PDA

View Full Version : Mokkai CWG Jokes



MumbaiRamki
6th October 2010, 10:35 PM
I know , this is bit late ,, but CWG itself was a joke , despite the fact that it has started successfully


1) ஒட்டப்பந்தய அறிவிப்பாளர்: ' ஒடுகளம் அருகே வேலை நடந்து கொண்டு இருப்பதால், போட்டியாளர்கள் மெதுவாக ஓடும் படி கேட்டு கொள்ளப்படுகின்றனர்'.

2) ஒருவர் : 'தன்னோட மெத்தைல ஏதோ ஒரு நாய் படுத்திருந்தும் அந்த விளையாட்டு வீரருக்கு ஏன் கோபம் வரல' ?

மற்றொருவர் :'தினமும் யாராவது வந்து படுப்பாங்களாம். நேத்திக்கி நாய் , அவ்வளவு தான்'.

3) அமைச்சர் : "யோவ், நம்ம விளையாட்டு அரங்கம் கொஞ்சம் அப்படி, இப்படி தான் இருக்கு. அதுக்குன்னு, வரவங்களுக்கு,இலவசமா எல்.ஐ.ஸி பாலிஸி தருவோம்ன்னு அறிவிப்பு பண்றது கொஞ்சம் ஒவர்!!

4) அறிவிப்பு : 'தில்லி அருகே ஒடும் யமுனா நதியில், வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவதால், எல்லா விளையாட்டு பந்தயங்களையும் கென்சல் செய்து விட்டு , படகு போட்டி வைக்கலாமென்று முடிவு செய்துள்ளோம். '

5) அமைச்சர் : ' தங்கும் அறைகள் சுகாதாரமாக இல்லையென்று குறை கூறுகின்றனர். இந்தியா ஒரு ஏழை நாடு. நம்ம ஏழைகள் குடிசைகளில் அவதி படும் போது , அயல் நாட்டவர்களுக்கு மட்டும் வசதியான அறைகள் கட்ட மனசு வரவில்லை'

6) அறிவிப்பு : ' இன்று பாப்ர் மசுதி தீர்ப்பு வருவதால் , போட்டிகளை சீக்கிரமாக முடிக்க உத்தரவு வந்துள்ளது. நூறு மீட்டர் போட்டி, ஐம்பது மீட்டர் போட்டியாக மாற்றபட்டுளது. உயரம் தாண்டுதல் போட்டியில், மிகவும் உயரமான கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு பரிசு அறிவிக்க படும்'

7) ஒருவர் :' ஆமா, நீச்சல் போட்டியில் பங்கேற்க்கும் முன்பு ஏதோ ஒண்ண கையிலயும் கால்லையும் தடிவிக்கிறாஙளே, ஏதாவது போதை மருந்தா?'

மற்றொருவர் : 'மண்ணாங்கட்டி, நீச்சல் குளத்தில் கொசு தொல்லை தாங்க முடியல . அதனால 'ஒடொமாஸ்' உடம்பில தடவிக்கிறாங்க'

8)அறிவிப்பாளர்: ' விளையாட்டு அரங்கின் ஒரு பகுதி இடிந்து விட்டது. இடிந்த பகுதி,மக்கள் உட்காரும் பகுதி தான் யென்பதால், விளையாட்டு வீரர்கள் பயப்படாமல் , விளையாட்டில் இடுபடும்படி கேட்டு கொண்டுள்ளனர்.'

9) ஒருவர் : 'எனது லட்சியம் நிறைவேறும் வரை ஒயமாட்டேன்னு நம்ம விளையாட்டு அமைச்சர் சொல்லியிருக்காறே?'

மற்றொருவர் :'நீ ஒண்ணு .. லட்சம் கோடி சுருட்டரவர ஓய மாட்டாரு !'

10) ஒருவர் : ' நம்ம ரஹ்மான் போட்ட பாட்டு நல்லா இல்லன்னு நம்ம விளையாட்டு அமைச்சகத்த சேர்ந்தவங்க சொல்றாங்க ?'

மற்றொருவர் : 'அவராவது அந்த பாட்ட முழுசா முடிச்சாரு , இவங்க , ஒரு கக்குஸ கூட சரியா முடிக்கல'

pavalamani pragasam
6th October 2010, 11:19 PM
:rotfl:

MumbaiRamki
7th October 2010, 06:16 PM
Enna PP mam , romba naala aaLa kanOm ?

pavalamani pragasam
7th October 2010, 07:44 PM
nallaarukku! naan ingayEthaan irukkEn, ungaLaththaan kaaNOm! :lol:

hari18
13th October 2010, 09:21 AM
:lol: :rotfl3:

Sarna
13th October 2010, 02:38 PM
'அவராவது அந்த பாட்ட முழுசா முடிச்சாரு , இவங்க , ஒரு கக்குஸ கூட சரியா முடிக்கல'

highlight :rotfl3: