PDA

View Full Version : Suggestions/ Requests for Script writers/ Directors



RAGHAVENDRA
30th October 2011, 09:45 PM
This is not to interfere in creativity but to give suggestions to overcome hurdles from different directions to the producers/ directors/ script writers/ dialogue writers.

Let us detail them in Tamil.

1. சமீப காலமாக திரைப்படங்களில் கைப்பேசி உரையாடல் காட்சிகளின் போது அந்த எண்களை உச்சரிப்பதைக் காண்கிறோம். இவற்றை எப்படி தணிக்கைத் துறை அனுமதிக்கிறது என்பது தெரியவில்லை. சில சமயங்களில் திரைப்படம் என்பது கற்பனை என்பதையே மறந்து நேரடியாக உணரும் அளவிற்கு இப்படிப் பட்ட காட்சிகள் அமையக் கூடிய ஆபத்து உள்ளது. அவ்வாறு சில எண்கள் சிலரிடம் இருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே திரைத்துறையினர் தங்களுடைய எச்சரிக்கை உணர்வைக் கடைப் பிடித்து அப்படி எண்களை சொல்லும் போது ஒலியை இல்லாமல் செய்வது நன்று.

2. படத்தின் தலைப்பில் நீதிமன்ற ஆவணங்களைப் பற்றிய குறிப்பு வருதல்.
இதுவும் தவிர்க்க வேண்டிய ஒன்று. அப்படிப் பட்ட தலைப்புகளில் வரும் எண்களில் உண்மையாகவே வழக்குகள் ஏதாவது நீதிமன்றத்தில் இருக்கக் கூடிய வாய்ப்புள்ளது. இதுவும் சமுதாயத்தில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு மிகவும் அதிகம்.

.... தொடரும்...

RAGHAVENDRA
30th October 2011, 09:47 PM
3. படங்களின் தலைப்பில் சாதி இனம் மதம் போன்றவை இடம் பெறுதல்

RAGHAVENDRA
31st October 2011, 08:51 AM
திரைப்படம் என்பது (feature film) என்பது கற்பனையின் அடிப்படையிலே அணுகப் பட வேண்டும். யதார்த்தம் என்ற பெயரில் உண்மைச் சம்பவங்களின் அடிப்படை என்ற பெயரில் சமுதாயத்தில் நேரடியாக சம்பவங்களையோ மனிதர்களையோ சூழ்நிலைகளையோ இடங்களையோ தொடர்பு படுத்தி வரும் போது பிரச்சினைகள் நிச்சயம் வரும். அந்தக் காலத்தில் முழுமையாக கற்பனையிலேயே வடிவமைத்தனர். அந்த எல்லைக் கோட்டைத் தொடும் போதோ அல்லது மீறும் போதோ பல்வேறு எதிர்ப்புகள் வருகின்றன.

இவற்றை தயவு செய்து தவிர்க்கவும். உண்மைச் சம்பவங்கள் என்றாலும் கூட அவற்றை நேரடியாக சித்தரித்தல் வேண்டாம்.

பெரும்பாலான அனுபவசாலியான இயக்குநர்கள், தணிக்கை விதிமுறைகளைப் பற்றி நன்கு அறிந்தவர்களே, சில படங்களில் தணிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் போது, புதிய இயக்குநர்களுக்கு இது சற்று கடினமான பணியாகும்.

வன்முறைக் காட்சிகளின் போது நேரடியாக தாக்குதல், ரத்தம் பெருகி வருதல் போன்ற காட்சிகள் மக்களிடம் நிச்சயம் வரவேற்பைப் பெறாது.

இயக்குநர்கள் தாங்களே இவற்றை அனுமானம் செய்து காட்சிகளை அமைத்தால் எளிதாக இருக்கும்.