PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7



Pages : 1 2 [3] 4 5 6 7 8

kid-glove
2nd October 2010, 04:22 PM
Ivalo nala ivaroda talent-A underestimate pannindu irundhomE-nu oru kavalai. So Polimer's "Sivaji oru sagaptham' special is one step closer to washing my sins and ignorance. Jallikattu (Admittedly not a significant film by any means!) - the scene after NT is shot by Radha, he wakes up to find SR by his side. The ensuing conversation(s back and forth) is ended with NT-SR exchanging their new-found understanding, with both breaking down. NT moves you to tears - not just by the plot/narrative but how he renders each syllable with his facial gestures - and most importantly, how his "face" tells its own narrative (like a legendary "silent film" star-actor) and asks for our emotional investment! There are some actors who "react" thro gestures, accentuating emotion like a needlepoint as well as exude charisma in minimalist sense, then there are actors like a proverbial jellyfish, imbibing everything to fully immerse the character (get inside the flesh so to speak), just consistently "be". NT was both! :notworthy:

Indha imayatha verum varthaiyAl varnikka mudiyathu.

kid-glove
2nd October 2010, 04:26 PM
Btw, YGM on the couch, Koffee with Anu tomorrow. In the promo, Anu asks about the dollar chain with NT's face, YGM states the obvious. Not that NT needed any advertisement, it's still heartening to hear/read effusive praise for the great man..

kid-glove
2nd October 2010, 08:00 PM
Ooty Varai Uravu #Nowplaying #AdityaChannel

Vivasaayi
2nd October 2010, 10:35 PM
A request to the best NT online fans group :)

I need the video of "Ennirendu padhinaru vayadhu"

I searched in youtube...but its not there.

pammalar
3rd October 2010, 12:59 AM
தவிர்க்க இயலாத காரணங்களினால், சென்னை புரசைவாக்கம் 'மினிமோட்சம்' திரையரங்கில், நேற்று 1.10.2010 வெள்ளி முதல் திரையிடப்படயிருந்த "புதிய பறவை" திரைக்காவியம் திரையிடப்படவில்லை.

பம்மலார்.

pammalar
3rd October 2010, 01:25 AM
I request permission from "Pammalar" to repost Sivaji-83 in my blog - http://awardakodukkaranga.wordpress.com/

Thanks,
RV

Dear Bhoori (RV),

You can definitely post 'Sivaji 83' posts in your blog. I am extremely happy by your gesture. My warm wishes to you & your blog.

Regards,
Pammalar.

pammalar
3rd October 2010, 03:13 AM
எங்கள் ஆருயிர் அண்ணனே.....

நீ பிறந்தாய்... பெருமையுற்றது தமிழகம்
நீ நடந்தாய்.... பேறு பெற்றது ராஜ நடை
நீ மேடையேறினாய்... செழித்தது நாடகம்
நீ பேசினாய்.... தலை நிமிர்ந்தாள் தமிழன்னை
நீ நடித்தாய்... புதிய முகவரியைக் கண்டது நடிப்பு
நீ முழங்கினாய்... அடங்கிப்போனது கோடையிடி
நீ கர்ஜித்தாய்... ஓடிப்போனது சிங்கம்
நீ சிரித்தாய்... உன்னைச் சுற்றிலும் பூ பூத்தது
நீ அரவணைத்தாய்... பாசத்தில் சிக்கினர் ரசிகப்'பிள்ளை'கள்
ஏன் மறைந்தாய்... நாங்கள் புலம்புவதற்கா..??.

சகோதரி சாரதா,

ஒவ்வொரு வரியும் அறிவுபூர்வமான, உணர்வுபூர்வமான ஒன்று. அப்படியே மெய்சிலிர்க்க வைக்கிறது!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd October 2010, 04:08 AM
Thank You Very Much Satish !

My sincere thanks for your kind words, Rakesh.

டியர் ஜவஹர் சார்,

தங்களின் மனப்பூர்வமான பாராட்டுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

நடிகர் திலகம் குறித்து அவரது ஆருயிர் நண்பர் திரு.வி.என்.சிதம்பரம் கூறியதாக தாங்கள் பதிவிட்ட செய்திகளைப் படிக்கும் போதே என் கண்கள் பனித்தன.

டியர் செந்தில் சார்,

தங்களின் இனிப்பான பாராட்டுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்!

பாரிஸ்டரைக் கண்டு திலீப்குமாரும் மிரண்டார் என்ற தகவல் அருமை மட்டுமல்ல, அரிய ஒன்றும் கூட.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd October 2010, 04:36 AM
டியர் ராகவேந்திரன் சார்,

விழாப் பதிவுக்கு நன்றி!

ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையை ஒப்புக் கொண்ட மத்திய அமைச்சர் திரு.ஜி.கே. வாசன் அவர்களுக்கு நமது நன்றிகள்! பாராட்டுக்கள்!! வாழ்த்துக்கள்!!!

சகோதரி சாரதா,

பெரும் பதவி வகிப்போரெல்லாம், தங்களது இதயத்தில் நடிகர் திலகத்திற்கு பெரும் பதவி கொடுத்திருக்கின்றனர் என்பதனை ஆணித்தரமாக பதிவிட்டமைக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்!

டியர் முரளி சார்,

நடிகர் திலகத்தின் 82வது பிறந்த நாள் [நிறைவு] விழாப் பதிவுகள் பிரமாதம்! பிரமாதம்!! பிரமாதம்!!!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd October 2010, 05:05 AM
"காந்தி" படம் பற்றி சிவாஜி
[சினிமா எக்ஸ்பிரஸ் 15.5.1983 இதழிலிருந்து]

"காந்தி திரைப்படம் பார்த்தேன்! அழுதுகிட்டே பார்த்தேன்! அவருடன் அப்படியே கலந்துட்டேன்! அதாவது படத்தோடும், காந்தியோடும் ஒன்றிட்டேன்! நாம செய்ய வேண்டிய ஒரு பெரிய காரியத்தை, ஒரு ஃபாரினர் (foreigner) அழகா பண்ணிட்டார்."

இன்று 2.10.2010 தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 142வது ஜெயந்தி.

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
3rd October 2010, 05:51 AM
1965-ல், இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தின் போது, தனது மூத்த மகள் சாந்தியின் திருமணத்திற்காக வாங்கிச் சேர்த்து வைத்திருந்த நகைகள் மற்றும் தனது மனைவி கமலா அணிந்து கொண்டிருந்த நகைகள் (தாலியைத் தவிர) எல்லாமுமாக 400 பவுன் தங்கத்தையும், "ஸ்கூல் மாஸ்டர்" கன்னடப் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்ததற்காக பந்துலு அன்பளிப்பாக வழங்கிய 200 பவுன் தங்கப்பேனாவையும், பாரதப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம், யுத்த நிதியாக அளித்தார் நமது தேசிய திலகம்.

இன்று 2.10.2010 திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் 107வது பிறந்த தினம்.

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
3rd October 2010, 06:17 AM
தனது இதயதெய்வத்திற்கு நமது இதயதெய்வத்தின் அஞ்சலி
[நவம்பர் 1975 'பொம்மை' இதழிலிருந்து]

"எனக்கு அறவழி காட்டிய தலைவர் காமராஜர். அவருக்கு நடிக்கத் தெரியாது, ஆனால் நாட்டை வழி நடத்தத் தெரியும். என் பிறந்த நாளில் என்னை வந்து வாழ்த்தியவர், அண்ணல் பிறந்த நாளில் அமரராகி விட்டாரே! வாழ்த்துச் செய்தி ஓயுமுன் வாய் மூடி விட்டாரே! அவரின் மௌனம், நம்மோர் ஓலம்! இவையனைத்தும் என் நெஞ்சில் ஓர் நொடி மின்னலிட, என் உயிர் துடித்து நடுங்கியது.

காமராஜர் உலகிற்கு ஒரு மகாகாவியம்! அரசியலுக்கு தர்மத்தலைவர்!
தொண்டர்களுக்கு புனிதத் தலைவர்! எனக்கு இன்னுயிர்!
தாயினும் மேலாம் தேசம்! தேசத்துள் இணைந்தவர் காமராஜர்!
அவரே இனி இவ்வுலகிற்கு வழிகாட்டும் சத்தியதீபம்!
அவ்வொளி மங்காது! அனைவருக்கும் வழிகாட்டும்!
ஜெய்ஹிந்த்!"

இன்று 2.10.2010, ஏழைப்பங்காளர், கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 35வது ஆண்டு நினைவு தினம்.

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

saradhaa_sn
3rd October 2010, 10:59 AM
டியர் முரளியண்ணா,

நடிகர்திலகத்தின் 83-வது பிறந்தநாள் விழாத்தொகுப்புகள் பூரணமாக இருந்தன. வர முடியாதவர்களுக்கு உங்கள் விழாத்தொகுப்பு ஒரு வரப்பிரசாதம், குறிப்பாக சென்னைக்கு வெளியேயும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கும்.

காங்கிரஸ் தலைவர்கள் பேசும்போது நடிகர்திலகத்தைப்பற்றி நாவினிக்க பேசுகிறார்கள். ஆனால் செயல்பாடுகளில்தான் எதையும் காணோம். காமராஜர் அரங்கம் மற்றும் சத்தியமூர்த்தி பவன் ஆகிவற்றில் நடிகர்திலகத்தின் படம் நிரந்தரமாக இடம் பெறுவதற்கும், நடிகர்திலகத்தின் மணிமண்டபம் அமைவதற்குமான கோரிக்கையை திரு. மோகன்ராம் அவர்கள் மேடையிலேயே ஜி.கே.வாசன் அவர்கள் முன்னிலையில் சொல்லியிருக்கலாம். குறைந்தபட்சம் அந்த நடவடிக்கைகளுக்கு ஆவண செய்வதாக ஒரு உறுதிமொழியை வாசன் அவர்கள் வாயிலாகப்பெற்றிருக்கலாம்.

(அப்படி மணிமண்டபம் அமைந்தால், அதில் சிவாஜி சமூகநலப்பேரவைத்தலைவர் சகோதரர் சந்திரசேகர் அவர்கள் படம் நிச்சயம் இடம்பெற வேண்டும். அது அவரது சீரிய முயற்சிகளுக்குக் கிடைத்த பரிசாக அமையும் என்பதில் ஐயமில்லை).

saradhaa_sn
3rd October 2010, 11:09 AM
டியர் பம்மலார்,

தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள்...
தாஷ்கண்ட் சமாதானப்புறா லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள்....
நம் உயிரில் கலந்திருக்கும் பெருந்தலைவரின் நினைவு நாள்.....

என்று, ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்ததன் மூலம், நடிகர்திலகத்துக்கு மட்டுமல்ல, அவரது பக்தர்களின் உடம்பிலும் ஓடுவது தேசீய ரத்தமே என்று ஆணித்தரமாக நிரூபித்துள்ளீர்கள்.

ஜெய்ஹிந்த்.

goldstar
3rd October 2010, 02:18 PM
Guys,

Just watched Sivaji 82 in Kalaigar TV, you can watch it at http://www.tubetamil.com/view_video.php?viewkey=849b1817a5d73d3bf8e0&page=1&viewtype=&category=

Prabhu and Ram Kumar have spoken more about NT fans and their affection.

I felt very happy to see our god songs and scenes in Kalaigar TV.

Cheers,
Sathish

RAGHAVENDRA
3rd October 2010, 02:53 PM
காங்கிரஸ் தலைவர்கள் பேசும்போது நடிகர்திலகத்தைப்பற்றி நாவினிக்க பேசுகிறார்கள். ஆனால் செயல்பாடுகளில்தான் எதையும் காணோம். காமராஜர் அரங்கம் மற்றும் சத்தியமூர்த்தி பவன் ஆகிவற்றில் நடிகர்திலகத்தின் படம் நிரந்தரமாக இடம் பெறுவதற்கும், நடிகர்திலகத்தின் மணிமண்டபம் அமைவதற்குமான கோரிக்கையை திரு. மோகன்ராம் அவர்கள் மேடையிலேயே ஜி.கே.வாசன் அவர்கள் முன்னிலையில் சொல்லியிருக்கலாம். குறைந்தபட்சம் அந்த நடவடிக்கைகளுக்கு ஆவண செய்வதாக ஒரு உறுதிமொழியை வாசன் அவர்கள் வாயிலாகப்பெற்றிருக்கலாம்.
(அப்படி மணிமண்டபம் அமைந்தால், அதில் சிவாஜி சமூகநலப்பேரவைத்தலைவர் சகோதரர் சந்திரசேகர் அவர்கள் படம் நிச்சயம் இடம்பெற வேண்டும். அது அவரது சீரிய முயற்சிகளுக்குக் கிடைத்த பரிசாக அமையும் என்பதில் ஐயமில்லை).

சிவாஜி ரசிகர்களின் எந்த முயற்சிகளுக்கும் முதல் ஆதரவு தரும் சகோதரி சாரதா அவர்களின் கூற்றுப்படி முரளி சாரின் பதிவுகள் நிகழ்ச்சிகளைக் கண்முன்னே நிறுத்துகின்றன.

நம் அனைவரைவிடவும் துரோகிகளால் பாதிக்கப்பட்டது, நடிகர் திலகம் மட்டுமல்ல, அவரது குடும்பத்தாரும் தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஏனென்றால் நடிகர் திலகத்தின் அனைத்து வெற்றி தோல்விகளிலும் அவருடைய குடும்பத்தின் பங்கு உண்டு. அப்படி இருக்கும் போது தம் தந்தைக்கு துரோகம் இழைத்ததை பெருந்தன்மையுடன் மன்னித்து அவருடைய புதல்வர் நடிகர் திலகத்தின் பால் வைத்துள்ள அன்பை மதித்து அவரை அழைத்தது பெருந்தன்மையின மிகச் சிறந்த உதாரணம், இன்றைய திராவிடக் கலாச்சாரத்தில் காணப் படாத நாகரீகம். அந்த அடிப்படையில் ரசிகர்களின் உள்ள உணர்வையும் புரிந்து கொண்டு அதே அடிப்படையில் தேசிய உணர்வுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரு ஜி.கே. வாசன் அவர்களை அழைத்தது மிகவும் பெருமை வாய்ந்த நிகழ்வாகும். இதற்கு நடிகர் திலகம் நிச்சயம் உளம் குளிர்ந்திருப்பார். காரணம், மன்னிக்கும் மனப்பான்மைக்கென்றே பிறந்தவர் அவர். அது மட்டுமல்ல பல சந்தர்ப்பங்களில் திரு மூப்பனார் அவர்களுடன் பல விழாக்களிலும் திருமணங்களிலும் நடிகர் திலகம் அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார். அப்படி பல புகைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். நடிகர் திலகம் மறைவுற்ற போது மூப்பனார் உடல் தள்ளாமையிலும் வந்து அஞ்சலி செலுத்தியதும் வரலாறு.
ரசிகர்களைப் பொறுத்த வரை அவருடைய துரோகம் அப்படியே நெஞ்சில் நிலைத்து விட்டபடியால் அன்றைய விழாவின் துவக்கத்தில் சிறிது இறுக்கமான சூழ்நிலை இருந்தது. ஆனால் அந்த நிலையை சகஜமான நிலைக்கு மாற்றியது திரு வாசன் அவர்களுடைய உரை என்றால் அது மிகையில்லை. அவர் ஆணித்தரமாக நடிகர் திலகத்தின் பெருமையை பேசிய போது அதில் போலித்தனமோ மேடை அலங்காரமோ தென்படவில்லை. மாறாக இவ்வளவு காலம் தேசிய இயக்கங்கள் தலைதூக்க முடியவில்லையே என்ற ஏக்கமும், நடிகர் திலகத்தின் இவ்வளவு பெரிய ரசிகர் படையை பயன் படுத்தாமல் வி்ட்டோமே என்ற உணர்வும் தான் தென்பட்டது.
மேடைப்பேச்சுக்காக வாக்குறுதிகளை வழங்கி விட்டு பின்னர் அவற்றை செயல் முறையில் நடைமுறைப் படுத்த தயங்கும் அரசியல் வாதிகளைப் போல் தேசிய தலைவர்கள் இருக்க மாட்டார்கள். சொன்னதை நிச்சயம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். இதில் வாசனும் விதி விலக்கல்ல. ஆகையால் மணிமண்டபம் என்றல்ல, நடிகர் திலகத்தின் புகழ் வேண்டி வைக்கக் கூடிய எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றக் கூடிய மனநிலை கொண்டவர் வாசன்.

நாம் எத்தனையோ தலைவர்கள் நினைவிடங்களையும் பார்த்து வருகிறோம். சகோதரி சாரதா அவர்களுக்குத் தெரியாததல்ல. எத்தனை பேர் அவற்றைப் பயன் படுத்துகின்றனர். புறாக்கள் கூடு கட்டுவதற்கும் வௌவால்கள் தொங்குவதற்கும் தான் அவை பயன் படுகின்றன. நினைவு நாள் அல்லது பிறந்த நாள் இந்த இரு நாட்கள் மட்டும் தான் அவை பயன் படுத்தப் படுகின்றன.

அதே போல் சமாதி எடுத்துக் கொள்ளுங்கள். வந்து இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தி வி்ட்டுப் போய் விடுகிறோம். அத்தோடு அந்தத் தலைவருக்கு நாம் செலுத்தும் மரியாதை மீண்டும் அடுத்த பிறந்த அல்லது நினைவு நாளில் தான்.

இந்த நிலையே நடிகர் திலகத்தின் மணி மண்டபத்திற்கும் வரவேண்டும் என்றால் நாம் அவசரப் படலாம். உடனடியாக போராட்டம் நடத்தி அதை அமைத்து விட்டு மறுவேலை பார்க்கலாம்.

இதைத்தான் நாம் விரும்புகிறோமா. வருடத்திற்கு இரு நாட்கள் வந்து செல்வதற்கு மட்டும் தான் மணிமண்டபமா

தயவு செய்து சிந்தியுங்கள். உலகத்தில் யாருக்குமே இல்லாத சிறப்பு நடிகர் திலகத்திற்கு மட்டும் தான் உண்டு. அவரைப் பற்றிய ஆராய்ச்சி உலகெங்கும் நடந்து வருகிறது. உலகின் பல பல்கலைக்கழகங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பு ஆராய்ச்சிகளிலும் திரைத்துறை தொடர்பான நூல்களிலும் இடம் பெறுகிறது. அவருடைய நடிப்பைப் பார்த்து நடிக்கக் கற்றுக் கொள்ள விழைவோர் தலைமுறைகளைத் தாண்டி உள்ளனர்.

அவர்களு்க்கு உதவுவது நம்மைப் போன்ற தலைமுறையினரின் ரசிகர்களின் கடமையல்லவா.

நடிகர் திலகத்திற்கு மிகச் சிறந்த முறையில் ஒரு நினைவிடம் அமைய வேண்டும். அது அன்றாடம் மக்கள் பயன் படுத்தும் வகையில் அமைய வேண்டும். நடிகர் திலகத்தின் பால் பற்று கொண்ட பல கனவான்கள் உள்ளனர். அவர்களையெல்லாம் பயன் படுத்திக் கொண்டு உலகிலேயே முதல் தரமான நினைவிடமாக, ஆராய்ச்சிக்கூடமாக, நடிப்புக் கல்விக் கூடமாக, நூலகமாக, அமைய வேண்டும். நடிப்பைப் பற்றி எந்த ஐயப்பாடானாலும் விளக்கம் பெறக் கூடிய கல்விக்கூடமாக அது அமைவதே நடிகர் திலகத்திற்கு நாம் செய்யக் கூடிய சிறப்பாகும்.

நடிகர் திலகத்துடன் நெருங்கிப் பழகியவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களையெல்லாம் பயன் படுத்திக் கொண்டு, அவர் படங்களையெல்லாம் கரைத்துக் குடித்த திரையுலக அன்பர்களைத் துணைக் கொண்டு சிறந்த முறையில் நினைவிடம் அமைப்பதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

தயவு செய்து நடிகர் திலகத்தின் சிலையானாலும் சரி, மணிமண்டபமானாலும் சரி, எந்த அரசையும் நாம் அணுகாமல் தனியார் துணைக் கொண்டு அமைப்பதே நல்லது. வெறும் விளம்பரத்துக்காவும், செய்தி வரவேண்டும் என்பதற்காகவும் இல்லாமல் எதிர்காலத்தில் எப்படி நினைவிடம் இருக்கும், இருக்க வேண்டும் என்பதையெல்லாம் ஆராய்ந்து செய்வதே ரசிகர்களாகிய நமது கடமையாக நான் நினைக்கிறேன்.

தயவு செய்து நடிகர் திலகத்தை பத்தோடு பதினொன்றாக, மற்ற அரசியல் வாதியாக எண்ணாமல் அவருடைய தனித்துவத்தை, அவருடைய மகிமையை நன்கு உணர்ந்து சிந்தித்து தொலைநோக்குடன் அணுகுவதே நம் முடைய அணுகுமுறையாக இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
3rd October 2010, 03:27 PM
டியர் பம்மலார்,
தங்களுடைய தேச பக்தியுணர்வுடன் பதியப் பட்ட பதிவு பாராட்டத் தக்கது. காந்திஜியையும், சாஸ்திரியையும், காமராஜரையும், இந்த நாடு மறந்தாலும் சிவாஜி ரசிகர்கள் மறக்க மாட்டார்கள் என்பதையும், எதிர்காலத்திலும் இவர்களை அடுத்த தலைமுறைக்கு கூறக்கூடியவர்கள் சிவாஜி ரசிகர்கள் மட்டுமே என்பதையும் கூறும் வகையில் தான் நடிகர் திலகம் இவர்களைப் பற்றி நமக்கு எடுத்துக் கூறி நம்மிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தாரோ என்று தோன்றுகிறது.

தங்கள் பணி மென்மேலும் சிறக்க என் உளப்பூர்வமான வாழ்த்துக்கள். தங்களுக்கு மட்டுமல்ல, ஆக்கபூர்வமான முறையில் நடிகர் திலகத்திற்காக உழைக்கும் ஒவ்வொவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள் என்றுமே உண்டு.

அன்புடன்
ராகவேந்திரன்

groucho070
4th October 2010, 08:05 AM
Watched two NT films on Friday.

Muthal Mariyathai.
I suppose a few NT fans like me has the arrogance of noting that his performance here is nothing. As Rajini would put it, "jujube", walk in the park. So each revisit you would try to look at different aspect, and this time around, the humour. Oh man, he was really funny here, spewing off one-liners, sarcasm and pure comedy especially lifting the rock scene.

Tillana Mohanambal
Classic. The cast is any directors' dream. All of them are simply awesome. Balaiyah stands out as particularly, no, being extremely funny. NT's character is not defined as hero here. He is just one of them, with the story centraled around his arrogant but child-like character. After the film...

Grouch: So, what do you think?
Mrs. Grouch: I like the way they (NT and Padmini) look at each other. Choo Chweet.
Grouch: :rant:

saradhaa_sn
4th October 2010, 10:09 AM
சிவாஜி ரசிகர்களின் எந்த முயற்சிகளுக்கும் முதல் ஆதரவு தரும் சகோதரி சாரதா அவர்களின் கூற்றுப்படி முரளி சாரின் பதிவுகள் நிகழ்ச்சிகளைக் கண்முன்னே நிறுத்துகின்றன.

நம் அனைவரைவிடவும் துரோகிகளால் பாதிக்கப்பட்டது, நடிகர் திலகம் மட்டுமல்ல, அவரது குடும்பத்தாரும் தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஏனென்றால் நடிகர் திலகத்தின் அனைத்து வெற்றி தோல்விகளிலும் அவருடைய குடும்பத்தின் பங்கு உண்டு. அப்படி இருக்கும் போது தம் தந்தைக்கு துரோகம் இழைத்ததை பெருந்தன்மையுடன் மன்னித்து அவருடைய புதல்வர் நடிகர் திலகத்தின் பால் வைத்துள்ள அன்பை மதித்து அவரை அழைத்தது பெருந்தன்மையின மிகச் சிறந்த உதாரணம், இன்றைய திராவிடக் கலாச்சாரத்தில் காணப் படாத நாகரீகம். அந்த அடிப்படையில் ரசிகர்களின் உள்ள உணர்வையும் புரிந்து கொண்டு அதே அடிப்படையில் தேசிய உணர்வுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரு ஜி.கே. வாசன் அவர்களை அழைத்தது மிகவும் பெருமை வாய்ந்த நிகழ்வாகும். இதற்கு நடிகர் திலகம் நிச்சயம் உளம் குளிர்ந்திருப்பார். காரணம், மன்னிக்கும் மனப்பான்மைக்கென்றே பிறந்தவர் அவர். அது மட்டுமல்ல பல சந்தர்ப்பங்களில் திரு மூப்பனார் அவர்களுடன் பல விழாக்களிலும் திருமணங்களிலும் நடிகர் திலகம் அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார். அப்படி பல புகைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். நடிகர் திலகம் மறைவுற்ற போது மூப்பனார் உடல் தள்ளாமையிலும் வந்து அஞ்சலி செலுத்தியதும் வரலாறு.
ரசிகர்களைப் பொறுத்த வரை அவருடைய துரோகம் அப்படியே நெஞ்சில் நிலைத்து விட்டபடியால் அன்றைய விழாவின் துவக்கத்தில் சிறிது இறுக்கமான சூழ்நிலை இருந்தது. ஆனால் அந்த நிலையை சகஜமான நிலைக்கு மாற்றியது திரு வாசன் அவர்களுடைய உரை என்றால் அது மிகையில்லை. அவர் ஆணித்தரமாக நடிகர் திலகத்தின் பெருமையை பேசிய போது அதில் போலித்தனமோ மேடை அலங்காரமோ தென்படவில்லை. மாறாக இவ்வளவு காலம் தேசிய இயக்கங்கள் தலைதூக்க முடியவில்லையே என்ற ஏக்கமும், நடிகர் திலகத்தின் இவ்வளவு பெரிய ரசிகர் படையை பயன் படுத்தாமல் வி்ட்டோமே என்ற உணர்வும் தான் தென்பட்டது.
மேடைப்பேச்சுக்காக வாக்குறுதிகளை வழங்கி விட்டு பின்னர் அவற்றை செயல் முறையில் நடைமுறைப் படுத்த தயங்கும் அரசியல் வாதிகளைப் போல் தேசிய தலைவர்கள் இருக்க மாட்டார்கள். சொன்னதை நிச்சயம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். இதில் வாசனும் விதி விலக்கல்ல. ஆகையால் மணிமண்டபம் என்றல்ல, நடிகர் திலகத்தின் புகழ் வேண்டி வைக்கக் கூடிய எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றக் கூடிய மனநிலை கொண்டவர் வாசன்.

நாம் எத்தனையோ தலைவர்கள் நினைவிடங்களையும் பார்த்து வருகிறோம். சகோதரி சாரதா அவர்களுக்குத் தெரியாததல்ல. எத்தனை பேர் அவற்றைப் பயன் படுத்துகின்றனர். புறாக்கள் கூடு கட்டுவதற்கும் வௌவால்கள் தொங்குவதற்கும் தான் அவை பயன் படுகின்றன. நினைவு நாள் அல்லது பிறந்த நாள் இந்த இரு நாட்கள் மட்டும் தான் அவை பயன் படுத்தப் படுகின்றன.

அதே போல் சமாதி எடுத்துக் கொள்ளுங்கள். வந்து இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தி வி்ட்டுப் போய் விடுகிறோம். அத்தோடு அந்தத் தலைவருக்கு நாம் செலுத்தும் மரியாதை மீண்டும் அடுத்த பிறந்த அல்லது நினைவு நாளில் தான்.

இந்த நிலையே நடிகர் திலகத்தின் மணி மண்டபத்திற்கும் வரவேண்டும் என்றால் நாம் அவசரப் படலாம். உடனடியாக போராட்டம் நடத்தி அதை அமைத்து விட்டு மறுவேலை பார்க்கலாம்.

இதைத்தான் நாம் விரும்புகிறோமா. வருடத்திற்கு இரு நாட்கள் வந்து செல்வதற்கு மட்டும் தான் மணிமண்டபமா

தயவு செய்து சிந்தியுங்கள். உலகத்தில் யாருக்குமே இல்லாத சிறப்பு நடிகர் திலகத்திற்கு மட்டும் தான் உண்டு. அவரைப் பற்றிய ஆராய்ச்சி உலகெங்கும் நடந்து வருகிறது. உலகின் பல பல்கலைக்கழகங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பு ஆராய்ச்சிகளிலும் திரைத்துறை தொடர்பான நூல்களிலும் இடம் பெறுகிறது. அவருடைய நடிப்பைப் பார்த்து நடிக்கக் கற்றுக் கொள்ள விழைவோர் தலைமுறைகளைத் தாண்டி உள்ளனர்.

அவர்களு்க்கு உதவுவது நம்மைப் போன்ற தலைமுறையினரின் ரசிகர்களின் கடமையல்லவா.

நடிகர் திலகத்திற்கு மிகச் சிறந்த முறையில் ஒரு நினைவிடம் அமைய வேண்டும். அது அன்றாடம் மக்கள் பயன் படுத்தும் வகையில் அமைய வேண்டும். நடிகர் திலகத்தின் பால் பற்று கொண்ட பல கனவான்கள் உள்ளனர். அவர்களையெல்லாம் பயன் படுத்திக் கொண்டு உலகிலேயே முதல் தரமான நினைவிடமாக, ஆராய்ச்சிக்கூடமாக, நடிப்புக் கல்விக் கூடமாக, நூலகமாக, அமைய வேண்டும். நடிப்பைப் பற்றி எந்த ஐயப்பாடானாலும் விளக்கம் பெறக் கூடிய கல்விக்கூடமாக அது அமைவதே நடிகர் திலகத்திற்கு நாம் செய்யக் கூடிய சிறப்பாகும்.

நடிகர் திலகத்துடன் நெருங்கிப் பழகியவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களையெல்லாம் பயன் படுத்திக் கொண்டு, அவர் படங்களையெல்லாம் கரைத்துக் குடித்த திரையுலக அன்பர்களைத் துணைக் கொண்டு சிறந்த முறையில் நினைவிடம் அமைப்பதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

தயவு செய்து நடிகர் திலகத்தின் சிலையானாலும் சரி, மணிமண்டபமானாலும் சரி, எந்த அரசையும் நாம் அணுகாமல் தனியார் துணைக் கொண்டு அமைப்பதே நல்லது. வெறும் விளம்பரத்துக்காவும், செய்தி வரவேண்டும் என்பதற்காகவும் இல்லாமல் எதிர்காலத்தில் எப்படி நினைவிடம் இருக்கும், இருக்க வேண்டும் என்பதையெல்லாம் ஆராய்ந்து செய்வதே ரசிகர்களாகிய நமது கடமையாக நான் நினைக்கிறேன்.

தயவு செய்து நடிகர் திலகத்தை பத்தோடு பதினொன்றாக, மற்ற அரசியல் வாதியாக எண்ணாமல் அவருடைய தனித்துவத்தை, அவருடைய மகிமையை நன்கு உணர்ந்து சிந்தித்து தொலைநோக்குடன் அணுகுவதே நம் முடைய அணுகுமுறையாக இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்
டியர் ராகவேந்தர் அண்ணா,

நடிகர்திலகத்தின் மணிமண்டபம் தொடர்பான உங்களது நீண்ட, விவரமான பதிவு பல விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளது.

நாம் குறிப்பிடும்போது 'மணிமண்டபம்', 'மணிமண்டபம்' என்ற சொற்றொடரை பயன் படுத்துகிறோமே தவிர, உண்மையில் நாம் சொல்ல வருவது 'நினைவு இல்லம்'தான். நீங்கள் சொல்லியிருப்பது போல, அதில் நடிகர்திலகம் பற்றிய எல்லா விவரங்களும் இடம்பெற வேண்டும் என்பதிலோ, வருடம் முழுவதும் அது பயன்பாட்டில் இருந்து வரவேண்டும் என்பதிலோ எந்த ஐயப்பாடோ, மாற்றுக்கருத்தோ இல்லை. அது புறாக்கள் அடையும் மண்டபமாக இல்லாமல், பயன்பாட்டில் இருக்கும் வகையில் சில மாடிகளைக்கொண்ட இல்லமாக அமைய வேண்டும் எனப்தே எல்லோரது நோக்கம் மற்றும் விருப்பமாகும்.

(தி.நகர் ஆற்காடு முதலி தெருவில் மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆர். வாழ்ந்த இல்லத்தையே அவரது நினைவு இல்லமாக மாற்றி, தினமும் பல பேர் வந்து பார்த்துச்செல்கின்றனர். வெளியூரிலிருந்து சென்னை வரக்கூடிய அவரது அபிமானிகள் பட்டியலில், அந்த நினைவு இல்லம் முதலிடம் பெறுகிறது. நானும் முன்பு இருமுறை சென்று பார்த்து வந்திருக்கிறேன். இத்தனைக்கும் அங்கு எந்த ஆராய்ச்சியோ, வேறெதுவுமோ நடைபெறவில்லை. அவர் பயன்படுத்திய பொருட்கள், அவர் பெற்ற நினைவுப்பரிசுகள், விருதுகள், மற்றும் அவரது அரசியல்ரீதியாக சம்மந்தப்பட்ட புகைப்படங்கள், மற்றும் கடிதங்கள் போன்ற்வை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவ்வளவுதான். பாடம் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும் சிங்கம் ஒன்றும், ரத்தக்கறை படிந்த டெரிலின் ஷர்ட் மற்றும் வேஷ்டியும் வைக்கப்பட்டுள்ளன. ராமாவரம் என்றால் மக்கள் சாதாரணமாக வந்து போக முடியாதென்பதால், தி.நகர் வீட்டை நினைவு இல்லமாக்கினார்களாம்).

நடிகர்திலகத்துக்கு வருவோம். அவர் மறைந்து ஒன்பது நீண்ட வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இன்னும் அதற்கான ஆரம்பகட்ட ஆயத்தங்கள் கூட நடைபெறாத நிலையில், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்ற இலக்கும் புலப்படாமல் இருக்கிறது. இதில் முனைப்பட்டு செயலில் இறங்க வேண்டிய அமைப்புக்கள் என்று சொன்னால் அது மத்திய, மாநில அரசுகள், அவர் சார்ந்திருந்த அரசியல் இயக்கம், அவரது ரசிகர்மன்ற மற்றும் சமூக நல அமைப்புகள், அவரது குடும்ப வாரிசுகள், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவையே.

இவற்றுள் சிவாஜி சமூக நலப்பேரவை மட்டுமே முனைப்போடு உள்ளது. குடும்பத்தினரோ அணுக வேண்டியவர்களை அணுகி ஆக வேண்டியவைகளைச் செய்யாமல் தயக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். மாநில முதல்வர், ஆட்சிக்கு வந்த கையோடு சிலை வைத்தார் என்பது நன்றிக்குரியது, ஆனால் நினைவு இல்லம் அமைக்க அரசின் பங்கு குறித்து பேசுவதில்லை. ஆறு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அந்த வாக்குறுதியை மீண்டும் தூசு தட்டி எடுக்கக்கூடும். நடிகர்சங்கத்தின் குறட்டை ஒலி காதைத் துளைக்கிறது. அவர்களும் மேடைகளில் வாய் வலிக்காமல் நடிகர்திலகத்தின் பெயரைச்சொல்வதோடு சரி. ஒரு பிறந்தநாள், நினைவுநாள் கூட சங்கத்தின் சார்பில் அணுஷ்டிப்பதில்லை.

ஏற்கெனவே இருந்த அரசு ஒதுக்கிய நிலத்திலும் ஏகப்பட்ட குளறுபடிகள். பொதுப்பணித்துறையோடு பேசி அதற்கு ஒரு வழி வகை காணவும் சமூக நலப்பேரவை தவிர்த்து வேறு யாரும் முனையவில்லை. அதிகார வர்க்கம் முனைந்தால் அல்லவா ஒரு தீர்வு ஏற்படும்?. தேசீய தலைவர்களைப்பற்றி நமக்குத்தெரியும். நேற்று சிவாஜி விழா என்பதால் அவரைப்புகழ்ந்து பேசிவிட்டார். ஆனால் சென்ற மாதம் மதுரையில் நடந்த தியாகி கக்கன் நூற்றாண்டு விழாவில் ஒரு தலைவர்கூட நடிகர் திலகத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. இளங்கோவன் மட்டும் ஒரு முறை பெயரை உச்சரித்தார். பழம்பெரும் தலைவரான குமரியார் கூட குறிப்பிடவில்லை.

இதுவரை நடிகர்திலகத்துக்கு ஆறு இடங்களில் (சென்னை, அரக்கோணம், புதுவை, மதுரை,நாகர்கோவில், தஞ்சாவூர்) முழு உருவச்சிலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டைச்சேர்ந்த தேசீயத்தலைவர்களின் பங்கு எதுவுமில்லை. தஞ்சாவூரில் தனிப்பட்ட மனிதர் 'புதிய பார்வை' திரு.நடராஜன் முயற்சியால் சிலை அமைக்கப்பட்டது. (சென்ற ஆண்டு தஞ்சை சென்றிருந்தபோது சிலையைப் போய்ப்பார்த்தேன். புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் மிகப்பொருத்தமான இடத்தில் நிறுவப்பட்டு சுற்றிலும் சிறிய பூங்கா அமைக்கப்பட்டு அழகாக பராமரிக்கப்பட்டு வருகிறது. நடிகர்திலகத்தின் நீண்டநாள் நண்பர் திரு எஸ்.எஸ்.ஆர். அவர்களால் திறக்கப்பட்டதாக கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது).

நடிகர்திலகத்தின் நினைவு இல்லம் இன்றைக்கே கட்டி நாளைக்கே திறக்க வேண்டும் என்பதல்ல ரசிகர்களின் கோரிக்கை. ஆனால் அதற்கான சிறு முயற்சி கூடத் துவங்கவில்லையே என்பதே நமது ஆதங்கம். எதையும் வெளிப்படையாகப்பேசுவதில் தவறில்லை. ஏற்கெனவே நடிகர்திலகத்தின் சமகாலத்தோழர்களை விரைவாக இழந்து வருகிறோம். கலைஞர் ஆட்சி இருக்கும்போதே அதற்கான பொருத்தமான மாற்று இடத்தைப்பெற்றால்தான் உண்டு. தேர்தலில் மாற்றுக்கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டாலோ, அல்லது தளபதி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துவிட்டாலோ இன்றைய அளவுக்கு உரிமையோடு இடத்துக்காக அணுக முடியுமா எனப்து தெரியவில்லை. (ஸ்டாலின் முதல்வராவதற்கு வசதியாக, வரும் தேர்தலில் கலைஞர், பேராசிரியர், ஆற்காட்டார் ஆகியோர் நிற்க மாட்டார்கள் என்பதாக அறிவாலயத்தில் பேச்சு அடிபடுகிறதாம்)

நடிகர்சங்கத்தில் இளையதிலகம் பிரபு, மனோரமா போன்றோர் செயற்குழுவில் இருந்தும் எங்கே, எது தடையாக உள்ளது, அல்லது யார் தடையாக உள்ளனர் என்பது புரியாத புதிராக உள்ளது. நடிகர்திலகத்தின் நினைவு இல்லம் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது காஷ்மீர் பிரச்சினை, இலங்கை பிரச்சினை, காவிரி பிரச்சினை போல காலாகாலத்துக்கும் பேசிக்கொண்டே இருக்கக்கூடிய ஒன்றாக மாறிவிடக்கூடாது, செயல்வடிவம் பெற வேண்டும் என்பதுதான். அதற்கு முதலடி எடுத்து வைக்கவேண்டியவர்கள் சகோதரர்கள் ராம்குமாரும் பிரபுவும்தான்.

நீங்கள் சொன்னது போல நடிகர்திலகத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்வோருக்கு பயன்படும் தாய் இல்லமாக அது அமையவேண்டும் என்பது உண்மையே. ஆனால் அதற்கு முதலில் கிழக்கே ஒரு ஒளிக்கீற்றாவது தென்பட வேண்டுமல்லவா?. ஒன்றுமே நடக்காமல் ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டனவே என்பதே அனைவரது ஆதங்கமும் ஏக்கமும் ஆகும்.

நல்லதே நடக்கும், அதுவும் விரைவில் நடக்கும் என்று நம்புவோம்.

SHIV
4th October 2010, 10:21 AM
Dear Murali sir,

Thanks for your excellent report on NT 's birthday function at Kamaraj Arangam. GKV's speech was surprising and also satisfying. Hope these are not lip service to satisfy NT's fans and exploit them for coming Assembly elections.

Regards

Shiv.

SHIV
4th October 2010, 10:29 AM
Dear Ragavendra sir,

Though i agree with you that Manimandapam issue should not be rushed thro and end up with just like any other building, I feel Ms.Sharadha is also justified in saying that time is running out and we should make the best use of NT's contemporories who are in Power now.

Otherwise it may be too late as now itself the acting fraternity is totally silent on this issue and it is all the more surprising and painful to note that the now senior most artists Kamal and Rajini who were so close to NT also do not open thier mouth or talk about this.

so we cannot expect much from the next generation of politicians or film fraternity.

Regards

Shiv

Mahesh_K
4th October 2010, 01:24 PM
"எந்திரன்" தினத்தந்தி திரைவிமர்சனத்திலிருந்து:

"ரோபோ" ரஜினி உத்தமபுத்திரன் சிவாஜியை நினைவுபடுத்துகிறார்

திரு. ரஜினி காந்த் அவர்களுக்கு மிகவும் பிடித்த சிவாஜி படம் உத்தமபுத்திரன் என்று அவர் ஒரு நேர் காணலில் குறிப்பிட்டிருந்தார்.

எனது நண்பர் ஒருவர் சொன்ன வேறு ஒரு interesting observation... Super starன் கடந்த 4 ஹிட் படங்களுக்கும் NTக்கும் உள்ள தொடர்பு.

படையப்பா - NT சிறப்பு தோற்றம்.
சந்திரமுகி - Sivaji Productions தயாரிப்பு
சிவாஜி - படத்துக்கு NT பெயர்.
எந்திரன் - NT பிறந்த நாளில் release.

saradhaa_sn
4th October 2010, 01:41 PM
படையப்பா - NT சிறப்பு தோற்றம்.
சந்திரமுகி - Sivaji Productions தயாரிப்பு
சிவாஜி - படத்துக்கு NT பெயர்.
எந்திரன் - NT பிறந்த நாளில் release.
மகேஷ், இன்னொன்று...

குசேலன் - NT-யின் புதல்வர் பிரபுவின் சிறப்புத்தோற்றம்.

NOV
4th October 2010, 01:48 PM
A request to the best NT online fans group :)

I need the video of "Ennirendu padhinaru vayadhu"

I searched in youtube...but its not there.http://movie1.search.biglobe.ne.jp/video/watch/7e6e013eeacd2462

abkhlabhi
4th October 2010, 01:59 PM
Due to work,load, could not see the PP on 20th of Sept . When I read Paamalar information that PP is schedule to release on 1st Oct at Mini Motcham, I booked a train ticket for this purpose only and have some personal work in the afternoon on that day in Koyamedu. When I reached koyamedu through someone I got Enthiran ticket for 3.00 p.m. show (rohini mulitplex). I thought this movie will be over by 6.00 p.m. and even if i catch auto from koyamedu , I may reach mini motcham around 6.30. p.m. since I catch an auto around 11.30 am in the morning from central and reached Koyamedu around 12. noon. But the movie started late around 3.30 p.m. After interval , I was very uneasy since I prepared my self to see only PP not others movies. I left after interval around 5.45 p.m ( Iam only person not seeing this movie fully - Chellame film retold as Enthiran, 150 crores waste, when the tickets were sold more than three times within the first week, naturally the collection will be more only - In B'lore Rs.400/- tickets are sold for Rs.1500) and catch an auto to minimotcham, But due to heavy traffic near koyamedu fly over construction I reach only around 7.30. p.m to MM. i saw only posters of PP in Minimotcham. when I enquired , the second show start at 10.00 pm. Since I have to catch train, I came back to central with broken heart. Still I felt very bad for missing this movie

KCSHEKAR
4th October 2010, 02:37 PM
திரு.முரளி அவர்களின் காமராஜர் அரங்க நிகழ்ச்சிப் பதிவுகள் அருமை.

KCSHEKAR
4th October 2010, 03:12 PM
Please click the link below

http://www.sivajiperavai.com/View_Press.php?id=120

KCSHEKAR
4th October 2010, 04:01 PM
Nadigarthilagam's 83rd Birthday News:

Please click the links below:

http://www.sivajiperavai.com/View_Press.php?id=121


http://www.sivajiperavai.com/View_Press.php?id=122

RAGHAVENDRA
4th October 2010, 05:32 PM
சகோதரி சாரதா மற்றும் நண்பர்களுக்கு,
தங்கள் உணர்வுகள் தங்களுக்கு மட்டும் உரியதல்ல, நம் அனைவரின் உணர்வுகளையும் தாங்கள் பிரதி பலித்திருக்கிறீர்கள் என்பதே உண்மை. அதற்கு முதலில் என் நன்றியை நான் கூறிக்கொள்கிறேன்.

அரசு மரியாதை என்ன, எப்படிப்பட்டது என்பதெல்லாம் அனைவரும் அறிந்ததே. நடிகர் திலகத்திற்கு மரியாதை செய்யும் தகுதி தற்போது எந்த அரசுக்கு உள்ளது, அவர்கள் எந்த அளவிற்கு செய்வார்கள் என்பதெல்லாம் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவ்வளவு பேசும் இளங்கோவன் ஏன் நடிகர் திலகத்திற்கு மத்திய அரசிடம் மரியாதை செய்யும் படி கோரிக்கை விடவில்லை. நடிகர் திலகத்திற்கு மரியாதை செய்யும் பொறுப்பு மாநில அரசுக்கு மட்டும் தான் உள்ளதா. ஏன் மத்திய அரசுக்கு இல்லையா. நாம் நடத்தும் போராட்டங்கள் ஏன் மத்திய அரசை நோக்கி செல்வதில்லை. இருந்த வரை நடிகர் திலகத்திற்கு சிறந்த நடிகர் விருது வழங்காததை ஏன் நாம் கேட்பதில்லை. நமக்கு மணிமண்டபம் கோரிக்கை ஒன்று தான் உள்ளதா. ஏன் நடிகர் திலகத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க நாம் வற்புறுத்தவில்லை. ஏன் இந்தியாவின் சிறந்த நடிகருக்கான விருதையாவது நடிகர் திலகம் பெயரில் வழங்கும் படி நாம் கேட்க வில்லை. தாங்கள் சொல்வது போல் கலைஞர் இருக்கும் வரை செய்கிறார் என்றால் மற்றவர்கள் செய்ய மாட்டார்கள் என்று நாமே ஏன் தீர்மானிக்க வேண்டும். ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட வருவதாக சொல்லிவிட்டு பெயரும் போட்டு விட்டு பின்னர் சாக்கு போக்கு சொல்லும் தலைவர்களை நாம் ஏன் எதுவும் கேட்பதில்லை. இதெல்லாம் நடிகர் திலகத்தை போற்றிப் புகழும் செயலாகுமா.

இப்படி பல கேள்விகள் எழுகின்றன. கலைஞர் வாக்குறுதி கொடுத்தால் அவராயிருந்தாலும் சரி, அவர் புதல்வராயிருந்தாலும் சரி, அந்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப் படும். அரசு எந்திரம் ..?
என்னைப் பொறுத்த வரை ஒரு காரியம் முறையாக, சரியாக, சிறப்பாக அமைய வேண்டும் என்றால் கால நேரம் ஒரு தடையாக இருக்காது. அப்படி சிறப்பாக அமையவேண்டும் என்றால் அது நிச்சயம் நடந்தே தீரும்.

நடிகர் திலகத்திற்கு தற்போதைய எந்த அரசும் மரியாதை செய்யும் தகுதியைப் பெறவில்லை. செய்தாலும் அது தொடர்ந்து தொய்வின்றி நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

பலரையும் பலவிதத்திலும் குறை சொல்லிக் கொண்டு போராட்டம் நடத்துவதால் எந்தப் பயனும் இருக்காது என்பதே என் எண்ணம். நாம் போராடினோம் என்று சொல்லிக் கொள்வதற்கு வேண்டுமானால் பயன் படலாம்.

நான் ஏற்கெனவே கூறியது போல் நடிகர் திலகத்தின் புதல்வர்கள் அவருக்காக எடுக்கக் கூடிய அனைத்து முயற்சிகளும் அறிவார்த்தமாகவும் விவேகமாகவும், அதே சமயம் செயல் பூர்வமாகவும் செய்வார்கள் என்பது திண்ணம். அதற்கான நேரம் கனியும் போது அவர்களைவிட முனைப்பாக செயல் படக் கூடியவர்கள் யாருமில்லை.

நமக்கு உண்மையிலேயே நடிகர் திலகத்திற்கான மரியாதைகள் செய்யப் படவேண்டும் என்ற முனைப்பும் எண்ணமும் இருந்தால், நடிகர் திலகத்தின் புதல்வர்களுக்கு நாம் ஒத்துழைத்து உறுதுணையாக இருப்பது தான் உண்மையான அணுகுமுறை. அதை விட்டு அவரவர் தனித்தனி பாதையில் போய் போராட்டம் செய்வதாலும் அறிக்கை கொடுப்பதாலும் அது நடிகர் திலகத்தை நாம் அவமதிப்பது போலாகும். அவர் மேல் நமக்கு பற்றும் பாசமும் இருப்பது உண்மையானால் அவருடைய குடும்பத்திற்கும் அவருடைய புதல்வர்களுக்கும் உறுதுணையாக இருப்பது தான் அடையாளம்.

அன்புடன்
ராகவேந்திரன்

kumareshanprabhu
4th October 2010, 06:18 PM
hi murali thankyou for upadating the news of kamarajar arangam. i was there in the function, i think i mssed you

mr_karthik
4th October 2010, 07:24 PM
[tscii:762236a189]Murali sir,

Thanks a lot for the live coverage of the events of NT’s Birthday celebrations at Kamaraj Arangam. I think due to shortage of time, the awardees are not allowed to speak. But still I feel , the awrd for mak-up artist Peethambaram is not an opted one, because he was the main make-up man for MGR, when Rengasamay was for NT. ( I hope his son P.Vasu’s ‘thalaiyeedu’ might be there to award his dad. Ok, let us leave it).

But I think still many NT’s close associates are there to be honored. Did director CVR, actress Lakshmi etc. has been given NT awards..?.
[/tscii:762236a189]

mr_karthik
4th October 2010, 08:03 PM
[tscii:3be35d6ef2]When going through the recent few pages, I found there is a 'அறிக்கைப்போர்' started between some of our senior pillars of the hub regarding the ‘Memorial House’ for NT. ( whenever we star to discuss about the leaders congress, automatically fight will start, I hope). But it is not a pleasant thing as per my view.

Even though Raghavendar sir’s post is addressed to Saradha mam, it indirectly points out Chandrasekhar, who is fighting for ‘Manimandapam’ and the news are published in medias.

At the same time Saradha’s post is not pointing to anyone, but worrying about the delays and afraid that memorial house should not be ended with dream, which is also acceptable.

But Raghavendar sir’s point is very clear that it should not be just a ‘manimandapam’ same like of other leaders, but should be an institution to know about NT by the future generation. He also says that we should trust on NT’s sons and to give full support for them.

Let us hope for the best, and wait for the proper time.
[/tscii:3be35d6ef2]

Murali Srinivas
4th October 2010, 11:59 PM
வாதப் பிரதிவாதங்களை தவிர்த்து எப்போதும் போல் என்றும் இனிக்கும் அவரது படங்களை பற்றியும் அவரது நடிப்பை பற்றியும் பேசுவோம்! மணிமண்டபம் பற்றி ஒரே வார்த்தை! நிச்சயம் ஒரு நாள் அமையும்! நம் மனம் போல் எல்லாம் நிகழும்! பொறுத்திருப்போம்.

நடிகர் திலகத்தின் பிறந்த தின விழாவைப் பற்றிய எனது பதிவை பாராட்டிய சாரதா, சுவாமி, ராகவேந்தர் சார், சிவராம், குமரேசன் பிரபு, சந்திரசேகர் மற்றும் கார்த்திக்கு உளமார்ந்த நன்றிகள்.

Thilak & Rakesh,

Keep them coming, more on such nuances.

அன்புடன்

Murali Srinivas
5th October 2010, 12:49 AM
சில படங்களை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. ரசிப்புத்தன்மை குறையாது. அப்படிப்பட்ட எவர் கிரீன் காவியமான ஆண்டவன் கட்டளை படத்தை வெகு நாட்களுக்கு பிறகு தியேட்டரில் காணும் வாய்ப்பு. நேற்று மாலை நட்ராஜ் அரங்கில் மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தின் இடையில் அமர்ந்து பார்த்தோம். நமது ரசிகர்கள் வழக்கம் போல் அமர்களப்படுத்தி விட்டனர்.

படத்தின் விமர்சனத்தை இந்த திரியில் நானே எழுதியிருக்கிறேன். ஆகவே மீண்டும் detailed-ஆக போக விரும்பவில்லை. தியேட்டருக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்த கோலாகலங்களை பார்த்தபோது ஏற்கனவே எனக்கு தோன்றிய எண்ணம் வலுப்பெற்றது. எந்த மொழிப் படமானாலும் action ஹீரோவிற்கு மாஸ் இருக்கும். ஆனால் ஒரு actor -க்கு இவ்வளவு பெரிய மாஸ் இருப்பது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யாருக்கு இருக்கும்?

படத்தை ரசிக்கும் போது ஒரு சில எண்ணங்கள் மனதில் ஓடின. நடிகர் திலகத்தின் கதாபாத்திரமான புரொபசர் கிருஷ்ணன் உருவாக்கப்பட்டிருக்கும் விதம், அதை நடிகர் திலகம் உள்வாங்கி திரையில் வெளிப்படுத்தும் முறை, பிரமாதம் என்ற வார்த்தை எல்லாம் சாதாரணம்.

பிரம்மச்சாரியாகவே காலத்தை கழித்து விட நினைத்துக் கொண்டிருக்கும் புரொபசர், தற்செயலாக ஏற்படும் பெண் ஸ்பரிசம், அதை தொடர்ந்து உண்டாகும் சபலங்கள். பூங்காவில் மழையில் நடந்த நிகழ்ச்சியால் தன் நிலை பிறழ்ந்து விடுவேனோ என்ற மனக் குழப்பத்தில் வீட்டிற்கு வரும் புரொபசர் சந்திக்கும் மனப் போராட்டக் காட்சி.

விவேகானந்தரையும் ராமலிங்க அடிகளாரின் அருள் வாக்குகளையும் கொண்டு மீண்டு விடலாம் என நினைக்கும்போது மனம் ஒரு குரங்கு என்று சொல்வதை மெய்ப்பிப்பது போல் கண்ணிலும் முன்னிலும் தோன்றும் தேவிகாவின் உருவம். சுமார் 10 நிமிடங்கள் வரும் இந்த Soliloquy - 10 நிமிடங்கள் கூட வேண்டாம். Can any other actor even think of pulling it off say atleat for a minute or two? Let it be method acting or non method or whatever jargon you want to put. It is simply an outstanding effort. No two ways about it.

படத்தின் highlight - ஆறு மனமே ஆறு பாடல் காட்சி! என்ன ரசிப்பு என்ன ஆரவாரம்! சாதாரணமாக எந்த நடிகனின் ரசிகனும் தன் அபிமான நடிகர் தாடி நீக்கி, மீசை நறுக்கி நேர்த்தியாக உடையணிந்து மிக அழகாக தோற்றமளிக்கும் போது தான் மிக அதிகமாக ரசிப்பார்கள், ஆரவாரம் செய்வார்கள்,கை தட்டுவார்கள். ஆனால் இங்கேயோ தன் அபிமான நடிகன், பரதேசி போல் முடி குறைத்து, முள்ளு முள்ளான தாடி வைத்து, கிழிந்த காவி வேட்டி கட்டி வரும்போதுதான் ரசிகன் உச்சக்கட்ட ஆரவாரத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறான். தன் நடிப்பின் மூலமாக ரசிகனின் ரசிப்பு தன்மையையும் வளர்த்தவர் நடிகர் திலகம் என்று சொன்னால் அது வேறு யாருக்கும் கிடைக்காத ஒரு பாக்கியம்.

Ragavender Sir and Swamy,

Pease post the photos.

அன்புடன்

SHIV
5th October 2010, 10:47 AM
Dear Murali sir,

Thanks for your report on Aandavan Kattalai. My pick ( as for most of us) is the last scene in the song "Aaru maname Aaru" where NT walks casually munching groundnuts and blowing the groundnut skins in his hand with all concentration . Its a Million Dollar performance and im at loss of words and too small to describe this performance.

Hats off to Mellisai Mannar also for providing the excellent ending music that matches with NTs performance and walk.

Regards

Shiv

mr_karthik
5th October 2010, 11:30 AM
Murali sir,

It is an unexpected pleasant surprise about your theatre coverage about 'Andavan kattaLai', the second best of PSV pictures, after Alayamani.

No doubt that Professor role was another challenging charector for NT, as walking on the sharp sword, but he won in that challenge. This is the one where 'our' Devika was too hot among the other NT movies. I think her poses in the song 'azhagE vA... arugE vA' are the special ones among her career, especially her close-ups.

It is very special of your watching it in Nataraj Theatre, because that theatre is called as one of the ports of MGR in chennai in recent days.

Thanks for your nerration.

RAGHAVENDRA
5th October 2010, 12:05 PM
[tscii:f22f6f7332]
Even though Raghavendar sir’s post is addressed to Saradha mam, it indirectly points out Chandrasekhar, who is fighting for ‘Manimandapam’ and the news are published in medias.

[/tscii:f22f6f7332]

Dear Karthik,
Though I am not interested in prolonging the arguments, I am compelled to clear a point. My intention is not to pin point any body individually. This is a general statement applicable invariably. This may kindly be read in that context.

Raghavendran

RAGHAVENDRA
5th October 2010, 12:17 PM
வாதப் பிரதிவாதங்களை தவிர்த்து எப்போதும் போல் என்றும் இனிக்கும் அவரது படங்களை பற்றியும் அவரது நடிப்பை பற்றியும் பேசுவோம்! மணிமண்டபம் பற்றி ஒரே வார்த்தை! நிச்சயம் ஒரு நாள் அமையும்! நம் மனம் போல் எல்லாம் நிகழும்! பொறுத்திருப்போம்.


முரளி சார், வாதப்பிரதிவாதங்களில் இறங்குவதில் எனக்கும் அதிகம் ஈடுபாடு இல்லை. இது கருத்துப் பரிமாற்றம் மட்டுமே. ஏனென்றால் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிப் பேசுவதற்கே 100 பாகங்கள் இருந்தாலும் போதாது. மற்ற விஷயங்களைப் பற்றிப் பேச தனித் திரி வைத்துக் கொள்ளலாம்.

கார்த்திக் சார் சொன்னது போல் நடராஜ் திரையரங்கில் பெரும்பாலும் எம்.ஜி.ஆர்.அவர்களின் படங்கள் திரையிடப் பட்டாலும் அவ்வப்போது அந்தக் காலங்களில் நடிகர் திலகத்தின் படங்களும் திரையிடப்படும். அவ்வாறு சிலபடங்களை நான் அப்போது பார்த்தும் இருக்கிறேன்.

கடந்த ஞாயிறு அன்று மாலைக் காட்சியில் வழக்கம்போல் அளப்பரைக்குக் குறைவில்லை. ஆரத்தி, வெடிகள், தேங்காய் உடைப்பு என ஒரு குறையுமின்றி சிறப்பாக செய்து விட்டனர் ரசிகர்கள். உள்ளேயும் அதே போல்.

இம்முறை திரையரங்க நிர்வாகம் ரசிகர்களுக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுத்தது சிறப்பம்சம். இதற்காக நடராஜ் திரையரங்கத்திற்கு நமது நன்றியும் பாராட்டும் உரித்தாகட்டும்.

மேலும் அத்திரையரங்கில் திரையிடப் படும் படங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக நிர்வாகி அவர்கள் கூறினார். அவருக்கு மீண்டும் நன்றி. அவரது ஆதரவு, நம்மைப் போன்றவர்களும் விநியோகஸ்தராக்கி விடும் அளவிற்கு ஊக்கமளிப்பதாக உள்ளது.

ஆண்டவன் கட்டளை படத்திற்கு அன்று ஒரு நாளில் மட்டும் கிட்டத் தட்ட 10லிருந்து 12 அல்லது 13 ஆயிரத்திற்கு மேல் வசூலாகியிருக்கக் கூடும் என்று கூறினார். முதல் நாள் எம்.ஜி.ஆர். நடித்த பாக்தாத் திருடன் படமும் நல்ல வசூலாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

நடிகர் திலகத்தின் மேலும் பல படங்களை நடராஜ் திரையரங்கில் நாம் எதிர்பார்க்கலாம்.

அன்புடன்
ராகவேந்திரன்

mr_karthik
5th October 2010, 12:57 PM
[tscii:3ed55acec2]
Even though Raghavendar sir’s post is addressed to Saradha mam, it indirectly points out Chandrasekhar, who is fighting for ‘Manimandapam’ and the news are published in medias.

[/tscii:3ed55acec2]

Dear Karthik,
Though I am not interested in prolonging the arguments, I am compelled to clear a point. My intention is not to pin point any body individually. This is a general statement applicable invariably. This may kindly be read in that context.

Raghavendran
Raghavendar sir,
Sorry if my post hurted you. My intension is, even a small crack between NT fans, is not an adviceable one. Thatswhy I afraid.

But insisting 'Nadigar Sangam' in this issue will not give any result. Because any action should be done whole heartedly. But eventhough there are NT's close friends like Kamal, Rajini, Vijayakumar, Sivakumar etc (including our Prabhu sir and our hubber Mohan Ram sir) are the members of Nadigar Sangam, there is no any progress in this matter from their part.

As you and our Murali sir said, let us wait for the proper time to materialise the dream and render our support to NT's family for that.

RAGHAVENDRA
5th October 2010, 01:54 PM
Dear Karthik,
No, don't worry. There is no question of hurting me. Because every body is an NT fan and every body is my friend, irrespective of x or y and every body has his right to express his views. You can always continue to express what you feel without any hesitation. The same way I too don't have any intention to hurt any body.

The only matter that concerns is , the approach to get things done. A cart has different wheels and all of them should go in one direction and each one should co-ordinate the other. If each wheel goes in its own direction, the result ...? That's what I mean.

We are having one desire and ambition ... getting due recognition for NT ... But if every body goes in his own direction like that cart, what would be the result? Instead if every body coordinates and acts together, the end result would definitely be successful.

We have seen many leaders having different persons claiming to be their followers forming different outfits and so on. Let such kinds of guises be done away with in the case of NT.

Let all NT fans come under one roof to show the world the real strength of his fans and followers..

That is my humble wish

Regarding NT's friends and fans in Nadigar Sangam, I hope they would definitely do their best and get the things done.

Let us wait for the appropriate time.

Thank you
Raghavendran

KCSHEKAR
5th October 2010, 02:10 PM
Murali Srinivas wrote:

வாதப் பிரதிவாதங்களை தவிர்த்து எப்போதும் போல் என்றும் இனிக்கும் அவரது படங்களை பற்றியும் அவரது நடிப்பை பற்றியும் பேசுவோம்! மணிமண்டபம் பற்றி ஒரே வார்த்தை! நிச்சயம் ஒரு நாள் அமையும்! நம் மனம் போல் எல்லாம் நிகழும்! பொறுத்திருப்போம்.


Mr.Murali - I accept your words.


Thanks

KCSHEKAR
5th October 2010, 02:16 PM
விவேகானந்தரையும் ராமலிங்க அடிகளாரின் அருள் வாக்குகளையும் கொண்டு மீண்டு விடலாம் என நினைக்கும்போது மனம் ஒரு குரங்கு என்று சொல்வதை மெய்ப்பிப்பது போல் கண்ணிலும் முன்னிலும் தோன்றும் தேவிகாவின் உருவம். சுமார் 10 நிமிடங்கள் வரும் இந்த Soliloquy - 10 நிமிடங்கள் கூட வேண்டாம். Can any other actor even think of pulling it off say atleat for a minute or two? Let it be method acting or non method or whatever jargon you want to put. It is simply an outstanding effort. No two ways about it.


Excellent comment. It is 100% true.

Thanks

Mahesh_K
5th October 2010, 02:47 PM
நான் ஏற்கெனவே கூறியது போல் நடிகர் திலகத்தின் புதல்வர்கள் அவருக்காக எடுக்கக் கூடிய அனைத்து முயற்சிகளும் அறிவார்த்தமாகவும் விவேகமாகவும், அதே சமயம் செயல் பூர்வமாகவும் செய்வார்கள் என்பது திண்ணம். அதற்கான நேரம் கனியும் போது அவர்களைவிட முனைப்பாக செயல் படக் கூடியவர்கள் யாருமில்லை.

நமக்கு உண்மையிலேயே நடிகர் திலகத்திற்கான மரியாதைகள் செய்யப் படவேண்டும் என்ற முனைப்பும் எண்ணமும் இருந்தால், நடிகர் திலகத்தின் புதல்வர்களுக்கு நாம் ஒத்துழைத்து உறுதுணையாக இருப்பது தான் உண்மையான அணுகுமுறை. அதை விட்டு அவரவர் தனித்தனி பாதையில் போய் போராட்டம் செய்வதாலும் அறிக்கை கொடுப்பதாலும் அது நடிகர் திலகத்தை நாம் அவமதிப்பது போலாகும். அவர் மேல் நமக்கு பற்றும் பாசமும் இருப்பது உண்மையானால் அவருடைய குடும்பத்திற்கும் அவருடைய புதல்வர்களுக்கும் உறுதுணையாக இருப்பது தான் அடையாளம்.

அன்புடன்
ராகவேந்திரன்

:clap: :clap: :clap: :clap: :clap:

என்னுடைய கருத்தும் இதுவே.

KCSHEKAR
5th October 2010, 02:56 PM
Nadigarthilagam 83rd birthday - special Annadhanam photos:
Please click the links below:

http://www.sivajiperavai.com/View_Press.php?id=123

http://www.sivajiperavai.com/View_Press.php?id=124

http://www.sivajiperavai.com/View_Press.php?id=125

http://www.sivajiperavai.com/View_Press.php?id=126

http://www.sivajiperavai.com/View_Press.php?id=127


Thanks

kumareshanprabhu
5th October 2010, 06:31 PM
mr karthik were are you in Bangalore,

rangan_08
5th October 2010, 06:41 PM
"எந்திரன்" தினத்தந்தி திரைவிமர்சனத்திலிருந்து:

"ரோபோ" ரஜினி உத்தமபுத்திரன் சிவாஜியை நினைவுபடுத்துகிறார்

One of my friend shared the same sentiment today.

rangan_08
5th October 2010, 06:46 PM
I feel so bad for having missed a lot of fun, excitement, strong feelings / sentimens & action, particularly on the day of NT's birth anniversary. In fact, I tried to log on to the hub but faced a "fatal error" msg. But, I managed to get the info from Murali sir. I also feel bad for missing Sunday screening of Aandavan Kattalai.

rangan_08
5th October 2010, 06:49 PM
[tscii:82753cdb8b]A PRESTIGIOUS VOICE

Barrister Rajinikanth commands respect through his attitude and most importantly through his gravelly and authoritative voice. True to the nature of his character, possessing a rich court room experience, he always sounds loud and maintain a commanding and argumentative tone which is quite contrary to the younger & timid Kannan’s soft voice reflecting his modest nature.

Of course, Nadigar Thilagam treated us with one of the best ever performance in the history of cinema, to differentiate these characters but he primarily achieved this tremendous task by lending unique timbre to the voices of both Barrister and Kannan.

Now, if the trend of “high pitch – Barrister and low pitch – Kannan “ continues throughout the film it would have become an ordinary fete. To overcome this monotonous tone, the director cleverly introduces several beautiful moments in the film that serves as a real challenge to the actor. Again, right from the Uthama Puthiran (sounding different in a dual role), Baley Pandia (3 different voices) & Navarathiri days , challenges are a way of life for this actor par excellence and he gladly takes this one also in his stride and gives no room for anybody to express a voice of concern.

The challenge that I have mentioned is, at times, Barrister has to speak in a low voice and Kannan in a louder tone (quite opposite to the nature of their characters) and this has to be done in a convincing manner. Well, the audience are not only convinced, they are awe-struck by Nadigar Thilagam’s un matched stroke of genius !!!

Remember the scene where Barrister, who is anxiously expecting the judgement, prays to God, in a humble yet authoritative tone….. “ unakku eppadi namaskaram panradhunnu kooda theriyala.. (it’s hard to miss the brahmin slang there….a big namaskaram to writer / director, VVS). Now, compare this tone with the generally soft spoken Kannan’s voice…all you hear is two distinct voices which is nothing but the result of hard work & talent of this gifted artiste. In another scene he says, “ dei Kanna, indha kaala konjam pudichi vidra….” – in a very passive and subtle tone – just brilliant !!

Now it’s Kannan’s turn……when Kannan protests against the idea of his fellow lawyers who persuade him to appear as Public Prosecutor thereby challenging his mentor, Kannan raises his voice a few decibels more than his normal tone. Even then it is entirely different from that of Barrister’s phenomenal roar. Considering the very last scene also where he lets out a loud cry, “ peripaaaaaaaa”, the audience will see only Kannan in their mind if they close their eyes and listen to the voice.

Another quintessential, absolute world class performance that has gone unnoticed (internationally) or perhaps missed the due respect which it more than deserves.

இந்த கௌரவமான நடிப்பைப் பற்றி எடுத்துச் சொல்ல எனக்கு v(ayasu)oice பத்தாது.
[/tscii:82753cdb8b]

rangan_08
5th October 2010, 06:53 PM
படத்தின் highlight - ஆறு மனமே ஆறு பாடல் காட்சி! என்ன ரசிப்பு என்ன ஆரவாரம்! சாதாரணமாக எந்த நடிகனின் ரசிகனும் தன் அபிமான நடிகர் தாடி நீக்கி, மீசை நறுக்கி நேர்த்தியாக உடையணிந்து மிக அழகாக தோற்றமளிக்கும் போது தான் மிக அதிகமாக ரசிப்பார்கள், ஆரவாரம் செய்வார்கள்,கை தட்டுவார்கள். ஆனால் இங்கேயோ தன் அபிமான நடிகன், பரதேசி போல் முடி குறைத்து, முள்ளு முள்ளான தாடி வைத்து, கிழிந்த காவி வேட்டி கட்டி வரும்போதுதான் ரசிகன் உச்சக்கட்ட ஆரவாரத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறான். தன் நடிப்பின் மூலமாக ரசிகனின் ரசிப்பு தன்மையையும் வளர்த்தவர் நடிகர் திலகம் என்று சொன்னால் அது வேறு யாருக்கும் கிடைக்காத ஒரு பாக்கியம்.

அன்புடன்

Very much true - particularly, the " kadalai korikkum " style - awesome.

saradhaa_sn
5th October 2010, 07:59 PM
இந்த கௌரவமான நடிப்பைப் பற்றி எடுத்துச் சொல்ல எனக்கு v(ayasu)oice பத்தாது.

இவ்வளவு அற்புதமாக விவரித்துவிட்டு அப்புறம் இந்த வரி தேவையா?.

ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் (உண்மையிலேயே அவை பெரிய விஷயமே) தீர்க்கமாக ஆராய்ந்து சொல்லியிருக்கீங்க மோகன்.

Murali Srinivas
5th October 2010, 10:21 PM
The photo gallery of NT's 82nd Birthday Function held at Chennai Kamarajar Arangam on 01.10.2010. Thanks to Joe for sending this.

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/23781.html

Regards

Murali Srinivas
5th October 2010, 11:25 PM
ஆண்டவன் கட்டளை பற்றிய பதிவை பாராட்டிய சிவராம், கார்த்திக், சந்திரசேகர், மோகன் அனைவருக்கும் நன்றி.

சிவராம் & மோகன்,

தோலை நீக்கி விட்டு கடலையை வாயில் போட்டுக் கொண்டு தோலியை ஊதும் காட்சி - உண்மையிலே அது மில்லியன் டாலர் performance -தான்.

கார்த்திக்,

அழகே வா பாடல் காட்சி பற்றியும் குறிப்பிட நினைத்தேன். விட்டுப் போய் விட்டது. வசனக் காட்சியாகட்டும், பாடல் காட்சியாகட்டும் காமிராவிற்கு முதுகை மட்டும் காண்பித்துக் கொண்டே ஒரு நடிகன் என்ன உணர்வுகளை பார்வையாளனுக்கு உணர்த்த விரும்புகிறானோ அதை சிறப்புற செய்தது நடிகர் திலகம் மட்டுமே. நிச்சய தாம்பூலத்தில் படைத்தானே, ஆண்டவன் கட்டளையில் அழகே வா, கை கொடுத்த தெய்வத்தில் ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ, சாந்தியில் யார் அந்த நிலவு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அது போல் வசனக்காட்சியில் நெஞ்சிருக்கும் வரையில் வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்லும் முத்துராமனிடம் பேசும் காட்சி, தங்கப்பதக்கத்தில் தன் காவலில் இருந்த குற்றவாளிகள் தப்பித்து போய் விட்டார்கள் என்றதும் ஐ.ஜி.யின் முன்னால் நிற்கும் காட்சி என பல உண்டு.

மீண்டும் அழகே வா பாடலுக்கு வருவோம். விவேகானந்தரையும், பரமஹம்சரையும், வள்ளலாரையும் வழிக்காட்டிகளாக கொண்ட மனம் ஒரு புறம், பெண் வாசம், பெண் நேசம், பெண் ஸ்பரிசம் என்று காதலும் காமமும் அலைக்கழிக்கும் சபலம் ஒரு புறம். வேண்டாம்,எனது கடமை உணர்வுதான் வெல்ல வேண்டும் என்று திரும்பும் மனிதனை வாவென்று அழைக்கும் அந்த உள்ளத்தின் உள்ளே சென்றும் வருடும் குரல் அப்படியே கட்டிப் போட, முகம் காட்டாமலே அந்த தவிப்பை உணர்வை வெளிப்படுத்த நமது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யாரால் முடியும்?

Mohan,

Extraordinary writing on Gowravam. As I once said, your pen seems to automatically flow when you think of Barrister and his step son. The aspect you had taken for analysis that is the voice modulation of both the characters is itself novel and intersting.

உங்களுக்காகவே விநியோகஸ்தரிடம் சொல்லி விரைவில் கெளரவம் படத்தை சாந்தியில் வெளியிடச் சொல்ல வேண்டும். [புதிய பறவை திரையிட்ட விநியோகஸ்தர்தான் கெளரவம் படத்தையும் வெளியிடப் போகிறார் என்பதை உங்களிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்].

அன்புடன்

pammalar
6th October 2010, 04:40 AM
டியர் ராகவேந்திரன் சார், சகோதரி சாரதா,

நமது தேசத்தலைவர்களை நினைவு கூர்வது நமது கடமை. பாராட்டுக்கு நன்றி!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th October 2010, 05:48 AM
Fanatic Rangan Sir,

Fantastic analysis about the voice modulation & high & low pitched tones of NT in both the characters, Barrister & Kannan.

கண்ணன் தன்னுடைய பெரியப்பாவின் மீது வைத்திருக்கும் பாசத்தை விட, ரங்கனாகிய நீங்கள் அவர்(பாரிஸ்டர்) மீது வைத்திருக்கும் பாசம் அதிகம்.

That's all your honour!

Warm Wishes,
Pammalar.

Bhoori
6th October 2010, 05:57 AM
பம்மலார், அனுமதி தந்தற்கு நன்றி!

goldstar
6th October 2010, 09:36 AM
Thanks Murali for making us sitting inside theatre and watching "Andavan Kattalai" excellent writeup. As you said in the last scene of song "Aru maneme aru" we won't see the screen everywhere flowers, coins, papers. We had watched this movie with so much "Allapparai" in Madurai Alankar theatre. Thanks again for taking me back to my Madurai days.

Mohan sir, excellent writeup about Gowravam. We expected this movie would be released in Shanthi theatre on NT's birthday. Hope it will be released soon.

Ragavendra sir, I really appreciate your effort for our god's memorial place and also speaking about realities.

Expecting AK's sunday gala photos, please post it ASAP.

Cheers,
Sathish

HARISH2619
6th October 2010, 01:51 PM
திரு முரளி சார்,
தங்களின் சிவாஜி விழா தொகுப்பை வழக்கத்திற்க்கு மாறாக சுருக்கமாக முடித்துவிட்டீர்கள் என்றாலும் ஷார்ட் & ஸ்வீட் ஆக இருந்தது.அதேப்போல ஆண்டவன்கட்டளை தியேட்டர் நிகழ்வுகளும் சூப்பர்.ஆறு மனமே ஆறு பாடலின் இறுதியில் வரும் நடைக்காகவே அந்த படத்தை பல முறை பார்த்ததாக என் தந்தையார் கூறுவார்கள்.

திரு ஜோ சார்,
விழா புகைப்படங்களுக்காக் நன்றி.எல்லா மனஸ்தாபங்களையும் மறந்து நமது நடிகர்திலகத்துக்காக தாங்கள் மீண்டும் இந்த திரியில் பங்கேற்க்கவேன்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

திரு சந்திரசேகரன் சார்,
கபாலீஸ்வரர் கோயில் சிவாஜி விழா புகைபடங்களுக்காக நன்றி.

Plum
6th October 2010, 02:04 PM
.



ipdi EdhAchum nadandhA, nAkku 3 tickets kAvAli, MS!

pammalar
6th October 2010, 06:44 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 144

கே: சிவாஜி கணேசன் தன்கூட இன்னார்தான் நடிக்க வேண்டுமென்று கூறுவதில்லையே, ஏன்? (என்.எஸ்.குமார், திருவனந்தபுரம்)

ப: மணம் வேண்டுமானால் நார் தானே பூவுடன் சேர வேண்டும்!

(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1968)

அன்புடன்,
பம்மலார்.

rangan_08
6th October 2010, 07:02 PM
இந்த கௌரவமான நடிப்பைப் பற்றி எடுத்துச் சொல்ல எனக்கு v(ayasu)oice பத்தாது.

இவ்வளவு அற்புதமாக விவரித்துவிட்டு அப்புறம் இந்த வரி தேவையா?.

ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் (உண்மையிலேயே அவை பெரிய விஷயமே) தீர்க்கமாக ஆராய்ந்து சொல்லியிருக்கீங்க மோகன்.

Though I'm an hard core fan, when compared with senior members like you, I'm way behind when it comes to recollecting incidences, writing reviews etc.,

Any way, thank you madam.

pammalar
6th October 2010, 07:02 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 145

கே: சிவாஜி நடிப்பிற்கும், பிரபு நடிப்பிற்கும் என்ன வித்தியாசம்..? (சிவாஜி சிவகுமார் பிரபு, திருப்பூர் - 6)

ப: தாய் பதினாறடி பாய்வதற்கும், குட்டி எட்டடி பாய்வதற்கும் இடையே உள்ள வித்தியாசம்!

(ஆதாரம் : பொம்மை, நவம்பர் 1994)

அன்புடன்,
பம்மலார்.

rangan_08
6th October 2010, 07:10 PM
Mohan,

Extraordinary writing on Gowravam. As I once said, your pen seems to automatically flow when you think of Barrister and his step son. The aspect you had taken for analysis that is the voice modulation of both the characters is itself novel and intersting.

உங்களுக்காகவே விநியோகஸ்தரிடம் சொல்லி விரைவில் கெளரவம் படத்தை சாந்தியில் வெளியிடச் சொல்ல வேண்டும். [புதிய பறவை திரையிட்ட விநியோகஸ்தர்தான் கெளரவம் படத்தையும் வெளியிடப் போகிறார் என்பதை உங்களிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்].

அன்புடன்

Thank you Murali sir... and yes, your'e right, Barrister is very close to my heart.

Gowravam @ Shanthi.....wow !!! Seekiram padatha poda sollunga sir.

Is the mega event planned for Diwali ??? ( World wide release, as you said ???) ---------------- appadiye namma Plum-mukkum oru ticket parcel.

Thanks sathish, for your appreciation.

rangan_08
6th October 2010, 07:12 PM
Fanatic Rangan Sir,

Fantastic analysis about the voice modulation & high & low pitched tones of NT in both the characters, Barrister & Kannan.

கண்ணன் தன்னுடைய பெரியப்பாவின் மீது வைத்திருக்கும் பாசத்தை விட, ரங்கனாகிய நீங்கள் அவர்(பாரிஸ்டர்) மீது வைத்திருக்கும் பாசம் அதிகம்.

That's all your honour!

Warm Wishes,
Pammalar.

Thank you Pammalar sir....... you may proceed now with Kelvi Pirandhadhu.." :)

Just now gone through Sivaji 83. Scrupulously prepared list - great effort. Wonderful, sir.

rangan_08
6th October 2010, 07:41 PM
Can any other actor even think of pulling it off say atleat for a minute or two? Let it be method acting or non method or whatever jargon you want to put. It is simply an outstanding effort. No two ways about it.



Exactly. It's impossible to slot him into any of these " acting styles ". And, I believe that he himself never bothered about it.

pammalar
6th October 2010, 08:24 PM
Dear Rangan Sir,

My sincere thanks for your praise & appreciation !

Regards,
Pammalar.

pammalar
6th October 2010, 08:44 PM
மதுரை சென்ட்ரல் சினிமா திரையரங்கில், 24.9.2010 வெள்ளி முதல் 30.9.2010 வியாழன் வரை ஒரு வார காலத்திற்கு, தினசரி 4 காட்சிகளாக, 'நசநச' என்று பெய்த மழையையும் மீறி, சக்கை போடு போட்டுள்ள ஸ்டைல் சக்கரவர்த்தியின் "சொர்க்கம்" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்). பழைய பட மறுவெளியீடுகளில் இது மலைக்க வைக்கும் சாதனை.

"சொர்க்க"த்தை திரையிட்டவருக்கு பூலோகத்தில் 'சொர்க்கம்' என்பதனைச் சொல்லவும் வேண்டுமோ!

பெருமிதத்துடன்,
பம்மலார்.

Murali Srinivas
7th October 2010, 12:05 AM
Thanks Satish. I too had a trip down memory lane when I was watching Aandavan Kattalai.

Mohan,

Yes, the distributor is planning to release it in Shanthi. The world wide release that I told you is that of Karnan. Gowravam would make rounds in the city.

Plum, ungalukku illaadha ticketaa? Will inform as and when it happens.

செந்தில்,

பிறந்த நாள் விழாவே short & sweet -ஆக தான் இருந்தது. மொத்தமே 75 நிமிடங்கள்தான் விழாவே நடைப்பெற்றது

சுவாமி,

சொர்க்கம் பெரிய வசூலை கொடுக்கும் என தெரியும். ஆனால் இதற்கு முன்பு வெளியான படங்களை எல்லாம் இப்படி தூக்கி சாப்பிடும், இந்த மார்ஜின்-ல் முறியடிக்கும் என எதிர்பார்க்கவில்லை. மதுரை மதுரைதான்.

Regards

RC,

சென்ற வார விகடனில் வந்த உயர்ந்த மனிதன் விமர்சனத்தையும் இங்கே பதிவிடுங்கள்.

saradhaa_sn
7th October 2010, 10:30 AM
[tscii:56caf5f1ec]Ananda Vikatan Review for the movie BABU……..
(Cine Bharath productions, 1971 Deepavali release)

நன்றி, விகடன்!

‘நடிப்பினால் ஒரு காவியமே படைத்திருக்கிறார்’ என்று சொல்வது கூட சிவாஜியின் அற்புதமான நடிப்புக்குப் போதுமான பாராட்டாக இருக்க முடியாது. அப்படி ஓர் அருமையான நடிப்பு!
ரிக்ஷாவின் கைப்பிடியைக் காலால் உதைத்து, லாகவமாகக் கையில் பிடித்துக்கொண்டு, துள்ளி ஓடும் இளமைத் துடிப்புள்ள ரிக்ஷாக்காரனாகத் தோன்றுவது முதல், கூனிக் குறுகி முதுமையடைந்து, ரிக்ஷாவைத் தூக்க முடியாத முதுமை வரை, ஒவ்வொரு நிலையிலும் சிவாஜியின் நடிப்பில் முத்திரை பதிகிறது.

பணக்கார சமதர்மவாதியான பாலாஜியின் பரிவைப் பார்த்து விட்டு, ”நீங்க எலெக்ஷனுக்குத்தானே நிற்கப் போறீங்க?” என்று கேட்கும் அப்பாவித்தனம்; நொடித்துப் போன ஜானகி குடும்பத்துக்குக் காவல் நாயாகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் விசுவாசம் – இப்படிப் பல காட்சிகள் குறிப்பிடத் தக்கவை.

சிவாஜி-விஜயஸ்ரீயின் காதலில், கதை ஜிலுஜிலுப்பாக ஆரம்பிக்கிற ஜோர் பிரமாதமாக இருக்கிறது.
பாபுவின் லட்சியப்படி நிர்மலா, பட்டம் வாங்கியதோடு கதையை முடித்திருக்கலாம். அதற்கு மேலும் கதையை நீட்டியிருக்க வேண்டுமா?

பணக்காரத் தம்பதியாக வரும் பாலாஜி-சௌகார் ஜானகி, குழந்தை மூவரும் நெஞ்சையள்ளும் பாத்திரங்கள். பாலாஜி வெகு அநாயாசமாகவும் அழகாகவும் நடித்துப் பெயரைத் தட்டிக் கொள்கிறார். குழந்தை பிச்சையெடுத்துவிட்டு அழும்போது இளகாத நெஞ்சமும் இளகும். சோதனையால் நிலை தடுமாறி குன்றிப் போன உயர் குலப் பெண்மணி ஒருவரின் தவிப்பு, தயக்கம் அத்தனையையும் உருக்கமாகச் சித்திரித்திருக்கிறார், சௌகார் ஜானகி.

படத்துக்குக் கவர்ச்சியூட்ட வேண்டிய பொறுப்பை சிவகுமார்-நிர்மலா ஜோடியிடம் விட்டிருக்கிறார்கள். மினி டிராயரைப் போட்டுக் கொண்டும், மழையினால் உடை, உடம்பில் ஒட்ட நனைந்து கொண்டும் நிர்மலா அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முயன்றிருப்பதில் குறையில்லை. ஆனால், சிவகுமார்-நிர்மலா காதலை விட நம் மனத்தில் சுவையூட்டியது ஆரம்பத்தில் மின்னல் போல் தோன்றி மறைந்த சிவாஜி-விஜயஸ்ரீ காதல் காட்சிதான்.

‘கஞ்சி வரதப்பா‘ பாட்டுக்கு ஏற்ப புன்னகை சிந்த, சாப்பாட்டுக் கூடையுடன் ஒயிலாக இடையை அசைத்து, விஜயஸ்ரீ நடந்து வரும் அழகில் சிருங்காரம் சொட்டுகிறது. முயன்றால் கதாநாயகி அந்தஸ்துக்கு சிறப்பாகத் தேறிவிடக் கூடிய நளினமும் அழகும் இவரிடம் பொருந்தியிருக்கின்றன.

சிவாஜியின் நடிப்பு என்ற தங்க விளக்கு இருக்கிறது; ஆனால் கதை என்ற திரி சரியாக இல்லையே!

(Thanks to ‘RV’ : http://awardakodukkaranga.wordpress.com/ )
[/tscii:56caf5f1ec]

RAGHAVENDRA
7th October 2010, 11:22 AM
நடராஜ் திரையரங்கில் கடந்த வாரம் தினம் ஒரு நடிகர் என்று 7 திரைப்படங்கள் 7 தினங்களுக்கு திரையிடும் நிகழ்வு நடைபெற்றது. இதனையொட்டி 03.10.2010 ஞாயிறு அன்று நடிகர் திலகத்தின் ஆண்டவன் கட்டளை திரைப்படம் திரையிடப் பட்டது. இதைப் பற்றி நமது முரளி சாரின் பதிவு மிக நேர்த்தியாகக் கூறியுள்ளது. அங்கு எடுக்கப் பட்ட நிழற்படங்கள் மிக விரைவில் தரவேற்றப் பட்டு இங்கு இணைப்பு வழங்கப் படும். தற்பொழுது ஒரு முன்னோட்டமாக அங்கு வைக்கப் பட்டிருந்த கௌரவம் பிம்பத்திற்கு ரசிகர்கள் ஆரத்தி எடுக்கும் ஒளிக் காட்சி உங்கள் பார்வைக்கு

http://www.youtube.com/watch?v=Y3_Plgjs5Ms

அன்புடன்
ராகவேந்திரன்

sankara1970
7th October 2010, 02:42 PM
During my recent visit to Chennai, I have added few NT movies to my collections.

I saw Uyarntha Manithan. The initial romances bw NT and Vanisri are wonderful-the locale in Kodaikanal-song Velli kinnam than-excellent.

Vanisri(Suseela)'s solo Nalai Intha Velai parthu is a nicely chroeographed one.

NT looks fantastic with a stick in his hand.
and did some dance movements in Velli kinnam-
treat for fans

sankara1970
7th October 2010, 03:02 PM
Varathappa kanji varathappa is a famous song in 70s

and it is a first kana type song

Words are easy to memorise.

ACT direction-Azugai over

Itho enthan theivam song also is a nice one

RAGHAVENDRA
7th October 2010, 04:33 PM
Dear Balakrishnan,
It was really moving to read your post on your efforts to watch Pudhiya Paravai. I feel you are both fortunate and unfortunate. Fortunate that you did not miss the film, since it was not screened at the Mini Motcham, for the reasons best known to the theatre management and the distributor. Unfortunate that, had it was screened, you'd have missed an opportunity so close. Hope you get a chance in near future.

Dear Sankara,
I feel you too narrowly missed the bus. Had you come in the morning you could have met Sri Ramkumar Sir at Annai Illam. Fans thronged Annai Illam and this year the crowd swelled compared to previous years. And to please the fans, Sri Ramkumar was kind enough to receive them until late afternoon, I believe. Because we were there upto almost 1.30 p.m. and still the visitors could meet and convey him their wishes. Hope you have an opportunity soon.

Regards

Raghavendran

RAGHAVENDRA
7th October 2010, 04:34 PM
Dear friends,

A group of fans from Shanthi Theatre, had published a special issue of Idhaya Raja. Priced at Rs.40.00 the book is a treasure house for fans, containing 16 pages full of color snaps of NT and many stills, copies of old ads, news, etc. (images, news and ads courtesy: Pammalar).

Those who are in need of the issue may contact Mr. R. Kumar (9790921358) or Mr. B. Ganesan (9283217843).

Regards

Raghavendran

Mahesh_K
7th October 2010, 05:28 PM
Dear Balakrishnan,
It was really moving to read your post on your efforts to watch Pudhiya Paravai. I feel you are both fortunate and unfortunate. Fortunate that you did not miss the film, since it was not screened at the Mini Motcham, for the reasons best known to the theatre management and the distributor. Unfortunate that, had it was screened, you'd have missed an opportunity so close. Hope you get a chance in near future.


Sir, I understand that the movie was not screened due to the print quality ( one reel), which was noticed by the theatre operator on Friday morning. There was no time to arrange another print which had to be obtained from lab.

RC
7th October 2010, 05:32 PM
Murali Sir - I thought someone posted it ...

உயர்ந்த மனிதன் விகடன் பொக்கிஷம்
பணக்கார வாலிபன் ராஜு, ஏழைப் பெண் பார்வதியை மணக்கிறான். ஆனால், அவன் தந்தையின் பரம்பரைக் கௌரவமும், திமிரும் அந்தத் தம்பதியைக் கொடூ ரமாகப் பிரிக்கின்றன. காதல் களத்தில் வீரனாகத் திரிந்த ராஜு, வாழ்க்கையில் கோழையாகி, மறுமணம் புரிந்துகொள்கிறான். ஆனாலும், முதல் மனைவியைப் பற்றியே எண்ணி எண்ணிக் குமைந்து மறுகுகிறான்.

இடையே விதி விளையாடி, அவன் முதல் மனைவியின் மகனே அவனிடம் வேலைக்காரனாகப் பணிபுரிய வருகிறான். இறுதியில் மகனும் தந்தையும் ஒன்று சேரு கின்றனர்.

சிவாஜியின் பாத்திர அமைப்பும், நடிப்பும் தனிச்சிறப்புப் பெற்று விளங்குகின்றன. வெறுப்பையும், அன்பையும் சேர்த்துக்காட்டி நடிக்க முடியுமா? சிவாஜியால் முடியும்! உதாரணத்திற்கு ஒன்று... "இந்தக் குடும்பம், எங்க குடும்பத்துக்கிட்டே இருபது வருஷமா அடிமையா இருக்காங்களாம்! பிளடிஃபூல்ஸ்!" என்று சுந்தர்ராஜனைத் திட்டும் காட்சி.

இயற்கையான நடிப்பு என்ற சொற்களெல்லாம் இனி சிவாஜிக் குப் போதாது போலும்! காரசார மான சாப்பாட்டை அவர் சாப் பிடும்போது, நம் கண்களிலும் கண்ணீர் வருகிறது.

சினிமாவில் வரும் இரண்டா வது மனைவி வில்லியாக இருப் பதும், கதாநாயகன் தனது இரண் டாவது மனைவியிடம் வெறுப்புடன் நடந்துகொள்வதும்தான் வழக்கம். இந்தப் படத்தில் அது மாறுபட்டு, இயற்கையாக இருக் கிறது. சிவாஜி-சௌகார் இருவ ரின் கதாபாத்திரங்களும் தனித் தன்மை கொண்டவை. கதையில் வரும் எல்லோருமே நல்லவர் களாக இருக்கிறார்கள். அதுவே ஒரு குறையோ?!

சௌகார் ஜானகி, இப்போது வரும் பல இள நடிகைகளைவிட அழகாகவும், இளமையாகவும் இருக்கிறார்.

நடிப்பில் இரண்டாவது பரிசுக்கு அசோகனும் சௌகார் ஜானகியும் போட்டி போடுகிறார்கள்.

நகைச்சுவைக் காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிறைவைத் தருகின்றன. "இங்கிலீஷில் சாயத்துக்கும் டை, சாவதற்கும் டை என்கிறார்களே!" என்று வி.கே.ராமசாமி அழகாக அலுத்துக் கொள்கிறார்.

'அந்த நாள் ஞாபம் நெஞ்சிலே' என்ற வசன கவிதை புதுமையாக இருந்ததும், ஏனோ ரசிக்கும்படி யாக இல்லை. பின்னணி சப்தம் அதிகமாக இருப்பதுதான் கார ணமோ?

உயர்ந்த மனிதன் உள்ளத்தைக் கவருகிறான்.

rangan_08
7th October 2010, 06:25 PM
'அந்த நாள் ஞாபம் நெஞ்சிலே' என்ற வசன கவிதை புதுமையாக இருந்ததும், ஏனோ ரசிக்கும்படி யாக இல்லை.

One thing which most of the fans, including myself, disagree.

rangan_08
7th October 2010, 06:28 PM
[tscii:678ac64abe]

Tillana Mohanambal
After the film...

Grouch: So, what do you think?
Mrs. Grouch: I like the way they (NT and Padmini) look at each other. Choo Chweet.
Grouch: :rant:

Dear groucho, I just can’t help but invite Mr Senthil (with you kind permission) to leave his comment. Pls pardon me.

Senthil : anney, aanalum unga samsaram unga alavukku illa…


And btw, I was deeply moved after reading your article in grouchy days, commemorating NT’s birth anniversary. ( The feel is genuine and is definitely not an excuse for my insolence, in case if you think so :) ).
[/tscii:678ac64abe]

rangan_08
7th October 2010, 06:32 PM
[tscii:3ed2a4c85d]

Can any other actor even think of pulling it off say atleat for a minute or two? Let it be method acting or non method or whatever jargon you want to put. It is simply an outstanding effort. No two ways about it.



Exactly. It's impossible to slot him into any of these " acting styles ". And, I believe that he himself never bothered about it.

I can quote a number of scenes to justify my statement. Let me start with this…

A couple of days back saw, “ Vidivelli” in Sirippoli, after a long time. There’s a beautiful scene. The hero has committed a misdeed (he steals a neck lace) in the past of which only he is aware of and is worried about it. It is a stigma attached deep inside him and he constantly repents for it. In fact, this feeling forms the crux of the film.

NT comes home in a sort of happy mood and chats with his mother. During their discussion, his mother casually brings up the subject of the neck lace and immediately NT’s demeanour changes dramatically, I mean, there’s a complete mood change in that scene and he pulls it off so well that the audience could easily sense it (Beware !! NT is very contagious) . It all happens in a split second.

The best part is, this great actor does it so naturally, dramatically, methodically or whatever you call it……..just awesome & transcending. And, that’s why I said it is impossible to slot him into any of the acting styles.
[/tscii:3ed2a4c85d]

RAGHAVENDRA
7th October 2010, 07:30 PM
Dear Mohan,
Your analysis of NT's acting is exemplary.
There are many films to point out how his acting is unique. Let me explain one scene from a film, in Tamil.

அவன் தான் மனிதனில் வரும் காட்சி

ஐயா, கப்பல் கவிழ்ந்தது மாதிரி உட்கார்ந்திருக்கீங்களே, இது நடிகர் திலகத்தின் வேலையாளாக வரும் மேஜர்.
ஆமா, உண்மையிலேயே கப்பல் கவிழ்ந்திருச்சு, என்று சொல்கிறார், நடிகர் திலகம்.
அதிர்ச்சியில் உறைகிறார் மேஜர்.

இனி வரும் காட்சியில் தான் நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த நடிப்பு வருகிறது. 175வது படம் என்கிற முத்திரைக்கு முழு தகுதி வழங்கும் காட்சி...

தன்னுடைய நண்பர்கள் ஒவ்வொருவராக தொலைபேசியில் தொடர்பு கொண்டு 20 லட்சம் ரூபாய் உதவி கேட்கிறார் நடிகர் திலகம். யாருமே உதவி செய்யவில்லை, அல்லது உதவ முடியவில்லை.

இந்தக் காட்சியில் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பின் முடிவிலும் நடிகர் திலகத்தின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. இப்பேர்ப்பட்ட கலைஞனை எப்படி இந்தியா மறந்தது என்ற கேள்வி தான் எழுகிறது.

ஆம்.. தன்னுடைய முகத்தில் ஏமாற்றம் வருகிறது. ஆனால் அவருடைய தன்னம்பிக்கை அந்த ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் தைரியத்தைத் தருகிறது. அந்த ஏமாற்றத்தையும் அடுத்த நொடியிலேயே அந்த தைரியத்தையும் ஒரு சேர காண்பித்து அந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் தைரியமிக்க தொழிலதிபராக அந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பு ...

நானும் முரளி சாரும் அந்த ஆண்டவன் கட்டளை படத்தில் அந்த ஓரங்க காட்சியில் அப்படியே பிரமித்து மெய்மறந்தோம் என்பதே உண்மை. இப்படி கிட்டத்தட்ட ஒரு 10 நிமிடத்திற்கு ஒரு நடிகன் தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்து விடுகிறான் என்றால். ..

நாமெல்லாம் அவர் காலத்திலேயே வாழ்ந்தோம் என்பதில் எவ்வளவு இறுமாப்பு ஏற்படுகிறது, எவ்வளவு கர்வம் ஏற்படுகிறது, எவ்வளவு பெருமை ஏற்படுகிறது...

நீயல்லவோ கலைஞன்...

அன்புடன்
ராகவேந்திரன்

KCSHEKAR
7th October 2010, 07:34 PM
Please click the links below for Press News about Nadigarthilagam's 83rd Birthday function held at Trichy on 03-10-2010

http://www.sivajiperavai.com/View_Press.php?id=128

http://www.sivajiperavai.com/View_Press.php?id=130

http://www.sivajiperavai.com/View_Press.php?id=129

Thanks & regards

saradhaa_sn
7th October 2010, 07:51 PM
டியர் ராகவேந்தர் & மோகன்...

அவன்தான் மனிதன் மற்றும் விடிவெள்ளி படத்தில் வரும் குறிப்பிட்ட காட்சியில் நடிகர்திலகத்தின் நடிப்பைப்பற்றி நீங்கள் இருவரும் அலசிய விதம் மிக அருமை. நிச்சயம அவரது முழுத்திறமையை அலசி ஆராய்ந்து கௌரவிக்கத் தவறிவிட்டனர் நம்மவர்கள்.

மம்மூட்டி நடித்த கே.பி.யின் 'அழகன்' படத்தில் ஒரு சிறுவன் அடிக்கடி ஒரு வசனம் சொல்வான்: "பேசாமல் நாம வேற வீட்டுல போய் பொறந்திருக்கலாம்டா".

இந்த வசனம் நடிகர்திலகத்துக்கும் பொருந்துமோ?.

NOV
7th October 2010, 07:55 PM
http://www.youtube.com/watch?v=plF6bOmFxaM&feature=channel

paarththaal paravasam :2thumbsup:

kid-glove
7th October 2010, 07:58 PM
[tscii:9d78ddcd98]

Can any other actor even think of pulling it off say atleat for a minute or two? Let it be method acting or non method or whatever jargon you want to put. It is simply an outstanding effort. No two ways about it.



Exactly. It's impossible to slot him into any of these " acting styles ". And, I believe that he himself never bothered about it.

I can quote a number of scenes to justify my statement. Let me start with this…

A couple of days back saw, “ Vidivelli” in Sirippoli, after a long time. There’s a beautiful scene. The hero has committed a misdeed (he steals a neck lace) in the past of which only he is aware of and is worried about it. It is a stigma attached deep inside him and he constantly repents for it. In fact, this feeling forms the crux of the film.

NT comes home in a sort of happy mood and chats with his mother. During their discussion, his mother casually brings up the subject of the neck lace and immediately NT’s demeanour changes dramatically, I mean, there’s a complete mood change in that scene and he pulls it off so well that the audience could easily sense it (Beware !! NT is very contagious) . It all happens in a split second.

The best part is, this great actor does it so naturally, dramatically, methodically or whatever you call it……..just awesome & transcending. And, that’s why I said it is impossible to slot him into any of the acting styles.
[/tscii:9d78ddcd98]

:thumbsup:

WORD

RAGHAVENDRA
7th October 2010, 08:11 PM
டியர் ராகவேந்தர் & மோகன்...

அவன்தான் மனிதன் மற்றும் விடிவெள்ளி படத்தில் வரும் குறிப்பிட்ட காட்சியில் நடிகர்திலகத்தின் நடிப்பைப்பற்றி நீங்கள் இருவரும் அலசிய விதம் மிக அருமை. நிச்சயம அவரது முழுத்திறமையை அலசி ஆராய்ந்து கௌரவிக்கத் தவறிவிட்டனர் நம்மவர்கள்.

மம்மூட்டி நடித்த கே.பி.யின் 'அழகன்' படத்தில் ஒரு சிறுவன் அடிக்கடி ஒரு வசனம் சொல்வான்: "பேசாமல் நாம வேற வீட்டுல போய் பொறந்திருக்கலாம்டா".

இந்த வசனம் நடிகர்திலகத்துக்கும் பொருந்துமோ?.

சரியாக சொன்னீர்கள். நடராஜ் திரையரங்கில் ஞாயிறு மாலைக் காட்சியில் நடைபெற்ற ஆரவாரங்களின் காட்சித் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு-
http://sivajimoviesinchennai2010.blogspot.com/2010/10/blog-post.html
தங்கள் கருத்துக்களைப் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
7th October 2010, 08:32 PM
இந்தத் திரியின் வேகம் தங்கள் பார்வைக்கு

பாகம் 6
துவங்கிய நாள் - பிப்ரவரி 4, 2010
39 பக்கம் முடிவடைந்த நாள் - ஏப்ரல் 21, 2010
நாட்கள் 77

பாகம் 7
துவங்கிய நாள் - ஆகஸ்ட் 6, 2010
39 பக்கம் முடிவடையக் கூடிய நாள் - அக்டோபர் 7 அல்லது 8, 2010
நாட்கள் 63 அல்லது 64

ராகவேந்திரன்

pammalar
8th October 2010, 03:11 AM
டியர் ராகவேந்திரன் சார்,

"இதயராஜா" இதழ் பற்றி தெரிவித்தமைக்கும், நடராஜ் திரையரங்கில் "ஆண்டவன் கட்டளை" புகைப்படங்களுக்கும் மற்றும் வீடியோவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th October 2010, 03:44 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 146

கே: தமிழ்த் திரையில் இதுவரை எவர் பெரிய சாதனையை செய்திருக்கிறார்? (கே.எல்.கன்னியப்பன், மலேசியா)

ப: சிவாஜி கணேசன். ஒரே படத்தில் ஒன்பது வேஷங்களில் நடித்துக் காட்டியிருக்கிறாரே! பன்னிரண்டு ஆண்டுகளில் கதாநாயகனாக நூறு படங்களில் நடித்து முடித்திருக்கிறாரே!

(ஆதாரம் : பேசும் படம், ஜனவரி 1965)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th October 2010, 03:57 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 147

கே: சிவாஜியிடம் உங்களுக்குப் பிடித்த குணம்? (பி.சிவாஜி பிரியா, போரூர்)

ப: சமீபத்தில் சிவாஜியைச் சந்திக்க அவரது கட்சியைச் சேர்ந்த சிலர் வந்திருந்தார்கள். படப்பிடிப்பில் இருந்த சிவாஜி, "மாலை வீட்டுக்கு வந்து விடுங்கள். இது என் தொழில் நேரம்" என்று சொல்லி அனுப்பி விட்டார். இப்படித் தொழிலை அவர் தெய்வமாக மதிக்கும் குணம் எனக்குப் பிடித்தது.

(ஆதாரம் : பொம்மை, ஏப்ரல் 1980)

அன்புடன்,
பம்மலார்.

groucho070
8th October 2010, 07:03 AM
Joe used to say, paraphrasing, acting, over-acting, under-acting, whatever-acting, NT got them all. No categorisations. No pigeonholing.

Rangan,

Thanks for reading. As for Samsaram :lol:, She was enamoured by the romance, which I think is the point the film trying to make, while we were distracted by the supporting stars antics, the music, the performances overall.

SHIV
8th October 2010, 10:02 AM
Thank you Ragavendar sir for Andavan Kattalai's celebrations snaps and video. It was a fantastic gesture by Nataraj theatre to have replayed "Aaru maname Aaru song" which would have delighted our fans to the maximum.

Another point that i would like to highlight is the review of Antha Naal Gnabagam song"Uyarntha Manithan" in Vikatan.

I think the man who had written about the song is a total "Gnana Sooniyam" in Music. What a great composition that was by Mellisai Mannar with a novel orchestration that mathes our NT;s style and walk!!. It is yet to be matched till date and will not be matched in future also by any Music director. I do not know why no mention was also made about "Naalai Intha Velai Parthu" and Velli Kinnam than".

This type of song review is just a sample as to how MSV was always sidelined by media those days inspite of giving immortal songs which still flows in our ears.


Regards

Shiv.

saradhaa_sn
8th October 2010, 12:29 PM
தங்கச்சுரங்கம் படத்தில் நடிகர்திலகமும் பாரதியும் இணைந்து நடிக்கும் 'சந்தனக்குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது' பாடல் காட்சியோடு சம்மந்தப்பட்ட ஒரு உண்மைச்சம்பவம். கீழேயுள்ள இணைப்பில்.....

http://ungalrasigan.blogspot.com/2010/06/blog-post_17.html

(துப்பறியும் ராஜனின் டூயட் பாடலும்கூட துப்பறியப் பயன்படுகிறது).

abkhlabhi
8th October 2010, 04:56 PM
http://www.asiantribune.com/news/2010/04/19/sunday-celebrity-%E2%80%98ceylon%E2%80%99-chinnaiya%E2%80%94his-look-alike-sivaji-image-dialogue-makes-him-p


http://www.asiantribune.com/news/2010/05/16/sunday-celebrity-%E2%80%98vietnam-veedu%E2%80%99-sundaram%E2%80%99s-thinking-beyond-tomorrow-makes-him-batti

rangan_08
8th October 2010, 06:59 PM
இப்பேர்ப்பட்ட கலைஞனை எப்படி இந்தியா மறந்தது என்ற கேள்வி தான் எழுகிறது.

ஆம்.. தன்னுடைய முகத்தில் ஏமாற்றம் வருகிறது. ஆனால் அவருடைய தன்னம்பிக்கை அந்த ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் தைரியத்தைத் தருகிறது. அந்த ஏமாற்றத்தையும் அடுத்த நொடியிலேயே அந்த தைரியத்தையும் ஒரு சேர காண்பித்து அந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் தைரியமிக்க தொழிலதிபராக அந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பு ...



Another GREAT moment. Excellent sir & thanks for your kind words.

rangan_08
8th October 2010, 07:02 PM
Thanks for the appreciation Saradha madam. Actually, it's been a long time since I last saw "Vidivelli " and it was a real treat to watch NT's performance.

Thilak, thanks for your WORD ! :)

rangan_08
8th October 2010, 07:06 PM
Rangan,

Thanks for reading. As for Samsaram :lol:, She was enamoured by the romance, which I think is the point the film trying to make, while we were distracted by the supporting stars antics, the music, the performances overall.

...adhulayum andha Vadivamba irukkahaley....appappappappappa. :D

rangan_08
8th October 2010, 07:09 PM
Mohan,

Yes, the distributor is planning to release it in Shanthi. The world wide release that I told you is that of Karnan. Gowravam would make rounds in the city.



Noted. Thank you Murali sir.

pammalar
9th October 2010, 03:45 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 148

கே: வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களை இப்போது எடுத்தால் ஓடுமா? (பகதூர், சென்னை)

ப: எடுக்க ஆள் இல்லை...நடிக்கவும் ஆள் இல்லையே!

(ஆதாரம் : ராணி, 10.10.2010) [லேட்டஸ்ட் 'ராணி' இதழ்]

அன்புடன்,
பம்மலார்.

NOV
9th October 2010, 07:52 PM
Photos from Pammalar

[html:123e330b21]
http://farm5.static.flickr.com/4129/5065027400_a5457d2e44_z.jpg[/html:123e330b21] [html:123e330b21]
http://farm5.static.flickr.com/4153/5064413837_5a0d86e3ca_z.jpg[/html:123e330b21]



[html:123e330b21]
http://farm5.static.flickr.com/4111/5064413623_7e125d6dcf_z.jpg[/html:123e330b21] [html:123e330b21]
http://farm5.static.flickr.com/4131/5065026578_6f9c78a41c_z.jpg[/html:123e330b21]

pammalar
10th October 2010, 02:09 PM
Thank you very much, Mr.Nov for publishing the pictures of "Aandavan Kattalai", Sunday [3.10.2010] evening gala at Chennai Nataraj theatre.

Regards,
Pammalar.

tacinema
10th October 2010, 11:40 PM
மதுரை சென்ட்ரல் சினிமா திரையரங்கில், 24.9.2010 வெள்ளி முதல் 30.9.2010 வியாழன் வரை ஒரு வார காலத்திற்கு, தினசரி 4 காட்சிகளாக, 'நசநச' என்று பெய்த மழையையும் மீறி, சக்கை போடு போட்டுள்ள ஸ்டைல் சக்கரவர்த்தியின் "சொர்க்கம்" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்). பழைய பட மறுவெளியீடுகளில் இது மலைக்க வைக்கும் சாதனை.

"சொர்க்க"த்தை திரையிட்டவருக்கு பூலோகத்தில் 'சொர்க்கம்' என்பதனைச் சொல்லவும் வேண்டுமோ!

பெருமிதத்துடன்,
பம்மலார்.

Pammalar / Murali,

Rs. 50K collection - nothing surprising, considering sorgam is liked by everyone, including non-NT fans. Have sunday evening show happenings? especially evergreen style chakravarthy's pon magal song happenings?

Uththama puthiran, raja, vasantha maaligai, thangapathakkam, pattikada pattanama, karnan, tiruvilaiyadal, etc. release pannungappa!! yaar vasool chakravarthy endru puriyum!!

Thanks

J.Radhakrishnan
10th October 2010, 11:59 PM
[size=9]Pammalar / Murali,

Rs. 50K collection - nothing surprising, considering sorgam is liked by everyone, including non-NT fans. Have sunday evening show happenings? especially evergreen style chakravarthy's pon magal song happenings?

Uththama puthiran, raja, vasantha maaligai, thangapathakkam, pattikada pattanama, karnan, tiruvilaiyadal, etc. release pannungappa!! yaar vasool chakravarthy endru puriyum!!
[/s

Sir,

I am accept your opinion
:D :D :D :D

J.Radhakrishnan
11th October 2010, 12:11 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 148

கே: வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களை இப்போது எடுத்தால் ஓடுமா? (பகதூர், சென்னை)

ப: எடுக்க ஆள் இல்லை...நடிக்கவும் ஆள் இல்லையே!

(ஆதாரம் : ராணி, 10.10.2010) [லேட்டஸ்ட் 'ராணி' இதழ்]

டியர் பம்மலார் சார்,

படம் எடுக்ககூட யாரேனும் முயற்சிக்கலாம், ஆனால் நடிப்பதற்கு NT அவர்கள் தான் மீண்டும் பிறந்து வரவேண்டும்

Murali Srinivas
11th October 2010, 12:11 AM
ராமன் எத்தனை ராமனடி பார்த்தேன். இதன் விமர்சனம் நமது திரியில் சென்ற வருடம் சாரதா எழுதியிருந்தார். படத்தின் ஒரு சின்ன விஷயத்தை கூட விட்டு விடாமல் மிக அழகாக பதிவு செய்திருந்தார். நானும் அந்த படம் வெளிவந்த போது நடந்த பல நிகழ்வுகளை பற்றி எழுதியிருந்தேன்.

இப்போது பார்க்கும் போது [எப்போது பார்த்தாலும்] பிரமிக்கும் ஒரு விஷயம் நடிகர் திலகம் சாப்பாட்டு ராமனாக வரும் போது இமேஜ் பார்க்காமல் நடித்த சில காட்சிகள். தெரு பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கும் போது சிறுவர்களுடன் சேர்ந்து போட்டி போட்டுக் கொண்டு சிதறு தேங்காயை பொறுக்குவது, சிறுவர்கள் இவரை வாடா போடா என்றழைப்பது, கரும்பை வெட்டி தரும் சிறுவனை ஏமாற்றி விட்டு தானே எல்லா கரும்பையும் தின்பது, கே.ஆர்.விஜயாவின் காலில் விழப் போவது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அது போல் பெண் கேட்டு போகும் காட்சியில் அடி வாங்குவாரே, உண்மையில் இரண்டு மூன்று தடவை நம்பியார் சிவாஜியின் முகத்தில் காலால் எட்டி உதைப்பார். செந்தாமரை சிவாஜியின் நெஞ்சில் தனது பூட்ஸ் காலை வைத்து அழுத்துவார். இரண்டு படம் நடித்த ஹீரோ கூட இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார். ஆனால் நடிகர் திலகம் என்றைக்கு அதெல்லாம் பார்த்திருக்கிறார்?

முதல் பகுதியில் வரும் அப்பாவி பின் பகுதியில் உலகம் தெரிந்த ஒரு நடிகனாக மாறும் போது என்ன வித்தியாசம் காட்டுகிறார். சில சமயம் அவரின் profile போஸிலியே எல்லாவற்றையும் சொல்லி விடுவார். மகளுக்கு கல்யாணம் என்று கே.ஆர்.விஜயாவை அழைத்து போகும் காட்சி. தான் யாரென்று வெளிப்படுத்தக் கூடாது என்று condition போடும் விஜயாவை அவர் பார்க்கும் ஒரு profile ஷாட். அந்த இடது கண்ணும் கன்னமும் மட்டுமே பார்வையாளனுக்கு தெரியும். ஆனால் உண்மையை சொல்ல விட மாட்டேன் என்கிறாளே என்ற உணர்வையும், சரி உன் இஷ்டப்படியே ஆகட்டும் என்ற முடிவையும் அந்த ஷாட்டிலே வசனமே இல்லாமல் வெளிப்படுத்துவது நடிகர் திலகத்திற்கு மட்டுமே முடிந்த ஒன்று.

படத்தில் நடிகர் திலகத்திற்கு அடுத்தபடியாக மனதை கவர்பவர் ஆயா எஸ்.என்.லட்சுமி. பிரமாதமாக பண்ணியிருப்பார். குறிப்பாக அவர் பேசும் இங்கிலீஷ் வசனங்கள் வரும் காட்சிகள் எல்லாமே ரசிக்கும்படியாக இருக்கும்.

மராட்டிய சிவாஜி பற்றி சொல்லவே வேண்டாம். தனி இசைத்தட்டாக வந்து பட்டி தொட்டியெல்லாம் வீர முழக்கமிட்ட வசனம். கண்ணதாசன் பேனா துள்ளி விளையாடியிருக்கும்.

சேர சோழ பாண்டியர்கள் ஆண்ட தமிழ் நாடு பாடல் - வேலூர் பெண்கள் சிறையில் பாடும் பாடல். 1970 ஆகஸ்ட்-ல் வந்த இந்த படத்திற்கு அன்று பொருத்தமாக இருந்த பல மாநில பிரச்சனைகள் இன்றும் 40 வருடங்கள் கடந்த பிறகும் அப்படியே இருப்பதை- தெலுங்கானா, சிவசேனா, பஞ்சாப்-ஹரியானா, சுதந்திர காஷ்மீர்- பார்க்கும் போது வருத்தமே மேலோங்குகிறது.

நடிகர் திலகம் சில பல காட்சிகளில் சென்னையின் தெருக்களில் நடந்தும், ஓடியும், வண்டி இழுத்தும் நடித்திருப்பார். நடிகர் திலகத்தின் வீடாக காண்பிக்கப்படுவது சென்னை தி.நகர் ராமன் தெருவில் அமைந்துள்ள கே.ஆர்.விஜயாவின் வீடாகும். முதலில் ஸ்கூல் பஸ் டிரைவராக முத்துராமன் வருவார். ஒரு காட்சியில் அவர் என்று நினைத்து நடிகர் திலகம் பேச செல்ல, திரும்பும் டிரைவர் புதியவர். அந்த காட்சியில் டிரைவராக நடித்தவர் யார் தெரியுமா? கவுண்டமணி.

நடிகர் திலகம் கே.ஆர்.விஜயாவை மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் போது பெரிய பூக்கள் போட்ட ஒரு half கை ஷர்ட் அணிந்திருப்பார். அது அந்நாளில் பெரிய பிரசித்தி பெற்றது.

முதல் காட்சி- நடிகர் திலகத்தின் அறிமுக காட்சி. அதில் "போட்டின்னு வந்துட்டா சும்மா விட மாட்டேன். ஜெயிச்சு காட்டறேன்" என்பார். தியேட்டர் அலறும்.

இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, பிரெஸ்டிஜ் பத்மநாபனாகவும், எதிரொலி நீதிபதியாகவும், சொர்க்கம் பணக்காரனாகவும்,எங்கிருந்தோ வந்தாள் பைத்தியக்காரனாகவும், பாதுகாப்பு படகுகாரனாகவும், இரு துருவம், தங்கைக்காக, அருணோதயம், சுமதி என் சுந்தரி, பிராப்தம், சவாலே சமாளி கதாப்பாத்திரங்களாகவும் வாழ்ந்துக் கொண்டிருந்தார் நடிகர் திலகம் என்று சொன்னால் அதை விட அந்த நடிகனுக்கு சிறப்பு வேறு என்ன இருக்கிறது?

அன்புடன்

pammalar
11th October 2010, 03:38 AM
டியர் முரளி சார்,

"ராமன் எத்தனை ராமனடி" திரைக்காவியம் பற்றிய பதிவு அருமை. இப்பதிவில் ஒரு மினி திறனாய்வையே தந்து விட்டீர்கள்! பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்!

டியர் ஜேயார் சார்,

தங்களின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.

டியர் டாக்,

'வசூல் சக்கரவர்த்தி' என்றென்றும் நடிகர் திலகமே என்பதற்கு இன்னொரு சிறந்த சான்று, சென்ற வாரம், சென்னை நடராஜ் அரங்கில், ஒரு நாள் படமாக வெளியான "ஆண்டவன் கட்டளை". 3.10.2010 ஞாயிறன்று, 3 காட்சிகளில், "ஆண்டவன் கட்டளை" அள்ளி அளித்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.16,000/- (ரூபாய் பதினாறாயிரம்).

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th October 2010, 03:53 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 149

கே: நடிகர் திலகத்தை கன்னையனாகவும் (பாகப்பிரிவினை), ரங்கனாகவும் (படிக்காத மேதை), ராஜூவாகவும் (பாசமலர்), வ.உ.சிதம்பரனாராகவும் (கப்பலோட்டிய தமிழன்) இனி காண முடியாதா? (ம.தங்கராஜ், திண்டுக்கல் - 3)

ப: இந்தப் படங்கள் மீண்டும் மீண்டும் திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடி வருகின்றனவே!

(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1974)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th October 2010, 04:02 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 150

கே: "சவாலே சமாளி" வெற்றிப் படமா? (எஸ்.சந்தானம், டேராடூன்)

ப: ஆமாம், வெற்றிகரமாக நடைபெறுகிறது.

(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1971)

அன்புடன்,
பம்மலார்.

tacinema
11th October 2010, 06:27 AM
டியர் முரளி சார்,

"ராமன் எத்தனை ராமனடி" திரைக்காவியம் பற்றிய பதிவு அருமை. இப்பதிவில் ஒரு மினி திறனாய்வையே தந்து விட்டீர்கள்! பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்!

டியர் ஜேயார் சார்,

தங்களின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.

டியர் டாக்,

'வசூல் சக்கரவர்த்தி' என்றென்றும் நடிகர் திலகமே என்பதற்கு இன்னொரு சிறந்த சான்று, சென்ற வாரம், சென்னை நடராஜ் அரங்கில், ஒரு நாள் படமாக வெளியான "ஆண்டவன் கட்டளை". 3.10.2010 ஞாயிறன்று, 3 காட்சிகளில், "ஆண்டவன் கட்டளை" அள்ளி அளித்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.16,000/- (ரூபாய் பதினாறாயிரம்).

அன்புடன்,
பம்மலார்.

Dear pammalar,

quite impressive BO collection for a b/w movie in just 3 shows. சண்டை காட்சி இல்லாமல், சுய புகழ் பாடாமல், bigger than life இமேஜ் heroism செய்யாமல் ஹிமாலய வெற்றி பெற நம் NT-yaal மட்டும் தான் பெற முடியும்.

Andavan Kattalai - a beautiful movie with NT-Devika combination.

Regards

tacinema
11th October 2010, 06:30 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 150

கே: "சவாலே சமாளி" வெற்றிப் படமா? (எஸ்.சந்தானம், டேராடூன்)

ப: ஆமாம், வெற்றிகரமாக நடைபெறுகிறது.

(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1971)

அன்புடன்,
பம்மலார்.

Dear Pammalar,

That was an absurd question - the whole world knows SS was a super hit movie.

A request: Please refrain from posting such questions.

Regards

groucho070
11th October 2010, 07:47 AM
Chanakkya Chandragupta (1977)

:lol: You guys are wondering, "WHAT??".

Was casually channel surfing when encountered this Telugu "historical" movie. Checked synopsis, and said starring Nageshwara Rao, NT Rama Rao, Jaya Pradha, S. Varalakshmi and Sivaji Ganesan.


And I went, :shock: wait, what?

So, I waited and waited, finally our man came and he was Alexander The Great. Is there no end to the great historical roles the man plays? Seated on the horse in the first scene, he started emoting when the bummer set in. Yes, he was dubbed and the dude who dubbed him seemed to have massive Sinusitis issue. Anyway, since there was Malay subtitles, I just muted and imagined NT's voice.

I had to go out in between and managed to catch the last part, where our Alexander is entertained by gals doing various Indian-related dances and our hero NTR comes barging in exchanging couple of heated words and then fight mano-o-mano with Alexander.

Thankfully no blood was spilled, and I guess this film is a bit like Rajaraja Cholan, more on drama and less on battles. All in all, NT did a fine job and knew his place by not attempting to overshadow the two leads (Nageshwararao played NTR's guru, emphasis of this film being guru-sisyhan relationship).

Ah, my first non-Tamizh NT film. Interesting.

groucho070
11th October 2010, 11:29 AM
Link courtesy of Joe:
http://telugucineblitz.blogspot.com/2010/08/chanakya-chandragupta-1977.html

saradhaa_sn
11th October 2010, 11:51 AM
ராமன் எத்தனை ராமனடி பார்த்தேன். இதன் விமர்சனம் நமது திரியில் சென்ற வருடம் சாரதா எழுதியிருந்தார். படத்தின் ஒரு சின்ன விஷயத்தை கூட விட்டு விடாமல் மிக அழகாக பதிவு செய்திருந்தார். நானும் அந்த படம் வெளிவந்த போது நடந்த பல நிகழ்வுகளை பற்றி எழுதியிருந்தேன்.

இப்போது பார்க்கும் போது [எப்போது பார்த்தாலும்] பிரமிக்கும் ஒரு விஷயம் நடிகர் திலகம் சாப்பாட்டு ராமனாக வரும் போது இமேஜ் பார்க்காமல் நடித்த சில காட்சிகள். தெரு பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கும் போது சிறுவர்களுடன் சேர்ந்து போட்டி போட்டுக் கொண்டு சிதறு தேங்காயை பொறுக்குவது, சிறுவர்கள் இவரை வாடா போடா என்றழைப்பது, கரும்பை வெட்டி தரும் சிறுவனை ஏமாற்றி விட்டு தானே எல்லா கரும்பையும் தின்பது, கே.ஆர்.விஜயாவின் காலில் விழப் போவது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
டியர் முரளி,

ராமன் எத்தனை ராமனடி படத்தைப்பற்றிய (இதுவரை பதியப்படாத) விவரங்கள் அருமை. அப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் இதுபோல புதிய புதிய கோணங்களில் சிந்தனை பாய்ந்துகொண்டேயிருக்கும்.


படத்தில் நடிகர் திலகத்திற்கு அடுத்தபடியாக மனதை கவர்பவர் ஆயா எஸ்.என்.லட்சுமி. பிரமாதமாக பண்ணியிருப்பார். குறிப்பாக அவர் பேசும் இங்கிலீஷ் வசனங்கள் வரும் காட்சிகள் எல்லாமே ரசிக்கும்படியாக இருக்கும்.
இவரைப்போலவே நம்மைக்கவரும் இன்னொருவர், மறைந்த நடிகர் பக்கோடா காதர். பெரும்பாலும் மாதவன் இயக்கிய எல்லாப்படங்களிலும் இருப்பார். 'டேய் சாப்பாட்டு ராமா' என்று வசனம் பேசிவிட்டு, ஷாட் முடிந்ததும் நடிகர்திலகத்திடம் போய் 'அண்ணே உங்களை இந்த மாதிரி கூப்பிட மனசுக்கு கூச்சமா இருக்குண்ணே' என்பாராம். அதற்கு நடிகர்திலகம் 'இதுக்கெல்லாம் நீ கூச்சப்பட்டா உன்னை நடிகனே இல்லேன்னுடுவாங்க. அதுனால சும்மா பேசு' என்பாராம். ('இந்தியன் மூவி நியூஸ்' (சிங்கப்பூர்) மாத இதழில் பக்கோடா காதரின் 'இமயங்களுடன் என் அனுபவங்கள்' கட்டுரை).


நடிகர் திலகம் கே.ஆர்.விஜயாவை மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் போது பெரிய பூக்கள் போட்ட ஒரு half கை ஷர்ட் அணிந்திருப்பார். அது அந்நாளில் பெரிய பிரசித்தி பெற்றது.
இந்தக்காட்சியில் அவர் கே.ஆர்.விஜயாவின் குடிசையில் பேசும் காட்சி படத்தில் Highlight-களில் ஒன்று (படமே ஒரு Highlight-தானே என்கிறீர்களா?. அதுவும் சரிதான்). அதிலும் குறிப்பாக "எங்கிருந்தோ வந்த ஒரு புயல் காற்று அந்த மலரை அதளபாதாளத்தில் உள்ள முள் புதரில் போட்டுவிட்டது" என்ற வசனத்தின் போது, அவர் கைகளின் ஆக்ஷன்.


நடிகர் திலகத்தின் வீடாக காண்பிக்கப்படுவது சென்னை தி.நகர் ராமன் தெருவில் அமைந்துள்ள கே.ஆர்.விஜயாவின் வீடாகும்.
அப்படியென்றால், ஒரு காட்சியில் 'நாகரீக' எஸ்.என்.லட்சுமியம்மா, தனது கோல்டுபிரேம் கண்ணாடியைத்தூக்கி விட்டுக்கொண்டு நடிகர்திலகத்தோடு பேசும் காட்சியில், அவருக்குப்பின்னால் ஒரு காலரியில், திரைப்படங்களின் 100-வது நாள் கேடயங்கள் இடம்பெற்றிருக்குமே, அதுவும் கே.ஆர்.விஜயா வீட்டில் உள்ளவைதானா?.


மராட்டிய சிவாஜி பற்றி சொல்லவே வேண்டாம். தனி இசைத்தட்டாக வந்து பட்டி தொட்டியெல்லாம் வீர முழக்கமிட்ட வசனம். கண்ணதாசன் பேனா துள்ளி விளையாடியிருக்கும்.
"தாத்தாரியர் தந்த புரவியில் அமர்ந்து ஆர்த்தெழுந்த சிவாஜியைக்கண்டு நாட்டுக்குரிய நல்லவனென்றும், போர் பாட்டுக்குரிய மன்னவனென்றும் ஆரத்தி எடுத்த மக்கள் (எனது உயிரினும் மேலான ரசிகர்கள்) எங்கே, ஓரத்தில் நின்று 'வெற்றிவரட்டும், அதன் சாரத்தை மட்டும் அனுபவிப்போம்' என்ற இந்த ஆணவக்காரர்கள் (என்னை வைத்து பலனடைபவர்கள்) எங்கே"

"எவனோ வந்தவன் (??) சொன்ன வாய்ப்பறை கேட்டு நொந்துபோக நான் நோயாளி அல்ல. உறையை விட்டு வாளையெடுத்த ஒவ்வொரு கணமும் எங்கே பகைவர், எங்கே பகைவர் என்று வெறிகொண்டு ஓடினேன், பகைவரைத்தேடினேன், வாள்கொண்டு சாடினேன், வெற்றியை நாடினேன். படைகொண்டு பகைவெல்ல மட்டும் சிவாஜி வேண்டுமாம். ஆனால் முடிசூட்டிக்கொள்ள மட்டும் முடியாதாம் (நெத்தியடி)"

"கொட்டிய முரசும் கூவிய படையும் எட்டியவரையில் எழுந்து நடந்து, கோட்டை மதிலைச்சுற்றி வளைத்து 'வாழ்க சிவாஜி வாழ்க' என்று முழங்கியபோது 'ஓகோகோ' என்று எதிரொலித்ததே இந்தக்கோட்டைதான்"

"ஆடுவோர் ஆட்டமும் பாடுவோர் பாட்டுமாய் அந்நியர் (??) களித்திருக்க, யாரது மண்ணிலே யாரது நாடகம் பார்ப்போம் என்று நான் படையெடுக்க, 'என்னடா முடியும் உன்னால்?' என்று என் எதிரிகள் கொக்கரிக்க, 'இதுவும் முடியும் இன்னன்மும் முடியும்' என்று நான் வாளெடுக்க......

saradhaa_sn
11th October 2010, 12:18 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 150

கே: "சவாலே சமாளி" வெற்றிப் படமா? (எஸ்.சந்தானம், டேராடூன்)

ப: ஆமாம், வெற்றிகரமாக நடைபெறுகிறது.

(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1971)

அன்புடன்,
பம்மலார்.

Dear Pammalar,

That was an absurd question - the whole world knows SS was a super hit movie.

A request: Please refrain from posting such questions.
Regards
டியர் tac..

'சவாலே சமாளி' தமிழகத்தில் மட்டுமே வெற்றிகரமாக ஏழு அரங்குகளில் 100 நாட்களைக்கடந்து ஓடியது என்பது தெரிந்ததுதான். (இலங்கையில் ஓடிய கணக்கு தனி).

1971 ஜூலை 3 அன்று சவாலே சமாளி வெளியானது. பம்மலார் மேற்கோள் காட்டியிருக்கும் 1971-அக்டோபர் மாத பேசும் படம், செப்டம்பர் மாதமே அச்சில் தயாராகிக்கொண்டிருக்கும்போது, சவாலே சமாளி படம் 70 அல்லது 75 நாட்களைக்கடந்து ஓடிக்கொண்டு இருந்திருக்கும். அதனாலேயே பேசும் படத்தில் அப்படி பதில் சொல்லப்பட்டுள்ளது.

SHIV
11th October 2010, 03:30 PM
Dear Mr.Murali Srinivas

Thanks for sharing the perception of how NT acts without ego for the sake of character and story.

In the above lines, i recollect a similiar incident narrated by actor sivakumar in TV some months back.

It is the scene where NT tries to remove the small ring (Kazhaiyani) from sivakumar's leg finger in "Thirumal Perumai".

This scene was shot near an old temple at Chingelput. The whole area was an open ground with thorns, bushes and grass and it served as an "Open Toilet" to the village people.

Noticing the condition of the ground NT had said to sivakumar" Goundere, intha shotla naan enna pannaporennu unakku theriyum, athanale un kalai konjam suthamma vechikoppa".

When the camera started rolling,after the dialogues, without any hesitation or fuss, NT had knelt down and started trying to remove the ring from sivakumar's leg finger the scene was okayed in a single shot!!!.

Sivakumar became emotional while narrating this incident. He said"NT was the ultimate star and I was the junior most artist, inspite of all this, without any ego or fuss, NT enacted the scene with all dedication. Had this been other actors, they would have simply refused this scene quoting the site location and star status".

Do we need more proof of NTs dedication.

Regards

Shiv

SHIV
11th October 2010, 04:09 PM
Very sorry. The most important point as per the sivakumar's narration was, In that scene, NT had to use his mouth to remove the ring from sivakumar's leg finger which he did without any hesitation or fussand unmindful of the fact of the ground condition"

Shiv.

SHIV
11th October 2010, 04:10 PM
Very sorry. The most important point as per the sivakumar's narration was, In that scene, NT had to use his mouth to remove the ring from sivakumar's leg finger which he did without any hesitation or fussand unmindful of the fact of the ground condition"

Shiv.

KCSHEKAR
11th October 2010, 04:46 PM
திரு.முரளி, சாரதா மேடம் ஆகியோரின் ராமன் எத்தனை ராமனடி பதிவுகள் அருமை. டியர் பம்மலார் புள்ளி விபரம் மற்றும் பொக்கிஷப் பதிவுகள் பணி தொடரட்டும்.

RAGHAVENDRA
11th October 2010, 06:57 PM
ரசிகர்களுக்கோர் நற்செய்தி

நடிகர் திலகத்தின் உன்னத திரைக்காவியமான இருவர்உள்ளம் சிம்போனி நிறுவனத்தால் டி.வி.டி. வடிவில் வெளியிடப் பட்டுள்ளது. விலை ரூ.40.00. தங்க பதுமை போல் இதுவும் மிக வேகமாக விற்று விடக்கூடிய வாய்ப்புகள் உள்ளதால், பிரதிக்கு முந்துவது நன்று.

ராகவேந்திரன்

Murali Srinivas
11th October 2010, 10:53 PM
Swami, tac, Saradha, Shiv and Chandrasekar

Thank you so much.

Special thanks to Radhakrishnan and Gopalakrishnan who had specially called and congratulated me over the phone.

Rakesh,

Good to see a review on Chankya Chandragupta, the first Cinemascope film of Telugu cinema. I think our bala [abkhlabhi] would be able to throw more light on the movie.

Thanks for the info on Iruvar Ullam DVD, Raghavendran Sir.

Regards

Murali Srinivas
11th October 2010, 11:02 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 150

கே: "சவாலே சமாளி" வெற்றிப் படமா? (எஸ்.சந்தானம், டேராடூன்)

ப: ஆமாம், வெற்றிகரமாக நடைபெறுகிறது.

(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1971)

அன்புடன்,
பம்மலார்.

Dear Pammalar,

That was an absurd question - the whole world knows SS was a super hit movie.



A request: Please refrain from posting such questions.

Regards

tac,

You know why Swami posted this? Did you notice the number in the heading? Does it ring a bell? Precisely that was the reason the question was posted.

Moreover as Saradha had pointed out the question was asked in August end or September start for it to get published in Pesum Padam October issue. Moreover see the place. The person is in Dehradun - now in Uttaranchal. Unlike present day, hardly there were any ways of communicating other than by post and information flow was few and far in between.

The person happened to be the President of Sivaji Fans Association, Dehradun at that point of time and out of sheer anxiety whether the film is doing well, had asked this question.

Regards

RAGHAVENDRA
11th October 2010, 11:28 PM
சகோதரி கிரிஜா அவர்கள் தரவேற்றியுள்ள வீடியோக்கள் - புதிய பறவை சாந்தி திரையரங்க கொண்டாட்டங்கள்

http://www.youtube.com/watch?v=ajgfdLFtKrE

http://www.youtube.com/watch?v=cB2yW9EGGI8

http://www.youtube.com/watch?v=nfnqLpOjH8Q

http://www.youtube.com/watch?v=oGbvXDRRGzU

நன்றி, கிரிஜா அவர்களுக்கு

ராகவேந்திரன்

goldstar
13th October 2010, 06:55 AM
Thanks Raghavendra for wonderfull "PudhiyaParavai" videos. Videos are very clear and its in HD. Fans had their day on Sunday.

Cheers,
Sathish

abkhlabhi
13th October 2010, 10:12 AM
Special appearence (not guest appearnce) as Alexander The Great in CC. This movie run 50 days in Movieland theatre, banglaore . There was a huge cutouts with big garlands of Three legends in front of the theatre. Run more than 100 days in AP. Some other actor dubbed for NT. In fact, some well known actor from telugu industry was supposed to act in this role. Due to some problems, and also fearing he may not be noticed by the fans when two great legends also there. The film was produced and directed by none other than NTR. When he requested our NT for Alexendar role, as a person of "NEVER SAY NO", he accepted the role without taking any reumuneration - since NT wants to be part of with the Two Great Legends of Telugu FI.


was not known telugu when watched this movie 33 years back. When saw huge cutout of NT, went and saw though didn't understand the language.

abkhlabhi
13th October 2010, 01:29 PM
Mr.Saikuamr - a telugu-kannada actor is a great fan of NT. In his realty show WOW in ETV, he often mentioned and never miss to praise NT whenver opportunity comes during show. In the recent episode, a month back or so, he asked some questions from Devar Magan (telugu version) to the participant. One ques. was who is acting Kamal father in that movie. (since this is a dubbing movie, viwers are very less in seeing in theatre) When participant was not given correct answer, Mr.Sai Kumar answered that Sivaji Ganesan is the correct answer. Further he said - to tell about SG, he has acted in "SMALL ROLES AS HERO" more than 280 films and got many INTERNATIONAL AWARDS, except Our Govt. award. Nenna, Munna uuchina actors (yesterday, day before yesterday) are getting awards. Still not known why he has not got. Further he said that some one come forward to do research why he has not got award and alteast the researcher try to get award from our Govt.

sankara70
13th October 2010, 03:27 PM
Gud news that we will have Iruvar Ullam DVD

I have a copy which is not clear

Also I looked for gud version of Karnan

I could not find in Chennai

sankara70
13th October 2010, 03:28 PM
Thanks Ms Girija

for Puthiya Paravai videos

SHIV
13th October 2010, 04:35 PM
I also heard that Saikumar had taken the sandals of NT in reverence during his visit to Annai Illam .

Regards

Shiv.

RAGHAVENDRA
14th October 2010, 03:32 PM
A tribute to Nadigar Thilagam's memory in the epaper of "Makkal Osai"

view here (http://65.175.77.34/makkalosai/epaperhome.aspx?issue=2172010)

groucho070
14th October 2010, 03:38 PM
Thanks for additional info on CC, Murali-sar and abkhlabhi. :D

KCSHEKAR
15th October 2010, 12:40 PM
for News,

Please click the links below:

http://www.sivajiperavai.com/View_Press.php?id=131

http://www.sivajiperavai.com/View_Press.php?id=132

Mahesh_K
15th October 2010, 07:27 PM
சிரிப்பொலி சேனலில் எதிரொலி ( 14.10.2010)

சூழ்நிலையால் தவறு செய்யும் நல்ல மனிதனின் வாழ்க்கையையும், மனப்போராட்டங்களையும் இவ்வளவு இயல்பாக சித்தரிக்கும் படம் தமிழில் நான் பார்த்ததில்லை.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தவிர்க்க முடியாமல் தான் பொய் சொல்லும்போது ஏற்படும் மனத்தவிப்பை பல காட்சிகளில் அப்படியே N.T. பிரதிபலிக்கும் போது அவர்கள் தங்களையே காண்பார்கள்.

தில்லானா மோகனாம்பாள், மோட்டார் சுந்தரம் பிள்ளை வரிசையில், படத்தில் பாடல்கள் உண்டு. ஆனால் ஒன்று கூட Hero வுக்கு இல்லை. முதல் வரிசை நடிகர் எவரும் என்றும் செய்யத் துணியாத பெருந்தன்மையான செயல் இது.

கலையை உண்மையாக நேசிக்கும் ஈகோ இல்லாத உண்மை நடிகன் ஒருவ்னால் மட்டுமே முடியும். ஆம்... NT யால் மட்டுமே முடியும் :clap: :clap:

சிக்கலான கதையை ரசிக்கும்படி ப்டமாக்கிய K.B. யும், N.T. க்கு ஈடு கொடுத்த K.R. விஜயாவும் பாரட்டுக்குரியவர்கள்.


இவ்வளவு நல்ல படம் ஓடவில்லை என்பது குறித்த வருத்தம் எனக்கு எப்போதுமே உண்டு.

Jeev
16th October 2010, 07:05 AM
Dear Sivaji Fans,

Here is the link to watch "Praptham' on line.

http://www.tamilflix.net/2010/10/13/praptham-tamil-movie-watch-online/

Enjoy.

RC
17th October 2010, 10:44 PM
I just happened to bump into this interview. Not sure someone has provided a link to the radio interview with Abdul Hameed.

Some very interesting questions and answers...

http://www.youtube.com/watch?v=Xi-dILr69Ww&feature=related

http://www.youtube.com/watch?v=c8xZ1n3eLxI&feature=related

RAGHAVENDRA
17th October 2010, 11:16 PM
Dear RC,
The Radio interview given by NT to Abdul Hameed has been hosted by Hameed himself in his website and a link has been given in our website, www.nadigarthilagam.com, for around 2.5 years now.

Raghavendran

disk.box
17th October 2010, 11:34 PM
மிக அருமையான நேர்காணல். :thumbsup:

சுட்டிகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி மதிப்பிற்குரிய ஆர்ஸி அவர்களே! :)

groucho070
18th October 2010, 07:08 AM
Uttaman

My feelings about it changed over the time, from really disliking it those days to watchable now. My notes:

1. K. Balaji, no thanks to typecasting himself as bad guy in his own films, still looked dishonest right at the end...where I believe they cut the part, "Okay, I was kidding. Radha you marry me, guys kill Gopi (NT)". Maybe not :?

2. The kid, mercifully, was not annoying that must have been a tough thing to do. Maybe he (she?) had a lesson with Kamal. One too many "Run, forrest, run" scenes.

3. KVM was so and so here, probably pressured to copy one of the Hindi original. Poor Mama. Other songs are okay, but not great.

4. NT gave his all, and that's what he can do with poor writing. Though, I took note of one scene where NT was NT. It was him meeting his ex-lover, and her father, after a long time. While Manjula and VKR was giving the off-the-grocery-store " :shock:" expression, he gave a slight register of shock, then a realisation that things were sour in the first place, and brief sadness before recovering. All these in two seconds!! And when seeing VKR, same but with anger. Also in very short time. Nuance-na ithutaan nuance. It maybe a mediocre film, but nobody can prevent him from giving his best.

5. Like I said, overall a mediocre film that could be intolerable if someone else played the lead.

Mahesh_K
18th October 2010, 03:27 PM
Uttaman

My feelings about it changed over the time, from really disliking it those days to watchable now. My notes:

1. K. Balaji, no thanks to typecasting himself as bad guy in his own films, still looked dishonest right at the end...where I believe they cut the part, "Okay, I was kidding. Radha you marry me, guys kill Gopi (NT)". Maybe not :?

2. The kid, mercifully, was not annoying that must have been a tough thing to do. Maybe he (she?) had a lesson with Kamal. One too many "Run, forrest, run" scenes.

3. KVM was so and so here, probably pressured to copy one of the Hindi original. Poor Mama. Other songs are okay, but not great.

4. NT gave his all, and that's what he can do with poor writing. Though, I took note of one scene where NT was NT. It was him meeting his ex-lover, and her father, after a long time. While Manjula and VKR was giving the off-the-grocery-store " :shock:" expression, he gave a slight register of shock, then a realisation that things were sour in the first place, and brief sadness before recovering. All these in two seconds!! And when seeing VKR, same but with anger. Also in very short time. Nuance-na ithutaan nuance. It maybe a mediocre film, but nobody can prevent him from giving his best.

5. Like I said, overall a mediocre film that could be intolerable if someone else played the lead.

Haven't seen the movie for a looooong time, but remember having liked the movie as a kid ( like every single NT movie, I watched at that time :) ). The film used to do well during subsequent releases in my native place in the 80s and 90s.

To be fair to 'KVM Mama', the movie had few hit songs (with telugu flavour ), like previous Engal Thanga Raja from same director - B.V. Rajendra prasad - father of Telugu hero Jagapathy Babu.
Now I badly want to see the movie again, to take a glimpse of Prabhu' 1st on screen appearance. No luck yet.

groucho070
18th October 2010, 03:35 PM
Now I badly want to see the movie again, to take a glimpse of Prabhu' 1st on screen appearance. No luck yet.But when was this. I too remembered mentioning in this thread, and waited and waited. I started watching only in the middle of Padagu Padagu song :(

RAGHAVENDRA
19th October 2010, 08:28 AM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 82வது பிறந்த நாள் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கில் 01.10.2010 அன்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சியினைப் பற்றி நமது முரளி சார் அவர்கள் இத்திரியில் விரிவாக எழுதியுள்ளார்கள். அந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மாண்புமிகு ஜி.கே. வாசன் அவர்களும் இளைய திலகம் பிரபு கணேசன் அவர்களும் ஆற்றிய உரை யூட்யூப் இணையதளத்தில் பார்வைக்கு தரவேற்றப் பட்டுள்ளது. இவற்றைப் பற்றிய தங்கள் கருத்துக்க்கள் வரவேற்கப் படுகிறது.

திரு ஜி.கே. வாசன் அவர்கள் உரை
http://www.youtube.com/watch?v=_7Msa-D8YNc

திரு பிரபு கணேசன் அவர்கள் உரை
http://www.youtube.com/watch?v=kqwHetbsT0k

அன்புடன்
ராகவேந்திரன்

Mahesh_K
19th October 2010, 11:17 AM
Now I badly want to see the movie again, to take a glimpse of Prabhu' 1st on screen appearance. No luck yet.But when was this. :(

I heard that it would be on 2 occassions- In the middle of padagu padagu song and also during cliamx fight..

KCSHEKAR
19th October 2010, 11:42 AM
Thanks Mr.Ragavendran for your youTube links of Nadigarthilagam's birthday function converage.

NOV
19th October 2010, 08:00 PM
[html:ec11c18988]
http://xa.yimg.com/kq/groups/5389531/sn/457831425/name/scan0001.jpg
[/html:ec11c18988]

NADIGAR THILAGAM SIVAJI VIZHA

*The President and Members of the Board of Management of Sivaji Ganesan Cultural Society of Malaysia Cordially Invites you to the 82nd Birthday Celebrations of the great Legend Nadigar Thilagam Sivaji Ganesan. Details as follows:-

***

Date: 29th Oct, 2010
Time: 7.30pm
Venue: Kala Mandapam, Jln Scott, KL

Ghief Guest of Honor: Magalir Thilagam Mother Rathnavalli Vijeyaraj
Special Guest: Mr.S. Maruthumogan- PhD reseacher on Nadigar Thilagam Sivaji Ganesan, Madras University.

HIGHLIGHT OF THE EVENING

The Sivaji Ganesan Award 2010 would be awarded to a deserving local artiste who have excelled in the field of Tamil Arts and Culture in the country. A Memento, A Certificate and Cash Prize would be presented to the Receipient.

Music and Songs

Popular local artistes like Sivakanthan/ Hema pair along with other well
known singers like Babuloganathan, Banu would perfom songs from Sivaji Ganesans movies.

ADMISSION: FREE

For further info call : 012-3728081 / 019-3821755 / 016-3310288
Please come and join in this evening of music and songs to remember the Great Star Sivaji Ganesan.

SHIV
20th October 2010, 04:20 PM
NT fans in Malaysia,

Have a great time & please post the happenings.

Regards

Shiv

KCSHEKAR
20th October 2010, 04:57 PM
Very nice to see the Sivaji Vizha Invitation at Malaysia. Thanks Mr.Nov. Kindly post the function coverage.

abkhlabhi
20th October 2010, 05:11 PM
Director Mahendran interview in Nakkeran magazine :

சிவாஜியை வைத்துப் படம் இயக்கும் எண்ணம் வரவே இல்லையா? தவற விட்டு விட்டோம் என்ற வருத்தம் எப்போதாவது வந்ததுண்டா?


""அந்த நடிப்பு மேதையை வைத்துப் படம் இயக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டாமல் போன துயரம் என் வாழ்வின் இறுதி மட்டும் என்னை விட்டுப் போகாது. அந்தத் துயரம் என்னை எட்டி உதைக்கும் சமயங் களிலெல்லாம் அந்த மாபெரும் இழப்புக்கு வடிகாலாக, நான் எழுதிய "தங்கப் பதக்கம்' நாடகத்தை அந்த இமயம் நடித்து இந்தியா முழுக்க அரங்கேற்றியதையும், அதையே அவர் படமாக்கி இன்றுவரை பேசப்படும் படமாக அவர் செய்திட்ட சாதனையையும் நினைத்து நினைத்து என்னை ஆறுதல்படுத்திக் கொள்வேன்

RAGHAVENDRA
20th October 2010, 06:15 PM
மலேசியா சிவாஜி கணேசன் கலை மன்றம நடத்தும் நடிகர் திலகம் சிவாஜி விழா சிறப்புற நடந்தேற, நமது அனைவர் சார்பிலும் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராகவேந்திரன்

NOV
20th October 2010, 09:17 PM
Very nice to see the Sivaji Vizha Invitation at Malaysia. Thanks Mr.Nov. Kindly post the function coverage.unfortunately, I will be in TN then. :banghead:

saradhaa_sn
21st October 2010, 03:13 PM
நேற்றிரவு ஜெயா டி.வி.யின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன நடிகை கீதாஞ்சலி (நடிகர்திலகத்துடன் மிகக்குறைவான படங்களிலேயே நடித்தவர்), நடிகர்திலகத்தைப்பற்றி குறிப்பிட்டபோது...

"'நெஞ்சிருக்கும் வரை' படத்தில் ஷ்ரீதர் எனக்கும் ஒரு கேரக்டர் தந்திருந்தார். அதில் நான் ஆடுவதாக வரும் பாடல் 'கண்ணன் வரும் நேரமிது'. இப்பாடல் ஷூட்டிங் நடந்தபோது சிவாஜி சாரும் அந்தக்காட்சியில் இருந்தார். பாடல் படமாக்கப்படும் முன், அந்தப்பாடலில் கண்ணனை நினைத்து எப்படியெல்லாம் உருகி எக்ஸ்பிரஷன் கொடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். பாடல் ஷூட் பண்ணி முடிந்ததும் 'பலே, பிரமாதமா எக்ஸ்பிரஷன் கொடுத்திருக்கியே' என்று பாராட்டியவர், ஷ்ரீதர் சாரிடம், 'உனக்கு ஒரு நல்ல ஆர்டிஸ்ட் கிடைச்சிருக்காங்க. பயன்படுத்திக்கோ' என்று சொன்னார்.

சிவாஜி சாரும், கமலாம்மாவும் என் மீது ரொம்ப அன்பு கொண்டவங்க. அவங்க வீட்டில் பலமுறை சாப்பிட்டிருக்கேன். பிரியாணி, கோழி, கருவாட்டுக்குழம்புன்னு செஞ்சு வச்சு சாப்பிடச்சொல்லி அசத்திடுவாங்க. அவங்க ரெண்டுபேர் அன்பும் எனக்கு எந்நாளும் மறக்க முடியாது".

(இதுபோலவே தன்னுடன் பணியாற்றிய பல்வேறு சீனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளைப்பற்றி ரொம்ப மரியாதையாகவும், உயர்வாகவும் குறிப்பிட்டார்)

abkhlabhi
22nd October 2010, 12:30 PM
ஆனந்த விகடன் பொக்கிஷம் - dated 7/4/2010 ௦

நடிப்பாசிரியர்

டைரக்டர் பிம்சிங்குக்கு படத்தின் பெயர் "ப" வில் துவங்கவேண்டும் என்று ஆசை. தயாரிப்பாளர் பி. எஸ். வீரப்பவுக்கோ "ஆ" வின் மேல் ஆசை. ஆலயமணியும் , ஆனந்தஜோதியும் வந்து போயிற்று. இப்போது "ஆண்டவன் கட்டளை" தயாராகிறது.

அப்படத்தில் கல்லூரி பேராசிரியராக நடிக்கும் சிவாஜிகணேசன் அன்று செட்டில் இடைவெளியின் போது புதுமுகம் ராஜனுக்கு எதோ சொல்லிக்கொடுத்து கொடுத்துக்கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்த பொது தான், விஷயம் புரிந்தது. சிகரெட் ஒன்றைக்கையில் வைத்துக்கொண்டு, " இதை விரல்களுக்குகிடையில் வைத்துக்கொள்ளும் தினுசிலிருந்தே ஒருவனின் குனாச்சித்திரத்தை சொல்லிவிடலாம். சிகரெட் பிடிக்கும் பாணியில் இருந்தே ஒருவன் கதநாயகனா, வில்லன்னா, காமடியனா என்று காட்டிவிடமுடியும்" என்று சொல்லி, பல "ஸ்டைல்"களில் பிடித்துகாட்டினர். நடிப்புக்கலையின் நுணக்கங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார் நடிகர் திலகம் !

abkhlabhi
22nd October 2010, 05:39 PM
Read

http://www.ithayakkani.com/cinemaspecial.html

october 2010 issue unable to download here

Mahesh_K
23rd October 2010, 11:04 AM
இன்று ( 23.10.2010) இரவு 8 மணிக்கு 'சிரிப்பொலி' யில் என் மகன்.

உடன் நினைவுக்கு வருவது படம் வெளிவந்த காலகட்டத்து அரசியல் சூழலை விமர்சிக்கும் 'நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா' பாடல்.

பொதுவாகவே இது போன்ற துடிப்பான தனிப் பாட்ல்கள் NT படங்களில் குறைவு என்பதாலோ என்னவோ, எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.

NT இரட்டை வேடம் - அதிலும் ஒன்று Police, பாலாஜி தயரரிப்பு எல்லாம் இருப்பினும் மற்ற NT-பாலாஜி காம்பினேஷன் பட்ங்களோடு ஒப்பிட்டால், இந்தப் படம் சுமார்தான். படம் Commercial ஹிட் ஆனது வேறு விஷயம்.

selva7
23rd October 2010, 08:06 PM
10-10-2010 தினத்தந்தியில் வெளியான கேள்வி பதில் இதோ: :oops:


பாடல் காட்சிகளில் தானே பாடுவது போல், வாய் அசைப்பிற்காக ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கிய நடிகர் யார்? (எஸ்.விவேகானந்தன், கடலூர்)

`நடிகர் திலகம்' சிவாஜிகணேசன்!

kid-glove
23rd October 2010, 08:49 PM
Kamal on feeling hands of Sivaji in between shots as a child artist, his love and admiration for "his hero".

http://www.youtube.com/watch?v=JeTZJZF7G4A&feature=related

goldstar
24th October 2010, 04:29 PM
Hi Mahesh,

Yes, I also like this song, I always want our NT movies have this kind of songs in all the movies.

Cheers,
Sathish

NOV
24th October 2010, 04:32 PM
Ramal, can you buy me this book?


A group of fans from Shanthi Theatre, had published a special issue of Idhaya Raja. Priced at Rs.40.00 the book is a treasure house for fans, containing 16 pages full of color snaps of NT and many stills, copies of old ads, news, etc. (images, news and ads courtesy: Pammalar).

Those who are in need of the issue may contact Mr. R. Kumar (9790921358) or Mr. B. Ganesan (9283217843).
Hi, i tried both mob-nos...
1 is switched off another one is not working... :oops:
pls get me some other no from ur fellow sivaji fans in hub...pammalar, murali sir etc... :?

Please help. :ty:

Murali Srinivas
24th October 2010, 10:22 PM
NOV,

Raghavendran Sir would help you to buy this magazine. When are you hitting Chennai?

People would remember S.A.Kannan who was one of the pillars of Sivaji Nataka Mandram and he was the person who directed the movie Sathyam [If I remember correctly he is the neighbour of our hubber Sriman Narayanan (Rajkumar)]. SAK had written a book.

Titled, நான் - நடிகர் திலகம் - நாடகம், the book is getting released on 29th of October. Further details would be provided by Raghavendran Sir.

Regards

This one is for Mohan [Rangan]. Tomorrow October 25th is the Birthday of Barrister and his foster son. They turn 37 tomorrow. Wishing them many more happy returns.

Srimannarayanan
24th October 2010, 10:57 PM
NOV,

Raghavendran Sir would help you to buy this magazine. When are you hitting Chennai?

People would remember S.A.Kannan who was one of the pillars of Sivaji Nataka Mandram and he was the person who directed the movie Sathyam [If I remember correctly he is the neighbour of our hubber Sriman Narayanan (Rajkumar)]. SAK had written a book.

Titled, நான் - நடிகர் திலகம் - நாடகம், the book is getting released on 29th of October. Further details would be provided by Raghavendran Sir.

Regards

This one is for Mohan [Rangan]. Tomorrow October 25th is the Birthday of Barrister and his foster son. They turn 37 tomorrow. Wishing them many more happy returns.

Murali

SAK is my house owner/

RAGHAVENDRA
25th October 2010, 03:14 AM
Dear Murali Sir and friends,
Pls give me a day or two to check out the mobile numbers. However, those who are in Chennai can get the copy at the Shanthi Book Stores, at the entrance of Shanthi Theatre, Anna Salai Chennai.
M/s. Allied Publishers are the publishers of the book of SA Kannan and it is learnt that the book is likely to be released on 29.10.2010 at the R K Swamy auditorium, Mylapore.
Hope to get more details soon

Barrister turns 37 today. Our wishes to HIM.

Raghavendran

NOV
25th October 2010, 06:57 AM
Raghavendran Sir would help you to buy this magazine. When are you hitting Chennai? Unfortunately I am not coming to Chennai this time Murali. Thats why I asked Ramal to get the book, as he will be meeting me at Kanyakumari.
Others travelling with him are great Balaji, Sanguine Sridhar, Maddy Sudhir.

rangan_08
25th October 2010, 06:31 PM
இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, பிரெஸ்டிஜ் பத்மநாபனாகவும், எதிரொலி நீதிபதியாகவும், சொர்க்கம் பணக்காரனாகவும்,எங்கிருந்தோ வந்தாள் பைத்தியக்காரனாகவும், பாதுகாப்பு படகுகாரனாகவும், இரு துருவம், தங்கைக்காக, அருணோதயம், சுமதி என் சுந்தரி, பிராப்தம், சவாலே சமாளி கதாப்பாத்திரங்களாகவும் வாழ்ந்துக் கொண்டிருந்தார் நடிகர் திலகம் என்று சொன்னால் அதை விட அந்த நடிகனுக்கு சிறப்பு வேறு என்ன இருக்கிறது?

அன்புடன்

A very apropriate concluding paragraph for this wonderful short review, Murali sir.

rangan_08
25th October 2010, 06:40 PM
Chanakkya Chandragupta (1977)



quite fortunate to see it.

rangan_08
25th October 2010, 06:45 PM
இவரைப்போலவே நம்மைக்கவரும் இன்னொருவர், மறைந்த நடிகர் பக்கோடா காதர். பெரும்பாலும் மாதவன் இயக்கிய எல்லாப்படங்களிலும் இருப்பார். 'டேய் சாப்பாட்டு ராமா' என்று வசனம் பேசிவிட்டு, ஷாட் முடிந்ததும் நடிகர்திலகத்திடம் போய் 'அண்ணே உங்களை இந்த மாதிரி கூப்பிட மனசுக்கு கூச்சமா இருக்குண்ணே' என்பாராம். அதற்கு நடிகர்திலகம் 'இதுக்கெல்லாம் நீ கூச்சப்பட்டா உன்னை நடிகனே இல்லேன்னுடுவாங்க. அதுனால சும்மா பேசு' என்பாராம். ('இந்தியன் மூவி நியூஸ்' (சிங்கப்பூர்) மாத இதழில் பக்கோடா காதரின் 'இமயங்களுடன் என் அனுபவங்கள்' கட்டுரை).



Another fantastic example.

rangan_08
25th October 2010, 06:55 PM
This one is for Mohan [Rangan]. Tomorrow October 25th is the Birthday of Barrister and his foster son. They turn 37 tomorrow. Wishing them many more happy returns.

Thanks Murali sir. 36 years !!! and Barrister continues to rock !!!

Hats off to the IMMORTAL LEGEND.

Murali Srinivas
25th October 2010, 11:44 PM
Raghavendran Sir would help you to buy this magazine. When are you hitting Chennai? Unfortunately I am not coming to Chennai this time Murali. Thats why I asked Ramal to get the book, as he will be meeting me at Kanyakumari.
Others travelling with him are great Balaji, Sanguine Sridhar, Maddy Sudhir.

I have arranged for the book and I have also spoken to Ramal. Would be delivering the book to him.

Regards

Mohan - Thanks for the visit and the compliment.

KCSHEKAR
26th October 2010, 10:46 AM
Many more happy returns to Mr.Mohan (Rangan).

KCSHEKAR
26th October 2010, 10:47 AM
[quote=saradhaa_sn]
இவரைப்போலவே நம்மைக்கவரும் இன்னொருவர், மறைந்த நடிகர் பக்கோடா காதர். பெரும்பாலும் மாதவன் இயக்கிய எல்லாப்படங்களிலும் இருப்பார். 'டேய் சாப்பாட்டு ராமா' என்று வசனம் பேசிவிட்டு, ஷாட் முடிந்ததும் நடிகர்திலகத்திடம் போய் 'அண்ணே உங்களை இந்த மாதிரி கூப்பிட மனசுக்கு கூச்சமா இருக்குண்ணே' என்பாராம். அதற்கு நடிகர்திலகம் 'இதுக்கெல்லாம் நீ கூச்சப்பட்டா உன்னை நடிகனே இல்லேன்னுடுவாங்க. அதுனால சும்மா பேசு' என்பாராம். ('இந்தியன் மூவி நியூஸ்' (சிங்கப்பூர்) மாத இதழில் பக்கோடா காதரின் 'இமயங்களுடன் என் அனுபவங்கள்' கட்டுரை).



That is the GREAT - NADIGARTHILAGAM

RAGHAVENDRA
26th October 2010, 11:30 AM
Many more happy returns to Mr.Mohan (Rangan).
Happy Birth day Rangan

guruswamy
26th October 2010, 06:05 PM
Dear NT Fans,

I would like to get associated with you all, please do give me the guidelines would like to share about our legend NT.

M. Gnanaguruswamy

RAGHAVENDRA
26th October 2010, 06:25 PM
Dear Sri Gnanaguruswamy,
Welcome to the world of NT. You have come to the right place in this thread, where you can share your thoughts, views, ideas on NT's films and related subjects. We are very eager to know about you. Pls introduce yourself, your affinity to NT, etc.

Happy days ahead!

Raghavendran

Murali Srinivas
27th October 2010, 12:31 AM
Many more happy returns to Mr.Mohan (Rangan).
Happy Birth day Rangan

<< dig

I think Chandrasekar had misunderstood what I had written. Actually I was referring to the release date of Gowravam [Oct 25th of 1973] and since Mohan [Rangan] was a great fan of that movie, I had said that Barrister and his foster son are celebrating their 37th birthday. Having understood that Mohan had thanked me. It was not Mohan's birthday.

end dig >>

Welcome Mr.Gnanaguruswamy. There are no giude lines here. You can discuss whatever you want to and you are most welcome to write about NT.

Regards

guruswamy
27th October 2010, 10:38 AM
Dear Mr. Ragavendran

Thank you for your welcome mail, first i would render my sincere aplogies to all our beloved NT fans, that i cannot draft my views in Tamil.

I'm from Bangalore and ofcourse like you all I'm die hard fan of NT. Though by birth I belong to Tamilnadu (CBE).

I HAVE LEARNT TAMIL ONLY BY READING N.T. BOOKS THAT CRAZE I'M FOR N.T.

Shortly, I will share my views and impact of this legend on my son.

Thank you all again & have a nice day!

Jaihind.

M. Gnanaguruswamy

tfmlover
27th October 2010, 10:43 AM
hi NT fans :)
Pandhapaasam was released in 1962 ? around this time

http://s775.photobucket.com/albums/yy40/TFML/Movie%20ads/Sivaji%20Ganesan/?action=view&current=pandhapasam.jpg

Regards

* check periodically for more ads

tfmlover
27th October 2010, 10:55 AM
hi NT fans :)
Pandhapaasam was released in 1962 ? around this time

http://s775.photobucket.com/albums/yy40/TFML/Movie%20ads/Sivaji%20Ganesan/?action=view&current=pandhapasam.jpg

Regards

* check periodically for more ads


and Muradan Muthu , released NOV 3rd , which year ?
http://s775.photobucket.com/albums/yy40/TFML/Movie%20ads/Sivaji%20Ganesan/?action=view&current=MuradanMuthu.jpg

saradhaa_sn
27th October 2010, 10:59 AM
வருக திரு ஞானகுருசாமி அவர்களே,

உங்களின் முதல் பதிவே, திரையுலகின் முழுமுதற்கலைஞரான நடிகர்திலகத்தின் திரியில் பதிவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நடிகர்திலகத்தைப்பற்றி நீங்கள் அறிந்தவை, உணர்ந்தவை அனைத்தையும் இங்கு பதியலாம். இதற்குமுன் பலராலும் பதியப்பட்ட அனைத்து விவரங்களையும் படிக்க, இதற்கு முந்தைய ஆறு பாகங்களை அணுகலாம். (அவற்றுக்கான இணைப்பு இத்திரியின் முதற்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது).

ஒரு முக்கிய வேண்டுகோள். ஆர்வம் காரணமாக, மற்ற நடிகர்களோடு ஒப்பீடு செய்வதைத் தவிர்க்கவும். (தேவையற்ற் சர்ச்சைகளைக் குறைக்கத்தான்). மற்றபடி, நடிகர்திலகத்தைப்பற்றிய எந்த ஒரு விஷயத்தையும், அது அவர் நடித்த படங்கள் பற்றியோ, தனிப்பட்ட அவரது குணாதிசயங்கள் பற்றியோ, அவர் வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகள் பற்றியோ அனைத்தையும் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.

மீண்டும் வரவேற்கிறோம்.

(if you are not able to read Tamil font, please be frank to mention)

sankara70
27th October 2010, 11:43 AM
Recently added Thirumal Perumai, Thiruvarutselvar, Karnan, VPK.

Already my child 5 yrs old, is addicted to Thiruvilayadal and Mayabazar.
She recognised NT in Karnan and Thirumal Perumai on the opening scenes and told me it is Sivan.
But she could not recognise Thirumal Perumai w/o moustache the Vishnu Chittar character.

In the absence of grand parents, we find it easy to play these movies for introducing historic heroes and Gods to our children

Thanks to NT and APN

J.Radhakrishnan
27th October 2010, 12:11 PM
saradhaa_sn wrote:

இவரைப்போலவே நம்மைக்கவரும் இன்னொருவர், மறைந்த நடிகர் பக்கோடா காதர். பெரும்பாலும் மாதவன் இயக்கிய எல்லாப்படங்களிலும் இருப்பார். 'டேய் சாப்பாட்டு ராமா' என்று வசனம் பேசிவிட்டு, ஷாட் முடிந்ததும் நடிகர்திலகத்திடம் போய் 'அண்ணே உங்களை இந்த மாதிரி கூப்பிட மனசுக்கு கூச்சமா இருக்குண்ணே' என்பாராம். அதற்கு நடிகர்திலகம் 'இதுக்கெல்லாம் நீ கூச்சப்பட்டா உன்னை நடிகனே இல்லேன்னுடுவாங்க. அதுனால சும்மா பேசு' என்பாராம். ('இந்தியன் மூவி நியூஸ்' (சிங்கப்பூர்) மாத இதழில் பக்கோடா காதரின் 'இமயங்களுடன் என் அனுபவங்கள்' கட்டுரை).

சகோதரி சாரதா அவர்களே,
அருமையான தகவல்!!! இந்தியன் மூவி நியூஸ்' (சிங்கப்பூர்) இதழ் எங்கு கிடைக்கும்? அந்த பேட்டியை முழுவதும் படிக்க விரும்புகிறேன்.

KCSHEKAR
27th October 2010, 12:17 PM
[quote=KCSHEKAR]Many more happy returns to Mr.Mohan (Rangan).
Happy Birth day Rangan

<< dig

I think Chandrasekar had misunderstood what I had written. Actually I was referring to the release date of Gowravam [Oct 25th of 1973] and since Mohan [Rangan] was a great fan of that movie, I had said that Barrister and his foster son are celebrating their 37th birthday. Having understood that Mohan had thanked me. It was not Mohan's birthday.

end dig >>

Thanks Mr.Murali,

Sorry for the mistake happened.

Welcome Mr.Gnanagurusamy.

saradhaa_sn
27th October 2010, 12:22 PM
Dear 'tfml'ji...

Thanks a lot for your link for the NT & MT advertisements.

Expecting more, because evaeryone know that I am an addict of Newspaper Advs.

Pandha paasam - 27.10.1962 (Deepavali)

Muradan Muthu - 03.11.1964 (Deepavali) (Navarathri also same day release)

tfmlover
27th October 2010, 12:30 PM
Dear 'tfml'ji...

Thanks a lot for your link for the NT & MT advertisements.

Expecting more, because evaeryone know that I am an addict of Newspaper Advs.

Pandha paasam - 27.10.1962 (Deepavali)

Muradan Muthu - 03.11.1964 (Deepavali) (Navarathri also same day release)
my pleasure :)
i have added ootti varai uravu too , another deepavali release..
will add more alright
chau for now
Regards

Thirumaran
27th October 2010, 12:47 PM
Belated Birthday Wishes Mohan (Rangan) :cheer:

guruswamy
27th October 2010, 02:26 PM
Dear Ms. Saradhaprakash,

Thank you so much. I would me most conversant to read it in English as reading in Tamil is taking time.

Jai hind.

M. Gnanaguruswamy

guruswamy
27th October 2010, 02:30 PM
[tscii:6d9d29f4f0]Dear Mr. Raghavendra

Please don’t say no. I really wanted to frame a big stylish NT photos at home atleast 3 nos, kindly suggest as where can I get the photos and also, I very much in need of NT DVD's of Felicitations & all the NT functions captured on DVD’s.

I will make the payment accordingly.

Jaihind.

M. Gnanaguruswamy[/tscii:6d9d29f4f0]

RAGHAVENDRA
27th October 2010, 04:29 PM
Dear TFMLover Sir,
Very happy to see your posting here and that too with the images of ads from newspapers.
Great on your part.
Thank you,
Raghavendran

tfmlover
27th October 2010, 10:59 PM
Dear TFMLover Sir,
Very happy to see your posting here and that too with the images of ads from newspapers.
Great on your part.
Thank you,
Raghavendran

hi RAGHAVENDRA sir
don't mention it ! have collected an ample amount of ads &
will be uploaded here gradually
innum varum :)
Regards

tfmlover
27th October 2010, 11:01 PM
50 ளின் இறுதியில் வெளிவந்த சுவாரஸ்யமான அறிவிப்பு விளம்பரம் :)

http://s775.photobucket.com/albums/yy40/TFML/Movie%20ads/Sivaji%20Ganesan/?action=view&current=SivagiGanesan-Pumpuhar.jpg

தயாராகிறது தமிழ் விருந்து !
மொழிகள் குல முதல்வியாம்
தமிழன்னைக்குச் சூட்டும் முத்தாரம்
புலி வில் கயல்
கொடி கண்டோர் புகழ் பொறித்திடும் சிலப்பதிகாரம்
பூம்புகார்
மு கருணாநிதி *சிவாஜி கணேசன் கிருஷ்ணன் பஞ்சு
இந்த மூவருடன் AVM தரும் எழிலோவியம் !

படம் திரைக்கு வந்தபோது அதில் எஸ் எஸ் ராஜேந்திரன் தானே இருந்தார் ?

ஆரம்பத்தில் நடித்துவிட்டு பின்னர் நடிகர் திலகம் விலகிக் கொண்டாரா ?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் pls

thanks
Regards

RAGHAVENDRA
28th October 2010, 08:37 AM
நடிகர் திலகத்திற்கு ஒரு அஞ்சலிக் கவிதை பாடலாக -
நன்றி யூட்யூப் இணைய தளம்

http://www.youtube.com/watch?v=Id05R6W37TQ&feature=related

அன்புடன்
ராகவேந்திரன்

saradhaa_sn
28th October 2010, 11:49 AM
50 ளின் இறுதியில் வெளிவந்த சுவாரஸ்யமான அறிவிப்பு விளம்பரம் :)

http://s775.photobucket.com/albums/yy40/TFML/Movie%20ads/Sivaji%20Ganesan/?action=view&current=SivagiGanesan-Pumpuhar.jpg

தயாராகிறது தமிழ் விருந்து !
மொழிகள் குல முதல்வியாம்
தமிழன்னைக்குச் சூட்டும் முத்தாரம்
புலி வில் கயல்
கொடி கண்டோர் புகழ் பொறித்திடும் சிலப்பதிகாரம்
பூம்புகார்
மு கருணாநிதி *சிவாஜி கணேசன் கிருஷ்ணன் பஞ்சு
இந்த மூவருடன் AVM தரும் எழிலோவியம் !

படம் திரைக்கு வந்தபோது அதில் எஸ் எஸ் ராஜேந்திரன் தானே இருந்தார் ?

ஆரம்பத்தில் நடித்துவிட்டு பின்னர் நடிகர் திலகம் விலகிக் கொண்டாரா ?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் pls

thanks
Regards
டியர் tfmlover,

நீங்கள் அளித்துள்ள சுவாரஸ்யமான விளம்பரத்துக்குப்பிண்ணனியில் நிகழ்ந்தவை....

1956-வாக்கில் கலைஞர் மு.கருணாநிதி கதை வசனத்தில், கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், ஏ.வி.எம் தயாரிப்பில், நடிகர்திலகம் பத்மினி ஜோடியாக நடிக்க "பூம்புகார்" தயாராவதாக இருந்தது. அப்போது வந்த விளம்பரம்தான் இது.

ஆனால் இப்படம் பற்றிய கதை பற்றிய கலந்துரையாடல் (செம்மொழியில் சொன்னால் 'ஸ்டோரி டிஸ்கஷன்') நடந்துகொண்டிருந்தபோது, கிட்டத்தட்ட இதே கதையமைப்பைக்கொண்டு இதே ஜோடியுடன் 'தங்கப்பதுமை' வெளியாகவே, இனிமேல் 'பூம்புகார்' கதையை எடுத்தால் போணியாகாது, மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று நினைத்த ஏ.வி.எம். செட்டியார் இப்படத்தை கைவிட்டார். கிருஷ்னன் பஞ்சுவும் விலகினார்.

பின்னர் சுமார் ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு, கலைஞர் தன்னுடைய் மேகலா பிக்சர்ஸ் சார்பில், காஞ்சித்தலைவனுக்கு அடுத்த தயாரிப்பாக 'பூம்புகார்' கதையை தயாரித்தார்.

நடிகர் திலகத்துக்கு பதிலாக இலட்சிய நடிகர்
பத்மினிக்கு பதிலாக விஜயகுமாரி
கிருணன் பஞ்சுவுக்கு பதிலாக ப நீலகண்டன்
ஏ.வி.எம்.நிறுவனத்துக்கு பதிலாக மேகலா பிக்சர்ஸ் என்று எல்லாமே மாறிப்போனது.

கலைஞர் மட்டுமே மாறாத ஒருவராக இடம்பெற்றிருந்தார்.

காஞ்சித்தலைவன் 1963-ம் ஆண்டிலும், பூம்புகார் 1964-ம் ஆண்டிலும் வெளிவந்தன. ('காஞ்சித்தலைவன்' என்ற பெயர் அண்ணாதுரையைக் குறிப்பதாக சென்ஸார் போர்டில் எதிர்ப்பு கிளம்பி பின் அடங்கியது).

tfmlover
28th October 2010, 07:40 PM
Oh ! quite interesting
thanks for your prompt reply saradhaa_sn madam
guys were wise 'before the event then
moreover , Vijayakumari poruthamaavum irundhirukkaadhu in my humble opinion

Thanga Padhumai 1959 vandhathu right?
Regards

kumareshanprabhu
28th October 2010, 09:27 PM
belated wishes to Mr.Rangan from Each and every fans from Bangalore

guruswamy
29th October 2010, 04:52 PM
[tscii:4a7e8c2afb]Dear Mr. Raghavendra

Please don’t say no. I really wanted to frame a big stylish NT photos at home atleast 3 nos, kindly suggest as where can I get the photos and also, I very much in need of NT DVD's of Felicitations & all the NT functions captured on DVD’s.

I will make the payment accordingly.

Jaihind.

M. Gnanaguruswamy[/tscii:4a7e8c2afb]

guruswamy
29th October 2010, 05:00 PM
'maranam unnai pirikalam'

Wat a feeling, just wonderful sir. I kept hearing this song. Our NT is a real legend, he lives with everyone of us.

We all should feel proud the we are great fan of our NT. I LOVE THE SONG WAT A FEELING AGAIN THIS SHOWS YOUR LOVE FOR NT.

We all should take one step forward to the next generation that they should know a Legend was born in India and in Tamilnadu the KING OF ACTING, PERSONALITY, A GOOD HUMAN BEING AND A GOD'S GIFT TO US.

Jaihind.
M. Gnanaguruswamy

RAGHAVENDRA
29th October 2010, 06:14 PM
SATHYABAMA UNIVERSITY

CHEVALIER Dr. SIVAJI GANESAN ENDOWMENT LECTURE
and Inauguration of Exhibition

30 October 2010, 10.00 A.M.

University Auditorium

Welcome Address/ Presidential Address by
Thiru Dr. Jeppiaar, M.A.,B.L.,Ph.D.,
Founder and Chancellor

Endowment Lectures by

Thiru Dr. T.S. Narayanaswamy,
Professor

Thiru Ramkumar,
Film Producer

Thiru V.C. Guhanathan,
Film Director

Thiru C.V. Rajendran,
Film Director

Thiru Dr. P. Bharathiraja,
Film Director.

Felicitation
Tmt. Remibai Jeppiaar
Madam Chancellor

KCSHEKAR
30th October 2010, 11:51 AM
Please click the link below:

http://www.sivajiperavai.com/View_Press.php?id=133

rangan_08
30th October 2010, 01:22 PM
BR : Kanna, news கேள்விப்பட்டியா ?

K : என்ன பெரியப்பா ?

BR : இந்த hub-la சிலர் நம்மை wish பன்றதுக்கு பதிலா அந்த மோகனை birthdayக்கு wish பண்ணிட்டாங்க.

K : யாரு பெரியப்பா, அந்த மோகன்தாஸா ?

BR : No, no. You are mistaken. அந்தப்பய தான் இப்போ Salem sub-jail-la கம்பி எண்ணின்டிருக்கானே. இது வேற மோகன். இந்தப் பயலுக்கு நாலு வார்த்த சேர்ந்தாப்பல English-la பேசத் தெரியாது.....ரொம்ப ரொம்ப ரொம்ப junior. இவனப் போய் wish பண்ணி இருக்காங்களே.

நம்ம Murali sir உடைய போஸ்ட்ட தப்பா புரிஞ்சுண்டு அப்படி செஞ்சுட்டாங்க. நேத்து சாயங்காலம் club-la meet பண்றச்சே இந்த விஷயத்த Murali என்னண்ட சொன்னார்.

K : தெரியாம பண்ணிட்டா பெரியப்பா. இதுக்காக Bail எல்லாம் move பண்ண சொல்லாதீங்கோ.

BR : சரிடா படவா


************************

Many thanks to friends & seniors for showering your affection on me........I feel that NT himself has wished me on the release date of Gowravam.....what an honour !!!

Special thanks to Mr Kumareshanprabhu for wishing on behalf of all Bengaluru NT fans :D

I dedicate ( word courtesy, music channels) 50% of the Greetings to Murali sir, who, without his knowledge, is responsible for this pleasant incident. :D

mr_karthik
30th October 2010, 01:41 PM
கண்ணன்: 'இன்னொன்னு கவனிச்சேளா பெரியப்பா. இந்த கார்த்திக் பய, முரளிசாரோட போஸ்ட்டை கரெக்டா புரிஞ்சுண்டு மோகனை wish பண்ணாம விட்டுட்டான்'.

பாரிஸ்டர்: 'ஆமாண்டா படவா, இந்த மோகன் இவ்வளவு சந்தோஷப்படுவார்னு தெரிஞ்சிருந்தா புரியாத மாதிரி அவனும் wish பண்ணியிருப்பான் தெரியுமோ?. ஏய் செல்லா, அந்த கவுனை எடுடி. கோர்ட்டுக்கு நேரமாயிடுத்து'

mr_karthik
30th October 2010, 02:51 PM
விக்ரம் - அனுஷ்கா ஜோடியாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் "தெய்வ மகன்".

தனுஷ் நடித்து தீபாவளிக்குத் திரைக்கு வரும் படம் "உத்தம புத்திரன்".

:shock: :evil: :oops: :shock: :evil: :oops: :shock: :evil: :oops:

RAGHAVENDRA
30th October 2010, 05:23 PM
சத்யபாமா பல்கலைக்கழகத்தின் சார்பில் டாக்டர் சிவாஜி கணேசன் அறக்கட்டளை சொற்பொழிவுகள் இன்று 30.10.2010 காலை பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் திரு ஜேப்பியார் அவர்கள் வரவேற்புரை மற்றும் தலைமையுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் திரு ராம்குமார், திரு டி.எஸ்.நாராயணசாமி, திரு குகநாதன் மற்றும் திரு சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் சொற்பொழிவாற்றினர். இதன் ஒரு பகுதியாக நடிகர்திலகத்தைப் பற்றிய புகைப்படக் கண்காட்சி ஒன்றும் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் விவரம் விரைவில் நமது இணையதளத்தில்.

ராகவேந்திரன்

pammalar
31st October 2010, 01:09 AM
தவிர்க்க முடியாத காரணங்களினால், கடந்த மூன்று வாரங்களாக, நமது திரியில் எம்மால் பதிவிட முடியவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்!

இனி இத்திரியில் எமது பதிவுகள் தொடரும். வழக்கம் போல் கேள்வி-பதில்கள், "புதிய பறவை" கட்டுரை, இதர தகவல்கள், புள்ளி விவரங்கள் என எல்லாம் தொடர்ந்து வெளிவரும்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
31st October 2010, 02:06 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 150

கே: "சவாலே சமாளி" வெற்றிப் படமா? (எஸ்.சந்தானம், டேராடூன்)

ப: ஆமாம், வெற்றிகரமாக நடைபெறுகிறது.

(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1971)

அன்புடன்,
பம்மலார்.

Dear Pammalar,

That was an absurd question - the whole world knows SS was a super hit movie.



A request: Please refrain from posting such questions.

Regards

tac,

You know why Swami posted this? Did you notice the number in the heading? Does it ring a bell? Precisely that was the reason the question was posted.

Moreover as Saradha had pointed out the question was asked in August end or September start for it to get published in Pesum Padam October issue. Moreover see the place. The person is in Dehradun - now in Uttaranchal. Unlike present day, hardly there were any ways of communicating other than by post and information flow was few and far in between.

The person happened to be the President of Sivaji Fans Association, Dehradun at that point of time and out of sheer anxiety whether the film is doing well, had asked this question.

Regards

டியர் டாக்,

நான் என்ன சொல்ல நினைத்தேனோ, அதனை சற்றேறக்குறைய அப்படியே கூறி விட்டார்கள் சகோதரி சாரதாவும், முரளி சாரும். அவர்களுக்கு நமது நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
31st October 2010, 02:23 AM
டியர் நௌ & ராகேஷ்,

மலேசியாவில் நடைபெறும் நடிகர் திலகத்தின் 82வது பிறந்த நாள் நிறைவு விழாவினுடைய செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்களைக் காண ஆவல் மேலிடுகிறது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
31st October 2010, 03:04 AM
Mr.M.Gnanaguruswamy,

A warm, rousing, red-carpet welcome to you to our NT thread.

An unflinching love towards our Godfather and to our motherland shines handsomely in your posts.

Very eager to view your posts now & then.

Warm Wishes,
Pammalar.

pammalar
31st October 2010, 03:23 AM
டியர் ராகவேந்திரன் சார்,

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த நடிகர் திலகத்தின் சொற்பொழிவுகள் மற்றும் கண்காட்சி குறித்த செய்திகளுக்கு பற்பல நன்றிகள்! மேலும் விவரங்களை தங்களது இணையதளத்தில் காண ஆவலாயுள்ளோம்.

டியர் tfmlover,

அந்த கால அரிய பட விளம்பரங்களை அள்ளித்தரும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

டியர் செல்வா,

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

தங்கள் பதிவுகளால் இத்திரி மென்மேலும் சிறக்கட்டும்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
31st October 2010, 04:08 AM
நடிப்புலகின் தேவருக்கு பசும்பொன் தேவரின் அறிவுரை
[அக்டோபர் 1988-ல் வெளியான 'மக்கள் தலைவர் சிவாஜி மணிவிழா மலரி'லிருந்து, ஆசிரியர் : ம.ச.பரதன்]

எந்தக் கட்சித் தலைவராக இருந்தாலும், தந்தை பெரியாரைப் போல் எழுந்து, பணிந்து வணங்குவது நடிகர் திலகத்தின் இயல்பாகும். ஒரு சமயம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை சந்தித்துப் பேசினார் சிவாஜி. தேவரின் எளிமையும், தெய்வீகமும் நடிகர் திலகத்தை அவர்பால் ஈர்த்தது. சிவாஜியின் பண்பும், பணிவும் தேவரை மிகவும் கவர்ந்தன. இருவரும் அடிக்கடி சந்திக்கலானார்கள். அப்படி ஒரு சந்திப்பின் போது தேவர் நடிகர் திலகத்திடம், "அய்யா! நீ வேறொரு 'கேம்ப்'பில் இருக்கிறாய். அடிக்கடி என்னை வந்து பார்த்தால், நமக்குள் ஏதோ ரகசியத் தொடர்பு இருப்பதாக நினைத்து உன்னுடைய சேவையில் களங்கம் கற்பிப்பார்கள். அதனால் என்னை நேரில் பார்க்காமல் இருப்பது உனக்கு நல்லது" என்று அறிவுரை கூறினார். அப்பழுக்கற்ற ஆன்மீகவாதியான அவரது அந்த அறிவுரையை அன்புக்கட்டளையாக ஏற்றார் நம்பெருமான்.

இன்று 30.10.2010 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 103வது ஜெயந்தி.

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

RC
31st October 2010, 04:55 AM
from Junior Vikatan by Mr. kazhugu
....'பழைய சத்யா ஸ்டூடியோவுக்கு எதிர் பக்கத்தில் அமைச்சர்களது வீடுகளுக்குச் செல்லும் பாதையில்... ஏதோ பூமி பூஜை நடக்கிறது. அதை க்ளிக் பண்ணி வையும்!' என்பதே அவர் தந்த தகவல்!

கழுகார் வந்து சேருமுன்பே போட்டோகிராபர் தனது வேலையை முடித்திருந்தார். அந்தப் படங்களைப் பார்த்த நியூஸ் பட்சியார், ''பூமி பூஜை நடந்திருக்கும் இடம், நடிகர் திலகம் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்துக்குப் பக்கத்தில் இருக் கிறது. இங்கே மிகப்பெரிய ஆடிட் டோரியம் ஒன்று விரைவில் எழப் போகிறதாம். இந்த சுறுசுறுப்பை எட்டி நின்று கவனிக்கிறார்கள் சிவாஜி ரசிகர்கள். ஜெயலலிதா முதல் வராக இருந்த காலத்தில் சிவாஜி மணி மண்டபத்துக்கு நிலம் ஒதுக்கியும் இன்று வரை பல இழுபறிகள் அதில் அரங்கேறுவதையும்... தென்னிந்திய நடிகர் சங்கம் இதில் போதிய ஆர்வம் காட்டாமல் இருப்பதையும் பார்த்து ஏக அப்செட்டில் இருக்கி றார்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்கள்! 'சினிமாக்காரர்களது கோரிக்கைகளை ஆசையோடு நிறைவேற்றும் முதல்வர் கருணாநிதி, தன் ஆப்த நண்பர் என்று இன்னமும் கண் கலங்குவது சிவாஜி பற்றித்தானே? மணி மண்டப விஷயத்தில் அவர் நினைத்தால் நல்லது நடக்காதா?' என்பது ரசிகர்களின் அர்த்தமுள்ள ஆதங்கம்!''

''பாவம்தான்!''

''சிவாஜியைப் பற்றி அவரது நாடக காலத்து நண்பர் ஒருவர் தனது அனுபவங்களைப் புத்தகமாக்கினார். சென்னையில் பிரபலமான பதிப்பகத்தில் கொடுத்து வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடும் செய்தார். ஆனால், சிவாஜி குடும்பத்தினர் இந்தப் புத்தகம் வருவதை விரும்பவில்லையாம். திடீரென்று தடை போட்டுவிட்டார்களாம். 'அந்தப் புத்தகத்தில் பழைய நினைவுகளுடன் சேர்த்து, சிவாஜியின் இறுதிக் காலத்தில் அவருக்கு வருத்தமூட்டும் வகையில் நடந்துவிட்ட சில தகவல்கள் இருக்கின்றன. அவை வெளியாவது, சிவாஜியின் நிழலாக இருந்தவர்களுக்கு தேவையற்ற சங்கடத்தை உண்டாக்கும்' என்பதுதான் புத்தக வெளியீட்டுக்குத் தடை விழுந்த பின்னணியாம்!!''

rangan_08
31st October 2010, 12:32 PM
கண்ணன்: 'இன்னொன்னு கவனிச்சேளா பெரியப்பா. இந்த கார்த்திக் பய, முரளிசாரோட போஸ்ட்டை கரெக்டா புரிஞ்சுண்டு மோகனை wish பண்ணாம விட்டுட்டான்'.

பாரிஸ்டர்: 'ஆமாண்டா படவா, இந்த மோகன் இவ்வளவு சந்தோஷப்படுவார்னு தெரிஞ்சிருந்தா புரியாத மாதிரி அவனும் wish பண்ணியிருப்பான் தெரியுமோ?. ஏய் செல்லா, அந்த கவுனை எடுடி. கோர்ட்டுக்கு நேரமாயிடுத்து'

:)

rangan_08
31st October 2010, 12:35 PM
A rare b&w photograph featuring NT, MGR, Jayalalitha, A.L Srinivasan & Mu.Ka. was published in this week's Ananda Vikatan.... briefly discussed about it with Murali sir.

NT looks very slim, smart and handsome in the photograph.

pammalar
1st November 2010, 03:10 AM
திருமதி.இந்திரா காந்தி கண்டு களித்த "கட்டபொம்மன்" நாடகம்

ஈரோட்டுக்கு அருகே கோபிசெட்டிபாளையத்தில், 6.12.1958 (சனி) மற்றும் 7.12.1958 (ஞாயிறு) ஆகிய இரு தினங்கள், காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாட்டிற்காக "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகம் நடந்தேறியது. அச்சமயம், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்திற்காக தமிழ்நாட்டில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த திருமதி.இந்திரா காந்தி அவர்கள் ஈரோட்டுக்கு வருகை புரிந்தார். கோபிசெட்டிபாளையத்தில் காங்கிரஸ் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்து மாநாட்டின் சிறப்பம்சமான நடிகர் திலகத்தின் "கட்டபொம்மன்" நாடகத்தையும் முழுமையாக கண்டு களித்து ரசித்து மகிழ்ந்த இந்திரா அவர்கள், நாடகத்தையும் அதில் நடிகர் திலகத்தின் நடிப்பையும் மனதாரப் பாராட்டினார். தேசப்பற்றை வளர்க்கும், விளக்கும் இது போன்ற நாடகங்களே தேசத்திற்கு இன்றியமையாத தேவை என்றும் புகழ்ந்துரைத்தார். நடிகர் திலகம் முதன்முதலில் திருமதி.இந்திரா காந்தியை சந்தித்தது இந்நிகழ்வில் தான்!

இன்று 31.10.2010 முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அம்மையாருடைய 26வது நினைவு தினம்.

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

KCSHEKAR
1st November 2010, 12:02 PM
Please click the link below - Nadigarthilagam's 83rd birthday function (YGM's VIETNAM VEEDU Drama) invitation - 07-11-2010, Sunday At Tirunelveli

http://www.sivajiperavai.com/View_Press.php?id=133

Thanks

SHIV
1st November 2010, 02:48 PM
Welcome back Mr.Pammalar. As usual the forum has now come back to its briskness after a brief lull in the brief absence of you, Mr.Murali srinivas & Sharda madam though Its like Sachin coming back to the team to make it more lively.


Best Regards

SHIV

SHIV
1st November 2010, 04:26 PM
Dear Mr.Pammalar

Thank you very much for the details on VKB and how Smt.Indira Gandhi enjoyed and appreciated it.

Its a timely posting on her death annversary as she was the only leader in Congress who had real affection and respect for our NT.

Regards

K.Sivakumar

RAGHAVENDRA
1st November 2010, 10:32 PM
NOVEMBER 2ND -
HAPPY BIRTH DAY TO SIVA AND ANANTH

Raghavendra

J.Radhakrishnan
1st November 2010, 11:41 PM
NOVEMBER 2ND -
HAPPY BIRTH DAY TO SIVA AND ANANTH

Raghavendra
___


:D

Murali Srinivas
2nd November 2010, 12:24 AM
இரு மலர்கள். இந்த படத்தின் பாடல் காட்சிகளிலெல்லாம் நமது ராகேஷ் அடிக்கடி சொல்வது போல் பல nuances நடிகர் திலகம் செய்திருப்பார். மன்னிக்க வேண்டுகிறேன் பாடலில் வரும் வாயசைப்பு பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோம். அது போல் கடவுள் தந்த இரு மலர்கள் பாடல் காட்சி. இந்த பாடல் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். இனம் புரியாத சோகத்தை மனதில் விதைக்கும் மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை, வாலியின் முத்தாய்ப்பான வரிகள், இனிமையே உருவான சுசீலா, ஈடு கொடுக்கும் ஈஸ்வரி, திரையில் நாட்டியப் பேரொளியும் புன்னகை அரசியும் அவரவர் பாணியில் அழகுற செய்திருப்பார்கள்.

ஆனால் நான் சொல்ல வந்தது நமது நடிகர் திலகம் பற்றி. இந்தப் பாடலை எப்போது பார்த்தாலும் இரண்டு விஷயங்கள் பளிச்சென்று தெரியும், ஒன்று நடிகர் திலகத்தின் புற தோற்றம் மற்றொன்று அவரின் உடல் மொழி எனப்படும் body language. புற தோற்றத்தைப் பொறுத்த வரை ஆள் அவ்வளவு அழகாக இருப்பார். மோகன் குறிப்பிட்ட விகடனில் எழுதியது போல படு இளமையாக ஸ்லிமாக இருப்பார். அந்த பால்கனியின் கைப்பிடி ரைல்ஸ்-ஐ பிடித்தப்படி நிற்கும் அந்த போஸ் ஒன்றே போதும்.

Body language - அந்த பாத்திரம் [சுந்தர்] தன் காதலி மேல் தீராக் கோபம் கொண்டிருக்கின்றான். தன்னிடம் அவ்வளவு வாக்குறுதி கொடுத்தவள் வார்த்தை தவறி விட்டாளே என்ற ஆத்திரம், அவளை வாழ்க்கையில் மீண்டும் சந்திக்க நேர்ந்த போது அந்த கோவம் ஆத்திரம் எல்லாம் ஒன்று சேர்ந்து வார்த்தைகளால் அவளை குத்தி கிழித்த பிறகும் அடங்காமல் அவளைப் பார்க்கும் போதெல்லாம் அது முகத்தில் பிரதிபலிக்கிறது.
அவளாலும் நடந்த உண்மையை சொல்ல முடியவில்லை. தன் நிலையை பாடலாய் வடிக்கிறாள் அதை கேட்கும் போதும் நாயகனுக்கு கோபம் தணியவில்லை என்பது அந்த முகத்தில் தெரிகிறது.

அந்நிலையில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினார்கள் என்பதையோ முன்பு நடந்தது என்னவென்றோ தெரியாத நாயகனின் மனைவி அவளுக்கு ஆறுதல் சொல்லி பாடுகிறாள்.

இந்த காட்சியை சற்று கூர்ந்து நோக்கினால் நான் முதலில் சொன்ன nuance தெரியும். கதைப்படி நாயகனுக்கு தன் மனைவி பாடப் போகிறாள் என்று தெரியாது. ஆனால் காட்சிப்படி சிவாஜி என்ற நடிகருக்கு விஜயா என்ற நடிகை வாயசைக்க போகிறார் என்று தெரியும். தெரிந்த ஒன்றை தெரியாதது போல் செய்ய வேண்டும், பார்வையாளனும் அதை உணர வேண்டும். இப்போது கவனியுங்கள். இரண்டாவது சரணம் தொடங்குகிறது

அலையில் மிதந்த மலர் கண்டு

அதன் மேல் கருணை மனம் கொண்டு

குரல் ஒலித்தவுடன் கிழே டீச்சரை பார்க்கும் நடிகர் திலகம், டீச்சர் பாடவில்லை குரல் தன் பக்கத்திலிருந்து வருகிறது என்று புரிந்து தன் மனைவியை பார்க்கும் நடிகர் திலகம், அந்த ஒரு வினாடிக்குள் அவர் முகத்தில் வந்து போகும் அந்த திகைப்பு +ஆச்சரியம், எப்படி இவரால் மட்டும் முடிகிறது? என்று பல முறை நான் வியந்து போவேன்.

பொதுவாகவே சினிமாவில் நடிகனுக்கு தெரியும், கதாபாத்திரத்திற்கு தெரியாது என்பதுதான் அடிப்படை என்றாலும் அதை இவர் அளவிற்கு convincing-ஆக செய்தவர்கள் எத்தனை பேர்?

பல முறை மனதில் தோன்றிய இந்த எண்ணத்தை எழுத்தில் வடிக்க வேண்டும் என்பது இன்று காலை இந்த பாடலை டி.வியில் பார்க்க நேர்ந்த போது தோன்றியது.

அன்புடன்

நண்பர் ஜெய்கணேஷ் 1000 பாடல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார். சிலர் சில ஆல்பங்களை அப்படியே எடுத்துக் கொள்ளலாம் என்று அங்கே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த லிஸ்டிற்கு எது suit ஆகுமோ இல்லையோ, இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் நிச்சயமாக தேர்வு பெறும்

pammalar
2nd November 2010, 03:55 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 151

கே: சிவாஜி கணேசன், நடிப்புப் பயிற்சிக் கழகம் ஒன்றை ஆரம்பித்து, புது முகங்களுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தால் என்ன? (ஜி.கண்ணன், தேனி)

ப: நடிப்பில் முன்னேற ஆர்வம் உடையவர்கள், அவர் நடிப்பதை ஊன்றி கவனித்தாலே போதுமே.

(ஆதாரம் : பேசும் படம், ஜூன் 1971)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd November 2010, 04:03 AM
டியர் ஷிவ் சார்,

தங்களது உயர்ந்த உள்ளத்திலிருந்து வரும் உயர்வான பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd November 2010, 04:22 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 152

கே: மார்லன் பிராண்டோ, ரெக்ஸ் ஹாரிசன், அல்பசினோ, ராபர்ட் டிநீரோ - இவர்களில் நம் சிவாஜி கணேசனுடன் போட்டி போடத் தகுதி பெற்ற நடிகர் யார்? (ஜி.கே.எஸ்.மூர்த்தி, கோபிசெட்டிபாளையம்)

ப: பிராண்டோ, ரெக்ஸ் - இந்த இருவர் தான் சிவாஜியின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருமே சிவாஜி செய்த விதவிதமான ரோல்களைச் செய்ததில்லை என்பதே உண்மை. அந்த இருவரும் உலகின் மிகச் சிறந்த டைரக்டர்களிடம் பணியாற்றியவர்கள். சிவாஜி சுயம்பு!

(ஆதாரம் : ஆனந்த விகடன், 3.11.2002, "ஹாய் மதன்" கேள்வி-பதில் பகுதி )

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd November 2010, 04:36 AM
டியர் முரளி சார்,

நடிகர் திலகம், நாட்டியப் பேரொளி, புன்னகை அரசி, வரகவி வாலி, மெல்லிசை மன்னர், இசைவாணி சுசீலா, இசைக்குயில் ஈஸ்வரி ஆகியோருடன் போட்டி போட்டுக் கொண்டு, தங்களது பதிவின் மூலம் பாடலைத் தங்களுடையதாகவும் ஆக்கிக் கொண்டு, திறனாய்வுத் திலகம் என்பதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டீர்கள், மனமார்ந்த பாராட்டுக்கள்!

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
2nd November 2010, 10:57 AM
NOVEMBER 2ND -
HAPPY BIRTH DAY TO SIVA AND ANANTH

Raghavendra
தொழிநோயாளிகளுக்குச்சேவை செய்வதையே லட்சியமாகக்கொண்ட 'டாக்டர் சிவா' அவர்களுக்கும்,

கொள்ளையர்களைப் பிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்ட 'வைர நெஞ்சம்' கொண்ட ஆனந்த் அவர்களுக்கும் 36-வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

'மலரே... குறிஞ்சி மலரே
(எங்கள்) தலைவன் (சிவா-ஜி) சூட நீ மலர்ந்தாய்
(அதன் மூலம்) பிறந்த பயனை நீ அடைந்தாய்'

ஆனந்த், உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துப்பாட..
'செந்தமிழ் பாடும் சந்தனக்காற்று
தேரினில் வந்தது கண்ணா'.

KCSHEKAR
2nd November 2010, 12:19 PM
Welcome back to Pammalar, very good information about Smt.Indira Gandhi & our NT's association.

Mr.Murali did a very nice, short & sweet research about Iru Malargal.

Thanks

saradhaa_sn
2nd November 2010, 03:57 PM
டியர் முரளி சார்,

நடிகர் திலகம், நாட்டியப் பேரொளி, புன்னகை அரசி, வரகவி வாலி, மெல்லிசை மன்னர், இசைவாணி சுசீலா, இசைக்குயில் ஈஸ்வரி ஆகியோருடன் போட்டி போட்டுக் கொண்டு, தங்களது பதிவின் மூலம் பாடலைத் தங்களுடையதாகவும் ஆக்கிக் கொண்டு, திறனாய்வுத் திலகம் என்பதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டீர்கள், மனமார்ந்த பாராட்டுக்கள்!

அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி,

நான் சொல்ல நினைத்ததை பம்மலார் அவர்கள் சிறப்பாகச் சொல்லியிருப்பதால், அவர் கூற்றை அப்படியே வழிமொழிகிறேன். (நடிகர்திலகம் திரியின் முந்தைய பாகமொன்றில், இருமலர்கள் படத்தின் 'அன்னமிட்ட கைகளுக்கு' பாடலைப்பற்றி நான் எழுதியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்). அப்படத்தில் கே.ஆர்.விஜயா ரொம்ப அப்பாவியாக வந்து நம் அனுதாபங்களை அள்ளிக்கொண்டு போவார்.

abkhlabhi
2nd November 2010, 05:54 PM
MGR speaks about Sivaji Ganesan and Kamal hassan - Rare Old Article cuts from a magazine

http://www.smubla.com/view.cgi?key=1bfe384e391f626401e9af6af3cb6ade

NOV
2nd November 2010, 06:26 PM
Please click the link below - Nadigarthilagam's 83rd birthday function (YGM's VIETNAM VEEDU Drama) invitation - 07-11-2010, Sunday At Tirunelveli


[html:6c478dc0bc]
http://www.sivajiperavai.com/press/VietnamVeeduDramaInvitationNellai07-11-2010.jpg

[/html:6c478dc0bc]

Thanks

pammalar
3rd November 2010, 03:25 AM
அன்னை இல்லத்தின் நாயகிக்கு ஆத்மார்த்தமான அஞ்சலி

" 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'னு கண்ணதாசன் பாடுவாரே, அந்த 'வரம்' அண்ணனுக்குக் கிடைக்கணும்ங்கிறதுக்காகவே, நீங்க அவருடைய அக்கா மகளா ஒரு குக்கிராமத்துல அறுபத்தெட்டு வருஷங்களுக்கு முந்திப் பொறந்தீங்க.

'இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று' - கண்ணதாசன் பாடுன இந்தப் பாட்டும் ஒங்களுக்குப் பொருந்திடுச்சு. உள்ளந்திறந்து சொல்றேன், 'மருமகளா... வீட்டுக்கு வந்த மகாலட்சுமி'னு சொல்வாங்களே, சத்தியமா அது நீங்க தான்.

1952-ல், பன்னன்டு அல்லது பதிமூணாவது வயசுல, இருபத்து மூணு வயசான அண்ணன் ஒங்க கழுத்துல மாங்கல்யம் புனைஞ்சு, ஒங்க கைய புடிச்சதுக்கப்பறந்தான், கமலாங்குற பேர்கொண்ட தாமரையான ஒங்க முகத்தைப் பாத்து, கணேசன்ங்கிற அந்த சிவாஜி உதிச்சு வெளிச்சத்துக்கு வந்தாரு! நீங்க அவர் வீட்டுக்கு வந்து விளக்கேத்தி வெச்சதுக்கப்பறந்தான் 'பராசக்தி' வந்து அவர் வாழ்க்கையில விளக்கேத்தி வச்சா. நீங்க புன்னகை புரியப் புரிய அவருக்குப் புகழ் பொங்குச்சு! நீங்க சிரிக்கச் சிரிக்க அவருக்குச் செல்வம் சேந்துச்சு!

பொழுது விடிஞ்சதிலிருந்து ராத்திரி தூங்கற வரைக்கும் அவரு, 'கமலா, கமலா'ன்னு கூப்பிட்டதை எண்ணிப்பாத்தா, குறைஞ்சது நானூறு ஐநூறு தடவையாவது இருக்கும். எனக்குத் தெரிஞ்சு அவர் ஒங்களைக் கட்டிக்கிட்டதிலேந்து நிரந்தரமா ஒங்களை விட்டுப் பிரிஞ்சு போன அந்த நாள் வரைக்கும், நீங்க இல்லாம வீட்டுல அவர் இயங்கினதே இல்லை. இயங்கவும் அவரால முடியாது.

அவர் ஒங்களைக் கோவிச்சுக்கிட்டதை ஒருநாளும் நான் பார்த்ததே இல்லை. ஒங்களைக் குறை சொன்னதாகக் கேள்விப்பட்டதும் இல்லை. 'மாமா, மாமா'ன்னு எப்போ பாத்தாலும் ஒரு குழுந்தை மாதிரி அவரையே சுத்தி வந்துகிட்டிருப்பீங்க! ஒரு மனிதனுக்கு நல்ல மனைவி மட்டும் அமைஞ்சிட்டா, அவ பாதி தாய்க்குச் சமம்! நீங்க அவருக்குப் பண்புள்ள மனைவியா மட்டும் இல்லாம பாசமுள்ள தாயாவும் இருந்து கவனிச்சிக்கிட்டீங்க.

பேரன் பேத்திங்க எடுத்ததுலேர்ந்து பேத்தியோட கல்யாணம் வரைக்கும் பாக்க வேண்டியதையெல்லாம் பாத்து சந்தோஷப்பட்டு, அண்ணன் இல்லேங்குற ஒரே ஒரு குறையோட மட்டும் ஆறு வருஷங்களா வாழ்ந்துக்கிட்டிருந்த எங்கள் அன்புள்ள கமலா அம்மா! அண்ணனைப் பாக்குறதுக்காக ஆகாயத்துக்குப் போய்ட்டீங்க! போயிட்டு வாங்க...! ஒங்க பேரன்-பேத்தி யாரோட கருவுலேயாவது நீங்க ரெண்டு பேரும் உருவாகி, மறுபடியும் ஒங்க அன்னை இல்லத்துக்கு வாங்க. போயிட்டு வாங்கம்மா...!"

- திரை இலக்கிய விற்பன்னர் ஆரூர்தாஸ் 11.11.2007 தேதியிட்ட 'ஜூனியர் விகடன்' இதழில் கமலா அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எழுதிய கட்டுரையிலிருந்து (சில வரிகள் மட்டும் மேலே கொடுக்கப்பட்டுள்ளது).

இன்று 2.11.2010 நடிகர் திலகத்தின் மனைவி கமலா அம்மாள் அவர்களது மூன்றாம் ஆண்டு நினைவு தினம்.

பக்தியுடன்,
பம்மல் ஆர்.சுவாமிநாதன்.

saradhaa_sn
3rd November 2010, 01:10 PM
டியர் பம்மலார்,

ஆரூர்தாஸ் அவர்களின் அஞ்சலிக்கட்டுரை இதயத்தை நெகிழ வைக்கிறது. அதனைப்பகிர்ந்துகொண்ட உங்களுக்கு நன்றி.

HARISH2619
3rd November 2010, 02:03 PM
ஒரு சிறு இடைவேளைக்குப்பிறகு மீண்டும் கலக்க வந்திருக்கும் பம்மலார் அவர்களை துள்ளலுடன் வரவேற்க்கிறோம்.

முரளி சார்,
வழக்கம்போல் தங்கள் ஆய்வுக்கட்டுரை மிகவும் அருமை.தாங்கள்தான் நடிகர்திலகத்தின் ரசிகர்திலகம் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள்

HARISH2619
3rd November 2010, 02:08 PM
நடிகர்திலத்தின் 83வது பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடக மாநில சிவாஜி பிரபு ரசிகர்மன்றத்தின் சார்பாக கர்நாடக தமிழ் சங்கத்துக்கு ஒரு கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்பட்டது.இதைப்பற்றிய விரிவான செய்தி மற்றும் புகைப்படத்தை அப்லோட் செய்யும்படி திரு.குமரேசன்பிரபு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

SHIV
3rd November 2010, 03:28 PM
Dear NT Fans

Wishing you all a very Happy, prosperous and safe DEEPAVALI.

Pl dont miss Mr.Prabhu's program in Jaya TV at 3.30pm on Diwali day.

Regards

Shiv

Mahesh_K
3rd November 2010, 03:49 PM
இரு மலர்கள். இந்த படத்தின் பாடல் காட்சிகளிலெல்லாம் நமது ராகேஷ் அடிக்கடி சொல்வது போல் பல nuances நடிகர் திலகம் செய்திருப்பார். மன்னிக்க வேண்டுகிறேன் பாடலில் வரும் வாயசைப்பு பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோம். அது போல் கடவுள் தந்த இரு மலர்கள் பாடல் காட்சி. இந்த பாடல் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். இனம் புரியாத சோகத்தை மனதில் விதைக்கும் மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை, வாலியின் முத்தாய்ப்பான வரிகள், இனிமையே உருவான சுசீலா, ஈடு கொடுக்கும் ஈஸ்வரி, திரையில் நாட்டியப் பேரொளியும் புன்னகை அரசியும் அவரவர் பாணியில் அழகுற செய்திருப்பார்கள்.

ஆனால் நான் சொல்ல வந்தது நமது நடிகர் திலகம் பற்றி. இந்தப் பாடலை எப்போது பார்த்தாலும் இரண்டு விஷயங்கள் பளிச்சென்று தெரியும், ஒன்று நடிகர் திலகத்தின் புற தோற்றம் மற்றொன்று அவரின் உடல் மொழி எனப்படும் body language. புற தோற்றத்தைப் பொறுத்த வரை ஆள் அவ்வளவு அழகாக இருப்பார். மோகன் குறிப்பிட்ட விகடனில் எழுதியது போல படு இளமையாக ஸ்லிமாக இருப்பார். அந்த பால்கனியின் கைப்பிடி ரைல்ஸ்-ஐ பிடித்தப்படி நிற்கும் அந்த போஸ் ஒன்றே போதும்.

Body language - அந்த பாத்திரம் [சுந்தர்] தன் காதலி மேல் தீராக் கோபம் கொண்டிருக்கின்றான். தன்னிடம் அவ்வளவு வாக்குறுதி கொடுத்தவள் வார்த்தை தவறி விட்டாளே என்ற ஆத்திரம், அவளை வாழ்க்கையில் மீண்டும் சந்திக்க நேர்ந்த போது அந்த கோவம் ஆத்திரம் எல்லாம் ஒன்று சேர்ந்து வார்த்தைகளால் அவளை குத்தி கிழித்த பிறகும் அடங்காமல் அவளைப் பார்க்கும் போதெல்லாம் அது முகத்தில் பிரதிபலிக்கிறது.
அவளாலும் நடந்த உண்மையை சொல்ல முடியவில்லை. தன் நிலையை பாடலாய் வடிக்கிறாள் அதை கேட்கும் போதும் நாயகனுக்கு கோபம் தணியவில்லை என்பது அந்த முகத்தில் தெரிகிறது.

அந்நிலையில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினார்கள் என்பதையோ முன்பு நடந்தது என்னவென்றோ தெரியாத நாயகனின் மனைவி அவளுக்கு ஆறுதல் சொல்லி பாடுகிறாள்.

இந்த காட்சியை சற்று கூர்ந்து நோக்கினால் நான் முதலில் சொன்ன nuance தெரியும். கதைப்படி நாயகனுக்கு தன் மனைவி பாடப் போகிறாள் என்று தெரியாது. ஆனால் காட்சிப்படி சிவாஜி என்ற நடிகருக்கு விஜயா என்ற நடிகை வாயசைக்க போகிறார் என்று தெரியும். தெரிந்த ஒன்றை தெரியாதது போல் செய்ய வேண்டும், பார்வையாளனும் அதை உணர வேண்டும். இப்போது கவனியுங்கள். இரண்டாவது சரணம் தொடங்குகிறது

அலையில் மிதந்த மலர் கண்டு

அதன் மேல் கருணை மனம் கொண்டு

குரல் ஒலித்தவுடன் கிழே டீச்சரை பார்க்கும் நடிகர் திலகம், டீச்சர் பாடவில்லை குரல் தன் பக்கத்திலிருந்து வருகிறது என்று புரிந்து தன் மனைவியை பார்க்கும் நடிகர் திலகம், அந்த ஒரு வினாடிக்குள் அவர் முகத்தில் வந்து போகும் அந்த திகைப்பு +ஆச்சரியம், எப்படி இவரால் மட்டும் முடிகிறது? என்று பல முறை நான் வியந்து போவேன்.

பொதுவாகவே சினிமாவில் நடிகனுக்கு தெரியும், கதாபாத்திரத்திற்கு தெரியாது என்பதுதான் அடிப்படை என்றாலும் அதை இவர் அளவிற்கு convincing-ஆக செய்தவர்கள் எத்தனை பேர்?

பல முறை மனதில் தோன்றிய இந்த எண்ணத்தை எழுத்தில் வடிக்க வேண்டும் என்பது இன்று காலை இந்த பாடலை டி.வியில் பார்க்க நேர்ந்த போது தோன்றியது.

அன்புடன்

நண்பர் ஜெய்கணேஷ் 1000 பாடல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார். சிலர் சில ஆல்பங்களை அப்படியே எடுத்துக் கொள்ளலாம் என்று அங்கே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த லிஸ்டிற்கு எது suit ஆகுமோ இல்லையோ, இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் நிச்சயமாக தேர்வு பெறும்

:clap: :clap: எப்படி முரளி சாரால் மட்டும் இவ்வளவு நுணுக்கமாக Observe செய்ய முடிகிறது என்று நானும் வியக்கிறேன்.

KCSHEKAR
4th November 2010, 04:31 PM
Thanks Mr.Nov for posting the Tirunelveli Funtion Invitation.

guruswamy
4th November 2010, 06:30 PM
MY DEAR NT FANS,

Hope the festival of lights enlightens your home and heart with peace and serenity..

May the Goddess of wealth and the God of Knowledge bless you all with their choicest blessings. On this Diwali and always!

On this auspicious festival of lights,
May the glow of joy,
Prosperity and happiness
Illuminate your life and all your homes.....

Wishing you loads of joy and happiness on Diwali......

JAIHIND
M. Gnanaguruswamy

RC
4th November 2010, 07:05 PM
There is another article in this week's Ju.Vi on S.A. Kannan's book. Very touching...

RAGHAVENDRA
4th November 2010, 08:47 PM
தீப ஒளித்திருநாளாம் இன்று நடிகர் திலகம் நம்மிடையே உயிருடன் இல்லையென்றாலும் அவர் நடித்த படங்களின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தீபாவளி என்றாலே இனிப்பு, புத்தாடை இவற்றுடன் நடிகர் திலகத்தின் புதுப்பட வெளியீடு என்பது தான் நமது கலாச்சாரம் என்றாகி விட்டது. இப்படி எத்தனை ஆண்டுகள். இன்றும் நாம் அவருடன் தீபாவளி கொண்டாடுவோமே

தாயெனும் செல்வங்கள்
தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி வீசட்டும்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்

நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு
நாள்தோறும் பரிமாற அன்னம் உண்டு
எப்போதும் ஒளி வீசும் கண்கள் உண்டு
இல்லை என்றென்னாத உள்ளம் உண்டு

சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்

பாவங்கள் இல்லையென்று நீராடுங்கள்
பண்பாடும் புகழ் என்று மலர் சூடுங்கள்
சமுதாயம் வாழ்கென்று இசை பாடுங்கள்
எதிர்காலம் உண்டென்று நடமாடுங்கள்

எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம்
இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்
தாயாக மகனாக உறவாடலாம்
தந்தைகள் தங்கைகள் துணையாகலாம்

சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்

நடிகர் திலகம் தீபாவளி கொண்டாடும் காட்சி (http://www.youtube.com/watch?v=AuUL1hgBFg4)

அனைவருக்கும் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ராகவேந்திரன்

REQUEST TO THE MODERATOR: PLEASE EMBED THE ABOVE VIDEO HERE IF POSSIBLE. THANK YOU.

Murali Srinivas
4th November 2010, 11:10 PM
[tscii:b8f0e05f29]சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் தங்க மீன் என்ற இணையதள இதழில் வெளியான ஒரு கட்டுரை. நன்றி ஜோ!

எப்பவும் எனக்கு 'சிவாஜி அங்கிள்'தான்

மைதிலி தேவி


அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும் . என் தந்தையின் கைகளைப் பற்றியபடி விக்டோரியா அரங்க மேடையின் பின்புறத்தில் நடந்து வந்து கொண்டிருந்தேன் . 'அதுதான் அந்தச் சம்பவம்’ அரங்கேறிய மேடை . அங்கு கடுகடுப்பான முகத்தோடு ஒரு மனிதர் ஆழ்ந்த சிந்தனையில் நின்று கொண்டிருந்தார் . நான் 'ஆட்டோகிராப்ஃ' நோட்டை இறுகப் பற்றியவாறு அவரை நோக்கி நடந்து, அவரிடம் நோட்டை நீட்டினேன். அந்த மனிதர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!


நடிப்பில் இமயம் . சிம்மக் குரலுக்குச் சொந்தக்காரர். அவர் பேசிய வசனங்கள் திரை அரங்குகளை அதிர வைத்து, வானையும் கிழித்துச் செல்லும் கரகோஷத்தைப் பெற்றுத் தரும் . அத்தகையவர், என்னைக் கூர்ந்து பார்த்தார். ஏதோ ஒரு ஆத்திரத்தில் சில வரிகளைக் கிறுக்கிவிட்டுப் புத்தகத்தை என் கைகளில் திணித்தார்.


எட்டே வயதான எனக்கு அந்த எரிச்சல் ஒரு பெரிய விஷயமாகப் படவில்லை. எல்லாமே பிரமிப்பாக இருந்தது. ஆனால் , மீண்டும் நடிகர்திலகத்தை சந்தித்த போது , அவர் என்னை நினைவு கூர்ந்து மன்னிப்பு கேட்டார் . “ ஸாரிம்மா, இந்த 'மேக்கப்'பால் முகத்தில் ஒரே அரிப்பு.. எரிச்சல். அதோடு மேடையில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருந்தேன் . அது என்னைப் பார்க்க சரியான நேரமில்லைம்மா ,” என்று கூறிப் புன்னகைத்தார். அந்த அன்பில், புன்னகையில், நான் வாயடைத்துப் போனேன்


வாழ்க்கையில் நாம் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம். அவர்களில் நம்முடன் இரத்த பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வோர் யார் என்பதை இறைவன் தீர்மானிக்கிறான் . 'தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்' என்று சொல்வார்கள். ஆனால் மிகவும் அரிய சந்தர்ப்பங்களில் , இரத்த சம்பந்தம் இல்லா விட்டாலும் , அத்தகைய உறவுகளை விதிவசமாக நாம் சந்தித்து அன்பு காட்டும் வாய்ப்பு கிட்டும் . அவர்கள் நம் மீது காட்டும் பாசத்தையும் நேசத்தையும் காண்கையில் , நம் உறவுகள் என்று கூறிக் கொள்வோர் கூட அவமானத்தில் தலை குனிவர் .


அப்பேற்பட்ட ஓர் அன்பு உள்ளத்தைச் சந்தித்த கௌரமும் பெருமையும் எனக்கு உண்டு. ஆமாம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் அவர் . . . நடிகர் என்ற அந்நிய மனிதனாக அல்லாமல், 'சிவாஜி அங்கிள்' என்று என்னால் உரிமையோடு அழைக்கப்படுபவர். எங்களுக்குள் இருந்த பரஸ்பர அன்புக்கும் சம்பாஷணைகளுக்கும் சான்றாகப் பற்பல சந்தர்ப்பங்கள் எழுந்திருக்கின்றன. அவருடைய அன்புக்குப் பெரும் சான்றாக, என் மனம் உருகிக் கண்கலங்க வைத்த ஒரு சம்பவம் குறிப்பாக உள்ளது.
அது தமிழகத்தில் நடந்த என்னுடைய திருமணம். அதற்காக நாங்கள் சிங்கப்பூரில் இருந்து இந்தியா போயிருந்தோம். அது, என் தந்தை இல்லாத சமயம். என் குடும்பத்தில் எல்லோரும் அவர் இல்லாத வெறுமையை உணர்ந்தோம். ஆனால், சிவாஜி அங்கிள் அந்தக் குறையே தெரியாதவாறு எல்லா விசேஷங்களையும், தாலிப் படையலிலிருந்து மாப்பிள்ளை அழைப்பு வரை, முன்நின்று செய்தார். திருமணத்தன்று, நடிகர் திலகம் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராக நாற்காலியில் அமரவில்லை. குடும்பத்தில் ஒருவராகக் கல்யாண மேடையில் நின்றிருந்தார் . எனக்குப் பேச வார்த்தைகள் இல்லை.


அதையும் விட , நான் மறக்கவே இயலாதபடி ஒன்று நடந்தது. திருமணத்துக்கு மறுநாள் காலையில், நடிகர் திலகம் எங்கள் வீடு தேடி வந்து, ஒரு தந்தையின் அக்கறையோடு என்னிடம்,” சந்தோஷமாக இருக்கிறாயாம்மா ?“ என்று நலம் விசாரித்துச் சென்றதை என்னால் ஏழேழு ஜென்மங்களுக்கும் மறக்க இயலாது .


என் சொந்த பந்தங்கள்கூடச் சிங்கப்பூர் திரும்புவதில்தான் அதிகக் கவனத்துடனும் ஆர்வமாகவும் இருந்தார்கள் . இந்த சிவாஜி என்கிற இந்த அற்புத மனிதர் பெண் மனம் புரிந்து, அவருடைய முக்கிய அலுவல்களுக்கு மத்தியில் நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்று தெரிந்து கொள்வதற்காக நேரம் ஒதுக்கியிருக்கிறார் என்றால், அவருடைய உயர்ந்த உள்ளத்தை என்னவென்று சொல்வது ? நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - நடிப்பில் மட்டும் சிகரமல்ல, குணத்திலும்தான்! அவர் என்றைக்குமே எனக்குச் சிவாஜி அங்கிள்தான் - அவர் மீது நான் கொண்டுள்ள நேசம் அத்தகையது

http://www.thangameen.com/ContentDetails.aspx?tid=67

அன்புடன்[/tscii:b8f0e05f29]

J.Radhakrishnan
5th November 2010, 12:08 AM
Dear Mr.Murali,

Thanks for your information, I am not control my tear (கண்ணீர்)after your message.

Murali Srinivas
5th November 2010, 12:31 AM
இரு மலர்கள் பாடல் காட்சியைப் பற்றிய எனது பதிவை பாராட்டிய சந்திரசேகர், சுவாமி, சாரதா, செந்தில், மகேஷ் மற்றும் ராதாவிற்கு நன்றி.

சாரதா,

அன்னமிட்ட கைகளுக்கு பாடல் பற்றிய தங்கள் பதிவு மறக்க கூடியதா என்ன? அதை இரு மலர்கள் படத்தைப் பற்றிய எனது விமர்சனத்திலும் சொல்லியிருந்தேனே!

இந்த திரியிலும் மற்றும் இந்த ஹப்பிலும் பங்கு பெறும் அனைத்து நல் இதயங்களுக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்!

அன்புடன்

Murali Srinivas
5th November 2010, 12:41 AM
அன்னையின் ஆணை - Part I

தயாரிப்பு - பாரகன் பிக்சர்ஸ்

கதை,திரைக்கதை, இயக்கம் - Ch.நாராயணமூர்த்தி

வெளியான நாள் - 04.07.1958

முதல் காட்சி ஒரு மருத்துவமனை. பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண். ஒரு மணி நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என சொல்லும் டாக்டர். காட்சி மாற சிறைச்சாலை. கைதி சங்கர் தன் மனைவியை காண துடியாய் துடிக்கிறான். அனுமதி இல்லை. எனவே சிறையிலிருந்து தப்பிக்கிறான். போலீஸ் துரத்துகிறது. இறுதியில் மருத்துவமனையின் வாசலில் அவனை சுட்டு விட, அப்போதுதான் பிறந்த குழந்தையை பார்த்து விட்டு, தன் மனைவி தேவகியிடம் தன் மேல் விழுந்த களங்கத்தை தன் மகன் மூலமாக துடைக்க வேண்டும் என்று உறுதி வாங்கிக் கொண்டு இறந்து போகிறான் சங்கர்.

ஊரில் பெரிய மனிதர் பரோபகாரம். வெளியில் பெரிய மனிதர் வேடம் போட்டாலும் நிழல் வேலைகளில் ஈடுபடுபவர் என்பது அடுத்த காட்சியில் பதிவு செய்யப்படுகிறது. தொழிலில் தன் பங்கை கேட்கும் கூட்டாளியை கூசாமல் சுட்டுக் கொள்கிறார் பரோபகாரம். அவருக்கு மனைவி இல்லை. ஒரே மகள் பிரேமா. அவருக்கு மிகுந்த செல்லம்.

கணவன் இறந்த பிறகு தையல் தொழில் செய்து தன் மகனை படிக்க வைக்கிறாள் தாய். மேற்படிப்பிற்காக மதுரை செல்ல வேண்டும் என்ற நிலையில் போக மாட்டேன் என்று சொல்லும் மகனை அவனின் தந்தைக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருப்பதாகவும் அதற்காக போயே தீர வேண்டும் என்று தாய் தேவகி சொல்ல மகன் கணேஷ் ஒத்துக் கொண்டு படிக்க போகிறான்.

இப்போது கதையில் ஒரு புதிய பாத்திரம். பெயர் பாலு. ஒரு அலுமினிய தொழிற்சாலையில் லீகல் அட்வைசர் வேலையில் இருக்கும் அவர் டான்ஸ் பள்ளி நடத்தும் சுந்தரி வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார். சுந்தரியின் அண்ணன் அவளுடன் வசிக்கிறான். பாலுதான் பரோபகாரத்திற்கு வக்கீல். அது மட்டுமல்ல கொடுக்கல் வாங்கல் மற்றும் நிழலான தொழிலில் பாலுவிற்கு பங்கும் இருக்கிறது. ஆனால் மற்றவர்களை அதட்டி மிரட்டுவது போல் பரோபகாரத்தால் பாலுவை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவனிடம் அமைதியாக நடந்துக் கொள்கிறார். அவரின் மகள் பிரேமா மேல் ஒரு கண் வைக்கிறான் பாலு.

பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி படிப்பு படிக்கும் போது கல்லூரி விழாவில் சாம்ராட் அசோகன் வேடத்தில் நடிக்கிறான் கணேஷ். விழாவிற்கு தலைமை தாங்கும் செல்வந்தர் கருணாகரன் கணேஷ் நடிப்பை பார்த்து பெரிதும் மனம் மகிழ்ந்து தன் வீட்டிற்கு அழைக்கிறார். அவர் வீட்டிற்கு செல்லும் கணேஷ் அங்கே தன் தந்தை சங்கரின் படங்கள் மாட்டப்பட்டிருப்பதை பார்த்து யாரென்று கேட்க, அவர் சொல்லும் விவரங்கள் மூலமாக காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறிய தன் தந்தையின் வீடுதான் அது என்றும், செல்வந்தர் கருணாகரன் தன் தாத்தா என்பதையும் புரிந்துக் கொண்டு அவருக்கும் அதை வெளிப்படுத்துகிறான். அவர், கணேஷின் தாயை அழைத்து வர சொல்ல தாயை பார்க்க வரும் மகனுக்கு தாயின் நோயாளி கோலம் அதிர்ச்சியளிக்கிறது. தான் அதிக காலம் உயிரோடு இருக்க மாட்டோம் என்று உணரும் அன்னை தன் கணவன் சிறைக்கு எப்படி சதி செய்து அனுப்பப்பட்டான் என்பதை விவரிக்கிறாள்.

பரோபகாரத்திடம் வேலை செய்யும் சங்கரை அலுவலக வேலையாக வெளியூருக்கு அனுப்பி வைத்து விட்டு தனியே இருக்கும் அவன் மனைவியை காண வரும் பரோபகாரம், தன்னை காப்பாற்றிக் கொள்ள கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டும் தேவகி,பயந்து ஓடும் பரோபகாரம், ஊரிலிருந்து வந்தவுடன் நடந்ததை அறிந்து ஆவேசமாக பரோபகாரத்தை காண செல்லும் சங்கர், அங்கே ஏற்படும் தள்ளுமுள்ளு, சண்டையை விலக்கி விட வரும் கூர்காவை தானே சுட்டு கொலை செய்து விட்டு பழியை சங்கர் மேல் போடும் பரோபகாரம், நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு, அதனிடையில் வரும் பிரசவம், சங்கர் தப்பிக்க முயற்சி செய்து போலிசின் குண்டடிப்பட்டு இறப்பது, இவை அனைத்தும் பிளாஷ் பாக்-ல் நம் கண் முன்னே விரிகின்றன. மரண தருவாயில் அவன் தந்தையை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவனை பழி வாங்கிய பிறகே அவன் எந்த சுகத்தையும் தேட வேண்டும் என்று ஆணையிட்டு விட்டு உயிர் துறக்கிறாள் அவன் அன்னை தேவகி.

இதற்கிடையில் பரோபகாரத்தின் பெண் பிரேமா படிப்பை முடித்து விடுகிறாள். அவள் தாயில்லாப் பெண் என்பது முதலிலே சொல்லப்பட்டு அதன் காரணமாக அவள் மேல் அதிக பாசம் வைத்திருக்கிறார் அவள் தந்தை.அந்த ஊருக்கு வந்து சேரும் கணேஷ் வழியில் வைத்து பிரேமாவை கண்டு அறிமுகமாகிறான். பரோபகாரத்தை சென்று சந்திக்கும் கணேஷ் தன்னை ஒரு பிசினஸ்மானாக அறிமுகப்படுத்திக் கொள்கிறான். பரோபகாரத்தின் வீடு ஒன்றை அவரிடமிருந்து வாங்குகிறான்.இது பாலுவிற்கு பிடிக்கவில்லை. அதை பரோபகாரத்திடம் வெளிப்படுத்துகிறான்.

பிரேமாவிற்கு கணேஷை பற்றி மனதுக்குள் ஒரு காதல் எண்ணம் ஏற்படுத்துகிறது. கணேஷிற்கும் விருப்பம் இருந்தாலும் அன்னைக்கு செய்த சத்தியம் மனதில் இருப்பதனால் அதை கணேஷ் நிராகரிப்பது போல் நடந்து கொள்கிறான்.

இதற்கிடையில் பாலுவிடம் மனதை பறி கொடுத்த சுந்தரி தன்னை கல்யாணம் செய்துக் கொள்ள கேட்க அவளை அடைவதற்காக அவன் ஒப்புக் கொண்டு விட்டு ஆனால் சிறிது காலம் கழிந்த பிறகே திருமணம் என்று சொல்லி விடுகிறான்.

தன் பங்கு பணத்தை பற்றி பரோபகாரத்திடம் பேசும் பாலு அவர் மகள் பிரேமாவை கல்யாணம் செய்து தரும்படி பரோபகாரத்திடம் வற்புறுத்த அவர் மறுக்கிறார். அவன் அவரின் நிஜ முகத்தை உலகத்திற்கு அம்பலப்படுத்தி விடுவேன் என மிரட்டுகிறான்.

இந்நிலையில் கணேஷ் பரோபகாரத்திடம் போன் செய்து மாலை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைக்கிறான். தானே நேரில் வந்து அழைத்து செல்வதாகவும் சொல்கிறான். சொன்னது போல் வந்து கூட்டி செல்கிறான். அங்கே சங்கர் மற்றும் தேவகி புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடையும் பரோபகாரம் அங்கிருந்து உடனே கிளம்ப முயற்சி செய்ய கணேஷ் தான் யார் என்பதை வெளிப்படுத்துகிறான். அத்துடன் பரோபகாரத்தை தன் வீட்டில் உள்ள பாதாள சிறையில் அடைக்கிறான். கணேஷ் வீட்டில் வேலை பார்க்கும் ஒரு ஊமை பெண்ணிற்கு மட்டுமே இந்த விஷயம் தெரியும். அவள்தான் சாப்பாடு கொடுப்பது போன்ற வேலைகளை செய்வது. தன்னை விட்டு விடும்படி கெஞ்சும் பரோபகாரத்திடம் தன் தந்தை சிறையில் அனுபவித்த அதே 7 வருட தண்டனை காலத்தை அவரும் அனுபவித்தே தீர வேண்டும் என்று சொல்கிறான் கணேஷ்.

தந்தையை காணாமல் தேடுகிறாள் பிரேமா. அவளுக்கு உதவி செய்வதாக வாக்களிக்கிறான் பாலு. ஆனாலும் துப்பு ஒன்றும் கிடைக்கவில்லை. தந்தையின் டயரியை தற்செயலாக பார்க்கும் பிரேமா, அதில் மாலை கணேஷ் வீட்டிற்கு போகப் போவதாக எழுதி வைத்திருப்பதை படிக்கிறாள். உடனே கணேஷ் வீட்டிற்கு செல்கிறாள். அவள் சொல்வதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் கணேஷ் அவள் தந்தை தன் வீட்டிற்கு வரவே இல்லை என்று சாதித்து விடுகிறான். ஏமாற்றத்துடன் திரும்ப செல்லும் அவள் மீது முதன் முறையாக கணேஷிற்கு காதலுடன் கூடிய ஈர்ப்பு வருகிறது.

தந்தையை காணாமல் தவிக்கும் பிரேமாவிடம் பாலு அவள் தந்தை சட்டத்திற்கு புறம்பாக பல வேலைகள் செய்ததாகவும் அதன் காரணமாக போலீஸ் அவரை தேடுவதாகவும் தன்னால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும், அதற்கு பதிலாக தன்னை பிரேமா கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறான்.

கல்யாணத்தன்று விஷயம் தெரிந்து பாலுவை தடுக்கும் சுந்தரியையும் அவள் அண்ணனையும் உதாசீனப்படுத்தி விட்டு கல்யாணத்திற்கு செல்கிறான் பாலு. விவரம் அறிந்து சுந்தரியையும் கூட்டிக் கொண்டு கல்யாண வீட்டிற்கு வரும் கணேஷ் நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அதே மேடையில் பாலு சுந்தரி திருமணத்தை நடத்தி வைக்கிறான்.

தந்தையையும் காணவில்லை, திருமணமும் நின்று போய் விட்டது என கலங்கும் பிரேமாவை திருமணம் செய்துக் கொள்ளும் கட்டாயம் ஏற்படுகிறது கணேஷிற்கு. திருமணம் முடிந்து தன் வீட்டிற்கு அவளை அழைத்து வந்தாலும் தாயிடம் செய்த சத்தியம் காரணமாக உறவை தவிர்க்கிறான். அவள் இப்போது இருக்கும் மனநிலையில் தன்னால் அவளுக்கு தொந்தரவு ஏற்பட கூடாது என்று அதற்கு காரணமும் சொல்கிறான்.

பாதாள சிறையில் பரோபகாரத்தை தினசரி சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கும் கணேஷ் அவர் மகளை திருமணம் செய்தது பற்றி சொல்லாமல் மறைத்து விடுகிறான். மகளைப் பார்க்க ஏங்குகிறார் தந்தை.

வீட்டில் உள்ள ஒரு மேஜையை தற்செயலாக பிரேமா திறக்க அதில் காணாமல் போன அன்று அவள் தந்தை அணிந்திருந்த சட்டை மறைத்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்து விடுகிறாள். இதை பற்றி கணவன் வந்தவுடன் அவனை ஆத்திரத்தில் கேள்வி கேட்டு துளைத்தெடுக்க கணேஷ் அவளை அடித்து விடுகிறான்.

அந்த வீட்டிற்கு வந்தது முதல் ஏதோ ஒரு மர்மமான சூழல் தன்னை சுற்றி நிகழ்வது போல் அவளுக்கு தோன்றுகிறது. வீட்டிலேயே சில இடங்களுக்கு தான் செல்ல விடாமல் தடுக்கப்படுவது, ஊமை பெண்ணின் நடவடிக்கைகள் அவளுக்கு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. தன் கணவனை பிரேமா சந்தேகப்பட தொடங்குகிறாள். பூட்டி வைத்திருக்கும் அறைக்கு பக்கத்தில் அவள் செல்வதை பார்க்கும் ஊமை வேலைக்காரி சண்டை போட மிகுந்த கோவமும் வருத்தமும் அடைகிறாள் பிரேமா.

இதற்கிடையில் தான் அடைப்பட்டிருக்கும் சிறையிலிருந்து தப்பித்து செல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் பரோபகாரம் ஒரு நாள் தப்பித்து சென்று விடுகிறார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் கணேஷை தேடி போலீஸ் வருகிறது. தன் தந்தையை காணவில்லை என்றும் அதற்கு காரணம் தன் கணவன்தான் என்று பிரேமா புகார் கொடுத்ததன் பேரில் கணேஷ் கைது செய்யப்படுகிறான். அவன் மேல் பரோபகாரத்தை கொலை செய்ததாக வழக்கு தொடுக்கப்படுகிறது.

பரோபகாரத்தை கடத்தி சென்று அடைத்து வைத்ததை ஒப்புக் கொள்ளும் கணேஷ் ஆனால் அவரை கொலை செய்யவில்லை என்று வாதிடுகிறான்.

தப்பித்து சென்ற பரோபகாரம் என்ன ஆனார்? உயிருடன் இருக்கிறாரா? அவரது சொத்துக்களை அபகரிக்க யாரவது கடத்தினார்களா? இதன் பின்னணியில் பாலுவின் பங்கு என்ன? தன் கணவன் உண்மையிலே நிரபராதியா? இதற்கு பதில் தேட புறப்படுகிறாள் பிரேமா. அந்த கேள்விகளுக்கான விடை வெள்ளித்திரையில்.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
5th November 2010, 12:53 AM
அன்னையின் ஆணை- Part II

இதை ஒரு one dimension movie என்றே சொல்லலாம். revenge - பழி வாங்குதல் என்ற ஒரு உணர்ச்சியின் மேல் எழுப்பப்பட்ட ஒரு கதை-திரைக்கதை. இன்றைக்கு 52 வருடங்களுக்கு முன்பு இப்படிபட்ட one dimensional படங்கள் வெகு அபூர்வமாய் மட்டுமே வந்திருக்கின்றன. அன்றைய சூழலில் பல்வேறு உணர்ச்சிகளையும் உள்ளடக்கிய கதைகள் அமைந்த திரைப்படங்களே வெளிவந்துக் கொண்டிருந்த காலத்தில் இப்படி ஒரு கதையை படமாக்கியதற்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

கிளாஸ் ஆடியன்ஸ் எனப்படும் உயர் தட்டு ரசிகர்கள் பலருக்கும் பிடித்த நடிகர் திலகத்தின் படம் இது என்றே சொல்லுவார்கள்.[ஆனால் நமக்கு நேரிடையான அனுபவம் மூலமாக நடிகர் திலகம் என்பவரை இந்த கிளாஸ் மட்டுமல்ல மாஸ் ஆடியன்ஸும் ஒரு போல ரசிப்பார்கள் என்பது தெரியும்].

இந்தப் படத்தில் இரண்டு வேடங்கள். அப்பா சங்கர், மகன் கணேஷ். அப்பாவின் ரோல் ஒரு சிறப்பு தோற்றம் என்ற அளவிற்கு மட்டுமே என்ற போதிலும் அதிலும் வித்தியாசம் காட்டியிருப்பார் நடிகர் திலகம். மனைவியிடம் தவாறாக நடந்தது கொள்ள முயற்சித்த முதலாளியிடம் ஆத்திரத்துடன் வந்து பேசும் காட்சியிலே அது தெரியும்.

மகன் கணேஷ் கதாபாத்திரம் படத்தின் உயிர் நாடி. முதலில் கல்லூரி மாணவனாக வரும் போது நார்மலாக இருக்கும் அவர் தன் தாயின் தவிப்பையும் செய்யாத தவறுக்காக தந்தை அனுபவித்த சிறை தண்டனையைப் பற்றி தெரிந்துக் கொண்டவுடன் அவர் முகத்திலும் அவர் உடல் மொழியிலும் வரும் மாற்றம், அந்த பழி வாங்கும் உணர்வின் தீவிரத்தை இறுதி வரை maintain செய்வதை பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். ரங்காராவ் யார் தன் mission என்ன என்று தெரிந்தவுடன் அவர் முதலில் ரங்கராவிடம் காட்டும் மரியாதை, அவருக்கே உரித்தான அந்த பணக்கார கெத்து, ரங்காராவ் தன் மகளை அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லும் போது அதை நாசூக்காய் தவிர்ப்பது, தன் வீட்டிற்கு சென்றவுடன் முதலில் இயல்பாக பேசிக் கொண்டிருந்து விட்டு அதன் பிறகு தன் தாய் தந்தை படங்களை பார்த்தவுடன் மிரள ஆரம்பிக்கும் ரங்காராவிடம் அவர் பேசும் தொனி கொஞ்சம் கொஞ்சமாக மாறும் இடத்தை சொல்வதா, ரங்காராவை பாதாள சிறையில் ஒவ்வொரு முறை சந்திக்கும் போது அந்த கண்களில் தெரியும் வெறி, வார்த்தைகளில் தெறிக்கும் குரூரம், இறுதி வரை அடங்காத ஆத்திரம் இவற்றை வர்ணிப்பதா இவை எல்லாமே நடிகர் திலகத்தின் வித்தியாசமான முகத்தைக் காட்டும்.

ரங்காராவுடன் அவரது interaction இப்படியென்றால், சாவித்திரியுடனான அவரது அணுகுமுறை blow hot blow cold என்று சொல்லுவார்களே, அது போல் இருக்கும். அவர்களின் முதல் சந்திப்பிலே ரிப்பேரான கார் சரியாவதற்கு உதவி செய்து விட்டு கிளம்பி சென்ற பிறகு மீண்டும் கார் ஹார்ன் அடிக்க ரிவர்சில் வந்து என்னவென்று கேட்க தேங்க்ஸ் சொல்லத்தான் அழைத்தேன் என்று சாவித்திரி சொல்லி விட்டு காரை கிளப்பிக் கொண்டு போக, what a mischievous girl என்று புன்னகைத்து விட்டு போகும் நடிகர் திலகம், பூவை பறிக்காதே என்று எழுதி வைத்திருக்கும் செடியிலிருந்து சாவித்திரி பூவை பறிக்க, Are you not educated என்று கோவத்தை காட்டும் நடிகர் திலகம், தந்தையை தேடி தன் வீட்டிற்கு வரும் சாவித்திரியிடம் திகைப்பை மறைத்துக் கொண்டு பேசும் நடிகர் திலகம், திருமணம் தன்னால் நின்று விட்டதே என்ற கழிவிரக்கத்தில் கல்யாணம் செய்து கொண்டு பிறகு தாயிடம் செய்து கொடுத்த சத்தியத்திற்கும் மனைவி மேல் வரும் காதலுக்கும் நடுவில் சிக்கி மனப் போராட்டத்தை சந்திக்கும் நடிகர் திலகம், தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு செல்லும் நடிகர் திலகம், மறு நாள் டைனிங் டேபிளில் முகத்தில் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் ஏன் அப்படி செய்தேன் என்று விளக்கும் நடிகர் திலகம், தன் மனைவிதான் போலீசை வரவழைத்தது என்று தெரிந்தவுடன் போலீசார் முன்னால் மனைவியை ஒரு விதமான வெறுமையாக பார்க்கும் நடிகர் திலகம். இப்படி பல காட்சிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஏராளமானவர்களுக்கு பிடித்த அந்த காட்சியைப் பற்றி தனியாக சொல்ல வேண்டும். தன் தந்தை காணாமல் போன அன்று அணிந்திருந்த சட்டையை டிரெஸ்ஸிங் டேபிளின் ட்ராயரில் பார்த்ததும் சாவித்திரி என் அப்பா எங்கே அவரை என்ன செய்தீர்கள் என்று உரத்தக் குரலில் சத்தம் போட்டு சிவாஜியை பிடித்து உலுக்கி அவரது நெஞ்சில் விரல்களால் பிராண்டி விட ஒரு வார்த்தை கூட பேசாமல் வழிகின்ற ரத்தத்தை வாஷ் பேசினில் சென்று கழுவி விட்டு டர்க்கி டவலால் அதை துடைத்துக் கொண்டே திரும்பி வந்து சாவித்திரியை அதே டவலால் மாறி மாறி அடிப்பார். வலி தாங்காமலும் தன் தவறை உணர்ந்தும் சாவித்திரி மன்னிப்பு கேட்க அப்போதும் ஒரு வார்த்தை கூட பேசாமல் சாவித்திரியை அனைத்துக் கொள்ளும் நடிகர் திலகம். அற்புதமான காட்சி, அற்புதமான நடிப்பு!.

படத்தில் முதலில் இடம் பெறும் சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம். நடிகர் திலகத்தின் அடுக்கு மொழி வசனம் பேசும் திறமையை பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை என்றாலும் ரத கஜ துரக பதாதிகள் என்ற வார்த்தையை எப்படி உச்சரிப்பது என்று பெரும்பாலோருக்கு சொல்லிக் கொடுத்தவர் நடிகர் திலகம். இன்னொரு குறிப்பிட வேண்டிய விஷயம் போர்க்களத்தில் சந்திக்கும் புத்த பிட்சுவைப் பார்த்ததும் ஆந்தைகளும் வௌவால்களும் அலைந்து திரியும் என்று வசனம் பேச ஆரம்பிக்கும் போது நடிகர் திலகத்தின் வலது கண் புருவம் மட்டும் மேலே ஏறி இறங்கும். வெகு இயல்பாக வரும் அந்த gesture-க்கு தியேட்டரில் செம அப்ளாஸ் விழும்.

நடிகையர் திலகத்தை பொறுத்த வரை ஒரு சில காட்சிகள் தவிர மற்ற காட்சிகளெல்லாம் சோகம் இல்லை மர்மம் என்ற அளவிலேயே அமைந்திருக்கும். திருமணம் முடிந்த பிறகு தன்னை சுற்றி என்னவோ நடக்கிறது என்று சந்தேகப்படும் காட்சிகளிலும், மேலே குறிப்பிட்ட நடிகர் திலகத்தை உலுக்கி பிராண்டும் காட்சியிலும் நடிகையர் திலகம் என்ற பெயருக்கு ஏற்றப்படி செய்திருப்பார். அவரது உடலும் பின்னாளில் அமைந்தது போல் பருமனாக மாறாமல் சரியான அமைப்பில் அமைந்திருந்ததனால் பாடல் காட்சிகளில் அவரை ரசிக்க முடிந்தது. படத்தின் இறுதிக் கட்டத்தில் நாயகன் சிறையில் இருக்க கிளைமாக்ஸ் நாயகியின் கைகளில் வரும். அதை சாவித்திரி குறைவின்றி செய்வார்.

வில்லன் பரோபகாரமாக ரங்காராவ். முதலில் வில்லன் பிறகு பரிதாபத்திற்கு உரிய கைதி. இரண்டையுமே ராங்கராவ் அவருக்கே உரித்த பாணியில் அழகுற செய்திருப்பார்.

இன்னொரு வில்லன் பாலுவாக நம்பியார். ஒரு படித்த வில்லன். பிற்காலத்தில் நாம் பார்த்த நம்பியராக இல்லாமல் சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் வேலை. எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு செய்திருப்பார். நடன பள்ளி நடத்தும் சுந்தரியாக எம்.என்.ராஜம் அவரது அண்ணனாக குலதெய்வம் ராஜகோபால். கணேஷ் வீட்டு ஊமை வேலைக்காரியாக டி.பி.முத்துலட்சுமி கவனம் ஈர்ப்பார்.

முரசொலி மாறன் வசனம். மாமாவின் மொழியாற்றல் இவருக்கு இல்லை எனபது கண்கூடு. இருப்பினும் சாம்ராட் அசோகன் நாடகத்தில் அடுக்கு மொழியை முயற்சி செய்து பார்த்திருப்பார். சிவாஜிக்கு நடிகர் திலகம் என்ற பட்டம் அப்போதே பிரபலமடைந்து விட்டது என்பது இந்த படத்தின் வசனம் மூலமாக தெரிகிறது. சாம்ராட் அசோகன் நாடகத்தை பாராட்டி பேசும்போது தலைமை விருந்தினர் சொல்லும் வசனம் " தம்பி கணேஷின் நடிப்பாற்றலை பார்க்கும் போது அவருக்கு நடிகர் திலகம் என்ற பட்டம் மிக பொருத்தம். அறிஞர் சொன்னது போல இவர் மார்லன் பிராண்டோ போல் நடிக்க முடியுமா என்று கேட்பதை விட முயற்சி செய்தால் மார்லன் பிராண்டோ வேண்டுமானால் இவரைப் போல் நடிக்க முயற்சிகலாம்"

பழி வாங்கும் உணர்வை மட்டும் வைத்துக் கொண்டு வசனம் எழுதுவது சற்று கடினமான காரியம். குறிப்பிட்ட சில [கல்லூரி நண்பர்கள் தலைமை தாங்க போகிறவர் வித்தியாசமானவர் என்று சொல்லும் போது நடிகர் திலகம் கிண்டலாக வித்தியாசமானவர் என்று சொல்லிக் கொண்டே கை அசைவினால் உடல் குண்டாக இருப்பது மாதிரியும், தலையில் இரண்டு கொம்புகள் முளைத்திருக்கும் என்று சைகை காட்டுவது, வீட்டிற்கு வரும் ரங்காராவிடம் சிவாஜி, டி.பி. முத்துலட்சுமியை அறிமுகப்படுத்தும் போது "பேர் என்ன தெரியுமோ தேன் மொழி"] இடங்களை தவிர நகைச்சுவைக்கும் வாய்ப்பில்லை.

பாடல்களை மருதகாசி, கு.மா.பாலசுப்ரமணியன், கா.மு.ஷெரிப்,
கோபாலகிருஷ்ணன் [கே.எஸ்.ஜி?] எழுதியிருக்க இசையமைப்பு எஸ்.எம். சுப்பையா நாயுடு. பாடல்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத படம். இருப்பினும் சில நல்ல பாடல்கள் இருக்கிறது.

1.நீயே கதி ஈஸ்வரி - பண்டரிபாய் மகன் சிறுவனாக இருக்கும் போது பாடும் பாடல்.

2. கொல்லாதே இது போலே - தெருவில் யாசகம் கேட்டு பாடிக் கொண்டே வரும் தந்தையும் மகளும் பாடும் பாடல்
3. அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை- படத்தில் மிக பிரபலமான பாடல்களில் ஒன்று. தாய் இறந்தவுடன் அதிர்ச்சியில் உறையும் நடிகர் திலகம் - பின்னணியில் அசரீரியாய் டி.எம்.எஸ். குரலில் ஒலிக்கும் பாடல். ஒரு சோக உணர்வை மனதில் விதைக்கும் பாடல்.

4. உள்ளம் நிலை மறந்து - சாவித்திரி சந்தோஷமாக இருக்கும் போது வரும் பாடல். பியானோ வாசித்துக் கொண்டே பாடுவது. சுசீலா பாடுவதற்கு கேட்க வேண்டுமா?

5. வாங்க வாங்க மாப்பிளை - நடிகர் திலகத்திற்கும் நடிகையர் திலகத்திற்கும் திருமணம் முடிந்தவுடன் ரிஷப்ஷன் போன்ற சடங்கில் நடன பெண்மணிகள் ஆடி பாடும் பாடல்.

6. கனவின் மாயா லோகத்திலே- படத்தின் ஹைலைட்டான பாடல் மற்றும் காட்சியமைப்பு. கதையின் போக்குப்படி காதல் டூயட் இடம் பெற வழி இல்லாததால் நடிகர் திலகத்தின் கற்பனையில் தோன்றுவது போல அமைக்கப்பட்டிருக்கும். நடிகர் திலகம் ஸ்டைல் சக்ரவர்த்தியாக பிய்த்து உதறியிருப்பார். இந்த படம் வெளி வந்த அதே 1958 ம் ஆண்டு வெளியான உத்தம புத்திரன் படத்தில் யாரடி நீ மோகினி பாடலுக்கு எப்படி நடனம் ஆடினாரோ அது போல [இதிலும் ஹீராலால் தான் நடனம்] இந்த பாடலிலும் ஸ்டெப்ஸ் அமர்க்களமாக இருக்கும். பாடலின் ஆரம்பத்திலிருந்து அவர் சின்னதாக சில ஸ்டைலிஷ் ஸ்டெப்ஸ் போட்டு விட்டு நிறுத்தி விடுவார். இன்னும் கொஞ்சம் அதை extend பண்ண மாட்டாரா என்று ஏங்க வைக்கும் நடிகர் திலகம் பாடல் முடியும் நேரம், சில ஸ்டைலிஷ் ஸ்டெப்ஸ் போட்டு நடந்து ஒரு கை கொண்டு சாவித்திரியின் ஒரு கரம் பற்றி ஒரு கால் மடக்கி முழங்கால் அமர்ந்து போஸ் கொடுக்கும் போது தியேட்டரே அதிர்ந்து போகும்.

படத்தை இப்போது பார்க்கும் போது சென்னை போன்ற பெரு நகரங்களில் பெரிய வெற்றியையும் மற்ற ஊர்களில் ஒரு ஆவேரேஜ் வெற்றியையும் பெற்றிருக்கும் என்றே தோன்றும். ஆனால் சென்னை மாநகரில் படம் 50 நாட்கள் படமாக போனது. காரணம், நடிகர் திலகத்தின் அடுத்த படமும் 50 -வது படமும் ஆன சாரங்கதாராவிற்காக மாறிக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை. ஆனால் சேலத்தில் 70 நாட்களும், நடிகர் திலகத்தின் படங்களுக்கு என்றும் பேராதரவு கொடுக்க கூடிய மதுரையில்,கல்பனா திரையரங்கில் 70 நாட்களும் ஓடியது இந்த படம். இந்த படத்தைப் பொறுத்த வரை எங்கள் மதுரையையும் மிஞ்சியது திருச்சி. திருச்சி வெலிங்டன் திரையரங்கில் 84 நாட்கள் ஓடிய அன்னையின் ஆணை, அடுத்த அரங்கில் ஷிப்ட் செய்யப்பட்டு 100 நாட்களை கடந்தது.

நடிகர் திலகத்தின் பட வரிசையில் என்றுமே சிறப்பாக பேசப்படும் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை என்பதில் மாற்று கருத்தில்லை.

அன்புடன்

இந்த படத்தின் விமர்சனத்தை நான் எழுத வேண்டும் என்று அன்பு கட்டளையிட்ட அன்பு சகோதரர் செந்தில் அவர்களுக்கு இதை dedicate செய்கிறேன்.

pammalar
5th November 2010, 04:31 AM
அன்னையின் ஆணை

முதல் வெளியீடு : 4.7.1958

லேட்டஸ்ட் வெளியீடு : 4.11.2010 [தீபாவளி ரிலீஸ்]

ஆம்! "அன்னையின் ஆணை"யை மறுவெளியீடாக, தீபாவளி ரிலீஸாக இத்திரியில் வெளியிட்ட முரளி சாருக்கு முத்தாய்ப்பான நன்றிகள்!

வழக்கம் போல் இந்தத் திறனாய்வு / கண்ணோட்டமும் அருமை, அபாரம், அற்புதம்.

பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!! நன்றிகள்!!!

[49வது திரைக்காவியமான "அன்னையின் ஆணை", 49வது பக்கத்தில் இடம்பெற்று தொடங்கியது 'ஆண்டவன் கட்டளை'யாலோ!]

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th November 2010, 04:34 AM
அனைவருக்கும் இதயபூர்வமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

pammalar
5th November 2010, 04:49 AM
தீபாவளியும் நடிகர் திலகமும்

தமிழ்த் திரைப்பட வரலாற்றில்,

தீபாவளி வெளியீடுகளாக 42 திரைக்காவியங்களையும்,

அவற்றில் 19 காவியங்களை 100 நாட்களுக்கு மேல் ஓடிய மாபெரும் வெற்றிக் காவியங்களாகவும்

கொடுத்த பெருமை தீபாவளி ஹீரோவான நடிகர் திலகத்துக்கு மட்டுமே சொந்தம்!

விவரங்களுக்கு : http://mayyam.com/hub/viewtopic.php?t=12282&postdays=0&postorder=asc&start=1065

அன்புடன்,
பம்மலார்.

kumareshanprabhu
5th November 2010, 11:05 AM
hi everybody wishing you a happy diwali

saradhaa_sn
5th November 2010, 01:44 PM
[tscii:2e3ba4ed49]டியர் முரளி,

'அன்னையின் ஆணை' வெகுநாட்கள் பார்க்கவேண்டும் என்று துடித்து, பின்னர் கல்லூரி நாட்களில் சென்னை ஓடியன் திரையரங்கில் ஒரு வாரம் மட்டும் திரையிடப்பட்டபோது, ஓடிச்சென்று பார்த்து மகிழ்ந்த படம். அதன்பிறகு பார்க்க முடியாததால், கிட்டத்தட்ட அதன் சம்பவங்கள் மறந்து போன நிலையில், தற்போது உங்கள் திறனாய்வுக்கட்டுரை படித்தபோது, முழுத்திரைப்படமும் அப்படியே மனதில் நிழலாடியது. பின்னே, விவரித்திருப்பது நீங்கள் ஆயிற்றே.

அப்போதைய திரைப்படங்களில் இடம் பெற்ற சாம்ராட் அசோகன் (இப்படம்), அனார்கலி (இல்லற ஜோதி), சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ் (ராஜா ராணி) ஆகிய ஓரங்க நாடகங்கள் அப்போது பள்ளி, கல்லூரி விழாக்களில் மாணவர்களால் மேடைகளில் நடிக்கப்பட்டனவாம். (தகவல்: என் தந்தையார்). 1976-ல் ரோஜாவின் ராஜா படத்திலும் இதே 'சாம்ராட் அசோகன்' நாடகம் நடிகர்திலகத்தால் நடிக்கப்பட்டது. ஆனால் நடிகர்திலகத்தின் சாம்ராட் அசோகன் நாடகத்தை உயர்த்தவேண்டும் என்பதற்காக, சுருளிராஜனை விட்டு 'கட்டபொம்மன்' நாடக வசனம் பேச வைத்திருந்தபோது மனம் வலித்தது. அதேபோல 'விடுதலை' படத்தில் நடிகர்திலகமே மீண்டும் போலீஸ் அதிகாரி உடையில் 'கட்டபொம்மன்' வசனம் பேசியபோதும் சுவைக்கவில்லை.

அன்னையின் ஆணையில் நடிகர்திலகம், நடிகையர் திலகத்துக்கு அடுத்து நம்மைக்கவர்பவர் நம்பியார்தான். (இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச்சொல்ல வேண்டும். வழக்கமாக திரு எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லும்போது கூடவே நம்பியார் பெயரையும் குறிப்பிடுவார்கள். அதாவது அவர்கள் இருவரும் அதிகப்படங்களில் இணைந்து நடித்திருப்பதாகத்தான் பெரும்பாலோரது எண்ணம். ஆனால் சமீபத்தில் மக்கள் திலகம், நடிகர்திலகம் இருவரது படப்பட்டியலை (செம்மொழியில்: பிலிமோகிராபி) ஒப்பிட்டுப்பார்த்தபோது ஒரு ஆச்சரியம் கண்டேன். மக்கள் திலகத்தை விட நடிகர்திலகத்துடன்தான் திரு எம்.என்.நம்பியார் அதிகப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். அதே சமயம் நடிகர்திலகத்துடன் மிக அதிகப்படங்களில் இணைந்து நடித்திருப்பவர் என்ற பெருமை பெற்றவர் 'பெரியவர்' வி.கே.ராமசாமி அவர்கள்).

திருச்சி வெலிங்டன் என்றதும், நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது, முதல் ப்டமான 'பராசக்தி'யை 245 நாட்கள் ஓடவைத்து மாபெரும் வெற்றிப்படமாக்கியதன் மூலம், தமிழ்த்திரையில் திருப்பம் ஏற்படக் காரணமாயிருந்த திரையரங்கம் என்பதுதான். அன்னையின் ஆணையும் அங்கேயே அதிக நாட்கள் ஓடியிருப்பது கூடுதல் சிறப்பு.

(திருச்சியில் ஒரே காம்பவுண்டுக்குள் அருகருகே அமைந்திருந்த வெலிங்டன், ராக்ஸி அரங்குகளில் (உரிமையாளர்கள் ஷம்சுதீன், பாஷா என்ற அண்ணன் தம்பிகள்) 1961-ல் வெலிங்டனில் நடிகர்திலகத்தின் ‘ஸ்ரீவள்ளி’யும், ராக்ஸியில் மக்கள் திலகத்தின் ‘சபாஷ் மாப்பிளே’யும் ஓடியபோது, இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு வன்முறையாக மாறி, ரத்தக்களறி ஏற்பட்டு, போலீஸ் அதிகாரிகள் வந்து, இரண்டு நாட்கள் படக்காட்சிகள் நிறுத்தப்பட்டு, பின்னர் இரண்டு படங்களுமே வெவ்வேறு இடங்களிலுள்ள வேறு தியேட்டர்களுக்கு மாற்றப்பட்டு, வெலிங்டனில் ஜெமினி படமும் (பனித்திரை..?), ராக்ஸியில் எஸ்.எஸ்.ஆர். படமும் (பணம் பந்தியிலே...?) திரையிடப்பட்டன).

'அன்னையின் ஆணை'யை மீண்டும் எழுத்துருவில் திரையிட்டமைக்கு நன்றி.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
[/tscii:2e3ba4ed49]

pammalar
5th November 2010, 09:15 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 153

கே: இரு மலர்கள், ஊட்டி வரை உறவு இரு படங்களும் ஒரே தினத்தில் வெளியாகி நூறு நாள் ஓடியிருக்கின்றன. ஒரே கதாநாயகனின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியாகி நூறு நாள் ஓடியதாக திரைப்படவுலக வரலாற்றில் வேறு ஒரு சான்று உங்களால் காண்பிக்க முடியுமா? (தா.அய்யப்பன், திருவனந்தபுரம்)

ப: பூக்காட்டில் மேலும் ஒரு புது மலர்!

(ஆதாரம் : பேசும் படம், மார்ச் 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th November 2010, 11:00 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 154

கே: ரஜினியின் 'சிவாஜி' தொடங்கும் முன்பே இவ்வளவு பேசப்படக் காரணம் என்ன? (எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்)

ப: 'பாபா'வின் தோல்வியை அடுத்து, 'ரஜினி இனி காணாமல் போய் விடுவார்' என்று சிலர் கனவு கண்டார்கள். ஆனால் 'சந்திரமுகி' அவர்களது கனவில் மண் அள்ளிப் போட்டு, 'மாப்பு! வைச்சுட்டாண்டா ஆப்பு' என டயலாக் பேசியது. இத்தனைக்கும் ரஜினியின் பிரத்யேக மேனரிஸம் அதிகம் இல்லாமலேயே வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறது. சிவாஜி பிலிம்ஸ் கொடுத்த அந்த வெற்றியைத் தொடர்ந்து சிவாஜியையே கொடுத்த நிறுவனம் தயாரிக்கும் படம் என்பதால் இதற்கு 'டாக்' அதிகம்.

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 1-15 அக்டோபர் 2005)

குறிப்பு:
'சிவாஜி', ரஜினியின் 154வது திரைப்படம்!

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
6th November 2010, 12:26 PM
[tscii:59367f7cb7]நடிகர் திலகத்தின் படங்கள் குறிப்பாக பாடல்கள் காலங்கடந்து நிற்பதோடு எந்தக் காலத்திற்கும் ஒத்து வரக் கூடியவை என்பதற்கு மற்றொரு உதாரணம், மூன்று தெய்வங்கள் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல். வெறும் பிரச்சாரப் பாடல்களை நடிகர் திலகத்தின் படங்களில் அதிகம் பார்க்க முடியாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்படக் கூடிய பிரச்னைகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள், அனைத்திற்கும் அவருடைய படங்களிலும் பாடல்களிலும் விடிவும் முடிவும் உண்டு. வாழும் கலையைப் பற்றிப் பல புத்தகங்கள், ஏடுகள், பிரசங்கங்கள் இன்று இடம் பெறுகின்றன. அவையனைத்தும் செய்யும் வேலையை நடிகர் திலகத்தின் இந்த ஒரு பாடல் செய்து விடுகிறது.

பாடல் - நடப்பது சுகமென நினைத்து
குரல் - டி.எம்.எஸ்-நடிகர் திலகம், எஸ்.பி.பாலசுப்ரமணியம்- முத்துராமன், சாய்பாபா - நாகேஷ்
பாடல் - கண்ணதாசன்

பாடல் காட்சி (http://www.youtube.com/watch?v=9YiNDzAL3P4)

பாடல் வரிகள்

நடப்பது சுகமென நடத்து – வரும்
நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து – நாம்
வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

ஹாஹாஹா....

லல்லல்லா...

போதாது நீ கண்ட ராஜாங்கம்
பேசாதே போலி வேதாந்தம்
பாராதே வெறும் பஞ்சாங்கம்
உனக்கொரு உலகத்தை
அமைத்து வளர்த்து எடுத்து நடத்து
சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும்போது நி்ல்லாதே
நானென்று பேர் சொல்லி நடை போடு
ஏனென்று கேட்போரை எடை போடு
----- நடப்பது சுகமென

கல்யாணம் பொய் சொல்லி கல்யாணம்
பெண் வேணும் வீட்டுக்குப் பொன் வேண்டும்
கண் போடு மெல்ல கைபோடு
சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே
அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையை சேர்க்க வேண்டும் பெண்ணோடு
செல்வங்கள் கைமாறி உருண்டோடும்
உள்ளங்கள் நிறம் மாறி விளையாடும்
----- நடப்பது சுகமென

அன்புடன்
ராகவேந்திரன்[/tscii:59367f7cb7]

HARISH2619
6th November 2010, 01:14 PM
எனது பனிவான வேண்டுகோளை ஏற்று அண்ணையின் ஆணை ஆய்வுகட்டுரையை முத்தாக பதித்த முரளிசாரின் கரங்களுக்கு ஆயிரமாயிரம் முத்தங்கள்.அதை எனக்கு டெடிகேட் செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிக்ள்

guruswamy
6th November 2010, 01:32 PM
Dear Mr. Raghavendra & Murali Sir & all my beloved NT fans,

Please take time to read my suggestions, if I'm wrong correct me.

We beloved diehard fans of NT, were are we heading. We know all about our NT, proof the articles in the Hub.

We the diehard fans of NT, we know each and everything about our legend.

So, what we can do and we are right people to do this..........

I have personally read the articles written by our fans which has lots & lots of in-depth info about our NT film careers and his personality and none can provide better info than our beloved fans.

The articles shared in the hubs should not just vanish by reading.

I want one of our senior person to take the ownership to compile all the articles written by our fans in the hub about our legend convert it in form of Book & e-print in a systematic way.

Believe me the articles so far if combined & compiled inform of a Book, can fetch a place in Gunnies Book of World Record. (for so much, is written about one person and for only our NT one can write like this)

We NT fans should be a pillar for a next generation, the articles should be made available in form of books.

Even the next generations to come will have an opportunity to read all about our NT and his devoted fans this legend had, even we can take one step forward to make it available in electronic media as well.

Please take this as one of our 2011 agenda, lets unite discuss and take this forward.

NOTE: No fans books has published so far for any actor. SO LETS DO THIS FOR OUR LIVING LEGEND, DR. SIVAJI STILL LEAVES IN US. HE WILL INSPIRE US AND WILL BLESS US THROGHOUT.

please advice.

JAIHIND
M. Gnanaguruswamy

KCSHEKAR
6th November 2010, 03:32 PM
'அன்னையின் ஆணை'யை மீண்டும் எழுத்துருவில் திரையிட்டமைக்கு திரு.முரளி அவர்களுக்கு நன்றி.

selva7
6th November 2010, 05:14 PM
அன்னையின் ஆணை படத்தின் விமர்சனத்தினை இவ்வளவு விரிவாக தந்தமைக்கு நன்றி. பாடல்கள், நடிப்பு மற்றும் கதை குறித்து அழகுற எழுதியுள்ளீர்கள்.

ஆனால் தொலைக்காட்சிகளில் இப்படம் ஒளிபரப்பப்படுவதாய்த் தெரியவில்லை.

Murali Srinivas
6th November 2010, 10:12 PM
அன்னையின் ஆணை திரைப்பட ஆய்வைப் பாராட்டிய சுவாமி, சாரதா, சந்திரசேகர், செந்தில் மற்றும் செல்வாவிற்கு நன்றி. தொலைபேசி மூலமாக பாராட்டிய ராகவேந்தர் சாருக்கும் நன்றி.

சாரதா,

திருச்சி வெலிங்டன்,ராக்ஸி பற்றிய குறிப்புக்கள் மற்றும் அரங்க வளாகத்தில் 1961-ல் நடந்த நிகழ்சிகளைப் பற்றி உங்கள் தகவல்கள் எனக்கு புதியவை. உங்கள் பதிவை படித்த போது வேறு ஒன்று நினைவிற்கு வந்தது. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன் நமது சுவாமி அவர்கள் மூலமாக 1962-ம் ஆண்டு அக்டோபர் மாத மதி ஒளி இதழ் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் திலகம் திரையுலகில் பத்து வருடங்களை நிறைவு செய்வதையொட்டி [1952 அக்டோபர்-1962 அக்டோபர்] வெளியான சிறப்பு இதழ்.அதில் ஒரு கட்டுரையில் இரு தரப்பு ரசிகர்களின் மோதலைக் குறிப்பிடும் போது இந்த மோதல் சில சமயம் ரத்தம் சிந்தும் வன்முறையில் போய் முடிகிறது என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்த மோதல் போக்கு தற்போது சற்று குறைந்திருக்கிறது என்றும் அதில் எழுதியிருந்தார்கள். ஒரு வேளை நீங்கள் சொன்ன நிகழ்வைத்தான் குறிப்பிட்டார்களா என்று தெரியவில்லை.

செந்தில் உங்கள் அன்பிற்கு நன்றி.

செல்வா, நல்வரவு. நீங்கள் இந்த நடிகர் திலகம் திரியில்தான் உங்கள் முதல் பதிவை செய்திருக்கிறீர்கள். உங்கள் அனுபவங்களை பங்கிடுங்கள்.

Gurusamy,

As you had suggested this has been put forth by many a person within and outside this forum. Definitely all thses things would be brought out in the traditional book format, God willing. Let us do it at the opportune moment.

Regards

J.Radhakrishnan
6th November 2010, 10:48 PM
messege deleted