PDA

View Full Version : KOLANGAL - unkal paakam



Pages : 1 2 3 [4] 5

aanaa
18th October 2008, 10:50 PM
நன்றி சாரதா
தொல்ஸ்-ன் ஒவ்வொரு செயல்பாடும் இனி உங்களுக்கு அத்துபடியாகப் போகின்றது
1500 ...

saradhaa_sn
21st October 2008, 01:53 PM
[tscii:e5a0659cc5]‘இன்ஸ்பெக்டர் என்ன சொல்றீங்க?. என்னுடைய ஆஃபீஸை சோதனை போடணுமா? எதுக்கு?.’

‘இதோ நிற்கிறாரே இந்த கார்த்திக், இவர் முன்னர் வேலை பார்த்த மிஸ் மேனகாவின் ஆஃபீஸிலிருந்து முக்கியமான ஃபைலை திருடிக்கொண்டு வந்துவிட்டார்’.

‘நோ இன்ஸ்பெக்டர், நான் அப்படிப்பட மோசமான ஆள் இல்லை. நான் வரும்போது அங்கிருந்து எந்த ஃபைலையும் திருடி வரவில்லை. இது அபாண்டமானது’

‘இன்ஸ்பெக்டர், ஒரு விஷயம். கார்த்திக் மேனகாவிடமிருந்து ஃபைலை திருடி வந்துட்டார்னு சொல்றீங்க. அதுக்காக என்னுடைய ஆஃபீஸை ஏன் சோதனை போடணும்’

ரவி குறுக்கிட்டு, ‘சும்மா ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க அபி. இந்த கார்த்திக் திருடிக்கொண்டு வந்த ஃபைலை உங்க கிட்டேதான் கொடுத்திருக்கார்’.

‘யூ ஷட் அப்….’ ‘இன்ஸ்பெக்டர் நீங்க தாராளமா என் ஆஃபீஸை சோதனை போடலாம்’.

சோதனை ஆரம்பிக்கும் முன்னர் ரவி திடீரென அபியின் மேஜையிலுள்ள ஃபைலைக்காட்டி, ‘இன்ஸ்பெக்டர் இதோ இந்த ஃபைலாகத்தான் இருக்கணும்’ கையில் எடுத்துப் புரட்டிப்பார்த்து ‘ஆமா இன்ஸ்பெக்டர், இந்த ஃபைலேதான் இதைத்தான் திருடி வந்திருக்கார் இந்த ஆள்’

‘ரொம்ப யோக்கியம் மாதிரி பேசினீங்க இப்போ என்ன சொல்றீங்க அபி’

‘நான் வெளியில் போய்விட்டு இப்போதான் வந்தேன், நான் வந்தபிறகுதான் கார்த்திக் வந்தார். இந்த ஃபைல் எப்படி என் டேபிளுக்கு வந்ததுன்னே எனக்கு தெரியாது. இதுல ஏதோ சதி நடந்திருக்கு’

‘மேற்கொண்டு எதுவாக இருந்தாலும் கோர்ட்ல வந்து சொல்லுங்க, கார்த்திக் எங்களோடு வாங்க’.

இது யாருடைய வேலையாக இருக்கும் என்று யோசித்தவாறு ஆஃபீஸுக்குள் நடந்துகொண்டிருக்கும் அபியிடம் கிருஷ்ணன் வந்து. ‘என்னம்மா இப்படி ஆயிடிச்சு’.

‘கிருஷ்ணன் உடனே நம்ம அட்வகேட்டுக்கு போன் பண்ணி அவரை வரச்சொல்லுங்க’.

கோர்ட்…….. குற்றவாளிக்கூண்டில் கார்த்திக்…..

பார்வையாலர்கள் பெஞ்சில் அபி, மேனகா, ஆதித்யா, கிரி, ரவி, ஜெனிஃபர், கிருஷ்ணன்….

அரசு தரப்பு வக்கீல் தனது வாதத்தை எடுத்துரைக்கிறார். மேஙாவிடம் கார்த்திக் வேலை பார்த்தது, அபியின் தங்கை ஆனந்திக்கும் அவனுக்கும் திருமணம் நடக்க இருப்பது, அதனால் மேனகாவை எதிர்த்தது, மேனகாவிடமிருந்து விலகியது, ஆனந்தியுடன் சேர்ந்து பத்திரிகையில் எழுதுவது என்று எல்லா விவரங்களையும் எடுத்துக்கூறியவர் ‘ஆகவே கார்த்திக்தான் ஃபைலை திருடியிருக்கிறார்’ என்று முடிக்க….

அபி தரப்பு வக்கீ மேனகா, அதித்யா இவர்களைப்பற்றி எழுதியதால் ஆனந்திமீது நடந்த கொலை முயற்சியையும், அதைத் தட்டிக்கேட்டதற்காக மேனகா கார்த்திக்கை வெளியேற்றியதையும், அந்தக்கோபத்தில் மேனகா கார்த்திக்கைப் பழிவாங்க இப்படி ஒரு நாடகம் ஆடியிருப்பதையும் சுட்டிக்காட்டி, கார்த்திக்தான் திருடினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையென்று கூறி வாதாட…….. அதற்கு அரசு வக்கீல்…

‘நல்ல வேடிக்கை, காணாமல்போன ஃபைல் அபியின் டேபிளிலேயே கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது, இதைவிட என்ன ஆதாரம் வேன்டும்?’

‘அரசு வக்கீல் சொல்வதுபோல அவர் திருடி அபியிடம் கொடுத்திருந்தால், அதைப்பத்திரமாக ஒளித்து வைக்காமல் யாருடைய பார்வையிலும் சட்டென்று படுகிற மாதிரி போட்டு வைப்பார்களா?. எனவே கார்த்திக் மீது எந்த தவறும் இல்லாததால் அவரை ஜாமீனில் விடுவிப்பதுடன், இந்த வழக்கில் இருந்தும் விடுதலை செய்ய வேண்டும்’.

‘இருதரப்பு வாதங்களையும் கேட்டதில், கார்த்திக்கை ஜாமீனில் விடுவிக்க கூடாதென்பதற்கு போதுமான காரணங்கள் சொல்லப்படவில்லை. எனவே அவரை நிபந்தனையற்ற ஜாமீனில் இந்த கோர்ட் விடுவிக்கிறது’.

அபிக்கும் கார்த்திக்கிற்கும் முகத்தில் நிம்மதி, மேனகா, ஆதி முகத்தில் அதிர்ச்சி கலந்த எமாற்றம். கோர்ட் வரண்டாவில் நடந்துசெல்லும்போது, அபி ‘கார்த்திக், எங்களல்தான் உங்களுக்கு இந்த கஷ்ட்டமெல்லாம், என்மீதுள்ள உள்ள் கோபத்தில்தான் அந்த மேனகா உங்களைப்பழி வாங்குகிறாள்’

‘அதெல்லாம் இல்லீங்க, நான் அவளை விட்டு விலகியதில் கோபம், அதுதான் காரணம்’.

‘ஆனந்திக்கு சப்போர்ட் பண்ணித்தானே விலகினீங்க, அப்படீன்னா அந்த கோணத்தில் பார்த்தாலும் நாங்கதானே காரணம்?’

அப்போது அவர்களைக் கடந்து போகும் மேனகா, ‘ஏய் அபி, ஜாமீன் கிடைச்சிடுச்சுன்னு சந்தோஷப்படாதே, இது த்ற்காலிக வெற்றிதான். இவன் பண்ணிய காரியத்துக்கு இவனுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்காமல் ஓயமாட்டேன்’.

‘இதோ பார் மேனகா, உனக்கும் எனக்கும்தான் போட்டி, அதுக்காக சம்மந்தம் இல்லாதவர்களையெல்லாம் ஏன் பழி வாங்கறே?’

‘என்னுடைய ஃபைலை திருடி உன்கிட்டே கொடுத்த இவன் சம்மந்தமில்லாதவனா?. நீ இப்படி அடுத்தவங்க ஐடியாவைத்திருடி பிஸினஸ் பண்றதை விட, தெருவில் உட்கார்ந்து பிச்சையெடுக்கலாம். நான் யாரு, என் ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியாம என்கிட்டே மோதுறே, கூடிய சீக்கிறம் அதன் பலனை அனுபவிப்பே’

(மேனகா இன்னும் கூட கார்த்திக்தான் அந்த ஃபைலை திருடி அபியிடம் கொடுத்திருப்பதாகவே நம்புகிறாள். அதனால்தான் அவளது கோபம் உண்மையான கோபமாக ஆவேசமாக வெளிப்படுகிறது. ஆனால் இது ஆதியின் தகிடுதத்த வேலை என்பது அவளுக்கு தெரியாதே. ஆனால் அபியோ இது, தன்னையும் கார்த்திக்கையும் மாட்டிவிட மேனகா செய்த சதியென்றே நினைப்பதால் அவளது கோபமும் முழுக்க மேனகா மீதுதான் திரும்புகிறது. பாண்டவர்களையும் கௌரவர்களையும் நேருக்கு நேர் மோதவிட்டு, தள்ளி நின்று தாடியை சொறிந்துகொண்டே கள்ளச்சிரிப்பு சிரிக்கும் சகுனியின் அதே சிரிப்பு ஆதியின் முகத்தில். இவன் தாடியில்லாத, கூலிங்கிளாஸ் அணிந்த சகுனி). [/tscii:e5a0659cc5]

aanaa
21st October 2008, 11:18 PM
:ty: சாரதா

gta129
22nd October 2008, 09:35 AM
I can't believe how much the story has changed. I can't even remember who use to be the good guy and who use to be the villain :? . They all keep changing and then changing back again. I guess thats what Thols have to do in-order to keep the serial going.

aanaa
22nd October 2008, 06:51 PM
Thols had ONLY 1 project and its Kolangal ONLY.
so he is taking for his life time.

Arthi
22nd October 2008, 07:23 PM
Thols had ONLY 1 project and its Kolangal ONLY.
so he is taking for his life time.
let him not take our life :wink:

aanaa
22nd October 2008, 07:51 PM
kolankal story ..
1 day serious
second day - dragging
so we can guess what could have happened today ....
:-)

saradhaa_sn
23rd October 2008, 01:54 PM
[tscii:07aa3e67f6]நேற்றைய (TUESDAY) எபிசோட் முழுக்க சொதப்பல்...................

ஃப்ராடு மாப்பிள்ளை ஊற்றிக்கொடுக்க திருவேங்கடமும் தங்கராசும் மதுவருந்திக்கொண்டிருக்கின்றனர். (வர வர சீரியல்களுக்கும் சென்ஸார் வந்தால் தேவலை, இப்படி குடும்ப உறவுகளைக் கொச்சைப்படுத்தும் காட்சிகள் குறையும்). மருமகன் வழக்கம்போல உலக அரசியல் அது இது என்று திருவேங்கடத்தை விட அதிகமாக பிதற்றுகிறான். ‘உலக அரசியலே நான்கு விஷயங்களைச் சுற்றியே அமைந்துள்ளது, அவை ஜாதி, மதம், இனம், நிறம்… இவற்றில் இனம், நிறம் இவையிரண்டும் நம் நாட்டுக்கு பொருந்தாது மற்ற இரண்டில் குறிப்பாக ஜாதியைப் பிடித்துக்கொண்டு அரசியல் பண்ணினால் ரொம்ப சீக்கிரம் முன்னுக்க வந்து விட முடியும் அதற்கு முதற்கட்டமாக நம்ம ஜாதிக்காரனை ரகசியமாக நாமே ஆள் வைத்து அடித்துவிட்டு பின்னர் அடிவாங்கியவனுக்காக போராட்டத்தில் இறங்க வேண்டும், அதுபோல நம்ம ஜாதி தலைவர் சிலைக்கு ரகசியமாக நாமே செருப்பு மாலை அணிவித்து விட்டு, பின்னர் பகிரங்கமாக ‘சிலை அவமதிப்பு போர்’ என்று களத்தில் குதிக்க வேண்டும், இப்படியெல்லாம் செய்தால்தான் சீக்கிரம் முன்னேற்றம் காண முடியும்’ என்று கூற அவனுடைய பிதற்றல் திருவேங்கடத்துக்கு ரொம்ப பிடித்துப்போகிறது. (உண்மையில் இது பிதற்றல் அல்ல, இன்று நாட்டில் நடக்கும் நிகழ்வுகளின் வெளிப்பாடுதான். இன்றைக்கு எந்த தலைவனும் தலைவியும் ‘பாடுபடும் ஏழைக்கு பசிக்கு உணவுக்காக’ போராடுவதில்லை. அப்படிப்போராடுவதாக பாவலா பண்னுபவர்களும் தான் ஆட்சி செய்தபோது மட்டும் என்ன வாழ்ந்தது என்று சிந்திப்பதில்லை).

தோழரும் தொல்காப்பியனும் உரையாடிக்கொண்டிருக்கின்றனர். கார்த்திக் மீது அநியாயமாக குற்றம் சுமத்தி பழிவாங்கும் மேனகாவின் செயலைக்குறித்து தோழர் ஆவேசப்படுகிறார். 'இதற்காக இவர்களின் உயிரை எடுத்தாலும் தப்பில்லை' என்று சொல்ல, பதிலுக்கு தொல்ஸ், 'தோழரே உயிரை எடுக்கும் உரிமை நமக்கேது?' என்று கேட்க, 'அப்படியென்றால் அந்த உரிமை கடவுளுக்குத்தான் என்கிறீர்களா?' என்று தோழர் பதிலுரைக்க, 'இந்த சதிவேலைகளுக்கு மேனகாவை மட்டும் குற்றம் சொல்ல முடியாது, அபிக்கு எதிரான ஒவ்வொரு சதிக்குப்பின்னாலும் அந்த ஆதியின் ஆலோசனையும், பங்கீடும், செயல்பாடும் முக்கியமாக இருக்கிற்து' என்று தொல்காப்பியன் சொல்ல, 'ஏன் தொல்காப்பியன், மேனகாவுக்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையிலும் நீங்கள் மென்மையான நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள்?' என்று மடக்க, 'அதன் காரணம் உங்களுக்கு விரைவில் தெரியும் என்று சொல்லி தொகாப்பியன் விடை பெற்றுச்செல்ல, தோழர் தன் இருப்பிடத்துக்குப்போகிறார்.

வேலையில் இருந்து திரும்பிக்கொண்டிருக்கும் சுமதி, வழியில் தன் மோசடிக்கணவன் நிற்பதையறிந்து, அவனைக்கண்டுகொள்ளாமல் கடந்துபோக, அவன் பின்தொடர்ந்து வந்து, 'தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு' கேட்க, அவள், 'நீ யாரென்றே எனக்கு தெரியாது. உன்னோடு நான் ஏன் சேர்ந்து வாழ வேண்டும்?' என்று பதிலளித்துவிட்டு வேகமாக நடக்க, அவனும் விடாமல் வந்து வம்பு பண்ண, சுமதி ரோட்டில் போவோரை உதவிக்கு அழைக்கிறாள். அவர்கள் வந்து விசாரிக்கும்போது, 'தான் எம்.எல்.ஏ.யின் மருமகன்' என்று அவன் கூறுவதை மறுத்து 'இவன் யாரென்றே எனக்கு தெரியாது. அப்படியிருக்க தன்னோடு வாழ வரும்படி தொந்தரவு செய்கிறான்' என்று சுமதி கூற.... கூட்டத்தினர் 'அப்படியா, நீ போம்மா நாங்க இவனை கவனிச்சுக்கிறோம்' என்று சொல்லி அவனுக்கு தாராளமாக அடிகளை வழங்க, அந்த சந்தடியில் அவள் தப்பிச் செல்கிறாள்.
[/tscii:07aa3e67f6]

aanaa
23rd October 2008, 07:15 PM
[tscii:860500f106]நேற்றைய (TUESDAY) எபிசோட் முழுக்க சொதப்பல்...................
[/tscii:860500f106]

தெரிந்த விடயம்தானே
:notworthy:

saradhaa_sn
23rd October 2008, 07:23 PM
[tscii:5d96f454e0]BUT WEDNESDAY EPISODE WAS INTERESTING AANAA... ESPECIALLY 'MENAKA & TOLS MEET' AND 'USHA & THOLS MEET'... (follows)......

‘சொல்லுங்க, எதுக்காக என்னைப்பார்க்கனும்ணு சொன்னீங்க?’

தன்னுடைய பண்ணை வீட்டில் இரவு நேரத்தில் தன்னை சந்திக்கும் தொல்காப்பியனிடம் மேனகா கேட்க, ‘முதல்ல யாருக்குமே அனுமதி கொடுக்காத இந்த பண்ணை வீட்டில் என்னை சந்திக்க அனுமதி கொடுத்த உங்களுக்கு தேன்க்ஸ்’

‘சரி, வந்த விஷயத்தை சொல்லுங்க’

‘அந்த கார்த்திக் இருக்காரே அவர் ஒரு அப்பாவி. அவரை உங்களுடைய பிஸினஸ் போட்டியிலே ஏன் இழுக்குறீங்க?’

‘அவன் எனக்கு துரோகம் பண்ணிட்டான், அப்படியிருக்க அவனுக்காக நீங்க சப்போர்ட் பண்ணாதீங்க’.

‘இப்படித்தான் மேனகா நீங்க சின்னக்குழந்தையா இருந்தபோது எதையும் கத்தி அழுது சாதிப்பீங்க, இப்பவும் அப்படித்தான், ஒரு மாற்றமா கோபத்தோடு அடம்பிடிச்சு சாதிக்கிறீங்க. நானும் அம்மாவும் உங்க மேலே எவ்வளவு அன்பு வச்சிருந்தோம் தெரியுமா?’

‘ஷட் அப்… திரும்ப திரும்ப நீங்க பழைய கதைகளை பேசாதீஙன்னு பலதடவை உங்களுக்கு சொல்லியிருக்கேன், கொஞ்சம் நிறுத்துறீங்களா? இப்போ வந்த விஷயத்தை மட்டும் சொல்லுங்க’

‘இதோ பாருங்க மேனகா அந்த அபி ரொம்ப நல்லவங்க, அவங்களை நீங்க உங்க எதிரியா நினைக்கிறது சரியில்லை, உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் அந்த ஆதிதான் எல்லா குழப்பங்களையும் பண்ணிக்கிட்டு இருக்கார்’.

‘என் கிட்டே இருந்தவனை பிரிச்சிக்கிட்டுப் போய் இப்ப எனக்கு எதிராக செயல்பட்டுக்கிட்டு இருக்கிறவ நல்லவளா? நான் இந்தியாவுக்கு வந்ததுமுதலே அபியை என் எதிரியா நினைக்கிறேன். இதுக்கு மேலே நான் பேச விரும்பலை, நீங்க போகலாம்’

திருவேங்கடத்தின் வீடு…. தான் சுமதியை சந்தித்து அவளிடம் பேசப்போக, தெரு ஜனங்கள் எல்லாம் கூடி தன்னை நன்றாக மொத்தி அனுப்பியதை மாமனாரிடம் மோசடி மாப்பிள்ளை சொல்ல, அவரோ அதை சட்டை பண்ணுவதாக இல்லை. ‘உங்க மகள் ரொம்ப மோசமானவள்’ என்று சொல்லும் மருமகனிடம் ‘அப்படீன்னா ஏன் அவளுடன் சேர்ந்து வாழனும்னு நினைக்கிறே? அவள் என்னையே அப்பா என்று மதிக்காதவள்’ என்று சொன்னவர் திரும்பவும் தன் அரசியல் உளறல்களைத் தொடர்கிறார் (அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டால் நமக்கு தலை சுற்றும். இந்த வசனங்களை யாரும் எழுதிக்கொடுக்கிறார்களா அல்லது ராமச்சந்திரனை தானே பேச விட்டுட்டாங்களா தெரியவில்லை). ஒருகட்டத்தில் மாமனாரை மடக்க, தான் செல்போனில் பதிவு செய்து வைத்திருக்கும் டயல்டோனைப்போட்டுக்காட்ட அதில் ‘அண்ணன் திருவேங்கடம் வாழ்க, தானைத்தலைவன் திருவேங்கடம் வாழ்க, வருங்கல முதல்வர் திருவேங்கடம் வாழ்க’ போன்ற கோஷங்கள் பதிவாகியுள்ளன. புகழ்ச்சி கோஷத்துக்கு மயங்கிப்போகும் திருவேங்க்டம், தன் மாப்பிள்ளைக்காக அவனுடைய ஆசைகளை நிறைவேற்றி வைப்பதாக சொல்கிறார்.

காஞ்சனாவின் வீடு..... ஆதி, ரேகா, மனோ அனு, கிஷோர், அர்ஜுன் (இவன் எங்கிருந்து வந்தான்?)... என எல்லோரும் ஆஜராயிருக்க, காஞ்சனா ஆவேசமாகப் பேசுகிறாள். அபி நடத்த்போகும் விழா மட்டும் நடந்துவிட்டால் தான் ஈஸ்வரனின் ‘சின்ன வீடு’ என்று எல்லோரும் பேசுவார்கள் என்றும் அது தனக்கு மட்டுமல்ல அவர்கள் எல்லோருக்குமே அவமானம்தான் என்றும் கத்தும் அவள், அப்படி நடந்துவிட்டால் தன்னை உயிரோடு பார்க்க முடியாது என்றும் மிரட்டுகிறாள். உலகமே அழிந்தாலும் கலங்காத ஆதி, அம்மாவின் இந்த வார்த்தைக்கு மட்டும் ஆடிப்போகிறான்.

‘இதைத்தடுக்க, முதலில் அப்பா இருக்கும் இடத்தைக்கண்டு பிடிக்கவேண்டும்’ என்று மனோ சொல்ல, அதற்கு அர்ஜுன் ‘ஏன், அவர் இருக்கும் இடம் உனக்கு தெரியாதா? உங்க அக்காதானே அவரைக் கடத்தி ஒளிச்சு வச்சிருக்காங்க? இப்போ இங்கே வந்து ஒண்ணும் தெரியாதவன் மாதிரி பேசுவது யாரை ஏமாத்த?’ என்று கேட்க, அவர்களுக்குள் வாய்ச்சண்டை முற்றுகிறது. இடையில் புகும் ஆதி, அர்ஜுனைத்திட்டுகிறான். ‘நீங்க இப்படி சண்டை போட்டுக்கொண்டிருப்பதில் எந்த பலனும் இல்லை, முதலில் உங்க அப்பாவைக் கண்டுபிடிக்கணும்’ என்று கிஷோர் சொல்ல, ஆளுக்கொருபக்கம் கலைந்து போகின்றனர். இத்தனை நாள் கழித்து வந்த கணவனை ரேகா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

ஒரு உயரமான கட்டிடத்தின் மொட்டைமாடியில் இரவு நேரத்தில் தொல்காப்பியனைச் சந்திக்கும் உஷா, தன்னை அவன் அழைத்த காரணத்திக்கேட்க, அதற்கு தொல்ஸ், ஆதி உஷாவுக்கு விட்டிருக்கும் டைவர்ஸ் மிரட்டல் பற்றிச் சொல்லி, அதுபற்றி உஷா ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டுமென்று கேட்க அவளோ, ஆதியிடமிருந்து பிரிந்து போவதுதான் தனக்கு நிம்மதியான வாழ்க்கையென்றும் தன்னுடைய மிச்ச வாழ்க்கைக்கு தன்னுடன் இருக்கும் தன் மகன் போதுமென்றும் கூறுகிறாள்…

‘இதோ பாருங்க உஷா, நம்முடைய நட்பு உங்க வாழ்க்கைக்கு இடையூறா இருக்கக்கூடாது. முன்னர் இப்படித்தான் எனக்கும் அபிக்கும் இடையே இருந்த தூய நட்பைக் கொச்சைப்படுத்தி கோர்ட்டில் சொல்லி பாஸ்கர் அபியிடமிருந்து விவாகரத்து பெற்றார். இப்போ ஆதியும் அதே வழியைக்கையாள்கிறார்’

‘இதோ பாருங்க தொல்ஸ், பாஸ்கரைப்பற்றியும், ஆதியைப்பற்றியும் நமக்குத்தெரியும். அப்படியிருக்க அவங்க என்ன சொல்வாங்கன்னு ஏன் பயப்படணும்?. நான் பாஸ்கரையோ, ஆதியையோ வைத்து இந்த உலகத்தை எடைபோட விரும்பவில்லை (ஆகா… இது முன்பு இந்த சாரதா சொன்ன அதே வார்த்தைகள்……!!!!). எனக்கு என் மகன் இருக்கிறான், என்மீது அன்பைப்பொழியும் அப்பா அம்மா இருக்காங்க, அதோடு நல்ல நண்பராக நீங்க இருக்கீங்க… என்னுடைய மிச்ச வாழ்க்கைக்கு இதுபோதும் தொல்ஸ். எனக்காக நீங்க மனசைப்போட்டு குழப்பிக்காதீங்க. பசிக்கிறது… வாங்க நிம்மதியா டின்னர் சாப்பிடுவோம்’

கட் அண்ட் ரைட்டாக (அதாவது தெளிவாக) பேசிவிட்டு உஷா படியிறங்கிப்போக, தொல்காப்பியன் பின்தொடர…….
[/tscii:5d96f454e0]

aanaa
23rd October 2008, 09:56 PM
[tscii:62569c40e5]BUT WEDNESDAY EPISODE WAS INTERESTING AANAA... ESPECIALLY 'MENAKA & TOLS MEET' AND 'USHA & THOLS MEET'... (follows)......
தொல்காப்பியன் பின்தொடர…….
[/tscii:62569c40e5]

:ty: சாரதா
தொல்ஸ்-ஸின் பாணியே அதுதானே - நீங்கள் முன்பு சொன்ன ( எழுதிய) மாதிரி

Arthi
23rd October 2008, 10:53 PM
emm pin thOdara... neengaL thOdarungaL :D

aanaa
24th October 2008, 06:00 AM
emm pin thOdara... neengaL thOdarungaL :D :lol:

saradhaa_sn
24th October 2008, 11:52 AM
விடிந்தால் சஷ்டியப்த பூர்த்தி விழா.......

நல்ல பெரிய மன்டபம்தான் பிடித்திருக்கிறார்கள். இரவில் மண்டபத்தின் அலங்கார வேலைகளைக் கவனித்துக்கொன்டிருக்கும் அபி, மற்றவர்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டிருக்கிறாள். கூடவே ஆர்த்தியும் கிருஷ்ணனும். (சரி, ஆர்த்தி இதில் மும்முரமாக ஈடுபட்டிருப்பது தெரிந்தால் அவருடைய "ஆதியண்ணா" கோபித்துக்கொள்ள மாட்டாரா?). ஒரு காரில் வந்திறங்கும் தேவராஜின் ஆட்கள் ஈஸ்வரனைத்தேடும் பணியில் இறங்குகின்றனர். அவர்களில் ஒருவன் சமையல்காரன் போலவும், இன்னொருவன் எலெக்ர்டீஷியன் போலவும் மண்டபத்துக்குள் நுழைகிறார்கள். அவர்களுடைய நடவடிக்கைகலைப் பார்த்தால் அவர்கள் போலி என்பதை சின்னப்ப்பையன் கூட கண்டுபிடித்து விடுவான். அந்தளவுக்கு அமெச்சூர்தனம். இருவரும் அபியின் சந்தேகப்பார்வைக்கும் ஆளாகின்றனர்.

சற்று நேரத்தில் போலீஸ் வர, இவர்கள் ஒளிந்துகொள்கின்றனர். விழாவில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடப்பதுபோல தெரிந்தால் தனக்கு தகவல் தெரிவிக்கும்படி இன்ஸ்பெக்டர் சொல்லிப்போகிறார். போலீஸ் போனதும் மண்டபத்தின் பின் வழியாக உள்ளே நுழௌந்து தேடும் இவர்கள் கண்ணில் ஈஸ்வரன் மட்டுமல்ல, ஒரு ஈ, காக்காய் கூட அகப்படவில்லை. மறுநாள் காலை விழா நடக்கும் இடம்போலவே தெரியவில்லை.

வீட்டில் அபி, ஆனந்தி, சுமதி இவர்கள் மத்தியில் கற்பகம் தன்னுடைய பழைய கதைகளைச்சொல்லி சந்தோஷப்பட, மூவரும் ஆர்வமும் சிரிப்புமாக கேட்டுக்கொண்டிருக்கின்றனர்....

'ஏம்மா, உன் கல்யணத்துக்கு முன் அப்பாவைப் பார்த்தியா?'

'அதெப்படிடீ பார்க்க முடியும்?. கல்யாணம்னு சொன்னாங்க நானும் சம்மதிச்சுட்டேன். கல்யாணத்தன்னைக்குதான் பார்த்தேன்'.

'ஒருவேளை முன்னாடியே பார்த்திருந்தா அப்பாவை வேணாம்னு சொல்லியிருப்பே இல்லையா?'

'ஏன்டி அவருக்கு என்ன குறை?, நல்ல அழகு, நல்ல கலர், நல்ல உயரம்'

'அய்யோ அம்மாவுக்கு வெட்கத்தைப்பாரு... அம்மா நீ வெட்கப்பட்டு இன்னைக்குத்தான் பார்க்கிறேன். அப்பாவுடைய திருட்டு முழியை விட்டுட்டியே. அது ஆர்த்திக்குத்தான் அப்படியே வந்திருக்கு'.

'அய்யோ இல்லை இல்லை'.

'ஏண்டி அப்படி சொல்றே.. அவருடைய முழி, நிறம், உயரம் எல்லாம் உனக்குத்தாண்டி வந்திருக்கு'

மகள்களோடு கற்பகம் ரொம்ப சந்தோஷமாக சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறாள். (நேற்று தமிழ் நாட்டில் பலத்த மழை. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிப்பு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)

இடையே உள்ளேயிருந்து வரும் ராஜேந்திரனும் இவர்களுடைய சந்தோஷத்தில் கலந்துகொள்ள, அப்போது வீட்டுக்குள் நுழையும் திருவேங்கடத்தைப் பார்த்து அபி... 'வாங்க'

'அதானே பார்த்தேன்... அபி அன்னைக்கு என் வீட்டுக்கு வந்த உன்னை நான் திட்டி அனுப்பினாலும் நீ இப்போ என்னை வரவேற்கிறே பாரு... ஒரு எம்.எல்.ஏ.யின் தயவு எப்பவும் வேணும்னு நினைக்கிறே இல்லையா?. அது தப்பில்லை அபி'

'நீங்க பதவியில் இல்லாவிட்டலும் நான் வரவேற்கத்தான் செய்வேன் சித்தப்பா'.

'சரி அதை விடு அபி, நான் அண்ணன் கிட்டே பேசணும். கொஞ்சம் கூப்பிடுறியா...?'

அபியின் சந்தேக முகம் குளோஸப்பில்....

Arthi
24th October 2008, 03:53 PM
'ஏம்மா, உன் கல்யணத்துக்கு முன் அப்பாவைப் பார்த்தியா?'

'அதெப்படிடீ பார்க்க முடியும்?. கல்யாணம்னு சொன்னாங்க நானும் சம்மதிச்சுட்டேன். கல்யாணத்தன்னைக்குதான் பார்த்தேன்'.

'ஒருவேளை முன்னாடியே பார்த்திருந்தா அப்பாவை வேணாம்னு சொல்லியிருப்பே இல்லையா?'

'ஏன்டி அவருக்கு என்ன குறை?, நல்ல அழகு, நல்ல கலர், நல்ல உயரம்'


wow ,typical Karpagam's dialog... cld imagine how she wld have delivered those diaglogs :P



மகள்களோடு கற்பகம் ரொம்ப சந்தோஷமாக சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறாள். (நேற்று தமிழ் நாட்டில் பலத்த மழை. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிப்பு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)


was it because of Karpagam's change in nature??? :roll:

aanaa
24th October 2008, 06:59 PM
:ty: சாரதா

aanaa
24th October 2008, 07:01 PM
was it because of Karpagam's change in nature??? :roll:

:rotfl:

Arthi
24th October 2008, 07:07 PM
was it because of Karpagam's change in nature??? :roll:

:rotfl:
enna... post-ku post sirippu adhigamaagikitE pOgudhu :P :)

aanaa
25th October 2008, 08:20 AM
a serial goes for more than 4 years
then what we do ...

saradhaa_sn
25th October 2008, 02:25 PM
'இப்போ எதுக்காக அப்பாகிட்டே பேசணும்'

'என்ன அபி, விடிஞ்சா அவருக்கு சஷ்டியப்த பூர்த்தி விழா. அதுக்காக அவரைப்பார்த்து பேசணும்'

'அவர் இப்போ வீட்டில் இல்லை'

'ஓ... அப்படீன்னா மண்டபத்தில் இருக்காரா?. அங்கே பார்த்து பேசிக்கிறேன்'.

'அவர் அங்கேயும் இல்லை. இப்போ எதுக்காக அவரைத்தேடுறீங்க?. என் கிட்டே விஷயத்தைச்சொல்லுங்க'

'சரி சொல்றேன்..., அபி, உங்க அப்பா எப்பவோ அண்ணியை விட்டுட்டு போயிட்டார். அப்புறம் அவர் வாழ்ந்ததெல்லாம் அந்த காஞ்சனாவுடன்தான். அப்போ அவங்கதானே கொண்டாடணும்?. நீங்க எதுக்கு கொண்டாடறீங்க?'

'சித்தப்பா... எல்லாம் எங்களுக்கு தெரியும். நீங்க இப்போ போறீங்களா?'

'அப்பா உங்க மரியாதை கெட்டுப்போகும் முன் போயிடுங்க'

'இதோ பார் சுமதி, மரியாதையெல்லாம் எதிர்பார்த்தா அரசியலில் இருக்க முடியுமா?'

காஞ்சனா வீடு....

'எல்லாரும் இப்படி நின்னுக்கிட்டு இருந்தா எப்படி?. விடிஞ்சதும் அங்கே விசேஷம் நடந்துவிடும். அதுமட்டும் நடந்துட்டா நான் தூக்கில தொங்கிடுவேன்'

'அம்மா, அப்படி சொல்லாதீங்கம்மா'.

'பின்னே என்ன செய்யச்சொல்றே?. அந்த அவமானத்தை தாங்கிகிட்டு என்னால வாழ முடியாது'

'பொறுங்கம்மா, அப்பாவைக்கண்டு பிடிச்சதும் தேவராஜன் போன் பண்ணுவார். அதுக்காகத்தான் வெய்ட் பண்ணுறேன்'.

அப்போ திருவேங்க்டம் வருகிறார்... 'என்ன எல்லாரும் ரொம்ப சோகமா இருக்கீங்க?. அஙே என்னடான்னா அபி காலில் சக்கரம் கட்டிக்கிட்டு பறந்திகிட்டு இருக்கா'

'இப்போ எதுக்காக இங்கே வந்தீங்க?'

'கோபப்படாதே ஆதி, நியாயமா இது உங்க அம்மாவுடன்தான் நடக்கணும்னு எனக்கும் தெரியும். அதனால் என்னா, நாமும் ஒரு விழா இதைவிட கிராண்டா நடத்திடலாம்'

'இப்போ நீங்க வெளியே போறீங்களா?'

'அட அபியும் இதையேதான் சொன்னாள். அடடே மனோவும் இங்கேதான் இருக்கியா?. ஆமாம் நமக்கு எது ஆதாயமோ அங்கேதான் இருக்கணும்'

'சித்த்ப்பா, நான் எந்த ஆதாயத்துக்காகவும் இங்கே வரலை'

'கரெக்ட், இதே மாதிரி அப்பப்ப அறிக்கைகளும் விடணும்'

'முதல்ல நீங்க போங்க இங்கிருந்து'

அபி வீடு.... மீண்டும் வழக்கம்போல கற்பகம் சோகமாக.... இப்போ அபி இல்லை... ஆர்த்தியும் ஆனந்தியும் மட்டும்தான்...

'ஏம்மா சோகமா இருக்கே?'

'இல்லை ஆனந்தி, தப்பு பண்ணினது உங்க அப்பா. அதுக்கு அந்த காஞ்சனா என்ன பண்ணுவாள்?. அவள் நிலையை நீங்க நினைச்சுப் பார்த்தீங்களா?.'

'அம்மா, அந்த காஞ்சனாவையும் ஆதியையும் பத்தி உனக்கு தெரியாதா?. இதே மாதிரி ஒரு விசேஷம் அங்கே நடந்தால் அவங்க உன்னை நினைச்சுப்பார்த்திருப்பாங்களா?. கஷ்ட்டப்பட்டு இவ்வளவு ஏற்பாடும் செஞ்ச அக்கா காதில் இது விழுந்தா எவ்வளவு வருத்தப்படும் தெரியுமா? காலைல விசேஷம், நீ மனதைப்போட்டு குழப்பிக்காதே. அக்காவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படும்'.

ஆதியின் வீட்டு காம்பவுண்ட்... ஆதியும் கிரியும் காத்திருக்க, தேவராஜனும் ஆட்களும் காரில் வந்திறங்க...

'என்ன ஆச்சு தேவராஜன், எங்க அப்பாவை கண்டுபிடிச்சிட்டீங்களா?'

'இல்லை ஆதி, உங்க அப்பா மண்டபத்தில் இல்லை. நம்ம ஆளுங்க நல்லா தேடிட்டாங்க. எங்கோ வெளியில தங்கி, காலைலதான் வருவார் போலிருக்கு. கவலைப்படாதீங்க, அவர் மண்டப வாசலுக்கு வந்ததும் நம்ம ஆளுங்க ஒரே அமுக்கா அமுக்கி, இங்கே கொண்டுவந்திடுவாங்க'.

'சும்மா சொன்னா போதாது தேவராஜ், சொன்ன மாதிரி செய்யணும், சரி எல்லோரையும் போய் ரெடியா இருக்கச்சொல்லுங்க'.

இவங்க சொன்ன மாதிரி எல்லாம் நடக்கணுமே என்ற சிந்தனையில் ஆதி மூழ்க.....

aanaa
25th October 2008, 07:11 PM
'இதோ பார் சுமதி, மரியாதையெல்லாம் எதிர்பார்த்தா அரசியலில் இருக்க முடியுமா?'
.....

:exactly:

:ty:

gta129
27th October 2008, 06:20 AM
Thanks again saradhaa madam. We all greatly appreciate your contribution.

saradhaa_sn
30th October 2008, 01:46 PM
[tscii:73fe66bbf0]காஞ்சனாவின் வீட்டில் வழக்கம்போல அவள், ஈஸ்வரனக்கும் கற்பகத்துக்கும் நடக்கப்போகும் சஷ்டியப்த பூர்த்தி விழாவைத்தடுக்க தன் மகன் ஆதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவனைக் காய்ச்சியெடுத்துக்கொண்டிருக்கிறாள். ஆதி என்ன சமாதானம் சொல்லியும் அவள் திருப்தியாகவில்லை. ஆதியின் கோபம் முழுக்க அபியின் மீதே திரும்புகிறது. இன்னமும் அந்த தேவராஜ பாண்டியனின் ஆட்கள் தன் அப்பாவைக் கண்டுபிடிக்கவில்லையென்ற ஆத்திரம். ஆனால் தேவராஜனைக் கேட்கும்போதெல்லாம், ‘கவலைப்படதீங்க தம்பி, எவ்வளவு முயற்சி செய்தும் உங்க அப்பா இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை, இந்நிலையில் நமக்கு இருக்கும் ஒரே வழி மண்டப வாசலில் வந்திறங்கும் உங்க அப்பாவை, அங்கிருந்து அப்படியே தூக்கி வருவதுதான். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டேன், நம்ம ஆட்கள் ரொம்ப தயாரா இருக்காங்க’ என்று சொல்லியும் ஆதி சமாதானம் ஆகவில்லை. அவனுடைய ஒரே அச்சம், எங்கே அந்த அபி எல்லோருடைய கண்ணிலும் மண்ணைத்தூவி விட்டு அந்த விழாவை நடத்தி முடித்துவிடுவாளோ என்பதில்தான் இருக்கிறது. ஆகவேதான் அவன் அடிக்கடி தேவராஜனை உசுப்பேத்திக்கொண்டிருக்கிறான்.

மண்டபத்தில் எல்லோரும் ஒரே சந்தோஷமும் கும்மாளமுமாக இருக்கின்றனர். விடிய விடிய அம்மா கற்பகத்தைச் சீண்டிவிட்டு அவள் வெட்கப்படுவதைப்பார்த்து ஆனந்திக்கின்றனர். காஞ்சனாவின் வீட்டில் காஞ்சனாவும் ரேகாவும் செய்வதறியாது கலக்கத்தில் இருக்க, இன்னொரு இடத்தில் ஆதியும் தேவராஜனும், மண்டபத்திலிருந்து தங்கள் ஆட்களின் போன் செய்தியை பரபரப்புடன் எதிர்பார்த்து காத்திருக்க இரவு இப்படியே ஓடிப்போகிறது, நேரம் ஆக ஆக ஆதிக்கு கலக்கம், முக்கியமாக இந்த ஃபங்க்ஷன் நடந்துவிட்டால் தற்கொலை செய்துகொள்ள்ப்போவதாக தன் அம்மா காஞ்சனா விடுத்திருந்த மிரட்டல். (இந்த தொடரிலேயே அம்மாவின் மீது உயிராகவும் அவளுக்காக எதையும் செய்யக்கூடியவனாகவும் வரும் ஒரே பாத்திரம் ஆதித்யாதான், அபியின் அம்மா பாசமெல்லாம் இவனுக்கு அப்புறம்தான்).

பொழுதும் விடிந்துவிட்டது. மண்டபமும் களைகட்டிவிட்டது. இன்னும் அப்பா வரவில்லையே என்று அபி வகையறாவுக்கு சற்று பதட்டம், இருந்தாலும் வரத்துவங்கிவிட்ட விருந்தினரை வரவேற்று உபசரித்து அமரவைப்பதில் பிஸியாக இருக்கின்றனர். அழைக்கப்பட்டவர்களெல்லாம் வந்துகொண்டிருக்க அவர்களை ஆர்த்தியும் ராஜேந்திரனும் வாசலில் நின்று வரவேற்கின்றனர்.

உஷாவின் வீடு…….. மொட்டை மாடியில் உஷா, அப்பா, அம்மா மூவரும் பேசிக்கொண்டிருக்கும்போது தொல்காப்பியன் வர, ‘வாங்க தொல்ஸ், எப்படி இருக்கீங்க?’

‘அதிருக்கட்டும் உஷா, என்ன இங்கே இருக்கீங்க? நீங்க அபி விட்டு ஃபங்க்ஷனுக்கு போயிருப்பீங்கன்னு நினைச்சேன்’.

‘என்ன விளையாடுறீங்களா?. உங்களை அழைக்கலைன்னு கோபப்பட்டு, உங்க முன்னாடிதானே அபியிடம் இன்விடேஷனைத் திருப்பிக்கொடுத்தேன், மறந்துட்டீங்களா?. அதுவும் பக்கத்தில் நின்ற உங்களை அழைக்காமல் என்னை மட்டும் அழைத்தால் என்ன அர்த்தம்?’

‘இதோ பாருங்க உஷா, இது அபி வீட்டு குடும்ப விசேஷம். அவங்க குடும்பத்தில் யாருக்கும் என்னை பிடிக்கலை அதனால் அழைக்கலை, ஆனா நீங்க அப்படியில்லையே’

‘அப்படி பார்த்தா என்னையும்தான் அவங்களுக்கு பிடிக்காது, அப்புரம் நான் ஏன் போகனும்?’

‘உங்களை பிடிக்காததுக்கு காரணம் நீங்க எனக்கு சப்போர்ட்டா பேசுறீங்கன்னுதான், வேறு காரணம் எதுவும் இல்லை’

‘சரி தொல்ஸ், இப்போ அந்த ஃபங்க்ஷனுக்கு போகனும் அவ்வளவுதானே, வாங்க ரெண்டுபேரும் போவோம்’.

‘அய்யோ என்ன உஷா நான் எப்படி அங்கே’

‘தெரியுதுல்ல?. அப்போ பேசாமல் இருங்க, அதுமட்டுமல்ல இன்னைக்கு உங்களுக்கு லன்ச் எங்க வீட்டுலதான், அம்மா நம்ம எல்லோருக்கும் லன்ச் ரெடி பண்ணுங்க’.

மீண்டும் கல்யாண மண்டபம்…..

அப்பா இன்னும் வரவில்ல்யே என்று ஆனந்தி, சாரதா இவர்களுக்கு இருந்த பதற்றம் இப்போது அபியையும் தொற்றிக்கொண்டது, நேரம் ஆக ஆக அவளது முகத்தில் சந்தோஷம் மறைந்து சந்தேகமும் பரபரப்பும் குடிகொள்ளத்துவங்கிவிட்டன, ‘அப்பா வராமல் சொதப்பி விருவாரோ, அல்லது வழியில் அவருக்கு ஏதும் தடங்கலோ’ என்ற பதை பதைப்பு, இருந்தாலும் மற்ரவர்களிடம் காட்டிக்கொள்ளவில்லை. அப்பா தனக்கு ஒரு காண்டாக்ட் நம்பர் கூட கொடுக்காமல் இப்படி ஒளிந்திருப்பது அவளையும் ஆனந்தி, சாரதா ஆகியோரையும் கவலையில் ஆழ்த்துகிறது.

தேவராஜா பாணிடியனுக்கும் ஆதிக்கும் வாக்குவாதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது, ஒருகட்டத்தில் பொறுமை இழக்கும் ஆதி, தேவராஜனின் ஆட்கள் நிச்சயம் தன்னை ஏமாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் கொண்டு, தானே மண்டபத்துக்குப்போவதாக காரில் விரைகிறான்.

மண்டப வாச்லில் சட்டென்று ஒரு காரில் வந்திரங்கும் ஈஸ்வரன், நேராக மண்டபத்துக்குள் விரகிறார். அப்பாவைப்பார்த்ததும் அபி, ஆனந்தி, ஆர்த்தி ஆகியோருக்கும் மற்றவர்களுக்கும் முகத்தில் சந்தோஷம் குடி கொள்கிறது. நேராக அவர் மணவறியில் சென்று அமர, அலங்கரிக்கப்பட்ட கற்பகத்தை அழைத்து வருகின்றனர்.

‘வேகமா போப்பா’ என்று டிரைவரை விரட்டும் காஞ்சனா, காரின் பின் சீட்டில் அமர்ந்திருக்க, அவள் கையில் துப்பாக்கி.

மண்டப வாசலில் வந்திறங்கியதும் பரபரப்புடன் நேராக அவள் உள்ளே செல்ல, பின்னால் வந்த காரிலிருந்து ஆதி இறங்கி அவனும் உள்ளே செல்ல, அவர்களின் பின்னே இன்னொரு காரிலிருந்து மனோ, அனு, அஞ்சலி ஆகியோரும் பின்தொடர, மண்டபத்துக்குள் கையில் துப்பாக்கியுடன் அம்மாவைப்பார்த்ததும் ஆதிக்கு அதிர்ச்சி. இவர்களை யாரும் கவனிக்காமல் சடங்குகளில் மூழ்கியிருக்க, அப்பாவின் கையில் தாலியை அபி கொடுக்கப்போகும்போது….. காஞ்சானவின் குரல்…

“நிறுத்துங்க”

நிமிர்ந்து பார்க்கும் அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி.

‘ஏய் அபி, இது உனக்கே நல்லாயிருக்கா, அவர் உங்கம்மாவுக்கு தாலி கட்டின புருஷன்னா, அப்போ என் கழுத்தில இருக்கிற தாலி யார் கட்டினது?. ஏன் எங்களை இப்படி வதைக்கிறீங்க?’

‘ஏம்மா, நாங்க உங்களை வதைக்கிறோமா? உங்க பிள்ளை ஆதி எனக்கு எவ்வளவு கொடுமை செஞ்சான்னு உங்களுக்கே தெரியாதா?. எத்தனையோ வருஷங்களுக்குப்பிறகு எங்க அப்பா எங்களுக்கு திரும்ப கிடைச்சிருக்கார். அவருக்கும் அம்மாவுக்கும் நடக்கிற விசேஷத்தை ஏம்மா தடுக்கிறீங்க?’
[/tscii:73fe66bbf0]

saradhaa_sn
30th October 2008, 07:52 PM
தொலைக்காட்சிகள் சும்மா எதற்கெடுத்தாலும் போட்டி வைத்து, நேயர்களை எஸ்.எம்.எஸ். அனுப்பச்சொல்லி படுத்துகின்றன. ஆகவே நாமும் ஒரு போட்டி வைத்தால் என்ன...?.

முந்தைய போஸ்ட்டில் 'மண்டபம்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வந்துள்ளது என்று சரியாக சொல்லும் நேயர்களில் மூவருக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

முதல் பரிசு : ரூ. பத்து லட்சம் மதிப்புள்ள கார் உடைய புகைப்படம்.

இரண்டாம் பரிசு : சிங்கப்பூருக்கு விமானப்பயணம் செல்லும் பயணிகளுக்கு டாட்டா காட்டும் வாய்ப்பு.

மூன்றாம் பரிசு: 21" கலர் டிவி யின் அட்டைப்பெட்டி.

aanaa
30th October 2008, 08:18 PM
தொலைக்காட்சிகள் சும்மா எதற்கெடுத்தாலும் போட்டி வைத்து, நேயர்களை எஸ்.எம்.எஸ். அனுப்பச்சொல்லி படுத்துகின்றன. ஆகவே நாமும் ஒரு போட்டி வைத்தால் என்ன...?.

:omg:

போட்டிக்கு முந்துங்கள்


:clap: :clap:

Arthi
30th October 2008, 08:21 PM
wow, attractive prizes...
I want second prize :P

saradhaa_sn
31st October 2008, 12:29 PM
'நாங்க ஆசைப்பட்டு நடத்துற இந்த விசேஷத்தை ஏம்மா தடுக்கிறீங்க?'

'நான் ஒண்ணும் தடுக்கலை அபி. தாராளமா நடத்துங்க' காஞ்சனாவின் இந்த வார்த்தைகள் அத்தனை முகங்களிலும் குழப்ப ரேகைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அபியின் முகம் அதிகமாகவே குழப்பம அடைகிறது.

'உண்மையாத்தான் சொல்றேன் அபி. நீங்க திட்டமிட்டபடி நடத்துங்க, ஏன்னா உங்க எல்லோருக்கும் அந்த உரிமை இருக்கு. என் கணவர் முதலில் தாலி கட்டியது உங்க அம்மாவுக்குத்தான். அதை இப்போ ஊரைக்கூட்டி வேறு நிரூபிச்சிட்டீங்க. அதுமட்டுமில்லே, அப்பா என்ற முறையில் நீங்க யாரும் இதுவரை அவரிடமிருந்து எந்த சந்தோஷத்தையும் அடைந்ததில்லை. அதன்னல்தான் சொல்றேன். நான் ஒண்ணும் இந்த விசேஷத்தை தடுக்க வரவில்லை. நீங்க எல்லோரும் என்னை அழைக்கலைன்னு கோபம்தான் எனக்கு, மத்தபடி எதுவுமில்லை'

காஞ்சனாவின் இந்த வார்த்தைகள் ஈஸ்வரன், கற்பகம், அபி, ஆர்த்தி, ஆனந்தி, சாரதா, ராஜேந்திரன், தோழர் பால கிருஷ்ணன் ஆகியோரை அதிகமாகவே குழப்பியது மட்டுமல்லாமல் மண்டபத்தில் வாசலில் நின்ற ஆதியை அதிர்ச்சியடைய வைக்கிறது.

'அம்மா, நீங்க சொல்றது ஒண்ணுமே புரியலை' என்று சொல்லும் அபியைப்பார்த்து, 'உண்மையாத்தான் சொல்றேன் அபி. இந்த விசேஷத்தில் கலந்துக்கத்தான் நான் வந்தேனே தவிர குழப்பம் விளைவிக்க வரவில்லை'. இந்த வார்த்தைகளைக்கேட்டதும் எல்லோர் முகமும் கொஞ்சம் கொஞ்சமாக மகிழ்ச்சியின் பக்கம் திரும்பியது என்றாலும் ஆனந்தியின் முகத்தில் இன்னும் சந்தேகம்.

காஞ்சனா இன்னும் என்னென்னவோ நிறைய பேசி அவர்களை சமாதானப்படுத்த (அந்த வசனங்களை எல்லாம் முழுசா இங்கு கொண்டு வர முடியவில்லை) அபி மகிழ்ச்சியடைந்து 'சித்தி'(?)யின் கைகளைப்பிடித்து அவளுக்கு நன்றி சொல்ல, மணமேடையில் இருந்து இறங்கி வரும் ஈஸ்வரன் 'என்னை மன்னிச்சிடு காஞ்சனா, நீயும் ஆதியும் ஏதாவது குழப்பம் செய்து இந்த விழாவை நிறுத்திடுவீங்களோ என்ற எண்னத்தில்தான் ரகசியமாக இந்த ஏற்பாடுகளை செஞ்சிட்டோம். நீ இவ்வளவு சீக்கிரம் மனம் மாறுவேன்னு நினைக்கவேயில்லை' என்று சொல்ல அனைவரும் மீண்டும் மணமேடைக்கு செல்ல, அபி மற்றும் அனைவரின் முகமும் ஆதியின் பக்கம் திரும்புகிறது.....

தன் அருகில் வந்து நிற்கும் அபியிடம், 'எங்க அம்மா சொன்ன பிறகுதான் எனக்கும் எல்லா விஷயங்களும் தெளிவாகிறது. நான் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்தது முதல் உங்க எல்லோருக்கும் ரொம்பவே தொல்லை கொடுத்துவிட்டேன். ஆனா அதற்கு பதிலாக நீங்க எனக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை. நான் உங்களுக்கு செய்த அநியாயத்துக்கெல்லாம் நீங்க என்னை மன்னிக்கணும்' (இன்னும் நிறைய வசனம் பேசுகிறான்) என்று கலங்கும் ஆதியின் கைகளைப்பிடித்துக்கொண்டு அபி, 'அப்படியெல்லாம் சொல்லாதே, நீ எப்போ என்னுடைய ஒரே ரத்தம்னு தெரிஞ்சு போச்சோ அன்றையிலிருந்து நீ செஞ்ச எதுவும் எனக்கு கஷ்ட்டமா தெரியலை'.

(திருச்செல்வத்துக்கு என்ன ஆச்சு?. ஏன் சீரியலை இவ்வலவு வேகமா முடிக்கப்பார்க்கிறார்?. காஞ்சனாவின் மனமாற்றமும், அதைவிட ஆதியின் மனமாற்றமும் கொஞ்சமும் நம்பும்படியாக இல்லையே. ரொம்ப சினிமாத்தனமாக இருக்கே. ஏன்?)

இவர்கள் இருவரும் மனம் விட்டுப்பேசிக் கொண்டிருக்கும்போதே மற்றவர்களின் மகிழ்ச்சியான முகங்கள் மாறி மாறி காண்பிக்கப்படுகின்றன.

'அக்கா, நானும் இந்த விசேஷத்தை ஒரு ஓரமா இருந்து பார்க்கலாமா?' என்று கேட்கும் ஆதியிடம்

'தம்பி, என்னடா சொல்றே, இது உன் வீட்டு விசேஷம்டா. நம்ம குடும்பத்துக்கு நீதான் மூத்த ஆண்பிள்ளை. நீ நின்னுதான் இதை சிறப்பா நடத்தணும்.. வா.. என் வாழ்நாளில் இன்னைக்குத்தான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்' என்று அபி சொல்ல...

அம்மா காஞ்சனாவையும் பெரியம்மா கற்பகத்தையும் அணைத்துக்கொண்டே ஆதி மணமேடைக்கு அழைத்துச்செல்ல.......

கற்பகத்துக்கு ஈஸ்வரன் தாலி கட்ட, காஞ்சனாவும் ஆதியும் பின்னால் நின்று அட்சதை தூவ, ஆதியும் அபியும் சிரித்துப்பேசிக்கொள்ள....

ஒவ்வொருவராக வந்து ஈஸ்வரனுக்கும் கற்பகத்துக்கும் பாதபூஜை செய்கின்றனர். முதலில் அபி, அடுத்து ஆதித்யா, பின்னர் ஆனந்தி, அடுத்து மனோ, அப்புறம் ஆர்த்தி, கூடவே ராஜேஷ், இவர்களோடு அஞ்சலி, கிஷோர், சுமதி, ராஜேந்திரன் ஆகியோரும் மகிழ்ச்சியோடு பாத பூஜை செய்ய...

எல்லோருடைய முகங்களிலும் சிரிப்போ சிரிப்பு... மகிழ்ச்சித்தாண்டவம்.... எல்லோர் முகங்களிலும் பயணித்துக்கொண்டே செல்லும் கேமரா... கற்பகத்தின் சிரித்த முகத்தில் அப்படியே குளோசப்பில் நிற்க.....

Madhu Sree
31st October 2008, 12:44 PM
:omg: :shock: :shock: :shock:

saradhaa_sn
31st October 2008, 12:48 PM
கேமரா... கற்பகத்தின் சிரித்த முகத்தில் அப்படியே குளோசப்பில் நிற்க.....

"அம்மா" அபியின் குரல் கேட்க......

"டமால்"

ஊதப்பட்ட பலூன் மீது பட்ட ஊசியாக அபியின் அழைப்பு தாக்க, கற்பகத்தின் கற்பனைக்கோட்டை வெடித்து சித்றுகிறது...

நிமிர்ந்து பார்க்கும் கற்பகத்தின் முன் அபி, ஆர்த்தி, சுமதி நிற்க, அம்மாவின் குழப்பமான முகத்தைப்பார்த்து, அபிக்கும் குழப்பம்...

'என்னம்மா ஆச்சு?'

அதோடு ஆர்த்தி 'அம்மா எதாவது பகல் கனவா?'

'இல்லடி பலிக்கக்கூடிய கனவுதான். அது சரி உங்க அப்பா வந்துட்டாரா?'

'அப்பா இன்னும் வரலைம்மா'.

(ஓ... இன்னும் ஈஸ்வரனே மண்டபத்துக்கு வரலையா?. சரிதான்)

காரில் துப்பாக்கியுடன் வந்துகொண்டிருக்கும் காஞ்சனா கோபத்துடன், 'இன்னும் வேகமா போப்பா' என்று ஓட்டுனரை விரட்டுக்கிறாள்.

அதானே பார்த்தேன்....
காஞ்சனாவாவது மனம் மாறுவதாவது....!!!,
ஆதியாவது அபியை அக்காவாக ஏற்றுக்கொள்வதாவது....!!!!
திருச்செல்வமாவது, சீரியலை முடிப்பதாவது.....!!!!!!!.

காஞ்சனா துப்பாக்கியோடு வருவதால், ஏதோ ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் தெரிகிறது.

Madhu Sree
31st October 2008, 12:58 PM
:roll: :phew:

saradhaa_sn
31st October 2008, 01:16 PM
:omg: :shock: :shock: :shock:
கரெக்ட்....

பார்க்கிறவங்க மட்டும் 'ஷாக்' ஆனா போதுமா?. படிக்கிறவங்களும் 'ஷாக்' ஆகட்டுமேன்னுதான், சஸ்பென்ஸை இரண்டாவது போஸ்ட்டில் போட்டேன்.

நான் நினைச்ச மாதிரியே 'ஷாக்' ஆயிட்டீங்க மது...

Madhu Sree
31st October 2008, 03:00 PM
:) aamaaa nejamaave shock thaan :D episode-ee izhakka ipdi laam panraanga :x :sigh2: .....

priya_2008
31st October 2008, 03:58 PM
Oh Saradha mam, :omg:

Even i was shocked., heard from my friend that Kolangal will be over by a month or two., but never expected this twist, the way u have described was awesome mam . :lol: :D

aanaa
31st October 2008, 06:59 PM
. கற்பகத்தின் சிரித்த முகத்தில் அப்படியே குளோசப்பில் நிற்க.....

தொல்ஸ் யை விட நீங்கள் இயக்குனராகலாம் போல.....

aanaa
31st October 2008, 07:00 PM
. கற்பகத்தின் சிரித்த முகத்தில் அப்படியே குளோசப்பில் நிற்க.....

இப்படி முடிக்கலாமென தொல்ஸ் யோசித்தாரோ என்னவோ
பின் :banghead: :banghead:

aanaa
31st October 2008, 07:11 PM
. கற்பகத்தின் சிரித்த முகத்தில் அப்படியே குளோசப்பில் நிற்க.....

அதுதானே

தொல்ஸ் சின் ஆயுள்கால திட்டம் அல்லவா :lol:

aanaa
31st October 2008, 07:12 PM
. கற்பகத்தின் சிரித்த முகத்தில் அப்படியே குளோசப்பில் நிற்க.....

மது மட்டுமில்லீங்க

saradhaa_sn
1st November 2008, 12:48 PM
'அப்பா வந்துட்டாரா அபி?'

'இன்னும் இல்லம்மா, இப்போ வந்திடுவார்'.

'அக்கா இதையேதான் நீயும் ரொம்ப நேரமா சொல்லிக்கிட்டே இருக்கே, ஆனா அவர் வந்தபாடில்லையே. அழைக்கப்பட்டவஙளெல்லாம் வந்துட்டாங்க. ஆனா இன்னும் அவரைக்காணோமே'

'பயப்படாதே ஆர்த்தி, நிச்சயம் வந்திடுவார்'.

'ஒரு காண்டாக்ட் நம்பரும் கொடுக்காம, இருக்கிற இடத்தையும் சொல்லாமல் என்ன மனுஷன் இவர்?'

'கோபப்படாதே ஆனந்தி, எனக்கு நம்பிக்கையிருக்கு. வந்திடுவார்'.

'அதுக்கில்லை அக்கா, நேரம் ஆக ஆக ஒருவேளை அவர் வராமல் போய் விடுவாரோன்னு பயம் வர ஆரம்பிச்சிடுச்சு' என ஆர்த்தி சந்தேகத்தை துவக்கி வைக்க.

'ஆமா அபி, அவள் பயப்படுறதும் சரிதானே, இன்னும் அவரைக்காணோமே' என்று கற்பகமும் கலங்க, அந்நேரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வர.

'அபி கொஞம் வரீங்களா?. உங்க கிட்டே தனியா பேசணும்'

'வாங்க இன்ஸ்பெக்டர்'

'எதுவும் பிரச்சினையில்லையே?. அப்படி ஏதும் பிரச்சினைகள் வந்தால் உடனே எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க'

'சரி சார்'.

'அபி இப்போ எதுக்கு போலீஸ் வந்திருக்கு?'

'பயப்படாதே அம்மா, அந்த ஆதியால் ஏதும் பிரச்சினை வந்துவிடக்கூடாதுன்னு ஒரு பாதுகாப்புக்கு வரவச்சிருக்கேன், அவ்வளவுதான்'.

அப்போது கோபத்துடன் திருமண மண்டபத்துக்குள் நுழைந்து நேராக இவர்கள் இருக்கும் இடத்துக்கு வரும் காஞ்சனா....

'அபி, நீ பண்றது உனக்கே நல்லாயிருக்கா?' என்று மண்டபனே இரண்டு பட கத்த, எல்லோருக்கும் அதிர்ச்சி. பார்வையாளர் கவனம் மொத்தமும் காஞ்சனா பக்கம் திரும்புகிறது.

ஆனந்தி மெதுவான குரலில், 'அக்கா இப்போ எதுக்கு இந்த பொம்பிளை இங்கே வந்திருக்காங்க?' என்று கேட்க, அபி அதே தாழ்ந்த குரலில், 'நாம் ஒண்ணும் பேச வேண்டாம். வேணும்னே பிரச்சினை பண்ண வந்திருக்காங்க'

வந்திருக்கும் பார்வையாளர்கள் பக்கம் திரும்பும் காஞ்சனா, 'ஏங்க இவங்கதான் விசேஷம் அது இதுன்னு கூப்பிட்டா உங்களுக்கு அறிவு வேண்டாம்?. தாலி கட்டிய மனைவி நானிருக்க என் புருஷனோடு தன் அம்மாவுக்கு சஷ்டியப்த விழா நடத்துறா இந்த அபி. அதுக்கு நீங்களும் வந்திட்டீங்க'.

இப்போது சாரதா குறுக்கிட்டு, 'ஏம்மா, நீங்க தாலி கட்டின மனைவின்னா அப்ப இவங்க யாரு?. உங்களுக்கு முன்னாலேயே அவருக்கு மனைவி ஆனவங்க. தெரியுமா?'

'சும்மா நிறுத்துங்க, இவள் அவருடைய மனைவிங்கறதுக்கு என்ன ஆதாரம்?. என்னோடு திருமனம் நடந்ததுக்கு எல்லா ஆதாரமும் இருக்கு, அதுமட்டுமல்ல எங்க மேரேஜை ரிஜிஸ்ட்டர் பண்ணியிருக்கோம். என்னை கல்யாணம் பண்ணிக்கொள்ளும் முன்னர் இவள் அவருடைய தொடுப்பா இருந்திருக்கலாம். அதுக்காக உரிமையுள்ளவங்க ஆயிட முடியுமா?'

இப்போது அனைவரும் திடுக்கிடுகின்றனர். கற்பகம், அபி, ஆனந்தி, ஆர்த்தி, சாரதா, கிருஷ்ணன், ராஜேஷ், தோழர் என எல்லோர் முகத்திலும் கோபத்தின் கொந்தளிப்பு. கோபத்துடன் கொந்தளிக்கும் அபி...

'நாக்கை அடக்கிப் பேசுங்க... எங்க அம்மாவைப்பத்தி இனிமேலும் ஒரு வார்த்தை சொன்னீங்க, அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்'.

'சும்மா நிறுத்துடி, பெரிசா பேசுறியே... நீ சொல்றது உண்மையா இருந்தா இப்போ இந்த விசேஷத்துல இருக்க வேண்டிய என் கணவர் இப்போ எங்கே சொல்லு?. ஏன் அவர் வரலை?. அவர் எங்கே இருக்கார்ங்கிறதாவது உங்களுக்கெல்லாம் தெரியுமா?. அவர் என் வீட்டில் உட்கார்ந்து டிவி.பார்த்துக்கிட்டு இருக்கார். (எல்லோர் முகத்திலும் சுனாமியின் தாக்குதல்) சந்தேகமா? இதோ நீயே பேசு'

நம்பரை டயல்பண்ணி அபி கையில் கொடுக்க, மறுமுனையில் ஈஸ்வரன்....

'அப்பா, ஏம்ப்பா இன்னும் வரலை?, நாங்க எல்லோரும் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கோம். எல்லோரும் வந்திட்டாங்க. இப்போ நீங்க வரலைன்னா எங்களுக்கு ரொம்ப அவமானமா போயிடும்பா'

அபி பேசுவதை எல்லோரும் மிக உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அவள் பேசப்பேச அவள் முகத்தில் சுரத்து இறங்கி ஏமாற்றம் படர்வது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது....

'என்னை மன்னிச்சிடு அபி, இப்போ நான் வர முடியாது' (அவருக்கு என்ன நிர்ப்பந்தமோ, என்ன மிரட்டலோ) என்ற ஈஸ்வரனின் பதில் அபியை இடியாகத்தாக்க, 'என்ன அபி, அவர் வருகிறாரா?' என்று கேட்கும் கற்பகத்திடம் 'இல்லை' என்று சோகமாக தலையாட்ட.... எல்லோர் முகத்திலும் ஏமாற்றம் மற்றும் கொந்தளிப்பு. அபியின் கையிலிருந்து தன் போனை வெடுக்கென்று பிடுங்கும் காஞ்சனா, கூட்டத்தினரைப் பார்த்து...

'என்னமோ பெரிசா பேசினாளே இந்த அபி, இப்போ தெரிஞ்சுபோச்சா?. இதுதான் இந்த மானங்கெட்ட குடும்பத்தின் லட்சணம். இவங்க கூப்பிட்டாங்கன்னு நீங்களும் வந்திட்டீங்களே. போங்க, போங்க... போய் உங்க வேலைகளைப்பாருங்க'.

கூட்டம் மொத்தமும் ஏதோ முணுமுணுத்தவாறு கலைந்துபோக, அதில் சிலர் இவர்கள் காதுபட மோசமாக பேசிக்கொண்டுபோக அவமானத்தின் உச்சத்தில் அபியின் குடும்பம்.

'நினைத்ததை நடத்தியே முடிப்பவள் நான் நான் நான்' என்று பாடாத குறையாக மண்டபத்தில் இருந்து காஞ்சனா வெளியேற, வாசலில் காரில் வந்திறங்கும் ஆதி 'நீங்க எப்படிம்மா இங்கே?' என்று கேட்க...

'ஆமா உன்னை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லைன்னுதான் நான் வந்தேன். அந்த சஷ்டியப்த விழா நடக்காமல் நான் நிறுத்திட்டேன்' என்று கூறும் அம்மாவைப்பார்த்து 'எப்படீம்மா?' என்று கேட்க 'வா... காரில் போகும்போது சொல்கிறேன்' என்று அழைத்துப்ப்போகிறாள். (எப்படீன்னு தெரிஞ்சுக்க இன்னும் ரெண்டு நாளாகும்).

'இனிமேல் என்னடி இருக்கு? வாங்கடி எல்லோரும் சேர்ந்து செத்துப்போயிடுவோம்' கற்பகத்தின் கண்களில், நிரம்பி வழியும் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட வெள்ளமாக கண்ணீர் பெருக்கெடுக்க, ஆனந்தியும் ஆர்த்தியும் செய்வதறியாது திகைத்து நிற்க, அம்மாவை அணைத்துக்கொள்ளும் அபியின் இமைக்காத கண்களில் சோகமில்லை, அதிர்ச்சியில்லை, ஆனால் கோபம் நிறைந்த தீர்க்கமான ஆவேசம் நிறைந்திருக்க.......

இந்தக் கண்ணகியின் கோபத்தில் எந்த மதுரை எரியப்போகிறதோ......

sudha india
1st November 2008, 02:35 PM
Eswaran's voice in dubbing ????? ......
May be Eswaran will given an entry now.

saradhaa_sn
1st November 2008, 03:40 PM
Eswaran's voice in dubbing ????? ......
May be Eswaran will given an entry now.
சுதா...

வெறுமனே அவர் குரலை மட்டும் கேட்டிருந்தால் நீங்கள் சொல்வதுபோல நடக்க சான்ஸ் உண்டு. ஆனால் ஈஸ்வரன் பேசுவதை கேமரா வழியே நேரிலேயே நமக்கு காண்பித்தார்களே. ஒருவேளை இந்த விசேஷத்தில் கலந்துகொண்டால் கற்பகத்தையோ அல்லது அபியையோ கொன்று விடுவோம் என்று ஈஸ்வரனை மிரட்டியிருக்கக் கூடும்.

(டப்பிங் கலையும் மிமிக்ரி கலையும் அபாரமாக வளர்ந்துவிட்ட இக்காலத்தில் ஆடியோ கேஸட் ஆதாரங்களை கோர்ட்டில் சாட்சிகளாக ஏற்றுக்கொள்வதில்லை என்பது உண்மைதான்).

aanaa
1st November 2008, 07:39 PM
:ty: Sarathaa

its a very long project for Thols
mmm
:banghead:

sudha india
3rd November 2008, 11:47 AM
Eswaran's voice in dubbing ????? ......
May be Eswaran will given an entry now.
சுதா...

வெறுமனே அவர் குரலை மட்டும் கேட்டிருந்தால் நீங்கள் சொல்வதுபோல நடக்க சான்ஸ் உண்டு. ஆனால் ஈஸ்வரன் பேசுவதை கேமரா வழியே நேரிலேயே நமக்கு காண்பித்தார்களே. ஒருவேளை இந்த விசேஷத்தில் கலந்துகொண்டால் கற்பகத்தையோ அல்லது அபியையோ கொன்று விடுவோம் என்று ஈஸ்வரனை மிரட்டியிருக்கக் கூடும்.

(டப்பிங் கலையும் மிமிக்ரி கலையும் அபாரமாக வளர்ந்துவிட்ட இக்காலத்தில் ஆடியோ கேஸட் ஆதாரங்களை கோர்ட்டில் சாட்சிகளாக ஏற்றுக்கொள்வதில்லை என்பது உண்மைதான்).

OK Sarada.... I did not see the serial. Ellam unga post padithu ezhudhinathuthan.

gta129
4th November 2008, 08:23 AM
its a very long project for Thols
mmm
:banghead:

Indeed, its VERY LONG project for Thols. :banghead: :banghead: :banghead:

saradhaa_sn
4th November 2008, 02:04 PM
[tscii:bd037e8e53]ஆதியுடன் காரில் இருந்து இறங்கும் காஞ்சனா, அவன் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு நேராக தன் வீட்டுக்குள் சென்று ஒரு அறையைத்திறந்துகாட்ட, உள்ளே ஈஸ்வரன், சுற்றிலும் ரவுடிகள் பாதுகாப்பில் இருக்க, அவரைப்பார்த்ததும் ஆதிக்கு உற்சாகம்.

‘இந்த ஆள் எப்படி இங்கே?. எப்படிம்மா இவரைக் கண்டுபிடிசீங்க?.’

‘ஆதி, இதுக்கு நாம் மனோவுக்குத்தான் நன்றி சொல்லணும்’.

ஃப்ளாஷ்பேக் விரிகிறது…….

அம்பாஸிடர் கார் ஒன்றில் மண்டபத்துக்கு ஈஸ்வரன் வந்துகொண்டிருக்கும்போது வழியில் கார் ரிப்பேராகி நின்றுவிட, டிரைவர் இறங்கி செக் பண்ணிப்பார்த்து பெல்ட் அறுந்துவிட்டதாகச் சொல்ல, வேறு ஏதேனும் ஒரு வண்டிக்காக காத்திருக்கும்போது மனோவின் கார் வந்து நிற்க…. ‘மனோ நீ எப்படிடா இங்கே?’

‘என்னப்பா நீங்க, அங்கே எல்லோரும் மண்டபத்தில் காத்திருக்காங்க, ரொம்ப லேட்டா வரீங்களே. சீக்கிரம் என் வண்டில ஏறிக்குங்க’.

காரில் ஏறப்போகும் ஈச்வரன், உள்ளே ரவுடிகள் இருப்பதைப்பார்த்து திடுக்கிட… ‘அப்பா எல்லாம் உங்க சேஃப்டிக்குதான்’.

கார் நேராக காஞ்சனாவின் வீட்டுக்கு போய் நிற்க… ‘டேய் மனோ இங்கே ஏண்டா அழைச்சிக்கிட்டு வந்தே?’.
‘ஒழுங்கா மரியாதையா இறங்கி வாங்க, இல்லேன்னா இழுத்துக்கிட்டூப்போக வேண்டியிருக்கும்’. ‘டேய், நான் வரமுடியாதுடா?’ (சுற்றிலும் ரவுடிகள் இருப்பதைப்பார்த்தபின்னும், தன்னால் ஒண்ணும் பண்ண முடியாது என்ற நிலையிலும் எப்படித்தான் இப்படி வீர வசனம் வருகிறதோ?. சினிமாக்களிலும் இப்படித்தான், சுற்றிலும் குண்டர்கள் கைகளில் உருட்டுக்கட்டைகளுடன் நிற்க, கைகால்கள் கட்டப்பட்டிருக்கும் கதாநாயகன், பிரதான வில்லன் முகத்தில் காறித்துப்பிவிட்டு மேற்கொண்டு ‘அடிஷனலாக’ நாற்பத்தேழு அடிகளை வாங்கிக் கட்டிக்கொள்வார். திருந்த மாட்டானுங்களே..)

காஞ்சனாவுக்கு சொல்லணுமா…”ஏன்யா, என்னோடைய சொத்து சுகங்களை வச்சு ரொம்ப சொகுசா வாழ்ந்துட்டு எனக்கு பிள்ளைகளையும் கொடுத்திட்டு, இப்போ அவளோடு சஷ்டியப்த பூர்த்தி கொண்டாட போறியா?. அப்படீன்னா இதுவரை என்னோடு வழ்ந்தது போலி வாழ்க்கையா?. விட மாட்டேன்ய்யா. அந்த விழாவை நடக்க விட மாட்டேன். நீ போனால்தானே விழா நடக்கும். உனக்கு பதிலா நான் போறேன்’…… பீரோவைத்திறந்து துப்பாக்கியைக் கையிலெடுத்தவள்…. ‘இதோ பார், நான் அங்கே போயி அங்கிருந்து உனக்கு போன் பண்ணுவேன், நீ வரமாட்டேன்னு அந்த அபி கிட்டே சொல்லணும். மாத்தி சொன்னாலோ அல்லது இங்குள்ள சூழ்நிலையைச்சொன்னாலோ அந்த அபி, கற்பகம், ஆனந்தி, ஆர்த்தி எல்லோரையும் சுட்டுத்தள்ளி விடுவேன்’ (அட.. இந்த சாரதா சொன்ன மாதிரிதான் ஆயிடுச்சு…!!!)

‘காஞ்சனா நீ பண்றது கொஞ்சம் கூட நியாயமில்லை, என்னை அங்கே போகவிடு’ என்னமோ காஞ்சனாவும் ஆதியும் இவருடைய அறிவுரையைக் கேட்டு அப்படியே நடப்பது போல இவர் கீதோபதேசம் செய்ய… காஞ்சனா போயே விட்டாள். (அதற்குப்பிறகு நடந்ததுதான் நமக்குத் தெரியுமே)

ஃபிளாஷ்பேக் முடிந்ததும், ஆதி மகிழ்ச்சியுடன் மனோவைக் கட்டிக்கொள்கிறான், கூடவே அப்பாவின் பக்கம் திரும்பி… ‘பார்த்தியாய்யா, நாங்க நினைப்பதுதான் நடக்கும். என்னமோ பெரிசா கிழிச்சுடுவேன்னாளே அந்த அபி, இப்போ என்ன ஆச்சு பார்த்தியா?. அபியுடைய மொத்தக்குடும்பமும் அவமானப்பட்டு நிற்குது. இப்பவாவது நாங்க யாருன்னு அவங்களுக்கு தெரியட்டும். உன்னைக் கடத்திக்கிட்டு வந்த வேலை முடிஞ்சிடுச்சு, இனி நீ எங்களுக்கு தேவையில்லை, வீட்டை விட்டு வெளியில போய்யா’ ஆதியின் கத்தலைத் தொடர்ந்து காஞ்சானவின் முறை….

‘ஆமாய்யா, நாங்க ஒண்ணும் உன்னை எங்களோடு வச்சுக்கணும்னு நினைச்சு கடத்திக்கிட்டு வரலை. உன்மேல இருந்த பாசமெல்லாம் எப்பவோ போச்சு. இனிமே நீ எங்களுக்கு தேவையில்லை. போ வெளியே’

அபியின் வீடு…….

சோகமே உருவாக எல்லோரும்… மனதில் கொந்தளிப்பும் முகத்தில் வருத்தமுமாக எல்லோர் கோபமும் ஈஸ்வரன் மீதுதான்….

‘அக்கா அப்பவே நான் சொன்னேன், இவரை நம்பி எதிலும் இறங முடியாதுன்னு. மனுஷனா இவர்? நீ எல்லா எற்பாடுகளையும் செஞ்சதால்தான் நான் ஒண்ணும் பேசாமல் இருந்தேன்’

‘நான் என்ன பண்னுவேன் ஆனந்தி? இந்த ஆளு இப்படிப்பண்ணுவார்னு நானும் நினைச்சேனா, இப்படி நம்ப வச்சு கழுத்தறுத்துட்டார்’

‘ஆமா அக்கா, இனிமே அந்த ஆளுக்கும் நமக்கும் எந்த ஒட்டும் உறவும் கிடையாது, அந்த ஆள் செத்தால் கூட அம்மா தாலி அறுக்கக் கூடாது’ ஆனந்தியின் இந்த கோபாவேசப் பேச்சுக்கு அதிசயமாக யாரிடமிருந்தும், குறிபாக கற்பகத்திடம் இருந்து எந்த எதிர்ப்போ ரியாக்ஷனோ வரவில்லை. வழக்கமாக அழுத்து குவிக்கும் கற்பகத்தின் முகம் நேற்று, பாறையாக இறுகிக்கிடந்தது.

அபி, ஆனந்தி மட்டுமல்லாது ஆர்த்தி, சாரதா, கிருஷ்ணன் என்று எல்லோரும் ஈஸ்வரனைத் திட்டித்தீர்க்கிறார்கள், கற்பகம் மட்டும் மௌனமாக விரக்த்தியின் எல்லையை அடைந்ததுபோல் இருக்க….

‘இந்த வீடுதாம்பா, நிறுத்து’ ஆட்டோவில் இருந்து இறங்கி பரபரப்பாக ஈஸ்வரன் வீட்டுக்குள் வர….. அபியின் குரல் 1000வாலா பட்டாசாக வெடிக்கிறது…

‘நில்லுங்க, எங்கே வந்தீங்க? நாங்கல்லாம் இருக்கோமா செத்துட்டோமான்னு பார்க்க வந்தீங்களா?. என்ன உரிமைல இந்த வீட்டுக்குள் நுழையறீங்க?. நாங்க பட்ட அவமானமெல்லாம் போதாதா, அந்த காஞ்சனாவோடும், ஆதியோடும் சந்தோஷமா இருக்கிறதை விட்டுட்டு எதுக்காக இங்கு வந்தீங்க?. எங்களுக்கு இன்னும் என்ன அவமானம் மிச்சம் இருக்கு? உங்களை நம்பித்தானே இத்தனை ஏற்பாடும் செஞ்சோம். முதல்லேயே மறுக்க வேண்டியதுதானே, எதுக்காக ஒத்துக்கிட்டீங்க? ஊரையே கூட்டிவச்சு இப்படி அவமானப்பத்திட்டீங்களே. ஒரு பத்து நிமிஷம் மட்டும் வந்திட்டு போயிடுங்கப்பான்னு போன்ல எவ்வளவு கெஞ்சினேன்?’

‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’

‘பேசாதீங்க, நீங்க பேசி நாங்க கெட்டதெல்லாம் போதும். கோயிலில் பிச்சைக்கார கோலத்தில் பார்த்த உங்களை அப்படியே விட்டுத் தொலைச்சிட்டு வந்திருக்கணும். அப்படிச்செய்யாமல் அப்பான்னு மதிச்சு எங்க கூடவே கூட்டிக்கிட்டு வந்தது என் தப்புதான். இன்னும் ஏன் நிற்கிறீங்க? போங்க இங்கிருந்து. இனி எங்க வீட்டு வாசற்படியை மிதிக்காதீங்க, இனி உங்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒட்டும் உறவும் கிடையாது. இனிமேல் உங்களை எந்த நிலையிலும் நான் சந்திக்க விரும்பலை, நீங்க செத்துட்டீங்கன்னு நினைச்சுக்கிறோம்…. போங்க வெளியே’

‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’

‘வெளியே போங்கன்னு சொல்றேன்’

வீட்டிலிருந்து கேட்டுக்குப்போகும்வரை சுமார் இரண்டு நிமிடங்கள் வரை அவர்களை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே போகிறார் ஈஸ்வரன்.

ஆக இரண்டு வீட்டில் இருந்தும் விரட்டியடிக்கப்பட்டு விட்டார். ஆதி வீட்டில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.. ஆனல் அபி வீட்டில்…..??????????????.

இப்போ தப்பு யார் மீது?. நிச்சயமாக ஈஸ்வரன் மீதுதான்…..

‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’

என்று இருபத்தைந்து தடவை சொல்லிக்கொண்டிருப்பதைவிட….., அதில் பத்தில் ஒரு பங்கு நேரத்தில்….

‘அந்த காஞ்சனா உங்களையெல்லாம் சுட்டுக் கொன்னுடுவேன்னு மிரட்டினதினாலதான் நான் போனில் வரமுடியாதுன்னு சொன்னேன்’ என்று ஒரே வரியில் சொல்லிவிட்டுப்போயிருக்கலாம்.

அதிலும், வீட்டிலிருந்து ‘கேட்’டுக்குப்போகும்போது எல்லோரும் கோபத்துடன், அதே நேரம் அமைதியாக அவரைப்பார்த்துக்கொன்டிருக்க, அந்த நீண்ட இடைவெளியில் ஒரு பெரிய லெக்சரே பண்ணலாம், அவ்வளவு நேரம் இருக்கிறது…..

ஆனால் ஒரு விஷயம், அப்படியெல்லாம் சட்டு புட்டுனு விஷயங்களைப்போட்டு உடைச்சிட்டா இன்னும் 749 எபிசோட்களுக்கு இழுத்துச்செல்ல முடியாது…. [/tscii:bd037e8e53]

aanaa
5th November 2008, 12:35 AM
[tscii:7b07e760ce]
..

ஆனால் ஒரு விஷயம், அப்படியெல்லாம் சட்டு புட்டுனு விஷயங்களைப்போட்டு உடைச்சிட்டா இன்னும் 749 எபிசோட்களுக்கு இழுத்துச்செல்ல முடியாது….

749 எபிசோட ... :lol: :rotfl:
:rotfl:
:rotfl:
:rotfl: [/tscii:7b07e760ce]

aanaa
6th November 2008, 07:38 PM
தொல்ஸிடம் நிறையவே விடயம் இருக்கும் ..

ஆனால்
எல்லா முட்டைகளையும் ஒரு கூடைக்குள் திணிக்க முயல்கிறார்

அனுபவங்கள் என நேற்று....

aanaa
10th November 2008, 09:49 PM
dock dock dock...

Saratha ...

Arthi
11th November 2008, 04:17 PM
no updates :huh:

great
11th November 2008, 11:39 PM
indha serial innum mudiyalaya :shock: :shock:

gta129
12th November 2008, 06:03 AM
indha serial innum mudiyalaya :shock: :shock:
No and it won't be for a long time.

kameshratnam
12th November 2008, 12:40 PM
I think they wont finish this serial since this is the only serial i guess is popular now in sun tv all others are dumb than this

aanaa
12th November 2008, 07:17 PM
its cheaper to have the known devil

gta129
13th November 2008, 10:22 PM
I think they wont finish this serial since this is the only serial i guess is popular now in sun tv all others are dumb than this

That's true. SunTV wouldn't have let this run this long, if it wasn't popular.

saradhaa_sn
16th November 2008, 01:51 PM
வைரஸ் காய்ச்சல் பத்துநாட்கள் படுக்கையில் சாய்த்துவிட்டது. தொடரை தொலைக்காட்சியில் பார்க்க முடிந்ததே தவிர பதிப்பிக்க முடியவில்லை. ஆகவே இடையே நடந்தவை சுருக்கமாக மட்டும்.....

அபியால் விரட்டியடிக்கப்பட்ட ஈஸ்வரன், சாலையில் போகும்போது மயக்கமடைந்து கீழே சாய, அவ்வழியே போகிறவர்கள் உதவிக்கு வருகின்றனர். அப்போது அங்கு ஆட்டோவில் வரும் தொல்காப்பியன் ஈஸ்வரனைக்கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்து, உஷாவுக்கு தகவல் சொல்ல உஷா பெற்றோருடன் அங்கு வருகிறாள். ஈஸ்வரனை சோதித்த மருத்துவர், அவருக்கு பக்க வாதம் அடித்துவிட்டதாகவும், ஒரு கை, ஒரு கால் விளங்காமல் போய்விட்டதாகவும் சொல்ல அவர்களுக்கு அதிர்ச்சி.

அசோஸியேஷன் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டாமென நினைத்திருந்த அபி, இப்போது முழு முச்சாக போட்டியில் இறங்கபோவதாக சொல்ல, ஆர்த்திக்கு மனதில் ஒரு அச்சம். அவளுடைய "ஆதியண்ணா" வை எதிர்த்து நிற்பது அவளுக்கு விருப்பமில்லை. ஆனால் அபி, ஆதிக்கு ஒருமுறையாவது பலத்த அடி கொடுக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறாள்.

ஈஸ்வரன் பக்கவாதத்தால் பாதிக்கப்ப்ட்டிருப்பதை முதலில் தொல்காப்பியன் அபியை நேரில் சந்தித்து சொல்லியும், உஷா மீண்டும் ஒருமுறை சொல்லியும் அபியின் மனம் மாறவில்லை. ஈஸ்வரன் மீதான வெறுப்பில் உறுதியாக இருக்கிறாள்.

கீழக்கரையில் இருந்து சென்னை வரும் தொல்ஸின் நண்பர் அன்வர்பாய், தொல்காப்பியனை சந்தித்து அவர் வீட்டில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, போகும்போது ஒரு டைரியைக் கொடுத்துவிட்டுப்போகிறார். போட்டோக்கடை வைத்திருந்த பாய் இறந்துவிட்டதாகவும், அவர் இறக்கும் தறுவாயில் தன்னிடம் அந்த டைரியைக்கொடுத்து தொல்ஸிடம் சேர்ப்பிக்கச் சொன்னதாகவும் சொல்லி அதைக்கொடுத்துவிட்டுப்போகிறார். அதைப்பிரித்துப்படிக்கும் தொல்காப்பியனுக்கு மீண்டும் பழைய நினைவுகள்.

வீட்டை விட்டு விரட்டிய ஈஸ்வரனை மீண்டும் கண்டுபிடித்து அழைத்து வருமாறு காஞ்சனா சொல்ல, அவரைத்தேடிக் கொண்டிருக்கும் வேளையில், ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வரும் உஷாவைப் பார்க்கும் கிரி, அவள் சென்றபின் அங்கு விசாரித்து, ஈஸ்வரன் அங்குதான் இருப்பதையும், அவருக்கு ஒரு கை ஒருகால் விளங்காமல் போய்விட்டதையும் தெரிந்துவந்து ஆதியிடமும் காஞ்சனாவிடமும் சொல்கிறான். ஈஸ்வரனைக் அழைத்துக்கொண்டுவரப்போகும் ஆதிக்கும், உஷாவுக்கும் மருத்துவமனையில் சண்டை மூள, அங்கு வரும் டாக்டர், ஆதி கலாட்டா செய்தால் போலீஸில் புகார் செய்வதாகச் சொல்ல, ஆதி வெளியேறுகிறான். ஆனால் வராண்டாவில் அபியைப்பார்த்ததும் அவனுக்கு அதிர்ச்சி. அபியும் உஷாவும் தன்னிடம் நாடகம் ஆடுவதாகவும் அவர்களுக்கு தான் யார் என்பதை விரைவில் காண்பிப்பதாகவும் எச்சரிக்கை செய்துவிட்டுப்போகிறான்.

அபியை அங்கு எதிர்பார்க்காத உஷாவுக்கு ஆச்சர்யம், ஆனால் அது விரைவிலேயே காணாமல் போகிறது. காரணம், அபி ஈஸ்வரனைப்பார்க்க வரவில்லை. தன் பொறுப்பில் வளரும் மஞ்சுளாவின் பிள்ளைகளை செக் பண்ணிவிட்டுப்போகவே வந்திருக்கிறாள்.

டைரியைப்படித்துவிட்டு அம்மாவின் நினைவுகளோடு, தன்னுடைய கடலோர கிராமத்துக்கு வரும் தொல்காப்பியன், அங்கு முன்னர் ஆன்டனியால் சீரழிக்கப்பட்ட பொன்னுத்தாயி என்பவளைச் சந்திக்க, அவள் செல்லமாவைப் பற்றி விசாரிக்கிறாள். செல்லமா இறந்த செய்தி அவளுக்கு அதிர்ச்சியளிக்கிறது. பொன்னுத்தாயி மூலமாக தாஸய்யா, அவரது மகன் ஆண்டனி ஆகியோரின் அடாவடித்தனங்கள் தொல்காப்பியனுக்கு தெரிய வருகின்றன. அவளுடைய உதவியோடு ப்ஞ்சாயத்துபோர்டு அலுவலகத்தில் இருந்து ஆண்டனியின் பழைய போட்டோவைப் பெற்றுக்கொண்டு வருகிறான். இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை வெளியில் இருந்து ஒருவன் சந்தேகத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறான்.

நீண்ட காலத்துக்குப்பின் அப்பாவின் சமாதியில் பூஜை செய்யும் ஆண்டனியிடம், மேற்படி ஆள், செல்லம்மாவின் மகன் தொல்காப்பியன் வந்து ஆண்டனி குடும்பத்தைப்பற்றி விசாரித்து, அவனுடைய போட்டோவையும் வாங்கிப்போனதைச்சொல்ல, தொல்காப்பியனைக்கொல்ல கையில் துப்பாக்கியோடு ஓடும் ஆன்டனி, தான் வருவதற்குள் அவன் படகில் ஏறிச்சென்று விடுவதைப்பார்க்கிறான்.

சென்னை வரும் ஆண்டனி தொல்ஸின் வீட்டைத் தெரிந்துகொண்டு அவனது வருகைக்காக தெருவில் காத்திருக்க, அங்கு வரும் சித்ரா அவனிடம் பேச்சுக்கொடுக்கும்போது அவனிடம் இருக்கும் துப்பாக்கியைப் பார்த்து சந்தேகப்பட்ட்டு விசாரிக்க, ஆண்டனி சுதாரித்துக்கொண்டு ஓடி தலைமறைவாகிறான். இவர்கள் சண்டையில் சித்ராவின் தலையில் அடிபடுகிறது. சிறிதுநேரம் கழித்துவரும் தொல்ஸ், சித்ராவின் காயத்துக்கு மருந்துபோட, அவனுக்கு தெரியாமல் ஆண்டனியின் போட்டோவைப் பார்த்துவிடுகிறாள்.

தொல்காப்பியனும் உஷாவும் வரும்போது அவர்களைசந்திக்கும் வீட்டுக்காரர், தொல்காப்பியனைத்தேடி சந்தேகத்துக்கு உரிய நபர்கள் எல்லாம் வருவதாகவும், ஆகவே அவன் உடனடியாக அங்கிருந்து காலி செய்ய வேன்டும் என்றும் சொல்ல, அவருக்கும் உஷாவுக்கும் வாதம் முற்ற, தொல்காப்பியனை அங்கிருந்து காலிபண்ணி தன் வீட்டுக்கு அழைத்துவருகிறாள் உஷா. தொல்ஸ் உறங்கிக்கொண்டிருக்கும்போது, உஷா "அந்த" டைரியை உஷா படிக்கத்துவங்குகிறாள்....

aanaa
16th November 2008, 08:19 PM
நலமே இருக்க வாழ்த்துக்கள்

aanaa
16th November 2008, 08:19 PM
நன்றி வாழ்த்துக்கள்

Arthi
16th November 2008, 09:38 PM
take care of ur health saradha madam :D

aanaa
19th November 2008, 08:17 PM
தொல்ச் கொஞ்சம் economics் படித்திருந்தால் நல்லதுபோல.

இந்த நாடகத்தைப் பார்க்க
பார்க்காதவர்கள் - அப்படி யாரும் விரும்பமாட்டார்கள் - இருந்தும்
/cassette/CD/DVD எடுத்துப் பார்க்க வாய்ப்பே இல்லை.

சின்ன நடகங்களை மக்கள் கொப்பி எடுத்துப் பார்ப்பதுண்டு.

இங்கு ....

எத்தனை ஆயிரம் கொப்பிகள் எடுத்துப் பார்ப்பது ???


பாவம் தொல்ஸ் :-(

aanaa
21st November 2008, 07:54 PM
dock dock dock...

Saratha ...
மீண்டும்

Arthi
21st November 2008, 08:38 PM
:huh:

Take care saradha madam :D

saradhaa_sn
22nd November 2008, 06:53 PM
நன்றி ஆர்த்தி மற்றும் ஆனா....

கடந்த ஒரு வாரமாக உஷா தொல்காப்பியனின் டைரியைத்தான் படித்துக்கொண்டிருக்கிறாள். (ஒரு வழியாக நேற்று படித்து முடித்துவிட்டாள்).

அதாவது, தொல்காப்பியனின் சின்ன வயது ஃப்ளாஷ்பேக்குகள்தான் ஓடிக்கொன்டிருக்கின்றன. செல்லம்மாவும் வெள்ளையனும் வேலை தேடி கேரளா போனது. அங்கு தொல்காப்பியனும், அவன் தங்கை மீனுவும் பிறந்தது, இருவருக்கும் வேலை கொடுத்த மலையாள நாராயணன் ஜோதிடனின் சொல் கேட்டு (????) செல்லம்மாவிடம் தகாத முறையில் நடக்க முற்பட்டது, அங்கிருந்து தப்பி செல்லம்மா தன் குழந்தைகளுடன் ராமேஸ்வரம் வந்தது, மனைவியையும் குழந்தைகளையும் தேடி வெள்ளையனும் ராமேஸ்வரம் வருவது...... இப்படி முழுக்க ஃப்ளாஷ்பேக் கதைதான் ஒருவாரத்தை ஆக்ரமித்துக்கொண்டது.

அடுத்த வாரம் நடப்புக் கதைக்கு திரும்பக்கூடும் என்று நம்புவோம். (ஃப்ளாஷ்பேக் கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் விவரிக்கவில்லை).

Arthi
22nd November 2008, 07:13 PM
:D

aanaa
22nd November 2008, 07:26 PM
:ty:

saradhaa_sn
25th November 2008, 12:02 PM
நேற்றைய எபிசோடிலும் உஷா, தொல்காப்பியனின் டைரியைத்தான் படித்துக்கொண்டிருக்கிறாள்.......

ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடிக்கு அழைத்துப்போவதாக பொய் சொல்லி காரில் ஏற்றிச்செல்லும் வெள்ளையன், தன் மனைவியையும் குழந்தைகளையும் மீண்டும் நாயர் வீட்டுக்கே கொன்டு வந்து சேர்க்க, செல்லம்மா உள்ளே வர மறுக்கிறாள். அவளை அடித்து உள்ளே தள்ளிப் பூட்டிவிட்டு மகள் மீனுவை தூக்கிக்கொண்டு ஓடி விடுகிறான். (தொல்காப்பியன் இந்த சீரியலில் தன்னைத்தவிர அத்தனை ஆண்களும் அயோக்கியர்கள் என்றே சித்தரிக்க முயன்றிருக்கிறார்).

அம்மாவைக்காப்பாற்ற, தனக்கு ஆதரவாக இருந்த பெரியவரை அழைத்து வர சிறுவன் தொல்காப்பியன் ஓடிப்போக, அந்த இடைவெளியில் வீட்டுக்குள் நுழையும் நாராயணன் நாயர், செல்லம்மாவிடம் தவறாக நடக்க முயல, அவள் அங்குமிங்கும் ஓடுகிறாள். (வீட்டுக்குள் ஏகப்பட்ட அறைகள் இருக்கின்றன. ஏதாவது ஒரு அறையில் நுழைந்து கதவை உள்ளே தாழ் போட்டால்கூட போச்சு). ஆனால் அவளோ அவனிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கிறாள். முடிவில் அரிவாளை எடுத்து ஒரே போடு. சரி... போட்டவள் அப்படியே ஓடிப்போக வேண்டியதுதானே?. வெட்டுப்பட்ட நாயர் அவள் கையிலிருந்த அரிவாளையே பிடுங்கி அவளை வெட்டும் வரை கழுத்தைக்காட்டி விட்டு செத்துப்போகிறாள். ரெண்டு பேரும் அவுட்.

ஆக, தொல்காப்பியன் கொல்லவில்லை... தவறான தீர்ப்பினால்தான் சிறுவர் சிறைக்குப் போயிருக்கிறான் என்பது தெளிவாகிறது. (அதானே........, தன் மீது எந்தக் களங்கத்தையும் சுமத்திக்கொள்ள மாட்டாரே.

Madhu Sree
25th November 2008, 04:23 PM
Welcome back Saradha mam :D
howzzz ur health now? thx for the wonderful update :)

aanaa
25th November 2008, 09:10 PM
. (அதானே........, தன் மீது எந்தக் களங்கத்தையும் சுமத்திக்கொள்ள மாட்டாரே.

:lol:
:rotfl:

:ty:

saradhaa_sn
26th November 2008, 02:04 PM
நன்றி மது & ஆனா.....

செல்லம்மா, நாராயணன் நாயர் இருவரும் கொல்லப்ப்ட்டுக்கிடக்க, பக்கத்தில் ரத்தக்கறை படிந்த சட்டையுடன் நிற்கும் சிறுவன் தொல்காப்பியன், நாயரின் ஆட்களால் பிடிக்கப்பட, அம்மாவின் கள்ளக்காதலைப் பார்க்க நேர்ந்ததால் இருவரையும் சிறுவன் தொல்காப்பியன் கொன்றுவிட்டதாக போலீஸ் கேஸை ஜோடித்து கோர்ட்டுக்கு கொன்டு போக, நீதிபதி வழக்கம்போல.... "சாட்சியங்களை வைத்துப்பார்க்கும்போது தொல்காப்பியன்தான் கொலை செய்தான் என்று நிரூபணமாகிறது" என்ற பீடிகையோடு தொல்ஸை சிறுவர் ஜெயிலுக்கு அனுப்ப....

தனக்கு ஆதரவாக இருந்த பெரியவர், தன்னைப்பார்க்க சிறைக்கு வர, முன்பு அவர் தன்னை தத்தெடுக்க விரும்பியதை தொல்ஸ் அவருக்கு நினைவூட்டி, தனக்கு பதிலாக தன் தங்கை மீனுவை தத்தெடுத்து வளர்த்து படிக்க வைக்குமாறு கூற, அவரும் மீனுவையும் அவன் அப்பாவையும் தேடிக் கண்டுபிடிப்பதாக உறுதியளித்துச்செல்கிறார்.

அடடே இப்போதான் ஞாபகம் வருகிறது... முன்பு மேனகாவின் ஃப்ளாஷ்பேக்கில், அவளை ஒரு பெரியவர் தத்தெடுப்பதாக காட்டினார்களே அந்தப்பெரியவர்தான் இவர். உண்மையில் தத்தெடுக்கவில்லை. பணப்பேயான அவள் அப்பாவிடம் இருந்து விலைக்கு வாங்கினார்.

(அடாடா.... அந்தக்கேரளக்காட்சிகள் கண்ணுக்கு விருந்தோ விருந்து. நாமே நேரில் போய்ப்பார்த்தது போல. அந்த வாய்க்கால்களும், படகு வீடுகளும்.... மலையாளத்திரைப்படங்களில் கூட இவ்வளவு அழகாக பார்த்ததாக நினைவில்லை. திருச்செல்வம் அப்படியே கதையை பெங்களுர், ஜெய்ப்பூர் என்று கொண்டு போனால் தேவலை. காரணம் கேமராவைப் பொறுத்தவரையில் திரைப்படங்களை விட அழகாக எடுக்கிறார்)

Arthi
26th November 2008, 04:10 PM
saradha madam..nice update with kutti +shottu :D

aanaa
26th November 2008, 08:43 PM
(அடாடா.... அந்தக்கேரளக்காட்சிகள் கண்ணுக்கு விருந்தோ விருந்து. நாமே நேரில் போய்ப்பார்த்தது போல. அந்த வாய்க்கால்களும், படகு வீடுகளும்.... மலையாளத்திரைப்படங்களில் கூட இவ்வளவு அழகாக பார்த்ததாக நினைவில்லை. திருச்செல்வம் அப்படியே கதையை பெங்களுர், ஜெய்ப்பூர் என்று கொண்டு போனால் தேவலை. காரணம் கேமராவைப் பொறுத்தவரையில் திரைப்படங்களை விட அழகாக எடுக்கிறார்)

:exactly:

gta129
27th November 2008, 08:51 AM
Thanks you saradhaa madam. It's nice to have you back.

saradhaa_sn
27th November 2008, 06:41 PM
எல்லோருக்கும் நன்றி... உங்க அன்பெல்லாம் இருக்கும்போது எனக்கென்ன குறை..?

ஒருவழியாக உஷா, தொல்ஸின் டைரியை மூடிவைத்துவிட்டு, உற்ங்கிக்கொண்டிருக்கும் தொல்ஸைப்பார்த்து, 'இவருக்குள் இவ்வளவு மனக்காயமா' என்ற சிந்தனையுடன் அவ்விடத்திலிருந்து செல்கிறாள்.

கதை நடப்புலகுக்கு வந்து விட்டது.... (இன்னொரு ஃப்ளாஷ்பேக் வரும்வரை)

ஒண்ணுக்கும் உதவாத தன் அப்பாவை அம்மா ஏன் வீட்டுக்கு அழைத்துவரவேண்டுமென்று பிடிவாதம் செய்கிறாள் என்று அலுத்துக்கொள்ளும் ஆதியிடம், கிரி இதைவிட முக்கியமான வேலைகள் இருப்பதாகவும் முத்லில் அசோஸியேஷன் தலைவர் தேர்தலில் வெற்றிபெற வேன்டுமென்றும் சொல்ல, அதற்கு ஆதி 'நிச்சயம் நான்தான் ஜெயிப்பேன். அந்த அபிக்கு கிழவன் வரதராஜன் போன்ற ஒருசிலருடைய ஆதரவு இருக்கலாம், ஆனால் பெரும்பாலோர் என் பக்கம்தான். நான் ஜெயிச்சதும் அவங்களையெல்லாம் என்ன பண்றேன்னு பார்' என்று சொல்கிறான். அப்போது போன், மேனகாவிடமிருந்துதான். அந்த இரவிலும் உடனடியாக வீட்டுக்கு வரும்படி சொல்கிறாள்.

மேனகாவின் வீட்டில் அவளை கிரியுடன் போய் சந்திக்க, அவளும் தலைவர் தேர்தல் பற்றியே பேசுகிறாள். ஆனால் அவள் சொல்லும் வழி வேறு. அபியை எதிர்த்து நின்று ஜெயிப்பதைவிட, அவளை தேர்தலிலேயே நிற்காமல் செய்ய வேண்டும். ஆதியை எதிர்த்து நிற்கணும்னு எதிர்காலத்தில் யாருக்குமே ஒரு எண்ணம் வரக்கூடாது. அந்த அளவுக்கு அவளுக்கு ஒரு பாடம் புகட்ட வேன்டுமென்று சொல்ல, ஆதியும் அதே எண்ணத்துடன் புறப்படுகிறான்.

(மீனவர் குப்பத்து செல்லம்மாவாகவும், கோடீஸ்வரி மேனகாவாகவும் இருவேறுபட்ட பாத்திரங்களில் எவ்வளவு வித்தியாசமான நடிப்பு...!!!!)

aanaa
28th November 2008, 12:14 AM
:ty:



(மீனவர் குப்பத்து செல்லம்மாவாகவும், கோடீஸ்வரி மேனகாவாகவும் இருவேறுபட்ட பாத்திரங்களில் எவ்வளவு வித்தியாசமான நடிப்பு...!!!!)

ஆமா
அந்த நடிகையின் பெயர் தெரியுமா?

saradhaa_sn
28th November 2008, 01:10 PM
காலையில் தொல்காப்பியனுக்கு காபி கொண்டுவந்து கொடுக்கும் உஷா, தொல்ஸின் தெளிவான முகத்தைப்பார்த்து, 'எப்படி இந்த மனிதரால் எல்லாவற்றையும் மனதுக்குள் போட்டு அழுத்திக்கொண்டு ஒண்ணுமே நடக்காததுபோல் இருக்க முடிகிறது?' என்ற எண்ணத்துடன் பார்க்க...

'என்ன உஷா, ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?'

'தொல்ஸ், எப்படி உங்க கஷ்டத்தை எல்லாம் வெளியில் சொல்லாமல் உங்களுக்குள்ளேயே அடக்கிக்கொள்ல முடிகிறது?' (என்ன கஷ்ட்டம் என்று சொல்லவில்லை).

'கஷட்டத்தை வெளியில் சொல்லி மத்தவங்களையும் கஷ்ட்டப்படுத்துவதைவிட, சந்தோஷத்தை பகிர்ந்து மத்தவங்களையும் சந்தோஷப்படுத்துவது நல்லது என்பது என் எண்ணம்'

'அப்போ நீங்க மட்டும் மத்தவங்க கஷ்ட்டத்தை எல்லாம் தாங்கிப்பீங்க. அப்படித்தானே?'

'உஷா என்ன சொல்ல வர்ரீங்க?'

'ஸாரி தொல்ஸ், நேத்து ராத்திரி....' அவள் சொல்லி முடிப்பதற்குள் கீழேயிருந்து அப்பாவின் குரல் 'உஷா உனக்கு ரிஜிஸ்ட்டர் போஸ்ட் வந்திருக்கு. வந்து வாங்கிக்கம்மா'

உஷா கீழே வந்து ரிஜிஸ்ட்டர் கவரை வாங்கிப்பிரித்துபார்த்து விட்டு லேசாக சிரிக்க, அவள் அப்பா 'என்னம்மா, சிரிக்கிறே?. யாராவது ரிஜிஸ்ட்டர் போஸ்ட்டில் ஜோக்ஸ் அனுப்பியிருக்காங்களா?'

'கிட்டத்தட்ட அப்படிதாம்ப்பா. ஆதி டைவர்ஸ் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கார். நான்தான் அந்த ஆதியே வேண்டாம்னு வந்திட்டேனே. அப்புறம் எதுக்கு நோட்டீஸ் எல்லாம்?'

இப்போது அப்பா, 'அதில்லைம்மா, நாளைக்கு உன்னால் பிரச்சினை வரக்கூடாதுன்னு நினைச்சிருப்பார்'

'அதில்லைப்பா, நோட்டீஸைப்பார்த்ததும் நான் அவன் காலில் போய் விழுவேன்னு எதிர்பார்த்திருப்பான்'

அப்போது தொல்ஸ் வந்து 'இது விஷயமா நீங்க நல்லா யோசிச்சு முடிவு செய்யணும் உஷா. இதுல உங்க வாழ்க்கை மட்டுமல்ல உங்க பையனின் எதிர்காலமும் அடங்கியிருக்கு'.

'இல்லே தொல்ஸ், அந்த ஆதியோட தயவு இல்லாமல் என்னால் என் மகனை வளர்க்க முடியும். அப்பாவைப்பத்தி அவன் கேட்கும் முன் நானே அவனிடம் எல்லாத்தையும் சொல்லிடுவேனே தவிர, மத்தவங்க மாதிரி அப்பா செத்துப்போயிட்டார், அப்படி, இப்படின்னு பொய் சொல்ல மாட்டேன்'

'சார், நீங்களாவது உஷாவுக்கு எடுத்துச் சொல்லக்கூடாதா?'

'இல்லே தொல்காப்பியன். எனக்கென்னமோ உஷா எடுத்த முடிவு சரின்னு படுது'

'இதை விடுங்கப்பா, இன்னைக்கு பத்து மணிக்கு மாமாவை டிஸ்சார்ஜ் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரணும். வாங்க போகலாம்'

அபியின் வீடு.....

கற்பகம், ஆனந்தி, ஆர்த்தி ஆகியோர் இருக்க மனோ வருகிறான். சஷ்டியப்த விழா நேரத்தில் அந்த ஆதிக்கு சாதகமாக பேசிவிட்டு தங்களைவிட்டு விலகிப்போய்விட்டதற்காக மூவரும் அவனை பிடி பிடியென்று பிடிக்கிறார்கள். (அப்பாவை அந்த ஆதி வீட்டுக்கு கடத்திப்போனவனே அவன்தான் என்பது இன்னும் அவர்களுக்கு தெரியாது)....

'சும்மா நிறுத்துங்க. என்னமோ என்மீது பாய்றீங்களே, இப்போ அபியக்கா செஞ்சது உங்களுக்கெல்லாம் தெரியுமா?. நீங்களெல்லாம் எந்த அப்பாவை இனி எக்காரணம் கொண்டும் சேர்க்கக்கூடதுன்னு விரட்டினீங்களோ அந்த அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் பார்ப்பதே அபியக்காதான்'. இதைக்கேட்ட் அம்மாவுக்கும் ஆர்த்திக்கும் அதிர்ச்சி..

ஆனால் ஆனந்தி 'சும்மா நிறுத்துடா, அக்கா அந்த மாதிரியெல்லாம் செய்யாது'.

'அப்படியா, சந்தேகமாயிருந்தா என்னோடு இப்பவே ஆஸ்பத்திரிக்கு வாங்க'.

அப்போ உள்ளே நுழையும் அபி, 'இங்கே எதுக்குடா வந்தே?. அன்னைக்கு உன் மனைவியின் பேச்சைக்கேட்ட் ஓடுனியா அல்லது ஆதியின் வசதியைப்பார்த்து ஓடுனியா?'

'அக்கா இவன் என்ன சொல்றான்னா...'

'எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுதான் வந்தேன் ஆனந்தி. டேய் மனோ, உனக்கு அந்த ஆதிதானே சொன்னான்?. ஆனந்தி, நடந்தது என்னன்னா மஞ்சுளாவின் குழந்தைகளை செக்கப்புக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்போனேன். அங்கே அந்த ஆதி இருந்தான். அவன் சொல்லித்தான் தெரியும் அப்பா அங்கேதான் அட்மிட் ஆயிருக்காருன்னு தெரிஞ்சிருந்தா, வேறு ஆஸ்பத்திரிக்குப்போயிருப்பேன்'.

நால்வரும் சேர்ந்து மனோவை சரமாரியாக திட்ட அவன் ஓடிப்போகிறான்.

ஆதியின் வீடு....

'இந்நேரம் மனோ போய் அந்த வீட்டில் அபிக்கு எதிராக குழப்பத்தை உண்டுபண்ணியிருப்பார்' என்று அனு சொல்லிக்கொண்டிக்கும்போது உள்ளே நுழையும் மனோ, 'நாம் நினைச்சது மாதிரி நடக்கவில்லை. அபியக்கா குழந்தைகளை 'செக்கப்' பண்ணத்தான் வந்ததாக சொல்லி திசை திருப்பிட்டாங்க'.

உடனே ஆதி, 'பொய்... சுத்தப்பொய். நான் பார்க்கும்போது அங்கு எந்த குழந்தையும் இல்லை'. (ஆதியும் கூட அபிதான் ஈஸ்வரனை ஆஸ்பத்திரியில் கவனிப்பதாகவே நம்புகிறான்).

அப்போது கிரி, 'பாஸ், இன்னைக்கு பத்துமணிக்கு உங்க அப்பாவை டிஸ்சார்ஜ் பண்ணி உஷா மேடம் வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுபோறாங்களாம்'.

'பாத்தியாடா, என்ன திமிர் அந்த உஷாவுக்கு. போ, நீ போய் அவரை டிஸ்சார்ஜ் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா'.

ஆதி, அனு, மனோ, ரேகா நால்வரும் புறப்ப்ட்டுப்போக... காஞ்சனாவின் முகம் குளோசப்பில்.

Murali Srinivas
28th November 2008, 06:00 PM
:ty:



(மீனவர் குப்பத்து செல்லம்மாவாகவும், கோடீஸ்வரி மேனகாவாகவும் இருவேறுபட்ட பாத்திரங்களில் எவ்வளவு வித்தியாசமான நடிப்பு...!!!!)

ஆமா
அந்த நடிகையின் பெயர் தெரியுமா?

ஆனா,

அவரது பெயர் பூர்ணிமா. மறைந்த மலையாள நடிகர் சுகுமாரின் மருமகள். நடிகர் இந்த்ரஜிதின் மனைவி. நடிகர் ப்ரித்விராஜின் (மொழி) அண்ணி.

அன்புடன்

saradhaa_sn
28th November 2008, 06:53 PM
நன்றி முரளி,

நீங்கள் இந்த சீரியல் பார்க்கிறீர்கள் என்பதும், இந்த த்ரெட்கள் பக்கமும் உலவுகிறீர்கள் என்பதும் PLEASANT SURPRISE.

ஆனா,

தகவல் களஞ்சியம் முரளி இருக்கையில் அப்புறம் என்ன...?.

aanaa
28th November 2008, 08:49 PM
அவரது பெயர் பூர்ணிமா. மறைந்த மலையாள நடிகர் சுகுமாரின் மருமகள். நடிகர் இந்த்ரஜிதின் மனைவி. நடிகர் ப்ரித்விராஜின் (மொழி) அண்ணி.

அன்புடன்

:ty:
சரித்திரமே இருக்கு

நன்றி

saradhaa_sn
29th November 2008, 12:11 PM
ஈஸ்வரனை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து அழைத்துச்செல்ல உஷா, அப்பா, அம்மா, தொல்காப்பியன் ஆகியோர் ஏற்பாடு செய்துகொண்டிருக்கும்போது, எதிர்பார்த்தபடியே ஆதி மற்றும் நால்வரும் உள்ளே நுழைகின்றனர்....

'ஏய் உஷா, நீ என்ன பண்ணிக்கிட்டிருக்கே?'

'மாமாவை டிஸ்சார்ஜ் பண்ணி எங்க வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப்போறேன்'

'நீயே எனக்கு வேண்டாம்னு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்கேன். அப்படியிருக்க எங்க அப்பா மட்டும் எப்படி உனக்கு மாமாவானார்?'.

'இதோ பாருங்க ஆதி, உங்களுக்கும் எனக்கும் இருக்கும் பிரச்சினை வேறு, அதுல இந்த இந்த மனுஷனைப்போட்டு ஏன் சித்திரவதை பண்றீங்க?. கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் நடக்கப்பாருங்க'.

இந்த இடத்தில் தொல்காப்பியன் ஏதோ குறுக்கிட்டுப்பேச, 'ஏய் நீ பேசாதே. இது எங்க குடும்ப விஷயம், நீ இதுல தலையிடாதே'.

தொடர்ந்து உஷா, ரேகா மனோ, அனு ஆதி இவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றுகிறது. ஆதியின் கத்தலைப்பொறுக்க முடியாத உஷாவின் அப்பா, 'உஷா, நீ என்னதான் மனிதாபிமான அடிப்படையில் பேசினாலும் உரிமைன்னு வரும்போது ஆதி சொல்றதுதான் எடுபடும், ஏனா அவருடைய அப்பா. அதனால அவரே ஈஸ்வரனை அழைச்சிக்கிட்டுப் போகட்டும், நாம் போகலாம் வா'.

'ஏய் உஷா, இந்தா எங்க அப்பாவுக்கு நீ செய்த வைத்திய செலவுக்கான பணம்'. ஆதி கொடுத்த பணத்தை ஈஸ்வரனின் கட்டில் மேலேயே வைத்துவிட்டு உஷா வெளியேறுகிறாள்.

மேனகாவின் வீடு......

மேனகா அவசரமாக வெளியே கிளம்பிக்கொண்டிருக்கும்போது போலீஸ் அதிகாரி வருகிறார்..

'உங்களோடு ஒரு முக்கிய விஷயம் பேசணும்'.

'நான் அவசரமா வெளியே கிளம்பிக்கிட்டு இருக்கேன். என்ன விஷயம் சொல்லுங்க'

'இப்போ உங்க உயிருக்கு மீண்டும் ஆபத்து'.

'இதையேதான் எப்போதும் சொல்லிக்கிட்டு இருக்கீங்க, ஆனா அதற்கு காரணமான நபரைக் கண்டுபிடிக்க காணோமே. ஒவ்வொரு முறை என்மீது கொலைமுயற்சி நடக்கும்போதும் நீங்க வேடிக்கை பார்த்துக்கிட்டிருப்பீங்க. அந்த தொல்காப்பியன் எங்கிருந்தாவது வந்து காப்பாத்துவான். இதானே நடக்குது..!'.

'மேடம் நீங்க நினைக்கிற மாதிரி இல்லே. அந்த தொல்காப்பியனும் உங்களது கொலைமுயற்சியில் கூட்டாளிதான்னு இப்போ சந்தேகப்ப்டுறோம். ஒவ்வொரு முறையும் அவன் உங்களைக்கொல்லத்தான் வருகிறான்'

'வாட் ஆர் யூ டாக்கிங் இன்ஸ்பெக்டர்?. முடிஞ்சா எனக்கு பாதுகாப்பு கொடுங்க, இல்லேன்னா விட்டுடுங்க. என் செக்யூரிட்டியை நான் பாக்குக்கறேன்'.

பேசிக்கொண்டே வெளியே போகிறாள்.

காஞ்சனாவின் வீடு....

ஈஸ்வரனைக் கட்டிலில் கிடத்தியிருக்க, அவர் கண்ணெதிரிலேயே அம்மாவிடம் கத்திக்கொண்டிருக்கிறான் ஆதி...

'அம்மா இந்த மனுஷனால ஒவ்வொரு தடவையும், ஒவ்வொரு இடத்திலும் எனக்கு அவமானம்தான். இன்னைக்கு ஆஸ்பத்திரியிலே அந்த உஷாவும் தொல்காப்பியனும் என்ன பேசினாங்க தெரியுமா? தொல்காப்பியனை விடுங்க, ஆனா அந்த உஷா ரொம்ப மோசமா பேசிட்டா. எல்லாம் யாரால?. இந்த மனுஷனாலதானே. முதல் கல்யாணம் பண்ணியவர் அவங்களோடவே எங்காவது குடிசைல இருந்துட்டு போக வேண்டியதுதானே. எதுக்கு உங்களை கல்யாணம் பண்ணி, நாங்கள்ளாம் பொறந்து, இந்த அவமானமெல்லாம் எங்களுக்கு தேவையா?'

'ஆதி இப்போ பழசையெல்லாம் பேசி என்னடா பிரயோஜனம்? இனிமே ஆகவேண்டியதைப் பார்ப்போம்'.

இப்போது ரேகா குறுக்கிட்டு... 'ஆதி, இதுனால நீங்க ஸ்ட்ரெய்ன் பண்ணி உடம்பை கெடுத்துக்காதீங்க. அவங்க குடும்பமே அப்படித்தான். அவங்க அப்பான்னு ஒருத்தர் இருக்காரே, அவர் உஷாவுடைய சொந்த அப்பாவா? அவங்க அம்மாவுடைய ரெண்டாவது புருஷன்தானே. அப்படீன்னா அந்த அம்மாவின் புத்திதானே உஷாவுக்கும் வரும்'.

'அவளுடைய ஆட்டத்துக்கேல்லாம் பின்னாடி யார் இருக்கான்னு எனக்கு தெரியும் ரேகா, அந்த அபிதான் எல்லாத்தையும் ஆட்டி வைக்கிறாள். அபியையும் உஷாவையும் ஷூட் பண்ணினால் கூட தப்பில்லை. காட்டுறேன்... இந்த ஆதி யாருன்னு காட்டுறேன்'.

அபியின் அலுவலகம்... அபி, விஸ்வநாதன், ராஜாமணி, வரதராஜன் ஆகியோர் ஆலோசனையில் இருக்கின்றனர். அப்போது வரதராஜன்... 'அபி, பிரஸிடெண்ட் எலெக்ஷன் நெருங்கிக்கிட்டு இருக்கு. என்ன ஏற்பாடு செஞ்சிருக்கீங்க?'

'ஆமா சார், ரொம்ப வேகமா நாள் ஓடிக்கிட்டு இருக்கு. இதோ இந்த ஃபைலைப்ப்பாருங்க. இதுல நம்மை ரொம்ப கான்ஃபிடன்ட்டா ஆதரிக்கிறவங்க யார் யாருன்னு லிஸ்ட் போட்டிருக்கேன். அதுபோல ஆதியை ரொம்ப ஸ்ட்ராங்கா சப்போர்ட் பண்றவங்க யாருன்னும் லிஸ்ட பண்ணியிருக்கேன். அவங்க எக்காரணம் கொண்டும் நம்ம பக்கம் திரும்ப மாட்டாங்க, ஏன்னா அவங்க ஆதியால ரொம்ப பலன் அடைஞ்சவங்க. அதுபோக இரண்டுபக்கமும் இல்லாமல் நியூட்ரலா இருக்கிறவங்களையும் லிஸ்ட் எடுத்திருக்கேன். அவங்க என்னை சப்போர்ட் பண்ணனும்னு கேட்டு எல்லோருக்கும் பெர்சனலா ஈ மெயில் அனுப்பியிருக்கேன், அத்துடன் அவங்களை நேரில் சந்தித்தும் ஆதரவு திரட்டிக்கிட்டிருக்கேன். விஸ்வநாதன் சார்... அந்த சிட்டி பில்டர்ஸ் எல்லாரும் உங்களுக்கு வேண்டியவங்க. அவங்க கிட்டே நீங்கதான் பேசி எனக்கு சப்போர்ட் பண்ண சொல்லணும்'.

'அதுக்கென்ன அபி நான் கன்டிப்பா சொல்றேன். அவங்க அதரவு உனக்கு வந்தாச்சுன்னு வச்சுக்கோ'.

'வெரிகுட் அபி, நல்ல ஏற்பாடுகள் செஞ்சிருக்கீங்க. அப்போ நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும்னு சொல்லுங்க'

'கண்டிப்பா இந்த பிரஸிடெண்ட் எலக்ஷன்ல நம் ஜெயிக்கிறோம் சார்'.

அபியின் நம்பிக்கையுடன் கூடிய புன்னகைமுகம் குளோசப்பில்....

Murali Srinivas
29th November 2008, 01:03 PM
நன்றி முரளி,

நீங்கள் இந்த சீரியல் பார்க்கிறீர்கள் என்பதும், இந்த த்ரெட்கள் பக்கமும் உலவுகிறீர்கள் என்பதும் PLEASANT SURPRISE.

ஆனா,

தகவல் களஞ்சியம் முரளி இருக்கையில் அப்புறம் என்ன...?.

சாரதா,

நான் இந்த சீரியல் பார்ப்பதில்லை (எந்த சீரியலுமே) . ஆனால் உங்கள் தொகுப்பை (உங்கள் எழுத்து நடைக்காகவே) நடு நடுவே படித்து விடுவேன். ஆனால் நான்கு வருடங்களாக இது ஓடுவதால் நடிக நடிகையரை தெரியும். முதலில் பூர்ணிமா (மோகன்) திரைப்படங்களிலும் பிறகு ஏசியா நெட் தொலைக்காட்சியில் பாடல் நிகழ்ச்சியை (நமது பெப்சி உங்கள் சாய்ஸ் போல) தொகுத்து வழங்கினார். பிறகு திருமணம் செய்து கொண்டு விட்டார். ஆக அந்த முக பரிச்சயம் தான் ஆனா-வின் கேள்விக்கு பதிலளிக்க உதவியது.

அன்புடன்

saradhaa_sn
29th November 2008, 04:26 PM
ஆஸ்பத்திரியில் ஆதியும் அவனைச்சேர்ந்தவர்களும் அவ்வளவு பேசும்போது, உஷாவும் தொல்காப்பியனும் மனிதாபிமானம், அது இது என்று உப்பு சப்பில்லாத பதில் சொல்வதை விடுத்து....

"இன்றைக்கு ஐந்து பேர் வரிந்து கட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்களே. அன்று இவர் ரோட்டோரத்தில் மயக்கமடைந்து அனாதையாய்க் கிடந்தபோது நீங்களெல்லாம் எங்கே போயிருந்தீர்கள்?" என்று கேள்வியைக்கேட்டு மடக்கியிருக்கலாம். ஆதி கும்பல் கொஞ்சம் ஆடிப்போயிருக்கும்.

aanaa
30th November 2008, 04:34 AM
:ty:

எழுத்து நடை :clap:

shorthand படித்தீர்களா

saradhaa_sn
30th November 2008, 10:51 AM
நன்றி ஆனா,

நான் SHORT-HAND படிக்கவில்லை. ஆனால் இருக்கின்ற HANDS-ஐ வைத்து எதையும் SHORT ஆக முடிக்க TRY பண்ணுவேன். (நன்றி: விவேக்).

மற்றபடி, எல்லாம் நினைவுகளில் இருந்து வருவதுதான்.

Arthi
30th November 2008, 06:01 PM
நன்றி ஆனா,

நான் SHORT-HAND படிக்கவில்லை. ஆனால் இருக்கின்ற HANDS-ஐ வைத்து எதையும் SHORT ஆக முடிக்க TRY பண்ணுவேன். (நன்றி: விவேக்).

மற்றபடி, எல்லாம் நினைவுகளில் இருந்து வருவதுதான்.

Good sense of humour :rotfl:

aanaa
30th November 2008, 09:10 PM
:rotfl:

saradhaa_sn
2nd December 2008, 11:28 AM
உஷாவை டைவர்ஸ் செய்வது சம்மந்தமாக லாயரைப்போய்ப் பார்க்கும் ஆதி அவரிடம் எவ்வளவு சீக்கிரம் விவாகரத்துப் பெறமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் பெற வேன்டுமென்று வற்புறுத்த, அவரோ ஆதியின் ஆதியின் அவசரத்துக்கெல்லாம் சட்டம் இடம் கொடுக்காது என்றும், எப்படியும் ஆறு மாதங்களாவது ஆகும் என்றும் சொல்வதுடன், அதற்கு முன்னர் முடித்துக்கொள்வதானால் ஒரு வழியிருப்பதாகவும் சொல்லி, உஷாவும் ஆதியும் சுமுகமான முறையில் பேசி இருவரின் பரிபூரண சம்மதத்துடன் பிரிவதாக இருந்தால் உடனடியாக விவாகரத்து கிடைக்க வழியுண்டு என்று சொல்கிறார்.

ஆதிக்கு இதில் உடன்பாடு இல்லாததுடன், உஷாவும் இதற்கு சம்மதிக்க மாட்டாள் என்றும் சொல்லி மறுக்கிறான். ஆனால் இந்த இடத்தில் ஒரு பெரியகுண்டைத்தூக்க்கிப்போடுகிறார். நாளை இவர்களின் விவாகரத்து வழக்கு மீடியாக்களில் வந்தால், அதனால் ஆதியின் பெயர் அவனுடைய சொஸைட்டியில் கெட வாய்ப்புள்ளது என்று கூற, தன் இமேஜைப்பெரிதாக நினைக்கும் ஆதி சற்று யோசிக்கிறான். இந்த சந்தர்ப்பத்தில், தான் உஷாவிடமும் அவளுடைய அப்பா அம்மாவிடமும் பேசிப்பார்ப்பதாக கிரி சொல்ல, ஆதி அரை மனதுடன் சம்மதிக்கிறான்.

ஆர்த்தியும் ராஜேஷும் தாங்கள் திட்டமிட்டபடி டாங்கர் லாரி ஒன்றை வாங்கி அதற்கு பூஜையும் போட்டு பிஸினஸைத்துவக்குகின்றனர். 'கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளி'யாக சிவசுவும் கூடவே இருக்கிறான்.

'ஆர்த்தி, நாம விரும்பியபடியே டாங்கர் லாரி வாங்கிட்டோம். இதுக்கெல்லாம் உன்னுடைய முயற்சிதான் காரணம்'.

'நம்முடைய முயற்சியைவிட ஆதியண்ணாவின் பெரிய உதவிதாங்க காரணம்'.

'அது உண்மைதான் ஆர்த்தி. சிவசு, முதல்ல டேங்கர் எங்கே போகுது?'

'டீஸல் ஏத்திக்கிட்டு திருச்சிக்கு போகுதுங்க'.

'சரி டிரைவர் பத்திரமா பார்த்து போங்க'.

டிரைவருடன் சிவசுவும் வண்டியில் ஏறிகொள்ள, அவன் சொல்லும் பாதையிலேயே ஓட்டச்சொல்கிறான். 'ஏங்க இந்த வழியா போனா டீஸல் லோடு பண்ற இடம் வராதுங்க'.

'டிரைவர், நாம் இப்போ டீஸல் லோடு பண்ணபோகலை. மனிதனுக்கு தேவையான டீஸல் ஏத்தப்போறோம்'

'என்னது சாராயமா?. இது தப்பில்லீங்களா? எனக்கு இது சரியா படலைங்க'.

அப்போது சிவசு, டிரைவரிடம் கத்தையாக பணத்தைக்கொடுத்து அவன் வாயை அடைக்க முயல, அப்படியும் டிரைவருக்கு மனம் சமாதானம் ஆகவில்லை. இருந்தாலும் சிவசுவின் சொல்படி வண்டி சாராய ஃபேக்டரிக்குப் போகிறது.

உஷாவின் பெற்றோருடன் பேசுவதாகச்சொன்ன கிரி, உஷா இல்லாத நேரம் அவர்கள் வீட்டுக்குப்போக, அங்கு அவனுக்கு வரவேற்பே சரியில்லை. இருந்தாலும் உஷாவின் அம்மா 'அவர் சொல்ல வந்ததையும் கேட்போமே' என்று சொல்ல.... உஷா தன் பாஸுடன் சமாதன்மாக பிரிந்துபோனால் இருவருக்கும் நல்லது, இருவரின் பெயரும் வெளியில் மீடியாக்களில் அடிபட்டு அசிங்கமாகாது என்று எடுத்துச்சொல்லிக் கொண்டிருக்கும் நேரம் வெளியிலிருந்து வரும் உஷா, 'கிரி உங்க பாஸ்தானே எனக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பினார்?. நான் அனுப்பலையே. அப்போ இதை சட்டப்படி கோர்ட்டிலேயே பார்த்துக்கொள்கிறேன், நீ போகலாம்' என்று சொல்ல, கிரி மீண்டும் ஏதோ சொல்ல வாயெடுக்க அவள் கேட்க மறுத்து விரட்டுகிறாள்.

கிரி வெளியே போகும் நேரம் தொல்காப்பியன் அங்கு வர, 'ஓ... இவரும் வந்துட்டாரா?. பாஸுக்கும் உங்களுக்கும் பிரிவு வரக்காரணமே இவர்தானே' என்று சொல்லும் கிரியிடம், 'அவர் இப்போ வந்தது மட்டுமல்ல. இங்கே எங்க வீட்லதான் தங்கியிருக்கார். இதையும் உங்க பாஸ் கிட்டே சொல்லு' என்று சொல்லி விரட்டுகிறாள். எல்லோரும் போன பின்னரும், கிரி சொன்ன அந்த வார்த்தை தொல்காப்பியன் மனதை உறுத்துகிறது.

இரவு நேரத்தில் ஆதியை சந்திக்க வரும் கிரியிடம்...

'அங்கே போனியே என்ன ஆச்சு? திட்டி அனுப்பினாளா? இல்லே அடிச்சு அனுப்பினாளா?'

'நீங்க சொன்னது சரிதான் பாஸ், உஷா மேடம் எந்த சமாதானத்துக்கும் வர விரும்பவில்லை, கோர்ட்டிலேயே பார்த்துறேன்னு சொல்லிட்டாங்க'

'அதான் சொன்னேனே கிரி. அவளைப்பத்தி எனக்கு தெரியும். நீயும் லாயரும்தான் சமாதானமா போகனும்னீங்க'.

'இன்னொரு விஷயம் பாஸ். அந்த தொல்காப்பியனும் அவங்க கூடவே இருக்கன்'.

'அதான் தெரியுமே, அவன்கூடத்தானே அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டு சுத்துறா'.

'அதில்லை பாஸ், இப்போ தொல்காப்பியன் உஷா மேடம் வீட்டிலேயே தங்கியிருக்கான். இதை மேடமே என் கிட்டே சொன்னாங்க'.

ஆதிக்கு சற்று அதிர்ச்சி....

'அப்படியா? அந்த உஷாவை என்ன கதியாக்குறேன்னு பார் கிரி'...

aanaa
3rd December 2008, 04:03 AM
ஆர்த்தியும் ராஜேஷும் தாங்கள் திட்டமிட்டபடி டாங்கர் லாரி ஒன்றை வாங்கி அதற்கு பூஜையும் போட்டு பிஸினஸைத்துவக்குகின்றனர். 'கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளி'யாக சிவசுவும் கூடவே இருக்கிறான்.
..

:ty:

:rotfl:

gta129
3rd December 2008, 04:44 AM
Thanks for the updates, I really appreciate it.

saradhaa_sn
3rd December 2008, 11:27 AM
நன்றி ஆனா & கீதா...

தன்னைப்பார்க்க "ஆதியண்ணா" வீடு தேடி வந்திருப்பதைபார்த்து ஆர்த்திக்கு வாயெல்லாம் பல். (ஆதி, தனக்கு ஆதாயமில்லாமல் துரும்பைக்கூட அசைக்க மாட்டான் என்பது இன்னும் இவர்களுக்கெல்லாம் தெரியவில்லை). வீட்டுக்குள் அழைத்தும் வராமல் வெளியில் நின்றே பேசுகிறான்.

"இதோ பார் ஆர்த்தி, உங்க அக்கா அபியை நான் என் எதிரியாக நினக்கலை. ஆனால் அவள்தான் என்னுடைய ஒவ்வொரு விஷயத்திலும் குறுக்கே வந்து எனக்கு சங்கடம் கொடுக்கிறாள். இப்போ அசோஸியேஷன் பிரஸிடெண்ட் எலெக்ஷனில் அபி நிற்கப்போவது உனக்கு தெரியுமா?"

தெரியும் என்பதாக ஆர்த்தி தலையாட்டுகிறாள்.

"உங்க அக்காவுக்கு இது தேவையா?. இப்போ அவள் பிஸினஸில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டிய நேரம். இப்போ எதுக்கு அவளுக்கு தலைவர் பதவியெல்லாம்?. அதனால் பிஸினஸ் எவ்வளவு பாதிக்கும் தெரியுமா?. அதுவும் கூட, நான் நிற்பது தெரிஞ்சும் எதிர்த்து நிற்கிறாள்னா என்ன அர்த்தம்?. எல்லா விஷ்யத்திலும் எனக்கு பிரச்சினை பண்ணனும்னுதானே. சஷ்டியப்த பூர்த்தி விழாவுல எங்களுக்குத்தான் உரிமையிருக்குன்னு சொன்னோம். அப்பாவும் அதைப்புரிஞ்சிகிட்டு அந்த நேரத்தில் எங்க வீட்டுக்கு வந்துட்டார்.(???) அதுக்காக கோபப்பட்டு அபி இதில இறங்கினாளா?. எனக்கு தெரியும், அவளாக இறங்கவில்லை, சில பேர் அவளை தூண்டி விட்டு இந்த எலக்ஷன்ல நிறுத்துறாங்க. அவங்களுக்கு என்னை எதிர்க்க உங்க அக்காவை விட்டால் ஆள் கிடைக்கலை. இதெல்லாம் அவளுக்கு தேவையா?"

"நீங்க சொல்றதெல்லாம் எனக்கு புரியுது அண்ணா. ஆனால் அக்கா கிட்டே இதையெல்லாம் யார் சொல்றது?"

"நீதான் சொல்லணும் ஆர்த்தி. ஏன்னா இப்போ அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்ல நீயும் ஒரு பார்ட்னர். அதனால தைரியமா சொல்லு. உன்னுடைய ட்ராவல்ஸுக்கு பிஸினஸ் பிடிக்க உதவி செஞ்சதுக்காகவும் , டேங்கர் லாரி வாங்க லோன் ஏற்பாடு செய்ததற்காகவும் இதைக் கேட்கவில்லை. என்னடா செஞ்ச உதவிகளை சொல்லிக்காட்டறானேன்னு நினைக்காதே".

"அய்யோ அப்படியில்லை அண்ணா, அதுக்கு ஒரு கைமாறு செய்ய வாய்ப்புக் கிடைக்குமான்னுதான் எதிர்பார்த்திருக்கேன்".

"ஆர்த்தி, நீ சொல்றது உண்மையா இருந்தால் இந்த விஷயத்துல தலையிட்டு அவளைத்தடுத்து நிறுத்து. உங்க அம்மா சொன்னால் அபி கேட்க மாட்டாளா?. அவங்க கிட்டே இதுல உள்ள பிரச்சினைகளை எடுத்துச்சொல்லு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ ஆர்த்தி, மத்த விஷயம் மாதிரி இல்லே இது, என்னுடைய கௌரவ பிரச்சினை. இதுல இடைஞ்சல் வந்தா நான் எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டேன்".

அபியின் வீடு. அபி வீட்டில் இல்லாத நேரம் ஆர்த்தி வருகிறாள்...

"அம்மா, அக்கா இன்னும் வீட்டுக்கு வரலையா?"

"அவள் இப்போ எங்கே வரப்போறா. ஏதோ அசோஸியேஷன் வேலை அது இதுன்னு லேட்டாத்தான் வர்ரா".

"அது விஷயமா பேசத்தான் வந்தேம்மா. அந்த ஆதியை எதிர்த்துக்கிட்டு அக்காவுக்கு ஏம்மா இந்த வீண் வேலை?. இதுல நமக்கு என்ன பிரயோஜனம்? கம்பெனிக்கு பெரிய ப்ராஜக்ட் கிடைத்து, அதில் கவனமாக இருக்கிற நேரத்தில் எதுக்கு இந்த வேண்டாத வேலை?. இதனால அந்த ஆதியின் கோபம் அதிகமாகி அக்காவுக்கு எதிராக இன்னும் ஏதாவது இடைஞ்சல் கொடுப்பான்".

"ஆர்த்தி, இதைப்பத்தி எனக்கென்ன தெரியும்?. தவிர அபி நல்லா யோசிக்காமலா இதுல இறங்கியிருப்பாள்?".

"அக்காவும் மனுஷிதானம்மா. அவங்களும் தப்பு செய்ய வாய்ப்பிருக்கில்ல?"

இந்த உரையாடலைக்கேட்டுக்கொண்டே வரும் ஆனந்தி, அபியின் முடிவுக்கு சப்போர்ட்டாக பேசுகிறாள்.

"நான் அதுக்கு சொல்லலைக்கா. இந்த தலைவர் பதவியால நம்முடைய பிஸினஸுக்கு இடைஞ்சல்கள் வருமே தவிர எந்த பிரயோஜனமும் கிடையாது. அக்காவின் கவனமும் பிஸினஸைவிட்டு மாறிப்போகும்ணுதான் சொல்றேன்"

(சும்மா சொல்லக்கூடாது. 'ஆதியண்ணா' நல்லாவே பிரைன்வாஷ் அனுப்பியிருக்கார்).

ஆர்த்தி வந்து அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, டாக்டர் மகேஷ் வீட்டுக்குள் வருகிறார். அவரைப்பார்த்ததும் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

"வாங்க தம்பி வாங்க?. எப்படி இருக்கீங்க, எப்போ வந்தீங்க?"

"நான் வந்து ரென்டு நாளாச்சுங்க. இனிமேல் சென்னையில்தான் நிரந்தரமாக இருக்கப்போகிறேன்".

"அப்படியா ரொம்ப சந்தோஷம்"

"சரி அபி எப்படி இருக்காங்க?"

"அபியிடம் எந்த மாற்றமும் இல்லை, அப்படியேதான் இருக்கா".

"நானும் அப்படியேதான் இருக்கேன்.... யெஸ் ஸ்டில் வெயிட்டிங். அப்போ நான் வர்ரேங்க".

மகேஷ் போனதும், சாரதா கற்பகத்திடம் "அக்கா. அந்த தம்பி சொன்னதைக்கேட்டீங்களா? இன்னும் அபிக்காக காத்துக்கிட்டு இருக்காராம். நாமதான் அபிக்கு எடுத்துச்சொல்லி சம்மதிக்க வைக்கணும்"

கற்பகத்திடமிருந்து (வழக்கம்போல) பெருமூச்சு...

கோர்ட்......

காரை விட்டு இறங்கும் ஆதியை நிருபர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விகள் கேட்க, அவன் எந்த ஒன்றுக்கும் பதில் சொல்லாமல் உள்ளே போகிறான். (அந்த நிருபர்கள், ஏதோ ஒரு நடிகையின் வழக்கு சம்மந்தமாக வம்பளக்க வந்தவர்கள். நடிகை வராததால் ஆதியிடமாவது ஏதாவது தீனி கிடைக்குமா என்று பார்த்தனர்... ஊகும்). அதுபோலவே காரில் வந்திறங்கும் உஷாவிடமும் அவர்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

நீதிபதி முன் அமர்ந்திருக்கின்றனர். அவர் இருவரையும் சமாதானமாகப் போக முயற்சிக்குமாறு சொல்கிறார். இருவருக்குமே அதில் விருப்பமில்லை. தனியாக மனவிட்டுப் பேசும்படி ஜட்ஜ் சொல்லியும் அதற்கு எந்த வாய்ப்பும் இல்லையென்று மறுக்கின்றனர்...

"சார், இந்த ஆதி ஒரு மேல் ஷாவனிஸ்ட். பெண்கள்னாலே அடிமைன்னு நினைக்கிறவர். அவருக்கு தேவை மனைவிங்கற பேர்ல ஒரு அடிமை. அதுக்கு நான் ஆளில்லை".

"ஏன் சார், மனைவியைப்பார்த்து குடும்ப பொண்ணா நம்ம கலாச்சாரத்து ஏற்றபடி நடந்துக்கோன்னு சொல்றது தப்பா. இதோ பாருங்க பேண்ட்டும் ஷர்ட்டும் போட்டுக்கொண்டு கோமாளி மாதிரி வந்திருக்கா. கழுத்தில் நான் கட்டிய தாலி கூட இல்லை".

"சார், கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டும்தானா?. அப்படீன்னா இவர் வேஷ்டி கட்டிக்கொண்டு வரவேண்டியதுதானே. இவருக்கு வேஷ்டி கட்டவாவது தெரியுமா?"

"இதோ பாருங்க, ரெண்டு பேரும் ஒரு மூணு மாசம் பிரிஞ்சு இருங்க. அதுக்குப்பின்னும் ரெண்டு பேரம் மனம் மாறலைன்னா இந்த வழக்கை கோர்ட்டுக்கு அனுப்பலாம்".

"சார், ஏற்கெனவே பல மாதங்கள் இவரைவிட்டு பிரிஞ்சுதான் இருக்கேன். இந்த மூணு மாசத்துல எந்த மாற்றமும் ஏற்படாது".

"அதையேதான் சார் நானும் சொல்றேன். இனி எக்காரணம் கொண்டும் இவளோடு சேர்ந்து வாழவே முடியாது".

"அப்படீன்னா இந்த வழக்கை கோர்ட்டுக்கு அனுப்புவதைத்தவிர வேறு வழியில்லை. நீங்க ரெண்டு பேரும் போகலாம்".

ஆதியும் உஷாவும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி வெளியேறுகின்றனர்.

(ஆனால் நிச்சயம் என்னைக்காவது இவங்க ஒண்ணு சேருவாங்கண்ணு உள்மனசு சொல்கிறது. ஏன்னா இந்த தொடரிலேயே ஆர்த்தி - ராஜேஷ், மனோ - அனுராதா, அர்ஜுன் - ரேகா இவர்களையெல்லாம் விட ஆதியும் உஷாவும்தான் ரொம்ப பொருத்தமான ஜோடி).

saradhaa_sn
4th December 2008, 12:22 PM
பெண்களுக்கு, குறிப்பாக சீரியலில் வரும் பெண்களுக்கு, அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் வரும் பெண்களுக்கு... இவ்வளவு ஏன், கற்பகத்துக்கு வீட்டு விஷயங்களை (என்னதான் பெரிய வீட்டில் இருந்தாலும்) கோயில் நின்று பேசினால்தான் நிம்மதி.

கற்பகம் சந்திர மண்டலத்திலிருந்து வந்தவள் அல்ல, ராஜேந்திரனும் செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்தவன் அல்ல. ஒரே வீட்டில் காலம் முழுக்க இருப்பவர்கள். மற்றவர்களாவது வேலை வெட்டி என்று வெளியில் போய் வருவார்கள். இவர்கள் இருவரும் மேய்ச்சலுக்கு போகும் மாடுகள் அல்ல, தொழுவத்தில் கட்டிய மாடுகள். இருந்தும் இவர்கள் அபியின் கல்யாணம் பற்றியும் ஆனந்தியின் கல்யாணம் பற்றியும் பேச தேர்ந்தெடுக்கும் இடம் கோயில். ஆனந்தி கார்த்திக் கல்யாணம் பற்றியும், அபி - மகேஷ் கல்யாணம் பற்றியும் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை பின்னால் இருந்து 'குள்ளநரி' கலா கேட்டுவிடுகிறாள். அடுத்து அவள் எங்கே போய் யாரிடம் வத்தி வைப்பாள் என்று எல்.கே.ஜி. குழந்தையிடம் கேட்போம்......

'இதோ பாரும்மா குழந்தை, இந்த அக்கா இப்போ நேரா எங்கே போவாங்க?'

'அதுவா... வந்து... வந்து... அலமேலு ஆன்ட்டி வீட்டுக்கு போவாங்க'.

(தண்டனை கொடுப்பதில் மனிதனின் தீர்ப்பு சிலசமயம் தவறாக முடிவதுண்டு. ஆனால் கடவுளின் தீர்ப்பில் தவறு வருமா?. இந்த சந்தேகம் நமக்கு வரக்காரணம், உடம்பு முழுக்க விஷத்தை வைத்துக்கொண்டு, 'ஐந்தரை அடி சயனைட் பாட்டிலாக' உலவிக்கொண்டிருக்கும் கலாவை விட்டு விட்டு, நல்லவனான அவள் கணவனுக்கு கைகால்கள் விளங்காமல் செய்திருப்பதால் அப்படி ஒரு சந்தேகம் வருகிறது. இது கதாசிரியரின் கற்பனைக்கதை என்று விட்டுவிட்டாலும், நிஜ வாழ்க்கையிலும் சில இடங்களில் (பல இடங்களில்..?) அப்படித்தானே இருக்கிறது?. நல்லவர்கள்தானே எப்போதும் கஷ்ட்டப்படுகிறார்கள்?. மனிதனின் சட்டங்கள் மட்டும் ரொம்ப லட்சணமாக இருக்கிறதா?. மண்டையை பிளக்கும் உச்சி வெயிலில் வேலை செய்யும் விவசாயிக்கும், முதுகு ஒடிய மூட்டைதூக்கிப் பிழைத்து மானத்தோடு வாழ நினைக்கும் தொழிலாளிக்கும் அடுத்த வேளை உணவுக்கு உத்திரவாதம் இல்லை. ஆனால் குற்றம் செய்துவிட்டு ஐந்தாண்டு சிறைத்தண்டனை பெறும் ஒரு அயோக்கியனுக்கு, ஐந்தாண்டுகள் உணவுக்கு அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்கிறது. அவர்களுக்கு வாராவரம் கோழிக்கறியாம், சிறையிலேயே சினிமாவாம். எந்த அரசியல்வாதியின் முப்பாட்டன் வீட்டு சொத்திலிருந்தும் அல்ல, நம்முடைய வரிப்பணத்தில் இருந்து. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, கேள்விப்படும்போது நம்முடைய இ.பி.கோ. சட்டப் புத்தகங்களையெல்லாம் ஒரு பெரிய மைதானத்தில் போட்டு தீ வைத்துக்கொளுத்தினால் என்ன என்று தோன்றவில்லையா?. சரி, விஷயம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு மேல் எழுதினால் இந்தப்பதிவு நீக்கப்படவும் வாய்ப்புள்ளது).

தன்வீட்டுக்கதவு தட்டப்படுவதைக்கேட்டு உஷா கதவைத்திறந்து பார்க்க, யாரோ ஒருவர் 'பேக்'குடன் நின்றுகொண்டிருக்க... 'யார் நீங்க? என்ன வேணும்?'

'நான் தினச்சுடர் பத்திரிகை நிருபர். உங்களை ஒரு பேட்டியெடுக்கலாம்னு வந்திருக்கேன்'

'பேட்டி கொடுக்கும் அளவுக்கு நான் ஒண்ணும் வி.ஐ.பி.அல்லவே".

'அதில்லீங்க, நீங்களும் உங்க கணவர் ஆதித்யாவும் டைவர்ஸ் செஞ்சுக்கப்போறீங்க. அது சம்மந்தமா கோர்ட்டில் சொல்ல முடியாத விஷயங்களை சொன்னால் பத்திரிகையில் போடுவோம். அதனால...'

'அதனால உங்க பத்திரிகை பத்தாயிரம் பிரதி கூடுதலாக விற்கும். அதுதானே. இதோ பாருங்க, இது என்னுடைய பெர்சனல் விஷயம். இது பத்தி பேப்ப்ர்ல வருவதை நான் விரும்பலை'.

'நீங்க சொன்னதை அப்படியே எழுதிடட்டுமா?'

'நீங்க என்ன வேணும்னாலும் எழுதிக்குங்க. போங்க இங்கிருந்து'.

பத்திரிகைக்காரரின் பேச்சைக்கேட்ட உஷாவின் அம்மாவுக்கு, பேசாமல் ஆதியுடன் சமாதானமாக போயிடலாம்னு தோன்ற, அது பற்றிப்பேச ஆரம்பிக்கிறாள். ஆனால் உஷாவும் அவள் அப்பாவும் மறுக்கின்றனர். டைவர்ஸ் கிடைத்தபின் உஷாவின் அடுத்த வாழ்க்கை பற்றி அம்மா பேச, உஷா கோபப்படுகிறாள். தான் காலம் முழுக்க ஆண்துணையில்லாமலேயே வாழ விரும்புவதாக தன் குழந்தையை வளர்த்து ஆளாக முடியும் என்று சொல்வதுடன் வழக்கம்போல ஆண்களைப்பற்றி மோசமான லெக்சர் கொடுக்கிறாள். அன்பான அப்பாவும், ஆதரவான தொல்காப்பியனும் பக்கத்தில் இருக்கும்போது, இவள் ஏன் ஆதி என்ற அயோக்கியனையே ஸ்கேலாக வைத்து ஆண்களை அளக்கிறாள் என்பது புரியாத ஒன்று. ஏற்கெனவே அபியைப்பற்றி சொல்லும்போதும் இதைச்சொன்னேன் என்று நினைக்கிறேன். (நியாயத்தை எடுத்துச்சொலவ்து, ஸேம்சைட் கோல் போடுவதாகாது என்பது என் எண்ணம்.)

குழந்தை சொன்னதுபோலவே அலமேலுவின் வீட்டுக்கு வரும் கலா, வழக்கம்போல கொஞ்சநேரம் அலமேலுவின் வெட்டி பந்தாக்களை கேட்டுவிட்டு (இம்முறை ஷேர் மார்க்கெட்), பின்னர் மெல்ல அபியின் இரண்டாவது திருமணம் பற்றி தான் காதால் கேட்ட விஷயத்தைப்போடு உடைக்கிறாள்...

'ஏய், நீ என்ன சொல்றே கலா. அந்த அபிக்கு ஏற்கெனவே என் பையனோடு கல்யாணம் ஆகி டைவர்ஸும் ஆச்சு. அந்த டாக்டர் ஏன் போயும் போயும் அவளைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புறான். ஒரு வேளை அவன் நிஜமாவே டாக்டர் இல்லையோ'.

'இல்லகா, அவன் டாக்டர் படிப்புலயே விசேஷமா படிச்சவனாம், அதாவது பைத்தியங்களையெல்லாம் குணப்படுத்துற டாக்டராம்'.

'அப்போ பைத்தியக்கார டாக்டரா, அப்படீன்னா அந்த குடும்பத்துக்கு பொருத்தமானவன்தான்'.

அப்போது வெளியேயிருந்து வீட்டுக்குள் பாஸ்கர் வர, அதே சமயம் மாடியில் இருந்து சங்கீதாவும் இறங்கி வர, பாஸ்கர் அலமேலுவிடம் கோபமாக...

'ஏம்மா உனக்கு வேறு வேலை இல்லையா?. அந்த அபியைக் குறை சொல்வதே உனக்கு வேலையா போச்சு. பாவம்மா அந்த அபி. ஏன் அவளைப்பத்தி எப்போதும் புரளி பேசிக்கிட்டே இருக்கே (????)'

மகனின் பேச்சு அலமேலுவுக்கு திகைப்பை உண்டாக்குகிறது. இவனா இப்படி...?.

'அதில்லைடா பாஸ்கரா, அந்த அபிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணப்போறதா....'

'விடும்மா. அவங்க என்ன வேணும்னாலும் பண்ணிட்டுப்போறாங்க' என்றவன் கலாவின் பக்கம் திரும்பி, 'ஏங்க, உங்களுக்கு வேலையில்லைன்னா அப்பளம் போடுங்க, ஊதுபத்தி செஞ்சு வியாபாரம் பண்ணுங்க. அதைவிட்டு ஏன் இங்கே வந்து புரளி பேசிக்கிட்டு இருக்கீங்க?' கன்னத்தில் பளார் என்று விழாத குறையாக பாஸ்கர் கேட்க, கலாவின் முகம் வாடுகிறது. 'இதென்னாடா கிணறு வெட்ட பள்ளம் தோண்டினால் உள்ளேயிருந்து பூதம் வருகிறதே' என்று ஏமாற்றம். (பாஸ்கர், சங்கீதாவுக்காக நடிக்கிறானா அல்லது உண்மையாகவே சொன்னானா தெரியாது. ஆனால் கலாவுக்கு கிடைத்த டோஸ் தேவையானதே).

வெளியில் புறப்பட்டுக்கொன்டிருக்கும் ஆதியிடம் 'இன்னைக்கு நியூஸ் பேப்பர் படிச்சீங்களா?' என்று ரேகா கேட்க, அதற்கு கிரி 'நான் படிச்சிட்டேன், ஒண்ணும் விசேஷம் இல்லையே'

'ஆதி, இவரை மாதிரி ஆளுங்களை உங்க செக்ரட்டரியா வச்சிருந்தா உருப்பட்ட மாதிரிதான். இதோ பாருங்க அந்த உஷா உங்களுடனான டைவர்ஸ் பத்தி பேட்டி கொடுத்திருக்கா' என்று சொல்லி அந்த பத்திரிகை நிருபர் விட்டிருந்த சரடுகளைப்படித்துக்காட்ட, ஆதியின் ரத்தம் சூடேறுகிறது.

'கிரி, இன்னைக்கு என்னுடைய எல்லா அப்பாயிண்ட்மெண்ட்டுகளையும் கேன்சல் பண்ணு. இதுல உடனடியா ஒரு முடிவு எடுத்தாகணும்'.

Arthi
4th December 2008, 08:57 PM
(நியாயத்தை எடுத்துச்சொலவ்து, ஸேம்சைட் கோல் போடுவதாகாது என்பது என் எண்ணம்.)

:clap: nanraaga sOneergaL :D

aanaa
4th December 2008, 11:08 PM
பெண்களுக்கு, குறிப்பாக சீரியலில் வரும் பெண்களுக்கு, அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் வரும் பெண்களுக்கு... இவ்வளவு ஏன், கற்பகத்துக்கு வீட்டு விஷயங்களை (என்னதான் பெரிய வீட்டில் இருந்தாலும்) கோயில் நின்று பேசினால்தான் நிம்மதி..

:lol:

:ty:

saradhaa_sn
5th December 2008, 12:13 PM
அறையில் தனியாக இருக்கும்போது, பாஸ்கர், அபியைப்பற்றி சொல்லும் விஷயங்களைக்கேட்டு அவன் முழுசாக திரும்பி (திருந்தி..?) விட்டான் என்றே சங்கீதா நினைக்கிறாள். (நமக்கும் கூட அப்படி ஒரு எண்ணம் வரத்தோன்றுகிறது). அபியைப்பார்க்க தன்னை அழைத்துப்போகும்படி சொல்ல பாஸ்கரும் அதற்கு சம்மதிக்கிறான்.

உஷாவின் பத்திரிகை பேட்டியைப் படித்து மனம் உடைந்துபோன ஆதி 'பாரில்' நேரம் போவது தெரியாமல் மதுவருந்திக்கொண்டு இருக்கிறான். அதிலும் உஷா கொடுத்ததாக சொல்லப்பட்ட அந்த பேட்டி அவனை ரொம்பவே அப்ஸெட் ஆக்கிவிட்டது. "அந்த ஆதி பெண்களைப்பற்றிய உணர்வோ உணர்ச்சியோ இல்லாதவர்" என்று பேப்பரில் போட்டிருந்ததை ரேகா அவனிடம் படித்துச்சொல்லும்போது... 'என்ன சொல்லியிருக்கா பாத்தீங்களா?. உணர்வு இல்லாதவர்னா நீங்க ஒரு மேல் ஷாவனிஸ்ட்னு அர்த்தம். உணர்ச்சியில்லாதவர்னா... (சென்ஸார்ட்) அர்த்தம்". என்று ரேகா சொன்ன குதர்க்கமான விளக்கத்தை (நிச்சயமாக கணவனின் அண்ணனுடன் பேசும் விளக்கம் அல்ல) நினைக்க நினைக்க அவனுக்கு உஷாவின் மேல் கோபமும், ஆத்திரமும் தலைக்கேறியது.

இருட்டில் மதுவருந்திக்கொண்டிருக்கும் ஆதியைக் காணவரும் கிரி, அவன் ஓவராக குடித்திருப்பதை அறிந்து பதறிப்போய், "பாஸ் இன்னைக்கு ரொம்ப ஓவரா குடிச்சிட்டீங்க, போதும் பாஸ் வாங்க வீட்டுக்குப் போகலாம்" என்று அழைக்க அவன் மீதும் எரிந்து விழுகிறான்.

"ஏய் கிரி, அந்த உஷா என்ன சொல்லியிருக்கா பார்த்தியா?. அவளை என்னால் ஒண்ணும் பண்ண முடியலையேடா. சாதாரண குடும்பத்தில் பிறந்த மிகச்சாதாரணமான அவளுக்கு பத்திரிகைக்காரங்க பேட்டி எடுக்கும் அளவுக்கு அந்தஸ்து எப்படி யாரால் வந்தது?. இந்த ஆதிங்கற தொழிலதிபரின் மனைவி என்பதால்தானே. என்ன திமிரா பேசியிருக்கா பார்த்தியா?. கூட அந்த தொல்காப்பியனும் வேற இருக்கான்னு சொல்றே".

"ஆமா பாஸ், அவங்களை என்ன பண்ணனும்னு சொல்லுங்க. நான் செஞ்சு முடிச்சிடுறேன்".

"இபோ இல்லே கிரி, இப்போ வேண்டாம். நான் எப்போ சொல்றேனோ அப்போ செஞ்சா போதும்". மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்துபோகிறான்...

அபியின் அலுவகத்துக்கு வரும் டாக்டர் மகேஷ், மீண்டும் திருமணம் பற்றிப் பேச்சையெடுக்க அவள் பிடிகொடுக்காமல் பேசுகிறாள்...

"இதோ பாருங்க மகேஷ். என்னுடைய வாழ்க்கையில் திருமணம்ங்கிறது ஒரு தடவை வந்து போயிடுச்சு. மறுபடியும் அதைப்பற்றி நான் நினைக்கவேயில்லை. பெண்களுக்கு திருமணம் அவசியம்தான்னு ஏன் நினைக்கிறீண்க்க?"

"அபி பெண்களுக்கு மட்டுமில்ல, ஆண்களுக்கும் திருமணம் அவசியம்னு நினைக்கிறவன் நான்".

அப்போது பாஸ்கரும் சங்கீதாவும் உள்ளே நுழைகின்றனர்...

"ஸாரி அபி, ரொம்ப பெர்ஸனலா பேசிக்கிட்டு இருந்தீங்க போலிருக்கு. டிஸ்டர்ப் பண்ணிட்டோம்". (அதான் தெரிஞ்சே டிஸ்டர்ப் பண்ணியாச்சே, அதை சொல்லி வேறு காட்டணுமா?).

மகேஷ், பாஸ்கரை ஒரு மாதிரியாகப்பார்க்கிறான், 'முன்பு இந்த பாஸ்கர் அபி விஷயமா நம்மிடம் தகராறு பண்ணிய ஆள் இல்லே'.

"அப்படியெல்லாம் இல்லே சங்கீதா, சும்மாதான் பேசிக்கிட்டு இருந்தோம்".

"அபி, இப்போ பாஸ்கர் முன்ன மாதிரி இல்லே ரொம்ப திருந்திட்டார். என்னை ரொம்ப அன்பா பார்த்துக்கிறார். உன்மீதும் உன் வாழ்க்கை பற்றியும் ரொம்ப அக்கறையோடு பேசுகிறார்".

"ஆமா அபி, நான் உன்னை கடந்த காலத்தில் ரொம்பவே கஷ்ட்டப்படுத்திட்டேன். அதுக்காக ரொம்ப வருத்தப்படுறேன். நீயும் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படியே மத்தவங்களுக்காக உன்னை வருத்திக்கிட்டு இருப்பே. கூடிய சீக்கிரமே (மகேஷைக் கைகாட்டி) இவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு அபி".

('வேலை செஞ்சு களைச்சுப்போய் இளைப்பாறுகிறீர்களா? எல்லோருக்கும் பாயாசம் கொண்டு வரச்சொல்லட்டுமா?' என்று கேட்கும் ராமதாஸைப்பார்த்து, 'என்னப்பா இது, பட்ட மரத்துல பால் வடியுது?'ன்னு நாகேஷ் கேட்பது ஞாபம் வருகிறதா?)

"ஸாரி மிஸ்ட்டர் மகேஷ், நான் கூட உங்க கிட்டே முன்பு அபி விஷயமா தகராறு பண்ணியிருக்கேன். அதெல்லாம் மனசுல வச்சிக்காதின்ங்க".

"நோ. நோ.. அதெல்லாம் இப்போ எதுக்கு?"

"சரி அபி நாங்க புறப்படுறோம், நீங்க உங்க பேச்சை கண்டினியூ பண்ணுங்க" இருவரும் போய்விட்டார்கள். ஆனால் அபி இன்னும் ஆச்சரியத்தில் இருந்து மீளவில்லை "பாஸ்கரா இப்படி?'.

"என்ன அபி, நம்ம கல்யாணத்தைப்பத்தி உங்களைத்தவிர எல்லோரும் ஏத்துக்கிட்டாங்க. உங்ககிட்டேயிருந்துதான் ஒண்ணும் வரக்காணோம்"

"என் கிட்டேயிருந்து என்ன வரணும் மகேஷ்?"

"'சம்மதம்'ங்கிற வார்த்தை வரணும், அதுக்காகத்தான் எல்லோரும் காத்திருக்கோம்".

"அது நாமாக வற்புறுத்தி வரவைக்க முடியாது, மனசில இருந்து தானாக வரவேண்டும்" என்று சிரித்துக்கொண்டே அறையைவிட்டு வெள்யே செல்ல, 'என்ன பெண் இவள்? புரியாத புதிராக இருக்காளே' என்ற குழப்பமான முகத்துடன் டாக்டர் மகேஷ்...

aanaa
5th December 2008, 11:28 PM
அறையில் தனியாக இருக்கும்போது, பாஸ்கர், அபியைப்பற்றி சொல்லும் விஷயங்களைக்கேட்டு அவன் முழுசாக திரும்பி (திருந்தி..?) விட்டான்

:roll:





(நிச்சயமாக கணவனின் அண்ணனுடன் பேசும் விளக்கம் அல்ல) நினைக்க நினைக்க அவனுக்கு உஷாவின் மேல் கோபமும், ஆத்திரமும் தலைக்கேறியது.
:lol: :rotfl:


:ty:

saradhaa_sn
6th December 2008, 01:40 PM
தொடர்ந்த ஊக்கப்படுத்தலுக்கு நன்றி ஆனா...

நேற்றைய எபிசோட் கொஞ்சம் டல்லடித்த மாதிரி ஒரு தோற்றம். முதல் பகுதியில், உஷாவின் அப்பாவுக்கு பெங்களூர் நண்பர் ஒருவரிடமிருந்து போன். தான் புதிதாக துவங்க இருக்கும் பிஸினஸுக்கு ஒரு இடம் தேவைப்படுவதாகவும், இவரது பெங்களூர் வீடு அதற்கு பொருத்தமாக இருக்குமென்று சொல்லி விலைக்கு கேட்க, இவர் மறுக்க, அட்லீஸ்ட் வாடகைக்காவது தரும்படி நண்பர் கேட்க யோசித்து சொல்வதாக சொல்கிறார்.

'யாருங்க போன்ல...?'

'என் ஃப்ரெண்ட்தான் (பெயர்கூட சொன்னாரே) பேசுறான். அவனுடைய புது பிஸினஸுக்கு நம்முடைய இடம் வேண்டுமாம். ஒரு வாரத்தில் யோசித்து சொல்வதாக சொல்லியிருக்கிறேன்'.

'ஏங்க நாமதான் இனிமே பெங்களூர் போகப்போவதில்லையே. அப்புறம் எதுக்கு அது? கொடுத்திட்டு இங்கே சென்னையிலேயே ஒரு இடத்தை வாங்கிப்போடலாமே'.

'இதோ பார், இதுல நம்முடைய சம்மதம் முக்கியமில்லே, உஷா சம்மதிச்சாதான் முடியும்'.

அப்போது வெளியிலிருந்து இதைக்கேட்டுக்கொண்டே வரும் உஷா, 'என்னப்பா எதுக்கு என் சம்மதம் வேணும்?.

'நம்ம பெங்களூர் வீட்டை என் நண்பன் விலைக்கு கேட்கிறான். ஆனால் அது உனக்காக நான் பார்த்துப்பார்த்துக் கட்டிய வீடு. அதனால்தான் அதைக்கொடுப்பதானால் உன் சம்மதம் வேணும்னு சொன்னேன்'.

'நல்ல விஷயம்தானேப்பா. கொடுத்திடலாமே.. இதுலயெல்லாம் எதுக்குப்பா செண்டிமெண்ட் பார்த்துக்க்கிட்டு. செண்டிமெண்ட் பார்க்க வேண்டிய புருஷன் பொஞ்சாதி உறவே ஒண்ணுமில்லாமல் போயிடுது, இதுக்குப்போய் ஏன் செண்டிமெண்ட் பார்க்கிறீங்க?. அப்பா, உண்மையில் நீங்க எனக்கு அப்பாவா கிடைச்சது என் அதிர்ஷ்ட்டம்'.

'இல்லேம்மா, உன் பையன் பிறந்ததுதான் நம் எல்லோருக்கும் அதிர்ஷ்ட்டம்'.

(இந்த செக்மெண்ட் எதுக்கு?. நேரத்தை இழுக்கவா?)

பாஸ்கரின் வீட்டுக்கு டாக்டர் மகேஷ் வருகிறான். முதலில் பாஸ்கர் இல்லையென்று அலமேலு சொல்ல, மாடியில் இருந்து பாஸ்கர் இறங்கி வர, சமாளிக்கிறாள்.

(சீரியல்களில் நான் பார்த்து ஆச்சரியப்படும் விஷயம், வந்த விருந்தாளிகளிடமே 'என்ன சாப்பிடுறீங்க?' என்று கேட்பது. அப்படீன்னா வந்த விருந்தாளிகள் வெட்கத்தை விட்டு, 'எனக்கு அது கொண்டாங்க, இது கொண்டாங்க'ன்னு கேட்பாங்களா?. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முதல் சீரியலிலிருந்து, இந்த வினாடி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் வரை இதேதான்).

'வாங்க மகேஷ், நீங்க வந்திருப்பது ரொம்ப சந்தோஷமாயிருக்கு'.... என்று ஆரம்பிக்கும் பாஸ்கர், மீண்டும் தனது கடந்தகால 'சேடிஸ்ட்தனம்' பற்றியும் அதன் காரணமாக அபிக்கு தான் இழைத்து வந்த கொடுமைகளையும் கஷ்ட்டங்களையும் பற்றி விவரிப்பதுடன், அதற்காக இப்போது தான் மிகவும் வருந்துவதாகவும், அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென்று ரொம்பவே விரும்புவதாகவும் கூறுவதுடன், கடந்த காலங்களில் மகேஷிடம் நடந்துகொண்ட முறைக்காக மீண்டும் மன்னிப்புக் கேட்கிறான். (இதைத்தானே முன்பு அபியின் அலுவலகத்திலும் பேசினான்?).

பாஸ்கரின் பேச்சைக்கேட்டு சங்கீதாவுக்கு மகிழ்ச்சி, ஆனால் அலமேலுவுக்கோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. 'தன் மகன் பாஸ்கரா இப்படி மாறிப்போயிட்டான்?'. ஆனால் நமக்கு மட்டும் பாஸ்கரின் மனமாற்றம் நம்பவே முடியவில்லை. ஏதோ பெரிய திட்டத்துக்காக அடிப்போடுகிறான் என்பது மட்டும் தெரிகிறது. நல்ல அப்பாக்களுக்குப்பிறந்த ஆதித்யாவுக்கும் பாஸ்கருக்கும், குணம் மட்டும் அப்படியே அம்மாக்களின் கெட்ட குணம்.

'மகேஷ், இப்போ ஆரம்பிச்சிருக்கிற அபியின் கல்யாணப்பேச்சு இடையில் தடைபடாமல் கல்யாணத்துல முடியணும்னு ஆசைப்படுறேன். அபிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனுங்கிறதுல நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன். சரி நீங்க எதுக்கு வந்தீங்கன்னு சொல்லவேயில்லையே..!'.

'உங்களுக்கு நன்றி சொல்லத்தான் வந்தேன் பாஸ்கர். அன்னைக்கு அபியின் ஆஃபீஸில நீங்க கல்யாணப்பேச்சை ஆரம்பிச்சது, மேற்கொண்டு அபியோடு நான் பேச வசதியாயிருந்தது'.

saradhaa_sn
6th December 2008, 02:01 PM
மேனகாவின் அலுவலக மீட்டிங் டேபிள்.

சுமார் பத்து பேர் இருக்கிறார்கள், ஆதியும்தான்.

'நான் எதுக்கு உங்களையெல்லாம் வரச்சொல்லியிருக்கேன்னா, எம்.எம்.சிடி மேக்கர்ஸ் சார்பில் இன்னொரு புதிய ப்ராஜக்ட் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்'.

இப்போது ஆதி குறுக்கிடுகிறான், 'மேடம் ஏற்கெனவே 'சேட்டலைட் சிடி', 'மேனகா டவர்ஸ்'னு ரென்டு ப்ராஜக்ட் நடந்துகிட்டு இருக்கு. இப்போ புது ப்ராஜக்ட் அவசியமா?'

'மிஸ்டர் ஆதி, ரெண்டு ப்ராஜக்ட் நடந்தா மூணாவது ஒண்ணு ஆரம்பிக்க கூடாதுன்னு அவசியம் இல்லையே. நான் யு.எஸ்.ல ஒரே நேரத்துல பத்து ப்ராஜக்ட் செஞ்சிருக்கேன். இந்த புது ப்ராஜக்ட்ல இஷ்ட்டம் இல்லாதவங்க இங்கிருந்து போகலாம்'.

'நோ மேடம், நான் அப்படி சொல்லலை. ஏரற்கெனவே ப்ராஜக்ட்ஸ் நடக்கும்போது இது அவசியமான்னுதான் கேட்டேன். மத்தபடி உங்க இஷ்ட்டம்'.

மேனகா இன்னொருவர் பக்கம் திரும்பி, 'இந்த புது ப்ராஜக்டுக்காக அந்த முப்பத்தஞ்சு ஃப்ளாட்ஸையும் விலைக்கு வாங்க சொன்னேனே முடிச்சிட்டீங்களா?'

'இல்லீங்க மேடம், அதுல அஞ்சு பேர் இடத்தை தர மறுக்கிறாங்க'.

'ஏன் பணம் அதிகமா எதிர்பார்க்கிறாங்களா?. கேட்டால் கொடுத்திடுங்க. அந்த அஞ்சு பேருக்காக நான் என் ப்ராஜக்ட்டை ட்ராப் பண்ண முடியாது'.

இப்போது ஆதி,'மேடம், அவங்களை காலி பண்ணும் வேலையை எங்கிட்டே விடுங்க, நான் பண்ணிடுறேன்'.

'நோ மிஸ்ட்டர் ஆதி, நீங்க ரொம்ப உணர்ச்சி வசப்படுற ஆள். நீங்க வேண்டாம். அவரே பண்ணட்டும். ரவி, நம்ம புது ப்ராஜக்ட்டோட ப்ளானை எடுத்துக்கிட்டு வாங்க'.

அபியின் அலுவலக மீட்டிங் டேபிள்....

கற்பகம், சாரதா, ராஜேந்திரன் ஆகியோர் அமர்ந்திருக்க அபி நின்றுகொண்டிருக்கிறாள். இது அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் புது ப்ராஜக்ட் பற்றி விவாதிக்க அல்ல. அபியின் கல்யாண ப்ராஜக்ட் பற்றி விவாதிக்க.

கற்பகமும், சாரதாவும் (வழக்கம்போல) கல்யாணப்பேச்சை எடுக்க, அபி (வழக்கம்போல) மழுப்ப, இவர்களும் (வழக்கம்போல) அவளுக்கான கல்யாண வாழ்க்கையின் அவசியத்தை எடுத்துச்சொல்ல, அபி சம்மத்ம் சொல்லாமல் (வழக்கம்போல) புன்னகை புரிய, ராஜேந்திரனும் தன் பங்குக்கு (வழக்கம்போல) சில விஷயங்களை எடுத்துவிட..... அபி ஒன்றும் சொல்லாமல் புன்னகையுடன் வெளியேற...

'என்ன சாரதா, ஒண்னும் சொல்லாம போறா?'.

'அக்கா உனக்குத்தான் ஒண்னும் புரியலை. ஏற்கெனவே கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆனவள், இந்த கல்யாணத்துல எனக்கு சம்மதம்னு வெளிப்படையாகவா சொல்லுவா? எப்போ அவள் மறுக்கலையோ அப்பவே சம்மதம்னு நாமதான் புரிஞ்சுக்கணும்'.

'அதுக்கில்லை சாரதா, அவள் வாயாலேயே சொல்லிட்டான்னா நமக்கும் நிம்மதியாயிடும்'

கற்பகத்தின் குழப்பமான முகம் குளோசப்பில்....

aanaa
6th December 2008, 07:49 PM
(இந்த செக்மெண்ட் எதுக்கு?. நேரத்தை இழுக்கவா?)
.

:hammer: :hammer:



(சீரியல்களில் நான் பார்த்து ஆச்சரியப்படும் விஷயம், வந்த விருந்தாளிகளிடமே 'என்ன சாப்பிடுறீங்க?' என்று கேட்பது. அப்படீன்னா வந்த விருந்தாளிகள் வெட்கத்தை விட்டு, 'எனக்கு அது கொண்டாங்க, இது கொண்டாங்க'ன்னு கேட்பாங்களா?. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முதல் சீரியலிலிருந்து, இந்த வினாடி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் வரை இதேதான்).
.

சில பேர் காப்பி மட்டுமே அருந்துவார்கள்

சிலர் தேனீர் மட்டும்தான்

இன்னும் சிலர் காப்பி டீ இரண்ணுடுமே குடிப்பதில்லை

பால்
சக்கரை வேறுபடும்

சக்கரை வியாதி ,,

முதலே இவைகளைத் தெரிந்து
உபசரிக்கலாமெனத் தான்
hmmmmmmm



:ty:

saradhaa_sn
7th December 2008, 10:40 AM
(சீரியல்களில் நான் பார்த்து ஆச்சரியப்படும் விஷயம், வந்த விருந்தாளிகளிடமே 'என்ன சாப்பிடுறீங்க?' என்று கேட்பது. அப்படீன்னா வந்த விருந்தாளிகள் வெட்கத்தை விட்டு, 'எனக்கு அது கொண்டாங்க, இது கொண்டாங்க'ன்னு கேட்பாங்களா?. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முதல் சீரியலிலிருந்து, இந்த வினாடி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் வரை இதேதான்).
.

சில பேர் காப்பி மட்டுமே அருந்துவார்கள்

சிலர் தேனீர் மட்டும்தான்

இன்னும் சிலர் காப்பி டீ இரண்ணுடுமே குடிப்பதில்லை

பால்
சக்கரை வேறுபடும்

சக்கரை வியாதி ,,

முதலே இவைகளைத் தெரிந்து
உபசரிக்கலாமெனத் தான்

நன்றி ஆனா...

இதுல இவ்வளவு விஷயங்கள் இருக்கா?. இருந்தாலும் அதை நாசூக்காக கேட்கலாமென்பது என் எண்ணம்......

"பேசிக்கிட்டு இருங்க, காபி எடுத்துக்கிட்டு வரேன்" என்று சொன்னால்...., வந்தவர்கள்...

"ஸாரி, நான் காபி சாப்பிடுவதில்லைங்க, டீதான்"
"இல்லைங்க, காபி டீ எதுவும் வேணாம். எனக்கு சூடுன்னாலே அலர்ஜி. கூலாக எதாவது கொண்டாங்க"
"காபியில சர்க்கரை கொஞ்சம் கம்மியா போடுங்க"
"கொஞ்சம் தண்ணீ(ர்) மட்டும் கொடுங்க போதும்"
"எதுவும் வேண்டாங்க. இப்போதான் சாப்பிட்டுட்டு வர்ரேன்"

இப்படி ஏதாவது ஒன்றை பதிலளிப்பார்கள்.

அதை விட்டு, ஓட்டல் சர்வார் மாதிரி "என்ன சாப்பிடுறீங்க?" என்று கேட்பது கொஞ்சம் நெருடுகிறது.

ஒருத்தராவது வசனத்தை மாற்றி எழுதக்கூடாதா?.

படங்களிலும் சீரியல்களிலும் வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், "எது சொல்றதா இருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து சொல்லுங்க" என்பது போல இதுவும் பெர்மெனண்ட் வசனமாகப் போய்விட்டது.

aanaa
7th December 2008, 09:12 PM
இதுல இவ்வளவு விஷயங்கள் இருக்கா?. இருந்தாலும் அதை நாசூக்காக கேட்கலாமென்பது என் எண்ணம்......

.

புரியுதுங்க

:banghead:

saradhaa_sn
9th December 2008, 12:38 PM
தான் புதிதாக ஆரம்பிக்கும் ப்ராஜக்டுக்காக தான் வாங்கியிருக்கும் குடியிருப்பு வளாகத்திற்கு தனது எடுபிடி, அடிவருடிகளோடு வரும் மேனகா, அங்கு இன்னும் மக்கள் காலிசெய்யாமல் குடியிருந்து வருவதைபார்த்து...

'இவங்க எல்லாம் ஏன் இன்னும் காலி பண்ணவில்லை?'

'ரென்டு நாள்ள காலி பண்ணிடுவாங்க மேடம்'

'அதெப்படி இவ்வளவுபேரும் ரெண்டே நாளில் காலி பண்ணுவாங்க?'

'அதெல்லாம் பண்ணிடலாம் மேடம், நீங்க கவலைப்படாதீங்க'.

'சரி, இடத்தை தரமாடேன்னு சொன்ன அந்த ஃப்ளாட் ஓனர்ஸ் எல்லாம் எங்கே?'

'இதோ வந்துட்டாங்க மேடம்'.

'நீங்களெல்லாம் ஏன் இடத்தைக் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்க?. நான் இங்கு உங்க இடம் தவிர மத்த எல்லா ஃப்ளாட்டுகளையும் வாங்கியாச்சு. நீங்க மட்டும் தரலைன்னா நான் எப்படி என்னுடைய ப்ராஜக்ட் ஆரம்பிக்க முடியும்?. ஏன் இப்படி பிடிவாதமா இருக்கீங்க?. உங்களுக்கு பணம் அதிகமா வேணும்னா இப்போ இருக்கும் மார்க்கெட் ரேட்டை விட டபுள் அமௌண்ட் தரச்சொல்றேன். என்ன சொல்றீங்க?'

'மேடம், ஏற்கெனவே உங்க ஆளுங்க பலதடவை எங்க கிட்டே வந்து கேட்டுட்டாங்க. அப்போதே நாங்க தர மாட்டோம்னு சொல்லிட்டோம். ஏன் மறுபடி மறுபடி தொந்த்ரவு பண்றீங்க?'

'இதை தொந்தரவுன்னு ஏன் நினைக்கிறீங்க?. சென்னை ரொம்ப நல்லா டெவலப் ஆகணும், உலகத்தரத்துக்கு உயரணும்னு சும்மா வாயாலே சொல்லிக்கிட்டு இருந்தா மட்டும் போதாது. அதுக்கு எல்லோருடைய கோ-ஆப்ரேஷனும் வேணும். நான் இந்த இடத்துல கட்டப்போற 'ஷாப்பிங் மால்' ப்ராஜக்ட் மட்டும் முடிஞ்சிடுச்சுன்னா, இந்த இடத்தோட வெல்ல்யூ எங்கோ போயிடும். என்ன சொல்றீங்க?'

'இருக்க்லாம்மா, ஆனா நாங்க இந்த இடத்துல அஞ்சு வருஷத்துக்கு மேலே குடியிருக்கிறோம். அதோட இது எனக்கு ரொம்ப ராசியான இடம். இங்கு வந்தபிறகுதான் எனக்கு பையன் பிறந்தான்'.

'ஓ... ப்ளடி செண்டிமெண்ட்ஸ். இப்படியே பேசிக்கிட்டு இருந்தா எப்போ டெவலப் ஆகப்போறீங்க?. இப்போ முடிவா என்ன சொல்றீங்க?. நீங்க உங்க இடத்தை எனக்கு விற்க முடியாது. அப்படித்தானே..?' ஓ கே'.

மேனகா புறப்பட்டுப்போகிறாள்....

மகன் கைலாஷை பள்ளியில் சேர்க்க அழைத்துப்போகிறாள் உஷா. முன்னதாக வீட்டைவிட்டுப்புறப்படுமுன் உஷாவின் அம்மா, அவனை பூஜை அறைக்கு அழைத்துச்சென்று சாமி கும்பிட வைக்கிறாள். அவள் அப்பா அப்ளிகேஷன்களை பூர்த்தி செய்து கொண்டு வந்து தர, தொல்காப்பியனுடன் போகிறாள் உஷா.

ஏற்கெனவே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருந்த பள்ளிக்குப்போக, அங்கு பள்ளியின் பிரின்ஸிபால் மேடம், விண்ணப்ப படிவத்தைப்பார்வையிட்டு, அதில் இரண்டு இடங்கள் பூர்த்தி செய்யாதிருப்பதைச் சுட்டிக்காட்ட, அதை வாங்கிப்பர்ர்க்கும் உஷா, பூர்த்திசெய்து தரப்போகிறாள் என்று பார்த்தால், அவையிரண்டையும் அடித்துவிட்டு பிரின்ஸியிடம் தர அவள் ஆச்சரியமடைகிறாள். உஷா அடித்துக்கொடுத்தது ஒன்று பையனின் ஜாதி, இன்னொன்று பையனின் தந்தை பெயர்.

'இதோ பருங்க, பையனின் ஜாதி பற்றிக்குறிப்பிடாவிட்டாலும் கூட பரவாயில்லை. ஆனால் அவன் அப்பா பெயர் எழுதாமல் இருந்தால் எப்படி. இங்கு படிக்க வரும் பிள்ளைகளின் அப்பா பெயர, அவரது தொழில், அவரது பொருளாதார வசதி இப்படி எல்லா விவரங்களும் குறிப்பிடப்பட வேண்டும். அவங்க ஒழுங்காக ஃபீஸ் கட்டுவாங்களா என்று எங்களுக்கு தெரியணுமில்லையா?'

'மேடம், நீங்க சொன்னதில் அவன் அப்பா பெயர் தவிர மற்ற எல்லாத்துக்கும் நான்தான் பொறுப்பு. நான்தான் அவனைப் படிக்க வைக்கிறேன். அவனுக்கு நான்தான் ஃபீஸ் கட்டப்போறேன். அப்புறம் அவனுடைய அப்பா பற்றிய விவரங்கள் எதுக்கு?'

இந்த ரீதியில், உஷாவுக்கும் பிரின்ஸிபாலுக்கும் வாக்குவாதம் முற்ற, தாங்கள் எதிர்பார்க்கும் விவரங்களைத்தராவிட்டால் அட்மிஷன் இல்லையென்று பிரின்ஸி சொல்ல, ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன் தொல்காப்பியன், 'உஷா, இத்தனை வாதங்களுக்குப்பிறகு அவர்கள் சீட் தந்தாலும் அவன் இங்கே நிம்மதியாகப் படிக்க முடியாது. வாங்க வேறு பள்ளியைப்பார்க்கலாம்'.

வேறொரு பள்ளியில், இதே மாதிரி வாக்குவாதங்கள் நடந்தபோதிலும் உஷா சொன்ன விவரங்களில் அரைகுறையாக திருப்தியடைந்த அந்தப்பள்ளியின் பிரின்ஸிபால் மேடம் 'சீட்' தர சம்மதிக்கிறார்.

வெளியில் வரும்போது, 'ஏன் உஷா பையனின் அப்பா பெயர் என்ற இடத்தில் ஆதித்யா என்ர பெயரைப்போட்டிருந்தால் விஷயம் இவ்வளவு பெரிசாகியிருக்காது. நாம் சேர்க்க விரும்பிய முதல் பள்ளியிலேயே இடம் கிடைத்திருக்கும்.'

'இல்லை தொல்ஸ், இது இதோடு போகாது. இனி எல்லா ரிக்கார்ட்ஸிலும் கைலாஷ், சன் ஆஃப் ஆதித்யா என்றே வரத்துவங்கும். அதில் எனக்கு விருப்பமில்லை. ஆதியின் நிழல்கூட இவன்மீது படக்கூடாதுன்னு நினைக்கிறேன்'.

பேசிக்கொண்டிருக்கும்போது திடீர்னு எங்கே கைலாஷைக்காணோமென்று தேட, ஒரு வேளை கிரி கடத்திட்டானோ என்று நினைக்கும் நேரம், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அங்கே நிற்கும் இன்னொரு பையனிடம் போய் போய், 'டேய் உன் வாட்டர் பாடிலைக்கொடு' என்று பிடுங்க அவன் தரமாட்டேன் என்று மறுக்க, 'தரலைன்னா உன்னைக் கொன்னுடுவேன்' என்று கைலாஷ் சொல்வதைக்கேட்டு உஷாவும் தொல்ஸும் திடுக்கிடுகின்றனர். அவனிடம் போய், 'உனக்கு வேறு பாட்டில் வாங்கித்தர்ரேன். அதைக்கேட்காதே என்று உஷா சொல்ல, அவனோ அந்த பாட்டில்தான் வேண்டுமென்று அடம் பிடிக்க, உஷா அவனை அடிக்க, தொல்ஸ் தடுக்கிறான். 'பார்த்தீங்களா தொல்ஸ், திமிரும் பிடிவாதமும் அப்படியே அவன் அப்பனைப்போலவே இருக்கிறான் என்று அவள் சொல்லும்போது அவள் மனதில் ஆதியின் குரூர முகம் சட்டென வந்துபோகிறது.

திருச்செல்வம் இதுக்கு முன்னால் 'ஜவ்வு மிட்டாய்' வியாபாரம் செய்துகொண்டிருந்தார் என்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரியத் துவங்குகிறது. பின்னே, ஒரு பையனை பள்ளியில் சேர்க்க இவ்வளவு இழுவையா..?.

aanaa
9th December 2008, 08:42 PM
திருச்செல்வம் இதுக்கு முன்னால் 'ஜவ்வு மிட்டாய்' வியாபாரம் செய்துகொண்டிருந்தார் என்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரியத் துவங்குகிறது. பின்னே, ஒரு பையனை பள்ளியில் சேர்க்க இவ்வளவு இழுவையா..?.

:hammer: :hammer:


:ty: Saradhaa

gta129
10th December 2008, 03:13 AM
Thanks for the update.

saradhaa_sn
10th December 2008, 01:50 PM
அடுத்தமுறை தொல்காப்பியன் (திருச்செல்வம்) திரையில் வரும்போது கவனித்துப்பார்க்க வேண்டும், எந்த அளவுக்கு தலையில் வீக்கம் இருக்கிறதென்று. :shock:

ஏனென்றால் அந்த அளவுக்கு 'ஆனா'விடம் சுத்தியல் அடி வாங்கியிருக்கிறார். :lol:

Madhu Sree
10th December 2008, 01:51 PM
:roll: :rotfl2:

saradhaa_sn
10th December 2008, 02:41 PM
தான் வாங்கியிருக்கும் ஃப்ளாட் ஏரியாவுக்கு தன் படைகளுடன் மீண்டும் வருகிறாள் மேனகா. இம்முறையும் ஆதியும் கிரியும் கூடவே வருகின்றனர் (வேறு காரில்தான்).

தங்கள் ஃப்ளாட்டைத்தர மறுத்த ஓனர்களை மீண்டும் சந்தித்துப்பேசுகிறாள். அவர்கள் தங்கள் முடிவில் பிடிவாதமாக இருக்கின்றனர் (அதாவது ஃப்ளாட்டை மேனகாவிடம் விற்பதில்லையென்ற முடிவில்). அவர்களுக்கும் ஆதித்யாவுக்கும் பேச்சு வார்த்தை முற்ற, ஆதி அவர்கள் மேல் பாய, நிலைமை மோசமாவதைக் கவனிக்கும் மேனகா, ஆதியை அடக்கி விட்டு, அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறாள் (????????). என்ன செய்வது, காரியம் நடக்கனுமே.

ஆனால் அவர்கள் இதனாலெல்லாம் சமாதானம் அடையவில்லை. 'ஏம்மா, நாங்க எங்க ஃப்ளாட்டுக்களை விற்கத்தயாராயில்லைன்னு எத்தனை தடவை சொல்றது?. இல்லேன்னு சொன்னா போக வேண்டியதுதானே, எதுக்கு வீணா வம்பு பண்றீங்க?'.

'நீங்க தரமாட்டேன்னா, நான் வாங்கிய இடங்களை வைத்து எப்படி என் ப்ராஜக்டைத் ஆரம்பிக்கிறது?'

'அது உங்க தலைவலி. எங்களைக்கேட்டுக்கிட்டா மத்த ஃப்ளாட்டுக்களை வாங்கினீங்க?. சும்மா சும்மா வந்து தொந்தரவு பண்ணாம வேறு வேலையிருந்தா போய்ப் பாருங்கம்மா'.

'ஆக, எனக்கு உங்க ஃப்ளாட்டை விற்பதில்லைங்கிற முடிவில் உறுதியா இருக்கீங்க. சரி, பார்க்கலாம். ஆதி வாங்க போகலாம்'.

தெரிஞ்சுபோச்சு, மேனகா ஏதோ ஒரு முடிவு பண்ணிவிட்டாள். இனி அந்த ஃப்ளாட் ஓனர்கள் என்ன அவதிக்கு ஆளாகப்போகிறார்கள் என்பது மூணாவது செக்மெண்ட்டில் தெரிய வருகிறது..

அபியின் வீடு....

அனந்திக்கு டாக்டரும், கார்த்திக்கும் சேர்ந்து, கைத்தடி உதவியில்லாமல் நடக்க வைக்க முயலுகின்றனர். லேசான வலியிருப்பினும் பொறுத்துக்கொண்டு நடக்கிறாள். இன்னும் கொஞ்சம் பழகினால் சரியாகிவிடுமென்றும், நாளை ஆஸ்பத்திரியில் வந்து ஒரு ஸ்கேன் எடுத்துக் கொள்ளும்படியும் டாக்டர் சொல்கிறார்.

டாக்டர் போனதும் தன் மகள், பேத்தியுடம் வள்ளி வருகிறாள். (யாரிந்த வள்ளி, அபியின் குடும்பம் சைதாப்பேட்டை வீட்டில் இருந்தபோது பக்கத்தில் இட்லி சுட்டு விற்றுக்கொண்டிருந்த ஆயா. ரொம்ப வருஷங்களுக்குப்பிறகு வந்திருக்கிறாள். வழக்கம்போல அவள் எப்படி இருக்கா, இவன் எப்படி இருக்கான் என்ற விசாரிப்புகள். ஆர்த்தி கல்யாணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் போனது பற்றியும், மனோவுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருப்பதையும் கற்பகம் சொல்கிறாள்.

தன் மகளின் கணவன், அவளைக்கொடுமைப்படுத்துவதாகவும், தினமும் குடித்துவிட்டு வந்து அவளைப்போட்டு அடிப்பதாகவும் அதனால் மகளையும் பேத்தியையும் அழைத்து வந்து விட்டதாகவும் வள்ளி சொல்கிறாள். உடனே ஆனந்தியின் கல்யாணம் பற்றி கேட்கும் அவள், என்னதான் இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு கல்யாணம் ஆனால்தான் நல்லது என்கிறாள். சில வினாடிகளுக்குள் இருவேறுபட்ட கருத்துக்கள்.

மேனகா வாங்கியிருக்கும் ஃப்ளாட்களுக்கு, ஆட்டோக்களில் ஏராளமான ரவுடிகள் வந்து இறங்கி, அவளால் இதுவரை வாங்கப்பட்டிருக்கும் ஃப்ளாட்டுகளில் சிலவற்றில் குடியேறுகின்றனர். குறிப்பாக, இடங்களை விற்க மறுத்தவர்களின் ஃப்ளாட்டுகளுக்கு எதிர் ஃப்ளாட் அல்லது பக்கத்து ஃப்ளாட் களில் குடியேறி, ஸ்டீரியோவை சத்தமாக வைத்துக்கொண்டு ஒரே ஆட்டமும் பாட்டுமாக அவர்களுக்கு இடைஞ்சல் செய்கின்றனர். அவர்கள் வீட்டுப்பெண்கள் போகும்போதும் வரும்போதும் பின்னாலேயே போகின்றனர். அவர்கள் மீது கைவைக்காதவரையில், அந்த ரவுடிகளை ஃப்ளாட் ஓனர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரவுடிகள் இவர்களின் எல்லையைத்தாண்டாமல், ஆனால் பழைய ஓனர்களுக்கு அச்சத்தைக்கிளப்பும் வகையில் செயல்படுவதால் அவர்கள் எந்த புகாரும் கொடுக்க முடியவில்லை. பொறுத்துப்பொறுத்துப் பார்த்தவர்கள், கடைசியாக மேனகாவையே நேரில் போய் சந்திக்கிறார்கள்... அவளோ படு கூலாக...

'யார் நீங்களெல்லாம்?'

'என்ன மேடம், எங்களை தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா?'

'சரி இப்போ எதுக்கு வந்தீங்க?'

'நீங்க குடி வச்ச ஆளுங்களால் எங்களுக்கு தொல்லைகள் தாங்க முடியவில்லை. அதான் எச்சரிக்க வந்தோம்'

'சரி என்ன செஞ்சாங்க?. உங்க வீட்டுப் பொண்ணுங்களிடம் தவறாக நடந்தாங்களா? இல்லே உங்க மனைவிகளை கையைப்பிடிச்சு இழுத்தாங்களா?. இல்லையே... அவங்க பாட்டுக்கு அவங்க ஃப்ளாட்டுகள்ளதானே இருக்காங்க?'

'இருந்தாலும் அவங்களை நீங்க உடனடியா காலி பண்ணனும். வீட்டுல அமைதியா ஒரு பூஜை பண்ன முடியலை, ஒரு சங்கீதம் கேட்க முடியலை'

'என்ன சொல்றீங்க?. இப்போதான் குடி வந்திருக்காங்க. அதுக்குள்ள எப்படி காலி பண்ண சொல்ல முடியும்?. அதுகு என்ன காரணம் சொல்வீங்க?'

'அவங்களை நீங்க குடி வெச்சது சரியில்லை. அவங்க அங்கே இருக்கக்கூடாது'

'என் ஃப்ளாட்ல யாரை குடி வைக்கணும், யாரை வைக்கக்கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு?'

'நீங்க இப்படி பிடிவாதமா பேசினா, நாங்க போலீஸுக்குப் போவோம்'.

'போங்க, உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்குங்க".

aanaa
10th December 2008, 09:44 PM
ஏனென்றால் அந்த அளவுக்கு 'ஆனா'விடம் சுத்தியல் அடி வாங்கியிருக்கிறார். :lol:

:lol:

aanaa
10th December 2008, 09:49 PM
தெரிஞ்சுபோச்சு, மேனகா ஏதோ ஒரு முடிவு பண்ணிவிட்டாள். இனி அந்த ஃப்ளாட் ஓனர்கள் என்ன அவதிக்கு ஆளாகப்போகிறார்கள் என்பது மூணாவது செக்மெண்ட்டில் தெரிய வருகிறது..
.
:ty:

இவ்வளவு விரைவாகவா?

2/3 கிழமைக்குப்பின் என்றல்லவா ..

mmmm

saradhaa_sn
11th December 2008, 11:04 AM
தெரிஞ்சுபோச்சு, மேனகா ஏதோ ஒரு முடிவு பண்ணிவிட்டாள். இனி அந்த ஃப்ளாட் ஓனர்கள் என்ன அவதிக்கு ஆளாகப்போகிறார்கள் என்பது மூணாவது செக்மெண்ட்டில் தெரிய வருகிறது..
.
:ty:

இவ்வளவு விரைவாகவா?

2/3 கிழமைக்குப்பின் என்றல்லவா ..

mmmm
சில நேரங்களில் நாம் எதிர்பாராதவை நடப்பதில்லையா, அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

திருவள்ளுவரே தன் கைப்பட எழுதிய 'கம்பராமாயண'த்தில் கோவலனும் கண்ணகியும், துரியோதனனின் சூழ்ச்சியால் கடல் கடந்து போக நேரும்போது... 'நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்' என்று எழுதி வைத்திருக்கிறாரே.

saradhaa_sn
11th December 2008, 12:54 PM
கம்பெனி அக்கவுண்ட்ஸ் ஃபைலைப்பார்த்துக்கொண்டிருக்கும் அபியின் கவனம், அதிலுள்ள ஒரு எண்ட்ரியில் நிலைக்கிறது. சஸ்பென்ஸ் அக்கவுண்ட்டில் கம்பெனி பணம் பதினைந்து லட்ச ரூபாய் வழங்கப் பட்டிருப்பதைப் பார்த்து சற்றே அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்து, கிருஷ்ணனை அழைத்துக்கேட்கிறாள்.

'கிருஷ்ணன், நம்ம கம்பெனி அக்கவுண்ட்ல பதினைந்து லட்ச ரூபாய் யாருக்கோ கொடுக்கப்பட்டிருக்கிறதே, அது என்ன?'

'அது நாலைந்து மாசமாவே சஸ்பென்ஸ் அக்கவுண்ட்ல இருக்குதும்மா'

'அதான் ஏன்னு கேட்கிறேன்'

'அது வந்து... வந்து.... நம்ம ஆர்த்தி மேடம் வாங்கியிருக்காங்க'.

'ஆர்த்தியா?. அவளுக்கு எதுக்கு இவ்வளவு பணம்?. சரி அப்படியே அவள் வாங்கியிருந்தாலும் நீங்க ஏன் என்கிட்டே சொல்லலை?'

'அது வந்தும்மா... சொல்லணும்னுதான் நெனச்சேன். ஆனாலும் அவங்க உங்க சிஸ்ட்டர். அதனாலே அவங்களே சொல்லுடுவாங்கன்னு நெனச்சு, நான் சொல்லலை'

'சரி, நீங்க போய் உங்க வேலையைப்பாருங்க'

சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் அபி, ஆர்த்தியை அழைத்துக்கேட்கவில்லை. மாறாக பெரிய யோசனையில் ஈடுபட்டிருக்கிறாள்.

'ஆர்த்தி ட்ராவல்ஸ்' அலுவலகம்....

'வா ஆர்த்தி, இதுதான் நம்ம ட்ராவல்ஸ் ஆஃபீஸ். பார்த்துக்கோ'

'என்ன ராஜேஷ், அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்ல வேலைகள் அதிகமா இருந்ததாலே கொஞ்ச நாளா இங்கே வர முடியலை. அதுக்காக இப்படி கிண்டல் பண்றீங்களே'.

அப்போது சிவசு, 'வாங்க மேடம், எப்படி இருக்கீங்க?'

'அதிருக்கட்டும் சிவசு, ட்ராவல்ஸ் எல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு'.

'அதுகென்னம்மா, ஜோரா போய்க்கிட்டிருக்கு. நாம நெனச்ச மாதிரியே டேங்கர் லாரி நல்லா ஓடிக்கிட்டிருக்கு'.

அப்போது சிவசுவின் தங்கை, 'மேடம், டேங்கர் லாரி அக்கவுண்ட்ஸ் எல்லாம் தனியாக இந்த நோட்ல மெயிண்ட்டெயின் பண்ணிக்கிட்டு வர்ரேன். இந்தாங்க பாருங்க'.

அக்கவுண்ட்ஸைப்புரட்டிப்பார்க்கும் ஆர்த்தி, 'பரவாயில்லையே, டேங்கர் லாரி வாங்கியதில் இருந்து ஒருநாள்கூட நிற்காமல் ஓடிக்கிட்டிருக்கே'.

சிவசு, 'என்ன மேடம், இவ்வளவு பணம் போட்டு சும்மா நிறுத்தி வைக்கிறதுக்கா லாரி வாம்க்கியிருக்கோம்?'.

'இப்படியே தொடர்ந்து ஓடிக்கிட்டு இருந்தால் கூடிய சீகிரமே லோன் எல்லாம் அடைச்சிடலாம்'

'லோனை அடைக்கிறது மட்டுமில்லே மேடம், இன்னொரு லாரியும் வாங்கி விட்டுடலாம்'.

அபோது ஒரு சிறிய போலீஸ் படை உள்ளே நுழைகிறது.

'இங்கே ராஜேஷ்ங்கிறது யாரு?'

'நான்தான் சார்'.

டேங்கர்லாரி நம்பரைச்சொல்லி, 'இது உங்க வண்டிதானே?'

'ஆமா சார், என்ன விஷயம்'.

'டேங்கர் லாரியில் கள்ளச்சாராயம் கடத்தின குற்றத்துக்காக உங்களை அரெஸ்ட் பண்ணுறோம்'

ராஜேஷ், ஆர்த்தி இருவருக்கும் கடும் அதிர்ச்சி... 'இது எப்படி நடந்தது?' என்று. சிவசுவுக்கும் அதிர்ச்சி 'இவ்வளவு சீக்கிரம் மாட்டிக்கிட்டோமே' என்று.

'என்ன சார் சொல்றீங்க?. நாங்க இதுவரை பெட்ரோல் மட்டும்தான் லோடு பண்ணிப்போயிட்டிருக்கோம். என்ன சிவசு இதெல்லாம்?'

'என்ன ராஜேஷ் என்னைக்கேட்கிறீங்க?. எனக்கென்ன தெரியும்?. நான் உங்க கிட்டே வேலை செய்ற மேனேஜர் மட்டும்தான். மத்தபடி என்ன லோடாகுது, எங்கே போகுதுங்கிறதெல்லாம் உங்களுக்குத்தானே தெரியும்?'

'அடப்பாவி, உன்னை நம்பித்தானே ஒப்படைச்சேன்'.

அப்போது ஆர்த்தி, 'சார், ராஜேஷ் அப்படியெல்லாம் செய்யக்கூடியவர் இல்லே, இதுல ஏதோ தவறு நடந்திருக்கு. அவர் நிரபராதி. அவரை விட்டுடுங்க'.

'நீங்க யாரும்மா?'

'நான் ராஜேஷின் மனைவி, அதோடு நான் அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பார்ட்னர்'.

'என்ன மூணு பேரும் சேர்ந்து நாடகம் ஆடுறீங்களா?. நீங்க யாராயிருந்தாலும் எனக்கு கவலையில்லை. எங்க கடமையைச்செய்ய விடுங்க. கான்ஸ்ட்டபிள்ஸ், இவங்க ரெண்டு பேரையும் ஜீப்பில ஏத்துங்க'.

'சார், அவர் நிரபராதி, அவருக்கு ஒண்ணும் தெரியாது. அவரை விட்டுடுங்க'

ஊகும்.... ஆர்த்தியின் கூச்சல் எதுவும் பலிக்கவில்லை. ராஜேஷையும், சிவசுவையும் போலீஸ் அள்ளிக்கொண்டு போய் விட்டது...

saradhaa_sn
11th December 2008, 01:11 PM
காவல் நிலையம்....

ஏற்கெனவே அவர்களின் டேங்கர் லாரி டிரைவர் லாக்கப்பில் இருக்கிறான்.

ராஜேஷ் இன்ஸ்பெக்டரிடம், 'சார் இது அபாண்டமான பழி, எங்களுக்கு ஒண்ணும் தெரியாது. யாரோ உங்களுக்கு தவறான தகவல் தந்திருக்காங்க'.

'யோவ், நாங்களே சோதனை போட்டு கையும் களவுமா பிடிச்சிருக்கோம்'.

'ஏன் சார், எங்க வண்டி நம்பரைப்போட்டு வேறு யாராவது இதைச் செய்திருக்கலாமில்லையா?'

அப்போது ட்ரைவர், 'முதலாளி, இவங்க பிடிச்சது நம்ம லாரிதான்'.

'பார்த்தியா உன் டிரைவரே ஒப்புக்கொண்டான். இவங்க ரென்டுபேரையும் சேர்த்து லாக்கப்புல வைங்கய்யா'.

அப்போது ஆர்த்தி, 'சார், இதை நான் அனுமதிக்க முடியாது. நீங்க பண்றது அராஜகம்'.

'இங்க பாரும்மா, மேற்கொண்டு எதுவா இருந்தாலும் கோர்ட்டில வந்து பேசிக்க. இனிமேலும் நீ இங்கே நின்னு இந்த மாதிரி பேசிக்கிட்டு இருந்தா உன் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். கெட் அவுட்'.

அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் அலுவலகம்....

டிஜிட்டல் வேல்லி ப்ராஜக்ட் விஷயமா சைட்டைப்பார்வையிட முக்கியஸ்தர்கள் வந்திருக்க, அவர்களுடன் அபி பேசிக்கொண்டிருக்கிறாள்.

'பெங்களூர் போற ரோட்டில நாலைந்து இடம் பார்த்து வச்சிருக்கேன். அதுல பொருத்தமான ஒண்ணுதான் நாம முடிவு பண்ணனும். இன்னொரு இடம்கூட பார்த்துக்கிட்டிருக்கேன். கொஞ்சம் அவகாசம் கொடுத்தா அதையும் ரெடி பண்ணிடலாம்'.

'இல்லே மேடம், இப்பவே மேலேயிருந்து ரொம்ப பிரஷர் கொடுக்கிறாங்க. அதனால இதுவரை ரெடியாயிருக்கிற சைட்ஸ நாம பார்த்து அதுல ஒண்ணு ஃபைனலைஸ் பண்ணுவோம். வாங்க இப்பவே போகலாம்'.

அவர்களோடு அபி வெளியாகும் நேரம், ஆர்த்தி ஓடி வந்து, 'அக்கா ஒரு நிமிஷம் உள்ளே வாயேன்' என்று அழைத்துப்போகிறாள்.

'என்ன ஆர்த்தி?'

'அக்கா, ராஜேஷை போலீஸ்ல பிடிச்சிகிட்டுப் போயிட்டாங்க'.

'என்னது போலீஸா?. எதுக்கு?'

'எங்களுடைய டேங்கர் லாரியில சாராயம் கடத்தினதாக அரெஸ்ட் பண்ணிட்டுப் போயிட்டாங்க'.

'உங்களுடைய டேங்கர் லாரியா? எப்போ வாங்கினீங்க?. என்கிட்டே சொல்லவேயில்லையே'.

'அதிருக்கட்டும்க்கா, இப்ப உடனே என்னோடு ஸ்டேஷனுக்கு வா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு'.

'இப்பவேவா, ஆர்த்தி ஒரு முக்கியமான விஷயமா சில வி.ஐ.பி.க்களோடு சைட் விசிட் போயிட்டிருக்கேன். நீ வீட்டுக்குப்போ. நான் போன்ல ஏற்பாடு பண்றேன்'.

'இல்லக்கா நீ இப்பவே வா அக்கா'.

'ஆர்த்தி என்ன இது? நான்தான் என் சூழ்நிலையை சொல்லிட்டேன்ல?. அப்புறம் ஏன் பிடிவாதம் பண்றே?. நான் போன்ல பேசி ஏற்பாடு செய்றேன். நீ பயப்படாமல் போ'.

அபி போய்விட்டாள். ஆர்த்தி முகத்தில் ஏமாற்றம்.

ஆனால் ஆஃபீஸுக்கு வெளியில் வரும் அபி, காரில் ஏறுமுன்னர் விஸ்வநாதனுக்கு போன் செய்து, விவரத்தைச்சொல்லி, சாலிக்கிராமம் போலீஸ் ஸ்டேஷக்குப்போகும்படி சொல்ல அவரும் ஒப்புக்கொள்கிறார். ஆனால் அபியின் இந்த ஏற்பாடு ஆர்த்திக்கு தெரியாது. அநேகமாக அவள் உதவி தேடி 'ஆதியண்ணா'விடம் போகக்கூடும். (ஒரு யூகம்தான்... கற்பனைக்கென்ன காசா பணமா).

sudha india
11th December 2008, 04:42 PM
EXACTLY...... I also think she will approach Aadhi.

Saradha... super write up. Thank you.

saradhaa_sn
11th December 2008, 07:04 PM
EXACTLY...... I also think she will approach Aadhi.
Saradha... super write up. Thank you.
நன்றி சுதா....

'ஆதியண்ணா'வுக்கும் ஆர்த்திக்கும்தான் TERMS ரொம்ப நல்லா இருக்கே, அதை வைத்துத்தான் ஒரு யூகம் வருகிறது.

(ஏன் எப்போவாவது வர்ரீங்க?. அடிக்கடி தலையைக்காட்டுங்க)

sudha india
11th December 2008, 07:21 PM
Dhinamum varen. Unga post padikkaren (seriala pakkaren thro your post)

Sari inime oru post udane podaren.

aanaa
11th December 2008, 07:41 PM
திருவள்ளுவரே தன் கைப்பட எழுதிய 'கம்பராமாயண'த்தில் கோவலனும் கண்ணகியும், துரியோதனனின் சூழ்ச்சியால் கடல் கடந்து போக நேரும்போது... 'நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்' என்று எழுதி வைத்திருக்கிறாரே.

:exactly:

aanaa
11th December 2008, 07:43 PM
(ஒரு யூகம்தான்... கற்பனைக்கென்ன காசா பணமா).

:ty:

:2thumbsup:

saradhaa_sn
12th December 2008, 12:49 PM
நாம் நினைத்த மாதிரியே ஆர்த்தி உதவி வேண்டி 'ஆதியண்ணா'விடம்தான் போகிறாள்...

அவள் சென்ற நேரம், ஆதித்யா மிக முக்கியமான் ஒரு மீட்டிங்கில் இருப்பதாகவும், ஒரு மணிநேரத்துக்கு யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாதென்றும் ஒரு மணி நேரத்துக்கு எந்த போன்கால்களையும் அவருக்கு மற்றக்கூடாதென்றும் எம்.டி. (ஆதி) சொல்லியிருப்பதாக, ரிஸப்ஷனிஸ்ட் சொல்ல, ஆர்த்தி தவிக்கிறாள். ஆதியின் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்ப்பட்டிருக்கிறது. இதுபோக இன்னும் சில முக்கியமான பிஸின்ஸ்மேன்கள் ஆதியைப்பார்ப்பதற்காக ரிஸப்ஷனில் காத்திருக்கிறார்கள்.

திடீரென மீட்டிங் அறையிலிருந்து வரும் ஆதி, ரிஸப்ஷனிஸ்ட்டை நோக்கி கோபத்துடன், "அந்த அக்ரிமெண்ட் ஃபைல் கேட்டேனே, என்ன ஆச்சு?. கிரி என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்" என்று சத்தம் போட்டுக்கொண்டு வரும்போது...

'அண்ணா'

'என்ன ஆர்த்தி திடீர்னு வந்திருக்கே, என்ன விஷயம்'

'ஒரு பெரிய பிரச்சினை அண்ணா, உங்ககிட்டே உதவிக்காக வந்திருக்கேன்'.

'என்ன ஆச்சு சொல்லு'.

'ராஜேஷை போலீஸில் பிடிச்சிகிட்டுப் போயிட்டாங்க'.

'அப்படியா, எதுக்காக?'

'டேங்கர் லாரியில் சாராயம் கடத்தினதா சொல்றாங்க. ஆனா அவருக்கு அது பத்தி எதுமே தெரியாது அண்ணா. நீங்க கொஞ்சம் உடனே வந்தா தேவலைண்ணா'.

'என்ன ஆர்த்தி, உனக்காக இதுகூட செய்ய மாட்டேனா?. இதோ உடனே வரேன்' என்றவன் ரிஸப்ஷனிஸ்ட் பக்கம் திரும்பி, 'மீட்டிங்கை ஒருமணிநேரம் நிறுத்தி வைக்கச்சொல்லு. இதோ வந்திடுறேன்'.

'சார் நீங்க முக்கியமான அக்ரிமெண்ட்ல கையெழுத்துப்போடணும்ங்கிறதுக்காக இவங்கள்ளாம் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க'.

'ஸாரி சார், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ஜஸ்ட் ஒரு மணிநேரத்துல வர்ரேன்'.

'பரவாயில்லை, போயிட்டு வாங்க மிஸ்ட்டர் ஆதி'.

ஆதியண்ணா எந்த மாதிரி சூழ்நிலையில் உதவிக்கு வருகிறான் என்று நினைத்து ஆர்த்தி உருகிப்போகிறாள்.

'சரி ஆர்த்தி, ராஜேஷை எந்த ஸ்டேஷன்ல வச்சிருக்காங்க?. எஃப்.ஐ.ஆர்.போட்டுட்டாங்களா?'

'அதெல்லாம் தெரியலைண்ணா. சாலிக்கிராமம் ஸ்டேஷன்ல வச்சிருக்காங்க'.

'அட அந்த இன்ஸ்பெக்டர் எனக்கு தெரிஞ்சவர்தான். ஒண்ணும் பயப்படாதே'.

போலீஸ் ஸ்டேஷன்....

'என்ன இன்ஸ்பெக்டர், என்ன நடக்குது இங்கே?'

'சார் நீங்களா?. வாங்க சார்'.

'அதெல்லாம் இருக்கட்டும். எதுக்காக இவரை உள்ளே வச்சிருக்கீங்க?. உடனே அவரை ரிலீஸ் பண்ணுங்க'.

'சார், டேங்கர் லாரியில சாராயம் கடத்தியிருக்காங்க'.

'அதை ராஜேஷ்தான் பண்ணினார்னு எப்படி சொல்றீங்க?. ப்ரூஃப் இருக்கா?'

'அவர்தாங்க வண்டியோட ஓனர்'.

'சரி அவங்களை வெளியில கொண்டாங்க நான் கேட்கிறேன்'. மூவரும் லாக்கப்பிலிருந்து விடுவிக்கப்பட.....

சிவசுவிடம் ஆதி, 'ஏன்யா, நீதானே மேனேஜர். உனக்கு லாரியில என்ன சரக்கு லோடாகுதுன்னு தெரியாதா?'

'தெரியாது சார், எல்லாம் ராஜேஷுக்குத்தான் தெரியும்'.

அப்போது ஆர்த்தி, 'ஐயோ அண்ணா, இந்த பாவி பொய் சொல்றான். வண்டியோட முழு கண்ட்ரோலும் இவன்கிட்டேதான் ராஜேஷ் கொடுத்திருந்தாரு'.

'சரி, இன்ஸ்பெக்டர். நான் டிரைவர்கிட்டே தனியா பேசணும்'

டிரைவரை ஆதி வெளியே அழைத்துப்போய், 'இதோ பாரு, இந்த தப்பை நீதான் செஞ்சேன்னு ஒத்துக்கோ. அதிகமா போனா ஆறுமாசம் ஜெயிலில் வைப்பாங்க. அதுக்காக உனக்கு ஒரு லட்சம் ரூபாய் தர்ரேன். போதலைன்னா மேற்கொண்டு ஐம்பதாயிரம் தர்ரேன். நீதான் செஞ்சேன்னு ஒத்துக்கிட்டு உள்ளே போ. நீ ஜெயில்லே இருந்து வந்ததும் நானே உனக்கு ஒரு நல்ல வேலை ஏற்பாடு பண்ணித்தர்ரேன். எனா சொல்றே?'

சிறிதுநேர யோசனைக்குப்பின் டிரைவர் சம்மதிக்கிறான். உள்ளே வரும் ஆதி, 'இப்போ கேளுங்க இன்ஸ்பெக்டர்'.

'என்னய்யா சொல்றே?'.

'ஆமா சார், நான்தான் தப்பு பண்ணினேன். அவங்களுக்கு எதுவும் தெரியாது சார்'.

'பின்னே ஏண்டா, முதல்ல தெரியாதுன்னே?. கான்ஸ்டபிள், இவன்கிட்டே ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்குய்யா. சார், நீங்க இவங்களை அழைச்சிக்கிட்டு போகலால்ம்'.

சிவசுப்பார்த்து ஆதி, 'யூ ராஸ்கல், ஓடிப்போடா. இனிமேல் உன்னை இந்த ஊர்ல எங்காவது பார்த்தேன்னா ஷூட் பண்ணிடுவேன்'.

'உங்களுடைய பிஸி ஷெட்யூலுக்கு நடுவுல எனக்காக இவ்வளவு தூரம் வந்து உதவினதுக்கு ரொம்ப நன்றிண்ணா'.

'ஏய் ஆர்த்தி, என்ன நன்றியெல்லாம் சொல்லிக்கிட்டு?. இது என்னோட கடமை. சரி, எனக்கு முக்கியமான வேலைகள் இருக்கு நான் வரேன். இனிமேலாவது யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாதுன்னு தெரிஞ்சு நடங்க'.

ஆதி போனதும், ராஜேஷ் ஆர்த்தியிடம், 'என்ன ஆர்த்தி இது?. அபியண்ணி இவ்வளவு நன்றிகெட்டபங்களா இருப்பாங்கன்னு நினைக்கலை. சஷ்டியப்த பூர்த்தி விழா சமயத்துல கூட அந்த மனோ ஆதிகூட போய் சேர்ந்துக்கிட்டபோது நாம அபிக்கு துணையா அவங்க கூடத்தானே நின்னோம். ஆனா இந்த மாதிரி நேரத்துல உதவிக்கு வரமாட்டேன்னுட்டாங்களே'.

அப்போது காரில் அங்கு வந்திறங்கும் விஸ்வநாதன் பதட்டத்துடன், 'என்ன ஆர்த்தி என்ன ஆச்சு?. அபி போன்ல ஒண்ணும் விவரமா சொல்லலை. அதான் ஓடி வந்தேன். என்ன ஆச்சு?'

ஆர்த்தி கோபத்துடன் கையெடுத்துக்கும்பிட்டு, 'ரொம்ப நன்றி சார், ஒண்ணும் பிரச்சினையில்லை. இவர் மேலே தப்பு இல்லேன்னதும் விட்டுட்டாங்க. போய் உங்க அபி மேடத்துகிட்டே சொல்லுங்க'. விஸ்வநாதன் திகைத்து நிற்கிறார்.

saradhaa_sn
12th December 2008, 01:08 PM
பெரிய போலீஸ் அதிகாரியின் (அஸிஸ்டெண்ட் கமிஷனர்...?) அலுவலகம்.....
மேனகாவிடம் மோதிய பத்து ஃப்ளாட் ஓனர்களும் அவரிடம் வந்து முறையிடுகிறார்கள்.

'சார், எங்க ஃப்ளாட்டைத்தரமாட்டோம்னு மறுத்ததுக்காக எங்களுக்கு தொல்லை கொடுக்கிறாங்க. மோசமான ரவுடிகளை எங்க எதிர் ஃப்ளாட்கள்ள குடி வச்சு பெண்களை பயமுறுத்துறாங்க. சதா ஸ்டீரியோவை சத்தமாக வைத்துக்கொண்டு ஆட்டமும் பாட்டமுமாக எங்களை நிம்மதியா தூங்க விடமாட்டேன்கிறாங்க. போய் அவங்களிடம் சொன்னால் காலி பண்ண முடியாது. முடிஞ்சா போலீஸ்கிட்டே போய் கம்ப்ளைண்ட் பண்ணுங்கன்னு ரொம்ப அஸால்ட்டா பதில் சொல்றாங்க'.

'அப்படியா?. குடியிருப்பவர்களுக்கு தொல்லை தருவதுபோல நடப்பது ரொம்ப மோசமான குற்றம். இதுக்கு பல செக்ஷன்களில் கேஸ் போடலாம். நீங்க ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிக்கொடுங்க'.

'இதோ எழுதியே கொண்டாந்திருக்கோம் சார்'.

'கொடுங்க, இது ஒண்ணு போதும் அவங்க மேல் நடவடிக்கை எடுக்க. இப்பவே போகலாம் வாங்க என்னோடு'.

அப்போது ஒரு போன் கால் வர, எடுத்துப்பேசுகிறார்...

'சரி சார்... எஸ் சார்.... ஓகே சார்.... நான் பார்த்துக்கிறேன் சார்..'

போனை வைத்துவிட்டு, அவர்களிடம் திரும்பி... 'ஆமா நீங்க இவ்வளவு நேரம் பேசினது மேனகா மேடத்தைப்பத்தி தானே. போங்கப்பா, போய் அவங்ககூட சமாதானமா போகப்பாருங்க. எதுக்கு வீணா பெரிய இடங்களைப் பகைச்சுக்கறீங்க. அவ்ங்க உங்களுக்கு இடைஞ்சல் கொடுத்தா இப்போ இருக்கிற இடத்தை விட்டு வேறு இடத்துக்குப்போங்க'.

குடித்தனக்கார்கள் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே வெளியேறுகின்றனர்.

அபியின் வீடு....

'அம்மா... அம்மா...' வீடே இரண்டுபடும்படியாகக் கத்திக்கொண்டு வரும் ஆர்த்தியைப்பர்த்து... 'என்னடி ஆச்சு? எதுக்கு இவ்வளவு கோபமா வர்ரே?' என்ற் கற்பகம் கேட்க....

'அக்கா வந்தாச்சா...?'

'யாரைக்கேட்கிறே? அபியையா ஆனந்தியையா..?'

'ஓ... அப்ப உனக்கு விஷயமே தெரியாதா?. உனக்கு கூட ஒரு போன் பண்ணிச்சொல்லணும்னு அபி மேடத்துக்கு தோணலையா?'

'என்னடி சொல்றே நீ?. ஒண்ணுமே புரியலை. என்ன ஆச்சு?'

'ராஜேஷை போலீஸ்ல பிடிச்சிக்கிட்டுப்போயிட்டாங்கன்னு அபி மேடத்துகிட்டே போய் சொன்னா, அவங்க அதைக்கண்டுக்காம அவங்க பிஸினஸ்தான் பெரிசுன்னு போயிட்டாங்க. தெரியுமா?'

'என்னது மாப்பிள்ளையை போலீஸ்ல கொண்டுபோயிட்டாங்களா.. ஏண்டி'.

'டேங்கர் லாரி விஷயமா ஒரு பிரச்சினைம்மா, அதுக்காகத்தான். உடனே போய் அக்கா கிட்டே சொன்னா அவங்க எந்த ரியாக்ஷனும் இல்லாமல் அவங்க பிஸினஸ்தான் பெரிசுன்னு போயிட்டாங்க. நான் எனக்கு 'வேண்டிய' ஒரு ஆள் மூலமா அவரை வெளியில் கொண்டு வந்திட்டேன்'.

'ஆர்த்தி, நீ அபி மேலே குற்றம் சொல்லாதே. அவளுடைய சூழ்நிலை எப்படியோ?'

'நீங்கள்ளாம் இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க. எனக்கு வந்த நிலைமை உங்களுக்கும் வந்தால் அப்போ தெரியும்'

வாசலில் அபி, 'என்ன தெரியணும் ஆர்த்தி?'

'வந்துட்டீங்களா?. உனக்கு கூடப்பிறந்தவங்கலோட பிரச்சினையை விட உன் டிஜிட்டல் வேல்லி பிஸின்ஸ்தானே பெரிசு?. அதுதானே முக்கியம்?.

(ஆர்த்தியின் நல்ல நேரம், ஆனந்தி அங்கேயில்லை. இருந்தால் அபியைவிட சூடாக பதில் கொடுத்திருப்பாள்).

'பைத்தியம் மாதிரி பேசாதே ஆர்த்தி. நான் விஸ்வநாதன் சாரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பிட்டு, அடிக்கடி அவருக்கு போன் பண்ணி கேடுக்கிட்டுத்தான் இருந்தேன்'.

'நிறுத்துக்கா, நடிச்சதெல்லாம் போதும் இனிமேலும் நம்ப நாங்க தயாராயில்லை. இனிமேல் உங்க ஒட்டும் வேணாம் உறவும் வேணாம். ஆளை விடு'.

ஆர்த்தி கோபத்துடன் வெளியேற, அபி திகைத்தபடி நிற்க கற்பகம் சாரதாவைப்பார்த்து... 'என்ன சாரதா இதெல்லாம்....' என்று ஆரம்பிக்கும் நேரம், சட்டென்று ரிமோட்டை எடுத்து சேனல் மாற்றினேன். (பின்னே...? நேரம் ஆச்சு, இதுக்குப்பிறகு எந்த முக்கியமான காட்சியும் வரப்போவதில்லை. அப்படியிருக்க கற்பகத்தின் புலம்பலைக்கேட்க வேண்டுமா?. தூங்கப்போகும் நேரத்தில் நமக்கேன் இந்த தண்டனை..?).

ஆர்த்தி என்னதான் ஆகா ஊகூ என்று தன் பக்கம் நியாயத்தைப்பேசினாலும், நமக்கு அவள் மேல் அனுதாபம் கொஞ்சமும் வரவில்லை. ஆர்த்தி என்றாலே நமக்கு 'தொல்காப்பியன் - பாண்டிச்சேரி - ஓட்டல் அறை - ஆர்த்தியின் துரோகம்' இவையெல்லாம் நினைவுக்கு வந்து... 'போடி, நீ ரொம்ப யோக்கியமோ?' என்ற எண்ணமே மேலோங்குகிறது.

sudha india
12th December 2008, 03:14 PM
... 'என்ன சாரதா இதெல்லாம்....' என்று ஆரம்பிக்கும் நேரம், சட்டென்று ரிமோட்டை எடுத்து சேனல் மாற்றினேன். (பின்னே...? நேரம் ஆச்சு, இதுக்குப்பிறகு எந்த முக்கியமான காட்சியும் வரப்போவதில்லை. அப்படியிருக்க கற்பகத்தின் புலம்பலைக்கேட்க வேண்டுமா?. தூங்கப்போகும் நேரத்தில் நமக்கேன் இந்த தண்டனை..?).

:lol: Andha Karpagam indha Saradhaa-vai parthu kettadhu pola irundhudha...... You are the greatest fan of Karpagam.. :lol:

ஆர்த்தி என்னதான் ஆகா ஊகூ என்று தன் பக்கம் நியாயத்தைப்பேசினாலும், நமக்கு அவள் மேல் அனுதாபம் கொஞ்சமும் வரவில்லை. ஆர்த்தி என்றாலே நமக்கு 'தொல்காப்பியன் - பாண்டிச்சேரி - ஓட்டல் அறை - ஆர்த்தியின் துரோகம்' இவையெல்லாம் நினைவுக்கு வந்து... 'போடி, நீ ரொம்ப யோக்கியமோ?' என்ற எண்ணமே மேலோங்குகிறது.

Exactly.

aanaa
13th December 2008, 01:51 AM
.'நிறுத்துக்கா, நடிச்சதெல்லாம் போதும் இனிமேலும் நம்ப நாங்க தயாராயில்லை. இனிமேல் உங்க ஒட்டும் வேணாம் உறவும் வேணாம். ஆளை விடு'.


:ty:

aanaa
13th December 2008, 10:37 PM
""ஆதி: இப்பதான் ஆரம்பம் ""என்கின்றான்

அப்படியானால் இன்னும் எத்தனை வருடங்கள்... :hammer: :hammer:

aanaa
14th December 2008, 02:22 AM
[tscii:b140355104]

ஆறு வருடங்கள் தொடர்ந்த கோலங்கள் சீரியல் வரும் மார்ச் மாதத்தில் முடிய இருக்கிறது. இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் அடுத்து பெரிய திரைக்கு வர இருக்கிறார். முற்றிலும் புது முகங்களைக் கொண்டு முற்றிலும், குடும்பச் செண்டிமெண்டை மையமாகக் கொண்ட படமாக இருக்கும் என்கிறார்.
பெரிய நிறுவனங்களின் தயாரிப்பு என்றால் சுதந்திரம் இருக்காது என்று கருவதால் தன் நண்பரை தயாரிப்பாளராக களமிறக்குகிறார். முதல் படமே ஆக்சன் படமாக அமைந்து அது ஓடாவிட்டால் இவனுக்கு சீரியல இயக்க மட்டும் தான் தெரியும் போல என்று முத்திரை விழுந்துவிடும். அதனால் கிளாசிக்கலாக ஒரு படமெடுத்து அது ஓடாவிட்டாலும் படம் நண்றாக இருக்கிற விஷயம் தெரிந்தவன் தான் என்று பெயர் வாங்கிக் கொடுத்தாலே போதும் என்கிறார் திருச்செல்வம்.


‘தொடர்’ந்து ஜெயிச்சுக்கிட்டே இருங்க பாஸ்!!
[/tscii:b140355104]

saradhaa_sn
14th December 2008, 02:24 PM
'ஆனா' அடிக்கடி சொல்வதுபோல, அடுத்த அஸைன்மெண்ட் கிடைக்கும் வரை 'கோலம்' போடலாம் என்று இருந்திருப்பார் (இழுத்திருப்பார்) போலும். இப்போது அடுத்த வாய்ப்பு, அதுவும் பெரிய திரையில் கிடைத்திருப்பதால், கோலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்.

அவர் இந்த சீரியலை முடிப்பது பெரிய விஷயமல்ல. ஆனால் இதில் அவர் போட்டிருக்கும் அத்தனை முடிச்சுகளையும் அவிழ்க்க வேண்டும். பெரும்பாலான சீரியல்கள் எந்த உருப்படியான தீர்வுமின்றி 'சப்'பென்று முடித்து விடுவார்கள். (பெரிய உதாரணம் சமீபத்தில் வந்த 'பொறந்த வீடா புகுந்த வீடா' தொடர்).

ஆனா; கோலங்கள் அப்படியல்ல... ஏகப்பட்ட முடிச்சுகள், மற்றும் சிக்கல்கள். அதை சரியானபடி கையாண்டு காலம் காலமாக பார்த்து வரும் ரசிகர்கள் திருப்தியடையுமாறு முடிக்க வேண்டும்.

இப்போது திருச்செல்வம் இன்னொரு சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார். 'கோலங்களை' சரியானபடி முடிக்காவிட்டால், அதன் எஃபெக்ட் அவர் எடுக்கப்போகும் திரைப்படத்தையும் பாதிக்கும் வாய்ப்பு உண்டு. (சரி, மிரட்டுவதாகத்தான் வச்சுக்குங்களேன்).

அது சரி, திரைப்படம் அநேகமாக 30 ரீல்களுக்கு மேல் இருக்குமா?. அப்படீன்னா ஒரு நாளைக்கு திரையரங்கில் ஒரு காட்சிதான் திரையிட முடியும். மூன்று இடைவேளைகள் தேவைப்படும்.

பார்ப்போம்....

இப்படியும் செய்தி வர வாய்ப்புண்டு....

"திருச்செல்வத்தின் திரைப்பட பிரவேசம் கொஞ்சம் தாமதமாவதால் 'கோலங்கள்' தொடரை மேலும் ஒராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளார்".

aanaa
14th December 2008, 08:39 PM
இப்போது திருச்செல்வம் இன்னொரு சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார். 'கோலங்களை' சரியானபடி முடிக்காவிட்டால், அதன் எஃபெக்ட் அவர் எடுக்கப்போகும் திரைப்படத்தையும் பாதிக்கும் வாய்ப்பு உண்டு. (சரி, மிரட்டுவதாகத்தான் வச்சுக்குங்களேன்).
".

:lol: :rotfl:

saradhaa_sn
16th December 2008, 02:02 PM
[tscii:c1b9406eba]FRIDAY

Even though Rajesh is become a businessman, the ‘Auto Driver’ inside him did not go entirely from him. So he is coming to Sivasu (alias Siva Subramaniyam) house in fully drunken condition and quarrelling with his sister about the cheat of her brother, by carrying arrack in his tanker lorry. Suddenly that girl knows the situation and the condition of Rajesh at that time, and she is predicting as she is supporting Rajesh and tells him there is no harm even if he kills her brother. (We can easily find out that she is acting). But this drunken Rajesh did not know about that, and believes that she is also hats her brother and supporting Rajesh.

In the meantime Sivasu comes home and seeing rajesh is there and his sister also supporting him and tells him to attack. He escapes from Rajesh by pushing him to the floor. Because of falling on the floor Rajesh feels more pain. That girl asking him to come with her to hospital for treatment, but Rajesh refuses and asks her to buy a brandy bottle for him, so that he can get relief from pain.

When going down to stairs, Sivasu is waiting there for her and he understood the ‘action’ of his sister to make him escape from Rajesh. He gives her a liquor bottle, which he was keeping for his own use. After drinking again, Rajesh goes out of his control and asks her to take him to his house. But that girl takes him to her bedroom and starts her cunning plan.

Sivasu meets Adhithya and tells him that everything is going as per Adhi’s plan. Adhi admires him and asking him where is Rajesh now. He replies, he is with his “sister” now. Adhi tells him, not to spell the word ‘sister’ and he know the bad relationship between them too (!?!?!?!?!?). Meantime he receives a phone call from Arthi, and telling him thanks again. But Adhi refuses it and tells her, it is his duty to save his sister when she is in trouble. Arthi melting like anything and tells him she hats her sis Abi and will not go her office hereafter. But Adhi is not accepting his decision and tells her to go office as usual, otherwise Abi will plan to send her out from the company permanently, and she will loose ger grip on Abi Constructions. He also asks her to act in front of Abi to get her sympathy and forget everything which Arthi talked cruelly with her.

Arthi accepts her beloved ‘Adhiyannaa’s’ advice and decides to go to office as usual. She also tells Adhi that Rajesh did not come home yet, and Adhi replies that he will take care of that, he will search and bring him within half an-hour to her home. Arthi fully falls in the net of Adhithya. Adhi tells Sivasu to send rajesh to his home. He also thanks to Inspector for his co-operation for this drama.

Giri as usual admires his boss for his brilliant actions against Abi… and Adhi tells him “this is the Start”. (After six years, now only he starts..?.)

(Just to beat one Abi, Adhithya is taking this much efforts…?. He is planning more wider than the terrorists, who attacked Mumbai).

MONDAY

Arthi is coming to office and sitting outside Abi’s cabin, so that Abi can watch her. Abi watches her when Arthi was seeing somewhere, but when Arthi sees Abi, she is reading some files. Krishnan asks Arthi, what is the problem, but she says nothing. He is coming inside Abi’s cabin and tells her Arthi is waiting there, but she replies she knows that and asks him to do his job.

At that time Arthi just walks some steps and falls down (just to attract the concentration of Abi). As she expected Abi runs out from her cabin and enquires her about what happened. One lady sraff gives water to Arthi, and after she get up, Abi takes Arthi to her cabin with more affection and asks her to sit there. Arthi tells ‘sorry’ to Abi and asks to forgive her for her rude talks that day, because she was in the situation to save Rajesh from Police. Abi tells her that she forgot everything on the same same day, but Arthi says she is not able to forget it, thatswhy she did not take any food for the past two days which is the reason for her tiredness and falling down outside the cabin.

Abi takes her food from the carrier and feeds Arthi with her hand and tells Arthi not to worry for anything and she is behind her for everything. (So Adhi’s plan 100% success).

The rowdies who where staying in the apartments are again giving trouble to fellow tenants by dancing with high pitch stereo songs. So they decided that no otherway except selling their apartments to Menaka and go to some other calm places. They meet her and tell their decision and ask her to give double the amount of market rate, as she demanded earlier. Adhithya and Giri also there. But now she refuses and tells ‘past is past’ they missed their opportunity given by her and now she cant give even a single paise more than market rate, and asks them if they don’t want to sell for that amount, they can go. She also threatening them nobody will buy their flats except her. As there is noway, they all accept to sell for the amount what she offered. After they left, Adhi praises Menaka for her cunning behavior, by creating situations as per her will and wish.

At that time Menaka’s “dad” Rajavarman arrives there with a surprise to everyone there, especially for Menaka. He introduces a new guy to Menaka. That guy watching Menaka by forgetting everything around him (may be another Ranjith). He says Menaka is so beautiful, as said by Rajavarman. But Meenu did not like this comment.

After everyone gone inside the house, Adhi and Giri alone in the lawn. Giri asks about the new guy, but Adhi says ‘nobody can enter in between Him and Menaka’.

(the inner meaning is, Adhi wants to become ‘Mappillai’ for Tholkaappiyan…??????? :lol: )
[/tscii:c1b9406eba]

aanaa
17th December 2008, 02:13 AM
[tscii:63961fa59f]FRIDAY
(the inner meaning is, Adhi wants to become ‘Mappillai’ for Tholkaappiyan…??????? :lol: )
[/tscii:63961fa59f]
:lol:

saradhaa_sn
17th December 2008, 01:55 PM
[tscii:9c0e6a9321]மேனகாவின் வீடு. வழக்கம்போல மேனகா ஒரு லேடாப்பை மடியில் வைத்துப் பார்த்துக்கொண்டிருக்க (கோடிக்கணக்கில் பிஸினஸ் செய்யும் மேடத்துக்கு இன்னும் ஒரு டேபிள் வாங்க காசில்லை). அப்போது அவளது ‘அப்பா’ ராஜவர்மன் வருகிறார்….

‘இதோ பாரு மேனகா.....பொழுதன்னைக்கும் நீ லேப்டாப்பை வச்சுப் பார்த்துக்கிட்டிருக்கியே தவிர உன்னுடைய வாழ்க்கையைப்பத்தி எதுவுமே நினைக்க மாட்டேங்கிறியே’

‘அப்பா லைஃப்ல என்னுடைய ஒரே லட்சியம் பிஸினஸ்ல கொடிகட்டிப் பறக்கணும்ங்கிறதுதான்’

‘அதெல்லாம் சரிம்மா, ஆனா நாளாக நாளாக உனக்கு வயசு எறிக்கிட்டே போகுதும்மா’

‘நாளாக நாளாக வயசு ஏறிக்கிட்டேதாம்பா போகும்’.

‘அது விஷயமா பேசத்தாம்மா இப்போ நான் வந்திருக்கேன்’

‘எதைப்பத்தி?. என்னுடைய வயசு ஏறிகிட்டே போறதைப்பத்தியா?’ மேனகா சிரித்துக்கொண்டே கேட்க, ‘அதாம்மா, உன்னுடைய கல்யாண விஷயமா பேசத்தான் வந்திருக்கேன். பிரதீப் ரொம்ப நல்லவன். சின்ன வயசிலிருந்தே நமக்கெல்லாம் தெரிஞ்சவன்’

‘அப்பா, எனக்கு கல்யாண ஆசையெல்லாம் அறவே இல்லைப்பா. என்னோட ஒரே லட்சியம் என் பிஸினஸ்தான்’

அப்போது அஙே பிரதீப் வர, இருவரும் பேசிக்கொள்ளட்டும் என்று ராஜவர்மன் ஒதுங்கிப்போகிறார். பிரதீப் மெல்ல அவனுடைய பீடிகையைப்போட மேனகா எதற்கும் மசிவதாக இல்லை…..

‘என்னிடம் நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க மேனகா? சொன்னால் அதுக்கு தகுந்த மாதிரி என்னை மாத்திக்குவேன்’

‘மிஸ்ட்டர் நான் உங்களைப்பிடிக்கலைன்னு சொல்லலை, கல்யாணம் என்கிற கான்செப்டே எனக்கு பிடிக்கலை. ஒரு பெண் கண்டிப்பா கல்யாணம் பண்ணித்தான் ஆகணும்னு ஏன் எல்லொரும் நினைக்கிறாஙன்னு தெரியலை. மிஸ்ட்டர் பிரதீப், உங்களுடைய திறமைக்கும் தகுதிக்கும் என்னுடைய கம்பெனியில் நான் ஒரு வேலை தரலாமே தவிர, கல்யாணம் எல்லாம் எனக்கு அற்வே பிடிக்கவில்லை’.

‘கொடுங்க மேனகா, உங்க கம்பெனியிலேயே, அதிலும் குறிப்பா உங்க பி.ஏ.வா வேலை கொடுங்க. அப்படி உங்க பக்கத்தில நான் இருக்கும்போது ஒருவேளை உங்க மனசுக்கு என்னைப் பிடிக்கலாமில்லையா?’.

பிரதீப் திரும்ப திரும்ப செக்குமாடு மாதிரி திருமண கான்செப்டிலேயே சுற்றி வருவது மேனகாவை எரிச்சலூட்டுகிறது.

கோர்ட்…..

ஆதியும் உஷாவும் கூண்டில் நிறுத்தப்பட்டு நீதிபதியால் நேரடியாக விசாரிக்கப்படுகின்றனர். வழக்கமாக அவர்கள் பலமுறை பல இடங்களில் பரஸ்பரம் சொன்ன அதே குற்றச்சாட்டுகளையே நீதிபதி முன்பும் கூறுகின்றனர். ஆதியின் தரப்பிலிருந்து ‘உஷா அடக்கமில்லாதவள், புருஷனை மதிக்காதவள், அடக்கமில்லாமல் ட்ரெஸ் பண்ணுகிறாள், தாலியைக்கழற்றிவிட்டாள்’….. அதுபோல உஷா தரப்பிலிருந்து ‘ஆதி பெண்களை மதிக்கத்தெரியாதவர், அடிமைகளாக நடத்துபவர், ஆணாதிக்கம் பிடித்தவர்’… என்ற குற்றச்சாட்டுக்கள்….

‘அபின்னு ஒரு பொண்ணு இருக்கா. அவள் எனக்கு பிஸினஸில் பெரிய எதிரி. இந்த உஷா, அபி எனக்கு விரோதின்னு தெரிஞ்சிருந்தும் அவளுக்கு சப்போர்ட்டா இருக்கா’.

‘யுவர் ஆனர், அந்த அபி வேறு யாருமில்லை இவரோட அக்காதான். ஐ மீன், இவருடைய அப்பாவின் முதல்தாரத்து மகள். அதுமட்டுமல்ல, இவரை நான் லவ் பண்ண முன்பிருந்தே அபி எனக்கு பெஸ்ட் ஃப்ரண்ட். எங்க கல்யாணத்துக்கு முன்னரே ஆதிக்கு அது தெரியும். தெரிஞ்சுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.

‘யுவர் ஆனர், அந்த அபிக்கும் எனக்கும் என்ன உறவுன்னு எனக்கு தெரியுமுன்பே நான் இவளைக் கல்யானம் பண்ணிக்கிட்டேன். அது மட்டுமில்லே, தொல்காப்பியன்னு எனக்கு இன்னொரு விரோதி. அவனோடு சேர்ந்துகொண்டு இந்த உஷா ஊர்சுற்றுவது, எங்க பில்டர்ஸ் அசோஸியேஷன் மத்தியில எனக்கு பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கு’.

‘யுவர் ஆனர், ஒரே ஒரு ரிக்வெஸ்ட், என்னுடைய குழந்தையை மட்டும் என்கிட்டேயே இருக்க நீங்க அனுமதிக்கணும்’ - உஷா

‘இல்லே யுவர் ஆனர், குழந்தை என்னுடையது, அது என்னிடம்தான் வளர வேண்டும்’ – ஆதி.

‘இருவரும் தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்ய அவகாசம் அளித்து, மீன்டும் இந்த வழக்கு பதினைந்தாவது நாள் நடைபெறும்’.

கோர்ட்டிலிருந்து வெளியே வரும் ஆதியை பத்திரிகை நிருபர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விகள் கேட்க, கிரி அவர்களை விலக்கி விட, ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் ஆதி காரில் ஏறிபோய்விடுகிறான்.

வெளியே வரும் உஷாவையும் நிருபர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விகளால் நெருக்க, அவளும் பதில் சொல்ல மறுக்கிறாள்.

‘இதோ பாருங்க, இது என்னோட பெர்சனல் விஷயம். இது பத்திரிகையில் வருவதை நான் விரும்பவில்லை’.

‘அப்படீன்னா முதலில் பேட்டி கொடுத்திருந்தீங்களே எண்?’

‘அதை நான் கொடுக்கவில்லை’.

‘அப்படீன்னா ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை?’

‘மறுப்பு தெரிவிச்சா என்ன ஆகும்னு எனக்கு தெரியும், அதனால்தான்’.

‘தொல்காப்பியனுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர் எந்நேரமும் உங்களோடு இருப்பதாகவும் ஆதி சொல்றாரே’.

‘தொல்காப்பியன் என்னுடைய பெஸ்ட் ஃப்ரண்ட், தவிர அவரும் நானும் சேர்ந்து புது பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணப்போறோம். அதுக்காக அவரோடு நான் பல இடங்களுக்கும் போக வேண்டிய சூழ்நிலை. ஏன் அந்த ஆதிகூடத்தான் எந்நேரமும் அவருடைய பிஸினஸ் பார்ட்னர் மேனகாவோடு இருக்கிறார்’.

‘அப்படீன்னா ஆதிக்கும் மேனகா மேடத்துக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்றீங்களா?’

அப்போது இடையே புகும் உஷாவின் அப்பா, ‘உஷா இவங்க வேணும்னே நம்ம வாயைக் கிண்டுறாங்க. இவங்களுக்கெல்லாம் பதில் சொல்லனும்னு அவசியமில்லை. வா போகலாம்’.
[/tscii:9c0e6a9321]

aanaa
18th December 2008, 01:08 AM
[tscii:3716275a3f]


‘நாளாக நாளாக வயசு ஏறிக்கிட்டேதாம்பா போகும்’.

:ty:[/tscii:3716275a3f]

saradhaa_sn
18th December 2008, 05:18 PM
[tscii:d1dbb784a4]ரொம்ப நன்றி 'ஆனா'...

நீங்க மட்டும் இல்லைன்னா, நான் இங்கே தனியாகத்தான் புலம்பிக்கிட்டிருப்பேன்னு நினைக்கிறேன்.

‘தொழிலதிபர் ஆதித்யாவுக்கு மேனகாவுடன் தொடர்பு
ஆதியின் மனைவி உஷா பேட்டி’

என்ற வாசகங்கள் போஸ்ட்டரை அலங்கரிக்க, பத்திரிகை கடை வாசலில் மூன்று பேரின் உரையாடல்…. ‘முன்னெல்லாம் சினிமாக்காரர்களைப்பத்திதான் இம்மாதிரி நியூஸெல்லாம் வரும். இப்போ தொழிலதிபர்களைப் பத்தியேவா’

‘நெருப்பில்லாமல் புகையுமாப்பா?. அதான் அந்த ஆதியின் மனைவியே பேட்டி கொடுத்திருக்காங்களே’

(எவனோ ஒருத்தன் இந்த பழமொழியைச் சொல்லிவிட்டுப்போய்விட்டான். இப்போ வதந்தியைப் பரப்புவோர்க்கு இதுவே வசதியாகப்போய் விட்டது).

மேனகாவின் வீடு….. கோபத்தின் உச்சியில் மேனகா….

ஆதி உள்ளே நுழைகிறான் ‘வரசொன்னீங்களே மேடம்’

‘What is going on here Adhi?.. உங்க மனைவி உஷாவின் பேட்டியைப் படிச்சீங்களா?. What the hell she is talking?. அந்த உஷாவை இதுவரை நான் பார்த்தது கூட கிடையாது. அப்படியிருக்க எப்படி இந்த மாதிரி அவள் சொல்லலாம்?. உங்களுக்கும் உங்க மனைவிக்கும் இடையே உள்ளது உங்க பெர்சனல் மேட்டர், அதுல என்னை எதுக்கு அனாவசியமா இன்வால்வ் பண்ணனும்?. காலையிலிருந்து எனக்கு எத்தனை போன் கால்ஸ் தெரியுமா? என்னுடைய போனையே ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிட்டேன் தெரியுமா?’

‘ Iam extremely sorry mam’

‘உங்க ஸாரியைத்தூக்கி குப்பைல போடுங்க. யாருக்கு வேணும் உங்க ஸாரி?’

‘நான் இப்போ என்ன பண்ணனும் மேம்?.’

‘உடனே அந்த நியூஸுக்கு மறுப்பு தெரிவிங்க, அது எல்லா நியூஸ்பேப்பர்லேயும் வரணும்’.

‘O k mam,… நான் உடனே பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு பண்றேன். நீங்களும் வாங்க’.

‘What…? நான் எதுக்கு வரணும்?. இது உங்களுக்கும் உங்க மனைவிக்கும் இடையே உள்ள பிரச்சினை, அதனால நீங்கதான் பிரஸ்மீட் வச்சு மறுப்பு தெரிவிக்கணும்’.

‘O k mam’.

ஆதியின் கெஸ்ட் அவுஸ்……
மீன் தொட்டியில் மீன்களைப்பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் ஆதியிடம் கிரி வருகிறான்…

‘பாஸ்.. நீங்க சொன்ன மாதிரியே உங்களுக்கும் மேனகா மேடத்துக்கும் இடையே கிசுகிசு இருப்பதாக எல்லா பேப்பருக்கும் நியூஸ் கொடுத்திட்டேன்'.

'வெரிகுட் கிரி... அப்படியே ஒரு பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு பண்ணு. அதில் ஏற்கெனவே வந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கணும்'.

'புரியலையே பாஸ்... ஒரு பக்கம் உங்களுக்கும் மேனகாமேடத்துக்கும் இடையே கிசுகிசு பரவணும்கிறீங்க. இன்னொரு பக்கம் உங்களுக்கும் மேனகா மேடத்துக்கும் இடையே தொடர்பு இருப்பதாக வந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கணும்கிறீங்க... ஏன்?'

'கிரி, பிரஸ்மீட் வச்சு மறுப்பு தெரிவிக்கணும்ங்கிறது மேனகாவின் உத்தரவு. அதனால் பிரஸ்மீட் வக்கிற மாதிரி வச்சு, பத்திரிகைகளில் மறுப்பு வராமல் பார்த்துக்கணும். சர்க்குலேஷனே இல்லாத இரன்டு பேப்பரில் மட்டும், ஆறாவது பக்கத்தில் சின்னதாக ஒரு மறுப்பு வரணும். ஆனால் மற்ற பத்திரிகைகளைப் பொறுத்தவரை, எனக்கும் மேனகாவுக்கும் இடையே உள்ள கிசு கிசு அப்படியே நீடிக்கணும். எப்படி என் ஐடியா?'

'பிரில்லியண்ட் பாஸ்... பின்னுறீங்க..'

'சரி போய் அதுக்கு முதல்ல ஏற்பாடு செய்'.

அபியின் அலுவலகம்...

யு.எஸ்.ஸிலிருந்து முரளி வருகிறார். அவரிடம் கிருஷ்ணன் பழைய கதைகளையெல்லாம் கிளற அவர் மழுப்பிவிட்டு அபியின் கேபினுக்குப்போகிறார். முரளியின் மனைவி வசு வரவில்லை. அமெரிக்காவில் பயங்கர பிஸியாம். (ஒபாமாவின் பதவியேற்புவிழா ஏற்பாடுகளைக்கவனிக்கிறாரோ...?). அப்போது ஆர்த்தி உள்ளே வர, அபி அவளை அவருக்கு அறிமுகம் செய்து வைக்க, முரளி ஆர்த்தியை உட்காரச்சொல்கிறார். அடுத்த வாரம் யு.எஸ்.ஸிலிருந்து 'டிஜிட்டல் வேல்லி ப்ராஜக்ட்' வி.ஐ.பிக்கள் அதற்கான சைட்டைப் பார்வையிட வருவதாகச்சொல்லிவிட்டு, காஃபியைக்குடித்துவிட்டு, ரொம்ப டயர்டாக இருப்பதாகவும் ஓட்டலில் போய் ரெஸ்ட் எடுக்கப்போவதாகவும் சொல்லிப்போகிறார்.

அவர் போனதும்... 'அக்கா அவர்பாட்டுக்கு அடுத்த வாரம் சைட் இன்ஸ்பெக்ஷன்னு சொல்லிட்டுப்போறாரே அப்படீன்னா இடம் ரெடியாயிடுச்சா?'

'இன்னும் இல்லை ஆர்த்தி'
'பின்னே எப்படிக்கா..?'

'அந்தப்பொறுப்பை ஒரு முக்கியமான ஆளிடம் ஒப்படைத்திருக்கிறேன். அவர் கண்டிப்பா முடிச்சிடுவார்'

வெளியே வரும் ஆர்த்தி குழப்பத்துடன் வருகிறாள்... 'ஏன் அக்கா எதிலும் பிடிகொடுத்தே பேசமாட்டேன்கிறாள்?'.

அப்போது நரி கிருஷ்ணன் அவளிடம் வந்து, 'மேடம், இப்போவெல்லாம் உங்க அக்கா கம்பெனி விஷயங்களைப்பத்தியோ, அல்லது பிரஸிடெண்ட் எலக்ஷன் பத்தியோ உங்ககிட்டே எதுவும் சொல்வதில்லை... கவனிச்சீங்களா?'

ஆர்த்தியின் குழப்பம் மேலும் அதிகரிக்கிறது.

மீண்டும் ஆதியின் கெஸ்ட் அவுஸ்....

'பாஸ் நீங்க சொன்ன மாதிரியே அந்த மறுப்புச்செய்தி இரண்டே இரண்டு பத்திரிகைகளில் வர ஏற்பாடு செய்துவிட்டேன்' என்று சொல்லி அவ்விரண்டு பத்திரிகைகளின் பெயரையும் கிரி சொல்ல ஆதிக்கு ஆச்சரியம்... 'கிரி, இந்தப்பெயரிலெல்லாமா பத்திரிகை வருகிறது?'

'ஆமாம் பாஸ்... அதுமட்டுமல்ல, அந்த மேனகாமேடத்தின் கண்ணில் காண்பிக்க பத்து பிரதிகளும் வாங்கி காரில் வைத்துவிட்டேன்'.

'வெரி குட் கிரி... நல்ல காரியம் பண்ணினே'

அப்போது பிருத்வி வந்திருப்ப்பதாக சொல்ல, ஆதிக்கு அவனைச்சந்திக்க விருப்பமில்லை. இருந்தாலும் கிரியின் வற்புறுத்தலால் வரும்படியாக சொல்லியனுப்ப அவனும் வருகிறான்...

'என்ன விஷயம் பிருத்வி?'

'என்ன இருந்தாலும் ஒரு பிஸினஸ் பார்ட்னரான உங்களை காலையில் மேனகா அப்படி ரொம்ப கடுமையாக பேசியது தப்புதான். அதுக்காகத்தான் மன்னிப்பு கேட்க வந்திருக்கேன்'.

'அதுக்கு நீங்க ஏன் மன்னிப்பு கேட்கணும்?'

'என்ன இருந்தாலும் மேனகாவும் நானும் ஒண்ணுதானே'. (ஆதிக்கு அதிர்ச்சி. இந்த கிறுக்கன் என்ன உளறுகிறான்..?). 'ஸோ.. அதுனாலதான் மேனகாவுக்க பதிலா நான் உங்ககிட்டே மன்னிப்புக் கேட்டுக்கிறேன். அப்போ வரட்டுமா?'

அவன் போனதும், 'ஏய் கிரி இந்த பிருத்வி எனக்கும் மேனகாவுக்கும் இடையில் ரொம்ப இடைஞ்சலாக இருப்பான் போலிருக்கு'.

'என்ன சொல்றீங்க பாஸ்?... அப்படீன்னா.....'

'யெஸ் கிரி, நான் மேனகாவை விரும்புறேன்'.

'வாவ்... அப்படியா? எக்ஸெலண்ட் பாஸ்' (கோமாளி.... நீ பொழைச்சுக்குவே).
[/tscii:d1dbb784a4]

Arthi
18th December 2008, 05:37 PM
[tscii:829ef70886]ரொம்ப நன்றி 'ஆனா'...

நீங்க மட்டும் இல்லைன்னா, நான் இங்கே தனியாகத்தான் புலம்பிக்கிட்டிருப்பேன்னு நினைக்கிறேன்.

[/tscii:829ef70886]
:notthatway:

I am also here, but last few weeks i was not able to browse this page.

I am the one who continously read your post :D

please continue :clap:

aanaa
18th December 2008, 11:34 PM
நீங்க மட்டும் இல்லைன்னா, நான் இங்கே தனியாகத்தான் புலம்பிக்கிட்டிருப்பேன்னு நினைக்கிறேன்.


:ty:
அனேகமானோர் ் silent redaers தான்


உங்கள் எழுத்தை ரசிப்பவர்கள் பலர் இங்கு

aanaa
18th December 2008, 11:35 PM
deleted

gta129
19th December 2008, 04:49 AM
Thanks for the update.

aanaa
19th December 2008, 05:40 AM
சாரதா

பல பேர் வாசிக்கின்றனர்

தங்களது கருத்துக்களை எழுத முடியவில்லையென மனவருத்தப்படுகின்றனர் சிலர்.

இதோ வேறு இடத்திலிருந்து காப்பி:





saradhaa_sn wrote:
நீங்க மட்டும் இல்லைன்னா, நான் இங்கே தனியாகத்தான் புலம்பிக்கிட்டிருப்பேன்னு நினைக்கிறேன்.


Hi aana there r many ppl who read sarada madams post but unable to reply the posts in hub forum becoz the user id is not getting activated for the new registrations and ppl unable to post.
__________________

aanaa
19th December 2008, 05:41 AM
:clap: :clap: :clap:

saradhaa_sn
19th December 2008, 12:34 PM
'கோலங்கள்' தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பத்தொடங்கி பல மாதங்கள் கழித்துதான் இந்த 'கோலங்கள்' thread, நான் பெரிதும் மதிக்கும் 'எஸ்.சத்யா' அவர்களால் துவங்கப்பட்டது. அப்போது கதையின் போக்கு பற்றியும், கதாபாத்திரங்களின் தன்மைகள் குறித்தும் சாதக, பாதகங்கள் பற்றி நான் உளபட பலரால் விவாதிக்கப்பட்டன. இடையில் இந்த திரி சற்று தொய்வடைந்தது உண்மை. பின்னர் சுதாரித்து மீண்டது. தற்போது, 'அப்டேட்' எழுதுவதும், அதைப் படித்து விட்டு பாராட்டுவதுமாக ஒரு சம்பிரதாய அடிப்படையில் போய்க்கொண்டிருக்கிறதே தவிர, விவாதங்கள் எதுவும் நடக்கவில்லையே என்ற எண்ணத்தில் எழுந்த வரிகள்தான் அவை.

இந்த தொடர் துவங்கி ஆறாண்டுகள் நெருங்குவதாலும், அதே கதாபாத்திரங்களே தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாலும், விவாதங்களுக்கு தேவையான சுவாரஸ்யம் குறைந்திருக்கக் கூடும்.

sudha india
19th December 2008, 02:48 PM
Hi Sarada,

I dont think your words have been mis understood. As I have told many a times, many of us see the serial thro your posts only.

Ofcourse, discussions are very limited.

We enjoy your sense of humour :

அமெரிக்காவில் பயங்கர பிஸியாம். (ஒபாமாவின் பதவியேற்புவிழா ஏற்பாடுகளைக்கவனிக்கிறாரோ...?).

:rotfl:

priya_2008
19th December 2008, 04:56 PM
Mam, me too reading it daily .

saradhaa_sn
19th December 2008, 05:33 PM
'வந்துட்டாங்கய்யா... வந்துட்டாங்கய்யா.... '

ஆம், விடுமுறையில் இருந்த 'சித்தப்பா' திருவேங்கடம் எம்.எல்.ஏ. வும் தோழர் பாலகிருஷ்ணனும் நேற்று தலைகாட்டினர். ஆனால் போரடிக்கவில்லை. கதையோடு ஒட்டியே வந்தனர்.

திருவேங்கடம் எம்.எல்.ஏவும் அவரது ஃப்ராடு மாப்பிள்ளேயும் தங்கள் தகிடுதத்த வேலகள் குறித்து விவாதித்துக்கொண்டு இருக்கின்றனர்.

'மாமா, அந்த சேட் வீட்டு கல்யாணத்தில் நமக்கு எதுவும் வரவில்லையே'.
'என்ன மாப்பிளே சொல்றீங்க? அதான் பத்திரிகை வச்சானே'

'மாமா நான் அதைச்சொல்லலை. வரதட்சணையாக பல லட்சம் கைமாறி இருக்கே. அதை யோசிச்சீங்களா?. வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்று மிரட்டி, அதன்மூல்ம நம் பங்கை வாங்கியிருக்க வேண்டாமா?'

'மாப்பிளே, உன்னை என்னமோ நினைச்சேன். ரொம்ப அட்வன்ஸாவே இருக்கே' (இல்லேன்னா உங்க கிட்டேயே கோடிக்கணக்கில் அடிச்சிகிட்டுப் போயிருக்க முடியுமா, பைத்தியக்கார மனுஷா)

'சரி, அதை விடுங்க. உங்க தொகுதியிலே என்ன நடக்குதான்னாவது உங்களுக்கு தெரியுமா?'.

'தொகுதிப்பக்கம் போனாத்தானே தெரியும்?. சொல்லு மாப்பிளே, என்ன நடந்தது?'

'ஒரு பெரிய குடியிருப்ப வளாகம் கைமாறியிருக்கு தெரியுமா?. அதுவே மொத்தம் நூறு கிரவுண்ட் இருக்கும். அதை வாங்கியிருப்பது தொழிலதிபர் மேனகாவும், உங்க அண்ணன் மகன் ஆதியும். ஆனால், அதில் ஒரு பத்து ஃப்ளாட் ஓனர்கள் மட்டும் தங்கள் இடத்தை விறக் முடியாது என்று போராடி வந்தனர். அந்த போராட்டத்தில் அவர்களுக்கு சாதகமாக நீங்களும் இறங்கினால், உங்களை சரிக்கட்ட, அந்த மேனகா சில கோடிகளை ஒதுக்கித்தர வேண்டியிருக்கும் அல்லவா?.'

'பலே, நல்ல யோசனை மாப்பிளே. அந்த பத்து பேரையும் அழைத்து வாருங்கள்'.

சொன்ன சிறிது நேரத்தில் அவர்கள் வந்து நிற்கின்றனர். அவர்களிடம் திருவேங்கடம் கோபமாக...

'இவ்வளவுதூரம் நடந்திருக்கிறதே, யாராவது எம்.எல்.ஏ. என்ற முறையில் என்னிடம் வந்து முறையிட்டீர்களா?. இப்போ அந்த மேனகாவுக்கே விற்க முடிவு செஞ்சுட்டீங்களா?'

'வேறு என்னங்க பண்றது?. நாங்க குடியிருக்கும் வீட்டுக்கு எதிர்வீடுகளில் தடி தடியான ரௌடிகளை குடிவச்சு எங்களை பயமுறுத்துறாங்க. பெண்டு பிள்ளைகள் வெளியே போய் வர முடியவில்லை. நாங்களும் நிம்மதியா ஆஃபீஸ் போய் வர முடியவில்லை. நாங்கள்ளாம் மிடில் கிளாஸ் ஃபேமிலீஸ். அவங்களை எதிர்த்து ஒண்ணும் பண்ண முடியலை. போலீஸ் வரைக்கும் கூட போய்ப் பார்த்துட்டோம். அவங்களும் கையை விரிச்சுட்டாங்க. அந்த மேனகாவிடம் விற்காமல் வேறு என்ன பண்ண முடியும் சொல்லுங்க'.

'முடியும், மக்கள் சக்தியைத் திரட்டி போராட முடியும். ஆனால் நான் எம்.எல்.ஏ.வாக இருப்பதால் நேரடியாக போராட்டத்தில் இறங்க முடியாது. நான் சொல்ற ஆளுகிட்டே போய் முறையிடுங்க, அவர் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்வார்'.

'யாருங்க அந்த ஆளு?'

'தோழர் பாலகிருஷ்ணன். அவரிடம் போய் எல்லாத்தையும் விவரமா சொல்லுங்க'.

'அவரா?. அவர் உங்களை எதிர்த்து தேர்தலில் நின்னவராச்சே. அவர் எப்படி?'

'அதெல்லாம் பழைய கதை, இப்போ எவ்வளவோ மாறிப்போச்சு. ஆனால் ஒண்ணு, இதுக்குப்பின்னால் நான் இருப்பதோ, நான் சொல்லித்தான் நீங்க அவரிடம் போனீர்கள் என்றோ அவருக்கு தெரியவே கூடாது. நீங்க அவர்கிட்டே போங்க. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்'.

('நீதானேய்யா எம்.எல்.ஏ., அப்படியிருக்க நாங்க ஏன் அவரிடம் போக வேண்டும்?' என்று கேட்க வக்கற்ற மிடில் கிளாஸ் செம்மறியாடுகள், தலையை ஆட்டிக்கொண்டு போக, ஃப்ராடு மாப்பிள்ளைக்கும், ஊழல் மாமனாருக்கும் முகத்தில் புன்னகை).

ஆர்த்தியின் வீடு......

ராஜேஷ் ஃபுல்லா குடிச்சிட்டு வந்து உளறிக்கொண்டிருக்கிறான். ஆர்த்திக்கு அதிர்ச்சி, மீண்டும் இவன் பழைய வழிக்கே போகத்துவங்கிட்டான்னு. அவனுடைய உளறல் முழுக்க அபியைப்பற்றித்தான் இருக்கிறது.

'பார்த்தியா ஆர்த்தி, நாம அந்த அபிக்கு எவ்வளவு விசுவாசமா இருந்தோம். கடைசியில காலை வாரிட்டாங்க' எகிற ரீதியில் உளறிக்கொண்டிருக்க, கலாவுக்கு இது போதாதா....

'பார்த்தியாடியம்மா உங்க அக்கா பண்ணின கொடுமையை?. நல்லபடியா தொழில் பண்னிக்கிட்டிருந்தவனை மறுபடியும் குடிகாரனாக்கி விட்டாள். இப்போ அவளுக்கு திருப்தியா?. தங்கச்சி புருஷன் போலீஸில் மாட்டியிருக்கும்போது அதைவிட அவளுக்கு அவளோட பிஸினஸ் பெரிசா போயிடுச்சோ?'

'அதான் வெளியில வந்துட்டாரில்ல?'

'எப்படி வெளியில் விட்டாங்க?. எம்மேலே எந்த தப்பும் இல்லேங்கிறதுக்கோசரம் விட்டுட்டாங்க. இல்லேன்னா விடுவாங்களா?. இன்னொன்னு தெரியுமா, நம்ம டேங்கர் லாரி இன்னும் விசாரணைக்காக போலீஸ் கஸ்டடியிலதான் இருக்கு' உளறிக்கொண்டே போய் படுக்கையில் விழுகிறான்.

தோழரின் இருப்பிடம்....

'மிடில்கிளாஸ் மாதவன்கள்'எல்லாம் அவரிடம் தங்களின் சூழ்நிலையைச்சொல்ல (நமக்குத்தான் சூழ்நிலை என்னன்னு தெரியுமே என்பதால் மீண்டும் சொல்லவில்லை. யாராவது 'ரிப்பீட்டு.......' என்று குரல் கொடுத்தால் பார்ப்போம்).

அவர்களின் நிலையை தீர்க்கமாகக்கேட்கும் தோழர், 'நீங்களெல்லாம் சொல்வதைவைத்துப் பார்க்கும்போது, ஒருவருடைய இடத்தை பலவந்தமாக அபகரிக்கவோ, வாங்கவோ நினைப்பதும், அதற்கான நிர்ப்பந்தத்தை உண்டாக்குவதும் சட்டப்படி குற்றமாகும். இதற்காகவே நாம் தயங்காமல் போராடலாம்'.

'அதுக்காகத்தாங்க உங்களைப்பார்க்க வந்தோம்'.

தோழர் நமட்டுச்சிரிப்புடன் "தோழர் டேனியல். பார்த்தீர்களா?. அவர்களுக்காகப் போராட வேண்டும் என்கிற நிலை வரும்போதுதான் நம்முடைய நினைப்பு வருகிறது". (இதற்கு என்ன அர்த்தம்?. 'ஓட்டுப்போடும்போது எங்கேப்பா போனீங்க கூமுட்டைகளா?' என்பதுதானே).

aanaa
20th December 2008, 04:17 AM
நன்றிகளுடன்.... சாரூ....:ty:

aanaa
20th December 2008, 04:18 AM
''ஓட்டுப்போடும்போது எங்கேப்பா போனீங்க கூமுட்டைகளா?' என்பதுதானே).

:clap:
:clap:

saradhaa_sn
20th December 2008, 11:34 AM
உஷாவின் மகன் கைலாஷ் படிக்கும் பள்ளி....

தன்னுடன் படிக்கும் மாணவர்களோடு ஏற்பட்ட வாக்குவாதத்தில், சக மாணவனை கைலாஷ் அடித்து விடுகிறான். அதைப்பார்த்த ஆசிரியை அவனைக் கண்டிப்பதுடன் அடிபட்ட மாணவனிடம் 'ஸாரி' கேட்கும்படி சொல்ல முடியாதென மறுக்கிறான். ஆசிரியை கண்டித்துக்கொண்டிருக்கும்போது உள்ளே வரும் உஷா விஷயத்தைக்கேட்க, ஆசிரியை விளக்க, உஷாவும் அவனைக் கண்டிப்பதுடன் 'மிஸ்' இடம் ஸாரி கேட்க வைக்கிறாள்.

கைலாஷுடன் வெளியில் வந்து ஆட்டோவில் ஏறப்போகும் நேரம், அங்கு வரும் கிரி அவளையும் கைலாஷையும் பர்த்துவிடுகிறான். ஆட்டோவில் போகும்போதும் உஷா மகனைக் கண்டிக்கிறாள்.

'ஏன் அவனை அடிச்சே?'

'அவன் நம்ம கிட்டே கார் இல்லேன்னு கிண்டல் பண்ணினாம்மா'.

'உண்மைதானே, நம்ம கிட்டே கார் இல்லாததால்தான் ஆட்டோவில் போறோம். வீட்டுல இருக்கிற கார் தாத்தாவுடையது. உன் அம்மாகிட்டே கார் இல்லை'.

'ஆனால் 'டாடி' கிட்டே இருக்கே'

இந்த பதில் அவளைத் திடுக்கிட வைக்கிறது. நாம் என்ன செஞ்சாலும் இவனிடம் இருந்து ஆதியின்ன் நினைவை மாற்ற முடியாது போலிருக்கே.

'சொல்லும்மா, டாடியோட காரும் நம்ம கார்தானே'.

(முன்னொருமுறை தொல்காப்பியன் சொன்ன வர்த்தைகள் ஃப்ளாஷ்பேக்கில் வந்து போகின்றன. 'உஷா, நீங்க என்னதான் ஆதி வேணாம்னு முடிவெடுத்தாலும், நாளை உங்க பையன் கேட்கும்போது உங்களால் பதில் சொல்ல முடியாது. எதுக்கும் உங்க முடிவை நல்லா யோசனை பண்ணிக்குங்க')

திடுக்கிட்டு சுதாரிக்கும் உஷா, 'இதோ பாரு கைலாஷ், இனிமே யாரும் உன்னை கிளாஸில் கிண்டல் பண்ணினாலும் மிஸ் கிட்டேதான் சொல்லணுமே தவிர, அவங்களை நீயே அடிக்கக்கூடாது'.

'ஊகும்... நான் அடிப்பேன்'. (ஆதியின் அதே பிடிவாதம்). மீண்டும் மீண்டும் அவன் அதையே சொல்ல அவள் கோபம் கொண்டு அவனை அடிக்க, இப்போது ஆட்டோக்காரன் அவளைக் கண்டிக்கிறான், 'என்னம்மா நீங்க, அவனிடம் அடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு சின்னப் பையனைப்போட்டு அடிக்கிறீங்களே'.

'வீட்டுக்கு வா, உனக்கு வச்சிக்கிறேன்' மகனிடம் ரகசியமாக அதட்டுகிறாள்.

வள்ளியின் தள்ளுவண்டி இட்லிக்கடை....

அவளும் மகளும் இட்லி, தோசை வியாபாரத்தில் மும்முரமாயிருக்க, அப்போது அங்கு வரும் இரண்டு குடிகாரர்கள் பேச்சோடு பேச்சாக வள்ளியின் மகளைக் கிண்டல் செய்ய (அந்த வசனங்கள் எல்லாம் காட்சியை இழுக்க நன்றாக பயன்படுகின்றன). அப்போது கற்பகத்துடன் அங்கு வரும் ராஜேந்திரன், அவர்களை அடிக்கப்போவது போல மிரட்டி, துரத்திவிட, கற்பகம் நடந்ததை விசாரிக்க.... 'அந்த ரவுடிப்பசங்க சாப்பிட வரலைக்கா. என் பொண்ணுகிட்டே தப்பும் தவறுமாக பேசி வம்பிழுக்க வந்திருக்கானுங்க. என்ன இருந்தாலும் வயசுப்பொண்ணுங்க புருஷன் துணையில்லாமல் இருந்தா இப்படித்தான்'. இது போதாதா கற்பகத்துக்கு?. இந்த ஒரு வரி வசனத்தை வரவழைக்க ஒரு செக்மெண்ட்.

ஆதியின் வீடு.....

'பாஸ், உங்க பையன் நாளை உங்க பிஸினஸ் சாம்ராஜ்யத்தையே கட்டி ஆள் வேண்டியவன். அவனை எப்படிப்பட்ட ஸ்கூல்ல படிக்க வைப்பீங்க?'

'அதிலென்ன சந்தேகம் கிரி, ஒரு 'ஏ'கிளாஸ் கான்வெண்ட்டில படிக்க வைப்பேன்'.

'அதுதானே முறை?. ஆனா உஷா மேடம் அவனை ஒரு மட்டமான பள்ளியில சேர்த்து படிக்க வச்சிருக்காங்க தெரியுமா?'

'என்னது இந்த ஆதியோட மகன் மட்டமான பள்ளியிலா?. அவள் மனசுல என்ன நெனச்சிக்கிட்டு இப்படியெல்லாம் பண்றா?. இதுக்குத்தான் பையனை நான் வளர்க்கிறேன்னு கேட்டாளா?'

இப்போது காஞ்சனா, 'வேறென்ன? பையனோட அப்பா ஒரு கையாலாகாதவன்னு தெரிஞ்சிக்கிட்டா. அதான் உன் மேலுள்ள வெறுப்பை பையன்கிட்டே காட்டுறா'.

'கிரி, உனக்கு நல்லா தெரியுமா?'

'பின்னே என்ன பாஸ்? யாரோ சொன்னதை வச்சா சொல்றேன்?. நான் என்னோட கண்ணாலேயே பார்த்தேன் பாஸ். ஸ்கூல்லேருந்து பையனை மேடம் அழைச்சிக்கிட்டு ஆட்டோவுல போனாங்க'.

'அப்படியா?. இது விஷயமா நான் என்ன பண்ணப்போறேன்னு பார். சீக்கிரமே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்'.

saradhaa_sn
20th December 2008, 11:55 AM
அபியின் வீடு......

முகத்தில் சோகமும் அமைதியின்மையுமாக கற்பகம், கூடவே ராஜேந்திரன். அம்மாவின் சோகமான முகம் அபிக்கும் ஆனந்திக்கும் குழப்பத்தை ஏற்படுத்த, அபி அம்மாவிடம்...

'என்னம்மா, ஒரு மாதிரியா இருக்கே. என்ன பிரச்சினை?'

கற்பகம் ஒன்றும் சொல்லவில்லை, ராஜேந்திரன்தான் பதில் சொல்கிறான்... 'எங்க அக்காவுக்கு தான் பெத்ததுங்களை நினைச்சுத்தான் வருத்தம்'.

'மாமா... புதிர் போடாமல் விஷயத்தைச்சொல்லுங்க'

'பின்னே?. எங்க அக்கா பெத்த நாலுல கடைசி ரெண்டும் கல்யாணம் செஞ்சிக்கிட்டுப் போயிடுச்சுங்க. அதுல ஒருத்தன் ஒரு பிள்ளையும் பெத்து தகப்பன் ஆயிட்டான். ஆனா மூத்ததுங்க ரெண்டும் இப்படி மொட்டையா நிக்குதுங்க'.

'என் கல்யானத்துக்கு இப்போ என்ன அவசரம்?'

இப்போது கற்பகம் வெடிக்கிறாள்....

'ஏண்டி நான் என்ன நேத்து சமைஞ்ச பொண்ணுங்களுக்கா கல்யாணம் பண்ணிவைக்க துடிக்கிறேன்?. இதே வார்த்தையை இன்னும் எத்தனை நாளைக்கு சொல்லிக்கிட்டேயிருப்பே. அந்த பாஸ்கரோடு டைவர்ஸ் ஆகி எவ்வளவு நாள் ஆச்சு?. ஒரு கல்யாணம் சரியா அமையலேன்னா மறு கல்யாணம் பண்றதில்லையா?. நீ போயிட்டு வந்தியே அமெரிக்கா, அங்கே கூட ஒரு கணவன் சரியா அமையலேன்னா அவனை உத்றிவிட்டு, வேறு கல்யாணம் பண்ணிக்கிறாங்களே ஏன்?. இருக்கிற கொஞ்ச நாளிலேயும் சந்தோஷமா வாழ்ந்திட்டு போகணும்னுதானே. இப்போ நீங்க ரெண்டு பேரும் வாழ்கிற வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லடி. அது வாழ்க்கையும் இல்லே. நீங்க எவ்வளவுதான் பணம் சம்பாதிச்சாலும் கணவன், குழந்தைகள், குடும்பம்னு இல்லேன்னா அதுக்கு பேரு வாழ்க்கை இல்லேடி. ஒருத்தி கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கூட வாழாமல் வந்துட்டா. இன்னொருத்தி கல்யாண மேடை வரை வந்து அதோடு நின்னுட்டா. இதோ பாருங்கடி, நான் அந்தக் காலத்து மனுஷிதான். நான் உன்னைப்போல ஒரு பெரிய தொழிலதிபரும் இல்லே, உன் தஙச்சி யைப்போல பெரிய பத்திரிகைக்காரியும் இல்லே. இருந்தாலும் வாழ்க்கையில் அனுபவப்பட்டவள். நீங்க ரெண்டு பேரும் இப்படியே இருந்தா நாளைக்கு ஊர் உலகம் என்ன சொல்லும்?. இந்த கற்பகத்துக்கு மகள்களை சரியாக வளர்க்கத் தெரியலைன்னுதானே'.

'அம்மா, ஊர் உலகத்துக்காகவெல்லாம் நாங்க வாழ முடியாது' - ஆனந்தி.

'சரிடி ஊரை விடு, உங்க அம்மாவுக்காக என்னுடைய ஆசையை நிறைவேத்தணும்னு உங்க ரெண்டு பேருக்கும் தோணலையா. யார் செஞ்ச புண்ணியமோ அந்த மகேஷ் தம்பி இவளையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு உறுதியா இருக்காரு. நீயும்தான் உனக்காகவே காத்துக்கொண்டிருக்கும் அந்த கார்த்திக்கை எவ்வளவு நாள்தான் இப்படியே காக்க வைக்கப்போறே?'

'இன்னும் கொஞ்சநாள் ஆகட்டும்மா' என்று அபி சொல்ல..

'கொஞ்சநாள், கொஞ்சநாள்னா எப்போ?. உங்க அம்மாவுக்கு பால் ஊத்தினதுக்கப்புறமா?'

கற்பகத்தின் இந்த வார்த்தை மூவரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது...

'என்னம்மா இப்படியெல்லாம் சொல்றே?' என்று அபி கேட்க, 'பின்னே எப்படி சொல்லச்சொல்றே...?'

இப்போது ஆனந்தி ஒரு தீர்க்கமான முடிவுடன், 'அம்மா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். நிஜமாத்தான் சொல்றேன். அதுமட்டுமில்லே, அக்காவும் கல்யாணம் பண்ணிக்கும். என்னோட சந்தோஷமானவாழ்க்கையைப் பார்த்து அக்காவும் கண்டிப்பா கல்யாணம் செஞ்சுக்க சம்மதிக்கும். அக்கா, அம்மாவுக்கு சத்தியம் பண்ணிக்கொடு'

ஆனந்தியின் வார்த்தையைக்கேட்டு அபிக்கு அதிர்ச்சி மற்றும் குழப்பம். ஆனால் ஆனந்தி, அபியின் கையைப்பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து, அம்மாவின் கையில் அழுத்தி சத்தியம் செய்கிறாள். அபிக்கு, ஆனந்தியின் செயலில் உடன்பாடில்லை என்பது நன்றாகத்தெரிகிறது. சோகமான முகத்துடன், அவள் யோசனை எங்கோ இருக்கிறது.

கற்பகமும் ராஜேந்திரனும் அங்கிருந்து சென்றதும் ஆனந்தி அபியிடம் வந்து 'ஐ ஆம் ஸாரிக்கா' என்று சொல்லி அகல, அபியின் குழப்பமான முகத்தில் கேமரா உறைய.......

aanaa
21st December 2008, 04:09 AM
அபியின் வீடு......
..

:ty:

aanaa
21st December 2008, 04:10 AM
இன்னுமே பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டியிருக்கின்றது...

விரைவில் முடியுமா????????
:roll:

saradhaa_sn
21st December 2008, 11:31 AM
உண்மைதான் ஆனா.....

கதையில் ஏகப்பட்ட முடிச்சுகள் விழுந்துவிட்டன. சீக்கிரம் முடியவேண்டும் என்பதைவிட, அந்த சிக்கல்களை எப்படி இயக்குனர் அவிழ்க்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பே பலருடைய மனதில் இருக்கிறது.

** பாஸ்கர் நல்லவனாக மாறிவிட்டவன் போல தெரிகிறது. (அது உண்மையான மாற்றம்தானா? அல்லது சங்கீதா பெயரிலுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரிக்க எண்ணும் நாடகத்தின் ஒரு பகுதியா தெரியவில்லை).

** நேற்றைய எபிசோட பார்த்தபோது, அபி மற்றும் ஆனந்தியின் திருமணம் விரைவில் நடந்துவிடுமோ என்று தோன்றுகிறது. (தொடரை முடிக்க வேண்டுமென்று நினைத்தால் திருமனம் நடக்கும், இழுக்க நினைத்தால் நடக்காது).

** தொல்காப்பியன் - மேனகா இடையேயான உறவு முடிச்சு, இன்னும் அவிழவில்லை. எப்போது எப்படி வெளிப்படும் என்று ஆவலைத்தூண்டுகிறது. அவர்கள் இருவரையும் தீர்த்துக்கட்ட அலைந்துகொண்டிருந்த அந்தோணி என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பது சமீப காலமாக காட்டப்படவில்லை.

** மேனகா மீதான கொலை முயற்சியின் பின்னணியை விசாரிக்கும் 'டிடெக்டிவ்' குலோத்துங்க சோழன், விவேக், சித்ரா ஆகியோரின் செயல்பாடுகளில் மிகுந்த தேக்கம். இதுவரை நடந்த புலணாய்வில், மேனகாவின் கொலைமுயற்சியில் தொல்காப்பியனுக்கும் பங்குண்டு என்ற தவறான முடிவுக்கு மட்டுமே அவர்களால் வரமுடிந்திருக்கிறது.

** ஆதித்யாவும் உஷாவும் மீண்டும் இணைவார்கள் என்று இன்னும் உள்மனம் சொல்லிக் கொண்டிருக்கிறது. மகனின் எதிர்காலம் கருதி இணையக்கூடும் (இணைய வேண்டும்). 'ஐ ஆம் ஸாரி உஷா, உன்னை ரொம்ப புண்படுத்திட்டேன்' போன்ற வசனங்கள் இறுதி எபிசோட்களில் வரக்கூடும்.

** அபியின் மொத்தக்குடும்பமும் (ஆர்த்தியின் துரோகத்தால்) தொல்காப்பியன் மீது கொண்டிருக்கும் தவறான வெறுப்புணர்ச்சி எப்போது, எப்படி நீக்கப்படப்போகிறது என்பது தெரியவில்லை. (ஒரு சில ஓட்டல் நிர்வாகத்தினர், அறையில் தங்கியிருப்பவர்களின் நடவடிக்கைகளை ரகசிய கேமரா மூலம் கண்கானிப்பார்களாமே. அதுபோல பாண்டிச்சேரி ஓட்டல் அறையில் நடந்த விவகாரம், ஏதேனும் ஒரு சி.டி.முலம் கிடைக்கப்பெற்று, அதன்மூலம் ஆர்த்தியின் முகத்திரை கிழித்தெறியப் படவேண்டுமே தவிர, 'என்னை மன்னிச்சிடுங்க தொல்காப்பியன்' என்று காலில் விழுவதாகக்காட்டினால், உடனே வேறு சேனல்களுக்கு தாவுவது சிறந்தது. ஓட்டல் சிப்பந்திகளிடம் தொல்காப்பியன் அடிவாங்கும்போது, தொல்ஸுக்கு மட்டுமே தெரியும்படி அவள் சிரித்த அந்த குரூரமான சிரிப்பு நம் நெஞ்சங்களில் உறைந்துவிட்டது).

** அர்ஜுன் - ரேகா எப்போது ஒன்று சேர்வார்களா..?. ரேகாவின் தந்தை சங்கரபாண்டியன் என்னவானார்..?

** ஆதியும் உஷாவும் எப்போது, எப்படி ஒன்று சேர்வார்கள்?.

** கற்பகம் - காஞ்சனா இடையேயான தீராத மனக்கசப்பு தீருமா?. அல்லது இருவரில் ஒருவர் உயிரை விட்டு, தியாகியாவார்களா..?.

** படுக்கையில் கிடக்கும் ஈஸ்வரனின் நிலை என்ன?. மகன் ஆதி மனம் திருந்தி, உலகத்திலேயே சிறந்த மருத்துவ சிகிச்சையளித்து அவரை நடமாட விடுவானா..?.

** மேனகா தொல்காப்பியனுடன் இணைந்து மீண்டும் மீனவர் குப்பத்துக்குப் போவாளா?. அல்லது தொல்ஸ் மேனகாவுடன் சேர்ந்து உலகளாவிய பிஸின்ஸ்மேன் ஆவாரா? அல்லது, 'உன் வழி உனக்கு என் வழி எனக்கு' என்று போயிவிடுவார்களா?. ('என் இறுதிக்காலத்தை ராமேஸ்வரம் கடற்கரையில்தான் கழிப்பேன்' என்று ஒருமுறை தொல்ஸ் தன் நண்பர் அன்வரிடம் சொல்லியிருந்தார்).

** இடையே புகுந்து தொடரைக் கண்டபடி இழுத்துச்சென்ற கங்காவின் குடும்பம் (கங்கா - அவள் அம்மா, அப்பா - மாமா ராமச்சந்திரன்) மீண்டும் வருவார்களா?. அல்லது அவ்வளவுதானா..?.

இன்னும் நான் குறிப்பிடாத எவ்வளவோ முடிச்சுகள். தலை சுற்றுகிறது. ஆனால் அத்தனை முடிச்சுகளையும் அவிழ்த்தால மட்டுமே முடிவு நிறைவானதாக இருக்கும். இல்லாவிட்டால், ஆர்வமாகப்பார்த்த நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

aanaa
21st December 2008, 08:51 PM
். இல்லாவிட்டால், ஆர்வமாகப்பார்த்த நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

அனுமான் வால் போல் நீண்டு கொண்டே... போகின்றது /போகும்

அந்த திருச்செல்வம் தான் துணை.... :?:

saradhaa_sn
22nd December 2008, 02:13 PM
அனுமான் வால் போல் நீண்டு கொண்டே... போகின்றது /போகும்

அந்த திருச்செல்வம் தான் துணை.... :?:

சரியா சொன்னீங்க... அனுமார் வால் கூட ஒரு முடிவுக்கு வந்துடும்னு நினைக்கிறேன். ஆனால் 'கோலங்கள்'...?

ஆனால் இந்த தொடரின் சிறப்பம்சமே, இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் விறுவிறுப்பாகவும், தொய்வு விழாமலும், எதிர்ப்பார்ப்பைத்தூண்டும் விதமாகவும் கொண்டு செல்வதுதான்.

அதனால்தான், தொடர் முடியவில்லை என்பது கூட ஒரு அலுப்பாகவோ, சுமையாகவோ தோன்றவில்லை.

ஓடும்வரை ஓடட்டும். நிற்கும்போது பார்த்துக்கொள்வோம்.

R.Latha
23rd December 2008, 12:23 PM
பாஸ்கர் நல்லவன் போல் நடிக்கிறான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே அவன் திருந்த வில்லை. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரிக்க எண்ணும் நாடகத்தின் ஒரு பகுதிதான் யோசிக்க வேண்டாம். கையில் நிலம் கிடைத்தவுடன் உங்களுக்கே தெரியும். நடிப்பில் வல்லவன் என்று] அதாவது கதை முடிவுக்கு வரும்போது, எல்லா முடிச்சுக்களும் அவிழ்த்தால்தானே ஒரு முடிவுக்கு வரும். அப்படி முடிச்சவிழ்க்கும் போது, பாஸ்கர் கெட்டவன் என்று எல்லாருக்கும் தெரியும். பிறகு திருந்துவதையும் மிஸ்டர் திருச்செல்வம் காண்பிப்பார். இன்னும் ஒரு வருடத்திற்குள் கோலங்கள் முடிவுக்கு வந்துவிடும்.

saradhaa_sn
23rd December 2008, 02:01 PM
[tscii:41c2a3eec7] ‘தினசரி தீ’ பத்திரிகை அலுவலகம், எடிட்டர் இருக்கையில் ஆனந்தி....

‘சொல்லுங தோழர், என்ன விஷயம்’

‘எல்லாம் வழக்கம்போலதான் ஆனந்தி. இதோ இவர்கள் குடியிருந்து வரும் இவர்களுக்கு சொந்தமான வீடுகளை பலவந்தமாக வாங்கி விட, இவர்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள்’

‘அப்படியா?. யார் அவங்க?’

‘எல்லாம் நமக்கு வேண்டியவர்கள்தான். அந்த மேனகாவும் ஆதியும்தான்’

‘ஏன் தோழரே, அவங்களுக்கு வேறு வேலையே இல்லையா?’

‘எல்லாம் பணத்துக்காகத்தான் ஆனந்தி. பணம் சம்பாதிப்பது ஒன்றுதான் அவர்களின் வேலை, நியாயத்துக்காக போராடுவதுதான் நம்முடைய வேலை’

உடனே ஆனந்தி, வந்தவர்களைப்பார்த்து...
‘நீங்கள்ளாம் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கீங்க. ஆனால் நாங்க இதுல இறங்கிப் போராடணும்னா, நீங்க எல்லாரும் கடைசி வரை உறுதியா எங்க பக்கம் நிற்போம்னு உறுதிமொழி தரணும். அவங்க ஆள் வச்சு மிரட்டுவாங்க. பயந்துடக்கூடாது. அப்படி உறுதியாக நிற்பதாக உறுதியளித்தால் அதுக்கு மேலுள்ள விஷயங்களை நாங்க பார்த்துக்கிறோம்’.

‘கண்டிப்பா நாங்க உறுதியாக இருப்போம் மேடம்’ (ஆதியும் மேனகாவும் எங்களுக்கு தொந்தரவு கொடுக்கும்வரை. அப்புறம் போலீஸ், கோர்ட் என்று வரும்போது பல்டியடிச்சு உங்களை நடுத்தெருவில் விட்டுடுவோம்).

கைலாஷ் படிக்கும் பள்ளிக்கு வரும் ஆதியும் கிரியும், மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் அவனிடம் போய் பேசுகின்றனர். அவன் அணிந்திருக்கும் அந்தப்பள்ளியின் சீருடையும், அந்த சூழ்நிலையும் ஆதிக்கு கோபத்தை உண்டாக்குகிறது. அவனை அழைத்துப்போக முயற்சிகும்போது ஒரு பெண் வந்து...

‘யார் சார் நீங்க?. பையனை எங்கே அழைச்சிக்கிட்டுப் போறீங்க?.’

‘முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க'.

‘நான் கைலாஷுடைய கிளாஸ் டீச்சர்’.

‘அப்படியா?. நான்தான் கைலாஷுடைய அப்பா. என் பையனை அழைச்சிக்கிட்டுப்போக வந்திருக்கேன்’.

‘அப்ப்டீன்னா நீங்க பிரின்ஸிபால் கிட்டே பெர்மிஷன் வாங்கிட்டு அழைச்சிக்கிட்டுப்போங்க’.

பிரின்ஸிபால் அறை...

‘இங்க பாருங்க சார். பையனுடைய அம்மா இவனை இங்கே சேர்க்கும்போது அப்பா பெயரைக்குறிப்பிடவில்லை. அதோடு நீங்கதான் இவனோட அப்பா என்பதற்கு என்ன ஆகாரம்?’.

‘ஏன், சந்தேகமிருந்தால் பையனையே கேளுங்களேன். கைலாஷ், நான் யாரு?’

‘அப்பா’

‘வேறென்ன மேடம். அதான் சொல்லிட்டான்ல?’

‘இருந்தாலும் பையனோட அம்மா வந்து கேட்டால் நாங்க என்ன பதில் சொல்றது?’

‘அவனோட அப்பா வந்து அழச்சிக்கிட்டுப்போயிட்டார்னு சொல்லுங்க’

‘இதோ பாருங்க மேடம், இவரை யாருன்னு நினைச்சீங்க. இவரோட ஸ்டேட்டஸுக்கு இவர் இப்படியெல்லாம் உங்க கிட்டே வந்து கெஞ்சிக்கிட்டு இருக்கணும்னு வசியமில்லை. ‘ஆதித்யா பில்டர்ஸ்’ எம்.டி. மிஸ்ட்டர் ஆதி இவர்தான்’.

‘கிரி, என்னுடைய விஸிட்டின்க் கார்டு எடுத்துக்கொடு. மேடம், இதுல என்னோட போன் நம்பர், செல் நம்பரெல்லாம் இருக்கு. உங்களுக்கு எந்த பிரச்சினைன்னாலும் எனக்கு போன் பண்ணுங்க’.

‘நீங்க இவ்வளவு தூரம் சொல்றதாலே உங்க கூட அனுப்புறோம்’.

கோயில்…. கற்பகமும், சாரதாவும்…….

‘என்னக்கா ஒரு மாதிரியா இருக்கீங்க. அதான் பொண்ணுங்க ரென்டு பேரும் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாங்கல்ல?. அப்புறம் என்ன இன்னும் சோகம்?’

‘இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னுதான் ஒரே கவலையா இருக்கு. எல்லாம் முறைப்படி நடந்தால்தான் அவங்க வாழ்க்கை நிம்மதியா இருக்கும். ஆர்த்திக்கு அப்படியெல்லாம் முறையா நடக்காததால்தான் அவள் வாழ்க்கை இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு இருக்கு’.

‘என்னக்கா சொல்றீங்க?. எத்தனையோ ஜோடிங்க காதல் திருமணம், ரிஜிஸ்ட்டர் திருமணம்னு பண்ணிக்கிறாங்க. அவன்க்களெல்லாம் கஷ்ட்டப்படவா செய்றாங்க?. இல்லே முறைப்படி கல்யாணம் செஞ்சுக்கிட்டவங்க எல்லாரும் சந்தோஷமா வாழ்ந்துட்டாங்களா?. இவ்வளவு ஏன், அபிக்கும் அந்த பாஸ்கருக்கும் முறைப்படித்தானே கல்யாணம் பண்ணினோம்?. ஆவங்க வாழ்க்கை என்ன ஆச்சு?.’

‘இல்லே சாரதா, அந்த கல்யாணத்திலும் குறையிருந்தது. முறைப்படி அவளுடைய அப்பா அவளை தாரை வார்த்துக்கொடுக்கலை. அப்போது அவர் இல்லை. இப்போது இருக்கிறார். அதனால் முறைப்படி அவர்தான் தாரை வார்த்துக்கொடுக்கணும்.'

(ஈஸ்வரன் செத்துப்போயிருந்தால் என்ன செய்வீங்க ‘பழைய பஞ்சாங்க’ மேடம்?. உங்க பொண்ணுகளுக்கு கல்யாணமே செஞ்சு வைக்க மாட்டீங்களா?. வெளிநாட்டுக்குப்போய்விட்டு வரும் மகன், ‘அம்மா இவள்தான் என் மனைவி’ என்று அறிமுகப்படுத்தும் இந்தக்காலத்தில் இப்படி ஒரு 'பழையகற்கால' மனுஷி)

‘அக்கா, அப்பாவைப்பற்றிப்பேச்செடுத்தாலே பொண்ணுங்கள்ளாம் கோபத்தில் கிடந்து குதிப்பாங்க. இது எப்படி நடக்கும்?’

‘அவங்களை நான் சமாதானப்படுத்திக்கிறேன். என்னோட கவலையெல்லாம், எப்படி காஞ்சனா வீட்டுல போய் அவரைக்கூப்பிடுவது என்பதுதான்’.

‘வேணாம்க்கா, உங்களைப் பார்த்தாலே காஞ்சனாவுக்கும் ஆதிக்கும் கோபம் அதிகமாகும். வேணும்னா நான் போய்க்கூப்பிடுகிறேன்’ (அதைவிட சாரதா இப்படி சொல்லியிருக்கலாம். ‘அக்கா எத்தனைமுறைதான் நீங்க மட்டுமே செருப்படி வாங்குவீங்க? எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்களேன், இந்த முறை நான் வாங்கிக்கிறேன்’)

பள்ளிக்கூடம்…… இடியென முழங்குகிறாள் உஷா…

‘என்ன சொல்றீங்க மேடம், யாரோ வந்து நான்தான் பையனோட அப்பான்னு சொன்னா அவரோடு அனுப்பிடுவீங்களா?. இதுதான் நீங்க பிள்ளைங்களைப்பார்த்துக்கிற லட்சணமா?. ஈதுக்கு நீங்க என்ன சொல்லப்போறீங்க?’

‘நாங்க யாரோ ஒருத்தரோட அனுப்பவில்லை, அவர்தான் அப்பான்னு எல்லா விவரமும் சொன்னார், தவிர உங்க பையனும் அவரை அப்பான்னு கூப்பிட்டானே’.

‘இருக்கட்டும், அதுக்காக அவரோடு எப்படி அனுப்பலாம்?’.

‘ஆதி உங்க கணவர்தானே, அப்புறம் ஏன் இவ்வளவு பதட்டப்படுறீங்க?’

‘கணவர்தான், ஆனா இப்போ நாங்க பிரிஞ்சிட்டோம். நீங்க கைலாஷை அவரோடு அனுப்பியது தப்புதான். இருங்க வந்து வச்சிக்கிறேன்’.

உஷா போனதும், இதென்னடா புதுத்தலைவலி என்று பிரின்ஸிபால் தலையைப் பிடித்துக்கொள்கிறார்.

ஆதியின் வீடு…. ஆட்டோவில் வந்திறங்கும் உஷா, நேராக கேட்டைத்திறந்து நுழைய…

‘நில்லுங்கம்மா, யார் நீங்க? யாரைப்பார்க்கணும்?’

‘வேலைக்குப்புதுசா, அதான் தெரியலை’

வீட்டுக்குள் நுழையும் உஷா, வீடே இரண்டு படும்படி அழைக்கிறாள்… ‘ஆதி… ஆதி…’

ஆதியில்லை , காஞ்சனாவும் அஞ்சலியும் வெளியே வருகின்றனர்.. ‘எங்கே வந்தே…?'

‘உங்க பையன் ஆதி எங்கே?’

‘எதுக்கு?’

‘உங்க மகன் ஆதி, பள்ளிகூடத்துக்குப் போய் என் பையன் கைலாஷைத் தூக்கிக்கிட்டு வந்துட்டார். எங்கே அவர் கூப்பிடுங்க’.

‘இங்கே ஆதியும் இல்லே, கைலாஷும் இல்லே… போ.. போ’.

‘ஓகோ… உள்ளே ஒளிஞ்சிக்கிட்டுர்க்காரா?. நான் போய்ப்பார்க்கிறேன்’.

உஷா வீடு முழுக்கத்தேடியும் காணவில்லை.

‘இதோ பாருங்க இது கொஞ்சம்கூட நல்லாயில்லே. பள்ளிக்கூடம் போனவனைக் கடத்திக்கிட்டு வந்திட்டார்’

இப்போது அஞ்சலி, ‘என்ன நீங்க, முதல்ல ‘தூக்கிட்டு வந்திட்ட்ற்;னீங்க, இப்போ என்னடான்னா ‘கடத்திக்கிட்டு வந்திட்டார்’ங்கிறீங, எங்க அண்ணன் ஒண்னும் அவ்வளவு மோசமானவரில்லை’…… (தொடரில் இது நாலாவது அஞ்சலின்னு நினைக்கிறேன். இம்முறை கொஞ்சம் நல்ல அஞ்சலி. வந்த அஞ்சலிகளிலேயே திவ்யதர்ஷிணிதான் பயங்கரம். நாக்கு நுனியில் எப்போதும் தேளின் கொடுக்கு)

காஞ்சனா, ‘ அவன் தூக்கிக்கொண்டு வந்தால்கூட என்ன தப்பு?. அது அவனோட பையன்தானே. அப்புறம் என்ன?. கேஸ் கோர்ர்டில் இருக்கும்போது நீ மட்டும் குழந்தையை சொந்தம் கொண்டாட முடியாது’

‘அப்படியா, பார்த்த்குகிறேன்’ கோபமாக வெளியேறுகிறாள் உஷா.

இவர்களின் உரையாடல்களை (வாய்ச்சண்டையை…?) உள்ளே படுக்கையில் படுத்தவாறு ஈஸ்வரன் கேட்டுக்கொண்டிருக்கிறார். நல்லவேளை படுக்கையில் கிடைக்கிறார். இல்லாவிட்டால், ‘காஞ்சனா, நீ சொல்றது சரியில்லை’ என்று தர்ம நியாயம் பேச ஆரம்பித்து ஜிப்பா பைகள் நிறைய வாங்கிக்கட்டிக்கொள்வார்.
[/tscii:41c2a3eec7]

sudha india
23rd December 2008, 06:37 PM
Thanks saradha. Mudichugal update padithen.

Oru sandegam. Ellorum serndhu vanzhndhal kolangal mudiyum.

Anaal Aadhi (matrum palar) panna kolaigal ellathukkum dhandanai vendaama?

Menaka - Aadhi sandai veru irukkume (Menaka peyaril aadhi seidha akramangal pala unde?)

Eppadiyum innum 2 varushangalavadhu oodum. Adhu varai Thols-ukku bore adikkaamal irundhal sari.

aanaa
24th December 2008, 12:53 AM
:ty: saradhaa_sn

aanaa
24th December 2008, 12:54 AM
Eppadiyum innum 2 varushangalavadhu oodum.
:lol:

saradhaa_sn
25th December 2008, 01:49 PM
பாஸ்கர் நல்லவன் போல் நடிக்கிறான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே அவன் திருந்த வில்லை. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரிக்க எண்ணும் நாடகத்தின் ஒரு பகுதிதான் யோசிக்க வேண்டாம். கையில் நிலம் கிடைத்தவுடன் உங்களுக்கே தெரியும். நடிப்பில் வல்லவன் என்று] அதாவது கதை முடிவுக்கு வரும்போது, எல்லா முடிச்சுக்களும் அவிழ்த்தால்தானே ஒரு முடிவுக்கு வரும். அப்படி முடிச்சவிழ்க்கும் போது, பாஸ்கர் கெட்டவன் என்று எல்லாருக்கும் தெரியும். பிறகு திருந்துவதையும் மிஸ்டர் திருச்செல்வம் காண்பிப்பார். இன்னும் ஒரு வருடத்திற்குள் கோலங்கள் முடிவுக்கு வந்துவிடும்.

ரொம்ப நன்றி லதா....

நானும் அதையேதான் நினைத்தேன். பாஸ்கரும் அவன் அம்மாவும் திருந்துவது என்பது குதிரைக்கொம்புதான். அவனுடைய பழைய உருவம் சீக்கிரம் வெளிப்படும் (என்று நம்புவோம்)

எல்லா முடிச்சுகளும் அவிழ்ந்தால் மட்டுமே திருப்தியான முடிவாக இருக்கும்.

('கோலங்கள்' தொடரை நான் முடிக்கப்போவதாக நான் எப்போது சொன்னேன்' என்று திருச்செல்வம் கேட்டாலும் கேட்பார்),

saradhaa_sn
25th December 2008, 01:58 PM
[tscii:e3779d942a][/tscii:e3779d942a]செவ்வாய் …

பள்ளியிலிருந்து கைலாஷை அழைத்துக்கொண்டு போன ஆதி நேராக தன் வீட்டுக்கு அழைத்துப்போகவில்லை. கடற்கரைசாலையில் உள்ள தனது பங்களாவுக்கு அழைத்துச்செல்ல, கிரி அவனுக்கு சைக்கிளில் விளையாட்டுக்கண்பித்துக்கொண்டிருக்க, போனில் ‘பிஸ்ஸா’ ஆர்டர் செய்து மகனுக்குக் கொடுக்கிறான். (இந்த செக்மெண்ட் ரொம்ப நேரம் இழுத்துக்கொண்டு போகிறது).

ஆதியின் வீட்டில் கைலாஷைக்காணாத உஷா, ஆதி மற்றும் கிரிக்கு போன் செய்தபோது, இவள் நம்பரைப் பார்த்ததுமே அவர்கள் அட்டெண்ட் பண்ணாமல் தவிர்க்கின்றனர். அப்போது அங்கு வரும் தொல்காப்பியன், தன்னுடைய நம்பர் கிரிக்கு தெரியாதென்று கூறி அவனுக்கு போன் செய்ய கிரி எடுத்துப்பேசுகிறான். ஒரு வங்கி அதிகாரி போலப்பேசும் தொல்ஸிடம் கிரி பிடிகொடுக்காமல் பேசினாலும், அவன் பேசியபோது பின்னணியின் கடலின் அலைகள் சத்தம் கேட்டதாகச்சொல்ல, உஷாவுக்கு பொறிதட்டுகிறது. தன் மகன் கைலாஷ் நிச்சயம் ஆதியின் கடற்கரைச்சாலை கெஸ்ட் அவுஸில்தான் இருக்கவேண்டுமென்று எண்ணி, தொல்காப்பியனையும் அழைத்துக்கொண்டு புறப்பட

புதன்

ஆதியின் கடற்கரை பங்களாவுக்கு வந்திறங்கும் உஷாவை, வாட்ச்மேன் உள்ளே விடாமல் தடுக்க, அவனுடன் வாதத்தில் ஈடுபட்டிருக்கும்போது தொலைவில் கடற்கரையில், ஆதி, கிரி, கைலாஷ் மூவரையும் பார்த்த உஷா, அங்கூ ஓடிப்போகிறாள். கைலாஷை தன்னுடன் வரும்படி உஷா அழைக்க அவன் மறுக்கிறான். இதனிடையே ஆதிக்கும் உஷாவுக்கும் கடும் வாக்குவாதம். எக்காரணம் கொண்டும் பையனைத்தர முடியாது, உன்னால் முடிந்ததைப்பார்த்துக்கொள் என்று சவால் விடுகிறான். இடையில் தொல்ஸ் புகுந்து ஏதோ பேசப்போக, தன் குடும்ப விஷயத்தில் தொல்ஸ் தலையிடக்கூடாது என்று சொல்வதுடன், உஷாவுக்கும் தொல்ஸுக்கும் இடையிலான நட்பையும் மிகவும் கொச்சைப்படுத்திப்பேசுகிறான். இதனால் உஷா மேலும் கோபம் அடைந்து ஆதியுடன் சண்டையிட, சற்று தூரத்தில் நிற்கும் மீனவர் கூட்டம் தொல்காப்பியனுக்கு உதவியாக வந்து ஆதியுடன் சண்டையிட, அந்த சந்தடியில் கைலாஷை அழைத்துக்கொண்டு உஷாவும், தொல்ஸும் விரகின்றனர்.

மேனகாவின் வீடு... (ஆஃபீஸ்...?..) சரி ஏதோ ஒன்று..

தான் வாங்கியிருக்கும் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளெல்லாம் தீர்ந்து விட்டதென்றும், இன்றைக்கு ரெஜிஸ்ட்ரேஷன் முடிந்துவிடுவதாகவும் யாருடனோ மேனகா பேசிக்கொண்டிருக்கும்போது, ரெஜிஸ்ட்ரேஷனுக்காகச்சென்ற அவளது ஆட்கள் திரும்பி வருகின்றனர். பத்திரத்தை வாங்கிப்பார்க்கும் மேனகா, அதில் கையெழுத்தில்லாமல் இருப்பதைப்பார்த்து திடுக்கிடுகிறாள்...

‘என்ன ஆச்சு?. அவர்கள்ளாம் கையெழுத்துப்போடவில்லையா? ஏன், என்ன காரணம்?. மேலும் பணம் எதிர்பார்க்கிறார்களா?. இன்னைக்கு ரெஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சிடும்னு சொல்லி, கம்பெனிகளிடம் கொட்டேஷன் அனுப்பச்சொல்லிட்டேன். இப்போ ஏன் தர மறுக்கிறாங்க?. அன்னைக்கு என்னிடம் வந்து பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டுப்போனாங்களே, இப்போ என்ன ஆச்சு?. சொல்லுங்க’

‘மேடம் இப்போ இந்த பிரச்சினையில் தோழரும், பத்திரிகையாளர் ஆனந்தியும் இறங்கியிருக்காங்க’

‘என்னது தோழரும் ஆனந்தியுமா?. உங்களுக்கு கன்ஃபர்மா தெரியுமா?’

‘தெரியும் மேடம்’.

‘இதையெல்லாம் கரெக்டா தெரிஞ்சு வச்சுக்குங்க. ஆனா, ஒரு டீலை எப்படி சக்சஸ்ஃபுல்லா முடிக்கிறதுங்கிறதை தெரிஞ்சிக்காதீங்க. ஆல் அஃப் யூ கெட் அவுட். ரவி உடனே ஆதிக்கு போன் பண்ணி உடனே வரச்சொல்லுங்க’

காஞ்சனாவின் வீட்டுக்கு சாரதா ஆட்டோவில் வந்திறங்குகிறாள்....

எதிர்பார்த்தது போலவே, காஞ்சனா முகம் கொடுத்துப்பேசவில்லை. சாரதா வந்த விஷயம் பற்றிச்சொன்னதும் காஞ்சணாவின் கோபம் எல்லை மீற தாம் தூம் என்று குதிக்கிறாள். கூடவே அஞ்சலியும். இவர்களின் சண்டையை உள்ளே படுத்திருக்கும் ஈஸ்வரன் கேட்டுக்கொண்டிருக்கிறார். அபி, ஆனந்தியின் திருமனத்துக்கு அவர் வந்து தாரைவார்த்துக்கொடுக்க வேண்டுமென்று சாரதா சொன்னதும் காஞ்சனாவும் அஞ்சலியும் அவளைத்திட்டி விரட்ட...... போதுமான செருப்படி கிடைத்த திருப்தியில், நெருப்புக்குண்டத்துக்குள் ஐஸ் கட்டியைத் தேடிச்சென்ற சாரதா திரும்புகிறாள். (வேறு பெயர் வைத்திருந்தால் கொஞ்சமாவது புத்திசாலியாக இருந்திருப்பாளோ). இப்போதான் ‘நிலா அது வானத்து மேலே’ பார்த்தது போல் இருக்கிறது. பத்து வருடங்களுக்குள் குயிலி ரொம்பவே முதுமை அடைந்துவிட்டாரே

aanaa
25th December 2008, 10:25 PM
('கோலங்கள்' தொடரை நான் முடிக்கப்போவதாக நான் எப்போது சொன்னேன்' என்று திருச்செல்வம் கேட்டாலும் கேட்பார்),

:rotfl:

aanaa
25th December 2008, 10:28 PM
[tscii:7c9bad15f6]
இப்போதான் ‘நிலா அது வானத்து மேலே’ பார்த்தது போல் இருக்கிறது. பத்து வருடங்களுக்குள் குயிலி ரொம்பவே முதுமை அடைந்துவிட்டாரே
:ty:

காலங்கள் மிக விரைவாகவே ஓடுகின்றன

:roll: [/tscii:7c9bad15f6]

saradhaa_sn
26th December 2008, 12:56 PM
வரவர இந்தப்பழைய பஞ்சாங்கங்களின் தொல்லை தாங்க முடியலைப்பா. வேறு யார்..?. இந்த தொடரின் ஒரே உறுத்தல் நாயகி கற்பகம்தான் (சத்யபிரியா). பின் என்ன, திருமணம் என்பது இருமனம் ஒத்துப்போகும் ஒரு விஷயம்தான் என்பதை இவர்கள் எல்லாம் எப்போதுதான் உணரப்போகிறார்களோ. உலகம் முழுக்க தம்பதிகளாய், பிள்ளை குட்டிகளோடு சந்தோஷமாக வாழும் அத்தனை பேரும், தந்தையால் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டவர்கள்தானா?. அப்படியே இது சாஸ்திர சம்பிரதாயம் என்று சாக்குப்போக்கு சொன்னாலும், காலமெல்லாம் பெற்ற பிள்ளைகளை மறந்து, 'தந்தை' என்ற தன் கடமையை நிறைவேற்றத் தவறிய ஒருவர் எப்படி ஒழுங்கான தந்தையாவார்?. பையனின் அல்லது பெண்ணின் பிறப்புக்கு மட்டும் அவன் காரணமாயிருந்தால் போதுமா?. அப்படியென்றால், மிருகங்களும் அதைச்செய்கின்றனவே. தந்தையின் கடமையிலிருந்து தவறியவருக்கு, தன் பிள்ளைகளை தாரை வார்த்துக்கொடுக்க என்ன யோக்கியதை இருக்கிறது?. மூளைக்குப்பதிலாக களிமண்ணைத்தலையில் கொண்டுள்ள கற்பகம் போன்ற மரமண்டைகள் இருக்கும் வரை, ஏன் ஆணாதிக்கம் கொடிகட்டிப்பறக்காது?.

அபியின் வீடு.... கறபகம், சாரதா, அபி, ராஜேந்திரன்....

'என்ன காரியம் பண்ணியிருக்கீங்க சித்தி?. எதுக்காக அந்த காஞ்சனா வீட்டுக்குப்போனீங்க?. அந்த மனுஷன் நமக்கு செய்ததைல்யெல்லாம் மறந்துட்டீங்களா?'.

'அபி, சாரதாவாகப்போகலை, நான்தான் போய் அவரை கூப்பிடச்சொன்னேன்'.

'அதுதான் எதுக்கும்மா?'.

'கல்யாணத்தின்போது ஒரு தகப்பன் இருந்து தன் பெண்னை தாரை வார்த்துக்கொடுப்பதுதான் முறை'.

'ஏம்மா உனக்கு கொஞ்சமாவது இருக்கா?. அவர் உன்னைக் கைவிட்டு ஓடிப்போன நாள் முதல், சஷ்டியப்த பூர்த்தி விழா வரையில் அவரால் நமக்கு அவமானங்கள்தான் மிச்சம். அவர் வந்து தாரை வார்த்துக்கொடுக்கலின்னா என்ன கெட்டுப்போகப்போகிறது?. சஷ்டியப்த விழா ஏமாற்றத்துக்குப் பிறகுதான், அவர்கூட எந்த தொடர்பும் இல்லைன்னு சொன்னோமே. அப்புறம் ஏம்மா இதெல்லாம்?. நாம யாரும் அந்த வீட்டு வாசற்படிய மிதிக்கலாமா. எப்போ வருவோம் அவமானப்படுத்தலாம்ணு காத்திருப்பாங்க'

'எனக்கென்னமோ நீ சொல்றதெல்லாம் மனசுக்குமனசுக்கு சரியாப்படலை அபி. அவர் கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும்'.

'அக்கா, ஒருவேளை அவர் வருவதா இருந்தல் கூட அந்த காஞ்சனா வரவிடமாட்டாள். அந்த அளவுக்கு பேசிட்டாள்'

'தெரிந்ததுதானே. அவங்க அப்படி பேசலைன்னாத்தான் நாம ஆச்சரியப்படணும். தெரிஞ்சே போய் அவமானப்பட்டு வந்திருக்கீங்க சித்தி. இதுவே ஆனந்திக்கு தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவா. அவர் வந்து தாரை வார்த்துக் கொடுப்பதாயிருந்தால், ஆனந்தி இந்த கல்யாணத்துக்கே சம்மதிக்க மாட்டாள்'.

யார் என்ன சொல்லியும் கற்பகத்தின் வரட்டுப்பிடிவாதம் தளர்வதாயில்லை. அபி போனதும்....

'என்னக்கா, இப்படி தீர்மானமா இருக்கிற பொண்ணுங்களை எப்படி சம்மதிக்க வைக்கப்போறீங்க?.

'சாரதா, இவங்களை எப்படி சம்மதிக்க வைக்கிறதுன்னு எனக்கு தெரியும்' (வேறென்ன, 'நான் சொல்றபடி கேட்கலைன்னா என்னை உயிரோடு பார்க்க முடியாது'ன்னு டயலாக் விடுவீங்க. அதானே?. 1950லேருந்து இதைத்தானேடி சொல்றீங்க).

'சரி இவங்களை விடுங்க, அவரை அனுப்பி வைக்க அந்த காஞ்சனாவை எப்படி சரிக்கட்ட போறீங்க?'

'அதுக்கு நானே போய், கேட்கிற விதத்திலே கேட்கிறேன்'. (காஞ்சனா வீட்டில் நிறைய விளக்குமாறுகளும் செருப்புகளும் இருக்காம்)

காஞ்சனா வீட்டுக்கு ஆட்டோவில் வந்து இறங்குகிறாள் கற்பகம். வீட்டின் உள்ளே யாருமில்லை. ஈஸ்வரன் படுத்திருக்கும் அறைவாசலைல் போய் நின்று விசும்ப, அவரும் பார்த்து கண்கலங்க சில நிமிடங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன....

'ஏய், எங்கே வந்தே....?' காஞ்சனாவின் அதிரடிக்குரல் திடுக்கிட வைக்க, பார்த்தால் மாடியிலிருந்து காஞ்சனா இறங்கி வர, பின்னாலேயே அஞ்சலி மற்றும் மனோ.

'என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் வச்சிருக்கேன்'.

'அது ரெண்டுக்கும் கல்யாணம்தான் ஒரு கேடு' - காஞ்சனா
'உங்க பொண்ணுங்க கல்யானத்தை ஏன் இங்கே வந்து பேசுறீங்க?' - அஞ்சலி.

'சரி அதுக்கென்ன இப்போ?'
'பொண்ணுங்களை தாரை வார்த்துக்கொடுக்க இவரை நீங்க அனுப்பணும்'.
'எக்காரணம் கொண்டும் இவரை அங்கே அனுப்ப முடியாது'. (பலே)
'கல்யாணம் முடியும் வரை கூட இருக்க வேணாம். ஒரு அரை மணி நேரம் வந்து தாரை வார்த்துக்கொடுத்து விட்டு வந்து விடட்டும்'
'முதல்ல அப்படித்தான் சொல்வே, அப்புறம் ஒட்டகம் கூடாரத்துக்குள் நுழைந்த மாதிரி, இவரை அப்படியே இழுத்துக்குவீங்க. அதெல்லாம் முடியாது போ வெளியே' (சபாஷ்)
'அப்படி சொல்லாதீங்க, இவர் வந்து ஆசீர்வாதம் பண்ணினால்தான் என் பொண்ணுங்க வாழ்க்கை நல்லாயிருக்கும்'.
அந்தக்கடவுளே வந்து ஆசீர்வாதம் பண்ணினாலும் உன் பொண்ணுங்களோட வாழ்க்கை நல்லாயிருக்காது. போ வெளியே'. (அப்படி போடு)
'நான் உங்க கிட்டே மடிப்பிச்சை கேட்கிறதா நினைச்சுக்குங்க. அவரை தயவு செஞ்சு அனுப்புங்க'. (இப்போ என்ன கல்யாண மண்டபத்தில் மாப்பிள்ளையும் பெண்ணும் மணவறையிலா உட்கார்ந்து காத்துக்கிடிருக்காங்க..?)

'இப்போ வெளியே போறியா இல்லையா?'.

இதற்கு மேல் நின்று பயனில்லை என்றறிந்து (காஞ்சனா விளக்குமாறுக்கு வேலை கொடுக்கும் முன்) கற்பகம் வெளியே போகிறாள். அம்மா போவதையே பார்த்துக்கொண்டிருக்கும் மனோவிடம், காஞ்சனா... 'பார்த்தியா மனோ, உன் கிட்டே ஒரு வார்த்தைகூட பேசலை உங்கம்மா'

'நானும் கூடத்தான் பேசலை. இப்போ அவங்க என்ன கேட்டாங்க?. அக்காக்களின்ன் கல்யாணத்துக்கு அப்பா வந்து ஆசீர்வாதம் பண்ணனும்னுதானே சொன்னாங்க'.

தன் பர்ஸை மேஜைமேல் வைத்து மறந்துவிட்டதையறிந்து, கற்பகம் திரும்பி உள்ளே வரும்போது.... அவள் வருவதையறியாத காஞ்சனா மனோவிடம், 'என்ன அம்மா மேல பாசம் பொங்குதோ. மற்யுபடியும் போயிடுவே போலிருக்கு'.

'இல்லே அத்தே, சஷ்டியப்த பூர்த்தி விழாவில் உங்க பக்கம் நியாயம் இருக்குங்கிறதனால்தானே, விழாவுக்குப்போன அப்பாவை வழியில் மடக்கி, கடத்திக்கிட்டு வந்து உங்க கிட்டே ஒப்படைச்சேன்'

பர்ஸை எடுக்க வந்த கற்பகத்தின் காதுகளில் மனோ பேசியது விழ... 'டேய் மனோ' என்று கத்திக்கொண்டே போய் அவன் கன்னத்தில் 'பளார்'..

saradhaa_sn
26th December 2008, 05:34 PM
Thanks saradha. Mudichugal update padithen.

Oru sandegam. Ellorum serndhu vanzhndhal kolangal mudiyum.

Anaal Aadhi (matrum palar) panna kolaigal ellathukkum dhandanai vendaama?

Menaka - Aadhi sandai veru irukkume (Menaka peyaril aadhi seidha akramangal pala unde?)

Eppadiyum innum 2 varushangalavadhu oodum. Adhu varai Thols-ukku bore adikkaamal irundhal sari.
நன்றி சுதா...

நீங்கள் சொல்வது அனைத்தும் சரியானதே.... இது வரை ஆதி செய்திருக்கும் கொலைகள் எராளம். முன்னொருமுறை கொலையானவர்கள் பட்டியலை 'ஆனா' தயாரித்திருந்தார். அதில் பெரும்பாலோர் ஆதியால் கொல்லப்பட்டவர்களே (அப்பாவியான 'கொச்சின் ருத்ரா' உள்பட). ஆனால் மனித உரிமை ஆணையம் மூலமாக அபி போட்டிருந்த 'மஞ்சுளா கொலை வழக்கு' உண்மையில் கொலை அல்ல. அது அபியைக்கொல்ல செய்யப்பட்ட 'கொலை முயற்சி'தான். அதில் அபி சாகவில்லை. மஞ்சுளா செய்துகொண்டது தற்கொலை. சாப்பாட்டில் விஷம் கலந்திருக்கிறது என்பது தீர்க்கமாகத் தெரிந்திருக்கும்போது, அதை ஒரு பூனைக்குத் தின்னக் கொடுத்துக்கூட நிரூபித்திருக்கலாம். தான் அதை அள்ளி அள்ளித் தின்று செத்துக்காட்டிதான் நிரூபித்திருக்க வேண்டும் என்பதில்லை. அது மஞ்சுளாவின் முட்டாள்தனம்.

சங்கீதாவின் அப்பாவை பாஸ்கர் மலையிலிருந்து தள்ளி கொலை செய்ததற்கும் தண்டனை கிடைத்தாக வேண்டும். அதன் ஒரே சாட்சியான மேனேஜரையும், சங்கீதா தன் முட்டாள்தனத்தால் காட்டிக்கொடுத்து, பாஸ்கரால் நையப்புடைக்கபட்டு, அடிதாங்க முடியாத அவனும் எனக்கொன்றும் தெரியாதென்று சொல்லிவிட்டான்.

இப்போதிருந்து இவற்றுக்கு விளக்கமளிக்க துவங்கினாலும் கூட, முடிவதற்கு ஓராண்டாகும்.

aanaa
26th December 2008, 09:19 PM
கற்பகம்தான் (சத்யபிரியா)
வரவர இந்தப்பழைய பஞ்சாங்கங்களின் தொல்லை தாங்க முடியலைப்பா. வேறு யார்..?. இந்த தொடரின் ஒரே உறுத்தல் நாயகி

:ty:

அந்த முனகல் அழுக்கைகாகவே - ஒரு கற்பகம்தான் (சத்யபிரியா)

aanaa
26th December 2008, 09:20 PM
வரவர இந்தப்பழைய பஞ்சாங்கங்களின் தொல்லை தாங்க முடியலைப்பா. வேறு யார்..?. இந்த தொடரின் ஒரே உறுத்தல் நாயகி



இன்னும் ஒராண்டா

:huh:
:cry2:
:hammer:

aanaa
26th December 2008, 09:35 PM
நீங்கள் சொல்வது அனைத்தும் சரியானதே.... இது வரை ஆதி செய்திருக்கும் கொலைகள் எராளம். முன்னொருமுறை கொலையானவர்கள் பட்டியலை (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=1606&postdays=0&postorder=asc&start=330)'ஆனா' தயாரித்திருந்தார்.்.

saradhaa_sn
27th December 2008, 01:09 PM
ஆதி, மேனகாவின் வீட்டுக்கு வரும்போது மேனகா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது

'மேடம், வரச்சொல்லி போன் ப்ண்ணினீங்களாம்'

'என்ன நடந்ததுன்னு தெரியுமா ஆதி?'

'என்னாச்சு மேம்?'

'ஓ... யாராவது வந்து சொன்னால்தான் உங்களுக்கெல்லாம் தெரியும். தானாக எதையும் தெரிஞ்சுக்க மாட்டீங்க. அப்படித்தானே?'

'என்ன நடந்தது மேம்?'.

'அந்த அஞ்சுபேரும் இடத்தைத் தரமாட்டோம்னு மறுபடியும் பிரச்சினை பண்றாங்க. வாங்கின அட்வான்ஸை கூட திருப்பி கொடுத்த்ட்டாங்க. தெரியுமா?'

'அப்படியா?. ஏன் அன்னைக்கு தருவதாக ஒப்புக்கொண்டு எல்லா கண்டிஷனுக்கும் தலையாட்டிட்டுத்தானே அட்வான்ஸ் வாங்கிட்டு போனாங்க?. இதுக்குத்தான் மேம், அவங்களைக் காலி பண்ற விஷயத்தை நான் பாத்துக்கிறேன்னு அன்னைக்கே சொன்னேன்'.

'முதல்ல முழுசா எல்லாத்தையும் கேட்டுட்டு பேசுங்க ஆதி. இப்போ இந்த பிரச்சினையில் தோழரும், அந்த பத்திரிகைக்காரி ஆனந்தியும் தலையை நுழைச்சிருக்காங்க. அவங்க கொடுத்த தைரியத்துலதான், அந்த ஃப்ளாட் ஓனர்ஸ் இப்போ பிரச்சினை பண்றாங்க. இப்போ போய் நீங்க கடுமையா நடவடிக்கை எடுத்தால், நாளைக்கே 'மேனகாவின் அராஜகம்' அப்படீன்னு நியூஸ்பேப்பர்ல செய்தி வந்திடும். ஒரு பதினைந்து பேரோடு அந்த தோழர் கொடியைப்பிடிச்சிக்கிட்டு என் பங்களா எதிரே உண்ணா விரதம்னு உட்கார்ந்திடுவார். என்ன ஆதி இது அநியாயம்?. அவங்க இடத்தை அவங்க விற்கிறாங்க, அதை நான் வாங்குறேன்.. இதுல தோழருக்கும், ஆனந்திக்கும் என்ன வந்தது?. இப்படி எல்லாத்துக்கும் பிரச்சினை பண்ணினா நாடு எப்படி முன்னேறும்?'.

'இப்போ என்ன பண்ணலாம் மேம்?'

'இதை வெளியில் தெரியாமல் ரகசியமா காதும் காதும் வச்சாப்புல முடிக்கணும். நாம நேரடியா இன்வால்வ் ஆகக்கூடாது'.

இப்போது கிரி, முன்னால் வந்து, 'மேடம் எனக்கு ஒரு நல்ல ஐடியா தோணுது'.

'ஏய் கிரி, நீ கோமாளித்தனமா எதாவது ஐடியா கொடுத்தால், அப்புறம் என் கண் முன்னாடியே முழிக்கக்கூடாது'.

'அப்படீன்னா நான் சொல்லலை மேம்'.

'சரி, சொல்லு மேன்'.

'இந்த தொகுதி எம்.எல்.ஏ. திருவேங்கடம் சார், நம்ம பாஸோட சித்தப்பாதான். இதை அவ்ர்மூலமா டீல் பண்ணினோம்னா, சுலபமா முடிச்சிடலாம்'.

மேனகா முகத்தில் புன்னகை, 'பரவாயில்லை மேன், இதுவரை நீ கொடுத்த ஐடியாவிலேயே இதுதான் உருப்படியானது'.

'அப்பாடா, நான் தப்பிச்சேன் மேம்'.

ஆதிக்கும் இந்த ஐடியா பிடித்துப்போக, 'குட் கிரி, மேம் இந்த விஷயத்தை திருவேங்கடத்துகிட்டே விட்டுட்டோமானால், இது இரண்டு அரசியல்வாதிகளின் பிரச்சினையாகி விடும். நம் பெயர் வெளியில் வராது'.

'அப்போ அந்த திருவேங்கடத்தை உடனே என்னை வந்து பார்க்கச்சொல்லுங்க ஆதி'

'ஓக்கே மேம்'.

saradhaa_sn
27th December 2008, 02:09 PM
அபியின் வீடு.....

காஞ்சனாவால் பட்ட அவமானத்தை சின்னதாக்கி விட்ட தன் மகன் மனோவின் சதி வேலையால் ஏற்பட்ட அதிர்ச்சியியோடு உள்ளே நுழையும் கற்பகத்தைப் பார்க்கும் அபி, 'என்னம்மா, ஒரு மாதிரியா இருக்கே, எங்கே போயிட்டு வரே?. என்ன நடந்தது?' அபியின் கேளிவையைத்தொடர்ந்து, ஆனந்தியும் ராஜேந்திரனும் ஆளுக்கொரு அறையிலிருந்து வெளிப்பட...

'சொல்றதுக்கு என்னடி இருக்கு?. வர வர யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாதுன்னே தெரியலை'

'அம்மா, நீ என்ன சொல்றே?. இப்போ எங்கே போயிட்டு வரே?'

'அந்த வீட்டுக்குத்தான் போயிட்டு வர்ரேன்'.

'அந்த வீட்டுக்குன்னா' யோசிக்கும் அபி, சட்டென கேட்கிறாள் 'அந்த ஆதி வீட்டுக்கா?. நீ ஏம்மா அங்கே போனே?. போக வேண்டாம்னு நான்தான் அப்பவே சொன்னேனே. தாரை வார்த்துக்கொடுக்க அவரைக் கேட்கப் போயிருந்தியாக்கும்'.

'ஆமா அபி, அங்கே போனதாலதான் கேட்கக்கூடாததையெல்லாம் கேட்க வேண்டியதா போச்சு. அய்யோ நான் அதைக்கேட்காமலே இருந்திருக்கக்கூடாதா?'.

'அம்மா நீ சொல்றது எதுவுமே புரியலை'.

'சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்கு உங்க அப்பா வராமல் ஏமாத்திட்டாருன்னுதானே இவ்வளவு நாளும் நாம எல்லோரும் நினைச்சிக்கிட்டிருந்தோம். ஆனால் நடந்தது என்ன தெரியுமா?. விழாவுக்கு வந்தவரை இந்த மனோ பயல்தான் ஆட்களை வச்சு கடத்திக் கொண்டு போய் அந்த காஞ்சனா லிட்டே ஒப்படைச்சிருக்கான்'.

மூவருக்கும் அதிர்ச்சி.... என்னது எல்லாம் மணோவுடைய வேலையா?.

'அம்மா, நம்ம மனோ அப்படியெல்லாம் செய்யக்கூடியவன் இல்லேம்மா. விழாவுக்கு வரப்பிடிக்கலைன்னு ஒதுங்கி இருந்திருப்பானே தவிர கடத்திக்கிட்டெல்லாம் போகக்கூடியவன் அல்ல. யாரோ சொன்னதைக்கேட்டு இப்படியெல்லாம் முடிவு பண்னிடாதேம்மா'.

'வேறு யாரோ சொல்லியிருந்தால், உங்களை மாதிரி நானும் நம்பியிருக்க மாட்டேண்டி. அவன் வாயாலேயே அந்த காஞ்சனா கிட்டே சொல்லிக்கிட்டிருந்ததை நானே கேட்டுட்டேண்டி'. அதிரிச்சியில் ஆனந்தி கையால் வாயைப்பொத்திக்கொள்ள, அபி திடுக்கிடுகிறாள். சோர்ந்து விழப்போன அம்மாவைத் தாங்கிப்பிடித்து நாற்காலியில் உட்கார வைக்கும் நேரம்.... ஆனந்தி 'அக்கா அங்கே யாரு வந்திருக்கான்னு பாரு' என்று சொல்ல, திரும்பிபார்த்தால் அங்கே மனோ நிற்க, அபிக்கும், கற்பகத்துக்கும் அதிர்ச்சியும் கோபமும் ஒருசேரப் பொங்கி வர.... கற்பகம்தான் முதலில் பாய்கிறாள்..

'டேய், யாருடா நீ?. எங்கே வந்தே?. செய்றதெல்லாம் செஞ்சிட்டு எப்படிடா உன்னால இந்த வீட்டுக்குள்ள நுழைய முடியுது?'

'அம்மா நீ தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கே, நான் அத்தைகிட்டே உனக்கு சப்போர்ட்டாத்தான் பேசினேன். கல்யாணத்துக்கு அப்பாவை அரை மணிநேரம் அனுப்பினால் என்ன தப்புன்னு கேட்டுட்டுத்தான் வர்ரேன்'

உடனே ஆனந்தி, 'இன்னைக்கு நடந்ததை விடுடா, அன்னைக்கு சஷ்டியப்த பூர்த்தியன்னைக்கு என்ன காரியம்டா பண்ணியிருக்கே?'

'அது நடந்து முடிஞ்ச கதைக்கா' என்று மனோ சொன்னதும் ஆனந்தி அவன் மீது பாய்ந்து, அவன் கன்னத்தில் பளார் பளாரென்று அடித்து, 'எதுடா முடிஞ்ச கதை?. அன்னைக்கு மண்டபத்துல ஊரார் முன்னாடி அவமானம் தாங்காமல் நாங்க அத்தனை பேரும் தலை குனிஞ்சு நின்னது உனக்கு தெரியுமாடா?. குடும்பத்தோட ஒட்டுமொத்த மானத்தையும் வாங்கிட்டியேடா பாவி'.

'அக்கா, சஷ்டியப்த பூர்த்தி விழாவுல காஞ்சனா அத்தை பக்கம் நியாயம் இருந்ததால்தான் அப்படி செஞ்சேன்'.

இப்போ கற்பகம், 'டேய் பேசாத்டா. அன்னைக்கு சஷ்டியப்த விழா மட்டுமில்லேடா. சபையில கூடியிருந்த எல்லோர் முன்னாலும் உங்களை தன்னுடைய பிள்ளைங்கன்னு அறிவிக்க இருந்தாருடா. எல்லாத்தையும் கெடுத்திட்டியேடா பாவி'.

அபி கோபத்துடன், 'எங்களையெல்லாம் விடுடா. உன்னைப்பெத்த தாய்க்கு நீ என்ன பண்ணிருக்கே தெரியுமா?. அந்த சபையில் அந்த காஞ்சனா என்ன சொன்னா தெரியுமா? நம்ம அம்மா அவள் புருஷனோட தொடுப்பாம், நாமெல்லாம் தப்பான வழியில் பிறந்தவங்களாம். சொல்லுடா நாம தப்பான வழியில பொறந்தவங்களா?. பெத்த தாய்க்கு ரொம்ப பெருமை தேடித் தந்துட்டேடா. இதுக்கெல்லாம் காரணம் நீதான்னு தெரியாம, அன்னைக்கு சஷ்டியப்த விழா முடிஞ்ச பிறகு வீட்டுக்கு வந்த அந்த மனுஷனை கழுத்தைப்பிடிச்சு வெளியே தள்ளினேன். தெரியுமாடா?. அப்போ அவர் மனசு என்ன படு பட்டிருக்கும்?''

'அக்கா, நான் சொல்றதைக்கேளுக்கா..'

'டேய், இனிமேலும் எங்களை அக்கா அக்கான்னு கூப்பிடாதே. நாங்க உனக்கு அக்காவும் இல்லே நீ எங்களுக்கு தம்பியும் இல்லே போடா வெளியே'

இனிமேலும் தன்னுடைய எந்தப்பேச்சும் அங்கு எடுபடாது என்று அறியும் மனோ அவ்விடத்தை விட்டு வெளியேற....

'நீ எதுக்கும் கவலைப்படாதேம்மா, உனக்கு நாங்க இருக்கோம்' என்று அபியும் ஆனந்தியும் அம்மாவை அணைத்துக்கொள்ள......

aanaa
27th December 2008, 10:23 PM
அபியின் வீடு..... ......

:ty:


மனோ ஏன் அப்படிச் செய்தான்??

Shakthiprabha.
27th December 2008, 10:27 PM
Eppadiyum innum 2 varushangalavadhu oodum. Adhu varai Thols-ukku bore adikkaamal irundhal sari.
எனக்கொன்றும் தெரியாதென்று சொல்லிவிட்டான்.

இப்போதிருந்து இவற்றுக்கு விளக்கமளிக்க துவங்கினாலும் கூட, முடிவதற்கு ஓராண்டாகும்.

:shock: :yessir:

romba bore adichuthu. Athaan vanthu saratha ezhuthinatha padichen. :oops:

sorry.

varusha kanakka orE serial-ai izhu izhu endru izhuthum athai abhimaanathoda paarkum neengaL elaam romba porumainga :oops: :yessir:

summa joke thaan.

yaarum kochukatheenga :shaking: :thumbsup:

have fun guys. aana onnu serial parka bore adikaravanga inga padichudalaam. saradha ezhutharathu nalla irukku (just read couple of posts now :) )

aanaa
27th December 2008, 10:35 PM
romba bore adichuthu. Athaan vanthu saratha ezhuthinatha padichen. :oops:
:) )
ரொம்ப நாளா ஆளையே காணோம்
:roll:

Shakthiprabha.
27th December 2008, 10:38 PM
romba bore adichuthu. Athaan vanthu saratha ezhuthinatha padichen. :oops:
:) )
ரொம்ப நாளா ஆளையே காணோம்
:roll:

:oops:

aana,

naan parkum rende rendu nigazhchi

maanada mayilada (80 percent parka matten, 20 percent thonichunna parpen)

neeya naana (ithum 80 percent parka matten 20 percent mudinja parpen)

:oops:

I love to watch good tamizh / hindi / english movies(sometimes reruns or bad movies too)

serials edhum ishtapattu parpathillai :oops:

thats why I am alienated here. :oops:

merry xmas and very happy new year to you

:)

//end dign.

saradhaa_sn
30th December 2008, 11:49 AM
நன்றி ஆனா மற்றும் ஷக்திப்ரபா....

சோகமே உருவாக உட்கார்ந்திருக்கும் ஆதியைப் பார்க்கும் காஞ்சனா, 'என்னடா ஆதி? என்ன ஆச்சு?. கைலாஷ் எங்கே?' என்று கேட்க, 'கைலாஷ் உஷாகிட்டேதாம்மா இருக்கான்'

'என்னது?. உஷா கிட்டே இருக்கானா?. அவள்தான் கைலாஷைத்தேடி இங்கே வந்தாளேடா?. என்ன நடந்தது?'

'நான் கைலாஷைத் தூக்கிக்கிட்டு நம்ம பீச் பங்களாவுக்குப் போயிட்டேன். அந்த இடத்தில்தான் கைலாஷ் இருக்கான்கிறதை எப்படியோ தெரிஞ்சிகிட்டு உஷாவும் தொல்காப்பியனும் வந்து அவனைத் தூக்கிக்கிட்டுப் போயிட்டாங்க'.

'என்னடா சொல்றே, அவங்க தூக்கிக்கிட்டுப் போற வரைக்கும் என்ன பண்ணிக்கிட்டிருந்தே?'.

'அம்மா, அந்த இடத்துல இருந்த மீனவர்கள் எல்லோரும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க. அவங்க எல்லாரும் அந்த தொல்காப்பியனுக்கு தெரிஞ்சவங்க. அதனால் அவனுக்கு சப்போர்ட்டா என்னோடு சண்டைபோட ஆரம்பிச்சுட்டாங்க. நானும் கிரியும் மாத்திரம் எத்தனை பேரை சமாளிக்க முடியும் சொல்லுங்க. அந்த நேரத்துல மட்டும் என்னிடம் துப்பாக்கி இருந்தால் அத்தனை பேரையும் சுட்டுத்தள்ளியிருப்பேன்'.

இப்போது ரேகா, 'அவங்க எல்லோரையும் ஏன் சுடுறீங்க?. நீங்க சுட வேண்டியது உஷாவைத்தான். அதுவும் இப்போ இல்லே. அவளை நீங்க சட்டப்படி டைவர்ஸ் பண்ணிட்டு, அவளுக்கு இருக்கிற சப்போர்ட்டையெல்லாம் கட் பண்ணி அவளைத்தனியாளாக்கிட்டு அப்புறம் சுட்டுத்தள்ளூங்க'.

'கைலாஷைத்தூக்கிக்கிட்டு நீ நேரா நம்ம வீட்டுக்கு வர வேண்டியதுதானேடா?. அப்படி வந்திருந்தால், உஷா இங்கே வந்து தூக்கிக்கிட்டுப் போயிருக்க முடியுமா?. அந்த கற்பகம் மாதிரி உஷாவையும் வாசலிலேயே நிற்கவச்சு அவமானப்படுத்தி அனுப்பியிருப்பேனே'.

'கற்பகமா? அவ எதுக்கு இங்கே வந்தா?'

'அவ பொண்ணுங்க அபிக்கும் ஆனந்திக்கும் கல்யாணமாம். தாரை வார்த்துக்கொடுக்க உங்க அப்பா வேணுமாம். நான் 'வெளியே போ'ன்னு துரத்தியடிச்சிட்டேன். இனிமேல் அவர் இந்த வீட்டைவிட்டுப்போறதா இருந்தால் அது அவருடைய இறுதி யாத்திரையாகத்தான் இருக்கும்'.

அவர்கள் அங்கிருந்து நகர்ந்ததும், ஆதி தன் மனதுக்குள், "ஓ அபிக்கும் ஆனந்திக்கும் கல்யாணமா?. எப்படி நடக்குதுன்னு பார்க்கிறேன்'.

(ஆனந்தி மீது அடுத்த ஆக்ஸிடெண்ட்டுக்கு திட்டமா?)

மேனகாவின் எதிரில் திருவேங்கடம் எம்.எல்.ஏ. அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே ஆதி.

திருவேங்கடத்தின் வழக்கமான அரசியல் பீடிகை ஆதிக்கும் மேனகாவுக்கும் எரிச்சலைத் தருகிறது. தேவைக்குமேல் ஒரு வார்த்தை பேச விரும்பாதவள் மேனகா. ஆனால் தேவையில்லாததைப் பேசுவதையே வழக்கமாகக்கொண்ட திருவேங்கடம். என்ன செய்வது இவரது தயவு இப்போ தேவையிருக்கே என்று பல்லைக்கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்கிறாள். ஆனாலும், 'மிஸ்ட்டர் திருவேங்கடம், இப்போ பேச வேண்டிய விஷயத்தை மட்டும் பேசுங்க' என்று அவ்வப்போது தடை போட்டாலும், அவரது அரசியல் நாக்கு நிற்கவில்லை. அவர் ஆப்பிள் ஜூஸ் குடிப்பது பற்றிய விளக்கத்திலிருந்து ஆரம்பித்து, ஒரு வழியாக விஷயத்துக்கு வருகிறார்...

'முன்னரே என்கிட்டே வந்திருந்தீங்கன்னா ரொம்ப சீப்பான ரேட்ல முடிச்சிருக்கலாம். ஆனா இப்போ கொஞ்சம் கூடுதலா ஆகும்'.

இப்போ ஆதி, 'என்ன, எங்க கிட்டேயேவா?'

'ஐயோ ஆதி, இதுல பத்து பைசா கூட எனக்கு கிடையாது. இந்த விஷயத்தில் ஏகப்பட்ட மேலிடங்களைக் கொடுத்து கவனிக்க வேண்டியிருக்கு. அதுக்காகத்தான்'. (நம்ம நாட்டுல ஏகப்பட்ட மந்திரவாதிகள் இருக்காங்களாம். என்ன பயன்?. லஞ்சம் வாங்கும் பணத்தை, வாங்கிய கொஞ்ச நேரத்திலேயே வெறும் வெள்ளைத்தாளாக மாற்றக்கூடிய மந்திரத்தை எந்த மந்திரவாதியாவது கண்டு பிடித்தானா?)

மேனகா, 'சரி மிஸ்ட்டர் திருவேங்கடம். எவ்வளவு பணம் எதிபார்க்கிறீங்க?'

'ஒரு ஐம்பது லட்சம்'... அவர் கேட்டதும் ஆதிக்கு அதிர்ச்சி. ஆனால் மேனகா சம்மதிக்கிறாள்.

'அப்போ கையோடு அட்வான்ஸும் கொடுத்திட்டா வேலைகளை ஆரம்பிச்சுடலாம்'

'சரி, வாக்கிக்குங்க' என்றவள் ரவியிடம் செக் புக் வாங்கி எழுதப்போகும் நேரம்...

'ஐயய்யோ, 'செக்'கெல்லாம் எதுக்குங்க, நாம என்ன அஃபீஷியல் டீலிங்கா பண்ணப்போறோம்?. அண்டர்கிரவுண்ட் வேலைதானே. அதனாலே கேஷா கொடுத்திடுங்க'. (இந்த அரசியல்வாதிகள் எந்த தடயத்திலும் மாட்டிக்க மாட்டாங்களே).

'ஓகே... ரவி, கேஷ் ரெடி பண்ணுங்க'

சில நிமிடங்களில் 'சூட்கேஸ்' நிறையப்பணம் திருவேங்கடத்தின் முன் வைக்கப்பட, அவருக்கு வாயெல்லாம் பல். 'சரி, விஷயம் முடிஞ்சாச்சுன்னு வச்சிக்குங்க. வரட்டுமா?' என்று சூட்கேஸுடன் அவர் கிளம்பிப்போக, ஆதியிடம் மேனகா, 'என்ன ஆதி... நமபலாமா'
'யெஸ் மேம்'.

இரவு சாப்பாட்டுக்காக உஷா அவள் அப்பா, கைலாஷ் ஆகியோர் உட்கார்ந்திருக்க, அம்மா பரிமாறுகிறாள். 'எனக்கு இட்லி வேன்டாம். பீஸாதான் வேண்டும்' என்று கைலாஷ் அடம் பிடிக்கிறான். அவர்களுக்கு ஆச்சரியம், இவனுக்கு பீஸாவெல்லாம் எப்படிதெரியும் என்று. 'இப்போது இட்லி சாப்பிடு, நாளைக்கு பீஸா வாங்கித்தாரேன்' என்று சொல்லியும் அவன் சமாதானமாகவில்லை. அவனுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஆதியைப்போலவே இருப்பதைக்கண்டு உஷா திடுக்கிடுகிறாள். அவளுக்கு ஆதியோடு வாழ்ந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. ஆதியைப்போலவே, சாப்பாட்டு பிளேட்டைத் தள்ளிவிடுவது, அவனைப்போலவே பிளேட்டைத் தரையில் தூக்கியடிப்பது, அவனைப்போலவே, கோபித்துக்கொண்டு சோபாவில் போய் உட்காருவது என்று, ஒவ்வொரு நடவடிக்கையும் அப்படியே ஆதியை உரித்து வைத்தது போலிருக்க, உஷாவுக்கு அதிர்ச்சியும் கலக்கமும் ஏற்படுகிறது. இப்பவே இப்படீன்னா.. போகப்போக இவனை எப்படி சமாளிப்பது?.

வாசலில் பஸ்ஸர் ஒலிக்க, உஷா திறந்துபார்க்க, அங்கே ஒருவன் பார்சலோடு நிற்பது கண்டு அவளுக்கு குழப்பம்.

'யார் நீங்க?. என்ன வேணும்?'.

'பீஸா ஆர்டர் பண்னியிருந்தீங்க. அதான் சப்ளை பண்ண வந்திருக்கேன்'.

'நாங்க யாரும் ஆர்டர் பண்னலையேப்பா'

அப்போது கைலாஷ், 'நான்தான் ஆர்டர் பண்ணினேன்' என்று சொல்லி டெலிபோன் நம்பர் சொல்ல, வந்தவன் 'ஆமாங்க இது எங்க ஓட்டல் நம்பர்தான்' என்றதும் இவர்களுக்கு அதிர்ச்சி, இதெல்லாம் இந்த சின்னப் பையனுக்கு எப்படித் தெரியுமென்று.

'பீஸா வேணாம். ஆர்டரை கேன்ஸல் பண்ணிடுங்க'.
'ஸாரிமேடம், ஆர்டர் பண்ணி தயார் பண்ணியதை கேன்சல் பண்ன முடியாது'.
'சரி, எவ்வளவுப்பா'.
'420 ரூபாய்ங்க'.

உஷா பணத்தைக்கொடுத்ததும், கைலாஷ் பீஸ்வை வாங்கிக் கொண்டுபோய் சாப்பிடத்துவங்குகிறான்.

உஷாவுக்கோ கவலையும் வேதனையும்.... 'ஒரே நாளில் பையனைக் குட்டிச்சுவராக்கிட்டான் அந்த ஆதி' என்று பொருமுகிறாள்.

Arthi
30th December 2008, 04:39 PM
Discussion about the serial is very less,almost nil because, hubbers are very much interested in reading Saradha madam's posts rather than sitting before TV.

The other reason could be, instead of Thiru's directions, here saradha madam's writting is more witty and enjoyable and most importantly without any commercial break, we get to see Kolangal here in the hub.

Many of our hubbers are due to various reasons unable to continue watching this serial because of which the disccussion is very less i believe

May fans for Saradha madam's writing are living in abroad where they are not able to view this serial on TV

Keep up your good wotk saradha madam :clap:

Arthi
30th December 2008, 04:53 PM
மேனகாவின் வீடு... (ஆஃபீஸ்...?..) சரி ஏதோ ஒன்று..


:rotfl: :rotfl:



அபி, ஆனந்தியின் திருமனத்துக்கு அவர் வந்து தாரைவார்த்துக்கொடுக்க வேண்டுமென்று சாரதா சொன்னதும் காஞ்சனாவும் அஞ்சலியும் அவளைத்திட்டி விரட்ட...... போதுமான செருப்படி கிடைத்த திருப்தியில், நெருப்புக்குண்டத்துக்குள் ஐஸ் கட்டியைத் தேடிச்சென்ற சாரதா திரும்புகிறாள்.

:rotfl: :rotfl:

Arthi
30th December 2008, 04:56 PM
[tscii:656b096c74]


இப்போதான் ‘நிலா அது வானத்து மேலே’ பார்த்தது போல் இருக்கிறது. பத்து வருடங்களுக்குள் குயிலி ரொம்பவே முதுமை அடைந்துவிட்டாரே
oru vElai serial-ili nadichE vayasagiduchO... becoz she almost cries in all the serials....

krishna paramaathma sOnna maadiri... azhudhu azhudhu kuyili vayasanavangalaagitaangalO :roll: [/tscii:656b096c74]

Arthi
30th December 2008, 05:04 PM
வரவர இந்தப்பழைய பஞ்சாங்கங்களின் தொல்லை தாங்க முடியலைப்பா. வேறு யார்..?. இந்த தொடரின் ஒரே உறுத்தல் நாயகி கற்பகம்தான் (சத்யபிரியா). பின் என்ன, திருமணம் என்பது இருமனம் ஒத்துப்போகும் ஒரு விஷயம்தான் என்பதை இவர்கள் எல்லாம் எப்போதுதான் உணரப்போகிறார்களோ. உலகம் முழுக்க தம்பதிகளாய், பிள்ளை குட்டிகளோடு சந்தோஷமாக வாழும் அத்தனை பேரும், தந்தையால் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டவர்கள்தானா?. அப்படியே இது சாஸ்திர சம்பிரதாயம் என்று சாக்குப்போக்கு சொன்னாலும், காலமெல்லாம் பெற்ற பிள்ளைகளை மறந்து, 'தந்தை' என்ற தன் கடமையை நிறைவேற்றத் தவறிய ஒருவர் எப்படி ஒழுங்கான தந்தையாவார்?. பையனின் அல்லது பெண்ணின் பிறப்புக்கு மட்டும் அவன் காரணமாயிருந்தால் போதுமா?. அப்படியென்றால், மிருகங்களும் அதைச்செய்கின்றனவே. தந்தையின் கடமையிலிருந்து தவறியவருக்கு, தன் பிள்ளைகளை தாரை வார்த்துக்கொடுக்க என்ன யோக்கியதை இருக்கிறது?. மூளைக்குப்பதிலாக களிமண்ணைத்தலையில் கொண்டுள்ள கற்பகம் போன்ற மரமண்டைகள் இருக்கும் வரை, ஏன் ஆணாதிக்கம் கொடிகட்டிப்பறக்காது?.

அபியின் வீடு.... கறபகம், சாரதா, அபி, ராஜேந்திரன்....

'என்ன காரியம் பண்ணியிருக்கீங்க சித்தி?. எதுக்காக அந்த காஞ்சனா வீட்டுக்குப்போனீங்க?. அந்த மனுஷன் நமக்கு செய்ததைல்யெல்லாம் மறந்துட்டீங்களா?'.

'அபி, சாரதாவாகப்போகலை, நான்தான் போய் அவரை கூப்பிடச்சொன்னேன்'.

'அதுதான் எதுக்கும்மா?'.

'கல்யாணத்தின்போது ஒரு தகப்பன் இருந்து தன் பெண்னை தாரை வார்த்துக்கொடுப்பதுதான் முறை'.

'ஏம்மா உனக்கு கொஞ்சமாவது இருக்கா?. அவர் உன்னைக் கைவிட்டு ஓடிப்போன நாள் முதல், சஷ்டியப்த பூர்த்தி விழா வரையில் அவரால் நமக்கு அவமானங்கள்தான் மிச்சம். அவர் வந்து தாரை வார்த்துக்கொடுக்கலின்னா என்ன கெட்டுப்போகப்போகிறது?. சஷ்டியப்த விழா ஏமாற்றத்துக்குப் பிறகுதான், அவர்கூட எந்த தொடர்பும் இல்லைன்னு சொன்னோமே. அப்புறம் ஏம்மா இதெல்லாம்?. நாம யாரும் அந்த வீட்டு வாசற்படிய மிதிக்கலாமா. எப்போ வருவோம் அவமானப்படுத்தலாம்ணு காத்திருப்பாங்க'

'எனக்கென்னமோ நீ சொல்றதெல்லாம் மனசுக்குமனசுக்கு சரியாப்படலை அபி. அவர் கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும்'.

'அக்கா, ஒருவேளை அவர் வருவதா இருந்தல் கூட அந்த காஞ்சனா வரவிடமாட்டாள். அந்த அளவுக்கு பேசிட்டாள்'

'தெரிந்ததுதானே. அவங்க அப்படி பேசலைன்னாத்தான் நாம ஆச்சரியப்படணும். தெரிஞ்சே போய் அவமானப்பட்டு வந்திருக்கீங்க சித்தி. இதுவே ஆனந்திக்கு தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவா. அவர் வந்து தாரை வார்த்துக் கொடுப்பதாயிருந்தால், ஆனந்தி இந்த கல்யாணத்துக்கே சம்மதிக்க மாட்டாள்'.

யார் என்ன சொல்லியும் கற்பகத்தின் வரட்டுப்பிடிவாதம் தளர்வதாயில்லை. அபி போனதும்....

'என்னக்கா, இப்படி தீர்மானமா இருக்கிற பொண்ணுங்களை எப்படி சம்மதிக்க வைக்கப்போறீங்க?.

'சாரதா, இவங்களை எப்படி சம்மதிக்க வைக்கிறதுன்னு எனக்கு தெரியும்' (வேறென்ன, 'நான் சொல்றபடி கேட்கலைன்னா என்னை உயிரோடு பார்க்க முடியாது'ன்னு டயலாக் விடுவீங்க. அதானே?. 1950லேருந்து இதைத்தானேடி சொல்றீங்க).

'சரி இவங்களை விடுங்க, அவரை அனுப்பி வைக்க அந்த காஞ்சனாவை எப்படி சரிக்கட்ட போறீங்க?'

'அதுக்கு நானே போய், கேட்கிற விதத்திலே கேட்கிறேன்'. (காஞ்சனா வீட்டில் நிறைய விளக்குமாறுகளும் செருப்புகளும் இருக்காம்)

காஞ்சனா வீட்டுக்கு ஆட்டோவில் வந்து இறங்குகிறாள் கற்பகம். வீட்டின் உள்ளே யாருமில்லை. ஈஸ்வரன் படுத்திருக்கும் அறைவாசலைல் போய் நின்று விசும்ப, அவரும் பார்த்து கண்கலங்க சில நிமிடங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன....

'ஏய், எங்கே வந்தே....?' காஞ்சனாவின் அதிரடிக்குரல் திடுக்கிட வைக்க, பார்த்தால் மாடியிலிருந்து காஞ்சனா இறங்கி வர, பின்னாலேயே அஞ்சலி மற்றும் மனோ.

'என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் வச்சிருக்கேன்'.

'அது ரெண்டுக்கும் கல்யாணம்தான் ஒரு கேடு' - காஞ்சனா
'உங்க பொண்ணுங்க கல்யானத்தை ஏன் இங்கே வந்து பேசுறீங்க?' - அஞ்சலி.

'சரி அதுக்கென்ன இப்போ?'
'பொண்ணுங்களை தாரை வார்த்துக்கொடுக்க இவரை நீங்க அனுப்பணும்'.
'எக்காரணம் கொண்டும் இவரை அங்கே அனுப்ப முடியாது'. (பலே)
'கல்யாணம் முடியும் வரை கூட இருக்க வேணாம். ஒரு அரை மணி நேரம் வந்து தாரை வார்த்துக்கொடுத்து விட்டு வந்து விடட்டும்'
'முதல்ல அப்படித்தான் சொல்வே, அப்புறம் ஒட்டகம் கூடாரத்துக்குள் நுழைந்த மாதிரி, இவரை அப்படியே இழுத்துக்குவீங்க. அதெல்லாம் முடியாது போ வெளியே' (சபாஷ்)
'அப்படி சொல்லாதீங்க, இவர் வந்து ஆசீர்வாதம் பண்ணினால்தான் என் பொண்ணுங்க வாழ்க்கை நல்லாயிருக்கும்'.
அந்தக்கடவுளே வந்து ஆசீர்வாதம் பண்ணினாலும் உன் பொண்ணுங்களோட வாழ்க்கை நல்லாயிருக்காது. போ வெளியே'. (அப்படி போடு)
'நான் உங்க கிட்டே மடிப்பிச்சை கேட்கிறதா நினைச்சுக்குங்க. அவரை தயவு செஞ்சு அனுப்புங்க'. (இப்போ என்ன கல்யாண மண்டபத்தில் மாப்பிள்ளையும் பெண்ணும் மணவறையிலா உட்கார்ந்து காத்துக்கிடிருக்காங்க..?)

'இப்போ வெளியே போறியா இல்லையா?'.

இதற்கு மேல் நின்று பயனில்லை என்றறிந்து (காஞ்சனா விளக்குமாறுக்கு வேலை கொடுக்கும் முன்) கற்பகம் வெளியே போகிறாள். அம்மா போவதையே பார்த்துக்கொண்டிருக்கும் மனோவிடம், காஞ்சனா... 'பார்த்தியா மனோ, உன் கிட்டே ஒரு வார்த்தைகூட பேசலை உங்கம்மா'

'நானும் கூடத்தான் பேசலை. இப்போ அவங்க என்ன கேட்டாங்க?. அக்காக்களின்ன் கல்யாணத்துக்கு அப்பா வந்து ஆசீர்வாதம் பண்ணனும்னுதானே சொன்னாங்க'.

தன் பர்ஸை மேஜைமேல் வைத்து மறந்துவிட்டதையறிந்து, கற்பகம் திரும்பி உள்ளே வரும்போது.... அவள் வருவதையறியாத காஞ்சனா மனோவிடம், 'என்ன அம்மா மேல பாசம் பொங்குதோ. மற்யுபடியும் போயிடுவே போலிருக்கு'.

'இல்லே அத்தே, சஷ்டியப்த பூர்த்தி விழாவில் உங்க பக்கம் நியாயம் இருக்குங்கிறதனால்தானே, விழாவுக்குப்போன அப்பாவை வழியில் மடக்கி, கடத்திக்கிட்டு வந்து உங்க கிட்டே ஒப்படைச்சேன்'

பர்ஸை எடுக்க வந்த கற்பகத்தின் காதுகளில் மனோ பேசியது விழ... 'டேய் மனோ' என்று கத்திக்கொண்டே போய் அவன் கன்னத்தில் 'பளார்'..

such a vague episode... thiruuuuuuuuu :hammer:
ippadiyuma ulagathula irupaangala enna :hammer:

aanaa
31st December 2008, 03:00 AM
Discussion about the serial is very less,almost nil because, hubbers are very much interested in reading Saradha madam's posts rather than sitting before TV.
Keep up your good wotk saradha madam :clap:
:clap:
:clap:
:exactly:

aanaa
31st December 2008, 03:04 AM

உஷா பணத்தைக்கொடுத்ததும், கைலாஷ் பீஸ்வை வாங்கிக் கொண்டுபோய் சாப்பிடத்துவங்குகிறான்.
்.யார் பெத்த பிள்ளையோ
கொடுத்துவைச்சவன்
நிறையவே பிஸ்ஸா சாப்பிடுகிறான்

:omg:

saradhaa_sn
31st December 2008, 12:50 PM
[tscii:8db107959f][/tscii:8db107959f]நன்றி ஆனா மற்றும் ஆர்த்தி…..

மகள்கள் கல்யாணத்துக்கு சம்மதித்ததும், கற்பகம் தன் வழக்கமான வேலையைத் துவக்கிவிட்டாள். ஆம், இப்போது கற்பகமும் சாரதாவும் ஒரு ஜோதிடரைப் பார்க்க ஆட்டோவில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

‘அக்கா, அதான் அபி, ஆனந்தி ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாங்களே. இப்போ எதுக்கு மறுபடியும் ஜோசியரைபார்க்கணும்?. அவர் பாட்டுக்கு எதாவது தடங்கல் சொல்லிட்டாருன்னா, அதுவேறு மனதை உறுத்திக்கிட்டிருக்கும்’.

‘அப்படியில்லை சாரதா, ஜாதகத்தில் எதாவது குறையிருந்தால் கல்யாணத்துக்கு முன்பே அதற்கு பரிகாரம் செய்திடலாம் இல்லையா அதுக்குத்தான்’.

இந்த கற்பகத்தைத் திருத்தவே முடியாது என்ற எண்ணம் சாரதா மனதில் (இந்த சாரதா மனதிலும்தான்).

முதலில் ஆனந்தியின் ஜாதகத்தைப்பார்த்த ஜோதிடர் நல்லதாக நாலு வார்த்தை சொல்கிறார். ‘இந்த ஜாதககாரருக்கு கூடிய சீக்கிரமே குரு இடம் பெயருகிறான். அதுக்குப்பிறகு நல்ல யோகம்தான். இவங்க கல்யாணம் செஞ்சுகிட்டா நல்லா இருப்பாங்க’ என்று ஆரம்பித்து இன்னும் என்னென்னமொ ஜோதிட பாஷைகளில் அடிச்சு விடுகிறார். கற்பகத்துக்கு முகத்தில் நிம்மதி கலந்த சந்தோஷம். ஆனால் அது நிலைக்கவில்லை.

அடுத்து அபியின் ஜாதகத்தை எடுத்துப்பார்க்கும் ஜோதிடர் முகம் மாறுகிறது, அதைப்பார்த்த கற்பகத்தின் முகத்திலும் கலக்கத்தின் ரேகை படிகிறது. ‘என்ன ஜோசியரே என்ன ஆச்சு?’

‘அதாவது இந்த ஜாதகக்காரங்களுக்கு சில தோஷங்கள் இருக்கிறது’ என்று ஆரம்பித்து ஏதேதோ சொல்லத்துவங்குகிறார். ‘இது நீங்கனும்னா பரிகாரம் செய்யணும்னு சொல்லத்துவங்கும்போது ஆடியோ கட்பண்ணப்பட்டு வெறும் வாயசைவு மட்டும் காண்பிக்கப்படுகிறது, சொல்லி முடித்ததும் ‘நான் சொன்ன மாதிரி தவறாமல் செஞ்சீங்கன்னா தோஷம் நீங்கிடும்’ எனும்போது மீண்டும் ஆடியோ கேட்கிறது.

பில்டர்ஸ் அசோஸியேஷன் மீட்டிங் ஆதி தலைமையில் நடந்துகொண்டிருக்கிறது...

அபி, விஸ்வநாதன், வரதராஜன் உள்பட அனைத்து மெம்பர்கள் அனைவரும் வந்துள்ளனர். ஆதி பேசத்துவங்குகிறான்...

'ஜெண்டில்மென், கடந்த அஞ்சு வருஷமா இந்த தலைவர் பதவியில் ரொம்ப சின்ஸியரா, ரொம்ப டெடிகேட்டடா பணியாற்றிக்கிட்டு இருக்கேன். என்னுடைய இந்த அஞ்சு வருஷ சர்வீஸ்ல நம்ம அசோஸியேஷன் எவ்வளவோ நல்ல பலன்களை அடைஞ்சிருக்கு. இதுவரையிலும் நான் போட்டி இல்லாமல்தான் ஜெயிச்சு வந்திருக்கேன், ஆனால் இப்போ சிலபேர் சேர்ந்து வரப்போகும் எலெக்ஷன்லே எனக்குப் போட்டியா சில பேரை நிறுத்துறாங்க. அது பற்றி நம்ம அசோஸியேஷன் செக்ரட்டரி சொல்வார்'

என்றதும், செக்ரட்டரி எழுந்து எந்தெந்த பதவிகளுக்கு யார் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள் என்று ஒரு சின்ன பட்டியலை வாசிக்கிறார். அதில், தலைவர் பதவிக்கு ஆதித்யாவும் அபிநயாவும் நிற்பதாக அறிவிக்கிறார். மீண்டும் இப்போது ஆதி பேசத்துவங்குகிறான்...

'வெல் ஜெண்டில்மென், இப்போ இது வரைக்கும் இந்த நிமிடம் வரைக்கும் நான்தான் தலைவரா இருந்துக்கிட்டிருக்கேன். ஸோ, என்னுடைய அதிகாரத்தின்படி நான் நம்ம அசோஸியேஷனுக்கு புதுசா ஒரு மெம்பரை சேர்த்திருக்கேன். அவங்க யாருன்னு இப்போ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்' என்றதும், மேனகா காரில் இருந்து இறங்கி உள்ளே வருகிறாள்.

'ஷி இஸ் அவர் நியூ மெம்பர், என்னுடைய ஃப்ரெண்ட் அண்ட் பார்ட்னர் மிஸ் மேனகா' (சிலர் கைதட்டுகிறார்கள்).

'ஸாரி மிஸ்ட்டர் ஆதி' வரதராஜன் ஆட்சேபிக்கிறார்... 'கம்பெனியின் ரூல்ஸ்படி எலெக்ஷன் டைம்ல புது மெம்பர்ஸ் சேர்க்கக்கூடாது. எலெக்ஷன் முடிஞ்ச பிறகுதான் சேர்க்க முடியும்'

'வரதராஜன், அப்படி எதுவும் ரூல்ஸ் இல்லையே'

'இருக்கு மிஸ்ட்டர் ஆதி, ஆனா அஞ்சு வருஷமாக நீங்க அதையெல்லாம் ஃபாலோ பண்ணாததால் உங்களுக்கு நினைவில்லை'

'வரதராஜன், தலைவர்ங்கிற முறையில் எனக்குன்னு சில அதிகாரங்கள் இருக்கு. அதன்படிதான் இவங்களைச்சேர்த்தேன்'.

இப்போ கிரி குறுக்கிடுகிறான், 'குறுக்கே பேசுறதுக்கு மன்னிக்கனும். மேனகா மேடம் பத்துநாளைக்கு முன்னரே மெம்பராக சேர்ந்தாச்சு. எங்க பாஸும் பத்துநாளைக்கு முன்பே அவங்க அளிகேஷனை அப்ரூவ் பண்ணி கையெழுத்துப் போட்டிருக்கார். இதோ பாருங்க அதன் காப்பியை'.

விஸ்பநாதன், 'இங்க பாருங்க கிரி, நம்ம கையில் பேனா இருக்கும்போது, எந்த தேதியை வேணும்னா போட்டுக்கலாம். இவங்களை மெம்பரா சேர்க்கப்போவது பற்றி இதுவரை ஏன் மிஸ்ட்டர் ஆதி சொல்லைலை?'

இப்போ அபி தன் ஆட்சேபனையைத் தெரிவிக்கிறாள். 'மிஸ் மேனகா ஒரு என்.ஆர்.ஐ. அவங்களை மெம்பரா சேர்க்கணும்னா முதல்ல கமிட்டியை கூட்டி ஒப்புதல் வாங்கியிருக்கணும். ஆதி அதைச்செய்யவில்லை'.

'ஏன் மிஸ்ட்டர் ஆதி, நான் இந்த அசோஸியேஷன்ல மெம்பராகறதுல இவ்வளவு பிரச்சினை இருக்கா?' - மேனகா.

'அதெல்லாம் எந்த பிரச்ச்னையும் இல்லை மேம். என் கிட்டே சம்பளம் வாங்கிக்கிட்டிருந்த அபி, இந்த எலக்ஷனில் போட்டியிடும்போது, என்.ஆர்.ஐ. யாக இருக்கும் மேனகா மெம்பராவதில் என்ன தப்பு?'.

'Mind your words Adhi,. நான் உங்ககிட்டே சம்பளம் வாங்கியது உண்மைதான். அப்படிப்பட்டவ இன்னைக்கு உங்களை எதிர்த்து நிற்குமளவுக்கு வளர்ந்துட்டாளேன்னு உங்களுக்கு பொறாமை. இந்த தேர்தல்ல தோத்திடுவோம்ணு பயத்தினாலதானே புது மெம்பர்ஸையெல்லாம் சேர்க்கிறீங்க?'.

'தோல்வியா?. எனக்கா?. நான் இதுவரை எதிலும் தோத்ததே கிடையாது'.

'ஆனால் இப்போ முதல் முறையா என் கிட்டே தோற்கப்போறே ஆதி. Be ready to face it. எலெக்ஷன்ல பார்ப்போம்'. அபி கிளம்புகிறாள்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

aanaa
1st January 2009, 06:28 PM
[tscii:74d0b4fb35][/tscii:74d0b4fb35]

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

:ty:

aanaa
1st January 2009, 06:30 PM
[tscii:e3ac85fdeb][/tscii:e3ac85fdeb]
'அதெல்லாம் எந்த பிரச்ச்னையும் இல்லை மேம். என் கிட்டே சம்பளம் வாங்கிக்கிட்டிருந்த அபி, இந்த எலக்ஷனில் போட்டியிடும்போது, என்.ஆர்.ஐ. யாக இருக்கும் மேனகா மெம்பராவதில் என்ன தப்பு?'.


இந்த திமிர்தான் :bangcomp:

saradhaa_sn
1st January 2009, 07:58 PM
புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி, நேற்றைய எபிஸோட் இருக்காது என்று நினைத்தோம். ஆனால் கோலங்கள் வரை ஒளிபரப்பாகியது. அரசியில் இருந்து கட் பண்னிட்டு திரைப்படம் போட்டுவிட்டார்கள். (அதை அரை மணி நேரம் முந்தி போட்டிருக்கலாம். காரணம் நேற்றைய கோலங்கள் முழு சொதப்பல்).

காரில் வந்துகொண்டிருக்கும் அலமேலு, வழியில் கலாவைப் பார்த்ததும் இறங்கி, (ஊரான் காசில் தனக்கு வாய்த்த) வளமான வாழ்க்கையைப்பற்றி (வழக்கம்போல) பெருமைப்பட்டுக்கொள்கிறாள்.

'என்னடி கலா, வீட்டுப்பக்கமே வரக்காணோம்?'

'அதான் உங்க பிள்ளை திடீர் யோக்கியனாகி, என்னைப்பார்த்து ஊதுபத்தியும், ஊறுகாயும் விற்கச்சொல்லிட்டாரே. அப்புறம் எப்படிக்கா வர்ரது?'

'அது கிடக்கட்டும்டி, அந்த அபி வீட்டு சமாச்சாரம் எதுவும் தெரியுமா?'

'அதான் கற்பகத்தோட ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கப் போறாங்களாமே'

'என்னடி சொல்றே?. அந்த கழுதைங்களுக்கு கல்யாணமா?'

'ஆமாக்கா, இதுவரை கல்யாணம் வேண்டாம், வேண்டாம்னு சொல்லிக்கிட்டிருந்த அந்த ஆனந்திகூட இப்போ கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாளாம்'.

'என்னடி இப்படி குண்டைத்தூக்கிப்போடுறே. அய்யோ... அய்யோ... அந்தக்கல்யாணம் ரெண்டும் எப்படியாவது நின்னு போகணும்டி. நடக்கவே கூடாது. அந்தக் குடும்பம் சந்தோஷமாவே இருந்திடக்கூடாது. கெட்டழிஞ்சு நடுத்தெருவுல நிக்கணும்'.

'ஏன்க்கா, எப்பவும் அந்தக்குடுமப்த்து மேலே இப்படி கர்வமாவே இருக்கீங்க?'.

'பின்னே என்னடி, அந்த அபி என்ன பண்ணினா தெரியுமா?. ஒருநாள் ஒரு பெரிய கல்லைத்தூக்கிக்கிட்டு என்னைக்கொல்ல துரத்திக்கிட்டு வந்தாள்'.

(இப்போ பழைய ஃப்ளாஷ்பேக் காட்சி, ஆனந்தியின் கல்யாணம் நின்று போன அதிர்ச்சியில் குடும்பமே துக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது, ஐம்பதாயிரம் ரூபாய் செக் திரும்பி வந்துவிட்டதைக் காட்டி அலமேலு பணம் கேட்க, அபி கோபப்பட்டு அலமேலுவை விரட்டியடிக்கும் காட்சி காண்பிக்கப்படுகிறது).

'ஏண்டி கலா, உனக்கும்தானே அந்தக் குடும்பத்தைப் பிடிக்காது. அப்புறம் என்ன என்னை மட்டும் கேட்கிறே?. அய்யோ... எப்படியாவது பில்லி, சூனியம் வச்சாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்திடணூம்' என்று சொல்லிக்கொண்டே காரில் ஏறிப்போகப்போகும்போது....

'அக்கா, போற வழியிலே என்னையும் உங்க காரில் கொண்டு இறக்கி விட்டுடுங்களேன்'

'கலா, நீ வலது பக்கம்ல போகணும். ஆனா நான் இடது பக்கம்ல போறேன். வரட்டா'

இந்தப்புதுப்பணக்காரியிடம் கேட்டிருக்க வேணாமோ என்று தோன்றுகிறது கலாவுக்கு.

சிவசு, கவிதாவைப்பார்க்க வருகிறான். அவன் வந்ததைப்பார்த்து கவிதா பதறுகிறாள். காரணம், அது ராஜேஷ் அவளைத்தேடி வரும் நேரம். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜேஷ் வந்து விடுகிறான். வெளியே போக வழியின்றி, ராஜேஷின் கண்ணில் படாமல் இருக்க, சிவசு கட்டிலின் அடியில் ஒளிந்துகொள்ள, அதே கட்டிலின் மேலே ராஜேஷ் உட்கார்ந்து மதுவருந்துகிறான். போதையில் அவன் தடுமாறிக் கொண்டிருக்கும்போது அவனுக்கு தெரியாமல் சிவசு வெளியேறி வாசலுக்குப்போக, கவிதா அவனை சீக்கிரம் வெளியே போகச்சொல்கிறாள். அவர்களின் ஏற்பாட்டின்படி, படுக்கையறையில் ஒளித்து வைத்திருக்கும் கேமராவை மறக்காமல் 'ஆன்' செய்யும்படி சிவசு சொல்ல, அது ஏற்கெனவே 'ஆன்' செய்யப்பட்டு ரெடியாக இருப்பதாகச்சொல்லி அவனை அனுப்பி கதவைடைக்கிறாள். கட்டிலில் ராஜேஷ், கவிதாவை நெருங்கி வரும் நேரம், நம் கேமரா, ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கேமராவை நோக்கிப்போய் அதில் நிலைக்கிறது.

ஒரு தொழிலதிபரைப்பார்த்து ஆதரவு திரட்ட அபியும், வரதராஜனும் சென்று அவரிடம் பேச, அவர் ஆதியின் அடாவடிச் செயல்களை எடுத்துச்சொல்லி அபிக்கு ஆதரவு தருவதாக வாக்களிக்கிறார். அவர்கள் புறப்படும் நேரம் அங்கு ஆதியும் மேனகாவும் வர, மீண்டும் மேனகா, அபி, ஆதியிடையே மோதல் முற்றுகிறது. வழக்கம்போல வார்த்தைதடிப்புகள், ஏளனப்பேச்சுக்கள், சவால்கள் (சவால்கள் எல்லாம் ஏற்கெனவே அரைத்து, அரைத்து புளித்துப்போன மாவு. அதனால் வேண்டாம்).

அபி போனதும் அந்த தொழிலதிபர் அப்படியே பல்டியடித்து, வரதராஜனுக்காக சும்மா பொய் சொன்னதாகவும், அவரது ஆதரவு எப்போதும் ஆதிக்குத்தான் என்றும் சொல்கிறார். (நிஜமாகவே ஆதிக்கு சப்போர்ட் செய்கிறாரா அல்லது அவனை நம்ப வைத்து கவிழ்க்க சதியா தெரியவில்லை).

மொத்தத்தில் நேற்றைய எபிஸோட் கதையோட்டத்துக்கு எந்த வகையிலும் உதவியாயில்லை. இன்றைக்கு கோலங்கள் ஒளிபரப்பாகுமா என்பது தெரியவில்லை.

aanaa
1st January 2009, 11:09 PM
காரணம் நேற்றைய கோலங்கள் முழு சொதப்பல்).
. இன்றைக்கு கோலங்கள் ஒளிபரப்பாகுமா என்பது தெரியவில்லை.

:ty:

காரணம் நேற்றைய கோலங்கள் முழு சொதப்பல்) :exactly:

saradhaa_sn
3rd January 2009, 01:23 PM
எபிஸோட் துவக்கத்தில் மீண்டும் அலமேலுவைக் காண்பித்ததும், ஐயய்யோ இன்னைக்கும் அவ்வளவுதானா என்று நினைத்தோம். நல்லவேளை அப்படியில்லை. துவக்கத்தில் இரன்டு பாத்திரங்களுக்கு ஆட்களை மாற்றிவிட்டார்கள். அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத அலமேலுவின் மகள் வித்யாவாக பிரியதர்ஷிணிக்கு பதில் இன்னொருவர், அவள் கணவர் ரோலுக்கு பிரபாகருக்கு பதிலாக இன்னொருவர்.

அலமேலு வீட்டுக்குள் வந்ததும், மகள் வித்யாவிடம் மீண்டும் அபி, ஆனந்தி கல்யாணம் பற்றி அலுத்துக்கொள்கிறாள். அந்த குடும்பம் விளங்காமல் போக வேண்டும், அபிக்கு கால் ஊனமாக வேண்டும், ஆனந்திக்கு கையிரண்டும் விளங்காமல் போக வேண்டும், கற்பகத்துக்கு வாய் கோணிக்கொள்ள வேண்டும் என்றும் அதற்காக ஒரு பவர்ஃபுல்லான மந்திரவாதியிடம் போய் பில்லி, சூனியம் வைக்கப்போவதாகவும் சொல்ல, அதை மாடிப்படியில் நின்றவாறு சங்கீதா கேட்டுக்கொண்டிருக்கிறாள். இப்படியும் ஒரு மனிதப்பிறவியா என்று அவள் மனதுக்குள் தோன்றுகிறது. (நாராயணன் இறந்தபோது கற்பகமும் அபியும் அலமேலு வீட்டில் மாங்கு மாங்கென்று வேலை செய்ததெல்லாம் எப்படி இவளுக்கு மறந்துபோனது?. சரி, அபி தன் மகனின் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கியதால்தானே, தன்னால் இப்படி ஒரு புதுப்பணக்காரியாக முடிந்தது என்பதெல்லாம் எப்படி அலமேலுவுக்கு மறந்துபோகிறது?. அது சரி, மனிதப்பிறவியாக இருந்தால்தானே).

இரவில் தெருவோரத்தில் காரை நிறுத்திவிட்டு ஆதித்யா காத்திருக்க, அங்கே ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நிற்கிறது. வந்தது தொல்காப்பியன்....

'மிஸ்ட்டர் ஆதி, எதுக்காக என்னை வரச்சொன்னீங்க?'

'என் தலையெழுத்து, என்னுடைய ஸ்டேட்டஸுக்கு உன் மாதிரி ஆளுங்களூக்காகவெல்லாம் காத்திருக்க வேண்டியிருக்கு'.

'ஸ்டேட்டஸ்னு எதைச்சொல்றீண்க்க ஆதி?. பெட்டி நிறைய பணமா?. என்னைப்பொறுத்தவரை ஸ்டேட்டஸ்ங்கிறது வெறும் பணம் இல்லை. நல்ல பண்புகள், அடுத்தவருக்கு நன்மை செய்யும் குணம், பிறருக்கு இடைஞ்சல் பண்ணாமல் இருப்பது இதுதான் ஸ்டேட்டஸ். அந்த வகையில் நான் உங்களைவிட ஸ்டேட்டஸில் உயர்ந்தவன்'.

'பார்த்தா பூனை மாதிரி இருப்பே, வாயைத்திறந்தால் ஒரே தத்துவம் இதானே உன் வேலை?'

'நீங்க எதுக்கு என்னை வரச்சொன்னீங்கன்னு இன்னும் சொல்லலை'.

'எனக்கும் உஷாவுக்கும் இடையில் நீதான் இப்போ பெரிய இடைஞ்சலா இருக்கே'.

'மிஸ்ட்டர் ஆதி, உஷாவுக்கும் உங்களுக்கும் இடையில் உள்ளது உங்க குடும்ப பிரச்சினை, உங்க சொந்த விவகாரம். அதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?.'

'இப்போ நீதானே அவ கூட இருக்கே'

'வார்த்தையை அளந்து பேசுங்க ஆதி, இதெல்லாம் ரொம்ப அநாகரீக்ம'.

'நீ கூட இருக்கிற தைரியத்துலதான் அவ இப்படி ஆடுறா'

'மறுபடியும் சொல்றேன் ஆதி, இது உங்களுக்கும் உஷாவுக்கும் இடையேயான சொந்த விவகாரம். அதை நீங்க ரெண்டு பேரும்தான் பார்த்துக்கணும். இதில என்னை இழுக்காதீங்க. நான் உஷாவுடைய பெஸ்ட் ஃப்ரண்ட் அவ்வளவுதான்'.

'போதும்... இப்படி சொல்லி சொல்லி ஏமாத்தினதெல்லாம் போதும். இப்படித்தான் அபியின் ஃப்ரெண்ட்னு சொல்லி நுழைஞ்சு, அபியையும் பாஸ்கரையும் பிரிச்சே. இப்போ உஷாகூட சேர்ந்துகிட்டு சுத்துறே'.

'ஸ்டாப் மிஸ்ட்டர் ஆதி, இனிமேல் இது விஷயமா உங்க கிட்டே பேச விரும்பலை'.

ஆதியின் பதிலுக்குக் கூட காத்திராமல் தொல்ஸ் பைக்கில் ஏறிப்போக, ஆதி லோபத்தில் தனியே நின்று கத்துகிறான்.

அபியின் வீடு... ஆர்த்தி ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி நுழைகிறாள்...

'அக்கா... அக்கா..., அம்மா அக்கா இல்லையா?'

'வா ஆர்த்தி, அக்கா ஆஃபீஸுக்குப் போயிட்டாளே'.

'அக்கா போயிடுச்சா?. நாம ரெண்டு பேரும் சேர்ந்து பேரும் சேர்ந்து போகலாம், வான்னு சொல்லியிருந்துச்சே. அப்படீன்னா ஆஃபீஸ் போயிருக்காது. எலெக்ஷன் வேலையாத்தான் போயிருக்கும். ஏம்மா, அக்காவுக்கு கல்யாணம் ஆகப்போது, இந்த நேரத்தில ஏம்மா இந்த எலெக்ஷன், தலைவர் பதவியெல்லாம்?'

'எனக்கென்ன்ம்மா தெரியும், அபி யோசிச்சுத்தானே இறங்கியிருப்பா'.

இப்போது ஆனந்தி குறுக்கிட்டு, 'ஆர்த்தி, அக்கா எலெக்ஷனில் நிக்கிறதுலயும் தலைவர் ஆகிறதுலயும் என்ன பிரச்சினை?'

'பிரச்சினைக்காக சொல்லலைக்கா, ஏற்கெனவே கம்பெனி வேலைகளே தலைக்குமேலே இருக்குது, இதுல அடிஷனலா இந்த தலைவர் பதவியெல்லாம் ஏத்துக்கிட்டா அக்காவுக்குத்தானே கஷ்ட்டம்?. வரப்போற கணவரையும் கவனிக்கனும் இல்லையா?' (அக்கா மேல் ரொம்ப கரிசனம் போல பேசுகிறாள். ஆனால் இது ஆதி மந்திரம் செய்யும் வேலை என்று யாருக்கும் தெரியவில்லை).

அப்போது உள்ளே நுழையும் டாக்டர் மகேஷ், 'ஆர்த்தி, அபி தன் விருப்பப்படி என்ன வேணும்னாலும் செய்யட்டும், அதுக்கு நான் முழு சப்போர்ட் பண்ணுகிறேன். ஏன்னா, நான் அபியை நல்லா புரிஞ்சிக்கிட்ட்வன். அபி என்ன செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்'.

என்னடா இது கிணறு வெட்டப்போக உள்ளிருந்து பூதம் கிளம்பியது போல, நாம் ஒண்ணு நினைத்து சொன்னால், அது அபியின் பக்கம் ஸ்ட்ராங்கான ச்ப்போர்ட்டாக அல்லவா முடிஞ்சுபோச்சு என்று ஆர்த்திக்கு படு ஏமாற்றம். எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டு வாசலுக்கு வரும்போது, 'ஆதியண்ணா' சொன்னவை நினைவுக்கு வர, அதை நிறைவேற்ற முடியவில்லையே என்ற வருத்தம் முகத்தில் தோன்றுகிறது. ஏனென்றால், இப்போது அவளுக்கு 'ஆதியண்ணா' தான் 'அறிஞர் அண்ணா'.

ஆதியின் கெஸ்ட் அவுஸ்...

தேவராஜ பாண்டியனுடன் ஆதி ஆலோசனையில் இருக்கிறான். என்ன உருப்படியான ஆலோசனயா, எல்லாம் சதியாலோசனைதான்.

'அஞ்சு வருஷமா அந்த அசோஸியேஷன் தலைவரா இருக்கேன் தேவராஜ். அதிலும் நாலு முறை போட்டியில்லாமல் தலைவராகியிருக்கிறேன். ஆனா இப்போ ஒரு கிழவன் எனக்கெதிரா போட்டியைக்கிளப்பியிருக்கிறான். அதுவும் அந்த அபியை எனக்கெதிரா நிறுத்தியிருக்கான்'.

'யாருன்னு சொல்லுங்க தம்பி. தூக்கிடுவோம்'

'இல்லை தேவராஜ், உங்க அடிதடியெல்லாம் இங்கே எடுபடாது. ரொம்ப கவனமா செயல்படணும்'.

'அப்படீன்னா லேசா அவனை மிரட்டி வைப்போம், அல்லது கொஞ்சம் பனத்தை வீசுவோம்'.

'தேவராஜ், அந்தக்கிழவன் மிரட்டலுக்கோ, பணத்துக்கோ மசிகிறவன் இல்லை. அதுவுமில்லாமல், இப்போ அவனுக்கும் எனக்கும் போட்டிங்கறதாலே, அவனுக்கு என்ன நேர்ந்தாலும் அந்த பழி என் மீதுதான் விழும். அது எலெக்ஷன்லே என் இமேஜை ரொம்ப பாதிக்கும். அதனால் நான் சொல்றபடி செய்யுங்க'..... சொல்லத்துவங்கியதும் வழக்கம்போல வெறும் வாயசைவு மட்டும், பின்னணியில் இசை... 'இதுல நீங்க நேரடியா ஈடுபட வேண்டாம் தேவராஜ். அதுபோல வழக்கமா அனுப்புற ஆளுங்களை அனுப்ப வேண்டாம். புது ஆளுங்களை அனுப்புங்க. அவங்க யாருன்னு யாருக்கும் தெரியக்கூடாது. ஏன், எனக்கே அவங்க யாருன்னு தெரியக்கூடாது'

'சொல்லிட்டீங்கல்ல?, முடிச்சிடுவோம் தம்பி....'

தேவராஜ் பாண்டியன் புறப்படுகிறான்.

aanaa
3rd January 2009, 09:40 PM
அது சரி, மனிதப்பிறவியாக இருந்தால்தானே).
:lol: :lol:
******************

'என் தலையெழுத்து,
:bangcomp: :bangcomp:
*************
அபியின் வீடு... ஆர்த்தி ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி நுழைகிறாள்...

:idea: :roll:
*******

'சொல்லிட்டீங்கல்ல?, முடிச்சிடுவோம் தம்பி....'

தேவராஜ் பாண்டியன் புறப்படுகிறான்.
:?:


:ty:

gta129
4th January 2009, 12:24 AM
Thanks for the update.

mr_karthik
4th January 2009, 01:36 PM
Good updates with dialogues, enables us to know the story of one week, within ten minutes.

Whynot other 'serial lovers' adopt 'each one each serial' like Arasi, Kalasam, Anandham etc, and update them periodically?, sothat non-watchers (like me) may be benefited.

aanaa
4th January 2009, 08:19 PM
Good updates with dialogues, enables us to know the story of one week, within ten minutes.

Whynot other 'serial lovers' adopt 'each one each serial' like Arasi, Kalasam, Anandham etc, and update them periodically?, sothat non-watchers (like me) may be benefited.
welcome back Karthik

mr_karthik
5th January 2009, 03:19 PM
Through the previous pages, I come to understand Thiruselvam, director of Kolangal, is going to direct a movie for big screen.

Can anybody pour more light on this, about name of the movie, starcast, tech crews etc...?

saradhaa_sn
5th January 2009, 04:48 PM
Through the previous pages, I come to understand Thiruselvam, director of Kolangal, is going to direct a movie for big screen.

Can anybody pour more light on this, about name of the movie, starcast, tech crews etc...?
கார்த்தி, நீங்கள் கேட்ட விவரங்களைத்தரணும்னு எனக்கும் ஆசைதான். ஆனல் எனக்கும் அந்தத் திரைப்படம் விஷயமாக எதுவும் தெரியவில்லை.

இப்போதுதான் பிள்ளையார் சுழி போட்டிருப்பார்கள் போலும். மற்றவை இன்னும் முடிவாகாமல் இருக்கலாம். நாளாவட்டத்தில் தெரிய வரும்.

திரைப்படம் துவங்குவத்ற்குள் 'கோலங்கள்' தொடரை முடிப்பாரா, அல்லது ஆறு மாதத்தில் படத்தை முடித்து விடலாம் என்று அதுவரை அவருடைய உதவி இயக்குனரைக்கொண்டு கோலங்களைத் தொடரவிட்டு, பின்னர் படம் முடிந்ததும் மீண்டும் வந்து கோலங்களில் இணைவாரா? தெரியவில்லை.

எதுவும் நடக்கலாம்.

aanaa
6th January 2009, 05:08 AM
திரைப்படம் துவங்குவத்ற்குள் 'கோலங்கள்' தொடரை முடிப்பாரா, அல்லது ஆறு மாதத்தில் படத்தை முடித்து விடலாம் என்று அதுவரை அவருடைய உதவி இயக்குனரைக்கொண்டு கோலங்களைத் தொடரவிட்டு, பின்னர் படம் முடிந்ததும் மீண்டும் வந்து கோலங்களில் இணைவாரா? தெரியவில்லை.

எதுவும் நடக்கலாம்.

:rotfl:

aanaa
6th January 2009, 05:09 AM
.

Can anybody pour more light on this, about name of the movie, starcast, tech crews etc...?

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=blogcategory&id=65&Itemid=94

saradhaa_sn
6th January 2009, 11:45 AM
நேற்றும் எபிசோட் கொஞ்சம் 'டல்'லடித்தது.....

ஆளரவமில்லாத ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு, ஆதி காத்திருக்க, கிரி இன்னொரு காரில் வந்திறங்குகிறான். (இப்போதெல்லாம் ஆதி தன் செக்ரட்டரியை சந்திக்கும் இடம் கூட ரோடாகத்தான் இருக்கிறது).

'கிரி, இப்போ 'பில்டர்ஸ் அசோஸியேஷனில்' இருந்துதானே வர்ரே, அங்கே நிலவரம் எப்படியிருக்கு?'

'நிலைமை ரொம்ப மோசம் பாஸ். அந்த வரதராஜனின் ஆதரவாளர்களெல்லாம் அந்த அபிக்கு ஃபுல் சப்போர்ட்டா நிற்கிறாங்க. எனக்கென்னமோ நம்ம நிலைமை கொஞ்சம் டேஞ்சராவே தெரியுது பாஸ். இதே நிலைமை நீடிச்சா நீங்க தோத்துடுவீங்க பாஸ்'.

'கிரி, இது இன்னைக்கு நிலைமைதானே, நாளைக்கே இந்த சிச்சுவேஷன் மாறும் பார்'.

'எப்படி பாஸ், அந்த வரதராஜனை நம்ம பக்கம் இழுக்கப்போறீங்களா?'

'இல்லை கிரி, வரதராஜனை இழுக்கப்போவதில்லை, இழுத்தாலும் அவன் வர மாட்டான். என்னை ஒழிக்கணும்னே முழுமூச்சாக இருக்கான்'.

'பின்னே எப்படி பாஸ், நிலைமை மாறூங்கறீங்க?. எதாவது மந்திரம் பண்ணி ஜெயிக்கப்போறீங்களா?'

'என்ன நடக்கப்போகுதுன்னு இப்போ சொல்றதைவிட ஸ்க்ரீன்லேயே பார்'.

'என்ன பாஸ், என்னை நம்பலையா?. இதுவரைக்கும் உங்களுடைய எந்த விஷயத்தையாவௌது வெளியே விட்டிருக்கேனா?. இதையும் எப்படின்னு சொன்னீங்கன்னா தெரிஞ்சுக்குவேனில்லையா?'

'அதான் சொன்னேனே, நீ இப்போ தெரிஞ்சுக்க வேணாம்னு. நடக்கும்போது பார். இப்போ போயிட்டு காலைல ஆஃபீஸுக்கு வா'.

'எவ்வளவு கேட்டும் சொல்ல மாட்டேங்கிறாரே' என்று முணுமுணுத்துக்கொண்டே கிரி தன் காரில் ஏறிப்போகிறான்.

திருவேங்கடம், தன் மாப்பிள்ளையோடு ஆலோசித்துக்கொண்டு இருக்கிறார். மேனகாவிடம் வாங்கிய பணத்துக்கு எப்படி வேலையை முடித்துக்கொடுப்பது என்பது பற்றியல்ல, தன்னுடைய எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா பண்ணிட்டு வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் நின்று எம்.பி.யாகி, மத்திய மந்திரியாவது பற்றி. அப்போது சாரதா வருகிறாள்......

'ஏண்டி வெளியிலேயே நிக்கிறே. உள்ளே வா. 'படிதாண்டா பத்தினி' என்பதெல்லாம் வீட்டை விட்டுப்போகும்போதுதான். வீட்டுக்குள் வரும்போது அதெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. என்ன ஆச்சு? அந்த அபி அடிச்சு விரட்டிட்டாளா?'.

'நான் ஒண்ணும் இங்கே தங்கறதுக்கு வரலை. ஒரு முக்கிய விஷயம் உங்ககிட்டே பேசணும்' என்று சொல்லிக்கொண்டே, 'மாப்பிள்ளை'யைப்பார்க்க....

'சரி, அத்தே நான் வேணும்னா உள்ளே போயிடுறேன். நீங்க மாமாவோடு தனியா பேசுங்க'.

உடனே திருவேங்கடம் எம்.எல்.ஏ...'வேணாம் மாப்பிள்ளே நீங்க இருங்க. என்ன விஷயம் சொல்லு சாரதா'.

'அங்கே அபிக்கும் ஆனந்திக்கும் கல்யாணம் பண்ண முடிவு பண்ணியிருக்காங்க'.

'அதுங்க ரெண்டுக்கும் இப்படி ஒரு மூக்கணாங்கயிறு தேவைதான். ஆனா என்ன, அநியாயமா ரெண்டு ஆம்பிளைங்க வாழ்க்கை பாழாகுதேண்ணுதான் வருத்தமாயிருக்கு. சரி, அதுக்கென்ன இப்போ?'

'அதுல நீங்களும் நானும்தான் அப்பா அம்மா ஸ்தானத்திலிருந்து அவங்களை தாரை வார்த்துக்கொடுக்கணும்'.

'என்னடி விளையாடுறீங்களா?. உங்களுக்கு வேணாம்னா உதறித்தள்ளிட்டுப் போவீங்க. எம்.எல்.ஏ.தயவு வேணும்னதும் தேடி வருவீங்க. அப்படித்தானே?'

'நான் ஒண்னும் உங்க பதவிக்காக உங்களைத்தேடி வரலைங்க. பாவம்ங்க அந்த கற்பகம் அக்கா. ஈஸ்வரன் மாமாவை தாரை வார்த்துக்கொடுக்க அழைச்சதுக்கு அந்த ராட்சஸி காஞ்சனா திட்டி விரட்டிட்டாங்க'.

'ஆக வேற வழியில்லாமல் இந்த எம்.எல்.ஏ.வைத்தேடி வந்திருக்கே. இங்கே ரெண்டு ஆம்பிளைங்க தனியா கஷ்டப்பட்டு சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கோமே அதை நினைச்சியா. முதல்ல உன் மகளைக் கூட்டிக்கிட்டு வந்து குடும்ப நடத்தப்பாருங்கடி'.

'ஏங்க நம்ம பொண்ணுக்கு இவன் செஞ்ச அயோக்கியத்தனத்தையேல்லாம் மறந்திட்டுப் பேசிறீங்களா?'

'அதையே இன்னும் எவ்வளவு நாளைக்குப் பேசிக்கிட்டு இருக்கப்போறே. கெட்டவன் எப்போதும் கெட்டவனாகவேதான் இருப்பானா?. திருந்தி நல்லவனாகவே மாட்டானா?. இப்போ மாப்பிள்ளை எனக்கு எவ்வளவு உதவியாய் இருக்கார் தெரியுமா?. இதோ பார் சாரதா, நீயும் உன் பொண்ணும் முதல்ல நம்ம வீட்டுக்கு திரும்பி வாங்க. அப்புறமா உன்னுடைய கோரிக்கையைப் பரிசீலிக்கிறேன்'.

சாரதா திரும்பிச்செல்கிறாள்.

ரோட்டோரத்தில் நின்று வழிப்பறியில் ஈடுபட்டிருக்கும் மாரியின் கும்பல், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் அடித்துப்பிடுங்க, அவ்வழியே காரில் வரும் தொல்காப்பியனைக் கண்டதும் ஓடத்துவங்குகின்றனர். அவர்களை விரட்டிப்பிடிக்கும் தொல்ஸ், அவ்ர்களுக்கு எம்.ஜி.ஆர்.பாணியில் அட்வைஸெல்லாம் பண்ண அவர்கள் உடனே திருந்தி(??????) செய்த தவறுக்கு வருந்துகின்றனர். தற்போது அவர்களின் உதவி தனக்குத்தேவையென்றும், ஆனால் கடைசி வரை விசுவாசமாக இருக்கவேண்டுமென்றும், முன்னர் இதுபோல த்ன்னுடன் இருந்துவிட்டு பின்னர் சமயம் பார்த்து ஆதியிடம் விலைபோனது போல் போகக்கூடாதென்றும் சொல்ல அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். (அவர்களின் பழைய நடவடிக்கைகள் ஃப்ளாஷ்பேக்காகக் காட்டப்படுகிறது. அதில் செத்துப்போன அங்குசாமி, சாந்தி, தில்லா என பலபேர் வந்து போகின்றனர்). அவர்கள் திருந்தியதன் முதல் கட்டமாக, பைக்கில் வந்தவரிடம் பறித்ததை அவரிடனே ஒப்படைக்கும்படி கூறி, அந்தப் பர்ஸிலிருந்த கார்டில் உள்ள நம்பருக்கு ஃபோன் செய்ய, பர்ஸையும், செயினையும் பறிகொடுத்தவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார். நமப முடியாத செயல்கள் நடப்பதால், ஏதோ மாயாஜாலப்படம் பார்ப்பது போலிருக்கிறது.

gta129
7th January 2009, 03:31 AM
I can't believe Karpagam. No matter how many times she gets insulted by Adhi and his family ,she keeps going back. Why would she even go back talk to them about Ananthi's marriage to them? These characters really get in my nerve. Will these people ever learn? Is the same thing over and over again. Getting insulted by Adhi and his mother times after times. And Mano. I hate him more than any other character. Compared to him Adhi is a saint.

The only character that I like in this serial is Ananthi.

aanaa
7th January 2009, 04:33 AM
நேற்றும் எபிசோட் கொஞ்சம் 'டல்'லடித்தது.....
.

:ty:

R.Latha
7th January 2009, 11:58 AM
'என்ன நடக்கப்போகுதுன்னு இப்போ சொல்றதைவிட ஸ்க்ரீன்லேயே பார்'.(':D') இதையே எத்தனை நாளைக்கு தான்
ஆதி சொல்றதும் அது நடக்காமல் போனால் கத்துவதும், திட்டுவதும். இப்போது அபி ஜெயிக்க வேண்டும். ஆதி தோற்க வேண்டும். இது அபி சீஸன். சாரதா தினமும் கோலங்களை மறக்காமல் போஸ்ட் பண்ணுவதற்கு மிக்க நன்றி. என்னென்றும் தொடரட்டும்.(':D') உங்கள் பணி. தினமும் படித்து தெரிந்து கொள்கிறோம்.

saradhaa_sn
8th January 2009, 02:20 PM
நன்றி ஆனா, கீதா, லதா....

அபியின் வீடு....

அபி, ஆனந்தி, கற்பகம் ராஜேந்திரன், சாரதா எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது, திருவேங்கடம் வருகிறார். எல்லோர் முகத்தில் குழப்பம் நிறைந்த ஆச்சரியம்...

'என்ன எல்லோரும் அப்படிப்பார்க்கிறீங்க. என்னடா இவன் வீடு தேடி வந்திருக்கான்னா?. சாரதா அன்னைக்கு நீ வீட்டுக்கு வந்தப்போ, நான் நாட்டு நிலைமையைப்பத்தி தீர்க்க மான சிந்தனையில் இருந்தேன், நாடு போய்க்கொண்டிருக்கும் நிலைபற்றி கவலையில் ஆழ்ந்திருந்ததால் உன்னை கோபமாக பேசி அனுப்பிட்டேன்'.

இவருக்கு வேறு வேலை கிடையாதா என்பது போன்ற சிந்தனை அபி மற்ரும் ஆனந்தி முகத்தில்.. திருவேங்கடமோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அரசியல்வாதியாயிற்றே.

'நீ போன பிறகுதான் யோசித்தேன். அபி மற்றும் ஆனந்தி கல்யாணத்தில் நானும் நீயும் நின்று தாரை வார்த்துக்கொடுப்போம் என்று முடிவு செஞ்சேன்'.

இப்போது அபி மற்றும் ஆனந்தி முகத்தில் லேசான அதிர்ச்சி....

'ஏன் சித்தி, நீங்க போய் அவர் கிட்டே கேட்டீங்களா?'.

'ஆமா அபி, உங்க அம்மா எல்லாம் சம்பிரதாயப்படி நடக்கணும்னு விரும்புறதாலே, நான்தான் அவரிடம் போய்க்கேட்டேன்'

'என்ன சித்தி இதெல்லாம்?. ஏன் அம்மாவும் நீங்களும் கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க?'

திருவேங்கடம் 'ஏன் ஆனந்தி கோபப்படுறே. அண்ணி ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டியது உங்க கடமை. அதுபோல், இந்த கல்யாணத்தில் நான் வந்து தாரை வார்த்துக்கொடுக்கணும்னா ஒரு சின்ன கண்டிஷன்'

அபி அவரைப்பார்த்து 'என்ன கண்டிஷன்?'

'அது பெரிசா ஒண்ணுமில்லே அபி. வரப்போற உங்க அசோசியேஷன் எலக்ஷன்ல நீ ஆதிக்கு எதிரா நிற்க்கக்கூடாது. அவ்வளவுதான்'.

அபிக்கு புரிந்துவிட்டது ... ஓ.. இது அவனுடைய வேலையா?

'அக்கா ஏன் எலக்ஷன்ல நிற்கக்கூடாதுன்னு சொல்றீங்க?' (யாருமே சித்தப்பான்னு கூப்பிடவில்லை)

'கல்யாணம் செஞ்சுகிட்டு குடும்பம் நடத்தப்போற நேரத்துல எதுக்கும்மா எலக்ஷனும் பதவியும்?. பேசாம கல்யாணம் பண்ணினோமா, குடும்பம் நடத்தினோமா, பிள்ளை குட்டிகளைபெத்தோமான்னு இருக்கிறதை விட்டுட்டு எதுக்கு அவளுக்கு இந்த தலைவலியெல்லாம்?. அண்ணி, நீங்களாவது சொல்லக்கூடாதா?'

கற்பகம் கூட இப்போது புத்திசாலித்தனமாக பேசுகிறாள், 'நீங்க குடும்ப விஷயம் பேசத்தான் வந்திருக்கீங்கன்னு நினைச்சேன். ஆனா வியாபாரம் பேசுறதுக்கில்ல வந்திருக்கீங்க'.

'ஓகோ. அப்படீன்னா உங்க பொண்ணுகளுக்கு தாரை வார்த்துக்கொடுக்க நான் தேவையில்லையா?'

இப்போது சாரதாவே முன்வந்து, 'தேவையில்லை, நீங்க தாரை வார்த்துக்கொடுக்காட்டாலும் அவங்க நல்லா இருப்பாங்க. நீங்க போங்க இங்கிருந்து'.

'அதாவது நான் என்ன சொல்றேன்னா....'

அபி, 'மரியாதைக்குறைவா எதுவும் சொல்றதுக்குள்ளே இங்கிருந்து போயிடுங்க ப்ளீஸ்'.

ராஜேந்திரன், 'அதான் சொல்லிட்டாங்கல்ல... இடத்தைக் காலி பண்றது...'

மேனகாவும் ஆதியும் எதிரெதிரே மர்ந்து பேசிக்கொண்டிருக்க...

'அசோஸியெஷன் சூழ்நிலையைக்கவனிச்சீங்களா ஆதி?. அந்த அபிக்குத்தான் சப்போர்ட் அதிகம் இருக்கு. நீங்க தோத்திடுவீங்கன்னு நினைக்கிறேன்' ரொம்பவே கூலாக பேசுகிறாள்.

'இல்லே மேம், நான் கண்டிப்பா ஜெயிக்கிறேன். பார்த்துக்கிட்டிருங்க'.

'இஸ் இட்.. எப்படி ஆதி?. அந்த அபிதான் சப்போர்ட்டர்ஸை சாலிடா வச்சிருக்காளே. அதை எப்படி உடைக்கப்போறீங்க?'

'எல்லாம் நிச்சயம் நடக்கும் மேம். இப்போ சொல்ல விரும்பலை. நான் ஜெயிச்ச பிறகு பாருங்க'

'அப்படியா... குட்'

அபியின் அலுவலகத்தில் தேர்தல் நிலவரம் குறித்து அபி, விஸ்வநாதன், வரதராஜன், ராஜாமணி ஆகியோர் பேசிக்கொண்டுள்ளனர். எப்படியும் வெற்றி கிடைத்துவிடும் என்பத்ற்காக அசட்டையாக இருந்துவிடக்கூடாது என்றும், ஆதி கடைசி நேர தகிடுதத்தங்கள் செய்வதில் மன்னன் என்றும், அதனால் எல்லா சப்போர்ட்டர்களையும் மீண்டும் சந்திப்பது என்றும், அதற்காக மறுநாள் காலை நால்வரும் வரதராஜன் இருப்பிடத்திலிருந்து புறப்பட்டு, அவர்களின் ஆதரவாளர்களை மட்டுமல்லாது, ஆதியின் சப்போர்ட்டர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டுவதென்றும் முடிவு செய்து, மறுநாள் சந்திப்பதாகக்கூறி புறப்படுகின்றனர்.

விஸ்வநாதனின் காரில் ராஜாமணி செல்ல, வரதராஜன் தனியே தன் காரை ஓட்டிச்செல்லும்போது, இன்னொரு காரில் வந்த குண்டர்கள் அவரது காரைத்தொடர்ந்து வந்து ஓரிடத்தில் அவரை வழிமறிக்க, அதிலிருந்து ஒருவன் வரதராஜனின் காரில் ஏறிக்கொண்டு, துப்பாக்கியைக்காட்டி மிரட்டுகிறான்...

'ஏய், யாருப்பா நீ?. எதுக்காக என் காரில் ஏறினே?'

'யோவ் பெரிசு, கேள்வியெல்லாம் கேட்டீன்னா சுட்டுத்தள்ளிவிடுவேன். பேசாம நான் சொல்ற ரூட்ல வண்டியை விடு'.

'என்ங்கேப்பா போகணும்?'

'பேசாம நான் சொல்ற பக்கம் போய்க்கிட்டே இரு. எதிர் கேள்வி கேட்காதே'

saradhaa_sn
8th January 2009, 04:58 PM
அபியின் வீடு.....

ஒரு புரோகிதர் வந்து பூஜைக்கான முஸ்தீபுகளைச் செய்துகொண்டிருக்கிறார். கூட அவருடைய உதவிக்கு ராஜேந்திரனும் ஆர்த்தியும். அப்போது கார்த்திக் வர கற்பகம் சாரதா எல்லோரும் அவனை வரவேற்கின்றனர். ஆனந்தியும் அவனைப் புன்முறுவலோடு நோக்குகிறாள் (ஆனந்தியை சிரித்த முகத்தோடு பார்ப்பது அபூர்வம். நேற்று தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்ததாக வானிலை நிலைய இயக்குனர் ரமணன் தொலைக்காட்சியில் சொன்னார்).

சற்று நேரத்தில் டாக்டர் மகேஷும் அங்கு வந்து சேர எல்லோரது முகத்திலும் மகிழ்ச்சி.

'ஆமா, என்ன விசேஷம்?' என்று மகேஷ் கேட்க அதற்கு ஆர்த்தி, 'என்ன எதுக்குன்னு கேட்காமலே, கூப்பிட்டதும் வந்துட்டீங்களா?' என்று கிண்டலடிக்கிறாள்.

'ஏதோ பூஜை பண்ணுவதாகவும், அதற்கு வரணும்னும் சொன்னாங்க. ஆனா என்ன பூஜை எதற்கு பூஜைன்னு தெரியாது. அதனாலதான் கேட்டேன் ஆர்த்தி'.

இப்போ ராஜேந்திரன், 'ஆர்த்தி இவ்வளவு பேசுறீயே, நீதான் எதுக்கு பூஜைன்னு சொல்லேன்'.

'ஐயய்யோ, உண்மையில் எனக்கும் தெரியாது, சும்மா டாக்டரை கலாய்ச்சேன், அவ்வளவுதான். என்னை ஆளை விடுங்க'

'நான் சொல்றேன்' சாரதா முன்வந்தாள் 'இது முன்னோர்களுக்கான படையல். நம் வீட்டில் நல்ல காரியம் நடப்பதற்கு முன் இதுபோல படையல் வச்சு நம் வீட்டின் முன்னோர்களுக்கு பூஜை செய்தால், நடக்கபோகும் விசேஷத்துக்கு அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது ஐதீகம்'.

'ஓ... அப்படியா?. இப்போ புரிஞ்சிக்கிட்டேன்'. சொல்லிக்கொண்டே டாக்டரின் கண்கள் வீட்டைச்சுற்றிவர, அதைக்கவனித்த ஆனந்தி, 'அக்காதானே, இன்னும் ஆஃபீஸிலிருந்து வரலை, இப்போ வந்திடும்'. (கார்த்திக்கும் மகேஷும் வந்திருக்காங்களே, ராஜேஷ் ஏன் வரலைண்ணு ஒருத்தர்கூட கேட்கவில்லை).

இன்னும் அபியைக்காணவில்லையே என்று கற்பகம் வாசலுக்கும் உள்ளுக்குமாக கண்களை அலைபாயவிட, அபி வந்துவிட்டாள். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி... 'அபி வந்தாச்சு, பூஜையை ஆரம்பிக்கலாம்'.

பூஜை முடிந்ததும் ஆர்த்தி, 'வாங்க எல்லோரும் சாப்பிடப்போவோம்' என்று கூற, சாரதா 'கொஞ்சம் பொறு ஆர்த்தி, இன்னொரு விஷயம் பாக்கியிருக்கு. கார்த்திக் தம்பி, ஆனந்தி ரெண்டு பேரும் அக்கா கிட்டே ஆசீர்வாதம் வாங்கிக்குங்க'

சாரதா சொன்னதும், இருவரும் கற்பகத்தின் காலைத்தொட்டு ஆசீர்வாதம் வாங்க, அவர்கள் நெற்றியில் விபூதியிடுகிறாள் கற்பகம். 'இப்போ நீங்க ரெண்டு பேரும் ஆசீர்வாதம் வாங்கிக்குங்க' என்று அபியையும் மகேஷையும் அழைக்க, மகேஷ் தயாராக, அபியோ ஒதுங்கிப்போகிறாள். எல்லோர் முகத்திலும் குழப்பம். பின்னர் மகேஷ் சுதாரித்துக்கொண்டு தான் மட்டும் தனியாக ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ள, பின்னர் அபி தனியாக கற்பகத்திடம் ஆசீர்வாதம் பெறுகிறாள். கற்பகத்துக்குக் கேட்கணுமா?. சற்று முன் இருந்த மகிழ்ச்சி மாறி, முகத்தில் குழப்பம் சூழ்கிறது. தன் மகள் தனக்கே புரியாத புதிராக இருக்கிறாளே என்று.

(எனக்கிருக்கும் மிகச்சின்ன மூளையைக் கசக்கிப்பார்த்ததில் ஒன்று மட்டும் தெளிவாகிறது. தன் உயிர் நண்பன் தொல்காப்பியனுக்கு ஒரு இல்லற வாழ்க்கை அமையும் வரை, அபி தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பவில்லை. மேலும் தொல்ஸ் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கும் வரை, அவன் தன்னைச்சேர்ந்தவர்களால் மீண்டும் மீண்டும் அவமானப்படக்கூடாது என்பதாலேயே தொல்ஸை ஒதுக்கி வைத்திருக்கிறாள். இப்போது உஷா தொல்ஸுக்கு சப்போர்ட்டாக இருப்பது அபிக்கு ஆறுதலாக இருக்கிறது.... இதெல்லாம் என் அனுமானங்களே. முன்பு 'அண்ணாமலை (Radhika) க்கும் அன்வருக்கும் (Vijay Adhiraj) ' இருந்த நட்பைப்பார்த்து வியந்த நமக்கு, தொல்ஸ், அபி நட்பு மேலும் வியப்பைத்தருகிறது).

saradhaa_sn
8th January 2009, 05:47 PM
வழக்கம்போல, கடத்தி வருபவர்களை அடைத்து வைப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்ட மக்கள் நடமாட்டமில்லாத ஒரு கிடங்குக்கு வரதராஜன் அழைத்து வரப்படுகிறார். அவருடைய காரில் வந்தவன் மட்டுமல்லாது, பின்தொடர்ந்து வந்த காரில் இருந்த அடியாட்களும் வரதராஜனைச் சூழ்ந்து கொள்கின்றனர்.

'இதோ பார் பெரிசு. ஒரு மூணு நாளைக்கு நாங்க சொல்றபடி நடந்துக்கிட்டீன்னா உனக்கு எந்த டெமேஜும் இல்லாம பத்திரமா அனுப்பி வைக்கிறோம்'.

'நீங்கள்ளாம் யாரு?. எதுக்காக என்னை இங்கே கொண்டு வந்திருக்கீங்க?'

'யோவ் இப்போதானே சொன்னோம். எதிர் கேள்வி கேட்கக்கூடாது. நாங்க சொன்னதை மட்டும் செய்யணும்னு. இப்போ என்ன பண்றேன்னா, உன் செல்போனில் உன் வீட்டுக்கு போன் பண்ணி, 'நான் அவசரமா மும்பை போறேன். திரும்பி வர மூணு நாட்களாகும். அங்கே ரிமோட் ஏரியாவுக்குப்போறதாலே நீ போன் பண்ணினாலும் ரீச் ஆகாது, தேவைப்பட்டால் நானே போன் பண்ணுறேன்' அப்ப்டீன்னு உன் மனைவி கிட்டே சொல்லு. அப்படிச்சொல்லலைன்னா உன் பிணம்தான் உன் வீட்டுக்குப்போகும்'.

அவர்கள் சொன்னது போலவே மனைவிக்கு போன் செய்கிறார்.

'குட்... அடுத்து என்ன பண்றேன்னா, உன்னுடைய ஆதரவாளர்களுக்கெல்லாம் உன் செல்போனிலிருந்து மெஸேஜ் அனுப்பி, வர்ர எலக்ஷன்ல அவங்க எல்லாரும் ஆதிக்குத்தான் ஓட்டுப்போடணும்னு சொல்லு'.

'இப்போ தெரிஞ்சுபோச்சு, ஏண்டா நீங்கள்ளாம் அந்த ஆதியோட ஆளுங்களா?. நீங்க சொல்ற மாதிரி செய்ய முடியாது. என் உயிரைத்தானே எடுக்கப்போறீங்க? எடுத்துக்குங்கடா'.

'யோவ் பெரியவரே, உன் உயிரை எடுக்கிறது மட்டுமில்லேய்யா. இதோ இதைக்கேள்' யாருக்கோ போன் செய்து ஸ்பீக்கரில் போடுகிறான்... 'அலோ, யாரு சந்த்ருவா. எங்கே இருக்கே?'

'நான் அந்த வரதராஜனுடைய மகள் தங்கிப்படிக்கும் ஆஸ்டல் முன்னால நிற்கிறேன். உன் போனுக்காகத்தான் வெயிட் பண்றேன். சொல்லு, அந்த பொண்ணை போட்டுத்தள்ளிறவா?'

கேட்டுக்கொண்டிருக்கும் வரதராஜன் பதை பதைக்கிறார், 'அய்யோ என் பொண்ணை கொன்னுடாதீங்க'.

'சந்த்ரூ, என்னுடைய அடுத்த போன் வர்ர வரைக்கும் அந்தப்பொண்ணை ஒண்னும் செய்ய வேணாம்'

'இது மட்டுமில்லே பெரிசு, இதோ இதக்கேளு'. அடுத்து வேறு யாருக்கோ போன் செய்கிறான்... 'அலோ மணியா?. இப்போ எங்கே இருக்கே?'

'நீ சொன்னமாதிரி வரதராஜனுடைய பையன் படிக்கிற காலேஜ் லைப்ரரில இருக்கேன். பையன் வெளியே வந்தான்னா கதையை முடிச்சிடலாம்னு பார்த்தா வர மாட்டேங்கிறான்'

'அய்யோ என் பையனை ஒண்ணும் பண்ணிடாதீங்க'

'மணி என்னுடைய அடுத்த போன் வரைக்கும் வெய்ட் பண்ணு'
'பெரியவரே இப்போ என்ன சொல்றே?. இதுமட்டுமில்லே, நாங்க சொல்றதைக்கேட்கலைன்னா உன் மனைவியையும் தீர்த்துக்கட்ட உன் வீட்டு வாசலிலும் ரெண்டு பேரு ரெடியா இருக்காங்க. உன் குடும்பம் மொத்தமும் குளோஸ்'

'வேண்டாம், நீங்க சொறபடி மெஸேஜ் அனுப்புறேன்'.

'அதோடு உன் லட்டர் பேடுல, நீ அவசரமா மும்பை போறதாலே உன்னுடைய ஓட்டும் அந்த ஆதிக்குத்தான் போடுவதாக எழுதிக்கொடு'.

அவங்க சொன்னபடியே செய்கிறார்.

'வெரிகுட், இனிமே இந்த செல்போன் உன் கையில் இருக்கக்கூடாது அதைகொடு'.. வாங்கிக்கொண்டதும் 'யோவ் பெரியவரே, இன்னையிலிருந்து மூணு நாளைக்கு நீ எங்கள் மதிப்புக்குரிய விருந்தாளி. என்ன வேணும்னாலும் கேளூ. வாங்கித்தர்ரோம். ஆனா தப்பிக்கணும்னு மட்டும் நினைக்காதே. அப்போ உன் குடும்பத்தை நினைச்சுக்கோ'.

aanaa
9th January 2009, 04:06 AM
அவங்க சொன்னபடியே செய்கிறார்.
'.
:ty:

தொல்ஸ்
கொலைகளையும் வன்முறைகளையும்தான் இங்கு காண்பிக்கின்றார்.
:hammer:
:bangcomp:

aanaa
9th January 2009, 04:09 AM
கற்பகத்துக்குக் கேட்கணுமா?. சற்று முன் இருந்த மகிழ்ச்சி மாறி, முகத்தில் குழப்பம் சூழ்கிறது. தன் மகள் தனக்கே புரியாத புதிராக இருக்கிறாளே என்று.
.

இப்படியேஏஏஏஏஏஏ
இழுத்தூஊஊஊஊஊஊஊஊஊஉ

R.Latha
9th January 2009, 09:03 AM
நன்றி சாரதா இரண்டு நாட்களாக தொடர் வரவில்லையே என்று நினைத்தேன். இரண்டு எபிசோடையும் ஒரே நாளில் அப்டேட் செய்து விட்டீர்கள். கம்ப்யூட்டரில் முதல் வேலை உங்கள் கோலங்கள் தொடரை படித்த பின்னரே மற்ற வேலையை தொடர்கிறேன். பொறுமையாக டைப் அடித்து, உங்கள் மனதில் தோன்றும் வார்த்தைகளையும் கோர்த்து எழுதுவது மிகவும் அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி.

R.Latha
9th January 2009, 09:10 AM
தொல்காப்பியன் வரதராஜனை தற்செயலாக காப்பாற்றுவது போல் காப்பாற்றுவார். கடைசி நிமிடத்தில் உண்மை தெரிந்து அபி வென்று விட ஆதி கோபம் தலைக்கேற, மேம்(மேனகா) வேறு எனக்கு அப்பவே தெரியும் ஆதி நீங்க தோற்று விடுவீர்கள் என்று. நான் என்ன செய்கிறேன் பார் என்று குழம்புவார் மிஸ்டர் ஆதி.(':confused2:')மண்டையை குடைந்து ஆதி தேவராஜனை முதலில் கோபத்தில் சத்தம் போட்டு மேற் படி என்ன செய்வது என்று தீவிர ஆலோசனை செய்வார்.

saradhaa_sn
9th January 2009, 05:21 PM
[tscii:9a9ccb3ed4]நன்றி [/tscii:9a9ccb3ed4]ஆனா மற்றும் லதா..

அபியின் வீட்டுக்கு பரபரப்புடன் வருகின்றனர் விஸ்வநாதன், ராஜாமணி, கிருஷ்ணன் ஆகியோர்....

'வாங்க சார்... வாங்க மேடம்...'

'அபி இன்னைக்கு வரதராஜனோடு போய் நம்ம சப்போர்ட்டர்ஸை மீட் பண்ணனும்னு இருந்தோமில்லையா?'

'ஆமா சார், வரதராஜன் சார் வீட்டுக்குப்போய், அங்கிருந்து அவரையும் அழைத்துப்போவதாகத்தான் முடிவு செய்திருந்தோம். அதுக்குத்தான் ரெடியாயிட்டிருக்கேன்'.

'என்ன சொல்றே அபி?. அப்படீன்னா உனக்கு விஷயம் எதுவும் தெரியாதா?'

இப்போது அபி, ஆனந்தி, கற்பகம், ஆர்த்தி ஆகியோர் முகத்தில் குழப்பம்...

'என்ன சார் என்ன ஆச்சு?'.

'நம்ம சப்போர்ட் அளுங்களுக்கெல்லாம் வரதராஜன் மெஸேஜ் அனுப்பி, அவங்க ஓட்டுக்களை அந்த ஆதிக்குப் போடும்படி சொல்லியிருக்காராம். பலபேர் போன் பண்ணி எங்களுக்கு சொன்னார்கள்'.

வீட்டிலிருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி...

'என்ன சார் சொல்றீங்க?. நான் பாட்டுக்கு நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தவளை இந்த எலெக்ஷன்ல நிற்கச்சொல்லி தூண்டியவரே வரதராஜன்தான். அவர் எப்படி இந்த மாதிரி செய்வார்?'

'ஆனால் எல்லோருக்கும் மெஸேஜ் வந்திருக்கே அபி. அதுவும் அவருடைய செல்போனிலிருந்துதான் வந்திருக்கு'.

'இருந்தாலும் அவர் இப்படி செய்திருப்பார்னு நம்ப முடியலை சார். ஒருவேளை அவருடைய செல்போனிலிருந்து வேறு யாராவது அனுப்பியிருந்தாங்கன்னா?. அவருடைய ஆஃபீஸில் செக் பண்ணினீங்களா?'

'பண்ணினோம் அபி, ஆனா அவர் இன்னைக்கு ஆஃபீஸுக்கே வரலையாம். வீட்டுக்கு போன் பண்ணினால், அவர் ஊரில் இல்லைன்னு பதில் சொல்றாங்களாம். அது மட்டுமில்லே, அவருடைய ‘ஓட்’டையும் ஆதிக்கே அளிப்பதாக எழுதியனுப்பியிருக்காராம். என்ன செய்றதுன்னே தெரியலை அபி'.

'வாங்க சார், அவர் வீட்டுக்குப்போய் அவர் மனைவியிடம் விசாரிப்போம்'.

புறப்பட்டுப்போகிறார்கள். இப்போது ஆர்த்தியின் முகம் குளோஸப்பில். இது ஆதியண்ணாவின் வேலைதான் என்று அறிந்து முகம் முழுக்க திருப்தி...

வரதராஜன் வீடு....

'சொல்லுங்கம்மா, என்ன நடந்தது?'

'ஆஃபீஸ் போனவர் அங்கிருந்து போன் பண்ணினார். தான் உடனடியா மும்பை போவதாகவும், அவசரமாகப் போவதால் அங்கிருந்து நேரடியாகப்போவதாகவும் வீட்டுக்கு வந்து போக நேரமில்லைன்னும் சொன்னார். அவர் வழக்கமாக இப்படி போகிறவர் இல்லை. என்ன அவசரமானாலும் வீட்டுக்கு வந்துட்டுத்தான் போவார். அது மட்டுமில்லே, நான் போன் பண்ண வேண்டாமென்றும் தேவையானால் அவரே போன் பண்ணுவதாகவும் சொன்னார். எனக்கும் குழப்பமாக இருக்கிறது'.

'வேற் எதுவும் சொல்லலைங்கிறீங்க. அப்படீன்னா அவர் எல்லோருக்கும் மெஸேஜ் அனுப்பினது உங்களுக்கு எப்படி தெரியும்?'

'அவர் போன் பண்ணிய கொஞ்ச நேரத்துக்கெல்லாம், ஏகப்பட்ட பேரிடமிருந்து வீட்டுக்கு போன் வந்ததே. அவங்கதான் சொன்னாங்க'.

அபி குழப்பமாக ராஜாமணியையும் விஸ்வநாதனையும் பார்த்து...

'சார், இதுல ஏதோ சதி நடந்திருக்கு. இது அந்த ஆதியோட வேலையாகத்தான் இருக்கும். எதுவாக இருந்தாலும் வரதராஜன் வந்த பிறகுதான் விவரம் தெரியும்'.

'என்ன சொல்றே அபி, அவர் வருவதற்குள் எலக்ஷன் முடிஞ்சிடும்'

'வேறு என்ன செய்றது சார்?'.

அப்போது, வரதராஜனின் ஆதரவாளர்கள் இரண்டு பேர் அந்த வீட்டுக்கு வருகிறார்கள். அவர்களிடம் விஸ்வநாதன்....

'சார், அந்த மெஸேஜ் செய்தியை நம்பாதீர்கள். அது ஏதோ சூழ்ச்சி இருக்கு. நீங்க ஏற்கெனவே முடிவு செஞ்சபடி அபிக்கே ஓட்டுப்போடுங்க'.

'அது எப்படி சார்?. உங்களுக்கு போடச்சொன்ன வரதராஜனே இப்போ வேணாம்ங்கிறார். நாங்க அவர் சொல்றதைத்தானே கேட்க முடியும். மறுபடியும் அவர் சொன்னார்னா போடுறோம்' அவர்கள் போய்விடுகிறார்கள்.

அபிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை 'இப்போ என்ன சார் பண்றது?'

'உடனடியா அசோஸியேஷன் போய், நம்முடைய ஆதரவாளர்களை அழைத்து மீட்டிங் போட்டு விஷயத்தைச்சொல்லி அவங்க ஆதரவை தக்க வைப்போம்'.

'ஆமா சார்... அதுதான் சரி. கிருஷ்ணன் நீங்க ஆஃபீஸ் போங்க. நாங்க மூணு பேரும் அங்கே போயிட்டு வர்ரோம்'.

மேனகாவும், ஆதியும் பில்லியர்ட்ஸ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்....

'எப்படி ஆதி, சொன்ன மாதிரி ஒரே நாளில் சிச்சுவேஷனையே திசை மாத்திட்டீங்க' (என்னவோ தெரியலை, இரண்டு நாளாக மேனகா படு கூல்).

'அதான் சொன்னேனே மேம், ஒரு ஐடியா வச்சிருக்கேன்னு'.

'இருந்தாலும் ஸ்ட்ராங்கா நின்ன அந்த வரதராஜன் எப்படி மாறினார்?. எதை வச்சு மயக்கினீங்க?. பணம் கொடுத்தா? நோ, அதுக்கு சான்ஸ் இல்லை. அவரது வேறெந்த வீக்னஸையாவது பயன்படுத்தி.... (முரட்டு மேனகாவுக்கும் கூட இந்த இடத்தில் நாணம்).. No, that is also not possible. வேறெப்படி?'

'மேம், நான் இன்னும் எலக்ஷன்ல ஜெயிச்சுடலை. அதுக்கான வழியை மட்டும்தான் பண்ணியிருக்கேன். முழு வெற்றி கிடைக்கட்டும். அப்புறம் எல்லாத்தையும் விவரமா சொல்றேன்'.

'என்ன ஆதி, இந்த மேனகாவுக்கே சஸ்பென்ஸா?. எப்படியோ நான் நினைச்சதை விட நீங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க. Good'

மேனகாவின் பாராட்டுக்களும், அவளது (இதுவரை பார்த்திராத) சிரிப்பும் ஆதியைப் பறக்க வைக்கிறது. அப்போது அங்கு பிருத்வி வருகிறான்.... 'அலோ மேக்'

'பிருத்வி, ஐ ஆம் நாட் மேக், ஐ ஆம் மேனகா. ஒண்ணு மேனகான்னு கூப்பிடு அல்லது மேடம்னு கூப்பிடு. இந்த செல்லப்பெயர் எல்லாம் வேண்டாம். இதோ பார் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கவும் விரும்பலை. வேலை கொடுக்கவும் விரும்பலை. ஏதோ அப்பா சொன்னதுக்காக பொறுத்துக்கிட்டு இருக்கேன். Now get out from here'.

'ஸாரி மிஸ்ட்டர் ஆதி, இந்த பிருத்வி என் மூடை ஸ்பாய்ல் பண்ணிட்டான். We will see later'.

பிருத்வியை மேனகா விரட்டுவது ஆதியை மேலும் உற்சாகமாக்குகிறது.

aanaa
10th January 2009, 08:27 AM
பிருத்வியை மேனகா விரட்டுவது ஆதியை மேலும் உற்சாகமாக்குகிறது.
:ty:
ஆதிக்கு
உஷா
தம்பியின் மனைவி -ரேகா
இப்ப மேனகா
ம்ம்
அடங்கல

saradhaa_sn
10th January 2009, 12:45 PM
ஆதியை சந்திக்க வரும் தேவராஜ பாண்டியனை கிரி ஆதியிடம் அழைத்துப்போகிறான்...

'பாஸ், தேவராஜன் உங்க கிட்டே ஏதோ முக்கிய விஷயம் பேசணுமாம்'

'அப்படீன்னு நான் உன் கிட்டே சொன்னேனா?'

'இல்லே தேவராஜன், நீங்க வந்தா அது முக்கியமானதாகத்தான் இருக்கும்னு'.... (எப்படியாவது பாஸின் ரகசிய நடவடிக்கையைத் தெரிஞ்சுக்கணும்னு கிரிக்கு ஆவல்)

தேவராஜ் ஆதியைப்பார்க்க, அவன் கிரியை வெளியே அனூபுகிறான்.

'என்ன தேவராஜ், எல்லாம் எந்த லெவல்லே இருக்கு?. ஏன் கேட்கிறேன்னா இப்போ அனுப்பியிருக்கும் ஆளுங்க புதுசு. அதுக்குத்தான் கேட்டேன்'.

'தம்பி, அவங்க நமக்குத்தான் புது ஆளுங்க. ஆனா இந்த மாதிரி வேலைகளுக்கு பழைய ஆளுங்க'

மேற்கொண்டு பேசப்போன தேவராஜனைத்தடுத்து, கதவுப்பக்கம் காட்ட, கண்ணாடிக்கு வெளியே யாரோ நின்று ஒட்டுக்கேட்பது தெரிகிறது. ஆதி சடாரென கதவைத்திறக்க அங்கு நின்றது கோமாளி கிரிதான். ஆதி அவனை மீண்டும் எச்சரித்து விரட்டிவிடுகிறான்.

'சொல்லுங்க தேவராஜன். நான் எதுக்கு சொல்றேன்னா நாம அனுப்பின ஆளுங்க சொதப்பிடக்கூடாது. முக்கியமா அந்த வரதராஜன், எலக்ஷன் முடிகிற வரையில் அங்கிருந்து வெளியே போயிடக்கூடாது. மேலும் இதுக்குப்பின்னால் நாம் இருப்பது தெரியவே கூடாது' (வேடிக்கையாக இல்லை?. அவரை மிரட்டி ஆதிக்கு ஓட் பண்ணும்படி சொல்லச்சொன்னது யாராக இருக்கும்னு தெரியாதா என்ன?).

'கவலையை விடுங்க தம்பி. அதான் எல்லாம் நாம பிளான் பண்ணபடி நடக்குதில்ல'

'இல்லை தேவராஜன்... நான் ஜெயிச்சு மீண்டும் பிரஸிடெண்ட் சேர்ல உட்காரும் வரை எனக்கு டென்ஷன் குறையாது'.

காரை விட்டிறங்கிய தொல்காப்பியன் யாருக்காகவோ வெயிட் பண்ணிக்கொண்டிருக்கும்போது, சற்று தூரத்தில் ஒரு ஆட்டோவில் இருந்து கிருஷ்ணன் இறங்குவதைப்பார்த்ததும்....

'சார்.... கிருஷ்ணன் சார்'.

'அடடே தொல்காப்பியனா?. என்ன சார் இந்த இடத்துல நிக்கிறீங்க?'

'ஒரு ஆளுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன். நீங்க எங்கே இங்கே?'

'பக்கத்துலதான் நம்ம வீடு. வாங்க வீட்டுக்குப்போய் ஒரு வாய் காப்பி சாப்பிட்டுகிட்டே பேசலாம்'

'பரவாயில்லே கிருஷ்ணான். சரி கம்பெனி நிலவரம் எல்லாம் எப்படி இருக்கு?. அபி நல்லா இருக்காங்களா?'

'நல்லாத்தான் இருந்தாங்க... ஆனா இப்போ.....' கிருஷ்ணன் இழுப்பதைக்கண்ட தொல்ஸ், 'என்ன கிருஷ்ணன், என்ன ஆச்சு?'

'அதை ஏன் சார் கேட்கிறீங்க, அவங்க பாட்டுக்கு தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தவங்களை, பில்டர்ஸ் அசோஸியேஷனைச்சேர்ந்த வரதராஜன், தேவையில்லாமல் பிரஸிடெண்ட் எலக்ஷன்ல நிக்க வச்சுட்டு, இப்போ திடீர்னு காலை வாரிட்டார். அபி இப்போ அந்த டென்ஷன்ல இருக்காங்க'.

'என்ன சொல்றீங்க கிருஷ்ணன்?. அந்த வரதராஜனை எனக்கு நல்லாவே தெரியும். அவர் ரொம்ப நல்லவ்ராச்சே'.

'இப்படி எல்லோர்கிட்டேயும் நல்ல பெயர் வாங்கி, அதை நல்ல விலைக்கு வித்துட்டார். அந்த ஆதிக்கு ஓட் போடசொல்லி எல்லா மெம்பர்ஸுக்கும் மெஸேஜ் அனுப்பிட்டு மும்பைக்கு தலைமறைவா போயிட்டார்'.

'என்னாலே நமப் முடியல கிருஷ்ணன். இப்பவும் சொல்றேன், அந்த வரதராஜன் ரொம்ப நல்லவர். இதுல அந்த ஆதியும் சம்மந்தப்பட்டிருப்பதால் ஏதோ நடந்திருக்குன்னு தெரியுது'.

'சரி, தொல்காப்பியன். நான் வர்ரேன்'.

அபியின் அலுவலக மீட்டிங் அறை. அபி, விஸ்வநாதன், ராஜாமணி மற்றும் வரதராஜனின் ஆதரவாளர்கள் சிலர். எல்லோரும் தங்களுக்குள் கசமுசவென்று பேசிக்கொண்டிருக்க, அபி அவர்களின் கவனத்தைத் திருப்ப....

'சைலன்ஸ்... இப்போ நாம எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வர வந்திருக்கோம். அப்படியிருக்க உங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தால் எப்படி?'

'எதைப்பத்தி முடிவு செய்யணும்?. அதான் அந்த ஆதிக்கு ஓட் போடச்சொல்லி வரதராஜன் சொல்லிட்டாரே. நாங்க அவர் தயவுல தொழில் பண்றவங்க. பேசாமல் அவர் சொல்றபடி செஞ்சுட்டுப் போக வேண்டியதுதான்'.

விஸ்வநாதன்: 'என்ன சொல்றீங்க?. அவரே நேர்ல வந்து சொன்னாரா?. வெறும் எஸ்.எம்.எஸ்.தானே. அதை வேறு யாரும் கூட அனுப்பியிருக்கலாமில்லையா?'

'அவர் அதோடு நின்னா நீங்க சொல்ற மாதிரி நடந்திருக்கலாம்.ஆனா அவர் மும்பை போறதா அவர் மனைவி கிட்டே சொல்லியிருக்கார். அதோ அவருடை 'ஓட்'ட்டைக்கூட ஆதிக்கே அளிப்பதாக தபால் மூலமா எலக்ஷன் கமிட்டிக்கு அனுப்பியிருக்காரே'.

'இருந்தாலும் அவர் நேர்ல வந்து சொல்ற அவரைக்கும் அவர் முன்பு சொன்ன மாதிரியே அபிக்கு நீங்க ஆதரவு அளிக்கலாமில்லையா?'

'என்ன சார் சொல்றீங்க நீங்க?. நாளைக்கே அவர் வந்து 'நான்தான் ஆதிக்கு போடச்சொன்னேனே, ஏன் அபிக்குப் போட்டீங்க'ன்னு கேட்டா அவருக்கு யார் பதில் சொல்றது?'

'ஏங்க உங்க எல்லோருக்குமே தெரியும், அவர் அந்த ஆதி பதவிக்கு வருவதை எவ்வளவு வெறுத்தார்னு. அப்படியிருக்க வெறும் ஒரு மெஸேஜை மட்டும் நீங்க நம்புவது முட்டாள்தனமா இருக்கு'. விஸ்வநாத்னின் இந்த பேச்சு அவர்களுக்கு கோபத்தை உண்டாக்க

'என்ன சார் இது, நீங்க கூப்பிட்டதுக்காக வந்தோம்னா நீங்க பாட்டுக்கு முட்டாள் அது இதுன்னு பேசுறீங்க?. இதோ பாருங்க சார், ஏற்கெனவே வந்த மெஸேஜ் மாதிரி இப்போது அபிக்கு ஓட்டு போடச்சொல்லி வரதராஜனிடமிருந்து மெஸேஜ் வரட்டும். பார்ப்போம். அது வராதவரையில் ஆதிக்குத்தான் எங்கள் ஆதரவு. எல்லோரும் வாங்க போகலாம்'.

இப்போது மூவர் மட்டும் த்யனியே...

'என்ன அபி, இப்படி ஆயிடுச்சு?'

'சார் இந்த எலக்ஷன்ல நாம ஜெயிக்கிறோம்'.

'எப்படி அபி, அந்த வரதராஜனின் ஆட்களுடைய சப்போர்ட்லதானே நாம் கான்ஃபிடெண்டா இருந்தோம்?. அது இல்லேன்னா ஆதிக்குத்தானே பலம் அதிகம். அதோடு இப்போ வரதராஜனின் சப்போர்ட் ஓட்டுக்களும் அவனுக்கு சேர அவனுடைய வெற்றி உறுதியாகி விட்டதே'.

அபியின் கண்களில் தீர்க்கமான வெறி.... 'இல்லே சார், நாம ஜெயிக்கணும். அதுக்கு முதல் வேலையா வரதராஜன் எங்கேன்னு கண்டு பிடிக்கணும்'.

'நாளைக்கு எலக்ஷனை வச்சிக்கிட்டு இதெல்லாம் நடக்கிற காரியமா அபி?. அவர் மும்பைக்குப்போரேன்னு சொல்லியிருக்கார். அவரை எப்படி நம்மால் தேட முடியும்'.

'நம்மால் முடியாது சார்.... ஆனா போலீஸால் முடியும். நாம் போலீஸில் புகார் செய்வோம்'.

என்ன விலை கொடுத்தாகிலும் அந்த ஆதியை இந்த தேர்தலில் ஒழிச்சுக்கட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இப்போது அபியின் கண்களில். (Wow.... what an expression Dhevayani....!!!!)

saradhaa_sn
10th January 2009, 01:43 PM
ஆதிக்கு
உஷா
தம்பியின் மனைவி -ரேகா
இப்ப மேனகா
ம்ம்
அடங்கல
எனக்கென்னவோ, ஆதியைப்பார்த்தால் (ரஞ்சனைப்போல) பெண்கள் பின்னால் சுற்றுபவனாத் தோன்றவில்லை. ரேகாதான் அவனிடம் வழிகிறாளே தவிர, அவன் ரேகாவை தவறான எண்ணத்தில் அணுகவில்லை.

அவனுடைய குறிக்கோள் எல்லாம் ஆஸ்தி, பணம், தொழில், அந்தஸ்து மோகம், தான் என்ற அகம்பாவம், ஈகோ, ஆணாதிக்க வெறி இவைகள்தான். அவன் மனதுவைத்தால் எத்தனையோ அழகான பெண்களை தினம் தினம் அடைய முடியும். ஆனால் அது அவனது நோக்கமாக தெரியவில்லை. சமுதாயத்தில் தனது 'ஸ்டேட்டஸ்' உயரத்தில் இருக்க வேண்டும். அதற்காக எந்த ஒரு கிரிமினல் வேலையும் செய்யத் தயாராக இருப்பவன்.

இப்போது அவன் மேனகாவை அடைய விரும்புவது கூட அந்தஸ்து மோகத்தினாலேயேதான். 'இண்டர்நேஷனல் பிஸினஸ் உமன்' மேனகாவின் கணவன் என்ற இன்னொரு ஸ்டேட்டஸுக்காகத்தான்

aanaa
10th January 2009, 08:02 PM
என்ன விலை கொடுத்தாகிலும் அந்த ஆதியை இந்த தேர்தலில் ஒழிச்சுக்கட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இப்போது அபியின் கண்களில். (Wow.... what an expression Dhevayani....!!!!)
:ty:
:exactly:

gta129
10th January 2009, 11:02 PM
Thanks for the updates.

Arthi
11th January 2009, 08:51 PM
oru vara serial-la orE naaLla padichachu :D

:ty: saradha madam :)

R.Latha
12th January 2009, 11:18 AM
thank u saradha madam. ('::')

mr_karthik
12th January 2009, 02:35 PM
While reading the dialogues, we can imagine the way & style of dialogue delivery of each charector.

tv munnAl utkArndhu pArkira mAthiriyE irukku.... :D :D

saradhaa_sn
13th January 2009, 12:50 PM
நன்றி ஆனா, கீதா, லதா, கார்த்திக் & ஆர்த்தி.....

டிடெக்டிவ் ஏஜென்ஸியைச்சேர்ந்த சித்ராவின் வீட்டுக்கு தொல்காப்பியன் வந்து பஸ்ஸரை அழுத்த, கதவைத்திறந்து பார்க்கும் சித்ராவுக்கு சந்தோஷ அதிர்ச்சி... என்னது, தொல்காப்பியனா?. அதுவும் நம்ம வீடு தேடி வந்து...?

'என்ன அப்படிபார்க்கிறீங்க சித்ரா?'

'இல்லே நீங்க என் வீடு தேடி வந்து..., ஆச்சரியமா இருக்கு சார். காப்பி, டீ எதாவது...., சரி வேண்டாம் டிஃபனே ரெடி பண்ணிடுறென். ரென்டு பேர்ம் சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்.'

'வேண்டாம் சித்ரா. நாம போற வழியிலே டிஃபன் சாப்பிட்டுக்கலாம்'.

'போற வழியிலா?. அப்படீன்னா நாம ரென்டு பேரும் இப்போ வெளியிலே போறோமா?'

'ஆமா சித்ரா, இப்போ எனக்கு உங்க உதவி வேண்டும். அதுக்காகத்தான் வந்திருக்கேன்'.

'உதவியா?. என்ன உதவி?'

'அதை வண்டில போகும்போது சொல்றேன்'

'அப்படீன்னா இப்போ வெறும் காஃபி மட்டுமாவது சாப்பிட்டுட்டுப் போவோம், ஜஸ்ட் எ மினிட்'.

கிச்சனுக்குள் போகும் சித்ரா, அங்கிருந்து தன் பாஸுக்கு போன் செய்து விவரம் சொல்கிறாள்.

'அப்படியா?. கண்டிப்பா அவரோடு போ சித்ரா. அவருக்கு உதவி செய்யும் சாக்கில் அவரோடு நெருக்கமாகப்பழகும்போது, நமக்குத்தேவையான மேலும் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. முக்கியமா, அவர் ஏண் மேனகாவைக்கொல்ல (????) முயற்சிக்கிறார்னு நமக்குத்தெரியணும். கவனம்'

'சரி சார்' போனைக் கட் பண்ணிட்டு கூடத்துக்கு வருகிறாள்.

'போவோமா சார்?'
'என்னங்க காஃபி போட்டுக்கிட்டு வரேன்னு போனீங்க?'
'ஓ.. மறந்துட்டேன் சார். இப்போ போட்டுக்கிட்டு வந்திடுறேன்'
'அப்போ இவ்வளவு நேரம் உள்ளே என்ன பண்ணினீங்க?'
'ஸாரி, காஃபி பொடியில்லை. அதான்'
'அப்படீன்னா, இப்போ ஏன் காஃபி கொண்டாறேன்னு போறீங்க?. சரியா போச்சு போங்க. உங்களை ஒரு முக்கியமான வேலைக்கு அழைச்சிக்கிட்டுப்போகலாம்னா, நீங்க இப்படி தடுமாறுறீங்க?'

'அதெல்லாம் ஒண்ணுமில்லை சார், வாங்க போகலாம்'.

அபியின் வீடு.... ஆனந்தி, ஆர்த்தி, கற்பகம் ராஜேந்திரன் இருக்கின்றனர். அபி இல்லை.

ஆர்த்தி இதுதான் சமயமென்று குத்திக்காட்டுகிறாள்... 'நான் அப்பவே சொன்னேன். இந்த எலக்ஷன், பிரஸிடெண்ட் பதவியெல்லாம் வேண்டாம்னு. யார் கேட்டாங்க?. அதுல ஜெயிச்சு வர்ரதெல்லாம் நாம நினைக்கிற மாதிரி அவ்வளவு சுலபமில்லை'.

'இப்போ எதுக்கு அக்காவைக் குத்தம் சொல்றே. அக்கா செஞ்சது ஒண்ணும் தப்பில்லை'.

'அபியக்கா இப்படி இதுல இறங்கிறதுக்கு நீயும்தான் ஒரு காரணம் அக்கா. சும்மா தன்னம்பிக்கை அது இதுன்னு நீ பத்திரிகையில எழுதுறதை வச்சிக்கிட்டுதான் அக்கா இப்படியெல்லாம் துணியுது. இப்போ என்ன ஆச்சு பார்த்தீல்ல?'

'இப்போஎன்ன நடந்திடுச்சுன்னு இப்படி குதிக்கிற ஆர்த்தி?'

'இன்னும் என்ன நடக்கணும்?. அந்த வரதராஜனை நம்பியெல்லாம் இறங்க வேண்டாம்னு சொன்னேன். அக்கா கேட்டுச்சா?. இப்போ சமயம் பார்த்து அந்த ஆள் காலை வாரிட்டார். ஏம்மா, இதெல்லாம் நீயாவது எடுத்துச்சொல்லக்கூடாதா?'

'ஆர்த்தி, இப்போ எதுக்கு அம்மாவிடம் அதையும் இதையும் சொல்லி பயமுற்த்துறே?'

'ஆனந்தி, எனக்கென்னமோ ஆர்த்தி சொல்றதுதான் சரின்னு படுது'.

'அம்மா, நீ இவள் சொல்றதைக்கேட்டு பயப்படாதே. அக்கா நிச்சயம் இந்த தேர்தல்ல ஜெயிக்கத்தான் போகுது'.

'எப்படிக்கா ஜெயிக்க முடியும். அந்த வரதராஜன்தான் தன் ஆதரவை ஆதிக்கு கொடுத்திட்டாரே. இப்போ மட்டும் இதுல தோத்திட்டா அதைவிட அவமானம் இல்லை. அதைத்தான் அந்த ஆதி எதிர்பார்க்கிறான். அக்கா மட்டும் தோற்கட்டும். அப்புறம் ஒவ்வொருத்த்ராக வந்து அவமானப்படுத்திட்டுப்போவாங்க. அது நமக்குத்தேவையா?'

'ஆர்த்தி, நீ ஏன் அக்கா தோற்கும்னே நினைக்கிறே?. நிச்சயம் அக்கா ஜெயிக்கப்போகுது பாரு'.

இப்போ ராஜேந்திரன், 'ஆர்த்தி, அதான் அபி ஜெயிக்கும்ணு ஆனந்தி சொல்லிடுச்சில்ல, நீ கிளம்பு. இருந்தால் எதையாவது சொல்லிக்கிட்டே இருப்பே'.

'நான் என்ன சொல்றேன்னா, இப்போ கூட தேர்தல்லேருந்து வாபஸ் வாங்க வாய்ப்பு இருக்கு'.

'ஆர்த்தி, மாமா சொன்னதுதான் சரி... முதல்ல நீ இங்கிருந்து கிளம்பு'

சித்ராவை காரில் அழைத்துவரும் தொல்காப்பியன், ஓரிடத்தில் இறக்கி விடுகிறான்.

'சித்ரா, இதோ இந்த கடைசியில் போய் திரும்புனீங்கன்னா, அதுதான் தேவராஜன் வீடு. நீங்க பிரஸ் ரிப்போர்ட்டர் மாதிரி போய் பேசுங்க. நீங்க ஒரு பெண்ங்கிறதாலே கொஞ்சம் அசால்ட்டா பேசுவான். அவன் வாயிலிருந்து ஒரு சின்ன மேட்டர் கிடைச்சா கூட போதும். வரதராஜன் எங்கேன்னு கண்டுபிடிச்சிடலாம்'.

போகிறாள். வாசலில் நிற்கும் தடியன்கள், தேவராஜனிடம் அனுமதி கேட்டு உள்ளே அனுப்புகின்றனர். மொட்டை மாடியில் நிற்கும் தே.பா.வை சித்ரா சந்திக்கிறாள்.

'சார், நான் மும்பையிலிருந்து வெளியாகும் 'தி வீக்லி கண்டெயினர்' என்ற பத்திரிகையின் நிருபர். உங்களைப் பேட்டி எடுக்க வந்திருக்கேன்'.

'உங்க பத்திரிகை பெயரை நான் கேள்விப்பட்டதேயில்லையே. சரி எதுக்காக என்னை பேட்டியெடுக்கணும்'.

'சார், மும்பைலா மஸ்தான், வரது பாய் இவங்களைப்போல சென்னையில் நீங்க பெரிய தாதான்னு உங்க பெயர வடநாட்டிலெல்லாம் பரவியிருக்கு. அதனால்தான் உங்களது பேட்டி எங்கள் பத்திரிகையில் வரணும்னு விரும்புகிறோம்'.

சற்று தூரத்தில் நிற்கும் தன் அடியாட்களை பெருமையுடன் பார்த்துக்கொள்ள, சித்ரா டேப் ரிக்கார்டரை ஆன் செய்து அவன் அருகே நீட்டுகிறாள்.

'நீங்க ஏன் இன்னும் அரசியலில் இறங்கவில்லை?'

'இங்கே லோக்கல் வேலைகளே நமக்கு நிறைய இருக்கு'

'இல்லே சார் நீங்க அரசியலில் இறங்கினால் பெரிய ஆளா வருவீங்கன்னு எல்லோரும் கணிக்கிறார்கள்'.

அப்போது தேவராஜனுக்கு போன் வர, சற்று நகர்ந்து போய் பேசுகிறான்...

'எங்கே வச்சிருக்கே. அமரன்பேட்டை குடோனிலா?' என்றவன் சட்டென சித்ரா இருப்பதைஅய்றிந்து சுதாரித்து... 'அந்த இடம்தான் தேவலை சரக்குகள் பாதுகாப்பாக இருக்கும். சரக்குகளை அங்கேயே வை' போனை கட் பன்னிவிட்டு சித்ராவிடம் வருகிறான்...

'அதாவது, நான் அரசியல்ல இறங்கணும்னா அடுத்த ஆண்டுதான் இறங்கணும்'.

'ஏன் சார்?.'

'இப்போ எனக்கு கிரகம் சரியில்லை. அடுத்த வருடம்தான் குரு வந்து சேர்கிறான். அப்போ அரசியலில் ஈடுபட்டால், பிரதமாகக் கூட வர வாய்ப்பிருக்கிறது'

மேலும் சில கேள்விகளோடு பேட்டியை முடித்துக்கொண்டு தொல்காப்பியனின் காருக்கு வருகிறாள். அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

'எதுக்காக இப்படி சிரிக்கிறீங்க?'

'இல்லே அடுத்த வருஷம் நமக்கு ஒரு அருமையான பிரதமர் கிடைக்கப்போகிறார்' என்று சொல்லி நடந்ததைச்சொல்ல, அதற்கு தொல்ஸ்...

'அதுக்காக ஏன் சிரிக்கிறீங்க சித்ரா. திருவேங்கடமெல்லாம் எம்.எல்.ஏ. ஆகும்போது, தேவராஜன் பிரதமரானால் ஆச்சரியமில்லை. சரி, நமக்கு தேவையான விவரம் எதுவும் கிடைச்சதா?'

'ஆம், நான் பேட்டியெடுக்கும்போது அவனுக்கு ஒரு போன்கால் வந்தது. அவன் பேசும்போது 'அமரன்பேட்டை குடோனிலா வச்சிருக்கே' என்று கேட்டவன், என் நினைவு வந்ததும் பேச்சை மாற்றினான்'.

'என்னது அமரன்பேட்டை குடோனா?. அப்போ அங்கேதான் வரதராஜனை அடைச்சு வச்சிருக்கணும்'.

R.Latha
13th January 2009, 01:32 PM
thanks saratha

aanaa
14th January 2009, 01:21 AM
'என்னது அமரன்பேட்டை குடோனா?. அப்போ அங்கேதான் வரதராஜனை அடைச்சு வச்சிருக்கணும்'.
:ty:

தொல்ஸ்' க்குத் தெரியாததா ..ம்ம்ம்ம்ம்ம்

saradhaa_sn
14th January 2009, 12:00 PM
நன்றி லதா மற்றும் ஆனா....

துணை போலீஸ் கமிஷனர் அலுவலக்த்தில் அவர் முன் அபி, விஸ்வநாதன், ராஜாமணி ஆகியோர் அமர்ந்திருக்க.....

'சொல்லுங்க, என்ன விஷயமா கம்ப்ளைண்ட் கொடுக்கப்போறீங்க?'

'பில்டர்ஸ் அசோஸியேஷனைச்சேர்ந்த வரதராஜனைக் காணோம். அவரைக் கண்டுபிடிக்கணும்'

'அவர்தான் மும்பைக்குப்போறதா சொல்லிப்போயிருக்காரே?'

'இல்லே சார் எங்களுக்கு சந்தேகமா இருக்கு. அவர் கடத்தப்பட்டிருக்கக்கூடும்னு நினைக்கிறோம்'.

'சரி அப்படியென்றாலும் அவரது மனைவியோ, பிள்ளைகளோ, அல்லது உறவினர்களோ தான் கம்ப்ளைண்ட் கொடுக்க முடியும்'.

'அவர் மேலே எங்களுக்கும் அக்கறை இருக்கு சார்'.

'என்ன அக்கறை?. அவரைக்கொண்டு நீங்க இந்த தேர்தல்ல ஜெயிக்கணும். அந்த அக்கறைதானே'.

'சார் நீங்க ஆக்ஷன் எடுப்பீங்கன்னுதான் லோக்கல் போலீஸிடம் கூட கம்ப்ளைண்ட் பண்ணாமல் உங்க கிட்டே வந்திருக்கோம்'.

அப்போது ஒரு இன்ஸ்பெக்டர் வந்து ஏ.சி.க்கு சல்யூட் அடித்துவிட்டு, தொடர்கிறார்....

'சார், நான் இப்போ பில்டர்ஸ் அசோஸியேஷன்லேர்ந்துதான் வர்ரேன். வரதராஜன் என்பவர் மும்பைக்குப்போயிருக்கார். அவருடைய செல்போனிலிருந்து தன் ஆதரவாளர்கள் எல்லோருக்கும் மெஸேஜ் அனுப்பியிருக்கார். அதோடு தன்னுடைய ஓட்டையும் தபால் மூலமாக ஆதித்யாவுக்கு அளித்துள்ளார். அவர் மனைவியிடம் விசாரித்ததில் அவர் மும்பை போயிருப்பதாக சொல்றாங்க. அவங்க கம்ப்ளைண்ட் எதுவும் கொடுக்க விரும்பவில்லை'

'கேட்டுக்கிட்டீங்களா?. வேணும்னா நான் ஒண்ணு செய்யலாம்'

அஸிஸ்டண்ட் கமிஷனர் ஏதோ சொல்லத்துவங்க, அபி ஒரு முடிவோடு எழுந்திருக்கிறாள்

'வேணாம் சார். நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம். நாங்க பார்த்துக்கிறோம். ஆனா ஒண்ணு எங்களுக்கெதிரா யார் என்ன செஞ்சாலும் இந்த தேர்தல்ல நான் ஜெயிக்கிறது நிச்சயம். வாங்க போகலாம்'. அபி வெளியே நடக்க, விஸ்வநாதனும் ராஜாமணியும் பின்தொடர்கின்றனர்.

அலமேலுவின் வீடு.... அலமேலுவின் சூழ்ச்சிப்படி அவளது உதவாக்கரை மருமகன் ஒரு சாமியாரை அழைத்து வர, அவனிடம் அலமேலு பில்லி சூனியம் வைக்குமாறு சொல்ல, அவன் பணத்தில் குறியாக முதலிலேயே ஐயாயிரம் ரூபாய் வாங்கிக்கொள்கிறான்.

'சாமி அந்த அபி இருக்காளே அவள் மொத்தக்க்குடும்பமும் நாசமா போகணும். அந்த அபிக்கு கை கால் விளங்காமல் போகணும், அவள் தங்கச்சி ஆனந்திக்கு மீண்டும் தலையில் அடிபட்டு படுத்த படுக்கையாகணும், அந்த ஆர்த்திக்கு வாய்பேசமுடியாமல், காதுகேட்காமல் போகணும். எல்லாத்துக்கும் மேலாக அவங்க அம்மா கற்பகத்துக்கு பைத்தியம் பிடிக்கணும். இதுக்கெல்லாம் நீங்கதான் சாமி ஏவல் செய்யணும்'.

'கவலைப்படாதீங்கம்மா. என் வசம் பத்து சாத்தான்களை வசப்படுத்தி வச்சிருக்கேன். நீங்க சொன்ன மாதிரி என்ன செய்றேன் பாருங்க'.

அலமேலுவுக்குத்தெரியாமல் மறைவில் நின்று கேட்டுக்கொண்டிருக்கும் சங்கீதாவுக்கு அதிர்ச்சி... 'இப்படியும் பொம்பிலை இருப்பாளா..??'

சாமியார் ஏதோ வாயில் நுழையாத வார்த்தைகளை மந்திரம் என்ற பெயரில் உச்சரித்துக்கொண்டே எதோ ஒரு பொடியைத்தூவ, புகை கிளம்புகிறது. அந்த சமயம், வாசலில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, பூஜை நடக்கும் இடத்தின் கதவை சாத்திக்கொண்டு, வாசல் கதவை அலமேலு திறக்க, வெளியே பாஸ்கர். அலமேலுவுக்கு அதிர்ச்சி...

'என்னடா பாஸ்கர் வந்துட்டே?'

'போன வேலை முடிஞ்சதும்மா. அதான் உடனே திரும்பிட்டேன்'. கூடத்துக்குள் நுழையப்போகும் பாஸ்கரை அலமேலு தடுத்து, மாடிக்குப்போகுமாறு சொல்ல, அம்மாவின் திடீர் குழைவில் அவனுக்கு சந்தேகம் வரும் நேரம், உள்ளே சாமியார் உரக்கச்சொல்லும் மந்திரம் அவன் காதில் விழ, அலமேலு தடுத்ததையும் மீறி அந்தக்கூடத்துக்குள் நுயைந்ததும் அவன் கண்ட காட்சி அவனுக்கு கோபத்தை அதிகமாக்குகிறது. சாமியாரை அடித்து விரட்டுகிறான்.

'என்னம்மா இதெல்லாம்?'

'எல்லாம் அந்த அபிக்கு எதிராகத்தாண்டா. அவளுக்கும் அந்த ஆனந்திக்கும் நடக்கப்போகும் கல்யாணம் நடக்கக்கூடாதுன்னுதான் இந்த சாமியாரைக்கொண்டு பில்லி சூனியம் வைக்கிறேன்'

'ஏம்மா, அறிவில்லை உனக்கு?. எத்தனை தடவை சொல்றது?. பாவம்மா அந்த அபி. நீ அவளுக்கு எவ்வளவோ கெடுதல் பண்ணியிருக்கியே பதிலுக்கு ஒரு தடவையாவது உனக்கு எதுவும் பண்ணியிருக்காளா?. அவளும் உன்னைப்போல ஒரு பெண்தானே. நான் ஆம்பிளை அவளுக்கு கெடுதல் செஞ்சாலும் அதைத் தடுக்க வேண்டிய நீயே என்னைத்தூண்டிவிட்டு பல கொடுமைகளைச் செய்ய வச்சுட்டே' (பக்கத்தில் நின்று கேட்டுக்கொண்டிருக்கும் சங்கீதாவுக்கு கணவனை நினைத்து முகமெல்லாம் பெருமை) 'பாவம்மா, இவ்வளவு கஷ்ட்டங்களை அனுபவிச்சுட்டு இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிக்கிட்டு இருக்கா. அதுல மண்ணைப்போட நினைக்கிறியே. நீ நல்லா இருப்பியா?. ஏம்மா இப்படி புத்தி கெட்டு அலையிறே?'

இவ்வளவு மணல் தட்டுப்பாடான நேரத்திலும் தன் வாயில் லாரி, லாரியாக மண்ணைக் கொட்டிவிட்டுப்போகும் மகனை அதிர்ச்சியுடன் பார்க்கிறாள். 'அடப்பாவி, என்னடா இப்படி ஒரேயடியா மாறிட்டே'.

கிராமத்துப்பெண் லெட்டப்பில் சித்ராவை அழைத்துக்கொண்டு காரில் வரும் தொல்காப்பியன், குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும் 'இந்த இடத்துக்குப்பெயர்தான் அமரன்பேடு. ஆனா, அந்த குடோன் எங்கேயிருக்குன்னு தெரியலையே. அதோ அந்த கட்டிடத்தைப்பாத்தால் குடோன் மாதிரியும் இருக்கு. ஃபேக்டரி மாதிரியும் இருக்கு. இருங்க யாரிடமாவது விசாரிக்கிறேன்'.

இறங்கி ஒரு ஓட்டுக்கட்டிடத்துக்குள் இருந்து ஒரு ஆளை அழைக்கும் தொல்ஸ், 'இங்கே அமரன்பேடு குடோன் எங்கேயிக்குங்க?'

'இதோ கொஞ்ச தூரத்துலதான் அமரன்பேரு. அங்கே நாளைஞ்சு குடோன் இருக்கு. யாருடைய குடோனைக் கேட்கிறீங்க?'

தொல்ஸ் சுதாரித்துக்கொண்டு, 'எனக்கு மாலிக் பாய் குடோனுக்குப்போகணும்'.

'மாலிக் பாய் குடோனா?. அது எதுன்னு தெரியலைங்களே'

'சரி, ரொம்ப நன்றிங்க. வரேன்'.

காருக்கு திரும்பி வரும் தொல்காப்பியன், 'சித்ரா, உங்களை கொஞ்ச தூரத்துல இறக்கி விடுறேன். நீங்க கோணிப்பையுடன் பழைய பேப்பர் பொறுக்குகிற மாதிரி அந்த கொடோன்களில் ஏதாவது ஆள் நடமாட்டம் தெரிகிறதான்னு பார்த்து எனக்கு தகவல் கொடுங்க. உங்களுக்கு ஆபத்து வருகிற மாதிரி தோன்றினால், உடனே என்னை செல்போனில் கூப்பிடுங்க'.

சித்ரா கையில் கோணிப்பையுடன், கிராமத்துப்பெண்ணாக இறங்கி நடக்கிறாள்...

saradhaa_sn
14th January 2009, 12:47 PM
இன்றைய எபிசோட்டில் விடுபட்டது...

அபியும் மற்றவர்களும் அஸிஸ்டண்ட் கமிஷனர் அலுவலகத்திலிருந்து வெளியேறியதும், முன்னர் ஏ.சி.க்கு தகவ்ல் சொன்ன இன்ஸ்பெக்டர் மறைவாகச்சென்று போன் செய்கிறார். யாருக்கென்று எல்லோருக்கும் தெரியும். ஆம், ஆதிக்குத்தான். ஆதி சொன்னபடியே செய்துவிட்டதாக அவனிடம் சொல்லி பாராட்டுப்பெறுகிறார்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

aanaa
14th January 2009, 07:40 PM
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

:ty:

wishing you all the same

Arthi
14th January 2009, 07:52 PM
wish you a happy pongal :D

saradhaa_sn
17th January 2009, 02:17 PM
பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கலன்று, திரைப்படங்கள் தொடர்களின் நேரத்தை ஆக்ரமித்துக்கொண்டன. எனவே இரண்டு நாட்கள் 'கோலங்கள்' ஒளிபரப்பாகவில்லை

saradhaa_sn
17th January 2009, 02:34 PM
Thank you aanaa & Arthi

நாட்டுப்புறப்பெண் கெட்டப்பில் வன்டியிலிடுந்து இறக்கி விடப்பட்ட சித்ரா, கையில் கோணிப்பையுடன் ரோட்டில் கிடக்கும் பழைய காகிதங்களைப் பொறுக்கியவாறு, அக்கம்பக்கத்தில் நோட்டம்விட்டுக்கொண்டே செல்கிறாள். இங்குமங்குமாக மூன்று பெரிய குடோன்கள் தென்படுகின்றன. பார்ப்பதற்கு ஏதோ தொழிற்சாலைகள் போலவும் தோன்றுகின்றன. சிலவற்றில் ஆள் நடமாட்டமும் தென்படுகிறது. சித்ராவிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லையென தொல்காப்பியன் வண்டியில் காத்திருக்கிறான்.

பில்டர்ஸ் அசோஸியேஷன் தேர்தல் நாள். உறுப்பினர்கள் வந்துசேர்ந்தவண்னம் இருக்கிறார்கள். கட்டிடத்தின் பிரதான வாயிலில் ஆதித்யாவையும், அபியையும் ஆதரித்து டிஜிட்டல் வண்ண பேனர்கள் பளிச்சிடுகின்றன. முதலில் ஒரு காரில் அபி, விஸ்வநாதன், ராஜாமணி, கிருஷ்ணன் ஆகியோர் வந்திறங்கி ஒரு பக்கம் நிற்க, சற்று நேரத்தில் இன்னொரு காரில் ஆதியும் கிரியும் வருகின்றனர். ஆதிக்கு அசோசியேஷன் மெம்பர்கள் சிலர் கைகுலுக்கி வாழ்த்துச்சொல்லுகின்றனர். ஆதி நேராக அபியிருக்கும் இடத்துக்கு வந்து, குத்தலாக கிரியிடம்... 'என்ன கிரி, யாரோ என்னை எதிர்த்து ஜெயிக்கப்போவதாக சவால் விட்டாங்களே என்ன ஆச்சு? 85 சதவீதம் ஓட்டுகள் எனக்கு இப்பவே கன்ஃபர்ம் ஆச்சு'.

'பின்னே என்ன பாஸ், நீங்க இப்பவே ஜெயிச்சாச்சுன்னு வச்சுக்குங்க'.

இப்போது அபி, 'அவசரப்படாதீங்க மிஸ்ட்டர் ஆதி, இன்னும் தேர்தல் முடியலை. முடிஞ்சாதானே தெரியும் யார் ஜெயிச்சாங்கன்னு?'

'எங்க பாஸை ஜெயிச்சுடலாம்னு இன்னமும் ஒரு நப்பாசையா?'

'விடு கிரி, எலெக்ஷன் முடிகிறவரைக்கும் அவங்க அந்த 50 - 50 கனவுலயே இருக்கட்டும். வா உள்ளே போவோம்'.

சித்ரா இன்னமும் பேப்பர் பொறுக்கிக்கொண்டு இருக்கிறாள். அப்படியே ஒரு ஃபேக்டரிக்கு உள்ளே போக, அங்கு சிலர் தென்படுகின்றனர்.

'ஏய், யாரும்மா நீ?. இங்கே எதுக்காக வந்தே?'

'இங்கே பழைய இரும்பு கிடைக்குமான்னு கேட்க வந்தேங்க'.

'பழைய இரும்பெல்லாம் எதுமில்லே. போம்மா'.

போனில் பேசிக்கொண்டு வரும் ஆதியிடம் கிரி ஓடி வருகிறான்.

'பாஸ், எங்கே பாஸ் போனீங்க?'

'ஒரு ஃபாரீன் கால் பேசிக்கிட்டு இருந்தேன். என்ன கிரி, என்ன ஆச்சு?'

'மேலே மாடியில் அந்த அபி, மெம்பெர்ஸையெல்லாம் கூட்டி வச்சு மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்காளாம்'.

'என்னது, இப்போ போய் மீட்டிங்கா?. வா போகலாம்'.

அபியைச்சுற்றி சுமார் பதினைந்து இருபது பேர் நிற்க, அங்கு வந்த ஆதி...

'என்ன, எலெக்ஷன் நேரத்துல எதுக்கு இங்கு மீட்டிங்'.

'அது வேறோண்ணுமில்லை சார், இந்த எலெக்ஷனை தள்ளி வைக்கலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கோம்'

'என்னது?. எலெக்ஷனை தள்ளி வைக்கணுமா? ஏன்?'

இப்போ அபி பதில் சொல்கிறாள்... 'மிஸ்ட்டர் வரதராஜன் கடத்தப்பட்டிருக்கார்,அதுக்காகத்தான் தள்ளி வைக்கணும்கிறோம்'

'என்னது கடத்தப்ப்ட்டாரா?. அவர் மும்பைக்குப்போனதாகத்தானே நான் கேள்விப்பட்டேன்?. அவர் ஏற்கெனவே அவர் மனைவியிடம் மும்பை போவதாக போனில் சொல்லியிருக்கார். அதோடு அவருடைய ஓட்'டையும் தபால் மூலமாக எலெக்ஷன் கமிட்டிக்கு அனுப்பியிருக்கார். இதெல்லாம் கடத்தபடக்கூடியவர் செய்யக்கூடியவர் செய்கிற வேலையா?'.

'அதுலதான் எங்களுக்கு சந்தேகமா இருக்கு'.

'உங்களுடைய சந்தேகத்துக்காகவெல்லாம் எலக்ஷனைத் தள்ளி வைக்க முடியாது. இப்போ வரதராஜன் இல்லை, அதனால தள்ளி வைக்கணும்கறீங்க. நாளை வேறொருத்தர் இல்லாமல் போயிட்டா அப்பவும் இதையே சொல்வீங்க. இப்படியே போனால் என்ன அர்த்தம்?. இப்போ சொல்றேன் கேட்டுக்குங்க. இந்த செகண்ட்லேருந்து நானே இல்லாட்டி கூட தேர்தலைத்தள்ளி வைக்கக்கூடாது. போங்க, எல்லோரும் போய் அவங்கவங்க ஓட்டைப்போடுங்க'.

கூட்டம் கலைந்து செல்கிறது.

இந்த இடத்தில் ராஜாமணி ஏதோ சொல்ல, அதற்கு கிரி கிண்டலாக பதில் சொல்ல, அதை விஸ்வநாதன் ஆட்சேபிக்க, அவரையும் கிரி அவமானமாகப்பேச, அதைத்தொடர்ந்து கைகலப்பு ஏற்பட, போலீஸ் வந்து ஆதிக்கு சாதகமாகப் பேசி அமைதி ஏற்படுத்துகிறது.

கிரி குதூகலிக்கிறான் 'பாத்தீங்களா?. என் மேலே கைவச்சதும் போலீஸே வந்திடுச்சு'

உடனே அபி சீறுகிறாள்... 'போடா பொறுக்கி'.

'பாஸ், என்ன பாஸ் இதெல்லாம்?'

'விடு கிரி, பாவம் தோல்வி பயத்துல புலம்புகிறாள். நாம போவோம் வா'

aanaa
17th January 2009, 09:21 PM
பாவம் தோல்வி பயத்துல புலம்புகிறாள். நாம போவோம் வா' :rotfl:

:ty:



தொல்ஸ் தேர்தல் என்றாலே ஒரே இழுவைதான் போலும்
முன்பு திருவேங்கடம்/தோழர்
இப்பொழுது ...

ம்ம்
ரப்பர்தான்

R.Latha
20th January 2009, 03:58 PM
saaratha,
monday kolangal-yai kaanavillaiye. Are u busy. How are u
Nalamthana.(':o')

aanaa
21st January 2009, 11:10 PM
:huh:

dock! dock!

sudha india
23rd January 2009, 11:59 AM
In a nut shell,

Therdhal nadandhu mudindhadhu.
Vaaku ennum tharunathil Varadarajan vandhu sergirar. Thaan engum sellavillai, but silaraal kadathappattu, sirai vaikkappattadhaga solgirar.

(Chitra, Varadarajan adaikkappattirukkum work shopai kandu pidithu solla, Tholsum avar kootaligal Police get up-il poi adhiradiyaga Varadaraajanai meetkirargal. Tholsin vendugolukkinanga Varadarajan thols than thanni kappatrinar enbadhai sollavillai)

Indha therdhal selladhu enavaum maru therdhal nadakka vendum enavum abi tharappil vadham seigindranar. Adharku Adhi & Co mattum edhirpu therivikkindranar. Anaal matha members ellam Abikku support seiya maru therdhal nadai perugiradhu. Mudivu - Abi becomes President.

Adhiyai Menaka oru paarvai (Chee-nee ivlothana?) parthuvittu sendru vidugiral. Adhi is spell bound. Sits like a statue, kangalil kanneer.

Abi challenges him when he is left alone, and when the people gather again, she takes over as President. She clearly says that she respects every member but if any member tries to play foul politics on her or any other member, she would definitely put them in place.

Adhi continues to be silent, and Abi challenges him once again, saying that from that moment it is only victory for her and Adhi can look forward to more and more failures.

Saradhaa... edho oru chinna writeup. Waiting for you to conintue in style.

aanaa
24th January 2009, 03:57 AM
In a nut shell,


Saradhaa... edho oru chinna writeup. Waiting for you to conintue in style.

:ty: Sudha

keep up

U can do it

gta129
24th January 2009, 04:38 AM
thanks for the update sudha india.:)

sudha india
24th January 2009, 12:25 PM
Friday : Only one segment.

Adhi still remained spell bound. Giri comes to take him home. But Adhi confronts him saying that he has been elected President and has to take oath and deliver the Presidential address. Saying so he sits in the president's chair and continues with his address assuming the members are there listening to his speech. But the hall is empty.

Kittathatta oru mananilai sari illadha aal pol thaniye pesugiran. What an acting !! Superb.

Devaraj Panidian comes and calls him. But Adhi does not recognise him and shouts at Giri to send him out.

After the speech, he slowly realises that he has lost the election and breaks down to a cry.

Yesterday was fully Aadhi's episode... Fantastic acting, numerous reactions and expressions. :thumbsup:

aanaa
24th January 2009, 08:15 PM
Friday : Only one segment.

Yesterday was fully Aadhi's episode...

Thats Thols speciality
:-(





Fantastic acting, numerous reactions and expressions. :thumbsup:

:ty:


:clap:

aanaa
27th January 2009, 05:58 AM
Thols says its 1400+ episodes and its now in 6th year

for more

http://www.cinechipz.com/tv/2009/01/chinnathirai-kondattam-spl-program/

saradhaa_sn
27th January 2009, 02:12 PM
Nice updates Sudha.... :clap: :clap:

You has summerised one week episodes in sjort & sweet form (without any 'vaLa vaLaa' comments.... :notworthy:

:ty:

Keep it up...... :thumbsup:

aanaa
27th January 2009, 10:55 PM
welcome back Saradhaa

aanaa
1st February 2009, 12:24 AM
1. Narayanan - a worst charector, who utilised Abhi's sympathy to save his son and family.

2. Ranjani - konja naal aadiya aattaam enna?.

3. Ubendra - Finally he did his part well

4. Sivadoss's wife - just come & go

5. Manjula - a foolish charector (she knows there is poison in food, is it necessary she must eat it and prove?)

6. Rudhra - a pitiable charector, died in Cochin episode. just came as a lightning.

7. Maddy - the black mailer of Anjali

8. Arthy's father-in-law (K.Kannan) : not shown as dead, but actually died.

9. Sangeetha's dad: murdered by the cruel and greedy son-in-law Basker,

10. Saroja: killed by her brothers

11. Saroja's brother - killed by Dhilla
12. Saroja's brother- killed by Dhilla
13. Saroja's brother - died in hospital

14. Kanchana's mom - Adhi's grand mom, who knows the secrets apart from Eswaran, Maragatham & Thiruvengadam.

any more missing...???.





15. In kollimalai kaadu - an adiyal shot by the thalaivan

16. Inspector Pirabu
17. another guy together with the Inspector

18 : Anandhi's Mother-in-law
19: and Father-in-Law in accedent
donot know whether their daughter and husband also in the accident
if so 20 and 21




22. The guy that Saroja's brother shot in the godown...
23 ..... and Saroja's periyappa - killed by Adi's henchmen




24. Santhi

:bangcomp: :hammer:

25/26: மேனகாவின் பாதுகாவலர் 2

27 : பொதுமகன்்

28/29 : காவல்துறையினர் 2

30. வேலைக்காரன்



:hammer: :bangcomp:

31, சங்கீதா

ஏதும் விடுபட்டிருந்தால்...

mr_karthik
1st February 2009, 06:55 PM
Sageetha dead...?. how?. by accident or murdered..?

I heared, in recent days Basker was showing affection on her.

(31 deaths in 6 year serial is not that much)

I think in Arasi also Ajay Rathnam killed Kavitha and Anuradha k.moorthy. (my family members discussed about that. But no discussion about Sangeetha's death).

aanaa
1st February 2009, 08:01 PM
Murdered by Baskar

thrown her from speeding car and then he crashed with a tree to looks like an accident.

sudha india
2nd February 2009, 01:14 PM
Last 4 episodes........

Abi shares her happiness at home, on winning the election. While Anandhi, Karpagam and her mama are happy, Arthi is not happy. She questions Abi as to how Varadarajan escaped and also repeatedly says that someone must have saved him.

In the meantime Thols calls Abi and congratulate her. Abi thanks him but does talk much. She also tells her mother that the call was from another builder.

In Adhi's place, Adhi, Giri, Tiruvengadam and his son-in-law are found drinking. Adhi as usual shouts at the others and drinks a lot. Devaraj Pandian comes to tell Aadhi that some people dressed as police and another man in casual dress had taken Varadarajan. But Aadhi shouts at him too much that DP goes out saying that Aadhi has to repent for all that he has said.
(Looks like Aadhi has got another enemy now)

In Baskar's house, Sangeetha is so happy to see the reformed Baskar and talks happily with him and requests him to take her to a temple the next day.

So the next day they prepare to leave for the temple when alamelu insists that they should take her along. Basker shouts at her and leave her behind and take sangeeta and the kid. On the highway, its again sangeeta talking happily, when Baskar shows his true colour.

He changes his tone and says that he will never forgive Abi and will make her come to him. It is for this that he gave a good act all these days and made everyone believe that he has changed. He also confesses to Sangeeta that he killed her father for the money and is also going to take a risk and create an accident in such a way that he will get hurt and Sangeetha will be dead. He will also continue his act, suffering with the baby alone, which will make Abi come to him.

He takes speed and at a point pushes the crying sangeetha out of the car and purposely bangs on a tree and lay there unconscious with blood flowing from his forehead.

Abi returns on the same road when she spots sangeetha and the car with Baskar and the kid. She calls for an ambulance and admit them to a hospital where Sangeetha dies. Alamelu starts her oppari with all good words about her daughter-in-law and now Abi is totally in a confused stage.

Does the secrets of Baskar's evil acts / killings also die with sangeetha ? Will Abi know the intension of Baskar ? (Ofcourse she has to !)

Madam Saradhaa.......... continue pannunga.

aanaa
3rd February 2009, 05:20 AM
Last 4 episodes........
(Ofcourse she has to !)

Madam Saradhaa.......... continue pannunga.

Thank you Sudha

saradhaa_sn
5th February 2009, 04:05 PM
மனைவி சங்கீதாவிடம் அழகாகப் பேசி கோயிலுக்கு அழைத்துச்செல்லும் வழியில், பாஸ்கர் தன் சுயரூபத்தைக்காட்டுவதுடன், அவள் அப்பாவைக்கொன்றதும் தான்தான் என்ற உண்மையையும் போட்டு உடைக்கிறான். (அப்போது அவளுக்கு அவ்வளவு அதிர்ச்சி தேவையில்லை. அதான் ஏற்கெனவே அந்த குவாரியில் வேலைபார்த்த மேனேஜர் சொல்லியிருக்கிறாரே).

வேகமாகச்செல்லும் காரில் இருந்து அவளைத்தள்ளிவிட்டு, தனக்குப்பாதகமில்லாமல் மெதுவாக காரை கொண்டுபோய் ஒரு புளியமரத்தில் மோதி நிறுத்துகிறான். அவ்வழியே வரும் 'உலகப்பரோபகாரியான' அபி இதைப்பார்த்துவிட (அதென்ன இதுமாதிரி சம்பவங்கள் நடக்குமிடத்தில் அபி அல்லது தொல்காப்பியன் கரெக்டாக வந்து சேர்கின்றனர்?) ஆம்புலன்ஸுக்கு போன் செய்து ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட, அங்கு சங்கீதா இறக்கிறாள். அலமேலுவின் ஒப்பாரி எல்லை மீறுகிறது. தன்னை கடவுள் ரொம்பவே சோதிக்கிறான் என்று புலம்புகிறாள். (இந்த வார்த்தைகளைச்சொல்ல அலமேலுவுக்கு என்ன யோக்கியதை இருக்கிறதென்று தெரியவில்லை. நன்றாக இருக்கும் நேரங்களில் அடுத்தவர் வாழ்வில் மண்ணைப்போடுவதைத்தவிர வேறு எதையும் அவள் செய்யவில்லை. அபி, ஆனந்தி கல்யாணத்தை நிறுத்த மந்திரவாதியிடம் போனவள், இப்படி புலம்பும்போதே அவள் நாக்கு அழுகுவதாக காட்டியிருந்தால், கடவுள் இருப்பதை ஓரளவு நம்பலாம். தெய்வம் நின்று கொல்லுமாம். எப்போ..? தொண்ணூறு வயதுக்குப்பிறகா?)

அபியிடம் அலமேலு ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கும்போதே, ஆர்த்தி வருகிறாள். உஷாவும் தொல்காப்பியனும் வருகின்றனர். தொல்ஸைக்கண்டதும் ஆர்த்தி வேறு பக்கம் திரும்பிக்கொள்கிறாள். (இருந்தாலும் ஆர்த்தியின் சாப்பாட்டில் தொல்ஸ் இவ்வளவு மண்ணை அள்ளிப்போட்டிருக்கக்கூடாது). பாஸ்கருக்கு ரத்தம் தேவையென்றதும் அபி, ஆர்த்தி, தொல்ஸ் மூவரும் ரத்தம் கொடுக்க முன்வருகின்றனர் (மூவருக்கும் 'பி+'...?. சரி, கதைதானே. சிந்துபாத் கதையில் மட்டும்தான் லாஜிக் பார்க்கக்கூடாதென்று சட்டம் எதுவும் இல்லையே).

தேர்தலில் தோற்ற ஆதித்யா, கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் லெவலுக்கு வந்துவிட்டான். ஜெயித்துக்கொண்டேயிருப்பவர்களுக்கு சின்ன தோல்வியைக்கூட தாங்க முடியாது. தன்னை நம்ப வைத்து கழுத்தறுத்த தேவராஜ் பாண்டியன் மேல் பாய்கிறான். வரதராஜன் தப்பித்து வந்து காரியத்தைக்கெடுப்பார் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லையே. அதுவும், தோற்றது அபியிடம் அல்லவா?.

தன் வீட்டாரிடம் அவனது தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை. வாய்க்கு வந்தபடி புலம்புகிறான். அபியின் வெற்றியை அறிந்து சந்தோஷப்படும் அப்பாவின் மேல் சீறி விழுகிறான். ஆதியைப் பற்றி என்னமோ பெரிசாக நினைத்த காஞ்சனாவுக்கும், ரேகாவுக்கும், அனுவுக்கும் அபியின் வெற்றி அதிர்ச்சியளிக்கிறது.

அலமேலுவின் வீட்டில் சங்கீதாவின் படத்துக்கு மாலையிட்டு வைக்கப்பட்டிருக்க அபி, கற்பகம், ஆர்த்தி இவர்கள் மத்தியில் 'சங்கீதாவையே நினைத்து உருகுவதாக' அழுது அழுது போலி நாடகம் ஆடுகிறான் பாஸ்கர். உலகப்பரோபகாரியான அபிக்கு பாஸ்கர் மேல் கொஞ்சம் கொஞ்சமாக அனுதாபம் வருகிறது. ஒருகட்டத்தில், 'பாஸ்கர், கவலைப்படாதீங்க. உங்களுக்கு நான் இருக்கேன்' என்று சொல்லும் அபியைப்பார்த்து அதிர்ச்சியடையும் கற்பகம், இனிமேல் அவளை அங்கே விட்டுவைத்தால் முதலுக்கே மோசம் என்று நினைத்து அபியை வீட்டுக்குப்போவோம் என்று அழைக்க, அபி அம்மாவை முதலில் போகும்படியும் தான் பின்னர் வருவதாகவும் சொல்ல, அலமேலுவும் அபி இருக்கட்டும் என்று சொல்ல (இந்த மாதிரி ஜென்மங்களுக்கு எத்தனை நாக்குகள்..?), கற்பகம் வலுக்கட்டாயமாக அபியை அழைத்துச்செல்கிறாள். (டாக்டர் மகேஷோடு கல்யாணம் நிச்சயித்திருக்கும்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிடக்கூடாதென்று கற்பகம் பயப்படுவது நியாயம்தானே).

saradhaa_sn
5th February 2009, 05:21 PM
பாஸ்கரின் வீட்டுக்கு அபி, கற்பகம், ஆர்த்தி போய்வந்தது ஆனந்திக்கு பிடிக்கவில்லை. இது அந்த பாஸ்கருக்கு கிடைத்த சரியான தண்டனைதான் என்கிறாள். அபியோ, இன்னமும் பாஸ்கரின் மீதும் குழந்தை மீதும் ரொம்பவே கரிசனமாகவும் அனுதாபமாகவும் பேசுகிறாள். இது ஆனந்திக்கு மட்டுமல்ல கற்பகம், சாரதா இவர்களையும் முகம் சுளிக்க வைக்கிறது. துக்கம் கேட்க போனோமா வந்தோமா என்றில்லாமல், இன்னும் ஏன் அவர்கள் மேல் கரிசனம் காட்டுகிறாள் என்று அவர்களுக்கு சங்கடம் (நமக்கும்தான்).

பாஸ்கர் ஒன்றும் அனாதை அல்ல. அம்மா இருக்கிறாள், தங்கையும் தங்கையின் கணவரும் இருக்கின்றனர். சங்கீதா கொடுத்த சொத்தும் பணமும் ஏராளமாக இருக்கின்றன. அப்புறம் என்ன?. இருக்கும் வேலைகளை விட்டு விட்டு அபிக்கு ஏன் இந்த புது தலைவலி?. ஓ... ஸாரி... மேடம் அவர்கள் உலகப்பரோபகாரியாச்சே. ஆனால் அவங்க தெருவின் கடைக்கோடி வீட்டில் இருப்பவரின் மனைவி இறந்தபோது அவருக்கு அனுதாபப்பட்டு உதவிக்குப்போகவில்லையே?. இத்தனைக்கும் அவர் அபிக்கும் தொல்காப்பியனுக்கும் தகாத உறவு இருப்பதாக கோர்ட் ஏறி சாட்சி சொல்லாதவர். அபியை ஒழித்துக்கட்டுவதாக சபதம் செய்யாதவர். அவர் மேல் இல்லாத அனுதாபம் இந்த அயோக்கியன் மேல் ஏன்?. ஸாரி, சில அனுதாபங்கள் நமக்கு இரக்கத்தை ஏற்படுத்தும். சில அனுதாபங்கள் நமக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அபி இரண்டாவது வகை.

வள்லலார், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, விவேகானந்தர், அன்னை தெரஸா இவர்களின் மொத்த உருவமாக அபி மேடம் உருவாக விரும்புகிறார் போலும். ஸாரி மேடம், உங்க நடவடிக்கைகள் எரிச்சலையே தருகின்றன. பாஸ்கரை மன்னிக்கும்போது, உங்க தம்பி ஆதியையும் நீங்க மன்னிக்கலாமே மேடம். அவன் விஷயத்துல மட்டும் ஏன் பிடிவாதம் பண்றீங்க?.

அபி ஆஃபீஸுக்கு கிளம்பும் நேரம் டாக்டர் மகேஷ் வந்துவிட, அவன் கண்ணெதிரிலேயே, 'தான் போகும் வழியில் பாஸ்கரையும் குழந்தையையும் பார்த்துவிட்டு' ஆஃபீஸ் போவதாகச்சொல்லிப்போகிறாள். இது யாருக்கும், குறிப்பாக ஆனந்திக்குப் பிடிக்கவேயில்லை. ஆனால், அபி செய்வது தவறில்லை என்று மகேஷ் சொல்கிறான்.

மேனகா 'பாசமலர்' படத்தின் கிளைமாக்ஸை டிவியில் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அண்ணன் தங்கை பாசம் பற்றி அவளுக்கும் அவளது 'வளர்த்த அப்பா'வுக்கும் விவாதம் வர, 'உனக்கு ஒரு அண்ணன் இருந்தால் அந்த பாசம் பற்றி தெரியும்' என்று 'அப்பா' சொல்ல, உடனே அவள் அண்ணன் தொல்காப்பியனின் நினைவுகளில் ஆழ்ந்துபோகிறாள். கண்கள் லேசாக கலங்குகின்றன.

ஆர்த்திக்கு கடன் கொடுத்த ஃபைனான்ஸியரையும், சிவசுவையும் ஆதி சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறான். ஆர்த்தி கையெழுத்திட்ட வெற்றுப்பத்திரத்தை வைத்து அவளை டார்ச்சர் பண்ணுமாறு சொல்வதோடு, ஆர்த்தி ட்ராவலாஸ் வண்டி எதுவும் ஓடக்கூடாதென சிவசுவிடம் சொல்ல, அவ்ற்றை ஏற்கெனவே ராஜேஷ் மார்வாடியிடம் அடமானம் வைத்து தன் 'செட்டப்' கவிதாவிடம் கும்மாளம் போட்டு வருவதாகவும், பேங்கில் லோன் போட்டு வாங்கிய வண்டியை அடமானம் வைப்பது தவறு என்றும் சொல்ல, அதையும் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி ஆர்த்தி மற்றும் ராஜேஷுக்கு நெருக்கடி கொடுக்குமாறு சொல்லி இருவரையும் விரட்டுகிறான். தன்னை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரியிடம் தகாத முறையில் நடந்ததோடு, அவருடைய பெயர்பிளெட்டையும் பிடுங்கி வீசி அவரை அடித்து விட, அவனை ஒருகை பார்ப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டிப்போகிறார். ஆதி தப்பு செய்துவிட்டதாக சொல்லும் கிரியையும் ஆதி அடித்து விரட்டுகிறான்.

முன்பு தொல்காப்பியனை மாட்ட வைப்பதற்காக ஆர்த்தியை தொல்ஸின் செல்போனில் போட்டோ எடுத்தவன், நள்ளிரவில் ஆளரவமில்லாத வழியே தன் மனைவியோடு போகும்போது வழியில் பைக் ரிப்பேராகி நிற்க, அப்போது அந்தப்பெண்ணிடம் நான்கு நவுடிகள் வம்பு பண்ண, தடுத்த கணவனையும் அவர்கள் புரட்டியெடுக்க, அவ்வழியே சுமோவில் வரும் தொல்காப்பியன் (?!?!?!?!) அவர்களை உருட்டுக்கட்டையால் அடித்து விரட்டி, காலில் அடிபட்டிருந்தவனை தன் காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில், அவனுக்கு தான் தொல்காப்பியனுக்கு செய்த துரோகம் மனதில் ஓடுகிறது. அனேகமாக மனம் மாறி தொல்ஸுக்கு ஆதரவான சாட்சியாக மாறக்கூடும்.

ஆதியை அழைக்கும் மேனகா, ஆனந்தியின் பத்திரிகையில் தான் வாங்கியிருக்கும் ப்ளாட் பற்றியும் ,அதைக்காலி செய்ய அடாவடித்தனங்கள் செய்வதாகவும் எழுதியிருப்பதையும், அதில் ஆதியையும் குறிப்பிட்டு எழுதியிருப்பதையும் காட்டுவதுடன், தன்னிடம் விற்க மறுத்தவர்களுக்கு ஆதரவாக தோழர் போராட்டம் நடத்தப்போவதாகவும் சொல்ல, ஆதி மீண்டும் வெறி கொள்கிறான். மேனகா தடுத்தும் கேளாமல் அவர்கள் இருவரையும் கொல்லப்போவதாகச் சொல்லி வெளியேறுகிறான். மேனகாவுக்கு அவனது இந்த நடவடிக்கை பிடிக்கவில்லை என்பதை அவளது கவலை தோய்ந்த முகம் காட்டுகிறது.

aanaa
6th February 2009, 03:23 AM
welcome back Saradha
:ty:

saradhaa_sn
6th February 2009, 02:38 PM
அபி காரை விட்டு இறங்கி போன் செய்துகொண்டிருக்கும் இடமாகப்பார்த்து, பாஸ்கர் தன் குழந்தையை ரோட்டில் இறக்கி விட்டு விட்டு, தான் குடிபோதையில் காரில் சாய்ந்துகிடப்பதுபோல பாவலா பண்ண், அதையறியாத அபி பாஸ்கரையும் குழந்தையையும் அலமேலு வீட்டுக்கு அழைத்து வர வீட்டில் யாருமில்லை. பாஸ்கரை படுக்கையில் படுக்க வைத்து விட்டு, அபி கூடத்துக்கு வர, அந்நேரம் பார்த்து வித்யாவின் கணவன் வந்து, பாஸ்கரை தான் பார்த்துக்கொள்வதாகச்சொல்ல, அபி வெளியேற, தன் திட்டத்தை பாழடித்த மாப்பிள்ளையை பாஸ்கர் போதையில் உதைப்பதுபோல உதைத்துத்தள்ளுகிறான்.

ஆதியின் ஏவலின்படி ஃபைனான்ஸியர், ஆர்த்தி வீட்டில் வந்து கடன பணத்தை உடனே திருப்பித்தர வேண்டும் இல்லையேல் வீட்டை தன் பெயருக்கு மாற்றித்தரவேண்டும் என்று நெருக்குகிறார். ஆர்த்தியும் ராஜேஷும் இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்டு எவ்வளவு கெஞ்சியும் பலனில்லை. வாய்ச்சவடால் பேசும் கலாவையும் அடக்குகிறார். வேறு வழியில்லாமல் வீட்டை தன் பெயருக்கு மாற்றி எழுதிய பத்திரத்தை ஃபைனான்ஸியர் நீட்ட ஆர்த்தி கண்ணீருடன் கையெழுத்திடுகிறாள். இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டை காலி பண்ணித்தர வேண்டும் என்ற கண்டிஷனுடன், தன் அடியாட்களையும் அங்கே விட்டு விட்டு, பக்கத்து வீட்டில் இருக்கும் மனோவிடம் போகிறார். ஆர்த்தியின் வீட்டில் நடந்தவற்றை வாசலில் நின்று ரசித்துக்கொண்டிருந்த மனோவை, தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தை உடனே திருப்பித்தர வேண்டுமென்றும் இல்லாவிட்டால ஆர்த்தி செய்தது போல வீட்டை எழுதித்தர வேண்டும் என்று கெடுபிடி செய்ய அவனும் திக்குமுக்காடிப்போகிறான். திருப்பித்தர அவகாசம் கேட்டும் பலனில்லாமல் வீட்டுப்பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத்தர, மனோவையும் இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டை காலி செய்யுமாறு எச்சரித்துப்போகிறார்.

அம்மா வீட்டில் இருக்கும் அனுவிடம் இந்த விஷயத்தை மனோ சொல்ல அவள் ஆடிப்போகிறாள். மனோ காஞ்சனாவிடம் போய், ஆதியிடம் சொல்லி பத்திரத்தை திரும்பப்பெற உதவி செய்யுமாறு கூற, அவளோ ஆதி இப்போதுள்ள மனமுடைந்த நிலையில் அவனிடம் இதுபற்றியெல்லாம் பேச முடியாதென்றும், நேரம் பார்த்து பக்குவமாக சொல்லுவதாகவும் சொல்கிறாள். மேலும், ஏற்கெனவே ஒருமுறை ஆதி உதவி செய்ததை சரியானபடி மனோ பயன்படுத்திக்கொள்ளவில்லையென்று சாடுகிறாள். ரேகாவின் முகத்தில் ஏளனப்புன்னகை.

எப்படியோ, ஆதியண்ணாவை நம்பிய இரண்டு குடும்பமும் நடுத்தெருவில்...

இனி 'ஆதியண்ணா' என்ன கதியானார் என்று பார்ப்போம்....

கட்டிடத்தைக்காலி செய்ய மறுப்பவர்களுக்காக களத்தில் குதித்துப்போராடுவது குறித்து தோழர்களுடன் விவாதித்துக்கொண்டிருக்கும் 'தோழர்' கிரி வருவதைப்பார்த்து விவரம் கேட்க, அவன் தன் பாஸ் ஆதி, தோழரை சந்திக்க தெருவில் காத்திருப்பதாக சொல்ல, ஆதியைச்சந்திக்கச்செல்கிறார். ஆதி அவரிடம், இந்தப்பிரச்சினையில் இருந்து ஒதுங்கிக்கொள்ள எவ்வளவு பணமும் தர தயாராக இருப்பதாகச்சொல்ல, தோழர் மறுத்து சிரிக்கிறார். வழக்கம்போல ஆதி கோபம் கொண்டு கத்துகிறான். தோழரோ அமைதியாக பேசுகிறார். ஒரு கட்டத்தில் ஆதி துப்பாக்கியை எடுத்து தோழரை சுட்டுவிடுவதாக மிரட்ட, அப்போது ஆட்டோவில் அங்கு வரும் ஆனந்தி, அதைத்தடுக்க அவர்கள் இருவரையுமே சுட்டுக்கொன்றுவிடுவதாக கத்த, பாவம் கிரியோ அவனை அடக்க முடியாமல் தடுமாறுகிறான். (ஆதிக்கு பிரஷர் ஏறிய எபிசோட்டில் இருந்து கிரியின் ரோலும் நடிப்பும் நன்றக இருக்கிறது).

தோழரையும், ஆனந்தியையும் ஆதி துப்பாக்கியுடன் மிரட்டிக்கொண்டிருக்கும் நேரம், ஏற்கெனவே ஆதியால் அடித்து அவமானப்படுத்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், தன் படையுடன் அங்கு வந்து துப்பாக்கியும் கையுமாக நிற்கும் ஆதியை கைது செய்கிறார். தோழரையும் ஆனந்தியையும் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு புகார் கொடுக்குமாறு சொல்ல அவர்கள் சம்மதிக்கின்றனர்.

தொடர் கிட்டத்தட்ட முடிவை நெருங்குவது போல தெரிகிறது...

மேனகாவின் அண்ணன் பாசம், ஆர்த்தி விஷயத்தில் தான் நிரபராதி என்று நிரூபிக்க தொல்ஸுக்கு கிடைத்த சாட்சி, ஆதித்யாவின் கைது, ஆர்த்தி, மனோ இருவரும் தெருவுக்கு வந்த நிலை (ட்ராவல்ஸ் வண்டிகள் கைமாறிய விவரம் இன்னும் ஆர்த்திக்கு தெரியாது)..... இவற்றை பார்க்கும்போது கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டதோ எனத்தோன்றுகிறது.

saradhaa_sn
7th February 2009, 07:25 PM
நன்றி ஆனா...

போலீஸ் ஸ்டெஷனுக்கு கொன்டு செல்லப்பட்ட ஆதி, அங்கு இன்ஸ்பெக்டருடன் தகராறு செய்கிறான். இன்ஸ்பெக்டர் ஆள் தெரியாமல் விளையாடுவதாகவும், அதன் பலனை அவர் அனுபவிக்க நேரிடும் என்றும் கத்தி கூச்சலிடுகிறான். இன்ஸ்பெக்டரோ அசறுவதாக இல்லை. அந்நேரம் அங்கு கமிஷனர் வர, அவர் தன்னை எப்படியும் விடுவிப்பார் என்று கணக்குப்போடும் ஆதியின் தலையில் மண் விழுகிறது. ஆதியைக் கைது செய்யச்சொன்னதே தான்தான் என்று கமிஷனர் சொல்ல ஆதிக்கு மேலும் அதிர்ச்சி. கமிஷனர் தன்னுடைய செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்வதோடு, இன்ஸ்பெக்டரிடமும் செல்போனை லாக் பண்ணச்சொல்கிறார். அத்துடன் ஸ்டேஷனிலுள்ள லாண்ட் லைன் போன்களையும் முடக்கி வைக்கச்சொல்கிறார்.

அப்போது தொண்டர்களின் 'வாழ்க' கோஷங்களோடு அங்கு நுழையும் திருவேங்கடம் M.L.A., கமிஷனர் முன் அலட்சியமாக நடக்க முற்பட, கமிஷனரால் எச்சரிக்கப்படுகிறார். தொண்டர்களையும் கிரியையும் போலீஸ் வெளியேற்றுகிறது. கிரியை விடுவிக்கச்சொல்லும் திருவேங்கடத்திடம் கமிஷனர் மறுப்பதுடன், போலீஸ் நிலையத்தில் புகுந்து கலாட்டா செய்ததாக திருவேங்கடத்தையும் உள்ளே வைக்க நேரும் என்று எச்சரிக்க, திரு அடங்குகிறார். புறப்படும் கமிஷனரை அனுப்ப இன்ஸ்பெக்டர் வாசலுக்கு செல்ல, அந்நேரத்தைப் பயன்படுத்தி ஆதி, திருவேங்கடம் காதில் ஏதோ ஓதுகிறான். இன்ஸ்பெக்டர் திரும்பி வந்து திரு. வையும் வெளியேற்றுகிறார்.

ஆர்த்தி குடும்பம் தெருவில் நிற்கிறது. எங்கே போவதென்று தெரியாமல் விழிக்கின்றனர். எங்காவது வாடகை வீடு பார்க்கும்படி ராஜேஷின் அண்ணன் சொல்ல, அதற்கும் அட்வான்ஸ் கொடுக்க பணமில்லாமல் கையைப்பிசைந்து நிற்க, அப்போது காரில் இரண்டு அதிகாரிகள் வருகின்றனர். ட்ராவல்ஸுக்கு வண்டி வாங்க ஆர்த்திக்கு கடன் கொடுத்த பேங்கிலிருந்து வந்துள்ளனர். கடனைக்கட்டாததால் வண்டியை எடுத்துப்போவதாகச்சொல்ல, ராஜேஷ் அதற்கு மறுக்கிறான். ஆனால் ஆர்த்தியோ இப்போது கடனை அடைக்க வழியில்லாததால் வண்டியைக்கொடுத்துவிடுவோம் என்று சொல்ல, வங்கி அதிகாரி அந்த வண்டிகள் வேறொருவரிடம் ராஜேஷால் அடம்ணம் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி அந்த ஆளையும் அறிமுகப்படுத்த, ஆர்த்திக்கு தலை சுற்றுகிறது. என்ன நடக்கிறது இங்கே?.

வங்கி அதிகாரிகள் ஆர்த்தியிடம் கடனுக்காக வண்டிகளைக்கேட்க, அடமானம் பெற்றவனோ ஒன்றரை லட்சம் இல்லாமல் வண்டிகளைத்தர முடியாதென்று மறுக்க, வங்கி அதிகாரிகள் ஆர்த்தி மேல் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்போவதாக சொல்ல, ஆர்த்தி 'இதோ வந்து விடுகிறேன்' என்று போகிறாள். வேறெங்கு போகப்போகிறாள்?. அபியக்காவிடமாகத்தான் இருக்கும். (அது இன்னும் காட்டப்படவில்லை). அல்லது ஒருவேளை ஆதியண்ணாவிடமா?. அவர்தான் கம்பிகளை எண்ணிக்கொண்டிருகிறாரே. எப்படியோ, ஆர்த்தி தெருவுக்கு வந்தது நமக்கு மகிழ்ச்சி. பின்னே என்னங்க?. நாம என்ன அபியைப்போல மகாத்மாவின் பேத்தியா?. சாதாரண மனிதர்கள்தானே. ஆர்த்தியைப்பார்க்கும்போதெல்லாம், அவள் பாண்டிச்சேரி ஓட்டல் அறையில் சிரித்த வஞ்சகச்சிரிப்புத்தான் நினைவு வருகிறது. நீங்களும் அதை மறந்துடாதீங்க. மறந்தால் ஆர்த்தியின் மீது அனுதாபம் வந்து விடும்.

ஆனந்தியைத்தேடி தோழர் அபியின் வீட்டுக்கு வருகிறார். அபி, ராஜேந்திரன், ஆனந்தி எல்லோரும் சந்தோஷமாக வரவேற்று காஃபி அளித்து உபசரிக்கின்றனர். ஆதி போலீஸில் மாட்டியிருப்பதால், இனிமேல்தான் ஆனந்தியும் தோழரும் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று அபி எச்சரிக்கிறாள். ஆதி ஒரு அடிபட்ட பாம்பு, எந்த நேரமும் கொத்துவான் என்று உஷார் படுத்துகிறாள். ஆனந்தி தோழருடன் புறப்படுகிறார்.

aanaa
7th February 2009, 10:58 PM
ஆதியின் காட்டுக் கூச்சலேதான்..

ஆக
பாஸ்கரின் தந்திரம் வெல்கின்றதா??

--:ty: saradha

saradhaa_sn
10th February 2009, 10:57 AM
ஆதியை விடுவிக்க மேனகாவே நேரடியாக காவல் நிலையம் வருகிறாள். ஸ்டேஷன் வாசலில் நிற்கும் திருவேங்கடத்தைப் பார்த்ததும் அவள் எரிச்சல் அதிகமாகிறது. எம்.எல்.ஏ.யாக இருந்தும் ஆதியை வெளியில் கொண்டு வரமுடியாத அவரது கையாலாகத்தனத்தைச் சாடுகிறாள். அவரோ சற்றும் சலைக்காமல் தனது வெத்து வேட்டு அரசியல் டயலாக்குகளை அள்ளி வீச, மேலும் எரிச்சலாகி உள்ளே போகிறாள். இன்ஸ்பெக்டரின் அனுமதியில்லாமல் நேரடியாக ஆதியிடம் போய் அவள் பேச, இன்ஸ்பெக்டர் ஆட்சேபிக்கிறார். உடனே ஆதி கத்தத் துவங்குகிறான். (தன் கத்தலுக்கு மசியாத இன்ஸ்பெக்டர் என்று தெரிந்தும் ஆதி இப்படி காட்டுக்கூச்சல் போடுவது எரிச்சலைத் தருகிறது). நிலைமையின் தன்மையை அறிந்த மேனகா, ஆதியை அமைதிப்படுத்தி, இன்ஸ்பெக்டரிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறாள். இருப்பினும் இன்ஸ்பெக்டர் அவளை ஆதியுடன் பேச அனுமதிக்கவில்லை. தி.நகரில் ஒரு பங்களா தருவதாக ஆசை காட்டும் மேனகாவை, லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்துக்காக கைது செய்ய நேரிடும் என்று இன்ஸ்பெக்டர் எச்சரிக்க, சோர்ந்த முகத்துடன் வெளியே வருகிறாள்.

ஆதியில்லாமல் வெறும் கையுடன் வரும் மேனகாவைப் பார்த்து, திருவேங்கடத்துக்கு இன்னும் எக்காளமாகிறது. தன் அரசியல் அறிவை பயன்படுத்தி மட்டுமே ஆதியை வெளியே கொண்டு வரமுடியும் என்று திருவேங்கடம் சொல்ல, அதற்கான வழியை மேனகா கேட்க, இன்ஸ்பெக்டரை ஒரு ஜாதிக்காரராகவும், ஆதியை இன்னொரு ஜாதிக்காரனாகவும் சித்தரித்து நாட்டில் ஜாதிக்கலவரத்தைத் தூண்டுவதே இதற்கு தீர்வு என்று சொல்கிறார். (விரைவில், ஜாதிக்கலவரத்தை தூண்டியதற்காக எம்.எல்.ஏ.சார் கைதாகக்கூடும்). கலவரத்தைத்தூண்ட பணம் தேவைப்படும் என்று கூறி அதற்கும் ஒரு பணப்பெட்டியை மேனகாவிடம் பெற்றுக்கொள்கிறார்.

நாம் நினைத்தபடி 'ஆதியண்ணா'வின் ஆஃபீசுக்குத்தான் ஆர்த்தி போகிறாள். (முன்பு, தனக்காக முக்கியமான மீட்டிங்கையே தள்ளி வச்சிட்டு வந்து 'உதவிய'(??) அண்ணாவாச்சே). ஆனால் ஆதி அன்று காலையிலிருந்தே ஆஃபீஸ் வரவில்லையென்று ரிசப்ஷனிஸ்ட் சொல்ல, அவர் வந்தால் ஆர்த்தி தேடி வந்ததாக சொல்லும்படி கூறி விட்டு வெளியே வர, அங்கே இரண்டு பேர் ஆதி போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பேசிக்கொள்ள..... ஆர்த்தி மேடத்துக்கு அதிர்ச்சி. இனி என்ன செய்வது?. வேறு வழியில்லை. ஏமாளி 'அபியக்காதான்' கதி. ஆனால் அங்கும் ஆப்பு காத்திருக்கிறது.

ஆம்.... காலில் அடிபட்டு நடக்க முடியாமல் நொண்டி நொண்டி நடந்து அபி வீட்டுக்கு வரும் சுரேஷ் (அபி அலுவலகத்தில் வேலை செய்த ஆர்த்தியின் எடுபிடி, முந்தாநாள் தொல்காப்பியனால் ரவுடிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டவர்) அபியை சந்தித்து விவரங்களைக் கூறத்தொடங்குகிறான்.

அபியை விட்டு தொல்காப்பியன் விலகியதற்கு ஆர்த்திதான் காரணமென்றும், அவள சொல்படியே தான் தொல்ஸுக்கு எதிரான செயல்களில் இறங்கி அவரை மாட்ட வைத்ததாகவும், அபி அமெரிக்கா சென்றிருந்த நேரம் ஆர்த்தியின் அடாவடி செயல்களைச் சொல்லத்துவங்க அவை ஃப்ளாஷ் பேக்காக விரிகிறது. புதிய சப்ளைய்ரகளை நியமிக்க தொல்ஸ் எதிர்ப்பு தெரிவித்தது, ஆர்த்தியின் தான்தோன்றித்தனமான முடிவுகளுக்கு கட்டுப்பாடு விதித்தது, அதனால் ஆர்த்தி தொல்ஸை ஒழித்துக்கட்ட முடிவு செய்தது, தன்னை விட்டே அவளை தொல்ஸின் செல்போனில் ஃபோட்டோ எடுக்க வைத்தது, பாண்டிச்சேரி ஓட்டலில் நடந்தவற்றை தன்னிடம் விவரமாக சொன்னது எல்லாவற்றையும் விவரமாக கூறி, தான் ஆர்த்திக்கு உடந்தையாக செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், ஆஃபீஸில் தான் திருடியதாக பழி சுமத்தப்பட்ட பணத்தையும் ஆர்த்திதான் கையாடினாள் என்பதையும் சொல்லி, அபியிடம் மன்னிப்பு கேட்கிறான்.

இப்போது அபியின் மனதில் மீண்டும் ஃப்ளாஷ்பேக். தான் அமெரிக்காவில் இருந்து திரும்பியபோது விமான நிலையத்தில் தொல்காப்பியனை புறக்கணித்தது, கம்பெனியைவிட்டே அவரை வெளியே அனுப்பியது, போகும்போது தனக்காக ஒரு சல்லிக்காசுகூட பெற்றுக்கொள்ளாமல் தொல்ஸ் வெளியேறியது எல்லாம் நினைவில் தோன்ற அபி மனதில் ஒரு தீர்க்கமான முடிவு தோன்றுகிறது. (தேவயானியின் முகபாவம்.... வாவ், சூப்பர்). மீண்டும் மன்னிப்பு கேட்கும் சுரேஷை போகும்படி சைகை காட்டி அனுப்புகிறாள்.

இனிதான் ஆர்த்திமேடம் வந்து அபியிடம் வாங்கி கட்டிக்கப் போறாங்க. பேங்க் அதிகாரிகள் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுத்தால், அனேகமாக ஆதியண்ணாவுக்கு அடுத்த 'செல்'லில் ஆர்த்தி மேடம் அடைக்கப்படக்கூடும். ஜாதிக்கலவரத்தைதூண்டிய குற்றத்துக்காக கைதாகப்போகும் எம்.எல்.ஏ. சார் மூன்றாவது 'செல்'லுக்கு வரக்கூடும்.

நான் சொல்லலை... முடிவு நெருங்குகிறதென்று....?

priya_2008
10th February 2009, 03:39 PM
sarada mam,
Thanks for ur updates..... :D

aanaa
10th February 2009, 07:20 PM
.

நான் சொல்லலை... முடிவு நெருங்குகிறதென்று....?

யாருக்கு ????

:ty:

saradhaa_sn
11th February 2009, 06:57 PM
[tscii:09117b9aa4]நன்றி ப்ரியா & ஆனா..... [/tscii:09117b9aa4]

அலுவலகத்துக்குள் வரும் அபி, தன்னுடைய அறைக்குச் செல்லாமல், ஏதோ நினைவில் ஃபைல் ரூமுக்கு வந்துவிடுகிறாள். (அபியின் அலுவலகம் என்று காட்டப்படும் அறை, ஏகப்பட்ட சீரியல்களில் இடம்பெறுவதால், ஷூட்டிங் நேரத்தில் கிடைகாமல் இருந்திருக்கக்கூடும்). அப்போது அபியைப்பார்க்க வரதராஜன் வருகிறார். சும்மா அபியைப் பார்த்துவிட்டுப் போவதாகவும், மாலை அசோஸியேஷன் அலுவலகம் வருமாறும் சொல்லிப்போகும் அவரை நிறுத்தும் அபி, தேர்தலன்று அவரைக்கடத்தியவர்களிடம் இருந்து எப்படி தப்பித்தார் என்று கேட்க, அந்த ரவுடிகள் அசந்த நேரம் பார்த்து தப்பியதாகச்சொல்லும் அவர், அபி மீண்டும் துருவித்துருவிக்கேட்க, அதற்குமேல் பொய் சொல்ல முடியாமல், தன்னை தொல்காப்பியன்தான் ஆட்களுடன் வந்து மீட்டு, அசோஸியேஷன் அலுவகம் வரை காரில் கொண்டு வந்து விட்டுச்சென்றதாகவும், இந்த விவரங்களை அபியிடம் சொல்ல வேண்டாம் என்று அவரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டதாகவும் சொல்கிறார். இப்போது அபிக்கு தொல்காப்பியன் மீதுள்ள மதிப்பு மேலும் உயர்கிறது. தன்னை விட்டு விலகியிருக்கும்போதும் கூட தன்னுடைய உயர்வுக்காக தொல்ஸ் செய்து வரும் காரியங்கள் அவளை பெருமையடைய வைக்கின்றன.

அபியில்லாத நேரத்தில் ஆர்த்தி கம்பெனி பணத்தை சொந்த விஷயத்துக்கு உபயோகப்படுத்திய விஷயம் பற்றி சுரேஷ் சொன்னது நினைவுக்கு வர, உடனே கிருஷ்ணனை அழைத்த அபி, சஸ்பென்ஸ் அக்கவுண்ட்டில் உள்ள 25 லட்சம் பற்றி ஏன் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்க, அவர் அபி அமெரிக்கா சென்ற நேரத்தில் ஆர்த்திதான் எம்.டி. யாக இருந்ததால் ஆர்த்தி கேட்கும்போதெல்லாம் பணம் கொடுக்க வேண்டியதாயிற்று என்று கூறுகிறார். உடனே அபி 'எல்லாம் தொல்காப்பியனால் வந்தது. நான் அமெரிக்கா செல்லும்போது அவரைக் கம்பெனியைப் பார்த்துக்கொள்ளச்சொன்னதற்கு, அவர்தான் இந்த ஆர்த்தியை பொறுப்பில் வைக்கும்படி சொன்னார்' என்று முணுமுணுக்க, கிருஷ்ணனுக்கு அதிர்ச்சி. ஆர்த்தி வரக்கூடாதென்று தொல்ஸ் சொன்னதாகவல்லவா இதுவரை நினைத்துக்கொண்டிருந்தார்?.

கிருஷ்ணன் அங்கிருந்து போனதும் ‘ஆர்த்தி மேடம்’ பரபரவென்று ஓடி வந்து தனக்கு உடனடியாக 20 லட்சம் பணம் வேண்டுமென்று கேட்க, அபியோ அவள் முதலில் கம்பெனியில் எடுத்த 25 லட்சத்துக்கு கணக்கு என்னாச்சு என்று கேட்கிறாள். ஆர்த்தி மேடம் அதிர்ச்சியுடன், அதைப்பற்றி பின்னர் விவரமாக சொல்வதாகவும் இப்போது அவசரமாக பணம் தேவையென்றும் சொல்ல, அபி பிடிவாதமாக மறுக்கிறாள். முதலில் 25 லட்சத்துக்கான விவரம் வேண்டுமென்று அபி கண்டிப்புடன் கூற, உடனே ஆர்த்தி மேடத்துக்கு கோபம் தலைக்கேறுகிறது. 'நீயெல்லாம் ஒரு அக்காவா?. இனிமேல் உன் கம்பெனி பக்கமே தலை வைத்துப்படுக்க மாட்டேன்' என்று சாபமிட்டு வெளியேறுகிறாள்.

திருவேங்கடத்தின் திட்டத்தின்படி தமிழகத்தின் முக்கியமான நகரமெங்கும் ஆதியை விடுதலை செய்யக்கோரி பேரணிகள் நடக்கின்றன (சும்மா ஊருக்கு பத்து பதினைந்து பேர்). ஆதியை ஜட்ஜ் முன் நிறுத்தி ரிமாண்ட் செய்ய கமிஷனர் அழைத்துப்போகும்போது, சீஃப் செக்ரட்டரியிடமிருந்து அவருக்கு போன் வருகிறது. சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைவதால் ஆதியை விடுதலை செய்யுமாறு சீஃப் செக்ரட்டரி கூற ஆதி விடுதலை செய்யப்படுகிறான். தன்னை அரெஸ்ட் செய்த போலீஸாரை ஒருகை பார்ப்பதாக ஆதி எச்சரிக்கை செய்துவிட்டுப்போகிறான்.

aanaa
12th February 2009, 06:47 AM
:ty: Saradha

aanaa
12th February 2009, 06:48 AM
[quote = "Mani Manivannan" from different gruop]



புதன்கிழமை ஒளிபரப்பான கோலங்கள், அரசி தொடர்களை யாரேனும் பார்த்தீர்களா?

வசனங்கள் வழக்கத்துக்கு மாறாக, பூடகமாக, சற்றுச் சூடாகவே இருந்தது போல் தெரியவில்லை?

"பக்கத்து வீட்டில் தீ பற்றி எரிகிறது என்பதைப் பற்றி தமிழனுக்கு அக்கறையே இல்லை! நம் இனத்தையே அழிப்பதைப் பார்த்துக் கொண்டு எப்படி கை கட்டிக் கொண்டு இருக்க முடியும்?" என்று தோழர் கொதிக்கிறார்!

"எங்கெல்லாம் அராஜகம் கை ஓங்குகிறதோ, அநீதி தழைக்கிறதோ, அங்கே அரசி ஆயுதம் ஏந்திப் போராடத் தயங்க மாட்டாள்" என்று பிணைக்கைதியாய் இருக்கும் அரசி கொதிக்கிறார்.

ம்ம்ம்.

வசனம் எழுதியவர்கள் தணிக்கையாளர்கள் கண்ணில் எதையோ தூவி விட்டு ஊசி வெடி வெடித்திருக்கிறார்களோ!

saradhaa_sn
12th February 2009, 12:07 PM
நன்றி ஆனா....

ஆதி விடுதலையானதில் தோழர் மற்றும் ஆனந்தி மிகவும் கொதிப்புடன் உள்ளனர். இம்முறை காவல்துறையும் கவனமாகச்செயல்பட்டும் கூட, நாட்டைப்பீடித்திருக்கும் சாதி உணர்வு' நியாயங்களை ஒதுக்கித்தள்ளி அநியாயங்கள் தலைவிரித்தாடதுணை நிற்பதாகக் கொதிதெழும் தோழர், தமிழன் சாதி என்ற உணர்வைக்கடந்து, இன உணர்வு கொள்ளும்வரை ஆதி போன்ற அயோக்கியர்களும், திருவேங்கடம் போன்ற சுயநல அரசியல்வாதிகளுமே பயனடைவர் என்று குமுறுகிறார். அவரது பேச்சு, அரசியல்வாதிகள் என்னும் எல்லையைக் கடந்து, பக்கத்து நாட்டில் பற்றியெறிந்துகொன்டிருக்கும் இனப்படுகொலையையும், தன் இனம் தன் கண்முன்னே அழிக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருக்கும் சுயநலப்போக்கினையும் சூசகமாகச்சாடுகிறது. தோழர் ஒருவர், 'தோழரை' தற்போதைய நிலவரத்துக்கு நினைவுக்கு கொண்டு வர, 'தோழரும்' சுதாரிக்கிறார். (ஏற்கெனவே பொதுப்பிரச்சினைகளை அலசும்போது கொதித்தெழும் ஆதவன், நேற்றைய எபிசோட்டில் ரொம்பவே உணர்ச்சிப்பிழம்பானார்). பேச்சோடு பேச்சாக ஒரு விஷயத்தை மேலோட்டமாகச் சொன்னார். 'இதுவரை நாம் வலியச்சென்று தாக்கவில்லை, மற்றவர்களால் தாக்கப்படும்போது மட்டும் தற்காப்பில் ஈடுபட்டோம். இனி நாமும் தாக்குவோம். அதில் நானே மரணித்தாலும் கூட நீங்களெல்லாம் கொள்கையில் உறுதி மாறாமல் நின்று போராட வேண்டும்' என்றார். தோழரின் இப்பேச்சு ஆனந்தி உட்பட அனைவருக்கும் அதிர்ச்சி தந்தபோதிலும், அவர்கள் தோழரின் கோரிக்கையை ஏற்றனர். அநீதிக்கும் அராஜகத்துக்கும் எதிராக தன்னுயிரையே தந்து, உண்மையான கம்யூனிஸத்தின் கொடியை உயர்த்திப்பிடிக்கப்போகிறாரா தோழர்..?.

மீனவர் குப்பத்திலுள்ள தன் வீட்டுக்கு வரும் தொல்காப்பியன், தனது வீட்டில் ஏற்கெனவே அவரது நண்பர் என்று சொல்லிக்கொண்டு ஒரு பெண் வந்து காத்திருப்பதாக குப்பத்திலுள்ள ஒரு பெண் சொல்லக்கேட்டு, அது உஷா அல்லது சித்ராவாக இருக்கக்கூடும் என்று நினைத்து, 'உஷா' என்றைழைத்தபடி உள்ளே நுழையும் தொல்ஸ், அங்கு சமையலறையிலிருந்து வெளிப்படும் அபியை கொஞ்சமும் எதிர்பார்க்காததால் சற்று குழப்பம் கலந்த வியப்புடன், அல்லது வியப்பு கலந்த குழப்பத்துடன் பார்க்க, அபி முகத்தில் சமீபகாலமாக காணாமல் போயிருந்த ஒரு தெளிவும் அமைதியும் குடிகொண்டிருப்பதைப்பற்த்து தொல்காப்பியனின் முகத்தில் நிம்மதி கலந்த ஒரு புன்னகை வெளிப்படுகிறது. (சிலரின் முணுமுணுப்பு: 'ஏன் இப்படி ஒரே வாக்கியமாக எழுதி கழுத்தறுக்கிறே சாரதா?')

முதலில் தண்ணீர் அளிக்கும் தொல்ஸ், பின்னர் காஃபி கொடுத்து உபசரிக்க, அதை அருந்திய அபி, தொல்காப்பியனுடன் தனியே பேச விரும்புவதாகச்சொல்ல, இருவரும் கடற்கரைக்கு வருகின்றனர். தொல்ஸ் அபியைப்பார்க்க, அபி கடலையே பார்த்துக்கொண்டிருக்க சிறிது நேரம் அமைதியிலேயே கடக்கிறது. 'அபி, ஏதோ பேசணும்னு சொன்னீங்க' என்று தொல்ஸ் ஆரம்பிக்க, அவ்வளவுதான் அபியின் கண்கள் மடைதிறந்துகொண்டன. தொல்ஸை பழைய உரிமையோடு கண்டிக்கிறாள். தான் அமெரிக்கா போயிருந்தபோது நடந்த சம்பவங்களை, குறிப்பாக ஆர்த்தியால் தொல்ஸ் பட்ட அவமானங்க்ளை தன்னிடம் மறைத்ததற்காக கோபப்படுகிறாள். அமெரிக்காவில் இருந்த தன்னிடம் போனில் ஆர்த்தி நடந்த (அதாவது, நடக்காத) சம்பவங்களை ஆர்த்திக்கு சாதகமாக சொன்னதாகவும், தான் திரும்பி வந்ததும் தொல்ஸ் அதைப்பற்றி சொல்வார் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் தொல்ஸ், மற்றவர்களின் கெடுமதியால் கம்பெனியை விட்டே வெளியேற்றப்பட்டபோதும் எதுவுமே சொல்லாமல் வெளியேறியதையும். இப்போது கூட அசோஸியேஷன் தேர்தலின்போது கடத்தப்பட்ட வரதராஜனை தேடிக்கண்டுபிடித்து மீட்டு வந்து, அலுவலக வாசல் வரை கொண்டு வந்து விட்டுச்சென்று, தான் பிரஸிடெண்ட் ஆக மிக முக்கிய காரண கர்த்தாவாக இருந்தும், அதையும் தன்னிடம் சொல்லக்கூடாதென சத்தியம் வாங்கியதையும் சொல்லிக்காட்டி அவனைக்கடிந்துகொள்கிறாள்.

அபிக்கு எல்லாம் உள்ளது உள்ளபடி விளங்கிவிட்டது என்பதயறிந்து தொல்காப்பியன் மனம் லேசாகிறது (அது அவரது புன்னகையில் தெரிகிறது). அபியின் வார்த்தைகளால் உணர்ச்சி வசப்படும் தொல்ஸ், தன் தோழியான அபியை சமுதாயத்தில் மிக உயரமான இடத்தில் வைத்துப்பாக்கவேண்டுமென்பதே தன் லட்சியமென்றும், அதற்காக அவன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எப்போதும் துணை நிற்பேன் என்று கூற, அபியின் முகத்தில், வெகுநாட்களாக தொலைந்து போயிருந்த புன்னகை. ஆனால் கண்கள் மட்டும் நீரைக்கொட்டும் வேலையை நிறுத்தாமல் செய்துகொண்டிருக்கின்றன. 'பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி' என்று கண்ணதாசன் எழுதியது காதலர்களுக்கு மட்டுமல்ல. உயிருக்கு உயிரான நண்பர்களுக்கும்தான் என்பதை இருவரின் கண்களும் காட்டுகின்றன.

அபி, தொல்காப்பியனை மீண்டும் ஆஃபீஸுக்கு வருமாறு அழைக்க, தொல்ஸ் மறுத்து, அவர்களுக்கிடையில் இன்னும் என்னென்ன சதிவலைகள் பின்னப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிய இன்னும் சிறிது காலம் அவர்கள் பிரிந்திருக்க வேண்டும் (அதாவது பிரிந்திருப்பதாக மற்றவர்களை நம்ப வைக்கவேண்டும்) என்று சொல்ல, அபி சம்மதிக்கிறாள்.

தனக்கு சுண்டல் வேண்டுமென சின்னக்குழந்தையைப்போல அபி கேட்க, நினைத்தவுடன் சுண்டல் கிடைக்க இது மெரினா பீச், அல்லது எலியட்ஸ் பீச் அல்ல என்று சொல்லும் தொல்ஸ், இருந்தாலும், அபிக்காக எங்கிருந்தாலும் வாங்கி வருவதாகச் சொல்லிப்போக.... தொல்காப்பியனையே பார்த்துக்கொண்டிருக்கும் அபியின் முகத்தில் ஒரு பெருமிதப்புன்னகை.....

'என்ன தவம் செய்தனை அபினயா
இப்படி ஒருவன் உன்னை 'தோழி' என்றழைக்க
என்ன தவம் செய்தனை'

aanaa
12th February 2009, 09:37 PM
'என்ன தவம் செய்தனை அபினயா
இப்படி ஒருவன் உன்னை 'தோழி' என்றழைக்க
என்ன தவம் செய்தனை'
:cool2:

saradhaa_sn
13th February 2009, 12:58 PM
நன்றி ஆனா....

இதோ வந்துவிடுகிறேன் என்று போன ஆர்த்தி மேடம் எப்படியும் பணத்தோடு வந்துவிடுவாள் என்று எதிர்பார்த்து ராஜேஷின் மொத்தக்குடும்பமும், கூடவே வங்கி அதிகாரிகளும், அத்துடன் வண்டிகளை அடமானம் பிடித்தவனும் அவனது அடியாட்களும்தெருவில் காத்திருக்கின்றனர். ஆட்டோவில் ஆர்த்தி வந்திறங்கியதும் பணம் வந்துவிட்டது என்ற தைரியத்தில் கலா, வங்கி அதிகாரிகளிடம் 'இதோ பணம் வந்திடுச்சு, வாங்கிட்டுப்போங்கய்யா' என்று தூக்கியெறிந்து பேசுகிறாள். ஆனல் ஆட்டோவிலிருந்து இறங்கிய ஆர்த்தி மேடத்தின் முகம் வதங்கிய கத்தரிக்காய் போல வாடியிருக்க ராஜேஷுக்கு கலக்கம்.
'என்னாச்சு ஆர்த்தி?'
'எங்கெல்லாம் அலைந்தும் பணம் கிடைக்கலை'
'என்னது பனம் கிடைக்கலையா?'
'ஆமா, ஆதியண்ணாவிடம் கேட்கலாமென்று போனால், அவர் இப்போ பெரிய பிரச்சினையில் மாட்டிக்கிட்டிருக்கார்'
'அப்போ அபியண்ணி கிட்டே கேட்க வேண்டியதுதானே?'
'கேட்டுப்பார்த்துட்டேன் அவங்களும் இல்லைன்னுட்டாங்க'
'என்னது இல்லைன்னுட்டாங்களா?'
'ஆமா, நான் ஏற்கெனவே கம்பெனியில் இருந்து எடுத்திருந்த 25 லட்ச ரூபாய்க்கு என்ன கணக்குன்னு கேட்டாங்க. அந்தப்பணத்துக்கு கணக்கு வராமல் ஒரு பைசா தரமாட்டேன்னுட்டாங்க'.
'சே, கணக்கு கேட்கிற நேரமா இது?. உங்க அக்கா இப்படி நன்றி கெட்டவங்களா இருப்பாங்கன்னு நினைக்கலை. நாம எவ்வளவு உதவி பண்ணியிருக்கோம். அவங்களுக்காக அந்த பாஸ்கர் கிட்டேயெல்லாம் கூட சண்டை போட்டிருக்கேன். எல்லாத்தையும் மறந்துட்டாங்க'

இதுதான் சமயமென்று கலாவும் குத்திக்காட்டுகிறாள்...

'அது எப்படி பழசையெல்லாம் ஞாபகம் வச்சிருப்பா?. இப்போ அமெரிக்கா கம்பெனியின் பிஸினஸ் கிடைச்சிடுச்சில்ல?. கோடிக்கணக்கில சம்பாதிச்சு தானே அனுபவிக்கணும்னு நினைக்கிறாள்'

வங்கி அதிகாரி சத்தம் போடுகிறார்...

'உங்க குடும்ப கதையையெல்லாம் கேட்க நாங்க உட்கார்ந்திருக்கலை. இப்போ பணம் கிடைக்குமா?. இல்லே நாங்க மேல் நடவடிக்கை எடுக்கட்டுமா?'

ராஜேஷின் அண்ணன் இரண்டு நாள் டைம் கேட்டு கெஞ்சியும் அவர்கள் மசியவில்லை. அப்போது ஆட்டோவில் கலாவின் தங்கை வந்திறங்குகிறாள். அங்கிருக்கும் சூழ்நிலை பற்றி தெரிந்துகொள்கிறாள். கிராமத்தில் இருந்த பூர்வீக சொத்தில் தாத்தா தனக்குள்ள பங்கை பிரித்து தந்துவிட்டதாகவும், அதை விற்று பணமாக கொண்டு வந்திருப்பதாகவும் அதிலிருந்து வங்கிக்கு கட்ட வேண்டிய பணத்தைக் கட்டிவிடலாமென்று சொல்ல எல்லோருக்கும் பெரிய நிம்மதியாகிறது. ஆனால் கலாவுக்கு அது பிடிக்கவில்லை. 'அபி ஏன் கொடுக்கவில்லை? அவன் என் கொடுக்கவில்லை? இவன் ஏன் கொடுக்கவில்லை' என்றெல்லாம் வக்கனை பேசியவள், இப்போ தன் தங்கையின் பணம் என்றதும் அதற்கு தடை போட முயற்சிக்கிறாள். ஆனால் அவள் தங்கை கேட்கவில்லை. பேங்கிலிருந்து பணம் எடுத்து மாலையில் லோனுக்கு கட்டிவிடுவதாகச்சொல்ல, வங்கி அதிகாரிகள் ஒப்புக்கொண்டு போகின்றனர். அதோடு வண்டிகள அடமானம் பெற்றவனும் தன்னுடைய ஒன்றரை லட்சம் ரூபாய், மாலைக்குள் வரவேண்டும் என்று சொல்லிப்போகிறான்.

வீடும் கடனுக்காக போய்விட்டதையறிந்த கலாவின் தங்கை இப்போதைக்கு ஏதாவது ஒரு சிறிய வீட்டில் தங்கிக்கொள்ளலாமா என்று ஆர்த்தியைக்கேட்க, ராஜேஷ் 'இன்னும் எதுக்கு அவளைக்கேட்டுக்கிட்டு?. நாம எங்கே போகிறோமோ அங்கே வரவேண்டியதுதான் அவள் வேலை?. என்கிறான். ஆம், அந்த வீட்டைப்பொறுத்தவரை ஆர்த்தி மேடத்தின் பவர் இறங்கி விட்டது. ஏற்கெனவே ஆர்த்தியின் தயவில் இருந்தபோதே கலா அவளை தேளாய் கொட்டிக்கொன்டிருப்பாள். இப்போ சொல்லணுமா?. இப்போ எல்லோரும் அவள் தங்கையின் தயவில் இருக்காங்க. ஆர்த்தி மேடத்தின் ஆடம்பர வீடும் போச்சு. ட்ராவல்ஸும், அதிலிருந்த வண்டிகளும் போச்சு. அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் வேலையும் போச்சு. வருமானத்தின் எல்லா வழிகளும் அடைபட்டுப்போச்சு. இனி அவளது தயவு 'ஆதியண்ணா'வுக்கும் தேவையில்லாமல் போச்சு. மொத்தத்தில் ஓவர்நைட்டில் மேடத்தின் அனைத்து விஷயங்களும் கையை விட்டுப்போச்சு. மாமியார் வீட்டில் அவளுக்கிருந்த மதிப்பும் போச்சு. இனி, கலாவின் கணவன் தவிர யாரும் அவளை மதிக்கப்போவதில்லை... இனி, கலா மனித உருவத்திலிருந்து தேளாக, பாம்பாக, பூரானாக, நட்டுவாக்காளியாக மாறி அவளைக் கொத்திக் கொண்டிருக்கப்போகிறான். ராஜேஷும் எட்டி உதைக்கப்போகிறான். ஆர்த்தி மேடம் சிறைக்கொடுமையை விட பெரிய கொடுமையை அனுபவிக்கப்போகிறாங்க. அபி இருக்கும் வரை அவளை அம்மா வீட்டிலும் அனுமதிக்கப்போவதில்லை. கலா, பட்டையைக்கிளப்பும்மா. உனக்கு முன்னால் சிறையதிகாரிகள் எல்லாம் எம்மாத்திரம். ஆர்த்திக்கு தண்டனை கொடுக்க நீதான் சரியான ஆள்.

saradhaa_sn
13th February 2009, 01:38 PM
"வெரிகுட் மிஸ்ட்டர் திருவேங்கடம்".... மேனகா கைதட்டிப்பாராட்டுகிறாள். திருவேங்கடம் வெறும் வெத்து வேட்டு ஆள் அல்ல, அவராலும் கூட எதாவது செய்ய முடியும் என்று மேனகாவுக்கு நம்பிக்கை பிறக்கிறது, ஆதியின் விடுதலை மூலமாக.

ஆதியிடம் செல்லும் மேனகா, இனி எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டாமென்றும், குறிப்பாக அபியிடம் தோற்றதைப்பற்றி.... இந்த வார்த்தையைக்கேட்டதுமே ஆதி வெடிக்கிறான். 'இல்லே நான் தோற்கலை, அபிகிட்டே நான் தோற்கலை' என்று கத்துகிறான். மேனகாவின் முன்னால் அவன் இவ்வளவு சவுண்ட் விடுவது இதுவே முதல் முறை. 'ஓக்கே.. ஓக்கே.. ரிலாக்ஸ் ஆதி. ஃபீல் ஃப்ரீ' என்று அவனைத்தட்டிக்கொடுக்கிறாள்.

அப்போது அங்கே குறுந்தாடியுடன் ரஞ்சன் வருவதைப் பார்த்து ஆச்சரியமடையும் ஆதி அவனை மேனகாவுக்கும், திருவேங்கடத்துக்கும் அறிமுகப்படுத்துகிறான். 'இவர் மிஸ்ட்டர் ரஞ்சன். லண்டன்ல என்னோடு பிஸினெஸ் மேனேஜ்மெண்ட் படிச்சவர். ராஜாமணி மேடத்தோட அக்கா மகன். ரஞ்சன் இது மிஸ் மேனகா".
"தெரியுமே, அழகான பிஸினஸ் மேக்னட்"
"மிஸ்ட்டர் ரஞ்சன், நீங்க ஒரு ஜொள்ளு பார்ட்டின்னு நினைக்கிறேன்". இதைக்கேட்ட் கிரி, "கரெக்டா சொன்னீங்க மேடம். எப்படி கண்டு பிடிச்சீங்க?"
"உன்னைப் பார்த்ததுமே ஆதியோட ஜால்ரான்னு கண்டுபிடிக்கலையா. அந்த மாதிரித்தான்"
இதைக்கேட்டு திருவேங்கடம் "ஓ நம்ம பெரியம்மாவோட அக்கா மகனா?. நான்தான் இந்த தொகுதி எம்.எல்.ஏ.திருவேங்கடம். அரசியல் புயல். உங்களை நான் இதுவரை பார்த்தைல்லையே".
"என்ன சார் சொல்றீங்க? ஒரு சமயத்துல அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்ல நான்தான் ஆட்சி பண்ணினேன்" என்று சொல்ல, ரஞ்சன் உஷா, விஸ்வநாதன், தொல்காப்பியன் ஒவ்வொருவரையும் ஏமாற்றி ஷேர்களை எழுதி வாங்கிய காட்சிகள் ஃப்ளாஷ்பேக்கில் வருகின்றன.

மேனகா புறப்படுகிறாள். மற்றவர்கள் பார்ட்டியில் மூழ்குகின்றனர். திருவேங்கடம் வழக்கம்போல, ஆதியை தான்தான் வெளியில் கொண்டு வந்ததாக உளற, ஒரு கட்டத்தில் கடுப்பாகிப்போன ஆதி, துப்பாக்கியை அவருக்கு நேராக நீட்டி, அவரை வெளியே போகுமாறு விரட்டியடிக்கிறான். தன்னுடன் பேச முற்படும் ரன்சனையும், கிரியையும் கூட வெளியேற்றுகிறான். ஆதி கிட்டத்தட்ட ஒரு சைக்கோ போல ஆகிவிட்டான். அவனை வெளிக்கொண்டுவர திருவேங்கடம் கையாண்ட முறை திருவேங்கடத்தின் ஐடியா அல்ல, போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அவர் காதில் ஆதி ஓதிய திட்டம் என்பது இப்போதான் நமக்குப்புரிகிறது.

aanaa
14th February 2009, 04:23 AM
:ty:


அப்போது ஆட்டோவில் கலாவின் தங்கை வந்திறங்குகிறாள்

அங்கே குறுந்தாடியுடன் ரஞ்சன் வருவதைப் பார்த்து


எல்லோரையும் திரும்ப அழைகின்றார்போலும்



இதுதான் சமயமென்று கலாவும் குத்திக்காட்டுகிறாள்.
குத்துவதெற்கென்றே ஒரு கலா


இனி, கலா மனித உருவத்திலிருந்து தேளாக, பாம்பாக, பூரானாக, நட்டுவாக்காளியாக மாறி அவளைக் கொத்திக் கொண்டிருக்கப்போகிறான்.
:roll:

R.Latha
16th February 2009, 11:53 AM
thank you for updating aanaa and saratha madam.

gta129
20th February 2009, 08:23 AM
We miss your updates saradhaa. We know your busy with other things, but drop in when you have the time.

P.S. I love you profile picture. :rotfl: