PDA

View Full Version : silEdai (i.e. dupple meening)



app_engine
28th August 2010, 12:07 AM
பல மொழிகளிலும் உள்ள வேடிக்கை தான் இது. சிலேடைப்புலவர் என்ற அடைமொழியுடனெல்லாம் தமிழில் திறமைசாலிகள் இருந்திருக்கிறார்கள்.

இந்த இழையில் அம்மாதிரியானவற்றை - சும்மா தொகுப்பதோடு நிறுத்தாமல் - தொடர்புள்ள பாடல்கள், கதைகள், சிரிப்புகள் என்று - உயிரோட்டத்துடன் கொண்டு செல்லலாமே?

app_engine
28th August 2010, 12:18 AM
காலில் இருந்து தொடங்குவோம் - ரெண்டு அர்த்தமுள்ள சொல் இது.

கால் - மிருக / மனித உடல் பாகம் (கட்டில் மாதிரிப்பொருட்களுக்கும் உள்ளது தான்)

கால் - குவார்ட்டர் - நாலில் ஒரு பங்கு

"பூனைக்காறு கால், புள்ளினத்துக்கொம்பது கால்" என்று ஒரு வாய்வழி விடுகதை சிறுவயதில் கேட்டிருக்கிறேன். அது இந்த இருபொருள் கொண்டுள்ள விளையாட்டு தான்.

பூனைக்கு என்று எழுதியிருக்கிறென் - சொல்லும்போது, பூநக்கி என்று தான் சொல்லுவார்கள் - அதாவது வண்டு, அதற்கு ஆறு கால் தானே?

பறவைக்கெப்படி 9 கால்? இங்கு குவார்ட்டர் வரும் - 9 கால் (9*1/4) = 2 1/4, அதாவது ரெண்டே கால் - ரெண்டே ரெண்டு கால் தான் என்று பொருள் :-)

Punnaimaran
30th August 2010, 01:49 PM
சட்டென நினைவுக்கு வரும் தமிழ்த் திரைபாடல் அத்திக்காய் காய் காய் ....

Sudhaama
30th August 2010, 07:05 PM
.


ஆகா.! அரும் சுவையான நல்லிழை.!


-- வரவேற்கிறேன். ! பாராட்டுகிறேன்.!!

--மிக்க நன்றி app.

--- தொடர்க.!!!


அன்புடன் ... சுதாமா.

.