PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 10



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16 17

RAGHAVENDRA
6th April 2013, 03:12 PM
நடிகர்திலகத்தின் காட்சி finish பண்ணும் போது character -action -mood ஆகிய அனைத்தையும் ஒரு சிறு gesture மூலம் establish பண்ணும் அழகு.

நூற்றுக்கு நூறு உண்மை. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் இதனை நாம் காணலாம். இதனை நான் முன்பே வேறொரு பதிவில் சுட்டிக் காட்டியிருக்கிறேன். உதாரணத்திற்கு மணமகன் தேவை படத்தைக் கூற விரும்புகிறேன். பானுமதியின் வீட்டிற்கு முதல் முறை வரும் போது காரில் வருவார். அப்போது அவர் வீட்டில் காரை நிறுத்தி விட்டு உள்ளே போக வேண்டும். காரை நிறுத்தி, இன்ஜினை அணைத்து விட்டு சாவியை எடுத்துக் கொண்டு வந்து அந்த காட்சியை முடிப்பார். அதன் பிறகு காட்சி வீட்டிற்குள் தொடரும். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் முடிக்கும் போது ஒரு ரிதம் இருக்கும், perfect finish இருக்கும்.

RAGHAVENDRA
6th April 2013, 03:23 PM
அன்பு நண்பர் P_R அவர்களுக்காக

நடிகர் திலகத்தின் அழுகைக் காட்சிகள் - தொடர்

பொதுவாக இக்காலத்தில் பரவலாக ஒரு தவறான அல்லது மிகையான அபிப்ராயம், நடிகர் திலகத்தின் படங்களில் வரும் அழுகைக் காட்சியைப் பற்றி நிலவி வருகிறது. அந்த myth உடைக்கப் பட வேண்டும் என்பதே இத் தொடரின் நோக்கம்.

அழுகை பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களில் திரைப்படங்களில் இடம் பெறும். இதனைப் பற்றித் தனியாக விரிவாக எழுதலாம். முதலில் உதாரணங்களைக் கூற முற்படுகிறேன். அதன் பின்னர் அந்த பல்வேறு விதமான சூழ்நிலைகள் தானாகவே விளக்கி விடும்.

பெரும்பாலானோர் பார்த்திராத, அல்லது ஒதுக்கியிருக்கக் கூடிய படம் தாம்பத்யம். நான் ஏற்கெனவே சொன்னது போல் அரைகுறை அல்லது அரை மனதோடு உருவாக்கப் பட்டது போல் தோற்றமளிக்கக் கூடிய தொழில் நுட்பங்களைத் தாண்டி, நடிகர் திலகம் என்னும் மாமேதை ஒளிரும் காட்சிகள் அடங்கிய சில படங்களில் இதுவும் ஒன்று. இதனுடைய மைனஸ் பாயிண்டுகளை எழுத ஏகப் பட்ட பக்கங்கள் வேண்டும். ஆனால் சிங்கம் ... அதன் மேன்மை குறையாமல் அப்படியே இருக்கும் படம் தாம்பத்யம்.

நடிகர் திலகத்தை விரும்புபவராக ராதா வருவார். ஆனால் அவர் விரும்புவது நடிகர் திலகத்திற்கு தெரியாது. ஆனால் நன்கு பழகிய நண்பராக நடிகர் திலகம் கருதி பழகி வருவார். ராதா தொடர்பான காட்சிகள் பின்னோட்டமாக வரும். ஒரு கட்டத்தில் ராதா இறந்து விடுவார். அப்போது நடிகர் திலகம் அழுகையைக் காட்ட வேண்டிய சூழல்.

தமக்கு மிகவும் பரிச்சயமான ஒருவர் இறக்கும் போது நாம் வருத்தப் படுவது அழுவது உண்டு என்றாலும் அது மிகவும் ஆழமான வருத்தமாக இராது. நாம் அதற்கு பச்சாதாபப் பட்டு மிகவும் தெரிந்தவர் இறந்து விட்டாரே என்பதற்கு எவ்வளவு வருத்தம் வருமோ அந்த அளவிற்குத் தான் வருந்துவோம், அதற்கு ஏற்ற வகையில் தான் நம்முடைய அழுகையும் இருக்கும். இதனை இக்காட்சியில் நடிகர் திலகம் தன் அழுகையின் மூலமாகவே அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். ஒரே ஒரு முறை அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் உச்சரிப்பார் ... அவ்வளவு தான் ...

வாசு சார் ,இந்தக் காட்சியை முடிந்தால் வீடியோவில் தரவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதில் பொதிந்துள்ள நுட்பமான உணர்வை நடிகர் திலகத்தின் நடிப்பில் அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

இன்னும் பல படங்களிலிருந்து இத் தொடருக்கான விஷயங்கள் வர உள்ளன.

Gopal.s
6th April 2013, 03:42 PM
தாம்பத்யம் ஒரு surprise package . முதல் காட்சியில், கொலை குற்றம் சாட்ட பட்டு போலீஸ் தேடி கொண்டிருக்கும். வீட்டுக்கு வரும் அவரிடம், hostility காட்டும் பிள்ளைகளிடம், அவர் காட்டும் reaction ......

JamesFague
6th April 2013, 04:12 PM
Even in the remake of Prem Nagar & Avataar both ANR & Rajesh Khanna not showing
their expression which is required for that film. I have watched recently the telegu
version of VM where ANR delivering the dialogue without any expression/emotions.
That particular walk of our NT from the step during the song scene of Kalaimagale
is enough why our NT incomparable actor with anyone in the world. Simlilary the
case of with Avataar. Rajesh Khannan not showing the correct expression throughout
the film whereas in Vazhkai everyone can see the difference why our NT the University of
acting.

adiram
6th April 2013, 04:25 PM
Mr. Gopal sir,

namadhu threadil ennaikkum humour shortage kidaiyaadhu. especially Mr. Ganpat sir's humours are 'must enjoy' category. Previously mr_karthik's posts also carry needful humours. But avar kindaladippadhu mostly about artists, not about hub members (now we miss those humours)..

humours are always enjoyable till they are not crossing the boundries.

adiram
6th April 2013, 04:34 PM
Mr. (Neyveli) Vasudevan sir,

Thanks for the clipping of 'Vaazhkai' the great movie. What an expression in that scene.

Mr.Raghavendar sir, we can raise up our collars as it is one of 'after 80' movies.

I must watch the full movie today.

Gopal.s
6th April 2013, 09:23 PM
Mr. Gopal sir,

namadhu threadil ennaikkum humour shortage kidaiyaadhu. especially Mr. Ganpat sir's humours are 'must enjoy' category. Previously mr_karthik's posts also carry needful humours. But avar kindaladippadhu mostly about artists, not about hub members (now we miss those humours)..

humours are always enjoyable till they are not crossing the boundries.
ரொம்ப நன்றி ஆதிராம் சார். கார்த்திக்,சாரதா இருவரையும் ஞாபக படுத்தி கொண்டே இருப்பதற்கு. உங்கள் செல்வாக்கை உபயோக படுத்தி, அவர்களை திருப்பி, திரிக்கு இழுத்து வாருங்களேன். புண்ணியமாய் போகும்.

RAGHAVENDRA
6th April 2013, 11:34 PM
நகைச்சுவைக்கு என்றே நமது திரைப்படப் பட்டியலில் அடுத்து இடம் பெறப் போகும் மணமகன் தேவை படம் பிரசித்தி பெற்றது. தன்னுடைய தங்கை பெயரையே தன்னுடைய இன்னொரு உருவமாக பாவித்து அதற்கு சூட்டி ஒரே சமயத்தில் தன்னை காதலிக்கும் இளைஞர்களை சாமர்த்தியமாக சமாளிக்கும் பெண்ணின் வாழ்க்கையில் சந்திக்கும் சம்பவங்களே படத்தின் கரு. இப்போதைக்கு இது போதும். மணமகன் தேவை திரைப்படத்திலிருந்து ஒரு நிழற்படம், நகைச்சுவையாக உருவாக்கப் பட்டுள்ளது இங்கே நம் பார்வைக்கு.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/MMTHEVAI07_zps07a53019.jpg

Murali Srinivas
7th April 2013, 12:24 AM
There will always be some combos that you would dream of that may be hard to materialise. But still even the remote possibility of such combo will make you mouth watering. Such a combo when it becomes a reality will give immense pleasure to one and all. No, I am not talking about the Sachin - Ricky of MI. Though they are yet to fire in unison, our thread's Sachin and Punter have set up a great momentum. It is a pleasure to read the current series and in addition when you are additionally served with delectable delicacies by Prabhu and Ganesh [the later nicely mixing it with the traditional Cauvery Kusumbu] what more do you want? Please continue as i lean back in my arm chair and enjoy it.

Vasu Sir,

Glad to see you back. Hope you are completely recovered from the illness.

Regards

IliFiSRurdy
7th April 2013, 10:33 AM
நண்பர்கள் திரு.கோபால்,ஆதிராம் அன்புடன் அளித்த பாராட்டுக்களுக்கே, கிறு கிறுத்து நின்ற என்னை,கீழேயே தள்ளி விட்டது நண்பர் முரளி அவர்களின் கனிவான பாராட்டு.

இவ்வகையில் சில சமயம் பாராட்டுகளுக்கு நன்றி சொல்வது கூட சிக்கல் ஏற்படுத்தி விடும்.எப்படி?

ஒரு ராமாயண நாடகம் நடந்து முடிந்தவுடன் அதில் அனுமனாக நடித்த ஒரு பெரிய நடிகரை அனைவரும் மேடையேறி பாராட்டினர்.அதை ஏற்றுக்கொண்டு பேசிய அவர் அடக்கத்துடன்,"இந்த பாராட்டில் பெரும்பகுதி எனக்கு அனுமாராக ஒப்பனை செய்தவரையே சாரும்!" என அறிவிக்க,அந்த ஒப்பனைக்காரர் (என் போன்ற ஒரு அப்பாவி) உடனே மைக்கை பிடித்து,"அண்ணா, என்னை அளவுக்கதிகமாக புகழ்கிறார்! நான் என்ன அப்படி பிரமாதாமாக ஒப்பனை செய்து விட்டேன்.ஒரு வால் ஒன்றை ஓட்டினேன்.அவ்வளவுதான்!!" என் அதை விட அடக்கமாக சொன்னாராம்.

மேலும் ராமாயணமும் மகாபாரதமும் யார் சொன்னாலும் சுவையாக இருக்கும்.அதைப்போல அல்லவா நம் தலைவர் புராணமும்!ஒவ்வொரு நண்பரும் தன பங்கிற்கு தலைவர் நடித்த ஒரு காட்சியை விவரிக்கையில்,அப்படியே மனம் மிக இலேசாகி விடுகிறதே!நண்பர் கோபால் அவர் பாணியில் தலைவரை உலக மகா நடிகர்கர்களுடன் ஒப்பிடுகையில் மனம் பூரிக்கிறதே!அப்பொழுது ராமருக்கு அணில் செய்த சிறு உதவியைப்போல
நானும் என் பங்கிற்கு ஏதாவது எழுத மனம் விழைகிறதே!இதெல்லாம் தன்னிச்சை செயல்கள்
(reflex actions) அல்லவா?

ஆயிரக்கணக்கில் அற்புதமான பதிவுகளை இட்டு அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் நண்பர்கள்,முரளி,பார்த்தசாரதி,பம்மலார் போன்றோர் மனம் மகிழ என் பதிவுகள்
அமையுமெனில் அதை விட எனக்கு மகிழ்ச்சியளிப்பது வேறு எதுவாக இருக்க முடியும்?

எல்லா வகையிலும் நான் இந்த மய்யம் அமைப்பிற்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

IliFiSRurdy
7th April 2013, 10:41 AM
நன்றி கோபால்.
"உலக பெரும் அதிசயம்" இன்னும் பல பகுதிகள் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.

IliFiSRurdy
7th April 2013, 10:58 AM
Thank you Adiram ji!
I may be Dhoni,but there are strong fielders like Pollard standing on the fence to prevent the balls from crossing the boundary.
(those who have watched the IPL yesterday would have been thrilled by the Sivaji catch taken by Pollard)

adiram
7th April 2013, 11:03 AM
ரொம்ப நன்றி ஆதிராம் சார். கார்த்திக்,சாரதா இருவரையும் ஞாபக படுத்தி கொண்டே இருப்பதற்கு. உங்கள் செல்வாக்கை உபயோக படுத்தி, அவர்களை திருப்பி, திரிக்கு இழுத்து வாருங்களேன். புண்ணியமாய் போகும்.

Gopal sir,

PM anuppaththaan mudiyum. adhukku atleast reply panninaaththaane.

avanga phone numberum theriyaadhu. (yaarudaiya phone numberum theriyaadhu, including yours).

avargal irauvarai vida naan aavaludan adhigamaaga edhirpaarppadhu, namadhu PAMMALAR avargalin varugaiyai.

adiram
7th April 2013, 11:11 AM
Thank you Adiram ji!
I may be Dhoni,but there are strong fielders like Pollard standing on the fence to prevent the balls from crossing the boundary.
(those who have watched the IPL yesterday would have been thrilled by the Sivaji catch taken by Pollard)

Ganpatji,

what Pollard caught was not the ball, but the victory of CSK.

IliFiSRurdy
7th April 2013, 01:12 PM
Ganpatji,

what Pollard caught was not the ball, but the victory of CSK.

Very well said!!

I could not find a suitable adjective for it so created my own.Sivaji means out of the world,great,prodigious and can not be done again by others!

Dwightvak
7th April 2013, 06:07 PM
Got this image from Facebook...Looks like same year released film. The hype that one film enjoyed was extreme when compared to other..Any insight?2314

Dwightvak
7th April 2013, 06:35 PM
ILAYARAJA TOO HAILS NADIGAR THILAGAM - Reproduced News from Internet

`கடினமான பாடலுக்கு பிரமாதமாக வாயசைத்தார்'- சிவாஜிகணேசனுக்கு இளையராஜா புகழாரம்

பஞ்சு சார் அடுத்து 'கவரிமான்' என்ற படத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார். நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (மனைவி சோரம் போகிற காட்சியை பார்க்கும் கணவனின் கேரக்டர்)

என் இசையில் முதன் முதலில் ஒரு தியாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். 'ப்ரோவ பாரமா?' என்ற கீர்த்தனையை ஜேசுதாஸ் பாட, டி.வி.கிருஷ்ணன் அவர்களின் வயலினும், டி.வி.கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன.

சிவாஜி இந்தப் பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்.

ஆரம்பத்தில் ஜேசுதாஸ் ராகம்பாடி, தாளம் ஏதும் இல்லாமல் திடீரென்று `ப்ரோவபாரமா' என்று தொடங்குமாறு பதிவு ஆகியிருந்தது.

ராகம்பாடி, `ப்ரோவ பாரமா' தொடங்குவதற்கு இடையில் தாளத்தில் ஏதாவது வாசித்திருந்தால் நடிப்பவர்களுக்கு பாடல் தொடங்கும் இடம் சரியாகத் தெரிந்து வாயசைக்கலாம்.

ராகம்பாட, வெறும் தம்புரா மட்டும் போய்க்கொண்டிருக்க, அது எவ்வளவு நேரம் போகிறது என்று கண்டுபிடித்து, பாடல் ஜேசுதாஸ் குரலில் வரும் அந்த நொடியை எப்படியோ கண்டுபிடித்து சரியாக வாயசைத்தார்.

இதைப் பாராட்டி, அண்ணன் சிவாஜியிடம், 'எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

'என்னை என்னடா நினைச்சிட்டே? சும்மா ஏனோதானோன்னு சினிமாவுக்கு வந்தவன்னு நினைச்சியா? இதெல்லாம் முடியாட்டா ஏண்டா ஒருத்தன் நடிகனா இருக்கணும்?' என்று கேட்டார் சிவாஜி.

'நடிகர் திலகம்' என்று சும்மாவா பட்டம் கொடுத்தார்கள்?

P_R
7th April 2013, 11:29 PM
Finally finally saw ThillAnA on the large screen :bluejump:
Arguably the most complete Tamil film of all time.
Sivaji, KV Mahadevan, APN, Padmini, Nagesh, Baliah, Manorama

An outstanding performance from Sivaji. As I tried to write once earlier, SikkalAr is one of his very best characters/performances. The naturally hypersensitive supreme artist is depicted with such fluency and perfection.

Right from the first சமிக்ஞை to the (தன்னையே மறந்து வாசிக்கும்) Baliah - to notice Mohana to the dazed expression when glancing at his hand - which had just slapped Mohana - in the intermediate moment between the Maharaja clearing the air and exiting and Thangarathnam (AVM Rajan) entering to inform him of Mohana's suicide attempt. சிக்கலார் பத்தி எவ்வளவு தான் சொல்றது. It always feels incomplete. Such a wholesome performance.

Hats off to APN - every single larger-context (நாதச் சக்ரவர்த்தி) line was placed with maximum effect without affecting the balance of the script - indeed accentuating the aesthetics. And some camera movements can only be appreciated fully on large screen - with larger than life images - like the confrontation with Mohana in Madhanpur - the drama is there even in the arcs the camera cuts to capture Shanmugam back and forth.

My favourite Nagesh performance of all time. I have possibly quoted most of his lines. He is at his funniest best when he attempts to insult Sivaji - which he does in many places in the film. The way he asks them to start performing in the Rao Bahadur function..

"சண்முகசுந்தரம், நீ சட்டையெல்லாம் அவுத்துட்டு... ' :rotfl:
Still laughing as I type this.

:ty: to Murali sir and Mr.Raghavendran and the NT Fans organization for the screening. Look forward to the next.

RAGHAVENDRA
8th April 2013, 12:23 AM
It's our pleasure, Prabhu for having you all with us during such occasions. I could not sit with the audience because of arrangement commitments and my personal commitments. Hope you enjoyed the evening.

BEFORE AND AFTER ... THE Exhibition Hall before the inauguration (clicked on 6th Ap evening) and you can see Murali Sir in one of those snaps.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741301_zps7e402af8.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741302_zpse3f9a982.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741303_zpsbccde8b8.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741304_zps5aa36a16.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741305_zps0a2499d4.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741306_zps1264dd26.jpg

RAGHAVENDRA
8th April 2013, 12:26 AM
And now, today's snaps at the exhibition hall just after inauguration. You can see FILM NEWS ANANTHAN explaining to the Consul General.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741307_zpsbfd7efd1.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741308_zps062adb46.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741309_zps900c7a37.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741310_zps1f832bdb.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741311_zps7d4c561a.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741312_zps25711a53.jpg

RAGHAVENDRA
8th April 2013, 12:28 AM
இன்றைய மாலைப் பொழுது மறக்க முடியாத பொழுதுகளில் ஒன்றாக சேர்ந்து கொண்டது.

100 ஆண்டு காண உள்ள தமிழ்த் திரையுலகைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முக்கிய காரணமாயிருக்கும் திரு அனந்தன் அவர்களை கௌரவித்தது, நம்மை நாமே கௌரவித்துக் கொண்டதற்கு சமம். நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் மூலம் அது நிறைவேறியிருப்பது பேரானந்தம்.

Gopal.s
8th April 2013, 05:47 AM
P_R,
I am in 1000% agreement with you. It is the best complete Tamil Movie ever made.

Gopal.s
8th April 2013, 05:49 AM
P _R , முரளி,ராகவேந்தர்,

நான் யாரை பார்த்தும் வயிற்றெரிச்சல் பட்டதில்லை. ஆனால் சிக்கலாரை பெரிய திரையில் நேற்று கண்டு களித்த அனைவர் மீதும்........ H mmm . Ex -Pat ஆக வாழ்வதின் சோகம் இந்த மாதிரி பொன்னான தருணங்களை வாழ்க்கையில் இழப்பதே.

ஒரே அசல் தமிழ் படம். இந்திய அளவிலேயே பார்த்தாலும் சிறந்த ஐந்துக்குள் வரும்.

முழு கதையை bind form இல் படித்துள்ளேன். (ஆஹா! இந்த சுகமே அலாதி) விடுமுறை நேரங்களில் அம்மாவின் வழி பாட்டி தாத்தா இருந்த திருவிடை மருதூர் சென்று விடுவோம். விறகடுப்பு வெந்நீர் குளியல். (அ ) காவிரி,வீரசோழன் ஆற்று குளியல்(climate பொறுத்து மற்றும் ஆற்றின் தண்ணீர் வரத்து).. பாட்டியின் கும்மிட்டி அடுப்பு சமையல். மதியம் முழுவதும் தாத்தாவின் easy -chair கவர்ந்து,கிணற்றடியில், தென்னை,பாக்கு மர பெரிய தோட்டத்தில், டெல்லி மோடா என்ற விஷயத்தை காலுக்கு தோதாய் வைத்து, ஆனந்த விகடன், குமுதம், கல்கி முதலிய பத்திரிகைகளில் இருந்து கிழிக்க பட்டு தைக்க பட்ட bind செய்த கதைகள்(கிழிக்க பட்ட பக்கங்களில், இந்த புதிருக்கு விடை 71 ஆம் பக்கம் என்று நாம் பார்க்கும் 21 ஆம் பக்கத்தில் இருக்கும். 71 ஆம் பக்கத்திற்கு எங்கே போவது).. பக்கத்தில்(left side) transistor . ceylon ஆசிய சேவை, madras ,trichy ,pondicherry வானொலி.இன்னொரு பக்கத்திலே(right side) சீடை,முறுக்கு,காரா சேவு, தேன்குழல் போன்ற home-made unlimited snacks .

வீட்டின் மேளா போல கும்மோணம்(kumbakonam) போய் சினிமா.ஒரு வாரம் திட்டமிட்டு நடை பெரும் நிகழ்வு. ஹெகல் சொல்லிய Thesis ,Anti -thesis ,Synthesis ஒவ்வொரு சினிமா அனுபவத்திலும் உண்டு.முடிந்தவுடன் "Ariya bhavan" dinner (idli ,dosai க்கு side -dish சாம்பார் ,சட்னி கூட இன்றைய காலங்களில் தரத்தில் தேய்ந்து கொண்டே இருக்கிறது. கலர் கலரான odourless ,tasteless .இன்றைய படங்கள் போலவே )

தாத்தா ,பாட்டி, அம்மா,நான் ,என் தங்கை, தம்பிகள்,அனைவரும், குடந்தை jupiter theatre இல்
டிசம்பர் 15 வாக்கில்.1968.(எனக்கு அரை பரீட்சை லீவ்.) தாத்தாவுக்கு படு favourite படம். ஆனால் புலம்பி கொண்டே இருந்தார்."மன்னவன் வந்தானடி" பாட்டு போல ஒன்று கூட அமையவில்லையே என்று.(high bench mark setting என் ரத்தத்திலேயே ஊறியுள்ள ரகசியம் புரிந்திருக்குமே?)

நேற்று பூரா mood -out . Borges " labyrinth " எடுத்து revise செய்தேன்.ஆனால் மனசு பூரா soviet centre மீது. :fatigue:

RAGHAVENDRA
8th April 2013, 08:01 AM
நேற்றைய நிகழ்ச்சியின் நிழற்படங்கள் .. தொடர்ச்சி

சென்னை இந்திய ருஷ்ய கலாச்சார மற்றும் நட்புறவு அமைப்பின் நிர்வாகி திரு தங்கப்பன் அவர்கள் வரவேற்பு மற்றும் தலைமையுரை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741313_zpsc8b8a0e0.jpg

மேடையில் மதிப்பிற்குரிய சான்றோர்கள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741314_zpsa1ce55cc.jpg

நமது அமைப்பின் செயலாளர் இந்த மாநாட்டினைப் பற்றிய கருத்துரை [வேறெ யாருமில்லே .... அடியேன் தான் ...]

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741315_zps1892a602.jpg

ருஷ்யக் கலாச்சார மய்யத்தின் இயக்குநருக்கு நமது சூப்பர் ஸ்டார் முரளி சார் பூங்கொத்தளித்து வரவேற்கும் ரம்மியமான காட்சி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741316_zps47b8fd7b.jpg

அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் திரு பூமிநாதன் அவர்கள் ருஷ்ய தூதரையும் ருஷ்ய கலாச்சார மய்ய இயக்குநரையும் கௌரவிக்கும் காட்சி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741317_zpsdb4f8617.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741318_zpse1de50bd.jpg

திரு பூமிநாதன் அவர்கள் திரு பிலிம் நியூஸ் அனந்தன் அவர்களை கௌரவிக்கும் காட்சி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741319_zps29b0c080.jpg

திரு பூமிநாதன் அவர்கள் திரு ஜெம் வீரமணி அவர்களை கௌரவிக்கும் காட்சி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741320_zps7fe90983.jpg

RAGHAVENDRA
8th April 2013, 08:04 AM
தென்னிந்திய ருஷ்ய தூதர் அவர்கள் திரு பிலிம்நியூஸ் அனந்தன் அவர்களை கௌரவிக்கும் காட்சி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741324_zpsbb5fe340.jpg

ருஷ்ய தூதர் அவர்கள் உரை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741325_zpse96459e6.jpg

மாணவிகள் நடிகர் திலகத்தின் உருவப் படத்தை வரைந்து தூதர் அவர்களிடம் வழங்கும் காட்சி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741326_zpsf230c7ca.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741327_zps80049174.jpg

RAGHAVENDRA
8th April 2013, 08:11 AM
திரு ஜெம் வீரமணி அவர்கள் உரை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741328_zps8d2d4977.jpg

திரு பிலிம்நியூஸ் அனந்தன் அவர்களின் ஏற்புரை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741329_zps0772b6c0.jpg

நமது முரளி சாரின் நன்றியுரை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741331_zps3db722e2.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTF741332_zpse5f83326.jpg

நன்றி P_R பிரபு ராம் ....
இந் நிகழ்ச்சியினைத் தாங்கள் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நம்முடைய ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தவறாமல் வந்திருந்து எந்த உதவியானாலும் உடனே செய்யும் நல்ல உள்ளம் கொண்ட திரு பால. தண்டபாணி அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி. குறிப்பாக இந்த நிழற்படங்களுக்கு ...

goldstar
8th April 2013, 10:11 AM
Guys,

Just watch this video at from 3:09, play back singer Bala Saraswathi Devi praises about our NT and his simplicity.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=vGUQJhQif9o#!

Cheers,
Sathish

JamesFague
8th April 2013, 10:35 AM
Watch tomorrow in Murasu TV NT's Super Hit Comedy
movie Sabhash Meena at 7.30 pm

P_R
8th April 2013, 11:30 AM
நன்றி P_R பிரபு ராம் ....
இந் நிகழ்ச்சியினைத் தாங்கள் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
Very much!

நன்றி திரு. ராகவேந்திரன்.
வட்டமெல்லாம் :oops: பலரும் நேற்று ரசித்தனர் நானும் ரசித்தேன். அவ்வளவு தான். பள்ளிக்கூடத்திலிருந்தே ஒரு பழமான front bencher :-)

பின்னால் சொல்லி சொல்லி ரசித்துக் கொண்டிருந்தார்கள் நுணுக்கங்களை முன்கூட்டியே anticipate செய்து பேசிக்கொண்டிருந்தனர் என்பதைப் பார்த்தேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் (இப்பொ 'ங்கொப்பராண வரும் பார்' , இப்பொ 'ஏய்' வரும் பார் - என்பவை எனக்கு கொஞ்சம் இடைஞ்சலாகத் தோன்றின...is it our Parthasarathy who I heard from the back-rows :-) ), ஆனால் தாங்கள் ரசித்ததை உடன் வந்திருப்பவர்கள் தவரவிட்டுவிடக் கூடாது என்ற ஆவலின் வெளிப்பாடு தான் அது என்றும் புரிந்தது.

பெரியதிரையின் வசீகரமே தனி. மறைந்த பேராசிரியர் T.G.வைத்யநாதன் - ஹிந்துவில் பத்தி எழுத்தாளர் - எழுதிய சினிமா பற்றிய கட்டுரைத் தொகுப்பின் தலைப்பு 'images in the dark' - இருளில் பார்வையாளன் கரைந்து larger-than-life பிம்பங்களால் ஆகர்ஷிக்கப்படும் அனுபவத்தைப் பற்றி அதில் சொல்லி இருப்பார். அந்தக் கனியிருப்ப Home-video காய்கவர்ந்தற்று ...என்று முற்றிலும் காய்திட மனம் வரவில்லை - காயின் ஊட்டச்சத்து இல்லை என்றால் நாங்களெல்லாம் எங்கே!

VCR சகாப்தத்தில் தொலைக்காட்சியில் வந்த தில்லானைப் பதிந்து, பார்த்துப் பார்த்து தேய்த்தபின், வீட்டில் DVD Player வாங்கியதும் வாங்கிய முதல் படம் தில்லானா. சிரிக்கவைத்து, நெகிழவைத்து, ஆஹா-வித்து..முழுவதுமாக சுண்டியிழுக்கும் படம். சிவாஜி படங்களிலேயே அனேகமாக வசனங்களில் தாளகதி உட்பட எனக்கு அனேகமாக பரிச்சயமான படம் என்றால் இதுதான். அதை பெரிய திரையில் காண வேண்டும் என்ற என் நெடுநாள் ஆசை நேற்று நிறைவேறியது. மீண்டும் ஒரு நன்றி.

நீங்கள் நகைச்சுவையாக சொல்வதுபோல நானும் 'அலைகடலென' கூட்டத்தை எதிர்பார்த்து ஐந்து மணிவாக்கிலேயே வந்து ஸ்கூட்டரை வைத்துவிட்டு, TTK சாலையில் ஒரு சிறு வேலை இருந்ததால் நடந்து போய்விட்டு ஆறு மணி சுமாருக்கு வந்தேன். (நேராக ஆறு மணிக்கு வந்தால், வண்டி நிறுத்த இடம் கிடைத்திருக்காது என்று நினைத்திருந்தேன்!)

முரளிசாரை வாசலில் பார்த்தேன். ஃபில்ம்நியூஸ் ஆனந்தனின் கண்காட்சியை காட்டினார். பிறகு நன்றியுரையில் கூறியது போல இது மிகுந்த சிரத்தையுடன் தொகுக்கப்பட்ட exhibition என்று தெரிந்தது. சிவாஜி அத்தனை பிறமொழிப் படங்களில் பிரதான/முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார் என்றே எனக்குத் தெரியாது.

திரு.ராகவேந்திரன், 'தாயே உனக்காக' படம் ருஷ்யமொழி க்ளாஸிக்கான 'Ballad of the Soldieரைத் தழுவி எடுக்கப்படதை எனக்குக் கூறினார். In the context of the function/location என்ன ஒரு சரியான தேர்வு! என் கல்லூரி நாட்களில், இதே ருஷ்ய கலாசார மையத்தின் அரங்கத்தில் தான் அந்தப் படத்தைப் பார்த்தேன் (அந்த நாள்.. ஞாபகம்.. :-) ).

ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் sesquicentennary (ஒன்றரை நூற்றாண்டு) விழா என்று அவர் புத்தகங்கள் சிலவற்றை கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள. கிறுஸ்துவ தேவாலயங்களில் சாலையோரச் சுவற்றில் கண்ணாடிப்பெட்டிக்குள் விவிலியத்தின் பக்கத்தைத் திறந்து வைத்திருப்பது போல. படிக்காமல் கடந்துபோக முடியாது. அதுபோல அந்தப் பக்கங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். I feel too cruel to mention this now for Gopal to read :lol2: இனிமையான தற்செயல்.

திரு.ராகவேந்திரன் தயாரித்துக்கொண்ட உரையுடன் to-the-point நன்றாகப் பேசினார். ருஷ்யாவில் வகுக்கப்பட்ட நடிப்பு முறைகளையும் சுயம்புவாக வெளிப்படுத்தினார் சிவாஜி என்று அவர் சொன்னது - கடந்த சில பக்கங்களில் நாம் பேசிக்கொண்டிருப்பதின் ஒரு கூரை அந்த சபைக்குத் தக்கவாறு பேசியதாகத் தோன்றியது.

திரு.முரளி தன் வழக்கமான சரளத்துடன் 'தில்லானா'வை contextualize செய்தார். அந்த அரசியல் சூழல், அக்கால சினிமா அழகியல் எதிர்பார்ப்புகளை எவ்வாறு அப்படம் ஏற்றுக்கொண்டது போலவே 'படம்' காண்பித்து ஆனால் சிறப்பாக மீறியது என்று சொன்னார். குறிப்பாக: 'பாட்டு உண்டு - ஆனால் ஹீரோவுக்கு இல்லை. சண்டை உண்டு - கதையில் அந்த நிகழ்வுக்கும் ஹீரோவுக்கும் ஸ்நாநப்ராப்தியே கிடையாது என்றார்.

படத்தை இன்னும் ஆழ்ந்து ரசிக்க அது பலருக்கு உதவியிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஹீரோவுக்கு பாட்டு கிடையாதா என்ன, வாய்ப்பாட்டு கிடையாது. APN ரசனை எதிர்பார்ப்புகளுக்கு 'on his own terms' தீனி போட்டார். என்றுமே ரசிகன் மீது பழியைப் போட்டு pander செய்ய வேண்டும் என்ற கீழ்நோக்குப் பார்வை இல்லாமல், தான் நினைத்ததை சிரத்தையோடும், நயத்தோடும் செய்யும் கலைஞர்கள் தான் ரசிகர்களைக் கவர்கிறார்கள்.

நினைத்துப் பாருங்கள், அந்த சண்டை பற்றி ஒரே இடத்தில் தான் அவனிடம் வசனமாக சொல்லப்படுகிறது - அதற்கு அவன் எத்தனை ஈவிரக்கம் இன்றி பதில் சொல்கிறான் - அவன் ஹீரோ இல்லை - 'குறை இல்லாத மனுஷன் ஏது ஜில்லு' என்று தானே சொல்லும் மனிதன்.

அதே சமயம் ஹீரோ'வுக்கான punch-dialogueகள் இல்லாமல் இல்லை. கலையில் ஒப்பற்றவன் என்றவாறு வரும் எல்லா வசனங்களும் சண்முகத்தை மட்டும் குறிப்பவை அல்ல என்று குழந்தைக்குக் கூட தெரியும். Punch-வசனங்களில் தன்மையே அது தானே. அந்த வேடத்தை விட்டு விலகி நாயகனின் பிம்பத்தைக் கொண்டாடும் தருணங்கள் அவை. முப்பக்கம் மூடிய மேடையில், நாலாவது சுவராக இருப்பது கலைஞர்கள் வாழும் அந்தக் கதையின் உலகையும், இப்பக்கம் அமர்திருக்கும் ரசிகர்களின் உலகையும் பிரிக்கும் ஒருவித ஒப்பந்தம் மட்டுமே. அந்த ஒப்பந்தத்தை மீறும் தருணங்கள் அவை. அதை படத்தின் சமநிலை குறையாமல் செய்துகாட்டினர் (நாகலிங்கத்துக்கு தண்டனை என்று வைத்தி சொன்னதும் சண்முகம் பேசும் பதில் வசனம்)

படத்தைப் பற்றி இப்போது எழுதப் போவது இல்லை. திங்கட்கிழமை காலை அதுவுமாக தில்லானா பற்று பேச ஆரம்பித்தால், வேலை செய்தது மாதிரிதான் :lol2:
இன்னும் கோபாலின் தொடரின் கடைசி பகுதிகள் வேறு படிக்க backlog இருக்கிறது. I will catch up later this week.

:ty: once again for the memorable show.

PS1: As I was telling Mr.Murali, there were a couple of cuts and jumps in the DVD and some resolution issues in long-shots. The DVD I have is clearer and complete- so let me know the next time whenever you plan to screen this. 300 படம் சுழற்சிமுறையில் மீண்டும் இதன் முறை 2038ல வரும்னு நினைக்கிறேன் :lol2:

PS2: It was nice to meet Parthasarathy again and also great to meet in person the archivist non-pareil Pammalar. Too bad the movie ended too late to leave much time for a catch-up after that.

JamesFague
8th April 2013, 12:16 PM
Excellent Coverage of the function Mr Raghavendra Sir, as i was out
of station could not make it to the function.

Mr P R Sir,

Again wonderful writeup of your experience of watching the evergreen
classic of Thillana.

Gopal.s
8th April 2013, 12:28 PM
P _R ,

நான் Stanislavsky யின் An Actor prepares படித்துள்ளேன். படிக்க விரும்புபவை Building a Character ,Creating a Role both by Stanislavsky . Art of Acting by Stella Adler , To the Actor by Chekhov .

I hope you mean நான் இது வரை எழுதியதில் கடைசி பகுதிகள்???

P_R
8th April 2013, 02:05 PM
yep sorry. I meant 'thus far'.

P_R
8th April 2013, 02:13 PM
Thank You vasudevan. இந்தப்படத்தை சிலாகிச்சு சலிக்காது. நலந்தானா-ல ஒரு சில படச்சட்டங்கள்ல (frame) குவிமைல (focus) இல்லாதபோது கூட சி.கே.சரஸ்வதி கடுகடு'ன்னு முகத்தை வச்சிருப்பாங்க.

மறைந்திருந்தே பார்க்கும்-மில், ராமன் செட்டியார் (யாரந்த நடிகர்?), தனக்கும் பரதேசிச்சாமி சஹஸ்ரநாமத்துக்கும் அருகில் நாகலிங்கம் (ஈ.வி.சஹாதேவன்) வந்து உட்காருவதை விரும்பாததை முகபாவத்தில் தெரிவிப்பார். ஒரு நொடி வரும் காடி, நம் கவனமெல்லாம் பத்மினி-சிவாஜி மீது. ஆனால் கணநேரத்தில் நாகலிங்கம் மோசமானவன் என்பது ஊரறிந்தது என்று பதிவு செய்துவிட்டு நகர்ந்துவிடுகிறார் ஏ.பி.என்.

vasudevan31355
8th April 2013, 03:15 PM
பிரபுராம் சார்,

அருமையான வித்தியாசமான கோணத்தில் அமைந்த தங்களின் 'தில்லானா' ஆய்வுக்கு எனது நன்றிகளும், பாராட்டுக்களும்.



மறைந்திருந்தே பார்க்கும்-மில், ராமன் செட்டியார் (யாரந்த நடிகர்?), தனக்கும் பரதேசிச்சாமி சஹஸ்ரநாமத்துக்கும் அருகில் நாகலிங்கம் (ஈ.வி.சஹாதேவன்) வந்து உட்காருவதை விரும்பாததை முகபாவத்தில் தெரிவிப்பார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_2VOB_000059216.jpg

நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த நடிகரின் பெயர் குண்டு கருப்பையா என்று நினைவு. (நடிகர் திலகத்தின் பல படங்களில் இவரைக் காணலாம்) நாகலிங்கம் என்ற நாகப்பாம்பாக வருபவர் பழம்பெரும் நடிகர் திரு ஈ.ஆர்.சகாதேவன் அவர்கள்.

vasudevan31355
8th April 2013, 03:27 PM
ராகவேந்திரன் சார்,

சீரும் சிறப்புமாக விழாவை இனிதே நடத்திக் காட்டி நிகழ்வுகளை இங்கே பதிந்தமைக்கு மிக்க நன்றி. விழா சிறக்க உறுதுணையாய் இருந்த அன்பு முரளி சாருக்கும், விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த நம்முடைய ஹப்பர்ஸ் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் உளமாந்த நன்றிகள். விழாவில் விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்ட நிழற்படங்கள் சூப்பர்.

vasudevan31355
8th April 2013, 04:11 PM
சதீஷ் சார்,

பின்னணிப் பாடகி பாலசரஸ்வதி தேவி அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி அளித்த அபூர்வ பேட்டி சுட்டியை தந்ததற்கு மிக்க நன்றி!

vasudevan31355
8th April 2013, 04:18 PM
திரியின் புதுவரவு சவுரிராஜன் சார் அவர்களே!

வாருங்கள்... வாருங்கள்.

வாருங்கள்... வாருங்கள்.

IliFiSRurdy
8th April 2013, 05:27 PM
நான்கு நாட்களுக்கு முன்னமே நண்பர் முரளியிடமிருந்து அன்பான sms

சரி நிச்சயம் போக வேண்டியதுதான் என முடிவு செய்திருக்கையில்,
கடைசி நேர சில நிர்பந்தங்கள் அந்த தங்க வாய்ப்பை இழக்க வைத்தன.

சரி பார்க்க இழந்தது தலைவரை மட்டுமே என்று சற்றே சமாதானப்படுத்தி
கொண்டிருக்கையில்,நண்பர் ராகவேந்தரின் புகைப்படங்கள்,நண்பர் பிரபுராமின்
அற்புத தொகுப்பு,அனைத்தும் நான் இழந்தது much more எனஊர்ஜிதம் செய்தன.

நீங்கள் teetotaler ஆ என்ற கேள்விக்கு நான் விடையாக.
”ஆம்.,கல்கி,தேவன்,ஜெயகாந்தன்,சுஜாதா ஆகியோரின் எழுத்துக்களை படித்திருப்பதை தவிர்த்து நோக்கினால்!””என்று சொல்வதுண்டு.

இப்பொழுது அந்த வரிசையில் நண்பர் பிரபுராமை யும் சேர்த்துக்கொள வேண்டியதுதான்.
ஏதோ Blue label whiskey சாப்பிட்டால் போல ஒரு உணர்வு,அவர் எழுத்தை படிக்கும்போது!

சினிமாவை தியேட்டரில் படம் பார்ப்பது ஃபில்டர் டிகாக்ஷன் கலந்த டிக்ரி காபி சாப்பிடுவது போல என்றால்.. DVD யில் பார்ப்பது, Coffee Toffee chocolate சாப்பிடுவது போல.

சினிமாவிற்குள் சென்று சினிமா பார்ப்பது ஒரு பரவசம்.
வீடியோவில் பார்ப்பது பல(ர்)வசம்..

அப்பப்போ அடிக்கும் காலிங் பெல்,டெலிபோன் மணி,பார்க்கும் ஓவ்வொருவரின் விருப்பதிற்கேற்ப, இடைவேளை விடுதல்(கொஞ்சம் pause செய்.இப்போ வந்துடறேன்).
வராத விருந்தாளிகளின் திடீர் வருகை,அவர்கள் அடிக்கும் அதிகப்ப்ரசங்கித்தனமான comments,எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாக வேண்டும்.

(ஆனா இப்போ தியேட்டரிலும் தொல்லை அதிகம்..சமீபத்தில் படம் ஆரம்பித்து இரண்டு நிமிடங்கள் கழித்து திருதிராஷ்டிரன் போல தட்டித்தடவி ,போய் D18,D19 அமர்ந்தால்,உடனே டெலிபோனின் உரத்த சிணுங்கல்.கூடவே "ஆமா தேவராஜ்தான் பேசுகிறேன் !” என்ற கட்டை குரல்..”என்னங்க! படத்தில் கமல் பேரு விசுவநாதன் இல்லையோ?” என்ற இல்லாளின் சந்தேகத்தை நிவர்த்திப்பதற்குள் அதே குரல் “நான் இப்போ தேவி தியேட்டரில் விஸ்வரூபம் பார்த்துக்கிட்டு இருக்கேன்.ஆங்..படம் ரொம்ப நல்லா இருக்கு..ம்ம்ம் அப்றம் பேசறேன்!” ன்னு ஒரு சுய வாக்குமூலம் கொடுத்து, காலை கட் செய்ய ஒரு பத்து பேர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.(இடைவேளை போதுதான் பார்த்தேன்.அந்த நபருக்கு பொன்னம்பலம் போல உடல்வாகு.)

இப்படி சினிமா, கச்சேரி நடுவே, போன் attend செய்து disturb செய்யாதே என சொல்வது
,”சுவற்றில் எழுதாதீர்” எனும் அறிவிப்பிற்கு கீழே “சரி” என்று எழுதுவதைப்போல ஆகும் எனபதே பலருக்கு தெரிய மாட்டேன் என்கிறது.

சரி இனி படம்...

தமிழில் வந்த மிக சிறந்த ஆறு படங்களை பட்டியலிட்டால் தில்லானா மோகனாம்பாள்(தி.மோ) மற்ற ஐந்திற்கும் மேலே இருக்கும்.

பூரணம், உன்னதம் எனும் இரு சொற்களுக்கான எடுத்துக்காட்டு தி.மோ.

இந்தப்படத்தின் உன்னதம் திரு ஏபிஎன். பிள்ளையார் சுழி போடும்போதே ஆரம்பமாகிறது..

விகடன் அதிபர் திரு வாசனை,ஏபிஎன் சந்தித்து தி.மோ படம் எடுக்க தான் விரும்புவதை சொல்லி ஆசி பெற்று கூடவே அதற்கான காப்புரிமையையும் சுமார் ரூ.ஐயாயிரம் கொடுத்து அவரிடமிருந்து பெறுகிறார்.
என்னதான் சட்டப்படி விகடன் நிறுவனத்திடமிருந்து உரிமையை பெற்றாலும் அதை ஆக்கியோன் எனும் விதத்தில் திரு கொத்தமங்கலம் சுப்புவிற்கும் மரியாதை செய்ய விரும்பி, அடுத்த நாள் அவர் இல்லம் சென்று விவரம் சொல்லி சில ஆயிரங்களையும் சன்மானமாக கொடுக்கிறார்,அதை பின்னவர் மறுத்து "நேற்றே திரு வாசன் என்னிடம் இதைக்கூறி நீங்கள் கொடுத்த பணத்தையும் தந்து சென்றார்" என சொல்கிறார்.....இது உன்னதம் # 1

மேதை கோபுலு எப்படி படம் வரைந்தாரோ அதை நிஜமாக்குவதைப்போல,
ஒவ்வொரு பாத்திரமும் பத்தாண்டுகள் கழித்து படத்தில் நடமாடினார்கள்.இது உன்னதம் #2

தலைவரை விடுங்கள்.அவர் கடவுள் !

ஒரு பாலய்யா,ராஜன்,ck சரஸ்வதி,??
ஒரு தங்கவேலு,ராமதாஸ்,பாலாஜி??
ஒரு நாகேஷ்,மனோரமா?
அச்சு அசலாக அப்படியே பாத்திரங்கள் வந்து இறங்கவில்லையா?இது உன்னதம் # 3

பிரபுராம் சவடால் வைத்தி பற்றி சொன்னார்.
என்ன ஒரு fluency ,timing and wit?
என்னப்பா சிக்கல்! எல்லாரும் அவாவா வாத்தியத்தை எடுத்துண்டு கிளம்புங்கோ!
மகராஜா எழுந்துகொள்ளும்பொது திருப்பள்ளி எழுச்சி வாசிக்கணும்.!!

“நாங்க கோவிலில் மட்டும் தான் திருப்பள்ளி எழுச்சி வாசிப்போம்”.

“அதுக்காக ராஜா கோவிலில் போயா படுத்துக்க முடியும்?”

இந்த timing, மவனே உலகத்தில் எவனுக்குயா வரும்?

ck சரஸ்வதியிடம்..”இவ்வளவு பெரிய கழுத்து!! எவ்வளவு காலியா இருக்கு?
ஒரு அட்டிகை போட்டா எவ்வளவு நன்னா இருக்கும்” என tempt செய்வதில் உள்ள wit

"யாரிந்த பொண்ணு? அரையும் குறையுமா?"
"shut up! she is the maharani of madanpur!"
“நினைச்சேன்! நினைச்சேன்!! இப்படி மகாலக்ஷ்மி மாதிரி ஒரு பெண்ணை
பார்க்கும்போதே நினைச்சேன்!” என்று சொல்வதிலுள்ள fluency

இந்த யானையை அடக்குவாரே நம் யானைப்பாகன்!

ஒரு பதரை பார்ப்பது போலல்லவா இவரைப் பார்ப்பார்!

இந்த பதர் எனும் சொல் இடம் பொருள்,ஏவலுகேற்ப மாறும்.

பின்னால் மோகனாம்பாள் ஒரு இடத்தில் ஷண்முகம் நடத்தைக்கண்டு கொதித்து,
அவரையும் ஒரு பதரைப்போலத்தான் பார்ப்பாள்.ஆனால் அது
காதல் கலந்த தற்காலிக கோபமான பார்வை! காதல் பதர் உடனே மறைந்து விடும்.
ஆனால் வைத்தியோ ஒரு நிரந்தர பதர்.

சரி! தலைவரின் நாதஸ்வர வாசிப்பு..??
அதில் ஒரு முக்கால் பங்கை, நாட்டில் உள்ள அத்தனை வித்வான்களும் கண்டு மகிழலாம்.மீதியை..??
அவர்கள் பாடமாக வைத்துக்கொண்டு அதன்படி தாங்களும் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இறைவனுக்கு நன்றி..
திரு.ஏ.பி.என் னை படைத்ததிற்கு

திரு.ஏ.பி.என் நிற்கு நன்றி தி.மோ.வை படைத்ததிற்கு

ஹிந்தி பட அதிபர்களுக்கு நன்றி..
இதை ஒரு ஷேனாய் வித்வான் படமாக ஹிந்தியில் எடுக்காததிற்கு.

தற்கால தமிழ் பட அதிபர்களுக்கும் நன்றி,
தி.மோ வை ரீமேக் செய்யாமல் இருப்பதற்கு.

நண்பர்கள் முரளி, கோபால்,ராகவேந்தர்,பிரபுராம்,வாசுதேவன் ஆகியோருக்கு என் அன்பு மற்றும் நன்றி,
for inspiring me to write..

(தொடரலாம்)

IliFiSRurdy
8th April 2013, 06:04 PM
>>சி.கே.சரஸ்வதி கடுகடு'ன்னு முகத்தை வச்சிருப்பாங்க.<<

டியர் பிரபு,

சி.கே.சரஸ்வதியின் முகம்,அவர் சிரிக்கும்போது கூட கடுகடு என்றுதான் இருக்கும்!
அது ஒரு brand.நீங்கள் அது இல்லாமல் அவர் முகத்தை பார்க்க விரும்பினால்,
இரு கோடுகள் படத்தில் அவர் வரும் ஒரு காட்சியின் ஒரு ஃபிரேமை (1/8 th of a sec) freeze செய்து பார்க்கலாம்
இது வாசு சார் மனது வைத்தால்(தான்) நடக்கும்.

IliFiSRurdy
8th April 2013, 06:30 PM
post # 2523..

Very well written Gopal ji..

அதே சமயம் நாங்கள் ஏதோ ultra modern gadgets சகிதம் சென்னையில் அரச போக வாழ்க்கை வாழ்ந்ததாக எண்ண வேண்டாம்.
வீட்டை விட்டு வெளியில் இருக்கும் பாத்ரூம் (இடக்கர் அடக்கல்);அதில் ஒரு நாற்பது வாட் சட்டி பலப்.அதற்கு வீட்டினுள் ஒரு சுவிட்ச் (தற்கால inverter size ற்கு) அதைபோட்டு விட்டு சுமார் ஐம்பது அடி நடந்து போய் எரிகிறதா என பார்க்க வேண்டும் (loose contact)..முதல் முறையே எரிவது என்பது ck சரஸ்வதி சிரிப்பதை விட ஒரு அபூர்வ நிகழ்வு.இரண்டாம் முறை எரிந்தாலே ஏதோ தாமஸ் ஆல்வா எடிசன் அவர் கண்டுபிடித்த பலப் முதல் முறை எரியும்போது பெற்ற மகிழ்வை பெறுவோம்.இப்படி பலதடவை முயன்று வெற்றி பெற்று ஒரு வழியாக பாத்ரூமிற்குள்
நுழைந்தால் எதற்கு வந்தோம் என்பது மறந்து விடும்.
ஆனால் ஒரு அதிர்ஷடம என் பெற்றோர் ஒரு தடவை கூட நான் சினிமா போக அனுமதி கேட்டு மறுத்ததே இல்லை.
(ஒரு சமயம் சென்னையை ஒரு பயங்கர புயல் தாக்கிக்கொண்டிருந்தபோது,"இன்று போய்தான் ஆக வேண்டுமா,நாளை போகலாமே!" என அப்பா சொன்னதை தவிர்த்தால்)

Gopal.s
8th April 2013, 06:32 PM
எனக்கு இன்னிக்கு cocktail விருந்து. (இந்த போதையாளர்கள் மற்றோரையும் எவ்வளவு சுலபமாக christian social worker போல convert செய்து விடுகிறார்கள்!!). பிரபுராமின் பதிவு ஒரு peg(a large and a small),ganpat பதிவு ஒரு peg ,mixing பண்ணி வுட்ட கட்டிங். யம்மாடியோவ்!!!

முரளி சார் போல் சாய்ந்து உட்கார்ந்து relax பண்ணி விடலாம் போல!!!

சாரே, நம்ம ராகவேந்தர் சாரை போய் ,ricky யுடனா ஒப்பிடுவது?? அவர் ஒரு Don (Broadman ).

ராகவேந்தர், முரளி சார்- congratulations for sunday .எனக்கு பிரபு ஒரு ஆள் அகல திரையில் பார்த்ததே போதும் .

RAGHAVENDRA
8th April 2013, 06:34 PM
நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த நடிகரின் பெயர் குண்டு கருப்பையா என்று நினைவு. (நடிகர் திலகத்தின் பல படங்களில் இவரைக் காணலாம்) நாகலிங்கம் என்ற நாகப்பாம்பாக வருபவர் பழம்பெரும் நடிகர் திரு ஈ.ஆர்.சகாதேவன் அவர்கள்.


தாங்கள் கூறியது சரி தான் வாசு சார். அவர் குண்டு கருப்பையா தான். இவருடைய புதல்வர் தான் தற்போது அதிமுக முன்னணிப் பேச்சாளராக இருக்கும் திரு குண்டு கல்யாணம் அவர்கள். திரு குண்டு கருப்பையா அவர்கள் ஏ.பி.என். னின் ஆஸ்தான கலைஞர்களில் ஒருவர். பெரும்பாலான ஏபி.என். படங்களில் இவரைப் பார்க்கலாம்.

RAGHAVENDRA
8th April 2013, 06:49 PM
http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-prn1/555967_10200738903095825_1150717860_n.jpg

டியர் சதீஷ் சார்,
இது தாங்களா ?

JamesFague
8th April 2013, 07:52 PM
Mr Ganpat

Nice writeup. Pls keept it up.

vasudevan31355
8th April 2013, 08:23 PM
டியர் முரளி சார்,

தங்கள் அன்பான விசாரிப்பிற்கு என் ஆழ்ந்த நன்றிகள்.

Dwightvak
8th April 2013, 08:45 PM
Dear Raghavendran sir

Neengal Beach Road orey traffic jam endru ezhudhiadhai padiththaboadhu unmayilayae traffic jam endru ninaithu sandhosha pattaen...Udanayae neengal mudhalukke Mosam endru ezhudhiadhai padiththaboadhu manam nijamaagavae vedhumbiyadhu...

Neengalae ippadi thamaazh seidhaal eppadi sir..! Photos galil nirayya missing veru...ADA...ENGAE AVAIGAL..MAAYAMAAI MARAINDHANAVAE.....Mothaththayum edit seidhu viteergal endru ninaikiraen...Andha Photovai paarthaboadhu Kootam migavum kuraivu dhaan endru enna thoandrugiradhu...

Nigazhchikku varaadhadhaal ezhudha mudiyavillai....Looks like the communication has not reached many..Atleast ...Neengal Vasantha Maaligai , Baby Albertil couple of notice otti irundhaal RCAvum Housefull aagi irukkum enbadhu nichayam. and many Thalaivar admirers would have enjoyed this...!!

The photos resembled a board meeting of corporate office.

goldstar
9th April 2013, 05:59 AM
http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-prn1/555967_10200738903095825_1150717860_n.jpg

டியர் சதீஷ் சார்,
இது தாங்களா ?

Yes, I am...

Gopal.s
9th April 2013, 07:20 AM
எனது முதல் தமிழ்ப்பதிவு, இணையத்தில் எனது தமிழ் ஆசான் திரு பிரபுராம் அவர்களுக்கு சமர்ப்பணம்.
ஆசானுக்கு தொடர்ந்து மரியாதை செய்யும் எண்ணமே இல்லையா திரு.ஆதிராம்?நீங்கள் தமிழில் தொடர்ந்து எழுதினால் கார்த்திக் இல்லாத குறையை போக்க முடியும் என்பது எனது தாழ்மையான அபிப்ராயம்.

Gopal.s
9th April 2013, 08:00 AM
Posted by Sri Sowrirajan.
The photos resembled a board meeting of corporate office.

Our Ragavendar Sir looks like dignified chairman of the Board.

Gopal.s
9th April 2013, 08:11 AM
வாசு,
தங்களின் நாயகியர், சண்டை காட்சி தொடருடன் டூரிங் டாக்கீஸ்,துணை போல தொடர்ந்து பதிவிடுங்கள். visual taste உடன் உங்கள் write -up கொடுக்கும் ரசனை அனுபவம் அலாதி.எங்களுக்கு டானிக் போல.

பார்த்தசாரதி, முரளி- கூட்டு புழு போல ஏன் வெளியே தலை காட்டுவதே இல்லை?

venkkiram
9th April 2013, 08:20 AM
போறபோக்குல எப்போதாவது சிவாஜி திரிகளை எட்டிப்பார்த்துவிட்டு செல்லும் பழக்கமுடைய நான் தற்பொதைய நாட்களில் ஆர்வமாக எல்லோரின் பதிவுகளையும் வாசிக்கிறேன். தில்லானா மோகனாம்பாள் பற்றிய பீஆர், கண்பத் பதிவுகள் சிறப்பு. பலரும் சொல்வதுபோல, தி.மோ ஒரு முழுமையான, பூரணமான படம். (கவியரசர் கண்ணதாசனும் தனது ஆகச் சிறந்த படங்களிளுக்கான பட்டியலில் இதையே முன்னிலைப் படுத்தி சிலாகித்திருக்கிறார் எனப் படித்த ஞாபகம்) . படத்தின் குறைபாடுகளையெல்லாம் ஜீரணிக்க வைத்து சிறப்புக்களை மட்டுமே மனதோடு எடுத்துச் செல்ல வைக்கும் படைப்பு. கீற்றுக்கொட்டகை ஜில்லு நாடகத்தினை ஒட்டிய மோகனாவின் வருகை, சிக்கலாரின் கடு-கடுத்தனம், துண்டை உதறிவிட்டு நடந்து செல்லும் பாங்கு;ஊதித் தள்ளிவிடுவது போல வைத்தியை அணுகும் கோபம்.. அந்த அத்தியாயமே எனக்கு மிகவும் பிடித்தக் காட்சிகளில் ஒன்று..

Gopal.s
9th April 2013, 08:53 AM
வெங்கி ராம் சார்,
பதிவுகளை ரசிப்பதோடு நிறுத்த வேண்டாம். தங்கள் பதிவுகள் தேர்ந்த
ரசனையாளரை இனம் காட்டுகிறது. தாங்களும் பதிவுகள் போட்டு, எங்களுக்கும் ,ரசனை அனுபவத்தை வழங்கலாமே?

RAGHAVENDRA
9th April 2013, 09:04 AM
Our Ragavendar Sir looks like dignified chairman of the Board.

என் மீது இது வரை இருந்த கோபத்தையெல்லாம் இந்த பதிவிலேயே பாதியைத் தீர்த்து விட்டார் போல... இன்னும் மிச்சம் மீதி எப்போ காட்டப் போறாரோ தெரியலே...

RAGHAVENDRA
9th April 2013, 09:06 AM
வெங்கிராம் சார் ... கோபால் சார் சொன்னது போல் அவ்வப் போது எட்டிப் பார்த்து விட்டுப் போகாமல் தொடர்ந்து பங்கு கொள்ளுங்கள் ... தாங்கள் ரசித்த படங்களைத் தாங்கள் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள் ... அதிகம் பேசப் படாத படங்களில் நடிகர் திலகத்தின் பங்கினைப் பற்றி எங்கள் சிற்றறிவிற்குத் தெரிந்த வரையில் நாங்கள் பகிரந்து கொள்கிறோம் ...

vasudevan31355
9th April 2013, 09:09 AM
என் மீது இது வரை இருந்த கோபத்தையெல்லாம் இந்த பதிவிலேயே பாதியைத் தீர்த்து விட்டார் போல... இன்னும் மிச்சம் மீதி எப்போ காட்டப் போறாரோ தெரியலே...

ராகவேந்திரன் சார்,

காலை வணக்கங்கள். நிஜமாகவே நேற்று கோபால் எனக்கு போன் செய்யும் போது தங்களை மிகவும் பாராட்டிப் பேசினார். அதனால் உண்மை என்றே நம்புவோம்.

RAGHAVENDRA
9th April 2013, 09:23 AM
காலை வணக்கங்கள் வாசு சார். தங்கள் உடல் நிலை எப்படி உள்ளது. நலம் தானா ...

என் மேல் கோபால் சார் வைத்துள்ள மதிப்பிற்கு மிக்க நன்றி.

oowijaez
9th April 2013, 09:41 AM
தில்லானா மோகனாம்பாள் என்றவுடன் எனக்கு ஞாபகத்தில் வருவது 'கள்ளழகர்' கோயிலும் தான்.
கதை யின் படி 'மறைந்து நின்று' பாடல், அந்த கோயிலின் வாசல் முன் மண்டபத்தில் நடைபெறுகிறது. எங்கள் குடும்பம் முதன் முதலில் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்தபோது அக்கோயிலுக்கு சென்றதும் தி.மோ நினைவுக்கு வந்து, excited ஆகி வாசலை போய் சுற்றிவரப் பார்வையிட்டோம். நாம் foreigners என்று அறிந்து கொண்ட ஒரு 'ad-hoc (!) tourist guide', அங்கு தான் அப்பாடல் காட்சி படமாக்கப் பட்டது என்று சொல்லி தொடர்ந்து அளந்து கொண்டே போனார். நான் நம்பவில்லை, மேலும் அக்கோயில் மண்டபம் சிறியதாகவும் தென்பட்டது. அதை நான் அவரிடம் கேட்க, அவரும், 'இல்லையில்லை அப்பாடல் காட்சி நிச்சயமாக இங்கே இந்த மேடையில் தான் எடுக்கப்பட்டது! பத்மினி அம்மா இங்கே தான் ஆடினாங்க' என்று சொல்லி கையை நீட்டி காட்டினார். அவர் காட்டிய திசையில் நாம் எல்லோரும் பார்க்க, அங்கே, அந்த மேடையில் சர்வ சாதாரணமாக ஒரு ஆடு நின்றுகொண்டிருந்தது! மே!.....

Gopal.s
9th April 2013, 09:55 AM
ஆஆ ஹ்......
கிள்ளி பார்த்து கொள்கிறேன். நிஜமாகவே வலிக்கிறது. வாங்க தங்கச்சி.

oowijaez
9th April 2013, 10:05 AM
ஆஆ ஹ்......
கிள்ளி பார்த்து கொள்கிறேன். நிஜமாகவே வலிக்கிறது. வாங்க தங்கச்சி.

Thank you very much! 'long time no see!!!!':-D

adiram
9th April 2013, 10:18 AM
தில்லானா மோகனாம்பாள் என்றவுடன் எனக்கு ஞாபகத்தில் வருவது 'கள்ளழகர்' கோயிலும் தான்.
கதை யின் படி 'மறைந்து நின்று' பாடல், அந்த கோயிலின் வாசல் முன் மண்டபத்தில் நடைபெறுகிறது. எங்கள் குடும்பம் முதன் முதலில் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்தபோது அக்கோயிலுக்கு சென்றதும் தி.மோ நினைவுக்கு வந்து, excited ஆகி வாசலை போய் சுற்றிவரப் பார்வையிட்டோம். நாம் foreigners என்று அறிந்து கொண்ட ஒரு 'ad-hoc (!) tourist guide', அங்கு தான் அப்பாடல் காட்சி படமாக்கப் பட்டது என்று சொல்லி தொடர்ந்து அளந்து கொண்டே போனார். நான் நம்பவில்லை, மேலும் அக்கோயில் மண்டபம் சிறியதாகவும் தென்பட்டது. அதை நான் அவரிடம் கேட்க, அவரும், 'இல்லையில்லை அப்பாடல் காட்சி நிச்சயமாக இங்கே இந்த மேடையில் தான் எடுக்கப்பட்டது! பத்மினி அம்மா இங்கே தான் ஆடினாங்க' என்று சொல்லி கையை நீட்டி காட்டினார். அவர் காட்டிய திசையில் நாம் எல்லோரும் பார்க்க, அங்கே, அந்த மேடையில் சர்வ சாதாரணமாக ஒரு ஆடு நின்றுகொண்டிருந்தது! மே!.....

Guide nandraaga saradu vittirukkiraar.

Actually that shot was picturised in studio set (set arranged same like Azhagar Koil by art director Ganga).

P_R
9th April 2013, 10:29 AM
நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த நடிகரின் பெயர் குண்டு கருப்பையா என்று நினைவு. (நடிகர் திலகத்தின் பல படங்களில் இவரைக் காணலாம்)

தாங்கள் கூறியது சரி தான் வாசு சார். அவர் குண்டு கருப்பையா தான். இவருடைய புதல்வர் தான் தற்போது அதிமுக முன்னணிப் பேச்சாளராக இருக்கும் திரு குண்டு கல்யாணம் அவர்கள். திரு குண்டு கருப்பையா அவர்கள் ஏ.பி.என். னின் ஆஸ்தான கலைஞர்களில் ஒருவர். பெரும்பாலான ஏபி.என். படங்களில் இவரைப் பார்க்கலாம்.
நன்றி.
ஆம், திருவிளையாடல் பாலையா குழுவிலும் வருவார்.

சிவாஜி குழுவில் குள்ளராக வரும் பி.டி.சம்மந்தம் அந்தக்கால பாய்ஸ் கம்பெனியில் கண்டிப்பான வாத்தியாராம்! தி.மோ-வில் மருத்துவமனையில் ஒரே ஒரு வசனம் - அவ்வளவு தான் அவருக்கு.

பத்மினி குழுவில் குள்ளராக வருபவர் யார் (ஸ்ருதிப்பெட்டி)? ராமச்சந்திரனும்-தங்கவேலுவும் அடிக்கடி அவரை தூக்கி அப்புறப்படுத்துவார்கள்.

P_R
9th April 2013, 10:36 AM
எனது முதல் தமிழ்ப்பதிவு, இணையத்தில் எனது தமிழ் ஆசான் திரு பிரபுராம் அவர்களுக்கு சமர்ப்பணம்.

ஓ இதை கவனிக்கவே இல்லை. கோபால் போட்ட இடுகைல பார்த்தேன். Sorry :oops:
நானே தடவித்தடவி தலைல ஆங்கிலத்துல தோணுறதை கட்டாய மொழிமாற்றம் பண்ணிக்கிட்டு பட்டி-டிங்கரிங் எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கேன் :lol2: எவ்வளவோ சரளமா தமிழ் எழுதுறவங்க இந்த திரிலையே இருக்காங்க.
வாங்க நம்மளும் சேர்ந்து எழுதி எழுதிப் பழகுவோம். அவ்வளவு தான் :-)

RAGHAVENDRA
9th April 2013, 10:44 AM
பேசும்படம் 1957 ஏப்ரல் இதழ் ஆண்டு மலரிலிருந்து ...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/pesumpadamapril57listfw_zps2f203443.jpg

P_R
9th April 2013, 10:45 AM
சி.கே.சரஸ்வதியின் முகம்,அவர் சிரிக்கும்போது கூட கடுகடு என்றுதான் இருக்கும்! :lol:

Jokes apart, அந்தக் கதைக்களன்/காலம் நடனக்கலைஞர்களின் அன்றைய சமுதாய நிலை இன்னைக்கு நிறைய பேருக்கு முழுசா புரியாது இல்லை?

வடிவாம்பாள் ஒரு முன்னாள் கலைஞர்னு கேள்விப்படுறோம்.
"இப்படி போகுற இடத்துல எல்லாம் பகையை சம்பாதிச்சுக்கிறியேம்மா....நமக்கு நாலு பெரிய மனுஷாலோட தயவு தேவை"ன்னு உண்மையா நினைக்குறா. மோகனா நடனத்துல பெரிய ஆளா வரணும்னும் ஆசைப்படுறா.

அந்த கதைக்காலம் ஒரு cusp of eras (இருவேறு காலகட்டங்கள் சந்திக்கும் நேரம்).

பிரபுக்களின் - அதாவது தனவான்களின் :-) - ஆதரவில் கலைஞர்கள் தழைக்கும் காலம் மறைந்து. கச்சேரிக்கு காசு, சபாக்கள் என்று கலைஞர்கள் மக்களிடம் (கிட்டத்தட்ட) நேரடியாக பணம் பெற்று சம்பாதிக்கும் காலம்.

இது மாபெறும் மாற்றம். சமூக சரி/தப்பு'கள் இங்கங்கென மாறு காலம் (an era of flux in the economic order and thus the attendant social values).

பலநூறு வருடங்களாக இயங்கும் விதம் மாறுகிறது

(will make one digressive post next to emphasize this point)

vasudevan31355
9th April 2013, 11:04 AM
பேசும்படம் டிசம்பர் 1962 (அரிய ஆவணம்)

இதுவரை இணையத்தில் வெளிவராத நடிகர் திலகத்தின் பயணக் கட்டுரை.

101 உல்லாச நாட்கள் என்ற தொடரில் தன்னுடைய அயல்நாட்டு பயண அனுபவங்களை நடிகர் திலகம் நம்முடன் பகிர்ந்து கொண்டார். அந்தத் தொடரிலிருந்து (வந்தேன் அமெரிக்கா) இப்போது ஒரு பகுதி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/f-4.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/e-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/d-3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/c-3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/b-5.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a-4.jpg

RAGHAVENDRA
9th April 2013, 11:04 AM
:lol:

Jokes apart, அந்தக் கதைக்களன்/காலம் நடனக்கலைஞர்களின் அன்றைய சமுதாய நிலை இன்னைக்கு நிறைய பேருக்கு முழுசா புரியாது இல்லை?

வடிவாம்பாள் ஒரு முன்னாள் கலைஞர்னு கேள்விப்படுறோம்.
"இப்படி போகுற இடத்துல எல்லாம் பகையை சம்பாதிச்சுக்கிறியேம்மா....நமக்கு நாலு பெரிய மனுஷாலோட தயவு தேவை"ன்னு உண்மையா நினைக்குறா. மோகனா நடனத்துல பெரிய ஆளா வரணும்னும் ஆசைப்படுறா.

அந்த கதைக்காலம் ஒரு cusp of eras (இருவேறு காலகட்டங்கள் சந்திக்கும் நேரம்).

பிரபுக்களின் - அதாவது தனவான்களின் :-) - ஆதரவில் கலைஞர்கள் தழைக்கும் காலம் மறைந்து. கச்சேரிக்கு காசு, சபாக்கள் என்று கலைஞர்கள் மக்களிடம் (கிட்டத்தட்ட) நேரடியாக பணம் பெற்று சம்பாதிக்கும் காலம்.

இது மாபெறும் மாற்றம். சமூக சரி/தப்பு'கள் இங்கங்கென மாறு காலம் (an era of flux in the economic order and thus the attendant social values).

பலநூறு வருடங்களாக இயங்கும் விதம் மாறுகிறது

(will make one digressive post next to emphasize this point)

இதைப் பற்றி கொஞ்சம் விரிவாக கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் அந்தக் காலத்தில் நண்பர்களிடம் பேசும் போது சொல்லியிருக்கிறார், அதனையே கதையிலும் உருவாக்கியிருக்கிறார். கோவில்களிலிருந்து தெருக்களுக்கு நடனங்கள் பெயர்ந்த காலம் அது. இடம் மாற்றம் என்று ஒரு சொல்லுக்குள் அடங்கி விடக் கூடிய விஷயம் அல்ல .. பின்னணியில் பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்த ஒரு விஷயம், அதற்குள் புதைந்து கிடந்த பல கலைஞர்களின் ஆதங்கள் மறைந்து, ஒரு சிறந்த கலைக்கு உண்மையான அங்கீகாரம் பெறும் நிலை வருவதற்கான மாற்றத்தின் வெளிப்பாடு ஆகும். தாங்கள் கூறுவது போல் இதில் digression அடங்கியுள்ளது. அதனுடைய தாக்கத்தை வெளிக்காட்டுவதற்கான ஒரு யுக்தியாகத் தான் கலைமணி அவர்கள் இந்தக் கதைக்களத்தை அமைத்தார். இதைப் பற்றிய தங்களுடைய பதிவில் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்.

RAGHAVENDRA
9th April 2013, 11:05 AM
வாசு சார் , சூப்பர் ... 101 உல்லாச நாட்களை உல்லாசமாகப் படிக்கக் காத்திருக்கிறோம் ...

நன்றி நன்றி மிக்க நன்றி ...

vasudevan31355
9th April 2013, 11:08 AM
'பேசும்படம்' டிசம்பர் 1962 இதழின் அருமையான பின் அட்டைப்படம் போனஸாக.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/attai.jpg

JamesFague
9th April 2013, 11:34 AM
Thalaivar's US Trip information simply super.
Thanks for the rare info. Mr Vasu Sir and also
additional bonus of the photo of Mr Thyagu.

P_R
9th April 2013, 11:40 AM
This post is admittedly a bit digressive. The purpose is to give the social context of the time-are of ThillAna.
Most of you are well aware of this, but I feel the youngsters who watch the movie now may receive it a tad too simply and thus under-appreciate the setting. Hence this post.

புறநாற்றில் ஒரு புலவர்

கை அது கடன் நிறை யாழே
மெய் அது புரவலர் இன்மையின் பசியே

புரவலர் இல்லை என்றால் பசி தான்.

ஒரு அரசனை ஒரு புலவர்: 'பாண் பசிப் பகைஞன்' என்கிறார் (பாணர்களின் பசிக்கு பகைவனாம்)

(முதல்) ஔவையார் ஒரு மன்னன் இறந்ததைப் பாடும்போது பாணர்களின் பாத்திரத்தில் துளை விழுந்துவிட்டது என்று பாடுகிறார்.

பலநூறு வருடங்களாக இப்படித் தான் கலைஞர்கள் வாழ்ந்தார்கள்.

நொபேல் பரிசுபெற்ற ப்ரித்தானிய தத்துவ எழுத்தாளர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் : "பிரபுக்களுக்கு கலை எவ்வளவு கடன்பட்டது என்பதை நாம் இன்றைய ஜனநாயகக் காலகட்டத்தில் மறக்க அனேக வாய்ப்புண்டு" என்றார் (in these days of democracy, one is apt to forget the debt art owes to aristocracy).

நாம் இன்றைய சமூக அமைப்பில் நின்று கொண்டு அன்றைய சமூக நிலைகளை நினைத்து, மேலோட்டமாக தீர்ப்பு வழங்கும் வேலையை எவ்வளவு எளிதாகச் செய்கிறோம்!

இந்த அமைப்பு எவ்வளவு தூரம் தொடர்கிறது. 20 ம் நூற்றாண்டு வரையிலும் கூட.

இந்தக் கால மாற்றத்தில் சிக்கிக்கொண்ட இன்னொருவர் பாரதியார்! எட்டயபுரம் ஜமீந்தாரை (மகாராஜா!) அண்டி இருந்தார். அவருக்கு புகழ்பாட்டுக்கள், சீட்டுக்கவிகள் எழுதிப் பிழைத்தார்.அவர் சுபாவத்துக்கு அது சரிவரவில்லை. விலகி அவரை (மறைமுகமாகத்) திட்டி எழுதினார். பிறகு மறுபடியும் வழியின்றி அவரிடமே போய் நிற்க வேண்டிய நிலைமை (தன் வாழ்நாளில் இருண்ட காலமாக இதைப் பற்றி எழுதுகிறார்).

மதுரை சேதுபதி பள்ளியில், சுதேச மித்திரன் பத்திரிகையில் என்று பிழைப்புக்கு ஏதாவது செய்யவேண்டிய நிலைமை. எதுவும் சரிவரவில்லை.

பாஞ்சாலி சபதம் சமர்ப்பணத்தில் கூட இப்படி எழுதுகிறார்.

தமிழ்மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப்போகிற வரகவிகளுக்கும் அவர்களுக்குத் தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப்போகிற பிரபுக்களுக்குமா இந் நூலைப் பாதகாணிக்கையாகச் செலுத்துகிறேன்.


பிரபுக்களின் காலம் முடிந்துவிட்டது என்று பாரதியாராலேயே கூட முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் பாருங்கள். அப்படிப்பட்ட ஒரு காலமாற்றம் நிகழ்கிறது.

('ச்சே மகாகவியை இந்த சமூகம் இப்படி பண்ணிடுச்சே' என்று மேலோட்டமாக அங்கலாய்த்து நகர்ந்துவிடுகிறோம். ஆனால் அந்தக்கால சமூக மாற்றங்களைப் பொதுவாக நாம் ஆராய்வதில்லை. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் (Madras Institute of Development Studies) சேர்ந்த பேராசிரியர் வெங்கடாசலபதி பாரதியாரின் காலம் பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறார் - அதில் தான் இந்தக் கோணத்தைப் படித்தேன்.)

Now coming to ThillAnA

வடிவாம்பாள் நினைப்பதில் என்ன தவறு?

அவள் பார்த்து வளர்ந்த உலகம் அது. இன்று கச்சேரிக்கு சம்பளம் பேசி 'லேசில் கையெழுத்து'ப் போடாத கெட்டிக்காரி அவள். ஆனாலும் இந்தப் 'புது உலக'த்தின் நியாய/அநியாயங்கள் அவளுக்கு முழுவதுமாகப் புரியவில்லை.

ஜில்ஜில்-லையும் நினைத்துப் பாருங்கள். என்ன ஒரு அசாத்திய திறமைக்காரி, தன்னம்பிக்கை உள்ளவள். ஆனாலும் முறையான திருமணம் என்பது அவளுக்கு இல்லை. 'உங்க ஆளு சண்டியன்' என்று சண்முகம் குறிப்பிடும் அந்த நாகலிங்கம் 'திருந்தி வருவான்' என்று அவள் நம்புவதாகப் படம் முடிகிறது. நெஞ்சை அறுக்கிறது அல்லவா அவள் நிலை?

digression within digression

மோகனாவும், சண்முகமும் எவ்வளவு எளிதாகத் துவண்டு விடுகிறார்கள். தன் சுயநலத்துக்காக சண்முகம் எத்தனை அசட்டையாக கையெழுத்துப் போடுகிறான். ஜில்ஜில் வாழ்க்கையை விடவா இவர்களுக்கு இடர்களும், சவால்களும்? சொல்லியும் சொல்லாமலும் பல ஏமாற்றங்கள். அவற்றை எவ்வாறு சமாளிக்கிறாள். இத்தனைக்கும் அவள் கலை 'உயர்ந்தது அல்ல' என்ற கீழ்நோக்குப் பார்வை வேறு. சகலகலாவல்லி என்று சண்முகம் அவளை அறிமுகப்படுத்திகிறான், ஆனால் அவளை நாம்கூட இரண்டாம்பட்சமாகத் தானே நினைக்கிறொம்.அதை நாமும் கூட கேள்வி கேட்பதில்லை. சண்முகத்தின் கத்திகுத்துக்கு பதறுகிறோம். சகலகலாவில்லி'க்கு பல் உடைந்தால் சிரிக்கிறோம்.

கொட்டகையில் அவள் சண்முகத்தை ஆழ்ந்து ரசித்ததை விடவா யாரும் ரசித்துவிடப் போகிறார்கள் ('ஆமாம் ராசா'). அவளுக்கு வாசித்ததை விட படம்நெடுகிலும் சண்முகம் யாருக்காகவாவது அத்தனை ஆத்மார்த்தமாக வாசித்தானா?


Back to வடிவாம்பாள்

தன் மகளை, ஒரு முன்னனிக் கலைஞனுக்கு வாழ்க்கைப்படுவதை விட ஒரு தனவந்தனின் ஆசைநாயகி ஆக்க இந்த அம்மாள் விரும்பிகிறாரே - என்று மட்டும் மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது. கலைஞர்கள் யாரையாவது சார்ந்தே வாழவேண்டியவர்கள் என்பதே அவள் காலம் அவளுக்குப் போதித்த வாழ்க்கைமுறை.

தன் மகள் நல்ல நாட்டியக்காரியாக பெயர் பெற வேண்டும் என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை அவள் ஒரு பெரிய மனுஷனின் 'ஆதரவு' கிடைக்க வேண்டும் என்று அவள் நினைப்பது.

இதில் ஒன்று உயர்ந்த நோக்கம் என்றும், இன்னொன்று தாழ்வானது என்றும் நாம் நினைப்பது - இன்றைய மனநிலையில் இருந்தே. அந்தத் தாய்க்கு இரண்டும் ஒன்றே.

அந்தக் காலத்து நாட்டியக்காரி, தனக்கு சரிவர அப்படி ஒரு ஆதரவு கிடைக்கவில்லை, அது தன் குழந்தைக்கு நிகழ்ந்துவிடக் கூடாது என்று அவள் நினைக்கிறாள் என்றும் கொள்ளலாம்.

"என் கண்ணு! நீ ஒருத்தி கஷ்டப்படுற, உன்னால நாங்க எல்லாம் சுகப்படுறோம்" என்று ஒரு வசனம் வரும் (ஞாயிறு ஸ்க்ரீனிங்கில் இது கட்!) - அவளை மகாராஜாவின் 'தங்கையை' பார்க்க அனுப்பும் ஆயத்தக் காட்சி. அவள் நோக்கம் வேறு என்றாலும் அந்த வாஞ்சை பொய் அல்ல என்றே நினைக்கத் தோன்றும்.

தனக்குத் தெரிந்த நல்வழியில் குழந்தையைச் செலுத்தவும்,தனக்கு கைகூடாதவை அவளுக்குக் கிடைக்கவேண்டும் என்று அவள் விரும்புவது இயல்புதானே.


ஆனால் (தனியாக வாத்தியார் வைத்து இங்க்லீஷ் சொல்லிக்கொடுக்கப்பட்ட) மோகனா காலமாற்றத்தை உணர்ந்தவள். பழைய சட்டகத்தை முற்றிலும் நிராகரித்து முன்செல்ல முடியும் என்ற நம்பிக்கை உடையவள். அது தான் சண்டை.

சண்முகமும் வடிவாம்பாள் போல சிந்தனை உடையவன் தான். அவன் சந்தேகப்பேர்வழி, அவசரக்காரன், (மேரி சொல்வது போல) 'நாதஸ்வரம் தவிர ஒன்றும் தெரியாதவன்' என்பதெல்லாம் வாஸ்தவம். ஆனால் அந்தக் காலச் சூழலில் நாட்டியக் கலைஞர்களின் வாழ்க்கைத் தேர்வுகள் இவ்வாறு தான் இருக்கும் என்றே பொதுவான கருத்து. அதனால் தான் சிறு விஷயங்களைக் கூட அவன் சந்தேகிக்கிறான். அவனாலும் மோகனாவின் தீர்க்கமான மனநிலையை முழுவதுமாக புரிந்துகொள்ள முடியவில்லை.

பாவம் மோகனா - தன் காலத்தைத் தாண்ட முனைபவர்கள் அனைவரும் படும் சிரமங்களில் மிகக் காட்டமான - 'நேசர்களின் புரிதலின்மை'யை அனுபவிக்கிறாள்.

இவற்றைக் கருத்தில்கொண்டு பார்த்தால், இந்தக் கதையை இன்னும் நன்றாக ரசிக்கலாம் என்று தோன்றுகிறது.

ஜில்ஜில் பற்றியும், நாகப்பட்டினம் கொட்டகையை ஏபிஎன் காட்டிய விதத்தையும் இன்னும் விரிவாக எழுதலாம்...பிறகொருமுறை

RAGHAVENDRA
9th April 2013, 11:56 AM
டியர் பிரபு சார்
சரியான முறையில் தங்கள் பார்வையில் ஒவ்வொரு பாத்திரத்திற்குள்ளும் புகுந்து அலசியிருக்கிறீர்கள். அவரவர் பார்வையில் என்ற கண்ணோட்டத்தில் மிகச் சிறப்பாக உள்ளது.

நிலச்சுவான் தார், பிரபுக்கள் இவர்களை அண்டி வாழும் கோணம் ஒரு புறம் இருக்க ...

கலைமணி அவர்களின் உள்ளத்தில் இருந்தது மற்றொரு விதமான ஏக்கமும் கோபமும் கலந்த ஓர் உணர்வு என்று எனக்குத் தோன்றுகிறது .. of course it's my interpretation may be right or wrong ... depends ...

நாட்டியம் என்பது பிரபுக்களுக்கும் விழாக்களுக்கும் மட்டுமே என்ற ஓர் வரைமுறையை கலைமணி அவர்கள் வெறுத்திருக்கலாம். பல நடனக் கலைஞர்கள் தங்கள் மனதிற்குள் ஏதாவது ஓர் சந்தர்ப்பத்தில் மனம் புழுங்கியிருப்பார்கள், இந்த நிலையை எண்ணி. அதனை வெளிப்படுத்த வேண்டும்.. நடனம் என்பது இறைவனின் வரப்பிரசாதம் என்பதை மக்கள் உணர வேண்டும், அதனுடைய புனிதத் தன்மையைக் கொச்சைப் படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற மனப்பான்மையில் கூட இந்த கதையை அவர் வடித்திருக்கலாம். ஏனென்றால் அவருக்கு அந்த ஏக்கம் இருந்திருக்கிறது. தம்மால் முடிந்த வரையில் தமக்குத் தெரிந்த வழியில் நடனத்திற்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் தான் அவர் இந்தக் கதையைப் படைத்திருக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் கோவில்களின் மதிற்சுவர்கள், பிரபுக்களின் நான்கு சுவர்கள் இவற்றையெல்லாம் தாண்டி நாட்டியம் பரவ வேண்டும், அது தனக்குரிய அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்கிற கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடே மோகனாம்பாள் பாத்திரம். கிட்டத் தட்ட இதே அணுகுமுறையும் ஆதங்கமும் அவருக்கு நாதஸ்வரக் கலையின் மீதும் இருந்திருக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் தான் தில்லானா மோகனாம்பாள் கதையை கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் படைத்திருப்பார் என நான் நினைக்கிறேன்.

Gopal.s
9th April 2013, 12:19 PM
:-D Prabu,
Enjoying this and if this is called digression, i prefer only digression. I told many people not to pass judgemental statements about past and take it as an interesting reading. Good and bad existed will exist in all times taking different shape and form, but told them not to fight Wind mills like Don quixote(cervantes). You have a great Style & content.
:goodidea:Take writing as your full time one. ( I am passing my wish on you as wish fulfilment)
Enjoying every bit of it.

Gopal.s
9th April 2013, 12:33 PM
புரவலர்- புலவர் பற்றி ஒரு interesting episode .

இளைய ராஜாவும் கண்ணதாசனும் ஏதோ விஷயத்தில் முரண் பட்டு பிணங்கி நின்ற காலம். 77-78 என்று நினைவு. கண்ணதாசன் கொஞ்ச காலம் ,இளைய ராஜாவிற்கு, எழுதவில்லை. ஒரு function போது ,தற்செயலான சந்திப்பில், இளைய ராஜா ,நலமா என்று கவிஞரை கேட்க, ராஜாக்கள் தயவில்லாமல், புலவர்கள் எப்படி நலமாக இருக்க முடியும் என்று ஒரு போடு போட ,நட்பு மீண்டும் தழைத்தது என்று கேள்வி.

மற்றொன்று- நான் கொத்தமங்கலம் சுப்பு குடும்பத்துடன் நட்பு கொண்டவன் என்ற முறையில், மூல கதாசிரியருக்கு இந்த படமாக்கத்தில் பரம திருப்தி. (வைஜயந்தியை கதாநாயகியாக்கியிருக்கலாம், மற்றும் இறுதி தூக்கு சீன் தவிர)

adiram
9th April 2013, 12:39 PM
Prabu Ram sir,

Beautiful narration about Mohana, Vadivu, Jiljil and Sikkalar.

We can watch in the movie, APN didnot show father of Mohana, at the same time Vadivaambal is not a vidow. She is having big kungumappottu in her forehead. That means Mohana's father is "somebody" which cannot be eloborated.

In the same way she want to lead her daughter. Thatswhy too much 'pal iliching' for Mittathaar Nagalingam's 'mookkuththi' and Singapuram Minor's 'vaira attigai' and Madhanpoor Maharaja's 'aranmanai vaasam'.

adiram
9th April 2013, 12:53 PM
Mr. Neyveli Vasudevan sir,

Thanks a lot for publishing Pesum Padam (1962) pages, about thalaiva'r visit to U.S. We never seen such an article till now.

In those days U.S.visits are un imaginable by many including in top level personalities. Thatswhy he described everything very widely.

No doubt it is a "ariya aavanam" with Alayamani in the cover which gives additional attraction.

RAGHAVENDRA
9th April 2013, 01:51 PM
தமிழ்த் தொலைக்காட்சிகளில் இந்த வாரம் நடிகர் திலகத்தின் படங்கள் ...

Nt films in tv - week 09.04.2013

zee tamil

ரிஷிமூலம் – 09.04.2013 – பகல் 2.00 மணி

vasanth tv

தீபம் – 10.04.2013 – பகல் 2.00 மணி
என் மகன் – 12.04.2013 – பகல் 2.00 மணி
சரஸ்வதி சபதம் – 14.04.2013 – பகல் 2.00 மணி

raj digital

ராஜ மரியாதை – 11.04.2013 – இரவு 8.00 மணி

mega tv

சந்திப்பு – 13.04.2013 – பகல் 1.30 மணி

mega 24 tv

லக்ஷ்மி கல்யாணம் – 14.04.2013 – பகல் 2.30 மணி
கோடீஸ்வரன் – 15.04.2013 – பகல் 2.30 மணி

ktv

எதிரொலி – 11.04.2013 – பகல் 1.00 மணி

j movies

பந்தம் – 13.04.2013 – பகல் 1.00 மணி
ஆனந்தக் கண்ணீர் – 15.04.2013 – பகல் 1.00 மணி

JamesFague
9th April 2013, 02:05 PM
Deepam rocking every fortnight in one channel or
the other. NT adakki nadippil asathiya padam.

JamesFague
9th April 2013, 02:06 PM
Welcome back Vanaja Madam after a long time.
Pls do post like before.

Subramaniam Ramajayam
9th April 2013, 03:12 PM
101 Ullasa hatkal by NT about usa tour very grand opening with aalayamani cover which took me to 1962 year what a memorable film. please continue.
hope your health is improving. take care vasu sir.

IliFiSRurdy
9th April 2013, 03:29 PM
தில்லான மோகனாம்பாளின் நடனம் களை கட்டி விட்டது.

பல நல்ல கருத்து பரிமாற்றங்கள்,புதிய வருகைகள்,வராதவர்களின் வருகைகள் என இந்த திரி அமர்க்களப்படுகிறது..

Ladies First..

Ms.Vanaja அவர்களின் வரவு நல் வரவு ஆகுக.
என்னை ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன்.

ஒரு வினோதம் பாருங்கள்..
நீங்கள் அந்த மண்டபத்தில், பத்மினி ஆடிய இடத்தில்
ஒரு மனிதனையோ,நாயையோ,கோழியையோ பார்க்கவில்லை.
பார்த்தது..நடனம் என்ற பெயர்ச்சொல்லோடு சம்பந்தம் கொண்ட வினை சொல்லான ஆடு.
எனவே அந்த guide சொன்னதில் உண்மை இருக்குமென நான் நினைக்கிறேன்.
தொடர்ந்து எழுதினால் மகிழ் வேன்/ஓம்.(உங்கள் தமிழ் படி)

நண்பர் கோபால் சொன்னது போல
இனி வரவேண்டியது நண்பர்கள் முரளி,பார்த்தசாரதி,& சாரதா

பொலிவு பூரணமாகும்.

IliFiSRurdy
9th April 2013, 04:33 PM
கலைஞர்கள் புரவலர்கள் பற்றிய கருத்து பரிமாற்றங்கள்..

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தோன்றி வரும் தலைமுறைகள் பட்ட /படும் அவதி மனித இனத்தில் வேறு எப்பொழுதும் நடந்திருக்க வாய்ப்பில்லை.

முதலில் கலாசார மாற்றம்
.பிறகு ஆட்சி முறை மாற்றம்.
பிறகு விஞ்ஞான மாற்றம்.
பிறகு தொழில் நுட்ப மாற்றம்
தற்பொழுது பொருளாதார மாற்றம் ..
இதனூடே பின்னிப்பிணைந்துள்ள கலாசார மாற்றம்.
என ஒரு நூற்றிருபது ஆண்டுகளுக்குள் சுனாமி போன்ற மாற்றங்கள்..

பல தலைமுறைகளாக கலைஞர்களை ஆதரிப்பது எனும் பெயரில் நாட்டிலுள்ள செல்வந்தர்கள் அவரவர் வசதிக்கேற்ப பெண்களை சீரழித்து வந்தனர்.இது ஒரு வடிகட்டிய அயோக்கியத்தனம்.இதற்கு தேவதாசி எனும் ஒரு இனிப்பு தடவிய பெயர் வேறு!!இது தேவரடியார்கள் என மருவி மேலும் என்னென்னவோ ஆகி, இவ்வினத்தவர் ஆண்களுக்கு இசைந்தால் இசைசொல்லாகவும்,மறுத்தால் வசை சொல்லாகவும் ஆகிப்போனது.1920 களில் இதை எதிர்த்து,ஒழிக்க கோரி சென்னை சட்ட சபையில் ஒரு சரித்திர புகழ் பெற்ற விவாதம்.Dr.Muthulakshmi Reddy அம்மையார் கடுங்கோபத்துடன் விவாதம் செய்ய காங் தலைவர் திரு சத்யமூர்த்தி அவர்கள் தேவதாசி முறை சமுதாய சுமுகமான போக்கிற்கு அத்தியாவசியமானது அதை நீக்குவது பேராபத்து என்றும் பேச,எழுந்தார் அம்மையார்.."மதிப்பிற்குரிய சத்யமூர்த்தி அவர்கள் தங்கள் குடுமபத்திலிருந்து ஒரு பெண்ணை இந்த நல்ல முறைக்கு நாட்டின் நன்மை கருதி அனுப்பி வைக்க இசைந்தால் இந்த மசோதாவை நான் வாபஸ் பெறுகிறேன் என கர்ஜிக்க முன்னவர் முகத்தில் ஈயாடவில்லை.அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு தேவதாசி முறையும் ஒழிந்தது.

சரி இனி மோகனாவின் கதை.
அவள் ஒரு குணவதி.தன் இனத் தொழிலை வெறுப்பவள்.சண்முகத்திடம் ஒரு நல்ல மனிதன் மற்றும் கலைஞனைக்கண்டு அவனை நேசிக்கிறாள்.அவனும் அப்பாவி.மோகனாவின் நிலை அறிந்து அவளை நேசிக்கிறான்.
ஆனால் இயல்பு காரணமாக அவ்வப்பொழுது சந்தேகம் தலை தூக்குகிறது.அதன் அடிப்படையில் அமைந்தது தான் இந்த திரைக்கதை.இதில் வடிவு எனும் பாத்திரம் மோகனாவை சண்முகத்திடமிருந்து தூர எடுத்து செல்லவும்,ஜில் ஜில்
எனும் பாத்திரம் மோகனாவை சண்முகத்தின் அருகே கொண்டு வரவும் மட்டுமே கதை மாந்தர்களாக தோன்றுகின்றனர்.
வடிவு தன மகளின் அழகையே மூலதனமாக பார்க்கிறாள்.அவள் கலையைப்பற்றி அவ்வளவு அக்கறையில்லை.ஆனால் மகளின் மனதை மாற்ற அவள் நேசிக்கும் கலையையே ஒரு tool ஆக பயன் படுத்தி அவளை வெற்றிகொள்ள பார்க்கிறாள் முடிவில் தோல்வி அடைகிறாள்.அவளுக்கு தன survival மட்டுமே top priority.

இதற்கு மாறாக ஜில் ஜில்..மிக நல்லவள்.கலையை நேசிப்பவள்..மோகனாவின் திறமையை புரிந்து கொண்டவள்.ஆனால் இவள் தன்னையும் ஒரு நடனமாது என நினைத்துகொண்டிருப்பது ஒரு நகை முரண்.(இதே தவற்றை சங்கமம் என்ற படத்தில் மணிவண்ணனும் செய்வார்..விஜயகுமாரிடம் மானபங்கம் செய்யப்படுவார்)

எனவே வடிவு எனும் பாத்திரம் ஒன்றும் போற்றத்தக்க ஒன்றல்ல.சுயநலம் மிகுந்து தன மகளின் வாழ்வும் தன் வாழ்வு போல ஆவதில் தவறில்லை என நினைக்கும் தாய்.இந்தப்போக்கை,சண்முகம் எனும் ஒரு அற்புத கலைஞனை ,சுந்தர புருஷனை பார்ப்பதற்கு முன் வேண்டுமெனில் ஓரளவு நியாயப்படுத்தலாம்.ஆனால் தன மகள் அவனுடன் மனைவி எனும் பெருமையுடன் இணைவதை விட ,ஒரு செல்வந்தனுடன் தாசி எனும் பட்டத்துடன் இணைவதே தனக்கு நல்லது எனும் கருத்தில் செயல்பட்ட அவள் ஒரு வில்லியே!

adiram
9th April 2013, 04:41 PM
Ganpat sir,

If we go through all the 10 parts of Nadigarthilagam thread (and ofcourse also in the thread which is under lock now), we can find lots and lots of discussions about the great movie Thillana Mohanambal by various hubbers. It includes the reviews of movie, analysis of songs (especially Nalandhana - Parthasarathy sir) and excellent discussions about
Sikkal Shanmuga Sundaram,
Thangarathinam,
Mohana,
Jil Jil Ramamani,
Vaithi,
Vadivambal,
Mittathaar Nagalingam,
Singapuram Minor,
Madhanpur Maharaja,
Nattuvanaar Muthukumaraswamy,
Thavil Sakthivel,
Thavil Muththaraakku annan,
Raman Chettiar,
Kadambavanam,
Nurse Mary
(Here I want to CHALLENGE... In any other films, can anyone remember this much actors only with their charector names..?. Never, that is speciality of Thillana)

If a seprate thread opened for Thillana and all those discussions (only about TM) moved to thread, then it will bw complete dictionery for Thillana Mohanambal. No doubt it is great painful task.

Gopal.s
9th April 2013, 04:57 PM
எல்லாவற்றிலும் தனி தொகுதி மற்றும் reservation கேட்கிறாரப்பா!!!

Gopal.s
9th April 2013, 05:40 PM
பாச மலர் எப்போ ரிலீஸ்?

adiram
9th April 2013, 06:06 PM
பாச மலர் எப்போ ரிலீஸ்?

Paasa Malar - 27.05.1961

adiram
9th April 2013, 06:12 PM
எல்லாவற்றிலும் தனி தொகுதி மற்றும் reservation கேட்கிறாரப்பா!!!

Not for all movies...

But Thillana Mohanambal is 'deserve' for a 'reserve'.

(konjam munnadidhaan TR programme paarththen. adhan effect)

IliFiSRurdy
9th April 2013, 06:27 PM
Ganpat sir,


If a seprate thread opened for Thillana and all those discussions (only about TM) moved to thread, then it will bw complete dictionery for Thillana Mohanambal. No doubt it is great painful task.


ஆதிராம் சார்,

ஒரு படத்திற்கு தனியே ஒரு திரி என்பது கேட்க நன்றாக இருப்பினும்
அதை நடை முறைப்படுத்துவது சிறிது கடினம் என நினைக்கிறேன்.

நான் இங்கு பார்த்த வகையில்
1)அறிவிப்புகள்
2)புள்ளி விவரங்கள்
3)காணொளிகள்
4)தலைவர் சம்பந்தப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்
a).அவர் திரைப்படங்கள் அடிப்படையில்
b)அவர் நடிப்பு பாணியின் அடிப்படையில்
என்று வேண்டுமானால் திரிகள் இருக்கலாம்.

ஒரு படைப்பாளி தன் ரசிகர்களை தன்னை விட உயர்வாக எண்ணி தன படைப்பை உருவாக்கும் போது ஒரு உன்னத படைப்பு உருவாகிறது.அதே போல அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்து தன படைப்பை உருவாக்கும் போது ஒரு சாதாரண படைப்பு உருவாகிறது.இந்த திரி ஒரு உன்னதத்தை நோக்கி போய் கொண்டிருப்பது மகிழ்வளிக்கிறது.இந்த வேள்வியில் நம் ஒவ்வொருவர் பங்கும் அவசியம்.

நன்றி.

IliFiSRurdy
9th April 2013, 06:51 PM
Not for all movies...

But Thillana Mohanambal is 'deserve' for a 'reserve'.

(konjam munnadidhaan TR programme paarththen. adhan effect)

உங்கள் இந்த TR பாணி pun மிக ஹாஸ்யமாக உள்ளது.பொதுவாக இம்மாதிரியான நகைச்சுவை
மிக சிலருக்கே சாத்தியமாகும்.உங்களில் ஒரு TR ஒளிந்திருப்பது தெளிவு.

ஜெயா டிவி யில் தினந்தோறும் காலை வரும் ஒரு பக்தி பாடல் மெட்டில் நானும் ஒரு stanza TR போல எழுத முயன்று தோல்வியுற்றேன்.அது..

இந்தியாவின் நிலையைப்பார்த்தால் வந்திடுமே ஆத்(தி)ரம்
மு.க.மேல் ஜெயாவிற்கு என்னிக்குமே க்ஷாத்(தி)ரம்
புது டில்லியே திருடர் அனைவரின் க்ஷேத்திரம்
மொரார்ஜிதேசாய் .....

பி.கு.முதலில் முழுவதும் போட்டு,உடனே எடிட் செய்து கடைசி வரியின் மூன்று வார்த்தைகளை நீக்கி விட்டேன்.

P_R
9th April 2013, 09:42 PM
Interesting series on the US trip Vasudevan. Look forward to next posts.
This is when he was made honorary mayor of Niagara city for a day and then he got to meet and interact with Brando, Lemmon and others - right. Would be interesting to read that.

P_R
9th April 2013, 09:50 PM
டியர் பிரபு சார் ஒரு வேண்டுகோள், சாரெல்லாம் சொல்லாதீங்க சார். கூச்சமா இருக்கு :-)

இருபதுகளுக்கு ஒருவழியா குட்பை சொல்லப்போறேன்னாலும் இளையவன் என்ற சலுகைகளுக்கான நப்பாசை போனபாடில்லை.


அவரவர் பார்வையில் என்ற கண்ணோட்டத்தில் மிகச் சிறப்பாக உள்ளது.நன்றி.


ஏனென்றால் அவருக்கு அந்த ஏக்கம் இருந்திருக்கிறது. தம்மால் முடிந்த வரையில் தமக்குத் தெரிந்த வழியில் நடனத்திற்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் தான் அவர் இந்தக் கதையைப் படைத்திருக்க வேண்டும். இந்த அடிப்படையில் கோவில்களின் மதிற்சுவர்கள், பிரபுக்களின் நான்கு சுவர்கள் இவற்றையெல்லாம் தாண்டி நாட்டியம் பரவ வேண்டும், அது தனக்குரிய அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்கிற கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடே மோகனாம்பாள் பாத்திரம். கிட்டத் தட்ட இதே அணுகுமுறையும் ஆதங்கமும் அவருக்கு நாதஸ்வரக் கலையின் மீதும் இருந்திருக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் தான் தில்லானா மோகனாம்பாள் கதையை கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் படைத்திருப்பார் என நான் நினைக்கிறேன்.

நிச்சயமாக இருக்கலாம்.
நான் அவர் எழுத்துகளைப் படித்ததில்லை. அவரது தனிப்பட்ட ஆளுமையைப் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. அவரும் கேபிஎஸ்-ஸும் காந்திமேல் மிகுந்த அபிமானம் கொண்டவர்கள் என்று மட்டும் தெரியும். அதை வைத்துப் பார்த்தால் நீங்கள் சொல்வதுபோல இருக்கவே வாய்ப்புண்டு.

P_R
9th April 2013, 09:55 PM
Good and bad existed will exist in all times taking different shape and form, but told them not to fight Wind mills like Don quixote(cervantes). Haha. Yeah. We are all the products of our time, more than we like to believe. The terrorist that he is - Bertrand Russel - in one of his books argues that even the climate of a geographical area seems to influence its moral codes! :-)



Take writing as your full time one. ( I am passing my wish on you as wish fulfilment)
Enjoying every bit of it. Thank You. எனது புரவலன் நானே - அதுனால இன்னொரு முப்பதே முப்பது வருஷம் வேலை பார்க்க வேண்டி இருக்கும் :-)

P_R
9th April 2013, 10:00 PM
Thank You adiram.


We can watch in the movie, APN didnot show father of Mohana, at the same time Vadivaambal is not a vidow. She is having big kungumappottu in her forehead. That means Mohana's father is "somebody" which cannot be eloborated.

In the same way she want to lead her daughter. Thatswhy too much 'pal iliching' for Mittathaar Nagalingam's 'mookkuththi' and Singapuram Minor's 'vaira attigai' and Madhanpoor Maharaja's 'aranmanai vaasam'.

Exactly. Her behaviour is indeed despicable - and meant to be portrayed that way.
I didn't mean to totally exonerate her - but just wanted to contextualize her. She is the product of her times and is cannot but think that that is the fate of dancers - and the best they can aspire for. Even if Mohana were to live with Shanmugam - in her opinion - he is also an artist who is dependent on patrons (quite simply what would have happened to him without Singapuram Minor Chelladurai's change of heart). And he also seems like an impractical madcap fellow - how could she entrust her daughter's wellbeing to such a person.

Though her behaviour is unconscionable to us, we should also consider these IMO.

P_R
9th April 2013, 10:32 PM
இதற்கு மாறாக ஜில் ஜில்..மிக நல்லவள்.கலையை நேசிப்பவள்..மோகனாவின் திறமையை புரிந்து கொண்டவள்.ஆனால் இவள் தன்னையும் ஒரு நடனமாது என நினைத்துகொண்டிருப்பது ஒரு நகை முரண்.(இதே தவற்றை சங்கமம் என்ற படத்தில் மணிவண்ணனும் செய்வார்..விஜயகுமாரிடம் மானபங்கம் செய்யப்படுவார்)

ரமாமணியாரின் சுய-அபிப்ராயத்தில் தவறென்ன கண்டீர்? :lol2:
கலையில் மேல்-கீழ், உயர்ந்தது/தாழ்ந்தது என்ற தீர்மானங்கள் எங்கிருந்து வருகின்றன?

கர்நாடக சங்கீதத்தோடும், பரநாட்டியத்தோடும் ஒன்றி ரசிக்க முடியாதவர்களுக்கு ஒரு உலகமே இருந்தது என்று ஏபிஎன் சிறப்பாக பதிவு செய்கிறார். குதிர குதிர பாய்ச்சலு...இங்கே கொட்டாயில கூச்சலு

அவளை ரசிக்க சனம் உண்டு: அவுஹ ஆடுனாத்தான் பாப்பாஹளா, நான் ஆடுனா கண்ணை மூடிக்குவாஹளா

படாடோபம் மிக்க உயர்குடிகள் அங்கு வருவதே இழிவாக நினைக்கிறார்கள். மாமனார் கடம்பவனம் மருமகன் 'ஏன் அங்கே வந்திருக்கிறான்' என்பதை அங்கு வரும்வரை முழுவதுமாக அறியவில்லை என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியது. கோச்சுவண்டி அங்கு வந்து நிற்பதே, சிங்கபுரம் மைனர் கூத்தாடும் இடத்துக்கு வந்ததே அவருக்கு அசூயை ஏற்படுத்துகிறது!

"வருசாவருசம் இங்கன நான்தான் ஆடிக்கிட்டு கிடந்தேன்...இந்த வருசம் என்ன நினைச்சாரோ செட்டியாரு திருவாரூர்லேர்ந்து புதுசா ஒரு செட்டைக் கொண்டுவந்து இறக்கிட்டார்..ஏஏன்" என்று வெகுளியாக இழுத்துக் கேட்கிறாள்

"அந்த மோகனாங்கி என்னமாத்தான் ஆடுறாஹன்னு பார்த்துட்டு வாரேன்" என்று வீம்பாக சொல்லிச் செல்கிறாள்

I find it moving. நினைத்துப் பாருங்கள்: மோகனாவுக்கும் பலகண்ணாடி அலங்கார முதல் ஃப்ரேம்...ரமாமணி'க்கும் அலங்காரம் செய்துகொண்டு தயாராகும் முதல் ஃப்ரேம்! மேடையில் ஆட ஆயத்தமாக இருக்கும் அலங்காரங்களுடன் சென்றவள்- கசப்பின் சுவடே தெரியாமல் பூரணமாக ரசிக்கத் துவங்கிவிடுகிறாள்!

என்ன ஒரு உயர்ந்த ஜீவன்!

venkkiram
10th April 2013, 01:30 AM
ரொம்ப நாளா ஒடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் சில..

விமானப் பிரயாணங்களில் கவனித்தது.. சென்னையில் இருந்து புறப்படும் நிறைய விமானப் போக்குவரத்துக்களில் கூட இந்திய பழைய மற்றும் கிளாசிக் திரைப்பாடல்கள் / திரைப்படங்கள் தொகுப்புக்களில் கூட சிவாஜி பாடல்கள் / படங்கள் இருப்பதில்லை. திலிப் உட்பட்ட ஏனைய பாலிவுட் நாயகர்களின் படங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. சிவாஜி நடித்த சிறந்த படங்கள் குறைந்தது பத்து எப்போதுமே விமானங்களில் எல்லா பிரயாண காலத்திலும் இருக்க வழிவகை செய்யணும். சிவாஜி மன்றத்தினர் இதற்கான முயற்சிகள் எடுக்கணும். இந்தியா மற்றும் உலக விமானப் போக்குவரத்துக்களை அணுகனும்.

இன்னொன்று.. Netflix போன்ற வீடியோ லைப்ரெரிகள். அங்கேயும் சிவாஜி என்ற தேடலுக்கு நிறைய வந்து கொட்டணும். IMDB போன்ற இணையத் தளங்களில் சிறந்த விமர்சனங்களை பதிவேற்றனும் .. விக்கியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அரிய பல தகவல்களை சேர்க்கணும்.

இதை நான் கமல் திரியில் பதிவு செய்யலாம் என இருந்தேன். ஆனால் சிவாஜியிடமிருந்தே ஆரம்பித்தால் மட்டுமே இப்பணி முழுமையானதாக இருக்கும்.

venkkiram
10th April 2013, 02:12 AM
என்ன ஒரு உயர்ந்த ஜீவன்! தொடருங்கள்.. தி.மோகனாம்பாள் காவியத்தின் மீதான சிறப்பான பார்வைகள் இயக்குனரை உயர்ந்த இடத்தில் தூக்கி நிறுத்துகிறது

Gopal.s
10th April 2013, 06:37 AM
ரொம்ப நாளா ஒடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் சில..

விமானப் பிரயாணங்களில் கவனித்தது.. சென்னையில் இருந்து புறப்படும் நிறைய விமானப் போக்குவரத்துக்களில் கூட இந்திய பழைய மற்றும் கிளாசிக் திரைப்பாடல்கள் / திரைப்படங்கள் தொகுப்புக்களில் கூட சிவாஜி பாடல்கள் / படங்கள் இருப்பதில்லை. திலிப் உட்பட்ட ஏனைய பாலிவுட் நாயகர்களின் படங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. சிவாஜி நடித்த சிறந்த படங்கள் குறைந்தது பத்து எப்போதுமே விமானங்களில் எல்லா பிரயாண காலத்திலும் இருக்க வழிவகை செய்யணும். சிவாஜி மன்றத்தினர் இதற்கான முயற்சிகள் எடுக்கணும். இந்தியா மற்றும் உலக விமானப் போக்குவரத்துக்களை அணுகனும்.

இன்னொன்று.. Netflix போன்ற வீடியோ லைப்ரெரிகள். அங்கேயும் சிவாஜி என்ற தேடலுக்கு நிறைய வந்து கொட்டணும். IMDB போன்ற இணையத் தளங்களில் சிறந்த விமர்சனங்களை பதிவேற்றனும் .. விக்கியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அரிய பல தகவல்களை சேர்க்கணும்.

இதை நான் கமல் திரியில் பதிவு செய்யலாம் என இருந்தேன். ஆனால் சிவாஜியிடமிருந்தே ஆரம்பித்தால் மட்டுமே இப்பணி முழுமையானதாக இருக்கும்.
வெங்கி ராம் சார்,
wiki ,IMDB எல்லாம் பார்க்கும் போது வயிரெரியும். சரியான தகவல் இல்லாததோடு ,பிழையான தகவல்கள் வேறு. கலைமாமணி பட்டம் அவருக்கு 1962 வில் வழங்க பட்டது. wiki யில் 1996 என்று தவறான தகவல். அவர் cult movies பற்றி மொக்கையான தகவல்கள். நான் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ,Singapore Airlines ,Air India என்று எல்லாவற்றிலும் எழுதியே கொடுத்துள்ளேன். சில ஐந்து நட்சத்திர hotel களில் எனது நண்பர்களுடன் பேசி சமீபத்தில் ஏற்பாடு செய்தேன். பெரும் போராட்டம், நமது behind woods ,sify ,oneindia இணைய தளங்களோடு. நீங்கள் சொன்ன குறை எனக்கும் உண்டு. ஆனால் நான் 20 வருடங்களாக வெளி நாட்டில் வாழ்வதால் ரொம்ப போராட முடிவதில்லை.
சரியான நேரத்தில் ,சரியான பிரச்சினையை கையிலெடுத்தீர்கள்.

Gopal.s
10th April 2013, 06:49 AM
சரியான பார்வை P_ R . பரத நாட்டியம், கர்நாடக இசையின் உயர்வு பற்றி எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால், சராசரி மக்களின் வாழ்வையொட்டிய கலை வடிவங்களை அழகுணர்ச்சி என்ற போலியாக வடிவமைக்க பட்ட பார்வையில் அணுகுவது யார் ஆரம்பித்த தவறு? சதிர் என்ற பெயரில் , கீழ் நிலையில் வைத்து பார்க்க பட்ட ஒரு கலை வடிவமே, பரத நாட்டியமாக நாம காரணம் சூட்ட பட்டு உயர் மக்களால் ச்வீகாரம் செய்து கபளீகரிக்க பட்டது.
நாட்டு புற பாடல்களில் உள்ள ஆழமோ ,அழுத்தமோ,வாழ்வியல் முறைகளோ,nerrative nuiances எதுவுமே, எந்த கீர்த்தனைகளிலும் இல்லை. (நான் வந்தேன்,போனேன்,தொழுதேன்,அருள் புரி, என்ற ஆழமற்ற lyrics .ஆனாலும் ஒஸ்தி!!!)
ஜில் ஜில் பற்றி உன்னுடையது சரியான புரிதல் கொண்ட பார்வை.

RAGHAVENDRA
10th April 2013, 07:10 AM
வெங்கிராம் / கோபால்
விமானப் பயணத்தைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த வரையில் தங்கள் உள்ளத்திலுள்ள ஆதங்கத்தை பகிரந்து கொண்டிருக்கிறீர்கள். கோபால் அதற்கான முயற்சியினையும் எடுத்துள்ளார்.
விக்கிபீடியாவை பொறுத்த மட்டில் யார் வேண்டுமானாலும் எடிட் செய்யும் வகையில் உள்ளதால் நாம் சரி செய்தால் அதனை மீண்டும் யாராவது வந்து தவறான தகவல்களையே மீண்டும் பதிகிறார்கள். 1997ல் முதன் முதலில் இணைய தளங்களைப் பார்வையிடும் வசதி கிடைத்த போது நான் தேடியது முதலில் நடிகர் திலகம் படங்களைப் பற்றிய தகவல்களைத் தான். அப்போது பல தகவல்கள் சரியாக இல்லாமல் இருந்தன. அப்போது தான் நாம் நடிகர் திலகத்திற்கென இணையங்களில் சரியான தகவல்களைத் தருவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தால் என்ன எனத் தோன்றியது. கிட்டத்தட்ட அதற்காக நான் காத்திருந்த காலம் 10 ஆண்டுகள். மிகவும் பொறுமையாக இருந்து 2007ல் தான் அதற்கான சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அப்போது தான் நமது நடிகர் திலகம் இணைய தளத்தினைத் துவக்கினேன். இன்னும் சில நாட்களில் 6 ஆண்டுகள் முடிந்து 7வது ஆண்டு துவங்க உள்ள நிலையில் தங்களுடைய பதிவின் மூலம் அடியேனுடைய முயற்சிகளைக் கூற ஒரு வாய்ப்பு கிடைத்தது. விக்கிபீடியா இணைய தளத்தின் தகவல்களை முழுமையாக நம்ப முடியாமல் இருப்பதற்கு ஒரு காரணம் அதனை யார் வேண்டுமானாலும் எடிட் செய்யலாம் என்கிற வசதி உள்ளதே ஆகும். ஓரளவிற்கு நமது நடிகர் திலகம் இணைய தளம் இந்தக் குறையைப் போக்கும் என நம்புகிறேன். அதனைத் தான் இதனுடைய நோக்கமாகவும் கொண்டிருக்கிறேன்.

goldstar
10th April 2013, 07:14 AM
ரொம்ப நாளா ஒடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் சில..

விமானப் பிரயாணங்களில் கவனித்தது.. சென்னையில் இருந்து புறப்படும் நிறைய விமானப் போக்குவரத்துக்களில் கூட இந்திய பழைய மற்றும் கிளாசிக் திரைப்பாடல்கள் / திரைப்படங்கள் தொகுப்புக்களில் கூட சிவாஜி பாடல்கள் / படங்கள் இருப்பதில்லை. திலிப் உட்பட்ட ஏனைய பாலிவுட் நாயகர்களின் படங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. சிவாஜி நடித்த சிறந்த படங்கள் குறைந்தது பத்து எப்போதுமே விமானங்களில் எல்லா பிரயாண காலத்திலும் இருக்க வழிவகை செய்யணும். சிவாஜி மன்றத்தினர் இதற்கான முயற்சிகள் எடுக்கணும். இந்தியா மற்றும் உலக விமானப் போக்குவரத்துக்களை அணுகனும்.

இன்னொன்று.. Netflix போன்ற வீடியோ லைப்ரெரிகள். அங்கேயும் சிவாஜி என்ற தேடலுக்கு நிறைய வந்து கொட்டணும். IMDB போன்ற இணையத் தளங்களில் சிறந்த விமர்சனங்களை பதிவேற்றனும் .. விக்கியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அரிய பல தகவல்களை சேர்க்கணும்.

இதை நான் கமல் திரியில் பதிவு செய்யலாம் என இருந்தேன். ஆனால் சிவாஜியிடமிருந்தே ஆரம்பித்தால் மட்டுமே இப்பணி முழுமையானதாக இருக்கும்.

Thank you Venkkiram, you have raised on right time. I also had same feeling like not to able to watch or listen our NT movies on the journey. Very rarely I have listened few NT songs in Singapore airlines. Let me write to have NT movies collections to few air lines in the suggestion sections. Good initiative Venkkiram.

Cheers,
Sathish

RAGHAVENDRA
10th April 2013, 07:21 AM
சரியான பார்வை p_ r . பரத நாட்டியம், கர்நாடக இசையின் உயர்வு பற்றி எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால், சராசரி மக்களின் வாழ்வையொட்டிய கலை வடிவங்களை அழகுணர்ச்சி என்ற போலியாக வடிவமைக்க பட்ட பார்வையில் அணுகுவது யார் ஆரம்பித்த தவறு? சதிர் என்ற பெயரில் , கீழ் நிலையில் வைத்து பார்க்க பட்ட ஒரு கலை வடிவமே, பரத நாட்டியமாக நாம காரணம் சூட்ட பட்டு உயர் மக்களால் ச்வீகாரம் செய்து கபளீகரிக்க பட்டது.
நாட்டு புற பாடல்களில் உள்ள ஆழமோ ,அழுத்தமோ,வாழ்வியல் முறைகளோ,nerrative nuiances எதுவுமே, எந்த கீர்த்தனைகளிலும் இல்லை. (நான் வந்தேன்,போனேன்,தொழுதேன்,அருள் புரி, என்ற ஆழமற்ற lyrics .ஆனாலும் ஒஸ்தி!!!)
ஜில் ஜில் பற்றி உன்னுடையது சரியான புரிதல் கொண்ட பார்வை.

டியர் கோபால் சார்,
தங்களுடைய பார்வையில் கர்நாடக சங்கீதத்தினைப் பற்றிய பதிவில் தங்களுடைய கோபமும் ஆதங்கமும் தெரிகிறது. இதற்குக் காரணம் அந்தக் கலைகளல்ல, அவற்றை கையாண்டவர்கள் தான். சங்கீத மும்மூர்த்திகள் முழுமையான இறை பக்தியுடன் தான் இவற்றையெல்லாம் படைத்தார்கள். எனக்கு கர்நாடக சங்கீதத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்றாலும் கூட அதில் உள்ள தூய்மையினைப் புரிந்து கொள்ள முடியும். கிட்டத் தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதனுடைய மேன்மை தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. அதற்கும் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது நமது நாட்டுப்புற இசை. அதன் அடிப்படையில் தான் ராகங்களும் தாளங்களும் உருவாக்கப் பட்டதாகவும் ஒரு கருத்து உள்ளது. உள்ளன்போடும் முழு ஈடுபாட்டோடும் இசைப்பதற்காகவே உருவாக்கப் பட்டவை கீர்த்தனைகள். இதில் உள்ள சில விஷயங்கள் இவற்றை சராசரி மனிதரிடமிருந்து வெகு தூரம் விலக்கி விட்டன. காலப் போக்கில் அவற்றில் ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப் பட்ட மாற்றங்கலே அவை அந்நியமாகத் தெரிவதற்கு மூல காரணம்.

மனோதர்மம் என்பது கர்நாடக சங்கீதத்தில் மிக முக்கியமானது. அவரவர்களுடைய சங்கீதப் புலமை, பாடும் போது அவர்களுக்குள் ஆலாபனை செய்யும் வல்லமையை உண்டாக்கும். அப்போது extempore ஆக பாடிக் கொண்டே இருப்பார்கள்.

இவற்றை சராசரி மனிதர்களால் புரிந்து கொள்வது சற்றுக் கடினம். அதனால் அவர்கள் அந்நியப் பட்டுப் போவார்கள். ஆனால் இந்த சங்கீதத்தைக் கேட்கும் போது தங்களையும் அறியாமல் இறைவனை உணர்பவர்கள் உண்டு.

இது சற்று பெரிய நீண்ட விவாதத்திற்குரிய விஷயம். இதே அணுகுமுறை தான் நாட்டியத்திலும் தொடர்ந்து வந்துள்ளது.

இதனை மாற்றி சராசரி மனிதருக்கும் கர்நாடக சங்கீதத்திற்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கப் பெரிதும் உதவியவை திரைப்படப் பாடல்கள்.

என்றாலும் தங்கள் கருத்து பல ஆண்டுகாலமாக நிலவி வரும் சூழ்நிலையைப் பிரதிபலிக்கும் கருத்தாகவே உள்ளது. இதில் தவறு காண ஏதும் இல்லை.

joe
10th April 2013, 07:36 AM
ரொம்ப நாளா ஒடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் சில..

விமானப் பிரயாணங்களில் கவனித்தது.. சென்னையில் இருந்து புறப்படும் நிறைய விமானப் போக்குவரத்துக்களில் கூட இந்திய பழைய மற்றும் கிளாசிக் திரைப்பாடல்கள் / திரைப்படங்கள் தொகுப்புக்களில் கூட சிவாஜி பாடல்கள் / படங்கள் இருப்பதில்லை. திலிப் உட்பட்ட ஏனைய பாலிவுட் நாயகர்களின் படங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. சிவாஜி நடித்த சிறந்த படங்கள் குறைந்தது பத்து எப்போதுமே விமானங்களில் எல்லா பிரயாண காலத்திலும் இருக்க வழிவகை செய்யணும். சிவாஜி மன்றத்தினர் இதற்கான முயற்சிகள் எடுக்கணும். இந்தியா மற்றும் உலக விமானப் போக்குவரத்துக்களை அணுகனும்.

இன்னொன்று.. Netflix போன்ற வீடியோ லைப்ரெரிகள். அங்கேயும் சிவாஜி என்ற தேடலுக்கு நிறைய வந்து கொட்டணும். IMDB போன்ற இணையத் தளங்களில் சிறந்த விமர்சனங்களை பதிவேற்றனும் .. விக்கியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அரிய பல தகவல்களை சேர்க்கணும்.

இதை நான் கமல் திரியில் பதிவு செய்யலாம் என இருந்தேன். ஆனால் சிவாஜியிடமிருந்தே ஆரம்பித்தால் மட்டுமே இப்பணி முழுமையானதாக இருக்கும்.
:thumbsup:

venkkiram
10th April 2013, 07:42 AM
My favourite Nagesh performance of all time. I have possibly quoted most of his lines. He is at his funniest best when he attempts to insult Sivaji - which he does in many places in the film. The way he asks them to start performing in the Rao Bahadur function..

"சண்முகசுந்தரம், நீ சட்டையெல்லாம் அவுத்துட்டு... ' :rotfl:
Still laughing as I type this.

:rotfl: வெடித்து சிரித்து விட்டேன்.

வைத்தியின் பர்சனலாட்டி டேமேஜிங் இதில் நிறைய.

சுவாமி: ஐயா!அதன் காரணத்தை நான் அறியலாமா?
வைத்தி: ஹ்ம்க்ம். செந்தமிழ் வேற! பரதேசி! பரதேசி!

Gopal.s
10th April 2013, 07:53 AM
wiki அபத்தம். இந்த நிமிடம் வரை சரி செய்ய படாமல்.....
Other honors

1986 – Honorary doctorate from the Annamalai University
1997 – Kalaimamani from the Government of Tamil Nadu[33]---------மகா அபத்த பிழை.
1998 – NTR National Award from the Government of Andhra Pradesh[51]

joe
10th April 2013, 09:28 AM
சமீபத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-ல் பிரயாணம் செய்த போது இருந்த தமிழ் படங்கள் துப்பாக்கி , ஆரோகணம் .இவை தவிர கிளாசிக் படங்கள் ஒன்றிரண்டு சேர்த்தால் நன்றாக இருக்கும்.

Gopal.s
10th April 2013, 10:44 AM
சமீபத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-ல் பிரயாணம் செய்த போது இருந்த தமிழ் படங்கள் துப்பாக்கி , ஆரோகணம் .இவை தவிர கிளாசிக் படங்கள் ஒன்றிரண்டு சேர்த்தால் நன்றாக இருக்கும்.
Yes. They always have hollywood classics like Citizen Kane, Casablanca. In Tamil Thillana Mohanambal and Kathalikka Neramillai should be suggested as everyone will enjoy this two classics.

adiram
10th April 2013, 11:52 AM
Yes. They always have hollywood classics like Citizen Kane, Casablanca. In Tamil Thillana Mohanambal and Kathalikka Neramillai should be suggested as everyone will enjoy this two classics.

Regarding songs, my first suggestion is

'iravum nilavum valarattume' from Karnan.

adiram
10th April 2013, 12:03 PM
wiki அபத்தம். இந்த நிமிடம் வரை சரி செய்ய படாமல்.....
Other honors

1986 – Honorary doctorate from the Annamalai University
1997 – Kalaimamani from the Government of Tamil Nadu[33]---------மகா அபத்த பிழை.
1998 – NTR National Award from the Government of Andhra Pradesh[51]

wiki அபத்தம்.

If we search for M.S.Viswanathan, they didnot mention anything about his music talent, but mentioned about some of the movies he produced, like 'silk.. silk.. silk' and 'police... police'.

Pathetic...

Gopal.s
10th April 2013, 12:06 PM
என்னுடையவை------

தூங்காத கண்ணென்று ஒன்று

பொன்னொன்று கண்டேன்

கண்ணெதிரே தோன்றினாள்

அதோ அந்த பறவை போல

கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு

உள்ளத்தில் நல்ல உள்ளம்

நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம்

ஒரு நாளிலே உறவானதே

பாட்டுக்கு பாட்டெடுத்து

பார்த்த ஞாபகம் இல்லையோ.

many many more. just a start.

adiram
10th April 2013, 12:14 PM
:rotfl: வெடித்து சிரித்து விட்டேன்.

வைத்தியின் பர்சனலாட்டி டேமேஜிங் இதில் நிறைய.

சுவாமி: ஐயா!அதன் காரணத்தை நான் அறியலாமா?
வைத்தி: ஹ்ம்க்ம். செந்தமிழ் வேற! பரதேசி! பரதேசி!

scene by scene we can ejoy Vaithy's panch...

in thillana competition "iyen.. veliyila oodhunna jananga ketka maattaangala"
------------------------------------------

M.Saroja: "yaaruyyaa nee?. kadhavu thirandhirundhaa vandhiduradhaa..?"

"piine?. saaththiyirundhaa appadiye poyiduradhaa?"
-----------------------------------------------

"indha aaththula velaikkari kooda nannave irukkaa"
-----------------------------------------------
about Balaji "minor vasamma maatindaan"
-----------------------------------------------
to Sendhaamarai "kadambavanam annaavaa? neengalellaam kaattu bangala pakkam varalaamaa?"
-----------------------------------------------
about Nambiar "hummm, periya thalappavaa kidaichirukkaan".
----------------------------------------------

Vaithy roll is a diamond in Nagesh's crown.

RAGHAVENDRA
10th April 2013, 03:48 PM
VOICE MODULATION - அப்படி என்றால் என்ன என்று இன்றைய நடிக நடிகையருக்குத் தெரியுமோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கான விளக்கத்தை இப்படத்திலும் நடிகர் திலகம் அளித்திருப்பது மட்டும் தெரியும். சரோஜா தேவியின் வரத்தால் முதியவராக மாறிய பிறகு, ஜமுனா சிலையாகி விடும் காட்சியில் அவருடைய நடிப்பு .... பின்னி எடுத்திருப்பார் ... வயதானவர்களின் குரலில் ஏற்படும் நடுக்கம் மிக தத்ரூபமாக பிரதிபலிப்பார். கண்ணை மூடிக் கொண்டு அந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் குரலைக் கேட்க வேண்டும். அதற்குப் பிறகு அந்தக் காட்சியில் அவருடைய நடிப்பைப் பார்க்க வேண்டும். He will introduce a new dimension in acting... நடிக்க வந்து ஐந்து வருடங்களில் இப்படத்தில் அவர் காட்டியிருக்கும் excellence ...

இந்தக் காலத்து இளைஞர்களின் பாஷையில் சொல்வதானால் .... சான்ஸே இல்லே ...

http://youtu.be/8ZgVJryK95I

மேற்காணும் காணொளியில் ஆடியோ மட்டுமே இணைக்கப் பட்டுள்ளது.

Gopal.s
10th April 2013, 04:13 PM
தீபம்- 1977- சில நினைவுகள்.

உனக்காக நான் - அரசியல் சூழ்நிலையால் சுமாரான வெற்றியை ஈட்டியது. 1976 -உத்தமன் தவிர மற்ற படங்கள் superhit range இல் இல்லை. தீக்கனல் என்ற மலையாள படத்தின் உரிமையை வாங்கிய பாலாஜி (கே.ஜீ .ஜார்ஜ் - ஸ்ரீவித்யா கணவர் அல்ல)அன்னகிளி யை super ஹிட் ஆக்கி இருந்த தேவராஜ்-மோகனை அணுக, அவர்கள் மறுக்க, ஆஸ்தான இயக்குனர் சி.வீ.ராஜேந்திரனிடம் கேட்க, subject பிடிக்கவில்லை (????) என்று அவரும் மறுக்க, ஏற்கெனவே காவல் தெய்வத்தில் இயக்குனராய் இருந்து, என்.வீ.ராமசாமி புண்ணியத்தில் ரோஜாவின் ராஜாவில் ஒப்பந்தம் செய்ய பட்டிருந்த கே.விஜயனுக்கு அடித்தது யோகம்.

சிவாஜிக்கு, விஜயனுக்கு பெரிய திருப்பு முனையாய் அமைந்த 1977 இல், சிவாஜியின் மாபெரும் வெற்றி சரித்திரத்தின் ஆரம்பமாய் அமைந்த நல்ல படம். நடிகர்திலகத்தின் அற்புதமான நடிப்பு ,படத்தின் range எங்கேயோ கொண்டு போய் விட்டது.

வாசு சார் முடிந்தால் சுஜாதாவை கடலை போடும் காட்சி.

பேச்சு கொடுத்து, அவர் எதில் impress ஆவார் என்று தேடி, பேச்சை வளர்க்கும் காட்சி.

அதே போல தன் வீட்டு guest house வந்து போகும் சுஜாதாவை பார்த்து பொறாமையும்,ஆற்றாமையுமாய் அவர் சுஜாதா அப்பா சுப்பையாவிடம் பொருமல்,ஆத்திரம்,ஆங்காரத்துடன் பேசும் கட்டம்.

சத்யப்ரியாவை piece piece ஆக்கும் ஆழமான ,குரூரம் நிறைந்த சத்தமில்லா மிரட்டல்.

நடிகர்திலகம் நடிகர்திலகம்தான்.

IliFiSRurdy
10th April 2013, 04:30 PM
நான் ஒரு paranoid என சிலர் கோபத்தில் சொல்வதுண்டு.

ஆனால் நானே மிகவும் அஞ்சும் கதிரியக்கம் மிகுந்த "சிந்துபைரவி"க்கு சில நண்பர்கள்
என்னைக் கடத்துகிறார்களோ என்ற பயம் என் மனதில் இப்போ வந்து விட்டது.

மனித உடலிலிருந்து வாயு பிரிதல் என்று ஒரு genre உள்ளது.
பாடுதல்,பேசுதல்,ஏப்பம் விடுதல் ,கொட்டாவி விடுதல்,தும்முதல்,சொடக்கு போடுதல் மற்றும் அபான வாயு (தன்னிச்சையாகவோ & முயற்சி செய்தோ) என்பவை இதில் அடங்கும்.

உலகின் ஜனத்தொகையான 720 கோடி பேரில் சுமார் 1 கோடி பேரே பாடுவார்கள். ஆனால்720 கோடி பேரும் அந்த கடைசி செயலை செய்வார்கள்.இதை வைத்து இரண்டு பிரிவினரையும் ஒரே குழுவில் அடக்க முடியுமா? கேட்டால் அதிக மக்களால் நேசிக்கப்பட்டு,பயிற்சி செய்யப்படும் கலை என சொல்லி விடலாமா?

சில கலைகள் மனிதனை பின்னோக்கி அவன் மூதாதயரிடம்(Darwin theory) அழைத்து செல்லும்.சிலவோ முன்னோக்கி அவன் இலக்கை நோக்கி அழைத்துசெல்லும்.இரண்டும் ஒன்றா?

ஜில் ஜில் நல்ல பெண் இல்லை என்று யார் சொன்னார்கள்? அவள் மோகனாவை விட நல்லவள்.ஒரு உயர்ந்த ஜீவன்!ஆனால் அவள் ஆட்டம்? அது நாட்டியமா? எனக்கு தெரிந்து திரைப்பட அநாட்டியமணிகள்.டி ஆர்.ராஜகுமாரி,மைனாவதி,
ராஜ சுலோச்சனா ஆகியோர் அடங்கிய குழுவில் வேண்டுமென்றால் ஜில் ஜில்லை சேர்க்கலாம்.

நகுமோமு வுடன் நாக்கு முக்கா வை ஒப்பிடலாமா?
(ஒப்பிடலாம் என்று ஒரு பய சொல்லட்டும்!
"சிவாஜியையும் விஞ்சிய சிவகுமார்" என்று நான் அடுத்த கட்டுரை எழுதுவேன்.உஷார்)

வியட்னாமிலிருந்து பாலசந்தர் சொல்கிறார்..
நாட்டு புற பாடல்களில் உள்ள ஆழமோ ,அழுத்தமோ,வாழ்வியல் முறைகளோ,nerrative nuiances எதுவுமே, எந்த கீர்த்தனைகளிலும் இல்லை. (நான் வந்தேன்,போனேன்,தொழுதேன்,அருள் புரி, என்ற ஆழமற்ற lyrics .ஆனாலும் ஒஸ்தி!!!)

ஆஹா என்ன கண்டுபிடிப்பு!!

இது ஒரு ஸ்டைல்..

park ஷெரட்டன் buffet சாப்பிடும்போது "என்ன இருந்தாலும் அந்த பாண்டிபஜார் கையேந்தி பவன் பரோட்டா டேஸ்ட் இல்லை" (அந்த கடையில் பரோட்டாவை compound சுவர் மீதுதான் காய வைத்திருப்பார்கள்.அப்படி ஒரு hygiene)

ஹாங்காங்கில் ஸ்டீம் பாத் எடுத்து கொள்ளும்போது "என்ன இருந்தாலும் திருத்துறைபூண்டி விறகு வெந்நீருக்கு ஈடாகுமா!" என்பது..
(அதைத்தாண்டி ஒரு படி மேலே போகாத எங்கள் மனம் என்ன பாடு படும்!)

சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சங்கமம் எனும் பெயரில் ஒரு இரண்டு வாரம் லூட்டி அடிப்பார்கள்.மாநிலம் முழுவதிலுமிருந்து பல்வேறு நாட்டுப்புற கலைஞர்களை நூற்றுக்கணக்கில் வரவழித்து சென்னை கலைஞர் ஒருவர் பணம் பண்ணுவார்.அதில் ஒரு நிகழ்ச்சிக்கு என் ஆதர்ச எழுத்தாளர் JK தலைமை தாங்குகிறார் என அறிந்து நானும் போயிருந்தேன்.இடம் film chamber hall அங்கே திடீரென ஒரு மேளம் அடிக்க ஆரம்பித்தார்கள் பாருங்கள்! நான் என்னமோ ஏதோ என பதறி விட்டேன்.

வாசலிருந்து JK அவர்களை மேடைக்கு கூட்டி வந்தனர் அக்கலைஞர்கள்.செவிப்பறை கிழிந்து விட்டது.மேலும் அவ்வகையான இசைக்குப்பின்னால் ஒரு பிரமுகர் நடந்து வருவதையும் அப்பொழுதுதான் நான் முதன் முதலில் பார்த்தேன்(பொதுவாக அவர்கள் படுத்துக்கொண்டுதான் வருவார்கள்)எல்லாம் ஓய்ந்ததும்அவர் மைக்கில் கர்ஜித்தாரே பார்க்கலாம் ..
"இதுவல்லவா இசை! பாலக்காடு மணியெல்லாம் இதற்கு அருகில் வர முடியுமா?"
அந்த சிங்கம் உளறி அப்போதான் நான் முதலில் பார்த்தேன்.

முடிவாக ...
அவரவர் ரசனை அவரவர்களுக்கு என்று சொல்லுங்கள்..(விட்டு) விடுகிறேன்.
எல்லாம் ஒன்றுதான்! வித்தியாசம் இல்லை என்றால்..விடமாட்டேன்.

Gopal.s
10th April 2013, 04:40 PM
. பரத நாட்டியம், கர்நாடக இசையின் உயர்வு பற்றி எனக்கு மாற்று கருத்து இல்லை.

இப்படித்தான் அந்த பதிவே தொடங்குகிறது. சிலருக்கு reinventing the wheel at an exorbitant cost ரொம்ப பிடிக்கிறது. (வேலை பார்த்த இடத்தின் வாசனையோ?)

நான் எங்கே நமது இசையையோ, கலையையோ குறை சொன்னேன்? ஆனால் அவற்றை மட்டுமே அழகுணர்ச்சி என்பதன் benchmark ஆக்கி, மற்றதை உதாசீனம் செய்தல் சரியில்லை என்று சொன்னேன்.

கீர்த்தனை பற்றி நான் எழுதியதற்கு மறுப்பு ஒன்றும் இல்லையே?

adiram
10th April 2013, 04:50 PM
// சத்யப்ரியாவை piece piece ஆக்கும் ஆழமான ,குரூரம் நிறைந்த சத்தமில்லா மிரட்டல். //

maadippadiyin naduvil amarndha vannam, idhaivida saththmillaamal S.V.Ramadossai mirattum thoranai. ("officela mattumillai, indha oorla unnai enge paarththaalum un thalaiyai eduththiduven.. get out")

IliFiSRurdy
10th April 2013, 04:52 PM
VOICE MODULATION - .

ராகவேந்தர் சார்!

நீங்கள் பொதுவாக ஒரு காணொளியோ media cuttings ஓ தானே போடுவது வழக்கம்?

என்ன இந்த முறை, வித்தியாசமாக ஒரு பாட புத்தகம் போட்டிருக்கிறீர்கள்?

GREAT becomes too small a word in front of தலைவர்.

மிக்க நன்றி.

adiram
10th April 2013, 04:58 PM
// ஜில் ஜில் நல்ல பெண் இல்லை என்று யார் சொன்னார்கள்? அவள் மோகனாவை விட நல்லவள்.ஒரு உயர்ந்த ஜீவன்!ஆனால் அவள் ஆட்டம்? அது நாட்டியமா? எனக்கு தெரிந்து திரைப்பட அநாட்டியமணிகள்.டி ஆர்.ராஜகுமாரி,மைனாவதி,
ராஜ சுலோச்சனா .அவர்கள் குழுவில் வேண்டுமென்றால் ஜில் ஜில்லை சேர்க்கலாம்.//

Rajasulochana..?.

Thirumal perumaiyil "karaiyeri meen vilaiyaadum kaaviri naadu" paadalil Padminikku equal aaga aadiya pinnum idhai ezhudha eppadi manam vandhathu..?.

next, andha varusham 'mohanaangi' varuvatharku mundhaiya aandu varai koyil mandapaththil Jil Jil thaane aadiyirukkiraal..? (mittathaar nagalingam (nakkalaaga): "koyilla indha varusham unnoda naattiyam illemmaa").

parthasarathy
10th April 2013, 05:16 PM
தில்லானா மோகனாம்பாள்

ஆஹா! இந்தப் படம் இளைஞர் திரு. பிரபு ராம் அவர்களை ருஷ்ய கலாச்சார மய்யத்துக்கு வரவழைத்தது ஒரு மகிழ்ச்சி என்றால், அவரது ஆழ்ந்த அலசல்களையும் சேர்த்து இந்தத் திரிக்கு வரவழைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி!!

ஒரு திரைப்படம் மிகச் சிறந்த படம் என்று சொல்வதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம் - சிறந்த கதை/திரைக்கதை, இயக்கம், நடிப்பு, இசை, எடிட்டிங், etc. ஆனால், மிக மிக முக்கியமான தலையாய காரணம் எனக்குத் தெரிந்து ஒன்று தான். காலங்கள் கடந்து நிற்கும் தன்மை - one which stands the test of time!

ஒரு திரைப்படத்தின் அனைத்து அம்சங்களிலும் 99 சதவிகிதம் நிறைவை அடைந்த படம் என்றால் அது தில்லானா மோகனாம்பாள் மட்டும் தான். நகைச்சுவை, சோகம், பிரம்மாண்டம் என்று அனைத்து அம்சங்களும் அழகாகவும்/அளவோடும் அமைந்திருக்கும். தான் சார்ந்திருக்கும் சமூகம்/கலாச்சாரத்தைப் பற்றி அமைந்ததும், அனைத்து பாத்திரங்களுக்கும் மிகச் சரியான நடிக/நடிகையர்களைத் தேர்வு செய்து, அவர்கள் அனைவரும் தத்தம் பங்கினைச் செம்மையாகச் செய்ததும், ஏ.பி. நாகராஜன் அவர்களின் அற்புத இயக்கமும், இந்தப் படத்தைக் காலங்கள் கடந்து நிற்கின்ற படமாக்கி விட்டது. 100 சதவிகிதம் கிடைக்காததற்கு மிக முக்கிய காரணம் படத்தின் இறுதியில் வரும் மதன்பூர் எபிசோட் தான்! இதில் குறை ஏதும் இல்லை; இருப்பினும், அது வரை இருந்த வேகத்தையும் சரளத்தையும் சற்றே குறைத்து விட்டது. நலம் தானா பாடலுடன் முடிந்திருந்தால், உலகத்திலேயே இது தான் சிறந்த திரைப்படம் என்கிற அளவிற்குச் சென்றிருக்கும்!

நடிகர் திலகம் மிக மிக நேர்த்தியாகவும், அதே சமயம் சரளமாகவும், பாத்திரத்திற்கு என்ன எவ்வளவு தேவையோ அதை மிகச்சரியாகத் தந்து நடித்த பல படங்களில் இது தலையாய படம். (திரு. கோபால் அவர்களின் கட்டுரையில் சொல்வது போல், அவர் பல தரப்பட்ட பள்ளி நடிப்பை வெவ்வேறு படங்களில் நடித்து விட்டது வேறு விஷயம்.) இத்தனைக்கும், இந்தப் படம் வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரே புதிய இன்னொரு பாட்டையில் - "தங்கை" மூலம் பயணிக்கத் துவங்கி விட்டார்! புதிய இளைஞர் கூட்டம் அவரை ரசிக்கத் துவங்கி விட்டது! (இது போன்ற படங்கள் எந்தப் பள்ளிகளிலும் வராதோ!)

இன்று காலை எங்கள் நிறுவனத்திற்கு வந்திருந்த ஒரு Trainer-இடம் பேசிக் கொண்டிருந்த போது தெரிந்தது அவரும் என்னைப் போல் நடிகர் திலகம் மற்றும் கவியரசுவின் ரசிகர் என்று. அவரிடமும் இதைப் பற்றி தான் பேசி கொண்டிருந்தேன் (of course உணவு இடைவேளை நேரத்தில் தான்). 1968-ஆம் வருடத்தில் தான் அவர் எத்தனை வித்தியாசமான பாத்திரங்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார் என்று (மேலும் பல வருடங்கள் உண்டு - தில்லானாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததால் இந்த வருடம்) - திருமால் பெருமை - (பக்திப் படம்); ஹரிச்சந்திரா (புராணப் படம்); கலாட்டா கல்யாணம் (முழு நீள நகைச்சுவை); என் தம்பி (காரம், மணம், குணம், ஸ்டைல் நிறைந்த மசாலா - அற்புத நடிப்பையும் தாங்கி); தில்லானா (எல்லாம் சொல்லியாகி விட்டது); எங்க ஊர் ராஜா (மசாலா செண்டிமெண்ட் ஒருங்கிணைந்த ஜனரஞ்சகம்); லட்சுமி கல்யாணம் (ஒரு விதமான கலைப் படம் - off beat to a great extent - திரைக்கதையில் சொதப்பியிருந்தாலும்!); உயர்ந்த மனிதன் (மிகச் சிறந்த உயர் தரக் குடும்பப் படம்).

அது எப்படி இவரால் மட்டும் ஒரே நேரத்தில் விமர்சகனுக்கும், அனைத்து தரப்பினருக்கும், வெகு ஜனத்திற்கும், தன்னுடைய ரசிகனுக்கும், தனக்கும் (ஆத்ம திருப்தி) நடிக்க முடிந்தது?

தொடரும்.....

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

P.S.:- திரு பிரபு ராம் - "ங்கொப்புரான" - நான் சொல்லவில்லை! "ஏய்..." சொன்னது - அது நாந்தேன் ஹி...ஹி... (இந்த முழுப் படத்தில் நடிகர் திலகத்தின் ரசிகனுக்கான பிரத்தியேக நடிப்பு இந்த ஒரு இடத்தில் தான் - எல்லோரும் காத்துக் கொண்டிருப்பார்களே!)

நலந்தானா பாடலில் - நானும் அன்று தான் கவனித்தேன் - மூலையில் focus ரேஞ்சின் மூலையில் இருக்கும் வடிவாம்பாளின் கடு கடு முகத்தை! ஏ பி என் - இவரது நுணுக்கம் மற்றும் [பரிபூரணத்துவம் வியக்க வைக்கிறது. இதே குணங்கள் நடிகர் திலகத்திடமும் இருந்ததால் தான் இருவரும் இணைந்து காலத்தைக் கடந்து நிற்கின்ற படங்களைத் தந்தார்கள்!)

parthasarathy
10th April 2013, 05:31 PM
திரு. கோபால் அவர்களே,

தீபம் - ஒரு சிறிய திருத்தம் - அது மாபெரும் வெற்றி சரித்திரத்தின் ஆரம்பம் - இல்லை அது தான் பராசக்தியிலேயே ஆரம்பமாகி விட்டதே! 1976-இல் இருந்த ஒரு தற்காலிகத் தொய்வில் இருந்து மீண்டும் மாபெரும் வெற்றிப்பாதையில் நடை போட அனுகூலமாய் இருந்த படம்! சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ரோஜாவின் ராஜாவிலேயே வெற்றிப்பாதையில் மீண்டும் பயணிக்க ஆரம்பித்து விட்டார்!

திருக்கழுக்குன்றத்தில் இருந்த என் பெரியம்மா வீட்டிற்கு பள்ளிப் படிப்பை முடித்து லீவில் சென்றிருந்தபோது செங்கல்பட்டு அங்கமுத்து திரை அரங்கத்தில் - ஜே..ஜே.. என்ற மக்கள் கூட்டத்திற்கிடையே பார்த்து ரசித்தது மறக்க முடியாத அனுபவம்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

IliFiSRurdy
10th April 2013, 05:38 PM
Rajasulochana..?.

Thirumal perumaiyil "karaiyeri meen vilaiyaadum kaaviri naadu" paadalil Padminikku equal aaga aadiya pinnum idhai ezhudha eppadi manam vandhathu..?.

next, andha varusham 'mohanaangi' varuvatharku mundhaiya aandu varai koyil mandapaththil Jil Jil thaane aadiyirukkiraal..? (mittathaar nagalingam (nakkalaaga): "koyilla indha varusham unnoda naattiyam illemmaa").


பரத நாட்டியத்திற்கு மிக முக்கியமானவை ஒயில்,தளர்வான உடலமைப்பு, பல பா(bha)வங்களை காட்டவல்ல முகம்.
இதில் பானுமதி,ராஜசுலோச்சனா போன்றோருக்கு இறுகிய உடலமைப்பு.ஒயில் மிக குறைவாகவே இருக்கும்.
இதை கொஞ்சிக்கொஞ்சி பேசி(படம் கைதிக்கண்ணாயிரம்) பாடலில் காணலாம்.மாறாக வஞ்சிக்கோட்டை வாலிபன் நாட்டிய போட்டியை நல்ல உதாரணத்திற்கு சொல்லலாம்.

ஆம் ஜில் ஜில் தான் அதுவரை ஆடிக்கொண்டிருந்தார். அது "ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சக்கரை" என்பதை போன்றது.EID Parry ஆலையாக மோகனா வந்ததும் அங்கே பூவிற்கு என்ன வேலை?

IliFiSRurdy
10th April 2013, 06:17 PM
.
கீர்த்தனை பற்றி நான் எழுதியதற்கு மறுப்பு ஒன்றும் இல்லையே?

கோபால் அவர்களே!

மேலெழுந்தவாரியாக பார்த்தால் எல்லா கீர்த்தனைகளும் ஒன்று போல தோன்றினாலும்,ஒவ்வொன்றிலும் ஓவ்வொரு அணுகுமுறை இருக்கும்.புகழ்வாய்ந்த தியாகராஜ கிருதிகளில் ஸ்ரீராமனை புகழ்வன,தான் படும் இன்னல்களை அவரிடம் சொல்லி அவரை விரைவில் தன்னை காக்க வருமாறு வேண்டுவன என்று இரு பகுதிகள்.இதில் ஒவ்வொரு கிருதியும் வெவ்வேறு அணுகு முறையில் இருக்கும்.ஒரு உதாரணம்.ஒரு பாடலில் "இன்னும் ஏன் என்னைக்காக்க வரவில்லை ஸ்ரீராமா?" என முறையிடும் போது,அழகாக சொல்வார் "நீ நிச்சயம் வந்திருப்பாய் ஸ்ரீராமா.ஆனால் உன் சாரதியான கருடன்தான் தாமதப்படுத்துகிறான் என எண்ணுகிறேன்" என்று.இதில் என்ன ஒரு அழகான management approach உள்ளது! நேரடியாக boss ஐ blame செய்யாமல் பழியை அவர் secretary மேல் போடுவது. (இது உண்மையில் வேலை பார்த்த இடத்தின் வாசனையே!)
அதே போல தமிழில் பாபநாசம் சிவன் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்.
"பிறவா வரம் தாரும்" என்பதில் "அப்படி பிறந்தால் மறவா வரம் தாரும்" எனும் உயரிய கருத்தினை இணைத்திருப்பார்.
இது boss இற்கு option அளிக்கும் நல்ல அணுகுமுறை.

கா என்ற சொல்லிற்கு காத்தல் என்ற பொருளும் உண்டு.
"முரு கா வா வா ..என்னை கா வா வா"என நயம்பட எழுதியிருப்பார்.

இப்படி உதாரணங்கள் பல உள்ளன.

RAGHAVENDRA
10th April 2013, 07:01 PM
வாசு சார் முடிந்தால் சுஜாதாவை கடலை போடும் காட்சி.

வாசு சார் சொல்லவே யில்லே ....

நாங்களும் காமெடி பண்ணுவோம்லே...

P_R
10th April 2013, 07:45 PM
முடிவாக ...
அவரவர் ரசனை அவரவர்களுக்கு என்று சொல்லுங்கள்..(விட்டு) விடுகிறேன்.
எல்லாம் ஒன்றுதான்! வித்தியாசம் இல்லை என்றால்..விடமாட்டேன்.

இந்த அளவு தாட்சண்யமாகக் கூட நீங்கள் முந்தைய இடுகையில் சொல்லவில்லையே :-)


இதற்கு மாறாக ஜில் ஜில்..மிக நல்லவள்.கலையை நேசிப்பவள்..மோகனாவின் திறமையை புரிந்து கொண்டவள்.ஆனால் இவள் தன்னையும் ஒரு நடனமாது என நினைத்துகொண்டிருப்பது ஒரு நகை முரண்

அடிக்கோடிடப்பட்ட வரியைப் பாருங்கள்: ஜில்ஜில் ஆடுவதை 'நடனம்' என்று ஒப்புக்கொள்வதிலேயே உங்களுக்குத் தயக்கம் இருக்கிறார்போல் தெரிகிறது.

அதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்தேன் (அதை எழுதப்போக ஜில்ஜில் பாத்திரத்தில் ஆழ்ந்து அவள் கல்யாணகுணங்களைப் பற்றி எழுதப்போய் குழப்பிவிட்டேன் - I didn't mean to conflate the two)

பறையிசை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வது வேறு ஆனால் உங்கள் இடுகையில் நீங்கள் பயன்படுத்திய சொற்களும் தொனியும் அதை எந்த வகையிலும் இசையாக ஏற்கமுடியாது என்ற அதீத நிராகிரிப்பு தான் தெரிகிறது. உங்கள் அபிமான எழுத்தாளரின் மிகைபாராட்டிற்கான மிகைஎதிர்வினை என்று அதை எடுத்துக்கொள்கிறேன்.

மற்றபடி பறையொலி என்பது இன்று, நீங்கள் சொல்வதுபோல, இறுதி ஊர்வலங்களோடே சம்மந்தப்பட்டாலும் அவற்றுக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.


ராமன் முடிசூட்டு விழாவிற்கு வரும் கோலாகலக் கூட்டத்தைப் பாடும் கம்பர் பாடல்களில் ஒரு வரி

மூக்கில் தாக்குறும் மூரி நந்தும், நேர்
தாக்கின் தாக்குறும் பறையும் தண்ணுமை

நுனியில் ஊதப்பட்டு சப்தம் எழுப்பபடும் சங்கு, நேரான குச்சியால் அடிக்கப்பட்டும் பறை

தண்ணுமை - சிறிய பறை

இவைகளும் (பிற) வாத்தியங்களும் சந்தோஷமான தருணத்தில் வாசிக்கப்பட்டன.

தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியிலும் 'ஏதமில் தண்ணுமை' என்று தொடங்கும் ஒரு பாடல் உண்டு. பகவானை எழுப்ப ஒலிக்கும் அழகான வாத்தியங்களின் அணிவகுப்பு அதில் தொடங்கும்

ஏதம் இல் தண்ணுமை - குற்றமற்ற சிறு பறை. பகவத்ப்ரீதி பெற்ற 'லூட்டி' போல இருக்கிறதே.


நிற்க, இதனால் ரமாமணி மோகனாவுக்கு இணையான கலைஞர் என்றெல்லாம் நான் சொல்லவில்
Discernment, sense of discriminaton - இவற்றை எல்லாம் நான் நிராகரிக்கவில்லை. கலைரசிகனுக்கு மிக முக்கியமானவை இவை.

எந்தக்கலைவடிவமும் அது பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் அழகுணர்ச்சியும் கலாசார vacuuமில் நிகழ்வது இல்லை. அவற்றுக்கு ஒரு பாரம்பரியமும், கால-சமூக வாழ்வியல் காரணங்களும் உண்டு. மேற்சொன்ன சூழல் காரணங்களும் அதனால் கைகூடும் ரசனைப்பயிற்சியும் வேண்டும்.

பெருந்திரளான மக்களைக் கவர்ந்த ஒரு வடிவத்தை 'அது கலையே அல்ல' என்று நிராகரிப்பதைத் தான் மிகை என்கிறேன்.
She is indeed a dancer in her own right.

P_R
10th April 2013, 07:52 PM
வாசு சார் ,இந்தக் காட்சியை முடிந்தால் வீடியோவில் தரவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதில் பொதிந்துள்ள நுட்பமான உணர்வை நடிகர் திலகத்தின் நடிப்பில் அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

இன்னும் பல படங்களிலிருந்து இத் தொடருக்கான விஷயங்கள் வர உள்ளன.

நன்றி. நான் பார்த்ததில்லை.

நீங்கள் இன்று போட்ட யூட்யூம் க்ளிப் என்ன படம்?

vasudevan31355
10th April 2013, 07:59 PM
வாசு சார் சொல்லவே யில்லே ....

நாங்களும் காமெடி பண்ணுவோம்லே...

யப்பா கோவாலு! ராகவேந்திரன் சார்கிட்டே இப்படி எக்கச்சக்கமா மாட்டி உட்டுட்டியே! ஒனக்கு என்ன கெடுதல்பா நான் பண்ணினேன்? கடலைன்னா மல்லாக்கொட்டையைத் தவிர வேறு எதுவுமே எனக்குத் தெரியாதுப்பா ராஜா. என்னப் போயி...

P_R
10th April 2013, 08:04 PM
"ஏய்..." சொன்னது - அது நாந்தேன் ஹி...ஹி... (இந்த முழுப் படத்தில் நடிகர் திலகத்தின் ரசிகனுக்கான பிரத்தியேக நடிப்பு இந்த ஒரு இடத்தில் தான் - எல்லோரும் காத்துக் கொண்டிருப்பார்களே!)


பத்து row தாண்டி முன்னாடி உட்கார்ந்திருந்த எனக்கும் ஸ்க்ரீனில் இருந்த மோகனாவுக்கும் கேட்டது :-)

vasudevan31355
10th April 2013, 08:11 PM
Interesting series on the US trip Vasudevan. Look forward to next posts.
This is when he was made honorary mayor of Niagara city for a day and then he got to meet and interact with Brando, Lemmon and others - right. Would be interesting to read that.

Thank U very much Prabhu sir.

RAGHAVENDRA
10th April 2013, 08:16 PM
நீங்கள் இன்று போட்ட யூட்யூம் க்ளிப் என்ன படம்?


தற்போது திரைப்படப் பட்டியல் திரியில் 40வது படமாக பதியப் பட்டிருக்கும் தங்கமலை ரகசியம் திரைப்படத்தில் இக்காட்சி இடம் பெறுகிறது. இப்படத்திலும் இவருடைய நடிப்பில் பல்வேறு பரிமாணங்களைக் காணலாம். முதலில் காட்டு வாசியாக மொழியறியாத நிலையில் ஒரு பரிமாணம், பின்னர் மனித மனத்தோடும் அறிவோடும் ஒரு நிலை, அதன் பின் சந்தர்ப்ப சூழ்நிலையில் பல்வேறு சிக்கல்களில் உழலும் நிலை - இப்படி வெவ்வேறு பரிமாணங்களில் ஒரே படத்தில் அவருடைய நடிப்பை நாம் அறியலாம். காட்டு வாசியாக காட்டு வாத்தியத்தை ஊதிக் கொண்டே அறிமுகம், உறுமல், முன்பின் தெரியாத மனித வாசனையை உணரும் போது என்ன ரியாக்ஷன் தருவது என்பது அறியாத உள்ளத்தின் நிலை, மனிதனாக நாட்டுக்குள் வாழும் போது மனிதர்களின் குணங்கள் நடவடிக்கைகளை கவனிக்கும் உன்னிப்பு, அவர்களோடு இருந்தாலும் அதிலும் ஒர் அந்நியத்தை உணரும் நிலையின் வெளிப்பாடு, அந்த தங்கமலை ரகசியத்தை அறிய துடிப்பது, தன் தாய் தந்தையை அறிய வேகம் காட்டுவது, என்ன நிகழப் போகிறது என்பது தெரிந்தும் அதனை பெரியதாக மனம் நினைக்காமல் தன் காரியத்திலேயே குறியாக இருந்து விட்டு பின்னர் மனைவி சிலையானதும் துடிப்பது ..

இப்படி பல்வேறு பரிமாணங்களில் பல்வேறு பள்ளிகளின் தாக்கத்தை இப்படத்தில் காணலாம். அத்தனையும் அந்தப் பாத்திரத்தின் தன்மைக்கு அந்நியமாய் இல்லாதிருப்பது தான் உலகத்தின் சிறந்த நடிகர் என அவரை அழைக்கும் உரிமையை நமக்குக் கொடுக்கிறது.

29 வயதில் 80 வயது கிழவராக நடிகர் திலகத்தை தங்கமலை ரகசியத்தில் காண்பதற்கு இதோ வாய்ப்பு ...

http://www.youtube.com/watch?v=vrfGR7gZWTY&feature=share&list=UUHZ9TIXjklcLpnIKC2q3h3A

RAGHAVENDRA
10th April 2013, 09:01 PM
அபூர்வ நிழற்படங்கள்

http://sphotos-b.ak.fbcdn.net/hphotos-ak-ash4/482783_612040972157659_1278411641_n.jpg

நன்றி முகநூல் நண்பர்

goldstar
11th April 2013, 05:25 AM
ரொம்ப நாளா ஒடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் சில..

விமானப் பிரயாணங்களில் கவனித்தது.. சென்னையில் இருந்து புறப்படும் நிறைய விமானப் போக்குவரத்துக்களில் கூட இந்திய பழைய மற்றும் கிளாசிக் திரைப்பாடல்கள் / திரைப்படங்கள் தொகுப்புக்களில் கூட சிவாஜி பாடல்கள் / படங்கள் இருப்பதில்லை. திலிப் உட்பட்ட ஏனைய பாலிவுட் நாயகர்களின் படங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. சிவாஜி நடித்த சிறந்த படங்கள் குறைந்தது பத்து எப்போதுமே விமானங்களில் எல்லா பிரயாண காலத்திலும் இருக்க வழிவகை செய்யணும். சிவாஜி மன்றத்தினர் இதற்கான முயற்சிகள் எடுக்கணும். இந்தியா மற்றும் உலக விமானப் போக்குவரத்துக்களை அணுகனும்.

இன்னொன்று.. Netflix போன்ற வீடியோ லைப்ரெரிகள். அங்கேயும் சிவாஜி என்ற தேடலுக்கு நிறைய வந்து கொட்டணும். IMDB போன்ற இணையத் தளங்களில் சிறந்த விமர்சனங்களை பதிவேற்றனும் .. விக்கியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அரிய பல தகவல்களை சேர்க்கணும்.

இதை நான் கமல் திரியில் பதிவு செய்யலாம் என இருந்தேன். ஆனால் சிவாஜியிடமிருந்தே ஆரம்பித்தால் மட்டுமே இப்பணி முழுமையானதாக இருக்கும்.

I have sent following feedback to Singapore Airlines and they responded my email by taking steps to have classical Tamil movies in the Tamil movie category. Hopefully in my next journey to Chennai will watch a NT movie

"I have been traveling with Singapore Airlines for last 11 years and mostly travel to Chennai and I am always watch Tamil movies and that's one of reason I prefer SA. But always have a feeling that there is no classical
Tamil movies listed in the Tamil movie category. Most importantly watching Sivaji Ganeshan movies will add definitely more happiness to my traveling. My request to add at lease one Tamil classic move in Tamil movie category and also old Tamil songs in the Tamil audio sections."

Cheers,
Sathish

RAGHAVENDRA
11th April 2013, 07:17 AM
http://2.bp.blogspot.com/-hPK-QR3Tnok/UGAZbfo4eAI/AAAAAAAACGM/rkXneXFkquA/s1600/malini_fonseka.jpg


“It was a delight working with him. Sridevi played my daughter in that film, and Sivaji Ganesan played my husband. We had great respect for each other.”

- Malini Fonseka in The Hindu

http://www.dailynews.lk/2012/05/09/z_p14-Kunkuma.jpg

Read more at http://www.thehindu.com/news/international/south-asia/sri-lankan-actors-reach-out-to-its-tamil-nadu-counterparts/article4602730.ece

joe
11th April 2013, 08:09 AM
Singapore Airlines and they responded my email by taking steps to have classical Tamil movies in the Tamil movie category.
No wonder they are world class

Gopal.s
11th April 2013, 08:18 AM
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,


நான் ஏன் எளிமையாக இருக்க வேண்டும் என்று சொன்னேன் என்றால், அது தான் எல்லோரையும் சென்று சேர வழி வகுக்கும். ஒரு Documentation Expert -ஐ வைத்து அதை செய்யலாம்.

தொடருங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி
இந்த H .R ஆளுங்க மட்டும் திருந்தவே மாட்டாங்க போல. சில நினைவுகள்------

1987 ஆம் ஆண்டு..... ஒரு வெள்ளிக்கிழமை......(அன்றுதான் H .R வாரந்திர meetings )
புதியதாய் வந்த C .E .O உலக துன்பத்துக்கெல்லாம் புத்தரை போல் ஒரு காரணம் கண்டிருந்தார். நாம் நினைப்பதை தொழிலாளர்களிடம் ,கொண்டு செல்ல இயலாலததே என்று கண்டு பிடித்தார். எல்லாருமே அசட்டு தனமாக மையமாக தலையாட்ட,ஆரம்பித்தது வினை.

எல்லா department இலும் jargons கொண்ட prominent sign boards வைப்பது என்று முடிவானது.
அதற்கு ஒரு task force headed by Executive -Labour relations (என்னுடைய உயிர் நண்பன்தான்)
எதோ நப்பாசையில் அவனிடம் சொன்னேன். எங்கள் department இலேயே தேர்ந்த கவிஞர்கள் உண்டு(house magazine உபயத்தில் ). நாங்களே மொழி பெயர்க்கிறோம் என்று . ஆனால் நண்பனின் task force குழுவோ எங்கள் மேல் நம்பிக்கையின்றி professional மொழி பெயர்ப்பாளர்களை கூட்டி வர முடிவு செய்தது.

அந்த நாளும் வந்தது. அந்த நபரும் வந்தார். எனக்கு எடுத்த எடுப்பிலேயே கொஞ்சம் சந்தேகம்.அசப்பில் நான் சிறுவயதில் நெய்வேலியில் பார்த்த சுவிசேஷ போதகர் சாயலில் இருந்தார்.

jargons ஆங்கிலத்தில் முடிவானது. மொழிபெயர்ப்பாளரின் மேல் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையில்,தமிழில் மொழி பெயர்க்க பட்டு , யாரும் சரி பார்க்காமலே sign boards வரை சென்றது. கொடுத்த fees தெலுங்கு பட dubbing expert புரட்சி தாசன் மூன்று படங்களுக்கு வாங்குவது.

Spirited teamwork leads to fruit of progress என்பது ஆங்கிலம்.

வைக்க பட்ட sign board

"பரிசுத்த ஆவி நிறைந்த ஒற்றுமை குழுக்களுக்கே பழங்கள் வழங்க படும்."

venkkiram
11th April 2013, 08:34 AM
தி.மோகனாம்பாள் படைப்பின் கதை, கதாபாத்திரங்கள், எது சிறந்த கலை என்ற தளத்தில் இங்கே உரையாடல் எழும்பியதால் "தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை" என்ற பிபிசி தமிழில் சில வருடங்களுக்கு முன்பு பதிவாகிய பெட்டகத் தொடரை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். மொத்தம் பதினாரு பெட்டகங்கள். ஒரு திரைப்படம் ரசிக்க எவ்வளவு நேரம் செலவழிப்பீர்களோ அப்படியொரு நேரத்தை ஒதுக்கி ஒரே மூச்சில் கேட்டுப் பாருங்கள். கர்நாடக இசை, தமிழிசை என எந்த பாரபட்சமுமின்றி இதைக் கேட்டாலும், கேட்டு முடிக்கும்போது தமிழிசை வளரவிடாமல் குறுகிய நோக்குடன் திட்டமிட்டு எப்படி சில கூட்டங்கள் கடந்த நூறாண்டு காலமாக தொடர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள் எனப் புலப்படும். தொகுத்த மதிப்பிற்குரிய மூத்தப் பத்திரிக்கையாளர் த.நா.கோபாலன் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2008/11/081110_tamilisai.shtml

Gopal.s
11th April 2013, 08:43 AM
மிக்க நன்றி வெங்கி ராம் .

IliFiSRurdy
11th April 2013, 11:19 AM
இந்த அளவு தாட்சண்யமாகக் கூட நீங்கள் முந்தைய இடுகையில் சொல்லவில்லையே :-)

பெருந்திரளான மக்களைக் கவர்ந்த ஒரு வடிவத்தை 'அது கலையே அல்ல' என்று நிராகரிப்பதைத் தான் மிகை என்கிறேன்.
She is indeed a dancer in her own right.

ஆழ்ந்து, அனுபவித்து, ஆராய்ந்து போட்ட பதிலுக்கு நன்றி.மிக ரசித்தேன்.

தில்லானா மோகனம்பாள் என்ற சாம்ராஜ்ஜியத்தின் எல்லைக்கு வந்து விட்டோம்.
இனி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் இன்னொரு நாட்டில் கொண்டுபோய்விடும்.
அது தேவையில்லை.நம் நோக்கமும் இல்லை.

மீண்டும் தலைநகர் திரும்பி தலைவர் புகழ் பாடுவோம்.

மறக்காமல், "அண்ணா பல்கலை கழக முன்னாள் மாணவர் சங்க"த்தின் உணவகத்தில்,"தேனும் தினைமாவும்" சேர்க்க சொல்லி விடுகிறேன். :smile:

JamesFague
11th April 2013, 01:07 PM
Watch Anbalippu in Murasu TV on 13.04.13 at 7.30 pm
NT's family entertainer.

mr_karthik
11th April 2013, 02:05 PM
நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

நீண்ட இடைவெளிக்குப்பின் வந்ததில் திரியில் நிறைய மாற்றங்கள் காணப்படுகின்றன. பம்மலார் அவர்களின் பதிவுகளையே காண முடியவில்லை. கிளாஸிக் பகுதியில் அவரால் துவங்கப்பட்டு வளமாக வளர்ந்து வந்த திரி பூட்டப்பட்டுள்ளது. முரளி சார் அவர்களின் பதிவுகளும் ரொம்பவே அபூர்வமாக தென்படுகிறது. என்ன காரணம் என்பது தெரியவில்லை.

ஏதோ நடந்திருக்கிறது.

இருப்பினும் இந்த திரியை உயிர்ப்புடன் நடத்திக்கொண்டிருக்கும் ராகவேந்தர் சார், வாசுதேவன் சார், கோபால் சார், கண்பட் சார், ஆதிராம் சார், சந்திரசேகர் சார், செந்தில் சார், பார்த்தசாரதி சார் ஆகியோருக்கு மிக்க நன்றி.

விடுபட்டவர்களின் பதிவுகளை மீண்டும் காண ஆவல்.

mr_karthik
11th April 2013, 02:07 PM
என் விருப்பம்

ஒருமுறை கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துகொண்டு இருந்தபோது முதல் முறையாக கேட்டபோதே ஒரு பாடல் என் மனத்தைக் கவர்ந்தது. அது 1973-ம் ஆண்டு மத்தியில். அப்போது டிவி.கிடையாது. கேசட் ரிககர்டர்களும் அவ்வளவாக பிரபலமாகாத நேரம். ஊரில் ஸ்பீக்கர் செட் கடை நடத்தும் இருவர் சென்னையில் இருந்து புதிய ரிக்கார்ட் பிளேயரும் அப்போது வெளியாகியிருந்த புதிய இசைத்தட்டுக்களும் வாங்கிக்கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் பயணிகள் உறக்கத்தில் இருந்த நேரத்தில், இரண்டு கம்பர்ட்மெண்ட்களுக்கு மத்தியில் இருக்கும் பாதையில் அமர்ந்து அவர்கள் வாங்கி வந்திருந்த இசைத்தட்டுக்களை பிளேயரில் பாடவிட்டுக் கொண்டிருந்தனர். பாதைக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த நான் அவற்றை சுவாரஸ்யமில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அப்போது "மேள தாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண்பார்க்க வந்தேனடி" என்ற ஒரு புதிய பாடலை ஒலிபரப்பியபோது, முதல்முறையாக கேட்ட மாத்திரத்திலேயே மனதில் 'சக்'கென்று ஒட்டிக்கொண்டது. இத்தனைக்கும் அந்தப்பாடல் எந்தப்படம் என்பது கூடத் தெரியாது. கேட்டதும் கிறங்கிப்போன நான் பாடல் முடியும் வரை மெய்மறந்து கேட்டு விட்டு, மெல்ல எழுந்து முன் அறிமுகமில்லாத அந்த நண்பர்களிடம் சென்று, அந்தப்பாடல் எந்தப்படம் என்று கேட்டபோது அவர்கள் அந்த இசைத்தட்டையே என் கையில் எடுத்து தந்தனர். படத்தின் பெயர் சிவகாமியின் செல்வன் என்று படித்ததும் மனது ஜிவ்வென்று பறந்தது. ஏனென்றால் எந்தப்படம் என்று தெரியாதபோதே மனத்தைக் கவர்ந்த அந்தப்பாடல் இப்போது தலைவர் படத்தில் என்றால் ஏன் மனம் குதியாட்டம் போடாது?.

அந்த நண்பர்களிடம் மீண்டும் அந்தப்பாடலை பிளே பண்ணும்படி கேட்டேன். அவர்கள் எனக்காக மீண்டும் இரண்டு முறை ஓடவிட்டனர். மனம் குளிரக் கேட்டுவிட்டு அந்த இருவருக்கும் நன்றி சொல்லி விட்டு வந்து என் இருக்கையில் அமர்ந்தேன்.

சென்னை திரும்பியதும், 'ஜுக் பாக்ஸ்' இருந்த ஹோட்டலில் சென்று பட்டியலில் தேடியபோது அந்தப்பாடல் இருந்தது. ஒருமுறை பிளே பண்ண 25 பைசா கட்டணம். அடிக்கடி அந்த ஹோட்டலுக்குப் போய் அந்தப்பாடலையே திரும்பத் திரும்ப கேட்டு அதன்மீது பித்தனானேன்.

படம் வெளியானபோது தியேட்டரில் 'மேளதாளம்' பாடல் வந்தபோது மெய்மறந்து ரசித்தேன். அந்தப்படத்தின் எல்லாப்பாடல்களும் அருமை என்றாலும் இந்தப்பாடலுக்கு என் மனதில் தனியிடம் எப்போதும் உண்டு. இன்றைக்கும் இந்தப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் கம்பன் எக்ஸ்பிரஸில் எனக்கு இந்தப்பாடலை அறிமுகப்படுத்திய அந்த நண்பர்கள் நினைவுக்கு வருவார்கள். ஏனென்றால் இது என் விருப்பம்.

Gopal.s
11th April 2013, 04:02 PM
ஆஹா!! இன்று எங்களது அதிர்ஷ்ட தினம் .

திரியின் அங்கத்தினர்கள் எனக்கு தனி தனியாக நன்றி தெரிவிக்க வேண்டும்

எனது அயராத முயற்சியினால் காணாமல் போனவர் வந்தே விட்டார்.

வருகவே, வருகவே.

நமக்கு வேலை வைக்காமல் , அவரே மேளதாளத்துடன் வந்து விட்டார்.

SoftSword
11th April 2013, 04:17 PM
Spirited teamwork leads to fruit of progress என்பது ஆங்கிலம்.

வைக்க பட்ட sign board

"பரிசுத்த ஆவி நிறைந்த ஒற்றுமை குழுக்களுக்கே பழங்கள் வழங்க படும்."

:rotfl3:

mr_karthik
11th April 2013, 04:50 PM
தில்லானா மோகனாம்பாள் பற்றிய ஆய்வு முற்றிலும் வித்தியாசமான முறையில் அமைந்திருந்தது. இதற்கு முந்திய ஆய்வுகளில் இருந்து சற்று வேறுபட்டு, புதிய கோணங்களில் அலசப்பட்டிருந்தது. ஆய்வுகளை சிறப்பாகச் செய்திருந்த கோபால் சார், ராகவேந்தர் சார், கண்பட் சார், பிரபுராம் சார் மற்றும் அனைவருக்கும் நன்றி.

mr_karthik
11th April 2013, 04:54 PM
கவரிமான் (06.04.1979 - 06.04.2013)
முப்பத்தைந்தாவது ஆண்டு துவக்கம்.

நடிகர்திலகத்துக்கு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம். அதுவரை தன்னை வைத்து தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை விட்டு, அப்போது கொடிநாட்டத்துவங்கியிருந்த புதிய தலைமுறையினருடன் நடிகர்திலகம் இணைந்த முதல் படம். இசைஞானி இளையராஜாவுடன் மூன்றாவது படம். எஸ்.பி.முத்துராமன் இயக்கம், பஞ்சுவின் கதை வசனம், பாபுவின் ஒளிப்பதிவு என முற்றிலும் புதிய கூட்டணி அமைந்த படம். ஆச்சாரமாகவும் கௌரவமாகவும் வாழும் ஒரு மேல்தட்டு வர்க்க குடும்பத்தில் நாகரிக மோகம் கொண்ட ஒரு மனைவியால் / மகளால் ஏற்படும் சீரழிவை மிக அற்புதமாக சொன்ன படம்.

1979 ஏப்ரல் துவக்கம், ஜனவரியில் வெளியாகியிருந்த திரிசூலம் தமிழகமெங்கும் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருந்த மகத்தான காலகட்டத்தில், திரிசூலம் அனைத்து அரங்குகளிலும் 71-வது நாளாக வெற்றி நடை... இல்லையில்லை.. வெற்றி ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தபோது ஏப்ரல் 6 அன்று வெளியானது கவரிமான் என்ற அற்புத திரைக்காவியம்.

சென்னையில் மிட்லண்ட், பிராட்வே, உமா, லிபர்ட்டி திரையரங்குகளில் வெளியானது. ஏப்ரல் 6 காலை சாந்தியில் அகில இந்திய சிவாஜி மன்றத்துக்காக சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. அதற்காக இரண்டு நாட்கள் முன்பாகவே எங்கள் மன்ற தலைவர் பார்த்தசாரதி மூலம் டிக்கட்டுகளை வாங்கி விட்டோம். அதற்கு முதல் நாளிரவு 12 மணி வரை மிட்லண்ட் தியேட்டரில் அலங்காரங்கள் நடப்பதைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தோம. எங்கள் மன்றத்தின் சார்பில் வழக்கம்போல தலைவரின் கட் அவுட்டுக்கு ராட்சத காகித மாலை ஏற்பாடு செய்திருந்தோம். வடசென்னை மிண்ட் ஏரியாவில் காகித மாலைகள் செய்யும் ஒரு குழுவினரிடம் ஆர்டர் கொடுத்திருந்ததை இரவு 9 மணிக்கு நானும் கோவை சேது, மந்தவெளி ஸ்ரீதர் முவரும் ஆட்டோவில் சென்று வாங்கி வந்ததும் மற்ற நண்பர்கள் மேலே ஏறி அதனைபபொருத்தும் வேலையில் ஈடுபட்டனர். மற்ற மன்றங்களின் அலங்காரங்களும் விமரிசையாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன. தியேட்டர் ஊழியர்களும் ஒத்துழைத்தனர்.

மறுநாள் காலை 8 மணிக்கே சாந்தியில் கூடி விட்டோம். அங்கங்கே சிறுசிறு வட்டங்களாக ரசிகர்கள் கூடி நின்று தமிழகமெங்கும் திரிசூலத்தின் அபார ஓட்டம் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டும், வெளியூர்களில் இருந்து ரசிகர்கள் எழுதிய கடிதங்கள், அனுப்பிய செய்தித்தாள்கள் ஆகியவற்றை ரசிகர்கள் மத்தியில் பரவ விட்டுக்கொண்டு இருந்தனர். சென்னை மாரீஸ் ஹோட்டலில் பணி செய்த நண்பர் சந்திரசேகர், திருச்சி தினத்தந்தி பதிப்புகளை வரவழைத்து அங்கு சுழற்சி முறையில் வலம் வரச் செய்து கொண்டிருந்தார். திருச்சி, தஞ்சை, கரூர், கும்பகோணம், மாயவரம், பகுதிகளில் திரிசூலம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது மனதுக்கு உற்சாகமாக இருந்தது.

சாந்தியில் ஒன்பது மணிக்கு ஸ்பெஷல் ஷோ துவங்கியது. ஆரம்பமே மிக வித்தியாசமான படமாக இருந்தது. யேசுதாஸின் கர்னாடக பாடலுக்கு நடிகர்திலகத்தின் வாயசைப்பு மிகப் பிரமாதமாக இருந்தது. பாத்திரங்களின் அறிமுகம் சற்று குழப்பமாக இருந்தபோதிலும் அந்த டைனிங் டேபிள் காட்சி சந்தேகங்களை நிவர்த்தி செய்தது. பூப்போலே பாடலுக்கு தலைவர் ஸ்டைலுக்கு நல்ல கைதட்டல் கிடைத்தது. ரசிகர்மன்ற ஷோவாச்சே. அதனால் காட்சிக்கு காட்சி கைதட்டல். பூப்போலே பாடலுக்கு பிரமீளாவுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணை டூப் போட்டு எடுத்ததால் சற்று உறுத்தியது. (நடிகர்திலகத்தின் படத்துக்கு கால்ஷீட் தர முடியாத அளவுக்கு பிரமீளா பிஸியா என்ன)

ரவிச்சந்திரன் வரும் காட்சிகள் சைலன்ட்டாக ஓடின. ரசிகர்கள் ரொம்பப்பேர் அந்த ரோலில் ரவிச்சந்திரனை விரும்பவில்லை. டெல்லி போன தலைவர் பயணம் ரத்தாகி வீட்டுக்கு வர, பஸ்ஸர் ஒலிக்கும் காட்சியிலேயே கைதட்டல் துவங்கி விட்டது. வேலைக்காரியின் சமாளிப்பை ஏற்று வேறு பக்கம் செல்ல இருந்தவர், மாடியில் தன அறையில் சிரிப்பு சத்தம் கேட்டு நின்ற இடத்திலிருந்தே தலையைத் திருப்பிப் பார்க்கும் இடத்தில் மீண்டும் பலத்த கைதட்டல். அப்போது ஆரம்பித்த ஆரவாரம், அவர் தன மனைவியை அந்நியனுடன் காணும் கோலம் கண்டு துடித்து, செய்வதறியாது தவித்து இறுதியில் பாட்டிலால் மனைவியின் தலையில் அடிக்கும் வரை ஆரவாரம் அடங்கவில்லை. படத்தின் ஹைலைட்டே அந்த இடம்தானே.
(ஒரே நேரத்தில் பல்வேறு உணர்ச்சிகளைக் கொட்டி நடித்த இக்காட்சி பற்றி இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தன ஒவ்வொரு பேட்டியிலும் சொல்லி வியப்படைவார்)

படம்பார்த்த அந்த தருணத்தில் ரசிகர்கள் அனைவரும் படம் நன்றாயிருப்பதாகவே சொன்னார்கள். ரசிகர் மன்ற சிறப்புக் காட்சி அல்லாது அன்றைய மாலைக் காட்சிக்கும் மிட்லண்ட் அரங்கில் ரிசர்வ் பண்ணியிருந்தோம். வழக்கம்போல நான்கு மணிக்கே தியேட்டரில் கூடி விட்டோம். எங்களுக்கு முன்பே அங்கே பெருங்கூட்டம் ரோட்டை அடைத்து நின்றிருந்தது. ஐந்து மணி சுமாருக்கு இயக்குனர் எஸ்.பி.முததுராமன், ஒளிப்பதிவாளர் பாபு ஆகியோர் வந்து, படம் துவங்கும்வரை தியேட்டர் வாசலில் நின்று ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். நடிகர்திலகத்துடன் பணியாற்றிய பெருமை அவர்கள் பேச்சில் எதிரொலித்தது. தான் ஒளிப்பதிவு இயக்குனர் ஆனபின்னர் நடிகர்திலகத்துடன் முதல் படம் இது எனக்குறிப்பிட்ட பாபு, தில்லானா மோகனாம்பாளில் கே.எஸ்.பிரசாத்தின் உதவியாளராக நடிகர்திலகத்துடன் பணிபுரிந்ததை நினைவு கூர்ந்தார். தன்னுடைய பிஸ்கட் கலர் ‘பியட்’ காரைத் தானே ஓட்டிவந்த விஜயகுமார், பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு வந்து இயக்குனரோடும் ரசிகர்களோடும் பேசிக்கொண்டு நின்றார்.

தியேட்டர் வாயிலில் ரோட்டை அடைத்து மக்கள் கூட்டம் நின்றதால் சற்றுதள்ளி சத்யமூர்த்தி பவன் அருகே அம்பாஸிடர் காரைவிட்டு இறங்கி, அங்கிருந்து நடந்து வந்த பிரமீளா எல்லோருக்கும் கும்பிடு போட்டவண்ணம் வந்தார். கிளிப்பச்சை நிறப்பட்டுப்புடவை அணிந்து அழகாக இருந்தார். கூட்டம் நெருக்கித்தள்ள, நமது ரசிகர்கள் அவரைச்சூழ்ந்து பாதுகாப்பாக அழைத்து வந்தனர். இயக்குனருடன் இரண்டொரு வார்த்தைகள் பேசிய அவர், கூட்டத்திலிருந்து தப்பிக்க அருகிலிருந்த டிக்கட் கவுண்ட்டர் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். (தியேட்டர் உள்ளே மேட்னி ஷோ இன்னும் முடியவில்லை என்பதால் உள்ளே போக முடியவில்லை). சற்று நேரத்தில் (மாஸ்ட்டர்) சேகரும் வந்தார். ரோஸ்கலர் புல்ஷர்ட்டும் கருப்பு பேண்ட்டும் அணிந்து மோட்டார் பைக்கில் வந்து இறங்கியவரை ரசிகர்கள் சூழ்ந்து, அவரது சிறப்பான நடிப்புக்கு பாராட்டு தெரிவித்தனர். (படத்தில் ஸ்ரீதேவியின் ஜோடி, மற்றும் இரண்டாவது வில்லன்). முதல் எபிசோட்டில் மனைவியே ஒரு அயோக்கியனுடன் சேர்ந்து கணவனுக்கு துரோகம் செய்யும் சூழல் என்பதால் அதில் மனைவி கொல்லப்படுகிறாள். அயோக்கியன் தப்பிவிடுகிறான். ஆனால் இரண்டாவதில் மகளின் சம்மதமின்றி கற்பழிக்க முயற்சிக்கும் சூழலில் அயோக்கிய காதலன் கொல்லப்படுகிறான். சேகருக்கு இது வித்தியாசமான ரோல். நன்றாக செய்திருந்தார். அவரும் தான் சிறுவனாக இருந்தபோது நடிகர்திலகத்தின் பல படங்களில் நடித்திருப்பதை நினைவு கூர்ந்தார். நடிகர்திலகத்தைக் குறிப்பிடும்போதெல்லாம் 'சிவாஜி அங்கிள்', சிவாஜி அங்கிள்' என்று குறிப்பிட்டார். (பாவம், மிகச்சிறிய வயதில் விபத்தில் பலியாகிவிட்டார்).

மேட்னி ஷோ முடிந்து கூட்டம் வெளியே வந்து, ஏற்கெனவே திரண்டிருந்த கூட்டத்துடன் சேர, குறுகலான ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு டிராபிக் ஜாம் ஆனது. மாலைக்காட்சியின்போது காலையில் ரசித்ததை விட ரசிகர்களும் பொதுமக்களும் நன்றாக ரசித்தனர். அதிலும் "பூப்போலே உன் புன்னகையில்" பாடல் இரண்டாம் முறையாக ஹோட்டலில் பாடும்போது நடிகர்திலகத்தின் ஸ்டைலை ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்டி ரசித்தனர். படத்தை உருவாக்கியவர்களின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது, ஆனால் நாட்கள் நகர நகர புன்னகை நீடிக்கவில்லை.

சமீபத்தில் கூட தொலைகாட்சியில் கவரிமான் பார்த்தபோது, ஏன் இப்படம் சரியாகபோகவில்லை என்பது புரியாத புதிராகவே இருந்தது.

Gopal.s
11th April 2013, 05:13 PM
கவரிமான் எதிர்பார்த்த வெற்றி பெறாதது பெரும் புதிர். ரொம்ப நாள் கழித்து எங்களுக்கு கார்த்திக் சாரின் full meals .:-D

adiram
11th April 2013, 05:51 PM
vandhuttaarayyaa......... vandhuttaarayyaa.........

Subramaniam Ramajayam
11th April 2013, 09:42 PM
kavarimaan SIVAJI Idhu mathiri roles nadithathu makkaluku total aga pidikkavillai.
ladies disliked this role played by NT. my observations from the first three days people's reports.

RAGHAVENDRA
11th April 2013, 10:54 PM
டியர் கார்த்திக் சார்,
தங்களுடைய வருகை நம் அனைவருக்கும் யுகாதி மற்றும் தமிழ் வருடப் பிறப்பு சிறப்பு விருந்தாக அமைந்துள்ளது. தங்களுக்கு நம் அனைவர் சார்பிலும் உளமார்ந்த வரவேற்பினை கூற விரும்புகிறேன். மேள தாளத்துடன் கவரிமானை வரவேற்று சிக்கலாரின் நாதஸ்வரத்தில் நலந்தானா எனக் கேட்க வைத்து விட்டீர்கள்.

தொடர்ந்து தங்கள் பங்களிப்பை மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

RAGHAVENDRA
11th April 2013, 10:57 PM
கார்த்திக் சார் சொன்னது போல கவரிமான் முதல் நாள் மிட்லண்ட் திரையரங்க நிகழ்வுகள் நெஞ்சில் நிலைத்து விட்டவை. இன்று அந்தப் பக்கம் போனால் கண்களில் ரத்தக் கண்ணீர் வடிகிறது. பல காவியங்கள் வெளியான அந்த திரையரங்கம் இன்று ஒரு கிடங்கு அளவிற்கு மாறி விட்டது. பிராப்தம், விளையாட்டுப் பிள்ளை, போன்று மிட்லண்டில் தலைவர் படம் பார்த்து விட்டு வாய்ப்புக் கிடைக்கும் போது பக்கத்திலேயே சத்யமூர்த்தி பவனில் பெருந்தலைவரை தரிசித்து வந்த நாட்கள், மறக்க முடியாத நாட்கள் ... குறிப்பாக அந்தமான் காதலி திரைப்படம் ஓடும் அத்தனை நாட்களும் அங்கேயே தவம் கிடந்ததெல்லாம் இன்று நினைத்தால் நெஞ்செல்லாம் நெகிழும் உணர்வுகள்...

RAGHAVENDRA
12th April 2013, 07:19 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/01424/12TVF_T_M_SOUNDARR_1424429e.jpg

இவ்வாண்டின் ஸ்வராலயா விருது பெற உள்ள திரு டி.எம்.எஸ். அவர்களுக்கு நமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள டி.எம்.எஸ். அவர்களைப் பற்றிய கட்டுரைக்கான இணைப்பு

http://www.thehindu.com/features/friday-review/music/timeless-melodies/article4605769.ece

RAGHAVENDRA
12th April 2013, 07:21 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/01421/03mp_Mohan_2_sivaj_1421285g.jpg

மறக்க முடியாத கட்டபொம்மன் வசனம் உள்பட பல படங்களில் நடிகர் திலகத்திற்கு வசனம் எழுதிய திரு சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் நூற்றாண்டினைக் கொண்டாடும் வகையில் ஹிந்து நாளிதழில் இடம் பெறும் கட்டுரைக்கான இணைப்பு. வழங்கியவர் நமது ஹப்பரும் நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் உப தலைவருமான திரு மோகன் ராம் அவர்கள்.

ஹிந்து நாளிதழ்க் கட்டுரைக்கான இணைப்பு

http://www.thehindu.com/features/cinema/the-power-of-the-pen/article4594630.ece?homepage=true

JamesFague
12th April 2013, 10:29 AM
Welcome Mr Karthik Sir, after a long gap.
Hope Mr Pammalar also will join soon.

IliFiSRurdy
12th April 2013, 10:54 AM
தில்லானா மோகனாம்பாள் பற்றிய ஆய்வு முற்றிலும் வித்தியாசமான முறையில் அமைந்திருந்தது. இதற்கு முந்திய ஆய்வுகளில் இருந்து சற்று வேறுபட்டு, புதிய கோணங்களில் அலசப்பட்டிருந்தது. ஆய்வுகளை சிறப்பாகச் செய்திருந்த கோபால் சார், ராகவேந்தர் சார், கண்பட் சார், பிரபுராம் சார் மற்றும் அனைவருக்கும் நன்றி.

நண்பர் கார்த்திக் அவர்களுக்கு வணக்கம்,நன்றி,மற்றும் நல்வரவு.

உங்கள் "கவரிமான்" பற்றிய பதிவு,நீங்கள் எந்த அளவிற்கு தலைவர் ரசிகர் என்பதையும்
சுமார் நாற்பது ஆண்டுகள் முந்தைய நிகழ்வை இப்படி தெள்ளதெளிவாக படைத்தது
உங்கள் கூரிய ஞாபக சக்தியையும் எங்களுக்கு புரிய வைக்கின்றன.
ஏதோ நேற்று நடந்த ஒரு நிகழ்வை விவரிப்பது போல இருக்கிறது.

அதே போல இவ்வளவு சிறந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததிற்கு இதன் anti theme தான் காரணமாக இருக்க முடியும்.பொதுவாக பெண்கள் ஒழுக்கமிழப்பதாக சித்தரிக்கப்படும் திரைகதைகளை ரசிகர்கள் (அதுவும் பெண் ரசிகர்கள் ) விரும்புவதில்லை.

IliFiSRurdy
12th April 2013, 11:00 AM
கார்த்திக் சார் சொன்னது போல கவரிமான் முதல் நாள் மிட்லண்ட் திரையரங்க நிகழ்வுகள் நெஞ்சில் நிலைத்து விட்டவை. இன்று அந்தப் பக்கம் போனால் கண்களில் ரத்தக் கண்ணீர் வடிகிறது. பல காவியங்கள் வெளியான அந்த திரையரங்கம் இன்று ஒரு கிடங்கு அளவிற்கு மாறி விட்டது...... ..

மிக நன்றாக சொன்னீர்கள் அண்ணா!

ஒரு காலத்தில் சென்னைக்கே சிறப்பு சேர்த்த Safire தியேட்டர் இப்போ இருக்கும் நிலை midland ஐ விட மோசம்.
நல்ல வேளை! சாந்தியாவது சாந்தி அளிக்கிறது!

Subramaniam Ramajayam
12th April 2013, 11:04 AM
கார்த்திக் சார் சொன்னது போல கவரிமான் முதல் நாள் மிட்லண்ட் திரையரங்க நிகழ்வுகள் நெஞ்சில் நிலைத்து விட்டவை. இன்று அந்தப் பக்கம் போனால் கண்களில் ரத்தக் கண்ணீர் வடிகிறது. பல காவியங்கள் வெளியான அந்த திரையரங்கம் இன்று ஒரு கிடங்கு அளவிற்கு மாறி விட்டது. பிராப்தம், விளையாட்டுப் பிள்ளை, போன்று மிட்லண்டில் தலைவர் படம் பார்த்து விட்டு வாய்ப்புக் கிடைக்கும் போது பக்கத்திலேயே சத்யமூர்த்தி பவனில் பெருந்தலைவரை தரிசித்து வந்த நாட்கள், மறக்க முடியாத நாட்கள் ... குறிப்பாக அந்தமான் காதலி திரைப்படம் ஓடும் அத்தனை நாட்களும் அங்கேயே தவம் கிடந்ததெல்லாம் இன்று நினைத்தால் நெஞ்செல்லாம் நெகிழும் உணர்வுகள்...

You can include CROWN SRIKRISHNA mint area dominated theatres plus BHUVANESWARI pursawalkam all NT films dominated theatres now demolished and have a deserted look now. Especially the days spent around crown theatre when NT films released and the interest shown by management tode days right from 1961 pasamalar days something marvelous and most memorable.

KCSHEKAR
12th April 2013, 11:27 AM
தில்லானா மோகனாம்பாள் பற்றிய ஆய்வு முற்றிலும் வித்தியாசமான முறையில் அமைந்திருந்தது. இதற்கு முந்திய ஆய்வுகளில் இருந்து சற்று வேறுபட்டு, புதிய கோணங்களில் அலசப்பட்டிருந்தது. ஆய்வுகளை சிறப்பாகச் செய்திருந்த கோபால் சார், ராகவேந்தர் சார், கண்பட் சார், பிரபுராம் சார் மற்றும் அனைவருக்கும் நன்றி.

என்னுடைய favourite திரைப்படமான தில்லானா மோகனாம்பாள் பற்றிய ஆய்வுகள் சிறப்பு.

திரு.கார்த்திக் அவர்களே,

நீண்ட இடைவெளிக்குப் பின் கவரிமான் - பற்றிய சிறப்பான அனுபவப் பதிவோடு துவக்கியிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

Gopal.s
12th April 2013, 02:33 PM
Cut&Paste from Filmography Thread.
Post By Sowrirajan sree.
Dear Friends,
Filmography thread is good and great going !

The other thread of our NT is not up to the mark honestly...There is no interesting posts or old paper cuttings where NT participation is seen etc.,

Oruvarai oruvar aahaa...oohoo.....ungalai maadhiri varuma....avarai maadhiri varuma..ivarai maadhiri unda...endra reedhiyil ulladhu....

Nadigar Thilagam pangukonda nigazchigalin aavanamoe...sambavangaloe...ondrumae illai.....Ennamo....Yedho endru oru silarukaagavae indha thiri ulladhu pol ulladhu....

sorry if am brutally frank

Quick reply to this message Reply Reply With Quote Reply With Quote Multi-Quote This Message
Today, 12:17 AM #713
RAGHAVENDRA
RAGHAVENDRA is offline
Senior Member Veteran Hubber RAGHAVENDRA's Avatar

Join Date
Jan 2008
Posts
3,687

Dear Sowrirajan Sree,
Thank you immensely for your kind words of appreciation of filmography thread. Hope to keep this alive with the kind co-operation of Sivaji Fans including you.
Raghavendran


Dear All,
We thought that all the differences were sorted out and the thread is moving in the healthy direction. Infact all the senior hubbers are participating in all discussions. Suddenly one spurious entry came and as we suspected,he is showing his true colour to creat politics. Mr.Ragavendar warned already that every one should stick to the point as it is going to serve as future encyclopedia. But unwittingly,he encouraged this post ,and I dont know why? He calls it kind words. Can I use some kind words now?
Unless ,this kind of clandestine attacks are stopped, it is difficult to have any healthy discussions or get some positive contributions.(It is a puzzle that this creep is not even voicing it here!!!!)

Gopal.s
12th April 2013, 04:52 PM
திரும்ப திரும்ப ஒரே குற்றச்சாட்டு. ஒரு சிலருக்கே இந்த திரியா என்று? யார் சொன்னது எல்லோரும் கலந்து கொள்ள கூடாது என்று? எல்லாவகை பதிவுகளுமே அங்கீகாரத்தை பெற்று கொண்டுதான் உள்ளது.இத்தனைக்கும் ஆஹா ஓஹோவேல்லாம் நின்று பல நாளாகிறது இப்போது ஒருவர் பதிவை வெட்டியோ ஒட்டியோ முன்னெடுத்து செல்லும் ஆரோக்யமான நிகழ்வுகள் தான் நடக்கின்றது. இது பொறுக்காத யாரோ ஒருவர் சௌரி ராஜன் போன்ற ஈனத்தனமான கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள் . ஏன் இந்த மாதிரி விஷம பதிவுகள் வெவ்வேறு பெயர்களில்? முன்பு முத்து ராமன் என்ற பெயரில் ஒருவர்.இப்போது சௌரிராஜன். உருப்படியாக உழைப்பவர்களுக்குதான் கெட்ட பெயர். மக்கு தனமாக உளறி கொட்டும் இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் ரசிகர்திலகம் என்ற விவேகமான அங்கீகாரம் வேறு. கருமம் தலையிலடித்து கொள்ள தோன்றுகிறது.

RAGHAVENDRA
12th April 2013, 05:32 PM
Dear Sowrirajan Sree,
Thank you immensely for your kind words of appreciation of filmography thread. Hope to keep this alive with the kind co-operation of Sivaji Fans including you.
Raghavendran


Dear Gopal,
Please read my reply correctly acknowledging the appreciation for the filmography thread. And also the next sentence is self-explanatory. I hope you understand it in the correct pespective.




Dear All,
Mr.Ragavendar warned already that every one should stick to the point as it is going to serve as future encyclopedia. But unwittingly,he encouraged this post ,and I dont know why? He calls it kind words. Can I use some kind words now?)


..... ??

Gopal.s
12th April 2013, 09:24 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-12

மத்திய அரசு தனது தென்னிந்திய படங்களை பற்றிய மாற்றாந்தாய் பார்வையை மாற்றி கொண்டு, அன்றைய பாராமுக மாநில அரசையும் மீறி, உலக பட தர கோட்பாடுகளை தளர்த்தி,அத்தனை அறிவுஜீவிகளையும் நடிப்பு என்ற ஒரே அம்சத்தால் மட்டுமே அசர வைத்து, oscar போட்டிக்கு தேர்ந்தெடுக்க பட்ட முதல் தென்னிந்திய திரை படம் தெய்வ மகன்.(1969).

பலர் ரசித்த காட்சிகளில் என்றுமே முன்னணியில் நிற்கும் மூன்று சிவாஜி தோன்றும் காட்சியை ரசித்த கோடி கணக்கானோருக்கு,தாங்கள் ரசித்தது மூன்று வெவ்வேறு உலக நடிப்பு கல்லூரி பாணியில் அந்த உலத்திலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நடிகன் நடித்த ஒப்பில்லாத காட்சிதான் ,என்பது புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. இப்போது நாம் அலச போவது அந்த படத்தை பற்றி அல்ல.

நான் ஏற்கெனவே விளக்கிய மூன்று முக்கிய நடிப்பு பள்ளி/கோட்பாடுகளான method Acting school ,Chekhov school ,Oscar wilde concept என்ற மூன்றையும்தான் மூன்று பாத்திரங்களாக்கி அந்த மேதை மூன்று பாணிகளையும் மோத விட்டார். வேறு வேறு நடிகர்கள் அந்த மூன்று பாத்திரங்களில் மோதியிருந்தால், ஒவ்வொரு நடிகனுக்கும் உள்ள திறமையளவின் ஏற்ற தாழ்வால்,நமக்கு முடிவு தெரியாமலே போயிருக்கும். ஒரே நடிகர்,சம திறமை,சம அக்கறையுடன் மூன்று பாத்திரங்களையும் வார்த்ததால் ,போட்டிக்கு ஒரு மாதிரி தீர்ப்பு வந்தது. இரண்டு சம வலுவுள்ள சங்கர்(அப்பா), கண்ணன்(மூத்த மகன்) பத்திரங்களை method acting (அப்பா),Chekhov (மூத்த மகன்) முறைகளிலும், மிக casual ஆக உருவான light ஆன விஜய்(இளைய மகன்) பாத்திரத்தை oscar Wilde பாணியில் சுதந்திர கற்பனை திறத்துடன் கையாண்டிருந்தார்.

இங்கேதான் நமக்கு ஒரு பாடமே நடத்த பட்டுள்ளது. உலக திறமையாளனான ஒரு versatile நடிகன்,தன் கற்பனை வளத்தை பயன் படுத்தி,சராசரி வாழ்க்கையில் பார்க்கவே முடியாத ஒரு பாத்திரத்தை தன் அழகுணர்ச்சியில் வடித்தால்?

எந்த கொம்பனி டம் வேண்டுமானாலும் இன்று கூட கேளுங்கள். தெய்வமகனில் உன்னை கவர்ந்த பாத்திரம் எதுவென்று? நூற்றுக்கு நூறு பேரின் விடை விஜய்தான்.இப்போது அந்த பள்ளிகளுக்கு போட்டி வைத்தால், சமமான பாத்திர வார்ப்பாக இல்லாவிடினும்,
Method Acting , Chekhov என்ற வலுவான பள்ளிகளை புறம் தள்ளி,Oscar Wilde சுதந்திர கற்பனை கோட்பாட்டில் ஜெயித்த அந்த ஒப்பற்ற கலைஞன்,மற்ற எல்லோரையும் விட எங்கு வேறு பட்டு நின்றார் என்பது உங்களுக்கு புரிந்திருக்குமே?இருந்தாலும் விளக்கத்தான் போகிறேன்,இந்த படங்களின் பாத்திரங்களையே பாடமாக்கி.

----To be Continued.

RAGHAVENDRA
12th April 2013, 10:02 PM
மத்திய அரசு தனது தென்னிந்திய படங்களை பற்றிய மாற்றாந்தாய் பார்வையை மாற்றி கொண்டு, அன்றைய பாராமுக மாநில அரசையும் மீறி, உலக பட தர கோட்பாடுகளை தளர்த்தி,அத்தனை அறிவுஜீவிகளையும் நடிப்பு என்ற ஒரே அம்சத்தால் மட்டுமே அசர வைத்து, oscar போட்டிக்கு தேர்ந்தெடுக்க பட்ட முதல் தென்னிந்திய திரை படம் தெய்வ மகன்.(1969).


மிகச் சரியாகச் சொன்னீர்கள். ஒரே ஒரு சின்ன கருத்து, என்னுடைய தனிப்பட்ட கருத்து , உலகத் தர கோட்பாடு என்பதை விட பங்கேற்பதற்கான வரைமுறை என்பது சரியாக இருக்கும். இந்த வரைமுறை தளர்வு தான் விமர்சனத்திற்குள்ளானது.

RAGHAVENDRA
12th April 2013, 10:08 PM
நடிகர் திலகத்தின் படங்களில் இருக்கக் கூடிய மிகப் பெரிய அளவிலான VARIETY உலகில் வேறு எந்த நடிகரின் படங்களிலும் இருக்காது என்பது என்னுடைய கருத்து. அநேகமாக இது அனைவரின் கருத்தாகவும் இருக்கும்.

இப்படி இருக்கும் போது அவருடைய நடிப்பைப் பற்றி விவாதிக்கும் இந்தத் திரி மட்டும் விதி விலக்காகுமா என்ன. வெறுமனே விவாதங்கள் மட்டுமே இருந்தால் அது நூறு சதம் பங்கேற்பதற்கான வாய்ப்பை எட்ட எட்டக் கொண்டு செல்லும். அந்த நூறு சதத்தை எட்டுவதற்கு நாம் முயலவேண்டும், அதில் வெற்றியடைய வேண்டுமென்றால் அதற்கு பெரிதும் உதவக் கூடியவை, அது மட்டுமின்றி விவாதங்களுக்கு வலுவூட்டக் கூடியவை என பல்வேறு வகைகளில் AVENUE வினை OPEN செய்பவை, ஆவணங்கள், நிழற்படங்கள், காணொளிகள், இணைய தளங்களில் நடிகர் திலகத்தைப் பற்றி வரக் கூடிய செய்திகள் கட்டுரைகளுக்கான இணைப்புகள் போன்றவை.

இந்த அடிப்படையில் ஒரு நிழற்படம் இங்கே நம் பார்வைக்கு ... பார்ப்போமா ...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/ntmirroreffect01_zps4def011a.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/ntmirroreffect01_zps4def011a.jpg.html)

RAGHAVENDRA
12th April 2013, 10:21 PM
நடுவில் சற்று தொய்வடைந்தாலும் அசுர வேகத்தில் நம் திரி நடை (ஓட்டம்) போடுகிறது. தற்போதைய நிலவரப் படி 2,00,000 பார்வையாளர் எண்ணிக்கையைத் தொட மிகச் சொற்பமான எண்ணிக்கையே பாக்கி. இன்னும் 340 பதிவுகளோடு 300 பக்கங்களை நிறைவு செய்யும் போது 3,00,000 பார்வையாளர்களைத் தாண்டி விடும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. அனைவரின் ஒத்துழைப்பும் இருந்தால் இது நிச்சயம் நிறைவேறும்.

RAGHAVENDRA
12th April 2013, 10:36 PM
திலகப் புதிர்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/101169_zps9fcc8336.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20Three/101169_zps9fcc8336.jpg.html)

இந்நிழற்படத்தில் இருப்பவர் யார்

CLUE - இந்த பின்னணி இசை

https://soundcloud.com/veeyaar/superbgm01

RAGHAVENDRA
13th April 2013, 07:25 AM
http://3.bp.blogspot.com/-wZfG4VOm6n4/TdaL1oMOFdI/AAAAAAAADf4/u5fpxIZgySs/s1600/Sivaji+Ganesan+%252816%2529.jpg

வெற்றிகரமாக 6 ஆண்டுகளை முடித்து இன்று 7வது ஆண்டில் நமது நடிகர் திலகம் இணைய தளம் அடியெடுத்து வைக்கிறது. இந்நேரத்தில் நமது நண்பர்கள் அனைவருக்கும் உலகெங்கும் வாழும் எண்ணற்ற சிவாஜி ரசிகர்களுக்கும் தமிழ்த் திரைப்பட ஆர்வலர்களுக்கும் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

http://www.animated-gifs.eu/website-thanks/0155.gif

அன்புடன்
ராகவேந்திரன்

IliFiSRurdy
13th April 2013, 07:55 AM
வெற்றிகரமாக 6 ஆண்டுகளை முடித்து இன்று 7வது ஆண்டில் நமது நடிகர் திலகம் இணைய தளம் அடியெடுத்து வைக்கிறது. இந்நேரத்தில் நமது நண்பர்கள் அனைவருக்கும் உலகெங்கும் வாழும் எண்ணற்ற சிவாஜி ரசிகர்களுக்கும் தமிழ்த் திரைப்பட ஆர்வலர்களுக்கும் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
ராகவேந்திரன்[/QUOTE]

Thank you Saar,for such a lively,wonderful and divine portrait of our Thalaivar.You made our day..
Wishing our thread many more happy returns of the day.
இந்நன்னாளில் இன்னொரு சந்தோஷமான செய்தி.
நடிப்பில்,தலைவருக்கு அடுத்த நிலையில் இருப்பதாக கருதப்படும் நடிகரின் திறமையைப்பற்றி ஏற்கனவே எழுதி விட்டோம்
மூன்றாவது நிலையில் உள்ளவரோ,இன்னும் தன பால்குடியைக்கூட மறவா பச்சிளம்
பாலகன் போல தெரிகிறது..
எனவே இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு தலைவர் இடத்தை யாரும் நெருங்கக்கூட முடியாது.

Gopal.s
13th April 2013, 08:05 AM
Ganpat Sir,

It is not thread but it is Nadigarthilagam.com website.

Gopal.s
13th April 2013, 08:07 AM
வாழ்த்துக்கள் ராகவேந்தர் சார்.

இது உங்களின் மகுடத்தில் மற்றுமோர் வைரம்.

இந்நன்னாளில் நாமொரு உறுதி எடுத்து கொள்வோம்.

ஒன்று படுவோம்.
ஒத்திசைவு கொள்வோம்.
வீணர்களை தவிர்ப்போம்.

நடிகர்திலகத்தின் புகழை தரணிக்கு சொல்லி உலகம் அவர் காலடியில் வீழ செய்வோம்.

RAGHAVENDRA
13th April 2013, 08:54 AM
Dear Sowrirajan, Gopal and friends,
I understand your feelings and let us not develop this further and give a full stop. And let us all have further discussions on Nadigar Thilagam in our main thread and share information on the films concerned in the Filmography thread. Each and every fan of NT is important and every one has his share of interesting information on NT and his films which should be brought out for the knowledge of future generation. Our foremost task is to spread the glory of the one and only NT.
Let us move in that direction.
Raghavendran

RAGHAVENDRA
13th April 2013, 08:56 AM
டியர் கண்பத் சார்,
தங்களுடைய நல்வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி. மற்றவர்களைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாமே. நம்முடைய பார்வை சிகரத்தை நோக்கி. கழுத்து வலித்தாலும் மனது வலிக்காத உயரத்தில் இருக்கும் நடிகர் திலகத்தை மட்டும் பார்ப்போமே.

RAGHAVENDRA
13th April 2013, 08:56 AM
கோபால் சார்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி என்றென்றும்.

RAGHAVENDRA
13th April 2013, 08:58 AM
ஒன்று படுவோம்.
ஒத்திசைவு கொள்வோம்.
வீணர்களை தவிர்ப்போம்.


ஒன்று படுவோம், ஒத்திசைவு கொள்வோம்..

அதே போல் நமது மய்யத்தில் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் ஒவ்வொரு ரசிகரும் நமக்கு இன்றியமையாதவர்கள், ஒருவரைக் கூட நாம் விட்டு விடக் கூடாது. அவரவர்க்கு ஏற்ற உரிய வசதிப்பட்ட விதத்தில் அவரவர் தம் பணியை செய்யும் போது அதற்கு நம்மால் முடிந்த வரையில் உறுதுணையாக இருப்போமே ...

RAGHAVENDRA
13th April 2013, 09:29 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/miscel/VASU3000GRTG_zps406c72e0.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/miscel/VASU3000GRTG_zps406c72e0.jpg.html)

Subramaniam Ramajayam
13th April 2013, 09:31 AM
dear sowrirajan, gopal and friends,
i understand your feelings and let us not develop this further and give a full stop. And let us all have further discussions on nadigar thilagam in our main thread and share information on the films concerned in the filmography thread. Each and every fan of nt is important and every one has his share of interesting information on nt and his films which should be brought out for the knowledge of future generation. Our foremost task is to spread the glory of the one and only nt.
Let us move in that direction.
Raghavendran

congrats raghavendran and friends for keeping the thread alive with valuable informations newsmaterials.
Let us march ahead and do our best to our god NADIGARTHILAGAM
Valga valamudan NT fans.

Gopal.s
13th April 2013, 09:58 AM
Nadigarthilagam pugazh onguga.

Gopal.s
13th April 2013, 10:30 AM
om shanthi om shanthi om shanthi

KCSHEKAR
13th April 2013, 11:13 AM
Dear Ragavendran Sir,

Congratulations for the beginning of 7th year of Nadigarthilagam.com

KCSHEKAR
13th April 2013, 11:15 AM
Dear Vasudevan Sir,

Advance Congratulations for your post No. 3000.

Gopal.s
13th April 2013, 11:56 AM
வாசு,
மூவாயிரம் ஒரு துணை போல் அமைய வாழ்த்துக்கள்.
நட்புடன்

Dwightvak
13th April 2013, 01:28 PM
Cut&Paste from Filmography Thread.
Post By Sowrirajan sree.
Dear Friends,
Filmography thread is good and great going !

The other thread of our NT is not up to the mark honestly...There is no interesting posts or old paper cuttings where NT participation is seen etc.,

Oruvarai oruvar aahaa...oohoo.....ungalai maadhiri varuma....avarai maadhiri varuma..ivarai maadhiri unda...endra reedhiyil ulladhu....

Nadigar Thilagam pangukonda nigazchigalin aavanamoe...sambavangaloe...ondrumae illai.....Ennamo....Yedho endru oru silarukaagavae indha thiri ulladhu pol ulladhu....

sorry if am brutally frank

Quick reply to this message Reply Reply With Quote Reply With Quote Multi-Quote This Message
Today, 12:17 AM #713
RAGHAVENDRA
RAGHAVENDRA is offline
Senior Member Veteran Hubber RAGHAVENDRA's Avatar

Join Date
Jan 2008
Posts
3,687

Dear Sowrirajan Sree,
Thank you immensely for your kind words of appreciation of filmography thread. Hope to keep this alive with the kind co-operation of Sivaji Fans including you.
Raghavendran


Dear All,
We thought that all the differences were sorted out and the thread is moving in the healthy direction. Infact all the senior hubbers are participating in all discussions. Suddenly one spurious entry came and as we suspected,he is showing his true colour to creat politics. Mr.Ragavendar warned already that every one should stick to the point as it is going to serve as future encyclopedia. But unwittingly,he encouraged this post ,and I dont know why? He calls it kind words. Can I use some kind words now?
Unless ,this kind of clandestine attacks are stopped, it is difficult to have any healthy discussions or get some positive contributions.(It is a puzzle that this creep is not even voicing it here!!!!)

Dear All,

I am sure, we all have liberty to express our views and opinions in this thread so that it could move in the right direction, for the purpose for which the entire thread was started. When any suggestion/opinion/advise/comment to be passed..am sure, all will second that there is a way by which that needs to be told. Even everyone maintains one decorum, ONLY ONE INDIVIDUAL is behaving with a BIG BROTHER ATTITUDE from day 1 of his participation. There is no need for anybody to suspect anybody. AND NOBODY HERE HAS ENTRUSTED TO AN INDIVIDUAL THE TASK OF DOING AN INVESTIGATION JOB - be it is honorary (or) Otherwise.

PEOPLE WHO ARE MEAN MINDED WILL ALWAYS LOOK EVERYTHING AS ATTACKS WHEN SOMEONE WRITES ANY SUGGESTION / COMMENT / VIEWS. BUT THE SAME PERSON WILL BEHAVE WITH AN OPEN LICENSE OF DEMORALISING / DEMOTIVATING THOSE WHO SPEND HOURS TOGETHER HERE AND CONTRIBUTE MEANINGFUL ARTICLES. SUCH PERSON SHOULD MATURE ENOUGH TO UNDERSTAND THAT Any suggestion/comment/view/opinion IS ONLY a suggestion/comment/view/opinion of the person who writes it.

BUT in the name of reply, NOBODY has the right over anybody to demonstrate a BIG BROTHER ATTITUDE.!! NOT EVERYONE WILL KEEP QUIET AND LISTEN..THERE WILL BE SOMEONE WHO WILL GIVE IT THRICE BACK.

LAST BUT NOT THE LEAST FIRST LET SOMEONE UNDERSTAND THAT THERE IS NO PUZZLE HERE BECAUSE EVERYBODY IN THIS THREAD IS ALREADY AWARE OF WHO THE ACTUAL CREEP WAS & CONTINUOUS TO BE ONE !!

I PARK THE CONVERSATION HERE !!!

Dwightvak
13th April 2013, 01:52 PM
DEAR NEYVELI VASUDEVAN SIR

CONGRATULATIONS ON 3000 COMPLETIONS ! YOU STARTED THE THREAD AND 3000th POST IS BEING AWAITED..!!

INDHA THIRIYAI THIRANDHU THODARNDHU BRAMIKUM VAGAYIL NADIGAR THILAGAM SAMBANDHA VISHAYANGALAI IDUGAI SEIYUM UNGALLUKKU EN PARISU..!!

2323

Dwightvak
13th April 2013, 02:40 PM
சௌரி ராஜன் போன்ற ஈனத்தனமான கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள் . ஏன் இந்த மாதிரி விஷம பதிவுகள் வெவ்வேறு பெயர்களில்? முன்பு முத்து ராமன் என்ற பெயரில் ஒருவர்.இப்போது சௌரிராஜன். மக்கு தனமாக உளறி கொட்டும் இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் ரசிகர்திலகம் என்ற விவேகமான அங்கீகாரம் வேறு. கருமம் தலையிலடித்து கொள்ள தோன்றுகிறது.

eenam pidithavanukku dhaan ellamae enathanamaaga theriyum...makkuthanamaaga ularubavanukkudhaan unmai uraigal kooda ularalaaga theriyum...! Urupadiyaaga uzhaipavarkku endha ketta paerum illai..!! Appadi oru mayayai kilapubavarkku dhaan ketta peyar..!

Yaarum thadukkavillai !!! Karumamae kannaga dharalamaaga udanayae thalayil adithukollalaam !

Gopal.s
13th April 2013, 03:05 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-13

எந்த பள்ளிகளையும் முறையாக கல்லாமல், அந்தந்த பாத்திரங்களுக்கு , இன்னின்ன முறையில்தான் வடிவமைக்க வேண்டும், இந்த பாணியில்தான் நடிக்க வேண்டும் என்று அந்த மேதைக்கு எப்படி தெரிந்தது? பிறவி மேதை என்ற பிறகு இந்த ஆராய்ச்சியே தேவையில்லை.

தெய்வமகன் சங்கர், கண்ணன் பாத்திரங்களை எடுத்து கொள்வோம்.இரண்டுமே, தன் முகத்தின் அழகு கெட்டு ,விகாரமாகி, அதனால் மற்றவர்களின் கேலிக்கும், சீண்டலுக்கும் பாத்திரமாகி , inferiority complex இனால் அவதி படும் பாத்திரங்களே. தந்தை-மகன் என்ற உறவு முறை வேறு. நடிகர்திலகம் நினைத்திருந்தால், இரண்டையுமே, ஒரே பாணியில் வடிவமைத்து சில நு ட்பங்களை மட்டுமே மாற்றியிருக்கலாம். ஆனால் பாத்திரங்களை அவர் பார்த்த முறையே வேறு.

சங்கர், சிறு வயதில் அவமானங்களை சுமந்து அவதி பட்டிருந்தாலும் ,அது அவன் வாழ்வில் ஒரு பகுதியே. Trauma என்ற சொல்லோடு கடந்து போகும். அவன் வாழ்வில், அப்பா,அம்மா, அன்பான மனைவி,பிள்ளை,நண்பர்கள் மற்றும் கஷ்ட பட்டு முன்னேறி அடைந்த தொழில் செல்வாக்கு எல்லாமே, ப்ரம்மாண்டமாகி அவன் குறையை சிறிதாக்குகிறது.தன் குறையை தினம் தினம் ஞாபக படுத்தி சித்திரவதை படுத்த வாய்ப்புள்ள ஒருவனை ,பிறவியிலேயே அழிக்க சொன்னது தனக்காக கூட இருக்கலாம்.

ஆனால் கண்ணனோ, அனாதை விடுதியில், அனுதினமும் குறையை மட்டுமே பார்க்கும் சக மனிதர்களுடன் கூட்டு புழுவாக வாழ்பவன்.மொழியறிவு, சிறிது இசை, சிறிது பாபாவின் அன்பு இவை தவிர வேறு வெளிச்சமே இல்லாத வாழ்க்கை. Herzog எடுத்த ஒரு ஜெர்மன் படத்தில், இருபது வயது வரை மோசமான நிலையில், captivity யில் இருந்த ஒரு மனிதனை, திடீரென்று ஒரு நகரத்தில் விட்டு விட்டு போய் விடுவார்கள்.(உண்மை கதை).கண்ணன் நிலை கிட்ட தட்ட அப்படித்தான்.டாக்டர் வீட்டிலும் இருட்டறை சிறை வாழ்வே. அப்போது கண்ணனின் வாழ்வே அவன் முகதழும்பு, அவமானம், சார்ந்தே சிறுது இசையுடன் பயணிக்கிறது. உள்ள போராட்டம் சங்கரை விட கண்ணனுக்கு ஏராளம்.

அதனால் சங்கருக்கு, inferiority காம்ப்ளெக்ஸ் கொண்ட ஒரு normal மனிதனை சித்தரிக்கும் method Acting .ஆனால் கண்ணனுக்கோ, முழுதும் ஆதி மனிதனின் impulsive basic instincts மட்டுமே தலை தூக்கும் பதுங்குதல்,பாய்தல்,அன்புக்கு உருகுதல் (இசை) என்ற அடிப்படை உணர்வு மட்டுமே கொண்ட,தந்தையின் தாக்கம் சிறிதளவே கொண்ட ,உளவியல் தாக்கம் நிறைந்த chekhov பாணி.

விஜய்க்கு, இப்படி எந்த சிக்கலும் இல்லாததால், சாதாரணமாக ஓயவெடுத்திருக்கலாம். ஆனால் மேதைகளுக்கு ஏது ஓய்வு? P _R சிலாகித்த அற்புத ராஜின் மேம்பட்ட பிரதியாக சிறிதே effeminacy கலந்த ஒரு spoilt lover boy .ஆக realism பாணியில் இன்றி, முழுக்க synthetic ஆக,ஒரு கலவையான கற்பனை கலந்த அழகுணர்ச்சியில் வடிவமைக்க பட்டு....

----To be continued.

adiram
13th April 2013, 03:48 PM
Chennai MIDLAND Theatre

When Raghavendar sir mentioned about the golden era of Tamil Cinema and also about the Midland theatre, in connection with mr_karthik sir’s Kavariman post, my memeory also traveled to the past about Midland Theatre.

Before Safire, Devi, Anand theatres contructed in Chennai Mount Road area, Midland was the prestigious theatre in that area next to Shanti, with air-condition facility. It was the only theatre in which we can watch the movie even from the first row, that much space facility with normal ticket rates. It was a less high theatre without balcony seats.

In 1978 a mini theatre was constructed inside the compound and named as Leo. Later this complex was bought by actress Jayapradha and renamed as Jayapradha (former Midland) and Raj (former Leo). We can see Mindland theatre in K.Balachandar’s ‘Manmadha Leelai’ where Kamal and Jayapradha standing in the queue to buy ticket for a Hindi movie. The movie Manmadha Leelai was released in the same Midland theatre, and later Jayapradha became the owner of same theatre, are sweet coincidences. Many of NT, MGR, Sreedhar KB movies released in the theatre.

Rajkapoor;s ‘Bobby’ ran in Midland for one year, MGR’s superhit Adimaippen, Bharathiraja’s first film 16 Vayadhinile, the first US shot movie ‘Oreyvaanam Oreyboomi’ were released in Midland.

Some of our Nadigarthilagam’s movies released in Midland are…

Padiththaal Mattum Podhuma (100 + days)
Kaikoduththa Dheivam (100 + days)
Navarathiri (100 + days)
En Thambi (10 weeks)
Niraikudam (50+ days)
Dharthi (Hindi Sivandha Mann)
Vilaiyattuppillai (12 weeks)
Prabtham ( 50 days)
Thenum Paalum
Andhaman Kaadhali (100 + days)
Kavariman
Yemanaukku yeman (50 + days)
Maadi Veettu Yezhai (50 + days)

MGR’s Ayirathil Oruvan, Adimaippen, Raman Thediya seethai,
KB’s Irukodugal, Apoorva Ragangal, Manmadha leelai, Nizhal Nijamaagirathu,
Sreedhar’s Avalukkendru Ore Manam, Ilamai Oonjaladukirathu etc also released in Midland.

Midland theatre has always a place in the hearts of Central Chennai cine fans. I hope our Raghavendar sir may enjoy these memories...

Gopal.s
13th April 2013, 04:19 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-14

இப்போது கண்ணனை மிக நுணுக்கமாக ஆராய்வோம். ஆஸ்கார் பரிசு பெற்ற Robert de Niro போன்ற நடிகர்கள்,தங்கள் நடிப்பில் இயற்கையின் ,மிருகங்களின் சாயலில் தங்கள் பாத்திரங்களை வடிவமைத்து வெற்றி கரமாக தங்களது பாத்திரங்களை கையாண்டுள்ளனர்.
"He based the movement of his character Travis Bickle in Taxi Driver (1976) on that of a crab. He thought the character was indirect and tended to shift from side to side."

நடிகர்திலகம் 1954 இலிருந்தே இதனை கையாண்டுள்ளார். நடைகளில், சிரிப்பில்,உறுமலில், mannerism என்று சொல்லப்படும் mood related gesture இல்.பின்னாட்களில் பாலா பிதாமகன் பாத்திரத்தில் இதனை புகுத்தி வெற்றி கண்டார்.தெய்வ மகன் கண்ணன் , body language சில சமயம், மானின் மருளல், அடிபட்ட வேங்கையின் சீற்றம்,எலியின் survival ஒடுக்கம் ,நாயின் உருகும் அன்பு என்று.
இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்றால் , திருடன் பட்டம் சுமந்து ,பெண்ணுடன் அவள் hand bag திருப்பி கொடுக்கும் காட்சி, ஜெயலலிதாவிடம் தன்னை மறைத்து ஒடுக்கும் காட்சி, மற்ற படி அவர் hyper ecstacy ,( அ ) extreme emotions like anger நிறைந்த காட்சிகள்,ஜெயலலிதா தன் காதலை வெளியிட்டதும் காட்டும் சுய வெறுப்பு காட்சிகளில் கவனித்து பாருங்கள்.(கர்ணனின் உறுமல் ,சாமுண்டியின் சீற்றம் obvious )

டாக்டர் தன்னை நிலை கண்ணாடியில் காட்டும் போது அலட்சியம் செய்யும் விகார முகம் , ஒரு பெண் தன்னை காதலிப்பதாய் கற்பனை செய்து (ஒதெல்லோ பற்றி சொன்னதும் டாக்டரின் கையை உடையும் அளவு இறுக்கும் வெறி கலந்த எதிர்பார்ப்பு),அது தன கற்பனையே என்றவுடன் சுய வெறுப்பின் உச்சமாய் கண்ணாடியில் தன் உருவத்தை தானே காறி உமிழ்ந்து, கண்ணாடியை உடைக்கும் மூர்க்க சுய வெறுப்பு.அந்த காட்சியில் அவர் காட்டும் subtle change in tempo and body position , தன் வீட்டுக்கு வந்து தாய்,தந்தை, தம்பியை கண்டு காட்டும் உருக்கம் கலந்த, euphoric ecstacy, டாக்டரிடம் அதை கொட்டி விட்டு, பசித்து சோர்ந்த நாய் குட்டி போல் மடி மேல் சோரும் கட்டம்.

கண்ணனை, விஜய் வெல்வதாவது என்று தோன்றுகிறதல்லவா?

----To be continued.

IliFiSRurdy
13th April 2013, 04:57 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-13,14

.

மிக சுவாரசியமாக இருக்கிறது.Multi roles performance என்பது வெறும் Fancy dress competition
என்று ஆகி விட்ட இந்த காலகட்டத்தில்,அதன் உட்பரிமாணங்கள் யாவை அதன் மூலம் அந்த பாத்திரங்களின் இயல்பும் தன்மையும் எப்படி வெளிப்படுத்தப்படுகிறது என்பதை பல பள்ளிகளின் பாணியை மையமாக வைத்து, சுவை குன்றாமல் சொல்லி செல்லும் உங்களுக்கு ஒரு "ஓ' போடுகிறோம்,நண்பர் கோபால்.

RAGHAVENDRA
13th April 2013, 06:17 PM
Herzog எடுத்த ஒரு ஜெர்மன் படத்தில், இருபது வயது வரை மோசமான நிலையில், captivity யில் இருந்த ஒரு மனிதனை, திடீரென்று ஒரு நகரத்தில் விட்டு விட்டு போய் விடுவார்கள்.(உண்மை கதை)


அந்தப் படம் The Enigma of Kaspar Hauser.

இதனைப் பற்றிய விக்கிபீடியா குறிப்புக்கு
http://en.wikipedia.org/wiki/The_Enigma_of_Kaspar_Hauser

அந்தப் படத்தின் PLOT


The film follows Kaspar Hauser (Bruno Schleinstein), who lived the first seventeen years of his life chained in a tiny cellar with only a toy horse to occupy his time, devoid of all human contact except for a man who wears a black overcoat and top hat who feeds him.

One day, in 1828, the same man takes Hauser out of his cell, teaches him a few phrases, and how to walk, before leaving him in the town of Nuremberg. Hauser becomes the subject of much curiosity, and is exhibited in a circus before being rescued by Herr Daumer (Walter Ladengast), who patiently attempts to transform him.

Hauser soon learns to read and write, and develops unorthodox approaches to logic and religion, but music is what pleases him most. He attracts the attention of academics, clergy, and nobility, but is then physically attacked by the same unknown man who brought him to Nuremberg. The attack leaves him unconscious with a bleeding head. He recovers but is again mysteriously attacked, this time stabbed in the chest.

Hauser rests in bed describing visions he has had of nomadic Berbers in the Sahara Desert, and then dies. An autopsy reveals an enlarged liver and cerebellum.
http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/e/e1/The_Enigma_of_Kaspar_Hauser.jpg/220px-The_Enigma_of_Kaspar_Hauser.jpg

RAGHAVENDRA
13th April 2013, 06:25 PM
சற்று முன் வந்த தகவல். நாகர்கோவிலில் வசந்த மாளிகை மிகப் பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான ஒரே வாரத்தில் ரூ. மூன்று லட்சத்திற்கு மேல் வசூலாகியுள்ளதாக செய்தி. ரசிகர்கள் அளப்பரையும் அமர்க்களமாக நடைபெற்றுள்ளது. நாஞ்சில் நகரம் நடிகர் திலகத்தின் கோட்டை என்பதும் இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

ஜோ சார்
காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்...

RAGHAVENDRA
13th April 2013, 06:34 PM
ஆஸ்கார் பரிசு பெற்ற Robert de Niro போன்ற நடிகர்கள்,தங்கள் நடிப்பில் இயற்கையின் ,மிருகங்களின் சாயலில் தங்கள் பாத்திரங்களை வடிவமைத்து வெற்றி கரமாக தங்களது பாத்திரங்களை கையாண்டுள்ளனர்.
"He based the movement of his character Travis Bickle in Taxi Driver (1976) on that of a crab. He thought the character was indirect and tended to shift from side to side."

நடிகர்திலகம் 1954 இலிருந்தே இதனை கையாண்டுள்ளார். நடைகளில், சிரிப்பில்,உறுமலில், mannerism என்று சொல்லப்படும் mood related gesture இல்.பின்னாட்களில் பாலா பிதாமகன் பாத்திரத்தில் இதனை புகுத்தி வெற்றி கண்டார்.

உன்னிப்பான analysis. இதே தெய்வ மகனில் காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் பாடலின் துவக்கத்தில் அந்தச் சிலைக்கு முன் நிற்கும் போது இவர் ஒரு சிலையை ரசிப்பதும் நாயகி இவருடைய கவனத்தை வேறு பக்கம் திருப்ப முயல்வதும் பின்னர் அவள் கோபித்துக் கொண்டு போகும் போது அவளை அவள் காதலை தன் வசமாக்க அவர் காட்டும் BODY LANGUAGE ஸ்பெயினில் காளையை அடக்க முயலும் MATADOR அந்தக் காளையின் உடல் மொழியை imitate செய்து அதனை தன் பக்கம் ஈர்த்து அடக்குவது போல், அதே உடல் மொழியினை பின் பற்றியிருப்பார். வேறு சில படங்களில் அந்த MATADOR போஸையே பார்க்கலாம். உதாரணத்திற்கு ஊட்டி வரை உறவு படத்தில் மாடியில் தரும் ஒரு போஸ் ... கே.ஆர். விஜயாவை அவர் படிக்கட்டில் நின்று கொண்டு பார்க்கும் போது நிற்கும் உடல் மொழி

http://i39.tinypic.com/24loris.jpg

Gopal.s
13th April 2013, 06:43 PM
நன்றி ராகவேந்தர் சார்.இதே இயக்குனரின் (Herzog ) பிற்கால படமான Nosferatu the Vampyre (1979) வின் ஹீரோ ஆனா klaus kinski நடிப்பில் நம் நடிகர்திலகத்தின் சாயலை நிறைய காணலாம்.

RAGHAVENDRA
13th April 2013, 06:52 PM
This is what is called telepathy ... பல ஆண்டுகளாக என் நெஞ்சில் நிலவி வரும் கருத்தையே தாங்களும் சொல்லியிருக்கிறீர்கள். எத்தனையோ ஆஸ்கார் நாயகர்கள் கின்ஸ்ஸியின் கால் தூசுக்கு வரமாட்டார்கள். Unfortunately he migrated from German அதனால் அவரை ஒரு அந்நியனாகவே ஹாலிவுட்டில் பார்த்தார்கள். NOSFERATU THE VAMPIRE ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் அவசியம் பார்க்க வேண்டிய படம். நடிகர் திலகத்தை அந்த கதாபாத்திரத்தில் தாங்கள் தானாகவே கற்பனை செய்யத் துவங்கி விடுவீர்கள். Of course, அதனை அவர் நான் வணங்கும் தெய்வம் படத்திலேயே செய்து விட்டார். அதே உடல் மொழி தான் வேம்பயர் படத்தில் கின்ஸ்கியிடம் தெரியும். கின்ஸ்கியின் மகளும் மிகச் சிறந்த நடிகை. நடாஷா கின்ஸ்கி டட்லி மூருடன் நடித்த UNFAITHULLY YOURS படம் அவரை ஒரு மிகச் சிறந்த நடிகையாக காட்டியது. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பது போல் நடாஷாவின் அற்புத நடிப்பிற்கு இப்படம்.

ஹாலிவுட்டைத் தவிர்த்து பல நாடுகளில் பல நடிகர்களின் நடிப்பில் நாம் நடிகர் திலகத்தைக் காணலாம். நடிகர் திலகத்தை மிகவும் கவர்ந்த, பிரெஞ்சு நடிகர் ருடால்ப் வாலெண்டினோ, யீவ்ஸ் மாண்டாண்ட் போன்றவர்கள் இதில் அடங்குவர். இவர்களைப் பற்றியெல்லாம் நாம் பிறிதொரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் தெரிந்து கொள்வோம். அப்போது தான் எப்பேர்ப்பட்ட மேதைக்கு நாம் ரசிகர்களாக இருக்கிறோம் என்பது புரிய வரும்.

RAGHAVENDRA
13th April 2013, 07:05 PM
இந்த ஆண்டின் தாதா சாஹேப் பால்கே விருதுக்கு ஹிந்தி நடிகர் பிரான் தேர்வு

http://media2.intoday.in/indiatoday/images/stories/pran_350_041213044926.jpg

93 வயது பிரான் அவர்களுக்கு இந்த விருது வழங்கப் படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். எப்போதோ நடந்திருக்க வேண்டியது. வட நாட்டில் சிவாஜி ரசிகராய் உள்ள பல நட்சத்திரங்களில் பிரான் குறிப்பிடத் தக்கவர். இவருடைய வீட்டில் நடிகர் திலகம் படம் நுழைவாயிலிலேயே இருக்கும் என கேள்விப் பட்டிருக்கிறேன். அவருக்கு நமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

adiram
13th April 2013, 07:33 PM
மிக சுவாரசியமாக இருக்கிறது.Multi roles performance என்பது வெறும் Fancy dress competition
என்று ஆகி விட்ட இந்த காலகட்டத்தில்,அதன் உட்பரிமாணங்கள் யாவை அதன் மூலம் அந்த பாத்திரங்களின் இயல்பும் தன்மையும் எப்படி வெளிப்படுத்தப்படுகிறது என்பதை பல பள்ளிகளின் பாணியை மையமாக வைத்து, சுவை குன்றாமல் சொல்லி செல்லும் உங்களுக்கு ஒரு "ஓ' போடுகிறோம்,நண்பர் கோபால்.

Exactly, Ganpat sir,

If you go to some threads, there will be always a wording "adhiga padanggalil irattai vedangalil nadiththavar".

idhil vedikkai enna theriyumaa?. out of those movies, more than 80% are "aal maaraatam movies". That means, ivaraa avarra endru kandupidikka mudiyaamal heroine, villan aagiyor thadumaarum case (like our 'ennaippol oruvan').

idhula viththiyaasamaavadhu, onnaavadhu?.

comparing to them, our 'five roll M.R.R.Vasu (sorkam)' is far better.

RAGHAVENDRA
13th April 2013, 09:29 PM
மிக மிக மிக அரிய ஆவணம் - நிழற்படம் - அமெரிக்கா சென்று திரும்பிய நடிகர் திலகத்திற்கு நடிகன் குரல் சிறப்பு மலர் வெளியிட்டது. இதில் நடிகர் திலகத்தின் அமெரிக்க விஜயத்தின் நிழற்படங்கள் இடம் பெற்றன. அதில் ஒன்று அப்பாச்சே இந்தியர்களுடன் நடிகர் திலகம் இருக்கும் இந்தப் படம்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/ntusanadigankuralp01_zps5d4ce81e.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/paper%20cuttings/magazinepages/ntusanadigankuralp01_zps5d4ce81e.jpg.html)

Gopal.s
14th April 2013, 04:56 AM
அனைவருக்கும் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வியட்நாம் வீட்டிலிருந்து.

RAGHAVENDRA
14th April 2013, 06:28 AM
அனைத்து நண்பர்களுக்கும் இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள். இந்நாளில் எம்.ஜி.ஆருக்கு சிறப்பு மலர் வெளியிடும் நமது ஆவணத் திலகம் பம்மலார் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். இதே போல் மிக விரைவில் நமது நடிகர் திலகத்திற்கும் அவர் மலர் ஒன்றை வெளியிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டு விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்

Subramaniam Ramajayam
14th April 2013, 08:47 AM
அனைத்து நண்பர்களுக்கும் இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள். இந்நாளில் எம்.ஜி.ஆருக்கு சிறப்பு மலர் வெளியிடும் நமது ஆவணத் திலகம் பம்மலார் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். இதே போல் மிக விரைவில் நமது நடிகர் திலகத்திற்கும் அவர் மலர் ஒன்றை வெளியிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டு விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்

TAMIL NEW YEAR GREETINGS TO ALL OUR HUBBERS. As raghavendran mentioned rightly Pammalar should release a SIRAPPU MALAR FOR NADIGARTHILAGAM very soon let us all give our support physially as well monetarily to our best.
my good wishes for the release of souvenir today at bangalore.

IliFiSRurdy
14th April 2013, 10:07 AM
அனைத்து நண்பர்களுக்கும் இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

sankara1970
14th April 2013, 12:39 PM
நம் சிவாஜி ரசிக இதயங்களுக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

RAGHAVENDRA
14th April 2013, 02:15 PM
வரும் வாரத்தில் தொலைக்காட்சிகளில் நடிகர் திலகத்தின் படங்கள்

ஜீ தமிழ்

17.4.13 – 2.00 மணி – அவன் தான் மனிதன்

வசந்த் டி வி

17.4.13 – 2.00 மணி – ஆனந்தக் கண்ணீர்

ராஜ் டி வி
20.4.13 – இரவு 10.30 மணி – ஆலயமணி

ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்

18.4.13 – 2 மணி – என்னைப் போல் ஒருவன்

17.4.13 – மாலை 4 மணி – லக்ஷ்மி கல்யாணம்

மெகா டிவி
14.4.13 – இரவு 11 மணி – என் மகன்
15.4.13 – இரவு 11 மணி – சினிமா பைத்தியம்

மெகா 24
14.4.13 – பகல் 2.30 மணி – லக்ஷ்மி கல்யாணம்
15.4.13 – பகல் 2.30 மணி – கோடீஸ்வரன்
16.4.13 – பகல் 2.30 மணி – மருத நாட்டு வீரன்
17.4.13 – பகல் 2.30 மணி – பணம்
20.4.13 – பகல் 2.30 மணி – சபாஷ் மீனா

கே.டிவி
15.4.13 – பகல் 1 மணி – ஊட்டி வரை உறவு

Gopal.s
14th April 2013, 02:32 PM
என்னை கவர்ந்த நடிகர்திலகத்தின் நடன காட்சிகள்-

1952- 1960
தேசம் ஞானம் கல்வி(பராசக்தி), ஆணும் பெண்ணும்,சுந்தரி சௌந்தரி,குரங்கிலிருந்து,அபாய அறிவிப்பு,ஏறாத மலைதனிலே,(தூக்கு தூக்கி), விண்ணோடும் முகிலோடும்(புதையல்), சிவதாண்டவம்(ராணி லலிதாங்கி),யாரடி நீ மோகினி(உத்தம புத்திரன்), கனவின் மாயா லோகத்திலே(அன்னையின் ஆணை),காணா இன்பம்(சபாஷ் மீனா), கண்டேனே உன்னை கண்ணாலே(நான் சொல்லும் ரகசியம்),தேரோடும் எங்க சீரான மதுரையிலே(பாக பிரிவினை), கொடுத்து பார் பார் பார்(விடிவெள்ளி).


1961-1970
பறவைகள் பலவிதம்(இருவர் உள்ளம்),வந்தேனே (நவராத்திரி), பார்த்தா பசு மரம்(திருவிளையாடல்),ஓஹோஹோ little flower (நீலவானம்)டே க்கா கொடுக்கதப்பா,பத்து மாதம்(பேசும் தெய்வம்),அய்யய்யா, நான் பொறந்தது தஞ்சாவூரு(என் தம்பி), ஹாப்பி இன்று முதல் (ஊட்டி வரை உறவு),தங்க தேரோடும், போட்டாளே (லட்சுமி கல்யாணம்),ஏழு கடல்(எங்க ஊர் ராஜா), டான்ஸ் நிர்மலாவுடன் (தங்க சுரங்கம்),கோயில் டான்ஸ்(குரு தக்ஷிணை),அன்புள்ள நண்பரே,காதலிக்க கற்று கொள்ளுங்கள்(தெய்வ மகன்),ஆடல் காணலாம்(நிறை குடம்),என்னங்க (எங்க மாமா),சிரிப்பில்(எங்கிருந்தோ வந்தாள் ),பொன்மகள்(சொர்க்கம்).

1971-1980
தேரு பார்க்க(இரு துருவம்),பொட்டு வைத்த, ஒரு தரம் (சுமதி என் சுந்தரி),வரதப்பா(பாபு),கல்யாண பொண்ணு(ராஜா),அம்பிகையே,அடி என்னடி,கேட்டுகோடி (பட்டிக்காடா பட்டணமா), love is fine (தவ புதல்வன்), ஏன் ஏன் ஏன் ,குடிமகனே, ஆதி வாசி மழை டான்ஸ்(வசந்த மாளிகை),மாப்பிள்ளையே(நீதி), சிவதாண்டவம்(பொன் ஊஞ்சல்),மும் மும் மும் முத்தங்கள் (எங்கள் தங்க ராஜா), I will sing for you (மனிதரில் மாணிக்கம்), இனியவளே ,ஆடிக்கு பின்னே (சிவகாமியின் செல்வன்), நான் பார்த்தாலும் பார்த்தேனடி(தாய்),நல்லதொரு குடும்பம்(தங்க பதக்கம்),சோன் பப்பிடி(என் மகன்)கன்னங்கருத்த(Dr .சிவா),சிவகாமி ஆட,உலகம் நாம் ஆடும்,my song is for you (பாட்டும் பரதமும்),ராஜா யுவ ராஜா(தீபம்),கோவில் டான்ஸ்(தியாகம்), வேலாலே, ஆணாட்டம்,மௌனம் கலைகிறது(என்னை போல் ஒருவன்),என் ராஜாத்தி,காதல் ராணி(திரிசூலம்),பூ மொட்டு(யமனுக்கு யமன்),ஆடல் பாடலில்(வெற்றிக்கு ஒருவன்).

1981-1990
குற்றால அருவி(லாரி டிரைவர் ராஜா கண்ணு),ராத்திரி நிலாவில்(சந்திப்பு)

1991-2000
சின்ன சின்ன காதல் (once more ), தேவராட்டம்(என் ஆசை ராசாவே)

adiram
14th April 2013, 03:18 PM
Gopal ji,

some more...

Rajasthaanil yaaro oruvan (Mannavan Vandhanadi)
Karthigai Maasamadi kalyana seasonadi (vaira Nenjam)
buthi ketta ponnu onnu suththudhadi ennaiye (anbaithedi)

Gopal.s
14th April 2013, 04:38 PM
We deeply mourn the Demise of our beloved Playback Singer Dr.P.B.Srinivas who was associated with about 25 of NT Films. He directly sang two songs for our NT.
1)Kandene unnai kandene(Nan sollum ragasiyam) 2)Endrum Thunbamillai(Punar Jenmam)

KCSHEKAR
14th April 2013, 05:13 PM
அனைத்து நண்பர்களுக்கும் இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

KCSHEKAR
14th April 2013, 05:17 PM
[QUOTE=Gopal,S.;1034576]என்னை கவர்ந்த நடிகர்திலகத்தின் நடன காட்சிகள்-

Dear Gopal Sir,

Good one.

Gopal.s
14th April 2013, 07:35 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-15

சங்கர் பாத்திரத்தை method acting பாணியில் அந்த மேதை முடிவு செய்ததற்கு, இரண்டு காரணங்கள். முதல் காரணம் , குறையை பெரிதாக நினைக்க வேண்டாத நிலையில் நிகழ்காலத்தில் இருப்பவன்.அவன் இறந்த காலத்தை நினைக்க வேண்டிய மூன்று இடங்கள் முதல் பிள்ளை பிறந்த போது, மூத்த பிள்ளை உயிரோடு இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி கலந்த குற்றவுணர்ச்சி. டாக்டரை சந்திக்கும் போது. இந்த கட்டங்கள் எல்லாமே sense memory யில் அமைய வேண்டியவை. இரண்டாவது காரணம், method acting முறையில் மற்ற நடிகர்களின் performance தூக்கலாகும். கண்ணனும் விஜய்யும் ஓங்கி தெரிய ,சங்கரின் method acting முறையில் அமைந்த பாணி யாலும், இந்த முறையில் scene stealing என்பது முடியாதென்பதும் ஒரு காரணம்.(சமீபத்தில் Lincoln படத்தில் Daniel Day Lewis இதே முறையில் method Acting செய்திருக்கிறார்.now now now என்று சொல்லும் போது சங்கர் ,ராஜுவிடம் you you சொல்லும் அதே gesture )

முதல் காட்சியில்,புற முதுகு காட்டியே , குழந்தை பிறந்த மகிழ்ச்சிக்கு expansive hand ,gesture ,ராஜு சமாதான படுத்த வரும் போது elbowing gesture ...அடடா, எத்தனை மேதைமை!!! ராஜுவுடன், தான் சிறு வயது trauma வை விவரித்து, குழந்தையை கொன்று விட சொல்லி ,குற்ற உணர்ச்சியேயின்றி உலர்ந்த மனதோடு ஆணையிடுவது போல், சிறு வயதின் உணர்ச்சியின் பால் பட்டு maturity இன்றி பேசும் விதம், ஒரு method acting ஸ்கூலில் பாடமாக வைக்க வேண்டும்.sense memory அடிப்படையில் நடிக்க விரும்புவோருக்கு பாடம்.

விஜய் உடன் அவர் கண்டிப்பு காட்ட நினைத்து இளகி சிரிப்பது, மனைவியின் வற்புறுத்தல் பேரில் இணங்குவது போல் தன கனிவை,செல்லத்தை மறைப்பது, மனைவியிடன் காட்டும் romance கலந்த நன்றியுணர்வுடன் கூடிய அன்பு இவை பார்த்து அனுபவிக்க வேண்டியவை.

டாக்டருடன் பல வருடங்களுக்கு பிறகான சந்திப்பு காட்சி ஒரு கல்வெட்டு. தயக்கம் கலந்த anxiety உடன் நுழைவது ஓர கண்ணால் சிறி து தயக்கம்,சங்கடம், curiousity கலந்த eye follow up என்று ஆரம்பித்து, formal ஆக தொடங்கி,கேட்க விரும்புவதை கேட்டு, நட்பை re -assert செய்து விட்டு,முடிவில் சிதார் ஓசை கேட்டு அலையும் மனதுடன், restless ஆக ,மகனை பார்க்க விழைந்து ,அரை மனுதுடன் ,திரும்பி செல்லும் கட்டம்.சுந்தர்ராஜன்,சிவாஜி இருவருமே உணர்ந்து, அருமையாய் நிமிர்த் தியிருப்பார்கள் . இந்த காட்சி எதை உரைக்க வேண்டுமோ, அதை உரைத்து , எதை உயிர்ப்பிக்க வேண்டுமோ அதை உயிர்ப்பித்து, எதை அடைய வேண்டுமோ அதை அடைகிறது. perfect sub text for method acting .

கண்ணன் சந்திக்க வரும் காட்சியில், உணர்வுகளை காட்டும் அளவே காட்டி, மிகை குற்றவுணர்வு இன்றி, ஆனால் கண்ணன் அநாதையாக்க பட்டு வாழ்ந்ததன் வலிகளை மட்டுமே, ,ஒரு தந்தையாக empathise செய்வார். இந்த காட்சி ,இன்றளவும் பேச படுவதற்கு காரணமே,மற்றவர்களை தூக்கி காண்பிக்கும் அளவு perform செய்த சங்கரே.

காணாமல் போன விஜய் பற்றி வரும் டெலிபோன் காட்சியில் , பதற்றம் ,எச்சரிக்கை, பதைபதைப்பு,மகனுக்கு எதுவும் நேர கூடாது என்று அவர் விடும் இயலாமை கலந்த வெற்று மிரட்டல் என்று ,ஒரு சராசரி காட்சியில் கூட நடிப்பு கொடி பறக்கும்.

ஆயிற்று. இத்தனை மேம்பட்ட கண்ணன் பாத்திரத்தை,சங்கர் பத்திரத்தை, ஒரு மேதை தன் வாழ்நாளின் one of the best என்று சொல்லும் அளவு பண்ணி விட்ட பிறகு, to lighten the proceedings என்று filler பாத்திரமான விஜய் என்ன செய்து ,இவர்களை சமாளிக்க போகிறது?

---To be continued .

Gopal.s
14th April 2013, 08:32 PM
ராகவேந்தர் சார்,
மூச்சடைத்து போனேன். என்ன ஒரு அபூர்வ ஆவணம்? அப்பாச்சி கலைஞர்களுடன் விவசாய கருவி உற்பத்தி கல்லூரியில் ,நடிகர்திலகம்!!! ஆயிரம் எழுத்துக்கள் தர முடியாத பரவசம் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

Gopal.s
15th April 2013, 07:18 AM
எஸ்வி சார்,
function நன்றாக நடந்ததற்கு வாழ்த்துக்கள் நடிகர்திலகத்தின் அதி தீவிர விசுவாசிகள் பட்டியலில் பம்மலார் பெயரை விட்டு விட்டீர்களே?

Richardsof
15th April 2013, 08:35 AM
இனிய நண்பர் கோபால் சார்


நீங்கள் உட்பட நடிகர் திலகத்தின் அன்பு உள்ளங்கள் அனைவரின் அன்பு வாழ்த்துக்களோடு நம் மக்கள் திலகத்தின் புத்தக வெளியீட்டு விழா இனிதே சிறப்பாக நடைப்பெற்றது .
திரு பம்மலார் அவர்கள் என்றென்றுமே நடிகர் திலகத்தின் தீவிர விசுவாசி என்பதில் ஐயமில்லை .

Gopal.s
15th April 2013, 09:52 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-16


விஜய் என்னதான் செய்யவில்லை?ஒரு உலகத்திலேயே சிறந்த மகா கலைஞன், தன் சுதந்திர கற்பனைகளோடு, எந்த realism சார்ந்த விஷயங்களோடும் சமரசம் செய்து கொள்ளாமல், முழுதும் தன் திறமை மற்றும் creativity ஐ நம்பி மட்டும் ஒரு பாத்திரத்தை conceptualise செய்து execute செய்தால்? தங்கத்தை போன்று ஜொலித்தன நெல் மணிகள் என்று கவிஞன் எழுதும் சுதந்திரத்தால் தான் கலைகள் ஜீவிக்கின்றன. மொக்கை தனமாக, நெல் மணிகள் நெல் போல தானே இருக்க வேண்டும் என்போருக்கு, கலைகளை ரசிக்கும் பக்குவமோ,அறிவோ இல்லை என்று பொருள். சரோஜா தேவியின் புத்தகம் கூட realism தான். அதை படிப்பதும் சுலபம். ஆனால் ஒரு காளிதாசன் ,கம்பனை பயில பயிற்சி தேவை. அல்லது என் போல ஒரு பொழிப்புரையாளன் தேவை.அப்படித்தான் அந்த உலக கலைஞனின் பாத்திர வார்ப்புகளும்.

விஜய் முதல் shot இலேயே ஈர்த்து விடுகிறான். பிறகு ஈர்க்க பட்டவர்களை தன்னிடையே தக்க வைக்கிறான். scene stealing செய்கிறான்.Antics செய்கிறான்.. பக்கத்திலிருக்கும் ,காமெடியன் ஒருவனை அவன் விளையாட்டிலேயே ஜெயிக்கிறான்.(beating bull in its game ). வேறு படுத்தி கொள்கிறான், நடை ,உடை,பாவனைகளில்.முக்கியமாய் இது வரை காணாத புதுமை ஆக்குகிறான். அதே நேரத்தில் ஒரு பாத்திரமாகவும் establish செய்கிறான்.ஜனங்களை ஆசுவாச படுத்துகிறான்.(heavy emotion ridden proceeding இல் இருந்து) .இன்னும் நிறைய காட்சிகளில் வர மாட்டானா என்று ஏங்கவே வைத்து விடுகிறான்.

கூர்ந்து கவனித்தால் , விஜய் much more than a spoilt mother 's virgin boy and a rich brat . பணத்தின் சௌகரியங்கள் கிடைத்தும், ஒரு identity crisis and false start உள்ள vested interest கொண்ட நண்பர்களால் சூழ பட்டவன். அம்மா, அப்பாவின் அதீத அரவணைப்பில் இருந்தாலும், முழு அப்பாவியும் அல்ல.அதீத பாதுகாப்பே ,அவன் ஆபத்துகளை உணர முடியாமல் செய்து விடுகிறது.தன்னால் தன்னை காத்து கொள்ள முடியும் என்ற அசட்டு நம்பிக்கை வேறு.ஆனால் விஜய்யை புன்னகையோடு தொடர முடியும்.

நண்பன் என்று சூழ்ந்தவனின் அதீத gimmick ஐ எள்ளுகிறான். (அதான் நான் வரை வரைக்கும் கயிறு கூட மாட்டிக்காமே???), விஜய் உனக்குன்னு கேளு என்றதும், இல்லை,இல்லை உனக்குன்னு கேட்கிறேன், அப்பத்தான் குகுளுன்னு என் daddy கொடுக்கும் என்று சொல்லும் அழகு.(நாகேஷ் வேடிக்கை தான் பார்ப்பார் என்ன பண்ணி புகுரலாம் என்று. ம்ஹும் chance இல்லவே இல்லை). மழலையான ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்பிலிருந்து , சுருட்டி கொண்டு சோம்பேறி கோழி தூக்கம் போடுவதாகட்டும்,அம்மா வை ice வைப்பதாகட்டும் (first class Tamil Picture கூட்டிட்டு போறேன் )உன் மேலதான் daddy க்கு எவ்ளோ லவ்வு என்று லொள் விடுவது என்று. (பின்னாடி மௌன ராகம் கார்த்திக் character இதிலிருந்து inspire ஆனதே.சந்திரமௌலி போன்ற antics .அந்த character உம் ஈர்ப்பு கொண்ட synthetic கற்பனையே ).

தன் ரூமில் யாரோ இருப்பதை தெரிந்து, அப்பா அம்மா இல்லை என்று உறுதியானதும், thief என்று மிரட்டல் ,பயம் கலந்த மெல்லிய மிரட்டல், anxiety யுடன் தேய்ந்த குரலில் மூன்றாவது thief என்று விஜய் என்னை முழுவதும் ஆட்கொண்ட பிறகு, சங்கராவது,
கண்ணனாவது?

தன்னிடம் வீட்டிலிருக்கும் கண்ணனை பற்றி பேசும் நிம்மியிடம், அவள் மடியில் உறங்குவது போல் disinterest காட்டி பின் சகிப்பு தன்மை இருக்கிறது. யாரோ புல்புல்தாரா வாசிப்பான் அவன் ரூமுக்கு போறேன் என்று என் கிட்டேயே என்று cute ஆக காதலன் possessiveness குழந்தை தனமாக வெளியிடும் அழகு.(முந்திய வருடம் 80 வயது அப்பரான மனிதன், அடுத்த வருடம் retire ஆக போகும் ஒரு பிராமணன், 20 வயது lover boy ஆக எல்லோர் மனதையும் அள்ளும் அழகு ). அப்பா அமாவிடம் அவர் காதலியை அறிமுக படுத்தும் அழகே அழகு.(certainly not .அதனால்தான் மம்மியை கட்டிக்கிட்டீங்களா, இது செய்யனும்....போன்ற one liner ).

அது மட்டுமல்ல, விஜய்யின் entry தான் அந்த மூன்று சிவாஜி தோன்றும் காட்சிக்கே, epic cult status கொடுக்கிறது. தன் தம்பியே ,தன் பெற்றோர்களுக்கு போதும் என்று கண்ணனை convince செய்து விடுகிறது. அதற்கு முன்னாள் நடந்த அத்தனை உணர்ச்சி மிகு encounter செய்யாத அதிசயம். பார்வையாளர்களும் convince ஆகி விடுகிறோம்.(கண்ணன் cheque ஐ நிராகரிக்கும் நிர்தாட்சண்யம் , விஜய் அதை உரிமை நிறைந்த ஆவலுடன் எடுக்கும் அழகு-- இந்த காட்சியையே அர்த்த படுத்தி விடவில்லையா)

கடைசி காட்சியிலும், அவ்வளவு பெரிய வில்லன் கும்பலிடம், அசட்டு மிரட்டலுடன் போராட்டம். டே... head லியா அடிச்சே என்று மயங்கி சாய்வது.

எனக்கு தெரிந்து character identity establish செய்து சாதாரண one liners ஐ அதீத ரசிக்கும் காமெடி ஆக்கிய அதிசயம் இந்த படத்தில்தான் நிகழ்ந்தது. ஒரு சாதாரண வலுவில்லாத பாத்திர படைப்பு, உலகத்திலேயே அதிக வலுவுள்ள நடிகனின் கற்பனையால் மட்டும் அமர துவம் பெற்று, அவரே நடித்த வலுவுள்ள மற்ற பாத்திரங்களை இரண்டு, மூன்று என்று வரிசை படுத்தும் உலக அதிசயம் நிகழ்ந்த ஒரே காரணம்---தெய்வ மகன் விஜய்.

----To be continued .

Gopal.s
15th April 2013, 11:10 AM
P .B . ஸ்ரீநிவாஸ்.--- சில நினைவுகள்.

நான் M .Tech படித்து கொண்டிருந்த போது ,அடிக்கடி shanti Vihar என்ற Luz Corner ஹோட்டல் செல்வேன். தோசை, Bengal sweet என்னுடைய favourite .எப்போதாவது pav baji .அங்கு என்னுடைய இரண்டாவது அபிமான பாடகர் (முதல் யார் ,நம்ம TMS தான்), ஜிலேபி சாப்பிட்டு கொண்டிருக்கும் அழகை ரசிப்பேன். ஒரு 20 ஜிலேபி வாங்கி ,இருபது பேப்பர் plate கேட்டு வாங்கி கொள்வார். அத்தனையும் ,அங்கே நின்றே சாப்பிடுவார். ரொம்ப பேசவெல்லாம் மாட்டேன். ஒரு நாள் , இன்னொரு நண்பனிடம் காமதேனுவில் noon show அடுத்த வீட்டு பெண் போக வேண்டும் என்று சொல்லி கொண்டிருந்த போது ,அவரே brake அடித்து நின்று, நல்ல பாட்டுக்கள் என்றார். அவர் முதல் பாடல் முதல் என்னை கவர்ந்த அத்தனை தமிழ் பாடல்களையும் சொல்லி, என்னுடைய இரண்டாவது அபிமானம் நீங்கள்தான் என்றேன்.மாலையில் மலர் சோலையில் பற்றி பேசும் போது ,முழு பாடலையும் பாடியே காண்பித்தார்.

பிறகு 90 களில் தொடர்பு விட்டு விட்டது. என் இளைய மகன்(தெய்வ மகன்??!!), நான் கார் பயணங்களில் (நீண்ட) போடும் பழைய தமிழ் பாடல்களில் ஈர்க்க பட்டு PBS ரசிகனானான்.(காலங்களில்,காதல் நிலவே,சின்ன சின்ன ,மாடி மேலே).எனக்கு அவரை தெரியும் என்றதும் த்ரில் ஆகி ,நாங்கள் விடுமுறையில் வரும் போது பார்க்க விரும்பினான். ஒரு பகல்,மாலை இடைப்பட்ட நேரம்...வூட்லண்ட்ஸ் drive -in . சந்திப்பு நிகழ்ந்தது. என்னை recognise பண்ணி கொண்டார். என் மகனிடம் மூன்று மணி நேர உரையாடல். என்ன அருமை!!! நான் NT பக்தன் என்று தெரிந்து, கண்டேனே பாட்டு முணுமுணுத்து ,NT யுடன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். படிக்காத மேதை படத்தை மிக சிலாகித்தார்.NT பொன்னொன்று கண்டேன் கேட்டு விட்டு ,தன் பகுதிக்கே வாயசைக்க விரும்பியதை பெருமையோடு குறிப்பிட்டார்.பிறகு ஐந்தாறு சந்திப்புகள் விழாக்களில்.

நேற்று என் மகன் சோகத்தோடு message our beloved PBS no more . வாழ்க்கையை விட மூர்க்கமான எதிரி யார்? இழப்புகளின் மூலம் வலியை அதிக படுத்தி கொண்டேதானே உள்ளது?

IliFiSRurdy
15th April 2013, 11:28 AM
P .B . ஸ்ரீநிவாஸ்.--- சில நினைவுகள்.



நன்றி கோபால்!
ஒரு நல்ல பாடகர்,
அதை விட ஒரு நல்ல மனிதர்..
திரை வாழ்க்கையின் வம்பு,தும்பு,அரசியலுக்கு அப்பாற்பட்டவர்.
அமைதியானவர்.
ஒரு ஞானியைப்போல வாழ்ந்தவர்.
அதே சமயம் வாழ்க்கையை நேர்மையாக நன்கு அனுபவித்தவர்.
காற்று உள்ள வரை அவர் குரல் ஒலித்துக்கொண்டிருக்கும்.
உங்கள் தெய்வமகனின் கொள்ளுப்பேரனும் அதை ரசித்துக்கொண்டிருப்பான்.

IliFiSRurdy
15th April 2013, 11:42 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-15,16
----To be continued .

மிக அருமையான ஆய்வு..அதிசயிக்க வைக்கும் அவதானிப்பு ...அற்புதமான வர்ணிப்பு..

மூன்று பாத்திரங்களும் தத்தம் வகையில் சுயநலம் கொண்டவர்கள்தான்.
ஆனால் அது எள்ளளவும் தெரியாவண்ணம் தலைவர் வெளிப்படுத்திய
பாங்கினை நன்கு விவரித்துள்ளீர்கள்.ஆனால் நடிப்பென்று பார்த்தால் என் ஒட்டு அப்பாவிற்குத்தான்!
என் மனமோ கண்ணனிடம்..ஆனால் படைப்பின் முழு ஆதிக்கம் விஜய் தான்.
தலைவருக்கென்ன?
உடலின் மேல்பாதியில்(இடுப்பிற்கு மேல்) வலது பகுதி சங்கராகவும்,இடப்பகுதி விஜய் ஆகவும் உடலின் கீழ் பாதி முழுவதும் (இடுப்பிற்கு கீழ்) கண்ணனாகவும் நடிக்க வேண்டும் என்றால் கூட ஊதிதள்ளியிருப்பார்.
உங்கள இந்த அதி தீவிர முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றி,பாராட்டுக்கள்.
You are adding a new dimension to connoisseurship

adiram
15th April 2013, 11:48 AM
Dear Mr. Gopalji,

Your analysis about the three different rolls of 'Dheiva Magan' is excellent. The way you described each roll individually is awsome. We dont know how to express our feelings on reading your essays. What a keen and neat observation..!!!!.

Thanks for all your efforts.

Your experience with our beloved Dr.P.B.Sreenivas is a nice memory. He is a down to earth person in his activities.

Subramaniam Ramajayam
15th April 2013, 12:35 PM
மிக அருமையான ஆய்வு..அதிசயிக்க வைக்கும் அவதானிப்பு ...அற்புதமான வர்ணிப்பு..

மூன்று பாத்திரங்களும் தத்தம் வகையில் சுயநலம் கொண்டவர்கள்தான்.
ஆனால் அது எள்ளளவும் தெரியாவண்ணம் தலைவர் வெளிப்படுத்திய
பாங்கினை நன்கு விவரித்துள்ளீர்கள்.ஆனால் நடிப்பென்று பார்த்தால் என் ஒட்டு அப்பாவிற்குத்தான்!
என் மனமோ கண்ணனிடம்..ஆனால் படைப்பின் முழு ஆதிக்கம் விஜய் தான்.
தலைவருக்கென்ன?
உடலின் மேல்பாதியில்(இடுப்பிற்கு மேல்) வலது பகுதி சங்கராகவும்,இடப்பகுதி விஜய் ஆகவும் உடலின் கீழ் பாதி முழுவதும் (இடுப்பிற்கு கீழ்) கண்ணனாகவும் நடிக்க வேண்டும் என்றால் கூட ஊதிதள்ளியிருப்பார்.
உங்கள இந்த அதி தீவிர முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றி,பாராட்டுக்கள்.
You are adding a new dimension to connoisseurship




your comments about our thalaivar FANTASTIC ganpat sir you have a gone a step ahead of GOPAL. lively discussions.

parthasarathy
15th April 2013, 05:20 PM
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,

அனுபவித்து எழுதுகிறீர்கள்.

தெய்வ மகன் - நடிகர் திலகம் முகத்தைக் காட்டாமல், துவக்கத்தில், உதவியாளர் மூலம் அவரது மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட செய்தி கேட்டவுடன், பீரோவிலிருந்து தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு செல்லத் துவங்கும் கட்டத்திலிருந்து, கடைசியில், மகன் கண்ணன் பாத்திரம் இறக்கும் கட்டம் வரை காட்சிக்குக் காட்சி அற்புதமாக நடித்துக் காட்டிய அத்தனை ரசிகர்களின் நெஞ்சிலும் நிலைத்து விட்ட படம். எனக்குத் தெரிந்து, அவர் நடித்த அத்தனைப் படங்களிலும், இந்தப் படத்திற்கு தான் அவர் காட்சிக்குக் காட்சி படம் நெடுகிலும் கைத்தட்டல்களை வாங்கிஇருந்தார்.

நடிகர் திலகத்தின் வேறுபட்ட நடிப்பை உங்கள் ஆய்வின் மூலம் படிக்கும் போது புல்லரித்து விட்டது. நடிக்கத் துவங்கி 17 வருடங்களுக்குப் பிறகு, "விஜய்" பாத்திரத்திற்கு அவர் தந்திருந்த புதிய நடிப்புப் பரிமாணம் எந்த ஒரு கலைஞனும் எண்ணிப் பார்க்க முடியாதது.

தொடருங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
15th April 2013, 05:30 PM
இன்னொன்று.

இந்தத் திரியில் எனது முதல் பதிவே "NT in Deiva Magan" தான். மிகச் சிறிய பதிவு தான்.

ஏனென்றால், நடிகர் திலகத்தைப் பற்றி நினைக்கும் போதே (மறந்தால் தானே நினைப்பதற்கு?!) "தெய்வ மகன்" தான் என் மனதில் தோன்றும்.

இந்தப் படம் வெள்ளி விழா ஓட்டம் காணாதது இன்று வரை புரியாத புதிர்!

adiram
15th April 2013, 06:00 PM
இன்னொன்று.

இந்தத் திரியில் எனது முதல் பதிவே "NT in Deiva Magan" தான். மிகச் சிறிய பதிவு தான்.

ஏனென்றால், நடிகர் திலகத்தைப் பற்றி நினைக்கும் போதே (மறந்தால் தானே நினைப்பதற்கு?!) "தெய்வ மகன்" தான் என் மனதில் தோன்றும்.

இந்தப் படம் வெள்ளி விழா ஓட்டம் காணாதது இன்று வரை புரியாத புதிர்!

Not only that.

Dheivamagan didnot run 100 days in Salem, Coinbatore, Nellai, Thanjai, Nagerkoil etc.

It ran 100 days only in Chennai, Madurai and Trichy.

Subramaniam Ramajayam
15th April 2013, 09:51 PM
Not only that.

Dheivamagan didnot run 100 days in Salem, Coinbatore, Nellai, Thanjai, Nagerkoil etc.

It ran 100 days only in Chennai, Madurai and Trichy.
The reason for not showing many centres is nothing but SIVANDAMANN released on diwali day. to give way for sivandamann
many centres compelled to sift even chennai they have tried their level best to disturb the movie. luckilly it has not happened. thanks to
VC SHUNMGAM SIVAJI FILMS.

J.Radhakrishnan
15th April 2013, 10:07 PM
மிக அருமையான ஆய்வு..அதிசயிக்க வைக்கும் அவதானிப்பு ...அற்புதமான வர்ணிப்பு..

மூன்று பாத்திரங்களும் தத்தம் வகையில் சுயநலம் கொண்டவர்கள்தான்.
ஆனால் அது எள்ளளவும் தெரியாவண்ணம் தலைவர் வெளிப்படுத்திய
பாங்கினை நன்கு விவரித்துள்ளீர்கள்.ஆனால் நடிப்பென்று பார்த்தால் என் ஒட்டு அப்பாவிற்குத்தான்!
என் மனமோ கண்ணனிடம்..ஆனால் படைப்பின் முழு ஆதிக்கம் விஜய் தான்.
தலைவருக்கென்ன?
உடலின் மேல்பாதியில்(இடுப்பிற்கு மேல்) வலது பகுதி சங்கராகவும்,இடப்பகுதி விஜய் ஆகவும் உடலின் கீழ் பாதி முழுவதும் (இடுப்பிற்கு கீழ்) கண்ணனாகவும் நடிக்க வேண்டும் என்றால் கூட ஊதிதள்ளியிருப்பார்.
உங்கள இந்த அதி தீவிர முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றி,பாராட்டுக்கள்.
You are adding a new dimension to connoisseurship



டியர் கோபால் சார் & கணபதி சார்,

என்னுடைய சாய்ஸ் கண்ணன் தான், மிக அற்புதமான நடிப்பு திறனை வெளிப்படுத்தியது இந்த வேடத்தின் மூலம் தான் என்பது என் கருத்து!

விஜய் போன்ற stylish வேடங்களை பல படங்களில் பார்த்திருக்கலாம், ஆனால் கண்ணன் போன்ற ஒரு பாத்திர படைப்பின் மூலம் அனைவரையும் கொள்ளை கொண்டு விட்டார் என்றே கூறலாம்.

தன் பெற்றோரை தெரிந்து கொள்ள dr மேஜரிடம் கேட்கும் போது அவர் உன் பெற்றோர் உன்னை பிரிய உன் முக லட்சணம் தான் காரணம் என கூறும் போது தூ! இவ்வளவு தானா? doctor! குட்டி அழகா இல்லேன்னு மான் அதை விட்டு பிரிஞ்சதவோ மலர் அழகா இல்லேன்னு கொடி அதை உதிர்ததவோ நன் கதைகள்ல கூட படிக்கல என்று சிரித்து கொண்டே அழும் காட்சியில் கண்ணன் தான் நிற்கிறார்.

அதே போல் தன் தாயை உறங்கும் போது பார்த்து கண்ணீர் விடுவதாகட்டும் பின் கோவிலில் தாயை மறைந்து பார்க்கும் போது அவர் கண்களில் தெரியும் ஏக்கம் ஆகட்டும் கண்ணன் கண்ணன் தான்! விஜய் நெருங்கமுடியாது! இறுதி காட்சியில் தன் மரண தருவாயில் தன் தாய் கண்ணா கண்ணா என்று கதறும் போது அம்மா அது நீங்க வச்ச பேர் இல்லம்மா என்ன மகனேனு கூப்பிடுங்க என்று கதறுவாதகட்டும் கண்ணன் நெஞ்சில் நீங்காத இடம் பெறுகிறார்.

IliFiSRurdy
16th April 2013, 07:21 AM
டியர் கோபால் சார் & கணபதி சார்,

என்னுடைய சாய்ஸ் கண்ணன் தான், மிக அற்புதமான நடிப்பு திறனை வெளிப்படுத்தியது இந்த வேடத்தின் மூலம் தான் என்பது என் கருத்து!..........கண்ணன் நெஞ்சில் நீங்காத இடம் பெறுகிறார்.

அன்பின் ராதாகிருஷ்ணன் அவர்களே,

உங்கள் கருத்தை ஆணித்தரமாக பதிவிட்டதற்கு என் வாழ்த்துக்கள்.
முதலில் நாம் எல்லாரும் அறிவது..தலைவர் படங்கள் ஒரு தலைவாழை இலையில் பரிமாறப்பட்ட ஏழு அடுக்கு விருந்து.இதில் எந்த பதார்த்தம்(தயாரிப்பு) அதிக சுவை என்பது,அவரவர் ருசிக்கேற்ப வேறு படும்.

சரி! நீங்கள் கோபால் சாரின் "தலைவர் நடிப்பில் பல பாணிகள்" பற்றிய விவரங்களை படித்து வருவீர்கள் என நம்புகிறேன்.அதன்படி இப்போ கண்ணன் பாத்திரப்படைப்பை எடுத்துக்கொண்டால்,அது ஒரு linear character.அதாவது பிறப்பிலேயே அவனுக்கு ஒரு கொடுமை,அதுவும் அவன் தந்தையாலேயே, இழைக்கப்பட்டு விடுகிறது.எனவே தன பெற்றோர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை குற்றஞ்சாட்ட எண்ணும் அவன், காரணம் தெரிந்து, அதில் உள்ள ஓரளவு நியாயத்தை உணர்ந்து, மனம் மாறுகிறான்.இதில் complexity எதுவும் இல்லை.

இப்போ சங்கர் பாத்திரத்திற்கு வருவோம்.

இது ஓரளவிற்கு வில்லத்தனமான பாத்திரம்.தான் பெற்ற பிள்ளையையே தன மனைவிக்குத்தெரியாமல் கொல்ல நினைக்கும் இவன்,உண்மையிலேயே வில்லனா? அல்ல.குரூபியாக பிறந்து தான் பட்ட கஷ்டம் தன மகனும் படக்கூடாது என்ற அன்பு அங்கு மறைந்துள்ளதல்லவா?இதை திறம்பட செய்வது கடினம்.எனவே இந்த பாத்திரம் கண்ணன் பாத்திரத்தை விட technical ஆக உயர்ந்து விடுகிறது.

எஞ்சியிருப்பது விஜய்.

இந்த பாத்திரம் உண்மையில் ஒரு இலவச இணைப்பு போல.காரணம் இது இல்லாவிட்டாலும் கதையின் போக்கு மாறாது.இதை உணர்ந்த தலைவர்,அந்த பாத்திரத்திற்கு ஒரு வேறுபட்ட குண இயல்பினை கொடுக்கிறார்.முதலில் தன இரண்டு பாத்திரங்களின் உருவ அமைப்பு பொலிவற்று இருக்கும் நிலையில்,விஜய் மூலம் அதை ஈடு கட்டுகிறார்.இளமையும் அழகும் கொஞ்சும் பாத்திரமாக விஜய் உருவாகிறான்.இதில் அவனை நல்லவனாக காட்டியிருந்தால், அவன் தன அண்ணன் நிழலில் தஞ்சமடைய வேண்டியிருக்கும். மாறாக திமிர் பிடித்தவனாக காட்டியிருந்தால் அவன் தன தந்தை நிழலில் தஞ்சமடைய வேண்டியிருக்கும்
எனவே அவனை ஒரு romantic பாத்திரமாக உருவாக்குகிறார தலைவர்.இது படத்திற்கே ஒரு refreshing change ஐத் தருகிறது.

மேற்கண்ட விஷயங்களை, மிக அழகாக நண்பர் கோபால் தொகுத்துள்ளார்.அவர் எழுதியுள்ள அடிப்படையை உள்வாங்கி, நாம் திரைப்படங்களை நோக்கும் போது, நம் ரசனை உணர்வும் மேம்படுகிறது.தாஜ்மஹாலை நாம் தனியே சென்று பார்ப்பதை விட, ஒரு கைதேர்ந்த வழிகாட்டியின் துணையுடன் பார்க்கும் போது, அதன் உன்னதம் நமக்கு இன்னும் பிரமிப்பை ஊட்டும்.அவ்வகையில் தலைவரைப்பற்றி ஒரு புதிய கோணத்தில் அறிய, இங்கு ஒரு professional guide போல உழைக்கும் நண்பர் கோபாலிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

adiram
16th April 2013, 11:31 AM
The reason for not showing many centres is nothing but SIVANDAMANN released on diwali day. to give way for sivandamann
many centres compelled to sift even chennai they have tried their level best to disturb the movie. luckilly it has not happened. thanks to
VC SHUNMGAM SIVAJI FILMS.

Mr. Ramajayam sir, I dont think so. Because when Sivandha Mann release, Dheiva Magan completed just 65 days only.

Dont give much credit to Mr. V.C.Shanmugam, he is the one spoiled many NT movies not to reach 100 days or silver.

Under his control only Thanga Surangam lifted in 10 weeks when there were much crowd till last day.
Paalamu Pazhamum lifted in 133 days
Saraswathy Sabatham lifted in 133 days
Thillana Mohanambal lifted in 133 days

You are being a Chennaivaasi (madharaswala) you know what happened to 'Dheiva Magan'. There was a situation of lifting Dheivamagan in 98 days in Shanti, Crown, Bhuvaneswari because a new movie 'Aththai Magal' was booked to release in the same three theatres by lifting Dheiva Magan in 98 days.

On hearing the news, NT fans gathered in Shanti and gave pressure to complete 100 days for Dheivamagan. Because of that pressure Dheivamagan was allowed to complete eaxactly 100 days and 'Aththai Magal' was released two days delay in Chennai Shanti, Crown, Bhuvaneswari. Otherwise Dheivamagan might have run 100 days in Madurai New Cinema and Trichy Prabhat only.

Shivaji Films was the big villains for NT films in the past.

goldstar
16th April 2013, 11:49 AM
On hearing the news, NT fans gathered in Shanti and gave pressure to complete 100 days for Dheivamagan. Because of that pressure Dheivamagan was allowed to complete eaxactly 100 days and 'Aththai Magal' was released two days delay in Chennai Shanti, Crown, Bhuvaneswari. Otherwise Dheivamagan might have run 100 days in Madurai New Cinema and Trichy Prabhat only.

Shivaji Films was the big villains for NT films in the past.

I cannot even digest now that for a non-NT movie 'Dheivamagan' was above to lift from 3 three theaters at 98th day. We may agree if 'Deivamagan' will be lifted for another NT movie.

IliFiSRurdy
16th April 2013, 11:59 AM
Mr. Ramajayam sir, I dont think so. Because when Sivandha Mann release, Dheiva Magan completed just 65 days only.

Dont give much credit to Mr. V.C.Shanmugam, he is the one spoiled many NT movies not to reach 100 days or silver.Shivaji Films was the big villains for NT films in the past.

Dear Adiramji,

என்ன ஒரு "irony"!! அதாவது நகை முரண்!!

இதையே நண்பர் கோபால் "தன்" பாணியில் சில மாதங்களுக்கு முன் சொன்னபோது ஒரு வில்லனாக சித்தரிக்கப்பட்டார்.

உண்மை, தக்ஷிணாயனத்தில் கசந்து, உத்தராயணத்தில் இனிக்கும் போலும்!

oowijaez
16th April 2013, 12:24 PM
என்ன ஒரு "irony"!! அதாவது நகை முரண்!!

இதையே நண்பர் கோபால் "தன்" பாணியில் சில மாதங்களுக்கு முன் சொன்னபோது ஒரு வில்லனாக சித்தரிக்கப்பட்டார்.

உண்மை, தக்ஷிணாயனத்தில் கசந்து, உத்தராயணத்தில் இனிக்கும் போலும்!

நகை முரண் என்பதன் அர்த்தம் இப்போது தான் புரிந்தது. நன்றி கண் பத்தாரே. :smile2:

Subramaniam Ramajayam
16th April 2013, 12:37 PM
Dear Adiramji,

என்ன ஒரு "irony"!! அதாவது நகை முரண்!!

இதையே நண்பர் கோபால் "தன்" பாணியில் சில மாதங்களுக்கு முன் சொன்னபோது ஒரு வில்லனாக சித்தரிக்கப்பட்டார்.

உண்மை, தக்ஷிணாயனத்தில் கசந்து, உத்தராயணத்தில் இனிக்கும் போலும்!
True many a sivaji films were lifted when it was going in full houses. in the case of sivandamann sridhar -chitralaya wanted prestgious SHANTHI for theie movie leaving crown and bhuvaneswari as a prestige matter that is why sivandamann release adverisements leaving mount road theatre blank other theatres AGASTYA MEKALA AND NOORJEHAN WERE PRINTED. even inthe advertisements newglobe shown with a different ink.after trying for anand casino thetres in the alternative nothing was worked. later globe was booked with a title NEWGLOBE with little alteraions done. this case sivaji films really obliged. later part aathaimagal was a unexpected bookings made later dropped. we have been running to sivaji films chitralaya always that time. true story happened.
but other movies thillana saraswathi sabatam and thanga surangam
your statement centpercent true.

oowijaez
16th April 2013, 12:41 PM
.


நண்பர் கோபால் எழுதியுள்ள அடிப்படையை உள்வாங்கி, நாம் திரைப்படங்களை நோக்கும் போது, நம் ரசனை உணர்வும் மேம்படுகிறது.தாஜ்மஹாலை நாம் தனியே சென்று பார்ப்பதை விட, ஒரு கைதேர்ந்த வழிகாட்டியின் துணையுடன் பார்க்கும் போது, அதன் உன்னதம் நமக்கு இன்னும் பிரமிப்பை ஊட்டும்.அவ்வகையில் தலைவரைப்பற்றி ஒரு புதிய கோணத்தில் அறிய, இங்கு ஒரு professional guide போல உழைக்கும் நண்பர் கோபாலிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

Absolutely, I second that. I go on without watching any NT movies or any movies for that matter, but these kind of articles give me a different perspective as well as a desire to watch them. In fact I like Vijay more after reading it.

oowijaez
16th April 2013, 12:57 PM
நான் ஒரு paranoid என சிலர் கோபத்தில் சொல்வதுண்டு.


மனித உடலிலிருந்து வாயு பிரிதல் என்று ஒரு genre உள்ளது.
பாடுதல்,பேசுதல்,ஏப்பம் விடுதல் ,கொட்டாவி விடுதல்,தும்முதல்,சொடக்கு போடுதல் மற்றும் அபான வாயு (தன்னிச்சையாகவோ & முயற்சி செய்தோ) என்பவை இதில் அடங்கும்.

உலகின் ஜனத்தொகையான 720 கோடி பேரில் சுமார் 1 கோடி பேரே பாடுவார்கள். ஆனால்720 கோடி பேரும் அந்த கடைசி செயலை செய்வார்கள்.இதை வைத்து இரண்டு பிரிவினரையும் ஒரே குழுவில் அடக்க முடியுமா? கேட்டால் அதிக மக்களால் நேசிக்கப்பட்டு,பயிற்சி செய்யப்படும் கலை என சொல்லி விடலாமா?



:rotfl2: you can't get politer than this, can you?

oowijaez
16th April 2013, 01:03 PM
P .B . ஸ்ரீநிவாஸ்.--- சில நினைவுகள்.


.(காலங்களில்,காதல் நிலவே,சின்ன சின்ன ,மாடி மேலே)..



I always wait for the lines........."என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்" brilliant!

adiram
16th April 2013, 01:06 PM
Dear Adiramji,

என்ன ஒரு "irony"!! அதாவது நகை முரண்!!

இதையே நண்பர் கோபால் "தன்" பாணியில் சில மாதங்களுக்கு முன் சொன்னபோது ஒரு வில்லனாக சித்தரிக்கப்பட்டார்.

உண்மை, தக்ஷிணாயனத்தில் கசந்து, உத்தராயணத்தில் இனிக்கும் போலும்!

Ganpatji,

I strongly hope, I never oppose any of such statement by Mr. Gopal. (may be some other hubbers / fans objected that).

Because I never have a good openion on Mr.V.C.Shanmugam regarding running NT films as per the deisre of the fans.

So. this 'nagai muran' will not be applicable for me.

oowijaez
16th April 2013, 01:09 PM
Spirited teamwork leads to fruit of progress என்பது ஆங்கிலம்.

வைக்க பட்ட sign board

"பரிசுத்த ஆவி நிறைந்த ஒற்றுமை குழுக்களுக்கே பழங்கள் வழங்க படும்."

:rotfl2: I think we can find plenty of examples like this one!

adiram
16th April 2013, 01:20 PM
True many a sivaji films were lifted when it was going in full houses. in the case of sivandamann sridhar -chitralaya wanted prestgious SHANTHI for theie movie leaving crown and bhuvaneswari as a prestige matter that is why sivandamann release adverisements leaving mount road theatre blank other theatres AGASTYA MEKALA AND NOORJEHAN WERE PRINTED. even inthe advertisements newglobe shown with a different ink.after trying for anand casino thetres in the alternative nothing was worked. later globe was booked with a title NEWGLOBE with little alteraions done. this case sivaji films really obliged. later part aathaimagal was a unexpected bookings made later dropped. we have been running to sivaji films chitralaya always that time. true story happened.
but other movies thillana saraswathi sabatam and thanga surangam
your statement centpercent true.

Mr. Ramajayam sir,

Regarding Sivandha Mann theatres, there was an article in our previous part of NT thread. I hop it was written by Murali Srinivas or Saradha (not sure, but as it was about chennai, more chances are there for saradha, because Murali sir is expert in Madurai incidents). As it was interesting, I saved it but forgot to save the hubber's name. It goes like this....

எடுத்தவரை யில் அவ்வப்போது போட்டுப் பார்க்கும்போதெல்லாம் படம் ஸ்ரீதருக்கு திருப்தி யளிக்கவே, படம் தயாராகும்போதே ஒரு முடிவு செய்தார். தன்னுடைய படத்தை தமிழ்நாடு முழுதும், அந்தந்த ஊர்களில் சிறந்த தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்பது அவரது ஆவலாக இருந்தது. இது விஷயமாக அவ்வப்போது விநியோகஸ்தர்களிடம் கலந்து பேச, அவர்களும் அந்தந்த ஏரியாக்களில் நல்ல தியேட்டர்களாக புக் செய்து வைக்க, படம் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஏற்கெனவே புக் பண்ணி வைத்திருந்த தியேட்டர்கள் கைமாறிப் போய்க்கொண்டிருந்தன.

1969 மே மாதத்திலேயே வெளியிடுவதாக ஏற்பாடு செய்திருந்த படம், நினைத்த வேகத்தில் முடியாததால், பின்னர் ஆகஸ்ட் 15 சுதந்திர தின வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியும் முடியவில்லை. வாகினி ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த ஆற்று வெள்ளம் செட் உடைந்து, வடபழனி கடைகளுக்கெல்லாம் தண்ணீர் புகுந்த சம்பவமும் ஒரு காரணம். (முதலில் ஏன் மே மாதத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு காரணம் அன்றைய ரசிகர்களுக்கு தெரியும். 'அவரது' சொந்தப்படத்தை தன் படத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்பது ஸ்ரீதரின் எண்ணம். 'அன்று சிந்திய ரத்தம்' என்ற படத்தலைப்பைச்சொன்னால் போதும். அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். புரியாதவர்கள் விட்டுவிடுங்கள்). இறுதியாக 1969 தீபாவளி வெளியீடு என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதற்கேறாற்போல தியேட்டர்கள் புக் செய்யப்பட்டன.

சென்னை மவுண்ட் ரோடு ஏரியாவில் 'குளோப்' தியேட்டர் என்பது கடைசி நேரத்தில் முடிவானதுதான். இப்போது இருக்கும் அதிநவீன தியேட்டர்கள் எல்லாம் அப்போது கிடையாது. தேவி காம்ப்ளக்ஸ், சத்யம் காம்ப்ளெக்ஸ் எல்லாம் கூட அப்போது இல்லை. இருந்தவற்றில் சிறந்தவைகளாக (சித்ராலயாவின் கோட்டையான) காஸினோ, சாந்தி, ஆனந்த், சஃபையர் காம்ப்ளெக்ஸ் இவைகள்தான். இதில் சாந்தியில் தெய்வமகன், மிடலண்ட்டில் நிறைகுடம் ஓடிக்கொண்டிருந்தன. காஸினோவில் வேறு படம் புக் ஆகிவிட்டது. ஆகவே ஸ்ரீதர் குறி வைத்தது ஆனந்த் தியேட்டரைத்தான். கடைசி நேரத்தில் அது மிஸ்ஸாகிப்போக, வேறு வழியின்றி குளோப் அரங்கை புக் செய்தனர்.

அதே சமயம், வட சென்னையில் அப்போதைக்கு மிகச்சிறந்த தியேட்டராக விளங்கிய 'அகஸ்தியா'வையும், மூன்றாவது ஏரியாவான புரசைவாக்கம் பகுதியில் அப்போதைக்கு சிறந்த தியேட்டராக இருந்த 'மேகலா'வையும் சைதாப்பேட்டையில் 'நூர்ஜகான்' தியேட்டரையும் புக் செய்தனர்.

குறிப்பாக மேகலா தியேட்டரில் படம் வெளியாகப்போகிறது என்றதும் ரசிகர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. காரணம், அந்த ஏரியாவில் 'புவனேஸ்வரி' நடிகர்திலகத்தின் கோட்டையாகத்திகழ்ந்ததுபோல, மேகலா, திரு எம்.ஜி.ஆரின் கோட்டையாகத்திகழ்ந்தது. ஏற்கெனவே நான் குறிப்பிட்டதுபோல, அந்த தியேட்டரில் 100 நாட்களைக்கடந்த படங்களின் பட்டியலை ஒரு ப்ளாஸ்டிக் போர்டில் அழகுறப் பதித்து வைத்திருந்தனர். அதில் சிவந்தமண் வெளியாவதற்கு முன் வரை (1964 - 1969) எட்டு படங்கள் 100 நாட்களைக்கடந்து ஓடியதில், 'எதிர்நீச்சல்' படம் தவிர மற்ற ஏழு படங்கள் (வேட்டைக்காரன், பணக்கார குடும்பம், எங்கவீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, காவல்காரன், அடிமைப்பெண்) என எம்.ஜி.ஆர். படங்கள்தான். நடிகர்திலகத்தின் நல்ல படங்களெல்லாம் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி காம்பினேஷனில் வரும்போது, புவனேஸ்வரிக்குப் போய்விட்டதால் (அல்லது அதைவிட்டால் ராக்ஸி) 'சிவந்த மண்' மூலம் எப்படியும் எதிரியின் கோட்டையில் கொடியேற்றி அந்த போர்டில் இடம் பெற்றுவிட வேண்டும் என்பது ரசிகர்களின் தணியாத தாகமாக இருந்தது.

அதிலும் நடிகர்திலகத்தின் கோட்டையான புவனேஸ்வரியில் 'குடியிருந்த கோயில்' 100 நாட்கள் ஓடியதிலிருந்து, அண்ணனுக்கு ஒரு படமாவது மேகலாவில் 100 நாட்களைக் கடந்து ஓடியாக வேண்டும் என்ற ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்து, சென்னையில் 100 நாட்களைக்கடந்த நான்கு அரங்குகளில் ஒன்றாக மேகலாவில் 'சிவந்த மண்' 100 நாட்களைக்கடந்து ஓடி, வெற்றிகரமாக அந்த போர்டில் இடம்பெற்றது. மேகலாவில் அந்த போர்டையும், ஷீல்டு காலரியில் 'சிவந்த மண்' 100வது நாள் ஷீல்டையும் பார்க்கும்போது நமக்கு ஒரு பெருமிதம் தோன்றும்..

IliFiSRurdy
16th April 2013, 01:48 PM
Ganpatji,


So. this 'nagai muran' will not be applicable for me.

No Mr.Adiram,I never said it was you.
When Mr.Gopal made some comments on Mr.Shanmugam in the same issue,
there were some hue and cries here, stating அண்ணனுக்கு அண்ணன் நமக்கும் அண்ணன்
So none should criticize NT's family members..etc etc.
So I called that as irony.
Thanks

oowijaez
16th April 2013, 01:50 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-1-11..........


Mr Gopal,
I wouldn't even try contemplating leaving a comment regarding this sequence of articles. Forget the content, but the jargons are too strong and intimidating for me. I wouldn't want to risk myself entering into an unfamiliar territory!! But I guess it's a landmark to this thread. Congratulations!

KCSHEKAR
16th April 2013, 04:17 PM
திரு.கோபால் அவர்களின் தெய்வமகன் பதிவு, அதனை ஒட்டிய நண்பர்களின் பதிவுகளைப் பார்த்துவிட்டு, தொலைக்காட்சியைப் பார்த்தால், நேற்று (15-04-13) இரவு sun life -ல் தெய்வமகன்.

பதிவுகளை அசைபோட்டபடியே குடும்பத்துடன் உட்கார்ந்து, பார்த்தேன், ரசித்தேன்.... நன்றி.

joe
16th April 2013, 06:38 PM
சற்று முன் வந்த தகவல். நாகர்கோவிலில் வசந்த மாளிகை மிகப் பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான ஒரே வாரத்தில் ரூ. மூன்று லட்சத்திற்கு மேல் வசூலாகியுள்ளதாக செய்தி. ரசிகர்கள் அளப்பரையும் அமர்க்களமாக நடைபெற்றுள்ளது. நாஞ்சில் நகரம் நடிகர் திலகத்தின் கோட்டை என்பதும் இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

ஜோ சார்
காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்...

நன்றி ராகவேந்திரா சார் . வசந்தமாளிகையை பொறுத்தவரை நான் சிறுவனாக இருந்த போது ஒவ்வொரு வருடமும் நாஞ்சில் நகரில் திரையிடப்படும் . நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழா (டிசம்பர் 3) மாவட்ட அளவில் பிரசித்தி பெற்றது . அப்போதெல்லாம் சுற்று வட்டார கிராமங்களில் சிறுவர்கள் கோட்டாறு சவேரியார் திருவிழாவுக்கு செல்வதற்காக 5 பைசா , 10 பைசா என சேர்த்து திருவிழாவுக்கு வருவார்கள் . மூன்று நோக்கங்கள் ..கோவிலுக்கு செல்வது , தேன்குழல் மற்றும் சேவு வாங்கி சாப்பிடுவது ..மூன்றாவது முக்கியமானது .. நள்ளிரவு சிறப்பு காட்சி படம் பார்ப்பது .. எனக்கு தெரிந்து எல்லா வருடமும் சொல்லி வைத்தாற் போல வசந்த மாளிகையும் , உலகம் சுற்றும் வாலிபனும் வெளியாகும் .. தீபாவளிக்கு வந்த ஹிட் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் . ஆனால் மொத்த கூட்டமும் வசந்த மாளிகைக்கும் , உலகம் சுஊரும் வாலிபனுக்கும் தான் மொய்க்கும் . அதிலும் நாஞ்சில் நகர் நடிகர் திலகத்தின் கோட்டை என்பது எல்லோருக்கும் தெரியும் .. வசந்தமாளிகை போஸ்டர்கள் திரும்பிய பக்கமெல்லாம் ஒட்டப்பட்டிருக்கும் . பல வருடங்கள் இது தொடர்ந்தது .

adiram
16th April 2013, 06:57 PM
Mr. Joe sir,

You cant fully raise your collar, because in the first release of 1972, out of 13 centres where Vasandha Maaligai crossed 100 days there is NO Nagerkoil and NO Thirunelveli.

In southern Tamil Nadu only one centre Madurai crossed 100 days.

But in Central TN, four centres Trichy, Thanjai, Kumabakonam and Mayavaram enjoyed 100 days.

In western TN three centres Kovai, Salem and Erode.

In north TN Chennai and Vellore.

joe
16th April 2013, 10:51 PM
Mr. Joe sir,

You cant fully raise your collar, because in the first release of 1972, out of 13 centres where Vasandha Maaligai crossed 100 days there is NO Nagerkoil and NO Thirunelveli.
அதற்கு பிராயச்சித்தமாத் தான் எங்கூருல வருஷா வருஷம் வெளியிட்டு பார்த்தாங்க போல மக்கள்.

Jokes apart , நான் குமரியிலே பிறந்தாலும் திருச்சியியிலும் படித்திருக்கிறேன் , சென்னையிலும் களித்திருக்கிறேன் . மேற்கு தமிழகம் தவிர்த்து பிற பகுதிகளில் பரிச்சையம் உண்டு . நான் பார்த்தவரை சதவீத அளவில் குமரி மண்ணில் சிவாஜிக்குள்ள ரசிகர் பட்டாளத்துக்கும் , செல்வாக்குக்கும் நிகராக நான் எங்கும் கண்டதில்லை . நான் குமரி மைந்தன் என்பதால் இதை சொல்லவில்லை . முரளி , ராகவேந்திரர் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும் . சிவாஜியின் பிள்ளை என்பதற்காகவே பிரபுவை செல்லப்பிள்ளையாக கொண்டாடிய மண் குமரி மண் . பிரபுவின் 100-வது படம் சென்னையில் கூட இல்லை , தமிழகத்திலேயே 100 நாட்கள் ஓட வைத்த ஒரே இடம் இன்றைக்கு திண்டுக்கல் கூட மாநகராட்சியான பின்னரும் நகராட்சியாக தொடரும் நாஞ்சில் நகர் மட்டும் தான் . அதற்கு பல அரசியல் காரணங்களும் , அது பெருந்தலைவரை பிரதிநிதித்த மண் என்பதும் முக்கிய காரணம் .

Murali Srinivas
16th April 2013, 11:30 PM
ஜோ,

நடிகர் திலகத்தின் மகனுக்கு மட்டுமல்ல அவரது பேரனுக்கும் மாபெரும் வரவேற்பு கொடுத்திருக்கும் நகரம் நாஞ்சில் நகரம். கும்கி இப்போதும் நாஞ்சில் மாநகரில் ஓடிக் கொண்டிருக்கும் செய்தி உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

மே 12 அன்று நாஞ்சில் மாநகரில் படத்தின் 150-வது நாள் வெற்றி விழா நடைபெறும் என்று ஒரு தகவல் வந்திருக்கிறது.

அன்புடன்

கோபால்,

தெய்வ மகன் வந்தால் சாரதி வருவார் என்று தெரியும். வந்து விட்டார். நானும் வருவேன். சற்று பொறுங்கள்.

RAGHAVENDRA
17th April 2013, 06:56 AM
டியர் கோபால் சார்
எட்டாவது உலக அதிசயம் மிக மிக அருமையான தொடர். நடிகர் திலகத்தைப் பற்றி இது வரை யாரும் இவ்வளவு உன்னிப்பாக கவனித்து எழுதியிருக்க மாட்டார்கள் என்று மார் தட்டிக் கூறும் அளவிற்கு ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் பெருமை கொள்ளும் தொடர். இதனை எழுதும் நீங்கள் அவ்வப்போது ஏதாவது கோபமாக எழுதி விட்டு தொடரின் நோக்கம் திசை திரும்புவதற்கு காரணமாகி விடுகிறீர்கள். பின்னர் அப்படி எழுதுவதை நீக்கி விடுகிறீர்கள். உணர்ச்சி வசப்பட்டு எழுதுவதை தவிர்க்கவும்.

RAGHAVENDRA
17th April 2013, 07:11 AM
நிழற்படங்களும் ஆவணங்களும் நடிகர் திலகத்தின் புகழைப் பறை சாற்ற உதவும் ஒப்பற்ற ஆவணங்கள். அவரின் ஒரு பார்வையை வைத்து நாம் ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதலாம். நடிகர் திலகம் திரியைப் பொறுத்த மட்டில் அத்தனை பக்கங்களையும் அவருடைய நிழற்படத்தைப் பார்த்தாலும் இன்னும் பார்க்கத் தூண்டும். அவருடைய சாதனைகளை பரப்ப உதவுபவை விளம்பர நிழற்படங்களே. தங்களுடைய எட்டாவது உலக அதிசயம் தொடரும் நிழற்படமும் காணொளியும் இருந்தால் அவற்றைப் புரிந்து கொள்ள உதவும். இவையெல்லாம் தங்களுக்குத் தெரியாததல்ல. இதனை உருவாக்க தேவைப்படும் உழைப்பு, நேரம், சக்தி போன்றவை, தாங்கள் எழுதுவதற்கு எவ்வளவு செலவிடுகிறீர்களோ, அதற்கு சற்றும் குறைந்ததல்ல. இதனைத் தாங்கள் மனதில் நிறுத்த வேண்டும். நடிகர் திலகத்தின் பல சாதனைகள், திரைப்படம் மட்டுமின்றி, கற்றோர் நிறைந்த பல சபைகளிலே அவர் பெற்ற பெருமைகளும் பாராட்டுக்களும் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல உதவுபவை இவை போன்ற பத்திரிகை செய்திகளும் அவற்றின் நிழற்படங்களுமே.

இதனைத் தாங்கள் அப்பாச்சே இந்தியர்களுடன் அவர் இருந்த நிழற்படத்தை வைத்தே தெரிந்து கொண்டிருப்பீர்கள். எந்த ஒரு அரச பதவியிலும் இல்லாமல் அவர் உலகின் பல நாடுகளில் பல பெருமைகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர்.

அவற்றையும் நாம் இங்கே அவ்வப்போது பகிர்ந்து கொள்வது நம்முடைய கடமை என நான் எண்ணுகிறேன்.

நம் ரசிகர்களில் பலர் பல அரிய ஆவணங்களைத் தங்களிடம் வைத்திருப்பார்கள். அவற்றையெல்லாம் நாம் இங்கே பகிர்ந்து கொண்டால் எதிர்கால சந்ததியினர் நடிகர் திலகத்தைப் பற்றிய பல தகவல்களைத் தெரிந்து கொள்ள நாம் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

இன்னும் பல அரிய ஆவணங்களை நானும் இங்கே பகிரந்து கொள்ள விரும்புகிறேன்...

RAGHAVENDRA
17th April 2013, 07:15 AM
டியர் கோபால் சார்,
voice of america வானொலிக்காக நடிகர் திலகத்தை வி.கோபால கிருஷ்ணன் பேட்டி எடுத்தார். இது 1970களின் துவக்கத்தில் நடந்தது. அந்தப் பேட்டியில் நடிப்புக்கலையின் நுணுக்கங்களைப் பற்றி நடிகர் திலகம் கூறியிருக்கிறார். தங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் அதனை பெற முடியுமா என்று முயன்று பாருங்கள். நான் அவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால் ஒன்றும் தகவல் இல்லை.

RAGHAVENDRA
17th April 2013, 07:53 AM
1962ல் நடிகர் திலகத்தின் அமெரிக்க விஜயத்தின் போது அவர் சந்தித்த பல பிரமுகர்களில் அந்நாளைய பிரபல ஹாலிவுட் நடிகர்களுடனான படங்களைப் பெரும்பாலானோர் பார்த்திருப்பிர்கள். ஆனால் அப்போது அவரைச் சந்தித்தவர்களில் ஹாலிவுட் பிரபல நடிகைகளும் உண்டு என்பதையும், அவர்களிடம் நடிப்பின் நுணுக்கங்களை, இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் நடிப்பைப் பற்றி நடிகர் திலகம் விளக்கியதையும் பலர் அறிந்திருக்க மாட்டீர்கள். அப்படி அவரை சந்தித்து உரையாடிய இரு ஹாலிவுட் பிரபல நடிகைகளுடனான நடிகர் திலகத்தின் நிழற்படங்கள் இங்கே. இவை மிக மிக அபூர்வமானவை, எனக்குத் தெரிந்து இதுவரை இணையத்தில் வந்திராதவை என எண்ணுகிறேன்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/nadigankural62ntusap03fw_zps7c1cb850.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/nadigankural62ntusap03fw_zps7c1cb850.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/nadigankural62ntusap02fw_zps2bcf57e5.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/nadigankural62ntusap02fw_zps2bcf57e5.jpg.html)


இவர்களின் பெயர்கள் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை. கோபால் சார் கூறுவார் என எதிர்பார்க்கிறேன்.

RAGHAVENDRA
17th April 2013, 08:09 AM
டாக்டருடன் பல வருடங்களுக்கு பிறகான சந்திப்பு காட்சி ஒரு கல்வெட்டு. தயக்கம் கலந்த anxiety உடன் நுழைவது ஓர கண்ணால் சிறி து தயக்கம்,சங்கடம், curiousity கலந்த eye follow up என்று ஆரம்பித்து, formal ஆக தொடங்கி,கேட்க விரும்புவதை கேட்டு, நட்பை re -assert செய்து விட்டு,முடிவில் சிதார் ஓசை கேட்டு அலையும் மனதுடன், restless ஆக ,மகனை பார்க்க விழைந்து ,அரை மனுதுடன் ,திரும்பி செல்லும் கட்டம்.சுந்தர்ராஜன்,சிவாஜி இருவருமே உணர்ந்து, அருமையாய் நிமிர்த் தியிருப்பார்கள் . இந்த காட்சி எதை உரைக்க வேண்டுமோ, அதை உரைத்து , எதை உயிர்ப்பிக்க வேண்டுமோ அதை உயிர்ப்பித்து, எதை அடைய வேண்டுமோ அதை அடைகிறது. perfect sub text for method actin


இதே காட்சியை நம் பார்த்தசாரதி சார் சிலாகித்து எழுதியிருந்ததைப் பலர் படித்திருப்பீர்கள். அதனையொட்டிய காணொளியினையும் அப்போது நாம் பார்த்திருப்போம். அதே காட்சியை இப்போது கோபால் சாரின் குறிப்புகளுடன் இணைத்துப் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=WOJ6BqtC4Ms&feature=share&list=UUHZ9TIXjklcLpnIKC2q3h3A

இந்தக் காட்சியைத் தனியாக மெல்லிசை மன்னரின் பின்னணி இசைக்காக பார்த்து அனுபவிக்க வேண்டும். அதனைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

இதில் மறக்க முடியாத கட்டம், படிக்கட்டின் போக்கிலேயே நடிகர் திலகம் தன் பார்வையை செலுத்துவது. சுந்தரராஜன் இறங்கி வருவதை தன் பார்வையிலேயே உணர்த்தும் அற்புத நடிப்பு. இதுவும் ஒரு வகையில் sense memoryயைக் கொண்டிருக்கும்.

RAGHAVENDRA
17th April 2013, 09:15 AM
நான் சொல்லும் ரகசியம் திரைப்படம் தற்போது மோசர் பேர் நிறுவனத்தின் மூன்றில் ஒன்று திரைப்பட நெடுந்தகடு வரிசையில் இடம் பெற்றுள்ளது. அதன் முகப்பு தற்போது நம் பார்வைக்கு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/MOSERNSRVRMMDVDC_zps07e93263.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/vcdvd%20wrappers/MOSERNSRVRMMDVDC_zps07e93263.jpg.html)

KCSHEKAR
17th April 2013, 10:28 AM
சரஸ்வதி சபதம் - எப்படிப்பட்ட ஒரு திரைக்காவியத்தை எப்படி கேவலப்படுத்தி மீண்டும் எடுக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.

http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2013/04/17&PageLabel=31&ForceGif=true&EntityId=Ad03106&ViewMode=HTML

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/DinamalarApril17_zps706184de.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/DinamalarApril17_zps706184de.jpg.html)

KCSHEKAR
17th April 2013, 12:57 PM
பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி இன்று (17-04-2013) அதிகாலை காலமானார்.

திரையிசையில் மகத்தான சாதனை படைத்தவர்கள் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் -டிகே.ராமமூர்த்தி. இருவரும் இணைந்து 700க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளனர். ராமமூர்த்தி, தனியாகவும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்போம்.

vasudevan31355
17th April 2013, 01:07 PM
3000 ஆவது சிறப்புப் பதிவு.

தாம்பத்யம் (20.11.1987)

ஒரு தாராள அலசல்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1mpg_000012976.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1mpg_000012976.jpg.html)

அடப் போப்பா... தேவரையும், தில்லானாவையும், தெய்வ மகனையும் போட்டு ஆளாளுக்கு விலாவாரியாய் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கும் போது வந்துட்டாரு இவரு 'தாம்பத்யம்' படம் பத்தி ஆய்வு எழுதறதுக்கு என்று எண்ணத் தோன்றுகிறதா? 'தாம்பத்யம்'... அப்படி ஒரு படமா!? 'தாம்பத்யம் ஒரு சங்கீதம்' அப்படீன்னு 'மைக்' மோகன் நடிச்ச படம் கூடஒண்ணு ஞாபகம் இருக்கு... ஆனா 'தாம்பத்யம்' அப்படின்னு அதுவும் தலைவர் நடிச்சி ஒரு படம் இருக்கா? என்ற கேள்வி கூட சிலர் மனதில் தொக்கி நிற்கக் கூடும். அழகான குண்டுமணி குவியலில் ஒரு குண்டுமணி கைநழுவி எங்கோ ஓடி மறைந்து விட்டது. அந்த குண்டுமணியைத் தேடி கண்டுபிடித்து மீண்டும் அந்த குண்டுமணிக் குவியலில் சேர்க்க ஆசை. தொலைந்து போன அந்த அழகான குண்டுமணிதான் 'தாம்பத்யம்' அதைத் தேடிக் கண்டு பிடித்து கொடுக்கத்தான் இந்த ஆய்வு.

பொதுவாகவே திரிசூலத்திற்குப் பிறகு தலைவர் நடித்திருக்க வேண்டாம் என்று ஒரு சாரார் கூறுவதுண்டு. திரிசூலத்திற்குப் பிறகெல்லாம் கூட அற்புதமான நடிப்பையும் (ஆஸ்கர் ரேஞ்சுக்கெல்லாம்) அருமையான சில படங்களையும் தந்திருக்கிறாரே! என்று இன்னொரு சாரார் கூறுவதுண்டு. இருநூறுக்கும் மேல் பல வெற்றிப்படங்களையும் தலைவர் தந்திருக்கிறார். தோல்விகளும் நிறைய உண்டு. இது இருநூறுக்கும் மேல் மட்டுமே நடந்ததல்ல. 1952-இலிருந்தே வெற்றிகளும், தோல்விகளும் தலைவருக்கு சர்வ சாதாரணம். படங்களின் வெற்றியாலோ அல்லது தோல்வியாலோ எள்ளளவும் பாதிக்கப் படாத அபூர்வ நடிகர் நம் தலைவர். தொடர் வெற்றிகளைக் கொடுத்தாலும் சரி, தொடர் தோல்விகளைக் கொடுத்தாலும் சரி அவர் அவர்தான். அவர் சாதனையை யாரும் தொட்டுக் கூடப் பார்த்து விட முடியாது. காரணம் திறமை! அசைக்க முடியாத திறமை! உலகில் யாருக்குமே வாய்க்காத திறமை! ஈரேழுலோகத்திலும் எவரும் நினைத்துப் பார்க்க முடியாத திறமை! சிவனே பார்த்து சிலாகித்த திறமை! தன்னம்பிக்கை கொண்ட திறமை! அந்த அற்புதத் திறமை ஒளி வீசிப் பிரகாசித்த அவருடைய இன்னொரு படம்தான் தாம்பத்யம். அவருடைய திரையுலக வாழ்க்கை முடியப் போகும் இறுதிக் காலகட்டத்தில் கூட அந்த கிழட்டு சிங்கத்தின் கில்லாடித்தனங்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்ட படம்.

சரி! 1987-இல் வெளி வந்த இந்தப் படத்தில் அப்படி என்ன விசேஷம்! பெரிய அளவில் விசேஷமெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு சாதாரணப் படம்தான். ஆனால் நல்ல படம். நல்ல நடிப்பைக் கொண்ட ஆனால் கவனிக்கப்படாமல் விட்டுவிடப்பட்ட வீணாய்ப் போன நல்ல படம்.

தாம்பத்யத்திற்கு முன் வந்த ஜல்லிக்கட்டு (28.08.1987) ஒரு சூப்பர் ஹிட் மூவி. ஜல்லிக்கட்டுடன் சேர்ந்து வெளியான தேங்காய் சீனிவாசனின் கிருஷ்ணன் வந்தான் ஒரு சுமாரான வெற்றிப்படம். அதற்கு முன் இரண்டு தெலுங்குப்படங்கள். விஸ்வநாத நாயக்கடு (தெலுங்கு) 14.08.1987 அக்னி புத்ருடு (தெலுங்கு) 27.08.1987. இதை விட்டு விடுவோம்.

அதற்கும் முந்தைய படங்கள்

ராஜ மரியாதை (14.01.1987)
குடும்பம் ஒரு கோவில் (26.01.1987)
முத்துக்கள் மூன்று (06.03.1987)
வீர பாண்டியன் (14.04.1987)
அன்புள்ள அப்பா (16.05.1987)

இவையெல்லாம் நம்மை சோதனை செய்த படங்கள். ஏனோதானோ என்று தொடர்ந்து வந்து நம்மை ஏமாற்றிய படங்கள். தலைவர் வேறு உடல்நிலை சரியில்லாமல் இளைத்து சோர்வுற்றிருந்த கால கட்டம். அதிகமாக சோர்வுற்றிருந்த நம்மை 'ஜல்லிக்கட்டு' குளுகோஸை ஏற்றி உற்சாகமாய் துள்ளி எழச் செய்தார் தலைவர். இந்தக் காலகட்ட சூழ்நிலையில் வந்து மாட்டிக் கொண்டு வீணான படம்தான் தாம்பத்யம். பஸ்சிலோ, ட்ரெயினிலோ நாம் கடலை வாங்கி சாப்பிடும் போது இரண்டு சொத்தைக் கடலை வாயில் மாட்டிக் கொண்டால் அடுத்து உரித்துப் போடும் நல்ல கடலையும் அந்த சொத்தைகளோடு சேர்ந்து வீணாகி விட்டதைப் போன்ற ஒரு நல்ல படம்தான் இந்த தாம்பத்யம். அப்பாடா..( தாம்பத்யம் பற்றி எழுத ஆரம்பிப்பதற்கு எவ்வளவு build-up கொடுக்க வேண்டியிருக்கிறது?)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4mpg_003861591.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4mpg_003861591.jpg.html)

சரி! தாம்பத்யத்தைப் பற்றி சற்று விரிவாகத்தான் கூற வேண்டியிருக்கிறது. காரணம் இந்தப் படம் மிகக் குறைந்த நாட்களே ஓடிய படம். அடுத்து நம் ரசிகர்கள் அதிகம் பார்த்திராத படம். பொதுவாகவே நம் ரசிகர்கள் ரொம்ப சுமாரான படங்கள் என்றால் கூட தலைவரின் படங்களை குறைந்தது இரண்டு முறையாவது பார்த்து விடுவார்கள். ஆனால் இந்தப் படத்திற்கு அந்த வாய்ப்பு ரொம்பக் கம்மி. ஒருமுறைதான் பார்த்திருக்கக் கூடும். அதனால் படத்தின் காட்சிகள் நினைவில் இருப்பது கஷ்டமே. அப்படியே நினைவில் இருந்தாலும் ஒன்றிரண்டு காட்சிகள்தாம் நினைவில் நிற்கக் கூடும். அதுவும் ஒரு சிலருக்கே! மீண்டும் பார்த்து நினைவில் கொள்ள மறு வெளியீடு என்ற பேச்சுக்கெல்லாம் இடமேயில்லை. இணையத்தில் ஏதாவது தென்படுமா என்று பார்த்தால் மருந்துக்குக் கூட இப்படத்தைப் பற்றிய தகவல்களோ, கோபாலுக்கு ரொம்ப விருப்பமான பொம்மைகளோ இல்லை. ஒரு stamp size இமேஜ் கூட இணையத்தில் இல்லை. ராஜ் டிவிக்காரர்கள் இப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை வைத்திருக்கிறார்கள். அதுவும் raj digital plus channel இல்தான் எப்போதோ ஒருமுறை போடுவார்கள். cable காரர்கள் raj digital plus கொடுப்பதே இல்லை. dish -களிலும் raj digital plus வருவதில்லை. vcd மற்றும் dvd க்களும் இப்படத்திற்கு இல்லை.

எதிர்பார்த்து எதிர்பார்த்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் போராடி ஒருவழியாக இப்போதுதான் இப்படத்தைப் பிடித்தேன். நானும் ரிலீசில் ஒருமுறைதான் பார்த்திருந்தேன். நிறையக் காட்சிகள் ஞாபகமில்லை. இப்போது ரீவைண்ட் செய்து பார்க்கும் போது மெய்யாலுமே சுகமான ஒரு அனுபவம் கிடைத்தது மறுப்பதற்கில்லை. மிகவும் ரசித்துப் பார்த்தேன். நிச்சயமாக எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆவல் எல்லை மீறியது. அதுதான் எழுத ஆரம்பித்து விட்டேன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3mpg_000580403.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3mpg_000580403.jpg.html)

படத்தின் கதை என்ன? சிம்பிள்தான். பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சத்தியமூர்த்தி வேறு யார்?! (சாட்சாத் நம் அன்பு தெய்வம்தான்) தன் தர்மபத்தினி ஜானகி (அம்பிகா) மற்றும் தன்னுடைய அன்பு மகள்கள் ('சங்கராபரணம்' துளசி, கலைச்செல்வி) இருவருடனும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தன் மனைவி மேல் உயிரையே வைத்திருக்கும் சத்தியமூர்த்திக்கு சதா அவளை விளையாட்டிற்கு சீண்டிப் பார்ப்பதே வழக்கம். ஜானகியோ ஒரு 'படபட' என பொரிந்து தள்ளும் ஒரு படபடப்பு முன்கோபி கேரக்டர். ஆனால் கணவனே கண்கண்ட தெய்வம். பிள்ளைகளுக்கும் பெற்றோர்கள் மீது கொள்ளைப் பிரியம். கணவன் மனைவி இருவரும் பரஸ்பரம் அன்னியோன்யமான அன்பு கொண்டு அருமையான தாம்பத்ய (ஹைய்யா! நைசாக படத்தின் பெயரை நுழைத்து விட்டேன்) வாழ்க்கையை கலகலப்பாக நடத்தி வருகிறார்கள். இவர்களுடன் ஜானகியின் அப்பாவும் (வி கே ஆர்) கலகலப்பு பேர்வழியாய் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

சத்திய மூர்த்தியின் பெண்களில் கலைச்செல்வி ஜூனியர் வக்கீலையும் (பாண்டியன்) பத்திரிகை ரிப்போர்ட்டரான அருணா ஒரு இன்ஸ்பெக்டரையும் காதலிக்கிறார்கள். இன்ஸ்பெக்டரோ கடமை தவறாத சௌத்ரியின் வழித்தோன்றல் போல எப்போதும் கடமை கடமை என்றிருப்பவன். அவனுக்கு வாழ்வில் மிகப்பெரிய லட்சியம் ஒன்று. அவனைத் தாய்க்குத் தாயாக வளர்த்த அவனுடைய அக்கா டாக்டர் லதாவை (ராதா) கொலை செய்தவனை கண்டு பிடித்து பழி தீர்ப்பதே அது. அதற்காகவே அவன் இன்ஸ்பெக்டரானவன். பழி தீர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்துக் கிடப்பவன்.

பெண்களுடைய காதலை ஒரு சந்தர்ப்பத்தில் தெரிந்து கொள்கிறார் சத்தியமூர்த்தி. அவர்கள் காதலுக்கு பச்சைக்கொடியும் காட்டிவிடுகிறார். முதலில் மறுக்கும் தன் மனைவி ஜானகியுடனும் சாதுர்யமாகப் பேசி பெண்களின் ஆசைக்கு அவளை சம்மதம் சொல்ல வைக்கிறார். கல்யாணமும் ஏற்பாடாகிறது. திருமணத்திற்காக துணிக்கடையில் துணி எடுக்கும் போது ஆரம்பிக்கிறது வில்லங்கம். கடையில் யாரோ ஒரு தாடிக்காரன் சத்தியமூர்த்தியை தனியே அழைத்து மிரட்டும் தொனியில் பேச ஆரம்பிக்க அந்த நபரை அடையாளம் கண்டு நிலைகுனிந்து போகிறார் சத்தியமூர்த்தி. ஆனால் அவனைத் தெரியாதது போல அவனிடம் பேசிவிட்டு வெளியேறிவிடுகிறார்.

வீட்டில் கல்யாண சந்தோஷ மூடில் இருக்கும் தன் மனைவி ஜானகியுடனும், அருமை மகள்களுடனும் கடும் கோபத்தைக் காட்டுகிறார்...(அந்த மர்ம மனிதனைச் சந்தித்தன் விளைவாக). நிம்மதி இழந்து வெளியில் எதையும் சொல்ல முடியாமல் புழுவாய்த் துடிக்கிறார். இயலாமை கோபமாய் மாறுகிறது. தேவையில்லாமல் இதுவரை பார்க்காத கோபக்கார அப்பாவைப் பார்த்து பெண்கள் அதிர்ந்து நிற்கிறார்கள். ஜானகி கூட தன் முன் கோபங்களை மூட்டை கட்டிவிட்டு கணவன் எதையோ வெளியில் சொல்ல முடியாமல் மென்று விழுங்குகின்றானே என்று பரிதவிக்கிறாள். கணவனை சாந்தப்படுத்த முயல்கிறாள். மனைவியின் அரவணைப்பால் சற்று சாந்தமடைகிறார் சத்தியமூர்த்தி.

அந்த மர்ம மனிதன் நேராக சத்தியமூர்த்தியின் வீட்டிற்கே வந்து விடுகிறான். சத்தியமூர்த்தி அந்த நபருக்கு பயந்து, அவன் கேட்ட பணத்தைக் கொடுப்பதை அருணா பார்த்து விடுகிறாள். அதை போட்டோவும் எடுத்து விடுகிறாள். தன் அப்பாவை அந்த மர்ம மனிதன் மிரட்டுவதையும், தன் அப்பா அவனுக்கு பயந்து பணம் கொடுப்பதையும் தன் இன்ஸ்பெக்டர் காதலனிடம் சொல்லி தன் அப்பாவைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்வதோடு அந்த மர்ம மனிதனின் போட்டோவையும் அவனிடம் கொடுத்து விடுகிறாள். அந்த போட்டோவை வைத்து 'ஜக்கு' என்ற அந்த மர்ம மனிதனை பிடிக்கிறான் இன்ஸ்பெக்டர். அதற்குப் பிறகு....

கல்யாண நாளும் வருகிறது. கல்யாணத்துக்கு மாப்பிள்ளையாக வர வேண்டிய இன்ஸ்பெக்டர் காக்கி உடையில் கோபமாக வந்து நிற்கிறான். டாக்டர் சத்திய மூர்த்தியை அரெஸ்ட் செய்யப் போவதாக கூறி அனைவரையும் அதிர வைக்கிறான். காரணம் கேட்பதற்கு தன் உயிருக்குயிரான டாக்டர் அக்காவை சத்தியமூர்த்திதான் இருபது வருடங்களுக்கு முன்னால் கொலை செய்ததாகக் கூறி அதற்கான ஆதாரமாக அவனுடைய அக்காவை சத்தியமூர்த்தி கத்தியால் குத்தி கொலை செய்து கத்தியை வயிற்றிலிருந்து வெளியே எடுப்பது போன்ற ஒரு போட்டோவையும் காண்பிக்கிறான். அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக சத்தியமூர்த்தியும் தான் தான் அந்த கொலைகாரன் என்று முழுமனதுடன் ஒத்துக் கொண்டு கைதாகிறார்.

சந்தோஷமாக வாழ்ந்த குடும்பம் சங்கடத்துக்குள்ளாகி தவிக்கிறது. ஜானகி தன் கணவன் கொலை செய்திருக்க முடியாது என்று நம்புகிறாள். ஆனால் கணவன் ஏன் குற்றத்தை தானே ஒத்துக் கொள்ள வேண்டும் என்று குழம்புகிறாள். பெண்களோ அப்பா கொலைகாரன்தான் என்று தீர்மானித்து விடுகிறார்கள். அப்பாவை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். அருணா இன்ஸ்பெக்டரிடம் சென்று தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு கேட்க இன்ஸ்பெக்டரோ, "என் அக்காவைக் கொன்ற உன் அப்பாவை கொஞ்சம் கொஞ்சமாக பழி தீர்க்க உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் இருப்பதுதான் சிறந்த வழி" என்று உதாசீனப் படுத்தி அனுப்பி விடுகிறான்.

ஜானகி ஜெயிலுக்கு சென்று கணவனிடம் நடந்ததை சொல்லுமாறு வற்புறுத்துகிறாள். சூழ்நிலை காரணமாகத்தான் அந்தக் கொலையை செய்ததாக மட்டும் கூறுகிறார் சத்தியமூர்த்தி. ஆனால் ஜானகியோ வேறு விதமாக முடிவு செய்கிறாள். "கொலை செய்யப்பட்ட டாக்டர் லதாவிற்கும், உங்களுக்கும் கள்ளக்காதல்... அந்தத் தொடர்பு வெளியே தெரியாமல் இருக்கத்தான் நீங்கள் லதாவைக் கொலை செய்தீர்கள்" என்று சத்தியமூர்த்தியிடம் வெடிக்கிறாள். இதுவரை தன் கணவனுடன் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி வெட்கப்படுவதாகக் கூறிக் கதறுகிறாள். கணவன் தனக்கு துரோகம் செய்து விட்டதாகக் கூறி வெதும்பி வெளியேறுகிறாள். அனைத்திற்கும் மௌனம் காக்கிறார் சத்தியமூர்த்தி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4mpg_001320711.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4mpg_001320711.jpg.html)

ஜெயிலில் இருந்து வீடு திரும்பிய ஜானகி தன் கணவன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக எண்ணி எண்ணி வருந்தி கையில் கிடைத்த பொருள்களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு அறையில் அடைபட்டு மயக்கமாகக் கிடக்கிறாள். பரிசோதனை செய்த டாக்டர் ஜானகியின் இதயத்துடிப்பு மிக பலவீனமாக இருப்பதாகவும், உடனே இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். விஷயம் சத்தியமூர்த்திக்குத் தெரியவர ஜானகிக்குத் தானே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் மனு கொடுக்க, கோர்ட்டில் அந்த மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. காரணம் தன் கணவர் கையால் தனக்கு ஆபரேஷன் நடப்பதை ஜானகியே விரும்பாததால்தான். அவ்வளவு வெறுப்பு அவளுக்குத் தன் கணவன் மேல்.

ஆனால் சத்தியமூர்த்தி தன்னால்தான் ஜானகியைக் காப்பாற்ற முடியும் என்று தீர்மானமாக நம்புகிறார். அதனால் ஜானகிக்கு ஆபரேஷன் செய்ய ஜெயிலில் இருந்து தப்பி வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வரும் தன் அப்பாவை கொலைகாரன் என்றும், அவரால்தான் தன் அம்மாவிற்கு இந்த கதி நேர்ந்தது என்றும், அவர் கையால் தன் அம்மாவிற்கு ஆபரேஷன் செய்வதை தான் அனுமதிக்க முடியாது என்றும் கத்துகிறாள் செல்ல மகள் அருணா. மகளின் தரம் கெட்ட பேச்சைக் கேட்டு கொதித்துப் போகிறார் சத்தியமூர்த்தி. அவளை அடித்தும் விடுகிறார். மனைவிக்கு உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும்... நடந்தவை என்னவென்று மகளுக்கும் தெரிய வேண்டும், நமக்கும் தெரிய வேண்டும் என்று தன்னுடைய பிளாஷ்பேக்கை சொல்ல ஆரம்பிக்கிறார்.

இனி பிளாஷ்பேக்

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcT6HdYJL5ECRThopub1uYOsbTVY-TUkZ6PJ6rTe3z3ABK31kU90VQ

இருபது வருடங்களுக்கு முன்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4mpg_002835631.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4mpg_002835631.jpg.html)

மெடிக்கல் காலேஜில் research செய்யும் professor ஆக பணி புரியும் இளம் டாக்டர் சத்தியமூர்த்தி. அவருடன் பணி புரியும் அழகான இளம் டாக்டர் லதா (ராதா). இருவருக்கும் அளவான, அழகான நட்பு. லதாவிற்கு சத்தியமூர்த்தி மீது ஒருதலைக் காதல். அதே போல் சத்தியமூர்த்தி குடியிருக்கும் house owner (V.K.R) இன் மகள் ஜானகியும் (அம்பிகா) சத்தியமூர்த்தியை கண்மூடித்தனமாகக் காதலிக்கிறாள். சத்தியமூர்த்தியை தான் தற்கொலை செய்வதாகக் கூறி செல்லமாக மிரட்டியே தன்னைக் காதலிக்க வைத்து விடுகிறாள் ஜானகி. சத்தியமூர்த்தியும் ஜானகியை விரும்பி கல்யாணத்துக்கும் சம்மதிக்கிறார். லதா வீட்டிற்கு சென்று அவளிடம் திருமண பத்திரிக்கை கொடுக்கிறார். ஜானகியை தான் விரும்பி கல்யாணம் செய்து கொள்ளப் போவதையும் கூறுகிறார். பத்திரிகை பார்த்து லதா அதிர்ச்சியடைகிறாள். ஆனால் அப்போதும் பேசா மடந்தையாய் இருந்து சத்திய மூர்த்தி மேல் தனக்குள்ள காதலை மறைத்து விடுகிறாள்.

இதற்கு நடுவில் வி.கே.ஆரின் நண்பர் ஒருவர் தன் மகன் ஜக்கு (மலையாள நடிகர் ஜனார்த்தனன்)விற்கு (அதே மர்ம நபர்தான்) ஜானகியை திருமணம் செய்து கொடுக்கக் கேட்க அதற்கு வி.கே.ஆர் மழுப்பலாக பதில் சொல்லி அனுப்பி விடுகிறார். இப்போது ஜானகிக்கும், சத்தியமூர்த்திக்கும் திருமணம் இனிதே நடக்கிறது. கல்யாணம் ஆன கையேடு சத்தியமூர்த்திக்கு வெளியூரில் வேலை கிடைத்து விட, அதை ஏற்று ஜானகியுடன் வெளியூர் சென்று வேலை பார்க்கிறார் சத்திய மூர்த்தி.

வி.கே.ஆரின் நண்பர் தன் மகன் ஜானகிக்குத் திருமணம் நடந்தது தெரியாமல் ஜக்குவிற்காக மீண்டும் ஜானகியை பெண் கேட்டு வர, ஜானகிக்கு சத்தியமூர்த்தியுடன் திருமணம் முடிந்த விஷயத்தை அவர்களிடம் தெரியப்படுத்துகிறார் வி.கே.ஆர். இதனால் கோபமுறும் ஜக்கு சத்தியமூர்த்தியையும், ஜானகியையும் பழி வாங்கத் துடிக்கிறான். அவனிடம் ஒரு பழக்கம். எதையுமே கேமராவினால் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு ப்ளாக்மெயில் செய்வதுதான் அது.

வெளியூர் சென்ற சத்தியமூர்த்தி தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது. ஒருநாள் தம்பதியர் குழந்தையுடன் இருவரும் வெளியே போகும்போது எதிர்பாராமல் லாரி விபத்தொன்றில் சிக்கி தன் சுய நினைவை இழக்கிறாள் ஜானகி. குழந்தை போல மாறி விடுகிறது அவள் குணம். ('மூன்றாம் பிறை' ஸ்ரீதேவி போல) சத்திய மூர்த்தி அவளை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்று குணப்படுத்த முடிவெடுக்கிறார். முதலில் தான் மட்டும் சென்று அந்த மனோதத்துவ நிபுணரைப் பார்க்க முடிவெடுத்து செல்கிறார்.அங்கெ போய்ப் பார்த்தால் அது மெடிக்கல் காலேஜில் அவருடன் பணி புரிந்த டாக்டர் லதா. நிரம்ப வசதியாகப் போயிற்று. லதா சத்தியமூர்த்தியின் மேல் கொண்ட காதலால் திருமணம் செய்யாமலேயே வாழ்க்கை நடத்துகிறாள். சத்தியமூர்த்தி ஜானகியின் பரிதாப நிலையைப் பற்றி லதாவிடம் கூறுகிறார். தான் ஜானகியை குணப்படுத்துவதாக சத்தியமூர்த்தியிடம் கூறுகிறாள் லதா. சத்தியமூர்த்தியை பழிவாங்கத் துடிக்கும் ஜக்குவும் சத்தியமூர்த்தியைத் தேடி அவர் இருக்கும் இடத்திற்கே வந்து அவரை watch செய்தபடியே இருக்கிறான்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4mpg_003996191.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4mpg_003996191.jpg.html)

ஒருநாள் ஜானகிக்கு சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர் லதா ஜானகி வீட்டிற்கு செல்ல, அங்கே தன் நிலை மறந்த ஜானகி தன் குழந்தையை மாடிப்படிகளில் கைப்பிடியில் தவழ வைத்து விளையாடப் பார்க்கிறாள். அதைக் கண்டு துடித்துப் போகும் லதா எவ்வளவோ எச்சரித்தும் ஜானகி குழந்தையை கைப்பிடிகளில் சறுக்கி விட்டு விடுகிறாள். நல்ல வேலையாக லதா குழந்தையைப் பிடித்துக் காப்பாற்றி விடுகிறாள். குழந்தையை தன்னிடம் கொடுக்கச் சொல்லி லதாவை ஜானகி வற்புறுத்த, லதா குழந்தையின் உயிருக்கு ஜானகியினால் ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சி குழந்தையை ஜானகியிடம் கொடுக்க மறுக்க, கோபமுறும் தன் நிலை மறந்திருக்கும் குழந்தை போன்ற ஜானகி கையில் கிடைத்த பொருளை எல்லாம் எடுத்து லதாவின் மேல் வீச, லதா குழந்தையை அங்கிருக்கும் நர்ஸிடம் பத்திரமாக ஒப்படைத்து விடுகிறாள். தொடர்ந்து லதாவைத் தாக்கிக் கொண்டிருக்கும் ஜானகி தான் செய்வது இன்னதென்று தெரியாமல் பழம் அறுக்கும் கத்தியை எடுத்து லதா மேல் வீச, வயிற்றில் கத்திக்குத்து பட்டு லதா உயிருக்குப் போராடுகிறாள். அந்த சம்பவத்தைப் பார்க்கும் ஜானகி அதிர்ச்சியில் மயக்கமாகிறாள். மரண வாசலை நெருங்கிக் கொண்டிருக்கும் லதாவை அவ்வமயம் அங்கு வந்து விடும் சத்தியமூர்த்தி பார்த்து விடுகிறார். வயிற்றில் கத்தி செருகப்பட்டிருக்கும் நிலையில் துடிக்கும் லதாவைக் காப்பாற்ற அவள் வயிற்றிலிருந்து கத்தியை சத்தியமூர்த்தி எடுக்கப் போக, சரியான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த ஜக்கு அதைப் படம் பிடித்து விட்டு ஓடி விடுகிறான். லதா உயிரை விடப் போகும் நிலையில் தனக்கிருந்த சத்தியமூர்த்தி மீதான காதலை அவரிடம் சொல்கிறாள். சத்திய மூர்த்திக்கு இதுவும் ஒரு அதிர்ச்சி. அதுமட்டுமல்லாமல் லதா ஜானகி தன் மீது கத்தி வீசியதைப் பார்த்து அதிர்ச்சியில் மயக்கமுற்றதால் அந்த அதிர்ச்சியே அவளை பழைய நிலைக்குத் திரும்ப குணப்படுத்தி இருக்கக் கூடும் என்றும், அப்படி பழைய மாதிரி அவளுக்கு நினைவு திரும்பியிருந்தால் தற்போது நடந்த எந்த நிகழ்வையும் அவளிடத்தில் சொல்லக் கூடாது... அப்படிச் சொன்னால் தான் ஒரு கொலைகாரி என்ற குற்ற உணர்வே அவளைக் கொன்று விடும் என்று கூறி அதைக் கூறாமல் ஜானகியைப் பார்த்துக் கொள்ளும்படி கூறி தன் ஒருதலைக் காதலன் மடியிலேயே உயிர் நீக்கிறாள் லதா. தன் குடும்பத்தையே காப்பாற்றிய அந்த தூய உள்ளத்தை நினைத்து உள்ளம் கலங்குகிறார் சத்தியமூர்த்தி.

முன் கதை தொடர்ச்சி...

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4mpg_004557791.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4mpg_004557791.jpg.html)

தான் எடுத்த அந்த போட்டோவைக் காட்டித்தான் போலீஸிடமும், ஜானகியிடமும் சொல்லிவிடுவதாக ஜக்கு சத்திய மூர்த்தியிடம் பிளாக்மெயில் செய்து பணம் பறித்தான். தன் அம்மாவிற்காக தன் தந்தை கொலைகாரப் பட்டம் ஏற்றுக் கொண்ட தியாக உள்ளத்தை எண்ணி, உண்மையை உணர்ந்து, தந்தையை அறிந்து, தந்தையிடம் மன்னிப்பு கேட்கிறாள் அருணா. தன்னுடைய ஹாஸ்பிட்டலுக்கு தன் மனைவி ஜானகியைக் கொண்டு சென்று மகள்களையும் மாமனாரையும் காவலுக்கு வைத்து விட்டு ஜானகிக்கு பல்வேறு இன்னல்களுக்கும், தடங்கல்களுக்கும் இடையே இருதய ஆபரேஷனை வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறார் சத்திய மூர்த்தி. சத்தியமூர்த்தியை பிடிக்க கழுகாய் வட்டமிடும் இன்ஸ்பெக்டரும் அருணா மூலம் உண்மையை உணருகிறான். ஜானகி, மற்றும் அனைவருக்கும் உண்மை தெரிய வருகிறது. ஜானகி தன்னுடைய தவறுகளுக்காக சத்தியமூர்த்தியிடம் மன்னிப்புக் கோருகிறாள். அவர்களுக்குள் இருந்த அன்னியோன்யமான தாம்பத்யம் மீண்டும் மலர்ந்து மணம் பரப்ப ஆரம்பிக்கிறது. அவர்களுடைய மகள்களுக்கும் திருமணம் இனிதே நடைபெற முடிவு மங்களம்.

vasudevan31355
17th April 2013, 01:19 PM
தாம்பத்யம்...தொடர்ச்சி

ஒரு தாராள அலசல்.

தலைவர் சாம்ராஜ்யம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1mpg_000249535.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1mpg_000249535.jpg.html)

அருமையான பாத்திரம். அதுவும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர். பாந்தமான தோற்றம். அரண்மனை போன்ற வீட்டில் கிட்டத்தட்ட (ஏவிஎம் வீடு செட் மாதிரி) மாடிப்படிக்கட்டுகளில் அவர் சூட்கேஸுடன் ஹாஸ்பிட்டலுக்கு புறப்பட்டு இறங்கி வரும் அறிமுகக் காட்சியே நம்மை கிறங்க வைத்து விடும். அம்பிகாவுடம் இவர் ஆரம்பிக்கும் சீண்டல்கள் எல்லாம் சுவையோ சுவை. Flower wash இல் செம்பருத்திப் பூவை அம்பிகா வைக்க சொல்லி வேலையாட்களிடம் ஆர்டர் பண்ண, நம்மவரோ ரோஜாதான் வைக்க வேண்டுமென அடம் பிடிக்க,"செம்பருத்தி ஏன் பிடிக்காது? என அம்பிகா வினவ, அதற்கு இவர் "Rose ... ரொமாண்டிக் flower...செம்பருத்தி சாமிக்குப் போடுற பூடி... கிழவிகளுக்குதான் பிடிக்கும்" என்பார். என்ன ஒரு நக்கல்!... பதிலுக்கு அம்பிகா, "இவர் குமரன்...பேரன் பேத்தி எடுக்கிற வயசு" என்று எதிர் நையாண்டி செய்ய, "பேரன் பேத்திகளை வச்சி வயசை எடை போடறதில்ல...spirit, outlook, behaviour" என்று கட்டை விரலை உயர்த்தியபடியே,"இத வச்சிதாண்டி எடை போட்றாங்க", என்று ஆடியபடியே நடிகர் திலகம் சொல்வது, "நான் என்னைக்குமே ஹீரோதாம்மா! ( நூற்றுக்கு இருநூறு உண்மை) வாவ்!... ரகளை.

அதேபோல நடிகர் திலகத்தின் நகைச்சுவை பஞ்சுக்கு ஒரு உதாரணம். பெண்கள் இருவரும் தாத்தா வி.கே.ராமசாமியின் பாட்டுக்கு பயந்து ஓடிவர, தலைவர் விவரம் கேட்க, பெண்களோ,"தாத்தா கல்யாணியைப் பாடித்தான் ஆகணும்னு அடம் பிடிக்கிறாரு", என்று சொல்ல நம்மவரோ வி.கே.ஆரிடம்," ஏன் மாமா அடம் பிடிக்கிறீங்க? கல்யாணியைப் பிடிக்கலன்னா பண்டரிபாய்கிட்ட சொல்லுங்க... இல்ல மைனாவதிகிட்ட சொல்லி பாட வைங்க", என்று போடுவாரே ஒரு போடு!

பத்திரிகை நிருபர் அருணாவை இன்ஸ்பெக்டர் ஒரு விஷயத்திற்காகப் பிடித்து வைக்க, பெண்ணை ஜாமீனில் எடுக்க வரும் தலைவர் முதலில் இன்ஸ்பெக்டரை மிரட்டுவது போல act செய்துவிட்டு பின் இன்ஸ்பெக்டரின் கடமை உணர்ச்சியைப் பாராட்ட, அதற்கு இன்ஸ்பெக்டர் இவரிடம், "சார் நீங்க டாக்டரா? இல்ல ஆக்டரா?" என்று மெய்மறந்து கேட்க, "ஆக்டரா? ஆக்டிங் பத்தி எனக்கு மண்ணாங்கட்டி கூட தெரியாதப்பா... நான் ஒரு சாதாரண ஆளு"....என்று தலைவர் ஒரு நெத்தியடி அடிப்பாரே பார்க்கலாம். (ஆழம் பார்க்குரதிலே மனுஷன் கில்லாடிப்பா)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3mpg_000041124.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3mpg_000041124.jpg.html)

பெண்ணை இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனில் பிடித்து வைத்து விட்டார் என்று அம்பிகா கிளினிக் வந்து நடிகர் திலகத்திடம் படபடப்பாகக் கூறி ஜாமீனில் எடுத்து வர சொல்ல, நடிகர் திலகமோ அலட்டிக் கொள்ளாமல் தன் patient ஐ பார்த்துக் கொண்டிருக்க, கோபித்துக் கொண்டு வீட்டுக்குச் செல்லும் அம்பிகா கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு அமர்க்களம் செய்ய, ஸ்டேஷனிலிருந்து பெண்ணோடு வரும் நடிகர் திலகம் அம்பிகாவை ரூமை விட்டு வெளியே வரவழைக்க அபிநயம் பிடித்தபடி பெண்களுடன் நாட்டியம் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி. (எங்க வீட்டு மகாலக்ஷ்மியே ! மங்கையர் திலகமே! மாதர்குல மாணிக்கமே") தபலா வாசிப்பு, புல்லாங்குழல் வாசிப்பு என்று சில வினாடிகளே ஆனாலும் தலைவரின் ஆளுமையை அவற்றில் பார்க்கலாம். பாடல் முடிந்தவுடன் அம்பிகா சாந்தமடைந்து வெளியே வர இவர் ஓடிப்போய்,"அடி என் சக்காளத்தி... சக்காளத்தி," என்று இழுத்து முழக்கியபடியே கொஞ்சி அணைப்பது கொள்ளை அழகு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3mpg_000004964.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3mpg_000004964.jpg.html)

நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை படத்தில் மிக ஹைலைட்டான காட்சிகள் இரண்டு.

முதல் காட்சி.(காமெடி கலந்த கலகலப்பு)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4mpg_000161471.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4mpg_000161471.jpg.html)

தனக்கு நடந்த பாராட்டு விழவில் சந்தர்ப்ப சூழ்நிலையால் அதுவரை தண்ணி போடாதவர் தண்ணி போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்து ரெண்டு படுத்தும் சீன். சும்மா கொடி பறக்கிறது. ஒரிஜினல் தண்ணி போட்டவனெல்லாம் என்ன செய்ய முடியும்? அப்படி ஒரு அதலகதள அமர்க்களம். வீட்டின் வாசல் கதவை வேலைக்காரர் மூர்த்தி திறந்தவுடன் ஒன்றும் புரியாமல் சில வினாடிகள் அப்படியே காலை bend செய்தவாறு சுற்றும் முற்றும் மயங்கிப் பார்ப்பது... மப்பில் வீடு சுற்றும்போது வாயைக் கோணியபடியே,"வீடு ஆடுது... வீடு குடிச்சிட்டு வந்திருக்கா? வீட்டக் கட்னவன் நான்... கொஞ்சம் பயபக்தி வேணும்... எதிலுமே நிதானம் வேணும். stop it", என்று கட்டளை வேறு வீட்டிற்கு இடுவார். வீடு சுழல்வது நின்றவுடன்," இப்பதான் நல்ல வீடு... என்று certificate வேறு. வேலையாள் மூர்த்தியைக் "குடிச்சிருக்கியா?" என்று பெண்டு நிமிர்த்துவார்.

"அம்மாவை கூப்பிடு" என்பார் மூர்த்தியிடம்.

மூர்த்தி,"அம்மா... அம்மா என்று அம்பிகாவைக் கூப்பிட்டவுடன் அம்பிகா வழக்கம் போல் பட படவென பொரிந்தபடியே வர, அதிகார தோரணையோடு,"ஏய் கழுத"...என்று நிறுத்தி சில வினாடிகள் gap கொடுத்து மீண்டும் "கழுத" என்று நடிகர் திலகம் உரக்க தரும் ஒரு அழுத்தம். ஏக ரகளையே நடக்கும். அம்பிகா இவர் குடித்து கலாட்டா செய்வதை தாங்கமாட்டாமல் வியப்புடன் பார்க்கும் போது அம்பிகா அருகில் போய் வாயை வேறு ஊதிக் காண்பிப்பார். "குடிச்சிருக்கேன்னு பார்க்கிறியா? குடிப்பேன்... குடித்துக் கொண்டே இருப்பேன்" என்று அழிச்சாட்டியம் பண்ணுவார். நடுநடுவே இந்திப்பாட ல்களின் வரிகளை (பியா தோ) வேறு ராகம் இழுப்பார். "என்னை என்ன பொண்டாட்டிக்கு பயந்தவன்னு நெனச்சியா? யாருக்கு யார் பயப்படறாங்கன்னு பார்ப்போமா," என்று அலட்சியமாக சொல்லியபடி அம்பிகாவுக்கு விழுமே ஒரு அறை! (இந்த இடத்தில் வாழ்க்கையின் சில நுணுக்கங்களைப் புரிய வைப்பார் தலைவர். வாழ்க்கை முழுதும் படபடவென்று பொரிந்து தள்ளும் மனைவியுடன் காலம் கழிக்கும் போது (அவள் நல்லவளாகவே இருந்தாலும் கூட) ஒரு சமயம் வெறுப்பும் சலிப்பும் ஏற்படத்தான் செய்யும். இந்த மாதிரி சமயங்களில் அதுவரை வாய்மூடி மௌனியாக இருப்பவன் தண்ணி அடித்தால் தடி எடுத்த தண்டல்காரன் ஆகிவிடுவான். அன்று அவன் சக்கரவர்த்தி... அதுவரை அவன் மனதில் வைத்திருந்ததெல்லாம் வார்த்தைகளாக வந்து தேள் கொடுக்காகக் கொட்டும். அன்று அவன் யாருக்கும் அடிமை இல்லை.. அன்று அவன் வைத்ததுதான் சட்டம். மனைவிக்கு உதையும் அன்று கிடைக்கும்.(அடுத்தநாள் பற்றி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்) அவள் ராட்சஸியாக இருந்தால் கூட அன்று அவள் அடங்கித்தான் போக வேண்டும். அதை அப்படியே நடிகர் திலகம் கண்ணாடி மாதிரி பிரதிபலிப்பார். எப்பேர்ப்பட்டவன் மனநிலையையும் அடுத்தவருக்கு புரிய வைக்கும் சக்தி கொண்ட மாபெரும் மேதையல்லவோ நம் தலைவர். அவர் மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்யும் காட்சிகளை பல படங்களில் பார்த்து ரசித்திருக்கிறோம். ஆனால் வயதான பிறகு அதுவும் உடல்நலம் குன்றிய நிலையில் இதுவரை எந்தப்படத்திலும் வழங்காத ஒரு நடிப்பை இந்தக்காட்சியில் அந்த மாபெரும் மேதை வழங்கியதாலேயே மட்டுமே இப்படம் சிறப்புப் பட்டியலில் இடம் பெறுகிறது. (இதில் அவர் குடிகாரர் அல்ல... தனக்கு பாராட்டு விழா நடத்தும் நண்பர்களின் வற்புறுத்தலுக்கிணங்க குடிக்க வேண்டிய கட்டாயம் ஆகி விடும்)

அதே போல தன்னைக் கண்டிக்கும் மாமனார் வி.கே.ராமசாமி இவரிடம் படும் பாடு... மாமனாரை இவர் அழைப்பதைப் பாருங்கள்!...(டேய்! வாடா இங்கே உன்னதாண்டா சின்னப் பயலே!) செல்ல மகள்களுக்கும் தர்ம அடி விழும். பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுப்பார். சிகரெட் விஷயத்தில் மனைவி ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்பதால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வார். ("உன் முன்னாலே நான் சிகரெட் பிடிக்கக் கூடாதா? குடிக்கலாமா இல்லையா?" என்று குரலை ஓங்குவார்). அம்பிகா நைசாக,"கொஞ்சம் மோர் குடிச்சுடுங்களேன்", என்று தெளிய வைக்க பார்ப்பார். அதற்கு double meaning இல் இவர் பதில் சொல்வார். (no moar...no more) Excellent performance கொடுத்திருப்பார்.

இரண்டாவது காட்சி (சீரியஸ்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4mpg_001323351.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4mpg_001323351.jpg.html)

தன்னை ஜனார்த்தனன் துணிக்கடையில் சந்தித்து மிரட்டிய பிறகு வீட்டிற்கு வந்து தலைவர் கொடுக்கும் expressions. ரொம்ப அருமையாக உணர்ந்து பண்ணியிருப்பார். வீடு கல்யாண சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்க வில்லன் மறுபடி போனில் மிரட்டியவுடன் என்ன செய்வது என்று புரியாமல் இயலாமை கோபமாய் வெடிக்க சிவன் நெற்றிக்கண்ணை திறப்பது போன்ற கோபத்தைக் காட்டுவார். அம்பிகா அவர் மௌனத்திற்கு காரணம் கேட்டவுடன் வெடிப்பாரே பார்க்கலாம். ("என்னடி நாய்...எப்படி இருக்கு உடம்பு!) அதுவரை அவ்வளவு சீரியஸ் காண்பித்திருக்க மாட்டார். மனைவியை அவ்வளவு கடுமையாக மிரட்டுவதும் அதுதான் முதல் முறையாக இருக்கும். மகளையும் அறைந்து விடுவார். மெளனமாக மெல்லிய அருமையான பின்னிசை இழையோட படிக்கட்டுகளில் மெளனமாக இறங்கி வந்து சோபாவில் அமர்ந்து சிகரெட்டைப் பற்ற வைத்து புகையை ஆழ்ந்து இழுத்து relax செய்வார். அம்பிகா அங்கே அருகில் வந்து அமர்வதை கவனியாதது போல இருப்பார். பின் சகஜ நிலைக்கு மெல்லத் திரும்புவார். முகமெல்லாம் வேர்த்துக் கொட்டியிருக்கும். வரக்கூடிய பிரச்னையை எப்படி சமாளிப்பது என்ற கவலை ரேகைகள் முகத்தில் ஓடும். யாரிடமும் சொல்லவும் முடியாது. நிம்மதி இல்லாமல் தடுமாறுவார். பிரமாதப்படுத்தி விடுவார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4mpg_002511511.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4mpg_002511511.jpg.html)

மனைவிக்கு தான் ஆபரேஷன் செய்யமுடியாத துர்பாக்கிய சூழ்நிலை. மனைவியே ஒத்துக் கொள்ளவில்லை. அப்போது மனம் நொந்து, "ஆண்டவரே!எத்தனையோ பேருடைய இதயத்தை குணப்படுத்தி உனக்கு சவால் விட்டிருக்கேன்...இப்ப எனக்கே நீ சவால் விடுறியா? வளைஞ்சி கொடுக்க மாட்டேன்... பார்த்துக்கலாம்," என்று தனக்குத்தானே பேசிக்கொள்வது அருமை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4mpg_004182312.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4mpg_004182312.jpg.html)

அதேபோல ஜெயிலில் இருந்து தப்பித்து வீட்டுக்கு வந்தவுடன் மகள் தன்னை எடுத்தெறிந்து கன்னாபின்னாவென்று பேசியவுடன் அதுவரை பொறுமையாய் இருந்து விட்டு சிங்கம் போல சீறுவார். ("யாரப் பார்த்து என்ன பேச்சு பேசற? நீ யாரு... நான் யாரு... உன் வயசென்ன என் வயசென்ன"...) என்று மகளுக்கு உண்மை நிலவரங்களை புரிய வைக்கும் காட்சி. ஒரு தந்தை தன் மகளிடம் அந்த சூழ்நிலையில் என்னென்ன எதிர்பார்ப்பான்... தன்னை அவளுக்குப் புரிய வைக்க எப்படி பாடுபடுவான்... அசத்தி விடுவார் அசத்தி. மகள் தன்னை புரிந்து கொள்ளாமல் மேலெழுந்தவாரியாக பேசுகிறாளே என்ற தவிப்பு, பின் அவளிடம் கண்டிப்பு என்று பாவங்கள் அற்புதமாய் அவரிடமிருந்து காட்டப்படும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4mpg_004085631.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4mpg_004085631.jpg.html)

அதேபோல தன் சக டாக்டர் ராதா இறந்தவுடன் அவர் காட்டும் முகபாவங்கள் ராகவேந்திரன் சார் சொன்னது போல மிக இயல்பாக,தேவையான அளவிற்கே இருக்கும்.

பொறுப்பான டாக்டராக, அன்பான கணவராக, அருமையான தந்தையாக, கொலைப்பழியைத் தான் ஏற்று குடும்ப மானத்தையும், மனைவியையும் காப்பாற்றும் தியாகச் சுடராக மங்காத ஒளி வீசிப் பிரகாசிக்கிறார் நடிகர் திலகம். அற்புதமான பாத்திரப் படைப்பு நம் அற்புதமான பிறவியினால் மெருகேற்றப்பட்டு நம் எல்லோரையும் மெய்மறக்கச் செய்கிறது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3mpg_000045564.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3mpg_000045564.jpg.html)

தலைவருக்கு அடுத்து இப்படத்தில் கொடி நாட்டுவது அம்பிகாதான். அருமையிலும் அருமை. 'வாழ்க்கை' நாயகியாய் வளைந்து கொடுத்தவர் இதில் 'சலசல' நீரோடையாய் வெற்றிநடை பயணிக்கிறார் நாயகனுக்கேற்ற நாயகியாக. பட படவென பொரிந்து தள்ளுவதும், 'சட் சட்'டென்று முன் கோபப்படுவதும், புருஷன் குணமறிந்து அடங்கிப்போவதும், பிள்ளைகளிடம் கண்டிப்புமாக பின்னியெடுக்கும் நடிப்பு. சதா விஜாயாவையும், பத்மினியையும் பார்த்து சலித்த கண்களுக்கு fresh ஆன தலைவருக்கேற்ற நடுத்தர வயது பெண்மணியாக அட்டகாசமாகப் பாத்திரத்திற்கு பொருந்தி விடுகிறார் அம்பிகா. ஜெயிலில் கணவனை சந்தித்து தனக்கு துரோகம் இழைத்ததாக அவன் மேல் குற்றம் சாட்டிவிட்டு, "இத்தனை வருஷமா உங்களை கடவுளா கோவிலா நெனச்சிகிட்டிருந்தவ நான்... எனக்குத் தெரியாம உங்களுக்கு ஒரு பொண்ணோட தொடர்பு இருந்திருக்குன்னா நீங்க எனக்கு கணவரும் இல்ல... கடவுளும் இல்ல"... என்று உணர்ச்சியில் உருகும் கட்டம் உன்னதம்.

பின் வீட்டிற்கு வந்து யாரிடமும் ஒன்றுமே பேசாமல் வெறுத்துப் போய் கணவன் சம்பந்தப்பட்ட பொருள்களையெல்லாம் ஒவ்வென்றாக போட்டு உடைத்தபடியே, மாடிக்கு அழுகையை அடக்கியபடியே கோபம் கொப்பளிக்க செல்வது பின்னாட்களில் நடிகர் திலகத்தின் மிகப் பொருத்தமான ஜோடி அம்பிகாதான் என்று கூக்குரலிடச் சொல்கிறது. இளவயது நடிகர் திலகத்திடம் கட்டாயமாக காதலிக்கச் சொல்லி அவரை மிரட்டி காதலில் பணிய வைப்பது சுவாரஸ்யம். (அம்பிகா மிக அழகாகக் காட்சியளிக்கிறார் இக்காட்சிகளில்)

மது அருந்திவிட்ட குற்ற உணர்ச்சியில் அறையில் ஒளிந்து கொண்டிருக்கும் திலகத்தை அவர் பாடி வரவழைத்தது போலவே அம்பிகா தன் பெண்களுடன் ஆடிப் பாடி வரவழைப்பது பொருத்தம். அருமையும் கூட. அம்பிகா தன் மகள்களாக நடிக்கும் சிறுவயது பெண்களைவிட அருமையாக ஸ்டெப் வைத்து ஆடியிருப்பார் இப்பாடலில்) அம்பிகா ஜாடிக்கேத்த மூடி கனகச்சிதம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4mpg_004067831.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4mpg_004067831.jpg.html)

ராதா சிறிது நேரமே வந்தாலும் பரிதாபத்துக்குரிய பாத்திரம். நினைவில் நிற்கிறார். பாண்டியன், துளசி, கலைச்செல்வி, ஜனார்த்தனன் வி.கே.ஆர், மூர்த்தி, திடீர் கன்னையா என்று நடிக நடிகையர்.

செல்வி T.S கல்யாணியின் தயாரிப்பு. ஒளிப்பதிவு ரம்மியம். விஸ்வநாதராய் அவர்களின் விசுவாசமான ஒளிப்பதிவு. மனோஜ் கியான் இரட்டையரின் மனதை வருடும் இசை. ("கண்ணனே! மன்னனே!"... காதுகளில் ரீங்காரமிடும் பாடல்) வலம்புரி சோமநாதனின் வளமான வசனங்கள் ("Law practice பண்ணும் போதே லவ் practice ம் பண்ற போலிருக்கு") செழியனின் நச் எடிட்டிங், வாலியின் பாடல் வரிகள்... அம்பிகா நடிகர் திலகத்தை வெளியே வரவழைக்க பாடும் பாட்டில் தலைவர் புகழை அவர் நடித்த படங்களின் பெயர்கள் மூலமே பாடல் வரிகளை அமைத்திருக்கும் புத்திசாலித்தனம்.(வா கண்ணா வா... வாழ்க்கை நீயல்லவா... பந்தம் போதுமா... பாசமலர் வாடுமா... நீ இருந்தால் இது வசந்த மாளிகை... நீ இல்லையேல் இது வியட்நாம் வீடு... இங்கு உனக்குத் தான் முதல் மரியாதை) எப்படி சூப்பரா இல்ல...

இயக்கம் எனது மனம் கவர்ந்த இயக்குனர் விஜயன். தெளிந்த நீரோடை போன்ற பயணிப்பு. அனாவசிய சீன்களே வைக்க மாட்டார். சொல்ல வந்ததை எப்போதுமே நச்சென்று சொல்லுவார். வெற்றிப்பட இயக்குனர் என்பதை சொல்லவும் வேண்டுமோ! விஜயன் இயக்கத்தில் நடிகர் திலகம் பங்கு கொண்டாலே செம விருந்துதான்.

குறைகளும் உண்டு. முக்கியமானது பிளாஷ்பேக்கில் இளவயது டாக்டராக வரும் நடிகர் திலகத்தின் மேக்-அப். நன்றாக கோட்டை விட்டிருப்பார்கள். நடிகர் திலகத்திற்கு முன் வரிசைப் பற்கள் வேறு சில இருக்காது. அதை கவனித்து சரி செய்திருக்கலாம். நடிகர் திலகத்தின் வயது வேறு அவரை research செய்யும் இளம் டாக்டராக ஏற்றுக்கொள்ள நமக்கு இடம் கொடுக்காது. முன் வரிசைப் பற்களைக் கட்டிக் கொண்டு நடித்திருக்கலாம். அலட்சியமாக விட்டிருப்பார்கள். மீசையை மாற்றி அமைத்திருக்கலாம். Inn செய்யாமல் dress ஐ சாதாரணமாகவே விட்டிருக்கலாம். சில இடங்களில் நடிகர் திலகம், நல்ல உடல்நிலையில் இருந்த போது இருந்த தோற்றத்திலும், சில இடங்களில் உடல் நலிவுற்று பின்னர் இருந்த தோற்றத்திலும் காணப்படுவார். இளவயது பாத்திரத்தில் மிகவும் சோர்வாகத் தெரிவார். இருந்தாலும் தன் அசாத்தியமான நடிப்புத்திறமையால் அந்தக் குறையைப் போக்கி விடுவார். வசனங்களை ஒருவர் பேசி முடிப்பதற்குள் அடுத்தவர்கள் பேசுவது கேட்பது மிகப் பெரிய குறை. நடிப்பு ஸ்கோர் பண்ண நம்மவருக்கும் அம்பிகாவுக்கும்தான் சான்ஸ். மற்றவர்கள் யாவருமே ஒப்புக்குச் சப்பாணியாகத்தான் வலம் வருகிறார்கள். பிளாஷ்பேக் சீனைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

இந்தப் படத்தை அந்தக்கால நடிகர் திலகத்தின் படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். சமகாலத்தில் வந்த நடிகர் திலகத்தின் படங்களுடன் ஒப்பிட்டால் இந்தப் படம் டாப்தான். அருமையான குடும்ப சப்ஜெக்ட். முகம் சுளிக்கும் காட்சிகள் அறவே இல்லை. நல்ல கதையும் கூட. சரியான விளம்பரம், தகுந்த சமயத்தில் வெளியீடு, படங்களுக்கிடையே நல்ல Gap என்று வந்திருந்தால் நல்ல வெற்றியைக் கூட இந்தப் படம் பெற்றிருக்கலாம். இப்படிப்பட்ட படங்கள் பல நம் கண்ணுக்குத் தெரியாமலேயே போய் விடுகின்றன. நாமும் இது போன்றவற்றில் அதிக அக்கறை கொள்வதுமில்லை. ஒரு கண்மூடித்தனமான கொள்கையை விட்டு விட்டு வெளியே வந்தோமானால் இது போன்ற நல்ல படங்கள் நன்கு பேசப்படலாம். நடிப்புக்காகவே இறுதி வரை வாழ்ந்த அந்த மேதை ஆரம்பம் முதல் முடிவு வரை பல அற்புதங்களை நமக்கு அள்ளி வழங்கிச் சென்றிருக்கிறார். அவற்றை ஒவ்வொன்றாக அள்ளிப் பருகி அனைவரும் மகிழ வேண்டும் என்பதே என் விருப்பம்.

படம் வெற்றியோ தோல்வியோ அதை விட்டு விடுவோம். கோபால் சார் சொன்னது போல இந்தப்படம் ஒரு surprise package தான்.

நன்றி!

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

Richardsof
17th April 2013, 01:20 PM
CONGRATULAIONS DEAR VASUDEVAN SIR

3000 SUPER POSTINGS - ALL THE BEST.

WITH CHEERS
esvee

Gopal.s
17th April 2013, 01:51 PM
பாவி,

கார் வாங்கின ஜோரில்தான் சும்மா சுத்திக்கிட்டு இருப்பதாக நினைத்தால், 3000 வது முத்தான, ரொம்ப rare படத்தை analyse பண்ணி, தங்க கோப்பையை ஒரே பதிவில் சுருட்டி கொண்டாய்.

superb தெளிவு, உன் style இல். எனக்கு அம்பிகாவை கலாய்க்கும் இடங்கள், தண்ணி போடும் scene , தன்னை உதாசீனம் செய்யும் குடும்பத்துடன் break point இல் உடையும் கட்டம் favourite .

படத்தை போல் உன்னுடையதும் surprise package .

மிக்க நன்றி ,நன்கு கவனிக்க படாத வைரத்தை தூசி துடைத்து காப்பாற்றினாய்.

RAGHAVENDRA
17th April 2013, 03:21 PM
டியர் வாசுதேவன் சார்
மூவாயிரமாவது முத்தான பதிவிற்கு முதற்கண் என் பாராட்டுக்கள்.
அதனை தாம்பத்யம் என்கிற அருமையான பதிவின் மூலம் சிறப்பாக்கி விட்டீர்கள். இது வரை இப்படத்திலிருந்து இவ்வளவு ஸ்டில்களை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அதே போல் பாடல் காட்சிகளும் இணையத்தில் இதுவரை இடம் பெற்றதில்லை. என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

படத்தைப் பொறுத்த வரை ஒப்பனையும் உடையலங்காரமும் மிகவும் சுமார். இயக்குநர் இவற்றிலெல்லாம் கவனம் செலுத்தாதது வியப்பாக உள்ளது. காரணம் தெரியவில்லை. மனோஜ்-கியான் இசையில் கண்மணி பாடல் மட்டும் நன்றாக இருக்கும். மற்றபடி நடிகர் திலகம் என்கின்ற ஒற்றைத் தூணின் மேல் எழுப்பப் பட்டுள்ள கூரை, தாம்பத்யம் திரைப்படம். கதை நன்றாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ரிசல்ட் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அனைத்து சிவாஜி ரசிகர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம் தாம்பத்யம். அதை உறுதிப் படுத்துவதே தங்கள் எழுத்திலுள்ள சாமர்த்தியம்.