை தாமதப் படுத்தியவர் விஜயன். பொறுத்துப் பார்த்த நடிகர் திலகம் விஜயன் இல்லாமலேயே 'ரத்தபாசம்' காவியத்தை தன் சொந்த பேனரான 'சிவாஜி புரொடக்ஷன்ஸ்' யூனிட்டோடு வெற்றிகரமாக முடித்து படத்தை பெரிய 'ஹிட் ஆக்கினார். 'ரத்த பாசம்' (1980) டைட்டிலில் திரைப்பட வரலாற்றில் அதுவரை நடக்காத ஒரு கதையாக டைரக்ஷன் யார் என்று போடமால் அந்த இடத்தில் நடிகர் திலகத்தின் அற்புதமான ஒரு ஸ்டில்லை மூன்றுமுறை கார்டாகப் போடுவார்கள். இதன் காரணமாகவே விஜயன் நடிகர் திலகத்தின் படங்களை இயக்குவதற்கான வாய்ப்பின்றி போனது. சொந்தப் படமான தூரத்து இடிமுழக்கமும் (1981) விஜயன் கையை ஆழமாகக் கடித்துப் பதம் பார்த்து விட்டது. ('தூரத்து இடிமுழக்கம்' படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் எங்கள் ஊரான கடலூர் துறைமுகத்தில் எடுக்கப் பட்டது என்பது ஒரு கொசுறு நியூஸ்.) கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக சரியான வாய்ப்புகளின்றி நொந்து போய் இருந்த விஜயனுக்கு 'பந்தம்' (1985) பட இயக்குனர் வாய்ப்பு அல்வா மாதிரி கிடைத்தவுடன் அவரும் மிகச் சரியாக பயன்படுத்தி அதைத் தக்க வைத்துக் கொண்டார். 'பந்தம்' காவியத்தை பெரும் வெற்றிக்காவியமாகவும் ஆக்கிக் காண்பித்தார். நடிகர் திலகமும் வழக்கம் போல பெருந்தன்மையுடன் விஜயனை ஏற்றுக் கொண்டார். தெரியாமல் தவறு செய்து விட்டு தண்டனை அனுபவித்த விஜயன் மறுபடி நடிகர் திலகத்தால் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்ட நிகழ்வைத்தான் நன்றி மறக்காமல் விஜயன் 'பந்தம்' காவியத்தில் உருவாக்கின அந்த டிரைவர் 'டேவிட்' கேரக்டர். நடிகர் திலகம் கூட விஜயனிடம் "என்ன! உன் கேரக்டரையே படத்தில் டிரைவர் கேரக்டரா வச்சுட்ட போல இருக்கு" என்று சொல்லி சிரித்தாராம். (தங்களுக்குத் தெரியாததா!)

'ரத்த பாசம்' காவியத்தில் டைரக்ஷன் யார் என்று போடுவதிற்குப் பதிலாக அந்த இடத்தில் சிம்பாலிக்காக போடப்பட்ட நடிகர் திலகத்தின் ஸ்டில் கார்டுகள் மூன்றும் இப்போது நம் பார்வைக்கு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-79.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-102.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-130.jpg

(ஒரு சிறு ஜோக். அந்தக் கார்டுகளில் என் வாட்டர் மார்க் இருக்காது. ஹா..ஹா.ஹா.)

Subramaniam Ramajayam
2nd September 2012, 08:46 AM
Thanks for NT FILM APP SOCIETY for screening Kappalototia tamizan A CLASS MOVIE INDEED as appreciated by our legend many times many occassions wHAT A LIVELY PERFORMANCE BY NT throughout the movie without any slightest overaction Really i regret very much for having missed the picture earlier and later years I want to see it in big screens and not dvds
IVARUKKU BHARAT AND BHARATA RATNA miss ANADHU eppadi enbathu answer illa QUESION

ScottAlise
2nd September 2012, 09:45 AM
Can NT fil appreciation societ be held in COimbatore just like chennai Many eople would like to watch with audience pl reply

Thomasstemy
2nd September 2012, 12:31 PM
Dear Murali Sir, Raghavendran Sir, Vaasudevan Sir, Karthik Sir, Pammalar Sir and all Pillaigal of Nadigar Thilagam and fellow hubbers,

It was indeed a great evening yesterday @ Russian Cultural Center which saw screening of our Kappalotiya Thilagam...sorry Thamizhan !!

Kappal oduvadharkku Vellam Thaevai....Naetru Nijamaagavae Russian Cultural Centeril Kappal engal anaivarudaya Aanandha Kaneeraal Odiyadhu endru Koorinaal adhu Migayaagaadhu....

Nadigar Thilagam ..Chidambaramaaga Vaazhndhaar enbadhu Ullangai Nellikani..! Adaeyappa...Nadikka Therindhavar Eppadi Chidambaramaaga Vaazhndhuvittar !!! Bale Pandiya !!!

Indha Kaaviyaththai Paarthu mudindhavudan, unmayilaeyae India edharkku sudhandhiram adaindhadhu endru varuththapattaen Yaen endraal...Ivalavu Kazhtapattu Vaangiya Sudhandhiraththai....Dravida Iyakangal Seerkulaiththu Sinnapinnapaduthi Tamizhnaatai Alangoalam Aaki vittadhae endru Ninaikkum boadhu...British Evalavo mael endru ninaikka Thoandrugiradhu...Avargal Irundhirundhaal Nadigar Thilagaththin Nadippai Paarthu, Adhan Pin Manam Thirundhi Avargal Naatirkku Sendriruppargal, Nadigar Thilagaththai Uriya Murayil Gowraviththapinbu enbadhu mattum Sathiyam !!

Thamizhnaatil Thamizhanai Indru Naetralla....Sudhandhirathirkku munnum Vaazhaviduvadhillai, Vaazhavaikkavillai, Gowravapaduththuvadhillai enbadhu Mattum Thinnam !!!!!

Viduthalai Petra Seidhi sollum adhigaariyidam....unarchiillamal..oho enbadhu pola jaadai seivadhumattum allaamal...Ungalukku Sandhosham illaya endru ketkum adhigariyidam..."Enn Naatirkka Viduthalai Kidaithuvittadhu ..." endru koorumboadhu ...andha performance....1000 Afro-Asia Awardugal matrum 1000 Chevalier Awardugal Avarudaya Paadhathil Saranaagadhi adaindhadharkku Samam..!!! National Matrum Oscar Awardai Naan kuripidavillai yaen endraal..avai indru, oru filmfare award pola tharam thaazhndhu vittadhu...Adhu Namadhu NadigarThilagathin Tharathirkku arigil, nerunga mudiyaadhu !!

Nadigar Thilagam Uraikkum Bodhu adhu "VandeMaadaram" matra nadigargal matrum arasiyal vyadhigal uraikkum bodhu adhu "Vandhu Yaemaatharoam"

Vande Maadaram !!!

:smokesmile:

pammalar
2nd September 2012, 03:27 PM
அன்புள்ள பம்மலார் சார்,

எது ஒன்றைச்செய்தாலும் அதில் நடிகர்திலகத்தை முன்னிறுத்தியே செய்வதை வழக்கமாக, கடமையாகக்கொண்டிருக்கும் தாங்கள், 'கலைவாணர் என்.எஸ்.கே அவர்களின் நினைவுநாளை' சிறப்பிக்கவும் கூட அவர் நடிகர்திலகத்தைப்பற்றி முதல் பட வெற்றிவிழா மலரிலேயே எழுதியுள்ள கட்டுரை மற்றும் சிறப்புக்கவிதையைப் பதிப்பித்து நினைவுகூர்ந்துள்ள விதம் அருமையிலும் அருமை.

இந்தக்க்ட்டுரை வெளிவந்த காலத்தில் (1952) என் தந்தைக்கு அதிகம்போனால் 17 வயது இருந்திருக்கலாம். என் தாய் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்திருப்பார். இன்றைய இளைஞர்களின் தாய் தந்தையர் அப்போது பிறந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது வெளிவந்த கட்டுரையை இப்போது நாங்கள் படிக்க முடிகிறதென்றால், பம்மலாரின் அர்ப்பணிப்பை அளவிட தமிழில் வார்த்தைகளே இல்லையென்பதுதான் உண்மை.

ஓலைச்சுவடிகளைத் தேடித்தேடி சேகரித்து தொகுத்தளித்த தமிழ்த்தாத்தா உ.வெ.சா. அவர்களின் வரிசையில் வைத்துப் போற்றப்படவேண்டியவர் தாங்கள்.

திரு சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம் நடத்தினால் என்ன?. தலைப்பு "த்மிழ்த்திரைப்பட ஆவணங்கள் அதிகம் இருப்பது பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களிடமா? பம்மலார் அவர்களிடமா?".

(தங்கள் அடியொற்றி நண்பர் வினோத் வேகமாக முன்னேறி வருகிறார். அவரது சேவையால் மக்கள்திலகம் திரி தறிகெட்டு பறந்துகொண்டிருக்கிறது).

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.

டியர் mr_karthik,

இதயத்தின் அடித்தளத்திலிருந்து துளியும் மிச்சம் வைக்காமல் தாங்கள் வழங்கிய ஆத்மார்த்தமான, உச்சமான, உயர்வான பாராட்டுக்கு எனது ஆனந்தக்கண்ணீருடன் கூடிய நன்றிகளைத் தங்களுக்கு காணிக்கையாக்குகின்றேன்..!

போற்றுதலுக்குரிய பெருந்தகை தமிழ்த் தாத்தா உ.வே.சா. எங்கே..! இந்த எளியவன் எங்கே..! கடந்த பல வருடங்களாக பற்பல ஆவணங்களைத் தேடித்தேடி சேகரித்தபோதும் சரி, தற்போதைய தொடர் தேடலிலும் சரி, தாங்கள் குறிப்பிட்ட திரு. சாமிநாத ஐய்யர்தான் இந்த சுவாமிநாதனுக்கு ரோல்மாடல் என்பதனை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 'அவரெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு, அல்லல்பட்டு, பசி நோக்காது, கண் துஞ்சாது, சதா சர்வகாலமும் தேடித்தேடி பண்டைத் தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகளை சேகரித்திருப்பார். நமக்கென்ன அதற்குள் அலுப்பு வந்து விடுகிறது. அவரைப் போல் விடாது முயற்சித்து மென்மேலும் திரட்ட வேண்டும்' என எனது தொடர் தேடுதல் வேட்டையில் அன்றும், இன்றும் உயர்திரு. உ.வே.சா. அவர்களே உந்துசக்தியாய் விளங்கி வருகிறார்.

மதிப்பிற்குரிய ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள், தமிழ்த் திரையுலக ஆவணங்களின் சிகரம். அடியேன், கடற்கரையில் குழுந்தைகள் கட்டி விளையாடும் ஒரு சிறு மணல் குன்று போன்றவன். எனினும், தங்களின் உயர்ந்த உள்ளத்திலிருந்து வரும் இந்த உன்னதமான பாராட்டுதல்களை மிகுந்த பணிவோடு சிரமேற்கிறேன்..! தங்களின் அபரிமிதமான அன்பிற்கும், எல்லையில்லா பெருந்தன்மைக்கும் தலைவணங்குகிறேன்..!

தங்களைப் போன்ற அன்புள்ளங்கள் வழங்கும் உச்சமான பாராட்டுதல்களே, என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயலாற்றுவதற்கு, மிகப் பெரிய ஊக்கசக்தியாக விளங்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை..!

தாங்கள் குறிப்பிட்டதுபோல் திரு. esvee அவர்கள் மக்கள் திலகம் திரியில் ஈடுஇணை சொல்லமுடியாத மகத்தான சேவையை ஆற்றி பாராட்டுக்கெல்லாம் அப்பாற்பட்டவராக உயர்ந்து வருகிறார். தற்போது அவருக்கு பக்கபலமாக திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களும் அரிய திருத்தொண்டினை அங்கே புரிந்து வருகிறார். அந்த இரு சகோதரர்களுக்கும் நமது இதயபூர்வமான வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்..!

பாசத்துடன்,
பம்மலார்.

KCSHEKAR
2nd September 2012, 04:19 PM
டியர் பம்மலார்,

கலைவாணர் நினைவுநாள் நிகழ்ச்சிப் பதிவு சிறப்பு. திரு.கார்த்திக் அவர்கள் கூறியதுபோல தங்களின் (ஒவ்வொரு பதிவிலும்) அர்ப்பணிப்பை அளவிட வார்த்தைகள் இல்லை.

பாராட்டுக்கள்

KCSHEKAR
2nd September 2012, 04:27 PM
டியர் வாசுதேவன் சார்,

'பந்தம்', 'கலாட்டா கல்யாணம்' மற்றும் கப்பலோட்டிய தமிழன் பதிவுகள் அருமை.

'ரத்த பாசம்' காவியத்தில் Direction யார் என்று போடுவதிற்குப் பதிலாக அந்த இடத்தில் சிம்பாலிக்காக போடப்பட்ட நடிகர் திலகத்தின் ஸ்டில் கார்டுகளுடன்கூடிய டைரக்டர் விஜயனுக்கும் நடிகர்திலகதிற்கும் ஏற்பட்ட மனக்கசப்பு Flash Back மிகவும் சிறப்பு.

vasudevan31355
3rd September 2012, 01:38 PM
'குமுதம்' 29-8-2012 இதழில் பிரபல தெலுங்கு நடிகர் திரு. நாகேஸ்வரராவ் அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி புகழ்ந்தளித்துள்ள பேட்டி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. நடிகர் திலகத்திற்கு ஈடு இணை எவரும் இல்லை, அவரைப் போல தன்னால் நடிக்க முடியவில்லை போன்ற விஷயங்களையும், 'சாணக்ய சந்திரகுப்தா' தெலுங்குக் காவியத்தில் நடிகர் திலகத்தின் அற்புதமான பங்களிப்பைப் பற்றியும் திரு நாகேஸ்வரராவ் அவர்கள் மிக அற்புதமாகக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த அற்புதப் பதிவு உங்கள் பார்வைக்கு. படித்து மகிழுங்கள். (அட்டகாசமான 'சாணக்ய சந்திரகுப்தா' காவியத்தில் மூவேந்தர்களின் ஸ்டில்லோடு)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sivaji%20ganesan/1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sivaji%20ganesan/2.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sivaji%20ganesan/3.jpg

RAGHAVENDRA
3rd September 2012, 10:05 PM
டியர் வாசுதேவன் சார்,
ரத்தபாசம் இயக்குநர் பற்றிய தகவலும் குமுதம் இதழில் வெளிவந்த நாகேஸ்வரராவ் பேட்டி பற்றிய பதிவும் தங்களுடைய விடாத உழைப்பின் அடையாளங்கள். உடனுக்குடன் அவற்றைப் பகிர்ந்து கொள்ளும் வேகம் வியக்க வைக்கின்றது. உளமார்ந்த பாராட்டுக்கள்.

நடிகர் திலகத்தின் மேல் பெரு மதிப்பு வைத்தவரும் அவருடன் பல படங்களில் இணைந்து நடித்தவருமான மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் புகழ்பாடும் அமைப்பாக ஜெய் ஜாய் புதுப் பொலிவுடன் மீண்டும் இயங்க உள்ளது. துவக்க விழா வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது. அழைப்பிதழின் நிழற்படம் கீழே தரப்பட்டுள்ளது. அனைவரும் வருக.

http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/576991_494347043926155_1240483803_n.jpg

eehaiupehazij
4th September 2012, 10:19 AM
dear raghavendra sir. happy for the information that the silent philanthropist and the unique South Indian James Bond Jaishankar sir's JaiJoy programme. Makkal Kalaignar's association with NT films are unforgettable

eehaiupehazij
4th September 2012, 10:26 AM
The doyen of Telugu film industry ANR's disclosure shows his magnanimity. I had enjoyed this movie in Hyderabad and the rousing reception NT received in his introductory scene is still greenish in my memory. NTR was so magnanimous to put in the title his name after ANR and NT.The movie was a wholesome entertainer with Jayapradha as heroine and a fantastic acting competition among this trio combo.ANR had an indelible mark as Chanakya while NT sizzled in the role of Alexander with a dominating screen presence wherein ANR and NTR were so magnanimous to act in a subtle way allowing the histrionics of NT to enthrall the Telugu audience.

vasudevan31355
4th September 2012, 11:41 AM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

(தொடர்-7)

நடிகர் திலகத்தின் நாயகிகள் (7) 'ஸ்ரீரஞ்சனி

http://3.bp.blogspot.com/-2WRM1_1WYvc/T9GmPmDjwqI/AAAAAAAAFbg/6Z4GqeuB8wg/s1600/jr.sriranjini.gif

'இல்லற ஜோதி' தமிழ்த் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்துடன் ஸ்ரீரஞ்சனி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ill.jpg

ஸ்ரீரஞ்சனி. நடிகர் திலகத்துடன் ஒன்றில் தங்கை. பதினொன்றில் மனைவி. 'இல்லறஜோதி' காவியத்தில் நடிகர் திலகத்தின் இரு ஜோடிகளில் ஒருவர். நடிகர் திலகத்தின் மனைவி 'காவேரி' யாக பொறுமையில் பூமாதேவியாய் நடித்திருப்பார். நடிகர் திலகத்தின் மற்றொரு ஜோடி பத்மினி. மனைவியைக் கவனியாமல் கலையார்வம் காரணமாக பத்மினியை காதலிக்கும் பாத்திரம் நடிகர் திலகத்திற்கு.

ஆந்திரத்தை சேர்ந்த ஸ்ரீரஞ்சனியின் இயற்பெயர் மகாலட்சுமி. ஏற்கனவே தெலுங்குத் திரைப்பட உலகில் வேறு ஒரு ஸ்ரீரஞ்சனி நடித்து வந்ததால் இவர் 'ஜூனியர் சிவரஞ்சனி' ஆனார். 1944- இல் 'பீஷ்மா' என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி ஏராளமான தெலுங்குப் படங்களில் நடித்துப் புகழ் பெற்று பின் தமிழிலும் நடித்தார். 'பராசக்தி' யில் நடிகர் திலகத்தின் தங்கை கல்யாணியாக நடித்து புகழ் பெற்றவர். 'பராசக்தி', 'ராஜி என் கண்மணி', 'சந்திரஹாரம்', 'நான்' போன்ற தமிழ்ப் படங்கள் இவர் நடித்தவற்றுள் குறிப்பிடத் தகுந்தவை. நடிகர் திலகம் அவர்களின் 'காவல் தெய்வம்' காவியத்தில் சிவக்குமாரின் அம்மாவாக வருவார். சோகப் பாத்திரங்களில் சோடை போகாமல் பார்ப்பவர்கள் பரிதாபம் கொள்ளும்படி நடித்து பெயர் வாங்கிய குடும்பப் பாங்கான நடிகை. நடிகர் திலகத்துடன் 'இல்லறஜோதி' படத்தில் மட்டும் மனைவியாக நடித்திருப்பதால் நடிகர் திலகத்தின் நாயகியர் லிஸ்ட்டில் சேருகிறார்.

'இல்லற ஜோதி' திரைக்காவியத்தில் நடிகர் திலகத்திற்கும் ரஞ்சனிக்கும் ஜோடிப்பாடல் இல்லாவிடினும் குழந்தையைத் தாலாட்டும் அற்புதப் பாடலான "சிறுவிழி குறுநகை சுவை தரும் மழலையின்"அற்புதப் பாடலில் நடிகர் திலகத்தையும், ஸ்ரீரஞ்சனியையும் இணைந்தே காணலாம்.


http://www.youtube.com/watch?v=xx9iKti-njs&feature=player_detailpage


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
4th September 2012, 02:46 PM
'சரஸ்வதி சபதம்' (3-9-66) 47-ஆம் ஆண்டுத் துவக்கம்.(சிறப்பு நிழற்படங்கள்)

கல்வியா! செல்வமா! வீரமா!

http://cinemachaat.files.wordpress.com/2012/05/queens.png

நாரதர் வேடத்தில் நடிகர் திலகம்

http://periplo.mond.jp/cgi/mt/archive1/Saraswati02.jpg

கல்வி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1.jpg

செல்வம்

http://cinemachaat.files.wordpress.com/2012/05/queen.png

வீரம்

http://cinemachaat.files.wordpress.com/2012/05/brave-man.png

வித்யாபதி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2.jpg

வித்தைக்கு அதிபதி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/7.jpg

கல்விக்கும், செல்வத்துக்கும் மோதல்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/8.jpg

வீரத்துக்கும் செல்வத்துக்கும் மோதல்

http://cinemachaat.files.wordpress.com/2012/05/vlcsnap-2012-05-18-00h53m18s85.png

கல்வியின் வீரம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/10.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
4th September 2012, 03:06 PM
http://img839.imageshack.us/img839/2025/sarasvathisabathamdvdri.jpg

http://img219.imageshack.us/img219/6747/sarasvathisabathamdvdriv.jpg

http://www.shotpix.com/images/23568447869921322759.jpg

http://img2.imageshack.us/img2/6585/sarasvathisabathamdvdris.jpg

http://img2.imageshack.us/img2/2025/sarasvathisabathamdvdri.jpg

http://img219.imageshack.us/img219/2025/sarasvathisabathamdvdri.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/9-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/10-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/vlcsnap-2010-11-22-00h23m11s87.jpg

http://padamhosting.com/out.php/i52303_vlcsnap2010112200h22m46s105.png

vasudevan31355
4th September 2012, 03:25 PM
http://www.shotpix.com/images/73308974835550562574.jpghttp://www.shotpix.com/images/18557725028081661322.jpghttp://www.shotpix.com/images/06970790121218845505.jpghttp://www.shotpix.com/images/90244757926125396004.jpg
http://www.shotpix.com/images/10375834358249036241.jpghttp://www.shotpix.com/images/61284316591374724111.jpg
http://www.shotpix.com/images/44659994759689062719.jpghttp://www.shotpix.com/images/14401634972739720623.jpg

vasudevan31355
4th September 2012, 03:39 PM
நன்றி அன்பு ராகவேந்திரன் சார்.

vasudevan31355
4th September 2012, 08:06 PM
'ஜெய் ஜாய்' ஜெயநடை போட என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

http://sim.in.com/6ccebabb8761019540eebb59f2e1090e_ls_lt.jpg

pammalar
5th September 2012, 01:55 AM
வெற்றிகரமாக 100-வது பக்கத்தை தாண்டி வெள்ளி விழாவை நோக்கி வெற்றி நடை போடும் திரியின் நாயகன் சுவாமிக்கும், பக்கதுணையாய் விளங்கும் வாசு அவர்களுக்கும், ராகவேந்தர் சார் அவர்களுக்கும் கார்த்திக் அவர்களுக்கும் ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த வாழ்த்துக்கள்.

வாசு சார்,

மிக்க மிக்க நன்றி. நான் எப்போதோ ஒரு முறை நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சிகளில் எனக்கு மிகவும் பிடித்தது [ராஜாவை தவிர்த்து] சொர்க்கம் படத்தில் இடம் பெற்ற ட்ரெயின் சண்டைக் காட்சிதான் என சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு அந்தக் காட்சியை இணையத்தில் தரவேற்றி அதை எனக்கு dedicate செய்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல!

Belated Birthday Wishes Chandrasekar Sir!

அன்புடன்

டியர் முரளி சார்,

தங்களின் பாசமான பாராட்டுக்கும், உளங்கனிந்த வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th September 2012, 02:07 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் அன்பான பாராட்டுதல்களுக்கு எனது அகம் குளிர்ந்த நன்றிகள்..!

நமது நடிகர் திலகம் திரியிலும், 'மய்யம்' தளத்திலும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக பெருஞ்சேவை புரிந்துவரும் தாங்கள், நமது நடிகர் திலகத்தின் புகழ்பாடும் அருமையான கட்டுரையான 'அரை நூற்றாண்டு அருஞ்சேவை', 'ஜெமினி சினிமா' கட்டுரையை இடுகை செய்தது மிகமிகப் பொருத்தமே..! சண்டைக் காட்சிகள் வீடியோ நெடுந்தொடரில், "சொர்க்கம்(1970)" terrific train fightஐ பதிவிட்டு, பார்ப்போர் அனைவருக்கும் பூலோகத்தில் சொர்க்கத்தைக் காட்டி களிப்புறச் செய்துவிட்டீர்கள்..! 'ராம'ராக "அம்பிகாபதி(1957)"யும், "ஜஹாங்கீர்(1964)" நாடக 'ஜஹாங்கீ'ரும் இதுவரை யாரும் பார்த்திராத மிக அரிய ஒரிஜினல் புகைப்படங்கள்..! நாயகியர் வரிசையில் நடிகர் திலகத்துடன் இணைந்த நடிகையர் திலகத்தின் அருமைபெருமைகளை விளக்கும் சிறப்புப்பதிவு அமர்க்களம்..! "வணங்காமுடி(1957)" காவியத்தில் கம்பீரத்திலகம், தனது இடதுகையை இடுப்பில் வைத்துக்கொண்டு கொடுக்கும் அந்த pose ஒரு photographer's delight..! அந்தப் poseல் தலைவர் அப்படியே நெஞ்சை அள்ளுகிறார்..! அப்பதிவில் நிறைவாக உள்ள நிழற்படமான, நடிப்புலகின் கோமேதகம் 'கோமா'வில் இருக்கும் அந்த நிழற்படம் கண்களைக் குளமாக்கியது. நடிகையர் திலகம் நடிகர் திலகத்தோடு முதன்முதலில் ஜோடி சேர்ந்தது "பெம்புடு கொடுகு(1953)" தெலுங்குத் திரைக்காவியத்தில்..! இக்காவியத்தின் தமிழ்ப்பதிப்பே, ஏழு வருடங்கள் கழித்து, 1960-ம் ஆண்டு வெளியான நடிகர் திலகத்தின் "பெற்ற மனம்".

நமது திரி 100 பக்கங்களை மிகமிக வெற்றிகரமாக கடந்ததற்காக, நான்கு மிகமிக உன்னதமான சிறப்புப் பதிவுகளை வழங்கிய தங்களுக்கு எனது உளப்பூர்வமான பாராட்டுக்களுடன் கூடிய உயர்வான நன்றிகள்..! அதுவும் 'ஒரு [27.8.2012] நாளிலே' கலகலகலவென இத்தனை சிறப்பான பதிவுகளை வழங்கிய தங்களுக்கு கிளுகிளுகிளுவென ஒரு அன்புப்பரிசு:


http://www.youtube.com/watch?v=BDXkcZPePMw

நமது அன்புச்சகோதரர் mr_karthik அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க "இரத்தத்திலகம்(1963)" திரைக்காவியத்திலிருந்து 'பசுமை நிறைந்த நினைவுகளே...':


http://www.youtube.com/watch?v=gbjt59-KZDo

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
5th September 2012, 09:14 AM
இன்று ஆசிரியர் தினம்.

http://nglonline.com/images/Kamaraj_with_President_Radhakrishnan.jpg

'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்
எண்ணும் எழுதும் கண்ணாகும்'

நடிப்புலக ஆசான்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a3-1.jpg

Professor R.Krishnan M.A.,M.L.,D.LIT.,ECON.(DIP)LONDON

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a1-3.jpg

Andavan Kattalai

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a2-2.jpg

ஆசிரியர் தின சிறப்புப் பாடல்.

நடிப்புலக ஆசானின் 'குருதட்சணை' திரைக்காவியத்தில் படிப்பின் பெருமையை ஆசிரியை மூலம் அழகாக எடுத்துரைக்கும் "ஒன்றே ஒன்று உலகம் ஒன்று" பாடல்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=bq2p6T5Rw_M


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
5th September 2012, 10:09 AM
டியர் ராகவேந்திரன் சார்,

மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் புகழ்பாடும் அமைப்பாக ஜெய் ஜாய் புதுப் பொலிவுடன் மீண்டும் இயங்க உள்ளது என்பது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. Professor Krishnan ஐப் பார்த்து மகிழ்ந்தோம். இப்போது மக்கள் கலைஞரை ஆசிரியர் தினத்தன்று 'Professor ஆக 'ஜெய் ஜாய்' அமைப்புத் துவக்கத்தின் சந்தோஷப் பதிவாக கண்டு மகிழலாம். இனி

"உங்களில் ஒருவன் நான்...
இரு கண்களில் பேதம் ஏன்?...
நானும் மாணவன் தான்"...

'இசைச் சக்கரவர்த்தி' வி.குமார் அவர்களின் அற்புத இசையமைப்பில்.


http://www.youtube.com/watch?v=xrkpCqTpwhg&feature=player_detailpage

vasudevan31355
5th September 2012, 02:07 PM
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்த 'டீச்சரம்மா' படத்தில் நாகேஷ் அவர்கள் ஓவியக் கலைக்கூடம் நடத்துவதாக வரும் ஒரு காட்சி. நடிகர் திலகத்தின் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' காவியத்தில் நடிகர் திலகம் அவர்கள் கட்டபொம்மனாக குதிரையின் மேல் கம்பீரமாக அமர்ந்து போர் புரியும் காட்சியை 'இடிச்சபுளி' செல்வராஜ் ஓவியமாய் வரைந்திருப்பது போன்ற காட்சி அது. அது மட்டுமல்லாது நாகேஷ் இடிச்சபுளியிடம்,"என்னடா வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை வரையச் சொன்னா சிவாஜியின் படத்தை வரைஞ்சிருக்கே!" என்று கேட்க அதற்கு இடிச்சபுளி அந்த ஓவியத்தை நாகேஷிடம் காட்டி "சிவாஜிதான் வீரபாண்டியக் கட்டபொம்மன்...வீரபாண்டியக் கட்டபொம்மன்தான் சிவாஜி... இவரைப் பாத்துதான் வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி இருப்பாரு என்று எல்லோரும் தெரிஞ்சுகிட்டாங்க" என்று நடிகர் திலகத்திற்கு புகழாரம் சூட்டுவார். அந்த ஓவியக் காட்சி இதோ நமது பார்வைக்கு.

மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்த 'டீச்சரம்மா' படத்தில் இடம் பெற்ற நம் கட்டபொம்மரின் ஓவியம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-1.jpg

அன்புடன்,
வாசுதேவன்

pammalar
5th September 2012, 02:58 PM
இன்று 5.9.2012 கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த செம்மல்
வ.உ.சிதம்பரனார் அவர்களின் 141வது அவதாரத் திருநாள்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/VOC2-2.jpg

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
5th September 2012, 03:07 PM
இந்தியத் திருநாட்டின் இரண்டாவது ஜனாதிபதியுடன் கலையுலக ஜனாதிபதி

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RadhaKrishnanSivaji-1.jpg

இன்று 5.9.2012 முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் 125வது பிறந்ததினம் மற்றும் ஆசிரியர் தினம்.

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

vasudevan31355
5th September 2012, 06:38 PM
செக்கிழுத்த செம்மலின் 141வது பிறந்தநாள்.

http://lh4.ggpht.com/-K7OcVzxzaNs/TOKpRYYoGkI/AAAAAAAAAGg/KYdwL8G2jkg/102.jpg

http://i.ytimg.com/vi/hkmf_NpwDQE/0.jpg

RAGHAVENDRA
5th September 2012, 07:03 PM
46 நாட்களில் 50000 த்தைத் தாண்டிய பார்வையாளர்கள் எண்ணிக்கை, 1097 பதிவுகள் .. பம்மலார் ... என்ன சொல்ல ....சாதனைத் திலகத்தின் சாதனைத் தொண்டரய்யா நீரும் வாசுதேவரும் ....

பாராட்டுக்கள்... கொண்டாடுவோம்.... திருவிளையாடல் பற்றிய செய்தியோடு ... ஹிந்து பத்திரிகையின் இணைய தளத்தில் வந்துள்ள பரம் - ஏ.பி.என். புதல்வர் பரமசிவன் - அவர்களின் பேட்டி - ஆங்கிலத்தில்...

http://www.thehindu.com/multimedia/dynamic/01199/09cp_thiruvilayada_1199799g.jpg



Classic gets a new life

The late Sivaji Ganesan was known for his numerous roles in mythological films. And the credit for casting the legend in such roles goes to the late director A. P. Nagarajan, who specialised in this genre. When APN passed away in 1977 at the age of 49, he was still at the zenith of his career. By then, he had already notched up an enviable 52 films, which included dubbed versions and remakes in Telugu.

Under APN’s direction, Sivaji acted in 16 films. Says C. N. Paramasivan (Param), APN’s son: “It was APN who was instrumental in casting N. T. Rama Rao as Lord Rama for the first time (all his earlier roles being that of Lord Krishna) in Sampoorna Ramayanam. He cast Sivaji as Bharathan, but gave equal importance to this character. In fact, APN had the unique distinction of having directed three chief ministers — NTR, MGR and Jayalalithaa — in his films.”

APN’s first film with Sivaji

Naan Petra Selvam was his first film with Sivaji as the hero, based on a story by APN himself. Under his direction, Sivaji also acted in Makkalai Petra Magarasi, Sampoorna Ramayanam, Navarathri, Thiruvilayadal, Saraswati Sabadam, Kandan Karunai, Thirumal Perumai, Thillana Mohanambal, Rajaraja Cholan, Gurudakshinai, Vilayattu Pillai, Thiruvarutselvar, Kulamagal Radhai, Paavai Vilakku and Vadivukku Valai Kaapu.

Thiruvilayadal

Following the tremendous response to the restored and re-released Sivaji-starrer Karnan, Param plunged into his father’s archives and unearthed the negatives of Thiruvilayadal from the storage facility at Gemini Films. “I found that APN, even in those days, had the foresight to retain the creative rights to the films he produced and directed, and sold only the 16 and 35mm screening rights. But, we faced a lot of difficulty restoring the films. Wear and tear, ageing and discoloured negatives and bad portions in the soundtrack were some of the problems we encountered. Nevertheless, I took it up as a challenge, as, I felt, post-Karnan, people were looking forward to watching some of Sivaji’s classics. Thiruvilayadal has been restored completely and will be a treat to watch,” says Param.

Stage to screen

Handling a legacy of the stature of APN’s work is difficult, but exciting, as Param found out. “Right from a young age, APN was fond of theatre and actively involved in Tamil plays in his hometown, Salem. It was during a staging of Nalvar that MAV Pictures’ M. A. Venu, a film producer from Madras, impressed with the story and the lead, approached APN to act in the film version. By then, APN was not just doing the lead in his dramas, but also writing the dialogues. Thus began his career as a movie actor in 1953. He acted in five films after which, he began to explore other areas of filmmaking — story and script writing, dialogues, cinematography — and apprenticed under several production companies. By the time he decided to direct films, he was thorough with almost every department of filmmaking, which resulted in flawless productions,” says Param.

Some believed that APN’s films became hits not because of his directorial capabilities but because of the star cast and the mammoth scale of his productions. “It was to silence them that APN went on to produce and direct movies such as Vaa Raja Vaa and Thirumalai Then Kumari with new faces. The former completed 100 days, proving many of his critics wrong,” notes Param.

Now that Thiruvilayadal is ready for its second innings in the more glamorous Cinemascope format, Param who is a businessman, says there are many other films of APN that merit restoration, not just because of their cast or grandeur but for their sheer social relevance. “Most of APN’s films had strong social messages and values. His forte was mythology and the way he went about designing the entire production, made them historic. Films such as Thiruvilayadal and Thillana Mohanambal had glamour, music, sets and grandeur, making them mass entertainers. Therefore, I am keen on restoring as many of his films as possible for future generations to enjoy,” says Param.

An interesting nugget

Writer and film historian Mohan V. Raman narrates an interesting episode that happened during the making of Thiruvilayadal, as described by Nagesh in his autobiography Siriththu Vaazha Vendum:

It was the shooting of Thiruvilayadal and a set was erected in Vasu Studios. Nagesh, who was asked to give a one-and-a-half day call sheet, had reported for work in his Dharumi get-up. Nagesh was to rush off to another shoot after this, as he was shooting for several films in a day. Sivaji was changing his make up for the poet’s role, and Nagesh knew it would take a little while. He asked APN if they could finish off any solo work — a scene where Nagesh was to rant about his misfortune. Nagesh ascertained from the cinematographer the area in which he could move around after APN outlined the scene, giving the actor the freedom to improvise. Nagesh recalled one Krishnaswamy Iyer who used to stand in front of the Mylapore temple tank and talk to himself loudly about how the world had fallen on bad times and so on. Nagesh decided he would similarly rant and just as he began, he heard two assistant directors discussing whether Sivaji would be ready before the lunch break; one said he would be there, while the other said he wouldn’t.....this inspired him to say ‘Varamattaan, varamattaan’ which became an important part of the hilarious scene in the film.


ஹிந்து இணையதளத்தில் அந்தப் பக்கத்திற்கான இணைப்பு (http://www.thehindu.com/arts/cinema/article3862116.ece)

RAGHAVENDRA
5th September 2012, 07:07 PM
டியர் வாசுதேவன்,
ஆசிரியர் தினத்தையொட்டித் தாங்கள் வழங்கியுள்ள செய்திகளும் குறிப்புகளும் தேச பக்தி என்னால் என்ன எப்படி பேணப் படவேண்டும் என்பதற்கான சான்றாக விளங்குகிறது. தாங்கள் டீச்சரம்மா படத்தில் இடிச்ச புளி செல்வராஜ் காட்சியைப் பற்றி சொல்லி அசத்துகிறீர்கள் என்றால் பம்மலார் வ.உ.சி. பற்றிய தகவல்களையும் நிழற்படங்களையும் தரவேற்றி தூள் கிளப்புகிறார். இரு தூண்களும் தாங்கி நிற்கும் போது வேறென்ன வேண்டும்.

பாராட்டுக்கள்.

அன்புடன்
ராகவேந்திரன்

mr_karthik
5th September 2012, 07:47 PM
அன்புள்ள பம்மலார் சார்,

தங்களுடைய பதிவில் "கார்த்திக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க" என்று தலைப்பிட்டு ஏதோ ஒன்றை அளித்திருக்கிறீர்கள். அது என்ன்வென்பதை அறிய கணினியில் எவ்வளவோ முயன்றும் ஓப்பன் ஆகவில்லை. அதனால் தாங்கள் அளித்திருப்பது என்னவென்பதை அறிய முடியவில்லை.

எதுவாயிருந்தபோதிலும், அதனை என் பெயரைக்குறிப்பிட்டு அளித்திருப்பதற்காக என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். (ஒருவேளை பின்னொருமுறை முயன்றால் ஓப்பன் ஆகக்கூடும் என்று நம்புகிறேன்).

Your wonderful postings for 'Teachers Day' and KappalOttiya Thamizhan's 141 birthday are super.

Thank you sir.

pammalar
6th September 2012, 04:27 AM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 11

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 28.1.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6564-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

5.9.2012 : கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 141வது ஜெயந்தி

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
6th September 2012, 04:38 AM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 12

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 11.2.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6565-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

5.9.2012 : கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 141வது ஜெயந்தி

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
6th September 2012, 04:54 AM
அன்புள்ள பம்மலார் சார்,

தங்களுடைய பதிவில் "கார்த்திக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க" என்று தலைப்பிட்டு ஏதோ ஒன்றை அளித்திருக்கிறீர்கள். அது என்ன்வென்பதை அறிய கணினியில் எவ்வளவோ முயன்றும் ஓப்பன் ஆகவில்லை. அதனால் தாங்கள் அளித்திருப்பது என்னவென்பதை அறிய முடியவில்லை.

எதுவாயிருந்தபோதிலும், அதனை என் பெயரைக்குறிப்பிட்டு அளித்திருப்பதற்காக என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். (ஒருவேளை பின்னொருமுறை முயன்றால் ஓப்பன் ஆகக்கூடும் என்று நம்புகிறேன்).

Your wonderful postings for 'Teachers Day' and KappalOttiya Thamizhan's 141 birthday are super.

Thank you sir.

டியர் mr_karthik,

தாங்கள் வாசு சாருக்கு எழுதிய பாராட்டுப் பதிவில், "இரத்தத்திலகம்(1963)" திரைக்காவியத்தின் 'பசுமை நிறைந்த நினைவுகளே' பாடலைக் குறிப்பிட்டுக் கேட்டு எழுதியிருந்தீர்கள்..! எனவே, அதன் வீடியோவைத்தான் அடியேன் 'தங்கள் அன்பு வேண்டுகோளுக்கிணங்க' எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தேன்.

தங்களுடைய பாராட்டுக்கு கனிவான நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th September 2012, 02:47 PM
லேட்டஸ்ட்

நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 5

நடிகர் திலகம் பற்றி நடிகர் நாசர்

சினிமா எக்ஸ்பிரஸ் : 1-15 செப்டம்பர் 2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6566-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6567-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6568-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

KCSHEKAR
6th September 2012, 05:21 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TryInvitationPg1.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TryInvitationPg2.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TryInvitationPg3.jpg

KCSHEKAR
6th September 2012, 05:35 PM
டியர் பம்மலார்,

ஆசிரியர் தினம், கப்பலோட்டிய தமிழன் பிறந்த தினத்தையொட்டி தஙகளின் சிறப்புப் பதிவுகள் & நடிகர் திலகம் பற்றி நடிகர் நாசர் - சினிமா எக்ஸ்பிரஸ் பேட்டி அருமை.

KCSHEKAR
6th September 2012, 05:36 PM
டியர் வாசுதேவன் சார்,,

ஆசிரியர் தினம், கப்பலோட்டிய தமிழன் பிறந்த தினத்தையொட்டி தஙகளின் சிறப்புப் பதிவுகள் அருமை.

yoyisohuni
6th September 2012, 07:29 PM
pammalar sar, nasar petti kannula thanniya vara vazhachidchu. nandri sar.

pammalar
7th September 2012, 12:12 AM
kaatu_poochi அவர்களே, மிக்க நன்றி..!

pammalar
7th September 2012, 12:14 AM
டியர் பம்மலார்.
சரியான தருணத்தில் சரியான நேரத்தில் சரியான ஆவணங்களைத் தருவதில் தங்களை மிஞ்ச ஒருவர் உளரேல். கலைவாணர் நினைவு நாளையொட்டி நடிகர் திலகத்தைப் பற்றிய அவருடை கருத்துக்கள் கொண்ட ஆவணத்தைப் பதிவிட்டு மேலும் மேலும் தங்கள் சிறப்பினை கூட்டிக் கொண்டே போகிறீர்கள். தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்

டியர் ராகவேந்திரன் சார்,

தங்களுடைய உளமார்ந்த பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th September 2012, 12:16 AM
லேட்டஸ்ட்

முத்தமிழ் வித்தகர் உதிர்ந்த முத்துக்கள் : 2

பொக்கிஷாதி பொக்கிஷம்

ஒரு திகிலான தனது வேட்டை அனுபவம் குறித்து 'ஹண்ட்டர்' சிவாஜி

மாலை முரசு : 23.8.2012
['மாலை முரசு' 7.10.1964 இதழிலிருந்து மறுபதிப்பாக வெளியிடப்பட்டது]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6529-1.jpg

குறிப்பு:
'மாலை முரசு' நாளிதழில், 1.8.2012 புதன் முதல், தினந்தோறும் இரண்டாம் பக்கத்தில், 'மாலைச் சுவடுகள்' என்கின்ற வரலாற்றுப் பகுதி இடம்பெற்று வருகின்றது. 'மாலை முரசு' நாளிதழ் வெற்றிகரமாக 51 ஆண்டுகளை பூர்த்தி செய்வதை முன்னிட்டு, இந்தப் புதிய சிறப்பு வரலாற்றுப் பகுதி இடம்பெறுகிறது. இந்தப்பகுதியில், கடந்த 50 ஆண்டுகளில், 'மாலை முரசு' நாளிதழில் வெளியான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள், மிகமிக சுவாரஸ்யமான செய்திகள் போன்றவை பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதில் நமது நடிகர் திலகம் தனது வேட்டை அனுபவம் குறித்து கூறிய கருத்துரை 23.8.2012 தேதியிட்ட 'மாலை முரசு'வில் வெளியாகியிருந்தது. அந்த அரிய பொக்கிஷமே மேலே இமேஜாக அளிக்கப்பட்டுள்ளது.

பக்தியுடன்,
பம்மலார்.

mr_karthik
7th September 2012, 11:30 AM
அன்புள்ள பம்மலார் சார்,

தங்கள் விளக்கத்துக்குப்பின், தங்கள் பதிவில் என்ன இடம்பெற்றிருந்தது என்பதை அறிந்துகொண்டேன். வாசுதேவன் அவர்களுக்கு முன்பு நான் அளித்த பதிலில் சுட்டியிருந்ததை நினைவில் வைத்திருந்து, இரத்தத் திலகம் பாடலை எனக்களித்தமைக்கு நன்றி. (அந்த பதிவை இன்னும் பார்க்க முடியவில்லை என்பதுதான் சோகம்).

60 ஆண்டுகளுக்கு முந்திய ஆவணங்களையும் என்னால் தரமுடியும், அதே சமயம் நேற்று வந்ததையும் சுடச்சுட தர முடியும் என்பதை நிரூபிக்கும் வண்ணம், இவ்வாரம் சினிமா எக்ஸ்பிரஸில் வெளியான, குணச்சித்திர நடிகர் நாஸரின் கட்டுரையைப் பிரசுரித்து அசத்தி விட்டீர்கள். சிறு வயதிலேயே நாஸர் அவர்கள் நடிகர்திலகத்தின் ஆதரவாளராக இருந்திருக்கிறார் என்ற செய்தி தேனாய் இனிக்கிறது.

சிற்சில சம்பவங்களைப் படிக்கும்போது, நமது நடிகர்திலகம் அவர்கள் படத்தில் மட்டும் நடித்துவிட்டு வெளியில் ரொம்ப வெளிப்படையாக இருந்திருக்காமல், மற்றவர்களைப்போல வெளியேயும் கொஞ்சம் நடித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. மிகப்பிரபலங்களின் பேச்சுக்களும் செயல்களும் பல தலைமுறைகளுக்கும் பேசப்படும் என்பதை உணர்ந்து, தன் காலத்தில் வாழ்ந்த சிலரின் செய்லபாடுகளைப்பார்த்தாவது, கொஞ்சம் சுதாரித்திருக்கலாமோ என்ற ஆதங்கம் தோன்றுகிறது.

தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் கப்பலோட்டிய தமிழனின் மறு வெளியீட்டு ஆவணங்களுக்கும், அனைத்துப் பதிவுகளுக்கும் மிக்க நன்றி.

mr_karthik
7th September 2012, 12:09 PM
அன்புள்ள பம்மலார் சார்,

நடிகர்திலகத்தின் வேட்டை அனுபவங்களின் தொடர்ச்சியாக, இன்று நீங்கள் தந்துள்ள பதிவு திடுக்கிட வைத்தது. நள்ளிரவில், நடுக்காட்டில், கும்மிருட்டில் எதிரே படமெடுத்து நின்ற 13 அடி பாம்பை சுட்டு வீழ்த்திய நம்மவரின் தைரியத்தை என்னவென்று சொல்வது?. படிக்கும்போதே பயத்தில் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. அரிய விஷய்த்தைப்பதிப்பித்த மாலைமுரசு இதழுக்கும், அதை அனைவரின் பார்வைக்கும் பறிமாறிய தங்களுக்கும் நன்றிகள்.

pammalar
7th September 2012, 09:06 PM
டியர் mr_karthik,

தங்களின் அன்பான பாராட்டுதல்களுக்கு எனது ஆனந்தமான நன்றிகள்..!

தங்கள் ஆதங்கத்திலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது, என்ன செய்வது..! திரு. சோ அவர்கள் நமது நடிகர் திலகத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் குறிப்பிடும் ஒரு விஷயம்தான் இத்தருணத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது. 'சிவாஜி அவர்கள் சினிமா காமிராவுக்கு முன்னால் மட்டுமே நடிக்கத் தெரிந்தவர். காமிராவை எடுத்துவிட்டால் அவருக்கு நடிக்கத் தெரியாது.' இதுதானே நடிகர் திலகத்தின் இயல்பு, மிக உயர்ந்த பண்பு. அதனால்தானே அனைவராலும் அவர் 'தெய்வப்பிறவி' எனப் போற்றப்படுகிறார்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th September 2012, 09:10 PM
http://i46.tinypic.com/2iaa3ia.jpg

டியர் esvee சார்,

"தில்லானா மோகனாம்பாள்(1968)" ஸ்டில்ஸ் தெவிட்டாத தேனமுது..!

"ஒரு யாத்ரா மொழி(1997)" மலையாளத் திரைக்காவியத்தினுடைய அவுட்டோர் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட அரிய ஸ்டில் அட்டகாசம்..!

அன்புடன்,
பம்மலார்.

KCSHEKAR
8th September 2012, 10:31 AM
Dear Pammalar,

மாலை முரசு : 23.8.2012 - Nadigarthilagam's hunting experience News - Very nice.

Thanks

ScottAlise
8th September 2012, 06:02 PM
Ennai Pol Oruvan is released in Delite theatre on Friday. Daily 2 shows.

It is re released 2nd time after release of Karnan

Pudhiya Paravai was re released last month

pammalar
8th September 2012, 07:59 PM
இந்த ஒரு பக்க கட்டுரைத் தகவலை படித்து முடிக்கையில்
நடிகர் திலகத்தின் நகைச்சுவை உணர்வை நினைத்து
எவராலும் சிரிக்காமலிருக்க முடியாது..!

வரலாற்று ஆவணம் : தினமலர் வாரமலர் : 19.1.1997
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6601-1.jpg

குறிப்பு:
நடிகர் திலகத்தின் "பொன்னூஞ்சல்", 15.6.1973 வெள்ளியன்று வெளியான திரைக்காவியம்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th September 2012, 08:17 PM
Dear Pammalar,

மாலை முரசு : 23.8.2012 - Nadigarthilagam's hunting experience News - Very nice.

Thanks

மிக்க நன்றி, சந்திரசேகரன் சார்..!

pammalar
8th September 2012, 08:19 PM
Ennai Pol Oruvan is released in Delite theatre on Friday. Daily 2 shows.

It is re released 2nd time after release of Karnan

Pudhiya Paravai was re released last month

Thanks for the info., Mr.ragul..!

pammalar
8th September 2012, 08:24 PM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :22

நடிகர் திலகத்தின் 67வது திரைக்காவியம்

பாவமன்னிப்பு [வெளியான தேதி : 16.3.1961]

வெள்ளிவிழாக் கொண்டாடிய மகாமெகாஹிட் காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 13.3.1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6602-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
8th September 2012, 09:13 PM
அற்புதமான விவரங்கள், நிகழ்ச்சிகள் என்று எல்லோரும் தந்து கொண்டே இருக்கிறீர்கள். என்னால் அலுவலகப்பணியில், இடையிடையே எப்போதாவது வந்து படித்து செல்ல முடிகிறதேயன்றி பங்களிக்க முடியவில்லை. மன்னிக்கவும். KCSekhar சார் என்னுடைய தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் தங்களுக்கு. பல நாட்கள் கழித்து நீண்ட நேரம் செலவழித்து ....

ஞாயிறு (26/08/12) இரவுக்காட்சியாக 'சன் லைப்' - ல் 'பலே பாண்டியா' பார்க்க நேர்ந்தது. இந்த படத்தைப் பற்றி பலர் அங்குலம் அங்குலமாக பல விதத்தில் அலசிவிட்டார்கள் இங்கே. எண்ணற்ற முறை நான் பார்த்து இருந்தாலும் இம்முறை பார்த்தபின் என் எண்ணத்தில் எழுந்தவைகள் இதோ...

திரு B. R. பந்துலு இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர். குறிப்பாக கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தனது அழுத்தமான முத்திரைப் படங்களை கொடுத்தவர். நடிகர் திலகத்துடன் இணைந்து பிரமாண்டமான, வித்தியாசமான, அற்புதமான பல படங்களை கொடுத்தவர். நடிகர் திலத்தின் முத்திரைப் படங்களாகவும் அவை அமைந்திருந்தன. இருவரும் பிரிந்து சென்றது தமிழ் திரையுலகிற்கே பேரிழப்பு.

பதினோரு நாட்களில் இப்படியொரு உயர்தரமான படத்தை கொடுக்க இப்படியொரு குழுவால் மட்டுமே சாத்தியம். (நடிகர் திலகம், நடிக வேள், தேவிகா, மெல்லிசை மன்னர்கள், கவியரசர், B. R. பந்துலு). நடிகர் திலகத்தின் நடிப்பை இந்த படத்தில் என்று இல்லை, எந்தப் படத்திலும் அற்புதம், அட்டகாசம், பிரமாதம், ஆஹா, ஓஹோ என்று நான் காட்சிவாரியாக சிலாகித்து சொல்வதில்லை. ஏனென்றால் 'சூரியன் கிழக்கில் தோன்றுகிறது. மேற்கில் மறைகிறது' என்ற கூற்றுகளில் எந்த தகவலும் (Information) இல்லையோ அது போல அந்த கூற்றுகளிலும் எந்த தகவலும் இருக்காது. இருந்தாலும் பலரைப்போல் என் மனதை மிகவும் கவர்ந்த சில காட்சிகள்... குறும்பு கொப்பளிக்கும் காதல் காட்சிகள் (தேவிகா அண்ணி ரசிகர் மன்றம் சாட்சி), 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' பாடல் காட்சிகள், அதுமுடிந்து மாமனாரை கண்டு அஞ்சுவது, அவரும் கபாலியும் வேறு வேறு ஆட்கள் என காணுவது, மற்றும் படத்தின் இறுதி காட்சிகளில் ரவுடி மருதுவும், விஞ்ஞானி சங்கரும் பாண்டியன் போல வேடம் போடுவதும் நகைச்சுவைக்கு உச்சக்கட்டங்கள். ரவுடி மருது, கபாலியிடம் 'பாஸ்', 'பாஸ்' என்றே அழைப்பதுவும், மதராஸ் தமிழிலேயே உரையாட வந்து தவிப்பதுவும், விஞ்ஞானி சங்கர் ஆங்கிலம் கலந்த கீச்சுத்தமிழில் உரையாட வருவதை தவிர்த்து பாண்டியன் போல இயல்பான தமிழ் பேச முயற்சி எடுப்பதையும் பின்னி எடுத்திருப்பார். படம் பார்ப்பவர்களுக்கு எந்த கதாபாத்திரம் எப்படி மாற முயற்சிக்கிறது என்பது தெளிவாக இருக்கும் என்பதால் நகைச்சுவை உற்சாகம் கரைபுரண்டோடும். இதற்கு பின்னர் வந்த பல படங்களில் கூட பலர் செந்தமிழில் உரையாடி இருப்பார்கள். ஆனால் 1962-ல் வந்த இந்தப்படத்தில் எல்லோரும் (ரவுடி மருது - மதராஸ் தமிழிலும், சங்கர் ஆங்கிலம் அதிகம் கலந்த தமிழிலும்) இயல்பான தமிழில் பேசி இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார்கள். உடன் வந்து கலக்கிய நடிகவேளை நான் குறிப்பிடாவிட்டால் எனது எண்ணவோட்டங்கள் முடிவு பெறாது. ஆனால் இவரை சிலாகித்து பேசுவதிலும் தகவல் இராது. ஆமாம் நடிகர் திலகமும், நடிக வேளும் மற்ற சிலரும் தங்கள் திரைப்படங்களில் சரியாக நடிக்கவில்லை என்று சொன்னால்தான் பிரமாண்டமான தகவல் இருக்கும். நகைச்சுவைக்கேற்ற நல்ல கதைதான். Logic-உம் சரியாகவே இருந்தது ஆனால்... பாலாஜி, தேவிகாவிற்கு முறை மாமன்/மாப்பிள்ளை. எனவே பாண்டியனுக்கு அண்ணன்/தம்பி முறை. அவரே பாண்டியனின் தங்கை வசந்தாவை மணப்பது சற்று சிரமமாய் இருந்தது. யாரோ அங்கே என்னை முறைப்பது தெரிகிறது. நிறுத்திகொள்கிறேன்.

இந்த படத்தின் பாடல்கள் தொலைக்காட்சி மற்றும் FM ரேடியோ நிகழ்ச்சிகளில் எங்கேயாவது ஒளிபரப்பாகிகொண்டேதான் இருக்கின்றன. பார்த்தால் அல்லது கேட்டால் சற்றே நிறுத்தி கண்டு அல்லது கேட்டு விட்டுத்தான் செல்ல முடியும் 'வாழ நினைத்தால்', 'அத்திக்காய் காய்', 'ஆதிமனிதன் காதலுக்குப்பின்', 'நான் என்ன சொல்லிவிட்டேன்', 'நியே உனக்கு என்றும்', 'யாரை எங்கே வைப்பது' போன்ற சாகா வரம் பெற்ற பாடல்களைப் பற்றி சொல்ல நான் இன்னும் பல கற்றுக்கொள்ளவேண்டும்.

'பலே பாண்டியா' என்ற சொற்றொடர் மஹாகவி பாரதி பிரயோகித்ததாக புதிய 'பலே பாண்டியா' (2010) திரைப்படத்தின் இயக்குனர் சித்தார்த் சந்திரசேகர் சொல்லி இருந்தார். இந்த புதிய படத்திலும் பாண்டியன் என்ற கதாநாயகன் படத்தின் துவக்கத்தில் தற்கொலை செய்ய முயற்சி செய்வது போன்ற காட்சி இருக்கும். அது மட்டுமே இரு படங்களுக்கும் தொடர்பு. மற்றபடி இது மறுவாக்கம் (ரீமேக்) அல்ல. பழைய புகழ் பெற்ற படங்களின் பெயர்களை வைக்காதீர்கள் என்று என்ன சொன்னாலும் தற்போதைய திரைப்படத்துறையினர் கேட்பதாகவே இல்லை. படத்தின் பெயரிலுருந்தே copy துவங்குகிறது. 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' பாடல் காட்சியை 'உள்ளதை தா' என்று அள்ளி கபளீகரம் செய்திருந்தார்கள். தனது திரைப்படங்களை (தங்கமலை ரகசியம், ஸ்கூல் மாஸ்டர் (கன்னட) ) மாற்று மொழிகளில் அந்த மொழிகளின் பிரதான நடிகர்களை வைத்து இயக்கிய திரு. B. R. பந்துலு இந்த படத்தை மற்ற மொழிகளில் எடுத்தாரா என தெரிந்தவர்கள் யாரேனும் கூறினால் நல்லது.

சமீபத்தில் கூட யாரோ ஒருவர் நடிகர் திலகத்தின் படங்களை அறிமுகம் செய்யுங்கள். அவருடைய 'கனத்த' கதையம்சம் நிரம்பிய படங்களை பின்பு பார்க்கிறேன். அதற்கு முன் 'light-hearted' படங்களை அறிமுகம் செய்யுங்கள் என்றபோது மற்றொருவர் இந்த படத்தைப் பாருங்கள் என்று கூறியது மிகவும் பொருத்தமானது. நடிப்பின் பாடங்களைக் கற்றுகொள்ள நல்லதோர் நகைச்சுவைப் படம்.

அன்புடன்.

பலே கல்நாயக்கரே, "பலே பாண்டியா" பதிவு பிரமாதம்..! ஒரு அருமையான ஆய்வு இழையோடும் தகவலார்ந்த பதிவை படித்த திருப்தி தங்களின் இந்தப்பதிவை வாசித்தபோது கிடைத்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் கலக்குங்கள்..!

எனக்குத் தெரிந்தவரை "பலே பாண்டியா"வை வேற்றுமொழிகளில் யாரும் பிரதி எடுத்ததாகத் தெரியவில்லை. தமிழைப்போல் நடிக்க அங்கேயெல்லாம் யார் இருக்கிறார்கள்..?!

pammalar
8th September 2012, 09:26 PM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :23

நடிகர் திலகத்தின் 67வது திரைக்காவியம்

பாவமன்னிப்பு [வெளியான தேதி : 16.3.1961]

வெள்ளிவிழாக் கொண்டாடிய மகாமெகாஹிட் காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 16.3.1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6603-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

Subramaniam Ramajayam
8th September 2012, 09:32 PM
IT was a saturday in sep 61 monday my wuarterly exams are starting i was standing in a big que on ladies side 166 ticket couners at sri krishna theatre mint for getting tikets to my mother and her friend for PALUM PAZAMUM PICURE RELEASE DAY. by 2pm got the tikets unfortunately my mother's friend who came to the theatre fell down unconcious by looking at the big crowds. then we sent back her home by a rickshaw mother wanted me to come for the movie Till then i was very regular visitor for sivaji movies but i have not seen fistday first shows. when the unexpected offer came to me iwas very happy on one side other side i have thefears
from my father at home. somehow mother convinced me and took me for the picure.
enjoyed the movie amidst very big allaparais and aarpattangal.
returned home got allaparais from father. my first experience of watching first day first show was tremdarous. that day i decided and succesfully enjoyed the first day first show watching almost till trisulam in 79. most memorale day in my life.

pammalar
8th September 2012, 10:10 PM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 11

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 28.1.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6564-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

5.9.2012 : கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 141வது ஜெயந்தி

பக்தியுடன்,
பம்மலார்.

திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 13

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 18.2.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6604-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
8th September 2012, 10:30 PM
IT was a saturday in sep 61 monday my wuarterly exams are starting i was standing in a big que on ladies side 166 ticket couners at sri krishna theatre mint for getting tikets to my mother and her friend for PALUM PAZAMUM PICURE RELEASE DAY. by 2pm got the tikets unfortunately my mother's friend who came to the theatre fell down unconcious by looking at the big crowds. then we sent back her home by a rickshaw mother wanted me to come for the movie Till then i was very regular visitor for sivaji movies but i have not seen fistday first shows. when the unexpected offer came to me iwas very happy on one side other side i have thefears
from my father at home. somehow mother convinced me and took me for the picure.
enjoyed the movie amidst very big allaparais and aarpattangal.
returned home got allaparais from father. my first experience of watching first day first show was tremdarous. that day i decided and succesfully enjoyed the first day first show watching almost till trisulam in 79. most memorale day in my life.

டியர் சுப்ரமணியம் ராமஜெயம் சார்,

பசுமை நிறைந்த நினைவுகளை அசைபோடும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடுஇணையே சொல்லமுடியாது. அதுவும் அந்நினைவுகள் சிறுபிராயத்தவையாக இருந்தால் கொள்ளைஇன்பம்தான்..! அதிலும் அவை நமது நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட நினைவுகளாக இருந்துவிட்டால் நமது மகிழ்ச்சியின் அளவுக்கு எல்லையேது..! தாங்கள் 'முதல் நாள்-முதல் காட்சி' பார்த்த 'முதல் நடிகர் திலகத்தின் காவிய'மான "பாலும் பழமும்" திரைக்காவியம் பற்றிய தங்களின் நினைவுப்பதிவு அருமை..! தாங்கள் தங்கள் அன்புத்தாயுடன் இக்காவியத்தை முதல் நாள்-முதல் காட்சி பார்த்தேதீரவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்ததனால்தான், தங்கள் அன்னையாரின் தோழியும் மயக்கமடைந்து பின் தெளிவாகி, திரையரங்கிலிருந்து அவர்கள் வீட்டிற்கு திரும்பிச் சென்றிருக்கிறார்கள். எல்லாம் நமது இதயதெய்வம் நடிகர் திலகத்தின் செயலேயன்றி வேறென்ன..!

நாளை [9.9.2012] 52வது ஆண்டு ஆரம்பவிழாவைக் காணும் "பாலும் பழமும்" திரைக்காவியம் பற்றி, அதன் 51வது தொடக்க ஆண்டான சென்ற ஆண்டின் செப்டம்பர் 9 அன்று, நமது எட்டாவது பாக நடிகர் திலகம் திரியில் அளிக்கப்பட்ட இக்காவியத்தினுடைய ரிலீஸ்மேளா பொக்கிஷங்களை மீண்டும் அனைவரும் கண்டுகளிக்க கீழ்க்காணும் சுட்டிகளைச் சொடுக்கவும்:

http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8&p=736801&viewfull=1#post736801

http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8&p=737195&viewfull=1#post737195

http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8&p=737401&viewfull=1#post737401

"பாலும் பழமும்" திரைக்காவியம், முதல் வெளியீட்டில் உருவாக்கிய பாக்ஸ்-ஆபீஸ் பிரளையம் பற்றி தெரிந்து கொள்ள கீழ்க்காணும் சுட்டிதனைச் சொடுக்கவும்:

http://www.mayyam.com/talk/showthread.php?9590-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-7&p=544924&viewfull=1#post544924

அன்புடன்,
பம்மலார்.

pammalar
9th September 2012, 03:39 AM
நடிகர் திலகத்தின் மேல் பெரு மதிப்பு வைத்தவரும் அவருடன் பல படங்களில் இணைந்து நடித்தவருமான மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் புகழ்பாடும் அமைப்பாக ஜெய் ஜாய் புதுப் பொலிவுடன் மீண்டும் இயங்க உள்ளது. துவக்க விழா வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது. அழைப்பிதழின் நிழற்படம் கீழே தரப்பட்டுள்ளது. அனைவரும் வருக.

http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/576991_494347043926155_1240483803_n.jpg

"துணிவே துணை" எனக் கொண்டு, இன்று [9.9.2012] துவங்கி, மீண்டும் வெற்றி பவனி வர இருக்கும் 'ஜெய்ஜாய்' அமைப்பிற்கு, இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்..!

"துணிவே துணை"யின் ஆவணப் பொக்கிஷம் 'பேசும் படம்' ஏப்ரல் 1976 இதழிலிருந்து....

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6605-1.jpg

"துணிவே துணை" முதன்முதலில் வெளியான தேதி : 13.4.1976.

Subramaniam Ramajayam
9th September 2012, 06:30 AM
"துணிவே துணை" எனக் கொண்டு, இன்று [9.9.2012] துவங்கி, மீண்டும் வெற்றி பவனி வர இருக்கும் 'ஜெய்ஜாய்' அமைப்பிற்கு, இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்..!

"துணிவே துணை"யின் ஆவணப் பொக்கிஷம் 'பேசும் படம்' ஏப்ரல் 1976 இதழிலிருந்து....

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6605-1.jpg

"துணிவே துணை" முதன்முதலில் வெளியான தேதி : 13.4.1976.


CONGRADULATIONS AND b BEST WISHES FOR LAUNCHING OF JAI JOY
TODAY One of the decent actors whoWAS away from all politics and a b rave person too. As i had close association with thengai srinivasan through him got introduced to jai. iravum pagalum was the first picture for both of them unfortunately the producer director joseph thalyath does not want to try two new faces at the same time hence thengai was removed. from then onwards jai was very affectionate to thengai. A TRUE gentleman thrughout his life. all the very best raghavender.

Richardsof
9th September 2012, 09:54 AM
A RARE STILL - MOOVENDHARGAL MATRUM JAISHANKAR - BALAJI - MN NAMBIYAR - AL SRINIVASAN AND ACTRESS SAVITHRI - SAROJADEVI - MNRAJAM

http://i46.tinypic.com/28vggpi.jpg

Subramaniam Ramajayam
9th September 2012, 11:47 AM
Essvee sir you are doing great jobs not only for mgr hub but also for nadigarthilagam hub. the above photograph is taken on the balcony of erstwhile shanthi theatre where
the photographs all leading tamil film stars were installed since inception of the theatre. iam not able to get answer how all the stars joined together at that spot or shanthi theatre can pammalar raghavender sarada or karik get the answer
really a very very rare still so far not published or known outside.

Richardsof
9th September 2012, 04:27 PM
ONE MORE

GROUP STILL-

http://i49.tinypic.com/73fleo.jpg

mr_karthik
9th September 2012, 05:26 PM
அன்புள்ள பம்மலார் சார்,

வெகு விமரிசையாக தாங்கள் துவங்கியிருக்கும் "பாவ மன்னிப்பு" படங்களின் ஆவணப்பொக்கிஷ வரிசை அற்புதம். மிக நேர்த்தியான தெள்ளத்தெளிவான விளம்பரப்பதிவுகள் அனைத்தும் சூப்பர். 100-வது நாள் மற்றும் வெள்ளிவிழா விளம்பரப் பதிவுகளைக்காண இப்போதே மனம் அல்லாடினாலும், அவை சிகரப்பொக்கிஷங்களாக இருக்கும் என்பதால் இடையில் வரவிருக்கும் பாவமன்னிப்பு திரைக்காவியத்தின் காவிய அணிவகுப்பை எதிர்கொள்ள காத்திருக்கிறோம்.

'பொன்னூஞ்சல்' படப்பிடிப்பின்போது அதன் தயாரிப்பாளர் திரு கே.எஸ்.குற்றாலிங்கம் அவர்களை சம்மந்தப்படுத்தி நடந்த சுவையான தகவல் பதிவு அருமை. நேற்றிரவு கூட அப்படத்தில் இடம்பெற்ற 'நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்' பாடலை ஒளிபரப்பினர். வெள்ளை வேஷ்டியும் முழங்கைவரை மடித்துவிடப்பட்ட சட்டையுமாக தலைவர் எவ்வளவு ஒல்லியாக அழகாக இருக்கிறார். பொன்னூஞ்சல் பாடல் காட்சிகளைப்பார்க்கும்போதெல்லாம் இவ்வளவு அழகான வெளிப்புறக்காட்சிகள் நிறைந்த இப்படத்தை ஏன் வண்ணத்தில் எடுத்திருக்கக்கூடாது என்று தோன்றும். இப்படத்துக்குபிறகு இரண்டு கருப்புவெள்ளைப்படங்களில் மட்டுமே (மனிதரில் மாணிக்கம், தாய்) தலைவர் நடித்தார்.

எங்கள் ஏரியா சுப்பிரமணியம் ராமஜெயம் அவர்கள் 'பாலும் பழமும்' உதய தினத்தை முன்னிட்டு அவரது முதல்காட்சி அனுபவத்தைப்பதித்ததும், சென்ற ஆண்டு இதே நாளில் நீங்கள் அள்ளி அள்ளித் தந்திருந்த பாலும் பழமும் ஆவணப்பதிவுகளுக்கான் இணைப்பைத்தந்து, மீண்டும் ஒரு ரீவிஸிட் செய்யவைத்து மனதுக்கு உற்சாகத்தை உண்டாக்கி விட்டீர்கள். அப்போது பார்த்திராத பலர் இப்போது பார்த்து மகிழ்ந்திடவும் ஒரு பெரும் வாய்ப்பாக வழங்கிவிட்டீர்கள்.

ஏற்கெனவே இவையெல்லாம், தங்களின் அளப்பரிய கைங்கர்யத்தால் எங்கள் சேமிப்பில் இருந்தபோதிலும், மீண்டும் தங்களின் முகவுரையோடும், நண்பர்களின் கமெண்ட்களோடும் படிப்பதே ஒரு தனி சுவைதான். அப்பக்கங்களில் பங்கேற்ற தனுஷ், பார்த்தசாரதி, சாரதா, மோகன் (ரங்கன்) போன்றோர் இப்போது மிஸ்ஸிங். நமது முரளி சார் கூட இப்போதெல்லாம் எப்போதாவதுதான் பதிவிடுகிறார். பழையபடி இவர்களனைவரும் முழுமூச்சில் பங்கேற்க வேண்டும் என்பது நமது ஆவல்.

கப்பலோட்டிய தமிழன் மீண்டும் தங்கத்தில் திரையிடப்பட்ட விளம்பரமும், 'துணிவே துணை' பட வண்ண விளம்பரமும் எங்களுக்கு அடிஷனல் போனஸ்.

பம்மலாரின் பதிவுகள் என்றாலே எங்களுக்கு சொல்லவொண்ணா சந்தோஷம்தானே...

ezuxsuc
9th September 2012, 11:02 PM
October 1
ADVANCE `HAPPY ACTOR'S DAY `

pammalar
10th September 2012, 03:29 AM
நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 6

நாடக சாம்ராட் பற்றி திரு.'கலாநிகேதன்' பாலு

பொக்கிஷாதி பொக்கிஷம்

வரலாற்று ஆவணம் : பொம்மை : அக்டோபர் 1995
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6607-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6608-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6609-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
10th September 2012, 03:55 AM
A RARE STILL - MOOVENDHARGAL MATRUM JAISHANKAR - BALAJI - MN NAMBIYAR - AL SRINIVASAN AND ACTRESS SAVITHRI - SAROJADEVI - MNRAJAM

http://i46.tinypic.com/28vggpi.jpg

டியர் esvee சார்,

மிகமிக அபூர்வமானதொரு நிழற்படத்தை அளித்து அசத்திவிட்டீர்கள்..! பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்..! இந்த ஸ்டில் என்னிடமும் உள்ளது.

சென்னை 'சாந்தி' திரையரங்கினுள்ளே எடுக்கப்பட்டுள்ள இந்த நிழற்படத்தில்,
நிற்பவர்கள் [இடமிருந்து வலமாக] : நாட்டிய விற்பன்னர் வழுவூர் ராமையா பிள்ளை, பாலாஜி, நம்பியார், மக்கள் திலகம், நடிகையர் திலகம், காதல் மன்னன், அபிநயசரஸ்வதி, என்.என்.ராஜம், பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன்.
முன் வரிசையில் : மக்கள் கலைஞர், நடிகர் திலகம்

நடிகர் திலகமும், மக்கள் திலகமும் ஏனைய கலைஞர்களோடு இணைந்திருக்கும் அந்த இன்னொரு குரூப் ஸ்டில்லும் அட்டகாசம்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th September 2012, 04:26 AM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :24

நடிகர் திலகத்தின் 67வது திரைக்காவியம்

பாவமன்னிப்பு [வெளியான தேதி : 16.3.1961]

வெள்ளிவிழாக் கொண்டாடிய மகாமெகாஹிட் காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 23.3.1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6612-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
10th September 2012, 04:40 AM
அன்புள்ள பம்மலார் சார்,

'பொன்னூஞ்சல்' படப்பிடிப்பின்போது அதன் தயாரிப்பாளர் திரு கே.எஸ்.குற்றாலிங்கம் அவர்களை சம்மந்தப்படுத்தி நடந்த சுவையான தகவல் பதிவு அருமை. நேற்றிரவு கூட அப்படத்தில் இடம்பெற்ற 'நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்' பாடலை ஒளிபரப்பினர். வெள்ளை வேஷ்டியும் முழங்கைவரை மடித்துவிடப்பட்ட சட்டையுமாக தலைவர் எவ்வளவு ஒல்லியாக அழகாக இருக்கிறார். பொன்னூஞ்சல் பாடல் காட்சிகளைப்பார்க்கும்போதெல்லாம் இவ்வளவு அழகான வெளிப்புறக்காட்சிகள் நிறைந்த இப்படத்தை ஏன் வண்ணத்தில் எடுத்திருக்கக்கூடாது என்று தோன்றும். இப்படத்துக்குபிறகு இரண்டு கருப்புவெள்ளைப்படங்களில் மட்டுமே (மனிதரில் மாணிக்கம், தாய்) தலைவர் நடித்தார்.

டியர் mr_karthik,

தங்களின் உச்சமான பாராட்டுதல்களுக்கு எனது உயர்ந்த நன்றிகள்..!

தாங்கள் குறிப்பிட்ட "பொன்னூஞ்சல்(1973)" காவியப் பாடலான 'நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்' பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் திலகத்தின் பாடல்களில் ஒன்று..! கருப்பு-வெள்ளையில், வேஷ்டி-சட்டையில் most handsome தலைவரை இப்பாடலில் தரிசிக்க முடியும்..!


தனுஷ், பார்த்தசாரதி, சாரதா, மோகன் (ரங்கன்) போன்றோர் இப்போது மிஸ்ஸிங். நமது முரளி சார் கூட இப்போதெல்லாம் எப்போதாவதுதான் பதிவிடுகிறார். பழையபடி இவர்களனைவரும் முழுமூச்சில் பங்கேற்க வேண்டும் என்பது நமது ஆவல்.


தங்களது கூற்றை அப்படியே வழிமொழிகிறேன்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th September 2012, 04:48 AM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 14

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 25.2.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6611-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
10th September 2012, 05:49 AM
சிவாஜி சினிமா : பத்திரிகை விமர்சனம் : 5

பொக்கிஷாதி பொக்கிஷம்

மன்னவன் வந்தானடி

தினமணி கதிர் : 1975
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6610-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
10th September 2012, 06:05 AM
டியர் ராகவேந்திரன் சார்,

கர்நாடக சங்கீத விற்பன்னர் திரு. சஞ்சய் சுப்ரமண்யம் அவர்கள் தனது வலைப்பூவில் நமது நடிகர் திலகம் பற்றி எழுதியிருந்தவற்றை இங்கே இடுகை செய்து சொல்லொணா சந்தோஷத்தை உண்டாக்கிவிட்டீர்கள்..!

"திருவிளையாடல்" மறுவெளியீடு குறித்து, அமரர் ஏ.பி.என்.னின் புதல்வர் திரு.சி.என். பரமசிவம் அவர்கள், 'The Hindu' நாளிதழில் அளித்த அருமையான பேட்டிக்கட்டுரையை பதிவிட்டும் அசத்திவிட்டீர்கள்..!

பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th September 2012, 06:07 AM
காவியக் காட்சிகள் : 5

பொக்கிஷாதி பொக்கிஷம்

சத்யம்(1976)

பேசும் படம் : மே 1976

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6613-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6614-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6615-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6616-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
10th September 2012, 03:20 PM
டியர் பம்மலார்,
பாலும் பழமும், பாவ மன்னிப்பு, சத்யம், ரிலீஸ், 100வது நாள் விளம்பரங்கள், பேசும் பட பக்கங்கள் என ஆவண அணி வகுப்பு அட்டகாசம். தங்களைப் பாராட்ட வேண்டும் ஆனால் எப்படி, புதியதாக ஒரு மொழியைக் கற்றுக் கொண்டு அதில் விற்பன்னராகி அதில் கவிதை எழுதும் அளவிற்குத் தேர்ச்சி பெற்று , அதன் பின் அந்த மொழியில் தங்களைப் பற்றிப் பாராட்டு ஒரு கவிதை எழுத வேண்டும் என்பதே ஆசை. எப்போது கற்பது, எப்போது எழுதுவது, ... காரணம் தங்களைப் பாராட்டத் தமிழில் எனக்கு வார்த்தையோ வாக்கியமோ நினைவுக்கு வரவில்லை.

தெரிந்த ஒரு வார்த்தை ... நன்றி ..
தெரிந்த மற்றோர் வார்த்தை - பாராட்டு ...

தங்களுக்கு அனைத்து ரசிகர்கள் சார்பிலும் நன்றியும் பாராட்டுக்களும்.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
10th September 2012, 03:23 PM
1973ல் சென்னை பிளாசாவில் பொன்னூஞ்சல் திரையிடப் பட்டிருந்த போது அந்த திரையரங்கின் நுழைவாயில் சூரியகாந்தி திரைப்படத்தில் இடம் பெறும். அதற்கு எதிர்த்தாற்போல் பொன் வண்டு பேனர் வைக்கப் பட்டிருந்தது. அதனுடைய நிழற்படங்கள் நம் பார்வைக்காக.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/PlazainSunFlower.jpg

நிழற்படம் சற்று மங்கலாகத் தோன்றுகிறது. முடிந்த வரை சரி செய்யப் பட்டுள்ளது. அதில் நாம் காணும் படத்தில் நுழைவாயிலின் வலப் புறத்தில் சிலர் நின்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அங்கே தான் அந்தப் பெரியவர் அமர்ந்திருப்பார். அவரிடம் தான் அனைத்து நடிகர் நடிகைகளின் ஸ்டில்களும் கிடைக்கும்.

பிளாசா திரையரங்கினுள் வைக்கப் பட்டிருந்த பொன்னூஞ்சல் பட போஸ்டர்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/PonnunjalPosterPlaza.jpg

பொன் வண்டு பேனர்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/PonVanduBanerMtRd.jpg

mr_karthik
10th September 2012, 04:30 PM
அருமைச்சகோதரர் பம்மலார் அவர்களைப்பற்றி, நமது ராகவேந்தர் சார் அவர்கள் முன்மொழிந்த பாராட்டுக்களை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அப்படியே வழிமொழிகிறேன்.

காரணம், அவர் சொல்லியிருக்கும் அனைத்தும் உண்மையைத்தவிர வேறில்லை.

பாவ மன்னிப்பு ஆவணப்புதையல்....
'சத்யம்' பேசும்படம் இதழின் நிழற்படத்தொகுப்பு....
நடிகர்திலகத்தின் நாடக ஈடுபாடு பற்றியும், அதற்காக திரைப்பட படப்பிடிப்புக்களில் அவருக்கு ஏற்பட்ட இடையூறுகள் பற்றியும் கலாநிகேதன் பாலு அவர்கள் பொம்மையில் எழுதிய கட்டுரையின் ஒரிஜினல் வடிவம்....

என அசத்துகிறார். அவருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தவிர எதைத்தரப்போகிறோம்?. எதைத்தந்தாலும் ஈடாகாது என்பதே உண்மை.

(இங்கே அவர் தந்துள்ள பாவமன்னிப்பு மற்றும் சத்யம் படங்களுக்கு ஓர் ஒற்றுமை உண்டு. முதலாவது அண்ணனோடு 'எங்க அண்ணி' ஜோடி சேர்ந்த முதல் படம். மற்றது அவ்விருவரும் ஜோடியாக நடித்த கடைசிப்படம். இவற்றுக்கிடையே இந்த ஜோடி நிகழ்த்திய பிரளயம்தான் எத்த்கையது. நேற்றிரவு 'முரசு' தொலைக்காட்சியில் 'ஓகோகோ ஓடும் எண்ணங்களே' பாடலையும், 'சொல்லடா வாய்திறந்து அம்மா என்று' பாடலையும் பார்த்தபோது அவ்விருவரின் கெமிஸ்ட்ரியைப்பார்த்து கண்களில் நீர் கோர்த்தது)

mr_karthik
10th September 2012, 05:33 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

அவ்வப்போது எதையாவது கொளுத்திப்போட்டு பழைய நினைவுகளில் மூழ்கடித்து விடுகிறீர்கள். இப்போது லேட்டஸ்ட் விஷயம் பிளாசா தியேட்டர், பொன்னூஞ்சல் பேனர்கள், வாசலில் அமர்ந்திருக்கும் பெரியவர்.

பேனருக்குப்ப்பின்னே தெரியும் 'சர்ச்'சுக்குப்பின்னால்தான் தியேட்டர். மிக நீண்ட நுழைவாயில். எல்லிஸ் ரோட்டிலிருந்து வருபவர்களுக்கு ஏதோ டிக்கட் கவுண்ட்டர் நுழைவாயில்போல இரண்டு சிறிய வாசல்கள். தியேட்டருக்கு வெளியிலேயே கவுண்ட்டர்கள் அமைந்திருந்ததால், முன்கூட்டியே கவுண்ட்டர்களின் கியூவில் போய் நின்று கொள்ளும் வசதி, தியேட்டருக்கு எதிரே விசாலாமான கிரவுண்ட் என்று பிளாசா தியேட்டரின் அமைப்பே ஒரு தனிரகம். எப்போது உள்ளே நுழைந்தாலும் அந்த முதியவரைத் தாண்டி சட்டென்று போய்விட முடியாதபடி அபூர்வ நிழற்படங்களை பார்வைக்கு வைத்து நம்மை சுண்டியிழுப்பார். ஒரு கணமேனும் நின்று பார்வையிட்டுச் செல்வது, தேவைப்பட்டால் வாங்கிக்கொள்வது வழக்கம்.

பிளாசா தியேட்டரில் ஒரு குறைபாடு என்னவென்றால், அந்தத்தியேட்டரில் எத்தனையோ நடிகர்திலகத்தின் படங்கள், மக்கள்திலகத்தின் படங்கள், மற்றவர்கள் படங்கள் சிலவும் 100 நாட்களுக்குமேல் ஓடி வெற்றியடைந்திருதாலும், அவற்றின் ஷீல்டுகளை மக்களின் பார்வைக்கு வைக்க மாட்டார்கள். அந்த வகையில் தேவி காம்பெளெக்ஸ் தியேட்டர்களை அடித்துக்கொள்ள முடியாது. (சாந்தியிலும் அவை இருந்தாலும் அங்கு முதல்வகுப்புக்கு பால்கனிக்குச் செல்வோர் மட்டுமே காண முடியும்).

தேவி காம்ப்ளெக்ஸில் நான்கு தியேட்டர்களிலுமே தனித்தனி கண்ணாடிக்கதவிட்ட ஷீல்டு கேலரிகள். அரங்குகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து படங்களின் ஷீல்டுகளும் எல்லா வகுப்பு ரசிகர்களும் பார்க்கும் வண்ணம் அழகுற அடுக்கி வைத்திருப்பார்கள். (இப்போதும் இருக்கிறதா?. நான் பார்த்து நாளாயிற்று).

அப்போதெல்லாம் திரைப்படங்களில் மவுண்ட் ரோடைக்காட்டும்போது, அங்கேயுள்ள தியேட்டர்களிலும் மற்றும் பொதுஇடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களையும் கட்-அவுட்களையும் காண்பிப்பது வழக்கம். பட்டிக்காடா பட்டணமாவில் வரும் 'ராஜா' கட்-அவுட் ரொம்ப பேமஸ். சிலநாட்களுக்குமுன் சகோதரர் வாசுதேவன் அவர்கள் இங்கு பதித்திருந்தார். முத்துராமன் நடித்த 'கண்ணம்மா' வண்ணப்படத்தின் டைட்டிலில் மவுண்ட்ரோட்டைக் காண்பிக்கும்போது குளோப் தியேட்டர் வாசலில் எம்.ஜி.ஆரின் 'நான் ஏன் பிறந்தேன்' கட் அவுட், பிளாசா தியேட்டர் வாசலில் மு.க.முத்துவின் 'பிள்ளையோ பிள்ளை' கட் அவுட், சாந்தியில் தலைவரின் 'பட்டிக்காடா பட்டணமா' கட் அவுட் ஆகியவற்றைக்காணலாம். நாணல் படத்தில் வரும் 'விண்ணுக்கு மேலாடை' பாடலின் இடையிசையில் காரில் பயணிக்கும் கேமரா, இடையிசை முடியும்போது அப்படியே திரும்பி, சாந்தி வாயிலில் இருக்கும் 'திருவிளையாடல்' பேனரில் போய் நிற்பதாகக் காண்பித்திருப்பார் கே.பாலச்சந்தர். அந்தக்காட்சிக்காகவே அப்பாடலின் அந்தக்கட்டம் வரும்போது கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பேன்.

நான் முதலிலேயே சொல்லவில்லையா, எதையாவது கொளுத்திப்போட்டு விட்டு புலம்ப விட்டுவிடுவீர்களென்று.

Subramaniam Ramajayam
10th September 2012, 05:49 PM
அருமைச்சகோதரர் பம்மலார் அவர்களைப்பற்றி, நமது ராகவேந்தர் சார் அவர்கள் முன்மொழிந்த பாராட்டுக்களை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அப்படியே வழிமொழிகிறேன்.

காரணம், அவர் சொல்லியிருக்கும் அனைத்தும் உண்மையைத்தவிர வேறில்லை.

பாவ மன்னிப்பு ஆவணப்புதையல்....
'சத்யம்' பேசும்படம் இதழின் நிழற்படத்தொகுப்பு....
நடிகர்திலகத்தின் நாடக ஈடுபாடு பற்றியும், அதற்காக திரைப்பட படப்பிடிப்புக்களில் அவருக்கு ஏற்பட்ட இடையூறுகள் பற்றியும் கலாநிகேதன் பாலு அவர்கள் பொம்மையில் எழுதிய கட்டுரையின் ஒரிஜினல் வடிவம்....

என அசத்துகிறார். அவருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தவிர எதைத்தரப்போகிறோம்?. எதைத்தந்தாலும் ஈடாகாது என்பதே உண்மை.

(இங்கே அவர் தந்துள்ள பாவமன்னிப்பு மற்றும் சத்யம் படங்களுக்கு ஓர் ஒற்றுமை உண்டு. முதலாவது அண்ணனோடு 'எங்க அண்ணி' ஜோடி சேர்ந்த முதல் படம். மற்றது அவ்விருவரும் ஜோடியாக நடித்த கடைசிப்படம். இவற்றுக்கிடையே இந்த ஜோடி நிகழ்த்திய பிரளயம்தான் எத்த்கையது. நேற்றிரவு 'முரசு' தொலைக்காட்சியில் 'ஓகோகோ ஓடும் எண்ணங்களே' பாடலையும், 'சொல்லடா வாய்திறந்து அம்மா என்று' பாடலையும் பார்த்தபோது அவ்விருவரின் கெமிஸ்ட்ரியைப்பார்த்து கண்களில் நீர் கோர்த்தது)


Nanbar kartik has reminded me about neelavanam. my mind rolls back to neelavanam release day as usual our house we send our maid to stand in ques by 1oam to what ever movie we want to go and later on we jion . we had a b ig team of peole who loves watching on the first day.
this time unlike palum paamum we could not get tikets at MAHARANI theatre. i was more tense time is moving fast as the song oadum ennangale was out earlier mounting tension started suddenly our maid was disappearing from the scene.
inside the thetre sivaji release has just going, lot of allaparais with wehisles heard outside.
there comes our maid with a tiket f saying thambi will be very upset if he doen't see movie firstday. she somehow manged to get one for me by approahing canteen people who are known to her.
marakka mudiyada suvaiyana anubhavam. thanks to LAKSHMY an honest person we have come across.

pammalar
11th September 2012, 02:40 AM
டியர் ராகவேந்திரன் சார்,

பழுத்த-அனுபவம் தோய்ந்த மூத்த ரசிகராகிய தங்களின் இதயபூர்வமான-உச்சமான பாராட்டுதல்களையெல்லாம் அடியேன் பெறுவது என் வாழ்வின் பேறு..! தங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள்..!

தாங்கள் பதித்த "பொன்னூஞ்சல்" பேனர், "பொன்னூஞ்சல்" போஸ்டர், "பொன்வண்டு" பேனர் மூன்றும் முக்கனி..!

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
11th September 2012, 02:52 AM
டியர் mr_karthik,

அடியேனின் ஆவணப்பதிவுகளைப் பாராட்டி, ஒவ்வொரு முறையும் தாங்கள் இதயத்தின் அடித்தளத்திலிருந்து வழங்கும் உச்சமான-உயர்வான பாராட்டுக்களுக்கு நான் எவ்வளவு நன்றிகளைத் தங்களுக்குத் தெரிவித்தாலும் போதுமானதாக இருக்காது. இருப்பினும், தங்களுடைய மனப்பூர்வமான பாராட்டுக்கு என்னுடைய இதயம் நிறைந்த நன்றிகள்..!

"பாவமன்னிப்பு" விளம்பரத்தையும், "சத்யம்" நிழற்படங்களையும் பதிவுகளாக அடியேன் நேற்று அளிக்கும்போது, பேரழகி தேவிகா அவர்களைக் குறிப்பிட்டு, இரண்டுக்கும் முடிச்சுபோட்டு தங்களிடமிருந்து நிச்சயமாக ஒரு பதில் பதிவு இன்று வரும் என்று நினைத்திருந்தேன். அப்படியே நடந்துவிட்டது. நமக்குள் என்னே ஒரு டெலிபதி எஃபெக்ட் சார்..!

'நமது ராகவேந்திரன் சார் எதையாவது கொளுத்திப்போட்டுவிட்டு புலம்பவைத்து விடுகிறார்' என்று எழுதியிருந்தீர்கள்..! எனக்கு உடனே நமது சிவாஜிபெருமான் புலவராக தருமியிடம் பேசும் "திருவிளையாடல்" ['நீ புலம்பியது என் காதில் விழுந்தது]' டயலாக்தான் ஞாபகத்திற்கு வந்தது. அதுசரி, நீங்கள் புலம்பினால் தகவல்களெல்லாம் அல்லவா கொத்துகொத்தாக வந்து விழுகின்றது. எந்தப் படத்தினுடைய எந்தக் காட்சியில் எந்தப் படத்தின் பேனர் வரும் என தங்கள் பதிவில் ஒரு reference guideஐயே அல்லவா தந்துவிட்டீர்கள்..!

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
11th September 2012, 05:03 AM
முத்தமிழ் வித்தகர் உதிர்ந்த முத்துக்கள் : 3

பொக்கிஷாதி பொக்கிஷம்

நடிப்புக்கலையில் என்றென்றும் தனக்குள்ள அசைக்கமுடியாத ஈடுபாடு குறித்து....

'பூ முகம்' இதழ் : 1987
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6623-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
11th September 2012, 05:26 AM
டியர் சந்திரசேகரன் சார்,

நமது நடிகர் திலகம் புகழ்பாடுகின்ற சுவர் விளம்பரங்களைக் காண்பதென்பது மிகமிக அரிதாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், நடிகர் திலகத்தின் 85வது ஜெயந்தி விழாவுக்காக, மலைக்கோட்டை மாநகரின் முக்கிய பகுதிகளிலுள்ள சுவர்களில், திருச்சி சிவாஜி பேரவை சார்பில், ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதாக தீட்டப்பட்டுள்ள அறிவிப்பு விளம்பரம், அறுசுவை விருந்தாகத் திருப்தியளித்தது. விழா அழைப்பிதழும் வழக்கம்போல் கனஜோர்..! திருச்சி சிவாஜி பேரவையைப் பொறுத்தமட்டில், 'A single man can make a difference' என்கின்ற கூற்று மிகச் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்..! அந்த 'சிங்கிள் மேன்' நமது அன்புச்சகோதரர் திரு. எஸ்.அண்ணாதுரை அவர்களைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும்..! திருச்சி சிவாஜி பேரவையின் செயலாளராக இதுவரை, கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று சிவாஜி ஜெயந்தி விழாக்களை, திரு. அண்ணாதுரை அவர்கள் மிகமிக வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளார். தற்பொழுது நான்காவது ஆண்டு ஜெயந்தி விழாவையும் மிகச் சிறப்பாக நடத்த பெருமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இறைவன் திருவருளாலும், நமது இதயதெய்வத்தின் அருளாசிகளாலும், திருச்சி சிவாஜி பேரவை செயலாளர் அண்ணாதுரை அவர்களின் பெருமுயற்சிகளாலும், அவருக்கு பக்கபலமாக இருந்து ஊக்கமளிக்கும் அன்புள்ளங்களின் ஒத்துழைப்பாலும், வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி விழா நிச்சயம் சிறப்பாக நடைபெறும். அதற்கு என் சார்பிலும், நமது நடிகர் திலகம் திரியின் சார்பிலும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th September 2012, 05:29 AM
மகாகவி பாரதியின் புகழ் ஓங்குக !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Bharathiyar1-2.jpg


தேசிய திலகம் நடத்திய தேசிய கவியின் விழா

வரலாற்று ஆவணம் : ஆனந்த விகடன் : 27.9.1959
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6626-1.jpg


'சிந்துநதியின்மிசை நிலவினிலே...'


http://www.youtube.com/watch?v=W1e-wtksDCw

இன்று 11.9.2012 அமரகவி பாரதியாரின் 91வது நினைவு தினம்.

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

KCSHEKAR
11th September 2012, 10:43 AM
டியர் பம்மலார்,

திருச்சி நிகழ்ச்சி குறித்த தங்களின் பாராட்டுக்கு நன்றி.

KCSHEKAR
11th September 2012, 10:45 AM
டியர் பம்மலார்,

தங்களுடைய அயராத முயற்சியால் திரியின் வேகம் சுவை குறையாமல் சென்றுகொன்டிருக்கிறது. கப்பலோட்டிய தமிழனாகட்டும், மகாகவி பாரதியாராகட்டும், எல்லா தேசிய தலைவர்களையும் நினைவுகொண்டு, நடிகர்திலகத்துடன் சேர்ந்து அதனைக் கொண்டாடும் தங்களின் தொடர்ந்த பதிவுகளுக்கு நன்றிகள், பர்ராட்டுக்க்ள்.

KCSHEKAR
11th September 2012, 10:46 AM
RANI - Weekly Magazine - 16-09-2012

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/RaniNews.jpg

mr_karthik
11th September 2012, 06:03 PM
இந்த வாரம் ஜெயா தொலைக்காட்சியில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சி இடம்பெற்று வருகிறது. தான் ஆரம்பகால நாடகவாழ்க்கையைத் துவங்கியதிலிருந்து நினைவலைகளை அளித்து வருகிறார்.

அவரைப்பற்றி தொலைக்காட்சிகளில் பேசுபவர்களும் சரி, வலைப்பூ எழுதும் பிரகஸ்பதிகளும் சரி அவர் திரைப்படங்களை இயக்குவதற்கு முன்பாக கதை,வசனம் மட்டும் எழுதி வேறொருவர் இயக்கிய படங்களைப்பற்றிச்சொல்லும்போது முதலில் மக்கள் திலகம் நடித்த தெய்வத்தாய் படத்தைச்சொல்லி, பின்னர் சர்வர் சுந்தரம் படத்தைப்பற்றிச் சொல்லி, அப்புறம் அப்படியே அவர் இயக்கிய படங்களுக்குத் தாவிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். எப்படி கே.பி.கதைவசனம் எழுதி பி.மாதவன் இயக்கத்தில் 64-ல் தெய்வத்தாய் வந்ததோ, அதுபோலவே கே.பி.கதை வசனம் எழுதி, அதே பி.மாதவன் இயக்கத்தில் 65-ல் 'நீலவானம்' என்ற நடிகர்திலகத்தின் படமும் வந்தது என்பது அந்த 'கடிவாளம் கட்டிய குதிரை'களுக்குத்தெரிவதில்லை, ஆகவே அப்படத்தைப்பற்றி அவர்கள் சொல்வதும் இல்லை.

நேற்று கே.பாலச்சந்தர் அவர்கள் அந்தக்குறிப்பிட்ட காலகட்டத்தில் தனது படங்களைப்பற்றிப் பேசியபோது, 'இவராவது நீலவானம் பற்றி சொல்கிறாரா அல்லது இவரும் ஜம்ப் ஆகி போகிறாரா' என்று கவனித்துக்கொண்டே இருந்தேன். தன்னுடைய 'நீர்க்குமிழி; படத்தைப்பற்றி சொல்லி முடித்தபின், நீலவானம் பற்றியும், அந்தப்படப்பிடிப்பின்போது நடிகர்திலகத்துடன் நெருங்கிப்பழகியது பற்றியும், அத்ற்கு முன்பாக தான் பார்த்த முதல்ஷூட்டிங் 1952-ல் பராசக்தி ஷூட்டிங்தான் என்றும் அழகாக, தெளிவாகச் சொன்னார். கேட்பதற்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. அதைத்தொடர்ந்து 'நீலவானம்' படத்தின் மிக முக்கியத் திருப்பமான காட்சியொன்றையும் ஒளிபரப்பினார்கள்.

நேற்றைய நிகழ்ச்சியில் 'நீலவானம்' பற்றிய விவரம் இடம்பெறப்போகிறது என்பது துவக்கத்திலேயே புலனாகி விட்டது. எப்படியென்றால், ஒவ்வொருநாள் எபிசோட் துவங்கும்போதும் அன்று இடம்பெறப்போகும் படத்திலிருந்து பாடலை டைட்டிலின்போது ஒளிபரப்புவார்கள். அதன்படி நேற்றைய டைட்டில் ஸாங் 'நீலவானம் படத்திலிருந்துதான்.

இப்போதாவது நீலவானம் பற்றி சில ஞான சூன்யங்களூக்கு, அரைவேக்காடுகளுக்கு புரிந்திருக்கும்.

eehaiupehazij
12th September 2012, 02:25 PM
after the stupendous success of karnan that ran for more over 150 days, after 48 years of its rerelease, it is time we take initiatives to get a life time achievement award for our soul NT with Oscar committee of Hollywood in the foreign actor's category. Since Pammalar Sir is the living thesaurus on NT's filmography, in tandem with YGMahendra and Sivaji family this effort may kindly be initiated. NT's karnan is no less than Benhur's Charlton Heston or the original James Bond Sean Connery who received this coveted life time achievement award globally.Even they do not have shown such a variety of acting. since NT happens to be a Tamilian, his prowess should not be shadowed from global limelight

Richardsof
12th September 2012, 05:26 PM
http://i49.tinypic.com/2q16jqv.jpg

Subramaniam Ramajayam
12th September 2012, 05:42 PM
after the stupendous success of karnan that ran for more over 150 days, after 48 years of its rerelease, it is time we take initiatives to get a life time achievement award for our soul NT with Oscar committee of Hollywood in the foreign actor's category. Since Pammalar Sir is the living thesaurus on NT's filmography, in tandem with YGMahendra and Sivaji family this effort may kindly be initiated. NT's karnan is no less than Benhur's Charlton Heston or the original James Bond Sean Connery who received this coveted life time achievement award globally.Even they do not have shown such a variety of acting. since NT happens to be a Tamilian, his prowess should not be shadowed from global limelight

Wonderful sivaji senthil sir LIFETIME ACHEIVEMENT OSCAR FOR NADIGARTHILAM LONG FELT DREAMS OF OUR FANS AND PEOPLE OF THE TAMIL PEOPLE.
LET US HOPE CONCERNED PEOPLE WILL TAKE THE ISSUE VERY VERY SERIOUSLY.

pammalar
12th September 2012, 08:11 PM
after the stupendous success of karnan that ran for more over 150 days, after 48 years of its rerelease, it is time we take initiatives to get a life time achievement award for our soul NT with Oscar committee of Hollywood in the foreign actor's category. Since Pammalar Sir is the living thesaurus on NT's filmography, in tandem with YGMahendra and Sivaji family this effort may kindly be initiated. NT's karnan is no less than Benhur's Charlton Heston or the original James Bond Sean Connery who received this coveted life time achievement award globally.Even they do not have shown such a variety of acting. since NT happens to be a Tamilian, his prowess should not be shadowed from global limelight

Dear sivajisenthil Sir,

My sincere thanks for your Himalayan compliments..!

'திறமை உள்ளவன் எங்கிருந்தாலும் தேசம் அவனிடம் ஓடும்' - கவியரசரின் வாக்கு என்றுமே பொய்க்காது.

Hollywood recognition & life-time oscar to our NT will definitely happen and that golden day is also not far of..!

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
12th September 2012, 08:29 PM
டியர் mr_karthik,

ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில், இயக்குனர் சிகரம் கே.பி. அவர்கள் அளித்த நேர்காணலின் திங்கட்சிழமை [10.9.2012] எபிஸோடை பற்றி மிக அழகாக பதிவு செய்திருந்தீர்கள்..! தாங்கள் குறிப்பிட்டதுபோல், "நீலவானம்(1965)" மிஸ் ஆகாமல் அவரது பேட்டியில் இடம்பெற்றது, நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி..! நேற்று செவ்வாய்க்கிழமை [11.9.2012], "மேஜர் சந்திரகாந்த்(1966)" திரைப்படத்தை இயக்கும்போது ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்களைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். இதில், இன்றைய தமிழக முதல்வர் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களைப் பற்றியும் அவர் புகழ்ந்துரைத்தது சுவையாக இருந்தது. 'மேடம் ஜெயலலிதா' என அவர் மிக யதார்த்தமாக கலைச்செல்வியை விளித்தது ஆச்சரியமாகவும் அதே சமயம் நன்றாகவும் இருந்தது..! வருகின்ற எபிஸோடுகளில் ஏதாவது ஒன்றிலாவது, "எதிரொலி(1970)" திரைப்படத்தைப் பற்றி நிறைய விஷயங்களைப் பதிவு செய்வார் என எல்லோரைப்போல நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th September 2012, 08:38 PM
நடிகர் திலகத்தின் பிறந்த நாளை யொட்டி சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் கௌரவிக்கப் படும் சாதனையாளர்கள் பட்டியலில் இந்த ஆண்டு தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். விவரம் விரைவில்.

சிவாஜி நினைவுப்பரிசை 1.10.2012 அன்று பெறப்போகும் அந்த மூத்த 'சிகர' இயக்குனர் யார் என்பதனை எமது அடுத்த பதிவில் தெரிந்து கொண்டு விடலாமே..!

pammalar
12th September 2012, 08:41 PM
நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 7

கலையுலக சக்கரவர்த்தி குறித்து இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர்

பொக்கிஷாதி பொக்கிஷம்

வரலாற்று ஆவணம் : ராணி : 19.8.2001
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6628-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6630-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
12th September 2012, 09:07 PM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்களின் மேன்மையான பாராட்டுக்கு எனது மென்மையான நன்றிகள்..!

கலைதெய்வத்தை வழிபடும் நடிகர் சாய்குமார் குறித்து லேட்டஸ்ட் 'ராணி' வார இதழில் வெளிவந்த அவரின் மினிபேட்டியுடன் கூடிய தகவல் மிக அருமை..! அதனை இங்கே இடுகை செய்தமைக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th September 2012, 09:16 PM
நடிகர் திலகத்துக்கு கௌரவம் : 6

ஃபிரான்ஸ் அளித்த அங்கீகாரம்

'செவாலியே' விருது விழா

22.4.1995 [சனிக்கிழமை]

எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் : சேப்பாக்கம் : சென்னை

தமிழக முதல்வர் கலைச்செல்வி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தலைமை வகிக்க, ஃபிரான்ஸ் நாட்டுத் தூதர் திரு. ஃபிலிப் பெடிட் அவர்கள், தங்கள் நாட்டின் மிகமிக உயர்ந்த விருதான 'செவாலியே' விருதை, உலக நடிகர் திலகத்துக்கு வழங்கினார். சிங்காரச் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, இந்தியத் திரையுலகமே திரண்டு வந்து, நமது சிங்கத்தமிழனை வாழ்த்தி, பெருமை தேடிக் கொண்டது. அந்தக் கோலாகலமான விழாவின் வரலாற்று ஆவணங்கள் தொடர்கின்றன:

பொக்கிஷாதி பொக்கிஷம்

வரலாற்று ஆவணம் : தினத்தந்தி குடும்பமலர் : 1995
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6624-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6625-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

lovedeva_pj
13th September 2012, 03:30 AM
டியர் esvee சார்,

மிகமிக அபூர்வமானதொரு நிழற்படத்தை அளித்து அசத்திவிட்டீர்கள்..! பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்..! இந்த ஸ்டில் என்னிடமும் உள்ளது.

சென்னை 'சாந்தி' திரையரங்கினுள்ளே எடுக்கப்பட்டுள்ள இந்த நிழற்படத்தில்,
நிற்பவர்கள் [இடமிருந்து வலமாக] : நாட்டிய விற்பன்னர் வழுவூர் ராமையா பிள்ளை, பாலாஜி, நம்பியார், மக்கள் திலகம், நடிகையர் திலகம், காதல் மன்னன், அபிநயசரஸ்வதி, என்.என்.ராஜம், பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன்.
முன் வரிசையில் : மக்கள் கலைஞர், நடிகர் திலகம்

நடிகர் திலகமும், மக்கள் திலகமும் ஏனைய கலைஞர்களோடு இணைந்திருக்கும் அந்த இன்னொரு குரூப் ஸ்டில்லும் அட்டகாசம்..!

அன்புடன்,
பம்மலார்.

very very very rare pic all the big leggends are there MGR Sivaji gemeni sarojadevi savitri
I wonder how it happend
only padmini is not there
can i know in which year it was happend
jayshankar also there so it may be +- in the year 1970

pammalar
13th September 2012, 04:07 AM
சிங்கத்தமிழன் குறித்த சீரிய கட்டுரைகள் : 2

நடிகர் திலகத்துக்கு 'செவாலியே' விருது வழங்கப்பட்டதையொட்டி வெளியான அருமையான கட்டுரை

பொக்கிஷாதி பொக்கிஷம்

வரலாற்று ஆவணம் : பிலிமாலயா : மே 1995
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6620-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6621-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6622-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
13th September 2012, 04:15 AM
டியர் வாசுதேவன் சார்,

23.8.2012 வியாழனன்று விஜய் தொலைக்காட்சியில், Super Singer Junior 3 நிகழ்ச்சியில் ஒளிபரப்பான, பதின்மூன்று வயதே நிரம்பிய செல்வன் கௌதமின் உருகவைக்கும் குரலில் ஒலித்த, "உள்ளத்தில் நல்ல உள்ளம்" பாடல் காணொளியை பதிவிட்டு - அரங்கினுள் இருந்தவர்களைப் போலவே - என்னையும் உணர்ச்சிப்பிழம்பாக ஆக்கிவிட்டீர்கள்..! அரங்கிலிருந்த பிரபல கர்நாடக சங்கீத வித்வான்கள் மற்றும் நல்ல இசை ரசிகர்கள் அத்தனை பேரையும் செல்வன் கௌதம் தன் gifted குரலால் கட்டிப்போட்டுவிட்டான். தாங்கள் குறிப்பிட்டதுபோல் அனைவரும் இந்தப்பாடலோடு ஐக்கியமாவதற்கு மூலகாரணம் நம் இதயதெய்வமேதான்..! I am spellbound after watching this video, Vasu Sir..! இதனை இடுகை செய்த தங்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள்..! திருநிறைச்செல்வன் கௌதம், வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று, வாழ்க வளமுடன்..! அவனது தேமதுரக்குரல் திக்கெட்டும் ஒலிக்கட்டும்..!

தலைவரின் "தச்சோளி அம்பு(1978)" ஸ்டில்களோடு திருவோணம் கொண்டாட்டம் : சூப்பர் சாய்ஸ்..!

"பந்தம்(1985)" 'கார்-ஸ்டெப்னி' காட்சியைத் தரவேற்றி எங்களையெல்லாம் இன்பப் பந்தாட்டம் ஆடவைத்துவிட்டீர்கள்..! No dialogues, Only expressions, that is possible for only our NT..! தாங்கள் இந்த அருமையான காட்சியை விவரித்திருந்த விதமும் வெகு அற்புதம்..!

நகைச்சுவை அரசர் கலைவாணர் அவர்களின் நினைவு தினப்பதிவாக, நமது கலைக்குரிசில் கலைவாணர் புகழ்பாடும் "அம்பிகாபதி(1957)" காவியக்காட்சியை அளித்தது சாலப்பொருத்தம்..!

சினிமா எக்ஸ்பிரஸ் : சித்ராலயா கோபு : கலாட்டா கல்யாணம் : அருமையான பதிவு..!

29.8.2012 தேதியிட்ட 'குமுதம்' வார இதழின் 'பேசும் படம்' பகுதியில் இடம்பெற்ற பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் அவர்களின் மினிபேட்டி மனதைக் கவர்ந்தது. இதற்குக் காரணகர்த்தாவான அந்த "சாணக்கிய சந்திரகுப்தா(1977)" அபூர்வ ஸ்டில் அசத்தல்..! உண்மையை உளப்பூர்வமாக ஒப்புக் கொள்ளும் Tollywoodன் 'நட சாம்ராட்'க்கு நமது உளங்கனிந்த நன்றிகள் உரித்தாகுக..!

வெள்ளித்திரை வேந்தரின் வெள்ளித்திரை நாயகியர் வரிசையில் நடிகை ஸ்ரீரஞ்சனி பற்றிய பதிவு அப்படியே 'ஸ்ரீ'த்துவமாக இருந்தது..!

"சரஸ்வதி சபதம்(1966)" - Crystal Clear ஆன வண்ண மெகா ஆல்பம் - வழங்க வாசுதேவனை விட்டால் வேறுயார்..?!

ஆசிரியர் தினத்துக்கு நமது பேராசிரியரின் ஸ்டில்ஸ் மற்றும் தங்களுக்கு மட்டுமா நம் அனைவருக்கும் பிடித்த "நூற்றுக்கு நூறு(1971)" 'உங்களில் ஒருவன் நான்' பாடல் என வழங்கி அகம் குளிரச் செய்துவிட்டீர்கள்..!

"கப்பலோட்டிய தமிழன்(1961)" திரைக்காவியத்தில் நமது தேசிய திலகத்தை ஒரு சில நொடித்துளிகள் கட்டபொம்மனாகக் காட்டுவார்கள்..! அதைப்போன்று செக்கிழுத்த செம்மலின் ஜெயந்தி நாளன்று சிதம்பரனார் நிழற்படங்களையும் அளித்து, "டீச்சரம்மா(1968)" மூலம் கட்டபொம்மனையும் காண்பித்துவிட்டீர்கள்..!

தங்களுக்கான இந்தப் பாராட்டுப்பதிவை தாமதமாக அளித்ததற்காக தங்களிடம் அடியேன் மன்னிப்பையும் கோருகிறேன்..!

எப்படியாயினும், நன்றி-பாராட்டு இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட சேவையல்லவா தங்களுடையது..!

தொய்வின்றித் தொடரட்டும் தங்களின் திருத்தொண்டு..!

[ஒரு சிறு இடைவெளிக்குப்பிறகு, ஒரு 'அவதார்' மாற்றத்தோடு, இங்கே 'தொபகட்டீர்' என குதிக்க இருக்கும் தங்களுக்கு, என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..!]

பாசத்துடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
13th September 2012, 06:46 AM
சிவாஜி நினைவுப்பரிசை 1.10.2012 அன்று பெறப்போகும் அந்த மூத்த 'சிகர' இயக்குனர் யார் என்பதனை எமது அடுத்த பதிவில் தெரிந்து கொண்டு விடலாமே..!

தெரிந்து கொண்டு விட்டோமே... பம்மலார்.... சூப்பர்...

இனி நிகழ்ச்சியின் விவரங்களுக்கு வருவோம் ...

அதிகார பூர்வமாக இன்னும் சில தினங்களில் வெளியான பின் உறுதி செய்து கொள்ள வேண்டிய தகவல்கள் ...

நிகழ்ச்சி- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா
நாள் - 01.10.2012
இடம் - சங்கீத வித்வத் சபை அரங்கம், டி.டி.கே. சாலை, சென்னை 18
நேரம் மாலை 6.30 மணி

விழாவின் சிறப்பு விருந்தினர் மேதகு ஆளுநர் ரோசய்யா அவர்கள்

விழாவில் செவாலியே சிவாஜி நினைவுப் பரிசைப் பெற இருக்கும் வித்தகர்கள்


இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர், கதாசிரியர்-இயக்குநர்
தவில் வித்வான் கலைமாமணி வலயப் பட்டி கே. சுப்ரமணியம்
கே.வி.ஸ்ரீநிவாசன், நடிகர்
பேராசிரியர் டி.எஸ்.நாராயணசாமி, ஊடகத்துறை வல்லநுர்
காஞ்சனா, நடிகை.

விழாவில் மேற்கூறிய திரைப்படக் கலைஞர்கள் நடிகர் திலகத்துடன் பணியாற்றிய படங்களிலிருந்து காட்சிகள் இடம் பெறும்.

அன்புடன்

ராகவேந்திரன்

RAGHAVENDRA
13th September 2012, 06:47 AM
பம்மலார் சார்,
மேலும் மேலும் அரிதான ஆவணங்களை அளித்து அநைவரையும் திக்குமுக்காடச் செய்து வருகிறீர்கள். பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்

eehaiupehazij
13th September 2012, 01:52 PM
dear pammalar sir. throughout my life time i was with the grief that NT could not even get the national award due to political reasons though we propagate that india is one country. Indian films they always mean only hindi films. As an ardent lover of world cinema too I have enjoyed almost all foreign films and observed the acting range of actors like Brando, Heston, Chaplin,Robert de Nero,.... dilip kumar, sanjeevkumar,ANR,... but no one is ever close to the range of our NT. The variety of roles he has given life are innumerous. Karnan tops all for the last 30 min during which NT shakes and stirrs all souls of fans, whoever may be without age bar also! Even I have an illusion that when I will be in my death bed, NT's Karnan scene in the climax only will come before my eyes as the last sight! it is time we collect his brilliant movies properly edited in sequence for forwarding to Hollywood oscar award for life time achievement which no other Indian actor deserves

mr_karthik
13th September 2012, 04:12 PM
அன்புள்ள சந்திரசேகர் சார்,

மலைக்கோட்டை மாநகரில் நடைபெற இருக்கும் நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழாவை உள்ளடக்கிய முப்பெரும் விழா பற்றிய அழைப்பு இதழ் பக்கங்களும், அதையொட்டி திருச்சி மாநகரின் சுவர்களில் வரையப்பட்டு நகரின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் கண்கவர் வண்ண சுவர் விளம்ரங்களும் அருமையோ அருமை. நண்பர்கள் இங்கே குறிபிட்டதுபோல, டிஜிட்டல் பேனர் யுகமாகிவிட்ட இந்நாளில் சுவரில் வண்ண விளம்பரங்களைக் காணுவதே அரிதான வேளையில், இவை மனதுக்கு இதமளித்து, கடந்த காலங்களுக்கு இட்டுச்செல்கின்றன.

நடிகர்திலகத்தின் மீது நடிகர் சாய்குமார் கொண்டுள்ள பக்தியின் வெளிப்பாடாக அமைந்த கட்டுரைப்பக்கம் கணஜோர். அவர் 2010-ல் வெளியான இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்திலும் ஒரு பிரதான ரோலில் (வில்லன் நாஸரின் வலது கை) நடித்திருந்தார். அவர் குறித்த ராணி இதழின் ஏட்டை அனைவரின் பார்வைக்கும் அளித்த தங்களுக்கு நன்றி.

mr_karthik
13th September 2012, 04:16 PM
அன்புள்ள பம்மலார் சார்,

தங்களின் அபூர்வ ஆவணப்பதிவுகள் வழக்கம்போல மிகவும் அருமை.

பாரதி நினைவு நாளையொட்டி பாரதி வேடத்தில் நம் தலைவரின் ஸ்டில், சிந்துநதியின்மிசை பாடலின் காணொளி மற்றும் நடிகர்திலகம் நடத்திய பாரதி நினைவுநாள் விழாவின் ஆனந்தவிடன் ஆவணம் அனைத்தையும் ஒரே பதிவில் தந்து அசத்தி விட்டீர்கள்.

இயக்குனர் சிகரம், நமது நடிகர்திலகத்தைப்பற்றி ஆகஸ்ட் 2001-ல் (தலைவர் மறைந்த சில தினங்களில்) அளித்திருந்த விவரங்கள் அடங்கிய 'ராணி' வார இதழ் பக்கங்கள் வெகுஜோர். இருவருக்குமிடையே கலகம் மூட்டிவிட சிலர் முயன்ற போதிலும் அவற்றை முறியடித்து இறுதிவரை சிறந்த நட்புடன் வாழ்ந்ததன் மூலம், இருவருமே நல்ல திறமையாளர்கள் மற்றும் தேர்ந்த அனுபவசாலிகள் என்பதை நிரூபித்தனர்.

செவாலியே விழா ஆவணங்களின் தொடர்ச்சியாக இன்று 'தினத்தந்தி' குடும்ப மலர் பக்க இதழ்களையும், 'பிலிமாலயா' இதழின் புகழுரையுடன் கூடிய பக்கங்களையும் ஒருசேர அளித்து மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்துள்ளீர்கள்.

இவைபோக, இதுவரை கேள்விப்பட்டிராத 'பூ முகம்' என்ற பத்திரிகையில் இருந்துகூட ஒரு பதிவைத்தந்து ஆச்சரியப்பட வைத்துள்ளீர்கள். (தங்கள் கண்ணில் படாத பத்திரிகைகள் எதுவும் இன்னும் தமிழ்நாட்டில் இருக்கின்றனவா?).

நாட்டில் பருவ மழை பொய்த்தாலும், நமது திரியில் ஆவண மழை பொய்க்காது என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்து வரும் தங்களுக்கு பாராட்டுக்கள் நன்றிகள்..

mr_karthik
13th September 2012, 04:48 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

தாங்கள் புதுப்பொலிவுடன் மீண்டும் வந்து கலக்கப்போகிறீர்கள் என்பதை பம்மலார் அவர்களின் பதிவின்மூலம் அறிந்து மிகவும் மகிழ்ச்சி. 'சரஸ்வதி சபதம்' மெகா பதிவுக்குப்பின் தங்களின் பதிவைக்காண முடியவில்லையென்று ஏங்கியிருந்தோம். சூப்பர் பதிவுகளோடு மறுபடியும் தங்கள் அதிரடியைத் தொடருங்கள்.

mr_karthik
13th September 2012, 05:43 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

இந்த ஆண்டு நடிகர்திலகம் பிறந்த நாள் விழாவில் விருது வழங்கப்படவிருக்கும் கலைஞர்களின் பட்டியலை அளித்ததற்கு நன்றி. நமது திரியைப் பார்த்து, படித்து, பரவசப்பட்டு வரும் எண்ணற்றோரின் வேண்டுகோளான, 'இந்த விழாவில் நமது பம்மலார் அவர்கள் மேடையேற்றப்பட்டு, விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கை முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறதா என்பதனை அறிய விரும்புகிறோம். காரணம் நடிகர்திலகத்தின் கடந்த கால சாதனைகள் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் ஆதாரப்பூர்வமாக எடுத்துச்சொல்லப்பட்டிருப்பதன் மிக முக்கிய காரணம் நமது பம்மலார் அவர்களின் தொண்டு என்பது மிகையல்ல. அவர் உரிய முறையில் கௌரவிக்கப்பட இவ்விழாவே சரியான ஒன்று என்பது பலரது கருத்தாகும்.

இதைத்தங்களிடம் சொல்லக்காரணம், இங்கிருக்கும் எல்லோரையும் விட தாங்களே திரு ஒய்.ஜி.மகேந்திரன் அவர்களிடமும், நடிகர்திலகத்தின் குடும்பத்தாரிடமும் நெருக்கமானவர். எனவேதான் இதில் தங்கள் பங்கு அதிகமாக இருக்க வேண்டுமென்பது அனைவரின் விருப்பம். நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறோம்.

பிளாசா தியேட்டர் பேனர் பற்றிய தங்கள் பதிவைப்படித்ததும், தங்களுக்காகவே பிளாசா தியேட்டர் பற்றிய பதிவை எழுதியிருந்தேன். ஏனென்றால், நாம் இருவரும் அங்கு சற்று அதிகமாகவே உருண்டு புரண்டவர்கள். அந்த இடங்களை இப்போது அதிகமாகவே மிஸ் பண்ணுகிறேன்.

'ஜெய்-ஜாய் நைட்ஸ்' பற்றிய தங்களின் விவரமான பதிவை மக்கள் கலைஞர் ஜெய் திரியில் எதிர்பார்க்கிறேன். நண்பர் hattori_hanzo தந்துள்ள புகைப்பட இணைப்பில் பார்த்தபோது, ஜெய்யுடன் பணியாற்றிய பழைய கலைஞர்கள் நிறையப்பேர் நிகழ்ச்சிக்கு வந்திருப்பது தெரிகிறது.

தங்கள் அனைத்து பதிவுகளுக்கும் நன்றி.

RAGHAVENDRA
13th September 2012, 11:03 PM
டியர் கார்த்திக்,
தங்களுடைய பதிவில் உள்ள உணர்வு நம் அனைவருடைய ஒருமித்த கருத்தே என்பதில் ஐயமில்லை. பம்மலார் உரிய முறையில் கௌரவிக்கப் படுவார் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அது எங்கே எப்போது எவ்வாறு என்பதெல்லாம் காலம் நிச்சயம் ஏற்கெனவே நிச்சயம் செய்திருக்கும். அத்தருணம் வரும்போது யார் தடுத்தும் அது நிற்காது. எனவே பொறுத்திருப்போம் என்பதே தற்போதைக்கு என்னுடைய நிலைப்பாடு.

ஜெய் ஜாய் நிகழ்ச்சியைப் பொறுத்த மட்டில் அது மிகச் சிறப்பாக நிறைவேறியது உள்ளபடியே மன நிறைவைத் தரும் விஷயமாகும். முடிந்த வரை அத்திரியில் விரிவாக எழுத முயல்கிறேன்.

பிளாசா திரையரங்கு ... என்ன சொல்ல .... மறக்கவொண்ணா நாட்கள்... எத்தனை படங்கள்.... எத்தனை நாட்கள் .... இதற்கெனத் தனித் திரியே துவங்கலாம். அந்த அளவிற்கு நினைவுகள் அலை மோதும் பசுமையான நிகழ்வுகள்...

தங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் உளமார்ந்த நன்றி.

அன்புடன்
ராகவேந்திரன்

mr_karthik
14th September 2012, 02:16 PM
நேற்றிரவு இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள், தனது 'திரும்பிப்பார்க்கிறேன்' நிக்ழச்சியில் தனது அனுபவி ராஜா அனுபவி மற்றும் பூவா தலையா படங்களைப்பற்றிக் குறிப்பிட்டபின், நாம் எதிர்பார்த்திருந்த, நடிகர்திலகத்தை அவர் இயக்கிய ஒரே படம் "எதிரொலி" பற்றிக் குறிப்பிட்டார். (அவரது பேச்சுக்கு நடுவே, எதிரொலி படத்திலிருந்து இரண்டு கிளிப்பிங்ஸ் காட்டப்பட்டன).

"இப்படம் துவங்கிய முதல் நாளே நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் என்னைத் தனியே அழைத்துச்சென்று, 'இதோபார் பாலு, இந்தப்படத்துக்கு நீதான் டைரக்டர், நான் நடிகன் மட்டுமே. என்னிடம் எப்படி நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ அதைத் தயங்காமல் கேள். நீ சொல்கிறபடி நடிக்க நான் தயார். சிவாஜியிடம் எப்படிக் கேட்பது என்று தயங்காதே. நீ படத்தை எப்படி வேண்டுமானாலும் எடு. அதில் நான் தலையிடவே மாட்டேன்' என்று உறுதியளித்தார். அவரது இந்த வார்த்தை எனக்கு பெரிய எனர்ஜியைக்கொடுத்தது.

நான் விருப்பப் பட்டபடியெல்லாம் தயங்காமல் நடித்துக்கொடுத்தார். ஆனால் கதைக்குத்தேவையான அளவு மட்டுமே அவரைப் பயன்படுத்திக்கொண்டு, அவரது முழுத்திறமையையும் உபயோகப் படுத்திக்கொள்ளத் தவறிவிட்டேன் என்பது பின்னர் தெரிந்தது. படம் முழுவதும் அவரை குற்ற உணர்வுள்ள ஒருவராக மட்டுமே காண்பித்தது நான் செய்த குறைபாடு. இருந்தாலும் நான் எதிர்பார்த்தபடியே மிக நன்றாக நடித்திருந்தார் என்பதில் எனக்கு பூரண திருப்தி.

நான் இயக்கிய மிகச்சிறந்த படங்களில் எதிரொலியும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை".

(இயக்குனர் சிகரம் கே.பி.அவர்களே...., இந்த ஒரு வார்த்தை போதும் எங்களுக்கு).

KCSHEKAR
14th September 2012, 02:19 PM
Dear Karthik Sir,

Thank you for your appreciation regarding Trichy function.

Richardsof
15th September 2012, 05:39 AM
14-1-1969 pongal day - daily thandhi paper

nadigar thilagam in uyarndha manidhan - advt;

pic forwaded by tirupur ravichandran


http://i49.tinypic.com/4kfa60.jpg

RAGHAVENDRA
15th September 2012, 10:36 AM
Dear EsVee Sir,
உயர்ந்த மனிதன் விளம்பரத்தின் நிழற்படத்தை உயர்ந்த உள்ளத்தோடு வழங்கிய திருப்பூர் ரவிச்சந்திரன் சாருக்கும் அதனை இங்கே பதிவிட்ட தங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
ராகவேந்திரன்

Thomasstemy
15th September 2012, 01:05 PM
Excellent !

RAGHAVENDRA
15th September 2012, 08:49 PM
சென்னை சாந்தி திரையரங்கு கிட்டத் தட்ட அனைத்து சிவாஜி ரசிகர்களுக்கும் நிச்சயம் பரிச்சயமாகியிருக்கும் , குறிப்பாக அந்தக் காலத் தலைமுறையினர் சென்ற தலைமுறையினருக்கு அதனுடைய பழைய வடிவம் பசுமையாக நினைவிருக்கும். அந்தக் காலத்தில் அதனுடைய தோற்றத்தை இன்றைய தலைமுறையினர் அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். அவர்கள் நீலவானம் திரைப்படத்தைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் நம் அவர்களுக்காகவும் நமக்கு ஒரு நினைவூட்டலாகவும் நீலவானம் திரைப்படத்தில் இடம் பெற்ற சாந்தி திரையரங்கின் தோற்றங்களை நிழற்படங்களாக இங்கே நாம் காண்போம்.

நுழைவாயிலில் ஒரு அருமையான நீரூற்று அமைக்கப் பெற்றிருந்தது. மாலை வேளைகளில் அதனுடைய நீர் வீழ்ச்சி ரம்மியமாக இருக்கும்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/BLUESKYSHANTI01.jpg

நடிகர் திலகம் காட்சியளிக்கும் இந்த நிழற்படத்தில் அவருக்குப் பின்னால் தெரிவது உயர் வகுப்பு மற்றும் பால்கனிக்கு செல்லும் நுழைவாயில்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/BLUESKYSHANTI02.jpg

கார் பார்க்கிங் - இது இன்றும் அப்படியே உள்ளது. மேலே உள்ள அழகிய செடிகளின் தோற்றம் மட்டும் மிஸ்ஸிங்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/BLUESKYSHANTI03.jpg

நடிகர் திலகத்திற்கும் ராஜஸ்ரீக்கும் நடுவில் தென்படும் அந்தக் கதவு உள்ளே லாபிக்கு செல்லும் வழி. அந்த லாபியில் தான் அந்தக் காலத்தில் பிரபலமான தமிழ் நடிகர் நடிகைகளின் படங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கும்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/BLUESKYSHANTI04.jpg

நடிகர் திலகத்தின் பின்னால் தெரிவது பார்வையாளர் கேலரி

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/BLUESKYSHANTI05.jpg

இந்தப் படத்தில் நடிகர் திலகத்தின் பின்னால் தெரியும் டிஸ்ப்ளே கூண்டுக்குள் தான் ரசிகர்களின் அட்டை பதாகைகள் அல்லது படத்தின் ஸ்டில்கள் இடம் பெறும்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/BLUESKYSHANTI06.jpg

திரையின் முழுப் பாதுகாப்பிற்காக இரு மட்ட திரைச் சீலை அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/BLUESKYSHANTI07.jpg

pammalar
15th September 2012, 09:35 PM
லேட்டஸ்ட்

நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 8

தேசிய திலகம் பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

துக்ளக் : 19.9.2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTPammalar1/GEDC6631-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTPammalar1/GEDC6632-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
15th September 2012, 10:02 PM
டியர் சுவாமி,
இந்த வார துக்ளக் இதழ் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். இதில் இளங்கோவன் அவர்கள் கூறியுள்ளது நடிகர் திலகத்தின் தூய்மையான அரசியலுக்கு ஒரு சிறந்த உதாரணம். இன்னும் வர இருக்கும் வாரத்தில் இடம் பெறக் கூடிய செய்திகள் இதனை மேலும் உறுதிப் படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்ப்போம். ஏற்கெனவே நடிகர் திலகத்தின் அரசியலைப் பற்றி அடியேனுடைய பதிவுகளை இந்த துக்ளக் இதழில் வெளிவந்துள்ள இளங்கோவனின் கட்டுரை அங்கீகரிப்பதாக உள்ளது. அப்போது நாம் நடிகர் திலகம் என்கிற பரிமாணத்தையும் தாண்டி அவர் எவ்வளவு சிறந்த தலைவராக இருந்தார் என்பதையும் உண்மைக்கும் நேர்மைக்கும் நம்பிக்கைக்கும் மிகச் சிறந்த உதாரணமாக அவர் எப்படி வாழ்ந்து காட்டினார் என்பதையும் புரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் சிவாஜி ரசிகர்களை நெஞ்சை நிமிர்த்தி நடக்க வைத்த சிறந்த தலைவர் என்பதையும் அனைத்து சிவாஜி ரசிகர்களும் உணர்ந்து கொள்ளவும் முடியும்.

தங்களுக்கு என் உள்ளத்தின் அடித்தளத்திருந்து எழும் நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன்.

அன்புடனும்
சிவாஜி கணேசன் என்கிற சிறந்த தலைவரின் தொண்டர் என்கிற இறுமாப்புடனும்
ராகவேந்திரன்

pammalar
15th September 2012, 10:46 PM
இன்று 15.9.2012 முன்னாள் தமிழக முதல்வர்
பேரறிஞர் அண்ணா அவர்களின் 104வது பிறந்ததினம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTPammalar1/Anna1-1.jpg

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
16th September 2012, 03:57 AM
நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 9

உலகப் பெருநடிகர் பற்றி பேரறிஞர் அண்ணா

பொக்கிஷாதி பொக்கிஷம்

அண்ணா அவர்கள் தலைமை தாங்கும் "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடக விளம்பரம்

வரலாற்று ஆவணம் : நம் நாடு : 23.9.1957
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6635-1.jpg


'கட்டபொம்மன்' கணேசன் குறித்து அறிஞர் அண்ணா புகழுரை

வரலாற்று ஆவணம் : நம் நாடு : 25.9.1957
[அன்புகூர்ந்து பதிவிறக்கம் செய்து படிக்கவும்]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6636-1.jpg

15.9.2012 : முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களது 104வது பிறந்ததினம்.

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
16th September 2012, 04:10 AM
டியர் mr_karthik,

தாங்கள் என்மீது கொண்டுள்ள அபரிமிதமான அன்புக்கும், அளித்துவரும் எல்லையில்லா ஆதரவுக்கும், தொடர்ந்து வழங்கி வரும் இதயம் நிறைந்த உச்சமான பாராட்டுதல்களுக்கும், எனது இருகரம் கூப்பிய சிரந்தாழ்த்திய ஆத்மார்த்தமான நன்றிகளை தங்களுக்கு காணிக்கையாக்குகின்றேன்..!

ஜெயா தொலைக்காட்சியில், 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில், வியாழனன்று [13.9.2012] வந்த எபிஸோடின் இறுதியில், நடிகர் திலகம் குறித்தும், "எதிரொலி(1970)" காவியம் குறித்தும் இயக்குனர் சிகரம் கே.பி. அவர்கள் தெரிவித்த கருத்துக்களை அப்படியே 'அச்சுஅசல்' பதிவுசெய்திருந்த தங்களுக்கு பாராட்டுக்கள்..!

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
16th September 2012, 04:14 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் அப்பழுக்கில்லா அன்புக்கும், பாசமான பாராட்டுதல்களுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றேன்..!

சிவாஜி-பிரபு சாரிடீஸ் டிரஸ்ட் சார்பில், 1.10.2012 திங்களன்று சென்னையில் நடைபெறும், நடிகர் திலகத்தின் 85வது ஜெயந்தித் திருவிழா பற்றிய விவரங்கள் வெகு அருமை..! மேதகு தமிழக ஆளுநரின் முன்னிலையில், சிவாஜி நினைவுப் பரிசுகளைப் பெறும் இந்த ஐந்து பிரபலங்களுமே அவரவர்களது துறையில் Stalwarts..! விழா சிறக்க வாழ்த்துக்கள்..!

"நீலவான" 'சாந்தி' அரங்க நிழற்படங்களைத் தரவேற்றி, காண்போர் தம் உள்ளங்களை அந்த நீலவானத்தில் சிறகடித்து பறக்கச் செய்து விட்டீர்கள்..!

லேட்டஸ்ட் 'துக்ளக்' இதழில், திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் நமது தலைவரைப் பற்றித் தெரிவித்துள்ள கருத்துக்களை இடுகை செய்யும்போதே, இப்பதிவுக்கு தங்களிடமிருந்து உடனடி ஹாட் ரெஸ்பான்ஸ் வரும் என்றே எண்ணியிருந்தேன்..! அதுபோலவே நடந்துவிட்டது. Internet connectionஐ எல்லாம் தாண்டிய Terrific telepathy connection சார் நம்முடையது..!

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
16th September 2012, 04:19 AM
dear pammalar sir. throughout my life time i was with the grief that NT could not even get the national award due to political reasons though we propagate that india is one country. Indian films they always mean only hindi films. As an ardent lover of world cinema too I have enjoyed almost all foreign films and observed the acting range of actors like Brando, Heston, Chaplin,Robert de Nero,.... dilip kumar, sanjeevkumar,ANR,... but no one is ever close to the range of our NT. The variety of roles he has given life are innumerous. Karnan tops all for the last 30 min during which NT shakes and stirrs all souls of fans, whoever may be without age bar also! Even I have an illusion that when I will be in my death bed, NT's Karnan scene in the climax only will come before my eyes as the last sight! it is time we collect his brilliant movies properly edited in sequence for forwarding to Hollywood oscar award for life time achievement which no other Indian actor deserves

டியர் சிவாஜிசெந்தில் சார்,

நாம் நமது பொன்னான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். நமது நடிகர் திலகத்துக்கு கிடைக்க வேண்டிய இன்னும்பல அகில உலக அங்கீகாரங்கள் கூடிய விரைவில் கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th September 2012, 04:22 AM
14-1-1969 pongal day - daily thandhi paper

nadigar thilagam in uyarndha manidhan - advt;

pic forwaded by tirupur ravichandran


http://i49.tinypic.com/4kfa60.jpg

டியர் esvee சார்,

29.11.1968 அன்று வெளியாகி, பொங்கலன்று வெற்றிகரமான 47வது நாளில் பீடுநடை போட்டுக் கொண்டிருந்த சிங்கத்தமிழனின் "உயர்ந்த மனிதன்" திரைக்காவியத்தினுடைய, அந்த 14.1.1969 தமிழர் திருநாள் இதழ் 'தினத்தந்தி'யில் வந்த அரிய ஆவணப் பொக்கிஷத்தை வெளியிட்டு அதகளப்படுத்திவிட்டீர்கள்..! தங்களுக்கும், ரவிச்சந்திரன் சாருக்கும் எங்களது இனிய நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th September 2012, 04:31 AM
நமது பத்தாவது பாக நடிகர் திலகம் திரியில், "உயர்ந்த மனிதன்(1968)" காவியம் பற்றி உயர்ந்த ஆய்வுப்பதிவுகளை தொடர்ந்து வழங்கிவரும், நடிகர் திலகத்தின் மிக உயர்ந்த ரசிக-பக்த-வெறியரான கோபாலகிருஷ்ண அடிகளாருக்கு இதயம் நிறைந்த அன்பான பாராட்டுக்கள்..!

pammalar
16th September 2012, 04:35 AM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :25

நடிகர் திலகத்தின் 67வது திரைக்காவியம்

பாவமன்னிப்பு [வெளியான தேதி : 16.3.1961]

வெள்ளிவிழாக் கொண்டாடிய மகாமெகாஹிட் காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 31.3.1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6634-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
16th September 2012, 04:44 AM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 15

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 11.3.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6633-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
16th September 2012, 07:55 AM
டியர் சுவாமி,
தங்களுடைய பாராட்டுக்கு என் உளமார்ந்த நன்றிகள். நடிகர் திலகத்தின் மீது மேம்போக்கான அன்பாய் அல்லாமல் ஆழமாய் பற்று வைத்திருக்கும் அனைவரின் எண்ண ஓட்டமும் ஒரே மாதிரி தான் இருக்கும் என்பதற்கு தாங்கள் கூறிய கருத்தே சான்று.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
16th September 2012, 07:56 AM
தமிழ்த் தொலைக்காட்சிகளில் வரும் வாரத்தில் பழைய திரைப்படங்கள் -


Zee Tamil 17.09.12 3 pm – AVAN THAN MANIDHAN
18.09.2012 3 pm – PESUM DEIVAM
20.09.2012 3 pm – RASAVE UNNAI NAMBI
21.09.2012 3 pm – KANDHAN KARUNAI

Raj TV 17.09.2012 1.30 pm – BALE PANDIYA
18.09.2012 1.30 PM – AVAN ORU CHARITHIRAM
19.-09.2012 1.30 PM - PONNUNJAL
20.09.2012 1.30 PM – ENNAI POL ORUVAN
21.09.2012 1.30 PM - ENGA MAMA
22.09.2012 1.30 PM - MIRUDANGA CHAKKARA VARTHY

Raj Digital Plus 17.09.2012 10 am – PANNEER NADHIGAL 1 PM – ORU VASANTHA GEETHAM 4 PM – PASATHAI THIRUDATHE 8 PM – PARISAM POTTACHU
18.09.2012 SANGU PUSHPANGAL 1 PM - NAAN UNGAL RASIGAN 4 PM – KADHAL VENNILA 8 PM – JULIE GANA PATHY
19.09.2012 9 AM – KALLAZHAGAR 1 PM - ULAGAM SUTRUM VALIBAN 5 PM = UNNAL MUDIYUM THAMBI 8.30 PM – RAGASIYA POLICE 115
20.09.2012 10 AM – IRU NILAVUGAL 1 PM - OYILATTAM 4 PM – MINNAL 8 PM – ULLATHAI KILLADHE
21.09.2012 10 AM – ANANDA JOTHI 1 PM – KIZHAKKU VEEDHI 4 PM – MURATTU KARANGAL 8 PM – PATTIK KAATTAN
22.09.2012 10 AM – SUGAMANA RAGANGAL 1 PM – BAGAVATHI PURAM RAILWAY GATE 4 PM - RANUVAM 8 PM – RAMAN ABDULLA

POLIMER TV 17.09.2012 2 PM – AVAL
18.09.2012 2 PM – AIRPORT
20.09.2012 2 PM – GEETHANJALI
21.09.2012 2 PM – NAYAK KARIN MAGAL
22.09.2012 2 PM – RASAVE UNNAI NAMBI

MURASU TV 17.09.2012 7 PM – MEENDUM VAZHVEN
18.09.2012 7 PM – KODI MALAR
19.09.2012 7 PM – DEIVAM
20.09.2012 7 PM – BAIRAVI
21.09.2012 7 PM – ATTUK KARA ALAMELU
22.09.2012 7 PM - GNANA OLI

MEGA TV 17.09.2012 12 PM – PATTANATHIL BUDHAM
18.09.2012 12 PM – BAMA RUKMINI
19.09.2012 12 PM – YARUKKAGA AZUDHAN
20.09.2012 12 PM – MUGA RASI
21.09.2012 12 PM – VAIDEHI KALYANAM
22.09.2012 1.30 PM – AMBIGAI NERIL VANDHAL

MEGA 24 17.09.2012 10 AM – KOLLI MALAI MAVEERAN 2.30 PM - SAKUNTALAI 6.30 PM – POOVIL RAGAM
18.09.2012 10 AM - URIMAI THEDUM URAVU 2.30 PM – MARAGA THAM 6.30 PM – RAJAVIN PARVAI
19.09.2012 10 AM – POLICE POLICE POLICE 2.30 PM – VIDI VELLI 6.30 PM – OH MANJU
20.09.2012 2.30 PM – AARA VALLI 6.30 PM – VASANTAME VARUGA
21.09.2012 2.30 PM – THEROTTAM 6.30 PM – THISAI MARIYA PARAVAIGAL
22.09.2012 2.30 PM – HELLO MR JAMINDAR 6.30 PM – VIRUNTHALI

J MOVIES 17.09.2012 9 AM – ENGAL THANGA RAJA 1 PM – EZHAI PADUM PADU 5 PM – ARADHANAI 9 PM – VETTAIK KARAN
18.09.2012 9 AM – PADHA PUJAI 1 PM – ILLARAME NALLARAM 5 PM – KARAI YELLAM SENBAGA POO 9 PM – ANNAI ILLAM
19.09.2012 8 AM – SRI VINAYAGAR VIJAYAM 11 AM – DEIVA CHEYAL 5 PM – THIRUVARUL 8 PM – THIRU MALAI DEIVAM
20.09.2012 9 AM – ULAGAM IVVALAVU THAN 1 PM – PANGALIGAL 5 PM – THUNAI 9 PM – KULA MAGAL RADHAI
21.09.2012 9 AM - ANNAI ABIRAMI 1 PM – THEDI VANDHA THIRUMAGAL 5 PM – KANNODU KAN 9 PM – KARUPPU PANAM
22.09.2012 9 AM – VARA PRASADAM 1 PM – KANNADI MALIGAI 5 PM - SHANKARLAL 9 PM - NEELA VANAM

RAGHAVENDRA
16th September 2012, 10:02 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/UAA60.jpg

mr_karthik
16th September 2012, 11:25 AM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

இந்த வாரம் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பாக இருக்கும் திரைப்படங்களின் பட்டியல் மலைக்க வைக்கிறது. எவ்வளவு சிரமப்பட்டு தொகுத்துள்ளீர்கள் என்பது தெரிகிறது.

வீட்டில் இருந்தபடியே இத்தனை திரைப்படங்களையும் (போதாக்குறைக்கு ஏகப்பட்ட சீரியல்கள், வாடகைக்கு எடுக்கப்பட்டு அவர்களுக்குள் பரிமாறிக்கொள்ளப்படும் சி.டி.க்கள்) பார்க்க முடிகிறது எனும்போது, திரையரங்குகள் அனைத்தும் வணிக வளாகங்களாகவும், குடியிருப்பு ஃப்ளாட்டுகளாகவும் விரைந்து மாறி வருவதில் வியப்பில்லை.

தற்போது 'உமாபதி திருமண மண்டபமாக' மாறிவிட்ட பழைய 'ஆனந்த் (70 mm)' தியேட்டர் உரிமையாளர் (மறைந்த ஜி.உமாபதியின் மகன்) சொன்ன தகவல் : "தியேட்டரில் வெறும் 50 பேர் மட்டுமே படம் பார்க்க வந்தாலும் தியேட்டர் முழுக்க நாங்கள் ஏ.சி.போடவேண்டியுள்ளது. ஏ.சி.க்கு ஆகும் செலவுக்குக்கூட வசூலாவதில்லை. மற்ற செலவுகளுக்கு நாங்கள் எங்கே போவது?. ஆகவேதான் திருமண மண்டபமாக மாற்றிவிட்டோம்". (அவர் சொல்வது உண்மைதானே)

mr_karthik
16th September 2012, 12:46 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

நீலவானம் திரைப்படத்தில் இடம்பெற்ற, சாந்தி திரையரங்கின் முந்தைய தோற்றத்தை பதிவுகளாக அளித்து பழைய இனிய நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டீர்கள். மரணம் வரை மறக்க முடியாத நினைவுகள் அவை. அந்த வளாகம் முழுக்க நம் கால்கள் படாத இடமேயில்லை. நம் சாயங்காலப்பொழுதுகளை சந்தோஷமாக்கிய நாட்கள் அவை. உள்ளே சென்று படம் பார்ப்பதைவிடவும், வெளியே நின்று அவற்றை நண்பர்கள் வட்டத்தில் அலசித்தீர்ப்பது பலமடங்கு இனிமையைத்தருபவை என்பதை பூரணமாக உணர்ந்த நாட்கள்.

எத்தனை எத்தனை புதிய நண்பர்கள் அங்கு அறிமுகமானார்கள். எவ்வளவு கருத்துப் பறிமாற்றங்கள், விவாதங்கள், சிலசமயம் விவாதம் முற்றி வாய்ச்சண்டைகள். (மாற்றுக்கருத்துடையோர்களுடன் பெரும்பாலும் வாய்ச்சண்டையிடுவோர் நண்பர் சீதக்காதி மற்றும் குமார்). வெளியூர் மன்றத்தினர் அவ்வப்போது அனுப்பிய அந்தப்பகுதியில் வெளிவரும் தினத்தந்தி செய்தித்தாள்கள், அவற்றில் வந்திருக்கும் பட வெளியீடுகள் பற்றிய அலசல்கள்.

நடுவில் நீரூற்றைக்கொண்ட தண்ணீர்த்தொட்டியின் சுற்றுச்சுவர்களில் (கம்பித்தடுப்பைத்தாண்டி) அமர்ந்துகொண்டு நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்த சுகமான நினைவுகள். சுற்றிலும் உட்காருவோர் எண்ணிக்கை அதிகமானதால், ரசிகர்களின் அன்புத்தொல்லையைக் கட்டுப்படுத்த கம்பித்தடுப்பின் உயரம் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டபின், பக்கத்திலிருந்த 'பால்ஸ் ரெஸ்டாரண்ட்டின்' ஜன்னல் தடுப்புகளில் அமர்ந்து பேசிய நாட்கள் (அந்த இடத்தில்தான் தற்போது நடிகர்திலகத்தின் படப்பட்டியல் கொண்ட கல்வெட்டு இடம்பெற்றுள்ளது).

சாந்தியில் வழக்கமாக கூடும் ரசிகர்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு, அவர்கள் எப்போது கேட்டாலும், எவ்வளவு கூட்டம் இருந்தபோதிலும் காட்சி நேரத்துக்கு முன்பாக 2 ரூபாய் டிக்கட்டுகளை குறிப்பிட்ட அளவு தனியாக வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தும் மாப்பிள்ளை வேணுகோபால், திரிசூலம் வெளியாகும் முன்பு, நடிகர்திலகத்தைப்பற்றியும் சிவாஜி பிலிம்ஸைப்பற்றியும் சற்று தவறாக செய்தி வெளியிட்ட 'பிலிமாலயா' பத்திரிகை அலுவலகத்தைத் தாக்கப்புறப்பட்ட மன்றத்தினராகிய நம்மை, ஒவ்வொருவர் தோள்மீதும் கைபோட்டு சமாதானப்படுத்திய 'நடிகர்திலகத்தின் புதல்வர்' பிரபு. (அப்போது அவர் நடிகராகவில்லை). அண்ணன் ஒரு கோயில் வெள்ளிவிழாவைக்காண இடைஞ்சலாக வந்த தியாகம் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று உரிமையுடன் ஆர்ப்பாட்டம் செய்தபோது, சிவாஜி பிலிம்ஸ் சார்பில் சமாதானம் செய்ய வந்து, அண்ணன் ஒரு கோயில் பக்கத்திலுள்ள அண்ணா தியேட்டரில் நிச்சயம் ஷிஃப்ட் செய்யப்படும் என்று (பொய்யான) வாக்குறுதியைத் தந்து நிலைமையை சமாளித்த சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு நிர்வாகி மோகன்தாஸ்..... இப்படி சொல்லிக்கொண்டே போக எத்தனை இனிய நினைவுகள்.

சுருக்கமாகச்சொன்னால், ஏதாவது சொந்த வேலையின் காரணமாக ஒருநாள் மாலை 'சாந்தி'க்கு வராமல் போனாலும், அன்று எதுவோ குறைந்தது போன்ற உணர்வு மனதில் அலைமோதும்.

இன்றைக்கு சாந்தி திரையரங்கம் தோற்றத்தில் எவ்வளவோ மாறிப்போய்விட்டது. ஆனால் நம் மனதில் பசுமையாக நிலைத்து நிற்கும் அந்த பழைய 'சாந்தி'யும் அதோடு ஒன்றிப்போன இனிய நினைவுகளும் என்றும் நம் மனதை விட்டு அகலாது.

mr_karthik
16th September 2012, 02:00 PM
அன்புள்ள பம்மலார் சார்,

இன்றைக்கும் எந்த ஒரு காங்கிரஸ் மேடையிலும் அண்ணன் நடிகர்திலகத்தின் பெயரை ஒருமுறையேனும் குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள திரு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் துக்ளக் இதழ் கட்டுரையைப்பிரசுரித்தமைக்கு மிக்க நன்றி.

அதைப்படிக்கும்போதே, அண்ணன் தலைமையில் தமிழக முன்னேற்ற முன்னணியில் இணைந்து பணியாற்றிய அந்த இனிய நினைவுகள் மனதில் அலைமோதுகின்றன. இன்றைக்கும் அந்த இய்க்கம் இருந்திருக்குமானால் இன்னும் அதில்தான் இணைந்திருப்போம். இப்போதுபோல, இருக்கின்ற இரண்டு கொள்ளிகளில் எது நல்ல கொள்ளி என்று பார்த்துக்கொண்டிருக்கின்ற அவசியம் வந்திருக்காது.

அவர் அடுத்த வாரம் சொல்லப்போகும் அந்த ஆஃபர் என்ன என்பது த.மு.மு.வில் இணைந்திருந்த நமக்குத் தெரிந்ததுதான். இதைப்பற்றி ஏற்கெனவே சாரதா தன்னுடைய வலைப்பூ கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். எப்படியாவது கட்சியை வளர்த்தால் போதும் என்று நினைத்திருந்தால், தி.மு.க.தலைவர் சொன்ன அந்த 25 சீட் ஆஃபரை அண்ணன் ஏற்றுக்கொண்டிருப்பார். தி.மு.க.வுக்கு போதிய எதிர்ப்பில்லாமல் இரண்டாகப்பிரிந்து கிடந்து அவர்களுக்குள்ளேயே தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த அ.இ.அ.தி.மு.க. வை எதிர்த்து, தி.மு.க. கூட்டணியில் அட்லீஸ்ட் ஒரு 15 எம்.எல்.ஏ.க்களாவது த.மு.மு. பெற்றிருக்கக்கூடிய நல்ல வாய்ப்பு வந்தது. ஆனால் அண்ணன் நாணயம், வாக்குறுதி, நம்பிக்கை என்றெல்லாம் அரசியலுக்கு ஒவ்வாத வாதங்களை வைத்து, அந்த வாய்ப்பை கைநழுவவிட்டார். தூய்மையான, நேர்மையான அரசியல்வாதி என்ற பெயர்மட்டுமே மிஞ்சியது.

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி கட்டபொம்மன் நாடகத்துக்கு அண்ணா தலைமை தாங்கிய 1957 விளம்பரத்தை வெளியிட்டமைக்கு நன்றி. அண்ணா ஒரே ஒரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தது 57 - 62 காலகட்டம் மட்டுமே. அதை அந்த விளம்பரத்தில் காண முடிகிறது. (62 - 67 ராஜ்யசபா எம்.பி., 67 - 69 எம்.எல்.சி. மற்றும் முதலமைச்சர்).

அரிய ஆவணங்களுக்கு அளவில்லாத நன்றிகள்.

vasudevan31355
16th September 2012, 02:52 PM
அதிர்ச்சி விளம்பரம் !!!!!!!???????

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6_0001-1.jpg?t=1347787497

mr_karthik
16th September 2012, 03:28 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

நிஜமாகவே அதிர்ச்சி விளம்பரம்தான்.

இது எப்போது...??. எப்படி...??.

விளம்பரத்தில் கண்டது உண்மையா, அல்லது எதாவது விஷமிகளின் வேலையா...??.

RAGHAVENDRA
16th September 2012, 03:58 PM
நடிகர் திலகத்திற்கென்றே இவர்கள் வந்து வாய்ப்பார்களா....இவர்களின் வியாபார சண்டைக்கு அவருடைய படங்கள் தானா கிடைத்தது... அல்லது வேறு என்ன காரணம் ... ஒன்றும் புரியவில்லை... திடீரென்று இப்படி ஒரு காட்சிக்கு திருவிளையாடல் படத்தை திரையிட்டிருப்பது புரியாத புதிராய் உள்ளது...

vasudevan31355
16th September 2012, 04:59 PM
அன்பு கார்த்திக் சார்,

நிஜமாகவேதான். அன்பு பம்மலார் சார் நேற்று இந்த அதிர்ச்சி தகவலை செல்லில் கூறியபோது என்னால் உங்களைப் போல நம்ப முடியவில்லை. நேற்றைய மாலைமுரசு சென்னை பதிப்பில் இந்த விளம்பரம் வந்திருப்பதாக பம்மலார் அவர்கள் கூறியதும் ஒரு நிமிடம் உறைந்தே போய் விட்டேன். நேற்றைய மாலை முரசு கிடைக்காததால் காலை 'தினத்தந்தி' வாங்கிப் பார்த்தபோது விளம்பரம் தந்திருந்தார்கள். என்ன கொடுமை சரவணன் சாரி கார்த்திக் சார் இது!

mr_karthik
16th September 2012, 05:27 PM
உட்லண்ட்ஸில் திரையிட்டிருப்பது உண்மைதானா..? (that too just a single show )

அல்லது விளம்பரமே விஷம(போலி)த்தனமானதா..?

ஒண்ணுமே புரியவில்லை.

வெளியீட்டாளர் சி.என்.பரமசிவன் என்று வேறு போடப்பட்டுள்ளது. அத்துடன் 'டிஜிட்டல் - சினிமாஸ்கோப்' என்று வேறு உள்ளது.

என்னதான் நடக்கிறது தெரியலையே.

RAGHAVENDRA
16th September 2012, 08:57 PM
அன்பு நண்பர்களே,
சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்கில் திருவிளையாடல் திரைக்காவியம் தினசரி மாலைக் காட்சி மட்டும் திரையிடப் பட்டுள்ளது. திரையிடப் பட்ட காரணம், அல்லது சூழ்நிலை இதைப் பற்றியெல்லாம் நாம் மேற்கொண்டு விவாதிக்க வேண்டாம். ஆனால் படத்தை சிறிது நேரம் பார்த்து விட்டு வந்ததில் பிரமிப்பு அடங்கவில்லை என்பது உண்மை. கர்ணன் திரைப்படத்திற்கே நாம் அந்த அளவிற்கு லயித்தோம் என்றால் திருவிளையாடல் கிட்டத் தட்ட பல மடங்கு அதிக தரத்துடன் வெளிவந்துள்ளது மறுக்க முடியாத உண்மை. தெள்ளத் தெளிவான பிரதி, ஒவ்வொரு நுணுக்கமும் தெளிவான பிம்பங்கள், துல்லியமான அதே சமயம் ஒரிஜினல் இசையில் ஒரு துளி கூட மாற்றமில்லாத நேர்த்தியான ஒலியமைப்பு... இவையெல்லாம் சேர்ந்து இத்திரைக்காவியத்தின் மேன்மையைப் பல மடங்கு உயர்த்தியுள்ளன. இறைவன் அருளால் - சிவனின் அருளால் - சிவனான நடிகர் திலகத்தின் அருளால் பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் அவை தீர்க்கப் பட்டு பிரம்மாண்டமான முறையில் திரையிடப் படவேண்டும் என்று நாம் வேண்டுவோம்.

மிகச் சிறந்த அனுபவத்தைத் தரத் தயாராக உள்ளது திருவிளையாடல் டிஜிட்டல் வடிவம்.

நமக்காக ஒரு சில நிழற்படங்கள். இவை நம்முடைய ரசிப்புத் தன்மைக்காக மட்டுமே இங்கு தரப் படுகின்றன.

ரசிகர்கள் மாலையால் அலங்கரித்த பதாகை

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20FILMS%20IN%20CHENNAI/WOODTV01.jpg

திரையில் சில காட்சிகள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20FILMS%20IN%20CHENNAI/WOODTV02.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20FILMS%20IN%20CHENNAI/WOODTV04.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20FILMS%20IN%20CHENNAI/WOODTV03.jpg


அன்புடன்
ராகவேந்திரன்

Thomasstemy
16th September 2012, 10:50 PM
I was literally taken by the Shock when i came to know thorough Mr.Gowrishankar, Murasu TV. He was passing by in his bike at around 630pm and he informed me of the screening at Woodlands and that too a mere 6:30PM.

A Film that was supposed to be released like KARNAN and that was supposed to beat the Karnan record, It was too pathetic to watch such a film of Thiruvilayadal Caliber getting killed by its own maker's son, Mr.Param.

He has substantiated it citing it as "taking advantage of legal situation for the film's case that is in the court already. All said and done, I am unable to understand Who would have given this Out of the Box Foolish Idea and even if at all, if the foolish idea was given, how come a person could release it. Do i call it an insane (or) just for the heck of it (or) something else...!

Anyway, Nammudaya Thalaivarukkendru Sila Tharudhalaigal ippadi vandhu, avar pugazhai avar maraindha pinbum thodarndhu seerazhiththukondu dhaan irukiraargal enbadhu mattum thinnam.

Oru Poakkuvarathu Vasadhi kooda illadha indha Woodlands theateril, Adhuvum Avamaanapaduthum Vagayil orey oru kaatchiyai mattum oatta kaaranam, thaiyarippalarin maganukku appadi enna pana mudayo theriyavillai..!

Ivar enna ezhavai vendumaanal seidhukondu poagattum ivarudaya peyar mattum irundhirundhaal...
AANAAL
Nammudaya Uyirin Gowravamum Allava idhil Adangiulladhu...

Aerkanavae...Verum Vaayai Mendru Kondu irupavargalukku, Indha Budhisaali, Avalayum Sarkarayum Serthu allava vaayil poattu koduthullan ?

Nadigar Thilagam irandha pinnarum Avarai Mudhugil Kuththa eppadi dhaan indha pullargalakku, Mayilukkum Mandhikkum Vidhyasam theriyaadha Madhivaanargalukku manadhu varugiradho !!!

Kalai Avadhaaramae ...Nee Thamizhagathil Pirandhadharkku Ippadi oru Dhandanaya unakku? Nee Maraindha Pinnarum Indha Maapaavigal unnai Padukolai seigiraargalae !

En Seivaen !! Tamizh Thaayae...Indha Pazhi Unakka ! Avarka ?

:smokesmile:

Subramaniam Ramajayam
17th September 2012, 10:50 AM
Glad to note from mr raghavendran that the moviie digital format and print is fantastic and also oli and other aspects well captured. we hope the contraversies will come to an end give right publicity like karnan better thy can give it to NIKIL and do something to make the picture another KARNAN OF 2012.

eehaiupehazij
17th September 2012, 11:11 AM
Thiruvilayadal is such a divine movie in the career of NT even a rung more than Karnan, to say by way of story line and the narration done excellently by APN to project NT's matured acting skills in the most enjoyable and entertaining way in this mythological movie. However, Karnan stood atop making the NT fans to move over to cloud 9 because a meticulous planning for its rerelease in a different format. It worked and created records tothe envy of yesteryear stars nd the current stars too establishing fact that NT always lives in the hearts and minds of movie fans and is immortal. Now, for Thiruvilayadal which was expected to re-create the magic, I humbly feel that a little bit of planning is lacking and this movie is not so cheap tobe released for a single show in one theatre. It is a magnum opus too, to be rereleased all over tamilnadu in line with Karnan standards. a bit of disappointment, sirs, APN family may reconsider.

mr_karthik
17th September 2012, 11:26 AM
அன்புள்ள பாரிஸ்ட்டர் சுப்பிரமணியம் மற்றும் நண்பர்களுக்கு...

நமது ராகவேந்தார் சார் அவர்களின் சூசகமான தகவல்களிலிருந்தும், 10-ம் பாகத்தில் நமது முரளி சார் அவர்களின் விளக்கத்திலிருந்தும், வழக்கின் காரணமாக வழக்கறிஞர்கள் ஆலோசனைப்படி தற்போது ஒரே ஒரு திரையரங்கில் ஒரு காட்சியாக வெளியிடப்பட்டுள்ளது தெரிகிறது. எனவே இது விஷயமாக நாம் இங்கே விவரமாக விவாதிக்க வேண்டாம்.

ஆனால் கூடிய விரைவில் தடைகள் நீங்கி, நல்ல விளம்பரங்களுடன், தமிழ்நாடு முழுவதும் நல்ல தரமான திரையரங்குகளில் கர்ணன் போல ஒரே நாளில் வெளியாகி சாதனை படைக்கும் நாளை விரைவில் எதிர்நோக்குவோம்.

படம் சினிமாஸ்கோப் அமைப்புடன், நல்ல தரமான ஒளி, ஒலி அமைப்புடன் அமைந்திருப்பதாக ராகவேந்தர் சார் அவர்கள் சொன்னதில் நம் அனைவருக்கும் திருப்தி. ஓட்டத்திலும் கர்ணனை முறியடிப்பதன் மூலம் 'முதல் வெளியீட்டிலும், மறு வெளியீட்டிலும் வெள்ளிவிழா கண்ட படம்' என்ற சாதனையைப் படைக்க வாழ்த்துக்கள்.

vasudevan31355
17th September 2012, 03:36 PM
நகைச்சுவை நடிகர் 'லூஸ்' மோகன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_03_1VOB_002610565-1.jpg?t=1347876623

நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனிப் பாணியை உருவாக்கி நம் எல்லோரையும் மகிழ்வித்த நகைச்சுவை நடிகர் திரு 'லூஸ்' மோகன் அவர்கள் நேற்று (16-09-2012) இறைவனடி சேர்ந்தார். நடிகர் திலகத்துடன் இணைந்தும் அவருடைய காவியங்களில் பணியாற்றியுள்ளார். அதில் ஒரு காவியமான 'சாதனை' திரைக்காவியத்தில் நடிகர் திலகமும், 'லூஸ்' மோகன் அவர்களும் இணைந்து நடித்த ஒரு உருக்கமான வீடியோக் காட்சி மூலம் அந்த ஒப்பற்ற கலைஞருக்கு அஞ்சலி செலுத்துவோம்.


http://www.youtube.com/watch?v=ng_Kp-A2brY&feature=player_detailpage

RAGHAVENDRA
17th September 2012, 03:50 PM
டியர் வாசுதேவன் சார்,
சற்று இடைவெளிக்குப் பின் தங்களுடைய வருகை அனைவருக்கும் புத்துணர்வூட்டும் என்பதில் ஐயமில்லை. தாங்களும் பம்மலாரும் இணைந்து இத்திரியினை உயர உயர எடுத்துச் செல்கிறீர்கள். தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

சில நாட்களுக்கு முன் தான் லூஸ் மோகன் அவர்களுடைய தந்தை நடித்த ஒரு காட்சியை நீல வானம் படத்தில் காண நேர்ந்தது. சாந்தி திரையரங்கில் ராஜஸ்ரீ மாடியில் முதல் வகுப்பில் டிக்கெட் கிழிக்கும் நடிகர் திலகத்தைப் பார்த்து திகைத்து நிற்கும் போது, பின்னால் குடும்பத்துடன் படத்துக்கு வந்த காட்சியில் லூஸ் ஆறுமுகம் அவர்கள் நடித்திருப்பார். சாந்தி திரையரங்க ஸ்டில்களுக்காக அதைப் பார்க்கும் போது எதேச்சையாக அவர் மகன் லூஸ் மோகன் சாதனை திரைப்டத்தில் நடித்த இக்காட்சி நினைவுக்கு வந்தது. நேற்று அவர் மறைந்த செய்தி, இன்று நாம் நினைத்த அதே காட்சியை இங்கு தாங்கள் பதிவேற்றியதைப் பார்க்கும் போது சிவாஜி ரசிகர்கள் ஒரே அலைவரிசையில் தான் சிந்திப்பார்கள் என்பதற்கு மற்றொரு சான்றாக அமைந்து விட்டது. துயரமான செய்தி என்பதால் பாராட்ட முடியவில்லை.

ஒரு நினைவூட்டலுக்காக லூஸ் ஆறுமுகம் தோன்றும் நீலவானம் காட்சியையும் இங்கே தாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

அன்புடன்

RAGHAVENDRA
17th September 2012, 03:54 PM
லூஸ் ஆறுமுகம் அவர்கள் நடிகராக மட்டுமின்றி நல்ல எழுத்தாளரும் கூட. பேசும் படம் பத்திரிகையில் தொடர்ந்து அவர் பெயரில் கட்டுரை இடம் பெறும். எழுத்தாளர் என்றாலும் அவர் சொல்ல சொல்ல கட்டுரையை ஆசிரியர் குழுவில் உள்ளவர்கள் எழுதி வந்ததாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

RAGHAVENDRA
17th September 2012, 03:58 PM
மாற்றுக் கொள்கையுடையோர், அரசியல் சார்புடையோர், என வித்தியாசம் பாராமல், அனைவருடனும் பெருந்தன்மையுடன் நடிகர் திலகம் நடந்து கொண்டுள்ளார் என்பதற்கு மற்றோர் சான்று. ஸ்ரீ வித்யா நிறுவனம் சார்பில் ரவிச்சந்திரன் வழங்கி மோகன் காந்திராமன் அவர்கள் தயாரித்து இயக்கிய ஆனந்த பைரவி படத்தினை க்ளாப் அடித்து துவக்கி வைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நன்றி என அப்படத்தின் டைட்டில் கார்டில் வரும். அதன் நிழற்படம் இங்கே நம் பார்வைக்கு. அது மட்டுமின்றி இப்படத்தில் ரவிச்சந்திரன் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள அடைமொழியினைப் பாருங்கள்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/ABAIR02.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/ABAIR01.jpg

mr_karthik
17th September 2012, 04:42 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

தாங்கள் அளித்துள்ள டைட்டில் கார்டு பார்க்கும்போது, திரு. விஜயகாந்த் மூன்றாவது புரட்சிக்கலைஞர் போலிருக்கிறது. ஏனென்றால், நடிகர்திலகம் நடித்த கவரிமான் படத்தின் டைட்டிலில் நடிகர் விஜயகுமாருக்கும் 'புரட்சிக்கலைஞர்' என்று டைட்டில் போட்டிருப்பார்கள்.

'புரட்சிக்கலைஞர்' ரவிச்சந்திரன்
'புரட்சிக்கலைஞர்' விஜயகுமார்
'புரட்சிக்கலைஞர்' விஜயகாந்த்

இந்த வரிசையில் நிற்கும் அடுத்தவர் யாரோ..?

mr_karthik
17th September 2012, 04:49 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன் மறைவுக்கு நீங்கள் அளித்துள்ள அஞ்சலிப் பதிவு மனதைத் தொடுவதாக அமைந்துள்ளது. சென்னைத்தமிழில் பேசி தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டவர் லூஸ் மோகன். மிமிக்ரி ஆர்ட்டிஸ்டுகளுக்கு நல்ல தீனி போட்டவர்.

vasudevan31355
17th September 2012, 05:08 PM
டியர் கார்த்திக் சார்,

நன்றி! ஒரு சிறு திருத்தம். 'புரட்சிக்கலைஞர்' விஜயகுமார் என்று டைட்டிலில் போட்டது 'கவரிமான்' காவியத்தில் அல்ல... 'பைலட் பிரேம்நாத்' காவியத்தில் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். டைட்டிலின் நிழற்படம் இதோ.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/AVSEQ02DAT_000212720-2.jpg

pammalar
18th September 2012, 12:07 AM
"திருவிளையாடல்" திரைக்காவிய திடீர் மறுவெளியீட்டைப் பற்றி என்னத்த சொல்ல..,என்னத்த செய்ய....

'ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது'

நமது தலைவரின் "பராசக்தி" பாடல் இந்தத் தருணங்களில் நெஞ்சில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது..!

'நெஞ்சு பொறுக்குதில்லையே....நெஞ்சு பொறுக்குதில்லையே'

http://www.youtube.com/watch?v=JgUOyi2TWyo&feature=relmfu

15.9.2012 தேதியிட்ட 'மாலை முரசு' நாளிதழில் வெளியான விளம்பரம்:

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6637-1.jpg

இனி விவாதிக்க வேண்டாம் என்றாலும் மனசு கேட்கவில்லை..அதனால் தான் பதித்தேன்..!

இந்த நிலையிலும், "திருவிளையாடல்" டிஜிட்டல் வடிவம் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக கிடைத்துள்ள தகவல் ஒரு தேனான செய்தி..!

சம்பந்தப்பட்டவர்கள் மிகுந்த சிரத்தையோடு - இதுபோன்ற அபத்தங்களை தவிர்த்து - நிதானமாக எந்தவொரு சிக்கலுமில்லாமல் சிறந்த முறையில் உலகமெங்கும் வெளியிட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இதுவே நமது பிரார்த்தனை. முதல் வெளியீட்டில் வெள்ளிவிழாக் கொண்டாடிய இக்காவியம் வருகின்ற டிஜிட்டல் மறுவெளியீட்டிலும் நிச்சயம் வெள்ளிவிழாக் கொண்டாடும்.

Murali Srinivas
18th September 2012, 12:35 AM
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் குறிப்பாக வழக்கம் போல் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை கொட்டியிருக்கும் சுப்புவிற்கும் நான் சொல்வது என்னவென்றால் திருவிளையாடல் படத்தைப் பொறுத்தவரை அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என நம்பிக்கை கொள்வோம். கடந்த எட்டு வருடங்களாக நமது மய்யத்தில் இயங்கி வரும் நடிகர் திலகத்தின் திரியில் அமங்கலமான சொற்களை நாம் உபயோகிப்பதே இல்லை. எப்போதும் நமது வார்த்தைகளில் கனிவு பணிவு மற்றும் நாகரீகம் நிறைந்திருக்கும். அந்த மாற்றை குறைப்பது போல் உள்ள வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாமே.

நாம் யார் பக்கமும் சேர வேண்டாம். நமக்கு நமது படத்தின் வெற்றி பாதிக்கப்பட்டு விடக்கூடாது எனபதே எண்ணம். இதை அனைவரும் புரிந்துக் கொள்ளும் அதே நேரத்தில் ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். படத்தை மெருக்கேற்றுவதற்காக மிகுந்த பொருட்செலவை முதலீடு செய்திருக்கும் பரமசிவன் அவர்களுக்கு இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்பதில் அக்கறை இல்லை என்று சொல்வதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா என்று யோசித்தால் உண்மை புரியும்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஒருவரின் மனநிலையை நாம் அவர்கள் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதற்கு we have to put ourselves in their shoes என்பார்கள். இது அனைவருக்கும் பொருந்தும். ஆக நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும்.

யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்

யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்

அன்புடன்

pammalar
18th September 2012, 12:38 AM
பகுத்தறிவுப் பகலவனுடன் கலையுலகக் கதிரவன்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Periyar1-1.jpg

17.9.2012 : தந்தை பெரியார் அவர்களின் 134வது பிறந்ததினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
18th September 2012, 12:58 AM
டியர் mr_karthik,

தங்களுடைய அன்பான பாராட்டுதல்களுக்கு எனது கனிவான நன்றிகள்..!

தாங்கள் பதித்துள்ள சென்னை 'சாந்தி' திரையரங்கம் குறித்த தங்களின் மலரும் நினைவுகள் பதிவு அருமையோ அருமை..!

நமது தலைவரைப் பொறுத்தமட்டில், அரசியலில் அவர் இருந்தவரை, கொள்கைச்சிங்கமாகவே வாழ்ந்தார். நேர்மை, தூய்மை, நாணயம், கொண்ட கொள்கையில் உடும்புப்பிடி, கொடுத்த வாக்கை எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் காப்பாற்றுதல், இன்னும் இதுபோன்ற அவரது எத்தனையோ சிறப்பியல்புகளினால் பெருந்தலைவருக்குப் பிறகு அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்று புகழப்பட்டார். இன்றும் புகழப்படுகிறார். என்றென்றும் இதே உச்சநிலையில் வைக்கப்பட்டு மக்களால் போற்றப்படுவார். அது ஒன்றுபோதும் நமக்கு..!

அன்புடன்,
பம்மலார்.

KCSHEKAR
18th September 2012, 07:04 AM
டியர் பம்மலார் , கார்த்திக் சார், ராகவேந்திரன் சார், வாசுதேவன் சார், முரளி சார் மற்றும் திருவிளையாடல் திரைப்படம் குறித்து பகிர்ந்துகொண்ட மற்றும் என்னைபோன்ற அனைத்து ரசிகர்களின் உணர்வும் ஒன்றுதான்.

ஆனால் ஒன்று, நடிகர்திலகம் அவர்களைப் பொறுத்தவரை, அவர் பராசக்தியில் அறிமுகமானதிலிருந்தே அவருடைய திரையுலக வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களைக் கடந்திருக்கிறார். ஆனால் இறுதி வெற்றி நடிகர்த்திலகத்திற்கே கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை.

திருவிளையாடல் திரைப்பட மறு வெளியீட்டைப் பொருத்தவரையிலும் அதே நிலைதான் வரும். வெற்றி பெறும், வெற்றி பெறுவோம் .

Subramaniam Ramajayam
18th September 2012, 08:18 AM
டியர் பம்மலார் , கார்த்திக் சார், ராகவேந்திரன் சார், வாசுதேவன் சார், முரளி சார் மற்றும் திருவிளையாடல் திரைப்படம் குறித்து பகிர்ந்துகொண்ட மற்றும் என்னைபோன்ற அனைத்து ரசிகர்களின் உணர்வும் ஒன்றுதான்.

ஆனால் ஒன்று, நடிகர்திலகம் அவர்களைப் பொறுத்தவரை, அவர் பராசக்தியில் அறிமுகமானதிலிருந்தே அவருடைய திரையுலக வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களைக் கடந்திருக்கிறார். ஆனால் இறுதி வெற்றி நடிகர்த்திலகத்திற்கே கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை.

திருவிளையாடல் திரைப்பட மறு வெளியீட்டைப் பொருத்தவரையிலும் அதே நிலைதான் வரும். வெற்றி பெறும், வெற்றி பெறுவோம் .

Had the pleasure of watching NADIGARTHILAGAM in QUBE FORMAT.
the picture has come very nicely with out any damage to the original format. the quality of picture and sound dts exceptionally good.
watching nadigarthilagam in cinemascope really an immense pleasure.
hope and pray for an early settlement between the parties and GALA
OPENING all over the state soon.

vasudevan31355
18th September 2012, 09:29 AM
அன்பு பம்மலார் சார்,

பட்டை கிளப்பிக்கொண்டிருக்கும் தங்கள் பதிவுகளுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும் தெரிவிக்க சற்று காலதாமதமானதற்கு பொறுத்தருள வேண்டுகிறேன். நேரமின்மையும், சற்று சொந்த வேலைகளும் இருந்ததால்தான் இந்த காலதாமதம். இனி தங்களின் தங்கப் பதிவுகளுக்கு வருகிறேன்.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 141வது அவதாரத் திருநாளை முன்னிட்டு தாங்கள் பதித்திருந்த கப்பலோட்டிய தமிழரின் புகைப்படம், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் 125வது பிறந்ததினம் மற்றும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அளித்திருந்த அட்டகாசமான தலைவரும், திரு.ராதாகிருஷ்ணன் அவர்களும் ஒன்று சேர்ந்து மிளிரும் புகைப்படம், திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் வரிசையில் கப்பலோட்டிய தமிழன்' காவிய செய்தித்தாள் விளம்பரங்கள், 'பாவ மன்னிப்பு' முதல் வெளியீட்டு மற்றும் 'இன்று முதல்' விளம்பரங்கள், "துணிவே துணை" பேசும்படம் இதழில் வெளிவந்த 'தயான்' நிழற்படம் அனைத்தும் அப்படியே உள்ளத்தை அள்ளிக்கொண்டு போகின்றன.

நடிகர் திலகம் பற்றி நடிகர் நாசர் 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழில் அளித்திருந்த பேட்டியை அசுர வேகத்தில் பதிவிட்டு அசத்தியுள்ளீர்கள். நடிகர் திலகத்தினுடனான நாசரின் நடிப்பு அனுபவங்கள் கற்கண்டாக இனித்தது. இனி அடுத்து வரும் இதழிலும் வரக்கூடிய நாசரின் பேட்டியை தங்கள் பதிவின் மூலம் காண ஆவல் மேலிடுகிறது.

தலைவரின் திகிலான வேட்டை அனுபவம் குறித்து 'ஹண்ட்டர்' சிவாஜி என்ற அம்சமான தலைப்பிட்டு, 'மாலைமுரசு' இதழில் மறுபதிப்பாக வெளிவந்த மிரள வைக்கும் கட்டுரையை பதிப்பித்து திகிலூட்டி விட்டீர்கள். மணியனின் 'இதயம் பேசுகிறது' இதழில் தலைவரின் நெருங்கிய நண்பர் திரு.'வேட்டைக்காரன்புதூர்' மாணிக்கம் அவர்கள் 'வனத்தில் கண்ட சில வசந்தங்கள்' என்ற தொடரில் தலைவரின் அட்டகாசமான வேட்டை அனுபவங்களை அருமையாக வர்ணித்திருப்பார். எனக்கு தங்கள் பதிவைக் கண்டதும் அந்தத் தொடர் சட்டென்று என் ஞாபகத்திற்கு வந்து நெஞ்சில் நிழலாடியது. அதற்காக தங்களுக்கு என் அருமை நன்றிகள்.

தயாரிப்பாளர் குற்றாலிங்கம் அவர்கள் உறங்கி வழிந்ததை அவருக்குத் தெரியாமலே படமெடுத்து பின் அதை அவருக்கே போட்டுக்காட்டி வெறுப்பேற்றிய தலைவரின் நகைச்சுவை உணர்வை என்ன சொல்ல! அருமையான நகைச்சுவைக் கட்டுரையை 'தினமலர்' வாரமலரிலிருந்து எடுத்துவைத்து போற்றிப் பாதுகாத்து பதித்ததற்கு சபாஷ்!

நாடக சாம்ராட் பற்றி திரு.'கலாநிகேதன்' பாலு அவர்கள் பொம்மை இதழில் அளித்திருந்த கட்டுரை நமது நடிப்புச் சக்கரவர்த்தியின் தன்னிகரற்ற நாடக ஈடுபாடுகளை பெருமையாக எடுத்துரைக்கிறது. ரொம்ப ரொம்ப நான் ரசித்த கட்டுரை.

'மன்னவன் வந்தானடி' தினமணி கதிர் விமர்சனம் நன்று.

'சத்யம்' காவியத்தின் 'பேசும் படம்' ஸ்டில்கள் அசத்தலோ அசத்தல். நான்கு பக்கங்களும் கலக்கல். அதுவும் முதல் பக்கத்தில் தலைவர் (சற்று அதிர்ச்சி கலந்தவாறு) தனியாக இருக்கும் போஸ் இன்ப அதிர்ச்சி.

'பூ முகம்' என்ற அபூர்வ இதழிலிருந்து தாங்கள் பதித்திருக்கும் தலைவரின் கருத்து ஆஹா. நடிப்பிலிருந்து விலகுவதில்லை என்று ஆணித்தரமாக தலைவர் தெரிவித்திருக்கும் கருத்து சும்மா நெத்தியடி.

அமரகவி பாரதியாரின் 91வது நினைவு தினத்தையொட்டி தேசிய திலகம் நடத்திய தேசிய கவியின் விழா பற்றிய 'ஆனந்த விகடன்' பதிவு மிக அபூர்வமான ஒன்று. பாரதியின் மேல்தான் தலைவருக்கு எவ்வளவு பற்று! வேறு எந்த நடிகர்களாவது இப்படி ஒரு விழா தேசியக் கவிக்கு எடுத்ததுண்டா? அதே போல் "சிந்துநதியின் மிசை நிலவினிலே" காணொளிப் பாடல் பதிவுக்கேற்ற அம்சமான பொருத்தம்.

கலையுலக சக்கரவர்த்தி குறித்து இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் தெரிவித்திருந்த கருத்துக்கள் அருமையோ அருமை. வியட்நாம் வீடு நாடகத்தைப் பற்றி அவர் சிலாகித்துப் பேட்டி அளித்திருந்தது அவர் ஒரு நல்ல கலைஞர், ரசிகர் என்று அடையாளம் காட்டுகிறது.

தினத்தந்தி 'குடும்பமலர்' இதழின் 'செவாலியே' விருது விழா கன ஜோர்.

'பிலிமாலயா' இதழின் வைரத்திற்கு பொன் அலங்காரம் புகழாரக் கட்டுரை நமது திரிக்கு பொன் அலங்காரமாய் ஜொலிக்கிறது.

தேசிய திலகம் பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 'துக்ளக்' இதழில் அளித்துள்ள பேட்டி கலக்கல்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 104வது பிறந்ததினம் முன்னிட்டு உலகப் பெரு நடிகரும்,பேரறிஞரும் ஒன்று சேர்ந்து நிற்கும் புகைப்படம் சூப்பரோ சூப்பர்.
அண்ணா அவர்கள் தலைமை தாங்கும் "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடக விளம்பரம் இதுவரை எவரும் இணையத்தில் காணாதது.

இதய தெய்வம் குறித்த அறிஞர் அண்ணாவின் புகழுரை அட்டகாசம். தலைவரின் மேல் மாசுமருவற்ற அன்பை திரு. அண்ணாதுரை இறுதிவரை வைத்திருந்தார் என்பதற்கு இக்கட்டுரை ஒரு சான்று. தன் சொந்த முயற்சியினாலும், உழைப்பினாலும்தான் நடிகர் திலகம் இமாலயப் புகழ் பெற முடிந்தது என்று அண்ணா குறிப்பிட்டிருப்பது நூறு சதவிகிதம் நிஜம்.

தந்தை பெரியார் அவர்களின் 134வது பிறந்ததினத்தையொட்டி பகுத்தறிவுப் பகலவரும், படிக்காத மேதையும் அமர்ந்துள்ள புகைப்படம் பக்கா.

எவருமே அளிக்க முடியாத ஆவணப் பொக்கிஷங்களை அள்ளி வழங்கி சந்தோஷக் கடலில் எங்களை சதாசர்வகாலமும் நீந்த வைத்துக் கொண்டிருக்கும் தங்கள் அருந்தொண்டிற்கு எப்படி நன்றி நவில்வது என்றுதான் புரியவில்லை.

vasudevan31355
18th September 2012, 10:07 AM
டியர் ராகவேந்திரன் சார்,

பிளாசா தியேட்டர் பொன்னூஞ்சல் பேனர் நிழற்படம், பிளாசா திரையரங்கினுள் வைக்கப் பட்டிருந்த பொன்னூஞ்சல் பட போஸ்டர், பொன் வண்டு பேனர், செவாலியே சிவாஜி நினைவுப் பரிசைப் பெற இருக்கும் வித்தகர்கள் யார் யார் என்ற தேனான விவரங்கள், நீலவானம் காவியத்தில் இடம் பெரும் சாந்தி திரையரங்கு நிழற்படங்கள், ஒவ்வொரு நிழற்படத்திற்கும் அருமையான விளக்க வரிகள், தமிழ்த் தொலைக்காட்சிகளில் வரும் வாரத்தில் திரையிடப்படப்போகும் பழைய திரைப்படங்கள் லிஸ்ட் விவரங்கள், (எனக்கு மிக மிக யூஸ் ஆகக்கூடியது) உட்லண்ட்ஸ் திரையரங்கில் திருவிளையாடல் திரைக்காவிய பேனர், திரைக்காட்சிகள், திருவிளையாடல் டிஜிட்டல் அற்புதம் என்ற தித்திக்கும் செய்தி, 'ஆனந்த பைரவி படத்தினை க்ளாப் அடித்து துவக்கி வைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நன்றி' என்ற டைட்டில் கார்டு காட்சி, புரட்சிக்கலைஞர் முன்னமேயே யார் என்ற கண்டுபிடிப்பு என்று ஜமாய்த்து விட்டீர்கள். அற்புதமான பதிவுகளை அளித்து ஆனந்தப் பட வைத்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

vasudevan31355
18th September 2012, 10:21 AM
அன்பு கார்த்திக் சார்,

பிளாசா திரையரங்கு பற்றிய பழைய நினைவுகளை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். நான் கடலூரைச் சேர்ந்ததால் எனக்கு சென்னை தியேட்டர்கள் அவ்வளவாகப் பரிச்சயமில்லை. ஆனால் சென்னை தியேட்டர்களைப் பற்றிய தங்களின் மலரும் நினைவுகளைக் காணும் போது அந்த மனக்குறை அறவே நீங்கி விடுகிறது.

பழைய தமிழ் திரைப்படங்களில் எந்தெந்த காட்சிகளில் தலைவர் படங்களின் பேனர்கள் வரும் என்று பிட்டு பிட்டு வைத்து விட்ட தங்கள் ஞாபக சக்திக்கு ஒரு இமாலய சபாஷ்!

வேலைப்பளுவின் காரணமாக 'திரும்பிப் பார்க்கிறேன்' ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாலச்சந்தரின் பேட்டியைப் பார்க்க முடியவில்லை. இருப்பினும் என்ன? நீங்கள் தான் இருக்கிறீகளே! தங்கள் பதிவின் விவரங்கள் மூலம் அந்த பேட்டியப் பார்க்க வில்லையே என்ற மனக்குறையும் நீங்கியது. தலைவரைப் பற்றிய நினைவுகளை மறந்து விடாமல் பேட்டியில் பாலச்சந்தர் சொல்லியிருப்பதற்கு நம் திரியின் சார்பாக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.

அருமையான தங்கள் நினைவுப் பதிவுகளுக்கும், இதர பதிவுகளுக்கும் என் மனம் மகிழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

vasudevan31355
18th September 2012, 10:30 AM
டியர் சந்திரசேகரன் சார்,

சிவாஜியை வழிபடும் நடிகர் 'ராணி' இதழ் கட்டுரை பிரமாதம். அற்புதமான கட்டுரை. தலைவரை தெய்வமாய்க் கொண்டாடும் நடிகர் சாய்குமார் அவர்கள். சிறப்பான கட்டுரையை பதிப்பித்ததற்கு நன்றிகள்.

தாங்கள் கூறியுள்ளது போல மலை போன்ற சோதனைகளை சமாளித்து வெற்றி கண்டு சாதனை படைத்தவர் நம் இதய தெய்வம். ஜெயம் நம்ம பக்கம்தான்.

vasudevan31355
18th September 2012, 10:33 AM
அன்பு பம்மலார் சார்,

என்னுடையப் பதிவுகளுக்கான தங்களின் மனம் நிறைந்த பாராட்டுதல்களுக்கு மலையளவு நன்றிகள் சொல்லக் கடமைப்பட்டவனாகிறேன். நன்றி! நன்றி 1

vasudevan31355
18th September 2012, 11:43 AM
நடிகர் திலகம் திரியின் பத்தாவது பாகத்தில் 'உயர்ந்த மனிதன்' காவியத்தை உயர்ந்த ரசனையோடு உரிய ஆய்வு செய்து அனைவரையும் உவகையுறச் செய்த என் அன்பு க(வ)ம்பருக்கு மனம் நிறைந்த என் பாராட்டுக்கள்.

ராஜுவின் இருபதாவது திருமண நாள் விழாவின் போது கோபால் குடித்துவிட்டு தனி அறையில் ராஜுவை வார்த்தை அம்புகளால் துளைக்கையில் ராஜு தான் ஒரு சுமைதாங்கி என்று தனக்கு ஏற்பட்ட சுமைகளை ஒவ்வொன்றாக அடுக்கி விவரித்து முடித்து, "கோபால், நான் என் சந்தோஷத்துக்காக வாழ்ந்த சில நாட்கள் பார்வதியோடு வாழ்ந்த அந்த சில நாட்கள்...அந்தநாள்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே தற்செயலாக வேலைக்காரன் சத்யா எதிர்பாராமல் அறைக்குள் நுழைந்துவிட, அதை சற்றும் எதிர்பார்க்காத ராஜுவான நடிகர் திலகம் கோபாலான அசோகன் தோளில் போட்டிருந்த கையை சடாலென எடுத்து, டக்கென்று திரும்பி, அசோகனிடமிருந்து விலகி சற்றே தூர நின்று "சார் விருந்தாளிங்க எல்லாம் உங்களுக்காகக் காத்துகிட்டு இருக்காங்க "என்று சொல்லும் சத்யாவிடம் (சிவக்குமார்) "நாங்க வர்றோம்... நீ போ" என்று அனுப்பி வைக்க எத்தனிக்கும் அந்தக் காட்சி... எத்தனை அர்த்தங்கள் பொதிந்தது?

தன் நண்பனிடம் பேசிக்கொண்டிருக்கும் ரகசிய விஷயங்களின் சம்பாஷணைகளின் போது சத்யா நுழைகையில் தங்கள் இருவரைத்தவிர வேறு எந்த ஒருவருக்கும் தன்னுடைய ரகசியங்கள் தெரிந்து விடக் கூடாது என்று நினைக்கும் அவசர முன்னெச்சரிக்கை வேகம், வேலைக்காரனுக்கு தெரிந்து விட்டால் அவனிடமான தன்னுடைய மதிப்பு குறைந்துவிடக் கூடாதே என்ற முன்ஜாக்கிரதை உணர்வு... எங்களுக்கும் ஒன்றுமே நடக்க வில்லை என்பது போல ஒரு பொய் மாயையை சடுதி வினாடியில் முகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் மொழி வழியாகவும் சத்யாவுக்கு மட்டுமல்ல... நமக்கும் காண்பித்தல்...

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/u.jpg

என்று அந்த ஒரு வினாடி காட்சியில் ஒரு கோடி யுகத்திற்கும் மறக்க முடியாத பாவனையை நம் நெஞ்சில் பதிய வைத்துப் போய் விட்டார் அந்தப் புண்ணியவான் .

ஒரு சிறு சந்தேகம். கோபால் என்றாலே நண்பர்களை நிம்மதியாக வாழவிட மாட்டாமல் அன்புத் தொல்லை கொடுப்பார்களோ! நான் ராஜுவின் நண்பன் கோபாலைச் சொன்னேன்.

vasudevan31355
18th September 2012, 12:15 PM
கோபால் சாருக்காக

http://i.tamiltubes.com/song/sf4p97zns.jpg

http://www.avm.in/images%5CBig1966-1975%5C97.jpg

mr_karthik
18th September 2012, 12:53 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

இங்கு பதிவிட்ட எல்லோருக்கும் பாராட்டு சொல்லும் வகையில் தாங்கள் அளித்த பதிவு, கடந்த ஐந்தாறு பக்கங்களில் வந்துள்ள அனைத்துப்பதிவுகளின் பட்டியல்போல, பொருளடக்கம்போல அமைந்து விட்டது. யாருடைய எந்த ஒரு சிறிய பதிவையும் விடாமல் குறிப்பிட்டிருக்கிறீர்கள் எனும்போது எவ்வளவு ஆழ்ந்து இவற்றைப் படித்துள்ளீர்கள் என்பது தெரிகிறது.

கோபால் மற்றவர்களை வாழ விடவில்லை என்பதை விட, கோபாலை மற்றவர்கள் வாழ விடவில்லை என்பதே உண்மை. ஒருபக்கம், தம்பிக்காகப் பார்த்த பெண்ணை தான் அடைவதற்காக சொந்த அண்ணனே மொட்டைக்கடிதம் எழுதி தம்பி கோபாலின் வாழ்க்கையைக்கெடுத்தார். இன்னொருபக்கம் மலேசிய பெண்போலீஸ் அதிகாரி, போலியாக காதல் நாடகம் ஆடி கோபாலைக்கவிழ்த்தார். இருப்பினும் கோபால் தளராமல், தான் தமிழனாக இருந்தும் தன் மகளை ஒரு தெலுங்கு நாயுடு குடும்பத்திலும், மகனை பஞ்சாப் சீக்கியர் குடும்பத்திலும் சம்பந்தம் செய்து இந்திய நாடு என் வீடு என்று நிரூபித்தாரே, அங்கேதான் கோபால் நிற்கிறார்.

mr_karthik
18th September 2012, 05:11 PM
அன்புள்ள எஸ்.கோபால் அவர்களே,

உயர்ந்த மனிதனைப்பற்றி மிக உயர்ந்த நிலையில் ஆய்வு செய்ததற்கு பிடியுங்கள் முதலில் பாராட்டை.

நான் 'இங்கே' எழுதுவதைப் படித்துவிட்டு நீங்கள் 'அங்கே' பாராட்டுவதும், நீங்கள் 'அங்கே' எழுதுவதைப் படித்துவிட்டு நான் 'இங்கே' பாராட்டுவதும் நமக்குள் நடக்கும் கண்ணாமூச்சி.

சும்மா அலசோ அலசென்று அலசித்தள்ளிவிட்டீர்கள். இதுவரையில் உயர்ந்த மனிதனின் 'உயர்ந்த மனிதனை' எத்தனையோ முறை பலர் பார்த்திருந்தபோதிலும் இனி பார்க்கும்போது ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத்துவங்குவர் என்பது திண்ணம். காரணம் உங்களின் அருமையான அலசல்.

எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம், ஏ.வி.எம்.சரவணன் தொலைக்காட்சி நேரகணலின்போது சொன்னது, பலருக்கும் கூட ஆச்சரியமாக இருக்கலாம். படத்துக்கு ஒப்பந்தம் ஆவதற்குமுன் வங்கப்படத்தின் இக்கதையைக்கேட்ட நடிகர்திலகம் 'இந்த ரோலில் நான் செய்வதற்கு என்ன ஸ்கோப் இருக்கிறது?. வேண்டுமானால் அந்த டாக்டர் ரோலைக்கொடுங்கள் செய்கிறேன்' என்று சொன்னாராம். இந்த ரோலில் என்ன ஸ்கோப் இருக்கிறது என்று கேட்டவர்தான், அதே ரோலில் இப்படி 'நடிப்பு ராஜாங்கம்' நடத்தியிருக்கிறார். அதனால்தான் இவர் நடிப்புக்கு நாயகன்.

நடிகர் திரு ஏ.ஆர்.எஸ். அவர்கள் மிகச்சரியாகச்சொன்னது போல மற்றவர்களின் படங்கள் வெறும் படங்கள், இவரது படங்கள் மட்டுமே நடிக்க வருபவர்களுக்கான பாடங்கள். இவரது எந்தப்படத்தில் குதித்தாலும் முத்தோடுதான் வெளியில் வர முடியும். அது உங்களைப்போல, பிரபுராம் அவர்களைப்போல, முரளி சீனிவாஸ் அவர்களைப்போல முத்துக்குளிப்பாளர்களின் திறமையைப் பொறுத்தது. சிலர் வெறும் சிப்பிகளைப்பொறுக்கிக்கொண்டு வந்துவிட்டு ஒன்றுமில்லை என்று சொல்வது திறமைக்குறைவே தவிர வேறில்லை.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்கள் தனியே வந்தபின் இசைவெள்ளம் பாய்ச்சிய படங்களில் இதுவே சிறந்தது என்ற உங்களின் கூற்றை ஒப்ப என் மனம் மறுக்கிறது. சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்பதே சரியாக இருக்கும். என் கண்ணோட்டத்தில் அவர் எவரெஸ்ட்டின் உச்சியில் ஏறி நின்றுகொண்டு அதற்கு மேல் உச்சம் எங்கே என்று தேடியது சிவந்த மண் படத்தில்தான் என்று நினைக்கிறேன்.

'அந்த நாள் ஞாபகம்' பாடலில் தானும் நடித்துக்கொண்டு, தன் கையிலிருந்த வாக்கிங் ஸ்டிக்கையும் எப்படி பல்வேறு விதமாக நடிக்க வைத்தார் என்று நீங்கள் விளக்கிய விதம் மிகவும் அருமை. 'யார் அந்த நிலவு' பாடலில் தன் கையிலிருந்த சிகரெட்டை மட்டுமல்லாது அதிலிருந்து வெளியான புகையையும் நடிக்க வைத்தவராயிற்றே.

ஆய்வு மன்னரின் அடுத்த படம் என்ன என்று ஏங்க வைத்துவிட்டீர்கள்.

(உங்கள் அனுமதியில்லாமல், உங்கள் ஆய்வுக்கட்டுரையை என் கணிணியில் சேமித்துக்கொண்டேன். 'அப்புறம் அனுமதி வாங்கிக்கொள்ளலாம்' என்ற அசட்டை பத்து சதவீதம். 'அட, நம்ம கோபால்சார்கிட்டே அனுமதியாவது ஒண்ணாவது' என்ற உரிமை தொன்னூறு சதவீதம்)

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.... (கோபால் என்ற) நண்பனே.. நண்பனே... நண்பனே...

vasudevan31355
19th September 2012, 07:14 AM
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

http://www.onsecrethunt.com/wallpaper/wp-content/uploads/2012/09/Ganesh-Chaturthi-Images.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_04_5_zps22734377.jpg?t=1348018877

vasudevan31355
19th September 2012, 07:20 AM
விநாயகர்சதுர்த்தி சிறப்பு வீடியோ பாடல்.

ஆனை முகனே! ஆதி முதலானவனே!
பானை வயிற்றோனே! பக்தர்களைக் காப்பவனே!
மோனைப் பொருளே! மூத்தவனே!
கணேசா! கணேசா!


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=juVSazxOH8c

vasudevan31355
19th September 2012, 08:51 AM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

(தொடர்-8)

நடிகர் திலகத்தின் நாயகிகள் (8) 'லலிதா '

http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-snc7/310247_243304075719597_1149803050_n.jpg

திருவிதாங்கூர் சகோதரிகள் ( பத்மினி, லலிதா, ராகினி) (Thanks Haystack)

http://haystack.colby-sawyer.edu/archive/files/07b8c521fbe4a30fc586a88174779c42.jpg

'ஆசிய ஜோதி' திரு ஜவஹர்லால் நேருவுடன் லலிதா மற்றும் பத்மினி

https://lh6.googleusercontent.com/-aBK8nVRrmvQ/RlKcUMTjz7I/AAAAAAAABTQ/aBasfwErb9g/Padmini%25252C%252520Lalitha%252520Nehru.jpg

'தூக்குத் தூக்கி ' தமிழ்த் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்துடன் லலிதா

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1_zpsf4a251f0.jpg

'உலகம் பலவிதம்' தமிழ்த் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்துடன் லலிதா (மிக அபூர்வ நிழற்படம்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3_zps60a11dc1.jpg

திருவிதாங்கூர் சகோதரிகள் (லலிதா, பத்மினி, ராகினி) என்றழைக்கப்பட்ட மூவரில் மூத்தவர். கொள்ளை அழகு கொண்டவர். நடிகர் திலகத்துடன் தூக்குத் தூக்கியில் மனைவியாக ஜோடி சேர்ந்தார். கண்களால் பேசுவது இவருக்கு கைவந்த கலை. அறிஞர் அண்ணாவின் 'ஓர் இரவு' இவரை உச்சத்தில் நிறுத்தியது. 'கணவனே கண் கண்ட தெய்வம்' திரைப்படத்தில் ஜெமினியை மயக்க விக்கிக்கொண்டே இவர் பாடும் "உன்னைக் கண் தேடுதே" பாடல் உலகப் பிரசித்தம்.

'உலகம் பலவிதம்' நகைச்சுவைக் காவியத்திலும் நடிகர் திலகத்தின் நாயகியாய் வலம் வந்தவர். கதகளி , பரதம் முதலியவற்றில் முறையான தேர்ச்சி பெற்று நிறைய படங்களில் நாட்டியக் காட்சிகளில் சோபித்தவர். நடிகர் திலகத்திற்கு பொருத்தமான ஜோடியாய் இருந்தாலும் அதிகப் படங்களில் ஜோடி சேர்ந்ததில்லை. எனக்கென்னவோ லலிதா பத்மினியை விட அழகில் ஒருபடி தூக்கலாய் இருப்பது போலத் தோன்றும். ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பை இவரிடம் காணலாம். தூக்குத் தூக்கியில் கணவனுக்கு துரோகம் செய்யும் பாத்திரத்தை உறுத்தாமல் செய்திருப்பார். நடிகர் திலகமும், லலிதாவும் இணைந்த டூயட் பாடலான "கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம்?"அம்சத்திலும் அம்சம். 'உலகம் பலவிதம்' காவியத்தில் வரும் நடிகர் திலகம், லலிதாவின் அற்புத டூயட்டான "ஆசைக்கனவே நீ வா...வா..வா...அழகுச் சிலையே நீ வா".... பாடல் மனத்தைக் கொள்ளை கொண்டு போகும்.

நடிகர் திலகமும்,லலிதா அவர்களும் இணைந்து கலக்கும் 'தூக்கு தூக்கி' காவியத்தின் அற்புத டூயட் பாடல்... (வீடியோ)

"கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம்?"...

http://www.youtube.com/watch?v=eyu9Tm8v5fI&feature=player_detailpage

'உலகம் பலவிதம்' காவியத்தில் லலிதா பங்கு பெறும் 'உலகம் பலவிதம் ஐயா' பாடல் வீடியோ.

http://www.youtube.com/watch?v=HovhV-lgk6M&feature=player_detailpage

A special cover was released on 01 Oct 2008 on 80th Birthday of Dr Sivaji Ganesan at Chennai. It is specially dedicated to the Travancore sisters Lalitha, Padmini and Ragini who were born in Thiruvanthapuram in what was the erstwhile Princely state of Travancore. The Three sisters were leading actresses of Indian Cinema and acted in a large number of films and worked with leading actors like 'Nadigar Thilagam 'Sivaji Ganesan , MGR, Raj Kapoor ,Prem Nazir, Rajkumar etc.

http://www.indianstampghar.com/wp-content/uploads/2008/10/121.jpg

(ஜோடிகள் தொடரும்)

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
19th September 2012, 10:33 AM
டியர் வாசுதேவன் சார்,
back with a bang - ஆங்கிலத்தில் கூறப்படும் இந்த மொழிக்கு உதாரணம் தங்களுடைய பதிவுகள். பம்மலாருக்கும் அநைத்து நண்பர்களுக்கும் ஒவ்வொரு பதிவிற்கும் அலசி ஆராய்ந்து பதில் சொல்லும் விதம், தங்களுக்கே உரிய பாணியில் மொழியில் அதை சொன்னது எல்லாமே பாராட்டுக்குரியவை. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டகாசம் அதிலும் குறிப்பாக பாகப் பிரிவினை பாடலை பதிவிட்டு தூள் கிளப்பி விட்டீர்களென்றால், லலிதாவைப் பற்றிய குறிப்புகளுக்கு என்ன சொல்ல... உலகம் பல விதம் படத்தில் நடிகர் திலகத்திற்கும் லலிதாவிற்கும் இன்னொரு டூயட் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக தற்போது வெளிவந்திருக்கும் நெடுந்தகடு பாதி படம் அளவிற்குத் தான் உள்ளது. நடிகர் திலகமும் காக்கா ராதாகிருஷ்ணனும் டி.கே.ராமச்சந்திரனும் சேர்ந்து அடிக்கும் லூட்டி .. இன்னும் சொல்லப் போனால் பாலைவனச் சோலை படத்திற்கு இந்தப் படம் ஒரு உந்து சக்தியாகக் கூட இருந்திருக்கும். இதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கதாநாயகியர் அதுதான் வித்தியாசம் எனவும் எடுத்துக் கொள்ளலாம். தூக்குத்தூக்கி ... உண்மையிலேயே க்ளாஸ் என்பதற்கு உதாரணம். திருவிதாங்கூர் சகோதரிகள் மூவருடனும் ஜோடியாக நடித்தவர் நடிகர் திலகம்.

பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
19th September 2012, 10:41 AM
டியர் முரளி சார்,
சுப்புவின் கருத்துக்குத் தங்களுடைய பதில் நன்று. என்றாலும் அவருடைய உணர்வுகள் நம் அனைவரின் உணர்வுகளையுமே பிரதி பலித்தன என்பது உண்மை. ஏபி என் அவர்களின் கடந்த கால வரலாறு நம் அனைவரின் கண்ணோட்டத்திலும் ஒரே மாதிரித் தான் தோற்றமளிக்கிறது என்றால் காரணம் நாமல்ல. பம்மலார் சொன்னது போல் இதை விவாதிக்க வேண்டாம் என்று எண்ண மனம் மறுக்கிறது.

போதாக்குறைக்கு ஹிந்து வில் வெளிவந்த கட்டுரையில் திரு பரம் கூறிய கருத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தது என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. சட்ட சிக்கல் வர வாய்ப்புள்ளது என்று தெரிந்திருந்தால் அதனைத் தீர்த்து விட்டு செலவழித்திருக்கலாமே என்று ஒர் கருத்து உருவாவதையும் மறுப்பதற்கில்லை. தவறு யார் பக்கம் என்பதை ஆராயாமல் இருக்க முடியாது என்பதே உண்மை நிலை. காரணம் இவ்வளவு பெரிய படத்தை திடீரென ஒரு காட்சியில் திரையிட்டால் எந்த ரசிகராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது ஒருமித்த கருத்து. இது சட்ட விவகாரம் என்றாலும் அதில் ரசிகர்களின் உணர்வும் அடங்கியுள்ளது. இந்த மாதிரி ஒரு நிலைப்பாட்டை அவர் வேறு நடிகரின் படம் என்றால் செய்வாரா... இவையெல்லாம் ஒவ்வொரு ரசிகரின் மனதிலும் எழும் எண்ண ஓட்டங்கள். அதைத்தான் சுப்பு அவர்கள் கூறியிருக்கிறார். அவருடைய வார்த்தைகளில் வேண்டுமானால் கருத்து வேறுபாடு இருக்கலாமே தவிர எண்ணம் நம் எல்லோர்க்கும் ஏற்புடையது தான்.

நக்கீரன் வசனத்தையே சற்று மாற்றிப் போட்டு யோசித்தால் ..

சுப்பு அவர்களின் வாதத்தில் ... பொருளில் குற்றமில்லை. சொல்லில் தான் குற்றமிருக்கிறது... சொல்லில் குற்றமிருந்தால் அது மன்னிக்கப் படலாம். ஆனால் அவருடைய பொருளில் குற்றமில்லை என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.

அன்புடன்

vasudevan31355
19th September 2012, 11:00 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்கள் உயர்ந்த உள்ளத்திற்கும், அன்புப் பாராட்டுதல்களுக்கும் அகம் மகிழ்ந்த என் நன்றிகள். 'உலகம் பலவிதம்' காவியத்தில் வரும் "ஆசைக்கனவே நீ வா" என்ற அரிய அற்புதப் பாடல் முதன் முதலாக இணையத்தில் தரவேற்றப்பட்டு நம் அனைவருக்காகவும் இதோ...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ug13QIPRc6k

pammalar
19th September 2012, 11:02 AM
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

HAPPY VINAYAKA CHATHURTHI TO ALL !

அரிய ஒரிஜினல் புகைப்படங்கள் : 1

திருவிளையாடல்(1965)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Thiruvilayadal1_zps7e560505.jpg

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

RAGHAVENDRA
19th September 2012, 12:04 PM
டியர் வாசு சார்,
உலகம் பலவிதம் ஆசைக் கனவே நீ வா - அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான பாடல் (வேறெங்கே சிலோன் ரேடியோவில் தான்) - அதை இங்கே அனைவரின் பார்வைக்கும் தந்த தங்களுக்கு உளமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.

பம்மலார் சார்,
ஆஹா தலைப்பே சூப்பர் ... சொக்கி இழுக்குதே .... தங்களுடைய பொக்கிஷங்களின் பல கதவுகளில் இன்னொன்று தற்போது திறந்திருக்கிறது. உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும் .. எவ்வளவு அபூர்வமான விலை மதிப்பற்ற மாணிக்கங்கள் . வைரங்கள் ... வைடூரியங்கள் ... என ஜொலிக்கப் போகின்றனவோ... குறிப்பாக தாங்கள் அதனைத் தொடங்கி வைத்த நேர்த்தி .. திருவிளையாடல் படத்தின் ஒரிஜினல் ஸ்டில்லுடன் ..

சும்மா சொல்லக் கூடாதய்யா ...

இங்கு குசும்புவில் யாரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்லர் ...

நன்றியுடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
19th September 2012, 12:14 PM
டியர் கோபால்,
நீதி சௌகார் ஜானகி போல் எனக்கு அவ்வளவு வயதாகி விடவில்லையே... நான் இன்னும் நடிகர் திலகத்தின் பிள்ளை தான் .. அதனால் நான் ஏற்பது என்ற கேள்விக்கே இடமில்லை.. தங்கள் கூற்றுப் படியே பார்த்தாலும் தான் மெச்சுவதை விட மற்றவர்கள் தன் பிள்ளையை மேன்மையான பிள்ளை என்று மெச்சும் போது தான் பெரிதும் மகிழ்வாள். ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோர் எனக் கேட்ட தாய் ... தங்களுக்குத் தெரியாததா ...

அன்புடன்
ராகவேந்திரன்

vasudevan31355
19th September 2012, 12:38 PM
அன்னை இல்லத்தின் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் (ஒரு பிளாஷ்பேக்)

மாலைமலர் june 17, 2010

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5811578_zps1173a4c4.jpg?t=1348038858

தினத்தந்தி செய்திகள் june 18, 2010

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/fe_1806_mn_15_cni_01-1_zpsec5559f5.jpg

pammalar
19th September 2012, 05:01 PM
அரிய ஒரிஜினல் புகைப்படங்கள் : 2

உத்தமபுத்திரன்(1958)

எம்.என்.நம்பியார், நடிகர் திலகம்(விக்ரமன்), பி.கண்ணாம்பா, நடிகர் திலகம்(பார்த்திபன்)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Uthamaputhran1_zpsb1172104.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
19th September 2012, 05:54 PM
125வது பக்கம் : 125வது காவிய புகைப்படம்

இந்த அரிய புகைப்படப் பதிவை கோபாலகிருஷ்ண அடிகளாருக்கு Dedicate செய்கிறேன் !

அரிய ஒரிஜினல் புகைப்படங்கள் : 3

உயர்ந்த மனிதன்(1968)

எஸ்.ஏ.அசோகன், நடிகர் திலகம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Uyarndha%20Manidhan1_zpsb4f11b70.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

mr_karthik
19th September 2012, 06:12 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

நடிகர்திலகத்தின் திரை நாயகியர் வரிசையில் திருவாங்கூர் சகோதரிகளில் மூத்தவரான லலிதாவைப்பற்றிய பதிவு நன்றாக உள்ளது. ஸ்டில்கள், வீடியோக்கள் அனைத்தும் அருமை. சகோதரிகளின் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் உறையையும் தவறாமல் இணைத்துள்ளீர்கள்.

சகோதரிகள் மூவரும் ஒரே மாதிரி உடையணிந்து ஒன்றாக இணைந்து நிற்கும் முழுமையான நிழற்படம் அனைத்திலும் டாப்.

தொகுத்தளிமைக்கு நன்றிகள்

mr_karthik
19th September 2012, 06:29 PM
அன்புள்ள பம்மலார் சார்,

தங்கள் பாராட்டுக்கு நன்றி. நமது ராகவேந்தர் சார் அவர்கள் பதிவிட்ட , நீலவானத்தில் இடம்பெற்ற சாந்தி திரையரங்க நிழற்படங்களைப் பார்த்ததும், சாந்தி பற்றிய மலரும் நினைவுகளில் சிலவற்றை எழுத வேண்டுமென்று தோன்றியது. அதனால் எழுதினேன். அது தங்களுக்கும் வாசுதேவன் சாருக்கும் பிடித்திருந்ததில் மிகவும் மகிழ்ச்சி.

தாங்கள் அதிரடியாகத் துவங்கியுள்ள 'ஒரிஜினல் நிழற்படங்கள்' வரிசை துவக்கமே அமர்க்களம். திருவிளையாடல், உத்தமபுத்திரன், உயர்ந்த மனிதன் நிழற்படங்கள் அனைத்தும் கிரிஸ்டல் கிளியராக உள்ளன.

ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி தலைப்புக் கொடுத்து, அவற்றுக்கு வரிசை எண்ணும் அளித்து வருவது ரெடி ரெஃபரென்ஸுக்கு உதவும் வகையில் உள்ளது. 125-ம் பக்கம் வரும்போதே அதற்கான சிறப்பு பதிவொன்றை அளிப்பீர்கள் என்று நினைத்தேன், அளித்து விட்டீர்கள்.

பாராட்டுக்களும், நன்றிகளும்.

pammalar
19th September 2012, 08:13 PM
125வது பக்கம் : 125வது காவிய விளம்பரங்கள்

இந்த அரிய ஆவணப் பொக்கிஷங்களை அன்புச்சகோதரர் mr_karthik அவர்களுக்கு Dedicate செய்கிறேன் !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/UMAd3_zps7a25803e.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/UM100_zpsdd0b44fd.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

KCSHEKAR
19th September 2012, 09:49 PM
அன்புள்ள பம்மலார் சார்,

தாங்கள் அதிரடியாகத் துவங்கியுள்ள 'ஒரிஜினல் நிழற்படங்கள்' வரிசை துவக்கமே அமர்க்களம். திருவிளையாடல், உத்தமபுத்திரன், உயர்ந்த மனிதன் நிழற்படங்கள் அனைத்தும் கிரிஸ்டல் கிளியராக உள்ளன.

ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி தலைப்புக் கொடுத்து, அவற்றுக்கு வரிசை எண்ணும் அளித்து வருவது ரெடி ரெஃபரென்ஸுக்கு உதவும் வகையில் உள்ளது. 125-ம் பக்கம் வரும்போதே அதற்கான சிறப்பு பதிவொன்றை அளிப்பீர்கள் என்று நினைத்தேன், அளித்து விட்டீர்கள்.


பாராட்டுக்களும், நன்றிகளும்.

KCSHEKAR
19th September 2012, 09:51 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

இங்கு பதிவிட்ட எல்லோருக்கும் பாராட்டு சொல்லும் வகையில் தாங்கள் அளித்த பதிவு, கடந்த ஐந்தாறு பக்கங்களில் வந்துள்ள அனைத்துப்பதிவுகளின் பட்டியல்போல, பொருளடக்கம்போல அமைந்து விட்டது. யாருடைய எந்த ஒரு சிறிய பதிவையும் விடாமல் குறிப்பிட்டிருக்கிறீர்கள் எனும்போது எவ்வளவு ஆழ்ந்து இவற்றைப் படித்துள்ளீர்கள் என்பது தெரிகிறது.


Add my appreciation and thanks

pammalar
19th September 2012, 10:15 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களது இதயங்கனிந்த பாராட்டுதல்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்..!

'தமிழ்த் தொலைக்காட்சிகளில் வரும் வாரத்தில் பழைய திரைப்படங்கள்' என்கின்ற தலைப்பில் தாங்கள் அளித்துள்ள பதிவு ஒரு அம்சமான Ready Reckoner. இதனை சிரத்தையோடு தொகுத்துத் தந்துள்ள தங்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்..!

வைரவிழாக் காணும் UAA குழுவினரின் நாடகத் திருவிழா இனிதே நடைபெற இதயபூர்வமான வாழ்த்துக்கள்..!

தாங்கள் சுடச்சுடப் பரிமாறிய "திருவிளையாடல்" திரைக்காவிய திரையரங்க நிழற்படங்கள், ஞாயிறு [16.9.2012] மாலை சென்னை 'உட்லாண்ட்ஸ்'ஸில் இருந்த உணர்வை உண்டாக்கியது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th September 2012, 10:53 PM
டியர் வாசுதேவன் சார்,

தாங்கள் வழங்கிய நீண்ட-நெடிய பாராட்டுதல்களுக்கு எனது சிரந்தாழ்த்திய சிகர நன்றிகள்..!

மெட்ராஸ் பாஷை காமெடிக்கு ஒரு குளோபல் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்த நகைச்சுவை நடிகர் 'லூஸ்' மோகன் அவர்களின் மறைவுக்கு தாங்கள் செலுத்திய அஞ்சலி ஒரு 'சாதனை' அஞ்சலி.

அடிகளாரைப் பாராட்டும்முகமாக தாங்கள் அளித்துள்ள "உயர்ந்த மனிதன்(1968)" பதிவு உள்ளத்தைத் தொட்டது.

விநாயக சதுர்த்தி ஸ்பெஷலாக தாங்கள் அளித்துள்ள விண்ணுலக கணேசர் நிழற்படம், கலையுலக கணேசர் காட்சிதரும் "திருவிளையாடல்(1965)" நிழற்படம், 'புள்ளையாரு' பாடல், இம்மூன்றும் நமது திரிக்கு தாங்கள் வழங்கிய பிள்ளையார் சதுர்த்திக்கான "அப்பம், அவல், பொரி" பிரசாதங்கள்..!

17.6.2010 தேதியிட்ட 'மாலை மலர்' மற்றும் 18.6.2010 தேதியிட்ட 'தினத்தந்தி' நாளிதழ்களில் வெளிவந்த நமது நடிகர் திலகத்தின் 'அன்னை இல்லம்' வரசித்தி விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேகம் பற்றிய செய்திகளை விநாயக சதுர்த்தியான இன்று தாங்கள் பதித்தது சரியான டைம்லி ஆக்ஷன்..! இதுதான் தாங்கள் எங்களுக்களித்த 'மோதக'ப் பிரசாதம்..!

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
19th September 2012, 11:22 PM
ராகவேந்தர் சார்,

நம் அனைவருக்குமே திருவிளையாடல் திரைப்படம் வெளியான விதம் மிகுந்த வருத்தத்தை கொடுத்திருக்கிறது எனபதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை. இந்த படம் இப்படி வெளியாகி இருக்கும் செய்தியை சென்ற சனிக்கிழமை மாலை உங்களை அழைத்து சொன்னபோது நாம் இருவரும் பகிர்ந்து கொண்ட எண்ணங்கள் உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். உங்களிடம் பேசி விட்டு சுவாமியிடம் இந்த தகவலை சொல்லும்போதும் அதே போன்ற உணர்வுகளையே பரிமாறிக் கொண்டோம். அருமை இளைய சகோதரர் சுப்பு அவர்களின் உணர்வுகளோடு நானும் ஒத்துப் போகிறேன். ஆனால் அவர் சில அமங்கலமான பதங்களை தவிர்த்திருக்கலாம் என்ற எண்ணத்தில்தான் குறிப்பிட்டேன். காரணம் நடிகர் திலகம் அவர்களே தனக்கு துரோகம் செய்தவர்களை சுடு சொற்கள் கொண்டு தாக்கியதில்லை. மாறாக அவர்களை கண்டு கொள்ளாமல்தான் போயிருக்கிறார். அதனால்தான் என்னைப் போல் ஒருவன் பாடல் வரிகளையும் குறிப்பிட்டேன். மற்றபடி நானே அந்தப் பதிவில் சொன்னபடி படம் தமிழகமெங்கும் திரையிடப்பட்டு பெறும் வெற்றியடைய வேண்டும் என்ற பொதுவான கருத்தில் மாற்றமேயில்லை.

அன்புடன்