PDA

View Full Version : kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2



Pages : [1] 2 3 4 5 6 7 8

pavalamani pragasam
23rd December 2010, 03:52 PM
Iyappan's introduction:

Nanbargale.. summa nam oruthar ezhudha matravar vimarsippadhai vida koncham pottiya ezhuthina nalla irukkumnu thonudhu.. Adhavadhu .. oruthar padal aarambithu adhai mudikkum varthai allaldhu mudippavar tharum vartha kondu matravar kavidhai thodanga vendum. ( Same like pattukku pattu.. But here you have to use your own poems not some one else). Ithu ellorudaya thirmayai valarkum adhe samayam arokyamana potty nilavuvadhal arumayyana pala kavidhagal kidaikkum enna sollgireergal??

Kavidhai edhai patri vendumanalum irukkalam

Idho naan thodangi vaikkiren..

Moola kanaldiyo moondezhundha velaiyile
kaama punaladhinal moolamadhu azhiyudhu par
Moola kanlezhuppi munne unai niruthi
kmamam azhithidave kannama vazhiyondrum ariyane
------

Thodanga vendiya varthai aridhal ( arivu, aryamai eny thing relates to that)

Let us try have great fun

Hope you also enjoy this .. Muyarchi seyyungalen


Anbudan Iya

Quote:

Simple rules of the game:

you must have heard of "paattukku paattu" game, an antakshani game, where the last word or syllable of the last song is taken up as the first word or syllable of the next singer. In the same way we write verses on any subject, in any form, from where the last person has finished, not necessarily related in theme. There is another thread exclusively to discuss, make comments like criticisms about the kavithais posted in this thread, maintaining an uninterrupted flow of kavithais in this thread.



Contd from the last thread:

தாழ்ந்தவர் உயர்ந்தவர் தகுதி தரத்தினால்
அன்றி வளத்தினால் அல்ல.

-
கிறுக்கன்


அல்ல அல்ல இது இருளல்ல
ஒளியின் நிழல்- கூடவே வரும்

அல்ல அல்ல இது இரவல்ல
பகலின் ஆயத்தம்- பொறுத்திரு

அல்ல அல்ல இது வலியல்ல
உடலின் உயிர்ப்பு- ஓர் எச்சரிக்கை

அல்ல அல்ல இது முடிவல்ல
துவக்கத்தின் அறிகுறி- அறியாயோ

வருடம் முடியுது புதியது பிறக்குது
வருக வருகவென வரவேற்றிடு

Kajan
3rd January 2011, 10:55 AM
வரவே மகிழ்வென்று வாழும் மனிதன்
தரணி புகழும் தமிழின் தரத்தை
கவியில் வடித்து கழகம் வளர்த்து
செவியில் நிறையும் தேன்

ஐயப்பன் நாளில் ஐயப்பன் திரியில்
மெய்யான வழியில் மிளிருது அந்தாதி
வெய்யிலில் பனியை விகடன் சொல்வதுபோல்
செய்வோம் பணியை சிறக்க என்றென்றும்

pavalamani pragasam
3rd January 2011, 01:58 PM
என்றும் இல்லா திருநாளாய்
எட்டிப்பார்த்தார் ஒரு நண்பர்
மறக்கவில்லை இத்திரியை
மகிழ்ந்து போனதென் மனம்
திருத்தக்கன் போல பலரும்
திரும்பி வர தமிழ் வளரும்
நம் இனிய நந்தவனத்தில்
நித்தம் நறுமண வசந்தம்

kirukan
3rd January 2011, 10:57 PM
வசந்தம் வருமென
இளவரசி போலிருக்க
அத்திபூக்களாய் வந்தது
பொண்டாட்டி தேவை விளம்பரம்
முந்தானை முடிச்சு போடலாமா இல்லை
மாதவியாய் வாழலாமா
திருமதி? செல்வம்? எது வேண்டும்
தங்கம் மட்டும் போதுமா
தென்றலாய் வாழ்வதா
செல்லமே என வாழ்வதா என யோசிப்பதற்குள்
இதயம் தொலைந்ததுதான்
நிஜம் என் வாழ்க்கை ஆனது
காமெடி டைம்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
4th January 2011, 09:20 AM
டைம் என்ன
கேட்பவன் வெகுளியா
வினயமானவனா
நெருங்கி வருவது
நேசமா நாசமா
தேவை எச்சரிக்கை

Shakthiprabha
4th January 2011, 10:51 AM
எச்சரிக்கை எங்கும் எதிலும்
எச்சம் இருப்பது.

படித்த் பாடங்கள்
விழுந்த அடிகள் - மீண்டு
எழுந்த எழுச்சி - ஊடே
வெடித்து சிதறும் அபாயக் குரல்
"ஓரடி விலகியே இரு"

pavalamani pragasam
4th January 2011, 02:13 PM
இரு இங்கேயே என்று
கோடு போட்டான் லட்சுமணன்
மதிக்கவில்லை மதினி
காற்றுக்கென்ன வேலி
பெண்ணியம் புதிதல்ல
புரிந்ததா(அப்)பாவி மனிதா

Shakthiprabha
4th January 2011, 09:34 PM
பாவி மனிதனுக்கு புரண்டு படுக்க
போதிய இடம் இல்லை
மரங்களை வெட்டியும் குளங்களை வற்றியும்..
இடப் பற்றாக் குறை

பாவி மனிதனுக்கு போதிய வளம் இல்லை
ஊதிய உயர்வும், ஊர்தியும் உணவும்
போதிய வரையில் நிரம்பிய போதும்
வீங்கி புடைத்து நிற்கும் சந்தையில்
வாடி உதிரும் வெங்காயக் கற்றைகள்

பாவி மனிதனின் ஊட்டச் சத்தெல்லாம்
மொத்த குத்தகைக்கு புகையாய் கக்கும்
சாலைகள்...தொழிற் சாலைகள்
விதைக்கப்ப்டாத வெங்காயங்களால்
அறுக்கப்படும் வினைகள்

இன்னும்..
குளங்கள் குட்டைகள் அதில்
எறியப்படும் குப்பைகள் மட்டைகள்
கரப்பானுக்கும் கொசுவுக்கும் குறிக்கப்படும்
மரண நாட்கள்
அதில் தானும் கருகிக் கொண்டே..
பாவி மனிதன்...அப்பாவி மனிதன்

pavalamani pragasam
5th January 2011, 09:26 AM
மனிதன் அறிவு மிக அரிய சிறப்பு
இணையம் அதன் அற்புத படைப்பு
வேகம் திறன் தூரம் துல்லியம்
வகை எல்லையில்லா சாத்தியம்
ஆனாலும் அது யந்திரம் மட்டுமே
எரிபொருள் தயவில் பழுதின் பிடியில்
மனித ஆன்ம கற்பனா சக்தியோ
ஊகம் தாண்டிய ஒப்பற்ற ஆற்றலே

Shakthiprabha
5th January 2011, 10:46 AM
ஆற்றல் பயன்பட ஆவதெல்லாம் நன்று
சீற்றம் கொண்டு சீவிச் சாய்க்காத
அழிவின் பாதையில் இட்டுச் செல்லாத
மானுடம் மலர நன்மைகள் சிறக்க
தேக்கம் கொள்ளாமல் தொடர்ந்து பெருக்கெடுத்து
அயராது சிந்தித்து தளராது செயல்பட்டு
ஆக்கத் துறைகளுக்கே ஊக்கம் தரும்
உயர்வாற்றாலை மட்டுமே பெருமைப் படுத்துவோம்.

pavalamani pragasam
5th January 2011, 03:52 PM
பெருமைப் படுத்துவோம்
பிறந்த நாடுதனை
வளர்த்த பெற்றோரை
கற்பித்த சான்றோரை
ஊடகப் பொய்மைகளை
சாடிட துணிவு கொண்டு
உலகமயமாக்கலின் கேடு
எதெதென்று பகுத்தொதுக்கி
உயர வேண்டும் எண்ணத்திலே
நிறைந்துவிட்ட மனத்திலே

kirukan
11th January 2011, 11:43 AM
மனத்திலே மரித்து உதட்டிலே சிரித்தாலும்
உள்ளத்தை உரைத்திடும் கண்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
12th January 2011, 09:13 AM
கண்ணை மூடிக்கொண்ட பூனை
கற்பனையில் மகிழ்ந்திருக்கும்
கவலைகளை மறந்திருக்கும்
காலத்தை மாற்றிட முடியுமா

kirukan
13th January 2011, 12:50 PM
மாற்றிட முடியுமா இயற்கையின் சீற்றத்தை
இறுமாப்பு மனிதனின் இயல்கள்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
13th January 2011, 02:25 PM
இயல்கள் இவளுக்கு தனி
இறுதி வரை தொடரும் புதிர்
இயலாது அவனால் அறிய
இல்லற சுவையின் இரகசியம்

jaiganes
13th January 2011, 02:51 PM
இரகசியம் அல்ல. துணிந்தே சொல்வேன்.
இறைவனை அறிதல், இயல்பினை உணர்தல்.
கடமையைத்தவிர்த்து காடு சென்றிருத்தல்,
மனிதனைத்தவிர்த்து மரத்துடன் சிரித்தல்,
வேண்டியதில்லை. வீணில் உடல்கெடும்.

மங்கையர் நட்பு, மழலையர் குழாம்
நண்பர்கள் பேச்சொலி, மக்களின் அரவம்
அனைத்திலும் உண்டு இறைவனின் சிரிப்பொலி.
அனைத்தையும் உண்டு அனுபவித்துணர்ந்தால்
மனதின் மெளனம் அறிவுக்குப்புரியும்.

புரியும் வேளையில் பொழுதும் புலரும்.
அதுவரை அலை கடல் ஆடி விளையாடுவோம்!

pavalamani pragasam
13th January 2011, 07:44 PM
விளையாடுவோம் விடிய விடிய
வித விதமான வித்தைகளிருக்கு
விரிந்து கிடக்கும் இணையத்தில்
விரித்த வலைக்குள் மீளாமலே

jaiganes
13th January 2011, 09:24 PM
விளையாடுவோம் விடிய விடிய
வித விதமான வித்தைகளிருக்கு
விரிந்து கிடக்கும் இணையத்தில்
விரித்த வலைக்குள் மீளாமலே
மீளாமலே போன பொருள்
காணாமலே போனதென்று
வீணாகவே வழிபார்த்து
வாளாவிருந்தக்கால்
சட்டெனப்பதிந்தது
தேனாகவே உன்முத்தம்
என் கன்னம் - உன்மத்தம்.

venkkiram
14th January 2011, 07:40 AM
உன்மத்தம்பூ உகந்ததிலை யென்றாலு மதன்
உருவ மொத்த ஊதுகுழாய் மங்களம்.

jaiganes
14th January 2011, 08:07 AM
மங்களம் பாடி முடித்திடலாம் என்றிருந்தேன்
வெண்கல மணி கொண்டு மோனத்தை உடைத்தாற்போல்
நன்கலப் பாலில் துளி விடம் கலந்ததுவே, நண்பன்
வெண்புகைக்குழல் தன்னில் மிதந்து வரும் புகை மேகம்.

pavalamani pragasam
14th January 2011, 08:34 AM
மேகம் போல் கூந்தல் என்றால்
மின்னல் போல் அதில் மல்லிகை
மனதில் பெய்திடும் தேன்மழை
மத்தளம் தட்டி நடக்கும் கச்சேரி

venkkiram
14th January 2011, 09:22 AM
கச்சேரி வைக்கலாம்
கதாகலட் சேபம் வைக்கலாம்
ராம நாடகம் வைக்கலாம்
பரத நாட்டியம் வைக்கலாம்
பட்டி மன்றம் வைக்கலாம்
பவானி அம்மன் திருவிழாவுக்கு
பஞ்சாயத்து தீர்வு சொல்ல
பல மணி நேரமானாலும்
பல்லு போன பெரிசு முதல்
ஜொள்ளு விடும் சிறுசு வரை
ஒரு மனதா ஒப்புக்கு வந்தது
ரெக்கா டான்ஸ்.

pavalamani pragasam
14th January 2011, 02:50 PM
டான்ஸ் ஆடும் கரடி
பல்டி அடிக்கும் குரங்கு
க்ளாப் பண்ணும் கோமாளி
ரைம் சொல்லும் பொம்மை
ஆஹா ஆனந்த உலகம்
மறுபடியும் மழலையானேன்

jaiganes
14th January 2011, 11:16 PM
டான்ஸ் ஆடும் கரடி
பல்டி அடிக்கும் குரங்கு
க்ளாப் பண்ணும் கோமாளி
ரைம் சொல்லும் பொம்மை
ஆஹா ஆனந்த உலகம்
மறுபடியும் மழலையானேன்
மழலையானேன் மறுபடி என்கண்மணியின்
கிள்ளையின் தமிழ் கேட்டு.
தாய் ஆனேன் தனியாய் அவள் தூங்கும் போது.
தனியன் ஆனேன் நான் மட்டும் உண்ணும் போது.
பனியும் ஆனேன் அவள் கனவின் இரவுகளில்.
வெறுமை ஆனேன் அவள் இல்லாத இல்லத்தில்.

venkkiram
15th January 2011, 04:08 AM
இல்லத்தில் தனிமை கண்டு வெறுத்துப் போகுது பெருசுக்கு
ஈன்றெடுத்த ஒன்றோ அசலூரில் குப்பை கொட்டுது காசுக்கு
வெப்கேமில் வாரம் ஒருவாட்டி பேரன் பேத்தி தரிசனம்
வெளங்காத வயதில் ஏங்கித் தவிக்கும் உள்மனம்
முதியோருக்கு ஏற்றதென்றும் முதியோர் இல்லமே
ஊன்றுகோல் அமையப்பெற்றால் இல்லை துன்பமே.

pavalamani pragasam
15th January 2011, 07:02 AM
துன்பமே தூரப் போ
மழலைப் பட்டாளம் சூழ
குளத்தில் குளித்தெழுந்து
நண்டும் நானும் தின்று
போட்டிகள் விளையாடி
சிறு சிப்பிகள் பொறுக்கி
சுற்றத்துடன் சுற்றும்
இனிப்பான நாள் இன்று

venkkiram
15th January 2011, 09:57 AM
இன்று அறுவடைத் திருநாளாம்
இயற்கையை வணங்கிக் கொள்வோம்
செயற்கை உரங்களை அறவே துறப்போம்
மண்ணின் வளத்தை மீட்டெடுப்போம்
மக்களின் வாழ்வை நீட்டிப்போம்
அன்பே எங்கும் எதிலும் ஆக்ஸிஜன் ஆகட்டும்
புவி வெப்பத்தை இனி அதுவே தணிக்கட்டும்
இழையோடி வரும் சகோதரத்துவம் இனிதே தொடரட்டும்
புரையோடும் வகுப்புவாதம் வழி தெரியாமல் மறையட்டும்

pavalamani pragasam
15th January 2011, 08:30 PM
மறையட்டும் மனதின் குறைகள்
உறங்கட்டும் களைத்த விழிகள்
மலரட்டும் மற்றொரு பொன்னாள்
மரபுகள் மறவா புதிய பாதைகள்
காட்டும் ஏற்றங்கள் வளர்பிறை
கனவுகள் கைகூடும் காலங்கள்
காத்திருந்து பறிக்கும் நற்கனிகள்
இப்பிறவியின் பெரும்பயன்கள்

jaiganes
17th January 2011, 05:51 AM
பெரும்பயன்கள் கிடைத்திடவே பலகாலம் பொறுத்திருந்தேன்.
பலர் வாட பலம்பெற்றவர் அறம் அழித்து பெருவாழ்வை
பெற்று பெற்றியுடன் பவனிவர, சகோதரர் சுவரின்றி
சிறையுற்றார், சிறுசெயல்கள் பலதாங்கி உயிர்மட்டும்
உடைமையென்று உணர்வொன்றும் ஏந்தாமல் உடல்களாய்
வாழ்கின்றனர். தனல் வெப்பம் உணவென்று மேடைகளில்
முழங்கி விட்டோம். யூட்யூபில் தினமொரு புதுப்பதிவு.
ஆறே பேர் இறந்தனர் அமெரிக்காவே அழுதது.
ஊரூராய் இறந்தனரே எம்மவர். கேளிக்கைக்
காட்சிகளும், அதை விடக்கேளிக்கையாய்க்கட்சிகளும்
எழுப்பிய கோஷங்களில் கும்பலாய்ப்போய் சேர்ந்தவர் குரல்கள்
கேட்கவில்லை எங்களுக்கு!
சகோதர ரத்தத்தில் புது பொங்கலும் பொங்குது.
நிகழ்ச்சிகளின் நிரலில் இலங்கையில் மடிந்தோர்க்கு
சம்பிரதாயமாய் வடிக்கும் கூட்டங்களுக்குக்கூட்டமில்லை
போலும். அது வேறு நாடு.
மண்ணில் தானே எல்லைக்கோடுகள்...
ஓ தேசபக்தி எங்கள் மனதிலும்
எல்லைகள் இட்டுவிட்டது ஈசா!
அழிப்பதற்கு அகிம்சையேனும் சரி ஆணையிடு!
இருக்கிறாயோ இல்லையோ,
உனக்குப்புண்ணியமாய்ப்போகட்டும்.

pavalamani pragasam
17th January 2011, 06:58 AM
போகட்டும் பனியும் கம்பளி போர்வையும்
வேண்டும் வெயிலும் கொஞ்சம் வேர்வையும்
வசந்த காலம்தானே அடுத்து வரப் போகுது
துன்பம் வந்தால் பின்னால் இன்பம் வாராதோ

venkkiram
17th January 2011, 11:18 AM
வாராதோ போன உயிர்கள்
மாறாதோ பகைமை உணர்வு
வீழாதோ கொடுங்கோலன் அரசு
மாளாதோ இன்ப வெள்ளம்
உயிர்க்காதோ மனித நேயம்
துளிர்க்காதோ நம்பிக்கை விதை.

pavalamani pragasam
17th January 2011, 11:26 AM
விதை ஒன்று போட்டால்
சுரை ஒன்று முளைப்பதில்லை
என் பேத்தி என்னைப் போல்
அவள் ஒரு மதுரை மீனாட்சி

venkkiram
19th January 2011, 03:33 AM
மீனாட்சி காமாட்சி விசாலாட்சி
பெயர் மறந்தே போய்விட்டது தாத்தாவுக்கு
நினைவெட்டிய வரையில் அவள்தான் முதல் காதலியாம்
அப்போ வயது பதினான்கு இருக்குமாம்
இனக்கவர்ச்சி இல்லை அது காதல் என்றார் சிரித்தேன்
உனக்கு அதெல்லாம் புரியாது என்றார் சரியென்றேன்
நன்னிலம் ரயில் சந்திப்பில் பருப்பு வடை விற்பாளாம்
தினம் பள்ளி செல்கையில் கைகாட்டி செல்வதுண்டாம்
பாட்டியை விட அழகா எனக் கேட்டேன்
பல மடங்கு என்று நகைத்தார்
பெயர் தெரியவில்லை முகம் மட்டும் எப்படி என்றேன்
ஆசை முகம் மறக்காதாம் எப்போதும்.

pavalamani pragasam
19th January 2011, 08:45 PM
எப்போதும் அலங்காரம்
எதற்கும் குதர்க்கம்
எதிலும் அவசரம்
எங்கேயும் இரக்கம்
எத்தனை அடையாளம்
எங்குல பெண்களுக்கு

venkkiram
21st January 2011, 10:59 PM
பெண்களுக்கு இட ஒதுக்கீடு வெறும் முப்பத்தி மூணு சதவீதம்
பேசாமல் அமல்படுத்த தடையாய் வரும் விவாதங்கள் பலவிதம்
மூன்றில் ஒரு பங்கு கொடுக்கவே யோசிக்கும் ஆதிக்க பிடிவாதம்
முழுவதில் சரி பாதி உமையாள் என உரக்கச் சொல்வது ஐதீகம்.

pavalamani pragasam
22nd January 2011, 10:12 AM
ஐதீகம் மனையாள் முன் எழுவது
அது இன்று முடிந்து போன கதை
வாசலில் கோலம் போடுவதில்லை
அடுக்குமாடி குடியிருப்பில் விடுதலை
பூவும் பொட்டும் வளையும் சுமை
பெண் ஆனாள் சுதந்திரப் பறவை

venkkiram
23rd January 2011, 04:56 AM
பறவை ஒண்ணு ஒத்தக் காலில்
காத்து நிக்குது குளக்கரையில்
கொரவை மீனை கொத்திச் சென்று
உணவாய் ஊட்ட குஞ்சுகளுக்கு
அலகால் கொத்தும் பறவைக்கு தன்
ஆயுள் முடிக்கும் கன்னி தெரியா
இயற்கை நடத்தும் விளையாட்டில்
ஒன்றைச் சார்ந்து இன்னொன்று.

pavalamani pragasam
23rd January 2011, 09:27 AM
இன்னொன்று கேட்டால் பாராட்டு
பள்ளியறையில் மனைவிக்கு
சாப்பாட்டுத் தட்டில் தாய்க்கு
மேடையில் கலைஞருக்கு
ரசனை இருந்திட்டால் விருந்து
ஆசையில் நிறையும் மனது

venkkiram
25th January 2011, 10:19 AM
மனது ஒரு சாட்சியாய்
மறைக்கும் உண்மைகளை தடுக்க
மனது ஒரு காட்சியாய்
மலரும் நினைவுகளை பார்க்க
மனது ஒரு சாவியாய்
பூட்டிய எண்ணங்களை திறக்க
மனது ஒரு பாவியாய்
வாட்டிய துயரங்களை புதைக்க.

pavalamani pragasam
25th January 2011, 03:57 PM
புதைக்கக் கிடைக்கவில்லை முதுமக்கள் தாழி
பொருள் விளங்கவில்லை நீண்ட ஆயுள் எதற்கு
பலனில்லா இருப்பு பலமில்லா பிழைப்பு சாபம்
பகலும் இரவும் அறியா யோக நிலை யோகமா

chinnakkannan
23rd February 2011, 03:18 PM
படுத்திய பாடு இருக்கிற்தே என
எதிர்வீட்டு ராமசாமி ஆரம்பித்தால்
விடமாட்டார்.
அவரது பழைய அலுவலகம், வீட்டில் மகன்,மருமகள்,
பேரன், பேத்தி,
பார்த்த படம் என
எல்லாவற்றையும் குற்றம் சொல்வார்..
ம் கொட்டிக் கேட்பேன்..
சில நாட்களாகக் கிழவரைக் காணோம்...
எங்கே எனக் கேட்டால்.
முதியோர் இல்லத்திலாம்..
“ரொம்ப்ப் படுத்தறார்ங்க’ என வந்தது பதில்...

pavalamani pragasam
23rd February 2011, 06:33 PM
//'யோகம்' என்று கவிதை துவங்கத் தவறிவிட்ட போதிலும் புது நண்பர்கள் சேர்வது திரிக்கு யோகமே என்பதால் சின்னகண்ணனை வரவேற்போம்!//

பதில் வந்தது வேகமாய்
சுவற்றில் அடித்த பந்தாய்
அடுக்களையில் வீசும் புயல்
ஆத்திரம் பாத்திரங்கள் மேல்
'ணங்' என்றது போர் முரசு
நாராசமான எச்சரிக்கையது
கண்ணாட்டியை ஏசும் முன்பு
கணவன் யோசிக்க வேண்டாமா

chinnakkannan
23rd February 2011, 11:43 PM
ஷக்திப் ப்ரபாவின் ’பெருமைப் படுத்துவோம்’ என முடித்ததை கடைசி இடுகை என எண்ணி விட்டேன்..ப்டுத்துவோம் என அந்தாதியை எடுத்து மிகக் குழம்பி இட்டது...மன்னிக்க நண்பரே...
இந்த் இழை சுவாரஸ்யமாக உள்ளது..
*****

வேண்டாமா என்க்கேட்டால் ஆமா மென்க
...வேகமாக இட்லிகளை வேக வைத்து
தீண்டினால் கொப்பளிக்கும் சூட்டில் நீட்டி
...த்கதகக்கும் சாம்பாரைத் தட்டில் விட்டுத்
தேன் த்டவிச் சொன்னேன்நான் ஏண்டா இன்னும்
..திண்ணமாக் இரண்டுகூட வைக்க லாமா..
போதும்மா முன்சொன்ன தோசையைத் தான்
..வார்த்துத்தா என்கின்றான் என்ன செய்ய...

pavalamani pragasam
24th February 2011, 05:47 PM
செய்ய முடிந்த காரியம் எத்தனையோ
களிமண்ணை பிசைந்து கலையாக்கலாம்
செய்ய முடியாத வினைகளிங்கு பல பல
நாயின் வாலை நிமிர்த்திடவே முடியாது
செய்ய முடிந்ததையும் முடியாததையும்
பகுத்தறிந்தால் தன்னால் தீரும் கவலை

chinnakkannan
26th February 2011, 10:16 PM
கவலையின் நிழல்படிந்தமுகம்....
விழியோரம் காய்ந்த கறை...
எதிர்பிளாட்பாரத்தின் ரயிலில்
ஜன்னலோரத்தில் அவள்...
காரணங்கள் அணிவகுக்க...
ப்ரீட்சையில் தேறவில்லையா..
ம்ம்..அவ்வளவு சின்னவயதில்லை...
காதலா..
த்ந்தை ஏதாவது சொன்னாரா...
கணவன் புரிந்து கொள்ளவில்லையா..
கடனட்டை பிரச்னையா...
உடல் முடியவில்லையா..
ப்ளாட்பாரத்தின் சத்தங்களை மீறிய
சலனமில்லாத பார்வை ஏன்..
கண்மை கரைந்த்தால் அழகாய்த் தெரிகிறாளா..
பொட்டு கருநீலமா கருப்பா...
நீலம் மஞசள் கலந்த சுரிதார் அழகுதான் இல்லை...
சற்றே கலைந்த கேசம் கூட அழகாக....
தட்தட்த்து என் ரயில் வந்து
அவளை மறைக்க
அனைத்தும் மறந்து அருகில் கேட்டேன்
எஸ்-3 எங்கே நிற்கும் என....

pavalamani pragasam
1st March 2011, 07:56 PM
நிற்கும் என காத்திருந்தாள்
நினைக்காமல் பொழிந்த மழை
நனைய ஆசைதான் மனதில்
நிறைவான புதிய உணர்விது
கட்டிப்போடும் கடமைகளிருக்க
காதலை கடந்து போகிறாள்

chinnakkannan
2nd March 2011, 12:39 AM
பவளமணி ஐயா...இது வைர வரிகளாக்கும். படிக்கப் படிக்க வெகு சுவையாய் உள்ளது..நன்றி..

போகிறாள் மனதில் வீசும் போர்க்களம் ஒதுக்கி விட்டு....
...ஏகுவாள் நெஞ்சில் கொண்ட எண்ணமும் நீங்கிடாமல்....
பாகினில் கரைந்த வெல்லம் பக்குவம் கொண்டு நாவில்....
..வேகமாய்க் இனிக்கும் வண்ணம் வையகம் காப்ப தற்கே...

துறவு வேண்டும் என்றே நீயும் முடிவும் செய்தாய்.....
..துயரம் இல்லா வாழ்க்கை தொடரும் எனவே எண்ணி
உறவு எல்லாம் உலகில் உறையும் மாயை தானே..
...உதறித் தள்ளி வாநீ இங்கு புவியும் வாழும்....

பவளங்கள் கோர்த்த மணிகள்..
..பர்ர்வையில் மின்னுதல் போலே...
தவத்தில்தான் சிந்தையும் கொண்ட......
..தங்கமணி மேக லயுந்தான்...
உவப்புடனே விம்மும் நெஞசம்...
...உலகமதின் மகிழ்ச்சி எண்ணி............
உளமார எடுத்தாள் காவி...
...உடுத்தித்தான் செய்தாள் நன்றை....

pavalamani pragasam
2nd March 2011, 09:08 AM
நன்றை ஒதுக்கி
நகைக்கும் குணம்
நாகரீக மோகம்
நடுங்குது மனம்
நாளும் வளருது
நச்சு விருட்சம்
நடக்குது கூத்து
நாராச பாட்டு
நிலை தடுமாறுது
நாளைய தூண்கள்
நிலையாது போகட்டும்
நிழலாய் மறையட்டும்
நிலவின் கிரகணம்
நிதமும் வேண்டினேன்

chinnakkannan
2nd March 2011, 03:28 PM
வேண்டினேன்
முறுவலித்து நின்றிருந்த
குட்டிக் கிருஷ்ணனை..
மனைவி, மகள்,
பழைய காதலி,
அலுவலகப் பதவி உயர்வு,
தொலைக்காட்சித் தொடர் கதானாயகி,
இந்திய அணியின் விளையாட்டு...
மற்றும் மற்றும்..
எல்லாருக்காகவும், எல்லாவற்றிற்கும்..
கண்மூடி.. மனமுருகி..
கண் திறந்ததில்
இதழ் விரிந்து
சிரிப்பு பூத்திருந்தது..

pavalamani pragasam
2nd March 2011, 07:41 PM
பூத்திருந்தது புதிய காலை
காத்திருந்தது செய்தித்தாள்
தித்தித்தது குடித்த காப்பி
ஈர்த்தது குறுக்கெழுத்துப் புதிர்
திறந்தது இணையப் புத்தகம்
தொடர்ந்தது குறுக்கெழுத்துப் பதிவு
அடுத்தது பண்ணை விளையாட்டு
விளைந்திருந்தது இரவு விதைத்தது
சேர்ந்திருந்தது பரிசுக் குவியல்
திளைத்திருந்தது இளைய மனம்

chinnakkannan
3rd March 2011, 12:32 AM
மனம்னா...
இதாண்டா..
அது தமிழ்ல ஹார்ட்னு சொல்வோமே..அதுப்பா..
இவன் ஒருத்தன்...
அதாவது என்ன்ன்னா..
அய்யா..சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு
சரிதான் பெரீவரே.. அந்தப் பக்கம் போ...
ஸாரிப்பா..உனக்கு தெரியாத்தக் கேட்டுட்டேன்...
ஏண்டா..
ரெண்டுந்தான் உங்கிட்ட இல்லையே..

pavalamani pragasam
3rd March 2011, 08:59 AM
இல்லையே எல்லைகள்
இயல்பான ஆசைகள்
தொடராது தொல்லைகள்
துடிப்பான அறுபதுகள்

kirukan
3rd March 2011, 11:15 AM
அறுபதுகள் இருபதை புரிதல் எளிது
இருபதுகள் அறுபதை அறிவதினும்.

-
கிறுக்கன்

chinnakkannan
3rd March 2011, 01:28 PM
அறிவதினும் மேலானது அழகு என்றே..
...அகத்தினிலே பொங்குசின முகத்தி லோங்க..
செறிவாகச் சொல்வதாக நினைத்தே அந்தச்
...சேயிழையும் தான்மொழிந்தாள் துறவி முன்னே...
முறிந்துவிடும் விஷமென்ன மூர்க்கமும் தான்...
...முனிவரவர் அர்த்தமுள்ள முறுவ லின்முன்...
புரிவதற்கு உனக்கின்னும் கால முண்டு..
..புரிந்தபின்னே நீவருவாய் என்னைத் தேடி...


கலகலப்பாய்த் தானிருந்த இளமை எல்லாம்..
...கடந்துவிட்ட வருடங்களில் கானல் நீராய்ப்
பழமையென மாறிவிடப் பாவை இன்றோ
..பக்குவத்தைப் பெறுவதற்கு அவரைத் தேட...

உலகினிலே அழகுமற்றும் காதல் எல்லாம்..
....நிலையான தில்லையெனச் சொன்னேன் அன்றே...
உளமார உண்ர்ந்துவிட்டாய் பெண்ணே’’ என்று
...உரைத்த்தற்குத் தலைவணங்கிச் சொன்னாள் நன்றி...



(ஒரு அந்தக் காலத் திரைப்பாடல் காட்சி நினைவுக்கு வந்த்து. புத்தரின்முன் ஒரு நடன நங்கை அழகின் செருக்கிலிருந்து அலட்சியப் படுத்திவிட்டு வயதான பின் வருந்துகிறாள்..பாடல் கூட உண்டு..’காதலைப் பொய்யென்றேனே கவனிக்கவில்லை நீயே..அழகெலாம் பொய்யென்றேனே அறிய்வும் இல்லை நீயே என வரும்..அதை அடிப்படையாக்க் கொண்டு இது...)

pavalamani pragasam
3rd March 2011, 03:47 PM
நன்றி கேட்கிறது எங்கெங்கும்
நல்ல நாகரிகந்தான் பழகிட
உள்ளத்திலிருந்து வருகிறதா
உதட்டிலிருந்து உதிர்கிறதா
உண்மை அதிலே இருக்கிறதா
யந்திரம் போல் சொல்வதுதானோ
நழுவிவிட ஒரு யுக்திதானோ
ஆராய்ச்சி வேணா அம்மகிழ்ச்சிக்கு

chinnakkannan
4th March 2011, 12:28 PM
"மகிழ்ச்சிக்கும் கண்ணீர் வரும்..
முதன் முதலாய்ப் பள்ளியில்
பரிசுக் கோப்பை பெற்ற போது...
குடும்பத்தில் முதல் பட்டதாரி என
அப்பா பாராட்டிய போது....
முதல் சம்பளத்தை
அம்மாவிடம் கொடுத்த போது...
முதன் முதலில் நீ காதலைச் சொல்லி
அருகினில் இழுத்த பொழுது....”
“சரி, கல்யாணம் ஆகி சிலமாதம் முடிந்தும் விட்டதே..
இப்ப ஏன்’
‘போடா..சரியான மக்கு நீ...”

pavalamani pragasam
4th March 2011, 09:16 PM
நீ நினைத்ததெல்லாம் நடந்தது
நடந்ததெல்லாம் இனித்தது
இனித்ததெல்லாம் தொடர்ந்தது
தொடர்ந்ததெல்லாம் உனக்கே உனக்கு
பலபல என விடிந்தபின் தூக்கமா
படவா எழுந்து பல்லைத் தேய்

chinnakkannan
5th March 2011, 02:29 PM
”தேய் சுருக்கங்களின் மீது
காலரில் தண்ணீர் தெளி..
தோளிலிருந்து கைப்பக்கம் வரை உதறி வை
மறுபடியும் இன்னும் அழுத்தமாக..
அந்தக் கோட்டின் மேலேயே..
இப்போது காற்சட்டை..
ஒன்றன் பின் ஒன்றாக வைத்து
ஒரே கோட்டில் தேய்...”
என அதட்டி உருட்டி
அப்பா சொல்லித் தந்தது
இன்றும்
மடிப்புக் கலையாமல் உடுத்தி
டை அணிந்து செல்கையில்
மதிப்பும் மரியாதையும் தருகிறது..
சொன்னவர் மட்டும் காற்றில்....

kirukan
5th March 2011, 03:43 PM
காற்றில் கலந்திட்ட
மாசு போல
நாட்டில் கலந்திட்ட
மந்திரிகள்
பார்வையில் தெரிவதில்லை
விஷத்தின் வீரியம்!!!!

-
கிறுக்கன்

pavalamani pragasam
5th March 2011, 04:16 PM
வீரியம் விதைக்கு
வீரம் மாந்தர்க்கு
விவேகம் பெரியோர்க்கு
வேண்டும் கட்டாயம்

chinnakkannan
6th March 2011, 10:42 AM
கட்டாயம் கவிதைநிதம் எழுத வேண்டும்...
...கண்களிலே உற்சாகம் தேக்கி வைத்தே
மட்டற்ற சிந்தனைகள் எண்ண வேண்டா..
...மனதினிலே தமிழார்வம் கொண்டால் போதும்..
முட்டாமல் மோதாமல் முகட்டை நோக்கி
...முனைந்தபடி பார்த்திருந்தால் ஒன்றும் வாரா...
தட்டாமல் கற்பனைநூல் நன்றாய் நெய்தால்
...தகதகத்துப் பளபளக்கும் கவிதை இங்கே..

pavalamani pragasam
6th March 2011, 07:59 PM
இங்கே இப்போது நடப்பதென்ன
வேங்கை ஆணை கண்டு பெண்மான்
வெருண்டது பழைய கதை அவளோ
வெகுண்டு எழுந்து வேங்கையாகி
விரட்டுகிறாள் அடக்கிய ஆணை
மானினும் மிரண்டு நிற்கிறான்
மலங்க மலங்க விழிக்கிறான்
மறந்தும் சமையல் கற்காத
மனையில் தங்க விரும்பாத
மழலையை மடியில் கொஞ்சாத
சாட்டையை சொடுக்கும் சர்க்கஸ்காரி
கொழுகொம்பை உதறும் கொடியின்று
உலக மகளிர் தினத்தில் தப்பாது
கொடி பிடிக்கும் கொள்கையெல்லாம்
கொன்றுபோடுமோ பெண்மை வரத்தை
மாதவத்தை மாண்புமிகு மகுடத்தை
மாற்றுமோ மரபணு தாய்மையை
ஆணும் பெண்ணும் ஆளத் துடிப்பதோ
அழகாய் இணைந்து வாழ நினைப்பதோ
அடுத்த தலைமுறை தலைவிதிப்படியே
காலமே கலிகாலமே கண்ணாடியாய்
காட்டு கண்ணுக்கு உறுத்தாத காட்சி
கல்லடி கிழவிக்கு கிடைக்குமென்றாலும்
சொல்லாமல் இருக்க முடியவில்லையே

chinnakkannan
7th March 2011, 10:53 AM
முடியவில்லையே இன்னும்….
எப்போது முடியும்..
******
ஆரம்பத்தில்
எழுதி, பேசி, உழைத்து, போராடி..
முன்னேறி..
மீண்டும்
எழுதி, பேசி, போராடி,
முன்னேறி..
மறுபடி
எழுதி, பேசி.....
உயர் நிலையை அடைந்தாயிற்று...
’*****
பெற்ற பட்டங்களும்
பலப்பல..
தலைவன்,.
கணவன்,
தகப்பன்,
தாத்தா,
கொள்ளுத் தாத்தா
தமிழ் பெறும் தாத்தா
தமிழ் பெருந்தாத்தா
தமிழ் பெற்ற தாத்தா
தமிழ்ப் பேறான தாத்தா..
என...
‘****
வாரிசுகளுக்கும்
வாழ்வதற்குக்
கோடிட்டுக் காட்டாமல்
கோடிகளையே காட்டியாயிற்று...
முன்னூறு வருடங்கள்
உட்கார்ந்து சாப்பிடலாம்
உலகம் அழியாதிருந்தால்...
**
மக்கள்
கடவுள் மேலுள்ள
மூட நம்பிக்கையையே
என் மீதும் வைத்திருக்கிறார்கள்..

**
வடக்கிருக்கலாம் என்றால்
குழப்பமாயிருக்கிறது...!!
‘மேலுக்கு முடியவில்லை என்றாலும்
விடமாட்டேன் என்கிறார்கள்..
***
ம்ம்.. என்ன செய்ய...
வரும் மாதம் தேர்தல்
வேலை இருக்குது நிரம்ப....!
‘******

pavalamani pragasam
7th March 2011, 01:58 PM
நிரம்ப மாற்றம் உலகெங்கிலும்
எங்கும் நிறைந்த சக்தியின்று
தொழுவில் கட்டிய மாடில்லை
துணிவில் துடிப்பில் ஈடில்லை
அறிவுச்சுடர் மிளிர்கிறது
அதிசயங்கள் நிகழ்கிறது
விடாத முயற்சியுண்டு
விழாத தைரியமுண்டு
குடத்தில் இட்ட விளக்கின்று
குன்றில் நின்று எரிகின்றது
தொடாத துறைகளில்லை
எட்டாத உயரங்களில்லை
எக்களமும் மிரட்டவில்லை
எத்தளமும் எட்டாததில்லை
சாதிக்கும் தங்க மங்கையர்
போதிக்கும் அரிய சமத்துவம்
அடுத்த கட்ட மனித நாகரிகம்
அழகாய் அரங்கேறும் நாளிது

chinnakkannan
8th March 2011, 06:45 PM
இதனை இதனால் இவன் முடிக்கும்
என்று ஆராய்ந்து
அதனை அவன் கண் விடாமல்
வேலையை இழுத்து குற்றம் சொன்னால்
நல்ல மேலதிகாரி எனக்
கிடைக்கும் பாராட்டு

pavalamani pragasam
8th March 2011, 08:30 PM
பாராட்டு பெண்ணின் பிறப்புரிமை
ஏவாள் எழுதினாள் முதல் பக்கம்
தொடர்கிறது சரித்திரப் புத்தகம்
எழுதுகோல் பெண்ணின் கையில்
என்றும் மாறாத வழக்கம்
கணிக்க முடியாத கணக்கு
எப்போது எங்கு என்ன நடக்கும்
எப்போதும் தீர்மானிப்பது பெண்

chinnakkannan
9th March 2011, 09:14 PM
*****

”பெண்ணை அழைச்சுண்டு வாங்கோ....”

பெண் வந்தாள்
முக அலங்கார நிபுண்ர்
மென்மையாய் தொட்டு விட்டிருந்த
கன்னத்துடனும்
கண்களில் மை சற்றே
கொஞ்சம் ஓரத்தில் படர்ந்திருக்க
கழுத்தில் மாலை,
பூச்சூடிய கூந்தல்,
பட்டுப் புடவை, சரசரக்க..
.
‘ரத்தியாட்டம் இருக்கே போ’
என திருஷ்டி கழித்தது எந்த மாமி..?
மாலை ரொம்ப கனக்கிறதே..
பின்னால் பின்னலில்
பூவா நாரா ஏதோ இழுக்கிறது..
ஏற்கெனவே வேகுது
இதில வீடியோக்காரனோட விளக்கு வேற...
தம்பிக்கடங்காரன்
சிரிச்சபடி இருக்காங்கறான்..
இவனுக்கு ஆகிறப்ப பார்க்கலாம்..
ஆமா இவன் எங்க நடக்கப் போறான்...
இந்த மண்டபத்தில ஏன்
மாடில்ல பொண்ணோட அறை வச்சுருக்காங்க..
ஊர்வலமாட்டமா
நடக்க வேண்டியிருக்கு..
கொஞ்சம் சிரிக்க வேற செய்யணுமாம்..
சிரிச்சபடியே வெச்சிருந்தா
உதடு அப்படியே நீளமாயிடுத்துன்னா...

வாத்யார் தேவலோகத்துக் காரரோ
கொஞ்சம் புகை ஜாஸ்தி இல்லை...
இவன் அம்மா என்ன
இப்பவே நா சிரிச்சதுக்கு
பதிலுக்கு சிரிக்கலை...
இவன் என்ன...
போட்டோல்லயும் பேண்ட் ஷர்ட்லயும்
ஜம்னு இருந்தான்..
இப்ப என்னடான்னா
பேர்பாடில்ல
‘ஓங்கி உலகளந்த
உத்தமர் பேர்பாடி”ன்னு
பாடற்வாளாட்டமா
மினி தொப்பையோட இருக்கான்..
ம்ம் எல்லாம் ஆகட்டும்..
பட்டினி போடலாம்..!
ந்ல்லவேளை
அப்பா அளவுக்கு இல்லை...

வாத்யார் ஸ்வாமிகளே
சீக்கிரம் தாலிகட்டச் சொல்லும் ஓய்!!
கொஞ்சம் கஷ்டமா
அப்பா ம்டில்ல ஒக்காந்துண்டிருக்கேன்”

கெட்டிமேளம் ஒலிக்க
கிடுகிடுவெனக் கழுத்தில்
மங்கல நாண் ஏறியதும்
உட்லுள் படர்ந்தது
ஒருவித நிம்மதி.....

******

pavalamani pragasam
9th March 2011, 10:11 PM
நிம்மதி தொலைந்தது
ஏக்கம் மிகுந்தது
பொறாமை பிறந்தது
ஆடவன் மனதினில்
மார்ச் எட்டு உலகிலே
பெண்ணை கொண்டாடும் நாள்
ஆணுக்கு ஒரு தினம்
ஒதுக்கினால் ஆகாதோ
வருத்தம் வேண்டாமடா
ஏப்ரல் ஒன்னு உனக்குத்தான்

chinnakkannan
9th March 2011, 11:55 PM
உனக்குத் தான்
என்றிவளை
என்னிடம் தள்ளிவிட்டு விட்டார்கள்..
அல்லது
நான் விழுந்து விட்டேனா..

இந்த
எண்பது கிலோ தாஜ்மஹால்
எனக்கே எனக்கா..
கண்மை கரைந்திருப்பதும்
அவளுக்கு அழகு..
ஆனால் எனக்குமா..
இட்ட்து அவள் அம்மா தான்..
அப்புறம் கவனிக்க வேண்டும்..

கையை இறுக்கமாகப் பிடி என
கண்ணால் ஜாடைகாட்டுகிறார்
அக்காவின் கணவர்..
அவருக்குப்
பழி வாங்குவதாக ஒரு நினைப்பு...

ம்ம்
திருப்பிச் சொல்லுங்கோ
என்கிறார் வாத்யார் ஸ்வாமிகள்..
வாயில் நுழைவது போல் சொல்லுங்கோ
எனச்
சொல்லத் தோன்றுகிறது..
ஆனால் முடியவில்லை..

ஒருவழியாய்
வாகாய்
அந்தப் பளிங்குக் கழுத்தில்..
ம்,ம்ம் வேறு உவமை
யோசிக்க வரவில்லை...
கட்டியாயிற்று...
அத்திம்பேர், அக்கா,
தெரிந்தவர் தெரியாதவர்
எல்லாம்
வாழ்த்துக்கள் என்றபோது
கண்ணோரம் ஈரம் வந்த்தே
அது புகையாலா..அல்லது...!
***
****

pavalamani pragasam
10th March 2011, 09:01 AM
அல்லது என்று இழுப்பதே பிழைப்பாகிவிட்டது
எதிலாவது திடமான முடிவெடுத்திருக்கிறாயா
எந்தப் பாதையிலாவது தயங்காமல் நடக்கிறாயா
தடுமாறும் தாரமே ஊசலாடும் தராசு முள்ளா நீ

chinnakkannan
10th March 2011, 07:57 PM
நீ
என்ன நினைத்துக் கொண்டு
என்னை
இப்படிப் படுத்துகிறாய்.....
**
சரீஈ....
நான் தான் இடம் கொடுத்தேன்
காரணம் நான் மட்டும் இல்லை..
அதெல்லாம் உனக்குப் புரியாது...
அதற்காக என்னைத்
தலைசுற்ற வைக்க வேண்டுமா...
***
எனக்கு
உருளைக்கிழங்கு கறி
காரசாரமாய்
சாப்பிடப் பிடிக்கும்..
உனக்குப் பிடிக்கவில்லை என்றால்
போயேன்..
ஏன் வெளித்தள்ளுகிறாய்...
**
எனக்கு
சத்தமான இசையுடன்
ஆடவும் பிடிக்கும்..
ம்ம் நன்றாகவும் ஆடுவேன்...
சத்தமாக்க் கேட்க்க் கூடாதாம்
ஆட்வும் கூடாதாம்
அம்மா சொல்கிறாள்..
எல்லாம் உன்னால் தான்...
**
நல்ல விஷயம் தான்
படிக்கணுமாம்....
நல்ல விஷயம் தான்
கேட்கணுமாம்..
இவர் சொல்கிறார்....
இவரே ஒரு
கெட்ட விஷயம்...!
**
போரடித்தால்
பேசாமல்
ராமா ராமா என்று
சொல்லிண்டு தூங்கு...
நடுராத்திரியில் உதைக்காதே..
எனக்குப் பிடிக்கவில்லை
சொல்லி விட்டேன்...!

இப்படியே தொடர்ந்தால்
என்ன செய்வேன் தெரியுமா..
வெளியில் வா...
வந்தவுடன் உன்னை...உன்னை...
பயப்படாதே...உதைக்க மாட்டேன்...
கொஞ்சுவேன்...!
***

pavalamani pragasam
10th March 2011, 11:04 PM
கொஞ்சுவேன் கூந்தலை கலைக்கும் தென்றலை
கோலத்தின் மேல் ஓடி அழிக்கும் குட்டி நாயை
கழுத்தைச் சாய்த்துப் பார்க்கும் குருவியை
கடையில் வாங்கி வந்த புதுச் சேலையை
கையில் கலகலக்கும் கண்ணாடி வளையலை
காற்றாய் மனம் பறக்கையில் இன்பமயமே

chinnakkannan
11th March 2011, 09:55 AM
…..இன்பமயம்”
கண்முடி அனுபவித்துப்
பாடிக் கொண்டிருக்க
எதிரில்
இரண்டாம் வரிசையில
அமர்ந்திருந்த ஒரு மாமா
குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருக்க
அங்கங்கே நாற்காலிகளில்
பரவலாய் அமர்ந்தபடி சிலர்
தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க
கொஞசம் தள்ளி
காதுகேட்கும் கருவி
வெளியில் வந்த்து தெரியாமல்
ஒரு பெரியவர் ஜோராய்த்
தாளம் போட்டுக் கொண்டிருக்க..
புதிதாய் நுழைந்த கண்ணாடி மாமி, குண்டு மாமா
மணமக்களை வாழ்த்திவிட்டு
செல் மாமாவிடம் சத்தமாய்ப் பேச...
நடுவில் சிலர்
ஈஸ்ட்மென் கலரில்
குளிர்பான்ங்கள் கொடுத்துக் கொண்டிருக்க..
சில சிறுமிகள் பட்டுப் பாவாடையுடன்
புதுசாய் சந்தித்த சினேகிதர்களுடன்
சத்தமிட்ட படி குறுக்கே ஓட...
பாடி முடித்துக் கண் திற்ந்தால்...
சோகையாய் ஓரிரு கைதட்டல்கள்...
அவள் கண்ணோரம் ஈரம்...

pavalamani pragasam
11th March 2011, 01:46 PM
ஈரம் இரக்கம் இருக்கா
கீரைக்காரியிடம் பேரம் ஏன்
கடிகிறான் சின்ன மகன்
மிச்சப்படுத்திய பைசாவில்
மாடிதான் கட்ட முடியுமா
இது என்ன மடமையோ

chinnakkannan
12th March 2011, 08:52 PM
மடமையோ என
நினைக்க வேண்டாம்..
இது
மக்களின் நலனுக்காகவே
ஏற்பட்ட கூட்டணிஎன
பேசி முடித்த தலைவர்
சொல்லவில்லை
தன் மக்களின் நலன் என்பதை

pavalamani pragasam
12th March 2011, 10:48 PM
நலன் என்பதை நினைத்தால்
நல் விவேகம் இருந்தால்
பயிருக்கு வேலி வேண்டும்
காத்திருக்கு வெள்ளாடு
நட்பிற்கு வரம்பு வேண்டும்
கள்ளம் புக வழியிருக்கு
ஆசைக்கு எல்லை வேண்டும்
போதுமென்பது பொன் மருந்து

chinnakkannan
13th March 2011, 08:52 PM
*
மருந்துக்குக் கூட
பொறுப்பிருக்கிறதா பாரேன்
பரீட்சை நேரம்..
இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்கறான்
படித்தானோ என்னவோ...
எலக்ட்ரிசிடி பில் கட்டிட்டீங்களா..
ஏன் இப்படி இருமறீங்க
அந்தக் கண்றாவியக்
குறைத்துக் கொள்ளலாமில்ல..
நீ என்னடி இப்படி
தலையை பேன்னு போட்டுக்கிட்ட்ருக்க
வா உட்கார்.. வாரி விடறேன்
பேன் வந்துடப் போவது..
இந்த வேலைக்காரி இன்னும் காணோம்..
கால் வேற நமநமங்குது..
சக்கரை ஜாஸ்தியாய்ருக்குமோ
உங்க அக்காக்கு வேற
போன் போட்டு பேசணும்
நாளாச்சு
மாப்பிள்ளை எப்படி இருக்காரோ..
இவ குளிச்சாளோ என்னவோ..
ஏய் இவனை எழுப்பேன்..
ஞாயித்துக்கிழமைன்னா என்ன
படிக்கலாமே..
**
அம்மாவின் கவலைக்கு
அளவே இல்லை..
எல்லா அம்மாக்களுக்குமே
அப்படித் தான்...

pavalamani pragasam
13th March 2011, 11:11 PM
அப்படித்தான் நடக்கவேண்டும் என்று இருந்தால்
அப்படித்தான் நடந்தே தீரும் நிச்சயமாய்
அப்படித்தான் நடக்குமென்று சொல்லும் உள்ளுணர்வு
அதிசயமாய் சிலருக்கு வாய்த்த ஏழாம் அறிவு
அப்படித்தான் நடக்கவேண்டும் என்று எண்ணுவது
அப்பட்டமான பிடிவாதம் அல்லது பேராசை
ஆளப்பிறந்தவர்கள் திறமையாகும் பல நேரம்
ஆக்கமுடன் முயல்பவர்கள் சாதனை பெருகட்டும்

chinnakkannan
14th March 2011, 09:57 PM
****
பெருகட்டும் பாவலரே உன் திறமை என்றே
...பேரரசன் உவகையுடன் பரிசுதனைத் தரவும்
உருகித்தான் உளமுழுதும் உற்சாகம் பொங்க
..உணர்வுகளீன் ஓசையினால் குரலதுவும் குழற

கருகட்டும் மன்னாஉன் எதிரிகளின் வீரம்..
..க்ண்களிலே பட்ட்தெலாம் உன்னடிமை ஆகும்..
மெருகுபெறும் உன்னாலே மக்களவர் வாழ்வே..
..பெருந்தகையே வாழிநீ என்ற்வரின் நினைவும்

பின்னோக்கி அன்றையநாள் நடந்த்தையே எண்ண்..
..”பலவிடங்கள் சென்ற்திலே உடலசதி கொண்டு
முன்னோக்கிப் பார்க்கவொரு மரப்பலகை கண்டே..
..முரசறையும் கட்டிலெனத் தெரியாமல் ஏறி

நன்றாகத் தூங்கிய்பின் மென்காற்றில் விழித்தால்..
..நின்ற்படி முறுவலுடன் விசிறியுடன் மன்ன்ன்..
கண்விழித்து மனம்பதைத்தால் பொற்கிழியைத் தந்தான்..
...கருணைமன மன்ன்னிவன் என்றென்றும் வாழ்க!”

pavalamani pragasam
14th March 2011, 10:32 PM
வாழ்க இந்த மாயாலோகம்
வலம் வர எத்தனை வழி
வசதியாய் ஒரு முகமூடி
வேண்டாம் உண்மை முகவரி
வளரும் முகம் பாரா நட்பு
சோழனும் ஆந்தையாரும் தூசு

chinnakkannan
15th March 2011, 03:47 PM
தூசு..
கண்ணைக் கசக்க
அருகில் வந்து இமை பிரித்து
ஊதினான்..
இப்போ பரவாயில்லை..
விலகி வெளிறி சிரித்தாள்..
கைகளில் படபடத்தன
விவாகரத்துக் காகிதங்கள்..
மறுபடி எப்போ..
நா ரெண்டு நாளில்
சிங்கப்பூர் போறேன்..
கொஞ்ச நாள் பழசை மறந்து..
புது வேலை..புது நாடு..
நீ இங்கு தானே..
விதியிருந்தால் பார்க்கலாம்..
கையசைத்துச் சென்றபிறகு
தூசில்லாமலே
மறுபடி கலங்கின..

pavalamani pragasam
15th March 2011, 08:08 PM
கலங்கின நினைவுகள்
கலைந்தன கனவுகள்
விலகின திரைகள்
விழித்தன கண்கள்
நீண்டன நிழல்கள்
அந்திம பொழுதுகள்

chinnakkannan
16th March 2011, 03:26 PM
பொழுதுகள் இன்பமாய்த் தான் கழிந்தன..
மன்னி நீட்டி முழக்கிச் சொன்ன
ஊர்வம்பு..
“பக்கத்து வீட்டு சித்ரா லவ்மேரேஜ் தெரியுமா..
கோடி வீட்டு கோமு மாமியோட
கடைசிப் பையன் இஞ்சினியரிங்க் சேர்ந்துருக்கான்
எதிர் வீட்டுல லொக் லொக்னு
இருமுவாரே சுருட்டு மாமா..
அவர் போன டிசம்பர்ல போயாச்சு..
அது சரி..
எக்ஸர்ஸைஸ் பண்றயோன்னோ..
நானும் மூணாவது வீட்டு கீதாவும்
காலைல வாக் போறோம் தெரியுமில்ல..”
தெரிந்த சில நண்பர்கள்,
சொந்தங்கள் எல்லாம்
கொஞ்சம் தொப்பை, கொஞ்சம் காதோர நரையுடன்...
சில சின்னப் பெண்கள் எல்லாம்
நெடுநெடுவென வளர்ந்து நின்று
புன்சிரித்துப் போயின..
அண்ணா வழக்கம் போல்
எவ்வளவு பேங்க் பேலன்ஸ்
எங்கெங்கே இன்வெஸ்ட் பண்ணியிருக்கே
திருநகர்ல ஒரு வீடு வர்றது பார்க்கட்டா..
என பேச்சுக்கள் ஆலோசனைகள்..
இவளது வீட்டிற்கே சென்று
அரட்டை அடித்து, பர்மிஷன் வாங்கி
சினிமா கோவில் என
சுற்றியாகி விட்ட்து..
எல்லாம் முடிந்து
கிளம்பும் போது
விமான நிலையத்தில்
இவளது கண்ணோர நீர்த்துளி;
தொக்கி நிற்கும்
எப்போ கூட்டிட்டுப் போகப்போறே – கேள்வி
கண்ட பிறகு
அது மட்டும் நினைவில்...

pavalamani pragasam
16th March 2011, 07:52 PM
நினைவில் நிற்குது பழைய செய்யுள் வரிகள்
பால்ய வயதில் நடந்த ஆயிரம் சம்பவங்கள்
பழகிய பல்வேறு முகங்கள் குரல்கள் இடங்கள்
மறந்து போகுதே நேற்று கேட்டது பார்த்தது

chinnakkannan
17th March 2011, 10:23 PM
பார்த்ததும்
கொஞ்சத் தான் தோன்றீயது..
கொழுகொழு கன்னமும்..
திருஷ்டிப் பொட்டும்,
துறுதுறு கண்களும்
அலைபாயும் முடிக்கற்றையும்...
இருகை நீட்டி
வா என அழைத்தால்
முகம் திருப்பிக் கொண்ட்து..
வைத்திருந்த சுரிதார் இளம்பெண் சிரித்து
“அண்ணா கிட்ட போடா’
”இது....”
“என் அக்காவின் குழந்தை!”
மனதுக்குள் ஏனோ நிம்மதி பரவ
இப்பொழுதும்
கொஞ்சத்தான் தோன்றியது....!

pavalamani pragasam
17th March 2011, 10:51 PM
தோன்றியது என்னவோ சொர்க்கபூமியாகத்தான்
வனங்களும் வளங்களும் பொங்கி வழிந்தோட
நீரும் நிலமும் கடலும் மலையும் உயிர்களுமாய்
ஆதாமும் ஏவாளும் பல கோடியாய் பெருகிய பின்
ஆணவமும் சுயநலமும் பெருக கேடுகளும் பெருக
இயற்கையோடு இயைந்து வாழாத மனிதன் இன்று
ஞானக்குருடனாய் அழிகிறான் அடக்கியாழ நினைத்த
அந்த அரிய சக்திகள் அடங்காமல் சீறி எழுவதனால்

chinnakkannan
18th March 2011, 09:33 PM
எழுவதானால் முடியுமா..
யோசிக்கவே செய்யாதே
எழுந்திரு... மெல்ல பிடித்துக்கொண்டு நட..
விபத்தில் காலெலும்பு முறிவது சகஜம்..
சரிசெய்யத் தான் நாங்கள் இருக்கிறோம்..
இருமாதங்கள் ஆகிவிட்ட்தே..
நடவுங்கள்...
டாக்டர் மென்மையாகச் சொன்னார்..
சாரே இந்தா தொடு..
கூச்சப்படாண்டா..
மெல்ல நடங்கோ..
மலையாள இள ம்யில் தாதி
கை நீட்ட
ம்ஹீம்.. முடியவில்லை..
வலி...
அப்படித்தான் கொஞ்சம் வலி இருக்கும்..
எங்கே முகத்தைப் பாரும்.. சிரியும்..பின் நடவும்..
உம்மால் முடியும்...
நர்ஸ் கொஞ்சம் கோணலாய் வைத்து
வேடிக்கை காட்ட
மறுபடி முயன்றதில்
வலி இருந்தாலும்
கூடியிருந்த்து தன்னம்பிக்கை..

pavalamani pragasam
19th March 2011, 07:53 AM
தன்னம்பிக்கை தருமே
தடை வெல்லும் வேகம்
தணியாததோர் உற்சாகம்
திருவினையாக்கும் ஆக்கம்
துணையாய் கையிலிருக்க
துவழ்வதோ தடுமாறுவதோ
தோணியின் துடுப்பாயிருக்க
தொடுவானம் கூட தூரமோ

chinnakkannan
19th March 2011, 09:04 PM
தூரம் அதிகமில்லை...
அந்தப் பக்க சாலையில் தான் நிற்கிறாள்..
கொஞ்சம் இளைத்திருக்கிறாள்..
முகம் வாடியிருக்கிறது...
துள்ளூம் கண்கள் சோர்வாய்..ஏக்கமாய்..
எப்படி இருக்கிறாள்
புதுவாழ்க்கை எப்படி...
கேட்டு விடலாமா..
ஆமாம் போய்க் கேள்... – மனது..
உனக்கு அறிவிருக்கிறதா...
வெட்டிய நகம்போல..
காலிச் சுண்டல் பொட்டலத்தைப் போல..
அலட்சியமாய் உன்னை....
.போகாதே –புத்தி..
என்ன செய்யலாம்
கொஞ்சம் புகைவிட..
போய்ப்பார்க்கிறேனே..
உனக்கென்ன தெரியும் என் நேசம் பற்றி..
என் மனதுக்குத் தான் தெரியும்..
அறிவு கெட்ட்வனே போகாதே...
ஒருவழியாய் வாதம் செய்து
குறுக்கே வாகனங்கள் செல்லக்
காத்திருந்து
கடக்க முற்பட்டால்..
எங்கிருந்தோ வந்த
மூன்று சக்கர வாகனத்தில்
ஏறிச் சென்றாள் அவள்....

pavalamani pragasam
20th March 2011, 07:51 AM
அவள் பைத்தியமாகிப் போனாளே
புத்தியை முழுதாய் தொலைத்தாளே
பற்றை விட வேண்டிய வயதிலே
பற்றிக்கொண்டாளே போதை ஒன்றை
பழுதென்றால் தடங்கலென்றால்
பொழுது போகாமல் தவிப்பாளே
பறி கொடுத்த நிலை கொள்வாளே
புது யுக வசியம் இந்த இணையமே

chinnakkannan
20th March 2011, 12:48 PM
இணையமே..
நீயும் ஒரு பெண்ணைப் போல..
உனக்குப் புரியாத விஷயமில்லை..
தெரியாத விஷயமில்லை..
ஆனால் கேட்டாலொழிய சொல்ல மாட்டாய்..
சமயங்களில் கோபித்துக் கொண்டு
பிழை எனச் சொல்வாய்...
விவாதம் செய்வதற்கும் உன்னிடம் முடியும்
ஆன்மீகமும் உன்னிடம் உண்டு..
இதர கவர்ச்சிகளும் உண்டு..
தொலைத் தொடர்புகளை
நெருங்க வைத்தவள் நீ
எங்கோ நடப்பதை அறியவைத்தவள் நீ..
இருந்தாலும்...
மெல்ல மெல்ல உன்னிடம்
அடிமையாவது என்பது
கொஞ்சம் நெருடலாக...

pavalamani pragasam
20th March 2011, 04:07 PM
நெருடலாக உறுத்திடும்
பல்லுக்குள் துணுக்காக
சாதத்தில் சிறு கல்லாக
கண்ணியமாய் பேசும் கனவான்
பார்வையில் ஒரு கள்ளம்
பூடகமாய் வரும் எகத்தாளம்
பெண்ணே தேவை எச்சரிக்கை

kirukan
20th March 2011, 05:35 PM
எச்சரிக்கை அறியாது வாழ்வானும் உண்டு
எச்சரிக்கையாய் வீழ்வானும் உண்டு.

-
கிறுக்கன்

pavalamani pragasam
20th March 2011, 07:46 PM
உண்டு உண்மை என்று ஒன்று
ஓரமாய் அது நின்று கொண்டு
ஊமையாய் வேடிக்கை பார்க்க
வேடம் பூண்டு பொய்யதுவும்
பலரும் பார்க்க ஆட்டம் காட்டி
பாய்ந்து ஆடி ஓய்ந்த வேளை
பொல பொலவென விடியும்

chinnakkannan
21st March 2011, 11:41 PM
விடியும் இன்னும் சற்றுப் பொழுதில்...
விழிகளில் உறக்கம் இனிமேல் வாரா..
எழுந்து சென்று கண்ணை இடுக்கி
நேரம் பார்த்தால் அட்டா ஜாஸ்தி
உறங்கி விட்டேனே எங்கே பையன்
இழுத்துப் போர்த்தித் தூங்கு கின்றான்..
சின்ன வயதில் எத்தனை கஷ்டம்..
பத்து வருடம் முன்னால் இவனின்
அம்மா போனாள் காய்ச்சலில் மேலே..
நானும் கொஞ்சம் அலைந்து திரிந்து
பற்பல வேலை பார்த்துக் கொண்டு
பள்ளியில் இவனைச் சேர்த்து விட்டேன்..
ம்ம்.. அவனும் நன்றாய்ப் படிக்கிறான்....
இப்போ கூட விடுமுறை ஆனால்
டீக்கடை ஒன்றில் வேலை செய்கிறான்...
எனக்கு உதவி செய்ய வேண்டுமாம்..
வேண்டாம் என்றால் விட்டால் தானே..
***
பள்ளியில் இவனும் பரிசாய் வாங்கிய
சைக்கிள் நிக்குது வெளியில் – அருகில்
என்னைப் போலவே பழைய என்சைக்கிள்..

அதனை எடுத்துப் பூட்டைத் திறந்து
ஏறி அமர்ந்து மெல்ல மிதித்தால்..
இருளோ இன்னும் விலகா திருக்க
பாலம் கொஞ்சம் இருபது நிமிடம்..
இந்த நேரம் வேன் வந்திருக்கும்..
சென்றால் ஐம்பது பேப்பர் எடுத்து
ஐந்தரை மணிக்குள் அருகில் உள்ள
நகரில் சென்று போட்டிட வேண்டும்..
மறுபடி பாலம்.. ஐம்பது பேப்பர்
மறுபடி கொஞ்சம் ஃப்ளாட்கள்; எல்லாம்
போட்டு முடிக்க ஏழும்ணி ஆகும்
பின்னர் வீடு குளித்துக் கிளம்பி
ஒருமணித் தொலைவில் இருக்கும் ஹோட்டலில்
வேலை செய்து மீண்டும் வரத்தான்
இரவு எட்டு மணிதான் ஆகும்...
பின்னர் தூக்கம் பின்னர் வேலை...
பொழுதும் போகுது வயதும் போகுது...
**
பாலம் வந்திட பேப்பர் எடுக்கும்
கூட்டமும் இருக்க பேசி எடுத்துப்
பிரித்து வண்டியில் வைத்துக் கட்டி
நிமிர்ந்தால் அட்டே நம்ம பையன்..
என்னடா என்றால் அப்பா இன்னிக்கு
தேர்வு முடிவு அதனால் வந்தேன்...
பேப்பர் கொடுத்து ஆர்வம் பொங்க
பையன் முகத்தைப் பார்த்தால் அவனும்
அப்பா என்றே பேப்பர் காட்ட
சிறிய அளவில் அவனின் போட்டோ..
பெரிய எழுத்தில் மாநில முதல் என..
கண்ணைத் துடைத்து அவனைக் கட்டி
விடிநத்து நமக்குடா என்றே சொல்லி
வானம் பார்த்தால் அங்கும் அப்படி....

****

pavalamani pragasam
22nd March 2011, 08:29 AM
அப்படி ஒரு கனவு
எப்படி வந்ததெனக்கு
இப்படி ஒரு மலைப்பு
மறுபடி வ்ருமா நேற்று
பழகிய பழைய வீடு
பசுமையான நினைவு
நாடோடியாய் ஓடிய நதி
நெருங்கிவிட்டது கடலை

chinnakkannan
22nd March 2011, 10:46 PM
”கடலைப்
பல இடங்களில் பார்த்திருக்கிறேன்...
ரசித்திருக்கிறேன்..
கோவளம் கடற்கரையில்
பகற்பொழுதில்
பருவப் பெண்ணைப் போல
சற்று அமைதியாய் இருக்கும் அலைகள்.....
திருச்செந்தூரில்
இரவுப் பொழுதில்
கருநீல நிறத்தில்
கோபம் கொண்ட பெண்ணாய்ச் சீறும்..
ஃப்யுஜைராவில் கொஞ்சம்
அடர்நீலத்தில்
கரையருகில் நின்றால்.
என்னைக் கொஞ்சேன் என்பதுபோல்அலைகள்
மென்மையாய்த் தொட்டுச் செல்லும்..
மஸ்கட்டில் காந்தாப் கடற்கரையில்
வெளிர்நீலத்தில் சிரிக்கும்..
அங்கேயே பாரல் ஹச்முக் என்ற இட்த்தில்
கடலைப் பார்த்தால்
வெண்மை மணலில்
பல நீலங்கள் ஒன்று கூடிப்
பரவசப் படுத்தும்..
அரை நிலா கடற்கரை சென்ற போது
அங்கு உள்ள் கடலும்
மெல்லக் குளிரவைக்கும் காற்றும்
இப்போது நினைத்தாலும்
சிலிர்க்கிற்து...
பார்த்துச் சலிக்காத விஷயங்கள்
உலகத்தில் இரண்டு உண்டு
ஒன்று நீ..மற்ற்து கடல்...
கடலை விட ஆழமான ஒன்றை
இன்று கண்டேன்...”

“அச்ச்ச்சோ...
என் கண்கள் எனப்போகிறாயா..:”
சிரித்தாள்
”கடலைப் பற்றி நீ சொன்னதை விட
நீ போடும் கடலை
எனக்குப் பிடித்திருக்கிறது..
ஆளை விடு சாமி..”

கை பிடித்து நிறுத்தினேன்..
“நான் சொன்னது
எப்பொழுதும்
சிரித்து மழுப்பி
பதிலேதும் சொல்லாமல்
நழுவிச் செல்லும்
உன் மனம்”

*****

pavalamani pragasam
23rd March 2011, 08:33 AM
மனம் இப்படி துவழுமா
சோகக் கடலில் மூழ்குமா
நிலை கொள்ளாது தவிக்குமா
தரையில் மீனாய் துள்ளுமா
கண் துயிலாது வெம்புமா
கருகிப் போகுது பயிரு
தொக்கி நிக்குது கவிதை
காத்துக்கிடக்கு மெயிலு
தொங்கிப்போகுது தொடர்பு
தொலைத்தொடர்பே காப்பாத்து
தொல்லை தீராத அலையா
திரிசங்கு சொர்க்கம் எனதா

chinnakkannan
24th March 2011, 12:55 AM
எனதா இல்லை உனதா
ஓ இல்லை இருவருடைய்தும் தான்..
விட்டுக் கொடுக்கட்டுமா உனக்கு
இல்லை
கொஞ்சம் பார்த்து விட்டுக்கொடு
உன் இஷ்டம்..
போட்டி போட்ட்டுமா
ஆமாம் அவசியம்..
உன்னுடன் ஒத்துத் தான் போகணுமா..
என்னம்மா கண்ணு..
அப்படித் தான் இருக்கணும்..
உன்னை விட நன்றாகச் செய்தால்
உனக்குக் கோபம் வராதா..
வருமே..
ஆனா.ல் நானும் நன்றாகச் செய்வேன்..
இதோ பார்..
உன்னை முழுதும் எனக்குத் தெரியாது..
எனக்கு உன் அழகு முக்கியமில்லை..
உனக்கு மட்டுமில்லை..எனக்கும் தான்..
உனக்கு நினைவுத் திறன் அதிகமா..
கொஞ்சம் தானெனில்
பழகிக்கொள்..
ம்க்கும்..உபதேசங்கள் வேண்டாம் எனக்கு..
உன் கண்ணில் என் அழகு தெரிகிற்தா..
இல்லை..
ச்ரி..என்ன தெரிகிறது..
நாமிருவரும் ஜெயிக்க வேண்டும்..
அப்போ சரி..
வா..
செம்மொழியில் இருவர் பாடியது என்றும்
தமிழில் டூயட் எனச் சொல்லப் படுவதுமான
.அந்தப் பாடலை.. பாடலாம்..வா..

pavalamani pragasam
24th March 2011, 07:40 AM
வா வழி காட்டுவேன்
தா பெருக்கித் தருவேன்
சொல் விளங்கிக் கொள்வேன்
பார் திறந்து வைத்தேன்
பாதியாய் நானிருப்பேன்
முழுதாய் மாற்றுவேன்

chinnakkannan
25th March 2011, 09:48 AM
மாற்றுவேன் என்ற் நீயும்..
மாறிய மாய மென்ன
காற்றிலே அலைந்து பாயும்
கார்குழல் முடிந்த தென்ன..
ஊற்றென சிரிக்கும் தன்மை
உதிர்ந்துமென் நகையாய் மாறி
ஆற்றலைக் காட்டி டாமல்
அடங்கிய நிலைதான் என்ன?
**
எனக்குத் தெரிந்த பெண்ணொன்று..
என்னிடம் வளர்ந்தாள் அவளின்று..
எங்கே சென்றாள் தெரியவில்லை..
என்ன ஆனதோ புரியவில்லை..

மழலைப் பருவம் முதற்கொண்டு
மங்கை யாக மாறும்வரை
அழகிய அவளின் அசைவுகளும்
அளவாய்ப் பொங்கும் உணர்வுகளும்
பழகிய எனக்கு இப்பொழுது
புதிராய்ப் போன தேனிங்கு..
வளர்ந்து விட்டாளா என்மகளும்..
வியப்பாய் மகிழ்வாய் இருக்கிறது..
**
அம்மா கொஞ்சம் புலம்பாதே..
அன்பைப் பொழிந்தே மயங்காதே..
சும்மா புகுந்த விடந்தன்னில
சுகமாய் இருக்க விழைந்தே தான்
என்மெய் தனையே மாற்றிவிட்டேன்..
எளிதாய் இதையே எடுத்துக்கொண்டேன்.
மாற்ற்ம் என்னும் ஒன்றேதான்
மாறா விஷயம் தெரியாதா..
**

pavalamani pragasam
26th March 2011, 07:59 AM
தெரியாதா சாத்திர நூல்கள் உரைகள்
வேத பாடங்கள் மேதாவி விளக்கங்கள்
வினவினான் பண்டிதன் பாமர படகோட்டியை
அவனோ படகில் பழுது நீந்த்த்தெரிந்தால்
உம் உயிர் உமக்கு என்று அறிவித்தான்
அந்தோ மூழ்கியது கர்வம் பரிதாபமாய்

chinnakkannan
26th March 2011, 01:10 PM
பரிதாபமாய்த் தான் இருக்கிறது..
*
நிரந்தர எதிரிகள்
தற்கால நண்பர்களாவதும்..
இலவசங்கள் மக்களுக்கு அணிவகுப்பதும்..
இதையும் மீறி
மக்கள் நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்கிறோம்
என்று அறிவிப்பதும்..
எல்லாம் பணத்தை மட்டும் மையமாகக்
கொண்டு காய்களை நகர்த்துவதும்..
அதைக் கேட்டுக் கொண்டு
பாமரர்கள் நம்புவதும்..
*
எல்லாம் பார்க்கையில்
பரிதாபமாய்த் தான் இருக்கிறது..
மிக மோசமான நிலையில்
இன்னும் ஒன்று..
அது மனித நேயம்..
**

kirukan
26th March 2011, 02:35 PM
மனித நேயம் மறந்து மதநேயமாகி
மண்ணில் மறையும் மனிதம்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
26th March 2011, 04:10 PM
மனிதம் என்றும் புதிர்தானோ
மாட மாளிகை பிடிக்காதோ
மண் குடிசையில் தழைக்குமோ
கணக்குப் போட தெரியாதோ
அடித்த கையை வருடுமோ
அழுத கண்ணை துடைக்குமோ
உடுக்கை இழந்தவன் கை போலே
ஒடி வந்து உதவுமோ உருகுமோ
பலனை எண்ணாத பரோபகாரமோ
என்றும் ஒரு கண்ணோடு சேர்ந்தழும்
மறு கண்ணின் இயல்பின் குணமோ
வற்றாத உயிர்மையின் ஊற்றோ

chinnakkannan
27th March 2011, 10:47 AM
ஊற்றோ;
அருவியோ.
காட்டாற்று வெள்ளமோ;
சூழலைப் பொறுத்துப்
பொங்கிடும் கவிதை..

kirukan
27th March 2011, 01:30 PM
கவிதையால் கவியாகி
புவி ஆள்பவரும் உண்டு
கவிதையில் விதை இல்லாது
வெறும் கதையாகி
கதைப்போரும் உண்டு
சொத்தை கவிதை கொண்டும்
சொத்தை சேர்க்கும்
வித்தை சிலர்க்கே
சொந்தம்.......

-
கிறுக்கன்

pavalamani pragasam
27th March 2011, 04:57 PM
சொந்தம் சுருங்கித்தான் போனதின்று
ஒரு பிள்ளை பெறுவதே பெரும்பாடு
அண்ணா தங்கை அத்தை பெரியப்பா என்ற
ஆலமரக் கிளைகள் விழுதுகள் தொலைந்து
பனை மரங்கள் ஆகி நிழலின்றி வாடுது
பாலைவனமாய் புதிய சமுதாயம் ஒன்று

chinnakkannan
27th March 2011, 08:47 PM
ஒன்றிலே அரையைக் கொடுத்து..
..ஒன்றியச் செயலாள ராகி..
ஒன்றியே இரண்டாய் ஆக்கி..
..ஊராட்சித் தலைவ ராகி..
ஒன்றுடன் பலதும் வைத்து..
..ஒழுங்காக அணிகள் சேர்த்தே...
ஒன்றாக வெற்றி பெற்றான்..
..ஓரினத் தலைவ னானான்...!

pavalamani pragasam
28th March 2011, 07:34 AM
தலைவனானான் பழங்காவிய பாணியில்
விசிலடிக்கும் நண்பர் குழாம் உசுப்பவே
பள்ளிக்கூடப் பிள்ளையை தொடர்ந்தான்
அயராது மாறன் கணைகளை தொடுத்தான்
அருமையான பல நவீன வழிகளின்றிருக்க
அரும்பிய மீசை வயதுக்கு வந்ததைச் சொல்ல
விளையாடுகிறான் பிருந்தாவனக் கண்ணன்
வீரமான விவரமான வித்தகன் களிப்புடனே

chinnakkannan
28th March 2011, 09:01 AM
களிப்புடன் கடந்து சென்ற
..கன்னியின் உருவம் கொஞ்சம்
உளியினால் செதுக்கி வைத்த
..உணர்வுகள் பொங்கும் சிற்பம்
விழிப்புடன் எழுந்து வந்து
..விந்தையாய் நடந்தே நெஞ்சைக்
கிழிப்பதாய் உள்ள தென்று.
..கிட்டப்போய்ச் சொல்ல லாமா...

pavalamani pragasam
28th March 2011, 01:56 PM
சொல்லலாமா உண்மையை
காப்பி நன்றாயில்லை
ஒப்பனை சரியில்லை
பையில் பணமில்லை
என் தாய் நல்லவள்
இப்படி போட்டுடைப்பது
தனக்கு லட்சணமில்லை
நல்லதே நடக்காது
பொறுமை அவசியம்
புருஷனுக்குத் தெரியும்

chinnakkannan
29th March 2011, 11:10 PM
தெரியும்ப்பா..
பாத்துப் படிக்கிறேன்..
புத்தகத்தை வாங்கிக்
குட்டிப் பையன்
பாசுரம் படிக்கையில்
சற்றே தவறாகி விட..
ஒழுங்கா சரியாப் படி
அப்பா கொஞ்சம் கோபமாய்க் கிள்ள
பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த
விக்ரகத்துக்கு வலித்தது...

pavalamani pragasam
30th March 2011, 07:54 AM
வலித்தது மிகவும்
வன்முறை பார்க்கையில்
வினயம் வெல்கையில்
வஞ்சம் சிரிக்கையில்
விரிவான விதத்திலே
வெள்ளித் திரையினில்
வக்கிரம் விரிகையில்
விடமே இவ்விருந்து

chinnakkannan
31st March 2011, 04:59 PM
விருந்து பிரமாதம்..
உண்டவர் கொடுத்தவரிடம் சொல்ல
கொடுத்தவர் சமையல் நிர்வாகியிடம் சொல்ல
சமையல் நிர்வாகி நினைத்துக் கொண்டார்
பத்து சதவிகிதம் உயர்த்த வேண்டுமென..

pavalamani pragasam
1st April 2011, 01:34 PM
வேண்டுமென விரும்பிய மாற்றமிதுவா
விபரீதமான விசித்திரமான விளைவா
ஆண்டாண்டு காலமாய் இங்கு ஓர் வழக்கம்
அடிமையாய் மருமகளை நடத்தும் பழக்கம்
ஆண்மகனை பெற்றவளின் அகந்தை அன்று
அடக்கியாண்டது தன் வீட்டுக்கு வந்தவளை
அன்னையிடம் நல்ல பெயர் வாங்குவாளா
அப்பாவி புதுக் கணவன் மிக வருந்தினான்
ஆனாள் பெற்றவளின்று படுவதை பார்க்கிறான்
அன்று அந்தியில்தான் கொடுமை மாமியாருக்கு
ஆரம்பம் நரகம் இன்று மாமியாரனவுடனேயே

chinnakkannan
1st April 2011, 08:21 PM
உடனே கிளம்பு...
சமயங்களில் குஷி கிளம்பும் அப்பாவுக்கு..
மீனாட்சி அம்மன் கோவிலோ..
டவுன் ஹால் ரோடு ஷாப்பிங்கோ...
ஆவணி மூல வீதி நகைக் கடையோ..
அதுவும் சினிமா என்றால்..
ஞாயிறு மாலை நாலே முக்காலுக்குச் சொல்வார்..
அம்மா அசர மாட்டாள்..
மெல்ல முணுமுணுத்து
என்னை ரெடிபண்ணச் சொல்லி
அக்கா,தங்கைகளை டிரஸ்மாத்தச் சொல்லி
தானும் புடவை மாற்றி
ஆடி அசைந்து கிளம்பினால்
வெளியில்
ரிக்*ஷா முருகன் தயாராய் இருப்பான்..
லெதர்சீட்டில் அக்கா அம்மா உட்கார
எதிரில் நானும் தங்கையும் அமர
சிம்மக்கல், யானைக்கல், நெல்பேட்டை
வழியாக ஊர்கோலம்கிளம்பி
சிந்தாமணிதியேட்டரை அடையும்....
பாரேன் கூட்ட்த்தை
ஞாயித்துக் கெளமை ஈவ்னிங்க் ஷோ
எம்ஜியார் படம்மா எங்கே கிடைக்கும் டிக்கட்
நாங்கள் முணுமுணுத்து நிற்க
முன்னால் சைக்கிளில் வந்திருக்கும் அப்பா
மேனேஜரிடம் பேசி
டிக்கட் எடுத்து வைத்திருப்பார்..
உள்ளே சென்று படம் பார்த்து
திரும்பினால் மறுபடி ரிக்*ஷா
மறுபடி ஊர்வலம்..
இழுத்துப் போத்திக்கோ என்ற்படி
பின்னால் சைக்கிளில் அப்பா...
பாட்டு நல்லா இருந்துச்சு.. அக்கா சொல்வாள்
அம்மா..ம்ம் அதே கதை தான்..
ஃபைட்சூப்பர்டா ...தங்கை..
போடி என்ன நடிக்கிறார் என்பேன்
சிவாஜிபிரியனான நான்..
ம்ம்.. அது அந்தக் காலம்..
இன்றோ..
வெளியில் செல்லத் தேவையில்லை
தொலைக்காட்சி,குறுந்தகடு,
நீள் தொலைக்காட்சித் தொடர் என..
அப்படியே கிளம்பலாம் என்றாலும்
பையன் முன்பதிவுசெய்து..
அப்பா.. நீயும் அம்மாவும் தமிழ் போ..
7.40க்கு காட்சி...
நானும் தங்கையும்
ஹிந்தி 6.50க்குக்காட்சி..
நாங்க படம் முடிச்சு
வெய்ட் பண்றோம்..
பின் காரில் செல்லலாம்..
போனவாரமே பண்ணிட்டேன்.. என்கிறான்..
**
காலங்கள் மாறும் போது..
காட்சிகளும் மாறுகின்றன..
காட்சி நேரங்களும் தான்...
********

pavalamani pragasam
1st April 2011, 10:44 PM
நேரங்களும் தான் நகருது வித்தியாசமாய்
றெக்கை கட்டிக்கொண்டு சில சமயங்களில்
நத்தை வேகத்தில் பிற பொழுதுகளில்
நின்றே கூட போகிறது அதிசயமாகவே

chinnakkannan
3rd April 2011, 01:13 PM
அதிசயமாகவே தான் இருந்த்து..
வீட்டில் இருந்து சைக்கிளை
இரண்டு மிதி மிதித்து
ஆறுமுச்சந்தி சென்று கடலைக் கடையில்
சூடாக வறுகடலை வாங்கி,
பின் கடவுள் இல்லை என்ற போஸ்டருடன் இருக்கும்
ஆறுமுகவிலாஸில் பக்கோடா வாங்கி
மறுபடி மிதித்து
அக்காவீடு வந்து கொடுத்த போது
ரொம்ப தாங்க்ஸ்டா எனச் சொல்லி
ஆர்வமாய் அக்கா சாப்பிட்ட்தைப் பார்த்த போது..
**
அக்காவுக்கு எதிலும் அலட்சியம் ஜாஸ்தி..
ஏதாவது மேட்சில் யாராவது நன்றாக விளையாடினால்
பாராட்ட மாட்டாள்..
உருகி உருகி சிவாஜியின் நடிப்பிற்குக் கண்கலங்கினால்
ச்ச் ப்ப்.. இது ஜான்வேய்ன் ஏற்கெனவே பண்ணிட்டாரே என்பாள்..
உடைகள் உடுத்துவதிலும்
ஒரு அலட்சியம்
கொஞ்சமே கொஞ்சம் மேட்சிங் இருக்கும்
பவுடர் பூச மாட்டாள்..
உதட்டுச் சாயம் ம்ஹீம்..
ஆனாலும் அழகாய் இருப்பாள்..
அம்மா ஏதாவது வேலை சொன்னால்
அப்படியே ஒதுக்கிவிடுவாள்..
சும்மா படிப்பு ரேடியோ என்றால் எப்படி
போற எடம் எப்படி இருக்கோ என்றால்
எல்லாம் அப்ப்ப் பார்த்துக்கலாம் என்பாள்..
இப்படிப் பட்ட அக்கா ஒரு நாள்
பக்கத்துத் தெரு பாஸ்கருடன் ஓடிப் போய்
திருமணம் செய்து அங்கேயே குடித்தனம் வந்தபோது
அம்மாவுக்குக் கோபம்;கண்ணீர்..
அப்படி என்ன அதிசயத்தை அந்தப் பையனிடம் கண்டாள் என..
அப்பா வழக்கம் போல் மெளனம்..
பள்ளி செல்லும்போது கொஞ்சம் நான்பார்த்து வருவேன்..
ஒருநாள் நீ மாமா ஆகப் போறேடா என்ற போது
அம்மாவிடம் சொல்ல..
அது ஒண்ணு தான் பாக்கி
பெத்தவங்கள அழவச்சுட்டு எப்படி இருப்பாளாம்..
நீ அடிக்கடி போகாதே..
**
சில நாட்கள் போகாமல்
பின் எல்லாம் வாங்கிக் கொடுத்தால்
அன்புடன் உண்டு.
கடைசியில் கேட்டாள்.. அம்மா சொன்னாளாடா
இதையெல்லாம் வாங்கிக் கொடுன்னு..
இல்லைக்கா ஏதோ தோணித்து..
பாக்கெட் மணில்ல வாங்கினேன்..
கேட்ட அவளின் கண்கள் கலங்க
முகத்தில் விரிந்த்து ஏமாற்றம்..

pavalamani pragasam
3rd April 2011, 07:41 PM
ஏமாற்றம் தரும் பாதிப்பு இரண்டு
முகம் கூம்பி சோகம் மனதுக்குள்ளே
ரத்தக்கொதிப்பு என்றொரு நிகழ்வு
தானாடாவிட்டாலும் ஆடும் சதையாய்
புத்தியை தாண்டி வரும் விளைவு
வைத்தியம் வேண்டும் தீரா வியாதி

chinnakkannan
4th April 2011, 10:42 AM
வியாதி வர்றதுக்குக் காரணமே
இந்த திருஷ்டி தான்’
மடியில் தம்பியை வைத்து
சூட்த்தை மூன்றுமுறை சுற்றுவதற்கு முன்
அம்மா சொன்னதும்;
வளர்ந்த பின்
‘எட்டு மிளகாய் போட்டு
சுத்திப் போட்டு அடுப்பில போட்டேங்க..
கமறவே இல்லை..
பாருங்க பசங்களுக்கு..ரொம்ப திருஷ்டி’
என்று பதறிச் சொன்னதும்;
காதலித்துக் கடிமணம் புரிந்த
வடக்கத்திய மனைவி என்னிடம்
‘நஸர் உத்தார்னேகேலியே
இந்த கட் பண்ணின நிம்புவை
மூணு டைம் சுத்தி பாஹர் போடு’
என்று மழலைத் தமிழில் சொன்னதும்;
எனக்கு திருஷ்டிக்கு
முற்றுப் புள்ளி வைப்பதை விட.
அவர்களது அன்பின்
’கமா’ வாகத்தான் தோன்றியது...

pavalamani pragasam
4th April 2011, 03:56 PM
தோன்றியது மனதில் துணிவு
மறைந்தது மருகும் தயக்கம்
நடை பழக அருகில் இடமில்லை
சாலையில் போக்குவரத்துத் தொல்லை
கொழுப்பை குறைத்தே ஆக வேண்டும்
கை நீட்டி வரவேற்றது அருகிருக்கும்
மகளிர் உடற்பயிற்சி மையம் ஆகா
இனி அழகும் ஆரோக்கியமும் எனதே

kirukan
4th April 2011, 05:34 PM
எனதே என்றிராது நமதே என்றிருப்பின்
எளிதே பிறக்கும் நன்மை.
-
கிறுக்கன்

pavalamani pragasam
4th April 2011, 07:34 PM
நன்மை -குவியும் கோடிகள்
உலகளாவிய ஒளிக்குளியல்
நீல நிறம் வெல்ல வேண்டி
விரதம் இருக்காத குறை
முட்டாள் பெட்டி முன்னமர்ந்து
முழு முனைப்போடு ஆதரித்து
நடுநிசியில் இனிப்பு வழங்கி
தீபாவளி கொண்டாடி வெடித்து
மதுவை பீச்சியடித்து மகிழும்
முகங்களைக் கண்டு பசி மறக்கும்
பாமரப் பக்குவம் வாய்க்கலையே

chinnakkannan
6th April 2011, 10:38 AM
"வாய்க்கலையே..
ஒனக்கு வாச்ச மாதிரி புருஷன்,
புள்ளைங்க, மாட்டுப் பொண் எனக்கு...’
அம்மாவிடம் அவ்வப்போது புலம்புவாள்
பக்கத்துவீட்டு ’பபுள்கம்’ ரங்கம் மாமி..
என்னம்மா இது எனக் கேட்டால்
அம்மா புன்னகைப்பாள்..
சும்மா இருடீ.. ஏதோ சொல்லிட்டுப் போறாள்..
வாழ்க்கைல ரொம்ப கஷ்டப் ப்ட்டுட்டாள்.. என்பாள்..
காலப் போக்கில்
கம் மாமியின் கணவர் மறைய
தொடர்ந்த சில வருடங்களில்
அம்மா மரித்த சமயத்தில்
கேட்டது குரல்..
‘வாய்க்கலையே..
ஒன்னமாதிரி எனக்கு
சுமங்கலியாப் போறதுக்கு..”
**
திருத்தவே முடியாது
சில ஜென்மங்களை..

pavalamani pragasam
6th April 2011, 02:02 PM
ஜென்மங்களைத் தாண்டிய பந்தமிது
சலீம் அனார்கலியாய் பிறந்தோம்
அம்பிகாபதி அமராவதியானோம்
ரோமியோ ஜூலியட் நாம்தானே
பெயர் பொறிக்காமல் போனாலும்
காவிய காதலர்களாய் நாமென
அழகான கற்பனையுடன் தீட்டிய
காவியங்களுக்கு முடிவேயில்லை
முதுகைக் காட்டி படுத்துறங்கும்
முகத்தைப் பார்க்க வெறுக்கும்
பட்டாசாய் பொறியும் பகைவராய்
வீட்டுக்கு வீடு காண்பது நிதர்சனம்

chinnakkannan
6th April 2011, 10:15 PM
நிதர்சனம் என்றால்..’
‘தெளிவு, உண்மை எனலாம்..”
‘அதாவது நம் காதல் நிதர்சனம்..”
இல்லை.. நம்காதல் உண்மை என்பது நிதர்சனம்..
வேகமாக வந்த பையன்
அம்மா புரியவே இல்லம்மா..
ஏன் திடீர்னு வேற பாஷைல்ல பேசறாங்க என்றபடி
தொலைக்காட்சியில் விளையாட்டிற்கு மாற்றியபோது
நிதர்சனமாய்ப் புரிந்த்து
விளையாட்டில் அவனுடைய ஆர்வம்..

pavalamani pragasam
7th April 2011, 01:39 PM
ஆர்வம் அடிக்கடி கோளாறாகுது
அத்து மீறிப் போக துடிக்குது
மூடிய அறைக்குள் எட்டிப்பாக்குது
தடை செய்யப்பட்டதை நோங்குது
ஆப்பிளைக் கடித்த ஆரம்பமே
விபரீதமாய் இன்றும் தொடருது

kirukan
7th April 2011, 01:52 PM
இன்றும் தொடருது போராட்டம்
இன்னும் சேறுது பெருங்கூட்டம்
இன்னல் நீக்கும் தொடராட்டம்
இனியேனும் வீழுமா லஞ்ச வெறியாட்டம்.....

-
கிறுக்கன்

pavalamani pragasam
7th April 2011, 05:46 PM
வெறியாட்டம் போடும் சூறாவளி காற்று
வேரோடு மரங்களை பிடுங்கும் மதயானை
ஊவென ஊளையிடும் ராட்சத ஓநாய்
வெட்டும் மின்னலோடு கொட்டும் மழை
இயற்கையின் ஊர்த்தவ தாண்டவமோ
அழித்து கழித்து துடைக்கும் பணியோ

chinnakkannan
8th April 2011, 11:01 AM
பணிவில்; அவளது பார்வை வீச்சில்..
..பிணிகள் எல்லாம் பறந்து போகும்..
துணிவாய் வாயைத் திறக்கச் சொல்லித்
..திணிப்பாள் கசப்பு ம்ருந்தை நன்றாய்..
இனிதாய் அழகாய்க் கேட்பாள் தினமும்....
..இப்போ வலிதான் எப்படி இருக்கு..
மனித னாகப் பிறந்தே விட்டோம்..
..மறக்குமா வலிகள் என்றால் சிரிப்பாள்..

காலப் போக்கில் குணமாய் ஆகி
.மருத்துவ மனையை விட்டே சென்று
மறுபடி வேலை மறுபடி குடும்பம்
என்றே நாட்கள் சென்ற போதில்
ஒருநாள் சென்றே பார்த்தேன் அவளை..
சிரித்தால் ஒன்றும் பதிலும் வரலை..
அழகிய பெண்ணே.மறந்து விட்டாயா..
இங்கே இருக்கும் நாட்களில் எல்லாம்
ஈன்ற தாயாய்; இனிய தோழியாய்
இருந்தவள் தானே நீயும் என்றால்..
ஐயா நோய்கள் தாக்கும் பொழுதில்
தீர்க்க நடக்கும் மருந்தாய் நாங்கள்..
அதுவே எம்தொழில் அதற்கு மேலும்
பெரிதாய் எதுவும் செய்யவு மில்லை..
பிணியுடன் வந்தால் மருந்தாய் இருப்போம்.
நோய்கள் மறைந்து நீவிர் சென்றால்..
நீங்கள் வேறு நாங்களும் வேறு...
மன்னிக்க வேண்டும் வேலை நிறைய..
பிறிதொரு பொழுதில் முடிந்தால் பார்ப்போம்..
வெள்ளை மன்ந்தான் உடையில் தெரிய
சிரித்தே மறைந்த்து அழகிய தேவதை..

pavalamani pragasam
8th April 2011, 04:36 PM
தேவதைகள் பெரியவர்க்கு பரிச்சயமில்லை
சிறுமிகளுக்கோ நெருங்கிய தோழிகளன்றோ
மாற்றாந்தாயும் அவள் மகள்களும் தடுக்க
அதைத்தாண்டி மன்னர் அளித்த விருந்துக்கு
எலிகள் பரிகளாகி பூசணி சாரட்டை இழுக்க
அழகிய பதுமையாய் அதிலமர்ந்து சென்று
சின்டிரல்லா இளவரசன் மனம் கவர்ந்தாடி
கண்ணாடி செருப்பின் துப்பிலே இறுதியில்
மணம் முடித்து அரண்மனை புகுந்த கதை
அறியாத சின்னச் செல்லங்கள் உண்டோ

chinnakkannan
9th April 2011, 06:10 PM
உண்டோ இலையோ என்றே தோன்றும்
உடுக்கை போன்றே குறுகிய இடையும்..
கண்டால் உள்ளம் களிவெறி கொள்ளும்
கனிச்சுவை கொண்ட கொவ்வை இதழும்
வண்டைப் போல குறுகுறு வென்றே
விழிகள் சுழலும் பார்வையும் கொண்டே
திண்டைப் பற்றிச் சிரித்தாள் அவளும்..
திகைத்தவன் மனமும் விழுந்த்து அங்கே..

மதுரை அழகைத் தெரிந்தவந்தான்..
மனதைத் தொடுமெனப் புரிந்தவன் தான்
வதுவை கொண்ட கண்ணகியை
வீட்டில் இருத்தி வந்தவன் தான்..
மதுரச் சிரிப்பைக் கேட்ட தனால்
மதியில் மயக்கம் கொண்டுவிட்டான்..
புதுமைச் சிரிப்பா அதுஇல்லை..
பாழும் விதியின் சிரிப்பன்றோ..

pavalamani pragasam
9th April 2011, 07:30 PM
சிரிப்பன்றோ விதை போட்டது
திரௌபதி சிரித்தாள் முன்னம்
பாரதப் போரில் அது முடிந்தது
ஏளனம் எள்ளல் பரிகாசமில்லாமல்
கள்ளம் கலக்காமல் சிரித்தால்
பிள்ளைகள் போல் குதூகலந்தான்

chinnakkannan
9th April 2011, 10:46 PM
குதூகலம்தான் கொண்டாட்டந்தேன்..
எல்லாமே இங்கே எலவசந்தேன்..
பையனுக்குக் கேர்ள்பெரண்ட் இலவசம்..
பொண்ணுக்கு புருஷன் இலவசம்..
புருஷனுக்குத் தொப்பை இலவசம்..
மாமியாருக்கு மாட்டுப் பொண் எலவசம்..
மாட்டுப்பொண்ணுக்கு சீரியல் எலவசம்..
சீரியலுக்கு நாயகி இலவசம்..
நாயகிக்கு வில்லி இலவசம்..!
வில்லிக்கு விளம்பரம் இலவசம்..
விளம்பரத்துக்கு விற்பனை இலவசம்..
விற்பனைக்கு ஹீரோஇலவசம்
ஹீரோவிற்குக் கோடிகள் இலவசம்
கோடிகளுக்கு வேட்பாளர் இலவசம்
வேட்பாளருக்குத் தொகுதி இலவசம்
தொகுதிக்குக் கட்சி இலவசம்
கட்சிக்கு ஆட்சி இலவசம்
ஆட்சிக்கு இலவசமே இலவசம்
ஆகக் கூடி
வாழ்க்கையே எலவசமாப் போச்சு...!
**

pavalamani pragasam
10th April 2011, 08:01 AM
போச்சு போயே போச்சு
பூவும் பொட்டும் புருவமும்
பட்டு பாவாடை புடவையும்
கருநாகம் போல் சடையும்
நளினமான நடை அழகும்
பெண் அடையாளமத்தனையும்

chinnakkannan
10th April 2011, 11:35 AM
அத்தனையும் உனக்கு அப்புறம் தர்றேன்
அம்மா சொல்வாள் ஆனால் மறுபடி
அழகாய் வைத்தே இருப்பதைப் பார்க்க
ஆவல் தோன்றும்; நாவில் ஊறும்
மெல்ல நைசாய் அருகில் சென்று
வெல்லச் சீடை எடுத்தால் வந்தே
வள்ளென விழுவாள் படவா ராஸ்கல்
பொறுமை என்பது கொஞ்சமும் இல்லை
எல்லாம் அந்த கண்ண ஒம்மாச்சிக்கு
அப்பா வந்து ஆரா திப்பார்
அப்புறம் தருவேன் கொஞ்சம் பொறேண்டா..
**
அவளைச் சொல்லிக் குற்றமும் இல்லை..
காலை வெள்ளென எழுந்து குளித்து
பக்தியுடனே எல்லாம் எடுத்து
முதல்நாள் ஊறப் போட்ட்தை உரலில்
இட்டு அரைத்து, பின்னர் எல்லாம்
பரபரவென்றே பலப்பலவாக
சீடை முறுக்கு, தட்டை மிக்சர்,
அதிரசம் மற்றும் பலவித பட்சணம்
ஒண்டி ஆளாய்ச் செய்து முடிக்க
மாலை ஆறு மணிதான் ஆகும்
இதனின் நடுவே அம்மா அழகாய்
வீடுமுழுக்கக் குட்டிக் காலகள்
இட்டு முடித்துக் காய்ந்தும் இருக்கும்
பின்னர் அப்பா கடையை மூடி
வந்தே குளித்து ஒருமணி நேரம்
கிருஷ்ணா என்றே பூஜைகள் செய்வார்
அதற்குப் பிறகு தீர்த்தம் திருத்துழாய்
சுக்கு வெல்லம் வெண்ணெய்; சீடை
மற்றும் அனைத்தும் உண்ணத் தந்தால்
அப்பா செய்த பூஜையின் அழகில்
அம்மா செய்த பட்சண வரிசையில்
பசிதான் எங்கோ மறைந்தே போகும்....
**
கடிக்க முடியா உப்புச் சீடை
கன்ன்ங்கரேலென வெல்லச் சீடை..
எண்ணெய் கொட்டும் அதிரசம் மற்றும்
எல்லாம் பக்கக் கடையில் வாங்கி
பூஜை செய்து மருமகள் தந்த தில்
வந்த்து நெஞ்சில் அந்தநாள் நினைவு..!
**

pavalamani pragasam
10th April 2011, 07:43 PM
நினைவுத் திரையில் நிழலாடிய உருவமோ
தவழும் அழகிய கொழுக் மொழுக் குழந்தை
நேரில் நிற்கிறான் மீசையுடன் ஆறடியில்
நம்ப முடியவில்லை நான் கிழவியானதை

chinnakkannan
10th April 2011, 08:28 PM
கிழவியானாதையோ குமரியானதையோ
சொன்னால் மறுப்பார்கள் இந்தப் பெண்கள்
வேகாத வெயில்ல வயசான காலத்தில
இப்படி உழைக்கணுமா என்றால்
என்ன இப்படிக் கேட்டுட்ட
வைகாசி வந்தால் அம்பத்தெட்டுதான் ஆகுது..
எனக்கொண்ணும் வயசாகலை
என்கிறாள் பக்கத்து வீட்டுப் பாட்டி..
அதையே என் பெண்ணிடம்
ஏண்டி வயசுப் பொண்ணா லட்சணமா
வீட்டுவேலை கத்துக்கயேன் என்றால்
அதுக்கின்னும் எனக்கு வயசாகலை
நா சின்னப் பொண்ணுதான்..
என வருகிறது பதில்..
ம்ம்..பெண்ணே உன் மறு பெயர் புதிரா..

pavalamani pragasam
10th April 2011, 11:22 PM
புதிரா இருக்கேன்னு
புத்திசாலி நினைச்சான்
பழம் ஏன் கீழே விழுது
புவி ஈர்ப்புன்னு புரிநது
பார்வையின் கோணம் தருது
பதிலை பொருளை பூரணத்தை

chinnakkannan
12th April 2011, 02:24 PM
பூரணத்தை முழுதாய்க் கொண்டே
இருந்த தா இளையவன் சிரித்த சிரிப்பும்..?
*
அரியணை மேலே அண்ணலுமே
அருகில் சீதை அமர்ந்திருக்க
அனுமனும் பணிவாய்த் தரையினிலே
அழகாய்த் தொழுதே அமர்ந்திருக்க
பின்னால் கொற்றக் குடையைத்தான்
பிடித்தே நின்ற இளயவனின்
அருகில் வந்தாள் நித்ராவும்
வ்ரவா நண்பா எனக்கேட்டாள்..

லஷ்மணன் நினைவோ முன்னால்போய்
லட்சியம் அடைய அவளிடமே
ஈரேழ் ஆண்டுகள் முன்னாலே
கேட்ட்தை நினைத்தே பார்த்ததுவே..
*
’நித்ரா தேவி உந்தனைத் தான்
நெஞ்சினில் பதித்து வணங்கிடுவேன்
இன்றுத் தொடங்கி ஈரெழு
ஆண்டுகள் எந்தன் அருகினிலே
வராமல் இருந்தால் நான் மகிழ்வேன்
அண்ணல் அண்ணி இவர்களுக்கு
பணிவிடை செய்தே மகிழ்ந்திடுவேன்..”
இளையவன் பணிவாய்க் கேட்டிடவும்
மெல்ல்ச் சிரித்தே தான் சொன்னாள்
’ ஈரே ழாண்டுகள் நானுந்தன்
அருகிலே என்றும் வரமாட்டேன்..
ஆண்டுப் பொழுது கழிந்தவுடன்
உடனே வருவேன் விடமாட்டேன்..
இளைய லஷ்மணப் பெருமாளே..
இனிதாய்ப் போய்வா’ என்றவள் தான்
இன்று பட்டா பிஷேகம் என்றே
நன்றாய் உணர்ந்தும் தான் கூட
நல்ல சமயம் பார்த்தே தான்
வருகிறேன் என்கிறாள் என்செய்ய
என்றே மனதுள் நினைத்தபடி
இளையவன் மெல்லச் சிரித்தனன்தான்..
*


பலரும் அங்கே பலவிதமாய்
இளையவன் சிரிப்பைத் தான் நினைத்தார்..
**
நாட்கள் கோள்கள் எல்லாம் தான்
முன்பே பார்த்தே தான் குறித்தீர்..
அண்ணல் அரியணை ஏறத்தான்
இவ்வளவு ஆண்டுகள் ஆனதையா..
என்றே சிரிக்கிறான் என நினைத்தார்
பிரம்ம ரிஷியான வஷிஷ்டரும் தான்..
*
எவ்வளவு கஷ்டம் தான்பட்டாய்
இனிய சித்தி நீயும்தான்
பரதன் அம்ர முடிந்த்துவோ..
பாதுகை தானே ஆண்ட்து..
என்றே நினைத்துச் சிரிக்கின்றான்
என்றே நினைத்தாள் கைகேயி..
*
கோட்டைக் கிழித்தே தான்சொன்னேன்
அண்ணி தாண்டாதே என்று..
என்னைச் சொற்களி னால்கிழித்தே
அனுப்பித் தாண்டினீர் என்னாச்சு..
கஷ்டம் இல்லாதிருந்திருக்கும்..
கனிவாய் என்சொல் கேட்டிருந்தால்’
என்றே நினைத்துச் சிரிக்கின்றான்
என்றே நினைத்தாள் சீதையும் தான்..
*
தம்பி உடம்பைப் பார்த்துக்கொள்
ஒழுங்காய் உணவை உண்டாயா
உறக்கம் நன்றாய்க் கொண்டாயா...
ஈரேழாண்டுகள் உடன் இருந்தும்
ஒருவார்த்தை இவனைக் கேட்ட்தில்லை..
அதைத்தான் நினைத்துச் சிரிக்கின்றான்
என்றே நினைத்தார் அண்ணலும்தான்..
*
லஷ்மணப் பெருமாள் யாரென்றால்
அண்ணலின் அம்சம் தானன்றோ..
பூரணம் என்ற பரம்பொருளைக்
கிள்ளியே அங்கே நின்றதன்றோ..
பூரண்ந்தன்னைக் கிள்ளினாலும்
பூரணத்தைத் தான் அடையும்..
அதுவே இறையின் விதியன்றோ..
**
பூத்த்து என்னவோ ஒருசிரிப்பு
பலரது நினைவில் பல பூக்கள்..
மலரச்செய்த லஷ்மணனை
மயங்க வைத்தாள் நித்ராவும்
சற்றே லஷ்மணன் கண்மூடக்
குடையும் சற்றே சாய்ந்த துவே..
*

pavalamani pragasam
12th April 2011, 07:53 PM
சாய்ந்ததுவே சாம்ராஜ்யம்
சாகச ராணியின் சிரிப்பில்
பெண்பால் கவர்ச்சி வீழ்ச்சியா
பலியானார் விசுவாமித்திரரும்
சுட்டுவிரலில் ஆட்டி வைக்க
சுண்டெலியாய் ஆணை மாற்ற
வரம் வாங்கி வந்தவள்தான்
வரலாறு உரைக்கும் உண்மை
மோகினியே அமுதினைத் தா
மோகத்தால் ஆணை அழிக்காதே

chinnakkannan
13th April 2011, 12:06 PM
அழிக்காதே..
அழி..
எதிர்ச்சொல் நேர்ச்சொல் விளையாட்டு
சின்ன வயதில்
அப்பாவிடம் விளையாடுவது பிடிக்கும்..
கற்றுக்கொண்ட்தும் நிறைய..
வளர்ந்த பின்னர் ஒரு நாள்.
மனதிலிருப்பதைச் சொல்வதற்காக....
எதிர்ச்சொல் விளையாடலாமா..டாட்...
‘காதலிக்காதே’ இதற்கு என்ன..
’சரி’ என்றார் அப்பா..!

pavalamani pragasam
13th April 2011, 02:06 PM
அப்பாவுக்கு இன்று தாய் வேஷம்
வக்கணையாய் சமைத்து ஊட்டி
விளையாடிக் களித்துப் பின்னே
கதை சொல்லி தூங்கவைத்து
முழு நேர பிள்ளை வளர்ப்பு
பொறுப்பான வீட்டு பராமரிப்பு
இதுவும் புருஷ லட்சணமென்று
இன்றைய அம்மா காட்டுகிறாள்

chinnakkannan
13th April 2011, 03:43 PM
காட்டுகிறாள் இயற்கை அன்னை
தனது மனதிற்குள்
பொங்கும் சீற்றத்தை..
கடலைப் பொங்க வைக்கிறாள்
பூமியை ஆட வைக்கிறாள்
ஒரு நாள் அழித்தும் விடுவாள்..
இது தெரியாமல்
இன்னும்
மண்ணின் மைந்தர்கள் என சொல்பவர்கள்
போடுகின்றனர் ஆட்டம்..

pavalamani pragasam
13th April 2011, 07:47 PM
ஆட்டம் போட்டோம்
அன்று பாட்டி வீட்டில்
கோடை விடுமுறையில்
கூட்டமாய் உறவினர்
கற்றோம் பல விஷயம்
கூட்டமில்லை இன்று
கலையும் திறனும் கற்பிக்க
களமிறங்கும் மையங்கள்
காசினை குவித்திட
காலம் இது புதிது
குழந்தைகள் வளரும்
களமும் சவாலானது

chinnakkannan
14th April 2011, 05:28 PM
சவாலானது எனச் சொல்ல முடியாது..
வரிசையாய் அடுக்கியிருக்கும் புத்தகங்கள்..
இடமும் சின்னதாக இருக்கும்..
கொஞ்சமாய் எடுத்துப் பார்த்து
கீழே வைத்து
அடுத்த்தைப் பார்க்க வேண்டும்..
அடுக்கிலிருந்து தவறிவிழும்
புத்தகங்கள் தூசு கிளப்பும்..
சற்றே தும்மல் வரச் செய்யும்..
இருந்தாலும்..
பொறுமையாய்த் தேடினால்
பொக்கிஷம் கிடைக்கும்..
கல்கியின் அமரதாரா மணியத்தின் படங்களுடன்..
சாண்டில்யனின் கடல்புறா பழைய லதாவின் ஓவியத்தில்..
ஏர்போர்ட் ராகிர தமிழாக்கம்..
கொஞ்சம் பழுப்படைந்த ஆங்கிலப் புத்தகங்கள்..
தேர்ந்தெடுத்த்தைக்
கடைக்கர் ர ரிடம் சொன்னால்..
ஆர்வத்திற்கேற்ப விலை சொல்வார்..
பேரம் பேசவேண்டும்..
எனில் அப்போது கைச்செலவுப்பணம் குறைவு..
முழுதும் வாங்க முடியாமல்
சிலவற்றை தியாகம் செய்ய வேண்டும்...
வாங்கியதை வீட்டில் எடுத்து
ஒவ்வொன்றாய்
படிக்கும் சுகம் இருக்கிறதே..அட்டா..
இப்போது
புதியவைகளையே வாங்க முடிகிறது..
இருப்பினும்
அன்று அப்படி வாங்கிய சந்தோஷம் இல்லை....
வாங்கலாம் என்றால்
பழைய புத்தக்க் கடைகளும்
அவ்வளவாய் இல்லை..

pavalamani pragasam
14th April 2011, 07:56 PM
இல்லை இன்று இலக்கணம்
இயல்பாய் மலர்ந்து காய்த்து
இனிப்பாய் கனிந்த காட்சி
பொருத்தமான பருவத்தில்
பூக்காத மணக்காத சூல்கொள்ளா
பொருள் தேடும் பெண்பூவில்
இருக்கிறதா ஈர்க்கும் அழகோ
இனம் வளர்க்கும் சாரமோ

chinnakkannan
15th April 2011, 12:07 AM
சாரம் எல்லாம் அவிழ்த்து,
எல்லா வேலைகளும் முடிந்து,
வண்ணமயமாய்...
புதியதாய் நடிக்கும் வெகு இளைய கதானாயகி போலப்
பளிச்சென இருந்த்து..
ம்ம்.இரண்டு வருடப் பழக்கம்..
இனி அவ்வளவு தான்..
கடைசி நாள் சம்பளம்
மேஸ்திரி வாங்க
கையசைத்தது வீடு...

pavalamani pragasam
15th April 2011, 01:43 PM
வீடு போ போங்குது
காடு வா வாங்குது
பெருசுகள் சொல்லில் அலுப்பு
பொழுதுக்கும் பேசும் புரணி
மனம் முழுக்க வினை வம்பு
மரியாதை தகும் வயது
அதனால் தப்பிக்கும் தவறு
இப்படியும் இருக்கு சில கிழடு

chinnakkannan
15th April 2011, 09:23 PM
கிழடுகள் இன்னும் வரலை போலும்..
ஒருசிலர் வேகமாய் நடை பயின்றிருக் க
ஒருசில இளைஞர் கைகால் நீட்டி
உடற்பயிற்சியைச் செய்தபடி இருக்க
பூங்கா முழுதும் மெளனம் மெளனம்.
அவர்கள் இருந்தால் சிரிப்பின் அலையால்
பூங்காச் செடிகள் மரங்கள் எல்லாம்
புன்முறுவலுடன் தான் ஆடி மகிழும்..
வண்டியை மெல்ல நிறுத்திக் கொஞ்சம்
மூச்சை விட்டு களைப்பைப் போக்கினால்

என்ன ஆச்சு இந்தக் கிழஙகளுக்கு..
என்றும் காலை நேரம் நன்றாய்
சிரித்தே முடித்து அருகில் வந்தால்
பதினைந்து காய்கள் அழகாய் விற்கும்..
அதுவும் அந்த சோமுக் கிழவர்
சிவந்த நிறத்தில் வெண்மை முடியுடன்
வேர்வை நெற்றியில் வழிந்தே இருக்க
‘முருகா.. ஒன்னைப் போன்றே இளசாய்
ஒன்றை வெட்டு’ என்பார்; பலர்போல்
‘எளனி’ ‘இந்தாப்பா’ ஏய்தான் என்று
மரியாதைக் குறைவாய் அழைக்க மாட்டார்..
குறைந்த பட்சம் தென்ன ந்தோப்பை
குத்தகை எடுக்கணும் கூடிய விரைவில்
என்பார்; சாமி அதெல்லாம் கஷ்டம்
அதற்கு நானும் அரசியல் பண்ணனும்
என்றால் சிரிப்பார் வெள்ளைச் சிரிப்பாய்...

என்ன இன்னும் இவர்கள் வரலை..
ஒரேஒரு ஆள்மட்டும் வந்தே எளனி
வாங்கிக் குடித்து நடந்தே செல்ல
தொலைவில் அட டே ராமுக் கிழவர்
வா சார் இன்னிக்கு ஏந்தான் லேட்சார்..’
மத்தவங்க இனிமேல் வருவாங்களாசார்..
இல்லை இன்னும் சிலநாள் ஆகும்..
ஒனக்குத் தெரியுமா சோம சுந்தரம்
போய்ட்டான் நேத்து நெஞ்சுல வலியாம்..’
சோகையாய்ச் சிரித்து அவ்ரும் நடக்க
‘அட டே பாவம் நல்ல மனுஷன்..
இப்போ நாமும் என்ன செய்யலாம்..
முக்கில் இருக்கும் பஸ்ஸ்டாண்ட் சென்றால்
கொஞ்சம் விக்கும் போய்த்தான் வருவோம்’
மனதில் நினைத்த்தை செயலும் படுத்த
கொஞ்சம் விரைவாய்ச் சென்றது இளநீர்...

pavalamani pragasam
15th April 2011, 09:38 PM
இளநீர் தண்ணி இளைய மகள்
ஏழாவதாய் பிறந்த என் அன்னை
மகிழ்ந்து சொல்வது செல்லமாய்
தந்தையிடம் சீராடியதை எண்ணி

chinnakkannan
17th April 2011, 12:46 AM
எண்ணிப் பார்ப்பதும் சுகம் தான்**
**
அன்றும் இதே நிலவு
ஆனால் அது மரத்தடி
இடமோ ஆத்தங்கரை ஓரம்..
மரக்கிளைகளில் தென்றல்கொஞ்ச
கீழே நீ
கிள்ளை மொழியில்
ஏதேதோ பேசினாய்..
பேச்செல்லாம் எங்கே புரிந்த்து..
இருளில்
இலைமறைகாயாய்த் தெரிந்த அழகு..
ப்ட்டும் படாமலும் தொட்ட வெளிச்சம்..
சுற்றிலும் பார்த்தபடி கன்னத்தில் கொடுத்த
மெல்லிய மின்சாரம்..
பின்னும் பேச்சு..
சற்றே கொஞ்சம் ஊடி
.அதனால் உனக்கு வந்த கோபம்
சிரித்தபடி நான் எழ
பின் நீ சென்றது..
**
இன்றும் அதே நிலவு..
அதே இரவு..

இருப்பது என்னவோ
நம்வீட்டு மொட்டை மாடி
தென்ற்ல் மெல்ல வீச
வா என ஜாடை காட்டினால்
முறைக்கிறாய்..
உனக்கும் எனக்கும்
ஏன் இந்தப் பிரிவு..
நடுவில் மூன்று குழந்தைகள்..
சுகமாய்த் தூங்கிக்கொண்டிருக்க..
ம்ம்
நான் இந்த மூலையில்
மறுபடி
எண்ணப் பார்க்கிறேன்..!

pavalamani pragasam
17th April 2011, 08:03 AM
பார்க்கிறேன் பாரெங்கும்
பகைவரிடம் நட்பு
பளீரென்ற சிரிப்பு
பொதுவிடத்து நடிப்பு
பரிவான விசாரிப்பு
போலியான பூச்சு
பொய்யான பேச்சு
பழகும் பாங்கு
பெயர் நாகரிகம்
போற்றலாம் இதை

chinnakkannan
17th April 2011, 01:19 PM
இதை இப்படியே விடக்கூடாது..
ஒவ்வொருமுறையும்
இப்படித் தான் நடக்கிறது..
நானும் மயங்கிக் கொண்டே இருக்கிறேன்
அழகன் தான்...
நன்றாக உடற்பயிற்சி எல்லாம் செய்து
அழகாய்த் தான் இருக்கிறான்..
பேச்சும் அபாரம்..
சொல்கின்ற கவிதைகள்,
செய்த சாதனைகள் என
கொஞ்சம் கூட கர்வமிலாமல் சொல்கிறான்..
ஆனால்
இப்படிச் செய்வது வெகு அநியாயம்..
எதிர்காலம் பற்றிச்
சொல்ல மாட்டேன் என்கிறான்..
வருவான் கடற்கரைக்குச் சொன்னபடி..
என் சாயம்பூசி மின்னும் நகங்களை
வருடிய படி பேசுவான்..
நானும் மயங்குவேன்..
மயங்கிய பின்
மனசில்லாமல் பிரிவோம்..
ம்ம்.. இன்று அப்படி விடக் கூடாது..

இதோ வந்து விட்டான்
மெல்லிய சிரிப்புப் பரிமாறல்...
ஏன் முகமழிக்கவில்லை..
கண்கள் குறுகுறுவெனப் பார்க்க
வழக்கமாய் அமரும் இட த்தில் அமர்ந்தால்...
வழக்கமாய்ப் பார்க்கும் தெரிந்த அலைகள்
அருகில் வந்து ஹாய் சொல்லிச் செல்ல..
பேச்சு சுவாரஸ்யத்தில் மெலிதாய்
அவன் கைபிடிக்க...
காணாமல் போனது வைராக்கியம்..

pavalamani pragasam
17th April 2011, 03:23 PM
வைராக்கியம் தொலத்த ஓர் இனம்
வெக்கமில்லாமல் குடிக்குது
மகிழ்ந்தாலும் குடிக்குது
துக்கத்திற்கும் குடிக்குது
உளருது உருளுது பிறழுது
குடும்பஸ்தன் குடிக்கிறான்
எத்தனை நாள் அடி வாங்குவாள்
தனியே பாரம் சுமக்கிறாள்
தந்தை நிழலில்லா குழந்தைகள்
கல்லூரி வாலிபன் குடிக்கிறான்
புதிய கலாசாரம் படைக்கிறான்
பள்ளிச் சிறுவன் ருசிக்கிறான்
என்ன மிஞ்சும் சாதனை களத்தில்
சோதனை இது கொடியது
குடியை வளர்த்த ஓர் அரசு
தொடர்ந்து காக்கும் அடுத்த அரசு
வற்றாத ஊற்றாக வருமானம்
கோடிகளில் கொட்டிக் கொடுக்க
இலவசங்கள் அள்ளி வழங்க
பெருகியோடும் மதுக் கடலில்
பாழாய் போகும் தலைமுறைகள்
யாருக்கு இங்கு அதில் அக்கரை
யாவரும் அறிந்ததே இச்சீர்கேடுகள்
ஆற்றை கண்டேனா அழகரைச் சேவித்தேனா
என்றிருக்க முடியாத மதுரைக்காரி
ஊரெங்கும் திருவிழா விமரிசையாய்

chinnakkannan
17th April 2011, 03:42 PM
விமரிசையாய்த்தான் நடந்து முடிந்தது
எல்லாரையும்
கவர் கொண்டு கவர்ந்த,
பேச்சால்,பொய்களால் மயக்கிய
தேர்தல் திருவிழா..
அடுத்த மாதம் முடிவாம்..
இந்த முடிவிலும்
ஆரம்பம் வருமா என்ன...

pavalamani pragasam
18th April 2011, 12:19 AM
என்ன என்று தெரியாத வரை ஆர்வம் இருக்கும்
ஆராய்ச்சி தொடர்ந்திருக்கும் சுவையிருக்கும்
அதனால்தானோ அளவற்ற மர்மங்கள் புதிர்கள்
இயற்கையில் வாழ்கையில் மனதின் மாற்றங்களில்

chinnakkannan
18th April 2011, 10:05 PM
மாற்றங்களில் தான்
உலகம் சுழல்கிறதாம்..
ஆங்கில ‘மாட்டுச் சாணம்..”

சரி..
இருந்தாலும்
எனக்கு நிகழ் ந்த து அநியாயம்..

ஊரெங்கும் என் குரல்
எப்பொழுதும் ஒலிக்கும்
ஆனால் நான் ஈன்ற குரலை
இப்போதிலிருந்து கேட்க முடியாது..


ஒன்றா இரண்டா
பதினைந்து வருஷம்....
தவமும்..மருந்தும் பலன் தர..
குறிஞ்சிப்பூ ஒன்று பெற்றேன்..
சின்னச் சிரிப்பும் கொள்ளை அழகுமாய்
எட்டு வருடம் வளர்ந்து
இதோ நீரில் மூழ்கிப் போனது..

எனது சுருதிப்பெட்டி
இனி முகாரி தான் இசைக்கும்..

கடவுள் என்பது
இல்லை..இல்லவே இல்லை..
எதற்குத் தர வேண்டும்..
எதற்குத் திருப்பிப் பெற வேண்டும்...


வாழ்வில் இதெல்லாம்
இயற்கை,தேற்றிக்கொள் என
மற்றவர்களுக்குச் சொல்ல
சுலபமாய் இருக்கிறது..
மற்றவர்கள் சொல்லும் போது
கண்ணீர்தான்...
*
ஒருவேளை இறைவனுக்குப் பொறாமையா..
எல்லோரும்
இனிமைக் குரல் கொண்ட
குயில் என்று சொல்வதை..
நினைத்திருப்பானோ..
இது இனி இசைக்கட்டும்
சோக கீதமென.......

மெல்ல மெல்ல
காலம் செல்லச்செல்ல
மாறத்தான் செய்வேன் நான்..
அது உலக நியதி..
ஆனால்
மாறாத ரணத்துடன்..

pavalamani pragasam
18th April 2011, 10:55 PM
ரணத்துடன் கைகோர்த்திருக்கும் வலி
ஆறிய பின்னும் மிச்சமிருக்கும் வடு
ஆற மறுக்கும் ஒரு சில காயங்கள்
பச்சைப் புண்ணாய் பல கசப்புகள்
உள்ளிருந்து வாட்டும் வேதனைகள்
ஏமாற்றும் முகத்தின் புன்சிரிப்புகள்

chinnakkannan
19th April 2011, 06:11 PM
புன்சிரிப்புகள், கைகுலுக்கல்கள் எல்லாம் முடிந்து
அவரவர் அமர,
ஒரு நிமிட் மேலாளர்;
மீன் மூலம் மேலாண்மை
போன்ற புத்தகங்களைப் பற்றி
நகைச்சுவையுடன் செவ்வனே பேசி
பின்னர்
விற்பனை இலக்கு ஏன் குறைவு..
யாரிடம் என்ன குறை
என விலாவாரியாக விவரித்து,
ஏன் சீக்கிரம் வசூலிக்க முடியவில்லை
ஏன் இவ்வளவு செலவுகள்
என
கணக்கப் பிள்ளையைச் சாடி;
அடுத்த மாத இலக்கை நிர்ணயித்து முடித்து
மணி பார்த்தால் ஒன்றரை..
அதான் பசிக்கிறது..
கை குலுக்கிக் கலைந்து
அறையில் மடிக்கணினியில்
வேறென்ன வேலை.....
மதியம் மூன்று மணிக்கு
விளம்பரக் கம்பெனிப் பெண் வருவாள்..
அழகாவும் இருப்பாள்..
ரசித்துக் கொண்டே பேசினால்
இன்றையப் பொழுது முடிந்த்து..
நாளைக்கு என்ன..
அட..
இன்றைப் போல் ஒன்றுமில்லையே.
போரடிக்குமே..
சரி, தொழிற்சாலை சென்று பேசுவோம்..
நம்மைப் பற்றி.. நமக்குத்தெரிந்த்தைப் பற்றி..
நிறையக் கொஞ்சுவோம்..
கொஞ்சம் திட்டுவோம்..
இப்பொழுது சற்று ஒப்பனை செய்யலாம்..
அழகி வேறு வருவாள்

முகம் கழுவும் அறைக்குச் சென்று
கண்ணாடி பார்த்த்தில்
தெரிந்த து.. சிறந்த மேலதிகாரியின்
பிம்பம்....!

pavalamani pragasam
19th April 2011, 10:18 PM
பிம்பம் நிசத்தின் பிரதிபலிப்பு
என்பதுதான் சராசரி கணிப்பு
இருக்கு கற்பனையின் பங்களிப்பு
கண்ணாடியில் என் முகம் அழகு

chinnakkannan
20th April 2011, 11:50 PM
அழகுக்கும் மலருக்கும் ஜாதியிலை..
நெஞ்சில்
ஆசைக்கும் உணர்வுக்கும் பேதமில்லை..
அறுபதில் பாடிய பாடலதன்
பொருள்
இன்னும் மாறாமல் தானின்று இருக்கிறதா..
அஹ்ஹஹ்ஹா...ஒஹ்ஹோஹ்ஹோ..
டொய்ங்க் டொய்ங்க்...!

pavalamani pragasam
21st April 2011, 07:50 AM
டொய்ங்க்
தன்னிச்சையாய் தந்தியை மீட்டுகிறது விரல்
மேகக்கூட்டமாய் உருமாறி அலையும் மனம்
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி தடுமாறும்
எதை எடுப்பது எதை விடுவது தீராத குழப்பம்
மதில் மேல் பூனையாய் நிற்கும் ஊசலாட்டம்
குழம்பிய குட்டை தெளியுமா மீன் தெரியுமா

chinnakkannan
22nd April 2011, 09:38 AM
தெரியுமா..
உலகம் மிக்க் குறுகலானது..
நாம் சோகமாயிருக்கும் போது...
உலகம் மிக விசாலமானது..
அழகானது..
நமது சந்தோஷத் தருணங்களில்...

pavalamani pragasam
22nd April 2011, 07:19 PM
சந்தோஷத் தருணங்களில்
விசேஷ கணங்களில்
விழாக் காலங்களில்
விகசித்த முகங்களில்
வெளிச்சம் தெரிகிறதே
வெள்ளி முடி மின்னுகிறதே
வெள்ளைச் சிரிப்பு பூக்கிறதே
புதுசாய் மீண்டும் பூக்கிறதே
புகைப்படங்களாய் பிடித்ததை
பார்க்கின்றபோதெல்லாம்

kirukan
22nd April 2011, 07:55 PM
எல்லாம் எளிதாய் நடந்தால் இகழ்வாய்
தெரியும் உழைப்பும் உயர்வும்.

-
கிறுக்கன்

chinnakkannan
22nd April 2011, 08:39 PM
உயர்வும் உயர்வில் அடக்கமுங் கொண்டால்
துயரம் விலகிடும் பார்

pavalamani pragasam
22nd April 2011, 09:56 PM
பார் இன்றுன் பரிதாப நிலையை
எவ்வழி மன்னன் அவ்வழி மக்கள்
கோலோச்சும் அரசின் ஆசைகள்
கூசாமல் பழி போட வைக்கும்
கனவென்றால் கோடிகள்தானா
பாவமறியா பச்சை குழந்தைகள்

chinnakkannan
22nd April 2011, 10:46 PM
குழந்தைகள் குழந்தைகள் தான்
சுசித்ராவைக் கேளுங்கள்
வாழ்க்கையின் துடிப்புக்கு
சிசர்ஸ்
கம் நியர் ஃபார்ய க்ளோசப் ஸ்மைல்
ஆரோக்ய் வாழ்வைக்காத்திடும் லைஃப்பாய்
லைஃபாய் இருக்குமிடம் ஆரோக்கியம் இருக்குமிடம்
இளமை பூரிக்கும் மாலா
அவள் சிரிப்பிலோர் அலாதி அழகு
உபயோகிப்பது கோல்கேட்...
முதலில் வெறுத்தபடி..
பின்னர் ரசிக்க ஆரம்பித்த விளம்பரங்கள்..
இன்றைய விளம்பர உலகிலும்
பெரிய நட்சத்திரங்கள், தொழில் நுணுக்கம்
என வந்த போதிலும்
மறக்காததற்குக் காரணம்
அதன் தன்மையா என் சிறு வயதா..
தெரியவில்லை..

pavalamani pragasam
23rd April 2011, 08:56 AM
தெரியவில்லை
இரவா பகலா
இனிப்பா கசப்பா
இசையா இரைச்சலா
இடரா உதவியா
இதெல்லாம் இலக்கியமா
இத்தனை சுதந்திரமா
இன்னும் என்னென்னவோ
இருட்டுது வெருட்டுது
இணையம் தஞ்சம்

chinnakkannan
23rd April 2011, 09:17 AM
தஞ்சமென வந்ததுபோல்
வெளியே செல்ல விடாமல்
காலடியில் முட்டுது தெரு நாய்க்குட்டி..
நேற்றிரவு போட்ட பிஸ்கெட் காரணமா.
வால் படபடவென அடிக்க
கண்களில் தெரியும் பாசம்..
உள்சென்று மறுபடி கொடுத்து விலக நினைத்தால்
வேகமாய் ஓரிரண்டை உண்டுவிட்டு
கேட் வரை ஓடி வருகிற்து..
நான் காட்டும் அன்பு
இதனன்புக்குச்சமமா..

pavalamani pragasam
23rd April 2011, 01:50 PM
சமமா சரிசமமா நிசமா
உமையொரு பாகனா
உடலிலும் மனதிலும்
உரிமை கொடுப்பவனா
ஒருவன் வருவானா
ஒவ்வொருத்தியின் ஆசை

pichumanip
23rd April 2011, 05:24 PM
ஆசையுடன் கோபம் கொண்டு
தனித்து வாழ்ந்த அறிவை
இனம் புரியா காதல் ஒன்று
மனம் முடிக்க எண்ணி
மடல் ஒன்றை வரைந்தது

"என் ஆசை நாயகனே!..."
என்று துவங்கும் அந்த மடலைப்
படித்த அறிவு சிந்தித்தது

"ஆசையுடன் தனித்திருந்தால் கோபம் வரும்!..
ஆசையின்றி தனித்திருந்தால் காதல் வரும்!..
...அத்துடன் ஆசையும் வரும்!..
அட்ரா சக்க நமக்கு ரெண்டு பொண்டாட்டி!!!"

மறு பேச்சின்றி காதலை மணந்தது அறிவு.

pavalamani pragasam
23rd April 2011, 07:47 PM
அறிவு ஒரு ஆயுதம்
செதுக்கு உன் வாழ்வை
செம்மையான முறையில்
சீரான நேர்பாதையில்
விலகட்டும் அஞ்ஞானம்
விரியட்டும் கண்ணோட்டம்
வேண்டும் ஆக்கபூர்வம்
வேண்டாம் வீண் ஆராய்ச்சி
விளைவுகளை நினை
விழிப்புடன் முன்னேறு

chinnakkannan
24th April 2011, 08:20 PM
முன்னேறும் இதயமற்ற கால்கள்..
பின்னோக்கும் அன்பான கண்கள்..
என்னப்பா எழுதறே..ஒண்ணும் புரியலை..
அஃதாவது
எவ்வளவோ பணிவிடைகள்
உன் அம்மாவின் கால்களுக்குப் புரிந்திருக்கிறேன்..
நல்ல செருப்பு,
காலைப்பராமரிக்க அழகு நிலையச் செலவு என..
ஆனால்
அந்தக் கால்கள் தான் நன்றியில்லாமல்
பணம் செலவழிக்க கடைத்தெருவிற்கு.
.சரி தமிழில் ஷாப்பிங்
போகுது..
உன் அம்மாவின் கண்களைப் பார்க்கமுடியுமா..
(எரித்துவிடுவாளே)
ஆனால் அவை மட்டும் என்னைத்
திரும்பிப் பாசத்துடன்
பார்த்தவண்ணம் செல்கின்ற்ன..
அப்பா..
வழக்கம் போல நீ ஒரு லூசு..
ஒன்ன அப்படிப் பார்த்துப் பார்த்து
ஏமாத்தறா...அம்மா

pavalamani pragasam
24th April 2011, 09:31 PM
அம்மாவின் கைமணம்
மீனானம் தேனானம்
மனைவியும் நிபுணிதான்
ஆனாலும் ஒரு படி கீழே
மருமகளே மருகாதே
மாமியார் ஆனதும் பார்
மகன் பல்லவி தொடர்வான்
மருமகள் பல்லைக் கடிப்பாள்

chinnakkannan
25th April 2011, 02:01 PM
பல்லைக் கடிப்பாள்..
விழிகளை உருட்டி மிரட்டுவாள்..
அதுவா அசரும்..
கிடுகிடுவெனத் தவழ்ந்து போய்
சற்றே
மேஜையைப் பிடித்து
மேலுள்ள பொருளை
கீழ் தள்ளி விட்டு
ஓசை எழும்புவதை வேடிக்கை பார்க்கும்..
அருகில் சென்று
அடிக்க கை ஓங்கினாலோ
நிமிர்ந்து பார்த்து கடகடவென நகைக்கும்..
அந்தச் சிரிப்பில்
அவளுக்கு
மற ந்து போகும் எல்லாம்...

pavalamani pragasam
25th April 2011, 08:07 PM
எல்லாம் தெரிந்தவர் இல்லை
எல்லாம் புரிந்தவர் இல்லை
எல்லாம் உணர்ந்தவர் இல்லை
எல்லாம் கண்டவர் இல்லை
எல்லாம் வென்றவர் இல்லை
எல்லாம் இன்பமயந்தான்
இயற்கையோடு நடந்தால்
இடரின்றி பயணம் முடியும்

chinnakkannan
27th April 2011, 12:28 PM
முடியும் எனப்
பலதடவை நினைத்த
நீள்தொலைக்காட்சித் தொடர்
முடியவில்லை.- பார்க்கவும்
முடியவில்லை..!
முடியாது என நினைக்கும் வாழ்க்கையோ..
...
மூன்று புள்ளிகளில்
முதற்புள்ளி முடிவதற்கும்
காத்திருப்பதில்லை

pavalamani pragasam
27th April 2011, 07:53 PM
காத்திருப்பதில்லை
கண்ணீர்த் துளிகள்
கன்னத்தில் வடியும்
காரியம் சாதிக்கும்

chinnakkannan
28th April 2011, 08:25 PM
சாதிக்கும் எண்ணமெதுவுமின்றி
சிறுவனைச் சந்தோஷப் படுத்துவ்தற்காக
கிடுகிடுவென ஓடிப்
பந்தை எடுத்து வருகிற்து
அந்த்த் தெருநாய்,,
வாலை ஆட்டிய படியே..
மறுபடி எறிய..
மறுபடி எடுத்து வர...
திடீரென பந்தை நாய் போட
சிறுவன் எடுத்து வர..
சிலிர்த்துக் கொண்ட சிறுவன்
நினைத்துக் கொண்டான்..
‘சே அப்படி எல்லாம் செய்யாது..
இது மட நாய்..”

pavalamani pragasam
28th April 2011, 11:51 PM
நாய்க்கு வேணும் நாணம்
நங்கைக்கு அல்லவாம்
புரட்சிப்புலவன் வாக்கு
பிழையாய் போனதின்று
அர்த்தமும் அனர்த்தமும்
அறிந்திட ஒரு வாய்ப்பு

chinnakkannan
29th April 2011, 12:25 PM
வாய்ப்புக் கிடைக்குமென
எதிர்பார்க்கவில்லை..
வழியில் தான் சந் தித்தேன்..
சற்றே குண்டாய் இருக்கிறான்..
மீசையின் இரு மூலைகளிலும் வெண்மை..
கண்களில் சற்றே சுருக்கம்..
இரண்டு குழ ந்தைகளாம்..
பெயர் விஜய் வினிதாவாம்..
என் பெயர் இல்லை..
மனைவி சுகமாம்..
வேலைபரவாயில்லையாம்..
குடும்பம் ஊரிலாம்..
ஓமானுக்கு வந்து இரு மாதமாம்..
கேள்விகளுக்குப் பதில் வந் த்து
கேள்விகள் வரவில்லை..
நானும் சொல்லவில்லை..
சற்றே கண்களைப் பார்த்துவிட்டுக்
கைகுவித்தேன்..
அவனும் கைகுவிக்கையில்
தெரிந்த்து
நான் கொடுத்த கடிகாரம்....

pavalamani pragasam
29th April 2011, 04:56 PM
கடிகாரம் நின்றுவிட்டதா
எத்தனை தரம் பார்ப்பது
கடினமானது காத்திருப்பது
கடிகார முள் பறக்கிறதே
அதற்குள் பிரிய வேண்டுமா
கடிகாரம் என்னவோ ஒன்றேதான்

GP
30th April 2011, 11:06 AM
உயிர்

ஒன்றேதான் உள்ளது என்னிடம்
கொன்றே தந்து விடுகிறேன் உன்னிடம்
இன்றே வருவாய் என்னிடம்

chinnakkannan
30th April 2011, 11:56 AM
என்னிடம் அவனது
எதிர்பார்ப்பு புரிகிறது..
சிறிய தலையாட்டல்..
மெலிய புன்சிரிப்பு..
கொஞ்சம் தயக்கமான பார்வை..
ம்ஹீம் மாட்டேன் போ..
தைர்யமிருந்தால் நீ வா..
இதோ..
எதிரில் அவன்..
வழக்கம் போல்
தலைகுனிந்து கடந்து
திரும்பிப் பார்த்தால்..
இல்லை.,.
முன்னால் சென்றால்
வ்ழிமறித்துத் தொடர்கிறது
அவன் உருவம்..
மனதில்..

pavalamani pragasam
30th April 2011, 01:10 PM
மனதில் நடக்குது பட்டிமன்றம்
கெஞ்சுவதா மிஞ்சுவதா
கொஞ்சுவதா குழைவதா
சாம தான பேத தண்டத்தில்
இந்தக் கணம் இவனை வெல்ல
துரிதமாய் துணிவாய் முடிவெடு

chinnakkannan
2nd May 2011, 12:26 AM
முடிவெடு அழகின் அழகே என்னைச்
சேர்ந்தால் உனக்கு ராஜ யோகம்
அந்தப் புரத்தின் அழகிகளெல்லாம்
உனக்கே அடிமை மற்றும் நகைகள்
இந்த இலங்கை எல்லாமுன்சொத்து..
சொன்ன ராவணன் பதிலுக்கு நிற்க
சோகம்,துக்கம்,வெறுப்பு எல்லாம்
கலந்தே சிரித்தாள் சீதை மெல்ல..
அந்தச் சிரிப்பிற்கிருக்கும் கதையும்
மதியில் மயக்கம் கொண்டவன் அறியான்..
*
சீதா ராமர் திருமண வைபவம்
சிறப்பாகவே நடந்திடும் சமயம்
தாமதமாகவே வந்தார் சிவனும்..
அவர்கள் அருகே சென்றே வாழ்த்த
‘ராமா மன்னி, உம்மைக் கண்டு
வாழ்த்த வேண்டும் என்ற அவசரத்தில்
பரிசு எதுவும் வாங்கவு மில்லை..
என்னவேண்டும் உரை நீ என்றார்..
தம்பதிகளில் தான் சீதை சொன்னாள்..
ஈசா நீவிர் இங்கே வந்து
எமைத்தான் வாழ்த்தினீர் அதுவே போதும்..;
ஈசன் சிரித்தே சொன்னான் அம்மா..
எந்தன் சிரிப்பை உனக்கே தருவேன்..
தக்க சமயத்தில் உபயோகப் படுத்து..!

**
திருமணப் போதில் கிடைத்த பரிசு
ஈசன் சிரித்த அழகிய சிரிப்பு
சாதா ரணமான சிரிப்பா அதுதான்
திரிபுரம் தன்னைப் பொடிப்பொடி யாகச்
சாம்பலாய் ஆக்கிய சிரிப்புதான் அன்றோ..
அதையே அந்த சோகப் பொழுதில்
தந்தாள் சீதை பிற்காலத்தில்
இலங்கையை எரித்த்து அந்தச் சிரிப்பு...
**

pavalamani pragasam
2nd May 2011, 08:53 AM
சிரிப்பு ஒரு திரை
அழகாய் மறைக்கும்
உள்ளத்து உணர்வை
உலை கொதிப்பதை
வலி வாட்டுவதை
வினை விளைவதை
நாகரிக ஒப்பனை
போலி வெளிப்பூச்சு
அறிவார் தேர்ந்தவர்
எளிதில் ஏமாறாதவர்

chinnakkannan
2nd May 2011, 10:54 PM
எளிதில் ஏமாறாதவர் சித்தப்பா..
அவ்ரையும் ஏமாற்றி விட்டாள் அவள்..
பாரு சாமி
சேப்பு கலந்த மாநிறமா
இருக்குது பாரு பழம்
ஒன்னைப் போலவே
எனச் சொல்லித்
தலையில்கட்டியும் விட்டாள்..
வெட்டிச் சுவைத்தால் ஒரே புளிப்பு..
என்ன சித்தப்பா மசக்கையா
எனக் கேட்டு குட்டும் வாங்கினேன்..
மறுநாள் காலை
அதே சமயம்
அவள் குரல் கேட்க..
சித்தப்பா அவளைக்
கூறு போடுவதைப் பார்க்க
நாங்கள் தயாராக..
அவள் வந்தும் சென்றும் விட்டாள்..
பின் வந்த சித்தப்பா
பெருமூச்சு விட்டுச் சொன்னார்..
’இந்தக் காலத்தில்
எங்கு பார்க்க முடிகிறது..
நல்ல வியாபாரியையும்..
ந்ல்ல மாம்பழத்தையும்...’

pavalamani pragasam
2nd May 2011, 11:50 PM
மாம்பழத்தையும் நாரதர் பகடையாக்க
பரமசிவன் குடும்பத்தில் தகராறு
பந்தயம் பாகப்பிரிவினை பிரச்சினை
பக்தர்க்கு கோவில்கள் பஞ்சமில்லை

chinnakkannan
3rd May 2011, 12:51 PM
பஞ்சமில்லை வாழ்க்கையில்
அன்புக்கு..
பரிவுக்கு..
பணத்திற்கு..
பாசத்திற்கு..
ஆசைக்கு.
வெறுப்புக்கும் விருப்புக்கும்...
இருந்தும்
மனிதனென்பதால்
திருப்தியில்லாமல்
தொடர்கின்றன என் தேடல்கள்..

pavalamani pragasam
3rd May 2011, 01:34 PM
தேடல்கள் ஏராளம்
எங்கேயும் எப்போதும்
தொலைந்த திருகாணிக்கு
மறந்த சாவிக்கு
மணமக்கள் தேவைக்கு
மனம்கவர் நட்புக்கு
கடற்கரை மணலிலே
இணைய தள சேவையிலே
புதையல் கிடைக்கலாம்
புதைந்தும் போகலாம்
காத்திருப்பது என்ன
அறிந்தவர்தான் யாரோ

chinnakkannan
3rd May 2011, 01:46 PM
யாரோ
அந்தப் பக்கம் சிரிக்கிறார்கள்..
யாரோ
அந்தப் பக்கம் அழுகிறார்கள்..
யாரோ நடந்துகொண்டு இருக்கிறார்கள்..
யாரோ பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்..
யாரோ பய்ணம் முடிந்தும் வருகிறார்கள்..
அல்லது செல்கிறார்கள்..
எல்லாவற்றையும்
மெளனமாய்
அவ்வப்போது மறைக்கும் மேகத்தையும் விலக்கிப்
பார்த்துக் கொண்டிருக்கிறது வானம்..

pavalamani pragasam
3rd May 2011, 07:17 PM
வானம் ஏன் அழுகிறது
அடை மழை பெய்கிறது
சந்திரனை சலவை செய்து
உலர்த்திய கவிதை வரிக்கா

chinnakkannan
4th May 2011, 08:45 PM
கவிதை வரிக்கா..
உனக்குப் பிடித் த தாய்
இருக்கவேண்டுமா..
பரிசு....
என்னது முத்தமா..
ஒவ்வொரு வரிக்குமா..
கொஞ்சம் இரு..
இந்தா...
சீ..போப்பா நீ ரொம்ப மோசம்..
நான் என்ன செய்துவிட்டேன்..
உன் பெயரை முப்பது முறை
எழுதியிருக்கிறேன்..
அதற்கு ஏன்
உன் முகம்
இப்படிச் சிவக்கிறது.....

pavalamani pragasam
4th May 2011, 10:36 PM
சிவக்கிறது தெருவெல்லாம்
குருதி பெருகியோடியதில்
தலைகள் உருண்டோடிடும்
அகந்தையும் ஆணவவும்
அரியணை தொலைக்க
சமுதாய நீதி தர்மம்
புதிதாய் அங்கே பிறக்க
பொற்காலம் சில காலம்
சக்கரம் நிற்காது சுழல்கிறது
மறுபடியும் ஓடுது ரத்த ஆறு

chinnakkannan
5th May 2011, 05:26 PM
ஆறு
அன்று அமைதியாய்த் தான்..
மாம்பழக் கலர் பட்டுப் பாவாடையும்
சிகப்புச் சட்டையும் போட்டுக் கொண்டு
சமர்த்தாய்
மணல் வீடு கட்டிக் கொண்டிருந்த
உன்னைப் போலவே...
நான் தான் மோசம்..
தொம்மென்று விழுந்து கலைத்து விட்டேன்..
கோபமும் கண்ணில் நீருடனும்
விருட்டென்று பேசாமல் போய்விட்டாய்..
பிற்காலங்களில்
நம் காதலை வளர்த்த்து
அந்த ஆறு தான்...
மெளனமாய் நம் உணர்ச்சிகளைப்
பார்த்துக் கொண்டிருக்கும்..
நம் தோழி தான்..
ஒரு நாள்
அதற்கும் கோபம் வந்து
வெள்ளமாய்க் காட்டியது..
என்று என்று உன் மனது அறியும்...
**
சமீபத்தில் ஊர் சென்ற போது
ஆற்றங்கரை சென்றேன்..
வயதாகி விட்ட்து போலும்..
நீர் கொஞ்சமாக..
மணலும் போய்..
பாவம்...

pavalamani pragasam
5th May 2011, 09:30 PM
பாவம் ஏணி
ஏற்றுவது வேலை
நகராது நின்று
கடமையை செய்
பலனை எதிர்பாராதே
கண்கூடான தர்மம்

chinnakkannan
6th May 2011, 12:29 PM
”தர்ம்ம் வென்றது!”
ஜெயித்தவர் கூறினார்..
“தர்ம்ம் தோற்றது”
தோற்றவர் கூறினார்
வழக்கம் போலவே
மக்கள் முழித்தனர்..
பின்னர் சிரித்தே
செய்யப் போயினர்
அவரவர் வேலையை....

pavalamani pragasam
6th May 2011, 01:09 PM
வேலையை மட்டும் செய் என்று விரட்டுகிறார்
ஆயக்கலை அறுபத்தி நான்கும் கற்றவளிடம்
சகலகலாவல்லியாய் சுடராய் திகழ்பவளிடம்
விரல் சொடுக்கி ஏவிடும் காட்டுமிராண்டிகள்

kirukan
6th May 2011, 09:15 PM
காட்டுமிராண்டிகள் கூட கருணை கொள்வர்
நாட்டுமிராண்டிகளால் குமுறும் குடிகண்டு.

-
கிறுக்கன்

chinnakkannan
6th May 2011, 11:38 PM
கண்டும் உணர்ந்தும் குடிப்போர் உடலில்தான்
உண்டியும் ஒன்றாய்க் கெடும்

pavalamani pragasam
7th May 2011, 07:32 AM
கெடும் வாடிக்கைப் பணி
பயணம் செய்யும் போது
கூடும் இன்பம் வெகுவாய்
பேரன்களுடன் விடுமுறை
கொண்டாடத் துவங்கியதும்
விழாக்கால குதூகலம் இது

kirukan
7th May 2011, 11:19 AM
இது இப்படிதான் அது அப்படிதான்
என்பார் எதுவும் புரியாதார்.

-
கிறுக்கன்

chinnakkannan
7th May 2011, 03:37 PM
புரியாதார் என்று இருக்கும்
சில மாணவர்களுக்குச்
சொல்லித் தருவேன் அவசியம்..
என்றார் ஆசிரியர்.
’புரிகிறதோ புரியவில்லையோ..
பிற்காலத்தில்
அவர்கள் மாறலாம்
அரசியல்வாதியாக..”

pavalamani pragasam
7th May 2011, 08:27 PM
அரசியல்வாதியாக மாறினாள்
அன்று போரில் துணை நின்று
தேர் சக்கரத்தில் விரல் கொடுத்து
வென்று சாதித்து வரமிரண்டு பெற்று
பல்லாண்டு சென்றபின் தக்க சமயத்தில்
மகனுக்கு அரியணை கேட்ட கைகேயி
பல தாரம் பல மக்கள் என்றால் இங்கு
என்றும் தொல்லை திருகும் தலைவலி

chinnakkannan
7th May 2011, 10:29 PM
தலைவலி
இட்து காதின் நேர்க்கோட்டில்
ஆரம்பித்து
உள்சென்று வியாபித்து
வலது காதுவரை வலிக்க
கைப்பையைத் திறந்து
எப்போதும் நண்பனான
மஞ்சள் மருந்தைத் தடவினால்...
கெக்கெக்கெக்கே என
வில்லத்தனமாய் சிரித்த வலி
கூடிக்கொண்டே செல்ல
‘இதைச்சாப்பிடு.. வாயுத்தொல்லைவராது’
எனத் தோழி கொடுத்த
எக்ஸ்ட்ரா மாத்திரையை
முழுங்க
ம்ஹீம்
கல்லுளிமங்கத்தனமாய்
போகாமல் படுத்தப் படுத்த
முகம் சற்றே வெளிற
காகி தத் துணி கொண்டு
அழுந் தத் துடைக்கும் போது
க்யூபில் எட்டிப் பார்த்தமேலாளர்
என்னம்மா முகம் வாடியிருக்கு..
நெத்திப் பொட்டு விலகியிருக்கு
எனக் கேட்ட கேள்விக்கு
சோகையாய் சிரித்துக்
கணிணியைப் பார்த்தால்
ம்ஹீம் மனம் ஒன்றாமல் போகையில்
கைப்பையிலிருந்து ஒலிவர
எடுத்து செல்லிடைப் பேசியைக் காதில் வைக்க...
”என்ன..ரொம்ப நேரமா அடிச்சேன்..
நிறைய வேலையா.. தொந்தரவு பண்ணிட்டேனா..
கொஞ்சம் சீக்கிரமா வ ந்துட்டேன்...
ஒண்ணுமில்லை..சின்னத் தலைவலி தான்..
காஃபி போட்டுக் குடிச்சுட்டேன்..
முடிஞ்சா சீக்கிரம் வா..
சேச்சே...கவலைப் படாதே..”
செல் அமைதியாக
‘அச்ச்ச்சோ.. இவருக்கு வலி தாங்காதே..
சுக்கு அரைச்சு தலையில்
மெலிசாத் தடவலாம்...
பக்கத்து பங்கஜம் மாமி
ஏதோ திப்பிலியோ மொளகோ
கஷாயம் சொன்னாளே..
அதப்போட்டுப்பார்க்கலாம்...
இப்போதைக்கு மேலாளருக்குச்
சொல்லிச் செல்ல்லாம்’
என நினைத்துக் கைப்பையை எடுக்கையில்
வாட்டிய வலி
போன இடம் தெரியவில்லை...
ஆச்சர்யமாய்...!


++

pavalamani pragasam
8th May 2011, 06:44 AM
ஆச்சர்யமாய் பார்
அழகான சூரியோதத்தை
அன்றலர்ந்த பூவை
ஆகாயத்து மேகத்தை
அதில் பறக்கும் காகத்தை
அடுத்த விட்டு குழந்தையை
அன்றாடம் பார்த்தாலும்
அதிசயமாய் தோன்றும்
அலுக்காத நிகழ்வுகள்
ஆனந்தத்தின் கதவுகள்

chinnakkannan
8th May 2011, 08:33 PM
கதவுகள்
மரத்தால் ஆனவை எனில்
பிறந்த இட த்தை விட
புகுந்த இட த்தில்
நன்மதிப்புடன் இருக்கும்...
**
வாசற்கதவுகள்
மூடியிருக்கும் போது
முறைத்தே நிற்கும்..
திற ந்திருந்தால் சிரித்திருக்கும்..
*
புதிதாய்த்திருமணமான
இளஞ்ஜோடிகளின்
படுக்கையறைக் கதவுகள்
குறுஞ்சிரிப்புடன் நின்றிருக்கும்..
*
குடும்பஸ்தரின் படுக்கையறைக் கதவுகளுக்கு
தொலைக்காட்சி இல்லாமலேயே
நன்றாய்ப் பொழுது போகும்..
வால்கள் இருந்தால்
கஷ்டம் தான்..
ஓடி ஆடி விளையாடுகையில்
டொம்மென்று
சாத்தப் பட்டு அடிவாங்கும்..
**
பீரோ லாக்கரில் இருக்கும் கதவுகள்
பெரும் பாலும் பூட்டுக் கணவனுடன்
இணைந்தே இருக்கும்..
*
துணிஅலமாரிக் கதவுகள்
பெண்களுடையது எனில்
சுமையுடனும்
குதூகலத்துடனும் இருக்கும்..
அதுவே
ஆண்களுடைய அலமாரி எனில்
கொஞ்சம்
சுவாரஸ்யமில்லாமல்
சோம்பியே நிற்கும்..
**
குளியலறைக் கதவுகள்
பெரும்பான்மை
சற்றே அழுக்குடனும்
கண்கள் மூடி
வெட்கத்துடனும் நின்றிருக்கும்
**
ஜன்னல் கதவுகள்
காற்றைக் கண்டாலோ
படபடவென
தன்னையே தட்டி மகிழும்..
*
புத்தக் அலமாரிக் கதவுகள்
உள்ளே இருக்கும் பொக்கிஷத்தைப்
படிக்கமுடியாத்தை எண்ணி
சோர்ந்தே இருக்கும்..
**
கண்ணாடிக் கதவுகள்
கிட் ட த்தட்ட
குழந்தை மனம் கொண்டவை..
உள்ளிருப்பதை வெளிக்காட்டும்..
*
சமையலறைக் கதவுகள்
வாசனையை மட்டும் உண்டு
ஏங்கியே நிற்கும்
*
அடுக்குமாடிக் குடியிருப்பின்
கதவுகள்
நகரத்தின் குணம் கொண்டவை..
தான், தன்னுள் இருப்பவரின்
சுகம்மட்டும் நினைவில் கொண்டு
முக்கால்பொழுது
மூடியே இருக்கும்
**
புதிய இளமையான
கதவுகளை விட
பழங்காலக் கதவுகள்
வேலைப்பாட்டில்
சிறந்தும் பொலிவுடனும் இருக்கும்..
**
பெண்களின் மனக்கதவு மட்டும்
ஆண்களுக்கு
எப்போதுமே புரியாதவிஷயம்
எப்போது திறக்கும்;
எப்போது படபடக்கும்;
எப்போது மூடியிருக்கும்;
எனத் தெரியவே தெரியாது...
எந்தக் காலத்திலும்....!

**

pavalamani pragasam
8th May 2011, 10:26 PM
எந்தக் காலத்திலும்
மேற்கே சூரியன் உதிப்பதில்லை
கோழி கூவப் பழகியதில்லை
கருப்பை ஆணுக்குள் வளர்வதில்லை
பருவம் தப்பி பூத்தலில்லை
மாறாத அமைப்பிதில் பிழையில்லை

chinnakkannan
9th May 2011, 09:50 PM
பிழையில்லை தான்..
இருந்தாலும் ஏதோ குறை..
நிதானமாய் மறுபடி பார்க்கையில்...
நெடுநாள் பிரிந்திருந்தவள் அவள்..
திடீரென
அவன் நட்டநடு காய்கறி மார்க்கெட்டில்
கார் நிறுத்தி இறங்கி
அவளை நோக்கி
வருவான் என எதிர்பார்க்கவில்லை..
கண்கள் நீருடன் சிரிக்க..
வெளிர் சிகப்பு உதடுகள் துடிக்க
கருநீல மேலும் வெளிர்மஞ்சள் கீழுமான
சுடிதாரில்..
அழகிய செருப்பணிந்த ஒருகால் உயர்த்தி.
ஒருகால் தரையிலென நிற்க..
சிகப்புக் கட்டம் போட்ட சட்டை
நீல நிற ஜீன்ஸ் ; கறுப்பு ப்ரேம் கண்ணாடியில்
கண்கள் தெளிவாய்த் தெரிய
அழகிய மீசையும் நான்கு நாள் தாடியும்
சிவந்த உதட்டில் முறுவலுமாய் அவன் நிற்க...
பின்புலத்தில் சாம்பல் வண்ண கார்
கறிகாய்க் கடைகள்;
ஓரிரண்டு பேர் குறுக்கே செல்வது போல...
அழகாய்த் தான் இருக்கிறது..
இருந்தும் இன்னும் கொஞ்சம்
செதுக்கியிருக்கலாமோ..
அவளது முக உணர்ச்சிகளை...
வாவ்..ரொம்ப அழகு...த்த்ரூபம்...!~
பின்னால் குரல் வர
திரும்பினால் இவள்..
‘ஏய்..நிஜமாகவா...’
‘பின்னே’
‘எனக்கு ஏதோ குறைவது போல..’
அருகில் வந்து கிள்ளினாள்..
‘உன் ஓவியம் வெகு அழகு..
உனக்குத் தெரியுமா..
எந்த ஒரு கலைஞனுக்கும்
எளிதில் வராத விஷய்ம்..
தன் படைப்பில் முழு திருப்தி...”

***

pavalamani pragasam
9th May 2011, 11:40 PM
திருப்தி கடையில் விற்பதில்லை
வரிசையில் நின்று வாங்கிச் செல்ல
வரமாய் வாங்கி வரவேண்டுமதை
வளமாய் வாழ்ந்து விடை பெற்றிட

chinnakkannan
11th May 2011, 08:14 AM
விடைபெற் றிட வே போகுது பார்..
..வாழ்வில் உந்தன் துன்பமெலாம்..
தடைகள் எல்லாம் தான் தகரும்..
,,,தானாய்க் கவிதை அகம்மலரும்..
மடையைத் திறந்து விட்டாற்போல்
..மன துள் மகிழ்ச்சி பொங்கிவரும்
கடைக்கண் பார்வை திருமகளும்
..கனிவாய் அருள்வாள் அழகாக..

pavalamani pragasam
11th May 2011, 02:05 PM
அழகாய் அரங்கேறும்
ஆழமாய் சிந்தித்து
அகலமாய் கணித்து
அதிகமாய் திட்டமிட்டு
அர்த்தமுடன் உழைத்து
அருமையாய் அடைகாத்தது

chinnakkannan
12th May 2011, 01:28 AM
அடைகாத் த்து அழகாகவே மரக்கூட்டிலே காகம்
தடையாய்வரும் அரவம் தனை தய ங்காமலே எதிர்த்தே
விடையாகவே பொரிந்தேநடம் புரியும்குயிற் குஞசும்
கடைப்பார்வையில் சிறைப்பட் ட தால் கலங்கித்தின மழுமே...

pavalamani pragasam
12th May 2011, 07:44 AM
அழுமே அந்த வானம்
ஐப்பசி கார்த்திகையில்
அதிரடியாய் கொட்டி
ஆவணி புரட்டாசியில்
ஆலங்கட்டியாய் சித்திரையில்
ஆண்டு முழுக்க மாரி
அவதாரம் மட்டும் மாறி
அதிலே செழிக்குது பூமி

chinnakkannan
13th May 2011, 04:14 PM
பூமித் தாயே..
உன்னிடம் ஒரு கேள்வி..
எது வெல்லும்.. தர்ம்மா அதர் ம மா...
கேட்டான் பாமரன்
சிரித்துச் சொன்னாள்..
தர்ம்ம்
நீள்விடுப்பில் சென்று
பல காலம் ஆகிறது..
இப்போது இருப்பது இரண்டு..
சின்ன அதர்ம்ம்
பெரிய் அதர்ம்ம்..
சின்ன அதர்ம்ம் இன்று ஜெயித்து
நாளை மிகப் பெரிய அதர்ம்மாய் மாறும்..
நாளை பெரிய அதர்ம்ம் ஜெயிக்கும்..!
இது தான் உன் தலைவிதி..
பாமரனுக்கு வந்த்து மயக்கம்...

pavalamani pragasam
13th May 2011, 07:26 PM
மயக்கம் சூழ்ந்தது சுகமாய்
மறந்தது வெயில் சுத்தமாய்
மணலில் கால் புதைய அலையில்
மனமகிழ்ந்து நின்றிருந்தபோது
மக்கள் கூட்டம் ஆரவாரிக்க
மொத்தமாய் கவலைகள் பறக்க
மாறாத ஈர்ப்பினை மறுபடியும்
மறக்காமலுணர்த்திய மெரினா

kirukan
13th May 2011, 07:48 PM
மெரினாவில் வந்த சுனாமி
மக்கள் வாழ்வை பறிக்க
தேர்தல் முடிவு சுனாமி
மக்களை வாழ வைக்குமா
இல்லை வீழ்த்தி சிரிக்குமா
என சொல்லுமா மெரினா!!!

--
கிறுக்கன்

pavalamani pragasam
13th May 2011, 11:17 PM
மெரினா ஒரு மௌன சாட்சி என்றும்
தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்
வறுத்த கடலை சோளக்கதிர் மீன்
வகை வகையாய் குடித்து உண்டு
ராட்டினம் கிளி ஜோசியம் ரசித்து
தொடுவானம் வரை நீளும் கனவு
இன்பம் துன்பம் இரண்டும் பகிர்ந்து
கடல் நீரில் கண்ணீரை கரைத்து
புது அத்தியாயம் எழுத எழுந்து
துவக்கமும் முடிவும் அரங்கேற்றி
அமைதியாய் அப்பாவியாய் கிடக்கும்
நீண்ட அதிசய அழகிய மர்மமே

chinnakkannan
15th May 2011, 12:19 PM
’அழகிய மர் மமே
எனச் சொல்லும்படியாகத் தான்
இருக்கிறது வாழ்க்கை..
அதுவும்
இறுதிக்காட்சி எப்படி என்று
வாழ்ந்தவனுக்குத் தெரியாது
எப்போதும்..
**
அழகிய மர் ம மே
என எல்லாவற்றையும்
கொண்டாட முடியாது..
நாவல்களில், திரைப்படங்களில்
மர்ம்ம் துலங்கினால்
அவ்வளவு தான்..
சுவாரஸ்யம் போய் விடும்..’

‘இப்போது தான் புரிகிறது..
முன்பெல்லாம்
அழகிய மர் ம மே
அழகிய கவிதையே
என்றெல்லாம் புகழ்வீர்கள்..
இப்போதோ பேச்சற்று இருக்கிறீர்கள்..
திருமணமாகி
பலவருடங்கள் கழிந்த தாலா..
‘அசடே..
எவ்வளவு வருடமானால் என்ன
பெண்களின் மனது மர்ம்ம் தான்..
உனக்குத் தெரியுமா
வயதாவதால்
கவிதைக்கு வந்துவிடாது முதுமை..!’

pavalamani pragasam
15th May 2011, 02:08 PM
முதுமை ரசிப்புக்கு கூர் தீட்டுமோ
மாயாஜாலெனும் கேளிக்கையரங்கிலே
பறக்கப் பழகாத நீலக்கிளியும்
புத்திசாலி பெட்டை நீலக்கிளியும்
பல வித சாகச அனுபவம் தாண்டி
ரியோ நகரத்து திருவிழா அமளியில்
அனுபவித்த அமர்க்களம் எத்தனை
நண்பர்கள் உவந்து உதவியதில்
தீயவர்களை அதகளம் செய்தே
அரிய அருகிய இனத்து பறவைகள்
காதலில் விழுந்து கனிந்து மகிழ
முப்பரிமாண வேடிக்கையை வியந்து
பேரப்பிள்ளைகளுடன் கண்டு மகிழ்திட
காலம் கனிந்து வந்தது வரமல்லவோ

chinnakkannan
17th May 2011, 12:08 AM
வரமல்லவா
மக்கள் என்னை மறுபடி
தேர்ந்தெடுத்த்து...
**
ஆரம்பத்தில்
எல்லோரையும் போல
குழந்தைப் பருவத்தில்
நான் சமர்த்து தான்..
நல்ல ஆற்றல் கொண்டவள் தான்..
ஆனால்
சூழ்நிலைகள் அமைய
திரையில் நடிக்க ஆரம்பித்தேன்..

கற்ற பாடங்கள் என்னை
வாழ்க்கையிலும் தொடர வைத்தன
*
அடிபட்டு அடிபட்டு
அனுபவங்கள் பல பட்டு
இருந்த போதில்
குரு பார்வையாலோ
அல்லது
மறைந்த என் குருவின் பார்வையாலோ
சிம்மாசானம்
எனக்கு வ ந்த்து..

உடன் பிறவாமல்
வரக்கூடாத
ஆணவம் அகந்தை
கூட்டுச் சேர
மனம் கட்டுக்கடங்காமல் செல்ல
சிம்மாசனம் கை நழுவ..

மறுபடி முயற்சித்து
அரியணை ஏற
கூடவே உடன் பிறவாதவர்கள் வர
அரியணையிலிருந்து
இறங்கினேன் மக்களால்..

இதோ
இப்பொழுது
பல வருடங்கள்
காய் நகர்த்திப்
போராடி
சிம்மாசனத்தில்
ஒருவராக அமர்வது
கடினம் என நினைத்த போழ்தில்..
நடந்தே விட்ட்து
மெளனப் புரட்சி..

தவறுகள் யார்செய்தாலும்
தாங்க மாட்டோம் எனச்
சொல்லிவிட்டனர் மக்கள்..

என்னைத் தேர்ந்தெடுத்த்து
என் மேல் உள்ள நம்பிக்கையாலா..
அல்ல
நான் தான் ஒரே ஆல்டர்னேட்..
இருந்தாலும்
எஞ்சியிருக்கும் கொஞ்சம் நம்பிக்கையில்
தனிப்பெரும்பான்மையாய்
என்னை அமர வைத்திருக்கிறார்கள்...

பெறுவதற்கான இலவசங்களால்
அவர்கள் கவரப் படவில்லை..
கொஞ்சூண்டு துக்குணியூண்டு
இருக்கும்
என நம்பும் தர்மத்தால் தான்..



நானென்ன செய்ய வேண்டும்..
என் கடமையைச் சரிவரச் செய்வேனா..
எதிரிi களை வசைபாடி
அழிப்பதில் குறியாய் இருப்பேனா..
வடக்கில் சென்று மாறுவேனா..
சுற்றி இருக்கும் கூட் ட்த்தால்
மனம் கலைந்து
சூழ்நிலைக் கைதியாகி
மக்களை மறப் பேனா..
தெரியாது..

ஆனால்
ஒன்று தெரியும்..
நான் செய் த்தை; செய்து கொண்டிருப்பதை;
செய்யப் போவதை
மேலே உள்ள ஆண்டவன்
பார்க்கிறானோ இல்லையோ
அமைதியாகவும் ஆழமாகவும்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
பாமர மக்கள் என
ஒளஒளாக்கட்டிக்காக அதாவது சும்மா
சொல்லப் படும்
புத்திசாலிகள்.....
***

pavalamani pragasam
17th May 2011, 08:01 AM
புத்திசாலிகள் ஆவதுண்டு கோமாளிகள்
பூனைகளுக்கு தனித் தனி வாசல் செய்து
வலது இடது பைக்குள் தவளை ரொட்டி மாற்றி
அல்லது அறிவோடு தந்திரம் கொஞ்சம் கலந்து
பணத்தை சேர்த்து பாதுகாத்துப் பெருக்கியும்
புகழை இலகுவாய் கைத்தடிகளால் வளர்த்தும்
உயரங்கள் தொடலாம் வியர்வையின்றி விந்தையில்லை
பெரிய படிப்பும் பட்டமும் வேணா போதும் நல் யோகம்

chinnakkannan
18th June 2011, 12:30 PM
நல்யோகம் உமக்கு காத்திருக்கிறது
ஆனால் கொஞ்சம்
தன்னம்பிக்கையுடன் முயற்சியும் வேண்டுமென
எஜமான் சொல்வதைக் கேட்டபடி
நெல்மணி எடுத்து உள்செல்கையில்
எழுந்த சிரிப்பு மறித்த்து..
சும்மா பொழுது போகவில்லை என வந்தேன்..
நீ சொல்வது எனக்கே தெரியும்...
எஜமான் மேலும் ஏதோ சொல்ல
எனக்குள் எழுந்த கோபத்தால் சற்றே பறந்து
சிரித்தவன் கையைக் கொத்தப் பார்த்து... பின்
த த் தித் த த் திக் கூண்டில் மேலேறினால்
மறுபடி சிரிப்பு..
பார் நல் யோகம் உன் கிளிக்குத் தான்..
இறகு முளைத்து விட்ட்து..
பறக்கப் போகிறது...
எஜமான் ஆதரவாகக்
கழுத்தைப் பிடித்துத் தடவ
அதில் நான் மெய்மறக்க
சற்றே தூக்கி கீழே வைத்து அழுத்தி
கூண்டினுள் தள்ளி விட்டு
அருகிலிருந்த பையைத் துழாவ
ஆஹா மறுபடி நெல்மணி என
அலகைத் திறக்க, பார்த்தால்
வெளிவந்த்தென்னவோ ஒரு
கத்தரிக் கோல்...

pavalamani pragasam
18th June 2011, 08:18 PM
கத்திரிக்கோல் வெட்டியது பட்டை நறுவிசாய்
அளந்து பிசிறின்றி பேசிய வார்த்தைகள்
துல்லியமாய் விளங்கியது எடுத்த முடிவு
தொடர்ந்தே வரும் தண்டவாள இடைவெளி
ஒட்டாத உறவின் மாற்றமில்லா போக்கிது
பறக்க விரும்பியது என் வீட்டு படித்த கிளி

chinnakkannan
20th June 2011, 11:50 AM
கிளி தானே...
கொஞ்சம் கோணல் மாணலாய்
குண்டாக
கிளையில் இருப்பது போல் தெரிந்ததை
உற்சாகப் படுத்துவதற்காகச் சொன்னால்..
அம்மா இங்கே பாரேன்
புறான்னு தெரியலை அப்பாக்கு எனக்
கைகொட்டிச் சிரிக்கிறது குழந்தை..
அப்பாவுக்கு எதுவுமே தெரியாதுடா
சொன்ன அம்மாவின் முகத்தில்
சின்னப் புன்னகை..

pavalamani pragasam
20th June 2011, 07:45 PM
புன்னகை புரியத் தெரிந்திருப்பது
முதல் தகுதி முக்கியத் தேவை
பொதுமக்களின் தொடர்பு சேவைக்கு
மலர்ந்த முகம் தெளிவான ஒப்பனை
பொறுமையான பதில் பணிவு தயவு
அலுக்காதோ எந்திரப் பதுமைகளுக்கு

chinnakkannan
21st June 2011, 03:19 PM
பதுமைகளுக்குச் சோர்வு ஏற்பட்டிருந்தது..
காரணமென்ன எனத்
தலைவி மதிவதன மோஹினி கேட்க..
“யாரோ போஜ ராஜனாம்..
இங்கு வந்து
நம் விக்கிரமாதித்த மன்னன்
சிம்மாசனத்தில்
அமர்வானாம்..
இது என்ன அநியாயம்..”
மதிவதன மோஹினி சொன்னது..
கவலையை விடுங்கள்..
நான் பார்த்துக் கொள்கிறேன்..
படை புடைசூழ போஜராஜன்
படிக்கட்டில் கால் வைத்ததும்
‘வாருங்கள் மன்னா..
தங்கள் வரவு நல்வரவாகுக..
அனைத்திலும் சிறந்தவரான நீங்கள்
இப்புவியை நன்றாக
சிறப்பாக ஆள
வாழ்த்துக்கள்’
மதிவதனி சொல்ல மற்றவை திகைத்தன..
போஜராஜன் சென்றதும் கேட்டன..
புன்முறுவலுடன் சொன்னது மதிவதனி...
“விக்ரமாதித்தன் ஆட்சி என்பது இறந்த காலம்..
இப்போது போஜ மன்னன் ஆட்சி
நிகழ்காலத்துக்குத் தக்கபடி மாறுவதும்
மன்னனைப் போற்றுவதும் தவறில்லை!.”

pavalamani pragasam
21st June 2011, 07:35 PM
தவறில்லை தவறுகள் என்று
பழைய தலைமுறைகள் பழக்கி
பெரும் பூதமாய் வளர்ந்ததின்று
ஊழலெனும் கொடிய நோய்க்கிருமி
தவறில்லை தவறுகள் என்று
சீர்திருத்தங்கள் பல வந்தனவே
பெண்கள் குழந்தைகள் வாழவே
பகுத்தறிவும் பரிவும் போற்றுவோம்

chinnakkannan
22nd June 2011, 02:13 PM
போற்றுவோம் தான்..
நல் மன்னன்
நல் ஆட்சி
நல் மக்கள்...
நல்ல மழை...
இவை கிடைத்தால்...
தற்போது
கண்மூடி கிடைப்பதுபோல்
காணலாம் கனவு..

pavalamani pragasam
22nd June 2011, 07:44 PM
கனவு வரும் இரண்டு வித வேளையிலே
உறக்கத்திலும் விழித்திருக்கும் போதும்
உறக்கத்து கனவு மறையும் நீர்க்கோலம்
கண் விழித்தபடி காணும் கனவு கத்தி
கலாம் விரும்பியபடி தீட்ட வேண்டியது
கதையில் வரும் பால்க்காரி குடம் போலுடைந்து
வீணாய் போகாமல் விழிப்புடன் முனைப்புடன்
அடியெடுத்து வைத்து அடைய வேண்டிய இலக்கு

chinnakkannan
23rd June 2011, 07:23 PM
இலக்கு எதிரிகளுக்குச் சிக்கல் ஏற்படுத்துவது தானே அண்ணா..
இல்லை தம்பி
நம்முடன் இருந்து நம்மை விட வளர்ந்து,
நம்மை மிரட்டி பணிய வைத்து,
ஆமாம் போட வைத்து,அவமானப் படுத்தி
இப்போது சிக்கலில் மாட்ட வைத்திருக்கும்
உறவினர்க்கு ஏதாவது செய்யவேண்டும்..
‘அது தான் ஏற்கெனவே
நமது தொலைக்காட்சியில் அந்த
தமிழ்க் கதானாயகனின் ப்டங்களாகப்
போடுகிறோமே அண்ணா..
என்ன செய்வது தம்பி
சமயத்தில் பார்வையாளர்களை
இப்படிக் கொடுமைப் படுத்த்த் தான்
வேண்டியிருக்கிறது..
பிற்காலத்தில் அவரால் நமக்கு
உபயோகம் வரும்..
அண்ணா.. நான் சிறை செல்வேனா...
எனக்கும் கொப்புளங்கள் உடலில் வருமா..
நீங்களும்
கண்ணாடியைக் கழற்றி அழுவீர்களா...
என்ன தம்பி இது
அப்படி எல்லாம் விட்டு விடுவேனா என்ன..
முடிதிருத்திக் கொண்டிருந்தவர் சொன்னார்..
ஐயாக்களே தயவு செய்து அந்தப் பலகையைப் பாருங்கள்..
பலகையில் எழுதியிருந்த து...
தயவு செய்து கீழ்க்கண்டவற்றை
இங்கு பேசாதீர்கள்..
அரசியல் மற்றும் நகைச்சுவை..!

pavalamani pragasam
23rd June 2011, 07:44 PM
நகைச்சுவை உணர்வோடு நெருங்கி
அடுத்தடுத்து வரும் அலையென
அடுக்கடுக்காக கதை சொல்லியே
கடலை போடும் காதல் மன்னர்கள்
வலையில்லாமல் மீன் பிடிக்கையில்
சிக்குவது விதி நழுவுவது மதி காண்

chinnakkannan
26th June 2011, 02:48 PM
காண்கின்ற காட்சியிது கற்பனையா இல்லை..
...கன்னிமனம் காதலினால் கனிந்துவிட்ட உண்மை
ஊண்மறந்தாள் உளம்நினைத்தாள் உடையவனின் தோற்றம்
..உறக்கமதைத் தொலைத்துவிட்டே புரளுகிறாள் அங்கே..
ஆண்டவனை தொழுவதறகு மறந்தேதான் நெஞ்சை
..ஆண்டவனைத் தான்நினைத்தே உருகுகிறாள் பாவை..
மாண்டவரை உயிர்ப்பிக்கும் மருந்தாமோ காதல்..
..மாற்றங்கள் நொடிப்பொழுதில் கொண்டுவரும் அன்றோ...

kirukan
26th June 2011, 05:38 PM
அன்றோ இன்றோ என்றும் மாறா
தள்ளையின் பிள்ளை பாசம்.

-
கிறுக்கன்.

pavalamani pragasam
26th June 2011, 07:23 PM
பாசம் எனும் வலை
போராட்டமான நிலை
பகிர்தல்தான் வேலை
புரிதலும் ஒரு கலை
பதற்றமேதும் இல்லை
பற்று முடியும் மாலை

chinnakkannan
27th June 2011, 09:47 PM
மாலையிட மண்டபத்தில் நுழைந்திட்ட மங்கை..
...மன்னவர்கள் தோற்றத்தைக் கண்டவுடன் நெஞ்சம்
கோழையெனக் கணநேரம் துணுக்குற்றுக் குமுற
..கூட்ட்த்தில் இருப்பவரை மறுபடியும் பார்க்க
வேலைவிடும் பயிற்சியினால் விரிந்திருக்கும் மார்பு
..விழிகளிலோ சாந்தமென அமர்ந்திருக்கும் ஐவர்
காளைகள்தாம் இருந்தாலும் காதலனின் தோற்றம்
...கொண்டவந்த நால்வரையும் தெரிவதுதான் எப்போ..

கண்மூடி தமயந்தி கடவுளையே வேண்ட
...கணப்பொழுதில் தோன்றியது ஓரெண்ணம் மனதில்..
மண்ணோக்கி இருப்பதுபோல் பார்த்திடவே நான்கு
..மன்னர்களின் கால்களும்தான் தரைதொடாமல் தொங்க
தன்மனதை ஆட்கொண்ட நளன்காலோ கீழே.
...தொட்டபடி தானிருக்க மனம்சிலிர்த்து அங்கே
வண்ணமயில் போல்நடந்த வஞ்சியவள் மாலை
...வல்லவனின் தோளிலிட்டு மனம்மயங்க நின்றாள்..

pavalamani pragasam
28th June 2011, 09:21 AM
நின்றாள்
மலைமேலே
மலைத்தாள்
மேலேயென்ன
கண்கட்டுது
கனவாயிது
இல்லையில்லை
ஏறியதுண்மை
இளைப்பாறு
காத்திரு

chinnakkannan
29th June 2011, 11:37 PM
காத்திருக்கத் தான் வேண்டும்..
இன்னும் கொஞ்ச நேரம்…
ஒரே கூட்டம்..கசகச..
நல்ல வேளை..
அவள் குழ ந்தையைச் சுமந்து
வெகு முன்னால்...
இடிக்காதீங்கப்பா.. நான் ஆம்பளை தான்..
என்ன வேண்டலாம்..
ஃப்ளாட் நல்ல விலையில்
நல்ல இட்த்தில் அமைய வேண்டும்...
பெண்ணுக்கு எட்டாம் வகுப்பில்
நல்ல மார்க் வரவேண்டும்..
வரமாட்டேன்னு மாமியார்கிட்டயே இருந்துடுத்து..
சின்னதுக்கு ரொம்ப் உடம்பு படுத்தறது..
தேவலையாகணும்..
மாமியார் பாவம்...
கை மூட்டில் வலியாம்..
சீக்கிரம் குணமாகி
எனக்குப் பருப்பு உருண்டைக் குழம்பு
செய்து தரணும்..
சரியான சாப்பாட்டு கண்ணன் டா நீ...
முன்னால் சற்றுத் தள்ளி
நிற்கும் பெண்ணின் வெளிர் நிற முதுகில்..
அது என்ன தேமலா..
அதுவும் குணமாகணும்..
சே..
இன்னும் கொஞ்சம் மின் விசிறிகள்
போட்டிருக்கலாம்...
முன்னால் இருப்பவர் என்ன சொல்கிறார்..
மாசில் வீணையும் மாலை மதியமும்...
சரி தான்...
இது என்னவாக இருக்கும்..
தேவாரமா...திருவாசகமா..
எப்போ நான் கத்துக்கப் போறேன்..
பழங்காலக் கோயில் தான்..
அதற்காக இவ்வளவு கூட்டமா..
திரை விலக கும்பல் முன்னேறி
அருள் தெரிய
‘ஹரஹர மகாதேவா’ என்ற ஒலியில்
எல்லாம் போனது மறந்து..

pavalamani pragasam
30th June 2011, 08:52 AM
மறந்து போகவில்லை
கும்மென்று வீசும்
ஆளை அசத்தும்
மயக்கும் மணம்
மதுரைக்கு வந்த
சோகமான சோதனை
பனிக்கட்டியில் வைத்த
பழைய மல்லிகை
பார்க்க மட்டும் அழகு
பறந்ததுவே வாசனை

chinnakkannan
1st July 2011, 10:03 AM
”வாசனை தெரியாமல் இருப்பதற்காக
முதலில் கடலை மிட்டாய்
பின்னர் ரோஜா பாக்கு போட்டு விட்டு
பின்
பெட்டிக் கடைக்காரனிட்மேயே
தண்ணீர் வாங்கி வாய் கொப்பளித்து,
சைக்கிள் ஏறி கொஞ்சம் சுற்றிவிட்டு
வக்கீல் மாமா வீட்டிற்கருகில் இருக்கும்
வேப்ப மரத்தில் இரண்டு இலை ப்றித்து
சிகரெட் பிடித்த விரலில் கொஞ்சம் கசக்கிவிட்டு
பின் தான் வீட்டிற்கு வ்ருவேன்...
இப்படிச் சின்னச் சின்னதாய்
உன்னை ஏமாற்றியிருக்கிறேன் அம்மா...நிறைய..
என்னை ம்ன்னிப்பாயா.”
மருத்துவ மனையில்
மரணப்படுக்கையில் இருந்த அம்மாவிடம்
மகன் சொல்ல அவள் சிரித்தாள்..
“போடா..மன்னிப்பு அது இதுன்னுட்டு
கிட்ட வா”
மகனின் த.லையைக் கோதிவிட்டாள்..
“நீ சிகரட் பிடிச்சேன்னு எனக்கு
அப்பவே தெரியுமே..”
“எப்படிம்மா.. வாசனை வந்துச்சா”
“இல்லை..
நீ என்ன செஞ்சாலும்
காட்டிக் கொடுத்து விடும்
உன் கண்”

pavalamani pragasam
1st July 2011, 01:29 PM
கண் மங்கிவிட்டது
காது மந்தமானது
கோலோடுதான் நடை
மெல்வதற்கு பல்லில்லை
கஞ்சிதான் வயிற்றுக்கு
எல்லாம் தளர்ந்த பின்னும்
கெட்ட புத்தி மாறாமல்
படுத்துகிறாள் கிழவி

chinnakkannan
2nd July 2011, 10:34 AM
கிழவியின் தலை
முழுதும் நரைத்திருக்க
நெற்றியில் அகலப் பொட்டு;
சாதாரண சேலை..
கோவிலை விட்டுவநதால்
எதிரிலிருந்த அனுமன் சன்னிதியில்
கண்மூடி நின்றிருந்த்து..
கேட்டேன்..
‘நாகப் பட்டினம் போற வழி’
‘அத இந்த
திருக்கண்ணபுரத்திலிருந்தே கேக்கீகளா..
இப்படியே போய் கொளத்த தாண்டி...”
என ஆரம்பித்து விவரமாகச் சொல்ல
காரிலமர்ந்து கிளப்பியபடி
மனைவியிடம் சொன்னேன்..
இந்தக் கிராமத்து ஜன்ங்கள்ளாம்
வெள்ளந்தி தான்.. நம்ம சென்னை மாதிரி கிடையாது’
சொல்லி முடிக்குமுன்
கார்க்கண்ணாடியில் நிழலாட..
கண்ணாடியை இறக்கினால் அவள்..
அந்தப் பேரிளம் பெண்...
‘சாரே.. ரூட் சொன்னதுக்கு
துட்டு தராம போறீகளே..
ஒரு பத்து ரூபா கொடும்..”
என் மனைவி சிரிப்பை அடக்கிக் கொள்ள
நான் கொடுத்த பத்து ரூபாயை
கிடுகிடுவென்று ஓடிப்போய்
அங்கிருந்த உண்டியலில் போட்டாள் அவள்..
திகைத்துப் போய்
‘ஏய் என்ன பண்ற’
‘என் பேரனுக்கு ஜீரம் போகணும்
அதுக்கு ஒரு ரூபா..
நாஞ்சொன்ன வழில்ல நீங்க
பத்திரமாப் போகணும்..
அதுக்கு மிச்சம் ஒன்பது...”
**

pavalamani pragasam
2nd July 2011, 02:24 PM
ஒன்பது உச்சியில் எண் வரிசையில்
ஆளுமை மாண்பு குறையாதது
குறையான பிறவிக்கும் ஏன் அது
குறியீடானது கிரகந்தானா அறிவீரா

chinnakkannan
4th July 2011, 10:24 AM
”அறிவீரா மன்னா..
ஜாதி, மதம் ஏழை பணக்காரன்
என்றெல்லாம் பார்ப்பதில்லை காதல்..
எனவே இளவரசி விருப்பத்தை
அங்கீகரியுங்கள்...”
‘பாட்டி ஒரு சந்தேகம்”
“என்ன அந்தக்கால பட்த்தோட
வசனம் புரியலையா..’
’எனக்கு வீர்பாண்டி கட்பொம்மனே புரியும்..’
‘பின்ன’
‘காதல்னா என்ன?”
‘அதாவது..
இப்போ
ஒங்க அம்மா அப்பாவோட
அன்பா இருக்காளோல்லியோ...
அதான் காதல்..”
“அப்ப
தாத்தாக்கு ஒன்கிட்ட அது இல்லையா..
ஏன் ஒன்ன பாதில்ல விட்டுப் போனார்..”
மளுக்கென மனதில் ஏதோ உடைய
பாட்டியின் கண்களில்
கட்டியது குளம்..

pavalamani pragasam
4th July 2011, 11:46 AM
குளம் வற்றும் கோடை காலம்
குத்தகைக்காரனுக்கு அது லாபம்
கொத்து கொத்தாய் மீன் பிடிபடும்
கடையில் காத்திருக்கும் கூட்டம்

chinnakkannan
7th July 2011, 12:28 AM
கூட்டமாய்த் தான்
பெரியவர்கள்:எல்லாம் ஒன்றுகூடி
அட்சதை போட்டு
நம்மை இணைத்து வைத்தார்கள்..
அதற்கப்புறம்
திருமணச் சடங்குகள்..
ஊஞ்சல்
ஏண்டா என் கையை நெறிக்கிறாய்..
அப்பளாம் உடைத்தல்
தேங்காய் உருட்டுதல் இன்ன பிற..
பின் மாலை வரவேற்பு
திருமணத்திற்கு முன் தினம்
கூடாதென்று நீ சொல்லிவிட்டாயாம்..
எனில்
மூன்று மணி நேரம் கால்கடுக்க
நின்று
தெரியாதவர்களிடம்
முகம் சிரித்து
புகைப்படம் எடுத்தாயிற்று..
அதன் பிறகு
மூத்த அண்ணன்
ஏற்பாடு செய்திருந்த
ஐ ந்து நட்சத்திர விடுதியில்
நம்மைத் தள்ளி
தாளிட்ட்து உறவுமுறை..
முறையே
மாலையில் காய்ச்சிய
நிஜமாகவே பழ்ம் பாலை
பழ்த்துடன் குடித்துப் பின்
திருமண விதிகளில் பாவம் நீ
குறைந்த பட்சம் நூறு தடவை
பெரியவர்களிடம்
சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணியிருப்பாய்
எனச் சொல்லி
என்னை தூங்கப் பணித்து
நீயும் தூங்கினாய்.. நானும் தான்..
பின்
அதிகாலை நடந்த்து
தணிக்கைக்கு உட்பட்ட்து படவா..
*
காலையில் எழுந்தால்
மணியடித்த்து உன் அம்மா..
ஹி.ஹி என என்னை விடக்
கூச்சப்பட்டு
ஏதேதோ சொல்லி
உங்களிருப்பிடம் கூட்டிச் சென்றார்கள்..
அங்கு போனால்
கட்டுச்சாதம்,, இன்னும் வந்த
உறவினர் கூட்டம்
எல்லார் முன் அடக்க ஒடுக்கமாக இருந்து
பின் இரவு வர..
கடங்காரன்..
யாரோ உன் அத்யந்த நண்பன் வர
“மன்னிப்பாய் மலர்
என் நண்பன் கனடாவிலிருக்கிறான்
எனக்காக வந்திருக்கிறான் எனச் சொல்லி..
(எந்த மடையனும் சொல்ல மாட்டான்..
ஆனால் நீ சொன்னாய்)
அவனுடன் இரு ந்தாய்..
மறு நாள் எல்லாருக்கும் பை பை சொல்லி
மூணாறுக்கு ரயில் ஏறினால்..
போச்சு..
அங்கும்
மடிக்கணினியைத் திற்ந்து
யோசிக்க ஆரம்பித்து விட்டாய்..
குட்டிப் பூனை போல் சற்றே உரசி
என்னய்யா என்றால்
யாரோ வலை அக்காவாம்
பாட்டுக்குப் பாட்டாம்
கூட்ட்ம் என்று எழுதணுமாம்..
ரயில்விளக்கைப் பார்த்தாய்..
ம்ம் நற நற
என்னைப் பொறுத்த வரை
அவள் அக்கா இல்லை பாட்டி..!
ஒருவழியாய் மூணார் வந்து
விடுதியில் உடைமாற்றி
வெளியில் வந்தால்...
வாவ்..
என்ன ஒரு இயற்கை
தேயிலைச் செடிகளின் மேல்
காதலுடன் உரசும் தென்றல்..
அதை மீறி
வானிலிருந்து
பொழியும் சாரல்...
ஜாலியாக்க் கைகோர்த்து
வலம் வருகையில்
ஓரிட்த்தில் நின்று
உன்னைக் கண்சிமிட்டி அழைத்து
சின்னதாய் ஒரு முத்தா கொடுக்கலாமென்றால்
யாரோ ஒரு சின்னப் பெண்..
குறுக்கே ஓடிச் செல்ல..
சே..
பின் எடுத்த ஆட்டோவில்
சிற்சில இடங்கள் சென்றுவிட்டு
வந்தால்
உணவு விடுதியில்
கண்டும் காணாத்து போல சாப்பிட்டு விட்டு
அறை வந்த்தும்...
கால் வலிக்கிற்து அன்பே எனச் சொன்னாய்..
பிடித்தால்..
அம்புட்டுத் தான்
கடங்காரா..குறட்டை விட்டுத் தூங்குகிறாய்..
இதை ஞான் யாரிடம் பறயு...
இருக்கவே இருக்கிறது
என் நாட்குறிப்பு....!

***