PDA

View Full Version : Pazhamozhigal



Pages : 1 [2]

Sudhaama
25th February 2008, 05:43 AM
[tscii:8a311cebce]
.
. Å¢Àã¾...???... ÀƦÁ¡Æ¢.!!!

. °Ã¡ý À¢û¨Ç¨Â °ðÊ ÅÇ÷ò¾¡ø,
. ¾ý À¢û¨Ç ¾¡§É ÅÇÕõ.

þÐ µ÷ ¬ú-¸ÕòÐ ÀƦÁ¡Æ¢... ¬É¡ø Å¢Àã¾Á¡¸ ¦À¡Õû ¦ºöÂôÀðÎ...

....Á¡É¢¼ «È ¦¿È¢ìÌ ÒÈõÀ¡¸ º¢Ä ¸ÕòÐì¸Ùõ... ´ùÅ¡¾ º¢Ä ¸ÕòÐì¸Ùõ... ¾ÅÈ¡É §ÅÚ º¢Ä ¸ÕòÐì¸Ùõ... ¾Á¢Æ÷ ºÓ¾¡Âò¾¢§Ä ¿¢Ä׸¢ýÈÉ.

«ùÅ¡§È þÇõ º¢È¡÷¸Ç¢ý À¢ïÍ ¯ûÇí¸Ç¢§Ä... Å¢¨¾ì¸ôÀðÎ ÅÇ÷ì¸ôÀðÎ-ÅÕ¸¢ýÈÉ.

«ôÀÊ¡?... «ùÅ¡È¡É¡ø þ¾ý «ºø ¸ÕòÐ ¾¡ý ±ýÉ.?.

«ýÀ÷¸§Ç... ¯í¸û ¸ÕòÐì¸û ±ý¦ÉýÉ.? ÜÚÅ£÷¸Ç¡.?
.
. [/tscii:8a311cebce]

pavalamani pragasam
25th February 2008, 08:11 AM
தற்போது அறியப்பட்டு வரும் கருத்து உபகார சிந்தனையை, தர்ம காரியங்களை ஊக்குவிப்பதாக உள்ளது. உட்பொருள் என்றால் பெண் குழந்தையை 'ஊரான் பிள்ளை' என்று கூறும் வழக்கத்தை தழுவி வருகிறதா? :roll:

Sudhaama
25th February 2008, 08:38 AM
.

தற்போது அறியப்பட்டு வரும் கருத்து உபகார சிந்தனையை, தர்ம காரியங்களை ஊக்குவிப்பதாக உள்ளது. உட்பொருள் என்றால் பெண் குழந்தையை 'ஊரான் பிள்ளை' என்று கூறும் வழக்கத்தை தழுவி வருகிறதா? :roll:
[tscii:4a7fb44527].
¬Á¡õ. ¾÷Á-¦¿È¢ §¿¡ì¸¢§Ä ÓýÀ¢ý ¦¾Ã¢Â¡¾ÅÕìÌ ¯¾×ÅÐ ¿ýÚ... ±ýÈ ¸ý§½¡ð¼ò¾¢§ÄÔõ º¢Ä÷ Å¢Çì¸õ ÜÚÅÐ ¯ñÎ.

¬É¡ø ´Õ ³Âõ.!.. «Ð§Å ¯¸ó¾¾¡É¡ø...

.."°Ã¡¨É" ±ýÚ ÁðΧÁ ÌÈ¢ôÀ¢ð¼¡ø §À¡¾¡¾¡.? «ô§À¡Ð «¾ý ÀÃó¾ þ¾Â-§¿¡ìÌ ÒÄôÀθ¢ÈÐ.

"°Ã¡ý À¢û¨Ç" ±ýÚ ¦º¡øÅ¡§Éý.?

§ÁÖõ °ðÊ ÅÇ÷ôÀÐ ±¾üÌ.?.

þíÌ ¦Àñ ÌÆó¨¾ ±ýÛõ ¦À¡Õû þø¨Ä.
.[/tscii:4a7fb44527]

pavalamani pragasam
25th February 2008, 09:20 AM
இதற்கு மேல் யோசிக்க முடியவில்லை :(

Sudhaama
2nd March 2008, 04:50 AM
[tscii:bff10158b7]
..
. ... ¸ÕòÐ - 1

. °Ã¡ý À¢û¨Ç¨Â °ðÊ ÅÇ÷ò¾¡ø,
. ¾ý À¢û¨Ç ¾¡§É ÅÇÕõ.

þôÀƦÁ¡Æ¢ìÌ ¿øÄ¢¾Â ¸ñ§½¡ð¼ò¾¢§Ä§Â ³óÐ ¦Åù§ÅÚ Å¨¸Â¡É ¸ÕòÐì¸û Àñʾ÷¸Ç¢¨¼§Â ¿¢Ä׸¢ýÈÉ.

«ÅüÚû Ó¾ø ¿¡ýÌõ ä¸-¸ÕòÐì¸û. ±É¢Ûõ ²ü¸ò-¾ì¸¨Å§Â.

¬É¡ø þÚ¾¢Â¡É ³ó¾¡ÅÐ ¸ÕòÐ ÁðÎõ ¾¡ý «ºø ¦À¡Õû...

...«¨¾ «È¢ó¾×¼§É... ±ÅÕ§Á ´ôÒ즸¡ûÅ÷, «Ð ¾¡ý ¾ì¸Ð ±ýÚ.

«Åü¨È ´ù¦Å¡ýÈ¡¸ ÅÆí̸¢§Èý..

...«ýÀ÷¸§Ç þýÒÚ¸.

"°Ã¡ý-À¢û¨Ç" ±ýÀ¨¾ "ÁШÃ-Á¡Áý" ±ýÀÐ §À¡Ä.. ´§Ã ¦º¡ü¦È¡¼Ã¡¸ ¸Õ¾¢...

¡§Ã¡ ÓýÀ¢ý ¦¾Ã¢Â¡¾ÅÕ¨¼Â «É¡¨¾ / ¬¾ÃÅüÈ À¢û¨Ç¨Â... ¿ÁìÌ ±ó¾ Àó¾Óõ ¸¼¨ÁÔõ ¸¼Ûõ þøÄ¡¾-§À¡¾¢Öõ...

...«Õû-ÁÉ §¿¡ì¸¡ø ¿¡Á¡¸§Å ÅÄ¢óÐ ¿¡Ê, ´Õ ¾¡¨Â §À¡Ä °ðÊ ÅÇ÷ò¾¡ø...

...§À¡¾¢Â «Ç× ÁÉôÀñÒõ, ̽Óõ ÅÇá¾ ¿ÁÐ À¢û¨Ç¨Â þ¨ÈÅý ¾¡É¡¸§Å ÅÇ÷òÐ... .¿üº£ÄÉ¡ö Á¡üÚÅ¡ý...

«¾¡ÅÐ ¿¡õ À¢È÷ À¡ø ¸¡ðÎõ «Õû-ÁÉôÀñÒ ¦ºÂ§Ä... Å¢ò¾¡ö ¯Õ¦ÅÎòÐ ¿ÁìÌ ¿üÀÂý Å¢¨ÇÅ¢ìÌõ...

...¿õÁ¡ø ¾¢Õò¾ÓÊ¡¾ ¿ÁÐ À¢û¨Ç¨Â þ¨ÈÅý ¾¢Õò¾¢ ÅÇ÷ôÀ¡ý...

...«ÅÉÐ À¢Ã¾¢-«ÕÇ¡ø.

¦À¡Õû þøÄ¡÷ìÌ þù×ÄÌ þø¨Ä
«Õû þøÄ¡÷ìÌ «ù×ÄÌ þø¨Ä.
.[/tscii:bff10158b7]

Sudhaama
30th March 2008, 10:17 PM
.
. பழமொழி கருத்து-2

. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தன் பிள்ளை தானே வளரும்.!

"ஊரான்" என்னும் சொல் விசித்திரமான சொல்... நேர் எதிர் மாறான பொருட்களை தரும் சொல்.! எப்படி.?

நாட்டுப்புற வழக்கிலும்... பொதுவாக பேச்சு-வழக்கிலும்... "ஊரான்" என்றால்...

... மாற்றான் / தொடர்போ உரிமையோ ஏதும் இல்லாதவன் / முன்பின் தெரியப்படாதவன் (Stranger)... என்று பொருள்.

மாறாக இலக்கிய-மரபுப்படி அதன் பொருள்... நேர்-கருத்து... அந்த ஊரை சேர்ந்தவன்... என்று பொருள்.

சிவன்-கோயில் உள்ள ஓர் ஊரானால்... மேற்குறித்த இருவகை பொருட்களும் அந்த ஈசனுக்கு மட்டுமே பொருந்தும்.!

ஏனெனில் சிவ-பெருமான் ஓர் புற-வாசி... அதாவது சுடுகாட்டில் வசிப்பவர்.. ஆக "வெளியான்" என்ற பொருளிலும்...

..உள்ளூர் கோயிலில் குடிகொண்டிருப்பவன்... "உள்-ஊரான்" என்ற பொருளிலும்.!

அடுத்து இலக்கிய தமிழில்... "பிள்ளை" என்ற சொல், "பிள்ளையார்" எனப்படும் விநாயகனை குறிக்கும்.

மேலும் விநாயகனுக்கு மட்டும், மேலும் ஓர் தனி சிறப்பு... அவன் ஊரின் உள்ளிலும், புறத்தில் குளத்தங்கரையிலும், ரோட்டு மரத்தடியிலும் வாழும் பிள்ளை.

அவன் பெரும் தியாகி... எவரிடமிருந்தும் எதுவுமே நாடாதவன்... ஓர் குழந்தையாய் கைகால்களை சுரூட்டிக்கொண்டு அடக்கமாய் அமைதியாய் கண் மூடி தியானித்துக்கொண்டே இருப்பவன்

அந்த சாது- பிள்ளையை நீயாகவே நாடிச்சென்று, அவனுக்கு எருக்கம்பூ மாலை சாற்றி... அருகம்புல்லால் அர்ச்சித்து... இயன்ற ஏதாவது பழத்தை நைவேத்தியமாக ஊட்டி...

...அவன் மீது ஊராருக்கு பக்தியை வளர்த்தால்...

நீ நட்ட தென்னம்பிள்ளை, பனம்-பிள்ளை பழ-மரங்கள், வயலில் பயிர்கள் மட்டுமின்றி...

...உனது பிள்ளைகள் / மதலையர் யாவரையுமே பற்றி நீ கவலைப்பட வேண்டா அளவுக்கு...

...அவை அனைத்துமே தானாகவே வளரும்.

..உனது குடும்ப நன்னலத்தை அந்த விநாயக-பிள்ளையே பார்த்துக்கொள்வான். கவலை வேண்டேல்.!
.

aanaa
1st April 2008, 08:08 PM
Thanks
:clap:

Sudhaama
23rd April 2008, 08:21 AM
.

. ஒரே பழமொழி.!!! - கருத்து -3

. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்,
. தன் பிள்ளை தானே வளரும்.

ஊரான் = அதே ஊரை சேர்ந்தவன்... ஊரார் அனைவரும் நமது குழந்தை என்று ஒவ்வொருவரும் ஒருங்கே அன்பு பாசத்துடன் சொந்தம் கொண்டாடும் அளவுக்கு... அனைவரது மனங்களையும் அன்பையும் கொள்ளை கொண்ட கள்வன்

பிள்ளை = [அவரவர் வீட்டின் சொந்த பிள்ளையை போல... தானாகவே ஊரார் எல்லோரது வீடுகளுக்கும் தத்தி தவழ்ந்து போய் அன்பு காட்டும்] குழந்தை கண்ணனை.

["பிள்ளை" என்ற சொல்லுக்கு குழந்தை-கண்ணன் அதாவது "பாலகிருஷ்ணன்" என்னும் பொருளும் உண்டு.

அந்த கருத்திலே தான் கண்ணனை "பிள்ளை-பெருமாள்" என்றும் அழைப்பது மரபு.

முற்காலத்தில் தமிழர் மதலையர்க்கும் அவ்வாறே பெயர் சூட்டியுள்ளனர்.]

ஊட்டி வளர்த்தால் = அன்பு பாசம் ஊட்டி வளர்த்தால்...

தன் பிள்ளை தானே வளரும் = கண்ணனையே கவனித்து உதாரணமாக பின்பற்றி... ஒவ்வொரு விட்டு குழந்தையும் நல்லபடியாக தம்மை தாமே திருத்திக்கொண்டும்... பெற்றோர் மற்றோரிடம் பழகும் முறையையும் வாழும் நெறியையும் தாமாகவே கற்றுக்கொண்டு....

...பெற்றோருக்கு அதிக சிரமம் வைக்காது தானே வளரும்.

கருத்து:--

ஆக குழந்தை கண்ணன் மீது பக்தி கொண்டால்... அவரவரது சொந்த குழந்தைகளும் கண்ணனது பால-கிருஷ்ண லீலைகளில் ஆர்வம் கொண்டு கேட்டு அறிந்து...

..தாமாகவே கண்ணனை உதாரண குழந்தையாய் பின்பற்றி நல்ல குணத்தவராய் தம்மை உருவாக்கிக்கொண்டு ஒங்குயர் மாந்தராய் வளர்வர்.
.

Sudhaama
23rd May 2008, 08:11 PM
.
.
ஒரே பழமொழி... கருத்து-4

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்..
தன் பிள்ளை தானே வளரும்.!

ஊரான் = ஊர்க்காரர் அனைவரின் மனதிலும் இடம் கொண்டு... எல்லோராலும் நம்மவன் என்ற அன்பு பாசத்தோடு அழைக்கப்படும் பொது நல சமுதாய-தொண்டன்

பிள்ளையை = பெற்ற தந்தை சமுதாய-தொண்டனாய் ஊராரின் பொது-நலமே கருத்தாய் கொண்டு ஊருக்கே உழைப்பவனாய் முழு-கவனம் திருப்பப்பட்டு விட்டதால்... தனது குடும்ப-கடமையையே மறந்து வாழும் அந்த நல்லானின் சொந்த குழந்தையையும் அவனது குடும்ப பொறுப்புக்களையும்...

ஊட்டி வளர்த்தால் = பொது சமுதாய சேவகனால் அரும் பெரும் பலன் பெற்று-வரும்... ஊர்க்காரர்கள் அனைவருமே... தமது சொந்த கடமைகளாக தாமே முன்வந்து வலிந்து ஏற்றுக்-கொண்டு ஊட்டி வளர்த்தால்...

தன் பிள்ளை = [அதன் பிரதி பலனாக].. ஊர்க்காரர் ஒவ்வொருவரின் பிள்ளை போன்ற பொறுப்புக்கள் கடமைகள் யாவற்றையும் இறைவனே தானே ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு திருவருள் புரிவான்.

எவருடைய முயற்சியும் பாடும் சேவையும் இன்றி... காட்டில் கனி-மரங்கள் தாமே வளர்வது போல..

...சமுதாய நன்னலங்கள் யாவும் தாமே வளரும்.

சமுதாயத்தை காக்கும் கடமை கொண்ட கடவுளின் பணியை இவ்வாறு இரு-பாலாரும் தாமாகவே முன்வந்து வலிந்து நிறைவேற்றிய

...செய்-நன்றிக்கு பிரதி-நன்றியாக இறைவன் அனைவர்க்குமே நாடாமலேயே வலிந்து திருவருள் புரிவான்.
.

Uthappam
7th June 2008, 01:54 AM
eLLu thaan eNNaikku kaiyuthu..
eli pulukkai etharkku kaiyuthu?

Sudhaama
30th June 2008, 08:44 PM
.
. ஒரே பழமொழி.!... கருத்து-5.!!!

.ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்.!
தன் பிள்ளை தானே வளரும்.!!!

இதே பழமொழிக்கு இதுவரை வெளியான நான்கு வெவ்வேறு கருத்துக்களும் பல்வேறு தமிழ்-அறிஞர்களின் அறிவார்ந்த சொந்த கற்பனையின் அடிப்படையில் அமைந்தவை.

ஆனால் இந்த பழமொழியின் அசல் மூலக்கருத்து இதோ...

ஊரான் பிள்ளை = பசு-மாட்டின் கன்றை

ஊட்டி வளர்த்தால் = தாய்ப்-பசுவின் பாலை முன்னதாக குடிக்க செய்து... கன்றையும் பேணி வளர்த்தால்

தன் பிள்ளை தானே வளரும் = பசுவை அதன் கன்றோடு பேணி வளர்க்கும் எஜமான-மாந்தனின் பிள்ளைக்கு அதே பசு... பால் வழங்கி... அந்த மானிட-பிள்ளையையும் வளரச்-செய்யும்.

கருத்து:--

நல்வாழ்வுக்கு வழி காட்டும் சிறந்த பழமொழி இது... எளிய உவமானத்தால் ஆழ்ந்த கருத்தை வலியுறுத்துவது.

முன் கை நீண்டால் முழங்கை நீளும் என்றும் ஆங்கிலத்தில்... Give and Take... என்னும் பழமொழிகளின் கருத்துப்படி...

...நாம் பெற விரும்பும் ஒவ்வொரு பொருள் அல்லது பயனுக்கும் முன்-விலையாகவும், கடமையாகவும்...

...நாம் அதற்கு-உரிய பிரதி-பொருளை அல்லது செயலை...

...நாமாகவே வலிந்து முன்வந்து செய்வதே மானிட அற-நெறி...

பசுவின் கன்றுக்கு முன்னதாக பால்-ஊட்டாது... நமக்காக பால் கறக்க இயலாது.

...அதுவே மாந்தர் வாழ்-நெறி.... மானிட வாழ்-நெறி ஒருவழி பாதை அன்று.

அதிலும் குறிப்பாக, நாம் பெற விரும்பும் ஒவ்வொரு நற்பயனுக்கும் ஆதாயத்திற்கும் துவக்கம்...

...பெற விரும்புவன் முன்னதாக கொடுக்க மனம் கொள்வதும்... உரியவர் நாடும் முன்னமேயே தானாகவே கொடுப்பதுமே.!

அத்தகைய உயரிய நல்வாழ்வு கருத்தையே... பிறிது-மொழிதல் அணியிலே... இப்பழமொழி வலியுறுத்தி கூறுகிறது.

ஆம். நமக்கு பால் வழங்கி நமது குடும்பத்திற்கே அரிய நல்லுணவு வழங்கும் பசுவின் சொந்த கடமை-பொறுப்பையும் நாம் ஏற்றுக்கொண்டால் தான்...

...கேவலம் அந்த மாடு கூட... நமது தேவையை மனம்-உவந்து அளிக்கும்.

அத்தகைய அடிப்படை அற-நெறியே... மாந்தர்- பாலும், இறைவன் பாலும் மானிடர் கொள்ளவேண்டிய நல்வாழ்வு கொள்கை.!!!.

உரிமையை கோருவோர்... முன்னதாக தனது கடமையை செய்தாக வேண்டும்...

..என்னும் நல்வாழ்வு அற-நெறியும்...

...இப்பழமொழியின் "உள்ளுறை-மறை பொருளாம்".!!!
.

Sudhaama
3rd August 2008, 03:55 AM
.
. - விபரீத பழமொழி

.பூராடத்தாள் நூல் ஆடாது.!.?


தமிழர் சமுதாயத்திலே இது ஒரு விபரீத பழமொழி... அதாவது அசல் கருத்தை மாற்றி திரித்து பொருள்-செய்வதால் ஏற்பட்ட விபரீதம்.! எப்படி.?

சில ஜோசியர்களால் இந்த பழமொழிக்கு இவ்வாறு பொருள் கூறப்படுகிறது....

"பூராட நட்சத்திரத்திலே பிறந்த பெண்ணின் தாலி (திருமாங்கல்லியம்) நீடித்து நிலைக்காது. அதாவது அவளது அத்தகைய ஜாதக-தோஷத்தால்... கணவனின் ஆயுசு பாதித்து, அவளுக்கு முன்னதாகவே உயிர் நீப்பான்" என்று பொருள் செய்கின்றனர்.

அப்படி அவச்சொல் கொண்ட ஒரு பழமொழியா இது.?

இதன் அசல் கருத்து என்ன.?... அன்பர்களே.! கூறுவீர்களா.?
.

pavalamani pragasam
3rd August 2008, 08:46 AM
ஆடாது என்றால் ஸ்திரமாக நிற்கும் என்று ஒரு எதிர் அர்த்தம் கேள்விப்பட்டதுண்டு!

aanaa
20th August 2008, 05:22 AM
பூராட நட்சத்திரப் பெண்களின் நூல் ஆடாமல் இருக்கும் - நிலைத்து இருக்கும்
சும்மா...

madhu
20th August 2008, 05:57 AM
பூராட நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணின் கழுத்தில் வெறும் மஞ்சள் கயிறு மட்டுமே ஆடும் நிலை வராது. அதாவது... நிறைய ஆபரணங்கள் பூணும் வகையில் உயர்ந்த நிலையில் இருப்பாள்.. என்று பொருளோ ?

pavalamani pragasam
20th August 2008, 08:54 AM
:D வெறும் மஞ்சள் கயிறாக இல்லாமல் வளமையின், செல்வ செழிப்பின் அடையாளமாக தங்கத்தாலி தொங்கும்!

Sudhaama
27th August 2008, 03:40 AM
.
- விபரீத பழமொழி

. பூராடத்தாள் நூல்-ஆடாது.

அசலில் நன்மங்கல கருத்து கொண்ட இந்த பழமொழியை... விபரீத பொருள் செய்து அமங்கல கருத்தாக்கி அரும் பெரும் மாங்கல்ய-பாக்கியம் கொண்ட கன்னியரின் திருமண தடையாக்கி விட்டனர் சிலர்... என்பது வருந்தத்-தக்க உண்மை...

...அதாவது அத்தகைய குறுகிய நோக்கர்களின் வக்கிர கருத்து... பூராட நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு தாலி-பாக்கியம் அதிக காலம் நீடிக்காது... விரைவில் விதவை ஆவாள்.!... என்பது.!!

ஆயின் இப்பழமொழியின் அசல் கருத்து என்ன.?

நூல் எனப்படும் மங்கல-நாண்... ஆடாது நிலைத்து நிற்கும்... அதாவது அவள் தீர்க்க (நீடித்த) சுமங்கலி மங்கையாகவே இறுதி நாள் வரை மங்கள-வாழ்வு வாழ்வாள்... என்பது பொருள்.

அதாவது பூராட நட்சத்திரத்தின் மகிமை அத்தகைய உன்னதமானது... என்பது கருத்து. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு வகை பலமும் குணமும் உள்ளது அன்றோ.?...

...திருவோணத்தான் உலகு ஆளும்.!.. என்னும் மற்றோர் பழமொழி போல.

ஆனால் இங்கு ஓர் உண்மையை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இருபத்து ஏழு நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் கெட்டது அல்ல.

எந்தவொரு நட்சத்திரத்தால் மட்டுமே எவ்வகையிலும் கெடுதல் விளையாது. அதாவது எல்லா நட்சத்திரங்களுமே நல்ல குணம் கொண்டவை தான்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையிலே.

மேற்குறித்த பழமொழிப்படி... பூராட-நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் எவருமே சுமங்கலியாகவே தான் வாழ்வார்கள் என்று உறுதி கொள்ளலாமா.?

அல்ல. ஒருமங்கையின் மாங்கல்லிய-பாவம் எனப்படும் தாலி-பாக்கியத்தை நமக்கு தெரிவிக்கும் பல குறிப்புக்கள் ஜோசிய சாஸ்திரத்தில் உள்ளன...

...உதாரணமாக ஜாதகத்தில் மாங்கல்லிய-ஸ்தானம் எனப்படும் எட்டாம் வீடு... அந்த வீட்டு அதிபதி... மங்கள-காரகன் எனப்படும் செவ்வாயின் ஜாதக-பலம்... போன்ற பல.

அத்தகைய குறிப்புக்களுக்கு இடையே... பூராட-நட்சத்திரத்தால் மட்டுமே கிட்டும் மாங்கல்லிய பலத்தை அறிந்து ஏனைய மாங்கல்லிய பலங்களோடு கூட்டி பலன் அறிய வேண்டியதே முறை.

ஆனால் எந்நிலையிலும் மனம் தளர வேண்டியது-இல்லை. ஏனெனில் ஜோசிய-சாஸ்திரத்தின் படி வரையப்பட்ட ஜாதகம் என்பது... ஒருவரது நிர்ணயிக்கப்பட்ட விதி-பட்டயம் அன்று....

...ஆனால் முந்தைய பிறவிகளின் பாவ-புண்ணிய ஈட்டங்களின் "நிதி-நிலை பட்டயம்" (Balance-Sheet).

இங்கு ஓர் அடிப்படை வேத-நெறி உண்மையை நாம் நினைவு கூர வேண்டும்..

எவருக்கும் வேத-நெறி விதி படைக்கவில்லை "ஏ மனிதா உன் ஜாதகம் தோஷம் மிக்கது. எனவே நீ உனது ஆயுள் முழுதும் கஷ்டப்பட்டுத்தான் தீரவேண்டும்" என்று.

அது மட்டும் அல்ல. ஜோசிய-சாஸ்திரம் மாறாகவும் கூறவில்லை... அதாவது "ஏ மனிதா உன் ஜாதகம் யோக-ஜாதகம். எனவே உன் ஆயுள் முழுதும் மகா பாக்கியவானாகவும் கோடீசுவரனாகவும் எல்லா சௌபாக்கியங்களும் எளிதாக பெற்று சொர்க்க-போகத்தில் மாமன்னனை போல வாழ்வாய். எனவே நீ உழைக்கவே வேண்டியது இல்லை" என்று.

காரணம்... முந்தைய ஜன்ம-பலன்களோடு கூட நிகழும் ஜன்ம-பலன்களோடு கூட்டித்தான் இறைவன் நமக்கு வாழ்க்கையை அமைக்கிறான்.

...அதாவது விதி என்பது அவ்வப்போது மாறக்கூடியது... தற்கால பாவ-புண்ணிய ஈட்டத்திற்கும் ஏற்ப.!

ஆம். நான் கண்கூடாக கண்ட அனுபவங்கள் பலப்பல.

உதாரணமாக...

யோக-ஜாதகம் கொண்டு 40 வயது வரை ராணிபோல் வாழ்ந்த பின்... அதள-பாதாளத்திற்கு சரிந்து பிச்சைக்காரியாய் 50 வயதிலேயே மடிந்த வேறோர் மாதையும் கண்டிருக்கிறேன்.

மாறாக... பூராட நட்சத்திரத்திலே பிறந்து தீர்க்க சுமங்கலியாய் 84 வயது வரை கோடீசுவரியாய் சொர்க்க போகத்தில் மங்கா புகழுடன் வாழ்ந்து மறைந்த... தோஷ-ஜாதகம் கொண்ட மங்கையையும் கண்டிருக்கிறேன்.

ஏன் இந்த புதிரான விளைவு.? ஜோசியமே பொய்யா.? ஜோசியர்களின் தவறா.? இரண்டும் அல்ல.

நிகழ்கால ஜன்மத்திலும் நாம் கொள்ளும் நடத்தை, பாவ-புண்ணியங்கள், பரிகார-ஈடுகட்டல் நற்பணிகள், பிறரை நம்பிக்கை மோசம் செய்து ஈட்டிய பெரும் செல்வத்தின் விளைபயன், அறம் வழுவா/வழுவிய நன்மை தீமை செயல்கள் ஆகியன...

...நமது கடந்த கால சேமிப்போடு பெரிதும் வலிமை கூட்டி பயன் தருகின்றன... என்பதே முக்காலும் உண்மை.!!!

...தினை விதைத்தவன் தினை அறுப்பான்... வினை விதைத்தவன் வினை அறுப்பான்... என்பது வெறும் ஏட்டு-சுவடி பழமொழி அன்று.

..நடைமுறையில் கண்ட அனுபவ-பாடம்.!!!

ஆக வேத-நெறி விதிப்படியும் ஜோசிய நியதிப்படியும்...

...பூராடத்தாள் நூல் ஆடாது.. என்பது மங்கல பழ-மொழியே.

.

pavalamani pragasam
14th November 2008, 08:32 PM
.
. ஒரே பழமொழி.!... கருத்து-5.!!!

.ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்.!
தன் பிள்ளை தானே வளரும்.!!!

இதே பழமொழிக்கு இதுவரை வெளியான நான்கு வெவ்வேறு கருத்துக்களும் பல்வேறு தமிழ்-அறிஞர்களின் அறிவார்ந்த சொந்த கற்பனையின் அடிப்படையில் அமைந்தவை.

ஆனால் இந்த பழமொழியின் அசல் மூலக்கருத்து இதோ...

ஊரான் பிள்ளை = பசு-மாட்டின் கன்றை

ஊட்டி வளர்த்தால் = தாய்ப்-பசுவின் பாலை முன்னதாக குடிக்க செய்து... கன்றையும் பேணி வளர்த்தால்

தன் பிள்ளை தானே வளரும் = பசுவை அதன் கன்றோடு பேணி வளர்க்கும் எஜமான-மாந்தனின் பிள்ளைக்கு அதே பசு... பால் வழங்கி... அந்த மானிட-பிள்ளையையும் வளரச்-செய்யும்.

கருத்து:--

நல்வாழ்வுக்கு வழி காட்டும் சிறந்த பழமொழி இது... எளிய உவமானத்தால் ஆழ்ந்த கருத்தை வலியுறுத்துவது.

முன் கை நீண்டால் முழங்கை நீளும் என்றும் ஆங்கிலத்தில்... Give and Take... என்னும் பழமொழிகளின் கருத்துப்படி...

...நாம் பெற விரும்பும் ஒவ்வொரு பொருள் அல்லது பயனுக்கும் முன்-விலையாகவும், கடமையாகவும்...

...நாம் அதற்கு-உரிய பிரதி-பொருளை அல்லது செயலை...

...நாமாகவே வலிந்து முன்வந்து செய்வதே மானிட அற-நெறி...

பசுவின் கன்றுக்கு முன்னதாக பால்-ஊட்டாது... நமக்காக பால் கறக்க இயலாது.

...அதுவே மாந்தர் வாழ்-நெறி.... மானிட வாழ்-நெறி ஒருவழி பாதை அன்று.

அதிலும் குறிப்பாக, நாம் பெற விரும்பும் ஒவ்வொரு நற்பயனுக்கும் ஆதாயத்திற்கும் துவக்கம்...

...பெற விரும்புவன் முன்னதாக கொடுக்க மனம் கொள்வதும்... உரியவர் நாடும் முன்னமேயே தானாகவே கொடுப்பதுமே.!

அத்தகைய உயரிய நல்வாழ்வு கருத்தையே... பிறிது-மொழிதல் அணியிலே... இப்பழமொழி வலியுறுத்தி கூறுகிறது.

ஆம். நமக்கு பால் வழங்கி நமது குடும்பத்திற்கே அரிய நல்லுணவு வழங்கும் பசுவின் சொந்த கடமை-பொறுப்பையும் நாம் ஏற்றுக்கொண்டால் தான்...

...கேவலம் அந்த மாடு கூட... நமது தேவையை மனம்-உவந்து அளிக்கும்.

அத்தகைய அடிப்படை அற-நெறியே... மாந்தர்- பாலும், இறைவன் பாலும் மானிடர் கொள்ளவேண்டிய நல்வாழ்வு கொள்கை.!!!.

உரிமையை கோருவோர்... முன்னதாக தனது கடமையை செய்தாக வேண்டும்...

..என்னும் நல்வாழ்வு அற-நெறியும்...

...இப்பழமொழியின் "உள்ளுறை-மறை பொருளாம்".!!!
.

Recently heard a new, different, strange explanation for this proverb in the radio:

ஊரான் பிள்ளை=மனைவி
மனைவியை வளமாக வைத்திருந்தால் தனக்கு வாரிசு நன்கு உருவாகும்!!!

Sudhaama
29th November 2008, 01:12 AM
.
. ஒரே பழமொழி.!... கருத்து-5.!!!

.ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்.!
தன் பிள்ளை தானே வளரும்.!!!

இதே பழமொழிக்கு இதுவரை வெளியான நான்கு வெவ்வேறு கருத்துக்களும் பல்வேறு தமிழ்-அறிஞர்களின் அறிவார்ந்த சொந்த கற்பனையின் அடிப்படையில் அமைந்தவை.

ஆனால் இந்த பழமொழியின் அசல் மூலக்கருத்து இதோ...

ஊரான் பிள்ளை = பசு-மாட்டின் கன்றை

ஊட்டி வளர்த்தால் = தாய்ப்-பசுவின் பாலை முன்னதாக குடிக்க செய்து... கன்றையும் பேணி வளர்த்தால்

தன் பிள்ளை தானே வளரும் = பசுவை அதன் கன்றோடு பேணி வளர்க்கும் எஜமான-மாந்தனின் பிள்ளைக்கு அதே பசு... பால் வழங்கி... அந்த மானிட-பிள்ளையையும் வளரச்-செய்யும்.

கருத்து:--

நல்வாழ்வுக்கு வழி காட்டும் சிறந்த பழமொழி இது... எளிய உவமானத்தால் ஆழ்ந்த கருத்தை வலியுறுத்துவது.

முன் கை நீண்டால் முழங்கை நீளும் என்றும் ஆங்கிலத்தில்... Give and Take... என்னும் பழமொழிகளின் கருத்துப்படி...

...நாம் பெற விரும்பும் ஒவ்வொரு பொருள் அல்லது பயனுக்கும் முன்-விலையாகவும், கடமையாகவும்...

...நாம் அதற்கு-உரிய பிரதி-பொருளை அல்லது செயலை...

...நாமாகவே வலிந்து முன்வந்து செய்வதே மானிட அற-நெறி...

பசுவின் கன்றுக்கு முன்னதாக பால்-ஊட்டாது... நமக்காக பால் கறக்க இயலாது.

...அதுவே மாந்தர் வாழ்-நெறி.... மானிட வாழ்-நெறி ஒருவழி பாதை அன்று.

அதிலும் குறிப்பாக, நாம் பெற விரும்பும் ஒவ்வொரு நற்பயனுக்கும் ஆதாயத்திற்கும் துவக்கம்...

...பெற விரும்புவன் முன்னதாக கொடுக்க மனம் கொள்வதும்... உரியவர் நாடும் முன்னமேயே தானாகவே கொடுப்பதுமே.!

அத்தகைய உயரிய நல்வாழ்வு கருத்தையே... பிறிது-மொழிதல் அணியிலே... இப்பழமொழி வலியுறுத்தி கூறுகிறது.

ஆம். நமக்கு பால் வழங்கி நமது குடும்பத்திற்கே அரிய நல்லுணவு வழங்கும் பசுவின் சொந்த கடமை-பொறுப்பையும் நாம் ஏற்றுக்கொண்டால் தான்...

...கேவலம் அந்த மாடு கூட... நமது தேவையை மனம்-உவந்து அளிக்கும்.

அத்தகைய அடிப்படை அற-நெறியே... மாந்தர்- பாலும், இறைவன் பாலும் மானிடர் கொள்ளவேண்டிய நல்வாழ்வு கொள்கை.!!!.

உரிமையை கோருவோர்... முன்னதாக தனது கடமையை செய்தாக வேண்டும்...

..என்னும் நல்வாழ்வு அற-நெறியும்...

...இப்பழமொழியின் "உள்ளுறை-மறை பொருளாம்".!!!
.

Recently heard a new, different, strange explanation for this proverb in the radio:

ஊரான் பிள்ளை=மனைவி
மனைவியை வளமாக வைத்திருந்தால் தனக்கு வாரிசு நன்கு உருவாகும்!!!

.
இந்த ஒரே பழமொழிக்கு... இதுவரை ஐந்து வகையான வெவ்வேறு கருத்துக்களை... தமிழ்-மொழி நயத்தை கண்டு அனுபவித்தோம்.

அவற்றுள் இறுதியாக வழங்கப்பட்ட ஐந்தாவது கருத்து மட்டுமே... எவரது சொந்த கற்பனையும் கலவாத அசல் கருத்து மட்டும் இன்றி... தலையாய சிறந்த கருத்தும் அதுவே.

அவ்வாறு கூறுதற்கு பல காரணங்களுள் முதலாவது காரணம்... "ஊரான்" என்னும் சொல்லுக்கு சங்க-தமிழிலே "பசு-மாடு" என்பதே பொருள்.

முதல் நான்கு வித கருத்துக்களும் பல்வேறு தமிழ்-அறிஞர்கள் தத்தம் சொந்த கண்ணோட்டத்திலே... தமிழ்-இலக்கிய மரபுக்கு ஏற்ப... பொருள் செய்த அறிவார்ந்த நற்கருத்துக்கள்.

அசல் கருத்தினின்றும் பெரிதும் வேறுபட்டு... பல்வேறு அறிஞர்கள் அவரவரது சொந்த கற்பனை-கண்ணோட்டத்திலே அணுகி, பொருள் கண்டாலுமே...

... அவற்றுள் எந்த-ஒன்றையும் தவறு என்று நம்மால் மறுக்க இயலாது... ஏனெனில் அவை அறிவுக்கு உகந்ததாகவும்... மனதிற்கும் உவந்ததாகவும் திகழ்வதால் தான்.

இலக்கியங்களில் குறிப்பாக திருக்குறளுக்கும், தமிழ்-மறை எனப்படும் ஆழ்வார்களின் தமிழ் திராவிட-வேதத்திற்கும் பல்வேறு உரையாசிரியர்கள் வெவ்வேறு கண்ணோட்டத்தில் பல்வேறு உரைகள் வழங்கியுள்ளனர்.! ஏன்.?

காரணம் அவை அத்தனை ஆழ்பொருள் பொதிந்து.. ஒவ்வொரு கண்ணோட்டத்திலும் வேறுபட்ட பொருள் துலங்கும் வகையிலே...

...ஒரே நதிப்படுகையில், பல்லிடங்களிலே உள்ள ஆழ்-கிணறுகளின் ஒரே நதி- நீரே பல்-சுவை தரு நீர்-வகைகளாய்... தேன் தமிழ்-சுரங்க ஊற்றுக்களாய் அமைந்துள்ள தமிழமுதங்கள். என்பதால் தான்

நம் சிந்தனைக்கு ஏற்புடையதான ஐவகையோடு... மேலுமோர் ஆறாவது கருத்தா இது.?

இக்கருத்து நல்லறிவு-சால் கருத்தா.? ஏற்புடைத்தா என்று சற்று ஆராய்வோம்.

ஊரான் பிள்ளை = மனைவி.!... இக்கருத்து இங்கு பொருந்துமா.?

(1) பெண்-பிள்ளை என்னும் முறையிலேயும் ஊரான் யாரோ முன்பின் அறியாதவரது பிள்ளை... என்னும் பொருள்-வரையிலும்... ஒரு வகையில் ஓரளவு இந்த அணுகுமுறை ஏற்க-தக்கதே.!... ஆனால்.?

முன்னம் கூறிய நால்வகையான கற்பனை-கருத்துக்களிலே... "ஊரான்" என்னும் சொல்லுக்கு யாரோ முன்பின் அறியப்படாத புதியோன் (Stranger) என்னும் பொருள் அசல் பொருள் அன்று. இலக்கிய-பொருளும் அன்று.

இலக்கிய கருத்திலே... ஊரான் என்னும் சொல்லுக்கு... ஊரவன் / ஊரை-சேர்ந்தவன்... என்னும் பொருளிலே, கருத்து மட்டும் தான் தரமான பொருளாம்.

ஆனால் பேச்சு-வழக்கிலே... "யாரோ ஒருவன்"... என்னும் கருத்திலே பொருள் செய்கிறோமே அன்றி... அக்கருத்து இலக்கிய-கண்ணோட்டத்திலே எதிர்-மறை பொருளே காட்டும்.-ஆதலால்... அம்முறையிலே பொருள்-செய்வது குழப்பமே விளைவிக்கும்... கொச்சை-பொருளாகும்...

ஓதுவது ஒழியேல்... என்னும் ஆத்திசூடி பழமொழியில் "ஓதுவது" என்ற ஒரே சொல்லுக்கு இலக்கிய-மரபுப்படி தானே நற்பொருள் செய்கிறோம்.?

கணவனது காதில் தலையணை-மந்திரம் "ஓதினாள்"... என்னும் கொச்சை-பேச்சு வழக்கிலே விபரீதமாக பொருள் செய்யலாமா.?

(2) பெண்-பிள்ளையான மனைவியை ஊட்டி வளர்க்கிறானா கணவன்.... என்னும் ஆண்-பிள்ளை.?

தற்காத்து தற்கொண்டானை பேணி வளர்ப்பவள் பெண்-பிள்ளையான மனைவியே அன்றோ.?

"பேணி"... என்னும் ஒரே சொல்லே போதாதா... கணவனையும் குடும்பம் முழுதையுமே ஊட்டி வளர்ப்பது பெண்-பிள்ளையா அல்லது ஆண்-பிள்ளையா?... என்னும் கேள்விக்கு விடை.!

(3) தானே வளரும்.... என்ற சொல்-வரி இங்கு பொருந்துமா.?

"தன்-பிள்ளை" எனப்படும்... தாய்-பெற்ற பிள்ளை...

...தானே வளர்கிறதா.?...

உள்ளும் புறமுமாக அந்த பிள்ளையை வளர்ப்பது எந்த பிள்ளை.?... தாய் என்னும் பெண்-பிள்ளையா.? தந்தை என்னும் ஆண்-பிள்ளையா.?

கர்பத்தில் பத்து மாதம் சுமந்து வளர்ப்பதும் தாயே.!... பிறந்த பின்னரும் ஊட்டி வளர்ப்பது தாயே அல்லவோ.?

ஆக தன்-பிள்ளை... தானே வளர்வது அன்று.... பிறரால் வளர்க்கப்படுவது.

(4) கர்ப்ப-வாசத்தின் போது... தாய் என்ன வளர்க்கிறாள்.? இயற்கையிலே குழந்தை தானாகவே தானே வளர்கிறது.?... என்று கேட்கலாம்.

ஆம். அந்நிலையில் தாயின் பங்கு சிறிதே.!... ஏனெனில் கர்ப்பத்தில் சிசுவை உருவாக்கி வளர்ப்பவன் இறைவன்... என்னும் கருத்திலே தான் கடவுளின் பல பெயர்களுள் ஒரு பெயர் "சிசு-பாலன்" என்னும் திருநாமம்.

அவ்வாறே கொண்டாலும் தாய்க்கும் ஒரு பங்கு உள்ளதே.!... கர்ப்ப-சிசுவுக்கு தன் உதிரத்தை ஊட்டி அன்றோ வளர்க்கிறாள் தாய் என்னும் பெண்-பிள்ளை.?...

கர்ப்ப-சிசுவே எனினும்.. தானாகவே மட்டும் வளர்வது அல்லவே.!

(5) தன் பிள்ளை... என்றால்.?

இந்த அறிஞர் கருத்துப்படி... "தன் பிள்ளை"... என்னும் சொற்களில்... தந்தையின் பிள்ளை என்னும் தனி-உரிமை தந்து... "தன்"-பிள்ளையாக கூறுகிறார்.

இக்கருத்து தமிழர் பண்பாட்டு-முறைப்படியோ... வேத-நெறிப்படியோ... விஞ்ஞான-ரீதியிலோ... அற-நெறிப்படியோ தந்தைக்கு மட்டுமே உரித்தாய் "தன்-பிள்ளை" என்னும் கருத்து ஏற்புடையது அன்று....

...தாயும் தந்தையுமாய் பெற்றொர் பெற்ற பிள்ளை... தாய்-தந்தை இருவர்க்குமே பொதுவான சொத்து... குடும்ப சம்பத்து.

ஆக, எந்த கண்ணோட்டத்திலே அணுகினாலும்... இந்த புதுமை-கருத்தின் நியாயத்தை என்னால் புரிந்து-கொள்ள முடியவில்லை.!

ஊம். இப்படியும் ஒரு விபரீத-கற்பனையா.?
.

pavalamani pragasam
29th November 2008, 08:12 AM
உண்மையிலே இந்த கற்பனையில் 'விபரீதம்' உள்ளதா? 'ஊரானுக்கு பிறந்தது' என்று பெண் குழந்தை பிறந்ததும் சொல்வது வழக்கில் உள்ளது. கணவன் 'ஊட்டி வளர்ப்பது' குடும்பத்தை சம்பாத்தியத்தால் காப்பாற்றுவது ஆகாதா? ஆரோக்கியமான இல்வாழ்கையின் பயனாய் வாரிசுகள் உதிப்பதில் அதிசயமுண்டோ?

aanaa
30th November 2008, 05:01 AM
""அசத்தப் போவது யாரு ""
இங்கும் இக் கருத்தையேதான் சொன்னார்கள்
??

Sudhaama
1st December 2008, 02:22 AM
.
.
. ஒரே பழமொழி.!!...கருத்து-6 ...'விபரீத-கற்பனை'.!!


. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்

தன் பிள்ளை தானே வளரும்.!



உண்மையிலே இந்த கற்பனையில் 'விபரீதம்' உள்ளதா?

அரிய சிந்தனைக்கு-உகந்த நல்ல கேள்வி.!

ஆம்.! இந்த 6-ஆம் கருத்தே விபரீத-கற்பனை தான்.! எப்படி.?



'ஊரானுக்கு பிறந்தது' என்று பெண் குழந்தை பிறந்ததும் சொல்வது வழக்கில் உள்ளது.

ஆம். உண்மையே.!.. பேச்சு-வழக்கிலே, இலக்கிய-மரபுக்கு மாறான கொச்சை-பொருளிலே...

..."ஊரான்" என்னும் சொல்லுக்கு... "யாரோ முன்பின் அறியப்படாத அந்நியன் (Stranger)"... என்னும் கருத்திலே அவ்வாறு கூறப்படுவது உண்டு.

இங்கு "ஊரான்" என சுட்டப்படுபவர் யார்.? அந்த பெண்- பிள்ளைக்கு வாய்க்க-போகும் கணவன்... பெண்ணை பெற்றோரது மாப்பிள்ளை.

பெற்றோர் என்ன நினைக்கின்றனர்.? ...

நாம் பெற்ற இரு குழந்தைகளான ஆண்-பிள்ளையையும் பெண்-பிள்ளையையும் சமமாக கருதி... உயர்வு-தாழ்வு இல்லா பாசத்துடனும் அக்கறையுடனும் இருவரையுமே ஒரே தரமாக மதித்து...

..."நம் குழந்தை" என்று நாம் தற்போது உரிமை-கொண்டாடி, பேணி வளர்க்கிறோமே.!...

...இதே உரிமை என்றென்றும் தொடருமா.?

"நாம் பெற்ற ஆண்-பிள்ளை நம்மை விட்டு அகலாது... நம்மோடேயே நம் வீட்டையே தன் வீடாக கருதி நம்மோடு வாழ-போகிறவன் அன்றோ.?

மாறாக, நமது மற்றோர் குழந்தையான நம் வீட்டு பெண்-பிள்ளையை...

...நம்மிடமிருந்து பிற்காலத்தில் கன்னிகாதானம் பெற-போகும் அவளது கணவன் தனது-என உரிமை கொண்டாட தகுதி கொண்டவன் ஆயிற்றே.!

...நாம் முன்பின் அறிந்திராத அந்த "ஊரான்" யாரோ தெரியாது... யாருக்கு மாப்பிள்ளை யாரோ.? அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ.?...

நாம் அரும் பாடுபட்டு வளர்க்கும் இந்த பெண்-பிள்ளை... திருமணத்திற்கு பின், நம்மிடமிருந்து பிரிந்து போய், புக்ககமே தன் வீடாய் கொள்ள-போகிறவள் ஆயிற்றே.!

அந்நிலையில் நாம் பெற்றெடுத்த நமது ஆண்-பெண் இரு குழந்தைகள்-பாலும் சமமான உரிமை கொண்டாட இயலுமா.?

'ஊரானுக்கு பிறந்தது'= ஊரானுக்காக பிறந்தது'



கணவன் 'ஊட்டி வளர்ப்பது' குடும்பத்தை சம்பாத்தியத்தால் காப்பாற்றுவது ஆகாதா?

காப்பது வேறு.... வளர்ப்பது வேறு.

காப்பது என்னும் சொல்லின் பொருள்... காக்கப்படும் சொத்து வளமுற வாழ்ந்து- ஓங்க தேவையான செல்வ- ஈட்டம் ஈட்டி, வளமை கொணர்ந்து-தந்து... சேதம், குற்றம்-குறை, கேடு, அழிவு, திருட்டு, இடையூறு, ஆபத்து, விபத்து ஆகிய புற- தலையீடுகளின்றும் தடுத்து பாதுகாத்து, மொத்த மேலாண்மை நிர்வாகம் செய்வது....

... விவசாய-வயல் நிர்வாகி , நாட்டு-மன்னன், குடும்ப-தலைவனாகிய தந்தை ஆகியோர் செய்யும் கடமை-பங்கு வகை.

உதாரணமாக தோழர்கள் இருவர் சேர்ந்து ஒரு வயல்-நிலத்தை வாங்கி, இருவரும் சம-பங்கு சொந்தக்காரர்கள் ஆகின்றனர்....

மூத்தவன் கல்வியறிவு கொண்டு உடல்-வலிமை குன்றியவன்.. ஆனால் விவசாயம் முற்றும் அறிந்தவன்.. அரசு-அலுவலக தொடர்பு, வரி கட்டுவது... உரம், விதை, பூச்சி-மருந்து போன்ற கடை-சரக்குகளை கொண்டு சேர்ப்பது, விளைச்சலை விற்று காசாக்குவது... இரவு-காவலாய் வயலடியே உறங்கி பாதுகாப்பது போன்ற பணிகளை பொறுப்பு-ஏற்று நடத்துகிறான்

இளையவன் உடல்-வலிமை மிக்கவன் நல்ல உழைப்பாளி. வயலில் உழைப்பு பணிகளை மட்டுமே கவனித்துக்-கொள்கிறான்.. என்று கொண்டால்..

...வயல்-சொத்தை பெருக்கி வளர்ப்பது விவசாயி.... நிர்வாகி செய்வது இல்லை.. ஆனால் பயிர்- விளைச்சலில் இருவரும் சொந்தமும் உரிமையும் கொண்டாடுகின்றனர்... நமது என்று.!

அதே போல தந்தை என்னும் குடும்ப-தலைவன் காக்கிறான்... வளர்ப்பது இல்லை.

...தாய்-தந்தையர் பெற்ற பிள்ளையை ஊட்டி- வளர்ப்பது தாயே அன்றோ.?

"தாயும்-ஆனவன்" என்ற சிவ-பெருமான் திருநாமத்தின் "உள்ளுறை மறை-பொருள்" இங்கு சிந்தித்தற்பாலது... குறிப்பாக, அதன் உட்பொதிந்த "உம்"

ஆம். சிவ-பெருமான் எனப்படும் தலைவன்... பொதுவாக பக்தர்களுக்கு ஓர் தந்தையின் பாங்கும் பணி-கடமையும் மட்டுமே கொண்டு பக்தர்களுக்கு வாழ்க்கையில் வளமும், பாதுகாப்பும் மட்டுமே திருவருள் புரிந்து கடவுள்-துணையாய் காப்பவன்.

ஆனால் அந்த ஈசன் என்னும் தேவநாதன் தந்தையோடு... ஒன்றியும் தனித்தும் இரு வேறு வகைகளிலே காட்சி தந்து... பக்தர்களுக்கு திருவருள் புரிந்து-வரும் அன்னையோ... பக்தர்களை பேணி வளர்ப்பவள், தாய்-பண்பிலே...

...தம் மக்களின் அக-வலிமைகளான உள்ளத்தையும், அறிவையும், ஆன்மாவையும்... தூண்டி, பக்குவப்படுத்தி, பெருக்கி வளர்த்து ஆளாக்குபவள்... அந்த அன்னை தேவ-நாயகியே அன்றோ.?

அன்னையான அவளால் தந்தை-கடமையும் செய்ய இயலும்.! ஆனால் செய்வது இல்லை...

...ஆம்! "தந்தையும்-ஆனவள்" தாய் நானே.. என்னும் தனிப்பெயர் கொள்ள அந்த மாதேவி உவப்பது-இல்லை.

...ஏனெனில் காக்கும் தலையாய பணி தன் நாதனின் கடமை அது... நாம் தலையிட கூடாது. ஆண்-தன்மையால் ஏற்படும் தலைமை சிறப்பு- ஆதலால் நாதன்-அவன் பணியை அந்த தந்தை ஆளும்-ஈசன் செய்வதே நன்று.... என்றும்,

...தந்தையின் ஈட்டத்தை மக்களுக்கு வழங்கி... தாயாய் பரிவும் பாசமும் காட்டி நல்வாழ்க்கைக்கு உரிய பால்-வளம் ஊட்ட தக்க வகையிலே... பெண்மை-பண்பு கொண்ட மனைவி நான் உறு-துணையாக தாய்-கடமையாற்றுவதே நன்று.... என ஒதுங்கி இருப்பவள்... ஆண்-தன்மையினின்றும் மேலோங்கிய பெண்மை-பண்பால்

...தன்னடக்கத்திற்கே முன்-உதாரணமாய்... பெண்மையின் சீர்மை உணர்த்தும் உமையன்னை.

[இராமாயணத்தில் அசோக-வன சீதா-தேவி அனுமனிடம் கூறிய தன்னிலை கருத்தும் அதுவே.]

மாறாக தந்தை ஈசனோ... இக்கட்டான சூழல்களில்...தனது இயல்பான ஆண்-தன்மையோடு, பெண்-தன்மையை-"உம்" கூட்டிக்கொண்டு...

...தாயும்-ஆனவனாய்... பக்தர்களின் பல்வகை தேவைகள் அனைத்திற்கும் முழு-பொறுப்பு ஏற்றுக்கொண்டு காத்தும் வளர்த்தும் தாய்-தந்தையரின் இருவேறு பண்புகளையும் ஒருங்கு-கூட்டி செயல்படுத்தும் நோக்கும் அணுகுமுறையும் கொண்ட தலைவன்... என்பதே கருத்து.

ஆண்-அல்லன், பெண்-அல்லன், அல்லா அலியும் அல்லன்... என்னும் தமிழ்-மறை திருவாய்மொழி சொற்களின் முதல்- பகுதி பொருளும் அதுவே.



ஆரோக்கியமான இல்வாழ்கையின் பயனாய் வாரிசுகள் உதிப்பதில் அதிசயமுண்டோ?

தலைமை-நிர்வாகியும் விவசாயியும் சேர்ந்து விளைவிப்பதே பயிர்- விளைச்சல்.

எனவே இருவருக்கும் பொது உடைமையே பயிர்-விளைச்சல் பயன்.

ஆனால் பயிரை ஊட்டி வளர்ப்பவன் விவசாயி மட்டுமே.... பயிரும் தானாக வளர்வது அன்று.. வளர்க்கப்படுவது.

இந்திய பாரம்பரியத்தின்படியும், தமிழர் வாழ்-நெறி கலாச்சாரத்தின்படியும்... விதைக்கு உவமானமாக தந்தையையும்...அதன் அடி-நிலத்திற்கு உவமானமாக தாயையும் சுட்டுவது மரபு. எப்படி.?

ஓர் கனிமரத்தை உருவாக்குவது அதன் விதையும்... நிலமும் தான்.

விதையை தன்னுள் மறைத்து-புதைத்து வைத்துக்கொண்டே, ஊட்டி வளர்த்து... சிறு விதையை பெரு மரமாய் உருவாக்கி அதை தாங்கி நிற்பது நிலம் தான்.

...தாய் தன்னுள்ளே ஒரு வித்தை புதைத்து வைத்து மறைத்து வளர்த்து... திடீரென ஒரு வளர்ந்த முத்தாய் வழங்கி தாங்குவதை போல.!

விதையே மரத்தின் ஆதார-வித்து என்னும் தந்தையே எனினும்...

...விதையை வளர்த்து ஆளாக்கி விளை-பயனை தலை-நிமிர்த்தி நிற்க-செய்வது தாய்-நிலமே.

எனவே ஊரான் என்னும் பெயர்-கொண்டவராய் விளங்கும்... பெண்ணை-பெற்ற அந்நிய பெற்றோரின் மகள் பெண்-பிள்ளையை...

...அதன் கணவனான ஆண்-பிள்ளை ஊட்டுவதும் இல்லை... வளர்ப்பதும் இல்லை.

ஏனெனில் முன்னமேயே வளர்ந்து ஆளான-பின் தான்... கணவனிடம் வந்து சேர்கிறாள்... பெண்-பிள்ளை.

அவ்விருவரும் பெற்ற பிள்ளைகள்... "தன்-பிள்ளை" ஆகா... "தம்-பிள்ளையே" தாய்-தந்தை இருவருக்குமே.!

...அந்த பிள்ளையும் தானாகவே வளர்வது அன்று... வளர்க்கப்படுவது.

ஆகவே இத்தகைய 6-வது வகையான கற்பனை-கருத்து...

...பாமரரிலிருந்து பண்டிதர் வரை எவருமே ஏற்கவொண்ணா விபரீத-கருத்தேயாம்.!
.

Sudhaama
9th March 2010, 08:58 AM
.
.

.
அரசன் அன்று கொல்வான்.!...

ஈசன் நின்று கொல்லும்.!!!



அன்பர்களே,

எல்லோரும் அறிந்த பிரபலமான...

....இப்பழமொழியின் ஆழ்பொருள் என்ன.?

...விவாதிக்கலாமா.?

அன்பன்... சுதாமா..
.
.

pavalamani pragasam
9th March 2010, 09:04 AM
அரசனின் ஆணைகள்/தீர்ப்புகள்/தண்டனைகள் வெகு விரைவில்/உடனடியாக நிறைவேற்றப்படும்- பாண்டியன் கோவலனை கொல்ல உத்தரவிட்டது போல, சோழ மன்னன் மகனை தேர்காலில் கொல்ல ஆணையிட்டது போல. ஆனால் கடவுளின் தீர்ப்பு/தண்டனை அவசரமில்லாமல் நிதானமாய் பல காலம் கழித்து நிறைவேற்றப்படும்.

Kambar_Kannagi
9th March 2010, 09:12 AM
அரசனின் ஆணைகள்/தீர்ப்புகள்/தண்டனைகள் வெகு விரைவில்/உடனடியாக நிறைவேற்றப்படும்- பாண்டியன் கோவலனை கொல்ல உத்தரவிட்டது போல, சோழ மன்னன் மகனை தேர்காலில் கொல்ல ஆணையிட்டது போல. ஆனால் கடவுளின் தீர்ப்பு/தண்டனை அவசரமில்லாமல் நிதானமாய் பல காலம் கழித்து நிறைவேற்றப்படும்.

மேலும், தீங்கு/அனியாயம் செய்து அதிலிருந்து தப்பித்துக் கொள்பவர்களுக்கு இதை பாதிக்கப்பட்டவர்கள் சொல்லகூடும்.
அதாவது, என்றாவது ஒரு நாள், செய்த தவறுக்கு உகந்த கூலி கிடைக்கும் என்றும் சொல்லலாம். எனது கருத்து.

Sudhaama
9th March 2010, 09:49 AM
.
.

.
அரசன் அன்று கொல்வான்.!...

ஈசன் நின்று கொல்லும்.!!!


.


அரசனின் ஆணைகள்/தீர்ப்புகள்/தண்டனைகள் வெகு விரைவில்/உடனடியாக நிறைவேற்றப்படும்- பாண்டியன் கோவலனை கொல்ல உத்தரவிட்டது போல, சோழ மன்னன் மகனை தேர்காலில் கொல்ல ஆணையிட்டது போல. ஆனால் கடவுளின் தீர்ப்பு/தண்டனை அவசரமில்லாமல் நிதானமாய் பல காலம் கழித்து நிறைவேற்றப்படும்.

"நின்று"... என்ற சொல்லுக்கு.... தாமதித்து.... அல்லது மெதுவாக... காலம் தாழ்த்தி... என்பன போன்ற கருத்தா.?

அப்படித்தான் நம்மிடையே தவறான வழக்கு நிலவி வருகிறது.

சற்று சிந்தித்துப் பாருங்கள்...

அவ்வாறு கருதுவது... காலம் கடந்த தீர்ப்பு அன்றோ.?

Justice delayed... means Justice DENIED... என்னும் சட்ட-விதிப்படி.... அத்தகைய இறை-பண்பு... இறைவனுக்கே அழகா.? பெருமையா.?

இறைவனுக்கு இழிவு அன்றோ.?

ஆம். அவ்வாறு பொருள்-கொள்வது விபரீத கருத்து....

அன்பர்களே.... மேலும் உங்களது சிந்தனை-குதிரையை... தட்டி ஓட்டுங்களேன்...

....உயர்-திசை நோக்கி.!

.

.

kirukan
9th March 2010, 11:33 AM
அன்று செய்த தவற்றிக்கு நல்லவனாயினும்
தண்டனை அளிப்பவன் அரசன்.

நின்று நிறைகுறை அறிந்து சீர்தூக்கி
தீர்ப்பை அளிப்பான் இறைவன்.

கிறுக்கனின் பார்வையில்....

Sudhaama
13th March 2010, 03:42 AM
[tscii]

.

.
.
.
அரசன் அன்று கொல்வான்.!...

ஈசன் நின்று கொல்லும்.!!!


.

.

அன்பர்களே,

இந்த விபரீத-பழமொழியின் அசல் பொருளைக்-காண உதவியாக ---

இதோ சில சிந்தனைப்-பொறிகள் (Clues) தருகிறேன்

1. இப்பழமொழி குற்றவாளியைக் குறித்து மட்டுமே சுட்டப்-படுவது

ஆயின் எத்தகைய குற்றவாளிக்கும் உரிய தண்டனை கொல்லப்படுவது ஒன்றேயா?... அரசனும் ஈசனுமேயா.?

2. குற்றத்தை நேரிடையாக இழைத்த முதல் குற்றவாளிக்கும் ஏனைய குற்றவாளியருக்குமே கொல்லப்படுவது ஒன்றே சமமான தண்டனையா.?

3. “அரசன் கொல்வான்” என்றும் ஈசன் கொல்லும்” என்றும்--- அரசனை உயர்வாகவும் ஈசனை அஃறிணை சொல்லிலும் குறிப்பிடுவது ஏன்.?

4. “அன்று” என்னும் சொல் ஏன்.? இங்கு அதன் பொருள் யாது.?

5. “நின்று” என்னும் சொல் ஈசனுக்கு மட்டுமே தான் பொருந்துமா.? எப்படி.? என்ன பொருள்.?

6. “அன்றுக்கு” மாறாக “இன்று”--- என்னாது, “நின்று” என்பதன் கருத்து என்ன-?

7. “அன்றுக்கும்” “நின்றுக்கும்” என்ன வித்தியாசம்.?

அன்பர்களே சிந்தியுங்கள்.!-- விடை கிட்டும்-!!

நல்-வாழ்த்துக்கள்.!!!
.
.

Sudhaama
20th March 2010, 01:11 AM
[tscii].
.

.
.
.
அரசன் அன்று கொல்வான்.!...

ஈசன் நின்று கொல்லும்.!!!


.

.
- விடை விளக்கம்



இது ஓர் விபரீதப் பழமொழி--- அதாவது நல்லறம் கூறும் கருத்தை விடுத்து…

---தான்-தோன்றித் தனமாக விபரீத பொருள் செய்யப்படுவது.

ஆம்.—இதன் பொருள் என--- தற்கால சமுதாயத்தில் பெரும்பாலும் பரப்பப்பட்டுள்ள கருத்து என்ன.?

குற்றவாளி என தெரிந்த அன்றே--- அரசன் தண்டனை அளிப்பான்

ஆனால் ஈசனோ நின்று நிதானித்து தாமதமாகத்-தான் தக்க தீர்ப்பும் உரிய தண்டனையும் வழங்குவான் --- என்பதாம்-

இவ்வாறு கூறுவது விபரீத கருத்தே.!

ஆயின் அசல் கருத்து என்ன.?

அரசன் அன்று கொல்வான் =

குற்றவாளியா அல்லவா என்று நீதி-மன்ற விசாரணையின் மூலமாக தெரிந்து-கொள்வதற்கு முன்னதாகவே---

---குற்றம் சாட்டப்பட்ட அன்றே / அன்றைய தினமே ---

---குற்றம் சாட்டப்பட்டவனை (Alleged Culprit) அரசன் கைது செய்து, வலுக்கட்டாயமாக நீதி-மன்றத்துக்கு இழுத்து-வரச்செய்வான் ஊரார் காண

ஆக உண்மையில் குற்றம்-சாட்டப்பட்டவன் குற்றம்-அற்ற நிரபராதியாய் இருந்தாலும்---

---சந்தேகத்தின் அடிப்படையிலே மட்டுமே--- குற்றவாளிக்கு சமமாகவும், ஒருவனை குற்றவாளி போலவேயும் நடத்துவது ஒன்றே---

---அந்த மனிதனின் கௌரவத்தையும், அந்தஸ்தையும், புகழையும் தன்-மானத்தையும் ஓரளவுக்கேனும் கொன்று விடும்.

---விளைவாக தான் நிரபராதி என நீதி-மன்றத்திலே நிரூபித்து தீர்ப்பு வழங்கப்படும் வரை—அவன் சமுதாயத்தின் முன்னே தலை-நிமிர்ந்து நடக்க இயலாது… அணு அணுவாக செத்துக்-கொண்டிருப்பான்.

---ஆம். ஒருவனை... குற்றம் சாட்டப்பட்ட அன்றே அவ்வாறு கொல்வான் அரசன்.

மாறாக ஈசனோ.!


ஈசன் நின்று கொல்லும் =

ஈசன் தீர்ப்பே என்றென்றைக்கும் நிலைத்து நிற்பது. அதுவே நின்று கொல்வது.

-- உண்மையான குற்றவாளியை நீண்ட காலம் வரை நிலைத்து கொல்லும்

அரியாசனத்திலே பாண்டிய மன்னன் தலை-குனிந்து அமர்ந்திருக்க--- அவனது மக்களுள் ஒருவள் கண்ணகி தலை-நிமிர்ந்து நின்று்---

---“தேரா மன்னா செப்புவது உடையேன்”… என்று தொடங்கி, கேள்வி மேல் கேள்விகளாக கேட்டது போல---

---ஈசனின் குற்றச்சாட்டு, உண்மையான குற்றவாளிக்கு எதிரே நின்று கேட்டுக்-கேட்டு-- பதில் கூற-முடியாது திணற-அடித்து சித்திரவதையாய் அணுஅணுவாய் கொல்லும்

எப்படி.? இரு வகையிலே.!

உலக-உயிரினங்களிலேயே மனச்சாட்சி (Conscience) கொண்ட ஒரே பிறவி --- மனிதன் மட்டுமே.

மனச்சாட்சி என்பது இறைவனின் குரல்.

ஒவ்வொரு மாந்தனின் உள்ளேயே மறைந்து வாழ்ந்து-கொண்டு மனதை அவ்வப்போதே இடித்துக்காட்டியும், கேள்வி-கேட்டும், மாந்தனுக்கு உரிய தகைமை வழுவாது சிந்திக்க-வைப்பது.

மன-எண்ணங்களும் தீர்மானங்களும் – மானிட சால்பு வழுவியதாகவோ, அல்லது

அதர்மமாகவோ இருந்தால்--- அவனது மனச்சாட்சியே மென்மேலும் அவனை இடித்துக்-காட்டி சித்திரவதை செய்யும் அவனது நிம்மதியை கொல்லும்-

---அவன் பொய் கூறி, புத்திசாலித்தனமாக தப்பித்து சமுதாயத்தின் கண்களிலும் நீதி-மனறத்தின் முன்னேயும் குற்றமற்றவனாக நிரபராதியாக தீர்ப்பு பெற்றாலுமே---

ஆக உண்மையான குற்றவாளி ஒருவன்--- ஒருவேளை தனது அரசனிடமிருந்து தப்ப இயலலாம் – சமுதாயத்தின் இழிவிலிருந்தும் தப்ப முடியலாம்—தம் உற்றார் உறவினர் குடும்பத்தினரின் குற்றச்-சாட்டுகளிலிருந்தும் கூட தப்பிக்க முடியலாம் –

---- பொய் புனை-சுருட்டு சாமர்த்தியங்கள், பண-பலம், செல்வாக்கு ஆகிய குறுக்கு-வழிகளின் சப்பைக்-கட்டுகளால்..

ஆனால், அவன் உண்மையான குற்றவாளியாய் இருந்தால்--- ஈசன் குரல் என்னும் மனச்சாட்சி ஒன்றே அணுஅணுவாய் அவனை கொல்லும்-

தைரியத்தை கொல்லும்.

சமுதாய மதிப்பு கௌரவத்தின் தரத்தை கொல்லும்.

அவனது மன அமைதியை கொல்லும்.

..உறக்கத்தை கொல்லும்

நிம்மதியை கொல்லும்.

இன்பத்தை கொல்லும்.

தலை-நிமிர்ந்த பெருமிதத்தை கொல்லும்.

வாழ்வையே என்றென்றும் கொல்லும்….

பிறர் முன்னே--- அவன் ஓர் போலிக்-காட்சி மனிதன் ---

---உள்ளுக்கு உள்ளே, அவனது சுய-உணர்வால் நடை-பிணம்.!.


தன்னை உத்தம-பிறவி மாந்தன் என கூறிக்கொள்ளத் தக்க கௌரவ- நிலைகள் அனைத்தையும்---

--மன்னர்-மாமன்னனான ஈசனின் மேலாட்சி நீதியே கொல்லும் .! ---


--மனச்சாட்சியின் குத்திக்காட்டல் இடி- குரலாலும்--- பாவத்தின் பின் விளைவாலுமே-!!



குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது.?



..