PDA

View Full Version : Mazhalai



srijk
25th January 2011, 03:50 PM
ஆழகிய மாலை

ஆழகிய மாலை
என்னவனும் அருகினில்
புரியாத சிலிர்பு
ஆடங்ஹாத பூரிப்பு
இயல்பாக இல்லை நான்
நிலைகொள்ளாமல் இருந்தது மனம்
இது நாள் வரை அறிந்திராத ஓர் உணர்வு
உச்சி முதல் பாதம் வரை படர்ந்திருந்தது
விளங்காமல் தவித்தேன்
என்னவனின் அரவனைபில் கிடந்தேன் !!

எதிர்பாரத நிகழ்வாய்
உதைத்தது ஒரு கால், என் வயிற்றில் பலமாக
கத்தினேன் கதறினேன்
உயிர் பிரியும் வலியால்
ஆம், பிரிந்தது உயிர் தான்
என் உயிருடன் கலந்திருந்த உயிர், என்னை பிரிந்து பிறந்தது !!

அழுகை , கதறல்
ரசித்து கொண்டிருன்தேன் நான், கண்ணீருடன் !!
என் கரங்களை நிரப்பினால்
அழகான எங்கள் தேவதை!!

மிருதுவான கேசம்
சீரான நெற்றி
மொழி பேசும் விழிகள்
கிளியின் மூக்கு
சிவந்த அதரங்கள்
சிறிய காதுகள்
நீண்ட விரல்கள்
நேர்த்தியான நகங்கள்
என்று ரதியின் பிம்பமாய் எங்களின் அவள்!!

தாயின் உருவம்
தந்தையின் சாயல்
தாத்தாவின் பார்வை
பாட்டியின் சிரிப்பு
மாமனின் குறும்பு
அத்தையின் குரல்
என்று மொத்த குடும்பத்தின் ப்ரதிபலிப்பாய் எங்களின் அவள் !!

ஆழுகையும் சிரிப்பும் கலந்தது அவள் பாஷை
மொழிபெயர்பாளர் இன்றி திகைத்திருந்தோம் நாங்கள் !!
அவளின் கண் அசைவுக்கும், கை அசைவுக்கும்
ரசிகர்களானோம் !!
தூங்கிய போதும் தூங்காத அவள் அழகை
பருகி களித்திருந்தோம்!!

வசந்தமானது வாழ்க்கை
எங்கள் தேவதையின் வரவினால்!!

இந்த பூலோக சொர்கத்தையெல்லாம் தரப்போகும்
அந்த "அழகிய மாலைக்காக"
காத்திருக்கும் இருவர்!!

- ஸ்ரீ

pavalamani pragasam
25th January 2011, 07:44 PM
:clap: மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!

kaveri kannan
4th March 2013, 10:46 AM
மகனோ மகளோ பிறக்கும் என் தந்தை முகமாக...

Atavism என்னும் தலைமுறை தாவும் ஜீனின் செயலைக் கவியரசர் சொன்ன வரி இது ( திரிசூலம்.... மலர் கொடுத்தேன்..)

தாத்தாவின் பார்வை, பாட்டியின் குறும்பும் அடாவிச எச்சங்கள்.

வளர்வதும் ஜீன் பிரதி எடுப்பதுமே பிறப்பின் தலையாய நோக்கங்கள்..

அதற்கான பாதையை அழகாகச் செதுக்கியதில்தான் மனித நாகரீகம் தழைத்தது..

செதுக்கியதில் இசைக்கும் கவிதைக்கும் முக்கிய பங்குண்டு..

வாழ்த்துகள் - கவிதைக்கும், மழலைக்கும்!