PDA

View Full Version : KOLANGAL - unkal paakam



Pages : 1 2 [3] 4 5

gta129
23rd March 2008, 03:25 AM
Abi will be away fro two months, so they might bring Ganga back. After all Ganga was introduced to extend the story while Devvayani was on maternal leave.

:shock: drama star panruppa avanga marriage koda pannula-nu nenakuren.. now 2nd child, :lol:

She got married a while ago. Way before the serial began.

Arthi
23rd March 2008, 03:51 AM
Saradhaa madam, thanks for ur updates, keep posting :D

Logambigai
25th March 2008, 12:58 PM
enekkum abi character pidikathu...

aanaa
29th March 2008, 07:21 PM
Can somebody tell me what is the name of the actor who does the role of 'Maddy' ?(Anjali's lover).


Mathan

Arthi
30th March 2008, 01:12 PM
ANY IMPROVEMENT IN KOLANGAL? :roll:

saradhaa_sn
30th March 2008, 01:59 PM
அபியும் தொல்ஸும் பேசிக்கொண்டிருந்ததை அரைகுறையாக கேட்ட கிருஷணன், அபியின் இடத்தில் ஆர்த்தி தற்காலிகப் பொறுப்பேற்பது தொல்ஸுக்கு பிடிக்கவில்லையென்று தவறுதலாக ஆர்த்தியிடம் சொல்லி வைக்க. ஆர்த்திக்கு தொல்ஸ் மேல் உள்ளுக்குள் கோபம் வருகிறது. அதை வெளிக்காட்டாமல் தன் நடவடிக்கைகளில் காட்டுகிறாள். தனக்கு கிருஷ்ணன உள்பட அனைவரும் 'மேடம்' என்ற அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று சட்டம் போடுகிறாள். தொல்ஸை இன்ஸல்ட் பண்ணும் முகமாக, கிருஷ்ணனுக்கு சம்பளம் உயர்த்தி, அவருக்கு தொல்ஸ் கேபினிலேயே டேபிள், சேர் போடுகிறாள்.

இந்நிலையில், ஆதி எப்படி தந்தையின் சொத்துக்கள் முழுவதையும் தன் பெயருக்கு மாற்றினான் என்பதை கிரியின் மூல்மாக தெரிந்துகொண்ட திருவேங்கடம், சதீஷ், அர்ஜுன் மூவரும் பொய்க்கையெழுத்துப்போட்ட குலோத்துங்கன் என்பவனைப்பிடித்து தங்கள் கஸ்டடியில் வைத்து அவனிடமிருந்து உண்மையை வரவழைத்து அதை மொபைல் போனில் பதிவு செய்கின்றனர். ஆக்ரோஷத்துடன் ஆதியைச் சந்தித்த அர்ஜுன், ஆதி செய்த சதிவேலைகள் தங்களுக்கு தெரிந்து விட்டது என்று உண்மையைப் போட்டு உடைக்கின்றான். (இது எதுக்கு தேவையில்லாமல் ஆதியை உஷார் படுத்தும் வேலை?). ஆதி உஷாராகி அர்ஜுனை மடக்க வழியை யோசிக்கிறான்.

தந்திரத்தில் குள்ள நரியான ஆதி, தம்பி அர்ஜுனின் மனைவி ரேகாவை விட்டு அர்ஜுன் மேல் வரதட்சணை கொடுமை கேஸ் பதிவு செய்ய வைக்கிறான். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் உஷாவின் வீட்டுக்கு வந்து தேடி விட்டு ஈஸ்வரனையும், உஷாவையும் மிரட்டி விட்டுப்போகின்றனர். அவர்கள் போனதும் உஷா அர்ஜுனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி அவனை போலீஸ் கண்ணில் மாட்டாமல் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரிக்கிறாள்.

(இந்த இடத்தில் நமக்குத் தோன்றுவது, ரேகாவைக்கொண்டு அர்ஜுன் மேல் வரதட்சனை கொடுமை கேஸை ஆதி பதிவு செய்திருக்கும்போது, அவனை மடக்க உஷாவைக்கொண்டு ஆதியின் மேல் அதே கேஸை பதிவு செய்தால் என்ன?. அர்ஜுன் கைதானால் ஆதியும் கைதாவான் அல்லவா?. அதற்கு பயந்து ரேகாவின் கேஸை வாபஸ் வாங்குவான் அல்லவா?).

சரி, தொல்ஸ் வேறு ஏதாவது ஐடியா வைத்திருப்பார்....

saradhaa_sn
30th March 2008, 02:16 PM
வேனில் போகும்போது தன் அண்ணனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆவதைப்பார்க்கும் ராஜேஷ், அண்ணனுக்கு ஒரு கை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து அவனையும் அவன் குடும்பத்தையும் தன் வீட்டுக்கு அழைத்து வருகிறான். அங்கு தன் மாமியாரும், ராஜேஷும், ஆர்த்தியும் தங்கள் மேல் பாசம் காட்டுவதை உணர்ந்த கலா அதில் நெகிழ்ந்துபோய் அவர்களோடு தங்கிவிட சம்மதிக்கிறாள். மனோ, அவன் மனைவி அனு ஆகியோரும் அந்த வீட்டில்தான் தங்கியிருக்கின்றனர். எப்போ என்ன பூகம்பம் வெடிக்கும் என்பது தெரியவில்லை.

ஐந்துநட்சத்திர ஓட்டல் கட்டுவதற்கு இடம் வாங்க தம்பி ரெட்டியிடம் சென்று அவமானப்பட்டு வந்த மேனகா, இப்போது அண்னன் ரெட்டியை அணுக, விஷயம் தெரிந்த பெரிய ரெட்டி தம்பியை விட காட்டமாக அவளைத்திட்டி அணுப்பிவிடுகிறான். இதனிடையில் பெரிய ரெட்டியின் மகளுடைய காதலனைத் தெரிந்துகொண்ட மேனகா, அவர்களை வைத்து ரெட்டியை மடக்க, அவனுக்கு தன் கம்பெனியில் பெரிய உத்யோகம் தருகிறாள். (கொக்கு தலையில் வெண்ணை வைத்துப்பிடிப்பது என்பது இதுதானோ..!)

("எதிர் கேள்வி கேட்காதே, நான் சொன்னதை செய்" என்ற ஆணவம் கலந்த வசனம் இரண்டு சீரியல்களிலும் மாறி மாறி கேட்கும். ஆம், "அங்கே" அரசி, "இங்கே" மேனகா).

அர்ஜுன் தன்னை எதிர்ப்பதற்கு பக்கபலமாக இருப்பது தன் சித்தப்பா திருவேங்கடம்தான் என்பதையறிந்த ஆதி, அவரை அடித்து நொறுக்க தேவராஜ் பாண்டியன் தலைமையில் அடியாட்களை அனுப்ப, அங்கே திருவேங்கடம் இல்லாததால், போன் பண்ணி கூப்பிடும்படி சாரதாவிடம் மிரட்ட, உடனே சாரதா புத்திசாலித்தனமாக கணவருக்கு போன் செய்வது போல் பேசிக்கொண்டே ஆனந்தியை போனில் அழைத்து விஷயத்தைச்சொல்கிறாள் (சாரதா என்றால் புத்திசாலியாகத்தான் இருக்க வேண்டும் :lol: ). உடனே ஆனந்தி மற்றும் தோழர் பாலகிருஷ்ணன் தலைமையில் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் வந்து அங்கு நடப்பதை படம் பிடிப்பதுடன், ஆனந்தியும் தோழரும் அவர்களை மிரட்டி அனூப்பிவிடுகின்றனர்.

தோழரின் இடத்தில் ஆலோசனை செய்யும் ஆனந்தி, சித்தப்பாவையும், எவிடன்ஸான குலோத்துங்கனையும் தோழர் பாதுகாப்பில் விட்டு விட்டு, அர்ஜுனையும் சதீஷையும் அழைத்துக்கொண்டு அபியின் வழக்கறிஞரைப்பார்க்க செல்கிறாள்.

saradhaa_sn
30th March 2008, 02:43 PM
பாஸ்கரின் கல்குவாரியின் பழைய மேனேஜர், தன் முதலாளியைக்கொன்றது பாஸ்கர்தான் என்று முதலாளியின் மகள் (பாஸ்கரின் மனைவி) சங்கீதாவிடம் சொல்லப்போக, அதைப்பற்றி பேச்செடுக்கும் சங்கீதா பாஸ்கருக்கு சந்தேகம் வருவதுபோல பேசப்போக, அதுமட்டுமல்லாமல் தங்கள் ஆடிட்டரிடம் தன் பேரிலுள்ள சொத்து விவரங்களை தெரிந்துகொண்டு திரும்பும்போது, பாஸ்கர் அவளைப்பார்த்து விடுகிறான். (அவன் பார்த்தது சங்கீதாவுக்கு தெரியாது). உடனே ஆடிட்டரிடம் சென்று விவரத்தை அறியும் பாஸ்கர், இதற்கெல்லாம் பழைய மேனேஜர்தான் காரணமாக இருக்குமோ என்று சந்தேகித்து, தேவராஜ் பாண்டியனைக்கொண்டு மேனேஜரைத் தூக்கிவந்து செம்மையாக அடித்து, மிரட்டி அனுப்புகிறான். (பாவம் அந்த மேனேஜர். உண்மையைச்சொன்னதற்கு சங்கீதா வாங்கிக்கொடுத்த பரிசு :evil: ).

அடுத்த வாரம் பார்ப்போம்.......

aanaa
30th March 2008, 05:43 PM
Thank you Saradhaa fpr the whole updates


அபியும் தொல்ஸும் பேசிக்கொண்டிருந்ததை அரைகுறையாக கேட்ட கிருஷணன், அபியின் இடத்தில் ஆர்த்தி தற்காலிகப் பொறுப்பேற்பது தொல்ஸுக்கு பிடிக்கவில்லையென்று தவறுதலாக ஆர்த்தியிடம் சொல்லி வைக்க.்....
I thought Krishnan is innocent and good man but ...




் (சாரதா என்றால் புத்திசாலியாகத்தான் இருக்க வேண்டும் :lol: ). ்.

purikiRathu..... :D

why so doubt?

gta129
2nd April 2008, 05:54 AM
Krishnan always starts these problems is office. He did it before too. I just can't remember the exact situation.

MEDIA ASIA
3rd April 2008, 04:21 AM
The episodes are going very interesting. I like watching Kolangal and they are doing it better than before. Interesting stories, and I'm looking forward to see how it will end :)

You can watch every new episodes of Kolangal recorded on w w w. london tamilvideo . com

saradhaa_sn
3rd April 2008, 08:02 PM
தன்மகன் என்ன செய்தாலும் சரியென்று காஞ்சனா சப்போர்ட் செய்வது ஏனென்று தெரியவில்லை. அத்தனை பேர்ம் எதிர்த்து நிற்கும்போது, அவன் செய்வது அநியாயமாக இருக்குமோ என்ற எண்ணம் ஏன் துளி கூட வரவில்லை?.

அபியின் வீட்டுக்குப்போய் அனைவரிடமும் சண்டைபோடும் காஞ்சனாவிடம், அர்ஜுனை ஏமாற்றி அத்தனை சொத்துக்களையும் ஆதி அபகரித்துக்கொண்டான் என்ற விவரத்தை காஞ்சனாவிடம் ஏன் யாரும் சொல்லவில்லை?. அவள் என்னவோ தன் மகன் உத்தமன் என்று வாதாடும்போது, சரியான பதிலடி கொடுக்காதது ஏன்?. இத்தனைக்கும் அந்த இடத்தில் கற்பகம், ஈஸ்வரன், திருவேங்கடம், ஆனந்தி, சாரதா, அர்ஜுன், சதீஷ் என்று எல்லோரும் இருக்கிறார்கள். அவளுடைய கத்தலுக்கு பயந்து, 'எங்களுக்கு உங்க சொத்துக்களே வேண்டாம்' என்று சரண்டர் ஆகிறார்கள். எல்லோரையும் பணிய வைக்கும் ஆனந்தியால் கூட காஞ்சனாவை அடக்க முடியவில்லை.

வீட்டுக்குப்போனபின்னும் காஞ்சனா ஆதிக்கு தூபம் போடுகிறாள். அதைக்கேட்டு ரேகாவுக்கு சந்தோஷம். அவளைப்பொறுத்தவரை கட்டிய கணவன் (அர்ஜுன்) தன்னைவிட்டுப்போய் விட்டான் என்ற கவலையோ, பெற்ற அப்பன் (சங்கரபாண்டியன்) தலைமறைவாக திரிகிறான் என்ற வருத்தமோ இல்லை. பழி வாங்க வேண்டும் என்ற உணர்ச்சி மட்டுமே மேலோங்கி இருக்கிறது. (உருப்படும்). சரி... பழிவாங்கி விட்டு மொட்டை மரமாக நின்று என்னத்தை சாதிக்கப்போகிறாள்..?.

தனக்கு உதவிய கல்குவாரி முன்னாள் மேனேஜரை தன் கணவன் பாஸ்கர் அடியாட்களை வைத்து அடித்து துவைத்த பின்னும் (பாஸ்கருக்கு அந்த சந்தேகம் வரக்காரணமே தான்தான் என்று தெரிந்தும் கூட) தனக்கு மேலும் உதவ மறுக்கும் மேனேஜர் மேல் கோபமாக வெளியேறுகிறாள் சங்கீதா. (நல்லவேலை செய்தான் அந்த மேனேஜர். இந்த மாதிரி பைத்தியக்காரிகளை நம்பி உதவி செய்தால் தான் சாவது நிச்சயம் என்று தெரிந்துகொண்டு விட்டான்).

ரெட்டியின் மகளுக்கு மறுநாள் நிச்சயதார்த்தம். ஆனால் முதல்நாளே அவளைக்காணவில்லை. யாரோ போன் செய்து ரெட்டிக்கு தகவல் சொல்லி மிரள வைக்கிறான். அது மேனகாவின் வேலைதான் என்று தெரிகிறது.

கலா தன் பழைய வேலையைத் துவங்கி விட்டாள். அனுவுக்கும் ஆர்த்திக்கும் ஆகவில்லை என்று தெரிந்துகொண்டு, அனுவுக்கு சப்போர்ட் செய்வதுபோல பேசுகிறாள். தான் கொடுத்த வேலைகளை சரியாக செய்யவில்லையென்று ராஜேஷ் மனோவை கோபிக்கிறான். தன்னை யாரும் ஒரு பார்ட்னராக மதிக்கவில்லை என்பதில் மனோவை விட அனுவுக்கு ரொம்ப மனக்குறையாக இருக்கிறது. ஆக அந்த வீட்டில் ஒரு பூகம்பம் நிச்சயம்.

கொஞ்ச நாளைக்கு முன்னர், துப்பாக்கியும் கையுமாக மேனகாவின் வீட்டு வாசலிலேயே சுற்றிக்கொண்டிருந்த அந்த கிழவன் என்ன ஆனான் என்பது தொல்ஸுக்கே வெளிச்சம். (இன்னும் குறிபார்த்துக் கொண்டேயிருக்கிறானா? :lol: ).

பார்ப்போம்..... :wave:

aanaa
4th April 2008, 05:41 PM
Thanks Saradhaa for the weekly updates.


I agree with you that why Kanchana is so adamant.

" நாய் வாலை நிமித்த முடியாது" mathiri - like kala.

Baskar still get away with that murder. hmmmmm.

keep up your weekly updates.
once again thank you

saradhaa_sn
6th April 2008, 03:32 PM
கடந்த மூன்று எபிஸோட்களாக, மெயின் ட்ராக்கை விட்டு, ரெட்டி மகள் காதல் விவகாரத்திலேயே ஓடுகிறது. தன் மகளை நிச்சயதார்த்தத்துக்கு முதல் நாள் காணவில்லையென்றதும், பெரிய ரெட்டி குடும்பம் கவலையிலும் அதிர்ச்சியிலும் மூழ்குகிறது. இதனிடையே வீட்டு வேலைக்காரி மூலமாக மகளின் காதல் விவகாரம் தெரிய வர, ஆபத்துக்கு பாவமில்லையென மனைவியின் சொல்கேட்டு உதவிக்கு தம்பி ரெட்டியை நாடுகிறார். தான் உயிரை வைத்திருந்த அண்ணன் மகளுக்கு ஆபத்து என்று தெரிந்ததும், தம்பியும் பகையை மறந்து உதவ முனையும் நேரம், மர்ம போன்கால் வருகிறது. அவர்கள் மகளையும் அவளது காதலனையும் காண வேண்டுமென்றால் எண்ணூரில் இருக்கும் பாழடைந்த பங்களாவுக்கு வரச்சொல்கின்றனர்.

(வழக்கமாக பல்லாவரம் மலையடிவாரத்திலிருக்கும் பாழடைந்த பங்களாவுக்குத்தானே வரச்சொல்வார்கள்..?. அப்படீன்னா அந்த வசனத்தை திரைப்படங்களுக்கே விட்டு விட்டனரா..? ஓகே).

அங்கே இவர்கள் போய் நிற்கும்போது, மூன்று வயதுக்குழந்தைக்கு கூட தெரியும், யார் வரப்போகிறார்கள் என்று. ஆம், மேனகா வருகிறாள் தன் பாஷா படையுடன். காதலர்களுக்கு அவள்தான் அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும், வெளியில் விட்டால் அவர்களுக்கு ஆபத்து என்றும் சொல்கிறாள். அவளால் நியமிக்கப்பட்ட அடியாட்கள் திடீரென வந்து, அந்தப்பையனுக்கு சாதகமாக வாதாடி கல்யாணம் செய்து வைக்க முயல்வதுபோலவும், மேனகா அவர்களைத் தடுப்பது போலவும் (ரெட்டிகளை ஏமாற்ற) ஒரு நாடகம் நடக்கிறது. ரெட்டிகளை தனியே அழைத்துப்பேசும் மேனகா, சீரியல் பார்க்கும் எல்லோரும் எதிர்பார்த்தபடி, மவுண்ட்ரோடு ப்ளாட்டை தனக்கு தந்தால் அவர்கள் மகளை அந்த ரவுடிக்கும்பலிடம் இருந்து மீட்டு தருவதாக சொல்கிறாள். அவர்களும் சம்மதிக்கவே, 'சரி நீங்க வீட்டுக்கு போங்க. உங்க மகள் வருவாள்' என்று சொல்லியனுப்பி விடுகிறாள்.

இப்போது காதலர்களை பிரிக்க வேண்டுமே..!. அவள் காதலில் உறுதியாக இருப்பதை அறிந்து அவனை தனியே அழைத்து பேரம் பேசுகிறாள். 'அவளைக் கல்யாணம் செய்துகொண்டால் ரெட்டிகள் அவனைக்கொன்று விடுவர். அவளை விட்டு விலகிப்போனால் உயிரும் தப்பிக்கலாம். கோடி ரூபாய் பணமும் கிடைக்கும்' என்று ஆசை காட்டுகிறாள். காதலுக்காக உயிரை விடுவதைவிட, உயிரும் பிழைத்து கோடிக்கணக்கில் பணத்தையும் பெற்று அனுபவிப்பதே தேவலை என்று ""புத்திசாலித்தனமாக"" முடிவெடுக்கிறான்.

பின் என்ன, காதலுக்காக உயிரைவிட்டால் கல்வெட்டிலா வரப்போகிறது?. அப்படி வந்தாலும் அந்தக் கல்வெட்டைத்தான் அவனால் பார்க்கமுடியுமா?. ரேகாவுடன் கைகோர்த்து அருவியில் குதித்த கமல் மட்டும் என்ன பண்ணினார்?. அடடா, சட்டை மரக்கிளையில் மாட்டிக்கொண்டதே, சரி திரும்பவும் அருவியில் இருந்து மறுபடியும் குதிப்போம் என்று போனாரா?. இல்லையே... ரேகாவை மறந்துவிட்டு ரேவதியுடன் டூயட் பாடவில்லையா?. விடுங்க, காதலாவது கத்தரிக்காயாவது. 'என்ன சத்தம் இந்த நேரம்' பாடல் முடிந்ததும், ஆவேசமாக கொட்டும் அருவியை அச்சத்துடன் விழித்துப்பார்க்கும் அப்பாவிப்பெண் ரேகா இன்னும் கண்ணில் நிற்கிறார். பாவம், தன்மீது உயிரையே வைத்திருப்பதாக தான் நினைத்த காதலன், தன்னை மட்டும் அனுப்பிவிட்டு இன்னொரு பெண்ணுடன் 'காலகாலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்' பாடிக்கொண்டிருப்பான் என்று நினைத்திருப்பாரா?. (ஐயய்யோ.. இது என்ன கோலங்களுக்கும் புன்னகை மன்னனுக்கும் முடிச்சு என்று கேட்காதீர்கள். காதல் என்பது வெறும் புடலங்காய் என்பதற்காக சொல்ல வந்தேன்).

அந்த புத்திசாலிப்பையன், ஒருகோடி ரூபாய் போதாது, இன்னும் இருபத்தைந்து லட்சம் சேர்த்து வாங்கிக்கொடுங்கள் என்று கேட்டு, அதையும் மேனகா சம்மதித்தபின் போகிறான். இனி அவனுக்கு தன் கம்பெனியில் வேலையில்லை என்று சொல்லி விரட்டி விடுகிறாள். காதலன் பேசிய அனைத்து பேரமும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, அந்த அப்பாவிப்பெண்ணுக்கு போட்டுக்காட்டப்படுகிறது. காதலனின் சாயமும், காதலின் சாயமும் வெளுக்கிறது. தன்னைக் காப்பாற்ற வந்த தேவதை என்று 'நரியை' அணைத்துக் கொள்கிறாள். ஆக கொக்கு தலையில் வெண்ணையை வைத்து ப்ளாட் வாங்க ஏற்பாடு செய்தாயிற்று. (இப்போது அந்த இரண்டு ரெட்டிகளும் சேர்ந்து ப்ளாட்டை தரமாட்டேன் என்றால் நரி என்ன பண்ணும்?. ரெட்டி மகளுடைய இன்னொரு காதலனைத்தேடுமா?. அதுசரி, திருச்செல்வத்துக்கு தெரியாதா, அதிலிருந்து இன்னொரு கிளைக்கதையை எப்படி ஆரம்பிப்பது என்று).

aanaa
6th April 2008, 05:44 PM
Thank you
pl keep on update




(வழக்கமாக பல்லாவரம் மலையடிவாரத்திலிருக்கும் பாழடைந்த பங்களாவுக்குத்தானே வரச்சொல்வார்கள்..?. அப்படீன்னா அந்த வசனத்தை திரைப்படங்களுக்கே விட்டு விட்டனரா..? ஓகே).
.

Oh ya



ி ரேகாவுடன் கைகோர்த்து அருவியில் குதித்த கமல் மட்டும் என்ன பண்ணினார்?. அடடா, சட்டை மரக்கிளையில் மாட்டிக்கொண்டதே, சரி திரும்பவும் அருவியில் இருந்து மறுபடியும் குதிப்போம் என்று போனாரா?. இல்லையே... ரேகாவை மறந்துவிட்டு ரேவதியுடன் டூயட் பாடவில்லையா?. விடுங்க, காதலாவது கத்தரிக்காயாவது. 'என்ன சத்தம் இந்த நேரம்' பாடல் முடிந்ததும், ஆவேசமாக கொட்டும் அருவியை அச்சத்துடன் விழித்துப்பார்க்கும் அப்பாவிப்பெண் ரேகா இன்னும் கண்ணில் நிற்கிறார். பாவம், தன்மீது உயிரையே வைத்திருப்பதாக தான் நினைத்த காதலன், தன்னை மட்டும் அனுப்பிவிட்டு இன்னொரு பெண்ணுடன் 'காலகாலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்' பாடிக்கொண்டிருப்பான் என்று நினைத்திருப்பாரா?.


thanks for bringing again.
:D

VENKIRAJA
7th April 2008, 12:54 AM
J/K....Intha serial innum odikittu irukka?Naan 10th padikkarache aarambichanga-nu nenaikaren :lol: .....I did watch the first episode.It was my last.ANYWAYS GOOD LUCK THIRUSELVAM!Ivar Hindi Ekta serial range-la part two three ellam edukka maatar-nu nenaikaren....! :rotfl:

R.Latha
7th April 2008, 08:21 AM
பிரபல எழுத்தாளர் கோவி.மணிசேகரன் கோலங்கள் என்ற தொடரில் நடிக்கிறார். தொடரில் இடம்பெறும் `பிளாஷ்பேக்' காட்சியில் தாசய்யா என்ற கேரக்டரில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

gta129
13th April 2008, 08:18 AM
J/K....Intha serial innum odikittu irukka?Naan 10th padikkarache aarambichanga-nu nenaikaren :lol: .....I did watch the first episode.It was my last.ANYWAYS GOOD LUCK THIRUSELVAM!Ivar Hindi Ekta serial range-la part two three ellam edukka maatar-nu nenaikaren....! :rotfl:

:rotfl: :rotfl: :rotfl:
So true. Its been going for a long, long time.

saradhaa_sn
19th April 2008, 03:18 PM
மேனகாவைக்கொல்ல வந்த அந்தோனியின் ஃப்ளாஷ்பேக் துவங்கியதும், எங்கே ரொம்ப நாளைக்கு இழுத்துக்கொண்டு போகுமோ என்று நினைத்தோம் (அதாவது பயந்தோம்). நல்ல வேளை நான்கே எபிஸோடில் முடித்துவிட்டனர். இப்போது மீண்டும் கேமரா தொல்ஸ் முகத்துக்கு வந்துவிட்டது. அதுசரி, ஊரில் அடாவடித்தனம் பண்ணிக்கொண்டு இருந்தவர்களிடம் இருந்து தப்பி ஓடிவந்த செல்லம்மாவை விட்டு விட்டு, அவளது வாரிசு மேனகாவை கொல்வேன் என்று அந்தோனி கொதிப்பது என்ன நியாயம்?. அந்த வேட்டை நாய்களிடம் இருந்து தப்பித்துதான் அவள் வந்தாளே தவிர, அவனது குடும்பம் முழுமையும் தற்கொலை செய்துகொண்டதற்கு அவளா காரணம்?. (உண்மையில் ஒன்று மட்டும்தான் தற்கொலை, மற்ற நான்கும் கிழவன் தாசய்யாவால் செய்யப்பட்ட கொலை. அதிலும் அந்த ஜோசப்பைத் தவிர, அவன் மனைவி, அவன் அம்மா (அந்தோனியின் மனைவி), அவன் தம்பி சார்லஸ் ஆகியோரைக்கொன்றது அநியாயத்திலும் அநியாயம்).

'கல்யாணத்துக்கு சம்மதமா?' என்று கேட்கும் அந்த வேட்டை நாய்களின் மத்தியில் 'சம்மதம்' என்று சொல்லி செல்லம்மா அப்போதைக்கு தப்பிப்பது நல்ல புத்திசாலித்தனம். பின்னர் தப்பிக்க எவ்வளவோ வழிகள் கிடைக்கலாம். அந்த சமயத்தில் 'முடியாது' என்று சொல்லி அவர்களிடம் சிக்கி நாசமாவது நிச்சயம் என்பது அவளுக்கு தெரிந்திருக்கிறது (பலே திருச்செல்வம்)

இதை எதுக்காக சொல்கிறேன் என்றால், வில்லனாலும் அவன் ஆட்களாலும் அடிவாங்கி ரத்தம் சொட்ட, கை கால்கள் கட்டப்பட்டு அசையக்கூட முடியாத கதாநாயகன், வில்லன் எதையாவது செய்யச்சொல்லும்போது, சம்மதிப்பது போல் ஏமாற்றி தப்பிக்கலாம் என்று எண்ணாமல், வில்லன் முகத்தில் காறித்துப்பி விட்டு மேலும் அடிவாங்கி சாகும் 'புத்திசாலித்தனமான' (?!?!?!?!?!?!?!) கதாநாயக நாயகியரை திரைகளில் பார்த்து மனம் புழுங்கிப்போன நமக்கு....... (1950-லிருந்து இதைத் தாண்டி சிந்திக்க மறுக்கிறார்கள் நம் கதாசிரியர்கள்).

ஃப்ளாஷ்பேக் கதையைப் பார்க்கும் சாக்கில் நமக்கு காணக்கிடைத்தது, அருமையான தென் தமிழ்நாட்டின் கடலோரக்காட்சிகள். அற்புதமான கடற்கரைப்பகுதிகளும், அதையொட்டியிருக்கும் சிதிலமடைந்த பழங்காலக் கட்டிடங்களும், சுற்றியுள்ள சோலைப்பகுதிகளும் இதுவரை எந்த திரைப்ப்படத்திலும் நாம் காணாதவை. (வெளிப்புறப் படப்பிடிப்பு என்றதுமே கேமராவை தோளில் தூக்கிக்கொண்டு, தயாரிப்பாளர் செலவில் ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து என்று போகும் இயக்குனர்களுக்கு, தமிழ்நாட்டிலும் அதைவிட அற்புதமான இடங்கள் இருக்கின்றன என்பது தெரியுமா?). நன்றி தொல்ஸ். (அடுத்து இவருடைய ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. அதில் ராமேஸ்வரத்தின் அழகு இடங்கள் நம் கண்ணுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்)

ShereneAndrew
20th April 2008, 06:05 AM
iam back again after a very long time...

i hvn't watched kolangal for more than 7 months..

so help me with the flwng info.. pls :D

Menaka - actress name?
and i watched some river-escape scene 2 days bfore.. some love story.. who r they.. :?: :?: :?

hope not asking too much . :roll:

:D :swinghead:

aanaa
20th April 2008, 05:31 PM
welcome back Shereneandrew

Menaka's name --> Saradhha might help

Menaka - A foreign return industrialist.
Athi likes to have joint venture with her business in Chennai.

As Saradhaa wrote in the above para - Menaka is Sellamah's daughter.

Another flashback should reveal the relationship between Thols & Manaka.

Menaka is a business mind lady - will do any 3rd grade job for her business.

ShereneAndrew
20th April 2008, 09:32 PM
ty very much aanaa :D

aanaa
25th April 2008, 05:19 PM
someone says its ending in May ?
Is it true?

Appaadaaaaaa

ShereneAndrew
29th April 2008, 02:05 AM
update.. pls.. :D

mr_karthik
29th April 2008, 11:11 AM
someone says its ending in May ?
Is it true?

Appaadaaaaaa

i dont think so.

there are too many knots to be solved, which will take months (may be years).
yesterday also Anandhi was taken by police for an enquiry for a new complaint on her by one of the reddys.

i hope you mentioned about May 2009.

aanaa
29th April 2008, 05:12 PM
i hope you mentioned about May 2009.
Thanks

atlast in May 2009
:roll:

aanaa
4th May 2008, 06:25 PM
Whats happening her??/

Arthi
4th May 2008, 11:57 PM
saradha madam... superb write up :clap:

plz continue :D

serial-la vida unga ezhuthu arumayaga erukiradhu :D

sudha india
22nd May 2008, 12:15 PM
Whats happening in kolangal ? Long time no see........

aanaa
22nd May 2008, 06:00 PM
saradha madam... superb write up :clap:

plz continue :D

serial-la vida unga ezhuthu arumayaga erukiradhu :D

saradha madam....

saradhaa_sn
22nd May 2008, 06:17 PM
எதிரி 'ஆதி'யை நல்லவன் என்று நினைக்கும் அளவுக்கு துரோகிகள் கூட்டம் பெருகி வருகிறது, கோலங்களில்...

துரோகி - 1 கிருஷ்ணன்...

ஆர்த்தியை அலுவலகத்தில் கொண்டு வந்து வைப்பது தொடர்பாக, அபியும் தொல்ஸும் பேசியதை அரைகுறையாக கேட்டு வத்தி வைத்த கிருஷ்ணன், அதன்மூலம் ஆர்த்தியிடம் தனக்கு பலன் பெருகுவதைக்கண்டு, மேலும் மேலும் தொல்ஸைப்பற்றி இல்லாததும் பொல்லாததுமாக சொல்லி, தனக்கு ப்ரமோஷனும் வாங்கி தனி கேபினும் வாங்கி விட்டான். அலுவலக பெண் தொழிலாளர்களிடம் தொல்ஸ் சகஜமாக பழகுவதை, ஆர்த்தியிடம் வேறு மாதிரியாக திரித்து கூறி, தொல்ஸை ஒரு பென் பித்தன் என்ற அளவுக்கு நினைக்க வைத்து விட்டான். (அதுக்காக தொல்ஸைப்பார்த்து ஆர்த்தி முந்தானையை இழுத்துப்போர்த்திக்கொண்டு தொல்ஸைப்பார்ப்பது கொடுமை). அதுபோக அலுவலகத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எடுக்கும் தவறான முடிவுகளுக்கு தொல்ஸ் முட்டுக்கட்டை போடுவது வேறு அவளுக்கு தொல்ஸ் மேல் எரிச்சலை அதிகமாக்குகிறது. கூடவே தூபம் போட கிருஷ்ணன். (தொல்ஸுக்கு இந்த இன்ஸல்ட்கள் தேவைதானோ என்று தோன்றுகிறது. அமெரிக்கா செல்ல்லும் அபி, தொல்ஸிடம்தானே நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்ளச்சொன்னாள்?.)

aanaa
22nd May 2008, 06:19 PM
Thank you Saradha
please continue with your updates

saradhaa_sn
22nd May 2008, 06:37 PM
துரோகி - 2 திருவேங்கடம்...

காசுக்காக எதையும் செய்யும் தற்காலத்திய 'டிப்பிக்கல்' அரசியல்வாதியின் வடிவமான திருவேங்கடம், தன்னை எம்.எல்.ஏ. ஆக ஆக்குவேன் என்று ஆசைகாட்டிய, ஆதியின் வார்த்தையில் மயங்கி, அவன் அவ்வப்போது போடும் பிச்சைக்காசுக்காக, ஆடியின் தம்பியும், தன் அண்னன் மகனுமான அர்ஜுனை முழுநேர குடிகாரனாக ஆக்குகிறார். சித்தப்பா, தனக்காக அண்ணனிடம் போராடி சொத்துக்களி மீட்டுத் தருவார் என்று நம்பும் அர்ஜுனும் அவர் சொல்லும் பேச்சுக்கெல்லாம் ஆட்டுக்குட்டியாய் தலையாட்டுகிறான்.

துரோகி - 3 கலா...

பக்கவாதம் அடித்த கணவனோடு நடுத்தெருவில் நின்ற தன்னை, ஆதரித்து வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்த ராஜேஷுக்கும், அவளுக்கு முழு மனதோடு தங்க அனுமதியளித்த ஆர்த்திக்கும் எதிராக, அதே வீட்டில் தங்கியிருக்கும் அனுவுக்கு தூபம் போடுவதும், அனுவுக்கு தெரியாமல் ஆர்த்தியின் ஆபீஸுக்குப்போய் அவளுக்கு தூபம் போடுவதுமாக குடும்பத்தில் குழப்பத்தை உண்டுபண்ணுகிறாள். இப்போது ஆர்த்தியும் அனுவும் உள்ளுக்குள் எலியும் பூனையும்.

இதனிடையே, தன்னுடைய ஒவ்வொரு தாக்குதலின்போதும் குறுக்கே புகுந்து மேனகாவைக் காப்பாற்றிவிடும் தொல்காப்பியனைத்தேடி, தொல்ஸ் இல்லாத நேரம் வீட்டுக்கு வரும் டேவிட்டை, வீட்டு சொந்தக்காரன் 'தாய் மாமன்' என்று தானே கற்பனை பண்ணிக்கொண்டு, தொல்ஸ் வீட்டு சாவியைத் தந்து அதில் தங்க வைக்க, அவன் தொல்ஸிடமிருந்த அவர்களுடைய பழைய போட்டோக்களை எடுத்துச் சென்று விடுகிறான். போகும்போது மேனகாவின் புதிய ப்ராஜக்டான 'மேனகா டவர்ஸ்' துக்க விழா செய்தியடங்கிய செய்தித்தாளை தொல்ஸின் அறையில் விட்டுப்போய் விடுகிறான். இரவில் வீட்டுக்கு வரும் தொல்ஸிடம் அவருடைய தாய்மானைப்பற்றி வீட்டு உரினையாளர் சொல்ல, தொல்ஸுக்கு அதிர்ச்சி. 'இல்லாத தாய்மாமன் எங்கிருந்து வந்தான்?' என்ற யோசனையில் இருந்தபோது, டேவிட் வந்த அன்று தன் வீட்டில் நடந்த விசேஷத்தின் வீடியோவில் அவன் முகம் பதிவாகியிருப்பதைக்காட்ட, தொல்ஸுக்கு மேலும் அதிர்ச்சி. 'இவன் மேனகாவைக் கொல்ல அலிகிறவனல்லவா?' என்ற எண்னத்துடன் வீட்டுத்தரையில் கிடக்கும் நியூஸ் பேப்பரைப்பார்க்க, அதில் மேனகா டவர்ஸ் துவக்க விழா பற்றிய செய்தி....

saradhaa_sn
22nd May 2008, 06:58 PM
அபி வீட்டில் குழப்பத்தை உண்டு பண்ணி அவர்களை தனித்தனியாக பிரிக்க எண்ணிய ஆதிக்கு ஒரு வாய்ப்பு. அலுவலகம் முடிந்து இரவில் தனியாக ஆட்டோவில் வரும் ஆர்த்தியை, ஆட்டோக்காரனும், இன்னும் ஒருவனும் கடத்தி ஊர் எல்லைக்கு வெளியே கொண்டு செல்ல, அங்கு தற்செயலாக கிரியுடன் வரும் ஆதி, ஆர்த்தியை யாரோ சீரழிக்க முயல்வதைக்கண்டு, அவர்களை விரட்டியடித்து ஆர்த்தியைக்காப்பாற்றுகிறான். ஆட்டோக்காரன், ஆதியின் துப்பாக்கியைக்கணடதும் தலைதெறிக்க ஓடுகிறான். 'தங்கை'(??) ஆர்த்தியைக்காப்பாற்றி தன் காரில் அழைத்து வரும் ஆதி, காரில் வரும்போது ரொம்ப கரிசனமாக பேசுகிறான். 'ராத்திரி நேரத்தில இப்படி தனியா வராதே. உன் புருசன் ராஜேஷை வரச்சொல்லி அவனோடு வா' என்று அட்வைஸ் பண்ண, 'அண்ணனின்'(??) பாசத்தில் ஆர்த்தி உருகுகிறாள். வீட்டில் கொண்டு வந்து விடும்போதும், ரொம்ப அட்வைஸ் பண்ணிவிட்டுப்போகிறான்.

'மேனகா டவர்ஸ்' துவக்க விழாவுக்கு ஒரு மலையாள பத்திரிகைகாரர் நாராயணன் நாயர் என்பவரைப்போல போலி அடையாள அட்டையுடன் நுழையும் டேவிட், பையில் துப்பாக்கியுடன் மேனகாவைக்கொல்ல தருணம் பார்த்திருக்கும் நேரம், ஓட்டலின் தலைவாசல் வழியாக நுழைய செக்யூரிட்டிகளால் அனுமதி மறுக்கப்படும் தொல்ஸ், பின் வழியாக ஏஏறிக்குதித்து உள்ளே நுழைந்து மாடிப்படி வழியாக இறங்கும் நேரம், கையில் துப்பாக்கியுடன் மேனகாவைக் குறிபார்க்கும் டேவிட் இடமிருந்து மேனகாவைக் காப்பாற்ற, மெயின் ஸ்விட்சை அணைத்து மின்சாரத்தை துண்டித்து விட, இருட்டில் சுடும் டேவிட்டின் துப்பாக்கிக்கு இரண்டு செக்யூரிட்டிகள் பலியாகின்றனர். மீண்டும் விளக்கு வந்ததும் டேவிட் மாயமாகிவிட்டான். ஆனால் வீடியோவில் பதிந்துள்ள முகத்தை போலீஸாரும் மற்றவர்களும் பார்த்து விடுகின்றனர். இதனிடையே டேவிட்டினால் கட்டிப்போடப்பட்டிருந்த ஒரிஜினல் பத்திரிகையாளர் நாராயணன் நாயரை போலீஸார் அழைத்து வருகின்றனர்.

saradhaa_sn
22nd May 2008, 07:18 PM
துரோகி - 4 மனோ.....

'சொந்தக்கார்களுக்குள் பிஸினஸில் கூட்டு வைத்துக்கொள்ளக் கூடாது' என்று அபி சொன்னதையும் மீறி, எங்கோ தெருவில் நின்ற மனோவையும் அனுவையும் மனதில் கள்ளம் கபடமில்லாத ராஜேஷ் தன் வீட்டுக்கு அழைத்து வந்ததுடன், தன்னுடைய ஆர்த்தி ட்ராவல்ஸில் பார்ட்னராகவும் ஆக்கியதை மறந்து, அவனுக்கே துரோகம் செய்யும் விதமாக, ராஜேஷுக்கு தெரியாமல் 'அனு ட்ராவல்ஸ்' என்ற பெயரில் துவக்கி, அது 'ஆர்த்தி ட்ராவல்ஸி'ன் கிளைதான் என்று பொய் சொல்லி அத்தனையும் கஸ்டமரையும் தான் பிடித்துக்கொள்ள, தன்னுடைய ட்ராவல்ஸில் வண்டிகள் எல்லாம் சவாரி போகாமல் நிற்பதைக் கண்டு கஸ்டமரிடம் ராஜேஷ் விசாரிக்க குட்டு உடைகிறது. கஸ்டமர் போல பேசி தன்னிடம் வரவழைக்கும் ராஜேஷ், ஆத்திரத்தில் மனோவை செருப்பால் அடித்து விடுகிறான். அப்புறம் என்ன வீட்டில் பஞ்சாயத்து. இரண்டு பக்கமும் வசைமாரிகள். குறுக்கே கலா புகுந்து தன் கொழுந்தனுக்காக பேசுகிறாள். மனோ மனைவி குழந்தையுடன் வீட்ட விட்டு வெளியேற, ஆர்த்தியிடம் திரும்பும் கறபகம், 'ஆர்த்தி என்னடி இதெல்லாம்?' என்று ஆரம்பிக்க, அவள் 'போம்மா' என்று போய்விடுகிறாள். (நல்ல வேளை, இல்லாவிட்டால் கற்பகத்தின் அறுவை வசனங்களை யார் கேட்பது?)

aanaa
22nd May 2008, 08:44 PM
நன்றி

போகிற போக்கைப் பார்த்தால் இன்னும் 4 வருடங்கள் இழுக்கும்போல்....

saradhaa_sn
23rd May 2008, 02:30 PM
'மேனகாவைக்கொல்ல முயற்சிக்கும்போதெல்லாம் தொல்காப்பியன் ஏன் வந்து இடையூறு செய்கிறான். அவனுக்கும் மேனகாவுக்கும் என்ன சம்மந்தம்' என்ற சிந்தனையுடன், தொல்ஸ் வீட்டிலிருந்து திருடி வந்த போட்டோக்களைப்பார்க்கும் டேவிட்டுக்கு அதிர்ச்சி. செல்லம்மாவுடன் ஒரு பையனும் ஒரு பெண்ணும் இருக்கும் படத்தைப் பார்த்ததும், அவளுக்கு ஒரு ஆண் வாரிசும் இருப்பது தெரிய வர, அவன் யாராக இருக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருக்க, உடன் இருக்கும் அவர்கள் வீட்டு விசுவாச வேலைக்காரன், அந்தப்படத்தில் இருக்கும் பையன் நிச்சயம் தொல்காப்பியனாகத்தான் இருக்கும் என்று சொல்ல, இப்போது டேவிட் இரட்டை வேட்டைக்கு தயாராகிறான். முதலில் தொல்காப்பியனை தீர்த்தால் மட்டுமே, மேனகாவை நெருங்க முடியும் என்ற எண்ணம் மேலோங்க, தொல்காப்பியனைத்தேடி முன் சென்ற வீட்டுக்கு (இப்போது சாமியார் வேடத்தில்) செல்ல.....

தன் மகள்களில் ஒருத்தியை தொல்ஸ் தலையில் கட்டிவிடலாம் என்ற நப்பாசையில் இருந்த வீட்டு சொந்தக்காரர், 'தொல்ஸ் தன் வீட்டிலிருந்து காலி செய்துவிட்டுப் போய் விட்டதாகவும் எங்கு சென்றார் என்பது தெரியாது என்றும்' சொல்லி சாமியார் எண்ணத்தில் மண்ணைப்போடுகிறார். டேவிட்டும் வேலைக்காரனும் பழைய இடத்திலிருந்து இடம் மாறி, ஒரு கோயில் மண்டபத்தில் தங்கியுள்ளனர்....

தேர்தலில் தனக்கு சீட் தரவில்லையென்ற கோபத்துடன் ஆதி வீட்டுக்குச் செல்லும் திருவேங்கடம், ஆதியிடம் கோபமாக சத்தம் போட, ஆதி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதைக்காண்பிக்க, செய்தியில் திருவேங்கடம் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வாசிப்பவர் அறிவிக்கிறார். அங்கே (முன்பு திருவேங்கடத்தை தன் அடியாட்களுடன் புரட்டியெடுத்த) தேவராஜ் பாண்டியனும் இருக்கிறான்.

(கோலங்கள் பார்க்கும்போது, மற்ற சேனல்களில் என்ன நிகழ்ச்சி ஒளிபரபாகிறது என்பதை அறிய, எப்போது சேனல் மாற்றுவீர்கள்?. விளம்பரத்தின்போதா?. நான், அபியின் அம்மா பேச ஆரம்பிக்கும்போது மாற்றுவேன். சுமார் பத்து சேனல்கள் சுற்றி முடிந்து வந்து பார்த்தால், அப்போதுதான் சத்யபிரியா ரெண்டு வார்த்தை பேசி முடித்திருப்பார். 'ரொம்ப ஸ்மார்ட்' :lol: :lol: )

sudha india
23rd May 2008, 03:02 PM
Thanks Saradhaa.....

Egappatta episodes- ai commercial BREAK illamal, SATHYAPRIYA-vin azugai illamal, 5 nimidathil partha thripthi erpattuvittadhu.

To be frank, I never see serials. Watched kolangal for sometime and then left.

Now I read lots of serial stories, with your fantastic write up.

As aanaa said, this is going to go on for years.... ROMBA SMART

Arthi
23rd May 2008, 11:13 PM
Saradhaa madam :clap:

nice write up :D

saradhaa_sn
24th May 2008, 02:15 PM
உஷாவின் வீட்டில் தங்கியிருக்கும் ஈஸ்வரன், கோயிலில் மனைவி கற்பகத்தை சந்தித்தபோது (சீரியல் பாத்திரங்களுக்கு, கோயில் என்பது மீட்டிங் பாயிண்ட் ஆகிவிட்டது. சரி, அது என்ன எல்லா சீரியல்களிலும் கோயிலில் ஒரே ஐயர்...?) மனோவுக்கும், ராஜேஷுக்கும் நடந்த சண்டை மற்றும் அதன்பின் நடந்தவற்றைக்கூற, ஈஸ்வர் மனோ மற்றும் அனுவை சந்தித்து சமாதானம் பேச முயல்கிறார். வழக்கம்போல அவருக்கு இன்ஸல்ட்டுகளும், வசவுகளும், அவமானங்களும் பை நிறைய கிடைக்கின்றன. (என்னவோ இவர் பேச்சை எல்லோரும் வேதவாக்காக கேட்டு அப்படியே ஏற்றுக்கொள்வதைப்போல, ஒவ்வொரு பிரச்சினையிலும் இவர் மூக்கை நுழைப்பது வேடிக்கை. மொத்த சீரியலிலும், எந்த ஒருவராலும் மதிக்கப்படாத ஒரே நபர் இவர்தான்).

திருவேங்கடம் தேர்தலில் நிற்பது உறுதியாகிவிட்ட நிலையில், இவர் ஏற்கெனவே இருந்த கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த தங்கராசு, அந்தக்கட்சியில் இருந்து விலகி திருவேங்கடம் கட்சியில் தொண்டராக சேருகிறார். (ஒவ்வொரு ஊரிலும் ஓடும் சாக்கடைகளுக்கு தனிப்பெயர் உண்டு. ஆனால் நாடு முழுக்க பொதுவாக ஓடும் ஒரே சாக்கடை அரசியல் என்பது தெரிந்த விஷயம்தானே). திருவேங்கடம் தன் குடும்பத்தினரை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும்போது அவர்கள் ஒவ்வொருவரையும் மகாத்மா காந்தி ரேஞ்சுக்கு தியாகிகளாக சித்தரிப்பது அருமை. (நடிகர் ராமச்சந்திரன் அரசியலுக்கு போனால், அவரது பேச்சாற்றலுக்கு அமைச்சர் பதவி உறுதி). தொண்டர்கள் மத்தியில் 'வாழ்க' கோஷங்கள் முழங்கும்போது, டி.வி.செய்தியில் ஒரு அறிவிப்பு.... 'பொதுவுடைமை இயக்கத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஒரு நபர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதால் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அந்த இயக்கத்தின் வேட்பாளராக 'தோழர்' பாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்' (வேறு யார்..? நம்ம 'செந்தமிழ்' பாலகிருஷ்ணன்தான்). இந்த அறிவிப்பு திருவேங்கடத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது 'தோழருடன்' தொல்காப்பியனும், ஆனந்தியும் அமர்ந்துள்ளனர். தோழருக்கு தன் பத்திரிக்கை முழு ஆதரவு அளிக்கும் என்றும், அவருக்காக பிரசாரம் செய்யும் என்றும் ஆனந்தி அறிவிக்கிறாள்.

ஆக, கதை இப்போது அரசியலுக்குள் நுழைந்து விட்டது.... 'தண்டலம்' இடைத்தேர்தலில் (ஊர் பெயர் சரிதானா?. என் காதுக்கு அப்படித்தான் கேட்டது) ஒருபக்கம் திருவேங்கடமும் அவருக்கு பக்க பலமாக ஆதி, மற்றும் தேவராஜ் பாண்டியன். மறுபக்கம் 'தோழர்' பாலகிருஷ்ணன், அவருக்கு ஆதரவாக தொல்காப்பியன் மற்றும் ஆனந்தி.

இவற்றுக்கிடையே....

தொல்காப்பியனையும், மேனகாவையும் கொல்ல அலையும் டேவிட்..
தொல்காப்பியனை ஒழித்துக்கட்ட நினைக்கும் ஆர்த்தி...
என்னவானார்கள் என்றே தெரியாமல் இருக்கும் பாஸ்கர், அலமேலு வகையறாக்கள்...
ஒருவரை ஒருவர் தொலைத்துக்கட்ட நினைக்கும் மனோ மற்றும் ராஜேஷ்...
திரிசங்கு சொரக்கத்தில் உஷா மற்றும் அவளது பெற்றோர்...
தனக்கு நியாயம் கிடைக்கும் என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் அர்ஜுன்...
நிரந்தர வில்லன் ஆதித்யா...
இவர்கள் எல்லோரையும் விழுங்கி ஏப்பம் விட துடிக்கும் மேனகா...

'கோலங்கள்' இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு உறுதி.

aanaa
24th May 2008, 05:29 PM
நன்றி

தொடருங்கள்

இன்னும் இரண்டு ஆண்டுகளிலாவது.....

mr_karthik
24th May 2008, 06:46 PM
this thread is like 'kumbakarnan'

this will sleep for some period, and will be busy for some period.

i think now now it is busy period.

gta129
26th May 2008, 06:15 AM
Finally some excitement in Kolangal.
And some twists too. The good character Arathi might be becoming a villan, because she wants Abi's company. I can believe she is going to betray Abi after everything she did for Arathi

Arathi and Anu's feud reached the climax. Now there's more reason's for tuning into watch Kolangal.

MEDIA ASIA
1st June 2008, 04:04 PM
The serial is going good. I just get irritated about Arthi, but the story will continue for a long time...

What happend to the investigation about Sarojas murder Gajendran was doing? No sign of him...

And also long time ago we saw Baskar..

When will Abi return? Will be interesting to see how it all will end.

Anyone knows what episode number of Kolangal is running now?
On Sun TV they only show the song - but not the episode number...

saradhaa_sn
1st June 2008, 07:43 PM
அபியையும் அவள் குடும்பத்தையும் ஒழித்துக்கட்ட நினைக்கும் ஆதி (அறிமுகமான எபிசோடில் இருந்து அவனுக்கு இந்த வேலைதானே), இப்போது 'கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்கும்' முயற்சியில் இறங்கியுள்ளான். அதாவது, ஒவ்வொருத்தராக அபியின் குடும்பத்தில் இருந்து பிரித்து அவர்களை திசைக்கொருவராக ஆக்கப்போகிறானாம். அவனுக்கு இருக்கும் பவருக்கும் செல்வாக்குக்கும், ஆள் பலத்துக்கும் அபி குடும்பத்தை ஒரு மூட்டைப்பூச்சியைப்போல நசுக்கி எறிந்து விடலாம்.

(ஆனால் அப்படி செய்தால் தொடர் சீக்கிறம் முடிந்து விடும்)

அதனால் முதல் வேலையாக ஆர்த்தியைத்தூண்டிவிட்டு, திசைதிருப்புகிறான். ஆனால் அவள் தன் குடும்பத்துக்கு எதிராக திரும்பவில்லை, தொல்காப்பியனுக்கு எதிராக திரும்புகிறாள். (சீரியல் கேரக்டர்கள் எப்படி பழையவற்றை அவ்வளவு சீக்கிரம் மறக்கின்றனர் என்பதுதான் தெரியவில்லை). தன் அக்கா அபியைக் கொல்ல ஆதி எப்படியெல்லாம் திட்டமிட்டான், அவன் சதிகளில் இருந்து தொல்ஸ் எப்படியெல்லாம் காப்பாற்றினான் என்பதையெல்லாம் எப்படி அவ்வளவு சீக்கிரம் ஆர்த்தியைப் போன்றவர்களால் மறக்க முடிகிறது என்பது தெரியவில்லை. (பாவம் அந்தப்பெண் என்ன செய்வாள்... பாத்திரப்படைப்பில் அவ்வளவு ஓட்டைகள்).

இடைத்தேர்தலில் எதிர் எதிராக நிற்கும் வேட்பாளர்களான, கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரரான தோழர் பாலகிருஷ்ணனை பாராட்டியும், சந்தர்ப்பவாத, சுயநல அரசியல்வாதியான தன் சித்தப்பா திருவேங்கடத்தை தாக்கியும் தனது தினசரி பத்திரிக்கையில் ஆனந்தி செய்தி வெளியிட, கோபம் கொண்ட திருவேங்கடம் தன் மனைவி சாரதாவுடன் ஆனந்தி வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்கிறார். திருவேங்கடத்தை விட சாரதாதான் அதிகம் சண்டை போடுகிறாள். சாரதா தன் கணவனுக்காக பரிந்து பேசுவது, சீரியலிலேயே இதுதான் முதல் தடவை என நினைக்கிறேன். அந்தக் குடுமபத்துக்காக தானும் தன் கணவனும் என்னவெல்லாம் செய்தோம் என்பதை பட்டியலிட்டு சண்டையிடும் சாரதா கடைசியில் 'இனிமேல் உங்க குடும்பத்துக்கும் எங்களுக்கும் எந்த ஒட்டும் உறவும் கிடையாது' என்று திருவேங்கடத்துடன் கோபமாக வெளியேறிவிட, கற்பகத்துக்கு அதுபோதாதா கண்ணீர் வடிக்க..?. ஆனந்தியை தன் வழிக்கு கொண்டுவர முயல, ஆனந்தியோ தன் கொள்கையில் உறுதியாக இருக்கிறாள்.

'ஒரு கம்பெனியின் எம்.டி.என்றால் காரில் போனால்தான் மரியாதை, ஆட்டோவில் போவது கேவலம்' என்று ஆர்த்திக்கு தூபம் போடும் ஆதி, அவளைக்கேட்காமலேயே ஒரு புதிய காருக்கு ஆர்டர் கொடுத்து முன் பணமும் கட்டிவிடுகிறான். கம்பெனிக்கு கார் வாங்க மேனேஜிங் பார்ட்னர் என்ற முறையில் தொல்காப்பியனின் அனுமதி வேண்டும் என்பதால் அதற்கான டாக்குமெண்ட் ரெடிபண்ணி அவனது கையெழுத்துக்காக நீட்டும் ஆர்த்தி, அவன் நிச்சயம் ஆட்சேபிப்பான் என்ற எண்ணத்தில், தனக்கு காரின் அவசியம் பற்றி நீட்டி முழக்கி பெரிய லெக்சர் கொடுக்க, அவள் முடிக்கும் முன்னேயே எந்த மறுப்பும் சொல்லாமல் கையெழுத்துப்போட்டு நீட்டி அவள் மூக்கை உடைக்கிறான்.

ஏற்கெனவே அனுவிடமும் மனோவிடமும் வண்டிக்கணக்கில் அவமானத்தை வாங்கிக்கட்டிக்கொண்ட ஈஸ்வரன், அடுத்து ஆர்த்தி மற்றும் ராஜேஷ் இடமும், அதன்பின் ஆதியிடமும் வலிய போய் நிறைய அவமானங்களை வாங்கிக்கட்டிக்கொள்ள அதன் காரணமாக நடுரோட்டில் 'அட்டாக்' வந்து விழுந்து கிடக்கும் அவரை அவ்வழியே ஆட்டோவில் போகும் ஆனந்தியும் தோழரும் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்கள். ஆதிக்கு தோழர் தகவல் கொடுக்க, ஆதியும் ரேகாவும் வருகிறார்கள்.... அஞ்சலியும் வருகிறாள்.

aanaa
2nd June 2008, 07:05 AM
நன்றி சாரதா
தொடரட்டும்....

priya_2008
20th June 2008, 02:36 PM
What happened no updates???? If anyone can update the show pls????

priya_2008
20th June 2008, 02:38 PM
I saw kolangal streday after a short break.
But hav some doubts,
1. Saw some detective agency ppl? who are they??? by whom they were appointed????
2. Whr has eswar gone from the hospital????
3. any idea when will abi be back???

gta129
23rd June 2008, 03:10 AM
Is Abi back yet?

priya_2008
23rd June 2008, 10:39 AM
No, i think it will take another month for Abi to return.

Arthi
23rd June 2008, 02:29 PM
saradha madam thordarungaL :D

Menaka
26th June 2008, 03:10 PM
what is menaka's real name ?

aanaa
26th June 2008, 10:48 PM
what is menaka's real name ?
You have to tell us
:lol:

priya_2008
28th June 2008, 11:52 AM
கார்திக் , (ன்யபகம் வருகிரதா) ஆனன்தியின் காதலன், லன்டனில் மெனகா வின் அலுவலகதில் பனிபுரிகிரன். கார்திக் சென்னை வருகிரன் அவனை அழைக மெனகா வின் கட்டலைபடி ஆதியும்,காதலனை அழைக ஆனான்தியும் விமனா நிலையிதிர்கு செல்கின்ட்ரனர். கார்திக் ஆனதியுடுன் செல, ஆதி மென்காவிடம் கார்திகை பட்ரி சொல மென்காவோ அதை நம்ப தயரக இல்லை. கார்திக், தனக்கு மெகவும் விச்வசமனவன் என்ட்ரு சொல்கின்ட்ரால். ஈதர்கிடயில் ஆனான்டி தனது பதிரிகை "தினசரி தீ" வில் மெனகா வை பட்ரி தவரக எழுத, மெனகா கார்திக் மெல் சந்தேகம் கொல்கிரல், கார்திகொ அதார்கும் தனகும் சம்பந்தம் இல்லை என்ட்ரு கோரி தான் ஆனதியிடம் இதை பட்ரி பெசுவதக சொல்கிரான், அது பொல ஆனனதியிடம் பெசவும் செஐகிரான், ஆனல் ஆனனதி அதை கன்டுகொல்வதகா தெரியாவில்லை.

ஆர்தி ட்ரவெல்ச் இன் 3 கார் அபி கன்ன்ச்ட்ருடினில் வாடைகு ஓடி கொன்டிருகின்ட்ரன. அவர்கல் தஙலின் வேலையை ஒலுன்ககா சைவதிலை என்ட்ரு அலுவலகர் ஒருவரின் மூலமக தொல்சுகு தெரிய வர தொல்சு ஆர்தியிடம் சென்ட்ரு ட்ரவெல்சின் கான்ட்ரக்டை கன்செல் செயுமாரு குருகிரார் ஆனால் ஆர்தியொ மருக்கிரால், உடனடியக தொல்சு அபிக்கு கால் பொட்டு கொடுக்க அபி ஒர்டரை கன்cஎல் செஇய சொனவுடன் ஆர்தி அலுகின்ட்ரல்.

அபி மின்டும் வருவதக கட்டுகிரர்கல். அபி மீன்டும் வன்ன்துவிடர் என்ட்ரு எதீர்பர்கபடுகின்ட்ரது.....

priya_2008
28th June 2008, 11:54 AM
Pls don mind if there are spelling mistakes in my posts....Will try to rectify it next time.....

aanaa
29th June 2008, 06:35 PM
w w w.usertube.com/tvshows/kolangal-27-6-08/kolangal-27-6-08-13-video_8af530d85.html#


visit the above link

priya_2008
5th July 2008, 12:46 PM
ஒருபக்கம் திருவென்ன்கடமும், தொழர் பாலக்ரிஷ்னன்னும், தெர்தல் மூலமகா சன்டை பொட்டு கொன்டிருகின்ட்ரனர்.

மருபுரம்,ஆர்தியோ ஆதியை நம்பி தன் ஆர்தி ட்ரவெல்சின் வன்டியைஆதியின் அலுவலகதில் ஒட்ட அனுமதி கெட்கின்ட்ரால். ஆதி அதில் ஒரு சிக்கல் இருபதாக சொல்லி தன் நன்பனின் ஆலுவலகதில் ஒட்ட ஒப்பந்தம் செயிது தருகிரன்.

இனொருபுரம், ஆர்தியின் அலுவலகதில் வேலை பார்கும் சுரெஷ் தொல்கபிஅன் இல்லத சமயம் அவரது மொபைலில் ஆர்தியை படம் எடுக்கிரர், ஆர்தியிடம் அதை தொல்கபிஅன் எடுததக சொல்கின்ட்ரான். ஆர்தி உடன் தொல்கபிஅனை சந்தேகம் கொல்கிரால்.

priya_2008
5th July 2008, 12:53 PM
The next day, Aarthi speaks with Thols, she sez Thols to forgive her for the mistakes done., Then Tholz sez that he needs to go to Pondicheery for a business meet. Aathi sez she aslo wishes to attend the meeting, Thols sez many reasons to avoid her but Aarthi was very stubborn and finally she goes along with Thols to the meeting.

unfortunately, the meeting was postponed by 4 hrs, and Thols suggest to go for beach to pass the time, But Aarthi compels him to take a room in a hotel, and they both stay in a single room. Suddenly Aarthi locks the door and shouts that thols is misbhaving to her, Then all the Hotel supervisors and mangers opens the door and Thols was caught. No, taken to a bad sitaution. Then aarthi laughs as if she has taken revenge on Thols..........

priya_2008
5th July 2008, 12:53 PM
Sorry, i wanted to update in tamil, but lots n lots of mistakes.......

aanaa
5th July 2008, 05:26 PM
Sorry, i wanted to update in tamil, but lots n lots of mistakes.......
தமிழில் எழுதிப் பழகி வரவும்..

பிழைகள் தானாகவே குறைந்து மறைந்தேவிடும்

சித்திரமும் கைப் பழக்கம் என்பதுபோல்
எழுத்துவன்மையும் வாசிப்பதாலும் எழுதுவதாலும் மெழுகேறும்

தொடர்ந்து தமிழில் எழுதுங்கள்...

jovemac
9th July 2008, 10:15 AM
தனது டிஜிடல் வெலி ப்ராஜக்டின் வெற்றிக்களிப்பில் திளைத்திருக்கும் அபிக்கு அந்த்ட் சந்தோஷம் எவ்வளவு நேரம் நீடிக்கும்?..

இந்தியா திரும்பியவுடன் தொல்காப்பியனை மீட்பாரா? ஆர்த்தி யை அவளது பதவி போதையிலிருந்து மீட்பாரா?.. தொலைந்துபோன அப்பா தானாக திரும்பிவருவாரா.. அலல்து அவரை தேடுவதும் அபின் பொறுப்புகளில் ஒன்றகுமா?

டிஜிடல் வெலி ப்ராஜக்ட்டுக்காக தனது கம்பெனியின் நிதி நிலைமையை அபி எப்படி சரி செய்யப்போகிறார்? அப்பாவின் சொத்துக்களை வைத்தா? இதற்கு ஆதியின் பதில்..?

Jo
http://www.cheyyar.com/node/17

saradhaa_sn
9th July 2008, 12:22 PM
தொல்காப்பியனுக்கு இது தேவைதானோ என்று கூட தோன்றுகிறது. அமெரிக்கா போகும் சமயம், அபி தன்னுடைய பொறுப்புகளை தொல்ஸிடம்தானே கவனித்துக்கொள்ளும்படி சொன்னாள்?. அப்படி நடந்திருந்தால், அபி குடும்பத்தில் யாரும் கேள்விகூட கேட்டிருக்கப் போவதில்லை. எத்தனையோ முறை அபி (கோமா நிலை போன்றவற்றால்) தலைமறைவானபோது கூட அந்நேரங்களில் கம்பெனியின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டது தொல்ஸ்தானே. அப்படியிருக்க இப்போது மட்டும் ஏன் ஆர்த்தியை, தொல்ஸ் கொண்டுவந்து நுழைக்க வேண்டும்?.

ஒரு பிஸினஸ்மேன், வெளியில் போகும்ப்போது தன் கேபினையும் பூட்டாமல், செல்போனையும் மேஜையில் வைத்துவிட்டுப் போவானா?. தன் ஆஃபீஸிலேயே தனக்கு எதிரிகள் இருப்பது தெரிந்தும்?. பிஸினஸ் செய்பவனுக்கு தேவை அபியின் ஓவர் பெருந்தன்மையும், தொல்ஸின் ஓவர் கண்ணியமும் அல்ல. இதில் கொஞ்சம், அதில் கொஞ்சம் அத்துடன் ஆதியின் தந்திரமும், பாஸ்கரின் அயோக்கியத்தனங்களும் கூட கொஞ்சம் கலந்திருக்க வேண்டும். அவன் மட்டுமே சரியான பிஸினஸ்மேன்.

சில சட்ட விரோத செயல்களை அனுமதித்தால் தவறில்லையோ என்றுகூட தோன்றுகிறது. உதாரணமாக, சில ஓட்டல் அறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தி, தங்கியிருப்பவர்களின் நடவடிக்கைகளை ஓட்டல் நிவாகத்தினர் கண்காணிப்பதுண்டாம். இது பச்சையான அயோக்கியத்தனம் என்ற போதிலும்கூட, பாண்டிச்சேரி ஓட்டலில் அப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று கூட தோன்றுகிறது. அப்படி கேமரா வைத்து கண்காணிக்கப்பட்டு இருந்தால், ஆர்த்தியின் கேவலமான நம்பிக்கை துரோகத்தின் முகத்திரை கிழித்தெறியப்பட்டிருக்கும்.

(ஆண்களை எதிர்க்க நேர்வழியைக் கையாளாமல், இன்னும் எத்தனை நாளைக்குத்தான் 'மானபங்கப் படுத்தினான்', 'தகாத முறையில் நடந்தான்' என்ற (கேவலமான) ஆயுதங்களையே இந்த பெண்கள் பயன்படுத்தப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. நானும் ஒரு பெண்ணானாதலால் தைரியமாக கேட்கலாம். இதை ஆண் சொன்னால்தான் பெண்கள் குதிப்பார்கள். 'FIRE' என்ற படத்தை எடுத்தவர் தீபா மெஹ்தா என்ற பெண் என்பதால், அனைத்து மாதர் அமைப்புகளும் தங்கள் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக்கொண்ட கதை நமக்கு தெரியாதா?)

sudha india
9th July 2008, 03:48 PM
Thols has been showing himself as a THYAGI right from the beginning for the sake of friendship and his friend Abi.

He has shed lot of blood in the hands of police and others and has been accepting everything with his trademake smile.

As we have seen enough of his thyagam, it is high time the story moves faster.

aanaa
9th July 2008, 06:53 PM
'FIRE' என்ற படத்தை எடுத்தவர் தீபா மெஹ்தா என்ற பெண் என்பதால், அனைத்து மாதர் அமைப்புகளும் தங்கள் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக்கொண்ட கதை நமக்கு தெரியாதா?)

:-) :exactly:

gta129
9th July 2008, 07:14 PM
Abi Is back. :bluejump: :redjump:

I'm missed Abi and Adhi going head to head.

jovemac
12th July 2008, 03:59 PM
நீண்ட நாட்களுக்குப்பின் மீண்டும் அபி..

டிஜிடல்வேலி ப்ராஜக்ட்டில் மீண்டும் சிக்கல்.. முகமூடி அணிந்து அமெரிக்காவில் அபியை மிரட்டும் மர்ம மனிதன் யார்?

அபி கன்ஸ்டிரக்ஷன் சிலிருந்து 20 லட்சம் ரூபாய் கைமாற்றம். அபிக்கு ஆர்த்தி எப்படி கணக்கு சொல்லப்போகிறார்?

எதிர்வீட்டில் மனோ! அவருக்கு பணம் எங்கிருந்து வந்தது?

மீனவ சமுதாய கூட்டத்தில் கலந்துகொள்ளும் மேனகாவின் நிலை?

அதுபோன்ற பல விடையில்ல வினாக்களுடன் இந்த வாரம் இனிதே நிரைவுற்றது..

Jo
http://www.cheyyar.com/node/17.

saradhaa_sn
12th July 2008, 07:19 PM
இரண்டு நாட்களுக்குமுன் அபிக்கு 'சேங்ஷன்' ஆகியிருந்த ப்ராஜக்ட் இப்போது கைக்கெட்டாமல் போய்விட்டது. மேனகாவின் கைங்கர்யத்தால். அபி சென்னையில் போலீஸாரல் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த விஷயங்கள் அமெரிக்கர்களுக்கு சொல்லப்பட, இப்போது அபியின் கனவு ஃபனால்.

மேனகாவைக் கொல்லத்துடிக்கும் டேவிட் மீனவர்குப்பத்து விழாவுக்கு வருகைதர இருக்கும்(?) மேனகாவை சுட்டுத்தள்ள சுமார் நான்கடி நீளமுள்ள புதிய லென்ஸ் துப்பாக்கியை வாங்கியுள்ளான். விழாஏற்பாடுகள் போலீஸார் கண்கானிப்பில் தீவிரமாக நடக்கின்றன. (இப்போதும் குறி தவறி எங்காவது சுடப்போகிறான், அவள் தப்பிக்கப்போகிறாள். இது அபி மற்றும் தொல்காப்பியனின் சதி எனக்கூறப்போகின்றனர்)

பிரைவேட் டிடெக்டிவ் என்ன ஆச்சுன்னு தெரியவில்லை. கடற்கரையில் ஞானோபதேசம் பெற்றபின்னர் தொல்காப்பியனைக்காணவில்லை.

அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பணத்தை எடுத்து ஆர்த்தி சொந்தவீடு வாங்கி விட்டாள். மேற்கொண்டு ராஜேஷின் பிஸினஸுக்காக அதே கம்பெனிக்கணக்கில் இருந்து இருபது லட்சம் ரூபாய் எடுத்திருக்கிறாள். கண்டிக்க வேண்டிய தொல்காப்பியனை அபாண்டமாக பழி சுமத்தி வெளியே அனுப்பியாகி விட்டது. அபி வந்து கேட்டால் தொல்ஸ் தலையில் தூக்கிப்போட்டு விடலாம்.

ஆதியின் தயவால் பேங்கில் இருந்து கடன் வாங்கிய மனோ, இப்போது ஆர்த்தியின் புதுவீட்டுக்கு அடுத்த வீட்டையே கிரயத்துக்கு வாங்கிவிட்டான். (அவையிரண்டும் வீடுகள் அல்ல, பங்களாக்கள்). கதையில் நாளுக்கு நாள் சிக்கல் அதிகமாகிக்கொண்டே போகிறது.

திருவேங்கடத்தின் கட்சிக்காரன், தோழர் பாலகிருஷ்ணனுக்கும் ஆனந்திக்கும் கள்ள உறவு இருப்பதாக தேர்தல் பிரச்சார மேடையிலேயே பேசப்போக அது பத்திரிகையில் வருகிறது. அபியின் அம்மாவுக்கு சொல்லணுமா?. மீண்டும் கண்ணீர் குடம் உடைகிறது.

saradhaa_sn
17th July 2008, 12:52 PM
தன்னுடைய நிலையை விளக்கிச்சொன்ன பின் அபிக்கு மீண்டும் 'டிஜிட்டல் வேல்லி ப்ராஜக்ட்' கிடைத்துவிட்டது. இதனிடையில், தன்னைக்கொல்லவந்த மேனகாவின் ஆளை அபி துப்பாக்கியைத் தட்டி விட்டு, அவனைத்துரத்தியடிக்கிறாள். (ஐந்தடி தூரத்தில் இருந்து சுட்டால் துப்பாகி சுடாது, ஒரு இஞ்ச் தூரத்தில் துப்பாக்கியைக்கொண்டு போனால்தான் சுடும் என்று பாவம் அமெரிக்க கொலைகாரன் கூட நினைக்கிறான். பரவாயில்லை, நம்மூர் ஓட்டல் வராண்டாக்களும், அமெரிக்க ஓட்டல் என்று சொன்னால் நம்பும்படியாக கட்டியிருக்கிறார்கள்).

மீனவர் குப்ப விழாவுக்கு மேனகாவுடன் ஆதியும் வருகிறான் (இப்போதெல்லம் ஆதி தன் சொந்த வேலைகளை விட்டுவிட்டு மேனகாவின் எடுபிடியாகிவிட்டான்). ஒருபெரிய பேனரின் பின்னால் நின்று டேவிட் குறிபார்த்து நிற்க, அங்கு தொல்ஸும் வருகிறான். மீனவர் குப்ப நிர்வாகிகள் அழைத்துள்ளனர். மேடையில் மேனகா, ஆதிக்கு சரிசமமாக தொல்ஸும் கௌரவிக்கப் படுகிறான். மேனகாவுக்குப்பின் தொல்ஸ் மைக்கில் பேசிக்கொண்டிருக்கும்போது, டேவிட் குறிபார்த்து சுட அப்போது வீசிய பலத்த காற்றால் பேனர் ஆட, குறி தவறி மீனவர்குப்ப நிர்வாகி ஒருவர் பலியாகிறார். இரண்டாவது குண்டு படாமல், தொல்ஸ் மேனகாவை கீழே தள்ளி காப்பாற்றுகிறான். போலீஸார் அலெர்ட் ஆக, டேவிட் தப்பித்து ஓடி தன்னுடைய மறைவிடத்துக்கு வந்து சேர்கிறான். (டேவிட் வீட்டு வேலைக்காரன், ஒவ்வொரு முயற்சி தோல்வியடையும்போதும், ஓவராக பதறுவது எரிச்சலூட்டுகிறது).

sudha india
23rd July 2008, 03:18 PM
Apram enna achu ?

saradhaa_sn
24th July 2008, 02:47 PM
சன் டி.வி.யில் புதிய சீரியலுக்கு விளம்பரம் காண்பிக்கின்றனர். அப்படீன்னா 'கோலங்கள்' முடியப்போகிறதா?.

sarna_blr
24th July 2008, 02:51 PM
:shock: :omg: innum kOlangal mudiyalayaa :roll:

PS... Saradha madam... en kElvikkenna badhil :angry2:

saradhaa_sn
24th July 2008, 03:16 PM
:shock: :omg: innum kOlangal mudiyalayaa :roll:

PS... Saradha madam... en kElvikkenna badhil :angry2:
இன்னும் முடியவில்லை. (இதுதான் பதில்). :lol:

sarna_blr
24th July 2008, 03:17 PM
:shock: :omg: innum kOlangal mudiyalayaa :roll:

PS... Saradha madam... en kElvikkenna badhil :angry2:
இன்னும் முடியவில்லை. (இதுதான் பதில்). :lol:

i am seriously asking :roll:

saradhaa_sn
24th July 2008, 03:22 PM
Apram enna achu ?
Dear Sudha,

சாமியார் வேடத்தில் போலீஸார் தன்னைப்பார்த்து விட்டதால், டேவிட் இப்போது இஸ்லாமியராக வேடம் புனைந்துவிட்டான். எப்படியோ பல கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகளுக்கு அலைந்து திரிந்து, தொல்காப்பியனின் அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் அட்ரசை வாங்கி, அங்கு வந்து விசாரித்துச் செல்கிறான்.

ஆர்த்தி (ராஜேஷ்)ம், மனோ (அனு)வும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் பால் காய்ச்சும் சடங்கும், ஹோமம் சடங்கும் வைத்து விட்டு அம்மாவை அழைக்கின்றனர். ஆனந்தி அந்த விசேஷத்தை புறக்கணிக்க், அபியின் அம்மா ராஜேந்திரனுடன் இரண்டு வீடுகளுக்கும் போய் வண்டி நிறைய அவமானங்களை வாங்கிக்கொண்டு வருகிறாள்.

அபிக்கு காண்ட்ராக்ட் கிடைத்த செய்தியில் அதிர்ச்சியடைந்த மேனகா, அபி சென்னை வந்ததும் அவளைக் கவனித்துக் கொள்வதாக ஆதியிடம் சவால் விடுகிறாள்.

நிலம் வாங்கும் விஷயமாக (டேவிட் மறைந்திருக்கும்) இடத்துக்கு செல்லும் தொல்ஸ், அங்குள்ள வேலைக்காரனால் டேவிட்டுக்கு தகவல் சொல்லப்பட, இதனிடையில் அவ்விடத்தில் முன்பு தன்னிடமிருந்து திருடிச்செல்லப்பட்ட தன் அம்மா தங்கையின் போட்டோக்களையும் டேவிட்டின் போலி ஐ.டி.யையும் பார்த்து உஷாராகி அங்கிருந்து தப்பிவந்து போலீஸுக்கு தகவல் சொல்ல, போலீஸ் டேவிட்டை சுற்றி வளைக்க, துப்பாக்கி சூட்டில் வேலைக்காரன் பலியாக டேவிட் தப்பித்து ஓடி விடுகிறான். (இனி டேவிட், முஸ்லிம் ஆசாமி வேடத்திலும் அலைய முடியாது).

sudha india
24th July 2008, 03:43 PM
வேலைக்காரனின் அறுவையும் இனி இல்லை.

ஆர்தி எப்படி ஒரு பெரிய வீடு வாங்கினாள் என்ற சந்தேகம் யாருக்கும் வரவில்லையா?

Thanks Saradha. I continue to see Kolangal only in your posts.

saradhaa_sn
24th July 2008, 04:05 PM
வேலைக்காரனின் அறுவையும் இனி இல்லை.

ஆர்தி எப்படி ஒரு பெரிய வீடு வாங்கினாள் என்ற சந்தேகம் யாருக்கும் வரவில்லையா?
உண்மையில் விசுவாசமான வேலைக்காரன். தன் முதலாளியைக் காப்பாற்ற, தன் உயிரையே கொடுத்துவிட்டான் (ஆனால் மோசமான ஒரு விஷயத்துக்காக).

ஆர்த்தியின்மீது யார் சந்தேகப்பட முடியும்?. அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிர்வாகம் அவள் கையில். அபியும் இல்லை. தொல்காப்பியனையும் பழிசுமத்தி விரட்டியாச்சு. ஆனந்திக்கும் இதில் சம்மந்தம் இல்லை. (அவளுக்கு பொதுசேவைக்கே நேரம் போதவில்லை). அப்புறம் என்ன? ஆர்த்தி தன் இஷ்டத்துக்கு ஆட்டம் போட வேண்டியதுதானே?.

Thanks Saradha. I continue to see Kolangal only in your posts.
Welcome Sudha,
I am giving just bits and pieces. If you watch in TV, it will be more enjoyable. Now the story is going very interesting.

Madhu Sree
24th July 2008, 04:08 PM
வேலைக்காரனின் அறுவையும் இனி இல்லை.

ஆர்தி எப்படி ஒரு பெரிய வீடு வாங்கினாள் என்ற சந்தேகம் யாருக்கும் வரவில்லையா?
உண்மையில் விசுவாசமான வேலைக்காரன். தன் முதலாளியைக் காப்பாற்ற, தன் உயிரையே கொடுத்துவிட்டான் (ஆனால் மோசமான ஒரு விஷயத்துக்காக).

ஆர்த்தியின்மீது யார் சந்தேகப்பட முடியும்?. அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிர்வாகம் அவள் கையில். அபியும் இல்லை. தொல்காப்பியனையும் பழிசுமத்தி விரட்டியாச்சு. ஆனந்திக்கும் இதில் சம்மந்தம் இல்லை. (அவளுக்கு பொதுசேவைக்கே நேரம் போதவில்லை). அப்புறம் என்ன? ஆர்த்தி தன் இஷ்டத்துக்கு ஆட்டம் போட வேண்டியதுதானே?.

Thanks Saradha. I continue to see Kolangal only in your posts.
Welcome Sudha,
I am giving just bits and pieces. If you watch in TV, it will be more enjoyable. Now the story is going very interesting.

saradha mam, abhi eppo chennai varugainu any clue?????

sarna_blr
24th July 2008, 04:15 PM
saradha mam, abhi eppo chennai varugainu any clue?????

:hammer: :hammer: naan kEttakElvikku badhil sollaama ellaar kElvikkum badhil sollikittu , pakkampakkamaa kadha ezhudhittu irukkaanga... idhula un kElvikku eppadi badhilsolluvaanga :roll:

sudha india
24th July 2008, 04:23 PM
[quote=Madhu Sree]

saradha mam, abhi eppo chennai varugainu any clue?????

She has already boarded a PASSENGER flight. Adhu ovvoru station sorry airport layum ninnu ninnu vara 2 - 3 vaaram agum.
:yessir:

aanaa
24th July 2008, 06:29 PM
சன் டி.வி.யில் புதிய சீரியலுக்கு விளம்பரம் காண்பிக்கின்றனர். அப்படீன்னா 'கோலங்கள்' முடியப்போகிறதா?.
இதுவா

நல்ல கனவு

:-)

aanaa
25th July 2008, 08:19 AM
சன் டி.வி.யில் புதிய சீரியலுக்கு விளம்பரம் காண்பிக்கின்றனர். அப்படீன்னா 'கோலங்கள்' முடியப்போகிறதா?.

ஒளிபரப்பு நேரம் இரவு 8.00 மணியாமே
அப்படியானால்.........

gta129
26th July 2008, 04:06 AM
I think they are ending Thiruvilayadal.

saradhaa_sn
26th July 2008, 12:33 PM
நீங்கள் சொலவது சரிதான்....

'அபி இன்னும் ஒருமணிநேரத்தில் வந்து இறங்கப்போகிறாள்' என்று சொல்லி இரண்டு நாள் எபிசோட் ஓடிவிட்டது. அபியை வரவேற்க மொத்தக்குடும்பமும் ஏர்ப்போர்ட் (எனக்காட்டப்படும் இடத்தில்) ஆஜாராகியுள்ளனர், கையில் பூங்கொத்துடன். உளறுவாய் ராஜேந்திரன், தேவையில்லாமல் கிறுக்கு டயலாக்குகளைப்பேச ஆர்த்திக்கும் மனோவுக்கும் சண்டை மூளும் சூழல் வருகிறது.

தொல்காப்பியனும் ஒரு பூங்கொத்துடன் வந்துள்ளான். அவனைப்பார்த்ததும் ஆர்த்தி, ஆனந்தி, மற்றும் அம்மா முகம் மாறுகிறது. அவனை அங்கிருந்து போகும்படி, கிருஷ்ணனிடம் ஆர்த்தி சொல்லியனுப்ப அவனும் வந்து, தொல்ஸை போகும்படி கூறுகிறான். ("எல்லாரும் சேர்ந்து எவ்வளவு பணம் போட்டு இந்த ஏர்போர்ட்டை வாங்கினீங்க?" என்று தொல்ஸ் இந்த இடத்தில் ஒரு டயலாக் விட்டிருந்தால், ஆர்த்தியை 'பாட்டா'வால் அறைந்தது போல் இருந்திருக்கும், தொல்ஸ் சான்ஸை விட்டுவிட்டான்)

aanaa
26th July 2008, 06:22 PM
ஆர்த்தியை 'பாட்டா'வால் அறைந்தது போல் இருந்திருக்கும், தொல்ஸ் சான்ஸை விட்டுவிட்டான்)
:rotfl:

saradhaa_sn
28th July 2008, 01:17 PM
பார்வையாளர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி 'கோலங்கள் த்ரெட்' சாதனை.

aanaa
28th July 2008, 07:19 PM
பார்வையாளர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி 'கோலங்கள் த்ரெட்' சாதனை.
சாதனைகள் பல படைக்கப் படப் போகின்றன

mr_karthik
28th July 2008, 07:56 PM
I dont know why they are not showing the number of episodes.

May be in thousands.

I think kOlangaL was started during 'annamalai' serial was in telecast.

gta129
30th July 2008, 04:34 AM
I dont know why they are not showing the number of episodes.

May be in thousands.

I think kOlangaL was started during 'annamalai' serial was in telecast.

Kolangal has very welled passed over thousand episodes. The following link says it has passed it's 1,186th episode.

http://www.newindpress.com/NewsItems.asp?ID=IE420080722003426&Page=4&Title=Entertainment&Topic=0

sudha india
30th July 2008, 11:18 AM
Though the serial has aroused lot of expectations recently, they are still dragging. Lots of questions unanswered and lot of killing without any investigation, etc etc.

If they drag like this, the viewership will definitely drop.

sarna_blr
30th July 2008, 11:27 AM
Though the serial has aroused lot of expectations recently, they are still dragging. Lots of questions unanswered and lot of killing without any investigation, etc etc.

If they drag like this, the viewership will definitely drop.

:notthatway: Serial paakkaama Hub'la kadhappadikkura neenga pEsakkoodaadhu :lol2:

saradhaa_sn
30th July 2008, 05:35 PM
Though the serial has aroused lot of expectations recently, they are still dragging. Lots of questions unanswered and lot of killing without any investigation, etc etc.

If they drag like this, the viewership will definitely drop.
சுதா, நீங்க சொல்வது சரிதான்...

ரொம்ப இக்கட்டான நேரத்தில் நேற்று போட்டு சொதப்பிவிட்டனர்.

அபி வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறாள். தொல்ஸ் பற்றி விவரம் அவளுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சரி என்ன முடிவடுக்கப்போகிறாள் என்பதை நேற்று காண்பிப்பார்கள் என்று பார்த்தால், ஒரே ஏமாற்றம்...

எடுத்த எடுப்பில், அலமேலு விக்கல் எடுத்து தண்ணீர் கேட்க அதை வேலைக்காரி கொண்டுவர தாமதமாக, பின்னர் தன் மருமகள் சங்கீதாவின் அறைக்குப்போக, அவள் பார்த்து முறைக்க... (விளம்பரம்)

விளம்பரம முடிந்து பாஸ்கர் வர, அவனிடம் அலமேலு விவரம் சொல்ல, அவனும் போய்ப்பார்க்க, இதனிடையே அலமேலுவிடம் திருவேங்கடம் தேர்தல் நிதி கேட்டு வர, அவள் மழுப்ப (விளம்பரம்)

மூன்றாவது பாகத்தில், தோழரின் அலுவலகத்தில் தோழரும் ஆனந்தியும் ஏதோ ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையில் வந்த செய்தியைப்பற்றி சிலாகித்துப்பேச, அப்போது அங்கு தொல்ஸ் வர, ஆனந்தி அங்கிருந்து போக, தோழரின் இடத்தைவிட்டு தொல்ஸ் காலிசெய்யப் போவதாகச் சொல்ல, தோழர் வருத்தத்துடன் விடை கொடுக்க... (நேற்றைய எபிசோட் முடிந்தது).

இப்படியே போனால், நாளுக்கு நாள் பெருகிவரும் சிக்கல்களுக்கு எப்போது, எப்படி விடை சொல்லப்போகிறார் தொல்ஸ் (திருச்செல்வம்...??).

aanaa
31st July 2008, 08:06 AM
மெளனமொழிச் சுற்றுப் புரிந்ததா

அதுதான் சித்ராவிற்கும் அந்த boss ம் ஏதோ பேசினார்களே
:lol:

saradhaa_sn
31st July 2008, 02:14 PM
நேற்று பரவாயில்லை...

ஒரு இடத்தை வாங்குவதற்கு மனோவுக்கும் ராஜேஷுக்கும் போட்டி. தன் ட்ராவல்ஸில் வேலைபார்க்கும் பெண்ணின் அண்ணன் (ரஜேஷின் முன்னாள் கடன்காரன்) ஒரு இடத்தை ராஜேஷுக்கு விலைபேச அழைத்துப்போக, அந்த இடத்தின் உரிமையாளர் ஏற்கெனவே வேறொருவருக்கு தருவதாக வாக்களித்ததாக சொல்ல, இவர்கள் ஒரே தடவையில் முழுபணம் 75 லட்சத்தையும் தருவதாக சொல்ல, அவர் மனம் மாறி ராஜேஷுக்கு தர சம்மதிக்கிறார். ஏற்கெனவே அந்த இடத்துக்கு விலைபேசிய மனோ, ஆர்த்தி வீட்டில் வந்து தகராறு செய்கிறான். (ஆர்த்தி, அனுவைப்பார்த்து 'ஆதி உனக்கு சொந்த அண்னன் இல்லை. எனக்குத்தான் அண்ணன்' என்கிறாள். அப்படீன்னா ஆதி மனோவுக்கும் அண்ணன் என்பதை அவள் மறந்தது ஏனோ?). அப்போ 'அபி கன்ஸ்ட்ரக்ஷனில்' இருந்து இன்னொரு 75 லட்சம் கைமாறப்போகிறது. அபி இன்னும் அலுவலகப் பொறுப்புக்களை ஏற்கவில்லையா?.

பத்திரிக்கையாளராக, சாமியாரக, இஸ்லாமியராக வேடம் போட்டு முடிந்து இப்போது பிராமணராக வேடம் புனைந்திருக்கும் கொலைகாரன், புதிதாக வீடு வாடகைக்கு எடுத்து தங்குகிறான். அந்த வீட்டு மாடியில்தான் டிடெக்டிவ் ஏஜென்ஸியில் வேலை செய்யும் பெண் தங்கியிருக்கிறாள். (இனி ஏதாவது துப்பு கிடைக்கலாம்).

Arthi
31st July 2008, 09:15 PM
saradhaa madam,thanks a lot for your updates :D
snatched some aapis time ;) and read your updates :D
Keep updating :clap:

ranganayaki1940
31st July 2008, 10:18 PM
:D
Dear friends:

I trust Kolangal will finish soon. I cannot understand how Abhi who is shrewd and smart cannot figure out the machinations of her family. Everyone except Anandi and Karpagam are out to totally fleece Abhi. Thola-- leaves without a fight or talk to Abhi his secret love.

How did Rajesh's sister-in-law acquire so much influence in the family matters? Arathi is greedy and totally unscrupulous in dealing with her sister's money? What happened to Abhi's fiance Dr. Mahesh?
Ranga

saradhaa_sn
1st August 2008, 07:11 PM
வெளிநாட்டில் அபி இருந்தபோது நடந்த விஷயங்களை கற்பகம் சொல்கிறாள். (தொல்ஸ் விவகாரம் தவிர வேறு எதுவும் இதுவரை அபிக்கு சொல்லப்படவில்லை). ஆர்த்தி - ராஜேஷ் மற்றும் மனோ - அனு இவர்களுக்கிடையேயான சச்சரவு, போட்டித்தொழில், சண்டை (செருப்படி, உருட்டுக்கட்டை அடி உள்பட), அவர்கள் கீரியும் பாம்புமாக ஆனது. மனோ வீட்டு கிரகப்பிரவேசத்திலும், ஆர்த்தி வீட்டு விசேஷத்திலும் தனக்கு கிடைத்த அவமானம் அத்துடன் ஆனந்தி - தோழர் இடையே, திருவேங்கடத்தால் பரப்பப்பட்ட தகாத உறவு, அனைத்தையும் சொல்லிவிடுகிறாள். அபிக்கு கவலை பற்றிக்கொள்கிறது. அத்துடன், இன்னும் தம்பி தங்கைகளை நம்பாமல் தனக்கென்று அபி ஒரு வாழ்க்கை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கற்பகம் வற்புறுத்துகிறாள்.

பாஸ்கர் வீட்டில், அழும் குழந்தையை கவனிக்காமல் சங்கீதா இருக்க, அவளை அதட்டும் பாஸ்கரிடம் 'எங்கப்பா எப்படி செத்தார்' என்று திரும்ப திரும்ப கேட்கிறாள். (சங்கீதா ஒரு எரிச்சலூட்டும் கேரக்டர்).

வெளிநாட்டில் இருந்து வந்த அபி, முதன்முதலாக ஆஃபீஸுக்கு வருகிறாள். ஸ்டாஃப்களுக்கெல்லாம் சந்தோஷம். (அவர்கள் ஆர்த்திக்கு வைத்திருக்கும் பெயர் 'HITLER MADAM'). அவர்கள் அபிமேல் அன்பாய் இருப்பது ஆர்த்திக்கு எரிச்சலூட்டுகிறது. அவர்கள் மேல் எரிந்து விழுகிறாள். இத்தனை நாள் காணாதிருந்த விஸ்வநாதன், ராஜாமணி மேடம் ஆகியோரும் திடீரென கையில் 'பொக்கே'யுடன் ஆஃபீஸில் முளைக்கின்றனர். அவர்களுடன் அபி ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கும்போது, தொல்ஸ் வந்திருப்பதை ஒரு ஸ்டாஃப் தெரியப்படுத்த, மீட்டிங் நடப்பதால் கொஞ்சம் வெளியில் இருக்கச்சொல்கிறாள் அபி. (சாதாரண ஸ்டாஃப் ஆன கிருஷணன் மீட்டிங்கில் இருக்க, டைரக்டர்களில் ஒருவரான தொல்ஸுக்கு மீட்டிங்கில் இடமில்லை). தடையை மீறி உள்ளே வரும் தொல்ஸ், 'அபி, தன்னிடம் ஒப்படைத்த வேலையான, ஒரே இடத்தில் ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் வேலை'யை தான் செய்துவிட்டதாக சொல்லி, அதற்கான டாக்குமெண்ட்டை மேஜையில் விசிறியடிக்கிறான். கஷ்டப்பட்ட காலத்தில்தான் அபிக்கு தன் உதவி தேவையிருந்தது என்றும், புதிய அவதாரம் எடுத்திருக்கும் பணக்கார அபிக்கு இனி தன் தயவு தேவையில்லை என்றும் கூறி வெளியேறுகிறான். (விமான நிலையத்தில் வரவேற்கச் சென்றிருந்த தொல்ஸிடமும் அபி எந்த ஒரு வார்த்தையும் பேசவுமில்லை, அவன் நீட்டிய மலர்ச்செண்டை வாங்கவுமில்லை என்பது நினைவிருக்கலாம்). நேற்றைக்கு கொஞ்சம் சூடுபிடித்தது. இன்றைக்கு மீண்டும் சொதப்பாமல் இருந்தால் சரி.

Arthi
1st August 2008, 07:37 PM
emm good saradhaa madam :D
thOdaratum ungaL paNi :D

gta129
2nd August 2008, 03:16 AM
It all deja vu again. Abi and Thols are no longer friends. Didn't this whole thing happen three years ago. Everyone in Abi's family bad mouth Thols, but Abi defends him. Later even Abi turns on him. Then they all understand their mistakes and apologize to Thols. Now the whole this is starting all over agaian thanks to Aarthi.

This time I really hope Thols, don't forgive Abi's family for what they did. If he did it would make no sense and I will lose all respect I have for Thols' character. Who is the world will keep going back to a friend and her family who blames him for every thing.

Manohar and his wife hates Thols, even though he's the who got them back together after Abhi separated them. And I can;t believe Karpagam, who ALWAYS blames Thols for all the flaws in her family. Even when Abi was in the hospital after being shot in the court, she blamed him. And I am surprised with Anathy. She is the most reasonable person in the whole family, but when it comes to Thols, she turns on him so quickly.

If Thols ever tries to help or forgive Abi and her family, I would stop watching this serial. It's totally ridicules. Sorry for the ranting but I just can't get over how they built Thol's character.

saradhaa_sn
2nd August 2008, 11:48 AM
You are correct gta129 (sorry I dont know your name)...

You have nicely summersied the old events happened for Thols in Abhi's family. But this time, the blame on Thols is undigestable and unrollerable and undigestable, becaise it is a well planned drama staged by Arthi.

The main reason of change of Anandhi's mind may be the Arthi's snaps on Thol's mobile phone. But she is being an investigative journalist, must have a second thought about this. She must also think about the gentle behavior of Thols, when both of them were happened to be alone many times. She must have think about the help rendered by Thols to her sister Abhi, in various "CRITICAL SITUATIONS". As Anandhi much knows about the charector (selfishness) of her sister Arthi, she should not believe her words fully.

Everyone knew about the worst charector of Karpagam (Abhi's mom) that, she always 'THANKLESS' to Thols, eventhough he saved Abhi in several dangerous situations. Whenever any trouble comes to Abhi, she always blame Thols, all because of him. Regarding her, getting married and delivering children is only life. Ladies no need to achieve out of that, her openion.

Atleast Abhi might have made an enquiry on Thols, about this matter. But actually it was not shown, what Arthi told to Abhi over phone, when she was in U.S.. We can remember the cunning smile of Arthi in Aiport before Abhi's arrival. It means she has spoiled Abhi's mind in some other way too, about Thols.

Now I hope, Arthi may put all blames on Thols about the mishandling of 'Abhi Constructions' money, which was actually robbed by Arthi for their Travels business and for buying own house.

Anyhow, as you rightly said, if Thols forgive Abhi's family this time, then better stop watching kOlangaL anymore.

This time Thols MUST take a new (different) avathar. Again he should not preach about the strongness of friendship etc.

It will be more appreciable by viewers, if he he turns worst than Basker, Adhitya and Menaka, to take revenge for the blames put on him.

saradhaa_sn
2nd August 2008, 01:19 PM
நேற்றைய எபிசோட்டில், எடுத்த எடுப்பிலேயே அலமேலு வீட்டுக்கு கலா வருகிறாள். முக்கியமான ஒரு திருப்பத்தை எதிர்பார்த்திருந்த நமக்கு இது சற்று சலிப்பைத் தருகிறது. என்ன செய்வது, இவையெல்லாம் இழுவைக்கான முகாந்திரங்கள். (விளம்பரதாரர் சப்போர்ட்டைப் பொறுத்தவரை, 'சன்'னில் மட்டுமல்ல, எல்லா சேனல்களிலும் வரும் எல்லா சீரியல்களையும் விட 'கோலங்கள்' முந்தி நிற்கிறதாம். அதனால் விளம்பரங்கள் போக மீதி நேரம்தான் எபிசோட்). இரண்டு அல்டாப்புகள் சேர்ந்தால் என்ன ஆகும். அலமேலுவும் கலாவும், (யார்மூலமாகவோ வந்த) புதுப்பணப்பெருமையை பறைசாற்றிக்கொள்வது எரிசலைத்தருகிறது. வெளிநாட்டிலிருந்து வந்துள்ள அபியின் புதுப்பொலிவைப் பற்றி கலா பெருமையுடன் (அதாவது பொறாமையுடன்) சொல்ல, அந்நேரம் அங்கு வந்த பாஸ்கர், இவற்றைக்கேட்டு விடுகிறான். (அவன் ஏற்கெனவே முந்தாநாள், தான் மீண்டும் அபியுடன் சேரப்போவதாக சங்கீதாவிடம் சொன்னான்). கலாவின் இந்த கூற்று அவன் மனதில் இன்னும் சலனத்தைத் தூண்டுகிறது.

திருவேங்கடத்தின் தேர்தல் பிரச்சார மேடையில் தனக்கு ஆதரவாக அலமேலுவைப் பேச வைக்கிறார் (???). திருவேங்கடத்தின் அரசியல் கோமாளித்தனங்கள், அளவுக்கு மீறியதால், சலிப்பையும் எரிச்சலையும் தருகின்றன.

தோழரிடம், தொல்ஸின் புதிய அட்ரஸ் மற்றும் செல்நம்பர் கேட்டுவரும் விவேக் - சித்ரா விடம், அவர்கள் மேல் சந்தேகம் கொண்ட தோழர், அவற்றைத்தர மறுத்துவிடுகிறார்.

அவற்றைப்பெறுவதற்காக, 'அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' சென்று, வேலை விஷயமாக தொல்ஸ் தங்களை வரச்சொன்னதாக ஆர்த்தியிடம் பொய்சொல்லி அவருடைய அட்ரஸ் கேட்க, அவள் தொல்ஸைப் பற்றி ' அவன் ஃப்ராடு, ஏமாற்றுக்காரன்' என்று பல அபாண்ட குற்றச்சாட்டுக்களைச் சொல்கிறாள். அங்கு வரும் 'ஜால்ரா' கிருஷணன், (இறந்துபோன) சாந்தியின் குழந்தை இருக்கும் ஆசிரமத்துக்கு, ஒவ்வொரு ஞாயிறும் தொல்ஸ் வருவான் என்று சொல்லி அந்த ஆசிரம அட்ரஸ் கொடுக்கிறார். அவர்கள் கிளம்ப்பிப்போகும்போது, தொல்ஸின் பெயரை டேமேஜ் பண்ணியதால், ஆர்த்தியின் முகத்தில் ஒரு குரூரப்புன்னகை.

aanaa
2nd August 2008, 06:13 PM
.....
Anandhy must also think about the gentle behavior of Thols,....

not only this..

at one stage they both ready to marry - by Abi's request

aanaa
2nd August 2008, 06:15 PM
நேற்றைய எபிசோட்டில்,

.
sothappal - every alternative day ...

your comments - very good
keep on

ranganayaki1940
4th August 2008, 01:01 AM
Love and loyalty are very strange buddies to characters of people. I am sure Thol will be convinced by Abhi about her suspiscions of Thol. Thol's whole adult life has revolved around Abhi. He has no other life. Arathi and Manohar will be caught when Abhi sees her financial statement. I hope she kicks them out of her life. Anandi's behavior is understandable in view of the convincing acting by Arathi. Another interesting character is Krishnan [all purpose self serving opportunist]. I think he is going to tell Abhi everything to get into her favors. Arathi is not the most powerful anymore. Mother Karpagam is hopelessly old fashioned thinking that marriage is the salvation for women. She probably embraces the idea women should suffer and shed tears all the time.

I see Tamil comments. I regret I cannot read Tamil. Can this be written in English script? Is it too much to ask?

Anyone have a clue how long this show will last?

Madhu Sree
6th August 2008, 03:29 PM
saradhaa mam.. updates pls.... :?

ranganayaki1940
6th August 2008, 06:00 PM
From the episode of 8/5/08 it looks like Abhi is getting a handle on Thol's non-involvement and Arathi's treachery. She needs to expose Arathi and boot her to Adhi's mercies.

Menaka's character is intriguing. Is she a front for something else or a sting operation to look into police dept and Adhi's network?

I am sure Abhi and Thol are going to make up. After all they have invested a lot of time in their relationship.

Thanks for listening to me.

saradhaa_sn
6th August 2008, 08:01 PM
ஆர்த்தியின் சூழ்ச்சியின்படி, ஏற்கெனவே தொல்ஸ் ஏற்பாடு செய்திருந்த இடத்தின் சொந்தக்காரரை வரவழைத்து, அபியின் முன்னால் அந்த இடத்தை தொல்காப்பியன், மேனகாவுக்கு கொடுக்கும்படி சொன்னதாக சொல்ல வைக்கின்றனர். இதற்குப்பின்னால் ஆதியின் சூழ்ச்சி இருக்கிறது.

இடையே கதையை நகர்த்த, திருவேங்கடத்தின் தேர்தல் பிரச்சார கோமாளித்தனங்கள். (இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தேர்தல் பிரச்சாரம். தேர்தல் நடக்குமா, அல்லது அதுவும் கோலங்கள் போலவே இழுத்துக்கொண்டு போகுமா?).

தொல்ஸ் இருக்கும்போது தான் மிரட்டி சாதித்ததுபோல நினைத்துக்கொண்டு, இப்போது தான் வாங்க இருக்கும் இடத்துக்காக அபியிடம் ஆர்த்தி அறுபது லட்சம் பணம் கேட்க, அபி மறுத்துவிடுகிறாள். இப்போது தன்னுடைய கவனம் மட்டுமல்ல ஆர்த்தியின் கவனமும் கூட, தான் புதிதாக செய்ய இருக்கும் டிஜிட்டல் வேல்லி ப்ராஜக்ட பற்றித்தான் இருக்க வேண்டும் என்கிறாள். முதல் முறையாக அலுவலகத்தில் ஆர்த்திக்கு மூக்குடைப்பு. உடைத்தவள் அபி என்பதால் ஆர்த்தியால் எந்த ட்ராமாவும் போட முடியவில்லை.

விஷயத்தைக்கேட்ட கிருஷ்ணன், தனக்கு தெரிந்த பேங்க் மேனேஜரிடம் லோன் ஏற்பாடு செய்வதாக சொல்லி ஆர்த்தியை அழைத்துப்போகிறார். அங்கே இவர்களுக்கு முன்னமே வந்து காத்திருக்கும் தொல்ஸ் இவர்களைப் பார்த்துவிட இவர்களுக்கு அதிர்ச்சி. முதலில் தொல்ஸ் மேனேஜரை சந்தித்து, பாண்டிச்சேரி ஆஸ்ரமம் ஒன்றுக்கு பேங்கின் நிதியுதவி கேட்க மேனேஜரும் அதை ஒப்புக்கொள்ள அவன் சென்றபின், 'நரிகள்' இரண்டும் உள்ளே போகின்றன. நிலம் வாங்க இப்போது லோன் தருவதில்லை என்று மேனேஜர் மறுத்துவிட, இது தொல்ஸின் சதிதான் என்று அவர்கள் குறுக்குப் புத்தி நினைக்கிறது.

அபிக்கும் தொல்ஸுக்கும் இடையில் பிரச்சினை பண்ணி அவர்களை பிரித்துவிட்டதாக ஆதி, மேனகாவிடம் சொல்ல அதற்கு அவள் தொல்ஸை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று கூறி ஆதிக்கு மேனகா அதிர்ச்சியளிக்கிறாள். (தொல்ஸ் விஷயத்தில் மேனகா எப்போதும் 'ஸாஃப்ட் கார்னரை'யே கையாள்கிறாள். அவன் தன் அண்ணன்தான் என்று அவள் உள்மனம் சொல்கிறதோ?. தன்மீது கொலை முயற்சி விஷயமாகக் கூட மற்றவர்கள் தொல்ஸ்மீது பழி சுமத்தினாலும் மேனகா நம்ப மறுக்கிறாள்).

ஆர்த்தி மீண்டும் அபியிடம் வந்து, தொல்ஸ் தனியாக தொழில் செய்ய லோன் பெற முயற்சிப்பதாக சொல்ல, இதனிடையே, ஆர்த்தியை புகைப்படம் எடுத்தவனை அபி அழைத்து, சில பொறுப்புக்களைக் கொடுக்கும் கையோடு, தொல்ஸ் ஆர்த்தியை போட்டோ எடுத்த விஷயத்தையும் விசாரிக்கிறாள்.

gta129
7th August 2008, 06:37 AM
Thank You for the updates Saradhaa. I really appreciate it.

aanaa
7th August 2008, 07:25 AM
இடையே கதையை நகர்த்த, திருவேங்கடத்தின் தேர்தல் பிரச்சார கோமாளித்தனங்கள். (இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தேர்தல் பிரச்சாரம். தேர்தல் நடக்குமா, அல்லது அதுவும் கோலங்கள் போலவே இழுத்துக்கொண்டு போகுமா?).்.
:rotfl:

saradhaa_sn
7th August 2008, 02:43 PM
தேர்தலில் தோழர் பாலகிருஷ்ணனைத் தோற்கடிக்க ஆதி, தேவராஜ் பாண்டியன், திருவேங்கடம் ஆகியோர் (வழக்கமாக எல்லா சீரியல்களிலும் வருவதுபோல, அரைகுறையாக கட்டப்பட்டிருக்கும் ஒரு கட்டிட மாடியில் நின்றபடி) சதியாலோசனைகளில் ஈடுபடுகின்றனர். இதுவரை நடந்த பிரச்சாரத்தில் திருவேங்கடத்தின் பின்னடைவுக்கும், தோழரின் முன்னேற்றத்துக்கும் காரணம் திருவேங்கடத்தின் அர்த்தமற்ற உளறல் பிரச்சாரங்களும், தோழரின் ஆணித்தரமான அணுகுமுறையும்தான் என்று ஆதி சித்தப்பாவிடம் கோபிக்கிறான். தோழரைவீழ்த்த ஒரு நல்லதிட்டம் இருப்பதாக தே.பா.சொல்ல, அது வழக்கம்போல பின்னணி இசையுடன் வெறும் வாயசைப்பில் காண்பிக்கப்படுகிறது.

தோழரின் போஸ்ட்டர் ஒட்டிய அதே இடத்தில் அவரது போஸ்ட்டருக்கு மேலேயே திருவேங்கடத்தின் போஸ்ட்டர் ஒட்டப்பட, தொண்டர்களுக்கிடையே கைகலப்பு, அடிதடி, சண்டை. தோழரின் இரண்டே ஆட்களை எதிரணியினர் ஒரு ஆட்டோ நிறைய வந்து அடித்து நொறுக்கிப் போகின்றனர். வழக்கம்போல (கையூட்டு பெற்ற) காவல்துறை தோழரின் ஒரு தொண்டரை விசாரணை என்ற பெயரில் அழைத்துப்போகிறது. இன்னொரு தொண்டர் நிலை கவலைக்கிடம்.

அபியின் அலுவலகத்தில் அவளது அழைப்பின் பேரில் அம்மா, ஆனந்தி, மனோ, ஆர்த்தி எல்லோரும் ஆஜர். கூடவே குடும்பத்துக்கு சம்பந்தமில்லாத 'நரி கிருஷ்ணன்'. தன் கம்பெனி தற்போது பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக மாற இருப்பதால் அவர்கள் அனைவரையும் டைரக்டர்களாக்க இருப்பதாக அபி சொல்ல எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஆனால் ஆனந்தி, தான் பத்திரிகைத்துறையில் இருப்பதால், தன்மீது கேஸ், அது இது என்று பிரச்சினைகள் வரக்கூடும் என்றும் அது கம்பெனியின் நடவடிக்கைகளை பாதிக்கும் என்பதால், தான் அந்த பொறுப்பை ஏற்கமுடியாது என்றும், மற்றவர்கள் இருந்தால் போதும் என்று கூறி விலகிவிடுகிறாள். புதிய பொறுப்பால் ஆர்த்திக்கும், மனோவுக்கும் நாக்கில் ஜலம். அம்மா வழக்கம்போல 'எனக்கெதுக்கும்மா இதெல்லாம்' என்று விலக முயற்சிக்க, அபி சம்மதிக்க வைக்கிறாள்.

இப்போது ஒரு புதிய பிரச்சினை கிளம்புகிறது. தொல்காப்பியனும் கம்பெனியில் இருப்பாரா என்று அம்மா கேட்க, அவரும் ஒரு ஷேர் ஹோல்டர் என்பதால் இருப்பார் என்று அபி சொல்ல, தொல்ஸ் கம்பெனியில் இருந்தால், தன்னால் இந்த பொறுப்பை ஏற்க முடியாது என்றும், தான் வீட்டைவிட்டே வெளியேறி முதியோர் இல்லத்தில் போய் தங்கப்போவதாகவும் அம்மா குண்டைப்போட, அபி அதிர்கிறாள். அம்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்த்தி, மனோ, ஆனந்தி மூவரும் வெளியேறுகின்றனர்.

நேற்று கொஞ்சம் சுறுசுறுப்பு... இன்று எப்படியோ...

aanaa
12th August 2008, 06:14 AM
இன்று எப்படியோ...

எப்படி ...

gta129
12th August 2008, 08:21 AM
On today episode, Abi asked Visvanathan to tell Thols to leave the company. Thols left the company without arguing or fighting. He also refused the money they gave him. Abi was sad and crying, but didn't say a word to Thols. Arthi as usual was laughing.

saradhaa_sn
12th August 2008, 05:09 PM
வஞ்சகமும் சூழ்ச்சியும் வென்றது... தொல்காப்பியன் வெளியேற்றப்பட்டார்... நட்பு, நட்பு என்று வாய்கிழிய பேசிய அபி, தன் குடும்பத்தினரின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து நட்பை தன் ஹீல்ஸ் செருப்பால் குதறித்தள்ளினார்....

முன்னதாக, தேர்தலில் தான் எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்ற தீராத தாகமெடுத்து அலையும் திருவேங்கடம், அதற்காக தேவராஜ பாண்டியன் மற்றும் ஆதியுடன் சேர்ந்து ஒரு நாடகம் அரங்கேற்றுகிறார். அதன்படி தன்வீட்டில் மிக பவ்யமாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்கும்போது (அவரால் செட்டப் செய்யப்பட்ட) குண்டர்கள், தோழரின் ஆதரவாளர்கள் போல கோஷமிட்டுக்கொண்டு அவரது வீட்டுக்குள் நுழைந்து அவரை ரத்தம் சொட்டச் சொட்ட அடிக்கின்றனர். அவரது குடும்பத்துப்பெண்களுடனும் தரக்குறைவாக நடக்க முற்பட்டதுடன், அவர்களை ஒரு அறையில் அடைத்து வைக்கின்றனர். இவையனைத்தும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடப்பதுடன், அவர்களது வீடியோ கேமராவிலும் பதிவாகிக் கொண்டு இருக்கிறது.

இதை சாக்காக வைத்து (காசு வாங்கிய) காவல்துறைனர் தோழரின் இருப்பிடம் சென்று அவரைக் கைது செய்து காவல் நிலையம் கொண்டு செல்ல, அங்கு (முன்னொருமுறை) ஆக்ரோஷத்துடன் தோழர், திருவேங்கடத்துடன் வாக்குவாதம் செய்ததை வீடியோவில் போட்டுக்காட்டி அதை ஆதாரமாக்குகின்றனர். அப்போது கழுத்தில் கட்டுடன் அங்கு வரும் திருவேங்கடம், அங்கும் தன் நாடகத்தைத் தொடர்கிறார். தோழரை தண்டிக்க வேண்டாமென்றும் விட்டுவிடுமாறும் ஏவல்துறையினரிடம் சொல்ல அவர்கள் விடுவிக்கின்றனர். அங்கும் பத்திரிக்கையாளர்கள் குழுமியிருக்க, அவர்கள் இவரது நாடகத்தை உண்மையென நம்புகின்றனர். திருவேங்கடத்தின் நாடகம் மகத்தான வெற்றி........ , இது ஒருபக்கம்.

இன்னொரு பக்கம் தொல்காப்பியனை வெளியேற்றியே தீரவேண்டும் என்று அபியின் குடும்பத்தினர் அனைவரும் (ஆனந்தி உள்பட) நிர்ப்பந்திக்க, வேறு வழியின்றி அபி சம்மத்தித்து, தொல்ஸுக்கு ஐம்பது லட்சரூபாய் கொடுக்க முடிவெடுக்கிறாள். ஆனால் ஐம்பது லட்சம் கொடுக்க ஆர்த்தி எதிர்ப்பு தெரிவிக்கிறாள். (அவள் முப்பாட்டன் வீட்டு சொத்து போல).

ஞாயிறு அன்று, தேவாலயம் சென்று சாந்தியின் மகளைப் பார்க்கும் வழக்கமுள்ள தொல்ஸ் அங்கு போக, டிடெக்டிவ் ஏஜென்ஸியின் சித்ரா அவரைச் சந்திக்கிறாள். (கிருஷ்ணன் அட்ரஸ் கொடுத்தது நமக்கு தெரியும்). சித்ராவின் பேச்சிலும் நடத்தையிலும், தொல்ஸ் மீது ரொம்ப மதிப்பும் நட்பும் பாராட்டுவதுபோல தெரிகிறது. அவள் சென்றதும் நரிகிருஷ்ணன் தொல்ஸைப் பார்த்து, அபி மறுநாள் அலுவலகம் அழைத்ததாக சொல்கிறார், காரணம் தெரிந்தும் சொல்லாமல்.

மறுநாள், கான்ஃப்ரன்ஸ் டேபிளில் அபி, விஸ்வநாதன், ராஜாமணி மேடம், ஆர்த்தி ஆகியோர் காத்திருக்கின்றனர். (அபி கோமாவில் கிடந்தபோதும், ஆதியால பலமுறை குறிவைத்து தாக்கப்பட்ட போதும், அபி, பல்வேறு சங்கடத்தில் தவித்தபோதும் இவர்களெல்லாம் எங்கே போயிருந்தனர் என்று தெரியவில்லை). தொல்ஸை கம்பெனியைவிட்டு வெளியேற்றும் விஷயத்தை, விஸ்வநாதன்தான் தொல்ஸிடம் சொல்ல வேண்டும் என்று அபி சொல்கிறாள். எல்லோரும் பெரும் புயலை எதிர்பார்த்திருக்க தொல்காப்பியன் ஆஜர்....

saradhaa_sn
12th August 2008, 05:46 PM
தொல்காப்பியனின் முகத்தை நேருக்கு நேர் பார்த்ததும், அபியின் முகத்தில் சொல்ல முடியாத சோகமும் கலக்கமும் சூழ்கிறது. சொல்லப்போகும் விஷயத்தை தொல்ஸ் எப்படி எடுத்துக்கொள்வாரோ, பிரச்சினை வெடிக்குமோ என்ற திகில் அபியிடம் மட்டுமல்ல, கூடியிருக்கும் அனைவரிடமும் இருக்கிறது... ஆர்த்தியைத் தவிர. அவள் தொல்ஸை எந்த வகையிலும் மேலும் அவமானப் படுத்தவும் அசிங்கப்ப்டுத்தவும் தயாராக இருக்கிறாள்.

விஸ்வநாதன் தொல்ஸை உட்காரச்சொல்ல, அவர் உட்கார மறுத்து நிற்கிறார். எப்படி சொல்வது என்று தயங்கியபடி விஸ்வநாதன் பெரிய பீடிகையெல்லாம் போட்டு கடைசியில் தொல்ஸை கம்பெனியைவிட்டு வெளியேற்ற அவர்கள் அனைவரும் முடிவு செய்திருப்பதாகச் சொல்ல, தொல்ஸ் முகத்தில் அதிர்ச்சி.. கண நேரம்தான். மறுபடியும் 'இதெல்லாம் நான் எதிர்பார்த்ததுதான்' என்பது போன்ற அவரது ட்ரேட் மார்க் புன்னகை.

சட்டென்று சுதாரித்துக்கொண்டு காரணம் கேட்க அவர்களால் காரணம் சொல்ல முடியவில்லை. தொல்ஸ் இருந்தால் அபி குடும்பம் விலகிப்போகும் என்ற காரணம் மட்டுமே சொல்லப்படுகிறது. எவ்வித சலனமும் இலாமல், 'சார், நான் எங்கே கையெழுத்துபோடணும்னு சொல்லுங்க. போட்டுக் கொடுத்துட்டுப் போறேன்' என்று தொல்ஸ் சொல்ல ராஜாமணி, விஸ்வநாதன் முகத்தில் ஆச்சரியம், ஆர்த்தி முகத்தில் புன்னகை, அபி முகத்தில் சொல்லமுடியாத வேதனை. (தேவயானியின் முகபாவம் அபாரம்). கையெழுத்துப்போட்டுவிட்டு திரும்பிப்போகும் தொல்ஸை விஸ்வநாதன் அழைத்து ஒரு கவரை நீட்ட, அது என்ன என்று கேட்க, அவருடைய உழைபுக்கு சன்மானமாக ஐம்பது லட்சம் ரூபாய் செக் இருப்பதாக விசு சொல்ல, தொல்ஸ் அதை மறுத்து வெளியேறுகிறார்.

காலம் காலமாக கட்டிக்காத்த நட்புப்பாலம், சில நரிகளின் சூழ்ச்சியால் தகர்த்தெறியப்பட்ட வேதனையுடன் அமர்ந்திருக்கும் அபி முகத்தி கேமரா FREEZE ஆக.......

இன்று என்ன நடக்கிறதென்று பார்ப்போம்....

aanaa
12th August 2008, 08:50 PM
.

இன்று என்ன நடக்கிறதென்று பார்ப்போம்....

thank you

பார்ப்போம்....

sudha india
13th August 2008, 03:45 PM
How come Abi - buddhisali, thiramaisali, porumaisali .............. etc etc. can easily believe one side (not even give an option to the other person to talk) and take such decisions ?

Thols-kku thyagi pattam nerungi varugiradhu.

gta129
14th August 2008, 08:54 AM
How come Abi - buddhisali, thiramaisali, porumaisali .............. etc etc. can easily believe one side (not even give an option to the other person to talk) and take such decisions ?

I don't think Abi completely believes Aarthi. When the employee who took the picture of Arthi came she asked him in a very suspicious and unsettled tone. Also the way she's been behaving toward Arthi shows she's a little mad. When Arthi came in and said nothing, she told her to go do her work. And when Narayan said Thols is playing a double games she yelled at him. MAkes me wonder if Thols and Abi are secretly friends. Also when ever people aks about Abi to Thols like The Father at church or Manager he answers it like they are still friends.

saradhaa_sn
14th August 2008, 12:30 PM
How come Abi - buddhisali, thiramaisali, porumaisali .............. etc etc. can easily believe one side (not even give an option to the other person to talk) and take such decisions ?

Thols-kku thyagi pattam nerungi varugiradhu.
அபி தொல்காப்பியனை வெளியேற்றியதற்கு முழுக்காரணம் தன் தங்கை ஆர்த்தியின் பேச்சை நம்பி தொல்ஸ் மீது சந்தேகப்பட்டதால் அல்ல. அப்போதும்கூட அவள்தொல்ஸை கம்பெனியின் பார்ட்னராக வைத்திருக்கவே விரும்புகிறாள். ஆனால் அபியைப் பணிய வைத்தது குடும்பத்தாரின் நிர்ப்பந்தம்.

தொல்காப்பியன் இருந்தால் தான் கம்பெனியின் ஷேர்ஹோல்டராக இருக்க மாட்டேன் என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், வீட்டையே விட்டு வெளியேறி ஏதாவது முதியோர் இல்லத்தில் போய் தங்கி விடுவேன் என்று அபியின் அம்மா மிரட்டும்போது அவளால் என்ன செய்ய முடியும்..?. தொல்காப்பியன் என்ற ஒருவன் இல்லையென்றால் அபியின் கதை எப்போதோ முடிந்திருக்கும், தன் சக்களத்தி மகன் ஆதித்யா அவளை எப்பவோ கொன்று புதைத்திருப்பான் என்பதை அந்த நன்றிகெட்ட (தா)ய் மறந்தது ஏனோ...?.

இப்போது OFFICE-ல், தன்னை வீட்டு விசேஷத்துக்கு அழைத்து வேண்டுமென்றே அவமானப் படுத்திய ஆர்த்தி, மனோ பக்கத்தில் கொஞ்சமும் வெட்கமின்றி உட்கர்ந்திருக்கிறாள்.

ஆதியை விட, காஞ்சனாவை விட, பாஸ்கரை விட, அலமேலுவை விட, திருவேங்கடத்தை விட படுமோசமான கேரக்டர் அபியின் அம்மா கற்பகம். எல்லாவற்றையும் மிரட்டியும், கண்ணீர் சிந்தியும் சாதித்துக் கொள்கிறாள்.

saradhaa_sn
14th August 2008, 12:54 PM
தேவராஜ பாண்டியன், திருவேங்கடம், ஆதித்யா ஆகியோர் மதுவருந்திக்கொண்டு இருக்கும் இடத்துக்கு வரும் கிரியிடம், தொல்காப்பியன் இருக்குமிடம் பற்றி எந்த தகவலும் கிடைத்ததா என்று கேட்க, கிரி மறுக்க, ஆதி கோபப்பட, அதே சமயம் கிரி இன்னொரு குண்டைத் தூக்கிப்போடுகிறான். ஆதி பார்ட்னராக இருக்கும் எம்.எம்.சிட்டி மேக்கர்ஸ் வேலைக்கு முக்கியத்துவம் தராமல், மேனகா தான் தனியாக செய்யும் 'மேனகா டவர்ஸ்' வேலையை மட்டுமே கவனம் செலுத்துவதாக மற்றவர்கள் பேசுவதாக சொல்ல, ஆதி கலங்கிப்போகிறான்.

அதே வேகத்துடன் மேனகாவைச்சந்திக்கும் அவன், அடக்க ஒடுக்கமாய் மெல்ல அவளிடம் விஷயத்தைச் சொல்ல அவள் கோபத்தின் உச்சிக்குப்போகிறாள். தன்னைப் பற்றி ஆதிக்கு சந்தேகம் வந்துவிட்டதாக கூறி, அவனை ப்ராஜக்டிலிருந்து விலகி விடுமாறு கொதிக்கிறாள். ஆதி குறிப்பிட்ட ப்ராஜக்ட் விஷயமாக என்னவெல்லாம் வேலைகளை தான் மேற்கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டிய அவள், இனிமேலும் ஆதி தன்னுடன் பார்ட்னராக இருக்க தான் விரும்பவில்லையென்றும், அவன் தன்னிடம் முதலீடு செய்த பணம் முழுவதையும் மறுநாள் வந்து வட்டியுடன் வாங்கிச்செல்லுமாறும் சொல்லி அதற்கு மேல் அவனிடம் பேச விரும்பவில்லையென்று அவனை வெளியேற்றுகிறாள்.

(இதற்கு முன் தனிக்காட்டு ராஜாவாக உலாவந்த ஆதி, தற்போது தன் கம்பீரம் இழந்து மேனகாவிடம் ஒரு அடிமை போல கெஞ்சுவது ரொம்ப பரிதாபமாக இருக்கிறது. ஆயிரம்தான் அவன் கெட்டவனாக இருந்தபோதிலும் இந்த தொடரில் கம்பீரமாக உலாவந்தவன் ஆதி. இப்போது மேனகாவின் எடுபிடிபோல ஆனது வருத்தமாக இருக்கிறது. எங்கள் அஜய்கபூர் மீண்டும் சிங்கமாக உலவ வேண்டும்).

saradhaa_sn
14th August 2008, 01:13 PM
பெங்களூரில் இருந்து காரில் சென்னை திரும்பிக்கொண்டு இருக்கும் 'உஷா' (நினைவிருக்கிறதா?), வழியில் கார் ரிப்பேராகிப் போக நடுவழியில் நின்றுகொண்டிருக்கிறாள். வண்டி ரெடியாக நேரமாகும் என்று கூறும் டிரைவர், வேறொரு ட்ராவல்ஸ் வண்டிக்கு தகவல் சொல்லியிருப்பதாக கூறுகிறான். இதனிடையே அவ்வழியே 'பைக்'கில் வரும், அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஊழியர் ஒருவர், உஷாவைப் பார்த்து வண்டியைவிட்டிறங்கி நலம் விசாரித்துக்கொண்டிருக்கும்போது ட்ராவல்ஸ் வண்டி வருகிறது. வண்டியிலிருந்து இறங்கும் டிரைவர் வேறு யாருமல்ல தொல்காப்பியன்தான்.

அந்த இடத்தில், அந்த கோலத்தில் தன் நண்பரும் கம்பெனி பார்ட்னருமான தொல்ஸைப்பார்த்து உஷாவுக்கு அதிர்ச்சி. கம்பெனி பெரிய ப்ராஜக்ட் ஒன்றை எடுத்து அதில் மும்முரமாக மூழ்கியிருக்கும் வேளையில், அதன் முதுகெலும்பான ஒரு நபர் ட்ராவல்ஸ் வண்டி ஓட்டுவதாவது..?. உஷா குழப்பத்தின் எல்லைக்குப்போய் விவரம் கேட்க, தொல்ஸ் மழுப்ப, உடனிருக்கும் ஊழியர் நடந்தவையனைத்தையும் புட்டு, புட்டு வைக்க உஷாவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. மற்றவைகளை வண்டியில் போகும்போது பேசிக்கொள்ளலாம் என்று கூறி, அந்த ஊழியருக்கு விடைகொடுத்தனுப்பி வண்டியில் ஏறும் உஷா, தொல்ஸிடம் விவரம் கேட்க, அவர் ஏதோ தத்துவக் கதைகளையெல்லாம் சொல்ல, உஷாவுக்கு மட்டுமல்ல நமக்கும் புரியவில்லை. இன்னும் வண்டியில்தான் அவர்கள் போய்க்கொண்டிருப்பதால், மேலும் பேசிக்கொண்டு போவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

(அந்த வண்டியில் தொல்ஸும் உஷாவும் மட்டுமல்ல, நாமும் சேர்ந்து பயணிப்பது போன்ற நினைவைத்தரும் அருமையான ஒளிப்பதிவு).

sudha india
14th August 2008, 02:08 PM
As usual good update saradha.....
I saw y/days episode and for no speacific reason, I am thinking of the tamil movie "THOOKU THOOKI"

TO compare with kolangal :

Konduvandhal thandhai : No respect for the fathers in this serial. so we leave it.

Kondu vandhalum varavittalum Thai : Karpagam - Evlovuthan avamana paduthappattalum namma kozhandhaigalthanennu oru character. Goes on getting humiliated knowing well that she will get kicked.
Kanchana : Adhi evlo kolai pannalum, he is great-nu oru feeling.
(Indha thaaigalai parthale peyai pakra feeling...Adhaiyum meeri oru erichal varudhu)

Seerudan vandhal sagodhari : Anu and Arthi can be taken as example. Adhi and Mano avangala support panra varaikkum OK. Kelvi kettal....thats the end of a good sister.

Kolaiyum seival pathini : Enakkennavo the second wife of Baskar will do that-nu thonudhu - for killing her dear father.......

Uyir kaappan thozhan : Ofcourse the story line is friendship between Thols, abi and Usha. Thols has already save Abi many times. Now it may be Usha saving Thols by telling the truth to Abi. Uyiraivida sirandha Maanathai (manidhaabimaanathai) kaappathuvaal endru ninaikiren.

//Dear friends - Dont get upset with me for comparing the evergreen Thooku thooki with this serial. Just sharing my thoughts //

saradhaa_sn
14th August 2008, 03:09 PM
Dear friends - Dont get upset with me for comparing the evergreen Thooku thooki with this serial. Just sharing my thoughts
இந்த வரிக்கு அவசியமே இல்லை சுதா...

மிக அருமையாக ஒப்பிட்டிருக்கிறீர்கள்.

எனக்கென்னவோ, உஷா அவ்வளவு சீக்கிரம் அபியையும், தொல்ஸையும் சேர்த்து வைத்துவிடக்கூடாது. தொல்காப்பியன் இல்லாத நிர்வாகம் எவ்வளவு சீரழிவைச் சந்திக்கும் என்பதை அபி மட்டுமல்ல, அவளது மொத்த குடும்பமும் (ஆனந்தி உட்பட) உணர வேண்டும். அதன் பலனை அனுபவிக்க வேண்டும். ஆர்த்தியின் அடாவடித்தனங்கள் அபியால் கண்டுபிடிக்கப்பட்டு, அவை வெளிச்சத்துக்கு வரவேண்டும்.

அதுவரை அபியும் தொல்ஸும் விலகியே இருக்க வேண்டும்.

aanaa
14th August 2008, 05:42 PM
பெங்களூரில் இருந்து காரில் சென்னை திரும்பிக்கொண்டு இருக்கும் 'உஷா' (நினைவிருக்கிறதா?),


:exactly:


(அந்த வண்டியில் தொல்ஸும் உஷாவும் மட்டுமல்ல, நாமும் சேர்ந்து பயணிப்பது போன்ற நினைவைத்தரும் அருமையான ஒளிப்பதிவு). :clap: :clap:

gta129
16th August 2008, 06:19 AM
It's nice to have Usha back and she's back as the old Usha. The old Usha was strong and stands up to what she believes. It's nice they bought her in, since Abi's character has changed and no longer stands up to what she believes. Like when she didn't want Thols to leave the company, but she still let her family talk her into leaving the company.

saradhaa_sn
16th August 2008, 12:49 PM
இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு மேனகாவிடம் பெற்றிருந்த நல்ல பெயரை சில நிமிடங்களில் இழந்துவிட்ட துக்கத்தில் ஆதித்யா தவிக்கிறான். பலமுறை போன் செய்தபோதும், மேனகா எடுக்கவில்லை. அவன் கோபம் முழுக்க கிரியின்மீது திரும்புகிறது. தேவராஜ பாண்டியன் சமாதானம் சொன்னபோதும் அவனுக்கு திருப்தியில்லை. கடைசி முயற்சியாக தேவராஜனின் 'செல்'மூலம் முயற்சிக்க, புதிய எண்ணைக்கண்டதும் போனை அட்டெண்ட் பண்ணும் மேனகா, ஆதியின் குரலைக்கேட்டதும் 'கட்' பண்ணுகிறாள்.

(இந்த மேனகாவுக்கு அலுவகம என்றெல்லாம் எதுவும் கிடையாதா?. எப்போது பார்த்தாலும் ஒரு 'லேப்டாப்பை' மடியில் வைத்துக்கொண்டு (மேஜையில் கூட அல்ல). இருக்கிறாள். பக்கத்தில் ஒரு ஆணும் பெண்ணும் (ஜெனிபர்..?) நின்றுகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் உட்கார்ந்து பார்த்ததில்லை, பாவம். மற்றபடி ஒரு ஆஃபீஸோ, அதில் அவளுக்கென்று ஒரு அறையோ காண்பிக்கப்படவில்லை).

அபியின் அலுவலகம் வரும் உஷா, அபியின் மனமாற்றம் பற்றி பூடகமாகப் பேசுகிறாள். ஒரு கட்டத்தில், அவள் ஏற்கெனவே தொல்காப்பியனை சந்தித்துவிட்டு வந்திருப்பதாக கூறி, நடந்தவற்றுக்கு விளக்கம் கேட்க, அபியிடமிருந்து எந்த விளக்கமும் இல்லை. நடந்த உரையாடலை ஒட்டுக்கேட்டுவிட்டு உள்ளே நுழையும் ஆர்த்தி, தொல்ஸைப்பற்றி மோசமாக விமர்சித்ததுடன், அவன் தன்னிடமே தகாத முறையில் நடந்ததாக கூற, இப்போது உஷாவுக்கு அதிர்ச்சி. தொல்ஸ் இப்படி நடந்திருப்பாரா என்பதால் அல்ல. அவர்மீது எப்படி இந்தமாதிரி ஒரு பழி விழுந்தது என்று.

தொடர்ந்து தொல்ஸுக்கு சப்போர்ட்டாகப்பேசும் உஷாவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எரிச்சல் அடையும் ஆர்த்தி, உஷாவையே தனிப்பட்ட முறையில் (புருஷனோடு வாழமுடியாத வாழாவெட்டி என்று) தாக்குகிறாள், தன் அக்கா அபியும் அந்த கேரக்டர்தான் என்பதையும், தானும்கூட கொஞ்சநாள் அப்படி வாழ்ந்தததையும் மறந்து.

தங்கையைப் பேசவிட்டுவிட்டு தான் எதுவும் பேசாமல், அவளையும் அடக்கிவைக்காமல் இருக்கும் அபியின் செயல் உஷாவுக்கு கோபத்தைதர, உஷா வெளியேறுகிறாள். அவள் சென்றபின், அவளோடு சேர்ந்திருந்த அந்த பசுமையான, மற்றும் கஷ்டமான நாட்களை அபி நினைத்துப்பார்க்கிறாள். (தொல்ஸ் வெளியேற்றப்பட்டபோதும், அவன் தனக்காகப் பட்ட கஷ்ட்டங்களை நினைத்துப்பார்த்தாள்).

(நேற்று, சுதந்திர தினத்தையொட்டி ஒளிபரப்பப்பட்ட 'திருவிளையாடல் ஆரம்பம்' திரைப்படம், கோலங்கள் நேரத்தையும் சேர்த்து விழுங்கி விட்டது. அதனால் 'அரசி'யில் இருந்தே சீரியல்கள் துவங்கின).

Arthi
16th August 2008, 08:19 PM
wow saradha madam... thanks a lot for ur updates again :D
your update is helpful for somany viewers who all are not able to see the serial :D

Arthi
16th August 2008, 08:19 PM
hi sudha Maami.. nice comparision :clap:

mr_karthik
17th August 2008, 06:02 PM
Arthi sis..

Why not you change your name and put a good one.

You see, wherever you watch, ARTHIs are always trouble makers for others (except you).

Arthi
17th August 2008, 06:10 PM
Arthi sis..

Why not you change your name and put a good one.

You see, wherever you watch, ARTHIs are always trouble makers for others (except you).

i am an exceptional!!! serial names are fake ones... :P
Real Arthis are just oppsite to Serial Arthis :thumbsup:

mr_karthik
17th August 2008, 06:40 PM
-- deleted --

aanaa
17th August 2008, 07:51 PM
commnets about " kolankal " only are welcome here

saradhaa_sn
19th August 2008, 02:14 PM
ஏற்கெனவே போனில் மேனகாவைத் தொடர்புகொள்ள முயன்று தோற்ற ஆதி, நேரில் அவளைப்பார்க்க வருகிறான். அப்போது அவள் கார்த்திக்கிடம் பிஸினஸ் விஷயமாக முக்கிய டிஸ்கஷனில் இருக்க, ஆதியைக் கண்டுகொள்ளவில்லை. ஆதிக்கு நெருப்பின் மீது நிற்பதுபோலிருக்கிறது. போதாக்குறைக்கு கார்த்திக் போகும்போது தன் பங்குக்கு ஆதிக்கு அட்வைஸ் பண்ணி விட்டுப்போக, 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என்ற நிலை ஆதிக்கு. ஒருவழியாக ஆதியிடம் முகம் கொடுத்துப்பேசும் மேனகாவிடம், ரொம்பவே பணிந்து பவ்யமாக மன்னிப்பு கேட்கிறான் ஆதி. என்ன செய்வது, சிங்கத்தின் வாயில் தலையைக்கொடுத்தாயிற்றே. இனிமேல் மேனகாவிடம் தன்னுடைய ப்ராஜக்ட் பற்றி எந்த ஒரு வார்த்தையும் கேட்கமாட்டேன் என்று சத்தியம் செய்கிறான். மேனகாவிடம் ஆதியின் பிடி வசமாக மாட்டிக்கொண்டது. இனி எந்தக்காலமும் அவன் மேனகாவிடம் எதுவும் கேட்க முடியாது. உடனடியாக ஒரு பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்யும்படி தன் எடுபிடிகளில் தலைமை எடுபிடியிடம் சொல்கிறாள். பின் என்ன அது அலுவலகமா, அல்லது அவன்தான் ஆபீஸரா..?. எப்போதும் மேனகாவுக்குப் பக்கத்தில் அடியாட்கள் போலவே நின்று கொண்டிருக்கின்றனர்.

தோழரின் பாசறை. ஆனந்தி மேனகாவின் பிரஸ் மீட்டுக்குப் போகப்போவதாகவும், அவளைப்பற்றியும், ஆதியைப்பற்றியும், தேவராஜ பாண்டியனைப் பற்றியும் ஏராளமான தகவல்கள் சேகரித்து வைத்திருப்பதாகவும் விரைவில் தன்னுடைய பத்திரிகையில் வெளியிடப்போவதாகவும் தோழரிடம் சொல்கிறாள்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக கடலோரப்பகுதியில் சிறிய வீடு எடுத்து தங்கியிருக்கும் தொல்காப்பியனைப் பார்க்க சித்ரா வருகிறாள். அங்கிருந்தவர்களிடம் விசாரித்துக்கொண்டு வீட்டை அடையும் அவள் உருப்படியாக எதுவும் பேசவில்லை. இரண்டு துண்டு பிரட் தின்றதோடு சரி. கிளம்பிப்போகும்போது, ஷேர் ஆட்டோவில் போக, அதில் ஏற்கெனவே வின்சென்ட் இருக்கிறான் (இப்போது புது அவதாரமான பிராமணர் வேடத்தில்..., விட்டால் இவரும் தசாவதாரம் எடுப்பாரோ). ஆட்டோவில் போகும்போது விவேக்கிடம் இருந்து போன் வர சித்ரா பேசுகிறாள் (தொல்காப்பியனின் பெயரைக் குறிப்பிடாமல்). ஒரு இடத்தில் வின்சென்ட் இறங்கிக்கொள்ள, ஆட்டோ புறப்படும் நேரத்தில் போனில் சித்ரா தொல்காப்பியன் பெயரைச்சொல்ல இவர் அதிர்கிறார். சுதாரிப்பதற்குள் ஆட்டோ போய்விடுகிறது. (வின்சென்ட் குடியிருக்கும் வீட்டு மாடியில்தான் சித்ரா குடியிருக்கிறாள். இப்போது சித்ராவை வின்சென்ட் பார்த்துவிட்டார். அவளுக்கும் தொல்ஸுக்கும் தொடர்பு இருப்பதும் தெரிந்து விட்டது).

தன்னுடைய ப்ராஜக்டுக்கு பார்த்த இடத்தை விலைபேச கிருஷ்ணனுடன், அந்த இடத்தின் சொந்தக்காரரைச் சந்திக்கப்போகிறாள் அபி. ஓனர் இப்போ வந்துவிடுவார் என்று அங்குள்ள ஒருவர், இவர்களை ஓனரின் அறைக்கு அழைத்துச்சென்று அமர வைக்கிறார். காத்திருக்கிறார்கள். ஓனர் வருகிறார், வேறு யாருமல்ல பாஸ்கர்தான். ஸ்டாஃப்களின் குட்மார்னிங்'களைப் பெற்றுக்கொண்டு (அபி அமர்ந்திருக்கும்) தன்னுடைய அறையின் கதவைத்திறக்க.... FREEZE.... (Freeze ஆனது அபியோ, பாஸ்கரோ அல்ல, காட்சி..)

aanaa
19th August 2008, 08:04 PM
Thank you saradhaa_sn
keep up

aanaa
19th August 2008, 08:06 PM
தொல்ஸ் /சித்ரா

யாருக்கும் கஸ்டம் கொடுப்பதில்லயாம் என்கின்றர்ர் தொல்ஸ்

இந்த கோலங்களை விடவா ..

:-)

saradhaa_sn
20th August 2008, 12:10 PM
அபியைத் தன்னுடைய அறையில் பார்த்த பாஸ்கருக்கு இன்ப அதிர்ச்சி. தன்னுடைய இடத்தை விலைக்கு வாங்க அபி வந்திருக்கிறாள், அதன் மூலம் அபியுடன் தன் நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவன் புன்னகையில் தெரிகிறது. ஆனல் தான் விலை பேச வந்தது பாஸ்கரின் இடம் என்பது தெரிந்த அடுத்த வினாடியே, அபி புறப்பட தயாராகிறாள். ஆனால் பாஸ்கர், தடுத்து, தனக்கும் அவளுக்கும் இடையேயான பழைய குடும்ப உறவுகளை எல்லாம் ஒதுக்கி வைக்கும்படியும், அவள் பிஸினஸ் பேச வந்திருப்பதாகவும் தான் பிஸினஸ் செய்ய இருப்பதாகவும் சொல்லி, தான் விறக் இருக்கும் இடத்தை அபியின் பெரிய ப்ராஜக்ட் ஒன்றுக்கு தருவதை தான் விரும்புவதாகவும் ஆகவே அவளே அதற்கு ஒரு விலையை நிர்ணயித்து எடுத்துக்கொள்ளும்படியும் கூற, அபிக்கோ அவன் சும்மா கொடுத்தாலும் அந்த இடம் வேண்டாம் என்ற எண்ணமே மேலோங்கி இருக்க, மறுத்துவிட்டு புறப்படுகிறாள். (ஆனால் இருவருக்கும் இடையே காரசாரமான வாதம் எதுவும் இல்லை, புன்னகையுடனேயே உரையாடினர்).

வெளியில் வந்ததும் காரை எடுத்துக்கொண்டு வருவதாகச்சொல்லி கிருஷ்ணன் போக, அபியைத்தொடர்ந்து அவள் பின்னாலேயே படியிறங்கி வரும் பாஸ்கர், அவளிடம் ஏதோ தனியாகப் பேசப் போகிறான் என்று எண்ணும் நேரம், அவ்விடத்தில் காரில் வந்திறங்கும் டாக்டர் ரமேஷ், அபியிடம் விவரம் கேட்கிறான். தன் ப்ராஜக்ட்டுக்கு இடம் வாங்கும் விஷயமாக வந்திருப்பதாகச் சொல்லும் அபியிடம், அதே ஏரியாவில் தனக்கு தெரிந்த ஒருவரது இடம் இருப்பதாகச்சொல்லி தன்னுடைய காரில் டாக்டர் ரமேஷ் ஏற்றிக்கொள்ள, தன் காரில் பின்தொடருமாறு கிருஷணனுடன் அபி தெரிவிக்க, நடந்தவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும் பாஸ்கருக்கு உள்ளத்தில் பொறாமைத்தீ. (ஏற்கெனவே டாக்டர் ரமேஷை திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாக கோயிலில் வைத்து பாஸ்கர் எதிரிலேயே அபி சொன்னது நினைவிருக்கலாம்).

(திருச்செல்வத்திடம் இருக்கும் ப்ளஸ் பாயிண்ட் இதுதான். எந்த ஒரு கேரக்டரையும் அம்போ என்று தொங்கலில் விட்டு விட்டுப் போய்க்கொண்டிருக்க மாட்டார். எங்காவது ஒரு இடத்தில் அவை வந்து 'லாக்' ஆகிக்கொண்டே இருக்கும். அங்குசாமியும், ராஜேஷின் அண்ணன் குடும்பமும், டாக்டர் ரமேஷும், கார்த்திக்கும் திரும்ப வருவார்கள் என்று நினைத்தோமா?. விரைவில் கங்காவின் குடும்பமும் திரும்பி வருவார்கள்.. பாருங்கள்).

பிரஸ்மீட்டுக்கு வந்திருக்கும் பத்திரிக்கையாளர்களிடம் ஆதியும், கார்த்திக்கும் பிரஸ் மீட் பற்றிய சின்ன அறிமுகம் கொடுக்க, மேனகா பேசுகிறாள். தங்களுடைய ப்ராஜக்டைப் பற்றி தங்களுக்கு வேண்டாத சிலர் இல்லாததும் பொல்லாததுமாக தவறான வதந்திகளைப்பரப்பி வருவதாக சொல்லிக்கொண்டிருக்கும்போது, ஆனந்தி உள்ளே வந்து குறுக்கிடுகிறாள். மேனகாவின் 'ஸேட்டலைட் சிடி' ப்ராஜக்டுக்கு ஏழை எளியோர் குடியிருக்கும் நிலங்களை சங்கரபாண்டியன், தேவராஜ பாண்டியன், ஆதித்யா ஆகியோரின் அராஜக, அடாவடி நடவைக்கைகளால் கைப்பற்றியதாகவும், அதற்கு தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் கூற, மேனகாவுக்கு அதிர்ச்சி. அவள் சந்தேகத்துடன் கார்த்திக் பக்கம் திரும்ப அவனுக்கு தர்மசங்கடம். ஆனந்தியை அடக்க முயலும் ஆதியையும், கார்த்திக்கையும் அவள் சட்டை பண்ணவில்லை.

ஆனந்தியின் அக்கா அபி, இன்னொரு பெரிய ப்ராஜக்ட் பண்ண இருப்பதால் தங்கள் செல்வாக்கைக் குறைக்கவே ஆனந்தி இப்படி குற்றம் சுமத்துவதாகவும், அதற்கு பத்திரிகை என்ற போர்வையை கேடயமாக பயன்படுத்துவதாகவும் மேனகா பத்திரிக்கையாளர்களிடம் சொல்கிறாள்.

ஆனந்தியின் குற்றச்சாட்டுக்கள் ஒரு கட்டத்தில் எல்லைமீறிப்போக, மேனகா உடனே பிரஸ்மீட்டை முடித்துக்கொண்டு, தங்கள் ப்ராஜக்ட் பற்றிய விவரங்களடங்கிய சிறிய கையேட்டை விநியோகிக்குமாறு தன்னுடைய உதவியாளரிடம் கூறிப் புறப்படுகிறாள்.

Arthi
20th August 2008, 07:06 PM
who is karthick?? Aanandhi's lover? :roll: (Vishva or Vijay saradhi??? )

Madhu Sree
20th August 2008, 07:40 PM
who is karthick?? Aanandhi's lover? :roll: (Vishva or Vijay saradhi??? )

Its Vishva ... :)

Arthi
20th August 2008, 09:20 PM
thanks Madhu :D

saradhaa_sn
21st August 2008, 11:50 AM
டாக்டர் மகேஷ் சொன்ன, பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள இடத்தின் சொந்தக்காரரை சந்திக்கும் அபிக்கு அந்த இடம் பிடித்துப்போக, தான் அந்த இடத்தை வாங்கிக்கொள்வதாக சொல்ல, அவர் 30 கோடி விலை சொல்கிறார். அது அபிக்கு சற்று கூடுதல் விலையாக தோன்ற, அவர் விலையில் உறுதியாக இருக்க, இடத்தின் வில்லங்கம் சம்மந்தமான விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கொண்டு ஒரு வாரத்தில் வருவதாகச் சொல்லி புறப்படுகிறாள். (கூடவே ஒட்டுவாலாக கிருஷ்ணனும்). அவள் போனதும், அபி தன்னை மணந்துகொள்ள மறுத்துப்பேசிய தருணங்களை டாக்டர் மகேஷ் நினைத்துப்பார்க்கிறார். (ஸாரி, முன்னர் நான் குறிப்பிட்டதுபோல அவர் ரமேஷ் அல்ல).

ஆனந்தியும் கார்த்திக்கும் வாக்குவாதத்தில் இறங்குகின்றனர். ஆனந்தியின் செயலால் தனக்கு மேனகாவிடம் கெட்டபெயர் ஏற்படும் என்று கார்த்திக் சொல்ல, அதுபற்றி தனக்கு கவலையில்லையென்றும், எந்த தனிப்பட்ட ஒருவருக்காகவும் தன்னுடைய கொள்கைகளை காம்ப்ரமைஸ் செய்துகொள்ள முடியாது என்றும் மறுக்கிறாள். அப்போது அங்கே வரும் தோழர், அவர்களது பேச்சின் சூட்டைத் தணிக்க முயல, கார்த்திக் அவர்மீதும் குற்றம் சுமத்துகிறான். ஆனந்தியின் தவறான போக்கைக் கண்டித்து திருத்த வேண்டிய அவரே அவளது நடவடிக்கைகளூக்கு தூபம் போடுவதாகச் சொல்ல, கோபம் அடைந்த ஆனந்தி கார்த்திக்கை சத்தம் போட்டு வெளியேற்றுகிறாள்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்த கசப்பான விஷயங்களால் கொதித்துப்போயிருக்கும் மேனகாவை மேலும் தூண்டும் விதமாக, 'ஆனந்தியை ஏன் இன்னும் சும்மா விட்டு வைத்திருக்கிறீர்கள்?' என்று ஆதி எரிகிற தீயில் எண்ணை ஊற்ற அவள் கோபம் மேலும் அதிகமாகிறது. அந்நேரம் அங்கு வரும் கிரி, ஆதியை தனியே அழைத்துப்போய், 'அபியின் ப்ராஜக்டுக்கு டாக்டர் மகேஷின் நண்பருடைய இடம் கிடைத்து விட்டது' என்ற விவரம் சொல்ல, அவனுக்கும் கோபம் தலைக்கேறுகிறது.

மகேஷின் நண்பர் மதுவருந்திக்குஒண்டு இருக்கும் 'பார்'க்கு அடியாட்கள் சகிதம் வரும் தேவராஜ பாண்டியன், 'அபிக்கு தன்னுடைய இடத்தை விற்றால், அவருடைய உயிரை எடுத்துவிடுவதாகவும் அப்புறம் எத்தனை கோடிகள் வந்தாலும் அவரால் அனுபவிக்க முடியாது என்றும், தன்னுடைய இந்த எச்சரிக்கைக்குப்பின்னால் மேனகா இருப்பதாகவும்' கடுமையாக மிரட்டி விட்டுப்போகிறான்.

தான் ஏற்கெனவே கட்டிக்கொண்டு இருக்கும் 'சைட்'ட்டில் (ஒட்டுவால் கிருஷ்ணன் சகிதம்) போயிருக்கும் அபியை, அந்த பிளாட்களில் ஒன்றுக்கு சொந்தக்காரர் ஒருவர் சந்திக்கிறார். பிளாட் சம்மந்தமான பேச்சுக்கு நடுவே அவர் தொல்காப்பியனைப்பற்றி விசாரிக்க, கிருஷ்ணன் 'அவர் இப்போது இல்லை'என்று பட்டென்று பதில் சொன்னது பிடிக்காமல் அபி அவரைக் கண்டிக்கிறாள். அப்போது அபிக்கு போன்கால் வர, எடுத்துப்பேசினால் மறுமுனையில் நிலத்தின் சொந்தக்காரர். மேனகாவின் சார்பில் தேவராஜபாண்டியன் தன்னைக்கொன்றுவிடுவதாக மிரட்டிவிட்டுப்போன விவரத்தை சொல்லி, அபிக்கு நிலம் தர மறுக்கிறார். அபி சமாதானம் செய்ய முயன்றும் அவர் கேட்கவில்லை. 'உங்களுக்கு இன்னொரு இடம் கிடைக்கும், ஆனால் எனக்கு இன்னொரு உயிர் கிடைக்காது' என்று அவர் சொல்ல, அபியால் மேற்கொண்டு வற்புறுத்த முடியவில்லை. கிருஷ்னனைப்போகச்சொல்லி விட்டு, கோபத்துடன் மேனகாவைப் பார்க்கச் செல்கிறாள்.

செக்யூரிட்டிகள், மேனகாவின் எடுபிடிகள் என்று யார் தடுத்ததையும் பொருட்படுத்தாமல் நேரே சென்று மேனகாவைப்பார்க்க, அவளோ மிகவும் கூலாக 'நீ என் காலில் விழ வருவேன்னு எனக்கு தெரியும்' என்று கூறி அபியின் கோபத்தை உச்சத்திற்கு கொண்டுபோக...., பதிலுக்கு அபி என்ன சொன்னாள்..?

அது இனிமேல்தான் தெரியும்.

aanaa
21st August 2008, 06:08 PM
:ty: saradhaa

Shakthiprabha.
21st August 2008, 06:10 PM
dign

// oru naal :ty: icon pottu pottu thalai sutha poguthu aana kku :lol2:

I am just kidding :D
aana its actually so cute to watch u putting :ty: icon . //

dign 2

:shaking: my mother in law was saying aanandhi and kolangal may finish very soon (and that was in last nov, which she confirmed again this june...so both the serials are still running :roll: ?)

(atleast did aanandhi get over?)

:shaking:

just curiosity! srry guys carry on :thumbsup: :wave:

saradhaa_sn
21st August 2008, 06:56 PM
சக்தி,
அந்த தொடரின் பெயர் 'ஆனந்தி' அல்ல, 'ஆனந்தம்'.
அதுவும் இன்னும் முடியவில்லை (என்று நினைக்கிறேன், காரணம் அந்த நேரம் முக்கியமான நேரமாதலால் (அதாவது சாப்பாட்டு நேரம்) பார்ப்பதில்லை).

Shakthiprabha.
21st August 2008, 09:01 PM
oh ok thanks saradha :)

aanaa
22nd August 2008, 07:53 AM
dign

// oru naal :ty: icon pottu pottu thalai sutha poguthu aana kku :lol2:

I am just kidding :D
aana its actually so cute to watch u putting :ty: icon . //


just curiosity! srry guys carry on :thumbsup: :wave:

:ty:

just kidding

தலைச் சுற்றுக்கு மருந்து தரமாட்டீங்களா
என்ன ..



dign 2

:shaking: my mother in law was saying aanandhi and kolangal may finish very soon (and that was in last nov, which she confirmed again this june...so both the serials are still running :roll: ?)

(atleast did aanandhi get over?)

:shaking:
just curiosity! srry guys carry on :thumbsup: :wave:



anadham -- :bangcomp:

aanaa
22nd August 2008, 07:57 AM
கோலங்கள் - ஆனந்தி கொலை செய்யப் படப் போகின்றாள் :huh:

saradhaa_sn
22nd August 2008, 02:07 PM
கோலங்கள் - ஆனந்தி கொலை செய்யப் படப் போகின்றாள் :huh:
தன்னுடைய ப்ராஜக்டுக்காக தான் வாங்க இருந்த இடத்தை தனக்கு கிடைக்கவிடாமல் நிலத்தின் சொந்தக்கராரை மிரட்டியதாக மேனகா மீது அபி குற்றம் சாட்ட, அவளோ தான் அபியை தனக்கு நிகரான ஒரு எதிரியாகவே நினைக்கவில்லை என்று கூறி அபியை மேலும் கோபப்படுத்துகிறாள். மேனகாவின் செல்வாக்கும், பிஸினஸும் அமெரிக்காவிலும், லண்டனிலும் சரிந்து வருவதாகவும், அதனாலேயே அவள் இந்தியாவுக்கு தொழில் செய்வதாக பேர்பண்ணிக்கொண்டு ஓடி வந்துவிட்டதாகவும் கூறும் அபி, இனிமேலும் தன்னுடைய வழியில் குறுக்கிடவேண்டாம் என்றும், அதன் விளைவுகளை மேனகா எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்து விட்டு வெளியேறுகிறாள்.

உண்மையில் அபிக்கு இடம் கிடைக்காமல் செய்ய இடத்தின் சொந்தக்காரரை மிரட்டியது அபி அல்ல. ஆதித்யாதான். அதை அவனே கிரியிடம் த்னியாக சொல்கிறான். ஆணாதிக்க நோக்கம் கொண்ட ஆதியின் இலக்கு, மேனகா, அபினயா இருவரையுமே ஒழித்துக் கட்டுவதுதான் என்றும், அபியைக்கொல்ல அமெரிக்காவில் ஆளை ஏற்பாடு செய்ததும் மேனகா அல்ல, தான்தான் என்றும் கிரியிடம் சொல்கிறான்.

தேவராஜ பாண்டியனின் கடந்தகால அட்டூழியங்களைப்பற்றிய விவரங்களை சேகரித்திருக்கும் ஆனந்தி, அதை தன் உதவியாளரிடம் படித்துக்காட்ட, அவளது பத்திரிகை அலுவலகத்தின் இன்னொரு ஊழியர் அவற்றைகேட்டு முகம் மாற்றம் அடைகிறான். பின்னர் எழுந்து வெளியே போகிறான். அவன் எதிரிகளின் கையாள் என்று நமக்கு தெரிகிறது.

நெடுஞ்சாலையில் ஒரு உயர் போலீஸ் அதிகாரியை வரச்சொல்லி சந்திக்கும் தேவராஜ பாண்டியனிடம் அந்த் அதிகாரி, ஆனந்தி தன்னுடைய பத்திரிகையில் தேவராஜ பாண்டியனைப்பற்றியும், அவனுக்கு உடந்தையாக இருந்த தன்னைப்பற்றியும் எழுத இருப்பதைச்சொல்லி, அவளை அதை வெளியிடாமல் இருக்கச்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சொல்ல தேவராஜ பான்டியனின் முகம் கொடூரமாக மாறுகிறது.

(ஆனந்திக்கு வர இருக்கிறது ஆப்பு. அந்நேரம் அவளைக்காப்பாற்ற தோழர், அல்லது தொல்காப்பியன் வரக்கூடும். ஒருவேளை தொல்ஸ் வந்து காப்பாற்றும் பட்சத்தில் அவன்மேலுள்ள தப்பான எண்ணம் மாறக்கூடும். அல்லது 'ஆனா' சொன்னதுபோல, ஆனந்தி, இந்த தொடரைவிட்டே மறையக்கூடும். கற்பனைக்குதிரைக்கு கடிவாளம் ஏது..?. ஆனால், ஆனந்தி கொல்லப்பட்டால், கதையில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்படும் என்பது உண்மை).

gta129
23rd August 2008, 02:41 AM
Thanks a lot for the update, I really appreciate it.

aanaa
23rd August 2008, 08:10 AM
1. Narayanan - a worst charector, who utilised Abhi's sympathy to save his son and family.

2. Ranjani - konja naal aadiya aattaam enna?.

3. Ubendra - Finally he did his part well

4. Sivadoss's wife - just come & go

5. Manjula - a foolish charector (she knows there is poison in food, is it necessary she must eat it and prove?)

6. Rudhra - a pitiable charector, died in Cochin episode. just came as a lightning.

7. Maddy - the black mailer of Anjali

8. Arthy's father-in-law (K.Kannan) : not shown as dead, but actually died.

9. Sangeetha's dad: murdered by the cruel and greedy son-in-law Basker,

10. Saroja: killed by her brothers

11. Saroja's brother - killed by Dhilla
12. Saroja's brother- killed by Dhilla
13. Saroja's brother - died in hospital

14. Kanchana's mom - Adhi's grand mom, who knows the secrets apart from Eswaran, Maragatham & Thiruvengadam.

any more missing...???.





15. In kollimalai kaadu - an adiyal shot by the thalaivan

16. Inspector Pirabu
17. another guy together with the Inspector

18 : Anandhi's Mother-in-law
19: and Father-in-Law in accedent
donot know whether their daughter and husband also in the accident
if so 20 and 21




22. The guy that Saroja's brother shot in the godown...
23 ..... and Saroja's periyappa - killed by Adi's henchmen




24. Santhi

:bangcomp: :hammer:

25/26: மேனகாவின் பாதுகாவலர் 2

27 : பொதுமகன்்

2829 : காவல்துறையினர் 2

30. வேலைக்காரன்

31. ஆனந்தி
:notthatway:

:hammer: :bangcomp:

saradhaa_sn
23rd August 2008, 01:43 PM
உஷாவின் அழைப்பின்பேரில் அவள் வீட்டுக்கு தொல்காப்பியன் வருகிறான். உஷாவும் அவளது பெற்றோரும் அவனை மிகவும் மதிப்புடனும் மரியாதையுடனும், அதே சமயம் சற்று உரிமையுடனும் வரவேற்று உபசரிக்கின்றனர். ஆர்த்தியின் நயவஞ்சக நாடகத்தை அவர்கள் நம்பவில்லை என்பது ஆறுதலைத்தருகிறது. தொல்ஸ் கஷ்ட்டப்பட்டு உருவாக்கி கட்டிக்காத்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு உஷாவின் அப்பா ரொம்பவும் வருந்துகிறார். (எப்போ எந்த சீனில் பார்த்தாலும், அநியாயக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் கூடிப்பேசுவதைப்பார்த்து நொந்துபோன நமக்கு, நல்லவர்கள் ஒன்றுகூடிப் பேசுவது ஆறுதல் அளிக்கிறது).

பேச்சினூடே உஷா தொலஸைப்பார்த்து, நாம் ஏன் புதிய பிஸினஸ் ஆரம்பிக்கக் கூடாது? என்று கேட்க அதற்கு தொல்ஸ், நடந்தவைகளையெல்லாம் எண்ணிப்பார்க்கும்போது எந்த ஒரு தொழிலிலும் நாட்டமோ, விருப்பமோ இல்லையென்றும், எதற்காக யாருக்காக இதைச்செய்ய வேண்டும் என்ற விரக்தியே மேலோங்கி வருவதாக சொல்ல, அதை உஷா மறுக்கிறாள். நமக்குள் இருக்கும் திறமைகளை பயன்படுத்தாமல் இருப்பது சரியல்ல என்றும், இருவரும் சேர்ந்து தங்களுக்கு தெரிந்த 'கட்டுமான தொழிலை'யே துவக்கலாம் என்றும் சொல்ல, அதற்கு தாமும் சப்போர்ட் செய்வதாக அவள் அப்பாவும் சொல்ல, தொல்ஸ் அரை மனதுடன் சம்மதிக்கிறான்.

தேவராஜ பாண்டியனில் இருப்பிடத்தில் ஆனந்தியைக்கொல்ல சதித்திட்டம் நடக்கிறது. அதற்கு அவர்கள் ஆதியின் ஒப்புதலை எதிர்பார்த்திருக்க, அங்கு வரும் ஆதியும் தே.பா.வும் தனியறையில் ஆலோசிக்கின்றனர். (என்ன பேசினார்கள் என்பது காட்டப்படவில்லை). முடிவில் வெளியே வரும் ஆதி அவள் கதையை முடித்து விடுமாறு கூறி வெளியேறுகிறான். (அக்கா என்று தெரிந்தும் அபியைக்கொல்ல துணிந்தவன், சொந்த தம்பியான அர்ஜுனை பைத்தியமாக்கத் துணிந்தவனிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?). உடனே தே.பா., தன் கையாளிடம் தங்களுடைய 'கொலை எக்ஸ்பெர்ட்'டுக்கு போன் போட்டு அவனை அழைக்கச் சொல்கிறான்.

பஸ் நிறுத்தத்தில் ஆனந்தி அட்டோவுக்கு கைகாட்டி ஏறிச்செல்ல, அதை ஒரு லாரி பின் தொடர்கிறது. ஆட்டோவும் லாரியும் போய்க்கொண்.........டே இருக்கின்றன, இடையில் இரண்டும் நடுவே ஒரு வெள்ளை அம்பாஸிடர் கார் புகுந்து விட, 'ஒட்டுனர்-கம்-மர்டரருக்கு' ஆத்திரம். ஆனந்தி எப்படியும் தப்பி விடுவாள் என்று நாம் எதிர்பார்க்கும் நேரம், அம்பாஸிடர் கார் முந்தி விட, கொலைகாரனுக்கு லைன் கிளியர். ஆனந்தியைக்கொல்வதுதானே நோக்கம், அப்படியிருக்க அப்பாவி ஆட்டோக்காரனையும் சேர்த்து ஏன் கொல்ல வேண்டும் (அப்புறம், 'ஆனா' தயாரிக்கும் 'இறந்தவர்கள் பட்டியல்' நீண்டு விடும்) என்று திருச்செல்வம் (தொல்ஸ்) நினைத்தாரோ என்னவோ, ஆனந்தி ஆட்டோவை விட்டு இறங்கி சாலையோரம் நடந்துபோக, பின்னால் வந்த லாரி அவளை ஒரே தட்டாக தட்டி வீசியெறிந்துவிட்டுபோக, இப்போது ரத்த வெள்ளத்தில் ஆனந்தி (இந்த தொடரில் எல்லோரும் விரும்பக்கூடிய ஒரே பெண் கேரக்டர்).

ஆனந்தி இறந்து விட்டாளா?. அல்லது இன்னும் உயிர் இருக்கிறதா?. அங்கு வந்த யாரேனும் அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிழைக்க வைப்பார்களா?. அவளும் சில நாள் கோமாவில் இருக்க நேரிடுமா?. தெரிய இரண்டு நாட்களாகும்.

ஆனந்தியைக் கொன்று விட்டால் அது பெரிய கொடுமை. அநியாயக்காரிகளான காஞ்சனா, அலமேலு, கலா, ஆர்த்தி, ரேகா என்று அனைவரும் உயிரோடு இருக்க, நியாயத்துக்காகப் போராடும் ஒரே பெண்ணான ஆனந்தியைக் கொன்று விட்டால், (நாம் முன்னரே சொன்னபடி), கதையில் மிகப்பெரிய தொய்வு ஏற்படும்.

aanaa
24th August 2008, 08:05 PM
(எப்போ எந்த சீனில் பார்த்தாலும், அநியாயக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் கூடிப்பேசுவதைப்பார்த்து நொந்துபோன நமக்கு, நல்லவர்கள் ஒன்றுகூடிப் பேசுவது ஆறுதல் அளிக்கிறது).
:exactly:



ஆனந்தியைக் கொன்று விட்டால் அது பெரிய கொடுமை. அநியாயக்காரிகளான காஞ்சனா, அலமேலு, கலா, ஆர்த்தி, ரேகா என்று அனைவரும் உயிரோடு இருக்க, நியாயத்துக்காகப் போராடும் ஒரே பெண்ணான ஆனந்தியைக் கொன்று விட்டால், (நாம் முன்னரே சொன்னபடி), கதையில் மிகப்பெரிய தொய்வு ஏற்படும்.
சரியாக்ச் சொன்னீர்கள்

மீண்டும்
:ty:

saradhaa_sn
26th August 2008, 01:54 PM
ஆனந்தி சாகவில்லை...

இன்றைய எபிசோடின் துவக்கத்திலேயே, ஆம்புலன்ஸ் வேனில் ஆனந்தியைக் கொண்டு வந்து ஆஸ்பத்திரியில் இறக்குவதைத்தான் காண்பித்தனர். யார் தகவல் சொன்னது போன்ற வள வளாக்கள் இல்லை. கூடவே போலீஸும் வருகிறது. (வழக்கம்போல) ஐ.ஸி.யு.வில் அனுமதித்து சிகிச்சையளிக்கின்றனர்.

பின்னர் காரில் அபியும் கிருஷ்ணனும் வந்திறங்குகின்றனர். ஆஸ்பத்திரியின் உள்ளே சென்று நிலவரம் அறிய முயற்சிக்கின்றனர். 'சீரியஸ் நிலையில் இருக்கிறாள்' என்ற விவரம் மட்டுமே தரப்படுகிறது. ஐ.ஸி.யு. வாசலில் போலீஸ் நின்று குடும்பத்தார் தவிர யாரையும் அனுமதிக்கவில்லை. ஆட்டோவில் கற்பகமும் ராஜேந்திரனும் வந்திறங்குகின்றனர். கற்பகம் (வழக்கம்போல) அழுகையும் கண்ணீருமாக, அபி (வழக்கம்போல) 'அழாதேம்மா, ஆனந்திக்கு ஒண்ணும் ஆகாது' என்ற ரெடிமேட் வசனத்தை திரும்ப திரும்ப சொல்கிறாள்.

ஒரு காரில் தோழரும், தோழர்களும் வந்திறங்கி கோஷமிட்டுக்கொண்டே நுழைய போலீஸ் அவர்களைத்தடுத்து, அபியின் வேண்டுகோளின்படி தோழரை மட்டும் அனுமதிக்கின்றனர். தோழர் (வழக்கம்போல) புரட்சி வசனங்களைப்பேசுகிறார். 'இரும்பு பெண்ணான ஆனந்திக்கு ஒண்ணும் ஆகாது' என்கிறார். கற்பகமோ 'இவளுக்கு இதெல்லாம் தேவையா?. ஒழுங்கா கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டு குடும்பம் குழந்தைகள்னு இருந்தால் இதெல்லாம் வருமா?' என்று அழுகிறாள். (ஒரு தாயின் மனது அப்படித்தான் நினைக்கும்).

அடுத்த காரில் மனோ வந்திறங்கி, ஆனந்திக்கு நேர்ந்த விபத்தைப்பற்றி விசாரிக்க, அடுத்த காரில் ஆர்த்தியும் ராஜேஷும் வந்திறங்குகின்றனர். போதக்குறைக்கு கிரியும் அங்கு வேவு பார்க்க வந்து, மறைந்து நின்று நடப்பவைகளைக் கவனிக்கிறான்.

போலீஸ், இது தற்செயலாக நடந்த விபத்து என்று கூறி கேஸை மூடி மறைக்க முயற்சி செய்ய, தோழரோ இது மேனகா, ஆதி, தேவராஜ் பாண்டியனின் ஆகியோரின் சதி என்று போலீஸிடம் வாதாடுகிறார்.

நேற்றைய எபிசோட் முழுதும் ஆஸ்பத்திரியில்தான்...

Arthi
26th August 2008, 08:52 PM
:ty: Saradha madam
vazhampOla ungal nadai :clap:
especially anandhi's accident in Red font :clap:

saradhaa_sn
27th August 2008, 02:09 PM
நன்றி ஆர்த்தி.....

ஆதி, திருவேங்கடம், தேவராஜ் பாண்டியன் அடங்கிய சதிகாரக் கூட்டம், வேவு பார்க்கப்போன கிரியின் வரவை எதிர்பார்த்திருக்கிறது. இதனிடையே திருவேங்கடம் (வழக்கம்போல) கண்டதை உளறி இருவரிடமும் வாங்கிக்கட்டிக்கொள்ள, அந்நேரம் அங்கு வரும் கிரி, மருத்துவமனை நடப்புகளைச் சொல்கிறான். ஆனந்தி உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதையும், இன்ஸ்பெக்டரிடம் தோழர் 'இது இவர்களின் சதிதான்' என்று தெரிவித்ததையும் சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்த, கவலையடைந்திருக்கும் ஆதிக்கு தே.பா. தெம்பூட்டும் விதமாகப் பேசுகிறார். ஆனந்தி பிழைத்து எழுந்துவிட்டால், தங்களுக்கு ஆபத்து என ஆதி புலம்ப... அவர்கள் கலைகின்றனர். (இந்த கொலைச்சதியில் மேனகாவின் பங்கு இல்லையென்பது தெரிகிறது. ஆனால் ஆனந்தி, தோழர், அபி ஆகியோர் மத்தியில் 'இது மேனகாவின் ஏற்பாடுதான்' என்ற ரீதியில் வதந்திகளைப் பரப்பிவிட்டனர்).

மருத்துவமனையில் கற்பகத்தின் அழுகை எல்லைமீறிப்போய் நம்மை ரொம்பவே சோதிக்கிறது. (நமக்குதான் தெரியுமே, இந்த அம்மா ஒண்ணுமில்லாததுக்கே ரொம்ப அழுவாங்க. இப்போ கேட்கணுமா?). ஆனந்திக்கு ஆபரேஷன் செய்ய ரத்தம் தேவைப்பட, அப்போதுதான் அபி ஆர்த்தியையும் மனோவையும் தேடுகிறாள். அவர்கள ஏதோ கடமைக்கு பார்க்க வந்தோம் என்று எப்பவோ இடத்தைக்காலி செய்து விட்டனர். தோழர் பாலகிருஷ்ணனும், மற்ற தோழர்களும் ஆர்வமாக ரத்தம் கொடுக்க முன்வந்ததைப் பார்த்து கற்பகம் முதல் முறையாக அவர்களைப்பார்த்து நெகிழ்ந்து போகிறாள். இதனிடையே அபியை தோழர் தனியே அழைத்து 'இதெல்லாம் மேனகாவின் சதி' என்று சொல்லி வைக்கிறார். அபி மனதில் ஆனந்திக்கும் மேனகாவுக்கும் இடையே நடந்த முந்தைய மோதல் சம்பவங்கள் நினைவில் வந்து போகின்றன. விடிய விடிய ஆபரேஷன் நடக்கிறது. அபியும் அம்மாவும் ராஜேந்திரனும் தோழர்களும், கிருஷ்ணனும் கூட மருத்துவமனையிலேயே அம்ர்ந்திருக்கின்றனர். அதிகாலை ஆபரேஷன் முடிந்து, ஆனந்தி அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக தலைமை மருத்துவர் தெரிவிக்க எல்லோர் மனதிலும் நிம்மதி. முகத்தில் சிறிது சந்தோஷம். தோழர் தன் சக தோழர்களுக்கு நன்றி சொல்லி அனுப்பிவைக்கிறார்.

அம்மா, மருத்துவமனைக்குப் பக்கத்திலிருக்கும் கோயிலுக்குப்போய் வருவதாகச் சொல்லி ராஜேந்திரனையும் உடன் அழைத்துப்போக, தோழரையும் கிருஷ்ணனனையும் மருத்துவமனையில் இருக்கச்சொல்லிவிட்டு (வழக்கமாக இம்மாதிரி நேரங்களில் உடனிருந்து ஓடியாடும் ஒருவர் மிஸ்ஸிங்.. அது தொல்காப்பியன். ஆனால் இப்போது கேமராவுக்குப்பின்னால் அவர்தானே நின்றிருப்பார்..!) அபி மேனகாவைப்பார்க்க விரைகிறாள்.

அவள் என்ன சொல்லப்போகிறாள்... 'அபி உனக்கென்ன பைத்தியமா?. இந்த விபத்துக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?' என்று (ஆனந்தியைக்கொலை செய்யா விட்டாலும்) தமிழைக்கொலை செய்யப்போகிறாள்... பார்ப்போம்.

Arthi
27th August 2008, 02:24 PM
aamaam... paarpOm :D
in kOlangal, we can predict most of the dialogs...
Thiruselvam kavanipaaraa? :roll:

gta129
29th August 2008, 10:10 AM
aamaam... paarpOm :D
in kOlangal, we can predict most of the dialogs...
Thiruselvam kavanipaaraa? :roll:

Thats true :lol: .

saradhaa_sn
30th August 2008, 11:47 AM
இரண்டு நாட்களாக என்னுடைய சிஸ்டத்தில் நெட்வ்ர்க் வேலை செய்யவில்லை. அதனால், தொலைக்காட்சியில் பார்த்ததை உடனுக்குடன் இங்கு போஸ்ட் பண்ன முடியவில்லை.... Better late than never... (எனக்கும் பழமொழியெல்லாம் தெரியுமாக்கும்).

மேனகாவை சந்திக்கபோன இடத்தில், நாம் எதிர்பார்த்ததுபோலவே மேனகா வசனம் பேச துவங்க, அவளைப்பேச விடாமல் அபி, அவள்மீது குற்றங்களை சுமத்தி எச்சரிக்கிறாள். மேனகா அஞ்சுவதாக இல்லை. தான் நினைத்தால் ஆனந்தியை ஒரு மூட்டைப்பூசியைபோல நசுக்கி எறிந்துவிடுவேன். ஆனால் தன் அதை விரும்பவில்லை என்று கூறுவதுடன், இப்போது கூட தான் நினைத்தால் அபி இந்த இடத்தை விட்டு நகரமுடியாமல் செய்யமுடியும் என்று பதிலுக்கு சவால் விட, கோபத்தின் எல்லைக்குப்போன அபி, 'இதோ பார் மேனகா, நீ இந்த அபியின் சாந்தமான முகத்தைத்தான் பார்த்திருக்கே, இன்னொருபக்கத்தைப்பார்த்தால் உன்னால் சமாளிக்க முடியாது' என்று ('படையம்மா'வாக மாறி) சவால் விட்டுப்போகிறாள். மேனகாவுக்கே தெரியாமல் ஆதி செய்த சதியால் இப்போது இரண்டு 'பிஸினஸ் உமன்களும்' நேருக்கு நேர் மல்லுக்கு நிற்கத்துவங்கி விட்டனர். (இடையில் கொஞ்ச காலம் தொய்ந்து போயிருந்த ஆதி, இப்போதுதான் மீண்டும் எம்.என்.நம்பியாரின் வாரிசாகியிருக்கிறான்)

பாஸ்கரின் ஆடிட்டர், அவனுக்கும் அவன் மனைவி சங்கீதாவுக்கும் இடையே உள்ள சுமுகமான உறவைப்பற்றி விசாரிக்கிறார். காரணம், எப்பவோ அவள் அப்பாவுடைய தாத்தா தொன்னூற்று ஒன்பது வருடம் குத்தகைக்கு விட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலம் இப்போது குத்தகை முடிந்து விட்டது என்றும், மற்றவர்கள் அபகரிக்கும் முன் கோர்ர்ட்டில் கேஸ் போட்டு பெற்றுவிடலாம் என்றும் அதற்கு சங்கீதாவின் ஒப்புதல் வேண்டும் என்றும் சொல்ல, 'பணப்பேய்' பாஸ்கரின் மனம் கணக்குப் போடத்துவங்குகிறது.

ஆனந்தி கண்விழித்து விட்டாள். அம்மா, அபி, ராஜேந்திரன், ஆர்த்தி ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போது கார்த்திக் வருகிறான். அவனைத்தனியே அழைத்துச்செல்லும் அபி, ஆனந்தியின் இந்த நிலைக்குக் காரணம், கார்த்திக்கின் பாஸ் மேனகாதான் என்று கூற, கார்த்திக் கோபத்துடன் அங்கிருந்து செல்கிறான்.

மேனகாவின் வீடு கம் ஆஃபீஸ். கோபமாக வரும் கார்த்திக், முன்னர் அபி சொன்ன குற்றச்சாட்டையே மிண்டும் சொல்கிறான். ஆனந்தி எல்லோரைப்பற்றியும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதுவதால் அவளுக்கு எதிரிகள் அதிகம் என்றும் அவர்களில் யாரோ ஒருவர் இதை செய்திருக்கக் கூடும் என்றும் மேனகா கூற ஆதியும் அதை ஆமோதிக்கிறான். தன்னுடைய இந்த மறுவாழ்வுக்கே காரணம் ஆனந்திதான் என்றும், அவளை அழிக்க நினைப்பவர்களிடம் இனியும் வேலை செய்ய விரும்பவில்லையென்றும் தன் வேலையை ராஜினாமா செய்வதாகவும் சொல்ல, தங்கள் கம்பெனி ரகசியங்களை முற்றிலுமாக தெரிந்த ஒருவனை தாங்கள் வெளியே விட முடியாதென்று மேனகா மறுக்கிறாள். கம்பெனி ரகசியங்களை வெளியிடும் அளவுக்கு தான் கீழிறங்க மாட்டேன் என்று கார்த்திக் சத்தியம் செய்ய, அவனிடம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு பொறுப்புகளில் இருந்து விடுவிக்கிறாள்.

வின்சென்ட் தன் வீட்டிலிருந்து வெளியே போகும் நேரம், விவேக்கும், அவனது பாஸும் சித்ரா வீட்டுக்கு வருகின்றனர். ஆனால் அவர்கள் வின்சென்ட்டைப்பார்க்கவில்லை. சித்ராவிடம் பேசும் பாஸ், தொல்காப்பியனிடம் அவள் தொடர்ந்து பழகி, அவனது நடவடிக்கைகளையும், யாரெல்லாம் அவனைத் தொடர்கிறார்கள் என்பதையும் அறிந்து சொல்லுமாறு கூறுகிறார்.

மனைவி சங்கீதாவைச் சந்திக்கும் பாஸ்கர், தன்னுடைய பிஸினெஸ் டென்ஷனால் அவளிடம் சற்று முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக கூறி, அதற்காக வருந்துவதாகவும் தன்னை மன்னிக்கும்படியும் கேட்கிறான். (அவளைக்கொண்டு காரியம் ஆகணுமே). ஆனால் அவன் தன் மனைவிடம் கெஞ்சுவதற்கும் மன்னிப்புக் கேட்பதற்கும் காரணம் அறியாத அலமேலு, பாஸ்கரைக் கண்டிக்க, அவளை தன் மனைவி எதிரிலேயே கோபமாகப் பேசி விரட்டுகிறான். சங்கீதாவின் மனம் மாறுவதுபோல தெரிகிறது. (அவள் மனம் மாறினால் அவளைப்போல முட்டாள் இல்லையென்று சொல்லலாம்).

சாரதா, திருவேங்கடத்திடம், ஆனந்தியைக்கொல்ல நடந்த முயற்சியில் அவரது பங்கும் இருக்கிறது என்று குற்றம் சாட்ட, அவர் மறுக்கிறார். தன் அண்ணன் மகளை தானே கொல்ல நினைப்பேனா என்று சொல்லும் அவர், ஆனால் ஆனந்தி போன்ற திமிரான பெண்களுக்கு இந்த தண்டனை தேவைதான் என்கிறார். தன்னைக்கேட்காமல் ஆனந்திப்பார்க்க சாரதா போனதற்கு கண்டிக்கிறார்.

ஆனந்தியுடன் மருத்துவமனையில் இருக்கும் கார்த்திக், அவளுக்கு காலை உணவு ஊட்டிக்கொண்டிருக்க, அப்போது அங்கே நுழையும் அபியும் அம்மாவும் அதைப்பார்த்து சந்தோஷத்துடன் வெளியே வருகின்றனர். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அறைக்கு வெளியே வரும் கார்த்திக் அவர்களைப்பார்த்து, தான் ஆனந்தியைக்கவனித்துக்கொள்வதாகவும், அபியை அலுவலகம் செல்லும்படியும், அம்மாவை வீட்டுக்குப்போய் ஓய்வெடுக்கும்படியும் கூறி அனுப்பி வைக்கிறான்.

saradhaa_sn
4th September 2008, 03:50 PM
மேனகாவின் இருப்பிடத்துக்கு தன் நண்பரொருவருடன் திடீரென்று வருகிறார் மேனகாவின் அப்பா ராஜவர்மன் (இதற்கு முன் இவரைக்காட்டவில்லையென்று நினைவு. போட்டோவில் மட்டும் காண்பித்திருக்கிறார்கள்). மேனகாவுக்கு நேர்ந்த கொலைமுயற்சிகளைப்பற்றி ரொம்பவும் கவலையாகக்கேட்கிறார். உடன் வந்த நண்பர், மேனகாவுக்கு நேர்ந்த, நேரப்போகும் ஆபத்துகள் விலக ஒரு ஓமப்பூஜை செய்யவெண்டும் என்கிறார். மேனகாவுக்கு இதில் நாட்டமில்லாவிட்டாலும் தந்தையின் வற்புறுத்தலுக்காக சம்மதிக்கிறாள்.

சங்கீதாவை ஏமாற்ற, தன் அறையில் தானே தனக்குள் பேசிக்கொள்வதுபோல பாஸ்கர் சங்கீதாவைப்பற்றி ரொம்ப உய்ர்வாகப் பேச, கதவுக்கு வெளியே நின்று சங்கீதா அனைத்தையும் கேட்கிறாள். அவள் மனம் சலனமடைவது போல தோன்றுகிறது (பாஸ்கரின் பிளான் அதுதானே).

பிராமணர் வேடத்தில் வின்சென்ட் தங்கியிருக்கும் இடத்துக்கு வரும் ஒரு ஐயர், மேனகா வீட்டு ஓமப்பூஜைக்கு ஒரு ஐயர் குறைவதாகவும் அதனால் அவரை அழைக்க வந்ததாகவும் கூற, நெற்றியில் பட்டை போட்டிருக்கும் வின்சென்ட்டும் சம்மதிக்கிறார். அதுவரை அவரை ஐயங்கார் என்று நினைத்திருந்த வீட்டின் சொந்தக்காரருக்கு அதிர்ச்சி, கூடவே சந்தேகம். மேனகாவைக்கொல்ல நல்ல வாய்ப்பு வந்ததென்று வின்சென்ட்டுக்கு மகிழ்ச்சி.

தொல்காப்பியன் வீட்டுக்கு வரும் சித்ரா, அவன் சதா பிரட்டைத்தின்று கொண்டிருப்பதைக் குறைகூறி, அன்று தான் சமைப்பதாகக் கூறி, சில பொருட்கள வாங்கி வர தொல்ஸை வெளியே அனுப்புகிறாள். அவன் சென்றதும், அவனுடைடைய பழைய டிரங்க் பெட்டியை சோதனையிட்டு, அதில் இருந்து ஒரு சர்டிபிகேட்டை எடுத்துப்பார்க்க அவளுக்கு அதிர்ச்சி. அது தொல்ஸ், சிறுவர்களுக்கான ஜெயிலில் இருந்ததற்கான சான்றிதழ். அவனறியாமல் எடுத்து தன் பையில் வைத்துக்கொள்கிறாள். திரும்பி வரும் தொல்ஸ், சாப்பிட்டுவிட்டு அவளோடு பேசிக்கொண்டு இருக்கும்போது, அறையின் உள்ளே டிரங்க் பெட்டி விழும் சத்தம் கேட்டு ஓடிப்போய் சிதறிக்கிடக்கும் பொருட்களை சேகரித்து பெட்டியில் வைக்கும்போது ஏதோ ஒன்றைக்காணாமல் தேட, அது தான் எடுத்து ஒளித்து வைத்திருக்கும் சான்றிதழதான் என்றறியும் சித்ரா, அவனுக்கு தெரியாமல் கீழேபோட்டுவிட்டு, அவனிடம் காண்பிக்க தொல்ஸுக்கு அப்போதுதான் நிம்மதி. (ஆக ஃபிளாஷ்பேக் ரொம்ப இருக்கும்போல தெரிகிறது).

பாஸ்கர்தான் தன் தந்தையைக்கொலை செய்தான் என்று தன்னிடம் சொன்ன அறிவழகனைப்பார்க்க அவன் வீட்டுக்குப்போக, வீடு பூட்டியிருக்கிறது, வீட்டு ஓனரிடம் விசாரிக்க, அவரோ அவன் சுத்த ஃபிராடு, ஏமாற்றுக்காரன் என்று வசைமாரி பொழிகிறார். குழம்பி நிற்கும் அவளை மேலும் குழப்ப, பாஸ்கரின் குவாரி ஆள் ஒருத்தன் வந்து அறிவழகனைப்பற்றி மேலும் மோசமாகவும், பாஸ்கரை ரொம நல்லவனாகவும் உயர்த்திப்பேச அவள் மனம் மாறுகிறது. (இதெல்லாம் பாஸ்கரின் செட்டப் என்று சொல்லியா தெரிய வேண்டும்?).

மேனகா வீட்டுக்கு ஓமப்பூஜைக்குப் போன ஐயர்களை செக்யூரிட்டிகள் செக் பண்ண அவர்கள் ஆட்சேபம் தெரிவித்து, தங்களை செக்பண்ணுவதாயிருந்தால் தாங்கள் திரும்பிப்போய்விடுவோம் எனவும் கூற, சோதனையில்லாமல் அவர்கள் என்ட்ரி ஆகின்றனர். மாடியில் பூஜை நடக்கும் இடத்துக்கு வின்சென்ட் செல்கின்றான். இப்போது எப்படி, எந்தரூபத்தில் தொல்ஸ் வந்து மேனகாவைக் காப்பாற்றப்போகிறான் என்று பார்ப்போம்..

saradhaa_sn
5th September 2008, 01:56 PM
புதனன்று விநாயக சதுர்த்தியை முன்னிட்டு சீரியல்களுக்கு விடுமுறை. சன் டி.வி.யில் அந்நேரத்தில் அடுத்தடுத்து 'நான் அவனில்லை', 'தாமிரபரணி' என இரண்டு திரைப்படங்கள் காண்பித்தனர். பெண்களுக்கு சங்கடம் (பல சீரியல்களில் அந்தரத்தில் நின்ற கதாநாயகிகள் என்ன ஆனார்களோ என்று). ஆனால் ஆண்களுக்கு கொண்டாட்டம் (காரணம் அடுத்தடுத்து திரைப்படங்கள்). எனக்கு சீரியல்களைவிட திரைப்படங்கள் மீது நாட்டம் அதிகமாதலால், அன்று ஒருநாள் மட்டும் ஆண்கள் பக்கம் சேர்ந்துகொண்டேன். சரி, 'கோலங்களில்' நேற்று என்ன நடந்தது...?

என்னடா ரொம்ப நாளாக கற்பகம் ஜோதிடர், மந்திரவாதி என்று போகவில்லையே என்று பார்த்தேன். நேற்று ஒரு ஜோதிடரிடம் போய்விட்டார். ஆனந்தியின் ஜாதகத்தைக் கொண்டுபோய் காட்ட, அந்த ஜோசியரோ 'ஆனந்தி ரொம்ப தைரியமான பெண்ணென்றும், வீரமான குணமுடையவள் என்றும், எதையும் தைரியமாக செய்வதால் அவளுக்கு எதிரிகள் அதிகம் புறப்படுவார்கள் என்றும்' (நமக்கு தெரிந்த விஷயங்களையே) சொல்கிறார். அம்மாவோ அவளது வழக்கப்படி ஆனந்தியின் கல்யாணம் குழந்தைகள் என்று விசாரிக்க அதற்கு அவர் நேரடியாக எதுவும் சொல்லாமல், வாலாஜாபாத் அருகிலுள்ள எதோ ஒரு கோயிலுக்கு (என்னவோ பெயர் சொன்னார்) போய் பிரார்த்தனை செய்யுமாறு சொல்கிறார். கற்பகமும், அவளது ஒட்டுவால் ராஜேந்திரனும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.

மேனகாவின் வீட்டில், ஓமப்பூஜை நடக்கிறது. அப்பாவின் கட்டாயத்தால் வேண்டாவெறுப்பாக மேனகா அங்கு வந்து உட்கார்திருக்கிறாள். (அவள் தரையில் அம்ர்ந்து இப்போதுதான் பார்க்கிறோம், முழங்காலைக்கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பது ரொம்ப அழகு). மற்ற ஐயர்கள் மந்திரம் சொல்லும்போது, போலி ஐயர் வின்சென்ட் சும்மா வாசைத்துக்கொண்டும், சில நேரங்களில் சும்மாவும் இருக்கிறான். அவன் முகம் மேனகாவையே நோக்குகிறது. இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து மஞ்சள் பையில் மறைத்து வைத்து, பையுடன் எடுத்து மேனகாவை குறிபார்க்கும் நேரம், தலைமை ஐயர், இவர் வெறுமனே வாயசைத்துக்கொண்டு இருப்பதையும் சிலநேரங்களில் சும்மா இருப்பதையும் கண்டு, சட்டென மந்திரங்களை நிறுத்தி விட்டு விசாரிக்க, இவனோ தன் வீட்டில் ஒரு துக்கம் நேர்ந்திருப்பதால் தன்னால் மந்திரம் சொல்ல முடியவில்லையென்று சொல்ல, மற்ற ஐயர்கள் சேர்ந்து அவரை அங்கிருந்து விரட்டுகின்றனர். மேனகாவின் அப்பா, வின்சென்ட்டுக்கு தட்சனை கொடுத்து அனுப்ப, அவனோ படியிறங்கிப்போகும் வரை மேனகாவையே பார்த்துக்கொண்டு போகிறான். (ஆனால் போகும்போது கையில் மஞ்சள் பை இல்லை). அவன் போனதும், மேனகாவுக்கு அவன் முகம் ஸ்ட்ரைக் ஆகிறது. முன்னொருமுறை பிரஸ்மீட்டில், பத்திரிக்கையாளர் நாராயணன் குட்டியாக வந்தவன் இவனே என்று புலன் தட்ட, செக்யூரிட்டிகளுடன் ஓடிப்போய்ப் பார்க்க, வின்சென்ட் போய் விட்டான். (அவ்வளவு சீக்கிறம் போயிருக்க முடியுமா என்ன?. செக்யூரிட்டிகளைவிட்டு அக்கம்பக்கம் தேடியிருக்கலாமே). பின்னர் மேனகா ஒன்றும் நடக்காததுபோல வந்து பூஜையில் அமர்கிறாள்.

தன் பாஸையும் விவேக்கையும் கடற்கரைக்கு வரச்சொன்ன சித்ரா, அவர்கள் வந்ததும் தொல்காப்பியன் சிறுவர் ஜெயிலில் இருந்ததற்கான சான்றிதழை தான் பார்க்க நேர்ந்ததையும், அவன் வீட்டில் நடந்தவற்றையும் விவரிக்கிறாள். அதிலிருந்த மலையாள எழுத்துக்களை அவள் படம்போல் வரைந்துகாட்ட, விவேக் அதைப்படித்து அது திருவனந்தபுரம் என்று சொல்ல, அங்குபோய் சிறுவர் ஜெயிலில் போய் விசாரிக்கலாம் என்று பாஸ் சொல்கிறார்.... (ஆக விரைவில் திருவனந்தபுரத்தின் காட்சிகளை கேமரா கவர் பண்ணப்போகிறது. ஏற்கெனவே சிவதாஸிடம் கையெழுத்து வாங்கப்போனபோது கொச்சின் அழகைப்பார்த்தோம். ஆனால் அதில் கொஞ்ச நேரமே வந்து, உயிரை விட்ட 'ருத்ரா' நம மனதில் தங்கி விட்டாள்).

Madhu Sree
5th September 2008, 03:12 PM
Nice updates... thx saradha mam... :D

gta129
6th September 2008, 01:58 AM
Thank you for the update. I really appreciate it. :ty:

saradhaa_sn
9th September 2008, 07:02 PM
இரண்டு எபிசோட்களாக மேனகாவின் ஃப்ளாஷ்பேக்....

போலி ஐயராக வந்துவிட்டுப்போன வின்சென்ட்டைப்பார்த்தது முதல் அவளுக்கு ஒரு எண்ணம். இவன் நிச்சயம் கூலிக்காக கொலைசெய்ய வந்தவனாக இருக்காது. நிச்சயம் இவனுக்கும் தனக்கும் முன்னாளில் ஏதோவொரு விரோதம் இருந்திருக்க வேண்டும். அதற்காகவே தன்னை அவன் ஒழித்துக்கட்ட முழுமூச்சாய் அலைகின்றான் என்ற எண்ணம் அவள் நினைவில் வேரூன்ற, தன் தந்தை ராஜ வர்மனிடம் தன் கடந்த கால வாழ்க்கையைப்பற்றிக் கேட்க, அவரோ மேனகாவை தனக்கு பத்து வயதுப் பெண்ணாக தன் தந்தை மகேந்திரவர்மன் தன்னிடம் அழைத்துவந்து ஒப்படைத்ததில் இருந்துதான் தெரியும் எனக்கூறி அதற்கு முன் அவள் நடந்த சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவருமாறு கூற, மேனகாவின் சிந்தனை பின்னோக்கிப் பயணிக்கிறது.

வின்சென்ட்டின் தந்தை தாசய்யாவுக்கு தெரியாமல் செல்லாம்மாவை அழைத்துக்கொண்டு (இழுத்துக்கொண்டு) ஊரை விட்டு ஓடிய வெள்ளையன், சுமார் இரண்டு வயது கைக்குழந்தையுடன், தாடியும் மீசையுமாக படகில் இருந்து புதிய ஊரில் வந்திறங்குகிறான். இவன் நிலையைப்பார்த்து படகுக்காரன் காசு வேண்டாம் என்று சொல்ல, அந்த காசுக்கு குழந்தைக்கு பாலும் ரொட்டியும், தனக்கு சாராயமும் வாங்கிக்கொள்கிறான். கடல்தொழில் தெரிந்த அவனுக்கு வலை பின்னும் வேலை கிடைக்கிறது.....

(மீண்டும் மேனகாவின் சிந்தனை புதைந்த முகம் காண்பிக்கப்படுகிறது....)

இப்போது மேனகா என்கிற மீனு பத்து வயதுப்பெண்ணாக காண்பிக்கப்படுகிறாள். மகளை படிக்க அனுப்பாமல் வேலைக்கு அனுப்பி அவள் சம்பாதித்து வரும் பணத்தை சாராயம் குடித்தே அழிக்கும் தந்தை. காலை விழித்ததும் அவனுக்கு சாராயம் வேண்டும். கையில் காசில்லாமல் கடனுக்கு சாராயம் வாங்கப்போகும் மீனுவை நான்கு பொறுக்கிகள் பின்தொடர்ந்து வந்து பலாத்காரம் செய்ய முயல, அவளை மக்கள் சேவையில் ஈடுபட்டிக்கும் மகேந்திரவர்மன் காப்பாற்றி அவள் வீட்டுக்கு அழைத்து வர, வீட்டில் அவள் அனுபவிக்கும் சித்திரவதைகள் அவருக்கு தெரிய வருகிறது. அவளை பெரிய தொகைக்கு தத்தெடுத்த்க்கொள்வதாக வெள்ளையனிடம் சொல்ல அவன் சம்மதிக்கிறான். (மீனுவுக்கு தெரியாது).

(மீண்டும் மேனகாவின் கண்ணீர் ததும்பிய முகம் க்ளோசப்பில்....)

பெரியவரின் வீட்டுக்குச்சென்று இருபதாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு, மீனுவை தத்துக்கொடுக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறான். வரும் வழியில் தனக்கு சாராயமும், மகளுக்கு பூவும், புதிய துணிகளும், பிரியாணிப்பொட்டலமும் வாங்கி வரும் அவன், மறுநாள் மீனு பெரியவரின் வீட்டுக்கு தத்துப்பிள்ளையாகப் போகப்போகும் விஷயத்தைச்சொல்ல, அவள் மறுக்கிறாள். அவன் அடித்தாலும் துன்புறுத்தினாலும் தந்தையைவிட்டுப்போக மாட்டேன் என்று அழுதுகொண்டே தூங்கிப்போகிறாள். மறுநாள் காலையில் குப்புறப்படுத்துக்கிடக்கும் அப்பாவை எழுப்பியும் அவன் எழும்பாமல் இருக்க, புரட்டிப்பார்த்தால், வாயில் ரத்தம் வழிய இறந்துகிடக்கிறான் வெள்ளையன்.....

(நினைவுகளில் மூழ்கிப்போன மேனகாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது....)

பெரியவர் வீடு. பெரியவரின் மகன் இளமையான ராஜ வர்மன். அரண்மனை போன்ற அந்தவீட்டை அதிசயமாகப்பார்க்கும் அவளிடம் இனி அவள் பெயர் மேனகா என்றும், அவளை அமெரிக்கா அழைத்துச்சென்று படிக்க வைத்து பெரிய தொழிலதிபராக ஆக்க இருப்பதாகவும் சொல்ல, அவளுக்கோ தனக்கு தாயும் தந்தையுமாக இருக்கும் கடலை விட்டுப்போக மனமில்லை. அமெரிக்கா சென்றாலும் தன்னை கடற்கரை இருக்கும் ஊரில்தான் படிக்க வைக்க வேண்டும் என்று குழந்தைத்தனமாக கூறுகிறாள். (கள்ளம் கபடமில்லாத அந்த அப்பாவிப்பெண்ணை திருச்செல்வம் எங்கு கண்டெடுத்தார் என்று தெரியவில்லை).

(மீனுவையும் அவள் தந்தையையும் மட்டுமே காண்பித்தனர், செல்லம்மா இறந்துவிட்டதாக வசனத்தில் சொல்கின்றனர். ஆனால் அவர்களின் ஆண் வாரிசு (தொல்காப்பியன்) பற்றி எந்த விவரமும் சொல்லப்படவில்லை. அதாவது மேனகா நினைத்துப்பார்க்கும் ஃப்ளாஷ்பேக்கில் வரவில்லை. சின்னச்சின்ன விஷயங்களில் கூட கௌரவம் பார்க்கும் மேனகா, மீனவர் குப்பத்து விழாவில் மட்டும் பங்கேற்க சம்மதித்தது ஏன் என்று மெல்ல விளங்கத் துவங்குகிறது).

gta129
10th September 2008, 07:40 AM
Thank you for the update, Saradha mam.

priya_2008
10th September 2008, 01:15 PM
Thank you for the update, Saradha mam. :clap: :clap: :clap: :ty:

saradhaa_sn
10th September 2008, 02:07 PM
நன்றி கீதா... (உண்மையிலேயே உங்க பெயர் அதுதானா என்று தெரியவில்லை. ஆனால் சுருக்கெழுத்துக்களை வைத்துப்பார்க்கும்போது அதாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். இத்தனை நாள் உங்க போஸ்ட் படித்தும் இன்னும் உங்கள் பெயர் தெரிந்துகொள்ளாதது தவறுதான், ஸாரி).

ஊகும்... எவ்வளவு நினைத்து, நினைத்து பார்த்தும் கடந்த கால வாழ்க்கையில் தனக்கு தமிழ்நாட்டில் எதிரிகள் யார் என்பதை மேனகாவால் ஊகிக்கவே முடியவில்லை. இதனை தன் வளர்ப்புத்தந்தை ராஜவர்மனிடம் கூற, அவரோ மனதைப்போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம், நேரம் காலம் வரும்போது தானே விவரங்கள் தெரியவரும் என்று கூறுகிறார். மேனகா அவரிடம், தன்னை ஏற்கெனவே தொல்காப்பியன் என்பவர் சந்தித்து தன்னை அவருடைய தங்கை என்று சொன்னதாகக்கூற, அவரோ வசதியானவர்களிடம் சொந்தம் கொண்டாட சிலர் பொய்களைச்சொல்லிக்கொண்டு வரக்கூடும் என்று மறுக்கிறார். அப்படி ஒரு அண்ணன் இருந்ததாக தன் தந்தை தன்னிடம் சொல்லவில்லை என்றும் கூறுகிறார். ஆனால் தொல்காப்பியனைப்பார்த்தால் பணத்துக்காக அப்படி பொய் சொல்பவராகத் தெரியவில்லை என்றும், அவர் மூன்று முறை தன் உயிரைக் காப்பாறியதாகவும் மேனகா சொல்கிறாள்.

வழக்கம்போல இறுக்கமான முகத்துடன் கட்டிலில் அமர்ந்திருக்கும் சங்கீதாவிடம் பாஸ்கர் வந்து தன் 'நல்லவன்' நாடகத்தைத் தொடர்கிறான். தான் முன்னாளில் அவளிடம் கோப்பப்பட்டதற்கு ரொம்பவே வருந்துவதாகவும், தன்மேல் அவள் வைத்திருக்கும் தப்பான அபிப்பிராயமே தன்னுடைய நல்ல விஷயங்களை அவளிடம் இருந்து மறைக்கின்றன என்றும் சொல்வதோடு, அவளை மேலும் தன் வலையில் வீழ்த்தும் விதமாக அவனே அவளுக்கு சாப்பாடு கொண்டுவந்து ஊட்டுகிறான். அவள் மனம் ரொம்பவே அவன்பால் சலனமடையத் தொடங்கிவிட்டது. வெளியே நின்று இந்த கூத்துகளைக் கவனித்துக் கொண்டிருக்கும் அலமேலு (மகனின் கபட நாடம் தெரியாததால்) மகனின் மனமாற்றம் கண்டு வயிறு எரிகிறாள். (மகனின் நாடகம் தெரிந்தால், நடிப்பில் அவனையும் மிஞ்சும் விதமாக தன் மருமகள் மேல் கரிசனத்தைக்கொட்டிவிட மாட்டாளா).

மாடியிலிருந்து படியிறங்கி வரும் சித்ரா தன் வீட்டு ஓனர் மீண்டும் கீழ் போர்ஷனுக்கு 'டு லெட்' போர்டு மாட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு காரனம் விசாரிக்க, அவர் இதற்கு முன் குடியிருந்த ஐயர் (ஆகிய வின்சென்ட்) காலி செய்துவிட்டுப்போய் விட்டதாகச் சொல்வதோடு அவனுடைய முரண்பாடான செயல்பாடுகளைப் பற்றியும் சொல்கிறார். (தன்னை அழைத்துப்போன ஐயர்மூலமாக தன் இருப்பிடம் தெரிந்து தன்னை மேனகா பிடித்துவிடக்கூடும் என்று வின்சென்ட் ஓடி விட்டான்). அப்போது அங்கே வரும் சித்ராவின் பாஸ், தொல்காப்பியனின் சிறுவர் ஜெயில் வாழ்க்கை பற்றி விசாரிக்க அவளும் விவேக்கும் திருவனந்தபுரம் போகவேண்டியிருக்கும் என்று சொல்கிறார்.

சங்கீதா முற்றிலும் மாறிவிட்டாள். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்போக வேண்டும் என்று பாஸ்கரிடம் சொல்கிறாள். அவனும் உடனே கிளம்ப, அலமேலு தடுத்து சங்கீதா மட்டும் ஆஸ்பத்திரிக்குப்போகட்டும், நீ ஆஃபீஸுக்குப்போ என்று சொல்ல, அவன் இனிமேல் தன் மனைவிக்கும் குழந்தைக்கும் பிறகுதான் தனக்கு தொழில் பற்றிய சிந்தனையெல்லாம் என்று சொல்லி சங்கீதாவை மேலும் பிரைன்வாஷ் செய்யவும், அலமேலுவை திகைக்க வைக்கவும் செய்கிறான்.

(மேனகா தன்னை ஐயர் வேடத்தில் பார்த்துவிட்டதால், விசென்ட்டின் ஐயர் அவதாரமும் முடிந்துவிட்டது என்று நினைக்கத்தோன்றுகிறது. முதலில் வின்சென்ட், பின்னர் பத்திரிக்கையாளர் நாராயணன் குட்டி என்ற மலையாளி வேடம், பின்னர் சாமியார் வேடம், சாமியார் வேடத்தை மீனவர் குப்பத்து சம்பவத்தில் போலீஸார் பார்த்துவிட்டதால் பின்னர் முஸ்லீம் வேடம், அதன்பின்னர் ஐயர் வேடம். இப்போது அதையும் மேனகா பார்த்துவிட்டதால் அடுத்த வேடம் என்னவென்று தெரியவில்லை. நான் முன்னரே சொன்னபடி இவரும் எந்த சந்தடியும் இல்லாமல், இன்னொரு 'தசாவதாரம்' எடுத்துக்கொண்டிருக்கிறார். 'ப்ரியா' படத்தில் வில்லனாகவும், 'மூன்றாம் பிறை'யில் கொல்லுப்பட்டரைக்காரனாகவும் பார்த்த பிறகு இப்போதுதான் அதிகமாகப் பார்க்க முடிகிறது என்று நினைக்கிறேன்).

saradhaa_sn
10th September 2008, 02:27 PM
நன்றி ப்ரியா...... (உங்கள் அனைவரின் ஊக்கத்திற்கும்).

aanaa
10th September 2008, 05:05 PM
thanks Saradha

I am in Holiday for 5 weeks
Now in Germany

just peeped in

enjoy all

c y all later once back in Ottawa

saradhaa_sn
11th September 2008, 03:28 PM
Dear aanaa...

Have a nice trip and enjoy the holidays.

saradhaa_sn
11th September 2008, 03:51 PM
'கோலங்கள்' சீரியல் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது என்பதற்காக, ஏராளமாக விளம்பரங்களை ஒப்புக்கொண்டு, அந்த விளம்பரங்களுக்கு நடுவே கொஞ்சமே கொஞ்சமாக சீரியலை ஒளிபரப்புவதற்கு ஒரு முடிவு வந்தாக வேண்டும். சன் டி.வி.க்கு இவ்வளவு பேராசை கூடாது.....

நேற்றைய முதற்பகுதியை திருவேங்கடம் ஆக்ரமித்துக்கொண்டார். தேர்தல் நெருங்கி விட்டது போலும், ஏதோ இறுதிக்கட்ட பேச்சு அது இது என்று பேசிக்கொண்டார்கள். அவரது கைத்தடிகள் அவரை விட கேவலமான ஐடியாக்களைக் கொடுத்தனர். இவர்களது வம்படி வழக்கிலேயே முதற்பகுதி முடிந்தது...

ஆஸ்பத்திரியில் இருக்கும் ஆனந்தியைப்பார்க்க தொல்காப்பியன் வருகிறான். ஐ.சி.யு. வார்டின் கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது உள்ளே அபி, கற்பகம், ராஜேந்திரன் ஆகியோர் இருக்கின்றனர். உள்ளே நுழையத்தயங்கியபடி வேறு பக்கம் திரும்பி நிற்க, அப்போது வெளியில் வரும் ராஜேந்திரன், ஓசைப்படாமல் உள்ளே போய் அபிக்கு தெரியாமல் கற்பகத்தை மட்டும் வெளியே அழைத்து வருகிறான். வெளியே தொல்காப்பியன் நிற்பதைப்பார்த்து, அவன் வந்த காரணத்தைக்கேட்க, ஆனந்தியைக்காண வந்த விவரத்தைச்சொல்ல அவள் கோபமடைகிறாள். முன்பே தான் வர எண்ணியதாகவும், கூட்டம் அதிகமிருந்தால் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் தாமதமாக வந்ததாகவும் சொல்ல, கற்பகமோ, 'உன்னால் நாங்கள் பட்ட அவமானம் எல்லாம் போதாதா, இன்னும் ஏன் வந்து எங்களை இம்சிக்கிறாய்' என்கிற ரீதியில் பொரிந்து தள்ளி அங்கிருந்து அவனைப்போகுமாறு விரட்ட, மன வருத்ததுடன் தொல்ஸ் வெளியேறுகிறான்.

மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறும் நேரம் அங்கு ஆட்டோவில் வந்திறங்கும் உஷா தொல்ஸிடம் விவரம் கேட்க, நடந்ததைக் கூறுகிறான். அதைக்கேட்டு வருத்தமடையும் உஷா, தொல்ஸைப்போகுமாறு அனுப்பிவிட்டு ஐ.சி.யு.வார்டுக்கு செல்கிறாள். (அதென்ன, மற்றவர்களை பார்த்து பேசும் அளவுக்கு தேறியபின்னும், ஆனந்தியை இன்னும் ஐ.சி.யு.வில் வைத்துள்ளனர்?). உஷாவைப்பார்த்த அபிக்கு சிறிது சந்தோஷம் சிறிது ஆச்சர்யம். ஆனால் கற்பகம் அவளிடம் முகம் கொடுத்துப்பேசவில்லை. ஆனந்தியிடம் உடல் நலம் விசாரித்த பின்னர், அபியை தனியே வெளியே அழைத்துச்செல்கிறாள். சந்தேகப்பட்டு கற்பகமும் ராஜேந்திரனும் பின்தொடர்கின்றனர்.

அபியிடம் உஷா, சற்றுமுன் தொல்காப்பியன் ஆனந்தியைப்பார்க்க வந்து, அம்மாவிடம் அவமானப்பட்டு வெளியேறியதைச்சொல்ல அபிக்கு அதிர்ச்சி 'தொல்கப்பியன் வந்தாரா?'. ஆனந்தியப்பார்க்க வந்தவரை அம்மா விரட்டியடித்த விவரத்தை உஷா விலாவரியாகச் சொல்ல, இடையே அம்மா புகுந்து குறுக்கிட்டு உஷாவை அந்த தொல்காப்பியனுக்கு வக்காலத்து வாங்கவேண்டாமென்று கண்டிக்கிறாள். அன்றைக்கு ஆஃபீஸில் நடந்ததை ஆர்த்தி தன்னிடம் சொன்னதாகவும் சொல்கிறாள். (எந்த ஆர்த்தி சொன்னதை...?. தன் வீட்டு பூஜைக்கு அம்மாவை வருந்தி வருந்தி அழைத்து, அங்கே போன அம்மாவை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அப்படி முகத்தில் கரி பூசி அனுப்பிய அந்த ஆர்த்தி சொன்னதை). கற்பகம் ஒரு முட்டாள் கேரக்டர் என்று நான் அடிக்கடி சொல்லி வருவதை அந்த அம்மா மெய்ப்பித்துக்கொண்டே இருக்கிறாள். சாரதா சொல்வது பொய்யாகிவிடக்கூடாது என்பதில் அந்த அம்மாவுக்கு அவ்வளவு அக்கரை.

ஒருகட்டத்தில் கற்பகம் உஷாவை வாழாவெட்டி என்று சொல்லி அவள் மனதைப் புண்படுத்துகிறாள். தன்னுடைய புருஷன் இத்தனை நாள் எங்கேயிருந்தார், இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியாதவள், தன் மகள் அபி ஒரு வாழாவெட்டியாக இருந்து வருவதை உணராதவள், கல்யாண வயது கடந்தபின்னரும் தன் மகள் ஆனந்தி இன்னொரு வகையில் வாழாவெட்டியாக இருப்பதை நினைக்காதவள், தன் மகள் ஆர்த்தி பலகாலம் தன கணவனைப் பிரிந்து வாழாவெட்டியாக இருந்ததை மறந்தவள்..... உஷாவை வாழாவெட்டி என்று சொல்வது அதிசயமல்லவா?.

அபியின் வார்த்தைகளையும் மீறி, கற்பகம் உஷாவை விரட்டியடிக்க அவளும் வேதனையுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறுகிறாள்.

gta129
12th September 2008, 08:11 AM
Thanks for the update Saradha mam :ty: .

priya_2008
12th September 2008, 12:56 PM
Nice update sarada mam, felt as if saw the serial live. :clap: :ty:

saradhaa_sn
12th September 2008, 02:39 PM
தேர்தல் பிரச்சாரம் முடிந்து, இறுதிக்கட்ட வேலைகள் பற்றி தோழரும், தோழரின் தோழர்களும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சாரம் முடிந்துவிட்டபோதிலும் தோழர்கள் அசட்டையாக இருந்துவிடக்கூடாது எனவும், தேர்தலில் வெற்றிபெற திருவேங்கடம் கூட்டத்தார் எத்தகைய தில்லுமுல்லுகளிலும் ஈடுபடத்தயங்க மாட்டார்கள் என்றும், தேர்தல் முடிவு எப்படியிருந்தாலும் ஜனநாயக நெறிமுறைகள் தோற்றுவிடக்கூடாது எனவும் தோழர் தன் சகாக்களுக்கு அறிவுறுத்துகிறார். அந்நேரம் வாசலில் ஏதோ சத்தம் கேட்டு தோழர் சென்று பார்க்க, ஒரு மூதாட்டி ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் கூலி விஷயமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு அருகில் சென்று பார்க்க, அது வேறு யாரும் அல்ல. தோழரின் அம்மாதான். கிராமத்தில் இருந்து மகனைக்காண வந்திருக்கிறார்.

அம்மாவை அழைத்துச்சென்று தோழர்களுக்கு அறிமுகப்படுத்தி தேனீர் தந்து உபசரிக்க, அம்மா எல்லோருக்கும் தான் கொண்டு வந்த தின்பண்டங்களை விநியோகிக்க, தோழர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அம்மாவைப்பார்த்ததில் தோழருக்கு ரொம்பவே உணர்ச்சிப்பிரவாகம். தன் தாயின் மேன்மைகளையும், சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட தன்னை அவர் வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்க மேற்கொண்ட சிரமங்களையும், தியாகங்களையும் சொல்லிச் சொல்லி பூரிப்படைகிறார். அம்மாவோ, தன்னுடைய ஒரே ஆசையான மகனின் திருமணம் பற்றிச்சொல்லி, அந்த ஒரே ஆசையையும் மகன் நிறைவேற்றாதது பற்றி மற்றவர்களிடம் குறை கூறுகிறார். அதற்கு தோழர், தன் அம்மா தன்னை இன்னும் இளைஞனாகவே நினைத்துக்கொண்டிருப்பதாகவும், தனக்கு திருமண வயதெல்லாம் கடந்து விட்டது என்றும் சொல்லி சமாதானப்படுத்த, தன் மகனின் தேர்தல் முடியும் வரை அவருடனேயே இருக்கப்போவதாகவும் சொல்கிறார். தோழர் உணர்ச்சிகளின் சங்கமத்தில் நெகிழ்ந்துபோகிறார்.

(நேற்றைய எபிசோட்டில் தாய் மகன் பாசத்தைப்பார்க்கும்போது நமக்கு லேசாக பொறிதட்டுகிறது. இந்த தேர்தல் கலவரத்தில் தோழர் தன் அம்மாவை இழந்துவிடுவாரோ என்ற அச்சம் தோன்றுகிறது).

தொல்காப்பியனைக் காணச்சென்ற உஷா, தொல்ஸ் இல்லாததால் கடற்கரையில் காத்திருக்கிறாள். (சீரியல்களிலும் சரி, திரைப்படங்களிலும் சரி, செலவில்லாத, அதே சமயம் அழகான அவுட்டோர் லொக்கேஷன் கடற்கரை. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத இடம்). காத்திருக்கும் நேரத்தில், பழைய சம்பவங்கள் அவள் மனதில் நினைவலைகளாக வருகின்றன. தனக்கும் அபிக்கும் இடையே இருந்த நட்பு, அதன் காரணமாக தான் ஆதியை நிச்சயதார்த்தத்தில் தூக்கியெறிந்து விட்டு வந்தது, அபியின் முயற்சியால் மீண்டும் தன் திருமணம் நடந்தது, ஆதி, தான் செய்த அக்கிரமங்களை தன் தந்தையிடம் சொன்னதை, மறைந்திருந்து கேட்டது, மறுபடியும் ஆதியுடன் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தது, பாஸ்கரையும், ஆதியையும் புறக்கணித்துவிட்டு மீண்டும் பழைய அபியும் உஷாவுமாக இருக்க கடற்கரையில் உறுதியெடுத்தது எல்லாம் அவள் மனதில் நினைவலைகளாக வந்தன.

(ஃப்ளாஷ்பேக் அப்படீன்னு நம்ம் ரொம்ப சுலபமா சொல்லிடுறோம். ஆனால் ஒவ்வொரு காட்சியும் எந்த எபிசோட்டில் வந்தது என்று தேடியெடுத்து எடிட் செய்வது என்பது அவ்வளவு சுலபம் அல்ல, அதுவும் ஆயிரத்துக்கு மேல் எபிசோட்கள் ஓடிவிட்ட ஒருதொடரில்).

தொல்காப்பியன் அங்கு வரவும், அவள் நினைவுகள் கலைகின்றன. இருவரும் தற்போதைய விவரம் குறித்துப்பேசத் துவங்குகின்றனர். தாங்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் 'கன்ஸ்ட்ரக்ஷன்' நிறுவனம் ஒன்றைத்துவங்குவது குறித்து தொல்ஸ் எதுவும் சாதகமாக பதில் சொல்லவில்லையென்று அவள் கூற, அபி இல்லாமல் இன்னொரு நிறுவனத்தை துவங்குவது பற்றி தன்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என தொல்ஸ் மறுக்கிறான். தான் ஒரு யோசனை சொல்வதாக உஷா சொல்லிவிட்டு ஏதோ நெடுநேரம் சொல்கிறாள். அது நமக்கு மௌன மொழியிலேயே காண்பிக்கப்படுகிறது. அவள் சொல்லி முடித்ததும் அவள் சொன்ன ஏற்பாட்டுக்கு தொல்ஸ் சம்மதிக்கிறான்.

அது என்ன என்று தெரிய வேண்டுமா?... இன்னும் எத்தனை எபிசோட்கள் வர இருக்கின்றன. அப்போது நமக்கு தெரியாமலா போகும்?.

saradhaa_sn
13th September 2008, 02:28 PM
மருத்துவமனையில் ஆனந்தியின் அருகில் இருக்கும் கார்த்திக், அவளது 'தினசரி தீ' பத்திரிக்கையில் பிரசுரிப்பதற்காகஒரு எழுச்சி மிகு கட்டுரையொன்றை தயார் செய்து அவளிடம் வாசித்துக்காட்டுகிறான். ஒவ்வொரு வரியும் அவளது எண்ணங்களையும், செயல்பாடுகளையும் பிரதிபலிப்பதாக இருக்க, ஒவ்வொரு வரிக்கும் தலையாட்டி ஆமோத்தித்துக்கொண்டே வருகிறாள். அந்நேரம் தன் தாயாருடன் அங்கு நுழையும் தோழர், கார்த்திக் படிக்கும் கட்டுரையின் சாராம்சத்தில் கவரப்பட்டவராய் மெய்மறந்து நிற்கிறார். பின்னர் அவர்களைப்பாராட்டிக்கொண்டே நுழையும் அவர், தன் அம்மாவை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். தேர்தல் நேரத்தில், தான் தோழருக்கு துணையாக களப்பணிகளில் ஈடுபட முடியவில்லையே என்று ஆனந்தி வருந்த, அவள் வருத்தப்படத் தேவையில்லை என்றும் களப்பணிகளை மற்ற தோழர்கள் செவ்வனே செய்து வருவதாகவும் கூறுகிறார்.

ஆனந்தியின் பேச்சில் கவரப்பட்ட அம்மா, 'பாலகிருஷணன் உன்னைப்பற்றிச்சொன்னதை விட நீ ரொமப்வே தீவிரமாய் இருக்கிறாய்' என்று ஆனந்தியைப்பாராட்டி ஆனந்திக்கும் கார்த்திக்கிற்கும் திருநீறு அணிவித்து வாழ்த்துகிறாள். பின்னர் இருவரிடமும் நெடுநேரம் ஏதோ பேசுகிறாள் அந்த மூதாட்டி. அது என்னவென்று நமக்கு சொல்லப்படாமல் (வழக்கம்போல) வெறும் வாயசைவு மட்டும் காண்பிக்கப்படுகிறது. ஆனால் அம்மாவின் வார்த்தைகளைக்கேட்டு தோழர் ரொம்பவே உணர்ச்சி வசப்படுகிறார். (அப்படீன்னா அது ஏதோ புரட்சிகரமான கருத்தாய் இருக்கக்கூடும்).

விவேக் - சித்ரா இருவரையும் திருவனந்தபுரம் அனுப்பும் முயற்சியில் இருக்கும் பாஸ், அங்குள்ள தன் நண்பருடைய நண்பரின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக்கொடுத்து அவரிடம் சென்று இருவரும் பத்திரிக்கையாளர்கள் என்றும், சிறுவர் சிறைச்சாலை பற்றிய செய்தி சேகரிக்க வந்திருப்பதாகவும் சொன்னால் அவர் அதற்கான ஏற்பாடுகளைச்செய்வார் என்று சொல்லியனுப்புகிறார்.

திருவனந்தபுரத்தில் விமானம் தரையிறங்கி ஓடுபாதையில் ஓடுவது மட்டும் காண்பிக்கப்படுகிறது. பின்னர் இருவரும் நேராக சிறுவர் சிறைச்சாலைக் காப்பாளரை சென்று சந்திக்கின்றனர். பாஸுடைய நண்பரின் நண்பரை சந்திப்பதெல்லாம் காண்பிக்கப்படவில்லை. அங்கு சென்ற இருவரும் தங்களை பத்திரிகையாளர்கள் என அறிமுகம் செய்துகொண்டு, சிறுவர் சிறை பற்றிய விவரங்களைக்கேட்க அவர் இதை தமிழ்நாட்டின் சிறுவர் சிறைகளிலேயே பெற்றிருக்கலாமே என்று கூறுகிறார். தமிழ்நாட்டிலும் ஏற்கெனவே விவரங்களை சேகரித்திருப்பதாக இருவரும் சொல்ல, அவர் அங்குள்ள நிலவரங்களைக் கூறத்துவங்குகிறார்.

முதலில் மேலோட்டமாக பேசியவர்கள் பின்னர் மெல்ல தொல்காப்பியனைப்பற்றி விசாரிக்கத் துவங்குகின்றனர். சித்ரா, தொல்ஸை தன்னுடைய உறவினர் என்றும் விவேக்கின் நண்பர் எனவும், அவர் சிறையிலிருந்து வெளியான நாளாக அவரைப்பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை என்றும் சொல்ல, சிறைக்காப்பாளர் 1984-ம் ஆண்டு ரெக்கார்டை வரழைத்து தேடிப்பார்த்து விவரங்கள் கூறுகிறார்.

தொல்காப்பியன் இரட்டைக்கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அவர் தன் அம்மாவையும் அவருடன் தகாத உறவு வைத்திருந்த ஒருவரையும் கொன்று விட்டு சிறைக்கு வந்ததாகவும், 1984 முதல் 1989 வரை சிறையில் இருந்ததாகவும், அவருடைய நன்னடத்தை காரணமாக ஐந்து வருடங்களில் விடுதலை செய்யப்பட்டதாகவும், சிறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட துறையில் வேலை என்ற அடிப்படையில் தொல்காப்பியனுக்கு கட்டிடம் கட்டும் துறையில் வேலை வழங்கப்பட்டதாகவும் சிறையதிகாரி, தஸ்தாவேஜைப்படித்து விவரம் கூறுகிறார்.

தங்களுக்கு தேவையான விவரங்கள் கிடைத்துவிட்ட போதிலும், பத்திரிகையாளர்கள் என்று பொய்யுரைத்து வந்ததால், சம்பிரதாயமாக சிறுவர் சிறையை சுற்றிப்பார்க்க அதிகாரியுடன் செல்கின்றனர்....

(ஆயிரத்தைந்நூறு எபிசோட்கள் கடந்தபின்னும், இன்னும் எந்த முடிச்சும் அவிழ்ந்தபாடில்லை என்பது மட்டுமல்ல, மேற்கொண்டு முடிச்சுகள் விழுந்துகொண்டே இருக்கின்றன. சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிக்கும் தொடரை 'சட்'டென்று முடித்துவிடாமல் எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்தபின் முடிப்பதுதான் தொல்ஸுக்கு அழகு, அதற்கு இன்னும் எத்தனை நூறு எபிசோட்கள் ஆனாலும் சரி).

gta129
15th September 2008, 05:37 AM
Thank you for the updates.

mr_karthik
15th September 2008, 07:14 PM
ஆயிரத்தைந்நூறு எபிசோட்கள் கடந்தபின்னும், இன்னும் எந்த முடிச்சும் அவிழ்ந்தபாடில்லை என்பது மட்டுமல்ல, மேற்கொண்டு முடிச்சுகள் விழுந்துகொண்டே இருக்கின்றன. சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிக்கும் தொடரை 'சட்'டென்று முடித்துவிடாமல் எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்தபின் முடிப்பதுதான் தொல்ஸுக்கு அழகு, அதற்கு இன்னும் எத்தனை நூறு எபிசோட்கள் ஆனாலும் சரி.
By this, you are giving 'Green Signal' to the director to run this serial for some more YEARS :D :D

saradhaa_sn
16th September 2008, 07:09 PM
By this, you are giving 'Green Signal' to the director to run this serial for some more YEARS :D :D
நான் சொல்லாவிட்டாலும் இன்னும் ஏராளமான எபிசோடகள் தொடரத்தானே போகிறது..?.

saradhaa_sn
16th September 2008, 07:30 PM
ஆனந்தியின் உடல்நிலை தேறிவிட்டது. மருத்துவ அறிக்கைகளைப் பரிசோதித்த பெண் மருத்துவர், அவள் குணமடைந்து விட்டதாகவும், இன்னும் நான்கு நாட்களில் வீடுதிரும்பலாம், அதன்பின் 'பிஸியோதெராபி' சிகிச்சையைத்துவங்கலாம் என்றும் சொல்கிறார். அருகில் இருக்கும் அபி, கற்பகம், கார்த்திக், ராஜேந்திரன் ஆகியோருக்கு மிகவும் மகிழ்ச்சி. (ஆர்த்தியும் மனோவும் அன்றைக்கு வந்தவர்கள்தான் அப்புறம் ஆளையே காணோம்). உடனே அம்மா தன்னிடம் ஜோதிடர் சொன்னதுபோல் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி அபியை அழைக்க, முதலில் ஆஃபீஸ் வேலை என்று தயங்கிவள் பின்னர் ஒப்புக்கொள்கிறாள்.

மேனகாவின் (வளர்ப்புத்) தந்தைபுறப்பட்டு விட்டார். போகும்போது மேனகாவிடம், இனியும் அவள் கடந்தகால வாழ்க்கை பற்றி சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டாம் என்றும், இனி வருங்காலம் பற்றிய விஷயங்களில் கவனம் செலுத்துமாறும் சொல்லி விட்டுப்போகிறார்.

திருவனந்தபுரத்திலிருந்து திரும்பிய கையோடு நேராக சென்று பாஸை சந்திக்கும் விவேக் சித்ரா இருவரும், தாங்கள் சேகரித்து வந்த தகவல்களை அவரிடம் சொல்ல, அவர் தொல்காப்பியன் சிறுவயதில் கொலைசெய்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார். அவர்களது துப்பறியும் துறை சம்மந்தமான சந்தேகங்களிப் பறிமாறிக்கொள்கின்றனர். இனி தொல்காப்பியனை முன்னைவிட அதிக நெருக்கமாகவும் தீவிரமாகவும் கண்காணிக்கும்படி சித்ராவிடம் சொல்ல், அவர்கள் வீடுகளுக்கு திரும்புகின்றனர்.

கடற்கரையில் உலவிக்கொண்டிக்கும் தொல்காப்பியனுக்கு, தன் சிறுவயதில் இதே போன்றதொரு கடற்கரையில் தன் தாய் தங்கையுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தது நினைவலைகளாக தோன்றுகிறது. அம்மாவின் இடுப்பில் சிறு குழந்தையாக தங்கை மீனு இருக்க, தான் கடல் மணற்பெருவெளியில் அம்மா விரட்ட, ஓடியாடிய நினைவுகள் அலைகளாக வந்து மோதுகின்றன. அதே நேரம் வீட்டில் இருக்கும் மேனகாவுக்கும் அவளது சிறு வயது நினைவுகள் தோன்றி தோன்றி மறைகின்றன. அவளுக்கு அம்மா, அண்ணனுடன் இருந்தது நினைவில்லை. அப்பாவுடன் புதியதோர் கிராமத்தில் வந்திறங்கியதுமுதலே நினைவுகள் தோன்றுகின்றன. இப்போது தொல்காப்பியனுக்கு, தன்னுடைய சிறுவயதில் போலீஸார் தென்னைமரத்தோப்புக்குள் தன்னை விரட்டி விரட்டிப் பிடித்தது நினைவுக்கு வருகிறது. இருவரின் முகங்களிலும் கண்ணீர் வழிய.... காட்சி உறைகின்றது.

Arthi
16th September 2008, 10:41 PM
wow, nice updates saradha madam :clap:

I saw one month's episodes in just half an hour without any interventions :D
very nice narrations and in between enjoyed your apt comments as well :D

well done.. and keep up the godo work :clap:

saradhaa_sn
17th September 2008, 02:17 PM
நன்றி ஆர்த்தி & கீதா....

தண்டலம் தொகுதியின் இடைத்தேர்தல் கிட்டத்தட்ட நெருங்கி விட்டது. பிரதான இரண்டு வேட்பாளர்களின் உச்சகட்ட பிரச்சாரம், நிஜமான அர்சியல் கட்சிகளின் பிரச்சாரங்களையே தோற்கடித்துவிடும் போலும். அவ்வளவு ரியாலிட்டி. வீதி வீதியாக, வீடு வீடாகச்சென்று பிரச்சாரம் செய்வதும், துண்டுபிரசுரங்கள் வழங்குவதுமாக அப்படியே ஒரு நிஜ தேர்தலைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். ஒரு கட்டத்தில் இரண்டு வேட்பாளர்களின் பிரச்சாரமும் எதிர் எதிர் சந்திக்கும்போது, திருவேங்கடம் அணியைச்சேர்ந்த ஒருவன் (ஏற்கெனவே செய்த செட்ட்ப்பின்படி) திருவேங்கடம் முகத்திலேயே கல்லெடுத்து வீசி காயப்படுத்த மீண்டும் சண்டை மூளுமோ என்று தோன்றியது. அப்படியெதுவும் இல்லை. திருவேங்கடம் தலையில் ஒரு எக்ஸ்ட்ரா கட்டுடன் பிரச்சாரம் மேற்கொள்கிறார், அவ்வளவுதான். தோழர் பாலகிருஷ்ணனின் கால்நடைப் பயண எளிய பிரச்சாரம், அச்சு அச்லாக கம்யூனிஸ்டுகளின் தேர்தல் அணுகுமுறையை நினைவூட்டுகிறது. (நான் சொல்வது பழைய கம்யூனிஸ்டுகளை. இன்றைய கம்யூனிஸ்ட்டுகள் காரை விட்டு இறங்குவதில்லை என்று கேள்வி).

ஜோதிடர் சொன்னபடி தன்வந்திரி கோயிலுக்கு (அப்பாடா கோயில் பெயரைக் கண்டுபிடித்துவிட்டேன்) செல்லும் அபி, கற்பகம், ராஜேந்திரன் ஆகியோர் நேராக கோயிலுக்குச் செல்லாமல், வழியில் இருக்கும் கிராமத்தில் நின்று அங்குள்ள வயல் வெளிகளையும் சோலைகளையும் கண்டு மனதைப்பறிகொடுத்து நிற்க (நகர நெருக்கடியில் உழலும் எந்திர மனிதர்களுக்கு, நிச்சயம் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தும் இடங்கள்தான் கிராமங்கள்), அந்நேரம் ராஜேந்திரன், நகர வாழ்க்கையின் கேடுகளையும் மனிதாபிமானமற்ற நடப்புகளையும், ஒருவருக்கொருவர் அன்னியோன்யம் இல்லாமல் அந்நியமாக நடப்பதையும் குறிப்பிட்டு, கிராமங்களில் அதுபோல எதுவும் கிடையாதென்றும், அங்குள்ள திருமண விசேஷங்கள், கோயில் திருவிழாக்கள் இவற்றில் கூடும் மக்களின் கபடமற்ற நெருக்கங்கள் இவற்றைப்பற்றியெல்லாம், ஏதோ சாலமன் பாப்பையா தலைமையில் "வாழ்க்கைக்கு சிறந்தது நகரங்களா கிராமங்களா" என்கிற தலைப்பில் கிராமங்களுக்காகப்பேசும் ராஜாராம், பாரதி பாஸ்கர், ராஜா, இவர்கள் ரேஞ்சுக்கு பெரிய லெக்சர் அடிக்கிறான்.

தன்வந்திரி கோயில் காண்பிக்கப்பட்டபோது இன்னொரு திருப்பம். ஆம், எற்கெனவே அந்தக்கோயிலில் இருந்து அலமேலு, பாஸ்கர், சங்கீதா ஆகியோர் குழந்தையுடன் வெளியே வருகின்றனர். அலமேலுவை பிச்சைக்காரர்கள் கூட்டம் சூழ்ந்துகொள்ள பாஸ்கரையும் சங்கீதாவையும் முன்னதாக காருக்கு அனுப்பிவிட்டு, பிச்சைக்கார்கள் மத்தியில் ஆளுக்கு இரண்டு ரூபாய் போடுவதற்குள், தான் ஏதோ கர்ணன், குமணன், பாரி ஆகியோரின் கொள்ளுப்பேத்தி ரேஞ்சுக்கு இவளும் ஒரு லெக்சர் கொடுத்து விட்டு எல்லோரையும் வரிசையில் நிற்கவைத்து ஆளுக்கு இரண்டு ரூபாய் தர்மம் செய்கிறாள். (தன்வந்திரி கோயிலில் அன்றைக்கு மழை வந்திருக்க வேண்டும்). இவர்கள் கூட்டத்தில் சேராமல் தனியாக மரத்தடியில் ஒரு சன்னியாசி முதுகுப்பக்கம் திரும்பி அமர்ந்திருக்க, அவருக்கும் பிச்சை போட அவள் அழைக்க, அவர் திரும்ப..... அவர் வேறு யாருமல்ல ஆதி, அபி ஆகியோரின் அப்பா ஈஸ்வரன்தான்.

(எம்.எம்.சிட்டி மேக்கர்ஸ் சார்பில் 'சேட்டலைட் சிட்டி' ப்ராஜக்டில் ஈடுபட்டிருக்கும் மகன், 'டிஜிட்டல் வேலி ப்ராஜக்ட்' வேலையில் ஈடுபட்டிருக்கும் மகள். இவர்களின் தந்தை , கோயிலில் சன்னியாசி கோலத்தில் .... காலக்கொடுமை என்பது இதுதானோ..?)

இம்மாதிரிக் காட்சியைக்கண்டுவிட்டால் அலமேலுவுக்கு கொண்டாட்டமாச்சே. அந்தக்கொண்டாட்டத்தைப் பகிர்ந்துகொள்ள மகன் பாஸ்கரை போய் அழைத்து விஷயம் சொல்ல அவன் நம்ப மறுக்கிறான். அலமேலு தன் கணவன் மீது சத்தியம் செய்ய, பாஸ்கர், சங்கீதா ஆகியோர் அலமேலுவுடன் மரத்தடிக்கு வந்தால் அங்கு ஈஸ்வரன் இல்லை. அக்கம்பக்கம் தேடுகிறார்கள். இதனிடையே அங்கு வந்து இறங்கும் கற்பகம், அபி ஆகியோரிடமும் அலமேலு, தான் ஈஸ்வரனை பிச்சைக்காரர் கோலத்தில் பார்த்ததைச் சொல்ல, அவர்களும் அதிர்ச்சியடைந்து கோயில் முழுக்க தேடுகிறார்கள். (ஈஸ்வரனைத்தேடும் சாக்கில், நாம் கோயில் முழுவதையும் பார்க்க முடிகிறது... நல்ல பெரிய கோயில்தான், ஏகப்பட்ட பிரகாரங்கள், வராண்டாக்கள். கோயிலில் நல்ல கூட்டம். 'மனிதனை நம்பி எந்தப்பிரயோஜனமும் இல்லை. அதனால்தான் கடவுள்கிட்டே முறையிடுறதுன்னு முடிவு பண்ணிட்டேன்' என்று புலம்பும் திருவிளையாடல் தருமி லெவலுக்கு மக்களும் வந்துவிட்டார்கள்).

சரி, இரண்டு குரூப்பும் ஈஸ்வரனைக் கண்டுபிடித்தார்களா?. திருச்செல்வம் (தொல்ஸ்) அவ்வளவு சீக்கிரம் சொல்லிவிடுவாரா என்ன?. பார்ப்போம்...........

sarna_blr
17th September 2008, 02:20 PM
Saradha Prakash :thumbsup:

saradhaa_sn
17th September 2008, 02:58 PM
நன்றி, SAR(AVA)NA.....

saradhaa_sn
18th September 2008, 01:43 PM
ஈஸ்வரனைத்தேடி கோயில் முழுக்க சுற்றியும் அவரைக்காணாமல் களைத்துப்போகும் அபியும், கற்பகமும் இன்னொரு பக்கம் தேடியலைந்த அலமேலுவையும் சங்கீதாவையும் சந்திக்கின்றனர். வேறொரு பக்கம் தேடிக்கொண்டிருக்கும் பாஸ்கர், அவனுக்குத் துணையாக ராஜேந்திரனை வரவழைத்துக்கொள்கிறான். அலமேலுவுக்கும் பாஸ்கருக்கும் ஈஸ்வரனைத்தேடுவதில் ஏன் இவ்வளவு அக்கறை யென்பது நமக்கு வியப்பாக இருந்தாலும், நாமாக ஒன்றைக் கற்பனை செய்துகொள்ள முடிகிறது. எப்படியாவது ஈஸ்வரனைக்கண்டுபிடித்து ஒப்படைத்து அபியிடம் நல்ல பெயர் வாங்குவதுடன், அதே சமயம் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட நல்லவன் என்ற எண்ணத்தை சங்கீதாவின் மனதில் விதைக்க வேண்டும் என்ற எண்ணம் பாஸ்கருக்கு. ஈஸ்வரனை பிச்சைக்கார கோலத்தில் பிடித்துக்கொடுத்து, அபி மற்றும் கற்பகத்தின் நிலையைப்பார்த்து எக்காளமிடவேண்டும் என்ற எண்ணம் அலமேலுவுக்கு. இவர்கள் இழுத்த இழுப்புக்கு ஓட சங்கீதா.

அப்பாவின் இந்த தலைமறைவுக்கு காரணம் என்ன என்று அம்மாவிடம் விசாரிக்கும் அபியிடம், அவள் அமெரிக்காவில் இருந்தபோது நடந்தவற்றைக்கூறுகிறாள். ராஜேஷ் மனோவை செருப்பால் அடித்தது, மனோ ராஜேஷை ரவுடிகளைக்கொண்டு தாக்கியது, விவரத்தைக்கேள்விப்பட்ட ஈஸ்வரன் அவர்களை சமாதானப்படுத்த முயன்றபோது, மனோவும், ஆர்த்தியும் அவரை தனித்தனியாக அவமானப்படுத்தி அனுப்பியது, போதாக்குறைக்கு ஆதியும் இவரை ரொம்பவே காயப்படுத்திப் பேசியது, அதனால் இவர் சாலையில் மயக்கமடைந்து விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது, டிஸ்சார்ஜ் ஆவதற்கு முதல்நாள் அவரை கற்பகமும், காஞ்சனாவும் தங்கள் தங்கள் வீடுகளுக்கு வரும்படி வற்புறுத்தியது, மறுநாள் முடிவு சொல்வதாக சொன்ன ஈஸ்வரன், அடுத்த நாள் இவர்கள் வருமுன்னரே மருத்துவமனையை விட்டு வெளியேறி கண்காணா இடத்துக்குப்போனது எல்லாவற்றையும் விலாவரியாகச் சொல்கிறாள்.

இந்த இடத்தில் கற்பகம் செய்த மிகப்பெரிய தவறு, இந்த விவரங்கள் அனைத்தையும் அலமேல்லுவைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு சொன்னதுதான். அலமேலுவுக்கு ஆச்சரியம், அபி குடும்பத்தில் இவ்வளவு பிரச்சினைகள் நடந்திருக்கிறதா என்று. ஏராளமான விவரங்கள் கிடைத்ததில் அவளுக்கு ரொம்ப திருப்தி. கற்பகம் அழுகையினூடே அனைத்தையும் சொல்லி முடிக்கிறாள். (நல்லவேளை இயக்குனர், நிகழ்வுகள் அனைத்தையும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளாக காட்டிவிட்டார் இல்லாவிட்டால் இந்த அம்மா அழுகை தாங்கமுடியாது. இந்த தொடரில் கற்பகம் (சத்தியபிரியா) நடித்தது 25% அழுதது 75%).

கோயிலில் காணாததால் கோயிலுக்கு வெளியே தேடுவோம் என்று அலமேலுவும், கற்பகமும் ஒரு ரிக்ஷாவில் ஏறி கோயிலுக்கு வெளியே தேடிப்போகிறார்கள். வழக்கம்போல ரிக்ஷாக்கரனுடன் அலமேலு வம்படி வழக்குகளில் இறங்க அவன் பாதி வழியில் இறக்கிவிட்டுப்போகிறான். இன்னொரு பக்கம் அபியும் சங்கீதாவும் தனியாக தேடிப்போகிறார்கள். (அதென்ன இவர்கள் நால்வருமே ஊருக்குள் தேடாமல் ஏதோ காட்டுப்பகுதியில் தேடியலைகிறார்கள்?. கற்பகம் சொல்வதுபோல காணாமல் போய் எங்காவது வழி தெரியாமல் நிற்பவரைக் கண்டுபிடிக்கலாம், இவர்கள் கண்ணில் படக்கூடாது என்று ஒளிந்துகொண்டிருப்பவரை எப்படி தேடிக் கண்டுபிடிக்க முடியும்?)

ஓரிடத்தில் சங்கீதா அபியிடம் 'பாஸ்கர் ரொம்ப நல்லவர், அவருடன் நீங்கள் சேர்ந்து வாழ முடியாமல் போனது உண்மையில் துரதிஷ்டம்தான்' என்று சொல்ல அவள் வழக்கம்போல (பாரதி பாஸ்கர், பர்வீன் சுல்தானா, தமிழிசை சௌந்தர்ராஜன், சுகாசினி, மௌனிகா, திவ்யதர்ஷிணி ரேஞ்சுக்கு) பெண்ணியம் பேச ஆரம்பிக்கிறாள். 'ஆண்கள் என்றாலே பெண்களை அடிமைப்படுத்தி ஆளத்துடிப்பவர்கள் என்றும், பெண்களின் முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் என்றும், வீடு குழந்தைகள் என்று ஒரு வட்டத்துக்குள் அடைத்து வைத்து விடுவார்கள் என்றும், சுதந்திரக்காற்றை சுவாசிக்க விடமாட்டார்கள் என்றும்' பலவாறாகப் பேசுகிறாள். அதென்னவோ பெண்கள் ஆண்களை எடைபோடும்போது மட்டும் ஏன் பாஸ்கர், ஆதித்யா போன்ற அயோக்கியர்களையே அளவுகோலாகக்கொண்டு அளக்கிறார்கள் என்பது தெரியவில்லை (ஸேம்சைட் கோல்தான், சகோதரிகள் மன்னிக்கவும், ஆனால் எனது கூற்றில் உண்மையிருக்கிறது என்பது என் எண்ணம்). அபி போன்றவர்கள் பேசும்போது தொல்காப்பியன், டாக்டர் மகேஷ், கார்த்திக், தோழர் பாலகிருஷ்ணன் போன்றவர்களும் ஆண்கள்தான் என்பதையும் அவர்கள் பெண்களை முன்னேற்றிப்பார்ப்பதில் ஆர்வமுடையவர்கள் என்பதையும் ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் ஆண்களே மெஜாரிட்டியாக இருந்தும் கூட பெண்கள் முதலமைச்சராகவும், பிரதமராகவும், குடியரசுத்தலைவராகவும் இந்நாட்டில் வர முடிந்திருக்கிறது என்றால், ஆண்கள் துணையின்றி இவை சாத்தியமா என்பதை அபி போன்றவர்கள் சிந்திப்பது நலம்.

1930-ல் இந்நாட்டில் பெண்கள் இருந்த நிலமையையும், இப்போது இருக்கும் நிலைமயையும் ஒப்பிட்டால் பெண்கள் அடைந்திருக்கும் அபார முன்னேற்றம், ஆண்கள் ஒத்துழைப்பின்றி சாத்தியமா என்பதை சிந்திக்கலாமே. ஆண்கள் மட்டுமே கொடுமைக்காரர்கள் என்று அபி ஏன் சிந்திக்க வேண்டும்?. கணவனை காலமெல்லாம் வாட்டி வதைத்த அலமேலு, புகுந்த வீட்டு நிம்மதியைக்குலைத்து கலகமூட்டுவதிலேயே குறியாக இருக்கும் கலா, கொழுந்தனின் சிநேகத்துக்காக கனவனையே வீட்டை விட்டு விரட்டிய ரேகா, தன்னைப்போன்ற பெண்தான் அபியும் என்பதை மறந்து மகன் ஆதித்யாவின் அடாவடி செயல்களுக்கு தூபம் போடும் காஞ்சனா, தொல்காப்பியன் மீது எந்த தவறும் இல்லையென்று தன் மனசாட்சிக்கு தெரிந்தும் அவனை வஞ்சகமாக பழிவாங்கிய ஆர்த்தி...... இப்படி பெண்குலத்திலும் கோடாரிகாம்புகள் இருப்பதை அபி சிந்திக்கலாமே....

(என்னுடைய இந்த பதிவுக்கு மட்டும் சகோதரிகளிடம் இருந்து நிறைய கண்டனங்கள் வரக்கூடும். கொஞ்சம் இருங்கள். முதுகில் தலையணையைக் கட்டிக்கொள்கிறேன்)

sudha india
18th September 2008, 02:06 PM
கண்டனம் செய்யும் அளவிற்கு ஒன்றும் இல்லை Saradha. In fact we are all fans to your writing.

I think, the reply from Abi was for Sangeetha's remark about the so called good Baskar.

I only wish, someone from Kolangal serial becoms a member in our Hub and read your comments.

As you commented earlier, the serial runs for only 15 mins after all advertisements. If Thols continue like this with unwanted dialogues of Alamelu (with the beggers) and many others and does not push the story, he will lose many viewers.

(And they will all read the serial here, which is more interesting than seeing on TV)

saradhaa_sn
18th September 2008, 04:19 PM
நன்றி சுதா...., என் கருத்தை புரிந்து கொண்டமைக்கு.

நீங்கள் சொன்ன பாயிண்ட்டுகள் கவனிக்கப்பட வேண்டியவை. விளம்பரங்களின் எண்ணிக்கையை சன் டிவி குறைக்காது (அவர்கள் சேனல் நடத்துவதே வருமானத்துக்குத்தானே) . ஆனால் நீங்கள் சொன்னபடி, தொல்ஸ் தேவையில்லாத வெட்டி வசனங்களை நீக்கி தொடரை சுறுசுறுப்பாக்கலாம்.

செய்வாரா..?. அல்லது என் இலக்கு பத்து வருடங்கள் என்று போய்க்கொண்டிருப்பாரா...?.

gta129
19th September 2008, 08:10 AM
I only wish, someone from Kolangal serial becoms a member in our Hub and read your comments.


I wish the same thing.

saradhaa_sn
19th September 2008, 10:44 AM
தன்வந்திரி கோயிலின் தலைமை குருக்கள் / பூசாரி போலிருக்கும் ஒருவர் அக்கோயிலின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறி, அங்கு வந்து வழிபாடு செய்பவர்களின் நோய், நொம்பலங்கள் கஷ்ட்டங்கள் எப்படியெல்லாம் தீரும் என்று விவரமாக எடுத்துக்கூற, அபியும் கற்பகமும் பயபக்தியோடு கும்பிடுகின்றனர்.

வீட்டுக்குள் நுழையும் திருவேங்கடம், தன் மனைவி, மகள், மருமகள் ஆகியோரை அழைக்கிறார். ரொம்ப அசட்டையாக வந்து 'என்ன' என்று கேட்கும் மனைவி சாரதாவிடம் 'என்னடி நான் ஒரு சிந்தனையாளன் வந்திருக்கேன், நீ பாட்டுக்கு ரொம்ப சாதாரணமா என்னன்னு கேட்கிறே' என்று கேட்க, அதற்கு அவள் 'இதோ பருங்க வெளியில் பேசுகிற மாதிரியெல்லாம் வீட்டுக்குள் பேசாதீங்க. உங்களைப்பத்தி எனக்கு தெரியும்' என்று மடக்குகிறாள். அதற்குள் மகளும் மருமகளும் வந்துவிட, மூவரிடமும் 'தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்துவிட்டது' என்று சொல்ல மகள், 'அப்பாடா, அம்மாவுக்கு தொல்லை விட்டது' என்று சொல்ல, திருவேங்கடம் விடுவதாயில்லை. 'இனிமேல்தாண்டி உங்க மூவருக்கும் வேலை காத்திருக்கிறது. நீங்க மூணு பேரும் வீடு வீடாகச் சென்று, அங்குள்ளவர்களை விசாரிப்பதுபோல, மெல்ல அவர்களிடம் எனக்கு வாக்களிக்குமாறு சொல்ல வேண்டும். குறிப்பாக தோழர் பாலகிருஷ்ணனுக்கு ஆதரவான வீடுகளின் பட்டியல் இதோ இருக்கிறது. அந்த வீடுகளுக்குப்போய் அவருடைய ஆதரவு ஓட்டுக்களை எனக்கு சாதகமாக திருப்ப வேண்டும்' என்று சொல்ல, மகள் இதற்கு மறுக்க, வர சத்தம்போட, மருமகள் பட்டியலை வாங்கிக்கொள்கிறாள். மகன் சதீஷை (தேவ்) காணவில்லை.

மீண்டும் தன்வந்திரி கோயில்... (போச்சுடா, இதை வைத்தே இன்னும் கொஞ்ச காலம் ஓட்டுவார் போலிருக்கே). இரவு நேரம் ஆகிவிட்டது. அப்போதும் அவர்கள் எல்லோரும் அங்கேயே தேடிக்கொண்டிருக்கின்றனர். அபி, அம்மா, அலமேலு, சங்கீதா மூவரும் ஓரிடத்தில் இருக்க, பாஸ்கரும் ராஜேந்திரனும் ஊர் முழுக்க ஒவ்வொருவராக ஈஸ்வரனைப் பற்றி விசாரிக்க அவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. எல்லோரும் தெரியாது தெரியாது என்றே சொல்கின்றனர்.

இதனிடையே அலமேலு, 'கவலைப்படாதீங்க, எப்படியும் பிச்சைக்காரர்கள் கூட்டத்தில்தான் இருப்பார். கண்டுபிடிச்சிடலாம்' என்று சொல்ல அபி கோபத்துடன் அவளிடம் சண்டைபோடுகிறாள். ஆரம்பம் முதல் ஈஸ்வரனை அவள் பிச்சைக்காரன், பிச்சைக்காரன் என்றே அழைப்பதைப்பொறுக்க முடியாத அவள், அலமேலுவின் குத்தலான, குதர்க்கப்பேச்சைக் கண்டிக்கிறாள். இதனிடையே அங்கு வரும் ராஜேந்திரன், அவர்கள் எல்லோருக்கும் தங்குவதற்கு பாஸ்கர் ஓட்டலில் ரூம் போட்டிருப்பதாகச்சொல்லி அழைத்துப்போகிறான். (பாஸ்கரின் இந்த அக்கறை ரொம்பவே விசித்திரமாக இருக்கிறது. யாரைக்கவிழ்க்க இந்த வேலை என்று தெரியவில்லை).

ஓட்டலுக்கு வந்த பின் அபியின் மனதில் ஈஸ்வரனுடன் (அவர் தன் அப்பா என்று தெரிவதற்கு முன்) அவளுக்கு நேர்ந்த கடந்தகால சம்பவங்கள் நிழலாடுகின்றன. இதனிடையே அவர் சம்மந்தமாக அம்மாவுக்கும் அபிக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. அவருடைய இந்த அவல நிலைக்கு அவர்தான் காரணம் என்றும், தன் அம்மாவையும் நான்கு குழந்தைகளையும் தனியாக தவிக்க விட்டுப்போனவர், அவர்களைப்பற்றிக் கவலைப்படாமல் தனக்கு வேறு குடும்பம் அமைத்துக்கொண்டதால்தான் இந்த நிலை என்றும், பிரச்சினைகளை சந்திக்காமல் இப்படி ஓடி ஒளிவது கோழைத்தனம் என்றும், அவரால் நேரடியாக பாதிப்புக்குள்ளான தன் அம்மா ரொம்ப சுலபமாக அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும் வாதிடுகிறாள்.

(இரண்டு நாட்களாக எபிசோட் ரொம்பவே 'டல்'லடிக்கிறது. தலைபோகும் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க இப்போது ஈஸ்வரனைத் தேடிப்பிடிப்பது அவ்வளவு அவசியமான ஒன்றா?. இன்னும் அவர்கள் கோயிலை விட்டுக்கிளம்பவேயில்லை. இன்னும் எத்தனை எபிசோட்கள் கோயில்லேயே ஓடப்போகிறதோ).

sudha india
19th September 2008, 12:52 PM
Inge Coimbatore - enga area-vil power cut from 5am to 7 am and 9 pm to 10 pm.

So Saradha podum vaarthai kolangalai mattum rasikkiren.

saradhaa_sn
20th September 2008, 02:03 PM
ஓட்டல் அறையில் தங்கியிருக்கும் கற்பகம், அங்கும் தன் ஃபார்முலாவை விடவில்லை. படுக்கையில் படுத்துக்கொண்டே அழுதுகொண்டிருக்கிறாள். ஒருவேளை கண்ணில் அகப்படாமல் இருக்கும் கணவனைப்பற்றிய சோகமா என்றால், இல்லையாம். அபி தன்னைப்பற்றி மோசமாகப் பேசிவிட்டாள் என்ற கவலையாம். அபியும் ராஜேந்திரனும் எவ்வளவு சமாதானம் செய்து அவள் அழுகை நிற்கவில்லை. அந்நேரம், அறையில் நுழையும் பாஸ்கர், அந்த ஏரியா பற்றி மிகவும் விசாரித்து விட்டதாகவும், தன்னுடன் தன் முன்னாள் மாமனாரைத்தேட தன்னுடன் வரும்படி ராஜேந்திரனை அழைக்க, அம்மாவின் அழுகையைத்தாங்காத அபி, அவர்கள் இருவரோடு தானும் வருவதாகப் புறப்பட்டுப்போகிறாள்.

எனக்கென்னவோ இந்த சீரியலின் ஒட்டுமொத்த அழுகையையும் கற்பகமே குத்தகைக்கு எடுத்துவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. வழக்கமாக மற்ற சீரியல்களில் கிட்டத்தட்ட எல்லா கதாபாத்திரங்களும் அழுவார்கள். ஆனால் 'கோலங்களில்' இவரைத்தவிர யாரும் அழுவதில்லை. அதனால்தானோ என்னவோ இவர் வரும் காட்சியெல்லாம் அழுது தீர்க்கிறார். (கற்பகம் (சத்யபிரியா) சிரித்த முகத்தோடு வரும் காட்சிகளை கண்டுபிடித்துச் சொல்வோருக்கு ஆயிரம் பொற்காசுகள் என்று 'விகடன் ஒளித்திரை' நிறுவனம் போட்டி அறிவிக்கலாமே...?. ஆனால் அது யாருக்கும் கிடைக்காது என்பது வேறு விஷயம்)

கவியரசர் கண்னதாசன், தன்னைப்பற்றி ஒரு நூலில் குறிப்பிடும்போது, தன்னுடைய மனம் எப்போதும் அழுகிற மனம் என்பதாகக்குறிப்பிட்டு, அதற்காக ஒரு நாலுவரிப்பாடலையும் எழுதியிருப்பார்.....

சீஸரைப் பெற்ற தாயும் சிறப்புடன் பெற்றாள்
நாசரைப் பெற்ற தாயும் நலமுடன் பெற்றாள் - காம
ராசரைப் பெற்ற தாயும் நாட்டுக்கே பெற்றாள் - எனை
ஆசையுடன் பெற்ற தாயோ அழுவதற்கென்றே பெற்றாள்

அதுபோல, அழுவதற்கென்றே படைக்கப்பட்ட பாத்திரம், கற்பகம். (யார் கண்டது?.. படப்பிடிப்பில் பின்வரும் உரையாடல்களும் நடந்திருக்கலாம்... "என்னப்பா, சத்யபிரியா ரெடியா இருக்காங்க, அவங்க சீனை முதலில் ஷூட் பண்ணிடுவோமா?"

"கொஞ்சம் பொறுப்பா, இன்னும் கிளிசரின் பாட்டில் வரலை. அதுவரை மற்றவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளை எடுக்கலாம்").

விளம்பரத்துக்குப்பின் வந்த இரண்டாம் பகுதி கொஞ்சமே கொஞ்சம், ஒரு மூன்று நிமிடமே வந்திருக்கும்.

சாரதாவும், மருமகள் சாந்தியும் ஒரு வீட்டுக்குள் சென்று அங்கிருப்பவர்களிடம் தன் கணவனுக்காக ஓட்டுப்போடும்படி கேட்க, அந்த குடும்பத்தலைவர் 'திருவேங்கடம் நேரத்துக்கு ஒரு பேச்சு பேசுபவர். அவரை நம்பி எப்படி ஓட்டுப்போட முடியும். வேண்டுமானால் அவர் வெற்றி பெற்றதும் தொகுதிக்கு நல்லது செய்வார் என்று நீங்கள் வாக்களித்தால், உங்களுக்காக ஓட்டுப்போடுகிறோம்' என்று கூற, அவ்வாறே செய்வதாக சாரதா உறுதியளித்துவிட்டு மருமகளுடன் அடுத்த வீடு செல்கிறாள். (இதற்குமுன் மருமகளாக நடித்துவந்த, ஜோடி நம்பர் - 1 முதல் மகாராணியான 'குட்டி' பூஜா, திருமணம் செய்துகொண்டு, சீரியல் உலகத்தையே புறக்கணித்துவிட்டு செல்ல, இப்போது வேறொருவர் நடிக்கிறார்). சாரதாவும் மருமகளும் இப்படி வீடுவீடாகச்செல்வதை, அப்போது சைக்கிளில் வரும் தோழர் அணியைச்சேர்ந்த ஒருவர் பார்த்துவிட்டு, மற்றவரிடம் விசாரிக்க, அவர்கள் ரகசியமாக வாக்கு சேகரிப்பதாக சொல்கிறார். பிரசாரம் முடிவடைந்துவிட்ட சூழலில் இப்படி சட்டவிரோதமான மறைமுக பிரச்சாரம் நடைபெறுவது பற்றிய சிந்தனையுடன் தொண்டர் செல்கிறார்.

பாஸ்கருடன் காரில் வேறொரு கோயிலுக்குப்போகும் வழியில் ஓரிடத்தில் அபி காரை நிறுத்தச்சொல்கிறாள். அங்கு சுவர் மறைவில் காவி உடையில் கால்கள் மட்டும் தெரியும்படியாக ஒருவர் படுத்திருப்பதைப்பார்த்து, மூவரும் இறங்கிப்போய்ப் பார்க்க சுவர் மறைவில் இருந்தவர் ஈஸ்வரன்தான். அபியைப்பார்த்ததும் திடுக்கிடுகிறார். கோயிலில் அலமேலுவைத்தானே பார்த்தோம், அபி எப்படி இங்கே வந்தாள் எந்த அதிர்ச்சியும் குழப்பமுமாக திகைக்கிறார்.

மீண்டும் தன்வந்திரி கோயில். அங்கே வைத்து அப்பாவை, அவருடைய பழைய ஃபிளாஷ்பேக்குகளை நினைவுக்கு கொண்டு வந்து அபி லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குகிறாள். அவருடைய பணம் காசுகளோ, சொத்துசுகங்களோ தங்களுக்கு தேவையில்லை என்றும், அவர் தங்களுக்கு அப்பா, தன் அம்மாவுக்கு கணவர் என்ற உறவுகள்தான் தங்களுக்கு வேண்டும் என்றும், அதற்கு அச்சாரமாக, ஊரறிய தன் அம்மாவுக்கு அவருடைய அறுபதாம் கல்யாணத்தில் தாலி கட்ட வேண்டும் என்றும் சொல்ல, மிகுந்த உணர்ச்சிவசப்பட்டவாராக அவர் சம்மதிக்கிறர். மகள் பேசும்வரை ஒருபக்கம் நின்று அழுதுகொண்டு நின்ற கற்பகத்தையும், மகள் அபியையும் அணைத்துக்கொள்கிறார். (இந்த இடத்தில் பாஸ்கர், அலமேலு, சங்கீதா ஆகியோர் காண்பிக்கப்படவில்லை).

Arthi
20th September 2008, 08:04 PM
saradha madam... kaLakareenga pOnga :clap:

gta129
20th September 2008, 08:39 PM
I don't have SunTV. I watch these serials by renting them at a videos store. Unfortunately the store's been closed for renovation since the beginning of this month. Thanks to Saradha madam I feel like I'm watching the serial.

Thanks again Saradha madam.

Arthi
21st September 2008, 08:37 PM
same here... i can not continue watching KOLANGAL serial.... only reading Saradha Madam's posts....
Thanks once again and keep going, your style of writing is too good :clap: :D

saradhaa_sn
23rd September 2008, 02:16 PM
தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துவிட்ட நிலையில், ஒரு வீட்டில் சாரதாவும், மருமகளும் ரகசிய வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென அங்கு வரும் தோழர் பாலகிருஷணன், அவர்கள் செய்வது சட்டவிரோதம் என்றும், தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் சொல்ல, சாரதாவோ, நாங்கள் தெரிந்தவர்களிடம்தானே கேட்கிறோம் என்று சொல்ல, தோழர் மறுக்க, அங்கு வரும் திருவேங்கடம், தோழரை தனியே அழைத்துச்சென்று, தாங்கள் இப்படி சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடத்தான் செய்வோம் என்றும், முடிந்தால் தோழர் தடுத்துக்கொள்ளட்டும் என்றும் சவால் விட, தான் தேர்தல் ஆணையத்தை அணுகப்போவதாக சொல்லி தோழர் செல்கிறார்.

இன்னொரு இடத்தில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளிகளைக்கண்டதும் காரை விட்டு இறங்கிய திருவேங்கடம், சைகையாலேயே தன்னுடைய சங்கு சின்னத்துக்கு வாக்கு கேட்க, முதலில் குழம்பிய அந்த தொழிலாளிகள் பின்னர் புரிந்து கொள்கின்றனர். அப்போதும் அங்கே தோழர் வர, மீண்டும் வாக்குவாதம் முற்றுகிறது. தோழர் வழக்கம்போல சட்ட விதிகளை எடுத்துக்கூறி அவர்களைத்தடுக்க, திருவேங்கடமும் தன் வழக்கப்படி, தனது சவடால் மற்ரும் தில்லுமுல்லு அரசியல்வாதங்களை எடுத்துவைக்க........ (எப்போதுதான் முடியும் இந்த தேர்தல்..?. அதற்குள் நமது பாராளுமன்ற தேர்தல் வந்துவிடும்போல் இருக்கே).

மருத்துவமனையில் ஆனந்தியைச் சந்திக்கும் ஈஸ்வரன், ஆனந்திக்கு திருநீறு அணிவித்து நலம் விசாரிக்கிறார். அப்போதும் அங்கே இருக்கும் அபியும், ஆர்த்தியும், கடந்தகாலத்தில் தங்களை வளர்க்க அம்மா பட்ட கஷ்ட்டங்களையும் சந்தித்த அவமானங்களையும் திரும்ப திரும்ப கூறுகின்றனர். (இது கொஞ்சம் ஓவ டோஸாக தெரிகிரது). அதிலும், தன் வீட்டு விசேஷத்துக்கு அம்மாவை அழைத்து அவமானப்படுத்தி அனுப்பிய ஆர்த்தி, தன் அம்மாவின் கடந்தகால கஷ்ட்டங்களை அப்பாவிடம் கண்ணீர் வழிய சொல்லும்போது துக்கம் வரவில்லை, சிரிப்பு வந்தது. தங்கள் அம்மாவின் சந்தோஷத்துக்காகவே அவரை அப்பாவாக ஏற்றுக்கொள்வதாகச் சொல்ல, அப்படீன்னா நீங்கள் மனமுவந்து அப்பாவாக ஏற்கவில்லையா என்று ஈஸ்வரன் பரிதாபமாக கேட்க, முன்னர் சொன்னபடி ஊரறிய தங்கள் அம்மாவை அவரதௌ மனைவியாக அறிவிக்கவேண்டும் என்று சொல்ல, அவர் சம்மதிக்க.... அபி, வார்டுக்கு வெளியே போய் அழுகிறாள் (எதுக்கு,,?).

sudha india
23rd September 2008, 02:40 PM
It is high time Thols understands one thing :

All the viewers have understood each and every character and about their good and bad thoughts.

The Director need not explain the mentality of the characters again, that too after so many episodes, by creating certain incidents and with lengthy dialogues. Instead can take the story at a faster pace.

Looks like the serial has left the main thread lose and concentrating on trivial issues.

Saradha....... as you rightly said, dialogues of
Arthi, the non stop crying of karpagam and baseless talks of Thiru thiruvengadam........ ellam thanga mudivadhillai.

thriinone
24th September 2008, 08:37 AM
oru kaalathila manaivi makkaloda virumbi partha serial. serial aarambicha poluthu college padicha en ponnukku ippo kalyanam pesi mudichittom. innum serial poittu irukku. entha serialum surukka mudikka theriyaama romba porumai sodhikkaranga

saradhaa_sn
24th September 2008, 01:57 PM
[tscii:d1ad3dfc5d]அன்றைக்கு வாக்குப்பதிவு என்று சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் அறிவிக்க, அப்பாடா இந்த தேர்தல் முடிந்தால், திருவேங்கடத்தின் கோமாளித்தனங்களும், அதற்கு தோழரின் கண்டனக்கணைகளும் குறைந்து, கதை சரியான பக்கம் பயணிக்கும் என்ற ஆறுதல் ஏற்படுகிறது. வாக்குச்சாவடி முன் இரண்டு பிரதான வேட்பாளர்களின் பூத் ஏஜண்டுகளும் எதிர் எதிராக மேஜை போட்டு வாக்காளர் பதிவுச்சீட்டு வழங்கிக்கொன்டிருக்க, வழக்கம்போல திருவேங்கடத்தின் ஆட்கள் தோழரை கிண்டலடிக்க, ஒரு சிறிய மோதல் முற்றுகிறது. சற்று நேரத்தில் திருவேங்கடமும், தோழர் பாலகிருஷ்ணனும் வாக்குபதிவைப் பார்வையிட வருகின்றனர். கழுத்திலும் தலையிலும் கட்டுடன், கிழிந்த சட்டை அணிந்தவாறு திருவேங்கடம், வாக்காளர்களின் அனுதாபம் பெற முயல்கிறார். வழக்கம்போல பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுகிறார். அனால் அவரது எச்சரிக்கை பயனற்றுப்போகிறது. ஓட்டுப்போட செல்லும்போதும் வரிசையில் நிற்பவர்களிடம் பவ்யமாக வணக்கம் சொல்ல, அவரது நிலையைப்பார்த்து வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் அனுதாபத்தைக் காட்டுகின்றனர். அதைப்பார்த்து மனதுக்குள் சந்தோஷமாக இருந்தபோதிலும் வெளிக்காட்டாமல் தன் நாடகத்தைத் தொடர்கிறார். அதன் உச்சகட்டமாக ஒருக்கட்டத்தில் மயக்கமடைகிறார். (அதாவது மயக்கமடைவதுபோல நடிக்க) வாக்காளர்களின் அனுதாபம் (குறிப்பாக தாய்க்குலம்) மேலும் அவர் பக்கம் திரும்புகிறது. முதலில் போய் ஓட்டுப்போடுமாறு மற்றவர்கள் கேட்டும், மறுத்து வரிசையில் நின்றே ஓட்டுப்போகிறார். ஓ…. தேர்தலில் இத்தனை தில்லுமுல்லுகள் உண்டா என்று ஆச்சரியம் கலந்த சிரிப்புடன் தோழர் இவையனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அதென்ன இது ஏதோ வார்டு கவுன்சிலர் தேர்தல் போல இரண்டு வேட்பாளர்களும் ஒரே வாக்குச்சாவடியில் முகாமிட்டுள்ளனர்?. வாக்குச்சீட்டில் நிறைய சின்னங்கள் காண்பிக்கப்பட்டபோதிலும் வேறு எந்த வேட்பாளர்களையோ அவர்களின் ஏஜண்டுகளையோ காணோம். வாக்குப்பதிவு காண்பிக்கப்படும்போது, திருவேங்கடத்தின் சங்கு சின்னத்தில் அதிக வாக்குகள் முத்திரையிடப்படுவதாகக் காண்பிக்கப்படுகிறது. சன் டிவியின் மாலைச்செய்தியில் தண்டலம் தொகுதி தேர்தல் மிகவும் அமைதியாக நடந்ததாக சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு முன்னிருந்த பரபரப்பு என்னாயிற்று?. இது தன்னுடைய தன்மானப்பிரச்சினை என்று சொன்ன ஆதித்யா, வெற்றிக்காக எதையும் செய்வதாகச் சொன்ன தேவராஜ பாண்டியன் ஆகியோரின் நடவடிக்கைகள் எதையும் காணோம். திருவேங்கடத்தின் ஒருசில சில்லறை நாடகங்கள் மட்டுமே அரங்கேறின. ஆனால் இம்மாதிரியான நேரங்களில் அடாவடிச்செயல்கள் வாக்களர்களை திசை திருப்பி விடும் என்பதால், அடிதடிகளில் இறங்காமல் திருவேங்கடம் அடக்கி வாசித்திருக்க கூடும்

தேர்தல் முடிவு எப்படி ஆகப்போகிறதென்று தெரியவில்லை. தோழர் வெற்றி பெற்றால், அது சினிம்மாத்தனமாக, அதாவது நல்ல விஷயங்கள் திரைப்படங்களில் மட்டுமே நடப்பது போல இதுவும் இருக்கும். அதே சமயம் திருவேங்கடம் வெற்றி பெற்றால் அது நாட்டின் இன்றைய நடைமுறைகளை அப்படியே பிரதிபலிப்பதாக அமையும். காலம் முழுவதும் ஒருவனைக் கயவனாக அறிந்திருந்தபோதிலும், சற்றுநேரம் அவன் நடத்தும் நாடகப்பிரச்சாரத்தில் மயங்கி வாக்களித்துவிட்டு ஐந்து வருடங்கள் அல்லல்படுவது நம் மக்களின் வாடிக்கையாயிற்றே. (சரி… இப்பகுதியில் அரசியல் பேசக்கூடாது என்பதால், கண்டனம் வரும் முன் நிறுத்திக்கொள்வோம்).

ரொம்ப நாளைக்குப்பிறகு அபியை அலுவலக அறையில் பார்க்க முடிகிறது. அப்போது அங்கு வரும் ராஜாமணி மேடம், தன்னுடைய ப்ராஜக்டை நல்லபடி முடித்துக் கொடுத்ததற்காக நன்றி தெரிவிக்க, அபி அதை மறுத்து, தன்னை மேடம் ஒப்படைத்த வேலையைத்தான் தான் செய்து முடித்ததாக சொல்ல, ராஜாமணி மீண்டும் சொல்ல, அபி மீண்டும் மறுக்க, ராஜாமணி தன் நன்றியை வாபஸ் பெற்றுக்கொள்கிறார். (சரிங்க, நன்றி சொல்வது அவ்வளவு பெரிய தவறா?. அதுக்கு இத்தனை ஃபுட்டேஜ் தேவையா?).

அப்போது கோட்டும், சூட்டுமாக ஒரு பெரியவர் வருகிறார். தோரணையைப்பார்த்தால் அவர் பெரிய பிஸினஸ்மேன் என்று தெரிகிறது. வந்தவர் பில்டர்ஸ் அசோஷியேஸனைச் சேர்ந்தவர் என்று அபியும், ராஜாமணியும் கண்டுகொள்கின்றனர். அவர் அபியுடன் ஏதேனும் ரகசியம் பேச இருந்தால் தான் வெளியே செணுவிடுவதாக ராஜாமணி சொல்ல, அவர் அப்படியொன்றும் ரகசியமில்லை என்று சொல்லி விஷயத்தை ஆரம்பிக்கிறார். தாங்கள் எல்லாம் உறுப்பினர்களாக இருக்கும் பில்டர்ஸ் அசோஸியேஷன் தலைவர் தேர்தல் வருகிறது என்று (மீண்டும் ஒரு தேர்தலா..?) அவர் சொல்ல, அதற்கு அபியும், ராஜாமணியும் ‘வழக்கம்போலவே அதில் ஆதித்யாதான் நின்று வெற்றி பெறுவார், இது தெரிந்ததுதானே’ என்று கூற, அவர்மறுத்து இந்த முறை ஆதியைத் தேர்ந்தெடுக்க கூடாதென்றும், தொடர்ந்து அவரையே தேர்ந்தெடுப்பதால் அவர் தலைக்கனத்துடனும் தான்தோன்றித்தனமாகவும் நடப்பதாகவும் சொல்லி இம்முறை அசோஸியேஷன் தலைவராக அபியைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் சொல்ல அபி முதலில் மறுக்கிறாள். தான் ஏற்கெனவே பெரிய ப்ராஜக்ட்டை ஒப்புக்கொண்டு அதில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கும்போது இந்த புதிய பொறுப்பு தனக்கு வேண்டாம் என்று மறுக்க, ராஜாமணியும், வந்தவரும் ரொம்ப வற்புறுத்தி அவலை சம்மதிக்க வைக்கின்றனர்.

இதை சாக்காக வைத்து நாளை ஆதி, அபிக்கு தொல்லைகள் தரும்போது, வற்புறுத்திய இவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அவள்தான் தனியாக அனுபவிக்க வேண்டும். இதெல்லாம் ராஜாமணிக்கும், வந்தவருக்கும் தெரியாதா?. (ராஜாமணியின் அக்கா மகன் என்று சொல்லிக்கொண்டு ரஞ்சன் என்ற ஒரு தடியன் சுற்றிக்கொண்டிருந்தானே என்னவானான்..?. சரி, தொல்ஸ் என்றைக்காவது கொண்டுவந்து கண்ணில் காட்டுவார்…….. ) [/tscii:d1ad3dfc5d]

sarna_blr
24th September 2008, 02:04 PM
I have become a regular reader of this thread :boo: ellaappugazhum Saradha prakash madam'kE :bow: :bow:

saradhaa_sn
25th September 2008, 01:52 PM
[tscii:664488659e]நேற்றைய எபிசோடில் தேர்தல் முடிவு தவிர வேறு எந்த திருப்பமும் இல்லை. வரப்போகும் தேர்தல் முடிவு குறித்து நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் திருவேங்கடம், வழக்கம்போல தனது சவடால்களை அவிழ்த்து விடுகிறார். தான் எம்.எல்.ஏ. ஆவது உறுதி என்றும், ஆனதும் முதல் வேலையாக தன் தொகுதியிலுள்ள புறம்போக்கு நிலங்களை தன் வசப்படுத்திக்கொள்ள வேன்டும் என்றும் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு வரும் சாரதா, முடிவு வருவதற்குள் ஏன் இப்படி பந்தா பண்ணுகிறீர்கள் என்று கேட்க, தான் வெற்றி பெறுவது உறுதி என்றும் தான் தேர்தல் தினத்தன்று போட்ட நடகங்கள் மக்கள் மத்தியில் தனக்கு பெரிய அனுதாப அலைகளை தோற்றுவித்துள்ளது என்றும் சொல்லிக்கொண்டிருக்கும்போது அங்கு வரும் மகள் இப்படி கேவலமான முறையில் வெற்றி பெறுவது வெட்கமாக இல்லையா என்று கேட்கிறாள். வாழ்க்கையில் கேவலம் எல்லாம் பார்க்கக்கூடாது என்றும், வாழும் வரை எப்படியும் சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுப் போகவேண்டுமென்றும், அவர் எம்.எல்.ஏ. ஆனால் எம்.எல்.ஏ. மகள் என்ற பெருமை அவளுக்கும்தானே என்றும் கூடிய சீக்கிறமே மந்திரி மகள் என்ற பெருமையையும் அவளுக்கு கொடுப்பதாகவும் கூற, மகள் மீண்டும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட, சாரதா மகளை வெளியே அழைத்துப்போகிறாள்.

ஆதித்யாவின் அலுவலகத்துக்கு வரும் அலமேலு, ஆதித்யாவைப்பார்க்க வேண்டுமென்று ரிஷப்ஸனிஸ்ட்டிடம் சொல்ல , அவ்ள் எம்.டி.யிடம் கேட்பதாக சொல்லி இண்டர்காமில் அழைக்கப்போகும்போது அவளிடமும் அலமேலு பிரச்சினை பண்ணுகிறாள். தன்னை அவள் தடுத்தது ஆதிக்கு தெரிந்தால் அவளுக்கு வேலை போய் விடும் என்றும் சவடால் விடும் நேரம், அங்கே வரும் கிரி அலமேலுவைப்பர்த்து வந்த காரனம் கேட்க, முக்கியமான குடும்ப விஷயம் பேச இருப்பதாக சொல்ல, பாஸ் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்றும் இப்போது பார்க்கமுடியாது என்றும் அவளைத்தடுக்கிறான். ஆதியின் அப்பா ஈஸ்வரனை பிச்சைக்கார கோலத்தில் பார்த்ததையும், தற்போது அவள் அபி வீட்டில் இருப்பதையும் ஆதியிடம் சொல்லி கோள்மூட்டி தூபம் போடலாம் என்ற எண்ணத்துடன் வந்த அலமேலுவுக்கு, கிரி நந்தி மாதிரி தடுப்படகிக்கண்டு எரிச்சல் அடைந்தவளாக வெளியேறுகிறாள். ஆலமேலு போனதும், இனி எப்போது அவள் வந்தாலும் உள்ளே அனுமதிக்க கூடாது என்று கிரி கண்டிப்புடன் சொல்கிறான்.

தேர்தல் முடிவு அறிய திருவேங்கடம் வீடில் அவரும் அவரது கைத்தடிகளும், தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்க, தோழரின் இருப்பிடத்தில் அவரும் மற்ர தோழர்களும், அவரது தயாரும் தொலைக்காட்சி செய்தியை எதிர்பார்த்துள்ளனர். முதல் சுற்றில் தோழர் 8,000 வாக்குகள் முன்னிலை, அடுத்த சுற்றில் 3,500 வாக்குகள் முன்னிலை, பின்னர் 2,500 வாக்குகள் முன்னிலை, அடுத்து திருப்பமாக திருவேங்கடம் 750 வாக்குகள் முன்னிலை……. இப்படியாக சென்ற வாக்கு எண்ணிக்கை கடைசியில் 5,500 வாக்குகள் வித்தியாசத்தில் திருவேங்க்டம் வெற்றி.

நல்லவேலை, தோழர் வெற்றி பெற்றிருந்தால் நான் ஏற்கெனவே சொன்னமாதிரி செயற்கையாக, சினிமாத்தனமாக, நம்ப முடியாததாக அமைந்திருக்கும். போலி அரசியல்வாதியை வெற்றிபெற வைத்ததன் மூலம், ஒரு யதார்த்த முடிவையும், இது நடப்பது தமிழ்நாட்டில்தான் என்பதையும் தெள்ளத்தெளிவாக உணர்த்தியுள்ளார் திருச்செல்வம்… வாழ்க.
[/tscii:664488659e]

sudha india
25th September 2008, 03:38 PM
thanks for the update Saradha.

Anyway the (comedy) electrion got over before our parliament elections.

Though the election result is not cinematic, the serial also confirms that people are fools, which is really a sad truth ????? !!!!!!

ksen
25th September 2008, 06:06 PM
[tscii:24b9f7b6e2]ரொம்ப நாளைக்குப்பிறகு அபியை அலுவலக அறையில் பார்க்க முடிகிறது. அப்போது அங்கு வரும் ராஜாமணி மேடம், தன்னுடைய ப்ராஜக்டை நல்லபடி முடித்துக் கொடுத்ததற்காக நன்றி தெரிவிக்க, அபி அதை மறுத்து, தன்னை மேடம் ஒப்படைத்த வேலையைத்தான் தான் செய்து முடித்ததாக சொல்ல, ராஜாமணி மீண்டும் சொல்ல, அபி மீண்டும் மறுக்க, ராஜாமணி தன் நன்றியை வாபஸ் பெற்றுக்கொள்கிறார். [/tscii:24b9f7b6e2]


Abhikku business kodukkum clientaaga irukkum Rajamani madam eppadi Tholsai veLiyil anuppum mukkiya meetingil ellaam pangukoLgiraar ? avar Ranjanudan sErndhu Abhiyai pEsiyadhai ellaam convenientaaga marandhuvittaargaL.

saradhaa_sn
26th September 2008, 02:06 PM
[tscii:0194fa117e]அபியின் அலுவலக அறைக்குள் வரும் கிருஷ்ணன், அவளுடைய சித்தப்பா திருவேங்கடம் வெற்றி பெற்றதையும், தோழர் பாலகிருஷ்ணன் தோல்வியடைந்தது பற்றியும் சொல்ல, அவள் சித்தப்பாவின் வெற்றிக்காக மகிழவில்லை, மாறாக தோழரின் தோல்விக்காக பெரிதும் வருத்தம் அடைகிறாள்.

திருவேங்கடம் வெற்றி பெற்றதற்கு ஆதிக்கு போன் கால்கள் வந்த வண்ணம் இருந்தன. சற்று நேரத்தில் தேவராஜ பாண்டியனும் வருகிறார். ஈருவரும் திருவேங்கடத்தின் வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஏற்கெனவே பணபலம், அடியாள் பலத்துடன் இருக்கும் தங்களுக்கு இப்போது அரசியல் பலமும் சேர்ந்துவிட்டதென மகிழ்கின்றனர். ஆனால் யாரிடம் இருந்து போன் வரவேன்டுமோ அவரிடமிருந்து வரவில்லை. ஆம், தனது வெற்றிச்செய்தியை திருவேங்கடம் ஆதிக்கு தெரிவிக்கவுமில்லை, அதற்கு நன்றி சொல்லவுமில்லை. பொறுத்துப்ப்பார்த்த ஆதி கிரியிடம் சொல்லி திருவேங்கடத்தை போனில் அழைக்கும்படி சொல்ல, போனை எடுக்கும் கைத்தடி ஒருவன் கிரியை தகாத வார்த்தைகளில் திட்ட கிரி போனைத் துண்டித்துவிடுகிறான். மூவரும் திருவேங்கடத்தைக்காண அவர் வீட்டுக்கு செல்கின்றனர்.

திருவேங்கடம் வீட்டில் கூட்டம் திருவிழாக்கோலமாக இருக்கிறது. கைத்தடிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்க ‘வருங்கால அமைச்சர், வருங்கால முதல்வர், வருங்கால பிரதமர்’ என்கிற ரீதியில் கோஷங்கள் முழங்கிக்கொண்டு இருக்கின்றன. அங்கு வரும் ஆதியிடம் ‘அப்பா உள்ளே கட்சித்தலைவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்றும், சற்று நேரம் வெளியில் அமர்ந்திருக்கும்படியும்’ சதீஷ் சொல்லி அவர்களை உட்கார வைக்க சாரதா அவர்களுக்கு காபியும் இனிப்பும் கொண்டு வந்து தருகிறாள்.

உள்ளே கட்சித்தலைவருடம் பேசிக்கொண்டிருக்கும் திருவேங்கடம், தான் வெற்றி பெற்ற செய்தியறிந்து ஆளுங்கட்சி உட்பட பல கட்சிகளில் இருந்தும் அழைக்கிறார்கள் என்றும், தான் இதே கட்சியில் தொடர்ந்து நீடிக்க தனக்கு பத்து கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார். பத்துகோடியா என்று வாய்பிளக்கும் தலைவரிடம், தலைவருடைய சொத்து பத்துக்கள் அனைத்தும் அடங்கிய ஃபைல் தன்னிடம் இருக்கிறது என்றும், அவற்றோடு ஒப்பிடும்போது பத்துகோடி அவருக்கு சின்ன டிப்ஸ் போன்றது என்றும் மிரட்டும் தொணியில் சொல்ல தலைவர் அரண்டு போகிறார். அத்துடன் பத்துகோடி உடன் தருவதாக சம்மதிக்கிறார். அதைக்கொண்டு முதலில், தன் கையைவிட்டுப்போன தன் வீட்டை மீட்பதே தன் முதல் வேலையென்று திருவேங்கடம் சொல்ல, தலைவர் புறப்படுகிறார். போகும்போதும் கைத்தடிகளின் (இவர்களை தொண்டர்கள் என்று சொல்வது, உண்மையான தொண்டர்களை அவமானப்படுத்துவதாகும்) வாழ்க கோஷம் ஒலிக்கிறது. .

தலைவருடன் வெளியே வரும் திருவேங்கடம் ஆதியையும் தேவராஜ பாண்டியனையும் சந்திக்கிறார், ஆனால் அவர் நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் அவர்களை துணுக்குறச்செய்கிறது. வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு பின்னர் சந்திப்பதாகச் சொல்லிப்போகின்றனர்.

தோழர் பாலகிருஷ்ணன் இருப்பிடத்தில் மற்ற தோழர்களும், தாயாரும் சோகமே உருவாக அமர்ந்திருக்க தோழர் மட்டும் கலங்கவில்லை. ஆனால் மக்களின் அறியாமையும் ஏமாளித்தனமும் அவரை அதிசயிக்க வைக்கிறது. ‘இவ்வளவு நாள் நீ பொதுவாழ்க்கையில் கஷ்ட்டப்பட்டதற்கு கிடைத்த பரிசு இதுதானா’ என்று கேட்கும் தாயாரிடம், தான் மக்கள் தொண்டு செய்வது இதைப்போல சட்டமன்ற, நாடாளுமன்ற பதவிகளைப் பரிசாகப் பெறுவதற்காக இல்லையென்றும், ஆனால் சட்டமன்ற உறுப்பினரானால் இன்னும் திறம்பட மக்கள் சேவை செய்யமுடியும் என்று எண்ணியே இதில் இறங்கியதாகவும் கூறுகிறார். ஆனாலும் தொண்டர்கள் சமாதானம் அடையவில்லை. ‘தியாகச்செம்மல், கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜரையே தோற்கடித்து பெருமைப்பட்டுக்கொண்ட தமிழகம் இதுவென்றும், அவற்றோடு ஒப்பிடும்போது தனது தோல்வி வெறும் தூசி என்றும், அதற்காக மக்கள் தொண்டை விட்டுவிடமாட்டேன், என் இறுதி மூச்சு வரை உழைப்பேன்’ என்று சொல்லி தோழர்களை அணைத்துக்கொள்கிறார். [/tscii:0194fa117e]

Sanguine Sridhar
26th September 2008, 11:26 PM
After so many months I watched this serial today.

summa solla koodadhu oru coma patient 10 varusham kazhichu thirumbavum nenavu vandhaalum kooda indha kadhai purinjudum pola :lol2: :evil:

Naane super-a direct pannuven!! 8-)

saradhaa_sn
27th September 2008, 01:59 PM
[tscii:e07c53a01d]சிலசமயம் சுறுசுறுப்பாக செல்வது, பலநேரங்களில் ‘டல்’லடிப்பது என்பது கோலங்கள் சீரியலின் வாடிக்கை. சமீப நாட்களாக ரொம்ப டல்.. கதையோட்டத்துக்கு முக்கியமான விஷயங்கள் எதுவுமே நடக்கவில்லை. சும்மா ஏனோதானோ என்று போய்க்கொண்டிருக்கிறது. நேற்று பதினெட்டு நிமிட விளம்பரங்களுக்கிடையே பணிரெண்டு நிமிடம் ஓடிய எபிசோடில் நடந்தது என்ன?. ஒரே வார்த்தையில் ‘ஒண்ணுமில்லை’ என்று சொல்லிவிட்டுப்போயிடலாம்.

அபியின் அலுவலகம். காட்சி ஆரம்பித்தபின் பகுதி நேரம் அவள் ஏதோ ஒரு ஃபைலை படித்தபடி அங்குமிங்கும் நடப்பதிலேயே போய்விட, அடுத்து உள்ளே நுழையும் ஆர்த்தி தான் தற்போது மருத்துவமனையில் இருந்துதான் வருவதாகவும், சித்தப்பா திருவேங்கடம் தேர்தலில் வெற்றிபெற்ற செய்தியை ரொம்ப மகிழ்ச்சியோடும் சொல்ல, அபியோ’இதில் நாம் மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது. இதுவரை அவரால் நம் குடும்பத்துக்கு எந்த பயனும் இல்லை. இப்போது அவரைத் தேர்ந்தெடுத்ததால் தொகுதி மக்களுக்கும் எந்த பயனும் இருக்கப்போவதில்லை, போய் உன் வேலையைப்பார்’ என்று அனுப்பிவிடுகிறாள். அவள்போகும் முன் அப்பா ஈஸ்வரன் தங்களுடன் இருப்பது ஆதிக்கோ கான்சனாவுக்கோ தெரியக்கூடாது என்பதால் இதுபற்றி யாரிடமும் எந்த வார்த்தையும் சொல்லவேன்டாம் என்றும் எச்சரிக்கிறாள். (யாருக்கும் தெரியக்கூடாதாம், ஆனால் அழைப்பிதழ் எல்லாம் அச்சடித்து ஊரை அழைக்கிறார்களாம். அபி வீட்டில் தும்மினால்கூட கண்டுபிடித்துவிடும் ஆதியிடம் இதை தெரியாமல் மறைப்பது சாத்தியமா?)

மருத்துவமனையில் தன்னைப்பார்க்க வந்திருக்கும் தோழர் பாலகிருஷ்ணனிடம் ஆனந்தி அவருடைய தோல்விக்கு அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவிக்கிறாள். தோழரோ ‘அசத்தியவாதிகள் (‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில் வருபவர்கள் அல்ல, சத்தியத்துக்கு புறம்பானவர்கள்) வெற்றிபெறுவதுபோல தெரியும், ஆனால் பின்னர் வீழ்ச்சியடைவார்கள்’ என்று சொல்ல, அதற்கு ஆனந்தி, ‘அவர்கள் தானாக வீழ்வார்கள் என்று சொன்னால் போதாது, அவர்களை நாம்தான் வீழ்த்த வேண்டும். நான் உடல்நலம் தேறியதும் முன்னைவிட இரட்டிப்பு வேகத்துடன் வருவேன் என்று’ சொல்ல, தோழர் முதலில் அவளுடைய உடல்நிலை பூரணமாக தேறட்டும், பின்னர் செயலில் ஈடுபடுவோம் என்று சொல்லி விடைபெற்றுச்செல்கிறர். அவர் போகும்வரை இன்னொரு அறையில் மறைந்திருந்த ஈஸ்வரன் வெளியே வந்து, ‘சஷ்டியப்த பூர்த்தி’ விழா நடக்கும்வரை ஆதி, கான்சனா இவர்கள் கண்ணில் படாமல் இருக்க தான் இவர்களைவிட்டு தனியாக வேறிடத்தில் தங்கிக்கொள்வதாக அபியிடமும் ஆனந்தியிடமும் சொல்ல, முதலில் தயங்கிய அபி பின்னர் சம்மதிக்க, அவர் செல்கிறார். நல்லவேளை அந்த இடத்தில் அப்போது கற்பகம் இல்லாததால் ஒரு அழுகைக்காட்சியில் இருந்து நமக்கு விடுதலை.

ஆதி, திருவேங்கடம், தேவராஜ பாண்டியன் மூவரும் மதுவருந்திக்கொண்டிருக்கின்றனர். (சித்தப்பா, மகன் என்ற பேதமின்றி இந்தக்குடிப்பழக்கம் மனிதர்களை எவ்வளவு கீழ்த்தரமாக கொண்டு செல்கிறது..!!). தேர்தலில் வென்ற செய்தியை தன் பாஸுக்குத்தானே முதலில் தெரிவிக்க வேண்டும், அப்படியிருக்க தான் போன் செய்தபோது அவருடைய கைத்தடி ஒருவன் தரக்குறைவாக பேசியதாக கிரி பேச்சை ஆரம்பிக்க……(போசுடா) ஆரம்பித்தது திருவேங்கடத்தின் அறுவை புராணம். தான் வெற்றி பெற்ற செய்தியைக்கேட்டதும் தன்னுடைய இரண்டு போன்களிலும் கால்கள் வந்தவண்னம் இருந்ததாகவும் முகேஷ் அம்பானி, நடிகை ஷில்பா ஷெட்டி, ஒலிம்பிக் வீரர் அபினவ் பிந்த்ரா ஆகியோர் போன் செய்து தன்னை வாழ்த்தியதாகவும், மாயாவதியிடமிருந்து போனை எதிர்பார்த்திருப்பதாகவும் தன் உளறல் புராணத்தை எடுத்துவிட ஆதியும், தே.பா.வும் எரிச்சல் அடைகின்றனர். (தண்டலம் சட்டமன்ற உறுப்பினர் பதவி, அமெரிக்க அதிபர் பதவியைவிட உயர்ந்தது என்று சொல்ல வருகிறாரா?. தொல்ஸ், உங்களுக்கே இதெல்லாம் ரொம்ப ஓவராக தெரியலையா?) புதிய பங்களா வாங்கியிருக்கும் விஷயத்தைப் பற்றி தே.பா. கேட்க, தான் பார்த்துப்பார்த்து கட்டிய வீட்டை தான் மீண்டும் வாங்கியதாகவும், தன்னுடைய இந்த ஐந்துவருட பதவியை வைத்து தன்னை எவ்வளவு வளப்படுத்திக்கொள்ள முடியுமோ அப்படி செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறார்.

இதையெல்லாம் செவிமடுக்காத ஆதி, அவருடைய பதவியைவைத்து தங்களுக்கு சில சாதகமான, அதே சமயம் அபியின் தொழிலை பாதிக்கக்கூடிய, நடவடிக்கைகளில் ஈடுபடவேன்டும் என்று கேட்க, ‘உனக்கு செய்யாமல் யாருக்கு செய்யப்போகிறேன் ஆதி’ என்று உறுதியளித்தாலும், தேர்தலுக்குப்பின் திருவேங்கடத்தின் செயல்பாடுகளில் தேவராஜ பாண்டியனுக்கு நம்பிக்கை வரவில்லை.
[/tscii:e07c53a01d]

saradhaa_sn
27th September 2008, 02:20 PM
[tscii:3f501819dc]ரொம்ப நாளைக்குப்பிறகு அபியை அலுவலக அறையில் பார்க்க முடிகிறது. அப்போது அங்கு வரும் ராஜாமணி மேடம், தன்னுடைய ப்ராஜக்டை நல்லபடி முடித்துக் கொடுத்ததற்காக நன்றி தெரிவிக்க, அபி அதை மறுத்து, தன்னை மேடம் ஒப்படைத்த வேலையைத்தான் தான் செய்து முடித்ததாக சொல்ல, ராஜாமணி மீண்டும் சொல்ல, அபி மீண்டும் மறுக்க, ராஜாமணி தன் நன்றியை வாபஸ் பெற்றுக்கொள்கிறார். [/tscii:3f501819dc]


Abhikku business kodukkum clientaaga irukkum Rajamani madam eppadi Tholsai veLiyil anuppum mukkiya meetingil ellaam pangukoLgiraar ? avar Ranjanudan sErndhu Abhiyai pEsiyadhai ellaam convenientaaga marandhuvittaargaL.
நீங்கள் சொல்வது உண்மை. நானும் பலசமயம் குழம்பிப்போனதுண்டு. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அபி வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் முதல்முறையாக அவளைசந்திக்க தொல்காப்பியன் அலுவககம் வரும்போது, உள்ளே அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கம்பெனி ‘போர்டு மீட்டிங்’ நடந்துகொண்டிருக்கிறது. அந்த மீட்டிங்கில் இருப்பவர்கள் அபி, விஸ்வநாதன், ராஜாமணி (?), ஆர்த்தி(?), கிருஷ்ணன்(?). அபோது உள்ளே செல்ல முற்படும் ‘கம்பெனியின் டைரக்டர்களில் ஒருவரான’ தொல்காப்பியனிடம், உள்ளே மீட்டிங் நடப்பதாகவும், அதனால் யாரையும் உள்ளே விடக்கூடாதென்று அபிமேடம் சொன்னதாகவும் (தொல்காப்பியனிடம் அதுவரை சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும்) ஒரு பெண் குமாஸ்தா தடுப்பது.

sudha india
29th September 2008, 02:48 PM
I saw the last episode.

Easwaran leaves the hospital with a heavy heart. Cinemavil varuvadhu pol, kadhavu varai poivittu thirumbi, unnai marupai orumurai (kadaisiyaga) parka vendum pol ulladhu- nnu solvaangale, adhu madhiri pesittu porar.

Easwaranaiyum mudichuduvaangalo alladhu marupadi oru kadathal naadagam nadakkumo ????

(Adhukkapparam karpagathin kanneer kadhai 3 or 4 vaarangal oodum....)

saradhaa_sn
30th September 2008, 02:03 PM
[tscii:a64373e82d]அண்ணனும் தங்கையுமாக ராஜேஷிடம் வேலை பார்த்துக்கொண்டே அவனுக்கு துர்ப்போதத்களைத்தந்து படுகுழியில் தள்ளக் காத்திருக்கும் சிவசு (முழுப்பெயர் சிவசுப்ரமணியமா..?), ராஜேஷின் மைத்துனன் மனோ புதிதாக ஒரு பெட்ரோல் பங்க் வைக்கப் போவதாகவும், அதற்கு போட்டியாக ராஜேஷும் டேங்கர் லாரி பிஸினஸில் இறங்க வேண்டும் என்றும் சொல்ல, ராஜேஷுக்கு மனதில் பேராசை தட்டுகிறது. அதற்கு தூபம் போடுவது போல தானும் தன் தங்கையும் ராஜேஷின் முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படுவதாகவும் கூற ராஜேஷுக்கு உச்சி குளிர்ந்து போகிறது. ஆர்த்தியிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுத்துவங்கலாம் என்று கூறி விட்டு அங்கிருந்து போக, சிவசு முகத்தில் (சினிமாவில் கதாநாயகன் தன் வலையில் விழுந்துவிட்டான் என்று தெரிந்ததும் வில்லன் சிரிக்கும்) கள்ளச்சிரிப்பு.

தன் வீட்டை மீண்டும் வாங்கி அதில் புதுமனை (?) புகுவிழா நடத்திக்கொண்டிருக்கும் திருவேங்கடம் எம்.எல்.ஏ.க்கு வழக்கம்போல கைத்தடிகளின் ‘அஞ்சாநெஞ்சன், தன்மானச்சிங்கம், விடிவெள்ளி, எழுச்சி ஞாயிறு’ என்ற அடைமொழிகளோடு வாழ்த்து முழக்கங்கள். இது தன் லட்சியத்தின் முதல் படிதான் என்றும் இன்னும் சாதிக்க வேண்டியது (?) நிறைய இருக்கிறது என்றும் (அதுசரி, அரசியல்வாதி தனக்காக வீடு, சொத்து, தோப்பு துறவு என்று தேடிக்கொள்வதுதானே இப்போதைய சாதனை) எம்.எல்.ஏ.சொல்ல, அவர் என்ன சொல்ல வருகிறார் என்று கூட தெரியாமல் அதற்கும் மகிழ்ச்சி ஆரவாரம். (பின்னர் ஏன் ஆளுக்கொரு கட்சி துவங்க மாட்டார்கள்..?). நிறையப் பரிசுப்பொருள்கள் வந்தவண்னம் இருக்கின்றன.

ஆதி, தேவாராஜ பாண்டியன், கிரி மூவரும் கையில் பூக்கொத்துடன் வாழ்த்து சொல்ல வருகிறார்கள். ஏற்கெனவே இருந்த வீட்டை திரும்ப வாங்கியதற்கு இவ்வளவு பந்தாவான விழா தேவையா என்று கேட்கும் ஆதியிடம், இப்படி விழா நடத்தினால்தான் வீட்டுக்கு தேவையான ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி. என்று நிறைய பரிசுகள் வருமென்றும், அரசியல்வாதியான பின் எந்த பொருளையும் காசுகொடுத்து வாங்குவது முட்டாள்தனம் என்றும் தற்கால அரசியலை உரித்து வைக்கிறார். எல்லோரும் பரிசுகளுடன் வந்திருக்கும்போது ஆதி & கோ மட்டும் வெறும் பூக்கொத்துடன் வந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார். அதற்கு பதில் சொல்லும் கிரி, இவையெல்லாவற்றையும் பெற்றுத்தரக்கூடிய எம்.எல்.ஏ. பதவியே தன்னுடைய பாஸ் கொடுத்த பெரிய பரிசுதான் என்று சொல்லி வாயை அடைக்கிறான். ஓரு கோமாளியின் பிதற்றல்களுக்கு இன்னொரு கோமாளி பதில் சொன்னால்தான் சரியாயிருக்கும் என்பதாலோ என்னவோ திருவேங்கடம் எம்.எல்.ஏ.யின் உளறல்களுக்கு கிரியையே பதில் சொல்ல வைக்கிறார் இயக்குனர்.

‘மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்’ என்று இரண்டாம் வகுப்பில் படித்ததை வேன்டுமானால் (படித்து ரொம்ப நாளாகி விட்டதால்) மறந்திருக்கலாம். ஆனால் அடிக்கடி தேன்கிண்ணம் நிகழ்ச்சிகளில் “மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதருக்கு அவ்வை சொன்னது” என்று கண்ணதாசன் பாடுவதைக்கூட அபி குடும்பத்தினர் பார்த்ததில்லை போலும். மதியாதார் வாசலை தேடிப்போய் வண்டி வண்டியாக அவமானங்களை வாங்கி வருவதையே வாடிக்கையாகக் கொண்ட அக்குடும்பத்தின் சார்பில், இப்போது அபி கையில் ஒரு பூக்கொத்துடன் சித்தப்பா வீட்டுக்கு செல்ல, அவள் நுழைந்தது முதலே அர்ச்சனையை ஆரம்பிக்கிறார் திருவேங்கடம் எம்.எல்.ஏ. தன்னுடைய தோல்விக்காகவும் தோழரின் வெற்றிக்காகவும் பாடுபட்ட குடும்பத்திலிருந்து அபி எந்த முகத்துடன் தன்னைப்பார்க்க வந்திருக்கிறாள் என்று கேட்கிறார். (நியாயம்தானே?). அபி அமெரிக்காவில் இருந்து வந்து இத்தனை நாட்களாகியும் தன்னைப்பார்க்க வராமல் இப்போது, தான் எம்.எல்.ஏ. ஆகிவிட்டது தெரிந்ததும் தன்னுடைய தயவு தேவைப்படும் என்று வந்ததாகவும் சொல்கிறார். (நியாயம்தானே..?. அவருடைய குறுக்குபுத்தி அப்படித்தான் நினைக்கும். தனக்கு ஆதாயம் இல்லாமல் ஒரு துரும்பைக்கூட தூக்கிப் போடாதவர் அவர்). தான் சித்தி சாரதாவுக்காக வந்ததாக அபி சொன்னதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அபியின் சப்போர்ட்டுக்கு வந்த சாரதா’ அபி நம்முடைய மூத்த மகள்’ என்று சொன்னதையும் மறுத்து. ‘இதோ நிற்கிறானே இந்த ஆதிதான் என் மூத்த மகன்’ என்று கொக்கரிக்கிறார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஆதியின் மனதில் மகிழ்ச்சி பொங்க அது கண்களில் தெரிகிறது.

‘சித்தப்பா, ஒரு காலத்தில் கடன்காரர்கள் உங்களை கடனுக்காக நெருக்கியபோது இந்த அபிதான் உங்களுக்காக ஜாமீன் கையெழுத்துப்போட்டேனே தவிர, இந்த ஆதி அப்போ எங்கிருந்தான்?’ என்று நம்மைப்போல பத்து மாதத்தில் பிறந்த சாதாரண மனிதர்கள் கேட்டிருப்போம். ஆனால் உலகத்தின் மொத்த பெருந்தன்மையையும் ஒரேயடியாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, வானத்தில் இருந்து ‘தொபுக்கடீர்’னு குதித்த தெய்வமங்கை அபினயா கேட்பாளா? கேட்கமாட்டாள். திரும்பிப்போய்விடலாமா அல்லது எம்.எல்.ஏ.சார், காலில் கிடப்பதை கழற்றி அடிக்கும் வரை நிற்கலாமா என்று யோசிக்கும் அபி, இன்றைக்கு இந்த அவமானம் போதும், சித்தப்பா எங்கே போய்விடப்போகிறார், அப்பப்போ வந்து வாங்கிக் கட்டிக்கொள்வோம் என்று முடிவெடுத்து திரும்ம்புகிறாள்.

எம்.எல்.ஏ.சார். வீட்டு அறையில் ஆதி, தே.பா., கிரி ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கும் எம்.எல்.ஏ.சார், தன்னுடைய வெற்றிக்கு ஆதியின் உதவியைவிட தன்னுடைய மூளையில் உதித்த குறுக்கு யோசனைகளே முக்கிய காரணம் என்று கூறுகிறார். தானே தன்னுடைய ஆட்களைவைத்தே தன்னையும் தன் குடும்பத்துப் பெண்களையும் தாக்கி அடிக்கச்சொன்னதையும், அதனால் மக்களுக்கு தன்மீது ஏற்பட்ட அனுதாபமே ஓட்டுக்களாக மாறியது என்றும் கூற, அப்படி தாக்கும்போது உங்கள் வீட்டுப்பெண்கள் யாராவது இறந்திருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கும் கிரியிடம், அப்படி நடந்திருந்தால், இப்போது ஆறாயிரம் வாக்குகளில் வெற்றியடைந்த நான் இன்னும் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்திருபேன் என்று எக்காளச்சிரிப்புடன் எம்.எல்.ஏ. கூற……… திரைக்குப்பின்னால் இவற்றைக்கேட்டுக்கொண்டிருக்கும் சாரதாவுக்கும் மகள் சுமதிக்கும் பயங்கர அதிர்ச்சி………….

எம்.எல்.ஏ.சாரின் இன்னொரு முகம் தெரிந்த அதிர்ச்சியை மனதில் அமுக்கி வைத்துக்கொண்டு காய் நகர்த்தப்போகிறார்களா, அல்லது “அட பாவி மனுஷா” என்று அலறிக்கொண்டே உள்ளே நுழையப்போகிறாற்களா என்பது இன்றைக்கு தெரியலாம்….. (சாரதா என்று பெயர் வைத்திருப்பதால் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வாய்பில்லை. பார்ப்போம்).
[/tscii:a64373e82d]

sudha india
30th September 2008, 02:26 PM
Sariyaana punch-udan mudithirukireergal.

Punch nalla irukku, anaal adhu unmai allave...

aanaa
30th September 2008, 04:57 PM
நன்றி சாரதா

உயிர் ஓட்டமாக இதுவரை இந்த இழையை நடத்திக் கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி

ஒரு மாத கால விடுமுறை.

உங்களது விமர்சனம்தான் என்ன நடக்கின்றது எனபதைப் புரியவைக்கின்றது.

தொடரட்டும் விமர்சனம்

மீண்டும் நன்றி

saradhaa_sn
1st October 2008, 01:59 PM
[tscii:b9738b6c1b]தன்னுடைய தேர்தல் வெற்றி பற்றியும், தன்னுடைய வீட்டை மீட்டதுபற்றியும் மனைவி சாரதாவிடம் திருவேங்கடம் எம்.எல்.ஏ. பெரிய சாதனையாகவும், அதற்காக தான் எவ்வளவெல்லாம் யோசித்து செயல்பட்டதாகவும் சொல்ல, அவளும் ‘உண்மைதான், என்னையும் தன்னுடைய மகள் மருமகளையும் நீங்களே ஆள் வைத்து அடிக்கும் அளவுக்கல்லவா செயல் பட்டீர்கள்’ என்று அவரிடம் சீற, திருவேங்கடம் எம்.எல்.ஏ.க்கு லேசான அதிர்ச்சி, இவளுக்கு எப்படி தெரிந்தது என்று. ஆதியிடம் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது கேட்டதாக அவளே சொல்ல, ‘சரி, அதான் தெரிஞ்சுபோசுல்ல அப்புறம் என்ன? என்னுடைய அரசியல் வெற்றிக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன். வீட்டில் இருப்பவர்கள் அதை பொறுத்துத்தான் ஆகவேன்டும். பாருடி, நான் வெற்றிபெற்ற செய்தியறிந்து எவனெல்லாம் என்னைத்தேடி வரபோறானுங்கன்னு ’ என்று சொல்லிக்கொண்டே வாசல் பக்கம் திரும்ப……….

அவருக்கு மட்டுமல்ல, அங்கு நின்ற மற்றவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி. ஆம், எப்போதோ ஒரு கயவனுடன் சேர்ந்து அப்பா மகன் என்று நாடகம் ஆடி, திருவேங்கடத்தை ஏமாற்றி, அவர் மகள் சுமதியைத் திருமணம் செய்து, திருவேங்கடத்தின் கோடிக்கணக்கான் ரூபாய்களையும் சுமதியின் ஏராளமான நகைகளையும் கொள்ளையடித்துச்சென்ற அயோக்கியன் வந்து நிற்கிறான். (முதலிரவில் சுமதியை ஏமாற்றிச்சென்ற பின், அவள் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக கொடைக்கானலில் இருந்தபோதும் இவன் அங்கு வந்து வம்பு பண்ணி சுமதி, அபி, சாந்தி இவர்களிடம் அடிவாங்கி தப்பி ஓடிப் போனது நினைவிருக்கலாம்). திருவேங்கடத்தை “மாமா” என்று அழைக்க அவருக்கு கோபம் தலைக்கேறுகிறது, தன் மகளை ஏமாற்றி அவள் வாழ்க்கையை பாழடித்துவிட்டானே என்பதால் அல்ல, தன்னுடைய கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து தன்னை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து நிறுத்தினானே என்பதால்தான். திருவேங்கடமும் மகன் சதீஷும் சேர்ந்து அவனை அடித்து நொறுக்குகின்றனர். ‘தான் திருந்தி வந்துவிட்டதாகவும், அவர்களுடன் சேர்ந்து வாழ விருபுவதாகவும்’ சொல்ல அவர்களின் கோபம் இன்னும் தலைக்கேறி மீண்டும் அடித்து நொறுக்குகின்றனர். கூடவே சுமதியும் சேர்ந்து அவனைத்திட்டுகிறாள்.

அவனை வீட்டை விட்டுத்துறத்தும்போது, திருவேங்கடம் எம்.எல்.ஏ.யின் பிரதான கைத்தடி தங்கராசு, திருவேங்கடத்தைத் தனியாக அழைத்துப்போய், தூபம் போடுகிறார். (நமக்கென்னவோ அந்த அயோக்கியனை தங்கராசே அழைத்து வந்திருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது). ‘நின்ங்கள் இவனை வீட்டை விட்டு துறத்தினால் அது உங்களுக்கு இடைஞ்சல் ஆகிவிடும். நின்ங்கள் ஏற்கெனவே உங்கள் மாப்பிள்ளை ஏர்கிராஷ் விபத்தில் இறந்து விட்டதாக பத்திரிகையாளர்களிடம் ரீல் விட்டிருக்கிறீர்கள். இந்நிலையில் இவனை வெளியே அனுப்பினால், நேராக எதிர்க்கட்சி முகாமில் போய் நடந்தவை யாவற்றையும் சொன்னால், இப்போதுதான் பிரகாசமாக சுடர்விடத்துவங்கியுள்ள உங்கள் அரசியல் வாழ்வு அஸ்தமனமாக நேரிடும்’ என்று இடம் பார்த்து அடிக்க, அரசியல் ஆதாயத்துக்காக எதையும் செய்யத்தயாராக இருக்கும் திருவேங்கடம் எம்.எல்.ஏ., அவனை தன் வீட்டிலேயே வைத்துக்கொள்ள முடிவு செய்கிறார். ‘இந்த ஒருமுறை மன்னிக்கிறேன். இனிமேல் ஒழுங்காக இரு’ என்று சொல்லும் திருவேங்கடம் எம்.எல்.ஏ.யைப்பார்த்து சாரதாவுக்கும் சுமதிக்கும் கடுமையான அதிர்ச்சி மற்றும் கோபம். அவருடைய முடிவை மறுத்துப்பேசும் சாரதாவை கன்னத்தில் அறைந்து, ‘நான் என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு கட்டுப்பட்டு இருந்தால் இரு. இல்லாட்டி வெளியே போ’ என்று கூற அவளும் சுமதியும் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். (நேராக அவர்கள் எங்கே போவார்கள் என்று உங்களுக்கு தெரியாவிட்டால், நீங்கள் சின்னஞ்சிறு பாப்பா என்று அர்த்தம்). சதீஷின் மிரட்டலுக்கு கட்டுப்பட்டு சாந்தி மட்டும் அந்த வீட்டில் தங்கி விடுகிறாள்.

திருச்செல்வத்திடம் இருக்கும் விசேஷம் இதுதான். எந்த ஒரு கதாபாத்திரத்தையும் அம்போன்னு தொங்கலில் விட்டுவிட மாட்டார். எங்காவது ஒரு இடத்தில் வந்து லிங்க் ஆகும். பாருங்கள், நான் சொன்னமாதிரி ரஞ்சனும், சிவதாஸும் கூட எங்காவது வந்து சேருவார்கள்.

ஆனந்தி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வருகிறாள். அம்மாவும் அபியும் அவளை அழைத்து வருகின்றனர். புதுப்பணக்கார்களான மனோவையும், ஆர்த்தியையும் காணவில்லை. முழு ஓய்வில் இருக்கும்படி சொல்லும் கற்பகத்திடம், அம்மா சொல்லியபடி தான் வேளாவாளைக்கு மருந்து, மாத்திரைகள், சாப்பாடு சாப்பிடுவதோடு தன் வேலையையும் வீட்டில் இருந்தே பார்க்க இருப்பதாகவும் அதற்கு அம்மா தடை போடக்கூடாது என்றும் சொல்ல, கற்பகத்துக்கு அது பிடிக்கவில்லை. அப்போது கற்பகம் அபியிடம், சித்தப்பா வீட்டுக்கு போகவேண்டாம் என்று நான் சொல்லியும் போனாயே. என்ன நடந்தது என்று கேட்க, சித்தப்பா கொஞ்சமாவது மாறியிருப்பார் என்று தான் நினைத்ததாகவும், ஆனால் தேர்தல் வெற்றிக்குப்பின்னர் அவருடைய நடவடிக்கை இன்னும் மோசமாகிவிட்டதாகவும் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சாரதாவும், சுமதியும் அங்கே வந்து அவர்கள் வீட்டில் நடந்ததைக்கூறுகின்றனர். தேர்தல் வெற்றிக்காக தன் கணவரே தன்னையும் மகளையும் மருமகளையும் ஆள் செட் பண்ணி அடித்ததை அவர் வாயால் சொல்லக் கேட்டதையும், போதாக்குறைக்கு திடீரென்று வந்து நிறகும் ‘ஃப்ராடு’ மாப்பிள்ளையை வீட்டில் சேர்த்துக்கொண்டதையும், அதனால் தாங்கள் இருவரும் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதையும், எங்கே போவதென்று தெரியாததால் இங்கு வந்திருப்பதாகவும் சொல்ல, இனிமேல் எவ்வளவு காலம் வேன்டுமானாலும் அவர்கள் இருவரும் தங்களுடன் இருக்கலாம் என்று மூவருமே ஒட்டுமொத்தமாக சொல்ல, சாரதாவும் சுமதியும் நெகிழ்ந்து போகின்றனர்.

சாரதா தன் கணவரின் தகிடுதத்தங்களைச் சொல்லும்போது, கேமரா ஆனந்தியின் முகத்தைல் ஃபோகஸ் ஆகிறது. சித்தி சொல்லச்சொல்ல, விஷயங்களை ஆழமாக உள்வாங்கிக்கொள்கிறாள். அனேகமாக விரைவில் அவளது பத்திரிகையில் ‘திருவேங்கடத்தின் தேர்தல் தில்லுமுல்லுகள்’ என்ற தலைப்பில் அவை வெளியாகக்கூடும்…. [/tscii:b9738b6c1b]

gta129
2nd October 2008, 12:49 AM
Thanks for the update Saradhaa madam :ty:

aanaa
2nd October 2008, 04:34 AM
thank you Saradha

Arthi
2nd October 2008, 09:01 PM
saradha madam, ungaLai neengaLe thazzhvaa madhipidalaamaa (last episode)....
come on... ungalavida arumaya indha serial-a yaarala kOnNdupOda mudiyum :thumbsup: :clap:

saradhaa_sn
3rd October 2008, 01:48 PM
Thanks Geetha, Aanaa (nice to see you back) , Sudha, Arthi & others........

தங்களது ட்ராவல்ஸ் பிஸினஸ் போதாதென்று ராஜேஷ் தனது புதிய திட்டமான, டேங்கர் லாரி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து வீட்டில் ஆர்த்தியுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறான். கூடவே சிவசுவும் இருந்து அந்த திட்டத்தைப்பற்றி ஆகா ஓகோ என்று புகழ்ந்துகொண்டிருக்கிறான். ராஜேஷின் அண்ணன் (வழக்கம்போல) 'முன்பின் தெரியாத தொழிலில் இறங்குவதற்கு முன் நன்றாக யோசித்து செய்யவேன்டுமென்றும் அவசரப்பட்டு முடிவெடுத்துவிடக்கூடாது' என்றும் சொல்ல (வழக்கம்போல) அவரது யோசனை குப்பையில் போடப்படுகிறது. மனோ பெட்ரோல் பங்க் தொடங்கிவிட்டான் என்று தெரிந்ததும், இந்த டேங்கர் லாரி திட்டத்தில் ஆர்த்தி ரொம்ப தீவிரமாகிறாள்.

இறந்துபோன நாராயணன், காணாமல் போன ஈஸ்வரன், கையொடிந்துபோன இவர் ஆகியோருக்கு ஒரு ஒற்றுமை உண்டு. தங்கள் யோசனைகள் தங்களுடைய வீட்டாரைப்பொறுத்தவரை செல்லாக்காசு என்று தெரிந்தும், வாயை மூடிக்கொண்டிருக்க மாட்டார்கள். என்னமோ இவர்கள் யோசனையை மற்றவர்கள் உடனே கேட்டு அதன்படி நடந்துவிடுவது போல யோசனை சொல்வார்கள். (வழக்கம்போல) மனைவி கலா அவரைக்கொத்தி அடக்குகிறாள். ஆர்த்தி எந்த வகையிலாவது நொடித்துப்போக வேண்டும் என்று விரும்பும் கலா, எங்கே இந்த புது பிஸினஸை ஆர்த்தி கைவிட்டு விடுவாளோ என்ற எண்ணத்தில், மேலும் மேலும் அவளுக்கு தூபம் போட்டு, மனோவை விட முன்னேறிக்காட்ட வேண்டும் என்று வேகத்தை ஏற்றி விடுகிறாள்.

சரி எந்த பிஸினஸ் துவங்கினாலும் அதற்கு வைட்டமின் 'ப' வேண்டுமே. அதுவும் ஐம்பது லட்சம். அதற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, அபியிடம் கேட்கலாம் என்று ராஜேஷ் சொல்ல, ஏற்கெனவே ப்ளாட் வாங்க பணம் கேட்டபோதே அக்கா தர மறுத்துவிட்டதைச்சொல்லி, அதற்கு வேறொரு யோசனை இருப்பதாக சொல்கிறாள். (அந்த யோசனை என்ன என்பது நமக்கு கிட்டத்தட்ட தெரிந்துபோகிறது. முன்னொருமுறை தங்கள் ட்ராவல்ஸ் வண்டி, அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸுக்காக ஓடக்கூடாது என்று தொல்காப்பியன் தடை விதித்தபோது "திடீர் அண்ணனனிடம்" போய் உதவி பெற்றது நமக்கு நினைவு வருகிறது).

தொல்காப்பியனைச்சந்திக்கும் தோழர், தேர்தலில் தனது தோல்வியால் தொல்ஸ் மிகுந்த வருத்தம் அடைந்திருப்பதை அறிகிறார். தேர்தல் தோல்வி தன்னைப்பாதிக்கவில்லை என்று தோழர் சொன்னபோதும் தொல்ஸ் சமாதானம் ஆகவில்லை. தேர்தல் என்று வந்தாலே நல்லவர்கள், மக்களுக்காக உழைப்பவர்கள் எளிமையானவர்கள் தோற்றுக்கொண்டே இருப்பதும், அயோக்கியர்கள், சுயநலவாதிகள், ஊரை அடித்து உலையில் போடுபவர்கள் எல்லோரும் வெற்றி மகுடம் அணிவதும் தொடர்ந்துகொண்டே இருப்பதும் தொடர்ந்தால் இதற்கு முடிவுதான் என்ன என்று விரக்தியடைகின்றான். தொல்ஸ் சொன்னபிறகு தனக்கும் அப்படி ஒரு எண்ணம் வருகிறது என்று சொல்லும் தோழர், அப்படி ஒரு எண்ணம் நிறைவேற தொல்காப்பியனும் தங்கள் பாசறையில் இணைந்துவிடலாமே என்று கேட்க, எல்லோரும் ஒரே கூடாரத்தில் இருந்து செயல்படுவதைவிட அவரவர்கள் மட்டத்தில் விழிப்புணர்ச்சியைக் கொண்டுவரலாம் என்று தொல்ஸ் கூற, இது நடக்கிற காரியமா என்கிற ரீதியில் தோழர் சிரிக்கிறார்.

நாம் நினைத்தது சரியாகிவிட்டது. ஆர்த்தியும் ராஜேஷும் "திடீர் அண்ணன்" ஆதித்யாவிடம்தான் உதவி கேட்டு வந்திருக்கிறார்கள். கூடவே சகுனி சிவசுவும். ஆதி விஷயத்தைக்கேட்டதும் 'என்ன ஆர்த்தி இது, அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் டைரக்டர்களில் ஒருவரானா ஆர்த்திக்கு அங்கே ஐம்பது லட்சம் புரட்ட முடியலையா?' என்று போலி ஆச்சரியத்தை வெளிப்படுத்த, 'பணம் இருக்கிறது, தருவதற்கு அக்காவுக்கு மனசுதான் இல்லை'யென்று சொல்ல, 'பரவாயில்லை, ஒண்ணாயிருந்த மாடுகள் தனித்தனியாக மேய ஆரம்பித்துவிட்டன' என்று ஆதிக்கு சந்தோஷம்.

தன் தங்கை ஆர்த்திக்காக ஐம்பது லட்சம் ஏற்பாடு செய்வது ஒண்ணும் பெரிய விஷயமில்லையென்றும், அவர்களுக்கு தான் உதவுவதாகவும் சொல்கிறான். அதற்காக உடனே 'செக்'கை கிழித்து நீட்டிவிடவில்லை. தனக்கு தெரிந்த ஃபைனான்ஸியருக்கு போன் செய்து லோன் ஏற்பாடு செய்கிறான். அதற்கான எல்லா பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கிக்கொளும்படியும் அவர்கள் முன்னிலையிலேயே போனில் சொல்கிறான். ஃபைனான்ஸியர் எதில் கையெழுத்துப்போடச் சொன்னாலும் போடும்படியும், அதற்கு தான் பொறுப்பு என்றும் சொல்ல, ஆர்த்திக்கும் ராஜேஷுக்கும் வாயெல்லாம் பல். ஆதி விரிக்கும் வலையில் தானாக வந்து விழுகிறோம் என்று தெரியாத இரண்டு கூமுட்டைகளும் சந்தோஷமாக விடைபெற்றுச்செல்ல, அதுவரை சாதாரணமாக சிரித்துக்கொண்டிருந்த ஆதியில் முகத்தில் இப்போது நம்பியாரின் குரூரப்புன்னகை.....

saradhaa_sn
3rd October 2008, 02:06 PM
[tscii:4482a67e5d]நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒளிபரப்பான சிவப்பதிகாரம் திரைப்படம் பல சீரியல்களை விழுங்கிவிட்டது. கோலங்களும் அதில் அகப்பட்டுவிடுமோ என்று எண்ணிய நேரத்தில், சரியாக கோலங்கள் தொடங்கும் முன் திரைப்படம் முடிந்துவிட்டது. படம் நன்றாகவே இருந்தது, ஆனாலும் கொஞ்சம் ரமணா வாடை வீசியது. ஊழல் அரசியல்வாதிகளை ஒழித்துக்கட்டும் கதை. (ஊழல் அரசியல்வாதிகளை கதைகளில் மட்டும்தான் ஒழிக்க முடிகிறது)…..

அபியின் அலுவலக மீட்டிங் டேபிளில் அபி, கற்பகம், ஆர்த்தி எல்லோரும் அமர்ந்து மனோவை எதிர்பார்த்திருக்கிறார்கள். கம்பெனியின் ஜெனரல் பாடி மீட்டிங்கோ என்று நினைக்கத்தோன்றியது. காரணம் அவர்கள் எல்லோரும் கம்பெனியின் டைரக்டர்கள் (??). (அரசியலில் மட்டும் சொல்வார்கள், காலம் காலமாக கட்சிக்கு உழைத்தவர்களை புறந்தள்ளிவிட்டு குடும்பத்தாரை நுழைக்கிறார்கள் என்று. இங்கு மட்டும் என்ன வாழ்கிறதாம்?. அபியுடன் சேர்ந்து கம்பெனியை உருவாக்கிய உஷாவையும், இதுநாள்வரை கம்பெனியை தன் தோளில் சுமந்து வந்த தொல்காப்பியனையும் வெளியேற்றிவிட்டு, கம்பெனிக்காக ஒரு துரும்பைக்கூட அசைக்காத கற்பகம், ஆர்த்தி, மனோ, ஆகியோர் கம்பெனியின் முக்கிய பங்குதாராகள்…!!!). ஆனால் இவர்களோடு ராஜேந்திரன், அனு, ராஜேஷ், சாரதா ஆகியோரும் இருப்பதால் இது ஏதோ வேறு விஷயம் என்று தோன்றுகிறது. உடல்நலம் தேறிவரும் ஆனந்தி வரவில்லை. மனோ வர தாமதவதைக் காரனம் காட்டி ஆர்த்தி பிரச்சினை பண்ண, அனுவுக்கும் ஆர்த்திக்கும் சிறிய மோதல். மனோ வந்ததும் மீண்டும் அவனுடனும் ஆர்த்தி சண்டைக்குப்போக, வந்த விஷயம் என்னவென்று சொல்லாமால் இவர்களை மோதவிட்டு அபி நேரம் கடத்துகிறாள், இடையிடையே ‘கொஞ்சம் ரென்டுபேரும் சும்மா இருக்கீங்களா’ என்று சின்ன அதட்டலுடன். விஷயம் என்னவென்று சொல்லும்படி எல்லோரும் வற்புறுத்த, கடைசியில் ஒண்ணுமில்லை, வெறும் புஸ்வாணம்.

அப்பாவின் சஷ்டியப்த பூர்த்தி விழாவை விமரிசையாக கொண்டாட வேண்டுமாம், அதில் அப்பா தங்கள் அம்மாவுக்கு மீண்டும் தாலி கட்டி இவர்தான் முதல் மனைவி என்று கன்ஃபர்ம் பண்ணுவாராம். இதற்காக பெரிய கல்யாணமண்டபம் ஏற்பாடு செய்து தடபுடல் பண்ண்ப்போகிறாளாம். (தெரிந்ததுதானே?. இதை வீட்டில் வைத்தே பேசியிருக்கலாமே). அதற்கான செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்வதாக அபி சொல்ல, செலவை எல்லோரும் ஏற்பதுதான் சம்பிரதாயம் என்று சாரதா சொல்கிறாள். (இதற்கெல்லாம் கூடவா சம்பிரதாயம்?. சாரதாவாக வனிதா கிருஷ்ணசந்திரன் இருக்கும்போதுதான் எதற்கெடுத்தாலும் சாஸ்திரம் சம்பிரதாயம். சாரதாவாக குயிலி வந்ததில் இருந்து இதெல்லாம் கொஞ்சம் அடங்கி கிடந்தது. இப்போது மீண்டும் ஆரம்பிக்கிறது). செலவைப்பகிர்ந்துகொள்வதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையில்லை. ஆனால் இந்த பேச்சு துவங்கியதில் இருந்து அனுவின் முகபாவம் சரியில்லை. மற்றவர்கள்தான் சந்தோஷமாக இருந்தனர். சஷ்டியப்த பூர்த்தி விழா பற்றிய தகவல் ஆதியின் குடும்பத்துக்கு தெரியக்கூடாது என்று அபி சொன்னதும் அனுவுக்கு அதிர்ச்சி.

வீட்டுக்கு வந்ததும் மனோவுடன் சண்டைபோடுகிறாள். ஆயிரம்தான் ஆனாலும் காஞ்சனா தன்னை சொந்த மகள்போல வளர்த்த தாய் என்றும் அவளுக்கு தெரியாமல் இந்த விஷேசம் நடத்துவது சரியில்லை என்றும், அபி சொன்னதுக்காக மனோ தலையாட்டிவிட்டு வந்ததாகவும் பிரச்சினையைக்கிளப்ப, அதற்கு மனோ, அபியக்கா சொன்னதுக்காக மட்டும் சம்மதிக்கவில்லையென்றும், சட்டப்படி முதல் மனைவிக்குத்தான் அந்த விசேஷத்தில் பங்கேற்க உரிமையுள்லதால் தன்னுடைய அம்மாவுக்குத்தான் அந்த உரிமையென்றும் சத்தம்போட, சண்டைதுவஙியதுமே பக்கத்து வீட்டில் இருந்து ஓடி வந்து ஒட்டுக்கேட்கும் கலாவுக்கு விஷயம் தெரிந்து போகிறது. தன் வீட்டுக்குள் நுழையும் கலா, தன்னைக்கணடதும் ஆர்த்தியும் ராஜேஷும் பேச்சை நிறுத்துவதைக்கண்டு, ‘என்னைக்கண்டதும் ஏன் பேச்சை நிறுத்துறீங்க?. உங்க அப்பாவுடைய சஷ்டியப்த பூர்த்தி விழா பற்றித்தானே பேசினீங்க?’ என்று குண்டைத்தூக்கிப்போட இவர்களுக்கு அதிர்ச்சி, அதற்குள் எப்படி கலாவுக்கு தெரிந்தது என்று. மனோ – அனு இவர்கள் சண்டையில் விஷயம் வெளியானதாகச் சொல்லி, அதற்கான செலவில் இவர்கள் ஏன் பங்கேற்க வேண்டும், இவர்கள் செலவழிக்க அபி பேர் வாங்கிக்கொண்டு போவதற்கா என்றும் கேள்வியை எழுப்பி குட்டையைக் குழப்பி விட்டுப்போகிறாள்.

கலாவுக்கு தெரிந்தபின் அது பரவாமல் இருக்குமா?. நேராக அலமேலு, பாஸ்கர் இவர்களிடம் போய் வத்தி வைக்கிறாள். பாஸ்கர் இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அலமேலு அப்படியில்லை. காஞ்சனாவுக்கும், ஆதிக்கும் தெரியாமல் இந்த விசேஷத்தை அபி நடத்தப்போகிறாள் என்ற விவரம் அறிந்ததும் அவள் மனம் பரபரக்கிறது. ஆக இன்றைக்கே அது ஆதியின் காதுக்குபோக வாய்ப்பிருக்கிறது.[/tscii:4482a67e5d]

aanaa
3rd October 2008, 06:25 PM
நன்றி சாரதா

Arthi
3rd October 2008, 07:59 PM
Digression:
Aanaa: How was ur trip to germany?

gta129
3rd October 2008, 09:33 PM
Thanks a lot for the updates Saradha Prakash madam.

aanaa
3rd October 2008, 10:41 PM
sorroy - 4out of the way / thread


Digression:
Aanaa: How was ur trip to germany?

its very pleasant

Have you been there?

visited to Amman temple at Ham/Germany

Vishnu temple /Birmingham , UK

Loudres/ France

nice places

O ya I have been in Chennai and paid a visit almost all temples,

I was working in Madras too - longtime back

saradhaa_sn
4th October 2008, 02:19 PM
[tscii:ed59942c91]கலாவிடமிருந்து விஷயத்தைத் தெரிந்துகொண்ட அலமேலு, எதிர்பார்த்தபடியே முதல் வேலையாக காஞ்சனா வீட்டுக்கு போய், ஈஸ்வரன் திரும்ப வந்துவிட்ட செய்தியையும், அவர் அபி குடும்பத்தாருடன் தங்கியிருக்கும் விவரத்தையும், அதைவிட முக்கியமாக அவருக்கு கற்பகத்துடன் நடக்கப்போகும் சஷ்டியப்த பூர்த்தி விழாவையும் பற்றி விலாவரியாக பற்ற வைக்க காஞ்சனா அதிர்ந்து போகிறாள். அவள் அதிர்ச்சியைப்பார்த்த அலமேலுவுக்கு சந்தோஷம். தான் வந்த வேலை செவ்வனே முடிந்த திருப்தியுடன் அலமேலு கிளம்புகிறாள்.

'பில்டர்ஸ் அசோஸியேஷன்' மீட்டிங் ஆதி தலைமையில் நடந்துகொண்டிருக்க, முன்பு அபியை சந்தித்து தேர்தலில் நிற்கச்சொன்ன வரதராஜன், அடுத்த தலைவருக்கான தேர்தல் பற்றிய விஷயத்தைக் கிளப்புகிறார். எப்போதும்போல ஆதியே இருக்கட்டும் என்று கமிட்டி மெம்பர்களில் சிலர் சொல்ல, அவர் மறுத்து ஆதியின் நடவடிக்கைகளில் திருப்தியில்லையென்றும் அதனால் தற்போது அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எம்.டி. அபினயாவை தலைவர் ஆக்கவேன்டும் என்றும் சொல்ல, அபியின் பெயரைக்கேட்ட மாத்திரத்தில் ஆதியின் பிரஷர் ஏறுகிறது. அப்போது அங்கு நுழையும் அபியைப்பார்த்து, (எப்போதும்போல) தன்னிடம் சம்பளத்துக்கு வேலை பார்த்த பொம்பளையை தலைவராக்க தான் ஒப்புக்கொள்ள முடியாது என்று சொல்ல, அவளும் பதிலுக்கு, ஒரு காலத்தில் விஸ்வநாதனை ஏமாற்றி அவருடைய கம்பெனியை பறித்தவன் ஆதி என்றும், இப்போது அவன் 'மேடம் மேடம்' என்று கைகட்டி நிற்கும் மேனகாவும் ஒரு பொம்பளைதான் என்றும் பதிலடி கொடுக்கிறாள். சணடை முற்றி ஆதி தன் இருக்கையை விட்டு எழுந்து வந்து அபியை மீண்டும் மோசமான வார்த்தைகளால் அர்ச்சிக்க, மற்ற உறுப்பினர்கள் ஓடிவந்து தடுக்கிறார்கள். இந்நேரம் பார்த்து கிரி ஓடிவந்து ஆதியின் அம்மா உடனடியாக அவனை வீட்டுக்கு வரச்சொல்லி போன் செய்ததாக கூறுகிறான். ஆதியின் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், கிரியுடைய போனில் அழைத்து உடனடியா வரச்சொன்னதாகவும், காரணம் தெரியவில்லையென்றும் சொல்ல, ஆதி புறப்படுகிறான்.

என்னவோ ஏதோவென்று வீட்டுக்கு ஓடிவரும் ஆதி அம்மாவிடம் விசாரிக்க, அவனுடைய அப்பா ஈஸ்வரன் அபி வீட்டில் இருக்கும் விஷயத்தை அவள் சொல்ல, இதுக்காகவா அவசரமாக அம்மா அழைத்தாள் என்று அவனுக்கு சலிப்பு. ஆனால் அடுத்ததாக அவள் சொன்ன விஷயம் அவனை ஆத்திரமூட்டுகிறது. தனது சஷ்டியப்த பூர்த்தி விழாவை கற்பகத்துடன் கொண்டாடப்போவதாகவும் கற்பகம்தான் தன் உரிமையுள்ள முதல் மனைவி என்று எல்லோருக்கும் தெரியப்படுத்தப் போவதாகவும் காஞ்சனா சொல்ல, அவன் கோபத்தின் உச்சிக்குப்போகிறான். போதாக்குறைக்கு அங்கிருக்கும் இன்னொரு விஷப்பாம்பு ரேகா அவன் கோபத்தைக்கிளறிவிட……

ரொம்ப நாளைக்குப்பிறகு (தொல்ஸின் தத்துவம், தோழரின் செந்தமிழ், திருவேங்கடத்தின் அல்டாப்பு, கற்பகத்தின் கண்ணீர் இல்லாத) அபியும் ஆதியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சுறுசுறுப்பான எபிசோட்…[/tscii:ed59942c91]

aanaa
4th October 2008, 05:53 PM
நன்றி சாரதா
சளைக்காமல் தொடரவும்

saradhaa_sn
4th October 2008, 08:00 PM
நன்றி ஆனா,

உங்களைப்போன்றோர் தரும் ஊக்கமும், எனது உற்சாகமும் குறையாத வரையில்....

இன்னொன்று கவனித்தீர்களா?. திருச்செல்வம் (தொல்காப்பியன்) பல ஆண்டுகளாக சளைக்காமல் தொடர்கிறாரே... (இன்னும் தொடர்வார் போலவே தோன்றுகிறது)

aanaa
5th October 2008, 02:04 AM
திருச்செல்வம் (தொல்காப்பியன்) பல ஆண்டுகளாக சளைக்காமல் தொடர்கிறாரே... (இன்னும் தொடர்வார் போலவே தோன்றுகிறது)

:lol:
:rotfl:

அவருக்கு வேறு project இருக்கா? ம்ம்ம்ம்ம்ம்
:lol:

jovemac
6th October 2008, 10:59 PM
இன்று..

சஷ்டியப்த பூர்த்தி விழா அழைப்பிதழை அச்சகத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் அபி அங்கு தொல்காப்பியன்யும் உஷா வையும் பார்கிறாள். உஷாவிற்கு முதலாவதாக அழைப்பிதழை வழங்குகிறாள். உஷா மறுத்துவிட.. மனக்குமுறல்களுடன் வண்டியில் செல்லும் அபி தனை கிரி பின் தொடர்வதை பார்த்துவிடுகிறாள்...


சஷ்டியப்த பூர்த்தி விழா நடக்குமா?

saradhaa_sn
7th October 2008, 02:13 PM
[tscii:916bd6621d]காஞ்சனா சொன்ன விஷயத்தைக்கேட்டு ஆதிக்கு அதிர்ச்சி. அழைப்பிதழ் அச்சடித்து ஊரை அழைத்து தன் அப்பாவுக்கும் அந்த கற்பகத்துக்கும் அறுபதாம் கல்யாணம் நடத்த்ப்போகிறாள் அந்த அபி, அதன்மூலம் தனக்கும் தன் அம்மாவுக்கும் இந்த சொஸைட்டியில் தலைகுனிவு ஏற்படுவது நிச்சயம் என்பதும், அபியின் அம்மா கற்பகம்தான் ஈஸ்வரனின் முதல் மனைவி என்று ஊரறிய விழா கொண்டாடினால் தன் அம்மா காஞ்சனா ஈஸ்வரனால் ஜஸ்ட் சேர்த்துக்கொள்ளப்பட்ட பெண் என்பதும், தான் அப்படி சேர்த்துக்கொள்ளப்பட்டவளின் மகன் என்பதும் தனக்கு எப்படிப்பட்ட அவமானத்தைத் தேடித்தரும் என்பது உறைக்க ஆதியின் கோபம் உச்சந்தலையில் ஏறுகிறது.

என்ன இது சோதனை?. அந்த அபியால் ஒரே நாளில் இரண்டு பெரிய அவமானம்?. ‘பில்டர்ஸ் அசோஸியேஷன்’ தலைவர் பதவி தன்னிடம் இருந்து பறிபோவது அல்லாமல், தனது ஜென்ம விரோதியான அபி அந்த தலைவர் பதவியில் வந்து அமர்வதன் மூலம் தனது தொழில் துறையில் தீராத அவமானம், இன்னொரு பக்கம் தன் அம்மாவை ஒதுக்கி தன் அப்பா ஈஸ்வரனின் உண்மையான மனைவி கற்பகம்தான் என்று அபி பறைசாற்றுவதன் மூலம் தன்னை சுற்றியுள்ள சமுதாயத்தில் தனக்கு வரப்போகும் தீராத களங்கம், அதிலும் இந்த இரண்டுமே அபியின் மூலமே வரப்போகிறது என்று எண்ணியதும் ஆதித்யா எனும் சிங்கம் பிடரியை சிலிர்த்துக்கொண்டு எழுகிறது.

(பலே, எங்கள் பழைய அஜய்கபூர் வந்துவிட்டான். மகனே இதுதாண்டா உனக்கு அழகு. இதைவிட்டு, யாரோ ஒருத்தியின் பின்னால் கூனிக்குறுகி நின்றுகொண்டு ‘எஸ் மேடம்… எஸ் மேடம்’ என்று பின்னணி பாடிக்கொண்டு…. இனிமேல் அதெல்லாம் வேண்டாம். என்ன?).

‘உங்கள் பிள்ளை ஆதி இருக்கும்வரை நீங்கள் எதற்கும் கவலைப்படாதீங்கம்மா, என்ன விலை கொடுத்தாவது அபியின் இந்த சூழ்ச்சியை முறியடிப்பேன்’ என்று தாய்க்கு சமாதானம் கூறியவன், இந்த விழாவைத்தடுத்து நிறுத்த வேண்டுமானால், முதலில் தன் அப்பா ஈஸ்வரனை தன்னுடைய கஸ்டடியில் கொண்டு வரவேண்டும், அவரைக்கடத்திக்கொண்டுவந்து அபிக்குத்தெரியாமல் மறைத்துவிட்டால் எப்படி அவள் விழா நடத்த முடியும்?. அதற்கு முதலில் அவர் இருக்கும் இடம் தெரியவேண்டும். உடனே தன் எடுபிடியான கிரியை அழைத்து, இப்போதுமுதல் அவன் அபியை நிழலாக பின்தொடரவேண்டுமென்றும், அவன் அப்பா இருக்குமிடத்தைக் கண்டுபிடித்த மறுவினாடி அந்த விஷயத்தைத் தனக்கு தெரிவிக்க வேன்டுமென்றும் கூறி, இதில் தன்னுடைய தன்மானப்பிரச்சினை அடங்கியிருப்பதால் கொஞ்சம் கூட பிசகாமல் செய்யவேண்டுமென்றும் கிரிக்கு எச்சரிக்கை செய்து அனுப்புகிறான்.

எந்த ஆதிக்கு தெரியக்கூடாதென்று அபி நினைத்துக்கொண்டிருந்தாளோ, அந்த ஆதிக்கு அவள் மீட்டிங் போட்ட அன்றைக்கே தெரிந்துவிட்டது. மனோ – அனு சண்டைமூலம் கலாவுக்குத் தெரிய, கலாவின் மூலம் அலமேலுவுக்கு தெரிய, அலமேலு மூலம் காஞ்சனாவுக்கும் அவளிடமிருந்து ஆதிக்கும் தெரிய…… அடடா என்ன ஒரு வேகம்?. அடுத்தவர் வீழ்ச்சியைக்கண்டு ஆனந்தப்படுபவர்கள் முன்னால், நம்முடைய 'தகவல் தொழில்நுட்பத்துறை' எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். அபி வீட்டில் இன்றைக்கு சோற்றுக்கு என்ன குழம்பு என்பது அபி வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியும் முன்னரே ஆதித்யாவுக்கு தெரிந்துவிடும் என்றிருக்கும்போது, இவ்வளவு பெரிய விஷயத்தை ஆதிக்கு தெரியாமல் மறைத்துவிடலாம் என்று அபி நினைப்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்…!!!.

அப்பாவின் சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்கான அழைப்பிதழை வாங்க கிருஷணனுடன் அச்சகத்துக்குப்போகும் அபிக்கு இன்னொரு அதிர்ச்சி. அங்கே தொல்காப்பியனும் உஷாவும் அமர்ந்திருப்பதைப் பார்த்து குழப்பம். மூவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதும் கண்களைத் தாழ்த்திக்கொள்வதுமாக சிறிதுநேரம் ஓடுகிறது. இரண்டு குரூப்புமே ஒருவரை ஒருவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவர்கள் பார்வையில் புலப்படுகிறது. கிருஷ்ணன் கிசு கிசு குரலில் அபியிடம்…

‘பாத்தீங்களாம்மா, அவங்க ரெண்டுபேரும் புதுசா தொழில் தொடங்கப்போவதாக சொன்னேனில்லையா?. அதுக்கு அழைப்பிதழ் அச்சடிக்கத்தான் வந்திருக்காங்க’

‘அப்படீன்னு அவங்க உங்க கிட்டே சொன்னாங்களா கிருஷ்ணன்?’

‘இல்லேம்மா, பின்னே வேறு எதுக்கு வந்திருக்கப் போறாங்க?’

அந்தப்பக்கம் உஷா, தொஸிடம் கிசுகிசு குரலில்……

‘பாத்தீங்களா தொல்ஸ், நம்மோடு பேசும்படி அந்த கிருஷ்ணன் சொல்றார். அதுக்கு அபி வேண்டாம் என்று மறுக்கிறாள்’

‘அது எப்படி உஷா உங்களுக்கு தெரியும்?, அவங்க பேசுன ஒரு வார்த்தைகூட நமக்கு கேட்கலையே..’

‘இல்லீங்க தொல்ஸ், அவள் வாயசைவை வைத்தே கண்டுபிடிச்சிட்டேன்’.

மீண்டும் அமைதி…… மீண்டும் பார்வைப்பறிமாற்றங்கள்….. முதலில் அபியின் அழைப்பிதழ் ரெடியாகி அவளிடம் வழங்கப்பட, அவள் முதல் பத்திரிகையை எடுத்துக்கொண்டு வந்து உஷாவிடம் கொடுத்து, ‘உஷா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சஷ்டியப்த பூர்த்தி விழா நடத்துறோம், நீ கண்டிப்பாக வரணும்’.

‘நான் மட்டும்தான் வரணுமா?. பக்கத்தில் தொல்காப்பியன் இருப்பது நிஜமாவே உனக்கு தெரியலையா?. உறவுகள் எல்லாம் உன்னைத் தூக்கி எறிந்தபோது உன்னைக் கைதூக்கிவிட அவரது நட்பு தேவைப்பட்டது. இப்போ உறவுகள் எல்லாம் ஒண்ணுசேர்ந்ததும் அவர் நட்பைத் தூக்கி எறிஞ்சிட்டே அப்படித்தானே. இப்போ நீ எனக்கு பத்த்ரிகை தருவதைப்பார்க்கும்போது, உன்னுடைய திருமணத்தின்போது நீ நம்முடைய பழைய ஆஃபீஸில் எல்லோருக்கும் பத்திரிகை வைத்துவிட்டு தொல்ஸை மட்டும் புறக்கணித்தது நினைவுக்கு வருகிறது’

என்று உஷா சொல்ல, பழைய காட்சி ஃபிளாஷ்பேக்காக விரிகிறது. (நான் முன்பே சொன்னதுபோல, பழைய காட்சிகள் எந்தெந்த எபிசோட்களில் வந்தன என்று தேடிப்பிடிக்கவே ஒரு குழு வேலை செய்துகொண்டிருக்கும் போலும்).

அதில் தொல்காப்பியனிடம் தன் திருமண அழைப்பிதழைக்கொடுக்கும் அபி, ‘உஷாவின் வற்புறுத்தியதால்தான் உங்களுக்கு அழைப்பிதழ் தந்தேன், அதுக்காக திருமணத்துக்கு வந்துடாதீங்க’ என்று சொல்ல, ஃப்ளாஷ்பேக் காட்சி முடிய, மீண்டும் இறுக்கமான முகங்கள்…

அபி நீட்டிய பத்திரிகையை வாங்கமறுக்கும் உஷா, ‘தொல்காப்பியனுக்கு அழைப்பு இல்லாதபோது எனக்கு உன்னுடைய அழைப்பு தேவையுமில்லை, நான் விழாவுக்கு வரவும் மாட்டேன்’ என்று மறுக்க, மேற்கொண்டு சிறிது நேரம் இருவருக்கும் வாக்குவாதம் நடக்க அபி கிளம்புகிறாள். கடைசி வரை தொல்காப்பியனுக்கு அபி அழைப்பிதழ் கொடுக்கவுமில்லை, அபி கொடுத்த அழைப்பிதழை உஷா வாங்கவுமில்லை. நடந்தவற்றைப்பற்றி மற்றவர்களிடம் வத்திவைக்க வசதியாக ‘நரி’கிருஷ்ணன் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார். அச்சகத்திலிருந்து வெளியே வரும் அபி, பார்சலை கிருஷ்ணனிடம் கொடுத்து ஆட்டோவில் ஆஃபீஸுக்கு கொண்டுபோகும்படி சொல்லி, இரண்டு மூன்று அழைப்பிதழ்களை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு காரில் புறப்பட, பின்னால் கிரி பின்தொடர்கிறான். ஒரு சிக்னல் நிறுத்ததில் கார் நிற்கும்போது, யதார்த்தமாக பின்னால் திரும்பிப்பார்க்கும் அபி, இன்னொரு காரில் கிரி பின்தொடர்வதை அறிந்து திடுக்கிடுகிறாள்….

(ஆகா…. உதிரிக் கதாபாத்திரங்களான மேனகாவின் பழங்கதை, தோழரின் தத்துவங்கள், திருவேங்கடத்தின் கோமாளித்தனங்கள் இல்லாமல் கதை மெயின் ட்ராக்கில் போகும்போது என்ன சுறுசுறுப்பு… என்ன விறுவிறுப்பு. கொஞ்ச நாளைக்காவது இதையே மெயிண்டெய்ன் பண்ணுங்க தொல்ஸ்)
[/tscii:916bd6621d]

aanaa
7th October 2008, 07:07 PM
நன்றி சாரதா

தொல்ஸ் ஐ இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கச் சொல்லணும்

gta129
8th October 2008, 06:40 AM
Thanks you for the updates.

aanaa
8th October 2008, 07:06 PM
இத் தொடர் தொடங்கி
நீண்ட காலமாகிவிட்டதால்
இடைஇடையே "திரும்பிப் பார்த்தல்" flash back
இல்லையேல் கதையை மறந்திருப்போம் என்று தொல்ஸ் ஞாபகப் படுத்துகின்றார்.

Arthi
8th October 2008, 07:10 PM
wow nice updates saradha madam :D

saradhaa_sn
9th October 2008, 01:55 PM
[tscii:fd32506394]சிக்னலில் ஆதியின் பி.ஏ.என்கிற எடுபிடி கிரியைப்பார்த்துவிட்ட அபி, தொடர்ந்து போகும்போதும் அவன் தன்னைப் பின்தொடர்வதை ரியர்வியூ வழியாக கவனித்துக்கொண்டே போகிறாள். அவள் இன்னொரு கான்ட்ராக்டரான (அபியைத் தலைவர் தேர்தலுக்கு முன்னுரைத்த) வரதராஜன் வீட்டுக்குள் நுழைய, சற்று தூரத்தில் காரைவிட்டு இறங்கிய கிரி அவளைப்பின்தொடர்ந்து சென்று காம்பவுண்ட் கேட்டின் கிரில் வழியாகப் பார்க்கிறான். வரதராஜனுக்கு அப்பாவின் சஷ்டியப்த்பூர்த்தி விழாவுக்கு அழைப்பிதழ் கொடுக்கும்போது, 'இந்த விஷயத்தை ஆதியிடம் சொன்னீர்களா' என்று அவர் கேட்க, அபி ‘இதுவரை சொல்லவில்லை, ஆனால் இந்நேரம் அவருக்கு தெரிந்திருக்கும்’ என்று சொல்கிறாள். காபி எடுத்துவர அவர் உள்ளே போனதும் கேட் பக்கம் திரும்பிப்பார்க்கும் அபி, அங்கே கிரில் வழியாக கிரி தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து விடுகிறாள். பின்னர் யாருக்கோ போன் செய்கிறாள். அபி தன்னைப் பார்த்துவிட்டது தெரிந்தும், அவ்விடத்தை விட்டு அகலாத கிரி, மீண்டும் மீண்டும் அவளைப்பார்க்க, அதை அபியும் பார்த்துவிடுகிறாள்.

வரதராஜனிடம் விடைபெற்றுப்புறப்படும்போது, ‘கொஞ்சம் என்னோடு கேட் வரைக்கும் வாருங்கள்’ என்று அபி அழைக்க அவரும் வருகிறார். இவர்கள் வருவதை அறிந்ததும் கிரி ஓட்டமும் நடையுமாக தன் காரை நோக்கிப் போகிறான். அப்படியும் அவர்கள் அவனைப்பார்த்துவிட, ‘இவன் அந்த ஆதியின் பி.ஏ. அல்லவா?. இங்கு எதற்கு வந்தான்?’ என்று கேட்க அதற்கு அபி, ‘அந்த ஆதியின் உத்தரவின்பட்டி இவன் என்னைப்பின்தொடர்ந்து வருகிறான்' என்று சொல்ல, ‘அப்படீன்னா இப்பவே போலீஸுக்கு போன் செய்வோம்’ என்று சொல்லும் அவரிடம் ‘நான் ஏற்கெனவே போலீஸுக்கு போன் பண்ணிட்டேன்’ என்று சொல்கிறாள். சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கு போலீஸ் வந்து காரில் உட்கார்ந்திருக்கும் கிரியை விசாரிக்க, ‘ ஏய் நான் யார் தெரியுமா? தொழிலதிபர் ஆதித்யாவுடைய பி.ஏ., என்மீது கைவைத்தால் என்ன ஆகும் தெரியுமா?’ என்று இன்ஸ்பெக்டரிடம் கொக்கரிக்க, அவர்கள் அதை சட்டை பண்ணாமல் அவனை அள்ளிக்கொண்டு போகிறார்கள். ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப்ளைண்ட் எழுதிக்கொடுக்குமாறு அபியிடம் கூற அபியும் புறப்படுகிறாள். போலீஸ் ஜீப்பில் போகும் கிரி ‘டேய் வரதராஜன், நீதான் அந்த அபிக்கு சப்போர்டா? பர்த்துக்கிறேண்டா உன்னை’ என்று சவால் விட்டுப்போகிறான்.

அபி ஸ்டேஷனில் அமர்ந்திருக்க, ஆதித்யா அங்கு வருகிறான். வந்தவன், கிரி அபியைப் பின்தொடர்ந்ததற்கான காரணங்களை விட்டுவிட்டு வழக்கம்போல அபிமீது சேற்றை வாரியிறைக்கிறான். தன் அப்பாவுக்கு சஷ்டியப்த பூர்த்திவிழா கொண்டாடுவதற்காக அபி அவரைக் கடத்திச் சென்று மறைத்து வைத்திருப்பதாக சொல்ல, “உங்க அப்பாவுக்கு விழா கொண்டாட இவங்க யார்?” என்று கேட்கும் இன்ஸ்பெக்டருக்கு ஆதியால் பதில் சொல்ல முடியவில்லை. உண்மையைச் சொல்ல இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணிய அபி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு “இவருடைய அப்பாதான் எனக்கும் அப்பா, இன்னும் சொல்லப்போனால் எனக்கு அவர் அப்பாவான பின்னர்தான் இவருக்கு அப்பா ஆனார்” என்று சொல்லி கடந்தகால நிகழ்வுகளைச் சொல்ல அவை ஃபிளாஷ்பேக்காக விரிகின்றன. அவ்ள் சிறு குழந்தையாய் இருந்தபோதிலிருந்து கோயிலில் பிச்சைக்காரர் கோலத்தில் அவரைக்கண்டுபிடித்தது வரை காண்பிக்கப்படுகின்றன. உண்மையை அறிந்த இன்ஸ்பெக்டருக்கு ஆச்சரியம். அவசரப்பட்டு வாய்யை விட்டதால் உண்மையைப்போட்டு உடைக்க அபிக்கு தானே ஒரு வாய்ப்புக் கொடுத்துவிட்டதை எண்ணி ஆதி நொந்துபோகிறான். தன் அப்பாவை மறைத்து வைத்திருக்கும் இடத்தைச் சொல்லும்படி ஆதி கேட்க, அவனுக்கு மட்டுமல்ல அவர் இருக்கும் இடம் தனக்கும் தெரியாது என்றும் சஷ்டியப்த விழாவில் நேரடியாக கலந்துகொள்ள வந்துவிடுவதாகவும், அதுவரை போனில் மட்டுமே தொடர்பு கொள்வதாகவும் அப்பா சொன்னதாக அபி சொல்ல, விழா மண்டபத்தில் வந்து விசாரிப்பதாக இன்ஸ்பெக்டர் சொல்லி கிரியை விடுவித்து ஆதியுடன் அனுப்பி வைக்கிறார்.

கிரியின் அரைகுறை வேவுபார்க்கும் வேலையால் அபி இன்னும் அலெர்ட் ஆகிவிட்டாள். அப்பா இருக்கிமிடத்தை இன்னும் ரகசியமாகப் பாதுகாப்பாள். அப்பாவைக்கண்டுபிடித்து மீட்க ஆதி மேற்கொண்ட முதல் முயற்சியே தோல்வியாகிவிட்டது. 'பக்கா' கிரிமினல் ஆதிக்கு இப்படி ஒரு அரைவேக்காட்டு செக்ரட்டரி. காரில் இருந்து இறங்கும்போதே அபி தன்னைப்பார்த்துவிட்டாள் என்று தெரிந்ததும் அவளுக்கு தெரியாமல் இடத்தைக்காலி செய்துவிட்டு ஓடியிருக்க வேண்டாமா? இப்படியா வலியவந்து மாட்டிக்கொள்வான்?. இவ்வளவு கூத்தும் நடக்கும்போதும் அபியின் டிரைவர் அவளுடைய காரில்தானே இருந்தான்?. அவன் ஏன் கிரியின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவில்லை?. எது எப்படியோ, கிரிக்கு ஆதியிடம் கடுமையான அர்ச்சனை காத்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இனிமேல் வேறு யாரும் ஈஸ்வரனைக் கடத்தினாலும் போளிஸின் சந்தேகம் தன்மீதுதான் விழும் என்பது ஆதிக்கு தெளிவாகிவிட்டது. அப்படீன்னா அவன் தன் அம்மாவுக்கு கொடுத்த வாக்குறுதி…??.

சரி என்ன அவசரம்?..... பார்ப்போம்…….

(நேற்று போஸ்ட் செய்வதற்காக எழுதியது. ஆனால் நேற்று முழுக்க என்னுடைய நெட் கனெக்ஷன் வேலை செய்யவில்லை.....ஸாரி.)
[/tscii:fd32506394]

saradhaa_sn
9th October 2008, 02:10 PM
[tscii:cc6f5dc5cb]அபி அலுவலகத்தில் அமர்ந்திருக்கும்போது வரதராஜன் அங்கு வருகிறார், கூடவே இரண்டு பேர். அவர்கள் காண்ட்ராக்டர்கள் என்றும், பில்டர்ஸ் அசோஸியேஷனில் முன்பு ஆதிக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் என்றும், தற்போது ஆதியின் அடாவடித்தனங்களால் வெறுப்படைந்து அபியை தலைவராக்க ஒப்புதல் அளித்திருப்பதாகவும் கூறும் வரதராஜன், அவர்களைத்தவிர மேலும் சில காண்ட்ராக்டர்களின் பெயர்களைச்சொல்லி அவர்களும் அபி தலைவராக வரவேண்டுமென்று விரும்புவதாக சொல்கிறார். ஆனால் அபி, தான் இன்னும் சரியான முடிவெடுக்கவில்லையென்றும், தலைவர் பதவி ஏற்க இன்னும் தயக்கத்திலேயே இருப்பதாகவும் கூற, வந்தவர்கள் அபி கண்டிப்பாக தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொள்ள வேன்டுமென்று வற்புறுத்துகின்றனர். அத்துடன், அபியின் கம்பெனிக்கு டிஜிட்டல் வேல்லி ப்ராஜக்ட் கிடைத்ததற்காக பில்டர்ஸ் அசோஸியேஷன் சார்பாக ஒரு பாராட்டுவிழா நடத்த இருப்பதாகவும் தேதி முடிவானதும் அறிவிப்பதாகவும் சொல்ல, அதற்கும் அபி மறுப்பு தெரிவிக்கிறாள். ஆதி தலைவராக இருக்கும்போது தனக்கு பாராட்டுவிழா நடத்துவதெல்லாம் ஏதாவது வம்பில் போய் முடியும் என்று அபி சொல்ல, விழா நடத்தப்போவது ஆதி என்ற தனிப்பட்ட மனிதன் இல்லையென்றும், அசோஸியேஷன் சார்பாக ஒரு முடிவெடுக்கும்போது ஆதியும் அதற்கு ஒப்ப்புக்கொண்டாக வேண்டுமென்றும் சொல்லி அபியை சம்மதிக்க வைத்துச் செல்கின்றனர்.

அவர்கள் வெளியேறியதும் அறைக்குள் வரும் ஆர்த்தி, அவர்கள் வந்த விவரத்தைக்கேட்க, தனக்குப் பாராட்டுவிழா நடத்த இருப்பதை மட்டும் சொல்கிறாளே தவிர ஆதிக்கு எதிராக தேர்தலில் நிற்பது பற்றி எதுவும் சொல்லவில்லை. அப்பாவின் சஷ்டியப்த விழாவில் அனுவுக்கு உடன்பாடில்லையென்றும் அவள் அந்த விழா நடப்பதை விரும்பவில்லையென்றும் ஆர்த்தி சொல்ல, ‘அவள் உன்னிடம் அப்படி சொன்னாளா’ என்று கேட்கும் அபி, அனுவின் மனதில் ஏற்பட்டிருக்கும் எண்ணம் நியாயமனதேயென்றும், அவளை அம்மாவாக இருந்து வளர்த்த காஞ்சனாவுக்கு தலைகுனிவு ஏற்படுவதுபோன்ற ஒரு விஷயத்தை அவள் எதிர்ப்பது இயற்கையே என்றும் சொல்லி விட்டு தனக்கு சைட்டில் வேலையிருப்பதாக சொல்லி வெளியேற, அதுவரை நடந்த உரையாடல்களை ஒட்டுக்கேட்ட ‘நரி’ கிருஷ்ணன் உள்ளே நுழைந்து, தான் அவர்கள் பேசியவற்றைக் கேட்டதாகவும், தனக்கு நடக்கவிருக்கும் பாராட்டுவிழா பற்றி மட்டும் சொன்ன அபி, தலைவர் தேர்தலில் ஆதியை எதிர்த்து நிற்பதை ஏன் ஆர்த்தியிடம் சொல்லவில்லையென்று வினா எழுப்ப, ஆர்த்திக்கு ஆச்சரியம்... அக்கா தேர்தலில் நிற்கிறாளா?. அதுவும் ஆதியை எதிர்த்து..?. இதுதான் சமயம் என்று கிருஷ்ணன் ‘ஆர்த்தி ஒரேயடியாக அபியை மட்டுமே நம்பியிருக்க கூடாதென்றும் அவளுக்கு பலவேறு வகையிலும் உதவியாக இருக்கும் ஆதியைப் பகைத்துக்கொள்ள வேண்டாமென்றும்’ இன்னும் தூபம் போடுகிறார். இப்போது ஆர்த்திக்கு குழப்பம்.

கணவன் ராஜேஷிடம் இந்த விவரங்களைசொல்லும் ஆர்த்தி, அப்பா அம்மாவின் சஷ்டியப்த விழாவில் நாம் பட்டும் படாமலும் இருந்துவிடலாமா என்று கேட்க, அவன் ரொம்ப தெளிவாக பதில் சொல்கிறான். ஆதி தங்களுக்கு டேங்கர் லாரி பிஸினஸுக்கு லோன் ஏற்பாடு செய்து தந்ததற்கு நன்றியுடன் இருக்கும் அதே வேளையில், ஆர்த்தியின் அம்மாவின் உரிமைகளையும் விட்டுத்தரக்கூடாது என்றும், இந்த விஷயத்தில் அவர்கள் அபிக்குத்தான் சப்போர்ட்டாக இருக்க வேண்டும் என்று சொல்ல, அப்போதும் ஆர்த்திக்கு குழப்பம். அவள் மனம் 'அபியக்கா' தயவை விட 'ஆதியண்ணா' தயவையே அதிகம் நாடுவதாக தெரிகிறது. இவள் ஆனந்தி மாதிரி தெளிவான சிந்தனை உள்ளவள் அல்லவே... நேரத்துக்கு தகுந்தாற்போல நிறம் மாறும் பசோந்திதானே...

கிரியைத்திட்டிக்கொண்டே அவனுடன் வீட்டுக்குள் நுழையும் ஆதியை அவன் அம்மா மடக்கி, அபி நடத்த்ப்போகும் விழாவுக்கு நாள் நெருங்கிக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, ஆதி இன்னும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையென்று பாய்கிறாள். கூடவே ரேகாவும் அவளது கோபத்தீயைத் தூண்டி விடுகிறாள். தான் சும்மா இருக்கவில்லையென்றும், இதுவிஷயமாகத்தான் ஒவ்வொரு கணமும் யோசித்து வருவதாகவும், முதலில் அவனுடைய வியூகத்தை கிரி குளறுபடி செய்துவிட்டதாகவும், விரைவில் அவனுடைய அப்பாவைக் கண்டுபிடித்து, விழாவை தடுத்து நிறுத்தி விடுவதாகவும் சொல்லியும் அம்மாவின் கோபம் தணியவில்லை.
[/tscii:cc6f5dc5cb]

aanaa
9th October 2008, 06:59 PM
நன்றி சாரதா
தங்களின் கைவண்ணம் தொடரட்டும்

saradhaa_sn
9th October 2008, 07:29 PM
நன்றி சாரதா
தங்களின் கைவண்ணம் தொடரட்டும்

உத்தரவு தேவியாரே......... :lol:

sarna_blr
9th October 2008, 07:37 PM
நன்றி சாரதா
தங்களின் கைவண்ணம் தொடரட்டும்

உத்தரவு தேவியாரே......... :lol:

aanaa dhEviyaaraa :?

Arthi
9th October 2008, 07:38 PM
thanks saradha madam, for your sincere efforts in posting kolangal here :D

aanaa
10th October 2008, 03:12 AM
நன்றி சாரதா
தங்களின் கைவண்ணம் தொடரட்டும்

உத்தரவு தேவியாரே......... :lol:

:lol:

priya_2008
10th October 2008, 10:23 AM
thanks saradha madam, for your sincere efforts in posting kolangal here :D

saradhaa_sn
10th October 2008, 11:24 AM
நன்றி (எல்லோருக்கும்).....

நேற்றிரவு விஜயதசமியை முன்னிட்டு சன் டி.வி.யில் ஒளிபர்ப்பான 'கில்லி' திரைப்படம் (எத்தனையாவது தடவை ஒளிபரப்பாகிறது என்று தெரியவில்லை) கஸ்தூரி, மேகலா, ஆனந்தம், கலசம், கோலங்கள் என்று பல சீரியல்களை விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது. தப்பிப் பிழைத்தவை அரசி மற்றும் சிவசக்தி மாத்திரமே. ஆகவே நேற்று கோலங்கள் ஒளிபரப்பாகவில்லை.

இன்று என்ன நடக்கிறதென்று பார்ப்போம்....

saradhaa_sn
11th October 2008, 12:13 PM
ஆதி சிபாரிசு செய்த ஃபைனான்ஸியரிடம் லோன் பெறுவதற்காக அவருடைய அலுவலகத்தில் ஆர்த்தியும், ராஜேஷும் அமர்ந்திருக்கும்போது, உள்ளேயிருந்து மனோ வெளியே போவதைப்பார்த்து அவர்களுக்கு ஆச்சரியம். அப்போது அங்கிருந்து வெளியே வரும் சிப்பந்தியிடம் விசாரித்ததில் மனோவும் லோனுக்காகத்தான் தங்கள் பாஸைப்பார்த்துவிட்டுப்போவதாகவும், ஆனால் அவருக்கு லோன் கிடைத்ததா இல்லையா என்று தனக்கு தெரியாது என்றும் கூறி, அவர்கள் இருவரையும் ஃபைனான்ஸியர் அறைக்குள் அனுப்புகிறார். ஆதி லோன் விஷயமாக எல்லா விவரமும் போனில் சொல்லியிருப்பதால், பணம் தயாராக இருப்பதாகச் சொல்லி சில பத்திரங்களில் கையெழுத்துப்போடும்படி கேட, அப்பத்திரங்களை வாங்கிப்பார்க்கும் ராஜேஷ் அவை வெற்றுப்பத்திரங்களாக இருப்பதைச் சுட்டிக்காட்ட, ஆதி எதுவும் உங்களிடம் சொல்லவில்லையா என்று அவர் கேட்கிறார். எங்கே லோன் கிடைக்காமல் போய்விடுமோ என்று அச்ச்ப்படும் ஆர்த்தி, எதுவும் கேட்காமல் அவசரமாக அவற்றில் கையெழுத்துப்போட்டுக் கொடுத்துவிட்டு, பணம் அடங்கிய சூட்கேஸை வாங்கிக்கொண்டு போகிறாள்.

திரைப்படங்களிலும் சரி, சீரியல்களிலும் சரி... இம்மாதிரி சூட்கேஸ் நிறையப் பணத்தை வாங்குபவர்கள், லட்சத்தில் இரண்டுபேர் தவிர மீதி பேர், (பணம் சரியாக இருக்கிறதா என்று பார்க்காவிட்டாலும் கூட பரவாயில்லை) அட்லீஸ்ட் உள்ளே பணமாவது இருக்கிறதா அல்லது வெற்றுத்தாள்கள் இருக்கிறதா என்று கூட பார்ப்பதில்லை. ஆர்த்தியோ அல்லது அவரை இயக்கும் தொல்ஸோ அந்த லட்சத்தில் இரண்டு பேரில் வர வாய்ப்பில்லை.

பந்தா எம்.எல்.ஏ. திருவேங்கடம் தன் தொண்டர்(?)களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். தன் தொகுதியை எப்படி முன்னேற்றுவது என்பதைப்பற்றி அல்ல என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எம்.எல்.ஏ.ஆகிவிட்டால் மட்டும் போதாது, அடுத்து அமைச்சர், அடுத்து முதல்வர் என்று போய்க்கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, அவருடைய ஃப்ராடு மருமகன் யோசனை சொல்லத்துவங்குகிறான். என்னமோ ஐன்ஸ்டீன், லிங்கன் அது இது என்று அவன் பங்குக்கு அவனும் பெனாத்துகிறான். எடுபிடி தங்கராசுவும் என்னென்னெவோ உருப்படியில்லாத யோசனைகளைச்சொல்கிறார். மொத்தத்தில் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே புரியவில்லை. ஏன் இடையிடையே திருவேங்கடம் எம்.எல்.ஏ.யைக்கொண்டுவந்து டெம்போவைக் குறைக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

கார்த்திக், ஆனந்தியின் அலுவலகத்தில் அமர்ந்து தங்கள் பத்திரிகையின் அடுத்த நாள் பதிப்புக்காக பணியாளரிடம் ஆலோசனையில் இருக்கும்போது, தோழர் பாலகிருஷ்ணன் ரொம்ப கோபமாக வருகிறார். அவர் தன் கையிலுள்ள ஒரு தினசரி நாளிதழைக் காட்டி, 'ஆனந்திக்கு நடந்தது திட்டமிட்ட கொலைமுயற்சி அல்ல, தற்செயலான சாலை விபத்துதான்' என்று கோர்ட் தீர்ப்பு சொல்லி, அந்த லாரி ஓட்டுனருக்கு வெறும் அபராதமும், மூன்றுமாத சிறைத்தண்டனையும் மட்டுமே தந்து தீர்ப்பளித்திருப்பது தனக்கு அதிர்ச்சியாக இருப்பதாகவும், இதன் பின்னணியில் பணபலமும், அதிகார பலமும் விளையாடியிருப்பதாகவும் சொல்லி, இதுபற்றி விளக்க உடனடியாக பிரஸ்மீட் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று சொல்ல கார்த்திக்கும் சம்மதிக்கிறாண். தனக்கும் இந்த தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாகவும் கூறுகிறான்.

மனோவையும் அனுவையும் தங்கள் வீட்டுக்கு வரவழைத்த காஞ்சனாவும் ரேகாவும் மனோவைக் காய்ச்சியெடுக்கிறார்கள். அபிக்கோ அல்லது ஆனந்தி, ஆர்த்தி, மனோ இவர்களுக்கோ அப்பாவை எத்தனை வயதில் தெரியுமென்றும், அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் வரை அப்பா யாரென்றே தெரியாது என்றும், ஆனால் தன்னுடைய பிள்ளைகள் பிறந்த்து முதலே அப்பாவின் கண்ணெதிரிலேயே வளர்ந்ததாகவும், கற்பகத்தை விட தானே அதிக வருடங்கள் ஈஸ்வரனுடன் வாழ்ந்ததாகவும், ஆகவே தனக்குள்ள உரிமைகள் கற்பகத்துக்கு கிடையாது என்றும், தனக்கு இவ்வளவு உரிமைகள் இருந்தும் தான் சஷ்டியப்த விழாவுக்கெல்லாம் ஏற்பாடு செய்யாததற்கு காரணம் தேவையில்லாத குழப்ப்ங்களை தவிர்க்க வேண்டுமென்பதற்காவும்தான் என்று காஞ்சனா சகட்டுமெனிக்கு பொழிந்துதள்ளுகிறாள். கூடவே ரேகாவும், 'தன் அத்தையின் இந்த கேள்வி ஒன்றுக்காவது அவனால் பதில் சொல்ல முடியாதென்றும்' கூற, ஆதி இவற்றை வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கிறான். கடைசியில் மனோவுக்கு உதவிக்கு வருவது போல வந்து அம்மாவிடம், 'பாவம் இவன் என்னம்மா பண்ணுவான்?. அந்த அபி செய்யும் அநியாயங்களை அந்த வீட்டில் யாரும் தட்டிக்கேட்க முடியாது' என்று உசுப்பேத்திவிட, உடனே முறுக்கேறிய மனோ'இல்லை இப்பவே நான் போய் அந்த விழாவைத்தடுக்க ஏற்பாடு செய்கிறேன்' என்று அனுவுடன் வெளியேற..... 'சரி இந்த மாடும் மந்தையில் இருந்து பிரிந்து விட்டது' என்று ஆதிக்கு மகிழ்ச்சி.....

sarna_blr
11th October 2008, 12:23 PM
ஆதி சிபாரிசு செய்த ஃபைனான்ஸியரிடம் லோன் பெறுவதற்காக அவருடைய அலுவலகத்தில் ஆர்த்தியும், ராஜேஷும் அமர்ந்திருக்கும்போது, உள்ளேயிருந்து மனோ வெளியே போவதைப்பார்த்து அவர்களுக்கு ஆச்சரியம். அப்போது அங்கிருந்து வெளியே வரும் சிப்பந்தியிடம் விசாரித்ததில் மனோவும் லோனுக்காகத்தான் தங்கள் பாஸைப்பார்த்துவிட்டுப்போவதாகவும், ஆனால் அவருக்கு லோன் கிடைத்ததா இல்லையா என்று தனக்கு தெரியாது என்றும் கூறி, அவர்கள் இருவரையும் ஃபைனான்ஸியர் அறைக்குள் அனுப்புகிறார். ஆதி லோன் விஷயமாக எல்லா விவரமும் போனில் சொல்லியிருப்பதால், பணம் தயாராக இருப்பதாகச் சொல்லி சில பத்திரங்களில் கையெழுத்துப்போடும்படி கேட, அப்பத்திரங்களை வாங்கிப்பார்க்கும் ராஜேஷ் அவை வெற்றுப்பத்திரங்களாக இருப்பதைச் சுட்டிக்காட்ட, ஆதி எதுவும் உங்களிடம் சொல்லவில்லையா என்று அவர் கேட்கிறார். எங்கே லோன் கிடைக்காமல் போய்விடுமோ என்று அச்ச்ப்படும் ஆர்த்தி, எதுவும் கேட்காமல் அவசரமாக அவற்றில் கையெழுத்துப்போட்டுக் கொடுத்துவிட்டு, பணம் அடங்கிய சூட்கேஸை வாங்கிக்கொண்டு போகிறாள்.


Saradha madam,
I saw the above scene while switching between channels :) hw r u able to putt forth the visual scenes in ur writing :o definitely a great skill :clap: :clap:

Saradha Madam, eththana varushama indha serial'a telecast panraanga :? more than 4 years :roll:

aanaa
11th October 2008, 08:14 PM
'சரி இந்த மாடும் மந்தையில் இருந்து பிரிந்து விட்டது' என்று ஆதிக்கு மகிழ்ச்சி.....

மீண்டும் மீண்டும் நன்றி பல

aanaa
11th October 2008, 08:14 PM
Saradha madam,
I saw the above scene while switching between channels :) hw r u able to putt forth the visual scenes in ur writing :o definitely a great skill :clap: :clap:

Saradha Madam, eththana varushama indha serial'a telecast panraanga :? more than 4 years :roll:

athuthaan Saradha
:clap: :clap: :clap:

saradhaa_sn
14th October 2008, 01:55 PM
[tscii:9cda8a391a]Thanks Saravana & Aanaa.....

தொல்காப்பியனும் உஷாவும் ‘பில்டர்ஸ் அசோஸியேஷன்’ கட்டிடத்துக்குள் நுழையும்போது, அங்கிருந்து அபியும் கூடவே கிருஷ்ணனும் வெளியே வருகின்றனர். (முன்பெல்லாம் அபி எங்காவது செல்வதென்றால் கூடவே தொல்காப்பியனுடன், அல்லது பலநேரம் தனியாக செல்வாள். ஆனால் இப்போது ஒட்டுவால் கிருஷ்னனுடன்தான் எங்கும் போகிறாள்). கிருஷ்ணன் உஷாவைப்பார்த்து “உஷாம்மா, நீங்க ரெண்டு பேர்ம் சேர்ந்து புதுசா ஒரு பிஸினஸ் ஆரம்பிக்கப்போகிறீர்களாமே”

“யார் சொன்னது?”

“இல்லம்மா, பரவலா பேசிக்கிறாங்க”

“இதுவரை அப்படி எதுவும் இல்லை, இனிமேல் ஆரம்பித்தாலும் ஆச்சரியம் இல்லை”

இப்போது அபி குறுக்கிட்டு (தொல்காப்பியனைப் பார்த்த்வாறே) “முன்பு இப்படித்தான் ஒரு புது பிஸினஸ் ஆரம்பிக்கும்போது ஒருவர் ‘நட்புக்காக’ ஆர்ம்பிப்பதாக சொன்னார். இப்போது அந்த நண்பரே இல்லை. அதான் கேட்டேன்”

அபியிடமிருந்து இந்த வார்த்தைகளை எதிர்பார்க்காத உஷா, “ரொம்ப நல்லாயிருக்கே நீ சொல்றது..!, நீங்களா சேர்ந்து ஒருத்தரை கம்பெனியை விட்டு வெளியே அனுப்புனீங்க. இப்போ அவரையே குத்தம் சொன்னால் என்ன அர்த்தம்?. அபி உணக்கு உண்மை என்னன்னு தெரியுமா?. புதுசா ஒரு பிஸினஸ், அதுவும் ‘கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிஸினஸ்’ ஆரம்பிக்கலாம் என்று சொன்னதே நான்தான். ஆனா அதுக்கு தொல்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?. ‘அபியில்லாமல் இன்னொரு பிஸினஸை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை’ என்றார்” .

“ஏன் தொல்ஸ் நீங்க ஒண்ணும் பேச மாட்டீங்களா?” என்ற அபியின் கேள்வி தொல்காப்பியனுக்கு மட்டுமல்ல உஷாவுக்கும் ஆச்சரியமாக இருக்க, “அவர் உங்கிட்ட பேசுகிற மாதிரியா நடந்துகிட்டே. அவரை ஒரு வார்த்தை கேட்காமல் கம்பெனியை விட்டு வெளியே அனுப்பினே. அன்னைக்கு கூட ‘கார்டு ஷாப்’ல நீ எனக்கு மட்டும்தான்னே பத்திரிகை கொடுத்தே. அது எப்படி அபி உங்கிட்டே தப்பே இல்லாத மாதிரி உன்னால் பேச முடியுது?”

“சரி உஷா, புதுசா பிஸினஸ் தொடங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்” உஷாவிடம் கைகுலுக்கிய அபி தொல்காப்பியனைப்பார்த்து, “தொல்ஸ் உங்களுக்கும் வாழ்த்துக்கள்” என்று சொல்ல, இத்தனை உரையாடல்களுக்கும் தொல்ஸிடமிருந்து வழக்கமான ட்ரேட்மார்க் புன்னகை மட்டுமே.

அபியும் கிருஷ்ணனும் வெளியே போனதும், அந்தக்கட்டிடத்துக்குள் நுழையும் கிரியின் கண்ணில் உஷாவும் தொல்காப்பியனும் படுகின்றனர், ஆனால் அவர்கள் கிரையைக்கவனிக்காமல் சிரித்துப்பேசிக்கொண்டே போக, கிரி அங்கிருக்கும் அசோஸியேஷன் மெம்பர்களின் உரையாடல்களைக் கவனிக்கிறான். ‘இப்போ சிரித்துப்பேசிக்கொண்டே போகும் பெண், அசோஸியேஷனின் சேர்மன் ஆதித்யாவின் மனைவி என்றும், அவள் ஆதியைப் பிரிந்து தொல்காப்பியனுடன் சுற்றுவதாகவும், இவர்களின் கூடா நட்பை ஆதி கண்டும் காணாமல் இருப்பதாகவும்’ அவர்கள் பேசிக்கொள்ள கிரி திடுக்கிடுகிறான்.

மாமியார் வீட்டிலிருந்து (சித்தியை மாமியார் என்று அழைக்கவேண்டிய சூழ்நிலை மனோவுக்கு) காரில் அனுவுடன் திரும்பிக்கொண்டு இருக்கும் மனோவிடம், அபி நடத்தப்போகும் விழாவை எப்படி நிறுத்தப்போகிறீர்கள் என்று அனு கேட்க, அவனோ இனிமேல்தான் அதுபற்றி யோசிக்க வேண்டும் என்று சொல்ல, தன் அம்மா(?)வின் முன் மனோ காட்டிய வேகம் இப்போது இல்லையென்பதை அறிந்த அனு கோபமடைந்து காரில் இருந்து இறங்கிக்கொள்ள, மனோ அவளை சமாத்னப்படுத்த முயல்கிறான். அவளோ “நீங்க யோசித்து முடிவு செய்வதற்குள் விழாவே முடிந்துவிடும். இப்பவே போய் உங்க அக்காவிடம் பேசினால் பேசுங்க, இல்லேன்னா நான் என் அம்மா வீட்டுக்குப் போகிறேன்” என்று முறுக்க “சரி சரி வா, இப்பவே போய் அபியக்கா கிட்டே பேசுறேன். ஆனா நான் பேசும்போது நீயும் கூட இருக்கணும்” என்று சொல்லி அழைத்துப்போகிறான்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஆனந்திமீது நடந்த கொலைமுயற்சியை நீதிமன்றம் சாதாரண சாலைவிபத்தாக சித்தரித்து லேசான தணடனையளித்து தீர்ப்பு வழங்கியது பற்றி தோழர் ரொம்ப ஆக்ரோஷமாக பேசுகிறார். கூடவே கார்த்திக்கும் விளக்குகிறான். பத்திரிக்கையாளர்கள் பேசாமல் இருந்தால் இன்று ஆனந்திக்கு நடந்ததுதான் நாளை மற்ற பத்திரிக்கையாளர்களுக்கும் நடக்கும் எனக்கூற, அவர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்று சொல்ல, தோழர் ஏளனமாக சிரித்து, ‘இப்போது இந்த நீதிமன்ற தீர்ப்பை பணத்தாலும் அதிகார பலத்தாலும் வளைத்தவர்கள் மேல்முறையீட்டிலும் அதைத்தானே செய்வார்கள்?. இதற்கு முதற்கட்டமாக கடற்கரையிலிருந்து நீதிமன்றம் வரை ஊர்வலம் சென்று நீதிமன்றத்தின் முன் உண்ணாவிரதம் இருக்க வேண்டுமென்றும், இதன்மூலம் மற்றவர்களின் கவனத்தை இந்த வழக்கின்பக்கம் திருப்ப வேண்டுமென்றும்’ கேட்க, பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.

காரில் ஆதியுடன் போய்க்கொண்டிருக்கும் கிரி, அசோஸிய்ஷன் அலுவலகத்தில் தான் பார்த்த காட்சிகள், கேட்ட உரையாடல்களை ஆதியில் காதுகளில் போட வேண்டுமென்ற எண்ணத்துடன், காரை நிறுத்தச்சொல்லி, டிரைவரை இறங்கி நிற்கச்சொல்லிவிட்டு, பாஸிடம் பேச்சை ஆரம்பிக்கிறான். தான் தொல்காப்பியனையும் உஷாமேடத்தையும் ஒன்றாகப்பார்க்க நேர்ந்ததையும், அவள் ஆதியின் மனைவியாக இல்லாமல் பழையபடி சுடிதார் அணிந்துகொண்டு ரொம்ப சகஜமாக சந்தோஷமாக இருந்ததையும், முக்கியமாக அவள் கழுத்தில் ஆதி கட்டிய தாலி இல்லையென்பதையும் சொல்ல, ஆதிக்கு அதிர்ச்சி. இருந்தும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அசோஸியேஷன் மெம்பர்கள், தொல்காப்பியனுக்கும் உஷாவுக்கும் கள்ள உறவு இருப்பதாகவும், கணவனாகிய ஆதி இதைக் கண்டுகொள்ளவில்லையென்றும் அவர்கள் பேசியதாகவும், பாஸுக்கும் மேடத்துக்கும் இன்னும் விவாகரத்து ஆகாத நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பிணக்கு மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாததால் பாஸைப்பற்றியும் மேடத்தைப்பற்றியும் இவ்வாறு தவறாகப் பேசுவதாக கிரி சொல்ல, ஆதியின் கோபம் உச்சந்தலைக்கு ஏறுகிறது.

உடனடியாக காரை எடுக்கச்சொல்லும் ஆதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, அத்துடன் காட்சி ஃப்ரீஸ்…..

(அடுத்து எங்கே போவான்?. தன் அம்மா காஞ்சனாவிடமா அல்லது உஷாவின் பெற்றோரிடமா…?).[/tscii:9cda8a391a]

aanaa
14th October 2008, 05:33 PM
நன்றி சாராதா

தமிழில் கலக்கிறீங்க!!!!!

saradhaa_sn
15th October 2008, 02:24 PM
[tscii:17a21c315e]எதிர்பார்த்தபடி ஆதி அம்மா காஞ்சனாவிடம் போய் தன் மனக்குமுறல்களைக் கொட்டுகிறான்.

‘கேட்டியாம்மா அவள் என்ன பண்ணியிருக்கான்னு?. என்னை எல்லார் முன்னாடியும் தலைகுனிய வைக்கிறதுக்காக என்னவெல்லாம் பண்ணுகிறாள் தெரியுமா? என்னால் தாங்க முடியலைம்மா’ ஆதியின் கூச்சலைக்கேட்ட காஞ்சனாவுக்கும் ரேகாவுக்கும் அந்த ‘அவள்’ யாரென்று புரியவில்லை. ஒருவேளை வழக்கம்போல அபியைப்பற்றித்தான் சொல்கிறானென்று நினைத்து ‘நீ யாரைப்பா சொல்றே?’ என்று கேட்க, ஆதியின் குமுறல் மேலும் வெடிக்கிறது. 'வேறு யார், உன் மருமகள் அந்த உஷாதான். நான் கட்டிய தாலியை தூக்கி எறிஞ்சதோடல்லாமல், என் எதிரியான அந்த தொல்காப்பியனோடு கைகோர்த்துக்கிட்டு சுத்துறாளாம். அதைப்பார்த்த பில்டர்ஸ் அசோஸியேஷன் மெம்பர்களெல்லாம் என்னைக் கையாலாகதவன், மனைவியை இப்படி ஊர்சுற்றவிட்டு விட்டு கண்டும் காணாமல் ஒதுங்கியிருப்பவன் என்றெல்லம் பேசுறாங்களாம். கிரி கேட்டுட்டு வந்து என்கிட்டே சொன்னான். அதைகேட்டதிலிருந்து எனக்கு எப்படியிருக்கு தெரியுமா?’ என்று வீடே ரெண்டுபடுவது போல் கத்த, அம்மா காஞ்சனா சமாதானம் சொல்கிறாள்.

‘அந்த கேடு கெட்டவள் எப்படிப்போனா உனக்கென்னடா?. அவளை நினைத்தெல்லாம் கவலைப்படணும்னு உனக்கென்ன தலையெழுத்தா?. நீ மட்டும் சரின்னா இன்னைக்கே எத்தனையோ பணக்கார பெண்கள் உன்னைக் கல்யாணம் செய்ய போட்டி போட்டுக்கிட்டு வருவாங்க. கழிசடை ஒழிந்தாள் என்று நிம்மதியாக இருப்பதை விட்டுட்டு யாரோ எதையோ சொன்னதுக்காக நீ வருத்தம் அடையாதே’.

அம்மாவின் ஆறுதலான வார்த்தைகள் அவன் கோபத்தைதணிக்க, ‘ஸாரிம்மா, இதையெல்லாம் உங்க கிட்டே சொன்னதுனால என் மனப்பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு. இந்த கவலையில் நான் செய்ய வேண்டியதை மறந்திடுவேனோன்னு மட்டும் நினைக்காதீங்க. அந்த அபி நடத்தப்போகும் சஷ்டியப்த விழாவை நிச்சயம் நடக்க விட மாட்டேன்’ பேசிக்கொண்டே மாடிக்குபோகும் மகனை நிம்மதியோடு காஞ்சனா பார்க்கிறாள்.

ஆதி தேவராஜ பான்டியன், திருவேங்கடம் மூவரும் மதுவருந்திக்கொண்டிருக்க, கிரி அவர்களுக்கு ‘ஊற்றிக்கொடுக்கும்’ வேலையில் இருக்க, வழக்கம்போல திருவேங்கடத்தின் உளறல்கள். ‘நீங்க எம்.எல்.ஏ.ஆனதில் எங்க பாஸுக்கு என்ன லாபம்’ என்று கிரி கேட்க, ‘இதுவரை என்ன செய்யணும்னு ஆதி சொல்லவே இல்லையே, அது மட்டுமல்ல அவன் ஒருமுறை கூட என்னை சித்தப்பா என்று அழைத்ததும் இல்லை. சர் இப்ப என்ன செய்யணும்னு சொல்லு’ என்று திருப்பிக் கேட்க, ‘உஷாவின் கதையைச்சொல்ல கிரி முன்வரும்போது ஆதி அவனை அடக்குகிறான். உடனே கிரி பிளேட்டை மாற்றி, ‘அபி நடத்தப்போகும் விழாவை தடுக்க முடியுமா என்று கேட்க, அவரோ போதையில் உளறுகிறார். மொத்தத்தில் இரண்டாவது பகுதி சுத்த வேஸ்ட். நேரத்தைக்கடத்த தொல்ஸ் கையாளும் தந்திரம், நமக்கோ தலைவலி.

அபி அலுவலக மீட்டிங் அறையில் அமர்ந்து அழைப்பிதழ்களுக்கு பெயர் எழுதிக்கொண்டிருக்க, கிருஷ்ணன் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வருகிறார். அப்போது கற்பகமும் சாரதாவும் அங்கு வர, அபி வேலையில் மும்முரமாக இருப்பதைக் கண்ட சாரதா, ‘கொஞ்ச வேலைகளை மற்றவர்களுக்கும் பிரித்துக்கொடுக்கலாமே. வெளி வேலைகளையெல்லாம் மனோவிடம் கொடுக்கக்கூடாதா?’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே மனோ, தன் மனைவி அனுவுடன் அங்கு நுழைகிறான் (விழாவை நிறுத்துவது பற்றிப் பேசும் நோக்கத்துடன்).

அவன் வந்த விவரம் தெரியாத அபி, மண்டபத்துக்கான அட்வான்ஸ் தொகையைக் கட்டிவிட்டு வருமாறு அவனிடம் நீட்ட, அவன் தயங்க, ‘ஏன் உனக்கு வேறு ஏதாவது வேலையிருக்கிறதா?’ என்று அபி கேட்க, அவன் பதில் சொல்லப்போகிறன் என்று பார்த்தால்.... அட அதற்குள் நேரம் முடிஞ்சு போச்சு. [/tscii:17a21c315e]

aanaa
15th October 2008, 07:03 PM
மொத்தத்தில் இரண்டாவது பகுதி சுத்த வேஸ்ட். நேரத்தைக்கடத்த தொல்ஸ் கையாளும் தந்திரம், நமக்கோ தலைவலி.


ஒன்றா இரண்டா
5 வருடங்களை அல்லவா கடத்திவிட்டார்.
இன்னும் எத்தனை வருடங்களோ ..
ஆதங்கத்துடன்....

அட அதற்குள் நேரம் முடிஞ்சு போச்சு.

எப்படா முடியும்ணு காத்திருகிறவர்களுக்கு ஓரு வரப்பிரசாதம்..

நனறி சாரதா

gta129
16th October 2008, 04:51 AM
Thanks for the update Saradha madam :ty:

saradhaa_sn
16th October 2008, 01:51 PM
[tscii:c89918e491]‘அக்கா உன் கிட்டே கொஞ்சம் தனியா பேசணும்’

‘பரவாயில்லை, இங்கே யாரும் வெளியாட்கள் இல்லை. சொல்லு’

‘இப்போதைக்கு இந்த சஷ்டியப்த விழா அவசியம்தானா?. இவ்வளவு நாள் எங்கே இருந்தார்னே தெரியாது. நம்மைப்பற்றி இதுவரை அவர் கவலைப்பட்டதும் கிடையாது. திடீர்னு வந்திருக்கும் அப்பாவுக்கு நாம் எதுக்காக சஷ்டியப்த விழாவெல்லாம் கொண்டாடணும்?. நமக்காக இத்தனை நாள் அப்பா என்ன செய்தார்?. எப்போது அந்த ஆதி குடும்பத்தோடுதானே நெருக்கமாக இருந்தார்?’

இப்போது கற்பகம் குறுக்கிடுகிறாள். ‘டேய் என்னடா சொல்றே?. நீங்கள்ளாம் அவருடைய புள்ளைங்கடா. அவர்தான் உங்களுக்கெல்லாம் அப்பா, நான் அவருடைய சட்டப்படியான முதல் மனைவி. நாம நடத்தாம வேறு யார் நடத்துவாங்க?’

‘இருக்கட்டும்மா. ஆனா இவ்வளவு நாள் அவர் அந்த ஆதி குடும்பத்தோடு தானே இருந்தார்?. அப்படீன்னா அவங்களே இதையெல்லாம் நடத்திட்டுப்போகட்டுமே. நமக்கு எதுக்கு வீண் செலவும் சிரமமும்?’

மனோவின் உள்நோக்கம் அபிக்கு தெரிஞ்சு போக, ‘சபாஷ், ரொம்ப நல்லா பேச கத்துக்கிட்டேடா. யார் சொல்லி இப்படியெல்லாம் பேசுறேன்னு தெரியுது. அனு ட்ரைனிங் கொடுத்தாளா?. நம்ம குடும்பத்துக்கு சாதகமாக பேசுவதுபோல அந்த ஆதியின் குடும்பத்துக்கு சாதகமா பேச வந்திருக்கியா?. இதோ பாருடா, நான் உன்னை நம்பி இந்த சஷ்டியப்த விழாவை நடத்தலை. நீ போனாலும் நாங்க மூணு பொண்ணுங்களும் நடத்துவோம். நீ போறதுன்னா போடா’

‘என் முடிவை நான் சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்ட்டம். நான் இந்த விழாவில் கலந்துக்க மாட்டேன்’. அனுவை அழைத்துக்கொண்டு வெளியேறப்போகும் மனோவை சமாதனப்படுத்த சாரதா எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவன் போயே விட்டான். வழக்கம்போல அழத்துவங்கும் கற்பகத்தை சமாதானப்படுத்த, ‘அவன் போறான் விடும்மா, நாங்க மூணு பொண்ணுங்களும் இந்த விழாவை ஜாம் ஜாம்னு நடத்துறோம் (ஆர்த்தி அடுத்த குண்டைப் போடப்போவது அபிக்கு தெரியாது, பாவம்). நான் போய் மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுத்திட்டு வாரேன்’. அபி சென்றதும் கற்பகத்தின் அழுகை மீண்டும் தொடர, சாரதா சமாதனப்படுத்த முயல்கிறாள். (முயல்கிறாள் அவ்வளவுதான்..... ஆனால் கற்பகத்தின் கண்கள் இடையிடையே வற்றிப்போகும் குற்றாலமோ, சிவசமுத்திரமோ அல்ல. என்றைக்கும் கொட்டிக்கொண்டிருக்கும் நயாகரா)..

மேனகாவைப்பார்க்க ஆதி வருகிறான். (மேடத்தைப்பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு). ‘என்ன ஆதி அசோஸியேஷன் தலைவர் தேர்தலில் மும்முரமாக இருக்கீங்க போலிருக்கு’.

‘யெஸ் மேடம், இத்தனை வருஷமா போட்டியில்லாமல் நானே ஜெயிச்சு வந்தேன். இப்போ அந்த அபி குறுக்கே வந்திருக்கா. அவளை நாண் வளர விட்டது தப்பா போச்சு’.

‘நோ மிஸ்ட்டர் ஆதி, அந்த அபியை நீங்க வளர்த்து விடலை, உங்களை எதிர்த்து தானா வளர்ந்திருக்கா’.

‘மேடம் நான் சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது, அவள் உங்களையும்தான் எதிர்த்து வளர்கிறாள்’.

‘அப்படீன்னா அவளை என்னாலும் ஒண்ணும் செய்ய முடியலைன்னு குத்திக் காட்டிறீங்களா ஆதி?’

‘நோ மேடம், இப்போ என்னுடை இமேஜை ஸ்பாய்ல் பண்ற மாதிரி இன்னொருத்தி கிளம்பியிருக்கா. அதுதான் என்னுடைய மூட் அவுட்டுக்கு காரணம். அது வேறு யாருமல்ல, என் மனைவி உஷாதான். அந்த தொல்காப்பியனுடன் சேர்ந்துகொண்டு சுற்றுவதைப்பற்றி நம்ம அசோஸியேஷனிலேயே ஒரு மாதிரியா பேச ஆரம்பிச்சுட்டாங்க’.(இப்போ மேனகா ஜாடை காட்ட அவளுடைய எடுபிடிகள் அவ்விடத்தை விட்டு அகலுகின்றனர், நிலைமையை அறிந்த கிரியும் அவர்களுடன் வெளியேற மேனகாவும் ஆதியும் தனிமையில்).

‘ஆதி நீங்க ஆரம்பத்திலேயே தப்பு பண்ணிட்டீங்க. உங்க மனைவியை உங்க கண்ட்ரோலிலேயே வைத்திருக்க வேண்டும். அதுதான் பிஸினஸ்மேனுக்கு அழகு. இப்போ எனக்கு ஒரு கணவர் இருந்தால் அவரையும் என் காலடியில்தான் வைத்திருப்பேன். என்னதான் பிஸினஸ் வேறு குடும்பம் வேறு என்று நாம் நினைத்தாலும் எதாவது ஒரு கட்டத்தில் ரெண்டும் மெர்ஜ் ஆயிடும். அதுனாலதான் சொல்றேன், முதலில் உங்க மனைவி உஷாவை உங்க கஸ்டடியில் கொண்டு வாங்க’.

யெஸ் மேடம், நீங்க சொல்றது கரெக்ட். இனி நான் வேறு வழியில் அப்ரோச் பண்ணப்போறேன். வருகிறேன்’.

கிருஷ்ணனிடம் கீதோபதேசம் பெற்ற அர்ஜுனனாக ஆதி வெளியேறுகிறான்.

காஞ்சனா வீட்டுக்கு வரும் மனோவும் அனுவும் ரொம்ப உற்சாகமின்றி காணப்படுவதை உணர்ந்த காஞ்சனா, ‘என்ன ஆச்சு?. ரொம்ப வீராப்பா போனீங்களே, இப்போ அந்த அபி செய்வதுதான் சரின்னு சொல்ல வந்திருக்கீங்களா?. அப்படி சொல்ல்றமாதிரி அவள் உங்களை மாத்தி அனுப்பிட்டாளா?’ என்று காஞ்சனா கேட்க, ‘இல்லமா, இவரும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார், அவங்க யாரும் கேட்கலை. அந்த வீட்டில் இவருடைய வார்த்தைகளுக்கு அவ்வளவுதாம்மா மதிப்பு’ என்று அனு கூற, ‘ஆனால் அந்த விழாவில் நாங்க கலந்துகொள்ள மாட்டோம்னு சொல்லிட்டு வந்துட்டோம், இனி நாங்க உங்க பக்கம்தான் இருப்போம்’ என்று கூறும் மனோவைப்பார்த்து,’நீங்க ரெண்டு பேரும் என் பக்கம் இருப்பது எனக்கு நிம்மதியாக இருக்கிறது. ஆனால் உங்களால் முடியாததை என் மகன் ஆதி செய்துமுடிப்பான். அபி நடத்தும் விழாவை நடக்காமல் செய்வதன்மூலம் அந்த அபிக்கு தான் யாருன்னு காட்டுவான்’ என்று காஞ்சனா கொக்கரிக்கிறாள்.

உஷாவின் வீடு.... உஷா, அம்மா, அப்பா, தொல்ஸ் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது உஷாவின் அப்பா, ‘என்ன இருந்தாலும் அபி உங்களை இப்படி இன்ஸல்ட் பண்ணியிருக்கக் கூடாது. அதென்ன உஷாவுக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு உங்களைப் புறக்கணிப்பது?’.

‘ஓ... சொல்லிட்டீங்களா உஷா?’

‘இதிலென்ன தப்பு?. அவள் செஞ்சது தவறுதானே. என்ன இருந்தாலும் நீங்க அவளுக்காக செய்ததெல்லாம் இவ்வளவு சீக்கிறத்தில் மறந்து உங்களை தவிர்ப்பாள் என்று நினைக்கவில்லை’

‘அதெல்லாம் இல்லை உஷா, இப்போ ஒரு சின்ன பிரச்சினை, அதனால் விலகியிருக்காங்க’

‘சும்மாயிருங்க தொல்ஸ், இப்பவும் கூட அவளுக்கே சப்போர்ட் பண்ணி பேசாதிங்க. எப்படி உங்களால் எல்லாத்தையும் மறந்து இப்படி தியாகி வேடம் போட முடியுது?’

‘அப்படியில்லை உஷா…., அன்னைக்கு அசோஸியேஷன் அலுவலக்த்தில் கூட நல்லாத்தானே பேசினாங்க?’

‘அது சும்மா ஒரு சம்பிரதாயத்துக்காக நம்ம புது பிஸினஸுக்கு வாழ்த்து சொன்னாள். அவ்வளவுதான்’

இப்போது உஷாவின் ஃப்ளாட்டில் படியேறிவரும் ஆதி, வெளியில் நின்றுகொண்டு கிரியை உள்ளே அனுப்பி உஷாவை அழைத்து வரச்சொல்கிறான். உள்ளே போகும் கிரி, அங்கு அவளது பெற்றோர் மட்டுமல்லது தொல்காப்பியனும் கூட இருப்பதைப்பார்த்து, ‘மேடம், பாஸ் உங்களுடன் பேசணுமாம். வெளியில் நிற்கிறார். உங்களை அழைத்துவரச்சொன்னார்’.

‘கிரி, இங்கேயிருப்பவர்கள் யாரோ எவரோ அல்ல, எல்லோரும் என்னைப்பற்றியும் உங்க பாஸைப்பற்றியும் தெரிந்தவர்கள்தான். இங்கே வந்து பேசச்சொல்லுங்கள்’.

‘உஷா நான் வேண்டுமானால் போயிட்டு அப்புறம் வர்ரேன். நீங்க பேசுங்க’ என்று தொல்காப்பியன் வெளியே செல்ல முயற்சிக்க, ‘பரவாயில்லை தொல்ஸ், குடும்ப விஷயத்தை போயும் போயும் ஒரு செக்ரட்டரியை விட்டுப் பேசச்சொல்லி அவர் அனுப்பியிருக்கும்போது நீங்க இருப்பதில் தவறில்லை’ என்று கூறும் உஷா கிரியின் பக்கம் திரும்பி, ‘கிரி, ஒண்ணு அவரை இங்கே வந்து பேசச்சொல்லுங்க. அல்லது என்ன விஷயம்னு நீங்க சொல்லுங்க’.

‘எங்க பாஸ் உங்களை ‘டைவர்ஸ்’ பண்ண முடிவு பண்ணியிருக்கார்’.

அதிர்ச்சியில் நால்வரும் சோபாவை விட்டு எழுந்து நிற்க, உஷாவின் குழப்பமான முகத்தில் கேமரா உறைய..........,
[/tscii:c89918e491]

aanaa
17th October 2008, 12:42 AM
கேமரா உறைய..........,


அந்த கேமராவை அப்படியே எங்கள் கண் முன்னும் நிறுத்தியதற்கு நன்றி சாரதா

Madhu Sree
17th October 2008, 11:15 AM
Saaradha madam... daily am reaching home only by 10 or 11... so missing this serial... but ur posts are compensating that... ur write-up is more realistic... ungal sevai thodarattum :clap: Thanks for ur wonderful write-ups till date :D

Arthi
17th October 2008, 01:52 PM
saradha madam :clap:, this episode is especially nice with direct speech. I could visualise each and every characters through your words...
wow, keep up the work madam :D

Arthi
17th October 2008, 02:00 PM
[tscii:f44afb243a]


அபி சென்றதும் கற்பகத்தின் அழுகை மீண்டும் தொடர, சாரதா சமாதனப்படுத்த முயல்கிறாள். (முயல்கிறாள் அவ்வளவுதான்..... ஆனால் கற்பகத்தின் கண்கள் இடையிடையே வற்றிப்போகும் குற்றாலமோ, சிவசமுத்திரமோ அல்ல. என்றைக்கும் கொட்டிக்கொண்டிருக்கும் நயாகரா)..
[/tscii:f44afb243a]

:rotfl: wow, enna oru udharanam :rotfl:


[tscii:f44afb243a]

கிருஷ்ணனிடம் கீதோபதேசம் பெற்ற அர்ஜுனனாக ஆதி வெளியேறுகிறான்.
[/tscii:f44afb243a]

wow wow, this quote simply visualise how Aadhi wld have gone to Geetha's place


[tscii:f44afb243a]
அதிர்ச்சியில் நால்வரும் சோபாவை விட்டு எழுந்து நிற்க, உஷாவின் குழப்பமான முகத்தில் கேமரா உறைய.........., [/tscii:f44afb243a]

wow wow wow.... wat a great freeze.... and make us eagerly waiting for the next episode :D
:thumbsup:

saradhaa_sn
18th October 2008, 12:58 PM
[tscii:7231453f5e]Thanks a lot aanaa, Madhushree & Arthi....

தன்னுடைய பாஸ் ஆதி, உஷாவை டைவர்ஸ் பண்ணப்போவதாக கிரி சொன்ன தகவல் முதலில் உஷாவுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், உடனே சுதாரித்துக்கொண்டு ‘இது நான் முன்பே எதிர்பார்த்ததுதான்’ என்கிறாள். ஏதோ சொல்ல வரும் அப்பாவையும் அம்மாவையும் தடுக்கிறாள். ‘கிரி, உங்க பாஸ்தானே என்னை டைவர்ஸ் பண்ணப்போறார். அதுக்காக நீங்க ஏன் முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு இருக்கீங்க?’ என்று கேட்க, அந்நேரம் உள்ளே நுழையும் ஆதி, ‘தெரியும்டி, நீ இப்படித்தான் பேசுவேன்னு எனக்கு நல்லாவே தெரியும்’ என்றவன் உஷாவின் அப்பாவைப்பார்த்து ‘என்னைய்யா பொண்ணை வளர்த்து வச்சிருக்கே கொஞ்சம் கூட மட்டு மரியாதை தெரியாதவள்’ என்று சீற, உடனே உஷா ‘இதோ பாருங்க ஆதி, நீங்க ‘டி’ போட்டுப்பேசினால் நானும் ‘டா’ போட்டுப் பேசவேண்டியிருக்கும். என்னோடு பேசிக்கொண்டிருக்கும்போது எங்க அப்பாவிடம் ஏன் பாய்றீங்க?. நீங்களும் நானும் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பெயர் வாழ்க்கையா?. என்னைக்குமே நாம புருஷன் பெஞ்சாதியாய் வாழ்ந்ததே கிடையாது’ என்று கூற, அதற்கு ஆதியும் ‘அதுக்குத்தான் நாம் ரென்டு பேரும் சுமுகமா பிரிஞ்சிடுவோம்னு சொல்றேன். இந்த மியூச்சுவல் அக்ரிமெண்ட்டில் கையெழுத்துப் போட்டுக்கொடு’ என்று அக்ரிமெண்ட்டை நீட்ட, இப்போது உஷா வெடிக்கிறாள்.

‘இந்த ஒப்பந்தத்தில் நான் கையெழுத்துபோட்டுக் கொடுப்பதன்மூலம், தவறு அனைத்தும் என்மீதுதான் என்பதைபோல ஆகிவிடும். அதை நான் என்னைக்கும் ஒப்புக்கொள்ள மாட்டேன். நீங்க ஒரு ஆணாதிக்க வெறியர் . பெண்களின் உணர்வுகளை மதிக்கத்தெரியாத ஒரு காட்டுமிராண்டி. சும்மா கோட்டும் சூட்டும் போட்டுக்கொள்வதால் நாகரிக மனிதனாக தோற்றமளிக்கிறீர்கள், ஆனால் உள்ளுக்குள் நீங்க ஒரு பக்கா சுயநலவாதி. உங்களுக்கு டைவர்ஸ் வேணும்னா கோர்ட் மூலமா வாங்க. அப்போ யார் மீது என்ன தப்புன்னு இந்த ஊருக்கு தெரியட்டும்’ என்று பதிலுக்கு கத்த, பக்கத்தில் நிற்கும் தொல்காப்பியனைப்பார்த்து முறைத்தவாறு ஆதி வெளியேறுகிறான்.

பத்திரிக்கையாளர்களின் உண்ணாவிரதப் பந்தலில் தோழர் பாலகிருஷ்ணனும், கார்த்திக்கும் மற்ற பத்திரிக்கையாளர்களும் அமர்ந்திருக்க, தொலைக்காட்சி நிருபர்கள் அவர்களைப் பேட்டியெடுக்கின்றனர்.

சமீபத்திய தொடர் அடிகளால் மன நிம்மதியிழந்த ஆதி, கிரியிடம் தன் மனப்பாரத்தைபற்றிப் புலம்பிக்கொண்டிருக்கிறான். அச்சோஸியேஷன் தலைவர் தேர்தலில் அந்த அபி தன்னை எதிர்த்துப்போட்டியிட்டு தனக்கு பெரிய சவாலை உண்டாக்கியிருப்பது போதாதென்று, இப்போது தன் மனைவி உஷாவும் தன்னைப் பற்றிய இமேஜை தன்னுடைய தொழிலதிபர்களின் வட்டத்தில் உடைத்து நொறுக்கப் புறப்பட்டிருக்க இன்னொரு தலைவலியாக அபி தன் அப்பாவுக்கு அவளுடைய அம்மாவுடன் சஷ்டியப்த விழா நடத்தப் போவதன்மூலம் தனக்கும் தன் அம்மாவுக்கும் தீராத அவமானத்தைத் தர முயற்சிப்பது எல்லாம் ஒரே நேரத்தில் சேர்ந்து வந்து தன்னை நிலைகுலையச் செய்திருப்பதைப்பற்றியும், தன் அப்பா இருக்குமிடத்தை இன்னும் கண்டு பிடிக்க முடியாதிருப்பதையும் கிரியிடம் புலம்ப, தலைமறைவாயிருக்கும் ஈஸ்வரனை ஆதியால் அனுப்பப்பட்டிருக்கும் தேவராஜ பாண்டியனின் ஆட்கள் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என்றும், தன்னுடைய பாஸ் இப்போது உஷா விஷயத்தில்தான் கவனம் செலுத்த வேண்டுமென்றும், அதற்கு முன் கொஞ்சம் ரிலாக்ஸாக தொலைக்காட்சியைப் பார்க்கும்ப்படி சொல்லி டி.வி.யை ஆன் பண்ண, அதில் உண்ணாவிதப்பந்தலில் இருக்கும் தோழர் மற்றும் கார்த்திக்கின் பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

அதைப்பார்த்த் ஆதிக்கு இன்னும் அதிர்ச்சி, என்னடா இது தலைவலிக்கு மேல் தலைவலி வந்து இப்படிக் கொல்கிறதேயென்று நொந்துகொண்டே பேட்டியைத் தொடர்ந்து பார்க்க தோழரும் கார்த்திக்கும், ஆனந்திக்கு நடந்தது சாதாரண சாலை விபத்து அல்லவென்றும் திட்டமிட்ட கொலைமுயற்சியென்றும், அந்த கொலை முயற்சியின் பின்னணியில் தொழிலதிபர்களான ஆதித்யாவும், மேனகாவும் இருக்கின்றனர் என்றும், இவர்களின் மோசடி மற்றும் அடாவடித்தனங்களைப்பற்றி ஆனந்தி பத்த்ரிகையில் எழுதியதாலேயே அவர்கள் ஆனந்தியைக்கொல்ல ஏற்பாடு செய்திருந்தனர் என்றும் கூற, பார்த்துக்கொண்டிருக்கும் ஆதி கோபத்தின் உச்சிக்குப்போகிறான். இந்த தொலைக்காட்சி பேட்டியைப் பார்த்துக்கொண்டிப்பவர்கள் மத்தியில் தன் செல்வாக்கு எப்படி சரியும் என்பதையறிந்து திடுக்கிடும் ஆதி, கிரியின் யோசனைப்படி மேனகாவுக்கு போன் செய்து ‘நியூஸ் பார்த்தீர்களா?’ என்று கேட்க அவளோ, ‘பார்த்தேன், ஷேர் மர்கெட் கொஞ்சம் சரிந்திருக்கிறது. அத்துடன் இரண்டு பில்டர்ஸ் ஒன்று சேர்ந்து ஒரு புதிய ஸ்டார் ஓட்டல் கட்டப்போகிறார்கள்’ என்று தன் தொழில் ரீதியான நியூஸ்களைச்சொல்ல, ஆதி கார்த்திக்கின் ட்.வி.பேட்டியைப் பற்றிக்கேட்க அதையெல்லாம் தான் பெரிதாக எடுத்துக்கொண்டு அவர்களை வளர்த்துவிட விரும்பவில்லையென்று சொல்லி போனை ‘கட்’ பண்ணுகிறாள்.

அபியின் நடவடிக்கைகளை முடக்க இப்போது ஆதி அந்த கார்த்திக்குடன் நேரடியாக மோத தீர்மானிக்கிறான்.
[/tscii:7231453f5e]

saradhaa_sn
18th October 2008, 01:12 PM
[tscii:b4ae9f40dd]மேனகாவைப்பார்க்க ஆதி வருகிறான் (கிரியோடுதான்). ரொம்பவும் பிஸியாக போனில் இருக்கும் அவள் ஆதி வந்த விஷயத்தைக்கேட்க, அவளது அட்வைஸ்படி உஷாவுக்கு வக்கீல் மூலமாக டைவர்ஸ் நோட்டீஸ் விட்டிருப்பதாகச்சொல்ல, அவள் அதைப் பாராட்டும் நேரம் ஆதி, கார்த்திக்கின் உண்ணாவிரதப்பந்தல் பேட்டியைப்பற்றிச் சொல்லத் துவங்க அதில் அவள் சிரத்தை காட்டவில்லை. அவனுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்துப் பேசி வளர்த்துவிட விரும்பவில்லையென்று சொல்லி தவிர்க்கிறாள். அவளைப்பற்றியும் கார்த்திக் பேட்டியில் சொல்லியிருப்பதாக சொல்லியும் அவள் சட்டை செய்யவில்லை. இதற்கிடையே அவளுக்கு போன் வர எழுந்து உள்ளே போகிறாள், கூடவே ஜென்னியும். உள்ளே சென்ற அவள் ஏதோ ஃபைல் கேட்க அவளுடைய பிரதான கைத்தடி ரவி அதை எடுத்துக்கொண்டு உள்ளே போக இப்போது அந்த இடத்தில் ஆதியும் கிரியும் மட்டுமே.

தன்னுடைய வீட்டில் கிரியின் வருகைக்காக காத்திருக்கும் ஆதியைச்சந்திக்கும் கிரி, தான் ரொம்ப கஷ்ட்டப்பட்டு மேனகா ஆஃபீஸிலிருந்து திருடி வந்ததாக சட்டைக்குள்ளிருந்து ஒரு ஃபைலை எடுத்து ஆதியிடம் கொடுக்க, அதை வாங்கிப்பார்க்கும் ஆதி, ‘வெரிகுட்’ இதுதான் நான் கேட்ட ஃபைல் என்று சொல்லி கிரியைப்பாராட்டுவதுடன், ‘இதோடு உன் வேலை முடியலை’ என்று சொல்ல, ‘அயோ பாஸ் மீண்டும் திருடனுமா?’ என்று கிரி அலற, ‘இல்லை, இதைக்கொண்டுபோய் அபியின் அலுவலகத்தில் வேலை செய்யும் முருகேசன் என்பவனிடம் கொடுக்க வேண்டும்’ என்று சொல்ல, ‘பாஸ், நாம கஷ்ட்டப்பட்டு எடுத்து வந்த ஃபைலை ஏன் அபியிடம் கொடுக்க வேண்டும்?’ என்று கேட்கும் கிரியிடம் ‘எல்லாம் நடக்கும்போது உனக்கு தானாக தெரிய வரும்’ என்று சொல்லி அனுப்புகிறான். இது, மேனகாவிடம் கார்த்திக்கை மாட்டிவிடும் திட்டம் என்பது நமக்கு தெரிந்துவிடுகிறது.

அப்போது அங்கு வரும் காஞ்சனா, ‘ஆதி, நீ கிரி கிட்டே பேசிக்கிட்டு இருந்ததெல்லாம் நானும் கேட்டேன். நீ உன்னுடைய பிஸினஸ்லதான் மும்முரமாக இருக்கியே தவிர, அந்த அபி நடத்தும் சஷ்டியப்த விழாவைத்தடுக்க எதுவும் செய்ததாக தெரியவில்லை’ என்று சீறுகிறாள். ‘இல்லம்மா, நான் அதை மறக்கலை’ என்று சொல்லும் ஆதியிடம் ரேகா, ‘வெறுமனே ஞாபகத்தில் வைத்திருந்தால் போதாது ஆதி, அதைத்தத்டுக்க உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும். இந்த விஷயம் கேள்விப்பட்ட நாளாக அத்தை சரியாக சாப்பிடுவதில்லை தெரியுமா? என்று சொல்ல, ‘நானும் சும்மா இல்லை ரேகா, அந்த விழாவைத்தடுக்க ஒரே வழி, அப்பாவை அந்த அபிக்கு தெரியாமல் கடத்தி வந்து என் கஸ்டடியில் வைப்பதுதான். அதற்காக அவரைத்தேடும் முயற்சியில் தேவராஜ் பாண்டியன் தன் ஆட்களை மும்முரமாக ஏவி விட்டிருக்கிறார். அவங்க என் அப்பாவை நிச்சயம் கண்டுபிடிப்பாங்க’ என்று பதிலளிக்க, அதற்கு காஞ்சனா ‘அவங்க தேடினா மட்டும் போதாது ஆதி, நீயும் இதில முழுமூச்சய் இறங்கணும். அபி குறித்த நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அந்த விழா மட்டும் அவள் ஏற்பாடு செய்தபடி நடந்துவிட்டால் அதைவிட நமக்கு அவமானம் கிடையாது. அப்புறம் என்னை நீ உயிரோடு பார்க்க முடியாது’ என்று கடுமையாக எச்சரிக்கிறாள்.

ஆதியின் உத்தரவுப்படி அபியின் ஆஃபீஸ் செல்லும் கிரி, தன் காரில் இருந்தவாறே அந்த ஃபைலை முருகேசனிடம் சேர்ப்பிக்க, அவன் யாரும் அறியாமல் மற்ற ஃபைல்களோடு சேர்த்து அபியில்லாத நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவளது மேஜையில் வைக்கப்போகும் நேரம் அங்கு வரும் ஆர்த்தி அவனிடம் இருந்து ஃபைல்க்ளை வாங்கி புரட்டிப்பார்க்கும் நேரம், அவளுக்கு போன் வர, ஃபைல்களை அப்படியே அபியின் டேபிளில் வைத்து விட்டு வெளியே போகிறாள்.

மீண்டும் மேனகாவின் அலுவகத்துக்கு (அது அலுவலகமா அல்லது மேனகாவின் வீடா?) வரும் ஆதி அவளிடம் அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் செய்யவிருக்கும் ‘டிஜிட்டல் வேல்லி ப்ராஜக்டுக்கான’ ப்ரொபோஸல் ஒன்றைக்காட்டி அது மேனகா செய்யவிருக்கும் ‘சேட்டலைட் சிடி’ ப்ளானுடன் ஒத்துப்போவதைச் சுட்டிக்காட்டுகிறான். மேனகாவுக்கும் ‘இது எப்படி அபி கைக்குப் போனது’ என்று அதிர்ச்சி. கார்த்திக்தான் இதை அவளிடம் இருந்து திருடி அபியிடம் கொடுத்திருக்க வேண்டும் என்று ஆதி சொல்ல, உடனே ரவியிடம் சொல்லி தங்கள் கம்பெனி ஃபைலைத் தேடச்சொல்லி மேனகா உத்தரவிட…… அது அங்கு இருந்தால்தானே?. ‘காணவில்லை’ என்ற ரவியின் பதில் ஆதியின் கூற்றை ஊற்ஜிதப்படுத்த, அவள் கோபம் கார்த்திக் மேல் திரும்புகிறது.

என்றைக்குமில்லாமல் கார்த்திக் அபியின் அலுவலகத்துக்கு வருகிறான். (உண்ணவிரதம் என்னாயிற்று?). அந்த வழியாக போனவன் சும்மா பார்த்துவிட்டுப்போகலாமே என்று வந்தானாம். ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா’…. ஸாரி… கார்த்திக் எதற்கு வந்திருக்கிறான் என்று கேட்டா ‘சின்னக்குழந்தையும் சொல்லும்’. ஆம், பின்னாலேயே போலீஸ் வரப்போகிறது. அப்படி போலீஸ் வரும்போது கார்த்திக் அங்கு இருந்தால்தானே கையும் களவுமாகப் பிடிக்க முடியும்னு ‘அய்யாச்சாமி’ நினைச்சு முடிக்கலை (நன்றி விஜய்) அதற்குள் போலீஸ் வந்துவிட்டது.

வராத கார்த்திக் வந்திருக்கிறானே என்பதற்காக அபி சும்மாவேனும் ஆனந்தியின் பத்திரிகை எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று சம்பிரதாயமாக விசாரித்துக்கொண்டிருக்கும்போது அபியின் கேனுக்குள் போலீஸ் நுழைகிறது. வழக்கம்போல இம்முறை ஆதியோ கிரியோ கூட வரவில்லை, இது மேனகாவின் கம்ப்ளைண்ட் என்று காட்டவோ என்னவோ அவளது பிரதான எடுபிடி ரவி போலீஸுடன் வந்திருக்கிறான்.

‘மேடம் உங்க ஆஃபீஸை சோதனை போடணும்’……..

(அபியின் அதிர்ச்சியான முகத்தோடுதான், காட்சியை திருச்செல்வம் 'ஸ்டில்' பண்ணியிருப்பார்னு உங்களுக்கு தெரியாதா என்ன, 1500 எபிசோடுக்கு மேல் பார்த்திருக்கீங்களே).
[/tscii:b4ae9f40dd]