PDA

View Full Version : kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2



Pages : 1 2 3 4 5 6 [7] 8

pavalamani pragasam
16th February 2015, 06:53 PM
(நம்ப முடியாமல் ஆனந்தத்தில் திக்குமுக்காடுகிறேன்! தேன்கூடாகிவிட்டதா இத்திரி? தேனீக்களின் ரீங்காரமாய் இருக்கிறதே!)

நாள் முழுவதும் நாடு
நேற்று கிடந்தது மூழ்கி
முட்டாள் பெட்டியின் முன்
ஆறாம் முறை வென்றோம்
அண்டை நாட்டுக்காரனை
நிம்மதியாய் தூங்கினோம்
நினைக்க மறந்தோம்
பாதையோரம் பரிதாபமாய்
வெற்றிக்கோப்பையுடன்
வண்டி வாகனம் வராதாவென
நிற்கும் கபடி வீரர்களை
இன்று முகநூல் காட்டி
இடித்தது குமட்டினிலே
செய்தியறிந்து வெட்கினேன்

chinnakkannan
16th February 2015, 08:51 PM
வெட்கினேன் முதலில் உந்தன்
…விரல்நுனித் தீண்டல் போது
உள்மனம் மாற்றங் கொண்டு
…உணர்வினில் தயங்கி அங்கே
குட்டியாய்ச் சிறகு ஒன்று
…;குளிர்ச்சியாய் எந்தன் தோளில்
கிட்டினாற் போன்ற தன்மை
…கிளர்ச்சியும் வந்த தேடா!

pavalamani pragasam
17th February 2015, 08:21 AM
வந்ததேடா புது வசந்தம்
இனிய இளவேனிற்காலம்
கொடிய பனி தொலைந்து
வாட்டும் வாடை ஒழிந்து
சுகமாய் இருக்குது ரசித்திடு
காத்திருக்கு கடும் வெயில்

Russellhni
17th February 2015, 10:38 AM
கடும் வெயிலில் காய்ந்த பட்ட மரத்தடியில்
சுடும் வெட்ட வெளியில் சோர்ந்திருந்த வேளையில்
எடும் அந்த இளநீர் எங்கே என் அரிவாள் என்றார்
திடும் என போட்டார் என் தலையில் சரிந்தேன் உன் வயிற்றில்

chinnakkannan
17th February 2015, 11:52 AM
//முரளி.. புரியலை//

kalnayak
17th February 2015, 11:56 AM
//சி.க. அது அந்த இளநீரின் புலம்பல்.*

chinnakkannan
17th February 2015, 12:21 PM
வயிற்றினில் இட்ட உதைகள்
..வலியிலை இன்ப மாச்சு
பயின்றிடும் பருவம் வந்த
..போதினில் நீயும் அன்று
துயிலிலே காலால் எத்தி
..சோம்பலாய்த் தூங்கி இன்றோ
வெயிலென வார்த்தை யாலே
..உதைக்கிறாய் வலிக்க லாச்சே..

chinnakkannan
17th February 2015, 12:22 PM
வாவ்.. முரளி.. நான் அப்படி யோசிக்கலை.. தாங்க்ஸ் :) அப்புறம் டிஸ்கஷன்ஸ்க்கு தனி த்ரெட் இருக்கு..அங்க டிஸ்கஸ் பண்ணலாம்..

pavalamani pragasam
17th February 2015, 06:39 PM
வலிக்கலாச்சே கையும் காலும்
கண்ணிப்போச்சே கன்னமிரண்டும்
விட்டுப்போச்சே குறுக்கெலும்பும்
சிவந்துபோச்சே தூங்காத கண்ணும்
அம்மம்மா அன்றவன் காதல் மோகம்
இன்றோ அவனிடம் மிருக மூர்க்கம்

chinnakkannan
17th February 2015, 10:43 PM
மூர்க்கத்தை எப்போது காட்ட வேண்டும்
…முரடாக நடக்கின்ற தீய நண்பர்
சேர்ந்தேதான் விட்டாலும் வெட்டிப் பேசி
…செயலிழக்க வைத்துவிட வேண்டும் நட்பை
தேர்ந்துதான் யோசித்தே கொள்ள வேண்டும்
..தீயவைகள் எதிர்ப்பதற்கு மட்டும் மட்டும்
வேர்விட்டு வளர்த்துவிடக் கூடா தன்றோ
.வெண்நெஞ்சம் போதுமன்றோ மனித வாழ்வில்

pavalamani pragasam
18th February 2015, 07:45 AM
வாழ்வில் சுவை கூட்டுவதெது
உப்பும் உரைப்புமாவது யாது
சப்பென்றில்லாமல் செய்வதெது
அடுத்து நடக்கப்போவதென்ன
என்பதின் மர்மமே அதிசயமே
நல்லதோ கெட்டதோ வரட்டுமே
அறியாமல் இருப்பது ஆனந்தம்
அறிந்தால் போய்விடும் நிம்மதி

Russellhni
18th February 2015, 11:16 AM
நிம்மதி எனக்கு இல்லை வாழ்க்கையோ வெறுப்பின் எல்லை
நோய் நொடியால் தொல்லை தாம்பத்தியமோ அது சொள்ளை
காசு இல்லை ஜெயம் இல்லை தோற்பேன் நான் ஐயமே இல்லை
கலக்கம் தான் மிச்சம் நண்பா கவலை தீர வழி சொல்வாய் !



(கற்பனை கவிதை: நிஜமல்ல )

chinnakkannan
18th February 2015, 12:00 PM
சொல்வாயா எனக்கேட்டால் என்ன சொல்ல
..சூழ்நிலைகள் வாழ்க்கையிலே சுழல்கள் தாமே
மெல்லாமல் முழுங்காமல் கவலை நிற்கும்
..மேனியெங்கும் முழுவதுமே குழப்பம் சூழும்
வெல்லாமல் அவைபற்றி யோசித் தேதான்
..வெறுமனேதான் நின்றிருந்தால் தீரா தன்றோ
தள்ளாமல் தாமவற்றை சரிசெய் தாலே
..தாளாத துயரதுவும் தீரும் தானே..

Russellhni
18th February 2015, 12:35 PM
தீருந்தானே கவலை தெளிவுடனே யோசிப்பீர்
இருப்பது போதுமென திருப்தி மனம் வேண்டும்
என்னதான் ஆகிவிடும் என்றொரு கை பார்ப்பீர்
எண்ணம் ஈடேறும் எல்லாமே கைகூடும்

kalnayak
18th February 2015, 02:28 PM
கைகூடும் கைகூடும் என்று கனா கண்டிருந்தேன்
முயற்சி மேற்கொண்டிருப்பின் திருவினையாகி இருக்கும்
உதவுவார் வரக் காத்திருந்து உறுதி தளர்ந்து போனேன்.
கைவிடும் கைவிடும் என்று கனாவிலும் நினைத்ததில்லை.
நமக்கு நாமே உதவிக்கொண்டால் நன்மை கிட்டும்
கனவில் கண்டது மெய்ப்பொருள் ஆகும் உண்மை தெளிந்தேன்.

pavalamani pragasam
18th February 2015, 06:30 PM
தெளிந்தேன் பௌதீக ரசாயன
இன்ன பிற விஞ்ஞான விதிகள்
இவையெவுதுமில்லா விந்தைகள்
எல்லாமே உரைக்கும் உண்மையை
விளங்குதல் விரும்புதல் வெளிப்படுத்தல்
வினையாற்றல் வாதிடுதல் வழிமுறைகள்
அனைத்தும் எதிர்மறை திசையில்
அன்று முதல் இன்று வரையில்
ஆணுக்கும் பெண்ணுக்கும் வழக்கம்
சீரான தீராத இடைவெளி இருக்கும்
ஒரு போதும் இணையாத பயணம்
இருப்புப்பாதை சொல்லும் தத்துவம்
இயல்பாய் வண்டி அதிலே செல்லும்
புரிந்தவர்க்கில்லை பிணக்கும் வழக்கும்

chinnakkannan
18th February 2015, 10:53 PM
வழக்கும் உண்டு வாதம் உண்டு
…வஞ்சி விழியின் நோக்கினிலே
வழக்கம் கூட அன்பாய்ச் சிரிப்பும்
…வண்ணப் பேச்சும் அவளிடமே
கலக்கம் கொள்ளா களங்கம் இல்லாக்
…கனிவாய்த் தோற்றம் தான்கொண்டே
பழக்கம் இல்லா காளை என்னைப்
…பணிவாய்க் கணத்தில் மடக்கிவிட்டாள்.

pavalamani pragasam
19th February 2015, 07:58 AM
மடக்கிவிட்டாள் வலித்த காலை
பிஞ்சு விரலால் இதமாய் நீவியே
பாட்டி சொன்ன தைலம் தடவியே
மாவு கட்டோ புத்தூர் கட்டோ இன்றி
விட்டேன் நெடிய பெருமூச்சு ஒன்று
கட்டிய ரத்தம் கரைய தேவை ஒத்தடம்
கலங்கிய இதயம் தெளிய தைரியம்
பாங்காய் அரவணைக்கும் அன்புக்கரம்

Russellhni
19th February 2015, 10:56 AM
அன்புக்கரம் நீட்ட வேண்டில் அழகான புன்னகை
பண்புடனே உண்மை பாங்காக நம்பிக்கை
கொண்டாலே போதுமே கூடிடும் நட்பதுவே
மண் காற்று நீர் ஒளியால் மரஞ்செடி அதுபோலே

chinnakkannan
19th February 2015, 11:50 AM
அது போலே என்று
தான் ஆரம்பிப்பார் சித்தப்பா
எதைச் சொன்னாலும்..

உவமானம்
உதாரணம் இல்லாமல்
சொல்ல த் தெரியாது..

சூழ்நிலையில்
காலன் அவரைக் கவர
பின் எல்லாரும் சொல்ல
ஆரம்பித்தார்கள்..
சித்தப்பா சொல்றாப்பல என்று..

கேட்டுப் பெருமைப் படத்தான்
அவர் இல்லை..

kalnayak
19th February 2015, 12:55 PM
இல்லை என்பது அமங்கலச் சொல்லாம் எனவேயதை
சொல்லவேண்டாம் என்று பண்டைய தமிழர் வணிகத்தில்
இல்லாத பொருளை விடுத்து இருக்கும் பொருளை சொல்வர்
பொல்லாத உலகம் குறும்பாய் எண்ணும் இதையே இந்நாள்.

chinnakkannan
19th February 2015, 01:07 PM
இன்னாளிலே எல்லாவித சந்தோஷங்கள் பெருகி
பொன்னாளென பூரித்துளம் முழுதும்மகிழ்ந் திடவும்
எந்நாளிலும் வாழ்வில்மிக ஏற்றங்களைப் பெறவே
கண்ணாம்சிவன் அருள்வான்தினம் களிப்பாகிடும் புவியும்

pavalamani pragasam
19th February 2015, 06:35 PM
புவியும் மதியும் பரிதியும்
பிரபஞ்சத்து கோளங்களும்
தட்டையா உருண்டையா
தன்னைத் தானே சுத்துதா
எத்தனை நாள் சூரியனை
நீள் வட்டமாய் சுற்றி முடிக்க
நட்சத்திர கூட்டங்கள் எவை
எரிநட்சத்திர தரிசனம் எப்போது
சூரிய சந்திரரை ராகு கேது கவ்வுதோ
எண்ணற்ற கேள்விகள் ஆவல்கள்
எம் மூதாதையர் மண்டைக்குள்
கணினி இல்லை கணக்குப் போட
கருவிகள் இல்லை தொலை நோக்க
மதமும் மன்னரும் கொலைவெறியில்
சளைக்கவில்லை களைக்கவில்லை
கண்டுபிடித்தனர் பல அதிசயங்கள்
அவர் அபூர்வ அறிவுக் களஞ்சியங்கள்
வியக்கிறேன் ரசிக்கிறேன் வணங்குகிறேன்

Russellhni
20th February 2015, 11:02 AM
வணங்குகிறேன் வாழ்வதனில் வாகை சூடும் வீரனென
சுணக்கமின்றி சிரிக்கின்றாய் சூரனென நினைக்கின்றேன்
எதிர்மறை எண்ணம் இன்றி நடப்பதெல்லாம் நன்மைக்கென்றே
சிறுவர் பாசம் சான்றோர் விசுவாசம் கொண்டே
இயற்கையின் சுவாசம் செடிகளின் தோட்டம் நண்பர் கூட்டம்
வென்றாய் நன்றாய் உன்னேசம் என்றும் எனக்கேற்றம்

chinnakkannan
20th February 2015, 11:27 AM
ஏற்ற மிறைக்குதற்கு நான்போறேன் முன்னாடி
..என்றே சொல்லிபுட்டு போனமச்சான் காங்கலையே
தீற்றி செஞ்செவப்பா மிளகாயில் தொக்குசெஞ்சு
…தூக்குச் சட்டியிலே மணமாக மோர்சோறு
வேர்க்க விறுவிறுக்க வயக்காட்டில் ஓடிவந்தா
…வேஷம் போட்டாரோ எங்கபோனார் தெரியலையே
தீர்க்க விழியகட்டி தூரக்கே பார்த்தாக்க
..திண்ணமா வருதுமச்சான் ஹப்பாடா பெருமூச்சு…!

ரொம்பத்தான் காத்தாயோ இப்படியேன் மூச்சிருக்கு..
…ரோசனையா ஒருஆள காங்கத்தான் போனேனே..
வம்பத்தான் ஒங்களுக்கு வாகாக ஆக்கிவச்சு
…வந்துபார்த்தா இல்லையின்னா என்னாவும் எம்மனசு
சும்மாத்தான் யோசிச்சே குழப்பாதே பயபுள்ள
…செத்தநாழி போனதுலே ஒனக்கென்ன கலக்கமடி
உம்முனுல்லாம் ஒன் ஒதட்ட சுழிச்சுத்தான் வெக்காதே
…உள்ளத்துல ஆசவந்து வேறவிதம் ஆகிவிடும்!

kalnayak
20th February 2015, 01:02 PM
ஆகிவிடும் ஆகிவிடும் என்றிருந்தால் ஆகிவிடாது
ஆக்கிவிடுவோம் ஆக்கிவிடுவோம் என்று ஆக்கினோமென்றால்
ஆகாததெல்லாம் ஆகாததாக நிற்காமல் ஆகி நிற்கும்
ஆக்கமுடன் ஆக்கிவைப்போம் வையத்தை தூக்கிவைப்போம்.
ஆன தலைமுறைகள் எத்தனையோ வருந்தலைமுறை எத்தனையாயினும்
ஆக்கிய யாவையுடன் ஆக்கும் வழிமுறையும் காத்து வைப்போம்.

pavalamani pragasam
20th February 2015, 02:32 PM
வைப்போம் முற்றுப்புள்ளி வாக்கிய முடிவில்
வார்த்தை எத்தனை இருந்தாலும் இறுதி அதுவே
வார்த்தையை கணக்கிடாது முற்றுப்புள்ளி
வருடத்தை கணக்கிடாது கடைசி மூச்சு

kalnayak
20th February 2015, 05:15 PM
மூச்சு விடாமல் முன்னூறு கவிதை பாட முயற்சித்தேன்
மூன்றையே பாட முடியாமல் மூச்சிறைத்தேன்
மூக்கிலே வேர்த்ததம்மா முன்னோர் பாடல் கேட்டு
மூட்டிய தமிழ்த்தீயில் மூழ்கியே தேடுவேன் கவிதை

pavalamani pragasam
20th February 2015, 07:03 PM
கவிதை என்பது ஒரு பம்மாத்து
உரைநடையில் வரிசை மாத்து
வார்த்தைகள் பிறழ்கின்ற கூத்து
இது ஒரு சாரார் கொண்ட கருத்து

Russellhni
21st February 2015, 09:32 AM
மூப்பு :

கருத்து இது காலடி சங்கரர் சொன்னது
காலன் வரும் நேரம் இனி காலம் இல்லை பாரும்
காமம் பாசம் போதும் நீவிர் மறுமையை நாடும்
கடவுளைப்பாடும் என்றும் இறைவனைத் தேடும்

chinnakkannan
21st February 2015, 11:54 AM
தேடும் பார்வை உன்னைக் காண அங்கும் இங்கும்
….நாடும் மனமோ நிலையில் லாமல் முன்னும் பின்னும்
ஓடிச் சென்றே அலைகள் போலே உந்தன் நினைவை
..ஊடி உணர்வை மேலும் மேலும் மயக்க வைக்கும்
வாடும் வஞ்சி என்னை நீயும் மகிழ வைக்க
…வாராய் கண்ணா வாவா விரைவில் இங்கே இங்கே
பாடும் பாடல் சுவையா என்று நானும் அறியேன்
..பக்தி அதனுள் உண்டே உனக்கும் தெரியும் கண்ணா..!..

pavalamani pragasam
21st February 2015, 05:36 PM
கண்ணா மன்னா என்றால் நடக்காது
ராஜா என்று தாஜா செய்திட முடியாது
உன்னால் ஆனதை பார்த்துக்கொள்
என் வழி தனி வழி என்றால் வெல்வாய்

chinnakkannan
21st February 2015, 06:51 PM
வெல்வாய் எனச்சொல்லி வேல்விழிகள் தான்விரித்து
…மெய்யாய் நெஞ்சத்தில் நம்பிக்கை வைத்தவள்தான்
செல்லும் காதலனைக் கண்கொட்டா மல்பார்த்து
…தெளிவாய் இருந்தமனம் தடக்கெனவே குழம்பிவிட
கிள்ளும் கவலையதோ மிகப்பெரிய ரூபத்தில்
,..கிளறிக் கண்ணீரைக் கட்டவிழ்த்து விட்டுவிட
மெல்ல அமர்ந்தவளும் மென்மையுடன் கண்மூடி
…மேனி உளமுருக பிரார்த்தித்தாள் ஆண்டவனை

pavalamani pragasam
22nd February 2015, 08:35 AM
ஆண்டவனைத்தான் விரட்டினோம்
கத்தியின்றி யுத்தமின்றி போரிட்டு
அப்படியே படிந்து கிடக்கே புத்தியில்
அவன் விதைத்த அடிமைத்தனம்

Russellhni
22nd February 2015, 09:19 AM
அடிமைத்தனம் கொள்வாய் ஆண்டவனிடத்தில்
அன்றே சொன்னார் துவாபர யுகத்தில்
சிறப்புதான் கர்ம ஞான பக்தி யோகம் எனில்
சரணாகதி ஒன்றே தான் முக்திக்கென்றே

chinnakkannan
22nd February 2015, 10:11 AM
//ஹாய் முரளி.. have you checked kavithai iyatRik kalakku -i posted in other thread//

chinnakkannan
22nd February 2015, 01:13 PM
முக்திக் கென்றே முனிவரவர்
...மூச்சை மறந்தே தியானத்தில்
பக்தி யிழைத்தே தவம்செய்து
..பரமன் கண்டது அக்காலம்
வித்தை பலவும் தான்செய்து
..விந்தைப் பேச்சும் தாம்பேசி
மக்கள் தம்மை ஏமாற்றும்
...மாந்தர் இருப்பதும் இக்காலம்

pavalamani pragasam
22nd February 2015, 06:38 PM
இக்காலம் முக்காலத்தில் ஒன்று
நேற்று இன்று நாளை என்பது
நாட்காட்டியில் மட்டும் வருவது
மன வான வாசத்தில் இல்லையது

Russellhni
23rd February 2015, 08:32 AM
இல்லையது எனில் இல்லையாம்
உள்ளதது எனில் உள்ளதேயாம் மேதினியில்
வெள்ளத்து ஏற்ப மலர்நீட்டம் அதுபோல்
உள்ளத்தில் கொள்வோம் உயர்வு

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQ1H3Q-cxU38sQIEFxh-BCdyT4BwR_2TDOtzjX6ia9Yy6VvJUCriQ.

pavalamani pragasam
23rd February 2015, 08:49 AM
உயர்வு தந்தது கொஞ்சம் கர்வம்
பொறுப்புடன் வந்தது மன அழுத்தம்
சொகுசால் ஏகமாய் கூட்டியது இன்பம்
அதில் அழைக்காமல் வந்தன நோய்கள்
வங்கி இருப்பின்றி ஏழை நடைபாதைவாசி
என்னைவிட நிம்மதியாய் தூங்குகிறான்

chinnakkannan
23rd February 2015, 10:54 AM
தூங்குகிறான் தூளியிலே சின்னக் கண்ணன்
..சுற்றிநீயும் ஆட்டாதே விழித்துக் கொள்வான்
பாங்காக அவன்முறுவல் முகத்தில் தானே
..ப்ரவசத்தைக் கூட்டுதடி அடியே தோழி
தேங்கிடுமே மென்காற்று அவனைச் சுற்றி
..தேகத்தை விட்டெங்கும் போகா வண்ணம்
நீங்கிடுமே நாம்ப்ட்ட துயரம் எல்லாம்
..நீலவண்ணன் தரிசனத்தில் என்றும் தானே..

kalnayak
23rd February 2015, 02:52 PM
தானே நடக்கும் என்றிருப்பவரன்றி
தெய்வம் நடத்தும் என்போருக்கும்
நானே நடத்துவேன் எனக்கொள்வாரும்
உய்யம் அடைவோம் எனமுயற்சிசெய்
வானேறி பிரபஞ்சங்காணும் ஏற்றம் பெறுவர்

pavalamani pragasam
23rd February 2015, 04:15 PM
பெறுவர் நண்பர் சற்று நிம்மதி
அகராதி பேசி வார்த்தையாடி
தொல்லை தரும் கிழவியும்
விடுமுறையில் செல்வதால்
:noteeth:

chinnakkannan
24th February 2015, 11:20 AM
//enga leaveletter..not acceptable :) //


விடுமுறையில் செல்வதால் என்ன ஆகும்
...விகசிக்கும் நெஞ்சமது ஊரைக் கண்டு
கடுகடுத்த முகத்துடனே பணிகள் செய்து
..களிப்புகளை மறந்திருந்த மனமும் இன்று
படுத்துவிடும் மகிழ்வில்தான் ஊரில் உள்ள
..பலவிதமாய் நண்பர்கள் உறவைக் கண்டே
சுடும்நினைவு பின்னாலே முடிந்தபின்னால்..
.இருந்தாலும் முன்னாலே அனுப விப்போம்..!

Russellhni
24th February 2015, 04:41 PM
அனுபவிப்போம் நன்றே அமர்க்களம் இன்றே
அறவழி வாழ்வுதனை ஐம்புலம் துணை கொண்டே
நேற்று என்பதேதோ சரித்திர நினைவாம்
நாளை என்பதுவோ மர்மத்தின் நிழலாம்
இன்று மட்டுமே இயற்கையின் வெகுமதி
என்றும் அதனை ‘ப்ரெசன்ட்’ எனக்கொள்

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSMuwYtg9Ff6ACMNWscNqELTYEuGGzxO cJesRJMNLZA_i0YdElTnw

kalnayak
25th February 2015, 11:49 AM
எனக்கொள் எனக்கொள் எனக் கொண்டால்
தனக்கொள் தனக்கொள் என்று தனதாக்கிக்கொண்டு
எவருமே ஏகடியம் பேசும் வாய்ப்பால்
தன்னிலை உணர்ந்தே எவரும் கொள்வர்
எனவறிந்தே பிறர் கொள்ள ஏற்றுக் கொள்வர்
தாமும் பிறர்க்குரியர் என உணர்வார்

Russellhni
26th February 2015, 12:08 PM
உணர்வார் தங்கள் வெற்றி
ஓய்ந்தே அமரும் காலத்தில்
ஆற்றிய கருமம் எண்ணுங்கால்
அகத்துடன் முகமலர்ந்தாலே

chinnakkannan
26th February 2015, 02:47 PM
முகமலர்ந் தாலே ஓதோழி
..மூச்சது திரும்ப வந்துவிடும்
உவந்ததன் தன்மை தான்காட்டும்
..ஒருசெயல் அதுதான் என் தோழி
சுகமிலை என்றே சொன்னதனால்
..சுரத்தினைப் போக்க வேண்டுமென்றே
அகத்திலே செய்த சிறுமருந்தை
..அவரிடம் நானே அனுப்பிவைத்தேன்..

சுளித்தே குடித்துத் தானிருப்பார்..
..சுர்ரெனப் புளிக்கும் அதுவன்றோ
விழிகள் நன்றாய் மூடிவிட
..விரைந்தே தூக்கம் வந்திருக்கும்
துளியாய் சிரித்தார் என்கின்றாய்..
..சுரவலி ஓடிச் சென்றிருக்கும்
வலியைப் போக்க நான்செல்ல
..வழியும் இருந்தால் சொல்லடிநீ

kalnayak
4th March 2015, 04:44 PM
வழி நீயே காட்டுவாய்
என நானே நீட்டினேன் நோட்டை
சுழி ஒன்றே பொருத்தம்
என சொல்லி மதிப்பெண் இட்டார்
கழி கொண்டே அடிப்பார்
என நானே புரியாமல் விலகினேன்
பழி ஒன்றே சொல்லத்த்தான்
எனை நானே தேடினேன் தந்தைக்கு
சுழி இல்லா மதிப்பெண்
எனைத் தேடி எப்போ வரும்
இழி இல்லா கணிதம்
என எனக்கு எப்போ புரியும்

chinnakkannan
4th March 2015, 06:51 PM
புரியு மெனநினைத்தால் புருவத்தை உயர்த்தித்தான்
...பூவை முகமாறி பல்வாறாய்க் கேள்விகளை
விரியும் பார்வையதன் மூல்மாகக் கேட்டிடுவாள்
...விழிகள் சிவந்திருக்கும் வேடிக்கை மறைந்துவிடும்
சரிதான் காத்திருப்பின் கஷ்டமென நானறிவேன்
..தங்கம் சின்னப்பூ ஜிஞ்சும்மா என்றாலோ
சுழிப்பாள் உதட்டினையும் பின்னங்கே வெடித்திடுமே
..சூறா வளியாகச் சொற்றொடர்கள் திட்டல்கள்..

மெல்லப் பின்வாங்கி மேவியவள் கைபற்றி
..மேனி தனையிழுத்து மென்முத்தம் பதித்தாலோ
துள்ளி விலகிடுவாள் துச்சமெனத் தான்பார்த்தே
..சும்மா சால்ஜாப்பு சொல்லாதீர் எனச்சொல்ல
அல்லி அழகியலே ஆனமட்டும் கெஞ்சுகிறேன்
..ஆனா லிக்கோபம் உன்னழகைக் கூட்டுதெனச்
சொல்லி மறுபடியும் கெஞ்சத்தான் வஞ்சுகத்தின்
..சொக்கும் இதழ்விரியும் ஊடலதும் பறந்திடுமே..

Russellhni
9th March 2015, 07:49 AM
தோழியின் சொல் :

பறந்திடுமே கவலை தோழி
மறைந்திடுமே உந்தன் வலி

மனதினில் உறுதி கொள் மகன்
மாறிடுவான் ஒரு நாள்

குறை உன்னிடமில்லை- மகன்
குறை தீர்க்க மருந்துமில்லை

குறையற்ற மனிதர் யாருமிலை
குறைத்திடுவாயே உன் குமுறலை

வாழும் வழி வழுக்கினான் விடு
வயதின் கோளாறு வினையாகாது

விருப்பம் போல் நடக்கிறவன் போக்கு
வெந்து விம்முவதால் அது மாறாது

வளர்ந்த மகன் உன் பையன் - நீ
வருந்தி மட்டும் என்ன பயன் ?

விடியும் நிச்சயம் ஒருநாள் வருவான்
விதிப்படி விடு ! வேறு வேலை எடு !

Courtesy :

https://s-media-cache-ak0.pinimg.com/736x/c4/4d/46/c44d46dbca533b256b96789bf2c7212e.jpg

பின் குறிப்பு:
தோழி சொல் ஏன்?
காரணம் தெரிந்து கொள்ள :
**

தாயின் புலம்பல் தோழியிடம் :

இவனைப்பெற வேண்டி அழுதேன் அன்று
இவனைப் பெற்றேனே அழுகிறேன் இன்று

வேலைக்கு போக மாட்டானாம்
வீணாய் அடிமை ஆகானாம்

சொந்த தொழிலும் வேண்டாமாம் அது
சூனியம் கொள்வது போல்தானாம்

படித்தவன் பகுத்தே பேசுகிறான்
எதிர்த்தால் சினந்தே ஏசுகிறான்

சோம்பி சும்மா அலைகின்றான்
சொகுசாய் சுகமே தேடுகிறான்

ஏதுமிலை ஜோலி குடிப்பதே ஜாலி
இருந்த வீடு நகை எல்லாம் காலி

ஏகமாய் கொடுத்து விட்டான் எனக்கு
ஏக்கம் இதயநோய் அல்சர் எல்லாமே

இதுவே என் சோகக் கதை
தினமும் படும் சித்ரவதை

என்ன செய்ய என் மகன் உய்ய
ஏதேனும் வழியென்று உண்டா
இருந்தால் சொல் ஒரு வழி !

chinnakkannan
9th March 2015, 10:32 AM
எடு
சாய்த்து வை
கொஞ்சம் பிடிச்சுக்கோடா
ஏணி சாயப் போகுது
இரு..
ஹப்பாடா
கொஞ்சம் இரு எறக்கறேன்
இந்தா இதை
இந்தப் பேப்பர்ல வச்சுக்கலாம்
இருடா இருடா
அதுக்குள்ள சாப்பிடாதே
மறுபடியும் ஏறி
வெச்சுடலாம்
பிடிச்சுக்கோ போய்டாதே
அப்பாடா வெச்சாச்சு
டேய் எங்கடா போன
ஓ சாயற மாதிரி இருக்கே
கொஞ்சம் மெல்ல மெல்ல
இறங்கணும்

இவன் எங்க போனான்
சுற்றித் தேடி
மாடியில் எல்லவற்றையும்
ம்டியில் வைத்து
வேகவேகமாகச்
சாப்பிட்டுக் கொண்டிருந்த தம்பியின்
காதைத் திருகி
இந்தாண்ணா நீயே வெச்சுக்கோ
எனக்கு வேணாம்
உனக்குத் தரமாட்டேன்னா சொன்னேன்
நீ எடுத்துக்கோ
எனக்கு ஒண்ணு போதும்
என விட்டுக் கொடுத்ததெல்லாம்
இப்போது நினைவில்..

கண்முன் ஈமெய்ல் மட்டும்..
நான் அடுத்த வாரம் வருவேன்
அப்பா வீடு வித்தாச்சுல்ல
ப்ணம் உடனே கிடைக்குமா..
எனக்குத் தேவை இருக்குண்ணா இங்க
புரிஞ்சுக்கோ..

புரிகிறது
பெரியவர்கள் சுபாவமே
விட்டுக் கொடுத்தலோ..

kalnayak
9th March 2015, 01:52 PM
விட்டுக் கொடுத்தாலோ விடாது எடுத்தாலோ
குறையாதிது அமுத சுரபி
பட்டு மாய்வதேன் படாது ஏய்ப்பதேன்
மறைந்து தப்பிப்ப தேன்
சிட்டு ஏமாற்றினாள் சீற்றம் தாமாய்
இறைத்தலை இழந்து போயிற்று
வாழ்க்கை என்ன கொடுமையடா
வீழ்ச்சியை நெஞ்சம் தேடுதடா!!!

Russellhni
10th March 2015, 08:25 AM
தேடுதடா எங்கள் மனம் தெய்வமே
நாடுதடா எங்கே நீயென தினமே
காடு மலைதனில் காற்றாய் மறைந்தாயோ
ஓடி ஒளிந்தாயோ உயரவே பறந்தாயோ

நாதியற்ற நடைப்பிண மாந்தர்தமை
நாம்தானே படைத்தோமென
நாணம்தான் கொண்டாயோ
நியாயம் தானோ ! நவில்வாய் தேவுடா !

chinnakkannan
10th March 2015, 10:41 AM
தேவுடா என்று வாயும்
..தெளிவுறச் சொல்லும் போது
கேவுதல் போல நெஞ்சம்
..கிளர்ந்திடக் கண்கள் உள்ளே
மேவியே தோற்றங் கண்டே
..மெல்லிய அதிர்வு கொள்ளும்
பாவியென் பக்கு வத்தின்
..பரிந்துரை கேட்கு மன்றோ

நொடியா கணமா எதுவும் அறியேன்
.. நெடிதாய் இருக்கும் நாரண் தோற்றம்
துடித்தே இதயம் துள்ள வைத்தே
..சொல்லும் பலவாய் அருளும் அன்பும்
நடிப்பாய் இருக்கும் வாழ்க்கை மாயை
.. நன்றாய் அங்கே மறைந்தே போக
வடிக்கும் நகையில் நெஞ்சம் மகிழ்ந்தே
..மனதுள் போற்றும் அவனின் நாமம்.

kalnayak
10th March 2015, 11:08 AM
நாமங்களில் நன்றே நாரணனின் நாமம்
நாடுகின்றவர் நெஞ்சினிலே நீடிக்கும் நாமம்
ராமானுஜர் ஊரெல்லாம் தெரியவைத்த நாமம்
ஓதுகின்றவர் ஓங்கினின்று உயரவைக்கும் நாமம்
சொல்லிடுவோம் ஓம்நமோ நாராயண வென்றே!!!

chinnakkannan
10th March 2015, 11:18 AM
நாராயணவென்றே மட்டும்
சொல்ல மாட்டாள்பாட்டி
எப்போதும் பெருமாளே காப்பாத்து தான்..
கொஞ்சம் செண்டிமெண்ட் என்றும் சொல்லலாம்
ஏனெனில் தாத்தாவின் பெயர்
நாராயணன்..

ச்சும்மா சொல்லுடி
ஒண்ணும் ப்ராப்ளமில்லை
தாத்தா கிண்டல் செய்தாலும்
கேட்க மாட்டாள்
யாராவது பெயர் கேட்டால்
ம்ம் அதான் அங்கெ இருக்கானே
திருப்பதில்ல அவன் பெயர் தான்..
சீனிவாசன்..
வெங்கடேஷ்..
என்றெல்லாம் கேட்டு
நாங்களும் பரிகசிப்போம்

சூழ்நிலையில்
தாத்தாவிற்கு
ரொம்ப முடியாமல் போய்
டாக்டர் மணி நேரங்கள் கெடு
வைத்திருந்தசமயம்

அவர் அருகில் எதற்கோ வந்த
பாட்டி
இடறி விழுந்து
கீழே கூர்மையாய் எங்கோ அடிபட
கடைசியாய்ச் சொன்னது
நாராயணா அவரைக் காப்பாத்து..

கட்டிலில் இருந்த
தாத்தாவும் கேட்டாரோ என்னவோ
அதன் பின்
அவரும் எழவில்லை..

Russellhni
13th March 2015, 09:36 AM
எழ வில்லை கற்பனை
எழுதவில்லை கவிதை
ஏனோ தெரியவில்லை
என்னால் முடியவில்லை

அப்பா சித்தப்பா தெரியும்
அது என்னப்பா ஆசிரியப்பா
அசையாம் தளையாம் தொடையாம்
ஆசையாய் திளைக்க தடுக்குதப்பா

யாப்பு வேண்டுமாம் கவிதையில்
ஆப்பு வைத்தார்கள் சடுதியில்
எதுகை அளபடை மோனை
எதுக்கய்யா எனக்கினி வேதனை

தேமா புளிமா விருத்தத்திற்கு
தேவையாம்மா என் வருத்தத்திற்கு
இலக்கணம் தெரிந்தால் கவிதைதான்
இலக்கினி எனக்கு விடுதலைதான் !

kalnayak
14th March 2015, 11:20 AM
விடுதலைதான் என்று முழக்கமிடும் வேந்தரே
விருத்தப்பாக்களினால் ராமகாதை வரைந்தான் கம்பன்
விடுதலை வேண்டுமென்று நினைத்திருந்தால்
வெற்றிப் பெருமைகொள்வோமோ இப்போதே நாமே.
விடுதலை பெற்றோம் ஆங்கிலேயனிடமிருந்து வெற்றாய்
விடுதலை கொடுத்தனரா நம் அரசியல்வியாதிகள்

தேமா புளிமா விருத்தம் தொடை தளை எல்லாம் பயிற்சியே
தேறினால் நீரும் கம்பரோ, வள்ளுவரோ, இளங்கோவோ யாரறிவார்
ஆசிரியப்பா ஒன்றும் பெரியப்பா இல்லைதான் பத்துவரிகள் மேல்மிக
அதுவே ஒன்றும் சிறியப்பாவாகலாம் நான்கு வரிகள் எழுதியே
யாப்பு ஒன்றும் ஆப்பு வைக்காது சொல்லியாயிற்று

எதுகை மோனையால் இசையை கூட்டு
இல்லாவிட்டால் புதுக்கவிதை பூட்டு.
திறமையை நன்றாய் இங்கே காட்டு
சொல்லித் தருவோரின் பேச்சை கேட்டு
இலக்கணம் கற்றே பெயரை நாட்டு
அவநம்பிக்கையை அவையின் வெளியே மாட்டு
பெருமையுடன் பெருங்கவிதை நன்றாய் தீட்டு
கருத்துக்களை காவியமாய் நீயே சாட்டு
கற்றவர் முன்னே கலக்கமின்றி நீட்டு
பெருங்கவிஞன் என்றே பேரை ஈட்டு
உண்மையை எல்லோரும் உணர்வதற்கே ஊட்டு
எல்லோரும் போடுவர் உனக்கே ஓட்டு
இலக்கணம் இல்லாமலும் இப்போதைக்கு பாட்டு
இருக்கே நமக்கு என்பதை சூட்டு.

chinnakkannan
14th March 2015, 11:38 AM
சூட்டுகிறாள் பூமாலை கோதை நல்லாள்
…சுடர்வண்ணன் கண்ணனையே நெஞ்சில் வைத்து
மீட்டுகிறாள் ராகங்கள் பலவாய்க் கொண்டே
..மென்மையான மாயவனின் செயல்கள் தன்னை
பாட்டுகளில் பற்பலவாய் எழுதிப் பார்த்து
…பங்கயமாய் விழிகொண்ட பாலன் என்று
தீட்டிடுவான் நெற்றியிலே குங்கு மத்தை
…தீர்மானம் கொண்டபடி அங்கு தானே..

Russellhni
14th March 2015, 04:03 PM
தானே தன்னை பகையாது
தன்னை தானே இழியாது
தானே தனக்கு நண்பனென்று
தன்னை தானே தெரிந்தவன்
தாழான் என்றும் தரணியில்
தேனாய் இனிக்கும் அவன் இல்

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQmVFZic9z6RV6pa1m6-E3FgFAkgucTjKvCbPDk7ryHPsL4zlbu

நன்றி : பகவத் கீதை

kalnayak
16th March 2015, 05:42 PM
இல்லை என்பார்க்கு இல்லாதவன்
இருக்கிறான் என்பார்க்கு வழங்குபவன்
கண்ணால் காண முடியாதவன்
எண்ணங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவன்
தலைவனுக்கு தலைவனாய் தலைமையேற்பவன்
அடிமைக்கு அடிமையாய் உழைப்பானவன்
பிறப்பும் இறப்பும் கொள்ளாதவன்
எதையும் தனக்கு கொள்ளாதவன்
எல்லா உருவும் எடுப்பானிவன்
அவனையே நாம் தேடுவோம்
நம்முள்ளே அவனை நிறுத்துவோம்

pavalamani pragasam
17th March 2015, 08:53 AM
நிறுத்துவோம் ஆணின் அகங்காரத்தை
நடக்கும் அக்கிரமத்தை அடக்குமுறையை
நஞ்சாய் படிந்த அவன் அழுக்கு புத்தியை
நரகமாய் மாறிய நங்கையர் நாட்களை
இந்த நேரத்தில் இன்ன நபருடன் சென்றாய்
வன்புணர்ந்தபோது அடங்காது திமிறினாய்
அதனால் கொன்றோம் இதுவே தொடரும்
சாகக் காத்திருக்கும் விலங்கின் வாக்குமூலம்
தூக்குக்கயிறு போதாது போதவே போதாது
எப்படி நொடியில் இவனை கொல்லலாம்
எண்ணெய் கொப்பரை சுண்ணாம்பு காளவாசல்
குலை நடுங்கும் பல்வேறு சித்திரவதைகள்
தரவேண்டாமா இதயமற்ற இக்கயவர்க்கு

chinnakkannan
18th March 2015, 12:24 PM
இதயமற்ற இக்கயவர்க் கென்ன வேண்டும்..
நான் கேட்கின்றேன்
இப்படி பலவிதமாய்
மக்களின் பணத்தை செலவு
பலவாறாய்ச் செய்கிறார்களே..
நான் கேட்கின்றேன்
ஏன் அப்படி..
நான் கேட்கின்றேன்..

பேச்சாளர் திரும்பக் கேட்டபோது
எழுந்த்து குரல்
உங்களுக்கும் வேண்டுமா பங்கு
காதில் விழுந்த்தாலோஎன்னவோ
முடித்தார் விரைவாக பேச்சை...

Russellhni
18th March 2015, 01:24 PM
பேச்சைக்குறை கூறாதே குறை
எண்ணியே கூறு எதையும் ஆழமாய்
ஏச்சு வேண்டாம் என்றுமே அது பகை
மிகை வேண்டாம் வேண்டுமே புன்னகை
மற்றவரை அறிந்து உண்மையை புரிந்து
மயக்கமின்றி பேசுதல் மாந்தர்க்கு அழகு


https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSH_SH-2gBBG9h6FR_WNXzfrcwwHzDFRHEH2Bqc7kGPLcZcko-H

chinnakkannan
18th March 2015, 01:47 PM
அழகுதனைக் காட்டிவிட்டே சற்றே ஓடி
...ஆடித்தான் மறைந்துவிட்டாய் நினைவி லுண்டா..
பழகுதற்கு இனியகுரல் பார்வை மட்டும்
.. பளபளத்து அங்குமிங்கும் சுற்றி ஓடும்
வளமுடனே விகசிக்கும் இளமைத் துள்ளல்
...வாகாக உடைநடையில் தெரியும் அன்றோ
கலகலப்பாய்ச் சிரித்திருந்தாய் அந்தக் காலம்
...கண்களிலே ஈரமின்று ஏனோ சொல்வாய்

என்னவெல்லாம் பேசுகிறாய் போடா போப்போ
...ஏதேனும் தெரியாமல் இருந்த காலம்
எண்ணமெலாம் சிறுவயதில் உந்தன் பின்னே
...ஏந்திழையாய்த் தொடர்ந்திருந்த காலம் நெஞ்சில்
இன்னுமின்னும் பேசத்தான் ஆசை உண்டு
... இன்றெனக்குப் பொழுதில்லை கண்ணின் ஈரம்
வண்ணமாக உனைப்பார்த்த ம்கிழ்ச்சி யால் தான்
...வாழ்வினிலே எனக்கொன்றும் குறையொன் றில்லை

pavalamani pragasam
18th March 2015, 05:04 PM
குறையொன்றில்லை கண்ணா
மூதறிஞர் அழகாய் சொன்னார்
பாலையில் நடக்கையிலவன்
தோள் மீதெனை சுமக்கையில்
வாட்டமெனக்கு வருவதில்லை
வருந்தாத மனம் நிலைக்கட்டும்

kalnayak
19th March 2015, 05:11 PM
நிலைக்கட்டும் என்றே நாம் நினைப்பதுண்டு
நிலைத்திட்டால் இவ்வுலகு நமக்கில்லை
நிலையானதில்லை என்ற வார்த்தையே நிலை
நிலையானதில்லை வேறொன்றுமே என அறிவோம்.

pavalamani pragasam
19th March 2015, 08:02 PM
அறிவோம் போலிகளை
பொய்களை புரட்டுகளை
பாசாங்கு பேச்சுக்களை
பச்சோந்தி பிறழ்வுகளை
பொங்காத பாலாய்
போதுமா பொறுமை

Russellhni
20th March 2015, 08:16 AM
பொறுமை இன்றி பித்தாய் என்றும்
பொருள் தேடி புரட்டி அலைகின்றோம்
என்றோ ஒருநாள் சாகப் போகின்றோம்
செத்தால் அன்று வேகப்போகிறோம்-ஆனால்
அனுதினமும் வெந்து வெந்து சாகிறோம்
அழுக்காறு அவா வெகுளி கொண்டே சகா !

http://www.videoinspiration.net/blog/wp-content/uploads/2014/11/greed.jpg

pavalamani pragasam
20th March 2015, 08:37 PM
சகா இல்லா வாழ்வு
சுகமில்லா பயணம்
சத்தியம் பொய் பேச
சமயமறிந்தவனவன்
சாம்ர்த்தியமானவன்
சமரோ சமாதானமோ
சகாயம் செய்வான்
சளைக்காத தோழன்

Russellhni
21st March 2015, 08:34 AM
தோழன் இருந்தான் காசும் இருந்தது
கடனாய் கேட்டான் கொடுத்தேன் காசு
காலம் கழிந்தது காணோம் அவனை
கண்டேன் ஒருநாள் கேட்டேன் கடனை
காசும் தோழனும் இழந்தேன் அன்றே


:-( :-(

pavalamani pragasam
21st March 2015, 09:37 PM
அன்றே மற நன்றல்லாததை
இன்றை நினை இனிமையாய்
நன்றே நடக்கும் அனைத்தும்
என்றோ வரட்டும் விடுதலை

Russellhni
23rd March 2015, 02:48 PM
விடுதலை என்பது உடைப்பது தளை
கெடுதலை எதிர்க்கலாம் கேள்வி கேட்கலாம்
அறிதலை பகிரலாம் அது இந்திய விடுதலை
அடிமை நாட்டிலும் அதுபோல் பேசலாம்
அதன் பின்னுண்டு அவனுக்கு விடுதலை
அமரனாவான் ஆணை அங்கு 'எடுதலை'!

chinnakkannan
23rd March 2015, 06:19 PM
எடுதலை என்றுவிட்டீர் என்பதியைக் கொன்றுவிட்டீர்
..எங்கினும் கண்டதுண்டோ இதுபோன்ற மதியீனம்
உடும்பென நீதிதன்னை உளத்தினிலே பிடித்துநீரும்
..உதவிடும் சாட்சியான சிலம்பினையே மறந்துவிட்டீர்
குறுகிய நெஞ்சமன்றோ கோமகனே கொண்டுவிட்டீர்
,,கூற்றுவன் கொண்டுசென்ற கணவந்தான் வந்திடுவானா
சுடுமழை சொற்களங்கு சடசடத்தே கனலைப்போல்
..சூழ்ந்ததும் மதுரைபின்னர் எரிந்தததுவும் அறிந்தகாதை..


//முரளீஈ... நற நற :)//

pavalamani pragasam
23rd March 2015, 07:16 PM
அறிந்தகாதை அறிந்த கதைதானா
பணம் பதவி பவிசு குறைவின்றி
மனைவி மக்கள் இளைய வாரிசுகள்
பார்வைக்கு மிக நிறைவான வாழ்வு
மறக்காதே அனுபவ பழமொழியிதை
ஒய்யார கொண்டையிலே தாழம்பூ
உள்ளே இருக்கும் ஈரும் பேனும்
கண்ணை நம்பாதே ஒரு நாளும்

Russellhni
24th March 2015, 12:01 PM
நாளும் ஒரு காரணம் நவிலும் சகியே
நீளும் உன் பட்டியல் தேடி தேடியே
நேரம் கழித்து இன்றேன் வந்தாய் சொல்

நாடியே கேட்டதனால் நன்குரைப்பேன் நானே
ஓடியே வந்தேனா மூச்சிறைக்க படி ஏறி
தேடியேக் காரணம் காண மறந்தேன் சகியே !

chinnakkannan
24th March 2015, 01:02 PM
சகியே உன்னை நினைத்தால் நெஞ்சில்
..தடைகள் தகர்ந்தே எழில்கள் ஊறும்
உரமாய் நானும் உயரத் தானே
..உணர்வில் கலந்தே உயிராய் நின்றாய்
கரத்தை நீட்டி ககன வெளியில்
..காற்றைப் போலப் பறக்கவும் வைப்பாய்
மரமாய் கல்லாய் இருந்த என்னை
..மயக்கி விட்டாய் கண்ணே தமிழே..!

kalnayak
24th March 2015, 01:40 PM
தமிழே அமுதே தரம்கூடிய தங்கமே
குமிழாய் எத்துனை மொழி குறைந்தாலுமே
தன்னிகர் இலக்கியம் அததுனையும் தந்தாயே
தரணியிலே முன்மொழியாய் நீடு வாழ்வாயே

chinnakkannan
24th March 2015, 01:57 PM
வாழ்வாயே வையத்தில் எல்லாம் பெற்று
... வளமுடனே குறையெதுவும் கொள்ளா வண்ணம்
நாள்பொழுது எக்கணமும் இன்பங் கூட்டி
.. நலமாக இருவென்றே சொல்லி என்னை
ஆழ்கடலில் தள்ளிவிட்டீர் அப்பா உங்கள்
..அரசினையே காப்பதற்கு எண்ணி நீவிர்
பாழ்மனதைக் கொண்டவந்தப் பகைவன் இல்லில்
..பட்டெனவே சேர்த்துவிட்டீர் ஆனால் அப்பா..

பெண்மனது என்னவென்று அறிய மாட்டீர்
..பிழையெல்லாம் புரிவதற்கும் அஞ்ச மாட்டீர்
என்னம்மா இதுசரியா என்ற கேள்வி
..எப்பொழுதும் கேட்டதில்லை நீவிர் என்னை
சொன்னசொலைக் காப்பதற்கு என்றே சொல்வீர்
..சோகந்தான் பெண்களுக்கா சொல்லும் அப்பா
மன்னனென்றால் மக்களுக்கு மட்டும் தானா
..மகளான எனக்குநீதி கிடையா தாப்பா..

pavalamani pragasam
24th March 2015, 06:06 PM
கிடையாதாப்பா ஒரு நல்லவன்
கேள்வி இது துரியோதனனுக்கு
கிடையாதாப்பா ஒரு கெட்டவன்
இக்கேள்வி மூத்தவன் தர்மனுக்கு
கீதை உரைத்த கண்ணன் குசும்பு
பார்வைதான் புலப்படுத்துகிறது
பங்காளி பய மக்கா என்றுணர்த்த
பரீட்சை வைத்தான் பரந்தாமன்

Russellhni
25th March 2015, 08:33 AM
பரந்தாமன் வடமொழியா அல்ல தமிழ் வழியா
பறந்து வந்ததாலா அல்ல பருந்து மேல் வந்ததாலா
பரந்து விரிந்த பார் அதிபனா இல்லை பாலி
பரக்ரிதியா பகர்வாயே பரந்தாமா !



--------------------

*பரக்ரிதி,பாலி – தமிழ் வடமொழிக்கு முன்னோடி

pavalamani pragasam
25th March 2015, 11:36 PM
பரந்தாமா போதும் உந்தன் பொல்லாத விளையாட்டு
பேதை என்னை விட்டு விடு பாதையை நீயே காட்டு
திக்கு தெரியாத காட்டில் எனக்கு ஏனிந்த கண்கட்டு
தடுமாறி நிற்கிறேன் தவிக்கிறேன் நேரான வழிகாட்டு

kalnayak
26th March 2015, 10:14 AM
காட்டு வழியிடை இரவுப் பயணம்
கானம் ஒன்றே வழித்துணையாகும்
பாட்டரவம் என்னை விலங்கிடம் விலக்கும்
பால் நிலா வெளிச்சம் பாதையைக் காட்டும்
நாட்டு மக்களின் தொந்தரவு தாண்டியே
நானே கண்டேன் புதிய பாதையை
வீட்டில் உள்ளோர் விடுகின்ற மூச்சு
வீதிகள் தாண்டியே என்னைத் தீண்டும்
பூட்டிய நெஞ்சிலே பெற்றவர் போதனை
பூவைப் பெற்றவள் அறியாப் பயணம்
வாட்டிய சோகத்தில் வாடிப் போனேன்
வந்தவள் நெஞ்சிலே அழுதே நின்றாள்
கட்டிலில் இருந்தே கீழே விழுந்தேன்
கனவுகள் விலக்கிக் காயம் கண்டேன்
கெட்ட கனவை கலைத்தக் காலையே
கெடாமல் என்மனம் காப்பான் இறைவன்

chinnakkannan
26th March 2015, 05:39 PM
இறைவன் நினைத்தாலும்
மனிதன் நினைக்காவிட்டால்
ரன் எடுக்க முடியாது
என வாஸ்ஸப் மெஸேஜ் அனுப்பினால்
என்னா மேன்
என்னா வேலபாக்காம வெள்ளாட்ட பாக்கறியா
அச்சோ பாஸீக்கு எப்படி
தப்பா மெஸேஜ் போச்சு
ஆண்டவா காப்பாத்து..

pavalamani pragasam
27th March 2015, 01:14 PM
காப்பாத்து கருணைக்கடவுளே
நாலு பக்கம் துன்பம் வந்தால்
ஓடுவதெங்கே ஒளிவதெப்படி
யானையும் சேனையும் துரத்த
ராணியும் உக்கிரமாய் பார்க்க
சதுரங்க ராஜா நான் செத்தேன்

Russellhni
28th March 2015, 07:07 AM
செத்தேன் என்றாயே சும்மாதானே
செத்தேன் என்பவர் சாகவில்லை
செத்தவர் வந்து செப்பியதில்லை
சாவு மட்டுமே நிச்சயம் அது
செமிகோலனா சிறிய புள்ளியா
சரியாய் எதுவும் புரியவில்லை
சாமியே இல்லை நாமே அதுவும்
சாவு மட்டும் நம் கையில் இருந்தால்!

pavalamani pragasam
28th March 2015, 09:22 AM
கையில் இருந்தால் அள்ளி வீசு
காசை தேன் துளியாய் மாற்று
கணங்களை முழுதாய் வாழு
கடந்து போனவை திரும்பாது

kalnayak
28th March 2015, 10:08 AM
திரும்பாது முன்னோக்கு நான் முதுகில்குத்தும் நபரில்லை
துரும்பாக எனை நினைத்தாலுமுனை வைதேனில்லை
அரும்பாது நம்காதல் எனகண்டும் உனைவெறுத்தேனில்லை
விரும்பாது என்னோடுவாராதே வாழ்க்கை விளையாட்டில்லை

Gopal.s
28th March 2015, 12:59 PM
விளையாட்டில்லை என சொல்லியே விளையாட்டில் திளைக்கிறோம்.



பூமி மாதாவின் மீது நச்சுரம் பூச்சிகொல்லி மிகை மடிகறக்கும் விளையாட்டு.



அசல் மாதாவை துதி பாடி தெய்வமாக்கி உதிரம் உறிஞ்சும்

விளையாட்டு.



பாரதமாதவை பிளாட் போட்டு அன்னியர்க்கு விற்று கள்ளபண விளையாட்டு.



சக ஜீவிகளை சோதனையாக்கி வாழ்விடங்களை ஒழித்து தின்று தீர்க்கும் விளையாட்டு.



நட்பு சோதரம் நன்கு தரமிறக்கி நற் கொள்ளையடிக்கும் நகை

விளையாட்டு.



மனைகாதலி என்ற கற்பு சிலுவையில் கட்டி கவ்வி குதறி காம

விளையாட்டு.



சாலைகளில் சுதந்திரம் தேடும் சக எதிர்பாலினரின் மீது தோல் ,இரும்பி கத்தி கீறும்

குரோத விளையாட்டு.



காற்றும் மழையும் கடலும் பனியும் சூரியனும் சுழன்று திசை மாறி தாக்கும்

விளையாட்டு



காட்டுகிறது விளையாட்டில்லை வாழ்க்கை ,பலியாக போவது புற்றுக்கா மேகத்திற்கா கோழி பன்றி

காய்ச்சலுக்கா ,சாட் புட் த்ரீ விளையாட்டு



பிரளயம் எனது தேர்வு.

pavalamani pragasam
29th March 2015, 08:53 AM
தேர்வு என்பது ஒரு சோதனை
படபடப்பு அதன் சுருதி தாளம்
பரிதவிப்பு அது புது அனுபவம்
வினாத்தாளை பார்த்தவுடன் பீதி
பதட்டம் அடங்கிடும் விரைவில்
பிரவகிக்கும் எழுத்தெனும் ஊற்று
உளைச்சலும் ஆக்க விளைச்சலும்
ஆயிற்று அரை நூற்றாண்டு போல
ஆயினும் தொடருது அத்தொந்தரவு
இன்னும் இரவில் வரும் கனவினிலே

Russellhni
29th March 2015, 10:09 AM
கனவினிலே தான் வெற்றி நமக்கு
காற்றினிலே விட்டு விட்டோம்
கிரிக்கட் கோப்பையினை
காத்திருப்போம் காலம் வரும்

விளையாட்டே வேள்வி என்று
விரும்பி ஏற்பவர் சிலர் உண்டு
சச்சின் ஆனந்த் சாயினா போன்று
சாகசம் செய்பவர் அவரே நன்று

வருமானம் பெருக்கவே சுருக்கான வழி
விளையாட்டதில் தப்பாட்டம் ஆடி
தன்வலி தேடாமல் ஆள்பலம் தேடி
ஏற்றமற்ற போட்டி கொண்டு
ஏமாற்றியவர் பலர் உண்டு
ஏமாந்ததில் இந்தியாவும் ஒன்று
என்றே நான் சொல்வேன்!


/** ச்சே ! இந்தியா நியுசி பைனல்ஸ் போச்சே :banghead: /

pavalamani pragasam
29th March 2015, 04:28 PM
சொல்வேன் உண்மையை
கொல்வேன் தீமையை
வெல்வேன் அதர்மத்தை
மன்னனோ கணவனோ
தாட்சண்யமேயில்லை
மாண்டான் நெடுஞ்செழியன்
எரிந்தது அன்று மாமதுரை
கண்ணகியின் கற்பு யாகம்
குண்டலகேசியின் தந்திரம்
கொலை தடுத்த கொலை
தயங்காது தாய்க்குலம்
தைரியமதன் தனி குணம்

chinnakkannan
29th March 2015, 06:15 PM
தனி குணம் தான் அவனுக்கு

வள வள வள வள என
நான் பேசிக்கொண்டே போகக்
காது கொடுப்பான்
பதில் எதுவும் சொல்ல மாட்டான்..

கூர்மையாய்ப் பார்ப்பான் என்னை..
கொஞ்சம் தடுமாறும் வார்த்தைகளை
மறுபடி கோர்ப்பேன்..

ஏதாவது பிரச்னையைத்
தீர்ப்பதற்கும்
ஒருவரிதான் பதில் வரும்..
ஆனால் ஆழமாக..

ஆனாலும்
அவன் நிறையப் பேசாதது
கொஞ்சம் கஷ்டமாய்..

சூழ்நிலையில்
எதற்கோ மும்பை போய் வந்தான்
அலுவலக விஷய்மாய்..
வாஸ்ஸப் இல்லை
ட்விட்டர் இல்லை
செல்பேசியும் இல்லை..

ஒருவாரம் கழித்து மின்னஞ்சலில்
அதே இடம் அதே நேரம் எனச்
சுருக்கமாக வர
வேகமாய் அரைமணி முன்னால் போய்
காத்திருந்தால்..

வந்தான்..
கண்டதும் குட்டியாய்
ஆனால் இறுக்கமாய் ஒரு
ஆங்கில அணைப்பு
ஒரு வெகுகுட்டி முத்தா கண்ணிமைகளில்..

வெட்கத்திலிருந்து மீள்வதற்கு முன்
பேசினான் பேசினான்..
பிரிந்தது கஷ்டமாம்
என் நினைப்பு தானாம்..
சாரி செல்லம் வேலை என்பதால்
எந்தத் தொடர்பும் வைக்கவில்லை..
சீக்கிரம் உன் அப்பாவிடம்
பேச வரட்டா...
இன்னும் என்னவெல்லாமோ..

சந்தோஷப் பூ
உள்ளூர விகசித்து
மணம்பரப்ப
கேட்டுக்கொண்டே இருந்தேன்
வெளியில் முகம்மட்டும்
நிச்சலனமாய்...

pavalamani pragasam
30th March 2015, 08:52 AM
நிச்சலனமாய் நிர்மலமோனமாய்
நித்திலம் உறங்கும் நீலக்கடலாய்
நிழல் பிம்பம் கட்டும் நீர்பரப்பாய்
நித்தமும் நெஞ்சே நீ நிலைத்திரு

kalnayak
30th March 2015, 12:35 PM
நிலைத்திருப்பது தெய்வம் மட்டுமே என்றுதான்
நினைத்திருந்தேன் அதையும் நட்டுமே சிலையாய்
கலைந்துபோனதே நினைப்பு அது களவுபோனதிலே
கணப்பொழுதும் நில்லாமல் பிரபஞ்சம் காப்பவர்
நிலையாக நிற்பதாகாதென நிரூபித்தனர் கள்வர்.

pavalamani pragasam
30th March 2015, 04:32 PM
கள்வர் கொள்ள முடியா செல்வம்
செல்வர் வழங்க முடியா தானம்
எடுக்க முடியா கொடுக்க முடியா
சொத்து எழுத்து கற்பனை கர்வம்

Russellhni
31st March 2015, 07:22 AM
கர்வம் கறையல்ல குறையல்ல
கண் மறைக்கும் திரையுமல்ல
கூழைக்கும்பிடு வெறுத்தலும்
குனிய மறுப்பதும் குற்றமல்ல

தனை மிஞ்சி எவருமல்ல
தானே உயர்ந்தவன் என்பது
தலை நிமிர்ந்தே நடப்பது
தன் தம்பட்டம் அடிப்பது

தனியனாய் இருக்க நினைப்பது
தலைவனுக்கு தேவை இவை
தலைக்கணம் சுயமரியாதை - அதனால்
தவறல்ல அதுவொரு நிலை !!

pavalamani pragasam
31st March 2015, 08:46 AM
நிலை தடுமாறினேன் விழப்போனேன்
நீட்டினாய் கையை பற்றிக்கொண்டேன்
நிழலாய் கூட நடக்கிறாய் நிற்காமல்
நின் கருணை நானறிவேன் பரமனே

kalnayak
31st March 2015, 10:43 AM
பரமனே என்றால் அனைத்துமானவனேவென புரியாதவரில்லை
புரிந்தும் சிலர் மனிதனை நீயாக கொள்ளவில்லை
பாவம் தானும் பரமனில் ஓருருவென அறிந்தாரில்லை
போகட்டும் எல்லோரும் எல்லாமும் அறிந்திட்டால் நீயில்லை

Gopal.s
31st March 2015, 03:19 PM
நீயில்லையெனில் இன்னொருவன்.



பெற்றோருக்கு நீதான் வேண்டுமென்றால், அசல் வீட்டு

உற்றாரின் வெற்றியை பெருமூச்சுடன் வெறுப்பார்களா.



ஆசிரியனுக்கோ இவனுடன் அவதி படுவதற்கு பதிலியாக

விசித்திர திறன் பெற்ற முன்னணி மாணவனுக்கு முனகுவானா.



நண்பனுக்கோ அருகாமை இல்லில் பள்ளியில் பேருந்தில்

கண்ணுக்கு கருத்துக்கு இசைவாய் ஓராத்மா இல்லா குறை .



பார்த்த பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இல்லையெனில்

நேர்த்தி வரனொன்று வரமாக சிலிக்கன் பள்ளத்தாக்கில் இன்பமாய்.



உன்னால் மட்டுமே முடியும் தம்பி உண்மையில்லா உன் மன பேதைமை

தன்னால் மேசைக்கு வந்த ஊதா வர்ண காகிதத்தில் கருப்பு காட்டிய விந்தை.



பிள்ளைகளுக்கு அன்னையை புணர்ந்தவனை அணைத்து வாழ்ந்தாலும்

உள்ளே முதல் ஐந்நூறு போர்ப்ஸ் நாயகன் அணைந்தவனானால் மெர்சிடிஸ் கனவு.



மருத்துவ மனைகளிலோ அமெரிக்க கூட்டத்தின் நடுவே தொல்லையாக

வெறுத்து அரசுக்கு பணிந்து உன்னுடலையும் நொந்து தீண்டும் செவிலியர்



அகந்தையில் சேர்க்க மறந்தது தெளிவு நீயில்லைஎனில் உன்னிலும் சிறப்பானவன்

காகங்கள் போல சுற்றும் மக்கள் உடலை கொத்தும் காகத்தை ஓட்டாமல் .




சுடுமோ இடுமோ என பிறவி தேர்வு இறுதியானதும் மக்கள் மகிழ்வர்.சுற்றோர்

அடுத்து ஊர் புகுவர் உனக்கு பிரதியாக இளமை சக்தியுடன் புத்தெழுச்சி



உலகத்தில் எங்கே ஒட்டினாய் எங்கு சிறந்தாய் எவர் வாழ்வை உய்வினாய்?

கலகத்தில் உழன்று அலைவுகளை கூட விடாத சுவடற்ற மறைவு.

pavalamani pragasam
31st March 2015, 05:03 PM
மறைவு எழுப்பித் தடுக்க
திரைச்சீலை மரக்கதவு
முள்வேலி மதில்சுவர்
சாக்குப்படுதா போர்வை
மற்றும் பராமுக பாவனை
போதுமான எல்லைக்கோடு

kalnayak
31st March 2015, 06:58 PM
எல்லைக்கோடு இருந்தும் மதிக்கவில்லை எதிரி
தொல்லைததந்தார் ஒதுங்கி நின்றோம் பதறி
பல்லையுடைத்தால்தான் துன்பம் உணர்வர் கதறி
வல்லை நம்எல்லையென அவர் போகவேண்டும் சிதறி

Gopal.s
1st April 2015, 07:15 AM
சிதறித்தான் போனோம் பல முறை .

கதறி கதறி கண்ணீர் வற்றி சிதறுவதில் கண்ணீர் மிச்சம்.



போதனைகள் கேட்டே பூதவுடல் வளர்த்தோம்.

வேதனை சுமந்தோம். சாதனை அரக்கருக்கு மட்டுமே.



உயிர்களிடத்து அன்பு காட்டும் பாரதியை மிதித்த பிள்ளையார்

உயிர்வாங்கி உடல் வளர்த்த வீரப்பனிடம் நயந்து பயந்தான்



வீரக்கலை பயின்றவர்கள் கொள்ளையடித்து கற்பழித்து

கோரக்கலையில் தேற அகிம்சை பயின்ற அறநெறி மாந்தர்

கேளாக் கலையில் தேர்ந்து அன்னாருக்கு தத்தம் பொன் பொருள்

கேளிர் கெட்ட பின் நீதி மன்றம் உள்ளிட்ட யாரையும் கேளீர்



அன்புநெறி ஆற்றும் என சேர்த்த சுற்றங்கள் வன்வெறியில்

பண்புநெறி துறந்த பாதகரையும் சொர்க்கம் சேர்க்கும் மாண்பு



சுற்றியும் நச்சு கூண்டு உண்பது நச்சு பொய்யுணவு சுவாசமோ

வற்றி போன பிரணவாயு புதுமைகளோ உருமாறும் விஷ நுண்ணியுர்கள்



பனிமாறி கடலாகி கரைதேடும் கல்கியாகும் நாளே அழித்து தழைக்கும்

பணியாற்றும் ஒரே தேவனை ஒன்றே குலமாய் சிதறாமல் தொழுவோம்.

pavalamani pragasam
1st April 2015, 08:31 AM
தொழுவோம் அழகை
குழந்தையின் சிரிப்பை
புல்லிடை பொடிப்பூவை
வெள்ளந்தியான மாந்தரை
மானுட அடையாளத்தை
அச்சாணி முறியவில்லை

Gopal.s
1st April 2015, 09:43 AM
அச்சாணிகள் முறியவில்லை பொருட்காட்சி சாலைகளில்.

இச்சைமிகு வாகனங்கள் புகைவிட்டு ஏந்தி செல்லும்

நச்சை இழுத்து வாழும் வண்டி மாட்டை உண்போர்

பிச்சை புகினும் கற்க அரசு பள்ளிகள் இருந்தும்

கொச்சை கொள்ளை கூடங்களாய் ஆங்கில பள்ளிகள்

சிச்சை கற்க அடகு கடையில் அடகாக அப்பனன்னை




கற்றபின் நிற்க அதற்குத்தக கொள்ளையர்களாய் தன்னை

விற்று சிற்றுந்தோ மகிழுந்தோ வாங்கி மகிழ் புகை விட்டு

சுற்றம் அனைத்தையும் முதியோர் விடுதிகளில் அட்டு

கொற்றம் காண கடல் கடக்கும் வீரதீர சோழர்கள்




குடிக்க மட்டும் வோட்கா, காண மட்டும் பாரிசு

குடிகாண தேடுவதோ சுத்த கற்பில் கடாமுடா பட்டி

மடிகணினியில் இணைதேடி ஸ்கய்ப்பில் காதல் கண்டு

முடிவெடுத்து முடியுமுன் மண்டபங்கள் கடிதாகி




இல்லாளை முதல் வருடம் முழுதும் புணர்ந்து பேர்

சொல்ல ஒரே வாரிசு பெற்று ,ஆயுள்வரை மூடியிட்ட புணர்ச்சி

கள்ள உறவு கொள்ளவும் மூடியிட்டே மேகம் தவிர்த்த மோகம்

உள்ள அனைத்திலும் கொள்ள ரப்பரும் ,பிளாஸ்டிக்கும்




தோலோடு தோலுரசி சுகம் காணா பிறப்புறுப்பு ரப்பருடன்

காலோடு தலை அனைத்துமே பிளாஸ்டிக் உறவுடன்

நாலோடு ஐந்தாக சுயமற்ற வாரிசின் வளர்ப்பு பிறந்தவுடன்

வாளோடு முற்பிறந்த மூத்த குடியின் வீரம் கணினி விளையாட்டில்




சுழற்சி செய்து இயற்கையை காக்காமல் சுழர்ச்சியால்

அழற்சியில் மானுடம் கொய்யும் நவீன செயற்கையே

விழலுக்கு இறைத்த நீராக அனைவரின் வாழ்வும்

நிழலுக்கும் ஒளியின்றி நிழல் வாழ்வு ,செல்வர்கள் ஐநூருக்காய் .

pavalamani pragasam
1st April 2015, 05:06 PM
ஐநூறுக்காய்
ஆயிரத்துக்காய்
தக்க மண்டபம்
மொய்யெழுத கூட்டம்
அளவில்லா ஆடம்பரம்
ஏனிந்த விளம்பரம்
பட்டினி சாவுலகில்
பந்தியிலுணவு பாழ்

Russellhni
2nd April 2015, 07:59 AM
பாழ் வெளியில் தேவருடன்
பார்வதி சிவனார் பார்த்தபடி :
பீஷ்மர் பாண்டவருக்கு படுத்தபடி
பார் உய்ய வழி பகர்ந்தபடி:


பரந்தாமன் திருநாமம் ஆயிரம்
பாடி அனுதினமும் சிந்திக்க
அமுதம் போல் அனந்தன் பெயர்
அருளிக் கொண்டிருந்த நேரமது !


https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTkwdfXcQ4A2y2kpa098Hu2Sqk8rlpDy aW77sPvku8P020wYACHRQ


/தொடரும் /:smile2:

pavalamani pragasam
2nd April 2015, 08:20 AM
நேரமது கேட்க சரியாய் படவில்லை
கழுத்துக்கு எட்டு காரட் வைர அட்டிகை
சாண் அகல சரிகை பார்டர் பட்டுச்சேலை
அவசரமாய் வெளியே கிளம்பும் காலை
காத்திரு வரும் மயக்கம் தரும் மாலை
கச்சிதமாய் காய் நகர்த்துவதவள் கலை

Russellhni
2nd April 2015, 09:17 AM
கலைவாணியும் பிரமனும் அருணனும் வருணனும்
கண்ணாயிரம் கொண்ட இந்திரனும் சந்திரனும்
கந்தர்வரும் தேவரும் கிங்கரரும் ஒன்றாய் நின்று
கண்கொள்ளா காட்சிதனை காணலாயிற்றே !

கருமுகில் வண்ணன் மாதவன் கோவிந்தன்
கேசவன் ஸ்ரீதராவென பிதாமகர் பாடலாயிற்றே!
கண்ணனும் சத்யபாமா ருக்மணியுடன் அங்கே
காவியமாய் பீஷ்மன் உரை கேட்கலாயிற்றே !



(கிங்கரன் - கைங்கரியம் செய்பவன். eg : யம கிங்கரன்)

chinnakkannan
2nd April 2015, 09:57 AM
கேட்க லாயிற்றே கண்ணனவன் குழலினிமை
…தெள்ளத் தெளிவாக தேனமுதாய்க் காதுகளில்
பார்க்க லாயிற்றே பரபரக்கும் விழிமலர்கள்
…பார்த்தன் திருவுருவம் வரும்திசையை நோக்கித்தான்
வேட்கை கொண்டவுளம் விரைவாக அங்குமிங்கும்
…வெட்கம் தனைவிட்டே அவனணைப்பை நாடித்தான்
வேர்த்து அலைபாயத் தவித்துநிற்க லாயிற்றே..
.மேவி அவளிடமே கண்ணனெப்போ வருவானோ

kalnayak
2nd April 2015, 02:51 PM
கண்ணனெப்போ வருவானோ
கவலையெல்லாம் தீர்ப்பானோ
அண்ணனையொத்து இருப்பானோ
அறிவுரைகளாய் தருவானோ
எண்ணங்களில் நிறைந்தானோ
ஏற்றங்கள் கொடுப்பானோ
வண்ணங்களாய் வார்ப்பானோ
வாழ்க்கையையே மாற்றுவானோ
திண்ணமாய் கும்பிடுவோர்
திருமலைநாதனை சேவிக்கிறார்

pavalamani pragasam
2nd April 2015, 05:15 PM
சேவிக்கிறார் பலர் பணநாதனை
உயர் பதவியில் இருப்பவனை
அடியாள் படை பலமுள்ளவனை
பவனி வரும் உற்சவ சாமியை
கொள்கையில்லாதது கொள்கை
அனுபவிக்க துடிப்பது என்னத்தை

Russellhni
3rd April 2015, 08:35 AM
என்னத்தை சொன்னார் கங்கை மைந்தன்
எப்படி அறுப்பது சம்சார பந்தன்
எப்படி பெறுவது பிறப்பறு முக்தி -என
பக்தியுடன் கேட்ட பாண்டு மகனுக்கு
பாசமாய் நேசமாய் பதில் சொன்னார்

பிறப்பு பின்னர் இறப்பு பின் தாயின் கருவில்
மீண்டும் உயிர்ப்பு மீளா துக்கம் மேதினியில்
மீள வேண்டில் மேக வண்ணன் புகழ் பாடு
பாரில் நாராயணன் நாமம் நீக்கும் பந்தம்
பாடு நாளெல்லாம் தேடு அவனடி நாடு !



//.. தொடரும் //

Gopal.s
3rd April 2015, 11:22 AM
அவனடி நாடு



சற்றே நீளம் பருமன் ,



வாய்க்குள் கமறல் வரும்



ஆனாலும் புணர்வில் இன்ப வேதனை



அவ்வப்போது பிட்டம் புணர்வது



மரணாவஸ்தை புதுமை அருவருப்பு.



ஆனால் குமாஸ்தாவாக மாமிச பிண்டம்



அலுவலகம் போகும் தேவைக்கு குறைவாக



பொருள் கொடுக்கும்



என்னவோ வெட்டி முறித்தது போல



கைகால் பிடிக்க சொல்லி வாடி போடி என்னும்.



சாதி திமிர் வேறு சம்போகமோ அம்மா



அனுமதித்தால் மாதமிருமுறை இரு வினாடி



பிட்டம் தூக்கி அபான வாயுவால்



அவ்வப்போது ரசாயன போர் வேறு



குடும்பத்துக்கேற்ற பெண்ணாக மனையில் நின்று



புதிய ஆண் நண்பனுடன் நிஜ வாழ்வு.



இருபிறப்பு இதமானதே

chinnakkannan
3rd April 2015, 05:03 PM
இதமானதே இனிதாயினி இகத்தில்சுகம் பெறவே
பதமானவோர் துணையென்றுதான் பகிர்ந்தேனுன துளத்தை
மிதமேயென அவனோயிலை எனிலோயினி மகளே
சடமாகவே இருக்காமலே தயங்காமலே விடுவாய்..

சொல்வதற்கும் எழுதுதற்கும் வார்த்தை வேண்டும்
…சோகத்தில் எழுகின்ற குரல்தான் ஆனால்
எள்ளிடுவார் உன்விஷயம் பார்க்கும் மக்கள்
..ஏனென்று கேட்கிறாயா சரித்தான் போடி
துள்ளுகின்ற இளமையதில் வேகத் தட்டாய்
…துடிப்படக்கி நல்வழிதான் செய்யும் மாண்பு
இல்லறத்தில் இருக்கிறது மகளே ஆனால்
..ஏட்டினிலே சொலும்போது பொறுமை கொள்வாய்..

..

விவரித்தாய் விவஸ்தைகளும் ஏதும் இன்றி
…விலாவரியாய் இங்குவந்து புலம்ப லுற்றாய்
புவனத்தில் மாக்களெல்லாம் மிருகம் போலே
..பிட்டுபிட்டு வைத்ததாக உந்தன் எண்ணம்
துவண்டுவிழும் சருகெல்லாம் மக்கிப் பின்னர்
….சிலநாளில் துளிர்த்தங்கே மரமாய் ஆகும்
சுற்றிசுற்றி வருவதுதான் பிறப்பும் இறப்பும்
…சூட்சுமத்தைப் புரிந்துகொண்டு நடப்பாய் மகளே

pavalamani pragasam
3rd April 2015, 07:14 PM
மகளே கொள்வாய் மிக கவனம்
வாக்கில் வேணும் நல்ல நாகரிகம்
காய் தவிர்த்து கனி போற்றுவாய்
அறியப்பட்ட இடக்கரடக்கல் பல
மூடியோ மூடாமலோ நன்றல்ல
தவிர் சபையோர்க்கு முகச்சுளிப்பு

chinnakkannan
3rd April 2015, 08:03 PM
முகஞ்சுளிப்புக் கொள்ளுகின்ற குழந்தை அன்று
…மூச்சுமுட்ட மருந்தினையே குடிக்கும் மேலும்
அகம்மலரும் சுரமதுவும் செல்ல அங்கே
…அழகுடனே அன்னையிடம் சிரிக்கும் பார்க்கும்
உடலினிலே கொண்டநோயும் மருந்தில் போகும்
…உளத்தினிலே கொண்டசுரம் என்று போகும்
படபடத்துப் பறக்கின்ற காலந்தன்னில்
…தானாகக் கரைந்துவிடும் நினைப்போம் நன்று..

pavalamani pragasam
4th April 2015, 08:02 AM
நன்று நடப்பது தேவதை கதைகளில்தான்
அதில் மட்டும் மணம்புரிவார்கள் பின்னர்
மகிழ்வாய் வாழ்வார்கள் ஆயுள் முழுதும்
அலுத்துப்போகாதோ திகட்டாதோ எனவே
ஆண்டவன் கொடுக்கிறான் துன்பம் அடிக்கடி
ஒரொரு அடி நகர்கையிலுமோரடி தருகிறான்

Gopal.s
4th April 2015, 08:29 AM
ஓரடி நகர்கையில் மேலுமோரடி வைப்பவன்

சீரடி கொண்டவனல்ல சிந்தையில் தேர்ந்தவன்



நினைப்போம் நன்று செய்வோம் இன்று

வினைகளுக்கு வேலைவைப்போம் நல் சேர்த்து




வேறு என்ன சொல்ல செய்ய உலகம் வைத்தது

பேருசொல்ல சிற்பம் செய்வோம் என்றால் டாவின்சி




கவிதை வரைவோம் என்றால் கம்பன் பாரதி

கவிமனத்தை கரைக்கும் நாயகன் என்றால்




நடிகர்திலகம் கதை செய்வோம் என்றால் அசோகமித்திரன்

துடிப்பாக புதுமை காண்போம் என்றால் நியூட்டன்




டார்வின் எடிசன் ப்ராஇட் ஐன்ஸ்டீன் என்று வரிசை

தேர்வின் போது இவர்கள் கண்டதை வெளிக்கொணரும்




மூன்றாம்தர குடிமகனாக நாமெல்லாம் எதை காண

இன்று எதை செய்ய எதை எழுத எதை நடிக்க செய்ததை




செய்யவும் வேலையின்றி கூகல் அனைத்தும் மடியில்

ஐயகோ காதல் செய்வீர் என்றால் தற்குறிப்பு அனுப்பு




சம்பளம் பாப்போம்,கோத்திரம் நிறம் உயரம் கண்டே

சம பலன் காண்போம் பெண்களோ குறைவு தேவைநிறைய




என்னத்தை செய்ய செய்ததை செய்ய வேண்டும் அலுப்பின்றி

சொன்னதை சொல்ல வேண்டும் சுயமின்றி மிச்சம் என்ன




அன்னை தெரசா தொண்டுக்கு எக்காலமும் தேவையுண்டு

முன்னை புதுமைக்கும் புதுமையாய் பின்னை பழமைக்கும்




பழமையாய் அலுப்பு சலிப்பே இன்றி ஆறுதல் அறச் சுற்றம்

கிழமை தோறும் காத்திருப்போம் அழிவு நோக்கி ஆர்வமாக




எல்லாமே அழியட்டும் மீண்டும் தழைக்கட்டும் இலைகட்டி

எல்லைமீறுவோம் ஏவாளுடன் ஆப்பிள் விழுவதை ஆய்வோம்

Russellhni
4th April 2015, 08:56 AM
ஆய்வோம் அவன் ஆற்றல் அவன் ஏற்றம்
அறிவோம் அவன் அருமை அவன் பெருமை
இதமானது எது இறைவன் யார் ஆதாரமெது
அச்சுதன் யார் பக்தவத்சலன் யார் -தேடினார்

தேடி தெளிந்தார் தெளிந்தது பகன்றார்
நாடினார் நாடி கண்டுகொண்டார் பீஷ்மர்
நாராயணா வென்னும் நாமம் - நவின்றார்
ஆயிரம் திருநாமம் விஷ்ணு சஹஸ்ரநாமம்

தருகிறான் விஷ்ணு தயக்கமின்றி கேள்
தருமம் பொருள் வம்சம் செழிக்கும்
துதிப்பவன் இருவினை இடரும் தீரும்
தூய்மையுடன் ஆயிரம் நாமம் சொன்னால்

நெறி சொல்லி நின்றாரில்லை பேரறிவு பீஷ்மர்
பெருமாள் பேர்பாட ஆயிரம் வைஷ்ணவ
அருந்தெய்வ திருநாமம் அடுக்கடுக்காய்
அருளினார் அழகாய் அம்பு படுக்கையில்

அஞ்சன வண்ணன் அமலன் விமலன் பேரோடு
இருடிகேசன் கோவிந்தன் பத்மநாபன் போக்தன்
அமரப்ரபு மதுசூதன் கேசவன் ஸ்ரீமான் என
அனந்த கல்யாண குணமாய் ஆயிரம் பேர்

அத்துடன் அநேகரூபன் அஜாதன் வனமாலி
ஆதித்யன் தாமோதரன் திரி விக்கிரமன்
அனுகூலா அச்சலா என சில நாமம் செதுக்கி
செவ்விய சஹஸ்ரனாம மாலை சேர்த்தார்


மாதவன் பேர் பாடவே மானுடம் உய்யவே
மண்ணு புகழ் மஹாவிஷ்ணு திருவடி சேரவே


https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQWMX3AZ5tDe1xRozO7Aqhpo-3JNeZa6zJFkxdR3YNJIl5_fhSqKA

// தொடரும் ... இது விஷ்ணு பற்றி அல்ல ராமனின் புகழ் சொல்ல :: எனது கிறுக்கல்கள் //

pavalamani pragasam
4th April 2015, 07:05 PM
சேரவே சேராது இருப்புப்பாதையின் தண்டவாளங்கள்
தனித் தனிக்குணம் கொண்ட ஆண் பெண் மனங்கள்
பங்கமின்றி தொடரும் நம் நீண்ட நெடிய பயணங்கள்
பாங்காய் உள்வாங்க வேண்டிய பெரிய உண்மைகள்

Gopal.s
5th April 2015, 06:37 AM
உண்மைகள்



பொய் என்ற கொழு கொழு அண்ணனின் சோனித் தம்பி



வாய் நிறைய புகழ்ந்து அடிக்கடி அழைப்பர் போற்றுவர்



அகப்பை நிறைய அன்னம் என்னவோ அண்ணனுக்கே



ஜகத்தை அழிக்கும் பாரதி குரலுக்காய் சிறிதே அன்னம்



எல்லா தொற்றும் தொ ற்றி உயிர் விடும் சாத்தியங்கள்



கல்லாரும் கற்றோரும் கச்சேரியில் உரைக்க தேவை



மருத்துவரை கூப்பிட்டு பிழைக்க வைத்து குறை சோறு



கருத்து சொல்ல கூப்பிடுவது தம்பியை மறைபொருளாய்



ஒறுத்து புறம் தள்ளி போற்றுவது அண்ணனை அக்கா லட்சுமி



விரும்பி சேருமிடமோ அண்ணன்தான் தங்கை தரித்திரத்தை



கருமி நெஞ்சுடன் குற்றுயிரான தம்பியுடன் குலவ சொல்வாள்



தம்பியை போற்றி புகழ்ந்து என்ன பயன் வாழவிடாமல்



கம்பிக்குள் போக விடாமல் கண்டோரையும் காப்பது அண்ணனே



அண்ணா அண்ணா என தம்பிகள் அழைப்பது புரிந்திருக்குமே



அண்ணனின் புகழுக்கு அழிவேயில்லை காணீர் ஜகத்தோரே





பி.கு- சி.க -கச்சேரி என்றால் கோர்ட்.

Russellhni
5th April 2015, 07:43 AM
ஜகத்தோரே அறிவீர் சர்வம் விஷ்ணு மயம்
ஜகத்ரக்ஷகன் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
துக்கித்தோரே துதியுங்கள் ஆயிரம் நாமம்
தூரப்போகும் துன்பமெல்லாம் இன்பம் சேரும்

அருளியே முடித்தார் பீஷ்மர் ஆயிரம் நாமம்
அன்னை பார்வதியும் அங்கேயே பரமனும்
ஆவலுடன் அனைத்தையும் கேட்ட பின்னர்
அன்னபூரணி அகிலாண்டேஸ்வரி அவளது பதி
அம்பிகாபதி அவனிடம் ஆச்சரியமாய் கேட்டதிது


என்னதிது ! ஈஸ்வரா! எவ்விதம் சாத்தியம்
எந்நாளும் சொல்வது ஆயிரம் திருநாமம்
ஏது மாந்தர்க்கு காலம் நேரம் தினம்
ஏதேனும் எளிதான உபாயம் உங்களிடம்
இருந்தால் சொல்லவேண்டும் என்னிடம்


இனிமையாக சிரித்துக் கொண்டே சொன்னான்
இறைவன் : என்னுயிர் மனோரமா - ஏனில்லை
எளிதான உபாயம் உண்டு ராம ராம என்று
நாளும் சொன்னால் ஆயிரம் நாமத்தின்
பலனும் அப்போதே கிடைக்கும் அறிவாய்



https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRdGNPgwdNm0mihA1D4y14fYmXmHcoRv y2KkWlaUHQiEpRP-f4S

" ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே !!!"

pavalamani pragasam
5th April 2015, 07:50 AM
அறிவாய் அளவாய் உப்பு காரமிட்டு
அறுசுவை விருந்து படைத்து மகிழ
அறியாய் அழுக்கும் அவலமுமான
அகந்தையுடன் பிறந்த ஆண்மகனை

kirukan
5th April 2015, 02:02 PM
ஆண்மகனாய் பாராது
ஆன்மீகமாய் பார்த்திடின்
நாமம் ஏதாயினும்
நன்மைப் பயத்திடும்
நஞ்சில்லா நெஞ்சுடன்
நம்பி நினைத்திட்டால்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
5th April 2015, 04:11 PM
நினைத்திட்டால் அந்த நாளை நினைத்திட்டால்
பாலாய் பொங்குது பாவை மனசு பரவசத்தில்
பிறந்த வீட்டை விட்டு புது உலகம் சென்றிட
படபடப்பாய் இமைகள் இனி துடிக்காமல் மூட
பொருட்டில்லையிங்கு சேர்த்து வைத்த எதுவும்
பறப்பேன் புதிய உலகில் இப்பூத உடலை துறந்து

kalnayak
6th April 2015, 01:04 PM
துறந்து செல்வதற்கு நான் ஒன்றும் பற்றற்றவன் இல்லை
பறந்து மேற்பார்வை கொள்வதற்கு நான் பறவையும் இல்லை
இறந்து போனால் எதைத்தான் பார்ப்பேன் விவரமும் இல்லை
சிறந்து விளங்கிட எத்துறைதேடுவேன் வழிகாட்டி இல்லை
திறந்த புத்தகமாகிட நான் என்ன சிறப்பு கொண்டேன் வாழ்வில்!!!

pavalamani pragasam
6th April 2015, 07:08 PM
வாழ்வில் சவாலுக்கு என்றும் பஞ்சமுண்டோ
வரிந்து கட்டி நீயும் போராடிட வேண்டாமோ
வருந்துவதால் எவ்விதமான பயனுமுண்டோ
வதனம் தான் வாடி தன் ஒளி இழக்கலாமோ
சோர்வை நீக்கி சுயபச்சாதாபம் தவிர்த்து எழுந்திடு
சொடுக்கிக் கூப்பிடு சோதனைகளை வா வாவென
வீழ்வேன் என நினைத்தாயோ என சண்டை போடு
வாழ்வது ஒரு முறை அதை செய்திடு நிறைவோடு

Gopal.s
6th April 2015, 08:14 PM
நிறைவோடு வாழ்பவன்

பிறந்த போது நிர்ணயித்த எதிர்காலம்
சிறந்த பள்ளிக்கு வித்யா மந்திர்

பள்ளிக்கு செல்ல எந்த கார் யார் ஓட்டுனர்
மெள்ள கல்வி பயில நீச்சல் கற்க ஒரு இசைக்கருவி

கூடவே டென்னிஸ் அவ்வப்போது கிரிக்கெட்
தேடவே தேவையில்லாமல் நிர்ணயித்த இணை

தந்தையின் செல்வ நண்பரின் ஒரே மகள்
எந்தையும் தாயும் மகிழ வருடம் ஒரு பிறந்தநாள்

கூடுதல் இரண்டில் ஒன்றாம் குழு முடிந்தவுடன்
தேடுதல் இன்றி நிர்ணயித்த ஐந்து லட்ச ஐ டி தனியார்

முடிந்ததும் டி.சி.எஸ் மும்பையில் முதல் வேலை
கடிமணம் அடுத்த இரண்டாம் வருடம் பிள்ளை பிறந்தான்

வித்யாமந்திர் சற்றே பெரிய கார் அடிக்கடி மாறும் ஓட்டுனர்
மத்யமர் வாழ்வில் எங்கே மாற்றம் மகிழ்ச்சி ஒன்றே நிலை

எப்போதாவது சேரியில் விளையாடி கழித்து தன் பிற்காலம்
தப்போ சரியோ தன் கையிலாக நிலையாமையில் உழலும்

வறியசிறுவனை வேடிக்கை பார்க்குங்கால் வாழ்க்கையில்
தெரியவரா நிலையாமை அறியாமை ஆச்சர்யங்கள் தான்

சுவையோ தன் வாழ்வை தானே வாழ்தல் தனித்தன்மையோ
கவைக்கு உதவா நிச்சய வாழ்வில் சில திருப்பங்களும் உண்டு

சக்கரை நோய் திடீர் பணி மாற்றம் பணி நீக்கம் திருப்பி தேடும்
அக்கரையில் அயர்ச்சி மகனின் திடீர் குடி பழக்கம் பணப்பை

பறிபோதல் சிலதொலைத்தல்கள் மறதிசார் மனமாச்சர்யங்கள்
வறியோருக்கு வக்கற்றோருக்கே வாழ்க்கை சுவாரஸ்ய சுவையோ

பிறப்பிலேயே நிர்ணயிக்க பட்ட நாடக வாழ்வு ஒரே கதை
மறக்காத மக்களின் அதே நிலை அதே நிறை அதே அதே அதே

pavalamani pragasam
7th April 2015, 07:34 AM
அதே கண்கள்
அடையாளம் கண்டவள்
ஆச்சரியக் கூவல்
அரை நூற்றாண்டு கழித்து
கல்லூரித் தோழியின் சந்திப்பு
கனத்திருந்தன உடல்கள்தான்
காய்ந்திருந்தன மனங்களும்
கசிந்துருகிய இனிய கணங்கள்

Russellhni
7th April 2015, 08:49 AM
கணங்கள் கூட மணியானதே
கண்ணே காத்திருக்கும் நேரத்திலே
கண்மணி நீ காதல் பேசுகையிலே
கணத்திலே போனதே கால நேரமே !


/ ** கல்யாணத்திற்கு முன் /

kirukan
7th April 2015, 12:13 PM
நேரம் தவறலும் தவறில்லை நேரம்
தவறல் நன்மைப் பயக்குமெனின்.

-
கிறுக்கன்

chinnakkannan
7th April 2015, 06:02 PM
நன்மை பயக்குமெனின் நல்லபடி வேகநடை
..நன்றாக நடந்தாலே எடையெல்லாம் குறையுமென
எண்ணி மனத்துள்ளே நினைத்துவிட்டு நேற்றெனது
..இல்லம் முன்னாலே *வாகனங்கள் நிறுத்தத்தில்
மென்மை யெனமுதலில் பின்கொஞ்சம் கூட்டுகையில்
..மேவி வந்தார்கள் பக்கத்து நண்பர்கள்
என்ன சுகம்தானா என்றெல்லாம் இருமணியாய்
..எல்லாம் பேசிவிட்டு திரும்பிவிட்டேன் என்னசெய்ய..!


*car parking

pavalamani pragasam
7th April 2015, 08:05 PM
என்ன செய்ய என்ன சொல்ல
ஏனடா இத்தனை சோதனை
முன்னால் சென்றால் முட்டி
பின்னால் சென்றால் உதைத்து
மாடாய் கழுதையாய் மாறி
என் விதி தாக்குகின்றபோது
வள்ளுவம் வழி செல்வேன்
ஊழை முயன்று வெல்வேன்

Russellhni
8th April 2015, 10:40 AM
வெல்வேன் என்பதே முன்னோக்கு பயணம்
வெல்லவே வேண்டும் துணிவும் முயற்சியும்
கொள்ளவே வேண்டும் உழைப்பும் பொறுமையும்
கூடவே வேண்டும் திட்டமும் இலக்கும்

Gopal.s
8th April 2015, 02:45 PM
திட்டமும் இலக்கும் எனக்கு கொடுத்ததென்னவோ

திட்டும் அடியும் உதையும்தான் திட்டமிட்டுத்தான்



ஓரிரவில் பெண்கள் கழிப்பறைக்கு சென்று யார்

யாரிடம் உறவு என்று படம் வரைந்து பாகம் குறித்தேன்



எந்த பாவியோ அது நானாக இருக்கலாம் என்று போட்டு

வெந்த புண்ணில் வேலாய் அப்பாவிடம் தகவல் கொசுராய்



முழுநாளும் முட்டி திட்டமிட்டு எழுதிய காதல் கடிதம்

கழுதையின் வாய்க்கு போனது குப்பை தொட்டி தட்டில்



ஹோலி பண்டிகை கொண்டாட்ட வெறியில் புரபசர் மகளின்

காலி நெற்றியில் பொட்டிட திட்டமிட்டு நிறைவேற்ற



பாவியவள் சிவப்பா உயரமா தொங்கு மீசை என்று பெயர்

பாவிப்பதை தவிர அனைத்தும் குறிப்பு கொடுக்க



கல்லூரியிலா விடுதியிலா எங்கே விலக்கு என பெரிசுகள்

பொல்லாத மட்டிமன்றம் நடத்தி விடுதியிலிருந்து வெளியேற்றம்



நண்பனின் தங்கையை தனியறையில் தழுவி முத்திட முனைந்து

கண் நிறை அண்ணன் தகப்பனிடம் உதைக்க சொன்னால் வாங்கலாம்



தொட்ட தோஷத்திற்கு கட்டு அவளை என கருத்தாக திட்டமிட

விட்டகுறை தொட்ட குறையாக விலை மதிப்பில்லா முத்தமானது



கட்டியபின் ஐந்து வருடம் அனுபவிப்போம் என திட்டமிட்டு உறைபோட

சட்டென்று கிழிந்த உரை இருநூற்று சொச்சம் நாட்களில் மகவு.



அலுவலகத்தில் சக நண்பனை போட்டு கொடுத்து பதவியுயர்வு திட்டம்

தெலுங்கு நண்பனோ முதலாளி ரெட்டிகாருவின் அக்காள் மகன்



போட்டுகொடுத்து போக்கி கொண்டது வேலையை மகனுக்காய் ஐ.ஐ.டி

திட்டம் மகன் வாங்கியதோ ஆண்டாரழகருக்கான அற்புத மதிப்பெண்



நொந்துபோன பின் திட்டமிடுதலை நிறுத்தி சித்தம் சிவம் போக்கில்

கந்துவட்டி மருத்துவர் குறித்தார் நாளை திறந்த இதய சிகிச்சைக்காய்



வந்துபோன அனைவரின் தேவையும் பில்லின் உருவில் திட்டமிடாமல்

பிந்திய வாழ்வில் திட்டமோ திடமோ இன்றி சுவடற்ற மறைவு அலைவுகள் அற்று.

chinnakkannan
8th April 2015, 03:21 PM
அலைவுக ளற்று இருந்த காலம்
..அன்னையின் மடியில் தவழ்ந்த நேரம்...
வளைதலும் சிறிதும் இலாமல் நின்று
..வாலிபக் காலங் கடந்து போச்சு
களைகளாய்க் செய்த செயல்க ளின்று
..கனவிலும் பயமாய் வார லாச்சு
தொலைத்திட நினைக்கும் வாழ்வு மின்று
..தொடர்ந்திடத் துன்பம் கூட லாச்சே

pavalamani pragasam
8th April 2015, 07:49 PM
கூடலாச்சே குற்றங்கள்
கூடவே கவலைகள்
கலைந்த குடும்பங்கள்
களையிழந்த கூடுகள்
கூறுகெட்ட குழுக்கள்
கிறுக்கான கலைகள்
கும்பிடும் கைகள்
குறிவைப்பது கறக்க
குழிபறிக்கும் குள்ளநரிகள்
காவலில்லா குழந்தைகள்
கற்பென்பதை கருதாத
கன்னிகள் காளைகள் காண்

Gopal.s
10th April 2015, 03:44 AM
காண் என உடனே கவனம் ஈர்க்கும் மின்னல் செய்திகளே
வீணென்று தள்ள முடியா துக்கத்தில் எமை ஆழ்த்தும்
ஞானத்தந்தை ஜெயகாந்தனின் மறைவு போன்ற நிகழ்வுகளை
மோனத் துவத்தில் நான் முடிவு காணும் நாள்வரை பதுக்கலாமே

என்வாழ்வுக்கே அர்த்தம் தந்து என் ஆத்மாவை வளப்படுத்திய
உன்னதர்களை சிறிது சிறிதாக இழந்து தனியனாய் இருந்து
காணத்தான் போவதென்ன குறை பட்ட இலக்கியங்கள் பந்தா
பேணும் அரைகுறைகள் சுயநல நட்புசுற்றம் கடமையே வாழ்வு

எங்கே நான் என்னை அனுதினமும் புதுப்பித்து அனுபவித்து
நன்கேவாழ்ந்த நாட்கள் வாழ்க்கை தீர்ந்து வாழும் வடிவங்கள்
சங்கு முழக்கிய பாரதியின் சிவப்பு சிஷ்யன் சூன்யமாக்கினான்
கங்கு கழன்று கருத்தை அழித்து காலத்தை ஒட்டுகிறது நிர்மூலமாய்

pavalamani pragasam
10th April 2015, 08:44 AM
நிர்மூலமாய் ஆனதன்று பழையதோர் உலகம்
நிர்மாணமானது அதன்பின் புத்தம்புது பிரபஞ்சம்
அதுவேதான் சூனியத்தின் மாபெரும் சூட்சுமம்
ஒன்றுமில்லாமல் ஆகி பின்னர் பூரணம் பிறக்கும்

chinnakkannan
10th April 2015, 04:54 PM
பிறக்கும் போதே சொல்லிவிட்டார்
..பேதை நானும் உனக்கென்று
அடடா அழகுப் பூஞ்சிரிப்பு
…அழகி இவளும் உனக்கென்று
பதமாய்ச் சொன்னார் உன் அம்மா
…பார்க்க மறுத்தீர் சிறுவயதில்
இதமாய் இளமை பூத்திருக்க
…இனிதாய்ப் படித்தேன் வளர்ந்துவிட்டேன்

வந்தேன் மாமா உமைத்தேடி
..வாகாய்ப் பேச வரச்சொன்னால்
செந்தேள் கொட்டாய் ஒருபார்வை
…சேர்த்துக் கோர்த்த ஒருசிரிப்பு
பெண்ணில் நானும் அழகிலையா.
..பெரிய படிப்புப் படிக்கலையா
எண்ணந் தன்னில் இன்னொருத்தி
..எளிதாய் உமக்கு அமைந்ததுவா..

செல்லக் கிளியாய் சின்னத் திமிராய்
.கள்ளச் சிரிப்பாய் கனிவாய்ச் சிவப்பாய்
வெல்லத் துளியாய் வேகங் கூட்டி
..மெல்ல இங்கே அழைத்தாய் பெண்ணே
பொய்யோ என்னும் இடையா என்றால்
…மெய்யே என்னும் பார்வை வீச்சு
சில்லாய்த் தெறித்த தேங்காய் வெண்மைத்
..தூக்கல் தெரியும் பற்கள் தன்மை

வந்தால் எண்ணம் ஆட்டங் காண
.;..மனதைத் திறந்து சொன்னாய் கண்ணே
உன்னை மறந்தே இருப்பது என்றால்
..ஊரை என்னை மறந்தாற் போல
திண்ணம் வேலை சிலமா தத்தில்
..திகைந்தால் நானும் வருவேன் உன்னூர்
கண்ணில் நெஞ்சில் கலக்கம் விட்டு
…கனிவாய், கனிவாய் கொடுப்பாய் முத்தம்…!

pavalamani pragasam
10th April 2015, 06:10 PM
முத்தம் தந்தான் வம்பாய் வெறியுடன்
விடவில்லை என் கன்னமிரண்டையும்
கண்ணயர்ந்த என் மேல் படர்ந்தான்
முகத்தை முழுதாய் நனைத்துவிட்டான்
எழ விடவும் மறுக்கிறான் போக்கிரி மகன்
வேலை குவிந்து கிடக்கென நான் தவிக்க
ரசித்து மகிழ்கிறான் பெரிய கள்ளன்
இரவு லீலையின் பொல்லாத கண்ணன்

Russellhni
11th April 2015, 08:25 AM
கண்ணன் சொன்னது கீதையில்
குணத்ரய விபாக யோகத்தில்
குணங்கள் மூன்று மாந்தரில்
குன்றியோ கூடியோ இருக்குமாம்

சத்வம் ரஜஸ் தமஸ் என்று
சாகச கண்ணன் சாதித்தது
சத்வ குணம் அதிலே சிறந்தது
சாத்வீகம் சத்தாயதில் பொதிந்தது

சத்துவ குணம் முனிவர் குணம்
சமச்சீர் நோக்கும் தெளிவும் உண்டாம்
ராஜச குணம் அது ராட்சச குணம்
கோபம் தாபம் குழப்பம் உண்டாம்

தாமச குணமோ சோம்பியின் இனம்
தள்ளும் கீழே எந்நாளும்
தயக்கம் மயக்கம் அதில் இருக்கும்
தமோ குணம் அதுவே அஞ்ஞானம்

chinnakkannan
11th April 2015, 09:19 AM
அஞ்ஞானம் தான்..
என்ன பண்றது…

ரோசிச்சா
பலவருஷம் முன்னால
தாவணி போட்டப்ப
அம்மம்மா சொல்லுவாக
நேரத்தோட பள்ளிக்கோடம் போய்
நேரத்தோட வா..
இளந்தாரிகளப் பாக்காதே
பேசாத
சிரிக்கக்கூடசிரிக்காத
குனிஞ்ச தல நிமிராதம்பாக


இளவட்டப் பொண்ணுக்கு
எதுக்கு இத்தினி அலங்காரம்..
ஜிம்ப்பிளா இரு புள்ள
கல்யாணங் கட்டற்வரைக்கும்னாக

அம்மா ஒண்ணும் சொல்லாது
பாட்டி சொல்றதக் கேளு
ஒன் நல்லதுக்குத் தானேம்பாக
எப்ப நான் ஆச்சி பத்தி
கம்ப்ளோண்டு பண்ணாலும்..

ம்ம்
எல்லாம் ஆச்சு
கல்யாணங்கட்டி
ஆறு பெத்து
ரெண்டப் பறிகொடுத்து
நாலையும் வளத்து
ஆளாக்கி கல்யாணமும் பண்ணி
அதுகளுக்கும் பொறந்து
அதுங்களையும் வளத்தாச்சு

அதுவும் மூத்த பேத்தி இருக்கே
கோல்ட்ல பண்ண சிற்பம் மாரி..
தகதகன்னு இருக்கு
ப்ளஸ்டூ படிக்கப் போகுது
சாக்ரதையா இருபுள்ள
ரோட்ல நடந்துக்கிட்டே
அந்த குட்டிப் போனை நோண்டாத..
வெரசா நட
கலகலன்னு சிரிக்காதேன்னு
சொன்னா
மூத்த மருமவ
என்னத்திட்டறா..

சும்மா கிடங்க அப்பத்தா
அதுங்களுக்குத் தெரியும்
ஒங்க காலமில்ல இது
அதுவும்
கராத்தே கிளாஸ்லாம் போய்ருக்கா
ஸ்கூல்ல கிரிக்கெட்டீம் காப்டன்
சிம்ல போய் எக்ஸர்ஸைலாம் பண்ணுதா..
எம் பொண்ணுபத்தி எனக்குத் தெரியும்
சும்மா சும்மா குத்தம் சொல்லாதீய
பாவம்
ராவானா கண்ணால ஜலம் சொட்டுது
நா என்ன தப்புப் பண்ணிட்டேன்னு
பாட்டி திட்டுதுன்னு புலம்பறா…
இந்தாங்க ஒங்க கேப்பக்கஞ்சி
டிவி போடறேன்
நீங்க பாக்கற சீரியல் பாருங்க..

இது நல்லாஇருக்கே
இவ சொன்னா
நாஞ்சும்மா இருக்க முடியுமா
அஞ்ஞானம் இருக்க விடுமா
நா அப்படித்தான் சொல்லுவேன்
போடி இவளே
எனக்கொண்ணும் ஒண்ணோட
கஞ்சி ஓணாம்னு ரூமுல ஒக்காந்தா
உள்ள கிளாஸோட வந்து முறைக்கா..

குடிங்கம்மா.. ந்னு கொஞ்சம் தன்மையா
சொன்னதுனா குடிக்க ஆரம்பிச்சேனா

கிழவிக்கு வயசாய்டுச்சுன்னு முணுமுணு..

சொல்லட்டுமே…எனக்கென்னா…!

pavalamani pragasam
11th April 2015, 06:58 PM
எனக்கென்னா குறைச்சல் இப்போ வயசா ஆச்சு
என்ன ஆறுதானே ஆகுது அது கூட ஒரு அறுபது
முன்னாடி உள் நாட்டுக்குள்ள அடிக்கடி பறந்ததுண்டு
மகன்கள் வீடுகளுக்கு வான்வழியாய் சென்றதுண்டு
மொதமொதலா இன்னும் அதிக உசரம் அதிக நேரம்
பறந்தா மூட்டு கொஞ்சம் அல்லது அதிகம் நோகும்
பரவாயில்ல பேராண்டிகளுடன் உல்லாசமாய் விடுமுறை
அடுத்த மாதம் இந்த தேதி அமெரிக்காவில் மகள் வீட்டில்

Gopal.s
12th April 2015, 06:11 AM
மகள் வீட்டில் இப்போது முதியோர் இல்லம் செல்லும் நாளை எண்ணி
மகளுக்கு வீடொன்று ஒன்று மகனுக்கில்லை மருமகளுக்கே கேரள

பாரம்பரிய மருமக்கள் தாயம் மருமகள் வடிவாய் நண்பர்களும் மகள்களுடன்
ஆரம்ப நாட்களில் மனைவி சொன்னது நமக்கென்று ஒரு வீடு வீடென்று எதனை

சொல்வீர் அதில்லை வீடு அதொரு ஆதிகால குகை உனக்கென்றே உள்ள அரண்
செல்வீர் அதனுள் ஓய்வு நிலையில் அந்நியர்கள் அனுமதிக்க படார் உமதே அது

அது ஒரு அந்தஸ்து மகனுக்கும் மகளுக்கும் வரன் பார்க்கும் போது வந்தவர்கள்
பொதுவில் கேட்டது சொந்த வீடா விடையின்றி குன்றிய நாட்களில் நிலைதெளிவு

வாடகை வீடுகளில் பிறந்து முதல் பிறந்தது முதலாய் சொந்தம் என்பது சுற்றோர் மட்டும்
பூடகமாய் பேசி வீட்டின் சொந்தம் குடிக்கூலி ஏற்றும் கால் ஒழுகல் பணி தனதில்லை

சுவர்களில் ஆணி கிறுக்கல்கள் என கூறி அனுமதியின்றியே அடுத்தோற்கு சுற்றி காட்டி
எவர் இவர் என்றரரிய கூட விடாமல் மறுநாள் தகவல் வெளியேறு என்று மகனின்

சொந்த வீட்டில் கால் மேல் கால் போட்டு செய்தி தாளுடன் தேநீர் திட்டம் தவிடு பொடி
இந்த இடம் உனதில்லை என உரைக்கவில்லை மருமகள் ஒரு படுக்கறையே எங்கப்பாம்மா

நாளை வருகை நீங்கள் போகலாமே மகளின் இல்லம் சொல்லி அனுப்புறோம் அறை காலியாகி
வேளை வருங்கால் மகள் வீட்டில் மூன்று வருடமாய் அறைதான் இன்னும் காலியில்லை

பாவம் மாப்பிள்ளையின் பெற்றோரும் மகள் வீட்டிலே அறிக்கை காத்திருப்பு சமன் ஆக
தேவைஒரு முதியோர் இல்ல அறை விவசாய குடி போல மகனை மூலதனமாய் கண்டு

திட்டமிடா ஓய்வில் நாள்தோறும் தேவையில்லா ஜீவனம் புழு போன்ற ஏளனம் வருடம்
தட்டாமல் பிறந்த நாள் வருங்கால் கிழிந்த ஆடைகளுக்கு ஓய்வுவருமா என குலுக்கல்சீட்டு

கழிசடை சமூகம் கொள்ளை காரர்களுக்கும் கந்து வட்டியாருக்கும் கற்பழிப்போர்க்கும் கருணை
பொழிந்து கம்பளம் விரிக்கும் திட்டமிடா நடுத்தரர் தூக்கிற்கு தயார் எனினும் அதனிலும் கொடிய

வாழும் தண்டனை அனு தினமும் இன்னுமா வாழ்கிறாய் என்ற ஏளன பார்வை ஆறுதல்
சூழும் கணங்கள் பெற்றோரை இல்லம் சேர்த்த சுற்றம் பேசும் பட்டி மன்றங்கள் முதியோரை மதியுங்கள்

chinnakkannan
12th April 2015, 09:16 PM
மதியுங்கள் எனச்சொன்னார் பாட்டி
மனமார உதாரணங்கள் காட்டி
பேரன்கள் படபடத்து
பெரிதாக யோசித்து
கத்தினரே ஓசைதனைக் கூட்டி

சொன்னவிதம் புரியலையா கூறு
பெரியவங்க வயசைத்தான் பாரு
பலவிதமாய் அனுபவங்கள்
பக்குவமா உழைச்சிருந்தார்..
மூளைக்குள் ஏற்றிப்போய்ச் சேரு..

சின்னவங்க நாங்கதானே பாட்டி
சிறுவிஷமம் செய்வதனால் நாட்டி..
எங்களுக்குப் புரியாத
ஏதேதோ கதைகளையே
சொல்லலாமா நீயேசொல் பாட்டி

pavalamani pragasam
13th April 2015, 09:32 AM
பாட்டி என்றால் பல் போய் பரிதாபமாய்
கோல் ஊன்றி சுருங்கின கொட்டையாய்
இளம் வயதில் பார்த்த புத்தகச் சித்திரங்கள்
தந்த ஒரு படிமம் மூளையில் அழியாதிருக்க
போகுமிடமெல்லாம் 'மரியாதை' மிகுந்த இந்த
மாநகரில் எனை பாட்டி என சிறு பெண்களழைக்க
கோபந்தான் வருகுதே மனம் வருந்துதே துவளுதே
என்றும் பதினாறாய் நிற்கும் என் இளம்மனத்தாலே

Gopal.s
13th April 2015, 10:17 AM
இளம் மனத்தாலே



ஐஷ்வர்யாவை அபிஷேக்கிடமிருந்து அள்ளி சென்று சுவைக்க முடியும்



ஐஸ்யர்வத்தை அம்பானிகளிடமிருந்து ஒரே நொடியில் கவர முடியும்



வேற்று கிரகங்களுக்கு நொடியில் சென்று அங்கு தரையில் பாயிட முடியும்



மாற்று வாழ்வில் புகுந்து காலிலிருந்து தலை வரை மாறி இன்பவாழ்வில் திளைக்கமுடியும்



சற்றே மாற்றி மாற்றி முடிவெடுத்து எப்போதுமே சரியான திசை காண முடியும்



சுற்றும் பூமியை நில் என்று ஆணையிட்டு அனைத்து வாழ்வையும் மாற்ற முடியும்



கற்றும் பிறழ்ந்து வாழும் சுற்றோரை மற்றோரை கல்லெறிந்து கொல்ல முடியும்



நினைத்தவுடன் கனவில் நினைத்த பெண்ணை அணைத்து பிணைந்து இணைய முடியும்



வினை விதைத்து வினை அறுத்த பலன்களை கற்பனையில் கண்டு தீயோரை தீயில் இடலாம்



இளம் மனம் இருக்கும் அறுதி இறுதி அவனவன் உள்ளத்திலே பதினாரிலும் எண்பதாவதும் மாற்றி வாழ்வதும்



தளமிடுவதோ கனவோ கற்பனையோ அல்ல வாழும் கணம் வாழும் விதம் சூழும் எண்ணம்



உலகை மாற்றி வளம் காணும் வித்தகனாய் விடலை பருவத்தில் இருந்தவன் அதே விடலையாய்



கலக்கி வருகிறேன் மாற்ற மனதுடன் மண் புழுவையும் மாற்ற இயலாமல் அங்கீகரித்து சக வாழ்வில்.

pavalamani pragasam
13th April 2015, 06:31 PM
வாழ்வில் வேண்டும் கொஞ்சம் துன்பம்
வருத்தம் வானை வளைக்க முயன்று
வெட்கம் சமூக அக்கரை குறைகையில்
வேதனை வெட்டி முறிக்க முடியாமையில்
வீணாய் போன நல்நோக்கு திட்டங்களில்
விழவேண்டும் மீண்டும் எழுந்து நிற்பதற்கு
வியர்வை விரயமாய் போய்விட்டபோதும்
விரும்புவாயோ உப்பில்லா பத்திய சோற்றை
விருந்தென்றால் வேண்டாமோ அறுசுவை
வெடித்து முளைக்கும் விதைக்குள் ஆலமரம்

Russellhni
15th April 2015, 10:43 AM
ஆலமரத்தின் பழம் சிறிதே
அதிலே உண்டு ஆயிரம் விதை
அதனுள் ஒன்று வித்தாகி
அகல மரமாய் அதை ஆக்கி
அனேக விழுது அதை தாங்கி
ஆயிரம் பறவைக்கு அடைக்கலமே

அரிக்கும் கரையான் அடிமரத்தை
ஆனால் ஆலோ தழைத்தோங்கும்
ஆயிரம் விழுது ஊன்றியதால்
அதுபோல் மனிதா ஆவாயே !
ஆல் போல் தழைத்து வாழ்வாயே !

pavalamani pragasam
15th April 2015, 06:22 PM
வாழ்வாயே மனிதா கொஞ்சம் ஆன்மாவிற்காய்
வயிறு பிரதானம்தான் இல்லையெனவில்லை
ஐம்புலன் சுகங்கள் இன்பந்தான் ஐயமில்லை
திரவியம் தேடி தேடியதை கண்டபடி இறைத்து
தடைகள் பல தாண்டி பந்தயத்தில் ஓடி வென்று
களைக்கையில் உள்மன தாகம் தீர் அறம் செய்து

Russellhni
16th April 2015, 11:34 AM
அறம் செய்து வாழ வழியென்று அன்றே
அறுத்திட்ட மறை ஒழுக்கம் - அஃதே
விழுப்பம் தருமாம் வள்ளுவன் வாக்கு -அதை
அகம் கொண்டு சொல் செயலினில் நாட்டு

pavalamani pragasam
16th April 2015, 09:11 PM
செயலினில் நாட்டு கண்கள் சிவக்க கத்தினாள்
ஓடும் தண்ணீரில் எழுதவேண்டுமுன் பேச்சை
பெற்றவளுக்கும் பின் வந்த ஒரு மற்றவளுக்கும்
நடுவில் விழி பிதுங்கும் கணவனொரு கோழை

Russellhni
17th April 2015, 11:07 AM
கோழை இல்லை நான் மோழையும் இல்லை
ஏழையென் சொல் அம்பலத்தில் ஏறவில்லை
எதிர்த்து பார்த்தேன் எந்த பயனுமில்லை
எடுபட்டவனே விட்டேனா பார் என்றனர்


எடுத்தேன் ஓட்டம் வெட்ட வரும் போது
வெட்டி வீரம் வேண்டாம் வீண் அது இப்போது
இன்று வெற்றி இல்லையெனில் நாளை உண்டு
எருமை போல் பொறுமை எனக்கென்றுமே உண்டு


வென்று காட்டினார் வீழ்த்தினார் வாலியை அன்று
வெகு எளிதாக இராமன் மறைவினில் நின்று
மறுபடி எதிர்ப்பேன் இம்முறை ஒளிந்து கொண்டு
மறம் உண்டு எனை வெல்ல இனி எவருண்டு ?

chinnakkannan
17th April 2015, 05:54 PM
எவருண்டு எனக்கேட்டால் என்ன செய்வாள்
…ஏந்திழையின் மனதுள்ளே நுழைந்த காதல்
பயிரதுவும் வெட்டிவிட்டு எரித்திடு வாரோ
..பாவையவள் நெஞ்சுள்ளே நடுக்கம் மேலும்
விழிகளிலே ஆச்சர்யம் தன்னைக் கூட்டி
…விறுவிறுப்பாய்க் கேட்டாளே தந்தை முன்னர்
விவரந்தான் கூறுங்கள் இந்தக் கேள்வி
..விவரிக்கும் காரணமும் புரிய வில்லை..


பாலாய்த் தேனாய்ப் பாசங்கள்
..பலவாய்க் கூட்டி வளர்த்தமகள்
யாரோ வயதுப் பையனிடம்
…ஏனோ சிரித்தே நின்றிருந்தாள்
ஊரார் பார்த்தே சொல்லத்தான்
..ஓடி வந்தே தான்கேட்டால்
பாவ முகமாய் நிச்சலனப்
..பாவம் கூட்டிக் கேட்கின்றாள்

அன்பே மகளே அருங்கனியே
..அழகாய்த் தானே நான்வளர்த்தேன்
எண்ணும் எழுத்தும் எண்ணவொண்ணா
..ஏற்றங் கொடுக்கும் நற்சிந்தை
இன்னும் பலவும் நீகேட்க
…எளிதாய்க் கொடுத்தேன் உண்டிலையா
பொன்னே பெண்ணே பூந்தளிரே
..புவிநீ இன்னும் அறியவிலை..

இன்னும் பேச்சு எதற்கப்பா..
..என்ன விஷயம் சொல்லுங்களேன்
உங்கள் மகள்தான் வாரிசுநான்
..உணர்வில் மயங்க மாட்டேனே..
கன்னஞ் சிவக்கும் யாரேனும்
..களிப்பாய் என்னை நெருங்கவுந்தான்
திண்ண புத்தி எனக்குண்டு
..சொல்வீர் உமது கேள்வியினை

அந்தக் கடைப்பக்கம் ஆடவன் ஒருவனுடன்
…அழகுப் பெண்ணிலவு உன்மகள் பேசுகிறாள்
சொந்தம் போல்சிரித்து கண்ணில் கனவுகளும்
..சொர்க்கம் போல்விரிய நின்றபடி தானிருந்தாள்
இன்னும் பலவாகச் சொன்னவர் எத்தனையோ..
…ஏற்றம் தரும்படியும் இனிமையாய் இல்லையம்மா
மென்மைக் காதலென்று பலர்சொலும் விஷமுந்தான்
..மேவி உனைச்சேர்ந்து விட்டதா சொல்லம்மா..

சிரிப்பலை கொஞ்சம் மெல்ல
…சிற்சில வாகக் கூடி
விரிந்ததே இதழு மங்கு
..விவரணை சொல்ல வொண்ணா
புரிதலும் இல்லா நோக்கு
..புனைந்தது கண்கள் மெல்ல
வரிவரி யாக நெற்றி
..வாகாகக் கோடு போட


சின்ன விஷயம் இதுதானா
..சீர்மிகும் உங்கள் சோகந்தான்
எண்ணம் சொல்ல ஏந்தயக்கம்
..எனக்கோ காதல் எதுமில்லை
வண்ண மாக நான்பேசி
..வாகாய்ச் சிரிப்பும் சொல்லியவர்
உள்ள விஷயம் சொலவில்லை
..உங்கள் தயக்கம் புரிகிறது..


பேசிச் சிரித்த நல்மனிதர்
..பெரிய மனிதர் என்னுடைய
நேசிப் புக்கும் உரியவளாம்
.. நேகா வுடைய அண்ணனவர்
பூசி மெழுகும் பழக்கம்தான்
..பூவை எனக்குக் கிடையாது
சேதி தவறு என்தந்தாய்
.. செல்வீர் என்றே தான்சிரித்தாள்..

உளத்தினில் கொண்ட காதல்
..உணர்வையும் மறைத்து வைத்தாள்
வழக்கமாய் அவனும் வந்தால்
..வருத்தமாய் முகத்தை வைத்து
பழக்கமும் வேண்டாம் என்றே
..பக்குவ மாகச் சொல்ல
உரமென நினைத்துக் கொண்டாள்
…உருக்குமா காதல் நாளை..

pavalamani pragasam
17th April 2015, 06:49 PM
நாளை என்னாகுமோ இந்நாடு
களை மண்டிய காடானதின்று
சொல்லவொணாத் துயரச் சுமைகள்
சொகுசறியா அனந்த கோடி பெண்கள்
உண்மை உணராமல் போக்கிரியாய்
மலிவு விளம்பரத்தில் பகட்டுகிறாள்
பதறிட பலபேர் பாராட்டிடவும் பலபேர்
பெண் சுதந்திரம் இதுவென்று பகர்கிறாள்
பொல்லாத பொருந்தாத பேச்சுக்கள்
பேசுகிறாள் பொறுப்பில்லாத மின்மினி

Russellhni
18th April 2015, 01:02 PM
மின்மினி பூச்சி ஒளியினை போல்
மின்னும் விண்மீன்கள் ஏராளம்
அண்டத்தில் ஒவ்வொன்றும் ஆயிரம்
அருணனின் வெப்பம் கொட்டும் – ஆயின்

தரணிக்கு தாரகையால் பயனுமில்லை
தண்மதியின் வெண்ணொளி அதற்கில்லை
தங்கமும் வெள்ளியும் தங்காத செல்வமும்
தரமில்லா கஞ்சரிடம் சேர்ந்தாற்போல் !

pavalamani pragasam
18th April 2015, 06:39 PM
கஞ்சரிடம் சேர்ந்தாற்போல் ஆனதே
வஞ்சியிவளிடம் வந்த வார்த்தைகள்
வக்கில்லை சொல்லுக்கு வெறும் சாடைகள்
விளங்குவதில்லை அவற்றின் அர்த்தங்கள்
கடுப்பா களிப்பா குழப்புகின்ற கருவிழிகள்
கிண்டலா ரசிப்பா கனி உதட்டின் சுழிப்புகள்
ம் என்றும் ஓ என்றும் உதிரும் முத்துக்கள்
உணர்த்தவில்லை அவள் உள்ளக்கிடக்கைகள்

Russellhni
19th April 2015, 11:59 AM
உள்ளக்கிடக்கைகள் ஒன்றா இரண்டா
ஓராயிரம் உண்டு மாறுபட்ட மனனங்கள்

மழையோ இல்லை மக்களவை தேர்தலோ
சாதியோ இல்லை சமய சண்டையோ

சாகா காதலோ இல்லை செத்துப் போதலோ
வேண்டும் இல்லை இல்லை வேண்டாம் என்று

வெறி கொண்டு அலையும் மாந்தர்- இவர் தம்
வேண்டுதல் கண்டு வெட்கியே இறையும்

முரண்பட்ட வேண்டுதலை மொத்தமாய்
மூடமனிதர் என மறுத்தானோ ?

காற்றாய் கரைந்து மறைந்தானோ இல்லை
கல்லாய் அவனியில் உறைந்தானோ?

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcT557ymNjzxHsjlWWstNuMnPNbPUzBDK gvd9zvQRJTLR5ZX5wcL1A

kirukan
19th April 2015, 12:22 PM
உறைந்தானும் அவனே
உயிர்தானும் அவனே
வெறுப்பும் அவனே
விருப்பும் அவனே
அவனின் ஒரு துகல்
நாமெனில் இதை
உரைப்பானும் அவனே.

-
கிறுக்கன்.

pavalamani pragasam
19th April 2015, 07:08 PM
அவனே தொலைத்தான் தன் நிம்மதியை
அறியாது கலைத்தான் குழவிக்கூட்டை
சும்மா இராமல் குறை சொன்னான் அவளை
சம்சாரிக்கு புத்தியில் ஏன் உறைக்கவில்லை
ஒரு தொப்பியை இரு தலை சுமப்பதில்லை
விளைவெண்ணாது தாண்டலாமோ எல்லை

kirukan
19th April 2015, 09:11 PM
எல்லை இல்லா உறவில் என்றும்
நிம்மதி என்பது இல்லை.
-
கிறுக்கன்.

pavalamani pragasam
20th April 2015, 08:47 AM
இல்லை இல்லவேயில்லை
வாய் நிறைய பொய்கள்
மண் தின்ற கண்ணன்கள்
காட்டுவர் ஈரேழு நரகங்கள்

chinnakkannan
20th April 2015, 10:07 PM
நரகங்கள் எனநினைத்தால் அஃதே என்று
... நாலிரண்டு திசையிலுள்ள தேவி சொல்வர்
சுரங்கூட்டி நல்லனவை நெஞ்சில் ஓட்ட
...சுழ்ந்துவிடும் சொர்க்கமுந்தான் உன்னை என்று
கரகரத்த குரலினிலே பாட்டி அன்று
...கனிவாகச் சொன்னவிதம் மனதி னுள்ளே
சுகமாக நிற்கிறதே இந்த நாளில்
..சொர்க்கங்கள் காண்கிறதே எந்தன் சிந்தை..

Gopal.s
21st April 2015, 05:26 AM
சிந்தை மூளையாம் இரவல் சிந்தனையில் திளைக்க பல்லாசிரியர்கள்
நிந்தை செய்தே நிறைய சூத்திரங்கள் தேர்வுக்கு வாயிலெடுக்க

தந்தை தன்னுழைப்பை தந்து ஈந்த செல்வமனைத்தும் எடுத்த
வாந்திக்கான மதிப்பெண்ணாய் அப்பனுக்கு அப்பனுக்கு அப்பனுக்கு

கந்தை கசக்கியவனின் பிள்ளைக்கு பிள்ளைக்கு பிள்ளை சவாலாய்
விந்தை கூற்றோடு உன்னுடைய நூறு எந்தன் முப்பதுக்கு சமன்

சந்தையை திறந்தாயிற்று உலகுக்கு எந்தை தவறுக்கு எனக்கு தண்டனை
சொந்தங்களின் சொகுசுக்கு சோக வாழ்வு இன்றெனக்கு குற்றமென செய்தேன்

தொந்தரவு ஏன் ஒதுக்கல் முறையில் பலன் அவனுக்கு ஒதுக்கல் தீண்டாமை
முந்தி போனாலும் நிந்தை செய்வார் நானே போடாத அடையாள சாதி அரசின் தயவில்

பந்தியில் பாகுபடுத்திய பழங்கால கதைக்காய் வேந்தர்கள் இன்றென்னை தண்டிப்பது
சந்தியில் விடுவது சகட்டு மேனிக்கு சவட்டி செல்வம் கண்ட மேன்மக்கள் பிள்ளைக்கு

தந்தாரே தாழ்த்த பட்ட பட்டயம் ராசாக்களின் பிள்ளைகளுக்கு பலகோடி கண்ட
சந்ததிக்கு சந்ததி வாழையடி வாழையாய் சலுகை ஏணிகாண வறுமையின் கோட்டில் நான்

செந்நீர் குருதி சிந்த கல்வியுடன் தந்த ஒழுக்கமும் பிறர் செல்வம் வேண்டா உஞ்சவிருத்தி
கண்ணீர் மட்டுமே கண்ட எந்தன் நிலையை எங்குரைப்பேன் கேளா அமைச்சுக்கா

வெந்நீரூற்றி வேரறுக்க விரையும் பாவனை கண்டதென்னவோ சாதிவாரி கணக்கெடுப்பு
தந்தார் கையில் சாதியுடன் கூடிய அடையாள அட்டை ஏற்க மறுப்பு சொன்னால்

விந்தை கூற்று மேல்சாதி சதிகாரன் மீண்டும் தாழ்த்த வருகிறான் என்று ஆட்டு
மந்தைகளாய் களபலிக்கு நாங்கள் சாதி பேர் சொல்லி நிந்தித்தாலும் இல்லை ஒருநீதி

ஏந்தினேன் கையை இன்னொரு நாட்டின் கருணைக்காய் வருகை அழைப்புக்காய்
முந்தினேன் முச்சந்தி கானா தப்பிப்புக்காய் இன்றென் அடையாளம் வாழா (வெட்டி)இந்தியன்

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய தமிழ் மண்ணில் தவழ மண்ணின் மைந்தனுக்கு
செந்தமிழ் பேச செம்மையும் காண சந்ததிக்கு கொடுத்து வைக்கா அமெரிக்க அயல்வாழ்வு

venkkiram
21st April 2015, 05:54 AM
அயல்வாழ்வு
வற்றாத ஜீவநதியின் அக்கரை போல
உறவுச்சங்கிலியின் பிணைப்பினை
உறுதிசெய்வது இருகரைகளும்தான்
இரண்டும் ஒரேநதியின் இருபக்கங்கள் என்றாலும்
இரண்டுமே வெவ்வேறுவித வாழ்க்கைப் போக்கு
ஒவ்வொரு கரையும்
தனக்கென ஒரு நாகரிகம்
தனக்கென ஒரு தொழில்முறை
தனக்கென ஒரு கலாச்சாரம்
ஆற்றை நீந்திச்செல்கையில் தான் புலப்படும்
விட்டுச்செல்லும் கரையின் மீதான பற்றினை

pavalamani pragasam
21st April 2015, 08:03 AM
பற்றினை விட்டது காய்ந்த சருகு
பக்குவம் வாய்த்தது வயதோடு
கழன்று விழுந்தது கிளையிலிருந்து
காற்றோடு சென்றது பாரமிழந்து

Russellhni
21st April 2015, 08:16 AM
பாரமிழந்து பயணிக்க பற்றினை விடு
ஆசை கொள் ஆண்டவனில் மட்டும் -ஆஸ்திகர்
அத்தனைக்கும் ஆசைப்படு அவனை விடு
ஆண்டவனே இல்லை அறிவாய் நீ -நாஸ்திகர்

விடிய விடிய வாக்கு வாதம்
விடிந்த பின் வென்றது யார்
பற்றினை விட்டார் நாஸ்திகர் !
பரமனை விட்டார் ஆஸ்திகர் !

Gopal.s
21st April 2015, 08:26 AM
பற்றினை அறுக்க சொன்னார் வான பிரஸ்தம் சந்நியாசம்

பற்றினேன் பரமனின் தாழ் எச்சுவையும் வேண்டேன் இனி



வற்றிப்போன வாய்க்கு ஒரு வாய் கொக்கு மாக்கு கோக்கு

முற்றிப்போன பசிக்காய் பர்கர் பிஸ்ஸா டபாஸ்கோ ஸாஸ்



வற்றிப்போன புரத குறைவு கால்களை காட்டி அரைநிஜார்

சுற்றிபோன சுற்றம் துறந்து அமர்ந்தேன் கணினி மேசை



பெற்றுபோட்ட ஒரே மகளின் வலை மடல் மூன்று மாதம்

சற்றுவிரைவில் அனுப்ப படும் உயர்வகுப்பு சீட்டு இரண்டு



சுற்றினேன் பிரகாரம் சூழ உறவினருடன் அர்ச்சனை

கற்றறிந்த நல்லோருடன் பெருமை பொங்க பயண விவரம்



சுற்றவேண்டிய காண வேண்டிய இடங்கள் பற்றி கூகல்தேடல்

வற்றாத சுரங்கமாய் செல்ல காண இடங்கள் சென்றேன்



முற்றாக காணாமல் வெந்தேன் வந்தேன் பதினெட்டு மாதசிறை

பெற்றவள் வடிச்சுகொட்ட துணி துவைக்க பாத்திரம் விளக்க



உற்றவனோ சுற்றுவேலை வேலை வால்மார்ட் வாங்குபணி

பற்றறுத்தேன் பாசமறுத்தேன் அடுத்த அழைப்பு வரும்வரை.

venkkiram
21st April 2015, 08:35 AM
இதுதான் பாதையெனப் பயணித்து வாழ்ந்து முடித்தவர்கள்
இயல்பாய் சிரித்தவண்ணம் சுவற்றில் தொங்க
எதுதான் பாதையெனத் தேடியே ஓடிக்கொண்டிருக்கும்
எந்திரமனிதர்கள் இளைப்பாற இடமில்லாமல் தவிக்க
காலச் சக்கரமோ இரு தலைமுறைகளுக்குமே சமச்சீராய்
பெருவெளியில் இயங்கிக் கொண்டே இருக்கிறது

pavalamani pragasam
21st April 2015, 07:55 PM
ஆஸ்திகர் வேட ஒப்பனை இப்போ பிரபலம்
திருத்தமாய் தீற்றிய திருநீறு நெற்றியில்
சிலருக்கு குங்குமத் திலகமும் நடுவினில்
விரைந்து கும்பிடும் கரங்களின் பணிவில்
அசந்துதான் போகிறேன் வேட பொருத்தத்தில்
நடிக்கத்தெரியாத நானோயிங்கு மக்கு மாணவி

chinnakkannan
21st April 2015, 09:41 PM
மக்கு மாணவி தான் அவள்..
எதைச் சொன்னாலும்
குறைந்தபட்சம் நாலுதடவை சொன்னபிறகுதான்
ஏறும் என்றால் அதுவுமில்லை
முழுக்கச் சரியாய்ப் போட்டுவிட்டு
விடையில் தப்பு பண்ணுவாள்..

தனிக்கல்வி தான் என்றாலும்
கோபம் எனக்கு வந்ததால்
நன்றாகக் காதைத் திருக
பரவாயில்லை மிஸ்
எப்படியும் வர்ற பங்குனில கல்யாணம்
பண்ணிடுவாங்க
எனக்கோ கூட்டக்கழிக்க தெரியும்
அது போதும்

சொன்னாற்போல
ப்ளஸ் ஒன் முடித்த லீவில்
அவளுக்குக் கல்யாணம்
பெற்றோர் அழைப்பை வைக்க
போனபோது குட்டியாய்ப் புன்னகை
எங்க கணக்குடீச்சர் எனப் பெருமையாய்
அறிமுகம்
கொடுவாள் மீசை வேட்டிசட்டை மாப்பிள்ளையிடம்…

திரும்பும் போது அவள் அம்மா சொன்னார்..
நாலு நாத்தனார் மூன்று மச்சினனாம் அவளுக்கு
இவ தான் மூத்தவளாம்
சுதானமா இருக்குமா என்ன தெரியலையே
அவர் கவலை
எனக்குத் தொற்றிக்கொண்டு கல்யாண மண்டபத்திலிருந்து
வீடுவரை இருந்தது..

சில வருடங்கள் கழித்து
வேறு ஊருக்கு மாற்றலாகி
சென்னை எதற்கோ சென்றபோது
சந்தித்தேன் அவளை..
அதே மாணவிதான்..சற்றே புஷ்டியாய்
தொங்கத்தொங்க நகைகள்..அடுக்கிய வளையல்கள்
மின்னும் பேசரி..
பட்டுப் புடவை..யானை பார்டர்..ஆரெம்கேவியா..
அவள்தானா..இல்லை..

அவள் தான்..
ஹாய் மிஸ்..
அதே புன்னகை..
என்னடி இவளே எப்படி இருக்க
நான்மல்லிகா இல்லை மிஸ் மாதவி
மறந்துட்டீங்களா..பரவாயில்லை..
நல்லா இருக்கேன் மிஸ்..
நாலு நாத்தனாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு
தம்பிங்க மூணு பேருல ஒருத்தன் டோஹா ஒருத்தன் துபாய்
ஒருத்தன் பெங்களூரு
பொண்ணு தேடிக்கிட்டிருக்கோம்..
இவருக்கு பிஸினஸ்..தோ… அந்த மால்ல தான்
நாலு கடை..
ரெண்டு கடை நாந்தான் பாக்கணுமாம்
கணக்கு வழக்கெல்லாம் நாந்தேன்..
அட்மினும் நல்லா செய்றேனாம்..
குழந்தையா மிஸ்..எனக் கேட்டு கன்னஞ்சிவந்து
இப்பத் தான் நாலுமாசம்..
எல்லாம் செட்டிலாய்ட்டு வச்சுக்கலாம்னு
இருந்தோமா..இப்பத் தான் வேளை..
நீங்க செளக்கியமா..

என் கொஞ்சூண்டு கசங்கிய துப்பட்டாவினால்
கண்ணாடியைத் துடைத்த போது
அவளைக் காணோம்
பார்த்தால்
அருகில் வந்த பிஎம் டபிள் யூவில் அவள்..
மிஸ் ட்ராப் பண்ணட்டா..
வேணாம் மல்லிகா ஸாரி மாதவி..

பை மிஸ்
ஐ வோண்ட் ஃபர்கெட் யூ இன் மை லைஃப்..

நானும்…..!

Gopal.s
21st April 2015, 10:32 PM
நானும் நாணும் படி ஒரு நற்காதல் பருவம் தவறி
காணும் யாவரும் தவறாக எண்ணவே இயலாமல்

ஊரும் உறவும் அறிய இயலா ஒன்று இதற்கு
ஆறும் அற மீறல் என்றில்லை விடலை மனதுடன்

உடலை நாடா உன்மத்தம் பித்து இத்தனைக்கும்
விடலையவள் அழகில்லை குணவதியும் இல்லை

முப்பது வருட வித்யாசம் காதலை சொல்ல விடவில்லை
தப்பாது அறிவு தப்பது என்று சொன்னாலும் இதயம் தள்ளும்

ஒருநாள் காணுதல் இல்லையேல் மனமெங்கும் அவளே
மறுநாள் கண்டதும் மொழிமோ பார்வையில் ஓராயிரம்

இந்த அலுவல் மனைவி என்னை அறிவாள் என் எண்ணம்
சொந்தமில்லை என்றாலும் சொக்கிநிற்பாள் சுணங்குவாள்

எப்போதுமே இற்று போகும் ஒட்டுத்துணி உறவு கழலும் கணம்
தப்புத்தான் என்றாலும் கணமதை மனதோடு இணைத்து இளமை

காணும் முகமும் மாறும் உடையில் நடையில் உல்லாச இளமை
பேணும் கணங்கள் இலவச இன்ப சுற்றுலா காணும் வளமை

என்று வேண்டுமானாலும் திருமண பத்திரிகை வரும் மொய்யுடன்
சென்று கண்டு பொய்யுடன் வாழ்த்து தந்து வெறுமையாய் நான்

chinnakkannan
21st April 2015, 10:57 PM
வெறுமையாக நானிருந்த காலமென்று கேட்டால்
…வெகுளியாய்த்தான் பேசிடுவேன் எதுவென்று நானே
பொறுமையுடன் கற்றிருந்த இலக்கணத்தின் பாடம்
…போடுதற்குக் கற்பனையும் வந்திடுமா என்று
எருமையெனச் சோம்பிநின்று மோட்டுவளை பார்த்தால்
..ஏகடியம் செய்துகொஞ்சம் நகர்ந்துவிட்ட பல்லி
உறைந்துவிட்ட பயத்தினிலே ஒடுகின்ற பூச்சி
…உளமாரச் சிரித்திட்ட நேரம்தான் அன்றோ..

Gopal.s
22nd April 2015, 04:30 AM
அன்றோ நான் கனவுகளை மென்றவன் அதிலேயே நின்றவன்
இன்றோ நான் கனவுகளை தின்றவன் மிச்சத்தையும் கொன்றவன்

வையத்துள் வாழ்வாங்கு வாழ கம்யுன் கனவு இடதுசாரி விடலைக்கு
கையதில் அடங்கா பொருள் குவித்த அதிபதியாம் சுடலைக்கு நிற்பவன்

அக்கினி குஞ்சாக சமூகம் காக்க முதல் நிலையில் மூச்சடக்கி நின்றவன்
திக்கினி இல்லை என்று தன் மக்களுக்கு சொத்து தந்து பேச்சடங்கி வென்றவன்

அன்றொரு நாள் அதே நிலவில் கடற்கரை மணலில் வீதிநாடகம் விடுதலைக்காய்
இன்றொருநாள் இதே நிலவில் விலைமகளுடன் மன இறுக்க விடுதலைக்காய்

பூர்ஷ்வாக்களை சாடி எல்லாரும் எல்லாமும் பொதுவுடைமை பேசி கையுயர்த்தி
கார்சாவிகளுக்கு புது அலமாரி தேடி தேவைக்காய் விற்கப்படும் மனைகள் கைகாட்டி

மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ என்ற காரிகைகளின் நெஞ்சம் தஞ்சமானவன்
மாறியது மஞ்சம் மாற்றியது நானே என காரிய மங்கைகளின் கொஞ்சும் பொருளானவன்

கனவு சாகாமல் தினமும் செத்தேன் இருள் வந்ததும் விரிப்பு கண்டதும் உலகு துறந்தேன்
நினைவு சாகாமல் நித்திரைக்கு வேண்டி மாத்திரை நாடி இருளில் கனவுக்கு ஏங்கி மதுவுடன்

இளமை வாழ்க்கையில் கடவுள் பிறப்புடன் தந்த சேமிப்பு செல்வம் செலவழியா கனவுகள்
வளமை கண்டும் வாழ்க்கையில் வென்றும் கனவு சேமிப்பை கரைத்து தின்று வடிவம் மட்டும் வாழ்கிறது

pavalamani pragasam
22nd April 2015, 08:03 AM
வாழ்கிறது சாம்பல்
விசித்திரமான உலகில்
எரிமலை பொங்குகிறது
அக்னி ஆறு வழிகிறது
எதுவும் பொசுங்கவில்லை
அகங்காரம் அழியவில்லை
அநீதி இறக்கவேயில்லை
சுடுகாட்டில் பூஞ்சோலை

Russellhni
22nd April 2015, 11:20 AM
பூஞ்சோலை ஒன்று பொன்மாலை பொழுது
பூங்கா என பொய்யான போர்டு போட்டு
போய்த் தான் பார்க்கவே ஆசைப் பட்டு
போனேன் உள்ளே வந்தேன் வெளியே

பொத்திக்கொண்டே கண் மூக்கு காது
போதாது போதாது மரஞ்செடி கொடி அங்கே
புதர்கள் நிறைய புதரிடை மனிதர் பதராய்
போகிற போக்கில் இருந்தது நிறைய

பூப்பாய் காணுமிடமெல்லாம் கழிப்பிடம் தவிர
குடிமன்னர் குப்பியும் சூதுமாய் கொண்டாட்டம்
கொண்டதே கோலமாய் கோலாகலமாய்
குறைவேயில்லை நமக்கு இத்திருநாட்டில் !

chinnakkannan
22nd April 2015, 03:00 PM
இத்திருநாட்டில் எங்கெங்கும் மாந்த ரெல்லாம்
..ஏற்றமிகு நற்சிந்தை நெஞ்சில் கொண்டு
வித்தைகளும் வேலைகளும் கற்று மேலும்
..வீரமுடன் பலசெயல்கள் செய்து இங்கே
பத்திரமாய் அனைவ்ருமே வாழ்வ தற்கு
..பலவிதமாய்த் துணைநிற்க அடடா நன்று
நிச்சலனம் மக்க்ளவர் நன்மை என்று
..நேர்மையுடன் ராமன்வாழும் கால்ந் தானே..!

pavalamani pragasam
22nd April 2015, 06:48 PM
காலந்தானே அருமருந்து
காயங்கள் அதில் ஆறுது
கவலைகள் பல மறக்குது
கண்ணீர் சுவடும் மறையுது

Russellhni
24th April 2015, 12:21 PM
மறையுது சூரியன் மறைத்தது கண்ணன்
மன்னவன் சயத்ரதன் சிரங்கொய்து நீக்க:
மாறியது இருண்மதி தோன்றியது நிறைமதி
மறை பட்டர் மேல் மன்னன் சினம் போக்க :
அறிவது ஒன்று அது ஆண்டவன் அருள்
அவனியில் தேவை போல அழிக்க காக்க

pavalamani pragasam
24th April 2015, 06:12 PM
காக்க வைத்து சோதிப்பது காதலி மட்டுமா
காலம் வராமல் விதை வெடித்து முளைக்குமா
கருதான் வளர ஐயிரண்டு திங்கள் குறையுமா
கச்சிதமான கணக்குடைத்து இயற்கையம்மா

pavalamani pragasam
26th April 2015, 08:35 PM
இயற்கையம்மா புரண்டால்
இடுப்புவலியில் துடித்தால்
இமயமலையதில் பிளந்தால்
இடரிது ஜனனமா மரணமா

venkkiram
27th April 2015, 04:39 AM
மரணமா இப்படியுமென மனம் கடந்து துடிக்குது
மரித்து போனது பல எண்ணங்கள் மண்ணுக்கடியில்
தோண்டி எடுப்பதில் தோள்கள்பல ஒன்றாய் சேருது
வேண்டி வணங்குது கைகள்பல சீற்றம் வேண்டாமென
செவிசாய்க்குமா இனியாவது இயற்கை என்றில்லாமல்
புவிசார் அறிவியலை மேம்படுத்தி வருமுன் காப்போம்

pavalamani pragasam
27th April 2015, 09:00 AM
காப்போம் மௌனம்
அறியாமை மறைக்க
இறுக்கம் குறைக்க
கலகம் தவிர்க்க
மனசாட்சி உறைக்க
உணர்வோம் நிதானம்

venkkiram
27th April 2015, 09:32 AM
நிதானம் தடுமாற வைக்கும் குடிபோதையால்
நித்தமும் குறையத் தொடங்கும் ஆரோக்கியம்
விட்டில்பூச்சியாய் அழித்துக் கொள்ளும் மனோபாவம்
வீடுவாசல் சுற்றம் நட்புவட்டம் விட்டுவிலகும்
மது விற்கும்தொழிலே அரசின் வருவாய்க்கு அடிநாதம்
மண்வளம் மிகுந்தும் மனிதவளம் சுருங்கும் வினோதம்

pavalamani pragasam
27th April 2015, 07:49 PM
வினோதம் ஆச்சர்யம் அதிசயம்
அபூர்வமல்ல அந்த அனுபவம்
வறுமையில் வாடுபவன் தான்
வழங்குவான் பங்கு பசியில்
வாடும் இன்னொரு உயிர்க்கு
நலிந்தவன் கை கொடுப்பான்
நடக்க முயலும் நொண்டிக்கு
வங்கியிருப்பு வசிக்க வீடு
வருமானம் தரும் அலுவலகம்
பட்டம் பதவி அந்தஸ்து ஏதும்
இல்லாதவன் கட்டாந்தரையில்
படுத்ததும் உறங்கிவிடுவான்

Russellhni
1st May 2015, 10:28 AM
படுத்ததும் உறங்கிடுவான்
புண்ணியவான் ! உடனே எழும்
பாழாய் போன குறட்டை சத்தம்
பாழும் மனைவிக்கோ சிவராத்திரி
பாவமும் புண்ணியமும்
பக்கத்து பக்கத்தில் ! இதில்
பாவம் யாருக்கு?
புண்ணியம் எவருக்கு ?


https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRGEc3UQ3Iu-denFReF7x7uU35dK3NGyA3jn1N4Zr6TTeB4e35AeQ

pavalamani pragasam
1st May 2015, 06:42 PM
எவருக்குத் தெரியும்
அடுத்த அத்தியாயம்
தெரிந்தாலேது சுவாரசியம்
இது தலைவிதிசார் விசயம்
இலவங்காய் பழுக்காது
கிளிக்கு அது புரியாது
ஆறறிவு மனிதனுக்கு
புரியும் இயற்கை கணக்கு

kirukan
3rd May 2015, 10:49 AM
இயற்கை கணக்கு
புரிந்திருந்தால்
இன்னல் புரிவானோ

சுழர்ச்சி சங்கிலியை
சுக்கு நூறாய்
உடைப்பானோ

வேதியல் என்ற
பெயரால் மண்ணை
மலடாக்குவானோ

விஞ்ஞானம் என்று
விரும்பிய பாலினம்
பெறுவானோ!!!!

-
கிறுக்கன்

venkkiram
3rd May 2015, 11:54 AM
பெறுவானோ பேரின்பம் மனிதன்
பேருபெற்று வாழும் லௌகீகத்தில்
சந்தேகம் கேட்டான் சத்குருவிடம்
சாமானியனாய் ஒருவன் ஆவலுடன்
நித்தமும் நித்திரை கெட்டு
நிஜார்கூட நிலையாய் நிற்காத
பேஜாரான அன்றாட வாழ்க்கையில்
பேரின்பம் உனக்கொரு கேடாயென்றார்

pavalamani pragasam
3rd May 2015, 06:39 PM
பேரின்பம் உனக்கொரு கேடாயென்றார்
பெரும் ஆத்திரத்துடன் பிரயாணிகள்
பிரம்மானந்த நிலையில் ஓட்டுனர்
பாட்டிலில் பாதி குடித்த மதுபானம்
படங்களுடன் செய்தி சொகுசு பஸ்
பயணத்தின் நடுவில் நடுநிசியில்
பரலோகம் செல்லும் அவசரமில்லா
பாமரர்க்கே இது போல் சோதனை

chinnakkannan
3rd May 2015, 11:55 PM
சோதனையாய்த் தான் வந்துவிட்டாள் எதிரே
என்னவள் அருகில்
கூடவே சின்னவன்..
சும்மா இருக்காமல் என்னைப் பார்த்து “ஹாய்”

என்னவள் கண்களில் முதலில்
ஆச்சர்யக் குறி பின் கேள்விக் குறி..

நான் இவர் ரெண்டுபேரும் ஃப்ரண்ட்ஸ்
காலேஜில்
நீங்கள் அழகாயிருக்கீங்க..

பேதை என்னவள் க்ளீன்போல்ட்
உங்களைப் பார்த்ததில்லையே..

நானிருப்பது மியாமி
என்னவருக்கு அங்கு வேலை..

என்பக்கம் விழி வரவேயில்லை..

சின்னவன் கண்கள் மட்டும் குறுகுறு..
நெத்திலபொட்டு ஆண்ட்டி
அங்க்கிள் இஸ் நோமோர்.வித் மி.டா
குட்டியாய்ச் சோகம்..
அதற்குள் செல் அடிக்க
சாரி..
என்னைப்பார்த்து மென்சிரித்து
சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கலாம் பை..


வேகமாக அவள் செல்ல
நாங்கள் பழகியவை எல்லாம் கரைந்தாற்போலபிரமை

சின்னவன்கத்தினான்
ஆண்ட்டி பொய்சொல்றாங்கம்மா..
என்னடா..
அவங்க ஃபோன்ல ஸ்க்ரீன்சேவர்
அப்பா ஃபோட்டோ பார்த்தேன்..எதுக்கும்மா...

கொஞ்சம் மெலிய சந்தோஷம் பரவினாலும்
எதிர்கொள்ள ஆரம்பித்தேன் பூகம்பத்தை...

pavalamani pragasam
4th May 2015, 07:27 AM
பூகம்பத்தை அடைத்து வைத்தாள்
பூமித்தாய் பத்திரமாய் வயிற்றுக்குள்
பொல்லாத பொருமல் அவளுக்குள்
பொங்குவதெப்போ மனம் பதறுதப்பா

kirukan
4th May 2015, 10:31 AM
தப்பா தான் போகுமுன்னு
எப்போதும் நீ ஆரம்பிச்சா
தப்பா தான் அது போகுமுன்னு
எப்போதும் நீ புரிஞ்சுக்க

கண்ணும் கருத்தும் இருந்தாத்தான்
கூடும் உன் வேல
ஒன்னிருந்து ஒன்னில்லனா அது
ஒத்த தண்டவாளம் போல
ஓடாது தொடர் வண்டி
எப்போதும் அது மேல.

-
கிறுக்கன்

Russellhni
4th May 2015, 12:00 PM
அது மேல எனக்கு ஒரு இது
அடக்க முடியாம கட்டிகிட்டேன்
ஆசையே துன்பத்திற்கு காரணமாம்
அது பொய் – இன்னிக்கும்
அவளில்லாமல் நானில்லை
அதுவே மெய்

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcT8twDiYT6Yn0JguMpawr-UsY1dPNsbzRjDhAhOSH45BnrLK-k8-w

kirukan
4th May 2015, 03:55 PM
மெய் மெலியும் மறையாது பொய்
பெருக்கும் ஆனால் பிழைக்காது.

-
கிறுக்கன்

chinnakkannan
4th May 2015, 05:23 PM
பிழைக்காது என மருத்துவர் கைவிட்ட
பெரியப்பாவைப் பார்த்து
ஆறுதல் தைரியம் சொல்லி
வீட்டிற்கு வந்த அப்பாவிற்கு
ஹார்ட் அட்டாக்
இரு தினங்களில் போயும் விட்டார்..

பெரியப்பாவோ பிழைத்தெழுந்து
வாழ்ந்தது இன்னுமிருபது வருடம்..
மரித்த தகவல் சமீபத்தில் தான் வந்தது..

ம்ம்
காலத்தின் கணக்கு
புரிவதில்லை எப்பொழுதும்

pavalamani pragasam
4th May 2015, 06:25 PM
எப்பொழுதும் நமக்கெல்லாம் நல்ல பொழுதே
எழுவதில்லை பஞ்சாங்கத்தின் தேவையே
எப்படி நாளும் நட்சத்திரமும் நடத்துமாம்
எமகண்டமும் ராகும் கேதும் தடுக்குமாம்
எண்ணிய காரியம் ஒன்றே முக்கியமாம்
எந்த தாமதமும் குளிகையும் வேணாமாம்

chinnakkannan
4th May 2015, 08:51 PM
வேணாமாம் அவளுக்கு
எனக்குத் தாப்பா..
என்றாள் சின்னவள்..
நா எங்க சொன்னேன் எனக்கே தாப்பா
இது பெரியவள்..
ஏற்கெனவே பாதி சின்னவளிடம் கொடுத்தாயிற்று
இதென்ன குழப்பம்..
சரி என ரெண்டு பேருக்கும் கொடுக்காமல்
வாயில் போடுவது போல் பாவனை செய்து
ஒளித்தால்...

ச்சீ வாடி நாம போலாம்
அப்பா மோசம்..
நா அம்மாகிட்ட சொல்லி
உனக்கு வாங்கித் தர்றேன்..

அதானே போப்பா
நான் சொன்னேன்லடி அப்பா எப்போதுமே ஏமாத்துவார்னு..

இந்தா பெரியவளே எடுத்துக்கோ
ம்ஹூம்
சின்னவளே..
போப்பா பெரிசு மறுபடி வாங்கு
நாங்க பண்ணிக்குவோம் ஷேர் இல்லடி...

அடிப்பாவி...

pavalamani pragasam
5th May 2015, 07:14 AM
அடிப்பாவி நானொரு அப்பாவி
அழகான ஒப்பனை பார்த்தேன்
கண்ணில் இட்ட மையில் மையல்
கமகம மல்லிகை சூடினாள் தையல்
இனிய மாலைபொழுதென கனவில்
நானிருக்க விரைந்தாய் தோழியுடன்

venkkiram
5th May 2015, 08:12 AM
தோழியுடன் கைகோர்த்து நடக்கும்
மழைப்பருவநாட்கள் மறக்கமுடியாதவை
செம்மலர்கள் பூத்துக்குலுங்கும் மரக்கிளையை
ஆசைதீர நான் பிடித்துக்குலுக்க
அவளுக்கென்றே அதுவரை காத்திருந்ததுபோல
மழைத்துளிகள் ஒவ்வொன்றும் மகிழ்ச்சியோடு நீராட்ட
நிலைகுலைந்து ஒன்ன என சிணுங்கிக்கொண்டே
அடுத்து வரப்போகும் மரக்கிளைக்காக
ஆவலுடன் நடைபோடும்
அவளின் அழகை என் சொல்ல!

Russellhni
5th May 2015, 09:20 AM
சொல்ல நினைப்பதை சொல்வாய்
வெல்லும் சொல் இன்மை அறிந்தே

சொல்லும் சூடான கனலும் ஒன்றே
எறியும் முன் எரித்திடும் கையை
எடுக்கும் முன் எச்சரிக்கை நன்றே

அழகான ஆண்பெண் ஆடையைப் போல
ஆர்வம் தூண்டி அளவாய் பேசு
ஆவேசம் தவிர் ! ஆபாசம் தவிர் !



https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQn8SFa0pCGws4GcQvm41T86BUUSiQEJ qkezkpY1qOmTZa6qGg1cQ

pavalamani pragasam
5th May 2015, 08:34 PM
தவிர் அலங்காரத்தை
ஆசை வார்த்தையை
அன்பான பார்வையை
இதமான பணிவிடையை
கூனியின் துர்போதனை
கேட்டாள் கைகேயி
கேட்டாள் இரு வரம்
கெட்டாள் அமங்கலி
விட்டதில்லை விதி
விரைந்தோடும் நதி

venkkiram
5th May 2015, 11:49 PM
நதிக்கரையில் உடை கழட்டி
அழுக்குதீர அடித்துதுவைத்து நீராடி
வெயில்காய உலர்த்திவிட்டு உடுத்தி
நகர்வலம் புறப்பட்டான் நாடோடி
இயற்கையிருக்கு எண்சான் மேலுக்கு
வயிருதான் வாடி வத்தியிருக்கு
யாதும் ஊரே யாரும் கேளீர்

pavalamani pragasam
6th May 2015, 07:04 AM
யாதும் ஊரே யாரும் கேளீர்
யதார்த்தமிந்த தீர்க்கரிசனம்
கண்டம் கடக்கும் குடும்பம்
அண்டை வீடு அமெரிக்கா
அரபு நாடு அள்ளித்தரும்
கருப்பு பழுப்பு வெள்ளை
கலந்து போகுது உறவில்
வெளிநாட்டு மாப்பிள்ளை
வேற்று மொழி போற்றிட
ஒற்றுமை கண்டதுலகம்
மதங்கள் மறந்துபோகுது
மனங்கள் விரிந்து மலருது

Russellhni
6th May 2015, 09:16 AM
மலருது அங்கே மணக்குது காதல்
மனதில் விரும்பியவளை
மணமுடிக்கையில் : மட்டுமின்றி
மணந்தவளை மனதில் விரும்பினால்
மலரும் அங்கும் மாசற்ற காதல் !


https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRyB7_bjiC_xpfBAs9JkDlXH2-wApBEzKPEi8YTH0kfg-k_7SkQ

venkkiram
6th May 2015, 10:05 AM
மலரும் ஒரு முக்கியமான பேசுபொருள்
மாளாத காதல் சொல்லும் சங்கத்தில்
ஊடல் கூடல் கருணை கோபம் தாபம்
உவமை உருவகங்களாய் பாடல்களில்
மகரந்தச் சேர்க்கைக்கு மட்டும்தானா அவை
மௌனமாய் பூமி நமக்களிக்கும் ரகசியம்

http://dbmlag.info/wp-content/uploads/2014/06/images-beautiful-flowers-flowers-for-flower-lovers--beautiful-flowers-wallpapers.jpg

chinnakkannan
6th May 2015, 10:23 AM
ரகசியம் சொல்றேன்ப்பா வாவேன்..

சின்னவள்
பள்ளிச் சீருடையில்
ஸ்கூல்பை தண்ணீர்பாட்டில் சகிதம்
பஸ்ஸிற்காகக் காத்திருக்கையில்
சொல்ல
தலை குனிந்து அவளுக்குக் காது கொடுத்தால்
பிஞ்சு இதழ்கள் காதில் உரச்
அந்த உணர்வில்
பேசியது எதுவும் விழாமல் சொக்க
பஸ் வந்துவிட

சட்டென நிமிர்ந்து பை டாடி
நான் சொன்ன சீக்ரட் ஞாபகம் வச்சுக்கோ

டாட்டா காட்டி
வீடு வந்து
ஆபீஸ் சென்று மறுபடி வீடு வந்தும்
இதே நினைவு
ஒரு நேர்க்கோட்டில்..
என்ன ரகசியம் குட்டி சொன்னது..என..

கனகாரியமாய்
ஹோம்வொர்க் செய்துகொண்டிருந்தவளை
தனியா வா எனச் சொல்லி
ஹே இவளே
என்னப்பா
காலைல சீக்ரட் சொன்னியே
அது என்ன..

ஒரு புரியாத விழி
கொஞ்சம் கோப முறை....

“போப்பா...மறந்து போச்..!”

pavalamani pragasam
6th May 2015, 05:27 PM
மறந்து போச் சங்கடமான சமையல்
பறந்து போச் செக்கு மாட்டு அலுவல்
நெருங்கிவிட்டது பறக்கும் காலம்
இரு பக்கமும் பொங்கும் ஆர்வம்

Russellhni
7th May 2015, 07:32 PM
ஆர்வம் வாழ்க்கையின் அவசியம்
ஆயிரம் தோல்வி கண்டபின்னும்
அயராமல் அதனை படியாக்கி
அரிய சாதனை செய்தவர் ஆயிரம்

அரைகுறைக்கும் ஆக்கல் வீரனுக்கும்
அகழி அடிப்படையில் ஆர்வம் தானே !
அது இருந்தால் போதுமே – தன்னால்
ஆற்றலும் வெற்றியும் வந்து சேருமே!



https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcR4nT88rdZEB9ufnaIcpmTT_n9YiL3rx IGdkxwCH_9Lu9e_GNGi8Q

pavalamani pragasam
8th May 2015, 09:03 AM
சேருமே ஞானச்செருக்கும்
வருமே மனத்தெளிவும்
பிறக்குமே புது யுகமும்
நிமிர்ந்து நட பெண்ணே

venkkiram
9th May 2015, 09:09 AM
பெண்ணே
வரம்கேள் தருகிறேன் என்றேன்
அடுத்த ஜென்மத்திலும்
பெண்ணாகவே பிறக்கணும் என்றாய்
ஒவ்வொரு ஜென்மமும்
உன்னை இதுபோல நான்
பின்தொடர்ந்து வருவது தெரியுமா உனக்கு
பெண்ணாகவே இருப்பதில்
அப்படியென்ன பெருமை என்றேன்
ஒருமுறை நீயும் பெண்ணாய் பிற
உணர்வாய் என்றாய்

Russellhni
9th May 2015, 11:02 AM
என்றாயே அன்று எதிர்கொள்வேன் எதையும்
இறப்பையும் தாங்கும் இதயம் எனக்கு என்று
என்னாயிற்று இன்று இப்போது வா நேரமாயிற்று
இழுத்துச்சென்றனர் போலீஸ் தர தரவென்று

அழுதான் ஓவென்று தொழுதான் தூக்குக் கைதி
என்னால் முடியாது முடியவே முடியாது
என்றுமே முடியாது என்றான் கைதி
ஆர்பாட்டம்! அமர்க்களம் ! ஐயகோ !
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSw4TBhwznY0z3UkOBHP0iYX8LQaP4TH LhupacJrsoIrTRdPv8z

என்னை விட்டு விடுங்கள்! வேண்டினான்
அதெல்லாம் முடியாது - விதி என்றனர்
அவனது மனைவியை பார்க்க அவளது
அறுவையை கேட்க ! அது பார்வை நேரம் !




/ * எங்கோ படித்த ஜோக்/

pavalamani pragasam
9th May 2015, 08:50 PM
நேரம் காட்ட எத்தனை உதவி
கடிகாரம் நாட்காட்டி என்பன
எதையும் நாடாமல் இருக்க
அவற்றில் நாட்டமில்லாமலிருக்க
ஒரு பருவம் வரும் பொழுது
அதுதான் உண்மையில் மகிழ்வு

Russellhni
10th May 2015, 11:30 AM
மகிழ்வை மனதார ஒரு முப்பது வருடம்
முட்ட முட்ட அனுபவித்தோம் இருவரும்
மோதியது விதி ஆனது எங்கள் மணம்
மகிழ்ச்சி எங்கே ? அப்புறம் அது காணோம் !

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSc237oYMDoMpwEFqptpbPX9Vl_pAfP_ d2p9fykxyNV4q6zFMUQ

pavalamani pragasam
10th May 2015, 12:45 PM
காணோம் என்று தேடாதீர்
பயணம் பல மணி நேரம்
பார்த்துப் பேச பல கதை
இப்பக்கம் பார்க்க தாமதம்
தவிர்க்க முடியாததொன்றே
தொந்தரவின்றி மகிழ்வீரே

venkkiram
11th May 2015, 09:09 AM
மகிழ்வீரே அகம்குளிர
மன்றத்தின் தீர்ப்பு நற்செய்தியறிந்து
உணர்வீரே ஒருசேர
ஊழலுக்கு உய்வுண்டா தென்பதை
புகழ்வீரே எக்காலமும்
தாமதமாய் வந்தாலும் தரம்தாழா நீதியை

Russellhni
11th May 2015, 11:57 AM
நீதியை தேடும் நியாயவான்களே- இந்த
சேதியை கேளுங்கள் செப்புவது உண்மை
சுட்டவனை தூக்கில் போடும் சட்டம்
சுட்டவனுக்கும் சொர்க்கம் காட்டும்
சுட்ட அப்பளம் சூடான பிசி பேளாவுடன்!





https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTUX7MBWP4FbOx4F6qxDnMMPzfFM4YCn lflkw6Ze9AYkOs2ZVg9OA

chinnakkannan
11th May 2015, 02:44 PM
சூடான பிசிபேளாவுடன்
குளிரக் குளிரத் தயிர்சாதம்
போதுமே அதான் சொர்க்கம்
என்று சப்புக்கொட்டிச் சாப்பிடுவார் மாமா..

வயதான பொழுதில்
பிபி சுகர் கொலஸ்ட்ரால் இன்னபிற ஆக்கிரமிக்க
டயட்டில்
வெறுமனே உப்புப்போடாமல் மோரிட்ட
கேப்பை கஞ்சிக் குடித்துக்கொண்டிருந்தவரிடம்
இப்போ எப்படிங்க எனக் கேட்டதில்
சொன்னார்
இப்பவும் முன்ன சாப்பிட்டது தான் சொர்க்கம்..
மாயை..
இப்ப சாப்பிடறேன் பாரு..
இது ரியாலிட்டி!”

kalnayak
11th May 2015, 03:11 PM
இது ரியாலிட்டி - சமையல் என்றதும் பாய்ந்து வருபவரிடம்
பிசி பேளாபாத் பத்தி கவிதை சொன்னால் சும்மா இருப்பாரா
இதுதான் சுவர்க்கம் என்று போட்டாரே மினி பட்டியல்
குளிரான தயிர் சாதம் என்ன, கேப்பை கஞ்சி என்ன அப்பப்பா
இத்துடன் சொன்னாரே பாருங்கள் பிபி, சுகர், கொலஸ்ட்ரால் என்று
புரிந்து கொண்டோம் பிசி பேளாபாத் கொண்டு வருமே அத்தனையும்
இது நேடிவிடி விட்டு போனதால் கிடைத்த நரகம்
எச்சரிக்கைக்கு நன்றியன்றி யாதொன்று சொல்வது

chinnakkannan
11th May 2015, 03:17 PM
சொல்வதைக் கேள்
அதைத் தொடாதே
ம்ம்

கண்ணை உருட்டி
அதட்டினேன் பக்கத்து வீட்டு
ஒன்றரை வயதுச் சிறுமியை..

ஒரே ஒரு கணம் முகம் வாடி
பின் கண் சிரிக்க
என்னைப் பார்த்துக் கொண்டே
தான் டேபிளில் பார்த்திருந்த
பொருளை எடுத்தபடி
என்னருகில் வந்து
சோபாவில் தாவி ஏறி அமர்ந்து
சிரித்தவளிடம் என்ன சோல்ல..

கையை உயர்த்தி
அடிப்பது போல் பாவலா பண்ண
கண்ணை அதுவும் இறுக்க மூடிக் கொள்ள
கொடுத்தேன் உச்சந்தலையில்
ஒரு குட்டி முத்தா...!

venkkiram
12th May 2015, 08:42 AM
முத்தா பவழமா வைரமா
முப்போரில் வென்று திரும்புகையில்
அண்டை நாட்டிலிருந்து எதை
அபகரித்து எடுத்துவரவேண்டும்
அரசியிடம் ஆசை தூண்டினான் சோழன்
நவரத்னக்கற்கள் நமக்கேன் மன்னா
நலமுடம் நீ நாடு திரும்பிவந்தாலே போதும்
நல்லாசியுடன் அனுப்பிவைத்தாள்

Gopal.s
12th May 2015, 09:58 AM
நல்லாசியுடன் அனுப்பி வைத்தாள் பத்தினி

நல்லாயுளுடன் வென்று வந்தான் மன்னன்



யார் வந்திருக்கா பார் என்று பார்வேந்தன் காட்டிய

கூர்விழி மாது போரில் வென்று முத்து மரகத வைர



ஜொலிப்பில் மன்னனின் மற்றொரு பத்தினியாக

களிப்பில் மன்னனுக்கு மறுமுறை இரு பத்தினிகளின்



ஆசிகள் மன்னனுக்கு ஆசையுடன் ஆசியும் கூடுகிறது

ஜோசியன் கூற்று படியும் மன்னனுக்கு பலநூறு வெற்றிகள்.

venkkiram
12th May 2015, 09:32 PM
வெற்றிகள் பலவற்றை தேடித்தர வல்ல
வெல்வதெப்படி என்ற சூட்சுமம் அறிந்த
வெளிச்சப் பாதையை காட்டிச் செல்ல
வெட்டொன்று துண்டு ரெண்டு வெளிப்படையான
அயற்சியால் முடங்கிப்போகும் அனைவரையும் தொடர்
முயற்சியால் முன்னேடுக்கவல்ல தேவையொரு பயிற்சியாளர்

Russellhni
13th May 2015, 08:34 AM
பயிற்சியாளர் பலவிதம் பாரினிலே
ஒவ்வொன்றும் ஒரு விதம் மேதினிலே

பாடம் சொல்லியேக் கொடுப்பவர் ஒருவர்
பகுத்து கில்லியாய் விளக்குபவர் ஒருவர்

பாரினில் பயிற்சியாளர் சிறந்தவர் கேட்பின்
படபடவென்று பண்ணியே காட்டுபவரே

அவரினும் சிறந்தோர் எவரென கேட்பின்
அரிது அரிது அவர் போல் கிடைப்பது அரிது

பயில்வோனை புரிந்து அவன் திறன் அறிந்து
பரிவுடன் ஊக்குவித்து செய் திறன் பார்த்து

பாராட்டி ஆக்கம் பெறச்செய்வோரே ஆசான்
அருமை சிற்பி அவரே வாழி வாழியவே!

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSzO7vYvd09UhOMXwKCQPK3hYtMaqjdh TtdureHV9pQO3cHZDt4

Gopal.s
13th May 2015, 09:44 AM
வாழியவே பல்லாண்டு காலம் இந்திய கதை கேட்க வந்த நீங்கள் வாழியவே
குறுக்கு வழியை தேடி தேடி நெடுஞ்சாலைகளை பாலையாக்கும் கதை கேட்க வந்தவர்
வாழிய வாழிய வாழிய வாழியவே ஆ ஆ ஆ ஹ அ ஆஹ ஹா



பிறக்கும் போது அழுது பிறப்பான் அடுத்த குழந்தையின் வளம் பார்த்து
முகம் பார்த்து சிரிப்பான் ரூபாய் நோட்டுக்களை காட்டினால் ,
காந்தி படம் என்பான்
தளிர் நடை பயில்வான் அடுத்தவர் பொருள் கவர



பள்ளி செல்வான் அடுத்து கெடுக்க கோள் சொல்லி கொடுக்க
மதிப்பெண் தேடி பிறர் அறிவை பிரதியெடுப்பான்
சமூக சலுகை நாடி சாதியிலும் பொய்யுரைப்பான் பிறர் இடம் கவர்வான்
சலுகை பெற்று வாழ்ந்தாலும் சமூக பொறுப்பற்று வீழ்வான்
பதவி சுகம் தேடல் ஊழல் லஞ்ச வாழ்வுக்காய் மனித சிலைகளுக்கு மாலை


சொச்ச நேரம் நடிகனுக்கு பாலபிஷேகம்
கடவுள் சிலைகளுக்கு மரியாதை களவாடி அந்நிய சந்தைகளில்
பகுத்தறிவு சுயநலவாதிகளுக்கு தேர் வடம் இழுப்பது
சகமனிதன் உயரம் தொட்டால் பொறாமையால் அவன் வீழ்ந்து தன்னிலை வர பிரார்த்தனை
சக மனிதனால் உயரம் கண்டு அவனையே வீழ்த்தும் திறன்
இருபதிலிருந்து அறுபது வரை ஒய்வூதியம் அறுபதிலிருந்து வீட்டிலிருந்து அதையே
ஓஸி என்பது கீதை அதுவே அவன் பாதை



நமது தேசிய தாவரம் புல்லுருவி கொடி
தேசிய மொழி தடுமாறும் கலப்பு மொழி
தேசிய மிருகமாய் சக இந்தியன்
தேசிய நோட்டு அயல்நாட்டு கள்ளம்
தேசிய விளையாட்டு சாதி சண்டை
தேசிய பொழுது போக்கு நதிகளை தடுத்தல்
தேசிய குணம் பல்லிளிப்பு பசப்பு



அன்னியனால் இணைக்க பட்ட ஒட்டு செடியாய் பாரதம்

இந்நாளில் இணைப்பு பெற மேற்சொன்ன அதிசயங்கள்



பாரத மணிக்கொடி வாழ்கவே, கதை கேட்ட நீங்களெல்லாம் வாழியவே
இதுக்கு பிறகும் ஆசையிருந்தால் மானம் துறந்தால் மரியாதை கெட்டு

வாழிய வாழிய வாழிய வாழியவே

Gopal.s
14th May 2015, 07:38 AM
வாழியவே என் சக மானிடன் வாழ்த்தும் பக்குவம் வந்து சேர்ந்ததே

தாழியை உடைத்தனர் சமூக வெண்ணை திரண்டு வருங்கால்

ஊழியை நோவதில் எப்பயன் கோழியையும் ஆட்டையும் பண்டமாற்றி

நாழிகை பார்க்காமல் நாளோட்டி வந்த உழைக்கும் வேட்டை விவசாயிகள்



பண்டமாற்றாய் மாறியது பணமென்னும் பிண பேய் தங்க மஞ்சள் மாயை

கண்டமாட்டில் பல தெய்வ தூதர்கள் வந்து சாதி மத பேய்களை கண்டு

தண்டமான வீண் போதனைகளால் பிரித்தனர் சக மானுடனை சகதியில் அமிழ்த்தனர்

மண்டையில் ஏற்றினர் மாபெரும் கொலை வெறியை இன மான உணர்வாக





கோயிலும் அரமணையும் அதிகார பூசலுக்காய் இணைய பிணங்க மக்களோ

நாயினும் நலிந்து மிராசுகளின் அடிமைகளாய் உழைப்பை பங்கிட்டது அரசு மதம் மிராசு

நோயினும் கொடிதான நன்னெறி போதனைகள் உண்டி காயினும் களவு ஆகாது

பாயினில் படுத்தால் தூங்கி வாழ்ந்தவன் மிராசுவின் வாயிலில் படுத்து காவலுமாயினர்



அன்னியமானேன் எந்தன் நிலத்துக்காய் எந்தன் உழைப்புக்காய் எந்தன் செல்வத்துக்காய்

அன்னியனானேன் எந்தன் இனத்துக்காய் எந்தன் குலத்துக்காய் கோடரியானேன்

விண்ணிய வனத்துக்கு பெய்யும் வானத்துக்கு நெய்யூரும் ஊற்றுக்கு காற்றுக்கும்

தண்ணிக்கும் வரி போட அரசு துணையாய் நின்றன ஆலயம் ஆண்டவன் ஆக்கிரமிப்பு



புண்ணியத்துக்கும் பாவத்துக்குமே விலை வைத்து விற்பனை கையறு நிலை

பண்ணியதெல்லாம் நானல்ல வினையருப்பது நானே யாரிடம் சொல்ல கதவு பூட்டி

கண்ணியம் துறந்து சகமனித நேசம் துறந்து யந்திரங்களை சோதரமாக்கினேன்

எண்ணியும் காணாத விந்தையாய் மனிதனுக்கு மனிதனே போட்டி இனவழிப்பு



நாணுகிறேன் என்னை கண்டு நான் பூட்டிய ஆடை உண்ணும் உணவு வசிக்கும் இருப்பு

பேணுகிறேன் என்னாலல்ல சக மனித தெய்வ அரை வயிறு உண்ட உழைப்பால்தானே

வேணுமென்ற செல்வம் தந்தால் போகுமோ தெய்வங்களுக்கு சாத்தான்களுக்கே பங்கீடு

காணுகிறேன் கடவுளை கண்ணால் இன்றே அந்தோ அவனுக்கோ எதுவுமில்லை வெறுமை

venkkiram
14th May 2015, 08:18 AM
வெறுமை பரவிய சூழல்
கைகூடாமல் போன காதல்
விரக்தி கவ்விய எண்ணம்
நிராகரித்துச் சென்ற காதலன்
கோபம் தெறிக்கும் நினைவு
கொஞ்சிப் பேசிய பொழுதுகள்
விவேகம் கொண்ட உள்ளம்
வீழ்ந்திடாமல் வாழ்ந்து காட்டு
தீர்க்கம் அடைந்த பார்வை
வெறுப்பைச் சுமக்கா வாழ்க்கை

Gopal.s
14th May 2015, 08:32 AM
வாழ்க்கை சுமக்கா வேட்கை

வழக்கை சுமக்கா மாட்சி

கிழக்கை காணா உறக்கம்

கிழத்தை சுமக்கா மனம்



வேட்கை காணா விவேகம்

மாட்சி வேண்டா சுழற்சி

காட்சி மாறா வேர்கள்

கட்சி மாறா மனத்தூய்மை

chinnakkannan
14th May 2015, 10:27 AM
மனத்தூய்மை கிடைப்பதற்கு என்ன வேண்டும்
..மாறாத நல்லெண்ணம் கொள்ள வேண்டும்
கணப்பொழுதும் களங்கமிலாக் கண்கள் கொண்டு
..க்லகலப்பாய் நெஞ்சுகொளத் தெரிய வேண்டும்
பணவரவு அதிகரிக்கப் பக்கு வங்கள்
..ப்லவாறாய்ச் செலவுவரின் கலங்காத் தன்மை
சுணங்காமல் சிரித்தமுகம் அன்பாய் உள்ளம்
..துவளாமல் இருந்தாலே கிடைக்கும் தானே..

venkkiram
15th May 2015, 09:56 AM
தானே முன்வந்து தளராமல் முன்னெடுத்து
தயக்கம் காட்டி பின்தங்கிய கூட்டத்திற்கு
தலைமை தாங்கும் தன்னலமில்லா மனிதன்
தலைமுறை தாண்டியும் போற்றப் படுவான்
வெட்டி வியாக்கியானம் வெளியில் பேசி
வீணே பொழுதுகளை நித்தமும் கழித்து
வெறுமையாய் வாழ்வை நகர்த்தும் மனிதன்
விட்டில் பூச்சாய் வீழ்ந்து மறைவான்

Russellhni
15th May 2015, 01:42 PM
மறைவான் மந்திரவாதி மாயமாய்
தெரிவான் மீண்டும் அந்திரமாய் – அவன்
தேர்ந்த செயல்திறனை தந்திரமாய்
தெரிந்து கொள்ள கேட்டான் ஒருவன்

பறைவாய் இம்மன்றத்தில் தெளிவாய்
மறைந்த முறை மறைக்காது பகர்வாய்
சிந்தித்தான் மந்திரவாதி சிறிது நேரம்
செப்புவேன் ஆயின் அதில் சிக்கல் உண்டு

செத்து விடுவாய் நீ அதை கேட்டால் !
சிரித்தது கூட்டம் : சளைத்தானா நம் ஆள்?
சிரித்தான் அச்சமின்றி : சரி சொல்
சீக்கிரமாய் என் மனைவியிடம் மட்டும் !

அமர்ந்தோரின் ஆர்பரிப்பு அமர்க்களம்!
ஆயிரம் குரல் அங்கே அதிர்ந்தது அரங்கம்
என் மனைவிக்கும் ! என் மனைவிக்கும்!
அடாடாடா ! என்ன ஒரு அவசரம் ?



https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcT7nl4u25heRU3hdqR6Xg6WVJThJEIxw Qg9P7t5n4vjlUr4Xl3ctA

chinnakkannan
15th May 2015, 04:12 PM
அவசரமாய்ச் சாயம் வாங்கி
மீசை தலையில் பூசி
காய வைத்துச்
சமர்த்தாய்க் குளித்து
தலை துவட்டி
கண்ணாடி பார்த்தால்
சிரித்தது
கண்களின் கீழிருந்த சுருக்கம்..

Gopal.s
16th May 2015, 05:38 AM
கீழே சுருக்கம் மேலே பொலிவிழப்பு அழகு பெண்ணவள்
தாழே போட்ட கட்டில் துறந்து தொட்டிலின் தாதியானாள்

சூற் சுமந்து தானகன்ற இருள் நிறைந்த கருவறை
பாற் சுமந்து தானளிக்கும் பம்மி நின்ற திருமுலை

அணைப்பாலும் முத்தாடியும் திணறும் மூச்சு
பிணைப்பால் அன்னை ஒருத்தி உருவமே உண்ண உறங்க

தளிர் நடை பயின்று தத்தி தத்தி சம்ஹாரம் பொருட்களை
வெளிர் முக காரியோ சும்மா இருக்காயா என்று செல்ல கடிதல்

பேச்சு என்ற ஒன்று பிக்கா பிக்கா என்று இணையில்லா அமிர்து
காச்சு மூச்சென்ற நவீன கானங்களின் முன்னோடி நினைத்த

நேரம் கழிக்கும் உரிமை உலக சிறார்களுக்கு இந்தியர்களுக்கோ
தாரம் வந்தும் பேரன் கண்டும் பிரத்யேக உரிமை தனியுரிமை

பகுத்தறிந்தேன் பள்ளி கண்டு பல்பங்களில் பண்ட மாற்று
மிகுவியாபார உத்தி ஐஸ்வண்டி ஆளுடன் கடன் வாங்கி

திருப்பாத பிற்கால பாடம் விமலா மீரா கலா என்ற கனவுகள்
கருப்பாக எண்ணங்கள் சக மாணவர்களை அடுத்து கெடுத்து

ஆசானிடன் நற்பெயர் பிற்கால வேலைக்கு இன்றே அடித்தளம்
காசா பணமா வக்கிரங்களுக்கு சிறுநீர் கழிவிடங்களில் சிந்தை

தூண்டும் படம் வரைந்து பாகம் குறித்து பால பார்கலவி கல்வி
வேண்டும் அளவு கிசு கிசு சக மாணவ,மாணவி,ஆசிரிய ஆசிரியை

பிற்கால பத்திரிகையானாய் பரிணமிக்க காப்பி அடிக்கும் கலை
தற்கால உன்னதங்களின் உயர்வுக்கு உதவும் அடிப்படை வலை

மாங்காய் திருடி பெற்றோரின் பையில் களவாடி அரசியல் பயிற்சி
பாங்காய் பயிற்சி பெற்று பலரின் தயவில் வேலை பின்னென்ன

நானும் மணந்தேன் நானும் புணர்ந்தேன் நானும் பெற்றேன்
நானும் வளர்த்தேன் நானும் கண்டேன் வீடுவாசல் நானும் கண்டேன்

பெயரன் பெயர்த்தி நானும் கண்டேன் நாணும் உதாசீனம் முதியோர்
பெயரும் குடில் சாணத்துடன் தகனம் புரியா மொழியில் சொர்க்க விடை

வரும் பிறவியில் இறைவா இதயத்துக்கு எலும்பு கொடு மூளைக்கு
இரும்பில் வலிவு கொடு விசையுறு பந்தாக உளம் வேண்டிய உரம் கொடு

அலைவுகளை விட்டு செல்வேன் சுவடற்று மறையாமல் கனவின்
கலைவுகளை மீட்டு எடுப்பேன் தொலை வாழ்விலும் தொலையாமல்

chinnakkannan
16th May 2015, 09:16 AM
தொலையாமல் இருந்திட்ட காலம் எப்போ
….தொக்கிநிற்கும் வாழ்வினிலே பிறக்கும் கேள்வி
கலைகின்ற கனவுகளும் காட்சி யுந்தான்
…காட்டியதே கூட்டியதே மாயை தன்னை
நிலையான நல்வாழ்வு ஈதா னென்றே
.. நித்தநித்தம் நின்றதுவும் போயே போச்சு
வலையாக வட்டமென இருக்கும் வாழ்வில்
…வாகாக முதுமையது வந்த தன்றோ

இனியொரு பிறவி வேண்டும்
..இறைவனே நானுங் கேட்பேன்
தனியிலை நானு மிங்கு
…தரம்பெறப் பலபேர் உண்டு
பணிவுடன் கனிவை ஏந்தி
…பாரிலே மேலும் நல்ல
பணிகளைச் செய்ய வேண்டும்
…பற்றினேன் உந்தன் பாதம்..

Russellhni
16th May 2015, 05:02 PM
பாதம் பற்றினேன் நின் சரண் புகுந்தேன்
பாமரன் பாவி நான் பவித்திரம் அறியேன்
கருமம் அறியேன் ஞானம் அறியேன்
கருணை இல்லேன் பக்தி இல்லேன்
எதுவுமற்றேன் நீயன்றி எவருமற்றேன்
என் கதி நீயே இறைவா !


https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQazNAwiZVQK98qlQG3yo63HGT1GHW8K nnY0llPqQVqFY3co9XNrA

Gopal.s
17th May 2015, 04:51 AM
இறைவா

மனிதன் படைப்பிலேயே அதிஉன்னத படைப்பு நீ

நிச்சயமற்ற வசீகர வாழ்வில் மன அழுத்த மருந்து நீ

பயமற்றவனையும் அச்சமுற வைக்கும் அற உன்னத காவலன் நீ

பணக்கார வீட்டின் தலைமை காவலன் சேவகனும் நீயே

உன்னத இலக்கியங்கள் சிற்பங்கள் கட்டிடங்கள் உருவாக காரணகர்த்தா நீ

மனிதனை விலங்குகளை அடிமை கொள்ள மனிதனுக்கு நற்றுணை நீ.

மூட பழக்க வழக்கங்களில் நேரத்தை பொழுதாக்கிட போதை பாதை நீ

பாவங்களுக்கு பரிகாரம் எனும் அற மீறல்களுக்கு தலைவன் நீ

நீ படைத்ததாக சொல்லும் சொல்லில் உண்மையிருந்தால் குறை படைப்பாளி நீ

நான் படைத்தவைகளை எனக்கு அந்நியமாக்கும் அபின் நீ

உன்னை நம்புவதே நீ இருப்பினும் இல்லாதிருப்பினும் காப்பானது.

chinnakkannan
17th May 2015, 08:07 PM
காப்பானது என்றேவொரு கவிதைபடித் தீரா
பூப்போலவே பொலிந்தேவிழும் சிரிப்பூவுடன் கேட்க
பேச்சானது புரியும்விதம் பெண்ணேஅறி வாயே
கேட்கும்படி அவரைச்செய வைத்ததும்நான் அறிவாய்

உண்டென்றால் உண்டென்பேன் பெண்ணே என்மேல்
..உளமில்லை என்றாலும் பேத மில்லை
கண்களிலே காண்பதுவும் உண்மை யல்ல
…காதுகளில் விழுவதுவும் உண்மையல்ல
எண்ணத்தில் மலர்வதுவும் உண்மை யல்ல
…ஏதேனும் அனுபவமும் உண்மை யல்ல
விண்ணுக்குள் மண்ணுக்குள் கரையும் வாழ்க்கை
..விசையதுவும் திசையதுவும் தெரியா தன்றோ

மாந்தரின் நெஞ்சி னுள்ளே
.. மாசினை நீக்க அங்கே
வேந்தரோ பிறரோ கொஞ்சம்
..வேட்கையும் கொண்டு என்னை
சேர்ந்துதான் படைத்தா ரென்றே
..தீர்க்கமாய் சிலர்சொல் லட்டும்
நேசமாய் நம்பிக் கைதான்
.. நிஜத்தினில் கடவு ளாகும்..

venkkiram
18th May 2015, 10:12 AM
கடவுளாகும் பாத்திரத்தை நம் கருத்திலேற்றும் இதிகாசம்
அடவுகட்டி மேடையேறி கலைக் காட்சிதரும் அவதாரம்
அல்லல்படும் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழ்த்து மென
அற்றதை போற்றவைக்கும் ஆத்திகச் சலவைக் கூட்டம்

chinnakkannan
19th May 2015, 03:07 PM
கூட்டத்தில் இடித்துப் பிடித்து
முன்னேறி
கடைசியில் டிக்கட் கிடைத்து
சீட் தேடி அமர்ந்து
வியர்க்க விறுவிறுக்க
எந்த விமர்சனமும் படிக்காமல்
பார்த்து
பின் பத்திரிகையைப் பார்த்து
ஒப்பிட்டுக் கொள்வதன் சுகமே அலாதிதான்..

இதே போல இந்தக் கால இளைஞர்கள்
இன்னும் பல்வருடம் கழிந்தபின்
நினைக்க என்ன இருக்கிறது
என யோசித்தால்
கிடைப்பது கேள்விக்குறி..

venkkiram
20th May 2015, 09:32 AM
கேள்விக்குறி
ஏன் ஆச்சர்யக்குறிபோல
திமிராக
நிமிர்ந்து நிற்கவில்லையென
நினைத்தததுண்டு
எதையுமே
யார்மனதும் புண்படாவண்ணம்
ஆழம் அகலம் புரிந்து
விவரமாகக் கேட்டு
விடைக்காக காத்திருக்க
உணர்த்துவதே
அவ்வளைவும் பணிவும்

http://www.yourwebgraphics.com/gallery/data/thumbnails/392/Man-With-Question-01.png

venkkiram
21st May 2015, 07:59 AM
பணிவும் துணிவும் துணை நிற்பின்
பதவிகள் பாராட்டுகள் வந்தடையும்
அன்பும் அறனும் துணை நிற்பின்
அகம் புற வாழ்க்கை மேலோங்கும்
விவேகமும் விடாமுயற்சியும் துணை நிற்பின்
வாய்ப்புகள் அனைத்தும் வாகைசூடும்
வாய்மையும் தூய்மையும் துணை நிற்பின்
காய்மையில்லா வார்த்தை வசப்படும்


https://www.quotespick.com/ta/images/quotes/tamil/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%A E%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF% E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%A F%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF %E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%A F%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE %E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%A F%8D-395-75.jpg

kalnayak
21st May 2015, 07:08 PM
வசப்படும் வானமே எண்ணத்தில் மட்டும்
கசந்துபோகும் முயற்சிகள் தோல்விகள் கண்டு
வசந்தங்கள் வருமே காலத்திலும் அதுபோன்று
பசுமைகள் திரும்பும் வாழ்விலும் ஆங்கு
நிசத்திலும் வசப்படும் வானம் மனிதனுக்கு.

Gopal.s
23rd May 2015, 06:27 AM
வானம் மனிதனுக்கு சொர்க்க லோகம் அங்கல்லவா
காணும் உறவெல்லாம் கசந்த நாட்களில் நாடும் வீடு
பேணும் கனவெல்லாம் தீர்ந்து மக்கள் சுற்றத்திடம் இரவல்
நாணும் வரை இக்கடன்கள் தீர்க்கவே பெறாமல் சுமை

என்ன வைத்திருக்கிறது பூமியில் மண் பொன் பெண் ஆக்கிரமிப்பு
மண்ணும் பொன்னும் மனிதனுக்கு இதயம் தொடா சேமிப்பு
பெண்ணும் சிக்கலானதில் சக ஆண்களிடத்தும் மோகம்
இன்னும் ஆக்கிரமித்தால் இருக்கவே இருக்கிறது அமெரிக்கா

chinnakkannan
23rd May 2015, 03:21 PM
”அமெரிக்கா”
கண்கள் முழுக்கக் கனவோடு
வேலை கிடைத்துச் சென்ற பெண்
கல்யாணமும் கட்டிப்
பின் நான்கு வருடம் கழித்து
திரும்பினாள்..

விவாகரத்தாம்
மனமொன்றவில்லையாம்
என்னடி
என்றால்
கண்ணீருடன் கட்டிப் பிடித்தாள்
யாருமில்லாத நேரத்தில்..
“அம்மா..
உனக்கு முப்பது வருஷமாச்சா
கல்யாணமாகி
எத்தனை கஷ்டம் எத்தனை அவஸ்தை
உன்னை அப்பாவும்
அப்பாவை நீயும்
பரஸ்பரப் படுத்தல்
அழுகை கோபம் துக்கம் இன்பம்
சுவாரஸ்யம் போர்
எல்லாவற்றிலும் சமமாக
இருந்து
ஸ்டில் இட் இஸ் கோயிங்க் ஆன்..
பட் ஆனால்
மேஜர் சுந்தர்ராஜ த் தடுமாற்றம் குரலில்

”வரவே வராதும்மா
இந்தியா போல்..”

Russellhni
24th May 2015, 01:01 PM
இந்தியா போல் எங்கும் காணோம்
ஏழை நாட்டில் நடக்காது எதுவும்
எக்கச்சக்க சட்டம் எதற்கும் திட்டம்
ஏமாற்று வேலை பம்மாத்து எல்லாம்

கருப்பு பணம் கையூட்டு கூடவே குப்பை
கொடிய நச்சு சூழல் குடிநீரில் சாக்கடை
கூடும் பணவீக்கம் விவசாயி வேதனை
குண்டும் குழியுமாய் நெடுஞ்சாலை

கொள்ளையர் ஆளும் நொள்ளை நாடிதே
குறை ஒன்றும் இல்லை அவர் பாடுகிறார்
கூசாமல் பொய் கூடையாய் சொல்கிறார்
கோபம் ஆத்திரம் பொத்து கிட்டு வருதே

காரோட்டியின் மனைவி
-----------------------------
எல்லாம் போகட்டும் கதை தேவையில்லை
என்ன சொல்லியும் ஒன்னும் ஆவதில்லை
எதானாலும் சரி! நமக்கு ஒன்னும் பெரிதில்லை
எனது பிரச்னை இப்போ அதுவுமில்லை !

இத்தனை கார் எதுக்கு எங்கு நோக்கினும்?
எப்படி இந்த ஏழை நாடு உருப்படும்?
என்ன கொடுமை இது ? என்ன செய்வோம் ?
இந்த ரோட்டிலே இல்லியே இடம்!

எங்கே காரை நாம் பார்க் பண்ணுவோம்?
ஏதேனும் செய் ! ஆச்சு பார்ட்டிக்கு நேரம் !


http://laugh18.com/wp-content/uploads/2012/07/Fine-for-parking.jpg

venkkiram
26th May 2015, 09:05 AM
நேரம் நெருங்கிக் கொண்டெ இருக்கு
விடப்போகும் கடைசி மூச்சினை
வீடே நெடுநாட்களாய் எதிர்பார்த்து நிக்குது
தொண்டையிலிருந்து இறங்கவா வேணாமா
போராட்டம் நடத்துது காய்ச்சிய பசும்பால்
கால்மாட்டில் கொள்ளுப்பேரன் பேத்திகள்
தலைமாட்டில் கணவன் மகன் மகள்
வெறிக்குது பார்வை விட்டத்தை நோக்கி
கடைசியாய்...கடைசியாய்..
நினைவுகளில் நிழலாடுகிறான்
கல்லூரிக் காதலன்

Russellhni
26th May 2015, 02:26 PM
காதலன் வர காத்திருந்தேன்
கண்ணிமையாமல் பூத்திருந்தேன்
கண்ணன் வந்தான் கண் பொத்தினான்
கை மங் கை பற்றினான் தொற்றினேன்

காணமல் போன கோபம் தேடினேன்
கடிந்தேன் கால தாமதம் ஏனென்றேன்
கண்ணே கடிதாய் காற்றாய் வந்தேன்
காதல் கைகூட பரிசும் கைகூட என்றான்

கள்ளனே பரிசென்ன காட்டு என்றேன்
கபடமாய் சிரித்தான் காட்டேன் என்றான்
கன்னி உன் பெற்றோருக்கு பரிசு முன்னே
கண்டிப்பாய் காதலி உனக்குண்டு பின்னே

காட்டுவேன் பரிசாய் மாப்பிள்ளை நானே
கொண்டு செல் என்னை அவரிடம் தேனே !
குறும்பாய் சிரித்தான் கொஞ்சலாய் தானே
கொள்ளை போனேன் நொடியில் நானே !


https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQfI0JN-MVBOdJ7t9borDx6ztCMT9SySwe4OWL0LUKwSb3zjZXUXg

* Perhaps this guy will be a parents-in-law pet ! I bet :)