PDA

View Full Version : kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2



Pages : 1 2 3 4 5 6 7 [8]

Russellstr
28th May 2015, 11:27 PM
Very nice, thanks for sharing!

backgammon live (http://www.gamecolony.com/backgammon.shtml)

venkkiram
29th May 2015, 09:30 PM
என்னை அலைகழிக்கும்
எல்லா நினைவுகளும்
என்னுள்ளிருந்தெ
எழுகின்றன
அதிர்வுகளாய் நீ

http://www.nasa.gov/centers/jpl/images/content/150216main_sea-odonnell-browse.jpg

venkkiram
30th May 2015, 12:18 PM
வீணாகும் வெட்டிப் பேச்சுக்கள்
விழலுக்கு இறைத்த நீர்
எதிர்மறை மிகு எண்ணங்கள்
ஏற்றத்தை தடுக்கும் சுவர்
நம்பிக்கை தரும் ஊக்கங்கள்
நலம் பயக்கும் நெம்புகோல்
விடியலை நோக்கும் வேள்விகள்
முடியாததை முடிக்கும் முயற்சி


http://psytreasure.com/wp-content/uploads/2014/07/positive-thinking.jpg

Gopal.s
31st May 2015, 07:36 AM
முயற்சிக்கு தடையாய் சகுனங்கள் வாஸ்து பென்சுயி
அயர்ச்சிக்கு விடையும் அறிந்தான் விரைவில் கண்டாங்கு
காலை விரைந்தான் கடமைகள் ஆற்றிட பணி நேர்த்தியுடன்
வேலை முடித்தான் விரைவாக சகுனம் தோன்றிய மூலவர்
மூலையில் தூணில் மறைவில் துரிதம் ஒதுங்கிப் பின்
சாலையில் விரைந்தோடி காணாது இருப்பார் கரந்து
நேர்ந்த நியமம் நிறைவேற்ற மூட தொண்டர்களும்
தேர்ந்தே அலைந்தார் தெருமுழுதும் சோர்ந்தொருவர்
காணா வகையில் கலங்கினார் தன் விரதம் அனுஷ்டம்
கோணா நிறைவு காணா குமைச்சலுடன் வஞ்சமுறு
திட்டங்கள் வகுத்தவனும் முற்றாக வேறே புது கோலம்
சட்டங்கள் காணாமல் முற்றாக வேறு நாடக கோலம் தரித்தான்
கொட்டங்கள் கொண்டாட்டங்கள் இம்முறை வீடு கட்டுவோருக்கு
கட்டடங்கள் ஆப்பிரிக்க பழங்குடி நம்பிக்கை நொட்டங்களுடன்

Gopal.s
6th June 2015, 04:43 AM
நம்பிக்கை நொட்டங்கள் சொலவடைநிறைந்த நன்னாட்டில்
தும்பிக்கையான் பாதம் தொழுதே துவங்குவோம் நற்செயலை

சம்பளமே சதம் என்று மூட மத்தியவர்க்கமாக வாழாமல்
தம்பலத்தில் இறுதிவரை வாழ இரண்டாம் வழி தேடி முதலிடு

வேண்டாததை வாங்கி குவித்தால் வெட்டி செலவில் திளைத்தால்
வேண்டிய அனைத்தையும் விற்று திங்கும் நிலை செல்வாய்

செலவு போக மீதத்தை சேமிப்பது பண்டைய புராதன சிந்தனை
செலவு செய்ய சேமித்த பின் மிஞ்சியதை அணுகல் புதுமரபு

ஆற்றிலே ஊற்றிலே இறங்கி சுகம் காண ஆழம் காண கால்கள்
மாற்றியே ஒரு காலை மட்டிலும் இறக்கி ஆழம் கண்டு இறங்கு

புரதம் வேண்டி கோழி முட்டை வாங்கி உண்ண வேண்டி வரினும்
விரதம் கொள் அனைத்து முட்டைகளையும் ஒரு சேர வைக்காதே

நேர்மை என்னும் பண்டம் விலை மதிப்பற்ற பரிசாம் அதனையே
ஓர்மையிலும் செல்வமில்லா கடையரிடம் பெற இயலாதே

(முரளி ,warren buffet சம்பாதிப்பது,செலவழிப்பது,சேமிப்பது,அபாய முதலீட்டில் இறங்குவது,முதலீடு செய்வது,எதிர்பார்ப்பு பற்றி வெவ்வேறு காலகட்டங்களில் வெளியிட்ட சிந்தனைகள் தொகுப்பு)

chinnakkannan
6th June 2015, 02:44 PM
இயலாதே கஷ்டம் எனச் சொன்னாலும்
விடமாட்டார் தமிழய்யா
விழுந்து விழுந்து சொல்லித் தருவார்
அப்படியும் ஏறவில்லை

இதனால் என்ன உபயோகம்
என்ற கேள்வி மட்டும் கேலியாய்
எழுந்ததே அன்றி
கற்கவில்லை...

பின்னர் வயதாக ஆக
அயல் நாடு வேலை, தாய்மொழிப் பற்றில்
மற்றவர் வைத்திருக்கும் பற்றில்
வந்த ஆவல்..

ஓரளவு கற்க முடிந்தது ஆர்வத்தால்

ஆனால் வேலையில்
தமிழய்யாவிடம் சொன்னது போல்
இயலாதே சொல்ல முடியவில்லை
செய்யத்தான் வேண்டும்
செய்யவும் செய்தேன்..

காரணம்... வயிறு..

venkkiram
7th June 2015, 09:43 AM
வயிறு குலுங்க வெடித்துச் சிரித்தால்
வாழ்நாள் நீடிக்க வாய்ப்புண்டாம்
தொலைக்காட்சியில் தாத்தா ஒருவர்
சிரித்துக்கொண்டே சொன்னார்
சுவற்றில் தொங்கும் தாத்தா
சிரித்து நான் பார்த்ததில்லை
கவலையில் கடைசிவரை நிம்மதியில்லாமல்
உழைப்பு உழைப்பேன ஓடாய்
உழன்றுகொண்டே வாழ்ந்தார்
ஆயுளை நீட்டிக்க உதவும் ஆலோசனையை
அவர் உழைப்பில் வாங்கியதொன்றின் வழி
அவரே பார்த்து உணர நேரமில்லாமல்
அமரராகிவிட்டார்

http://beamingnotes.com/wp-content/uploads/2013/06/make-me-laugh-d884e93a2b0d0bcae52ee11e89e2c30c7c5f0a50-s51.jpg

chinnakkannan
18th July 2015, 08:33 PM
அமரராகி விட்டார்
நமது இனிய முதலாளி
அவரது ஆன்மா
சாந்தியடைவதாக
இரண்டு நிமிஷம் மெளனமாய்
இருக்கலாம்..

அந்தவெட்டவெளியில்
எல்லா தொழிலாளிகளும்
கூடியிருக்க
மெளனம் மெல்ல மெல்ல
வளர்கையில்
எங்கிருந்தோ காற்று சீறி
மரத்தடிகளின் கீழிருந்த
பழுத்த இலைகளைத் தள்ளி...

கண் திறந்த போது புன்சிரித்து
புதிய ஆரம்பத்திற்கு
சொன்னது “ஹாய்”

chinnakkannan
31st July 2015, 10:44 AM
ஹாய்யாக ஈசிசேரில்
அமர்ந்தபடி நான் விளையாடுவதைப்
பார்த்துக் கொண்டிருப்பார் தாத்தா
என்ன நினைப்பார் எனத் தெரியாது
கண்கள் மட்டும் விழித்திருக்கும்..

பின்
அவர் மரிக்க
ஈஸி சேர் உள்ளே போனது..

கொஞ்ச நாள் அப்பா
பின் அம்மா
ஞாயிறு மதியத்தில் நான்..

முன்னால் ஒரு ஸ்டூல் போட்டு
கால் நீட்டி உறங்கினால்
அப்படி இருக்கும்...

பின் பின்பின்
கொஞ்சம் கொஞ்சமாய்த் தேய
எலாஸ்டிக் முழுவதும் பிய்ந்துவிழ
வேற மாத்தலாமா
வேண்டாம்
மரத்துல வாங்கிடலாம்
இதைத்தூக்கிப்பரணில் போடு

தூரப்போட்டுடலாமாம்மா

வேணாம் தாத்தா நினைவாய்
இருக்கட்டும்..

நல்ல வெய்ட்
எடுத்து மேலே போட
அது விழுந்த இடம் அங்கு
ஒதுங்கி இருந்த
தாத்தாவின் பழைய படம்....

pavalamani pragasam
19th August 2015, 07:04 AM
படம் எடுத்து களிக்கிறேன்
பூவெல்லாம் புதுசு பாராதது
பகிர்ந்தேன் பார்த்த அழகை
பதிவிட்டேன் உடனே முகநூலில்
பரவசம் நட்புலகமதை ரசிக்கையில்
பாசமகள் வீட்டில் இனிய பொழுது

pavalamani pragasam
14th October 2015, 10:31 PM
பொழுது புலருது ஒரு பக்கம்
உறங்கச் செல்லுது மறு பக்கம்
பல மாதமாய் நான் இந்தப் பக்கம்
புது அனுபவம் இந்த இரு பக்கம்

Russellhni
16th October 2015, 07:07 PM
பக்கம் எல்லாம் வெற்றாகவே
பார்க்கையில் நெஞ்சில் வெட்கம்
பேனாவில் மசி இலா குறையா?
பணந்தேடி அலைவதின் விலையா?

பகிற அகப் பையில் எதுமிலா நிலையா?
பந்தமதில் வந்த சிக்கல் வலையா? அல்ல
பசியா ? பிணியா ? படிக்காத குறையா ?
பகர்வாயா மனமே - என் துக்கம் தீராயா?

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTqPtOnHD6DPjyEd0f1gXq0AF0ODSKSN VGSPsOgmvOtxPBbSY1j

pavalamani pragasam
16th October 2015, 08:36 PM
நிலையா இங்கெதுவும்
இன்பமும் துன்பமும்
மெய்யும் பொய்யும்
இன்னும் பலவும்

venkkiram
16th October 2015, 09:17 PM
பலவும் கற்றால் நிச்சயம் பண்டிதர் ஆகலாம்
பழகிய கலைகள் ஒருநாள் கை கொடுக்கலாம்
பரந்துபட்ட உலகை அன்பால் இணைக்கலாம்
பண்பாடு காத்து பரஸ்பர நட்பு பேணலாம்

pavalamani pragasam
17th October 2015, 08:44 AM
பேணலாம் ஒரு செல்ல நாயை
வாலாட்டும் வாயில்லா சீவன்
தன் கண்ணில் தேக்கிய பாசம்
தரும் இணையில்லா பரவசம்

Russellhni
18th October 2015, 08:30 AM
பரவசம் அது முற்றிய ஆனந்தம்
தன்வசம் இழந்து தன்னை மறந்து
பிறன்வசம் இழைந்து பின் குழைந்து
பெறுதற்கரிய பேரானந்தம்

பக்தியினாலும் வரலாம் பாசத்தினாலும்
நேசத்தினாலும் கூட வரலாம் - பரவசம்
பகுக்க இயலாத அனுபவம் இம்மைக்கும்
மறுமைக்கும் இடைப்பட்ட நிலையாம்

அரங்கன் பேர் கேட்டாலே
ஐயப்பனை நினைந்தாலே
ஆண்டவன் புகழ் பாடினாலே
ஆழமான ஆன்மிகருக்கு பரவசம்

ஆண்டுகள் ஓடி பின் அன்னை நாட்டினில்
அடி வைக்கும் குடி மகனின் பிரவேசம்
ஆங்கே தோன்றலாம் பற்றின் பரவசம்

ஆண்டுகள் பிரிந்து அன்னையை வீட்டினில்
அன்பு தந்தையை அவர்தம் மாறா அன்பை
பார்த்தாலே சிலருக்கு பற்றும் பரவசம்


https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTCNspX4UyOoiVNT7mNYAWnCa1Mg72CB zjeEMCUwqJwj_DniQ9S5g

pavalamani pragasam
18th October 2015, 10:13 AM
பரவசம் தான் ஆரம்பம்
அதுவே க(வி)தை முடிவு
ஆகா அது பெரும்பேறு
இது இனிக்கும் தேன்கூடு

chinnakkannan
18th October 2015, 09:00 PM
தேன்கூடுகளுக்கும்
அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கும்
ஒற்றுமை உண்டு..

நிறையத் தேனிக்கள் வாழும்
முன்னதில்
நிறைய மக்கள் பின்னதில்

தேன் கூடுகள் கலைக்கப் பட
பதறித்திரியும் தேனிக்கள்
மறுபடி கட்டி ஒற்றுமையாய் வாழும்

அடுக்கு மாடிக் குடியிருப்பு மக்கள்
ஒற்றுமையாய்ப் பிரிந்து வாழ்வர்
..
கலைக்கவே வேண்டாம்..

pavalamani pragasam
18th October 2015, 11:38 PM
வேண்டாம் என்றால் விடுமா
வராதே என்றால் நிற்குமா
வெறுப்பும் விருப்பும் இல்லாத
காலப் பாம்பும் கற்பனையும்

venkkiram
19th October 2015, 08:48 AM
கற்பனையும் கைத்திறனும் கைகோர்த்து நடக்க
கலைநயம் பெறுகிறது கற்சிற்பம் ஒன்று
ஒன்றோடொன்று சேர்த்து சேர்த்து வருவதல்ல
விலக்கி விலக்கியே உருவம் தேடும் உன்னதம்

http://www.thehindu.com/multimedia/dynamic/01397/18EPBSSCULPTING_04_1397331g.jpg

Russellhni
19th October 2015, 10:20 AM
உன்னதமாய் நண்பரோடு என் மகன் ஆடுகிறான்
உன்மத்தமாய் யாருடனோ அவன் பாடுகிறான்
உறக்கத்தில் யாரையோ தினம் தேடுகிறான்
உண்மையென்ன சொல்லுங்கள் டாக்டர்

கண்மணியின் கவலை இது கலங்கினாள்
கண்ணன் சின்ன குழந்தை அவன்
கண்முன் தான் யாரும் இல்லையே இதன்
காரணம் என்ன டாக்டர் ?

கவலை வேண்டாம் - டாக்டர் தில்லை
காரணம் இது மனநோய் இல்லை
கற்பனைக்கு கடிவாளம் இல்லை குழந்தை
கண்ணனுக்கு ஒன்றுமேயில்லை

கூட்டி வா உன் மகனை சரியாகும்
கூட வந்த கணவனுக்கோ ஆச்சரியம்
அதெப்படி சாத்தியம் டாக்டர்
அவளுக்குத்தான் மகனே இல்லையே !

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRILtTN7LXCcFkSbRAmxTf4pMTe-OEUWrjnPlvsFylp_FQb52o_6w

chinnakkannan
19th October 2015, 02:34 PM
இல்லையே என்பதை நம்பாமல்
விழி அகல
இன்னொரு கை பிடித்திழுத்து
ஒவ்வொரு விரலாய்த் திருப்பித் திருப்பி
அந்தக்கையிலும்
ஒன்றுமில்லாமல் போக
கண்களில் புதிருடன்
அமர்ந்திருந்த நாற்காலியைச்
சுற்றி வந்து தேடி
பின் என் முகம் பார்த்தபின்..

ஏ என வாய் கோணி அழும்
அப்போதுகொடுக்கலாம்
ஒளித்து வைத்தசாக்லேட் என
நினைத்தால்..

சுற்றிவந்து முகம் பார்த்து
மாமா..சாக்லேட் ஆ போச்
என சொல்லி
தீவிர சிந்தனையுடன்
திரும்பி
தையாத் ததக்கா என
நடக்க..

ஓஹ்.. ச்சோ ச்வீட்..!

pavalamani pragasam
20th October 2015, 06:44 AM
ச்சோ ச்வீட்..யா
பாருடி தடியன் கேலி பண்றதை
கிசுகிசுக்கிறாள் தன் தோழியரிடம்
நடையை உடையை கவனிங்கடி
எட்டுக்கு அடுத்த நம்பர் இவனோ
இது ரெண்டும் கெட்டான் உலகமடி

chinnakkannan
20th October 2015, 12:55 PM
இரண்டுங் கெட்டான் உலகமடி
..இதுவும் என்றும் தெரியுமடி

சிறப்புற வாழ்ந்தால் சிந்தையுள் பொறாமை
..சீக்கிரம் கொண்டே மெல்லத் தூற்றும்
உரமுடன் இவனும் வாழும் வாழ்க்கை
..எப்படி வந்தது தெரியா தாவென..

திறம்பட் வாழும் வாழ்க்கையில் சோதனை
..தீர்க்கமாய் வரவும் வழுக்கி விழுந்தால்
கரம்பல கொட்டி களிகொள நகைக்கும்
..கணமும் ஊசியின் முனையாய்க் குத்தும்

பறக்கும் போக்கை ப் பாய்ந்தே இழுக்கும்
..பறக்காவிடிலும் பக்கென நகைக்கும்
சுறுசுறுப் பாக வேலை செய்தால்
..சுத்தம் அவந்தான் திமிரெனச் சொல்லும்

விறுவிறுப் பில்லா வேலைசெய்தால்
..வேகம் இல்லா சோம்பே றியெனும்
நறுவிசுக் காரியம் பாராட் டாது
.. நல்லதை என்றும் கொண்டா டாது

இரண்டுங் கெட்டான் உலகமடி
..இதுவும் என்றும் தெரியுமடி..

pavalamani pragasam
20th October 2015, 10:05 PM
தெரியுமடி கள்ளி
நிற்கின்றாய் தள்ளி
பொய்யான கோபமிது
பொல்லாத பாசாங்கு
ஊடல் நாடகமாடி
சாதிக்கும் சதியே

Russellhni
21st October 2015, 11:36 AM
சதியே என் அழகு ரதியே
தளரா இள நதியே தண் மதியே
கண்ணே பொன்னே காண்பாயே- உன்
கண்கவர் மனங்கவர் வெகுமதியே !

கண்ணே இதோ கணவன் என் பரிசு
கண்டிப்பாய் உனக்கு பிடிக்கும் நீயும்
காலம் காலமாய் ஏங்குகிறாய் !
கிடைக்குமா என்றே வேண்டுகிறாய் !

அன்பே பிடி உன் ஆசை பரிசை
அழகாய் நாட்டிடுன் கையெழுத்தை
அனுபவி விடுதலை இனி உனக்கு !
ஆருயிரே என் விவாக ரத்து பத்திரமிது

chinnakkannan
21st October 2015, 01:22 PM
பத்திரமிது
ஜாக்கிரதை
ச்சும்மா சும்மா தலையை ஆட்டாதே
ஜாக்கிரதை
குதித்து விளையாடாதே
அலுங்காமல நடடீ

என
அம்மா பார்த்துப் பார்த்துச்
சொல்லிப் போட்ட
ஜிமிக்கி
மறு நாள் காலையில் காணாமல்போய்விட
திட்டுக்கள்
என் அழுகை
பின் உபதேசங்கள்
எனத் தொடர்ச்சியாய் கிடைத்தது ஒருகாலம்

நேற்று
எதையோ
பரணில் தேடப் போய்
பழைய சாமான்களின் இடையே
ஜிமிக்கி
சிரிக்க
நினைவுகள் மனதில் முந்த

வந்தது அழுகை..

pavalamani pragasam
21st October 2015, 10:40 PM
அழுகை எனக்கு வரத்தான் செய்கிறது
பழுத்த இலைகள் விழ பார்க்கையில்
பழைய பள்ளித் தோழி பறந்தாள்
காலையில் கடிதம் சொன்ன தகவல்

Russellhni
24th October 2015, 09:20 AM
தகவல் வந்தது தங்கள் தனயன்
தீரன் வீரன் அசகாய சூரன்
தண்ணீரில் தவித்தவனை அவன்
தன்னலம் இன்றி தரை சேர்த்தனன்

மறுநாள் மீண்டும் வந்த தகவல்
மீட்டவன் உதவி வியர்த்தமே
மீண்டவன் இன்று மாண்டான்
மனநோய் ! மாட்டியே தொங்கினான்

அரண்டான் என் மகன் ! ஆகாது ஆகாதே
அவனாகவா தொங்கினான் ? பொய்தானே !
அன்பாய் உலர்த்தினேனே ஈரம் காய !
அவனை தூக்கில் மாட்டியதே நான்தானே !




https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSo9kdzbROs-932FoVZTYQcMMGP7DX3DcHUTTYZX-Z6_9s967MoUA

pavalamani pragasam
24th October 2015, 08:29 PM
Omg!:-d

pavalamani pragasam
24th October 2015, 09:40 PM
நான்தானே ஏமாந்தது
கானல்நீர் பின் ஓடியது
நாய் வாலை நிமிர்த்த
கல்லில் நார் உரிக்க
சக்தி விரயம் ஆனதே
ஞானம் இன்று வந்ததே

chinnakkannan
27th October 2015, 12:04 PM
வந்ததே என
ஒரு சின்ன சந்தோஷத்தைப் பெரிதாய் எண்ணித்
துள்ளி ஆடிய காலமும்
சின்ன வருத்தத்திற்கு
மிகப் பெரிய மனம் நோதல் செய்த காலமும்
போய்த் தான் விட்டது

கண்களில் கூட அமைதிப் பார்வை..

வயதாகிறதா என்ன என நினைத்தாலும்
அது
அனுபவம் சொன்ன பாடம்..

pavalamani pragasam
27th October 2015, 09:20 PM
பாடம் படிப்பது பள்ளியறையில்
பட்டம் பெறுவது தாய்மைப்பேற்றில்
பெருமை கிடைப்பது பாட்டியாவதில்
பிறந்த பலனின் பூரண அனுபவம்

chinnakkannan
28th October 2015, 02:36 PM
அனுபவம் தலைப்பில் நீயும்
..அழகுறச் சொல்லு மேலும்
பனுவலோ பாவோ பின்னும்
..பாங்குடன் உரையோ ஏதும்
நுணுக்கமாய்ச் சொல்லு அங்கே
...நூதனப் புதுமை காட்டி
அனுதினம் நினைக்கும் வண்ணம்
..ஆய்ந்துதான் சொல்லென் றீர்நீர்

ஆழ்ந்து கொஞ்சம் யோசித்தால்
..அழகாம் மனிதன் நடத்துகின்ற
வாழ்வில் தினமும் தினம்தோறும்
..வாகாய்ப் பலவாய் அனுபவம்தான்
சுற்றம் சூழல் சிந்தனைகள்
..சூறா வளியாய்த் திருப்பங்கள்
மற்றும் இன்னும் பலவாறாய்
,...மாற்றம் தருமே அனுபவமே..

பல்வித அனுபவம் படப்படத்தான்
..பக்குவ நெஞ்சமும் தான்வருமே
நல்விதம் அல்விதம் எனவேதான்
.. நாளிலும் கிடைக்கும் அவையன்றோ
சொல்வதை கிடைப்பதைச் சிந்தையுள்ளே
..தொக்கியே வைத்துப் பாடத்தைக்
கற்றிடக் கடவுளும் தென்படுவார்
..கண்ணனின் தாசனும் சொன்னதன்றோ..


//கண்ண தாசனின் கவிதை பிறப்பினில் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் என ஆரம்பித்து..கடைசியில் அனுபவத்தால் தான் அமைவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்
ஆண்டவன் எந்தன் அருகினில் வந்து அனுபவமே தான் நானெனச் சொன்னான் என வரும்..அதைஇங்கு பயன் படுத்தியிருக்கிறேன்//

pavalamani pragasam
28th October 2015, 11:12 PM
சொன்னதன்றோ அதிகாலை கனவு
அதிலே எத்தனை அழகு தெளிவு
கிட்டும் உன் மனம் போல் வாழ்வு
எழுந்து வா காப்பி ஆறப்போகுது

Russellhni
29th October 2015, 11:02 AM
ஆறப்போகுது ஓர்நாள் ஆன்மா - ஆயின்
தீரப்போவது எப்போது இப்பாவம் ?
சேரப்போவது எப்போது அவன் பாதம் ?
நேரப்போவது எப்போது எந்தன் முக்தி ?

இளையாழ்வான் கணைகளை கொடுக்க
எடுத்து திருக்கச்சி நம்பி தொடுத்து
அருளாளன் கச்சி வரதனிடம் விடுக்க
ஆண்டவனும் அவர் சொல் செவிமடுத்தார்

வரந்தரும் வரதனின் ஆறு வார்த்தைகள்
வைணவர் வாழ்வுதனில் ஒளி விளக்காய்
விசிட்டாத்வைத பொறியாய் அறநெறியாய்
வந்ததே எம்பெருமான் வாய் வேதப்பொருளாய் !

'அஹம் ஏவ பரந்தத்வம்' என்றான் இறைவன்
அடைய வேண்டிய பரம்பொருள் நானே என்றான்
அடுத்து அவன் 'பேதமே தரிசனம்' என்றான்
ஆண்டவன் வேறு நாம் வேறேதான் அன்றோ !

அவனடி சேர அறவழி 'உபாயம் ப்ரபத்தியே!'
அகங்காரத்தை விடு என் கதி பற்று – என்றான்
ஐயனே மரணம் வருங்கால் உனை மறப்பேனோ
அப்போதைக்கு இப்போதே நின் பாதம் பற்றவோ

ஐயம் கொண்ட கேள்விக்கு அவன் ஆசுவாசம்
'அந்திம ஸ்மிருதி வேண்டாம்' -தப்பாமல் தினம்
எனை நினை ! உன் நினைவு தப்புங்கால்
தப்பாமல் காப்பேன் அந்நாளில் உனை

ஐந்தாவதாய் மொழிந்தான் : சரண் கொண்டால்
ஆன்மா அகலும் போழ் 'அக்கணமே மோட்சம்'!
ஆறாவதாய் சொன்னது 'சத் ஆச்சார்யம் சமஸ்ரைய! '
ஆண்டவனை அடைய ஆன்மிக குருவை பற்று !

பேரருளாளன் சொல் கேட்டு இளையாழ்வானும்
பெரியநம்பி பற்றவே வைணவம் தழைத்ததே
ஆறு வார்த்தையால் ஆண்டவன் நெறி பற்றி
அழகாய் திருவடி காட்டிய திருக்கச்சி நம்பி வாழி !

http://2.bp.blogspot.com/_h7qhuHzSykY/S1UFub-BXlI/AAAAAAAACJE/UBjJ5jqlfcU/s400/015.jpg

pavalamani pragasam
29th October 2015, 10:16 PM
நம்பி வாழி
நன்னெறியை
நம்பிக்கையை
நலமே கிட்டும்

chinnakkannan
30th October 2015, 10:46 AM
கிட்டுமெனக் கண்ணன்கை பற்றப் பார்த்தால்
...கீச்செனவே கத்தியவன் நழுவிச் செல்வான்
எட்டாத உயரத்திலே வெண்ணெய்ப் பானை
...ஏணிவைத்து எடுக்கின்றான் பின்னும் என்ன
மொட்டெனவே முழிமுழித்துக் கையின் வெண்ணை
...மோகமுடன் வாயினிலே இடுவான் நன்றாய்
கொட்டிடுவேன் அடியசோதா உந்தன் பிள்ளை
...கோர்த்தேநான் பிடித்திட்டால் ஆமாம் சொன்னேன்..

pavalamani pragasam
30th October 2015, 10:19 PM
சொன்னேன் சுரக்காய்க்கு உப்பில்லை
விடிய விடிய கதை கேட்டு
விடிந்தபின் சீதைக்கு ராமன் சித்தப்பன்
பளிச்சென புரியும் பழமொழியில்
பாங்காய் உணர்த்தும் அவை
பொருளும் பொல்லாத கோபமும்
வாய் வழி வார்த்தைகள்
வாழ்வியலின் அழகிய வெளிப்பாடு

chinnakkannan
3rd November 2015, 02:44 PM
அழகிய வெளிப்பாடாய்த் தான்
இருந்தது முன்பு
அந்தப் பூனைக்குட்டியின் பார்வை
கதவைத் திறந்து நான்
வெளியில் வந்ததும் தாவி
காலருகில் வந்து ஒரு செல்ல மியாவ்..
கையிலுள்ள சீஸை, அதன் உணவை
போட்ட பின் ஆர்வ உண்ணல்..

தினம் நடக்கும் விஷயமென்றாலும்
சில நாள் கொண்டுவர
மறந்துவிட்டேன்..
அப்படியும் வந்து உரசும்..
போகும்..

பின் அதுவும் தேய்ந்து
மூலையிலிருந்து ஒரு பார்வைமட்டும் விடுகிறது..
ம்ம்
கொஞ்சம் கொஞ்சமாய் அதுவும்
கற்றுக் கொண்டுவிட்டது
மனிதம்..

pavalamani pragasam
5th November 2015, 01:17 PM
மனிதம் காணாமல் போய்விட்டதாம்
தண்டோராக்காரன் அறிவித்தான்
தேடிக்கண்டுபிடிக்க வாருங்கள்
கண்ணில் கருணை காட்டிப் பாருங்கள்
வார்த்தையில் இனிமை கூட்டிப் பேசுங்கள்
சட்டென்று இளகி உருகப் பழகுங்கள்
மாயமாய் மறைந்து போன மனிதம்
முன்னால் வந்து நின்று சிரிக்காதோ

chinnakkannan
11th November 2015, 01:10 PM
சிரிக்காதோ இந்தப் பெண்..

லட்சணமான முகம்
பக்கத்து ஃப்ளாட் புதுக் குடித்தனம்

முப்பது செகண்ட் லிப்டிலும் சரி
எதிரில் பார்த்தாலும் சரி

ம்ஹூம்
ஒரு பதில் தலையாட்டல்
பதில் புன்முறுவல்..

சென்ற நாட்களில் வந்த தகவல்

அவள் தனியாம்
புருஷன் விவாகரத்தாம்
ஏதோ ஸகூல் டீச்சராம்..
ட்யூஷன் அண்ட் குறைந்த சம்பளம்
என ஓடுகிறதாம் வாழ்க்கை..

பக்கத்து க்ராசரி ஸ்டோர் காரன்
சொன்னதைக் கேட்டதும்
பாவமாய்த்தான் இருந்தது..
இன்னொன்றும் ..

மன சந்தோஷத்தில்
தான் பூக்கும் சிரிப்பூ..

pavalamani pragasam
11th November 2015, 06:25 PM
சிரிப்பூ
சிதறும் மத்தாப்பூ
தீபாவளி திருவிழாயிது
மறுபடி வருவதற்கு
வருடம் ஒன்றாகுமே
வருத்தம்தான் வருகுதே

chinnakkannan
12th November 2015, 11:43 AM
வருகுதே கண்ணனவன் வருகையினைக் காணாமல்
..வாடிய கண்களிலே கண்ணீரின் வெள்ளோட்டம்
பெருகுதே மனத்தினிலே துன்பவலை தானெழுந்து
..பெண்ணவள் பெருமூச்சாய் விட்டுவிட, மெழுகாட்டம்
உருகுதே உணர்வினிலே தானெழும்பும் நினைவலைகள்,
..ஊர்வலம் போலவங்கே முன்பின்னாய் தேராட்டம்
அரும்பிட அவள்மன்னன் அங்குவந்தால் இப்பாவை
..ஆடிட மாட்டாளோ பெருந்தோகை மயிலாட்டம்..

pavalamani pragasam
13th November 2015, 08:22 AM
மயிலாட்டம் ஒயிலாட்டம் போலொரு ஆட்டம்
ஆடியதின்றதிகாலை சென்னை வானம்
ஆண்டவனின் உற்சாக ஊழித்தாண்டவமோ
இடி மின்னல் மழை அதன் நட்டுவாங்கமோ

chinnakkannan
13th November 2015, 12:45 PM
நட்டுவாங்கமோ எனக் கேட்டால்
ஆம் எனத் தான் சொல்லவேண்டும்..

எதிர்ஃப்ளாட்
புதுக்குடித்தனம்
புதுக் கல்யாணம் போல
மெஹந்தி இன்னும் அழியவில்லை
நன்னாத் தான் இருந்தாள்
இருப்பினும்
எப்போதும் முகம் சுருங்குவதும்
எதற்கெடுத்தாலும் கோப விழிகள்
காட்டுவதும்
அவன் அடங்கிப்போவதும்

கொஞ்சம் நேரில் போகும் போதும்
கொஞ்சம் கார்பார்க்கிங்கிலும்
கொஞ்சம் அடுத்த ஃப்ளாட் மாமியாலும்
கிடைத்த தகவல்கள்

இன்னும் பேசியதில்லை..
என்ன வேண்டியதிருக்கிறது
சமர்த்தாய் குடித்தனம் பண்ண வேண்டாமோ
புள்ளையாண்டான் லட்சணம் தான்..
ஓமான் ஏரில் வேலை போல
வீட்டுவாசலில் ஸ்டிக்கர்..

ஒரு லிஃப்ட் சந்திப்பில்
தனியாய்க் கணவன் மாட்ட
புன்னகை பரிமாறிக் கொண்டு
எப்படி இருக்காங்க உங்க வைஃப்
அவஸ்யம் வீட்டுக்கு வரணும் நீங்க


கொஞ்ச நாள் போட்டும் ஆண்ட்டி
என்னோட அக்கா பொண் தான்
நான் ஏஜ் டிஃபரன்ஸ் ஜாஸ்தின்னு
சொன்னாலும் அம்மா கேட்கலை
சரியாய்டும் குழந்தைத் தனம்..

இப்பவந்தா ஏதாவது சுருக்னு சொல்லிடுவா
யாரையாவது..ஸோ…

சிரித்தேன்
இதானா..
நோப்ராப்ளம்ப்பா..
அப்படிஎல்லாம் ஃபீல் பண்ணாதே
ஒரு நாள்
அழைச்சுண்டு வா…

குழந்தையை…

pavalamani pragasam
14th November 2015, 11:02 AM
குழந்தையைப் பார்த்துக்கொள் பத்திரமாய்
குறைந்துவிடும் உன் பாரங்கள் விசாரங்கள்
கண் விரிய பார்த்திடவேண்டும் அதிசயமாய்
கைகொட்டி ரசிக்கவேண்டும் ஒவ்வொன்றையும்
களித்திட வேண்டும் சின்ன சின்ன சாதனைக்கும்
உன் உள்மனமெனும் குழந்தையை காப்பாற்று

Russellhni
23rd November 2015, 08:22 AM
காப்பாற்று கடவுளே !எனக்கு கருணை காட்டு
கேசவா மாதவா கோவிந்தா உன்னருள் நீட்டு
கண்ணனின் கதறல் : கரியவன் காதோ செவிடு
கைவளை ஓசை ! கதவு தட் தட்டு !அம்மா அதட்டு !

பள்ளி கொண்டது போதும் கண்ணா எழுந்திரு
பள்ளிக்கு நேரமாச்சு :பர பரவென்றே புறப்படு
பக்கத்து வீட்டு பையன் கூட பறந்து விட்டான்
போகத்தான் வேண்டும் வேண்டாம் வீண் வாதம்

பள்ளிக்கா? மாட்டேன் அம்மா ! போகமாட்டேன் !
புரிந்து கொள் அம்மா !பாடம் சொல் வாத்திகளுக்கும்
பின்னே பசங்களுக்கும் என்னை பிடிக்கவில்லையே
போகத்தான் வேண்டுமெனில் ஏனென்று சொல்?
.
.
.
.
.
.
.

படுத்தாதே கண்ணா ! பள்ளி ஆசிரியரே நீ தான் !


https://external.fmaa1-1.fna.fbcdn.net/safe_image.php?d=AQAbT9a-pJVfBP6Z&w=188&h=188&url=https%3A%2F%2Fencrypted-tbn3.gstatic.com%2Fimages%3Fq%3Dtbn%253AANd9GcR1ke R5untjwD4dUZkBMNZLRi2IP3nnidv9VXgUq4Jyf_UYbiAOfQ

(படித்த ஜோக்கின் தழுவல்)

pavalamani pragasam
23rd November 2015, 06:46 PM
நீ தான் நீயே தான்
பொறுப்பு உன் விதிக்கு
அழ ஆசைப்பட்டால் அழு
ஆனந்தம் வேண்டுமா
கொட்டிக்கிடக்கு அள்ளிக்கொள்
அலை ஓய்ந்து குளிக்கவோ
நாய் வாலை நிமிர்த்தவோ
வீண் முயற்சிகள் வேண்டாம்
சம்சார சாகரம் கடக்க இருக்கு
நம்பிக்கை என்னுமோர் துடுப்பு

Russellhni
24th November 2015, 02:19 PM
துடுப்பின்றி தோணி தரை தட்டாது
தூயமதி இன்றி மனமோ நிலையாது
அவா வெகுளி கொண்டலையாது
அலைகடலாம் நின் வாழ்வினை கட
அலகிலா அக்கடவுள் சரண் பற்றி

pavalamani pragasam
24th November 2015, 04:32 PM
பற்றி கொள்ளத்தானே
பஞ்சும் நெருப்பும்
விட்டிலும் விளக்கும்
கொம்பும் கொடியும்
இரும்பும் காந்தமும்
அழிவா ஆதரவா
இரண்டும் இயல்பா
வியப்பான விதியா

Russellhni
26th November 2015, 03:41 PM
விதியாலே தான் வாழ்க்கை
மதியாலே மாற்ற முடியாது
விதிப்படி தான் யாவும் அவரவர்
விதிப்படி தான் சாவும் என்பார் சிலர்

வீதி கடக்கும் போது மட்டும் அவர்
பீதியுடன் நோக்குவார் இருபுறம்
ஊழிற் பெருவலி யாவுள என்றீரே
விதிவிலக்கு இதற்கேனோ என்றால்

வெட்கப்பட்டே இம்மாந்தர் சாதிப்பர்
விதி சாலை விதி இதுயெனவே !

pavalamani pragasam
26th November 2015, 07:48 PM
இதுயெனவே அறியும் கணம்
பிறக்கும் போதிமர ஞானம்
மாறி மாறி வரும்
பகலும் இரவும்
இன்பமும் துன்பமும்
நிலையாமை நிலையானது

Russellhni
28th November 2015, 03:38 PM
நிலையானது எதுவென கேட்பின்
கலையாத அன்பு தொலையாத புகழ்
மலையான நம்பிக்கை மீளாத மரணம்
அதனினும் நிலை எதுவென கேட்பின்
நிலையாமை ஒன்றே நிலைத்து நிற்கும்
நீக்கமற இவ்வையகத்தில் என்றென்றும்
நெருநல் உளனொருவன் இன்றில்லை இது
நில்லாத மாற்றத்தால் இயங்கும் உலகு!

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTH8Z49muCT_vaGjtSBssI3u3ZuJZoCj tCeuHq-l681yChV495jbg

pavalamani pragasam
28th November 2015, 07:47 PM
உலகு என்றொரு கோளம்
எது அதன் அடையாளம்
நீர் நில பல வளங்கள்
காட்டு வீட்டு உயிரினங்கள்
நாளும் உயரும் அறிவியல்
நட்பு வளர்க்கும் வயல்கள்
இணைய வலைத்தளங்கள்
இணைந்தே இருக்கும் மனங்கள்
மங்காத மனிதநேய மரபுகள்
மாறாத நன்னெறிப் பாதைகள்

Russellhni
5th December 2015, 11:19 AM
பாதைகள் பல உண்டு மானிட வாழ்வினிலே
உபாதைகளும் உண்டு உட(ல்)ன் பிறந்ததாலே!
போதாது போதாது போகுமிடம் தெரிந்தால் மட்டும்
போகுமா இப்பாதை அதை அறிதல் வேண்டும்

அது மட்டும் போதாது வெல்ல வேண்டும்
வாழ்வுதனை வீணாக்காமல் : அதற்கே வேண்டும்
அயராத உழைப்பு அத்துடன் ஆர்வம் வேண்டும்
திறம் வேண்டும் தளராத நம்பிக்கையும் வேண்டும்!




https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSHhbm5GJuVb8CWlQH6urioz6H32UOAH _MGVhpomMcsarx4fK4g

pavalamani pragasam
5th December 2015, 05:19 PM
வேண்டும் சட்டென உருகும் உதவும் மனம் மட்டும்
உடுக்கை இழந்தவன் கை போல் இடுக்கண் களைய
கூடின கரங்கள் அறவே இல்லையங்கு பேதங்கள்
அன்பொன்றே இப்பேரிடரில் காதில் கேட்ட ஒரே மொழி

Gopal.s
22nd November 2016, 08:26 AM
This is my poem on Middle age crisis wherein demand will be peaking in office,and personal front , lot of money needs, Tiredness and wornout sensation on relations,Lot of personal losses on relations , Feeling of rejection,owing to peaking in career associated backstabbing, soaring of relations,obsessive compulsions on renewed youth, misdirections Etc. Made it as simple as possible without losing essence or purpose. Enjoy.

மத்தியமம்

உன்னதம் காணும் உயர்வு
உன்மத்தம் கொள்ளும் சிந்தை
மன்மதன் விழையும் விந்தை
நன்னகம் நாடும் அயர்வு

இழவுகள் காணும் நிகழ்வுகள்
இழிவுகள் என்றும் நிதர்சம்
விழுமுன் கண்முன் கடன்கள்
எழுமுன் மண்மூடும் கரங்கள்

சுற்றங்களின் நோக்கில் அலட்சியம்
முற்றங்களில் வீழ்த்தும் அந்நியம்
ஏற்றங்கள் காணும் பணப் புழுக்கம்
நாற்றங்களின் மோப்பங்கள் விரிப்படியில்

நோக்கங்கள் நிறைந்து கும்பல்
நாக்குகளில் வழியும் பூந்தேன்
சாக்குகளில் பொழியும் வன்னுணர்வு
வாக்குகளில் அழியும் நன்னுணர்வு

கடிவாளம் கட்டிய செக்குக்காளை
அடிநாதமாய் ஒட்டிய மங்குகாதல்
படித்துறையில் நிறையும் பாசிகள்
அடித்து ஓடும் சாநீர்

Gopal.s
22nd November 2016, 08:35 AM
This is my poem on Middle age crisis wherein demand will be peaking in office,and personal front , lot of money needs, Tiredness and wornout sensation on relations,Lot of personal losses on relations , Feeling of rejection,owing to peaking in career associated backstabbing, soaring of relations,obsessive compulsions on renewed youth, misdirections Etc. Made it as simple as possible without losing essence or purpose. Enjoy.

மத்தியமம்

உன்னதம் காணும் உயர்வு
உன்மத்தம் கொள்ளும் சிந்தை
மன்மதம் விழையும் விந்தை
நன்னகம் நாடும் அயர்வு

இழவுகள் காணும் நிகழ்வுகள்
இழிவுகள் என்றும் நிதர்சம்
விழுமுன் கண்முன் கடன்கள்
எழுமுன் மண்மூடும் கரங்கள்

சுற்றங்களின் நோக்கில் அலட்சியம்
முற்றங்களில் வீழ்த்தும் அந்நியம்
ஏற்றங்கள் காணும் பணப் புழுக்கம்
நாற்றங்களின் மோப்பங்கள் விரிப்படியில்

நோக்கங்கள் நிறைந்து கும்பல்
நாக்குகளில் வழியும் பூந்தேன்
சாக்குகளில் பொழியும் வன்னுணர்வு
வாக்குகளில் அழியும் நன்னுணர்வு

கடிவாளம் கட்டிய செக்குக்காளை
அடிநாதமாய் ஒட்டிய மங்குகாதல்
படித்துறையில் நிறையும் பாசிகள்
அடித்து ஓடும் சாநீர்

chinnakkannan
4th July 2017, 03:19 PM
ஒரே மொழி தான்
எப்போதும் என்றும்
எக்காலத்திலும் சிறந்தது
அது
மெளனம்..

sgokulprathap
17th December 2018, 05:47 PM
மௌனம் கொடிது, உணர்ந்தேன் உன் மரணத்தில்
பேசின விழிகள் மூடிட
சிந்திய சிரிப்பு மறைந்திட
உடல் மட்டும் உறைந்திட
உள்ளம் உயிரோடு என்னிடம் இருந்திட
நினைவுகளை நிஜமாக நினைத்துக் கொள்கிறேன்

pavalamani pragasam
9th January 2021, 05:57 PM
மௌனம் கொடிது, உணர்ந்தேன் உன் மரணத்தில்
பேசின விழிகள் மூடிட
சிந்திய சிரிப்பு மறைந்திட
உடல் மட்டும் உறைந்திட
உள்ளம் உயிரோடு என்னிடம் இருந்திட
நினைவுகளை நிஜமாக நினைத்துக் கொள்கிறேன்நினைத்துக்கொள்கிறேன் முண்டாசு கவிஞனை
மனதில் உறுதியுடன் காத்திருந்தேன்
மெய்ப்பட்டதே நண்பர்களை சந்திக்கும் கனவு

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

RR
9th January 2021, 06:33 PM
கனவொன்று கண்டேன்
கண்டதும் சொன்னேன் அவரிடம்
புன்னகையே உதிர்ந்தது அவரிடம்
உதிராத வார்த்தைகளை எண்ணி
கனவுகளில் மிதக்கிறேன் மீண்டும்..!

pavalamani pragasam
9th January 2021, 07:23 PM
கனவொன்று கண்டேன்
கண்டதும் சொன்னேன் அவரிடம்
புன்னகையே உதிர்ந்தது அவரிடம்
உதிராத வார்த்தைகளை எண்ணி
கனவுகளில் மிதக்கிறேன் மீண்டும்..!சொல்லாத சொல்லில் பிழையில்லை
செல்லாத ஊருக்கு வழி கேட்பதில்லை
பொல்லாத மனந்தானொரு குரங்கு
கல்லாதவனும் அறிந்த உண்மை

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

RR
9th January 2021, 07:35 PM
சொல்லாத சொல்லில் பிழையில்லை
செல்லாத ஊருக்கு வழி கேட்பதில்லை
பொல்லாத மனந்தானொரு குரங்கு
கல்லாதவனும் அறிந்த உண்மை

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

உண்மை யாதென்று சொல்வீர்
உமமுடைய உண்மை எமக்கு பொய்யாய் படலாம்
பொய் உண்மையாக புலப்படலாம்
எனவே சொல்வீர்
உண்மையில் உண்மை என்றால் என்ன

pavalamani pragasam
9th January 2021, 07:48 PM
உண்மை யாதென்று சொல்வீர்
உமமுடைய உண்மை எமக்கு பொய்யாய் படலாம்
பொய் உண்மையாக புலப்படலாம்
எனவே சொல்வீர்
உண்மையில் உண்மை என்றால் என்ன

பெண்டாட்டி பிள்ளையை விட்டு விட்டு
போதி மரத்தடியில் புத்தன் கண்டானா
புத்தியோடு பிழைத்த பெண்ணுக்குத்
தெரியாத பெரிய உண்மையை
போக்கத்தவனுக்கு தேவையந்த தேடல்
புரிந்துகொண்டால் இல்லையே வாடல்

RR
9th January 2021, 10:28 PM
வாடல் எப்போது?
பெண்டாட்டி இல்லாதபோதா
இருக்கும்போதா?
பிள்ளை இல்லாதபோதா
இருக்கும்போதா?
போதிமரம் அறியாதபோதா
அறிந்தபிறகா?
இப்படியான தேடல் ஏதும்
இல்லாத போதல்லவோ வாடல்..!

pavalamani pragasam
9th January 2021, 11:02 PM
பெண்பிள்ளை கடைக்கு போனாள்
பச்சையாய் பொறுக்கி காய் வாங்கினாள்
ஆண்பிள்ளை பையை நீட்டினான்
வாடலை நிறுத்துப் போட்டான் கடைக்காரன்

RR
10th January 2021, 08:19 AM
கடைக்காரன் காத்திருந்தான்
சாலையில் சனங்கள் அங்குமிங்கும்
அவனை அலட்சியம் செய்வது போல்
ஆனாலும் காத்திருந்தான்
காத்திருப்பு கைபோகவில்லை
அவள் வந்தாள்
கையில் பணத்துடன்
ஆர்வத்துடன் நோக்கினான் கடைக்காரன்
கேட்டாள் அவள்
கிடைக்குமா முகக்கவசம் என்று..!

pavalamani pragasam
10th January 2021, 08:34 AM
கடைக்காரன் காத்திருந்தான்
சாலையில் சனங்கள் அங்குமிங்கும்
அவனை அலட்சியம் செய்வது போல்
ஆனாலும் காத்திருந்தான்
காத்திருப்பு கைபோகவில்லை
அவள் வந்தாள்
கையில் பணத்துடன்
ஆர்வத்துடன் நோக்கினான் கடைக்காரன்
கேட்டாள் அவள்
கிடைக்குமா முகக்கவசம் என்று..!

புன்னகை சிந்தும் பூ முகம்
தேனாய் இனிக்கும் வார்த்தைகள்
மானுக்கும் மீனுக்கும் வலைகள்
எந்த புற்றில் எந்த பாம்போ
முகமூடி மாந்தரிவர்
நெருப்பாய் நீயிரு பெண்ணே

RR
10th January 2021, 09:53 AM
PP ma'm, aren't we supposed to start from the last word? : )

pavalamani pragasam
10th January 2021, 10:34 AM
பிடி பட மாட்டேங்குது! மறந்தே போச்சி!

pavalamani pragasam
10th January 2021, 10:38 AM
என்று கிடைக்கும் என்று
அன்று ஏங்கிய ஒன்று
இன்று கையில் கிடைத்தது
நன்று போகிறது பொழுது

RR
10th January 2021, 11:41 AM
பொழுது புலரும்
உலகுக்கு
உயிர்களுக்கு
இணைவோம் மையத்தில்
இசைப்போம் மகிழ்விசை
இறைவன் ஆசி..!

pavalamani pragasam
11th January 2021, 05:43 PM
ஆசி கிடைக்குமா ஈசியாய்
கடந்த பல மணி நேரமாய்
கடத்தப்பட்டிருந்தேன்
காடு போலிருந்த உலகிற்கு
கற்கால நாட்களுக்கு
தொலைதொடர்பறுந்த
தொல்லை தொடர்ந்ததால்
மீண்ட சொர்க்கம் காத்திருக்க
மீண்டும் சோதனை வருமோ
தீர்வை தேடுகிறேன் தீவிரமாய்
செர்வரை மாற்றுவேன்
பார்த்துவிடலாம் ஒரு கை

RR
11th January 2021, 11:17 PM
ஒரு கை பார்ப்பது
உடுப்பி ஓட்டலில் சாத்தியமாகலாம்
சைபர் கிருமினல்களை
சைபர் ஆக்குவது
சைவ சாப்பாடு போலல்ல
சவாலான செயலாம்
சாக்கிரதையாய் இருப்பதே சரி..!

pavalamani pragasam
12th January 2021, 12:34 AM
சரிகமபதநி ஏழு சுவரங்களில் எண்ணற்ற பாடல்கள்
அத்தனைக்கும் அர்த்தம் தரும் அநேக பாவங்கள்
உணர்ச்சிகள் பொங்கினால் கொட்டும் அருவிகள்
உருவாக்க தேவை இயற்கையான ரசனைகள்

RR
12th January 2021, 01:59 PM
ரசனைகள் மாறலாம்
ரசிகர்கள் மாறலாம்
இளையராஜாக்கள் போகலாம்
ரகுமான்கள் வரலாம்
ஹரிஹரன்கள் போகலாம்
அனிருத்துகள் வரலாம்
ஆயினும்
இசையருவி கொட்டுவது தொடரும்..

pavalamani pragasam
12th January 2021, 03:05 PM
தொடரும் நிழல்
ஒளியில் மறையும்
துரத்தும் நாயும்
கல்லெடுத்தால் ஓடும்
எதிர்க்கத் துணிந்தால்
தடைகள் விலகும்
நம்பி நடந்தால்
பாதை தெரியும்

RR
12th January 2021, 09:41 PM
தெரியும் எல்லாம்
என்று எண்ணியிருக்க,
மேலும் படிக்கப் படிக்க,
தெரியாமையே தெரிந்தது அவனுக்கு!

pavalamani pragasam
12th January 2021, 10:09 PM
அவனுக்கு தனி இலக்கணம்
அவளுக்கு தனி அகராதி
இணையாமல் இணைந்தே
இருப்புப்பாதை தண்டவாளம்
அர்த்தநாரி வண்டவாளம்
தாம்பத்யத்தின் அடையாளம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

RR
13th January 2021, 01:33 AM
அடையாளம் அறிவீரோ
அவனை அறிய..
எங்கும் இருப்பானாமே..
எதிலும் இருப்பானாமே..
அப்படியெனில்
அடையாளங்களிலும் இருக்க வேண்டுமே
எனவே, அறிவது எப்படி?

pavalamani pragasam
13th January 2021, 01:47 AM
எப்படி பாடினரோ என்றால்
பக்தியின் வியப்பு அன்றோ
எப்படி எழுதினரோ என்றால்
இலக்கிய தாகம் அல்லவோ
எப்படி ஏய்த்தனரோ என்றால்
மௌடீகமே மாயா மயக்கமே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

RR
14th January 2021, 05:07 PM
மயக்கமே
மனிதனை நீ
கோதையாய்
போதையாய்
பேதையாக்கி
பிறகு பாதையாய்
வழிநடத்துகிறாய்
என்ன தான் உன் இலக்கு?

pavalamani pragasam
15th January 2021, 01:02 AM
இலக்கு என ஏதுமிருப்பதில்லை
வாலறுந்த காகித பட்டத்திற்கு
மரத்திலிருந்து உதிர்ந்த சருகிற்கு
காற்றடிக்கும் திசையில் அது செல்லும்

RR
15th January 2021, 04:26 AM
செல்லும் திசை வேறென்றாலும்
சென்ற இடம் வேறென்றாலும்
பண்பாடு மறப்பதில்லை தமிழர்
பண்டிகை மறப்பதில்லை
பொங்கலோ போகியோ
பழைய நார்மலோ
புதிய நார்மலோ
கொண்டாடிவர்
குறைந்தபட்சம் வாட்ஸ்ஆப்பில்..!

pavalamani pragasam
15th January 2021, 02:15 PM
வாட்ஸ்ஆப்பில் இன்று கலவரம்
மார்க்கு மேல பொங்குது கோபம்
என்ன இருக்கு புதுசாய் இழக்க
தெரிந்த பேயா தெரியாத பூதமா
கிளைக்குக் கிளை தாவுது
நம் மனமெனும் குரங்கு

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

priya32
16th January 2021, 12:15 PM
குரங்கு சேட்டையை நிறுத்து!
சுட்டிகளிடம் முறைக்கும் அம்மாக்கள்
சந்தையில் வாங்கிய பழங்கள்!
நசுங்கிவிடுமோ கலக்கத்துடன் முதியோர்கள்
இறங்கி விடுவாளோ அடுத்த நிறுத்தத்தில்!
தவிப்புடன் நகம் கடிக்கும் ரோமியோக்கள்
அனைவரையும் சுமந்து ஊர்வலம் போக!
நிறைமாத கர்ப்பிணியாய் நகர்ந்தது பேருந்து

pavalamani pragasam
16th January 2021, 02:14 PM
பேருந்து பயணம் ரொம்ப மாறிப்போச்சி
சில்லென்ற காத்து முகத்தைக் கொஞ்ச
பறக்கின்ற காட்சிகளாய் பச்சை வயல்கள்
விருந்தாய் மனசை நிறைத்தது அன்று
கருப்புக் கண்ணாடி மூடிய சன்னல்கள்
திரையில் ஓடுது காமா சோமா சினிமா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

priya32
17th January 2021, 01:54 AM
காமா சோமா சினிமா தியேட்டரு
வாமா முனிம்மா இன்னா மேட்டரு
வீணா வேணாம் எங்கிட்ட பீட்டரு
சீனா தானா வந்துட்டா பேஜாரு

pavalamani pragasam
17th January 2021, 03:17 AM
பேஜாரு ஆனா அது சிங்கார சென்னை
மரியாதயானவய்ங்க இருப்பது மதுரை
அம்மிணி சொல்லிப்போட்டா கோவை
ஏலே என்றழைக்கும் நெல்லை குமரி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

RR
17th January 2021, 03:57 AM
காமா சோமா சினிமா தியேட்டரு
வாமா முனிம்மா இன்னா மேட்டரு
வீணா வேணாம் எங்கிட்ட பீட்டரு
சீனா தானா வந்துட்டா பேஜாரு

பேஜாராயிட்டேன் கவிதய பாத்துட்டு
உடம்பெல்லாம் ஜில்லாயி வேர்த்துட்டு
மெர்சலாக்குது ப்ரியாவோட டேலன்ட்டு
தொடர்ட்டும் உங்க கவித டார்கெட்டு!

(இது ஒரு சைட் ட்ராக், விட்ருங்க புரிஞ்சுகிட்டு ;)

pavalamani pragasam
17th January 2021, 04:04 AM
சைட் டிராக்?????

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

pavalamani pragasam
17th January 2021, 04:37 AM
டார்கெட் கொக்குக்கு மீனு
கூடவே சைட் டிராக்கு

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

priya32
17th January 2021, 09:24 AM
பேஜாராயிட்டேன் கவிதய பாத்துட்டு
உடம்பெல்லாம் ஜில்லாயி வேர்த்துட்டு
மெர்சலாக்குது ப்ரியாவோட டேலன்ட்டு
தொடர்ட்டும் உங்க கவித டார்கெட்டு!

(இது ஒரு சைட் ட்ராக், விட்ருங்க புரிஞ்சுகிட்டு ;)

Thank you! Glad you liked it and will try to be active more here! :)

priya32
17th January 2021, 09:25 AM
பேஜாரு ஆனா அது சிங்கார சென்னை
மரியாதயானவய்ங்க இருப்பது மதுரை
அம்மிணி சொல்லிப்போட்டா கோவை
ஏலே என்றழைக்கும் நெல்லை குமரி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

குமரி பஸ் ஸ்டாண்டில் நேத்து பார்த்த பியூட்டி
ஓரக்கண்ணால் கண்டுக்கிட்டேன் எதுக்கும் ஒருவாட்டி
பொண்ணுங்க இருக்காங்க எத்தனையோ வெரைட்டி
ஆனாலும் அவள்தான் எனக்கு வருங்கால பொண்டாட்டி

pavalamani pragasam
17th January 2021, 12:51 PM
பொண்டாட்டி எதுக்கு
ஆட்டி வைக்கத்தானே
ஆணையும் தோசை மாவையும்
வாழ்வும் வயிறும் நிறையும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

priya32
17th January 2021, 02:11 PM
நிறையும் குறையும் தராசுக்கு புரியும்
மறையும் பிறையும் மாதத்துக்கு தெரியும்
கரையும் நுரையும் ஆற்றுக்கு பழக்கம்
திரையும் கறையும் ஜன்னலுக்கு வழக்கம்

pavalamani pragasam
17th January 2021, 04:32 PM
வழக்கமில்லா வழக்கமாய் மரியாதை
வம்பு வழக்கு பேசாமல் மௌன நடை
சொல்லாமலே சுறுசுறுப்பாய் வேலை
உஷாராகு கணவனே சம்திங் ராங்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

kirukan
17th January 2021, 05:19 PM
ராங் ரீங்கெனும் பீஜங்கள் ஒலியால்
உள்ளொளி ஏற்றும் வித்துகள்.
-
கிறுக்கன்

pavalamani pragasam
17th January 2021, 05:36 PM
வித்துக்கள் மண்ணுக்குள் உறங்கும்
கனவுகள் மனசுக்குள் முளைக்கும்
காலம் நேரம் கனிந்து வரும் வேளை
கண் முன்னே சோலைகள் மாளிகைகள்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

priya32
17th January 2021, 09:57 PM
மாளிகைகள் அடுக்கடுக்காய் நகர
வாகனங்கள் வண்ணமயமாய் பறக்க
உரையாடல்கள் ஆங்கிலத்தில் குழைய
பெற்றோர்கள் நெஞ்சத்தில் கனக்க
என்னவனை அயல்நாட்டில் காண
நான் வந்த அழகிய தருணம் அது

pavalamani pragasam
17th January 2021, 10:25 PM
அது எது என்று தெரியாமல் அலைமோதி
இதுதானா அது என்று சலிப்பாகி இன்னும்
தேடி தேடி துருவி துருவி அலசி அலசியபின்
புரிகிறது அது உரிக்க உரிக்க வெங்காயம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

kirukan
17th January 2021, 11:20 PM
காயம் பொய்யென உணர்ந்தோரை மாயை
என்செய்யும் மந்திரம் என்செய்யும்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
17th January 2021, 11:31 PM
செய்யும் பல வித்தை
அடிக்கும் அந்தர்பல்டி
குரங்காட்டியின் கோலுக்கேற்ப
அப்பிராணிதான் அப்பிராணி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

RR
18th January 2021, 04:54 AM
அப்பிராணி போர்வையில் இயங்கும் மனிதர்களை
எப்படியாவது திருத்துமைய்யா கடவுளேயென்று சென்றால் - அங்கு
வேறொரு போர்வையில் சுரண்டும் கும்பல் கண்டு
நானொரு முடிவெடுத்தேன் விற்கலாம் போர்வையென்று

RR
18th January 2021, 04:59 AM
அது எது என்று தெரியாமல் அலைமோதி
இதுதானா அது என்று சலிப்பாகி இன்னும்
தேடி தேடி துருவி துருவி அலசி அலசியபின்
புரிகிறது அது உரிக்க உரிக்க வெங்காயம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

படிச்சு கண் கலங்கிடுச்சி மேடம்! :cry2: :rotfl2:

priya32
18th January 2021, 12:34 PM
போர்வையென்று ஒன்றுண்டு
தலையணையென இரண்டுண்டு
வரிசையாய் மெத்தைகள் மூன்றுண்டு
இவையனைத்தும் இங்கிருந்தும்
தூக்கமின்றி கண்கள் இரண்டும்
உன்னை நினைந்து நினைந்து
துடிக்குதடா இதயம் இருண்டு

pavalamani pragasam
18th January 2021, 12:46 PM
(RR, வெங்காயத்தை உரிக்கும்போது அப்படித்தானே இருக்கும்? [emoji23])


Sent from my ONEPLUS A6000 using Tapatalk

pavalamani pragasam
18th January 2021, 12:59 PM
இருண்டு கிடந்தது வீடு
திரண்டு வந்தது துக்கம்
இல்லாளை கடிந்தது தவறு
அவ்வளவு மோசமா உப்புமா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

priya32
18th January 2021, 01:12 PM
உப்புமா என்றாலே எனக்கு பரம எதிரி
எழுந்தேன் விருட்டென்று கையை உதறி
உதைத்தேன் ஸ்கூட்டரை ஒருமுறை எகிறி
பத்து தெரு தாண்டினதும் என் மனம் மாறி
வந்து பார்த்தால் உப்புமா இல்லை மீதி
பிறகென்ன? அன்று காலை நான் பட்டினி!

RR
18th January 2021, 01:27 PM
பட்டினி என்றொரு சோதனை
பத்தினி கொடுத்தாள் அன்று
சட்னி அதிகம் சாப்பிட்டால்
கிட்னி பாதிக்கும் என்று
மேட்னி ஷோவில் பார்த்தாளாம் விளம்பரம்!

(இது போதுமா? :mrgreen:)

pavalamani pragasam
18th January 2021, 01:37 PM
விளம்பரம் தேவையில்லை பூக்கடைக்கு
அலங்காரம் தேவையில்லை உண்மைக்கு
அவசரம் தேவையில்லை சாவை சந்திக்க
அலுப்பு தேவையில்லை நல்லதை சிந்திக்க


Sent from my ONEPLUS A6000 using Tapatalk

kirukan
18th January 2021, 07:47 PM
நல்லதை சிந்திக்க தொடங்க உன்னை
சந்திக்க விழையும் இறை.

-
கிறுக்கன்

pavalamani pragasam
18th January 2021, 09:44 PM
இறை உறையுமிடம் எது
கோவில் முழுவதும் தேடியவர்
விண்டிட முடியாத கண்டவர்
வேதமும் மதங்களும் கற்றவர்
ஏழையின் சிரிப்பில் தரிசித்தவர்
இவர் எவருமில்லாத பலருள்
தீது நினையாத கடமையாளர்
அகத்திலெரியும் அன்புத் தீயில்
இயக்கத்தில் இணைந்திருக்கும்
மனிதத்தில் துடிக்கும் இருதயம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

priya32
19th January 2021, 12:20 AM
இருதயம் துடிக்க மறந்த வினாடிகள்
மறுபடியும் சந்தித்த சொற்ப நிமிடங்கள்
எவ்வளவு விரைவில் பறந்து சென்றன
சிறு நொடிகளின் நினைவுகளைச் சுமந்த
கரு விழிகளின் கனவுகள் இனிக்கின்றன

pavalamani pragasam
19th January 2021, 12:51 AM
இனிக்கின்றன ஜிலேபி, லட்டு, பால்கோவா எல்லாமே
தீபாவளி என்றால் இவற்றை விழுங்கும் விழாதானே
இனிக்கின்றன கனிந்த செவ்வாழை, சப்போட்டா பழமெல்லாம்
பொல்லாத நோய் உலாவும் இந்த கெட்ட காலத்திலே
தெம்பாய் போராட தயாராகும் நல்ல நோக்கத்திலே
தடையின்றி நானும் தின்று வந்தேன் வெள்ளந்தியாய்
திடீரென தாக்கிய தலைசுற்றல் நீடித்ததே புரியாமலே
வாடிக்கையான மாத்திரைக்கு தண்ணி காட்டியதே
தாமதிக்காமல் செய்த ரத்த பரிசோதனை சொன்ன சேதி:
மிகுந்துவிட்ட சர்க்கரை கொழுப்பாய் மாறிவிட்டது நற நற

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

priya32
19th January 2021, 02:44 AM
நற நற கொவிட் நைண்டீன்
வர வர ஏறுது டென்ஷன்
வேண்டாம் இனி குவாரன்டைன்
போதும் இந்த ஐசோலேஷன்

pavalamani pragasam
19th January 2021, 02:58 AM
ஐசோலேஷன் தண்டனை காலத்திலே
கான்சோலஷன் இங்கு கண்டோமே
பாடிப் பாடி ஆத்திக்கொள்வோம்
தேடித் தேடி தங்கலீஷ் பாஷையிலே

priya32
19th January 2021, 04:37 AM
தங்கிலீஷ் பாஷையிலே இங்கிலீஷ்
உதட்டுக்கு போடுறா லிப்ஸ்டிக்
நகத்துக்கு பூசுறா பாலிஷ்
கண்ணுக்கு வைக்குறா ஐலாஷ்
வாலட்டு பத்திரம்டா கைலாஷ்

pavalamani pragasam
19th January 2021, 12:54 PM
கைலாஷ் மலை உயரத்திலே
குடியிருக்கான் சிவன் பத்திரமாய்
துன்பங்களை நம் துயரங்களை
நன்கு பார்க்கிறான் வேடிக்கை


Sent from my ONEPLUS A6000 using Tapatalk

kirukan
19th January 2021, 04:46 PM
வேடிக்கை வாழ்க்கை வாட்டிடும் நடப்பது
நாடகமென தெளியும் வரை.

-
கிறுக்கன்

pavalamani pragasam
19th January 2021, 07:39 PM
தெளியும் வரை கலங்கிய குளம் குட்டை
தெளிந்த பின்னே பளிங்கு நீரோடை
தெளிவாய் தெரியும் மீனும் மணலும்
தெளிவாய் புரியும் நெளிவும் சுழிவும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

R.Latha
19th January 2021, 11:28 PM
வாழ்க்கையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே ஓடம்போலே ஆடிடுவோமே
வாழ் நாளிலே

pavalamani pragasam
20th January 2021, 12:48 AM
கடைசி வார்த்தையில் கவிதையை தொடங்குங்கள்.

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

priya32
20th January 2021, 04:06 AM
தெளியும் வரை கலங்கிய குளம் குட்டை
தெளிந்த பின்னே பளிங்கு நீரோடை
தெளிவாய் தெரியும் மீனும் மணலும்
தெளிவாய் புரியும் நெளிவும் சுழிவும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

நெளிவும் சுழிவும் தெரிந்த
தெளிவான தமிழும் பயின்ற
கனிவான மொழியும் அறிந்த
நளினமான நங்கை அவள்

pavalamani pragasam
20th January 2021, 09:26 AM
அவள் அச்சாணிதானே அழகிய தேருக்கு
அவள் ஆழமான வேர்தானே ஆலமரத்திற்கு
சாய்ந்து கொள்ள தன் தோள் கொடுப்பாள்
கைப்பிடித்து வழி நடக்கும் அன்புத் துணை
ஆவியை இயக்கும் இனிய மூச்சுக்காற்று
ஆணை பூரணமாக்குகிறாள் பெண் சக்தி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

kirukan
20th January 2021, 12:43 PM
சக்தியில்லா சிவமும் சிவமில்லா சக்தியும்
இருந்தும் இல்லா நிலையே.
-
கிறுக்கன்

pavalamani pragasam
20th January 2021, 01:35 PM
நிலையே மோன நிலையே
சும்மா இருக்கும் சுகமே
தானே தனக்கு துணையாய்
ஈடில்லாததோர் சுதந்திரமே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

priya32
21st January 2021, 06:26 AM
சுதந்திரமே உன் இருப்பிடம் எது
சந்திக்க வேண்டும் முகவரி சொல்லு
எவரிடமும் சொல்லேன் என்னை நம்பு
பதிலை எதிர்நோக்கும் கூண்டின் கிளி

pavalamani pragasam
21st January 2021, 10:16 AM
கிளிப்பச்சை வண்ண பட்டுடுத்தி
வட்ட பொட்டை நெத்தியில் வைத்து
அழகான நகைகளை அணிந்து நானே
கண்ணாடி முன்னே என் முதல் ரசிகை

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

priya32
22nd January 2021, 04:52 AM
ரசிகையின் செவிக்கு விருந்து
கலைஞனின் இசையில் இருந்து
இதயத்தின் வலிமைக்கு மருந்து
ஒருவனின் அசைவில் இருந்து

pavalamani pragasam
22nd January 2021, 09:51 AM
இருந்து பயனில்லாத செல்வம்
பகிர்ந்து வழங்காத ஞானம்
இரங்கி உதவாத இருதயம்
காட்டில் காய்ந்த நிலவே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

priya32
23rd January 2021, 07:27 PM
நிலவுக்கு பிறை அழகு
பிறைக்கு நிழல் அழகு
நிழலுக்கு உருவம் அழகு
உருவத்துக்கு நீ அழகு

pavalamani pragasam
23rd January 2021, 09:12 PM
அழகை கண்டேன்
அழுக்கில்லாத மனதிலே
அலுக்காது மோதும் அலையிலே
அசையும் யானை காதிலே
அசராத உழவனின் உழைப்பிலே
அமைதியான புன்முறுவலிலே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

priya32
24th January 2021, 04:03 AM
புன்முறுவலிலே பூத்த மலரோ
ஊர்கோலம் போக இசைந்தது
புத்துணர்விலே தோன்றிய கதிரோ
பூபாளம் பாடி மகிழ்ந்தது

pavalamani pragasam
24th January 2021, 09:10 AM
மகிழ்ந்தது மனம்
இல்லையதில் சலனம்
குடிக்க சூடான காப்பி
படிக்க சுவையான புத்தகம்
கடல் தாண்டி சிநேகம்
கற்பனை வளர்க்கும் யாகம்
வேறென்ன வேணும்
தனிமை ஒரு வரம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

Shakthiprabha
9th February 2021, 08:11 PM
வரம் வேண்டி வந்தவள்
வாய்மூடி மௌனித்து
கைகூப்பி தொழுது
இதயம் கனிந்தே
இறையோடு இழைகிறாள்
பொல்லா உலகையும்
பூபோல ரசித்து
நில்லாமல் செல்லும்
காலத்தை வென்று
கூட்டுக்குள் குறுகாது
பரந்து விரிகிறாள் - தன்
சிறகை விரித்து
பிரபஞ்சம் அளக்கிறாள்.

pavalamani pragasam
9th February 2021, 08:56 PM
அளக்கிறாள் மனதுக்குள் கடந்த தூரத்தை
அதிகந்தான் அதில் சந்தேகம் ஏதுமில்லை
அறிந்திடாள் மிஞ்சிய காதம் எத்தனையென
அலுப்பேது அவனும் கூடவே வருகையிலே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

RR
20th April 2021, 04:55 PM
வருகையிலே வாழ வைக்கிறாள்
வையகத்தை வஞ்சியவள்
வானருவியாய்..!

pavalamani pragasam
23rd April 2021, 06:25 PM
வானருவியாய் வந்தே குளிர்வித்தாய்
வாராது வந்த மாமணியே மதலையே
வாரி அணைத்தேன் உன் அன்னையே
வாழ்வெல்லாம் சொர்க்கமடா உன்னாலே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

RR
30th April 2021, 11:01 PM
உன்னாலே உருவானதாம்
உலகும் உயிர்களும்
வானும் வனமும்
பயிர்களும் பறவைகளும்
ஏன்..
பிரபஞ்சமும் அதற்கு அப்பாலும்
எனில்
பிரச்சினைகளும் உன்னால் தானோ
பக்லுமைய்யா
உன் விளையாட்டு தானோ
இந்த இரண்டாம் அலை கொரோனா?!

pavalamani pragasam
1st May 2021, 10:28 AM
கொரோனா என்றொரு கலியுக அரக்கன்
உலக உருண்டையை பந்தாய் உதைக்கிறான்
நின்றாடுகிறான் கோரமாய் கொக்கரிக்கிறான்
மக்களை மொத்தமாய் கொன்று குவிக்கிறான்
யாம் பட்டது போதும் பகவானே அவதரித்து வா
பாவங்கள் புரியுது பாடங்கள் கசக்குது ஐயகோ

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

RR
3rd May 2021, 10:23 PM
ஐயகோ என்ன இது
முதல் அலை பின்னோக்கிய நேரத்தில்
இரண்டாம் அலை தாக்குதல்..
தத்தளிக்கும் நேரத்தில்
உதயம் ஒரு சூரியன்..
மக்களின் முடிவுகளில்
ஒரு ஆரம்பம்..
இது உதயமா உதையலா..
நம்பிக்கையுடன் எதிர்னோக்குவோம்
மகேசனை..
மக்களின் தீர்ப்பே
மூத்தவன் தீர்ப்பு..!

pavalamani pragasam
4th May 2021, 08:31 AM
தீர்ப்பு சொல்வதாரோ
தொடரும் அவலந்தானோ
திருக்கல்யாணம் பக்தர் காணாமலே
திரையில் வரைந்த வைகை ஆற்றிலே
திருமாலழகர் நடத்தினார் திருவிழா
தேர்தல் நாடகமும் நடந்து முடிந்தது
திருந்துவரோ கேடு செய்யும் கெட்டவர்
தினுசு தினுசாய் வந்து நிற்கும் சவால்கள்
தினமும் கேட்குது திக் திக் சேதிகள்
தள்ளித் தள்ளி போகிறதே தொடுவானம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

kirukan
11th May 2021, 02:26 PM
தொடுவானம் தொடுவதற்க்கு இல்லை புது
மாற்றம் விடியலும் இல்லை.
-
கிறுக்கன்

pavalamani pragasam
11th May 2021, 05:36 PM
இல்லை இனி தோற்கும் பயம்
எல்லை வேண்டும் எதிர்பார்ப்பிற்கு
தொல்லை நின்றுவிடும் தூரத்தில்
நல்லை நானா நிரூபணம் எதற்கு

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

kirukan
12th May 2021, 10:01 PM
எதற்கு இந்த
பொய்யும் புரட்டும்
தவற்றை மறைக்க
தரமற்ற நாடகம்
குரங்கின் கையில்
பூமாலை..
-
கிறுக்கன்

pavalamani pragasam
12th May 2021, 10:41 PM
பூமாலை தோளில் ஏறிய பூ பாரம்
சுமக்கும் பொறுப்புகளின் ஆரம்பம்
சுகம் சுமைகளில் அமிழ்ந்து மறைய
சருகாகி நினவுகள் அழியும் காலம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

priya32
19th May 2021, 05:04 AM
காலம் இவ்வாறு மாறும் என
கனவிலும் நினைக்கவில்லை
நேரில் பார்க்க இயலாத சொந்தம்
யாரும் நெருங்க முடியாத பந்தம்
தனிமையில் அவல நிலை
கண்ணீரில் அவளின் நிழல்
கவசம் முகத்தில் கவலை மனதில்
இனி வீழ்வேனோ இல்லை மீள்வேனோ
நம்பிக்கையின் விளிம்பில் நான்
விடிவு காலமே விரைந்தோடி வருவாயா
முடிவு மாற்றியே விடியலைத் தருவாயா

pavalamani pragasam
19th May 2021, 09:19 AM
தருவாயா இறைவா தினமும் இதே நிழலை
காலையில் கொஞ்ச நேரம் கொஞ்சல்
தோட்டத்து மஞ்சள், சிகப்பு, வெள்ளை, ரோஸ்
மலர்கள், பல வித பச்சை நிறத்து இலைகள்
கைபேசியில் உலகை சுற்றி பறந்து வர
சுற்றமும் நட்பும் நலமென நிம்மதியாய்
காயும் கனியும் பருப்புகளும் கொறித்து
குட்டி தூக்கம் வாசிப்பு பந்தங்களின் விசாரிப்பு
கோபப்பறவை விளையாட்டில் குழந்தையாகி
பள்ளித்தோழிகளுடன் ஜுமில் கலந்துரையாடி
மலையாய் பாக்கியங்கள் ஓங்கி நின்றிட
மன உடல் வருத்தங்கள் ஓடி ஒளிந்து கொள்ள
வாடவோ தேடவோ தேவையில்லாத மோனம்
ஒளியில் குளிக்கும் ஆவி பாடாதோ கானம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk