PDA

View Full Version : kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2



Pages : 1 [2] 3 4 5 6 7 8

pavalamani pragasam
7th July 2011, 08:48 AM
நாட்குறிப்பு எழுத புது ஆசை வருது
நாட்டு நடப்பை பதித்து வைக்கணும்
நாளுக்கொரு சேதி புழுதி கிளப்புது
நாகரிகமானது பக்தியும் ஆன்மீகமும்
சாமியும் சாமியாரும் காத்து வந்ததனரே
கருவூலங்களில் கொழிக்கும் கோடி செல்வம்
கொட்டுது கொட்டுது மழை சண்டமாருதமாய்
புதையலென்றால் புதையல் பாரறியாதது
புட்டபர்த்தி நேற்று பத்மனாபர் கோயிலின்று
அரங்கநாதனின் கருடன் பின் பொற்குவியல்
பத்திரிக்கையில் படித்தேன் செய்தி இன்று
என்றும் வளங்கள் நிறைந்தது எங்கள் நாடு

chinnakkannan
10th July 2011, 09:59 PM
நாடு போற்றிட நல்லவை கொண்டுதான் வந்த
கூடு போன்றதாய் உருவிலே புன்னகை சி ந்தி
ஊடி ம்க்களின் உணர்விலே எழுச்சியும் ஊட்டி
தேடிச் சுதந்திரம் கண்டவர் தாமவர் காந்தி...

pavalamani pragasam
10th July 2011, 11:51 PM
காந்திக்குப் பிடித்த மூன்று குரங்கு பொம்மை
என் வீட்டு கூடத்தை அலங்கரிப்பதுண்மை
காண்போர்க்கெல்லாம் நினைவூட்ட வேண்டுமது
கண்ணியமான கருத்துள்ள கட்டுப்பாடென்று
ஆயின் ஐயமொன்று எழுகின்றது மனதிலே
கண்ணில் விழுந்த சிறு தூசென உறுத்துது
கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும்
குரங்கு மூன்றும் கலங்குமோ குழம்புமோ
எப்போதும் ஊமையாய் செவிடாய் குருடாய்
இருந்திடத்தான் வேண்டுமோ கலியுகத்தில்
தீயவை என்பதன் புதுப் புது அர்த்தங்கள்
அனர்த்தங்கள் அரிதாரங்கள் புரியாமலே

chinnakkannan
11th July 2011, 10:56 AM
புரியாமலேயே
நடக்கின்றன
சில மாற்றங்கள்..
சில நிகழ்வுகள்..
**
சின்ன வயதில்
விழுந்து விழுந்து படித்து
பத்தாம் வகுப்பு வரை
முதலில் வந்த
பக்கத்து வீட்டு செல்வக்குமார்
பதினொன்றில் தடம் மாறி
கல்லூரிப் பக்கம் போகாமல்
ஊர்சுற்றும் ரவுடியாக மாறியது ஒன்று..

அடக்க ஒடுக்கமாக
பிறரைப் பார்க்கவே கூச்சப் படும்
குணம் கொண்ட
ரெட்டைத் தெரு சுகன்யா
காலப் போக்கில்
டெல்லிக்கு வேலைக்குச் சென்று
அங்குள்ள பஞ்சாபிப் பையனை
மணமுடித்து
பின் சொந்த ஊர் வந்த போது
எந்த வித தயக்கமுமில்லாமல்
என்னைப் பார்த்த போது
ஹாய் அங்கிள் எனப் புன்சிரித்த து..

மகன்களின் மீது மட்டும்
அன்பையும் பணத்தையும்கொட்டும்
எனது பாசக்கார மாமியார்
துரத்தித் துரத்தி
என் மனைவியுடன் தான் இருப்பேன் என
வெளி நாட்டில் இருந்த என்னை
குடியுரிமை விசா வாங்க வைத்து
வந்து
இருந்த இரண்டு மாதங்களில்
ஒரு இரவில்
மாரடைப்பில் மரித்த து....

முன்னர் இருந்த ஆட்சி
மோசமானது என
விழுந்து விழுந்து
சுட்டிக்காட்டிய பத்திரிகைகள்
மற்றும் தொலைக்காட்சிகள்
எல்லாம்
புதிய ஆட்சியின் செயல்பாடுகளைப்
பற்றி
முழுமையாக அலசாமல்
சிலவருடங்களுக்கு முன் தான்
வந்த
திரைப்பட நடிகரின் திருமணத்தை
வெகு வெகு முக்கியமாக
மக்களிடம் கொண்டு செல்வது....
**
இன்னும் இன்னும்...

புரியாமல் நடக்கும்
மாற்றங்களும்,
புரியாமல் நடக்கும்
நிகழ்வுகளும்...
தொடர்கதை தான்...
புரியவும் முயற்சிக்க் கூடாது..
ஏனெனில்
இது தான்
உலகம்...

kirukan
11th July 2011, 11:25 AM
உலகம் சுற்றி வந்த
வாலிபன் முன்
உமையாளையும் உமாபதியையும்
சுற்றி வந்து
உலகத்திற்கு virtualisationai
உணர்த்திய விநாயகனே போற்றி போற்றி!!!

-
கிறுக்கன்.

pavalamani pragasam
11th July 2011, 03:47 PM
போற்றி வளர்ப்பான் நல்ல தோட்டக்காரன்
செடிகளின் தனித்தன்மை தேவை அறிந்து
நிழலா வெயிலா நீர் விட்டிடும் அளவென்ன
கவாத்து செய்யும் காலமறிந்து ஒடித்து
சீராக நேராக எழிலாக மரம் திருத்தி
தக்க பருவத்தே தீதில்லா உரமிட்டு
அயராத உழைப்பும் கவனமும் குவித்து -
குடும்பமெனும் தோட்டத்து உறவுகளை
அங்ஙனமே பராமரிக்கும் இல்லாளின்
ஞானத்திலே ஞாலம் தழைத்திருக்குமே

chinnakkannan
11th July 2011, 06:03 PM
தழைத்திருக்குமே
செல்வம், பசுமை, மகிழ்ச்சி எல்லாம் நிறைந்து...
இப் புவி..
எப்பொழுது என்றால்...
**
பருவத்தே தவறாமல்
நல்லமழை பொழிந்து
பயிர்கள் செழித்து வளர்ந்தால்..
*
விவசாயியிடம்
நியாய விலைக்கே காய்கறி மற்ற உணவுப் பொருட்களை
வியாபாரி வாங்கி
மக்களிடமும்
நியாய விலைக்கே விற்றால்...
*
அரசியல்வாதிகள்
இன்முகத்துடன்
மனதார மக்களுக்காகவே உழைத்தால்..
*
காதலியின் நிஜ அழகை
தைரியமாக் க் காதலன் சொன்னால்...!
*
தமிழ்த் திரைப்பட்த் தயாரிப்பாளர்கள்
கதானாயகனிடம் வன்முறையையும்
கதானாயகியின் இடைப்பிரதேசத்தையும்
காட்டுவதை விட்டு
தரமான அதே சமயத்தில்
மற்றவர்களுக்கு நஷ்டமடைய வைக்காமல்
பொழுதையும் போக்கும்
நல்ல திரைப்படங்கள் கொடுத்தால்..
*
தொலைக்காட்சித் தொடர்கள்
அழுகை,பழிவாங்குதல்,
இரண்டு மூன்று பெண்டாட்டிகள்
போன்ற கருக்களை விட்டு
இயல்பாய்ப் படம் எடுத்தால்...
**
கல்லூரி மாணவ மாணவிகள்
தமிழில் ஷாப்பிங்க் மால் எனச் சொல்லப் படுகிற
விற்பனை வளாகங்களில்
அளவில்லாமல். அழகிய சிறிய உடையோடு
போய்வந்து கொண்டிராமல்
சமர்த்தாய் படிக்கும் நேரத்தில் படித்து
சுற்றும் நேரத்தில்
கட்டுப்பாட்டுடன் சுற்றி
பெற்றோரின் பணத்தை செலவழிக்காமல்
இருந்தால்...
**
பத்திரிக்கைகள்
புரியும்படியான
சிறுகதைகளையும்
அழகிய நற்கவிதைகளையும்(இதைப்போன்ற)
சிறந்த நகைச்சுவையையும்,
இளம் கதானாயகிகளின்
முழு ஆடை அணிந்த புகைப்படங்களையும்
வெளியிட்டிருந்தால்..
*
இளம்பெண்கள்
அழகிய ஆடை ஆபரணங்களை அணிந்து
திருட்டுபயமில்லாமல்
இரவில் நடக்க முடிந்தால்...
*
தங்கம் வெள்ளி போன்றவை
பாம ர ர்களும் வாங்கும் படி
விலை குறைவாயிருந்தால்..
**
ம்ம்..
பெருமூச்சு தான் வருகிறது..
இந்த பகற்கனவில்...
இவை எப்போ நடக்கும் சொக்கா...!

kirukan
11th July 2011, 06:30 PM
சொக்கா என
உதவிக்கு அழைத்தவனுக்கு
பக்கா பாட்டு
கொடுக்காமல்
பொருள் புதைந்த
பாட்டெழுதி
encoding எடுத்துரைத்த
சிவாய நாம:

chinnakkannan
11th July 2011, 10:52 PM
சிவாய நாமஹ..
இப்படித்தான் அந்தக்காலத்தில
என்னோடவீட்டுக்காரர்..ஒன்னோட தாத்தா
கடுதாசில்ல ஆரம்பிப்பாக..
நல்லா இருக்கியாப்பா..
நா ஒன் பாட்டி எழுதறேண்..
என்னது..ரெண்டு சுழி ன தான் போடோணும்..
நா செளக்கியம் நீ செளக்கியமாப்பா..
நீ எனக்கு அனுப்பிச்ச
ஐ நூறு டாலர் வந்துச்சுன்னு
ஒன் மதனி சொன்னா..
ஐயாயிரம் ரூபாயாமே..
அவ்வளவு எதுக்குப்பா
இந்த குருட்டுக் கிழவிக்கு...
ஏற்கெனவே
ஒம் மதனி
காலேல கேப்பக் கஞ்சி,
மத்தியானம் நீர்சோறு
ராத்திரில்ல ரெண்டு பூவ்ன் ப்ழம் கொடுக்கா..
ராசா சாப்பாடு தாம்ப்பா..
சீரணம் ஆவணும்ல..
நல்லாத்தான் இருக்கேன்
கொல்லப்பக்கத்தில
மாட்டுக்கொட்டாய் கிட்ட இருக்கற ரூம்புல தான்..
என்ன ஒடம்புல சுகராம்..
கம்பவுண்டர் நெதக்கும் ஊசி போடறார்..
என்ன ராத்திரில்ல் தட்வித் தடவி
பாத்ரூம் போறது தான் கஷ்டம்...
அதான் விழாம வந்துடுவம்ல..
நீ அமெரிக்கா போயும் நாளாச்சு பாரு..
எப்போ என்ன்பாக்க இந்த கள்ளந்திரிக்கு வருவ..
ம்ம்
என்னால தான் ஒன்ன பாக்க முடியாது..
கொஞ்சம் ஒன்னோட கை பிடிச்சுக்கலாமேப்பா..
அண்ணன்கிட்டயும் சொல்லி அலுத்துப்புட்டேன்
ஒங்கிட்ட சொன்னானா
முடிஞ்சா நா இருக்கறச்சயே வா..
இல்ல என்னப்பத்தி தகவல் கெடச்சா
கண்டிப்பா வந்து என்னப் பாக்கோணும்..செரியா..
ஏய் என்ன புள்ள நீ அழுவுற்..
இந்த லெட்டர ஏதோ ஈமெயிலாமே
அதுல
பக்கத்து வீட்டு படிக்கற் புள்ள மூலமா
அனுப்பறேன்...
ம்ற்க்காம பாக்க வா ராசா..
உசிரோட பாத்தா இன்னும் சந்தோஷம்..

***

pavalamani pragasam
11th July 2011, 11:26 PM
சந்தோஷம் மல்லி முல்லை போல
மறைக்க முடியாது மணப்பதை
சுற்றிலும் பரப்பும் ரம்மியத்தை
தனக்கு மட்டுமது சொந்தமில்லை
தழுவ வரும் நிலாக்கால கடலலை
நினைவு வங்கியின் நிரந்தர இருப்பு

kirukan
12th July 2011, 01:34 PM
இருப்பு இருப்பதால் இறுமாப்பு சுரக்கின்
இருப்பே நெருப்பாகி சுடும்.

chinnakkannan
12th July 2011, 03:22 PM
’சுடும் இப்படித்தான்..
கொஞ்ச நேரமும் சும்மா இருக்காமல்
மழைல்ல அலைஞ்சா...
இப்ப்ப் பாரு யாரு கஷ்டப் படறா
வாயத் தெற’
அம்மா விட்ட கஷாயம்
தொண்டையில் கசப்பாய் இறங்க
‘பகவானே சீக்கிரமா குணமாகணும்..”
கண்மூடி பிரார்த்தனை செய்தவளின்
விழியோரம் ஈரத்தைக் கண்ட தும்..
மழையில் நனைந்த தன் உற்சாகம் வடிந்து போனது....

pavalamani pragasam
12th July 2011, 04:22 PM
போனது போகட்டும்
அது முடிந்த கதை
வருவது வரட்டும்
அது வெறும் கனவு
இப்போது வாழ்ந்திடு
இது மட்டும் நிரந்தரம்

chinnakkannan
13th July 2011, 11:51 AM
நிரந்தரப் புகழ் என்பது
அடுத்தடுத்த தொடர் வெற்றிகளினால் மட்டுமல்ல..
மனப்பூர்வமாய்
தவறுகளை தைரியமாக
ஒப்புக்கொண்டு
பின் தங்குவதாலும் கிடைக்கும்..

pavalamani pragasam
13th July 2011, 03:28 PM
கிடைக்கும் நிம்மதி
மகேசன் தரிசனத்தில்
இமயத்தின் மடியில்
கங்கையின் கரையில்
பாவத்தைக் கரைக்க
யாத்திரை செல்கிறேன்
என்றாள் இளையவள்
இன்னும் கொஞ்சம்
பாவம் செய்துவிட்டு
வருகிறேன் என்றாள்
முன்னால் பிறந்தவள்
எத்தனை கோணங்கள்
எண்ணத்தில் கோணல்கள்?
குழந்தை குணங்கள்!

chinnakkannan
15th July 2011, 11:02 AM
குணங்கள்...எழுது
குணங்கல்..
இந்த பார்..பள்ளம் வர்ற் ள் போடணும்..
சரி டீச்சர்..
என்னடா..
மறுபடி தப்பா..
வா..ஒருபக்கம் முழுக்க
எழுதச் சொல்லியிருக்காளோல்லியோ..எழுது..
போம்மா..
நா மாடிக்குப் போய்
வெளயாடப் போறேன்..
*
ஏண்டி..
ப்ன் மரம் மாதிரி வளர்ந்துருக்க..
இது என்ன டிரஸ்..தக்கணூண்டு..
கத்தரிக்காய்க்கு குட்டப் பாவாடை போட்ட மாதிரி..
போம்மா..டீசண்ட்டா தானே இருக்கு..
ஏங்க் ஒங்க் அம்மாகிட்ட சொல்லுங்களேன்..
புடவைல்ல என்க்கு செளகர்யமா இல்ல..
சுடிதார் தானே போட்டிருக்கேன்...
போடி.. உன் பாடு எங்க அம்மா பாடு..
*
இந்த தடவை நமக்கு சீட் கிடைக்கும்கற..
தலைவர் வரவர மாறிட்டார்..
நம்மள் க்வனிக்கவே மாட்டேங்கறார்..
ம்ம் இவரல்லாம் வளர்த்து விட்ட்தே நாம தானே..
அதோ வர்றாரே..
எங்கள் தானைத் தலைவன்
சொன்னபடி செய்யும் சிங்கம்...
வாழ்க வாழ்க..
*
என்னய்யா இந்த முழி முழிச்சிக்கிட்டுருக்க..
என்ன கவிதை வரமாட்டேங்குதா..
குணம்னு எழுதணுமா..
செல்லம்..
தைரியத்த வுடாதே..
நல்லா சிந்தி..
இன்னிக்குவெள்ளீக்கிழமை..
லீவு தானே..
இந்தா வெண்டைக்காய்..
கட்பண்ணீக்கிட்டே யோசி..
*
குணங்கள்ல மூணு வகை
ரஜோ குணம்
சாத்வம்
தாமச குணம்..
கீதைல்ல பகவான் என்ன சொல்றார்னா..
சார் என்ன இந்தப் பக்கம்..
என்ன ஓய் பண்றது
இந்த நாட்டுப் பொண்
ரொம்ப்ப் படுத்தறா.,,
நல்லவ தான்..
இருந்தாலும்
இந்த எலக்ட்ரிசிடி பில், டெலிபோன்
அப்புறம்
பேரனப் பார்த்துண்டு இருக்கற்து
இதெல்லாம் செஞ்சுண்டு தான் இருக்கேன்..
இன்னிக்கு காலைல்ல பேப்பர் படிக்கலை
சாயந்திரம் ப்டிக்கலாம்னு எடுத்தா
இன்னும் ஏதோ சொல்றா..
சரி தான்போன்னு இங்க வந்துட்டேன்..
புரியலைன்னாலும்
ஏதோ கொஞ்சம் நிம்ம்தியா இருக்கு..
ந்ல்லாத் தான் ப்ண்றார் பாகவதர்
காலட்சேபம்...!
*

pavalamani pragasam
15th July 2011, 03:46 PM
கதாகாலட்சேபம் ஒன்று புதுமையாய்
மாதர் சங்க கலை நிகழ்ச்சிக்காக
பல்லாண்டுக்கு முன் தயாரித்தேனே
சிலப்பதிகாரக் கதையை முழுதாய்
திரைப்பட பாடல்களால் கோர்த்தேனே
நேயர் ஒருவர் தங்களுக்கு பள்ளியிலே
இவ்வண்ணம் கற்பிக்கவில்லையே என
அங்கலாய்த்ததை எப்படி மறப்பேன்

//அதை விமரிசன திரியில் படித்து மகிழவும்(!)//

chinnakkannan
16th July 2011, 02:24 PM
எப்படி மறப்பேன் அன்பே..
கொய்ங்க்.. என்று ரீங்கரித்து
திடீரென அருகில் வந்து
பயமுறுத்தும் கருவண்டு போன்ற
சுற்றிச் சுழலும் உன் விழிகளை..
**
அன்று
கரு நீல சுடிதாரில்
நெற்றியில் இருந்த
குட்டிப் பாம்புப் பொட்டும்
மெலிதாய் நெளிய
வெளிர் நீல தோடுகள் காதுகளில் ஆட ஆட
வெளிர் சிகப்பு உதடுகள் பிரியப் பிரிய
என்னருகில்
சிரித்தபடி பேசினாயே..
எப்படி மறப்பேன்..
**
ஹோ வென்ற கும்பல்
அந்த
அஷ்டலஷ்மி கோவிலை ஒட்டிய
கடற்கரையில்
நம்மைச் சுற்றிப் போய் வந்து கொண்டிருந்தாலும்
நாம் மட்டும் ... இருவர் மட்டும் இருப்பதாய்
நினைத்தபடி
ஒருவரை ஒருவர் பார்த்தபடி
‘ஒன்றுமில்லாத இனியவை’
அதுதான் ஸ்வீட் நத்திங்க்ஸ் என்று தமிழில் சொல்வார்களே
அதைப் பேசியபடி இருந்தோமே..
எப்படி மறப்பேன் அதை..
*
அதன் பிறகு
சூரியன் கோபித்துக் கொண்டு மேற்கில் மறைய
சில்லெனக் காற்றுடன்
நிலாப் பெண் மேலே உயர,
கூட்டம் குறைந்திருந்த அந்தப் பொழுதில்
என் அருகினில் வந்து
மென்மையாக
அழகாக
கொஞ்சம் வெட்கத்துடன்
கேட்டாயே..
நானும் கொடுத்தேனே..
எப்படி மறப்பேன் அதை..
**

ம்ம்..
அடியே..
நான் எதையும் மறக்கவில்லை..
இன்று மாலை
நாம் சந்திக்கும் போது
மறக்காமல் கொண்டு வா
அன்று அந்த நிலாக்கால இரவில்
என்னிடம் கை மாற்று வாங்கிய
ஆயிரம் ரூபாயை..!

pavalamani pragasam
16th July 2011, 03:10 PM
ரூபாயை பத்திரமாய் பெட்டிக்குள்
பெண்ணை பத்திரமாய் வீட்டுக்குள்
பாதுகாப்பது அழகிய நல்ல பண்பாடு
சீரும் சிறப்புமாய் நிம்மதியாய் வாழ்

chinnakkannan
18th July 2011, 03:18 PM
வாழ்வில் எல்லாமே
நகரும் மேகங்கள் தான்..
பிறப்பு, இறப்பு
வேதனை, சாதனை
துன்பம் இன்பம்
எல்லாவற்றையும்
சமமாக எடுத்துக் கொள்ள
வேண்டும் மனப் பக்குவம்

pavalamani pragasam
18th July 2011, 07:58 PM
பக்குவம் ஒரு தொழில் ரகசியமோ
அதே அஞ்சரைப் பெட்டி அடுப்பு
அதே அளவில் கொட்டி தாளிப்பு
அப்புறமும் அம்மா சமையலில்
அப்படி ஒரு தனி மணம் ருசி
அது என்ன சூட்சுமமோ மாயமோ

kirukan
20th July 2011, 03:10 PM
மாயமோ மோகமோ மானிட சாபமோ
சகித்து சுகிக்கும் காதல்.

pavalamani pragasam
20th July 2011, 03:38 PM
காதல் கூட்டி வரும்
கள்ளத்தனம் எல்லாம்
காளமேக கவித்திறன்
காணாத கற்பனைகள்
காற்றினும் கடிய வேகம்
கடைசியில் தரை இறங்கும்

kirukan
20th July 2011, 04:35 PM
இறங்கும் ஞாயிறும் உறங்கும் உள்ளமும்
என்றும் இருளை ஏற்றும்.

pavalamani pragasam
20th July 2011, 09:42 PM
ஏற்றும் எஸ்கலேட்டரைக் கண்டு
வியந்து அதன் பின்னர் மிரண்டு
பழகியதும் பயம் சிறிது குறைந்து
நாகரிக ஏணியில் நான் ஏறியது
வளரும் உலகை எட்டிப் பார்த்தது
பெருநகரில் மகன்கள் வாழ நேர்ந்து
வணிக கேளிக்கை வளாகங்களுக்கு
அன்புடன் அழைத்துச் சென்ற போது
எங்கள் சிறிய நகரமிப்போது
ஒரு பெருநகரமாய் வளருது
பளபள துணிக்கடை வரவு
அதை அறிமுகம் செய்தது
அச்சத்தை ஆர்வம் மீறியது
முதன் முதலாய் ஏறியபோது
மக்கள் முகமெல்லாம் பல்லானது
என் கதையும் நினைவில் வந்தது

chinnakkannan
22nd July 2011, 11:19 AM
வந்த்து யாரென்று தெரியுமா
அம்மா சொல்வாள்
உறவினர்கள் வ ந்து சென்றதும்..
தூரத்து உறவுகள் யார் நினைவில் கொள்வார்கள்..
வேண்டா வெறுப்பாய்க் கேட்டு வைப்பேன்..
காலம் செல்ல
வேலை அயல் நாட்டில் தான்
என்றான பின்
தமிழ் பேசுபவர்கள் சிலர்
தூரத்து உறவாக இருக்கலாமோ
எனத் தோன்றுகிறது..
விள்க்கத் தான்
அம்மா இல்லை...

pavalamani pragasam
22nd July 2011, 08:39 PM
அம்மா இல்லை வீட்டில்
பச்சைக் குழந்தைக்கு
பரிந்து பாலூட்ட
பரிவாய் தலை கோத
பலகாரம் செய்து தர
பாசமாய் கதை சொல்ல
பொலிவாய் இல்லம் மிளிர
பார்த்துப் பேசிடவும்
பல கதை பகிர்ந்திடவும்
பாங்கான தோழியில்லை
புரிதலுக்கு துணையில்லை
பணத்திற்கு முதலிடம்
பெண்ணின் மகுடமெது
பொறுப்பென்பது என்ன
பெற்றவரை பிள்ளைகளை
பார்த்துக்கொள்ள காப்பகம்
பறக்கிறாள் எதைப் பறிக்க
பேரின்பமாம் குடும்பமெனும்
பழத்தை கசக்க வைக்கும்
புது உலக மோகம் தாகம்
புதைத்துவிட்ட இன்பம்
பெயரளவில் இல்லறம்
பார்க்கப் பார்க்க சலிப்பு

chinnakkannan
22nd July 2011, 10:33 PM
சலிப்பு தான் வருகிறது..
ஏன் எனத் தெரியவில்லை...
தொலைக்காட்சியில்
மனதுக்குப் பிடித்த நடிகரின்
நகைச்சுவைப்படம்..
நேற்று கடைத்தெரு சென்று
வாங்கி வந்த
புதிய படம்..
உள்ளே ச்மையலறையில்
என் வீட்டு இளங்கிளி
எனக்குப் பிடிக்குமே
என்று
யாரிடமோ க்ற்றுக்கொண்டு
செய்யும்
பானி பூரியின் சின்னப்பூரிகள்
பொரியும் எண்ணெய் வாசனை..
அவளது மெரூன் கலர் சுடிதார் அழகா
அல்லது
நெற்றியில்
ஒற்றைக் கோட்டில் ஆடும் முடியின்
அ லைக்கற்றையில்
துளிர்த்திருக்கும்
வியர்வைத் துளி அழகா..

வெளியில் பால்கனியில்
எட்டிப் பார்த்தால்
நாற்பத்தேழு டிகிரி
எனில்
உள்ளே குளுமையாய் ஏ.சி..
ஊரிலிருந்து இந்தமுறை வாங்கி வ்ந்த
விஜயமகா தேவி
கண்சிமிட்டிச் சிரிக்க்கிறாள்..

வலையில் உலவலாம் என்றாலும்
ஓஹ்.. ஏனோ வெறுமையாய்..
.
ம்ம்
எல்லாம் இருந்தும்
ஏனோ மனதில் விரக்தி
சலிப்பு..
என்ன செய்யலாம்..

ஹை..
இருக்கவே இருக்கிறது.
கணினியைத் திற்ந்து
எழுதப்பார்க்கலாமா..
வருமா..
சோர்வாய் மனம் இருக்கிறதே..

சரி செய்யலாம்..
திற ந் து
எழுத ஆரம்பித்தால்...

துள்ளிப் பொங்குகிறது..
வெள்ளம்...

pavalamani pragasam
23rd July 2011, 08:44 AM
வெள்ளம் வருடாந்தர நிகழ்வு சில ஆறுகளுக்கு
அபூர்வம் அதிசயம் ஆனந்தம் எங்கள் வைகைக்கு
கூட்டமாய் ரசிக்கச் செல்வோம் இத்திருவிழாவிற்கு
நுரைத்து இருகரை தொட்டோடும் அழகிய காட்சிக்கு
புகைப்படமெடுத்துப் பாதுகாக்கும் நவீன வசதியிருக்கு
என் வலைமனை படத்தொகுப்பிலது கொலுவிருக்கு

chinnakkannan
23rd July 2011, 07:58 PM
கொலுவிருக்கும் கடைசிப் படிக்க்ட்டுச்
செட்டியார் கேட்டார்
’ஏன் இந்த தடவை அஞ்சு படி தான்
வெச்சுருக்கா மாமி?;
கல்யாண கோஷ்டி நாதஸ்வர வித்வான்
‘தெரியலை ஓய்.. அது சரி
அந்த வைர மூக்குத்தி மாமி பார்த்தீரா’
‘அதுவா இந்த மாமியோட தூரத்து உறவாம்...
போன தடவைக்கு முந்தின தடவை வந்தா..
அவ பட்டுப் புடவை க்ரே வித் ரெட் பார்டர்
சும்மா ஜிலுஜிலுன்னு...
நன்னா இருக்கோன்னோ..’

இரண்டாம்படிக்கட்டில் இருந்த ராதா
‘ஏங்க.. கல்யாணத்துக்கும்
கூட்டிட்டுப் போமாட்டேங்க்றீங்க..
கீழே கிரிக்கெட் மாட்ச் வச்சுருக்கா..
அதுக்கும் மாட்டேங்கறீங்க..
பக்கத்துல மஹாபலிபுரம் பீச் செட்
அங்கயாவது போலாமே..’
கிருஷ்ணன் புன்னகைத்து..
‘நானா மாட்டேங்கறேன்..
கீழே பார்.. மூணாம் படிக்கட்டில
எல்லாஅவதாரமும் நின்னுண்டிருக்கு..!
அது ச்ரி
யாரந்தக் குழந்தை..
சிகப்பு தாவணி பட்டுப் பாவடை
போட்டுண்டு
ஏதோ எட்டு ஸ்வரத்துல பாடுது..
நம்ம ஊர் கோபிகையோட சாயல் தெரியுது..’
ராதா முறைத்துக் கிள்ள

கீழே இருந்த பலராமர்
‘ஏய் எங்களை கிண்டல் ஏதும் பண்ணலையே..’

நாலாம் படிக்கட்டில் இருந்த
க்ன்னுக்குட்டி அம்மாவிடம்
‘இன்னிக்கும் கொண்டக்கட்லை சுண்டல் தானாம்..
அம்மா போரடிக்குது
பேசாம வேற கொலுக்குப் போலாமா.
இந்த பாரேன் அந்தச் சின்னப் பையன்
என்னைத் தொட வர்றான்...’
கவலைப்படாதே யானை மாமாக்கிட்ட
சொல்றேன்..
ஓய் என் புள்ள பயப்படுது..”
“ஒண்ணும் ஆவாது..
பேசாம பசுவா லட்சணமாத்
தலை குனிஞ்சு இரு..
இந்தப் பக்கம்
அஷ்ட் லஷ்மி வேறு இருக்காங்க்..
எதிர்ல பார்த்தியா
சில மாமாக்கள்
சீரியஸா கோல்ட் ரேட்,ஷேர்ஸ்னு
பேசிக்கிட்டிருக்காங்க ..
நல்லா இருக்கு...
கேக்க விடாம இந்தப் பாட்டுதான் தடுக்குது..
அட் ஒருவ்ழியா பாட்டு முடிஞ்சா
ம்ம் இன்னொரு மாமி பாடறாளே..
என்ன தவம் செய்தனை...
புதுசாபாடலாமில்ல.. ஏ ஜே ஏஜே..

அருகிலிருந்த மயில்
ரொம்பத் தான் சினிமா பார்க்கறே..
என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமில்ல..’

ஷ்.. ச்த்தம்போடாமச் சமர்த்தா
வந்தவாளைப் பார்த்துண்டு
சும்மா இருங்கோ..
என்றார் முதற்படிக்கட்டுப் பிள்ளையர்ர்..
‘எனக்குப் பொண் பார்த்திண்டிருக்கேன்..
உங்க பேச்சு எனக்குத்
தொந்தரவா இருக்கு...!”

pavalamani pragasam
23rd July 2011, 10:12 PM
இருக்கு ஒரு வித கிறுக்கு
மேடையில் சாமியாடுது
தவளையாய் குதிக்குது
பறக்க முயற்சிக்குது
போதையில் மிதக்குது
புத்தியை தொலைக்குது
குருபக்தியில் திளைக்குது
ரொம்ப அருவருப்பாயிருக்குது

chinnakkannan
24th July 2011, 01:54 PM
அருவருப்பாயிருக்கிறது...
ஊர்ந்து செல்லும்
கம்பளிப் பூச்சியைப்பார்க்கையில்..

கூட்டத்தில் நடந்து செல்லும் போது
எதிரில் வந்து
மோதும் குடித்த மனிதனின்
நாற்றத்தை உணர்கையில்...

இவை எல்லாம் விட
கேட்கும் போது
முகஞ்சுளிக்க வைக்கும் விஷயம்..

அரசியல் வாதிகளின் பொய்கள்..

pavalamani pragasam
24th July 2011, 07:30 PM
பொய்கள் பெருகுமா
நெடுநாள் காக்குமா
மதிப்பை கெடுக்குமா
இதயத்தை கிள்ளுமா
போய்யா அரிசந்திரா
பிழைக்கும் வழியைப் பார்

kirukan
25th July 2011, 10:13 PM
பார் பார்(bar) இல்லா
ஊரை பார்
பார்வை மட்டும் தெரிய
போர்வை போர்த்திய
பாவை பார்
(பாட்டுக்கு மட்டுமே பார்த்தாலே குற்றமாம்...)
எண்ணையில் நாடு செழித்தாலும்
திண்ணை கூட இல்லா
தின கூலியை பார்
ஏதும் இல்லை என்ற போதும்
பிள்ளை பெறலை கடமையாய்
காணும் குடியை பார்.

(சவுதியில் இருந்து.4 நாள் பயணம் )

pavalamani pragasam
25th July 2011, 11:22 PM
பார் என்று பகட்டுகிறாள்
அணிந்தாலும் கவர்ச்சி
அணியாமலும் கவர்ச்சி
பேதமில்லாமல் பழகுகிறாள்
பொது உடமை கருதுகிறாள்
எடுக்கவும் கொடுக்கவும்
தாராளம் காட்டுகிறாள்
வேலியில்லை விதிகளில்லை
விருப்பம் போல வாழுகிறாள்
ஒளிவுமறைவு ஏதுமில்லை
வெட்கப்பட தேவையில்லை
கற்காலம் காட்டுகிறாள்

chinnakkannan
27th July 2011, 02:55 PM
அறிமுக நடிகை..
காட்டுகிறாள் கண்களிலே கட்டுடலைச் சிற்றுடையில்;
மூட்டுகிறாள் உள்ளத்தில் உணர்வுகளின் நெருப்பினையும்;
கூட்டுகிறாள் வெண் திரையில் வெள்ளமெனக் கூட்ட்த்தை;
பூட்டுகிறாள் நெஞ்சமதில் தான்கொண்ட வேதனையை.;

pavalamani pragasam
27th July 2011, 08:44 PM
வேதனையை ஏன் தருகிறாய்
அத்தை பெத்த அதிரசமே
அசையும் உலகின் அதிசயமே
சித்திரை மாத முழு நிலவே
விலகி விலகிச் செல்லாதே
விருப்பமென்ன சொல்லிவிடு
புலிவால் மீசையா
அணில் வால் மீசையா
மீசையே வேண்டாமா
தனிக்குடித்தனம் வேண்டுமா
துணி துவச்சிப் போடணுமா
சேவை செய்ய காத்திருக்கேன்
காலை சுற்றும் பூனைக்குட்டியை
மடியில் வைத்துக் கொள்ளம்மா

chinnakkannan
28th July 2011, 11:18 PM
வைத்துக் கொள்ளம்மா நீயே..
என்றேன் பேத்தியிடம்..
அவ்ள் கேட்ட் குட்டிக் கறுப்பு ஆடு
சுறுசுறுப்பாய்த்
தழை மேய்ந்து கொண்டிருக்க..
இது வளர்ந்தா என்ன ஆகும்..
குட்டி நிறைய போடும்..
அப்புறம்..
அந்தக் குட்டிகள்ளாம் பெருசாகும்..
இந்தக் குட்டி ஆடு என்னாகும்..
இதுவும் பெருசாகும்..
அப்புறம்..
சாமிக்கிட்ட போகும்...
நெஜம்மாவா..
இல்லைசெல நேரம்
நாமே சாமிக்காக்க் கொடுத்துடுவோம்..
கருப்பசாமிக்கு கருப்பு ஆடு ரொம்ப்ப் பிடிக்கும்...
புத்திசாலி என நினைத்து மருமகள் சொல்ல..
பேத்தி மறுத்தாள் தீர்மானமாய்...
அப்ப இது இங்கேயே இருக்கட்டும்
என்க்கு வேண்டாம்...

pavalamani pragasam
29th July 2011, 08:34 AM
வேண்டாம் வாதம் விவாதம்
வீம்பு வீண் பிடிவாதம்
வழக்கு விவகாரம் வினை
விரோதம் வெஞ்சினம் விசனம்
விபரீத விளயாட்டு வேதனை
வாழப்போவது கொஞ்ச காலம்

chinnakkannan
29th July 2011, 11:34 AM
காலம் மாற்றுபவை ப்ல..அதில் ஒன்று..
சின்ன வயதில்
மேல மாசி வீதியில்
சித்திரைத் திருவிழாவின் போது
சாமி வருகையில்..
ரோஜா,வெள்ளை நிறங்கலந்த
மிட்டாய்.....
பள்ளியில் படிக்கும் போது
ட்ரிபிள் டேஸ்ட் என்ற மிட்டாய்
சுற்றியிருக்கும் பேப்ப்ரைச் சேர்ப்பதற்காக...
க்ல்லூரிப் போதில்
சென் ட்ரல் சினிமா அருகில்
உள்ள சந்தில்
பாம்பே மீல்ஸ் சாப்பிட்ட் போது
கொடுத்த
பால் பேடா...
வேலை சேர்ந்த போது
மனம் கவர்ந்த அலுவலகப் பெண்ணுடன்
சற்றே ஆர்வங்கலந்த் பேச்சுக்களிடையே
அசிரத்தையாய் உண்ட் குலோப் ஜாமூன்...
திரும்ணம் ஆன புதிதில்
புது மனைவி
பாலைக் கொதிக்க்க் கொதிக்க வைத்து
ம்றுபடியும் கையைச் சுட்டுக் கொண்டு
சுண்ட வைத்துக்
கிளறி
கண்களில் ஆவல் ம்ற்றும்
எதிர்பார்ப்பு மின்னக் கொடுத்து
உண்ட திரட்டுப் பால் அதன் பின்
அப்படியே நான் கொடுத்த முத்தம்...
பெண் பிறந்து பத்து வயதாகையில்
வேண்டுதலுக்காக ஸ்ரீரங்கம் சென்றதில்
அங்கு கிடைத்த அரவணை என்ற இனிப்பு
(டேஸ்ட் டிஃபரண்ட்டா இருக்குப்பா)
போன் மாதம் பத்தாம் வகுப்பில்
அதிகமார்க் வாங்கியதற்காக
அவளே செய்த சேமியா பாயசம்..
ம்ம்
காலம் செல்லச் செல்ல
என் இனிப்பின் ரசனையும்
மாறியிருக்கிற்து..
ஆனால் இனி முடியாது..
கண்ட்ரோலில் இருக்கணுமாம்
வைத்தியர் சொன்னாராம்..
சுகர் வந்தாலும் வருமாம்..
எனில்
காலைக் காப்பியிலும்
அதிகமாய் இருந்த்து
கசப்பு...!

pavalamani pragasam
29th July 2011, 03:18 PM
கசப்பும் இனிப்பும்
பொய்யும் உண்மையும்
வெயிலும் நிழலும்
இன்பமும் துன்பமும்
வலியும் இதமும்
நோயும் ஆரோக்கியமும்
நாணயத்தின் இரு பக்கம்
சேர்ந்தே இருக்கும் லயம்
ஒன்றின் அருமை அறிந்திட
மற்றொன்றென ஓர் ஏற்பாடு

chinnakkannan
29th July 2011, 09:21 PM
ஏற்பாடெல்லாம் செஞ்சாச்சா..
ப்க்கத்துவீட்டு ஆச்சி கேட்க் பெரிய மதனி
‘என்ன இப்படிக் கேட்குறிய்..
எல்லாம் செஞ்சாச்சுல்லா..
இவரோட தம்பிக்கு தலச்சன் புள்ளல்லா..
தம்பியோட மாமனார்
ஒரு பவுன்ல தோடு வாங்கிருக்காக..
திருச்செ ந்தூர் தான் முடி எறக்கற்து...
நாங்க எட்டுப் பேர் மொத நாள் ராத்திரில்லபோவோம்..
ஆமா...செகண்ட்க்ளாஸ் ஏஸி தான் ட் ரெய்ன்ல..
இல்லன்னா வேகும்லா..
லாட்ஜ் எல்லாம் பாத்தாச்சு..
சாப்புடறதுக்கா..
அங்கேயே
கோவில் பக்கத்துல தேவஸ்தான ஹோட்டல் இருக்கு...
ஆர்டரும் சொல்லியாச்ச்சு..
ஒறம்பொற ஒரு இருவத்தஞ்சு பேர் வருவாக..
காலல்ல முடி எறக்கிட்டு தோடு குத்திட்டு
லஞ்ச்
அதான் பதினொன்னு ஆயிரும்லா
சாப்பிட்டுட்டு
பின்ன
கார்ல தின்னவேலி போய்
சாயந்திரம் அங்கேர் ந்து
ட் ரெயின் பிடிச்சா மக்க நாள் மதுர...

பாருங்க புள்ள் எப்படி சிரிக்குதுன்னு..
நாளக்கி அழாதுன்னு நினைக்கேன்...

மறு நாள்
மங்களகரமாக உறவினர்கள் வந்திருக்க
குழந்தைக்கு மொட்டை அடித்து
காது குத்தி
அழாதே என்று வாயில் சர்க்கரை வைத்து
உறவினர்களுக்கு விருந்து கொடுத்து
சம்பந்திகளை
பத்திரமாக
இரவில் ரயிலில் ஏற்றிய
பெண்ணின் அப்பா
தானும் ஏறி
சின்ன நோட்டில்
கணக்கு எழுதிப் பார்க்கையில்
சற்றே சோர்வு வந்த்து அவருக்கு..
காதுகுத்தல் நன்றாகத் தான் நடந்த்து
ஆனால் யாருக்கு என்று எழு ந்த்து கேள்வி...!

pavalamani pragasam
29th July 2011, 11:10 PM
கேள்வி கேட்கச் சொன்னான் சாக்ரடீஸ்
தெளிவு பிறந்தது தத்துவஞானத்தில்
விஞ்ஞானியின் கேள்விகள் கொடுக்கும்
பதில்கள் அறிவியல் வளர்த்திடும்
கேள்வி கேட்காத மனைவிகளை
என்னாளும் ஆண்களுக்குப் பிடிக்கும்

chinnakkannan
30th July 2011, 10:55 AM
பிடிக்கும் எனக்கு வேண்டும்
என
பொம்மையைக் கையில் வைத்து
அடம் பண்ணிய குழந்தையிடம்
பிடுங்கி
கீழே வைத்து விட்டு
அது அழ அழ
அம்மா தரதரவென இழுத்துச் செல்ல
மற்ற பொம்மைகள் ஆண்டவனிடம்
‘கடவுளே..
எங்களுக்கும் பேச்சுத்தன்மை கொடு
நாங்களும்
அந்தக் குழந்தையுடன் போகவேண்டுமென
அடம் பிடிப்போம் கடைக்காரனிடம்’
எனச் செய்தன பிரார்த்தனை..!

kirukan
30th July 2011, 02:18 PM
பிரார்த்தனை ஆராதனை பலன்தரா பகட்டிடம்
பக்தி பணியும் போது.

pavalamani pragasam
30th July 2011, 03:22 PM
பணியும் போது மட்டும் பயப்படு
பாய்வதில் இல்லாத பயங்கரம்
குழையும் போது பதுங்கியிருக்கும்
நால்வகை ஆயுதம் பெண்புலியிடம்

chinnakkannan
30th July 2011, 04:09 PM
பெண்புலியிடம் ஆண்புலி
‘கண்ணே.. உனக்காக
ஒன்று
கொண்டு வந்திருக்கிறேன்..’
கண்களில் ஆவல் மின்ன
‘மானா..’
‘இல்லை’
‘மாடா..’
‘இல்லை’
‘பின் யானையா..’
‘இல்லை இவளே..
உன் விழிகளின் அழகும்
உறுமலின் வீர்யமும் வைத்து
ஒரு சின்னக் கவிதை..’
'அடச்சீ போய்ய்யா’ என்றது பெண்புலி..
‘எனக்கு உணவு தான் வேண்டும்..பசிக்கிறது..
புலி பசித்தாலும்
கவிதை தின்னாது..!”

pavalamani pragasam
30th July 2011, 04:30 PM
தின்னாது தானமும் பண்ணாது
நாய் பெற்ற தெங்கம்பழமாய்
வீணாய் போகும் பண்டம் நிறைய
சோமலியாக்கள் இருக்கக் காரணம்

chinnakkannan
31st July 2011, 06:39 PM
காரணம் தான் புரியவில்லை...
சுந்தர பாண்டியன் புலம்பினார்..
ஒரு பக்கம் மகன்கள்
வீர பாண்டியனும்,குலசேகர பாண்டியனும்
சண்டை போடுகிறார்கள் என்றால்
நாட்டை இழந்த நம்மையே
குறிவைத்துத் தாக்குகிறார்கள்
சோழர்கள்...
என்ன செய்வது...
அமைச்சர் உள்ளுக்குள் நகைத்து..
மன்னா..
நாட்டு நலத்திற்காக அரசை மக்கள் கொடுத்தனர்.
ஆனால் அதை நீஙகள் உங்கள் மக்களிடம் தந்தீர்...
எனச்சொல்ல நினைத்துச் சொல்லாமல்
கடைசியில் சொன்னார்..
என்ன பண்ண மன்னா..
எல்லாம் ஊழ் வினை..!

pavalamani pragasam
31st July 2011, 08:03 PM
ஊழ்வினை தொடரும் நிழலாய்
முன்னெழுதியது தர்மன் தீர்ப்பு
தவறாது சித்திரகுப்தன் கணக்கு
என்பது ஒரு சாரார் நினைப்பு
தாண்டி வா அதையென சொன்னது
வள்ளுவன் தன்னம்பிக்கை வாக்கு

chinnakkannan
2nd August 2011, 05:01 PM
வாக்குத் தவறாதவர் அப்பா..
சொன்னால் சொன்னபடி செய்வார்..
அது மட்டுமல்ல..
வார்த்தைகளும் கூட..
அவர் குளிர்ந்திருந்தால்
பனி அருவியாய்க் கொட்டும்..
கோப்ப்பட வைத்திருந்தால்
எரிமலைக் குழம்பாய் வரும்..

என்ன காரணமோ..
அம்மா வழிப் பெரியப்பாவிடம்
பயங்கரமாக்க் கோபம் அவருக்கு..
எவ்வளவு உதவி பண்ணினேன்..
துரோகம் பண்ணிட்டாம்மா...
அவ்வப்போது உறுமுவார்..
ம்ம்
என் முகமுழி அவனுக்குக் கெடைக்கும்கற...
கை பிடித்து சமாதானம் செய்வேன்..

காலப் போக்கில்
அப்பாவும் பெரியப்பாவும்
சமாதானமாக...
ஒரு மாலைப் பொழுதில்
திடீரென வந்த மாரடைப்பில்
அப்பாவின் உயிர் பிரிய...
அதிசயமாக
அருகிலிருந்த உறவுகள் எல்லாம் வந்து
வேகவேகமாய்க் காரியங்கள் நடந்து
இரவு ஒன்பது மணியளவில்
எல்லாம் முடிய..
வீட்டுக்குவந்தால் பெரியப்பா..
விருதுநகரிலிருந்து அரக்கப் பரக்க
வந்திருக்க..
வாசலிலேயே அண்ணனுடன் சண்டை..
பார்க்க விடாமப் பண்ணிட்டயேப்பா..
மற்றவர்கள் சமாதானம் கூற..
ஒருசிலர் என்னிடம்
‘என்னவோடியம்மா..
ஆனாலும் உங்கப்பாக்கு கரி நாக்கு.
சொன்னது போல் நடந்துடுத்தே.” என
அது கரி நாக்கா..
அல்லது
சுடும் நாக்கா ’எனப் புரியவில்லை..
இன்றுவரை..

pavalamani pragasam
2nd August 2011, 10:36 PM
இன்று வரை குறையில்லை
தூங்காமல் ஏங்கவில்லை
பிடிபடாமல் பறக்கவில்லை
வலிகள் கொல்ல முடிந்ததில்லை
சில கனவாவது பொய்க்கவில்லை
பேராசை என்றும் இருந்ததில்லை
விதியுடன் சண்டை போடவில்லை
வீணாய் மண்டை உடையவில்லை
எனக்கென வகுத்த ஓர் எல்லை
அதற்குள் நான் தோற்கவில்லை

chinnakkannan
3rd August 2011, 11:24 PM
தோற்கவில்லையாம் சாதாரணமாக..
தோற்க வைத்து விட்டேனாம்..
ப்ணம் நிறைய வாங்கிக் கொண்டேனாம்..
குற்ற்ம் சாட்டுகிறார்கள்..
ஏன் வாங்கினால் என்ன..
இவர்களுக்காக
எவ்வளவு போட்டிகள் ஜெயித்திருக்கிறேன்..
எவ்வளவு தடவை
சொப்பு மாதிரியான கப்புகள்
வாங்கியிருக்கிறேன்..
ஹீம்.. அவற்றில்
ஒரு காப்பி குடிக்க முடியுமா...
ரசிகைகள் எல்லாம்
சூழ்ந்து கொள்வார்கள் தான்..
வாஸ்தவம்
நெரிசலில்
சிரித்தபடி
கையெழுத்துப் போட்டதில்
எனக்கு
கை வலியும் சென் ட் ம்ணமும் தான்
மிச்சம்..!
அது யார்..
ஒரு திரைப்பட நடிகை..
லட்சணமானவள் தான்..
அழகாய் உடனிருப்பாள்
என நினைத்தால்
ஐந்து நட்சத்திர ஹோட்டலில்
இரவு விருந்து முடித்து
ச்சோ ஸ்வீட் யார்...
ஸீ யூ லேட்டர் எனச்
சொல்லிச் சென்றவள் தான்..
அந்த லேட்டர் தான் இன்னும்
வந்த பாடில்லை..
ம்ம்..
ஏய் கண்ணாடி
நீயே சொல்
நான் செய்வது சரிதானே
எனக்கெனச் சேர்த்துக் கொள்ளக்
கூடாதா என்ன...

கண்ணாடியில் தெரிந்த
பிம்பம்
சற்றே மாறி
ஒரு
ராட் ஷச உருவமாய்
ஒருகணம் தெரிந்து
மறுபடியும்
வழக்கமான பிம்பம் வர
கண்ணைக் கசக்கிக் கொண்ட
விளையாட்டு வீரர்
தனக்குள் சொல்லிக் கொண்டார்
‘சே.. எல்லாம் பிரமை..”

pavalamani pragasam
4th August 2011, 08:41 AM
பிரமை பிடித்து சும்மா உட்கார்ந்திருக்காதே
உன்னை நம்பி இங்கே பல பணிகளிருக்கே
எடு சவக்காரத்தை கிளம்பு வான் மேலே
முதல் வேலை சந்திரனை சலவை செய்வதே

chinnakkannan
7th August 2011, 12:12 PM
சலவை செய்வதே என் வாழ்க்கை..
எவ்வளவு துணிகள்..
எவ்வளவு அழுக்கு..
இவ்வளவு வருடங்களிலும்
கொஞ்சம் கூட முகம் கோணாமல்
துவைத்திருக்கிறேன்..
போன வாரம் இவள் சொன்னாள்..
இது சரியில்லை..
பதினெட்டு வருஷமாச்சு..
வேற வாங்கலாம்..
ஆயிற்று..
இப்பொழுது என் இட்த்தில்
வேறொன்று..
என் இடம் பால்கனி..
நான் துவைத்த துணிகள்
காய்வதை வேடிக்கை பார்த்தபடி..
மெல்ல மெல்ல
என் மேல் படிகிறது அழுக்கு..

pavalamani pragasam
7th August 2011, 08:17 PM
அழுக்கு இவ்வளவு அழுத்தமாய் பதிந்துள்ளதா
பதறுது பாவி மனம் பத்திரிக்கை படிக்கையில்
எத்தனை வக்கிரம் விசித்திரம் விகாரம் வன்மம்
அறுபது வயதில் பிள்ளைப் பெற்று பூரிக்கும் பாட்டி
அரசு தொட்டிலில் அநாதையாய் பிஞ்சு சிரிக்கும் படம்
பதவி நாற்காலியை உடும்பாய் பற்றிய ஊழல் மந்திரி
காதலனுடன் சேர்ந்து பெண் கணவனை செய்த கொலை
சிறுமியை கெடுத்த சாமியார்- உளதோ வேறு நரகம்

chinnakkannan
9th August 2011, 12:46 AM
நரகத்திற்குச் சென்றால்
கதவு பூட்டியிருந்தது..
குழம்பியபடி வந்து
எதிர்ப்பட்ட தேவனிடம் கேட்டால்..
‘அடடா..நீங்கள் வந்திருப்பது
டெர்மின்ல் ஒன்று..
இங்கு நிரம்பி விட்டது..
டெர்மினல் இரண்டுக்குச் செல்லவும்..

pavalamani pragasam
9th August 2011, 09:11 AM
செல்லவும் முடியாமல்
நிற்கவும் முடியாமல்
என்ன ஒரு அவதி இது
அவரோ என் மேலதிகாரி
தொலைபேசிக்கொண்டேயிருக்கும்
ரொம்ப முக்கிய பொறுப்பு
கொட்டாவியை அடக்கிவிட்டு
கற்பனை குதிரையை தட்டி
அவர் நாற்காலியிலெனை இருத்தி-
ரொம்ப சுகமாய்த்தான் இருக்கு

chinnakkannan
9th August 2011, 04:50 PM
இருக்கும் பொழுது
எதுவும் பேச மாட்டேன் என்கிறாய்.
நான் சொல்வதை
தலையசைத்துக் கேட்கிறாய்..
கண்ணிமைகள் படபடக்க
நீ
ஒருபக்கம் தலையைச் சாய்த்து
கூர்மையாய்ப் பார்க்கிறாய்..
இவையெல்லாமும்
நீ இல்லாத பொழுது
எனக்குத் துணையாய் இருக்கிறது
நான் அசைபோட...

pavalamani pragasam
9th August 2011, 08:25 PM
அசைபோட அவகாசமிருக்கு
வெள்ளி முடி வந்த பிறகு
அவசரமாய் உணவை உண்ணும் பசு
பின்னர் நான்கு அறை வயிற்றிலிருந்து
மீண்டும் அதை வாய்க்கு கொணர்ந்து
மெதுவாய் மென்று அதை விழுங்கி
செரித்து நலம் பெறுவது போலவே
அவசரமாய் உண்ட இளமையை
வசந்தகால தேன் உணவை
பனிகாலத்தில் அசைபோடும்
சுகத்தை ஆங்கில கவி கீட்ஸ்
அழகாய் சொன்னான் மனித வாழ்வை
இயற்கையின் நான்கு பருவமாக்கி
மறக்க முடியா ஓர் கவிதையில்

chinnakkannan
9th August 2011, 10:33 PM
’கவிதையில் ஆரம்பித்து
கவிதையில் முடிவது எது தெரியுமா...’
‘இந்தச் செவ்வானம்’
‘இல்லை’
‘இந்தக் கடல்லை’
‘ம்ஹீம்’
‘இந்த்த் தென்ற்ல்..
இந்தப் ப்டகு மறைவு..
இந்த த் தனிமை..
இங்கு நாம் பேசிய ‘ஒன்றுமில்லா இனிப்புகள்’”
“எதுவும் இல்லை’
“பின்...”
“உன் நெற்றி உச்சி;
ம்ற்றும் உன் உள்ளங்கால்...”
குப்பென்று கன்ன்ங்கள்
ரசாயனத்தால் வான நிறம் பெற
உத்டு குவிந்துச் சொன்னாள்
“ச்சீ போடா”

pavalamani pragasam
10th August 2011, 08:40 AM
போடா என்றால் வாடா
வஞ்சியின் அகராதி
அது மட்டுமா தனி
ஆழம் காணா கடல்
முத்தும் பவளமும்
சுறாவும் சிறுமீனும்
குவிந்திருக்கும் சுரங்கம்
எட்டாத தொடுவானம்
படைப்பின் அதிசயம்
விடை கண்டிடாத புதிர்

chinnakkannan
11th August 2011, 11:52 AM
புதிர் தான்..
விழுந்து விழுந்து
மூன்று மாதங்கள் உழைத்து
ஆயிரத்தெட்டு மின்ன்ஞ்சல்,
நூறு தொலைபேசி அழைப்பு
பதினைந்து தடவை நேரில் சென்றது..
எனச் செய்து
நேற்று
தொழிற்சாலைப் பொருட்களை வாங்குவதற்கு
கிடைத்த ஆர்டரைச் சொல்கையில்
சிரித்து வாழ்த்திய எம்.டி
இன்று ஏனோ
சின்ன விஷயத்திற்குக் கோப்ப் பட்டு
வள் என்று விழுவது..
ம்ம்..என்ன செய்ய
தலையெழுத்து..
என்ன உழைத்தாலும்
மிஞ்சுகிற்து திட்டு ஒன்று தான்..
அட வீடு வந்து விட்ட்தே..
’சட்டை கழட்டும் போது
என்ன யோசனை..
கொஞ்சம் சிரித்தபடி
முகத்தை வைத்துக்
கொள்ளக் கூடாதா..’
‘அதெல்லாம் ஒன்றுமில்லை..
எங்கே பெரியவ..
‘அப்பவே வ்ந்துட்டாளே..
மாடில அவ அறையில் இருக்கா..
டீ இவளே..
அப்பா கூப்பிடறா பாரு..
*
போச்சு
அப்பா வந்துட்டார்..
எங்கே நைட்டி..
இந்தக் குட்டை டிராயர், டி ஷர்ட்டோட
கீழே போனால் அம்மா உதைப்பா..
வீட்ல தானே இருக்கேன்.
என் உடை என் செளகர்யம்..
அம்மாக்குப் புரிய மாட்டேங்குது..
கம்ப்யூட்டரை வேற மூடணும்..
என்ன இவன்..
ஒரு மாசமா வெய்ட் பண்ணி
என்னைப் பார்த்து சிரித்து
அதுக்கப்புறம்
இன்னும் ஒருமாசம் கழிச்சு பேசி
இன்னும் ஒண்ணும்
உருப்படியா சொல்ல மாட்டேங்கறான்..
என்னமோ கவிதை மாதிரி எழுதியிருக்கான்..
’ஒவ்வொரு முறை
உன் பெயரை
உச்சரிக்கும் போதும்
நான் உயிர்த்தெழுகிறேன்..
சொதப்பலா இருந்தாலும்
ஏனோ எனக்குப் பிடிச்சிருக்கு..
நாளக்கழிச்சு காயத்ரி ஜபம்
ச்சும்மா
என் பேரை
ஒரு ஆயிரந்தடவை
உச்சரிக்கச் சொல்ல்லாம்..!
நாளைக்கு
கோவிலுக்கு வரச் சொல்லிப் பேசணும்..
எங்க இந்த ஸ்டிக்க்ர் பொட்டு..
இட்டுக்கலேன்னா அம்மா வையும்..
அட கிடைச்சுடுத்து..
இந்த்த் தம்பிக் கடன்காரன்
விளையாடப் போனவன்
இன்னும் வரலை..
கணக்கு சுட்டாலும் வரமாட்டேங்குது
ஒன்பதாம் கிளாஸ்
கடா மாதிரி வளந்துருக்கான்..
வந்த்தும் திட்டி
நாலு ஸம் போடச் சொல்லணும்..
‘எற்ங்கி வர்றதுக்கு
இவ்ளோ நாழியா..
ப ஜ்ஜி சூடா இருக்கு சாப்பிடு..”
இல்லம்மா ஆயில்..வேணாம்
இவன் எங்கே..
வருவான் வருவான்..
*
அடிச்சது சிக்ஸர்
என்ற போது கை தட்டினாங்க..
ஆனா பந்து காணோம்னா
நான் தான் வாங்கித் தரணுமாம்..
அட டா
மணி ஆறரையாச்சா..
அக்கா கொட்டுவா..
டேய் நீங்க தேடுங்க..
கிடைக்கலைன்னா நான் வாங்கறேன்..
சைக்கிள் திற்ந்து ஒரே மிதி..
நேத்திக்கு நட்த்தினது
கால்குலசா.. ச்சே ஒண்ணும்
நினைவுக்கு வரலையே..
எதிர்ல போற
அந்த பாவாடை சட்டை
என்னப் பார்த்து எதுக்கு சிரிச்சா..
யா.. அது நம்ம
கொமாரோட தங்கை..
அப்பாடி... வந்தாச்சு..
ஸ்டாண்ட் போடலாம்
’வாடா வா..
ஒடம்பு முழுக்க வேர்வை தூசு..
கால்லம்பிண்டு வா..
ப்ஜ்ஜி சாப்பிடு..’
போம்மா.. அப்றம் சாப்பிடறேன்...
ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு
போறேன் மாடிக்கு..
*
என்ன ஜென்மங்களோ..
ஏங்க பஜ்ஜி எப்படி இருந்துச்சு..
ஓக்கேயா..
ஏன் குரல் கம்மியா வருது..
ஓ இண்டர் நெட்டா..
வழக்கம் போல ஷேர் மார்க்கெட்டா..
எஸ் அண்ட் பி அங்க கொறச்சா
இங்க விழுந்துடுத்தா..
அட்டா.. அடி பட்டிருக்காதோ..
சிரிக்காதீங்க
எனக்கு இந்த விஷய்ம் லாம் தெரியாது..
இதுங்க எப்ப வரும்..
எப்ப சாப்பிடும்..
ஆறினா நல்லா இருக்காதே
பெரியவ ஆயிலாம்..
அவளக் கெஞ்சணும்
ஒண்ணேஒண்ணு எடுத்துக்கடி.
இவன் ஒருத்தன்..
நெறயக் குத்தம் சொல்வான்..
இப்போ டின்னர் வேற
என்ன செய்யறது..
நாளக்க்கு கால்ல்ல
தோச வாக்கலாம்..
லஞ்ச்சுக்கு லெமன் ரைஸா..
பாத்திரம் வேற நெறய இருக்கு
கண்ணக் கட்டுதே..
எனக்கு மட்டும்
கண்டினுவஸ் வேலை...வேலை..
ஹீம்..
இது தான் வாழ்க்கையா..
எப்போ முடியுமோ இந்தப் புதிர்..
கடவுளே..
*
.

pavalamani pragasam
11th August 2011, 03:52 PM
கடவுளே உமக்கு சுக்கிர தசையோ
மக்களை வசியம் ஏதும் செய்தீரோ
நாளென்றும் கிழமையென்றும் புதுசாய்
பகலிலும் இரவிலும் அலங்காரமாய்
சந்து முக்கிலும் மலை உச்சியிலும்
ஊர் எல்லையிலும் கடைத்தெருவிலும்
எல்லா பெரிய சிறிய கோவில்களிலும்
பக்தி வெள்ளம் பெருக்கெடுத்தோடுதே
தொடரும் புதுப் புதுக் கேளிக்கையிடை
மனங்கள்தான் பழுத்த மர்மமென்ன

kirukan
15th August 2011, 01:17 PM
என்ன என்ன
என்ற கேள்விகளுக்கு
எதையாவது சொல்லிவைத்தால்
பின்வரும் நாட்களில்
முன்சொன்ன பதில்களை
முடிச்சு போட்டு
கேள்வி எழுப்ப
முழி பிதுங்குது
மழலையின் முன்.

pavalamani pragasam
15th August 2011, 08:21 PM
முன் நடந்தான் நெஞ்சு நிமிர்த்தி ஆடவன்
அவன் பின் குனிந்து நடந்தாள் பெண்மணி
நூற்றாண்டுகள் பல சென்றன இப்படியே
நாகரிகம் நல்லெண்ணம் சமத்துவம் தோன்ற
தோளோடு தோளாய் சேர்ந்து இருவரும் நடக்க
மேலும் உருண்டன வேகமாய் வருடங்கள் பல
புலியாய் பாய்கிறாள் முன்னேறிய பெண்ணின்று
பூனையாய் பம்மிக்கொண்டு பின்னால் ஆண்மகன்
வட்டம் முடிவது துவக்கப் புள்ளியில் அறிவோம்
பெண்ணே உடைப்பாயோ பழைய சித்தாந்தம்
புதிதாய் படைப்பாயோ நிகரில்லா சரித்திரம்

chinnakkannan
16th August 2011, 10:33 AM
”சரித்திரம் படைப்போம் நாம்..
கொடுங்கோல் ஆட்சி ஒழிந்தது..
இனி
எல்லா உயிர்க்கும் தீங்கு வராத
நல்லாட்சியை வழங்குவோம்..”
முழங்கினான் சோழ மன்னன்
முகம் மாறாமல் சிரித்தபடி
நசுக்கினான்
காலில் கடித்த எறும்பை..

pavalamani pragasam
16th August 2011, 03:30 PM
எறும்பை அழைத்தூட்ட அரிசி மாவு கோலம்
ஆயின் அதை விரட்ட இனிப்புகளைச் சுற்றி
கோடாய் வரைந்த பூச்சி மருந்து தடுப்பு
அனுமதித்த சலுகைகள் அவசிய தடைகள்
என்றும் எங்கும் இருப்பது எறும்புக்கு மட்டுமா
எழுதாத சட்டங்கள் எல்லைகள் பாதுகாப்பா

chinnakkannan
16th August 2011, 03:52 PM
பாதுகாப்பாய் இருக்க நினைப்பதில்
தவறில்லை..
ஆனால் நான்
நெருங்கும் போது
இறுகுவதும்
விலகி அமரும் போது
ஏக்கப் பெருமூச்சும்
ஈரவிழிப் பார்வை கொள்வதும்..
ஏன் இந்த நாடகம்...

kirukan
16th August 2011, 04:28 PM
ஏன் இந்த நாடகம
அஹிம்சா வழி அதர்மமாம்
ஆட்டைய போடுவது தர்மமாம்

மக்கள் தீர்மானத்தை விட
மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள்
(மக்கள் விரோத)தீர்மானம் தான் இறுதியானதாம்
என்ன கொடும சரவணன்...

உண்ணாவிரததுக்கு 144 போட்டா
ஊராடிச்சு உலைல போடுரவனுங்களுக்கு
என்னத்த போட

சுவிஸ் வங்கி கணக்கு
சுழியத்தின் அணிவகுப்பு

சுத்தமானவங்களாம் இவனுங்க
சொல்லி திரியரானுங்க
1 வருசத்துக்குள்ள
5 லட்சம் கோடி
வெளிய எடுத்துருக்கானுங்க
வெளங்காதவனுங்க
சொல்லுது சுவிஸ் வங்கிகள்.

பாமரனை பசிக்கவிட்டு
சுகிக்கும் நீங்கள்
வெறும்
பணம் திண்ணும் பிணங்களடா...

ஹ்க்த்துதூ..................

chinnakkannan
16th August 2011, 06:12 PM
ஹ்க்த்துதூ...

வாயில் போட்டிருந்த
வெற்றிலை பாக்கு புகையிலையை
மாடு வைக்கலை மெல்வது போல
அக் அக் அக் என மென்று
துப்பிய
பக்கத்து வீட்டு மாமா
‘நான் என்ன சொல்ல வர்றேன்னா..
பகவத் கீதையில பகவான்
என்ன சொல்றாருன்னா..”
என ஆரம்பித்துச்
சொன்ன விஷயங்கள்
காதில் விழவேயில்லை
வெள்ளைச் சுவற்றில்
துளிகளாய் விரிந்து பரவி
கண்களில் ஒட்டிக் கொண்ட
சிகப்புத் தீற்றலால்..

pavalamani pragasam
16th August 2011, 07:11 PM
சிகப்புத் தீற்றலால் திருமதியென அறிவித்தாள்
தாலியோடு அதையும் தைரியமாய் அழித்தாள்
தனக்கென தனி அடையாளம் தேடும் தன்னம்பிக்கைத்
தலைமுறையைப் பார்த்து விம்ம வேண்டும் பெருமையில்

kirukan
16th August 2011, 07:42 PM
பெருமையில் திளைக்குது இந்தியா
சுட்டிகாட்டயவரும் சுருட்டியவனும்
ஒரே சிறையில்

rti கொண்டு
தட்டி கேட்டவரை
சுட்டு வீழ்துது

நாட்டுக்கு வந்த
புற்றுநோய்கே புற்றுநோயாம்

மண்ணாகி மக்கி போனாலும்
பொன்னாசை விட்டு போகாத
இந்த புல்லுரிவிகளுக்கு
புண்ணாகி போன
எம்மக்கள் வாழ்வு புரியுமா.

pavalamani pragasam
17th August 2011, 07:45 AM
புரியுமா சாடை என அவளும்
தெரியுமா தாபம் என அவனும்
அது ஒரு அழகான ஊமை நாடகம்
எலியும் பூனையுமாய் வெளி வேடம்
கொடியும் கொம்புமாய் உண்மை பற்று
சம்சாரத்தின் இனிமை முரண்கள்தானே

kirukan
17th August 2011, 10:41 AM
முரண்கள்தானே நடப்பது
வெளிவிட்டால் பிரச்சனை
என நினைத்தவர்களுக்கு
வெளியே போகாதது
பிரச்சனை ஆனது.

chinnakkannan
17th August 2011, 03:25 PM
ஆனது ஆகட்டும்
எப்படியும் முட்டி மோதிப் பார்க்கலாம்
என
மனத்தைக் கொத்திக் கொண்டே
இருக்கின்றன கற்பனைக் குருவிகள்..
வெளியே விட்டால்
அவை அழகான கவிதையாகுமோ
அல்லது காற்றில் கரையுமோ
என்ற பயத்திலேயே
கழிந்து செல்கின்றன என் பொழுதுகள்..
*
ஆனது ஆகட்டும்
கொஞ்சம் தைர்யமாய் எழுது
ஆண்பிள்ளைதானே நீ
என ஒரு குருவி கேட்க
சரியென
உன்னை நினைத்துச் சின்னதாய்
எழுத முயற்சிக்கையில்
திடீரென அழைப்புமணி அடிக்க
கதவைத் திறந்தால்
சிகப்பு தாவணியும் மஞ்சள் ரவிக்கையும்
மஞ்சள் பட்டுப் பாவாடையுமாக
நீ நிற்கிறாய்..
என் கவிதை வெட்கப்பட்டுக் கொண்டு
ஓடி
சுவருக்குப் பின்னால் சென்று
எட்டிப் பார்க்கிறது ஒளிந்து..

kirukan
17th August 2011, 05:41 PM
ஒளிந்துள்ள உண்மைகள்
ஊருக்கு தெரியுமா
குற்றம் நிரூபிக்கப்பட்ட
தேச துரோகிக்கு
ஆறு மாதமம்
பொய் வழக்கு
தொடுப்போருக்கு
இரண்டு ஆண்டாம்
இவனுங்க தலைல
இடி விழ.



Jokepal bill
Punishment for corruption will be a minimum of 6 months and a maximum of up to 7 years.
For False, Frivolous and vexatious complaints- Two to five years of imprisonment and fine.

pavalamani pragasam
17th August 2011, 07:48 PM
இடி விழ மின்னல் வெட்ட மழை கொட்ட
ஒலி ஒளி வெள்ளமாய் பருவ கால திருவிழா
வெந்த பூமியும் நொந்த மனமும் குளிர
மேலும் இதுபோல் வரமாய் வருக தருக

chinnakkannan
17th August 2011, 11:02 PM
வ்ரமாய் வ்ருக தருக என
வேண்டி,கெஞ்சி,கொஞ்சி, கதறினாலும்
வர மறுக்குது மழை,,..
ஏதோ எப்படியோ பொங்கிய
காதலுணர்வில்
மேகங்கள் வந்தாலும்
குடும்பக்கட்டுப் பாட்டு அதிகாரியாய் வந்து
கலைக்கிறது காற்று...
விரத மாதத்தில்
பி.எஸ்.வீரப்பா போல
வில்லத்தனமாய்ச் சிரித்து
சுட்டெரிக்கிறது சூரியன்..
வேலை பார்க்கும் இடத்தில் இப்படி..
பிறந்து வளர்ந்த ஊரில்
இடியாம், மின்னலாம், மழையாம்....
ம்ம்....ம்ம்..
நற ந ற...

pavalamani pragasam
18th August 2011, 08:10 AM
நற நற சத்தம் நள்ளிரவில்
திடுக்கிட்டு விழித்தவளருகில்
அமைதியாய் தூங்கும் பிள்ளை
வயிற்றில் பூச்சி பிரச்சினையிது
வைத்தியரிடம் காட்டவேண்டும்
தருவார் இதற்கு தகுந்த மருந்து

kirukan
18th August 2011, 10:43 AM
மருந்து உண்டோ
மக்களை மயக்கி
நாட்டை செல்லரிக்கும்
ஊழலை ஒழிக்க
மருமகளாய் வந்தவரை
குடிமகளாய் கொண்டாடிய
மக்களின் குடிகெட்டதுதான் மிச்சம்
இப்போது
மருமகளின் மருமகன்
ஆட்டம் ஆரம்பம்.




https://www.facebook.com/video/video...=1714109831035
Please watch the above video
1. TATAs took 100 years to become billionaire, Ambanis took 50 years(after utilizing all its resources), where as Delih Based Robert Vadra took less than 10 years to become fastest multi billionaire
2. All newspapers are scared to discuss the story of Robert Vadra because of severe threat from Sonia Gandhi and Congress government
3. After Robert Vadra got married with Priyank Gandhi, Robert's father committed suicide under mysterious circumstances, his brother found dead in his delhi residence and his sister found dead in mysterious car accident. These reports were not published in any Indian media.
4. Robert Vadra is having stakes in Malls in premier locations of India, he is having stakes in DLF IPL, and DLF itself. Robert Vadra was involved in Commonwealth games corruption - DLF was responsible for development of Commonwealth games, and Kalmadi gave favouritism to DLF because of Robert Vadra's direct interest and business partnership with DLF.
5. Robert Vadra owns many Hilton Hotels including Hilton Gardens New Delhi
6. Robert Vadra 's association with Kolkat Knight Ryders(one of the Frenchies of DLF IPL) has never been reported by Indian media
7. Robert Vadra is having 20% ownership in Unitech, Biggested beneficiary ownership of 2G Spectrum Scam. Because of Robert's involvement in this scam, there are concerns that investigation would never reach decisive conclusion
8. Robert owns prime property in India specially commercial hubs, and taxi business but for Air Taxi. He owns few private planes as well.
9. Robert is having direct link with Italian businessman Quatrochi
10. Several companies of Robert Vadra received unsecured loans from the banks
If we consider the contents in documentary correct, then we would join second freedom movement of indain history soon.

pavalamani pragasam
18th August 2011, 03:53 PM
ஆரம்பம் எதுவென தெரியாமல்
அப்பாவி கணவன் தடுமாறுகிறான்
நிர்மலமான வானம் ஏன் கருத்தது
கடகடவென ஏன் இடித்தது
பளீரென ஏன் மின்னியது
கனமழை ஏன் கொட்டியது
பெண்ணிவள் புயலா பூகம்பமா
என்ன பிழை நான் செய்தேன்
குறை ஒன்றும் கூறவில்லை
வாதமும் புரியவில்லை
தடை ஏதும் சொல்லவில்லை
ஒன்றுமே புரியவில்லையே
இன்று நேற்றல்ல பல மாதம்
கடந்தும் கனன்று கொண்டிருக்கும்
என்றோ பேசியது செய்தது
எரிமலையை ஆராய்ந்து பயனுண்டோ

chinnakkannan
18th August 2011, 09:23 PM
உண்டோ என
மலையாளத்தில் கேட்பதாக நினைத்துக்
கேட்டால்
இருக்கிறது எனப் புன்சிரித்த
விற்பனை இளைஞன்
எங்களைக் கூட்டிச்சென்று
வாங்கவிருந்த குளிர்பதனப் பெட்டியைப பற்றி
மனைவி கேட்ட சந்தேகத்தெல்லாம் தீர்த்து
விலையை என்னிடம் சொல்லி
நடுவில்
என் சுட்டிப் பெண்ணைக் கொஞ்சி
அனுப்ப..
சில நாள் க்ழித்து
தெருவில் பார்த்த்தில்
கொஞ்சம் கூட சிரிக்காமல் போனான்..
மனைவி
‘என்ன்ங்க இது..
அன்னிக்கு சிஸ்டர் அது இதுல்லாம் சொன்னான்
இன்னிக்கு...’
நான் சொன்னேன்..
‘அவன் அன்று விற்பனை ஆள்..
அது தொழில்..
இன்று தான் அவன்
இருக்கிறான்.. அவனாக.:

pavalamani pragasam
19th August 2011, 08:04 AM
அவனாக தேடிய துணை
தேளோ திரவியமோ
தீராத தலைவலியோ
சிரிக்கும் சிங்காரி உறவை
சிதைப்பாளோ சேர்ப்பாளோ
குலம் கோத்திரம் வேறு
கூடி வாழ வந்தது துணிவு
புது யுகத்தின் சூதாட்டம்
போகப் போகத் தெரியும்
பெற்றவர் பொறுப்பு சுருங்க
பறவைகள் சிறகை விரிக்க
அவசியமாகிவிட்ட மாற்றம்
அதிலில்லை ஏதும் குற்றம்

chinnakkannan
19th August 2011, 09:31 AM
”குற்றம் ஏதுமில்லை
எனத் தான் நினைக்கிறேன்..
மூத்த மகன்
அலுவலகத்தில் சக தோழியைக்
காதலிக்கிறானாம்....
வேறு ஜாதி தான்..
மகன் என்பதால் சரியென்று விட்டேன்..
உங்கள் மகனுக்கும்
என் மகளுக்கும் தான்
முன்பே ஜாதகம் பொருந்திவிட்ட்தே..
நல்ல நாள் பார்க்கலாமா..”
அப்பா கேட்ட்தற்கு
இடுப்பில் கையை வைத்து
இடி இடி எனச் சிரித்த
அவரது நெடு நாளைய நண்பரான
கொல்லைப் பக்கத்து வீட்டு டாக்டர் மாமா
‘என்ன ஓய் சொல்றீர்..
வலது கை போனாலென்ன
இட்து கை போனாலென்ன..
ஊனம் ஊனம் தானே..
என் பையனுக்கு
கெளரவமான இட்த்தில்
பார்த்துக் கொள்கிறேன்..’
என்று நாவால் சுட
தலைகுனிந்த படி வந்த அப்பா
விஷயத்தைச் சொல்ல
தாவிக் குதித்தாள் அக்கா..
‘விடுங்கப்பா..
நானும் ஊனமுற்றவரின்
வீட்டிற்குப் போக மாட்டேன்..”
அப்பாவின் விழிகள் விரிய..
‘ஆமாம்...
அவருக்குத் தான்
இதயமே இல்லையே...!”
சொன்னவளை
அணைத்துக் கொண்டார் அப்பா இறுக...

pavalamani pragasam
19th August 2011, 03:38 PM
இறுக அணைத்த நிகழ்வு சரித்திரம்
எதிரியின் வஞ்சக தழுவல் கொல்வதற்காக
ஆயின் குத்திய குறுவாளை தடுத்தது
மராத்திய சிங்கம் அணிந்த இரும்பு கவசம்
எதிர்பார்த்திருந்த தாக்குதலுக்கு
பதிலடியாய் குடலை உருவியது
மதியூகியின் புலிநக ஆயுதம்
வியக்க வைக்கும் கபட நாடகம்

kirukan
19th August 2011, 05:05 PM
கபட நாடகம் என்றார்
அயல் நாட்டு சதி என்றார்
என்சொல்லி என்ன
மக்கள் முன் நின்றனர்
மழை நனைத்த போதும்
உள்ளத்தீ அணையாது நின்றனர்
கோடியில் சம்பாதிக்கும்
கட்சிகளுக்கு
மக்களின் நாடி புரியுமா.



Agila indiya Digress Income excluding collection and coupon sale
2002-2003 - 70,00,00,000.00
2008-2009 -220,00,00,000.00
2010-2011 -470,00,00,000.00

pavalamani pragasam
19th August 2011, 08:04 PM
புரியுமா இன்றைய புத்திசாலி மனிதனுக்கு
பூமி ஏன் வெப்பமானது மழை ஏன் மாறுது
சுனாமியும் சூறாவளியும் ஏன் வருகுது
வீடிழந்த யானை ஏன் வயலை அழிக்குது
எங்கும் மாசு எதிலும் மாசு எத்தனை விதத்திலே
புதிது புதிதாய் நோய்களும் கிருமிகளும் தோன்ற
சுகம் ஒன்றே குறியாய் சுயநலமே கொள்கையாய்
கோர தாண்டவம் ஆட தொலையுது எதிர்காலம்

chinnakkannan
19th August 2011, 08:13 PM
எதிர்காலத்தில்
மருத்துவர், பொறியாளர், மாவட்ட ஆட்சியர்,
இன்னும் பலவாய்
ஆக வேண்டுமென்
பிள்ளைகளுக்குச் சொல்லி
படிக்க வைப்பவர்கள்
மனிதனாக இருக்க, நடக்க
சொல்லித் தருகிறார்களா என்றால்
சந்தேகம் தான்..

kirukan
19th August 2011, 09:17 PM
சந்தேகம் தான்
சரித்திரம் மாறுவது
ஆனால்
வீதிக்கு வந்த மக்கள்
வீணர்களை வீதியில் நிறுத்துவார்கள்.

pavalamani pragasam
19th August 2011, 11:01 PM
நிறுத்துவார்கள் சீண்டலையென
பொறுமை காத்தாள் புது மருமகள்
புரிந்துகொண்டாள் கொண்டவனவர்கள்
கைப்பாவையாய் இயங்குவதை
புரிதலில்லா துணையுடன் இது
நரகமென்று விலகித் தீவானாள்
இருந்தும் இல்லாத இந்த அவலம்
புதிய தலைமுறை காணாதது

chinnakkannan
20th August 2011, 12:46 AM
”காணாதது கண்ட மாதிரி
நடந்து கொள்ளாதே..
நாசூக்காக..நளினமாக நட..
கொஞசம் அடக்கி வாசி”
வேறு எப்படிச் சொல்ல..
அறையினுள் மகனை அனுப்பினால்
மறு நாள் காலையில்
அவ்ன் முகத்தில் சில கீறல்கள்..
அந்தப் பக்கம்
கொஞ்சம் வாசிப்பு அதிகமாம்!!’

pavalamani pragasam
20th August 2011, 08:06 AM
அதிகமாம் மக்கள் ஆதரவு
ஆணவமாய் எண்ணியது
பொய்யாய் போனது கணக்கு
பொங்கி எழுந்தது ஊர்சனம்
மிரட்டியதும் சுரண்டியதும்
போதுமென சொன்ன தேர்தல்

kirukan
20th August 2011, 12:37 PM
தேர்தல் மட்டுமே
ஜனநாயக கடமையாம்
அதன் பின்
ஐந்து வருடம்
ஐயுறு வந்தாலும்
அடக்கி வாசிக்க
வேண்டுமாம்
குரல் எழுப்புதல்
ஜனநாயக குந்தகமாம்.

pavalamani pragasam
20th August 2011, 04:18 PM
குந்தகமாம் தூக்கத்திற்கு
கணவனின் குறட்டை சத்தம்
கோர்ட்டுக்கு போவாள் வெள்ளைக்காரி
கோபமாய் மணவிலக்குக் கோரி
கொண்டையை பிடித்து உலுக்கி
காலால் மிதித்து உதைத்து
கொடுமை பல செய்தாலும் இங்கே
கொண்டவனை கும்பிடுவாள் குலமகள்
கொட்டும் மழை அவள் வார்த்தைக்கு
குருட்டு நம்பிக்கையில் வளமாய் ஆணினம்

kirukan
20th August 2011, 04:38 PM
ஆணினம் ஆதிக்கவாதிகளா
அடங்கி வாழும்
அடிமைகளா என்பது
ஆண்டவனுக்கே வெளிச்சம்
சமஉரிமை வேண்டியவர்
சமமில்லை உயர்நிலையென
ஊழலில் உணர்த்திட்டார்.

pavalamani pragasam
20th August 2011, 08:34 PM
உணர்த்திட்டார் ஒரு 'உம்'மில்
உப்பும் உரைப்பும் கச்சிதம்
பக்குவமான நல்தாளிதம்
ருசியும் மணமும் அதிகம்
கண்மை கரைய சமைத்தவள்
அடைகிறாள் புளங்காகிதம்

kirukan
20th August 2011, 11:15 PM
புளங்காகிதம் அடைகிறது மனது
சட்ட திருத்தம் செய்யும்
குழுவில் லல்லு போன்ற
புழுக்கள் உள்ளது
என அறியும் போது

புரிந்த போதும்
பயத்தில் பதுங்கி
பணிய மறுக்கிறது
புலி வேடம் கொண்ட
குள்ளநரி கூட்டம்.

pavalamani pragasam
21st August 2011, 07:16 AM
கூட்டமாய் தான் படையெடுக்குமாம் துன்பங்கள்
ஒத்தை வரிசையில் வராதாம் மோதிப் பார்க்க
மெத்த சரியாகத்தான் சொன்னார் ஷேக்ஸ்பியர்
தன்மானமும் தன்னம்பிக்கையும் துவளவிடாதே

kirukan
21st August 2011, 10:45 AM
துவளவிடாதே நண்பா
தூரெடுக்கும் போது
துர்நாற்றம் வீசத்தான் செய்யும்
துணிந்து எடுத்துவிட்டால்
தூய நீரை சுவைத்திடலாம்.

chinnakkannan
21st August 2011, 11:33 AM
சுவைதிடலாம் இந்த பழச்சாரை...
‘சுவைத்திடலாம்’னு சொல்..
சற்றே முறைத்துப் பின்
அருகில் வந்து
‘என்கு கொஞ்சம் கொஞ்ச்மா தான்
தமிழ் வரும்..
இப்படி அர்ஜெண்ட் பண்ணினே..”
“என்ன செய்வாய் என்
வட நாட்டு இனியவளே..”
“உன்கு கொடுக மாட்டேன்
முதம் போ...”

pavalamani pragasam
21st August 2011, 12:00 PM
போ என்றவுடன் போகாமல்
வா என்றவுடன் வராமல்
தரும் தொல்லை தீராமல்
இருக்கும் ஆயர்பாடி கண்ணன்கள்
இல்லாத இல்லங்கள் உண்டோ
யசோதையின் பேறு மிகப்பெரிது

kirukan
21st August 2011, 04:52 PM
பெரிது பெரிது
மக்கள்தொகை
அதனினும் பெரிது
இவர்கள் சுரண்டிய
மக்களின்தொகை

சிறிது சிறிது
மக்களின் தேவை
அதனினும் சிறிது
இவர்கள் நாட்டுக்கு
செய்த சேவை.

chinnakkannan
21st August 2011, 08:04 PM
சேவை என்றால் மோர்க்குழம்பு;
தோசை என்றால் காரச்சட்னி,சாம்பார்;
இட்லிக்கு க்ட்லை மாவு வெங்காயம்போட்ட சட்னி; எள் மிளகாய்ப் பொடி
காய்கறி பிரியாணியா.. வெங்காய சாலட்
ச்ரி
ஞாயிற்றுக் கிழமை மதியமா
பருப்பு உருண்டைக் குழம்பு
பூண்டு ரசம்
பூசணிக்காய் கூட்டு
உருளை காலிஃப்ளவர் கறி
பொரித்த அரிசி அப்பள்ம், ஜவ்வரிசி வடாம்
அப்போது தான் அரைத்த் பருப்புப் பொடி..
ம்ம்
உணவுக்கான மெனுவ்ம் கூட
மனதில் வைத்துச் செய்வதில்
அம்மா கில்லாடி..
*
காலேல ப்ரெட் டோஸ்ட் பண்ணட்டா..
மத்யானம் சமர்த்தோல்லியோ
த்யிர்சாதம் ஊறுகா..
ஒனக்குப் பிடிச்ச மாவடு..
அப்புறம்
நைட் வீ வில் கோ அவுட் யார்....
நாளக்கி காலல்ல
அப்றம் பாக்கலாம் டியர்..
கண்ணோல்லியோ..
*
காதலித்தவளை
கடிமணம் புரிந்தபின்
வாழ்க்கை
மற்ற விஷயங்களில்
வண்ணம்யமாய்த் தோற்றம் கொண்டாலும்
சமைய்லில் கொஞ்சம்
க்றுப்பு வெள்ளை தான்...

kirukan
21st August 2011, 10:28 PM
கருப்பு? வெள்ளைதான்
கொள்ளை அடித்த பணத்தை
கடல்கடந்து கொண்டுசென்று
கவலைஇல்லாது களிக்கும்
கம்மனா...கள்
செலவழிக்கும் பணம்
செலவழிக்கும் நாட்டில்
கறுப்பல்ல வெளுப்பே
வெள்ளேந்தி இந்தியனுக்கு
மிஞ்சியது வெறுப்பே.

pavalamani pragasam
21st August 2011, 10:45 PM
வெறுப்பே காட்டாத முகங்கள்
வேற்று மனிதர் பல்லிளித்தாலும்
விகாரமாய் கண்ணால் மேய்ந்தாலும்
வேண்டுமென்றே கேள்விகள் கேட்டாலும்
விரலால் தொட்டு நோட்டம் போட்டாலும்
விரசம் ததும்பும் வித வித பாவனைகளும்
வாங்குகிற சம்பளப் பணத்திற்காக
வெளிக்காட்ட முடியாத விவகாரம்

kirukan
21st August 2011, 11:13 PM
விவகாரம் விகாரமாகி
விவரமாய் விவரித்த பின்னும்
விழியாது விழிக்கும்
வழிப்பறி கூட்டம்
வருந்தி திருந்துவது எக்காலம்.

pavalamani pragasam
22nd August 2011, 07:39 AM
எக்காலம் எது நடக்கவேண்டுமோ
அக்காலம் அது நடந்தே தீரும்
பலனை எண்ணாது கருமம் செய்திட
பளுவாய் எதுவும் தெரிவதில்லை

chinnakkannan
22nd August 2011, 11:05 AM
தெரிவதில்லை.. எப்படி
விளயாடுவதென்று இவனுக்கு

தெரியவில்லை..
எங்கு ஒளிந்துகொண்டானென்று...

விழிகளுக்கெட்டியவரை பார்த்தால்..
ம்ஹீம் ஆளைக் காணோம்..
பாறையில் வைத்திருந்த
துணிகளையும் காணோம்..
இருப்பது ஒற்றைத் துணி..

தலை முழுக்க நனைத்தாயிற்று..
உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறது துணி..
சில்லென வீசும் காற்றில்
குளிர வேறு செய்கிறது..
இப்படியே எப்படி ஊரினுள் செல்வது..

இந்தக் குட்டிப்பையன்
படுத்துகிறான்.. ரொம்ப..

தண்ணீரில் அதிக நேரம் இருந்தால்..
ஜல்தோஷம் வந்து விடுமோ..
ஜீரம் வந்தால் கஷ்டம் தான்..
அம்மாவின் கசப்புக் கஷாயம்
நினைத்தாலே நாக்கு உள்வாங்கு கிறது..

வ்வ்வ்..ஆவ்..
என்னவோ தண்ணீர் பூச்சி போல
கடிக்கிறது..
டேய் படவா..
மரியாதையாய்த் திருப்பிக் கொடு..
கண்ணா....

மாலையும் மயங்கி இருள
எனக்குப் பயம்மா இருக்கே..
என் செய்வேன்...

கத்திப் பார்த்தாயிற்று..
வேறு யாருக்கும் கேட்காதோ..

ஒன்று செய்யலாம்
கைகள மேலே கூப்பிக்
கூப்பிடலாம் அந்தக் குறும்புக்காரனை..
அட்டா..
கைகளைத் தூக்குகையில்
துணியும் நழுவுவது போல இருக்கிறதே..
பரவாயில்லை..
அவனையே நினைத்து உருகி
நீ தாண்டா எனக்கு எல்லாம்..
நீயே எனக்கு அடைக்கலம் என்போம்...

கண்ணா..ஆ.ஆ..

தொப்பென்று மேலே விழுவது என்ன..
அட துணிகள்..
கண்ணுயர்த்திப் பார்த்தால்
குறும்பாய்க் கண்ணன்..

மடமடவென உடுத்தி
அவனுக்கு நன்றி சொல்லும் சாக்கில்
கொஞ்சலாம் எனப் பார்த்தால்..
மறைந்துவிட்டான் அந்த மாயக்காரன்...

kirukan
22nd August 2011, 11:37 AM
அந்த மாயக்காரன் தான்
விளக்க வேண்டும்
தெரியவில்லை எனக்கு

திறமைசாலி எல்லாம்
உத்தமரா
உணர்ச்சிவசபட்டவர் எல்லாம்
உதவாக்கரையா

chinnakkannan
22nd August 2011, 01:17 PM
உதவாக்கரையாய்த் தான் போவான்
என நினைத்த பாஸ்கர்
ப்ளஸ்டூவில் தேறாமல்
அப்பாவின் ஏச்சுக்களை
நல்லவிதமாய் ஏற்று
தொழிலும் கற்று இன்று..
நன்றாய் முன்னுக்கு வ்ந்து விட..

பெரீய்ய கலெக்டராக வரணும்னு
ஆசைப்பட்ட
நன்றாய்ப் படிக்கும் எதிர்வீட்டு எத்திராஜ்
திடீரென தந்தை மரிக்க
குடும்பத்திற்காக
படிப்பை நிறுத்தி
ஏதோ ஒரு வேலை எனச் செய்து..
கனவு கனவாகவே ஆனதை எண்ணி
முதலில் கொஞ்சமாய்க் குடித்து
பின் குடியே அவனைக் குடிக்க ஆரம்பித்தது...

இந்த மாற்றங்கள்
எந்த விதத்தில் நியாயம்...

சில கேள்விகளுக்கு
வாழ்க்கையில் எப்போதும்
இருப்பதில்லை விடை..

pavalamani pragasam
22nd August 2011, 02:45 PM
விடைத்தாளை விசிறியடிக்கும் ஆசிரியருண்டு
அழகாய் திருத்தி பாராட்டி தெளிவாய் விளக்கிடும்
உயர்ந்த வழிகாட்டிகளும் உண்டு வகுப்பறையில்
விளைநிலத்தை பண்படுத்துவோர் வாழியவே

chinnakkannan
23rd August 2011, 03:03 PM
வாழியவே..
வாழியவே..
*
பக்கத்து அறையில் வேதியர்கள்
எனக்காக யாகம் செய்கிறார்கள்..
நான் நல்ல மன்ன்னாம்...
நீண்ட நாள் இருக்க வேண்டுமாம்..

டபக்கென்று கோபம் வசப்படுகின்ற
நானும் ஒரு மன்ன்னா..
ஆத்திரத்தில் கண் மறைக்க
ஊர்ந்த பாம்பை முனிவரின் கழுத்தில் சூட்ட
அவரதுமகனுக்கும் கோபம் வர
எனக்குக் கொடுத்தானாம் சாபம்
ஏழு நாட்களில்
அரவமில்லாமல் அரவம்
எனைத் தீண்டுமாம்..
*
இதோ
நிலவைத் தொடும் வகையில்
அமைந்த மாளிகையில்
உச்சியில் நான்...

வேடிக்கையாகத் தான்
இருக்கிறது..
விரைவில் அங்கேயோ போவேனோ என்னவோ..
*
இறப்புக்கு பயமா எனக்கு
இல்லை இல்லை
இந்த பரீக்*ஷித்துக்கு என்றும்
இருந்த்தில்லை..
பின்
எதற்கு உடன்படுகிறேன்
இந்த மந்திரங்களுக்கும் யாகங்களுக்கும்..
என் மேல் இவர்கள் கொண்ட நம்பிக்கையால்..
*
பொறுத்துப் பொறுத்து இருந்த்தில்..
இன்று
ஏழாம் நாள்..
இறுதி இரவா இது..
என் வாழ்க்கைக்கதையில்
முற்றுமா.. தொடருமா
*
அறைக்கதவு தட்ட்த் திறந்தால்
ஒரு வேதியர்
கண்களில் ஏதோ விஷம்ம்..
பரீஷித்..உன்மனம் கலங்கியிருக்க
மற்றவரைக் குறை சொல்லாதே..
இருந்தும்..
‘வாருங்கள் வேதியரே..’
‘வாழுங்கள் மன்னா..
இந்தாரும்..”
அழகிய மாம்பழங்கள் கொண்ட கூடை
அற்புத வாசனை
மிக இனியதுமன்னா..
உண்டு விட்டு உறங்குவீர்...இனிதாக..
எனக்கும் இனிதாக...
*
வேதியர் போய்விட்டார்..
மாம்பழங்கள் சிரிக்கின்றன
உண்ணலாமா..
வெளியில் பார்த்தால்
சந்திரன் ஏதோ சொல்வதைப் போல..
வா என்கிறானா..

அதோ அந்தமுழுதும்
மஞ்சளாய் உள்ள பழம்..
கத்தியால் வெட்ட...
வெளியில் தாவிய சிறுபுழு
மடமடவென நாகமாய் மாறி
கணத்தில் தீண்ட...

மெல்ல மெல்ல க்ண்சொருகும்
தருணத்தில் தோன்றியது..
யாராலும் முடியாது
வெல்வதற்கு விதியை..

நான் விதைத்த்து வினை
அறுவடை செய்வதும் வினை...

***

pavalamani pragasam
23rd August 2011, 03:24 PM
வினை முடிக்கும் செயல் வீரன்
விடாமுயற்சியுடைய தீரன்
வெற்றிக்கனியை பறிப்பான்
விவரமாய் ஆளை தேர்ந்தெடு

kirukan
23rd August 2011, 05:44 PM
தேர்ந்தெடுத்து தேரில் ஏற்றினால்
சாலையில் ஓட்டாது
சாக்கடையில் ஓட்டி
தேரேன்றால் நாறத்தான் செய்யும்
எனில் என்சொல்ல.

pavalamani pragasam
23rd August 2011, 06:14 PM
என்சொல்ல
சின்ன மழையே
செல்ல மழையே
சுகமாய் தூவு
செடியோடு நானும்
சிலிர்க்கின்றேனே
சில்லென்று மனது
சிரிக்கின்றதே நிதம்

chinnakkannan
23rd August 2011, 06:40 PM
நிதம் எழும்போது
நினைத்துக் கொள்வேன்..
அதற்கு அதிகம் செல்லம்
கொடுக்கக் கூடாதென..
எழுந்ததும்
அறையை விட்டு வெளியே வந்தால்
அது பரபரவென வாலை ஆட்டி
தாவி நாக்கைத் தொங்க வைத்து
பார்க்கும் பார்வையில் மறந்து
கட்டிக் கொஞ்சுவேன்
’என் செல்லக் கன்னுக்குட்டி..!.”

pavalamani pragasam
23rd August 2011, 09:47 PM
கன்னுக்குட்டி துள்ளுவதை
கண்டாலே மனம் துள்ளுவதேன்
கள்ளம் கபடில்லை அதனிடம்
காலம் இருக்கு பதவிசு வந்திட
கவலை தெரியாத பருவம்
கடிதாய் முடிந்திடுவது பாவம்

chinnakkannan
24th August 2011, 09:42 PM
பாவமாய்த் தான் இருக்கிறது...
உன் மென்மையினால்
பொறாமைப் பட்ட தென்றல்
மெல்ல
அடிமேல் அடி வைத்து
உன் முன்னுச்சி முடியைக் க்லைக்க
அதனால் நீ மேலும் அழகானதைக்
காணப் பொறுக்காமல்
உன்னிடமே
முட்டி மோதுவதைப் பார்க்கையில்...

*
பாவமாய்த் தான் இருக்கிறது..
என் பெருமை யாருக்கு வரும்
எனக்
கர்வத்துடன் இருந்த
உன் தலையில் நீ சூடியிருந்த
ரோஜா
ஏதோ ஒரு அசைவில்
உன் பின்னால் விழுந்து
நீ எடுத்து
மறுபடியும் சூடிக் கொள்வாயா
என
ஏக்கத்துடன் பார்ப்பதைப் பார்க்கையில்….
*

பாவமாய்த் தான் இருக்கிறது..
எப்படியும் நீ எடுத்து
எழுதுவாய்..
உன் தளிர்விரல்கள்
தன் மேல் படும்..
ஜென்மசாபல்யம் அடையலாம்
என நினைத்திருந்து
உன் கைப்பையினுள் தவமிருந்த பேனா
அதை நீ எடுக்காமல்
கணினியைஉயிர்த்து
தட்டச்சு செய்வதைப்பார்த்துப்
பெருமூச்சு விடுவதைப் பார்க்கையில்..
*
உன்க்கு நான்
பாவமெனத் தெரியவில்லையா..
கடைத்தெரு சென்று வந்த்தும்
எனக்கு சின்ன புன்சிரிப்புக் கூடக்
கொடுக்காமல்
நேரே கணினியின் முன் அமர்ந்து
எதுவோ எழுதுகிறாயே..
இது நியாயமா.. நீயேசொல்..

pavalamani pragasam
25th August 2011, 08:02 AM
சொல் ஒரு சொல்
முடியாது
மாட்டேன்
போடா
லூசு
ஏதாவது ஒன்று

chinnakkannan
25th August 2011, 11:41 AM
ஒன்று இரண்டு எனச்
சொல்லிக் கொடுத்த
ஆசிரியரின்
குரலும் முகமும்
மறந்து போய் வெகு நாளாகிவிட்டது

க்ளட்ச் பிடி இது ப்ரேக்
என ஓட்டச் சொல்லிக் கொடுத்த
அண்ணனை
வருடம் ஒரு முறைதான் பார்த்தாகிறது..

இப்படி தோள்ல போட்டுக்கோ
அப்புறம் இப்படி மடி..
அப்புறம் என..
முதன்முறை வேலையில் சேர்ந்த போது
டை கட்டிக் கொள்வதற்கு
அழகாய்ச் சொல்லிக் கொடுத்த
அக்காவின் கணவரிடம்
ஏதோ ஒன்றை முன்னிட்டு
மனஸ்தாபம் கொண்டு
பேச்சை நிறுத்தியாகி விட்ட்து..

அலுவலில் சேர்ந்த முதல் நாள்
மேலாளர் சொன்ன வேலையை
எப்படி ஆரம்பிப்பது எனத்
தெரியாமல்
முழித்த போதில்
‘இப்படி வா’ என அழைத்து
சொல்லிக்கொடுத்து
அந்த நிறுவனத்தை விட்டு
வெளியில் செல்லும் வரை
துணை நின்ற அந்த வயதானவர்
உயிருடன் இருக்கிறாரா
என்பது கூட்த் தெரியாது..

**
அஸ்திவாரங்களைக்
கட்ட்டம் வேண்டுமானால் மறக்காது...
க்ண்டிப்பாய்
மறந்து கொண்டு தான் இருப்பான்
மனிதன்..

kirukan
25th August 2011, 11:43 AM
வட போச்சே..
மனிதன்..
ஒன்றுபட்டு குரல் கொடுக்க ஒடுக்கும்
அரசும் செவி மடுக்கும்.


என்னுடைய ௨௦௦வது கிறுக்கிறள்...சகித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் என் பணிவான நன்றி .

pavalamani pragasam
25th August 2011, 03:21 PM
செவி மடுக்கும் பாவனையில்
உதிரும் பல 'உம்', 'அடடா'
ஆர்வமாய் அவனிடம் கொட்ட
கோடி கதை அவளிடமிருக்க
தன்னை மறந்து கணினியில்
அவன் லயித்திருக்க அதை
அவளும் உணர்ந்து மடக்க
நடித்தவன் முழிப்பது திருதிரு

kirukan
27th August 2011, 09:16 PM
திருவாளர் அன்னா
திரையை திறந்துள்ளார்
திருந்துவதும்
திருத்துவதும்
மக்களின் கையில்.

pavalamani pragasam
27th August 2011, 09:37 PM
கையில் உள்ள ஒரு பறவை
புதரில் உள்ள இரண்டினும் உத்தமம்
இருப்பதை விட்டு பறப்பதற்கு
அலைவது அறிவீனமென்பது சத்தியம்

chinnakkannan
28th August 2011, 01:02 PM
சத்தியமாச் சொல்றேன்
எனப் பலவிதமாகச்
சிறு வயதில் செய்த நிகழ்வுகள்
அவை காப்பாற்றப் பட்டதா
என
இப்போது யோசிக்கும் போது
கொஞ்சம் வேடிக்கை;
நிரம்ப வேதனை வருகிறது கலந்து

pavalamani pragasam
29th August 2011, 06:47 AM
கலந்து ஊற்றிய மருந்து
காரிகையெனும் ஒரு விருந்து
வஞ்சம் பிடிவாதம் பொறாமை சூது
இன்னும் பல அரக்கப் போக்கு
ஒவ்வொன்றும் இத்தனை அவுன்சு
பழைய சினிமா பாட்டில் கேட்டது

chinnakkannan
29th August 2011, 08:48 AM
கேட்டது கிடைக்க வேண்டுமென
கோவிலுக்குச் செல்பவர்கள் பலர்..
கேட்டது உன்னிட்மே இருக்கிற்தே
என்ற் படி பார்த்துக் கொண்டிருக்கிறார்
இறைவன்...

pavalamani pragasam
29th August 2011, 12:18 PM
இறைவனும் இறைவியும் சேர்ந்து ரசிக்க
உலகத் திரையரங்கில் எத்தனையோ
நிழற்படங்கள் எதிர்பாராத திருப்பங்கள்
திகிலுடன் சாகசம் நகைச்சுவை உருக்கமென
நவரச வேடிக்கைகள் விரிகையில் அவரே
திகைத்து எழுதிய கதை வசனம் மறப்பரோ

chinnakkannan
31st August 2011, 11:49 AM
மறப்பரோ என்றால் தெரியாது
ச்மயத்தில் நினைவில் வைத்திருந்து
காலை வாரி விடுவார்கள்..

நிறைய வாக்குறுதி கொடுத்தாயிற்று..
,கொஞ்சம் நிறைவேற்றியும் ஆயிற்று...
நமக்குப் போக்...

இப்பொழுது
தற்காலிகமாக மக்களை
மறக்க வைக்க என்ன செய்யலாம்..

அட அது தான்
புதியதாக ஒரு பிரச்னை
சிலருக்குத் தூக்குத் தண்டனை..
சில புதிய வரிகள்..
சில அத்தியாவசியப் பொருள்களில்
விலை ஏற்றி விடலாம்..

..
தொலைக்காட்சி பத்திரிகைகள்
நேரம் நிரப்பக்கிடைத்த வாய்ப்பைப்
பயன் படுத்த..
மக்க்ள் மறந்து விடுவார்கள்

நாம் யார்..
எவ்வளவோ செய்தோம் செய்கிறோம்
இதைச் செய்ய மாட்டோமா..

pavalamani pragasam
31st August 2011, 12:03 PM
செய்ய மாட்டோமா விதவிதமாய் பட்சணம்
ஒன்று மாற்றி ஒன்றாய் வராதோ பண்டிகை
கொழுக்கட்டை சுண்டல் அவல் பொரி கனிகள்
களிமண்ணால் பிசைந்த பிள்ளை யார் நாமன்றி

chinnakkannan
31st August 2011, 12:41 PM
நாமன்றி வேறு யாரும்
ஜெயிக்க முடியாது..
சோர்வடையாதீர்கள்..
இதோ வருகின்ற பந்து..
உங்கள் திற்மையைக் காட்ட்ப் போகிற்து..

அடிக்கடி விழுந்த எண்களினால்
சரிந்திருந்த
பள்ளியின் கால்பந்து அணி
அணியின் தலைவரின்
தன்னம்பிக்கை மருந்தினால்
சுறுசுறுப்படைந்து..

இதோ..
பந்தைத் துரத்தி துரத்தி
எதிரியின் வலையில்
அடிக்க...

வெற்றி
வீழ்ந்தது எதிரியின் ஆணவம்...

pavalamani pragasam
31st August 2011, 05:56 PM
ஆணவம் என்ன செய்யும்
கண்ணை மறைக்கும்
கருணை மறுக்கும்
குழிக்குள் தள்ளும்
குலத்தை அழிக்கும்
முள்முடியது அணியல்ல

chinnakkannan
1st September 2011, 09:51 AM
அல்ல...
வெளியில் இருந்து ஒலித்த பாட்டை
திருப்பிச் சொல்லப்பார்த்த்து குழந்தை..
அல்லா..டா
திருத்தினாள் அம்மா..
அப்பா முறைத்தார்..
ஏய் ஒழுங்கா பாடு சாமி கோச்சுக்கும்
நா பாடினா சாமி ஒண்ணும் சொல்லாது..
குழ்ந்தைக்குத் தெரிந்த்து
தெரியவில்லை அப்பாவிற்கு..

pavalamani pragasam
3rd September 2011, 07:35 AM
அப்பாவிற்கு என்ன தெரியும்
சிறிய சேயும் இளைய தாயும்
சேர்ந்து சிரிக்கும் காட்சி
இயற்கையான ஒரு மகிழ்ச்சி
அதை அப்படி அர்த்தமாக்கியது
அழகிய ஜான்சன் விளம்பரம்

chinnakkannan
4th September 2011, 12:14 AM
விளம்பரம் என்பது..

இவன் மூணாவது வயசிலேயே
அப்பா பின்னாடி தான் இருப்பான்
கணினியின் விசைப்பலகை அத்துப்படி..
ஏ பி சிடி அப்புற்ம் அதன் விரிவாக்கம்
நகைச்சுவைத் தன்மை ஜாஸ்தி...
ஹேய் குட்மார்னிங்க் சொல்லு
குட்மார்னிங்க் மிஸ்..
அப்ப அட்மிஷன் ஓக்கேயா மேடம்
*
இவனை என்னன்னு நினைக்கறீங்க..
பத்தாம்கிளாஸ்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட்
ப்ளஸ் டூவில விழுந்து விழுந்து படிச்சான்
அதுக்காக டிவியும் பார்க்காம் இருக்க மாட்டான்
ம்ம் அந்த ப் பாட்டுப் போட்டில்ல
தானாவே அப்ளை ப்ண்ணிக் கலந்துக்கிட்டான்
ரன்னர் வரைக்கும் வந்தான்
டிரஸ் லாம் பாத்திருப்பீங்கள்ள..
ப்ள்ஸ் டூவில் ஸ்டேட் ஃபர்ஸ்ட்..
காலேஜ் சீட் ஓக்கே ஆயிடுமாங்க..
*
ப்ரொபஷனல் கோர்ஸ் படிக்கணும்னு ஆசை தான்
சி.ஏ தாங்க ஃபார்வார்ட் க்ளாஸீக்கு வழி..
பிகாம் முத்ல வருஷத்தில இண்டர் முடிச்சேன்
பிகாம் முடிச்சு ஒன்றரை வ்ருஷத்தில
சி ஏ, சி எஸ், ஐசி டபிள்யூ ஏ முடிச்சேன்
எப்படி இந்த அக்செண்ட்ல ஆங்கிலம் பேசறேனா..
அதுக்கு ஒரு கோர்ஸ் படிச்சேன்..
கொஞ்சம் கவிதை எழுதுவேன்
யா போத் டாமில்,இங்க்லீஷ், ஹிந்தி, ஜெர்மன்..
கடைசி ரெண்டு லாங்வேஜ் பொழுது போக்கா படிச்சேன்..
விளையாட்டு
கிரிக்கெட் பார்க்கப் பிடிக்கும்
செஸ் டோர்னமெண்ட்ல இரண்டாவது இடம்..
கேரம் ஓக்கேயா ஆடுவேன்
அஃப்கோர்ஸ் ப்ரிட்ஜ் எங்க அப்பாகிட்ட கத்துக்கிட்டேன்
யா நிறைய கம்பெனிக்கு
ஆர்டிகிள்ஷிப்ல போயிருக்கேன்..
கண்டிப்பா..நல்ல பேர் எடுப்பேன் உங்க கம்பெனில்ல..
தாங்க்ஸ்ய லாட் சார்..
*
பையன் கல்ஃப்ல இருக்கான்
நல்ல சம்பளம் தான்
ஃபோட்டோல்லபாருங்க
ஹேண்ட்ஸம்மா இருக்கானில்ல..
உங்கபொண்ணு ஃபேஸ்புக்ல பார்த்தானாம்
லீவுல்ல வந்தப்ப கூட
எப்படியோ அட்ரஸ் தெரிஞ்சு
அவளுக்குத் தெரியாம பாத்துருக்கான்..
ஜாதகம் நீங்க மின்னஞ்சல்ல அனுப்பிச்சீங்கள்ள
அதுவும் ந்ன்னாவே பொருந்துது..
என் பையன்கற்துக்காக சொல்லலை..
ரியலி
ஹி இஸ் எ மேன் ஆஃப் ப்ரின்சிபிள்ஸ்..
ந்ன்னாவே பாத்துக்குவான் உங்க பொண்ணை..
எனக்கென்னெ ஓய்
நான் ஒரு ரிட்டயர்ட் பேங்க் மேனேஜர்
இவனுக்கும் இவன் தங்கைக்கும் ரெண்டு ஃப்ளாட்டும்
எனக்குன்னு ஒருவீடும்...
மேல் போர்ஷன்ல வர்ற வருமானமும்
என் பென்ஷனும் சேர்ந்தாலேரொம்ப் ஜாஸ்தி..
இவன் கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம்
நானும் இவளும்
காசி ராமேஸ்வரமெல்லாம் போமாட்டோம்
இப்படியே குலு மணாலி, நைனிடால்
மடிக்கேரி, தலைககாவேரின்னு
போலாம்னு இருக்கோம்..
பாருங்க எப்படி வெக்கப் படறான்னு
சொல்லுங்க
எப்ப முகூர்த்தத்த வெச்சுக்கலாம்..
பையனும் பொண்ணும் பேசிக்கணுமா
சரி..
*
ஹாய்
ஹாய்..
உங்களோட டாப்ஸ் ந்ல்லா இருக்கு
எங்க எடுத்தீங்க போத்தீஸா..
தாங்க்ஸ்..லைஃப் ஸ்டைல்..
அப்ற்ம் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும்
எதைச் சொல்றீங்க..
தமிழ் லிட்ரேச்சர்னு எடுத்தீங்கன்னா
எனக்கு தி.ஜான்கிராமன், சாண்டில்யன் பிடிக்கும்..
ஓ..எனக்கும் தான்
அதில உய்ர்த்தேன் ரொம்பப் பிடிக்கும்
ஓ குட் சாய்ஸ் திரைப்படம்
முன்னால கே.பி இப்போ மிஷ்கின்
எனக்கும் தான்
ஆங்கில நாவல்ல..
ஜான் கிரஷாம், ராபர்ட் லுட்லும், டேனியல் ஸ்டீல்
சிட்னி ஷெல்டன் சொல்ற்துன்னா நிறையச் சொல்லலாம்..
ஓ எனக்கும் அப்படித்தான்
ஒண்ணு கேக்கட்டா
ஒங்க எடை என்ன
அம்பத்தொண்ணு
நீங்க
அறுபத்தஞ்சு
ஜிம் போவீங்க போல இருக்கே
ஆமாம் தினசரி போலன்னா
வாழ்க்கைல ஏதோ இழந்த மாதிரி..
நீங்களும் ஜிம்மா.
இல்லை யோகா.
அம்மா சொல்லிக் கொடுத்துச்சு
அப்றம் டி நகர்ல ஒரு யோகா டீச்சர்..
அழகா சிக்னு இருக்கீங்க..
...
அழகாவும் வெக்கப் படறீங்க..
ஒண்ணு சொல்லட்டா..
ம்..
இன்னும் என்ன நீங்க சொல்லிக்
கூப்பிடணுமா..
என்னம்மா பேசி முடிச்சாச்சா
இதோ வர்றேம்ப்பா..
*

விளம்பரங்கள்
விற்பனைக்கு மட்டுமல்ல..
வாழ்க்கை நீரோட்டத்திற்கும்
ரொம்ப அவசியம்..

pavalamani pragasam
4th September 2011, 08:29 AM
அவசியம் கண்டுபிடிப்பின் காரணி
நெருக்கடியில் மூளைக்குள் மின்சாரம்
அரிய உத்திகள் அப்போது பிறக்கும்
அது ஒரு சிலிர்க்கும் ஆனந்த அனுபவம்
மனிதனின் சாதிக்கும் வல்லமை நிரூபணம்
அதனால் சவால்களே சளைக்காமல் வருக

chinnakkannan
6th September 2011, 12:40 AM
வருக
இந்தக் கிராமம் உங்களை வரவேற்கிறது..
எனச் சொல்லும் பலகைகள்
மஞ்சள் உடம்புடனும்
கருப்பு எழுத்துடனும்
சாலையோரம்
கொஞ்சம் நிறைய் அழுக்குடனும்
விகல்பமின்றி நின்று கொண்டிருக்கும்..
கணப் பொழுதில் தான் கண்களில் படும்..
ஏக்கமெல்லாம் அதில் தெரியாது..
ஆனால்
எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல்
நின்றிருக்கும் சிரித்தபடி..

pavalamani pragasam
6th September 2011, 08:11 AM
சிரித்தபடி பள்ளியறைக்குள் செல்கிறாளே
பந்தாய் திரளுது பயம் வயிற்றுக்குள்ளே
பொங்குவதுண்டு எரிமலையாய் கோபத்திலே
பொறுத்திருந்தால் அடங்கும் கொஞ்ச நேரத்திலே
புனலாய் கண்ணீர் பெருகுவதுண்டு சமயத்திலே
பதமாய் பேசியே சமாளிக்கலாம் அப்பொழுதிலே
பழிகாரி சிரித்தால் ஆபத்தான மர்மந்தானே
பரிதவிக்க வைத்தாளே பெரும் திகிலிலே

chinnakkannan
6th September 2011, 09:58 AM
திகிலிலே தான் என்னை
உறைய வைக்கிறாய்..
சந்து பொந்து
பஸ் கார்.. ஆட்டோ..
எல்லாவிடமும் புகுந்து
விர்ரும் என
என் எண்ணங்களைப் போல
பறந்து செல்கிறாய்\
எனக்கு மிக
பயமாய்த் தான் இருக்கிறது
யாரிடம் சொல்ல..
இருந்தாலும்
நீ வேகமாய் செல்கையில்
கண்கள் மூடி
உன்னை இறுக்கப் பிடித்துக் கொள்கையில்
நிறைய வெட்கமாயும்
கொஞ்சம் சந்தோஷமாயும் தான்...

படவா..
சீக்கிரம் கார் வாங்கு..

pavalamani pragasam
6th September 2011, 12:37 PM
வாங்கு கடனை
அனுபவி உலகை
சுகங்கள் எத்தனை
அனைத்தும் உனக்கே
போனால் வராது
வாழ்வது ஒருமுறை
இன்றே இப்போதே
சுவைத்து முடித்திடு

chinnakkannan
7th September 2011, 09:56 PM
முடித்திடு என்று
மிஸ் சொல்லியிருக்காளாம்
பள்ளியில் வந்ததிலிருந்து ஒரே அழுகை..
இருடி..அம்மா வேலை முடிச்சுட்டு வர்றேன்..
இல்லன்னா அப்பா வ்ருவார்..
அழுகை பலக்க
சரி கடங்காரி எனத் திட்டி
கத்த்ரிக்கோல் எடுத்து
மரக்கலர் அட்டைகளை
எல்லாப் புத்தகங்களும் போட்டுக் கொடுத்தால்
அதுவரை கொஞ்சம் அழுகையை அடக்கி
பாதி தோசையில் இருந்தவள்
கையை உதறி
இரும்மா கோடி தீபக்கப் பாத்துட்டு வர்றேன்
என ஓடியே போய் விட்டாள்..
நான் நல்லவளா பைத்தியமா என
என்னை நினைக்க வைத்து...

pavalamani pragasam
8th September 2011, 07:16 AM
வைத்து விட்டுப் போகலாம் அடையாளத்தை
நடந்த பாதையில் அழியாத ஒரு கால் தடத்தை
அரிய பெரிய சாதனைகள் செய்திட வேண்டாம்
அழகிய பாரம்பரியம் அழியாமல் காத்திடு போதும்

kirukan
8th September 2011, 10:29 AM
போதும் தூக்கு தண்டனை
என்ற போராட்டம் போதும்
பொது மக்கள் உயிர்காக்க
போராட வேணும்

குண்டு வைத்து குடி கெடுக்கும்
கூட்டமே
உனக்கு
திறனிருந்தால்
திராணியிருந்தால்
தில்லிருந்தால்
அறியா ஜனத்தின் மேல்
வைக்கும் குண்டை
அரியணையில் உள்ளவர்கள் மேல்
வைத்துப்பார்

அப்போது தெரியும்
எம்
காவலர்களின் கண்டுபிடிப்பு திறனும்
புலன் விசாரணையில் புயல் வேகமும்

சாவது சாதாரணமானவன்
என்பதால் தான்
படை கொண்டு
பகை கொல்லாமல்
பாடைக்கு இங்கே
பாடுகிறார்கள் ஒப்பாரி.

chinnakkannan
8th September 2011, 12:40 PM
ஒப்பாரின்னாலே ஒச்சாயிக் கெழவிதான்..
*
கடைகண்ணி போகையிலெ
கருணை வாங்க்றேன்னு
பொடிநடையாப் போனவரு
போனபாத ப்ரியலையே

மூக்குத்தி வாங்குதற்கு
முக்குக்கட போன மச்சான்
மேல போன மாயமென்ன
மோசம் நானும் போனதென்ன..

செட்டுசெட்டா வண்டி பூட்டி
செவப்பான நெறத்தோட
எனப் பாக்க வந்தவரே
எங்கேய்யா போனீக
*
எப்படி எப்படியோ இட்டுக்கட்டி பாட்டுச்சொல்லும்
ஒச்சாயிக் கெழ்வியுந்தான் ஒரு நாள் மேல போக
ஊர்மூச்சும் வந்த்தென்றால் அதுதானே இல்லீங்க
பாடிஅழுகையதை பக்குவமாச் சொன்னவளுக்கு
கூடிய கொஞ்சஜனம் த்ந்த்துவோ மெளனம் தான்...
*

pavalamani pragasam
8th September 2011, 07:23 PM
மௌனம் தான் வலிய தொடர்பு சாதனம்
விடிய விடிய பேசியது சந்தித்த புதிதில்
புரிதல் வளரும் வருடங்கள் பறக்கையில்
வார்த்தைகள் வீணாகும் அத்வைத நிலை

chinnakkannan
9th September 2011, 08:20 PM
நிலைக்கண்ணாடி
ஆண்களை அழகாக்க்
காட்டுவதே இல்லை..

சின்னப் பையன்களை
பவுடர் முகத்தில் ஜாஸ்தியாகவும்
பள்ளி மாணவ்ர்களுக்கு
தலை வாரிக் கொள்வதற்கும்
கல்லூரி மாணவர்கள்
கொஞ்சம்
ஆஃப்டர் ஷேவ் லோஷன் தெளித்து
முகத்தைப் பார்த்துக் கொள்வதற்கும்
வேலை செய்யும் ஆண்களுக்கு
டை கட்டுவதற்கும்
வயதான ஆண்களுக்கு
திருநீறோ நாம்மோ சரியாக இருக்கிற்தா
எனப் பர்ர்ப்பதற்கு மட்டுமே
இருப்பதால்
ஒரு வித விரக்தியில் நின்றிருக்கும்..

அதுவே
ஒரு சிறுமி, மங்கை, பேதை பேரிளம் பெண்
என்றால் குஷி ஆகிவிடும்..
என்னிடம் நிறைய நேரம் கழிப்பவர்கள்
இவர்கள் தானே..
இவர்தான் என் உண்மையான சினேகிதி எனப்
பெருமை கொள்ளும்..

இருப்பினும்
அவைகள் கொஞ்சம் கோழைத்தனமானவை தான்
கோபத்தில் யாராவது எறிந்தோ
கைதவறி கீழே விழுந்தாலோ
படக்கென உடைந்து விடும்..
சிதறிய போதும் சிரித்து
நம்மைப் பிரதிபலிக்கும்..
அலட்சியமாக சிதற்லைப் பொறுக்கினால்
அங்கே தான்
கோபத்தைக் காட்டி ரத்தம் வரவழைக்கும்..

மூட ஜென்ம்ம்..

இருந்தாலும்
மனித வாழ்வில்
மூச்சைப் போலவே
முக்கியமானது இது என
புரிந்தாலும்
அதற்கு எப்போதுமே
வந்த்தில்லை கர்வம்...

pavalamani pragasam
10th September 2011, 07:11 AM
கர்வம் ஓங்கி வளரத்தான் செய்யும்
வாரிசை தன் அச்சாய் காண்கையில்
நடை பாவனை ரசனை குணம் குறை
அத்தனையையும் அப்படியே பிரதிபலிக்கையில்-
விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்காது-
சின்னஞ்சிறு கிளியை உச்சி முகராதோர் உண்டோ

chinnakkannan
10th September 2011, 02:58 PM
உச்சி முகராதார் உண்டோ
என்றால் இல்லை..
பார்த்த அம்மா அப்பா
எல்லாம் ஹை
எவ்வளவு முடி..
கொழுகொழுன்னு
அப்படியே அப்பனைப் போல இருக்கு
எனக் கொஞ்ச
என் அம்மா
ம்ம் மூக்கு இவள் தான் என
என் குழவியோ சின்னதாய் முகம் சுளிக்க..
பாரேன் இவளும்
சிறுவயதில் இப்படித்தான் என..
வந்த கணவன்
வழக்கம்போல ஆபீஸ் முகம் காட்டி..
சரி சரி எப்ப வீட்டுக்குப் போகலாமாம்..
மருத்துவச்செலவுக்கவலை அவனுக்கு..
இருந்தாலும் கொஞ்சம் பெருமிதம் முகத்தில்..

பக்கத்து வீட்டு மாமி
பெத்துப் பிழைச்சையேடி..
படவா.. படுத்திட்ட அம்மாவை
எனக் கொஞ்சி சின்னதாய்க் கிள்ளுகிறாள்..

ஊரிலிருந்து வந்த அக்கா
எங்க இவர் முன்னாலேயே
விடமாட்டேன் என்கிறார்
இல்லன்னா நேத்தே வந்துருப்பேன்..
பாரேன் சமத்தா தூங்கறான்..
உனக்கென்ன
நல்ல மாமியார் மாமனார்
வீட்டுக்குப் போயும் ரெஸ்ட்
எடுத்துப்ப தானே..
எனக்குத்தான் தீராது
மூத்தது இளையது பொறந்தப்போ
மூணாம் நாள்ளயே கிச்சன் போய்ட்டேன்..

வந்தவர்கள் பார்ப்பவர்கள்
சொல்வதை
காதில் வாங்காமலேயே
உறங்கிக்கொண்டிருக்கிறது
பரப் பிரம்மம்..

pavalamani pragasam
10th September 2011, 06:52 PM
பரப் பிரம்மம் போலிருடா பதி நீ
அவள் அடிக்கட்டுமே இடிக்கட்டுமே
தலையில் குட்டட்டுமே திட்டட்டுமே
பட்டினி போடட்டுமே பொங்கட்டுமே
சிறை வைக்கட்டுமே சீறட்டுமே
கல்லாய் மனிதன் ஆனபின்னே
நால்வகை படை தோற்றிடவே
பாவப்பட்ட நிலை தான் சதிக்கு

chinnakkannan
14th September 2011, 12:38 AM
சதிக்குத் தானா எனத் தெரியவில்லை
..
கண்களில் மை..
கொஞ்சம் முகம் ப்ளிச்சென..
அழகு நிலையம் சென்றிருப்பாளோ..
தலையில் மல்லிகை..
மென்மையான இளஞ்சிவப்புச் சாயம்
உதட்டில்...
கண்களில் குறும்பு..
கவிழ்த்து விடுவாள் போல...

காலையில்
இருவரும் தான் சண்டைபோட்டுக் கொண்டோம்.
நடுவில்
அலுவலகத்திலும் வேறு
தொலைபேசியில்
ஒனக்கு எப்போ என்னைப்
புரியுமுன்னு தெரியலை
எனப் புலம்பல்

வீட்டிற்கு வந்தால் இப்படி..

முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டாலும்
இரவு என்ன செய்யட்டும்
எனப்பாவமாய் க் கேட்ட போது
சிரிப்புத்தான் வந்த்து..

இழுத்து அணைத்து...
ம்ம்

சண்டையை சரிசெய்தாகி விட்ட்து..
திரைப்பட்த்திற்குப் பாடல் முக்கிய்ம் போல
வாழ்வோட்ட்த்திற்கு ஊடல்..

*

pavalamani pragasam
14th September 2011, 08:28 AM
ஊடல் தகுமோ கற்பனையே
கோடி வார்த்தை காத்திருக்கே
கவிதை கொட்ட வேண்டாமோ
மேகத்துள் நிலவு மறைய
கூம்பாதோ அல்லி மனது
போதும் உன் விளையாட்டு

chinnakkannan
15th September 2011, 12:29 PM
விளையாட்டில் முன்போல
இப்போது ஆர்வம் இல்லை
என்று சொன்னபடி
சதுரங்கத்தில் காய்களை
வெட்டிக் கொண்டே இருந்தார் தாத்தா..

பேரன் கலங்கினான்..
அந்தப் பக்கம் வந்த அவன் அப்பா
சொல்லிக் கொடுக்க
பேரன் தாத்தாவை ஜெயித்து
குதூகலிக்க
அப்பாவைத் தாத்தா கோபித்தார்..

ஏய்..
என்ன இது
ஏன் சொல்லித்தர்றே

நீங்கள் எனக்குச் சொல்லித் தந்தது
நான் இவனுக்குச் சொல்கிறேன்

உன்னோட நான் செஸ் ஆடினதேஇல்லையே..

இல்லையப்பா
இளைய தலைமுறைக்கு நீங்கள்
வழிவிட்டது போல்
நானும் செய்தேன்..
இதெல்லாம் வாழையடி வாழை..

pavalamani pragasam
15th September 2011, 01:49 PM
வாழை மரம் தோரணம்
வாசலில் வண்ணக்கோலம்
வா வாவென்று அழைக்கும்
வாசனை சந்தனம் பூ கல்கண்டு
வாய் நிறைய புன்னகை
வரவேற்பு அமர்க்களம்
வந்தவர் மனம் நிறையும்
விமரிசையாய் திருமணம்
விருந்தும் மிகப் பிரமாதம்
வாழ்க நம் சம்பிரதாயம்

chinnakkannan
15th September 2011, 04:05 PM
சம்பிரதாயத்தை மீறியது தான் புதுக்கவிதை..
சம்பிரதாயத்தை மீறியது தான் கலப்புத் திருமணங்கள்
சம்பிரதாயங்க்ள் எல்லாம்
மூட நம்பிக்கை எனச் சொல்லும்
அரசியல்வாதிகள்
மட்டும்
இருக்க்றார்கள் சில விஷயங்களில்
சம்பிரதாயத்தை மீறாமல்..

pavalamani pragasam
15th September 2011, 11:29 PM
மீறாமல் விதிகளை மீறாமல்
வாகனம் சென்றால் விபத்தில்லை
கூறாமல் காதலை கூறாமல்
மங்கை மறைத்தால் வாழ்வில்லை
முடியாமல் கதை முடியாமல்
தொடர்ந்தால் புதிது பிறப்பதில்லை

chinnakkannan
16th September 2011, 10:22 AM
புதிது பிறப்பதில்லை
கதாசிரியர்களுக்கு
என்றாள் பக்கத்து வீட்டு மாமி
இந்த தொலைக்காட்சித் தொடரில்
அண்ணனும் மருமகளும் வில்லன் வில்லி
என்றால்
அடுத்த தொடரில்
தம்பியும் அவன் மனைவியும்..
காதலர்கள் இதில் சேர்ந்தால்
மற்ற்தில் பிரிவார்கள்..
வசனங்களிலும்
கொஞ்சமே கொஞ்சம்மாறுதல் தான்..
எல்லாம் அதேபழைய மாவ்
வேறு வழியில்லை
பொழுதைப் போக்கணுமேன்னுதான்
பார்க்கறோம்..
இது ஆண்டவனுக்குமோ
அதே வாழ்க்கைக் கதைகள்
ஆரம்பிப்பதும் முடிப்பதுமாய்..
என்ன சந்தோஷம் இருக்க முடியும்
ஆண்டவனுக்கு
பொழுது போவதைத் தவிர...

pavalamani pragasam
16th September 2011, 01:32 PM
பொழுது போவதைத் தவிர
பலன் இன்னும் பல இருக்கு
பச்சைப் புல்லில் சிறிது நேரம்
பூனைத் தூக்கம் போட்டபின்பு
பாதம் புதைய மணலில் நடந்து
பல கணம் கடல் நீரில் நின்று
பரவசமாய் மாலையில் மயங்கி
பஞ்சாய் மனம் லேசாகி பறக்க
பகையும் புகைச்சலும் மறைய
பட்டாணி சுண்டல் வேர்க்கடலை
பஜ்ஜி பொரித்த சோளமும் தின்று
புத்துணர்வோடு எழுந்து நடந்து
புலரும் புதுக் காலையின் சவால்களின்
பயம் தொலைத்து கூட்டை அடையலாம்

chinnakkannan
16th September 2011, 02:30 PM
கூட்டை அடையலாம்..
இன்றைக்கு உணவு போதும்
வாய்முழுக்க இரைகள்..
எங்கே நம் குழந்தைகள் இருக்கும் வீடு
ஏன் இந்தக் காற்று இப்படி அடிக்கிறது..
மழையும் சடசட்வென்று இசையுடன்..
இன்னும் எவ்வள்வு தூரம் செல்லவேண்டும்
இடைப்பட்ட் இட்த்தில்
ஒதுங்கி
கொஞ்சம் சிறகுகளைப் படபட்த்து
ஆசுவாசப் படுத்தி
இரையை காலுக்கு மாற்றி
கீ க்க்கீ என கத்தியபின்
மெல்லப் பறந்து
மரமிருக்கும் இடம் அடைந்தால்
காணோம்..
இல்லை..மரம் நிற்கவில்லை
படுத்திருக்கிறது..
இரையை கீழே போட்டுவிட்டு
அங்குமிங்கும் மற்ற் நண்பர்களுடன்
அலைபாயத் தேடினால்
அதோ
ஒரு இடுக்கில் என் குழந்தைகள்..
குளிரில் நடுங்கி
வாய் பேச முடியாமல்
கண்களினால்
பார்த்த சந்தோஷத்தில் தாவ..
மெல்ல எடுத்து
அருகிலிருந்த ஒரு வீட்டின் ஓட்டில் விட்டு
பின் திரும்ப
தரையில் விழுந்த இரையைக் காணோம்
புழு தானே ஊர்ந்திருக்கும்..
மறுபடி தேடுவதா..
குட்டிக்கண்ணை உறுத்துப்பார்த்த்தில்
ஒரு வீட்டு மாடியில் சில அரிசிமணிகள் தெரிய
கொத்தி எடுத்து மீண்டும் பறந்து
குழந்தைகளுக்கு ஊட்டி விட்டு
பசிமறந்து அயர்ந்த்து குருவி..

pavalamani pragasam
16th September 2011, 07:48 PM
குருவியைக் காணோம்
கவலையெனை வாட்டுது
சாதாரண சின்னப்பறவை
என் பேரன்கள் பாராதவை

கண்ட மாற்றங்கள் எத்தனை
குருவி தொலைந்தது வேதனை
சௌகரியமாய் வாழ்கிறோமாம்
அழிவின் அருகாமையறியா மாயை

chinnakkannan
19th September 2011, 12:17 AM
மாயை தானா எல்லாம்

பெற்றவளின் மிச்சங்களைக்
கடலில் கரைத்துவிட்டு
வீடு வந்து குளித்து
கண்ணோரம் ஈரத்துடன்
திண்ணையில்
வெறித்து அமர்ந்தவனின்
வெற்று முதுகில்
ஒரு பிஞ்சுக் கரம் தொட

திரும்பினால் சிரிக்க
யார் வீட்டுக் குழந்தை..
தெரியவில்லை
வா வென்றால்
பயந்து பலத்து அழ..

ஒரு நொடியில் சிரிப்பு அழுகையாய்
மாறியது என்ன விந்தை..
இல்லை
இது தான் இயல்பு..
இது தான் வாழ்க்கை..
எல்லாம் நாட்பட மாறும்
மெல்லமெல்ல
கொஞ்சம்
நிலைக்கு வந்தது.. தேர்

pavalamani pragasam
19th September 2011, 08:49 AM
தேர் கொடுத்தான் பாரி முல்லைக்கு
போர்வை தந்தான் பேகன் மயிலுக்கு
எச்சில் கையால் காகம் ஓட்டாதவனும் உண்டு
இரவும் பகலும் சேர்ந்து இயங்குவது உலகு

kirukan
19th September 2011, 09:59 AM
உலகு உறங்குவது போல கிறங்கினும்
ஒருபாதி விழித்து கறங்கும்.

pavalamani pragasam
19th September 2011, 03:37 PM
கறங்கும் காகிதப் பட்டம்
மனதில் கொண்டாட்டம்
நூலை பிடித்தவன் நாட்டம்
இருக்கும் வரைதான் ஆட்டம்

chinnakkannan
19th September 2011, 08:49 PM
ஆட்டம் முடியவில்லை இன்னும்..

அழகிய கயிறு...நல்ல முரட்டுத் தனத்துடன்..
ஒரு முனையில் அவன்
மறுமுனையில் அவள்..

விடாப்பிடியாக இழுக்க..
ஒரு கணத்தில்
அவள் கை விலக
கயிறு கைக்கு வந்த மகிழ்ச்சியில்
வென்றவன் நான்’
என்றவன் கூத்தாட

‘தோற்றவன் நீ என் அன்பில்’
என நினைத்த
அவள் முகத்தில் குறு நகை

வாழ்க்கையில் விட்டுக் கொடுப்பதும்
ஒரு சுவாரஸ்யம் தான்..

pavalamani pragasam
20th September 2011, 08:50 AM
சுவாரஸ்யம்தான் இருக்குமோ
சுலபமான வெற்றிகளில்
செக்குமாட்டுத் தடத்தில்
தெரிந்த கதை முடிவுகளில்
தெளிவாய் விரியும் பாதையில்
வேண்டும் சவால் எதிலும்

chinnakkannan
22nd September 2011, 08:20 PM
எதிலும் அதீத நிதானம்
சோம்பல் தான் வெங்கடேஷிற்கு
எதற்கும் ஒரு சிரிப்பு சிரிப்பான்..
ஒரு நாளைக்குள் இந்த வேலை முடி
என்றால்
இரண்டரை நாளெடுத்து
எழுபது சதவிகிதம் முடித்து..
கொஞ்சம் தாமதம் என்று சிரிப்பான்
திட்ட்டினாலும்
முகம் மாறமாட்டான்..
கோபம் வந்தாலும் அவன் சிரிப்பில்
மறந்து
மற்றவர்களிடம் வேலை வாங்கி விடுவேன்..
அசடு அடிமுட்டாள் சோம்பேறி
என்ன பண்ண பணிவு ஜாஸ்தி..

காலப் போக்கில்
வேறு நிறுவனத்திற்கு நான் மாறி
சில வருடங்களுக்குப் பிறகு
பழைய முதலாளியைப்பார்த்தேன்..

கம்பெனி நன்றாய் இருக்கிறதாம்..
பரவாயில்லை ஓய்
உன் சகாக்களுக்கு நன்றாகப்
பயிற்சி கொடுத்திருக்கிறீர்..
நன்றாகவே வேலை செய்கிறார்கள்..

என் இட்த்தில் யார்.. கருணாகரனா.
இல்லையப்பா.. வெங்கடேஷ் தான்..
என்ன ஒருசுறுசுறுப்பு
உங்க ட்ரெய்னிங்க் தானே..
நீங்கள் இருக்கும் போதே
நீங்கள் சொல்லித் தானே
அலுவல்கத்தில் நடப்பதை
எனக்குச் சொல்வார் வெங்கடேஷ்..

பழைய முதலாளி சொல்லிக் கொண்டே போக
ஒன்று தெளிவாய் புரிந்த்து
வெங்கடேஷின் ப்ணிவுக்குப் பின்னால்
இருந்த்து அசட்டுத் தனமல்ல..
ராஜ தந்திரம்..

pavalamani pragasam
23rd September 2011, 08:24 AM
தந்திரம் போல் சிறந்த ஆயுதம் உண்டோ
மிருக பலமா மூளை பலமா வெல்வதெது
காட்டில் நரியும் நாட்டில் சாணக்கியருமறியும்
சமயோசிதம்தனை சிறு குழந்தையுமறியும்
சாகசமான பெண்மணிகளும் கடைபிடிக்கும்
சத்தியமான சாத்தியமான உதவியன்றோ

raathai
24th September 2011, 02:06 AM
உதவியன்றோ உதவிடுவீர் உன்னத பணிக்காக
பதவிக்காக படித்து பட்டங்கள் பெற்றிடுனும்
கதவுகள் அனாதை இல்லங்களில் திறந்தநிலையில்
உதவிகள் வழங்குவதோ உன்னத கரங்களில்

pavalamani pragasam
24th September 2011, 09:48 AM
கரங்களில் ஒழுகி ஓடும் குறுமணல்
குழந்தையின் கடற்கரை விளையாட்டு
கரைவது வாழ்வின் கணத்துளிகள்
கடைசி வரை களிப்புடன் விளையாடு

chinnakkannan
24th September 2011, 10:27 AM
விளையாடு வெறியுடன்..
இது தான் உன் பருவம்
இது தான் உன் தருணம்..
பள்ளி கல்லூரி எல்லாம் முடிந்தபின்
வாழ்க்கை விளையாட்டை எதிர்கொள்ள
இப்போதே தயாராகு..
சோர்வுறாதே..
விழு.. எழு..

pavalamani pragasam
24th September 2011, 02:04 PM
எழு இரு கண் வழி ஆணை
சரி ஆண் சொல் ஒரே விடை
துணை ஆசை எது யோசி
மனை ஏடு இதை வாசி
அத்தனையும் இரண்டெழுத்து
பிரணவம் துவங்கி ஒலி
பிரபஞ்சம் முழுதும் கேள்
ஆக்கம் செய்யும் இனிய எண்

chinnakkannan
27th September 2011, 12:55 PM
எண்கள் பலவிதமாய்
வாழ்க்கையில் குறுக்கிடுகின்றன..

உங்க அப்பாக்கு எத்தனாவதுகுழந்தை நீ
ஆறு..
உன்னோட ரோல் நம்பர்
நாற்பத்தேழு டீச்சர்..

இளமைப்பருவம் பதினாறிலிருந்து இருபது வரை
இசைபாடும்..
பின்
மதிமயங்கி தேர்தலில் ஓட்டுப் போடும் வயது வர
பணந்தேடி மனமலைய ஆரம்பிக்கும்..

எவ்வளவு வாங்கறே நீ
பத்து..
பத்தாயிரம் போதாதேப்பா
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்..
அப்பத்தான் துணையும்
உன்னிடம் வரும்..

இருபத்தைந்து வயதில்
இணை தேடும் எண்ணம்
நாற்பது வயதில் சோர்வுறும்
நாற்பது என்றாலே
ஒரு கால் சவப்பெட்டியின் மீது தானே..
பின்
வாழ்வின் வயதின் எண்கள் கூடக் கூட
மனதும் முதிரும்..

வாழ்க்கையில் எந்த எண்ணில்
முற்றுப்புள்ளி வருமெனத்தெரியாது..

இருந்தும்
தெரிந்தோ தெரியாமலோ
முக்கியக் காரணியாய்
எண்கள் நடத்துகின்றன வாழ்க்கையை..

pavalamani pragasam
27th September 2011, 03:28 PM
வாழ்க்கையை வாழ்ந்து பார்
வழக்கை வாதிட்டு வெல்
வழவழ கொழகொழ வேணா
வழுவாத நெறி உடனிருக்கட்டும்

chinnakkannan
27th September 2011, 03:41 PM
உடனிருக்கட்டும் என நினைத்து
பத்திரமாய் எடுத்து வந்த
சட்டை, டிஷர்ட்,
ஆஃப்டர் ஷேவ் லோஷன்,
உள்ளாடைகள்
எல்லாவற்றையும் திருப்பி வைத்தாயிற்று.
சூட்கேசை எடுக்கும் போது
அதிகமாய் கனம்..
இருந்த போது சேர்த்த
நினைவுகளால்..

pavalamani pragasam
27th September 2011, 03:50 PM
நினைவுகளால் முகம் சிவந்து
கனவுகளால் அதை எதிர்பார்த்து
தீட்டி தீட்டி தினம் கூரேற்றி
பழிக்குப் பழி வாங்கும் பாவி

chinnakkannan
27th September 2011, 05:36 PM
பாவி..இப்படியா விளையாடுவது
எனச் சொல்லிக்
கன்னம் சிவக்க
கோபத்தில் அழகாய் அகலும்
உன் விழிகளைப் பார்க்கவே
மேலும்
உன்னிடம் விளையாட்த் தோன்றுகிறது..

கொஞ்சம் உற்றுப் பார்க்கையில்
கண்ணோரம் கொஞ்சமாய் ஈரம்..
கைப்பிடித்து கொஞ்சம் இழுத்து அணைத்து
சமாதானம் செய்கையில் இன்னும்
நெகிழ்கிறாய்..
அப்படியே கொஞ்சம்
கிள்ளவும் செய்கிறாய்..
ச்சீப் போப்பா நீ மோசம்
என்கிறாய்..
இன்னும் பிதற்றலாய்
வார்த்தைகள் வர..
அடக்குதற்குத்தெரிந்த வழி ஒன்று தான்..

நான் சொன்னது நிஜம்..
விளையாட்டில்லை..
என் வீட்டில் எனக்குப் பார்த்த பெண்
இன்னும் அழகாயிருக்கிறாள்
உன்னை விட...
எனச் சிரித்தபடி சொல்ல

ஒருகணப் பொழுதில்
சோகம், ஏமாற்றம், வியப்பு உன் கண்ணில்
எந்த நல்ல நடிகையும்
செய்திருக்க மாட்டாள்..
புகைப்படம் வைத்திருக்கிறேன்
பாரேன்
என்றபடி காட்டினால்
அதிலிருந்த அவள் பட்த்தைப் பார்த்த்தில்
கண்ணீர்துளி இருந்த கண்ணில் சிரிப்பு மறுபடி..
படவா எனச் சொல்லி
அவள் அடித்த்து
நெஜமாகவே வலித்தாலும்
கொஞ்சம் சந்தோஷமாக்வும் இருக்கிறது..

pavalamani pragasam
27th September 2011, 09:43 PM
இருக்கிறது நம்பிக்கை
இரவில் படுக்கும்போது
இன்னொரு நாளை பார்க்க
இமைகள் திறக்குமென்று

chinnakkannan
28th September 2011, 03:38 PM
இமைகள் திறக்குமென்று
எதிரே பார்க்கவில்லை..

சமர்த்தாய்க் கால் குறுக்கி
உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு
குட்டி விரலால் துணியை
இறுக்க்க்கப் பிடித்துக் கொண்டு
மிக சீரியஸாக உறங்கிக் கொண்டிருந்த அது
சின்னதாய்த் தொடவும்
டபக்கென கருவண்டுக் கண்ணால்
மலங்க மலங்கப் பார்க்க

’அப்பா’டா பாரு.. என பின்னால் குரல் வர
என்ன நினைத்ததோ
வீல்...

சே..என்ன இது.
.
ஆமாமாம்..
இப்படி தாடி மீசையோட வந்தா
எனக்கே பயம்ம்மா இருக்கு தெரியுமா..
அழாதடா செல்லம்.. அப்பா தானே அட்ச்சுடலாம்..

அவள்
தூக்கிக் கொண்டதும்
மெல்ல
புன்னகை போலக் கொஞ்சமாய்
இதழ் விரித்துப் பின்
படக்கென மூடிக்கொள்ள..

முணுமுணுத்தபடி நகர்ந்தேன் நான்..
‘அம்மாவைப் போல பிள்ளை..”

pavalamani pragasam
28th September 2011, 07:47 PM
பிள்ளை வளர்க்கப் பொறுமையில்லை
பெரியவர் பேணிடப் பிடிக்கவில்லை
பெரிதாய் சமூகநல கொள்கையில்லை
பிடித்து வைக்க ஒரு கட்டுப்பாடில்லை
யாருடனோ அவள் தனியே அவன் தனியே
எங்கோ களிக்கின்றனர் குடியும் கூத்துமாய்
பருவமடைந்ததும் துவங்குது இப்பழக்கம்
போதை ஏறி ஆடி முடிவாய் எங்கு எவருடன்
புரண்டு எழுந்தோமென சுத்தமாய் மறந்து
பகலுக்குப் பின் இரவு இப்படியே தொடர்ந்து
புதிய சரித்திரம் சமுதாயம் படைக்கின்ற
புல்லுருவிகள் இவர்கள் (அ)நாகரிக பதர்கள்
புலனின்பமன்றி வேறொன்றறியா உயிரினங்கள்
பகுத்தறியா இவர்கள் பெரும் படிப்பாளிகள்
பேரழிவுப் புயலின் நிச்சய புள்ளி மையங்கள்
புரையோடிப் பரவும் பயங்கர நச்சுக் கிருமிகள்
பட்டணம் துவங்கி பட்டிக்காடடையும் நோய்கள்
புற்றாய் பீடித்த நாசகார நண்டுக்கொடுக்குகள்
பொரித்தெடுப்பாரோ இவர்களை எண்ணெய் கொப்பரையில்
போட்டு வைப்பாரோ பொசுக்கும் அணையா செந்தழலில்
போகட்டும் நரகத்திற்கோ வேறெங்கோ பொருட்டில்லை
பொறுக்கலாமோ நரகமாய் நாட்டை வீட்டை ஆக்குவதை

chinnakkannan
2nd October 2011, 02:29 PM
ஆக்குவதை எல்லாம்
அழகாய் தட்டில் போட்டு
மேலே ஒரு துணியையும் போடுவாள்
என் வட இந்திய மனைவி..

ஏன் சப்பாத்திமேல் துணி போடுகிறாய்
என்றால்
மென்முறுவலுடன்சொல்வாள்
அவள் அம்மா வழக்கமாம்..

அவள் அம்மாவிற்கு
அம்மாவின் அம்மா சொன்னதாம்..

சூடு போகாதாம்..
சுவையும் இருக்குமாம்..

சிலபேர் வழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல்
அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறார்கள்..
நான் தான்..
அம்மாவின் சுவைக்கு அடிமையாய்
இருந்த நாக்கு
இப்போது இவளுடைய சமையலுக்கு..

ம்ம்
உடலிலேயே மோசமானது
நாக்கு தான்..

pavalamani pragasam
2nd October 2011, 02:52 PM
நாக்குதான் குழறியது
வாய் கூட உளறியது
கவிதை மறந்துபோனது
காதல் பறந்தேபோனது
கயவனுடன் பார்த்தபோது
கற்பனை நொறுங்கியது

chinnakkannan
2nd October 2011, 03:31 PM
நொறுங்கியது என்னவோ
கை தவறித்தான்..
கண்ணாடிப் பாத்திரம்
சுக்குநூறுதான்..
ஜாக்கிரதையாய்ப் பைய்பபையக்
கால் வைத்து
விளக்குமாற்றால் பெருக்கி
குப்பைக்கூடையில் போட்டுவிட்டு
பின்
வெண்பஞ்சினால் ஒற்றி ஒற்றி
அதையும் தூரப் போட்டு
ஈரத்துணியால்
துடைத்தும் விட்டாயிற்று

ஆனால் மீண்டும்
நடக்கையில்
மெல்லத்தான் காலடி வைக்கத்
தோன்றுகிறது.
.
ம்ம்
ஏதோ குத்துவது போலவும்..
பிரமை...

pavalamani pragasam
2nd October 2011, 07:02 PM
பிரமையில் நானோ
பகல் கனவுதானோ
பிறந்த பலனிதுவோ
பொற்காலமிதுவல்லவோ
பாரெங்கும் நல்லொழுக்கம்
பகையில்லா நெருக்கம்
பார்த்தாலே பரவசம்
பாலில் விழுந்தது பழம்

chinnakkannan
4th October 2011, 12:03 AM
பழம், பாக்கு எல்லாம் கொடுத்தும்
அந்தப் பட்டுப்பாவாடைச் சிறுமி
தயங்கி நின்றது..

என்னம்மா...
இன்னிக்கு சுண்டல் இல்லை..
ஆமை வடைதான்
தட்டுல சாப்பிட்டியே..
இன்னும் பார்சல் பண்ணட்டுமா..

இல்லை என ஆரம்பித்துச் சொல்லத் துவங்க..
அவள் அம்மா இடைமறித்து
வாடி போகலாம்..

சும்மா இரும்மா..
மாமி..
என்பாட்டு எப்படி..

பேஷா இருந்தது போ..

பொய்..
நா நிறைய இடத்துல
தப்பு பண்ணினேன்..
அம்மா கூட முறைச்சா..

சிரித்து..
செல்லம்.. பாடறது எனக்காக இல்ல
ஒம்மாச்சிக்கு...
அது எதும் சொல்லாது..

த்ப்பு தப்புதான்..
நாளக்கி வரட்டா..

நாளக்கி நல்லா பாடறேன்..

சரி., வாயேன்..

சற்றே தயங்கி..

நாளக்கி
என்ன சுண்டல் மாமி...

pavalamani pragasam
4th October 2011, 03:21 PM
மாமி நான் மாமாவின் மடியில் அமர்வதை தடுக்கமாட்டாயே
மணப்பெண்ணிடம் குறும்பாய் கேட்ட போது கோபம் வரவில்லை
வாழ்த்துமடலில் அப்படி விண்ணப்பித்தவள் வேறு யாருமில்லை
அருமை நாத்தனாரின் அழகிய மூன்று மாதக் குழந்தைதானே

chinnakkannan
7th October 2011, 08:30 PM
குழந்தை தானே
என்றெல்லாம் பார்க்க மாட்டாள்
கொல்லைப்பக்கத்து வீட்டு
ஆண்டாள் மாமி

இரண்டு பையன்கள்
ஒன்று ஆறாவது வகுப்பு ஒன்று மூன்றாவது..
ஒரே டெர்ரர்தான்
பள்ளி முடிந்து வந்தால்
கைகால் கழுவி
உடனே படிக்க வேண்டும்
விளையாட்டெல்லாம் கிடையாது..
விடுமுறைகளிலும் கூட
எதையாவ்து படிக்கச் சொல்லி இருப்பாள்..

பையன்கள் காலேஜ் சேர்ந்த பிறகு
கண்டிப்பெல்லாம் இல்லை..
அவர்களிடமும் அம்மா தானே
என்று
அன்பெல்லாம் இல்லை..
அவர்கள் இஷ்டம் தான்..
ஆனால் படிப்பார்கள்..

ஏண்டா இப்படி
அவர்களைக்கேட்டால்
அதான் படிக்கறோம்ல
சின்னவயசுல எவ்ளோ படுத்தினா..
நீர் உம் வேலையைப்பாரும் ஓய்..

மாமியைக் கேட்டேன்..
குழந்தை தானே விடுங்கோ..
எல்லாம் சரியாய்டும் என
வந்தது பதில்..

pavalamani pragasam
7th October 2011, 10:55 PM
பதில் வந்தது அம்பாய்
சுவற்றில் அடித்த பந்தாய்
கேட்டிருக்க வேண்டாமோ
காலங்கடந்து வந்த ஞானம்
முடியில்லா தலைக்கு சீப்பு
இதுதானே இங்கு வாடிக்கை

chinnakkannan
9th October 2011, 12:39 PM
வாடிக்கையாய்
மல்லி,வெண்டைக்காய், எலுமிச்சைப்பழம்
விற்கும் கிழவியைக் காணோம் சந்தையில்..

பொல்லென வெண்மேகமாய் முடி..
நெற்றியில் அக்லக் குங்கும்ம்..
வெற்றிலைச்சாற்றில் சிவந்த உதடு..
பருத்திப் புடவையுடன்
பளிச்சென
மல்லீய், வெண்டிக்காய் என
அவள் கூவும் குரலும் கணீர்..

விலை விசாரித்தால்
எல்லாம் மலிவு தான்சாமி
நம்ம தோட்ட்த்தில வெளஞ்சது..
பிஞ்சு வெண்டிக்கா பாரு
ஒன்ன மாரி இருக்கு.. என்பாள்..
அப்படியும் பேரம் பேசுவேன்..
ஏன் சாமி..
கல்யாணத்துக்கா சேக்கற
நல்ல வில கொடுத்துட்டுப் போயேன்..
பொண்ணு எங்க கெடைக்குது..
ஏஞ்சாமி..
எல்லாம் ஒன்ன மாதிரிப் பொண்ணா
பாக்கறோம்ல..

அதுக்கு என் வீட்டுக்கார்ரில்லா கேக்கணும்
குறும்ப்ப் பாரு..
எனச் சிரிப்பாள் வெள்ளந்தியாய்
காதுகளில் கிழங்காய்
தண்ட்ட்டியும் ஆடும்..

இன்று பார்த்தால் அவளில்லை..
அவளிட்த்தில் ஒரு சிறுவன்..

எங்கப்பா பாட்டி?

பாட்டியா..
போனவாரம் செத்துப் போச்..
ஒரு நொடி மெளனித்தவன்
தொடர்ந்தான்..
‘சாமீ.. மல்லி.. வெண்டிக்கா.ய்..வாங்குங்க..
பிஞ்சா இருக்கு
ஒங்கள மாதிரி இளமையா..’

pavalamani pragasam
9th October 2011, 02:59 PM
இளமையாய் மனசிருக்கு
எண்ணத்தில் துள்ளலிருக்கு
ஆனாலும் என்ன செய்ய
சபையில் நுழையும்போது
முடியில் பரவிய நரையும்
முகத்தில் முதிர்ச்சியும்
முன் வந்து கிழவியென
கட்டியம் கூறுதே
ஆயின் சில நொடி பேச்சில்
தெளிவாய் புரிந்துவிடும்
கிழவியல்ல குமரியென
இன்னும் கூட குழந்தையென
குறை தீர்ந்திடுமெனக்கு
போதும் இந்த பாக்கியம்

chinnakkannan
10th October 2011, 01:16 PM
பாக்கியம் செய்திருக்கிறேன் ஸ்வாமி
என்ன பணி புரிய வேண்டும்..

இவளே கொஞ்சம் காப்பி கொடு
இதோ தர்றேங்க..என்ன முகம் ஒருமாதிரி இருக்கு
கொஞ்சம் தலைவலி
அச்சச்சோ.. இதோ பிடிச்சு விடட்டுமா..
இல்லை வேண்டாம்..

ஹாய்
ஹாய்..
என்னப்பா ஒரே வேலையா ஃபோனைக் காணோம்..
ஆஃபீஸ்ல ஒரே மீட்டிங்..ஒனக்கு..
எனக்கும் தான்..இப்ப தான் வந்தேன்..
கொஞ்சம் காப்பி கிடைக்குமா.
ஒய் நாட்.. கொஞ்சம்வெய்ட் பண்ணு..
உடை மாற்றிக்கிட்டு
போட்டு த் தாரேன்..

என்ன முன்னாடியே வந்துட்டியாடா..
ஆமாம்.. டிராஃபிக் கொஞ்சம் கம்மி
அது சரி..ஒரே தலைவலி..
அச்சச்சோ பெனடால் போட்டுக்கற்து தானே கண்ணம்மா.
ஒண்ணும் வேண்டாம்..ஆமா..சீக்கிரமா வந்தேல்ல
டிகாக்*ஷன் போட்டியோ..
இல்லைம்மா.. பைக் நிறுத்தறச்சே
கொஞ்சம் எசகுபிசகா கால்ல ஸ்ப்ரெய்ன்..
கொஞ்சம் நீ போட்டுக் கொடேன்..
அதானே பார்த்தேன். ஒரு துரும்பு எடுத்து
போட மாட்டியே.. எல்லாம் நான் தான் செய்யணும்..
எல்லாம் ஆணாதிக்கம்..
நான் என்னசொல்லிட்டேன்னு குதிக்கறே..
ஆமாய்யா ஆமா குதிக்கறது நானா.. நீயா..
சரி..போ.. நான் சரவணபவன் போய் குடிச்சுட்டு
ஒனக்கும் வாங்கி வர்றேன்..
இத முதல்லயே யோசிச்சிருக்கலாமில்ல...

கால்ம் மாற மாற
மாறிவிட்டன கோல மயில்கள்

pavalamani pragasam
10th October 2011, 06:34 PM
மயில்கள் ஆடும் அழகிய வனத்திலே
மலர்ந்த மங்கை பெயரும் சகுந்தலை
மகிழ்ந்தாடிய கலாப காதலன் மன்னன்
விளைந்தது பாரத விருட்சத்தின் விதை
மறந்துவிட்டான் கொடுத்த கணையாழியை
மீனின் வயிற்றில் மறைந்திருந்ததந்த சாட்சி
மறதி விலகும் காலம் வந்ததும் மங்களம்
காளிதாசன் வரைந்திட்ட காவியக் கதை

chinnakkannan
20th October 2011, 12:07 AM
கதை தானே வேண்டும்
நான் இவர்களைப் பற்றிச்
சொல்கிறேன்
என்ற் ப்டி
அப்பா
த்ன் மகனிட்ம் சொல்வதை
புன்சிரிப்புடன்
கேட்டுக்கொண்டிருந்தார்கள்
தாத்தா பாட்டி
புகைப் பட்த்தில்

pavalamani pragasam
20th October 2011, 08:30 AM
புகைப்படத்தில் பார்த்த பின்பு
ஜாதக பொருத்தமும் அறிந்து
சொஜ்ஜி பஜ்ஜி சாப்பிடச் சென்று
பாடச்சொல்லி கேட்டு பலருமாய்
சிலபல லௌகீக பேரங்கள் நடத்தி
மண்டபமும் தேதியும் முடிவாகும்
காலம் கடந்துவிட்டதோ இனி
பெரியவர் வேலை முடிந்துவிட்டதோ
இணையமும் கல்லூரிசாலைகளும்
இணைந்து இயங்கும் பணியிடங்களும்
மாலும் காபிஷாப்பும் டிஸ்கோவும்
மாலை சூட பொருத்தம் காட்டுமோ

chinnakkannan
20th October 2011, 03:37 PM
காட்டுமா என்றால் அப்படித் தான் இருக்கும்..
முகம் வெளிறும்
நடை தளரும்..
அதான் டாக்டர்
தீபாவளிக்கு முன்னால
ஆய்டும்னுட்டாரே
நா படாத கஷ்டமா
இவ சமாளிச்சுக்குவா.
ரொம்பக் கவலைப்படாதே.
பெரிய்ய்ய பிரகாஷ் ராஜ்னு நினப்பு’

என்னவள் ஆயிரம் கூறினாலும்
மகளிடம் கேட்டால்.
வெளிறச் சிரித்து..
ஷ் பாரேன் உன் பேரனை
இப்போதே படுத்தறான்... எனச் சொல்கிறாள்...

அவர்களுக்கு எப்படிப் புரியும்
ஆணின் வேதனை, பதட்டம்..
இவர்களை விடப் பெரிது என்பது...

pavalamani pragasam
20th October 2011, 09:09 PM
பெரிது என்பது எது
சிறிது என்பது எது
பெரிதென நினைத்த கோடு
சிறிதாகும் அதை விட
பெரிய கோடு அருகில் வர
பெரிதும் சிறிதும் மாறும்
சூழ்நிலைக்கு தக்கபடி ஆயினும்
தலைவலி தலைவலிதானே

chinnakkannan
20th October 2011, 10:50 PM
தானே மெல்லத் தவழ்ந்து
சுவர் பற்றி மெல்ல நடந்து
பின்
எதையும் பற்றாமல்
த்த்தித் தந்தி நடந்து
வேகமெடுத்து
ஓடி
பின் பறக்கும்
கற்பனையால்
சந்தோஷம் கொள்ளும் மனம்
அது தூங்கும் போது
வலிக்கிறது மிகவும்.

pavalamani pragasam
23rd October 2011, 03:46 PM
மிகவும் யோசித்து
மிகவும் தயங்கி
மிகவும் மென்மையாய்
மீட்டேன் என் இடத்தை

chinnakkannan
26th October 2011, 12:07 AM
இடத்தைப் பிடிக்க
சில மணி நேரம் முன்னால் நின்று
அடிபிடி நடத்தி
ஆ ஊ எனக் கூச்சலிட்டு
வரிசையில் சென்று
சீட்டுக் கொடுக்கும் இடம் வந்ததும்
சீட்டில்லை எனச் சொல்ல
பொறுமையாய் இருந்து
அந்தக் காட்சி முடிந்து
சீட்டு வாங்கி
உள்ளே முட்டி மோதி
பின்னால் இடம் பிடித்து
மேலே சுழலும் அறைகுறை மின்விசிறிக்
காற்றினால் ஆசுவாசம் அடைந்து
பின்
ஆவலுடன் வெள்ளையை நோக்கி
டபக்கென இருளாகி
ஓட ஆரம்பித்ததும் சே விளம்பரம் எனச் சலித்து
மறுபடி
படம் ஆரம்பித்து
நாயகன் வர விசிலடித்து
கலர்காகிதங்களை எறிந்து
பார்க்கும் கூட்டம்..நிறைய இருந்தது.அந்தக் காலம்.

வலை என்பது இருக்கு
அல்லது
ப்ளாக் தானே மெல்லப் போனாப் போதும்
ஒரு ஐநூறு தான் செலவாவும்
பரவால்ல பாத்துடலாம்..
என இருப்பது இந்தக் காலம்...

chinnakkannan
26th October 2011, 12:08 AM
பவள மணிக்கா.. உங்களுக்கும் உங்க்ள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்..

pavalamani pragasam
26th October 2011, 10:22 AM
காலம் காற்றாய் அல்லவோ பறக்கிறது
குட்டிப் பெண் அன்று பட்டுப்பாவாடையில்
பாட்டி வீட்டில் செட்டுப் பிள்ளைகளுடன்
கொட்டமடித்தது அதிரச இனிப்பு
குமரியாய் உறவுகளை சந்தித்த
கொண்டாட்டம் குலாப்ஜாமுன் தித்திப்பு
மறுவீடு சென்று இரு வீட்டு சீராடியது
மனம் நிறைந்த மைசூர்பாகின் சுவை
மக்களைப் பெற்று அவர் ருசிக்குக் கிளறியது
மங்காத மகிழ்ச்சி தரும் பாதாம் அல்வா
பேரப்பிள்ளைகள் கொறிக்க முறுக்கும் மிக்சரும்
பேரின்பம் தரும் போளியும் பாதுஷாவும்
அக்கரையிலும் தொலைதூர பணியிடங்களிலும்
மக்கள் இன்று - மாட்டிக்கொண்டோம் தனித்தீவில்
கடையில் வாங்கிய பலகாரம் போதுமென
அக்கம் பக்கம் பகிர்ந்துண்டு அருகிருக்கும்
பழுத்த மர நிழலில் சற்றே ஆசுவாசம்
பெற்றவரை பார்த்து ஆசி பெறுதல் பணியாரம்
பண்டிகை கொண்டாடியதாய் நீயும் இன்று
பேர் பண்ணிக்கொள் மனமே வேணாம் பேராசை

chinnakkannan
30th October 2011, 10:50 PM
பேராசை கொண்ட முதலை
குரங்கை
பழத்தைச் சாப்பிடச் சொல்லிச்சா
எனப் பாட்டி ராகத்துடன் சொன்னதை
கேட்டபடி
பாட்டியின் முதுகில்
தூங்கிய குழந்தை
தானே குரங்காக மாறுகையில் புன்னகை புரிந்து
முதலையாய் மாறுகையில்
கொஞ்ச்ம நடுங்கி
புடவையை இறுக்கப் பிடித்தபடி
கண்களை இறுக்க மூடித் தூங்குவதை
வியப்புடன்
பார்த்துக் கொண்டிருந்தன
கதைப் புத்தகத்து முதலையும்
குரங்கும்..

pavalamani pragasam
1st November 2011, 07:43 AM
குரங்கும் அதன் குறுகுறு கண்களும்
குட்டியை கவ்விச் செல்லும் பாங்கும்
தவழும் நீண்ட அழகிய வாலும்
மெத்தென்ற சிறு கைவிரல்களும்
கூட்டமாய் வாழும் ஓர் ஒழுங்கும்
ஈர்க்கும் சங்கதிகள்தான் எத்தனை

chinnakkannan
20th December 2011, 11:36 PM
எத்தனை ஆண்டுப்பழக்கம்
மறந்து விட்டாயா புவனமகாதேவி..
நட்பு உதவிக்குக் கணக்கு வைப்பதில்லை..
அறியாதவளா நீ..
எல்லோரும் உன்னை அம்மா என்றழைக்க
நான் உன்னை அக்கா என...
என் மகன் உன் ம்கனென
தத்தெடுத்துத்
திருமணமும் செய்வித்தாய்...

எனக்கும் வயதாகிறதே
என்னையும்
மற்றவர்க்ள்
அம்மா என அழைக்க
நான் ஆசைப்பட்டால்
அது குற்றமா..

காலங்கள் மாறும்
மனிதர்கள் மாறுவார்கள் தான்
நீ மாறலாமா..

நான ஆசைப்பட்டதையெல்லாம்
நிறைவேற்றினாய்
எனது குடும்பம்
உன்னால உயர்ந்தது
என எண்ணம் கொண்டிருக்கிறாய்
தவறு தோழி..
என் எண்ணத்தில்
அவர்கள் உயர்ந்தார்கள்..

இருந்தாலும்
என்னை
அவையிலிருந்து நீக்கி விட்டாய்
உன் மனத்திலும் என
மனப்பால் குடிக்கிறாய்...
ஒருவேளை இதெல்லாம் உன் நாடகமா..

எது எப்படியோ
எனது ஆசையும்
உனது முடிவும்
சரியா தவறா என
சொல்லும் காலம்...
இந்த செம்பியன் மாதேவி...
...யார் என
புரியும் அனைவருக்கும்...

pavalamani pragasam
21st December 2011, 07:34 PM
அனைவருக்கும் திருப்தியா
அப்படியொரு தீர்வு உளதா
அது என்றும் சாத்தியமா
தாத்தன் பேரன் கழுதை
பயணித்த கதை சொல்லும்
சமுதாயத்தின் இயல்புதனை

chinnakkannan
21st December 2011, 09:38 PM
இயல்புதனை மறந்த காலத்தை விட
இருந்த காலம் எப்பொழுது...

ரகசியமாய்ப்
பக்கத்து கிளாஸ்மேட் கொடுத்த
மயிலிறகை
புத்தகத்தில் இரவில் ஒளித்து வைத்துவிட்டு
கண்ணை இறுக்க மூடி
தூக்கம் வரும் வரை
இரவெல்லாம் சாமியை வணங்கி
காலையில் பார்த்தால்
வளராமல் போக
கண்ணீல் குளம் கட்டி அழுத போது..

ஸ்ஸ் பச்சமிளாகா பிடிக்காது தெரியுமல்
ஏன் போட்ட
எனக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய
ஏண்டி நா போடவேஇல்லையே
எனப் பதறித்
தண்ணீர் தந்த அம்மாவிடம்
கண் சிமிட்டிச் சிரித்த போது...

பருவ நிலைக்கேற்ப
மாறுதலடைந்ததால்
கண்களில் கொஞ்சம் கனவு,
கொஞ்சம் பூரிப்பு
கொஞ்சம் நாணமாய்த் தலைகுனிதல்,
மற்றவர் கொஞ்சம் வியந்து பார்க்கையில்
ஏற்பட்ட பெருமிதம்...
கண்ணாடி காட்டும் முக அழகில்
ஏற்படும் மெலிதான கர்வம்...
எதற்கும் குறைவில்லை..

இவ இவ்ளோ அழகா இருக்காளேங்க்
எப்ப படிப்ப முடிப்பாளோன்னு
ரொம்ப பயம்மா இருக்கு
அம்மா சொல்ல
அப்பா நல்லா பிஜியே படிக்கட்டும்
வேலை கிடைத்தாலும் சரிதான்..
இந்தக்காலத்தில் அழகு மட்டும் கூடாதுடி..
படிப்பும் வேண்டும் என்று சொன்ன போது
வயதை மறந்து ஓடிச் சென்று
அப்பாவை கட்டிக் கொண்டு
தாங்க்ஸ்பா சொன்ன போது...
இயல்பாகத் தானிருந்தேன்...

கல்லூரியிலும் பின் வேலையிலும்
எல்லோரிடமும் சகஜமாகத் தான் பேச்சு..பழக்கமெல்லாம்..

பின்..எப்படி..
கடங்காரா.. எங்கிருந்து வந்தாயடா..

பொருத்தமெல்லாம் சரியா இருக்காம்..
இந்தா பையன் ஃபோட்டோ..
பிடிச்சிருந்தா வரச்சொல்லட்டா..

அப்பா காட்டிய புகைப்படத்தில்
உன்னைப்பார்த்ததில்...

கொஞ்சம் முகம் மலர ...
நாணமும் உடன் வர
உள்ளே ஓடி
வழ்க்கம் போலக் கண்ணாடி பார்க்கையில்
தெரிந்தது மாற்றம் துல்லியமாக..
இன்னொன்றும் புரிந்த்து..
அது நிரந்தரம் என.......

***..

pavalamani pragasam
21st December 2011, 10:19 PM
நிரந்தரம் என நினைத்து ஆணவம்
நிலைமை புரியாமல் அட்டகாசம்
நின்று யோசிக்காமல் அவசர ஓட்டம்
நிலைக்காது இந்த வெத்து ஆட்டம்

chinnakkannan
21st December 2011, 10:39 PM
ஆட்டம் இப்போது தான் ஆரம்பம்
என நினைக்கையில்
பொசுக்கென முடிவதும்..
ஆட்டம் முடிந்தது என எண்ணுகையில்
மறுபடி ஆரம்பிப்பதுமாய்...
நீள் தொலைக்காட்சி த் தொடரைவிட
நீண்ட தொடர் கதை தான்..
ஆரம்பம்
கதை வசனம் முடிவு என
எல்லாவற்றையும்
ஒளித்து வைத்திருப்பவன்
மேலே உள்ளவன்

pavalamani pragasam
22nd December 2011, 06:50 AM
உள்ளவன் சுமக்கிறான் பொறுப்பு
செல்வம் செழுங்கிளை தாங்க
மேதமை இம்மானிடம் ஓங்க
தைரியம் முன்னால் நடக்க

chinnakkannan
22nd December 2011, 10:15 AM
நடக்க நடக்க
நாராயணன் செயல்
என
அடிக்கடி சொல்வாள் பாட்டி...
அம்மா
நடகக நடகக
அவ்ர் செயல் என்பாள்
மேலே பார்த்துக் கொண்டு..
எனில் புருஷன் பெயரைச்
சொல்லக் கூடாதாம்...

சில வருடங்களாக
நானும்
நடக்க நடக்க நாராயணன் துணை
என்கிறேன்..
என் மேலதிகாரியின் பெயர்
பத்ரி நாராயணன்..

pavalamani pragasam
22nd December 2011, 08:36 PM
நாராயணன் பேரை சொல்லிக்கொண்டே
நாரதர் பொழுதுக்கும் நடத்துவது கலகம்
நன்மையில் அவை முடிவதும் விந்தை
நவீன நாரதர்கள் செய்வதெல்லாம் நாசம்

chinnakkannan
23rd December 2011, 08:32 PM
நாசமாக ஆகிவிடுமா
வேகமாக சுற்றிச் சுற்றிச்
சுழன்றடிக்கும் மழையைப்
பார்த்தபடி
பயிர் பற்றிய கவலையுடன்
கிராமத்து மாமா..
சே
ஒரு இடத்துக்குப் போக முடியலை
எப்போ நிக்கும்..
சலிப்புடன் அப்பா..
சூடா பக்கோடா போட்டிருக்கேன்
சாப்பிட்டுட்டு எங்க வேணா போங்க..
சமையலறையிருது அம்மா..
ச்ச் போடி..
மழையால சிக்னல் கிடைக்கலை..
கரெண்ட் எப்ப வேணா போலாம்
அசைன்மெண்ட் எப்படி முடிக்கறது..
செல்பேசியில் தங்கை..
விளையாடப் போகலாமென்றாலும்
முடியாது..
கம்ப்யூட்டர்ல வலை வேலை செய்யலை..
சரி ஆங்கிலக் காமிக்ஸ் படிக்கலாம்
என
புரட்டிய படியே நான்
சற்றே
அடுக்குமாடிக் குடியிருப்பின்
ஜன்னல் வழியாக
வெளியே பார்த்ததில்
எந்தக் கவலையுமில்லாமல்
சுதந்திரமாய்
சிரித்துப் பெய்துகொண்டிருக்கிறது மழை..

pavalamani pragasam
26th December 2011, 08:02 PM
மழைக் காதலன் வருகிறான் விரைவாக
வருடுகிறான் விரல்களால் ஆதுரமாய்
மயங்கி மலர்கிறாள் மண்மங்கை நல்லாள்
வளங்கள் வழிகின்றன பூரித்த பூமியிலே

chinnakkannan
27th December 2011, 11:54 AM
பூமியிலே இருக்கும் போது
வானத்தில் பறக்க ஆசைப்படுவதும்
வானுலகு போகும் வேளை வரும்போது
பூமியில் இருக்க ஏங்குவதும்...
என்ன மனிதன் இவன்.

pavalamani pragasam
27th December 2011, 08:11 PM
இவன் தூங்கினால் எழுப்பலாம்
நடிப்பவனை என் செய்யலாம்
கண்ணை மூடிக்கொண்டால் தூக்கமா
உலகம் இருண்டதாயெண்ணும் பூனையா
ஊர் குறட்டை விடும் வேளையிலும்
துடிப்புடன் உழைப்பவர் வழிகாட்டல்
தேவை என்றும் மானிடம் தளைத்திட
தூக்கம் இன்று தொலைவது பலருக்கு
பொல்லாத போக்குகள் பலவும் பழகியதால்
தலைவர் யார் கயவர் யார் தெரியவில்லை

chinnakkannan
28th December 2011, 12:20 AM
"தெரியவில்லை..
எனக்குத் தெரியாது”
எப்போது எதைக்கேட்டாலும்
என் உதவியாளர் நாய்ரிடம் இருந்து
வரும் பதில்..
எனக்கடுத்து
நான் ஓய்வு பெற்ற பின்னால்
நாயரைத் தெரிவு செய்யலாம் என
மேலதிகாரி முடிவு செய்து
எனைக் கேட்ட போது
நாயர் சொல்லும் பதில்களை,
பிறகு நான் சொல்லிக்கொடுப்பதைச்
சொன்னேன்..

ச்ரி எனச் சொல்லிச்
சில கேள்விகளை
நாயரிடமே கேட்டார் மேலதிகாரி..

தெரியுமே எனப் பதில்வ்ர
அப்போது தான் எனக்குப் புரிந்தது
நாயரை

pavalamani pragasam
28th December 2011, 09:05 AM
நாயரை அறியாத நாடுண்டோ
நாவிற்கு சுவையான தேனீரும்
நல்ல மசால் வடையும் விற்கும்
நாட்டுநடப்பை அலசும் இடமாய்
நன்குணர்ந்து மகிழாத பேருண்டோ
நட்பும் நேசமும் நெருக்கமும் இன்று
நசிந்தது ஏனென்று ஞான் அறியேன்
நல்வாக்கு பறையணும் அந்த பகவதி

chinnakkannan
28th December 2011, 01:16 PM
பகவதி, பார்வதி, ஓமனா
எதுவாக வேண்டுமானலும் இருக்கும்
எதிர் ஃப்ளாட் யுவதியின் பெயர்..

மலையாளம் என
கன்னங்களிலும் டிஷர்ட்டிலும்
தெரிந்தது..

சந்திக்கும் பொழுது
கண்களும் இதழ்களும்
சிரித்துப் பதில்வாங்கிப் போய்விடும்..
பேசியதில்லை..

நாட்காட்டியில் தேதிகள் மாற மாற
ஹாய் ஹலோவில்
கொஞ்சமாய்ப் பூத்தது சினேகம்..
பெயர்களும் பரிமாறப்பட்டன..
அவளின் தேன்கலந்த பெயர் ஷ்ரியாவாம்..

மனதுக்குள்
செல்லமாய் எப்படி அழைக்கலாம்
என
பட்டிமன்றமே ஆரம்பித்தது..

ஒரு நாள்
லிஃப்டில் ஒன்றாய் வர நேர்கையில்
என்னிடமிருந்து விசாரணைகளும்
அவளிடமிருந்து சுகந்தமும்
இடம் மாறின..

சொல்லிவிடலாமா
அல்லது
கேட்டு விடலாமா
என நெற்றி நரம்புகள் துடிக்கையில்
லிஃப்ட் நின்றது..

கதவு திறந்த பொழுது
கொஞ்சம் அசடும், கொஞ்சம் தொப்பையும்
கொண்டு நின்றிருந்தவனைப்
பார்த்துப் புன்சிரித்து
வெளிவந்த என்னைப் பற்றி
அவனிடம்,
‘இவர் தான் எதிர் ஃப்ளாட் மாமா..
நல்ல ஃப்ரெண்ட்’
எனச் சொல்ல...

முகம் முறுவலிக்க
கைகள் குலுக்கிக் கொள்ள
உள்ளே
உடைந்து போயிருந்தது மனம்

pavalamani pragasam
28th December 2011, 03:23 PM
மனம் இருக்கவேண்டும் ஒரு பூந்தொட்டியாய்
ஆனால் குரங்கது ஆகுது குப்பைத்தொட்டியாய்
ஓயாமல் அலையடிக்கும் ஆசாபாசங்கள்
ஒப்புக்கொள்ள மறுக்கும் நியாய தர்மங்கள்
இப்புயலில் சிக்கிய சிறு பாய்மரக்கப்பலதை
உல்லாச ஊஞ்சலாய் ஆடவைக்க கற்பதெப்படி

chinnakkannan
28th December 2011, 09:07 PM
கற்பதெப்ப்டி..

வெள்ளைப் பேப்ப்ரில்
குண்டு பேனாவினால்
அச்சுப்பதித்தாற்போல்
பாடம், கேள்வி ப்தில், படம் வரைதல்
கணக்கு
என் எழுதி
புத்தகம்பார்த்து
இன்ன இன்ன ம்ணிக்கு
இப்ப்டிப் படிக்க வேண்டும்,
இவ்வ்ள்வு முடிக்க் வேண்டும்
என
அழ்காய் எழுதித் த்ருவார் அண்ணா...

அத்ன்ப்டி ப்டித்து உழைத்ததில்
தான்
நல்ல் கல்லூரியில்
சேர முடிந்தது எங்களால்..

ஒரு சுபயோக் சுபதினத்தில்
அண்ணனுக்கு அண்ணி வர...

பள்ளிப்படிப்புக்கு
நேரம் சொன்ன அண்ணனால்
கல்லூரிப் படிப்புக்கு எதுவும்
அறிவுரை சொல்ல இயலாமல் போனது..

ஏனெனில்
அவரே
நட்ந்து கொண்டிருந்தார்
அண்ணி கொடுத்த
அட்டவ்ணைப்படி...!

pavalamani pragasam
29th December 2011, 09:47 AM
அட்டவணைப்படி உண்டு உறங்கி
அளவாய் எதையும் அனுபவித்து
ஆரோக்கியத்தை கணக்காய் பேணி
ஆயுளை நீட்டித்து அறிவோடியங்கி
அடைந்த நிகர லாபம்தான் என்ன
அமைதியா ஆனந்தமா ஆயாசமா

chinnakkannan
29th December 2011, 11:05 AM
ஆயாசமாக இருந்தால்
கொஞ்சம்
கட்டையைச் சாச்சுக்கலாம்னு
வாங்கினேன்...

ஈஸி சேரை ப்ப்ற்றி
அப்பாவின் தாத்த சொல்வாராம்..

அப்பாவின் அப்பா
மீனாஷி கோவிலில்
ராஜம் சந்தானத்தின்
ராமாய்ணம் கேட்கப்போவாராம்..

அப்பாவிற்காக
முதல் சம்பளத்தில்
ரெக்ளைனிங்க் சேர்..
அதேஈஸி சேரின்
இந்தக்கால வடிவம்
வாங்கிக் கொடுத்த போது
ரொம்ப சந்தோஷப் பட்டார்..

எனக்கும் வயசாகி விட
பையன் சொல்கிறான்
இதோ பத்துகிமீ தான்ப்பா
வாரம் ஒருமுறை நானும் அவளும்
பார்க்கறோம்..
உங்க சந்தோஷம் தான் முக்கியம்
என்கிறான்..

நினைத்தால்..
வருகிறது
கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் அழுகை...

pavalamani pragasam
29th December 2011, 04:25 PM
அழுகை அவசியமான செயலே
அந்தரங்கம்தான் அதன் அழகே
அழுத்தம் நீக்கி அழுக்கை கழுவி
அமைதியை தரும் வைத்தியமே
அவையில் அழும் பலர் பொய்யர்கள்
அதில் முதலை கண்ணீர் ஒரு ரகம்
அமங்கல வீட்டிலோர் சம்பிரதாயம்
அங்கே அவலமாகும் ஒரு புனிதம்

chinnakkannan
29th December 2011, 08:14 PM
புனிதமானவள் நான்
என்னைத் தீண்டினால்
அழிந்தே போவாய்..

என்ற வசனங்களெல்லாம்
மறைந்து போய்..

என்னய்யா ல்வ்வா..
கொஞ்சம் பழகு
பிறகு யோசிக்கலாம்

என்பது போல்
மாறிவிட்டது..

ம்ம்..எல்லாம் காலம்

pavalamani pragasam
29th December 2011, 09:41 PM
காலம் கலிகாலம் ஆனதே
எழுதியவன் ஏட்டை கெடுக்க
பாடியவன் பாட்டை கெடுக்க
உலகத்தை கொலைவெறி பிடிக்க
எதுவுமே இங்கு புரியவில்லை
அனர்த்தம் தலைவிரித்தாட
அநாகரிகம் அதை ரசித்திட
புதிது புதிதாய் பிறக்கும்
அபத்தங்கள் பெருக பிறக்கும்
புது வருடம் புது வெள்ளத்தில்
புரட்டியடிக்குமோ புனரமைக்குமோ
இளைய தலைமுறையினரை
மாறுமோ மந்தை சிந்தனை
உடையுமோ வெத்துக் குமிழிகள்

chinnakkannan
31st December 2011, 10:13 AM
குமிழிகள்
சின்னதும் பெரியதுமாகப்
பறப்பது போல
வண்ணமயமாகப்
பறக்கின்றன பலூன்கள்
வாழ்த்துச் சொல்லியபடி...

வண்ணமயமாக இருக்கட்டும்
வாழ்க்கை எனச் சொல்வது போல்
வானில் சத்தமிட்டு வண்ணத்துடன்
விழுகின்றன பட்டாசுகள்..

நுரை ததும்பும் கிண்ணங்களிலுள்ளவை
உற்சாகத்துடன்
உள் செல்கின்றன வயிற்றுள்
சிறப்பாக வரப் போகும்
புத்தாண்டை வரவேற்றபடி...

எந்த வித எதிர்பார்ப்புமில்லாமல்
தனது வேலையைச் செய்வதற்காகப்
புன்முறுவலுடன்
கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது
சூரியன்

pavalamani pragasam
31st December 2011, 04:33 PM
சூரியன் சுட்டெரித்தால் பிடிக்கவில்லை
சூரியன் விடுப்பில் சென்றால் பிடிக்கவில்லை
மழையும் பனியும் காற்றும் பிடிக்கவில்லை
எதுதான் பிடிக்கும் என்றும் தெரியவில்லை
சிறு பிள்ளை மனக்குறைக்கு ஏது எல்லை
வருடங்கள் பறந்தாலும் மாறாதோ இந்நிலை

chinnakkannan
31st December 2011, 04:46 PM
இந் நிலை வருவதற்குக்
எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..
மெய்வருத்தம்பாராமல்
கண் துஞ்சாமல்
கருமமே கண்ணாயினேனாக்கும்..
தாத்தா சொல்ல
பேரன்கேட்டான்..
தாத்தா உனக்குத் தெரியாதா தமிழ்...

pavalamani pragasam
31st December 2011, 09:25 PM
தமிழ் அறிவாள் பல நாகரிகம்
அவள் அலங்காரம் பலவிதம்
காலத்திற்கேற்ப மாறும் கோலம்
பல்லை உடைக்கும் இலக்கண நடை
பாகாய் இனிக்கும் மணிப்பிரவாளம்
வட்டார மொழியென அங்கங்கே தளுக்கி
ஊடக வழி வித விதமாய் மினுக்கி
விடலைகள் உதடுகளில் தத்தளித்து
இன்று ஆங்கிலக் கடலில் மூழ்கினாள்
முத்துக்குளிக்கவோ மரணிக்கவோ

chinnakkannan
1st January 2012, 01:16 PM
மரணிக்கவோ விழுந்தது நிலா கிணற்றில்..
இல்லையில்லை..
முகம் அலம்புவதற்காக இருக்கும்..

pavalamani pragasam
1st January 2012, 01:39 PM
இருக்கும் இல்லத்தில் இன்பமும் ஒளியும்
பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் நாளும்
புதிய வாய்ப்புகளின் அரிய பெட்டகம்
என்றெண்ணும் பக்குவம் கனிந்தபின்னே

chinnakkannan
2nd January 2012, 09:26 PM
கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ அறியாத பாவையா..
நாணமோ இன்னும் நாணமோ ஜாடை நாடகமென்ன
அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா
க்ட்டிப்புடி கட்டிப் புடிடா
ஒய்திஸ் கொலவெறிடி

அன்று பெண்மைக்கு
நாசூக்காய் மரியாதை தந்த
தமிழ்த் திரைப்பாடல்கள்
இன்று மாறியது
சூழலா அல்லது
அப்படித்தான் இன்று இருக்கிறதா..

pavalamani pragasam
3rd January 2012, 10:11 AM
இருக்கிறதா இன்னும்
இடையினில் தேடல்
இடைஞ்சலாய் ஊடல்
இருவரின் விளையாடல்
இன்பம் திகட்டுவதில்லை
இயற்கை பின்னும் வலை

chinnakkannan
3rd January 2012, 09:37 PM
வலை மனதுக்குள் சொல்லிய வார்த்தைகள் கீழே:


‘படுபாவி வந்துட்டான்யா வந்துட்டான்,.
நேரங்கெட்ட நேரத்தில
படகுல எடுத்துண்டு போவான்...
கடல் காத்தே எனக்குக் குளிரும்..
இதுல தொப்னு ஜில் தண்ணில
போடுவான்...
ஆசையா என்கிட்ட வந்து
முத்தம் கொடுக்கற மீன்கள்
எவ்ளோ அழகா இருக்கு...
வராதீங்கன்னு சொல்லவும் முடியலை..
மின்மினி நெருப்புல விழற மாதிரி
என்கிட்ட மாட்டிக்குதுங்களே..
அச்சச்சோ...
இந்தப் பாவி இழுக்கறானே..
இதோ இழுத்துட்டான்..
மேலே வந்ததுக்கப்புறம்
ஒவ்வொண்ணும் என்ன்மாத் துள்ளுதுங்க
மூச்சுக்காக...
அடேய் ஒனக்கு இரக்கமே இல்லியா...
நிறையக் கிடச்சுடுத்தாம்
கரைக்கு வந்துட்டான்...
என்கிட்ட ஆசையாத் துள்ளினது
இப்போ அசையாமக்கெடக்குங்க..
எடுத்து வேற துணிமேல போட்டுட்டான்
என்னை மறுபடியும்
உபயோகப் படுத்தறதுக்காக
காயவும் போட்டுட்டான்....
ஹலோவ்வ்வ்வ்
லவ்வர்ஸ்
என்னை பாத்துக்கிட்டே
ஒங்க கண்ணோட பேசிக்கிட்டே
நடக்கறீங்களே
ஒங்களுக்குப் புரியலையா
கொலைகளுக்கு உடந்தையான
என்னோட சோகம்...

pavalamani pragasam
4th January 2012, 10:59 AM
சோகம் அறியாவிடில் சுகம் இனிக்குமா
வெயில் இல்லாமல் நிழல்தான் குளிருமா
உப்பு உரைப்பில்லாமல் சமையல் ருசிக்குமா
இரவும் பகலும் வானத்தில் வருவதுண்டு
இடரும் இன்பமும் நாணயத்தின் இருபக்கமே
ஒன்றில்லாமல் ஒன்றுக்கு மதிப்பில்லையே

chinnakkannan
4th January 2012, 02:41 PM
மதிப்பில்லையே அவ்வளவு...

எதிரில் இருந்த கல்
முக இறுக்கத்துடன் பேசியது...

என்ன இப்படிச் சொல்கிறீர்கள்..
நீங்கள் என் பாட்டனாரின் நண்பர்
உங்களுக்குத் தெரியாததல்ல்
அந்தக் காலத்தில்
அவர் வாங்கிய இந்த
வைர நெக்ல்ஸின் விலை
நீங்க்ள் சரி பாதி சொல்வது எப்படி.

விற்பவர் கேட்க கல் பேசியது

"இப்போ இவ்ளவு தான்...
நிறைய் உபயோகப்ப்டுத்தியதில்
சேதாரம், அழுக்கு
தவிர கல் பிரித்தால்
எப்ப்டி எனச் சொல்வது கஷ்டம்
எனில் இது தான் விலை

முடிவில்
அறுப்து ச்தவிகிதத்தில் பேரம் படிய

விற்றவர் சென்றதும்
கல்லின் பையன் கேட்டான்
”அபபா
உங்கள நண்பரின் பேரன் தானே
வந்தவர்..
இன்னும் கொடுத்திருக்கலாமோ..”

கல் சிரிக்காமல் சொன்னது

நட்பு வேறு
வியாபாரம் வேறு

pavalamani pragasam
4th January 2012, 07:47 PM
வேறு பக்கம் பார்க்கிறாள்
விட்டேத்தியாய் பேசுகிறாள்
வெறுப்பேத்துகிறாள் வீம்பாய்
வினைகாரியின் விளையாட்டிது
விழி பிதுங்கும் விபரீத சதுரங்கம்
விளங்கவில்லை அடுத்த நகர்வு
விக்கித்து வேர்த்து நிற்கிறேன்
வஞ்சியின் வலைக்கு தப்புவதுண்டோ
விலாங்கும் வஞ்சிரமும் வாளையும்
வினயமில்லா சிறு மீன் நான் பாவம்

chinnakkannan
6th January 2012, 09:39 AM
பாவம்.
அபூர்வமாகக்கிடைத்த
பழைய நாவல் புத்தகத்தைத்
தூசு தட்டியதில்
படக்கெனப் பறந்து
கீழேவிழுந்து அடங்கியது
அந்தப் பூச்சி...

நான் தட்டியதில்
அதன் உயிர் சென்றது பாவம்..
ஆனால்
இவ்வளவு நாள்
அந்தப் புத்தகத்தை
படித்திருக்கிறதே..
அது அதுசெய்த புண்ணியம்...

pavalamani pragasam
6th January 2012, 12:41 PM
புண்ணியம்தன்னைத் தேடித் தேடி
கோவில் கோவிலாய் சென்று
குளங்களில் தவறாது புனித நீராடி
திருவோடுகளில் சில்லறை வீசி
உண்டியலில் காணிக்கை செலுத்தி
பக்திப்பழமாய் பரவச கோலம்
நெஞ்சில் ஈரம் இன்றி அதிகாரம்
பொருளுக்கும் புகழுக்கும் பேராசை
பெருக்கியது பணமா புண்ணியமா
காலமறிந்து செய்யும் உதவி
ஓசையின்றி வழங்கிய நிதி
கல்விக்கண் திறக்க விரும்பி
பச்சை வளம் பூமியில் காத்து
தீய சிந்தனை செயல் ஒழித்து
தேடிய புண்ணியம் திரவியம்
தலைமுறைகள் அதில் வாழும்

chinnakkannan
7th January 2012, 06:57 PM
வாழும் பல்லிங்க..ஒண்ணும் செய்யாது...
வீட்டுக்காரர் சொன்னாலும்
புதுக்குடித்தனம் மனைவியுடன்
சென்றபோது கொஞ்சம்
பயம்மாகத் தான் இருந்தது..

அதுவும்
அது
படுக்கையறை,
குளியலறை,
சமையலறை
என
நாராயணக் கடவுள் போல
காட்சி தரும்..

பார்த்தால்
பதிலுக்கு வெறித்த பார்வை பார்த்து
ச்ச்ச் சொல்லும்..

மனைவி கிண்டல் செய்வாள்
என்ன இது பல்லிக்கெல்லாம் பயந்து..

ஒரு ஞாயிறுப் பொழுதில்
காலையில்
ச்ச் சத்தத்தில்
சட்டென விழிப்பு வந்ததில்
கொஞ்சம் பயந்து கத்த...

அவள் குங்குமமாய்ச் சிவந்து
வாயைப் பொத்தினாள்..
கத்தாதீங்க.. அது பல்லியில்லை
நான் தான்..!

pavalamani pragasam
7th January 2012, 07:59 PM
நான் தான் முட்டாளோ
முதல் ஆளாய் வந்துவிட்டு
முழிக்கிறேன் நேரம் தவறாமை
மறந்த விழாக் கூட்டத்தினர் முன்
முதல் ஆளாய் கண்டிக்கிறேன்
கண் முன்னே அக்கிரமம் நடக்கையில்
மௌனமாய் மற்றவர் பார்க்கையில்
முதல் ஆளாய் கொதிக்கிறேன்
கலாசாரம் காற்றில் பறக்கையில்
கைதட்டி பிறர் அதை ரசிக்கையில்
கேவலமில்லை இந்த மௌடீகம்
நான் இருப்பேன் நானாகத்தான்

chinnakkannan
7th January 2012, 10:35 PM
நானாகத் தானிருந்த கால மெப்போ
...நலமாகத் தானிருந்த பொழுது மெப்போ.
தானாடி என்னுடனே ஓடி யாடி
..தயங்காமல் என்மழலைப் பேச்சி லாடி
ஆணாக எனைவளர்த்த அன்னை கூட
..அழ்காக இருந்திருந்த நாட்க்ள் தானா..
தேனாகப் பலவாறாய்ப் பேசி வானில்
..திசைக்கெல்லாம் பறந்திருந்த இளமைப் போதா

ஊனாசை உயிராசை எல்லாம் கொண்டே
..உறங்காமல் ப்லவாறாய்ச் செல்வம் சேர்த்து
காணாமல் போய்விட்ட வெள்ளை உள்ளம்
..கண்களிலே மறுபடியும் தெரியுங் காலம்
வீணாசை என்றேதான் அறிந்த போதும்
...வேடிக்கை தனைக்கூட்டும் விந்தை நெஞ்சால்
தானாகத் தோன்றிடுமோ என்றே உள்ளே.
..தவித்தபடி கேட்கின்றேன் விடைதான் எங்கே...

pavalamani pragasam
7th January 2012, 11:03 PM
எங்கே உளது உணவென்று
உயிரினங்கள் முகர்ந்துவிடும்
வண்டறியும் தேன் இருக்கும்
மலர்களின் இருப்பிடம்
வீசும் நறுமணத்திலே
இரவு மலர்களின் வெண்மை
எளிதாய் கண்டுபிடிக்கவே
தேனை கொடுப்பதின் விளைவு
மகரந்த சேர்க்கையல்லவோ
தானும் பிழைத்துப் பெருகி
தன் சங்கிலி கண்ணிகளும்
வலுவாய் நலமாய் தொடர
அமைந்த அழகிய ஒழுங்கை
குலைக்கிறான் பாவி மனிதன்

chinnakkannan
10th January 2012, 10:23 AM
மனிதனைக் கட்டுப்படுத்த வேண்டும்..
என்ற தலைப்பில் பேச வந்தன மிருகங்கள்..
மனிதன் மிக மோசம்
என்றது ஆடு
என்றது மாடு
என்றது கோழி..
கடைசியாய் வந்த நாய்
மனிதன் மிக நல்லவன் எனச் சொல்லி
வள் எனக் குலைத்துப் பாய
கலைந்தன கூட்டம்

pavalamani pragasam
10th January 2012, 12:03 PM
கூட்டம் வேண்டுமா கொண்டாடிக் களிக்க
அணிகலன் அலங்காரமுடன் அளவளாவ
அறுசுவை விருந்துண்டு மகிழ்ந்திருக்க
மனம் லேசாகி கவலைகள் மறந்துவிட
தன்னம்பிக்கையும் தெம்பும் ஊற்றெடுக்க
போதுமே அழ ஆதரவாய் ஒரு தோள்

chinnakkannan
11th January 2012, 01:13 AM
தோள்
இல்லை தோள்கள்
கொஞ்சம் தேன் கொஞ்சம் வெண்ணெய்
இரண்டும் அள்வாய்க் க்ல்ந்த நிறம்...

நிறைய அழகாயிருந்ததாலோ என்னவோ
அழகிய திருஷ்டியாய்
இரண்டு அம்மைத் தழும்புகள்..
அதுவும் அழகாய்த்
தெரியும் வ்ண்ணம்
கையில்லாமல் ரவிக்கோ என்ன பெயரோ
அதில் வருவாள்
அக்காவின் நண்பி
கம்லா நாக்ராஜ்ராவ்...

வேலை சேர்ந்த புதிது
அன்னிய தேசம்
அக்காவின் வீட்டில் ஜாகை..
பெண்களைப் பார்க்காத கண்கள்...

இருந்தும்
வீட்டுக்கு வரும் அவர் மேல்
சின்னதாய் ஈரவிழிப் பார்வைகள்
படியும்...

நல்ல பிள்ளை எனக்
காட்ட
ஏன்க்கா ஏன் இது இப்படி வருது
எனக் கேட்பேன் மதுரை பாஷையில்..

ஒன்ன யாரு பாக்கச் சொன்னா
அவ்ளுக்கு ரெண்டு குழந்தை
இருக்காக்கும்
படவா ஒழுங்கா இரு
திட்டிய ப்டியே செல்வாள் அக்கா...

இருந்தாலும் கைகள்..
கொழுக் மொழுக்கென
வ்ரம்பு மீறாமல்
பார்ப்பதில் கொஞ்சம் மகிழ்ச்சிதான்..

பழைய உவமையான
வாழ்க்கைச் சக்கரம் சுழன்று
எனக்கானவள் வந்த போது
அவ்ளிடமும் சொல்லிவிட்டேன்...
எனில்
நான்
ப்ளாஸ்டிக் ஃபோல்டர் போல
தூய்மையானவன் எனத் தெரிவதற்காக..
(ஏய்..கள்ளா..)

மறுபடியும் காலம் கடமையைச் செய்ய
இருபதாவது திருமண ஆண்டு இப்போது...

முந்தா நாள் வந்தாள் ஒரு பெண்..
சின்னவள்..முகம் கறுத்திருந்தாலும்
சிவ்ந்தவள்...

என் மனைவியின் மாணவி...
அதே
கைகளை மறைப்பதை
மறுதலித்த உடை...
ஜாடையாய் நோக்குகையில்
கொஞ்ச்ம்
தேக்கு மரம் நினைவில் வந்தாலும்...
அதுவும் அழகு தான்...

வழக்கம் போல்
மனைவியிடம்
பாவ மன்னிப்பா..கண்காட்சிக்கு நன்றி நவிலலா
எனத்தெரியாமல்
கொஞ்சம் கடுகு மிளகு உளுத்தம் பருப்பு சேர்த்து
அப்பாவியாய்
ஏன் இது இப்படி டிரஸ் பண்ணிக்குது
எனச் சொன்ன போது
என்னவள் ஒரே ஒரு பார்வை...

பின் சொன்னாள்...
எந்த வயதானாலும்
ஆண்க்ள் ஆண்க்ள்தான்..

pavalamani pragasam
11th January 2012, 10:35 AM
ஆண்கள்தான் இங்கு ஆழ் உறக்கத்தில்
சுற்றும் பூமியில் எத்தனை சுழற்சிகள்
ஆயின் இவரோ கிணற்றுத்தவளைகள்
காண்பது மிடுக்கான மிராசுக் கனவுகள்
வீசுவது அதே ஆபாச வசவு வார்த்தைகள்
அரதப்பழசான அந்த ஆணாதிக்க ஆயுதங்கள்
அவையோ இன்று வெறும் அட்டைக்கத்திகள்
எப்பவோ தொலைந்தன தொழுவத்து மாடுகள்

chinnakkannan
11th January 2012, 02:42 PM
மாடுகள் தான்
எனக்குப் புகழைத் தந்தன..

பேச்சி பேச்சி எனப் பாடியே
மாடுகளையும்
மனிதர்களையும்
மயக்கியது ஒரு காலம்...

மக்கள்
என் பாட்டை ரசித்து
உயரத்தில் வைத்தார்கள்..

வண்ணமயமான அந்தக் காலத்தில்
கண்ணைப் பறிக்கும் வண்ணச் சட்டைகள்
அணிந்து பயமுறுத்தி விட்டேன் போலும்..

படக்கென
இறக்கியும் விட்டார்கள்..

காரணத்தைத் தேடியதில்
வயது கூடியது தான் மிச்சம்..

அரசியலில் சேர்ந்தால்
பிழைக்கலாம் என
சேர்ந்தேன்..
பின் தான் புரிந்தது
கைக்குழந்தையான நான்
பெரிதெற்கெல்லாம்
ஆசைப்படக் கூடாதென..

இப்போது யோசித்தால்
மெலிதாகத் தெரிகிறது.
எனக்கு
திரைப்படத்திலும்
வாழ்விலும்
வ்ராது நடிப்பு

pavalamani pragasam
11th January 2012, 08:15 PM
நடிப்பு அத்தனையும் நடிப்பு
மகனிடம் பசப்புறா மாமியா
மண்டூகமாய் நம்பும் மனுஷன்
மாட்டிக்கிட்டு முழிக்கிறா பாவி
முக்காக் கிழவிக்கு யோகமில்ல
முடிஞ்சிக்க முடியல முந்தானியில

chinnakkannan
11th January 2012, 08:25 PM
முந்தானியை
ஒருகை இறுக்கிப் பிடித்திருக்க
ஒருகை என்னவளைச்
சுற்றிப்போட்டிருக்க
ஒரு கால் மட்டும் போட்டு
கண்ணை இறுக்கி மூடித்
தூங்கும் மகளைப்பார்த்து
என்னவளை எழுப்பமுடியாது என்ற
இயலாமையால் சற்றே கோபம் வந்தாலும்
மகளின் தலையை வ்ருடி
அந்தப் பக்கம் படுத்தால்
பச்ச்சென்று கன்னத்தில் முத்தம்
குட் நைட் டாடி
திரும்பிப் பார்த்தால் ஆழ்ந்த உறக்கம்..
புன்முறுவலுடன் என் குட்டியைப்
பார்த்தபடியே இருந்ததில்
போன இடம் தெரியவில்லை என் நித்திரை...