View Full Version : kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2
Pages :
1
2
[
3]
4
5
6
7
8
pavalamani pragasam
12th January 2012, 10:38 AM
நித்திரை வருவதில்லை
குத்துப்பட்டவனுக்கும்
குறை வயிற்றுக்காரனுக்கும்
குற்றம் புரிந்தவனுக்கும்
பிறழாத நெறி கொண்டவன்
படுத்தவுடன் உறங்குவான்
chinnakkannan
13th January 2012, 10:44 AM
உறங்குவான் அல்லது
உறங்குவாள் நின்ற படி...
கண்கள் திறந்த படி
சுற்றி ஒரு ஆள் இருந்தாலும்
பலர் இருந்தாலும்
கவலை இல்லாமல்
ஏதும் பேசாமல்
கொஞ்சம் தயக்கத்துடனும்
இறுக்க முகத்துடனும்
சுவாசம் கொஞ்சம் கனமாய் வர
மேலே அல்லது கீழே
பார்வை பார்த்தபடி..
சில நிமிடங்களைக்
கஷ்டமாய்க் கழித்தே...
பின்
நின்ற பின்
டபக்கென வெளிவந்து
படக்கென விரைவர்..
வேறெதில்...
லிஃப்டில் தான்
pavalamani pragasam
13th January 2012, 11:35 AM
லிஃட் கேட்ட விரல் வெண்டைபிஞ்சென்றால்
மவனே உஷாரு நேரமோ நட்ட நடு நிசி பாரு
ஐவேயில அழகான மோகினி பிசாசுகளும்
சிங்காரிச்ச ரத்தகாட்டேரிகளும் நிக்குதாம்
chinnakkannan
14th January 2012, 09:55 AM
நிக்குதாம்..
அப்பச்சி சொல்லிச்சு..
என்னவாக்கும் விசேஷம்...
செளக்கியமா கீதா வூட்டுல...
வட்டார வழக்கில்
கேட்கையில் தனி சுகம் தான்..
இலக்கணமெல்லாம் பார்க்க வேண்டாம்..
அதுவும் என்மகள்..
அப்பா
நீனே இதச் செஞ்சு கொடு
எனக் கேட்டதில்
உண்டோ இலக்கணப் பிழை..
pavalamani pragasam
14th January 2012, 06:18 PM
பிழை இருந்தது மன்னன் தீர்ப்பில்
விலை தந்தது மதுரை மாநகரம்
நிழலை போல் தொடருமே எந்நாளும்
தவறின் பின்னே தவறாத தண்டனை
chinnakkannan
14th January 2012, 10:03 PM
தண்டனை தான்...
இல்லையா பின்னே
அலுவ்ல்க்த்தில் சின்ன விருந்து..
சாதாரணம் தான்..
உற்சாக பானமெல்லாம் இல்லை..
நல்ல உணவு...
ஒரு மாறுதலுக்காக ரத்னா கஃபே
வெங்காய வ்டையும்
பொங்கல் கொத்சுவும்
காய்கறி ப்ரியாணியும்
க்லகலப்பாய் ரைத்தாவும்...
தொப்..என தொப்பைக்குள்
தள்ளிவிட்டு
வீட்டுக்கு வந்த பின் தான் நினைவு...
அவள்
செய்வதாகச் சொன்ன
சேவை, மோர்க்குழம்பு..
சற்றே பொய்சொல்லி
கொஞ்சமாகக் கொறித்திருக்கலாம்..
ஓட்டை வாய்..
சொல்லிவிட்டேன்..
அப்படியா அதனாலென்ன..
என்றவள்
நிறுத்தி நிதானமாய் அமர்ந்து
சப்புக்கொட்டி சாப்பிட்டு விட்டு
தொலைக்காட்சி பார்த்திருந்த என்னிடம்
ரொம்ப நேரம் முழிக்காதீஙக்..
காலாகாலத்தில தூங்குங்க - சொல்லி
ப்டுக்கையறைக்குப்
போயே போய் விட்டாள்..
இதற்கு அவள்
திட்டியிருக்கலாம்
அழுதிருக்கலாம்
முகம் தூக்கி வைத்திருக்கலாம்...
அடித்தும் கூட இருக்கலாம்...!
ரொம்ப உறுத்துகிறது...
pavalamani pragasam
15th January 2012, 09:07 AM
உறுத்துகிறது சிறு தூசு கண்ணுக்குள்
உண்ட ஒரு துணுக்கு பல்லிடுக்கில்
உதித்த ஒரு சந்தேகம் மனதில்
உள்ளிருந்து உயிர் வதைக்கும்
chinnakkannan
16th January 2012, 12:03 AM
வதைக்கும்விழி அழைப்பால்மனங் கலங்கிக்குளச் சுழலாய்
பதைக்கும்பொழு தினிலேயவள் பருவத்தெழில் துணையில்
விதைப்பாள்சில விருப்பங்களை இதய்ம்மகிழ்ந் திடவே
கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள்
pavalamani pragasam
16th January 2012, 08:08 AM
உரைப்பாள் பல கதைகள்
கரைப்பாள் பாவி மனதை
மாமி நாத்தியுடன் மனைவி
பிணக்கின்றி வாழ முடியாதா
இல்லறவியல் அறியா பாமரன்
பல கலை கற்றும் கல்லாதவன்
chinnakkannan
16th January 2012, 03:02 PM
கல்லாதவன் என
பக்கத்து வீட்டுப் பரமசிவத்தை
அவன் அப்பா திட்டுவார்..
தண்டச்சோறு
உருப்படாவெட்டி
இன்னும் ப்ல அடைமொழிகள்..
காலப்போக்கில்
ஏதோ வேலையில் சேர்ந்து
அதை விட்டு
கொஞ்ச்ம வியாபாரம் பண்ணி
வாழ்ந்து காட்டியதும்
அவருக்குப்பெருமை..
படிக்காட்டி என்ன
ஜெயிச்சுட்டான்ல...
கல்லாதவர்கள்
கற்கவில்லை அல்லது
கற்க மறுத்திருந்தாலும்
கற்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
வாழ்க்கைப் பாடம்..
pavalamani pragasam
16th January 2012, 06:59 PM
பாடம் படிக்கும் மாணவியாய்
பாச மகள் பகிர்ந்து கொண்டாள்
பரவசமான முதல் பனி மழையை
பூப் போல் கையில் விழும் வடிவம்
பொலிவாய் செதுக்கிய நட்சத்திரம்
பொசுக்கென கரைந்துவிடும் மாயம்
பொம்மை மனிதன் செய்யும் கூட்டம்
பாகுபாடின்றி பெரியவரும் சிறாரும்
பளிங்கு போல் எங்கும் ஒரு நிர்மலம்
பரிசுத்தமான நிகழ்வதுவோர் அதிசயம்
பன்முக இயற்கையின் தூய தரிசனம்
பரவிக்கிடந்தது அங்கே ஒரு பயபக்தி
chinnakkannan
17th January 2012, 12:01 AM
பயபக்தியுடன் தான்
கண்களிலே கற்பூரம் ஒற்றி
துளி துளிர்த்திருந்த நெற்றியில்
குங்குமம் இட்டுக் கொண்டு
பின் பார்க்க நானும் இட்டுக்கொள்ள,
திரும்பி சுற்ற ஆரம்பிக்க
பின்தொடர்ந்தால்
மெளனமாய் இரு சுற்ற்ல்..
பின் தூணுக்கருகில் அமர
நானும....
கோயில் என்ப்தால் திட்டாமல் இருக்கிறேன்..
ஏன் தாமதம் என பார்வையில் கேட்க
சைகையில்
ஏகப்பட்ட வாகனங்க்ளுக்கிடையில்
சிக்கிக் கொண்டதைச் சொல்ல
அதுவ்ரை எங்களைப் பார்த்திருந்த சிறுவ்ன்
என்னங்க்ணா ரெண்டுபேரும் ஊமைங்களா
எனக் கேட்க
பட்டென வெடித்த சிரிப்பில்
கரைந்தது கோபமும் நாடகமும்..
pavalamani pragasam
17th January 2012, 08:54 AM
நாடகமும் முடிந்தது
திரையும் விழுந்தது
கூட்டம் கலைந்தது
அடுத்த வேலை என்ன
அடுப்பில் உலையை வை
இருப்பவர் வயிறை கவனி
chinnakkannan
17th January 2012, 02:07 PM
கவனிப்பு நல்லது தான்
அதற்காக இப்படியா
இளவயது பாவாடை தாவணி மங்கை
பந்தியில்
அமர்ந்திருந்த வாலிபனுக்கு
சரமாரியாகக்
கண்களாலும் கைகளாலும்
பரிமாறிக் கொண்டிருக்க..
அந்தப்பக்கம் அமர்ந்தபடி பார்த்த நான்
பொறுக்கமுடியாமல் கேட்டேன்..
அந்தப் பொண்ணு அந்த ஆளோட காதலியா..
அருகிலிருந்தவ்ர் முறைத்தார்..
வாய் கூசாம இப்படிக் கேக்கறீங்களே..
அந்தப் பொண்
அவரோட மச்சினி...!
pavalamani pragasam
17th January 2012, 06:57 PM
மச்சினி பாவம் கத்தி அழுவுறா
கண்ணீரை அருவியா கொட்டுறா
கையைக் காலை உதைக்கிறா
குஞ்சுப் பாப்பா கன்னத்தை
கொஞ்சிய மச்சானின் மீசை
குத்துனதுதான் குத்தமா போச்சு
chinnakkannan
19th January 2012, 11:40 AM
போச்சு போச்சுவென்றே பொங்குவதும் போதாமல்
...பேச்சில் நல்வார்த்தை சிறிதேனும் சொல்லாம்ல்
வீச்சு வீச்சென்றே விள்ங்காமல் கத்துவதும்
...வில்லி நாயகனின் நாயகியை வீழ்த்திடவே
பூச்சி பிடிக்கின்ற பல்லியைப்போல் காய்நகர்த்தி
... பொன்னும் மணிநகையும் புடவையும் தானுடுத்தி
சூழ்ச்சி செய்வதையும் விடாமலே பார்த்திடுவார்
...சோம்பல் மாந்தரவ்ர் தொலைக்காட்சித் தொடரினிலே..
pavalamani pragasam
19th January 2012, 12:01 PM
தொடரினிலே எண்ணற்ற கண்ணிகள்
பொருளுள்ள ஆதாரமான காரணிகள்
ஓரிழையில் கோர்த்த உயிரினங்கள்
அழிக்கக் கிளம்பிய நாம் அறிவிலிகள்
chinnakkannan
21st January 2012, 03:58 PM
அறிவிலிகள்..
கடைசிப் பெஞ்ச் மாணவர்களைப்
பார்க்கும் போதெல்லாம்
தமிழையா சொல்வார்..
கொஞ்சமாவது படிக்கிறார்களா..
நீங்கள் அவர்களைப் பார்க்காதீர்கள்
படித்து முன்னேறுங்கள்...
ஒரு நாள்
அவர்களில் ஒருவன்
அறிவிலிக்குப் பொருள் கேட்டு
அறிந்த பின்
ஐயா மறுபடி விளித்த போது
சொன்னான்..
“ஐயா நாங்கள் அவ்விதமில்லை..
மனிதனாகப் பிறப்பதே அரிது
என்று தானே நீர் சொன்னீர்..
நாங்களும் மனிதர் தாமே’
ஐயா பதிலேதும் சொல்லவில்லை..
ஏனெனில்
அவன் புரிந்து சொல்கிறானா
புரியாமலா எனத்
தெரியவில்லை அவருக்கு...
pavalamani pragasam
21st January 2012, 08:41 PM
அவருக்கு கொத்தமல்லி துவையல் பிடிக்கும்
தலை நிறைய மல்லிகைப்பூவை சூட்டி
தழையத் தழைய பட்டுடுத்தினால் பிடிக்கும்
காப்பியில் சீனி தூக்கலாய் இருக்க வேண்டும்
கலைந்து கொண்டிருக்கும் அந்த நாள் சித்திரம்
காணாமல் போய்க்கொண்டிருக்கும் பழைய பத்தினிகள்
அவளுக்கு காப்பி மிதமான சூட்டில் இருக்க வேண்டும்
உடுப்பை சுருக்கமின்றி தேய்த்து வைக்க வேண்டும்
அவள் பேசும் போது குறுக்கிடக்கூடாது சொன்னதை
சிரமேற்கொண்டு கச்சிதமாய் முடித்திட வேண்டும்
கூடச் சென்று வாங்கியதை சுமந்து வரவேண்டும்
கொடுத்துவைத்தவர்கள் பூரிப்பில் இன்று பதிகள்
chinnakkannan
22nd January 2012, 11:48 AM
பதிகள்
அவ்வண்ணம் மாறிய பிறகு
தொலைத்தவை ஏராளம்..
சுதந்திரம்,
பேச்சு,
இன்ன பிற..
இருப்பினும்
அவ்வப்போது
சதிகளை வழி நடத்துபவர்களும்
அவர்கள் தான்
சில சமயங்களில்...!
pavalamani pragasam
22nd January 2012, 12:40 PM
சமயங்களில் பூசப்பட்ட வண்ண சாயங்கள்
விதைத்து வளர்ந்த ஏராள சம்பிரதாயங்கள்
மதியை மயக்கி இயந்திரமாக்கும் சக்திகள்
வரிசையாய் வருடம் முழுக்க விழாக்கள்
வரண்ட வாழ்வில் மாயக் கவர்ச்சிகள்
மேன்மை பெற உதவாத மார்க்கங்கள்
chinnakkannan
22nd January 2012, 01:14 PM
மார்க்கங்கள் எத்தனையோ;
வழிகள் எத்தனையோ;
புத்தகங்கள் எத்தனையோ;
ஆசிரியர்களும் நிறைய;
இருப்பினும்
வெற்றிக்கனிக்கு வேண்டுமுழைப்பு
மனப்பூர்வத்துடன்
pavalamani pragasam
22nd January 2012, 06:25 PM
மனப்பூர்வத்துடன் இருவர் இணைவர்
அக்னி சாட்சியாய் நிறைந்த நன்னாளில்
மங்கல நாண் சூட்டி மஞ்சள் திலகமிட்டு
அவை நிறைந்த சுற்றம் உறவின் முன்
மாலை மாற்றி பூரண சம்மதம் சொல்லி
ஆசீர்வாதமுள்ள தேவன் திருச்சபையில்
மோதிரம் அணிவித்து இணைந்திடும் உறவு
முற்றாய் முடிவது பதிவாளர் அலுவலகத்தில்
chinnakkannan
26th January 2012, 01:36 AM
அலுவலகத்தில்
சிற்றுந்து நிறுத்துமிடம்
மிகப் பெரிது..
தரைக்குக் கீழே என்பதால்
மிக விசாலம்..
நான்,
என் அலுவலக நண்பர்களான
இந்தியர்கள்,
ஸ்பானிஷ், டேனிஷ்
பாகிஸ்தானியர்கள்,
கொழும்பு நகரக்க் காரர்கள்
ஓமானியர்கள்
அனைவரும்
நிறுத்துவோம் ஒற்றுமையாய்...
எங்கிருந்து வந்தது எனத்
தெரியவில்லை
அந்தக் கறுப்புப் பூனை...
சிகப்பு ரோஜாக்களில் நடித்த
பூனையின் எள்ளுப் பேத்தியோ என்னவோ..
ரோஜா மொட்டைப் போன்ற
சின்னஞ் சிறு குட்டி
நிறம் மட்டும் வேறு..
வந்தது முதல்
அதன் மொழியில்
யாரைப் பார்த்தாலும்
அழைக்கும்
ச்ற்றே பரிதாபம் கொண்டு
ஒரு நாள்
கொஞ்சம் பால்
காகிதக் கிண்ணத்தில் வைத்ததில்
கொஞ்சமே கொஞ்சம் குடித்துவிட்டு
மறு படி மியாவ்...
உடன் வேலைபார்த்த லங்காபுரியர் ஒருவர்
கவலைப்படாதீர்கள் சார் என
ஆங்கிலத்தில் சொல்லி
தினமும்
தான் சாப்பிடும் மீன் ம்ற்றும் கோழி உணவை
சிறிச்சிறிதே கொடுக்க
அதுவும் வ்ள்ர்ந்தது
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்
கறுப்பு நிலவாய்....
உலகம் அழியுமோ என்ன்வோ
தெரியாது
இந்த ம்ஸ்க்ட்டில் ஜ்னவ்ரியில்
க்டும் குளிர்..
வெட்டவெளியில் குட்டி
நாங்கள்
வேலைமுடித்து வீடு செல்லும் பொழுதில்
கொஞ்சம் ப்ரிதாப மியாவ்
காலை
வேலைபார்க்க வ்ந்து சேரும்பொழுதில்
உற்சாக மியாவ்..
கடந்த் சில தின்ங்க்ளில்
மியாவ்வின்
ஒலிமட்டும் கம்மியாய் இருக்க்
அது இருக்கிறதே என்
ஒருவகை நிம்மதி..
அதுவும்
]கலைந்து போனது
சில தினங்க்ளாய்...
குளிரிலேயே இறந்திருக்குமோ
யாரும் எடுத்துச் செல்ல்வில்லை
எனச் சொல்லின்ர்..
கஷ்டமாய்தான் இருந்தது
இருக்கிறது..
என்ன ஆயிற்றோ..
ஆனால்
இப்பொழுதும்
சிற்றுந்தைக் காலையில்
நிறுத்தும் பொழுதெல்லாம்
கேட்கிற்து
மியாவ் என்ற ஒலி...
pavalamani pragasam
26th January 2012, 11:11 AM
ஒலியின் மொழிக்கு உண்டோ அகராதி
உணர்த்தும் பொருள் உண்டே பல நூறு
உம் என்று பெண் உதிர்க்கும் ஒரு சத்தம்
எச்சரிக்கை மணியடிக்கும் ஆண் மனதில்
ஆ என்றால் அர்த்தங்கள் ஓர் ஆயிரம்
ஏற்றி இறக்கினால் பல உணர்வை சொல்லும்
ஓ என்னும் ஒலிக்குள் ஒளிந்திருக்கும்
வார்த்தையில்லா வலுவான பல சேதி
வக்கணையாய் வரி வரியாய் பேசாமல்
இணைக்கும் பாலம் ஒலிகள் ஆதி முதலாய்
chinnakkannan
28th January 2012, 01:50 PM
ஆதி முதல் அந்தம் வரை
எப்படி ஆரம்பம்
எப்போது முடிவு
என்பது தெரியாவிட்டாலும்
தேடல்களில்
தொடர்ந்துகொண்டிருக்கிறது
மனித வாழ்க்கை..
கொஞ்சம் சுவாரஸ்யமாய்
pavalamani pragasam
28th January 2012, 08:56 PM
சுவாரஸ்யமாய் இருந்தது ஒரு கதை
வலை மனையில் உலா வந்த கவிதை
பாராட்டத்தெரியாத புருஷன் ஒருவன்
பொழுதுக்கும் புகழ்ந்தான் பெத்தவளை
மட்டம் தட்டியதில் நொந்த பெண்டாட்டி
அவன் அம்மா செய்யாத ஒன்றை சிறப்பாக
செய்திட வீறு கொண்டு எழுந்தாள் ஒரு நாள்
ஓங்கி அவனை அறைந்துவிட்டாள் கன்னத்தில்
chinnakkannan
28th January 2012, 11:08 PM
கன்னத்தில் முத்தமிட்ட கணத்தைத்தானெண்ணி
..கன்னியவள் நிற்கின்றாள் கற்சிலையாய் ஆங்கே
வண்ணமய நினைவுகளும் வார்த்தைகளும் நெஞ்சில்
..வழுக்காமல் விகசித்தே சிரித்திருக்கும் நன்றாய்
ப்ண்ணிசையை ரசித்தபடி தானிருந்த அன்பன்
..பட்படத்துப் பறந்த்விடம் தெரியவில்லை தானும்
மன்னனவன் திரும்புவதைக் கேளாமல் விட்டே..
..ம்யங்குகிறாள் தயங்குகிறாள் தவிக்கின்றாள் மாது..
pavalamani pragasam
29th January 2012, 08:44 AM
மாது அணிகிறாள் கவசம்
கமழுது அவள் தனி வாசம்
வாய் கூசாமல் ஆண் வீசும்
அதே பழைய அசிங்க வசனம்
இன்னுமா அவளுக்கு காது கூசும்
அமைதியும் அறிவும் அவள் வசம்
chinnakkannan
31st January 2012, 12:04 AM
அவள் வசம் சிக்கிய பார்வை
மீண்ட் போது
நடையில் துள்ளல்..
என்னப்பா எனக் கேட்டால்
நிறையக் கிடைத்ததாம் க்ளூக்கோஸ்...
pavalamani pragasam
31st January 2012, 08:26 PM
க்ளூக்கோஸ் பெண்ணே
ஸ்டீராய்ட் கண்ணே
பந்தயக் குதிரையாய்
பல்ஸ் எகிறுதே
அவசர சிகிச்சை
அளிக்காவிட்டால்
உயிர் பிரியும் உடனே
பாடியாய் மாறிடுவேன்
chinnakkannan
2nd February 2012, 01:10 AM
மாறிடுவேன் என
நினைக்காதிருந்த
வீரபாண்டியனாகிய நான்
மாறியதற்குக் காரணம் அவர்..
நாடகத்தில்
அன்னையாக நடித்தவரிடம்
எவ்வளவு மரியாதை காட்டியிருப்பேன்..
என்னை
குடவோலை த் திட்ட்த்தில்
வெற்றி பெற வைத்து
அவையில் எதிராக அமர வைத்தவர் அவர்..
மறுப்பதற்கில்லை..
மக்கள்
என் மீது நம்பிக்கை வைக்கவில்லை..
கொஞ்ச்ம் கவர்ச்சி தான்...
ஊரெல்லாம் அவரை
அன்னை என்றாலும்
என்னிடம் மட்டும் அவர் காட்டுவ்து
சித்தி மனப்பான்மை..
நாடகத்தில்
எதிரிகளை முழு நீள
ஆடை புனைந்து
அடித்துதைத்த நான்
எவ்வளவு காலம் தான்
புவனமகாதேவியின்
அவையில் மெளனம் சாதிக்க முடியும்..
அதுவும் எனது
வாரிசுக்காக்
நாடகம் தேடிக்கொண்டிருக்கும் வேளையில்...
எவ்வளவு குட்டுகள் தான்
என்னால் வாங்க முடியும்..
அது தான்
இன்று பொங்கி எழுந்தேன்
உள்ளூர பயமிருந்தாலும்...
வெளியேற்றப்பட்டாலும்
நான் பனித்துளி போல் மறைபவன் அல்ல..
எர்ர்ரிமலை...
பொங்கிக் கொண்டே இருப்பேன்..
கேள்விகேட்பவரிடம்
சித்தியைப் பற்றிக் குற்றம் சொல்வேன்..
படை திரட்டி
மறுபடியும் அரியாசனத்தை அடைவேன்
என்றெல்லாம் சொல்ல நினைத்தாலும்
சொல்ல மாட்டேன்..
ஏனெனில் நான் ஒரு
அரசியல்வாதி..
குருபார்வை சீக்கிரம் வருமென்று
ஒரு ஜோதிடர் சொல்லியிருக்கிறார்
கண்டிப்பாக
வெற்றி அடைவேன்....
மனசு மட்டும் புலம்புகிறது
இந்த வீரபாண்டியன்
வெற்றி அடைவானா..
pavalamani pragasam
2nd February 2012, 09:09 AM
அடைவானா இலக்கை
சுவைப்பானா தேனை
உச்சிக் கொம்பில் இருக்கு
கூட கொட்டும் கொடுக்கு
கெஞ்சலும் கொஞ்சலும்
கொஞ்சம் கரிசனமும்
கோடிகள் கொடுக்காத
கனிந்த பக்குவத்தை
கொடுக்காதோ காய்த்த
காரிகையின் மனதிற்கு
chinnakkannan
3rd February 2012, 11:57 AM
காரிகையின் மனதிற்கு
என்ன ஆகும் என
காளைக்கு என்றும் குழப்ப்ம் தான்..
அழகாய் இருக்கிறாள்
அணைக்கலாம் என
அருகில் போனால்
வெடிக்குது எரிமலை..
சரி கொஞ்சம் விலகி இருக்கலாம்
என இருந்தால்
குளிர் ம்தியாய் முகத்தில் சிரிப்பு...
ம்ம்
எந்தக் காலத்திலும்
இப்படி இருக்க் யார் செய்தனர் விதி
pavalamani pragasam
3rd February 2012, 06:29 PM
விதி ஒன்று உருவானால்
விலக்கு ஒன்றும் பிறக்கும்
ஒளியோடு இருளும்
ஆணியோடு சுத்தியலும்
சேர்ந்தே இருக்கும்
நீ கழுவுற நீரில்
நழுவும் மீனாயிரு
chinnakkannan
12th March 2012, 11:04 AM
மீனாயிருக்கத் தான் ஆசை
சமர்த்தாய்
நீந்திக் கொண்டே
அழகுக் காட்சிகளை ரசித்தபடி
அழுக்குகளை உடலில் மட்டும்
வாங்கியபடி
பதிலேதும் பேசாமல்
மெளனமே மொழியாக வைத்து
இருப்பதற்கு..
நிலத்திலும்...
pavalamani pragasam
12th March 2012, 06:42 PM
நிலத்திலும் நீளும் எல்லை வெறுக்கும் கடலரசன் கைகள்
அபகரிக்கும் ஆசை கொண்ட தொடர் தொடு ஆசைகள்
கெஞ்சிக் கொஞ்சி வருடிச் செல்லும் செல்ல அலைகள்
என் அடுக்களை ஆட்சி போனதே டைபாயிட் காய்ச்சலால்
chinnakkannan
27th April 2012, 10:24 PM
காய்ச்சலால் கொஞ்சம் நன்றாக
வெடவெடவென்று
இருந்தது..
பொரித்தால் பூவாய் மலர்ந்து
பரப்பிய வாசத்தால்
குழந்தைகள் வந்து
படக் படக் கென எடுத்து
உண்டதில்
எனக்கு எதுவுமில்லாமல்
தீர்ந்து போனது வடகம்..
ஆனால் நிறைந்திருக்கிறது
வயிறு...
pavalamani pragasam
28th April 2012, 09:01 AM
வயிறு மேடிட்டது
ரகசியம் உடைந்தது
கூடலின் கூட்டலிது
பெண்மை மெருகேறியது
பேரின்பம் உணர்வானது
வரமான பெரும் பேறிது
chinnakkannan
28th April 2012, 02:50 PM
'பெரும் பேறிது..”
சொன்னதற்குச்
சலனமேதுமில்லாமல் இருந்தது
பக்கத்துவீட்டுக்காரன் முகம்..
‘ஆமாமாம்..
இரண்டு தடவை
பாதியிலேயே வந்துவிட்டது..
பின்னர்
சிற்ப்பு வைத்தியரிடம் சென்று
மருந்து,முயற்சி, பிரார்த்தனை,
பின்
உடல் நிலையில் கவனம் என
இருந்தும்
ஆறரை மாதத்திலேயே
நீர் குறைவாம்.. சிசேரியனாம்
செய்ததில்
இரட்டைப் பெண் குழந்தைகள்..
வெகுகவனமாக
இன்குபேட்டரில் தான் வைக்கவேண்டுமாம்
ஒரு மாதம்..
மருத்துவச் செலவு பத்து லட்சம் தாண்டும்...
ஏற்பாடெல்லாம் செய்துவிட்டேன்..
இருந்தும்...”
படபடவெனப் பொறிந்தவனை
நெற்றிச் சுருக்கி நான் பார்க்க..
’இரண்டு மாதம் கழித்து தான்
ஊர் போய் பார்க்க முடியும்...
எனக்கு விடுமுறை கிடைக்காது இப்போது...”
கொஞ்சம் கொஞ்சமாய்
உள்சென்ற குரலில்
தெளிவானது அவன் ஏக்கம்...
pavalamani pragasam
28th April 2012, 03:57 PM
ஏக்கத்தின் இலக்கு எட்டும் உயரத்திலா
ஏணி வைத்து ஏறி எட்டி விடலாமா
விடாது முயன்று கனியைப் பறித்துவிடு
கரணம் போட்டாலும் ஆகாத காரியமா
கடுகளவும் சாத்தியமில்லா கனவதுவா
மறந்துவிட்டு மாற்றி யோசிக்கலாம் வா
எட்டுவதா ஆகாததா என கண்டறிவாய்
நல்விவேகமுடன் தேர்ந்தெடு நலமாய்
chinnakkannan
29th April 2012, 10:48 AM
நலமாய் இருக்கிறாயா..இருக்கிறீர்களா..
செளக்கியம் நீ..நீங்கள்..
இங்கு மஸ்கட்டில் ஒரு சின்ன வேலை..
வந்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள்..
ஆமாம் நீ நீங்கள்..
அதே மதுரை தான்..
உனக்கு..உங்களுக்குத் தான் தெரியாதா..
ஓ ஐ நோ... கான்ஸ்டபிளாய் த் தானே சேர்ந்தாய்..
இப்போ என்ன எஸ்.பியா..
ஜோக் அடிக்காதடா அடிக்காதீர்கள்..
இப்போ எஸ் ஐ தான்..
அதே புதூர் தான்..
வீடு தான் மாறி விட்டேன்..
எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள்
உனக்கு..உங்களுக்கு
எனக்கு ஒரு பெண்..
துபாயில் படிக்கிறாள் காலேஜில்..
உன்.. உங்க பசங்க..
ஒருத்தன் பிபிஓவில் வேலை..
போனவருடம் தான் கல்யாணம் நடந்தது..
சின்னவன் காலேஜ் போகிறான் பி பி ஏ..
ஓ..
நீ நீங்கள் எப்போ வருவீர்கள்..
அனேகமாக ஜூன்..
கண்டிப்பாக மதுரை வாடா..வாங்க..
ச்ச்.. வாடான்னே கூப்பிடுங்க..
நீங்க நீ மட்டும்..
சரி வர்றேண்டா...
அதுக்கு முன்னால் அடிக்கடி ஃபோன் பண்ணுடா..
கண்டிப்பா..
பலவருடங்களுக்கு முன்
பழகிய கல்லூரி சினேகத்துடன்
தொலைபேசியது சந்தோஷமாய்த் தான்
இருந்தது..
அதன் பிறகு
இன்று வரை
ஏனோ அவனும் , நானும்
பேசிக்கொள்ளவேயில்லை..
விடுமுறையில் சென்ற போதும்...
அவன் தொலைபேசி எண்ணை
மறந்துவிட்டேன்...
காரணம்
நிச்சயமாகப் பயமில்லை..
ஏதோ ஏதோ ஏதோ ஒரு.....
pavalamani pragasam
29th April 2012, 03:55 PM
ஒரு கணம் ஒரு யுகம் ஆவதேன்
ஒரு பார்வையில் பைத்தியமாவதேன்
எல்லாம் பருவத்தின் கோளாறு
இனம் விருத்தியான வரலாறு
chinnakkannan
29th April 2012, 10:22 PM
வரலாறு நம்மை
என்னவென்று சொல்லும் குழந்தைகளே
சண்டை போடாதீர்கள்...
குலசேகர பாண்டியர் புலம்பினார்
வீரபாண்டியனையும் சுந்தர பாண்டியனையும்
பார்த்து...
வேண்டுமானால்
வீரா பாண்டிய நாட்டை வைத்துக் கொள்ளட்டும்
சுந்தராவிற்கு பல்லவ நாட்டை
படையெடுத்து சுருட்டித் தருகிறேன்
சண்டையில்லாமல் இருங்கள்
இருமியபடியே குலசேகரர் சொல்ல
இரக்கமில்லாமல் சண்டை தொடர..
மறுபடியும் புலம்பினார் அவர்..
சேர்த்ததெல்லாம் உங்களுக்குத்தானே..
சரி..ஈ...மற்ற ஊரில் இருக்கும் உங்கள் தங்கைக்கும் தான்..
ஏன் சண்டை
சமாதானமாக இருந்து
மக்களை ஏமாற்றுங்களேன்..
தெய்வமே..
நீ இல்லாதிருப்பது உண்மையென்றால்
இவர்க்ள் மாறட்டுமே சீக்கிரம்...
உருக்கமான புலம்பல் கேட்டு
வானத்தில் மேகங்க்ள் சூழ்
இடியுடன் கூடிய மழை
பொழிந்து நனைத்தது மண்ணை..
pavalamani pragasam
30th April 2012, 07:40 AM
மண்ணைத் தின்றான் மாயக்கண்ணன்
அன்னை கொண்டாள் கடுங்கோபம்
வாயைத் திறக்கச் சொன்னாள்
உண்மைதானா என சோதித்திட
மகன் காட்டிய அதிசய காட்சி
கதைகளின் ஈர்ப்பின் ஒரு சாட்சி
chinnakkannan
30th April 2012, 10:34 PM
சாட்சியாய்..இல்லை சாட்சிகளாய்
மேலே நிலா
உடல் மேலே குளிர் தென்றல்...
அந்த அழகிய ஆல மரத்தின்
இலைகள் சலனித்ததால் வந்த சத்தம்..
சற்றே சிறிய தூரத்தில்..
சரி..ஒரு நான்கு தப்படி தொலைவில்..
சல்லென்று ஓடிய ஆற்று நீரின் மெல்லிய ஒலி...
கருவண்டா சில்வண்டா அல்லது ஏதோ ஒரு பூச்சியா..
எது எனத்தெரியவில்லை..
கிக் கிக் கிக் என சத்தம் மட்டும் கேட்டது...
பின்
நான் காற்கட்டை விரலால்
கொஞ்சம் ஆழமாய் ஏற்படுத்திய பள்ளம்
இன்னும் இருக்கலாம்...
அன்று நீ கொடுத்த
ஆழமான உணர்ச்சியான..
ஆசையான
இன்னும் என்ன்வெல்லாமோ ஆன்
முத்தம்
இன்னும் நினைவில்..
இப்போதெல்லாம்
ஏன் ஓடுகிறாய்
கொஞ்சம்
கொஞ்சும் இதழுடன்
அருகில் வந்தாலே...
நான் மூன்று முறை
பல் துலக்குகிறேன்
போதாதென்று
வாய் துவைப்பானை வைத்து
கொப்பளிக்கிறேன்..ம்ம்
ஒரு வேளை
கல்யாணமாகி
இருபது வருடம் ஆனது தான்
காரணமா..
அட் ப்ட்வா...
pavalamani pragasam
1st May 2012, 11:51 AM
அட படவா...
செல்லமாய் திட்டிக்கொண்டிருந்தாள்
திரையில் கொல்லிப்பாவை ஒருத்தி
கண்டதே காட்சி கொண்டதே கோலமாய்
சினிமா சீரழிக்கும் விதத்தை விந்தையை
கலாசாரம் பயணிக்கும் காட்டுப்பாதையை
சற்றே அவதானிக்கலாமென எண்ணினால்
முன்னிருக்கையில் முட்டிக்கொண்டிருக்கும்
மண்டைகள் இரண்டும் திரையை மறைக்க
அலுவலகம் கல்லூரியிலிருந்து வரும்
அனாமத்து ஜோடிகளால் எம்போன்றோர்க்கு
அடடா எத்தனை எரிச்சல்...
chinnakkannan
1st May 2012, 10:44 PM
எரிச்சல் தான் வருகிறது..
முகம் வெளுக்கத் தடவும் க்ரீம்
வைத்த இடத்தில் இல்லை..
இருந்த இடத்திலோ
கொஞ்சம் கண்டப்டி நசுங்கி
பரிதாபமாய்...
ஏற்கெனவே இருக்கும் செவ்விதழை
செவ்வ்விதழாக்க
உதட்டுச் சாயம் எடுத்துத் தடவினால்..
ஏதோ ஒரு குறை...
யாரோ உபயோகித்தாரா...
சரி..
பீரோவைத் திறந்து
பிடித்த பிங்க் சுடிதாரைத் தேடினால்..
க்டைசி வ்ரை காணோம்
ம்ம்
இஷ்டமில்லாமல் ஆரஞ்சு சுடிதார்
அணிந்தாயிற்று..
ஒர்ரே வெய்யில்..
வெளிக் கிளம்புவதற்கு ஏற்ற
பார்ஷே குளிர்கண்ணாடி
அப்பா ஆசையாய் வாங்கிக் கொடுத்தது..
தேடினால் அதையும் காணோம்...
கைப்பை...
எப்போதும் நாலைந்து இருக்கும்
சணலில் ப்ளாஸ்டிக்கில் லெதரில் துணியில்..என
விதவித நிறத்தில்..
ரொம்பப் பிடித்த ஆரஞ்சு சணல் கைப்பை
எங்கே போயிற்று..
சரி
ஹை ஹீல்ஸ்
பாண்டிபஜாரில் கொஞ்சம் பேரம் பேசி
மலிவாய் நானூறு ரூபாய்க்கு வாங்கியது..
அதையும் காணோம்..
ஊப்ஸ்
என்ன இன்று எதுவுமே கிடைக்க மாட்டேன் என்கிறது
கிடைத்த செருப்பைப் போட்டு
வெளியில் வந்தால்..
அட யார் இது..
அழகாய்
நம்முடையதைப் போலவே
பிங்க் சுடிதார்...
கறுப்புக் கண்ணாடி..
செருப்பு....
அடர்த்தியாய் உதட்டுச் சாயம்...
எங்கோ பார்த்த மாதிரி..
நொடியில் அடையாளம் புரிந்து
அடிவயிற்றிலிருந்து கத்தினேன்...
பாட்டீஈஈ.....
pavalamani pragasam
1st May 2012, 11:02 PM
ஏதோ ஒரு ரகசியம் ரத்த உறவின் பிணைப்பில்
பிள்ளைகளின் ருசி பெத்தவளுக்குத் தெரியும்
பெத்தவளின் பாசம் பிள்ளைகளுக்குத் தெரியும்
காதங்கள் பிரிக்காத பாலமாய் பிணைத்திருக்கும்
pavalamani pragasam
2nd May 2012, 12:19 PM
பாட்டீஈஈ..
செல்லப்பேத்தியின் அபயக்குரல்
ஈரக்குலை பதறியது
என்னாச்சோ ஏதாச்சோ
சின்டிரல்லாவை சித்தெறும்பு கடிச்சதோ
அரோராவுக்கு ஆராரோ பாடணுமோ
பார்பி கண்ணாடியை தொலைத்துவிட்டாளோ
பெல்லாவுக்கு பேரிக்காய் வேண்டுமோ
கூப்பிட்ட குரலுக்கு போட்டது போட்டபடி
ஓடி வந்து நிற்பது பேரின்பம்
chinnakkannan
3rd May 2012, 09:43 AM
பேரின்பம் டா...
சின்ன வயதில்
பக்கத்து வீட்டுத் தாத்தா
மெல்லிய மரக்கலரில்
இருக்கும் வாழைப்பட்டையைப்
பிரித்து
சின்னதாய்
ஆட்காட்டி விர்ல் கட்டைவிரல் சேர்த்து
ஒரு சிட்டிகை எடுத்து
ச்ர்ர்ரென்று மூக்கில் விட்டு
கண்கள் கலங்க சொல்வார்..
ஆச்சரியமாய்ப் பார்ப்பேன்...
பின் அப்பா..
ரகசியமாய்
ரேழியில் கதவுக்கு
மேலிருக்கும் ஷெல்பில்
ஒரு பாலித்தீன் பேக்கட்
எடுத்து
ஒரு சிட்டிகை வாயில் போட்டுச்
சொல்வார்..
ஹப்பாடா
லூஸ் புகையிலையாம்..
பின்னர் தான் தெரிந்தது..
வளர வளர
பேரின்பங்க்ளும் மாற மாற..
எது நிலையானது எனத்
தேடல் மனதில் வர...
இன்று வரை
கிடைக்கவில்லை..
pavalamani pragasam
3rd May 2012, 11:51 AM
கிடைக்கவில்லை ஓர் இடம்
கையிலிருக்கும் திரவியத்தை
கண் காணாமல் ஒளித்து வைக்க
களவு போகாமல் பாதுகாக்க
கசிகிறது வட்டு கருப்பட்டியாய்
கரைகிறது உறைந்த பனிக்கட்டியாய்
காப்பாற்றவே முடியாமல் போகுமோ
கடலில் கரைத்த பெருங்காயமோ
கனவித்தனை நிறைவேறிய இன்பத்தை
கரை சேர்க்கும் கலங்கரைவிளக்கத்தை
கசப்பின்றி கடைசி நொடியை கடக்கவென
கை பிடித்து நடத்தும் தன்னம்பிக்கையை
காற்றில் கரையாத கற்பூரமாய் காக்க
கருவூலமாய் கனிந்த மனமது உதவுமா
chinnakkannan
3rd May 2012, 07:04 PM
உதவுமா என நினைக்காமல்
ஏதோ நினைவில்
நிதம் ஊற்றிய தண்ணீரால்
செடி வளர்ந்து
மரமாகிக் கொஞ்சம் நிழல் தருகிறது..
உதவும் என நினைத்த்வை
கொஞ்சம்
எதிர்மறையாகப் போகின்றது..
என்ன செய்ய
வாழ்க்கைப் பாடம்...
pavalamani pragasam
3rd May 2012, 08:12 PM
பாடத்தை பட்டுத்தான் படிக்கணுமா
தீயை தொட்டுத்தான் சூடறியணுமா
பட்டவர்கள் பட்டதை பார்த்தவர்கள்
மூதுரையும் பழமொழியும் போதாதா
chinnakkannan
4th May 2012, 01:25 AM
போதாதா என்றால் இல்லை தான்..
சிலசம்யம் பட்டுத்தான்
தெரிந்து கொள்ள் வேண்டியிருகிற்து
பெண்ணிட்மும்..
தொட்டுத் தான் புரிந்து கொள்ள
வேண்டியிருக்கிறது
செல்ஃபோனிடமும்...!
pavalamani pragasam
4th May 2012, 09:11 AM
செல்ஃபோனிடமும் டிவி ரிமோட்டிடமும்
தீராத பகையும் வெறுப்பும் தொடர்கிறது
அவற்றை இயக்கும் கம்ப சூத்திரம் மிரட்டுது
கிழட்டுக் குதிரைக்கு புது வித்தை வராது
வேண்டாத, மனம் வேண்டாத அநாவசியங்கள்
கர்ணனின் கவச குண்டலமாய் அனைவர்க்கும் கைபேசி
ஆற்றும் வினைகளோ ஆயிரம் எல்லோர்க்கும் செல்லம்
ஏனோ மயக்கவில்லை என்னை இதுவரைக்கும்
பண்பலை வரிசைகள் பாட்டோடு ஊர் சங்கதியை
பாங்காக வழங்கக் கேட்பதின்பம் எனக்கு
சின்னத்திரை சித்திரங்களோ சித்திரவதைகள்
சீரியல்களில் சிரிப்பாய் சிரிக்கும் கருமங்களில்
சிக்காத சின்ன மீன் மாட்டிக்கொண்டது இணைய வலையில்
இணையில்லா இன்பப் பெருவெளியில் என் ஜன்ம சாபல்யம்
chinnakkannan
4th May 2012, 09:21 AM
ஜன்ம சாபல்ய்ம் அடைஞ்சுடும்
பெருமாளைப் பாத்தால் போதும்
என்று சொல்லிக் கொண்டிருப்பாள்
எதிர்வீட்டுப் பாட்டி..
அங்கிங்கே வேலை பார்த்து
சிறுகச் சிறுகச்
சேர்த்தும் வைத்திருந்தாள்...
ஒரு தடவை
விட்டுச் சென்ற மக்ன்
எதற்கோ வர
முகமெல்லாம் மலர்ச்சி..
சற்று நேரத்தில்
அவன் சென்றுவிட
என் வீட்டுக்கு வ்ந்தாள்..
என்ன என அம்மா கேட்டதிற்கு
ஏதோ கஷ்டமாம் கொஞ்சம்
துட்டு கேட்டான் கொடுத்தேன்
அடிப்பாவி..
ஒனக்கோ கொஞ்சம் தானே வ்ருமானம்...
இருந்தாலென்ன
பெருமாளுக்கு வச்சுருந்தது
எடுத்துக் கொடுத்துட்டேன்..
எப்படியும்
அங்க என்னை சேர்க்கப் போறவன்
இவன் தானே...
சொன்ன பாட்டியின் முகத்தில்
புன்சிரிப்பாய்
வழிந்து கொண்டிருந்தார் பெருமாள்..
pavalamani pragasam
4th May 2012, 01:49 PM
பெருமாள் பெரிய புத்திசாலி பகவான்
பாவிகளும் அப்பாவிகளும் தேடி வர
பெரிய லட்டும் பெரிய உண்டியலுமுண்டு
பெரிய நாமம் கரிய முகத்தை மறைக்க
பொன்னாபரணங்கள் மலைமேனி மூட
பச்சை கற்பூர தீர்த்தம் துளசி கமழ்ந்திட
போதாததற்கு பொங்கல் புளியோதரை
பிரசாதங்கள் மடப்பள்ளியில் மணக்க
பக்தி காணுது புதுப் புது அர்த்தங்கள்
பரவசமாய் சேவிக்கின்ற அடிபொடிகள்
chinnakkannan
5th May 2012, 11:19 AM
அடிப்பொடிகள்
நீதிமன்றத்துள் சென்ற
புவனமகாதேவியைப் பார்த்து
இவ்வண்ணம் பேசிக் கொண்டார்கள்
‘பெரிய இடம் தான்
என்ன தான் மன்னரின் மகளென்றாலும்
நீதி என்று ஒன்று இருக்கிறது..
மன்னர் மகள்
தவறு செய்திருப்பார் என்றே தோன்றுகிறது’
நீதி வழங்கி
புவனமகாதேவி நிரபராதி என்றதும்
மறுபடி பேசினர் அவர்கள்..
“எனக்கு முன்பே தெரியும்
எப்படியும்
மன்னரின் மகள் இவ்வண்ணம் என்று..
அவரது கையில் இல்லை கறை”
pavalamani pragasam
5th May 2012, 12:26 PM
கறை கையில் படிந்துவிட்டதென
கழுவுகிறாள் கழுவுகிறாள்
கழுவிக்கொண்டேயிருக்கிறாள்
கொலை செய்த லேடி மேக்பெத்
அரேபியாவின் அத்தனை வாசனை திரவியமும்
அந்த சின்னக் கையின் கறையை கழுவிட போதாதாம்
குருதியின் வாடை குற்றத்தின் சுமை துயில் தொலைக்கும்
கவிஞரின் மொழியின் அழகும் ஆழமும் அடடா என்னென்பேன்
chinnakkannan
5th May 2012, 04:29 PM
என்னென்பேன் ஏதென்பேன்
என்றெல்லாம்
இனிப்புத் தடவிய வர்ணனைகளுக்கு
பெண்கள்
நாணப்பட்டு கன்னஞ்சிவந்ததெல்லாம் ஒருகாலம்..
இப்போது
கஷ்டப்பட்டு புதுப்புது
விதமாய்ச் சொன்னாலும்
முகத்தில்
உணர்வினைக் காட்டுவதில்லை...
என்ன காதலா
என்றெல்லாம் கிண்டல் செய்வார்கள்...
இருந்தாலும்
ரசிக்கத் தவறுவதில்லை
உள்ளூர..
pavalamani pragasam
5th May 2012, 06:26 PM
உள்ளூர அடைத்த சமாச்சாரங்கள்
சமோசாவின் கிழங்கு மசாலாக்கள்
சீயம் போளியின் தேங்காய் வெல்லங்கள்
சிறிதளவும் சிரமமாயிருப்பதில்லை
பச்சைக் காயும் வடையும் மெயோனைசும்
அடக்கிய பர்கரை தின்பது சாகசமே
chinnakkannan
6th May 2012, 09:53 PM
சாகசம் பண்ணித்தான்
மயக்கிப்புட்டா போல
பாரேன் அவ்ளையும்,
அவ வீட்டு மனுஷாளையும் மட்டும் தான்
பார்க்கறானே தவிர
நம்மள் மதிக்கிறானா
இப்பவே மாறிட்டான் பாரேன்
சின்ன்க்கா பெரியக்காவிடம்
கண்கள் தளும்பச் சொல்லியதும்
அதானே
முன்னெல்லாம் என்னை வாய் நிறைய
மாமான்னு ஆசையாக் கூப்பிடுவான்
இப்போ
அத்திம்பேர்னு எனக்கென்னவோ
வயசான் மாதிரி கூப்பிடுறான்
நீ சொல்ற்து ச்ரிதான் இவளே
என
அக்காவின் கணவர்
பக்கவாத்தியம் வாசித்ததும்
திருமண வ்ரவேற்பில்
பழக்கமில்லாத கோட் சூட்டினால்
விய்ர்வை வழிந்தாலும்
செயற்கையாய்
தெரியாதவர்களுடன்
செயற்கைச் சிரிப்பில் கை குலுக்கி
பக்கத்தில் இருப்பவ்ளின்
அழகைக் கூடப் பார்க்காமல்
க்ளைப்பாய் இருந்த் நான்
மலங்க மலங்க முழித்தபடி
கேட்டுக் கொண்டிருந்தது ஒரு காலம்..
இப்போது
போன மாதம் திருமணமான
சின்னக்காவின் பையனைப் பற்றி
அவரிடமே தொலை பேசினேன்..
என்னக்கா
மாட்டுப் பொண்
நன்னா நம்ம பையன
மயக்கிட்டாளா..
உன்னை கவனிக்கறாளோ என்னமோன்னு
ஒண்ணுவிட்ட சித்தி
முந்தானாள் சென்னையில் இருந்து கேட்டாக்கா...
அதெல்லாம் ஒண்ணுமில்ல க்ண்ணா
பாவம் அந்தக் குழ்ந்தை
வெகுளி
எப்பவும் சிரிக்கத்தான் செய்யுது போ
என்ன சமைக்கத் தான் தெரிய்லை
நா ஹெல்ப் பண்றேன்
நெட்ல அம்மா கூட் பேச்றா தான்
அதனாலென்ன.. நாமெல்லாம் புது மனுஷா தானே
அவளுக்காக
நம்ம பையனும் கொஞ்சம் அவாளோட பேசறான்..
இதெல்லாம் தப்பா எடுத்துக்கலாமா சொல்லு...
சொல்லச் சொல்ல சிரிப்புடன்
மனதுள் எழுந்த்து ஒரு கேள்வி..
மாறியது காலமா..
அல்லது மனிதர்களா...
pavalamani pragasam
6th May 2012, 11:14 PM
மனிதர்களா பதர்களா
கொதிக்கின்றன கோபத்தில்
நீரும் நிலமும் நெருப்பும்
வானும் வெளியும் கூடி நின்று
மாசுறச் செய்தார் மதியின்றி
அழித்து அவலமாக்கினார் அந்தோ
மூடரிவர் திருந்தவேயில்லை
முடிவதற்கா இந்த சொர்க்கம்
chinnakkannan
7th May 2012, 06:36 PM
சொர்க்கம் என்பது..
முன்பு
பல்லை எடுத்து பின் பொய்ப்பல்
பொருத்தியவுடன்
தாத்தா ஜம்மென்று முறுக்கைக் கடித்து
ரசித்து சாப்பிட்ட போது
அவர் கண்ணில் தெரிந்த ஒன்றா..
மனைவி எதற்கோ வெளியில் இருந்தபோது
அப்பா ரொம்பத் தலைவலியாப்பா
இரு பிடிச்சுவுடறேன் சொல்லி
குடுகுடுவென்று ஓடி
ஸ்டூல் போட்டு
உயரத்தில் ஷெல்பில்
இருந்த அமிர்தாஞ்சனததை எடுத்து
பின் அருகில் வந்து
இருவிரல்களிலும் எடுத்து
தலையின் இருபுறமும் அழுந்த
தேய்த்து
கொஞ்சம் சுற்றியும் தேய்த்து
பின் எப்படிப்பா இருக்கு என
சின்னவள் கேட்ட போது
எனக்கும் தெரிந்ததா..
காதலியின் முதல் முத்தம்,
பிறந்த சின்னப் பூ
குட்டி விரலால் பிடித்துக் கொள்ளும் போது,
இன்னும் இன்னும்..
சொர்க்கங்கள் புலப்படத்தான்
செய்கின்றன
உயிர்வாழும் போதே..
pavalamani pragasam
7th May 2012, 07:19 PM
உயிர்வாழும் போதே சவ நிலை
இல்லையில்லை தவ நிலை
ஆனந்தம் நிர்வாணம் முக்தி
அடி ஆத்தி ஆத்தி
ஆடும் நித்தி நித்தி
அஞ்ஞானமா மெய்ஞானமா
ஆணும் பெண்ணும் ஆடிப் பாடி
அந்தக்கால அந்தப்புரமாகுது
ஆசிரமங்கள் ஊருலகெங்கும்
கோடிகளை அங்கு குவித்த
கூறு கெட்ட மக்கா மக்கா
மானமுனக்கு இருக்கா இருக்கா
chinnakkannan
7th May 2012, 09:41 PM
இருக்கா இருக்கா
இல்லையா இல்லையா
இது என்ன கேள்வி
இருந்தால் இல்லை
இல்லை என்றால் இருக்கும்
உண்ருங்க்ள் குழந்தைகளே
சிரித்தவண்ணம் துறந்தவர்
எனத் தன்னை
சொல்லிக் கொள்பவர் சொல்ல
மின்னிய்து புகைப்படக் கருவிகள்
வெள்ளைப்பேப்பர்களில்
பேனாக்களின் எழுத்துக்கோலங்கள்
மறு நாள் வண்ணப் படத்தில்
முதல்பக்கத்தில்
தினப் பத்திரிகைகளும் வாராந்த்ரிக்ளும்
பாராட்டிய் படி...
சில் நாட்க்ள் கழித்து
துறந்தவர் துறக்காத்வ்ற்றை அறிந்து
அதுப்ற்றி அவ்ரிடமே கேட்டால்
இருக்கும் என்றால் இருக்கும்
இல்லை என்றால் இல்லை
எனப் பதில்வர
அதுவும்
தொலைக்காட்சி,பத்திரிகைகள்
மூல்மாக
எதிர் மறையாக...
துறந்தவரைத்
இன்னும் துறக்காமல்
கூட்டம் இருப்பதன் காரண்ம்
பணமா
நல்ல குண்மா
வேறு ஏதாவ்தா..
எதுவுமில்லை...
கலிகாலம்...
pavalamani pragasam
8th May 2012, 08:57 AM
கலிகாலம்தான் சந்தேகமேயில்லை
காக்கா குருவி மைனா காணவில்லை
குளங்களும் கொக்குகளும் இங்கில்லை
கான்கிரீட் காடுகளில் வாழ்கின்ற நிலை
கரைகளை உடைக்கும் விஞ்ஞான அலை
கட்டிப்போடும் சொகுசுகளின் மாய வலை
கரையும் சுகங்களின் நீளுகின்ற எல்லை
கொடுக்கிறோம் கனவிலுமறியாத விலை
chinnakkannan
10th May 2012, 03:54 PM
விலை கொஞ்சம் ஜாஸ்தி தான்
இருந்தாலும்
ஆசையாய்க் கேட்டுவிட்டது..
பட்ஜெட் நூறு தான்
இது எண்ணூறு
..ம்ம்.
வாங்க வேண்டியது தான்
எட்டுமாசம் கொஞ்ச்ம்
கை செலவைக் குறைக்க வேண்டியது தான்
இவளோ திட்டுவாள்
பரவாயில்லை
சமாதானப் படுத்திவிடலாம்..
கடன்..ம்ஹீம்.. வாங்க வேண்டாம்
மில்லில்
கொஞ்சம் ஓவர் டைம் பார்க்கலாம்..
கொஞ்சம் சிகரெடடைக் குறைத்துக் கொள்ள்லாம்..
இருப்பது ஒரே குட்டி...
பலவிதமாய் அலசி
அழகாய் ஒரு ஃப்ராக் வாங்கி
குட்டியிடம் காண்பித்தால்
ஒரே குஷி...
மறந்தே போனது எல்லாம்
தாவி
அது கொடுத்த
ஒரே முத்தத்தில்
pavalamani pragasam
10th May 2012, 10:42 PM
முத்தத்தில் முழு நிமிடம் ஓட்டி
கதையென்பதை வலிய ஓரங்கட்டி
இசையென இரைச்சல் ஒன்றை கூட்டி
அதையும் இதையும் கொஞ்சம் காட்டி
திறந்து காட்டுவதில் மட்டும் போட்டி
திரையில் விரிவது கொடுமை சாமி
chinnakkannan
17th May 2012, 10:18 AM
சாமி
உன்னை வேண்டிக்கிட்ட்து பலிச்சு
எனக்கு கிடச்சுடுத்து நான் வேண்டிய்து
ரொம்ப நன்றி சாமி
குதித்தான்
தட்டில் பல பணத்தைப் போட்டான்..
பய்பக்தியுட்ன்
நெற்றியில் இட்டுக்கொண்டான்
சென்றான்
சில தின்ங்கள் கழித்து
அதே ஆள்..
சாமி
இது என்ன அனியாயம்
கொடுக்கரமாதிரிக் கொடுத்து
எடுத்துக்கிட்டியே
நியாயமா
இனி உன்னைப் பார்க்க மாட்டேன் போ...
இரண்டு தடவைகளிலும்
ச்லனமில்லாம்ல்
சாமி காத்தது மெளனம்
pavalamani pragasam
17th May 2012, 02:21 PM
மௌனம் மயான மௌனம்
இருட்டு கருவறை இருட்டு
அடுத்ததும் பொட்டையா
கூசாமல் கொன்று விடு
அல்லது ஓடு அப்பன் வீட்டுக்கு
அடுத்து கட்டப்போகும் மகராசி
பெறுவாள் மகனை புருசனுக்கு
கள்ளிப்பாலும் நெல்லுமணியும்
பழசாகி குளிப்பாட்டி குளிரில்
விறைக்க வைப்பது புது உத்தி
சட்டம் என்ன செய்யும் பாவிகளே
அதி நவீன சோதனைக்குப்பின்
ஓசையின்றி ஒழிக்கும் பட்டணமே
நாலெழுத்து சொல்லித்தர ஏலாதாம்
நகை நட்டு போட வக்கில்லையாம்
வேலியிட்டு பயிரை பாதுகாக்கணுமா
பொய்யாய் புனைய எத்தனை காரணம்
இரண்டாம் தர குடிமகளாய் அழுத்தி
குடி முழுகிப் போகவே குழி பறிக்கிறார்
கண்ணே கண்மணியே கலங்காதே
முடிவில்லா கிரகணமிருந்ததில்லை
வெள்ளி நிலவே வெள்ளை மலரே
விசும்பின் ஒளியே வாழ்வின் சுவையே
வினைகளின் வினாக்களின் விடை நீயே
chinnakkannan
22nd May 2012, 10:04 AM
நீயே தான்
எல்லாம் செய்ய வேண்டும்
போகுமிடத்தில்
வா சொல்லிக் கொடுக்கிறேன்..
அக்காவுக்குக் கல்யாணம்
நிச்சயமானதும்
அம்மா
சுத்தமாய் மாறி
என்னை ஒதுக்கி
எல்லாம் அவளுக்கே
சமையல், ஒப்பனை இன்னபிற
சொல்லிக் கொடுத்தாள்..
கல்யாணம் ஆன பின்பும்
கூட
இருவரும் பேசிக்கொள்ளும்
சம்பாஷணையில்
என்னை சேர்க்க மாட்டார்கள்..
போடி அந்தண்டை
என அதட்டுவார் அம்மா..
என்ன ரகசியம் வேண்டியிருக்கிறது
முணுமுணுத்து நகர்வேன்..
ஒருவருடம் கழித்து
எனக்கு நிச்சயம் ஆன பிறகு
என்னிடம் பேச வந்த போது
போ அவளிடமே போய் பேசு
எனக் கோபிக்க
அம்மா சிரித்து
அடி குட்டி...
இப்ப தான்
உன் கிட்ட பேசணும்..
எனச் சொல்லி
பேசி, கற்றுக் கொடுக்க..
ஒரே ஒருகேள்வி எழுந்தது மனதில்
கல்யாணம் ஆனால்தான் பெரிய பெண்ணா
pavalamani pragasam
22nd May 2012, 03:26 PM
பெரிய பெண்ணா இல்லை சின்ன பெண்ணா
பெரிய குழப்பம் தொடருது என்னுள்ளே
வருடத்தோடு வயது வளரவில்லையோ
வதனபுத்தக பண்ணை விளையாட்டிலே
விதையாக பூ கனி தானியங்களோடு
வானவில்லும் கிடைக்கக் கண்டு விதைத்திட
வயலெல்லாம் வெடித்துச் சிரிக்கும் வானவில்கள்
வியப்பான வெள்ளைக் களிப்பிலெனை ஆழ்த்துதே
நடை தளர்ந்த வயதிலே நான்கும் பார்த்தபின்னே
நடப்பதும் நடக்காததும் மறந்து முன்னம் போல்
கற்பனைகளும் கதைவிடும் விளையாட்டு களங்களும்
களிப்பாக்கி அமுதுண்ட தேவர் லோகம் காட்டுவதேன்
chinnakkannan
22nd May 2012, 10:21 PM
காட்டுவதேன் என்ப்து புரியாத புதிர்...
எனக்கே தெரியாதா என்ன..
என்ன தான் கொஞ்சம் குண்டா இருந்தாலும்
உன்னோட க்ண்ல மின்ற் குறும்பு
ச்ற்றே விலகியிருக்கும் நடுப்ப்ல்..
குழ்ந்தைத் த்னமான உன் குரல்..
என்க்கு ரொம்ப்ப் பிடிக்கும்..
க்ல்யாண்மான புதிதில்
மனைவியின் வார்த்தைக்ள் இவை..
எப்ப்டியிருந்தாலும் சார்
கொஞ்சம் சிரித்தே
பிரச்னைகளை எதிர் கொள்கிறீர்கள்
ஐ லைக் இட்
சொன்ன்வள்
அலுவ்லக மார்க்கெட்டிங் பெண்..
கண்ணா
கொஞ்சூண்டு தொப்பையைக் குறை
அப்புறம் பாரு
இந்த டானிஷ் குட்டி
ஒம் பின்னாலேயே வரும்
உபதேசித்த்து அலுவ்ல்க
விற்பனை மேலாளர்..
இருந்தாலும்
கண்ணாடி முன் பார்க்கும்போது
எவ்வ்ளது தடவை
இருட்டை அப்பப்பார்த்தாலும்
தலை தூக்கி
கள்ளத்தன்மாய்ச் சிரித்தப்டி
வெளிவ்ரும்
வெள்ளி ஒற்றை முடி...
கோபத்துடன்
கத்திரி எடுத்து வெட்டினேன்..
ஹேய் நான் இப்போ இளமையாக்கும்...
என
கெக்கெக்கே என் கொக்க்ரித்தால்
ஆர்ப்பரிக்காமல்
சிரித்து
வெள்ளிமுடி சொல்கிறது சேதி..
pavalamani pragasam
23rd May 2012, 10:12 AM
சேதி சென்றது பல காதம்
டாம் டாமென தட்டித் தட்டி
பறந்து சென்றது புறாவுடன்
மடித்துக் கட்டிய மடலாய்
கடல் தாண்டியது கடிதத்தில்
விரைந்து வந்தது தந்தியாய்
காதில் சொன்னது வானொலிப்பெட்டி
கண்ணுக்குத் தந்தது தொலைக்காட்சி
கணிணியில் குவிந்திருக்கும் கடல்
உள்ளங்கை அலைபேசியில் இப்போது
விரல் தொடக் கொட்டிடக் காத்திருக்கு
மூளை வளருது துரத்துது முன்னேற்றம்
chinnakkannan
23rd May 2012, 09:31 PM
முன்னேற்ற்ம் வேண்டுமென்றால்
கொஞ்சம் சிரி
க்ண்களை அகலவிரி
அப்பொழுது தான் பெண்கள்
உன்னை ச் சூடுவார்கள்..
பெரிய் ரோஜா
சற்றே சோம்பியிருந்த
குட்டி ரோஜாவிடம் சொல்ல.
ம்ம்
என்ன பண்ணுவது
நீ நன்னா வள்ந்துட்ட
அதனால தெனாவட்டாசொல்ற
பாரேன் நேத்து மழை
அப்புறம் தோட்டக்காரன் வேற
த்ண்ணி ஊத்தினான்..
எவ்ளோ குடிச்சும் வள்ர முடியலை..
விதிப்படி ந்டக்கட்டும்
பெரிய ரோஜா தலையிலடித்துக்கொள்ள
பறிக்கும் பெண் வ்ந்தாள்...
கையில் இரு கூடைகள்
பெரிய ரோஜா ஒரு கூடை
சின்னது இன்னொன்றில் விழ..
க்டைக்குச் சென்று மாலைகளானதில்...
தொம்மென்று வைக்கப்பட்ட் பெரிசு
சுற்றும் முற்றும் பார்த்தால்
உயிரற்ற உட்லின் மேல்..
சுற்றியுள்ளவர்களுடன் சேர்ந்து
அதுவும் அழுத்து....
டப்க்கென்று விழுந்த
மாலையிலிருந்த குட்டி ரோஜாவிற்கு
கற்பூர் வாச்னை..ம்ற்றும் இன்பமான
சொல்ல முடியாத ந்றுமணம்...
உற்றுப் பார்த்தால்
இருப்பது அம்பாள் கழுத்தில்..
ஓ தாங்க்யு
ஓ நன்றி
ஓ நன்னி அம்மே
என பல் மொழிகளில் குழறி
சந்தோஷப் பட்டது..
புரிவதே இல்லை
எப்பொழுதும்
இறைவனின் கணக்கு
pavalamani pragasam
24th May 2012, 09:21 AM
கணக்கு போடுகிறான்
கூட்டிக் கழித்து
அழித்துத் திருத்தி
அந்தர் பல்டி அடித்து
கபடதாரி அரசியல்வாதி
கடிமனதாளின் காதலன்
வேட்டைக்காரர் குறி பாவம்
வலையில் மீனாய் சிக்கும்
chinnakkannan
28th May 2012, 11:25 AM
சிக்கும்
சுற்றிச் சுற்றிப் பார்க்கும் விழிகளில்..
ஒரு சின்ன சமிக்ஞை..
உடனே
குதி குதி எனக்
குதிக்க ஆரம்பித்து விடுவோம்..
கையில் உள்ள
காகித மாலைகளும் ஜொலிக்கும்..
எங்களது பற்களும் ஆடைகளும்
பளபள விளக்கொளியில்
இன்னும் பளபளப்பாக...
சுற்றியிருக்கும் ஜனம்
ரசிக்குமோ இல்லையோ தெரியாது..
ஆரம்பத்தில்
சின்ன வயதில்
நான் நன்றாக ஆடுவேனாம்..
பாட்டி உச்சி முகர்வாள்
அம்மா பாராட்டுவாள்
அப்பா பர்ஸ் திறந்து
பணம் கொடுப்பார் ஆடல் வகுப்பிற்கு..
எல்லாம் நன்றாகத் தான் சென்றது..
படிப்பும் நன்றாக வந்தது..
எங்கு வாழ்க்கை திரும்பியது தெரியவில்லை..
கடைசியில்
இப்படி
விளையாட்டுப் போட்டி மைதானத்தில்
குதிக்க வேண்டியதாகி விட்டது..
இதோ
மறுபடி சமிக்ஞை..
நாலா ஆறா ஆட்டமிழப்பா தெரியாது..
கால்கள் தாவுகின்றன
கைகள் விரிகினறன
இதழ்கள் மலர்கின்றன
ஆரம்பித்து விட்டோம் குதிக்க
ஒரு சின்ன
வயிற்றுக்காக...
pavalamani pragasam
28th May 2012, 10:12 PM
வயிற்றுக்காக உண்ணமாட்டாள்
வடிவம் காக்க உருகுவாள்
குச்சி குச்சி ராக்கம்மா
சுவரில்லாமல் சித்திரமா
chinnakkannan
1st June 2012, 12:34 PM
சித்திரமா
ம்னதில் பதிந்த காட்சியா
கிடுகிடுவ்ன்று
உயரத்தில் இருந்த ஷெல்பில்
இருந்த அந்தப் பொருளை
சின்ன் நாற்காலி போட்டு
எடுத்தது
எப்படியோ
அம்மாவின் க்ண்களில் பட்டு விட்
எதுக்குடா அது
இங்க கொண்டா...
இல்லம்மா நானும்
செஞ்சு பார்க்கிறேன்..
வேண்டாம்டா
சொல்லச் சொல்ல்க் கேட்காமல்
கொல்லைப் புறம் போய்
அதை உபயோகப் படுத்திப் பார்க்கையில்
பின்னாலேயே ஒருகரம்..
அம்மா..
எங்க காண்பி..
நிறம் மாறாம்ல் அந்த அட்டை இருக்க
ஹப்பாடா..
ஒனக்குல்லாம் சர்க்கரை
இந்த வயசுமட்டுமில்லை
எந்த வயசுலயும் வ்ரவேண்டாம்
என்று பெருமூச்சு விட்டு
தூர எறிந்த
அவர் கண்களில் தெரிந்த நிம்மதி...
அவர் காலமான பிறகும்
பலவருடமாய் கண்ணுக்குள்...
இதோ இன்று
டாக்டர் .
ஹாய்..உங்களுக்கு ஒன்றும்
சர்க்கரையில்லை..
சின்ன மயக்கம் தான்...
தைரியமாயிருங்கள்..
க்ண்ணை மூடிக் கொண்டால்
அம்மா சிரிக்கிறாள்
வ்லதுகைக் கட்டை விரலை
உயர்த்தி....
pavalamani pragasam
1st June 2012, 01:21 PM
உயர்த்திவிடத்தான் ஏணி
அது கூட வருவதில்லை
வாசனைக்குத்தான் கருவேப்பிலை
அது ஓரத்தில் ஒதுக்கப்படும்
அதிலும் காண் கீதை உரை
பலனை எதிர்பாரா கடமை
chinnakkannan
16th June 2012, 07:10 PM
கடமையாக்..இல்லை இல்லை
கடனே என
ஒவ்வொரு பொருளாய் எடுத்து
இயந்திரமாய்
இயந்திர்த்தின் முன் விலை பதித்து
சிறிதும் பெரிதுமாக இருந்த பொருட்க்ளைத் தள்ளி
மொத்த்மாக இவ்வளவு என
வாடிக்கையாளரிட்ம் சொல்லி
அவர் கொடுத்த் அட்டையைத் தேய்த்து
காகிதமெடுத்து கையெழுத்து வாங்கி
அட்டையைக் கொடுத்தால்..
மறுபடி பொருட்கள்..
என்ன் செய்வது
வேலை..செய்தால் வயிறு நிரம்பும்...
ம்ம்..
வெறுத்துத் தான் வருகிற்து..
மறுபடி
பொருட்க்ளை எடுத்து
பில் போட்டு திரும்பவும்
அட்டையைக் கொடுக்கையில்
கை பிடித்தது குட்டிக் கரம்..
கடனட்டை கொடுத்தவரின் குட்டிப் பெண் போலும்..
தாங்க்யூ ஆண்ட்டி..
சின்னதாய்ப் புன்முறுவல் வர
தொற்றிக் கொண்ட்து சுறு சுறுப்பு
pavalamani pragasam
17th June 2012, 03:37 PM
சுறு சுறுப்பு என்ற குணமது இருக்குமிடம்
தேனீ எறும்பு என்றறிந்தோம் பல காலமாய்
ஊனுறக்கம் மறந்த இணைய அடிமைகளிடம்
அதை காண்கிறோம் இப்போது சில காலமாய்
chinnakkannan
18th June 2012, 11:07 PM
காலமாய் மாறிச்
ச்ற்றே பின்னோக்கிச் சென்றால்...
அட உன் இதழைப் போலவே சிவந்த
இந்தக் கனியை எங்கு பிடித்தாய்...
கனியும் சுவை
உங்கள் பேச்சும் சுவை..
கன்னம் சிவந்த ஏவாள்
கடித்த கனியை விட்டெறிய
கடித்த அவன்
பெண்ணே இந்தக் கனியும் சுவை
நீயே அருந்து எனச் சொல்லி பதிலுக்கு விட்டெறிய
அது எங்கோ விழுந்து மறைய
அடடே வேறுகனி
பறித்துத் தருகிறேன்
எங்கிருக்கிறது..
பார்த்தால் கிளை எட்டாதிருக்க..
பரவாயில்லை..
என அருகில் கிளி வ்ர..
அவனுக்குக் கனி மறந்து போக
காலமோ
நடப்பதை நிறுத்தாமல்
தடதடத்து ஓட..
**
அது அரண்மனைத் தோட்டம்..
குறுந்தாடியுடன் அவர்
மென்மையாய்
அவளைத் தீண்டியபடி
அன்பே இந்தக் க்ன்னங்களுக்கு
ஆப்பிள்கள் ஈடாகாது..
வெட்கத்துடன் கன்னம் மேலும் சிவக்க
என் காதலீ
உன்மேலுள்ள காத்லை
க்ண்டிப்பாய் உலகிற்குச் சொல்வேன்
ஒரு நாள்
இது சத்தியவார்த்தைகள்..
வேகமாய்ச் சிந்தியவற்றை
விவேகமாய் மும்தாஜ் அணை போட..
மேலும் வேகமாய்காலம் ஓட..
**
ஏ ஃபார் ஆப்பிள்..
ஏன் ஏண்ட் நு சொல்லக் கூடாது டீச்சர்
சும்மா இரு ஆப்பிள் தான் சரி..
**
காலம் மறுபடி மூச்சிரைக்க
இங்க பாருங்க சார் பாட்டு நல்லா இருக்கா
ஆடற் கலையே நீயாரோ
ஐஸ்க்ரீம் நிலவே நீயாரோ..
என்னங்க இது இருபத்தோராம் நூற்றாண்டு..
ஆடற்கலைன்னு புரியாத பாஷைல சொல்லிக்கிட்டு..
மாத்துங்க..
ஆப்பிள் பெண்ணே நீயாரோ
ஐஸ்க்ரீம் சிலையே நீயாரோ..
பாருங்க இப்பவே சொல்றேன்
இந்தப் பாட்டு ஹிட்..
ஹீரோயினையும் யாராலயும் அணுக முடியாது
**
படத்துல இருக்கறது என்ன பழம் தாத்தா
ஆப்பிள்ம்மாஙக
நான் சாப்பிட்டதேயில்லையே
நாமல்லாம் அதப்பத்தி
கனவு தான் காணமுடியும்
சமத்தா தூங்கு செல்லம்..
*
எந்தக் காலத்திலும்
ஆப்பிள் இருப்பது/இருந்தது
எட்டாத உயரத்தில் தான்
pavalamani pragasam
19th June 2012, 07:59 AM
உயரத்தில்தான் பிரச்சினை
அதனாலென்ன என்று தள்ளிட
அமிதாப்பும் ஜெயாவும் இல்லை
பெண்ணல்லவா பனை மரம்
குள்ளமான பையன் பின்வாங்கினான்
பள்ளங்கள் நிறைந்த பெண்சமத்துவம்
chinnakkannan
30th June 2012, 12:07 PM
பெண் சமத்துவம்
ஆஹா நலல் தலைப்பு
பழையதாய் இருந்தாலும்..
பேசிப் பேசிப் பொழுதைக்
கழிக்கலாம்..
மாற்றங்கள் வருமா என்ன..
எண்ணச் சிறகுகள்
விண்ணோக்கினாலும்
உடலிருப்பது தரையில்..
pavalamani pragasam
30th June 2012, 01:23 PM
தரையில் புரளும் தலைமுறைகள்
தண்ணித்தொட்டி கன்னுக்குட்டிகள்
வெப்பம் உருக்கும் பனிமலைகள்
ஆகும் நிலத்தை விழுங்கும் கடல்நீர்
உலகை அழிக்கப்போவது தண்ணீர்
அதில் இல்லை எள்ளளவும் ஐயம்
எந்தத் தண்ணீர் என்பது பந்தயம்
chinnakkannan
2nd July 2012, 10:36 PM
பந்தயம் தான்.
ஒப்புக் கொண்டாயிற்று..
இதோ வந்தாயிற்று...
கிழவனாரின் கண்கள் சுழல
அடுக்குமாடிக் குடியிருப்பில்
மனங்கள், பணங்கள் வேறுபட்டிருந்தாலும்
மைதானத்தில் கூடியிருக்க..
கிழவர் வேட்டியை குறுக்கில்
கட்டிக் கொண்டார்..
நெற்றிக் குறுக்கில் பேரனின் குரல்..
தாத்தா
சர்க்கரை பிபி மாத்திரை
போட்டுக் கொண்டாயா..
கொஞ்சம் யோசி
உன்னால் முடியுமா..
முடியுண்டா
மனதில் உறுமி நிமிர்ந்தால்
அருகில் பேரனின் நண்பன்
இள் வயது
புதிய ஷீக்கள் கால்களில்
கைகள்
உடற்பயிற்சியில் உரமுடன்..
கைகால் நீட்டி வளைத்து
இவரைப்பார்த்த சிரிப்பில்
சினேகமில்லை..
கூடவே நிறைய அலட்சியம்..
பெரிசு..
சும்மா கூவாத
முடிஞ்சா எங்கூட
ஓடி வர முடியுமா..
நீ ஜெயிச்சா
நாங்க விளையாடவே மாட்டோம்
தோத்தா...
உசுப்பேற்ற
எழுபது வருடமாய்
உடன் வளர்ந்த ரோஷம்
விஸ்வரூபமெடுக்க..
சரிடா..
எதிர் கிரெளண்ட்ல ஒரு ரவுண்ட்
யார் முதல்ல வரான்னு பாக்கலாம்
நாள் குறித்து
இதோ வந்தாயிற்று..
நடுவராய் இருந்தவர்
ஒன்று இரண்டு மூன்று சொல்ல.
பெரிய புயலும் சின்னச் சூறாவளியும்
பறக்க
வெற்றிக் கம்பம் வந்ததும்
ஒருவர் மூச்சிரைக்க
மற்றவர் கொஞ்சம் மூச்சிரைத்து நின்று
கீழே விழ..
கூட்டத்தில் குரல்கள்.
அச்சச்சோ என்னாச்சு.
தெரியலையே
இந்த வயசுல இதெல்லாம் வேண்டாம் தானே
பார்க்காத ஒருவர் சொல்ல
என்ன சொல்றீங்க நீங்க..
விழுந்த்து கிழவனார் இல்லை.
பின்...
கூட்டத்ததை விலக்கி
பரிசோதித்த வைத்தியர் முகம் மாறித்
தோள் குலுக்க..
என்ன ஆச்சு..
மாரடைப்பாம்..ச்ச்
ரொம்பச் சின்ன வயசுப்பா..
இப்படி ஆச்சே...
கிழவனார்
மூச்சிரைப்பையும் பொருட்படுத்தாமல்
அடப்பாவி எழுந்திருடா
எழுந்திருடா விளையாடலாம்..
அச்சோ.. நான் தப்புப் பண்ணிட்டேனே
எனக் கதற..
பார்த்தவர்களுக்குப் புரிந்ததொன்று..
வாழ்க்கை மாறுவதற்கு
போதும் ஒரு நொடி..
இல்லைஇல்லை அதற்கும் குறைவாக..
pavalamani pragasam
3rd July 2012, 11:06 PM
குறைவாக இருந்தது எங்கும் வசூல்
பெட்டிக்குள் சுருண்டுகொண்டது ரீல்
பச்சையாய் கொச்சையாய் வசனம்
கசாப்புக்கடையாய் ஓடும் ரத்தம்
க்வாட்டர் மப்பில் வாலிபர் கூட்டம்
கிளுகிளுப்பாய் குமரிகள் குத்தாட்டம்
அதிநவீன அசகாய அசாத்திய சூரத்தனம்
அக்கரை பசுமையில் காதலர் நடனம்
எதைக் குறத்தேன் நடிகையர் உடை தவிர
தயாரிப்பாளர் குழம்பித் தவிக்கிறார் பாவம்
chinnakkannan
13th July 2012, 09:54 PM
பாவமாய் த் தான் இருக்கிறது
காய் நறுக்கும் போது
கையில் கத்திபட்டதில் ரத்தம் வர
இது துடித்துப் போய்விட்ட்து
ஐஸ் எங்கே
குளிர்பதனப் பெட்டியில் இருந்து
எடுத்து விரலில் வைத்து
ரத்தம் நிற்கவும்
வா டாக்டரிடம் போவோம்..
வேண்டாம்யா
சரி நீ வேலை செய்யாதே
நான் பார்க்கிறேன்
பரவாயில்லை தோசை தானே..
நீ சும்மா இரு..
தோசைக் கல்லில்
வேகமாய்ச் சுட வைத்து
மாவு விட்டு வார்த்தால்...
பிரளயம் தான்..
தோசை கொத்துப்பரோட்டாவாய் வர
விக்ரமாதித்தனாய் மாறி முயற்சித்து
மற்ற இரண்டும் நன்றாய் வர..
ஆனால் வட்டம் தான் இல்லை..
தட்டில் போட்டு பிய்த்து
ஆ காண்பி..
யோவ் ரொம்பச் செய்யாதய்யா
சாப்பிடு இவளே..
சட்னியில் தோய்த்துக் கொடுத்ததைச்
உண்டதும் கண்ணில் நீர்..
என்னாச்சு நல்லா இல்லையா..
காரமா.. எனப் பதறிப் பாவமாய்க் கேட்க
விழுங்கியபடியே சொன்னேன்..
ஜோராய் இருக்கிறது..
தோசை இல்லை..உன் மனசு
pavalamani pragasam
14th July 2012, 02:13 PM
மனசு நினைத்தது எதற்கு எனக்கு இத்தனை விழிகள்
காண விரும்பாத பல கசப்பான விபரீத காட்சிகள்
உறங்காமல் களைப்பில் போராடும் பரிதாப வேளைகள்
பொல்லாத விழிகள் போல் மனசுக்கு ஏன் இத்தனை வழிகள்
செல்லாத பேர்களில்லை சத்திரம் போல் திறந்த வாசல்கள்
அனுமதிக்க தேவையில்லாத நுழைவுகள் வெளிநடப்புகள்
குதிரைக்கு கண்களில் மறைப்பு பயணத்தின் அவசியங்கள்
மாளிகைக்கு மணிக்கதவுகள் மரியாதையின் சின்னங்கள்
படைப்பில் பல சாபங்கள் முயன்றால் அவையே வரங்கள்
Kajan
18th July 2012, 04:04 AM
வரவில்லை வந்ததும் கண்டேன் வட்டமில்லாத் தோசை
தரமாய்த் தந்தார் சின்னக்கண்ணன் தகுந்த அன்பைக் காட்டி
உரமாய் விளங்கும் உத்தமத் திரியில் உங்கள்பங்கு நன்று
சிரமம் பலதில் செய்யும் சேவை தினமும் இங்கு தொடர்க
அவதானி கஜன்
pavalamani pragasam
18th July 2012, 08:05 AM
தொடர்க என்றன கண்கள்
ஊர்ந்து சென்றன கைகள்
கன்னியின் மௌன ஆணைகள்
காளையின் இனிய கணங்கள்
chinnakkannan
29th July 2012, 06:12 PM
கணங்கள் சிலதான்..
அதற்குள் அது நடந்து
முடிந்து விட்டது..
அலுவலகம் முடிந்து
சிந்தனையை நெய்தபடி
வேகமாக சுலபமாக நடந்ததில்..
ஹலோ..
அழைத்தது ஒரு யுவதி..
அழகிய நீல நிறச் சுடிதார்
குறும்பாய்ச்சிரிக்கும் கண்களின் மேல்
கறுப்பு ஃப்ரேம் கண்ணாடி..
டபக்கென
கால் முதல் தலைவரை
பார்வை பாய்ந்ததில்..
கொஞ்சம் அழகு தான்..
அளவெடுத்துச் செய்த
சிற்பம் தான்..
யாராயிருக்கும் என
யோசித்து
மறுபடி ஹாய் எனச் சொல்ல..
பதிலுக்கு புன்னகை தந்து
விறுவிறுவெனப் போயே போய்விட்டாள்..
ம்ம்
என்ன செய்வது..
மறுபடி கூப்பிடலாமா..
யார்மா நீ
யாரும்மே நீ
ஹல்லோ ஆப் கோன் ஹை..
மோளே நீயாருன்னு பற..
இவ்ளோ அழகா வேற இருக்கே..
ம்ஹீம்..
நினைவுக்கு வராமல் போக..
இப்போது
நடப்பதும் இருந்தது கனமாக..
Shakthiprabha
29th July 2012, 09:57 PM
கனமானதொரு புத்தகத்தை
கையிலும் மனதிலும் சுமந்திருந்தது, வலித்தது!
ஏட்டில் துப்பிய கனத்துக்கு
பெருக்கலும் கூட்டலுமாய் மதிப்பெண்
பட்டம் பறந்தது இலகுவானேன்..
பரணில் படுத்துறங்கும் கனமான புத்தகமும்
அதன் உட்கருத்து துருபிடித்து தூசியேறியது
chinnakkannan
29th July 2012, 10:24 PM
தூசியேறியது..
சற்றே கையில் இடுக்கிக் கொண்டு
தும்முகையில்
விழுந்தன
அந்தப் பழைய டைரியும்
மடித்து வைத்த இன்லண்ட் லெட்டரும்...
இவளுக்கு..
ந்லமா.. நான் நலம்.
இங்கு மும்பையில்
ஆலு சப்பாத்தி பானி பூரி என
வாயில் வைக்க வழங்கவில்லை..
பசங்க் எப்படி இருக்காங்க..
எனத்தொடர்ந்திருந்த அப்பா..
முடிக்கையில்
ஜாக்கிரதையாய் இரு என எழுதி
கீழே
சற்றே கிறுக்கலாய்
கைய்ழுத்தின் அருகே
ரொம்ப்பச் சின்னதாக
ஐ லவ்யூ..
படித்துச் சிரித்து
கிடுகிடென்று
பரணிலிருந்து இறங்கி
மூக்குக்கண்ணாடியுடன்
பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பாவிடம்
டொட்டொடோய்ங்க் எனத்
துப்பட்டாவுடன் குதித்து நீட்டினால்..
முதலில் கோபம்..
பின்னர் கெஞ்சல்..
ஏய் தாடீ....
பின்னால் கடிதத்தை வைத்துக் கொண்டு
அப்பாவைப் பார்க்கையில்..
அழகாய்த் தான் இருக்கிறது
ஆண்களின் வெட்கமும்
pavalamani pragasam
30th July 2012, 07:45 AM
வெட்கமும் பொய்
பூசிய சாயமே
உரித்துப் பார்க்க
வெங்காயமில்லை
மூழ்கி எடுக்க
முத்துக் கடலல்ல
இலக்கணமில்லாக் கவிதை
இரக்கமில்லா வனிதை
இடையறா மாற்றம்
ஈர்க்கின்ற தோற்றம்
அரிச்சுவடி கற்குமுன்
நரை வந்துவிட்டது
அறிந்த வரை வியப்பு
ஆயுளுக்கும் தவிப்பு
அப்பாவிப் பையன்
அறியாத ஆழம் அது
chinnakkannan
31st July 2012, 11:49 PM
ஆழம் அது என்று
சொல்லிச் சொல்லிக் கேட்காமல்
போய்
போயே போய்விட்ட
முரளியின் மனைவியை
பலவருடங்க்ள் கழித்துப் பார்த்த போது
வழக்கமாய் க் கேட்கும்
செளக்கியமா வாயில் வந்து விடடது..
நல்லா இருக்கேன் மாமா
மாமி எப்படி..
பப்லு ப்டிச்சு முடிச்சுட்டானா
என்ன வேலை பார்க்கிறான்..
இங்க
என் மாமா மாமி
நன்னா பாத்துக்கறா
எல்லாச் சொத்தும் எழுதி வச்சுட்டா எனக்கே..
ம்ம்
ஆள் படை அம்பு எல்லாம்
இருக்கு
செளக்கியத்துக்கு என்ன குறைச்சல்
படபடவென பட்டாசாய்
வார்த்தைகள் வெடித்தாலும்
கண்கள் மட்டும்
சற்றே கலங்கலாய்..
pavalamani pragasam
1st August 2012, 08:29 AM
கலங்கலாய் மாற்றும் சலனங்கள்
தெளிந்த சாரமில்லா நீரோடையை
ஆமையாய் நத்தையாய் ஊர்ந்த நாட்கள்
ரங்கராட்டினமாய் மாறிய கணங்கள்
அபூர்வமாய் வரும் இனிய வரங்கள்
அடுக்காய் தொடர்கின்ற சம்பவங்கள்
பூப்போட்ட சராய் சட்டையில் சிப்பந்திகள்
ஆடி மகிழ்விக்க கணப்படுப்பில் முன்னால்
பலகாரம் ருசியாய் அணி வகுத்து வர
மாயக் கடற்கரை சூழலில் இனிப்புகளால்
வாயும் வயிறும் மனமும் குளிர்ந்து ததும்பிட
பல்லடுக்கு அங்காடியில் சுற்றித் திரிந்தபின்
பார்க்கும் சினிமாவும் பொழுதுதைச் சாப்பிட
எண்ணற்ற கேளிக்கைகள் குழந்தைகளுடன்
வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கிடைக்க
இரவும் பகலும் தேதியும் கிழமையும் மாதமும்
மறக்கின்றதோர் மயக்கத்தில் மிதக்கிறேன்
மீண்டும் நானொரு சின்னஞ்சிறு குழந்தையாய்
chinnakkannan
3rd August 2012, 01:01 AM
குழ்ந்தையாய்த் தான்
இருக்க வேண்டியிருக்கிறது
சில சமயங்களில்..
வளர்ந்த பிறகும்...
அதுவும் ஆணாக..
மன்னி பின்னாலேயே போய்டுவியாண்ணா..
சே சே நீ என்ன சொல்றேன்னே புரியலை..
டேய் அவ பேசற பேச்சப் பாத்தியா..
இல்லையேம்மா..
ஒண்ணு சொல்லட்டுமா
என்ன இருந்தாலும் நீ
சொல்றது தான் சரி..
ஏங்க..உங்க அம்மா..
ச்ச் இனிய இதயமே
நான் உனக்குத்தான் ஒத்துழைப்பு தருவேன்..
என்ன செய்வது
குழந்தைகள் வளர்ந்து விட்டன
என்று
தெரிவதே இல்லை பெண்களுக்கு...
pavalamani pragasam
2nd September 2012, 12:58 PM
பெண்களுக்கு என்றும் எழுதப்பட்ட படாத சட்டங்கள் பல
கண்ணுக்குத் தெரிந்த தெரியாத வேலிகள் கோடுகள் பல
சட்டத்துக்குள் அடங்காத ஒரு சித்திரம் விசித்திரம் அவள்
வேலிக்குள் கோட்டுக்குள் ஒடுங்காத வண்ணக்கோலம் அவள்
அணைக்கும் அலைக்கரங்களை கடலன்னை சாட்டையாக்குவாள்
கரைமேல் கறையும் கறையானும் அவள் கண்ணை உறுத்தினால்
chinnakkannan
29th January 2013, 06:16 PM
உறுத்தினால் என்ன செய்வது..
இது தான் விதி
ஏற்க வேண்டியது தான்..
மூன்றாவது மாடி அடுக்ககத்தில்
பார்த்தால் கொஞ்சம் தள்ளி
ஒரு வீட்டின் மொட்டை மாடி, பின்
அந்தப் பக்கம் ஆரம்பித்து வளர்ந்திருக்கும்
நெடிதுயர்ந்த மரம்..
மாடியின் பாதி மறைந்திருக்கும்..
அந்தி வேளையில்
கசமுச கசமுச எனக் கூச்சலாய்க்
குருவிகள்
டபக் டபக் என அந்த மரக்கிளைகளில்
சரணடையும்..
அதிகாலையில் மறுபடி கசமுச..
இரைதேடக் கிளம்பும்
நிதப்படி விஷயம்..
குடிவந்தமுதல் கொஞ்சம் கஷ்டமாய் இருந்தஒலி
இன்னிசையாய் மாறிப்போனது நாட்பட..
திடீரென வந்த புயல்
மரத்தைசாய்க்க
ஓரிரு நாட்களில் முழுவதுமாய்
வெட்டுப்பட்டுக் காணமற் போக..
முதலில் தவித்த குருவிகள்
பின் அவையும் காணாமல் போக..
எப்போது வரும் என நினைப்பில்
நாட்கள் நகர்ந்த போது..
வீட்டில்
ஸ்ப்ளிட் ஏசி வைக்க வேண்டும்
மனைவி மகள் மகன் அடம்பிடிக்க
வேண்டாம் நேரா என்மேல் அடிக்கும்
ஒத்துக்காது என நான் மறுத்தாலும்
சரி என பொருத்தவேண்டியதாய்ப் போனது..
முன்னம் இருந்த ஜன்னல் ஏசியைக் கழட்டி
ப்ளைவுட்டால் மறைத்தால்..
ஒரு நாள் அதிகாலையில்
மறுபடி குய் குய்..
ஏசி ஓட்டையின் பின்புறம்
காணாமல் போயிருந்த குருவிகளில் சில
மறுபடியும் குடித்தனம்..
மாற்றத்திற்கு குருவிகள்
பழகிவிட்டன..
எனக்குத் தான் புதிய ஏசி
ஒத்துக்கொள்ளவில்லை
அடிக்கடி சரியில்லாமல் போகிறது உடம்பு
pavalamani pragasam
31st January 2013, 06:58 PM
உடம்பு எங்கே
தேடுது உயிர்
எரிந்து போனதா
புதைந்து போனதா
நீரில் மூழ்கியதா
வல்லூறு தின்றதா
பஞ்சபூதத்தில் கரைந்ததா
பிரியா விடை பெற்றதா
பிறக்குமா மீண்டுமது
தேடுவதை நிறுத்து
பறந்து செல் உயிரே
பிரபஞ்சம் காத்திருக்கு
பிணியறுக்கும் நேரமிது
பெருவெளியில் கலந்துவிடு
chinnakkannan
1st February 2013, 09:20 AM
கலந்து விடு
முதலில் டிகாக்ஷன்
பின் ஏற்கெனவே கொதித்த பால்
சூடில்லை எனில் மறுபடி கொதிக்கவை..
இப்படித்தான்…
கண்ணில்
தூக்கக் கலக்கத்துடன்
தலை முடியைச் சற்றே சுருட்டிக் கொண்டு
காப்பி போடுவதை விட
குடிக்கும் ஆசையால்
பார்த்துக் கொண்டிருப்பேன்..
கொடுத்ததும்
டபரா டம்ளரில் ஆற்றி
பஃபென்று பாவாடை கூடாரமானாலும்
படக்கென்று கிச்சனிலேயே அமர்ந்து
குடித்தது இன்னும் நினைவில்..
பாத்துடி.. பதறுவாள்..
வாய் சுட்டுடும்.
பரவால்லம்மா.
எப்படி இருக்கு
ம்ம்ம் சுமார்தான் ஷீகர் போடலியா
இதுக்கு மேல் வேண்டாம்..இந்தா
அரை மனதாக அரை டீஸ்பூன் வரும்..
மெல்ல மெல்லப்பருகி
வாசலுக்கு வந்தால் ஒரு மணி நேரப்பாடம்
ஒரு நொடியாய் ஓடும்..
இப்போது இருப்பது பெரிய
மாடுலர் கிச்சன்
லேடஸ்ட் ஓவன்..
டிகாக்ஷனுக்கு குட்டி டிரம் கிடையாது
பெர்கொலேட்டர் தான்.
நிமிடங்களில்கலந்து
கணவர் குழந்தைகளுக்குக் கொடுத்தால்
ம்ம் சூப்ப்ர்மா என்கிறார்கள்..
இருந்தாலும்
மனதில் எப்போதும்
முகிழ்த்திருக்கிறது
அம்மாவின் கைமணம்…
pavalamani pragasam
1st February 2013, 08:13 PM
கைமணம் ஒரு காரணம்
கட்டிப்போடும் மந்திரம்
குட்டிப்போட்ட பூனையாய்
காலைச் சுற்றி வரும் குமரன்
தாய்க்குப் பின் தாரம்
தொடரும் பாரம்பரியம்
தழைத்திடும் உறவுகள்
தவமின்றி பெற்ற வரங்கள்
chinnakkannan
1st February 2013, 10:52 PM
வரங்களில் ஒன்று போலத் தான்
மாறி விட்டது மெதுவாக...
இப்போதெல்லாம்..
குறிப்பிட்ட நேரத்தில்...
அமைதியாய் இருக்க முடிகிறது..
வீட்டில் இருந்தாலும்
உடலின் கலோரிகள் தானாகக்
குறைகின்றன..
முன்போலில்லாமல்
திட்டமிட்டுக் காரியங்கள்
பழகிக் கொள்ள முடிகிறது...
நிறைய் சிந்தனை செய்ய முடிகிறது..
ம்ம்
ஒரு காலத்தில் இப்படித் தானே
நாமும் இருந்தோம்..
அந்தக் காலத்தில் தாத்தா பாட்டி
கொள்ளுத் தாத்தா கொள்ளுப் பாட்டி
அதற்கு முன்னால் இருந்த
ராஜ வம்சங்கள்..பாவம்
ரொம்பக் கஷ்டப் பட்டிருப்பார்கள்..என
யோசிக்க முடிகிறது..
தொலை பேசி கட்டாய மெளனமாய் இருக்கும்
அலைபேசியையும் அணைத்து விட்டால்
இன்னும் ஆனந்தம்..
உணவுகள்
அன்றன்று தேவைக்கு மட்டும்
தயார் செய்தால் போதும்..
செளகர்யம் தான்..
உங்கள் வட்டாரத்தில் இந்த நேரமா
என் வட்டாரத்தில் இந்த நேரம்..
பேசுவதற்கு ஒரு கூடுதல் தலைப்பு...
தொலைக்காட்சித் தொடர் கவலை இல்லை..
ம்ம்
நன்றாகத் தான் இருக்கிறது..கொஞ்ச்ம் பழகியதால்...
நன்றி
மின்வெட்டே..!
pavalamani pragasam
3rd February 2013, 08:22 AM
மின்வெட்டே ஆனது நல்ல காரணம்
மாற்றி யோசிக்க வேண்டிய தருணம்
கண்டுபிடிப்பின் தாய் தேவையல்லவோ
தாராளமாய் கிடைக்கும் சூரிய ஒளியே
தந்திடும் தடையில்லா நாகரிக வாழ்வு
மீண்ட சொர்க்கமினி நனவாகும் கனவு
chinnakkannan
3rd February 2013, 12:19 PM
கனவுகள் கண்ணில் மின்ன
...கவிதையாய் எண்ணம் துள்ள
நனவினில் நானும் கேட்டேன்
...நங்கையாய் இருந்தபோதில்
மனதினில் மகிழ்ச்சி மின்னல்
...முகிழ்க்கிற தன்மை எல்லாம்
என்றுமே இருப்ப தற்கு
...எளிமையாய் வழிகள் சொல்வாய்..
பெண்ணினம் என்று பாரில்
...பெருமையாய்ப் பிறந்த தற்கு
கன்னிநீ நினைப்ப தெல்லாம்
...கவிதையில் சொல்ல நன்று..
கண்களில் கனவு நானும்
...காலமாய்க் கண்டு இருந்தேன்
விண்ணிலே சிறகை விட்டே
...உளத்திலே மகிழ்ந்தி ருந்தேன்
நுண்ணிய காலப் போக்கில்
...நொறுங்கியே உடைந்த தெல்லாம்
வண்ணமாய்க் கனவு எல்லாம்
...வாழ்க்கையில் உதவா தம்மா..
கஜங்களின் மீது ஏறி
...காடுகள் மலைகள் சென்று
கோட்டையைப் பிடித்த காலம்
..ஓடியே போயே போச்சு..
நிஜங்களை எண்ணிப் பார்த்து
..நேர்மையாய் உளத்தில் எண்ணி
நலமுடன் நன்கு வாழ
.. நங்கைநீ பழகு என்றாள்..
pavalamani pragasam
3rd February 2013, 07:02 PM
பழகு என்றாள் எனை நெருங்கி
யாரிவள் பாப்பைய்யாவின் மகளா
வேண்டாம் மச்சி வேண்டாம்
இந்த பொண்ணுங்க காதலு
காதுக்குள்ளே நண்பன் குரலு
பொண்ணுங்க எல்லாம் வாழ்வின் சாபம்
இன்னொருத்தனின் நிலையோ பரிதாபம்
கையளவு நெஞ்சுக்குள்ளே
கடலளவு ஆசை வச்சான்
சொய்ங் சொய்ங் நானும் போறேன்
எங்கேடி கூட்டிட்டு போறேன்னு
அனுபவ ஞானம் பெறுவேனே
chinnakkannan
3rd February 2013, 09:39 PM
ஞானம் பெறுவேனே..
கொஞ்சம் சேர்த்துக் கொள்ளும் எம்மை...
குருவின் கண்களில் மின்னல்
சின்ன ஆமோதிப்பு..
சேர்ந்தாயிற்று..
எதுவும் உரைகளா...
இல்லை..
எப்பொழுதும் பூஜை..
ஏதேனும் குருவைக் கேட்டால்
மெல்லிய புன்சிரிப்பு..
எப்பொழுதும் மெளனம் தான்..
அவ்வப்போது தனியாக
காட்டினுள் சென்று ஆசை தீர ஓ
எனக் கத்தல்..
பின்னர் குருவிடம் குருவடியிடம்..
நாட்கள் செல்லச் செல்ல
வாய் பேச்சை இழக்க
மனமோ ஒலிக்க ஆரம்பிக்க
கண்களில் மெருகேற
சீடனிடம் மெல்ல வாய்திறந்தார் குரு..
ஞானம் உனக்கு வந்துவிட்டதப்பா...
pavalamani pragasam
4th February 2013, 08:34 AM
வந்துவிட்டதப்பா பொற்காலம்
சரித்திரத்தைத் தூசி தட்டி
வீர சின்னங்கள் ஊரில் நிறுவி
புராதன சிறப்பிடங்களுக்கு உலாவாக
பள்ளிச் சிறார்களைக் கூட்டிச் சென்று
மராத்தான் ஓட்டம் ஒன்றும் நடத்தி
தெரிந்த தெரியாத பெருமைகள் பேசி
எங்கெங்கும் விளம்பரப்படுத்தி
குப்பை கூளம் அகற்றி முடிக்க
தன்னார்வ அமைப்புகள் முனைய
போட்டிகளும் பரிசுகளும் குவிய
சுங்குடி சேலையும் அகல் விளக்குமாய்
வைகையில் வஞ்சியர் வந்து களிக்கும்
ஒரு திருவிழா நடக்கிறது இங்கே
மாமதுரை போற்றுவோம் என்கிறோம்
ஆண்டாண்டிதை நாங்கள் தொடருவோம்
chinnakkannan
4th February 2013, 12:22 PM
”தொடருவோம்..தெரியுமா”
தெரியுமே..
விழிகளில் தெறித்த மின்னல்
இதழ்களிலும்..
சமர்த்தாய் என் வீட்டில் இருந்து
நான்கோவில் சென்று
பின் திரும்பும் வரை காத்திருந்து
வந்ததும்
எதிர்க் கடையிலிருந்து விலகி
வீடுவரை விடுவீர்கள்..
எல்லாம் இத்தனை வருஷம்
கழித்த்தும் நினைவு வைத்திருக்கிறாயே
கணவர் குழந்தைகள் நலமா..
நலம்...
கண்களில் மின்னல் போய்
கொஞ்சம் மேகம்..
ஆமாம்ப்பா
ஒங்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு
ரொம்ப நாளா எண்ணம்..
நாலு பேரும் நல்லாத் தான் இருந்தீங்க..
ஏன் என்னிடம்
வந்து பேசவில்லை..
யாருக்குமே பிடிக்கலையா..
சேச்சே..
எனக்கு உன்னை ஸாரி உங்களை
ரொம்பப் பிடிக்கும்..எனினும்
ஏதோ ஒரு சாலைத் தடை மனசுள்..
நான் சொல்லியிருந்தா..
உனக்கு உங்களுக்குப் பிடிச்சுருக்குமா..
பட படவென
பக்கத்தில் வந்து நின்ற
ஸ்கூட்டியில் இருந்த அவளது
குட்டி ஜெராக்ஸ் பெண்
ஏறும்மா என
படக்கென ஏறி
கண்களில் சிரித்து
அதான் சொல்லலைல்ல..
சொல்லியிருந்தா உன் வீட்டுக்கு வந்திருப்பேன்..
இப்ப நான் போறேன் என் வீட்டுக்கு..
பை..
போன பிறகும்கூட
விழுந்த வார்த்தைகள்
சுற்றிக் கொண்டிருந்தன நெடு நேரம்
மனதில் புகையாக..
pavalamani pragasam
4th February 2013, 06:47 PM
புகையாக பனி சூழும் காலை
போர்வைக்குள் கிடக்கும் வேளை
காத்திருக்கும் காப்பியின் நினைப்பு
கண் திறவாமல் ரசிக்கும் பாட்டு
இரவின் குழப்பங்கள் விலகியிருக்க
திடீரென அரிய தீர்வுகள் பளீரிட
அடடா அது தானே ஆனந்தம்
அழகான ஓர் நாளின் ஆரம்பம்
chinnakkannan
5th February 2013, 10:27 AM
ஆரம்பம் அழகாய்த் தான் இருந்தது..
வணக்கம்
உங்களுடைய இந்த நண்பர்..
ஓ தெரியுமே
அவரும் உங்களுக்குத் தெரிந்தவரா..
புன்முறுவல்கள்..
காப்பி உபசரிப்புகள்...
வியாபாரம் என வந்த போது
முகம் மெல்ல மெல்ல வேறொரு முகமாக..
புன்சிரிப்பெல்லாம் ஓடி ஒளிய
இறுதியில்
முகம் இறுகி
வியாபாரம் படியாத நிலையில்...
மீண்டும் உங்க்ளைத் தொடர்பு கொள்கிறோம்
மகிழ்ச்சி..
இறுக்கமான கை குலுக்கல்..
வெளிவந்த போது
செகரட்டரி கேட்டாள்
இதுஇப்படித் தானா..
ஆம்..வியாபாரம் செய்தால்
நீ நண்பன்
இல்லையேல் நீ
எதிரியிலலை.. ஆனால்
நீ யாரோ..
pavalamani pragasam
5th February 2013, 12:57 PM
யாரோ வந்து யாரையோ
அபகரிக்க அமைந்ததா
ஆயிரங்காலத்து பயிர்
வெறும் கற்பனையை வளர்த்து
வீணாய் வேதனையில் வெந்து
வம்பை வளர்க்காத மாமியார்
தன் மகனை இழக்க மாட்டாள்
இன்னொறு மகளைப் பெறுவாள்
chinnakkannan
5th February 2013, 02:27 PM
பெறுவாள் அதிக மதிப்பெண்கள்
ஏனெனில் அவளிடம் அறிவும்
அதற்கேற்ற உழைப்பும் இருக்கிறது..
பக்கத்து வீட்டுப் பெண் பற்றிச்
சொன்னதைக் கேட்ட பையனின்
கண்களில் மின்னல்,வெறி..
படித்தான்
படித்து உயர்ந்து
வேலையில் சேர்ந்த போது
அந்தப் பெண்ணிற்கோ திருமணம்..
பத்திரிகை கொடுக்க வந்த போது
சிரித்தாள்..
உன் நிலைக்கு உழைப்பு..
என் நிலைக்கும் தான்..
ஆனால்
உனக்கும் எனக்கும் வித்யாசம்..
படித்ததால் உனக்கு உபயோகம்
படித்ததால் உபயோகம்
என் குழந்தைகளுக்கு..
pavalamani pragasam
5th February 2013, 06:46 PM
குழந்தைகளுக்கு எளிய மனது
குதூகலிக்கத் தெரிந்த வயது
ஆயிரம் ரூபாய் பொம்மையும்
ஐந்து ரூபாய் பொம்மையும்
ஒன்றுதான் அவர் மகிழ்வதற்கு
எத்தனை விதமாய் ஒரு பொருள்
மாற்று அவதாரம் எடுக்கிறது
வட்டத்துக்குள் சுற்றும் காந்த மீன்களை
வாளிக்குள் நீந்தவிட்டு தூண்டிலடவும்
வடிவமைத்த அழகிய பூங்காவில்
வரிசையில் நிற்க வைக்கவும் முடிகிறது
வகுத்த கட்டத்துள் அடங்கா கூர்மதி
ஊகிக்க முடியா அற்புத கற்பனைகள்
உயிர்ப்புடன் நடமாடும் பாத்திரங்கள்
அவர்கள் உலகம் பெரியது சிறந்தது
சொர்க்கத்தின் சாயலை கொண்டிருப்பது
அதிலே ஐக்கியமாய்விட முயல்வது
எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு
chinnakkannan
6th February 2013, 10:33 AM
பொழுது போக்காய்த் தான் இருக்கும்
முன்பெல்லாம்
வாசல் கதவைத் திறந்து
அப்பா படியில் உட்காருவார்
பக்கத்து வீட்டுக்
கம்பவுண்டர் மாமாவும்...
ஊரின், உலக நடப்பு
எல்லாம்
அலசிக் காயப் போடுவார்கள்..
ரொம்ப நாளைய சினேகம்
திண்ணையில் படிப்பது போல
உட்கார்ந்திருப்பேன்..
ஏனெனில் கேட்க சுவாரஸ்யமாய் இருக்கும்
பத்துபத்தரைக்கு டப்பென்று எழுந்து
அப்பா உள்ளேவர
மாமா அவர் வீட்டினுள் செல்ல..
தடாலென ஒரு அமைதி பரவும்..
ம்ம்..
இப்போதெல்லாம்
பக்கத்து எதிர் வீடுகளில்
இருப்பவரின் முகத்தைக் கூட
யோசிக்க வேண்டியிருக்கிறது..
புன் முறுவல் கூட தேவையைப் பொறுத்து..
காலங்கள் மனிதர்கள் மாறும் போது
எல்லாம் மாறும் சரிதான்
நேயமும் நட்பும் கூடவா..
pavalamani pragasam
6th February 2013, 02:09 PM
நட்பும் கூடவா மலிந்து போகும்
முக நூலை பார்த்தால் போதும்
நட்பு வேண்டி எத்தனை கோரிக்கை
யாரென்றே தெரியாது ஆயினும்
பொது நண்பர்கள் மூலம் அறிமுகம்
முன்பின் அறியாமல் ஏன் நெருக்கம்
chinnakkannan
6th February 2013, 03:33 PM
நெருக்கமாய் இருந்த
தருணங்களில்
முன்பிருந்த ஆர்வம்
இப்போது
அவ்வளாய் இல்லை..
பருவம் மாறுவது
ஒரு காரணம்..
சொன்னால் சொல்வார்கள்
அடப்பாவி
வயசாகிவிட்டதுடா உனக்கு..
அப்படியில்லை
முன்பு துணையுடன்
உடல் நெருங்கியிருந்தது..
இப்போது மனம்..
நெருக்கம் தெரியும்
ஒரு பார்வையில்..
pavalamani pragasam
6th February 2013, 08:42 PM
பார்வையில் அழைப்பு
வார்த்தையில் தவிர்ப்பு
சாய்ந்து சாய்ந்து பார்த்து
காய்ந்து காய்ந்து போகவிட்டு
நெருங்கவும் விடாமல்
விலகவும் விடாமல்
அலைக்கழிக்கும் கலை
கன்னி விரிக்கும் வலை
காளை தவிக்கும் நிலை
களிப்பூட்டும் காம லீலை
chinnakkannan
7th February 2013, 08:34 AM
காம லிலை தொடர்கிறதா..
பேப்பரை
நழுவும் மூக்குக்கண்ணாடி பொருத்தி
கொஞ்சம் உற்று நோக்கி
தாத்தா வாய்விட்டு உரக்கப் படிப்பார்..
பாட்டி தலையில் அடித்துக்கொள்வாள்..
ம்ம்
கொஞ்சம் மனசுக்குள்ள நியூஸ்லாம்
படிக்கப் படாதோ
குழந்தைகள்லாம் இருக்குல்ல..
அப்பா சிரித்தவண்ணம் நகர்வார்..
அம்மா அப்பா
செய்திகள் அலசுவதை
நான் பார்த்ததில்லை..
ஆனால் ஊர் வம்பு வரும்..
என்னடீ அந்த
வக்கீல் வீட்டு மாட்டுப் பொண்
என்ன சொன்னா..
அதுவா... எனத் தொடரும்...
இன்றைய காலைகள்
அலுவலகம் செல்வதற்கான ஆயத்தம்
பள்ளிக்குக் குழந்தைகளைக் கிளப்ப
கொஞ்சம் ச்மைக்க என இயந்திரமாய்..
பின்னணியில்
தொலைக்காட்சிச் செய்திக் குரல்..
காதில் விழும்...ஆனால் விழாது
க்ண் பார்க்கும்.. ஆனால் பார்க்காது!!
எல்லாம் காலம்..!
pavalamani pragasam
7th February 2013, 09:12 AM
காலம் நின்றுவிட்டதா ஏன் இப்படி நடக்குது
பலூன்காரனை பார்த்தால் கால்கள் நிற்கிறது
மிட்டாய் கடையைப் பார்த்தால் இனிக்கிறது
காக்கா குருவியை பட்டாம்பூச்சியை கண் தொடருது
கேட்டது உடனே வேண்டுமென அழுகத் தோணுது
ஓ என்னுள் இருக்கும் குழந்தை வளர மறுக்குது
venkkiram
7th February 2013, 11:08 AM
மறுக்குது வானம் பருவ மழை பெய்ய
சிரிக்குது தரிசு நிலம் குறுக்கு நெடுக்க
உறுத்துது மனம் கூறு போட்டு விற்க
chinnakkannan
7th February 2013, 11:42 AM
விற்க முடியாது..
ஓவியன் கண்டிப்பாய்
தலையசைத்து மறுக்க்
வியப்பாய்த் தான் இருந்தது..
கண்காட்சியில்
அவனது மற்ற ஓவியங்கள் எல்லாம்
அழகு.. மிக அழகு..
இது கொஞ்சம் சுமார் தான்..
சின்னக் கிறுக்கலாய்
ந்திக்கரையில் இருக்கும் ஒரு
பெண்பற்றிக் கோட்டோவியமாய்....
ஒரு வேளை காதலியோ
மெல்லிய புன்முறுவல்..
இன்னும் கொஞ்ச்ம்
உற்று நோக்குகையில்...
ஒரு வேளை அந்த
ஓவியனின் பையன் வரைந்ததாய் இருக்குமோ..
அல்பாயுசில் அவன் இறக்க
இவன் தர மறுக்கிறானோ..
மறுபடியும் ஓவியனை நோக்க
அவன் முகத்தில் மாற்றமேதும் இல்லை..
நானும் எதுவும் கேட்கவில்லை..
வந்துவிட்டேன்..
எதற்காகக் கலைத்துக் கொள்ள வேண்டும்
என் கற்பனையை..
pavalamani pragasam
7th February 2013, 08:01 PM
கற்பனையை உசுப்பிப் பார்க்கிறேன்
எழ மறுக்கிறது சண்டிக்குதிரை
தட்டித் தடவிக் கெஞ்சிக் கொஞ்சியும்
வெறுப்பில் அக்கழுதையை திட்டியும்
ஒன்றும் நடக்கவில்லை நினைத்தபடி
உலுக்கினாலும் உதிரவில்லை நெல்லிக்கனி
மழையோ அருவியோ வந்து கொட்டவில்லை
பாலையாய் மாறியதோ பாழும் புலமை
வற்றிய ஊற்றாய் கிடப்பது கொடுமை
மீனில்லை அதை கவ்வும் கொக்கில்லை
நானென்ன செய்வேன் ஊடல் தணிக்க
தெரியும் எனக்கும் தவிப்பை மறைக்க
இனி நான் கெஞ்சமாட்டேன் மிஞ்சுவேன்
தானாய் வந்து கொஞ்சுவாய் தெரியாதா
chinnakkannan
7th February 2013, 09:30 PM
தெரியாதா என்றால்
ஆம் என்றாய்...
எனக்குத் தெரிந்ததை
மிளகு உப்பெல்லாம் போட்டு
கொஞ்சம் நீட்டி முழக்கிச்
சொன்னால் கேட்டு விட்டு..
அதைப் பற்றியே
இன்னும் நிறையச் சொல்கிறாய்..
ஏன் முதலில் தெரியுமெனச் சொல்லவில்லை என்றால்
ஏதாவது சொல்கையில்
என் காதின் ஜிமிக்கியின் அசைவுகள்
உன் மனதை அசைக்கிறது என்கிறாய்..
ச்சீ போ
எனக்கு வெட்கமாய் இருக்கிறது
கிட்டே வா படவா..
pavalamani pragasam
7th February 2013, 11:15 PM
படவா எவ்வளவு குசும்பு உனக்கு
முளைத்து மூணு இலை விடலை
அதற்குள் இத்தனை விவரம் விஷமம்
என் பேச்சை ரசிக்கிறாய் தெரியுமெனக்கு
அதை கைபேசியில் இப்படி பதிவு செய்து
கீச் கீச் என மாற்றி பேச வைத்து மகிழ்ந்து
கெக் கெக் என சிரிக்கிறாய் செல்லப் பேரனே
உன் பிரியமான தோழியாய் நான் இருப்பேனே
chinnakkannan
8th February 2013, 11:33 AM
நான் இருப்பேனே
கண்டிப்பாய் வருவேன்
அழைப்பு அனுப்பு...
எண்பத்தைந்து வயது
தூரத்து உறவுப் பாட்டியை
வணங்கி ஆசிர்வாதம் விழைந்ததில்
எனது பத்தாம் வகுப்புப் படிக்கும் மகளின்
ஏழெட்டு வருட்ம் பின்னால் இருக்கும்
திருமணத்திற்கு
அழைப்பு தரச் சொல்லி
முதலில் சொன்னவாறு பேசினாள்
வெகு நம்பிக்கையாக..
எனக்குத் தான்
கொஞ்சம் பயமாய்...
pavalamani pragasam
8th February 2013, 12:20 PM
பயமாய் இல்லை புறப்பட்டுச் செல்ல
பரணை ஒழிக்க வேண்டும் முதலில்
பாதுகாத்த திரட்டிய பொக்கிஷங்கள்
வெறும் குப்பைகள் அடுத்த தலைமுறைக்கு
நினைவு சின்னங்கள் எல்லாம் தேவையில்லை
நானிருப்பேன் அவர்கள் பாதச்சுவடுகளாய் மாறி
chinnakkannan
8th February 2013, 12:45 PM
மாறித் தான் விட்டது எல்லாம்..
நீ ரசித்த இளமீசையில் இன்று வெண்மை
நீ ரசித்த தோள்களில்
இன்று சுருக்கங்கள்..
கண்களும் கூடச் சிறிதாகி
முட்டைக் கண்ணாடியில் பெரிதாக..
நடையும் சற்றுத் தளர்வுதான்..
சிந்தனையில் மட்டும்
மாற்றமில்லை
உன்னிடம் கொண்டிருந்த அன்பில்..
pavalamani pragasam
8th February 2013, 07:44 PM
அன்பில் வந்ததே வில்லங்கம்
பெண்களால் வரும் விவகாரம்
பழையவளும் புதியவளும் போரிட
மிகப்புதிதாய் வந்தவள் வெல்ல
தகப்பனாய் அடையும் பாக்கியம்
இறுதி வரை கூட வரும் பரமசுகம்
venkkiram
8th February 2013, 07:54 PM
பரமசுகம் சிறந்த பாட்டு ஒன்றை ரசிப்பதில்
பரமசுகம் அதைத் தானே பாடிக் கேட்பதில்
பரமசுகம் தான் பாடுவதை துணையும் ரசிப்பதில்
பரமசுகம் தனக்கும் ஒரு ரசிகை உருவாவதில்
chinnakkannan
8th February 2013, 11:14 PM
உருவாவதில் குறை இல்லை..
உருவாக்குவதில் தான்..
ரோஜாப்பூ அழகாய்த் தான் மொட்டு விடுகிற்து
மல்ர்கிறது..
மாலையானால் அழகு..
தனியாக கூந்தலில் இன்னும் அழகு..
அதை கவனிக்காமல் வாட விட்டால்..
வளர்த்தவன் தவறு தானே..
இது மனிதர்க்ளுக்கும் பொருத்தம் தான்..
இருந்தும்
சமயத்தில் எல்லாம் மாறிப் போவதற்குத்
தெரியவில்லை காரணம்..
pavalamani pragasam
8th February 2013, 11:57 PM
காரணம் வேண்டியிருப்பதில்லை
காலை முதல் இரவு வரை
வலிய வம்புக்கிழுத்து வசை பாடி
சரிக்குச் சரி மல்லுக்கு நின்று சதிராடி
சகலமும் அறிந்த நிறைய சதிபதிக்கு
சாதனை இப்படியும் வாழ்ந்து காட்டுவது
இயற்கையிலே எதிர் துருவ காந்த ஈர்ப்பு
இல்லறத்தின் அடி நாதத்தில் ஏன் வியப்பு
chinnakkannan
9th February 2013, 05:20 PM
வியப்பாகப் பிம்பம விகசிக்கக் கண்டு
தயக்கமாய் நீந்தும் நிலவோ - பயத்துடன்
மீளாமல் மேகத்தில் மென்மை முகம்புதைக்க
தாளாமல் கத்தும் கடல்
pavalamani pragasam
9th February 2013, 06:57 PM
கடல் கடந்து அன்று திரவியம் தேடினர்
கடினமான பாதைகளில் பயணித்தனர்
கட்டுமரத்தில் பாய்மரக்கப்பலில் தோணியில்
கடும்புயலில் காரிருளில் கொட்டும் மழையில்
குடும்பம் காக்க வம்சம் வளர போராடினர்
கலாசார பாலங்கள் கெட்டியாகக் கட்டினர்
கொண்டு சென்றதும் கொண்டு வந்ததும்
குறைவிலா தனமும் அரிய ஞானங்களும்
குறு விரல் நுனியில் இன்று பரிவர்த்தனை
கற்பனையின் வேகத்தை மிஞ்சும் சாதனை
venkkiram
10th February 2013, 10:07 AM
சாதனை என்பது என்ன?
இல்லார்க்கு பயன்பட
வாழ்ந்து மறைவதா? - தன்
இருத்தலுக்காக போராடி
வாழ்ந்து காட்டுவதா?
chinnakkannan
10th February 2013, 12:03 PM
காட்டுவதா வேண்டாமா..
கொஞ்சம் வெட்கமாய்த் தான்
இருக்கிறது..
கையிடுக்கில் கொஞ்சம்
இழுக்கிறது..
பின்னால் கொஞ்சம் இறக்கமோ..
இருந்தாலும்
இந்தப்புடவைக்கு இது பொருத்தம் தான்..
என்னதான்
பலவருடங்கள் கல்யாணம் ஆனாலும்
கேட்டால் என்னபதில் வருமோ..
வெளியில் வந்து
ஹாலில் இருந்த அவரிடம்
எப்படி...
பார்வையால் கேட்டால்..
ஹை நல்லாத் தான் இருக்கு
வாலிபம் திரும்பிடுச்சுடி உனக்கு
எனச் சொல்லி அவர் எழ..
என்னாயிற்று அவரின் வேட்டிக்கு..
பல பாக்கெட்கள் கொண்ட
காக்கி பர்முடாஸீம்
கீழே கரணை கரணையாய்க் கால்களும்..
யோவ் நீங்களும் புதுசா..
நடத்துங்க..
வந்தது சிரிப்பு..
pavalamani pragasam
10th February 2013, 01:00 PM
சிரிப்பு மல்லிப்பூவாய் கொட்டிக்கிடக்கு
ஊர் முழுக்க மூணு நா திருவிழாவுல
சுங்குடி சேலை கட்டிகிட்டு போனேன்
சவ்வு மிட்டாயிக்காரனிடம் கை நீட்டி
கடியாரம் கட்டிகிட்டேன் கழுத்து மாலை
கூட வந்த மதினிக்கு வாங்கித் தந்து
குழந்தைகால நினைவுகளில் குதூகலித்து
கவர்னரும் கலெக்டரும் மேயரும் மேடையிலே
காலேஜு கொமரி கொழுந்தன் மக கையில பரிசு
கண்கொள்ளா காட்சியா தத்ரூப சாட்சியா
கடந்தகால நிகழ்கால பெருமையெல்லாம்
கடந்துபோக அலங்கார ஊர்வலம் நேற்று
கடைசி நாளின்னிக்கு வைகையிலே விளக்கேற்றி
கோலாகலமா வாணவேடிக்கை நடக்கப் போகுது
பன்னெண்டு மாசமும் பஞ்சமில்லாம திருவிழா
ஒன்னு இப்ப கூடிப்போச்சி மாமதுரை போற்றுவோம்
venkkiram
10th February 2013, 01:18 PM
போற்றுவோம் நல்லதை போற்றுவோம்
தூற்றுவோம் தீயதை தூற்றுவோம்
கொட்டுவோம் வீரரெனத் தோள் கொட்டுவோம்
மீட்டுவோம் இழந்த சுகம் மீட்டுவோம்
காட்டுவோம் நாம் வாழ்ந்து காட்டுவோம்
ஊட்டுவோம் புத்துண(ர்)வை ஊட்டுவோம்
நீட்டுவோம் நேசக் கரத்தை நீட்டுவோம்
chinnakkannan
10th February 2013, 02:19 PM
நீட்டுவோம் வாலை
என்று இருந்தீர்கள் என்றால்
ஒட்ட நறுக்கிவிடுவேன்..
புதிய ஆசிரியர் சொல்லி
முடிக்க
அமைதியாய் இருந்த அறையில்
களுக்..
யார் அது..
கண்கள் சிவந்தன..
கையை உயர்த்தினான்
பையன்..
என்ன கொழுப்புடா உனக்கு
நீங்க சொன்னது சிரிப்பு வந்தது சார்..
பதிலா பேசற
உன் அப்பா என்ன பண்றார்..
பையன் மெளனிக்க
அருகாமை
இவன் அப்பா ஹெட்மாஸ்டர் சார்..
ஒருகணம் திகைத்தவர்..
சரி உட்கார்..
இனிமேல் இப்படிச் செய்யப்படாது
எனச்சொல்லி அமர்கையில்
நாற்காலியில்
சுருண்டு கொண்டிருந்தது
அவரது வால்...
pavalamani pragasam
10th February 2013, 06:40 PM
வால் என்றதும் நினைவுக்கு வருகிறார்
பூனை தன் வாலைப் பிடிக்க முயன்ற
பெரிய தத்துவம் சொன்ன நல்ல நண்பர்
கூடவே என் பதிலாய் முளைத்த வால்கள்
அனுமாருடையது போல பழைய மொழிகள்
பல கதைகள் அவை பொன்னான காலங்கள்
venkkiram
11th February 2013, 06:31 AM
காலங்கள் பலவகை தமிழ் நாட்டில்
விதை முளைவிடும் இளவேனில்
வெக்கை நிரம்பிய முதுவேனில்
குளம் கம்மாய் வழியும் கார்
சருகுகள் மிதக்கும் கூதிர்
நெற்கதிர் சாயும் முன்பனி
வைகறைப் பனி கொட்டும் பின்பனி
pavalamani pragasam
11th February 2013, 08:23 AM
பின்பனி பிடறியைத் தாக்க
முன் நிற்கும் கடமை அழைக்க
காணாமல் போகும் குளிர்
கதிரவன் கடுமையை காட்ட
வந்தேவிட்டது கோடையும்
வடகம் போட நெருங்குது நேரம்
venkkiram
11th February 2013, 09:22 AM
நேரம் என்ன தம்பி இருக்கும்
கடந்து போகும் முதியவர் கேட்டார்
ஐந்தரை மணி தாத்தா
அங்காடி இன்னும் தொறந்திருக்குமா
சந்தேகம்தான் சீக்கிரம் போங்க
கிருஷ்ணாயில் வாங்கணும் தீந்துபோச்சி
வேலை முடிஞ்சி வந்த சோர்வுல
நேத்திக்கே வாங்க மறந்திட்டேன்
பேத்திக்கு பரிட்சை நாளைக்கு
புலம்பி கொண்டெ நடையை கூட்டினார்
தாமதமாக வந்து நின்ற
டவுன் பஸ்ஸினுள் கூட்ட நெரிசலிலும்
ஏறிக்கொண்டு இன்வெர்ட்டர்
வாங்கும் பணத்தை
இன்னொருமுறை இருக்கிறதா என
சரிபார்த்துக் கொண்டென்
chinnakkannan
11th February 2013, 10:33 AM
சரிபார்த்துக் கொண்டேன்
பொட்டு சரியாய் இருக்கிறதா..
இந்த பிங்க் சுடிதாருக்கு ஓகேயா
லிப் க்ளாஸ் போட்டாச்சு
இந்த இயர்ரிங்க்ஸ் நே சூட்டபிளா இல்லை
ஓ இந்த கோரல் இஸ் குட்
போட்டுக்கலாம்..
காதில் போட்டுக் கொண்டு
ஆடுவதைப்பார்க்க
குட்.. அவன் சந்தோஷப் படுவானா..
வீட்டு மணி அழைப்பு
அவன் தான்..
மாடிப்படிக்கட்டில்
தாவிக்குதித்து இறங்க
சுண்டுவிரலில் கொஞ்சம்
அடி பலமாய்..
கண்ணில் வலி..
பொறுத்துக்கொண்டு
திறந்தால்
சிரிப்பூ முகத்தில்..
ஹை.. நல்லா இருக்கே
இந்த டிரஸ் உனக்கு..
தோடு புதுசா..
சுண்டுவிரல் தந்த வலி
போயே போச்சு
pavalamani pragasam
11th February 2013, 12:27 PM
போயே போச்சு பண்பும் பக்குவமும்
பச்சையாய் பல்லை இளிக்குது பணப்பசை
படிப்பும் பதவியும் பரம்பரை பெருமையும்
பொருளற்றுப் போகுது புல்லர்கள் முன்னால்
chinnakkannan
11th February 2013, 06:41 PM
முன்னால் சென்றாலும்
பின்னால் சென்றாலும்
உன்னை
காலத்தே பின் தொடரும்
நிழலாய் நான்..
pavalamani pragasam
11th February 2013, 07:40 PM
நான் நீயாகி நாமாகி ஒன்றாகி
இரு கண்ணின் ஒரு பார்வையாகி
ஒரு கனவாகி ஒரு நினைவாகி
ஒரு லயத் துடிப்பாகி நிதம் வாழ்ந்து
செம்புலநீராய் தாம் நெஞ்சம் கலந்து
நம் மண்ணின் மாண்பல்லவா ஆஹா
venkkiram
12th February 2013, 02:35 AM
ஆஹா என்ன ருசி
காபின்னா இப்படித்தான் இருக்கணும்
ஒன்னோட ஆம்படையான்
கொடுத்து வச்சிருக்கணும் தாயி
நீ தீர்க்காயுசா திருச்செந்தூரான் புண்ணியத்துல
ஒரு கொறையும் இல்லாம
நீடுழி வாழ்ந்து நல்லாயிருக்கணும் தாயி
இப்படிப்பட்ட வெகுமதிக்காக
எத்தனை டம்ளர் வேணாலும்
பக்கத்து வீட்டு சுசிலா மாமியிடம்
காப்பிப் பொடி இரவலுக்கு வாங்கலாம்
pavalamani pragasam
12th February 2013, 08:37 AM
வாங்கலாம் சவ்வு மிட்டாயும் பஞ்சு மிட்டாயும்
பாப்கார்னும் டில்லி அப்பளமும் குச்சி ஐஸும்
நெத்திக்கு ஒட்டுப் பொட்டு ஜடைக்கு மாட்ட கிளிப்பு
குதூகலம் பொங்குமிடம் என்றால் பொருட்காட்சி
venkkiram
12th February 2013, 09:44 AM
பொருட்காட்சி போனதுண்டா
ராட்சத ராட்டினங்கள் ஏறியதுண்டா
பொரி உருண்டை ருசித்ததுண்டா
பெரிய பஞ்சு மிட்டாய் கடித்ததுண்டா
வண்ண விளக்குகளை ரசித்ததுண்டா
கால் கடுக்க நடந்ததுண்டா
நாள் முழுதும் களித்ததுண்டா
chinnakkannan
12th February 2013, 11:15 AM
களித்ததுண்டோ என்று கேட்டால்
எப்படி..
மார்கழி மாத இரவில்
மொட்டை மாடியில்
மெல்லிய் குளிர்காற்றில்
படுத்தபடி நட்சத்திரங்களை எண்ணுவதில்..
பள்ளி கல்லூரி பருவங்களை
விட்டு விட்டால்..
வேலை கிடைத்தபிறகு
விட்முறை நாட்களில்
மாலை நேரங்களில்
கொள்ளிடக் கரையில்
ஆற்று நீர் இருக்கும் போது
அமைதியாய் ப் பார்த்த படி
அமர்ந்திருக்கையில்..
சின்ன வயதில்\
அழகாகப் பழைய சாதம்
கல்சட்டியில் சுண்ட வைத்த
முந்தா நாள் கீரைக் குழம்பு
வண்டிக்காரன் துகையல்
கவாங் கவாங் எனக்
கத்தும் பசியில் உண்ட போது...
ம்ம்
நீங்கள் பண்ணிய
பருப்பு உருண்டைக் குழம்பு
அபாரம் தான்..
ஆனால் நான் இதுவரை
கண்ட களிப்புகள் எல்லாம்
உங்களிடம் சொல்ல இயலாது..
ஏனெனில் நீங்கள் என்
மாமியார்...
pavalamani pragasam
12th February 2013, 12:43 PM
மாமியார் நேற்று மருமகளாய்
பட்டதை படித்ததை பக்குவமாய்
புகட்டுவாள் புதியவளுக்கு பொறுப்பாய்
பரந்த மனமும் நியாய குணமும்
இருபுறமும் இருந்தால் பிழைப்பான் ஆண்மகன்
இல்லாவிடில் ஆகிவிடும் அவன் கதி அதோகதி
venkkiram
13th February 2013, 09:54 AM
அதோகதி அப்பாவிகள்
ஆடம்பர வாழ்க்கை அரசியல்வாதிகள்
இயன்றவரை சுருட்டும் அதிகாரிகள்
ஈகையற்ற தெய்வங்கள்
உறிஞ்சிப் பிழைக்கும் மருத்துவர்கள்
ஊக்கம் தராத ஊடகங்கள்
எஞ்சியதையும் அபகரிக்கும் பள்ளிகள்
ஏப்பமிடும் விலைவாசி
ஐயமுடன் பொதுமக்கள்
ஒற்றுமை குலைந்த மதங்கள்
ஓயாமல் விவாதிக்கும் இணைய வீரர்கள்
ஔடதம் நமக்கெல்லாம் நேர்மறை நெஞ்சமே
chinnakkannan
13th February 2013, 10:36 AM
நெஞ்சமே
இந்தா சுக்குக் கஷாயம்
அநியாயங்களை ஜீரணிக்க..
நெஞ்சமே
இந்தா க்ராண்ட் ஸ்வீட்..
நாளை
பிடித்த நடிகரின்படம் போனாலும் போவேன்..
நெஞ்சமே
இந்தா ஐஸ்க்ரீம்
திரைக்கு அவளும் வருகிறேன்
என்று சொல்லி இருக்கிறாள்..
இருந்தாலும்
இப்போதைய உடனடி தேவை
ஒன்று..
தா ஒரு கொஞ்சும் கவிதை..
pavalamani pragasam
13th February 2013, 01:11 PM
கவிதையிலே கொஞ்சிக்கோ
காசை அள்ளி வீசிக்கோ
கவனமாய் இருந்துக்கோ
காமன் தின உற்சாகம்
கரை உடைத்துவிட்டால்
கண்ட பெண்ணிடமும்
கைவரிசை காட்டினால்
காத்திருக்கு போலீஸு
காப்பு மட்டுமில்லை பாஸ்போர்ட்
கனவுக்கும் ஆப்பாம் இது இன்று
கிடைத்த பத்திரிக்கைச் செய்தி
காலம் கடந்த பின் வருந்தாதே
chinnakkannan
13th February 2013, 08:28 PM
வருந்தாதே
கவலைப் படாதே
இது பொருத்தமாய்த் தான் இருக்கிறது..
இது என்ன ரூபியா..
நெக்லஸ் உன் கழுத்துக்கென்றே செய்தாற்போல்..
விலை..
அதிகம் என்றெல்லாம் நினைக்காதே
ச்ச் எடுத்துக்கம்மா..
வாலண்டைன் டே கிஃப்ட்..ஓ.கே..
ஒருவழியாய் அவ்ள் முகம்
மலர்ந்தபிறகு
கடனட்டை தேய்க்கையில்
வரத்தான் செய்தது
கொஞ்சம் கவலை..
venkkiram
14th February 2013, 08:50 AM
கவலை என்ற சிலந்தி வலையில்
சிலந்தியும் நீ இரையும் நீ
நல்லெண்ண துடைப்பத்தால்
(க)வலை அகற்று
தன்னம்பிக்கை நெம்புகோலால்
மூலை முடுக்கை விட்டு
உன்னையே நீ நகர்த்து
இருத்தலில் மனதை ஒருத்து
இயங்கிக் கொண்டெ இரு
pavalamani pragasam
14th February 2013, 09:03 AM
இரு என்று சொல்லிப் போனாள்
எங்கே தொலைந்துவிட்டாள்
கப்பல் வாங்கப் போனாளோ
சப்பல் வாங்கப் போனாளோ
ஒன்னும் புரியலையே அப்பாவி
நான் இவளை விரும்பும் பாவி
chinnakkannan
14th February 2013, 10:08 AM
பாவியான மனம்..
இரு உடைமாற்றுகிறேன்
என்று சொல்லி
அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாய்..
உடல் மட்டும் வெளியில்
மனதிலோ
மோதுகிறது அலை..
venkkiram
14th February 2013, 11:13 AM
அலை போல உயிர்க்காதல் தடுமாறுதே - உதிரும்
இலை போல என்னெஞ்சம் நிலை மாறுதே
மலை போல நினைவெல்லாம் உன் பிம்பமே - இனி
மறுபிறவி கண்டாலும் அகலாது நம் பந்தமே
chinnakkannan
14th February 2013, 11:51 AM
பந்தமே நமக்குள்
இனி
தொட்ரட்டும் என்பதால் தான்
இந்த் ஏழடி...
இருந்தாலும்
நீ என்பின்னால் வருஅதால்
பார்க்க இயலவில்லை..
உன்னைத் திரும்பிப் பார்க்கவும்
இயலாது..
என் கால்களையாவது
உன்னால் பார்க்க் முடிகிற்து..
அது ச்ரி..
நிச்சயம் ஆனதிலிருந்து
எத்தனை எஸ் எம் எஸ்
ஈமெய்ல் அனுப்பினேன்..
எந்த்தனை புகைப்படங்கள் அனுப்பினேன்
ஒன்றிற்காவது ரெஸ்பான்ஸ் செய்தாயா..
முக நூலில் நான் எழுதும்
க்விதைகள் உனக்குப் பிடித்த்ததா இல்லையா..
என் சிறுவயதுப் புகைப்படங்கள் எப்ப்டி..
ம்ம்
நிறையக் கேட்க வேண்டும்..
**
இப்படியா தரதரவென்று இழுப்பார்..
நல்ல முரடு..
காலின் குதிகாலில் லேசாய் அழுக்கு
அவருக்கு..
நன்றாய் தேங்காய் நார் கொடுத்துத்
தேய்க்கச் சொல்ல் வேண்டும்..
வேறென்ன நினைக்க..
மெட்டியில் கொஞ்சம் புடவையின் நூல்
இழுக்கிறது..
சரியாக நடக்க முடியாது..
இருந்தாலும் முயற்சி செய்ய வேண்டும்..
ஹோமகுண்ட்த்துக்கு இவ்ளோ பக்கமாகவா
நடக்கணும்..
*
சரி சரி உட்காருங்கோ..
நினைவு கலைந்து
வந்தாயிற்று நனவுக்கு...
pavalamani pragasam
14th February 2013, 01:27 PM
நனவுக்குக் கருணை உண்டோ
கடமையே கண்ணாய் நகருது
கனவுக்கு இல்லை கடிகாரம்
காலம் மறந்து கிடக்கிறது
இரண்டுக்கும் இடையே இன்புற்றிட
கால்கள் மண்ணில் ஊன்றியிருக்க
தலையோ மேகத்தில் மிதக்கின்ற
கலையில் தேர்ச்சி கைகொடுக்கும்
chinnakkannan
14th February 2013, 08:48 PM
கை கொடுக்கும் இல்லை
கால் கொடுக்கும்..
இரு கால்க்ளால் நின்று
வார்த்தை வராது குரல் கொடுக்கும்
ஏய் விடுறா வர்றேன் என்றால் விலகும்
பின் மெல்ல பின்னால் வரும்..
ஆனால் என்ன ஆயிற்று..இன்று அப்படி
இல்லையே..
வீட்டுக்குள் சென்றால்
ம்க்ன் சொன்னான்
அதற்கு உடம்பு முடியவில்லையாம்
அம்மா டாக்டரிடம் போயிருக்கிறாள்..
கொஞ்ச நேரம் கழித்து
மனைவி திரும்ப
பின்னால் அது..
என்னைப் பார்த்ததும்
வேகமாய் வந்து
வழக்கமாய் செய்வதைச் செய்ய
முகத்தில் மட்டும் கொஞ்சம் சோர்வு..
மனைவி
ஒண்ணுமில்லீங்க.. அது உண்டாயிருக்கு..
ஏய் கள்ளி சொல்ல்வே இல்லையே
அதனிடன் நான் சொல்ல
புரிந்தாற்போல் வாலாட்ட
அதன் முகத்தில் தெரிந்தது
மெலிதான வெட்கமா என்ன..
pavalamani pragasam
14th February 2013, 11:01 PM
என்ன சொல்ல
எப்படிச் சொல்ல
இல்லை நெருக்கம்
நீளும் தூரம்
நடுவில் திரை
விலக்கத் தடை
கிடைத்தது சுதந்திரம்
பறிபோனது உரிமை
பொருளில்லா உறவு
போராடும் மனது
சத்தமின்றி விலகவோ
சட்டப்படி விலகவோ
இதுதான் முடிவா
இல்லறத்தின் கதியா
இனிக்காத கட்டுப்பாடு
இணங்காத எழுச்சி
எங்கே தவறினோம்
எதனால் இழந்தோம்
கரும்பான நுகத்தடி
இரும்பாக கனக்குதே
பூட்டிய மாடுகள்
தனிப்பாதை தேடினால்
வண்டி எங்கு போகும்
பாரம் என்னவாகும்
chinnakkannan
15th February 2013, 08:48 AM
என்னவாகும் என்றெல்லாம்
யோசிக்க வைக்க
விடவே மாட்டாள் அக்கா..
படம் பார்க்கும் பொதே
அதோ அந்த சிவத்தவன் இருக்காம்ல
அவந்த்தேன் கொலகாரன்
ரிவ்யூல படிச்சோம்ல் என்பாள்..
எங்களுக்குக் கோபமாய் வரும்...
ஒரு நல்ல நாளில் கல்யாணங்கட்டி
மதுரைக்குப் போச்சு அக்கா..
அப்புறம்
பார்த்த த்ரில்லர் திரைப்படங்கள் எல்லாம்
சுமாராய்த் தான் பட்டது
எனக்கும் என் தம்பிக்கும்..
ஒரு படம் பார்த்துக் கொண்டிருக்கியில்
அக்கா இருந்துச்ச்ச்சுன்னா
சுவாரஸ்யமா எதாச்சும் சொல்லியிருக்கும்லா..
என்றேன்..
ஆமாம்லா என்றான் தம்பி..
pavalamani pragasam
15th February 2013, 01:01 PM
தம்பி இந்த இடத்துக்கு எப்படிப் போகணும்
இது மாதிரி நிறைய உடன்பிறவா அண்ணன்கள்
வாடா வந்து பாரு சண்டியராய் வம்பிழுக்கும்
பதர்கள் தொப்புள்க்கொடி தொடர்பில்லா தம்பிகள்
chinnakkannan
15th February 2013, 02:04 PM
தம்பிகள் தங்கைகள்
கல்யாணம் செய்து கொடுத்தாயிற்று..
அம்மாவும் போன மாதம்
போய்ச் சேர்ந்து விட்டாள்
எல்லாரும் சுற்றி வந்த வீட்டில்
இப்போது சுற்றுகிறது வெறுமை..
அலுவல் முடித்து
வீடு வந்து
முகம்கழுவிக்
கண்ணாடியில் பார்க்கையில்
முன்னெற்றியில்
ஒருமுடி வெள்ளிக் கோடாய்..
சோர்வுடன்
வரவேற்பறை வந்து
அமர்ந்து கண்கள் மூடினால்
கேள்விக் குறி தெரிகிறது
பெரிதாய்..
இனி என் வாழ்க்கை
என்னவாகும்?
venkkiram
15th February 2013, 05:40 PM
என்னவாகும் எதிர்காலம் சூரியனுக்கு
எரிபொருள் படிப்படியாக தீருமாம்
ஈர்ப்புவிசை அதற்கேற்ப மாறுமாம்
வெளிப்பகுதி வெடித்து சிதறுமாம்
வெப்பநிலை தாறுமாறாய் எகிறுமாம்
உருவம் அளவிலா பெரிதாகுமாம்
கோள்பாதைகள் ஒவ்வொன்றும் நீளுமாம்
பூமியை இழுத்து உறிஞ்சிவிடுமாம்
என்னவாகும் எதிர்காலம் இறைவனுக்கு
pavalamani pragasam
15th February 2013, 05:52 PM
என்னவாகும் பூமி உருண்டை
மேலும் மேலும் குப்பை
கொட்டுகிறோம் யோசிக்காமல்
மக்காததுதான் முக்கால்வாசி
இமயங்களாய் தினம் வளருது
ஆபத்தானது அணுக்கழிவு
அடுத்தவர் கரையில் கொட்டும்
பேரரசுகளின் சின்னப் புத்தி
உயிர் தாங்கும் பஞ்சபூதங்கள்
நஞ்சானதின்று நம் அறிவீனத்தால்
வரிசை கட்டி விழுங்கக் காத்திருக்கு
பெருநோய்கள் பேரிடர்கள் புரிகிறதா
chinnakkannan
16th February 2013, 05:30 PM
இறைவனுக்கு இப்படிக் கோபம்கூடாது
சமயங்களில்
திட்டித் தீர்ப்பாள் பக்கத்து வீட்டுப் பாட்டி..
எவ்ளோ படிச்சது குழந்தை
எவ்ளோ ஒழச்சது
நல்ல மார்க் கிடைக்கலியே
என பேத்தியைப் பற்றி..
மாடா ஒழைக்கறடா நீ
ஆனா உனக்கு ஏத்த சம்பளம்
கிடைக்கலையே..
மகனைப் பற்றி..
மருமகளின் உழைப்பைப்
பற்றியும்
மெலிதாய் முணுமுணுத்து
இறைவனைத் திட்டுவாள்..
பின்
ஒரு பொன் காலைப் பொழுதில்
எழாமலேயே அவள் போய்விட
வழியனுப்ப வந்தவர்கள் சொல்லினர்..
பரவாயில்லை
எவ்வளவு திட்டினாலும்
நல்ல சாவு தான்
கொடுத்திருக்கான் அவன்..
pavalamani pragasam
16th February 2013, 09:16 PM
அவன் ஒரு மிகச் சாதாரண சராசரி ஆண்மகன்
பொங்கிப் போடவும் பக்கத்தில் படுத்துறங்கவும்
பெற்று வளர்க்கவும் பணிவிடைகள் செய்திடவும்
போதும் பெண்டாட்டியென்ற பொது நீதியின் பிரதிநிதி
பாதியுடலை உமைக்கீந்த புராண முன்னோடி ஈசனோ
சதியை ரதசாரதியாக்கிய சாம்ராஜ்யபதி தசரதனோ
இதிகாசத்திலோ காவியத்திலோ சரித்திரத்திலோ அரிதே
ஆயினும் சுக்கானைப் பிடித்திருப்பர் மாதர் பல வீட்டிலே
chinnakkannan
17th February 2013, 10:20 AM
வீட்டிலே இருந்து கிளம்பி
இதோ இடப்பக்கம் போனீங்கன்னா
ஒன்றரை கிலோ மீட்டர்ல
ஹாஸ்பிட்டல்
வலப்பக்கம் மெயின் ரோட் ஜஸ்ட்
அரை கிலோ மீட்டர் தான்
பின்பக்கம் கொஞ்சம் மூணே மூணு
கிலோமீட்டர்ல
ரயில்வேஸ்டேஷன்
வர்ற ப்ளான் ஏற்கெனவே
அப்ரூவல் ஆய்டுச்சு
முன்னால் ஸ்ட்ரெய்ட்டா
போனீங்கன்னா ஒரே ஒரு
கிலோமீட்டர்ல ஸ்கூலும்
பெரிசா மாலும் வருது..
கண்ணை மூடிய படி
சொல்லிக் கொண்டிருந்தார்
மனை விற்பவர்..
கண்கள் திறந்தபடி
கற்பனை செய்து கொண்டிருந்தோம்
நாங்கள்
அந்தப் பொட்டல் வெளியில்
venkkiram
17th February 2013, 10:48 AM
வெளியில் கலந்து விட்டிருந்தது மணம்
என்னவள் கடந்து சென்றிருக்கிறாள் - அக
வெளியில் கலந்து விட்டிருந்தது காதல்
என்னுள் கரைந்து சென்றிருக்கிறாள்
chinnakkannan
17th February 2013, 11:12 AM
சென்றிருக்கிறாள் அம்மா
மேலோகம்..
ஒனக்கு எனக்கு எல்லாம்
நல்லது செய்ய
பொங்கிய துக்கத்தை
மறைத்து
பையனிடம் சொன்ன போது
பையன் கேட்டான்
எப்போ திரும்பி வருவா..
சொல்ல முடியவில்லை பதில்..
pavalamani pragasam
17th February 2013, 12:01 PM
பதில் தெரிந்தாகவேண்டும் இன்றெனக்கு
வாயில் கொழுக்கட்டையா ஏன் மௌனம்
ஏழடி என் பின்னே எடுத்து வந்தாய் வலம்
உன் பொல்லா சுதந்திரத்தை பறித்தேனா
போகாதே அங்கேயிங்கே என்று தடுத்தேனா
பேசாதே கண்டவனிடமும் என்றேனா
பட்டும் வைரமும் பரிசளிக்கவில்லையா
பாதுகாக்கும் பாங்கில் குறையுளதா
கொடுமையென்ன நான் செய்தேன் உனக்கு
பிள்ளைக்கு உன் மனதில் ஏனடி முதலிடம்
chinnakkannan
17th February 2013, 12:41 PM
முதலிடம் என்பது
ஒன்றே ஒன்று தான்
எனத் தெரிந்த பின்னும் கூட
போட்டிகள் பொறாமைகள்
வேதனைகள் ஏமாற்றங்கள்..
முதலிடம் பெற்றவர்
புன்னகை பூப்பதும்
தோற்றவர் வருந்துவதும்..
அது நிரந்திரமில்லை எனத்
தெரிந்த பிறகும்...
ஏதோ
சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கிறது
உலகம்
pavalamani pragasam
17th February 2013, 05:19 PM
உலகம் மாறிவிட்டதா
ஆமாம் ரொம்ப
உலகம் மாறவில்லையா
இல்லை கொஞ்சம் கூட
தேர்ந்த வக்கீலிடம்
என் மனக் குரங்கிடம்
ஒரு கேள்வியை கேட்கணுமா
மாட்டிக்கிட்டு முழிக்கணுமா
chinnakkannan
17th February 2013, 09:05 PM
மாட்டிக்கிட்டு முழிக்கணுமா
என யோசித்து
விவாதத்தில் கலந்துகொள்ளாமல்
இருப்பதை விட
கலந்து தீர்வு காண்பதே மேல்
பேசிக்கொண்டிருந்த தலைவரின்
செல்பேசி மெள்னமாயொலி எழுப்ப
பார்த்தால் மனைவியின் எண்..
பிற்கென்ன பேருரை சுருங்கியது..
venkkiram
18th February 2013, 06:48 AM
சுருங்கியது தேகம் சூடான வார்த்தைகளால்
அமைதியான அரங்கத்தில் அழைக்கும் தூரத்தில்
அமர்ந்திருந்த நெருங்கியத் தோழன் தோழியை
சத்தம் போட்டழைக்க சங்கோஜப்பட்டு
செல்பேசி மூலம் திடுக்கிடச் செய்தேன்
அழைத்த ஓசையை அணைத்துவிட்டு
ஆருயிர்த் தோழன் உதிர்த்தான் தோழியிடம்
எழவெடுத்தவன் இவனுக்கு நேரங்காலமே தெரியாது
pavalamani pragasam
18th February 2013, 08:37 AM
தெரியாது
நேரம் போவது
எவ்வெப்போது
கையில் ஒரு புத்தகம்
அருகில் காதல் துணை
திரையில் நல்ல படம்
கடற்கரைப் பொழுது
இணையத்தின் இணைப்பு
இனிப்பான தருணங்கள்
இதுபோல் எத்தனையோ
venkkiram
18th February 2013, 09:50 AM
எத்தனையோ இடப்பாடுகள் தடுத்தாலும்
என் ஏற்றத்தின் படிக்கட்டு நீயே
எத்தனையோ இருப்பிடங்கள் தெரிந்தாலும்
என் அன்பின் அடைக்கலம் நீயே
எத்தனையோ பாதைகள் கடந்தாலும்
என் தேடலின் தடம் நீயே
எத்தனையோ கானங்கள் கரைந்தாலும்
என் ஆடலின் பாடல் நீயே
எத்தனையோ வெளிச்சங்கள் விழுந்தாலும்
என் கண்ணின் நிறப்பிரிகை நீயே
எத்தனையோ பருவங்கள் தொடர்ந்தாலும்
என் மண்ணின் மழை நீயே
எத்தனையோ வார்த்தைகள் உதிர்த்தாலும்
என் உயிரின் உள்ளர்த்தம் நீயே
எத்தனையோ தத்துவங்கள் உணர்ந்தாலும்
என் வாழ்நாளின் படிப்பினை நீயே
pavalamani pragasam
18th February 2013, 11:51 AM
நீயே எந்தன் உயிர் என்கிறாய்
நூதனமாய் என்னை கொல்கிறாய்
அன்புச் சிறையில் மூச்சு முட்டுதே
காற்று புகா இடைவெளி காதலா
அது என் சுதந்திரத்தின் சாதலா
எங்கு சென்றாலும் பின் தொடர்கிறாய்
என்னிடம் உனக்கு மோகமா சந்தேகமா
எனக்கே எனக்கு கொஞ்சம் இடம் கொடு
chinnakkannan
18th February 2013, 12:37 PM
இடம் கொடு என
எப்போது கேட்டாலும்
அழிச்சாட்டியம் ப்ண்ணுவான் கதிரேசன்..
அவனுக்கு கணேஷீடன் தான் இருக்கவேண்டும்..
மனமில்லாமல்
முன் பெஞ்ச்சில் அமர்ந்து கொள்வேன் பள்ளிக்காலங்களில்..
வருஷங்கள் பல செல்ல
ஒரு நன்னாளில்
பள்ளி சென்ற போது
நாங்க்ள் இருந்த வகுப்பு
பெஞ்சுகள் மாறாமல்..
என் முடியில் நரை, உடலில் மாற்றங்கள்..
கதிரேசனும் நினைவில் வந்தான்..
எங்கு இருக்கிறானோ..
போன வருடம் விபத்தில் மரித்த கணேஷும் நினைவில்..
நினைவு மயக்கத்தில்
பள்ளியின்வாசலுக்கு வந்தால்
ஒரு பெரியவர்..
இவர்..இல்லை இவன்..
கதிரேசன் வழுக்கை விழுந்து
முகச் சுருக்கம்..
அறிமுகப் படுத்திக் கொண்டு
மகிழ்ச்சி எண்ணங்க்ளில் நீந்தினால்..
கணேஷைப் பற்றிக் கேள்விப்பட்டதும்..
அவன் முகத்தில் வருத்தம்..
உனக்கு இடம் கொடுத்திருக்கலாம்டா..
அன்னிக்கு..ஏதோ..
வேறேன்ன சொல்ல முடியும்
சோகப் புன்முறவல் பரிமாறுவதைத் தவிர..
pavalamani pragasam
18th February 2013, 03:14 PM
பரிமாறுவதைத் தவிர வேறு வேலைகளை
வேற்று ஆட்களிடம் கொடுக்கலாம் ஏனெனில்
சாப்பிடுபவன் பரிமாறும் கரங்களிடம் மட்டும்
சொக்கித்தான் போகிறான் பார்த்துப் பார்த்து
ருசியறிந்து பசியறிந்து பாவை பரிமாறினால்
பாங்காய் சமைத்திறக்கக் கற்காதவளும்
வயிற்று வழி சுருக்கப் பாதையில் சென்று
கொண்டவன் மனதிலே இடம் பிடிக்கலாம்
chinnakkannan
18th February 2013, 04:10 PM
இடம் பிடிக்கலாம் முன்னாலேயே
என
சீக்கிரமாகவே
மீனாட்சி கோவிலுக்கு
கூட்டிச் சென்று விடுவாள் அம்மா..
உள்ளே சென்று
வேகமாய் தரிசித்துவிட்டு
ஆடிவீதி வந்தால்
கூட்டம் சேர ஆரம்பித்திருக்கும்..
அதிலும்
கொஞ்சம்முன்சென்று
அரைடிராய்ர் அணிந்த என்னுடன்
அமர்ந்து கொள்வாள்..
காலட்சேபம்
ராஜம் சீனிவாசனோ, வாரியாரோ..
யாராயிருந்தாலும்..
அவ்வ்ப்போது
காற்று சுகம் விசாரிக்கும்...
ஒருமணி நேரத்தில்
லேசாகப் பசியெடுக்குதோ என நினைத்தால்
குட்டிப் பையிலிருந்து
வேகவைத்த கடலை,
அல்லது வேறு ஏதாவது எட்டிப் பார்க்கும்..
சுவாரஸ்யமாயிருக்கும்
காலட்சேபமும் கடலையும்..
வீடு திரும்பினால்
லேட்டாய் வந்ததற்காக
அம்மாவிடம்
அப்பா நடத்தும் காலட்சேபம்
இன்னும் சுவாரஸ்யம்..
இந்தக் கால
காலட்சேப டிவிடிக்களில்
இல்லை அந்தச் சுவை..
pavalamani pragasam
18th February 2013, 08:02 PM
சுவை அதிகம் கூட்டாஞ்சோற்றிலே
பாட்டி வீட்டு மொட்டை மாடியிலே
கட்டுச்சோற்றின் சுவை அலாதி இடம்
அழகர் மலை தேக்கடி வைகையணையெனின்
குழம்பு கூட்டு துவையல் சுவையோ சுவை
அம்மா தன் கையால் செய்து தரும் போது
chinnakkannan
19th February 2013, 12:38 PM
தன்கையால் செய்து தரும்போது
தான்
உணவு ஒட்டும்
என
எவ்வளவு வேலை பார்த்தபோதிலும்
அம்மா
அவனுக்காகக் காத்திருப்பாள் சாப்பிடாமல்..
அவன் வந்தபிறகுதான்
அவனுக்குப் போட்டு பின் உண்ணுவாள்..
காலங்கள் மாற
அவனுக்கென்று ஒரு அவள் வர..
அம்மாவுக்குக் கட்டாய ஓய்வு..
என்ன புதுசாவா நடக்குது
திண்ணையில் படுத்தபடி
கொசுக்களிடம் பேசிக் கொண்டிருப்பாள்..
அவனுக்கும் அவனுடைய அவளிடம்
குறையொன்றுமில்லை..
அம்மா இருக்கும்போது எப்படியோ
அப்படியே நடக்கிறது என..
ஒரு நாள்
அம்மா கண்விழிக்கவேயில்லை..
அழுகையில்
“அம்மா யார்மா அன்பு கலந்து
தருவா எனக்கு” என
அவன் வெடித்துக் கதற..
அவளுக்கோ வியப்பு, அதிர்ச்சி..
pavalamani pragasam
19th February 2013, 07:40 PM
அதிர்ச்சி அடைந்தது ஆழ்கடல்
நகர்ந்து கொடுத்தததன் அடி மடி
அம்மாடி குலுங்கியது பூலோகம்
பொங்கியெழுந்தது மலையாய் அலை
கொன்று குவித்தது கடற்கரையை
சுத்தம் செய்ய தேவையா சுனாமி
chinnakkannan
19th February 2013, 10:41 PM
சுனாமி போலத் தான்
இருந்ததடா உன் வருகை..
விமான நிலையத்தில்
ஓ..ரொம்ப வெயில்லில்லை
எனச் சொல்லி
குளிர்கண்ணாடியைக் கழட்டி
என்னைப் பார்த்த உன் கண்கள்..
பின் கேட்ட கேள்வி..
ஏன் இளைச்சுப் போய்ட்ட..
உன் டாட் வந்திருக்காரா..
பின் காரில்
உடமைகளை ஏற்றி
வீடு செல்லும் வரை
உன் வேலை முதல்
உன் குடியிருப்பில் இருக்கும்
ஓமானியக் கன்னிகை வரை
வாய் வலிக்க வலிக்கச் சொன்னது...
அப்பாவிடம்
ஹாய் டாட் என நமஸ்காரம் பண்ணி
அம்மாவிடமும் கை குவித்து
பாவ் சூ பண்ணட்டுமா ஆண்ட்டி..
எனச் சொல்லிக் கால் தொட
அம்மா கூச்சப் பட்டது..
மாடியில் உன்னறை எனக் காட்டிய போது
ஷ் என்னடா இது கழுத்தில..
என்னவெனத் தெரியாமல் நான் திகைக்க
பட்டென அணைத்துக் கொண்டது..
நான் திமிறி
ப்ளீஸ் விடுப்பா..
எனக்கு லீவ் நாள் எனச் சும்மாச் சொல்ல
ஸாரிடா ஸாரிடா என நீ கொண்ட பதற்றம்..
பொய் எனச் சொல்லலாமா எனத் தவித்து
நான் இறங்கி என்னறைக்குச் சென்றது..
பின் கழிந்த இரு நாட்கள்..
பேல் பூரின்னா மும்பை தான் டாட்
ஆண்ட்டி வெங்காய சாம்பார் பிரமாதம்..
சென்னை வாங்க
கச்சேரி ரோட்ல ஒரு ஹோட்டல்
கூட்டிப் போறேன்..
அப்புறம் நீங்க பாடுவீங்களாமே
எனக்கு மலய மாருதம் பிடிக்கும்
கண்ணனே நீவர்க்காத்திருந்தேன்..
டாட்..நீங்க அந்த ஷேர்ஸ் வாங்குங்க
கண்டிப்பா கூடும்..
என
திறந்துவிட்ட குழாயாய் சளசளவெனப் பேச
அம்மா என்னிடம்
என்னடி இது என்னை ஆண்ட்டிங்கறான்
உங்கப்பாவை டாட்ங்கறான்
எனத் திகைத்தது..
பின் மறுபடி ஏர்போர்ட் செல்லும் வரை
என்னுடன் தனிமையைத் தவிர்த்தது..
நான் தான் உன்னை வம்படியாகத்
தனிமையில் இழுத்தேன்..
ஏய்..என்னது இது..
போடா..சும்மா சொன்னேன்..
சும்மாவா சொன்னே சும்மாவா சொன்னே
.
பின் வலித்த கன்னம்..
சென்னைல ரெண்டு நாள் ஆபீஸ்வேலை
முடிச்சுட்டு ஸ்டெரெயிட் மஸ்கட்..
எனிவே மூணுமாசம் கழிச்சு வரணும்ல
கல்யாணத்துக்கு..
இருக்கவே இருக்குவெப்காமரா..
காண்டாக்ட் பண்றேன்..
ச்சீ சீ..என்னது இது..
பச்சப் புள்ளயாட்டமா..
டாட் ஆண்ட்டி சொல்லப்படாதா
எனச் சொல்லிக் காட்டிய டாட்டா..
சுனாமி தாண்டா நீ..
போய்விட்டாய்..
என் நினைவுகளில் தடங்களைப்
பதித்து விட்டு
pavalamani pragasam
20th February 2013, 08:44 AM
பதித்து விட்டுப் பார்
பொன்னிலே வைரத்தை
பொருத்தமான சேர்க்கை
பொறுமையோடு நம்பிக்கை
venkkiram
21st February 2013, 09:38 AM
நம்பிக்கை விதைகளை ஊன்று
உரிமை மறுக்கப் பட்டாலும்
உழைப்பு சுரண்டப் பட்டாலும்
உதிரம் உறிஞ்சப் பட்டாலும்
உணர்வு நசுக்கப் பட்டாலும்
நம்பிக்கை விதைகளை ஊன்று
பட்ட மரம் பாலூறும்
பட்ட துன்பம் விட்டகலும்
chinnakkannan
21st February 2013, 11:16 AM
துன்பம் விட்டகலும்
என மொழிந்தார் ஜோசியர்..
எப்போங்க..கேட்டான் அவன்..
எல்லாம் இந்த மாசம் முப்பத்தொன்றாம் தேதி..
மாசக்கடைசியில் சென்றால்
அவரில்லை..
போய்விட்டாராம் வானுலகு..
பலன் சொன்னது அவனுக்கா
அல்லது அவருக்கேவா..
தெரிய்வில்லை..
pavalamani pragasam
21st February 2013, 12:52 PM
தெரியவில்லை பாம்பா கயிறா என்று
பாலா கள்ளா வெள்ளை திரவமிது
வலமா இடமா திசைகாட்டியில்லை
இது போல் குழப்பங்கள் ஏராளம்
எப்படித் தீர்மானிப்பதோ முடிவாக
ஏழாம் அறிவொன்று இருக்கிறதே
chinnakkannan
21st February 2013, 10:29 PM
இருக்கிறதே ஏற்கெனவே
என்றெல்லாம்
யோசிக்கவே மாட்டாள்
கீழ் ஃப்ளாட் சிந்திப் பெண் சிந்துஜா..
பாத்திரம், நகை இன்ன பிற
எதுவானாலும்
இரண்டு தான் வாங்குவாள்..
அவள் கணவனும்
பெரிய உத்யோகம்
எனில் கவலை இல்லை..
நல்லதொரு நன்னாளில்
அவளுக்கு
தன்கணவனுக்கும் தன்
வழக்கம் வேறு வித்மாய்
இருப்பது தெரிய வந்தது..
இப்போது
ஒரு வக்கீல் தேடுவதகவும்
மேட்ரிமோனியலில்
இளம் விவாகரத்தான பெண்ணிற்குக்
கணவன் தேவை என்றும்
விளம்பரம் போட்டிருப்பதாகக்
கேள்வி!!
pavalamani pragasam
22nd February 2013, 09:07 AM
கேள்வி இருந்தால்
இருக்கும் பதில்
பூட்டுக்கு சாவி
ஆணுக்குப் பெண்
உடலுக்கு உயிர்
இயற்கை நியதி
chinnakkannan
22nd February 2013, 03:39 PM
இயற்கை நியதி இது
எனச் சொல்ல முடியும்..
அதில்
சீற்றங்களும் அடங்கும்..
காரணமும் சொல்லலாம்..
ஆனால் புரிவதில்லை
எப்போது ஏற்படுமென்று..
ஒருவேளை அது
காலத்தின் கணக்கோ..
pavalamani pragasam
22nd February 2013, 06:06 PM
கணக்கோ பௌதிகமோ
தமிழோ ஆங்கிலமோ
வேப்பங்காயாய் கசக்கும்
பரிட்சைக்காக படிக்கையிலே
பின்னாளில் கைகொடுக்கும்
பிள்ளைகள் படிக்கும் போது
சமைக்கப் பழக பிடிக்கவில்லை
அம்மா விடாது நச்சரித்த போது
பிடித்தது பதி பாராட்டுகையில்
பழம் பழுக்க நாளாகும் காத்திரு
chinnakkannan
22nd February 2013, 06:09 PM
காத்திரு என்று
சொல்லித் தான் செல்கின்றன
மேகங்கள்..
வருமோ வராதோ
என்ற தவிப்பில்
முழித்துக் கொண்டிருக்கிறது
நிலா
pavalamani pragasam
22nd February 2013, 08:42 PM
நிலா ஒரு நிகரில்லா பின்னணி
மொட்டை மாடியில் சோறுண்ண
கடற்கரையில் கூடி விளையாடிட
பஞ்சணையில் சதிபதி சரசமாடிட
பிள்ளைக்குக் கதை பல சொல்லிட
விவரிக்கவியலாத ஓர் வசியம்
venkkiram
22nd February 2013, 08:50 PM
வசியம் எனப்படுவது யாதெனின் தனக்கேற்ப
பிறரை ஆட்டு வைத்தல்.
chinnakkannan
23rd February 2013, 12:11 AM
வைத்தல் நல்லதென்றுஓர் நடிகர்
வாங்குங்கள் என்று ஓர் நடிகர்
வாங்காதே அக்கடையில் என்று ஓர் நடிகர்
இந்தக் கடை ராசி என ஓர் நடிகை
எல்லாரையும் புன்னகைத்தபடி
பார்த்துக்கொண்டே
ஸீ ஸா ஆடிக் கொண்டிருக்கிறது தங்கநகை..
pavalamani pragasam
23rd February 2013, 07:47 AM
தங்கநகை ஏதுக்கடி என் ஆசை தங்கமே
கையாலாகா ஆம்பளையா நீ மச்சானே
திருட்டுப்பய தீங்கு செய்வான் கண்ணே
உனக்கு இந்த மீசையெதுக்கு கன்ணாளா
பெட்டிக்குள்ள பூட்டிவைக்க நகையெதுக்கு
ரசிக்கத் தெரியாதவனுக்கு இது ஒரு சாக்கு
சேதாரம் செய்கூலி ஏமாத்து வேலையிருக்கு
உருக்கி ஊதி செஞ்சி தர முடியுமா உனக்கு
உன்னோட பேசி வெல்ல முடியுமா எனக்கு
அப்போ சட்டைய மாட்டு கடைக்குக் கிளம்பு
chinnakkannan
23rd February 2013, 08:54 PM
கிளம்பு என்றால் ஒரே அடம்..
அன்னிக்கே ஏன் வாங்கித் தல்லை..
வர மாத்தேன் போ..
வாடி செல்லம் எனக் கொஞ்சி கெஞ்சி..
அதே கடை..அதே கார்..காட்டினால்
ம்ஹீம் வேண்டாம்..
வேற இத்து..
வேணாம்டா நல்லா இல்லை..
ம்ஹீம்..இதான்..
சரி என வாங்கிக் கொடுத்து
திரும்பும் போது
பேசாமல் நான் வர
அப்பா..
ம்ம்
ஏன் பேசமாட்டேங்கற..
நீ பேட் கேர்ள்..
ஓகே இனிமே குட் கேர்ள்
வேணும்ன கடைல கொடுத்துடலாமா..
புத்திசாலி..மறுபடியும் பத்து நிமிஷம் திரும்பணுமா..வேண்டாம்..
ச்ரி தூக்கிக்கோ
பேட் கேர்ளத் தூக்க மாட்டேன்
ப்பா ப்ளீஸ்பா..
க்ண்சுருக்கிய அழகுக் கெஞ்சலில்
பாதி மயங்கி
தூக்கினால்..
பச்சக்.. ஓகேயா.. இப்ப சொல்லு..
நான் யார்..
குட் கேர்ள்..
சொன்னேன் முழு மயக்கத்தில்..
pavalamani pragasam
24th February 2013, 07:39 AM
மயக்கத்தில் மூழ்கிவிடும் எனது மூளை
உள்ளும் புறமும் மறந்த ஆனந்த வேளை
பிடித்த காதாசிரியரின் புத்தகம் கையில்
பள்ளி நாட்களில் வேர் விட்ட என் பழக்கம்
யானை தும்பிக்கையில் சங்கிலியென்றதை
அம்மா செல்லமாய் திட்டியது மறக்குமா
chinnakkannan
24th February 2013, 03:35 PM
திட்டியது மறக்குமா..
பல வருடங்களாயிற்று
நண்பன் தான் எனினும்..
அறிவே இல்லைடா
உனக்கு
என்னகாதல் வேண்டியிருக்கிறது..
முதல்ல படி..
பின் நல்ல வேலை..
அப்புறம் அவ இருந்தா பார்க்கலாம்..
படித்து முடிப்பதற்கு முன்பே
அவள் டாடா பைபை சொல்ல..
நான் முடித்து
இதோ கடல்கடந்து வந்து
நல்ல வேலையில்
இருபது வருடத்தையும் கடந்தாயிற்று..
அவனிடமும் இருந்து
மெல்ல விலகியாயிற்று..
ரொம்ப நாள் கழித்து
லீவில் சொந்த ஊர் போனதில்
அவனைப் பார்த்தேன்..
நரையைத்தவிர
அப்படியே இருந்தான்..
சிரித்தான்..
போடா பாவி..
ரொம்ப நாள் தாபத்தைக்
கக்கினேன்..
உன்னால் தான் நான்
என் காதலை மிஸ் ப்ண்ணினேன்..
நிறைய நாள் உன்னை
மனதில் திட்டியிருக்கிறேன் தெரியுமா..
எதுவும் பேசாமல்
என்னை மேலிருந்து கீழாகப் பார்த்தான்..
லாஞ்சைன்ஸ் கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி
பார்ஷே வாட்ச்..
விரலில் ஒன்றரைக் கேரட்
ஒற்றை வைர மோதிரம்..
வாசலில் நின்றிருந்த இன்னோவா..
கொழுக் மொழுக்கென
இருந்த, அவனது சோனி மகளுடன்
விளையாடிக் கொண்டிருந்த என் மகன்..
மனைவியின் டமாஸ் வளையல்கள்..
பின் என்னை
மறுபடியும் பார்க்க
அதில் பொதிந்திருந்தது பொருள்..
pavalamani pragasam
25th February 2013, 11:38 AM
பொருள் விளங்காத விரல் சைகை
திரு திருவென விழிக்கும் கோமாளி
பழுத்த பண்டிதன் அவன் எதிராளி
பொருள் இதுவென நம்பிய ஏமாளி
பழைய திரைப்படச் சிரிப்புக் காட்சி
ரசிக்கத்தக்க நகைச்சுவைக்கு சாட்சி
chinnakkannan
26th February 2013, 12:41 AM
சாட்சி தானே..
மேல இருக்கு பாரு..
வாசலுக்குத் தூக்கிக் கொண்டு போய்
காட்டுவாள் பாட்டி..
நிலா சிரிக்கும்..
பாரு.. என் தோசையை
அது மாதிரி இல்லை..
பிய்த்து மிளகாய்ப்பொடியில்
தொட்டு ஊட்டி விடுவாள்..
அரை டஜன்
வாய் பேசாமல் உள் செல்லும்..
ம்ம்
பாட்டி நினைவு நாளான இன்று
அவள் நினைவலைகளில்
மூழ்கியபடி தோசை வார்த்து
சற்றே மறந்து விட்டேன்
தீய்ந்த வாசனை வர
சற்றே பதறி
சமையலறையில் பார்த்ததில்
நல்லவேளை
முக்கால் வாசி சிவந்தே இருக்க
கீழ்வட்டப் பகுதி மட்டும்
பாட்டியின் தாடை மச்சம் போல
இருந்தது
சற்றே கறுத்து..
pavalamani pragasam
26th February 2013, 02:01 PM
கறுத்துப் போன உதடுகள் சொன்னது
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதென்று
கன்னக்கதுப்பும் தொந்தியும் காட்டியது
குடிப்பழக்கம் உறுதியாய் இருக்கிறதென்று
கண்களின் விகார கீழ் பார்வைகள் கூறியது
கண்டிப்பாய் இவன் ஒரு காமுகனென்று
பெண் பார்க்கும் படலம் ஒன்று முடிந்தது
கன்னி நிராகரித்தாள் மாப்பிள்ளையை
chinnakkannan
26th February 2013, 02:51 PM
மாப்பிள்ளையைப் பார்த்துக்கடி
மைனாக்குட்டி..
அப்போது பிரபலமான்பாடலை
அடிக்கடி பாடுவான் அவன்.. ரங்கன்
ஒவ்வொரு முறையும்
பள்ளிக்கு பச்சை மஞ்சள் சீருடையில்
செல்லும் போது..
கோபம் வரும்
கடங்காரா
என பலவிதமாய்
கொடுப்பேன் சாபம்..
பள்ளி முடிந்து
கல்லுரி சென்ற போது
என் வீடும் மாறியதால்
அவனைப் பார்க்கவில்லை..
ஒரு நாள்
கோவிலில் பார்த்த போது
அவனுடன் ஒருத்தி
கட்டை குட்டையாய்
கொஞ்சம் கிளிமூக்காய்
ஏகப் பட்ட நகைகளுடன்
அவன் பணிவாய்..
என்னை ஒரு கணம் பார்த்துவிட்டு
பார்க்காதது போல் இருக்க..
எனக்கு
வந்தது சிரிப்பு பீறிட்டு..
pavalamani pragasam
26th February 2013, 10:58 PM
பீறிட்டு வருவது அழுகையா சிரிப்பா
எதுவானால் என்ன மறைக்க வேண்டாமா
கைக்குக் கிடைத்தது உன் முந்தானையா
கழுத்தை சுற்றிக் கிடக்கும் துப்பட்டாவா
எதுவானால் என்ன எடுத்து வாயை மூடு
அந்தரங்கம் பிறர் அறியாமல் திரை போடு
chinnakkannan
27th February 2013, 12:39 PM
திரை போடு
பெரிய குருக்கள் சொல்ல
சின்னவர் திரையை மூட..
ஓடி வந்த அவன் நின்றான்..
அச்சச்சோ மூடிடுத்தா..
கண்ணை மூடி கொஞ்சம் தியானித்து
பெருமாளே காப்பாத்து..சொல்லி
பின் விரைய
சென்றவனின் பின்னால்
தொடர்ந்தார் பெருமாள்..
pavalamani pragasam
27th February 2013, 07:21 PM
பெருமாள் பிச்சை எடுப்பாராம்
பிடுங்கித் தின்பாராம் அனுமார்
பெரியோர் கட்டிக் காப்பார் தர்மத்தை
பலனை அனுபவிப்பர் பின் சந்ததிகள்
chinnakkannan
28th February 2013, 12:48 PM
சந்ததிக்ளின் நன்மைக்காகத்
தான்
இந்த தான தர்மங்களெல்லாம்..
புன்சிரிப்புடன் சொன்னார் வள்ளல்..
அப்போது
நீங்கள் செய்த பாவங்களெல்லாம்..
பதில் சொன்னார் வள்ளல்..
என் சொத்துக்களான புண்ணியம்
அவர்களை போய்ச்சேரும் நேரிடையாக..
பாவங்கள் எனது கடன் போல..
என்போன்ற மானிடரால் பிரிக்க இயலாது..
அவற்றைப் பிரித்து வழங்குவான்
மேலே உள்ளவன்..
pavalamani pragasam
28th February 2013, 01:33 PM
மேலே உள்ளவனை என்ன செய்யலாம்
அவனுக்கு திமிர் அலட்சியம் அதிகம்
கொட்டுகிறான் குப்பையை ஜன்னல் வழியே
வருந்துது என் தோட்டத்து கண்மணிகள்
chinnakkannan
1st March 2013, 03:24 PM
கண்மணிகளுடன் இமை
ஒட்டிக் கொண்டாற்போல் பிரமை..
மருந்து விட்டுச் சென்று
அரை மணி இருக்குமா
என்னவெல்லாம் குரல்கள் வெளியே..
எனக்குப் பதினொரு மணி அப்பாய்ண்ட்மெண்ட்
உறுதியாவா.
கொஞசம் இருங்கள்
கம்ப்யூட்டரில் செக் பண்ணுகிறேன்
ரிசப்ஷனிஸ்டின் குரல்..
அந்த ஆர்தோபீடிஸ்ட் எந்த அறை..
நீங்கள் முதல் மாடி செல்லவேண்டும்
மீண்டும் அவள் குரலே..
நான் கண்ணைத் திறக்கலாமா நர்ஸ்
பக்கத்தில் எனக்கு முன்னமேயே
கண்ணை மூடியிருந்தவரின் குரல்...
கொஞசம் இன்னும் ஐந்து நிமிடம்..
மெல்லிய பதில்..
வெளியில்
ர்ரென்று சப்தம்
ஆட்டோவா பைக்கா..
செல்வேறு சத்தம் போடுகிறது
என்னால் எடுக்க இயலாது
யாராய் இருக்கும்
அவள் தான்
இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்
எனக் கேட்பாள்..
என்னால் எடுக்கமுடியும்
பார்க்க முடியாதே..
அப்பாடி நின்று விட்டது..
மறுபடியும் கொய்ங்க்
இதுஎஸ் எம் எஸ்
அவளாகத் தான் இருக்கும்..
காத்திருக்கட்டும்..
ஒருவழியாய்
கண்ணைத் திறங்க சார்..
குரல் வர
பிசுபிசுத்த கண்களை
சற்றே சிரமப்பட்டுத் திறந்தால்
முதலில் மசமசப்பாக
பின் தெளிவாக..
ஆஹா உலகம் எவ்வளவு
பிரகாசமாய்..
ம்ம்
இருட்டில் தான் தெரிகிறது
வெளிச்சத்தின் அருமை..
pavalamani pragasam
1st March 2013, 07:02 PM
அருமையாய் போற்றி
வளர்த்தார் அப்பா
அதை இவரிடம் நான்
எதிர்பார்த்தால் தப்பா
அவர் மகளை பொத்தி
வளர்க்கிறார் அருமையாய்
அவள் அதையே நினைப்பாள்
பின்னாளில் ஒரு தாரமாய்
என் தாய் இன்றும் ஓயாமல்
போற்றுகிறார் தந்தையை
பேத்தியும் செய்வாள் இதை
என்னென்பது இவ்விந்தையை
chinnakkannan
2nd March 2013, 04:18 PM
இவ்விந்தையை என்னென்று
சொல்வது
வியந்தார் தமிழாசிரியர்..
வழக்கமாய்
முத்து முத்தாய் எழுதும் முத்து
கொஞ்சம் கோழிக் கிறுக்கலாய்..
என்னடா ஆச்சு..
ட்ராயரைத்தூக்கி விட்ட படி
வழக்கமா எதிர் வீட்டு அக்கா
சொல்லிக் கொடுக்கும்
ஸ்கூல் முடிச்சுப் போனதும்..
போனவாரம் அக்கா போய்டுச்சு..”
“ஓ கல்யாணம் ஆய்டுச்சா..”
“இல்லை சார்”
தலையை அசைத்தான் தீர்மானமாக..
“செத்துப்போச்சு
ஏதோ காதலாம்”
கண்ணில் முட்டியது அழுகை..
சரி..போ..என்னிடம் வா
ஸ்கூல் முடிந்ததும்..
சொல்லித் தருகிறேன் என்றவருக்கு
பையனின் எதிர் வீட்டு அக்காவின் முகம்
நிழலாய்..
pavalamani pragasam
2nd March 2013, 10:05 PM
நிழலாய்
தொடர்வது
வினை
விதி
பாவம்
புண்ணியம்
சாவு
கிரகம்
நட்பு
மனசாட்சி
chinnakkannan
3rd March 2013, 12:03 AM
மனசாட்சி
சற்றேனும் சிலருக்கு இருப்பதனால்
அவ்வப்போது
பெய்கிறது மழை..
pavalamani pragasam
3rd March 2013, 07:47 AM
மழையின் சத்தம்
மனதிற்கு இதம்
தாலாட்டும் கீதம்
கிடைக்குமா நிதம்
venkkiram
3rd March 2013, 09:30 AM
நிதம் நினைக்கணும்
நிழலாய் தொடரணும்
சதா கொஞ்சனும்
சகஜமாய் பழகணும்
விடாமல் துரத்தனும்
விழாமல் தாங்கனும்
இமைக்காமல் பார்க்கணும்
மலைக்காமல் ரசிக்கணும்
pavalamani pragasam
3rd March 2013, 01:03 PM
ரசிக்கணும் என்றுதானே ஒப்பனை
அலங்கார சாதனங்களின் விற்பனை
என்னைப் பார் என் அழகைப் பார் என்று
மூடியும் மூடாமலும் தெரியும் அங்கங்கள்
கண்ணைக் கவரும் கவர்ச்சி விளம்பரங்கள்
கருத்தை மயக்கும் மாய வலைகள்
விரிப்பவவை வர்த்தக நிறுவனங்கள்
மழுங்குதுதே மெல்லிய உணர்வுகள்
kaveri kannan
3rd March 2013, 09:30 PM
உணர்வுகள் அனிச்சமலராய்...
உரசல்படாமல் காத்துக்கொள்ள
கவசமிட்டால் வந்தது
கல்நெஞ்சக்காரி பட்டம்!
RAGHAVENDRA
3rd March 2013, 11:58 PM
மனம் கொண்ட மணங்கள் -
தருமாம் மனோரஞ்சிதம்
மனம் கொண்ட உணர்வுகள் ....
வருமா அவள் சம்மதம் ?
kaveri kannan
4th March 2013, 02:07 AM
சம்மதம்..
துரட்டியைத் தொட்டெடுக்கவும் சம்மதம்
பொதுப்பாதையில் சிதறப்பட்ட
நரகலைப் பெருக்கி அகற்ற..
சம்மதம்..
முள்ளைக் கையாளவும் சம்மதம்
மென்நெஞ்சில் தைத்த வேறோர்
முள்ளைக் கீறி எறிய
pavalamani pragasam
4th March 2013, 07:57 AM
எறிய எடுத்த அம்பு கையில்
தயக்கம் பார்த்தன் நெஞ்சில்
ரத்த சொந்தங்களன்றோ எதிரில்
பிறந்தது கீதை சாரதி வாயில்
kaveri kannan
4th March 2013, 10:08 AM
வாயிலில் கருப்புத் தோரணமா
வீட்டினுள் அவர் இருக்கும்போது?
கண்மை இடாததற்கு
கன்னியின் விளக்கமிது!
chinnakkannan
4th March 2013, 10:16 AM
விளக்கமிது என எழுதினாலும்
பல சமயங்களில்
முழு மதிப்பெண் கிடைப்பதில்லை
ஏனெனில் தமிழ் மொழிப் பரீட்சையாம்..
பையன் அம்மாவிடம்
தயங்கியவாறே சொல்ல
அம்மா சொன்னாள்
இட்ஸ் ஆல்ரைட் டா..
கணிதம் இயற்பியல் வரலாற்றில்
நல்ல மார்க் எடுப்பாயல்லவா
அது போதும்..!
kaveri kannan
4th March 2013, 10:56 AM
போதும்.. ஊடல் என்ற உப்பிட்டது..
தாகம் கொல்லுமுன்
கூடல் நீர் ஊற்றிவிடு..
உயிர் நனையட்டும்!
pavalamani pragasam
4th March 2013, 03:24 PM
நனையட்டும் மனிதம்
சிறுமழையாய் புனிதம்
துளிர்க்கட்டும் இப்பயிர்
சிலிர்க்கட்டும் எமதுயிர்
kaveri kannan
5th March 2013, 04:01 AM
உயிர் உடம்பு எடுத்ததா
உடம்பு உயிர் எடுத்ததா
சிவவாக்கியர் வாக்கியம்...
பதிலில்லை இன்னமும்...
அசைவது உயிரா - சிதைந்து
வளர்வது உயிரா
உணர்வது உயிரா- கற்று
உயர்வது உயிரா
இனம் பெருக்குவது - சூழலுக்கு
ஏற்ப மாறுவது..
சிந்திப்பது..
நினைவில் வைப்பது..
???????????
உயிர் தந்த அறிவால் அலசியும்
உயிரின் வடிவம் பிடிபடவே இல்லை!
pavalamani pragasam
5th March 2013, 07:47 AM
பிடிபடவே இல்லை சந்தை நிலவரம்
புரியவே இல்லை திரைகளின் ஆதிக்கம்
தெளிவேயில்லை கலாச்சார குழப்பம்
பொங்கி வடியுது ஒரு கோடி ஆதங்கம்
chinnakkannan
5th March 2013, 10:20 AM
ஆதங்கம் அடிக்கடி படுவாள் மாமியார்..
என் குழந்தைகளில் இவனைத் தவிர
மத்தவாள்ளாம் நல்லா இருக்கா..
எனக்கு சுருக்கென்றிருக்கும்..
மனைவியிடம் சொல்வேன்..
ஏன் உன் இரண்டாவது அண்ணாவிடம்
மட்டும் உன் அம்மாவிற்குப்
ப்ரியம் அதிகம்..
நீங்கள் மொத்தம் அறுவர் ஆச்சே..
ஏதோ வயசானவா
விடுங்கோ..
வருடங்கள் பல
சென்ற பிறகுதான் புரிந்தது..
அது
அனைவரும் நலமாய் இருக்க
நினைத்த ஆசை..
kaveri kannan
5th March 2013, 12:16 PM
ஆசை அனைவரும் சமமாய் இருக்க..
ஆனால் இறைவனின் படைப்பில்
சிலர் மனநலம் குன்றி....
உடலில் மட்டும் வளர்ந்து...
உள்ளம் வளராமல் ... வளர வாய்ப்பே இல்லாமல்!!!!
If immature, its possible they might grow.. we can hope!
Alas.. in cases of dysmature, they never grow but we can adapt and cope!
தேவனின் மாற்றுத்திறன் தென்படும் உயிர்கள்..
அலட்சியப்படுத்தாமால் அரவணைப்போம்!
pavalamani pragasam
5th March 2013, 12:48 PM
அரவணைப்போம் உலகமயமாக்கலை
பழகுவோம் கன்னாபின்னா கலைகளை
விதைத்திடுவோம் மலட்டு விதைகளை
அடைப்போம் உள்நாட்டு சிறு வணிக வழிகளை
வேடிக்கைப் பார்ப்போம் பழுக்கும் பிஞ்சுகளை
அறிவோமா அழிக்க வந்த இந்த மாயசுழலை
kaveri kannan
5th March 2013, 12:53 PM
சுழலும் உலகப்பநது
சூடாகி மாற்றங்கள்.
மாறும் உலகில் மாறாதிருக்க
யான் வனவிலங்கல்லேன் --
கவியரசின் மொழிகேட்டு
மாறுகிறோம்..நிச்சயமாய்!
ஏறுமாற்றமா இறங்குமாற்றமா?
அதுதான் தடுமாற்றமாய்!!!
pavalamani pragasam
5th March 2013, 05:52 PM
தடுமாற்றமாய் இருக்கிறது
புத்தம்புதிய பாதையிது
பழகாத மனிதர்களோடு
புரியாத பழக்கங்களோடு
புது மருமகளின் மறு வீடு
போராடித்தான் வென்றிடு
kaveri kannan
5th March 2013, 06:31 PM
வென்றிடுவது போராட்டங்களால் மட்டுமன்று..
விட்டுக்கொடுப்பதிலும்.. ஏன்
வேண்டுமென்றே தோற்பதிலும் கூட உண்டு..
இல்லறம்...
இனிய விநோத ஆடுகளம்...
chinnakkannan
6th March 2013, 10:21 AM
ஆடுகளம் தான் இது..
புதிது புதிதாக ஆட்டக்காரர்கள்
நீந்தித் தவழ்ந்து எழுந்து
வெற்றி நடை போட்டவர்களும் உண்டு..
இடையிலேயே படக்கென
முடிந்தவர்களும் உண்டு..
ஆட்டம் முடியும் என்று
ஆட்டக்காரர்களுக்குத் தெரியும்
எப்போது என்று தெரியாது..
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
மட்டும்
சுவாரஸ்யம் தான்
எப்போதும் புதிய ஆட்டங்களைப் பார்ப்பது..
ஏதோ
ஆட்டக்காரகள் மாறிக் கொண்டே இருந்தாலும்
ஆடுகளம்
இருக்கிறது அப்படியே..
kaveri kannan
6th March 2013, 12:34 PM
அப்படியே இருக்கும் ஆடுகளம்...
அப்படியே இருப்பர்
முப்பத்துமுக்கோடி சந்திர சூரிய நட்சத்திரரும்..
எழுபது ஆண்டுகள் மட்டுமே பார்க்கும் என் விழிகளுக்கு..
எழுநூறு பில்லியன் ஆண்டு ஏட்டைப் புரட்டினால் தெரியும்
சிலர் பிறந்து ஒளிர்ந்து சிவந்து வீங்கி வெடித்து சிதற
சிலர் சுருங்கி கருத்து பெருங்குழியில் புதைய..
அண்டப் பெருவெளியில்
நட்சத்திர நாற்றங்காலில்
மாற்றமே சாசுவதம்..
காலமானி மட்டும் பலவிதம்..
chinnakkannan
6th March 2013, 01:41 PM
பலவிதமாய் சுகங்கள்
துன்பங்கள்
ஏற்ற இறக்கங்கள்
எல்லாம் பார்த்தாயிற்று..
பொக்கை வாயில் ஆரம்பித்து
பொக்கை வாய்க்கு வந்தாயிற்று..
உணவை விட
இப்போது
எண்ணங்களை அசைபோடுவதே அதிகம்..
கோடு அதன்மேல்கோடு
அதன் மேல்கோடு
என
எண்ணங்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிறழ்கின்றன..
நிரந்தரத் துயில் எப்போது வரும்
என பயம் தான்..
கதை முடிந்துவிட்டால் அவ்வளவு தான்..
வெறும் தூசு தூசாகக்
காற்றில்கலக்க வேண்டியது தான்..
நினைப்பார்களா
இந்தக் காற்றில் நான் இருக்கிறேன் என்று..
எல்லாமே கேள்விக்குறிதான்..
ம்ம்
வாழ்க்கை பற்றிய பயம்
வாழ்ந்து முடியும் போது
இருக்கிறது அதிகமாய்..
pavalamani pragasam
6th March 2013, 05:21 PM
அதிகமாய் யோசிப்பது அந்திம காலத்தில்
நிறைய நேரமிருக்கு கையில்
எளிதில் வருவதில்லை துயில்
வெறித்துப் பார்க்கும் வெட்டவெளியில்
எட்டிப்பார்க்கும் பரமாத்மாவின் ஒளியில்
கலக்கத் தவிப்பு ஜீவாத்மாவின் உயிரில்
venkkiram
7th March 2013, 08:46 AM
உயிரில் கலக்கும் உணர்வாம் காதல்
உடல் மறைந்தாலும் பின் தொடருமாம்
சிந்தையில் மலரும் விந்தையாம் காதல்
சிற்றின்பம பேரின்பம் காண விழையுமாம்
தேடலின் முடிவில் தோன்றுமாம் காதல்
ஊடலில் ஒதுங்கி கூடலில் இணையுமாம்
chinnakkannan
7th March 2013, 09:05 AM
இணையுமாம்
இன்னும் சொல்லிக் கொண்டு தான்
இருக்கிறார்கள் என
தம்மிடம் வருபவர்கள்
சொல்லி ஆதங்கப் படுவதைக்
கேட்டவண்ணம்
சிரித்த படி ஓடிக் கொண்டிருக்கின்றன
கங்கா காவேரி நதிகள்..
pavalamani pragasam
7th March 2013, 09:21 AM
நதிகள் கரையில் வளர்ந்த நகரங்கள்
நல்மனித நாகரிகத்தின் ஏணிப்படிகள்
கலையும் கல்வியும் தவழும் மடிகள்
சரித்திரம் சொல்லும் வண்ண பாடங்கள்
venkkiram
7th March 2013, 09:32 AM
நதிகள் கரை புரண்டோடும் மழைக் காலம்
மதகுகள் வாய் திறக்க கண்மாய் நிறையும்
மரஞ்செடிகள் தரை தட்டி சாலை மறிக்கும்
நஞ்சை வயல்களில் நெற்கதிர் மூழ்கும்
குளம் குட்டையில் சாரைகள் நெளியும்
முகங்கள் எல்லாம் குடைக்குள் ஒளியும்
பள்ளிக் கூடம் மூடப்பட்டு சிறார் கூட்டம்
காகிதக் கப்பல் விட மழையில் கால் பதிக்கும்
மின்சாரம் ஒரேயடியாய் நின்று போகும்
ஊரே சீக்கிரம் தூங்கி விடும்
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.