PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 9



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16 17

Subramaniam Ramajayam
17th December 2011, 01:22 AM
ஒரு சில நாட்கள் வெளியூர் பயணம் காரணமாக நமது ஹப்பில் பங்கேற்கவில்லை. அதற்குள் மாற்றங்கள்... நீண்ட திரியினை அமைப்பில் மாறுபடுத்தி வெளியிட்ட மாடரேட்டர் அவர்களுக்கு பாராட்டுக்கள். முரளி, பார்த்தசாரதி, வாசுதேவன், கார்த்திக், ராமஜெயம், சந்திரசேகர், பம்மலார் உள்ளிட்ட அனைவரும் அட்டகாசமாக கருத்துக்களையும் ஆவணங்களையும் பகிர்ந்து கொண்டு உலகம் போற்றும் உத்தமனின் புகழ் பாடி பரவசப் படுத்தி வருகின்றனர்.

கார்த்திக் சொன்னது போல் ஜஸ்டிஸ் கோபிநாத் லிபர்டியில் வெளியிடப் படுவது கடைசி நேரத்தில் தான் வெளியானது. அந்தக் காலத்தில் எதேச்சையாக அதே சமயம் பிடிவாதமாக இப்படத்தின் விளம்பரங்களை கத்தரித்து ஒரு நோட்டில் ஒட்டி வைத்து பாதுகாத்து வந்தேன். குறிப்பாக லிபர்டி திரையரங்கம் சேர்க்கப் பட்ட விளம்பரம் மட்டும் கிடைத்த பத்திரிகைகளிலிருந்து எடுத்து வைத்தேன். அதனுடைய மகத்துவம் இப்போது....

அந்த விளம்பரங்களை பார்க்கும் போது கார்த்திக் சொன்னவற்றை நீங்கள் புரிந்து கொள்ளலாம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/JGAd01fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/JGAd02fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/JGAd03fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/JGAd04fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/JGAd05fw.jpg

இதில் லிபர்டி திரையரங்கின் பெயர் மட்டும் தனித்து தெரிவதையும், முதலில் இடம் பெற்றிருந்த கிரௌன் திரையரங்கின் பெயர் எடுக்கப் பட்டு கிருஷ்ணா திரையரங்கின் பெயர் சேர்க்கப் பட்டதையும் அதனையும் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்ததையும் பார்க்கலாம்.

அது மட்டுல்ல, ரவிராஜ் பிக்சர்ஸ் மற்றும் செஞ்சுரி பிலிம்ஸ் என்கிற பெயர்களில் படம் வெளியிடப் பட்டிருப்பதையும் அறிந்து கொள்ளலாம்.

அன்புடன்
dear raghavendran,
A very rare ollection you have made, IDU MADUIRI RASIGAGAL VERU YARUKKANUM IRUPPARGALA,
CERTAINLY NOT. ALL CREDTS TO NADIGAR THILAGAM

RAGHAVENDRA
17th December 2011, 06:17 AM
டியர் கார்த்திக்,
ஜஸ்டிஸ் கோபிநாத் திரையரங்க வெளியீடு பற்றிய நினைவுகள் பலருக்கு புதிய செய்தியாய் இருக்கக் கூடும். தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

டியர் வாசுதேவன்
வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களின் பேட்டி சுவாரஸ்யமாய் இருந்தது. நடுவில் அவர் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கும் போது என்ன காரணத்தாலோ பாதியிலேயே வெளியேறியது நெருடலாக இருந்தாலும் பின்னர் வேறொரு கால கட்டத்தில் அதை எண்ணி வருத்தப் பட்டிருக்கிறார். இருந்தாலும் ஒரு நல்ல நடிகை என்பதை மறுக்க முடியாது.

டியர் ராமஜெயம் சார்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

வேறோர் இணைய தளத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பில் உளவியல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் உள்ள சிறப்புகளை நண்பர் ஒருவர் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறார். அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்து அதனை இங்கே தர விரும்புகிறேன்.




மருத்துவப் படிப்பில் .....

மன நோயில் இரண்டு

வகைகள் உண்டு !

அவை : SPHYCHOSIS

AND

NEUROSIS.

இவைகளில் முதலில் எழுதிய வகை

எளிதல் குணப்படுத்துக்கூடியவை!

இரண்டாவது குணப்படுத்த சற்று

கடினம் அல்லது முடியாது !

இதில் முதலில் வரும் SPHYCOSIS

வகையில் வருவதுதான் : DEPRESSION !

இந்த மனத்தளர்ச்சி எளிதில்

குணப்படுத்தக்குடியது !

.....

FAMILY PHYSICIAN

கூட நிறைய பேர்களை குணப்படுத்தி

யிருக்கிறார்கள்!

அடியேனிடம் நிறைய " மனத்தளர்ச்சி" நோயாளிகள்

வருவதுண்டு ! அவர்களை " பேசியே" அதாவது

SPHYCOTHERAPY

யைப் பயன்படுத்தி குணப்படுத்தியும் உள்ளேன் !
.....
NEUROSIS.

...nostalgic thoughts

வகை இந்த இரண்டு பிரிவுகளில் வரவே

இல்லை என்பது உறுதி !

.... " நினைப்பு" !

வியாதி அல்ல !



nostalgic thoughts



க்கும்

DEPRESSION

இதற்குள் என்ன வித்தியாசம் !

இனி சினிமாப் பாடல் !

படம் :

"உயர்ந்த மனிதன் "

பாடல் :

" அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே "


பணக்கார சிவாஜி கணேசன் தன் பள்ளி

மாணவனும் பின் தன் காரோட்டியான

" மேஜர்" சுந்தர்ராஜனின் தோளில் கை

போட்டு , ஒரு சிறிய கைத்தடியுடன்,

கொடைக்கானல் " கால்ப்" மைதானத்தில்

நடமாடிக்கொண்டே பாடியே

தன் பள்ளி - இளமைப்

பருவத்தை அசை போட்டுப் பாடுவது......

nostalgic thoughts தானே !

ஆனால் அதே பாட்டில் , கடைசியில் அவர்

என்ன பாடி வருந்துகிறார்!


" பாசமென்றும் , நேசமென்றும்

வீடு என்றும் மனைவி என்றும் ,

நூறு சொந்தம் வந்த பின்பும்

தேடுகின்ற அமைதி எங்கே- அமைதி எங்கே?"

என்று அவர் துயரத்துடன் பாடுவது :

DEPRESSION

அல்லவா !

போதாக்குறைக்கு மெல்லிசை மன்னரின் துயரை சுட்டிக்காட்டும் வயலின் இசை !

அது மட்டுமா !

கடைசியில் பாடும் வரிகளை

பாருங்கள் :

" எண்ணமே சுமைகளாய், இதயமே

பாரமாய்,

தவறுகள் செய்பவன் எவனுமே அழுகிறான் ! "

என்று சொல்லும் இட்த்தில் நடிகர் திலகம்

மரத்தின் அருகே சென்று யாருக்கும் தெரி

யாமல் அழுவதைப் பாருங்கள் !

" உயர்ந்த மனிதன் " அல்லவா! அவர் அழுவதை

யாரேனும் பார்த்துவிட்டால் !

இதுவும்

DEPRESSION தானே கோபால் சார் !

ஆக, ஒரே பாடலில்

nostalgic thoughts உம் DEPRESSION

வருவதும் ஆக இருக்கும் இந்த பாடல்

ஒரு மிக உயர்ந்த பாடல்தானே !

நடிகர் திலகத்தின் படங்கள்

எதெற்கெல்லாம் பயன்படுகிறது

பார்த்தீர்களா !


இனி...

C . M. E . PROGRAMME

( CONTINUENIG MEDICAL EDUCATION PROGRAMME )


கூட அந்த காலத் தமிழ்த் திரைப் படங்களைப்

பயன்படுத்தலாம் போல !
....

vasudevan31355
17th December 2011, 01:43 PM
அன்பு ராகவேந்திரன் சார்,

தங்கள் அன்பிற்கும், பாராட்டிற்கும் என் பணிவான நன்றிகள்.

அரிய பொக்கிஷமான ஜஸ்டிஸ் கோபிநாத் ஆவணங்கள் தங்கள் கைவண்ணத்தில் பதிவானது அருமை. அதற்காக என் அளவிடற்கரிய நன்றிகள்.

வேறோர் இணைய தளத்தில் நண்பர் ஒருவர் வழங்கிய மருத்துவ ரீதியான விளக்கங்களை நம் நடிகர்திலகத்தின் பாடல் மூலம் வழங்கி அனைவரையும் குதூகலிக்கச் செய்தார் என்றால் அதை நமது திரியில் பதிவிட்டு நீங்கள் எங்களைத் திக்கு முக்காடச் செய்து விட்டீர்கள். இருவருக்கும் எங்கள் மனப்பூர்வமான நன்றிகள். நம் நடிகர் திலகம் எங்கெல்லாம் எதெற்கெல்லாம் உதவுகிறார் பாருங்கள்! நல் இதயம் கொண்ட நாயகரல்லவா அவர்!

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
17th December 2011, 01:45 PM
அன்பு கார்த்திக் சார்,

தங்கள் மகத்தான பாராட்டுக்கு மனப்பூர்வமான நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
17th December 2011, 01:49 PM
அன்பு ராகவேந்திரன் சார், கார்த்திக் சார், பம்மலார் சார், முரளி சார் மற்றும் சாரதா மேடம்,

தங்கள் அனைவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள். நேரம் கிடைக்கும் போது முடிந்தால் "கலைநிலவு" ரவிச்சந்திரன் அவர்களுக்கான திரியைப் பார்க்கவும். சிரமத்திற்கு பொறுத்துக் கொள்ளவும. நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
17th December 2011, 09:11 PM
மார்கழி மாத பிறப்பான இன்று [17.12.2011], ஆண்டாள் அருளிய 'திருப்பாவை' பாசுரங்களை, செந்தாமரை(1962) திரைக்காவியப் பாடலின் காணொளி மூலமாக கண்டு, கேட்டு மகிழுங்கள்:


http://www.youtube.com/watch?v=t-BlQubHy_4

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
17th December 2011, 09:41 PM
டியர் வாசுதேவன் சார்,

"நமது திரியும் எங்கள் வாசுதேவனும்" போல் தங்கள் "பாட்டும் பரதமும்" பதிவுகள் பசுமை !

'ஜமீன்தார் சிவலிங்கம்', "ஜஸ்டிஸ் கோபிநாத்" : குறுந்தாடி கம்பேரிஸன் Class !

நமது நடிகர் திலகம் பற்றி 'வெண்ணிற ஆடை' நிர்மலா, 'பிலிம் நியூஸ்' ஆனந்தன் ஆகியோர் கூறிய கருத்துக்கள் அசத்தல் !

தங்களின் பரமானந்தமான பாராட்டுதல்களுக்கு எனது பாசமிகு நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th December 2011, 10:11 PM
டியர் mr_karthik,

தங்களின் பாங்கான பாராட்டுக்கு எனது ஸ்ட்ராங்கான நன்றிகள் !

"ஜஸ்டிஸ் கோபிநாத்" மலரும் நினைவுகள் மிக அருமை ! 16.12.1978 சனிக்கிழமையன்று காலைப்பொழுதில் 'லிபர்ட்டி' வாயிலில் நடந்த நிகழ்வுகளை தாங்கள் எழுதியிருந்தவிதம் சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் செய்துவிட்டது. அட்டகாசப் பதிவை அளித்த தங்களுக்கும், அதற்கு நல்லதொரு தொடர்ச்சியாக மேலதிக விவரங்களை வழங்கிய வாசு சாருக்கும், தங்களின் இப்பதிவுக்கு வலுவூட்டும் வகையில் விளம்பர ஆவணங்களை அள்ளி அளித்த ராகவேந்திரன் சாருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
18th December 2011, 05:14 AM
Demi-God's December Delicacies

நீதி

[7.12.1972 - 7.12.2011] : 40வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி(மதுரை) : 7.12.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Needhi1-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : பிலிமாலயா[பொங்கல் மலர்] : ஜனவரி 1973
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5273-1.jpg


பின் அட்டை விளம்பரம் : பேசும் படம் : ஜனவரி 1973
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Needhi2-1.jpg


காவிய விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5274-1.jpg


ரசிகர் மன்ற குறும்பிரசுரம்(Notice)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Needhi3-1.jpg


'சென்னை 'தேவிபாரடைஸ்' அரங்கில் 100 CHF' விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Needhi4-1.jpg


காவிய விமர்சனம் : குமுதம் :1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Needhi5-1.jpg

குறிப்பு:
1. சிறந்த வெற்றிக்காவியமான "நீதி" 99 நாட்கள் ஓடிய அரங்குகள்:
அ. சென்னை - தேவிபாரடைஸ்
ஆ. சேலம் - சங்கம்

2. "நீதி", சென்னை 'தேவிபாரடைஸ்' திரையரங்கில் மொத்தம் 107 தொடர் கொட்டகை நிறைந்த காட்சிகள் / Continuous House Full shows(CHF).

3. இக்காவியத்தின் 50வது நாள் மற்றும் இதர சாதனை விளம்பரங்கள் கிடைத்தவுடன் இங்கே இடுகை செய்கிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

J.Radhakrishnan
18th December 2011, 10:41 AM
டியர் பம்மலார் சார்,

நீதி திரைப்பட விளம்பரம், ரசிகர் மன்ற குறும்பிரசுரம் மற்றும் குமுதம் விமர்சனம் அசத்தல்!

தொடரட்டும் தங்கள் திருப்பணி!

mr_karthik
18th December 2011, 05:14 PM
அன்புள்ள பம்மலார் சார்,

தங்களின் பாராட்டுக்கு முதல் நன்றி.

'நீதி' திரைக்காவியத்தின் ஆவணப்பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை. அன்றைய காலகட்டத்தை நினைவில் நிறுத்தியது. 50-வது நாள் விளம்பரம் கிடைத்ததும் பதிவிடுவதாக வந்த உங்கள் அறிவிப்பு உள்ளத்தில் உவகை பொங்கச்செய்கிறது.

சென்னை தினத்தந்தியில் தேவி பாரடைஸில் 'நீதி' படத்தின் 99-வது நாள் விளம்பரம் கூட வெளியாகியிருந்தது. அத்துடன் தேவி பாரடைஸ் தியேட்டரில் இப்படத்தின் 99-வது நாள் ஷீல்டும் உள்ளது.

தங்களின் காவியப்பதிவுக்கு கணக்கிலடங்கா நன்றிகள்.

// "ஜஸ்டிஸ் கோபிநாத்" மலரும் நினைவுகள் மிக அருமை ! 16.12.1978 சனிக்கிழமையன்று காலைப்பொழுதில் 'லிபர்ட்டி' வாயிலில் நடந்த நிகழ்வுகளை தாங்கள் எழுதியிருந்தவிதம் சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் செய்துவிட்டது. //

பம்மலார் சார், இந்த் வேடிக்கை நடந்தது படம் வெளியான அன்று அல்ல. அதற்கு நான்கு நாட்களுக்கு முன் ரிசர்வேஷன் துவங்கியபோது நடந்தது.

NOV
18th December 2011, 07:55 PM
Moving of earlier discussions smoothly completed.
1st page has also been updated with original post from Joe.
Can RAGHAVENDRA update to include the remaining parts (which can be found in Tamil Classics section)?

Thanks.

pammalar
18th December 2011, 08:16 PM
Moving of earlier discussions smoothly completed.
1st page has also been updated with original post from Joe.
Can RAGHAVENDRA update to include the remaining parts (which can be found in Tamil Classics section)?

Thanks.

Dear Mr.NOV,

Thank you so much !

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
18th December 2011, 08:19 PM
டியர் பம்மலார் சார்,

நீதி திரைப்பட விளம்பரம், ரசிகர் மன்ற குறும்பிரசுரம் மற்றும் குமுதம் விமர்சனம் அசத்தல்!

தொடரட்டும் தங்கள் திருப்பணி!

டியர் ஜேயார் சார்,

தங்களின் மனமுவந்த பாராட்டுதல்களுக்கு எனது மகிழ்வான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
18th December 2011, 08:35 PM
அன்புள்ள பம்மலார் சார்,

தங்களின் பாராட்டுக்கு முதல் நன்றி.

'நீதி' திரைக்காவியத்தின் ஆவணப்பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை. அன்றைய காலகட்டத்தை நினைவில் நிறுத்தியது. 50-வது நாள் விளம்பரம் கிடைத்ததும் பதிவிடுவதாக வந்த உங்கள் அறிவிப்பு உள்ளத்தில் உவகை பொங்கச்செய்கிறது.

சென்னை தினத்தந்தியில் தேவி பாரடைஸில் 'நீதி' படத்தின் 99-வது நாள் விளம்பரம் கூட வெளியாகியிருந்தது. அத்துடன் தேவி பாரடைஸ் தியேட்டரில் இப்படத்தின் 99-வது நாள் ஷீல்டும் உள்ளது.

தங்களின் காவியப்பதிவுக்கு கணக்கிலடங்கா நன்றிகள்.

// "ஜஸ்டிஸ் கோபிநாத்" மலரும் நினைவுகள் மிக அருமை ! 16.12.1978 சனிக்கிழமையன்று காலைப்பொழுதில் 'லிபர்ட்டி' வாயிலில் நடந்த நிகழ்வுகளை தாங்கள் எழுதியிருந்தவிதம் சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் செய்துவிட்டது. //

பம்மலார் சார், இந்த் வேடிக்கை நடந்தது படம் வெளியான அன்று அல்ல. அதற்கு நான்கு நாட்களுக்கு முன் ரிசர்வேஷன் துவங்கியபோது நடந்தது.

டியர் mr_karthik,

'லிபர்ட்டி மேட்டர்' பற்றி தாங்கள் சரியாகத்தான் எழுதியுள்ளீர்கள், நான்தான் மாறுதலாகப் புரிந்துகொண்டுவிட்டேன்.

தங்களின் பாராட்டுக்களுக்கும், மேலதிக விவரங்களுக்கும் மேன்மையான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
18th December 2011, 09:00 PM
ஏ பொண்ணு... வா இந்தப் பக்கம்...

வந்தேன்...

இது என்னா சொல்லு...

இது ஆவணச் செம்மலின் சூப்பர் நீதி ஆவணம்...

மேல என்னா இருக்கு சொல்லு...

தினமணி ரிலீஸ் கட்டிங் படு சூப்பரு...

அப்புறம் சொல்லு...

பிலிமாலயா விளம்பரம் இன்னும் சூப்பரு...

ம் ...இன்னும் சொல்லு...

பேசும்பட அட்டையில நம்ம தலைவரு நிக்கற ஸ்டைலு செம டக்கரு...

அடுத்ததா சீக்கிரம் சொல்லு...

காவிய விளம்பரம் செவப்புக் கலரு கலக்கலு...

வேற ஏதாவது இருக்கா...

ரசிகர் மன்ற நோட்டீசு ரகளைக்கு இருக்கு... மெட்ராசு தேவிபாரடைசு தியேட்டரு 100 ஹவுஸ்புல்லு காட்சி விளம்பரம் ஜோராக்கீது...அது இல்லாம குமுதம் விமர்சனம் கும்முன்னு இருக்கு... நீதி சாகசம் பண்ணின வெவரமும் இருக்கு...

பாருங்கோய்யா... இந்த ஆவணமெல்லாம் இன்னா பண்ணும்?...

ஒலகம் பூரா பரவி நம்ம தலைவரின் பொகழப் பரப்பும்...

ஏ பொண்ணு...இதுக்குக் காரணம் யாரு?

நம்ம ஆவணத் திலகம் பம்மலாரு...

இன்னா ஜோரா நம்ம பம்மலாரு நீதி பதிவு போட்டு பட்டையை கெளப்பியிருக்காரு...எல்லாம் ஜோரா ஒருமுறை நல்லா கைதட்டுங்கோ...

அன்புடன்,
வாசுதேவன்.

Jeev
18th December 2011, 09:08 PM
Dear Fans,

A super scene from Paritchaikku Neramachu (Sivaji & YGM)

http://www.youtube.com/watch?v=BPsRQnqMc64

Enjoy.

Regards,

Jeev

RAGHAVENDRA
18th December 2011, 09:28 PM
Moving of earlier discussions smoothly completed.
1st page has also been updated with original post from Joe.
Can RAGHAVENDRA update to include the remaining parts (which can be found in Tamil Classics section)?

Thanks.

Dear Sir,
Can you instruct me how to do this?

Can we rearrange the first post with the greetings for Pammalar from Murali Srinivas?

KCSHEKAR
18th December 2011, 10:28 PM
டியர் பம்மலார், பாட்டும் பரதமும் விளம்பரங்கள், ஆனந்த விகடன் விமர்சனம் மற்றும் நீதி விளம்பரம், குமுதம் விமர்சனம் அருமை.

மார்கழி மாதப் பிறப்பிற்குக் கூட பொருத்தமான நடிகர்திலகத்தின் பாசுரப் பாடலைப் பதிவு செய்திருக்கும் தங்களின் ரசனைக்கும், முயற்சிக்கும் சபாஷ்.

KCSHEKAR
18th December 2011, 10:35 PM
டியர் வாசுதேவன் சார், பாட்டும் பரதமும், ஜஸ்டிஸ் கோபிநாத் நிழற்படங்கள் மற்றும் பாடல் காட்சி இணைப்புகள் அருமை.

வெண்ணிற ஆடை நிர்மலா, பிலிம் நியூஸ் ஆனந்தன் பேட்டிகள் சிறப்பு.

பம்மலாரின் பதிவுகளுக்கு, கேள்வி-பதில் பாணியில் தாங்கள் தெரிவித்திருக்கும் பாராட்டு மிகவும் பொருத்தம் / ரசிக்கும்படி இருந்தது.

KCSHEKAR
18th December 2011, 10:38 PM
டியர் ராகவேந்திரன் சார், தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த ஜஸ்டிஸ் கோபிநாத் விளம்பரங்கள் உண்மையிலேயே அதற்குத் தகுதியான பொக்கிஷம்தான் - நன்றி.

KCSHEKAR
18th December 2011, 10:42 PM
டியர் கார்த்திக் சார், தங்களின் ஜஸ்டிஸ் கோபிநாத் அனுபவங்கள் அருமை. விமர்சனமாக இருந்தாலும், அனுபவப் பதிவாக இருந்தாலும், ஏன் பாராட்டுவதாக இருந்தாலும்கூட அதனை ரசிக்கத்தக்க வகையில் பதிவிடும் தங்களை இதயப்பூர்வமாகப் பாராட்டுகிறேன். நன்றி.

pammalar
19th December 2011, 12:19 AM
அன்புள்ள பம்மலார் சார்,

'நீதி' திரைக்காவியத்தின் ஆவணப்பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை. அன்றைய காலகட்டத்தை நினைவில் நிறுத்தியது. 50-வது நாள் விளம்பரம் கிடைத்ததும் பதிவிடுவதாக வந்த உங்கள் அறிவிப்பு உள்ளத்தில் உவகை பொங்கச்செய்கிறது.

சென்னை தினத்தந்தியில் தேவி பாரடைஸில் 'நீதி' படத்தின் 99-வது நாள் விளம்பரம் கூட வெளியாகியிருந்தது. அத்துடன் தேவி பாரடைஸ் தியேட்டரில் இப்படத்தின் 99-வது நாள் ஷீல்டும் உள்ளது.



டியர் mr_karthik,

எனது தொடர் தேடலில், நமது நடிகர் திலகத்தின் என்னென்ன ஆவணப்பொக்கிஷ விளம்பரங்கள், சாதனைச் செப்பேடுகள் கிடைக்கப்பெறுகின்றதோ அவை அனைத்துமே உடனுக்குடன் இங்கே நமது திரியில் இடுகை செய்யப்படும். ஜூலை 2011 முதல், நமது திரியில் நம் அனைவராலும் மிகமிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நமது நடிகர் திலகத்தின் ரிலீஸ் மேளாவில், இதுவரை என்னென்ன சாதனைப் பொன்னேடுகள், விளம்பரப் பொக்கிஷங்கள் அளிக்கப்பட்டுள்ளதோ அவை தவிர, அந்த சமயத்தில் இடுகை செய்யப்படாத (தற்பொழுது கிடைக்கப்பெற்றுள்ள இன்னும் சில) ஆவணப்பொக்கிஷங்கள், ஒவ்வொன்றாக இனி இங்கே வெளியிடப்படும்.

நமது நடிகர் திலகம் நடித்துள்ள 306 திரைக்காவியங்களில், அவருக்கு வெள்ளிவிழாக் கொண்டாடியவை 22 காவியங்கள். இதுகுறித்த விரிவான புள்ளிவிவரங்களை ஏற்கனவே நான், இத்திரியின் முந்தைய பாகங்களில் எழுதிய பதிவுகளில் வழங்கியுள்ளேன். இந்த 22 வெள்ளிவிழாக்காவியங்களில், 16 காவியங்களின் வெள்ளிவிழா விளம்பரங்கள் கைவசம் உள்ளன. இதுவரையில் இங்கே 7 காவியங்களின் [பாசமலர், திருவிளையாடல், வசந்த மாளிகை, பைலட் பிரேம்நாத், திரிசூலம், முதல் மரியாதை, தேவர் மகன்] வெள்ளிவிழா விளம்பரங்கள் அளிக்கப்பட்டுவிட்டன. மீதம் கைவசமுள்ள வெள்ளிவிழா விளம்பரங்களும், அதே சமயம் இனி கிடைக்கப் பெறுகின்ற வெள்ளிவிழா விளம்பரங்களும் அந்தந்த காவியங்களின் ரிலீஸ் மேளா மாதத்தில் அவசியம் வெளியிடப்படும். இதுதவிர, ஏனைய 100வது நாள் உள்ளிட்ட சாதனை விளம்பரங்களும் அந்தந்த சமயங்களில் பதிவிடப்படும்.

'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்பதே நமது தாரகமந்திரம் !

[இன்னும் கிடைக்க வேண்டிய அந்த ஆறு வெள்ளிவிழாக் காவிய விளம்பரங்கள் : பராசக்தி, பாகப்பிரிவினை, தர்த்தி(ஹிந்தி), தீர்ப்பு, நீதிபதி, ஸ்கூல் மாஸ்டர்(கன்னடம்)].

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th December 2011, 01:55 AM
ஏ பொண்ணு... வா இந்தப் பக்கம்...

வந்தேன்...

இது என்னா சொல்லு...

இது ஆவணச் செம்மலின் சூப்பர் நீதி ஆவணம்...

மேல என்னா இருக்கு சொல்லு...

தினமணி ரிலீஸ் கட்டிங் படு சூப்பரு...

அப்புறம் சொல்லு...

பிலிமாலயா விளம்பரம் இன்னும் சூப்பரு...

ம் ...இன்னும் சொல்லு...

பேசும்பட அட்டையில நம்ம தலைவரு நிக்கற ஸ்டைலு செம டக்கரு...

அடுத்ததா சீக்கிரம் சொல்லு...

காவிய விளம்பரம் செவப்புக் கலரு கலக்கலு...

வேற ஏதாவது இருக்கா...

ரசிகர் மன்ற நோட்டீசு ரகளைக்கு இருக்கு... மெட்ராசு தேவிபாரடைசு தியேட்டரு 100 ஹவுஸ்புல்லு காட்சி விளம்பரம் ஜோராக்கீது...அது இல்லாம குமுதம் விமர்சனம் கும்முன்னு இருக்கு... நீதி சாகசம் பண்ணின வெவரமும் இருக்கு...

பாருங்கோய்யா... இந்த ஆவணமெல்லாம் இன்னா பண்ணும்?...

ஒலகம் பூரா பரவி நம்ம தலைவரின் பொகழப் பரப்பும்...

ஏ பொண்ணு...இதுக்குக் காரணம் யாரு?

நம்ம ஆவணத் திலகம் பம்மலாரு...

இன்னா ஜோரா நம்ம பம்மலாரு நீதி பதிவு போட்டு பட்டையை கெளப்பியிருக்காரு...எல்லாம் ஜோரா ஒருமுறை நல்லா கைதட்டுங்கோ...

அன்புடன்,
வாசுதேவன்.

டியர் வாசுதேவன் சார்,

"நீதி" பதிவைப் பாராட்டும்முகமாக, தாங்கள் "நீதி" காவியத்தின் புளியமரக்காட்சி பாணியிலேயே பதிவை அளித்து பாராட்டியிருந்தது அப்படியே என்னை மெய்சிலிர்க்கச் செய்துவிட்டது. இரவில், [மோகினிப்பிசாசு இருக்கும்] புளியமரத்தடியில், அம்மரத்தை வெட்டுவதற்காக கையில் கோடாரியுடன் காத்திருக்கும் நமது நடிகர் திலகத்துடன், கலைச்செல்வி செல்லமாக அளவளாவும் அந்தக் காட்சியையும் தங்கள் பாராட்டுப்பதிவின்மூலம் கண்முன் நிறுத்திவிட்டீர்கள் !

என்னைத் திக்குமுக்காட வைக்கும் இதுபோன்ற பாராட்டுதல்களுக்கு, நான் எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் அவை, தாங்கள் வழங்கிய பாராட்டுக்களை விட குறைவாகத்தான் இருக்குமே ! எனினும், தங்களுக்கு எனது எண்ணிலடங்கா நன்றிகள் !

அன்பு கலந்த ஆனந்தக்கண்ணீருடன்,
உங்கள் பம்மலார்.

pammalar
19th December 2011, 02:19 AM
Dear Sir,
Can you instruct me how to do this?

Can we rearrange the first post with the greetings for Pammalar from Murali Srinivas?

Dear Raghavendran Sir,

My whole-hearted, sincere & innumerable thanks for your incomparable, magnanimous heart !

With lots & lots of love & affection,
Pammalar.

pammalar
19th December 2011, 02:28 AM
டியர் பம்மலார், பாட்டும் பரதமும் விளம்பரங்கள், ஆனந்த விகடன் விமர்சனம் மற்றும் நீதி விளம்பரம், குமுதம் விமர்சனம் அருமை.

மார்கழி மாதப் பிறப்பிற்குக் கூட பொருத்தமான நடிகர்திலகத்தின் பாசுரப் பாடலைப் பதிவு செய்திருக்கும் தங்களின் ரசனைக்கும், முயற்சிக்கும் சபாஷ்.

டியர் சந்திரசேகரன் சார்,

தங்களின் பாசமான பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th December 2011, 03:26 AM
Demi-God's December Delicacies

மனிதரில் மாணிக்கம்

[7.12.1973 - 7.12.2011] : 39வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 7.12.1973
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5277-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th December 2011, 04:02 AM
Demi-God's December Delicacies

வெற்றிக்கு ஒருவன்

[8.12.1979 - 8.12.2011] : 33வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி : 8.12.1979
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/VO-1.jpg


அட்டைப்படம் : பேசும் படம் : டிசம்பர் 1979
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/VO1-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th December 2011, 05:07 AM
Demi-God's December Delicacies

எதிர்பாராதது

[9.12.1954 - 9.12.2011] : 58வது ஆரம்பதினம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 6.12.1954
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/E1-1.jpg



முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/E2-1.jpg


51வது நாள் விளம்பரம் : The Hindu : 28.1.1955
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/E51-1.jpg


மிக அரிய நிழற்படம் : தமிழ் சினிமா : 15.12.1954
['தமிழ் சினிமா', மாதமிருமுறை வெளிவந்த சினிமா செய்தித்தாள்]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/E3-1.jpg

குறிப்பு:
சிறப்பான வெற்றியைப் பெற்ற "எதிர்பாராதது", திருச்சி 'ஸ்டார்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th December 2011, 05:12 AM
16.12.2011 வெள்ளி முதல், மதுரை 'ஸ்ரீமீனாக்ஷி' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளில், நமது சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்" வெற்றிநடைபோட்டு வருகிறது.

இனிய தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

NOV
19th December 2011, 06:57 AM
Can we rearrange the first post with the greetings for Pammalar from Murali Srinivas?Done!
Murali, please do the necessary. :)

vasudevan31355
19th December 2011, 08:02 AM
எதிர்பாராதது [9.12.1954 - 9.12.2011] 58வது வருட ஆரம்ப நாள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7-6.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-13.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-14.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-11.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-7.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-9.jpg

"சிற்பி செதுக்காத பொற்சிலையே"... காலத்தால் அழிக்க முடியாத இனிய காவியத்தின் இன்ப கானம். (வீடியோ வடிவில்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Opv1Gdu4MZQ

'எதிர்பாராதது' காவியத்தில் ஏ.எம்.ராஜா, ஜிக்கி இருவரின் மனதை உருக்கும் குரல்வளத்தில் உருவான அற்புதமான பாடலான "காதல் வாழ்வில் நானே... கனியாத காயாகிப் போனேன்" பாடல் மற்றும் இதர பாடல்களுக்கு லிங்க் கீழே.

http://www.inbaminge.com/t/e/Edhirpaarthadhu/

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
19th December 2011, 08:24 AM
Done!
Murali, please do the necessary. :)

THANK YOU SO MUCH, NOV SIR.
THIS IS THE BEST BIRTH DAY GIFT TO OUR ARCHIVE SUPER STAR PAMMALAR.

Thank you once again

vasudevan31355
19th December 2011, 08:58 AM
அன்பு பம்மலார் சார்,

கோடியில் ஒருவரின் 'வெற்றிக்கு ஒருவன்' மற்றும் 'எதிர்பாராதது' படங்களுக்காக தாங்கள் அளித்துள்ள ஆவணங்கள் நாங்கள் மேலும் உங்களிடமிருந்து இதுபோன்ற அற்புத ஆவணங்களை எதிர்பார்க்க வைக்கின்றன. நாங்கள் எதிர்பார்க்கும் அத்தனை ஆவணங்களையும் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் தாங்கள் அளித்து வருவது தங்களது தயாள குணத்தைக் காட்டுகிறது. அற்புத பதிவிற்கு அசுர நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
19th December 2011, 09:04 AM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்கள் உயரிய பாராட்டிற்கு உள்ளம் கனிந்த நன்றிகள். தங்கள் சபரிமலைப் பயணம் இனிதே நடந்து முடிந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
19th December 2011, 10:12 AM
பிற மொழிகளில் 'எதிர்பாராதது'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-12.jpg

அற்புதமான புதுமைப் படைப்பான ஸ்ரீதர் அவர்களின் 'எதிர்பாராதது' காவியம் மாபெரும் வெற்றி அடைந்ததோடல்லாமல் 'நித்யகன்யக' என்ற பெயரில் மலையாளத்தில் எடுக்கப்பட்டு 1963 இல் வெளியானது. நடிகர் திலகத்தின் பாத்திரத்தை சத்யனும், பத்மினியின் பாத்திரத்தை ராகினியும் (பத்மினியின் தங்கை), நாகையா அவர்களின் பாத்திரத்தை நடிகர் திலகத்தின் அருமை நண்பரான 'திக்குரிசி' சுகுமாரன் நாயர் அவர்களும் ஏற்று நடித்திருந்தனர்.

http://www.hindu.com/mp/2010/06/14/images/2010061451300401.jpg

தெலுங்கில் ‘Ilavelpu' என்ற பெயரில் வெளிவந்தது. பிரதான ரோல்களில் நாகேஸ்வரராவும், அஞ்சலி தேவியும் நடித்திருந்தார்கள். இயக்குனர் யோகானந்த் இயக்கியிருந்தார். 1956-இல் இப்படம் வெளிவந்தது.

'எதிர்பாராதது' இந்தியிலும் எடுக்கப்பட்டது. 'சாரதா' என்ற பெயரில் இயக்குனர் திரு.எல்.வி.பிரசாத் இயக்கத்தில் 1957-இல் வெளிவந்த இப்படத்தில் ராஜ்கபூரும், மீனாகுமாரியும் பிரதான வேடங்களில் நடித்திருந்தனர்.

http://img694.imageshack.us/img694/3820/sharda1957.jpg

மேற்கண்ட மொழிகளில் 'எதிர்பாராதது' எடுக்கப்பட்டு அத்தனை மொழிகளிலும் வெற்றிகண்டது குறிப்பிடத்தக்கது.

அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
19th December 2011, 01:27 PM
அன்புள்ள பம்மலார் சார்,

1954-ம் ஆண்டில் வெளியான 'எதிர்பாராதது' திரைப்பட பொக்கிஷப்பதிவுகள் அனைத்தும் அருமை. நீங்கள் பிறப்பதற்கு பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்த ஆவணங்களை நீங்கள் சேகரித்து வழங்குவதைப்பார்க்கும்போது, பண்டைய இலக்கிய நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்தவற்றைத் தேடித்தொகுத்து தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யர் அவர்களின் தொண்டே நினைவுக்கு வருகின்றது.

அவர் செய்தது தமிழன்னைக்குச்செய்த திருத்தொண்டு. நீங்கள் செய்து வருவது ஈடில்லா தமிழ்க்கலைஞன் நடிகர்திலகத்துக்கு செய்து வரும் திருத்தொண்டு. இரண்டிலுமே உயர்ந்து நிற்பது தியாகமும், சேவையுமே. உலகெங்கிலும் வாழும் நடிகர்திலகத்தின் ரசிகக்கண்மணிகள் மனம் மகிழ வேண்டுமென்பதற்காக தங்களை வருத்திக்கொண்டு நீங்கள் செய்து வரும் சேவைக்கு ஈடு இணையே இல்லை. அந்த வரிசையில் ஒரு மைல்கல் கல்தான் இந்த 'எதிர்பாராதது' விளம்பரப்பொக்கிஷங்களும், அபூர்வ நிழற்படமும்.

இயக்குனர் ஸ்ரீதரின் எழுத்தோவியத்தில் உருவான இவ்வரிய காவியம், பின்னர் பல்வேறு மொழிகளிலும் தயாராகி பெருவெற்றி கண்ட விவரங்களை நமது வாசுதேவன் சார் அருமையாக எடுத்தியம்பியுள்ளார்.

அப்போதைய நிகழ்வுகளை அறிய இத்தகைய ஆவணங்கள் எவ்வளவு பேருதவியாக இருக்கின்ற என்பதற்கு ஒரு உதாரணம், அதில் குறிப்பிடப்பட்டுள்ள திரையரங்குகளின் வரிசை. சென்னையில் மட்டும் 5 திரையரங்குகளின் வெளியானது மட்டுமல்ல, ஒரே ஏரியாவிலுள்ள இரண்டிரண்டு தியேட்டர்களில் வெளியாகியிருப்பதுதான். சித்ராவும் காமதேனுவும் ஒரே ஏரியா அரங்குகள். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் ஏராளமான படங்கள் வெளியாகும்போது, அண்ணாசாலைப்பகுதியில் தியேட்டர் கிடைக்காதபோது மட்டுமே காமதேனுவில் புதிய படம் வெளியிடப்படும். அப்படி காமதேனுவில் வெளியாகும் படம், அண்ணாசாலை தியேட்டர்களில் வெளியிடப்படாது. ஆனால் 'எதிர்பாராதது' சித்ரா, காமதேனு இரண்டு அரங்குகளிலுமே புதிய வெளியீடாக வெளியாகியுள்ளது.

அதுபோல வடசென்னைப்பகுதியில் பிராட்வே அரங்கும், பாரத் அரங்கும் நடந்து செல்லும் தூரத்திலேயே உள்ளன. (1972-ல் ஒரு ரம்ஜான் தினத்தன்று பிராட்வேயில் 'தங்கதுரை' படத்துக்கு டிக்கட் கிடைக்காமல், நாங்கள் ஐந்தாறு பள்ளி மாணவர்கள் நடந்தே போய் 'பாரத்'தில் ஓடிக்கொண்டிருந்த படத்தைப் பார்த்தோம்). ஆனால் அவ்வளவு அருகருகே உள்ள இரண்டு தியேட்டர்களிலும் 'எதிர்பாராதது' வெளியாகி அசத்தியிருக்கிறது. இவையெல்லாம் தங்களின் ஆவணப்பொக்கிஷங்கள் மூலம் மட்டுமே அறிய சாத்தியமாகிறது.

அதற்காக எங்கள் அனைவரின் நன்றிகளையும் தெரிவிப்பதுடன், தன்னலமற்ற தங்கள் சேவை தொடர வாழ்த்துகிறோம். ராமஜெயம் சார் சொன்னதுபோல, தங்களைப்போன்ற தூய ரசிகக்கண்மணிகள் எந்த ஒரு கலைஞருக்கும் கிடைக்கமாட்டார்கள் என்பது உண்மை.

parthasarathy
19th December 2011, 03:18 PM
Done!
Murali, please do the necessary. :)

There cannot be a more fitting tribute than this to Mr. Pammalar, who has been doing glorious service to NT and his Fans in this thread.

Thanks Mr. Raghavendar for your suggestion and thanks to Mr. Nov & Mr. Murali.

Regards,

R. Parthasarathy

parthasarathy
19th December 2011, 04:16 PM
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

தங்களது எதிர்பாராதது ஆவண பொக்கிஷங்கள் நாங்கள் எதிர்பாராதது என்று சொல்ல முடியாது. ஏனென்றால், கண்டிப்பாக அவைகள் தங்களால் பதிவிடப்படும் என்பது தெரிந்தது தான். மிக்க நன்றிகள். நீதி திரைப்பட ஆவண பொக்கிஷங்கள் மிகவும் அருமை. குறிப்பாக, குமுதம் விமர்சனம் நான் படிக்காத ஒன்று (குமுதத்தில் வேலை செய்தும் கூட!).

மறுபடியும் நன்றிகள்.

அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

பம்மலார் எதிர்பாராதது படத்தைப் பதிந்தவுடன், அந்தப் படங்களின் பிரத்தியேக ஸ்டில்களையும் பாடல்களையும் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. அந்தப் படத்தில் வரும், "சிற்பி செதுக்காத பொற்சிலையே" பாடல் காலத்தால் அழிக்க முடியாத அற்புதப் பாடல். ஏ.எம்.ராஜா அவர்களும் நடிகர் திலகத்திற்கு சிறந்த பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பது இந்தத் தலைமுறையில் எத்தனை பேருக்குத் தெரியும். 1952-இல் துவங்கி, 60 வரை, சி.எஸ்.ஜெயராமனும் ஏ.எம்.ராஜாவும் நடிகர் திலகத்திற்கு பல ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். அதாவது, எந்தப் பின்னணிப் பாடகருக்கும் ஏற்றவாறு, தன்னுடைய உடல் மொழியை மாற்றிக் கொண்டவர் நம் நடிகர் திலகம் என்பதற்கு இதை விடச் சிறந்த உதாரணம் தேவையில்லை. இன்னும் நிறைய சொல்லலாம். மேலும், எதிர்பாராதது படம் பிற மொழிகளில் வந்தது பற்றிய விவரங்களும் அருமை. அதன் தெலுங்குப் பதிப்பை நான் சிறு வயதில் பார்த்தது நினைவில் இருக்கிறது. ஹிந்தி பார்த்ததில்லை.

நன்றியுடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
19th December 2011, 04:26 PM
http://www.sadmuffin.net/cherrybam/graphics/comments-congratulations/congratulations013.gif http://www.sadmuffin.net/cherrybam/graphics/comments-congratulations/congratulations012.gif

நம் அன்பு மாடரேட்டர்கள், அன்பு முரளி சார், மற்றும் அன்பு ராகவேந்திரன் சார் ஆகியோரின் ஆசீர்வதங்களினாலும்,முயற்சிகளாலும் திரி நாயகர் பம்மலார் அவர்களுக்கு முரளி சார் பதிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களோடு இந்தத் திரியின் புதிய பாகம் (Current Discussions) தொடங்கப்பட்டிருப்பது சாலப் பொருத்தம். சதா சர்வகாலமும் நடிக தெய்வத்திற்கே தொண்டு செய்வதைக் கடமையாகக் கொண்ட நம் பம்மலாருக்கு நடிகர் திலகத்தின் ஆசிகள் பூரணமாக உண்டு என்பதை இந்நிகழ்வு ஆணித்தரமாக நிரூபணம் செய்கிறது. ஆவணத் திலகத்திற்கு கிடைத்துள்ள பெருமையை எண்ணி மனம் பூரிப்படைகிறது. நடிகர் திலகத்தின் பரிபூரண ஆசிகளோடு அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வாராக என்று நம் அனைவர் சார்பாகவும், நமது திரியின் சார்பாகவும் அவரை நெஞ்சார வாழ்த்துகிறேன்.

அன்புடன்,
வாசுதேவன்.

abkhlabhi
19th December 2011, 05:16 PM
எப்போது படித்தது

எழுதியவர் பார்த்தா


"சிவாஜி .......
இது
மராத்திய மன்னனின் பெயர்
நீ வரும் வரை ---


சிவாஜி
இது
நடிப்பின் மறு பெயர்
நீ வந்த பின்பு ----

21 / 07 /2001 இல் ---
உலகமே ஒன்று திரண்டு வியந்தது !!!

மரணம் மனிதர்களக்கு தானே ;
நடிப்பின் கடவுளுக்குமா என்று ???

உன் தமிழ் பிரவாகத்தில் ;
தடம் புரண்டிருபர்களே
உன்னை படைத்தவர்கள் -

தண்ட வாளங்களுக்கு நடுவே வைத்து
தமிழ் பேசுபவர்களுக்கு மத்தியில் -
தமிழை தமிழாக பெசியவனே ;

எத்தனையோ வேடங்களில்
எங்கள் முன் வாழ்ந்தாய் -

உன்
மரணமும் ஒரு நடிப்பு தானே ?

உண்மை சொல் .............

vasudevan31355
19th December 2011, 05:20 PM
அன்பு பார்த்த சாரதி சார்,

தங்கள் மனமுவந்த பாராட்டிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சி.எஸ்.ஜெயராமனும் ஏ.எம்.ராஜாவும் நடிகர் திலகத்திற்கு பின்னணிப் பாடியுள்ளதை பாடல் ஆய்வுச் செம்மலான நீங்கள் நினைவு கூர்வது மிகப் பொருத்தமே!

'எதிர்பாராதது' தெலுங்குப் பதிப்பை நான் பார்த்ததில்லை. இந்திப் பதிப்பான சாரதாவை இன்றுதான் பார்த்தேன். சிற்சில இடங்களில் தமிழிலிருந்து இந்திக்கேற்றவாறு கதையில் மாறுபாடுகளுடன் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தது.

அன்புடன்,
வாசுதேவன்

mr_karthik
19th December 2011, 05:23 PM
அன்புள்ள பம்மலார் சார்,

தாங்கள் அளித்துள்ள 'வெற்றிக்கு ஒருவன்' விளம்பர ஆவணத்தைப்பார்த்ததும், படம் வெளியான கால நினைவுகள் மனதில் அலைமோதுகின்றன. இப்படத்துக்கு முதலில் சூட்டப்பட்டிருந்த பெயர் 'கண்ணே கண்மனியே'. இப்படத்தின் தலைப்பு ஏற்கெனவே வெளியான நடிகர்திலகத்தின் 'அன்பே ஆருயிரே' படத்தை நினைவூட்டியதாக நமது திரியிலேயே முன்னர் தெரிவித்திருந்தனர். படம் ஓட்டத்திலும் அப்படியே ஆகும் என்பது யாரும் எதிர்பார்த்திராத ஒன்று.

நடிகர்திலகத்தின் ஒவ்வொரு படமும் வெளியாகும்போது, அன்றைக்கு காலைக்காட்சி ஸ்பெஷல் காட்சியாக, தலைமை ரசிகர்மன்ற நிதிக்காக நடத்தப்படுவது வழக்கம். அதற்கு கட்டணம் சற்று அதிகம். வெற்றிக்கு ஒருவனுக்கும் அதுபோன்ற சிறப்புக்காட்சி, சேத்துப்பட்டு ஈகா திரையரங்கில் டிசம்பர் 9 அன்று காலை நடத்தப்பட்டது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் வந்து கூடியிருந்தனர்.

நான் வாழவைப்பேன் சித்ராவில் 70 நாட்களைக்கடந்து ஓடிக்கொண்டிருக்கும்போது, தீபாவளிக்கு சாந்தியில் பட்டாக்கத்தி பைரவன் வெளியானது. பட்டாக்கத்தி ஓடிக்கொண்டிருக்கும்போதே நான் வாழ வைப்பேன் 100 நாட்களைக்கடந்து ஓடி, நவம்பர் இறுதியில் சித்ராவிலிருந்து எடுக்கப்பட்ட பின், பட்டாக்கத்தி பைரவன் சாந்தியில் 51 நாட்களைக்கடந்து ஓடிக்கொண்டிருக்கும்போது, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள ஸ்டார் தியேட்டரில் 'வெற்றிக்கு ஒருவன்' வெளியானது.

ஏற்கெனவே எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாச்சலம், இளையராஜா, பாபு கூட்டணி நடிகர்திலகத்தோடு இணைந்து தந்திருந்த 'கவரிமான்' தரமான படமாக இருந்தும் ஓட்டத்தில் சுமார் நிலையையே எட்டியது. அதற்கு திரிசூலம் சுனாமி காரணமாக இருந்திருக்கலாம். அந்த காம்பினேஷனில் வெளிவரும் இரண்டாவது படமென்பதால் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. (படம் பார்த்தபின் இக்கூட்டணியின் மீது இருந்த நம்பிக்கை தளர்ந்து போனது தனி). ஆனால் இதற்கு அடுத்த படமாக இதே காம்பினேஷனில் வெளிவந்த 'ரிஷிமூலம்' சென்னை மற்றும் மதுரையில் நான்கு அரங்குகளில் 100 நாட்களைக்கடந்து வெற்றியடைந்தது.

சிறப்புக்காட்சிக்காக ஈகாவில் கூடியிருந்த ரசிகர் கூட்டம் ஆரம்பத்தில் மிகுந்த ஆரவாரத்துடன் படம் பார்க்கத்துவங்கியது. ஆனால் படத்துவக்கத்தில் நடிகர்திலகம் ரொம்பவே கோழையாக, பயந்த சுபாவமுள்ளவராகக் காண்பிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் சிறிது அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் தந்தையின் மரணக்காட்சியில், தன் கண்முன்னேயே அவர் கொலை செய்யப்பட்டு அவரது ரத்தம் கார் கண்ணாடியின் மீது தெறிக்கும் காட்சியை திரும்பத்திரும்ப நினைத்துப்பார்க்கும் அவருக்குள் ஒரு வேகமும் தைரியமும், பழிவாங்கும் எண்ணமும் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுப்பதை நன்றாக சித்தரிந்தார் இயக்குனர் எஸ்.பி.எமுத்துராமன். நடிகர்திலகமும் அதை உணர்ந்து பெர்ஃபாமென்ஸில் கலக்கியிருந்தார்.

ஒளிப்பதிவாளர் பாபுவின் ஒளிப்பதிவு ஒரு இடத்தில் சிறப்பாக அமைந்தது. நடிகர்திலகத்தின் தந்தையைக்கொல்வதற்காக, மோகன்பாபு கையில் துப்பாக்கியுடன் எதிரேயிருக்கும் உயரமான அடுக்குமாடி கட்டிடத்தில் மாடிப்படியில் ஏறும்போது, கேமராவும் அவர் கால்களை மட்டும் காண்பித்தவாறு கூடவே மாடிப்படியில் போய்க்கொண்டேயிருக்கும். நீளமாக எடுக்கப்பட்ட இக்காட்சி எவ்வித வெட்டல், ஒட்டல் இன்றி ஒரே ஷாட்டாக எடுக்கப்பட்டிருக்கும்.

நம்பியார், ஸ்ரீபிரியா, ஒய்.ஜி.பார்த்தசாரதி போன்ற திறமையான நடிகர்கள் இருந்தும் திரைக்கதை சரியில்லாததால் படம் உற்சாகமளிக்கவில்லை. இப்படத்திலும் ஜஸ்டினுடன் ஒரு சண்டைக்காட்சி இருந்தது. படம் துவங்கும்போது ரசிகர்களுக்கிருந்த ஆர்வம் முடியும்போது இல்லை. இருப்பினும் மாலைக்காட்சியின்போது ஸ்டார் தியேட்டர் முன்பு கூடினோம். காலையில் ஏற்பட்ட ஏமாற்றத்தை ரசிகர்கள் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஆனாலும் ஓப்பனிங் கொண்ட்டாட்டங்கள் வழக்கம்போல கிராண்ட்டாக இருந்தன. அதில் ஒன்றும் குறை வைக்கவில்லை.

But, even with this un-happy result, the movie has crossed 50 days.

'வெற்றிக்கு ஒருவன்' படம் தியேட்டர்களில் மறு வெளியீடுகளில் அவ்வளவாக வலம் வரவில்லையென்று நினைக்கிறேன். அதுபற்றி கூடுதல் விவரம் தெரிந்தவர்கள் தெரிவியுங்கள்.

pammalar
20th December 2011, 02:22 AM
Done!
Murali, please do the necessary. :)

Dear Mr.NOV,

My sincere & heartiest thanks for your magnanimous gesture !

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
20th December 2011, 02:29 AM
THANK YOU SO MUCH, NOV SIR.
THIS IS THE BEST BIRTH DAY GIFT TO OUR ARCHIVE SUPER STAR PAMMALAR.

Thank you once again

Dear Raghavendran Sir,

Thank you so much !

I am very much indebted to you Sir, for this gesture !

Once again, thank you very much !

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
20th December 2011, 02:35 AM
http://www.sadmuffin.net/cherrybam/graphics/comments-congratulations/congratulations013.gif http://www.sadmuffin.net/cherrybam/graphics/comments-congratulations/congratulations012.gif

நம் அன்பு மாடரேட்டர்கள், அன்பு முரளி சார், மற்றும் அன்பு ராகவேந்திரன் சார் ஆகியோரின் ஆசீர்வதங்களினாலும்,முயற்சிகளாலும் திரி நாயகர் பம்மலார் அவர்களுக்கு முரளி சார் பதிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களோடு இந்தத் திரியின் புதிய பாகம் (Current Discussions) தொடங்கப்பட்டிருப்பது சாலப் பொருத்தம். சதா சர்வகாலமும் நடிக தெய்வத்திற்கே தொண்டு செய்வதைக் கடமையாகக் கொண்ட நம் பம்மலாருக்கு நடிகர் திலகத்தின் ஆசிகள் பூரணமாக உண்டு என்பதை இந்நிகழ்வு ஆணித்தரமாக நிரூபணம் செய்கிறது. ஆவணத் திலகத்திற்கு கிடைத்துள்ள பெருமையை எண்ணி மனம் பூரிப்படைகிறது. நடிகர் திலகத்தின் பரிபூரண ஆசிகளோடு அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வாராக என்று நம் அனைவர் சார்பாகவும், நமது திரியின் சார்பாகவும் அவரை நெஞ்சார வாழ்த்துகிறேன்.

அன்புடன்,
வாசுதேவன்.

டியர் வாசுதேவன் சார்,

"எதிர்பாராதது" பதிவு தங்களிடமிருந்து எதிர்பார்த்ததுதான் ! வழக்கம் போல் அசததல் !

'பிறமொழிகளில் எதிர்பாராதது' பதிவு அட்டகாசம் !

அதியற்புத மனம் படைத்த தங்களின் உயர்ந்த உள்ளத்திலிருந்து, வான்மழை போலக் கொட்டும் பாராட்டுமழைக்கும், தங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுக்கும் எனது இதயபூர்வமான எண்ணிலடங்கா நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th December 2011, 02:48 AM
There cannot be a more fitting tribute than this to Mr. Pammalar, who has been doing glorious service to NT and his Fans in this thread.

Thanks Mr. Raghavendar for your suggestion and thanks to Mr. Nov & Mr. Murali.

Regards,

R. Parthasarathy

Dear Parthasarathy Sir,

My whole-hearted thanks to you !

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
20th December 2011, 03:00 AM
டியர் பார்த்தசாரதி சார்,

தங்களின் அன்பான பாராட்டுக்களுக்கு எனது பணிவான நன்றிகள் !

"நீதி", 'குமுதம்' விமர்சனததை தாங்கள் படித்து களிப்புற்றது என் பாக்கியம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th December 2011, 03:24 AM
அன்புள்ள பம்மலார் சார்,

1954-ம் ஆண்டில் வெளியான 'எதிர்பாராதது' திரைப்பட பொக்கிஷப்பதிவுகள் அனைத்தும் அருமை. நீங்கள் பிறப்பதற்கு பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்த ஆவணங்களை நீங்கள் சேகரித்து வழங்குவதைப்பார்க்கும்போது, பண்டைய இலக்கிய நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்தவற்றைத் தேடித்தொகுத்து தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யர் அவர்களின் தொண்டே நினைவுக்கு வருகின்றது.

அவர் செய்தது தமிழன்னைக்குச்செய்த திருத்தொண்டு. நீங்கள் செய்து வருவது ஈடில்லா தமிழ்க்கலைஞன் நடிகர்திலகத்துக்கு செய்து வரும் திருத்தொண்டு. இரண்டிலுமே உயர்ந்து நிற்பது தியாகமும், சேவையுமே. உலகெங்கிலும் வாழும் நடிகர்திலகத்தின் ரசிகக்கண்மணிகள் மனம் மகிழ வேண்டுமென்பதற்காக தங்களை வருத்திக்கொண்டு நீங்கள் செய்து வரும் சேவைக்கு ஈடு இணையே இல்லை. அந்த வரிசையில் ஒரு மைல்கல் கல்தான் இந்த 'எதிர்பாராதது' விளம்பரப்பொக்கிஷங்களும், அபூர்வ நிழற்படமும்.

இயக்குனர் ஸ்ரீதரின் எழுத்தோவியத்தில் உருவான இவ்வரிய காவியம், பின்னர் பல்வேறு மொழிகளிலும் தயாராகி பெருவெற்றி கண்ட விவரங்களை நமது வாசுதேவன் சார் அருமையாக எடுத்தியம்பியுள்ளார்.

அப்போதைய நிகழ்வுகளை அறிய இத்தகைய ஆவணங்கள் எவ்வளவு பேருதவியாக இருக்கின்ற என்பதற்கு ஒரு உதாரணம், அதில் குறிப்பிடப்பட்டுள்ள திரையரங்குகளின் வரிசை. சென்னையில் மட்டும் 5 திரையரங்குகளின் வெளியானது மட்டுமல்ல, ஒரே ஏரியாவிலுள்ள இரண்டிரண்டு தியேட்டர்களில் வெளியாகியிருப்பதுதான். சித்ராவும் காமதேனுவும் ஒரே ஏரியா அரங்குகள். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் ஏராளமான படங்கள் வெளியாகும்போது, அண்ணாசாலைப்பகுதியில் தியேட்டர் கிடைக்காதபோது மட்டுமே காமதேனுவில் புதிய படம் வெளியிடப்படும். அப்படி காமதேனுவில் வெளியாகும் படம், அண்ணாசாலை தியேட்டர்களில் வெளியிடப்படாது. ஆனால் 'எதிர்பாராதது' சித்ரா, காமதேனு இரண்டு அரங்குகளிலுமே புதிய வெளியீடாக வெளியாகியுள்ளது.

அதுபோல வடசென்னைப்பகுதியில் பிராட்வே அரங்கும், பாரத் அரங்கும் நடந்து செல்லும் தூரத்திலேயே உள்ளன. (1972-ல் ஒரு ரம்ஜான் தினத்தன்று பிராட்வேயில் 'தங்கதுரை' படத்துக்கு டிக்கட் கிடைக்காமல், நாங்கள் ஐந்தாறு பள்ளி மாணவர்கள் நடந்தே போய் 'பாரத்'தில் ஓடிக்கொண்டிருந்த படத்தைப் பார்த்தோம்). ஆனால் அவ்வளவு அருகருகே உள்ள இரண்டு தியேட்டர்களிலும் 'எதிர்பாராதது' வெளியாகி அசத்தியிருக்கிறது. இவையெல்லாம் தங்களின் ஆவணப்பொக்கிஷங்கள் மூலம் மட்டுமே அறிய சாத்தியமாகிறது.

அதற்காக எங்கள் அனைவரின் நன்றிகளையும் தெரிவிப்பதுடன், தன்னலமற்ற தங்கள் சேவை தொடர வாழ்த்துகிறோம். ராமஜெயம் சார் சொன்னதுபோல, தங்களைப்போன்ற தூய ரசிகக்கண்மணிகள் எந்த ஒரு கலைஞருக்கும் கிடைக்கமாட்டார்கள் என்பது உண்மை.

டியர் mr_karthik,

'தமிழ்த்தாத்தா' உ.வே.சா. போன்ற மாபெரும் தமிழ் மூதாதையர்களின், மூதறிஞர்களின் பெரும் திருத்தொண்டுடன் இந்த எளியேனின் சிறுதொண்டினை ஒப்பிடும் தங்களின் உயர்ந்த உள்ளத்துக்கு எனது உயர்வான நன்றிகள் ! அவர்கள் எங்கே, இந்த எளியவன் எங்கே ! எனினும், தூய்மையே உருவான தங்களின் பெருந்தன்மை நிறைந்த இதயத்திலிருந்து தாங்கள் வழங்கும் உச்சமான பாராட்டுக்களை ஏற்றுக்கொள்வதே பண்பு, மரபு என்பதன் அடிப்படையில் தங்களது இந்த இணையில்லாப் பாராட்டுதல்களை சிரமேற்கொள்கிறேன். தங்களுக்கு எனது இருகரம் கூப்பிய, சிரந்தாழ்த்திய பணிவான பலகோடி நன்றிகள் !

"எதிர்பாராதது" பதிவில் தாங்கள் அளித்த அரிய விவரங்களுக்கும் அற்புத நன்றிகள் !

அன்பு கலந்த ஆனந்தக்கண்ணீருடன்,
என்றும் உங்கள் பம்மலார்.

pammalar
20th December 2011, 04:14 AM
டியர் mr_karthik,

"வெற்றிக்கு ஒருவன்" மினி ஆய்வுடன் கூடிய நினைவலைகள் மிக அருமை ! அதென்னமோ தெரியவில்லை, தாங்கள் மலரும் நினைவுகளில் மூழ்கும்போது எங்களையெல்லாம் அந்தக்காலகட்டத்திற்கே அழைத்து சென்றுவிடுகிறீர்கள் ! அது தங்களுக்கு கைவந்தகலை, இக்கலை எல்லோருக்கும் வாய்க்காது.

தாங்கள் "கண்ணே கண்மணியே", "வெற்றிக்கு ஒருவன்" ஆன தகவலைத் தெரிவித்ததும் என் நினைவில் சட்டென்று உதித்தவை:

- "வயது பதினாறு ஜாக்கிரதை", "காலமெல்லாம் காத்திருப்பேன்" என்று மாறி கடைசியில் "ஊட்டி வரை உறவு" என்ற உன்னதப் பெயரைப் பெற்றது.

- "தெய்வமகன்" திரைக்காவியத்திற்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் "உயிரோவியம்".

- "சாப்பாட்டு ராமன்", "ராமன் எத்தனை ராமனடி" ஆனார்.

- "ஹீரோ 72", "வைர நெஞ்சம்" என மாற்றப்பட்டது.

- "திசைகள் திரும்பும்", "ரிஷிமூலம்" என்று ஆனது.

இன்னும் இதுபோன்ற பெயர்மாற்றங்களை உள்ளடக்கி ஒரு பட்டியல் போடலாம்.['சிந்தனைச் சிற்பி'யான வாசு சார் இதுகுறித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டது மனக்கண்ணில் தெரிகிறது.]

பெருவெற்றிக்காவியமான "ரிஷிமூலம்", சென்னை சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று அரங்குகளில் மட்டும் 100 நாட்களைக் கடந்தது. மதுரையில் இக்காவியம் 'சினிப்ரியா' அரங்கில் 62 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

தங்களின் இந்த அதிரடி அசத்தல் பதிவுக்கு எனது பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th December 2011, 04:19 AM
டியர் பாலா சார்,

கவிதைக்கு நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
20th December 2011, 07:32 AM
அன்பு கார்த்திக் சார்,

தங்களின் 'வெற்றிக்கு ஒருவன்' பற்றிய பதிவு very interesting. நாங்கள் கடலூரில் ரசிகர் மன்ற ஷோ ரிலீசன்று காலைக்காட்சி பாடலி தியேட்டரில் ஏக ரகளையோடு இப்படத்தைப் பார்த்ததை நினைவு படுத்தி விட்டீர்கள். உங்களுக்கு இருந்த அதே மனநிலைதான் கொஞ்சமும் மாறாமல் அப்படியே எங்களுக்கு இருந்தது. 'கண்ணே கண்மணியே' என்ற பெயரில் பேசும்படம் பத்திரிக்கையில் முதன் முதல் தலைவர் ஸ்ரீப்ரியாவுடன் பயந்தாற்போல் நிற்கும் ஸ்டில் வெளிவந்தது நினைவிருக்கிறது.

தந்தை மேஜருடன் A certificate படம் பார்ப்பது, சாப்பாடு சாப்பிடும்போது 'முட்டையில் முள்ளு' என்று சொல்வது, நீங்கள் குறிப்பிட்டது போல இடைவேளை வரை அவரை மகா கோழையாக சித்தரித்திருந்தது...இவையெல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இடைவேளைக்கு பிறகு படம் சூடு பிடித்து கொஞ்சம் தாக்குப் பிடித்ததால் நாங்களும் கொஞ்சம் தாக்குப் பிடித்தோம். எல்லாமே இருந்தும் எதுவும் இல்லாத படமாகப் போய்விட்டது. அதுமட்டுமில்லாமல் 'வெற்றிக்கு ஒருவன்' என்று சொன்னாலே நம் ரசிகர்கள் உட்பட அனைவரும் சற்று முகம் சுளிப்பது போன்ற ஒரு பெயரை இந்தப்படம் பெற்று விட்டது துரதிருஷ்டம் தான். அந்த அளவுக்கு மோசம் என்றும் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று. டைட்டிலில் தலைவர் குங்பூ,கராத்தே பாணியில் கை,கால்களை அசைத்து ஆக்ரோஷமாக ஓடி ஓடி வருவது போன்ற ஆரம்பக் காட்சியில் தியேட்டர் கூரை பித்துக்கொண்டு போனது நிஜம். 'வெற்றிக்கு ஒருவன்' ரிலீஸ் அன்று தமிழ்நாடு முழுவதும் அன்று நம் ரசிகர்களுக்கு இருந்த மனநிலையை உங்களத் தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக எழுதி உணர்த்த முடியாது. அதற்காக உங்களுக்கு என் சிறப்பான நன்றிகள்.

குறிப்பு: நடிகர்திலகம் திரி என்பதால் வெறும் நிறைகளை மட்டுமே தூக்கி வைத்துக் கொண்டு ஆடாமல் நம்மிடம் இருக்கும் குறைகளையும் நாம் அனைவரும் அலசுவது சிறந்த நடுநிலைக்கு எடுத்துக்காட்டாகும். இதற்காக நாம் அனைவரும் நிஜமாகவே பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இப்படிப்பட்ட நடுநிலையான பதிவுகளை நம் திரியைத் தவிர நான் வேறு எங்கும் பார்த்ததாக நினைவில்லை.

நன்றியுடன்,
வாசுதேவன்.

vasudevan31355
20th December 2011, 07:42 AM
அன்பு பம்மலார் சார்,

எங்கள் அனைவருடைய உளப்பூர்வமான பாராட்டுக்களை பணிவோடு ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் நன்றி கூறும் பாங்கு உண்மையாகவே தாங்கள் சிறந்த பண்பாளர்,பணிவாளர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. "நான் எதுவும் செய்யவில்லை" என்று நீங்கள் தன்னடக்கத்துடன் கூறினாலும் நீங்கள் இத்திரிக்காக எதுவும் செய்வீர்கள் என்பது நாங்கள் அனைவரும் அறிந்த ஒன்று. தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
20th December 2011, 07:45 AM
டியர் பாலா சார்,

அசத்தல் கவிதை. சூப்பர். பாராட்டுக்கள். ஒரு சிறு வேண்டுகோள். அடிக்கடி காட்சி கொடுங்கள். அப்போதுதான் இப்படிப்பட்ட சிறந்த பதிவுகளை நாங்கள் படித்து இன்புற முடியும். நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.

abkhlabhi
20th December 2011, 10:37 AM
ANNAI ILLAM


http://madrasmusings.com/Vol%2018%20No%2011/historic_residences_of_chennai_2.html

vasudevan31355
20th December 2011, 12:18 PM
கடந்த செப்டம்பர் மாதம் நடிகர் திலகத்திற்கு கடலூரில் சிலை நிறுவ வேண்டும் என்று கடலூர் நகர சிவாஜி மன்றம் சார்பாக கடலூர் நகரசபை துணைத் தலைவர் திரு.தாமரைச்செல்வன் அவர்கள் மூலம் கடலூர் நகரசபை கூட்டத் தீர்மானத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதற்கான தினத்தந்தி செய்தி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_0001-3.jpg http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_0002-2.jpg




அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
20th December 2011, 01:32 PM
'எதிர்பாராதது' அரிய வரலாற்று ஆவணம்.

'எதிர்பாராதது' 58-ஆவது வருடத் துவக்கத்தை முன்னிட்டு 'தினத்தந்தி' நாளிதழில் (22-3-2005) 'வரலாற்றுச் சுவடுகள்' என்ற தொடரில் 'திரைப்பட வரலாறு' (106) என்ற தலைப்பில் நடிகர் திலகம் புகழ் பாடிய தொடரில் வெளியான 'எதிர்பாராதது' படத்தைப் பற்றி வந்த இந்தக் கட்டுரையைப் பதிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் படித்து இன்புற வேண்டுகிறேன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/01.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-16.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-12.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
20th December 2011, 04:08 PM
அன்பு வாசுதேவன் சார், பாராட்டுக்கு நன்றி.

'எதிர்பாராதது' படத்தின் படப்பின்போது நடந்த சுவையான நிகழ்ச்சியின் பத்திரிகை வடிவத்தை அப்படியே பெயர்த்துத் தந்தமைக்கு மிக்க நன்றி. 'அடி வாங்கியவனை விட்டுட்டு அடித்தவங்களுக்கு சிகிச்சை' என்று நடிகர்திலகம் சொல்வது, அவருக்குள்ளே இருக்கும் நகைச்சுவையுணர்வை வெளிப்படுத்துகிறது.

கடலூர் நகராட்சியின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றபின் நடிகர்திலகத்தின் சிலை அமைப்பு பற்றி பேசப்பட்டதா, சிலையமைப்புக்கான சாத்தியக்கூறுகள் தென்படுகிறதா?.

அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள். தங்கள் ஊர்களில் ஜாதிப்பெயர்களில் அமைந்த சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களை மாற்றி தலைவர்களின் பெயர்களைச்சூட்டும்போது, தவறாமல் முக்கியமான சாலையொன்றுக்கு 'நடிகர்திலகம் சிவாஜி' அவர்களின் பெயரைச்சூட்டுங்கள். இது தமிழர்களின் விருப்பம், வேண்டுகோள்.

mr_karthik
20th December 2011, 04:40 PM
அன்புள்ள பம்மலார் சார், பாராட்டுக்கு நன்றி.

படங்களின் பெயர்கள் மாற்றம் பற்றி தாங்கள் குறிப்பிட்ட பட்டியலில் மேலும் சில...

'கந்தன் கருணை'யின் முந்தைய பெயர் 'கந்தலீலா'

'பைத்தியக்காரன்' என்று முதலில் பெயரிடப்பட்ட படம்தான் 'எங்கிருந்தோ வந்தாள்' ஆனது (நன்றி, முரளி சார்)

'எங்க வீட்டு தங்க லட்சுமி' பின்னர் 'அண்ணன் ஒரு கோயில்' என்று கொண்டாடினாள்.

ரிஷிமூலம் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல். அது முதலில் 'ரிஷிமூலம்' என்ற பெயரில்தான் மேடை நாடகமாக நடத்தப்பட்டு வந்தது. பின்னர் படமாக்கத் துவங்கியபோது 'திசைகள் திரும்பும்' என்று பெயர் சூட்டி படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.

இதனிடையே, 'திரிசூலம்' மாபெரும் இமாலய வெற்றி பெற்றதால், தொட்டதற்கெல்லாம் செண்ட்டிமென்ட் பார்க்கும் சினிமா உலகில் ஒரு சபலம் யூனிட்டாருக்கு ஏற்பட்டது. ஓசை நயத்தில் 'திரிசூலம்' என்பது போலவே அமைந்த 'ரிஷிமூலம்' என்ற ஒரிஜினல் பெயரையே சூட்டி விடலாம் என்று விரும்பியதால், ரிஷிமூலம், திசைகள் திரும்புமாகி மீண்டும் ரிஷிமூலமாகவே மாறி வெளியானது.

RAGHAVENDRA
20th December 2011, 07:12 PM
பெயர் மாற்றங்களில் பல உண்டு. அதில் ஒன்று கொடுத்து வைத்த மகராஜா பின்னர் உத்தமனானது என்று நினைக்கிறேன்.

RAGHAVENDRA
20th December 2011, 07:41 PM
நீண்ட நாள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உன்னத காவியம், தங்கைக்காக, தற்பொழுது நெடுந்தகடு வடிவில் வெளியிடப் பட்டுள்ளது. 7 ஸ்டார் ஆடியோ நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நெடுந்தகடு, சென்னை ஆழ்வார்பேட்டை, சங்கரா ஹால் காட்சியகத்திலும் மற்றும் பெரும்பாலான நெடுந்தகடு குறுந்தகடு விற்பனையாளர்களிடமும் கிடைக்கிறது.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/ThangaikkaagaDVDcover.jpg

sakaLAKALAKAlaa Vallavar
20th December 2011, 07:49 PM
2 things abt sivaji sir - 1.11 & 4.17


http://www.youtube.com/watch?v=kt1SykiOiM8

pammalar
20th December 2011, 07:56 PM
Demi-God's December Delicacies

நீலவானம்

[10.12.1965 - 10.12.2011] : 47வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

ஷூட்டிங் ஸ்பாட்

வரலாற்று ஆவணம் : பேசும் படம் : ஜூலை 1965
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NVSS1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NVSS2-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

sakaLAKALAKAlaa Vallavar
20th December 2011, 08:03 PM
Pammalar sir, do you have any old clippings about NT's Sishyan Kamal?!? :)

pammalar
20th December 2011, 09:11 PM
Pammalar sir, do you have any old clippings about NT's Sishyan Kamal?!? :)

Dear Mr.SakaLAKALAKAlaa Vallavar,

Yes, I have. I will post in Kalaignani's thread soon !

Warm Wishes & Regards,
Pammalar.

sakaLAKALAKAlaa Vallavar
20th December 2011, 11:09 PM
You are a priceless hubber sir! Salute :)

pammalar
20th December 2011, 11:59 PM
You are a priceless hubber sir! Salute :)

Dear Mr.SakaLAKALAKAlaa Vallavar,

Thank you so much for your compliments and my special thanks for the video !

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
21st December 2011, 12:09 AM
Demi-God's December Delicacies

நீலவானம்

[10.12.1965 - 10.12.2011] : 47வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

அட்டைப்படம் : சினிமா கதிர் : ஆகஸ்ட் 1965
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NV3-1.jpg


அட்டைப்படம் : பேசும் படம் : அக்டோபர் 1965
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NV4-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 3.12.1965
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NV1-1.jpg


'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 10.12.1965
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NV2-1.jpg

குறிப்பு:
"நீலவானம்", சென்னை 'சித்ரா'வில் 63 நாட்களும், 'மஹாராணி'யில் 56 நாட்களும், 'சயானி'யில் 56 நாட்களும், 'ராம்' திரையரங்கில் 52 நாட்களும் மிக வெற்றிகரமாக ஓடியது. மதுரை 'நியூசினிமா'வில் 56 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. மேலும், கணிசமான ஊர்களின் அரங்குகளில் 50 நாட்களைக் கடந்து வெற்றி பெற்று, ஒரு 'நல்ல வெற்றிக்காவியம்' என்கின்ற நிலையை அடைந்தது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st December 2011, 02:21 AM
Demi-God's December Delicacies

நெஞ்சங்கள்

[10.12.1982 - 10.12.2011] : 30வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

நடிகர் திலகம் பற்றி - அவரால் குழந்தை நட்சத்திரமாக "நெஞ்சங்கள்' திரைக்காவியத்தில் அறிமுகம் செய்யப்பட்ட - நடிகை மீனா

வரலாற்று ஆவணம் : தினகரன் [சுதந்திர தின சிறப்பு மலர்] : 15.8.2001
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Nenjangal1-1-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st December 2011, 05:12 AM
டியர் வாசுதேவன் சார்,

பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மேன்மையான நன்றிகள் !

கடலூரில் சிங்கத்தமிழனுக்கும், சிந்தனைச்சிற்பிக்கும் சிலை அமைக்கும் முயற்சிகள் விரைந்து வெற்றி பெறட்டும் !

"எதிர்பாராதது" வரலாற்று ஆவணம் அதிரடி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st December 2011, 05:21 AM
டியர் mr_karthik,

தங்களின் அன்பு வேண்டுகோளை, தமிழனாகப் பிறந்து தலைவர் பதவி வகிக்கும் ஒவ்வொருவரும், ஒரு கடமையாக ஏற்றுக்கொண்டு அதற்கு செயல்வடிவம் கொடுக்கப் பாடுபட வேண்டும். தங்களின் வேண்டுகோளை முதல் ஆளாக வழிமொழிகிறேன் !

மேலும் சில திரைக்காவியங்கள், பெயர் மாற்றப்பட்ட விவரங்கள், வெகு அருமை !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st December 2011, 05:26 AM
Demi-God's December Delicacies

புதிய வானம்

[10.12.1988 - 10.12.2011] : 24வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 10.12.1988
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5358-1.jpg


100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 19.3.1989
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5361-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st December 2011, 06:06 AM
அன்புள்ளங்கள் அனைவருக்கும்,

"மண்ணுக்குள் வைரம்", "ஜஸ்டிஸ் கோபிநாத்" ஆவணப்பதிவுகளுக்கு முன் "ராஜபார்ட் ரங்கதுரை" மகா மெகா ஆல்பம்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st December 2011, 06:08 AM
Demi-God's December Delicacies

ராஜபார்ட் ரங்கதுரை

[22.12.1973 - 22.12.2011] : 39வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல் : மகா மெகா ஆல்பம்

கலையுலக நிரந்தர ராஜபார்ட் சிவாஜிதுரை அவர்களின் பதினான்கு கலக்கல் கெட்டப்புகள்

1. வேடன் (வேலன்)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRVedan.jpg


2. ராஜபார்ட் (பாகவதர் கிராப்)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRBhagavatharCrop.jpg


3. அர்ஜூனன்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRArjunan.jpg


4. நந்தனார்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRNandanar.jpg


5. கோவலன்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRKovalan.jpg


6. காதலன்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRKaadhalan.jpg


7. முருகன்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMurugan.jpg

தொடர்ச்சி அடுத்த பதிவில்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
21st December 2011, 06:11 AM
Demi-God's December Delicacies

ராஜபார்ட் ரங்கதுரை

[22.12.1973 - 22.12.2011] : 39வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல் : மகா மெகா ஆல்பம் [தொடர்ச்சி...]

கலையுலக நிரந்தர ராஜபார்ட் சிவாஜிதுரை அவர்களின் பதினான்கு கலக்கல் கெட்டப்புகள்

8. பஃபூன்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRBafoon.jpg


9. ஹரிச்சந்திரன்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRHarichandran.jpg


10. பெருஞ்செல்வந்தர் (கப்பல் வியாபாரி)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRShipMerchant.jpg


11. ஹேம்லட்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRHamlet.jpg


12. பகத்சிங்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRBhagatSingh.jpg


13. ராஜபார்ட் (மாடர்ன் கிராப்)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRModernCrop.jpg


14. கொடி காத்த குமரன்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRThiruppurKumaran.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

KCSHEKAR
21st December 2011, 08:24 AM
டியர் கார்த்திக் சார், தங்களுடைய கருத்து ஒவ்வொரு ரசிகனுடைய உள்ளப் பிரதிபலிப்பாகும். நன்றி.

KCSHEKAR
21st December 2011, 08:26 AM
டியர் பம்மலார், ராஜபார்ட் ரங்கதுரை, 14 வித கெட்டப்புகள் கலக்கல். நன்றி.

vasudevan31355
21st December 2011, 12:02 PM
நடிகை ஜமுனா

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/ja.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-8.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
21st December 2011, 12:17 PM
'ராஜபார்ட் ரங்கதுரை'

நாடகக்கலைஞனாக நடிகர்திலகம் வாழ்ந்து காட்டிய ராஜபார்ட் ரங்கதுரையின் 39-வது உதய தின இனிய நினைவலைகள் (22.12.1973 - 22.12.2011)

தயாரிப்பில் இருக்கும்போதே பலவேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்ட படங்களில் இதுவும் ஒன்று என்றால் மிகையில்லை. ஆனால், எதிர்பார்க்க வைத்து ஏமாற்றாமல், எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்து, ரசிகர்களையும் பொதுமக்களையும் உற்சாகத்தில் ஆழ்த்திய திரைக்காவியம்.

1971 இறுதியில் துவங்கிய நடிகர்திலகத்தின் வெற்றிநடை 72-ஐக்கடந்து 73-லும் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் வெளியாகி இதுவும் வெற்றிக்கனியை ஈட்டியது. (தொடர் வெற்றிப்பட்டியலை ஏற்கெனவே முரளி சார் அவர்கள் முந்தைய பக்கத்தில் அட்டகாசமாக தொகுத்தளித்துள்ளார்). இப்படம் வெளியானபோது தீபாவளி வெளியீடான கௌரவம் தமிழகமெங்கும் வெற்றிகரமாக 58 நாட்களைக் கடந்துகொண்டிருந்தது. மனிதரில் மாணிக்கம் 15 நாட்களைக்கடந்து ஓடிக்கொண்டிருந்தது. (ராயப்பேட்டை பைலட் தியேட்டரில் மட்டும், வெளியிடும்போதே 15 நாட்களுக்கு மட்டும் என்ற அறிவிப்புடன் தினசரி 4 காட்சிகளாக ஓடி, இப்படத்துக்காக பக்கத்தில் மயிலை கபாலி தியேட்டருக்கு மனிதரில் மாணிக்கம் மாற்றப்பட்டது).

ராஜபார்ட் ரங்கதுரை படம் வெளிவரும் முன்பே, இது காங்கிரஸ் இயக்கத்தினரை உற்சாகப்படுத்த எடுக்கப்பட்ட படம் என்று மதிஒளி, திரைவானம் போன்ற பத்திரிகைகள் சரமாரியாக செய்திகளையும் படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தன. அப்போது சிவாஜி ரசிகன் என்றும் பெருந்தலைவரின் தொண்டன் என்றும் பிரித்துப்பார்க்க முடியாதபடி எல்லோரும் இரண்டுமாக திகழ்ந்த காலகட்டம். போதாக்குறைக்கு ஆகஸ்ட் 15 அன்று நடந்த சுதந்திர தின விழாவில், பெருந்தலைவரும் நடிகர்திலகமும் மேடையில் இருக்கும்போதே, மன்றத்தலைவர் சின்ன அண்ணாமலை, அப்போது தயாரிப்பிலிருந்த ராஜபார்ட் ரங்கதுரை படத்தைப்பற்றி வெகு சிறப்பாகப்பேசி, ‘இது காங்கிரஸ்காரர்களின் லட்சியப்படம்’ என்று கூறி விட்டார்.

அப்போது சிவாஜி மன்றமும் ஸ்தாபன காங்கிரஸும் தமிழகத்தில் பெரும் சக்தியாக விளங்கியதால் இப்படம் பெருந்தலைவரின் பாராட்டைப்பெற்றால் நன்றாக இருக்குமே என்று கருதிய தயாரிப்பாளர் குகநாதன், பெருந்தலைவருக்கும் காங்கிரஸ் இயக்க முன்னோடிகளுக்கும் ஒரு பிரத்தியேக காட்சி ஏற்பாடு செய்திருந்தார். (அந்த பிரத்தியேக காட்சியைப்பற்றியும் அதில் நடந்தவற்றைப் பற்றியும் ஏற்கெனவே முன்னர் சாரதா மிக விரிவாக எழுதியிருந்தார், அதை நாமெல்லோரும் படித்திருக்கிறோம். ஆகவே அதை மீண்டும் விளக்கத்தேவையில்லை).

ராஜபார்ட் ரங்கதுரை சென்னையில் பைலட், ஸ்ரீகிருஷ்ணா, ராக்ஸி, முரளிகிருஷ்ணா, கிருஷ்ணவேணி ஆகிய ஐந்து திரையரங்குகளில் வெளியானது. அத்தனையிலும் தினசரி மூன்று காட்சிகள்தான். வடசென்னை மண்ணடிவாசியான நான் (வழக்கம்போல) மிண்ட் ஏரியா ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில்தான் (வழக்கம்போல) முதல்நாள் மாலைக்காட்சிக்கு ரிசர்வ் செய்திருந்தேன். முதல்நாள் மாலைக்காட்சி டிக்கட் கிடைப்பது சாதாரணம் அல்ல, ரிசர்வேஷன் துவங்கும் அன்று காலை ஏழுமணிக்கெல்லாம் போய், 'கேட்'டைப்பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும். கேட் திறந்ததும் ஓடிப்போய் கியூவில் நின்றுகொண்டு, இன்னும் போலீஸ் வரவில்லையே என்று தவமிருக்க வேண்டும். போலீஸ் வந்துவிட்டால் நமக்குத்தெம்பு. அப்பாடா, இனி நம் இடம் பறிபோகாது என்று. அப்போது பள்ளி மாணவப்பருவமாதலால் இதெல்லாம் பெரிய கஷ்ட்டமாகத் தெரியவில்லை. இன்றைய இளம்பருவத்தினர் இந்த சாகசங்களையெல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணி விட்டார்கள்.

மதியசாப்பாட்டுக்குப்பின், பவளக்காரத்தெரு நண்பன் வீட்டு வாசலில் எல்லோரும் கூடி, அங்கிருந்து புறப்பட்டோம். நடைதான். பேசிக்கொண்டே கிருஷ்ணா தியேட்டர் போய்ச்சேர்ந்தபோது மணி நான்கை நெருங்கியிருந்தது. போகும் வழியில் கிரௌனில் கௌரவம் எப்படீன்னு எட்டிப்பார்த்தோம். சனிக்கிழமையாதலால் மேட்னி ஃபுல். (ராஜபார்ட்டுக்கு மேட்னி டிக்கட் கிடைக்காதவர்களும் இங்கு வந்திருக்கக்கூடும்).

ஸ்ரீகிருஷ்ணாவை நெருங்கும்போதே சாலையில் பெரும் கூட்டம் தெரிந்தது. தியேட்டர் முழுக்க காங்கிரஸ் கொடிகள், காங்கிரஸ் பேனர்கள். நடிகர்திலகத்தின் கட்-அவுட் கையிலும் நிஜமான கொடி பறந்துகொண்டிருந்தது. ஏதோ காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்துவிட்டது போன்ற தோற்றம் தந்தது. பேனர் முழுக்க நடிகர்திலகத்துக்கு பிரம்மாண்டமான மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. வடசென்னை மன்றங்கள் அலங்காரங்களில் அசத்தியிருந்தனர். அந்தக்கண்கொள்ளாக் காட்சிகள் இன்றைக்கும் மனதில் நிறைந்திருக்கிறது. ஏற்கென்வே மெயின்கேட் திறந்து விடப்பட்டு, கவுண்ட்டர் கேட்களும் போலீஸ் பந்தோபஸ்துடன் திறந்து விடப்பட்டு, கூட்டம் நிரம்பி வழிந்தது. கரண்ட் டிக்கட் கவுண்ட்டரில் நின்றவர்கள் கண்களில் 'டிக்கட் கிடைக்குமோ கிடைக்காதோ' என்ற பதைபதைப்பு தெரிந்தது.

போலீஸ் மட்டுமல்லாது மன்றத்தினரும் வெள்ளை சீருடையில் காங்கிரஸ் பேட்ஜும், மன்ற பேட்ஜும் அணிந்து கூட்ட்த்தினரை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். சீனியர் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருக்க, நாங்கள் அவர்கள் மத்தியில் நின்று, செய்திகளை கிரகித்துக்கொண்டிருந்தோம். காம்பவுண்டுக்குள் நிற்க இடமில்லாமல் நிறையப்பேர் 'கேட்'டுக்கு வெளியிலும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களில் பலர் ரிசர்வ் பண்ணியவர்களோ, அல்லது தற்போது கியூவில் நின்று டிக்கட் வாங்க வந்தவர்களோ அல்ல. (ஏனென்றால் இப்போது கவுண்ட்டரில் நிற்பவர்களுக்கே பாதிப்பேர்க்கு டிக்கட் கிடைப்பது கஷ்ட்டம். இருந்தும் நம்பிக்கையோடு நிற்கின்றனர்). மற்றவர்கள் அலப்பறையைக்காண வந்தவர்கள்.

ஐந்தேமுக்காலுக்கு அனைத்து வாசல்களும் அகலத்திறந்து வைக்கப்பட, மேட்னி முடிந்து ஜனத்திரள் வெளியே வந்தது. அனைவர் முகத்திலும் மகிழ்ச்சிப்பரவசம். 'படம் அட்டகாசம்பா', 'அண்ணன் பின்னியெடுத்துட்டார்', 'போய்ப்பாருங்க, பர்ஸ்ட் கிளாஸா இருக்கு' என்று ஒவ்வொருவரின் கமெண்ட்டும் நம்பிக்கையைத் தோற்றுவித்தது. ஒரு நாற்பதுபேர் அடங்கிய சிறு கூட்டம் 'அண்ணன் சிவாஜி வாழ்க' என்று கோஷமிட்டவாறு தியேட்டரிலிருந்து சாலைக்குச்சென்றனர். எங்களுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. அப்போது பாடம் பார்த்த ஒருவர், 'படம் ஆரம்பிச்சதும் ஏமாந்துறாதீங்க, நாங்கதான் ஏமாந்துட்டோம்' என்றதும் வெளியே நின்றவர் 'என்னய்யா சொல்றீங்க?' என்று கேட்க, 'ஆமாங்க படம் துவக்கத்தில் ப்ளாக் அண்ட் ஒயிட்ல கொஞ்ச நேரம் ஓடும். ஏமாந்துடாதீங்க. டைட்டில்லேருந்துதான் கலர் ஆரம்பிக்கும்' என்று சொல்லி மாலைக்காட்சி பார்க்க நின்றவர்களை உஷார் படுத்தினார்.

அப்போது பட்டுப்புடவையும் காங்கிரஸ் பேட்ஜும் அணிந்த சுமார் பத்துப்பணிரெண்டு கல்லூரி மாணவிகள் பரபரப்பாக வந்து தியேட்டர் உள்ளே சென்றனர். யார் அவர்கள், ஏன் உள்ளே போனார்கள் என்பது பின்னர்தான் தெரிந்தது. கரண்ட் டிக்கட் விற்பனை துவங்கியதும் ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஒரு பெண் நின்று கொண்டு தட்டில் இனிப்பு வைத்துக்கொண்டு உள்ளே சென்றவர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தனர். தியேட்டர் சிப்பந்தி டிக்கட் கிழிக்க, மாணவி அவருக்கு எதிரில் நின்று படம் பார்க்க வந்தவர்களை இன்முகத்தோடு 'வாங்க' என்றழைத்து இனிப்பு வழங்கிய காட்சி அருமையாக இருந்தது. அருகிலிருந்த ஒருவர், 'எல்லாம் நம்ம மன்ற ஏற்பாடு' என்றார்.

பார்த்து அதிசயித்துக்கொண்டே நாங்கள் ரிசர்வ் செய்திருந்த முதல் வகுப்பு பாலகனிக்குச்செல்ல, அங்கு இரண்டு பெண்கள் நின்று வரவேற்று இனிப்பு வழங்கினர். தியேட்டர் உள்ளே ஒரே ஆரவார இரைச்சல். அரங்கு நிறைந்ததும் படம் துவங்கியது. ஒருவர் உஷார் படுத்தியது போல படம் முதலில் கருப்பு வெள்ளையில் துவங்கி, ரயில் பாடல் முழுக்க அப்படியே ஓடியது. டைட்டில் துவங்கியதும் கலருக்கு மாறியது. டி.எம்.எஸ்ஸின் ஆலாபனையிலேயே டைட்டில் முடிந்து 'இயக்கம் பி.மாதவன்' என்ற எழுத்து மறைந்ததும் “மேயாத மான்” என்று தலையைத்திருப்பினார் பாருங்க. அவ்வளவுதான் தியேட்டரே அதகளமாகிவிட்டது. கைதட்டல்கள் என்ன, விசில்கள் என்ன, ஆரவாங்கள் என்ன, தியேட்டர் முழுக்க காகிதங்கள் பறந்தன. அப்போ பிடிச்ச 'டெம்போ'தான். படம் முடிகிற வரைக்கும் நிற்கவில்லையே. அதுவும் ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் இத்தகைய ஆரவாரம் ஏற்பட்டது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

'மதன மாளிகையில்' பாடல் துவங்கியதும் இன்னொரு அதிசயம். மன்றத்தினர் ஆங்காங்கே நின்றுகொண்டு மல்லிகை வாடையை பம்ப் மூலம் ஸ்ப்ரே பண்ணிக்கொண்டிருந்தனர். தியேட்டர் முழுக்க மல்லிகை வாடை கமகமத்தது. சூழ்நிலையே மனதை மயக்குவது போல இருந்தது.

படம் வருவதற்கு முன்பே 'அம்மம்மா தம்பியென்று' பாடல் பாப்புலராயிருந்தாலும் இவ்வளவு உணர்ச்சி மயமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. டேபிள் டென்னிஸ் பேட்டில் தாளம்போடத்துவங்கியதிலிருந்து பாடலின் ஒவ்வொரு வரிக்கும் கைதட்டல் பறந்தது. பாடல் முடிந்து பையைக்கையில் எடுத்துக்கொண்டு, துண்டால் வாயைப்பொத்தியவாறு செல்லும்போது, அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் வெடிக்க கைதட்டலால் கூரை தகர்ந்தது.

அதுபோல 'மதன மாளிகை'யும், 'இன்குலாப் ஜிந்தாபாத்' பாடலும் ரசிகர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. 'இன்குலாப்' பாடலின் ஒவ்வொரு வரியும் ரசிகர்களையும் பெருந்தலைவரின் தொண்டர்களையும் உணர்ச்சி வசப்படுத்த, அந்தப்பாடலிலும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை கைதட்டல். ஏனென்றால் அந்தப்பாடல் அப்போதுதான் எல்லோரும் முதன்முதலில் கேட்டனர். படம் பார்க்கும் முன் ‘இன்குலாப்’ பாடலைப்பற்றி எதுவுமே ரசிகர்களுக்குத் தெரியாது. (படம் வந்த பின்னும், வானொலியில் ஒளிபரப்ப தடைசெய்யப்பட்டிருந்தது ஏன் என்பது தெரியவில்லை. இப்போது தொலைக்காட்சிகளில் சர்வ சாதாரணமாக ஒளிபரப்பப் படுகிறது)

படம் முடிந்து வெளியே வரும்போது மனதுக்கு நிறைவாக இருந்தது. 'அண்ணனுக்கு இந்தப்படமும் வெற்றிதான்' என்று ரசிகர்கள் மகிழ்ச்சிக் கூச்சலிட்டுச்சென்றனர். மறுபுறம் காங்கிரஸ் இயக்கப்பெரியவர்கள் 'அவர் இறந்து போற மாதிரி முடிச்சது சரிதான். இல்லேன்னா தியாகத்தை எப்படிக் காட்ட முடியும்' என்று சர்டிபிகேட் வழங்கிப்பேசியவாறு சென்றனர்.

இதே மகிழ்ச்சியுடன் வீட்டில் போய்ப்படுத்தேன். வெகுநேரம் வரை தூக்கம் வரவில்லை. எப்படி வரும்..?.

vasudevan31355
21st December 2011, 12:19 PM
'கலாட்டா கல்யாணம்' படத்தில் நாகேஷ் அவர்களின் அத்தையாக வரும் நடிகை எஸ்.என். பார்வதி அவர்களின் காமெடி சீனை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. அதைப் பற்றிய அவருடைய நினைவுகள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-15.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-17.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/p.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

abkhlabhi
21st December 2011, 01:18 PM
சிதம்பர நினைவுகள் - பாலசந்திரன்சுள்ளிக்காடு
சிவாஜி பற்றிய கட்டுரைலிருந்து சில வரிகள் :


..................கூட வந்த நண்பர் சிவாஜியிடம் வீரபாண்டிய கட்டபொம்மனிலிருந்து ஒரு டயலாக் சொல்லக் கேட்க இப்படித் தொடர்கிறது :


“சிவாஜி கணேசன் சிறிது நேரம் கண்மூடி கைகூப்பி அமர்ந்திருந்தார். பிறகு மெதுவாகக் குனிந்து இடதுகையால் வேட்டியின் தலைப்பைப் பிடித்து மெதுவாக நிமிர்ந்தெழுந்து சட்டென விஸ்வரூபமெடுத்தது போலத் திரும்பி நின்றார். நாங்கள் மிரண்டு போனோம். உயரம் குறைவான வயதான எங்களிடம் இவ்வளவு நேரம் இயல்பாய் பேசிக்கொண்டிருந்த சிவாஜி கணேசனல்ல அது. மனித ஆத்மாவை நடுநடுங்க வைத்த வீர பாண்டிய கட்டபொம்மன் தான் அது. சூரியன் அஸ்தமம் ஆகாத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியான ஜாக்சன் துரைக்கு நேராக தமிழக வீர பௌருஷத்தின் சிங்க கர்ஜனை முழங்கியது…..

………ஒரு இளம் சூட்டினை லஜ்ஜையோடு நான் உணர்ந்தபோது தான் என்னுடைய உள்ளாடைகள் நனைந்தது எனக்குத் தெரிய வந்தது”

abkhlabhi
21st December 2011, 01:37 PM
சாதனையாளர்கள் பலரும் தவறி விழுவது பிள்ளைப் பாசத்தால் தான்.

ஆனால் அதிலும் நடிகர் திலகம் நடிப்பின் மீது அவருக்கிருந்த மரியாதையை நிரூபித்தார்.

தன் மகன் என்பதற்காக அவர் பிரபுவை தன் வாரிசாக மக்களிடம் திணிக்கவில்லை.

பிரபு ஒரு சமயம் ‘நான் எப்படி நடிக்கின்றேன்?” என்று கேட்டபோது “முதல்ல நீ தமிழை ஒழுங்காப் பேசு. அப்புறமா நடிக்கிறதைப் பத்திப் பார்க்கலாம்” என்று சொன்னவர் அவர். திறமையின் அடிப்படையில் கமலையே வாரிசாக ஏற்றுக்கொண்டார்.

நடிகர் திலகத்தின் நேர்மைக்கு இது ஒரு சான்றாகவும் அமைந்தது.

mr_karthik
21st December 2011, 05:05 PM
அன்புள்ள பம்மலார் சார்,

வான்புகழ் கொண்ட நடிகர்திலகத்தின் 'நீலவானம்' மற்றும் 'புதிய வானம்' திரைக்காவியங்களின் ஆவணப்பதிவுகள்....

நீலவானம் படப்பிடிப்புக்காட்சிகள்...

நடிகை மீனாவின் இதயத்தை நெகிழ வைக்கும் அனுபவப் பதிவு....

ராஜபார்ட் ரங்கதுரையின் 14 விதமான வித்தியாசமான கெட்-அப்புகளின் நிழற்படத்தொகுப்பு.....

என அனைத்துப்பதிவுகளுமே மிக மிக அருமை. அதெப்படி ராஜபார்ட்டின் நிழற்படங்கள் அனைத்தும் ஒரே அளவில் கிடைத்தன?. சூப்பர் சார்.

அசத்துங்கள்.

abkhlabhi
21st December 2011, 05:30 PM
ஒரு தமிழ் ஆன்லைன் புத்தக கடையில் , அதிகம் விற்பனையில் (vcd / dvd ) உள்ள மற்றும் என்றும் இனிமை படங்களின் வரிசையில் ஆறு படங்கள் உள்ளன.

அவற்றில் 5 படங்கள் நடிகர் திலகத்தின் படங்கள் :

பாகப்பிரிவினை ;
நெஞ்சம் மறப்பதில்லை;
தில்லான மோகனம்பாள்;
பாரத விலாஸ்;
திருவரூட்செல்வர் ;
கப்பலோட்டிய தமிழன்

mr_karthik
21st December 2011, 05:34 PM
அன்பு வாசுதேவன் சார்,

நடிகர்திலகத்தைப்பற்றி யார் என்ன சொல்லியிருந்தாலும் அந்த துணுக்குகளையும், ஏடுகளையும் இங்கே பதித்து விடுவது என்ற நோக்கோடு, நீங்கள் த்ந்திருக்கும்

வெண்ணிற ஆடை நிர்மலாவின் ஸ்டேட்மென்ட்
ஜமுனாவின் ஸ்டேட்மென்ட்
எஸ்.என்.பார்வதியின் ஸ்டேட்மென்ட் என்று சகட்டு மேனிக்கு பொழிந்து வருகிறீர்கள். அதுவும் அவர்களுடைய அபூர்வ புகைப்படங்களோடு.

பாராட்டுக்கள்.

sankara1970
21st December 2011, 09:39 PM
mr karthik
Nice write up-u have brought in front of eyes as if yesterday it happenned-i want to c the film now

pammalar
21st December 2011, 11:27 PM
டியர் பம்மலார், ராஜபார்ட் ரங்கதுரை, 14 வித கெட்டப்புகள் கலக்கல். நன்றி.

டியர் சந்திரசேகரன் சார்,

தங்களின் அன்பார்ந்த பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st December 2011, 11:29 PM
டியர் வாசுதேவன் சார்,

நடிகர் திலகம் பற்றி நடிகை ஜமுனா, நடிகை எஸ்.என்.பார்வதி ஆகியோர் கூறிய கருத்துக்கள் கனக்கச்சிதம் ! மிக்க நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
21st December 2011, 11:41 PM
'ராஜபார்ட் ரங்கதுரை' அவர்களின் ராஜாங்க அணிவகுப்பு. (நீள் ஆல்பம்)

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/1926_5_5.jpg

http://2.bp.blogspot.com/_qPk2Br_LLxU/TCAdJoVxvCI/AAAAAAAANZ0/USdL3AKz_Jg/s1600/1.png

http://img241.imageshack.us/img241/3021/rajapart01bd5.jpg

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/1926_5_1.jpg

http://2.bp.blogspot.com/_qPk2Br_LLxU/TCAdecESo1I/AAAAAAAANa0/o5yRZSDrI8g/s1600/3.png

http://img174.imageshack.us/img174/4489/rajapart04fu4.jpg

http://img406.imageshack.us/img406/2657/rajapart06ls7.jpg

http://img406.imageshack.us/img406/8232/rajapart03eb5.jpg

http://img244.imageshack.us/img244/9332/rajapart08yl4.jpg

http://www.shotpix.com/images/64324759488043946909.png


அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
21st December 2011, 11:50 PM
டியர் mr_karthik,

தங்களின் பாராட்டுக்கு முதற்கண் நன்றி !

தாங்கள் பதிவு செய்துள்ள "ராஜபார்ட் ரங்கதுரை" நினைவுகள் உண்மையிலேயே மெய்சிலிரிக்கும் அனுபவங்கள். நாங்கள் அனைவரும்,

"தங்களுடனேயே ஸ்ரீகிருஷ்ணா தியேட்டருக்கு வந்தோம். காட்சி தொடங்குவதற்கு முன்பாக நடைபெற்ற கொண்டாட்டங்களையும் கண்டு களித்து அக்கொண்டாட்டங்களில் நாங்களும் கலந்து இன்புற்றோம். மாலைக்காட்சியை தங்களோடும் தங்களது தோழர்களோடும் மிகுந்த ஆரவாரங்களுடன் பார்த்து மகிழ்ந்தோம். வீடு திரும்பிய பின்னர், இரவு வெகுநேரம், இம்மகிழ்ச்சியில் உறக்கம் வராமல் விழித்திருந்தோம்"

என்று சொல்லுமளவிற்கு தங்களது பசுமை நினைவுகள் பதிவு தத்ரூபம் ! தங்களுக்கு எனது பாசமான பாராட்டுக்களுடன் கூடிய பொன்னான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd December 2011, 05:55 AM
Demi-God's December Delicacies

ராஜபார்ட் ரங்கதுரை

[22.12.1973 - 22.12.2011] : 39வது ஜெயந்தி

பொக்கிஷாதி பொக்கிஷம்

'மதி ஒளி' வெளியிட்ட "ராஜபார்ட் ரங்கதுரை" சிறப்பு மலர்
மீண்டும் நமது அன்புள்ளங்களுக்காக...

ஒவ்வொரு பக்கமும் ஒரிஜினல் வடிவில்
[அதில் உள்ள ஏனைய பட விளம்பரங்களோடு, செய்திகளோடு]

இம்மலரை எனக்கு அன்புப்பரிசாக அளித்த அன்புள்ளம் திரு.ஜி.மாணிக்கவாசகம் அவர்களுக்கு எனது எண்ணிலடங்கா ஆத்மார்த்தமான நன்றிகள் !

வரலாற்று ஆவணம் : மதி ஒளி ["ராஜபார்ட் ரங்கதுரை" சிறப்பு மலர்] : 15.12.1973

[முகப்பு-பின் அட்டை தவிர 24 பக்கங்கள்]

முன் அட்டை
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMMA-1.jpg


முன் அட்டை உட்புறம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMMB-1.jpg


முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM1-1.jpg


இரண்டாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM2-1.jpg


மூன்றாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM3-1.jpg


நான்காம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM4-2.jpg



ஐந்தாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM5-1.jpg


ஆறாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM6-1.jpg


ஏழாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM7-1.jpg


எட்டாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM8-1.jpg

தொடர்ச்சி அடுத்த பதிவில்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
22nd December 2011, 05:59 AM
Demi-God's December Delicacies

ராஜபார்ட் ரங்கதுரை

[22.12.1973 - 22.12.2011] : 39வது ஜெயந்தி

பொக்கிஷாதி பொக்கிஷம்

'மதி ஒளி' வெளியிட்ட "ராஜபார்ட் ரங்கதுரை" சிறப்பு மலர்
மீண்டும் நமது அன்புள்ளங்களுக்காக...

ஒவ்வொரு பக்கமும் ஒரிஜினல் வடிவில்
[அதில் உள்ள ஏனைய பட விளம்பரங்களோடு, செய்திகளோடு]

இம்மலரை எனக்கு அன்புப்பரிசாக அளித்த அன்புள்ளம் திரு.ஜி.மாணிக்கவாசகம் அவர்களுக்கு எனது எண்ணிலடங்கா ஆத்மார்த்தமான நன்றிகள் !

வரலாற்று ஆவணம் : மதி ஒளி ["ராஜபார்ட் ரங்கதுரை" சிறப்பு மலர்] : 15.12.1973

[முகப்பு-பின் அட்டை தவிர 24 பக்கங்கள்] [தொடர்ச்சி...]

ஒன்பதாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM9-1.jpg


பத்தாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM10-1.jpg


பதினோறாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM11-1.jpg


பன்னிரெண்டு மற்றும் பதிமூன்றாம் பக்கங்கள்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM1213-1.jpg


பதினான்காம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM14-1.jpg


பதினைந்தாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM15-1.jpg


பதினாறாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM16-1.jpg


பதினேழாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM17-1.jpg


பதினெட்டாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM18-1.jpg


பத்தொன்பதாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM19-1.jpg

தொடர்ச்சி அடுத்த பதிவில்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
22nd December 2011, 06:03 AM
Demi-God's December Delicacies

ராஜபார்ட் ரங்கதுரை

[22.12.1973 - 22.12.2011] : 39வது ஜெயந்தி

பொக்கிஷாதி பொக்கிஷம்

'மதி ஒளி' வெளியிட்ட "ராஜபார்ட் ரங்கதுரை" சிறப்பு மலர்
மீண்டும் நமது அன்புள்ளங்களுக்காக...

ஒவ்வொரு பக்கமும் ஒரிஜினல் வடிவில்
[அதில் உள்ள ஏனைய பட விளம்பரங்களோடு, செய்திகளோடு]

இம்மலரை எனக்கு அன்புப்பரிசாக அளித்த அன்புள்ளம் திரு.ஜி.மாணிக்கவாசகம் அவர்களுக்கு எனது எண்ணிலடங்கா ஆத்மார்த்தமான நன்றிகள் !

வரலாற்று ஆவணம் : மதி ஒளி ["ராஜபார்ட் ரங்கதுரை" சிறப்பு மலர்] : 15.12.1973

[முகப்பு-பின் அட்டை தவிர 24 பக்கங்கள்] [தொடர்ச்சி...]

இருபதாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM20-1.jpg


இருபத்தோராம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM21-1.jpg


இருபத்திரண்டாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM22-1.jpg


இருபத்துமூன்றாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM23-1.jpg


இருபத்துநான்காம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMM24-1.jpg


பின் அட்டை உட்புறம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMMC-1.jpg


பின் அட்டை
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRMMD-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
22nd December 2011, 06:53 AM
'ராஜபார்ட் ரங்கதுரை' அவர்களின் ராஜாங்க அணிவகுப்பு தொடர்கிறது...

http://www.thehindu.com/multimedia/dynamic/00653/10fr_rajapart_jpg_653663e.jpg

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/1926_17_f.jpg

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/1926_5_2.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-10.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-9.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-18.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-18.jpg

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/1926_5_3.jpg

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/1926_5_4.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/i47426_RR03.png



அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
22nd December 2011, 06:59 AM
'ராஜபார்ட் ரங்கதுரை' DVD- அட்டை முகப்புகள் மற்றும் விவரங்கள்

http://www.moserbaerhomevideo.com/images/titleimages/large/DTAF0752S%20%20%20%20%20%20%20.jpg

http://600024.com/store/image/cache/data/moserbaer/Raja%20Part%20Rahga%20Durai-500x500.jpg

http://mytamildvd.com/wp-content/uploads/2011/10/rajapart-rangadurai.jpg

http://i56.tinypic.com/zilj4h.jpg

http://i54.tinypic.com/fmeqw.jpg

http://i56.tinypic.com/eiqwyx.jpg

http://i52.tinypic.com/5jz9yd.jpg

http://i54.tinypic.com/2md0yoo.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
22nd December 2011, 07:31 AM
http://www.shakthi.fm/album-covers/ta/55d6668e/cover_m.jpg

"மதன மாளிகையில்"...பாடல் காட்சிகள்.

http://hosting11.imagecross.com/image-hosting-50/9279rajapart2.jpg

https://lh6.googleusercontent.com/-rkKQv_u69RQ/TXNtLg9gaDI/AAAAAAAACZw/0DoEz_YFTXs/s1600/Rajapattu+Rangadurai_Madana+Maligayil_tamilhitsong s.blogspot.com.mkv_thumbs_%255B2011.03.06_16.46.10 %255D.jpg

http://2.bp.blogspot.com/_2I2hYF2DQtI/THJFB_FyJiI/AAAAAAAACBw/dMmH-0PyNI8/s1600/Rajapart+Rangadurai+_MADHANA+MALIGAI_tamilhitsongs .blogspot.com.VOB_thumbs_%5B2010.08.23_15.22.49%5D .jpg

"அம்மம்மா... தம்பி என்று நம்பி" பாடல் காட்சிகள்

https://lh6.googleusercontent.com/-OQ4Rx4i2Gvc/TXNtaX4VhzI/AAAAAAAACZ4/KiwP2DlVqUY/s1600/Rajpart+rangadurai_ammama+thambi_tamilhitsongs.blo gspot.com.mkv_thumbs_%255B2011.03.06_16.45.59%255D .jpg

"ஜிஞ்ஜினுக்கான் சின்னக்கிளி" பாடல் காட்சிகள்

https://lh6.googleusercontent.com/-2A1CiBXURMQ/TXNtS2yPesI/AAAAAAAACZ0/MbqAioD9Zes/s1600/Rajapattu+Rangadurai_chinna+killi_tamilhitsongs.bl ogspot.com.mkv_thumbs_%255B2011.03.06_16.46.22%255 D.jpg

'ராஜபார்ட் ரங்கதுரை' யின் துணைவர்கள்.

http://i304.photobucket.com/albums/nn195/sakthirohit/Private/snapshot20081221094042.jpg

http://i304.photobucket.com/albums/nn195/sakthirohit/Private/snapshot20081221093103.jpg

http://i304.photobucket.com/albums/nn195/sakthirohit/Private/snapshot20081221092145.jpg

http://i304.photobucket.com/albums/nn195/sakthirohit/Private/snapshot20081221092434.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
22nd December 2011, 07:35 AM
'ராஜபார்ட் ரங்கதுரை' சிறப்பு நிழற்படங்கள்

http://i56.tinypic.com/8yc4up.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-17.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
22nd December 2011, 07:44 AM
'ஹாம்லெட்' ஸ்பெஷல் புகைப்படம்

http://www.freewebs.com/pammalar/Rajapart1.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
22nd December 2011, 08:29 AM
ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் கிருஷ்ணா திரையரங்க அனுபவத்தை கார்த்திக் எப்படி உணர்ந்திருப்பார் என்பதை நமக்கு விஷுவலாக உணர்த்தி விட்டார்கள் வாசுதேவனும் பம்மலாரும்.
பாராட்டுக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு சென்று விட்டார்கள் இருவரும்.
இருந்தாலும் சம்பிரதாயத்திற்காக ஒரு
நன்றி...

நமது பதிவுகள் எந்த அளவிற்கு எதிர்கால சந்ததியினரிடம் நடிகர் திலகத்தைப் பற்றிக் கூறுகின்றன என்பதை நாம் அவ்வப்போது உணர்ந்து வருகிறோம். 30 வயது கூட இல்லாத ஒரு இளைஞர் நடிகர் திலகத்தைப் பற்றி தன் வலைப்பூவில் எழுதியுள்ளதைப் படியுங்கள்.

அதிலிருந்து ஒரு பகுதி


இந்தப் பதிவு திடீரென்று தான் எனக்கு எழுதத் தோன்றியது. காரணம், அக்டோபர் 1 மறைந்த நடிகர் திலகம் 'செவாலியே' சிவாஜி கணேசனின் 83 வது பிறந்த நாள். சிவாஜியின் பிறந்த நாள் என்று சொல்வதை விட,'மறைந்த நடிப்பிற்கு' பிறந்த நாள் என்று தான் நான் சொல்வேன். இந்த பதிவு அன்றே எழுதியிருக்கவேண்டும். அன்று பார்த்து ப்ளாக்கரில் எதோ கோளாறு போல. சிவாஜி கணேசன் மறையும் போது எனக்கு வயது 16. அந்த வயதிற்கு அது ஒரு நியூஸ். அதற்குப் பிறகுதான் சிவாஜியின் நடிப்பு எப்படிப்பட்டது? என்பதை அவரின் திரைப்படங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன்.

மேலும் படிக்க.. (http://oorkavalan.blogspot.com/2011/10/blog-post.html)

vasudevan31355
22nd December 2011, 10:04 AM
'ராஜபார்ட் ரங்கதுரை' யின் அற்புதமான பாடல்கள் (காணொளியாக)

"அம்மம்மா ...தம்பி என்று நம்பி"...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UKzNiwAHTIE

"ஜிஞ்ஜினுக்கான் சின்னக்கிளி"


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KnVcvvKcUWs

"மதன மாளிகையில்"...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=i6UeorX-aVo


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
22nd December 2011, 11:12 AM
அன்பு பம்மலார் சார்,

'நீலவானம்' ஷூட்டிங் ஸ்பாட் கன (காண) ஜோர். 'சினிமாக்கதிர்' நீலவானம் விளம்பரம் கதிர் போல ஒளிவீசுகிறது. 'ஹிந்து' விளம்பரம் அரிய ஒன்று.

'புதிய வானம்' விளம்பரங்கள் புதிய தலைமுறையும் ரசிக்கும்படி இருக்கிறது.

அந்த வானத்தைப் போல மனம் படைச்ச ஆவண மன்னவரே! நன்றி சொல்லவே எனக்கு வார்த்தை இல்லையே!

'ராஜபார்ட் ரங்கதுரை' மகா மெகா ஆல்பம் மகா மகா அற்புதம். பதினான்கு கலக்கல் கெட்டப்புகளும் ஈரேழு பதினாலு லோகங்களையும் ஈர்த்துவிடும். ஒவ்வென்றையும் வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆயுசு நூறு போதாது. கல்லடி பட்டாலும் கண்ணாடி படக்கூடாது என்பது முதுமொழி. ஆனால் நடிகர் திலகத்தின் கண்ணடி பட நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சொல்லாமல் சொல்கிறது தாங்கள் பதிந்த அந்த வேல வேடன். அதியற்புதம் அந்த நிழற்படம். பாராட்டுக்கள். (தங்களுக்கு கண்ணடி படப்போவது நிச்சயம்) பதினான்கும் பதினான்கு நவரத்தினங்கள்.

'நெஞ்சங்கள்' மீனாவின் பேட்டி நன்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு. அருமையான பதிவு.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல பொக்கிஷாதி பொக்கிஷமான 'மதிஒளி' ஆவணம் ராட்சஷப் பதிவு. 24 பக்கங்கள்...அடேயப்பா!...
படிக்கும் எங்களுக்கே மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறதே! பதிவு செய்த தங்கள் நிலை? நேற்று இரவு உங்களுக்கு சிவராத்திரிதானே? மறைக்காமல் சொல்லுங்கள். அத்தனையும் தங்கள் மூலம் எங்களுக்கும், இவ்வுலகிற்கும் கிடைப்பதற்கு நாங்கள் என்னென்ன புண்ணியம் செய்தோமோ தெரியவில்லை. அபார, அசுர உழைப்பு.

நல்லாட்சிக்கு ஒரு அசோகச் சக்கரவர்த்தி!

நல்லுழைப்பிற்கு ஒரு ஆவணச் சக்கரவர்த்தி!

நன்றி என்ற வார்த்தைக்கும் மேல் எத்தனை வார்த்தைகள் உள்ளதோ அத்தனையும் தங்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.

பிரமிப்பு அடங்காத,
வாசுதேவன்.

vasudevan31355
22nd December 2011, 11:46 AM
அன்பு கார்த்திக் சார்.

வாவ்!.. ராஜபார்ட் ரங்கதுரை பற்றிய தங்களது ரிலீஸ் தினத்தன்றைய நினைவலைகள் எங்களை எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்து விட்டன. அன்றைய நிகழ்வுகளை அப்படியே அழகாகப் படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள். கட்டுரையின் சுவாரஸ்யத்திற்கு குறைவே இல்லை. ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அருமையாக வடிக்கப்பட்ட கட்டுரைப் பதிவிற்கு என்னுடய ஆனந்தமான நன்றிகள் சார்.

காங்கிரஸ்காரர்களுக்காக நம் அருமை அண்ணன் பட்டபாட்டை அவர்கள் எந்தக் காலத்திலும் நன்றியோடு நினைத்துப் பார்க்கப் போவதில்லை. அதற்கான பலனை அவர்கள் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அனுபவிக்கவும் போகிறார்கள். வேறு என்ன சொல்ல இருக்கிறது?

'ராஜபார்ட் ரங்கதுரை' ரிலீசன்று கடலூர் நியூசினிமா திரையரங்கில் அந்த ஜன வெள்ளத்தில் சிக்குண்டு, திக்கித் திணறி எப்படியோ டிக்கட் எடுத்து முன்னால் திரை மேடையில் மட்டுமே இடம் கிடைக்க, அங்கே அமர்ந்து (திரைக்கு அருகில் தீ அணைக்கும் வாளி ஒன்றில் மணல் போட்டு வைத்திருப்பார்கள்... அந்த இடத்தில் அமர்ந்திருந்தேன்) எல்லோர் உருவங்களும் மிகப் பிரம்மாண்டமாகத் தெரிய கழுத்துவலியோடு அண்ணாந்து தலைவரை பார்த்துப் பார்த்து கைதட்டியது பசுமையாக நினைவில் உள்ளது. நீங்கள் சொன்னது போல காங்கிரஸின் மூவண்ணக் கொடிகளால் தியேட்டர் முகப்பே தெரியவில்லை. 'கொடி காத்த சிவாஜி' அவர்களின் கையில் சுதந்திரக் கொடிக்கு பதிலாக காங்கிரஸ் கொடி. ம்... பம்மலார் கூறியது போல் 'என்னத்தச் சொல்ல! என்னத்தச் செய்ய'!

தங்களுடைய அன்புப் பாராட்டுதல்களுக்கும் சேர்த்து நன்றி சொல்லக் கடமைப் பட்டவன் ஆகிறேன்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
22nd December 2011, 11:54 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்கள் அன்பு பொழிந்த பாராட்டுக்கு அளவில்லா நன்றிகள். முப்பது வயது இளைஞன் ஆகட்டும்...மூன்று வயது குழந்தை ஆகட்டும்...யார் நடிகர் திலகத்தைப் பற்றிப் புகழ்ந்தாலும் அதை தேடித் பிடித்து வெளிக்கொணரும் தங்களுக்கு இணை தாங்கள்தான்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
22nd December 2011, 11:59 AM
வித்தியாசமான 'நறுக்' பதிவுகளைத் தரும் பாலா சாருக்கு நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
22nd December 2011, 01:02 PM
டியர் பம்மலார்,மதிஒளியில் வெளியான ராஜபார்ட் ரங்கதுரை பற்றிய சிறப்பு செய்திகள் (அடேங்கப்பா 24 பக்கங்கள்) முழுமையாக வெளியிட்டு அசத்தியுள்ளீர்கள். தங்களின் அசுர / அசரா முயற்சிக்கு அன்பான வாழ்த்துக்கள், நன்றிகள்.

KCSHEKAR
22nd December 2011, 01:04 PM
டியர் வாசுதேவன் சார், தங்களின் ராஜபார்ட் ரங்கதுரை நிழற்பட அணிவகுப்பு, பாடல் காட்சிகள் இணைப்பு வழக்கம்போல அருமை.

KCSHEKAR
22nd December 2011, 01:13 PM
டியர் கார்த்திக் சார், தங்களின் ராஜபார்ட் ரங்கதுரை நினைவலைகள் அருமை. தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் நிகழ்ச்சிகளை நேர்முக வர்ண்ணையாகக் கேட்ட மாதிரியான அனுபவத்தினை உங்களின் எழுத்து தருகிறது. பட வெளியீட்டு தினத்திற்கே எங்களையும் அழைத்துச் சென்றுவிட்டீர்கள். நன்றி.

KCSHEKAR
22nd December 2011, 01:20 PM
டியர் ராகவேந்திரன் சார்,
முப்பது வயது இளைஞன் ஆகட்டும்...மூன்று வயது குழந்தை ஆகட்டும்...யார் நடிகர் திலகத்தைப் பற்றிப் புகழ்ந்தாலும் அதை தேடித் பிடித்து வெளிக்கொணரும் தங்களுக்கு இணை தாங்கள்தான்.


Thanks

mr_karthik
22nd December 2011, 04:14 PM
அன்புள்ள பம்மலார் சார்,

தங்கள் பாராட்டுக்கு நன்றி. பதிவின் நீளம் கருதி அன்றைய கொண்டாட்டங்களின் விவரிப்பை பெருமளவு சுருக்கி விட்டேன். பாடல் காட்சிகளில் மட்டுமல்லாது வசனக்காட்சிகளிலும் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்கள், கைதட்டல்கள். நடிகர்திலகத்தின் மற்றைய படங்கள் போலல்லாது இதில் பொடிவைத்த வசனங்கள் அதிகம். அவை ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்குக்கொண்டு சென்றன.

குறிப்பாக சொன்னால், ராமதாஸிடம் "இது பனங்காட்டு நரி, உன் சலசலப்புக்கு அஞ்சுமா?"

கொடிகாத்த குமரன் நாடகத்தில் போலீஸாரிடம், "கூடிய சீக்கிரமே கோட்டையிலே எங்கள் மூவண்ணக்கொடி பட்டொளி வீசிப்பறக்கத்தான் போகிறது. அப்போது இதே கைகள் எங்களுக்கும் வெண்சாமரம் வீசத்தான் போகின்றன".

ஆர்மோனியத்தை அடகு வாங்க மறுக்கும் அடகுக்காரர் சொல்லும் வசனம் "உன்னை கோடி ரூபாய்க்கு மதிக்கிறேன்யா, எதுக்கு? உன்கிட்ட இருக்கிற நடிப்புக்கு"

இப்படி படம் நெடுக நிறைய இடங்கள். பாடல்களில் கண்ணதாசனும், வசனங்களில் பாலமுருகனும் ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட தீனி போட்டனர். ரசிகர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றனர். இப்படியொரு படத்தை எடுத்ததற்கு குகநாதன் காலம் முழுக்க பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

'ராஜபார்ட் ரங்கதுரை' மேளாவை அருமையாகத் துவக்கியிருக்கும் தங்களுக்கு பாராட்டுக்கள். 'மதிஒளி' சிறப்பு மலர் முழுமையும் அப்படியே அனைவரது கைகளிலும் தவழ விட்டதற்கு மிக்க நன்றி. அனைத்துப்பக்கங்களையும் ஸ்கேன் செய்வதும் அவற்றை போஸ்ட் செய்வதும் சாமானிய காரியமா?.

ஒவ்வொரு பக்கத்தையும் படிக்க, படிக்க மனம் அப்படியே 1973-க்குப் பயணிக்கிறது. அன்றைய இனிய நினைவுகள் அப்படியே மனதில் வந்து சூழ்கின்றன. டிவி, வீடியோ கேஸட், சிடி, டிவிடி போன்ற 'திரைப்பட சத்ருக்கள்' இல்லாத, (திரைப்படங்களை தியேட்டர்களில் மட்டுமே பார்த்து வந்த) அந்த பொற்கால நினைவுகள்தான் எத்தனை இனிமையானவை.

'மதிஒளி' இதழின் ஒவ்வொரு பக்கமும் மனதை ப்ரட்டிப்போடுகின்றன. இந்த இனிய அனுபவத்தை எங்களுக்குத்தர நீங்கள் எடுத்துக்கொள்ளும் சிரமம் என்னவென்பதை உணர முடிகிறது. ராகவேந்தர் சார் சொன்னது போல, வெறும் சம்பிரதாய நன்றிகள் சொல்ல முடிஉம். ஆனால் உங்கள் சேவை நன்றிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது.

உங்கள் ஆவணப்பொக்கிஷ மழையைப்பார்த்து, மலைத்து நிற்பதைத்தவிர வேறொன்றும் எங்களுக்குத் தோன்றவில்லை.

abkhlabhi
22nd December 2011, 04:38 PM
தினகுரல் 29.07.2001

சிவாஜி கணேசனுக்கு பிரியாவிடை கூறல் (கார்த்திகேசு சிவத்தம்பி)
`````````````````````````````````````````````````` `````
ஒரு பண்பாட்டாய்வியற் குறிப்பு

சிவாஜிகணேசன் மறைந்து விட்டார் என்ற செய்தி தொலைக்காட்சி வழியாக வந்தபொழுது (21.07.2001) அது தமிழகத்தின் கடந்த மாத காலத்தின் அசாதாரண நிகழ்வுகள் பற்றிய நினைப்புகளுக்குள் அமிழ்ந்து விடும் போலவே இருந்தது.

ஆனால், வந்த நிகழ்ச்சிகள் அப்படி அமையவில்லை. மரணம் இயற்கை மரணம் என்றாலும், இழப்பு திடீரென வந்தது போலவும், அந்த இழப்பு சின்னதொன்றல்ல, மிகப் பெரியது, முழுத் தமிழகம் தழுவியது என்ற தொனியில் ஊடகங்கள் எடுத்துரைக்கத் தொடங்க அந்த எடுத்துரைப்பு தமிழுணர்வில் படியத் தொடங்க, அந்த மனிதன் மறைவுக்குள் தமிழ்ப் பண்பாட்டின் 'இனங்காணல்கள்' சில தொக்கி நிற்கின்றன என்பது புரியத் தொடங்கியது.

அரசியல் தன்னை ஒதுக்கியது கண்டு ஒதுங்கிப் போய் தன் நடிப்பும் தானும் என்றிருந்த சிவாஜிகணேசனுக்கு இறுதி மரியாதையாக வீரர்களுக்கு வழங்கப்படும் இறுதி கெளரவம் (துவக்குவேட்டு மரியாதை, 'லாஸ்ற்போஸற்' இசைப்பு) வழங்கப்பட்டது. சோகம் தமிழகத்தையும் தமிழ் பேசும் உலகத்தையும் தாண்டியது. அனைத்திந்திய சோகம் ஆயிற்று.

சென்னையில் நடந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத வெளிமாவட்டத்தினர் தங்கள் தங்கள் மாவட்ட நகரங்களில் இறுதிமரியாதைச் சடங்குகளை மீளுருப்படுத்திக் கொண்டாடினர். பெண்கள் அழுதனர். ஆண்கள் மொட்டை அடித்தனர்.

உண்மையான ஆச்சரியம் என்னவென்றால் இந்த உணர்வு வெளிப்பாடுகள், போலியானவையாக இருக்கவில்லை. சினிமாத்தனம் என்று சொல்வோமே அந்தப் பண்பினவாக இருக்கவில்லை.

இந்த 'நிகழ்ச்சி' (நிகழ்வு அல்ல) தமிழ்நாட்டின் பண்பாட்டுச் சமூகவியலில் ஈடுபாடு கொண்டுள்ளவர்கள் ஆய்வுக்கான ஒன்றாகும்.

அரசியற் பலமும், சமூக அதிகாரமும் இல்லாதிருந்த சிவாஜிகணேசனுக்கு இத்தகைய நெஞ்சுருக்கும் இறுதி மரியாதை ஏன் கிடைத்தது என்பது ஒரு முக்கியமான வினாவாகும்.

அதற்கான விடை காணும் பணியினை மேற்கொள்வதற்கு முதல் இந்த நிலைமையை உருவாக்கியது ஊடகத் தொழிற்பாடு தான் என்பதை மறுக்கமுடியாது. தொலைக்காட்சி அலைவழிகளும் வானொலிச் சேவைகளும் சிவாஜிகணேசன் எதனைச் 'சுட்டி' நின்றார் என்பதை மீளமீளச் சொல்லின. இவையாவற்றையும் தொகுத்துக் கூறுவது போல் அமைந்தது, சன் தொலைக்காட்சியினர் அளித்த ஒரு ஒன்றரை நிமிட நேர சிவாஜித் தொகுப்பு. சிவாஜி நடித்த பிரதான பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் ஒன்று மாறி ஒன்றாக நம் கண்முன்னேயோட விட்டனர்.

அப்பொழுது தான் அந்த உண்மை பளிச்சிட்டது.

தமிழகத்திலும், தமிழ் பேசும் நாடுகளிலும், தமிழுணர்வு, தமிழ் பாரம்பரியம் பற்றிய சிரத்தை சமூக அரசியற் பிரக்ஞையில் முக்கிய இடம் வகித்த இருபதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தமிழர் தொன்மைகளிலும், வரலாற்றிலும் முக்கிய இடம் பெறும் பலரை 'மீள் உருவப்படுத்தியவர்' சிவாஜிகணேசனே.

காப்பிய பாத்திரங்கள் - கர்ணன், பரதன்; சமய பாத்திரங்கள் - அப்பர்; அரசியற் பாத்திரங்கள் - இராஜராஜன், கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார்.

சிவாஜியின் ஆளுமைக் கூடாகவே நாம் இந்தப் பாத்திரங்களைக் கண்டோம். அவர்களை மனிதர்களாகச் சந்தித்தோம்.

தமிழ்ப் பண்பாட்டு உணர்வு விருத்தியில் இந்த 'மீள் உருவாக்கம்' மிகமிக முக்கியமாக அமைந்தது. இந்த உருவாக்கங்களுக்கான அரசியல் இலாபத்தைப் பெறும் ஆற்றல் விழுப்புரம் சின்னையா கணேசனிடத் திலிருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அந்த நடிகன் மூலமாகவே நாம் தமிழனின் அசாதாரணத் திறன்களைக் கற்பனை செய்தோம், கண்முன் நிறுத்தினோம்.

அந்த வகையில் சிவாஜி தமிழ்ப் பண்பாட்டின் 'உருவத் திருமேனிகளில்' ஒன்றாகிறார்.

சிவாஜி பற்றிய ஊடக மீள நோக்குகள் தமிழ் சினிமா மூலம் நாம் பெற்றுக் கொண்ட 'உணர்வு அகற்சி'களை காட்சிப்படுத்திய - காணபியப்படுத்திய கலைஞனை, அவன் திறனை முதனிலைப்படுத்தின.

அந்த உணர்வின் படிப்படியான ஆழப்பாடுதான் சிவாஜியின் செயற்பாடு மூலம் நாம் எவ்வகை உருவாக்கங்களைப் பெற்றோம் என்பதை வெளிப்படுத்தத் தொடங்கிற்று.

சிவாஜியின் பாத்திரங்கள் பற்றிய சிந்தனை சமகாலத் தமிழ்ப் பண்பாட்டின், அந்த பண்பாட்டின் வாழ்வியலில், ஆள்நிலை உறவுகளில், சமூக அலகு உறவுகளில், குறிப்பாக குடும்ப உறவுகளில் எவையெவை மோதுகை அம்சங்களாக அமைகின்றன என்பது பற்றிய உணர்வை வலுப்படுத்தும்.

நாடகத்தின் - அரங்கின் - பிரதான பயன்பாடுகளில் ஒன்று மனிதர்களை அவர்களின் மோதுகை நிலையிலே காட்டுவது தான். இது நாடகம் (அரங்கு) பற்றிய உலகப் பொதுவான விதி. அரங்கின் விஸ்தரிப்பாக அமைந்த சினிமாவும் இந்த மோதுகைகளை மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.

தமிழ் நிலையில் இந்த மோதுகைகளை சிவாஜிகணேசனைப் போன்று எவரும் சித்தரிக்கவில்லை. பாத்திரத் தொகையிலும், சித்தரிப்பு ஆழத்திலும் சிவாஜியின் சாதனை மிகப் பெரியது.

மிக மேலோட்டமாகப் பார்த்தாலே இந்த உண்மை புலனாகும். பாசமலர், படிக்காத மேதை, பாகப்பிரிவினை, மங்கையர் திலகம், தங்கப்பதக்கம், வசந்தமாளிகை, முதல்மரியாதை, தேவர் மகன் முதலிய திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரங்களின் (சிவாஜி சித்தரித்தவை) மோதுகை நிலைகளைப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு புலப்படும். இந்த அம்சத்தைப் பற்றி சற்று உன்னிப்பாக ஆராய முனையும் பொழுதுதான், சிவாஜியின் நடிப்பு வரலாற்றின் ஒரு முக்கிய உண்மை தெரியவரும். சிவாஜி சித்தரித்த பாத்திரங்கள் பெரும்பாலும் (ஏறத்தாழ எல்லாமே) இந்த மோதுகைகளின் 'பாடு'களை தாங்குகின்றனவாக - துன்பத்தையேற்றுக் கொள்கின்றனவாக அமைந்தன என்பது தெரியும்.

சிவாஜிகணேசன் பற்றிய நினைவுகள் நமக்கு, நமது பண்பாட்டு வட்டத்து வாழ்வியலின் 'மனிதத்துவப் பாடுகளை', 'மனித நிலை சோகங்களை' எடுத்துக் காட்டுகின்றனவாக அமையும்.

சிவாஜிகணேசனுக்குள் இருந்த நடிப்புத் திறன் பிறர் இன்ப, துன்பங்களை தன் உணர்வு நிலைக்குள் உள்வாங்கிச் சித்தரிப்பவன் - இந்த மனித மோதுகைச் சித்தரிப்புக்கான தேடலை ஊக்குவித்தது.

'நடிகனுக்கான சவால்' என்பது இந்தச் சித்தரிப்புக்குள் தான். தனது இந்தப் பணி நன்கு நிறைவேறுவதற்கு அந்த நடிகரோடு 'ஊடாடும்' மற்றைய பாத்திரம் முக்கியமாகும். இதனால், சிவாஜியோடு நடிக்கும் நடிகையர், துணைப் பாத்திரங்கள் மிக முக்கியமாகினர். தான் மதித்த நடிகையர் என பானுமதி, பத்மினி, சாவித்திரியின் பெயர்களை சிவாஜிகணேசன் எடுத்துக் கூறியுள்ளார். (இலங்கை வானொலி 22.07.2001 அன்று இ.தயானந்தா அளித்த நினைவு நிகழ்ச்சி) சிவாஜிகணேசன் 'சுட்டி'நிற்கும் பண்பாட்டுத் தொழிற்பாடுகளைப பற்றி ஆராயும் பொழுது தான் சிவாஜிகணேசனின் சினிமா வருகையும், அதன் பின்புலமும் உற்றுநோக்கப்பட வேண்டியவையாகின்றன.

தமிழ்த் திரையுலகத்தின் 'அமர' கதாநாயகன் சிவாஜி ஒருவர் தான் என்று கூறவே முடியாது. அவர் காலத்து வாழ்ந்த மதனபள்ளி கோபால் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) முக்கியமானவர். எம்ஜிஆர் தமிழ் சினிமாவை பயன்படுத்தியது போலச் சிவாஜியால் பயன்படுத்த முடியவில்லை. வளப்படுத்தியதுடன நின்று விடவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இங்கு முக்கியமாக பார்க்க வேண்டுவது, சிவாஜியின் சமகாலத்தவர்களிலும் பார்க்க, சிவாஜியின் வருகைக்கு முன்னர் இருந்தவர்களே.

தியாகராஜ பாகவதருக்குச் சிவாஜியை விட கவர்ச்சி இருந்தது. கே.ஆர். ராமசாமி 'வேலைக்காரி' மூலம் மிகப் பெரிய புகழை ஈட்டியிருந்தார். சிவாஜிக்கு முன்னர் வந்தவர்களுக்கும் சிவாஜிக்குமிருந்த முக்கிய வேறுபாடு, அவர்கள் பிரதானமாக பாடகர்களே (பாடகர்கள் அல்லாதவர்கள் பிரசித்தமடைவது 1950 களின் பின்னரே - எம்ஜிஆர், ஜெமினிகணேசன் முதலியோர்) சிவாஜி உச்சரிப்புச் செம்மையையே தனது பிரதான ஆஸ்தியாகக் கொண்டிருந்தார்.

சிவாஜியின் நடிப்பு அங்க அசைவுகளில் மாத்திரம் நம்பியிருக்கவில்லை. அது 'சொற் சீரமை'யிலும் தங்கியிருந்தது.

இந்தச் சொற் சீரமை ஓர் அரசியல் பின்புலத்தோடு வந்தது. அண்ணாதுரை, கருணாநிதி தமிழ்நாட்டின் அரசியல் மேடையையும், அரங்கையும், சினிமாவையும், தமது சொற்பொழிவு முறையாலும், எழுத்து முறையாலும் மாற்றிய காலம் அது. அரங்கில் பாட்டுப் போய் வசனம் முக்கியமான காலம். கதையிலும் பார்க்க வசனத்துக்கு முக்கியத்துவம் வரத்தொடங்கிய காலம்.

சினிமாவுக்குள் இந்தப் போக்கை ஸ்திரப்படுத்திய பாரசக்தி மூலம் சிவாஜிகணேசன் அறிமுகமானார். தமிழ்ச் சினிமாவில் நடிப்பு, இப்படத்துடன் ஒரு புதிய பரிமாணத்தை பெறுகின்றனது.

சிவாஜிகணேசனின் இந்த வருகை இவரை மற்றச் சினிமா நாயகர்களிலிருந்து வேறுபடுத்துகின்றது.

தமிழ்ச் சினிமாவுக்கான நடிப்புக் கலைஞர் வருகை ஸ்பெர்ல் நாடக மரபு வழியாகவே நிகழ்ந்தது. இதனால், ஆரம்ப காலத் தமிழ்ச் சினிமா அமைப்பிலும், எடுத்துரைப்பிலும் அந்த நாடக அரங்கின் இயல்புகளையே கொண்டிருந்தது.

சிவாஜிகணேசனின் நடிப்பு முறைமை இந்திய நாடக மரபின் 'நாட்டிய தர்ம'முறை வழியாக வருவது (இது பற்றி மூன்றாவது மனிதன் ஜூலை இதழில் வந்த எனது கட்டுரையைப் பார்க்கவும்) சிவாஜிகணேசன் 'நாடக வழக்கு'க்கான ஆற்றுகையை தெருக்கூத்து மரபுக்குரிய 'அகல்வீச்சு' ஆங்கில வழியாகச் செய்தார்.

அப்படித் தொடங்கியவர் பின்னர் படிப்படியாக சினிமா என்ற ஊடகத்தின் தனித்துவமான 'காமரா வழிப்பார்வை எடுத்துரைப்பு' என்ற அம்சத்தினால் உள்வாங்கப்பட்டு அதற்குரிய நடிப்பிலே கவனம் செலுத்தத் தொடங்குகிறார்.

நடிகர் முதன்மைக்குப் பழக்கப்பட்டுப் போன தமிழ் சினிமா படிப்படியாக 'டைரக்டர் முதன்மை'க்கு வரத்தொடங்கியது. இந்த மாற்றத்தில் பாலச்சந்தர் பெயர் பெரிதும் அடிபட்டாலும் உண்மையில் கட்புலநிலை, நின்று நோக்கும் பொழுது தமிழ்ச் சினிமாவின் தமிழ் மண்வாசனை பாரதிராஜாவுடனேயே முனைப்புப் பெறுகின்றது.

பாலச்சந்தர், பாரதிராஜா வருகைக்கு முன்னர் எம்ஜிஆர், சிவாஜி 'கோலோச்சி' நின்ற காலத்தில் படப்பிடிப்பின் பொழுது கமராவின் அசைவியக்கத்தையும், கோணங்களையும் இந்தப் பெரும் நடிகர்களே தீர்மானித்தார்களாம். (இது பற்றி சத்யஜித்ரே கூட ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்) அந்த அமைப்பு 'மேடைத்தன்மை' யானதாக விருந்தது.

நெறியாளர்கள் முக்கியமாகத் தொடங்க சிவாஜியின் நடிப்பில் புதிய ஒரு விகசிப்பு ஏற்படுகின்றது. 'முதல் மரியாதை' சிவாஜியின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

நாடக மரபின் சிசுவாக இருந்த சிவாஜிகணேசன், சினிமாவுக்கேற்ற நடிப்பின் விற்பன்னராகினார். சிவாஜியின் சினிமா வாழ்க்கை தமிழ்ச் சினிமாவின் இந்த வரலாற்றுக் கட்டத்தை எடுத்துக் காட்டுகின்றது.

சினிமா படிமங்களின் கலை - அசையும் படிமங்களின் கலை. அதனால்தான் அதை 'மோர்ன் பிக்சர்' (அசையும் படம்) என்பர்.

சமகால ஊடக உலகின் படிமத் தயாரிப்பில் சினிமாவுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. உலக நிலையில் தொழிற்பட்ட இந்த உண்மை தமிழ்ப் பண்பாட்டினுள்ளும், தமிழ்ச் சினிமாவின் ஊடாகத் தொழிற்படத் தொடங்கியது.

பணபாட்டுப் பிரக்ஞை பிரதானப்படத்தொடங்கிய சமூக அரசியற் சூழலில் அதற்கான ஆள்நிலைப் படிமங்களும் தோன்றின. அந்த நடைமுறையில் தனது சித்தரிப்பு திறனாலும், பல்வேறு பாத்திரத் தேர்வினாலும், நமது பண்பாட்டு வாழ்வியலின் ஒரு 'உருவத்திருமேனி'யாக சிவாஜிகணேசன் என்ற வி.சி. கணேசன் திகழ்ந்தார்.

அவர் மறைவுதான் அவரின் பாரிய படிம வாக்க முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்திற்று.

தமிழ்ப் பண்பாட்டில் நாடக ஆற்றுகையாளர்களை விதந்து கூறும் பண்பு நவீன காலத்திலேயே ஆரம்பிக்கின்றது. இவர்களின் பங்களிப்பு தமிழ்ப் பண்பாட்டின் நவீன கால இயக்கத்துக்கு முக்கியமாகிற்று. என்.எஸ். கிருஷ்ணன் எம்.ஜி. இராமச்சந்திரன் என வரும் அப்பட்டியலில் சிவாஜிகணேசனுக்கு நிரந்தரமான இடமுண்டு.

abkhlabhi
22nd December 2011, 05:19 PM
நன்றி "அன்புடன் புகாரி"

அன்புடன் புகாரி எழுதியது :

எங்கள் கலைக்கூடம் கலைந்தது

ஜூலை 21, 2001

காற்று, ஓர் உன்னத தமிழனின் மூச்சுக்கு நிராகரிக்கப்பட்டு தன் புனிதம் கெட்டது.

தமிழ் மொழிபோல் இனிதாவது வேறெங்கும் காணோம் என்று பாரதி சொன்னான்.

அதை நிரூபிக்கும் சான்றுகளாய், தன் உயிர் சொட்டும் உச்சரிப்பால்,

நம் செவிகளையெல்லாம் தலையாட்ட வைத்த நடிகர் திலகம் இன்று மறைந்தார்.

கட்டபொம்மனாகட்டும் அல்லது அந்தக் கடவுளாகட்டும் அவர் காட்டாமல் எந்தப்
பாமரனுக்கும் தெரியாது. நகமும் முடியும்கூட நடிப்பை உருக்கி உணர்வுகளை
வார்க்க, பொய்யான திரைக்குள், நிஜத்தைக் காட்டி தமிழ் சினிமாவுக்குக்
கிரீடம் சூட்டிய பத்மஸ்ரீ இன்று மறைந்தார்.

எப்படி கர்ஜிப்பது என்று சிங்கங்களுக்கு வகுப்பெடுக்கும் குரல்
சக்கரவர்த்தி. பாசமலர் பார்த்தால், நமக்கெல்லாம் சகோதரனாவார். புதிய
பறவை பார்த்தால், 'எங்கே நிம்மதி' என்று நம்மையும் அலையவைப்பார். பார்க்க
வந்தவர்களையும் பாத்திரங்களாக்கி வென்ற செவாலியர் சிவாஜி இன்று
மறைந்தார்.

நடிப்பின் அகராதி, மூன்றாம் தமிழின் ஒப்பற்ற கலைக் களஞ்சியம், இப்படி
மறைந்துவிட்டார், மறைந்துவிட்டார் என்று கூறுவது சரியா கலைஞர்கள்
மறைவதில்லை.

கலைஞர்களையே உருவாக்கும் பிரம்மக் கலைஞருக்கு ஏது மறைவு

abkhlabhi
22nd December 2011, 05:21 PM
நன்றி "அன்புடன் புகாரி"

அன்புடன் புகாரி எழுதியது :

தீந்தமிழ்ச் சாறெடுத்து
தித்திக்கும் தேன்குழைத்து
பாந்தமாய்ப் பேசியாடி
பலகோடி மக்கள் நெஞ்சில்

வேந்தனாய் பவனிவந்த
வெற்றித்திலகமே தமிழனே
ஏந்தினாய் தீபமொன்று
எந்நாளும் அணையுமோ

தவமெனப் பெற்றாளே
தமிழன்னை உனையிங்கே
எவருண்டு உன்நடிப்பை
எள்ளளவும் நகலெடுக்க

சிவனே என்றாலும்
சிவாஜி நீ காட்டாது
நவரசக் கலைஞனே
நானிலந்தான் அறியுமோ

நடையெனில் ஒருநூறு
நகைப்பெனில் நானூறு
புடைக்கின்ற நரம்புகளில்
புவியையே அளந்தவன்

தடையற்ற வெள்ளமெனத்
தமிழ்ச்சொல் வீசியே
படையெடுத்து நின்றவுன்
பார்புகழ் அழியுமோ

இனிதெனில் தமிழேயென
ஈடற்ற மாகவியும்
பனிமலர்த் தூவியே
போற்றினான் செந்தமிழை

தனியனாய் நின்றதனை
தங்கக் குரலெடுத்து
இனியது தமிழேயென
வழிமொழிந்தத் திலகமே

நுண்மதி மாந்தர்கட்கும்
நடிப்பையா காட்டினாய்
வண்ணத்திரையில் நீ
வாழ்க்கையன்றோ காட்டினாய்

சின்ன அசைவினிலும்
பொன்னென மின்னினாய்
இன்னுமோர் நடிகனும்
இனியில்லை என்றானாய்

மூன்றாம் தமிழ்வளர்த்த
முதன்மைக் களஞ்சியமே
ஆன்றோர் வியந்துவக்கும்
அகராதி நீதானே

வான்தொடு உயரத்தில்
வெற்றித் திருச்சுடர் நீ
தேன்வளர் திரைக்கலைஞர்
தேடும் பொற்கனா நீ

சிங்கங்கள் அணிவகுக்கும்
சிம்மக்குரல் கேட்க
அங்கங்கள் சிலிர்க்குமெந்த
அரசவைப் புலவர்கட்கும்

மங்கா புகழ்வென்றாய்
மறையா நிலைபெற்றாய்
எங்கெலாம் கலையுண்டோ
அங்கெலாம் சிரிக்கின்றாய்

கண்ணீர் பொங்குதய்யா
காலனுனைக் கவர்ந்தானே
வெந்நீர் விழுந்தமலர்
வேதனையில் துடிக்குதய்யா

உன்னதக் கலைஞர்களை
உருவாக்கும் பிரம்மனே
உன்புகழ் வாழ்க வாழ்க
உனக்கென்றும் மரணமில்லை

J.Radhakrishnan
22nd December 2011, 11:14 PM
//எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல பொக்கிஷாதி பொக்கிஷமான 'மதிஒளி' ஆவணம் ராட்சஷப் பதிவு. 24 பக்கங்கள்...அடேயப்பா!...
படிக்கும் எங்களுக்கே மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறதே! பதிவு செய்த தங்கள் நிலை? நேற்று இரவு உங்களுக்கு சிவராத்திரிதானே? மறைக்காமல் சொல்லுங்கள். அத்தனையும் தங்கள் மூலம் எங்களுக்கும், இவ்வுலகிற்கும் கிடைப்பதற்கு நாங்கள் என்னென்ன புண்ணியம் செய்தோமோ தெரியவில்லை. அபார, அசுர உழைப்பு.//


டியர் பம்மலார் சார்,

உங்களை பாராட்ட நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது, உங்கள் சேவை அதற்கெல்லாம் அப்பாற்பட்டது.

pammalar
23rd December 2011, 04:09 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் உச்சமான பாராட்டுக்களுக்கு எனது உணர்வுபூர்வமான நன்றிகள் !

எனக்கு மட்டுமா சிவாஜி ராத்திரி, தங்களுக்கும் தானே ! [சிவனும், சிவாஜியும் நமக்கு ஒருவரே !]

தாங்கள் பதித்துள்ள "ராஜபார்ட் ரங்கதுரை" பதிவுகள் ரகளையோ ரகளை ! சும்மா அதிருதுல்ல !

டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd December 2011, 04:22 AM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்களின் அன்பான பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd December 2011, 04:24 AM
டியர் mr_karthik,

என்னுடைய ஒவ்வொரு ஆவணப்பதிவுக்கும் ஒவ்வொருவிதமான, உச்சமான, மிகமிக உயர்வான பாராட்டுப்பதிவுகளை அள்ளி அளித்து, என்னை மென்மேலும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் தங்களுக்கு, நான் எத்தனைமுறை நன்றிகளைத் தெரிவித்தாலும் அவையெல்லாம் தங்களுடைய பாராட்டுதல்களின் முன் குறைவாகத்தான் தெரியும். இருப்பினும், ஒவ்வொரு முறையும் இதயத்தின் அடித்தளத்திலிருந்து மிச்சம் வைக்காமல் உச்சமாகப் பாராட்டும் தங்களுக்கு எனது எண்ணிலடங்கா இதயபூர்வமான மற்றும் ஆத்மார்த்தமான நன்றிகள் !

தங்களது பதிவில் தாங்கள் அளித்துள்ள "ராஜபார்ட் ரங்கதுரை" விவரங்களும் மிக அருமை !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd December 2011, 04:25 AM
டியர் ஜேயார் சார்,

தங்களின் புகழுரைக்கு எனது பொன்னான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd December 2011, 04:41 AM
Demi-God's December Delicacies

ராஜபார்ட் ரங்கதுரை

[22.12.1973 - 22.12.2011] : 39வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

அட்டைப்படம் : பேசும் படம் : ஏப்ரல் மலர் 1973
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RR1-2.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : ஜனவரி 1974
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RR2-2.jpg

குறிப்பு:
1. "ராஜபார்ட் ரங்கதுரை", சென்னை 'பைலட்'டில் 76 நாட்களும், 'ஸ்ரீகிருஷ்ணா'வில் 75 நாட்களும், 'கிருஷ்ணவேணி'யில் 75 நாட்களும், 'ராக்ஸி'யில் 55 நாட்களும், 'முரளிகிருஷ்ணா'வில் 48 நாட்களும் ஓடி, மாநகரில் மாபெரும் வெற்றி. திருச்சி 'பிரபாத்'தில் 100 நாட்களும், சேலம் 'ஓரியண்டல்' அரங்கில் 100 நாட்களும், மதுரை 'சென்ட்ரல்' திரையரங்கில் 84 நாட்களும், கோவை 'ராஜா'வில் 62 நாட்களும் ஓடி, இங்கெல்லாம் அமோக வெற்றி. நாகர்கோவில் 'பயனீர்பிக்சர்பேலஸ்' அரங்கில் 55 நாட்கள், நெல்லை 'பார்வதி'யில் 48 நாட்கள், மேலும் கணிசமான அரங்குகளில் 48 நாட்களும் அதற்கு மேலும் ஓடி 'சிறந்த வெற்றிக்காவியம்' என்கின்ற பெரும்பெயரைப் பெற்றது.

2. இக்காவியத்தின் 50வது நாள் மற்றும் 100வது நாள் விளம்பரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் உடனுக்குடன் இங்கே இடுகை செய்கிறேன்.

பக்தியுடன்,
பம்மலார்.

Jeev
23rd December 2011, 05:36 AM
Dear Pammalar Sir,

Rajapart Rangaduari ran 91 days at KINGSLEY theatre Colombo.

Jeev

vasudevan31355
23rd December 2011, 10:35 AM
'பக்த ராமதாசு' (23-12-1964)

Cast: 'Nadigar Thilagam 'Sivaji Ganesan(Laksman),Chittooru Nagaiah (Ramadasu), NTR (Srirama), ANR (Vishnu), Gummadi (Kabir), Kannamba, CSR Anjaneyulu, Mudigonda Linga Murthy,

Lyrics: Ramadasu, Samudrala Raghavacharya

Music: Chittooru Nagaiah

Play-back: Ghantasala, AP Komala, Mallik, Srinivas, Nagaiah, Mohd. Rafi, P. Susheela, Sulamangalam Sisters, TG Kamala Devi, M. Balamurali Krishna, M. Satyam, Govinda Rajan

Director: Chittooru Nagaiah

Banner: VN Films

Release Date: 23 December 1964

'பக்த ராமதாசு' நடிகர் திலகம் அவர்கள் கௌரவ வேடத்தில் நடித்து வெளிவந்த ஒரிஜினல் தெலுங்குப் படமாகும். 23-12-1964-இல் வெளிவந்த இத்தெலுங்குப் படத்தில் நடிகர் திலகத்துடன் N.T.R, நாகையா, அஞ்சலிதேவி மற்றும் நாகேஸ்வரராவ் நடித்திருந்தனர். நடிகர் திலகத்தின் அபூர்வ கௌரவத் தோற்றப் படங்களில் ஒன்றான இந்தப் படத்தின் சில அரிய, அபூர்வ நிழற்படங்களைப் பார்க்கலாம்.

குறிப்பு: நமது நடிகர் திலகம் ராமபிரானின் தம்பி லக்ஷ்மணனாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.(எதைத் தான் விட்டு வைத்தார் அவர்!)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/BhaktaRamadasuDVDCD2bychinnamamaavi_005320815.jpg

N.T.R அவர்களுடன்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-20.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-21.jpg

நடிகர் திலகம் 'லக்ஷ்மணனாக'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-10.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-15.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-20.jpg

N.T.R

http://4.bp.blogspot.com/_TRLC_TIkwFs/SViWliZXQ6I/AAAAAAAAAT4/0wMDQaROpuM/s1600/bak1.jpg

நாகேஸ்வரராவ்

http://3.bp.blogspot.com/_TRLC_TIkwFs/SViWl9r5iUI/AAAAAAAAAUA/LQkyNsdpFqg/s1600/bak2.jpg

நாகையா

http://1.bp.blogspot.com/_hkhUD0LDPho/TLdWW6_yjbI/AAAAAAAADd8/rPUzNgfoNNk/s1600/bhakta-ramadasu.jpg

நம் அன்பு ரசிக வேந்தர் அவர்கள் தரவேற்றிய நடிகர் திலகம் 'பக்த ராமதாசு' படத்தில் தோன்றும் ஒரு வீடியோக் காட்சி.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Fz-AMoNAUlg

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
23rd December 2011, 12:07 PM
டியர் வாசுதேவன்,
பக்த ராமதாசு திரைப்படத்தின் பதிவுகள் மூலம் அப்படத்தின் நினைவுகளை அசைபோட வைத்து அசத்தியுள்ளீர்கள். அந்தப் படம் அப்போது பார்க்க முடியவில்லை என்று குறை தற்போது அந்தக் காணொளி மூலம் நீங்கி விட்டது. பாராட்டுக்கள், நன்றிகள்.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடைபெற்ற உலகத் திரைப்படவிழாவில் கடந்த 10 ஆண்டுகளில் மறைந்த இந்திய கலைஞர்களை நினைவுபடுத்தி கௌரவித்துள்ளார்கள். அதில் நடிகர் திலகம் முதற்கொண்டு சமீபத்தில் காலமான தேவ் ஆனந்த் வரை இடம் பெற்றுள்ளனர்.

இதன் செய்தித் தொகுப்பிறாகன இணைப்பு
http://ibnlive.in.com/news/biffes-2011-concludes/214406-60-119.html


ஆனால் நம் ஊரில் நம் சென்னை மாநகரில் நடைபெற்ற திருவிழாவில் நம் ஊர் திரைப்படங்களைத் திரையிடுவதற்கே போராட்டம்.

இதுதான் தமிழ்நாடு...

mr_karthik
23rd December 2011, 12:50 PM
அன்பு பம்மலார் சார்,

ராஜபார்ட்டைத்தாங்கி வந்திருக்கும் 'பேசும் படம்' முன் அட்டை மற்றும் உட்பக்க விளம்பரங்கள் பிரமாதம். தொகுத்து வழங்கியமைக்கு நன்றி. இவற்றையெல்லாம் அப்போது பாதுகாத்து வைக்காமல் தவற விட்டு விட்டோமே என்று சில மாதங்களுக்கு முன் வரை இருந்து வந்த வருத்தங்கள் தற்போது தங்கள் மேலான சேவையால் நீங்கி வருகின்றன. காகித வடிவில் இருந்த ஆவணங்களை கணிணி வடிவில் ஏற்றி நொடிகளில் உலகம் முழுமைக்கும் நொடிகளில் பரவ வைக்கும் தங்கள் சேவையைப்பாராட்ட வார்த்தைகளே இல்லை.

வெறும் வார்த்தை ஜாலங்களால் அவர் புகழ் பாடுவதற்கும், ஆவணங்களை அள்ளித்தருவதற்கும் உள்ள வித்தியாசம்..... ஒரு இடத்தில் நின்று கொண்டு 'இந்த இடம் எனக்குச்சொந்தம்' என்று வாயால் சொல்வதற்கும், 'இந்த இடம் எனக்குச்சொந்தம், இதோ பாருங்கள் கிரயம் வாங்கி ரிஜிஸ்ட்டர் செய்த பத்திரம்' என்று காண்பிப்பதற்கும் உள்ள வித்தியாசம்.

தங்கள் அயராத பணி தொடர வாழ்த்துக்கள்.

அன்பு வாசுதேவன் சார்,

ராஜபார்ட் ரங்கதுரை ரிலீஸ் மேளவை முன்னிட்டு தாங்கள் அள்ளி வழங்கியுள்ள நிழற்பட வரிசை வெகு அற்புதம். அத்துடன், பாடல்களின் வீடியோ இணைப்பும் வெகு நேர்த்தி.

தங்கள் சிரத்தை மிகுந்த அனைத்துப்பதிவுகளுக்கும் நன்றி.

vasudevan31355
23rd December 2011, 07:39 PM
அன்பு பம்மலார் சார்,

'ராஜபார்ட் ரங்கதுரை' பேசும்படம் அட்டைப்படம் பிரமாதம். முதல் வெளியீடு விளம்பரமும் கன கம்பீரம்.
படம் ஓடிய நாட்கள் பற்றிய குறிப்புகளும் மிக நன்று. பதிவுகளுக்கு பாராட்டுக்கள்.

அன்பு ராகவேந்திரன் சார்,

'பக்த ராமதாஸ்' பதிவுகள் பற்றிய தங்களுடய மனம் திறந்த பாராட்டுகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். கர்நாடகாவில் நடைபெற்ற உலகத் திரைப்படவிழாவில் நடிகர்திலகம் கௌரவிக்கப் பட்டது நமக்கெல்லாம் பெருமை. அற்புத தகவலை அளித்ததற்கு நன்றி!

அன்பு கார்த்திக் சார்,
தங்கள் உள்ளம் நிறைந்த பாராட்டுகளுக்கு என் பணிவான நன்றிகள்.

டியர் சந்திரசேகரன் சார்,
தங்கள் அன்பிற்கும், பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.

Jeev
23rd December 2011, 07:58 PM
Hi,

A nice song from Paathukaapu.

Stylish Sivaji & JJ.

http://www.youtube.com/watch?v=LBh-R_0cFBQ&feature=related

Enjoy.

vasudevan31355
23rd December 2011, 08:30 PM
'நீலவானம்' ஷூட்டிங்கில் நடிகர் திலகம், இயக்குனர் பி.மாதவன் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_0026.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
24th December 2011, 02:12 AM
Dear Pammalar Sir,

Rajapart Rangaduari ran 91 days at KINGSLEY theatre Colombo.

Jeev

Dear Jeev Sir,

Superb ! Thanks for the info.

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
24th December 2011, 02:34 AM
டியர் வாசுதேவன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

அண்ணலின் காவியங்களில், அதிகம் அறியப்படாத, கௌரவத் தோற்றத் தெலுங்குக் காவியமான "பக்த ராமதாசு" பற்றிய தங்களின் பதிவு உண்மையிலேயே படுஜோர். இக்காவியத்தில் பணியாற்றிய நடிக-நடிகையர் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் ஆகியோரது பெயர்களை உள்ளடக்கிய புள்ளிவிவரங்கள் மிகமிக அருமை. நிழற்படத்திலகம் வழங்கும் நிழற்படங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ !

பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th December 2011, 02:44 AM
டியர் mr_karthik,

தங்களின் மேன்மையான பாராட்டுக்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள் !

'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th December 2011, 04:32 AM
Demi-God's December Delicacies

ராஜபார்ட் ரங்கதுரை

[22.12.1973 - 22.12.2011] : 39வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல் : காவிய விமர்சனங்கள்

ஆனந்த விகடன்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRAVReview-1.jpg


கல்கி
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRKalkiReview-1.jpg


ராணி
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RRRaniReview-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
24th December 2011, 06:32 AM
தந்தை பெரியார் அவர்களுக்கு ஆத்மார்த்தமான அஞ்சலி

21.6.1965 திங்களன்று கரூரில் நடைபெற்ற சிவாஜி நாடக மன்றத்தின் "களம் கண்ட கவிஞன்" நாடகத்துக்கு தந்தை பெரியார் அவர்கள் தலைமைதாங்கி நடிகர் திலகத்தின் நடிப்பினை மனமார பாராட்டி வாழ்த்தினார். அந்த மிக அரிய செய்தித்தொகுப்பு அப்படியே அதன் ஒரிஜினல் வடிவில்:

வரலாற்று ஆவணம் : விடுதலை : 1965
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTPeriyar1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTPeriyar2-2.jpg
[இந்த ஆவணத்தை அன்புள்ளங்கள் அன்புகூர்ந்து பதிவிறக்கம் செய்து படிக்கவும்]

24.12.2011 : பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 38-ம் ஆண்டு நினைவு தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
24th December 2011, 06:48 AM
முன்னாள் தமிழக முதல்வர்
அமரர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு
24வது ஆண்டு நினைவாஞ்சலி

தமிழக முதல்வர் பற்றி கலையுலக முதல்வர்

முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1984-ம் ஆண்டு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்று அதன்மூலம் உடல்நலம் வெகுவாக முன்னேறி வந்த சமயத்தில் அவரைப் பற்றி 'பொம்மை' இதழில் அவர் பூரணநலமடைய வேண்டியும், அவருடன் தனக்கிருந்த இணக்கம்-நல்லுறவு குறித்தும் ஒரு கட்டுரைத் தொடரையே வடித்தார் நமது நடிகர் திலகம்

அந்த அரிய-அற்புத கட்டுரைத்தொடரின் முதல் பகுதி இதோ: [முன் அட்டையுடன் நான்கு பக்கங்கள்]

வரலாற்று ஆவணம் : பொம்மை : டிசம்பர் 1984

முன் அட்டை
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTMTBommai-1.jpg


முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTMTBommai1-1.jpg


இரண்டாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTMTBommai2-1.jpg


மூன்றாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTMTBommai3-1.jpg

தொடரும்...


24.12.2011 : முப்பிறவி கண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 24-ம் ஆண்டு நினைவு தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

vasudevan31355
24th December 2011, 08:26 AM
முன்னாள் தமிழக முதலமைச்சர் திரு. M.G.R. அவர்களின் 24-ஆம் ஆண்டு நினைவு தினம்.

நடிகர் திலகமும், மக்கள் திலகமும்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-16.jpg

நட்புக்கு இலக்கணமாய் இரு திலகங்களும்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-22.jpg

ஒன்றாக அமர்ந்து உண்டு மகிழும் இரு திலகங்களும் (மிக அபூர்வ நிழற்படம்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-11-1.jpg

இரு திலகங்களும் இணைந்த ஒரே படமான 'கூண்டுக்கிளி' திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-11.jpg

நடிகர் திலகம் 'பத்மஸ்ரீ' பட்டம் பெற்றதற்கு கௌரவிக்கிறார் மக்கள் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-21-1.jpg

திரு. M.G.R. அவர்கள் 'பாரத்' அவார்ட் பெற்றதற்கு கௌரவிக்கிறார் நடிகர் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-11.jpg

அன்னை இல்லத்தில் இரு மாபெரும் நட்சத்திரங்கள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-22.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
24th December 2011, 08:53 AM
திரு.M.G.R.அவர்கள் மறைவிற்கு நம் அருமை நடிகர் திலகத்தின் கண்ணீர் அஞ்சலி (வீடியோவாக)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gE1GBzXWjms


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
24th December 2011, 10:49 AM
தந்தை பெரியார் அவர்களின் 38-ம் ஆண்டு நினைவு தினம்.

தந்தை பெரியாராக நடிக்க வேண்டும் என்ற நடிகர் திலகத்தின் வாழ்நாள் ஆசை நிறைவேறாவிட்டாலும், பெரியார் வேடத்தில் அவர் எப்படி இருப்பார் என்று ஒரு இணையதளத்தில் morphing முறையில் அந்த வேடம் வடிவமைக்கப்பட்டு தரவேற்றப்பட்டுள்ளது.

தந்தை பெரியாருடன் நடிகர் திலகம்.

http://chennaibest.com/cityresources/Entertainment/movies/img/sivajievrperiyar.jpg

http://tamilnation.co/images/hundredtamils/sivaji/sivaji.jpg

அந்த 'பெரியார்' வேட நடிகர் திலகம் இதோ...

http://www.radiomirchi.com/blog_images/Sivaji_as_priyar.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
24th December 2011, 12:22 PM
டியர் பம்மலார், களம் கண்ட கவிஞன் நாடக விழாவில் பெரியார் பாராட்டியதன் பதிவு காணக்கிடைக்காத பொக்கிஷப் பதிவு. நன்றி.

RAGHAVENDRA
24th December 2011, 12:59 PM
டியர் வாசுதேவன் சார்,
நடிகர் திலகத்தைத் தந்தை பெரியாராக உருவகப் படுத்திய நிழற்படத்தை வெளியிட்டு அசத்தியுள்ளீர்கள். இதனை அவர் இருந்து பார்த்திருந்தால் அதை விட அவருடைய வாழ்வில் மகிழ்வினை வேறெதுவும் தந்திருக்க முடியாது. பாராட்டுக்கள்.

தாங்களும் பம்மலாரும் சேர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு நாளை, சிறப்பாக அனுசரித்து விட்டீர்கள். தங்களை விட வேறு யாரும் உயர்ந்தவரில்லை என்கிற மனப்பான்மை இனியாவது மாறி சாதனைகளை மனமுவந்து ஒப்புக்கொள்ளும் நல்லெண்ணமும் மனப்பக்குவமும் பெருந்தன்மையும் வரவேண்டும் என எதிர்பார்ப்போம்.

பாராட்டுக்கள்.

நாளை ரோஜாவின் ராஜா வெளியீட்டு நாளை முன்னிட்டு தலைவரின் சூப்பர் பாடல்


http://youtu.be/LAF1u4kzkxE

mr_karthik
24th December 2011, 03:10 PM
அன்புள்ள பம்மலார் சார்,

'ராஜபார்ட் ரங்கதுரை' மேளாவின் தொடர்ச்சியாக தாங்கள் அளித்திருக்கும் முத்தான மூன்று விமர்சனப்பதிவுகளுக்கும் நன்றி. அதென்னமோ தெரியவில்லை. அக்காலப்பத்திரிகைகள் விமர்சனம் என்றால் சரியாக ஒரு பக்கத்துக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று நியதி வைத்திருந்தன போலும். அதனால் நிறைய பாராட்ட வேண்டிய விஷயங்களை விட்டு விட்டனர். பாடல்களைப்பற்றி குறிப்பிட்டவர்கள் மெல்லிசை மன்னரைப்பற்றி ஒரு வரி கூடக் குறிப்பிடவில்லை (எந்த விமர்சனத்திலும்) என்பது வருத்தமளிக்கிறது. ஏற்கெனவே நமது திரியில் குறிப்பிட்டது போல, மெல்லிசை மன்னரும் அக்கால மீடியாக்களால் வஞ்சிக்கப்பட்ட ஒருவர்.

பெரியார் அவர்கள் நமது நடிகர்திலகத்தைப் பாராட்டிய பத்திரிகைச்செய்தியின் ஒரிஜினல் பதிப்பு நிச்சயம் காணக்கிடைக்காத பொக்கிஷங்களில் ஒன்று. வரலாற்றைத் திரும்பத்தோண்டியெடுக்கும் தங்கள் பணி மகத்தானது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவுநாளை, நமது நடிகர்திலகம் வழங்கிய 'பொம்மை' இதழ் கட்டுரையின் மூலமாகவே நினைவு கூர்ந்தது மிகவும் அருமையான ஒன்று. தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே இருந்த நட்பின் ஆழத்தை மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் அவர்கள் உடல்நலம் பெற வேண்டி அனைத்து மத ஆலயங்களிலும் நடிகர்திலகம் பிரார்த்தனை செய்ததையும், மக்கள் திலகத்துக்கு தன் சிறுநீரகம் ஒன்றை அளிக்க நடிகர்திலகம் பதிவு செய்திருந்ததை, அப்பல்லோ மருத்துவமனை இயக்குனரே சொல்லியிருப்பதையும் படித்தபோது என் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. எப்பேற்பட்ட மனிதர் நம் நடிகர் திலகம். அதை இன்றைய தலைமுறையும் அறியசெய்த தாங்களல்லவோ அவரது உண்மையான பக்தர்.

பொருத்தமான நேரத்தில் பொருத்தமானவற்றைத் தேடியெடுத்து பொருத்தமான வகையில் அள்ளி வழங்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

mr_karthik
24th December 2011, 03:50 PM
அன்பு வாசுதேவன் சார்,

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாளையொட்டி தாங்கள் அளித்துள்ள, இரு திலகங்களும் இணைந்திருக்கும் நிழற்படங்கள் ஆறும், அறுசுவை விருந்தாகத்திகழ்கிறது.

அனைத்தையும் ஒன்றாக இணைத்து பதிவிட்ட தங்களுக்கு எங்கள் நன்றி.

நமது பம்மலாரும் நீங்களும் சேர்ந்து நமது திரியை எங்கோ உயரத்துக்குக் கொண்டு சென்றுவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

KCSHEKAR
24th December 2011, 03:52 PM
அன்புள்ள பம்மலார்,




மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவுநாளை, நமது நடிகர்திலகம் வழங்கிய 'பொம்மை' இதழ் கட்டுரையின் மூலமாகவே நினைவு கூர்ந்தது மிகவும் அருமையான ஒன்று. தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே இருந்த நட்பின் ஆழத்தை மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் அவர்கள் உடல்நலம் பெற வேண்டி அனைத்து மத ஆலயங்களிலும் நடிகர்திலகம் பிரார்த்தனை செய்ததையும், மக்கள் திலகத்துக்கு தன் சிறுநீரகம் ஒன்றை அளிக்க நடிகர்திலகம் பதிவு செய்திருந்ததை, அப்பல்லோ மருத்துவமனை இயக்குனரே சொல்லியிருப்பதையும் படித்தபோது என் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. எப்பேற்பட்ட மனிதர் நம் நடிகர் திலகம்.

பொருத்தமான நேரத்தில் பொருத்தமானவற்றைத் தேடியெடுத்து பொருத்தமான வகையில் அள்ளி வழங்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Well-done Pammalar.

RAGHAVENDRA
24th December 2011, 04:11 PM
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் 2012 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நம்முடைய நடிகர் திலகம் இணைய தளம் சார்பில் வடிவமைக்கப்பட்ட காலெண்டர் தங்களுடைய பார்வைக்கும் பதிவிறக்கத்திற்கும்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/2012calendarNTfw01.jpg

vasudevan31355
24th December 2011, 05:40 PM
அன்பு பம்மலார் சார்,

'ராஜபார்ட் ரங்கதுரை' பற்றிய ஆனந்த விகடன், கல்கி, ராணி விமர்சனங்களை அளித்து அருள் பாலித்து விட்டீர்கள். கிட்டத் தட்ட மூன்று விமர்சனங்களும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்த மாதிரி இருந்தன. அற்புதம்.

"களம் கண்ட கவிஞன்" நாடகத்துக்கு தந்தை பெரியார் அவர்கள் தலைமைதாங்கி நடிகர் திலகத்தின் நடிப்பினை மனமார பாராட்டி வாழ்த்தியதை விடுதலை பத்திரிக்கையின் மூலம் பதிவு செய்து வியக்கச் செய்து விட்டீர்கள். வியப்பில் ஆழ்த்துவது தங்களுக்கு ஒன்றும் புதியதல்லவே! மிக அரியதொரு பதிவு. கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் தலைவரை கலையுலகில் தமது பிள்ளை என்று பாரட்டிப் பேசியது நெஞ்சை நெகிழ வைத்தது.

முன்னாள் தமிழக முதல்வர் அமரர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நம் தலைவர் பொம்மை இதழிற்கு அளித்த பேட்டியை வைத்தே 24வது ஆண்டு நினைவாஞ்சலி செலுத்தியது 'சபாஷ்' போட வைக்கிறது.

தலைவரின் கல்மனமும் கரையும் பேட்டி அருமை! எம்.ஜி.ஆர் அவர்களுக்காக தன் சிறுநீரகத்தையும் தர தயாராய் இருந்த அந்த உத்தமனைப் பற்றி கூற என்ன இருக்கிறது?... அதே போல இப்படிப்பட்ட அரிய, அற்புத பதிவுகளைத் தரும் தங்களைப் பற்றிக் கூற இனி என்ன இருக்கிறது? எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் நெஞ்சார்ந்த நன்றி! நன்றி! நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
24th December 2011, 05:48 PM
அன்பு கார்த்திக் சார்,

தங்களுடைய விசாலமான உள்ளத்திற்கும், மனம் திறந்த பாராட்டுதல்களுக்கும் என் ஆழ்ந்த நன்றிகளைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த தங்களின் 'ரோஜாவின் ராஜா' பற்றிய நினைவுப் பதிவை நினைத்தவாறே எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். விருந்து நாளைக்கே கிடைக்குமா?

அன்புடன்,
வாசுதேவன்

vasudevan31355
24th December 2011, 05:58 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களுடைய உயரிய பாராட்டிற்கு உளமார்ந்த நன்றிகள்.

நம் நடிகர் திலகம் இணையதளம் சார்பாக வடிவமைக்கப்பட்டுள்ள காலெண்டர் (2012) அருமையாக உள்ளது.

ராஜாவின் 'ரோஜாவின் ராஜா' பாடலை கொடுத்த தாங்கள் என்றும் எங்கள் "ரசிக ராஜா". அற்புத அபூர்வ பாடலுக்கு நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
24th December 2011, 09:45 PM
கோவை பெரிய நாயக்கன் பாளையம் சிவாஜி மன்றம் வடிவமைத்துள்ள 2012ம் ஆண்டிற்கான காலண்டர்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/PNPalayamNTFansCalendar2012fw.jpg

pammalar
25th December 2011, 12:43 AM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்களின் அடுக்கடுக்கான பாராட்டுக்களுக்கு எனது ஆனந்தமயமான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th December 2011, 01:00 AM
டியர் mr_karthik,

தங்களின் உணர்வுபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !

தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி, அக்காலத்து பத்திரிகைகள் திரைப்பட இசையமையப்பாளர்களை இருட்டடிப்பு செய்திருப்பது கண்கூடு. அத்தனை இருட்டடிப்பையும் மீறி மெல்லிசை மன்னர் அவர்கள் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைபெற்றிருக்கிறாரென்றால், அதைவிட அவரது படைப்புத்திறனுக்கு கட்டியம்கூற வேறென்ன வேண்டும். ஏதோ இப்போதாவது 'மெகா டிவி' போன்ற டிவி சேனல்கள் அவரைக் கண்டுகொண்டு உரிய கௌரவத்தை அளித்துவருவது மனதுக்கு இதம் !

["ரோஜாவின் ராஜா" அனுபவப்பதிவு, தன்னை வெகுவாக அலங்கரித்துக் கொண்டு 'அலங்காரம் கலையாத சிலை' போல அழகுமிளிர வருகின்றதோ ?!]

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th December 2011, 01:09 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் உச்சமான பாராட்டுப் பதிவுக்கு எனது உணர்வுபூர்வமான பொன்னான நன்றிகள் !

நடிகர் திலகமும், மக்கள் திலகமும் இணைந்திருக்கும் நிழற்பட வரிசை நெஞ்சை அள்ளுகிறது !

தந்தை பெரியாராக கலைப்பெரியார் - கண்களுக்கு விருந்து ! இந்நிழற்படத்தை இங்கே இடுகை செய்த திரிப்பெரியாருக்கு தேங்க்ஸ் !

டியர் ராகவேந்திரன் சார்,

2012-ம் ஆண்டுக்கான நடிகர் திலகம்.காம் இணையதளத்தின் நாள்காட்டியும், கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய சிவாஜி மன்றத்தின் நாள்காட்டியும் வெகு அருமை !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th December 2011, 04:27 AM
முன்னாள் தமிழக முதல்வர்
அமரர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு
24வது ஆண்டு நினைவாஞ்சலி

தமிழக முதல்வர் பற்றி கலையுலக முதல்வர்

முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1984-ம் ஆண்டு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்று அதன்மூலம் உடல்நலம் வெகுவாக முன்னேறி வந்த சமயத்தில் அவரைப் பற்றி 'பொம்மை' இதழில் அவர் பூரணநலமடைய வேண்டியும், அவருடன் தனக்கிருந்த இணக்கம்-நல்லுறவு குறித்தும் ஒரு கட்டுரைத் தொடரையே வடித்தார் நமது நடிகர் திலகம்

அந்த அரிய-அற்புத கட்டுரைத்தொடரின் இரண்டாவது பகுதி: [இரண்டு பக்கங்கள்]

வரலாற்று ஆவணம் : பொம்மை : 1-15 ஜனவரி 1985

முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTMTBommai4-1.jpg


இரண்டாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTMTBommai5-1.jpg

தொடரும்...

24.12.2011 : முப்பிறவி கண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 24-ம் ஆண்டு நினைவு தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
25th December 2011, 04:35 AM
MERRY MERRY CHRISTMAS ! HAPPY HAPPY CHRISTMAS !

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Antony1-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th December 2011, 04:50 AM
கிறிஸ்துமஸ் கீதங்கள்

1. "கிங்கிணி கிங்கிணி"

http://www.youtube.com/watch?v=Iuhj3EIBepM

2. "தேவனின் கோவிலிலே"

http://www.youtube.com/watch?v=9hgnW6jbwTU

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
25th December 2011, 07:31 AM
அனைவருக்கும் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

http://i116.photobucket.com/albums/o38/zokai/mz_070104_10028506085.gif http://i457.photobucket.com/albums/qq294/akmk2787/merry-christmas-34.gif?t=1229682345

'ஞானஒளி' தந்த எங்கள் அன்பு 'ஆண்டனி'

http://2.bp.blogspot.com/_ZxB6aHS1OLw/SVe6UkoGoVI/AAAAAAAAAFw/4gh3nkWex9E/s1600/235.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
25th December 2011, 08:32 AM
"ரோஜாவின் ராஜா"(25-12-1976)விற்கு இன்று 36-ஆவது பிறந்தநாள் ஆரம்பம்.

http://4.bp.blogspot.com/_gSllffkZKzA/TBnQ5g6-3KI/AAAAAAAAEUA/1eLK7sESNG8/s320/roses-wallpaper-roses-bouquets4470_med.jpg

"ரோஜாவின் ராஜா"வில் எங்கள் தங்க ராஜா.

http://www.nadigarthilagamsivaji.com/Photos/MovieStills/186.jpg

http://www.shakthi.fm/album-covers/ta/d2875d56/cover_m.jpg

http://www.freewebs.com/pammalar/Roja1.jpg

"அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்" கோடியில் ஒரு பாடல். (காணொளி வடிவில்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Xuqcf72OPdo

"ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான்" சூப்பர் ஹிட் பாடல். (காணொளி வடிவில்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FNvk2_KC5Mg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
25th December 2011, 08:44 AM
"ரோஜாவின் ராஜா" சிறப்பு அரிய நிழற்படம்

அசோகச் சக்கரவர்த்தியாக நடிப்புலகச் சக்கரவர்த்தி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_0001-4.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
25th December 2011, 09:16 AM
"ரோஜாவின் ராஜா" அசத்தல் நிழற்படங்கள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_000383807.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_000995513.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000514953.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001441056.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000724145.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001153669.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_001870271.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_002344741.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_036652786.jpg



அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
25th December 2011, 11:57 AM
நடிகர்திலகத்தின் கிருஸ்துமஸ் பரிசு 'ரோஜாவின் ராஜா'
36-வது உதய தினம் (25.12.1976 - 25.12.2011)

1976-ம் ஆண்டு நடிகர்திலகத்துக்கு அவ்வளவு வெற்றிகரமான ஆண்டு அல்ல. அந்த ஆண்டில் வெளிவந்த சில படங்கள் 100 நாட்களைக்கடந்ததுடன், ஒரு படம் இலங்கையில் வெள்ளிவிழாப்படமாகவும் அமைந்தது. இருப்பினும் அவருக்கு இதற்கு முந்தைய ஆன்டுகளைப்போல பரபரப்பான ஆண்டு அல்ல. அதற்குக்காரணம், இந்த ஆண்டின் துவக்கத்தில் தமிழக அரசியலில் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட சில மாற்றங்கள் என்பதை ஏற்கெனவே இங்கே பலமுறை விரிவாக அலசியிருக்கிறார்கள். குறிப்பாக நமது வரலாற்று விற்பன்னர் முரளி சார் தெளிவாக பல பதிவுகளில் சொல்லியிருக்கிறார்.

1976-ம் ஆண்டு வெளிவந்த படங்கள் சென்னையில் ரிலீஸான அரங்குகள்

உனக்காக நான் - தேவி பாரடைஸ், அகஸ்தியா புவனேஸ்வரி
கிரகப்பிரவேசம் - பைலட், அகஸ்தியா, முரளிகிருஷ்ணா, கமலா
சத்யம் - வெலிங்டன், கிரௌன், ராக்ஸி, நூர்ஜகான்
உத்தமன் - சாந்தி கிரௌன், புவனேஸ்வரி
சித்ரா பௌர்ணமி - பிளாசா, ஸ்ரீபத்மனாபா, உமா
ரோஜாவின் ராஜா - பிளாஸா, பிராட்வே, ராக்ஸி, கமலா

ரசிகர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது வருடத்துவக்கத்தில் வெளியான 'உனக்காக நான்'. பாட்டும் பரதமும் போலவே இதுவும் அரசியல் சூழலில் சிக்குண்டதால் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. நடிகர்திலகம் - பாலாஜி அணியின் முதல் சரிவு. (இருந்தாலும் சரியாக ஒரே ஆண்டில், பழைய காம்பினேஷன்களை மாற்றி 'தீபம்' படத்தின் மூலம் வெற்றியைக்கண்டனர். நடிகர்திலகத்தின் தேக்க நிலையும் சீரானது).

அடுத்து வந்த கிரகப்பிரவேசம், சத்யம் படங்களை ரசிகர்கள் அதிகம் எதிபார்க்கவில்லை. காரணம் அவை பரபரப்பில்லாத குடும்ப்பபடங்கள் என்பது முன்பே தெரிந்து போயிற்று. கிரகப்பிரவேசம் படத்தை டி.யோகானந்த் இயக்கியிருந்தார். யோகானந்த் படம் எப்படியிருக்கும், முக்தா படம் எப்படியிருக்கும், சி.வி.ஆர்.படம் எப்படியிருக்கும் என்பதெல்லாம் ரசிகர்களுக்கு அத்துப்படி. ஆகவே எதிர்பார்ப்புக்களை மூட்டைகட்டினர். இருந்தாலும் தாய்க்குலத்தின் ஆதரவைக்கொண்டும் அருமையான தியேட்டர்கள் அமைந்ததாலும் படம் ஓரளவு நன்றாகவே ஓடி சுமார் வெற்றியை பெற்றது.

1962-ல் சிறுவனாக நடித்த பார்த்தால் பசிதீரும் படத்துக்குப்பின்னர் நடிகர்திலகத்துடன் 'வாலிபன் கமல்' இணைந்து நடித்த முதல் படம் சத்யம். பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் உள்பட பல்வேறு படங்கள் மூலம் கமல் நன்றாக பாப்புலராகிவிட்ட நேரம். அதனால் நடிகர்திலகத்துடன் இணைகிறார் என்றதும் எதிர்பார்ப்பு தலைதூக்கியது. சிவாஜிநாடகமன்ற இயக்குனர் எஸ்.ஏ.கண்ணன் இயக்கிய முதல் படம். என் நினைவு சரியாக இருக்குமானால் சாந்தி படத்துக்குப்பின்னர் தேவிகா மீண்டும் நடிகர்திலகத்தின் ஜோடியாக நடித்த படம். இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தும் கதை பழைய ஜமீன்தார் காலத்து கதைபோல ஆனதால் எதிர்பார்த்த பெரிய வெற்றியைப்பெறவில்லை எனினும் பரவலாக நன்றாக ஓடியது. இலங்கையில் கிரகப்பிரவேசம், சத்யம் இரண்டுமே நல்ல வெற்றியைப்பெற்றன.

ரசிகர்களின் அடுத்த பெரிய எதிர்பார்ப்பு 'உத்தமன்' படம். எங்கள் தங்க ராஜா என்ற மாபெரும் வெற்றிப்படத்தைத்தந்த வி.பி.ராஜேந்திர பிரசாத்தின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வந்த படம். மஞ்சுளா ஜோடி. சாந்தி, கிரௌன் புவனேஸ்வரி காம்பினேஷனில் இந்த ஆண்டில் வெளியான ஒரே படம். படம் நன்றாகவே இருந்தது. கே.வி.எம். இசையில் பாடல்கள் அனைத்தும், அவற்றைப்படமாக்கிய விதமும் நன்றாகவே இருந்தன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அமைந்திருந்தது. காஷ்மீர் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. தமிழகத்தில் பெரிய வெற்றியைப்பெறும் என்று எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. என்ன காரணமோ மதுரையில் மட்டும் 100 நாட்களைத்தாண்டி ஓடியது. சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் 10 வாரங்களைக் கடந்தது. (இலங்கையில் இது பெரிய வெற்றி பெற்று வெள்ளிவிழா கொண்டாடியது).

தீபாவளிக்கு 'இளைய தலைமுறை', 'சித்ரா பௌர்ணமி' என இரண்டு படங்கள் வெளியாவதாக அறிவிப்புக்கள் வந்தன. இரண்டுமே சற்று நீண்டகால தயாரிப்பு. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இளைய தலைமுறை கடைசி நேரத்தில் தயாரிப்பாளருக்கும் வங்கிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் தள்ளிப்போனது. இப்படம் பின்னர் அடுத்த ஆண்டு மே மாதம்தான் வெளியானது. சென்னை சென்ட்ரல் அருகில் வால்டாக்ஸ் ரோட்டிலுள்ள, புதிய படங்களே வெளியாகாத ஸ்ரீபத்மநாபா தியேட்டரில் 'சித்ராபௌர்ணமி' வெளியானது. அதுவே ரசிகர்களுக்கு முதல் கோணலாகப் பிடிக்காமல் போனது. இருந்தாலும் போய்ப்பார்த்தோம். ரசிகர்கள், பொதுமக்கள், தாய்மார்கள் என்று எத்தரப்பினரையும் திருப்திப்படுத்தாத படமாகப்போய், அந்த ஆண்டில் வெளிவந்த நடிகர்திலகத்தின் படங்களில் மிக மோசமான ரிசல்ட்டை சந்தித்தது.

இப்படி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்த 1976-ம் ஆண்டின் இறுதிப்படமாக 'ரோஜாவின் ராஜா' வெளியாவதாக அறிவிப்பு வந்தது. அதுவும் சற்று நீண்டகாலத் தயாரிப்புதான். இப்படத்தின் தயாரிப்பாளர் என்.வி.ஆர். பிக்சர்ஸ் என்.வி.ராமசாமி, ரோஜாவின் ராஜாவைத்துவக்கியபின், அதற்காக விநியோகஸ்தர்களிடம் பெற்ற தொகையைக்கொண்டு வேறு நடிகர்களை வைத்து புதுவெள்ளம் போன்ற படங்களை எடுத்ததால், இப்படம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஒருவழியாக படம் முடிவடைந்து டிசம்பர் 25 அன்று வெளியாவதாக விளம்பரம் வந்தது. வழக்கமாக காலை தினத்தந்தியில்தான் ரிசர்வேஷன் விளம்பரம் வெளியாவது வழக்கம். இப்படத்துக்கு முதல்நாள் மாலைமுரசிலேயே 'நாளைமுதல்' ரிசர்வேஷன் விளம்பரம் வந்தது.

வீட்டுக்கு மிக அருகிலேயே இருக்கும் பிராட்வே தியேட்டரில் எப்போதும்போல ரிசர்வேஷன் செய்யச்சென்றோம். என்னதான் சோர்வு இருந்தாலும் ரசிகளின் கூட்டத்துக்குக் குறைவில்லை. கேட் திறக்கும்வரை கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். ஒருதட்டியில் படத்தின் பெரிய போஸ்ட்டர் ஒட்டப்பட்டு வெளியில் வைக்கப்பட்டிருந்தது. நடிகர்திலகம் ஜிப்கோட், கூலிங் கிளாஸ் அணிந்து வாணிஸ்ரீயின் கைகளைக்கோர்த்தவாறு சற்று தலையைத்தூக்கி சிரித்துக்கொண்டிருக்கும் போஸ்ட்டர். அங்கிருந்த மூத்த ரசிகர்கள், அது 'அலங்காரம் கலையாத சிலையொன்று' பாடல் காட்சியென்று சொன்னார்கள். (படம் பார்த்தபோது அவர்கள் சொன்னது சரிதான் என்று தெரிந்தது).

பிராட்வே தியேட்டர் முன் கூட்டம் கூடியிருந்தபோதிலும், ரசிகர்கள் உற்சாகம் சற்று குறைந்து காணப்பட்டனர். அதற்குக்காரணம் 'மன்னவன் வந்தானடி' படத்துக்குப்பின் சென்னையில் அண்ணனின் 100-வதுநாள் போஸ்ட்டரைப் பார்க்க முடியவில்லை என்பதோடு, பிராட்வேயில் படம் வெளியாகிறதே என்ற வருத்தமும் கூட என்பது அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது. 'ஏன்யா இந்த தியேட்டர்ல ரிலீஸ் பண்றாங்க?. இவங்களுக்கு நம்ம படம்னாலே பிடிக்காதே. மானேஜரிலிருந்து முறுக்கு விற்கிறவன் வரையில் 'அவரோட ஆளுங்க'. நம்ம படம்னாலே கூட்டத்தோடு ஓடிக்கொண்டிருக்கும்போதே கழற்றி விட்டுடுவாங்க' என்று ஒருவர் சொல்ல இன்னொருவர் 'ஆமாமா, ஊட்டிவரைஉறவையும், ஞான ஒளியையும் நல்ல கூட்டம் இருக்கும்போதே எடுத்துட்டாங்க' என்று சொன்னார். கேட்டுக்கொண்டு நின்ற எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது. (பிற்காலத்தில் கல்தூண் படத்துக்கும் அப்படியே செய்தார்கள்).

கேட் திறந்தபின்னும் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ரசிகர்கள் வரிசையில் போய் நின்றனர். அங்கும் கூட, அதற்குமுன் வந்த படங்களின் ஓட்டம் பற்றிய விமர்சனங்கள். ஏற்கெனவே வானொலி மூலம் 'அலங்காரம் கலையாத', 'ஜனகன் மகளை', 'ஓட்றா... ஓட்றா...' ஆகிய பாடல்கள் மக்கள் மத்தியில் பிரசித்தமாகியிருந்தன. (பிற்காலத்தில் 'ஓட்றா' பாடலை கேட்டால் எனக்கு அண்ணன் ஒரு கோயிலில் ஐ.எஸ்.ஆர். ஈகா தியேட்டர் லவுன்ச்சில் தர்ம அடி வாங்கும் காட்சிதான் நினைவுக்கு வரும்). நான் சுமார் ஐம்பதாவது ஆளாக நின்றிருந்திருப்பேன். எனக்குப்பின்னால் கூட்டம் நீண்டிருந்தது. முதல்நாள் மேட்னிக்காட்சிக்கே டிக்கட் கிடைக்க வாய்ப்பிருந்தது. இருந்தாலும் வழக்கம்போல மாலைக்காட்சிக்கே எங்கள் அணி டிக்கட் வாங்கிக்கொண்டோம். ரிசர்வேஷன் எந்தபரபரப்புமின்றி அமைதியாக நடந்துகொண்டிருந்தது. டிக்கட் வாங்கியதோடு வேலை முடிந்தது என்று போகாமல் எல்லோரும் வாசலிலும், ஸ்டில் போர்டு வைக்கப்பட்டிருக்கும் வழியிலும் கொத்து கொத்தாக நின்று படம் எப்படிப்போகும் என்று பேசிக்கொண்டிருந்தனர்.

'படம் ஏற்கெனவே லேட் படம். கொஞ்சமாவது கேப் கொடுத்தால்தான் ஓரளவுக்காவது ஓடும்' என்று ஒருவர் சொல்ல, இன்னொரு ரசிகர் 'எங்கே கேப் கொடுத்தாங்க?. மதிஒளி 15-ம்தேதி இஷ்யூ பார்த்தியா இல்லையா?. இன்னும் 19 நாளில் பொங்கலுக்கு 'அவன் ஒரு சரித்திரம்' வருது. அடுத்த 12 நாள்ள பாலாஜியோட 'தீபம்' ரிலீஸாகுது. இப்படி விட்டாங்கன்னா எப்படிப்பா?' என்று சொன்னார். தியேட்டர் மேனேஜரும் எல்லோரோடும் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போதே படத்தை மட்டம் தட்டிப்பேச ஆரம்பித்தார். அவர் பங்குக்கு 'திருவொற்றியூர் ஓடியன் மணியிலேயும் இந்தப்படம் (ரோஜாவின் ராஜா) ரிலீஸாகுதாமே. அப்போ தேறுவது கஷ்ட்டம்தான்' என்று சொல்ல, சிலர் ரகசியமாக, 'இப்பவே ஆரம்பிச்சுட்டாருய்யா' என்று சலிப்படைந்தனர்.

அப்போது பஸ்ஸில் வந்திறங்கிய ஒருவர் 'பிளாசாவிலே நல்லா ஜரூராக புக்கிங் நடதுப்பா, இங்கே ஏன் டல்லக்கிறது?' என்று வினவினார். பிராட்வேயில் அமைதியா புக்கிங் நடந்தாலும் அப்போதே ஒன்பது காட்சிகள் அரங்கு நிறைந்தன. ரிசர்வேஷன் தொடர்ந்துகொண்டிருக்க நாங்கள் வீடு திரும்பினோம்.

டிசம்பர் 25 அன்று கிருஸ்துமஸ் தினம். எங்கள் குடும்ப நண்பர் ‘டெய்ஸி மேடம்’ வீட்டிலிருந்து மதிய விருந்துக்கு அழைத்திருந்தார்கள். போய் சாப்பிட்டு விட்டு வந்து, நான்கு மணிக்கு மேல் நண்பர்களை ஒவ்வொருவராக இணைத்துக்கொண்டு பிராட்வே போய்ச்சேர்ந்தோம். வழக்கம்போல வடசென்னை மன்றங்கள் தியேட்டரை அலங்கரித்திருந்தனர். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பிராட்வேயில் ஒரு அசௌகரியம் என்னவென்றால், கேட் திறக்கும் வரை சாலையில்தான் நிற்க வேண்டும். அதிகம் வாகனப்போக்குவரத்து உள்ள சாலையாதலால் ஒரே தூசியும் தும்பையுமாக இருக்கும். இப்போதும் அப்படித்தான் இருக்கிறது.

மேட்னி முடிந்து வெளியில் வந்த கூட்டம், 'படம் நல்லாயிருக்கு' என்று சொல்லிக்கொண்டு போனார்கள். மனதுக்கு திருப்தியாக இருந்தது. கரண்ட் டிக்கட் விற்பனைக்கு கூட்டம் முண்டியத்தது. தாய்மார்கள் கூட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது. சற்று நேரத்தில் அரங்கு நிறைய, கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கூட்டம் டிக்கட் கிடைக்காமல் திரும்பியது மனதுக்கு சந்தோஷமளித்தது. இந்த மகிழ்ச்சியோடு உள்ளே சென்று அமர்ந்தோம். நடிகர்திலகம் படம் முழுக்க நீல்நிற கூலிங் கிளாஸ் அணிந்து நடித்திருந்தது மனதுக்கு இதமாக இருந்தது. கல்லூரி விழாவில் 'சாம்ராட் அசோகன்' நாடகத்தை எதிர்பார்த்து காத்திருக்க, வாணிஸ்ரீ (கண்ணகி), சுருளிராஜன் (கட்டபொம்மன்) இவர்களின் இவர்களின் நாடகத்தைத்தொடர்ந்து உடனே அசோகன் நாடகத்தைத் துவக்காமல், இடையில் தேவையில்லாமல் ஒரு பாடலைப் போட்டு சொதப்பியிருந்தார்கள். சாம்ராட் அசோகன் நாடகத்துக்கு எதிர்பார்த்ததைப்போலவே ஆடியன்ஸ் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. செட்டில் எடுக்கப்பட்ட 'ரோஜாவின் ராஜா' பாடலுக்கும் (ஓ.. தலைவர் என்ன அழகு), மைசூர் அரண்மனை முன் எடுக்கப்பட்டிருந்த 'அலங்காரம் கலையாத' பாடலுக்கும் கூட நல்ல வரவேற்பு. பெரும்பாலான காட்சிகள் பரபரப்பில்லாமலேயே போனது. 'ஓடிக்கொண்டேயிருப்பேன்' பாடலும் நன்கு ரசிக்கப்பட்டது. மற்ற இடங்களின் ரெஸ்பான்ஸ் அவ்வளவு நினைவில்லை.

படம் முடிந்து வெளியே வந்தபோது, எல்லோரும் படம் நன்றாயிருப்பதாகவே பேசிக்கொண்டு போயினர். மேலும் இரண்டுமுறை பார்த்தபின், 'அவன் ஒரு சரித்திரத்துக்கு' தயாரானோம்.

mr_karthik
25th December 2011, 12:59 PM
அன்பு வாசுதேவன் சார்,

ரோஜாவின் ராஜா படத்தின் ஸ்டில்களும், பாடல்களின் வீடியோக்களும், படம் வெளிவந்த காலகட்டத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ளன.

பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி.

vasudevan31355
25th December 2011, 02:11 PM
அன்பு கார்த்திக் சார்,

தங்களின் நடிகர்திலகத்தின் கிருஸ்துமஸ் பரிசு 'ரோஜாவின் ராஜா' பதிவை வெகு ஆவலாக எதிர்பார்த்திருந்தேன். அதே மாதிரி நீங்கள் வெகு சிறப்பான பதிவோடு தங்களுக்கே உரிய நடையில் ரோஜாவின் ராஜாவைப் பற்றி மட்டுமல்லாது 1976-ம் ஆண்டின் அனைத்து நடிகர் திலகத்தின் படங்களுக்குமான ஒரு மினி ஆய்வையே தந்து அசத்தி விட்டீர்கள். நீங்கள் கூறியுள்ள கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரியே.

இந்த ஆண்டில் வெளியான நடிகர் திலகத்தின் படங்களை "ஓஹோ" என்று சொல்லிவிட முடியாதுதான். ஒரு சிறு தேக்கம். இந்தத் தேக்கம் நடிகர் திலகத்திற்கே தெரிந்திருந்தது. அதன் வெளிப்பாடு கிரஹப் பிரவேசம் படத்தில் தெரியும். லாரி டிரைவராகவும், நாடக நடிகராகவும் நடிகர்திலகம் அப்படத்தில் நடித்திருப்பார். ஒரு விபத்தில் இடது காலும், இடது கையும் சுவாதீனமில்லாமல் போய்விடும். கைகால்கள் விளங்காமல் போனதால் நாடகங்களில் அவர் நடிக்க இயலாமல் போய்விடும். இருந்தாலும் நடிப்பவருக்கு பின்னணி பாடும் பாடகராக மேடையின் ஒரு ஓரத்திலிருந்து பாடிக்கொண்டிருப்பார். அப்போது நாடகம் பார்க்கும் மக்கள்," நீ பாடாதே. அந்த வேஷத்தை நீ கட்டு" என்று அவரை நடிக்கச் சொல்லி வற்புறுத்துவார்கள். நடிகர் திலகம் தன் நிலைமையைச் சொல்லி அவர்களை சமாதானப்படுத்தி மறுபடி பாட ஆரம்பிப்பார். ("கன்றுகுரல் தேடி வரும் பசுவானேன்...) பாடல் முடிந்ததும் ரசிகர்கள் எல்லோரும் கை தட்டி ஒன்ஸ்மோர் பாடச் சொல்லுவார்கள். அப்போது நடிகர் திலகத்தின் போட்டி நடிகர் (படத்தில்) ஒருவர் தரையில் அமர்ந்து நாடகம் பார்த்துக் கொண்டிருப்பார். ஜனங்கள் ஆரவாரத்தைக் கண்டதும் அவர் பொறாமையுடன் பக்கத்தில் கை தட்டி ரசிக்கும் ரசிகரிடம்,

"என்னடா ரசிக்கிற... என்ன விட அவன் பெரிய நடிகனோ?... என்பார்.

அதற்கு அந்த ரசிகர், "நீ சொன்னாலும், சொல்லாட்டியும் அவன் அதுக்குன்னே பொறந்தவன்தான்டா...அவன் தன் நடிப்பால நாட்டுல துடிப்ப ஏற்படுத்துனவன்டா...

என்று நடிகர் திலகத்தின் புகழ் பாடுவார். இப்படியே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுவிடும். உடனே நடிகர் திலகம் எழுந்து வந்து கூட்டத்தை சமாதானப் படுத்தி

"அய்யா! கொஞ்சம் அமைதியா இருங்க...என் ரசிகர்களை விட என் விரோதிகளுக்குதான் அதிக மதிப்பு கொடுப்பேன். ஏன் தெரியுமா?... அவுங்க என்ன திட்றதனாலதான் என்னால என் கலைய வளர்த்துக்க முடியுது...கொஞ்சம் கலாட்டா பண்ணாம இருக்கீங்களா"

என்று கூறியவுடன் கூட்டத்திலிருந்து சிலர் கல்லால் நடிகர் திலகத்தை அடித்து விடுவார்கள். அப்போது வருத்தத்துடனும்,சற்று கோபத்துடனும் அவர் பேசுவதை கவனியுங்கள்.

"கலைகளையும்,கலைஞனையும் பொக்கிஷமா நினைக்கிற இந்த நாட்டுல இந்த நிலைமை வந்துடுச்சா... ரொம்ப சந்தோஷம்...என் எதிரிங்களுக்கு சொல்லிக்கிறேன்... நீங்க என்ன கல்லால அடிக்கல...நான் கட்டுற கலைக்கோயிலுக்கு அஸ்திவாரம் போட உதவி செய்யிறீங்க...எதிர்ப்பில நீங்க எறியிற சாணத்தை எல்லாம் எருவா போட்டு அதுல வளர்த்த கலை என் கலை...இந்த மேடையில்தான் நான் சாகணும்னு விதி இருந்துச்சுன்னா அதுக்காக நான் ரொம்ப சந்தோஷப் படுறேன்...

மேற்குறிப்பிட்ட நடிகர் திலகம் பேசும் வசனம் அவருக்கு அப்போதிருந்த சூழ்நிலைக்கு தக்கவாறு எழுதப்பட்டிருந்தது. அச்சு அசல் தன் அப்போதைய மனநிலையை கிரஹப்பிரவேசம் பட வாயிலாக வெளிப்படுத்தியிருந்தார் அவர்.

நீங்கள் சொன்னது போல உனக்காக நான், சத்யம்,உத்தமன்,சித்ரா பௌர்ணமி எல்லாம் சுமார் ரகங்களே. கிரஹப்பிரவேசம் வெற்றி அடைந்தது. உத்தமன் படம் நடக்கும் போது இவர் இந்திராகாங்கிரசுடன் இணையும் சம்பவம் வேறு நடைபெற்றது. அதுவும் எங்கள் தங்க ராஜாவை ஒப்பிட்டுப் பார்க்கும் போது உத்தமன் சுமார்தான். அதனால் கடலூரில் கூட அப்படம் சுமாராகத்தான் போயிற்று. தலைவரின் பல ரசிகர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்கள். வேறு சிலர் அவர்கள் விருப்பப்பட்ட கட்சிகளில் இணைந்தார்கள். எங்களைப் போன்றவர்கள் தலைவர் வழி எதுவாயினும் முதலும் முடிவும் அவர்தான் என்று அவர் எது சொன்னாலும் அதையே தாரக மந்திரமாய் ஏற்றுக்கொண்டோம்.

சில படங்கள் நன்றாய் இருந்தது என்றும் சொல்லமுடியாமல், நன்றாய் இல்லை என்றும் சொல்ல முடியாமல், சுமார் ரகம் என்றும் சொல்ல முடியாமல் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். அப்படிப்பட்ட படங்கள் தாம் 1976-இன் அவருடைய படங்கள்.

"ரோஜாவின் ராஜா" வும் அப்படியே. சில இடங்கள் தூள் பரத்தும். சில இடங்கள் சுமாராக இருக்கும். நீங்கள் சொன்னது போல தலைவர் படு ஸ்டைலாக இருப்பார். "நாளை நீ மன்னவன்" தேவை இல்லாதது. அதை அசோகன் ஓரங்க நாடகத்தில் காணாமல் செய்துவிடுவார். (dvd யில் அந்த நாடக சீனையே காணோம். நம் நண்பர்கள் யாராவது வைத்திருப்பவர்கள் கொடுத்தால் கோடி புண்ணியமாக இருக்கும்). பாடல்கள் கொள்ளை போகும். "ஓடிக்கொண்டே இருப்பேன்" சூப்பர். காந்தி சிலை அருகில் மனோகரிடம் பேசும் வசனத்தில் அரசியல் நெடி அதிகம். எப்படி இருந்தாலும் "அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்" என்ற அற்புத பாடல் உள்ள படம் என்ற ஒரு சிறப்பே இப்படத்திற்கு போதும்.

சிறிது கூட நடுநிலை பிறழாமல் தாங்கள் அளித்திருக்கும் ரோஜாவின் ராஜா பதிவு உண்மையிலேயே பெருமைப்பட வைக்கிறது. தங்கள் மேல் எங்களுக்கிருக்கும் மதிப்பையும் மரியாதையையும் இன்னும் கூட்டுகிறது. நிறைய விஷயங்களை இப்பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள வைத்ததற்கு மிகுந்த நன்றிகள் சார்.

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
25th December 2011, 05:08 PM
டியர் கார்த்திக்,
ரோஜாவின் ராஜா பதிவின் மூலம் அநைவரையுமே 1976க்கு அழைத்து சென்று விட்டீர்கள். பாராட்டுக்கள்.

வாசுதேவன் கூறியது போல் அந்த சாம்ராட் அசோகன் நாடகத்தை மீண்டும் பார்க்க முடியுமா என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. பார்ப்போம்..

Inherit the Wind (1960) - இந்தப் படத்தைப் பற்றி ஒரு இணையதளத்தில் குறிப்பிடும் போது நடிகர் திலகத்தை அப்பாத்திரத்தில் போட்டிருந்தால் நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத் தக்கது. அது மட்டுமல்ல இன்றைய நடிப்பினைப் பற்றியும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதோ அந்த பதிவு (http://veenmanshow.blogspot.com/2011/12/inherit-wind-1960-review.html)

sankara1970
25th December 2011, 05:49 PM
the photo (laughing) by both thilagams are very nice

KCSHEKAR
25th December 2011, 08:08 PM
நடிகர்திலகத்தின் புகைப்படங்கள், பாடல் காட்சிகளின் மூலம் சிறப்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை அளித்த டியர் பம்மலார், வாசுதேவன் சார், பாரட்டுக்கள், நன்றிகள்.

KCSHEKAR
25th December 2011, 08:13 PM
டியர் ராகவேந்திரன் சார், நடிகர்திலகம்.காம் சார்பில் வெளியிடப்பட்டுள 2012 காலண்டர் மிகவும் சிறப்பு.

KCSHEKAR
25th December 2011, 08:16 PM
டியர் கார்த்திக் சார், தங்களின் ரோஜாவின் ராஜா அனுபவப் பதிவுகள் அருமை

pammalar
25th December 2011, 08:40 PM
முன்னாள் தமிழக முதல்வர்
அமரர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு
24வது ஆண்டு நினைவாஞ்சலி

தமிழக முதல்வர் பற்றி கலையுலக முதல்வர்

முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1984-ம் ஆண்டு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்று அதன்மூலம் உடல்நலம் வெகுவாக முன்னேறி வந்த சமயத்தில் அவரைப் பற்றி 'பொம்மை' இதழில் அவர் பூரணநலமடைய வேண்டியும், அவருடன் தனக்கிருந்த இணக்கம்-நல்லுறவு குறித்தும் ஒரு கட்டுரைத் தொடரையே வடித்தார் நமது நடிகர் திலகம்

அந்த அரிய-அற்புத கட்டுரைத்தொடரின் மூன்றாவது பகுதி: [இரண்டு பக்கங்கள்]

வரலாற்று ஆவணம் : பொம்மை : 16-31 ஜனவரி 1985

முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTMTBommai6-1.jpg


இரண்டாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTMTBommai7-1.jpg

தொடரும்...

24.12.2011 : முப்பிறவி கண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 24-ம் ஆண்டு நினைவு தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

KCSHEKAR
25th December 2011, 09:50 PM
டியர் பம்மலார், எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிய நடிகர்திலகத்தின் பொம்மை பத்திரிக்கை கட்டுரை மூலம் எம்.ஜி.ஆர் அவர்களுடனான நட்பின் ஆழத்தை மட்டும் அல்லாமல், நடிகர்திலகத்தின் அரசியல் வாழ்க்கை மற்றும் பல அரிய விபரஙளைப் பற்றியும் உண்ர முடிகிறது. பொக்கிஷப்பதிவுக்கு நன்றி.

pammalar
25th December 2011, 11:45 PM
Demi-God's December Delicacies

மண்ணுக்குள் வைரம்

[12.12.1986 - 12.12.2011] : 26வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 12.12.1986
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5359-1.jpg

குறிப்பு:
சென்னை மற்றும் தமிழகமெங்கும் பல அரங்குகளில் 50 நாட்களைக் கடந்தும், அதில் சில அரங்குகளில் 70 நாட்களைக் கடந்தும் ஓடிய "மண்ணுக்குள் வைரம்", 100 நாட்களைத் தொடாவிட்டாலும், பாக்ஸ்-ஆபீஸில் 'சூப்பர்ஹிட்' அந்தஸ்தைப் பெற்ற காவியம். இதன் 50வது நாள் மற்றும் 75வது நாள் விளம்பரங்கள் கிடைத்தவுடன் இங்கே இடுகை செய்கிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th December 2011, 04:44 AM
Demi-God's December Delicacies

ஜஸ்டிஸ் கோபிநாத்

[16.12.1978 - 16.12.2011] : 34வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி : 20.11.1978
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/JG1-1.jpg


'இன்று முதல்' விளம்பரம் : தினத்தந்தி : 16.12.1978
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/JG2-1-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(திருச்சி) : 17.12.1978
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/JG3-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : ஜனவரி 1979
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/JG4-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th December 2011, 04:50 AM
டியர் வாசுதேவன் சார்,

"ரோஜாவின் ராஜா" பதிவுகள், கிறிஸ்துமஸ் பரிசாக, தாங்கள் எங்களுக்கு வழங்கிய வாடாத ரோஜா பூங்கொத்து !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th December 2011, 04:52 AM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்களின் அடுத்தடுத்த பாராட்டுக்களுக்கு எனது அடுக்கடுக்கான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th December 2011, 05:51 AM
டியர் mr_karthik,

நமது நடிகர் திலகம் நமக்கு "ரோஜாவின் ராஜா" திரைக்காவியத்தை 1976-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசாக அளித்தார். mr_karthik ஆகிய தாங்கள்,நமது நடிகர் திலகம் திரிக்கு "ரோஜாவின் ராஜா" நினைவுப்பதிவை 2011-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசாக அளித்துவிட்டீர்கள் !

முதற்கண் தங்களது அபார நினைவாற்றலுக்கு எனது அன்பு கலந்த நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் !

நமது முரளி சார் 'வரலாற்று விற்பன்னர்' என்பது உலகறிந்த விஷயம். தாங்கள் மட்டுமென்ன சளைத்தவரா? 'வரலாற்று வித்தக'ராயிற்றே !

அப்பப்பா...ஒரு அனுபவப் பதிவில் எத்தனை விஷயங்கள் !!!

- 1976-ல் வெளியான நடிகர் திலகத்தின் காவியப் பட்டியல் [சென்னை அரங்குகளுடன்]

- "உனக்காக நான்" தொடங்கி "சித்ரா பௌர்ணமி" வரை, அக்காவியங்களைப் பற்றிய மினிஅலசல் மற்றும் வரலாற்றுக்குறிப்புகள்
(நடிகர் திலகம்-தேவிகா ஜோடியில், "சாந்தி" [22.4.1965]க்குப்பின் "நீலவானம்" [10.12.1965], அதற்கப்புறம் ஜோடியாக 10 ஆண்டுகளுக்குப்பின் "சத்யம்" [6.5.1976] காவியத்தில்தான். இடையில் "சரஸ்வதி சபதம்" [3.9.1966], "பாரத விலாஸ்" [24.3.1973] போன்ற கலைக்குரிசிலின் காவியங்களில் தேவிகா தலைகாட்டியபோதும், அக்காவியத்தலைவி ஆகும் வாய்ப்பு கிட்டவில்லை)

- "ரோஜாவின் ராஜா" குறித்த பசுமை நிறைந்த நினைவுகள்

என ஒரு வரலாற்றுத் தகவல் பெட்டகமே தங்கள் பதிவில் அடங்கியுள்ளது.

தங்களுக்கு நகைச்சுவை உணர்வும் அதிகம் என்று நினைக்கிறேன். அது தங்கள் எழுத்திலும் வெளிப்படுகிறது.

'அலங்காரம் கலையாத சிலை' போல அழகு பொங்க வந்த இந்த அனுபவப்பதிவை இடுகை செய்த தங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் !

அன்பு கலந்த பிரமிப்புடன்,
பம்மலார்.

vasudevan31355
26th December 2011, 07:31 AM
அன்பு பம்மலார் சார்,

தமிழக முதல்வர் பற்றி கலையுலக முதல்வர் கூறியுள்ள கருத்துக்கள் (தொடர்ச்சி) அருமை. தான் திமுக விலிருந்து ஒதுக்கப்பட்டதையும், கலை நிகழ்ச்சிகள் மூலம் புயல் நிவாரண நிதி திரட்டித் தந்ததையும் நினைவு கூர்ந்துள்ளார் தலைவர். தன் திருமணத்தை பற்றிக் கூறி இருப்பது இன்னும் சிறப்பு. இரு திலகங்களும் பரஸ்பரம் தங்கள் தாயார்களின் மேல் வைத்திருந்த அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. தொடரைக் கொடுத்து தொடர்ந்து தாங்கள் செய்துவரும் பணியும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

மண்ணுக்குள் வைரம், ஜஸ்டிஸ் கோபிநாத் பதிவுகள் very neat. பாராட்டுக்கள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
26th December 2011, 09:52 AM
'பணம்' (27-12-1952) 60-ஆம் ஆண்டு பிரம்மாண்ட தொடக்க விழா.

நடிகர் திலகத்தின் 2-ஆவது காவியப் படைப்பு.

http://img153.imageshack.us/img153/5248/vlcsnap2011110509h50m02.png

நடிகர் திலகத்துடன் இதர கலைஞர்கள்

http://img231.imageshack.us/img231/9267/vlcsnap2011110509h57m00.png

http://img249.imageshack.us/img249/5896/vlcsnap2011110509h54m32.png

http://img197.imageshack.us/img197/179/vlcsnap2011110509h52m27.png

http://img233.imageshack.us/img233/4042/vlcsnap2011110509h57m16.png

http://img338.imageshack.us/img338/2171/vlcsnap2011110509h55m09.png

http://img560.imageshack.us/img560/5712/vlcsnap2011110514h13m36.png

http://img830.imageshack.us/img830/9639/vlcsnap2011110514h12m57.png


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
26th December 2011, 10:19 AM
சிறப்பு நிழற்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Panam1.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
26th December 2011, 10:35 AM
'பணம்' படத்தில் சிம்மக் குரலோனின் சீர்மிகு தோற்றங்கள்

http://www.moserbaerhomevideo.com/images/titleimages/large/VTAF0853.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-24.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-18.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-12.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-12.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-23.jpg

"பணம்" படத்தில் எம்.எல்.வசந்தகுமாரியின் தேன் சொட்டும் குரலில் நடிகர் திலகம், பத்மினி நடிப்பில் மிளிரும் "குடும்பத்தின் விளக்கு" பாடல் வீடியோவாக.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5I_zunnmHeI

NSK அவர்களின் கருத்துச் செறிவுள்ள "எங்கே தேடுவேன்... பணத்தை எங்கே தேடுவேன்...பாடல் வீடியோவாக.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=JDOVnLqnlUY



அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
26th December 2011, 11:12 AM
"பணம்" 'தினத்தந்தி' நாளிதழின் வரலாற்று ஆவணம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-17.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-23.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_0005-1.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
26th December 2011, 02:41 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

தங்கள் அன்பு பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. 1976 படங்கள் பற்றிய தங்களின் மேலதிக விவரங்கள், குறிப்பாக 'கிரகப்பிரவேசம்' பட வசனங்கள் அருமை. சரியான நேரத்தில் சரியான வசனமாக அவை படத்தில் இடம் பெற்றிருந்தன. அவற்றை அப்படியே இங்கு பதித்து கூடுதல் சுவை சேர்த்தமைக்கு நன்றி.

அடுத்த அட்டாக்காக, 'பணம்' படத்தை கையில் எடுத்துள்ளீர்கள். ஸ்டில்களும், தினத்தந்தி வரலாற்று ஆவணங்களும் நன்றாக உள்ளன. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத என்.எஸ்.கே.யின் 'எங்கே தேடுவேன்... பணத்தை எங்கே தேடுவேன்' பாடலைப் பதிப்பித்ததற்கு மிக்க நன்றி.

தொடர்ந்து அசத்துங்கள்.

mr_karthik
26th December 2011, 03:58 PM
அன்புள்ள பம்மலார் சார்,

தங்களின் மேலான பாராட்டுக்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.

சத்யத்துக்கு முன் நடிகர்திலகத்துடன் தேவிகா ஜோடியாக நடித்த கடைசிப்படம் சாந்தி என்று சற்று தவறி விட்டேன். சாந்திதான் முதலில் வந்தது, நீலவானம் பின்னர் வந்தது என்று நானே நண்பரொருவரிடம் ஏற்கெனவே வாதிட்டிருக்கிறேன். தேதி சொன்னால் நம்ப மாட்டார் என்பதால் நான் சொன்ன பாயிண்ட், சாந்திக்கு இசை 'விஸ்வநாதன் ராமமூர்த்தி' ஆனால் நீலவானத்துக்கு இசை 'எம்.எஸ்.விஸ்வநாதன்' என்றதும் நண்பர் வாய் மூடினார். அப்படி வாதிட்ட நானே இப்போது அவசரத்தில் சற்று பிறழ்ந்து விட்டேன். சுட்டியமைக்கு நன்றி.

தங்களின் சமீபத்திய பதிவுகளில் அள்ளித்தந்த

பொம்மையில் வந்த நடிகர்திலகத்தின் கட்டுரைத்தொடர்ச்சி,

ஜஸ்டிஸ் கோபிநாத், மண்ணுக்குள் வைரம் ஆவணங்கள்

அனைத்தும் சூப்பர். அதிலும் ஜஸ்டிஸுக்கான திருச்சி தினத்தந்தி விளம்பரத்தைப் பதித்தமைக்கு கூடுதல் நன்றிகள். அதில் தஞ்சை மாவட்டத்தில் சிறு நகரங்களில் கூட சாதாரணப்படமான ஜஸ்டிஸ் 4 காட்சிகள், 5 காட்சிகள் என்று திரையிடப்பட்டு கலக்கியிருக்கின்றன. சிலருடைய படம்தான் சின்ன ஊர்களில் கூட அதிக காட்சிகள் காண்பிக்கப்படுவதாக வேறொரு திரியில் சிலர் பதிந்தமைக்கு சரியான பதிலாக இது அமைந்துள்ளது.

ஆவணச்செம்மலான தங்கள் தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

அன்புள்ள ராகவேந்தர் சார் மற்றும் சந்திரசேகர் சார்,

தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி.

sankara1970
26th December 2011, 06:58 PM
Raja Raja Cholan posil annan Sivaji calendar 2012 veli ittulla Kovai Peria Nayakanpalayam Rasiga Ithayangalukku vazthukkal

athai ingu pathitha Thiru. Ragavendarku nandri

pammalar
26th December 2011, 08:15 PM
கோவை பெரிய நாயக்கன் பாளையம் சிவாஜி மன்றம் வடிவமைத்துள்ள 2012ம் ஆண்டிற்கான காலண்டர்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/PNPalayamNTFansCalendar2012fw.jpg

டியர் sankara1970,

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய சிவாஜி மன்றம் வெளியிட்டுள்ள 2012-ம் ஆண்டு நடிகர் திலகம் நாள்காட்டியில் வெளியாகியுள்ள நடிகர் திலகத்தின் புகைப்படம், "திருவருட்செல்வர்" திரைக்காவியத்தில் வரும் 'வில்லவ' மன்னன் கதாபாத்திரம்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th December 2011, 08:57 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களது களிப்பான பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !

"பணம்" பதிவுகள் பிரமாதம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th December 2011, 10:12 PM
டியர் mr_karthik,

தங்களின் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது வளமான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th December 2011, 10:34 PM
முன்னாள் தமிழக முதல்வர்
அமரர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு
24வது ஆண்டு நினைவாஞ்சலி

தமிழக முதல்வர் பற்றி கலையுலக முதல்வர்

முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1984-ம் ஆண்டு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்று அதன்மூலம் உடல்நலம் வெகுவாக முன்னேறி வந்த சமயத்தில் அவரைப் பற்றி 'பொம்மை' இதழில் அவர் பூரணநலமடைய வேண்டியும், அவருடன் தனக்கிருந்த இணக்கம்-நல்லுறவு குறித்தும் ஒரு கட்டுரைத் தொடரையே வடித்தார் நமது நடிகர் திலகம்

அந்த அரிய-அற்புத கட்டுரைத்தொடரின் நான்காவது பகுதி: [ஒரு பக்கம்]

வரலாற்று ஆவணம் : பொம்மை : 1-15 பிப்ரவரி 1985

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTMTBommai8-1.jpg

தொடரும்...

24.12.2011 : முப்பிறவி கண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 24-ம் ஆண்டு நினைவு தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
27th December 2011, 04:23 AM
Demi-God's December Delicacies

பக்த ராமதாசு(தெலுங்கு)

[இராமரின் தம்பி இலட்சுமணராக கௌரவத் தோற்றம்]

[23.12.1964 - 23.12.2011] : 48வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

அரிய நிழற்படம் : இராமரும்-இலட்சுமணரும் : தேவுடா-நடிகர் திலகம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/BhakthaRamadasu1-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th December 2011, 04:35 AM
Demi-God's December Delicacies

ரோஜாவின் ராஜா

[25.12.1976 - 25.12.2011] : 36வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

அரிய நிழற்படங்கள்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RoR2-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RoR1-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th December 2011, 04:43 AM
Demi-God's December Delicacies

ரோஜாவின் ராஜா

[25.12.1976 - 25.12.2011] : 36வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல் : காவியத் துவக்கவிழாக் காட்சிகள்

வரலாற்று ஆவணம் : மதி ஒளி : 15.4.1973
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RoR-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
27th December 2011, 05:57 AM
அன்பு பம்மலார் சார்,

தமிழக முதல்வர் பற்றி கலையுலக முதல்வர் கூறியுள்ளதில் திரு எம்.ஜி.ஆர் அவர்களின் மூத்த மனைவி இறந்தவுடன் நமது நடிகர் திலகம் திரு எம்.ஜி.ஆர் அவர்களுடனே இரு தினங்கள் இருந்தது அவர்களது சிறந்த நட்புக்கு ஒரு சான்று. அரசியலில் தனக்கு போதுமான திறமை இல்லை என்று கூறும் மனோபாவம் வேறு யாரிடமாவது காட்டி விட முடியுமா? அரிய பதிவின் தொடர்ச்சிக்கு என் தொடர் நன்றிகள்.

'பக்த ராமதாஸ்' பதிவு பரமானந்தம்.

'ரோஜாவின் ராஜா' மதிஒளி பதிவு நீங்கள் என்றும் எங்கள் ஆவண ராஜா என்று காட்டுகிறது. அதிலும் நெஞ்சை அள்ளும் 'ரோஜாவின் ராஜா' நிழற்படங்கள் நினைவிலேயே தங்கி விட்டன. பிரமாதம்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
27th December 2011, 06:00 AM
அன்பு கார்த்திக் சார்,

தங்களுடைய வெகுவான பாராட்டிற்கு என் அன்பு கலந்த ஆயிரம் நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
27th December 2011, 06:06 AM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்கள் அன்பான பாராட்டிற்கு என் மனம் நிறைந்த நன்றி.

அன்புடன்,
வாசுதேவன்.

saradhaa_sn
27th December 2011, 04:36 PM
டியர் பம்மலார்,

தங்களின் ஆவணப்பதிவுகள் அடைமழையாய் நமது நடிகர்திலகம் திரியில் பொழிந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் அடிக்கடி பங்குபெற்று உங்களுகெல்லாம் அவ்வப்போது பாராட்டும், நன்றியும் சொல்ல முடியவில்லையென வருந்துகிறேன்.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியான நடிகர்திலகத்தின் திரைக்காவியங்களுக்கு தாங்கள் அள்ளி வழங்கியிருக்கும் ஆவணப் பொக்கிஷங்களைப் பார்த்து திகைத்துப்போனேன். இதுபோன்றதொரு பொற்காலம் நமது திரிக்கு வர வேண்டுமென்று முன்பெல்லாம் ஏங்கியதுண்டு. இப்போது அவை நிறைவேறுவது கண்டு இது கனவா அல்லது நனவா என்ற மலைப்பு ஏற்படுகின்றது. அடேயப்பா, ஒவ்வொரு திரைப்படத்துக்கும்தான் எத்தனை ஆவணங்கள் தர முடிகிறது தங்களால்.

விளமபரப்பதிவுகள் மட்டுமல்லாது அந்தத்திரைப்படங்கள் வெளியானபோது வெளிவந்த விமர்சனங்கள், சிறப்புக்கட்டுரைகள், பிரபலங்களின் கருத்துக்கள், அது சம்மந்தமான விழாக்கள், அப்படங்களுக்காக பருவ இதழ்கள் வெளியிட்ட சிறப்பு மலர்கள் என எவ்வளவு விஷயங்களை அதன் ஒரிஜினல் வடிவத்திலேயே தருவதற்கு என்பது எவ்வளவு பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டுள்ளீர்கள் என்பதை உணர்ந்து நடிகர்திலகத்தின் ரசிகப்பெருமக்கள் அனைவரும் தங்களுக்கு கடமைப்பட்டவர்களாகிறோம். 'ராஜபார்ட் ரங்கதுரை' மதிஒளி சிறப்பு மலரை முன்னட்டை முதல் பின்னட்டை வரை அப்படியே பதிப்பித்து தந்தமைக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

ஒவ்வொரு படத்தின் ஆவணப்பதிவைப்பற்றியும் தனித்தனியே பாராட்ட வேண்டும்போலிருக்கிறது. ஆனால் ஏராளமாக தாங்கள் பதிப்பித்துத்தள்ளிவிட்டதால், அவற்றுக்கே பல பதிவுகள் இடவேண்டியிருப்பதால் மன்னிக்கவும்.

இதையே அனைத்துப் பதிவுகளுக்குமான பாராட்டாகவும், நன்றி நவிலலாகவும் ஏற்றுக்கொள்ளுங்கள். தங்கள் சேவைக்கு வெறும் வார்த்தைகளாலும் எழுத்துக்களாலும் நன்றி சொல்லி முடித்து விட முடியாது. எனவே ராகவேந்தர் அவர்களும் கார்த்திக் அவர்களும் சொன்னது போல, இது ஒரு சம்பிரதாய நன்றி மட்டுமே. உள்ளத்திலுள்ள நன்றியுணர்ச்சிகளை வார்த்தைகளில் கொட்ட முடியாது.

தங்கள் ஆவணக்காப்பகம் அள்ள அள்ள குறையாத வற்றாத ஜீவ நதியாகத்திகழ்வது கண்டு மிக்க மகிழ்ச்சி.

தங்கள் அயராத உழைப்புக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.

saradhaa_sn
27th December 2011, 04:43 PM
டியர் வாசுதேவன்,

கடந்த சிலமாதங்களாக தங்கள் அசுர உழைப்பு எல்லோரையும் அசர வைக்கிறது.

ஒவ்வொரு படத்துக்கும் அற்புதமான ஸ்டில்கள், பாடல்களின் வீடியோ இணைப்புக்கள், படங்கள் மற்றும் பாடல்களைப்பற்றிய குறிப்புக்கள் என்று முக்கனிச்சாறான பதிவுகள் மூலம் நமது திரியை எங்கோ வெகு உயரத்துக்குக் கொண்டு சென்று விட்டீர்கள். நீங்களும் பம்மலாரும் ராகவேந்தர் அவர்களும் தந்துவரும் பொக்கிஷப்பதிவுகளைப்பாராட்ட வார்த்தைகளே இல்லை. முரளியண்ணாதான் முன்போல அடிக்கடி வராவிட்டாலும், வருகின்ற நேரங்களில் அவரது சிறந்த வரலாற்றுப்பதிவுகள் மூலம் ஈடு கட்டிவிடுகிறார். இன்னொரு பக்கம் கார்த்திக் அவர்களின் கடந்த கால அனுபவப்பதிவுகள் சுவையூட்டுகின்றன. சந்திரசேகர் அவர்களின் சமூகப்பணிகளும் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மற்றவர்களின் அவ்வப்போதைய பதிவுகளும் சிறப்பாக உள்ளன. மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

தங்களின் சிரத்தை மிகுந்த பதிவுகள் அனைத்தையும் படித்தேன். படித்தேன் என்பதைவிட, பார்த்தேன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் அவை கண்களுக்கும் கருத்துக்கும் விருந்து படைக்கின்றன. ஒவ்வொரு படத்துக்கும் நீங்கள் அக்கறையெடுத்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் தேடியெடுத்து இணைப்பது ரொம்பவே பாராட்டுக்குரியது.

அனைத்துப்பதிவுகளுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.

saradhaa_sn
27th December 2011, 05:31 PM
டியர் பம்மலார் & டியர் ராகவேந்தர்,

நடிகர்திலகத்தின் திரியில் மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாளையொட்டி பதிவுகள் இட்டிருந்த விதம் அற்புதம்.

மக்கள் திலகத்தின் நினைவு நாளையொட்டி, அவரைப்பற்றி நடிகர்திலகம் அவர்கள் பொம்மை மாத இதழில் எழுதிய தொடர் கட்டுரைகளை அப்படியே ஆவணமாகத் தொடர்ந்து பதித்து வருவது பாராட்டுக்குரியது. நடிகர்திலகத்தின் கட்டுரை, பல மறைந்துகிடந்த உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது.

ராகவேந்தர் அவர்களின் 'நடிகர்திலகம் காலண்டர்' 'மக்கள் திலகம் காலண்டர்' இரண்டுமே அருமை. பாராட்டுக்கள்.

sankara1970
27th December 2011, 06:29 PM
very rare NT and Thevar-i believe they never worked together.

saradhaa_sn
27th December 2011, 07:39 PM
very rare NT and Thevar-i believe they never worked together.

டியர் சங்கர்,

சாண்டோ சின்னப்பா தேவர் நடிகர்திலகத்தை வைத்து படம் தயாரிக்கவில்லை. தேவர் படத்தில் நடிகர்திலகம் நடிக்கவில்லை. ஆனால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். நடிகர்திலகம் வீட்டில் விசேஷம் என்றால் தேவர்தான் முதல் ஆளாக நிற்பார். சின்னப்பா தேவர் வீட்டு விசேஷங்களுக்கு நடிகர்திலகம் வந்தபின்தான் எம்.ஜி.ஆரே வருவார்.

இவ்வளவு ஏன்?, இயக்குனர் ஆர்.தியாகராஜனுக்கும், தேவரின் மகளுக்கும் திருமனம் நடந்த போது மாப்பிள்ளை வீட்டு சார்பில் நடிகர்திலகமும், பெண் வீட்டு சார்பில் மக்கள்திலகமும் தான் தட்டை மாற்றிக்கொண்டார்கள். (இது தியாகராஜனே 'திரும்பிப்பார்' நிகழ்ச்சியில் சொன்ன தகவல்).

pammalar
27th December 2011, 11:15 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் பாசமான பாராட்டுதல்களுக்கு எனது நயமான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th December 2011, 11:26 PM
சகோதரி சாரதா,

தங்களை மீண்டும் "வருக ! வருக !" என மனமார வரவேற்கிறேன்.

தங்களது பாராட்டுப்பதிவுக்கும் அதில் தாங்கள் இந்த எளியவனுக்கு வழங்கியுள்ள புகழுரைகளுக்கும் ஆயிரமாயிரம் ஆத்மார்த்தமான நன்றிகள் !

தங்களது பாராட்டுக்கள் மிகப்பெரிய ஊக்கசக்தியாக விளங்குகிறது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை !

தங்களின் அபார படைப்புகளால்(பதிவுகளால்), பல ஆண்டுகளாக அக்கறையோடு தாங்கள் வளர்த்த நமதுதிரிக்கு, முடிந்தபோதெல்லாம் தாங்கள் வருகைபுரிந்து, நடிகர் திலகம் மற்றும் அவரது காவியங்களைக் குறித்த பல சிறந்த-அரிய பதிவுகளையும் முன்போல் அளித்து, அதேசமயம் எங்களையெல்லாம் பாராட்டும் பதிவுகளையும் அளித்து, எங்களை மென்மேலும் ஊக்கப்படுத்தி மகிழ்விக்குமாறு இங்குள்ள அனைவரின் சார்பிலும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th December 2011, 11:38 PM
very rare NT and Thevar-i believe they never worked together.

டியர் sankara1970,

You are cent percent right ! [திரைப்படங்களில் இணையாத நடிகர் திலகமும், தேவரும் இணைந்துள்ள அபூர்வ புகைப்படம்தான் அது !]

தங்களது பதிவுக்கு பதில் பதிவாக நமது சகோதரி வழங்கியுள்ள விவரங்கள் அருமை !

ஒரு கூடுதல் தகவல்:
திரையுலகில் தன்னுடன் இணையாத சின்னப்பா தேவரின் மணிவிழாவை நமது நடிகர் திலகம் தலைமைதாங்கி முன்னின்று நடத்திக்கொடுத்தார். நடிகர் திலகத்தின் பெருந்தன்மைக்கு இது போன்று பல சான்றுகளைக் கூறமுடியும்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th December 2011, 12:17 AM
முன்னாள் தமிழக முதல்வர்
அமரர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு
24வது ஆண்டு நினைவாஞ்சலி

தமிழக முதல்வர் பற்றி கலையுலக முதல்வர்

முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1984-ம் ஆண்டு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்று அதன்மூலம் உடல்நலம் வெகுவாக முன்னேறி வந்த சமயத்தில் அவரைப் பற்றி 'பொம்மை' இதழில் அவர் பூரணநலமடைய வேண்டியும், அவருடன் தனக்கிருந்த இணக்கம்-நல்லுறவு குறித்தும் ஒரு கட்டுரைத் தொடரையே வடித்தார் நமது நடிகர் திலகம்

அந்த அரிய-அற்புத கட்டுரைத்தொடரின் ஐந்தாவது நிறைவுப்பகுதி: [இரு பக்கங்கள்]

வரலாற்று ஆவணம் : பொம்மை : 16-28 பிப்ரவரி 1985

முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTMTBommai9-1.jpg


இரண்டாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTMTBommai10-1.jpg

24.12.2011 : முப்பிறவி கண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 24-ம் ஆண்டு நினைவு தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
28th December 2011, 02:59 AM
உமாபதிக்கு மணிவிழா : "பணம்" காவியத்துக்கு வைரவிழா

கலையுலகின் மன்னர்மன்னனுக்கு வைர-மணி விழா

'பராசக்தி' கணேச பெருமானாரின்
இரண்டாவது திரைக்காவியம்

பணம்

[27.12.1952 - 27.12.2011] : 60வது ஆண்டு ஆரம்பம்

கிடைத்தற்கரிய புகைப்படங்கள்

ஸ்டைலாக ஒரு அசத்தல் போஸ்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PanamPhoto1a-1.jpg


நடிகர் திலகத்துடன் நாட்டியப்பேரொளி
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PanamPhoto2-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th December 2011, 04:55 AM
உமாபதிக்கு மணிவிழா : "பணம்" காவியத்துக்கு வைரவிழா

கலையுலகின் மன்னர்மன்னனுக்கு வைர-மணி விழா

'பராசக்தி' கணேச பெருமானாரின்
இரண்டாவது திரைக்காவியம்

பணம்

[27.12.1952 - 27.12.2011] : 60வது ஆண்டு ஆரம்பம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்

The Hindu : 21.12.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Panamad-1.jpg


The Hindu : 27.12.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/panamad1-1.jpg


குண்டூசி : ஜனவரி 1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/panamad3-1.jpg


The Hindu : 3.1.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/panamad2-1.jpg


Indian Express : 1.1.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Panamad-2-1.jpg


The Hindu : 9.1.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Panamad4-1.jpg


The Hindu : 23.1.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Panamad5-1.jpg


The Hindu : 11.2.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Panamad6-1.jpg

குறிப்பு:
1. "பணம்", சென்னையில் 'சித்ரா'வில் 42 நாட்களும், 'பிரபாத்'தில் 48 நாட்களும், 'திருமகள்' திரையரங்கில் 43 நாட்களும், 'காமதேனு'வில் 36 நாட்களும் ஓடி மாநகரில் வெற்றிக்காவியமாகத் திகழ்ந்தது. மேலும், கணிசமான வெளி ஊர்களின் அரங்குகளில் 50 நாட்கள் ஓடிய இக்காவியம், அதிகபட்சமாக மதுரை 'ஸ்ரீதேவி'யில் 84 நாட்கள் ஓடி 'நல்ல வெற்றிக்காவியம்' என்கின்ற பெயரைப் பெற்றது. மதுரையில் ஷிஃப்டிங் முறையில் "பணம்" 100 நாட்களைக் கடந்தது.

2. மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த முதல் திரைக்காவியம் "பணம்".

3. 1952 டிசம்பரில் திறக்கப்பட்ட சென்னை 'காமதேனு' திரையரங்கில் வெளியான முதல் புதிய தமிழ்த்திரைக்காவியம் "பணம்".

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
28th December 2011, 12:54 PM
http://www.natpu.in/?p=11819

vasudevan31355
28th December 2011, 02:04 PM
பாக்கியவான் "பத்மஸ்ரீ" நடிக்கும் 'பாக்கியவதி'(27-12-1957) மிக அரிய நிழற்படங்கள்

55-ஆவது ஆண்டுத் துவக்க விழா ஸ்பெஷல்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-28.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/29.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/33.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/32.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/30.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/26.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/23-3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/21-4.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th December 2011, 02:10 PM
'பாக்கியவதி' நிழற்படங்கள் தொடர்கின்றன.

'பாக்கியவதி' பட இயக்குனர் திரு.L.V.பிரசாத்

http://www.telugucolours.com/profiles/lv_prasad_400.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/14-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/13-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/15-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/27.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/25-3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/18-3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/17-2.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/12-2.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th December 2011, 02:39 PM
'பாக்கியவதி' நிழற்படங்கள் தொடர்கின்றன.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/9-8.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/11-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-15.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/8-8.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-22.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th December 2011, 02:45 PM
'பாக்கியவதி' சிறப்பு நிழற்படம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-29-1.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th December 2011, 03:05 PM
"ஆசைக்கிளியே...அழகுச் சிலையே"...இனிமையான தாலாட்டுப் பாடல் காணொளி வடிவில்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2XgPVUILrGg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th December 2011, 03:24 PM
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,

வருக! வருக!. எத்தனை நாள் ஆயிற்று தங்கள் அற்புதப் பதிவுகளைப் பார்த்து! தங்கள் பதிவுகளைப் பார்த்ததும் 'விர்' ரென்று ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

தங்கள் அன்பு கலந்த பாராட்டிற்கு என்னுடைய எண்ணிலடங்கா நன்றிகள். திரியைப் பார்த்து அத்தனை விஷயங்களையும் பாராட்டியமைக்கு எங்கள் அனைவரது சார்பாக தங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் தேவர் சம்பந்தப்பட்ட அரிய தகவலுக்கு நன்றி.

தங்களுடைய நீண்ட பதிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்.

நன்றியுடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th December 2011, 03:54 PM
அன்பு பம்மலார் சார்,

மக்கள் திலகத்தைப் பற்றிய தலைவரின் பொம்மைக் கட்டுரையின் தொடர்ச்சியில் நடிகர் சங்க துரோகங்களை அவர் விவரித்திருப்பது அவர் மனம் எவ்வளவு புண்பட்டிருந்தது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

'பணம்' விளம்பரங்கள் படு சூப்பர். விலை மதிக்க முடியாதவை. அதுவும் பச்சைக் கலரில் பளபளக்கும் 'குண்டூசி' இதழ் விளம்பரம் பட்டையை உரிக்கிறது.

"எங்கே தேடுவேன்... அரிய ஆவணங்களை எங்கே தேடுவேன்"...என்று தவித்த எங்களுக்கு "இதோ நான் இருக்கிறேன்" என்று ஆபத்பாந்தவராய் அருள்பாலித்து ஆவணங்களைத் தர தங்களை விட்டால் வேறு யார்?

பணத்தை விட விலைமதிக்க முடியாத 'பணம்' ஆவணங்களுக்கு பல்லாயிரம் நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்

vasudevan31355
28th December 2011, 05:27 PM
பணம் 'பேசும்படம்' இதழ் அரிய அட்டைப்படம். (அன்பு பம்மலார் அவர்கள் இதை வண்ணமயமாகத் தருவார் என்று எதிர்பார்க்கிறேன்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-16.jpg

அன்புடன்,
வாசுதேவன்

saradhaa_sn
28th December 2011, 05:30 PM
டியர் பம்மலார் & டியர் வாசுதேவன்,

நடிகர்சங்க விஷயத்தில் நடிகர்திலகம் தன் பதவிக்காலத்துக்குப்பின் மிகவும் மனம் புண்பட்டிருந்தார் என்பது உண்மை. அதற்கான காரணம் நடிகர்சங்க உறுப்பினர்களாலேயே ஏற்படுத்தப்பட்டதுதான்.

1971 இறுதியில் நடிகர்திலகம் தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்னர் நடைபெற்ற சங்கக் கூட்டங்களின்போது, "நமது சங்கம் இன்னும் வாடகைக் கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. அத்துடன் சங்க உறுப்பினர்களின் சந்தாவை நம்பியே நடக்கிறது. சங்கத்துக்கு சொந்தக்கட்டிடமும், நிறந்தர வருமானம் கிடைக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்ட வேண்டும்" என்று நடிகர்திலகம் பேசியபோது, மற்ற அனைவரும் "அப்படியானால் இம்முறை நீங்கள் தலைவராக இருந்து செயல்படுத்துங்கள். நாங்கள் முழு ஒத்துழைப்புத்தருகிறோம்" என்று கூற, நடிகர்திலகமும் அதனை ஏற்றுக்கொண்டு, தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசனை செய்தபின் அவர் தலைவராகவும், மேஜர் சுந்தர்ராஜன் செயலாளராகவும், வி.கே.ராமசாமி பொருளாளராகவும், 'சோ' சங்கத்தின் சட்ட ஆலோசகராகவும் எல்லோராலும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகம் அமைந்ததும் சொந்தக்கட்டிடத்துக்கான ஆலோசனைகள் தீவிரமாக்கப்பட்டு, உறுப்பினர்களிடம் தொகைகள் வசூலிக்கப்பட்டதுடன், சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நட்சத்திர இரவு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு நிதி வசூலிக்கப்பட்டது. சென்னையில் நடந்த பிரம்மாண்ட நட்சத்திர விழாவில் ராஜேஷ் கன்னா, மும்தாஜ், ரேகா உள்ளிட்ட வட இந்திய நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். பல்வேறு வகையிலும் திரட்டிய நிதி போதாமல் வங்கியில் கடன்பெறப்பட்டு கட்டிட வேலை நடந்தது. சங்கக்கட்டிடம் மட்டுமல்லாது, ச்ங்கத்துக்கு நிரந்த வருமானம் வரும் வகையில் ஒரு பெரிய அரங்கம் ஒன்றும் கட்டப்பட்டது. திறப்பு விழாவுக்குப்பின் அந்த அரங்கம் பல்வேறு பொது நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு அந்தப்பணம் சங்கத்தின் நிதியில் சேர்க்கப்பட்டது. அந்த அரங்கம் பல்வேறு திரைப்படங்களிலும் இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில், வங்கிக்கடன் முழுவதும் செலுத்தப்படாத நிலையில் நடிகர்திலம் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்தபோது, மேலும் இன்னொரு பீரியட் இந்த நிர்வாகிகளே நீடிக்க வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ள, தேர்தல் நடத்தப்படாமல் இவர்களின் பதவிக்காலம் நீடித்தது.

(நடிகர்திலகத்தின் முதல் பதவிக்காலத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 'பாரத்' பட்டம் பெற்றதற்காகவும், இரண்டாவது பதவிக்காலத்தில் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சியைப்பிடித்து முதலமைச்சரானதற்காகவும், நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகர்திலகம் தலைமையேற்று பாராட்டு விழாக்கள் நடத்தினார். முதல் விழா நடிகர் சங்கத்திலும், இரண்டாவது விழா பழைய நேரு விளையாட்டரங்கிலும் நடந்தது. இதற்கு முன் 1963-ல் எம்.ஜி.ஆர். நடிகர்சங்கத்தலைவராக இருந்தபோது, அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில் அமெரிக்கா சென்று வந்த நடிகர்திலகத்தை வரவேற்று, சென்னை விமான நிலையம் முதல் அன்னை இல்லம் வரை பிரம்மாண்ட ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார் எம்.ஜி.ஆர்.)

நடிகர்திலகத்தின் தலைமையில் நடிகர் சங்கம் செம்மையாக செயல்பட்டு வந்ததால் மீண்டும் அவரையே தலைவராக நீடிக்குமாறு எல்லோரும் கேட்டுக்கொள்ள, போட்டியின்றி தேர்ந்தெடுத்தால் ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்தார். ஆனால் இலட்சிய நடிகர் திரு எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான் எதிர்த்துப்போட்டியிடப்போவதாக அறிவித்தது நடிகர்திலகத்துக்கு அதிர்ச்சியளித்தது. அவருக்கு போன் செய்து 'ராஜு, நீ தலைவராக விரும்பினால் என்னிடம் நேரடியாக சொல்லியிருக்கலாமே, நானே போட்டியிலிருந்து விலகிக்கொள்வேனே' என்று சொன்னதோடு தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சி திரையுலகினருக்கு அதிர்ச்சியளித்தது. பலர் நடிகர்திலகத்துக்கு ஆதரவளித்தனர். நடிகர்திலகத்தின் அன்னை இல்லத்துக்கு ஒருவர் வந்து எஸ்.எஸ்.ஆரை போட்டியிலிருந்து விலகச்செய்ய தான் பொறுப்பு என்றும், நடிகர்திலகமே சங்கத்தலைவராக நீடிக்க வேண்டுமென்றும் சொன்னார். அவர் யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அப்போது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஐசரிவேலன்தான் அவர்.

ஆனால் நடிகர்திலகம் மறுத்துவிட்டார். 'எப்போ போட்டின்னு வந்திடுச்சோ அப்புறம் அந்தப்பதவி எனக்கு வேன்டாம், ராஜுவே தலைவராகட்டும்' என்று விலகிவிட்டார். எஸ்.எஸ்.ஆர். சங்கத்தலைவராக பதவியேற்றதும் சங்க செயல்பாடுகள் முடங்கிப்போயின. அவற்றுக்குக் காரணம் முந்தைய தலைவராக இருந்த நடிகர்திலகம், மற்றும் வி.கே.ஆர்., மேஜர் இவர்கள்தான் என்று எஸ்.எஸ்.ராஜேந்திரன் குற்றம் சாட்ட, நடிகர்திலகம் மனம் புண்பட்டு 'இனிமேல் நடிகர் சங்கத்துக்கு வரமாட்டேன்' என்று அறிக்கை விட்டார். அதிலிருந்து அவர் சங்கத்தின் பக்கமே போகாமல் இருந்தார். நடிகர்சங்கத்தின் சார்பில் இலங்கைத்தமிழர்களுக்காக நடந்த ஊர்வலத்தில் மட்டும் எஸ்.எஸ்.ஆருடன் ஒரே ஜீப்பில் அமர்ந்து வந்தார். அதுபோலவே, ராம்குமாரின் திருமண வரவேற்பு ஆபட்ஸ்பரி மண்டபத்தில் நடந்தபோது, இரவு வெகுநேரம் கழித்து தன் முதல் மனைவியுடன் கடுகடுவென்ற முகத்துடன் எஸ்.எஸ்.ஆர். வந்துவிட்டுப்போனார்.

பின்னர் ராதாரவி நடிகர்சங்கத் தலைவரான பின் முதல் வேலையாக அன்னை இல்லம் சென்று, 'இனிமேல் நீங்கள் கண்டிப்பாக சங்க நடவடிக்கைகளில் கலந்துகொள்ள வேண்டும்' என்று நடிகர்திலகத்தைக் கேட்டுக்கொள்ள, 'எனக்குப்பதிலாகத்தான் நீ இருக்கியே அப்புறம் என்ன, எங்க காலம் முடிஞ்சுபோச்சு. உன் ஃபிரண்டு பிரவனை (பிரபுவை) கலந்துக்கச்சொல்றேன். எல்லாரும் ஒற்றுமையா இருந்து செய்ங்க' என்று வாழ்த்தி அனுப்பினார்.

ஆனால் பிற்பாடு நடிகர்திலகத்தைப் பற்றி எஸ்.எஸ்.ஆர். உயர்வாகவே பேசிவந்துளார். பல விழாக்களில் 'என் அன்புச்சகோதரர் சிவாஜி கணேசன்' என்றே குறிப்பிடுவார். நடிகர்திலகம் மறைந்தபோது பெஸன்ட் நகர் மின்மயானத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். இதன் உச்ச கட்டமாக, மூன்றாண்டுகளுக்கு முன் தஞ்சாவூரில் நடிகர்திலகத்தின் முழு உருவச்சிலையை எஸ்,எஸ்.ஆர்தான் திறந்து வைத்து அழியாக்கல்வெட்டில் இடம்பெற்றார்.

sankara1970
28th December 2011, 05:37 PM
Dear Saratha Madam
acharyam than
really- nan kelvi padatha vishayam.
the reason is all I know was both NT and MT had different teams for themselves.
However, this information proves NT had friends all over-he had such a wonderful
heart, he has communicated his love and affection towards MT.

RAGHAVENDRA
28th December 2011, 08:41 PM
டியர் பம்மலார், பொம்மையில் வெளிவந்த நடிகர் திலகத்தின் கட்டுரையின் மூலம் அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே இருந்த ஆழமான புரிந்துணர்வு புலப்படுகிறது. எம்.ஜி.ஆரின் இறுதிக் காலத்தில் நடிகர் திலகத்துடன் அவர் எந்த அளவிற்கு அன்பு வைத்திருந்தார் என்பதும் அதே போல் நடிகர் திலகமும் எம்.ஜி.ஆரிடம் எந்த அளவிற்கு பாசம் வைத்திருந்தார் என்பதும், இங்கு ஏற்கெனவே விளக்கப் பட்டுள்ளது. இந்த அருமையான ஆவணங்களை அளித்த தங்களுக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும்.


டியர் வாசுதேவன் சார்,
தாங்களும் சளைத்தவரல்ல என்பதை தங்கள் பதிவுகளில் உள்ள நிழற்படங்கள் நிரூபிக்கின்றன.

தங்கள் இருவரின் பங்களிப்பும் அந்த உலக மகா உத்தமனின் புகழ் காக்கும் கேடயங்கள் என்பது உண்மை.

அன்புச் சகோதரி சாரதா,
நண்பர்கள் கூறியுள்ளது போல் தாங்களும், முரளி சாரும் தொடர்ந்து அடிக்கடி இங்கு பங்கு பெற வேண்டும், தங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

நம் அனைவரின் பார்வைக்காக ராஜபார்ட் ரங்கதுரை மற்றும் ரோஜாவின் ராஜா விளம்பரங்களின் நிழற்படங்கள்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/rajapart200showsadfw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/rojrajad01fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/rojrajad02fw.jpg

RAGHAVENDRA
28th December 2011, 10:19 PM
அன்புச் சகோதரி சாரதா,
நடிகர் சங்கமும் நடிகர் திலகமும் பற்றித் தாங்கள் எழுதியுள்ள விரிவான பதிவு புதிய தலைமுறையினர் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள பேருதவியாய் இருக்கும். தங்களுடைய பதிவிற்கு பதில் எழுத எனக்கு ஆவல் இருந்தாலும் மனம் ஒப்ப மறுக்கிறது. எந்தக் கட்டிடத்திற்காக ஏச்சையும் பேச்சையும் வாங்கினாரோ, எந்தக் கட்டிடத்திற்காகத் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்தாரோ, எந்தக் கட்டிடம் அவருடைய லட்சியமாக இருந்ததோ...

இன்று அந்தக் கட்டிடம்...

எங்கே..

ஒவ்வொரு செங்கல்லுக்கும் கணக்கு வைத்திருந்து, வாங்கிய கடனை அப்படியே முழுவதும் கட்டுமான வேலைக்கு பயன் படுத்தினார்கள்.

இது என்னுடைய கூற்று அல்ல. கடன் கொடுத்த வங்கி அதிகாரி, துக்ளக் இதழுக்கு அளித்திருந்த பேட்டியில் இடம் பெற்றது. துக்ளக்கிலும் பிரசுரமானது.

அப்படிப்பட்ட நடிகர் சங்க கட்டிடம் இன்று ...?

pammalar
29th December 2011, 03:00 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் உணர்வுபூர்வமான, உச்சமான பாராட்டுதல்களுக்கு எனது இதயபூர்வமான தலையாய நன்றிகள் !

"பாக்கியவதி" பதிவுகள் படுஅமர்க்களம் !

சிவாஜி கணேசனார் எனும் நமது இறையனார், நெய்வேலி வாசுதேவனார் எனும் அவரது பரம பக்தராகிய தங்களைப்பெற பாக்கியத்திலும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். அதனாலும் அவர் பாக்கியவான் !

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
29th December 2011, 03:04 AM
Demi-God's December Delicacies

பாக்கியவதி

[27.12.1957 - 27.12.2011] : 55வது ஆரம்பதினம்

பொக்கிஷப் புதையல்

கிடைத்தற்கரிய புகைப்படம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Bhagyavathi1-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th December 2011, 03:18 AM
சகோதரி சாரதா,

'நடிகர் சங்கத்திற்காக நடிகர் திலகம் ஆற்றிய அருந்தொண்டு' என்பதன் அடிப்படையில் அமைந்த தங்களது சமீபத்திய பதிவு மிகமிக அருமை ! பல வரலாற்று உண்மைகளையும், விரிவான விவரங்களையும் இப்பதிவு எடுத்தியம்பியது.

தங்களுக்கு எனது சிறப்பான பாராட்டுக்களுடன் கூடிய இனிய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th December 2011, 05:07 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களது அன்பான பாராட்டுக்களுக்கு எனது சிறப்பான நன்றிகள் !

'ரங்கதுரை'யின் சாதனை ஆவணமும், 'ராஜா'வின் வெளியீட்டு ஆவணங்களும் 'ராகவேந்தர்' ஆகிய தங்களின் அதிரடி அசத்தல் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th December 2011, 05:13 AM
Demi-God's December Delicacies

பாக்கியவதி

[27.12.1957 - 27.12.2011] : 55வது ஆரம்பதினம்

பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்

நடிகன் குரல் : ஜனவரி 1958
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/BhagyavathiAd1-1.jpg


The Hindu : 4.1.1958
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/BhagyavathiAd2-1.jpg


The Hindu : 14.1.1958
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/BhagyavathiAd3-1.jpg


குண்டூசி : பொங்கல் மலர் : 1958
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/BhagyavathiAd4-1.jpg

குறிப்பு:
"பாக்கியவதி", சென்னை 'கெயிட்டி'யில் 63 நாட்களும், 'பிரபாத்'தில் 42 நாட்களும், 'சரஸ்வதி'யில் 35 நாட்களும் ஓடி மாநகரில் நல்ல வெற்றி. மதுரை 'சென்ட்ரல்' திரையரங்கில் 56 நாட்கள் ஓடி வெற்றி. சேலம் 'ஓரியண்டல்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி. ஏனைய அரங்குகளிலும் ஜெயக்கொடி நாட்டி சிறந்ததொரு வெற்றிக்காவியமாகத் திகழ்ந்தது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th December 2011, 05:32 AM
Demi-God's December Delicacies

பாக்கியவதி

[27.12.1957 - 27.12.2011] : 55வது ஆரம்பதினம்

பொக்கிஷப் புதையல்

வரலாற்று ஆவணம் : நடிகர் திலகம் பற்றி டைரக்டர் எல்.வி.பிரசாத்

நடிகன் குரல் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக வெற்றி உலா மலர்) : ஆகஸ்ட் 1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5441-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5442-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
29th December 2011, 08:26 AM
'ராஜபார்ட் ரங்கதுரை' பற்றிய V.C.குகநாதன் அவர்களின் நினைவுகள். (அற்புதமான புகைப்படத்தோடு)


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/8-10.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7-11.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-32.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-31.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
29th December 2011, 12:50 PM
அன்புள்ள பம்மலார் சார்,

மக்கள்திலகம் பற்றிய நடிகர்திலகம் அவர்களின் கட்டுரையின் இறுதிப்பகுதியை அளித்து செவ்வனே நிறைவு செய்து விட்டீர்கள். அருமையான ஆவணப்பதிவை முழுமையாக அளித்து மகிழ்வித்ததற்குப் பாராட்டுக்கள்.

'பணம்' திரைக்காவியத்தின் ஒன்பது நவரத்தினமான விளம்பரப்பொக்கிஷப்பதிவுகளும், 'பாக்கியவதி' படத்தின் அருமையான விளம்பரப்பதிவுகளும் மிக மிக அற்புதம். பணம் திரைப்படம் தனது அறுபதாவது ஆண்டை நெருங்கும் வேளையில், அன்றைய விளம்பரங்கள் எப்படி புதுமை மாறாமல் பதிக்க முடிகிறது என்று எண்ணி குழம்பினேன். அப்புறம்தான் தெளிந்தேன். நீங்கள் என்ன எங்களைப்போன்ற சாதாரண மனிதரா?. நீங்கள்தான் 'ஜீ பூம்பா' பூதமாயிற்றே. நீங்கள் நினைத்தால், தமிழின் முதல் பேசும் படமான 'சீனிவாச கல்யாணம்' விளம்பரத்தைக்கூட கொண்டுவர முடியும்.

அப்பப்பா என்ன ஒரு அசுர உழைப்பு....

இணைப்பாகத் தந்துள்ள இயக்குனர் பிரசாத் அவர்களின் புகழ்க்கட்டுரையும் அருமை. அனைத்து ஆவணங்களுக்கும் எண்ணற்ற நன்றிகள்.

mr_karthik
29th December 2011, 01:24 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

'பாக்கியவதி'யின் நிழற்பட அணிவகுப்பை அழகுற அளித்துள்ளீர்கள். ஸ்டில்கள் அனைத்தும் தெளிவாக உள்ளன. பாராட்டுக்கள். அதே சமயம் குகநாதன் பற்றிய பதிவைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

சாரதா மேடம்,

தென்னிந்திய நடிகர்சங்கத்தில் நடிகர்திலகத்தின் சாதனை, பின்னர் அதே சங்கத்தின் சிலரால் அடைந்த மனவருத்தம் ஆகியவற்றை தெளிவுபடுத்தியுள்ளீர்கள். முரளி சாருக்கு சொல்வதுபோலத்தான் தங்களுக்கும் வேண்டுகோள். அடிக்கடி வந்து இதுபோன்ற அபூர்வ தகவல்களைத்தாருங்கள்.

அன்புள்ள ராகவேந்தர் சார்,

'ராஜபார்ட் ரங்கதுரை' சாதனை விளம்பரமும், 'ரோஜாவின் ராஜா' வெளியீட்டு விளம்பரமும் அருமை. முன்பு எனது பதிவில் குறிப்பிட்டிருந்த நடிகர்திலகம் - வாணிஸ்ரீ 'போஸ்' இதுதான், பிராட்வே தியேட்டர் வாசலில் ஒட்டப்பட்டிருந்த தட்டியில் இருந்தது. அன்றைய விளமபரங்களை சிரத்தையாக நோட் புத்தகத்தில் ஒட்டி வைத்து பாதுகாத்துள்ளீர்கள் என்பது பதிவில் தெரிகிறது. பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி.

abkhlabhi
29th December 2011, 05:27 PM
ஜல்லி கட்டு வெற்றி விழாவில்

மக்கள் திலகத்திடம் இருந்து முத்தம் பெற்றும் நடிகர் திலகம். மக்கள் திலகத்திடம் நம்பியார் முத்தம் கேட்டக, மக்கள் திலகம் மறுக்க, நடிகர் திலகம் ஒரு சிறுவன் போல் நம்பியாரை தள்ளிவிட, கடைசியில் , மக்கள் திலகம் நம்பியர்ர்க்கு முத்தம் கொடுக்க ................

Video :

http://www.youtube.com/watch?v=fj2P52qvaw4&feature=BFa&list=UUVjdICorK2LJX81xXTm0PZg&lf=plcp

One RARE photo of NT, MT , Rajkumar and Prem Nazir (?) together in the end of the video

Murali Srinivas
29th December 2011, 10:02 PM
அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்!

சில பல நாட்களாய் இங்கே பதிவிட முடியாதபடி சில பல வேலைகள்!

வழக்கம் போல் சுவாமியும் வாசுதேவனும் அள்ளி வழங்கியிருக்கிறார்கள்! அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு தவம்! அதன் மூலம் மற்றவர்களுக்கு கிடைப்பது வரம்! தவங்களை புரிவோர் எதையும் எதிர்பார்பதில்லை. அதே நேரத்தில் வரங்கள் கிடைக்கப் பெற்றோர் நன்றி சொல்வதிலும் தவறில்லை. அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்!

ஒவ்வொரு படத்தின் வெளியிட்டு நாளன்றும் கார்த்திக் தன் நேரடி தியேட்டர் அனுபவங்களை பதிவு செய்த விதம் நன்றாக இருந்தது. குறிப்பாக 70-களில் வெளியான படங்களுக்கு அவரின் பதிவுகள் அன்றைய காலக் கட்டத்தின் நேரே பிடிக்கப்பட்ட கண்ணாடி!

நீண்ட இடைவெளிக்கு பின் வந்த சாரதா அக்குறையை ஈடு கட்டும் வண்ணம் பல பதிவுகளை செய்திருக்கிறார்!அவற்றில் அவரின் முத்திரைகள் வழக்கம் போல்!

சாரதா,

ஒரே ஒரு சந்தேகம்? நடிகர் திலகம் நடிகர் சங்க தலைவராக இருந்த போது அவருக்கு எதிராக எஸ்.எஸ்.ஆர். போட்டியிட்டது எப்போது? காரணம் நீங்கள் ராம்குமாரின் திருமண வரவேற்பு விழாவையும் அதில் சேர்த்திருப்பதால் கேட்கிறேன்! ராம்குமாரின் திருமணம் நிகழ்ந்தது 1980 ஜனவரியில். [நீங்கள் கூட சிறுமியாக இருந்த போது உங்கள் தந்தையாரோடு கல்யாண வரவேற்பிற்கு போய்விட்டு வந்ததை ஒரு முறை இங்கே எங்களோடு பகிர்ந்து கொண்டது நினைவிற்கு வருகிறது]. நடிகர் திலகத்தின் தலைவர் பதவிக்கு அப்போது ஏதும் பிரச்சனைகள் ஏற்படவில்லை. 1974 முதல் 1984 வரை அவர் எவ்வித தடையிமின்றி தொடர்ந்தார். 1984 ஜூன் மாதம்தான் இந்த எஸ்.எஸ்.ஆர். போட்டி வந்தது. நமக்கு வேதனையளித்த விஷயம் என்னவென்றால் அதே 1984 மார்ச் ஏப்ரல் மாதங்களில்தான் நடிகர் திலகமே தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள போரூர் சிவாஜி கார்டன்-ல் அன்னை ராஜாமணி அம்மையார் சிலை திறப்பு விழா மற்றும் தஞ்சையில் சாந்தி கமலா திரையரங்குகள் திறப்பு விழா நடைபெற்றது. அதுவும் தவிர அதே 1984 மே மாதத்தில் தமிழகத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. தஞ்சை, மாயவரம், உப்பிலியாபுரம் மற்றும் சென்னை அண்ணா நகர் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அ.தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஏனைய கட்சிகள் எல்லாம் தி.மு.க. தலைமையில் எதிர்த்து நின்றன. அப்போதும் கூட்டணி தர்மத்தின்படி காங்கிரஸ் -அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு நடிகர் திலகம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். [அந்த தேர்தலில் தஞ்சையில் காங்கிரஸ்-ம் உப்பிலியாபுரத்தில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்ற போது மாயவரத்திலும் சென்னை அண்ணா நகரிலும் தி.மு.க. வெற்றி பெற்றது]. மேற்சொன்ன அனைத்து நிகழ்வுகளிலுமே ஆதரவான நிலையை நடிகர் திலகம் எடுத்த போதும், அவர் உயிரைக் கொடுத்து உழைத்த நடிகர் சங்கத்தில் அவருக்கு எதிராக எஸ்.எஸ்.ஆர். களமிறக்கப்பட்டார். அது நடிகர் திலகத்தை வேதனையில் ஆழ்த்தியது என்றால் ரசிகர்களுக்கு அது கோவத்தை வரவழைத்தது. அந்த நேரத்தில்தான் சிம்ம சொப்பனம் வெளியாகிறது [1984 ஜூன் 30]. மதுரையில் எஸ்.எஸ்.ஆருக்கு எதிராக ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டினர். ஆனால் எஸ்.எஸ்.ஆர். அம்புதானே! ஆகவேதான் இனிமேல் நடிகர் சங்க வாசலை மிதிக்க மாட்டேன் என்று நடிகர் திலகம் ஒரு முடிவு எடுத்தார்.

அதன் பிறகு நீங்கள் குறிப்பிடும் ராதாரவி வெற்றி பெற்றதெல்லாம் 1986-ல் நடந்தவை. அன்னை இல்லத்திற்கே வந்து நடிகர் திலகத்தை சமாதானப்படுத்தியதாக நீங்கள் குறிப்பிடும் அதே ஐசரி வேலன்தான் ராதாரவியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அப்போதும்கூட நடிகர் திலகத்தைப் பற்றி ஒரு பேட்டியெல்லாம் கொடுத்தார் [இது சிவாஜியின் வெற்றியும் அல்ல, ---- ரின் தோல்வியும் அல்ல].

எது எப்படியிருப்பினும் நடிகர் சங்கம் என்ற ஒன்று இன்றும் நிலைக் கொண்டிருக்கிறது அதற்கு ஹபிபுல்லா ரோட்டில் சொந்தமாக ஒரு கட்டிடம் இருக்கிறது, இன்று சத்யம் சினிமாஸ் குழுமத்தோடு அங்கே ஒரு மல்டிப்ளெக்ஸ் அமைப்பதற்கு ஒப்பந்தம் போடப்படுகிறது என்றெல்லாம் சொன்னால் அதெற்கெல்லாம் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது நடிகர் திலகம் என்பதை யார் நினைத்தாலும் மறைக்க முடியாது.

அன்புடன்

anm
30th December 2011, 01:52 PM
அன்பு நண்பர்கள் Smt. சாரதா மேடம், முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களே,

என்னதான் நமது நடிகர் திலகம் அவர்கள் தனது உயர்ந்த பண்பால் தனது நண்பரான MGR அவர்கள் முதுகில் குத்தியவைகளை மறைத்து, மறந்து பெருந்தன்மையுடன் நல்லவைகளையே எழுதினாலும் , MGR இன் உண்மை குணத்தை அறிந்த நம் போன்றோருக்கு இவைகளை இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை; திரு முரளி ஸ்ரீநிவாஸ் குறிப்பிட்டதைப் போல் எஸ்.எஸ்.ஆர் ஒரு அம்புதானே, அதை ஏவியவர் எம். ஜி. ஆர். தானே!!!! பின்னே, உள்ளத்தில் நஞ்சை வைத்து புறத்தில் தேனைத் தடவி என்ன புண்ணியம். MGR நல்லவன் போல் வேடம் போட்டு தானே, பாமரர் எல்லோரையும் கவிழ்த்தார்!!!

We cannot accept all MGR's Debauchery against our veteran Nadikar Thilagam.

Thank you friends,

ANM

Subramaniam Ramajayam
30th December 2011, 11:03 PM
அன்பு நண்பர்கள் Smt. சாரதா மேடம், முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களே,

என்னதான் நமது நடிகர் திலகம் அவர்கள் தனது உயர்ந்த பண்பால் தனது நண்பரான MGR அவர்கள் முதுகில் குத்தியவைகளை மறைத்து, மறந்து பெருந்தன்மையுடன் நல்லவைகளையே எழுதினாலும் , MGR இன் உண்மை குணத்தை அறிந்த நம் போன்றோருக்கு இவைகளை இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை; திரு முரளி ஸ்ரீநிவாஸ் குறிப்பிட்டதைப் போல் எஸ்.எஸ்.ஆர் ஒரு அம்புதானே, அதை ஏவியவர் எம். ஜி. ஆர். தானே!!!! பின்னே, உள்ளத்தில் நஞ்சை வைத்து புறத்தில் தேனைத் தடவி என்ன புண்ணியம். MGR நல்லவன் போல் வேடம் போட்டு தானே, பாமரர் எல்லோரையும் கவிழ்த்தார்!!!

We cannot accept all MGR's Debauchery against our veteran Nadikar Thilagam.

Thank you friends,

ANM

MURALISRINIVAS and amm are absoltely correct. Because of all these happenings NT decided not to step iin nadigar sangam activities any more.
BOTH THE CONGRESS PARTY AND NADIGARSANGAM HAS NOT RECEIPROCATED NT PROERLY.

pammalar
31st December 2011, 04:45 AM
அன்புள்ள பம்மலார் சார்,

மக்கள்திலகம் பற்றிய நடிகர்திலகம் அவர்களின் கட்டுரையின் இறுதிப்பகுதியை அளித்து செவ்வனே நிறைவு செய்து விட்டீர்கள். அருமையான ஆவணப்பதிவை முழுமையாக அளித்து மகிழ்வித்ததற்குப் பாராட்டுக்கள்.

'பணம்' திரைக்காவியத்தின் ஒன்பது நவரத்தினமான விளம்பரப்பொக்கிஷப்பதிவுகளும், 'பாக்கியவதி' படத்தின் அருமையான விளம்பரப்பதிவுகளும் மிக மிக அற்புதம். பணம் திரைப்படம் தனது அறுபதாவது ஆண்டை நெருங்கும் வேளையில், அன்றைய விளம்பரங்கள் எப்படி புதுமை மாறாமல் பதிக்க முடிகிறது என்று எண்ணி குழம்பினேன். அப்புறம்தான் தெளிந்தேன். நீங்கள் என்ன எங்களைப்போன்ற சாதாரண மனிதரா?. நீங்கள்தான் 'ஜீ பூம்பா' பூதமாயிற்றே. நீங்கள் நினைத்தால், தமிழின் முதல் பேசும் படமான 'சீனிவாச கல்யாணம்' விளம்பரத்தைக்கூட கொண்டுவர முடியும்.

அப்பப்பா என்ன ஒரு அசுர உழைப்பு....

இணைப்பாகத் தந்துள்ள இயக்குனர் பிரசாத் அவர்களின் புகழ்க்கட்டுரையும் அருமை. அனைத்து ஆவணங்களுக்கும் எண்ணற்ற நன்றிகள்.

டியர் mr_karthik,

தாங்கள் என்னிடம் கொண்டுள்ள அபரிமிதமான நம்பிக்கைக்கும், இதயத்தின் அடித்தளத்திலிருந்து தொடர்ந்து தாங்கள் அள்ளி அளித்துவரும் உயர்வான, உச்சமான பாராட்டுக்களுக்கும், எனது உணர்வுபூர்வமான, சிரந்தாழ்த்திய நன்றிகள் !

[தமிழின் முதல் பேசும் படம், "காளிதாஸ்". இத்திரைப்படம், 31.10.1931, ஸ்திரவாரமான சனிக்கிழமையன்று வெளியானது. தாங்கள் குறிப்பிட்டுள்ள "ஸ்ரீனிவாச கல்யாணம்" 1934-ம் ஆண்டில் வெளியானது. இந்தப்படத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், இதுதான் சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் பேசும் படம்.]

அன்புடன்,
பம்மலார்.

RC
31st December 2011, 04:50 AM
aaha... andha viLambaramum kaivasam irukku-nu solRIngaLaa? :)

pammalar
31st December 2011, 04:57 AM
டியர் பாலா சார்,

நடிகர் திலகம்-மக்கள் திலகம்-வில்லன் திலகம் ஆகிய தமிழ்த்திரையுலகின் மூன்று அரும்பெரும்திலகங்கள் ஒரே மேடையில் அபூர்வமாக இணைந்த "ஜல்லிக்கட்டு" திரைக்காவிய 100வது நாள் வெற்றிவிழா வீடியோவை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துவிட்டீர்கள் ! அதில் உள்ள, இருதிலகங்கள் இணைந்திருக்கும் அரிய நிழற்படங்கள், கண்களுக்கு கலக்கல் விருந்து. கிடைத்தற்கரிய காணொளியின் சுட்டியினை வழங்கிய தங்களுக்கு தீர்க்கமான நன்றிகள் !

டியர் முரளி சார்,

தங்களின் மேன்மையான பாராட்டுக்கு எனது கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
31st December 2011, 05:25 AM
aaha... andha viLambaramum kaivasam irukku-nu solRIngaLaa? :)

டியர் Mr. RC,

முதல் தமிழ் பேசும் படமான "காளிதாஸ்" படத்தின் விளம்பரம் விக்கிபேடியா இணையதளத்திலேயே உள்ளது. அந்த மிகமிக அரிய விளம்பரம் இங்கே தங்கள் மற்றும் அனைவரின் பார்வைக்கு:

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Kalidaas31101931.jpg

"காளிதாஸ்"தான் தெலுங்கு மொழியின் முதல் பேசும் படமும் கூட. இப்படத்தில் நடித்த பாதி கலைஞர்கள் தமிழிலும், பாதி கலைஞர்கள் தெலுங்கிலும் பேசி நடித்தனர். அதாவது தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழிலும், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தெலுங்கிலும் பேசி நடித்தனர். [சென்னையில் இப்படம் வெளியான 'கினிமா சென்ட்ரல்' அரங்கம்தான் சென்னை தங்கசாலைப்(Mint) பகுதியிலுள்ள 'ஸ்ரீமுருகன்' திரையரங்கம்].

"ஸ்ரீனிவாச கல்யாணம்" விளம்பரம் கிடைக்கப் பெற்றால், அவசியம் இங்கே பதிவிடுகிறேன்.

Thanks for your response !

[இதற்கெல்லாம் காரணகர்த்தாவாகிய mr_karthik அவர்களுக்கும் இனிய நன்றி !]

அன்புடன்,
பம்மலார்.

pammalar
31st December 2011, 05:36 AM
Demi-God's December Delicacies

விடிவெள்ளி

[31.12.1960 - 31.12.2011] : 52வது உதயதினம்

சாதனைச் செப்பேடுகள்

காவிய விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5443-1.jpg


காவிய விளம்பரம் : The Hindu : 5.10.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5444-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 24.12.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/VidivelliAd1-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : The Mail : 28.12.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/VidivelliAd2-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : கலைமகள் : ஜனவரி 1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5445-1.jpg


100வது நாள் விளம்பரம் : The Hindu : 9.4.1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Vidivelli100-1.jpg

குறிப்பு:
1. இக்காவியம் 100 நாள் கண்ட அரங்குகள்:
சென்னை - சித்ரா - 104 நாட்கள்
சென்னை - கிரௌன் - 104 நாட்கள்
மதுரை - சிந்தாமணி - 104 நாட்கள்

2. சென்னை 'சயானி'யில் 76 நாட்களும் மற்றும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 50 நாட்களைக் கடந்தும் ஓடிய இக்காவியம், ஒரு சிறந்தவெற்றி கண்ட காவியம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

3. "விடிவெள்ளி" மற்றும் "பாசமலர்" திரைக்காவியங்கள், 1959-ல் ஒரே நாளில் பூஜை போடப்பட்டு துவங்கப்பட்டன. "விடிவெள்ளி" 31.12.1960 அன்றும், "பாசமலர்" 27.5.1961 அன்றும் வெளிவந்தன.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
31st December 2011, 08:40 AM
விடிவெள்ளி பாட்டுப் புத்தகத்தின் நிழற்படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP01.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP02.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP03.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP04-1.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP05.jpg

RAGHAVENDRA
31st December 2011, 08:42 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP06.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP07.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP08.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP09.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP10.jpg

பாட்டுப் புத்தகங்கள் மிகவும் மங்கிப் போயுள்ளதால் முடிந்த வரையில் சரி செய்ய முயன்றுள்ளேன்.

RAGHAVENDRA
31st December 2011, 09:15 AM
அனைவருக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புத்தாண்டைக் கொண்டாட எல்லோர்க்கும் அன்பளிப்பு


http://youtu.be/Wo7Tz6Pm5hE


http://youtu.be/0eTOWFNLasw

மிகவும் அபூர்வமான பாடல்

abkhlabhi
31st December 2011, 10:06 AM
http://s431.photobucket.com/albums/qq35/abkhlabhi/?action=view&current=PrabhuGanesan.jpg


இளையதிலகம் பிரபுவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்




"மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்

உண்மை நின்றிட வேண்டும்"

- பாரதி


அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புதுவருட நல்வாழ்த்துகள்

RAGHAVENDRA
31st December 2011, 03:50 PM
புத்தாண்டு என்றால் நினைவுக்கு வரும் சில பாடல்களில் சங்கிலி பாடல் மிக முக்கியமானதாகும். நல்லோர்கள் வாழ்வைக் காக்க என்ற பாடல் இலங்கையில் பல வாரங்கள் தொடர்ந்து முன்னிலை வகித்தது மறக்க முடியாததாகும்.

அப்பாடலின் ஒலியை எடுத்துக் கொண்டு பல நிழற்படங்களைத் தொகுத்து காணொளியாகத் தொகுத்து தரவேற்றியுள்ளார் ஒரு நண்பர். இதில் சிறப்பம்சம் நமது நடிகர் திலகம் இணைய தளத்தினை அதில் குறிப்பிட்டிருப்பதாகும். அவருக்கு நமது நன்றி.


http://youtu.be/6jcJjrF4VMM

mr_karthik
31st December 2011, 03:52 PM
அன்புள்ள பம்மலார் சார்,

தமிழின் முதல் பேசும்படம் படம் பற்றிய அரிய தகவல்களுக்கும், மிக மிக அரிய விளமபரத்துக்கும் நன்றி.

புத்தாண்டு பரிசாக நீங்கள் அள்ளி வழங்கியிருக்கும் 'விடிவெள்ளி' வெற்றிக்காவியத்தின் ஆவணப்பொக்கிஷங்கள் அனைத்துக்கும் மிக்க நன்றி. நடிகர்திலகத்துடன் சரோஜாதேவி நடித்த வெற்றிக்காவியங்களான பாகப்பிரிவினை, பாலும் பழமும், ஆலயமணி, பார்த்தால் பசிதீரும், இருவர் உள்ளம், புதிய பறவை போன்ற வெற்றி வரிசையில் 'விடிவெள்ளி'யும் இடம்பெற்றிருக்கிறது என்பதை தெளிவாக்கியிருக்கிறீர்கள்.

புத்தாண்டில் புதுப்பொலிவுடன் எங்கள் பம்மலாரை சந்திக்க இருக்கிறோம் என்ற எண்ணமே ஆனந்தமாக இருக்கிறது. தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
31st December 2011, 03:56 PM
இளைய திலகம் பிரபு ரசிகர்கள் சார்பாக அவருக்கு நமது உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
31st December 2011, 04:24 PM
subramanian subbaraman kaarmaygam poandra kaysam, saamudhriga lakshanam nooru sadhavighidham konda netri adhil amizhnda puruvangal, mudhal raga paneer drakshayai pradhibhalikkum kangal, sedhukkiya sirpaththirkku kooda amayaadha naasi, naasiyin keezhae yella vagayaana meesayum azhagaaga utkaarvadharkendray vadivamaindha alaveduthu vaiththa udhadugal, chatrapathi sivajiyai ivarai paarthaal podhum neeril paarthatharku nigar endru sooluraikavaikkum andha mugavaaikattai...... Iraivan padaiththa kalai thurayin orey avathaaramae.....un pugai padaththai paartha yenakkae aedho kavidhai pola uraikka miga sumaaraaga varugiradhendral...un thiraipadaththai paarththaal ippodhaya thamizh nadigargallukku evalavu nadippu varum...? Hmmm....adharkkum oru bhaagiyam vendum !!

நம்முடைய பம்மலார் அளித்துள்ள பாக்யவதி நிழற்படத்தை நமது அன்புச் சகோதரர் மோகன் ராம் அவர்கள் facebook இணைய தளத்தில் பதிவிட்டு அதற்கு வந்துள்ள பல பதில் குறிப்புகளில் ஒன்று தான் மேலே உள்ளது. மோகன் ராம் சார், மிக்க நன்றி. அதே போன்று பம்மலாருக்கும்.

mr_karthik
31st December 2011, 04:24 PM
அன்புள்ள முரளி சார்,

தங்களின் பாராட்டுக்கு நன்றி. திரைப்பட வெளியீடுகளின்போது நடந்தவற்றைப் பகிர்ந்துகொள்வதில் எனக்கு ஒரு திருப்தி. அது தங்களுக்கும் பிடித்திருக்கிறது என்று அறியும்போது மிக்க மகிழ்ச்சி.

நடிகர் சங்கத்தில் நடிகர்திலகத்தின் பங்களிப்பு, மற்றும் அதிலிருந்து அவராகவே மனம் வெதும்பி தன்னை விடுவித்துக்கொண்டது ஆகியவற்றை மிகத்தெளிவாக, காலகட்டத்துடன் விளக்கி, தாங்கள் ஒரு 'வரலாற்று விற்பன்னர்'தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்.

சாரதாவின் பதிவைப்படித்தபோது எனக்கும் சில சந்தேகங்கள் எழுந்தன. அவை சம்பவங்கள் நடந்த கால கட்டம் பற்றித்தான். நடிகர்திலகத்திடம் ஐசரிவேலன் வந்து பேசியபோது, ஐசரி சட்டமன்ற உறுப்பினர் இல்லை. அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தது 1977 முதல் 80 வரைதான். (1977-ல் சென்னையில் வெற்றிபெற்ற ஒரே அ.தி.மு.க. உறுப்பினர்). 1980-ல் சட்டமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடந்தபோது எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சியைப்பிடித்தார். ஆனால் ஐசரிவேலன் அதே ஆர்.கே.நகர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் மட்டுமல்ல சிவாஜி மன்ற வேட்பாளருமான வி.ராஜசேகரனிடம் ஐசரி தோல்விடைந்தார்.

நடிகர்சங்கத்தேர்தலில் ராதாரவியிடம் தோற்றபின் அவர் அளித்த பேட்டியில் "சட்டமன்றத்தேர்தலில் தனது மன்ற வேட்பாளரை நிறுத்தி சிவாஜி என்னைத் தோற்கடித்தார். அப்படியிருந்தும் அவர் நடிகர்சங்கத்தலைவராக நீடிக்க வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டவன் நான். ஆனால் தற்போது எனக்கு ஆதரவளிக்காமல் சிவாஜி நடுநிலை வகித்து ஒதுங்கிக்கொண்டார்" என்று சொல்லியிருந்தார் ஐசரி வேலன்.

ஆனால் ராம்குமார் திருமணத்தின்போது நடிகர்திலகம்தான் சங்கத்தலைவராக இருந்தார். அப்போது எப்படி எஸ்.எஸ்.ஆர். அவருடன் முறைப்பாக இருந்ததாக சாரதா சொன்னார் என்பது தெரியவில்லை.

எப்படியிருந்தபோதிலும் நடிகர்திலகம் வெளிப்படையாக எல்லோரிடம் பழகியபோதிலும், மற்றவர்கள் உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றுமாக அவருடன் முகமூடியணிந்தே பழகி வந்துள்ளனர் என்பது தெரிகிறது. இதுவரை எஸ்.எஸ்.ஆர்., தானாகவேதான் போட்டியில் இறங்கினார் என்று நினைத்திருந்தேன். ஆனால் தங்கள் பதிவைப் படித்தபின்புதான், அவர் வெறும் அம்பு என்பதும், அவரை ஏவியது ஒரு பெரிய கை என்றும் தெரிகிறது.

தங்களின் தெளிவான பதிவுக்கு மிக்க நன்றி.

goldstar
31st December 2011, 07:42 PM
அன்பு நண்பர்கள் Smt. சாரதா மேடம், முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களே,

என்னதான் நமது நடிகர் திலகம் அவர்கள் தனது உயர்ந்த பண்பால் தனது நண்பரான MGR அவர்கள் முதுகில் குத்தியவைகளை மறைத்து, மறந்து பெருந்தன்மையுடன் நல்லவைகளையே எழுதினாலும் , MGR இன் உண்மை குணத்தை அறிந்த நம் போன்றோருக்கு இவைகளை இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை; திரு முரளி ஸ்ரீநிவாஸ் குறிப்பிட்டதைப் போல் எஸ்.எஸ்.ஆர் ஒரு அம்புதானே, அதை ஏவியவர் எம். ஜி. ஆர். தானே!!!! பின்னே, உள்ளத்தில் நஞ்சை வைத்து புறத்தில் தேனைத் தடவி என்ன புண்ணியம். MGR நல்லவன் போல் வேடம் போட்டு தானே, பாமரர் எல்லோரையும் கவிழ்த்தார்!!!

We cannot accept all MGR's Debauchery against our veteran Nadikar Thilagam.

Thank you friends,

ANM

Dear ANM sir,

You are spot on, you have said about most of NT fan's internal view, even thought most of our members don't want to discuss about this but still I believe they have similar view like yours. I 100% agree with you. There were so many back stabbing people so called as our NT's friends always done these kind of activities. History never forget and forgive these people.

Live long NT fame.

Cheers,
Sathish

goldstar
31st December 2011, 07:52 PM
Thanks a lot Mr. Pammalar and Vasu, Karthik, Ragavendran, Murali and other NT fans.

I have not posted any thing for last few weeks because of work commitment but never missed our "Kadavul" details tharum namathu today's details kadavul Pammalar sir, Vasu sir,Ragavendran sir details.

Pammalar sir unbelievable details you have been keep giving us and taking us to Everest mountain happiness. Long live your service to our god. Hats off to you sir.

Vasu sir, what can say about you sir, I enjoy each every piece you give of our NT, thanks and hats off to you sir. Please keep continuing.

Saradha madam has given so many valuable details about "Nadigar Sangam" how our NT shaped it but at the end how the BACK STABBING people planned to defeat him in the "Nadigar Sangam" elections. As per Newton's third law "Every action there is an opposite equal re-action", every one knew how BACK STABBING people had final end. Thanks Saradha madam.

Karthik sir, as a NT from 1983 (from my class 6th) you have given diamond worth details of our NT, particularly around 1970s. I am very much curious to know about it. Thank you to you also. Please keep us happy like this.

Cheers,
Sathish

Subramaniam Ramajayam
31st December 2011, 09:49 PM
A very very successful year for our NADIGARTHILAGAM THIRI, becasuse of our friends raghavendran, ammalar, vasu, arthasarathy, kartick and all well wishers of our evergreen superstar NADIGARTHILAGAM, of yesterday today and up course tomorrow. We will certainly make this thread as a most memorable one not only for our rasigargal, butalso for everyone, by taking STILL MORE ACTIVE pARTICIATION.
WITH BEST WISHES for a very BRIGHT AND PROSEROUS NEWWYEAR.

pammalar
31st December 2011, 09:52 PM
நடிகர் திலகத்தின் இளையமகன்
இளைய திலகம் பிரபு அவர்களுக்கு
இதயங்கனிந்த இனிய
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTITa-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5457-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

sankara1970
31st December 2011, 10:35 PM
Wish all fans of NT a very Happy New Year 2012

RAGHAVENDRA
31st December 2011, 11:09 PM
அனைத்து அன்புள்ளங்களுக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். ராமஜெயம் சார் சொன்னது போல் இந்தத் திரி மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நாமனைவரும் இந்த ஆண்டு தொடங்கி தினமும் ஒரு பதிவினை, அல்லது குறைந்த பட்சம் வாரம் ஒரு பதிவினை அளிப்போம் என உறுதி பூணுவோம்.
அன்புடன்

pammalar
1st January 2012, 02:32 AM
Demi-God's December Delicacies

விடிவெள்ளி

[31.12.1960 - 31.12.2011] : 52வது உதயதினம்

பொக்கிஷப் புதையல் : கிடைத்தற்கரிய நிழற்படங்கள்

வரலாற்று ஆவணம் : முரசொலி : 2.10.1959

"விடிவெள்ளி" தொடக்கவிழா
[இந்நிழற்படத்தில் எஸ்.எஸ்.வாசனுக்கு அருகே இடதுஓரம் வி.சி.சண்முகம், முத்துமாணிக்கத்திற்கு அருகே ஸ்ரீதர், ராம்குமாரைதோளில் தூக்கிவைத்துக் கொண்டுள்ளார்; முத்துமாணிக்கத்திற்கு முன்னே நின்றுகொண்டிருக்கும் குழந்தை, பிரபு]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5450-1.jpg


"பாசமலர்" தொடக்கவிழா
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5449-1-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

kumareshanprabhu
1st January 2012, 02:37 AM
dear Pammalar sir

thank you for that lovely photos

wishing all a happy new year

regards
kumareshanprabhu

pammalar
1st January 2012, 03:20 AM
அன்புள்ள பம்மலார் சார்,

தமிழின் முதல் பேசும்படம் படம் பற்றிய அரிய தகவல்களுக்கும், மிக மிக அரிய விளமபரத்துக்கும் நன்றி.

புத்தாண்டு பரிசாக நீங்கள் அள்ளி வழங்கியிருக்கும் 'விடிவெள்ளி' வெற்றிக்காவியத்தின் ஆவணப்பொக்கிஷங்கள் அனைத்துக்கும் மிக்க நன்றி. நடிகர்திலகத்துடன் சரோஜாதேவி நடித்த வெற்றிக்காவியங்களான பாகப்பிரிவினை, பாலும் பழமும், ஆலயமணி, பார்த்தால் பசிதீரும், இருவர் உள்ளம், புதிய பறவை போன்ற வெற்றி வரிசையில் 'விடிவெள்ளி'யும் இடம்பெற்றிருக்கிறது என்பதை தெளிவாக்கியிருக்கிறீர்கள்.

புத்தாண்டில் புதுப்பொலிவுடன் எங்கள் பம்மலாரை சந்திக்க இருக்கிறோம் என்ற எண்ணமே ஆனந்தமாக இருக்கிறது. தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

டியர் mr_karthik,

தங்களின் ஆனந்தமயமான பாராட்டுதல்களுக்கும், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள் !

தங்களுக்கும், எனது இதயம் நிறைந்த, இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st January 2012, 03:33 AM
டியர் ராகவேந்திரன் சார்,

"விடிவெள்ளி" ஒரிஜினல் பாட்டுப்புத்தகப் பக்கங்கள் கொண்ட பதிவுகள் அருமை மட்டுமல்ல, அரியதொரு பொக்கிஷமும்கூட !

ஆங்கிலப் புத்தாண்டு அன்பளிப்பாக தாங்கள் பதிவிட்டுள்ள "அன்பளிப்பு" பாடல் காணொளிகள் அம்சமோ அம்சம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st January 2012, 03:37 AM
நம்முடைய பம்மலார் அளித்துள்ள பாக்யவதி நிழற்படத்தை நமது அன்புச் சகோதரர் மோகன் ராம் அவர்கள் facebook இணைய தளத்தில் பதிவிட்டு அதற்கு வந்துள்ள பல பதில் குறிப்புகளில் ஒன்று தான் மேலே உள்ளது. மோகன் ராம் சார், மிக்க நன்றி. அதே போன்று பம்மலாருக்கும்.

டியர் ராகவேந்திரன் சார்,

"பாக்கியவதி" நிழற்படத்தைக் கண்டு மகிழ்ந்து, திரு.சுப்ரமணியன் சுப்புராமன் அவர்கள், facebook-ல் எழுதியிருக்கும் வர்ணனை கலந்த கவிதை மிக அருமை ! அவருக்கும், மோகன்ராம் சாருக்கும், தங்களுக்கும் எனது கனிவான நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st January 2012, 03:41 AM
Dear goldstar Satish,

Thanks a lot for your whole-hearted appreciation !

Dear Ramajayam Sir,

Thanks for your compliments !

Dear kumareshanprabhu Sir,

Thank you very much !

Warm Wishes & Regards,
Pammalar.